பகவத் விஷயம் காலஷேபம் -110- திருவாய்மொழி – -5-3-1….5-3-5–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்–

மலியும் சுடரொளி மூர்த்தி மாயப்பிரான் கண்ணன் தன்னை” என்று,
வடிவழகையும் குணங்களையும் சௌலப்யத்தையும் அநுசந்தித்தார்; இப்படி அநுசந்தித்து,
சுலபனுமாய் ஆச்சரியமான குணங்களையும் செயல்களையுமுடையவனுமாய் அவை இல்லையே யாகிலும் விட ஒண்ணாத
வடிவழகையுமுடையனான இவனோடு மெய்யுறு புணர்ச்சியை விரும்பி அவனை அணைக்கக் கோலிக் கையை நீட்ட,
அவன் அகப்படாமல் கைகழிந்து நிற்க, அதனாலே கலங்கி — ஒரு பிராட்டி தசையை அடைந்து மடல் எடுக்கையிலே புகுகிறார் இத்திருவாய்மொழியில்.
மடல் எடுக்கையாவது,வைக்கோல் போர் சுட்டுப் பொறி கொறிக்கையைப் போன்றது ஒன்றாம். —பிரயத்தனம் அதிகம்
பலம் கிஞ்சித் -என்றவாறு –தூதர்களை விட்டு பதிலுக்கு எதிர் பார்த்தல் போன்றவை – போர் சுட்டுப் பொறி கொறிக்கையைப் போன்றது –
‘அநீதி செய்யாதே கொள்ளுங்கோள்’ என்று பிறரைத் திருத்தினவர், ‘நீர் செய்யப் பார்க்கிற இது அநீதி, அதனைத் தவிரும்’ என்று
பிறர் திருத்தவும் திருந்தாதபடி ஆனார். பகவத் விஷயத்தில் ஈடுபடும்படியாகப் பிறரைத் திருத்துகிற இவரை,
‘பகவானிடத்தில் ஈடுபாடு ஆகாது’ என்று திருத்தப் பார்த்தால் திருந்தாரே அன்றோ.

அன்றிக்கே, “ஏறாளும் இறையோனும்’ -என்று திருவாய்மொழியில், அவனுக்கு உறுப்பு அல்லாத யானும் என்னுடைமையும் வேண்டா என்று
அலாபத்தாலே கூப்பிடும் தம்மோடு ஒக்கக் கூப்பிடுகைக்குத் துணை தேடி உலக ஒழுக்கத்தை நினைத்த இடத்து,
தாம் பகவத் விஷயத்திலே ஈடுபாடுடையவராய் இருக்குமாறுபோலே அவர்கள் இதர விஷயங்களிலே ஈடுபாடுடையவராய் இருக்கிறபடியைக் கண்டு,
அவர்கள் கேட்டிற்கு நொந்து -அவர்களுக்குப் பகவானுடைய பரத்துவத்தை எடுத்துக் கூறித் திருத்தி,
‘இவர்களிலே ஒருவனாக இருக்கிற என்னை, இவர்களையும் திருத்தும்படி ஆக்குவதே சர்வேச்வரன்!’ என்று
அவன் தமக்குச் செய்த உபகாரத்தை நினைத்து, தாம் திருத்தத் திருந்தின ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு மங்களாசாசனம் செய்து,
இப்படிப் பிறருடைய நலத்துக்கு வேண்டுவன எல்லாம்செய்து கை ஒழிந்த பின்பு பழைய தம் இழவே தலை எடுத்து,
‘வழி அல்லா வழியேயாகிலும் கிட்டுமத்தனை’ என்னும்படியான விடாய் பிறந்து மடல் எடுக்கையிலே
ஒருப்பட்டுப் பேசுகிறார் இத்திருவாய்மொழியில் என்னுதல்.
ஒவ்வொரு விஷயத்திலே ஒவ்வொருவருக்குப் பற்று உண்டானால் அவ்விஷயங்கள் கிடையாவிட்டால்
‘அவற்றை அப்போதே பெறவேணும்’ என்னும்படியான மனோ வேகம் பிறந்தால், பின்பு அவ்விஷயங்கள் இருந்த இடங்களிலே
புகை சூழ்ந்து புறப்பட வேண்டி இருப்பது ஒரு சாகசத்தைச் செய்து புறப்பட விடுவித்து முகத்திலே விழிப்பாரைப் போலே,
‘அத்தலைக்குப் பழியை விளைத்தாகிலும் முகத்திலே விழிக்குமத்தனை’ என்று சாகசத்திலே ஒருப்பட்டு,
தனக்கு இவ்வளவாகப் பிறந்த நிலையை அந்யாப தேசத்தாலே பேசுகிறார்.

‘அபிமத விஷயத்தைப் பிரிந்து ஆற்ற மாட்டாதார் மடல் எடுக்கக் கடவர்கள்’ என்று ஒன்று உண்டு தமிழர் சொல்லிப் போருவது.
அதாவது, “ஒத்த சீலம் வயது ஒழுக்கம் உடையவளை” என்கிறபடியே,
சீலத்தாலும் வயதாலும் குடிப்பிறப்பாலும் வடிவழகாலும் செல்வத்தாலும் குறைவற்று இருப்பவர்களான இருவர்,
அவர்களில் ‘அறிவு நிறை ஓர்ப்புக் கடைப்பிடி’ என்பன போன்று சொல்லுகிற நாயகனுடைய இலக்ஷணங்கள் நாயகனும் உடையவனாய்,
‘நாணம் மடம் அச்சம் பயிர்ப்பு’ என்பன போன்று சொல்லுகிற நாயகியுடைய இலக்ஷணங்கள் நாயகியும் உடையவளாய்,
இப்படி இருவரும் குறைவற்று, இவர்கள் தாமும் தக்க யௌவனப் பருவத்தை யுடையவர்களுமாய் இருக்க;
திராவிட லஷணம் –அறிவு -வேண்டியவற்றை வேண்டிய காலத்தில் அறிதல் –நிறைவு -ஐஸ்வர்ய பூர்த்தி
ஓர்ப்பு -நிரூபண சாமர்த்தியம் –கடைப்பிடி -ஸ்வீகரித்த விஷயத்தில் யாவதாத்மாபாவி உறுதியாய் இருக்கை
இவர்களைப் புறம்பே கூட்டுவார் ஒருவரும் இன்றிக்கே இருக்க, இவனும் தெய்வாதீனமாக ‘வேட்டைக்கு’ என்று புறப்பட,
இவளும் ‘பூக்கொய்து விளையாட’ என்று உத்தியானத்திற்குப் புறப்பட, அவ்விடத்திலே தெய்வம் கூட்டுவிக்க
இருவர்க்கும் கண் கலவி உண்டாக, சிலர் காரணமாக வந்த கலவி அல்லாமையாலே பிரிவோடே முடிவுற்றுப் பிரிய,
குணாதிகர்களாகையாலே இருவர்க்கும் ஆற்றாமை விஞ்சி, ஒருவரை ஒழிய ஒருவர்க்குச் செல்லாமை பிறக்க,
இரண்டு தலையையும் அழித்தாகிலும் பெறப் பார்ப்பது.

ஸ்வா பதேசம்
வேட்டைக்கு -ராவணாதிகளை நிரசிக்கை -ராம கிருஷ்ணனாக அவதரிக்கை
பூ கொய்ய –என்பது விஷய பிரவணர் ஆவது -அல்ப சாரங்கள் அவை சுவைத்து
தோட்டம் -பெய்த கா -லீலா விபூதி
தெய்வம் கூட்டுவிக்க என்றது -யாத்ருச்சிக்க தெய்வ கடாஷம் -ஸூ ஹ்ருதம்
தோழிமார் -தூர்த்தர் உடன் இசைந்தோம் –
காந்தர்வ விவாகம் -நாசௌ புருஷகாரம் இல்லாமல் -ஸ்வா தந்த்ரம் -கடாஷம் -பட்டாலும் படும் விட்டாலும் விடுமே –

மடல் ஊர்தல் என்பதுதான், தலைவியைப் பிரிந்த ஆற்றாமையாலே தலைவன் தலைவியை ஒரு படத்திலே எழுதி,
வைத்த கண் வாங்காதே அவ்வுருவைப் பார்த்துக்கொண்டு பனைமடலைக் குதிரையாகக் கொண்டு,
தலைவியைப் பிரிந்த போது தொடங்கிக் கண்ட போக உபகரணங்கள் எல்லாம் நெருப்பினாலே கல்பிக்கப்பட்டதாகத் தோற்ற,
ஊணும் உறக்கமும் இன்றிக்கே, உடம்பிலே துளி நீரும் ஏறிட்டுக் கொள்ளாதே, தலை மயிரை விரித்துக்கொண்டு திரியா நின்றால்,
இத் தீயச்செயலைக் கண்ட அரசர் முதலானோர் ‘கெட்டோம் இவனுக்கு ஒரு பெண்ணினிடத்தில் இத்துணை அன்பு இருப்பதே!’ என்று
அவர்கள் அவனை அத் தலைவியோடு கூட்டக் கூடுதல், இல்லையாகில், இதுவே காரணமாக இரண்டு தலையிலுள்ள உறவினர்களும் கைவிட,
அலக்குப் போர் போலே ஒருவர்க்கு ஒருவர் புகலாய் அங்ஙனம் கூடுதல், தோழிமார் கூட்டக் கூடுதல், ஆற்றாமை கூட்டக் கூடுதல்,
தலைவியானவள் குணங்களால் சிறந்தவளாயிருப்பாளே யாகில் பழிக்கு அஞ்சிக் கூடக் கூடுதல், இவை இத்தனையும் இல்லையாகில்,
முடிந்து போதல் செய்கையாகிற சாகசமானதொரு தொழில் விசேடமாயிற்று.

இது தன்னை, “கடலன்ன காமத்த ராகிலும் மாதர், மடலூரார் மற்றையார் மேல்” என்று உயிரின் அளவல்லாதபடி
ஆற்றாமை கரைபுரண்டாலும் பெண்கள் மடல் ஊரக்கடவர்கள் அல்லர்;
நாயகன் தன் ஆற்றாமையாலே மடல் எடுக்க உலகின்மேல் வைத்துச் சொல்லுவான்,
பின் ‘நான் வரை பாயப் புகாநின்றேன், மடல் எடுக்கப் புகாநின்றேன்’ என்று தோழிக்கு வந்து அறிவிப்பான்,
அறிவித்த பின்னரும் அவள் கூட்டிற்றிலளாகில் பின்பு அவன் இது செய்யக்கடவன்; இத்தனை அல்லது,
பெண்கள் மடல் எடுக்கக் கடவர்கள் அல்லர் என்று இங்ஙனே ஒரு மரியாதை கட்டினார்கள் தமிழர்கள்-
கடலன்ன காமத்த ராயினும் பெண்டிர் மடலேறார் மைந்தர்மேல் என்ப – மடலூர்தல்
காட்டுகேன் வம்மின் கலிவஞ்சி யார்கோமான் வேட்டமா மேற்கொண்ட போழ்து–என்பது, நச்சினார்க்கினியர்
“கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப் பெண்ணிற் பெருந்தக்க தில்.” என்பது, திருக்குறள்.
இங்கு அங்ஙன் அன்றிக்கே, பிராட்டி தான் மடல் எடுப்பதாக இராநின்றது;
தமிழர் ‘பெண்கள் மடல் எடுக்கக்கடவர் அல்லர்’ என்று சொன்ன இது, சேரும்படி என்? என்னில்,
அவர்கள் ஒரு தலையிலேதான் அதனை இசைந்தார்களே, அப்படி இசைகைக்குக் காரணம், ஆற்றாமையே;
அவ்வாற்றாமை இருவர்க்கும் ஒத்த பின்பு ஒருவர்க்கு மாத்திரம் ஒதுக்குவார் யார்?
இதற்கு ஒரு மரியாதை கட்டுகையாவது, ஆசைக்கு ஒரு வரம்பு இட்டார்களாமித்தனை.
அப்போது பின்னை அரசர் ஆணைக்கு நிற்க வேணும், இன்றேல் வேலி யடைத்தால் நிற்கவேணும்;
ஆகையால், அவர்கள் அன்பின் தன்மையை அறிந்திலர்களாமித்தனை.
வரம்பு அழியவாகிலும் முகங்காட்டி வைத்துக்கொண்டு தரிக்க வேண்டும்படியாய் இருப்பது ஒரு விஷயம் புறம்பு இல்லையே;
இங்ஙனம் இருப்பார் சிலரைக் கல்பித்துக்கொண்டார்கள் இத்தனையே.
மடல் ஏறுவர் கடவுளர் வந்தால் -பரிபாடல் -ராக பிராப்தம் மடல் எடுப்பது –

இனி, இவர்தாம், “வளவேழ் உலகு” என்ற திருவாய்மொழியில், நாம் அவனோடே கலத்தலாகிற இது
அவனுக்குத் தாழ்வினை விளைவிப்பதாம், நம் பேற்றுக்காக அவனோடே கலந்து அவனுக்குத் தாழ்வினை விளைப்பதிற்காட்டில்
நாம் அகன்று முடிந்தாகிலும் அவனுக்கு அதிசயத்தைச் செய்ய அமையும் என்று இருக்குமதனோடும் சேராது;
இனி, “ஏறாளும் இறையோனும்” என்ற திருவாய்மொழியில், அவனுக்கு உறுப்பு அல்லாத ஆத்மாவும்,
ஆத்மாவோடு சம்பந்தப்பட்ட பொருள்களும் நசித்துப்போக அமையும் என்று சொன்ன அதனோடும் சேராது;
எனக்குக் கிடைக்காத அவனும் வேண்டாம் என்கிறார் -இதில் –
ஆக, இவர்தம் 1-ஸ்வரூபத்தோடும் சேராது.2- ஆசையற்றவர்களாய் இருப்பவர்களும் செய்வது ஒன்று அன்று.
3- ஞானாதிகராய் இருப்பவர்களும் செய்வது ஒன்று அன்று. -மூன்று சங்கை – -ஆறு சமாதானங்கள் –
ஆனால், இது இருந்தபடி என்? என்னில்,
இவற்றிற்கெல்லாம் சமாதானம், பட்டர் திருமடல் வியாக்கியானம் அருளிச்செய்கிறபோது அருளிச்செய்தருளினார்;
இங்குத்தைக்கும் வேண்டுவன சொல்ல வேணுமே அன்றோ.

ஞானத்தால் மேம்பட்டவர்களாய் இருப்பவர்கள் ஜனக குலத்தில் பிறந்தவர்களாயுள்ளவர்களுக்கு மேல் இலரே அன்றோ;
அக்குடியிலே பிறந்த பிராட்டியானவள், “எந்தப் பிராட்டி முன்பு ஆகாசத்தில் சஞ்சரிக்கின்றவைகளான பூதங்களாலும்
பார்ப்பதற்கு முடியாதவளோ அந்தப் பிராட்டியை இப்பொழுது இராஜ வீதியிலுள்ள மக்கள் எல்லாரும் பார்க்கின்றார்கள்” என்கிறபடியே,
வண்ணச் சீரடி மண் மகள் அறிந்திலள் -கம்பர் – பெருமாள் காட்டிற்கு எழுந்தருளுகிற காலத்தில் “மன்னன் இராமன்பின் வைதேகி என்றுரைக்கும்,
அன்ன நடைய அணங்கு நடந்திலளே” என்கிறபடியே, அவர் பின்னே புறப்பட்டுப்போகையாலே சிஷ்டாசாரம் உண்டாயிருந்தது;
மேலும், மயர்வற மதிநலம் அருளப்பெற்ற இவர் அநுஷ்டிக்கையாலே இது தானே பிரமாணமாகத் தட்டு இல்லையே அன்றோ.
“பெரியவன் எது எதனைச் செய்கிறானோ அது அதனையே மற்ற ஜனங்களும் செய்கிறார்கள்; அந்தப் பெரியவன்
எதைப் பிரமாணமாகச் செய்கிறானோ அதனையே உலகமும் அநுசரிக்கின்றது” என்கிறபடியே,
சத்துக்களுடைய அநுஷ்டானத்தைப் பிரமாணமாகக் கொள்ளக்கடவதன்றோ.
ஆனாலும், காமம் விலக்கப்பட்டிருக்கிறதே? என்னில், அவை நிலை நில்லாமையாலே சிற்றின்பத்தில் காமமேயே யன்றோ விலக்கப்பட்டிருக்கிறது.
பகவத் விஷயத்தில் காமத்தை “தியானம் செய்யத்தக்கவன்” என்கிறபடியே, விதியா நின்றதே அன்றோ.
வேதாந்தங்களிலே விதிக்கப்பட்ட பக்தியை அன்றோ இங்குக் காமம் என்கிறது.
“வளவேழ் உலகு”என்ற திருவாய்மொழியில், நாம் கிட்டுகை அவனுக்குத் தாழ்வினைத் தருவதாம் என்று அகன்ற இவர்,
அத்தலையை அழித்து முகங் காட்டுவித்துக்கொள்ளப் பார்க்கிற இது இவர் ஸ்வரூபத்தோடு சேருமோ? என்னவும் வேண்டா;
ஆறு சமாதானங்கள் -சொல்லி அருளுகிறார் இதற்கு மேலே
1-அங்கு அகல நினைத்ததும் அத்தலைக்கு வரும் தாழ்வினை நீக்குகைக்காக அன்றோ; தமக்கு ஆற்றாமை கரை புரண்டு இருந்தது,
‘தன்னை ஆசைப்பட்டார் பெறாமலே முடிய, முகங்காட்டாமலே இருந்தான்’ என்கிற தாழ்வினை நீக்குகைக்குச் செய்கிறாராகையாலே.
கைத்தலை சேவை ஆழ்வாருக்கு தானே -ப்ரேமம் பராங்குச நாயகிக்கு தானே -ஸ்வரூபத்துடன் சேரும் –
2-அங்கு அகன்றது ஞான காரியம்; இங்கு மேல் விழுகிறது பக்தியின் காரியம்.
இத்தனை கலங்கப் பண்ணிற்றில்லையாகில், அத்தலையில் வைலக்ஷண்யத்துக்குத் தாழ்வாம்;
இவர்தாம் இப்படிக் கலங்கிற்றிலராகில் இவருடைய பிரேமத்துக்குத் தாழ்வாம். அவன் அருளியதும் மதி நலமே அன்றோ,
அவை படுத்துகிற பாடே அன்றோ இவை எல்லாம். மதியின் காரியம் அது; பக்தியின் காரியம் இது.
3-இனித் தான் சித்தோபாயத்தை மேற்கொண்டு அது பலியாவிட்டால் ஸ்வரூபத்தை வேறு வகையாகச் செய்யுமித்தனை அன்றோ;
அவன் ஸ்வரூபம் வேறுபட்டால் இத்தலை சொல்ல வேண்டாவே அன்றோ. இத்தலையில் கர்த்தவ்யம் இல்லையாகில் அவனுக்கு
அசக்தி இல்லையாகில் நடுவில் விளம்பத்துக்குக் காரணம் என்? என்று தோற்றுமே அன்றோ.
இவர்தாம் ‘மடல் எடுக்கக் கடவேன்’ என்று துணிந்த துணிவுக்கு மேற்பட அநுஷ்டிக்க வேண்டுவது இல்லையே யன்றோ
4- குணாதிக விஷயம் ஆகையாலே. ஆற்றாமையையும் உண்டாக்கி அம்பும் தொடுக்க வேண்டும்படியான விஷயத்தை அன்றே இவர் பற்றியது.
கடலைப் பெருமாள் சரணம் புக்க இடத்தில் அக்கடல் தானாக வந்து முகங்காட்டாமையாலே நாலு மூன்று அம்பை விட,
உடம்பிலே பாதி வெந்த பின்பேயன்றோ வந்து முகங்காட்டியது; இங்கு அது வேண்டாமையாலே,
“ஓ இலக்குமணா! வில்லைக் கொண்டு வா, ஆசீ விஷத்திற்கு ஒப்பான பாணங்களைக் கொண்டு வா,
சமுத்திரத்தை வற்றச்செய்யப் போகிறேன், வானர வீரர்கள் கால்களால் நடந்து செல்லட்டும்” என்றதைப் போன்று,
‘மடல் ஊர்வேன்’ என்று அச்சம் உறுத்தி முகங்காட்டுவித்துக்கொள்ளப் பார்க்கிறார்.
தம்முடைய ஸ்வரூபத்தில் கலக்கம் தொடர்ந்து நிற்கச் செய்தேயும் அவனுடைய குண ஞானத்தில் கலக்கம் இன்றிக்கே இருக்கிறது காணும் இவர்க்கு.

5-“ஏறாளும் இறையோனும்” என்ற திருவாய்மொழியில், அவனுக்கு உறுப்பு அல்லாத நானும் என்னுடைமையும் வேண்டா என்று
முடித்துக்கொள்வாய் பார்த்தஇடத்தில், அது தம் கையது அன்றிக்கே, அவன் உளனாக இது அழியாததாய் இருந்தது;
இனி அத்தலையே பிடித்து வேர்ப்பற்றோடே அழிக்கப் பார்க்கிறார்; உண்டாம் போதும் அத்தலையாலே உண்டாய்,
இல்லையாம் போதும் ஒன்றும் இல்லையாம்படி அன்றோ வஸ்துவின் ஸ்வரூபந்தான் இருப்பது.
வேர்ப் பற்று -நிரூபகம் ரஷண தர்மம் -ஒளியை அளித்தால் மணி இல்லையே -மடல் எடுத்தால் நிரூபகம் அழிந்து அவனையும் அழித்தார்
-இத்தை தானே 4-8 வேண்டிக் கொண்டார் -பிரமம் இருந்தால் தான் ஜீவாத்மா சத்தையா காரணம் -அப்ருதக் சித்த விசேஷணம் அன்றோ
6–“உயிரினாற் குறை இலம்” என்றார் அங்கு; இங்கு, உயிர்க்கு உயிரினால் குறை இலம் என்கிறார்.
“ஏறாளும் இறையோனும்” என்ற திருவாய்மொழியில், அவனுக்கு உறுப்பு அல்லாத நானும் என்னுடைமையும் வேண்டா என்றார்;
இதில், எனக்கு உறுப்பு அல்லாத அவனும் அவனுடைமையும் வேண்டா என்கிறார்.
“இராவணன் மாயா சிரசைக் காட்டினபோது, மற்றைய பெண்கள் மனத்தோடு படாமலே அழுமாறு போன்று,
தன் ஆற்றாமையாலே கூப்பிட்டு, சத்தையோடே இருந்தாள், இவ்வார்த்தை கேட்டபோதே முடியாதிருப்பான் என்?” என்று பட்டரைச் சிலர் கேட்க,
‘ஜீவனத்திற்கும் முடிதலுக்கும் நிமித்தம், ஞான அஜ்ஞானங்கள் அல்ல; அத்தலையில் சத்தையும் அது இல்லாமையும் ஆயிற்று;
அதற்கு அழிவில்லாமையாலே இருந்தாள்’ என்று அருளிச்செய்தார்.

இப்படி அத்தலையை அழித்தாகிலும் முகங்காட்டுவித்துக்கொள்ள வேண்டும்படி தமக்குப் பிறந்த நிலை விசேடத்தை,
எம்பெருமானோடே கலந்து பிரிந்தாள் ஒரு பிராட்டி. ஆற்றாமை மீதூர்ந்திருக்கச் செய்தே இவள் தரித்திருந்த இருப்பைக் கண்டு,
தோழியானவள், ‘முன்புத்தை அளவுகள் அன்றிக்கே, இவள் தேறி இருந்தாள், அவன் வாராதிருக்க இவளுக்கு
இத்தனை தேற்றம் உண்டாம் போது, சாகசங்களிலே துணிந்தாளாகவேணும்’ என்று பார்த்து,
‘நீ செய்ய நினைக்கிற இது, உன் தலைமைக்கும் அவன் தலைமைக்கும் உன் மதிப்புக்கும் உன் பிறப்புக்கும் உன்னுடைய
மர்யாதைகளுக்கும் தகாது கண்டாய்’ என்ன, ‘என் ஸ்வரூபத்தை அழித்தாகிலும் மடல் எடுக்கை தவிரேன்’ என்று
துணிந்து துணிவைத் தோழிக்கு அறிவிக்க; இதனைக் கேட்டு அஞ்சி, சர்வேச்வரன், இருந்த இடத்தில் இருக்க மாட்டாமை
வந்து முகங்காட்டித் தானும் சத்தைபெற்று இவளையும் தரிப்பித்தானாய்த் தலைக்கட்டுகிறது.
யாம் மடலூர்தூம் -தலைமை நம்மாழ்வார் கூடஸ்தர் /ஆதி மூர்த்தி -அவன் தலைமைக்கும் /
நிறை கொண்டான் -உன் மதிப்பிக்கும் /குதிரியாய் மடலூர்த்தும் –உன் பிறப்புக்கும் –தகாது கண்டாய்’ –

இவர் மடலிலே துணிந்தால் கடுக வந்து முகங்காட்டிப் பிழைக்கில் பிழைக்குமித்தனை போக்கி,
இல்லையாகில் சத்தை கிடக்க விரகு இல்லை அன்றோ அவனுக்கு; பிரஹ்மாஸ்திரத்துக்குத் தப்ப ஒண்ணாதே அன்றோ அவனுக்கு.
இதற்கு முன்னர், ‘அவனாலே பேறு’ என்று போந்தாரே யாகிலும், அடையத்தக்கதான கைங்கர்யத்துக்கு முன்பு
உள்ளனவாய் இருப்பன பரபக்தி பரஞான பரமபக்திகள் என்பன சில உளவே அன்றோ, அவை தவிர ஒண்ணாதே.
இனி, பக்திமானுக்கும் பக்தி உண்டு, பிரபந்நனுக்கும் பக்தி உண்டு, ருசியை ஒழியப் பரபத்தி பண்ணக்கூடாதே,
பக்திமானுடைய பக்தி, விதி ரூபமாய் வரும்; பிரபந்நனுடைய பக்தி, ருசி காரியமாயிருக்கும்.
பக்திமானுக்குச் சாதன ரூபமாயிருக்கும், பிரபந்நனுக்குத் தேக யாத்திரைக்கு உறுப்பாக இருக்கும்.
பக்திமானுக்குப் பலத்திலே சிரத்தை இல்லாத போது அந்தப் பக்தி தவிரலாயிருக்கும்
பிரபந்நனுக்கு ஸ்வரூபத்தோடு கூடியதாய் வருமதாகையாலே ஒருகாலும் தவிராததாயிருக்கும்.

—————————————————————————–

மாசறு சோதி என் செய்ய வாய் மணிக் குன்றத்தை
ஆசறு சீலனை ஆதி மூர்த்தியை நாடியே
பாசற வெய்தி அறிவிழந்து எனை நாளையம்
ஏசறும் ஊரவர் கவ்வை தோழி! என்செய்யுமே?–5-3-1-

இவளுடைய வியவசாயம் அறிந்த தோழி விலக்க உத்யோகிக்க -ஊரார் பழி -அவனுடைய ஆபி ரூப்யத்தில் அகப்பட்ட
என்னை பழி என்ன செய்யும்
மாசறு சோதி என் செய்ய வாய் மணிக் குன்றத்தை-அவயவ சோபையும் சமுதாய சோபைகள்-மாணிக்க மலை போலே பரம போக்யமானவன்
பிரணயிதவத்தால் வந்த தாழ்ச்சியாலே-தேடி தேடித் போகிறேன் -நிரந்தரமாக
ஆசறு சீலனை ஆதி மூர்த்தியை நாடியே-ஆசு குற்றம் அற்ற சீல சவ பாவன்
தான் முற்பாடாக வந்து அனுபவிப்பித்த -மூர்த்தி ஸ்வாமி
பாசற வெய்தி அறிவிழந்து எனை நாளையம்-மேனியில் பசுமை -அழிந்து வெளுத்து காதல் நோய் வசப்பட்டு
அறிவும் இழந்து -லௌகிக ஞானம் இழந்து
பாசு -ச்நேஹம் -பாசம் -மிகவும் எய்து -அற எய்தி என்றுமாம்
வழி அல்லா வழியில் போகசக் கூடாது என்ற அறிவும் இழந்து
ஏசறும் ஊரவர் கவ்வை தோழி! என்செய்யுமே?-அலவலைப் பேச்சு ஆராவாரப் பேச்சு என்ன செய்யும்

தோழீ! அழுக்கு நீங்கிய ஜோதி சொரூபமானவனும் சிவந்த வாயினையுடைய மாணிக்கமலை போன்றவனும் குற்றம் நீங்கிய
சீலத்தையுடையவனும் காரணனாயிருக்கின்ற மூர்த்தியுமான எம்பெருமானை விரும்பியதனால், சரீரத்திலுள்ள பசுமைநிறம்
நீங்கப் பெற்று அறிவும் நீங்கி எத்தனை காலத்தேமாயினோம்; ஊராருடைய பழிச்சொல் நம்மை என் செய்யும்? என்கிறாள்.
சோதியும் குன்றமும் சீலனும் மூர்த்தியுமான எம்பெருமான் என்க. நாடி-நாடியதனால். எனை-எத்தனை.
நாளையம்-நாட்களையுடையேம். கவ்வை-ஒலி; பழிச்சொல்.
இத்திருவாய்மொழி, கலி நிலைத்துறை.

“அழகாலும் சீலத்தாலும் மதிப்பாலும் பழிப்பு அற்றது ஒரு விஷயம் ஆயிற்று அது, நீ செய்யப் புகுகிற இதனால்
அவ்விஷயத்துக்குப் பழிப்பை உண்டாக்கப் புகுகிறாயே” என்று தோழி சொல்ல, நான் அவ்விஷயத்துக்குப் பழிப்பை
உண்டாக்கப் புகுகிறேன் அல்லேன், பழிப்பை அறுக்கப் புகுகின்றேன் காண் என்கிறாள்.

மடல் எடுத்தால் சௌந்தர்யம் சௌசீல்யம் மதிப்புக்கு பழி யாது என்னில் –
நாயகன் -நாயகி இடம் பரம பிரணயி-சௌந்தர்யத்தை தானே மேல் விழுந்து காட்டி விட வேண்டும் என்பதாய் இருக்க
மடல் எடுத்தால் கொத்தை யாகுமே
சீலம் -தலை தடுமாறுதல் -போகத்தில் தட்டு மாறும் சீலம் காட்கரையில்-உன்ன என்னதாவி –என்னில் முன்னம் பாரித்து என்னை முற்றம் பருகினான் –
இவள் தட்டு மாறி மடல் எடுக்க -ஸ்த்ரீத்வம்- இது கொத்தை சுசீல்யத்துக்கு
மதிப்பு காரணத்வம் -ஸ்ருஷ்டித்ததே தன்னை அடைய -கொடுக்காமல் மடல் எடுத்ததால் -கொத்தை வருமே மடல் எடுத்து மூன்றுக்கும் கொத்தை என்றபடி

மாசு அவனுக்கு அறுத்தது இவள் மடல் எடுத்ததால்
அறும் பிரகாரம் -சர்வ பிரகார விலஷணையாய் இருப்பவளே மடல் எடுத்ததால் -அவன் அழகு பிரசித்தம் ஆகுமே –
மடல் எடுக்க தொடங்கின உடனே அவன் முகம் காட்டுவானே -நாட்டார் -தவிக்க விடாமல் பெருமை பாராமல் வந்தானே
என்பார்களே -இத்தால் சௌசீல்யம் பிரசித்தம் ஆகுமே
இதே போலே அவன் சுசீல்யமும் காரனத்வ பிரயுக்தமான மதிப்பும் அபரிச்சின்னம் என்று தெரியுமே
நாரீனாம் உத்தமி இவள் என்பவள் பிரபன்ன ஜட கூடஸ்தர் -படைத்தவன் -சர்வாதிக வஸ்துவாக இருக்க வேண்டும் -மதிப்பும் தோற்றுமே
சோதி உடையவர் மேல் மடல் எடுத்தேன் -மடல் எடுத்ததால் அழகு பெற்றார் -இரண்டு நிர்வாகங்கள் –

மாசு அறு சோதி-
கலந்து பிரிந்தவள் ஆற்றாமை இன்றிக்கே மர்யாதைகளை நோக்கிக்கொண்டிருத்தலானது அத்தலைக்குத் தாழ்வு போலே காணும்;
பிரிந்தால், இப்படிச் செய்யாத அன்று குற்றமே அன்றோ அழகிற்கு. நான் என்னுடைய மர்யாதைகளைக் குலைத்தாகிலு
கெடுவாய், அவ்வடிவு குற்றங்கட்கு எல்லாம் எதிர்த்தட்டானது காண். -சோதி -ஒளி பெருமை வடிவு அர்த்தங்கள் உண்டே –
ஆதலால், நான் மடல் எடாது இருக்கை அவ்வடிவிற்குக் குற்றத்தை உண்டாக்குகை காண்.
‘அவன் அவ்வடிவை உகந்தார்க்குக் கொடான்’ என்னும் பழியைத் துடைக்கக் காண் நான் பார்ப்பது;
“பக்தர்களுக்காகவே என்கிற உடம்பைத் ‘தனக்கு’ என்று இருக்கையாகிற இது அவ்வடிவிற்குக் குற்றமே அன்றோ.
‘மடல் எடுத்தல் மாசு’ என்று இருக்கிறாள் தோழி; ‘மடல் எடாது ஒழிகை மாசு’ என்று இருக்கிறாள் இவள்.
பிரிவில் இப்படி ஆற்றாமை விளையாதாகில் நாம் காண்கிற விஷயங்களைப் போன்றது ஆகுமே.
வடிவிலே அணைந்தவள் ஆகையாலே முற்பட வடிவிலே -சௌந்தர்யத்தில் முதலில் -மண்டுகிறாள்.
அன்றிக்கே, மேல், ‘ஆசு அறு சீலனை’ என்னா நிற்கச் செய்தே, குணத்திலும் விக்கிரஹம் மனக் கவர்ச்சியைச் செய்கையாலே
‘மாசு அறு சோதி’ என்று முற்பட வடிவழகைச் சொல்லுகிறாள் என்னுதல். -ஐயப்பாடு அறுத்த அழகனூர் அரங்கன் அன்றோ –
நான் மடல் எடுக்க நினைத்த அளவிலே மாசு அற்று வருகிறபடி பாராய் என்கிறாள்.

என் செய்ய வாய்-
“அவாக்யநாதர:” என்கிறபடியே, வேறுபாடு இல்லாமல் இருக்கக்கூடிய பரம்பொருள், என்னோடே கலந்து அதனால் வந்த
பிரீதிக்குப் போக்கு விட்டுப் புன்முறுவல் செய்து வேறுபாட்டினை அடையக்கூடிய பொருள் போலே வேறுபட்டவன் ஆகாநிற்க,
நான் அவனைப் பிரிந்து வேறுபடாதவளாய் இருக்கவோ.
ஒரு வார்த்தை சொல்லக்கூடியவன் அன்றிக்கே, முகம் பார்த்து வார்த்தை சொல்லுகைக்குத் தன்னோடு ஒப்பது ஒரு
வேறுபொருள் இல்லாமையாலே அநாதரித் திருக்குமவன். ‘கர்மங் காரணமாக வருகின்ற வேறுபாடு இல்லை’ என்ற இத்தனை போக்கி,
அடியார்களோடு கலத்தலாலும் பிரிதலாலும் வருகின்ற வேறுபாடு இல்லை எனில், ஒரு சேதனனோடு கலந்தது அன்றிக்கே ஒழியுமே அன்றோ.
பண்டு ஸ்மிதம் -ராஜ சூயை யாகத்தில் ஊர் பூசல் -த்ரௌபதி சிரித்ததால் மகா பாரதம் -இவன் ஸ்மிதத்தால் இவள் மடல் எடுக்கிறாள்
அவன் கலந்தபோது செய்த புன்முறுவல் அன்றோ என்னை மறைவு அற்ற வழியாகிய மடல் எடுக்கையிலே மூட்டிற்று.
சம்சாரி முத்தன் ஆவானே ஆனால் அவனுக்குப் பிறக்கும் உவகை போலே காணும் இத்தலையைப் பெற்று அவன் புன்முறுவல் பூத்து நின்ற நிலை
மலர் புரையும்-தளிர் புரையும் திருவடி -கிருபையால் விகாரம்
என் செய்ய வாய் மணிக் குன்றத்தை-
இவளுடனே கலந்ததனால் உண்டான பிரீதியாலே புன்முறுவல் பூத்து வடிவிலே வேறுபாடு தோற்ற நின்ற நிலை ஆயிற்று
இவளைக் கையும் மடலுமாம்படி தொட்டுவிட்டது. வாய்க்கரையிலே நின்று மடல் எடுக்கிறாள்;
கழுத்துக்கு மேலே அன்றோ இவள் மடல் எடுக்கப் பார்க்கிறது.-மனஸ் சஹாயம் இல்லாமல் –
மணிக் குன்றத்தை – மாணிக்க மலை போன்று இனியன் ஆனவனை.-மணிக் குன்ற பெருமாள் -தஞ்சை மூன்று கோயில்களில் ஓன்று –
அதாவது, ‘கழுத்துக்கு மேலே அன்றிக்கே, மெய்யே மடல் எடுக்கச் செய்துவிட்டது என்கிறாள். என்றது, -ஹிருதயமாகவும் என்றுமாம் –
என்னோடே வந்து கலந்ததனாலே வடுவில் வைவர்ண்யம் போய்ப் புகர்த்துக் குளிர்ந்து நிலை பெற்றபடியும்,
பிரிவை நினைத்துக் கால் வாங்க மாட்டாதே நின்ற நிலையுங் காண் என்னை மடலிலே துணியப் பண்ணிற்று என்கிறாள் என்றபடி.
அசலம் பிரிவை பிரசங்கிக்கவும் மாட்டோம் மலை போல் நிற்கிறேன் -என்கிறான் மலைக் குன்றப் பெருமாள் அன்றோ –

ஆசு அறு சீலனை –
குற்றம் அற்ற சீலத்தையுடையவனை, என்றது, அவன் கலக்கிறபோது என் பேறாகக் கலந்தானாகில் அன்றோ
நானும் பிரிவில் என் பேற்றுக்கு வேண்டுமதனைச் செய்திருக்கலாவது; அம் மேன்மையுடையவன் இப்படித் தாழ நின்று
என்னைப் பெற்ற இது பெறாப் பேறாகத் தான் நினைத்திருக்க, நான் அவனைப் பிரிந்து வைத்து,
‘வரில் போகடேன், கெடில் தேடேன்’ என்று நினத்திருக்கலாமோ?
அவன் தன் குணம் பரிஹரித்துப் போக, என்னைப் பழி பரிஹரித்திருக்கச் சொல்லுகிறாயோ?
ஆக, ‘ஆசறு சீலனை’ என்றதனால், வெறும் வடிவழகு கண்டு அன்று காண் என்பதனைத் தெரிவித்தபடி.
ஆதி மூர்த்தியை –
ஜகத்துக்கு காரணம் -இவள் காதல் பெறுவதற்கும் காரணம் என்றவாறு –
‘ஒப்பற்ற குடியிலே பிறந்த உனக்கு, அவன்தானே வர இருக்குமது ஒழிய நீ பதறுகிற இதனால் உன் மதிப்பை
அறுத்துக்கொள்ளப் பார்க்கிறாயே’ என்ன, நான் மதிப்பை அறுத்துக்கொள்ளப் பார்க்கிறேன் அல்லேன்,
மதிப்பை உண்டாக்கிக்கொள்ளப் பார்க்கிறேன் என்கிறாள்;
“காரணப் பொருளே தியானம் செய்யத் தக்கது” என்று சாஸ்திரங்கள் ஒரு மிடறு செய்கிற விஷயத்தை அன்றோ நான் ஆசைப்பட்டது,
இவ்விஷயத்தை ஆசைப்பட்டுப் பெறாதே முடிந்தாலும் அதுதானே மதிப்பாம்படியான விஷயம் அன்றோ.
வியாக்கியானம் செய்வதற்கு முன்பேயும் ஒரு பொருள் உண்டு இதற்கு அருளிச்செய்வது:
பூர்வஜ -“ஆத்மாக்கள் உஜ்ஜீவிப்பதற்கு முற்பாடனாய்க் கிருஷி செய்யுமவன்” என்கிறபடியே, நம்முடைய கலவிக்கு
அவன் முற்பாடனாகச்செய்தே, பிரிவில் ஆற்றாமைக்கு நான் பிற்பட்டவள் ஆகவோ என்பது.

“ஜிதந்தே புண்டரீகாக்ஷ நமஸ்தே விஸ்வபாவந நமஸ்தேஸ்து ஹ்ருஷீகேஸ மஹாபுருஷ பூர்வஜ”
இங்கே, ‘ஜிதந்தே புண்டரீகாக்ஷ’ என்றதனால், பிரணவத்தால் சொல்லப்பட்ட சேஷத்துவமும்,
‘நமஸ்தே’ என்றதனால், நமஸ் சப்தத்தால் சொல்லப்பட்ட பாரதந்திரியமும்,
‘விஸ்வபாவந’ என்றதனால், நாராயண சப்தத்தால் சொல்லப்பட்ட காரணத்வமும்,
‘நமஸ்தேஸ்து’ என்றதனால், கைங்கர்யப் பிரார்த்தனையும்,
‘ஹ்ருஷீகேச’ என்றதனால், ‘உனக்கே நாமாட்செய்வோம்’ என்கிறபடியே, கைங்கர்யத்தால் தனக்குப் பலன் இல்லாமையும் சொல்லுகிறது.
இந்தச் சுலோகத்தில் ‘விஸ்வபாவந’ என்றதனால், ஜகத் காரணத்வம் சொல்லி இருப்பதனால், ‘பூர்வஜ’ என்பதற்கு,
சேதந உஜ்ஜீவனத்திற்கு முற்பாடனாய்க் கிருஷி பண்ணுமவன் என்றபொருள் கொண்டு
நம்முடைய கலவிக்கு அவன் முற்பாடனாய்’ என்று தொடங்கி அருளிச்செய்கிறார்-இத்தையே ஆதி மூர்த்தி என்று காட்டி அருளுகிறார்

‘ஆனாலும், காதலனைப் பிரிந்தாள், உடனே மடல் ஊர்ந்தாள்’ என்னாமே, ‘சிலநாள் ஆற்றாமையோடே பாடு ஆற்றிக் கிடந்தாள்,
பின்பு தன்னால் பொறுக்க ஒண்ணாமையான அளவு ஆனவாறே மடல் எடுத்தாள்’ என்னும் வார்த்தை படைக்க வேணுங்காண்’ என்ன,
நாடியே பாசறவு எய்தி-
பகவத் தத்துவம் உள்ள இடம் எங்கும் புக்குத்-காரார் திரு வேங்கடம் காணும் அளவே போய்-தேடிக் காணாமையால் நசை அற்றுத்
துக்கத்தை யுடையேனாய்ப் பின்பே அன்றோ மடல் எடுத்தது; பாசறவு-துக்கம். -நாடி நாடி –நரசிங்கா என்று வாடும் இவ் வாணுதலே –
அன்றிக்கே, பாசு என்று பசுமையாய், அது அறுகையாவது, வைவர்ண்யமாய், வைவர்ண்யத்தை மேற் கொண்டு என்னுதல்.
அன்றிக்கே, பாசு என்று பாசமாய், அதாவது, பற்றாய், உறவினர்கள் பக்கல் பற்று அற்று என்னுதல்;
அன்றிக்கே, சிநேகம் அடைய அவன் பக்கலிலே எய்தி என்னுதல்.
இன்றோ, நான் எத்தனைகாலம் உண்டு இப்படிக் கிலேசப்படுகிறது என்பாள் ‘எனை நாளையம்’ என்கிறாள். என்றது,
அவன் என்னைப் பெறுகைக்குப் பட்ட காலம் எல்லாம் போராவோ நான் அவனப் பிரிந்து பட்டவை என்றபடி.
காலம் எல்லாம் தேடிக் காணப் பெறாமல் துக்கப்பட்டுத் திரிந்த தத்தனை யாகாதே தான்;
சிறைக் கூடத்திலே பிறந்து அங்கே வளருமாறு போலே. பிரிவினாலே ஊகிக்கப்படுமித்தனை காணும் புணர்ச்சி.

எல்லாம் செய்தாலும் இது அறிவுடையார் செய்வது ஒன்று அன்று என்ன,
அறிவு இழந்து எனை நாளையம் –
அறிவு குடிபோய் எத்தனையோர் காலத்தோம். மயர்வற மதிநலம் அருளின அன்றே போயிற்று இல்லையோ நம்முடைய அறிவு.
அவர் அறிவே இருந்தது -என்றபடி -பறவை முதலானவற்றின் காலிலே விழுந்து தூது விட்ட அன்று, ‘அது ஞான கார்யம்’ என்று இருந்தாயோ,
இன்று இருந்து கற்பிக்கைக்கு–உபதேசிக்கைக்கு -; அன்றே மதி எல்லாம் உள் கலங்கிற்று இல்லையோ.
தன் பக்கல் கை வைத்தால் மற்றொன்று அறியாதபடி செய்யும் விஷயமே அன்றோ,
‘பேரின்பமெல்லாம் துறந்தார் தொழுதார் அத் தோள்’ என்னக் கடவதன்றோ.
“ஜனங்களின் மத்தியில் இருக்கிற இந்தச் சரீரத்தை நினையாமலே சஞ்சரிக்கிறான்” என்கிறபடியே,
பேற்றினைப் பெறுகிற சமயத்திலே இவ் வருகுள்ளவற்றை நினையாதபடி செய்கையே அன்றிக்கே,
ஞானம் பிறந்த சமயமே பிடித்தும் இவ் வருகுள்ளவற்றை நினையாமலே செய்ய வல்ல விஷயம் அன்றோ?
தன்னை அநுசந்தித்து உலக யாத்திரையையும் அநுசந்திக்கும்படியோ அவன்படி.
நன்று; நீ எல்லாம் சொன்னாலும் பழிக்கு அஞ்சவேண்டுங் காண் என்ன,
ஏசு அறும் ஊரவர் –
‘இவளை ஒரு பழி சொன்னோமாய் விட வல்லோமே’ என்று அதிலே துணிந்திருக்கிற ஊரார் என்னுதல்; என்றது,
ஏசுகையில் துணிந்திருக்கிற ஊரார் என்றபடி. இதனால், மடல் எடுக்கை நமக்குக் குற்றமாகில் அன்றோ
அவர்களுக்கும் பழி சொல்லுகையும் குற்றமாவது என்கிறாள் என்றபடி.
அன்றிக்கே, ‘பகவத் விஷயத்தில் கைவைத்தவர்களுக்கு ஒரு பழி சொன்னோமாய் விடவல்லோமே’ என்று
துக்கப்பட்டிருக்கிற ஊரார் என்னுதல்; ஏசறும் – துக்கப்பட்டிருக்கின்ற.
அன்றிக்கே, ஏசற்று இருக்கிற நமக்கு. அதாவது, ஏசும் எல்லையைக் கடந்திருக்கிற நமக்கு என்னுதல்; என்றது,
அறிவுடையார்க்கு வரக்கூடியதான பழி, அது வாசனையோடே குடிபோன நமக்கு வாராது காண்; இதற்கு அஞ்ச வேண்டா என்கிறாள் என்றபடி.

ஊரவர் கவ்வை –
பகவத் விஷயத்திலே கைவைத்தார் ‘இது பழி’ என்னில் அன்றோ பழியாவது,
இதற்குப் புறம்பாய் நின்ற ஊரார்கள் சொல்லுமது நமக்குப் பழியோ.
தோழி –
சமானமான துக்கத்தையும் சுகத்தையுமுடைய உனக்கு ‘இது பழி’ என்று தோற்றில் அன்றோ எனக்கு மீள வேண்டுவது.
என்செய்யுமே –
ஏசு அறும் எல்லையிலே நிற்கிற எனக்கு, இது -மடல் எடுத்தல் -ஏசாம்படி இருப்பார் சொல்லும் வார்த்தை கொண்டு கார்யம் என்?
ஊரார் பழி, புகழாம் எல்லையிலே அன்றோ நாம் நிற்கிறது. அவர்கள் சொல்லுகிற இது நமக்குத் தாழ்வேயோ, தாரகமாமித்தனை அன்றோ?
“அலர் எழ ஆருயிர் நிற்கும்” என்னக்கடவதன்றோ.-அபவாதம் உதிக்குமாகில் பூர்ண பிராணன் நிற்கும் -தாரகம் -அபாகாவதர் தூற்றுவதே –
“அலர் தூற்றிற்று அது முதலாக் கொண்ட என் காதல்” என்கிறபடியே, அவர்கள் பழி தாரகமாக அன்றோ மடல் எடுக்க இருக்கிறது.
ராமானுஜ சம்பந்திகள் -போக கூடாது -ஆத்மகுணம் நிறைந்த கூரத் ஆழ்வான்-கோயிலுக்கு உள்ளே போக சொல்ல போக மறுத்தார் –
நாஸ்திகன் வாயால் ஆஸ்திகன் பட்டம் பெறுவதே பேரு என்றபடி –

——————————————————————

என் செய்யும் ஊரவர் கவ்வை? தோழீ! இனி நம்மை
என் செய்யத் தாமரைக் கண்ணன் என்னை நிறைகொண்டான்
முன் செய்ய மாமை இழந்து மேனி மெலி வெய்தி
என் செய்ய வாயும் கருங்கண்ணும் பயப்பூர்ந்தவே.–5-3-2-

அவன் கண் அழகாலே ஏன் சர்வத்தையும் அபஹரித்து -ஏன் வை லஷண்யம் எல்லாம் போன பின்பு இனி என்ன கவலை இவர்கள் வசவால் –
என் செய்யும் ஊரவர் கவ்வை? தோழீ! இனி நம்மை
என் செய்யத் தாமரைக் கண்ணன் என்னை நிறைகொண்டான்பூரணமாக அபஹரித்தான்
ஸ்த்ரீத்வ பூர்த்தி போன படியால்
முன் செய்ய மாமை இழந்து மேனி மெலிவெய்தி-கண் முன்னாள் தோன்றும் மாமை நிறம் இழந்து -ஆச்ரயமான சரீரமும் மெலிந்து
என் செய்ய வாயும் கருங்கண்ணும் பயப்பூர்ந்தவே.-இழந்தவற்றை சொல்லிக் கொள்கிறாள் -அவனது வாய் கண் குறி அழியாமல் இருக்க
-கண்ணும் வெளுத்து இப்படி ஆன பின்பு
முதல் பாட்டில் -மத்யே ஒருவர் எழுந்து அருள மீண்டும் சங்கதி சொல்லக் கேட்டதும் மீண்டும் அருளிச் செய்கிறார் இதில்

தோழீ! என்னுடைய செந்தாமரைக் கண்ணன், என்னுடைய நிறையைக் கொண்டான்; முன்பு இருந்த சிறந்த மாமை நிறமும்
நீங்கிச் சரீரமும் மெலிவை அடைந்து என்னுடைய செவ்வாயும் கருங்கண்களும் பசலை நிறத்தை அடைந்தன;
ஆதலால், இனி ஊரவர் கூறுகின்ற பழிச்சொற்கள் நம்மை என் செய்யும்? என்கிறாள்.
இழக்க எய்த பயப்பு ஊர்ந்த என்க. பயப்பு – பசப்பு. ஊரவர் கவ்வை இனி நம்மை என் செய்யும் என்க. மாமை-அழகு. நிற விசேடமுமாம்.

மேல் திருவாய்மொழியில் நின்றும் இத்திருவாய்மொழிக்குப் புகுருகைக்கு வழி இரண்டாக இருக்கும்.
“சீலம் இல்லாச் சிறியன்” என்ற திருவாய் மொழியிலே கூப்பிட்டார்; கூப்பிடச் செய்தேயும் வந்து முகங்காட்டாமையாலே,
அவனுக்கு உறுப்பு அல்லாத ஆத்மாவையும் ஆத்மாவோடு சம்பந்தப்பட்ட பொருள்களையும் எனக்கு வேண்டா என்றார்;
இப்படி ஒழியப் புறம்பே பேறு இழவுமாய் இருக்கிற சம்சாரிகள் படியைக் கண்டு வெறுத்தார்;
‘ஈச்வரனும் கைவாங்கிய இவர்களை நான் திருத்துவேன்’ என்று, பகவானுடைய பரத்துவத்தை எடுத்துச் சொல்லித் திருத்தினார்;
‘இவர்களிலே ஒருவனாக இருக்கிற எனக்கு இவ்வாசி உண்டாவதே!’ என்று பகவானுடைய கிருபையைக் கொண்டாடினார்;
தாம் திருத்தத் திருந்தின ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய கூட்டத்திற்கு மங்களாசாசனம் செய்தார்;
தொடங்கின காரியம் முடிந்தவாறே பழைய இழவே தலை எடுத்து, தம் ஆற்றாமையாலே மடல் ஊர்ந்தாகிலும் பெறப் பார்க்கிறார் என்னுதல்.
அன்றிக்கே, மேலே, “மலியும் சுடர் ஒளி மூர்த்தி” என்று வடிவழகை அநுசந்தித்தார், பின்பு புறக் கலவியை விரும்பினார்,
அப்போதே பெறாமையாலே, வழி அல்லா வழியே மடல் ஊர்ந்தாகிலும் பெறப் பார்க்கிறார் என்னுதல்.
மாசறு சோதி . . . . . . என் செய்யுமே – என் செய்யவாய் மாசறு சோதி மணிக்குன்றத்தை என்று சேர்த்துக்கொள்வது,
‘இனி, விசேஷணந் தோறும் ஒரு பொருள் சொல்லவேணும்’ என்னுமதனாலே சொன்னோம்” என்று அருளிச்செய்வர்.

ஊரவர் சொல்லும் பழி நம்மை என் செய்யப் புகுகிறது என்று நின்றாள் மேல்; இது என்ன வார்த்தை சொன்னாய் ஆனாய்,
எல்லாம் செய்தாலும் பழி நீக்கப்பட வேண்டுங் காண் என்ன, நான் ‘பழி நீக்கப்பட வேண்டா’ என்றேன் அல்லேன்,
பழி நீக்கப்படுதற்கு உரிய எல்லை கடந்தது காண் என்கிறேன் என்கிறாள்.

‘ஊரவர் கவ்வை இனி நம்மை என் செய்யும் தோழீ’
என்று, தன் வடிவழகைக் காட்டுகிறாள். இம் முதலடியில் உள்ள ‘இனி’ என்ற சொல்லின் பொருளைப் பாசுரத்தில் மேல்
உள்ள மூன்று அடிகளும் விரிக்கின்றன.
என் செய்யத் தாமரைக் கண்ணன் என்னை நிறை கொண்டான், முன் செய்ய மாமை இழந்து மேனி மெலிவு எய்தி
என் செய்ய வாயும் கரும் கண்ணும் பயப்பு ஊர்ந்த; ஊரவர் கவ்வை இனி நம்மை என் செய்யும் தோழீ என்று கூட்டுக.
தோழி, தன் வாயாலே ‘மடல் ஊரக் கடவதன்று’ என்று விலக்கவும் கூட,
உடம்பு வெளுத்தல் அவளுக்கும் ஒத்திருக்கையாலே, ‘இனி என்னை’ என்னாமல், ‘இனி நம்மை’என்கிறாள்.
தோழிமாரும் “எம்மின் முன் அவனுக்கு மாய்வராலோ” என்னக் கடவதன்றோ. -முன்னமே ஈடுபடுவர் களே -என்றவாறு –
“எனக்கு அவன் வேணும்’ என்னும் தலைவி; ‘இவளுக்கு அவன் வேணும்’ என்னும் தோழி என்னும் இதுவேயாயிற்று வாசி.
ஸ்வா ர்த்ததா கந்தமும் இல்லாமல் –
தலைவியைக் காட்டிலும் தோழிக்கு ஆற்றாமை விஞ்சி இருக்கும்; அதற்குக் காரணம், தலைவனைப் பிரிகையால் உண்டான
ஆற்றாமை மாத்திரமே தலைவிக்கு உள்ளது, தலைவி நோவுபடக் காண்கையாலும்,
தலைவியும் தலைவனுமாகச் சேர இருக்குமது காணப் பெறாமையாலும் தோழிக்கு இரட்டித்திருக்குமே அன்றோ.

‘பெருமாளும் பிராட்டியுமான இருப்பிலே பிரிவு விளைந்தது’ என்று இளைய பெருமாள் மஹாராஜர்க்கு அறிவிக்க,
அவ்வார்த்தை செவியிலே படப்பட, பெருமாள் திருமேனியில் வைவர்ண்யம் இவர் உடம்பிலே மாறிற்றாயிற்று;
“ஸ ஸ்ருத்வா வாநரேந்த்ரஸ்து லக்ஷ்மணேந ஈரிதம்வச :ததாஸீத் நிஷ்பிரப: அத்யர்த்தம் ராகு க்ரஸ்த இவ அம்சுமான்” – ஸ்ரீராமா. சுந். 35 : 36
“அத்யர்த்தம் நிஷ்பிரப :- இழந்திருந்த தன்மை வாசாமகோசரம்” பிராட்டியைப் பிரிகையில் உண்டான ஆற்றாமை அன்றோ
பெருமாளுக்கு உள்ளது, பெருமாளுடைய ஆற்றாமையைக் காண்கையாலும்,
பிராட்டியும் பெருமாளுமாகச் சேர இருக்கக் காணப் பெறாமையாலும் மஹாராஜர்க்கு அவ்வளவன்றிக்கே, மிக்கிருக்குமே அன்றோ
‘அர்த்தம்’ என்ற சொல் பொருளை உணர்த்தும் சொல்லாயிற்று. அதி அர்த்தமாவது, சொற்களைக் கடந்தது. என்றது, வாசாமகோசரம் என்றபடி.
“நம் இருவர்க்கும் சுக துக்கங்கள் ஒன்றே” என்கிறபடியே, தனக்கும் தோழிக்கும் உள்ள சம்பந்தத்தை முன்னிட்டுக்கொண்டு
‘தோழி இனி நம்மை’ என்கிறாள். என்றது, ‘பழி’ என்று நீக்குதற்குப் பார்க்கிறவள் தன்னையும் பழி சொல்லுகிறாள் அன்றோ,
“நம்மிருவர்க்கும் சுகதுக்கங்கள் ஒன்றே” என்றிருக்குமது அவளுக்கும் உண்டு ஆகையாலே.
பழிக்கு அஞ்ச வேண்டாமல் இருப்பதற்கு நமக்கு இப்போது வந்தது என்? என்ன-

என் செய்யத் தாமரைக்கண்ணன் என்னை நிறை கொண்டான் –
‘என்னுடைய ஆத்மாவும் ஆத்மாவோடு சம்பந்தப்பட்ட பொருள்களும் நீ இட்ட வழக்கு அன்றோ’ என்கிற
அகவாயில் தண்ணளி தோற்றும்படி வாத்சல்யத்தாலே குதறிச் சிவந்த தாமரையைப் போன்ற திருக்கண்களாலே குளிர நோக்கி
‘நானும் என்னுடைமையும் உன்னது’ என்று சொல்லுவாரைப் போலே வந்து
இத் தலையிலுள்ள எல்லாச் செல்வத்தையும் கொள்ளைகொண்டு போனான். என்றது,
எனக்குக் கொடுப்பவனைப் போலே இருக்க நோக்கி, என்னை உரி கூறை கொண்டு போனான் என்றபடி.
சொல் ஒன்றும் செயல் ஒன்றுமாய் இருந்தன; “தூது செய் கண்கள் கொண்டு ஒன்று பேசி” என்னக்கடவதன்றோ.
சத்யம் வத சர -உண்பது தர்மம் வத சொல்லி விட்டு செய்யாமல் -போலே
என்னை நிறை கொண்டான் –
அவன் புருஷோத்தமனாய் இருக்கும் தன்மைக்குத் தாமரைக் கண்ணனாய் இருத்தல் எல்லையாய் இருக்குமாறு போல ஆயிற்று
இவள் பெண் தன்மைக்கு நிறை எல்லையாய் இருக்கும்படி.
அவன் புருஷோத்தமன் ஆனாற் போலே ஆயிற்று, இவள் பெண்ணுக்குள்ளே உத்தமியாய் இருக்கும்படி. -நாரீணாம் உத்தமி அன்றோ இவள் –
பிரிவோடே இருந்து மடல் ஊர்ந்து பழி விளையா நிற்கச் செய்தேயும் ‘என்னுடையவன்’ என்னலாம்படி காணும் அவன் கிட்டினால் இருக்கும்படி;
ஆதலின், ‘என் தாமரைக் கண்ணன்’ என்கிறாள்.
நூறாயிரம் புருஷோத்தமர்கள் கூடினாலும் தோற்றுப் போம் இதற்கு மேற்படச் செய்யலாவது இல்லை என்றாயிற்று,
இவளுடைய பெண் தன்மைக்குரிய அபிமானந்தான் இருப்பது; ஆதலின், ‘என்னை நிறைகொண்டான்’ என்கிறாள். என்றது,
கடலைத் தறை காணுமாறு செய்வது போன்று, என்னைச் செய்தான் என்றபடி.
தன்னுடைய ஆண் தன்மை முழுதையும் அழிய மாறி என்னுடைய பெண் தன்மையைக் கொண்டான் என்பாள்
‘என் செய்யத் தாமரைக் கண்ணன் என்னை நிறை கொண்டான்’ என்கிறாள். என்றது,
தான் தோற்றுப் போலே காணும் இவளைத் தோற்பித்தது என்றபடி.
மன்னார் குடி ராஜகோபாலன் -அவள் தோட்டைப் போட்டுக் கொண்டு அவளை தோற்பித்தால் போலே
-ஒரு காதில் குண்டலமும் ஒரு காதில் தோடும் உடன் இன்றும் சேவை
‘என்னை நிறை கொண்டான்’ என்று இவள்தான் தோழிக்குச் சொல்லும்படி அன்றோ பண்ணிற்று.
நிறையாவது, அடக்கம். அகவாயில் ஓடுகிற இது பிறர்க்குத் தெரியாதபடி மறைத்துக்கொண்டிருக்கை அன்றோ.
நான் எனக்கு ஓடுகிற நிலையை உனக்கு வாய்விட்டுச் சொல்லும்படி அன்றோ செய்தது.
தோழி தானும் இவள் வடிவிலே வேறுபாடு கொண்டு “உற்ற நன்னோய் இது தேறினோம்” என்று இவள் அகப்பட்டபடி
அறியுமித்தனை போக்கி, இவள்தான் தோழிக்கும் வாய்விட்டுச் சொல்லாதபடி அன்றோ பெண்மை தான் இருப்பது.
“என்னைப் பார்த்து ஒன்றும் வார்த்தை சொல்லவில்லை” என்னக் கடவதன்றோ. ‘நிறை கொண்டான்’ என்கிற இதனை விரித்துப் பேசுகிறாள் மேல்:
தீர்பாரையில் இவள் சொல்லாமல் தோழியாகவே ஊகித்துச் சொல்லும் படியான நினை யன்றோ –
நைவமாம் கிஞ்சித் -அழுகையே செய்தியாக சொல்லி -சுமந்த்ரன் -அங்கு வெட்கி ஒரு வார்த்தையும் பேச வில்லை -என்றான் -இவளுக்கு எல்லாம் கொண்டானே

உன்னிடத்தில் அவன் கொண்டவைதாம் யாவை? என்ன, ‘நிறைகொண்டான்’ என்ற சொல்லுக்குள் அடங்கி
கிடக்குமவற்றை எண்ணுகிறாள்: வியாக்யானம் மேல் –
‘மடல் ஊர்வேன்’ என்கிற என் வாயை நீ புதைத்தால், என் வடிவு மடல் எடுக்கிற இதனை என் கொண்டு மறைப்பாய் என்கிறாள்.
முன் செய்ய மாமை இழந்து-
இதற்கு மூன்று விதமாகப் பொருள் அருளிச்செய்வர்:
தன்பக்கல் கை வைப்பதற்கு முன்னே, அதாவது, பிறந்தபோதே உண்டான நிறத்தை இழந்து என்னுதல்.
அன்றிக்கே, மற்றையவற்றை இழப்பதற்கு முன்னே நிறத்தை இழந்து என்னுதல்;
முன்பு தோற்றினவற்றைப் பறித்துக் கொண்டு, பின்பே அன்றோ கிழிச்சீரையை அறுத்துக்கொள்வது;
அவன் தானும் முந்துற விரும்பியது இந்நிறத்தைக் காணும்.
அன்றிக்கே, முன்னே காணக் காண நிறத்தை இழந்து என்னுதல்.
இப்பாசுரத்தில் ‘செய்ய மாமை’ என்கிறாள்; முன்னே “மணிமாமை” என்கிறாள்;
இவ்விரண்டாலும் சிவப்பும் கறுப்பும் அல்ல இங்குச் சொல்லுகிறது;
இரண்டிலும் ஒருசேர ஏறின பிரயோஜனம், ‘விரும்பத் தக்க தன்மை’ என்பதேயாகும்.
அவனோடு கலந்து பெற்ற நிறத்தைத் தனமாக நினைத்திருந்தபடியால் ‘மாமை இழந்து’ என்கிறாள்.
சம்பந்தம் முன்இழந்தது – /முதலில் இழந்தது -/பார்த்து இருக்கும் பொழுதே இழந்தேன் –
மேனி மெலிவு எய்தி-
நீர்ப்பண்டம் போலே காணக்காணச் சரீரம் சருகு ஆகாநின்றதாயிற்று.
ஆஸ்ரயம் உண்டானால் அன்றோ தொங்குவது; ஆதலால், இனி அவன் வந்தாலும் நிறம் வந்தாலும்
தொங்குகைக்கு ஆஸ்ரயம் இல்லை என்பதைத் தெரிவித்தபடி.
என் செய்ய வாயும் கருங்கண்ணும் பயப்பு ஊர்ந்த –
அவயவியாகத் தேடுகிறேனோ, அவயவங்கள் தோறும் வருகிறபடி பாராயோ? என்கிறாள்.
இப்போது“செய்ய வாயும் கருங்கண்ணும்’ என்று தன்னுடைய அவயவங்களைத் தானே புனைந்துரைக்கிறாள் அல்லள்;
அவன் வந்து கிட்டினபோது அவனுடைய ஸ்ரீ சகஸ்ரநாமங்களுக்கு -ஸ்தோத்ரம் -விஷயம் இவையே அன்றோ,
அதனைச் செவியாலே கேட்டிருக்குமே, அதனாலே சொல்லுகிறாள். என்றது, தான் இழந்த முறை சொல்லாநிற்கச் செய்தே,
அவன் உகந்த முறை தோன்றா நின்றது காணும் இவளுக்கு என்றபடி.
அவன், தனக்கு இவற்றை எல்லாச் செல்வங்களுமாக நினைத்திருந்தபடியால்,
இவளும் ‘உன்னது என்னது’ என்று ஒருதலை பற்றுகிறாள் ‘என்வாய்’ என்று.
ஆத்ம ஸ்வரூபமும் பிராப்பிய அந்தர்க்கதமாய் அன்றோ உத்தேஸ்யமாவது, இங்ஙன் அன்றாகில்,
“மம என்ற இரண்டு எழுத்துகள் நாசத்திற்குக் காரணமாகின்றன.
பிராப்ய பூதனுக்கு உப யுக்தம் -மதியம் என்ற காரணத்தால் ஆத்மாவை கொண்டாடுகிறோம்
என்னது என்று அவன் அபிமானித்ததால் இவள் தன்னது என்கிறாள் –
ந-மம என்ற மூன்று எழுத்துகள் மோக்ஷ பதவிக்குக் காரணமாகின்றன” என்கிற வழியாலே பற்றுகிறாள் அன்றே என்றபடி.
அவன் வாய் புகு சோறு பறி யுண்ணா நின்றது என்பாள் “செய்ய வாயும் கருங்கண்ணும் பயப்பு ஊர்ந்த” என்கிறாள்.
“செங்கனி வாய் நுகர்ந்தான்”, “மண நோக்கம் உண்டான்” என்னக் கடவதன்றோ. -இவள் வாயும் கண்ணும் அவனுக்கு ஆகாரம் அன்றோ –
செய்யவாயும் கருங்கண்ணும் பயப்பு ஊர்ந்த-கடலும் மலையும் குடியிருப்புமான இடங்கள் எல்லாம் பிரளய காலத்தில் ஒரே வெள்ளமாய்
இருக்குமாறு போலே எங்கும் ஒக்க வைவர்ண்யமேயாயிற்று.-ஒரே வெளுப்பு ஆயிற்று.
விஷம் பரந்தாற்போலே காணக் காண வண்டல் இட்டு வைவர்ண்யமானது பரப்பு மாறிற்று.

——————————————————————————————-

ஊர்ந்த சகடம் உதைத்த பாதத்தன் பேய் முலை
சார்ந்து சுவைத்த செவ்வாயன் என்னை நிறை கொண்டான்
பேர்ந்தும் பெயர்ந்தும் அவனோடு அன்றி ஓர் சொல்லில்லேன்
தீர்ந்த என் தோழி! என் செய்யும் ஊரவர் கவ்வையே?–5-3-3-

விரோதி நிவர்த்தகன் -அதி சேஷ்டிதங்களுக்கு அகப்பட்டேன்
ஊர்ந்த சகடம் உதைத்த பாதத்தன் பேய் முலை-ச்தன்யார்த்தத்தால்-அந்ய பர வியாபாரத்தால்
சார்ந்து சுவைத்த செவ்வாயன் என்னை நிறை கொண்டான்-
மாச திரு நஷத்ரம் ரோஹிணி- தொட்டில் போட்டு -சகடம் 7 மாசம் –
கீதை 67 வயசில் அருளினான் -அதி சைசவ முக்த சிசு -பேய் முலை-சுவைத்து -தாய் முலைப் பாலில்
அமுது இருக்க –சுவைத்து -பித்தர் என்றே பிறர் ஏச நின்றானே
பருவம் நிரம்பா செயலாலே ஏன் நிறை கொண்டான்
பேர்ந்தும் பெயர்ந்தும் அவனோடு அன்றி ஓர் சொல்லில்லேன்-கூடியும் விலகியும் -மீண்டும் மீண்டும் –
தீர்ந்த என் தோழி! என் செய்யும் ஊரவர் கவ்வையே-ஏன் உடன் நெஞ்சு ஆகும் படி -என்னைப் போலே உள்ளக் கிடக்கை உடைய
அலர்-என்ன செய்யும் -நிறை மீட்டுக் கொடுக்குமோ
அவரை தவிர வேறு ஒருவரை அடையேன்

ஊர்ந்து வந்த சகடாசுரனை உதைத்துக் கொன்ற திருவடிகளையுடையவனும், சார்ந்து பூதனையின் முலையைச் சுவைத்த சிவந்த
வாயினையுடையவனுமான கண்ணபிரான் என் நிறையைக் கொள்ளைகொண்டான்; சென்றும் வந்தும் அவன் சம்பந்தமான வார்த்தைகளை ஒழிய வேறு வார்த்தைகளையுடையேன் அல்லேன்; அறுதியையுடைய என் தோழீ! ஊராருடைய பழிச்சொல் என்ன காரியத்தைச் செய்யும் என்கிறாள்.
தீர்ந்த-எல்லாவற்றையும் விட்டு நீங்கிய. “தீர்தலும் தீர்த்தலும் விடற்பொருட்டாகும்’ என்பது தொல்காப்பியம். தோழி ஊரவர் கவ்வை என் செய்யும் என்க.

“என் செய்யும் ஊரவர் கவ்வை” என்றாள்; ‘எல்லாம் செய்தாலும் பழி நீக்க வேண்டாவோ’ என்று இருப்பாளே அன்றோ இவள்;
‘இது பழி’ என்று நீக்க ஒண்ணாதபடி எனக்கு ஈடுபாட்டினை விளைத்தவன் எவ்வளவிலே நிற்பவன்,
‘இது பழி’ என்று மீளாதபடி இவ்விஷயத்தில் ஈடுபட்டவளாய் இருக்கிற நான் எவ்வளவிலே நிற்கிறேன்,
‘இது பழி’ என்று சொல்லுகிறவர்கள் தாம் எவ்வளவிலே நிற்கிறார்கள்,
அவர்கள் சொல்லுகிறவற்றைச் சொல்லுகிற நீதான் எவ்வளவிலே நிற்கிறாய் என்கிறாள்.
நால்வர் நிலைகளையும் நான் சொல்கிறேன் கேள் என்கிறாள்-

ஊரார் பழி புகழாம் என்னும் எல்லையிலே நான் நிற்கிறேன்
பகவத் விஷய அவஹானத்தையே தோஷம் என்கிறார்களே இவர்கள்
சமான சுக துக்க உன்னுடைய நிலை அன்றோ
அசுர நிரசனம் -பூதனை -சகடாசுரன் -இவள் பக்கல் பிராவண்யம் விளைக்கச் செய்த செயல்கள் என்கிறாள்
இது அவனுக்கு சத்தா பிரயுக்தம் -பிறந்ததே இவளுக்கு ப்ராவண்யம்
என்நின்ற இனியுமாய் பிறந்தாய் -எல்லா அவதாரங்களும் இவளுக்கு பிராவண்யம் வளர்க்கவே –
பழிக்கிற சமயத்திலே உபகாரங்களைச் சொல்லுதல், மிக்க ஈடுபாட்டினை உண்டாக்குவதற்குக் காரணங்கள் என்கிறார் –
“ஊர்ந்த சகடம் உதைத்த பாதத்தன்” என்பது போன்றவைகளைத் திருவுள்ளம்பற்றி ‘ஈடுபாட்டினை விளைத்தவன் எவ்வளவிலே நிற்பவன்’-என்கிறார்.

ஊர்ந்த சகடம் உதைத்த பாதத்தன்-
ஊருகிற சகடம் அன்று; அது செய்வது எல்லாம் செய்து முடிந்தது; இவன் ஜீவன அதிருஷ்டத்தாலே தப்பின இத்தனை.
இரண்டு சகடத்தை இரண்டு அருகும் இழுத்து நடுவே தொட்டிலை இட்டு கண் வளர்த்திப் போனாள் தாயார்;
பாடி காப்பாரே களவு காணுமாறு போலே, காவலாக வைத்த சகடமே அசுர ஆவேசத்தாலே ஊர்ந்து வந்ததாயிற்று.
அசேதனமான சகடத்தில் அசுரர்கள் ஆவேசித்து நலிவதாக ஊர்ந்து வந்ததித்தனை அன்றோ.
அதுவும் செய்வது எல்லாம் செய்து, இவனும் அகப்படுவது எல்லாம் அகப்பட்டு நின்றான்;
திருவடிகளினுடைய செயலாலே தப்பின இத்தனை ஆதலின் ‘உதைத்த பாதத்தன்’ என்கிறாள்.
இவனை அடி காத்துத் திரிந்ததித்தனை. முலை வரவு தாழ்க்கச் சீறி நிமிர்த்தத் திருவடிகளுக்கு இலக்காய்த்
துகளாய்ப் போயின இத்தனை ஆதலின் ‘உதைத்த பாதத்தன்’ என்கிறாள்
“கிருஷ்ணன் முலைப்பாலை விரும்பினவனாய்க் கொண்டு திருவடிகளை மேலே நிமிர்த்தான், அழுதான்” என்பது விஷ்ணு புராணம்.
நமக்குப் புகலான திருவடிகள்தாமே நமக்கு விருப்பம் இல்லாதவைகளையும் போக்கித் தருமாயிற்று.-ஆபத்து அடியேனுக்கு அன்றோ வந்தது –
சகடாசுரனைக் கொன்ற இது, பருவம் நிரம்பிக் கம்சனைக் கொன்ற செயலோடு ஒக்கச் சொல்லலாம்படி யன்றோ இதற்கு
முன்பே பூதனையைக் கொன்ற செயல். சகடம் வந்து கிட்டினபோது சிலராலே நீக்கப்படலாம்;
பூதனை தாய் வடிவுகொண்டு வந்து நலியப் புக்கால் அதற்குப் பரிஹாரம் இல்லையே அன்றோ,
ஈன்றோரே நஞ்சு இட்டாற்போலே இருப்பது ஒன்றே அன்றோ.
பேய் முலை சார்ந்து சுவைத்த செவ் வாயன் –
பிள்ளைகள் முலை உண்ணப் புக்கால் தாய்மார்களுடைய முலைக்கீழே முட்டினவாறே பால் சுரக்கும்,
பின்னைப் பாலை உண்டு உபகாரத்தின் நினைவாலே முகத்தைப் பார்த்துப் புன்முறுவல் செய்வார்கள்;
அப்படியே, அவளும் தாயாய் வந்து முலை கொடுக்கையாலே இவனும் பிள்ளையாயே முலைக்கீழே முட்டி முலை உண்டு,
உபகாரத்தின் நினைவாலே முகத்தைப் பார்த்து அதரத்தில் பழுப்புத் தோற்ற புன்முறுவல் செய்தாயிற்று முலை உண்டது.
“மழலை மென்னகை இடை இடை அருளா வாயிலே முலை இருக்க என் முகத்தே” என்னக் கடவதன்றோ.
“உயிரை வற்ற வாங்கி உண்டவாயான்” என்கிறபடியே, முலைப்பாலோடே இரங்கி உயிரையும் சுரக்கும்படியாக ஆயிற்று முலை உண்டது.
விஜயா முஹூர்த்தம் வாமனன் -திருவவதாரம் -கிருஷ்ணன் அவதரித்த முஹூர்த்தம் விஷமும் அமிர்தமாயிற்றே –
புன்முறுவல் செய்து முலை உண்டமைக்குப் பிரமாணம் காட்டுகிறார் “மழலை மென்னகை” என்று தொடங்கி.
குழகனே! என்தன் கோமளப் பிள்ளாய்! கோவிந்தா! என்குடங் கையில் மன்னி
ஒழுகு பேரெழில் இளம்சிறு தளிர்போல் ஒருகை யால்ஒரு முலைமுகம் நெருடா
மழலை மென்னகை இடைஇடை அருளா வாயி லேமுலை இருக்கஎன் முகத்தே
எழில்கொள் நின்திருக் கண்ணினை நோக்கம் தன்னையும் இழந்தேன் இழந்தேனே.-இது, பெருமாள் திருமொழி.

“சுவைத்த” என்றதற்குப் பிரமாணம் காட்டுகிறார் “உயிரை” என்று தொடங்கி.
முற்ற மூத்துக் கோல்துணையா முன்னடி நோக்கி வளைந்து இற்ற கால்போல் தள்ளி மெள்ள இருந்து அங்கு இளையாமுன்
பெற்ற தாய்போல் வந்த பேய்ச்சி பெருமுலையூடு உயிரை வற்ற வாங்கி உண்டவாயான் வதரி வணங்குதுமே.- இது, பெரிய திருமொழி.

ஆக, இதற்கு முன்பெல்லாம், சகடாசுரனைக் கொன்றதும், பூதனையின் பாலைக் குடித்து அவளை அழித்ததும்,
‘கம்சன் வரவிட்டனவற்றைப் போக்கினான்’ என்று இருந்தாள் அவள்;
‘எனக்குத் தன்பக்கலிலே ஈடுபாட்டினை உண்டாக்குகைக்காகச் செய்தான்’ என்று இருக்கிறாளாயிற்று இவள்.
பருவம் நிரம்பிக் காதலனாய் அதில் வல்லவனான பின்பு செய்தவை அலவோ இவளுக்குத் தன்பக்கல் ஈடுபாடு
மிகைக்குச் செய்தவையாவது, பால்யத்திலே செய்தவை இவளுக்கு உடலாம்படி எங்ஙனே? என்னில்,
இவளுக்குத் தன் பக்கல் ஈடுபாட்டினை உண்டாக்குதல் அவனுக்குச் சத்தாபிரயுக்தம் என்கை.
“எந்நின்ற யோனியுமாய்ப் பிறந்தாய்” என்று அவற்றை ஒழியவேயும் பின்பு செய்த காரியங்கள் எல்லாம்
தனக்காகச் செய்தான் என்று இருக்கிறாள் ஆயிற்று இவள்.

என்னை நிறை கொண்டான் –
ஒரு செயலாலே இரண்டு பெண்களைக் கொன்றான். பார்த்த கடாஷம் பூதனை தன் ஆத்மா சமர்ப்பணம் பண்ணும் படி ஆயிற்றே –
தன்னை ஆசைப்பட்டாரில் உகவாதார்க்கே நன்றாயிற்று; அவளை நற்கொலையாகக் கொன்றான், என்னை உயிர்க்கொலையாகக் கொன்றான்.
அவனுடைய செயல்களிலே ஒன்று குறைதல், நான் இழந்தவற்றிலே ஒன்று குறைய இழத்தல் செய்யில் அன்றோ
நீ சொல்லுகிற வார்த்தையைக் கேட்க வல்லேனாவது.
ஆகில், இத்தகைய நிலைகள் உளவானால் அவ்விஷயத்தை மறந்து உலக யாத்திரையிலே புகுந்து புறம்பு ஏதேனும்
ஒன்றைக் கொண்டு போது போக்கிக்கொண்டு இருக்க வேண்டாவோ, எல்லாம் செய்தாலும் இழக்காலாவது ஒன்றோ நிறை? என்ன,
பேர்ந்தும் பெயர்ந்தும்-போயும் வந்தும். என்றது, பிரிந்தும் கலந்தும் என்றபடி.
அவனோடு அன்றி ஓர் சொல் இல்லேன்-அவன் சம்பந்தத்தையுடைய வார்த்தை அல்லது வேறு ஒரு வார்த்தையை யுடையேன் அல்லேன்.
மறக்கையாவது, நினைப்பனவற்றிலே ஒன்றாக வேணுமே நான் ஆறி இருக்கைக்கு,“ஏது செய்தால் மறக்கேன்” என்னக் கடவதன்றோ.
நாட்டார், தங்கள் தங்கள் காதலர் காதலிகளோடு கலந்த போது அவர்களை நினைத்து, பெயர இருந்தபோது அவர்களை மறந்திருப்பர்கள்,
இதர விஷய ஸ்மரணமே மறக்கை யாகும் -அனுபூத விஷய மறக்கை இதர விஷய நினைப்பதில் ஒன்றாகும் –
சம்ச்லேஷத்தில் இதர விஷய ஸ்மரணம் இல்லையே -விஸ்லேஷ தசையிலும் அப்படியே –
அவனே பிராப்தம் -கால தேச விஷய பரிச்சின்னம் அன்றோ அவன் –
என்று மாற சொல்கிறாய் -கூடிப் பார்த்து தான் மறக்கப் பார்க்க வேண்டும் என்ன -தோழி இது என்ன -என்ன
அதே போலே பிரிந்தாலும் மறக்க முடியாதே –
கலந்து பிரிந்த விஷயத்தினுடைய தன்மையாலே; நான் பிரிந்த இது உலகத்தில் வேறுபட்ட பொருளாகையாலே,
பிரிந்தபோது மறக்கலாய் இருந்தது இல்லை, இனிக்கூடித்தான் பார்ப்போமோ மறக்கலாமாகில் என்கிறாள்.
கூடினாலும் மறக்கலாமோ? என்னில், கூடின காலத்தில் மறப்பது செய்யலாமாயின் பிரிந்தபோது மறக்கலாவதென்று வியதிரேக உக்தி.
அன்றிக்கே, அவனோடு அன்றி ஓர் சொல் இல்லேன் என்பதற்கு, ‘அவனை மற, அவனை நினை’ என்றே நீ சொல்லுவது,ஆகையாலே,
அவனை ஒழிய எனக்கு வேறு ஒரு சொல் இன்றிக்கே இருந்தது என்கிறாள் என்னுதல்.
இவள் இப்படிச் சொன்னவாறே விலக்குகிற தோழி உகந்தாள், யாங்ஙனம்? எனின்,
‘நாம் இவளை அவனோடு சேர்ப்பதற்குப் பட்டபாடும், அப்படிச் சேர்ப்பித்த நாமே இவளை மறப்பிக்க முயற்சி செய்தாலும்
மறவாதபடி உட்புகுந்தவாறும் என்னே! என்று உகந்தாள்; இவள், விலக்குகிற வார்த்தைகளை விட்டு
இவள் மனத்தினைக் கண்டாள் ‘தீர்ந்த என் தோழி’ என்கிறாள்.

தீ்ர்ந்த என் தோழி –
தாய்மார் சொல்லுகிற நல்வார்த்தைகளை நீயும் சொல்லுகையாலே, ‘நீயும் அவர்களைப் போன்று விலக்குகிறாய்’ என்று இருந்தேன்,
உன் நினைவு இதுவாகப் பெறுவதே! நீ நீயேயாம்படி இருந்தாய் வர இரு என்கிறாள்.
“இராவணன் வரவிட்ட ஆள்” என்று ஐயம் உற்று இருந்தவள், “பெருமாள் பக்கல் நின்றும் வந்தவன்” என்று
அறிந்த பின்பு அவனைக் கொண்டாடிற் போலே. என்றது, “பெருமாளால் அநுப்பப் பட்டவனாயிருப்பதனாலே,
ஓ வானர உத்தமனே! என்னுடன் இரஹசியமான சமாசாரங்களைச் சொல்லுவதற்கும் தகுதியுள்ளவன் ஆகிறாய்” என்றாள் என்றபடி.
“தோழிமாருடனே சுகமாக இருப்பாய்” என்கிற அவர்கள் படியாய் இருந்தாயே நீ என்கிறாள் என்றபடி.
“நான் அங்கு ஸ்ரீ ராமபிரானுடைய திருமாளிகையில் பன்னிரண்டு வருடங்கள் முடிய,
மனிதர்களுக்குரிய போகங்களை அநுபவித்துக்கொண்டு எல்லா விருப்பமும் முற்றுப்பெற்றவளாய் இருந்தேன்” என்கிறதும்
உன்னோடே சொல்லக்கூடியதாய் இருந்தது.

“அர்ஹஸேச கபிசிரேஷ்ட மயா ஸம்அபிபாஷிதும் யத்யபி ப்ரேஷி தஸ்தேந ராமேண விதிதாத்மநா” சுந். 36 : 10. பிராட்டி, திருவடியைப் பார்த்துக் கூறியது.
“சம்அபிபாஷிதும்” என்றதிலேயுள்ள “சம், அபி” என்ற உப சர்க்கத்திற்குப் பொருள் அருளிச்செய்கிறார் “நான் அங்கு” என்று தொடங்கி. என்கிறதும் –
என்கிற இரஹசியமும். உன்னோடே – திருவடியோடே.
“சமா த்வாதச தத்ராஹம் ராகவஸ்ய நிவேசநே புஞ்ஜாநா மாநுஷாந் போகாந் சர்வகாம சம்ருத்திநீ”- சுந். 33 : 17.

அத் தோழி தானும், பிறர் கூறுகின்ற நல்வார்த்தைகளும் இவள் செவியிற்படும்படியோ இவள்தான் நின்ற நிலை’ என்று அறிகைக்காகச்
சொன்னாளித்தனை அன்றோ.
ஊரார் பழிக்கு அஞ்சி அன்றோ நான் விலக்குகிறது என்ன, என் செய்யும் ஊரவர் கவ்வையே.
ஆகில், உனக்கு வார்த்தை சொல்ல அடுப்பது இப்படியே காண், ‘நாட்டார் பழி சொல்லுவர்கள்’ என்று சொல்லாமல்
‘என் நினைவு இருந்தபடி இது’ என்று செல்லலாவதுண்டாகில் சொல்லிக்காணாய் என்கிறாள்.
ஊரார் பழி கொண்டு காரியம் என்? உன் நெஞ்சிற் குறை இல்லாமையே அன்றோ எனக்கு வேண்டுவது என்கிறாள்.

எல்லாம் செய்தாலும் -லோகத்தார் பழி தவிர்க்க வேண்டும் -தோழி இது பழி என்று சொல்பவர்கள்
நான் எங்கே நீ எங்கே அவன் எங்கே ஊரார் எங்கே பழி அனைவரும் சொன்னாலும் கவலை இன்றி இருக்க செய்தான்
சேஷ்டிதங்கள் -செய்தவன் என்னை நிறை கொண்டான் அவனை தவிர வேறு சொல் இல்லையே
அவனை விட முடியாதபடி ஈடுபாடு செய்த பிரான் ஊரார் பழி சொன்னாலும் விட முடியாத ஈடுபாடு கொடுத்து அருளி
அத்தா அரியே என்று உன்னை அழைக்க பித்தா என்பார் லோகத்தார்

——————————————————————————-

ஊரவர் கவ்வை எருவிட்டு அன்னை சொல் நீர்படுத்து
ஈர நெல் வித்தி முளைத்த நெஞ்சப் பெருஞ் செய்யுள்
பேரமர் காதல் கடல் புரைய விளைவித்த
காரமர் மேனி நம் கண்ணன் தோழீ! கடியனே?–5-3-4-

பக்தி விளைவித்த கிருஷிகன் செயல்களை அருளிச் செய்கிறார் -அபி நிவேசம் வளரும் படி கிருஷி பண்ணின உபகாரகன்
-சீலன் -அனுபகாரனவனைப் போலே குறையச் சொல்லக் கடவையோ
தன்னை மீட்கைக்காக வார்த்தை சொல்லிய தோழியை -வாய் வார்த்தையாக பேசியதையும் பொறுக்காமல் அருளிச் செய்கிறார் –
ஊரவர் கவ்வை எருவிட்டு அன்னை சொல் நீர்படுத்து-அலர் தானே எரு -அன்னை நிரந்தர ஹித வசனம் -நீர் -பாத்தி கட்டி நிறுத்து
ஈர நெல் வித்தி முளைத்த நெஞ்சப் பெருஞ் செய்யுள்-ஆசை யாகிய நெல் -நெஞ்சம் விளை நிலம் -நாத்து –
பேரமர் காதல் கடல் புரைய விளைவித்த-ஊர் பூசல் விளைவித்த காதல் -கடல் போலே –அமர் சமர் -பெரிய சண்டை –
பெரிய அமர்த்தி -இருப்பிடம் போட்டு சிம்ஹாசனத்தில் உட்கார்ந்த காதல் என்றுமாம்
காரமர் மேனி நம் கண்ணன் தோழீ! கடியனே?-வர்ஷுவக ஸ்வ பாவம் -இத்தை வைத்தே காதல் வளர்த்தான் -திரு மேனி அழகு –
நமக்கு பவ்யனான -கண்ணன் -தோழி -நீ தானே சேர்த்து வைத்தாய் -அவளா நீ இன்று கடியன் என்று பழி சொல்வதா –

ஊரிலுள்ளவர்களால் பேசப்படுகின்ற அலராகிய எருவை இட்டு, தாயினால் பேசப்படுகின்ற நல்வார்த்தைகளாகிற தண்ணீரைப் பாய்ச்சி,
அன்பாகிய நெல்லை விதைத்து அதனை முளைப்பித்த நெஞ்சமாகிய பெரிய வயலிலே, பொருந்திய பெரிய காதலைக் கடலைப் போலே
உண்டாக்கிய மேகம் போன்ற திருமேனியையுடைய நம் கண்ணபிரான் கடியன் ஆவானோ? என்கிறாள்.
முளைத்த – முளைப்பித்த. காதலைக் கடல் புரைய விளைவித்த கண்ணன் என்க. கடியனே என்ற ஏகாரம், கடியன் ஆகான் என்னும் பொருளையுடையது; எதிர்மறை.

“என்செய்யும் ஊரவர் கவ்வை” என்றாள்; ஊரார் சொல்லும் பழியேயாய், அவன் தான் நமக்கு உடலானானோ அவர்கள்
சொல்லும் பழி பொறுத்திருக்கைக்கு; ஆனபின்பு, அவன் கடியன் காண் என்றாள்.
ஏதேனும் ஒன்றைச் சொல்லியாகிலும் மீட்க வேணுமே அவளுக்கு, ‘அவன் அருள் அற்றவன்காண்’ என்ன;
‘கெடுவாய், நீ சொல்லும் வார்த்தையே இது,அவன் நமக்கு என்ன குறை செய்தான்’ என்ன,
ஊரவர் பழி சொல்லிலும் மீளாதபடியான ஈடுபாடு உண்டான இடத்திலும் இந்நிலையில் வந்து முகங்காட்டிற்றிலன் கண்டாயே’ என்ன;
அவன் இப்போது வந்து முகங்காட்டிற்றிலனாகிலும், தான் முகங்காட்டாத போதும் தன்னை ஒழிய
நாம் மற்றொன்றால் பொருந்தாதபடி செய்தானே! அவன் செய்தபடி பொல்லாதோ என்கிறாள்.

கடியனே -பிரிநிலை -ஏகாரம் கடியன் அல்லன் -அதீத பக்தியால் -பேசும் பாசுரம் -6-2- பிரணய ரோஷம் அங்கு தான்
இதில் அதிக பிராவண்யம் கொண்டு பேசுகிறாள்
தோழி சொன்னது கொண்டு பதில் சொல்வதாக -கொண்டால் -தீர்ந்த என் தோழி -பிராவண்யம் கொண்ட -அவள் சொல்ல மாட்டாளே
முகம் காட்டாது இருக்க கடியன் அல்லன் சொல்லக் கூடுமோ
கடியன் அல்லாமையை சாதிக்கும் இவள் -முகம் காட்டாது இருக்க -ஊரார் பழிக்க -அத்தனை காதல் மட்டும் விளைவித்ததை சொல்வான் என் என்னில்
சமாதானம் -தோழி -கடியன் -சொல்லி மீட்க பார்க்கிறாள் -இவளை ரஷிக்க-ஏதாவது சொல்லி மீட்கப் பார்க்கிறாள் –
ஜாபாலி பெருமாளை திரும்ப சொல்லிய வார்த்தைகள் போலே –

ஊரவர் . . . . . . விளைவித்த கண்ணன் இவை எல்லாம் செய்தாய் நீயோ.
ஊரவர் கவ்வை எருவாக –
அநுகூலம் இல்லாதவர்களை விட்டு நீங்கிய அன்று தொடங்கி ஊரவர் பழி சொல்லத் தொடங்கினார்கள் காணும்.
தங்களை விட்டுப் போருவதற்கு முன்னே “விபீஷணஸ்து தர்மாத்மா” என்றார்களே அன்றோ;
இவன் இக்குடியில் உள்ளார்படி அல்லன், இவனுக்கு வாசி உண்டு; அந்த வேறுபாட்டினைச்சொல்லுகிறது “தர்மாத்மா” என்று.
“மறக்குடி அறஞ் செய்யக் கெடும்” என்றதே அன்றோ. “அரக்கர் செயலை உடையவன் அல்லன்” என்பது போன்று,
ஜாதி மாத்திரமே இவன் பக்கல் எடுத்துக்கொள்ளலாவது.
பிராதி கூல்ய நிவ்ருத்தி மாத்ரத்திலே பழி சொல்வார் உண்டோ -விபீஷணம் -குல பாம்சனம் -என்றார்களே –
ஹிம்சாதி பண்ணாத தர்மாத்மா -சனாதன தர்மம் பெருமாளை ஆத்மாவாகக் கொண்டவன் –
ராஷசர்களுக்கு தர்மம் சாமான்யர்களுக்கு அதர்மம் அன்றோ –
அறத்தை செய்யச் செய்ய அரக்கர் குடி மறக்குடி -கிராத வம்சம் -கெடுமே -தர்மாத்மா -என்பதே பழி என்றவாறு –

ஊரார் சொல்லுகிற பழியை இவளுடைய அன்புக்கு எருவாக இட்டான்.
ஊரார் பழி சொல்லிற்றிலர்களாகில் இவள் தானும் கைவாங்கி இருக்குங்காணும்; என்றது,
இவள், ‘மறப்பேன்’ என்னும் அன்றும் மறக்க ஒண்ணாதபடி ஊரார் நினைவினை உண்டாக்குகின்றவர்கள்
தன்மையிலே நிற்பர்கள் ஆயிற்று என்றபடி.
அன்னை சொல் நீர்படுத்து-
தாயாரும் இதற்கு முன்பெல்லாம் ‘என் மகள்’ என்றே இருந்தாள், ஊரார் பழி சொல்லப்புக்க பின்பாயிற்று இவள் அறிந்தது.
தாயாருடைய ஹித வசனத்தை நீராகப் பாய்ச்சி.
எருவாவது, அடியிலே ஒருகாலே இட்டுவிடுவதே அன்றோ, நீர் மாறாமல் பாய்ச்ச வேணுமே;
ஊரார் ஒருகால் சொல்லி விடுவர்களித்தனையே, தாயார் வீட்டுக்குள்ளே இருந்து எப்போதும் ஒரே தன்மையாக
ஹிதம் சொல்லா நிற்குமே அன்றோ; அதனால், அன்னை சொல்லை ‘நீர்’ என்கிறாள்.
ஈர நெல் வித்தி –
அன்பாகிற நெல்லை வித்தி. இவள், அன்பு இருக்கும்படி ஆராய்ச்சி செய்ததும் இவ்விஷயத்திலே ஆயிற்று;
“முலையோ முழு முற்றும் போந்தில பெருமான் மலையோ திருவேங்கடம் என்று கற்கின்ற வாசகம் இவள் பரமே” என்கிறபடியே,
இளமைப் பருவம் தொடங்கி வேறு ஒன்றினையும் அறியாள்.
புறம்பே சில விஷயங்களிலே பற்று உண்டாய் விரக்தி பிறக்க வேண்டா ஆயிற்று இவளுக்கு.
தன் சம்பந்தமான ஞானத்துக்கு உபகாரகமான மூல சுக்ருதமும் அவன் தானே ஆயிற்று.முளைத்த -இல்லை முளைப்பித்த என்றவாறு –
முளைத்த –
எருவும் இட்டு நீரும் பாய்ச்சினாலும் முளைக்கும்போதும் முளைப்பிக்கும் சக்தி உண்டாகும்போதும் அவன் உண்டாக்க வேண்டுமே;
ஆதலின், “முளைத்த” என்கிறது. “சரீர ஆரோக்யம் செல்வம்” என்னும் பொருளைத் தொடக்கமாகவுடைய சுலோகத்திலே
சுகத்திற்குச் சாதனங்களையும் சொல்லி, அவற்றுக்குப் பலமான சுகத்தையும் தனித்துச் சொல்லி,
இரண்டற்கும் பகவான் திருவருள் வேணும் என்று சொல்லியிருக்கிறதே அன்றோ.
“சரீர ஆரோக்யம் ஐஸ்வர்யம் அரிபக்ஷ ஜயஸ்ஸு கம் தேவி த்வத்திருஷ்டி திருஷ்டானாம் புருஷாணாம் ந துர்லபம்”
என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 1. 9 : 125. இது, திருமகளைப் பார்த்து இந்திரன் துதிப்பது. இது, பிராட்டி விஷயமாயினும், பிராட்டிக்கும் ஈச்வரனுக்கும்
உண்டான அபேதத்தைப் பற்ற, பிராட்டி விஷயமான இச்சுலோகம்-இவ்விடத்திற்குப் பிரமாணமாகத் தட்டு இல்லை என்க.
வரவாறு ஓன்று இல்லையேல் -சாதனம் அவன் பண்ண சாதனப்பலனை இவள் அனுபவிக்கிறார்
விஷய வைலஷண்ய அதீநாயாக இச்சாயாகா -அவிதேயத்வாத் -ஞானைத்தை மட்டுமே விதிக்க முடியும் –
விஷயத்தை படிக்க ஞானம் விதிக்கலாம் -இச்சை தானே உருவாகும் -என்றபடி -ஸ்ரீ பாஷ்யத்தில் அருளிச் செய்தாரே –
ஆத்மாவாலே ச்ரோதவ்யா மந்தவ்யா -எல்லாம் விதி இல்லை –
இங்கு ஆழ்வார் விஷயத்தில் இச்சையும் உண்டாக்கி அருளினார் என்றபடி

சிறியதைப் பெரியது நலியுமாறு போலே, ஒருவன் செய்த புண்ணியத்தினுடைய பலத்தை வேறு ஒருவன் பறித்துக்கொள்ளாமல்
, அப்புண்ணியத்தைச் செய்தவனே அநுபவிக்கும்படி செய்யும் போதும் அவன் திருவருள் வேணுமே.

நெஞ்சப் பெருஞ் செய்யுள் –
நெஞ்சமாகிற பெரிய செய்யிலே. கலவியும் பிரிவும் என்னும் இவற்றாலே புடைபடுத்திப் பரமபதத்தைப் போன்று
பரப்புடைத்தாம் படி பெருக்கினானாதலின் ‘நெஞ்சப் பெருஞ் செய்யுள்’ என்கிறாள்.
ஆக, ஊரார் அலராகிற எருவை இட்டு, தாயாராலே எப்பொழுதும் பேசப்படுகின்ற ஹித வசனமாகிற நீரை நிறுத்தி,
ஆசையாகிய நெல்லை வித்தி முளைத்த நெஞ்சமாகிற பெரிய விளை நிலத்துக்குள்ளே என்றபடி.
பேர் அமர் காதல் கடல் புரைய விளைவித்த –
பெரிதாய் அமர்ந்த காதல் ஆயிற்று. என்றது, ஊரார் சொல்லும் பழிக்கும் தாயாருடைய ஹித வசனத்துக்கும் மீளாதபடி
ஆத்மாவோடு கட்டுப்பட்டிருக்கின்ற காதல் என்றபடி.
இங்கே ‘கடல் புரைய’ என்றது, “கடலின் மிகப் பெரிதால்” -7. 3 : 6.என்னாநின்றது; “அதனில் பெரிய என்னவா” -10. 10 : 10) என்று,
ஈச்வரன் தன்னை விளாக்குலை கொள்ளும்படியான காதல் என்னா நின்றது;
ஆக, “பொய்ந்நின்ற ஞானம்” தொடங்கி இவ்வளவும் வர விளைத்துக்கொண்ட காரியம் இதுவாயிற்று.
கைங்கர்யத்திற்கு முன் கணத்தில் இருப்பதொன்றாய் இருக்குமே அன்றோ பரம பக்தி என்பது.
அது உண்டாக வேணுமே அன்றோ அவ்வருகு போம் போது; அங்கே போன பின்னர்
அங்குள்ளாரது ஒருபடியாய் இவரது ஒருபடியாய் இருக்க ஒண்ணாதே.
முதலிலே மயர்வற மதிநலம் அருளினது தன்னையே இவ்வளவாகப் பெருக்கினானாயிற்று.
அன்றிக்கே, பெரிய போரை விளைக்கக் கூடியதான காதல் என்னுதல். என்றது,
ஊர்ப்பூசலை விளைத்த காதல் என்பதனைத் தெரிவித்தபடி.
அன்றிக்கே, காமவேள் மன்னுஞ் சிலையாய் மலர்வாளி கோத்து எய்கிற காதல் என்னுதல்.
நன்று; ஈரம் என்பதற்கும், காதல் என்பதற்கும் வேறுபாடு என்? என்னில்,
“த்யாயதோ விஷயாந் பும்ஸ: ஸங்கஸ்தேஷு உபஜாயதே ஸங்காத் ஸம்ஜாயதே காம: காமாத் குரோத: அபிஜாயதே”- என்பது, ஸ்ரீ கீதை. 2 : 62.
“விஷயங்களை நினைக்கின்ற ஒரு மனிதனுக்கு அந்த விஷயங்களிலே சங்கம் உண்டாகிறது,
அந்தச் சங்கத்தால் காமம் உண்டாகிறது, அந்தக் காமத்தால் குரோதம் உண்டாகிறது” என்கிறபடியே,
அதிலே ஓர் அவஸ்தா விசேடமாம். முன் நிலையைப் பற்ற, மேல் பிறக்கும் நிலை விசேடம் வேறு பொருள் என்னலாம்படி அன்றோ இருப்பது.

கார் அமர் மேனி –
அடியிலே எருவும் இட்டு நீரும் பாய்ச்சினாலும், மேல் மழை பெய்யாதாகில் அப் பயிர் தலை குளிர்ந்து இராதே அன்றோ;
வடிவாலே ஆயிற்று மழை பெய்தது. நீர் உண்ட மேகம் போலே குளிர்ந்த வடிவு.
நம் கண்ணன் –
வடிவையும் தந்து தன்னையும் நமக்குத் தந்த கிருஷ்ணன். வெறும் வடிவில் பசை கண்டு அகப்படுமவள் அன்று,
அகவாயில் தண்ணளியும் உண்டாக வேணுமாயிற்று. கிருஷ்ணன் என்றால் ‘பெண்களுக்குச் சேஷபூதன்’ என்பது பிரசித்தமே அன்றோ.
தோழி-
நீ தான் யாராய் இவ்வார்த்தை சொல்லுகிறாய்.
இரண்டும் உனக்கே பணியோ; ‘நீர்மை யுடையவன்’ என்று பொருந்த விடுகையும் உனக்கே பணியாய்,
‘அருள் அற்றவன்’ என்று அகற்றப் பார்க்கையும் உனக்கே பணியாயோ இருப்பது!
கடியனே –
இவ்விஷயத்தில் இப்படிப் பொருந்தவிட்ட நீயே மீட்கப் பார்த்தாலும் மீளாதபடியான ஈடுபாடு உண்டாம்படி செய்தானாகில்,
இனி அவன் என் செய்வான். முன்பு நீர்மையுடையவனாகச் சொல்லப்பட்டவன், இன்று பழிக்கும்படி கடியன் ஆனானோ?

ஊரவர் கவ்வை எருவாக அன்னை சொல் நீராக நீளும் இந் நோய்.-என்ற திருக்குறளை இங்கு ஒப்பு நோக்குக.

—————————————————————————————————-

கடியன் கொடியன் நெடியமால் உலகங் கொண்ட
அடியன் அறிவரு மேனி மாயத்தன் ஆகிலும்
கொடிய என் நெஞ்சம் அவனென்றே கிடக்கும் எல்லே!
துடி கொள் இடை மடத்தோழி! அன்னை என் செய்யுமே!–5-4-5-

குண ஹீனன் ஆனாலும் அனன்யார்ஹன் ஆக்கி அருளினான்
கடியன் -சீகர பிரவ்ருத்தி பண்ணி -ஸுவ கார்யத்தில் புலி -வேகம்
கொடியன் -கார்யம் தலைக் கட்டியதும் புரிந்து பாராமல் போகும் கொடியவன்
நெடியமால் -போகப் புக்கால் விலக்க ஒண்ணாத படி மேன்மை -மறக்க முடியாத படி –
உலகங் கொண்ட அடியன் -தன்னதே -அனன்யார்ஹம் ஆக்கிக் கொண்ட -எதிர்தலைக்கு ஒன்றும் ஒட்டாத படி
காலில் கீழ் கொள்ளும் கிருத்ரிமன்
அறிவரு மேனி மாயத்தன்-அழகாலே மயக்கும் -ஸ்வ பாவன் -விவேக ஞானம் -அருமையாக இருப்பதால் கீழ் சொன்னவை தெரியாதே
ஆகிலும்
கொடிய என் நெஞ்சம் அவனென்றே கிடக்கும் எல்லே!-குற்றம் சொல்லி மீட்க முடியாத -எனக்கு பவ்யம் இல்லாத நெஞ்சை
கொடியவனை கொடியவன் என்று சொல்வதை கேட்காத கொடுமையான நெஞ்சே
துடி கொள் இடை மடத்தோழி! அன்னை என் செய்யுமஎல்லே -முற்பாடனகா மேல் விழுவான் -கடியன்
புறம்புள்ள உறவில் பற்று அறுத்து -கொடியன் /அதிசய வ்யாமோஹத்தான்-நெடியமால்
கால் கீழ் கொண்டவன் /பரிச்சேதிக்க அரியவன் /ஆச்சர்ய சேஷ்டிதங்கள்/என்றே நெஞ்சு கொள்ளுமே
என் நெஞ்சம் -செய்தவை எனக்கு அநு கூலம் என்பதால்
இடை அழகு -மடப்பம் -உடைய தோழி
பிரணய தாரையில் வாசி அறிவாயே -என்கிறாள் -மீட்கையில் நோக்கம் என்று அறிந்தேன் -நிஷேதிப்பது அன்னைக்கு அஞ்சி என்றபடி

கடியன், கொடியன், நீண்ட மால், உலகத்தைத் தாவி அளந்த திருவடிகளையுடையவன், அறிதற்கு அரிய திருமேனியையுடைய
மாயத்தையுடையவன் ஆகிலும், கொடிய என் மனம் அவன் என்றே கிடக்கும்; என்ன ஆச்சரியம்! துடியினது வடிவத்தைக் கொண்ட
இடையினையும் மடப்பத்தினையுமுடைய தோழீ! தாய் என்ன செய்ய மாட்டுவாள் என்கிறாள்.
முதல் இரண்டு அடிகளின் பொருள்களை வியாக்கியானத்திற்காணல் தகும். துடி-உடுக்கை.

“நீ அவனுக்கு நீர்மை இல்லை, அவன் அருள் அற்றவன்’ என்றாயாகிலும், அச் சொல்லுக்கு ஒரு பிரயோஜனம் இல்லை காண்,
அவன் குணம் இல்லாதவன் என்று நீ சொல்லுவது என்னை மீட்கைக்காக அன்றோ, அதுவும் நான் அவனைப் பற்றுகைக்கு
உறுப்பாகச் சொன்னாய் ஆயினாயித்தனை என்கிறாள்.

கடியன் கொடியன் நெடிய மால் உலகம் கொண்ட அடியன்
அவன் குணம் இல்லாதவன் என்று சொல்லும்போதும் நானே சொல்ல வேணுங்காண்;
நீ மூட்டிக் கடக்க நின்றாயித்தனை போக்கி, அவனைக் கலந்து உட்புகாநின்ற என்னளவு தெரியுமோ உனக்கு அவனை;
ஆனபின்னர் அவை தம்மையும் நான் சொல்லக் கேள் என்கிறாள்.
கடியன்-கூரியன்; தன் காரியத்திலே நோக்குள்ளவன். என்றது, தனக்கு ஒரு காரியம் உள்ளது ஆனால்,
எதிர்த்தலையின் அளவு பாராதே மேல்விழுந்து வந்து கலக்குமவன் என்றபடி. கடுமை-கூர்மை.
கொடியன் –தான் மேல் விழுந்து வந்து கலக்கச் செய்தே ‘பிரியேன்’ என்ன வல்லவன். என்றது,
கலவியின் மத்தியத்திலே பிரிவினை நினைத்தவன் இனிச் செய்ய மாட்டாதது ஒன்று உண்டோ? என்றது,
“பேதை நின்னைப் பிரியேன் இனி என்று அகன்றான்” என்கிறபடியே,-திருப்புல்லாணி எம்பெருமான் பொய் கேட்டு இருந்தேனே –
கலக்கச்செய்தே மற்று ஒன்றினை நினைக்க வல்லவனுக்கு இனிச் செய்ய அரியது ஒன்று உண்டோ? என்றபடி
நெடிய மால்-மால் என்பது பெருமை. நெடிய என்பது, அதன் மிகுதியைக் குறிக்கின்றது. அறப்பெரியவன் என்றபடி.
இதனால், கைபுக்கு இருக்கச் செய்தேயும் அளவிட ஒண்ணாதபடி இருக்குமவன் என்கை.
‘பிரிய நினைக்கின்றான்’ என்று அறியா நிற்கச்செய்தேயும் “சேண் குன்றம் சென்று பொருள் படைப்பான் கற்ற திண்ணனவு” என்ன
திரு விருத்தம் -திருமலை உத்தேச்யமாக போகும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் -அங்கே தடுக்க முடிந்தது ஒண்ணாதபடியாய் இருக்கை. என்றது,
மேல் விழுந்து வந்து கலவா நிற்கச்செய்தே பிரிய நினைத்தால், அதனை அறியச் செய்தேயும், ‘நீ பிரிய நினைத்தாய்’ என்று
மடி பிடித்துக் காற்கட்டி விலக்க ஒண்ணாதபடியாய் இருக்கை.
உலகம் கொண்ட அடியன் –
பிறர் உடைமையைத் தனக்கு ஆக்க நினைத்தால் பின்னையும் அவர்களுக்கு ஓர் அடியும் எஞ்சாதபடி செய்யுமவன்.
அவர்களைப் பின்னே பாதாளத்திலே தள்ளுமவன். பாதாளங் கலவிருக்கை கொடுக்குமவன்.
ஒன்றைக் கொள்ளப் பார்த்தால், அவர்களுக்கு ஒன்றும் எஞ்சாதபடி கொள்ளும் திருவடிகளையுடையவன்.

அறிவு அரு மேனி
-கிட்டினால், ‘இத்தலைக்கு எல்லாச் செல்வத்தையும் தர நினைக்கின்றானோ, எல்லாச் செல்வத்தையும்
கொள்ளை கொள்ள நினைக்கின்றானோ, என்று அறிய ஒண்ணாதபடியான வடிவையுடையவன்.
‘என்னுடைய ஆத்மாவும் என்னுடைமைகளும் நீ இட்ட வழக்கு’ என்பாரைப் போலே சொல்லி ஆயிற்று
இத் தலையில் ஆத்மாவையும் மற்றைச் செல்வத்தையும் கொள்ளைகொள்வது. என்றது,
தன்னையும் தன்னுடைமையையும் இவள் இட்ட வழக்கு ஆக்கி, பின்னையாயிற்று இவளைத் தனக்கு ஆக்கிற்று என்றபடி.
மாயத்தன்-
‘நானும் என்னுடைமையும் நீ இட்ட வழக்கு’ என்ற இவ்வார்த்தையை நினைத்து அதிலே நெஞ்சு மூழ்கியிருக்க,
அவ்வளவிலே கண்களிலே மணலைத் தூவி அகல வல்லவன்.
ஆகிலும்-
நீ சொல்லிச் சொல்ல மாட்டாதவையும், சிசுபாலன் முதலானோர் சொல்ல மாட்டாதவையும் எல்லாம்
நான் சொல்ல வல்லவள் அன்றோ அவை விடுகைக்கு உறுப்பாகப் பெற்றேனாகில்.
கொடிய என் நெஞ்சம் –
உல்லோகமாய் உலகத்திற்கு வேறுபட்டதான என் நெஞ்சு. என்றது,
நாட்டாருக்கு, குணம் பற்றுகைக்குப் பற்றாசாய்த் தோஷம் விடுகைக்கு உடலாய் இருப்பது;
அங்ஙனன்றிக்கே, குணஹாநி தன்னையே பற்றுகைக்கு உடலாகக் கொள்ளும்படியான என் நெஞ்சம் என்றபடி.
அவன் என்றே கிடக்கும்-
இத் தோஷங்கள் அவன் உடைமைகள் அன்றோ என்று ஈடுபட்டுக் கிடக்கும் என்று பிள்ளான் பணிப்பர். என்றது,
அவன் கடியன் என்றால் அவன் கடுமை இப்போதே காணவேணும்;
கொடியன் என்றால், அவன் கொடுமை இப்போதே காணவேணும்;
அவன் அடைய முடியாதவன் என்றால், அவன் அடைய முடியாதவனானபடியை இப்போதே காணவேணும்;
அவன் எல்லாச் செல்வங்களையும் கொள்ளை கொள்பவன் என்றால், அவன் எல்லாச் செல்வங்களையும் கொள்ளை கொள்ள நான் இழந்திருக்கவேணும்;
அவன் அறிய முடியாதவன் என்றால், அவன் அறிய முடியாதவனாக இருக்கும் தன்மையை இப்போதே அறியவேணும் என்ற படியாம்.
அன்றிக்கே, என் நெஞ்சுக்கு மாயாவாத ருசி உண்டோ? அறிகின்றிலேன் என்பர் சீயர். என்றது,
விசேஷணாம்சத்தில் தாத்பரியம் இன்றிக்கே, விசேஷ்யத்திற்கு அவ்வருகு அறிகின்றது இல்லை என்றபடி.
அத்வைத ருசி -விசேஷணங்கள் இல்லாத கண்ணன் -தோஷங்கள் இல்லாத கண்ணன் மட்டுமே நெஞ்சிலே பட -நிர் விசேஷம் ப்ரஹ்மம் என்றபடி
இதனால், அவனுடைய சம்பந்தம் குணம் காரணமாக வந்தது அன்று, ஸ்வரூபத்தோடு கூடியிருப்பது என்கை.
குண க்ருத தாஸ்யம் இல்லை -ஸ்வரூப பிரயுக்த தாஸ்யம் என்றபடி
எல்லே-
என்னே! இஃது ஓர் ஆச்சரியம் இருக்கும்படியே!
அன்றிக்கே, ‘உன்னை மீட்க நினைத்த நான் சொன்னபடியே அன்றிக்கே ஒழிந்த பின்பு, இனி, நீ நினைத்தபடியே நினைத்திரு’ என்று
போகப் புக்காள் தோழி; இங்ஙனே வாராய் என்று அவள் கையைப் பிடித்து ‘எல்லே’ என்று அழைக்கிறாள் என்னலுமாம்.

இவள் இப்படிச் சொன்னவாறே, ‘இது ஓர் அன்பின் தன்மை இருந்தபடி என்?’ என்று நினைத்தவாறே
தோழிக்கு ஒரு விகாரம் பிறந்தது; அதனைக் கண்டு
‘துடிகொள் இடை மடம் தோழி’ என்கிறாள்.
துடியோடு ஒத்திருக்கிற இடையையும், ஆத்ம குணத்தையுமுடைய தோழீ!
அன்றிக்கே, உன் வடிவிற்கும் குணத்திற்கும் என் பக்கலுண்டான அன்பிற்கும் ஈடாக வார்த்தை சொல்லப்பாராய் என்கிறாள் என்னுதல்.
நான் அது அறியாமையாலும் வேண்டாமையாலும் சொல்லுகிறேனோ, தாய்சொல்லுமதற்கு அஞ்சிக்காண்
நான் இப்படிச் சொல்லுகிறது என்ன, அன்னை என் செய்யுமே-உன் சொல் கேளாத நான், இனி, தாய் சொல்லோ கேட்கப் புகுகிறேன்.
அநசூயை, பிராட்டியைப் பார்த்துப் ‘பெண்களுக்குத் தெய்வம் கணவனே காணும்’ என்ன,
கேட்ட பிராட்டி நாணமுற்றுக் கவிழ்தலை இட்டிருந்தாள்; ‘நான் இவர் பக்கல் ஈடுபாடுடையவளாய் இருக்கிற இருப்புக்குக் காரணம்,
பெருமாள் பக்கல் உண்டான குணங்களாலே என்றே அன்றோ நாட்டார் நினைத்திருப்பது;
தெய்வ சம்பந்தத்தால் அவருக்குக் குணமுண்டான தித்தனை போக்கி, குணங்கள் இல்லாதவருமாய் அழகு இல்லாதவருமானாலும்
நான் அவரை விடமாட்டாதே இருக்கும் இருப்பைக் காட்டலாமே அன்றோ அவரைக் குணங்களோடு பிரித்து வைக்கப் பெற்றதாகில்’ என்றாளே அன்றோ.
ஒரு விஷயத்தில் பாவபந்தம் உறைத்திருப்பார் வார்த்தையாயிற்று இது.
“வேம்பின் புழு வேம்பு அன்றி உண்ணாது; என்னக் கடவதன்றோ. நன்று;
“இது, குணாதிக விஷயத்தில் சொல்லுகிற வார்த்தையாகில், ‘கரும்பின் புழு கரும்பு அன்றி உண்ணாது’ என்ன வேண்டவோ? என்னில்,
‘அவனுக்கு இந்நன்மைகள் இல்லையேயாகிலும் நான் அவனை விட மாட்டேன்’ என்கிற பாவபந்தத்தில் உறைப்புத் தோற்றும்படி
மாறாடிச் சொல்லுகிறதல்லது, குணாதிக விஷயத்தில் இது இருப்பதாமோ என்க.
என் ஸ்வரூபத்தைப் பார்த்தால் நான் உன்னை விட மாட்டேன், நீ நீ அன்றிக்கே இருந்தாலும் என்னால் விடப் போகாது..

ஏது செய்தால் மறக்கேன்? மனமே! தொழுதும் எழு
தாது மல்கு தடம்சூழ் பொழில் தாழ்வர் தொடர்ந்து பின்
பேதை நின்னைப் பிரியேன் இனி என்று அகன்றான் இடம்
போது நாளும் கமழும் பொழில் சூழ்ந்த புல்லாணியே.- என்பது, பெரிய திரு. 9. 3 : 3.

———————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: