பகவத் விஷயம் காலஷேபம்- 103- திருவாய்மொழி – -4-9-6….4-9-11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

மறுக்கி வல் வலைப்படுத்திக் குமைத்திட்டுக் கொன்றுண்பர்;
அறப் பொருளை அறிந்து ஓரார்; இவை என்ன உலகியற்கை!
வெறித் துளவ முடியானே! வினையேனே உனக்கு அடிமை
அறக் கொண்டாய் இனி என்னாரமுதே!கூய் அருளாயே.–4-9-6-

சம்சார ஸ்வ பாவம் -பர பீடையே -காணாத படி -நிரதிசய போக்யனான நீ என்னை உன்னிடம் கூட்டிக் கொள்ள வேண்டும்
மறுக்கி வல் வலைப்படுத்திக் குமைத்திட்டுக் கொன்றுண்பர்;பய ஹெதுக்களை சொல்லி -இவனை கலக்கி -தன் வசப்படுத்தி -சிக்கென்ற வலையில்
ஸ்வயமேய தானே நெகிழும் படி -அறும் படி கொன்று -அளித்து தாங்கள் வயிறு வளர்ப்பார்
அறப் பொருளை அறிந்து ஓரார்; இவை என்ன உலகியற்கை!-பகவானே தர்மம் -அறிந்து -விலகாமல்
பொருள் -சொத்து -அர்த்தம் என்றுமாம் -பின்னாலே போகிறார்கள் -பொருளை அறியாமல்
அறம் -தர்மம் -உஜ்ஜீவன ஹேது -என்று ஆராய்ந்து -தர்மம் ரசித்தால் அது நம்மை ரஷிக்கும் என்று அறியாமல்
வெறித் துளவ முடியானே! வினையேனே உனக்கு அடிமை-அத்யந்த சௌகந்த்யம்-போக்யதையைக் காட்டி
பாபம் சேர்ந்து கொண்ட என்னை- -பாபமே அடையாளமாக இருந்த என்னை -அவற்றைப் போக்கி சேஷ பூதன் ஆக்கி
அறக் கொண்டாய் இனி என்னாரமுதே!கூய் அருளாயே–இனி -அழைத்துக் கொண்டு அருள வேண்டும் –

‘உலகத்து மக்கள் ஒருவரை ஒருவர் மனத்தினைக் கலக்கிக் கொடிய வலையிலே அகப்படச் செய்து வருத்திப் பின்கொன்று
அவர்கள் பொருள்களைக்கொண்டு தாங்கள் ஜீவிப்பர்; தர்மமாகிற பரம புருஷார்த்தத்தை அறிந்து அதனை ஆராயார்.
இவை என்ன உலகியற்கை! வாசனை பொருந்திய திருத்துழாயைத் தரித்த திருமுடியையுடையவனே! தீவினையையுடைய என்னை
உனக்கே அடிமையாகும்படி செய்தவனே! உனக்கு அடிமையான பின்பு, எனக்கு அரிய அமுதமாய் இருப்பவனே! அழைத்துக்கொண்டருள வேண்டும்,’ என்கிறார்.
‘ஓரார்’ என்பதற்கு மக்கள் என்னும் எழுவாயை வருவித்து முடிக்க. ‘உண்பர், ஓரார்’ என்க. வெறி – வாசனை.

‘இம்மாக்களுடைய பகவத் வைமுக்யாதி தோஷங்களை நினைத்து ஈசுவரனை இன்னாதாகை தவிர்ந்து, தாம் வாழ்வதன் பொருட்டுப்
பிறரைத் துன்புறுத்துகின்ற சமுசாரிகள் நடுவினின்றும் என்னை உன் திருவடிகளிலே அழைத்தருள வேண்டும்,’ என்கிறார்.

முதல் அடியாலே, கிராமணிகள் செல்வத்தைத் தேடிச் சேர்க்கும்படியை அருளிச்செய்கிறார்:
மறுக்கி –
சாது என்று தோற்ற வாழ்கின்ற ஒருவன், ஒரு தேசத்திலே வாழா நின்றால், அச்சம் இன்மைக்காகப் பற்றுக்கோடாக
ஒருவனைப் பற்றியிருக்கவேண்டும்,’ என்று ஒரு கிராமணி பக்கல் சென்று சேர்வான்; ‘இவன் சாது’ என்று அவனுக்குத் தோற்றினவாறே,
‘உன்னை இன்னாரும் இன்னாரும் இன்னபடி சொன்னார்களே!’ என்பான்; அவன் அஞ்சினவனாய்,
‘இவன் நம்மைப் பாதுகாப்பவன்’ என்று இவனை அவன் நம்பினபடியாலே, ‘அதற்குப் பரிஹாரம் என்?’ என்று இவன்தன்னையே கேட்பான்;
‘உனக்கு ஒன்று வந்தால் சொல்லலாவது இல்லாதபடி என் வீட்டிலே உனக்குள்ள செல்வத்தையும் பொகட்டு
உன் நிலம் முதலாயினவற்றையும் என்மேலே திரிய விட்டு வை,’ என்பான்; இப்படி அவன் நெஞ்சைக் கலங்கச் செய்து.
வல் வலைப் படுத்தி –
இவன் இனி இவை கொண்டு தப்ப ஒண்ணாதபடி தன் பக்கலிலே அகப்படுத்தி.
குமைத்திட்டு –
பின்னர் இவன் கொடுத்த செல்வத்தை அடையத் தன் பேரிலே செலவு எழுதிச் சிகைக்கு அடிப்பிக்கும்.
கொன்று –
‘இவன் இருக்குமாகில் ஒரு நாள் வரையில் சிலரை அடைந்து தொடரிலோ?’ என்று இவனைக் கொல்லுவான்.
உண்பர் –
இப்படிச் செய்தால் தான் செய்வது வயிறு வளர்க்கையே அன்றோ?

அறப்பொருளை அறிந்து –
‘தேகத்திற்கு வேறுபட்டதாய் இருப்பது ஒரு ஆத்தும வஸ்து உண்டு; நாம் இப்போது செய்கிறவை அதிலே வந்தவாறே
தட்டுப்படும்,’ என்று தர்மத்தின் உண்மையை அறிந்து.
ஓரார் – அதனுடைய தன்மையிலே முதலிலே இழியார்கள்.
அன்றிக்கே, ‘பிறரைத் துன்புறுத்துவதினின்றும் நீங்கார்’ என்றுமாம்;- ஓர்தல் – ஒருவுதலாய். ஒருவுதல் -நீங்குதல் என்றபடி.
அன்றிக்கே, ‘செல்வமாகிய புருஷார்த்தம் ஒன்றையுமே அற விரும்பி.- நன்மை தீமைகளை ஆராய்ந்து பாரார்’ என்னுதல்.
இவை என்ன உலகு இயற்கை –
இது ஒரு உலகவாழ்வு இருக்கும்படியே பிரானே!
வெறித் துவள முடியானே –
வாசனையையுடைய திருத்துழாயை முடியிலே உடையவனே! என்றது, ‘இம்மக்கள் நடுவே இருக்கிற என்னை
உன்னுடைய இனிமையைக் காட்டி அடிமை கொண்டவனே!’ என்றபடி.

வினையேனை –
ஐம்புல இன்பங்களிலே ஈடுபட்டிருக்கிற இவர்களிலே ஒருவனாகப் பிறப்பதற்கு அடியான பாபத்தையுடைய என்னை.
உனக்கு அடிமை அறக்கொண்டாய் –
நான் நின்ற நிலைக்குச் சேராதபடியான உன் திருவடிகளில் அடிமையை ஒரு காரணமும் இன்றியே என்னைக் கொண்டருளினாய்
இனி –
அடிமை கொண்ட பின்பு.
என் ஆர் அமுதே –
எனக்கு எல்லை இல்லாத இனியன் ஆனவனே!
கூய் அருளாயே –
நான் இவர்கள் நடுவே இருக்கிற இருப்பை விட்டு உன் திருவடிகளிலே சேரும்படி அழைத்துக்கொண்டருள வேண்டும்.
அன்றிக்கே, ‘இனி என் – அவர்கள் ஒரு படியாலும் பேற்றிலே நெஞ்சு வையாரான பின்பு, நான் அவர்கள்
கேட்டிற்குக் கரைந்ததற்குப் பிரயோஜனம் என்? அதனை விடலாகாதே?’ என்னை முதல் அங்கே அழைத்துக்கொண்டருளவேண்டும்,’ என்னுதல்.

———————————————————————————

ஆயே இவ் உலகத்து நிற்பனவும் திரிவனவும்
நீயே மற்று ஒருபொருளும் இன்றிநீ நின்றமையால்
நோயே மூப்பு இறப்பிறப்புப் பிணியே என்றிவை ஒழியக்
கூயே கொள் அடியேனைக் கொடு உலகம் காட்டேலே.–4-9-7-

சர்வாத்ம பூதனான குரூரமான துக்கோத்தரமான சம்சாரம் காணாத படி உன் திருவடிகள் சேர்த்து அருள வேண்டும்
ஆயே இவ் உலகத்து நிற்பனவும் திரிவனவும் நீயே -நீயேயாய் -சரீராத்மா பாவம் -அந்தராத்மா தயா சர்வ நியந்தா
மற்று ஒருபொருளும் இன்றி நீ நின்றமையால்-ஏகமேய அத்வதீயம் -விசிஷ்ட அத்வைதம் –
ஸூ சரீரத்தில் ஆத்மா தானே நோயைப் போக்க வேணும்-நீ தானே சரீரி -என்கிறார் –
நோயே மூப்பு இறப்பிறப்புப் பிணியே என்றிவை ஒழியக்-தனித்தனியே நோய் -மூப்பே -இறப்பே -பிறப்பே -பிணியே-பிணி -தாரித்ர்யம் என்றுமாம்
துக்கத்துக்கு நிரபேஷ ஹேது -அவன் ஆனந்தத்துக்கு நிரபேஷ ஹேது வாவான் போலே
கூயே கொள் அடியேனைக் கொடு உலகம் காட்டேலே-கூவிக் கொள் -கொடிய லோகம் இது -உள்ளே உள்ளே அமுக்கும்
இந்த சம்சாரம் -கண்ணுக்கு இலக்காக்க வேண்டாமே –

‘இந்த உலகத்திலே நிற்கின்ற பொருள்களும் திரிகின்ற பொருள்களும் நீயேயாகி, உன்னைத் தவிர வேறு ஒரு பொருளும் இல்லாதபடி
நீ நின்ற காரணத்தாலே, நோய் மூப்பு இறப்புப் பிறப்புப் பிணி என்ற இவைகள் ஒழியும்படியாக அடியேனைக் கூவிக் கொள்வாய்;
இந்தக் கொடிய உலகத்தை எனக்குக் காட்டாதே,’ என்கிறார்.
முதலிலே உள்ள ‘ஆய்’ என்ற சொல்லை ‘நீயே’ என்ற சொல்லோடு சேர்த்து, ‘நீயேயாய் நின்றமையால்’ எனக் கூட்டுக.
ஆய் -வினையெச்சம். அன்றி, ‘ஆயே’ என்பதனை விளிப்பெயராகக் கோடலுமாம். ‘நின்றமையால் இவை ஒழிய அடியேனைக் கூயே கொள்,’ என்க.
என்றது, ‘சரீரத்திற்கு வருகின்ற நோய் முதலானவைகளை ஆத்துமா நீக்குவது போன்று, உனக்குச் சரீரமாய் இருக்கின்ற எனக்கு
வரும் நோய் முதலானவற்றையும் சரீரியாகிய நீயே நீக்க வேண்டும்,’ என்பது கருத்து.

விரும்பியவை அப்போதே கிட்டாமையாலே, ‘பேறு தம்மதான பின்பு தாமே முயற்சி செய்து வருகிறார்,’ என்று இறைவன்
நினைத்தானாகக் கொண்டு, ‘எல்லாப் பொருள்களும் உனக்கு அதீனமான பின்பு நீயே உன்னைக் கிட்டும் வழி பார்த்தருள வேண்டும்,’ என்கிறார்.

ஆயே –
தாயே! என்றபடியாய், ‘மாதா பிதா’ என்கிறபடியே, ‘எனக்கு எல்லாவிதமான உறவின் கூட்டமும் ஆனவனே!’ என்கிறார்.
அன்றிக்கே, ‘இவ்வுலகத்து நிற்பனவும் திரிவனவும் நீயே ஆய்’ என்று கொண்டு கூட்டி, இந்த உலகத்திலே
தாவரங்களாயும் சங்கமங்களாயும் கூடியிருக்கின்ற எல்லாப்பொருள்களும் ‘நீ’ என்கிற சொல்லுக்குள்ளே ஆம்படி சரீரமாய் அற்று,
நீ ஒருவனுமே சரீரியாய்’ என்று பொருள் கோடலுமாம். ‘உலகம் பரமாத்துமாவுக்குச் சரீரம் என்ற புத்தி எப்பொழுது இவனுக்கு
உண்டாகிறதோ, அப்பொழுது தனித்த ஒரு சாதனத்தாலே, தனித்த ஒருவனைப் பார்க்கக் கடவன்,’ என்பது உபநிட வாக்கியம்.

மற்று ஒரு பொருளும் இன்றி –
‘இவ்வுலகில் பல பொருள்கள் பரமாத்துமாவை நீங்கித் தனித்து இயங்குகின்றன என்று எவன் எண்ணுகிறானோ,
அவன் நனி பேதை ஆவான்; (ஆதலால்) இவ்வுலகில் பல இல்லை என்று மனத்தால் எண்ணக்கடவன்,’ என்று சொல்லுகிறபடியே,
பரம்பொருளினின்றும் நீங்கி நிற்பதாய்ச் சுதந்தரமாய் இருப்பது ஒரு பொருளை ஆயிற்று, ஈண்டு ‘இல்லை’ என்கிறது.
நீ நின்றமையால் –
நீ இப்படி நின்ற பின்பு.
நோயே மூப்பு இறப்புப் பிறப்புப் பிணி என்ற இவை ஒழிய –
சரீரத்துக்கு வந்தவற்றுக்குச் சரீரியான ஆத்துமா இன்புறுதல் துன்புறுதல் செய்யுமதனைப் போன்று, எனக்கு வந்தவற்றுக்கு
இன்புறல் துன்புறல் செய்வாய் நீ ஆம்படி சம்பந்தம் உண்டாய் இருந்த பின்பு, பிறவி காரணமாக வருகின்ற இந்தத் துன்பங்களைக் கழித்து
நோயும் பிணியும் –
ஆதி வியாதிகள்.
கூயே கொள் –
‘இவன் தானே வருகிறான்,’ என்று இராமல், நீயே அழைத்துக்கொண்டருள வேண்டும்.
கொடு உலகம் –
உன்னை விட்டு ஐம்புல இன்பங்களால் போது போக்கி இருக்கிற உலகம்.

காட்டேல் –
திட்டிவிடம் போலே காணில் முடிவன். ‘இந்த உலக வாழ்வு என் கண்களுக்கு இலக்கு ஆகாதொழிய வேண்டும் என்கையாலே,
இந்த உலக வாழ்வு இவர் கண்களில் பட்டது இல்லையாய் இருந்தபடி. மயர்வு அற மதிநலம் அருளினதைப் போன்று
சர்வ சத்தியானவன் இதனைக் காட்டில் காணுமித்தனை.யாவையும் திருமால் திரு நாமமே கூவி –
இவர் பிராக்ருத பதார்த்தங்களில் கண் வைப்பார் அல்லர் -காட்டேல் -இவன் தான் அவருக்குக் காண்பித்தான் -என்றவாறு
‘ஆனால், ‘இவை என்ன உலகியற்கை,’ என்றதனோடு சேரும்படி என்?’ என்னில்,
‘பரஹிதம்’ என்கிற புத்தியாலே முன்பு நினைந்தார்; ‘இதுதான் வந்து தம்மைக் கிட்டாதபடி பண்ணவேண்டும்,’ என்கிறார் இத்திருப்பாசுரத்தில்.

—————————————————————————-

காட்டி நீ கரந்து உமிழும் நிலம் நீர் தீ விசும்பு கால்
ஈட்டி நீ வைத்து அமைத்த இமையோர் வாழ் தனி முட்டைக்
கோட்டையினிற் கழித்து எனை உன் கொழுஞ்சோதி உயரத்துக்
கூட்டரிய திருவடிக்கள் எஞ்ஞான்று கூட்டுதியே?–4-9-8-

சகல ஜகத் காரண பூதன் -இந்த ஜகத் அந்தர்பாவத்தை கழித்து -உன் திருவடிக் கீழ் கூட்டுவது என்றோ
காட்டி நீ கரந்து -நாம ரூப பாவம் இல்லாமல் -ஏகி பவதீ -ஸ்வரூபத்தில் மறைத்து
-நிலம் நீர் தீ விசும்பு கால்-பூதங்கள் ஐந்தையும்
ஈட்டி நீ வைத்து அமைத்த இமையோர் வாழ் தனி -பஞ்சீகரணம் -செய்து -ப்ரஹ்மாதிகள் அநிமிஷர் வாழும்
முட்டைக் கோட்டையினிற் கழித்து எனை -கோட்டை -அனந்தகோடி ஜென்மமாக -கோட்டையைத் தகர்த்து –
துக்கமாய் -உன்னை பெற ஆசை கொண்ட என்னை –
உன் கொழுஞ்சோதி உயரத்துக்-பரம பதத்தில் -கூட்டரிய திருவடிக்கள் எஞ்ஞான்று
அசாதாரணமாய் அதீத தேஜோ ரூபமாய் -விதி சிவா சனகாதிகளுக்கும் அத்யந்த -கூட அரிய –காலம் அறிந்தேன் ஆகில் தரிப்பேன் –

‘நீ உலகத்தை உண்டாக்கிக் காட்டிப் பிரளயம் வந்தவாறே உண்டு மறைத்துப் பிரளயம் நீங்கினவாறே வெளிநாடு காண உமிழ்ந்த
நிலமும் நீரும் தீயும் ஆகாயமும் காற்றும் ஆகிய ஐந்து பூதங்களையும் சேர்த்துச் சமைத்து வைத்த, தேவர்கள் வாழ்கின்ற ஒப்பற்ற
அண்டமாகிற கோட்டையினின்றும் நீக்கி என்னை உன்னுடைய மிக்க ஒளியோடு கூடிய பரமபதத்திலே பெறுதற்கு அரிதான
திருவடிகளிலே எப்பொழுது கூட்டுவாய்?’ என்கிறார்.
‘உமிழும் முட்டை, வைத்து அமைத்த முட்டை, இமையோர் வாழ் முட்டை, தனி முட்டை’ என்று தனித்தனியே கூட்டுக.
முட்டை – அண்டம். கொழுஞ்சோதி உயரம் – பரமபதம்.

‘நாமே செய்யப் புக, நீர் ‘வேண்டா’ என்றவாறே அன்றோ தவிர்ந்தது? இதற்கு நம்மைக் காற்கட்ட வேண்டுமோ?’ என்ன,
‘செய்யக் கடவதாகில், அது செய்வது என்று?’ என்கிறார். ‘எம் மா வீட்டுத் திறமும் செப்பம்’ என்றாரே முன்னர்.
நீர் தானே சத்ய சங்கல்பன் -சொன்னதை செய்யும் என்கிறார் -நின் செம்மா பாத பற்பு தலை சேர்த்து ஒல்லை தானே கேட்டேன்
-உன் கொழுஞ்சோதி உயரத்துக் கூட்டரிய திருவடிக்கள் எஞ்ஞான்று கூட்டுதியேஅத்தையே இப்போதும் கேட்கிறேன்-

காட்டி –
முன்பு தானே தான் ஆம்படி இவற்றை அடையத் தன் பக்கலிலே உப சம்ஹரித்து -சேர்த்துச் ‘சத்’ என்னும் நிலையினதான உலகத்தை,
‘பிரமன் முன்னிருந்தபடியே படைத்தான்,’ என்கிறபடியே, இதனை உண்டாக்கிக் காட்டி.
‘காட்டி’ என்ற சொற்போக்கால், ‘ஐந்திர ஜாலிகரைப் போலே இதனை உண்டாக்கிக் காட்டுகிறான்’ என்பது போதரும்.
நீ கரந்து உமிழும் –
படைத்தவனான நீயே பிரளயம் வந்தவாறே உள்ளே வைத்துக் காப்பாற்றி, அது கழிந்தவாறே வெளிநாடு காண உமிழுகின்ற,
அன்றிக்கே, ‘நீ கரந்து காட்டி, உமிழ்ந்து காட்டும்’ என்னலுமாம்.
நிலம் நீர் தீ விசும்பு கால் –
இப்படி உண்பது உமிழ்வதான மண் முதலான ஐந்து பூதங்களாலே.
ஈட்டி – திரட்டி,
திரிவிருத்கரணத்தைச் சொன்னபடி. -தேஜஸ் அப்பு பிருத்வி மூன்றையும் –
‘மண் முதலிய பூதங்கள் ஒன்றோடு ஒன்று கலந்து எல்லாவற்றிலும் எல்லாம் உள்ளன,’ என்கிறபடியே,
இவை தனித்தனியும் காரியத்தைப் பிறப்பிக்க மாட்டா; கூடினாலும் எல்லாம் ஒத்ததாய் நிற்கில் காரியம் பிறப்பிக்க மாட்டா;
செதுகையும் மண்ணையும் நீரையும் கூட்டிக் குயவன் குடம் முதலியனவற்றைச் செய்யுமாறு போலே,
தேவர்கள் முதலான பல காரியங்களும் பிறக்கும்படி முக்கியப் பொருள்களாகவும் முக்கியம் இல்லாத பொருள்களாகவும் நிற்கும்.
ஒன்றற்கு ஒன்று காரணம் ஒரே தன்மையாய் நிற்கில் காரியமும் ஒரே தன்மையாய் இருக்குமே அன்றோ?

திரிவிருத்கரணம் – பூமி தண்ணீர் நெருப்பு இவற்றைக் கூட்டுதல். திரிவிருத்கரணத்தைக் கூறியது, பஞ்சீகரணத்துக்கும் உபலக்ஷணம்.
பஞ்சீகரணமாவது, ஐம்பெரும்பூதங்களையும் கூட்டுதல். கூட்டுதலாவது, ஆகாசம் முதலிய பூதங்கள் ஐந்தனையும் தனித்தனியே இரண்டு கூறாக்கி,
அவற்றில் ஒவ்வொரு கூற்றையும் நான்கு கூறாக்கி, மற்றைப் பூதங்களில் ஒவ்வொரு கூறு கூட்டிவிடுதல். இதனால், எல்லாப் பூதங்களிலும் எல்லாக்
குணங்களும் கலந்து நிற்கும்.
பஞ்ச பூதங்களும் ஒன்றோடொன்று கலக்கும்போது பிரதான அப்பிரதானங்களாய்க் கலப்பதனால் காரியம் உண்டாகிறது என்பதனைத்
திருஷ்டாந்த மூலம் விளக்குகிறார், ‘செதுகையும்’ என்று தொடங்கி. செதுகை – பதரும் கூளமும். ‘இவை கூடினாலல்லது காரியகரம் ஆகாமையாலே,
மண்ணையும் மணலையும் நீரையும் சேர்த்து ஒரு திரவியமாக்கிச் சுவர் இடுவாரைப் போலே ஈசுவரன் இவற்றை எல்லாம் தன்னிலே சேர்த்து ஓர்
அண்டமாக்கி அதுக்குள்ளே சதுர்முகனைச் சிருஷ்டித்தருளும்,’ என்பது,-தத்துவத்திரயம், அசித் பிரகரணம், சூ. 34.

ஆக, இப்படி இவற்றைத் திரட்டி இவற்றாலே,
நீ வைத்து அமைத்த –
நீ சமைத்து வைத்த.
இமையோர் வாழ் தனி முட்டைக் கோட்டையினிற்கழித்து –
பிரமன் முதலானோர் வன்னியம் செய்கிற ஒப்பற்ற அண்டமாகிற கோட்டையினின்றும் என்னைப் புறப்பட விட்டு.
கோட்டை என்பது, புறம்புள்ளாரால் புகுர ஒண்ணாததுமாய், உள் உள்ளாரால் புறப்படவும் ஒண்ணாதே,
புக்க இடமும் புறப்பட்ட இடமும் தெரியாததாய் இருக்குமே அன்றோ? அப்படியே, இந்த உலக வாழ்வும் இருத்தலின், இதனைக் ‘கோட்டை’ என்கிறது.
‘என் மாயை ஒருவராலும் தாண்ட முடியாதது’ என்றானே அன்றோ அவனும்?

என்னை –
இக்கோட்டையிலே அகப்பட்டுப் புறப்பட வழி அறியாதிருக்கிற என்னை.
அன்றிக்கே, ‘எவர்கள் என்னையே சரணம் அடைகிறார்களோ, அவர்கள் இந்த மாயையைக் கடக்கிறார்கள்,’ என்று நீ சொன்னபடியே
உன்னையே பற்றின என்னை’ என்னுதல். ‘இதனைக் கழித்து உம்மைக் கொடு போகச் சொல்லுகிறது எங்ஙனே?’ என்ன, அருளிச்செய்கிறார் மேல்:
உன் கொழுஞ்சோதி உயரத்து –
சமுசார சம்பந்தம் சிறிதும் இல்லாததாய்ச் சுத்த சத்துவமயமாய் எல்லை இல்லாத தேஜோரூபமான பரமபதத்திலே.
கூடு அரிய திருவடிக்கள் –
தன் முயற்சியால் அடைய முடியாதனவான திருவடிகளை.
எஞ்ஞான்று கூட்டுதி –
‘துக்கியாதே’ என்று ஒரு வார்த்தையைச் சொல்லிலும் ‘மனம் நிறைவு பெற்றவனாய் இருக்கிறேன்’ என்று இருக்கலாய் அன்றோ இருப்பது?
அப்படியே, ‘நான் கூட்டக் கடவேன்’ என்று ஒரு வார்த்தை அருளிச்செய்ய வேண்டும்.
‘பிறகு ஸ்ரீ பரதாழ்வான் பாதுகைகளைத் தலையில் வைத்துக்கொண்டு அப்போது ஆனந்தமடைந்தவராய்ச் சத்துருக்னாழ்வானோடு
கூடினவராய்த் தேரில் ஏறினார்’ என்னலாம்படி ‘பதினான்கு வருஷங்களும் முடிந்து வருகிறேன்’ என்றதைப் போன்று வார்த்தை அருளிச்செய்தருளவேண்டும்.

‘இதனைக் கழிக்க வேண்டும்’ என்று இருக்கிற என்னை,
எஞ்ஞான்று கூட்டுதி –
‘நீ உகந்தாரைக் கொடு போய் வைக்கும் தேசத்திலே, அளவிலாத ஆற்றலையுடையனான நீயே என்று கொடுபோய் வைக்கக்கடவை?’ என்றது,
‘இக்கோட்டை இட்ட இவன்தானே கழிக்க வேண்டும்?’ என்றபடி.
‘எவர்கள் என்னையே சரணம் அடைகிறார்களோ, அவர்கள் இந்த மாயையைக் கடக்கிறார்கள்’,
‘அந்தச் சர்வேசுவரனையே சரணமாக அடைவாய்; அவன் திருவருளாலே பரமபதத்தை அடைவாய்,’என்கிறபடியே.
விரோதியைப் போக்கிலும் இவனைப் பற்ற வேண்டும்: தன்னைப் பெறிலும் தன்னாலேபெறவேண்டும்.
‘ஒரு குருவி பிணைத்த பிணை ஒருவராலவிழ்க்க ஒண்ணுகிறது இல்லை; ஒரு சர்வசத்தி, கர்மத்திற்குத் தகுதியாகப் பிணைத்த பிணையை.
அவனைக் காற்கட்டாதே இவ்வெலி எலும்பனான சமுசாரியால் அவிழ்த்துக் கொள்ளப்போமோ?’ என்று பணிப்பர் பிள்ளை திருநறையூர் அரையர்.

————————————————————————————–

கூட்டுதி நின் குரை கழல்கள்; இமையோரும் தொழா வகைசெய்து,
ஆட்டுதி நீ; அரவணையாய்! அடியேனும் அஃது அறிவன்;
வேட்கை எலாம் விடுத்து எனை உன் திருவடியே சுமந்து உழலக்
கூட்டரிய திருவடிக்கள் கூட்டினை நான் கண்டேனே.–4-9-9-

ஆர்த்தி தீரும் படி -பரம பத இருப்பைக் காட்டிக் கொடுக்க -பிராபிக்க கண்டேன் -என்கிறார் –
மேவினேன் உன் பொன்னடி மெய்மையே -என்கிறார் இவர் –

கூட்டுதி நின் குரை கழல்கள்-சர்வ சக்தியான நீ -அளவிலிகளே ஆகிலும் -நிரதிசய போக்யனான நீ சேர்த்துக் கொள்கிறாய்
இமையோரும் தொழா வகைசெய்து,-அலமாப்பு கொள்கிறார்கள்
ஆட்டுதி நீ; அரவணையாய்! அடியேனும் அஃது அறிவன்;-ஆஸ்ரிதரை கொள்வது -அரவணை கைங்கர்யம் கண்டேன்
அஃது -ஆஸ்ரித பஷபாதி -அநாஸ்ரிதர்-கிட்ட முடியாதே என்பதை -ஊர் அறிந்த ரகசியம்
சௌலப்ய துர்லப்ய -ஸ்வ பாவம் -தகுதி இல்லா விடிலும் ஆஸ்ரிதர் சொல்லி அடையலாம்
வேட்கை எலாம் விடுத்து எனை உன் திருவடியே சுமந்து உழலக்-இதர விஷய அபி நிவேசம் கழித்து
கூட்டரிய திருவடிக்கள் கூட்டினை நான் கண்டேனேநிரதிசய போக்யமான உன் திருவடிகளை
முக்தன் அனுசஞ்சரணம் பண்ணி -ப்ரஹ்மாதிகளாலும்
கூட்டிக் கொள்ள அரிய அடியேனைக் கூட்டிக் கொண்டீர் -நானும் கண்டேன்

‘ஞானமில்லாதவரேயாயினும், நீ உகந்தாரை’ ஒலிக்கின்ற கழலையுடைய திருவடிகளிலே கூட்டிக்கொள்ளுகின்றாய்;
நீ உகவாதாரை, அவர்கள் தேவர்களேயாயினும், உன்னைத்தொழாதபடி செய்து விஷயங்களிலே திரியும்படி செய்கின்றாய்;
அதனை அடியேனும் அறிவேன்: அரவணையாய்! வேட்கை எல்லாம் விடுத்து உன் திருவடிகளையே சுமந்து திரியும்படியாக,
தன் முயற்சியால் ஒருவராலும் அடைய முடியாத திருவடிகளிலே என்னைச் சேர்த்தாய்; நான் பார்த்தேன்,’ என்கிறார்.
‘குரைகழல்கள் கூட்டுதி,’ என்க. பின்னர், ‘இமையோரும்’ என வருவதனால், இங்கு ‘ஞானமில்லாத சிறியாராயினும் அவர்களை’ எனச்
செயப்படுபொருள் வருவித்து அதனைக் ‘குரை கழல்கள் கூட்டுதி’ என்றதனோடு முடிக்க.

இவர் இவ்வுலக வாழ்வினை நினைத்தமையால் வந்த துன்பம் எல்லாம் தீரும்படி, திருநாட்டில் இருந்த இருப்பைக்காட்டியருள,
‘கண்டு அனுபவிக்கப்பெற்றேன்,’ என்று மனம் நிறைவு பெற்றவர் ஆகிறார்.

நின் குரைகழல்கள் கூட்டுதி –
அறிவில்லாதவர்களாகவுமாம். நீ உகந்தாரை உன் திருவடிகளிலே சேர்த்துக் கொள்ளுதி.
குரை – பெருமை; அன்றிக்கே, ‘ஆபரணங்களின் ஒலி’ என்னுதல்.
இமையோரும் தொழாவகை செய்து ஆட்டுதி நீ –
பிரமன் முதலான தேவர்களேயாகிலும், நீ நினையாதாரை வந்து கிட்டாதபடி செய்து அலையச்செய்வை.
‘அரவணையாய்!’
என்ற இவ்விளி, ‘கூட்டுதி’ என்றதற்கு உதாஹரணம்.-திர்யக் சமாதியாலே சொல்லுகிறார் அளவிலி என்று
அடியேனும் அஃது அறிவன் –
உலக வேதங்களிலே -இதிஹாச புராணங்களிலே -பிரசித்தமான உன் படியை நானும் அறிவேன். ‘அறிந்தபடிதான் என்?’ என்னில்,
வேட்கை எல்லாம் விடுத்து –
எனக்கு உன்னை ஒழிந்தவை ஆமத்தனை அன்றோ ஆசைப்படுகைக்கு? உன் உலகத்தில் நான் ‘எனக்கு, எனக்கு’ என்னாதது உண்டோ?
யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை நல்வீடு செய்திலையோ?
உன் திருவடியே சுமந்து உழல –
புறம்பான விஷயங்களிலே உண்டான ஆசை எல்லாம் உன் பக்கலிலேயாய், உன் திருவடிகளையே நான் ஆதரித்து,
அதுவே வாழ்க்கையாய்ச் செல்லும்படிக்காக.
கூட்டரிய திருவடிக்கள் எனைக் கூட்டினை –
யாவர் சிலர்க்கும் தந்தாமால் சேர்த்துக்கொள்ள அரிய திருவடிகளை நான் சேரும்படி என்னைச் சேர்த்துக்கொண்டாய்.
நான் கண்டேனே –
இது கேட்டார் வாய்க் கேட்டு நான் சொல்லுகிறேன் அல்லேன்: அனுபவத்தாலே சொல்லுகிறேன்.

——————————————————————–

கண்டு கேட்டு உற்று மோந்து உண்டு உழலும் ஐங்கருவி
கண்ட இன்பம், தெரிவரிய அளவில்லாச் சிற்றின்பம்,
ஒண் தொடியாள் திருமகளும் நீயுமே நிலாநிற்ப,
கண்ட சதிர் கண்டொழிந்தேன்; அடைந்தேன் உன் திருவடியே.–4-9-10-

இதர புருஷார்த்தங்கள் கழித்து பரம புருஷார்த்தம் கொடுத்த கணக்கு என்ன –
ஐஸ்வர்ய கைவல்யங்களை விட்டு உன்னைப் பெற்றேன்
கண்டு கேட்டு உற்று மோந்து உண்டு உழலும் ஐங்கருவி
கண்ட இன்பம், -லப்த விஷயத்தில் பசை போராமல் சஜாதீய விஷம் தேடி அலமாந்து
பரிச்செதித்து அனுபவித்த ஐஸ்வர்யசுகமும்
தெரிவரிய அளவில்லாச் சிற்றின்பம்,-கைவல்யம் -இந்த்ரியங்களால் க்ரஹிக்க முடியாத ஆத்ம சுகம் –
சிற்றினம் தாழ்ந்த -பகவத் அனுபவம் போலே நிரதிசய இன்பம் இல்லையே
நித்யம் அல்பம் -என்றபடி -அத்யந்த ஆத்மா அனுபவ சுகமும் ஒழித்தேன்
ஒண் தொடியாள் திருமகளும் நீயுமே நிலாநிற்ப,-முன் கை வளையல்கள்கள் சங்கு தங்கு முன்கை
நாரீனாம் உத்தமி புருஷோத்தமன்
உபயவிபூதியும் -உபய பிரகாரம் -ஒருபடிப் பட்டு இருக்க
கண்ட சதிர் கண்டொழிந்தேன்; -அடைந்தேன் உன் திருவடியே.-அனுபவ முகத்தாலே பிராபித்தேன் –

‘கண்டும் கேட்டும் உற்றும் மோந்தும் உண்டும் திரிகின்ற ஐந்து இந்திரியங்களாலே அனுபவிக்கிற ஐஸ்வரிய இன்பமும்,
இந்த இந்திரியங்களாலே தெரிந்து அனுபவிக்க அரியதான அளவில்லாத ஆத்தும அனுபவ இன்பமும்,
ஒள்ளிய தொடியினையுடையளாய திருமகளும் நீயும் ஒருபடிப்பட்டு நிற்கும்படியாகச் செய்து வைத்த நல் விரகை நேரே கண்டு,
மேலே கூறிய இரண்டு இன்பங்களையும் ஒழிந்தேன்; உன் திருவடிகளை அடைந்தேன்,’ என்கிறார்.
‘நிலா நிற்பக் கண்ட சதிரைக் கண்டு, கண்ட இன்பமும், சிற்றின்பமும் ஒழிந்தேன்,’ என்க.

மேற்பாசுரத்தில், ‘விடுத்து’ என்றும், ‘கூட்டினை’ என்றும் சொல்லப்பட்ட பேற்றினைப் பிரீதியின் மிகுதியாலே
‘விட்டது இது; பற்றினது இது’ என்று விளக்கமாக அருளிச்செய்கிறார் இத்திருப்பாசுரத்தில்.

கண்டு கேட்டு உற்று மோந்து உண்டு உழலும் ஐங்கருவி –
காட்சிக்குக் கருவியாக இருக்கும் கண், கேட்கைக்குக் கருவியாக இருக்கும் செவி, பரிசித்து அறிதற்குக் கருவியாக இருக்கும்
சரீர இந்திரியம், நாற்றத்தை அறிதற்குக் கருவியாக இருக்கும் மூக்கு, சுவையை அனுபவிப்பதற்குக் கருவியாக இருக்கும் நாக்கு;
கண்டு கேட்டு உற்று மோந்து உண்டு இப்படி இவையே செயலாய்ப் போருகைக்குக் கருவிகளாக இருப்பனவேயாமன்றோ -கண் முதலான இந்திரியங்கள்
ஐங்கருவி கண்ட இன்பம் –
உழக்காலே அளக்குமாறு போன்று அளவிற்குட்பட்ட பொருள்களை அறியத் தக்கவைகளான இந்திரியங்களாலே
அனுபவிக்கப்பட்ட இவ்வுலக இன்பம். ஆத்துமாவிற்கு ஞானம் நித்திய தர்மமாய், அதுதான் விபுவாயிருக்கக் கூடியது;
இப்படி இருக்கச்செய்தேயும், கர்மம் காரணமாகக் குறைவுபட்டதாய், மனம் அடியாகப் புறப்பட்டு,
புற இந்திரியங்கள் வழியாக விஷயங்களை அறியக் கூடியதாய் அன்றோ இருப்பது? ஆதலின், ‘ஐங்கருவி கண்ட இன்பம்’ என்கிறது.
தெரிவு அரிய அளவு இல்லாச் சிற்றின்பம் –
இவ்வுலக அனுபவத்தைப் பற்றத் தான் தெரிவரியதாய், அவ்வுலகில் பகவத் அனுபவத்தைப் பற்றத் தான் முதன்மை இல்லாததாய்,
அணுவான ஆத்துமாவைப் பற்ற வருகிற இன்பமாகையாலே சொரூபத்தாலே அளவிற்குட்பட்டதாய் இருக்கிற ஆத்தும அனுபவ சுகம்.
அந்தமில் பேரின்பத்திற்கு எதிர்த்தட்டானதாகையாலே ‘சிற்றின்பம்’ என்கிறது. ஒழிந்தேன் – இவற்றை விட்டேன்.

‘விட்டது இதுவாகில், பற்றியது எதனை?’ என்னில், அருளிச்செய்கிறார் மேல் :
ஒண்தொடியாள் திருமகளும் நீயும் –
தொடி என்பது, முன்கை வளை. அதற்கு ஒண்மையாவது, இவள் கையினின்று நீங்காதிருக்கை.
எப்பொழுதும் சர்வேசுவரனை விட்டுப் பிரியாமல் இருப்பவளாகையாலே, முன்பு ஒருகால் கழன்று பின்பு பொறுக்கவேண்டும்படி
இருப்பது இல்லையே அன்றோ? ‘சங்கு தங்கு முன்கை நங்கை’ என்னக் கடவதன்றோ?
ஆதலால், ‘ஒண்டொடியாள்’ என்கிறது; இப்படியிருக்கிற பிராட்டியும், அவள் தானுங்கூட ‘இறையும் அகலகில்லேன்’ என்றிருக்கிற நீயும்.
நீயுமே நிலாநிற்ப –
இருவருடையவும் அபிமானத்துக்குள்ளே திரிபாத் விபூதியாக அடங்கிக் கிடக்கும்.
‘புருஷன் என்பவன் பகவானாகிய நாராயணனே; பெண் என்பவள் பிராட்டியே; இவர்களைத் தவிர வேறு பொருள் இல்லை,’ என்னாநிற்க,
வாசல் தோறும் ஈசுவரர்களேயன்றோ இங்கு? ஆதலின், ‘நீயுமே நிலாநிற்ப’ என்கிறது.

நிலாநிற்பக் கண்ட சதிர், உங்கள் இருவருடையவும் அபிமானத்திலே கிடக்குமதுவே வாழ்க்கையாம்படி நீ பார்த்து வைத்த நேர்பாடு.
கண்டு –
‘நினைவிற்கும் எட்டாத, உலகத்திற்கெல்லாம் பதியான மகா விஷ்ணுவானவர் நித்திய முத்தர்கள் சூழப் பிராட்டியோடு கூட
ஸ்ரீ வைகுண்டம் என்கிற மேலான உலகத்திலே எழுந்தருளியிருக்கிறார்,’ என்கிறபடியே,
நீ பார்த்து வைத்த வாய்ப்பான அதனைக் கண்டு. என்றது, ‘பெரிய பிராட்டியாரும் நீயுமாகச் சேர இருக்கிற உங்கள் இருவருடையவும்
அபிமானத்திலே ஓர் உலகமாக அடங்கியிருக்கிற இருப்பைக் கண்டேன்,’ என்றபடி.
உன் திருவடியே அடைந்தேன் –
அந்த நித்தியசூரிகளோடு ஒரு கோவையாய் உன் திருவடிகளிலே அடிமை செய்யவேண்டும் என்று உன் திருவடிகளைக்
கிட்டினேன். இது நான் உற்றது; கீழ்ச்சொன்னவை நான் விட்டவை.

‘நன்று; ‘ஒண்தொடியாள் திருமகளும் நீயுமே’ என்ற அளவில், நித்தியவிபூதியில் அடியார்களுடன் இருக்கும் இருப்பைச் சொல்லியது ஆமோ?’ என்னில்,
‘அடியார்கள் குழாங்களை உடன் கூடுவதென்று கொலோ!’ என்று இவர் சொல்லுகையாலும்,
‘-பக்தைர் பாகவத சஹ -‘நித்தியர்களோடும் முத்தர்களோடுங்கூட’ என்று வேறு பிரமாணங்கள் உண்டாகையாலும் சொல்லத் தட்டு இல்லை’ என்க.
மேலும், ‘நிற்பனவும் திரிவனவும் நீயே மற்று ஒரு பொருளும் இன்றி’ என்று கூறிவைத்துக் ‘கொடு உலகம் காட்டேல்’ என்றதைப் போன்று,
‘அவர்கள் இருவருமே’ என்ற இடத்தில், அவர்கள் அபிமானத்திலே அடங்கிக் கிடப்பது ஒரு உலகம் உண்டாகச் சொல்லத் தட்டு இல்லையே அன்றோ?
அங்ஙனமாயின், பிராட்டியும் தானும் நித்தியசூரிகளுமாய் இருக்கிற அவ்வுலகம் இவ்வுலகம் ஆனாலோ?’ என்னில்,
தனக்கே உரிய விக்கிரஹத்தோடே, ‘நீர் சீதா பிராட்டியாரோடுகூட’ என்கிறபடியே, தானும் பிராட்டியுமாய் இருந்து,
‘இதனைச் செய்க’ என்று சொல்லுகிறபடியே, இளைய பெருமாளை அடிமை கொண்டாற்போலே,
இவரை அடிமை கொள்ளுவது ஒரு தேச விசேடமாகவே இருக்கவேண்டும் அன்றோ?-

இப்பால் கைவளையும் மேகலையும் காணேன் கண்டேன் கன மகரக் குழை இரண்டும் நான்கு தோளும்-கலியன்

—————————————————————————————————

திருவடியை நாரணனைக் கேசவனைப் பரஞ்சுடரைத்
திருவடி சேர்வது கருதிச் செழுங் குருகூர்ச் சடகோபன்
திருவடி மேல் உரைத்த தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும்
திருவடியே அடைவிக்கும் திருவடி சேர்ந்து ஒன்றுமினே.–4-9-11-

திருவடி அடைவிக்கும்
திருவடியை நாரணனைக் கேசவனைப் பரஞ்சுடரைத்-சர்வ சேஷி -அந்தராத்மாவாய் -விரோதி நிரசன சீலன் –
சம்பத் -வாத்சல்யம் -விரோதி நிரசன சீலத்தால் வந்த ஔஜ்வல்யம்
திருவடி சேர்வது கருதிச் செழுங் குருகூர்ச் சடகோபன்-திருவடியைப் பற்ற அபி சாந்தி கொண்ட -நிரதிசய போக்யமான திருக் குருகூர்
திருவடி மேல் உரைத்த தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும்-
திருவடியே அடைவிக்கும் திருவடி சேர்ந்து ஒன்றுமினே-ஒன்றி ஆனந்தம் அடையலாம் -தானே அடைவிக்கும்

‘திருவடியும் நாரணனும் கேசவனும் பரஞ்சுடருமான சர்வேசுவரனுடைய திருவடிகளை அடையவேண்டும் என்று நினைத்து, செழுமை பொருந்திய
திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீ சடகோபராலே, எம்பெருமானுடைய திருவடிகளின்மேலே அருளிச்செய்யப்பட்ட தமிழ்ப்பாசுரங்கள் ஆயிரத்துள்
இப்பத்துப்பாசுரங்களும் திருவடிகளிலே சேர்ப்பிக்கும்; நீங்களும் திருவடிகளைச் சார்ந்து அடிமை செய்யப் பாருங்கோள்,’ என்றவாறு.
‘கருதி உரைத்த தமிழ்’ என்க. ‘இப்பத்தும் அடைவிக்கும்,’ என்க.

‘இத்திருவாய்மொழி கற்றவர்களை இதுதானே அவன் திருவடிகளிலே சேர்க்கும்,’ என்கிறார்.

புறம்பு உண்டான ருசியைப் போக்கித் தன் பக்கலிலே ருசியைப் பிறப்பித்த உபகாரத்தை நினைத்து ஏத்துகிறார், ‘திருவடியை’ என்று தொடங்கி.
திருவடியை –
எல்லார்க்கும் ஸ்வாமியாய் உள்ளவனை.
நாரணனை –
கேவலம் ஸ்வாமியாய் இருக்குமளவே அன்றிக்கே, ‘இவை அல்லோம்’ என்ற அன்றும் தான் விடமாட்டாதபடி அன்பு உள்ளவனாய் இருப்பவனை.
கேசவனை –
அன்பு உள்ளவனாய்க் கடக்க இருக்கை அன்றிக்கே, இவர்களோடே ஓர் இனத்தானாய் வந்து அவதரித்து, இவர்கள் விரோதியைப் போக்குமவனை.
பரஞ்சுடரை –
இப்படி அவதரித்து நின்ற இடத்திலே உண்டான மனிதத் தன்மையிலே பரத்துவத்தைச் சொன்னபடி.
திருவடி சேர்வது கருதி –
‘அவன் திருவடிகளைக் கிட்டினோமாகவேண்டும்’ என்னும் எண்ணத்தையுடையராய்;
‘துயர் அறு சுடர் அடி தொழுது எழு’ என்று அடியே பிடித்து வருகின்ற எண்ணம் இதுவே அன்றோ?

செழுங்குருகூர்ச் சடகோபன் –
திருவயோத்தியையில் மண்பாடுதானே ஸ்ரீராமபத்தியைப் பிறப்பிக்குமாறு போலே, அவ்வூரில் பிறப்பாயிற்று இவர்க்கு இந்த ஈடுபாட்டிற்குக் காரணம்.
திருவடிமேல் உரைத்த தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும் திருவடியே அடைவிக்கும் திருவடி சேர்ந்து ஒன்றுமின் –
அவன் திருவடிகளிலே சொன்ன தமிழ் ஆயிரத்திலும் வைத்துக்கொண்டு இந்தப் பத்தும் அவன் திருவடிகளிலே சென்று அடைவிக்கும்;
நீங்களும் அதற்கு உறுப்பாகத் திருவடிகளிலே சென்று கிட்டுங்கோள்.

அவன் திருவடிகளிலே கிட்டக்கொள்ள, நீங்கள் உங்களுக்குமாய் இராமல், அடிசிற்பானை போலே அவன் திருவடிகளிலே
நித்திய கைங்கரியத்திலே சேரப் பாருங்கோள். ‘ சமானமான பதவியை அடைந்தவர்களாய், விரோதி கழிந்தவர்களாய்
எப்பொழுதும் என்னுடைய கைங்கரிய பரர் ஆகின்றார்கள்,’ என்றும்,
‘பகவான் எந்த எந்த வழியாலே செல்லுகிறானோ, அந்த அந்த வழியிலே உயிரும் செல்கிறது,’ என்றும் சொல்கிறபடியே,
இளைய பெருமாளைப்போலே பிரியாதே நின்று அவன் நினைவிற்குத் தகுதியாக அடிமை செய்யப் பாருங்கோள்.
‘இப்படி அடிமை செய்வார்க்கு, இவர் விட்டவையும் விட்டுப் பற்றியதும் பற்ற வேண்டுமோ?’ என்னில்
, ‘இவர் அருளிச்செய்த இத்திருவாய்மொழியைச் சொல்லவே, தன்னடையே ஐம்புல இன்பங்களில் விரக்தியையும்
பிறப்பித்து அவன் திருவடிகளில் சேர விடும் இத்திருவாய்மொழிதானே,’ என்க.

————————————————————————————————————-

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

சோசன் முனி
ஸூ சத்ருசஞ்ச சகாயம் இச்சன் லோகம் விலோக்ய
விபரீத ருசிம் விஷண்ண
அத்யத்ர வாஸம் அசஹன்
ஹரிணா ஸூ வாஸம் வைகுண்டம் பிரகடனம்
நவமே ததர்ச

———————————————————

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –

காருண்யாத் அப்தி மாத்யாத் -கண்ணாளா கடல் கடைந்தாய்
தத் உபரி சயித-அரவணையாய்
தது சமான அங்க வர்ண -கடல் வண்ணா அடியேனை
க்யாத் ஔதார்ய ஸ்வதானே -வள்ளலே மணி வண்ணா
ருசிர மணி ருசி — மணி வண்ணா
வேஷத அதீவ போக்யதா-வேரி துளவ முடியானே
ஆத்மத்வேன அனுபாவ்ய -நீயேயாய்
துரதிகம பத –கூட்டரிய திருவடிகள்
பந்த மோஷ ஸ்வ தந்திர –இரண்டிலும் ஸ்வா தந்த்ர்யம் உண்டே
ஸ்வ அந்ய ப்ரேமம் உபரோதி
விபு தத் பதோத் கண்டித –44-

உலகு இயற்க்கை பட்டியல்
தாபை
சம்பந்தி துக்கை-தேக அனுபந்தி
ஸ்வ விபவ மரணைதி
தாப க்ருத் போக்ய சங்கைகி
துர்கத்யா வெந்நரகம்
ஆஜ்ஞ்ஞாதி வ்ருத்தே –
அனிதர விதுதே
சேஷதைக ரசன்
அண்ட காரா நிரோதாத்
பிரக்வீ பாவம்
பிரலகு சுக பரிஷ்வங்கஸ்ய –45

பாசுரம் 7-10-அர்த்தாந்தரம்
ஸ்வா நாம் நிர்வாகத்வாத்
அகிபத சயநாத்
அத்யந்த உதாரபாவாத்
வளவத் தர்சநீய யோகத்வாத்
சந் மௌலி துளசி
பிரிய கரண முகைகே –7 பாசுரம் -தாய் போலே பிரியமானவன்
அண்ட ஸ்ருஷ்டத் -சக்தி –8 -சாமர்த்தியம்
சுப்ராபத்வம் -ஆதி சப்தம் ஸ்ரீ மத்வம்-9-புருஷகார பூதை-இருப்பதால் -ஆஸ்ரிதற்கு சுலபன்-46-

———————————————————–

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 39-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்–

நண்ணாது மாலடியை நாநிலத்தே வல்வினையால்
எண்ணாராத் துன்பமுறு மிவ்வுயிர்கள் -தண்ணிமையைக்
கண்டிருக்க மாட்டாமல் கண் கலங்கும் மாறன் அருள்
உண்டு நமக்கு உற்ற துணை யொன்று————–39-

தாபஹர தேச வாசித்வம் -கல்யாண குணம் –

————————————————————————————–

அவதாரிகை –

இதில்
சம்சாரிகள் உடைய அனர்த்தத்தைக் கண்டு
வெறுத்த பாசுரத்தை
அனுவதித்து
அருளிச் செய்கிறார்
அது எங்கனே என்னில்
கீழே
ஆத்மாத்மீயங்களில் நசை அற்ற இடத்திலும்
அவை போகக் காணாமையாலே
விரஹ வ்யசனம் அதிசயித்து
தம் இழவுக்கு கூட்டாவார் உண்டோ -என்று சம்சாரிகளைப் பார்த்த இடத்தில்
அவர்கள் பகவத் விஷயத்தை காற்கடைக் கொண்டு
இதர விஷயங்களின் யுடைய லாப அலாபங்களே
பேறும் இழவுமாய் நோவு படுகிற படியைக் கண்டு
அது பொறுக்க மாட்டாமல்
சர்வேஸ்வரனை பார்த்து -ரஷகனான நீ உளனாய் இருக்க
இவை நோவு படுகை போருமோ -பிரானே
என்று விஷண்ணராய்
இவர்கள் நோவைப் போக்குதல்
இது கண்டு பொறுக்க மாட்டாத என்னை முடித்தல்
செய்து அருள வேணும் -என்ன
இவர்களுக்கு இச்சை இல்லாமையாலே
உம்மோபாதி நாமும் நொந்து காணும் இருக்கிறது -என்ன
ஆனால் இவர்கள் நடுவில் நின்றும் என்னை வாங்க வேணும் -என்ன
இவர் கிலேசம் தீரும்படி
பிராட்டியும் தானுமாக திரு நாட்டில் இருக்கும் இருப்பை அவன் காட்டிக் கொடுக்க
அத்தைக் கண்டு அனுபவித்து க்ருதார்த்தர் ஆகிற
நண்ணாதார் முறுவலிப்ப -வில் அர்த்தத்தை
நண்ணாது மாலடியை -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -என்கை-

—————————————————————————————

வியாக்யானம்–

நண்ணாது மாலடியை –
ஆஸ்ரித வ்யாமுக்தனான
சர்வேஸ்வரன் திருவடிகளை ஆஸ்ரயியாமல்-
ஆத்மாத்மீயங்களில் தாம் நசை அற்ற இடத்திலும் அவனைக் கிட்டப் பெறாமல்
சம்சாரிகளில் தம் இழவுக்கு கூட்டுவார் உண்டோ என்று பார்த்து

நாநிலத்தே வல்வினையால் -இத்யாதியாலே
வெறுத்து அருளிச் செய்கிறார்
என்கிறார் –

நாநிலத்தே –
நாலு வகைப் பட்ட பூமியிலே
அதாவது
குறிஞ்சி நிலமான திருமலைகளிலும்
முல்லை நிலமான திருக் கோட்டியூர் திரு மோஹூர் தொடக்கமான ஸ்தலங்களிலும்
மருத நிலமான கோயில் பெருமாள் கோயில் தொடக்கமான ஸ்தலங்களிலும்
நெய்தல் நிலமான திரு வல்லிக் கேணி திருப் புல்லாணி திரு வல்லவாழ்
திரு வண் வண்டூர் தொடக்கமான ஸ்தலங்களிலும்
ஸூலபனாய் இறே அவன் இருப்பது
அந்த சுலப்யமே ஹேதுவாக
அவன் திருவடிகளை ஆஸ்ரயியாதே

நாநிலத்தே வல்வினையால் எண்ணாராத் துன்பமுறு மிவ்வுயிர்கள் –
இப்படி விலஷணமான பூமியிலே
பகவத் ஆஸ்ரயணீயம் பண்ணி உஜ்ஜீவியாமல்

மாலைத் தாம் வாழ்த்தாது இருப்பது இது வன்றே மேலைத் தாம் செய்யும் வினை –
என்னும்படி பிரபல கர்மங்களாலே
அசங்க்யாதமான துக்கத்தை மிகவும் அடைந்து பொறுக்கிற
இவ்வாத்மாக்கள்
நந்தந்த் யுதித ஆதித்யே நந்தந்த் அஸ்தமிதே ரவௌ
ஆத்மா நோ நாவ புத்யந்தே மனுஷ்ய உஜ்ஜீவித ஷயம்-என்னும்படி

தண்ணிமையைக் கண்டிருக்க மாட்டாமல் –
இவர்கள் அனர்த்தத்தை கண்டு ஆற்ற மாட்டாமல் –
அதாவது
எண்ணாராத் துயர் விளைக்கும் இவை என்ன உலகு இயற்கை –
ஏமாறி கிடந்தது அலற்றும் இவை என்ன உலகு இயற்கை –
கண்டு ஆற்றேன் உலகு இயற்கை –
தமமூடும் இவை என்ன உலகு இயற்கை –
ஈங்கு இதன் மேல் வெந்நரகம் இவை என்ன உலகு இயற்கை –
அறப் பொருளை அறிந்தோர் ஆர் இவை என்ன உலகு இயற்கை –
கொடு உலகம் காட்டேல் –
இத்யாதிகளாலே இவற்றின் கொடுமையை பல காலும் அருளிச் செய்து

கண் கலங்கும் மாறன் –
திருக் கண்களும்
திரு உள்ளமும்
கலங்கிப் போகும் ஆழ்வார்
அதாவது
கூயே கொள் அடியேனைக் கொடு உலகம் காட்டேல்
வாங்கு எனை
கூட்டரிய திருவடிகள் எஞ்ஞான்று கூட்டுதியே –
என்று கூப்பிட்ட பின்பு

எம்பெருமானாலே
கூட்டரிய திருவடிக் கண் கூட்டினை –
அடைந்தேன் உன் திருவடியை –
என்னும்படி சமாஹிதராய்
சம்சாரிகள் நோவுக்கு நொந்து
அருளிச் செய்த ஆழ்வார் –

அருள் உண்டு நமக்கு உற்ற துணை யொன்று –
இப்படி ஈஸ்வரனும் கூட கைவிட்ட
சம்சாரிகளையும் அகப்பட விட மாட்டாமல்
ஈச்வரனோடே மன்றாடும் ஆழ்வார் உடைய அருள்
அந்தரங்கமான ரஷையாக நமக்கு ஓன்று உண்டு –
வேறு ஒரு ரஷகாந்தரம் தேட வேண்டா –
தானே ரஷகமாய் இருக்கும்
அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான்
அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே -என்னக் கடவது இறே –

———————————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: