பகவத் விஷயம் காலஷேபம் -106- திருவாய்மொழி – -5-1-1….5-1-5–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்–

முதற்பத்தால், பகவத் கைங்கர்யம் புருஷார்த்தம் என்று அறுதியிட்டார்;
இரண்டாம் பத்தால், அந்தக் கைங்கர்யத்தில் களை அறுத்தார்;
மூன்றாம் பத்தால், களை அறுக்கப்பட்ட அந்தக் கைங்கர்யமானது பாகவத சேஷத்துவ பர்யந்தமான பகவத் கைங்கரியம் என்றார்;
நான்காம்பத்தால், இப்படிப்பட்ட கைங்கர்யத்திற்கு விரோதிகள் ஐச்வர்ய கைவல்யங்கள் என்றார்;
அந்த விரோதிகளைப் போக்குவானும் அவனே என்கிறார் இவ் வைந்தாம் பத்தால்.

பரத்வ -காரணத்வ -வ்யாபகத்வ -நியந்த்ருத்வ காருணிகத்வ –
சரண்யத்வ – சக்தித்வ -சத்ய காமத்வ ஆபத் சகத்வ -ஆர்த்தி ஹரத்வ –விசிஷ்டன்
மயர்வை அறுக்க தத்தவ வேதன மறப்பற்று
ஜ்ஞப்தி பல முக்தி தலை சேர நிஷ்கர்ஷித்து
மோஷ பல வ்ருத்தி செய்ய அர்த்தித்து
புருஷார்த்த பல அந்ய ருசி ஒழிந்து
விரக்தி பல ராகம் கழிய மிக்கு
பிரேம பல உபாயத்தே புகுந்து
சாதன பல உபகாரக் கைம்மாறு இன்றி
க்ருதஜ்ஞாதா பல பிரதி க்ருதமானத்தை உணர்ந்து
ஆத்ம தர்சன பல பிராப்தி மரணாவதியாகப் பெற்று
காலாசத்தி பலகதிக்குத் துணை கூட்டின தம் பேற்றைப் பிறர் அறியப்
பத்துத் தோறும் வெளியிட்டு அருளுகிறார் –ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை –218

“நண்ணாதார் முறுவலிப்ப” என்ற திருவாய்மொழியிலே சம்சாரிகள் படுகிற துக்கத்தை அநுசந்தித்து, அதற்குப் பரிஹாரமாகப்
‘பகவானுடைய பரத்துவ ஞானத்தை உண்டாக்குவோம்’ என்று பகவானுடைய பரத்துவத்தை உபதேசித்தார் மேல் திருவாய்மொழியிலே;
இரண்டு கிட்டம் தம்மிலே சேரக் கிடக்க அவற்றிலே-கிட்டம்-உலோகத்துண்டு.-ஒன்று பொன்னாய் இருக்குமாறு போலே அவர்களிலே
ஒருவராக இருக்கிற தாம், அவர்களையும் திருத்தும்படி தமக்குப் பிறந்த நன்மைக்கு ‘அடி என்?’ என்று பார்த்து, அதற்குக் காரணம்
தம்பக்கல் ஒன்றும் காணாமையாலே தன்னுடைய நிர்ஹேதுகமான கிருபையாலே செய்தானத்தனை என்கிறார் இத் திருவாய்மொழியில்.
இத்திருவாய்மொழியில் வருகின்ற “விதிவாய்க்கின்று காப்பார் ஆர்?” என்ற பாசுரப் பகுதியைத் திருவுள்ளம்பற்றி ‘நிர்ஹேதுகமான’ என்கிறார்.

‘அநாதிகாலம் பிறந்து இறந்து புத்தி பூர்வம் விரும்புவது ஐம்புல இன்பங்களையேயாய், தன்பக்கலில் எனக்குள்ளது மனத்தொடு
படாத வார்த்தைகளேயாயிருக்க, நான் புத்தி பூர்வம் செய்து போந்த பிராதிகூல்யங்களை மறந்து, ஞானம் பிறந்த பின்பு என்னை
அறியாமலே செய்து போந்தவற்றில் அஜ்ஞனாய், என்னை இவ்வளவாக அங்கீகரித்தான்; பிறரையும் யான் திருத்த வல்லேனாம்படி
செய்தான்’ என்று தாம் பெற்ற பேற்றின் கனத்தைச் சொல்லி ஈடுபட்டு அநுபவிக்கிறார் என்றபடி.

நிர்ஹேதுகம்’ என்றால், எல்லார்க்கும் இத்திருவருள் கூடவேண்டுமேயன்றோ? அங்ஙனம் இல்லை ஆதலின், ஒரு காரணம் பற்றியே
கிருபை செய்தான் என்று கொண்டால் என்னை? எனின், அதற்கு விடை அருளிச் செய்கிறார்
‘அநாதி காலம்’ என்று தொடங்கி. “பொய்யே கைம்மை சொல்லி” என்றதனைத் திருவுள்ளம்பற்றித்
‘தன் பக்கலில் எனக்குள்ளது மனத்தொடு படாத வார்த்தைகளேயாயிருக்க’ என்றும்,
“அவன் என்னாகி ஒழிந்தான்” என்றதனைத் திருவுள்ளம்பற்றி ‘நான் புத்தி பூர்வம்’ என்று தொடங்கியும் அருளிச் செய்கிறார்.
‘ஞானம் பிறந்த பின்பு என்னை அறியாமலே செய்து போந்தவற்றில் அஜ்ஞனாய்” என்றது,
“காப்பாரார்” என்ற பாசுரத்தைத் திருவுள்ளம்பற்றித் “மெய்யே பெற்றொழிந்தேன்” என்றதனைத் திருவுள்ளம்பற்றித்
‘தாம் பெற்ற பேற்றின் கனத்தைச் சொல்லி’ என்கிறார்.

1-பகவானுடைய பரத்துவ ஞானத்தைத் தம் நெஞ்சிலே படுத்தினபடியையும்,2- அதற்கு உறுப்பாய் இருப்பது ஒரு நன்மை தமக்கு
இன்றிக்கே இருந்தபடியையும், 3- அநாதி காலம் தாம் விபரீதங்களையே செய்து போந்தபடியையும்,4-புருஷார்த்தத்திற்கு உபாயமாகச்
சொல்லுகிறவற்றில் தாம் ஒன்றும் கனாக்கண்டு அறியாதே இருக்கிறபடியையும், 5-‘புருஷார்த்தம் வேணும்’ என்னும் நினைவும் இன்றிக்கே
இருந்தபடியையும், -6-சம்சாரத்திலே தரைகாண ஒண்ணாதபடி ஆழ்ந்து நோவுபடாநிற்கச் செய்தே ‘நோவுபடாநின்றோம்’ என்று அறிவிக்கவும்
மாட்டாதே உணர்த்தி அற்று இருக்கிறபடியையும்,7-அமுதம் இருக்க விஷத்தை விரும்புவாரைப் போலே ஆராவமுதை விட்டு இனிய அமுதம்
என்னும்படி இனியபொருளாகத் தோன்றின ஐம்புல இன்பங்களை விரும்பிப் போந்தபடியையும், 8-அதற்கு மேலே அவன் பக்கல் இச்சை
இன்றிக்கே இருக்க அவனை உகந்தார் சொல்லும் வார்த்தைகளைச் சொல்லிப் போந்த படிகளையும் நினைத்து, இப்படி எல்லாவகைகளாலும்
தண்ணியேனாய் இருக்கிற என்னை, அவற்றுள் ஒன்றனையும் பாராமல்,9- ‘தான் சர்வசேஷி’ என்னுமிடத்தையும்
‘தன் திருவடிகளில் கைங்கர்யமே புருஷார்த்தம்’ என்னுமிடத்தையும் -10-என் நெஞ்சிலே படுத்தி என்பக்கலிலே
ஆராக் காதலனாய் என்னோடே வந்து கலந்தான் என்று -இப்படி பத்து பத்தாக உபகரித்தானே -தாம் பெற்ற பேற்றினைச் சொல்லிப் பேருவகையர் ஆகிறார்.

இத்திருவாய்மொழியில் சொல்லப்பட்ட பொருள்களை விவரிக்கிறார் ‘பகவானுடைய’ என்று தொடங்கி.
“கையார் சக்கரத்து”, “அம்மான் ஆழிப்பிரான்” என்ற பாசுரங்களைத் திருவுள்ளம்பற்றிப் ‘பகவானுடைய பரத்துவ ஞானத்தை’ என்று தொடங்கியும்.
“பொய்யே கைம்மை சொல்லி” என்றதனைத் திருவுள்ளம்பற்றி,அதற்கு உறுப்பாய்’ என்று தொடங்கியும்,
“புறமே புறமே ஆடி” என்றதனைத் திருவுள்ளம்பற்றி ‘அநாதி காலம்’ என்று தொடங்கியும்,
“நின் கண் நெருங்கவைத்தே என தாவியை நீக்க கில்லேன்” என்றதனைத் திருவுள்ளம்பற்றிப் ‘புருஷார்த்தத்திற்கு’ என்று தொடங்கியும்,
“நாவாய் போல்” என்றதனைத் திருவுள்ளம்பற்றிப் ‘புருஷார்த்தம் வேணும்’ என்று தொடங்கியும்,
“அலைநீர்க் கடலுள் அழுந்தும்” என்றதனைத் திருவுள்ளம்பற்றிச் ‘சம்சாரத்திலே’ என்று தொடங்கியும்,
“உள்ளன மற்றுளவா” என்றதனைத் திருவுள்ளம்பற்றி ‘அமுதம் இருக்க’ என்று தொடங்கியும்,
“போனாய் மாமருது” என்றதனைத் திருவுள்ளம்பற்றி ‘அதற்கு மேலே’ என்று தொடங்கியும் அருளிச்செய்கிறார்.
‘தான் சர்வ சேஷி’ என்றது, “அம்மான் ஆழிப்பிரான்” என்றதனைத் திருவுள்ளம் பற்றி.
“உய்ந்தொழிந்தேன்” என்றதனைத் திருவுள்ளம்பற்றித் ‘தன் திருவடிகளில்’ என்று தொடங்கி அருளிச்செய்கிறார்.
“அடியேனோடும் ஆனான்” “என்னை முற்றவும் தானானான்” என்பனவற்றைத் திருவுள்ளம் பற்றி ‘ஆராக்காதலனாய்’ என்கிறார்.

———————————————————————

கையார் சக்கரத்து என் கரு மாணிக்கமே! என்றென்று
பொய்யே கைம்மை சொல்லிப் புறமே புறமே ஆடி
மெய்யே பெற்றொழிந்தேன் விதி வாய்க்கின்று காப்பார் ஆர்?
ஐயோ! கண்ண பிராஅன்! அறையோ! இனிப் போனாலே.–5-1-1-

க்ருத்ரிமமான அநு கூல உக்தி -சர்வ சுலபனான -தப்ப ஒண்ணாத கிருபையின் பலமாக -அக்ரித்ரும பிரேம பரர் பெரும் பேற்றைப் பெற்றேன்
கையார் சக்கரத்து என் கரு மாணிக்கமே! என்றென்று-யசோதை கௌசல்யை வசிசிஷ்டர் போல்வார் சொன்னதை பரிவுடன் அடிக்கடி சொல்லி
நம்பாமல் போவாரே என்று மீண்டும் மீண்டும் நாம் சொல்வது போலே -பாரமார்த்திக பிரேம யுக்தர் போலே
பொய்யே கைம்மை சொல்லிப் புறமே புறமே ஆடி-ப்ரீதி இல்லாமல் -எதிரியும் சத்ய புத்தி பண்ணும்படி கிருத்ரிம உக்தியை
உக்திக்கு நேர் மாறாக -பாஹ்ய விஷயங்களிலும் ஒன்றை விட்டு ஒன்றில் பற்றி நின்றும் -அங்கும் உண்மை இல்லை -சர்வதா சஞ்சரியா வைத்து
மெய்யே பெற்றொழிந்தேன் விதி வாய்க்கின்று காப்பார் ஆர்?
ஐயோ! கண்ண பிராஅன்! அறையோ! இனிப் போனாலே—ஐயோ -ஹர்ஷ பிரகர்ஷ உக்தி -ஆனந்தத்தால் பாடுகிறார் -ஆனந்த கர்வ உக்தி –
வல்லையாகில் போய் காண் -உன்னால் முடியாதே -உண்மையான பிரேம உக்தர் பெரும் பேற்றை பெற்றேனே
விதி -பகவத் கிருபை -பொய்யையும் மெய்யாக பிரதிபத்தி பண்ணக் கடவதாய்-
ஏமாற்ற ஹேதுவும் அவன் இடமே இருந்ததே -சர்வஜ்ஞ்ஞன் சர்வசக்தன் – கருணை கண்ணை மறைக்கும் படி -ஆனதே –
நீ அல்லேன் என்னவும் தவிர ஒண்ணாத படி பிரவர்த்திப்பிக்கையாலே -கிருபையை விதி என்கிறார்
மத்யத பரதரம் நாந்யத் கிஞ்சித் நாஸ்தி -குணத்தால் சிறந்தது வேறு ஒன்றும் இல்லை -நாந்யத் கிஞ்சித் இரண்டு சப்தமும் உண்டே
அபராத சஹாத்வம் -தண்ட ஹரத்வம் இரண்டும் இருந்தாலும் இது இத்தை வெல்லுமே -ஸ்வா தந்த்ரத்தால் சக்தன் -கிருபை போக விடாதே –

கையிலே பொருந்திய சக்கரத்தையுடைய என் கருமாணிக்கமே! கண்ணபிரானே! என்று என்று மிக்க பொய்யைச் சொல்லி,
புறவிஷயங்களிலே மூழ்கி, உண்மையான பேற்றினைப் பெற்றுவிட்டேன்; உன்னுடைய திருவருள் கிடைக்கின்ற காலத்தில்
அதனைத் தடை செய்வார் யாவர்? ஐயோ! இனிப் போவாயேயானால் அறையோ!’ என்கிறார்.
கைம்மை – பொய். ஆடி – விளையாடி. ‘மூழ்கி’ என்னலுமாம். ‘பெற்றொழிந்தேன்’: ஒருசொல். வாய்க்கின்று – வாய்க்குமிடத்து. இது, வினையெச்சம்.
இத்திருவாய்மொழி, கலிநிலைத்துறை.

என் பக்கல் உள்ளது மனத்தொடு படாத வார்த்தையாக இருக்க, இதனை மனத்தொடு பட்டு வந்த வார்த்தையாகக் கொண்டு விரும்பி,
‘இனி, இதற்கு அவ்வருகு இல்லை’ என்னும்படியான பேற்றினைச் செய்து கொடுத்தான் என்கிறார்.

கைஆர் சக்கரத்து-
வெறும்புறத்திலே ஆலத்தி வழிக்க வேண்டும்படியான கையிலே திருவாழியைத் தரித்தானாயிற்று.
இதுதான் ஆபரணமுமாய் வினைத்தலையில ஆயுதமுமாய் அன்றோ இருப்பது. ஒரு கைக்குப் படையாய்-யுத்தத்துக்கு – இருக்குமே யன்றோ?
“கூரார் ஆழி வெண் சங்கு ஏந்தி வாராய்” என்று அநுகூலர்க்கு ஆசைப்படுகைக்கு உடலாய், விரோதிகளைத் துணிக்கைக்கும்
உடலாய் ஆயிற்று இருப்பது. ‘சக்கரத்து’ என்றவிடத்து ‘அத்து’ என்பது, சாரியை இடைச்சொல்.
மேல் வரும் இடங்களில் எல்லாம் இப்படியே கண்டுகொள்வது.
என் கரு மாணிக்கமே –
சிரமஹரமாய் நீல இரத்தினம்போலே பெரு விலையனான வடிவழகை எனக்கு முற்றூட்டு ஆக்கினவனே!
கையுந் திருவாழியுமான அழகை நினைத்தால் அடைவே ஸ்ரீ பாஞ்சஜன்யத்தை நினைக்க வல்லர் அல்லரே,
பின்னர் வடிவழகிலே கால் தாழ்ந்தார், படி கடந்து அவ்வருகு போமவர் அல்லரே. -படி தாண்டா பத்னி -திருமேனி அழகிலே படியுமவர் அன்றோ –
என்று என்று –
இதனை ஒருகால் சொல்லித்தான் விட்டேனோ. பகவத் விஷயத்தில் உட்புக்கது எல்லாம் குற்றமாய்த் தோற்றுகிறதாயிற்று;
‘போராது’ என்று இருக்கையாலே. இது பொல்லாததாய் இருந்தது இல்லையே! என்ன, அழகே யன்றோ, பாவ பந்தத்தோடு சொன்னேனாகில்.
பொய்யே கைம்மை சொல்லி –
பொய் என்பதும், கைம்மை என்பதும் ஒருபொருட் சொற்கள். ‘இதனால் என் சொல்லியவாறோ?’ எனின்,
பிறரை வஞ்சித்தல் அன்றிக்கே, முற்றறிவினனான சர்வேச்வரனும் ‘இது மெய்’ என்று பிரமிக்கும்படி பெரும் பொய்யை அன்றோ சொல்லிற்று என்றபடி.
பொய்யும் மெய்யுமாகக் கலந்துதான் சொன்னேனோ என்பார் ‘பொய்யே’ எனப் பிரிநிலை ஏகாரம் கொடுத்து ஓதுகிறார்.

புறமே புறமே ஆடி –
இப்போது ‘புறம்’ என்கிறது, ஐம்புல இன்பங்களை.
‘பகவத் விஷயத்தில் இறங்கியது போராது’ என்று இதனைப் ‘பொய்’ என்னாநிற்கச் செய்தேயும்,
ஐம்புல இன்பங்கள் புறம்பாய்த் தோற்றுகின்றன ஆயிற்று இவர்க்கு;
“பாவியேனைப் பல நீ காட்டிப் படுப்பாயோ” என்னுமவரேயன்றோ? ஜாதி, உருவங்கள் தோறும் நிறைந்து இருக்குமாறுபோலே ஆயிற்று
விஷயங்கள்தோறும் தனித்தனியே கால் தாழ்ந்தபடி. இதுதான் எப்பொழுதை நிலையைப் பற்றச் சொல்லுகிறார்? என்னில்,
முக்காலத்தில் உள்ளவையும் சம காலத்தில் போலே தோற்றுகையாலே சென்ற பிறவிகளில் நிகழ்ந்தனவற்றை நோக்கிச் சொல்லுகிறார் என்னவுமாம்;
மயர்வு அற மதிநலம் பெற்ற பின்பும் தமக்கு விஷயத்திற்குத் தகுதியாகப் போராமையாலே சொல்லுகிறார் ஆகவுமாம்.
‘உம்முடைய நிலை இதுவாகில் பேறு இருந்தபடி என்?’ என்ன, அருளிச்செய்கிறார் மேல்:

மெய்யே –
என்பக்கல் உள்ளவை பொய்யே ஆயினாற் போலே, அவன் அடியாக வந்தது ஆகையாலே மெய்யேயாய் இருக்குமே அன்றோ.
பேற்றில் கண்ணழிவு சொல்லலாவது இல்லை என்றபடி.
பெற்றொழிந்தேன் –
பரமபதத்து ஏறப்போனாலும் இப்பேற்றினை அசையிட்டு இருக்குமத்தனை. என்றது, இனி, இதனைக்காட்டிலும் ஏற்றம்
செய்யலாவது இல்லை என்றபடி. ‘காரணம் இல்லை’ என்னாநின்றீர், பேறு கனத்திருந்தது; இதற்கு அடி என்? என்ன,
விதிவாய்க்கின்று –
பகவானுடைய கிருபை கரைபுரளப் பெருகாநின்றால் நம்மாற் செய்யலாவது உண்டோ? ‘விதி’ என்கிறது, பகவானுடைய கிருபையை.
“கேசவன் தமர்” என்னும் திருவாய்மொழிக்கு இப்பால் எல்லாம் இவர், ‘விதி’ என்கிறது, பகவானுடைய கிருபையை.
கிருபையை ‘விதி’ என்பதற்கு அடி, அவனால் தப்ப ஒண்ணாதபடி இருக்கையாலே.
வாய்க்கின்று – பகவானுடைய கிருபை ஈச்வரனுடைய ஸ்வாதந்திரியமாகிய கரைபுரளப் பெருகி வந்து கிட்டுமிடத்தில்.
காப்பார் ஆர் –
எது காக்கும் -சொல்லாமல் -கர்மம் -எடுத்துக் கழிக்கவும் யோக்யதை இல்லையே -அவ்வளவு அல்பம் –
இதனைத் தடை செய்வார் ஆவார் உளரோ? இரண்டு சேதநராலும் தடை செய்யப்போகாது என்பார்
‘காப்பது எது?’ என்னாமல், ‘காப்பார் ஆர்?’ என்கிறார். என்றது, பரதந்திரனான இவனாலும் தகைய ஒண்ணாது,
ஸ்வதந்திரனான அவனாலும் தகைய ஒண்ணாது; பலத்தை அநுபவிக்கிற இவனாலும் தகைய ஒண்ணாது,
பலத்தைக் கொடுக்கிற அவனாலும் தகைய ஒண்ணாது என்றபடி.
அன்றிக்கே, காப்பார் ஆர் என்பதற்கு, கிருபை உண்டாவதற்குக் காரணமான பிராட்டி காக்கவோ?
கிருபைக்குப் பரதந்திரப்பட்டவனான நீ காக்கவோ? கிருபைக்குப் பாத்திரமான நான் காக்கவோ? என்று பொருள் கோடலுமாம்.

“காப்பார் ஆர்?” என்றதற்கு, இரண்டு வகையாகப் பொருள் அருளிச்செய்கிறார்.
கர்மத்தோடு கூடின சேதநராலும் ஸ்வாதந்திரியத்தையுடைய ஈச்வரனாலும் தகையப்போகாது என்பது முதற் பொருள்.
அதனை அருளிச்செய்கிறார் ‘இரண்டு சேதநராலும்’ என்று தொடங்கி. ‘பரதந்திரனான’ என்றது, கர்மங்கட்குத் பரதந்திரப் பட்டவனான என்றபடி.
‘ஸ்வதந்திரனான’ என்றது, கர்மங்கட்குத் தகுதியாகவே நிர்வஹிக்கக் கடவேன்’ என்னும் ஸ்வதந்திரத்தை யுடைய ஈச்வரனாலும் என்றபடி.
முதற் பொருளுக்குக் கருத்து, அவனுடைய கிருபையை அண்டை கொண்ட பலத்தால் கூறுகிறார் என்பது.
“காப்பார் ஆர்” என்றதற்கு, இரண்டாவது பொருள், இதற்குக் கிருஷி செய்தவர்கள் தகைவர்களோ? என்பது. இதனை அருளிச்செய்கிறார்
‘அன்றிக்கே’ என்று தொடங்கி.
“ந கச்சித் ந அபராத்யதி-குற்றம் செய்யாதார் ஒருவருமிலர்” என்கிறபடியே, கிருபையுண்டாவதற்குக் காரணமான பிராட்டி காக்கவோ?
“தாமரையாளாகிலும் சிதகு உரைக்குமேல் என்னடியார் அது செய்யார். செய்தாரேல் நன்று செய்வர்.” என்கிறபடியே,
கிருபைக்குப் பரதந்திரனான நீ காக்கவோ? “கிருபயா பர்ய பாலயத்-கிருபையாலே காப்பாற்றினான்” என்கிறபடியே,
கிருபைக்குப் பாத்திரமான நான் காக்கவோ? என்றபடி.
கிருபா ஜநகை-பிராட்டி -கிருபா பரதந்த்ரன் -அவன் கிருபா பாத்ரம் – நாம் -மூவராலும் முடியாதே

“மித்ர பாவேந” என்கிற சுலோகத்திலே
எம்பார், ‘சாவஜ்ஞனுக்கு ஒரு அஜ்ஞானமும் மறதியும், சர்வசக்திக்கு ஒரு அசத்தியும் உண்டு’ என்று அருளிச்செய்வர்.
ஒருவன், தன்னை அடைந்தால், முன்பு புத்தி பூர்வம் பண்ணிப்போந்த குற்றங்களிலே மறதி, ஞானம் பிறந்த பின்பு தன்னை
அறியாமலே வரும் குற்றங்களில் அஜ்ஞானம் அவனை விடவேண்டி வருமளவிலே அசக்தி.
இப்படி இருக்கைக்குக் காரணம், இயல்பிலே அமைந்த குடல் தொடக்கு.

இப்போது கிருபா பரதந்திரனாய் இருந்தானேயாகிலும், சர்வஜ்ஞன் சர்வசக்தி அலனோ, அபராதங்கட்குத் தகுதியாக அவற்றின்
காரியங்களும் பிறவாவோ?-என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் “மித்ரபாவேந” என்று தொடங்கி.
“மித்ரபாவேந ஸம்ப்ராப்தம் ந த்யஜேயம் கதஞ்சந தோஷோ யத்யபி தஸய ஸ்யாத் ஸதாமேத தகர்ஹிதம்.” என்பது, ஸ்ரீராமா. யுத். 18:3.
இந்தச் சுலோகத்தில் உள்ள “தோஷோ யத்யபி” என்றதனை நோக்கி ‘அஜ்ஞானமும் மறதியும்’ என்றும்,
“கதஞ்சந நத்யேஜயம்” என்றதனை நோக்கிச் ‘சர்வசக்திக்கு ஒரு அசக்தியும் உண்டு’ -என்றும் அருளிச்செய்கிறார்.

“ஆர்” என்பான் என்? ஸ்வதந்திரனான என்னால் தகையத் தட்டு என்? என்ன,
ஐயோ! –
ஆமாகில் செய்து பார்த்துக்காணாய். ‘ஐயோ!’ என்பது, உவப்பின் மிகுதியினாலே சொல்லும் சொல்.
கண்ணபிரான்
உபகார சீலனான கிருஷ்ணனே! ஒரு தாயினுடைய மெய்க்குப் போகமாட்டாத நீயோ என்னுடைய பொய்க்குப் போகப் புகுகிறாய்,
ஓர் ஆய்ச்சி கையிலே கட்டுண்ட நிலையிலே அந்தத் தளையினின்றும் தப்ப விரகு அறியாதே சத்தியும் இன்றிக்கே
இருந்த நீயோ போகப்புகுகிறாய்? ஆர்ஜவமான கட்டை அவிழ்க்க மாட்டாதவன் பொய்யான பந்தத்தை அவிழ்க்கமாட்டான் என்றபடி.
இனிப் போனால் அறையோ –
இனிப்போனாயாகில் அறையோ அறை.
என் பக்கலிலே ‘மெய்’ என்று பெயர் இடலாவது ஒரு பொய் பெற்ற பின்பு போனாயாகில் அறையோ அறை.
பகவானுடைய கிருபையைப் பக்கபலமாகக் கொண்டு ஈச்வரனுடைய ஸ்வாதந்தரியத்தை அறைகூவுகிறார்.
‘கண்ணபிரான்’ என்பது, விளிப்பெயர்.
அன்றிக்கே, கண்ணபிரானானவன் இனிப்போனால் அறையோ அறை என்று பொருள் கொண்டு முன்னிலைப் படர்க்கையாகக் கோடலுமாம்.

————————————————————————

போனாய் மாமருதின் நடுவே! என் பொல்லா மணியே!
தேனே! இன்னமுதே! என்றேன்றே சில கூத்துச் சொல்லத்
தானேல் எம்பெருமான் அவன் என்னாகி ஒழிந்தான்
வானே மாநிலமே மற்றும் முற்றும் என்னுள்ளனவே.–5-1-2-

அஹ்ருதமான பிரேம உக்தி பற்றாசாக -உபய விபூதி விசிஷ்டன் என் வசம் ஆனானே
போனாய் மாமருதின் நடுவே! என் பொல்லா மணியே!துளை இடாத மணியே -மருத மரங்களை நிரசித்து
-அதனால் ஔஜ்வல்யம் அடைந்து -தர்ச நீயம் உரலுக்கு இடம் போதாது என்று அறியாமல் -மௌக்த்யம்-
தேனே! இன்னமுதே! என்றேன்றே சில கூத்துச் சொல்லத்-யசோதை தாயைப் போலே
அஹ்ருதயமாக நானும் சொல்ல – தரிக்கப் பண்ணி -பாவித்து பலகாலும் சொல்ல
தானேல் எம்பெருமான் அவன் என்னாகி ஒழிந்தான்–அபிமானத்துக்கு உள்ளே யாக வந்தானே
வானே மாநிலமே மற்றும் முற்றும் என்னுள்ளனவே.-உபய விபூதியும் என் வசம் ஆனதே -எல்லாமே எனக்கு உள்ளனவாக ஆனதே

பெரிய இரட்டை மருதமரங்களின் நடுவே போனவனே! துவாரம் செய்யப்படாத என் மாணிக்கமே! தேனே! இனிய அமுதமே! என்று என்று
சில கூத்துக்களைச் சொன்னேன்; சொல்ல, எம்பெருமானாகிய அவன்தான் செய்தபடி என்? என்னில், அவன், நான் இட்டவழக்கு ஆனான்;
ஆகாயம் என்ன, பூமி என்ன, மற்றுமுள்ள பூதங்கள் என்ன, இவை எல்லாம் என்பக்கலிலே ஆய்விட்டன.
பொல்லல் – தொளைசெய்தல். கூத்து – ஒருவர் செயலை மற்றொருவர் அநுசரித்தல். பொய் என்னலுமாம்.
பன்னீராயிரப்படி உரைகாரர் ‘கூற்று’ என்ற பாடத்தைக் கொண்டுள்ளார்.

அஸத்தானே பய சங்கிகள் சொல்லும் வார்த்தையை நான் மனத்தோடு படாமலே சொல்ல, முற்றறிவினனான சர்வேச்வரன்
அதனை மெய்யாகக் கொண்டு தன் விபூதியோடேகூட நான் இட்ட வழக்கு ஆனான் என்கிறார்.

மா மருதின் நடுவே போனாய்-
அப்போது கண்டு நின்ற யசோதைப்பிராட்டியானவள், இரட்டை மருத மரங்கள் நடுவே அவன் போனபடியைக் கண்டு
பாவபந்தம் தோற்றச் சொன்ன வார்த்தையை அது இல்லாத நான்சொன்னேன்.
தெளிந்த ஞானத்தாலே, ‘இறந்தகாலம்’ என்று இவர்க்குத் தோற்றுகிறது இல்லையாயிற்று.
சர்வேச்வரன் செய்து கொடுத்த தெளிந்த ஞானம் வயிறு எரிகைக்கு உடலாய் விட்டதித்தனை.
பெரிய வடிவுகளையுடைய அசுரர்கள் மரங்களாய் நின்றார்கள் ஆதலின் ‘மா மருது’ என்கிறார்.
இவனுடைய இளமையை அறிந்து, பெருத்துத் தடித்துக் காட்சிக்கு இனிய வேஷத்தோடே ஆயிற்று இருவரும் கிருதசங்கேதராய்ச் சிறிதும்
வெளி இடம் இல்லாதவாறு நின்றபடி. ஒன்றிலே வெளிகண்டு போனாற்போலே போனான் ஆதலின் ‘நடுவே’ என்கிறார்.
“மருத மருதங்களின் நடுவே சென்றார்” என்ற ஆபத்தை ஆயிற்றுச் சொல்லுகிறது.
என் பொல்லா மணியே-
“அதன்பின் கடகட என்ற ஓசையைக் கேட்டுப் பரவசத்தை அடைந்த ஆயர்கள் அங்கு வந்தார்கள்”,
“தாமரைக் கண்ணனான அந்தக் கண்ணபிரானும் சென்றார்” என்கிறபடியே, இவற்றைத் தப்பிப்போய், முரிந்து விழுகிற ஓசையைக் கேட்டு
முன்பு இல்லாததனைக் காணும் காட்சியாலே சிவந்த மலர்ந்த கண்களும் தானுமாய் இருக்கிறபடி.
“புணர் மருதம் இற நடந்த பொற்குன்றினை” என்னக்கடவதன்றோ.
அழகிது என்னில், நாட்டில் உள்ள அழகைப்போன்றது ஆம் என்று நினைத்து, வேறுபாடு தோன்ற ‘பொல்லா மணியே!’ என்கிறார் என்னுதல்.
அன்றிக்கே, நாட்டார் கண்டு கண்ணெச்சில் படாமைக்குக் கரிபூசுகிறார் என்னுதல்.
அன்றிக்கே, தொளையாதமணி; அதாவது பிறரால் அநுபவிக்கப்படாத மணி என்னுதல்;
பொல்லல் – தொளைத்தல். இதுவும் யசோதைப் பிராட்டி அருகில் நின்று சொன்ன வார்த்தை.

தேனே –
வந்து எடுத்துக்கொண்ட காலத்தில் ஸ்பரிசத்தாலும் மழலைச்சொற்களாலும் கொண்டாடிச் சொல்லும் வார்த்தை.
இன் அமுதே
-அப்போதையில் இனிமையாலே சொன்ன வார்த்தை.
ஆக, தேனே! இன் அமுதே! என்னும் இவை இரண்டானும் 2நிரதிசய போக்யமாய், போன உயிரை மீட்கவற்றாய் இருக்கையைத் தெரிவித்தபடி.
“அமுது என்றும் தேன் என்றும் ஆழியான் என்றும்” என்று சொல்லுகிறபடியே நிரவதிக போக்கியமாயிருக்கை.
என்று என்றே –
ஒருகால் சொல்லி, ‘தப்பச் செய்தோம்’ என்று மீளத்தான் செய்தேனோ என்பார் ‘என்று என்று’ என்கிறார்.
சில கூத்துச் சொல்ல
பரிவுடைய யசோதைப்பிராட்டி இவற்றிலே ஈடுபட்டுச் சொல்லும் வார்த்தைகளை அன்றோ அப் பரிவு இல்லாத
நான் சென்னேன் என்பார் ‘கூத்துச்சொல்ல’ என்கிறார். கூத்தாவது, ஒருவன் நினைவையும் செயலையும் மற்றொருவன் செய்வது
தானேல் எம்பெருமான் –
தானாகில், முற்றறிவினனாய் எல்லாப் பொருள்களையும் நியமிக்கின்றவனாய் இருப்பான் ஒருவன். என்றது,
அகவாய் அறியாதான் ஒருவன் அல்லன், அறிந்தால் உபேக்ஷிக்கமாட்டாதான் ஒருவன் அல்லன் என்பதனைத் தெரிவித்தபடி.
அவன்-
அப்படி, சர்வஜ்ஞனாய் சர்வசக்தியானவன்.
என்னாகி ஒழிந்தான்-
நான் இட்டவழக்கு ஆனான். என்னையுடையவன் நான் இட்ட வழக்கு ஆனான், உடையவன் தான் உடைமை யானான்:
கீழ் மேல் ஆயிற்று என்றபடி. நன்று; அவன் விபூதி செய்தது என்? என்னில்,
வானே மாநிலமே மற்றும் முற்றும் என் உள்ளனவே-
“மனைவி, புத்திரன், வேலைக்காரன் இவர்கள் ஸ்வதந்திரம் இல்லாதவர்கள், பரதந்திரர்கள்; இவர்கள் எவனுக்கு
அடிமை ஆவர்களோ அவனுக்கே இவர்கள் செல்வமும் உரியது” என்கிறபடியே,
விபூதியையும் நான் இட்ட வழக்கு ஆக்கினான் என்னுதல்.
அன்றிக்கே, விபூதியை யுடையவனாய்க் கொண்டு என்னுள்ளே புகுந்தான் என்னுதல்.
‘வானே மாநிலமே’ என்றது, ஐம்பெரும் பூதங்கட்கும் உபலக்ஷணம்.
‘மற்றும்’ என்றது, ஐம்பெரும் பூதங்களின் காரியங்களான அண்டங்களை. ‘முற்றும்’ என்றது, பரமபதத்தை.
‘என்னுள்ளனவே’ என்றது, விபூதியும் என்னுள்ளே புகுந்தது என்றபடி.

———————————————————————————-

உள்ளன மற்று உளவா புறமே சில மாயம் சொல்லி
வள்ளல் மணி வண்ணனே என்று என்றே உன்னையும் வஞ்சிக்கும்
கள்ள மனம் தவிர்ந்தே உன்னைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேன்
வெள்ளத்து அணைக் கிடந்தாய் இனி உன்னை விட்டு என் கொள்வனே –5-1-3-
சர்வஜ்ஞ்ஞன் உன்னையும் வஞ்சிக்கும் நெஞ்சில் கிருத்ரிம ஸ்வ பாவம் தவிர்ந்து காணப் பெற்றேன்
உபகாரகனான உன்னை ஒழிய ஒரு அபாஸ்ரயம் பற்றுக் கொம்பு உண்டோ
உள்ளன மற்று உளவா புறமே சில மாயம் சொல்லி ஆத்மவிஷயம் பரமாத்மா விஷயம் போகாமல்
கண்டா உபரி -கழுத்துக்கே மேலே –
உண்மையான சொற்கள் இல்லாமல்
வள்ளல் மணி வண்ணனே என்று என்றே உன்னையும் வஞ்சிக்கும் -மித்யா உக்திகள் பொய்யான வார்த்தைகள் சொல்லி
-உன்னையும் -சர்வஜ்ஞ்ஞன் சர்வ சக்தன் -விப்ரலம்பிக்கும் படி
கள்ள மனம் தவிர்ந்தே உன்னைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேன் –கிருத்ரிம ஸ்வ பாவம் தவிர்ந்து
தீய நெஞ்சு மாறி -ஆனந்தமாக பேசுகிறார்
4/5 வறுத்த பாசுரங்கள் மேலே 6 மேலே ஆனந்தம் தொடங்கும்
ஆநு கூல்ய பாவனையையே பற்றாசாக கொள்ளும் நீ -ஆபி முக்கியம் கூட எதிர்பார்க்காமல்
அபரோஷித்து பிரத்யஷமாக கண்டேன் அசத் கல்பமாக இருந்த நான் உஜ்ஜீவித்தேன்
வெள்ளத்து அணைக் கிடந்தாய் இனி உன்னை விட்டு என் கொள்வனே
உனது கிருஷி பலித்த பின்பு -உன்னை நித்ய அவசர ப்ரதீஷன் -நிரதிசய போக்யன்-இரண்டாலும்
உன்னை விட்டு நச்வரமாக துராராதானமான வேறு ஒன்றை கொள்வேனோ -அல்ப பலம் கொடுக்கும்
நீயோ நித்யம் மஹத் சுவாராரதனன் ஆன பின்பு

பொய்யே கைம்மே –உள்ளன மற்றுளவாதல்- சில சொன்னதை விவரியா -நின்று
வாக் மாத்ரத்தாலே உன்னைப் பெற்ற பின்பு உன்னை ஒழிய வேறு ஒன்றை ஆசைப்பேடன்

உள்ளன மற்று உளவா
ஹிருதயத்தில் -அந்த கரணம் அழுக்கு நிறைந்து
புறமே சில மாயம் சொல்லி
புறப் பூச்சாக சில -அஹ்ருதயமாக -பொய்களைச் சொல்லி
இத்தாலே கூத்துக்களைச் சொல்லி -என்ற இடம் விவரணம்
வள்ளல் மணி வண்ணனே
பரம ஔதாரன்
விலை மதிப்பான -முடிந்து ஆளும் படி எனக்கு ஆக்கிக் கொடுத்த உதாரன்
என்று என்றே –
வீப்சை -புத்தி பூர்வகமாக சொல்லா விடிலும்
சொல்லும் பாங்கு நேர்த்தி –
உன்னையும் வஞ்சிக்கும்
உள்ளுவார் உள்ளத்து எல்லாம் -உடன் இருந்து அறியும் உன்னையும் -சர்வஜ்ஞ்ஞன்

கள்ள மனம் தவிர்ந்தே-
அஹ்ருதயமாக வந்தாரையும் மேல் விழும் படி விடாத ஸ்வ பாவன் அன்றோ
மித்ரா பாவேன -நத்யஜேயம் -வேஷம் கொண்டு வந்தாரையும் -போக்யனான உன்னை
உன்னைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேன்
ஒரு படி கான வல்லோமே
நிதி எடுத்தாரைப் போலே லபித்து
அசந்நேவ என்று இருந்த நான் உய்வை அடைந்தேன்
கண்டு கொண்டாலே போதுமா
ந பிபந்தி -அம்ருதம் த்ருஷ்ட்வா த்ருப்த்யந்தி -சாப்பிடாமல் குடிக்காமல் கண்டு கொண்டே -சாந்தோக்யம்
இனி நீர் செய்யப் பார்க்கிறது என்
வெள்ளத்து அணைக் கிடந்தாய் இனி உன்னை விட்டு என் கொள்வனே
அவசர பிரதீஷனாய்
இவ் வேலையிலே கண் வளர்ந்து -வேளையிலே -சாடு
என் ரஷணார்த்தமாக
இனி உனக்கு சத்ருசமான பரம பதம் விட்டு
எனக்கு சத்ருசமான -லீலா விபூதியில் வந்து
ரஷிப்பதே நோக்காக வந்த பின்பு
நான் விட்ட அன்றும் என்னை விடமாட்டாத உன்னை -முன்னும் பின்னும் பக்க வாட்டிலும் நின்று -அவசர ப்ரதீஷனனாக நீ இருக்க –
பச்சை கொண்டு -பல வேளையிலே -நிஷ் பலங்களாக –
ஆராதிக்கும் இடத்தில் துரரதரராய் -வருந்து ஆராதித்தாதிலும் கிடைப்பது ஒன்றும் இல்லையே புறம்பே இருப்பதை பற்றுவேனோ

——————————————————————————–

என் கொள்வன் உன்னை விட்டு என்னும் வாசகங்கள் சொல்லியும்
வன் கள்வனேன் மனத்தை வலித்துக் கண்ண நீர் கரந்து
நின் கண் நெருங்க வைத்தே எனது ஆவியை நீக்க கில்லேன்
என் கண் மலினம் அறுத்து என்னைக் கூவி அருளாய் கண்ணனே –5-1-4-

விப்ரலம்ப உக்திகள் மூலமாக -பரம பிரயோஜனமான
என் கொள்வன் உன்னை விட்டு என்னும் வாசகங்கள் சொல்லியும் -பொய்யாகச் சொல்லி –
அநந்ய பிரயோஜனர்கள் சொல்லும் வார்த்தையை சொல்லி
வன் கள்வனேன் மனத்தை வலித்துக் கண்ண நீர் கரந்து நின் கண் நெருங்க வைத்தே எனது ஆவியை நீக்க கில்லேன்
பெரும் கள்வன் -ஆத்மாபஹாரம் -வன்மை -க்ருத்ரிமன்
விஷயாந்தரங்களில் சென்று போன மனசை வர இழுத்து –
பாசாங்கு பண்ணி -கண்ண நீர் விட்டு -இழவால் பிறக்கும் அழுகை
விஷயாந்தரங்களில் விட்டு உன்னை நினைப்பதே என்ற அழுகையை
ஆவியை லோகத்தில் இருந்து நீக்கி உன் இடம் சேராமல்
நிரதிச போக்யனான உன்னிடம் – சம்சாரத்தில் நின்றும் விடுவிக்க மாட்டு கின்றிலேன்
காரணம் -மனசில் உள்ள அழுக்கு -என்று அறிந்தேன் இப்பொழுது
என் கண் மலினம் அறுத்து என்னைக் கூவி அருளாய் கண்ணனே -என்னிடத்தில் அழுக்கு நீக்கி -கூப்பிட்டு அருள வேண்டும் –
அடைந்தேன் -முன்பு சொல்லி -போக்க வேண்டும் -என்று பிரார்த்திக்கிறார்
அவித்யாதி தோஷங்கள் போக்கி அசக்தனான என்னை
மாஸுசா சொல்வாயே -நிர்வாகன் தானே நீ -அழைத்துக் கொண்டு அருள வேண்டும் –

பொய்யே கைம்மை சொல்லி என்றும் -சில கூத்துக்கள் -என்றும் பொய் சொல்லிப் போந்தேன்- ‘இதுக்கு நிபந்தனம் என்ன
மெய்யே பெற்றதால் ஆனந்தத்தித்தார் முன்னம் -எதனால் பொய் சொன்னோம்
அடைந்த வற்றை மறந்தார் –பிரகிருதி சம்சர்க்கமாய் இருந்ததீ
பிரக்ருத விஷயங்களில் ஓடும் மனஸை மீட்டி -உன் பக்கல் பிரவணராய் வைத்து
ஆத்மாவை உஜ்ஜீவிக்க வேண்டும்
இதற்கு நான் ஷமர் அல்லையே-நீயே போக்கி அருள வேண்டும் –பட்டர் நிர்வாகம் – -மறந்தார் -எனபது அர்த்தாத் சித்தம்
முன்புள்ள முதலிகள் –
கண்டு கொண்டேன் உய்ந்து ஒழிந்தேன் எனபது மானஸ பிரத்யஷமாக இருக்க இழந்தோம் என்கிறார்
பாஹ்ய சம்ச்லேச்ச அபேஷை பிறந்து கை நீட்ட -அகப்படக் கண்டிலர் -பிராப்தி இருக்கவும் கைக் கொள்ள வில்லையே
அத்தாலே தளர்ந்து -தேக சம்பந்தம் காரணம் என்று உணர்ந்து
இத்தை கழிக்க -சாதனா அனுஷ்டானம் கண்ணுக்கு இல்லையே
பக்தி பாரவச்யர் -கால் ஆளும் –கண் சுழலும் -நீயே போக்கி உன் திருவடிகளில் சேர்த்து கொள்ள வேண்டும் என்கிறார் –
க்ரமத்திலே வரும் பக்தி தமக்கு என்று நினைத்திலர்
அஜ்ஞ்ஞானத்தாலே பிரபன்னர் ஆழ்வார் -பட்டர் நிர்வாகம்
ஞானாதிக்யத்தாலே -பிரபன்னர் ஆச்சார்யர்கள்
பக்தி பாரவச்யத்தாலே பிரபன்னர் -ஆழ்வார்கள் -முன்புள்ள முதலிகள் -நிர்வாகம் –

என் கொள்வன் உன்னை விட்டு என்னும் வாசகங்கள் சொல்லியும் -பரம ஏகாந்திகள் போலே வாயாலே சொல்லி
வன் கள்வனேன்
பர த்ரவ்ய அபகாரம் -கள்ளம்
வலிய களவு -பகவத் அதீயமான ஆத்ம அபகாரம்
நன்பினேன் பிறர் நன் பொருள் தன்னையும்
விறகு களவு கண்டார் அளவு இல்லை அன்று இ றே ரத்ன அபகாரம் செய்தவர் தோஷம்
பெரியவன் இடம் பெரியவற்றை திருடி
கௌச்துப ஸ்தாநீயம்-புருடன் மணி வரமாக
த்ரவ்யம் உடையவன் இரண்டுமே வி லஷணம்
மனத்தை வலித்துக்
இதர விஷய பிரவணமாய் உள்ள மனஸை மீட்டு
வலித்து
நான் இந்த்ரிய ஜெயம் பண்ண நினைக்க அவை என்னை மேலிட
இழுக்க என்னாமல் வலித்து –
கண்ண நீர் கரந்து
அலாபத்தாலே பாய்கிற கண்ண நீரையும் மாற்றி
விஷயாந்தரங்களை விட்டதால் அழுது
நின் கண் நெருங்க வைத்தே எனது ஆவியை நீக்க கில்லேன்
உன்னிடம் வைக்க ஷமர் ஆககில்லேன்
என் கண் மலினம் அறுத்து என்னைக் கூவி அருளாய் கண்ணனே
இதற்கு அடி அநாதி கால பாப்பம்
பிரகிருதி சம்பந்தம்
மெய்யனாய் கெட்டேன்
சரீரத்துக்குள் அகப்பட்டு
முன்பு பொய்யனாய் கெட்டேன் மெய்யனாய் பெற்றேன் என்றார்
கண்ணனே
சோக நிவர்த்தகன் அன்றோ நீ
எனக்கு அழகிய வடிவைக் காட்டி அருள அமையுமே –
மாஸுசா
அவ்வடிவைக் கண்டால் மற்று ஒன்றினைக் காணா ஆகுமே
பூமா அன்றோ
அதவா –வேறு ஒரு நிர்வாகம்
ஸ்வரூப அனுரூபமான பாசுரம் -என் கொள்வன் -சொல்லா நிற்கச் செய்தேயும்
உத்தேச்வய வஸ்துவை -கடுக லபிக்க பெறாததால் வன் கள்வன் என்கிறார்
மனத்தை வலித்து
பக்தி பாரவச்யத்தால் -உள்ள மனஸை திண்ணியதாக்கி
கண்ண நீரையும் மாற்றி நிறுத்தி
உன்னைக் கிட்டியவாறே உடை கொலை பண்ணும் மனஸை ஸ்திரமாக அனுசந்திக்கும் படி
சரீரம் ஆத்மா பிரிந்து சேர்க்கும் சக்தன் அல்லன்
மலினம் -விஷாயாந்தர முன்பு -இதில் -பக்தி பார்வச்ய -இரண்டு -உற்ற நல நோய் இது போலே
தான் க்ரமத்தில் வரட்டும் என்று எண்ணாமல்
நினைத்த கார்யம் முடிக்க வல்ல கண்ணனே
விரோதி போக்கி
சோகித்த -பக்தி உபாயம் இல்லை என்று அர்ஜுனன் –
அவனுக்கு மாஸூஸா சொல்லித்ய கண்ணனே
பக்தி -அசக்தி -அப்ராப்தம் -சோகித்தவனுக்கு உன் திருவடி- நல் விரகு காட்டி அருளுவாய் –

——————————————————————————–

கண்ண பிரானை விண்ணோர் கருமாணிக்கத்தை அமுதை
நண்ணியும் நண்ணகில்லேன் நடுவே ஓர் உடம்பிலிட்டுத்
திண்ணம் அழுந்தக் கட்டிப் பல செய்வினை வன் கயிற்றால்
புண்ணை மறைய வரிந்து என்னைப் போர வைத்தாய் புறமே.–5-1-5-

கீழே தோஷ ரூபமான பிரகிருதி யாதிகள் -பந்தித்தார் நீ அன்றோ -நிவர்த்தகமும் உன் பொறுப்பே -விதேயம்
கண்ண பிரானை விண்ணோர் கருமாணிக்கத்தை அமுதை-மாம் ஏக்கம் -உபாய உபதேசம் அருளி
ஆஸ்ரித்தவரை நித்ய ஸூ ரிகளுக்கு வி லஷண விக்ரகம் காட்டி
நண்ணியும் நண்ணகில்லேன் நடுவே ஓர் உடம்பிலிட்டுத்-தந்த ஞான முகத்தாலே கிட்டினேன்
பாஹ்ய சம்ச்லேஷம் இல்லையே
அதுக்கு அடி நடுவே -எனக்கும் உனக்கும் -ஹேய பிரத்ய நீகன்- ஆத்மா உடனும் சம்பந்தம் இல்லாமல்
இருவரையும் பிரித்து -சம்சர்க்கம் தொடர்பு
திண்ணம் அழுந்தக் கட்டிப் பல செய்வினை வன் கயிற்றால்-காயிகம் மானசம் கர்மங்கள் பிரபல பாசங்கள் -திடமாக கட்டி –
புண்ணை மறைய வரிந்து என்னைப் போர வைத்தாய் புறமே.-உள்ளது வெளியதானால் காக்கை ஓட்ட போராதே -பாபங்கள் நிறைந்து –
இதுவும் துக்கம் -ஆந்தர தோஷம் காண ஒட்டாமல் -இக்கட்டு அவிழ்க்க அசக்தன் அபிராப்தன்
உனக்கு புறமாக உள்ள விஷயாந்தர சம்சாரம் -நீ நினைத்தால் விடுவிக்கலாம் என்று கருத்து

கண்ணபிரானாக அவதரித்தவனும், விண்ணோர்கட்குக் கருமாணிக்கம் போன்றவனும், அமுதமயமாயவனுமான உன்னைச் சேர்ந்தும் சேராதவனாக
இருக்கின்றேன்; என்னை? எனின், என்னை நடுவே ஓர் உடம்பிலே சேர்த்து, செய்யப்பட்டவைகளான கொடிய பல வினைகளாகிற கயிற்றால்
இறுக அழுந்தக் கட்டிப் புண்கள் தோன்றாதவாறு வரிந்து புறத்திலே போர வைத்திட்டாயே என்கிறார்.
இட்டு அழுந்தக் கட்டி மறைய வரிந்து புறமே வைத்தாய் என்க. வரிந்து – மேல்பூச்சுப்பூசி. போர-மிகவும்.

‘நீர் “மலினம்” என்கிறது எதனை?’ என்ன, இன்னதனை என்கிறார்.

விண்ணோர் கருமாணிக்கத்தைக் கண்ணபிரானை –
“அந்தப் பரமபதத்தில் மேதாவிகளும், துதித்துக்கொண்டிருத்தலையே இயல்பாகவுடையவர்களும், எப்பொழுதும் ஜாக்கிரதையோடு
கூடினவர்களாய்க் கொண்டு பிரகாசிக்கிறார்கள்” என்கிறபடியே, நித்தியசூரிகளுக்கு அநுபவிக்கக் கூடியதான வடிவழகை
எனக்குக் கொடுப்பதற்காகக் கிருஷ்ணனாய் வந்து அவதரித்தவனை.
அமுதை –
இப்படி அவதரித்துத் -விண்ணோர் கருமாணிக்கத்தைக் கண்ணபிரானை-தன்னுடைய இனிமையை ஆயிற்று இவரை அநுபவிப்பித்தது.
நண்ணியும் நண்ணகில்லேன் –
பெற்று வைத்தே பெறாதார் கணக்கானேன்.
பிறந்த ஞானலாபத்தை நினைத்து ‘நண்ணியும்’ என்கிறார்.
சரீர சம்பந்தத்தோடே இருக்கிற இருப்பை நினைத்து ‘நண்ணகில்லேன்’ என்கிறார்.
நடுவே ஓர் உடம்பில் இட்டு –
ஆத்மாவுக்குச் சரீரத்தின் சேர்க்கை அநாதியாக இருக்கச் செய்தேயும், அது ஒளபாதிகமாய்த் தோற்றுகையாலே ‘நடுவே ஓர் உடம்பு’ என்கிறார்.
சலகில் கிடந்த முத்துக்கும் பொன்னுக்கும் அழுக்கு ஏறின நாள் அறிவார் இல்லை,
பின்பு கழியக் காண்கையாலே ‘இது வந்தேறி’ என்று தோற்றா நின்றதே அன்றோ?
அப்படியே, பகவானை அடைவதனாலே கழியக் காண்கையாலே ‘இது வந்தேறி’ என்று தோற்றுமே அன்றோ?
இராஜ புத்திரன் வழியிலே போகா நிற்கச் செய்தே வேடர் கையிலே அகப்பட்டுத் தன்னை வேடனாகவே எண்ணுமாறு போலே
இருப்பது ஒன்றே அன்றோ, சேதனன் தேகத்திலே அஹம் புத்தி பண்ணி “நான் தேவன்” என்று இருக்கும் இருப்பு?

திண்ணம் அழுந்தக் கட்டி –
அவித்தை முதலியவைகளாலே உறுதியாகக் கட்டி.
பல செய் வினை வன் கயிற்றால் –
தாம் பலவாய்ச் செய்யப்பட்டிருந்துள்ள வினைகளாகிற வலிய கயிறுகளால் உறுதியாகக் கட்டி.
புண்ணை மறைய வரிந்து –
தோலை மேவிக் கைப்பாணி இட்டு மெழுக்கு வாசியிலே மயங்கும்படி பண்ணின இத்தனை ஒழிய,
அகவாய் புறவாய் ஆயிற்றாகில் காக்கை நோக்கப் பணி போருமித்தனையே அன்றோ?
என்னை –
என்னைக் காப்பாற்றிக் கொள்வதில் அசக்தனாய்ச் சம்பந்தம் இல்லாதவனுமாய் இருக்கிற என்னை.
போர வைத்தாய் புறமே –
ஏகாந்த போகத்துக்காகப் போந்த பிராட்டி அசோகவனத்திலே இருந்தாற்போலே தோன்றா நின்றதாயிற்று,
சொரூப ஞானம் பிறந்த பிறகு தேகத்திலே இருக்கிற இருப்பு. புறமே – உன் குணங்கள் நடையாடாத சம்சாரத்திலே வைத்தாய்
தம்முடைய சொரூபத்தைப் போன்று ‘கர்மங்களும் அவனைக் குறித்தபோது பரதந்திரங்கள்’ என்று இருக்கும் பரமவைதிகர் ஆகையாலே
‘போரவைத்தாய்’ என்று அவன் செய்தானாகச் சொல்லுகிறார்.

என்பினை நரம்பிற் பின்னி உதிரம் தோய்த்து இறைச்சி மெத்திப் புன் புறந் தோலைப் போர்த்து மயிர்புறம் பொலிய வேய்ந்திட்டு
ஒன்பது வாயிலாக்கி ஊன் பயில் குரம்பை செய்தான் மன் பெருந் தச்சன் நல்லன் மயங்கினார் மருள என்றான்.–என்பது, சிந். 1577.

————————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: