பகவத் விஷயம் காலஷேபம் -104- திருவாய்மொழி – -4-10-1….4-10-5–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்–

ஒரு நிலத்திலே ஒரு கூறு உவர்ந்து கிடக்க மற்றைக் கூறு விளைவதும் அறுப்பதுமாய் இருக்குமாறு போலே,
நித்திய விபூதியும் நித்தியசூரிகளும் பகவத் அனுபவமே பொழுது போக்காகச், சொல்லாநிற்க, இவ்வுலகமாகிற பாலை நிலத்தில்
உள்ளார் சிற்றின்பங்களிலே ஈடுபாடுடையவர்களாய் இவற்றினுடைய லாபாலாபங்களே பேறும் இழவுமாய்ப் பகவானிடத்தில்
விருப்பு இல்லாதவர்களாய்த் துன்பப்படுகிற படியை நினைத்து, ‘அவர்களைத் திருத்துவோம்’ என்று பார்த்து,
சர்வேசுவரன் உளனாய் இருக்க நாம் இருந்து துன்பப்பட வேண்டுமோ?’ என்று, ‘தேவர் உள்ளீராய் இருக்க,
இவர்கள் இப்படி நோவுபட விட்டிருக்கை போருமோ?’ இவர்களையும் திருத்தி நல்வழி போக்கவேண்டும்.’ என்று அவன் திருவடிகளிலே சரணம் புக,
அவன் இவரை நோக்கி, ‘நம் குறையன்றுகாணும்; இவர்கள் அறிவில்லாத பொருள்களாயிருக்க நாம் நினைத்தபடி
காரியங்கொள்ளுகிறோம் அல்லோமே? அறிவுடையராய பின்பு இவர்கள் பக்கலிலேயும் ருசி உண்டாக வேண்டுங்காணும்.
உம்மைத்தொகை-தம் பக்கல் ருசி என்றே உண்டே -கிருஷிகன் அவனே –

ருசி உண்டாகவேணுங்காணும்’ என்றது, ‘ருசி முன்னாகப் போகாமையாலே வைதிக புத்திரர்கள் மீண்டார்களேயன்றோ? என்றபடி.
‘தாளாற் சகங்கொண்ட தாரரங் கா!பண்டு சாந்திபன்சொல் கேளாக் கடல்புக்க சேயினை மீட்டதுங் கேதமுடன்
மாளாப் பதம்புக்க மைந்தாரை மீட்டதும் மாறலவே மீளாப் பதம்புக்க மைந்தரை நீயன்று மீட்டதற்கே?’– என்பது திருவரங்கத்துமாலை.

மீண்டு வருதல் இல்லாத தன்மையையுடைய மோக்ஷத்தைப் பெறும்போது; நாமும் உம்மைப் போன்று ஆவன எல்லாம் செய்து பார்த்தோம்;
முடியாமையாலே கண்ண நீரோடே காணும் கை வாங்கினோம்,’ என்ன,
‘இவர்களுக்கும் ருசி இல்லையேயானாலும் பேற்றுக்கு வேண்டுவது இச்சை மாத்திரமேயாயிற்று;
ஆன பின்பு, இந்த இச்சையையும் தேவரீரே பிறப்பித்துக் கொள்ளுமித்தனை அன்றோ?’ என்று,
ஸ்ரீ கிருஷ்ணன், துரியோதனாதியர்களை அழியச்செய்து, வெற்றி கொண்டு நிற்கச்செய்தே, துரியோதனாதியர்கள் பக்கல் உண்டான
அன்பினாலே உதங்கன் வந்து, ‘உனக்குச் சம்பந்தம் ஒத்திருக்க, பாண்டவர்களிடத்தில் அன்புள்ளவனாய்த் துரியோதனாதியர்களை
அழியச் செய்தாயே?’ என்ன, ‘அவர்களை ஆந்தனையும் பொருந்த விட்டுப் பார்த்தோம்; அவர்கள்
‘பந்துக்கள் வாழ்ந்தால் நாங்கள் வாழோம்!’ என்ற பின்பன்றோ நாம் அவர்களை அழியச்செய்தது?’ என்ன,
‘நீ எல்லாப் பொருள்களையும் நியமிக்கின்றவனான பின்பு அவர்களுக்கு இசைவைப் பிறப்பித்துப் பொருந்தவிட்டுக் கொள்ளாது
விட்டது என்?’ என்று அவன் நிர்ப்பந்தித்தாற்போலே, இவரும் நிர்ப்பந்திக்க,
‘சேதநரான பின்பு ருசி முன்பாகச் செய்ய வேண்டும் என்று இருந்தோம் இத்தனைகாணும்; அது கிடக்க, உமக்குக் குறை இல்லையே?
உம்மைக் கொடுபோய் வைக்கப் புகுகிற தேசத்தைப் பாரீர்,’ என்று பரமபதத்தைக் காட்டிக் கொடுக்க-கண்டு கிருதார்த்தரானார் மேல் திருவாய்மொழியிலே.

‘பரமபதத்தைக் காட்டிக்கொடுக்க’ என்றது, மேல் திருவாய்மொழியிலேயுள்ள ‘ஒண்தொடியாள் திருமகளும் நீயுமே நிலாநிற்பக், கண்டசதிர்
கண்டொழிந்தேன்’ என்ற பாசுரத்தைத் திருவுள்ளம்பற்றி.
பின்னையும் தம் செல்லாமையாலே, சர்வேசுவரன் கைவிட்ட இவ்வுலகத்தையும் திருத்தப் பார்க்கிறார்.
பின்னையும் – ஈசுவரன் கைவிட்ட பின்பும். ‘அருள் கொண்டாயிரம் இன்தமிழ் பாடினான், அருள்கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே,’ என்றும்,
‘நின் கண்வேட்கை எழுவிப்பனே’ என்றும் சொல்லுகையாலே ‘தம் செல்லாமையாலே’ என்கிறார். ‘ஈசுவரன் கைவிட்டிருக்க, இவர் திருத்தினால்
திருந்துவர்களோ?’ என்னில், ‘உபரிசரவசு வினுடைய உபதேச சுத்தியாலே பாதாளத்தையடைந்தவர்கள் திருந்தினாற்போன்று, மஹாபாகவதரான
இவருடைய கடாக்ஷ விசேஷத்தாலும் உபதேச சுத்தியாலும் திருந்துவார்கள்,’என்க.

முதல் திருவாய்மொழியிலே, தம்முடைய அனுபவத்திற்கு உறுப்பாக, அவன் காட்டிக்கொடுத்த பரத்துவத்தை அநுசந்தித்து,
அதுதன்னை ‘உளன் சுடர்மிகு சுருதியுள்’ என்று சுருதிச் சாயையாலே விரித்து அருளிச்செய்தார்,
‘சுவானுபவந்தான் பிறர்க்கு உறுப்பாய் இருக்கையாலே, அறிவுடையராகில் இவ்வளவு அமையுமே அன்றோ?’ என்று பார்த்து. பின்னர்
இதிகாச புராணக் கூற்றுகளாலே பரத்துவத்தை அருளிச்செய்தார், ‘திண்ணன் வீடு’ என்ற திருவாய்மொழியில்.
அதிலும் அவர்கள் திருந்தாமையாலே, ‘அவர்கள் தம்மையே உத்தேசித்தே பகவானுடைய பரத்துவத்தை விளக்கி
விரித்துப் பேசுவோம்’ என்று பார்த்து, அதற்கு உறுப்பாக, மற்றைத் தேவர்கள் பக்கல் உண்டான பரத்துவ சங்கையை
அறுத்துக்கொண்டு, பகவானுடைய பரத்துவத்தை விளக்கி விரித்துப் பேசுகிறார் இத்திருவாய்மொழியில்.

அன்றிக்கே, முதல் திருவாய்மொழியிலே பரத்துவத்திலே பரத்துவத்தை அருளிச்செய்தார்;
அது இவ்வுலக மக்களுக்கு எட்டாநிலமாய் இருந்தது.
அதற்காக, அவதாரத்திலே _ பரத்துவத்தை அருளிச்செய்தார், ‘திண்ணன் வீடு’ என்ற திருவாய்மொழியில்.
அதுவும் பரத்துவத்திலே பரத்துவத்தை ஒத்ததாய்ப் பிற்பாடர்க்கு எட்டிற்று இல்லை. இரண்டும் தேசத்தாலும் காலத்தாலும் கைகழிந்தன.
அக்குறை ஒன்றும் இன்றிக்கே, ‘பின்னானார் வணங்குஞ்சோதி’ என்கிறபடியே, பிற்பாடர்க்கும் இழக்க வேண்டாத
அர்ச்சாவதாரத்திலே பரத்துவத்தை அருளிச்செய்கிறார் இத்திருவாய்மொழியில் என்னுதல்.

எம்பார், ‘சிலர் எல்லா வேத சாஸ்திரங்களும் கைவரப் பெற்று வைத்து, ‘பரதத்துவம் இன்னது’ என்று அறுதியிடமாட்டாதே,
‘சேம்புக்குக் கூராச் சிற்றரிவாள் உண்டோ? நமக்கு வணங்கத் தகுந்தவர் அல்லாதார் உளரோ?’ என்று கண்ட இடம் எங்கும்
புக்குத் தலை சாய்த்துத் தடுமாறி நிற்க, எம்பெருமானார் தரிசனத்தில் எத்தனையேனும் கல்வி இல்லாத பெண்களும்
மற்றைத் தெய்வங்களை அடுப்பிடு கல்லைப் போன்று நினைத்திருக்கிறது,
இந்த ‘ஒன்றுந் தேவும்’ என்ற திருவாய்மொழி உண்டாகையினாலே அன்றோ? என்று அருளிச்செய்வர்;
எம்பெருமானாருடைய திருவடித் தாமரைகளை அடைந்தவர்கள் பிரமன் முதலாயினாருடைய குறைவற்ற செல்வத்தைத்
துரும்புக்குச் சமமாக நினைப்பார்கள்,’ என்னக் கடவது அன்றோ?

‘கார்த்தவீரியார்ஜூனன் என்பான் ஒருவன் தான் இராச்சிய பரிபாலனம் செய்கிற காலத்தில் யாரேனும் ஒருவர்
பாபசிந்தனை பண்ணினார் உளராகில் அவர்கள் முன்னே கையும் வில்லுமாய் நின்று அவற்றைத் தவிர்த்துப் போந்தான் என்றால்,
இது பொருந்தக் கூடியதே,’ என்று இருப்பர்கள்; ஒரு அற்ப மனிதனுக்கு ‘இது கூடும்’ என்று இருக்கிறவர்கள்,
சர்வசத்தியாய் ‘சர்வாந்தர்யாமியாய் இருக்கிற சர்வேசுவரன் இப்படிப் பரந்து நின்று நோக்கும்,’ என்றால்,
மக்கள், ‘இது பொருத்தம் அற்றது’ என்று இருப்பர்கள். ‘ஜாதி, பொருள்கள்தோறும் நிறைந்து தங்கியிருக்கும்’ என்றால்,
‘அசித் பதார்த்தத்திற்கு இது கூடும்’ என்று இருப்பர்கள்;
‘பரம சேதநனாய் இருப்பான் ஒருவன் பரந்து நிறைந்து தங்கியிருப்பான்,’ என்றால், ‘இது கூடாது’ என்று ஐயப்படா நிற்பார்கள்.

இனி, ‘இவர் திருத்தப் பார்த்த வழிதான் யாது?’ என்னில், எல்லாரும் ஒரு சேர விரும்புவது சுகங்கள் உண்டாகவும்,
துக்கங்கள் இன்றிக்கே ஒழியவுமாய் இருக்கச் செய்தே, விரும்பிய சமயத்தில் விரும்பப்பட்ட சுகம் வரக் காணாமையாலும்,
விருப்பம் இல்லாத துக்கம் வரக் காண்கையாலும் ‘இவற்றை எல்லாம் நியமிக்கின்றவனாய் நின்று நுகர்விக்கிறான்
ஒருவன் உளன்,’ என்று கொள்ள வேண்டி இருந்தது. ‘அது என்? சுக துக்கங்களுக்குக் காரணமான புண்ணிய பாவங்கள்
நுகர்விக்கின்றன என்று கொண்டாலோ?’ என்னில்,
அந் நல்வினை தீவினைகளினுடைய தன்மையை ஆராய்ந்தவாறே, அவை, அறிவு அற்றனவாய் இருப்பன சில கிரியா விசேடங்கள் ஆகையாலே,
அப்போதே நசிப்பனவாம்; இனி ஒரு மரத்தைச் செப்பன் இடுங்காலம் வந்தால், கருத்தாவை ஒழிய வாய்ச்சி முதலானவைகட்கு
ஒரு செயல் கூடாதது போன்று, அந்தக் கிரியைகளுக்கும் ஒரு இறைவனை ஒழியப் பலத்தைக் கொடுக்கும் ஆற்றல் கூடாமையாலே
ஒரு இறைவனைக் கொள்ளவேண்டி வரும்; இனி, ‘அபூர்வம்’ என்று ஒன்றைக் கற்பித்து
‘அது அதிருஷ்டரூபேண நின்று பலத்தைக் கொடுக்கிறது’ என்பதனைக்காட்டிலும்,
‘ஒரு பரமசேதநன் நெஞ்சிலே பட்டு அவனுடைய தண்டனை உருவத்தாலும் திருவருள் உருவத்தாலும்
இவை பலிக்கின்றன,’ என்று கூறுதல் நன்றே அன்றோ?இனி, ‘அந்தப் பரமசேதநன் ஆகிறான் யார்?
அவனுடைய சொரூப சுபாவங்கள் இருக்கும்படி எங்ஙனே? அவனுடைய செயல்கள் இருக்கும்படி எங்ஙனே?’ என்னில்,
அவற்றைப் பிரமாணம் கொண்டு அறியவேண்டும். அவற்றுள், பிரத்தியக்ஷம் முதலான பிரமாணங்கள் இந்திரியத்தாலே
காண முடியாத பொருளைக் காண்பதற்குப் பயன்படாமையாலே அவை பிரமாணம் ஆகமாட்டா;
இனி, ‘ஆகமம் முதலானவைகள் பிரமாணம் ஆனாலோ?’ என்னில், புருஷனுடைய புத்தியால் வருகின்ற 3வஞ்சகம்
முதலான தோஷங்கள் அவற்றிற்கு உள ஆகையாலே, அவையும் பிரமாணம் ஆகமாட்டா;
இனி, பதினான்கு வகைப்பட்ட வித்தியைகளுள் முக்கியமானதாய், நித்தியமாய், புருஷனாலே செய்யப்படாதது ஆகையாலே
வஞ்சகம் முதலான தோஷங்கள் இல்லாததாய், சாத்துவிக புராணங்களாலே விரித்துரைக்கப்படுகின்ற வேதம் பிரமாணம் ஆக வேண்டும்.

‘மக்கள் நினைத்தபடி இன்ப துன்பங்கள் வாராமையாலே ஒரு சேதனன் உளன்’ என்று அவன் செய்யும்படியை அனுமானத்தாலே சாதித்தார் மேல்.
‘அவனுடைய ஸ்வரூபம் ஸ்வபாவம் முதலானவை இருக்கும்படி எங்ஙனே?’ என்ன, ‘பிரமாணங்கொண்டு அறிய வேண்டும்’ என்று பிரமாணத்தை
அறுதியிடுகிறார், ‘அவற்றைப் பிரமாணங்கொண்டு அறியவேணும்’ என்று தொடங்கி.

பிரத்யக்ஷம், அநுமானம், உபமானம், ஆகமம், அர்த்தாபத்தி, அபாவம், சம்பவம், ஐதிஹ்யம் எனப் பிரமாணங்கள் எட்டு வகைப்படும். அவற்றுள்,
மநுவினாலே அங்கீகரிக்கப்பட்ட பிரமாணங்கள் மூன்று; அவை, பிரத்தியக்ஷம், அநுமானம், ஆகமம் என்பனவாம். அவற்றையே, இங்குப்
‘பிரத்தியக்ஷம் முதலான பிரமாணங்கள்’ என்று அருளிச்செய்கிறார். ‘முதலான’ என்றதனால், அநுமானத்தைக் கொள்க. ‘ஆகமம்
முதலானவைகள்’ என்றது, பாசுபத சாங்கிய யோகங்களைக் குறித்தபடி.

‘வஞ்சகம் முதலான தோஷங்கள்’ என்றது, பிரமம், பிரமாதம், அசக்தி இவைகளை.

‘பதினான்கு வகைப்பட்ட வித்தியைகள்’ என்றது, இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் என்னும் வேதங்களையும்; சிக்ஷை, வியாகரணம், கல்ப சூத்திரம்,
நிருத்தம், ஜோதிஷம், சந்தோவிசிதி என்னும் ஆறு அங்கங்களையும்; நியாயம், மீமாம்சை, புராணம், தர்மசாத்திரம் என்னும் உபாங்கங்கள் -நான்கனையுமாம்.
ஆயுர் வேதம் -அர்த்த சாஸ்திரம் -தனுர் வேதம் -காந்தர்வ வேதம் -சேர்த்தும் சொல்வர் –

‘‘சாத்துவிக புராணங்களாலே விரித்துரைக்கப்படுகின்ற வேதம்’ என்றது, என்னை? வேதார்த்தத்தை நிர்ணயம் செய்வதற்கு உபப்பிருஹ்மணங்கள்
வேண்டுமோ?’ எனின், வேதார்த்தத்தை அறுதியிடுவதற்கு, சர்வ சாகைகளிலும் சர்வ வேதாந்த வாக்கியங்களிலும் நிறைந்த அறிவு
படைத்திருத்தல் வேண்டும்; அத்தகைய ஞானம் படைத்தவர்கள் மஹரிஷிகளேயாவர்; ஆதலால், ‘இதிஹாச புராணாப்யாம் வேதம்
ஸம்உபபிரும்ஹயேத்’, ‘பிபேதி அல்ப சுருதாத் வேதோமாமயம் பிரதரிஷ்யதி’ என்கிறபடியே, மஹருஷிகள் வசனங்களாகிய
உபப்பிருஹ்மணங்கள் வேண்டும். ‘வேதார்த்தம் அறுதியிடுவது ஸ்மிருதி இதிகாச புராணங்களாலே’ என்பது, ஸ்வாமி பிள்ளை லோகாசாரியர் ஸ்ரீ சூக்தி. (ஸ்ரீவசன பூஷணம்)

சாத்துவிக புராணங்கள்’ என்று விசேடித்துக் கூறுவதற்குக் கருத்து என்?’ என்னில், புராண கர்த்தாக்கள் எல்லாரும் பிரமன் பக்கலிலே
சென்று இவ்விரண்டு காதைகளைக் கேட்டுப் போந்து தாங்கள் தாங்கள் புராணங்கள் செய்தார்கள்;
அந்தப் பிரமனும் ‘ஸ்ரீமந் நாராயணர் உலகங்களைப் படைப்பதற்கு முன்னே பிரமனைப் படைத்தார்;
அந்த நாராயணர் அந்தப் பிரமனுக்கு வேதங்களையும் உபதேசித்தார்,’ என்கிறபடியே, சர்வேசுவரனாலே படைக்கப்பட்டவனாய்
அவனாலே ஞானத்தையடைந்தவனுமாய் இருக்கச் செய்தேயும், ‘முனி புங்கவர்களான தக்ஷர் முதலானவர்களாலே கேட்கப்பட்டவரும்
முக்காலங்களையும் உணர்ந்தவரும் தாமரை மலரில் உதித்தவருமான பிரமாவானவர், ‘உள்ளவாறு சொல்லுகிறேன், என்று சொன்னார்,’
என்கிறபடியே, முனிவர்களைப் பார்த்து உபதேசிக்கிறவிடத்திலே, ‘நான் முக்குணங்களுக்கும் வசப்பட்டவனாய் இருப்பேன்; தமோகுணம் மேலிட்ட போதும் ரஜோகுணம் மேலிட்டபோதும் சொன்னவற்றைப் போகட்டு, சத்துவகுணம் மேலிட்ட சமயத்தில் சொன்னவற்றை எடுத்துக்கொள்ளுங்கோள்,’ என்றானே அன்றோ?

இனி, ‘தாமச கல்பங்களிலே அக்நி சிவன் இவர்களுடைய மாஹாத்மியமானது பரக்கச் சொல்லப்படுகிறது;
இராஜச கல்பங்களிலே பிரமனுடைய மாஹாத்மியம் அதிகமாகச் சொல்லப்படுவதை அறிகிறார்கள்;
சாத்துவிக கல்பங்களிலே விஷ்ணுவினுடைய மாஹாத்மியம் அதிகமாகச் சொல்லப்படுகிறது’ என்னாநின்றதே அன்றோ? ஆகையாலே
குணபேதங்களாலே புருஷபேதங்களைக் கொண்டு அவ்வழியாலே புராணபேதம் கொள்ளலாய் இருந்தது.
ஆகையாலே, ‘சாத்துவிக புராணங்களாலே அறியப்படுகின்ற வேதம்’ என்று விசேடித்துச் சொல்ல வேண்டியிருந்தது.
ஆதலால், சாத்துவிக புராணங்களாலே விரிக்கப்படுகின்ற வேதமே பிரமாணமாகக் கொள்ளவேண்டி இருந்தது,’ என்க.

அந்த வேதத்துக்கு மூன்று குணங்களால் வருகின்ற குற்றம் இல்லையேயாகிலும்,இரு வகைப்பட்ட உலகங்களோடு கூடின
சர்வேசுவரனை விளக்கிப் பேச வந்ததாகையாலே, ‘மூன்று குணங்களையுமுடைய மக்களை விஷயமாக உடையன வேதங்கள்.’ என்கிறபடியே,
முக்குணங்களையும் உடையவர்களாய் இருக்கின்ற மக்களை விஷயமாகவுடையதாய் அவர்களுக்கு நலம் சொல்லப் போந்தது ஆகையாலே,
அவர்களுடைய குணங்கட்குத் தகுதியாக நலம் சொல்லுமது உண்டாய் இருக்கும் வேதத்துக்கும்.
அது அங்ஙனம் சொல்லிற்றேயாகிலும், ‘எல்லா இடங்களிலும் நிறைந்த தண்ணீரில் வேட்கையுடையவனுக்கு எவ்வளவு நீர்
பிரயோஜனப்படுகிறதோ, அறிந்த பிராமணனுக்கு எல்லா வேதங்களிலும் அவ்வளவே பிரயோஜனப்படுகின்றது,’ என்கிறபடியே,
ஆறு பெருகி ஓடாநின்றால், நீர் வேட்கையால் வருந்தின ஒருவன் தன்விடாய் தீருகைக்கு வேண்டுவது எடுத்துக்கொள்வானே அல்லது.
ஆற்று நீரை அடங்கலும் வற்றுவிக்க வேண்டும் என்னும் நிர்ப்பந்தம் இல்லையேயன்றோ அவனுக்கு?
அப்படியே, முமுக்ஷூவானவன் இந்த வேதத்தில் தனக்குக் கொள்ள வேண்டியதான அமிசத்தையன்றோ அறிய வேண்டுவது?

‘இந்த உதரத் தெரிப்பு, த்ரைகுண்ய விஷயமானவற்றுக்குப் பிரகாசகம். வத்சலையான மாதா, பிள்ளை பேழ்கணியாமல் மண் திண்ண
விட்டுப் பிரதி ஒளஷதம் இடுமா போலே, எவ்வுயிர்க்கும் தாய் இருக்கும் வண்ணமான இவனும், ருசிக்கு ஈடாகப் பந்தமும் பந்தம்
அறுப்பதோர் மருந்தும் காட்டுமிறே,’ என்னும் ஆசார்ய ஹிருதய வாக்கியங்கள் (13, 14. சூ.) இங்கு அநுசந்தேயங்கள்.

இனி,அந்த வேதந்தான் ‘பூர்வபாகம்’ என்றும், ‘உத்தரபாகம்’ என்றும் இரண்டு வழிகளாலே பிரிவுண்ணக் கடவதாய்,
அதில் பூர்வபாகமானது, ஆராதனத்தில் தன்மையைச் சொல்லியும், சுவர்க்கம் முதலான பேறுகளையும் அவற்றையடைதற்குரிய
சாதனம் முதலானவற்றையும் சொல்லியும் அவற்றிலேநின்று பரக்குமதாய் இருக்கும்;
இனி, உத்தர பாகமானது, சர்வேசுவரனுடைய சொரூப ரூப குணங்களைப் பரக்க நின்று விளக்கிப் பேசும்.

இனி, பற்றத்தகுந்ததையும், விடத்தக்கவைகளையும் அறுதியிடுவது எது?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘இனி, இந்த வேதந்தான்’ என்று
தொடங்கி.

‘ஆதௌ வேதா: பிரமாணம் ஸ்மிருதி: உபகுருதே ஸேதிஹாஸை: புராணை: நியாயை: ஸார்த்தம் த்வத் அர்ச்சாவிதிம் உபரிபரிக்ஷீயதே பூர்வபாக:
ஊர்த்வோபாக: த்வத் ஈகா குண விபவ பரிஜ்ஞாபநை: த்வத் பதாப்தௌ வேத்யோ வேதைச் ச ஸர்வை: அஹம் இதி பகவந்! ஸ்வேந ச வியாச கர்த்த
– பகவானே! வேதங்களானவை முதலிலே (வேறொரு பிராமணத்தை விரும்பாமல் தாமாகவே) பிரமாணமாகின்றன; மநு முதலான
ஸ்மிருதிகளானவை, இதிகாசங்களோடு கூடின புராணங்களோடும் பூர்வ உத்தர மீமாம்சைகளோடுங்கூடி (அந்த வேதங்களுக்குப் பொருள் விவரணம்
செய்தலாகிற) உபகாரத்தைச் செய்கின்றன; (அந்த வேதத்தில்) கர்ம காண்டம் எனப்படுகிற பூர்வபாகமானது, தேவரீருடைய திருவாராதன முறைமையைச்
சொல்லும் வகையில் முடிகின்றது; பிரம காண்டம் எனப்படுகின்ற உபநிடத பாகமானது, தேவரீருடைய செயல்கள் குணங்கள் விபூதிகள் ஆகிய இவற்றை
விளங்கத் தெரிவிப்பதனாலே தேவரீருடைய திருவடிகளைச் சேர்வதில் முடிகின்றது; ‘எல்லா வேதங்களாலும் அறியக்கூடியவன் நானே,’ என்று
தேவரீர் அருளிச் செய்ததும் உண்டேயன்றோ?’ என்பது ஸ்ரீரங்க ராஜஸ்தவம்.

‘இனி, வணங்குவதற்குரிய பரம்பொருள் யாது?’ என்றால், உலகத்தைப் படைத்தல் முதலிய முத்தொழில்கட்கும் காரணமாய்
இருக்கும் பொருள் எதுவோ, அதுவே, வணங்கத் தக்க பொருள் என்று காரண வாக்கியங்கள் ஒருங்க விட்டு வைத்தன. ‘எங்ஙனே?’ என்னில்,
‘எதனிடத்திலிருந்து இந்தப் பொருள்கள் உண்டாகின்றனவோ,எதனால் உண்டான பொருள்கள் பிழைத்திருக்கின்றனவோ,
நாசத்தையடைந்து எதனிடத்தில் இலயப்படுகின்றனவோ, அதனைத் தியானம் பண்ணுவாயாக; அதுதான் பரம்பொருள்,’ என்று கொண்டு,
மற்றைப் பொருள்கட்குத் தியானம் பண்ணத் தகாததாகுகையை முன்னாக உலகத்திற்குக் காரணமாயுள்ள பொருளுக்குத் தியானம்பண்ணத்
தகுந்ததாகுகையை விதித்துக் கொண்டு நின்றது; ‘காரணப் பொருளே தியானம் செய்வதற்குரியது,’ என்னக்கடவதன்றோ?

‘யதோவா இமாநி பூதாநி ஜாயந்தே யேந ஜாதாநி ஜீவந்தி யத்பிரயந்தி அபிஸம்விசந்தி தத்விஜிஜ்ஞாஸஸ்வ தத்பிரஹ்ம’–என்பது, தைத்திரீய. பிருகு. 1.

‘எல்லா வாக்கியங்களும் ஏவகாரத்தோடு கூடியவை,’ என்கிற நியாயத்தாலே, இங்கு, ‘தத்விஜிஜ்ஞாஸஸ்வ’ என்ற தொடர்மொழியை ‘ததேவ
விஜிஜ்ஞாஸஸ்வ’ என்று ஏவகாரத்தோடு கூட்டினால், ‘அந்தப் பொருளையே தியானம் பண்ணுவாய்’ என்ற பொருள் போதரும்; அவ்வாறு போதரவே,
‘மற்றைப் பொருள்கள் தியானம் செய்யத் தக்கவையல்ல’ என்ற பொருளும் கிடைக்குமேயன்றோ? அதனைத் திருவுள்ளம் பற்றியே, ‘மற்றைப்
பொருள்கட்கு’ என்று தொடங்கி அருளிச்செய்கிறார்.

தியானம் செய்தற்குரிய அந்தப் பொருளை, ‘சோமபானம் செய்வதற்குரிய சுவேத கேதுவே! இந்த உலகமானது படைப்பதற்கு முன்னே
‘சத்’ என்று சொல்லக் கூடியதாய் இருந்தது,’ என்று ‘சத்’ என்ற சொல்லால் சொல்லி, வேறு சாகைகளிலே நின்று,
‘இந்த உலகமானது படைப்பதற்கு முன்னே பிரஹ்மம் என்ற ஒன்றேயாய் இருந்தது,’ என்று பிரஹ்ம சப்தத்தாலே சொல்லி,
அந்த பிரஹ்ம சப்தந்தானும் அநேக பொருள்களைக் கூறுமாகையாலே, ‘இந்த உலகமானது படைப்பதற்கு முன்னே
ஆத்துமா என்ற ஒன்றேயாய் இருந்தது,’ என்று ஆத்தும சப்தத்தாலே சொல்லி, அந்த ஆத்தும சப்தமும் பலவிடங்களிலும்
ஒட்டிக்கொள்ளலாயிருக்கையாலே, ‘நாராயணன் ஒருவனே இருந்தான்,’ என்று நாராயணன் என்ற சொல்லுக்கு உரிய பொருளாகச் சொல்லி நின்றது.

‘காரணந்து த்யேய:’ என்பது, அதர்வசிகை.

‘ஸதேவ ஸோம்யே தமக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம்’– என்பது, சாந்தோக்யம்.

‘பிரஹ்ம வா இதம் ஏகமேவ அக்ர ஆஸீத்’- என்பது, வாஜஸநேயம்.

‘அநேக பொருள்களைக் கூறுமாகையாலே’ என்றது, ‘பிரஹ்மம் என்ற சொல் -வேதம் முதலிய பொருள்களைக் காட்டுமாகையாலே’ என்றபடி.

‘ஆத்மா வா இதம் ஏக ஏவ அக்ர ஆஸீத்’ என்பது, ஐதரேயம்.

‘ஆனால், பின்னர் சத்தும் இல்லை; அசத்தும் இல்லை; சிவன் ஒருவனே இருந்தான்,’ என்றும்,
‘சம்பு: ஆகாஸ மத்யே த்யேய:’ என்றும் காரணனாய் உள்ள தன்மையையும், தியானம் செய்யத் தகுந்தவனாயுள்ள தன்மையையும்
சிவன் முதலானவர்களுக்கு விதியாநின்றதே; அவை செய்வன என்?’ என்னில், அப்பெயர்களால் அவர்கள் உத்தேசியர்களாகச்
சொல்லப்பட்டார்களேயாகிலும், சுத்தி குணத்தையுடையவன், சுகத்தைக் கொடுக்கிறவன் என்ற காரணங்களால்
அப்பெயர்களும் விசேடியமான நாராயணன் என்ற பெயரால் சொல்லப்படுகிறவன் பக்கலிலே சென்று சேரும்.
‘சம்பு சிவன் முதலிய பெயர்களை நாராயணன் என்ற பெயரால் சொல்லப்படுகின்றவனுக்கு விசேடணமாக்கிக் கூறியது போன்று,
நாராயணன் என்ற இந்தப் பெயரையும், சம்பு சிவன் முதலிய பெயர்களால் சொல்லப்படுகின்றவனுக்கு விசேடணமாக்கிக் கூறினாலோ?’ என்னில்,
சுத்தி குணத்தை உடையவன், சுகத்தைக் கொடுக்கிறவன் என்ற காரணங்களால் அவற்றை இங்கே சேர்க்கலாம்;
நாராயணன் என்னும் பெயர், காரண இடுகுறிப்பெயராகையாலே, வேறு பொருள்கட்குச் சேர்க்க ஒண்ணாது.

‘ஏகோ ஹவை நாராயண ஆஸீத் நபிரஹ்மா நேஸாநோ நேமே த்யாவா பிருதிவீ ந நக்ஷத்ராணி’–என்பது, மஹோபநிடதம்.
ந சத் நச அசத் சிவ ஏவ கேவல:’– என்பது , ஸ்வேதாஸ்வதரம். ‘சத்’ என்றது, நாமரூபங்களோடு கூடின சித்தினை.
‘அசத்’ என்றது, நாமரூபங்களோடு கூடின அசித்தினை.
‘சம்பு : ஆகாச மத்யே த்யேய:’- என்பது, ஸ்வேதாஸ்வதரம்.

அவர்கள் உத்தேசியர்களாகச் சொல்லப்பட்டார்களேயாகிலும்’ என்றதனால,் ஸ்வபக்ஷத்தால் அவர்கள் உத்தேசியராகச் சொல்லக்கூடாது என்கை.
‘யாங்ஙனம்?’ எனின், ‘நாராயணாத் பிரஹ்மா ஜாயதே நாராயணாத் ருத்ரோ ஜாயதே’, ‘த்ரயக்ஷ: சூல பாணி: புருஷோ ஜாயதே’ என்பனவற்றால் பிறப்பும்,
‘நபிரஹ்மாநே ஸாநோ’ என்றதனால் அழிவும், சிவனுக்குச் சொல்லுகையாலே ‘சிவ ஏவ கேவலம்’ என்ற காரணத்துவம் கூடாது. ‘சதபதத்திலே
அஷ்டமூர்த்திப் பிராஹ்மணத்திலே, ‘பூதாநாம்பதி: ஸம்வத்ஸர உஷஸி’ என்பது முதலாகத் தொடங்கப்படும் வாக்கியங்களால், நான்முகனால்
படைக்கப்படுதலும், பாவங்கள் நீக்கப்படுதலும், பெயர் வைக்கப்படுதலும் முதலாயின சிவனுக்குச் சொல்லப்படுதலால், தியானிக்கப்படுதலும் கூடாது,’
என்றபடி. ‘ஆயின், ‘பிரஹ்ம விஷ்ணு ருத்ர இந்த்ரா: தே ஸர்வே ஸம்பிரஸூயந்தே’ என்பதனால், விஷ்ணுவுக்கும் பிறப்புச்
சொல்லப்படுகிறதே?’ எனின், அது, அநுவாத ரூபமாகையாலே, ‘அஜாயமாந:’ முதலிய விதி வாக்கியங்களுக்குத் தகுதியாக, கர்மங்கட்குக்
கட்டுப்படாதவனாயும் கர்ம பலன்களை அநுபவிக்காதவனாயும் தன் இச்சையாலே அவதரிக்கின்ற சர்வேசுவரனுடைய அவதாரங்களைக்
குறிக்கின்றது. ‘தஸ்யதீரா: என்பது முதலான சுலோகங்கள் இங்கே அநுசந்தேயங்கள். ‘சிவன் முதலியோர்கட்கு இத்தகைய விதி வாக்கியங்கள்
இல்லாமையாலே, பிறப்பு, கர்மங்காரணமாய் வந்தது என்றே கோடல் வேண்டும்,’ என்க.

‘சுத்தி குணத்தையுடையவன்’ என்று தொடங்கும் வாக்கியத்திற்குக் கருத்து யாது?’ என்னில், ‘சிவன், சம்பு முதலிய பெயர்கள், வேறு பொருள்களிலும்
இரு வகை வழக்கிலும் வழங்கி வருகின்றன; ஆதலால், அப்பெயர்களை இங்குச் சேர்க்கலாம். ‘நாராயணன்’ என்ற பெயர், வேறு பொருள்களுக்குப்
பெயராக வழங்காமையின், அதனை வேறு பொருளுக்குச் சேர்க்க ஒண்ணாதே!’ என்பது. இப்பெயர், காரண இடுகுறிப் பெயர் என்க. ‘ஆயின்,
சிவன், சம்பு முதலிய பெயர்களும் காரண இடுகுறிப்பெயர்களேயன்றோ?’ எனின், ‘அவை, சாதாரண காரண இடுகுறிப் பெயர்கள்; இது, அசாதாரண
காரண இடுகுறிப் பெயர்,’ என்க. இதனை, ‘அத்யந்த யோகரூடி’ என்பர். ‘மோ, பங்கஜம்’ என்னும் பெயர்களைப் போன்று கொள்க.

நன்று; சிலர்க்கே உரியனவாய் அவர்கட்கே முடிவு செய்யப்பட்டனவாய் உள்ள பெயர்களை வேறு ஒருவர் பக்கலிலே
கொடுபோய்ச் சேர்க்கும்படி எங்ஙனே?’ என்னில், இந்திரன், பிராணன், ஆகாசம் என்னும் இப்பெயர்கள்,
அவ்வப்பொருள்கள் அளவில் முடிந்து நில்லாது, அவற்றிற்கு உரிய நேர்ப்பொருள்களில் சென்று முடிந்து நிற்கின்றன அல்லவோ?’
‘யாங்ஙனம்?’ எனின், ‘இந்திரன் என்றால், இப்பெயர் உண்டாக்கப்பட்ட இந்த இந்திரனைக் காட்டுதலோடு அமையாது,
சர்வேசுவரன் பக்கலிலே சென்று முடிவு பெறுதலைப் போலவும், பிராணன் என்னும் பெயர், ஐவகைப்பட்ட பிராணன்களில்
ஒன்றனைக் காட்டுதலோடு அமையாது, பிராணனாய் இருக்கின்ற சர்வேசுவரன் பக்கலிலே சென்று முடிவுறுதலைப் போலவும்,
ஆகாசம் என்னும் பெயர், ஐம்பெரும்பூதங்களில் ஒன்றான ஆகாசத்தைக் காட்டுதலோடு அமையாது, அவனளவும் காட்டுகிறாப்போலேயும்,
சம்பு சிவன் முதலிய பெயர்களும், சர்வேசுவரன் பக்கலிலே சென்று முடிந்தல்லது நில்லா,’ என்க.
இனித்தான் பிரகாரவாசி சப்தங்கள் பிரகாரி பர்யந்தம் சென்று தத்தம் பொருளைச் சொல்லக் கூடியன ஆகையாலும்,
பிரகாரியான சர்வேசுவரன் பக்கல் சென்று முடிந்தல்லது நில்லா,’ என்க.

‘நன்று; சம்பு சிவன் முதலிய பெயர்கள் காரணத்தை நோக்குமிடத்துப் பகவத் பரம் ஆகலாம்; ‘உமாபதி’ என்பது போன்ற அசாதாரணமான பெயர்களில்
நிர்வாஹம் எப்படி?’ என்ன, ‘இனித்தான்’ என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார். ‘பிரகாரவாசி சப்தங்கள்’ என்றது, ‘விசேஷணம்’
அல்லது,‘சரீரம்’ என்ற பொருளைக் காட்டுகின்ற சொற்கள் என்றபடி. பிரகாரி -விசேடியம்: அல்லது, சரீரி. சிவன் முதலானோர் சர்வேசுவரனுக்குச் சரீரமாய்
உள்ளவர்கள் என்பதனை, ‘ஸபிரஹ்மா ஸசிவ:’ ‘ஸ: அந்தராத் அந்தரம் பிராவிசத்’, ‘பிரஹ்ம விஷ்ணு சிவாத்மிகாம்’ என்ற வாக்கியங்களால் உணர்தல் தகும்.

‘நன்று; இனி, ‘ததோயத் உத்தரதரம்’ என்று கொண்டு சொல்லுகிற இடத்தில் செய்வது என்?’ என்னில், மேலே சர்வேசுவரனைப்
புருஷன் என்ற பெயர்க்குரிய பொருளாகச் சொல்லி, அதற்கு மேலே ‘உத்தரதரம்’ என்னும் போது ‘புருஷோத்தமன் என்பதனைத் தெரிவித்ததாமத்தனை.
அங்ஙனங்கோடற்குக் காரணம் என்?’ என்னில், ‘எந்தப் பரம்பொருளுக்கு ஒத்த தாயும் மிக்கதாயுமுள்ள பொருள் வேறு ஒன்றும் இல்லை,’ என்று கூறி
வைத்து, ‘அதற்கு மேலே ஒன்று உண்டுகாண்’ என்னும் போது அறிவில்லாதவனாகச் சொன்னவனாமத்தனை; முதலிலே ஓதாதவன் வார்த்தையாமத்தனை.

‘தத:’ என்ற சொல். மேலே கூறிய புருஷனைக் காட்டுகிறது என்றும், ‘உத்தரதரம்’ என்றது, அவனுக்கு மேலேயுள்ள சிவனைக் காட்டுகிறது என்றும்
பிற மதத்தினர் பொருள் கூறுவர். ‘தத:’ என்பதற்கு ஹேது பரமாகவும், ‘உத்தரதரம்’ என்பதற்கு, சர்வ உத்கிருஷ்ட புருஷ பரமாகவும் பொருள் கூற
வேண்டும் என்பது நமது சித்தாந்தம். என்றது, ‘அந்தக் காரணங்களால், புருஷோத்தமன்’ என்பதனைத் தெரிவித்தபடி என்றவாறு. தத: – ஆகையால்,
இதனையே அருளிச்செய்கிறார், ‘மேலே சர்வேசுவரனை’ என்று தொடங்கி. ‘புருஷன் என்ற பெயர்க்குரிய பொருளாகச் சொல்லி’ என்றது, ‘வேதாஹ
மேதம் புருஷம் மஹாந்தம்’ ‘தேநேதம் பூர்ணம் புருஷேண ஸர்வம்’ என்று வருகின்ற மேல் வாக்கியங்களைத் திருவுள்ளம் பற்றி.

. ‘யஸ்மாத் பரம் நா பரம் அஸ்தி கிஞ்சித்’ என்பது சுருதி வாக்கியம்.

‘ததோயத் உத்தரதரம்’ என்று கூறும் வாக்கியத்திற்குப் பிறர் கூறும் பொருளைத் திருவுள்ளம் பற்றி, ‘அதற்கு மேலே ஒன்று உண்டுகாண்
என்னும்போது’ என்று அருளிச்செய்கிறார்.

‘முதலிலே ஓதாதவன் வார்த்தையாமத்தனை’ என்றது, ‘உஸ்மாத் பரம் நா பரம் அஸ்தி கிஞ்சித்’ என்ற முன் வாக்கியத்தைப் ‘படிக்காத
அறிவில்லாதவனுடைய வார்த்தை,’ என்றபடி.

நன்று; ‘அந்தப் பகவானிடத்தில் உள்ளே இருக்கிற பொருள் உபாசிக்கத் தக்கது,’ என்கிறதோ?’ எனில், அது,
வேறு பொருள் உபாசிக்கத் தக்கது என்கிறது அன்று; அந்தப் பகவானைப் போன்ற அவன் குணங்களும் தியானிக்கத் தக்கவை என்பதனைக் கூறியதாம்.
இனித் தான், உலகத்திற்குக் காரணப் பொருளாய் இருந்து கொண்டு வணங்கத் தக்கதாய் இருப்பது,
என்றும் ஒக்க இருக்கும் பொருளாக வேண்டுமே அன்றோ?’ அதில் சம்ஹார காலத்தில் ‘நாராயணனே இருந்தான்’ என்று
நாராயணன் என்ற பெயரால் சொல்லப்படுகின்றவன் ஒருவனுமே உளன் என்று சொல்லி,
‘பிரமனும் இல்லை, சிவனும் இல்லை’ என்று அவர்களை இல்லையாகச் சொல்லிற்றே அன்றோ?’
இனி, ‘மற்றைத் தேவர்களைக்காட்டிலும் அவர்களுக்கு ஓர் உயர்வு உளதோ?’ என்று ஐயப்படாமைக்கு
‘ஆகாயம் பூமி இல்லை; நக்ஷத்திரங்களும் இல்லை,’ என்று அவற்றோடு ஒக்க, பிரமன் சிவன் என்னும் இவர்களையும் ஒரு சேரச் சேர்த்துவிடுகிறது.
படைத்தலைக் கூறுமிடத்தும், ‘நன்மைப்புனல் பண்ணி நான்முகனைப் பண்ணி’ என்று ஒரு நீராகப் பொருந்த வைத்தன்றோ கிடக்கின்றது?

தஸ்மிந்யத் அந்த: தத்உபரஸிதவ்யம்’ இங்கு, ‘அந்த:’ என்பதற்கு, ‘உள்ளே இருக்கிற வேறொரு தத்துவம்’ என்று பிற மதத்தினர் பொருள் கூறுவர்.
‘உள்ளே இருக்கின்ற கல்யாண குணங்கள்’ என்பது நமது சித்தாந்தம்.சாந்தோக்ய உபநிடதமும் இங்ஙனமே கூறாநிற்கும்; ‘தஹரோஸ்மிந் அந்த:
ஆகாஸ: தஸ்மிந்’ என்று தொடங்கி விரிவாகக் கூறிச் செல்லுதலை ஆண்டுக் காணல் தகும்.

மற்றைத் தேவர்கட்கு அபரத்துவ பூர்வமாக எம்பெருமானுடைய பரத்துவத்தைக் காட்டுவதற்கு மூன்று ஏதுக்களை அருளிச் செய்கிறார்,
‘இனித்தான்’ என்று தொடங்கி.

‘ஏகோஹவை நாராயண ஆஸீத் நபிரஹ்மா நேஸாநோ நேமேத்யாவா பிருதிவி ந நக்ஷத்ராணி.’

‘பிரமனை அசேதனத்தோடு சேர்த்துச் சொல்லலாமோ?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘படைத்தலைக் கூறுமிடத்தும்’ என்று தொடங்கி.
திருவாய். 7. 5 : 4.

ஆக, இத்திருவாய்மொழியில் சொல்லுகிற பரத்துவ நிர்ணயத்துக்கு உபயோகமான பிரமாண உபபத்திகளைத் தெரிவித்த பின்பு,
இத்திருவாய்மொழியிற்சொல்லுகிற பொருளைத் தொகுத்து அருளிச்செய்கிறார், ‘ஆக, இப்படிகளாலே’ என்று தொடங்கி.
இத்திருவாய்மொழியில் வருகின்ற, ‘இலிங்கத் திட்ட புராணத் தீரும்,’ ‘விளம்பும் ஆறு சமயமும்’ என்ற பாசுரங்களைத் திருவுள்ளம் பற்றி
‘மற்றைத் தேவர்கள்பக்கல் உண்டான பரத்துவ சங்கையையறுத்து’ என்றும்,
‘நாயகன் அவனே’ என்றதனைத் திருவுள்ளம்பற்றி, ‘எல்லாப் பொருள்களைக்காட்டிலும் உயர்ந்தவனாய்,என்றும்,
‘உலகோடு உயிர் படைத்தான்’ என்றதனைத் திருவுள்ளம் பற்றி,‘எல்லாப் பொருள்களையும் படைக்கின்றவனாய்’ என்றும்,
‘வீடில் சீர்ப்புகழ்’ என்றதனைத் திருவுள்ளம் பற்றிக் ‘கல்யாண குணங்கள் எல்லாவற்றையுமுடையவனாய்’ என்றும்,
‘கரந்து உமிழ்ந்து கடந்து இடந்தது?’என்றதனைத் திருவுள்ளம் பற்றி ‘எல்லாப்பொருள்களையும் காப்பாற்றுகின்றவனாய்’ என்றும்,
‘மறுவில் மூர்த்தியோடொத்து இத்தனையும் நின்ற வண்ணம் நிற்க’ என்றதனைக் கடாக்ஷித்து, ‘எல்லாப் பொருள்களுக்கும் அந்தரியாமியாய்’ என்றும்,
‘நாராயணன் அருளே’ என்றதனைக் கடாக்ஷித்து, ‘நாராயணன் என்ற பெயரால் சொல்லப்படுகின்றவனான’ என்றும்,
‘இத்தனையும் நின்ற வண்ணம் நிற்கவே’ என்றதனைக் கடாக்ஷித்து, ‘தன் பெருமைகள் எல்லாவற்றோடுங்கூட’ என்றும் அருளிச்செய்கிறார்.

‘ஆக, இப்படிகளிலே மற்றைத் தேவர்கள் பக்கல் உண்டான பரத்துவ சங்கையை அறுத்து, எல்லாப் பொருள்களைக்காட்டிலும் உயர்ந்தவனாய்
எல்லாப்பொருள்களையும் படைக்கின்றவனாய்க் கல்யாணகுணங்கள் எல்லாவற்றையுமுடையவனாய் எல்லாப் பொருள்களுக்கும் அந்தரியாமியாய்
நாராயணன் என்ற பெயரால் சொல்லப்படுகின்றவனான சர்வேசுவரன் தன் பெருமைகள் எல்லாவற்றோடுங்கூடக் கண்களுக்குப் புலனாகும்படி திருநகரியிலே வந்து அண்மையிலே இருப்பவன் ஆனான்; அவனை அடைந்து எல்லாரும் பயன் பெற்றவர்களாகப் போமின்,’ என்று அருளிச்செய்கிறார்.

‘ஒன்றும் தேவும்’ என்ற இத்திருப்பதிகத்தில் திருமந்திரத்தின் பொருள் சொல்லப்படுகிறது, ‘யாங்ஙனம்? எனின்,
முதல் இரண்டு திருப்பாசுரங்களாலே காரணத்துவத்தையும்,
மூன்றாந்திருப்பாசுரத்தாலே இரட்சகத்துவத்தையும்,
நான்காந்திருப்பாசுரத்தாலே சேஷித்துவ நிவர்த்தியையும்,
ஐந்தாம் பாசுரத்தாலே அந்நிய சேஷத்துவ நிவர்த்தியையும்,
ஆறாந்திருப்பாசுரத்தாலே நமஸ் சப்தார்த்தமான உபாயத்துவத்தையும்,
ஏழாந்திருப்பாசுரத்தில் ‘ஆடுபுட்கொடி யாதி மூர்த்தி’ என்கையாலே நாராயண பதத்திற்சொன்ன உபய விபூதி யோகத்தையும்,
எட்டாந்திருப்பாசுரத்தாலே நாராயண சப்தந்தன்னையும்,
ஒன்பதாந்திருப்பாசுரத்தாலே அவன் அடியார்க்கு அடிமைப்பட்டிருத்தலையும்,
பத்தாந்திருப்பாசுரத்தாலே கைங்கரியத்தையும் அருளிச்செய்திருத்தலால்,’ என்க.

————————————————————————————————————————

ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா
அன்று, நான்முகன் தன்னொடு தேவர் உலகோடு உயிர்படைத்தான்
குன்றம் போல் மணிமாடம் நீடு திருக் குருகூரதனுள்
நின்ற ஆதிப் பிரான் நிற்க, மற்றைத் தெய்வம் நாடுதிரே!–4-10-1-

காரண வாக்ய பிரக்ரியையால் சமஸ்த -காரண பூதன் -சர்வேஸ்வரன் -சந்நிஹிதனாக இருக்க –
காரண வாக்கியம் -ஏககை நாராயாணா ஆஸீத் -ஏகமேவ அத்விதீயம் ந பிரம்மா இத்யாதி -வேறு யாரைத் தேடுகிறீர்கள்
ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா-யாதும் ஒன்றும் இல்லா-கொன்று கூட்டுப் பொருள் –
அன்றிக்கே
அடை மொழியாக ஒன்றும் -ஒன்றைக் கூடிய -லய காலத்தில் -அனைத்தும் -ஒன்றுமே –தமஸ் பரே தேவே ஏகி பவதே –
ஆனானப் பட்ட மூலப் பிரக்ருதியே லயிக்குமே -தேவ ஜாதி லயிக்க சொல்லவும் வேணுமோ
மற்றும் -சமஷ்டி ரூபமான மகான் முதலிய சமஸ்த பதார்த்தங்களும்
நாம ரூப விபாக ரஹீதங்களாக கொண்டு
யாதும் -சகல பதார்த்தங்களும்
அன்று, நான்முகன் தன்னொடு தேவர் உலகோடு உயிர்படைத்தான்-பிராட்டி -உணர்த்த –சிருஷ்டி உன்முகனாக-
தயமான மனவானாகக் கொண்டு சிருஷ்டிக்கு யோக்யமான அன்று -கால தத்வம் –
பஹூச்யாம் பிரஜாயேதி சங்கல்பம் செய்து
சமஷ்டி புருஷனான பிரமன் உடன் கூடி -தன்னை வந்து ஆஸ்ரயித்து நல் வழி பெற
குன்றம் போல் மணிமாடம் நீடு திருக் குருகூரதனுள்-ஆஸ்ரயிப்பார்க்கு சுலபமாக -வந்து நிற்கிற சமஸ்த காரண பூதன் -மகா உபகாரகன்
நின்ற ஆதிப் பிரான் நிற்க, மற்றைத் தெய்வம் நாடுதிரே!-சந்நிஹிதனாக இருக்க -சிருஷ்டி சம்ஹாரங்களுக்கு கர்மீ பவிக்கும்
-விஷயமாகும் தேவதைகளை தேடுகிறீர்களே

‘தேவர்களும் தேவர்கள் தங்கியிருக்கின்ற உலகங்களும் மக்கள் முதலான உயிர்களும் மஹத்து முதலான தத்துவங்களும் மற்றும்
எல்லாப் பொருள்களும் ஒன்றும் இல்லாத அந்தக் காலத்தில் நான்கு முகங்களையுடைய பிரமனோடுகூடத் தேவர்களையும் அவர்கள்
தங்கியிருக்கின்ற உலகங்களையும் மற்றை உயிர்க்கூட்டங்களையும் படைத்தவன்; மணிமாடங்கள் மலைகளைப்போன்று உயர்ந்து
விளங்குகின்ற திருக்குருகூரில் நின்ற திருக்கோலமாய் எழுந்தருளியிருக்கின்ற ஆதிப்பிரான் நிற்க, மற்றைத் தெய்வங்களைத் தேடுகின்றீர்களே!’ என்கிறார்.
‘மற்றும் யாதும் ஒன்றும் இல்லா அன்று’ என்று கூட்டுக. அன்றிக்கே, ஒன்றும் என்பதனைப் பெயரெச்சமாகக் கொண்டு தேவும் முதலான பொருள்கட்கு அடைமொழியாக்கலுமாம். ‘உயிர் படைத்தானாகிய ஆதிப்பிரான்’ என்க. நாடுதிர் – விரும்புகின்றீர்கள் எனலுமாம்.
இத்திருவாய்மொழி, அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.

‘நாராயணன் ஒருவனே இருந்தான்,’ என்ற காரண வாக்கியப் பொருளை நினைந்து கொண்டு, எல்லாப்பொருள்களையும்
படைத்தவனான சர்வேசுவரன், தாய் சந்நிதி ஒழியக் குழந்தை வளராதாப் போலே தன் சந்நிதி ஒழிய இவை வாழமாட்டா என்று
பார்த்துத் திருநகரியிலே மிக எளியனாய் நிற்க, -பிரமேயம் பிரயோஜனம் அவனே —
‘வேறே அடையக்கூடிய பொருளும் ஒன்று உண்டு,’ என்று தேடித் திரிகின்றீர்கோளே!’ என்று நிந்திக்கிறார்.

தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் ஒன்றும் இல்லா அன்று –
தேவசாதியும் அவர்களுக்கு இருப்பிடமான உலகங்களும், மனிதர்கள் முதலான உயிர்களும், அண்டத்திற்குக் காரணமான
மகத்து முதலான தத்துவங்களும் இவை ஒன்றும் இல்லாத அன்று’ என்னலுமாம்;
அங்ஙன் அன்றிக்கே,
‘காரியத்துக்குக் காரணத்திலே இலயமாகச் சொல்லுகையாலே, காரணனாய் இருக்கிற தன் பக்கலிலே சென்று
ஒன்றுகின்ற தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா அன்று’ என்னவுமாம். -நாம ரூபங்கள் இல்லாமல்
சதேவ -சத்தாகவே இருக்கும் –அழிந்து போகாதே -சதேவ சோம்யே-‘சத்து ஒன்றே இருந்தது’ என்னக்கடவது அன்றோ?
அல்லாதார் ரஷிக்கும் பொழுது கைம்முதல் -கொண்டு பண்ணுவது போலே இல்லாமல் -ஆகிஞ்சன்யம் -ஒன்றையே
-பச்சையாகக் கொண்டு ரஷிக்கும் சர்வேஸ்வரன் அன்றோ இவன்
நான்முகன் தன்னோடு தேவர் உலகோடு உயிர் படைத்தான் –
பிரமனோடு கூடத் தேவசாதியையும், அவர்களுக்கு இருப்பிடமான உலகங்களையும் உயிர்களின் கூட்டத்தையும் படைத்தான்.
அன்றிக்கே,
‘பதினான்கு உலகங்களையும் படைத்த பிரமனோடு, அவனாலே படைக்கப்பட்டவர்களாய் நித்திய சிருஷ்டிக்குக் கடவரான பிரஜாபதிகள் பதின்மரும்
போக ஸ்தானங்கள் -லோகங்கள் உடன் -குடி மக்கள் மனுஷ்யாதிகள் -வாசி அற படைத்தான் –

இங்கு,–‘யத் தத் பத்மம் அபூத் அபூர்வம் தத்ர பிரஹ்மா வியஜாயத பிரஹ்மணஸ் சாபி ஸம்புத: சிவ இதி அவதார்யதாம்
சிவாத் ஸ்கந்த: சம்பபூவ ஏதத்சிருஷ்டி சதுஷ்டயம்’- என்ற பகுதி நினைத்தல் தகும்.
நான்முகனைப் படைத்தான்; நான்முகன் ஐம்முகனைப் படைத்தான்: ஐம்முகன் அறுமுகனைப் படைத்தான்; ஆக இதுதான் பல முகமாயிற்றுக்காணும்.
நாட்டார் சிவனுக்கு உயர்வுகளைச் சொல்லி மயங்காநிற்கவும், இவர் அவன் பக்கல் ஒன்றும் காணாமையாலே, திருநாபிக்கமலத்தில் நேரே பிறந்து
அதனாலே உண்டான ஏற்றத்தை யுடையவனாகையாலே, பிரமனை (முதலாக) எடுத்துச் சொல்லி, சிவனைத் தேவகூட்டத்திலே சேர்த்துப் பேசுகிறார்.

‘சம்ஹாரத்தில் மகத்து முதலானவைகள் அளவும் சொன்னார் படைப்பில் பிரமன் தொடக்கமாகச் சொன்னார்; இதற்குக் கருத்து என்?’ என்னில்,
மகத்து முதலான தத்துவங்களிலே பரத்துவ சங்கை பண்ணுவார் இலர்; அறிவில்லாத மக்களாய் இருப்பவர்கள் பிரமன் முதலாயினார் பக்கல்
பரத்துவ சங்கை பண்ணுவார்கள்; அதற்காக அவ்விடமே பிடித்துக் கழிக்கிறார். ‘நன்று; நித்தியமான உயிர்களைப் ‘படைத்தான்’ என்றல் என்?’ எனின்,
போக மோக்ஷங்கள் விளைத்துக் கொள்ளுகைக்குக் கரண களேபரங்களைக் கொடுத்தலைத் தெரிவித்தபடி.

குன்றம் போல் மணி மாடம் நீடு திருக்குருகூரதனுள் நின்ற –
இப்படிப் படைத்தவன் தான் தூரத்தில் உள்ளவனாய் நிற்கையன்றிக்கே, மலைகளைக் கொடுவந்து சேர வைத்தாற்போலே இருப்பனவாய்,
மணி மயமான மாடங்களினுடைய உயர்ச்சியை யுடைத்தான திருநகரியிலே நின்ற.
‘பெருமாள் மீண்டும் என்னைக் கூப்பிடுவரோ என்னும் ஆசையால் பல நாள் குகனோடு கூட அங்கே நின்றிருந்தேன்,’ என்னுமாறு போலே,
நாம் கொடுத்த கரணங்களைக் கொண்டு ‘நான் வணங்கமாட்டேன்,’ என்னாமல், வணங்குவர்களோ?
அன்றிக்கே,
‘நாம் வளைந்து கூட்டிக் கொள்ளப் புக்கால், விலக்காதொழிவர்களோ!’ என்று கொண்டு காலத்தை எதிர் நோக்கினவனாய் நிற்கின்றபடி.
அங்குச் சேஷியைப் பெறுகைக்குச் சேஷபூதனானவன் நின்ற நிலை; இங்கு அடியவர்களைப் பெறுகைக்கு இறைவன் நின்ற நிலை.
சேஷபூதனை லபிக்க சேஷி நிற்கும் நிலை –

ஆதிப்பிரான் நிற்க –
இப்படி உங்கள் பக்கல் ஆசையாலே திருநகரியிலே நித்தியவாசம் செய்கிற இவனை விட்டு
மற்றைத் தெய்வம் நாடுதிரே –
தேடித் திரியுமது ஒழியப் பற்றத் தகுந்தவர்கள் கிடையார்.
‘எவன், வசுதேவன் புத்திரனான ஸ்ரீ கிருஷ்ணனை விட்டு வேறு தேவனை வணங்குகிறானோ, அந்த மூடன், நீர் வேட்கையுடைய
ஒருவன் புத்தியில்லாதவனாய்க் கங்கையின் கரையிலே கிணறு தோண்டுகின்றான்-ஜான்கவி தீரே கூபம் – என்பவனோடு ஒப்பன்,’ என்கிறபடியே,
‘நீர் வேட்கையுடைய ஒருவன், கங்கை பெருகி ஓடாநிற்க அதிலே அள்ளிக் குடித்துத் தன் விடாய் தீரமாட்டாதே, அதன் கரையிலே
குந்தாலி கொண்டு கிணறு தோண்டித் தன் விடாய்க்கு உதவ நாக்கு நனைக்க இருக்குமாறு போலே, அடையத் தக்கவனுமாய் எளியனுமாய்
எளிதில் ஆராதிக்கக் கூடியவனுமாய் நல்நெறியை யுடையவனுமான இவனை விட்டு, அடையத் தகாதவராய் அரியராய் அரிதில்
ஆராதிக்கக் கூடியவராய்த் தீ நெறியையுடையராய், வருந்தி ஆராதித்தாலும் சேட்டை தன் மடியகத்துச் செல்வம் பார்த்திருக்குமாறு போலே
பலிப்பதும் ஒன்று இன்றிக்கே இருக்கிற திருவில்லாத் தேவரைத் தேடி அடைவதற்குத் திரிகின்றீர்கோளே!’ என்று நிந்திக்கிறார்.

ஆதிப்பிரான்’ என்றதனை நோக்கி, ‘அடையத்தக்கவனுமாய்’-பிராப்தன்- என்றும், ‘திருக்குருகூரதனுள்’ என்றதனை நோக்கி, ‘எளியனுமாய்’ என்றும்,
‘யாதுமில்லா அன்று உயிர் படைத்தான்’ என்றதனை நோக்கி, ‘எளிதில் ஆராதிக்கக் கூடியவனுமாய்’ -ஸூ ஆரதன் -என்றும்,
‘நின்ற’ என்றதனை நோக்கி, ‘நல்ல சுவபாவத்தையுடையனுமான’ -ஸூ சலினன்-என்றும் அருளிச்செய்கிறார்.
இதற்கு மறுதலையாக ‘மற்றைத் தெய்வம் நாடுதிரே’ என்றதற்கு பாவம் அருளிச்செய்கிறார், ‘அடையத்தகாதவராய்’ என்று தொடங்கி.
‘நாட்டினான் தெய்வம் எங்கும், நல்லதோர் அருள் தன்னாலே காட்டினான் திருவரங்கம் உய்பவர்க்கு உய்யும் வண்ணம்;
கேட்டிரே நம்பு மீர்காள்! கெருடவா கனனும் நிற்கச் சேட்டைதன் மடிய கத்துச் செல்வம் பார்த்திருக்கின்றீரே,’- திருமாலை, 10. சேட்டை – மூதேவி.

‘கல்லா தவரிலங்கை கட்டழித்த காகுத்தன் அல்லால் ஒரு தெய்வம் யானிலேன் ;- பொல்லாத
தேவரைத் தேவரல்லாரைத் திருவில்லாத் தேவரைத் தேறேன்மின் தேவு.’– நான்முகன் திருவந். 53.

—————————————————————————————————-
நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும் முன் படைத்தான்
வீடில் சீர்ப் புகழ் ஆதிப்பிரான் அவன் மேவி உறை கோயில்,
மாட மாளிகை சூழ்ந்தழகாய திருக் குருகூரதனைப்
பாடி ஆடிப் பரவச் சென்மின்கள், பல்லுலகீர்!பரந்தே.–4-10-2-

இதுவும் அகரார்த்தம் -ஜகத் காரணத்வம்
சிருஷ்டிக்கு அடியான திவ்ய மங்கள குணங்கள் –திவ்ய தேசத்தையே வணங்க –
நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும் முன் படைத்தான்-நீர் நாடி வணங்கும் -குண அனுகுணமாக -ஆஸ்ரயிக்கும்-
தேவதைகளையும் உங்களையும் -சிருஷ்டித்தவன்
வீடில் சீர்ப் புகழ் ஆதிப்பிரான் அவன் மேவி உறை கோயில்,-ஞான சக்த்யாதி நித்ய கல்யாண குணங்கள் -வேதாந்த பிரசித்தி
பிரதம உபகாரகன் -ஆஸ்ரித அபிமுக்யார்த்தமாக பொருந்தி நித்ய வாஸம்
மாட மாளிகை சூழ்ந்தழகாய திருக் குருகூரதனைப்-திவ்ய தேசத்தையே
பாடி ஆடிப் பரவச் சென்மின்கள், பல்லுலகீர்!பரந்தே.–ருசி குண பேதங்களால் -பல் வகைப்பட்ட –
பாடி விக்ருதராய் ஆடி ஸ்துத்தித்து -உகப்பாலே எங்கும் சென்று -சொல்லிக் கொள்ளுமின் –

‘பல வகைப்பட்ட நாடுகளிலும் நகரங்களிலும் உள்ளவர்களே! நீங்கள் விரும்பி வணங்குகின்ற தெய்வங்களையும் உங்களையும்
ஆதி காலத்திலேயே படைத்தான், அழிதல் இல்லாத கல்யாண குணங்களையும் புகழையுமுடைய ஆதிப்பிரான்.
அவன் மனம் விரும்பி வசிக்கின்ற கோயில், மாடங்களும் மாளிகைகளும் சூழ்ந்து அழகு நிறைந்திருக்கின்ற
திருக்குருகூர் என்னும் திவ்விய தேசத்தைப் பாடி ஆடித் துதித்துப் பரந்துசெல்லுங்கோள்,’ என்றவாறு.
‘உலகீர்! நீர் திருக்குருகூரதனைப் பாடி ஆடிப் பரவிப் பரந்து சென்மின்,’ எனக் கூட்டுக.
‘படைத்தானாகிய ஆதிப்பிரான் அவன் மேவி உறை கோயில்’ என்க. ‘கோயிலாகிய திருக்குருகூர்’ என்க.
அன்றி, ‘கோயிலையுடைய திருக்குருகூர்’ எனலுமாம்.
மாயோன் மேய காடுறை உலகமும்’ என்புழிப்போன்று, ஈண்டு ‘உலகு’ என்றது, உலகின் உட்பகுதிகளைக் காட்டிற்று.

அடைகின்ற உங்களோடு, அடையப்படுகின்ற அந்தத் தேவர்களோடு வாசி அற எல்லாரையும் உண்டாக்கினவன்
நின்றருளுகையாலே அடையத்தக்கதான திருநகரியை அடையுங்கோள்,’ என்கிறார்.

நீர் நாடி வணங்கும் தெய்வமும் –
இயல்பாகவே அமைந்தது ஓர் உயர்வு இல்லாமையாலே அவைதாம் இறாயா நிற்கச்செய்தே. வசன ஆபாசங்களாலும் யுக்தி ஆபாசங்களாலும்
நீங்கள் பொரி புறந்தடவி வருந்திச் சேமம் சார்த்தி வைத்து அடைகின்ற தேவர்களையும். கள்ளரைத் தேடிப் பிடிக்குமாறு போலே
தேடிப் பிடிக்க வேண்டி இருப்பவர்களாதலின், ‘நாடி’ என்கிறார்.
ஆடு திருடின கள்ளர்களே அன்றோ இவர்கள்தாம்? அணங்குக்கு அருமருந்து என்று அங்கே ஆடு கட்டினவர்கள் ஆகையாலே,
தேடிப் பிடிக்க வேண்டுமே? -தீர்ப்பாரை -பார்த்தோம் -ஆடும் கள்ளும் பராய்
‘கள்ளர் அச்சம் காடு கொள்ளாது,’ என்று தன்னை அடைய வருகிறவர்களையும்
தன்னைக் கட்ட வந்தார்களாகக் கொண்டு போகிறபடி. நீர் – இராஜஸராயும் தாமஸராயும் உள்ள நீர்.
அன்றிக்கே, ‘நீர்’ என்று, அவர்களோடு தமக்கு ஒட்டு அறச் சொல்லுகிறார் என்னலுமாம்.
ஆக, ‘நீர் நாடி வணங்கும்’ என்றதனால், ‘உங்கள் நினைவு ஒழிய அவர்கள் பக்கல் ஓர் உயிர் இல்லை’ என்பதனைத் தெரிவித்தபடி.

நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும் –
நீங்கள் வணங்குகின்ற இராஜசராயும் தாமசராயும் உள்ள தேவர்களையும் உங்களையும்.
முன் படைத்தான் –
படைக்கிற இடத்தில் முற்பட அவர்களைப் படைத்துப் பின்னர் உங்களைப் படைத்தான்.
‘உலகங்களைப் படைப்பதற்கு முன்னே பிரமனைப் படைத்தார்’ என்கிறபடியே,
பிரமனைப் படைத்துப் பின்பே அன்றோ இவ்வருகு உள்ளாரைப் படைத்தது? அவன் படைத்திலனாகில்,
நீங்கள் மற்றைத் தேவர்களை அடையும்படி எங்ஙனே?’ என்பார், ‘படைத்தான்’ என்கிறார்.
‘அவன் படைத்திலனாகில் எங்ஙனே உண்ண இருப்பீர்கோள்?’ என்றபடி.
‘உங்களுக்கு இறைமைத்தன்மை உண்டாகும் அன்றே அன்றோ, அவர்களும் இறையவராவது?’ என்பார், ‘உம்மையும் படைத்தான்’ என்கிறார்.

வீடு இல் சீர் –
இயல்பாகவே அமைந்துள்ளதான செல்வத்தையுடையவன். என்றது,
‘நீங்கள் அடைகின்ற தேவர்களுடைய ஐஸ்வரியம் போலே
ஒருவனுடைய புத்திக்கு வசப்பட்டதாய், அவன் நினைத்திலனாகில் இல்லையாய், அது தனக்கு அடி கர்மமாய்,
அந்தக் கர்மம் குறைந்தவாறே அழியக் கூடியது அன்று ஆதலின், ‘வீடு இல் சீர்’ என்கிறது. வீடு – அழிவு. சீர் – செல்வம்.
அன்றிக்கே, நீங்கள் அடைகின்ற தேவர்களுடைய செல்வம் போலே அவதியுடன் கூடியிருப்பது அன்று. என்றது,
யுக கோடி சஹஸ்ரம் தபஸ் பண்ணி அன்றோ நான் முகன் பதவி பெற்றது -தன் தலை அறுத்துக் கொண்டுத்து தபஸ் பண்ணினவன் அன்றோ ருத்ரன் –
‘கர்மம் அடியாய் அதிலே ஒன்று குறையக் குறைதல், பலத்தைக் கொடுக்கின்றவனுடைய திருவருள் குறையக் குறைதல் இல்லாதது.’ என்றபடி.
‘எல்லாப் பலன்களும் அந்தப் பரம்பொருளிடத்திலிருந்துதான் பெறப்படுகின்றன,’ என்றதே அன்றோ?
பலம் அத உபபத்தே –உத்தர மீமாம்சம் -சர்வம் பலம் -அவன் இடத்தில் இருந்து தான் -அவனே பிராப்யம் பலம் –
அன்றிக்கே, ‘வீடு இல் சீர்’ என்பதற்கு, ‘அழிவில்லாத கல்யாண குணங்களையுடையவன்’ என்னுதல்.
‘அவனிடத்தில் எந்தக் குணம் உள்ளதோ, அதுவும் தியானிக்கத் தக்கதே,’ என்கிறபடியே, அவனைப் போன்றே
அவன் குணங்களும் உபாசிக்கத் தக்கவை என்னுமிடம் சொல்லுகிறது.

புகழ் –
எல்லாரையும் பாதுகாத்து, அவ்வாறு பாதுகாத்தலால் வந்த புகழையுடையவன்.
பாதுகாப்பதால் வந்த புகழையுடையவன் அன்றோ அடையத் தக்கவன் ஆவான்?
‘கீர்த்திக்குத் தானே இருப்பிடமாக இருப்பவர்,’ என்னக் கடவதன்றோ?
யசசச்ய ஏக பாஜனம் -தாரை -நாமி பலத்தால் சுக்ரீவன் வந்துள்ளான் என்றது –
ஆதிப்பிரான் –
பாதுகாத்துப் புகழைப் படையாமல் பழி படைத்தாலும் விட ஒண்ணாத சம்பந்தத்தை ‘ஆதி’ என்கிற பதத்தால் சொல்லுகிறது.
‘கேவலம் சம்பந்தமே அன்று, உபகாரகன்’ என்பதனைச் சொல்லுகிறது ‘பிரான்’ என்ற சொல்.
உபகாரகனுமாய் சம்பந்தத்தையுடையனுமாய், கீர்த்தியாளனுமாய். ஐஸ்வர்யம் என்ன, அழியாத கல்யாண குணங்கள் என்ன,
இவற்றையுடையவனை ஒழிய, இவை இல்லாதாரை அடையத் தகுதி இல்லை.
காரண வஸ்துவே அன்றோ உபாசிக்கத் தக்கது? ‘காரண வஸ்துவே தியானிக்கத் தகுந்தது’ என்னா நின்றதே அன்றோ?

அவன் மேவி உறை கோயில் –
அவன் பரமபதத்திலே உள் வெதுப்போடே -மனஸ் தாபம் -காணும் இருப்பது. இம் மக்கள் படுகிறத்துக்கத்தை நினைந்து,
‘இவை என் படுகின்றனவோ?’ என்கிற திருவுள்ளத்தில் வெறுப்போடே ஆயிற்று அங்கு இருப்பது.
‘முத்தன் ஜனங்களின் மத்தியில் இருக்கிற இந்தச் சரீரத்தை நினையாமலே நாலு பக்கமும் சஞ்சரிக்கின்றான்,’ என்கிறபடியே,
இங்குத்தைத் துக்கத்தை நினையாது ஒழிய வேண்டுவது, பண்டு துக்கத்தை யுடையவனாய் இருந்து இவ்வுலகத்தினின்றும் போனவனுக்கே அன்றோ?’
‘இங்குத்தைத் துக்கத்தை நினைக்குமாகில், அனுபவிக்கின்ற சுகத்துக்குக் கண்ணழிவு ஆகாதோ?’ என்னும் கண்ணழிவு இல்லையே அவனுக்கு?

‘பரமபதத்திலும் சமுசாரிகள் படுகிற துக்கத்தை நினைத்துத் திருவுள்ளத்தில் வெதுப்போடே யாயிற்று
எழுந்தருளியிருப்பது,’ என்று பட்டர் அருளிச்செய்ய,
‘பண்டிதர்’ என்கிறவர், ‘ஆச்சானும், பிள்ளையாழ்வானும் இத்தைக் கேட்டுப் பரமபதத்திலே ஆனந்தத்தால் நிறைந்தவனாய்
இருக்கிற இருப்பிலே திருவுள்ளத்திலே ஒரு வியசனத்தோடே இருந்தான் என்கை உசிதமோ என்கிறார்கள்,’ என்று ‘பண்டிதர்’ என்கிறவர்,
வந்து விண்ணப்பஞ்செய்ய, ‘‘மனிதர்களுக்குத் துக்கம் வருகின்ற காலத்தில் தானும் மிகவும் துக்கிக்கின்றான்’ என்றது,
‘குணப் பிரகரணத்திலேயோ, துக்கப் பிரகரணத்திலேயோ?’ என்று கேட்க மாட்டிற்றிலீரோ?
இது குணமாகில், ‘குணம்’ என்று பேர் பெற்றவற்றில் அங்கு இல்லாதது ஒன்று உண்டோ?’ என்று அருளிச்செய்தார்.
‘எல்லாக் கல்யாண குணங்களையும் இயல்பாகவேயுடையவன்,’ என்னக் கடவதன்றோ? –
இது பெருமாள் குணம் என்னவோ என்றாகில் மேலே -சமஸ்த கல்யாண குணம் கொண்டவன் அன்றோ அந்த பராத்பரன் –
அபஹதபாப்மா –விசோக-சாம்யாபத்தி அஷ்ட குணங்களில் ஓன்று அன்றோ -என்னில் அது கர்ம நிபந்தனம் இல்லை –
தன் இச்சை ஒழியக் கர்மம் காரணமாக வருபவை இல்லை என்னுமத்தனை போக்கி, திருவருளின் காரியமாய் வருமவை இல்லை எனில்,
முதலிலே சேதனன் அன்றிக்கே ஒழியும். ‘அந்தப் பரம்பொருள் உயிர்க்கூட்டம் எல்லாம் பிரகிருதியில் இலயப்பட்டிருக்கும் காலத்தில்
தான் தனியாய் இருந்துகொண்டு துக்கத்தை அடைந்தான்,’ -ச ஏகாகி ந ரமேத -என்றது, நித்தியவிபூதியும் குணங்களும் உண்டாயிருக்கச் செய்தே அன்றோ?

ஆதிப்பிரான் அவன் மேவி உறைகோயில் –
பரமபதத்தில் தன்னில் குறைந்தார் இல்லாமையாலே, அவ்விடத்தை விட்டு, நல்ல படுக்கையையும் போகத்துக்கு
ஏகாந்தமானவற்றையும் காற்கடைக்கொண்டு, குழந்தையினுடைய தொட்டிற்காற்கடையிலே கிடக்கும் தாயைப் போலே,
காப்பாற்றுவாரை விரும்புமவர்களான இம் மக்கள் இருக்கிற இடமாகையாலே விரும்பி வசிக்கும் இடம் இவ்விடம் ஆயிற்று.
மாட மாளிகை சூழ்ந்து அழகாய திருக்குருகூர் –
மாடங்களாலும் மாளிகைகளாலும் சூழ்ந்து காட்சிக்கு இனியதாய் இருக்கும் திருக்குருகூர். உங்களுக்குதான் நல்ல தேசம் தேட்டமே; ‘முத்தனாகிற
பேற்றினைக் கொடுக்கும் தேசம், என்று தோற்றுகிறதில்லையோ?’ என்றபடி.
அதனைப் பாடி ஆடி –
பிரீதியினாலே தூண்டப்பட்டவராய்க்கொண்டு பாடி, உடம்பு இருந்த இடத்தில் இராமல் ஆடி, கிரமமின்றியே கூப்பிட்டுக் கொண்டு.
இதனால், ‘அதனுள் நின்ற ஆதிப்பிரான்’ என்ற இடம் மிகை என்கிறார். என்றது,
‘பகவான் எழுந்தருளியிருக்கும் ஊரில் வசிக்கக்கடவன்,’ ‘இந்தத் தேசமானது, புண்ணியத்தைக் கொடுக்கக் கூடியது;
விரும்பியனவற்றை எல்லாம் கொடுக்கக் கூடியது.-தேசோயம் சர்வ காம துதூத் – என்கிறபடியே, இதுதானே பேறு,’ என்றபடி.
அந்தத் தேசம் என்றால் தம் திருவுள்ளம் இருக்குமாறு போலே இருக்கும் என்று இருக்கிறார் காணும் எல்லார்க்கும்.

பல் உலகீர் –
ஒருவன் சமித்தைக் கையிலே உடையவனாய் ஐம்பொறிகளையும் அடக்கியவனாய் வர, அவனுக்கு நலத்தை உபதேசம் செய்கிறார் அல்லர்;
‘இவை என்ன உலகியற்கை!’ என்று, உலகம் கிலேசப்படுகிறபடியைக் கண்டு எல்லார்க்கும் சொல்லுகிறாரே அன்றோ?
ஆதலால், ‘உலகீர்’ எனப் பொதுவில் அழைக்கிறார்.
பரந்தே –
‘பெரிய திருநாளுக்கு எல்லாத் திக்குகளினின்றும் வந்து ஏறுமாறு போன்று, பல திக்குகளினின்றும் பாடி ஆடிப் பரவிச் சென்மின்கள்.

‘விரும்பினவை எய்தும்; வினை யனைத்தும் தீரும்; அரும் பரம வீடும் அடைவீர் ;- பெரும்பொறிகொள்
கள்ளம் பூதங்குடிகொன் காயமுடை யீரடிகள் புள்ளம் பூதங்குடியிற் போம்.’ என்ற திவ்விய கவியின் திருவாக்கு நினைவு கூர்தல் தகும்.

‘சமுசாரிகள் பாடி ஆடுவார்களோ?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘அந்தத் தேசம்’ என்று தொடங்கி.
‘வளந்தழைக்க உண்டால் என்? வாசம் மணந்தால் என்? தெளிந்த கலை கற்றால் என்? சீசீ! – குளிர்ந்தபொழில்
தண் குருகூர் வாவிச் சடகோபன் ஊர் எங்கள் வண் குருகூர் என்னாத வாய்.’

————————————————————————————————–

பரந்த தெய்வமும் பல் உலகும் படைத்து அன்று உடனே விழுங்கிக்
கரந்து உமிழ்ந்து கடந்து இடந்தது கண்டும் தெளிய கில்லீர்
சிரங்களால் அமரர் வணங்கும் திருக்குருகூர் அதனுள்
பரன் திறமன்றிப் பல்லுலகீர்! தெய்வம் மற்றில்லை பேசுமினே.–4-10-3-

ரஷகத்வம் -கார்ய ரூப ஜகத்தை ரஷிப்பதே -ஸ்ருஷ்டித்தவனது அடையாளம் –
பரந்த தெய்வமும் பல்உலகும் படைத்து அன்று உட னேவிழுங்கிக்-ஸூ விபூதி நியமனத்தாலே –
விபூதி லோகங்களால்–சிருஷ்டித்து க்ரமம் பார்க்காமல் விழுங்கி
கரந்துஉ மிழ்ந்து கடந்துஇடந்தது கண்டும் தெளிய கில்லீர்-பிரளயம் காண ஒண்ணாதபடி –அளந்த -மகா பலி அபிமானம் –
அனந்யார்ஹம் ஆக்கி -மகா வராஹமாய்
கண்டும் அறியாமல் -திருவடி ஒருவன் நீட்ட -ஒருவன் கழுவ ஒருவன் தலையில் வாங்கி சுத்தி பெற
சிரங்க ளால்அம ரர்வணங் கும்திருக் குருகூர் அதனுள்-ரஜஸ் தமோ குணங்களால் அறியாமல் -சர்வ ஸ்மாத் பரன்
பரன்திற மன்றிப் பல்லுல கீர்! தெய்வம் மற்றில்லை பேசுமினே.-அப்ருதக் சித்த விசேஷணம் பிரகாரம் –
தெய்வம் மற்று இல்லை -பரன் திறம் அன்றி -விசேஷித்து -ஸ்வ தந்தரமாக இல்லையே

பரந்திருக்கின்ற தெய்வங்களையும் அவர்களுக்கு உறைவிடமான பல வகைப்பட்ட உலகங்களையும் படைத்தும்,
பிரளயம் வந்த அக்காலத்தில் உடனே விழுங்கியும், பிரளயம் அறியாதவாறு மறைத்தும், பின்னர் வெளி நாடு காண உமிழ்ந்தும்,
திருவிக்கிரமாவதாரத்தில் இரண்டு அடிகளால் அளந்தும், வராஹ அவதாரத்தில் பிரளயத்தினின்று எடுத்தும் செய்து போன
காரியங்களைப் பார்த்திருந்தும், ‘அவனே யான்; அவனுக்கேயுரியது உலகம்’ என்பதனைக் தெளியமாட்டுகின்றிலீர்;
தேவர்கள் தலைகளாலே வணங்குகின்ற திருக்குருகூர் என்னும் திவ்விய தேசத்தில் எழுந்தருளியிருக்கின்ற சர்வேசுவரனுக்குச் சரீரமாய் அல்லது
ஸ்வதந்தரத்தோடு கூடியிருக்கிற வேறு தெய்வம் இல்லை: இருக்குமேயாயின், பல வகைப்பட்ட உலகத்தில் உள்ளவர்களே! என்னோடு வந்து பேசுங்கள்.
‘பல் உலகீர்! கண்டும் தெளியகில்லீர்! திருக்குருகூரதனுள் பரன் திறம் அன்றி மற்றுத் தெய்வம் இல்லை; பேசுமின்,’ எனக் கூட்டுக.
‘அன்றி இல்லை’ என்க. திறம் – பிரகாரம்; சரீரம்.

‘உலகத்தை விழுங்குதல் முதலிய தெய்வத்தன்மை வாய்ந்த செயல்களாலும் இவனே பரன்;
இதனை உடன்படாதார் என்னோடு வந்து கலந்து பேசிக்காணுங்கோள்,’ என்கிறார்.

பரந்த தெய்வமும் –
கொள் கொம்பு மூடப் படர்ந்து இறைவனோடு ஒக்க எடுத்துக் கழிக்க வேண்டும்படி, கை விஞ்சின தேவசாதியும்.
பல் உலகும் –
அவர்கள் பரப்புக்கெல்லாம் போரும்படியான உலகங்களும்.
அன்றிக்கே, ‘அவர்கள் நியமிக்கின்றவர்கள் ஆகைக்குக் காரணமாக நியமிக்கப்படுகின்றவர்களான மற்றைய ஆத்துமாக்களையும்’ என்னலுமாம்.
படைத்து –
உண்டாக்கி. இவருக்கு அந்தத் தேவர்களோடு அல்லாதாரோடு வாசி அற்று இருக்கிறபடி.
அன்று உடனே விழுங்கி –
‘அந்தப் பரமாத்துமா முன்னே பிரமனைப் படைத்தார்,’ என்கிறபடியே,
படைக்கிறபோது முறையாகப் படைத்தான்; ஆபத்து வந்தால், அங்ஙனம் முறை பார்க்க ஒண்ணாதே,
பிரளயாபத்திலே ஒருகாலே வயிற்றில் வைத்து.
கரந்து –
‘பிரளயம் வந்தாலும் இங்கு உண்டோ?’ என்று இளைத்துக் காட்டலாம்படி மறைத்து.

உமிழ்ந்து –
‘உள்ளே இருந்து நோவுபடுகின்றனவோ?’ என்று வெளி நாடு காண உமிழ்ந்து.
கடந்து –
நடுவே மஹாபலி போல்வார் பருந்து இறாஞ்சினாற்போலே பறித்துக்கொள்ள, எல்லை நடந்து மீட்டுக்கொண்டு.
இடந்தது –
பிரளயத்திலே அழுந்தி அண்டப் பித்தியிலே சேர்ந்த இந்த உலகத்தை மஹாவராஹமாய்ப் புக்கு ஒட்டு விடுவித்து எடுத்து.
இப்படிச் செய்த இவற்றை,
கண்டும் –
இவர்க்குப் பிரத்தியக்ஷத்திலும் சாஸ்திரம் விளக்கமாகக் காணப்படுகிறது காணும்.
தெளியகில்லீர் –
மக்கள் செயலுக்கு அப்பாற்பட்ட இத்தகைய செயல்களைக்கொண்டே ‘அவனே அடையத்தக்கவன்’ என்று அறியலாய் இருக்க,
அறிய மாட்டுகின்றிலீர்கோள். இவர்கள் தெளிவும் தெளியாமையும் ஒழிய, உண்மைநிலையில் மாறாட்டம் அற்று இருக்கிறது ஆதலின்,
‘கண்டும் தெளியகில்லீர்’ என்கிறார். ‘உங்கள் கலக்கமும் தெளிவும் ஒழிய, அவனை ஈஸ்வரன் அல்லனாகச் செய்தல்,
இவர்களை ஈஸ்வரர்கள் ஆக்குதல் செய்ய ஒண்ணாதே அன்றோ?’ என்றபடி.

அமரர் சிரங்களால் வணங்கும் –
‘எல்லாப் பொருள்களையும் படைத்தவனும் அல்லன்; ஆபத்திற்குத் துணைவனும் அல்லன்’ என்று இருந்தீர்கோளே யாகிலும்,
நீங்கள் அடைகிற தேவர்கள் செய்கிறது முன்னம் நீங்கள் கண்டால் தெளியலாமே!
அவர்கள், ‘தலை படைத்த பிரயோஜனம் பெற்றோம்’ என்று வணங்குகிறபடியைக் கண்டாகிலும் நீங்கள் அவனைப் பற்றப் பாருங்கோள்.
‘தாமரை போன்று ஒளியுள்ளதும், பிரமன் சிவன் இவர்களால் அருச்சிக்கப்பட்டதுமான திருவடிகளால் தடவினார்,’ என்றும்,
‘பின்னிட்ட சடையானும் பிரமனும் இந்திரனும், துன்னிட்டுப் புகலரிய’ என்றும்,
‘நாத்தழும்ப நான்முகனும் ஈசனுமாய முறையால் ஏத்த’ என்றும் கூறப்படும் பிரமாணங்களைக் காண்க.
திருக்குருகூர் அதனுள் பரன் –
மனித வடிவத்தில் பரத்துவத்துக்கும் அவ்வருகே ஒரு பரத்துவமே அன்றோ இது?
இவ்வருகே போரப் போர உயர்வு மிகுமத்தனை. குணத்தாலே அன்றோ பொருளுக்கு உயர்வு?
குணங்களுக்குப் பெருமை உள்ளது இங்கேயே யன்றோ?
‘அவர்கள் இருவரில் சேதனன் கருமபலத்தை இனிமையாக அனுபவிக்கிறான்; மற்றவனான ஈசுவரன் கர்மபலத்தை
அனுபவியாமல் மிகவும் பிரகாசிக்கிறான்!’ என்கிறபடியே, இவ்வுயிர்கள் சரீரத்தோடே கலசக்கலச ஒளி மழுங்கி வாரா நிற்கச்செய்தே,
அவனுக்கு நியமிக்கும் தன்மையால் வந்த புகர் அற விஞ்சி வருமாறு போன்று,
இம்மக்கள் நடுவே போரப்போர ஆயிற்று, முதன்மை – மேன்மை பிரகாசிப்பது.-இதம் பூர்ணம் –சர்வம் பூர்ணம் சஹோம்

திறம் அன்றி –
அவனுக்குச் சரீரமாய் அல்லாது. திறம் – சரீரம்.
தெய்வம் மற்று இல்லை –
சுதந்தரமாய்த் தனக்கு உரித்தாய் இருப்பது ஒரு தெய்வம் இல்லை.
தேவர்களுடைய சொரூபத்தை விலக்குகிறார் அன்று, ‘அவனுக்கு விபூதி வேண்டும்’ என்று இருக்கிறவர் ஆகையாலே;
அவர்களுடைய சுவாதந்தரியத்தை விலக்குகிறார். ‘மற்றைத் தேவர்களை அவனுக்குச் சரீரமாகப் புத்தி பண்ணி அடைந்தீர் கோளாகில்,
அவனுடைய ஆஸ்ரயணத்திலே புகும்; அவர்கள் சுவதந்தரர்கள் என்று புத்தி பண்ணிப் பற்றினீர் கோளாகில்,
சுவதந்தரமாய் இருப்பதொரு வேறு தெய்வம் இல்லை;
‘சுவதந்தரப் பொருள் இங்குப் பல இல்லை’ என்றும்,
‘எவர்கள் பிதிரர்களையும் தேவர்களையும் அக்கினியோடு கூடிய பிராமணர்களையும் பூஜிக்கிறார்களோ, அவர்கள் எல்லா
ஆத்துமாக்களுக்கும் அந்தரியாமியாயிருக்கிற விஷ்ணுவையே பூஜிக்கிறார்கள்,’ என்றும் வருவன காண்க.
பேசுமின் –
நான் ‘அவனுக்குச் சரீரமாய் அல்லது சுவதந்தரமாயிருப்பது ஒரு தேவதை இல்லை,’ என்றேன்;
‘இப்படி வேறு ஒருவருக்கும் வசப்பட்டிராத நியமிக்குந் தன்மையையுடைய இவனைத் தனக்குச் சரீரமாகவுடையது
ஒரு தெய்வம் உண்டு,’ என்று சொல்ல வல்லார் உண்டாகில், வாய் படைத்தார் என் முன்னே நின்று சொல்லிக்காணுங்கோள்,’ என்கிறார்.

————————————————————————————————

பேச நின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும்
நாயகன் அவனே கபால நன் மோக்கத்துக் கண்டு கொண்மின்
தேச மாமதிள் சூழ்ந்து அழகாய திருக்குருகூர் அதனுள்
ஈசன் பால் ஓர் அவம் பறைதல் என்னாவது இலிங்கியர்க்கே?–4-10-4-

பேசுமின் என்றார் முன் பாசுரத்தில் -5117 வருஷங்களாக யாரும் மாற்றி பேச வரவில்லையே
ஈச்வரதையா பிரசித்தமான தேவதாந்த்ரங்களுக்கும் ஈஸ்வரனாக -நிர் தோஷ பிரமாண சித்தம் –
அநீச்வரத்வம் சொல்லும் ஆநு மாநிக -ஈச்வராதிகள் -முதலான -நையாயிகர்களால் என்ன பிரயோஜனம்
சைவர்கள் லைங்கர்யகள் பாசுபதர்கள் -நையார்கர்கள் வைசேஷிகர்கள் -சாஸ்திர சம்பந்தம் இல்லாமல் -சொல்லுவார்கள் –
சாஸ்திர யோநித்வாத் -ப்ரஹ்ம விசாரம் சாஸ்திரம் கொண்டே –
நையாயிக -வைசேஷியர் -அநு மானம் கொண்டே ஸ்தாபிக்கப் பார்ப்பார்கள் –
அபரிச்சின்ன ஞான சக்திகளுக்கு கொத்தை வரும்
பேச நின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும்-பேசிப் பேசித் தான் இவர்களைத் தூக்கி நிறுத்த வேண்டும் –
புதுசாக கல்பித்து -ஆலம்பனம் -பிரமாண ஆபாசங்களால் –
சமாத்யாயங்களாலும் -ஈஸ்வர பிரசித்த உபயோகம்
பிரமாதம் -கவனக் குறைவு -அர்த்தம் தப்பாக உபயோகிப்பது போலே
அவனுக்கும் உத்பாதகன் -பிறர்க்கும் -எவிற்றுச் செய்யும் அல்லாத தேவாதிகளுக்கும்
நாயகன் அவனே கபால நன் மோக்கத்துக் கண்டு கொண்மின்-ஸ்வரூப விபூதி நிர்வாகன்
நிர் தோஷ வேதாந்த சித்தன் சர்வேஸ்வரன்
கபாலீத்வம் பவிஷ்யசி -சாபம் -பிஷார்த்தம் -நல்ல சாப விமோசனம் -கபாலம் வெடித்து –
பஞ்சமா வேதம் மகாபாரதம் சொல்லுமே -அபரோஷித்து -பிரத்யஷம்
தேச மாமதிள் சூழ்ந்து அழகாய திருக்குருகூர் அதனுள்
இப்படி இருக்கும் தேஜோ மயமாய் -அத்யுன்னமான –
ஈசன் பால் ஓர் அவம் பறைதல் என்னாவது இலிங்கியர்க்கே?
கபாலி விமோசகத்வம் தோற்ற எழுந்து அருளி இருக்கும் –
நிருபாதிக சர்வேஸ்வரன் –
அவம் -அபக்ருஷ்ட வசனங்கள் சொல்லி -இலிங்க பிரமாண வாதிகள் -ஆநு மாநிகர்களுக்கு என்ன ஆவது
உண்மை அறிவுக்கு ஊற்று வாய் பிரமாணம் -கருவி –
வேதம் பிரபல பிரமாணம் மாறாக சொல்லி –ஸூ அபிமத ஈஸ்வர சித்தி இல்லை என்று கருத்து –

‘பேசப்படுகின்ற சிவபெருமானுக்கும் பிரமனுக்கும் மற்றைத் தேவர்கட்கும் தலைவன் அவனேயாவன்; இதனைக் கபாலம் விடுபட்ட
சரிதையாலே கண்டுகொள்ளுங்கோள்; ஒளி பொருந்திய பெரிய மதில்கள் சூழ்ந்து அழகாய் இருக்கின்ற திருக்குருகூர் என்னும்
திவ்விய தேசத்தில் எழுந்தருளியிருக்கின்ற சர்வேசுவரன் விஷயத்தில் பயனில்லாத வார்த்தைகளை ஏற்றிப் பேசுதல்
அநுமானத்தைப் பிரமாணமாக உடையவர்கட்கு என்ன பயனைத் தருவதாம்?’ என்கிறார்.
கபாலம் – பிரமனது மண்டை ஓடு. மோக்ஷம் – விடுபடுதல். தேசம் – ஒளி. அவம் – பயன் இன்மை. ‘இலிங்கியர்க்கு என்னாவது?’ என்க.
இலிங்கியர் – அநுமானத்தைப் பிரமாணமாகக் கொண்டவர்; அவர் ஆவார், பாசுபத நையாயிக வைசேடிகர்.

வியோமாதீத நையாயிக வைசேடிகர்கள் முதலானவர்கள் வந்து கிட்டினவர்களாய்,-வியோமம் -ஆகாசம் அதீத -நாராயணனை தாண்டி ருத்ரன் -என்பர்
‘உலகம் உறுப்புகளோடு கூடியிருக்கையால் காரிய ரூபமாய் இராநின்றது; ஆகையாலே, இதற்கு ஒரு கருத்தா வேண்டும்;
இந்த உலகந்தான் விசித்திரமான அமைப்பை உடைத்தாய் இருக்கையாலே இதற்குத் தக்க
‘உபாதாந உபகரண சம்பிரதாந பிரயோஜன அபிஜ்ஞ கர்த்தா’ – உபாதானமும் உபகரணமும் சம்பிரதாநமும் பிரயோஜனமும்
அறிகைக்குத் தகுதியான விசித்திரமான ஞான சத்தி முதலியவைகளையுடையனாய் இருப்பான் ஒருவன் கர்த்தாவாக வேண்டும்,’ என்கிறபடியே,
உபாதானம் -ம்ருத் பிண்டம் -மூலப் பொருள் /உபகரணம் -சக்கரம் -கருவி /சம்ப்ரதானம் -விநியோகம் -யாருக்கு எத்தைக் கொடுக்க -என்னும் அறிவு /
பிரயோஜன -இன்ன பொருள் இன்ன கார்யத்துக்கு என்ற அறிவு /
இங்ஙனே அநுமானத்தாலே ஒருவனைக் கற்பித்து, வேதத்தை ஆப்த வசனமாக்கி இதற்குத் துணை செய்வதாகக் கொண்டு,
அநுமானப் பிராதான்யத்தாலே ஈசுவரனைச் சாதித்து, அவனாகிறான், ‘ஈசன், ஈசானன்’ என்று இங்ஙனே வேதத்திலே
பிரசித்தமாகப் பெயர்கள் உண்டாயிரா நின்றன. இந்தப் பெயர்களாலே அவற்றால் சொல்லப்படுகிற அவனே ஈசுவரன் ஆகிறான்’ என்று
அநுமானத்தாலும் சமாக்யைகளாலும் ஆகப் பகவானுக்கு வேறுபட்டவன் ஒருவனுக்கு உயர்வினைச் சாதித்தார்கள். அவர்களைப்
பார்த்து, ‘நீங்கள் சொல்லுகிற அநுமானம் சுருதியின் முன்பு நேர் நில்லாது; இலிங்கத்தின் முன்பு சமாக்யை நேர் நில்லாது,’ என்று
சுருதி இலிங்கங்களாலே -இலிங்கம் -அடையாளம்-அநுமானத்தையும் சமாக்யையும் தள்ளிப் பகவானுடைய பரத்துவத்தைச் சாதிக்கிறார்.
‘அது செய்கிற வழிதான் என்?’ என்னில்.
‘வேதத்தின் முதலிலும் வேதத்தின் முடிவிலும் சொல்லப்படுகிற ஸ்வரமாகிறது பிரணவம்;
உலகத்திலுள்ள எல்லாச் சொற்களும் அதிலே இலயம் அடைகின்றன;
அந்தப் பிரணவந்தான் இயல்பிலே அமைந்த அகாரத்திலே இலயம் அடைகின்றது;
அந்த அகாரத்துக்குப் பொருளாய் இருப்பதனாலே பரனாய் இருக்கிறான் யாவன் ஒருவன்?
அவன் மஹேஸ்வரன் என்று கூறுகின்ற சுருதியாலும், –நம சிவாயா -பஞ்சசாஷரி –பிரணவம் ஒவ்வாதே -அகாரம் சிவனுக்கு வாசகம் இல்லையே
‘ஈசன், ஈசானன்’ என்கிற பெயர்களால் தோற்றுகிறவர்களும்
தலை யறுப்புண்பாரும் தலை யறுத்துப் பாவமுடையராய் நிற்பாருமாய் இராநின்றார்கள்;
இவன் அவர்களுக்குத் துக்கத்தைப் போக்குமவனாய் இரா நின்றான்;
ஆனால், ‘அவர்களைப் ‘பரன்’ என்னவோ, இவனைப் ‘பரன்’ என்னவோ?’ என்ற இலிங்கத்தாலுமாக
அநுமானத்தையும் சமாக்யையையும் தள்ளிப் பகவானுடைய பரத்துவத்தை நிலையிடுகிறார்.
ஆக, இப்படிகளாலே, ‘எல்லா உபநிடதங்களாலும் பிரசித்தமாகச் சொல்லப்படுகின்றவனான நாராயணனே பரம்பொருள்’ என்று
அறுதியிட்டு, காலாத்யயாபதிஷ்டமாகிற தூஷணத்தாலே அவர்களை மறுக்கிறார்.
சுருதி -வேதம் /லிங்கம் -அடையாளம் /வாக்யம் /பிரகரணம் /ஸ்தானம் /சமாக்யா -பிரபலம்- முன்னால் சொல்வது –
அஷரங்களில் அகாரமாக -அகாரோ விஷ்ணு வாசக -அ ப்ரஹ்ம வாச்யம் –
நெருப்பு குளு குளு என்று இருக்கும் பஞ்ச பூதங்களில் ஓன்று என்பதால் -தண்ணீர் இருப்பதால் –பிரத்யஷம் பாதிக்கும் -அநு மானம் தூஷணம் இப்படி

பேச நின்ற சிவனுக்கும் –
‘நீர் சுருதி சொன்னீராகில் நாங்களும் ஒரு சுருதி சொல்லுகிறோம்,’ என்று
‘அநந்யபரமான நாராயண அநுவாக சித்தன்’ என்று நான் சொன்னால், அதற்கு மாறாக,
புறம்பே உபயோகிக்கப்பட்டதாய், கர்மவிதி சேஷமாயிருப்பன சில புனைந்துரைகளாலும் தாமச புராணங்களாலும்
சொல்லலாம்படி முட்டுப் பொறுத்து நின்ற சிவனுக்கும்.
அன்றிக்கே, ‘நீங்கள் ‘பரன்’ என்று பேசும்படி நின்ற சிவனுக்கும்’ என்னவுமாம்.
‘சொற்களின் பொருட்டு முட்டுப் பொறாது; பேசுகைக்குப் பற்றுக்கோடு மாத்திரமே உள்ளது’ என்பார், ‘நின்ற’ என்கிறார்.
மற்றையோரை ‘ஈசுவரர்கள்’ என்னாதே இவனைச் சொல்லலாம்படி இருக்கிறது ஓர் ஏற்றம் உண்டே அன்றோ இவனுக்கு?

ஏக ஏவ ருத்ர -கர்மம் விதிக்கு சேஷமாய் இருக்கும் அர்த்தவாதம் -புகழ்ந்து கொண்டாடும் –
சிவ பிரானைக் குறித்து யாகம் பண்ண சொல்ல வந்தது –
வாயவ்ய ஹோமம் பலன் தரும் -என்றால் வாயுவுக்கு உத்கர்ஷம் சொல்லி -இது கர்ம விதிக்கு சேஷமாக சொல்லும் -அது போலே பேச வந்தது –

பிரமன் தனக்கும் –
அவனுக்கும் தமப்பனான பிரமனுக்கும். ‘பிரமனுக்கு ஜேஷ்ட புத்திரனாகிச் சிறப்பை அடைந்த’ என்றும்,
‘பிரமனுக்குப் புத்திரனாகச் சிவன் தோன்றினான்’ என்றும் சொல்லப்படுதல் காண்க.
‘மஹாத்துமாவான சிவன் சர்வமேதம் என்னும் யாகத்தில் ஆத்துமாவை ஓமம் செய்து தேவ தேவனாக ஆனார்,’ என்கிறபடியே,
சிவனுடைய ஈசுவரத்துவம் பகவானுடைய திருவருளாலே வந்தது.-வைஷ்ணவாணாம் அஹம் சம்பு -ஜ்யேஷ்ட விஷ்ணு பக்தன் சிவன்
பிறர்க்கும் –
இவர் தம் திருவுள்ளத்தால் அவர்களோடு இவர்களோடு வாசி அற்று இருக்கிறபடி.
அவர்கள் தங்கள் தங்கள் நினைவாலும் அப்படியே அன்றோ?’
பிரமன் சிவனை நோக்கி, ‘உனக்கும் எனக்கும் அந்த விஷ்ணு அந்தரியாமியாய் இருக்கிறார்;
மற்றும் எவர்கள் சரீரம் படைத்தவர்கள் என்று பெயர் பெற்றிருக்கிறார்களோ, அவர்கள் எல்லாருக்கும்
அந்த விஷ்ணுவானவர் சாக்ஷியாய் இருக்கிறார்,’ என்றான்.
நாயகன் அவனே –
இக் காரியத்திற்குத் தகுதியான காரணத்தைக் கற்பிக்கிலும் அவனையே கொள்ள வேண்டும்.
சுருதிப் பிரசித்தியை நினைத்து ‘அவனே’ என்கிறார். அநந்ய பரமான நாராயண அநுவாகப் பிரசித்தியையும்
‘ய: பரஸ்ஸ மஹேஸ்ர:’ என்கிற அகரத்தின் பொருளாய் உள்ள பிரசித்தியையும் நினைக்கிறார்.

‘இவனையும் ஒக்கச் சொல்லாநிற்க ‘அவனே’ என்பான் என்?’ என்னில்,
‘கபால நன்மோக்கத்துக் கண்டு கொண்மின்’
என்று கையோடே காட்டிக்கொடுக்கிறார். -கை யில் ஓட்டுடன் -காட்டி -உடனே காட்டிக் கொடுக்கிறார்
நீங்கள் இப்படிச் சொன்னால் மறுமாற்றம் சொல்லுகைக்கு இது ஒன்று உண்டாகப் பெற்றோமே!’
‘தத்ர நாராயண: ஸ்ரீமாந் – மயா பிஷான் – பிரசதயதா -விஷ்ணு பிரசாதம் -பார்வதி இடம் தானே சொல்லிக் கொள்கிறான் –
இடர் கெடுத்த திருவாளன் -கலியன் திரு நறையூர் பாசுரம் -இந்த தத்ர நாராயண:ஸ்ரீ மான் சுருதி
‘தாம் தாம் செய்த கர்மத்தின் பலத்தைத் தாம் தாம் அனுபவிக்கிறார்களாகில், நாம் என்?’ என்றிருக்கும்
ஈசுவர சுவாதந்தரியம் தலை தூக்காதபடி ‘குற்றம் செய்யாதார் ஒருவரும் இலர்,’ என்பாரும் அருகே உண்டு என்கிறான்
ஸூஸ்ரோணி –
உன் வடிவழகாலே வந்த சௌபாக்கியம், நான் சர்வேசுவரன் பக்கலிலே சென்ற அளவிலே உதவிற்றுக் காண்.
ஸ்வப்ந லப்தம் –
அனுபவம் செல்லா நிற்கச் செய்தே விழித்துப் பார்க்குங்காட்டில் இல்லையாய் இருந்தது; ஆகையாலே, ‘நன்மோக்கம்’ என்கிறது.
‘உங்களுக்கு இப்போது மறுமாற்றம் சொல்லலாம்படியாக இது ஒன்று உண்டாயிற்று’ என்கிறாராதல்;
ஸ்வப்ந லப்த தநம் யதா –
‘கனவில் கிடைத்த தனம் போலே போன வழி தெரியாமலே போயிற்று,’ என்கிறாராதல்.

நீங்கள் ஈசுவரர்களாகச் சந்தேகப்படுவதற்குரியவர்கள் இருவரும் நின்ற நிலை கண்டீர்களே!
ஒருவன் தலை கெட்டு நின்றான்; ஒருவன் ஓடு கொண்டு பிராயஸ்சித்தம் செய்ய வேண்டியவனாய் நின்றான்.
ஓட்டை ஓடத்தோடு ஒழுகல் ஓடமாய் உங்கள் குறை தீரப் பற்றுகிற நீங்கள் உங்களிலும் பெருங்குறைவாளரையோ பற்றுவது!
‘பாவமுடையவனாய்ப் பிச்சை புக்குத் திரிந்தான்,’ என்று நீங்களே சொல்லி வைத்து, அவனுக்கே பரத்துவத்தைச் சொல்லவோ?’
ஒருவனுடைய ஈசுவரத்துவம் அவன் தலையோடே போயிற்று. மற்றவனுடைய ஈசுவரத்துவம் அவன் கையோடே காட்டிக்கொடுக்கிறார்;
கண்டுகொண்மின் –
‘முன்னே நின்று பிதற்றாமல், உந்தம் ஆகமங்களிலே நீங்கள் எழுதியிட்டு வைத்த கிரந்தங்களைப் பார்த்துக் கொள்ள மாட்டீர்களோ?’ என்கிறார்.

தேச மா மதிள் சூழ்ந்து அழகாய –
பகைவர்களுக்குக் கிட்டுதற்கும் முடியாத ஒளியையுடைத்தாய், அரணாகப் போரும்படியான மதிளையுடைத்தாய், காட்சிக்கு இனியதாய் இருக்கிற.
திருக் குருகூரதனுள் ஈசன் பால் –
விட்டுப் பிரியாத தன்மையை உடையவனாகையாலே, சௌலப்யத்திலே அந்த மேன்மை குலையாதிருக்கிற-அஜகத் ஸ்வஸ் ஸ்வ பாவம் –
‘ய : பரஸ்ஸமஹேஸ்வர:’ என்கிற சர்வேசுவரன் பக்கலிலே. மேலே நாராயண சப்தார்த்தத்தைச் சொல்லி வைத்து,
அகாரத்தின் பொருளாய்ப் பரனானவனையே மஹேஸ்வரன் என்கையாலே, மஹேஸ்வரன் என்ற சொல்லால் சொல்லப்படுகின்ற
பொருளானவன் நாராயணனே என்பது சுருதியாலே அறுதியிடப்பட்டிருக்கையாலே இந்தச் சுருதியாலே உன்னுடைய
அநுமானம் தள்ளப்பட்ட விஷயமாகும். ‘கண்டுகொண்மின்’ என்கிற சொற்பொருள்களின் ஆற்றலோடு (லிங்கம்) முரண்பட்ட
சமாக்யை நேர் நில்லாது; ஆகையாலே ‘இவனே பரன்,’ என்கிறார்.

ஓர் அவம் பறைதல் –
மற்றுள்ள க்ஷேத்ரஜ்ஞரோடு ஒக்க ஸ்ரீமந் நாராயணனுக்கு ஈசுவரத் தன்மை இல்லை என்பதற்குச் சாதகமாக ஏதேனும்
போலி வார்த்தைகளைச் சொல்லுமது. அவற்றைத் தம் வாயால் சொல்ல மாட்டாமையாலே, ‘அவம்’ என்கிறார்.
தங்கள் கூட்டத்தில் மறைவாகச் சொல்லுமது ஒழிய எல்லாரும் அறியச் சொல்லுதல் இல்லையாதலின், ‘பறைதல்’ என்கிறார்.
மஹாபலி, ஸ்ரீ பிரஹ்லாதாழ்வான் பக்கலிலே வந்து, ‘ராஜ்யமடைய ஒளி மழுங்கி வாராநின்றது;
என் பலமும் குறைந்து வாராநின்றது; இதற்கு அடி என்?’ என்ன,
‘நீ சர்வேசுவரன் பக்கல் பண்ணின அபராதத்தாலே காண்,’ என்ன, ‘இந்த விஷ்ணு எவன்?’ என்பது போன்று
விருப்பு இல்லாத வார்த்தைகள் சிலவற்றை அவன் பேச, ‘எனது தலையை அறுப்பதைக் காட்டிலும் பெரிது இந்த வார்த்தை’ என்கிறபடியே,
என் தலையை அறுத்து என் கையிலே தந்தாயாகில் ‘என் பேரன் செய்த உபகாரம்’ என்று இருப்பேன் யான்;
‘என் முன்பே பகவானை நிந்தை செய்தாய், நீ இராஜ்யப் பிரஷ்டன் ஆவாய்’ என்று சபித்து விட்டான்;
இதனை இப்படியே பட்டர் அருளிச் செய்தவாறே, ‘பிரகிருதி புருஷ விவேகம் பண்ணியிருக்கிற இவன்
ஆத்துமாவுக்குக் குறைவு வருவது ஒன்றனைச் சபியாமல், ‘இராச்சியத்திலிருந்து நழுவினவனாய் விழுவாயாக’ என்று
சபிப்பான் என்?’ என்று கேட்க, ‘நாயைத் தண்டிக்கையாவது, மலத்தை விலக்குகையே அன்றோ?
சாந்தை விலக்குகை அதற்கு விருப்பம் இல்லாதது அன்றே?
ஆகையால், இவனுக்கு அநிஷ்டம் செய்கையாவது இதுவே அன்றோ?’ என்று அருளிச் செய்தார்.

இலிங்கியர்க்கு என் ஆவது –
அநுமானத்தைப் பிரமாணமாகக் கொண்டவர்க்கு என்ன பிரயோஜனம் உண்டு? என்றது,
‘அந்தத் தேவிற்கு ஓர் உயர்வு பெற்றிகோள் அன்று; அத்தேவினைப் பற்றியதற்கு ஒரு பலம் பெற்றிகோள் அன்று;
இதனால், உங்களுக்கு ஓர் உயர்வு பெற்றி கோள் அன்று; என்றிய பட்டிகோள்’ என்கிறார் என்றபடி.

—————————————————————————–

இலிங்கத் திட்ட புராணத்தீரும் சமணரும் சாக்கியரும்
வலிந்து வாது செய்வீர்களும் மற்று நும் தெய்வமுமாகி நின்றான்
மலிந்து செந்நெல் கவரி வீசும் திருக் குருகூர் அதனுள்
பொலிந்து நின்ற பிரான் கண்டீர் ஒன்றும் பொய்யில்லை போற்றுமினே.–4-10-5-

பாஹ்ய குத்ருஷ்டிகளை நிரசித்து -திரு நகரியில் நிற்கும் சர்வேஸ்வரனே சர்வ ஸ்மாத் பரன் என்கிறார்
இலிங்கத் திட்ட புராணத்தீரும் சமணரும் சாக்கியரும்-சூரா கும்பம் நடுவில் இலிங்கம் வைத்து -தாமச புராணம் பற்றி
ஜைனர் -பாஹ்ய ஸ்ம்ருதி நிஷ்டர் -பௌத்தர்களும் துர்க தர்க்கங்களால் -நையாயிக
வலிந்து வாது செய்வீர்களும் மற்று நும் தெய்வமுமாகி நின்றான்-உங்கள் தெய்வம் -தேவதா விசேஷங்கள் –
இவர்களுமாகி நின்றான் -சரீரமாகி –
இவர்களை திருத்தி வைக்க என்னை அனுப்பி உள்ளானே
மலிந்து செந்நெல் கவரி வீசும் திருக் குருகூர் அதனுள்-கதிர் கனத்தால் காவிரி போலே அசைய –
பொலிந்து நின்ற பிரான் கண்டீர் ஒன்றும் பொய்யில்லை போற்றுமினே.-பரத்வ பிரகாசம் -சௌசீல்யம் சௌசீல்யாதி குணங்களும் பொலிந்து -தோற்றுமே-
பரி பூர்ணனாக நிற்கும் பிரகாரம் -அர்ச்சாவதாரம் -பரத்வம் என்று சங்கிக்க வேண்டாம் — இவனையே ஸ்துதியுமின்

‘இலிங்கபுராணத்தைப் பிரமாணமாகவுடைய நீங்களும் சமணர்களும் பௌத்தர்களும் மேலும் மேலிட்டு வாது செய்கின்ற
வைசேடிகர்களான நீங்களும் நீங்கள் வணங்குகின்ற தெய்வங்களும் ஆகி நிற்கின்றவன், செந்நெற்பயிர்கள் மிக ஓங்கி வளர்ந்து
கவரியைப் போல வீசுகின்ற திருக்குருகூர் என்னும் திவ்விய தேசத்தில் எல்லாக் குணங்களோடும் பொலிந்து நின்ற திருக்கோலமாய்
எழுந்தருளியிருக்கின்ற பிரானே ஆவான்; ஆதலால், யான் கூறுகின்றவை சிறிதும் பொய்யில்லை; அவனையே துதிசெய்யுங்கோள்,’ என்கிறார் என்றவாறு.
‘இலிங்கத்திட்ட புராணத்தீரும் சமணரும் சாக்கியரும் மற்றும் வலிந்து வாது செய்வீர்களும் ஆகி நின்றவன், நும் தெய்வமும் ஆகி நின்றான்;
‘அவன் யார்’ எனின், ‘பொலிந்து நின்ற பிரான் கண்டீர்’ என்க. நின்றான் – வினையாலணையும் பெயர்.
‘பொலிந்து நின்ற பிரான் ஆகி நின்றான்,’ என முடிக்கலுமாம்.

இலிங்கபுராணம் தொடக்கமான குத்ருஷ்டி ஸ்மிருதிகளையும், வேதத்திற்குப் புறம்பான ஸ்மிருதிகளையும்
பிரமாணமாகக் கொண்டு வந்தவர்களை விலக்குகிறார்.

இலிங்கத்திட்ட புராணத்தீரும் –
இலிங்க விஷயமாக இடப்பட்ட புராணத்தையுடைய நீங்களும்.
சாத்துவிக புராணங்களைக்காட்டிலும் இராஜஸமாயும் தாமஸமாயும் உள்ள புராணங்களுக்கு வேற்றுமை இதுவாயிற்று.
அவற்றை நிச்சயம் பண்ணுதல் அந்த அந்தப் புராணங்களினுடைய தொடக்கத்திலே காணலாய் இருக்கும்;
‘ஓ பிராமணோத்தமரே! இந்த உலகமானது எதனை ஆத்துமாவாகவுடையது? இந்தச் சராசரங்கள் எங்கிருந்து உண்டாயின?
எப்படி எங்கே இலயத்தை அடைந்தன? எங்கு இலயத்தை அடையப் போகின்றன?’ என்று பொதுவிலே வினாவ,
‘உலகமெல்லாம் விஷ்ணுவின் சமீபத்தினின்றும் உண்டாயின. அந்த விஷ்ணுவினிடத்திலேயே இலயப்படுகின்றன.
அந்த விஷ்ணுவே இந்த உலகங்கட்கெல்லாம் வாழ்வையும் சாவையும் கொடுப்பவர், அந்த விஷ்ணுவே அந்தரியாமியாகவும்
உலகமே உருவமாயும் காணப்படுகின்றார்,’ என்று கொண்டு கோல்விழுக்காட்டாலே விடையாக இருத்தல்
அன்றிக்கே.
ஒரு பொருளைக் குறித்துச் சொல்லி, ‘அதற்கு உயர்வினைப் பண்ணித் தரவேண்டும்,’ என்று கேட்டவனும்
தமோ குணத்தால் மறைக்கப்பட்டவனாகிக் கேட்க, சொன்னவனும் தமோ குணத்தால் மறைக்கப்பட்டவனாய்ச் சொல்ல,
ஓர் இலிங்க விஷயமாக இடப்பட்ட புராணமாகும் அது. ‘இளி கண்ணனைப் புண்டரீகாக்ஷனாகக் கவிபாடித் தரவேண்டும்’ என்றும்,
‘எருமையை யானையாகக் கவிபாடித் தரவேண்டும்’ என்றும் சொல்ல, அப்படியே, கவி பாடுவாரைப் போலே இருப்பது ஒன்றே அன்றோ,
‘அவர்களுக்கு இல்லாத உயர்வுகளை இட்டுச் சொல்லுமது?’ தான் சொல்லப் புக்க பொருளுக்கு உயர்வினைச் சாதிக்க மாட்டாமல்
மற்றுள்ளவற்றினுடைய உயர்வினைக் கழிக்க மாட்டாதே இருப்பது ஒன்றாயிற்று அது.

சமணரும் –
சைனர்களும்.
சாக்கியரும் –
பௌத்தர்களும்.
மற்றும் வலிந்து வாது செய்வீர்களும் –
மிக உயர்ந்ததான பிரமாணத்தை அங்கீகரித்துக்கொண்டு நின்று பிரமாணங்களுக்கு அநுகூலமான தர்க்கங்களை ஒழியக்
கேவல தர்க்கங்களைக்கொண்டு அர்த்தத்தைச் சாதிக்கப் பார்க்கும் புறச்சமயத்தாரில் எஞ்சியவர்களும்.
‘எவை, வேதத்திற்குப் புறம்பான ஸ்ம்ருதிகள்? யாவை சில, குத்ருஷ்டி ஸ்ம்ருதிகள்? அவை யாவும் மறுமை இம்மைகட்குப் பயனற்றவை;
அவை தமோ குணமுடையவைகள்,’ என்கிறபடியே, தமோகுணமுடையராய் இருக்கை எல்லார்க்கும் ஒத்ததே அன்றோ?
ஆகையாலே, புறச்சமயத்தாரையும் குத்ருஷ்டிகளையும் ஒரு சேரச் சொல்லுகிறார்.
நும் தெய்வமும் ஆகி நின்றான் –
உங்களோடு நீங்கள் பற்றுகின்ற தேவர்களோடு வேற்றுமை அற ஆத்துமாவாய் நின்றான். என்றது,
‘நீங்கள் அவ்வத் தெய்வங்கட்கு உயர்வுகளைச் சொல்லும் போது பகவானுடைய பரத்துவத்தை அங்கீகரித்துக்கொண்டு
நின்று சொல்ல வேண்டும். ‘அதற்கு அடி என்?’ என்னில், ‘அவ்வத் தெய்வங்களினுடைய சொரூபம் நிலைபெறுதல்
முதலானவைகள் அவன் அதீனமாய் இருக்கையாலே,’ என்பதனைத் தெரிவித்தபடி.

‘இனித்தான் மதங்கள்தோறும், ‘முற்றறிவினன், ‘ஈசுவரன்’ என்றாற்போலே ஒவ்வொரு தெய்வமும்
கொள்ளக் கூடியதாய் இருக்குமே அன்றோ? ‘அவ்வத் தெய்வங்களுடைய சொரூபம், நிலைபேறு முதலானவைகள் அவன் அதீனம்,’ என்ற இது,
சுபக்கத்தாலே சொல்லுகிறதோ, பரபக்கத்தாலே சொல்லுகிறதோ?’ என்னில்,
‘இரண்டும் ஒழியப் பிரமாணங்களின் போக்கினாலே சொல்லுகிறது. ‘எங்ஙனே?’ என்னில்,
ஒரு தேவன் பக்கலிலே மக்கள் செயலுக்கு அப்பாற்பட்டதாய் இருப்பதொரு செயலைக் கண்டு, ‘இதற்கு அடி என்?’ என்ன,
‘அளவிடற்கு அரிய ஒளியையுடையவனும் பூஜிக்கத் தக்கவனுமான சிவனுக்கு விஷ்ணு அந்தராத்துமாவாய் இருக்கின்றார்.’ என்கிறபடியே,
சர்வேசுவரன் அந்தராத்துமாவாய் நிற்கையாலே என்றதே அன்றோ?
சர்வேசுவரன் தன் சர்வாத்தும பாவத்தைச் சொல்லுமாறு போன்று, சிவன், அதர்வ சிரஸ்ஸிலே நின்று, தன்படிகளைச் சொல்லி,
‘அவன் தானே இங்ஙனம் சொல்லுகைக்கு அடி என்?’ என்று ஐயங்கொண்டு,
‘ஸ: அந்தராத் அந்தரம் பிராவிசத்’ என்கிறபடியே, ‘பரமாத்தும பிரவேசத்தாலே சொன்னேன்,’ என்றானே.
‘என்னிடத்திலிருந்து எல்லா உலகங்களும் உண்டாகின்றன; அநாதியான என்னிடத்தில் எல்லாம் இலயம் அடைகின்றன.
யானே எல்லாப் பொருள்களுமாய் இருக்கிறேன்; யானே அழிவில்லாதவனும் முடிவில்லாதவனும் ஆகிறேன்;
பரமாத்துமாவை ஆத்துமாவாகப் பெற்றுள்ளேன்,’ என்றான் பிரஹ்லாதாழ்வான்.
பிரஹ்லாதாழ்வான் பக்கல் பரத்துவம் உண்டாமன்று ஆயிற்று, சிவன் பக்கல் பரத்துவம் உள்ளது.

மலிந்து செந்நெல் கவரி வீசும் திருக்குருகூரதனுள் –
செந்நெற்பயிர்கள் கதிர்களின் கனத்தாலே அவ்வருகுக்கு இவ்வருகு அசைகிற போது சாமரை வீசினாற்போலே ஆயிற்று இருப்பது. என்றது,
‘இப்படி எல்லாப் பொருள்கட்கும் அந்தராத்துமாவாய் இருக்கிற சர்வேசுவரன் ‘தூரத்தில் உள்ளான்’ என்ற கண்ணழிவும் இல்லாதபடி
திருநகரியிலே வந்து அண்மையில் இருப்பவன் ஆனான்;
எல்லாப் பொருள்கட்கும் பற்றுக்கோடாய் இருக்கிற அவன் இங்கே வந்து நிற்கையாலே,
அறிவுடைப்பொருள் அறிவில்லாப்பொருள் என்ற வேறுபாடு இல்லாமல்,
‘நீ வனத்தில் வசிப்பதற்காகவே படைக்கப்பட்டாய்,’ என்று சொல்லப்பட்ட
இளைய பெருமாளைப் போன்று அநுகூலமான தொழில்களைச் செய்கிறபடியைத் தெரிவித்தவாறு.

பொலிந்து நின்ற பிரான் கண்டீர் –
பரமபதத்தை விட்டு இம்மக்கள் நடுவே வந்து புகுந்த இடத்து அவர்கள் படுகின்ற கிலேசத்தைத் தானும் ஒக்கப்படுகை அன்றிக்கே,
இவ்வருகே போதரப் போதரச் சொரூப ரூப குண விபூதிகள் மேன்மேலென விஞ்சி வாராநின்றன ஆயின.
அன்றிக்கே, ‘சொன்னார் சொன்னவற்றுக்கும் எல்லாம் அவ்வருகாயிருக்கும்,’ என்னுதல்.
ஒன்றும் பொய் இல்லை –
மற்றைத் தேவர்கட்குச் சொல்லுகிற உயர்வுகள் ஒன்று ஒழியாமல் பொய்யாய் இருக்குமாறு போலே,
பகவான் சம்பந்தமாகச் சொல்லுமவற்றில் ஒன்றும் பொய்யில்லை.
அவ்வத் தேவர்கட்கு இயல்பிலே உயர்வு இல்லாமையாலே மெய் ஒன்றும் இல்லை;
பகவானுடைய உயர்வுக்கு எல்லை இல்லாமையாலே, பொய் சொல்லுகைக்கு இடம் இல்லை.
போற்றுமினே –
நீங்கள் விரும்பாதிருக்க, நானே இப்படிச் சொல்லுகிறது, எனக்கு உங்கள் பக்கல் உண்டான
‘அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே,’ என்கிறபடியே, மிக்க அருளாலே அன்றோ?
அவ்வருளின் காரியம் பிறக்க வேண்டுமே. ‘கிரமத்திலே செய்கிறோம்’ என்று ஆறியிராமல், சடக்கென அவன் திருவடிகளிலே அடைவதற்குப் பாருங்கோள்.

————————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: