பகவத் விஷயம் காலஷேபம்- 109- திருவாய்மொழி – -5-2–6….5-2-11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

கொன்று உயிர் உண்ணும் விசாதி பகைபசி தீயன எல்லாம்
நின்று இவ் வுலகில் கடிவான் நேமிப்பிரான் தமர் போந்தார்
நன்று இசை பாடியும் துள்ளி ஆடியும் ஞாலம் பரந்தார்
சென்று தொழுதுய்ம்மின் தொண்டீர்! சிந்தையைச் செந்நிறுத்தியே.–5-2-6-

சாம்சாரிக சகல கிலேசங்களும் தீரும் படி -ஆஸ்ரித சம்ஸ்ரஷன அர்த்தமாக -சர்வேஸ்வரன் அடியார்கள் எங்கும் பரந்து இருக்க
கீழ் சொன்ன அரக்கர் அசுரர் ஸ்வ பாவங்கள் உடையவர்களை -இவர்களைப் பிடித்து உய்மின்
கொன்று உயிர் உண்ணும் விசாதி பகைபசி தீயன எல்லாம்-சரீரம் முடித்து -பிராணன் -உண்ணும் -வியாதி சரீர மநோ-இரண்டும் –
பகையும் பசியும் போன்ற க்ரூர ஸ்வ பாவங்கள் எல்லா வற்றையும்
நின்று இவ் வுலகில் கடிவான் நேமிப்பிரான் தமர் போந்தார்-அடியார்கள் -செய்தன -அவனைப் பற்றினதால்
கடிவதற்க்காக போந்தார்கள்
நன்று இசை பாடியும் துள்ளி ஆடியும் ஞாலம் பரந்தார்-எங்கும் நிறைந்து -பாடி ஆடி
சென்று தொழுதுய்ம்மின் தொண்டீர்! சிந்தையைச் செந்நிறுத்தியே.–தேவதாந்திர விஷயாந்த்ரங்கள் -உபாய போக்யமாகக் கொண்டு
சேஷத்வ வ்ருத்தி கைங்கர்யம் பண்ணி உய்யலாமே -கீழ் உய்யும் வகை இல்லை என்றவர்களுக்கும் உய்ய வழி அருளிச் செய்கிறார் –

உயிரைக் கொன்று உண்ணுகின்ற நோய் என்ன, பகை என்ன, பசி என்ன, மற்றும் தீயனவாயுள்ளன எவை எவை உன்ளனவோ
அவை எல்லாவற்றையும் இவ்வுலகத்தில் விடாமல் நின்று போக்குவதற்காக, சக்கரத்தைத் தரித்த சர்வேச்வரனுடைய அடியார்கள் வந்தார்கள்;
வந்து செய்த காரியம் யாது? எனின், இசைபாடியும் துள்ளி ஆடியும் இவ்வுலகத்திலே பெரிதும் பரந்தார்கள்;
தொண்டீர்! மனத்தைச் செந்நெறியிலே நிறுத்திச் சென்று தொழுது உஜ்ஜீவிப்பீர்களாக என்கிறார்.
இவ்வுலகில் நின்று கடிவான் என்று மாற்றுக. போந்தார் பரந்தார் – போந்தார்களாகிப் பரந்தார்கள். போந்தார்: முற்றெச்சம்.
நன்று பரந்தார் எனக் கூட்டுக. “நன்று பெரிது” என்பது தொல்காப்பியம். தொண்டீர் சிந்தையைச் செந்நிறுத்தித் தொழுது உய்ம்மின் என்க.

எல்லாத் துக்கங்களையும் போக்குகைக்காக ஸ்ரீ வைணவர்கள் உலகமடையப் பரந்தார்கள்;
அவர்களோடே நீங்களும் அவனை அடைந்து உஜ்ஜீவியுங்கோள் என்கிறார்.

கொன்று உயிர் உண்ணும் விசாதி-
சரீரத்தின் பிரிவினைப் பிறப்பித்துப் பிராணன்களைக் கொள்ளை கொள்ளும்படியான வியாதி
அன்றிக்கே, பிராணனைப் பிரித்துச் சரீரத்தை முடிக்கும் வியாதி என்னுதல்.
இப்பொருளில், உயிர் என்பதற்குச் சரீரம் என்பது பொருள்.
கொன்று உயிர் உண்ணும் வியாதி-தேக விச்லேஷம் உயிர்” என்பதற்கு, இரண்டு பொருள்; ஒன்று, பிராணன். மற்றொன்று, சரீரம்.

கொன்று -பிராணனை அபஹரிக்கும் வியாதி
பகை பசி –
அப்படிச் செய்யும் பகையும் பசியும். இப்படிப் பிரித்துச் சொல்லுகிறது என்?
தீயன எல்லாம் –
தண்ணியவை எல்லாம்.
நின்று இவ்வுலகில் கடிவான் –
இவ்வுலகில் விடாமல் நின்று போக்குகைக்காக.
நேமிப் பிரான் தமர் போந்தார்-
கையும் திருவாழியுமான அழகிலே தோற்றிருக்குமவர்கள் வந்தார்கள்.
நேமிப் பிரான் தமர்-ஸ்ரீ ஆளவந்தார் நிர்வாஹத்திலே நித்திய சூரிகள்.-எம்பெருமானார் நிர்வாஹத்திலே ஸ்ரீ வைஷ்ணவர்கள்.
போந்த நேமிப்பிரான் தமர், நன்று இசை பாடியும் துள்ளி ஆடியும் ஞாலம் பரந்தார்-
நன்றான இசை பாடியும், பரபரப்போடு நிருத்தம் பண்ணியும், இப்படிப் பூமி அடையப் பரந்தார்கள்.
சென்று தொழுது உய்ம்மின்-
அவர்கள் பாடே சென்று அவர்களைத் தொழுது உஜ்ஜீவித்துப் போகுங்கோள் என்னுதல்.
அவர்களோடே சென்று சர்வேச்வரனை அடைந்து உஜ்ஜீவித்துப் போகுங்கோள் என்னுதல்.
தொண்டீர் –
தக்கது அல்லாத விஷயத்தில் தொண்டுபட்டிருக்கிற நீங்கள். என்றது, திருந்துகைக்கு யோக்கியதையுடைய நீங்கள் என்றபடி.
அது செய்யுமிடத்தில்,
சிந்தையைச் செந் நிறுத்தியே-
தொழுத பின்னர் “எனக்கு ஒன்று தா, உனக்கு ஒன்று தருகிறேன்” என்னாமல் வணங்குங்கோள் என்கிறார்.

——————————————————————————————

நிறுத்தி நும் உள்ளத்துக் கொள்ளும் தெய்வங்கள் உம்மை உய்யக்கொள்
மறுத்தும் அவனொடே கண்டீர் மார்க்கண்டேயனும் கரியே
கறுத்த மனம் ஒன்றும் வேண்டா கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை
இறுப்பதெல்லாம் அவன் மூர்த்தி யாயவர்க்கே இறுமினே.–5-2-7-

தேவதாந்தர பரரைக் குறித்து -அவனை ஒழிய -இவர்களுக்கு ரஷண சக்தி இல்லையே -அவனே தேவாதி தேவன்
நித்ய நைமித்திக கர்மங்களை -சரீரத்வ புத்தியாகக் கொண்டு அனுஷ்டிக்கப் பாருமின் –
நிறுத்தி நும் உள்ளத்துக் கொள்ளும் தெய்வங்கள் உம்மை உய்யக்கொள்-சுபாஸ்ரயம் அல்லாமல் வலிய பிடித்து -வைக்க வேண்டுமே
பேரேன் என்று நெஞ்சு நிறைய அவன் தானே நிர்ஹேதுகமாக புகுவான் -பிராப்யம் அவனுக்கே தானே உண்டு –
உஜ்ஜீவனன் ஏற்படுத்தும் போதும்அவனாலே
மறுத்தும் அவனொடே கண்டீர் மார்க்கண்டேயனும் கரியே-திரும்ப கிட்டி -நமக்கு அருள அவர்கள் இவன் இடம் சென்று -கிட்டி கிடீர் இவர்கள் கொடுப்பது
மார்கண்டேயனும் சாஷி
கறுத்த மனம் ஒன்றும் வேண்டா கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை-மனதை கறுப்பாக-வெறுத்து வைக்காமல் –
இதர தேவதா பரதவ பிரதிபத்தி பண்ணுவதே கறுத்த மனம்
இதர தேவதைகள் மேலே ஸ்ரத்தையும் இவன் தானே உண்டு பண்ணுகிறான் -நாட்டினான் –தெய்வம் எங்கும் –நல்லதோர் அருள் தன்னால் காட்டினான்
இவனே சரீரி அவர்கள் சரீரம்
இறுப்பதெல்லாம் அவன் மூர்த்தி யாயவர்க்கே இறுமினே-எல்லாம் அவன் மூர்த்தி -கிருஷ்ணனுக்கு
சரீர வடிவம் -அறிந்து -சர்வ யஜ்ஞ்ஞானாம் போக்தா ச பிரபுரேவச –செய்கின்ற கிரிசைகள் எல்லாம் யானே என்னும் -இத்யாதி
பாகவத உத்கர்ஷ ஹேதுவான இவனுக்கு பாரம்யம் அருளிச் செய்கிறார்

உங்கள் உள்ளத்திலே நிறுத்திக் கொள்ளுகின்ற தெய்வங்கள் உங்களை உஜ்ஜீவிப்பித்துக் கொள்ளுவதும் மீண்டும் அவன் திருவருளாலேயாகும்;
அதற்கு மார்க்கண்டேயனே சான்று ஆவான்;
தண்ணிய மனம் சிறிதும் வேண்டாம்; கண்ணபிரானைத் தவிர வேறு தெய்வங்கள் இல்லை; ஆதலால், உங்களால் செய்யப்படுகின்ற நித்திய நைமித்திக
கர்மங்கள் எல்லாவற்றையும் சர்வேச்வரனுக்குச் சரீரமாக இருப்பவர்கள் இந்தத் தேவர்கள் என்ற எண்ணத்தோடு அவர்களுக்கு இடுங்கோள் என்கிறார்.
நிறுத்திக் கொள்ளும் தெய்வங்கள் உம்மை உய்யக் கொள்வது அவனொடே கண்டீர் என்க. ‘அவனொடே’ என்றது, அவன் திருவருளாலேயாகும் என்றபடி
கரி – சான்று. ‘கறுத்த’ என்பது, ஈண்டுக் குற்றத்தைக் காட்டுகின்றது. இறுத்தல் – கொடுத்தல். அவன் மூர்த்தியாயவர் – அவனுக்குச் சரீரமாக இருப்பவர்கள்.

நாங்கள் பலநாள் தேவதைகளுக்குப் பச்சை இட்டு ஆராதித்துப் போந்தோம்; அதன் முடிவு கண்டு, பின்பு பகவானைப் பற்றுகிறோம் என்ன,
நீங்கள் ஆராதிக்கின்ற தேவதைகள் உங்களைக் காப்பாற்றுவதும் அவன் பக்கலிலே கொடு சென்று காட்டிக் கொடுத்தாயிற்று,
ஆன பின்பு, அவனையே ஆராதிக்கப்பெறில் அழகிது; அதுவும் மாட்டீர்கோளாகில், நீங்கள் அவர்களுக்கு இடுகிறவற்றை
‘இவர்கள் அவனுக்குச் சரீரமாக உள்ளவர்கள், இவர்கள் முகத்தாலே நாம் பகவானை ஆராதிக்கிறோம்’ என்று
புத்தி பண்ணியாகிலும் இடுதற்குப் பாருங்கோள் என்கிறார்.

நிறுத்தி –
தியானம் செய்தற்குரிய பொருளை நிலைத்திருக்கச் செய்கையும் தியானம் செய்கிறவனுக்கே பாரமாயிற்று.
தியானம் செய்கிற இவன் எடுத்த, நிறுத்த, நிற்கின்றவையே யன்றோ அந்தத் தெய்வங்கள்.
நும் உள்ளத்துக் கொள்ளும் தெய்வங்கள் –
உங்களுடைய இருதயங்களிலே கொள்ளுகின்ற தேவதைகள். ‘புறம்பே சிலர் அறியில் பரிஹசிப்பர்கள்’ என்று
தாங்களே அறிந்ததாக உபாசிப்பவர்கள் என்பார் ‘உள்ளத்துக் கொள்ளும்’ என்கிறார்.
உம்மை உய்யக்கொள்-
உங்களை உஜ்ஜீவிப்பித்துக் கொண்டார்கள் ஆகிறபடி.
மறுத்தும் அவனோடே கண்டீர்-
நீங்கள் ‘அவனிலும் இவர்கள் அடையத் தக்கவர்கள்’ என்று பற்ற, இவர்கள் உங்களை அவன் பக்கலிலே கொண்டுபோய் அன்றோ காப்பாற்றுவது.
”காப்பாற்றுவதில் நிலைநிற்கின்றவரும் எல்லா ஆத்மாக்களுக்கும் ஈச்வரனாயும் மஹாத்மாவாயும் இருக்கிறவருமான விஷ்ணுவைத் தவிர,
காப்பாற்றும் திறன் வேறு ஒருவர்க்கும் இல்லை என்பது பிரசித்தம்” என்கிறபடியே, என்றும் இரக்ஷண தர்மம் கிடப்பது அவன் பக்கலிலேயாம்.

வேறு சிலரை ஆராதிக்க அவனே பலத்தைக் கொடுக்கிறவன் ஆவான் என்பது என்? என்ன
மார்க்கண்டேயனும் கரியே-
இவ்வர்த்தத்திற்குச் சாக்ஷி மார்க்கண்டேயன்.
அம்மார்க்கண்டேயன் பலநாள் தேவனை ஆராதிக்க, அவனைப் பார்த்து, ‘பலநாள் நீ நம்மை ஆஸ்ரயித்தாய்,
இந்த ஆஸ்ரயணம் பாழே போக ஒண்ணாது, உன்னோடு என்னோடு வேற்றுமை இல்லை, உனக்கு ஒரு புகல் காட்டித் தருகிறேன் போதரு’ என்று
சர்வேச்வரன் பக்கலிலே கொண்டு சென்று, அவனுடைய விருப்பத்தைத் தலைகட்டிக் கொடுத்தான்;
ஆனபின்னர், இதற்குச் சான்று அவனே என்றபடி.
கறுத்த மனம் ஒன்றும் வேண்டா-
புன் சிறு தெய்வங்களைப் பரம்பொருளாக நினைத்து இருக்கும் தண்ணிய மனம் உங்களுக்கு வேண்டா.
கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை-
“வேதங்களும் மூன்று அக்நிகளும் ஐந்து ஆஹீதிகளும் எல்லாத் தேவர்களும் தேவகியின் புத்திரனான கண்ணபிரானே” என்கிறபடியே,
அவனுக்குச் சரீரமாக அல்லது ஸ்வதந்திரமாயிருப்பது ஒரு தேவதை இல்லை.
“எந்த எந்த பக்தன் எந்த எந்தச் சரீரத்தைச் சிரத்தையுடன் அருச்சிப்பதற்கு விரும்புகிறனோ அவன் அவனுக்கு
அந்த அந்தச் சிரத்தையையே நிலைநிற்கும்படி செய்கிறேன்” என்கிறபடியே, அக்கண்ணபிரானுக்குச் சரீரமாக உளராகில் ஆமித்தனை.
இறுப்பது எல்லாம் அவன் மூர்த்யாயவர்க்கே இறுமின் –
ஆனபின்பு, நீங்கள் அவ்வத் தேவர்கட்குக் கொடுக்கும் சமாராதநத் திரவியங்களை எல்லாம்
‘இவர்கள் அவனுக்குச் சரீரமாக இருப்பவர்கள்’ என்று புத்திபண்ணி, அவர்களுக்குக் கொடுக்கப் பாருங்கோள்.
‘இறுப்பது எல்லாம்’ என்றது, “தேவதாந்தராய-பிற தேவதையின் பொருட்டு” என்று தோற்றுகிற நித்திய
நைமித்திகக் காமங்களையெல்லாம் என்றபடி.
‘அவன் மூர்த்தியாயவர்க்கே’ என்றது, அவனுக்குச் சரீரமாக இருக்கிற அவர்களுக்கே என்றபடி.
ஆக, “அந்தராத்மா சர்வேச்வரன்’ என்று புத்திபண்ணி அவனுக்குச் சாமாராதனம் செய்கிறோம் என்ற எண்ணத்தோடு செய்யுங்கோள் என்றபடி.

—————————————————————————————–

இறுக்கும் இறை இறுத்து உண்ண எவ்வுலகுக்குந் தன்மூர்த்தி
நிறுத்தினான் தெய்வங்களாக அத் தெய்வ நாயகன் தானே
மறுத் திரு மார்வன் அவன் தன் பூதங்கள் கீதங்கள் பாடி
வெறுப்பின்றி ஞாலத்து மிக்கார் மேவித் தொழுது உய்ம்மினீரே.–5-2-8-

சர்வ தேவதா நாயகன் -ஸ்ரீ வத்ச நாயகன் -கிருஷ்ணன் -அடியார்கள் -எங்கும் நிறைந்து இருக்க
இறுக்கும் இறை இறுத்து உண்ண எவ்வுலகுக்குந் தன்மூர்த்தி-கடமை நித்ய நைமித்திக கர்மங்கள் செய்ய -சமஸ்த லோகங்களிலும்
நிறுத்தினான் தெய்வங்களாக அத் தெய்வ நாயகன் தானே-சக்கரவர்த்தி வரி வசூல் பண்ண ஆள்களை வைப்பது போலே
பரஸ்பரம் பாவயந்த -இட்ட பணி-சிஷ்யனையும் தன்னையும் தன் ஆச்சார்யருக்கு சிஷ்யர் என்றே எண்ண வேண்டுமே
நாநா ருசி -குண அனுகுணமாக –சர்வம் ப்ரஹ்மாத்மகம்-சரீர பேதங்களை -கர்ம ஆராத்ய தேவதைகளாக
மறுத் திரு மார்வன் அவன் தன் பூதங்கள் கீதங்கள் பாடி ஸ்ரீ வத்சம் மகா லஷ்மி உடன் சேர்ந்த -சர்வாதிகத்வ ஸூ சகம் -சேஷ பூதர்கள்
வெறுப்பின்றி ஞாலத்து மிக்கார் மேவித் தொழுது உய்ம்மினீரே.-சாம்சாரிக தோஷத்தால்
வெறுக்காமல் -கொடு உலகம் காட்டேல் -ததீய சம்பந்தம் அறிந்து வெறுக்காமல்
சர்வ உத்கருஷ்டர் -எங்கும் நிறைந்து இருக்க -உஜ்ஜீவனத்துக்கு இவர்களை பணிவதே வழி

தெய்வங்களுக்கு எல்லாம் நாயகனான அந்தச் சர்வேச்வரன் தானே, நீங்கள் கொடுக்க வேண்டிய பொருள்களைக் கொடுத்து,
அவர்கள் அருளைப் பெற்று உஜ்ஜீவிக்கும்படி, தன் சரீரத்தையே எல்லா உலகங்கட்கும் தெய்வங்களாக நிறுத்தினான்;
ஸ்ரீவத்சம் என்னும் மறுவும் பிராட்டியும் தங்கியிருக்கின்ற திருமார்பையுடையவனான அவ் வெம்பெருமானுடைய அடியார்கள்
இசைகளைப் பாடிக் கொண்டு இந்த உலகத்திலே வெறுப்பு இல்லாமல் நிறைந்து வசிக்கின்றார்கள்;
நீங்களும் அவர்களை அடைந்து வணங்கி உய்ந்து போகுங்கோள் என்கிறார்.
உண்ண நிறுத்தினான்; தன்மூர்த்தியை எல்லா உலகுக்கும் தெய்வங்களாக நிறுத்தினான் என்க. பூதங்கள் மிக்கார் என முடிக்க.
பொருளை நோக்கி ‘மிக்கார்’ என உயர்திணை முடிபு கொடுத்து ஓதுகிறார். நீர் மேவித் தொழுது உய்ம்மின் என்க.

இராஜசராயும் தாமசராயும் உள்ள சேதநர் குணங்களுக்குத் தகுதியாக அடையலாம்படி இதர தெய்வங்களை உலகம் அடங்கப் பரப்பி வைத்தான்;
ஆகையாலே, அவனுடைய அசாதாரண விக்கிரஹத்தில் தோற்றிருக்கும் ஸ்ரீவைஷ்ணவர்கள் உலகம் அடங்கப் பரந்தார்கள்;
நீங்களும் அவர்களைப் போன்று அவனை ஆஸ்ரயிக்கப் பாருங்கோள் என்கிறார்.

இறுக்கும் இறை இறுத்து உண்ண தன்மூர்த்தி தெய்வங்களாக எவ்வுலகுக்கும் நிறுத்தினான்-
செய்த பயிருக்குக் கடமை இறுக்குமாறு போன்று, உங்களுடைய புண்ணிய பாவங்களுக்குத் தகுதியாக
அவ்வவ் தேவதைகளுக்குக் கொடுக்கும் திரவியங்களைக் கொடுத்து ஜீவிக்கைக்காக,
எல்லா உலகங்களிலும் தனக்குச் சரீரமாக இருக்கிற தேவதைகளை நிறுத்தினான். என்றது,
இராஜாக்கள் ஊர்தோறும் கூறு செய்வார்களை வைக்குமாறு போன்று நிறுத்தி வைத்தான் என்பார் ‘நிறுத்தினான்’ என்கிறார்.
அத்தெய்வ நாயகன் தானே –
இவ்வுலகிலுள்ளாரோடு அந்தத் தேவர்களோடு வேற்றுமை யற எல்லார்க்கும் ஒக்க நியமிக்கின்றவனாய் இருக்கிற தானே
மறுத் திரு மார்வன் –
ஸ்ரீவத்ஸத்தையும் பிராட்டியையுமுடைய மார்வன் என்னுதல்; ஸ்ரீவத்ஸத்தையுடைய அழகிய மார்வையுடையவன் என்னுதல்.
அவன் பூதங்கள்-
அவனுடைய அசாதாரண விக்கிரஹத்தில் தோற்றிருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள்.
கீதங்கள் பாடி வெறுப்பு இன்றி ஞாலத்து மிக்கார்-
பிரீதியின் மிகுதியாலே கீதங்களைப் பாடி, ‘சம்சாரத்தில் வசிக்க வேண்டியிருந்ததே!’ என்கிற வெறுப்பு இன்றிக்கே பூமி எங்கும் பரந்தார்கள்.
நீர் மேவித் தொழுது உய்ம்மின் –
ஆன பின்பு, நீங்கள் சென்று அவர்களை அடைந்து உஜ்ஜீவியுங்கோள் என்னுதல்;
அந்தச் சத்துவ குணத்திலே நிலை நின்ற பெரியோர்களைப் போன்று நீங்களும் வேறு ஒரு பயனைக்
கருதாதவர்களாய்ச் சர்வேச்வரனை அடைந்து உஜ்ஜீவித்துப் போகுங்கோள் என்னுதல்.

——————————————————————————————-

மேவித் தொழுது உய்ம்மின் நீர்கள் வேதப் புனித இருக்கை
நாவிற் கொண்டு அச்சுதன் தன்னை ஞான விதி பிழையாமே
பூவிற் புகையும் விளக்கும் சாந்தமும் நீரும் மலிந்து
மேவித் தொழும் அடி யாரும் பகவரும் மிக்கது உலகே.–5-2-9-

ஆஸ்ரிதரைக் கை விடாத -அபிரச்சுத ஸ்வ பாவன் -அச்சுதன் -கைங்கர்ய குண நிஷ்டர்கள் உலகம் எங்கும் நிறைந்து இருக்க
மேவித் தொழுது உய்ம்மின் நீர்கள் வேதப் புனித இருக்கை-ருக் -வேதம் -ஸ்வரூப ரூப குண பிரதிபாதிதம்
புனிதம் -பாவனம் -புருஷ ஸூ க்தம் -நாராயண அனுவாதம்
நாவிற் கொண்டு அச்சுதன் தன்னை ஞான விதி பிழையாமே-ஆராதனா ரூபம் ஞானம் கலந்த பக்தி ஞான விதி
பூவாலே புகையும் -சாத்துப்பொடி இத்யாதி
பூவிற் புகையும் விளக்கும் சாந்தமும் நீரும் மலிந்து
மேவித் தொழும் அடி யாரும் பகவரும் மிக்கது உலகே.–அநந்ய பிரயோஜனராய் -சேஷ வ்ருத்தி ஆராதனை
கைங்கர்ய குண நிஷ்டர்கள் -வைகுந்தத்து அமரரும் முனிவரும் -முனிவர்களும் யோகிகளும் –
பரதன் -இளைய பெருமாள் போல்வார் -மிக உடைத்தானதால் அவர்களைத் தொழுது உய்மின்

வேதங்களிலேயுள்ள பரிசுத்தமான ஸ்ரீ புருஷ சூக்தங்களை நாக்கினாலே உச்சரித்துக்கொண்டு, பக்தி மார்க்கத்தினின்றும் வழுவாமல்,
பூவும் புகையும் விளக்கும் சாந்தமும் தண்ணீரும் ஆகிய இவற்றாலே நிறைந்தவர்களாய்க்கொண்டு பொருந்தி, அடியார்களை நழுவ
விடாதவனான சர்வேச்வரனைத் தொழுகின்ற அடியார்களாலும் பகவர்களாலும் உலகமானது நிறைந்திருக்கின்றது;
ஆதலால், நீங்கள் அவர்களை அடைந்து வணங்கி உய்ந்து போகுங்கோள் என்கிறார்.

உலகு அடியாரும் பகவரும் மிக்கது; நீர் மேவித் தொழுது உய்ம்மின் என்க. ‘நீர்கள்’ என்பதில் ‘கள்’ அசைநிலை.
“பிரிந்தவற் கிரங்கிப் பேதுற்று அழுதநம் கண்ணினீர்கள்” (சிந். 1391.) என்றவிடத்துக் ‘கள்’ என்பதனை அசைநிலை என்றார் நச்சினார்க்கினியர்.
மலிந்து – மலிய; எச்சத் திரிபு. அடியார் என்பதற்கு, இல்லறத்தார் என்றும், பகவர் என்பதற்குத் துறவறத்தார் என்றும் பொருள் கூறுவதும் உண்டு.

பகவத்குண நிஷ்டரும் கைங்கர்ய நிஷ்டருமான ஸ்ரீ வைஷ்ணவர்கள், பூமி எங்கும் பரந்தார்கள்;
நீங்களும் அவர்களோடு ஒக்க வேறு பயன்களைக் கருதாதவர்களாய் ஆஸ்ரயியுங்கோள் என்கிறார்.

நீர் மேவித் தொழுது உய்ம்மின் –
நீங்கள் வேறு பயன் ஒன்றனையும் கருதாதவர்களாய்க் கொண்டு ஆஸ்ரயித்து உஜ்ஜீவிக்கப் பாருங்கோள்.
வேதப் புனித இருக்கை நாவிற் கொண்டு –
வேதத்தில் அவன் விபூதி விஷயமாகப் பரக்குமவற்றை அன்றிக்கே, அசாதாரண விக்கிரஹத்திலும் குணங்களிலும்
ஸ்வரூபத்திலுமாகப் பரந்திருக்கிற ஸ்ரீ புருஷசூக்தாதிகளை நாக்கிலே கொண்டு.
நாவில் கொண்டு -நாவினால் நவிற்று -அஹ்ருதயமாக சொன்னதை அடியாருக்கும் பகவருக்கும் கொள்ளாமல் நமக்குக் கொள்வதே பொருந்தும் –
அச்சுதன் தன்னை-
இவர்கள் நாவிலே கொண்டு மனத்தோடு படாமல் சொன்னால் அதனை மனத்தொடு பட்டதாகக் கொண்டு “அவர்களை விடமாட்டேன்” என்னுமவன்.
ஞானவிதி பிழையாமே-
பக்தியினாலே தூண்டப்பட்டுச் செய்கின்ற காரியங்களில் ஒன்றும் தப்பாமல். ‘ஞானம்’ என்கிறது, ஞான விசேஷமான பக்தியை.
பூவின் புகையும் விளக்கும் சாந்தமும் நீரும் மலிந்து –
பூவோடே கூடின புகை தொடக்கமான சமாராதந உபகரணங்களை மிகுத்துக் கொண்டு.
மேவித் தொழும் அடியாரும் பகவரும் மிக்கது உலகம்-
அவனை விடாமல் நின்று அடிமை செய்யுமவர்களாலும், குணங்களை அநுசந்தானம் செய்வதற்கு அவ்வருகு ஒன்றுக்கும்
ஆற்றல் இல்லாதே இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களாலும் மிக்கது உலகம். என்றது, தொடர்ந்து அடிமை செய்யும் இளைய பெருமாளையும்,
கிடந்த இடத்தே கிடந்து குணாநுபவம் செய்யும் ஸ்ரீ பரதாழ்வானையும் போலே இருப்பாரே ஆயிற்று உலகம் அடைய என்றபடி.
ஆதலால், நீங்களும் மேவித் தொழுது உய்ம்மின் என்க.

—————————————————————————

மிக்க உலகுகள் தோறும் மேவிக் கண்ணன் திருமூர்த்தி
நக்க பிரானோடு அயனும் இந்திரனும் முதலாகத்
தொக்க அமரர் குழாங்கள் எங்கும் பரந்தன தொண்டீர்!
ஒக்கத் தொழகிற்றிராகில் கலியுகம் ஒன்றும் இலையே.–5-2-10-

சர்வாதிகன் -சர்வேஸ்வரன் -சேஷ பூதர்கள் -ஆஸ்ரயநீயத்வம் பிரதிபாதித்து -பிரயோஜ நாந்தர அர்த்தமாக –
தேவதைகள் அபிலஷித பதங்கள் பெற்றவோபாதி -நீங்களும் அவனை ஆஸ்ரயித்து-
கால தோஷம் இல்லாமல் -செய்யப் பாருமின் -மிக்க உலகுகள் தோறும் மேவிக் கண்ணன் திருமூர்த்தி
நக்க பிரானோடு அயனும் இந்திரனும் முதலாகத்-வஸ்த்ரம் இல்லாத –
தொக்க அமரர் குழாங்கள் எங்கும் பரந்தன தொண்டீர்!-இதர விஷய சபலர்கள் -திரண்ட தேவதா சமூகங்கள்
-போக்ய போக உபகரண போக ஸ்தானங்கள் இவர்களே
ஒக்கத் தொழகிற்றிராகில் கலியுகம் ஒன்றும் இலையே-புத்திக்கு அபகர்ஷம் -கலியினால் வந்தது –
பகவத் அர்ச்சக விமுகராக பாஷண்டிகள் -ஆவார்கள் -அந்த கலி தோஷம் போனதே –

சிவனும் பிரமனும் இந்திரனும் முதலாகத் திரண்ட அமரர் கூட்டங்கள் கண்ணபிரானுடைய விக்கிரஹத்தைப் பொருந்திப் பற்றிக்கொண்டு
மிக்க உலகங்கள்தோறும் எல்லாவிடங்களிலும் பரந்திருக்கின்றன; தொண்டீர்! நீங்களும் அவர்களைப் போன்று தொழுவீர்களேயானால்,
கலியுகத்தின் தோஷங்கள் ஒன்றும் இல்லையேயாம் என்றவாறு.
குழாங்கள் மேவிப் பரந்தன என்க. அன்றிக்கே, மேவித் தொக்க அமரர் எனக் கூட்டலுமாம்.

நீங்கள் அடைகின்ற தேவதைகள் செய்கிற இதனை நீங்களும் செய்தீர்கோளாகில்,
யுகம் காரணமாகப் பொருந்தி வருகின்ற தோஷங்களும் போம் என்கிறார்.

மிக்க உலகுகள் தோறும் கண்ணன் திருமூர்த்தி மேவி-
பரந்திருக்கின்ற உலகங்கள் எங்கும் கிருஷ்ணனுடைய அசாதாரண விக்கிரஹத்தைப் பற்றுகோடாகப் பற்றி.
நக்கபிரானோடு அயனும் இந்திரனும் முதலாகத் தொக்க அமரர் குழாங்கள் எங்கும் பரந்தன-
நக்க பரன் குழாங்கள் போல பல குழாங்கள் -என்பதால் பரந்தன
உருத்திரனோடே பிரஹ்மாவும் இந்திரனும் இவர்கள் தொடக்கமாகத் திரண்ட தேவ கூட்டங்கள் எங்கும் ஒக்கப் பரந்து
விரிந்த செல்வத்தையுடையன ஆயின;
தொண்டீர் ஒக்கத் தொழகிற்றிராகில் கலியுகம் ஒன்றும் இலை-
வகுத்தது அல்லாத விஷயத்திலே தொண்டு பட்டுத் திரிகிற நீங்கள், அவர்களோடு ஒக்கச் சர்வேச்வரனை அடைந்து வணங்கப்பெறில்
உங்கள் தோஷம் போகையே அன்றிக்கே, யுகம் காரணமாகப் பொருந்தி வருகின்ற தோஷமும் போம் என்கிறார்.

——————————————————————————–

கலியுகம் ஒன்றும் இன்றிக்கே தன்னடியார்க்கு அருள் செய்யும்
மலியும் சுடரொளி மூர்த்தி மாயப் பிரான்கண்ணன் தன்னைக்
கலிவயல் தென்னன் குருகூர்க் காரிமாறன் சடகோபன்
ஒலிபுகழ் ஆயிரத்து இப்பத்து உள்ளத்தை மாசறுக் கும்மே.–5-2-11-

அழுக்குகள் போக்கும்
கலியுகம் ஒன்றும் இன்றிக்கே தன்னடியார்க்கு அருள் செய்யும்-அசாதாராண சேஷ பூதர்கள் –
ஸூ விஷய ஞான பிரேம வ்ருத்தி மூன்றையும் செய்து
மலியும் சுடரொளி மூர்த்தி மாயப் பிரான்கண்ணன் தன்னைக்-மிக்க ஒளி நிறைந்த -திரு மேனி -உடையவன்
உபகாரகன் -அனுபவிப்பித்து -மாயத்தை –
கலிவயல் தென்னன் குருகூர்க் காரிமாறன் சடகோபன்-கலி -சம்ருத்தமான செழிப்பு மிடுக்கு -குல வை லஷண்யம்
ஒலிபுகழ் ஆயிரத்து இப்பத்து உள்ளத்தை மாசறுக் கும்மே.-ஒலி-எங்கும் புகழும் பகவத் குண பிரதை
தேவதாந்திர பரத்வம் சங்கை –ஸ்ரீ வைஷ்ணவர் நமக்கு சாம்யம் -பிரதிபத்தி –பிரயோஜநாந்தரம்-பிராவண்யரூபம் அழுக்குகள்

கலியுகம் காரணமாக வருகின்ற தோஷங்கள் ஒரு சிறிதும் இன்றிக்கே, தன் அடியார்களுக்குத் திருவருள் புரிகின்ற, நிறைந்த மிக்க
சுடரையுடைய திவ்விய மங்கள விக்கிரஹத்தையுடையவனும் மாயப்பிரானும் கண்ணனுமான சர்வேச்வரன் விஷயமாக, வளப்பம் பொருந்திய
வயல்களாற் சூழப்பட்ட தெற்கேயுள்ள சிறந்த திருக்குருகூரிலே அவதரித்த காரிமாறனாகிய ஸ்ரீ சடகோபராலே அருளிச்செய்யப்பட்ட தழைத்த
புகழோடு கூடின ஆயிரம் திருப்பாசுரங்களுள் இந்தப் பத்துத் திருப்பாசுரங்களும் உள்ளத்திலேயுள்ள குற்றங்களை நீக்கும் என்றபடி.
இன்றிக்கே, அருள்செய்யும் மாயப்பிரான் என்க. கண்ணன் தன்னைச் சடகோபன் (சொன்ன) ஆயிரம் என்க. தென்-அழகுமாம்.

இத்திருவாய்மொழி கற்றார்க்கு, மற்றைத் தேவர்கள் பக்கல் உண்டான பரத்துவ சங்கையும், எம்பெருமான் பக்கல் வேறு
பிரயோஜனங்களை விரும்புகின்ற தன்மையுமான மனத்தின் தோஷங்கள் எல்லாம் போகும் என்கிறார்.

கலியுகம் ஒன்றும் இன்றிக்கே-
“எவனுடைய மனத்தில் கோவிந்தன் இருக்கிறானோ அவனுக்குக் கலியுகம் கிருதயுகமாக இருக்கிறது;
எவனுடைய மனத்தில் கிருஷ்ணன் இல்லையோ அவனுக்குக் கிருதயுகம் கலியுகம் ஆகிறது” என்கிறபடியே,
கலிதோஷங்கள் ஒன்றும் வாராதபடி தன் அடியார்க்கு அருள் செய்யும்.
நாட்டுக்கு இட்ட அஃகம்-மூல தனம் – அல்லவே யன்றோ அந்தப் புரத்துக்கு -அடியார்க்கு -இடுவது.
மலியும் சுடர் ஒளி மூர்த்தி-
சுடர் என்றும் ஒளி என்றும் பரியாயமாய், இரண்டாலும் மிகுதியைச் சொல்லுகிறது.
மலிதல்-நிறைதலாய், மிக்க ஒளியாலே நிறைந்த வடிவு என்றபடி.
இதனால், அருள்செய்யாது ஒழிந்தாலும் விட ஒண்ணாத வடிவழகைக் கூறியபடி.
மாயம் பிரான் கண்ணன் தன்னை-
ஆச்சரியமான குணங்களையும் செயல்களையுமுடைய கண்ணனை ஆயிற்றுக் கவி பாடிற்று.
கலி வயல் தென்னன் குருகூர்க் காரிமாறன் சடகோபன்-
கலி என்று, மிடுக்குக்கும் ஆரவாரத்துக்கும் பெயர். இவற்றால், பூசாரத்தைச் சொல்லுதல்;
நடுவது, அறுப்பது, உழுவதாகச் செல்லும் ஆரவாரத்தைச் சொல்லுதல்.
இப்படிப்பட்ட வயல்களையுடைத்தாயிருந்துள்ள திருநகரியில் ஆழ்வார் அருளிச்செய்த
ஒலி புகழ் ஆயிரத்து இப் பத்து உள்ளத்தை மாசு அறுக்கும்-
பிரசித்தமான புகழையுடைத்தான ஆயிரத்திலும், இந்தப் பத்தும்,
வேறு தேவர்கள் பக்கல் பரத்துவ சங்கை பண்ணுதல்,-கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை
ஸ்ரீ வைஷ்ணவர்கள் பக்கல் சஜாதீய புத்தி பண்ணுதல்,-தொழுது தொழுது நின்று ஆர்க்கும்
பாகவதரல்லாதாருடைய சகவாசம் நன்று என்று இருத்தல்,-ஊழி பெயர்த்திடும் கொன்றே
வேறு பிரயோஜனங்களை விரும்புதல் ஆகிற மானச தோஷங்களைப் போக்கும்.-சிந்தையை செந்திருத்தியே

கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை கறுத்த மனம் வேண்டா -அனன்யார்ஹ சேஷத்வம்
சென்று தொழுது உய்மின் -நமஸ் ததீய சேஷத்வம்
திருதிய பத -ஐஸ்வர்யாகைவல்ய நிவ்ருத்தி -புருஷார்த்தம்
மாசு அறுக்கும் ஸ்வரூப உபாய புருஷார்த்தம் மாசு மூன்றையும் சொன்ன படி –

————————————————————————————

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

முனி த்ருதீயே
ஆசாஸ்தி மங்களம்
ஆலோக்யன்
கலி நாத்
ஆத்மா உபதேச
விபைவி சாமித
அஹப்ருந்தம்
ஆரப்த வைஷ்ணவ சம்ருத்தி
சமுதயமானம்
ஜகத் அக சமனதவம் – கல்யாண குணம்

———————————————————

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –

பரிட காந்தௌ
சரச துளைசௌ அலங்க்ருத
தாத்ரு பாவே கரிய முகில்
வைகுண்டத்வே -ச 4/5/–கடல் பள்ளி –
சக்ர பிரகரண
வசித-மருத்தும்-நியந்தா
தேவதா ச்தாபதாநௌ -ஆதி ஸ்ரீ யபதித்வம்
ஸ்வா நா நத்ஜயேயம்-
சகல நியமனே சர்வ கர்ம இஜ்ஜ்ய பாவே
நித்யா சக்தா
ஜகத் அக சமணம் பிராக கிருஷ்ணம் சடாரி

———————————————————–

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 42-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்–

பொலிக பொலிக வென்று பூ மகள் கோன் தொண்டர்
மலிவு தானும் கண்டு உகந்து வாழ்த்தி -உலகில்
திருந்தார் தம்மைத் திருத்திய மாறன் சொல்
மருந்தாகப் போகும் மனமாசு———–42-

—————————————————————————————–

அவதாரிகை –

ஒன்றும் தேவில் -தாம் திருத்த
திருந்தின ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு மங்களாசாசனம் பண்ணியும்
திருந்தாதவரைத் திருத்தியும் செல்லுகிற
பாசுரத்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
கீழ்
ஒன்றும் தேவிலே தாம் பண்ணின
பகவத் பரத்வ உபதேசத்தைக் கேட்டு
சம்சார பரமபத விபாகம் அறும்படி
நாடாக திருந்தின பாகவத சம்ருத்தியைக் கண்டு ஹ்ருஷ்டராய்
தாம் திருத்த திருந்தின ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு மங்களா சாசனம் பண்ணியும்
திருந்துகைக்கு யோக்யதை யுடையாரை உபதேசித்துத் திருத்தியும்
திருந்தாதவரை உபேஷித்தும் செல்லுகிற
பொலிக பொலிக பொலிக – வில் அர்த்தத்தை
பொலிக பொலிக -என்று துடங்கி அருளிச் செய்கிறார் என்கை-

————————————————————————————

வியாக்யானம்–

பொலிக பொலிக வென்று பூ மகள் கோன் தொண்டர் மலிவு தானும் கண்டு உகந்து வாழ்த்தி –
ஜெயத்பதி பலோ ராமோ லஷ்மணஸ் ஸ மஹாபலா
ராஜா ஜயதி ஸூக்ரீவோ ராகவேணா பிபாலிதா -என்னும்படி
பூ மகள் கோன் தொண்டர்
மலிவு தன்னைக் கண்டு உகந்து
பொலிக பொலிக என்று வாழ்த்தி –

பூ மகள் கோன் தொண்டர் மலிவாவது –
கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல் மலியப் புகுந்து -என்றும்
மாதவன் பூதங்கள் மண் மேல் பண் தான் பாடி நின்றாடி -என்றும்
கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல் இரியப் புகுந்து -என்றும்
தடம் கடல் பள்ளிப் பெருமான் தன்னுடைப் பூதங்களேயாய் -என்றும்
இவ்வுலகத்து வைகுந்தன் பூதங்களேயாய் -என்றும்
பகை பசி தீயன வெல்லாம் நின்று இவ்வுலகில் கடிவான்
நேமிப்பிரான் தமர் போந்தார் ஞாலம் பரந்தார் -என்றும்
மேவித் தொழும் அடியாரும் பகவரும் மிக்கது உலகே -என்றும்
இப்படி நித்ய சித்தர்
ஸ்வேததீப வாசிகள்
முதலான திருமால் அடியார்கள் எங்கும் திரண்ட சம்ருத்தி –
நித்ய சித்தருக்கும்
ஸ்வேத தீப வாசிகளுக்கும் சாமானராய்த்
திருத்த திருந்தின ஸ்ரீ வைஷ்ணவர்கள் -என்றுமாம்-

கண்டு –
தமர்கள் கூட்டம் நாளும் வாய்க்க நங்கட்கு -என்னும்படியாக
தம் கண்களாலே கண்டு

உகந்து –
கண்டோம் கண்டோம் கண்டோம்
கண்ணுக்கு இனியன கண்டோம் -என்று ஹ்ருஷ்டராய் –

வாழ்த்தி –
அந்த சம்ருத்திக்கு பொலிக பொலிக பொலிக
என்று மங்களா சாசனம் பண்ணி
உலகில் திருந்தார் தம்மைத் திருத்திய மாறன் சொல் மருந்தாகப் போகும் மனமாசு-
ஒன்றும் தேவில் உபதேசத்தாலும் திருந்தாதே
ஒதுங்கி இருந்தவர்களைக் குறித்து
கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை -என்றும்
எவ்வுலகும் தன மூர்த்தி நிறுத்தினான் தெய்வங்களாக அத் தெய்வ நாயகன் தானே –என்றும்
ஒக்கத் தொழ கிற்றீர் ஆகில் கலி யுகம் ஒன்றும் இல்லையே -என்று
இப்படி பரத்வ உபதேசம் பண்ணி திருத்தியும்
அதிலும் திருந்தாதவர்களைக் குறித்து
அரக்கர் அசுரர் பிறந்தீர் உள்ளீரேல் உய்யும் வகை இல்லை தொண்டீர்
உழி பேர்த்திடும் கொன்றே -என்று
தேடி தடவிப் பிடித்து
பிரத்யா புரச்சரமாய்த் திருத்தியும் சொல்லுகிற ஆழ்வார் ஸ்ரீ ஸூக்தி
ஔஷதம் அடியாக மநோ மாலின்யம் நிவ்ருத்தமாம் –
ஸ்ரீ வைஷ்ணவ சஜாதீய புத்தியும்
தேவ தாந்த்ரங்கள் இடத்தில் பரதவ புத்தியும் இறே மநோ மாலின்யம் ஆவது
மனனகம் மலமறக் கழுவி -என்று இறே அருளிச் செய்தது –

விஷ வருஷ பலங்கள் கைக் கூடினவர்
அடிமை புக்காரையும்
ஆட்செய்வாரையும் காண
லோக தீபாந்தரங்களின் நின்றும் போந்த
தேவர் குழாம் களைக் கண்டு காப்பிட்டு
பிரஹ்லாத விபீஷண சொல் கேளாத
அரக்கர் போல்வாரைத் தடவிப் பிடித்து
தேச கால தோஷம் போக எங்கும் இடம் கொண்டவர்களை
மேவித் தொழுது உஜ்ஜீவியுங்கோள்-
நீங்கள் நிறுத்துபவர்களை தேவதைகளாக நிருத்தினவனை
மேவிப் பரவும் அவரோடு ஒக்கத் தொழில் யுக தோஷம் இல்லையாம்
என்று விஷ்ணு பக்தி பரராக்கி -என்று இறே ஆச்சார்ய ஹிருதயத்தில் நாயனாரும் அருளிச் செய்தது-

விஷ வருஷ பலங்கள் கை கூடினவர் அடிமை புக்காரையும் -சம்சாரம் -விஷ வருஷம் -கேசவ பக்தியும் -பாகவத சமாப்தம்
அடிமை புக்காரையும் ஆட செய்வாரையும் காண
லோக த்வீ பாந்தரங்களில் நின்றும் போந்த தேவர் குலான்களைக் கண்டு காப்பிட்டு
ப்ரஹ்லாத விபீஷணர் சொற் கேளாத அரக்கர் அசுரர் போல்வாரைத் தடவிப் பிடித்து
தேச கால தோஷம் போக எங்கும் இடம் கொண்டவர்களை மேவித் தொழுது உஜஜீவியுங்கோள்
நீங்கள் நிறுத்துகிறவர்களை தேவதைகளாக நிறுத்தினவனை மேவிப் பரவும் அவரோடு ஒக்கத் தொழில்
யுக தோஷம் இல்லையாம் என்று விஷ்ணு பக்தி பரராக்கிக் கண்ணுக்கு இனியன காட்டலாம்படி யானார்
கண்ணில் நோக்கிக் காணும் பக்தி சித்தாஞ்சனத்தை இடுகிறார் அஞ்சாம் பத்தில்
என்று இறே ஆச்சார்ய ஹிருதயத்தில் நாயனாரும் அருளிச் செய்தது-

————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: