பகவத் விஷயம் காலஷேபம்- 101- திருவாய்மொழி – -4-8-6….4-8-11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

அறிவினால் குறையில்லா அகல் ஞாலத்தவர் அறிய,
நெறி எல்லாம் எடுத்து உரைத்த நிறை ஞானத்து ஒரு மூர்த்தி,
குறிய மாண் உருவாகி, கொடுங் கோளால் நிலங்கொண்ட
கிறி அம்மான் கவராத கிளர் ஒளியால் குறையிலமே.–4-8-6-

உபதேசத்தாலும் -அர்த்தித்வத்தாலும் -என்னை தனக்கே யாக கொள்ளும் -அவன் விரும்பாத ஒளியால் என்ன கார்யம்
அறிவினால் குறையில்லா அகல் ஞாலத்தவர் அறிய,-குறை இருந்து –இல்லை என்ற குறையும் இன்றிக்கே இருக்கும் –
வைராக்கியம் இதில் -அபேஷை இல்லாமல் -அறிவைப் பயன் படுத்துவதும் கொஞ்சமே
நெறி எல்லாம் எடுத்து உரைத்த நிறை ஞானத்து ஒரு மூர்த்தி,-படைகளுக்கு நடுவே கர்ம யோகம் -பிரபத்தி பர்யந்தமாக
தானே அருளிச் செய்த -சர்வஜ்ஞ்ஞன் –
குறிய மாண் உருவாகி, கொடுங் கோளால் நிலங்கொண்ட-மகா மேருவை மஞ்சாடி ஆக்கி -அழகைக் காட்டி –
சிற்றடிக் காட்டி இசைவித்து -பூமியை தனதாக்கிக் கொண்ட
கிறி அம்மான் கவராத கிளர் ஒளியால் குறையிலமே.-லாவண்யம் -சமுதாய சோபை
உபாயம் -சர்வேஸ்வரன் விரும்பாத -இத்தால் என்ன பயன்

‘அறிவு ஒன்றில் மாத்திரம் குறைபாடு இருப்பதை அறியாத அகன்ற உலகிலேயுள்ள மக்கள் அறியும்படியாக உபாயங்கள்
எல்லாவற்றையும் எடுத்துக் கூறிய நிறை ஞானத்து ஒரு மூர்த்தியும், சிறிய பிரமசரிய வடிவங்கொண்டு கொடிய செயலாலே
உலகத்தை அளந்துகொண்ட விரகையுடைய தலைவனுமான சர்வேசுவரன் விரும்பாத மிக்க ஒளியால் யாதொரு பயனையும் உடையேம் அல்லோம்,’ என்கிறாள்.
‘மூர்த்தியாகிய அம்மான், ஆகிக் கொண்ட அம்மான்’ என்க. கிறி – விரகு; உபாயம்.

‘அறிவில்லாதார்க்குத் தன்னை அடைவதற்குரிய உபாயங்களை உபதேசித்து, அறிவு பிறத்தற்குத் தகுதியில்லாதாரை
வடிவழகாலே தனக்கு ஆக்கிக் கொள்ளுமவன் விரும்பாத மிக்க ஒளியால் என்ன காரியம் உண்டு?’ என்கிறாள்.

அறிவினால் குறை இல்லா –
அறிவினால் குறைவுபட அறியாத. அறிவு ஒன்றிலும் ஆயிற்றுக் குறைவுபட அறியாதது. என்றது,
‘நாட்டார் அன்னம் பானம் முதலிய எல்லாவற்றாலும் காரியமுடையராய் இருப்பார்களே அன்றோ?
அறிவால் காரியம் இன்றிக்கே இருப்பார் ஆயிற்று,’ என்றபடி.
அகல் ஞாலத்தவர் அறிய –
பரப்பையுடைத்தான பூமியில் அறிவில் குறைவுபட அறிவார் ஒருவரும் இலர் ஆயிற்று;
ஆதலால், கல்லைத் துளைத்து நீரை நிறுத்தினாற்போலே இவர்கள் நெஞ்சிலே படும்படி செய்தானாதலின்,
‘அறிவினால் குறை இல்லா அகல் ஞாலத்தவர் அறிய’ என்கிறது.
நெறி எல்லாம் எடுத்து உரைத்த –
கர்மயோகம் முதலாகப் பிரபத்தி யோகம் முடிவாக எல்லா உபாயங்களையும் விளக்கமாக உபதேசித்தபடி.
ஆத்துமாக்களினுடைய பேதங்களைப் போலே போருமே அன்றோ உபாயங்களினுடைய பேதங்களும்?
ஆதலின், ‘நெறி எல்லாம்’ என்கிறது. என்றது, ‘கர்ம ஞான பத்திகள், அவதார ரஹஸ்ய ஞானம், புருஷோத்தமவித்தியை,
ஆத்துமாவினுடைய உண்மைத்தன்மை, விரோதிகள் போவதற்குப் பிரபத்தி, கைவல்யத்தை அடைவதற்குப் பிரபத்தி,
பகவானை அடைதற்குப் பிரபத்தி இவை அடங்க விளக்கமாக அருளிச்செய்தவன்,’ என்றபடி.

கர்மயோகத்தை உபதேசிக்க, அவன் ‘இந்திரியங்களை அடக்குதல் அரிது,’ என்ன, ‘ஆகில், என் பக்கலிலே நெஞ்சை வை’ என்று
கர்மத்தை அநுஷ்டித்தாரைச் சொல்லி, அங்ஙனம் சொல்லு முகத்தாலே அவதார ரஹஸ்யத்தை உபதேசித்து,
பின்னர் ஞானயோகத்தை உபதேசித்து, ‘ஞானத்தின் தெளிவிற்கு உறுப்பாக என் பக்கலிலே நெஞ்சை வை’ என்று பின்பு
பத்தியோகத்தை உபதேசித்து, அங்கு ‘விரோதியாகிய பாபங்கள் அழிவதற்கும் பத்தி அதிகரிப்பதற்குமாக என் பக்கலிலே நெஞ்சை வை’ என்று,
பின்னர், ‘எந்த இறைவனிடத்திலிருந்து சமுசாரத்தின் சம்பந்தமானது நீண்ட காலமாகப் பரவி இருக்கிறதோ,
அந்தச் சர்வேசுவரனையே அடைக்கலமாக அடைவாய்,’ என்றும், ‘சத்யசங்கல்பம் முதலான குணங்களோடு கூடின என்னையே
எவர்கள் சரணம் அடைகின்றார்களோ,’ என்றும் அவற்றுக்கு உறுப்பாகப் பிரபத்தியை விதித்து, அவ்வழியாலே சொரூப ஞானத்தைப் பிறப்பித்து,
‘என்னுடைய இந்த மாயைதானே மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், மனம், புத்தி, அகங்காரம் என்னும்
இந்த எட்டு வகையாகப் பிரிந்திருக்கிறது,’ என்று தொடங்கி, ‘ஜீவசொரூபமானதும் எனக்கு வயப்பட்டது ஆனதுமான
பிரகிருதியைச் சிரேஷ்டம் என்று அறி,’ என்கிறபடியே, அறிவுடைப்பொருள்களும் அறிவில் பொருள்களும் தனக்குச் சரீரம் என்று கூறி,
அவ்வழியாலே ஒருவன் தன் பேற்றுக்கு உபாயமாக ஒன்றனைச் செய்வதற்குத் தனக்குத் தகுதியின்றிக்கே இருக்கிறபடியைக் காட்டி,
‘இவைதாம் செய்து தலைக்கட்டப்போகாது,’ என்று சொல்லும்படி இதன் அருமையை அவன் நெஞ்சிற்படுத்தி,
அவன்தான் அறிந்து கேட்டவற்றிற்குப் பரிஹாரம் சொல்லி, அவன் அறியாதே கேட்க மாட்டாதவற்றையும்
தானே அறிவித்து, பிரபத்தி மார்க்கம் முடிவாக உபதேசித்தபடியைச் சொல்லுகிறது.

‘ஒருவன் சொன்னான்’ என்ற அளவில் அது பிரமாணமாமோ? நம்பத் தக்கதாக வேண்டாவோ?’ என்னில், அதற்கு விடை அருளிச்செய்கிறார் மேல் :
நிறை ஞானத்து ஒருமூர்த்தி –
நிறைந்த ஞானத்தை உடைத்தான ஒப்பற்றதான சொரூபத்தையுடையவன். என்றது,
‘இத்தலையில் அறிவு இன்மையால் இவனுக்கு அழிவு வாராதபடியான ஞானபூர்த்தியையுடையவன்’ என்பதனைத் தெரிவித்தபடி.
பிரமாணமாய் எல்லார்க்கும் ஞானத்தைப் பண்ணிக் கொடுப்பதான வேதத்தினுடைய என்றும் உளதாம் தன்மையும்,
புருஷனால் செய்யப்படாத தன்மையும் தன் அதீனமாம்படி அவற்றை நினைத்துச் சொல்லுமவனாய் உள்ளவன்.
வேதார்த்தத்தை விரித்து அருளிச்செய்தவன்.
குறிய –
கோடியைக் காணியாக்கிக்கொண்டாற்போலே, வளர்ந்த போதையிற் காட்டிலும் கவர்ச்சிகரமாய் இருக்கிறபடி.
மாண் உருவாகி –
பிறந்த போதே இரப்பினை மேற்கொண்டு, அதுவே பயிற்சியாய் இருந்தபடியாலே, ‘பிறப்பதற்கு முன்பெல்லாம்
இதுவேயோ செயல்?’ என்னும்படிக்குத் தகுதியாக ஆயிற்று, ‘உண்டு’ என்று இட்ட போதோடு ‘இல்லை’ என்று சொல்லிக் கதவு
அடைத்த போதோடு வாசி அற முகமலர்ந்து போகும்படிக்குத் தகுதியாக ஆயிற்று இரப்பிலே தழும்பு ஏறினபடி.
ஆக, ‘அறிவிக்கக் கேளாதாரை வடுக விடுநகம் இட்டு வடிவழகாலே தனக்கு ஆக்கிக்கொள்ளுமவன்’ என்பதனைத் தெரிவித்தபடி.

கொடுங்கோளால் –
வெட்டிய கோளாலே; என்றது, வடிவழகைக் காட்டி அவனை வாய் மாளப் பண்ணினபடியைத் தெரிவித்தபடி.
அன்றிக்கே, ‘கொடு’ என்றதனைக் ‘கோடு’ என்றதனுடைய குறுக்கல் விகாரமாகக் கொண்டு,
‘கோடு’ என்பதற்கு விலங்குதல் என்று பொருள் கூறி, ‘விலங்குதலாவது, செவ்வைக்கேடு’ என்று கொண்டு,
‘செவ்வைக் கேடாவது, மூன்று அடி கேட்டு இரண்டு அடிகளாலே அளப்பது; சிறு காலைக் காட்டிப் பெரிய காலாலே அளப்பது;
ஆக, இப்படிகளாலே அவனை வஞ்சித்தபடியைச் சொல்லுகிறது என்னுதல். என்றது,
தீய உபாயத்தைப் பிரயோகம் செய்தவர்களுக்கு அதற்குத் தகுதியாக உத்தரம் சொல்லுவாரைப் போலே,
அவன் செவ்வைக்கேட்டிற்குத் தகுதியாகத் தானும் செவ்வைக் கேடனாய்க்கொண்டமையைத் தெரிவித்தபடி.
கிறி அம்மான் –
அவன் தரும் விரகு அறிந்து வாங்க வல்ல பெருவிரகனான சர்வேசுவரன்.
‘பெருங்கிறியான்’ –திருவிருத்தம், 91.-என்னக் கடவதன்றோ?
கவராத கிளர் ஒளியால் குறை இலமே –
செவ்வை கெடவாகிலும் தன்னுடைமையைத் தனக்கு ஆக்கிக் கொள்ளுமவன், முன்னரே இசைந்து தன்னைப் பெறவேண்டும்
என்றிருக்கிற எனக்கு வந்து முகங்காட்டித் தனக்கு ஆக்கிக்கொள்ளாத பின்பு எனக்கு இத்தால் காரியம் உண்டோ?
கிளர்ஒளி – மிக்க ஒளி; என்றது, சமுதாய சோபை.

————————————————————————————

கிளர் ஒளியால் குறைவில்லா அரி உருவாய்க் கிளர்ந்து எழுந்து,
கிளர் ஒளிய இரணியனது அகல்மார்பம் கிழித்து உகந்த,
வளர் ஒளிய கனல் ஆழி வலம் புரியன், மணி நீல
வளர் ஒளியான் கவராத வரிவளையால் குறையிலமே.–4-8-7-

உத்துங்க விரோதியான ஹிரண்யன் -வரத்தில் -பெற்ற பழம் -ஸ்ரீ நரசிம்ஹன் விரும்பாத வளை களால் என்ன பலன்
கிளர் ஒளியால் குறைவில்லா அரி உருவாய்க் கிளர்ந்து எழுந்து,-ஆஸ்ரித அர்த்தமாக வடிவு அழகை-
நீல மணி போன்ற அழகை மாற்றிக் கொண்டு ஜ்வலந்தம் -வளர்ந்து வரும் ஒளி
பரிபூரணம் -சிம்ஹ உருவாய் கொண்டு
கிளர் ஒளிய இரணியனது அகல்மார்பம் கிழித்து உகந்த,-சத்ரு நிரசனத்தால் உத்யோகித்து ஆவிர்பவித்து
அனாயாசேன கிழித்து
ஆஸ்ரித விரோதி போக்கியதால் உகந்து -இறை பெறாத பாம்பு போலே சீறுகையால்
வளர் ஒளிய கனல் ஆழி வலம் புரியன், மணி நீல-வளர்ந்து ஒளி -ஆழி சங்கு
வளர் ஒளியான் கவராத வரிவளையால் குறையிலமே.–வரியை உடைய அழகிய வளை களால் என்ன பிரயோஜனம்
தன் கையில் வளை குலுக்கும் -கிருஷ்ணன் சத்ருச பார்யை -தானா -என்று ஆண்டாள் பார்த்துக் கொண்டாள் -அன்றோ

‘கிளர்ந்த ஒளியாலே குறைபாடு இல்லாத நரசிங்க உருவமாய்க் கிளர்ந்து எழுந்து, கிளர்ந்த ஒளியையுடைய இரணியனுடைய
அகன்ற மார்பினைக் கிழித்து மகிழ்ந்த, வளர்கின்ற ஒளியையுடைய பிரகாசம் பொருந்திய சக்கரத்தையும் பாஞ்சஜன்யம் என்னும்
சங்கினையும் நீலமணி போன்று வளர்கின்ற ஒளியினையுமுடைய சர்வேசுவரன் விரும்பாத வரிகளையுடைய
வளையல்களால் ஒரு பிரயோஜனத்தையுமுடையோம் அல்லோம்,’ என்கிறாள்.
கிளர்தல் – மிக்குப்பொலிதல். ‘எழுந்து கிழித்து உகந்த ஒளியான்,’ என்க. அரி – சிங்கம். வரி – அழகு; கீற்றுமாம்.

‘பெற்ற தமப்பன் பகையாக, பாலன் ஆனவனுக்கு உதவினவன், தன்னால் உதவப் பெறாமல் நோவு படுகிற எனக்கு
உதவானாகில், நான் ஆபரணம் பூண்டு அலங்கரித்திருக்கின்ற இவ்வலங்காரம் யார்க்கு?’ என்கிறாள்.

கிளர் ஒளியால் குறை இல்லா அரி உருவாய் –
கிளர்ந்த ஒளியால் குறைவின்றிக்கே இருக்கின்ற நரசிம்ஹமாய்.
‘ஜ்வலந்தம் -பிரகாசித்துக்கொண்டிருப்பது’ என்கிற மந்திரார்த்தம் தோற்றச் சொல்லுகிறது-
நரசிம்ஹ அவதாரத்தில் ஒளி உண்டோ?’ என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார், ‘ஜ்வலந்தம்’ என்று. ‘உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும் ஜ்வலந்தம் ஸர்வதோமுகம்
ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம் ம்ருத்யு ம்ருத்யும் நமாம்யஹம்.’ என்பது அம்மந்திரமாகும்.

கிளர்ந்து எழுந்து –
சீறிக்கொண்டு தோற்றி. என்றது, ‘பிறை எயிற்று அன்று அடல் அரியாய்ப் பெருகினானை’-பெரிய திருமொழி. 2. 5 : 8. என்கிறபடியே,
சிறுக்கன்மேலே அவன் முடுகினவாறே கிளர்ந்தபடி.
கிளர் ஒளிய இரணியன் –
மிக்க ஒளியையுடைய இரணியன். ஆசுரமான ஒளியைக் குறித்தபடி. 4நரசிம்ஹமும் பிற்காலித்து வாங்கும்படி
ஆயிற்றுப் பையல் கிளர்த்தி இருந்தபடி. அகல் மார்பம் – அகன்ற மார்வை :
தேவர்களுடைய வரத்தை ஊட்டியாக -போஜனமாக -இட்டுத் திருவுகிருக்கு இரை போரும்படியாக வளர்த்த மார்பாதலின், ‘அகல் மார்பம்’ என்கிறது.

கிழித்து –
நரசிம்ஹத்தினுடைய மொறாந்த முகத்தையும், நா மடிக்கொண்ட உதட்டையும், குத்துதற்கு முறுக்கின கையையும்,
அதிர்ந்த அட்டகாசத்தையும் கண்டவாறே, பொசுக்கின பன்றி போலே உருகினான் ஆயிற்றுப் பொன்னன். ஆகையாலே,
பின்னர் வருத்தமின்றியே கிழித்துப் போகட்டான். நெற்றியது கண்ணும் உச்சியது புருவமுமாய்க்கொண்டு தோற்றின போது
மரத்தினைப் பற்றியுள்ள நெருப்புப் போலே அச்சமாகிய நெருப்பு உள்ளே நின்று எரியப் புக்கவாறே பதஞ்செய்யுமே அன்றோ?
உகந்த –
‘சிறுக்கனுடைய விரோதி போகப் பெற்றோமே!’ என்று உகந்தபடி.
அன்றிக்கே, ‘ஏ தேவனே! உன்னைத் துதித்த என்னிடத்தில் என் தமப்பனாருக்கு அதனால் உண்டான பாபமானது நாசம் அடையட்டும்,’ என்கிறபடியே,
இவன்தான் காற்கட்டி ஆணையிடாதே, இவன்தானே ‘கொல்ல வேண்டும்’ என்று இசையப் பெற்றோமே அன்றோ என்று உகந்த உகப்பு என்னுதல்.

வளர் ஒளிய கனல் ஆழி வலம்புரியான் –
காவற்காட்டில் துஷ்ட மிருகங்களுக்கு ஊட்டி இட்டு வளர்க்குமாறு போலே, தேவர்களுடைய வரங்களை ஊட்டியாக
இட்டு வளர்த்த பையலுடைய மார்பு முழுவதும் திரு உகிருக்கு அரை வயிறாம்படி ஆயிற்றே அன்றோ?
ஒருவன் கை பார்த்திருப்பார் பலர் உளர் ஆனால், அவர்களிலே சிலவர் இவனோடே கைசெய்து,
அவனுக்குள்ள உடலையும் -உடல் -தனம் -சரீரம் -தாங்கள் கண்டபடி அழித்து நீக்கியுள்ள உடலையும் கூறிட்டு, தாங்களே கொண்டுவிட்டால்,
மற்றுள்ளார் கதகத எனச்-கோபிக்க-ஜ்வலிக்க — சொல்ல வேண்டா அன்றோ? இவர்கள் தாம் நுனியாடிகள் அலரோ? -ஹஸ்தாக்ரம் -சேநாக்ரம் –
இப்படி இவர்கள் தாமேயாவது என், நாம் இருக்க?’ என்று திவ்விய ஆயுதங்கள் கிளர்ந்தன ஆயிற்று.
மணி நீல வளர் ஒளியான் –
நீலமணி போலே வளராநின்றுள்ள ஒளியையுடையவன். கை மேலே இலக்கைப் பெறாதார்க்கு நாடோறும் படி விட வேண்டுமே அன்றோ?
படி விடாத போது அரைக்கணமும் நில்லார்களே அவர்கள். இவர்கள் விருத்தவான்கள் ஆகையாலே அன்றோ
கைமேலே இப்படிப் பெற்று வாழ்கிறார்கள்? ‘படி கண்டறிதியே’ என்னக் கடவதன்றோ?

‘ஒருவன் கைபார்த்திருப்பார்’ என்று தொடங்கிச் சிலேடையாக அருளிச்செய்கிறார். கைபார்த்திருப்பார் – ‘ஒருவனுக்குப்
பரதந்திரராயிருப்பார்’ என்பதும், ‘கையிலே இருப்பார்’ என்பதும் பொருள். கைசெய்து – ‘துணை செய்து’ என்பதும், ‘கையிலே இருந்து’ என்பதும் பொருள்.

இலக்கு – மாத ஜீவனமான பணமும், இலட்சியமும். படி – அரிசிப் படியும், திருமேனியும், என்றது, ‘கைமேலே இருந்து வைத்து இலட்சியம்
பெறாதார்க்குச் சந்தோஷத்தையுண்டாக்குவதற்காகத் திருமேனியைக் கொடுக்க வேணுமேயன்றோ?’ என்றபடி. ‘படி’ என்பது, திருமேனி என்ற பொருளைக்
காட்டுவதற்கு மேற்கோள், ‘படி கண்டறிதியே’ என்பது, முதல் திருவந். 85.
எப்பொழுதும் பார்த்துக்கொண்டேயிருக்கிறார்கள்,’ என்கிறபடியே, இப்படிக் கண்டு ஜீவிக்குமதேயன்றோ உள்ளது?

‘‘மணி நீல வளர் ஒளி’ என்பது என்? அப்போது திருமேனி வெளுத்து அன்றோ இருந்தது?’ என்னில்,
‘சிறுக்கன் துன்பம் தீரப் பெற்றோமே!’ என்று திருமேனி குளிர்ந்தபடியைச் சொல்லுகிறது.
கவராத வரி வளையால் குறை இலமே –
‘அவ்வடிவையுடையவன் தானே வந்து மேல் விழுந்து விரும்பி வாங்கி இட்டுக்கொள்ளாத இவ்வளையால் எனக்கு என்ன காரியம் உண்டு?’ என்கிறாள்.

———————————————————————————————
வரி வளையால் குறையில்லாப் பெரு முழக்கால் அடங்காரை
எரி அழலம் புக ஊதி இருநிலம் முன் துயர் தவிர்த்த
தெரிவரிய சிவன்பிரமன் அமரர்கோன் பணிந்து ஏத்தும்
விரிபுகழான் கவராத மேகலையால் குறையிலமே.–8-8-8-

பூ பார நிர்ஹரணார்த்தமாக -துற யோதாதி விரோதி சதத்தையும் -கீர்த்தி உள்ளவன் விரும்பாத
கை வளையும் மேகலை -ஆத்மா -சரீரம் அங்கே
வரி வளையால் குறையில்லாப் பெரு முழக்கால் அடங்காரை-ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் -உண்டான -மகா கோஷத்தால் -அபவ்யரான சத்ருக்களை
எரி அழலம் புக ஊதி இருநிலம் முன் துயர் தவிர்த்த-கிளர்ந்து எழும் பயாக்னி பிரவேசிக்கும் படி ஊதி -உழுத்து போகச் செய்ததே
மகா பிருத்வி பார கிலேசத்தை -போக்கி –
தெரிவரிய சிவன்பிரமன் அமரர்கோன் பணிந்து ஏத்தும்-உபகாரத்தால் தேவாதிகள் ஸ்தோத்ரம் பண்ண
-விவேகிக்கைக்கு அரிய பிரதான்யம் -தன்னோடு ஒக்க பிரமித்து -ஈச்வரோஹம் என்று அபிமானித்து
கிருத்ஜ்ஞதா உபகாரத்தால் பரவசராய் ஸ்தோத்ரம் பண்ணும்
விரிபுகழான் கவராத மேகலையால் குறையிலமே.-விஸ்தீரணமான புகழ் -உடையவன் ஆதரியாத
காஞ்சிகுணம்-ஆபரணம் -பரிவட்டம் மேலே கட்டுவது -அன்றிக்கே -மேவுகின்ற கலை -வஸ்த்ரம் –

‘வரிகளையுடைய பாஞ்சஜன்யம் என்னும் சங்கினது குறைபாடு இல்லாத பெரிய ஒளியால், எரிகின்ற அச்சமாகிய நெருப்பானது
பகைவர்கள் மனங்களிலே புகும்படியாக ஊதிப் பெரிய நிலத்தினது துன்பத்தை நீக்கிய, அறிதற்கு அரிய சிவனும் பிரமனும் இந்திரனும்
வணங்கி ஏத்துகின்ற விரிந்த கல்யாண குணங்களையுடைய சர்வேசுவரன் விரும்பாத மேகலையால் யாதொரு பயனையும் உடையோம் அல்லோம்’ என்கிறாள்.
‘வரிவளையினது குறை இல்லாத பெருமுழக்காலே அடங்கார் மனங்களிலே எரி அழலம் புக ஊதி நிலத்தினது துயரைத் தவிர்த்த விரிபுகழான்,’ என்க.
அழலம் : அம் – சாரியை. அழல் – நெருப்பு. ‘வளையால், அடங்காரை’ என்பன வேற்றுமை மயக்கங்கள். ‘தெரிவரிய’ என்பது, ‘சிவன்’ முதலானோர்கட்கு அடை.

‘உலகத்திற்கு உபகாரத்தைச் செய்த சர்வேசுவரன், தனக்கே உரியவளான -அசாதாராணமான-என்னை
விரும்பிலனேயாகில், என்னுடைய மேகலையால் எனக்கு என்ன பிரயோஜனம் உண்டு?’ என்கிறாள்.

வரி வளையால் –
ஸ்ரீ பாஞ்சஜன்யத்தாலே. வளை – சங்கு. -முகத்தில் வரி படைத்த -சௌந்தர்யம் என்றுமாம் –
குறை இல்லாப் பெருமுழக்கால் –
‘அந்த ஒலியானது திருதராஷ்டிரன் புத்திரர்களுடைய நெஞ்சுகளைப் பிளந்தது,’ என்றும்,
‘அந்தப் பாஞ்சஜன்யமானது, பாதாளம் ஆகாயம் திக்குகள் திக்குப்பாலர்கள் ஆகிய இவற்றோடு கூடின
உலகத்தை நடுங்கச் செய்தது,’ என்றும் கூறப்படுகின்றபடியே, பகைவர்கள் அளவு அல்லாத பெரிய ஒலியாலே.
‘ஹஸ்தேந ராமேண – கையினாலே ஸ்ரீராமனாலே’ என்னுமாறு போன்று,
‘வரிவளையால் பெருமுழக்கால்’ என்பது வேற்றுமை மயக்கம்.
அடங்காரை –
பகைவர்களை.
எரி அழலம் புக ஊதி –
எரியா நின்றுள்ள நெருப்பானது அவர்கள் மனங்களிலே புகும்படி ஊதி. என்றது,
‘பய அக்கினி கொளுந்தும்படி செய்து’ என்றபடி. அடியார்களுடைய பகைவர்கள் கழிய ஊதியது இவளையிட்டே அன்றோ?
ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் இட்டும் -பராங்குச நாயகிக்காக -கனை கழல் காண்பது என்று கொலோ இவள் காதல் வளர்க்க -என்றுமாம்-

இருநிலம் முன் துயர் தவிர்த்த –
பரப்பையுடைத்தான பூமியில் முன்பே உண்டான துக்கத்தைப் போக்கின. ‘என்றது, என் சொல்லியவாறோ?’ எனின்,
‘முன்பே பிடித்துத் துக்கத்தைப் போக்குமவனாய்ப் போருமவன், இன்று இத்தலையை நோவுபட விட்டிருக்குமாகில்,
பின்னை எனக்கு என்னுடைமை கொண்டு காரியம் என்?’ என்கிறாள் என்றபடி. ‘தேவர்களுக்குப் பலம் விருத்தியடைந்தது
யோகிகளுக்குத் தெளிவும் விருத்தியடைந்தது’; ‘அந்தச்சங்கின் ஒலியானது திருதராஷ்டிரன் புத்திரர்களுடைய மனங்களைப் பிளந்தது,’ என்கிறபடியே,
ஸ்ரீ பாஞ்சஜன்யத்தின் ஒலியாகிற இதுதான் அன்புடையவர்கள் கேட்க ஆசைப்பட்டிருப்பதுமாய், பகைவர்கள் முடிகைக்குக்
காரணமுமாய் இருப்பது ஒன்றே அன்றோ?-தைத்யர் பல ஹானி -அடையவும் -தேவர் தேஜஸ் வளரவும் -என்கிறபடியே-

பெரியாழ்வார் திருமகளார்க்கும் விசேடித்து ஜீவனமாய் இருப்பது ஒன்றே அன்றோ இது?
‘கோங்குலரும் பொழில் மாலிருஞ் சோலையில் கொன்றைகள் மேல் தூங்கு பொன் மாலைகளோடு உடனாய் நின்று தூங்குகின்றேன்
பூங்கொள் திருமுகத்து மடுத்தூதிய சங்கொலியும் சார்ங்கவில் நாணொலியும் தலைப்பெய்வது எஞ்ஞான்று கொலோ!’- என்பது-நாய்ச்சியார் திருமொழி.
என்றது, ‘ஸ்ரீ ஜனகராஜன் திருமகளுக்கும் உருக்குமிணிப்பிராட்டிக்கும் உண்டான விடாய் தனக்கு ஒருத்திக்கும்
உண்டாகையாலே, அவர்கள் இருவரும் பெற்ற பேற்றை நான் ஒருத்தியும் ஒருகாலே பெறவேண்டும்,’ என்கிறாள் என்றபடி.
‘இது, பட்டர் அருளிச்செய்ய நான் கேட்டேன்’ என்று நம்பிள்ளை அருளிச்செய்வர்.
சிசுபாலன் சுயம்வரத்திலே வந்த போது உருக்குமிணிப்பிராட்டி, ‘இவ்வளவிலே கிருஷ்ணன் வந்து முகங்காட்டிற்றிலனாகில் நான்
பிழையேன்!’ என்ன, அவள் கலங்கின சமயத்திலே புறச்சோலையிலே நின்று ஸ்ரீ பாஞ்சஜன்யத்தை முழக்க, அது வந்து செவிப்பட்டது;
இராவணன் மாயா சிரசைக் காட்டிய போது பிராட்டி தடுமாற, அவ்வளவிலே வில்லின் நாண் ஒலி வந்து செவிப்பட்டது;
அவ்விருவர் விடாயும் தனக்கு ஒருத்திக்கும் உண்டாகையாலே, இரண்டும் ஒருகாலே பெற வேண்டும் என்று ஆசைப்படுகிறாளாயிற்று இவள்.

தெளிவு அரிய சிவன் பிரமன் அமரர்கோன் பணிந்து ஏத்தும் விரி புகழான் –
பாரதப்போரை முடிய நடத்தினமை காண்கையாலே, தாங்கள் பிறரால் அறியப்பட மாட்டாதவர்களாக
நினைத்திருப்பாருமாய்ப் பூமியில் கால் பாவாமையால் வந்த செருக்கினை யுடையருமான சிவன் தொடக்கமானார் செருக்கு
அற்றவர்களாய்க் கொண்டு வந்து விழுந்து ஏத்தும்படியான பரந்த புகழையுடையவன்.
ஒரு கொசுகுத்திரள் இருந்தது என்னா, திருப்பாற்கடலில் ஒரு மூலை சுவறாதே அன்றோ?
அப்படியே, இவர்கள் ஏத்தா நின்றால் ஏத்தின இடம் அளவுபட்டு ஏத்தாத இடம் விஞ்சும்படியான புகழையுடையவனாதலின், ‘விரிபுகழான்’ என்கிறது
‘கவராத மேகலையால் குறை இலமே –
அவன் விரும்பாதே நானே உடுத்து முசியும்படியான மேகலை எனக்கு என் செய்ய?
அன்றிக்கே, ‘உடைமாறாத பரிவட்டங்கொண்டு காரியம் என்?’ என்னுதல்.-உடை மாறாத-மாறாடி உடாத –
-அவன் பரியட்டம் இவளுக்கு -போகத்தில் தட்டு மாறும் சீலத்தை ஆசைப்படுகிறாள்
அன்றிக்கே, ‘பாதுகாப்பவனாய்த் தான் வந்து புகழ் படைத்துப் போருகிறவன், ‘இத்தலையைப் பாதுகாப்பதனால் வரும் புகழ் வேண்டா;
அது தவிர்ந்தால் வரும் பழி வர அமையும்,’ என்று இருந்தானாகில், நான் எனக்குப் பழியாம்படி பரிவட்டம் பேணி இருக்கவோ?’ என்னுதல்.

இனி, வரிவளையால் குறையிலமே –
வாயாடி. வாய்க்கரைப் பற்றை அடுத்தூணாகவுடையவன். எதிரிகள் முடுகினால் இவன்தான் வாய்க்கரையிலே இருந்து செய்யும்
ஆர்ப்பரவத்தைக் கேட்டு எதிரிகள் முழுக்காயாக அவியும்படியாக இருப்பவன்.
அந்தப்புரத்திலுள்ளார் ‘எங்கள் வாய் புகு சோற்றைப் பறித்து ஜீவியாநின்றான்!’ என்று முறைப்பட்டால்,
அவன் வாய்விடாச் சாதி என்னலாம்படி அன்றோ இருப்பது? ஓசையும் ஒளியும் உடையனாய் எதிரிகளை ஊதப் பறக்கும்படி செய்தே அன்றோ இருப்பது?
அல்லாத ஆழ்வார்கள் கூரியரேயாகிலும், ‘தடியர் கழுந்தர் என்னலாய், இவனைப் போலே சுஷி யுடையார் இலரே அன்றோ?

மற்றைய ஆழ்வார்களாவார், சக்கரம் கதை முதலானவர்கள். கூரியர் – கூரிய அறிவினர்; தீக்ஷணர்கள். தடியர் – கதை, முஷ்கரர், கழுந்தர் -வில்; கழுந்து,
சப்பரை. சுஷி – ஞானம், துவாரம்.

மரங்கள் போல் வலிய நெஞ்சர் ஆகையாலே எரி அழலம் புக ஊதிக் கொளுத்தினபடி.
‘இப்படி அடியார்களைப் பாதுகாத்தவன் விரும்பாத மேகலையால் எனக்கு என்ன பிரயோஜனம் உண்டு?’ என்கிறாள் என்னுதல்.

———————————————————————————–

மேகலையால் குறையில்லா மெலிவுற்ற அகல்அல்குல
போகமகள் புகழ்த்தந்தை விறல்வாணன் புயம்துணித்து
நாகமிசைத் துயில்வான்போல் உலகெல்லாம் நன்கொடுங்க
யோகுஅணைவான் கவராத உடம்பினாற் குறையிலமே.–4-8-9-

ஆஸ்ரித விரோதியான பாணனை -விஹச்தன் ஆக்கின கிருஷ்ணன் விரும்பாத சரீரத்தால் என்ன பயன் –
மேகலையால் குறையில்லா மெலிவுற்ற அகல்அல்குல-அநிருத்தன் அணைத்ததால் மேகலையால் குறை இலையே இவளுக்கு
உடை அழகு -குறை இல்லாமல் -துவட்சி உடைய -விஸ்தீரணமான அல்குல்
போகமகள் புகழ்த்தந்தை விறல்வாணன் புயம்துணித்து-உஷைக்கு பிதா என்ற பிரதை உடைய -வாணன் –
யுத்த கண்டூதி தினவு எடுக்கும் தோள்கள் -தின்ற இடம் சொரிந்தால் போலே துணித்து
அவதாரம் கார்யம் முடிந்து மீண்டும் ஷீராப்தியில் சாய
நாகமிசைத் துயில்வான்போல் உலகெல்லாம் நன்கொடுங்க-சர்வ லோகமும் இவன் இடம் ஒடுங்க ஸூ பிராப்தி ஆகிற நன்மை -யோக நித்தரை
யோகுஅணைவான் கவராத உடம்பினாற் குறையிலமே-இதில் உடம்பு -அடுத்து ஆவி சொல்வார் -யோகு -உபாயம் –

‘மேகலையாலே குறைவில்லாத மெலிந்திருக்கின்ற அகன்ற அல்குலையுடைய இன்பத்திற்குத் தக்கவளான உஷையினது புகழையுடைய
தந்தையாகிய, வெற்றி பொருந்திய பாணாசுரனுடைய தோள்களைத் துணித்து, ஆதிசேஷ சயனத்தின்மேலே தூங்குகின்றவனைப்
போன்று உலகமெல்லாம் நன்மையிலே பொருந்தும்படி யோக நித்திரையைச் செய்கின்ற சர்வேசுவரன் விரும்பாத
இந்தச் சரீரத்தால் யாதொரு பயனையும் உடையோம் அல்லோம்,’ என்கிறாள்.
மேகலை – ஓர் ஆபரணம்; இடையிலே அணிந்து கொள்வது; ஏழு அல்லது, எட்டுக் கோவையால் ஆயது. அன்றிப் புடைவையுமாம்.
‘குறையில்லாப் போகமகள்’ என்றும், ‘மெலிவுற்ற போகமகள்’ என்றும் தனித்தனியே கூட்டுக. ‘தந்தையாகிய வாணன்’ என்க.
புகழையும் விறலையுமுடைய வாணன். ‘துணித்து யோகணைவான்’ எனக் கூட்டுக.

‘அடியார்க்கு விரோதியான வாணனை அழியச்செய்து, எல்லாரும் உய்வு பெறும் வழியை எண்ணுமவன்
விரும்பாத உடம்புகொண்டு காரியம் என்?’ என்கிறாள்.

மேகலையால் குறை இல்லா மகள் –
‘உஷைக்குக் கூறை உடை அழகியதாய் இருக்கும் போலே காண்’ என்று அருளிச்செய்வராம் வங்கி புரத்து நம்பி.
மெலிவுற்ற மகள் –
மென்மைத்தன்மையுடையளாய் உள்ளவள். என்றது, ‘பிரிந்து தனியிருக்கப் பொறாதவள்’ என்றபடி.
அகல் அல்குல் மகள் –
அகன்ற அல்குலையுடையளாய் இருக்கை.
போக மகள் –
போகத்திற்குத் தக்கவளான பெண்பிள்ளை.
புகழ்த்தந்தை –
உஷைக்குத் தந்தையான வார்த்தைப்பாட்டால் உள்ள புகழையுடையவன்.
அன்றிக்கே, ‘சௌரியம் வீரியம் முதலியவைகளால் உள்ள பிரசித்தியையுடையவன்’ என்னுதல்.
விறல் வாணன் –
மிடுக்கையுடைய வாணன். ஒரு தேவதையின் சந்நிதியிலே இருந்தால் சத்துவகுணம் தலையெடுத்து இருக்கக் கூடியதாய் இருக்குமே
அன்றோ எல்லோர்க்கும்? அவ்வளவிலும் யுத்த கண்டூதி மிக்கு, ‘எனக்கு எதிரியாய் இருப்பான் ஒருவனைக் காட்டவேண்டும்,’ என்று
வேண்டிக்கொள்ளும்படியான பெருமிடுக்கையுடையவனாதலின், ‘விறல் வாணன்’ என்கிறது.
புயம் துணித்து –
‘இவன் அறக் கை விஞ்சினான்!’ என்று கரத்தைக் கழித்துவிட்டான். தலையை அறுத்து வைக்க வேண்டும் குறை உண்டாயிருக்கச் செய்தேயும்,
‘உஷை தந்தை அற்றவள் ஆகவொண்ணாது,’ என்று உயிரை நிறுத்தி வைத்துக் கையைமாத்திரம் கழித்தானாகலின், ‘புயம் துணித்து’ என்கிறது.

நாகமிசைத் துயில்வான்போல் –
வாணனுடைய தோள்களாகிய காட்டினைத் துணித்த பின்பு ஆயிற்றுப் போகத்தில் பொருந்திற்று.
‘‘துயில்வான் போல்’ என்பது என்? துயில இல்லையோ?’ என்னில், உலகு எல்லாம் நன்கு ஒடுங்க யோகு அணைவான் –
‘இன்னமும் வாணன் போல்வார் எதிரிடுவார் உளராகில் அவர்களையும் அழித்து,
‘உலகத்தார் நம்மையே பற்றிக் கரைமரம் சேரும் விரகு யாதோ?’ என்று இதனையே சிந்தித்துக்கொண்டு யோக நித்திரை செய்யாநிற்பான்
கவராத உடம்பினால் குறை இலம் –
இப்படி எல்லார் பக்கலிலும் செய்யும் பரிவை அவன் என் பக்கலிலே செய்யாதே இருக்க,
நான் என் உடம்பைக் கட்டிக்கொண்டு கிடக்கவோ? அவனுக்காகக் கண்ட உடம்பு ஆயிற்று இவளது.
அவனுக்கு உறுப்பாகவே அன்றோ இவள்தான் இந்தச் சரீரத்தை விரும்புவது?
அவன்தான் தன் உடம்பு ‘பத்தர்களுக்காகவே’ என்று இருக்குமாறு போன்று இறைவனுக்காகக் கண்ட உடம்பாயிற்று இது.

ஆக, ‘மேகலையால் குறையில்லா மெலிவுற்ற அகல் அல்குல் போகமகள்’ என்ற அடைமொழிகளால்,
‘ஒப்பனையழகாலும், ஆத்தும குணத்தாலும், பருவத்தாலும் குறைவற்றவள்’ என்பதனைத் தெரிவித்தபடி.

——————————————————————————————————–

உடம்பினால் குறையில்லா உயிர்பிரிந்த மலைத்துண்டம்
கிடந்தனபோல் துணிபலவா அசுரர்குழாம் துணித்துஉகந்த
தடம்புனல சடைமுடியன் தனிஒருகூ றமர்ந்துறையும்
உடம்புடையான் கவராத உயிரினால் குறையிலமே.–4-8-10-

அசேஷ விரோதி நிவர்த்தகன் -அவனால் விரும்பாத -ஆத்மாவால் என்ன பிரயோஜனம்
உடம்பினால் குறையில்லா -சரீர போஷணம் பண்ணி மகா காயர்
உயிர்பிரிந்த மலைத்துண்டம் கிடந்தனபோல் -இந்திர சின்னம் வஜ்ராயுதம் கொண்டு இந்த்ரன் மலைத்துண்டம் பண்ணியது போலே
துணிபலவா அசுரர்குழாம் துணித்துஉகந்த-இவன் துணிக்க அவை இப்படி கிடந்தது -ஜகத் விரோதி கழிந்ததே என்று உகந்து
தடம்புனல சடைமுடியன் தனிஒருகூ றமர்ந்துறையும்-அதி விச்தீர்நையான கங்கை -அதிசய சக்தன் -அபிமானித்து
இருக்கும் ருத்ரன் -தனக்கு அபாஸ்ரயமாக ஒரு பார்ஸ்தவத்தில் நித்ய வாஸம் பண்ணும் -ஏறாளும் இறையோன் ஆரம்பித்து
சௌசீல்யம் சொல்ல வந்த திருவாய்மொழி
உடம்புடையான் கவராத உயிரினால் குறையிலமே.-அவன் விரும்பாத -ஆத்மீயங்கள் போலே ஆத்மாவால் என்ன லாபம்

‘சரீர பலத்தில் குறைவில்லாத அசுரர் கூட்டங்கள், உயிர் நீங்கிய மலைத்துண்டுகள் கிடந்தன போலத் துண்டங்கள் பலவாகத் துணித்து மகிழ்ந்த,
மிகப் பெரிய கங்கையைத் தரித்த சடையாகிய முடியையுடைய சிவபிரான் ஒரு பக்கத்திலே ஒப்பில்லாதபடி விரும்பி வசிக்கின்ற திருமேனியையுடைய
சர்வேசுவரன் விரும்பாத என்னுடைய இந்த உயிரால் யாதொரு பயனையும் உடையோம் அல்லோம்,’ என்கிறாள்.
‘உடம்பினால் குறையில்லா அசுரர்’ என்க. ‘துணித்து உகந்த உடம்புடையான்’ எனக் கூட்டுக. புனல – அகரம் சாரியை; ஆறாம் வேற்றுமை உருபுமாம்.

முதற்பாசுரத்தில் சொன்ன சீலகுணத்தையும் விரோதிகளை அழித்தலையும் சொல்லி,
‘அவன் விரும்பாத உயிரால் என்ன காரியம் உண்டு?’ என்று, முதற்பாசுரத்தில் தொடங்கியதற்குச் சேர முடிக்கிறாள்.
‘உடம்பினால் குறை இல்லா அசுரர் குழாம் உயிர் பிரிந்த மலைத்துண்டம் கிடந்தன போல் துணி பலவாத் துணித்து’ என்றதனால்,
‘நீறு ஆகும்படியாக நிருமித்துப் படைதொட்ட’ என்றதனைச் சொல்லுகிறது.
‘தடம் புனல் சடை முடியன் தனி ஒரு கூறு அமர்ந்து உறையும் உடம்பு உடையான்’ என்றதனால்,
‘கூறு ஆளும் தனி உடம்பன்’ என்றதனைச் சொல்லுகிறது.

உடம்பினால் குறை இல்லா அசுரர் குழாம் –
உயிரைத் தேய்த்து உடம்பை வளர்த்திருந்தவர் பிறப்பு இறப்புகளிலே எப்பொழுதும் உழன்று திரிகின்றவர்களாய்ப்
போருவர் இத்தனை அன்றோ?’ என்றது. ‘உயிரிலே ஆயிற்றுக் குறை உண்டாகில் உள்ளது,’ என்றபடி.
உயிர் பிரிந்த மலைத்துண்டம் கிடந்தன போல் துணி பலவாத் துணித்து உகந்த –
உயிரோடு கூடிச் சஞ்சரிக்கின்ற மலைகள் இந்திரன் கையில் வச்சிராயுதத்தாலே பல கூறு ஆகும்படி துணியுண்டு கிடந்தாற்போலே,
அசுரர் கூட்டத்தைத் துணித்து உகந்தான் ஆயிற்று.
‘உயிர் பிரிந்த மலைத் துண்டம் கிடந்தன போல் உடம்பினால் குறை இல்லா அசுரர்குழாம் துணித்து உகந்த’ என்று கூட்டுக.
‘திருமகள் கேள்வன் தேவர்களுக்கும் தானவர்களுக்கும் பொதுவான தெய்வம்,’ என்கிறபடியே,
சம்பந்தம் எல்லார் பக்கலிலும் உண்டாய் இருக்க, ‘இவர்கள் அடியார்கட்கு விரோதிகள்,’ என்னும் தன்மையாலே
இவர்களை அழித்து, ‘அடியார்கட்குப் பகைவர்கள் அழியப் பெற்றோமே அன்றோ!’ என்றத்தாலே உகந்தானாயிற்று.

தடம் புனல சடை முடியன் தனி ஒரு கூறு அமர்ந்து உறையும் உடம்பு உடையான் –
மிக்க நீர் வெள்ளத்தையுடைத்தான கங்கையைத் தன் சடையில் ஒரு பக்கத்திலே தரிக்கையால் வந்த செருக்கையுடைய சிவபிரான் ஆனவன்,
பிராட்டி திருமார்வைப் பற்றி, ‘இவ்விடம் என் இருப்பிடம்’ என்று அபிமானித்திருக்குமாறுபோலே,
ஒரு பக்கத்தைப் பற்றி ‘இவ்விடம் என் இருப்பிடம்’ என்று அபிமானிக்கும்படி அவனுக்கு இடங் கொடுத்துக் கொண்டிருக்கிற
திருமேனியையுடையவன். திருமேனியில் இடங்கொடுக்கச்செய்தே, இது தன்னைக் குணமாக விரித்துக் கூற வேண்டும்படியாயிற்று
அவர்களுடைய அகங்காரம். என்றது,
‘அகங்காரம் இல்லாதவர்கள் அணையக்கூடிய உடம்பிலே ஆயிற்று அகங்காரம் கொண்டவர்களுக்கும் இடங்கொடுக்கிறான்’ என்றபடி.

கவராத உயிரினால் குறை இலம் –
‘இப்படிப் பொதுவான உடம்பு படைத்தவன் ஆசைப்பட்ட எனக்கு உதவானாகில், இவ்வாத்தும வஸ்துவைக் கொண்டு என்ன காரியம் உண்டு?’ என்கிறாள்.
இதற்கு முன்னர் எல்லாம் சரீரத்தையும் சரீரத்தோடு சேர்ந்திருக்கின்ற பொருள்களையுமே அன்றோ ‘வேண்டா’ என்றது?
அவைதாம் அழியக் கூடியவையாய் இருக்கையாலே தாமாகவே அழியுமவற்றை ‘வேண்டா’ என்றதாய் இருக்குமே அன்றோ?
அதற்காக நித்தியமான ஆத்துமவஸ்துவையும் ‘வேண்டா’ என்கிறாள் இப்பாசுரத்தால்.
‘இதனை வேண்டா என்பதற்குக் காரணம் என்?’ என்னில், ‘இது கிடக்குமாகில், இன்னமும் ஒரு பிறவி உண்டாய்ப்
பழையவையும் எல்லாம் வந்து தோற்றி முலை எழுந்து நோவு படுகைக்குக் காரணமாய் இருக்கும் ஆதலால், அதனைப் பற்ற’ என்க.
இனித்தான், அவனுடைய நித்திய இச்சையாலே அன்றோ இவ்வாத்துமாவினுடைய நித்தியமாய் இருக்குந் தன்மையும் உளது?
அவனுக்கு இச்சை இல்லாத போது பின்னை இவ்வாத்துமாவைக் கொண்டு காரியம் இல்லையே’ என்க.

———————————————————————————————

உயிரினால் குறை இல்லா உலகு ஏழ் தன் உள் ஒடுக்கித்
தயிர் வெண்ணெய் உண்டானைத் தடங் குருகூர்ச் சடகோபன்
செயிர் இல் சொல் இசை மாலை ஆயிரத்துள் இப்பத்தால்
வயிரம் சேர் பிறப்பு அறுத்து வைகுந்தம் நண்ணுவரே.–4-8-11-

பகவத் சேஷத்வ பூர்வகமாக பரமபதம் –
உயிரினால் குறை இல்லா உலகு ஏழ் தன் உள் ஒடுக்கித்-சங்கல்ப அந்தர்பூதமாகும் படி -ரஷிக்கப் படும் இடத்துக்குள்
ஏக தேசத்தில் தானும் அவதீர்ணனாய்
தயிர் வெண்ணெய் உண்டானைத் தடங் குருகூர்ச் சடகோபன்-ஆஸ்ரிதர் உகந்த த்ரவ்யம் உகந்து
செயிர் இல் சொல் இசை மாலை ஆயிரத்துள் இப்பத்தால்-சொல் குற்றம் பொருள் குற்றம் இல்லாத
வயிரம் சேர் பிறப்பு அறுத்து வைகுந்தம் நண்ணுவரே.திடமான பிறப்பு -காழ்ப்பு ஏறும் படி -உள்ள சம்சாரம் முடித்து -வைகுந்தம் கிட்டப் பெறுவார்

‘உயிர்களால் குறைவில்லாத ஏழ் உலகங்களையும் தன் வயிற்றினுள்ளே ஒடுக்கிக்கொண்டு, தயிரையும் வெண்ணெயையும்
உண்ட சர்வேசுவரனை. விசாலம் பொருந்திய திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீ சடகோபராலே அருளிச்செய்யப்பட்ட குற்றமில்லாத இசையோடு கூடின
மாலையாகிற ஆயிரம் திருப்பாசுரங்களுள் இந்தப்பத்துத் திருப்பாசுரங்களாலும் காழ்ப்பு ஏறிய இந்தப் பிறவியை நீக்கிக்கொண்டு பரமபதத்தை அடைவார்கள்,’ என்றபடி.
‘ஒடுக்கி உண்டான்’ என்க. ‘உண்டானைச் சடகோபன் சொல் மாலை ஆயிரம்’ என்க. ‘பத்தால் அறுத்து நண்ணுவர்’ என்க.

‘இத்திருவாய்மொழியைக் கற்றவர்கள், காழ்ப்பு ஏறின பிறவியினது கலக்கம் நீங்கிப் பரமபதத்திலே புகப்பெறுவார்கள்,’ என்கிறார்.

உயிரினால் குறை இல்லா ஏழ் உலகு –
கணக்கு இல்லாதவைகளான ஆத்துமாக்கள் நிறைந்துள்ள ஏழ் உலகங்களையும்.
தன்னுள் ஒடுக்கித் தயிர் வெண்ணெய் உண்டானை –
தயிரும் வெண்ணெயும் களவு காணப் புகுகிறபோது,
‘செருப்பு வைத்துத் திருவடி தொழச் செல்லுவாரைப்போலே வேறு ஒன்றற்கு உடலாக ஒண்ணாது,’ என்று எல்லா உலகங்களுக்கும்
வேண்டுவனவற்றை யெல்லாம் தன் நினைவாலே செய்து, பின்னை ஆயிற்று வெண்ணெய் அமுது செய்தது.
அன்றிக்கே, ‘கருவுற்ற மகளிர் வயிற்றிலுள்ள பிள்ளைக்குத் தகுதியாக உணவு முதலானவைகளை உட்கொள்ளுமாறு போன்று
உள் விழுங்கின உலகங்கட்கு ஜீவனமாகத் தயிர் வெண்ணெய் உண்டான்’ என்னுதல்.
அன்றிக்கே, ‘எல்லா உலகங்களையும் பாதுகாக்கின்றவர்களான அந்தக் கிருஷ்ணபலராமர்கள் கன்றுகளைக்
காப்பாற்றுகின்றவர்கள் ஆனார்கள்,’ என்கிறபடியே, சர்வேசுவரனாயிருந்து வைத்து, அடியார்கள் சம்பந்தம் உள்ள
பொருள்களால் அல்லது சொல்லாதபடி இருக்குமவன்,’ என்னுதல்.

தடம் குருகூர்ச் சடகோபன் –
‘அயோத்தியா நகரத்தில் கூட்டம் கூட்டமாக’ என்கிறபடியே, ‘பெருமாளுடைய திருவபிஷேக மங்கள
மகோற்சவத்தைக் காணவேண்டும்’ என்று நாடுகளடையத் திரண்டு கிடந்தாற்போலே, இவர்
ஆத்துமாவையும் ஆத்துமாவோடு சம்பந்தப்பட்ட பொருள்களையும் ‘வேண்டா’ என்று கழித்திருக்கிற இருப்பைக் காண்கைக்காகத் திரண்ட
ஸ்ரீ வைஷ்ணவ மக்களுக்கு அடைய இடம் போரும்படியான பரப்பையுடைத்தான திருநகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வார்.
25 போர்வை -தத்வங்கள் கழித்து ஆத்மீயம் ஆத்மா கழித்து -திருவந்திக்காப்பு -களைந்த வற்றை பார்த்து சேவிக்க
ஆழ்வார் திருநகரி மக்கள் அனைவரும் கூடி -திருமுடி சேவை
செயிர் இல்சொல் இசை மாலை –
செயிர் – குற்றம். இல் – இல்லாமை: குற்றம் இன்றிக்கே இருக்கை. என்றது,
‘ஆத்துமாவும் ஆத்துமாவோடு சம்பந்தப்பட்ட பொருள்களும் வேண்டா,’ என்ற வார்த்தையில் குற்றமின்றி இருக்கையைத் தெரிவித்தபடி.

வயிரம் சேர் பிறப்பு அறுத்து –
இவர் ‘வேண்டா’ என்று கழித்தாலும் விடாதபடி காழ்ப்பு ஏறிக் கிடக்கிற பிறவியினைக் கழித்து.
வைகுந்தம் நண்ணுவரே –
ஓர் உடம்பாய், ‘இதுதானும் வேண்டா’ என்று கழிக்கும்படியான இவ்வுடம்பை விட்டு,
‘அந்த முத்தன் பல சரீரங்களை மேற்கொள்ளுகிறான்,’ என்கிறபடியே, அவனுடைய நினைவின் வண்ணமும்
அஃது அடியான தன் நினைவின் வண்ணமும் பல சரீரங்களை மேற்கொண்டு அடிமை செய்யலாம்படியான
தேசத்திலே போய்ப் புகப்பெறுவர். என்றது,
‘பல படிகளாலும் அடிமை செய்யப்பெறுவர். என்றபடி.
அவன் விரும்பினபடி இது என்று அறியாதே அன்றோ இவர்தாம் ‘வேண்டா’ என்கிறது?
இவர் திருமேனியை நித்ய முக்தர் திருமேனி போலே விரும்ப -அவன் விரும்பின படி சரீரம் என்று அறியாமல் வேண்டாம் என்கிறார் –

————————————————————————————

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

ஏவம் ருதன்நபி -அலுத்து கொண்டே -சீலம் இல்லா சிறியேன்
சடாரி அலாப்த காம
ஸூ அபேஷைணைக்க பரதாம்
சௌரே அவதார்ய
தத் சேஷதைக ரஹித
சகல
ச்வகீய ச்வச்மின் அபி
ச்ப்ருத
நிச்ப்ருஹதா
சர்வ பிரயோஜனத்வம் -அவன் அன்றோ

———————————————————

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –

சௌந்தர்யாதௌ
ஹ்ருத்திக காரண
பூர்ணதாயாஞ்ச
காந்தௌ
சமயக் ஞ்ஞானே
பிரகாசே
வலைய ரசனயோஹொ
வர்ஷ்மணி
ஸ்வ ஸ்வரூப
சிவாத் ஆஸ்ரிதாங்கம்
இத்யுஜ்ய காரி சூனு
தத் இதம் அகிலம் உன்மூலம்
ந தே ந பிராண பரித்யாஜ்யம் –

———————————————————–

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 38-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்–

ஏறு திருவுடையை ஈசன் உகப்புக்கு
வேறுபடில் என்னுடைமை மிக்க வுயிர் -தேறுங்கால்
என் தனக்கும் வேண்டா வெனு மாறன் தாளை நெஞ்சே
நம் தமக்குப் பேறாக நண்ணு ——————38-

ஏறு திருவுடையை ஈசன்-தன் திரு மார்பில் ஏறப் பெற்ற
பெரிய பிராட்டியாரை உடையனான சர்வேஸ்வரன்

————————————————————————————–

அவதாரிகை –

இதில் இவ் வாற்றாமைக்கு உதவாமையாலே
அவனுக்கு உறுப்பு அல்லாத
ஆத்மா ஆத்மீயங்களில் தாம் நசை அற்ற
படியைப் பேசின
பாசுரத்தாலே அருளிச் செய்கிறார்
அது எங்கனே என்னில் –
கீழ்
சீலமில்லாச் சிறியனில் ஓலம் இட்டு அழைத்த இடத்திலும்
வந்து முகம் காட்டக் காணாமையாலே
பிராப்தனாய்
சீலவானாய்
விரோதி நிரசன சமர்த்தனாய்
இருக்கிற சர்வேஸ்வரன் இத்தசையில் முகம் காட்டாமைக்கு அடி
இத்தலையை வேண்டாது ஒழிகை இறே –
அவனுக்கு வேண்டாத
என் ஆத்மா ஆத்மதீயங்களால் எனக்கு ஒரு கார்யம் இல்லை -என்று
அவற்றில் நசை அற்ற படியை அன்யாபதேசத்தால் அருளிச் செய்து
திருவருள் செய்பவன் போல் –உருவமும் ஆர் உயிரும் உடனே வேண்டான் -விருப்பட்ட வரிசைக்கிரமத்தில் இவர் அருளிச் செய்கிறார்
ஏறாளும் இறையோனில் அர்த்தத்தை
ஏறு திரு உடைய ஈசன் உகப்புக்கு -என்று துடங்கி
அருளிச் செய்கிறார் -என்கை-

———————————————————————————————————————————————-

வியாக்யானம்–
ஏறு திருவுடையை ஈசன் –
பிராட்டி ஏகாநை யாகையாலே
நஹிமே ஜீவிதேன– இத்யாதியாலே
அத்தலைக்கு உறுப்பு அல்லாத ஆத்மா ஆத்மீயங்களில்
நசை அற்ற படியைச் சொன்னாள்
இவர் மிதுநாயனர் ஆகையாலே –
திரு மகளும் கூறாளும் தனி உடம்பன் -என்றும்
மலர் மாதர் உறை மார்பன் -என்றும்
பட நாகத்தணைக் கிடந்த பரு வரைத் தோள் பரம் புருடன் -என்றும்
இப்படி ஸ்ரீ யபதியாய் இருக்கிற சர்வேஸ்வரன் உடைய உகப்புக்கு
புறத்தியான மாமை முதலான
உடைமையோடு
உயிரோடு
வாசி அற வேண்டா -என்கிறார் –

ஏறு திரு உடைய ஈசன் -என்று
ஸ்ரீயபதித்வத்தால் வந்த சர்வேஸ்வரத்வம் சொல்லுகிறது

ஏறு திரு –
யவௌ வஷஸ் ஸ்தலம் ஹரே –என்று ஆரூட ஸ்ரீசன் இறே

ஏவம் விதனானவன் உடைய
உகப்புக்கு -வேறுபடில் –
அதாவது
சந்தன
குஸூம
தாம்பூலாதிகளைப் போலே
அவனுக்கு இஷ்ட விநியோக அர்ஹ்யமாய் இருக்கை அன்றிக்கே

ஸ்வார்த்தைக்கு உறுப்பாக இருக்குமாகில் அத்தை ஆயிற்று
தவ சேஷத்வ விபவாத் பஹிர்பூதம் -என்றது –

என்னுடைமை –
அதாவது
மணிமாமை
மட நெஞ்சால்
நிறைவினால்
தளிர் நிறத்தால்
அறிவினால்
கிளர் ஒளியால்
வரி வளையால்
மேகலையால்
உடம்பினால் -என்று
ஆத்மாத்மீயங்களாய் உள்ளவை-

மிக்க உயிர்-
இவற்றில் விலஷணமாய்
ஞானானந்த ஸ்வரூபமாய்
பகவத் சேஷமாய்
ஸ்ரீ ஸ்தனம் ஸ்ரீ கௌஸ்துபம் போலே எம்பெருமானுக்கு அத்யந்த போக்யமாய்
இருப்பதொரு ஆத்மா ஸ்வரூபம் என்று-

தேறும் கால் –
பர ப்ரீதி விஷயமாகவே இருக்கிற ஆகாரத்தை
நன்றாகத் தெளியுங்கால் –
நாரணன் தன வாடா மலரடிக் கீழ் வைக்கவே வகுக்கின்றது -என்றும்
தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே -என்றும்
உன் தன் திரு உள்ளம் இடர் கெடும் தோறும் -என்றும்
இப்படி தெளிய ஆராய்ந்தால் அத்தலைக்கு உறுப்பாகவே இருக்க வேணும் –

இப்படி அன்றிக்கே
வேருபட்டதாகில்
ஸ்வார்த்தைக்கு உருப்பாகில்
என் தனக்கும் வேண்டா –
பரதந்த்ரனான எனக்கும் தான் வேண்டா –

எனும் மாறன் தாளை- நெஞ்சே -நமக்கு பேறாக நண்ணு –
என்று இப்படி அருளிச் செய்யும் ஆழ்வார் திருவடிகளை
நெஞ்சே
நமக்கு பிராப்யமாம்படி
அடை
நமக்கு இந்த நிர்பந்தங்கள் ஒன்றும் வேண்டா
ஆழ்வார் திருவடிகளே பிராப்யம் என்று பிராபி-

———————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s


%d bloggers like this: