பகவத் விஷயம் காலஷேபம் -100- திருவாய்மொழி – -4-8-1….4-8-5–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்–

கீழில் திருவாய்மொழியிலே, கேட்டார் அடைய நீராகும்படி கூப்பிட்டார்;
இப்படிக் கூப்பிடச் செய்தேயும், சர்வேசுவரன் நமக்கு முகம் தாராதிருந்தது
நம் பக்கல் விருப்பம் இல்லாமையாலே யாக அடுக்கும்,’ என்று பார்த்து,
ப்ராப்தனாய் -சம்பந்தமுள்ளவனுமாய், சுசீலனுமாய், விரோதிகளை அழிக்கிற தன்மையனுமாய் இருக்கிறவன்
இது வேண்டா என்று இருக்குமாகில், எனக்கோ தான் இது வேண்டுவது?’ என்று விடப் பார்த்து,
அவனுக்கு வேண்டாத நானும் என்னுடைமையும் வேண்டா எனக்கு,’ என்று ஆத்மாவோடு சம்பந்தப்பட்ட பொருள்களிலும்
நசை அற்றபடியை அந்யாபதேசத்தாலே அருளிச்செய்கிறார்.
(ஆத்மாத்மீயங்களில் வைராக்யம் இதில் -)

வரி வளையால் குறைவிலமே -என்பதால் நாயகி பாவம் தோற்றும் –
அவன் விரும்பின வழியாலே காணும் ஆத்ம வஸ்துவை விரும்பச் சம்பந்தம் உள்ளது;
நாம் நமக்காக இல்லையே -அவனுக்காகத் தானே –
இங்ஙனம் விரும்பாத போது – தேகத்தையே ஆத்துமாவாக நினைத்திருக்கும்
பழைய நினைவினைப் போன்றதே அன்றோ?

இத் திருவாய்மொழியிலே வருகின்ற
அடியேனைப் பணி கொண்ட’ என்றதனைத் திருவுள்ளம் பற்றிச் ‘சம்பந்தமுள்ளவனாய்-ப்ராப்தனாய் -என்றும்,
கூறாளும் தனியுடம்பன்’ என்றதனைத் திருவுள்ளம் பற்றிச் ‘சுசீலனுமாய்’ என்றும்,
அசுரர்களை நீறாகும்படியாக’ என்றதனைத் திருவுள்ளம் பற்றி,‘விரோதிகளை அழிக்கின்ற தன்மையனுமாய்’ என்றும் .
உயிரினால் குறையிலம்-உடம்பினால் குறையிலம் இத்யாதிகளால் -அவனுக்கு வேண்டாத
நானும் என்னுடைமையும் வேண்டா எனக்கு-என்றும் அருளிச்செய்கிறார்

‘காதலர் நயந்தது யாமுடை நயப்பே; காதலர் வேண்டின யாம் வேண்டினமே;
காதலர் எம்மை வேண்டார் எனிலே யாமும் வேண்டலம் இனியே’– என்றார் பிறரும்.

ந தேகம் –
இத்தனைச் சாந்து நாற்றத்துக்காக நிலை நின்ற-அத்ருஷ்டம்- பலத்தையுங்கூட அழிய மாற்றும்படி அன்றோ சரீரத்தில்
பண்ணியிருக்கும் அபிமானம்? அப்படிப்பட்ட சரீரம் வேண்டா.
ந பிராணாந் –
சரீரத்தை விரும்புகிறது பிராணனுக்காக; அந்தப் பிராணன்களும் வேண்டா.
ந சுகம் –
பிராணன்களை விரும்புகிறது சுகத்துக்காக; அந்தச் சுகமும் வேண்டா.
இதற்கு உறுப்பாக வருமவை எல்லாம் எனக்கு வேண்டா.
இவை யெல்லாம் புருஷார்த்தமாவது, ஆத்மாவுக்கே அன்றோ? அந்த ஆத்மா தானும் வேண்டா.
இங்ஙனம் பிரித்துச் சொல்லுமது என்?
உன் சேஷத்வ- திருவடிகளில் அடிமையாகிற சாம்ராஜ்யத்துக்குப் புறம்பானவை யாவை சில,
அவை ஒன்றும் எனக்கு வேண்டா.
நாத –
உடையவனுக்குப் புறம்பாய் இருக்குமவற்றை விரும்பச் சம்பந்தம் உண்டோ?’ ‘அங்ஙனேயாமாகில்,
கிரமத்திலே கழித்துத் தருகிறோம்,’ என்ன, ஒரு ஷணமும் பொறுக்க மாட்டேன்;
இவை தம்மைத் தவிர்த்துக் கடக்க வைக்க ஒண்ணாது;
நசித்துப் போம்படி செய்ய வேண்டும். இது-கண்டாதூர்த்தமான- கழுத்துக்கு மேலே வருகின்ற வார்த்தை அன்றோ?’ என்ன,
தத் சத்யம் –
அது மெய். மது மதந – ‘இங்ஙனம் அன்றாகில், தேவர் முன்பு பொய்யரானார் பட்டது படுகிறேன்,’
என்றார் ஸ்ரீ ஆளவந்தார்–இது,ஸ்தோத்திர ரத்நம், 57.

மகா ரதராகிய பெருமாளைப் பிரிந்து அரக்கியர் நடுவில் வசிக்கிற எனக்குப் பிராணனால் பயன் இல்லை;
பொருள்களாலும் பயன் இல்லை; ஆபரணங்களாலும் ஒரு பயன் இல்லை,’ என்றாள் பிராட்டி.
பிராணன் முதலியவற்றால் காரியம் இன்றிக்கே ஒழிகிறது என்?’ என்னில்,
இருக்கிறது அரக்கியர்கள்-ஸ்ரீராமா. சுந். 26 : 5.-
நடுவே; பிரிகிறது பெருமாளை; இவற்றால், என்ன பிரயோஜனம் உண்டு?’ என்றபடி.
பிராணன் -வைத்து தரிக்கலாம் பக்தர்கள் நடுவில் இருந்தால் அவர் வருவார் என்று-

———————————————————————————

ஏறு ஆளும் இறையோனும், திசை முகனும், திருமகளும்,
கூறு ஆளும் தனி உடம்பன், குலம் குல மா அசுரர்களை
நீறு ஆகும் படியாக நிருமித்து, படை தொட்ட
மாறாளன் கவராத மணிமாமை குறை இலமே.–4-8-1-

ஆஸ்ரிதற்கு அபாஸ்ரயமான சீல குணம் -அனாஸ்ரிதற்கு விநாச்யமான ஆண் பிள்ளைத் தனத்தையும் உடைய
உபாய பூதனால் விரும்பப் படதா அழகிய நிறத்தால் என்ன பிரயோஜனம்
ஏறு ஆளும் இறையோனும், திசைமுகனும், திருமகளும்,-ஈசோஹம்-அபிமானித்து இருக்கும் ருத்ரன் -பஹுமுகமாக சிருஷ்டிக்க –
இவர்கள் உடன் ஒக்க நித்ய அநபாயினி -சம்பத் -பிரதி நியதமாம் படி அனுபவித்து –
கூறு ஆளும் தனி உடம்பன்,-தங்களுக்கு இருப்பிடமாக அபி மானித்து கொண்டு போருமதாய் -அத்விதீயமாய் விலஷணம்
அஹங்கார தூஷித்தார் -நித்ய அனபாயினி -சீல குணத்துக்கு மேலே
குலம் குலமா அசுரர்களை-விரோதிகளைப் போக்கும் இடத்தில் பச்மமாம் போம்படி சங்கல்பித்து
நீறு ஆகும் படியாக நிருமித்து, படை தொட்ட-தொட்ட படை எட்டும் –
மாறாளன் கவராத மணிமாமை குறைஇலமே-சத்ருக்களை -மாமை நிறம் ஒளி உடைய நிறத்தால் என்ன கார்யம்
கவருதல் விரும்புதல்

‘இடபவாகனத்தையுடைய சிவபிரானும் நான்கு முகங்களையுடைய பிரமனும் திருமகளும் தனித்தனியே ஆளுகின்ற ஒப்பற்ற
திருமேனியையுடையவனும், கூட்டம் கூட்டமாக அசுரர்கள் சாம்பலாகும்படியாக நினைத்துப் படையைப் பிரயோகித்த மாறாளனுமான
சர்வேசுவரனால் விரும்பப்படாத அழகிய இந்நிறத்தால் ஒருவிதப் பயனும் உடையோம் அல்லோம்,’ என்கிறாள்.
குறை – பயன். இத்திருவாய்மொழி, தரவுகொச்சகக் கலிப்பா.

அத்யந்த குணவான் -குணம் –ஸுலப்யம் -எல்லை இல்லாத பெருமை பொருந்திய குணத்தை யுடையவனுமாய்
விரோதிகளை அழிக்கிற ஆற்றலையுடையவனுமாய் இருக்கிற
எம்பெருமான் விரும்பாத நலம் மிக்க நிறங்கொண்டு எனக்கு ஒரு காரியம் இல்லை,’ என்கிறாள்.

ஏறு ஆளும் இறையோனும் திசை முகனும் கூறு ஆளும் தனி உடம்பன் –
இதனால், ‘நான், நான்,’ என்பார்க்கும் அணையலாம் படியான உடம்பை அன்றோ நான் இழந்திருக்கிறது?’ என்கிறாள்,
‘கண்ட காபாலி கந்தர் பெற்றுப் போகிற உடம்பு அன்றோ எனக்கு அரிது ஆகிறது?’ என்கிறாள்.
‘அகங்காரங்கொண்டவர்களுக்கும் சுலபமானது எனக்கு அரியதாயிற்றே!’என்னுமதனைச் சொல்ல வந்தது.
அதனை ரசோக்தியாக விவரிக்கிறார், ‘கண்ட காபாலி’ என்று தொடங்கி.
காபாலி-கபாலத்தையுடையவன்; சிவன். கந்தன் – கந்தையையுடையவன்;சிவன்.
அன்றிக்கே, கந்தன் என்பது, ‘உலகத்திற்கெல்லாம் மூலமான திரு நாபீ கமலத்தில் பிறந்தவன்
என்று பிரமனைச் சொல்லுகிறது’ என்னுதல்.

ஏறு ஆளும்
–சர்வேசுவரன் வேதமே சொரூபமான பெரிய திருவடியை வாஹனமாகவுடையனாய் இருக்குமாகில்,
தானும் கைக்கொள் ஆண்டிகளைப் போலே ‘ஓர் எருத்தையுடையேன்’ என்று செருக்குற்று
இருப்பவனாதலின், ‘ஏறு ஆளும்’ என்கிறார்.
ஆளும் –
இவனுடைய இரு வகைப்பட்ட உலகங்களின் ஆட்சி இருக்கிறபடி.
அவன் உபய விபூதிகளுக்கும் கடவனாய்ச் சர்வேசுவரனாயிருப்பான் :
கள்ளியை ‘மஹாவிருக்ஷம்’ என்பதனைப் போன்று,
தானும் ‘ஈசுவரன்’ என்று இருப்பவனாதலின், ‘இறையோன்’ என்கிறார்.

திசைமுகனும் –
படைத்தலுக்கு உறுப்பாக நான்கு வேதங்களையும் உச்சரிப்பதற்குத் தகுதியான நான்கு முகங்களை யுடையனாய்,
‘நான் படைப்பவன்’ என்று செருக்குற்று இருக்கிற பிரமனும்.
‘தர்ம தர்மிகளுக்கு ஐக்கியம் உண்டித்தனை போக்கி, தர்மி துவயத்துக்கு ஐக்கியமில்லை,’ என்க.
சிவனாய் அயனாய் -ஐக்யம்-சொல்லி -இறையோனும்-திசை முகன் -பேதம் -தர்மி தர்மம் –
சௌசீல்யம் உடையவன் சுசீலன் சொல்லலாம்
தேவன் -தேவ சரீரம் சரீர ஆத்மா இரண்டையும் சொல்லும் -இதனால் ஐக்யம் சொல்லிற்று
ஸ்வரூப ஐக்யம் சொல்ல வில்லை -தர்மி த்வயத்துக்கு ஐக்யம் இல்லையே

திருமகளும் –
‘நான் ஸ்ரீ ராகவனுக்கு வேறு ஆகாதவள்’ என்று சொல்லுகிறபடியே இருக்கிற பெரிய பிராட்டியும்.

கூறு ஆளும் தனி உடம்பன்
இவர்கள் கூறு இட்டு ஆளும்படி ஒப்பற்ற உடம்பு படைத்தவன். ‘நாங்கள் அதிகாரி புருஷர்களுடையவர்கள்’ என்று
பிராட்டி பக்கத்திலே புக்குச் சிலர் அழிவு செய்தல், ‘நாங்கள் படுக்கைப் பற்றிலுள்ளோம்’ என்று சிலர் அவர்கள்
எல்லையிலே புக்கு அழிவு செய்தல் செய்ய ஒண்ணாதபடி ஆளுகின்றாராதலின், ‘கூறு ஆளும்’ என்கிறார்.
தனி உடம்பன்-
திவ்யாத்ம சொரூபத்திலும் வீறுடையது திருமேனியே அன்றோ?
எல்லார்க்கும் இடமாய் அன்றோ திருமேனிதான் இருப்பது?
இப்படிச் சீலமுடையவனாய் இருக்கின்றவனை அன்றோ நான் இழந்திருக்கிறது?’ என்கிறாள்.

குலம் குலமா அசுரர்களை நீறு ஆகும்படியாக நிருமித்துப் படை தொட்ட மாறாளன் –
இதனால், ‘அணைக்கைக்குத் தடை உண்டாய்த்தான் இழக்கின்றேனோ?’ என்கிறாள்.
மேற்கூறியது, ‘இந்த உலகத்தில் இக்காலத்தில் குணங்களை யுடையவர் யாவர்?’ என்பது போன்றது.
வீரத்தையுடையவர் யாவர்?’ என்பது போன்றது இது.
குணவான் கஸ்ய வீர்யவான் போலே இங்கும் –
குலம் குலமா அசுரர்களை –
குலம் குலமாக அசுரர் கூட்டத்தை.
நீறாகும்படியாக நிருமித்து – ‘என்னால் முன்னரே கொல்லப்பட்டு இருக்கிறார்கள்’ என்கிறபடியே,
உறவு வேண்டேம்’ என்ற போதே சாம்பலாகப் போகும்படி நினைத்து. அழல விழித்தே கொன்றான் –
படை தொட்ட –
உலகத்தைப் படைக்கின்ற காலத்தில் சங்கற்பத்தாலே அதனைச் செய்யுமவன்,
அடியார்கட்குப் பகைவர்களை அழியச் செய்யுமிடத்தில் படையையுடையவனாய் மேல் விழுவான்.
படைத்தல் முதலிய தொழில்களில் சத்திய சங்கற்பனாய் இருப்பான்,
அடியார்களுடைய பகைவர்களிடத்திலே அசத்திய சங்கற்பனாய் இருப்பான்.
‘யாகங்களுக்கு இடையூறு செய்கின்றவர்களையும், (விச்வாமித்ரர் யாக ரக்ஷணம்)
பாண்டவர்கட்குத் துன்பம் செய்கின்றவர்களையும் நான் வருத்துவேன்!’ என்கிறபடியே,
‘தன்னை மிடற்றைப் பிடித்தாரையும், உயிர் நிலையிலே நலிந்தாரையும் நலியுமவன்’ என்பதாம்.
அஹம் -சர்வ யஜ்ஞ்ஞாம் போக்தா -என்றதால் மிடற்று -பாண்டியர் உயிர் நிலை மம பிராணா –

நீறு ஆகும்படியாக –
சின்னம் பின்னம் சரேர் தக்தம்‘அறுக்கப்பட்டனவாகவும் பிளக்கப்பட்டனவாகவும்
பாணங்களால் கொளுத்தப்பட்டனவாகவும்’ என்கிறபடியே,
தூளியாகும்படியாக நினைத்து ஆயுதம் எடுக்குமவன் ஆதலின், ‘நீறாகும்படியாக நிருமித்துப் படைதொட்ட’ என்கிறார்.
மாறாளன் –
‘மிடுக்கன்’ என்னுதல்; ‘பகைவன்’ என்னுதல். துரியோதனன் ‘உண்ண வேண்டும்’ என்ன,
‘பகைவனுடைய அன்னம் உண்ணத்தக்கது அன்று; பகைவர்களையும் உண்பிக்கக்கூடாது,’ என்கிறபடியே,
தன் அடியார்களுடைய பகைவர்களைத் தனக்குப் பகைவர்களாகக் கொண்டு வழக்குப் பேசுமவன் அன்றோ?
கவராத மணி மாமை குறை இலமே –
பகைவர்களை அழியச்செய்து விடாய்த்துத் ‘தண்ணீர், தண்ணீர்’ என்று அவன் வந்து அணையாத நல்ல நிறத்தால்
ஒரு விருப்பம் உடையோம் அல்லோம். நிறத்திலே அவன் ஆதரிக்குமன்று அன்றோ இத்தால் காரியமுள்ளது?
அல்லது, நிறக் கேடாமித்தனை அன்றோ? -நிறம் -ஸ்வரூபம் என்றுமாம்-

———————————————————————-

மணி மாமை குறையில்லா மலர் மாதர் உறை மார்பன்
அணி மானத் தடைவரைத் தோள் அடல் ஆழித் தடக்கையன்
பணி மானம் பிழையாமே அடியேனைப் பணிகொண்ட
மணி மாயன் கவராத மட நெஞ்சால் குறை இலமே.–4-8-2-

பிராட்டி உடன் சேர்ந்த விக்ரக வைலஷண்யம் காட்டி என்னை அடிமை கொண்டவன் ஆதரியாத நெஞ்சால் என்ன பயன்
மணி மாமை குறையில்லா மலர் மாதர் உறை மார்பன்-நித்ய சம்ச்லேஷத்தால் நிரதிசய ஔஜ்வல்யம் -குறையற்ற
ஆபி ரூப்யத்துக்கு மேல் -பூவில் பிறந்த ஆபிஜாத்யத்தால் வந்த சௌகுமார்யாதி குண விசிஷ்டையான –
நாரீனாம் உத்தமை-திரு மார்பு கொண்டவன்
அணி மானத் தடைவரைத் தோள் அடல் ஆழித் தடக்கையன்-மானம் அளவு -ஆபரணத்தால் அலங்கரிக்கப் பட்ட
-சுற்றளவு கொண்ட -மலை போலே -திடமான திருத் தோள்கள்
விரோதி நிரசன சீலம் திரு வாழி உடைய
பணி மானம் பிழையாமே அடியேனைப் பணிகொண்ட-கைங்கர்ய வ்ருத்திகளில் ஒன்றும் குறையாமல் கொண்டார்
தப்பாமல் -ஸ்வரூபம் உடைய என்னை
மணி மாயன் கவராத மட நெஞ்சால் குறை இலமே.-நீல ரத்னம் போலே கருத்த நிறம்
விதேயமான நெஞ்சு மட நெஞ்சம் -குறைவிலம் -பற்றுடைய நெஞ்சம் -விஷயாந்தர நெஞ்சம் வேண்டாம் என்று சொல்ல வில்லை
உகக்க வேண்டிய நெஞ்சு என்றாலும் அவனால் விரும்பப் படா விடில் –

மணி போன்ற ஒளியையுடைய அழகிலே யாதொரு குறைவும் இல்லாத பெரிய பிராட்டியார் நித்தியவாசம் செய்கின்ற
மார்பையுடையவனும், அழகிய பெருமை பொருந்திய விசாலமான மலை போன்ற தோள்களையும் பகைவர்களைக் கொல்லுகின்ற
சக்கரத்தைத் தரித்த திருக்கரத்தையும் உடையவனும், கைங்கரியத்தின் அளவிலே தவறாமல் அடியேனை அடிமை கொண்ட
நீலமணி போன்ற நிறத்தையுடைய மாயவனுமான சர்வேசுவரனால் விரும்பப்படாத மடநெஞ்சால்
ஒரு காரியத்தையுடையோம் அல்லோம்,’ என்கிறாள்.
குறை இல்லாத மாதர்’ என்க. அடல் – கொல்லுதல். பணி -தொண்டு. மானம் – அளவு.

மேற்பாசுரத்திற்கூறிய சீலத்துக்கும் அடியான பிராட்டியோடே கூட வடிவழகைக் காட்டி அடிமை கொண்டவன்
விரும்பாத உரிமைப்பட்ட நெஞ்சால் என்ன காரியம் உண்டு?’ என்கிறாள்.

மணி மாமை குறை இல்லா மலர் மாதர் உறை மார்பன் –
மணி மாமை குறை இல்லா மாதர்’ என்கையாலே, தன்னைப்போன்று ‘மணிமாமை குறை இலமே’ என்ன வேண்டாதவள்
என்பதனைத் தெரிவிக்கிறாள். அவள் எப்பொழுதும் அண்மையில் இருப்பதாலே என்னை அடிமை கொண்டவன்.
குற்றம் செய்யாதவர் ஒருவரும் இலர்’ என்கிறவளும் கூட இருக்கச்செய்தே என்னை விரும்பாதிருக்குமாகில்,
என் உடைமையால் எனக்குதான் பிரயோஜனம் என்?
மலரில் மணத்தையே வடிவாக வகுத்தாற்போலே இருக்கையாலே ‘மலர் மாதர்’ என்கிறாள்.
நிறமே அன்றிக்கே, பிரியத் தகாத மென்மைத்தன்மையும் உடையவள்,’ என்பாள், ‘மாதர்’ என்கிறாள்.
மாது – மிருதுத்தன்மை. உறை மார்பன் – அவள் நித்திய வாசம் செய்கிற திருமார்வையுடையவன்.
1–மலரில் பிறப்பு மாத்திரமேயாய், நித்திய வாசம் செய்வது மார்பிலேயாதலின்,
உறை மார்பன்’ என நிகழ்காலத்தாற் கூறுகிறாள்.
2– தான் பிறந்த மலர் நெருஞ்சிக் காடு ஆம்படியான மார்வு படைத்தவன் என்பதாம்;
அனிச்சமும் அன்னத்தின் தூவியும்-(தூவி சிறகு ) மாதர், அடிக்கு நெருஞ்சிப் பழம்,’ என்றானே யன்றோ?
அனிச்சப்பூ -நோக்கவே கன்னிச் சிவக்கும் -அன்னத்தின் சிறகு -மென்மையாக இருக்கும் –
இவை இரண்டுமே மாதர் அடிக்கு நெரிஞ்சிப் பழம்–என்றவாறு
3–முத்தன் இவ்வுலகவாழ்க்கையை நினையாதாப்போலே பூவை நினையாமலே வசிக்கும் மார்வு படைத்தவன்.
பிராட்டி பெருமாளைக் கைப்பிடித்த பின்பு ஸ்ரீ மிதிலையை நினைத்தாலாயிற்று,
இவள் தான் பிறந்த மலரை நினைப்பது.
4-அவள் ‘அகலகில்லேன்’ என்கிற மார்வை நான் இழப்பதே!

அணி மானம் தடவரைத் தோள் –
எல்லா ஆபரணங்களையும் அலங்கரிக்கத் தக்க திருத்தோள்கள்’ என்கிறபடியே,
சர்வ பூஷண பூஷணாய -ஆபரணத்துக்கு ஆபரணமான தோள்’ என்று நஞ்சீயர் அருளிச் செய்வர்.
நீண்டும் அழகாய்த் திரண்டும் உலக்கையை ஒத்தும்’ என்கிறபடியே, ‘நீட்சியை யுடைத்தாய்ச் சுற்றுடைத்தாய்
ஒருவரால் சலிப்பிக்க ஒண்ணாத தோள் படைத்தவன்’ என்பதாம். அணி – ஆபரணம். மானம் – அளவு; நீட்சி.
அன்றிக்கே, ‘அணி என்று அழகாய், மானம் என்று பெருமையாய், அணி பெருகிய தோள்’ என்றார் ஒரு தமிழ்ப்புலவர்.
அதனாலும், ‘ஆபரணத்துக்கு ஆபரணம்’ என்கிறபடியாய் இருக்கை.

அடல் ஆழித் தடக்கையன் –
பிராட்டியும் தானுமான சேர்த்திக்குப் பரமபதத்திலுங்கூட என் வருகிறதோ என்று ஐயங்கொண்டு எப்போதும் ஒக்க
யுத்த சந்நத்தனாய்ப் பகைவர்களைக் கொல்லும் தன்மையையுடைய திருவாழியைத் தடக்கையிலே யுடையவன்.
இவனுடைய விருத்தம் கை மேலே காணலாய் இருக்கிறபடி.

பணி மானம் பிழையாமே –
நான் உமக்கு எல்லா அடிமைகளையும் செய்வேன்,’ என்கிறபடியே,
கைங்கரியத்தில் ஓரளவும் குறையாமல். பணி – கைங்கரியம். மானம் – அளவு.

அடியேனைப் பணி கொண்ட –
இளைய பெருமாளை அடிமை கொண்டாற்போலே,
இருவருங்கூட இருந்து காணும் அடிமை கொண்டது. ‘குமரிருந்து போகாமே’ என்பார்,
அடியேனைப் பணிகொண்ட’ என்கிறார். என்றது,
இச் சரீரம் இறைவனுக்கு உரிமைப்பட்டதாக இருக்க, அவனுக்கு உறுப்பு அன்றிக்கே போகாமல்’ என்றபடி.
இங்கே அருளிச்செய்யும் வார்த்தை: உடையவர் எழுந்தருளியிருக்கிற மடத்திலே ஸ்ரீ வைஷ்ணவர்கள் அமுது செய்யா நிற்க,
ஆச்சான் தண்ணீரமுது பரிமாறுகிறவர், ஓர் அருகே சாய நின்று பரிமாறினார்; அத்தை உடையவர் கண்டு,
ஓர் அடி வந்து முதுகிலே மோதி, ‘நேரே நின்றன்றோ வுடோ பரிமாறுவது?’ என்றார்; என்ன,
பணி மானம் பிழையாமே அடியேனைப் பணிகொண்ட’ என்று பணித்தார் ஆச்சான்.

பணி கொண்ட மணி மாயன் –
நீல இரத்தினம் போன்ற கறுத்த நிறத்தையுடையவன்; என்றது,
தஹ பச – சுடு அடு’ என்று அன்று அடிமை கொண்டது;
பிடாத்தை விழி விட்டு வடிவைக் காட்டி அடிமை கொண்டான்’ என்றபடி.

கவராத மடநெஞ்சால் குறை இலமே –
வடிவில் சுவட்டை அறிவித்து என்னை அனுபவிப்பியானாகில், பணிவையுடைய நெஞ்சால் என்ன காரியம் உண்டு?
நஞ்சீயர் இவ்விடத்திலே அருளிச் செய்வது ஒரு வார்த்தை உண்டு; ‘பூசுஞ்சாந்து என் நெஞ்சமே’ என்கிறபடியே,
அன்று அப்படியே இத்தை விரும்பினவன் இன்று இப்படியே உபேக்ஷிக்கையாலே, ‘நாயகன் வரவு தாழ்த்தான்’ என்று
அவன் முன்னே சாந்தைப் பரணியோடே உடைப்பாரைப் போலே, ‘என் நெஞ்சு எனக்கு வேண்டா என்கிறாள்’ என்பது.
நெஞ்சு பரணியாகவும் அதிலுண்டான நினைவு-சாந்தாகவும் கொள்க. பரணி – சிமிழ். இவ் வாக்கியம், ரசோக்தி.
பிராட்டி அவனோடே சேர இருந்திலளாகில் நான் ஆறி இரேனோ?
தோள் அழகை எனக்குக் காட்டிற்றிலனாகில், நான் ஆறி இரேனோ?
கையும் திருவாழியுமான அழகைக் காட்டிற்றிலனாகில், ‘சம்பந்தம் இல்லாத விஷயம்’ என்று ஆறி இரேனோ?
வடிவழகால் அன்றிக் குணத்தாலே என்னை அங்கீகரித்தானாகில் நான் ஆறி இரேனோ?’ என்கிறாள்.

——————————————————————————-

மட நெஞ்சால் குறையில்லா மகள் தாய் செய்து ஒருபேய்ச்சி
விட நஞ்ச முலை சுவைத்த மிகு ஞானச் சிறு குழவி
பட நாகத்து அணைக் கிடந்த பருவரைத் தோட் பரம் புருடன்
நெடு மாயன் கவராத நிறையினால் குறை யிலமே.–4-8-3-

அவனது உபாய கார்யமான -அநிஷ்ட நிவ்ருத்தி -மேலே பிரதிபாதிப்பதாக –
முதலில் அநு கூல சத்ரு பூதனை நிரசனமாக
ஆஸ்ரித அர்த்தமாக -வந்தவன் விரும்பாத
மடநெஞ்சால் குறையில்லா மகள் தாய்செய்து ஒரு பேய்ச்சி-பூதனைக்கு விசேஷணம் -பிள்ளை பக்கல் பிராவண்யம்
பொத்தை விரல் -கண்ணி குறும் கயிறு -விட நஞ்ச முலை -தனக்கே என்று இருப்பதால்
இவனுக்கே என்று அற்று தீர்ந்தத்தால் பரம ப்ரீதி
தாய் ரூபத்தில் வந்து -அத்விதீயமான –
விட நஞ்ச முலை சுவைத்த மிகுஞானச் சிறுகுழவி-மீமிசை -பெரிய நஞ்சு -உலகில் நஞ்சு அமிர்தம் போலே இவளது –
பிராணன் விட நஞ்சை சுவைத்தான் என்றுமாம் -ஈட்டில்
பசை அற சுவைத்த -பேய்ச்சி தெரியாமல் -பித்தர் என்று பிறர் பேச நின்றான் -மிகு ஞானம் –
ரசமான பால் என்று -பிறந்த வேளை -ஸூ முஹூர்த்தம் -விஷப்பால் கூட அமிருதமாக ஆகும் நேரம் அன்றோ –
பட நாகத்து அணைக் கிடந்த பருவரைத்தோட் பரம் புருடன்-விஷத்துக்கு மருந்து -அரவணை -முறிக்க
ஸ்தாவர விஷம் -இது ஜங்கம விஷம் –
மலை போன்ற வளர்ந்த தோள்கள் -புருஷோத்தமன் –
நெடு மாயன் கவராத நிறையினால் குறையிலமே-நிறைவு அடக்கம் -ஸ்த்ரீத்வம்-காத்து இருந்து கைப்பிடிப்பது –
நிரவதிக ஆச்சர்யமான குண சேஷ்டிதன் –அடங்கி என்ன கண்டோம் –

மடப்பம் பொருந்திய நெஞ்சத்தால் குறைவில்லாத தாய்மகளாகத் தன்னைச் செய்துகொண்டு வந்த ஒரு பேயாகிய பூதனை யினது
மிக்க விஷத்தையுடைய முலையைச் சுவைத்துப் பால் குடித்த மிகுந்த ஞானத்தையுடைய சிறிய குழவியும், படத்தையுடைய பாம்பின்
படுக்கையிலே சயனித்திருக்கின்ற பெருத்த மலை போன்ற தோள்களையுடைய பரம்புருடனும், நெடுமாயனுமான சர்வேசுவரன்
விரும்பாத நிறை என்னும் குணத்தால் யாதொரு பயனுமுடையோம் அல்லோம்,’ என்றவாறு.
மனித வடிவிலே தாய் உருவத்தோடு வந்தவளாதலின், ‘மகள் தாய்’ என்கிறாள். மகள் என்பது, மக்கள் என்ற சொல்லின் சிதைவு.
விடம் நஞ்சம்’ என்பன, ஒரு பொருட்சொற்கள். ‘மிகு ஞானம்’ என்றது, ஈண்டுச் சுவை உணர்வை யுணர்த்திற்று.
குழவி – குழந்தை. பரம்புருடன் – புருடோத்தமன்.

பகைவர்களை அழிக்கும் ஆற்றலையுடையனாய், வேறுபட்ட மிக்க சிறப்பினையுடையனாய்,
முன்னர் என் பக்கல் மிக்க காதலையுடையன் ஆனவன் விரும்பாத அடக்கம் எனக்கு வேண்டா,’ என்கிறாள்.

மடம் நெஞ்சால் குறை இல்லா –
மடப்பமாவது, மென்மை; அதாவது, நெஞ்சில் நெகிழ்ச்சி. என்றது,
முலை உண்ணும் போது யசோதைப் பிராட்டிக்குப் பிறக்கும் பரிவையும் ஏறிட்டுக்கொண்டு வந்தபடி.
அக வாயில் உள்ளது பகைமையாய் இருக்கச் செய்தே, அத்தை மறைத்துக் கொண்டு,
அன்பு தோற்ற வந்தவள்’ என்பதனைத் தெரிவித்தபடி.

மகள் தாய் செய்து –
தாய் மகள் செய்து; என்றது, ‘பேயான தான் மனித வேடத்தைக் கொண்டு, அது தன்னிலும்
பெற்ற தாய் போல்’ –பெரிய திருமொழி, 1. 3 : 1.-என்கிறபடியே, தாய் வடிவைக் கொண்டு வந்தவள்’ என்றபடி.
மகள் என்பது மனிதர்கட்குப் பெயர். மகள் – மக்கள். ஒரு பேய்ச்சி – இஃது என்ன வஞ்சனை தான்!
வஞ்சனைக்கு ஒப்பற்றவள்’ என்றபடி.
அன்றிக்கே, ‘நலிய வந்தாள்’ என்னும் கோபத்தாலே விருப்பம் இல்லாத வார்த்தையாகவுமாம்.

விடம் நஞ்சம் –
விஷம் என்றும், நஞ்சம் என்றும் மீமிசைச் சொல்லாய், ‘நாட்டில் விஷங்கள் எல்லாம் அமிருதம் என்று
சொல்லக் கூடியதான விஷம்’ என்னுதல்.
அன்றிக்கே, பேய்ச்சிவிட – பேயானவள் உயிரை விடும்படி,

நஞ்சம் முலை சுவைத்த –
நஞ்சு முலையை அமுது செய்த’ என்னுதல். என்றது,
அம்முலை வழியே உயிரை வற்ற வாங்கி உண்ட வாயான்’ என்கிறபடியே,
பாலும் உயிரும் ஒக்க வற்றி வரும்படி சுவைத்தமையைத் தெரிவித்தபடி.
உயிரோடு குடித்தான்’ என்னக் கடவதன்றோ?

மிகு ஞானச் சிறு குழவி –
இளமைத் தன்மையில் கண்ணழி வற்று இருக்கச் செய்தேயும், சுவை உணர்வாலே,
இது தாய் முலை அன்று; வேற்று முலை,’ என்று அமுது செய்தான்
அன்றிக்கே, ‘அவள் தாயாய் வந்தாலும், இவன் ‘தாய்’ என்றே முலை உண்டாலும், பொருளின் தன்மையாலே
வருமது தப்பாதே அன்றோ? அத்தாலே தப்பிற்றித்தனை,’ என்னுதல்.

படம் நாகத்து அணைக் கிடந்த –
உணவுக்குத் தகுதியாகக் காணும் கிடந்த படியும். நஞ்சை உண்டு நஞ்சு அரவிலே அன்றோ கிடக்கிறது?
நஞ்சுக்கு நஞ்சு மாற்றே அன்றோ? விரோதியை அழியச் செய்து படுக்கையிலே சாய்ந்தபடி.
அன்றிக்கே, ‘திருவனந்தாழ்வானாகிற கட்டிலை விட்டு விட்டு’ என்கிறபடியே,
படுக்கையை விட்டுப் போந்து விரோதியைப் போக்கினபடி’ என்னுதல்.
அடியார்களுடைய கூக்குரல் கேட்டால் போகத்திலே நெஞ்சு பொருந்தாதே அன்றோ?
சர்வேசுவரன் திருமேனியிலே சாய்கையால் உண்டான சந்தோஷத்தாலே விரிந்த
படங்களையுடையவனாதலின், ‘பட நாகம்’ என்கிறது.
அசுரர்களுடைய கூட்டம் கிட்டினால் ‘
வாய்ந்த மதுகைடபரும் வயிறு உருகி மாண்டார்’-மூன்றாம் திருவந்தாதி என்று -முடியுமாறு போலே ஆயிற்று,
அன்புள்ளவர்கள் கூட்டம் கிட்டினால் வாழும்படி.
ராமஸ்ய தஷிணோ பாஹூ-பிராதி கூல்யர் கிட்டினால் மாய்வார் –
இவன் மூச்சுக் கூற்றால் -போனாலும்

பரு வரைத் தோள் –
திருவனந்தாழ்வானுடைய சம்பந்தத்தால், ஒரே தன்மையதான விக்கிரஹத்துக்குப் பிறக்கும் வேறுபாட்டைச் சொல்லுகிறது.
கர்மங்காரணமாக வருகின்ற வேறுபாடுகள் இல்லை’ என்ற இத்தனை போக்கி, அடியார்களுடைய சேர்க்கையில்
வேறுபாடு இல்லை எனில், அவ்வஸ்துவை அணைய ஆசைப்பட வேண்டாவே?

பரம் புருடன் –
தகட்டில் அழுத்தின மாணிக்கம் நிறம் பெறுமாறு போன்று, திருவனந்தாழ்வான் மேலே சாய்ந்த பின்பாயிற்று
அறப்பெரியன்’ என்று தோன்றிற்று.

நெடு மாயன் –
என் மடியில் சுவடு அறிந்த பின்பு படுக்கையில் பொருந்தி அறியாதவன்.
மிக்க வியாமோகத்தையுடையவன்-மடி – வயிறு. சுவடு – இனிமை. –
கண்ணன் என் ஒக்கலையானே’ –திருவாய். 1. 9 : 4

கவராத நிறையினால் குறை இலமே –
அப்படி ஆதரித்தவன் இப்படி உபேக்ஷித்த பின்னர், எனக்கு என்னுடைய பெண்மையால் என்ன காரியம் உண்டு?
நிறை அடக்கம்’ என்றது, ‘தன்னகவாயில் ஓடுகிறது பிறர்க்குத் தெரியாதபடி இருக்கும் பெண் தன்மை.’

——————————————————————-

நிறையினால் குறைவில்லா நெடும் பணைத் தோள் மடப்பின்னை
பொறையினால் முலை யணைவான் பொரு விடை ஏழு அடர்த்த உகந்த
கறையினார் துவர் உடுக்கைக் கடையாவின் கழி கோல் கை
சறையினார் கவராத தளிர் நிறத்தால் குறைவிலமே –4-8-4-

அபிமதையான நப்பின்னை பிராட்டிக்காக –அவனால் விரும்பாத -நிறத்தினால் என்ன பயன் –
நிறையினால் குறைவில்லா நெடும் பணைத் தோள் மடப்பின்னை -ஸ்த்ரீத்வத்தால் குறை இல்லையே
ஏழு ரிஷபம் நிரசனம் வரை காத்து இருந்தாள்-இதுவே ஸ்த்ரீத்வ பூர்த்தி
பொறையினால் முலை யணைவான் பொரு விடை ஏழு அடர்த்த உகந்த -வியசனம் -பொறுத்து –
இவளை அணைக்க -ஜாத் உசித வ்ருத்தி செய்து –
கறையினார் துவர் உடுக்கைக் கடையாவின் கழி கோல் கை -ஏற்ற வஸ்த்ரம் -பழம் பறித்து உண்ட கரை -நாகப் பழம் –
நாட்டில் பழம் உண்டார் துடைப்பது இவன் வஸ்த்ரத்தில்-வீசும் கோல்
சறையினார் கவராத தளிர் நிறத்தால் குறைவிலமே -வர்ணத்தால் -மணி மாமை -முன்னால்–
அரைச் சலங்கை சப்தம் -கேட்டே ஆ நிரைகள்-வருமாம்
சறை -உடம்பை பேணாதவன் –

தன்னைப் பேணாதே -பெண் பிறந்தாரைப் பேணும் -விரும்பாத நிறம் வேண்டாம் –

நிறையினால் குறைவில்லா நெடும் பணைத் தோள் மடப்பின்னை
கிருஷ்ணன் தன்னை பெற செய்யும் வியாபாரங்களில் இதில் தான் அவிவிருதியையாய் -ஸ்த்ரீத்வம்
கீழ் ஆத்ம குணம் –
நெடும் பணை -ரூப குணம்
நீண்ட வேய் போன்ற தோள்கள் –
அரியன செய்தும் பெற வேண்டிய வடிவு அழகு

பொறையினால் முலை யணைவான் பொரு விடை ஏழு அடர்த்த உகந்த
வியசன சஹன் –
முலையால் பிறந்த விமர்த்தமாக -நினைத்து இருந்தானே
பொரு விடை-
உத்த உன்முகமாய் அசுரா வேசமாய் –
ஏழு அடர்த்த உகந்த
ஓன்று இரண்டு அல்ல
ஒரு காலே ஊட்டியாக -இவளை லபித்தோம் என்று உகந்தான்
நப்பின்னை பிராட்டியை விடை கொண்டு வந்து காணும் கைப் பிடித்தது

கறையினார் துவர் உடுக்கைக் கடையாவின் கழி கோல் கை
கறை மிக்கு தோலால் செய்யப்பட உடுக்கை
இடையர் காட்டுக்கு போகும் பொழுது முள்ளால் கிளிக்க முடியாத வஸ்த்ரம்
அரையில் பீதக வண்ண வாடை வேண்டாதவள் ஆயிற்று
கோ ரஷணம் பண்ணிய வடிவை அனைய ஆசைப்படுபவள்
கடையாவும் கழி கோலும் -கையும் உழவு கோலும் -கோபால வேஷம் -சாரத்திய வேஷம்
கையிலே பிடித்த சிறு வாய் கயிறும் -கொல்லா மாக்கோல்-
சேனா தூளி தூசரிதமான திருக் குழல் -தேருக்கு கீழே நாட்டின திருவடிகள்
சாரத்ய வேஷம் / கோபால வேஷம் -நாயனார் திருப்பாவை வியாக்யானம் -பிள்ளை லோகாச்சார்யார்
கீதை சாதித்த பின்பு -38-வருஷம் பின்பு தன்னுடைச் சோதி எழுந்து அருளினான் கண்ணன் காந்தாரி சாபம்
பிராமணிகள் கையில் வெண்ணெய் விரும்பாதது போலே
கற்று தூளியால் தூ சரிதமான திருக் குழல் இங்கு –
கடையா -மூங்கில் குழாய்
கடையா-கொடுமையான பசு என்றுமாம் -நியமித்து கறக்க வீசு கோல் என்றுமாம்
முன் ஈன்ற கன்றுக்கு முகத்தில் கட்டி விடுவார்
புல்லும் நீரும் இருக்கும் இடத்தே
மாத்ரை தொடக்கமான -பிஷி பெற சந்நியாசி-கையில் கொண்டு திரிவது போலே இவன்

சறையினார் கவராத தளிர் நிறத்தால் குறைவிலமே
சறை -கை மணி
இடையர் -இடுப்பில் கட்டும் மணி -இந்த தொனி-விட மணி -உடை மணி ஓசை பரங்க-
தந்தை காலில் -வியசனப் பாசுரம் எட்டாம் பத்து கலியன் —காளை மாட்டில் கழுத்தில் மணி
ரிஷப கதி -ஆயிரம் கால் -மண்டபம் புறப்பாடு வரும் பொழுது இந்த மணி ஓசை வருமாம்
தாழ்ந்த இடைக்குலம் -சறை-தாழ்வாய் -சறாம்புகை-அல்லாத இடையர் அயனத்தில் உடம்பு இருக்க தலை குளித்தல்
அதுக்கும் அல்லாத -அவகாசம் இல்லாத இவன் என்றவாறு –
ரஷ்ய வர்க்கத்துக்கு ரஷிக்க தன்னையும் பேணாமல் ரஷிப்பான்-என்றவாறு
அந்த வடிவை அணைக்க வாயிற்று இவர் ஆசைப்படுவது
தீஷிதம் வ்ரத சம்பன்னம் -வராஜின –பஸ்யந்தி –பார்த்து ஆசைப்பட்ட -சீதை
அவன் விரும்பாத இதனால் என்ன கார்யம் -நிறம் இருந்தாள்
பிரதி கூலம் -சீதை -அலங்கரித்து வந்ததை பெருமாள் -மேல் விழுந்த வானர முதலிகளை ஹனுமான் தள்ள -வந்த கோபம் –
பல்லக்கை கீழே இறக்கச் சொல்லி சீறி -தளிர் நிறத்துடன் வர -இவன் விரும்பாத
கண் வலிக்காரனுக்கு விளக்கைப் பார்த்தால் போலே -இப்பொழுதும் தப்பை தனது பேரில் கொண்டார் பெருமாள் –
உபேஷா விஷயமான நிறத்தால் நமக்கு ஏன் செய்ய
இவளைப் போலே நிறத்தில் சொன்னவள் இல்லை -பூஷணம் வேண்டாம் -என்றாள் நிறத்தை சொல்ல வில்லையே –
மணி மாமை -முதல் -இங்கு தளிர் நிறத்தால் -வாசி
அழகையும் மென்மையையும் –இங்கு நிறத்தை
அங்கு நிறத்தை சொல்லி -ச்நிக்தம் மிக அழகு -சோகம் அதிகம் இங்கே –
புள்ளும் சிலம்பின காண் -இரண்டு தடவை -விடிந்தமைக்கு அடையாளம் –
அது கூட்டில் இருந்த நாதம் -இது இறை தேடும் பொழுது நாதம் போலே
ஆசார்ய பிரதானம் -இஷ்வாகு குலம் என்பதால் -அவ்வடிவை விரும்பினாள்
இங்கு இடையர்
தீஷிதம் வரதம் சம்பன்னம்
யஜமானன் தீஷை -வெண்ணெய் பூசி -அந்த உடம்பை
பட்டினி -வசிஷ்டர் ஓன்று விடச் சொன்னால் பெருமாள் நான்கு நாள் விடுவார் –
அது தான் வ்ரத சம்பன்னம் -தர்ம ஸ்ரத்தையால்
வரா அர்ஜிததனம் -பட்டுப் பீதாம்பரம் தவிர்ந்து
ஸூ சிம் -ஸ்திரீயையும் தீண்டாமல் பாவனம் -தர்ம பத்னி -தீண்டினால் சேதம் இல்லை
இருந்தும் -அதி சங்கை பண்ணி -ஆச்சார்யத்தில் விருப்பம் கொண்டு
பரிவட்டம் தம் மேல் பட்டது போலே காற்று வீசினால் சரயு நதியில் நூறு தடவை நீராடுவார்
இங்கே நேர் மாற்றி கண்ணன்
ஏவ வஸ்த்ரம் -கலைக் கொம்பு கையும் –
பஸ்யந்தி -மேல் வரும் பலத்தை அபேஷிக்கவே-நடுவில் ஆநு ஷங்கிகமாக வரும் –
பகவத் பஜனம் -த்ருஷ்டத்துக்கு பஜிக்கிறாள் -தர்சனத்துக்கு -சதா பஸ்யந்தி அங்கும் –
கண் எச்சில் வழிப் போக்கில் வாராமல் இருக்க மங்களா சாசனம் –
சாவித்திரி -பர்த்தாவை உயிர் உடன் விட -அநேகம் பிள்ளைகள் வேண்டும் என்று கேட்டால் போலே –

———————————————————————–

தளிர் நிறத்தால் குறையில்லாத் தனிச் சிறையில் விளப்புற்ற
கிளி மொழியாள் காரணமாக் கிளர் அரக்கன் நகர் எரித்த
களி மலர்த் துழாய் அலங்கல் கமழ் முடியன் கடல் ஞாலத்து
அளி மிக்கான் கவராத அறிவினால் குறையிலமே.–4-8-5-

ஸ்ரீ ஜனக ராஜன் திரு மகளுக்காக -அசஹ்ய அபராதி -ராவணனை -அளித்த -சக்கரவர்த்தி திருமகன்
விரும்பாத அறிவால் என்ன பலன்
தளிர் நிறத்தால் குறையில்லாத் தனிச் சிறையில் விளப்புற்ற
சூரியன் பிரபை பிரித்தது போலே
வழிய சிறை புகுந்து தேவ ஸ்திரீகள் சிறை வெட்ட
மதுரா மதுரா லாபா
களி மலர்த் துழாய் அலங்கல் கமழ் முடியன் கடல் ஞாலத்து
பரிமளம் -பூமியிலே
அளி மிக்கான் கவராத அறிவினால் குறையிலமே-உபகரிக்கும் தண்ணளி -விரும்பாத அறிவினால் என்ன லாபம்

தளிர் போன்ற நிறத்தாலே குறைபாடு இல்லாத, தனித்த சிறையிலே பிரசித்தமாக இருந்த கிளி போன்ற சொற்களையுடைய
பிராட்டி காரணமாக, கிளர்ச்சியையுடைய இராவணனது நகரமாகிய இலங்கையை எரித்த, தேன் பொருந்திய மலர்களையுடைய
திருத்துழாய் மாலையானது வாசனை வீசுகின்ற திருமுடியையுடையவனும், கடலாற்சூழப்பட்ட இவ்வுலக மக்களிடத்தே திருவருள்
மிகுந்தவனுமான சர்வேசுவரன் விரும்பாத அறிவினால் ஒரு பயனையும் உடையோம் அல்லோம்,’ என்கிறாள்.
‘குறை இல்லாத கிளிமொழியாள்’ என்றும், ‘விளப்புற்ற கிளிமொழியாள்’ என்றும், தனித்தனியே கூட்டுக. ‘காரணமாக நகர் எரித்த முடியன்’ என்க.

‘பரம காதலனாய் எல்லாரையும் காக்கின்றவனான சக்கரவர்த்தி திருமகன் விரும்பாத
அறிவினால் என்ன பிரயோஜனம் உண்டு எனக்கு?’ என்கிறாள்.

தளிர் நிறத்தால் குறை இல்லா –
‘தன் திருமேனியின் ஒளியால் எல்லாத் திக்குகளையும் இருள் இல்லாதபடி செய்கிறவள்’ என்கிறபடியே,
பிராட்டி பத்து மாதங்கள் திரு மஞ்சனம் பண்ணாமையாலே திருமேனியில் புகர் மங்கியிருக்கும்படி,
பத்துத் திக்குகளிலும் உண்டான இருளைப் போக்குமளவாயிற்று;
வருத்தம் இருள் இவைகளைப் போக்க வல்ல பிள்ளை என்று பேர் பெற்ற ஒளி’ என்பது இரகு வமிசம்.
தனிச்சிறையில் –
ஒளியையும் ஒளியை உடைய பொருளையும் (சூரியனையும்) பிரித்து வைத்தாற் போலே இருப்பது ஒன்றே அன்றோ
அரக்கியர் நடுவில் தடைபட்டவளாய் இருந்தபடி?
விளப்புற்ற –
கண்ணீரால் நிறைந்த முகமுடையவளும், இரங்குவதற்குரியவளும், ஆகாரம் இன்மையால் இளைத்திருப்பவளும்’ என்கிறபடியே,
தன்னைப் பேணாதே இருந்தாள்’ என்று திருவடியாலே பெருமாளுக்கு விண்ணப்பம் செய்யப்பட்டவள் என்னுதல்;
அன்றிக்கே, ‘தெய்வப் பெண்கள் கால்களில் விலங்கை வெட்டி விடுகைக்காகத் தன்னைப் பேணாதே
அங்கே புக்குத் தன் காலிலே விலங்கைக் கோத்துக் கொண்டவள்,’ என்று நாட்டிலே பிரசித்தையானவள் என்னுதல்.

கிளி மொழியாள் காரணமா –
திருவடி வாயிலே ஒன்று தங்கிய அவள் வார்த்தையைக் கேட்டு, அவ்வழியாலே
இனியவளும் இனிய வார்த்தையையுடையவளும்’ என்றாரே அன்றோ? அதனை நினைத்துக் ‘கிளிமொழியாள்’ என்கிறது.
அப்படிப்பட்ட வார்த்தையையுடையவள் காரணமாக’ என்றபடி.
மதுரா மதுரா லாபா -தனிச் சிறையில் விளிப்புற்ற கிளி மொழியாள்-சேர்ந்தே சொல்லப்படும் ஸ்ரீ ஸூக்திகள்

கிளர் அரக்கன் –
கொழுத்தவனான இராவணனுடைய’ என்கிறபடியே, தாயும் தமப்பனும் சேர இருக்கப் பொறாதபடியான
கிளர்த்தியையுடைய இராவணன்.

நகர் எரித்த –
இராவணனுடைய எல்லா வற்றாலும் நிறைவுற்றிருந்த நகரத்தை எரித்துச் சாம்பல் ஆக்கின. என்றது,
பையல் குடியிருப்பை அழித்து மூலையடியே வழி நடத்தின’ என்றபடி.

களி மலர்த்துழாய் அலங்கல் கமழ் முடியன் –
தேனை யுடைத்தான மலரோடு கூடின திருத்துழாய் மாலை கமழா நின்றுள்ள திருமுடியையுடையவனை.
அவன் தான் மக்கட் பிறவியை மேற்கொண்டு அவதரித்தால், பிரகிருதி சம்பந்தம் இல்லாத பொருள்களும்
அதற்குத் தகுதியான வடிவைக் கொண்டு வந்து தோன்றுவன இத்தனையே யன்றோ?
ஆகையாலே, அவன் கலம்பகன் கொண்டு வளையம் வைத்தாலும் இவர்கள் எடுத்துச் சொல்லுவது திருத் துழாயை இட்டேயாம்.
தனக்கேயுரிய சிறப்புப் பொருள்களைக் கொண்டே அன்றோ கவி பாடுவது?
துரும்பால் கிளறிய சக்கரக் கையன்
பாண்டியர்கள் மற்றையார் கருமுகை மாலையைக் கொண்டு வளையம் வைத்தாலும்,
அவர்களுக்கே உரியதான வேம்பு முதலானவற்றை யிட்டேயன்றோ கவி பாடுவது?

கடல் ஞாலத்து அளி மிக்கான் –
சமுசாரத்தில் தண்ணளி மிக்கவன் ஆயிற்று. மக்கள் படுகிற துன்பத்தை நினைத்து, ‘இதைப் போக்க வேண்டும்’ என்று
திருவுள்ளம் இங்கே வேரூன்றினபடி. என்றது, பிராட்டியைப் பிரிப்பது, இளையபெருமாளை அகற்றுவதாய்,
பின்னர், ‘அவதாரத்துக்குக் காலமாயிற்று’ என்று தேவ காரியத்திலே ஒருப்படுவித்துக் கிளப்ப
வேண்டும்படி யன்றோ இங்கே வேரூன்றினபடி?’ என்றவாறு.

கவராத அறிவினால் குறை இலம் –
அப்படிப்பட்டவன் விரும்பாத அறிவினால் காரியம் உடையோம் அல்லோம்.
பிராட்டியுடைய இரண்டாம் பிரிவிற்கு அடியான வனவாச ஞானம் போலே இருக்கிற இந்த அறிவால் என்ன பிரயோஜனம் உண்டு?
பிரிவோடே சேரும்படியாய் அன்றோ அது இருப்பது?

—————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading