Archive for June, 2016

பகவத் விஷயம் காலஷேபம் -156- திருவாய்மொழி – -7-8-1….7-8-11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்–

June 30, 2016

மேல் திருவாய்மொழி, உருவு வெளிப்பாடாய்ச் சென்றது.
கைக்கு எட்டாமையாலே உருவு வெளிப்பாடு என்று அறிவர் அன்றோ?
இனி. சர்வேஸ்வரன் தான் நினைத்த காரியம் செய்து தலைக் கட்டிக் கொள்ளுமளவும் நம்மை இங்கே
வைத்திருப்பான் என்னும் இடமும் அறிவரன்றோ?
ஆகிலும், அவனை ஒழியத் தரிக்க மாட்டாதவர் ஆகையாலே, இதனை நினைத்து ஆறி இருக்கவும் மாட்டாரே!
‘விரோதியைப் போக்கித் தரவேணும்’ என்று இவர் விரும்பினாலும்,
அவனும் இவரைக் கொண்டு தான் நினைத்த பிரபந்தங்களைத் தலைக்கட்டிக் கொள்ளாமளவும் இவர் விரும்பியதைச் செய்யானே!
இவர் விரும்பியதைச் செய்யாதிருக்கச் செய்தேயும், இவரை இங்கே வைத்து வாழ்விக்கும் உபாயங்களும் அறிந்திருக்குமே!

ஆகையாலே, சில பொருள்களை –மத்ஸ்யங்களை -உயிர் போகாதபடி ஒன்றிலே கோத்திட்டு வைக்குமாறு போலே,
முடியவும் ஒட்டாதே வாழவும் ஒட்டாதே நடுவே இருத்தி நலிகிறபடி நினைத்து,
‘எனக்கு இதில் பொருந்தாமை உண்டாய் இருக்கச் செய்தேயும் இச் சம்சாரத்திலே வைத்து என்னை நடத்திக் கொடு
போருகிற இவ் வாச்சரியத்தை எனக்கு அருளிச் செய்ய வேண்டும்,’ என்ன ஒன்றைக் கேட்க,(பாசங்கள் நீக்கி நிதான பாசுரம் )

வேறே சிலவற்றைச் சொல்லுவாரைப் போலே, ‘இது ஒன்று கண்டோ நீர் ஆச்சரியப்படுகிறது?
இவ்வளவு அல்லாத நம்முடைய விசித்திர உலக உருவமாய் இருக்குந் தன்மையைப் பாரீர்!’ என்று
தன்னுடைய ஆச்சரியமான உலக உருவமாய் இருக்குந் தன்மையைக் காட்டிக் கொடுத்தான்.
அங்ஙனம் காட்டிக் கொடுத்த அது தானும் இவர் நினைத்தது அன்றே யாகிலும், அவன் காட்டிக் கொடுத்தது ஆகையாலே.
அதுவும் இவருடைய பிரீதிக்குக் காரணமாக இருக்கும் அன்றோ?

ஆக, இவர் ஒன்றைக் கேட்க, –
அதைத் தவிர -அவன் பல ஆச்சரியங்களைக் காட்டிப் பரிகரித்தான்.

அக்குரூரன், யமுனையிலே புக்கு முழுகினவாறே பிள்ளைகளை நீருக்குள்ளே கண்டு அஞ்சிக் கரையிலே பார்த்தான்:
அங்கேயும் கண்டான்;

நீரிற் புகுங்கண்டு தேரினைப் பார்க்கும் நிறுத்தியபொன்
தேரில் தொழும்பின்னை நீரினில் காணும் சிறந்தபச்சைக்
காரில் திறம்மெய் யரங்கனும் சேடனும் கஞ்சவஞ்சன்
ஊரிற் செலஉடன் போம்அக்கு ரூரன்தன் உண்மகிழ்ந்தே.’-என்ற திருவரங்கத்துமாலைச் செய்யுள் நினைத்தல் தகும்.

‘ஓ கிருஷ்ணனே! இந்த உலகமானது, மஹாத்துமாவான எவனுடைய மிகப் பெரிய ஆச்சரிய சொரூபமாயிருக்கிறதோ,
அப்படிப்பட்ட மிகப் பெரிய ஆச்சரியச் செயலை யுடைய உன்னோடு சேர்ந்தேன்,’ என்று கொண்டு

ஜகத் ஏதத் மஹாஸ்சர்யம் ரூபம் யஸ்ய மஹாத்மந:
தேந ஆஸ்சர்யவரேண அஹம் பவதா க்ருஷ்ண ஸங்கத:’-என்பது, ஸ்ரீவிஷ்ணு புரா. 5. 19 : 7.

கண்டு,அவன் ஆச்சரியப்பட்டாற்போலே, இவரும்
அவனுடைய விசித்திரமான உலக உருவமாய் இருக்குந் தன்மையை அருளிச் செய்து ஆச்சரியமடைந்தவராகிறார்.
விஸ்மயம் வியப்பு விஸ்ம்ருதி மறப்பு

புகழும்நல் ஒருவன்’ என்ற திருவாய்மொழியும், ‘நல்குரவும் செல்வும்’ என்ற திருவாய்மொழியும், இத்திருவாய்மொழியும்
பொதுவாக நோக்க ஒன்றாக இருந்தனவே யாகிலும் ஒவ்வொன்றற்கும் வேறுபாடு சிறிது உண்டு என்க.

‘புகழும் நல்ஒருவன்’ என்ற திருவாய்மொழி ஐயத்திலே – நோக்கு.–ஜெகதாகாரத்வம் –
‘நல்குரவும், செல்வும்’ என்ற திருவாய்மொழி மாறுபட்ட ஐஸ்வர்யத்திலே நோக்கு- -விருத்த ஆகாரம் அங்கு
இத்திருவாய்மொழி ஆச்சரியமாக உலக உருவமாய் இருக்குந்தன்மையிலே நோக்கு.-விசித்திர ஆகாரம் இங்கு

—————————————————————————————-

மாயா! வாமனனே!மது சூதா! நீ அருளாய்
தீயாய் நீராய் நிலனாய் விசும்பாய்க் காலாய்த்
தாயாய்த் தந்தையாய் மக்களாய் மற்றுமாய் முற்றுமாய்
நீயாய் நீ நின்றவாறு இவை என்ன நியாயங்களே!–7-8-1-

காரண கார்ய வர்க்கங்கள் -சகல பதார்த்தங்களும் விபூதியாக கொண்ட பிரகாரம் -ஆச்சரிய ரூபன் நீயே அருளிச் செய்ய வேண்டும்
மாயா! வாமனனே!மது சூதா! நீ அருளாய்- ஸ்வாபாவிக ஆச்சரிய சக்தன் -அதுக்கு அநு ரூபமாக
மகா மேருவை மஞ்சாடி கூழாம் கல்லை போலே சுருக்கி -சங்கை தீர்த்து –
தீயாய் நீராய் நிலனாய் விசும்பாய்க் காலாய்த்-அண்ட காரணம் பூத பஞ்சகம் -சாமா நாதி கரண்யம் சரீராத்மா நிபந்தம்
வ்ருத்த ஸ்வ பாவம் இவை -இருந்தாலும் இவை எல்லாம் சரீரம் அவனுக்கு -என்ன ஆச்சர்யம் –
தாயாய்த் தந்தையாய் மக்களாய் மற்றுமாய் முற்றுமாய்-ஸமஸ்த பதார்த்தங்கள் -காரிய வர்க்கங்கள் –
நீயாய் நீ நின்றவாறு இவை என்ன நியாயங்களே-பிரகாரங்கள் -தத் பிரகார விசிஷ்டன்
நீ யாய் -உனக்கு அசாதாரண ஆகாரமும் உண்டே -கூரார் ஆழி –இத்யாதி
உபபக்தி பொருத்தம் புரிய வில்லை -நீயே அருளிச் செய்ய வேணும் –
சர்வாத்மகன் தான் -தத் கத தோஷம் இல்லாமல் -உள்ளாய் –
வேதாந்த ரகசிய பொருத்தங்களை நீயே அருளிச் செய்ய வேணும்

மாயவனே! வாமனனே! மதுசூதனனே! தீயாகி நீராகி நிலனாகி ஆகாசமாகிக் காற்றாகித் தாயாகித் தந்தையாகி மக்களாகி மற்றைய
உறவினர்களாகி மேலும் சொல்லப்படாத பொருள்களுமாகி உனது உருவுமாகி நீ நின்றபடிகள் தாம் இவை என்ன படிகள்?
இத்திருவாய்மொழி, கலைநிலைத்துறை.

விசித்திரமான காரிய காரணங்களை எல்லாம் விபூதியாகவுடையனாய் இருக்கிற இருப்பை அநுசந்தித்து,
‘இவை என்ன படிகள்!’ என்று ஆச்சரியப்படுகிறார்.

மாயா –
‘மாயா!’ என்கிற இது, இத்திருவாய்மொழிக்காகச் சுருக்கமாய் இருக்கிறது.

மாயனை மன்னு-அங்கும் 30 பாட்டிலும் மாயன் அர்த்தம் கோத்து அர்த்தங்கள் உண்டே –

வாமனனே –
‘மாயன் என்கிற பதத்திற் சொல்லுகிற ஆச்சரியத்தினை அறிகிற இடமாய் இருக்கிறது. என்றது,
அன்றே பிறந்து அன்றே வளர்ந்து –பெரியதிருவந்தாதி.-
மஹாபலி பக்கலிலே சென்று. அவன் முன்னே நின்று, தான் சொன்னவை எல்லாம் செய்ய வேண்டும்படி வார்த்தை அருளிச் செய்து,
சிற்றடியைக் காட்டிப் பெரிய அடியாலே அளந்து கொண்டு,
இப்படிச் செய்த செயல்கள் அனைத்தையும் முன்னோட்டுக்கொண்ட வாமனனே!’ என்கிறார் என்றபடி.

மதுசூதா –
ஆச்சரியமான செயல்களுக்கு எல்லாம் ஸ்ரீ வாமனனைப் போலேயாயிற்று,
பகைவர்களை அழிப்பதற்கு மதுசூதனன் என்கிறது.

மதுசூதா நீ அருளாய் –
மது என்னும் அசுரனை அழித்தாற்போலே, எனக்கு ஓடுகிற ஐயத்தையும் நீயே போக்கித் தந்தருள வேணும்.

தீயாய் நீராய் நிலனாய் விசும்பாய்க் காலாய் –
காரியத்தைப் பற்றி இருக்கிற விசித்திரத் தன்மை காரணத்திலேயும் உண்டாய் இருக்கும் அன்றோ?
மேலும், ஒன்றின் படியாய் இராதே அன்றோ மற்றையது?
இப்படி வேறுபட்ட பிரகாரங்களை யுடையனவான ஐம் பெரும் பூதங்களுக்கும் நிர்வாஹகனாய்.

தாயாய்த் தந்தையாய் மக்களாய் மற்றுமாய் –
காரிய வர்க்கத்திலும் தாய் செய்தது தமப்பன் செய்ய மாட்டான்;
தமப்பன் செய்யும் உபகாரங்கள் மக்கள் செய்ய மாட்டார்கள்;
மக்கள் செய்யும் உபகாரம் உறவினர்கள் செய்ய மாட்டார்கள்;
இப்படி எல்லா விதமான உறவினர்களுமாய்.

முற்றுமாய் –
சொல்லப்படாத தொடர்பு பெற்றவைகளாயுள்ள சேதன அசேதனங்கள் எல்லாவற்றிற்கும் நிர்வாஹகன் ஆனவனே!

நீயாய் –
உலக உருவமாய் இருக்கும் அளவு அன்றே தனக்கே உரியதான விக்கிரகத்தோடு கூடி இருக்கும் இருப்பு?

இவர்க்குப் பரம பதத்திலே நித்திய ஸூரிகளுக்கு இனியனாய் இருக்கும் இருப்போடு,
உலக உருவமாக நிற்கும் நிலையோடு வாசி அறப் போக்கியமாம்படி அன்றோ
இவர்க்குப் பிறந்த ஞானத்தின் தெளிவு இருக்கிறபடி?

நீ நின்றவாறு-
இப்படி இவை எல்லாமாய்க் கொண்டு நீ நின்ற பிரகாரம்.

இவை என்ன நியாயங்கள்-
இவை என்ன படிகள் தாம்?

முதல் திருவாய்மொழியிலே இவனுடைய இறைமைத் தன்மையை அனுபவித்திருக்கச் செய்தேயும்,
இதற்கு முன்பு கண்டறியாதாரைப் போலே புதியராய் அனுபவிக்கிறாராயிற்று.
குணானுபவத்தில் கணந்தோறும் புதுமை பிறந்து அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆராவமுதமாய் –திருவாய் 2. 5 : 4.-
அனுபவிக்குமாறு போலேயாயிற்று, விபூதி அனுபவத்திலும் புதியராய் அனுபவிக்க வல்ல படி.

இவை என்ன நியாயங்கள் நீ அருளாய்-
இதனை அருளிச் செய்ய வேணும்.
‘ஏ கிருஷ்ணனே! என் சந்தேகத்தை அடியோடு போக்குதற்கு நீ தான் தக்கவன்;
இந்த சந்தேகத்தை நீக்குகின்றவன் உன்னை ஒழிய வேறு ஒருவன் இலன்,’ என்கிறபடியே,
அருச்சுனனுடைய சந்தேகத்தைத் தீர்த்தாற்போலே, என்னுடைய ஐயத்தையும் தீர்த்தருள வேணும்.

‘ஏதம் மே ஸம்ஸயம் க்ருஷ்ண சேத்தும் அர்ஹஸி அஸேஷத;
த்வத் அந்ய: ஸம்ஸயஸ்ய அஸ்ய சேத்தா நஹ்யுப பத்யதே’-என்பது, ஸ்ரீ கீதை, 6 : 39.

————————————————————————————————

அங்கண் மலர்த் தண் துழாய் முடி அச்சுதனே!அருளாய்
திங்களும் ஞாயிறுமாய்ச் செழும் பல் சுட ராய் இருளாய்ப்
பொங்கு பொழி மழையாய்ப் புகழாய்ப் பழியாய்ப் பின்னும் நீ
வெங்கண் வெங் கூற்றமுமாம் இவை என்ன விசித்திரமே!-7-8-2-

நியாயங்கள் முடிந்து -இங்கு -அபிமத சித்தியால் வந்த பூர்த்தியால் -அச்சுதன் -மிக உயர்ந்த சகல தேஜஸ் பதார்த்தங்கள் விபூதி -விசித்திரம்
அங்கண் மலர்த் தண் துழாய் முடி அச்சுதனே!அருளாய்-அம் கள்-இங்கு -மதுவை உடைய பூவை –கை விடாதே -சேஷித்வ பூர்த்தியால் -ஆழ்வாரைப் பெற்றதால்
திங்களும் ஞாயிறுமாய்ச் செழும் பல் சுட ராய் இருளாய்ப்-தேஜஸ் பதார்த்தங்கள் பிராணிகளுக்கு பதார்த்த தர்சனம் பண்ண முடியாத இருள்
பொங்கு பொழி மழையாய்ப் புகழாய்ப் பழியாய்ப் பின்னும் நீ-வளர வேண்டிய மழை-செழிப்பாக -தர்மம் -புகழ் -துர் வியோகம் பாத்திரம் வரும் பழி
பகவானுக்கும் பிறக்கும் என்றால் புகழ் இங்கே பரம பதம் –
வெங்கண் வெங் கூற்றமுமாம் இவை என்ன விசித்திரமே-பழி மிக்கு இருந்தால் -சீற்றம் மிக்கு -முடித்து -உபசம்ஹரித்து
க்ரூர கண் க்ரூர ஸ்வபாவம் என்ன விசித்திரமான பிரகாரங்கள்

அழகிய தேனோடு கூடிய மலர்களையுடைய குளிர்ந்த திருத்துழாயை முடியிலேயுடைய அச்சுதனே! சந்திரனும் சூரியனுமாகி அழகிய
பல வகையான நக்ஷத்திரங்களாகி இருளாகியும், மிகுதியாகப் பெய்கின்ற மழையாகிப் புகழாகிப் பழியாகி. அதற்கு மேலே
தறுகண்மையும் கொடுமையுமுடைய யமனுமாய் இருக்கின்ற இவை என்ன ஆச்சரியம்! அருளிச்செய்வாய்.

சந்திரன் சூரியன் முதலான பொருள்கள் முழுதும் தனக்கு விபூதியாகவுடையனாய் இருக்கிற படியை அருளிச் செய்கிறார்.

அம் கள் மலர்த் தண் துழாய் முடி அச்சுதனே –
அழகிதாய்த் தேனோடு கூடின மலரை யுடைத்தாய்க் குளிர்ந்திருந்துள்ள திருத்துழாயைத் திருமுடியிலேயுடையையாய்,
அந்த ஒப்பனையால் வந்த அழகுக்கு ஒரு நாளும் ஒரு வேறுபாடும் இன்றிக்கே என்றும் ஒக்க நித்தியாம்படி இருக்கிறவனே!
வைத்த வளையத்தைப் போன்றும் போக்கியமாகிறதாயிற்று விபூதி அனுபவம் இவர்க்கு. -இது ஒரு வளையமே -கங்குலும் பகலில் பார்த்தோம் –
‘மேல் திருவாய்மொழியிலே ‘விள்கின்ற பூந்தண் துழாய் விரை நாற வந்து’ என்று சொன்னதை நினைக்கிறார்’ என்று. பிள்ளான்பணிப்பர்.
மாயன் குழல் விள்கின்ற பூந்தண் துழாய் உருவு வெளிப்பாடாய்த் துன்புறுத்தல் தவிர்ந்து, நேரே கண்டு அனுபவிக்கிறார் அன்றோ?

உருவ வெளிப்பாடும் அவனைப் பார்க்க வேண்டும் -இப்பொழுது விபூதியைப் பார்க்கிறார் -துளசி கண்ணால் பார்க்கலாமே –
இதற்கு அந்தராத்மா என்று அன்றோ பார்க்கிறார் -அதனால் பாதிப்பு இல்லை -இதில் -ப்ரீதி அப்ரீதிகள் மாறி மாறி தானே இவருக்கு வரும் –

திங்களும் ஞாயிறுமாய் –
‘சூரியகிரணங்களால் உண்டான தாபத்தைச் சந்திரன் நீக்கினான்,’ என்கிறபடியே,

‘ஸூர்யாம்ஸூ ஜநிதம் தாபம் நிந்யே தாராபதி: ஸமம்
அஹம் மாநோத்பவம் துக்கம் விவேக: ஸூமஹாந் இவ’-என்பது ஸ்ரீ விஷ்ணு புரா. 5. 10 ; 13.

சூரியனுடைய கிரணங்களாற்பிறந்த வெப்பம் எல்லாம் போம்படி குளிர்ச்சியைச் செய்யக்கூடியதான சந்திரனும்
அவனால் வந்த குளிர்ச்சியை அறுத்துக்கொடுக்கும் சூரியனுமாய்.

செழும் பல் சுடராய்-
சேதநர்க்கு வரும் லாபாலாபங்களை அறிதற்குத் தகுதியான சஞ்சாரத்தையுடைய நக்ஷத்திரங்ளுமாய்.

இருளாய் –
சேதநர்கட்கு இன்ப நுகர்ச்சிக்கு உரியதான இருளாய்.

பொங்கு பொழி மழையாய் –
எல்லாப் பிராணிகளும் உயிர் வாழலாம்படி பயிர்களை உண்டாக்கும் மழையுமாய்.

புகழாய் –
எல்லாரும்  ஆசைப் படும் யஸஸ்ஸாய்- கீர்த்தியாய்.

பழியாய்-
எல்லாரும் வருந்தியும் நீக்கக் கூடியதான பழியாய்.

பின்னும்-
அதற்கு மேலே.
வெங்கண் வெங் கூற்றமுமாம் –
‘முன்னே இளகின மனத்தை யுடையவரும் புலன்களை அடக்கியவரும் எல்லாப் பிராணிகளுக்கும் நலத்தைச் செய்வதில்
விருப்ப முடையவருமாய் இருந்து விட்டு இப்போது சீற்றத்தை அடைந்து இயல்பான தன்மையை விடத் தக்கவர் அல்லர்’ என்கிறபடியே,

‘புரா பூத்வா ம்ருது: தாந்த: ஸர்வபூத ஹிதேரத:
ந க்ரோத வஸம் ஆபந்ந: ப்ரக்ருதிம் ஹர்தும் அர்ஹஸி’-என்பது, ஸ்ரீராமா. ஆரண். 65 : 4.

இவை மிகுதி யுற்றவாறே குளிர நோக்குமது தவிர்ந்து, வெவ்விதான நோக்கினை யுடையையாய்.
அன்றிக்கே,வெங்கூற்றம்-
அந்தகன் ‘தண்ணீர்’ என்னும்படி வெவ்விய கூற்றமுமாம். என்றது,
அழித்தல் தொழிலில் உருத்திரனுக்கு அந்தர்யாமியாய் இருக்கும் தன்மையைச் சொன்னபடி.
இவை என்ன விசித்திரமே-இவை என்ன ஆச்சிரயந்தான்! அருளாய்.

—————————————————————————————-

சித்திரத் தேர் வலவா!திருச் சக்கரத் தாய்!அருளாய்
எத்தனையோர் உகமும் அவையாய் அவற்றுள் இயலும்
ஒத்த ஒண் பல் பொருள்கள் உலப்பில்லனவாய் வியவாய்
வித்தகத்தாய் நிற்றி நீ இவை என்ன விடமங்களே!–7-8-3-வித்தகத்தால் பாட பேதம்

கால உபலசித்தமான -ஆஸ்ரித பரதந்த்ரன் -உத்துங்கன் -யுகம் தோறும் மாறாமல் -தொற்று அற்று நீ இருக்கும் வைஷம்யம்
சித்திரத் தேர் வலவா!திருச் சக்கரத் தாய்!அருளாய்–தேரோட்டி -விசித்ரமாம் படி -அவஸ்த்தை அனுரூபமாம் படி நடத்தி
அந்த வைச்சித்ரம் போலே பகலை இரவாக்கும் பரிகரம் உடைய
எத்தனையோர் உகமும் அவையாய் அவற்றுள் இயலும்-அத்விதீயமான யுகங்களுக்கு நிர்வாகன்-கால காலயமா கொண்டு -பிரிவுடன் –
ஒத்த ஒண் பல் பொருள்கள் உலப்பில்லனவாய் வியவாய்-ஞான ஏக ஆகாரத்தயா ஒத்து ஞான ஸ்வரூபத்தால் சமம் -ஸ்வயம் பிரகாசம்
கர்மானுகுணமாக சிக்குண்டு -ஞாத்ருத்வம் ஸ்வ பாவம் -தர்மிக் ஞானம் -தர்ம பூத ஞானம் புத்தி -ஏகோ பஹு நாம் –
ஸ்வரூப பேதம் -பின்னம் உண்டு சமமான ஆகாரம் -உலப்பு இல்லா எண்ணில் அடங்காமல் -சாமியாகார திரோதாகாரம்
வியவு வேறுபாடு தேவாதி -இவற்றுக்கும் நிர்வாககனாய்
வித்தகத்தாய் நிற்றி நீ இவை என்ன விடமங்களே-என்னிடத்தில் அவை இல்லை அவை இடத்தில் நான் இல்லை கீதை 7 அத்யாயம்
ஆதார ஆதேய பாவம் -உள்ளே இருந்தாலும் -ஆத்மா சரீரத்துக்கு போலே -ஆத்மாவுக்கும் இவனே ஆதாரம் –
பஸ்யமே யோகம் ஐஸ்வர்யம் -தத் கத தோஷ அஸ்ப்ருஷ்டன் -இவை என்ன வைஷம்யங்கள்

‘அழகிய தேரை நடத்தியவனே! அழகிய சக்கரத்தையுடையவனே! யுகங்கள் அவையுமாகி, அவற்றுள் நடக்கின்ற ஒத்தனவாயும் ஒள்ளியவாயும்
எல்லையில்லாதனவாயும் இருக்கின்றவாகிய பல பொருள்களாகியும் அவற்றின் வேறுபாடுகளாகியும் ஆச்சிரயப்படத்தக்கவனாய் நீ நிற்கின்றாய்;
இவை என்ன வேறுபாடுகள்! அருளிச்செய்ய வேண்டும்,’ என்கிறார்.
‘எத்தனையோர் உகம் அவையுமாய்’ எனப் பிரித்துக் கூட்டுக. ‘ஒத்த ஒண் உலப்பு இல்லன பல்பொருள்களாய்’ என்க. வியவு – வேறுபாடு, விடமம் – வேறுபாடு.

‘கிருதயுகம் முதலான யுகங்களையும், அந்த அந்தக் காலங்களில் உண்டான தேவர் மனிதர் முதலான
பொருள்களையும் விபூதியாக வுடையவன்,’ என்கிறார்.

சித்திரம் தேர் வலவா –
விசித்திரமாம்படியாகத் தேரை நடத்த வல்லவனே!
விசித்திரமாவது, துரோணன் கையும் அணியும் வகுத்து வாசலைப் பற்றி நிற்க,
அவனை வளைந்து அவனுக்கு அவ் வருகே தேரைக் கொடு போய் நிறுத்தி, அவன் போர் செய்தற்கு இடம் அறுத்தல்.

அன்றிக்கே,
‘வீடுமன் கையில் அம்பு தூரப்போய் விழும்; அருச்சுனன் கையில் அம்பு இவ் வருகே விழும்;
ஆகையாலே, அவன் அம்பு விடப் புக்கவாறே தேரைப் பின்னே கழலக் கொடு போயும்,
இவன் அம்பு விடப் புக்கவாறே தேரைக் கிட்ட நிறுத்தியும், இப்படித் தேரை நடத்தும்படியை நோக்கி’ என்னவுமாம்.

திருச் சக்கரத்தாய் –
பகலை இரவாக்கும் பரிகரத்தை யுடையவனே!

எத்தனையோ உகமுமவையாய் –
கிருத் யுகம் முதலான யுகங்களுக்கெல்லாம் நிர்வாககனாய்.

அவற்றுள் இயலும் –
அவற்றுக்குள்ளே வாழ்கிற.

ஒத்த வியவாய் ஒண் பல் பொருள்கள் உலப்பில்லனவாய் –
ஓர் ஆகாரத்தாலே ஒத்தும், வேறு ஆகாரத்தாலே வேறுபட்டும் இருப்பனவுமாய்,
விலட்சணமுமான பல வகைப்பட்ட பொருள்கள் பலவற்றை யுடையையாய். என்றது,
‘தேவர் மனிதர் முதலிய சாதியாலே ஒத்தும், வடிவு வேறுபட்டாலே வேறுபட்டும் இருக்கிற பல பொருள்களுமாய்’ என்றபடி.

அன்றிக்கே,
எல்லா ஆத்துமாக்களும் ஞானத்தாலே ஒத்திருக்கச் செய்தேயும் நான் நீ முதலிய வேறுபாட்டாலே
வேறுபட்டவர்களாய் இருப்பர்கள் அன்றோ? அவற்றைத் தெரிவித்தபடி ஆகலுமாம்.

வித்தகத்தாய் நிற்றி நீ –
இப்படி ஆச்சரியப்படத் தக்கவனாய்க் கொண்டு நில்லா நின்றாய் நீ.

இவை என்ன விடமங்களே –
இவை என்ன சேராச் சேர்த்தியான செயல்கள் தாம்?
ஒத்தும் வியவ்வாயும் -உலப்பில்லா ஒண் பொருள்களை -சித்தியும் -பல பொருள்கள் -அசித்தையும்

——————————————————————————————————

கள்ளவிழ் தாமரைக் கண் கண்ணனே!எனக்கு ஒன்று அருளாய்
உள்ளதும் இல்லதுமாய் உலப்பில்லனவாய் வியவாய்
வெள்ளத் தடங்கடலுள் விட நாகணை மேன் மருவி
உள்ளப் பல் யோகு செய்தி இவை என்ன உபாயங்களே!–7-8-4-

பரத்வ ஸுலப்யம் போக்யத்வம் தோற்றும் படி -புண்டரீகாக்ஷன் -நித்யம் அநித்தியம் -உள்ளதும் இல்லதுமாய்-
ஒருபடிப்பட இருக்காதே -அசித் -ஸமஸ்த பதார்த்தங்களும் பிரகாரமாகக் கொண்டு
கள்ளவிழ் தாமரைக் கண் கண்ணனே!எனக்கு ஒன்று அருளாய்-நீ நினைக்கும் ரக்ஷணம் உபாயங்கள்
உள்ளதும் இல்லதுமாய் உலப்பில்லனவாய் வியவாய்-அவஸ்தை மாறாத சித்துக்கள் அவஸ்தாந்தர பேதம் உள்ள அசித்துக்கள்
-எண்ணிக்கை இல்லாத -அவாந்தர பேதங்கள் கொண்ட -பட்டாம் பூச்சி 27 லக்ஷம் உண்டே –
வெள்ளத் தடங்கடலுள் விட நாகணை மேன் மருவி-ரசிப்பதற்கு திருப்பாற் கடலில் -விரோதிகளுக்கு கிட்டே வரமுடியாமல்
உள்ளப் பல்யோகு செய்தி இவை என்ன உபாயங்களே!-ரக்ஷணம் உபாயங்களை சிந்தியா நின்றாய்
-அவதரண -அநிஷ்ட நிவாரண இஷ்ட பிராப்தி ஆஸ்ரித சம்ச்லேஷ உபகார பரம்பரைகள் சிந்தித்து –

‘தேனோடு மலர்கின்ற தாமரை போன்ற திருக்கண்களையுடைய கண்ணனே! அழிதல் இல்லாததாய் இருக்கின்ற சித்து ஆகியும்
, அதினின்றும் வேறுபட்டதாய் இருக்கின்ற அழிந்துபோகின்ற அசித்தாகியும், திருப்பாற்கடலில் விஷம் பொருந்திய ஆதிசேஷ சயனத்தின்மேல் பொருந்தித்
திருவுள்ளத்தில் பல விதமான காக்கும் உபாயங்களைச் சிந்தனை செய்கிறாய்; இவை என்ன விரகுகள் தாம்! எனக்கு ஒன்று அருளிச்செய்யவேண்டும்,’ என்கிறார்.
‘உலப்பு இல்லன உள்ளதுமாய், வியவாய் இல்லதுமாய்’ என்க. உள்ளது-ஆத்துமா. இல்லது – அசித்து.

உலகத்தில் நித்திய அநித்தியமான பொருள்களை விபூதியாகவுடையனாய் இருக்கிறபடியை அருளிச்செய்கிறார்.

கள் அவிழ் தாமரைக்கண் கண்ணனே –
அப்போது அலர்ந்த தாமரைப்பூப்போலே இருக்கின்ற திருக்கண்களையுடையவனாய்ப் பவ்யனாய் இருக்கிறவனே!
அவனுடைய திருக்கண்கள் போலே ஆயிற்று, இவர்க்கு விபூதியும் கவர்ச்சியாய் இருக்கிறபடி.

அன்றிக்கே,
‘திருக்கண்களைப் போன்று துன்பத்தைச் செய்வதாகா நின்றது ஆயிற்று விபூதி அனுபவமும் இவர்க்கு,’ என்னுதல்.
‘துன்பத்தைச் செய்வதாவது என்?’ என்னில், ‘இன்னது’ என்று நிச்சயிக்கமாட்டாதே ஐயுற்றுப் பட்டது ஒரு துக்கம் உண்டே அன்றோ?
அதுவும் துன்பத்தைச் செய்வதாக இருக்குமே? அதனைச் சொல்லுகிறது. முடிச்சோதி யாய் -சங்கை போலே -பாதிப்பு -சம்சயித்து பட்ட கிலேசம் –

அன்றிக்கே,
‘மேல் திருவாய்மொழியிலே, ‘சூழவும் தாமரை நாண்மலர்போல் வந்து தோன்றும்’ என்றதனை நினைக்கிறார,்’ என்று பிள்ளான் பணிக்கும்.
அதனைச் சீயர் கேட்டருளி, ‘மேலே ஓடுகிற ரீதியின்படியே இதுவும் ஆகப்பெற்றதாகிர் அழகிது!
அங்ஙன் அன்றிக்கே, இது வேறு ரசமாய் அறிவுண்டான பின்பு இவ்விடத்தோடு பொருந்தமாட்டாது’ என்று அருளிச்செய்தாராம்.

உள்ளதும் இல்லதுமாய் உலப்பு இல்லனவாய் வியவாய் –
உலப்பு இல்லனவாய்க் கொண்டு உள்ளதுமாய், வியவாய்க்கொண்டு இல்லதுமாய் இருக்கின்ற சேதந அசேதநங்களுக்கு நிர்வாஹகனாய்.
‘அரசனே! எது எந்தக் காலத்திலும் வளர்தல் குறைதல் முதலிய வேறுபாடுகளை அடைவது இல்லையோ,
அதுதான் வஸ்து; ‘அது எது?’ என்று ஆராயந்து பார்,’ என்கிறபடியே,-ரைக்குவர் -விருத்தாந்தம் –

‘யத்து காலாந்தரேணாபி ந அந்ய ஸம்ஜ்ஞாம் உபைதி வை
பரிணாமாதி ஸம்பூதாம் தத்வஸ்து ந்ருப தச்ச கிம்’-என்பது, ஸ்ரீ விஷ்ணு புரா. 2. 13 : 96.

அசித்து அழிந்து போவதாய் இருக்கையாலே ‘இல்லது’ என்று சொல்லலாய் இருக்கும்;
ஆத்தும வஸ்து ஒரே தன்மையாக இருக்கையாலே ‘உள்ளது’ என்கிறது.

வெள்ளம் தடம் கடலுள் விடம் நாகணை மேல் மருவி –
திருப்பாற்கடலில், பிரதிகூலர்க்குக் கிட்ட ஒண்ணாதபடி விஷத்தை உமிழா நின்றுள்ள திருவனந்தாழ்வான்மேலே பொருந்தி.
‘ஆங்கு ஆரவாரமது கேட்டு அழல் உமிழும். பூங்கார் அரவணையான்’ நான்முகன் திருவந். 10.-என்கிறபடியே,
இடம் அல்லாத இடத்திலும் அச்சத்தாலே சங்கை கொண்டு அழல் உமிழுமவன் அன்றோ?

உள்ளப் பல் யோகு செய்தி –
திரு வுள்ளத்திலே இரட்சண சிந்தை பல செய்யா நிற்றி. ஆத்துமாக்கள் பல்வேறு வகைப்பட்டிருத்லைப்போலும் போருமாயிற்று,
அவன் செய்யும் இரட்சண சிந்தையில் பரப்பு.
இப்போது இது முன்னும் பின்னும் சேருமாறு யாங்ஙனம்?’ எனின்,

அசித்தாவது, அழிவதாய்க் கொண்டு விடக் கூடியதாக இருக்கும்;
ஆத்தும வஸ்து ஒரே தன்மையதாய்க் கொண்டு கொள்ளக் கூடியதாக இருக்கும்;
இவை இரண்டையும் நியமிப்பவனாய் இருப்பான் ஈஸ்வரன்:

‘இச் சேதனன் தானும், தான் செய்தது ஒரு கர்மமும் தனக்கு என ஒரு ருசியுமாய் இருக்கையாலே,
இவன், தனக்கு என்ன ஓர் இச்சை பிறக்கில் அல்லது நம்மைப் பெற விரகு அற்று இருந்தது;
இவனுக்கோ, அது இல்லையாய் இருந்தது; இனிச் செய்யும்படி என்?’ என்று, இவன்,
‘இந் நின்ற நீர்மை இனி யாம் உறாமை’ என்றால் செய்யுமதனை, இவன் தலையிலே இசைவு இன்றிக்கே இருக்கச் செய்தே,
‘இவன் நம்மைக் கிட்டினானாம் விரகு ஏதோ?’ என்று அதற்கு உறுப்பாக உபாய சிந்தை செய்து திருக் கண் வளர்ந்தருளுகிறபடி’ என்க.

இவை என்ன உபாயங்களே –
சேதநர் பலரானால் அவ்வவருடைய இரட்சணங்களும் பலவாயே அன்றோ இருப்பன?
அதற்குத் தகுதியாக உபாயங்களையும் அறியுமே முற்றறிவினன் ஆகையாலே. இவை என்ன விரகுகளே!

——————————————————————————————

பாசங்கள் நீக்கி என்னை உனக்கே அறக் கொண்டிட்டு நீ
வாச மலர்த் தண் துழாய் முடி மாயவனே!அருளாய்
காயமும் சீவனுமாய்க் கழிவாய்ப் பிறப்பாய் பின்னும் நீ
மாயங்கள் செய்து வைத்தி;இவை என்ன மயக்குகளே.–7-8-5-

நிதானப் பாசுரம் -ஆச்சரிய ஜகதா காரம் அனுபவிக்கிறார்
அநந்ய பிரயோஜனமாம் படி ஆக்கி -அதிசய போக்யத்தைக் கொண்டு -சரீராத்மா சம்பந்தம் -நீ இட்ட வழக்கு –
கர்மானுகுணமாக -உத்பத்தி விநாசமும் நீ இட்ட வழக்கு -இவை பிரமிக்கும் படி மயக்குகின்றன -அகப்படுத்தி வைக்கும் பிரகாரம் புரிய வில்லையே
பாசங்கள் நீக்கி என்னை உனக்கே அறக் கொண்டிட்டு நீ-த்வத் ஏக சேஷமாக -உனக்கே ஆட்பட்டு -உதவாத சங்கங்கங்கள் -நீக்கி
தனக்கே யாக என்னைக் கொண்டு -வாச மலர்த் தண் துழாய் முடி மாயவனே!அருளாய்-பரிமள பிரசுரம் -இத்தைக் காட்டியே
அடிமை ஆக்கிக் கொண்டாய் -ரக்ஷகன் போக்யன் –
காயமும் சீவனுமாய்க் கழிவாய்ப் பிறப்பாய் பின்னும் நீ-சரீரம் ஆத்மாவும் -பந்தக சரீரம் -பந்தப்பட்டு இருக்கும் ஜீவன் நீ இட்ட வழக்கு
விநாச உத்பத்திகளும் -நீ இட்ட வழக்கு மாயங்கள் செய்து வைத்தி;இவை என்ன மயக்குகளே-அவித்யா கர்மா ருசி வாசனைகள் –
உள்ள சம்சாரத்தில் இன்னும் வைத்து இருக்கிறாயே -இது என்ன மாயம் -அருளிச் செய்ய வேண்டும்

‘சரீரமும் ஆத்துமாவுமாகியும். இறப்பாகிப் பிறப்பாகியும் இருக்கின்ற வாசனை பொருந்திய மலர்களையுடைய குளிர்ந்த திருத்துழாயினைத்
தரித்த திருமுடியையுடைய மாயவனே! நீ என்னுடைய பாசங்களை எல்லாம் நீக்கி என்னை உனக்கே அடிமையாகக் கொண்டும்,
அதற்கு மேலே நீ இச்சரீரத்தோடே பொருத்தி வைத்திருக்கின்றாய்; இவை என்ன மயக்கங்கள்? அருளிச்செய்ய வேண்டும்’ என்கிறார்.
‘கழிவாய்ப் பிறப்பாய் இருக்கின்ற முடி மாயவனே!’ எனக் கூட்டுக. ‘நீக்க அறக்கொண்டிட்டும் பின்னும் வைத்தி,’ என்க.

இத்திருவாய்மொழிக்கு நிதானமான பாட்டாயிற்று இது.
அதாவது, ‘மயர்வற மதிநலம் அருளி, பின்னையும் எனக்குப் பொருந்தாததான சம்சாரத்திலே என்னை வைத்து
வாழ்வித்துக் கொடு போகிற இவ்வாச்சரியம் இருந்தபடியை எனக்கு அருளிச்செய்ய வேணும்,’ என்கிறார்.

பாசங்கள் நீக்கி –
மயர்வை அறுத்து; என்றது, ‘அவித்தியை முதலானவைகளைப் போக்கி’ என்றபடி.
பல செய்வினை வன் கயிற்றால் சூழ்த்துக் கொண்டதனை நீக்கி. –திருவாய். 5. 1 : 5.-

என்னை-
வேறு விஷயங்களிலே கால் தாழ்ந்திருக்கிற என்னை.

உனக்கே அறக் கொண்டிட்டு-
துயர் அறு சுடர் அடி தொழும்படியாகச் செய்து.
‘பாசங்கள் நீக்கிற்றும் தனக்கே அறக்கொண்டதும் எதனைக் காட்டி?’ என்னில்,

வாசம் மலர்த் தண்துழாய் முடி மாயவனே –
வைத்த வளையத்தில் அழகைக் காட்டியாயிற்று,புறம்பு உண்டான பற்று அறுத்ததும்,
தனக்கே யாம்படியாகச் செய்ததும்.

அருளாய் –
இவ்வளவு புகுர நின்ற என்னை இங்கே இட்டு வைத்து நலியவோ?

காயமும் சீவனுமாய்க் கழிவாய்ப் பிறப்பாய் –
சரீரமும் ஆத்துமாவுமாய், பிறப்பு, இறப்புகளுமாய்.

பின்னும் நீ மாயங்கள் செய்து வைத்தி-
உன் பக்கலிலே அறிவைப் பிறப்பித்து, பின்னையும் இதிலே பொருந்தாதபடியான
என்னைச் சம்சாரத்திலே வையா நின்றாய்.

இவை என்ன மயக்குகளே-
இவை என்ன தெரியாத செயல்கள் தாம்!
புறம்பு உண்டான பற்றை அறுத்து உன் பக்கலிலே அன்பைப் பிறப்பிக்கையாலே
நீ அங்கீகரித்தாயோ என்று இரா நின்றேன்;
பின்னையும் இச் சம்சாரத்திலே வைக்கையாலே கைவிட நினைத்தாயோ என்று இரா நின்றேன்;
இது என்ன மயக்கம்!

———————————————————————————————

மயக்கா! வாமனனே! மதியாம் வண்ணம் ஒன்றருளாய்
அயர்ப்பாய்த் தேற்றமுமாய் அழலாய்க் குளிராய் வியவாய்
வியப்பாய் வென்றிகளாய் வினையாய்ப் பயனாய்ப் பின்னு நீ
துயக்கா நீ நின்றவாறு இவை என்ன துயரங்களே.–7-8-6-

மாயா வாமனன் தொடங்கினார் -பிரமிக்கும் படி சேஷ்டிதங்கள் உடைய வாமனன் -விஸ்ம்ருதி யாதி மறக்கும் படி விசித்ரனாய் கொண்டு
-அயர்ப்பு -மறதி -கிலேசங்கள் -எத்தனை
மயக்கா! வாமனனே! மதியாம் வண்ணம் ஒன்றருளாய்-பிரமிக்கும் படி -அழகாலும் -நடத்தையால் -சேஷ்டிதங்கள் -பேச்சாலும்
நெஞ்சு பிரமிக்கும் -கலக்கம் தீரும் படி அருளிச் செய்ய வேண்டும்
கலங்குபவர் ஆத்மா உண்டு -கலக்கும் அசித்தும் உண்டே -கலக்குபவரும் உண்டே -தெளிவிக்கும் ஆச்சார்யர் தெளிந்தவன் சேதனன்
தெளிந்தே இருப்பவர் ஈஸ்வரன் –அயர்ப்பாய்த் தேற்றமுமாய் அழலாய்க் குளிராய் வியவாய்-மறுப்பும் -வியவு விஸ்மயம் -நீ இட்ட வழக்கு
வியப்பாய் வென்றிகளாய் வினையாய்ப் பயனாய்ப் பின்னுநீ-விஜயம் வினை பயன்கள் புண்ய பாப பலன்கள் நீ இட்ட வழக்கு -அந்தராத்மாவாக இருப்பதால்
துயக்கா நீ நின்றவாறு இவை என்ன துயரங்களே-சேதனர் கலங்கும் கலக்கமும் நீயாய் -லீலா ரசிகனாய் நிற்கும் -பிரகாரம் என்னே -கிலேசமாக இருக்கின்றன –

‘மயக்குகின்றவனே! வாமனனே! நான் தெளியும்படி ஒன்று அருளிச் செய்ய வேண்டும்; மறப்பு ஆகித் தெளிவு ஆகி வெப்பமாகிக் குளிர்ச்சியாகி
ஆச்சரியமாகி ஆச்சரியப்படத்தக்க பொருள்களுமாகி வெற்றிகளுமாகி இரு வினைகளாகி இருவினைப் பயன்களுமாகி அதற்கு மேலே உன்னை அடைந்த
அடியவர்களும் மதி மயங்கும்படி நீ செய்துகொண்டு நின்ற விதம் எங்களுக்குத் துக்கத்தைத் தருகின்றனவாய் இராநின்றன, ‘என்றவாறு.

மறதி தொடக்கமான மாறுபட்ட பொருள்களை விபூதியாக உடையனாய் இருக்கிறபடியை அருளிச் செய்கிறார்.

மயக்கா
இன்னார் என்று இன்றிக்கே, யாரேனுமாகக் கிட்டினாரை மயங்கச் செய்யுமவனே!
‘அது எங்கே கண்டோம்?’ என்னில்,

வாமனனே –
காரியம் செய்யப் போந்த நீ, அந்தத் தேவர்களை நெருக்கின மஹாபலி தானே நெஞ்சு நெகிழ்ந்து
உன் கையிலே நீரை வார்த்துத் தானே இசைந்து தரும்படி மயங்கச் செய்தவனே!
‘மன்னை மனங்கொள்ள வஞ்சித்து நெஞ்சுருக்கி’ பெரிய திருமடல், 109.-என்கிறபடியே.

மதியாம் வண்ணம் ஒன்று அருளாய் –
அநுகூலர் பிரதிகூலர் என்ற வேற்றுமை இல்லாமல் மயங்கச் செய்யாதே,
நான் தெளிவை யுடையேனாம்படி செய்தருள வேணும்.

அயர்ப்பாயத் தேற்றமுமாய் –
நினைவும் ஞானமும் மறப்பும் என்னிடமிருந்து உண்டாயின’
ஸர்வஸ்யச அஹம் ஹ்ருதி ஸந்நி விஷ்ட:
மத்த: ஸ்மிருதி: ஜ்ஞாநம் அபோஹநம் ச’-என்பது, ஸ்ரீகீதை, 15 : 15.–என்றான் அன்றோ தானே,

மறதியும் தெளிவுமாய்?
இவ் விடத்தில் மாறுபட்ட தன்மையைச் சொல்லுகிறது அன்று, விசித்திரமான தன்மையைச் சொல்லுகிறது.

அழலாய்க் குளிராய்-
சீத உஷ்ணங்களாய்.

வியவாய் வியப்பாய் –
ஆச்சரியமும் ஆச்சரியப் படத் தக்க பொருள்களுமாகி.

வென்றிகளாய் –
வெற்றிகளாய்.

வினையாய்ப் பயனாய் –
புண்ணிய பாப கர்மங்களாய் அவற்றினுடைய பலங்களுமாகி.

பின்னும் நீ துயக்கா –
அதற்கு மேலே, உன்னை அடைந்தவர்களும் மதி கலங்கும்படி,
அந்யதா ஞானம் விபரீத ஞானம் இவற்றை உண்டாக்கி.

நீ நின்றவாறு –
நீ நின்ற பரிகாரம்.

இவை என்ன துயரங்களே –
உனக்கு இவற்றில் அருமை இன்றியே விளையாட்டாய் இரா நின்றது;
எங்களுக்கு அவை தாம் துக்கத்தைக் கொடுக்கக் கூடியவையாய் இரா நின்றன.

—————————————————————————————–

துயரங்கள் செய்யும் கண்ணா !சுடர் நீள் முடி யாய்!அருளாய்
துயரஞ் செய் மானங்களாய் மதனாகி உகவைகளாய்த்
துயரஞ் செய் காமங்களாய்த் துலையாய் நிலையாய் நடையாய்த்
துயரங்கள் செய்து வைத்தி;இவை என்ன சுண் டாயங்களே.–7-8-7-

கர்ம அனுகுணமாக துக்கம் -துக்க ஹேது துர்மானம் -விபூதியாக கொண்டு சேதனரை துக்கிப்பியா நின்றாய்
லீலார்த்த ஸூ வார்த்த -பிரவ்ருத்தி சம்பந்த உறைப்பால்-சொல்லுகிறார் இப்படி –
துயரங்கள் செய்யும் கண்ணா !சுடர் நீள் முடி யாய்!அருளாய்-அவதார திசையிலும் பரத்வ திசையிலும் துயரங்கள் செய்யும்
புண்ய பாப பலன்களை கொடுத்து -துக்க ரூபமாகவே இருந்தால் அனைவரும் முமுஷுக்கள் ஆவார்கள் –
இன்ப ருசி கண்டு -துயரஞ் செய் மானங்களாய் மதனாகி உகவைகளாய்த்-துர்மானம்-துக்க ஹேது பூதம் -அபிஜனம்-வித்யா சொத்து தனம்-ஆபிரூபியாம்
துயரஞ் செய் காமங்களாய்த் துலையாய் நிலையாய் நடையாய்த்-அபிநிவேசம் -அதனால் வரும் துயரம் பதார்த்த த்ருஷ்ணா ரூபம்
துலை தராசு -ஸ்திதி கமனங்கள்-ஸ்தாவர ஜங்கமங்கள்
துயரங்கள் செய்து வைத்தி;இவை என்ன சுண் டாயங்களே-இவை என்ன ஆச்சார்யம் -பர துக்கம் பாராத ஸூ வார்த்த பிரவர்த்திகள்

துன்பங்களைச் செய்கின்ற கண்ணனே! பிரகாசம் பொருந்திய நீண்ட திருமுடியையுடையவனே! துன்பங்களைச் செய்கிற சாதி முதலானவை
பற்றி வருகின்ற மானங்களாகியும், செருக்காகியும், மகிழ்ச்சிகளாகியும், துன்பங்களைச் செய்கின்ற காமங்களாகியும், அளவாகியும்,
நிற்றலாகியும், நடத்தலாகியும் துன்பங்களைச் செய்து வைத்தாய்; இவை என்ன சுயநலக்காரிங்கள்? அருளிச்செய்ய வேண்டும்.

துயரங்கள் செய்யும் கண்ணா-துக்கங்களைச் செயக் கூடிய கிருஷ்ணனே! ‘எதனாலே நலிவது?’ என்னில்,
‘முடிச்சோதி’ என்ற திருவாய் மொழியிற் கூறியபடியே திருமுடியில் அழகைக் காட்டியாயிற்று.

சுடர் நீள் முடியாய்-
விபூதியைச் சொல்லுவதும் திருமுடியைப் போன்று பாதகம் ஆகா நின்றதாயிற்று.
நிற்றி முற்றத்துள்’ (7. 7 : 10.) என்ற திருப் பாசுரத்தைத் திருவுள்ளம் பற்றி.-

அன்றிக்கே, ‘‘முற்ற இம்மூவுலகும் விரிகின்ற சுடர் முடிக்கே ஒற்றுமை கொண்டது’ என்றது,
‘பின்னாட்டுகிறது,’ என்று பிள்ளான் பணிப்பர்.

அருளாய் –
அவனைக் கேட்டு அறிய வேண்டுகையாலே பாதகமாம் அன்றோ?

துயரம் செய் மானங்களாய் –
‘அடியவனான நான்’ என்கிற அபிமானம் அடிக் கழஞ்சு பெற்றிருக்கும்.-
இன்பம் செய்யும் மானம் அன்றோ இது -சோஹம்-கூடாதே -தாஸோஹம் -கூடுமே
அங்ஙனன்றிக்கே, ஸோஹம் – அந்த நான்’ என்று துக்கங்களைச் செய்யும் அபிமானங்களாய்.

(அபிமான பங்கமாய் என்றும் அபிமான துங்கம் என்றும் உண்டே -ஓன்று த்யாஜ்யம் ஓன்று உபா தேயம்)

மதனாகி உகவைகளாய் –
களிப்பும் அதற்கு அடியான உகவையுமாய்.

துயரம் செய் காமங்களாய் –
‘பொருளின் தொடர்பினால் அப் பொருளில் விருப்பம் முதலியன உண்டாய்ப் புத்தி கெட்டுக் கெடுகின்றான்’ என்கிறபடியே,
‘ஸங்காத் ஸம்ஜாயதே காம: புத்தி நாஸாத் ப்ரணஸ்யதி’-என்பன, ஸ்ரீகீதை, 2. 62 : 63.

கேட்டினை எல்லையாக வுடைய காமங்களாய்;
அங்ஙன் அன்றே, பகவத் காமம்? –கண்ணனுக்கு ஆமது காமம்

துலையாய் – பிரமாணமாய்; நிறுக்குமதாய்.

நிலையாய் நடையாய் –
தாவரங்களும் ஜங்கமங்களும்.
அன்றிக்கே, நிற்றல் நடத்தல்களைச் சொல்லுதலுமாம்.

துயரங்கள் செய்து வைத்தி –
இப்படித் துக்கங்களைச் செய்வியா நின்றாய்.

இவை என்ன சுண்டாயங்கள்-
உனக்கு விளையாட்டாக இரா நின்றது, எங்களுக்குத் துக்கத்திற்குக் காரணமாக இராநின்றது.

————————————————————————————————–

என்ன சுண்டாயங்களால் நின்றிட்டாய் என்னை ஆளுங்கண்ணா!
இன்னதோர் தன்மையை என்று உன்னை யாவர்க்குந் தேற்றரியை
முன்னிய மூவுலகும் மவையாய் அவற்றைப் படைத்தும்
பின்னும் உள்ளாய்!புறத்தாய்!இவை என்ன இயற்கைகளே–7-8-8-.

அதிசயித்த ஞாநர்க்கும் -அவபோதக்கைக்கு அரியனாய் சகல ஜகத்துக்கும் ஸ்ருஷ்ட்டி அநு பிரவேசம் வியாபித்து நியமித்து-இருக்கும் பிரகாரங்கள் –
என்ன சுண்டாயங்களால் நின்றிட்டாய் என்னை ஆளுங்கண்ணா!-பவ்யனான கிருஷ்ணன் –
இன்னதோர் தன்மையை என்று உன்னை யாவர்க்குந் தேற்றரியை-இப்படிப் பட்ட ஸ்வ பாவன் -அபரிச்சின்ன -நிர்ணயித்து காட்ட அரிய
முன்னிய மூவுலகும் மவையாய் அவற்றைப் படைத்தும்-பிரவாஹ அநாதியாய் இருப்பதாய் -க்ருதகம் அகிருதகம் க்ருதாக்ருதகம்
சரீரமாக கொண்டு ஸ்ருஷ்டித்து பின்னும் உள்ளாய்!புறத்தாய்!இவை என்ன இயற்கைகளே-அந்தர்பவித்து நியமிக்க
வெளியில் வியாபித்து ஆதாரம் -ஸ்திதிக்கும் சத்தைக்கும் -இது என்ன ஸ்வ பாவிக ஸ்வ பாவம் –

என்னை ஆளுகின்ற கண்ணனே! என்ன விளையாட்டுகளை யுடையையாய் நிற்கிறாய்? இப்படிப்பட்ட தன்மையை யுடையை என்று உன்னைத்
தெளிந்துகோடற்கு எத்தகைய ஞானிகட்கும் அரியவனாய் இருக்கின்றாய்; பழைமையான மூன்று உலகங்களுமாகியும் அவற்றைப் படைத்தும்
அதற்கு மேலே பொருள்கட்கு உள்ளும் இருக்கின்றாய்; புறத்தும் இருக்கின்றாய்; இவை என்ன தன்மைகள்? அருளிச் செய்ய வேண்டும்.
தேற அரியை-தேற்றரியை. முன்னிய-பழைமையான.

‘எல்லா உலகங்களையும் படைத்து உள்ளும் புறம்பு பரந்து இப்படி நிர்வகித்து வைத்து அறிய
முடியாதவனாய் இருக்கிற இது என்ன ஆச்சரியம்!’ என்கிறார்.

என்ன சுண்டாயங்களால் நின்றிட்டாய் என்னை ஆளும் கண்ணா –
என்ன விளையாட்டுகளை யுடையையாய் நிற்கிறாய், என்னை அடிமை கொள்ளுகிற கிருஷ்ணனே!
இன்னது ஓர் தன்மையை என்று உன்னை யாவர்க்கும் தேற அரியை –

எங்கனே நின்றிட்டாய் -பெரியவாச்சான் பிள்ளை
இன்ன படிப்பட்ட தன்மையை யுடையை என்று, எல்லாப் பொருள்களுக்கும் காரணனாய் இருக்கிற உன்னை,
எத்தனையேனும் மிகுதியுற்ற ஞானத்தை யுடையவர்களாலும் அறிய ஒண்ணாதபடி நிற்புத்தி:
‘பிரமனும் அவனுடைய தன்மையை மிக வருந்தியும் சிறிதும் அறிய மாட்டான்,’ என்கிறபடியே.
‘ப்ரஹ்மாபி நவேத்தி அல்பம் ப்ரயத்நத:’ என்பது.

முன்னிய மூவுலகும் அவையாய்-
பிரவாஹ ரூபத்தாலே பழையதாகப் போருகிற மூவுலகுக்கும் கடவையாய்.

மூவுலகு –
மூன்று வகைப்பட்ட ஆத்துமாக்கள்; அல்லது, மூன்று உலங்கள்.

அவற்றைப் படைத்து –
‘உலகமானது போது, அவற்றை உண்டாக்கி’ என்கிறது.
‘ஆத்துமாக்களான போது, அவர்களுக்கு ஞானத்தின் மலர்ச்சியை உண்டாக்கி’ என்னுதல்.

பின்னும் உள்ளாய் புறத்தாய்-
உள்ளும் புறம்பும் பரந்திருக்கின்றாய்!

இவை என்ன இயற்கைகளே-
உனக்கு இவை தாம் விளையாட்டாக இரா நின்றன; எங்களுக்கு இவை தாம் ஆச்சரியமாக இரா நின்றன

—————————————————————————————————————-

என்ன இயற்கைகளால் எங்ஙனே நின்றிட்டாய் என் கண்ணா
துன்னு கர சரணம் முதலாக எல்லா உறுப்பும்
உன்னு சுவை ஒளி ஊறு ஒலி நாற்றம் முற்றும் நீயே
உன்னை உணர உறில் உலப்பில்லை நுணுக்கங்களே.–7-8-9-

வேதைக வேதியன் -ஸூஷ்ம சேதன அசேதன விசிஷ்டமாய் இருப்பானே –விபு ஸூஷ்மம் – -இந்த்ரியங்களால் அறிய முடியாமல் -மஹத் –
அறிவுக்கு அப்பால் பட்டவன் -கரணங்கள் -விஷயங்கள் அனைத்தையும் வியாபித்து -சூஷ்மத்தால் தான் அறிவுக்கு அப்பால் பட்டவன் என்கிறார்
என்ன இயற்கைகளால் எங்ஙனே நின்றிட்டாய் என் கண்ணா -உன் ஆகாரங்களைக் காட்டி என்னை அடிமை கொண்ட கண்ணா
துன்னு கர சரணம் முதலாக எல்லா உறுப்பும்-கர்ம ஞான இந்திரியங்கள் சரீரம் உடம் ஒட்டிக் கொண்டு
உன்னு சுவை ஒளி ஊறு ஒலி நாற்றம் முற்றும் நீயே-சப்தாதிகள் ஸ்பர்ச ரூப கந்தம் -அந்தர்யாத்மா
உன்னை உணர உறில் உலப்பில்லை நுணுக்கங்களே-அணிமா -சூஷ்மங்களுக்குள் சூஷ்மம் -முடிவே இல்லையே

‘என் கண்ணா! எவ்வகையான இயற்கைகளோடு கூடி என்ன பிரகாரத்தால் நிற்கிறாய்? செறிந்திருக்கின்ற கை கால் முதலான
எல்லா அவயவங்களும் நீயே; நினைக்கப்படுகின்ற சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்று சொல்லப்படுகிற புலன்கள் முழுதும் நீயே;
உன்னை அறியல் உற்றால் நுணுக்கங்கள் எல்லை இல்லாதவனாய் இருக்கின்றனு,’ என்க.

ஞானேந்திரியங்களும் கர்மேந்திரியங்களும் ஐம்புலன்களும் அவனுக்கு விபூதியாக இருக்கிற இருப்பை அருளிச் செய்கிறார்.

என்ன இயற்கைகளால் எங்ஙனே நின்றிட்டாய் என் கண்ணா-
என்ன தன்மைகளை யுடையையாய்க் கொண்டு என்ன பிரகாரத்தாலே நிற்கிறாய்?
எனக்குப் பவ்யனான கிருஷ்ணனே!

துன்னு கர சரண முதலாக எல்லா உறுப்பும் –
நெருங்கி இருந்துள்ள கைகள் கால்கள் தொடக்கமான எல்லா அவயவங்களுக்கும்,
நினைக்கப் படுவனவாய் ஆசைப்படப் படுவனவாய்
இருக்கின்ற ஐம்புலன்களுக்கு கடவையாய் இருந்தாய்.

உன்னை உணர உறில் –
உன்னை அறியப்புகில்.

உலப்பு இல்லை நுணுக்கங்களே –
உன் வைலக்ஷண்யங்களுக்கு முடிவு இல்லை, ‘நுண்பொருளாய் உள்ளவனை’ என்கிறபடியே,
‘அசித் வஸ்துவான சரீரத்தில் ஸூஷ்ம ரூபத்தாலே எங்கும் புக்குப் பரந்திருக்கும் ஆத்தும வஸ்து,
இவ்விரண்டிலும் சூக்கும ரூபத்தோடு பரந்திருப்பாய் நீ’ என்றபடி.

‘நாராயணம் அஸேஷாணாம் அணியாம்ஸம் அணீயஸாம்’-என்பது, ஸ்ரீவிஷ்ணு புரா. 1. 8 : 40.

‘ப்ரஸாஸிதாரம் ஸர்வேஷாம் அணீயாம்ஸம் அணீயஸாம்’-என்பது, மனு தர்மம், 1 : 22.

——————————————————————————————————

இல்லை நுணுக்கங்களே இதனி்ற் பிறி தென்னும் வண்ணம்
தொல்லை நன்னூலிற் சொன்ன உருவும் அருவும் நீயே
அல்லித் துழாய் அலங்கல் அணிமார்ப!என் அச்சுதனே!
வல்லதோர் வண்ணம் சொன்னால் அதுவே உனக்காம் வண்ணமே –7-8-10-

வேதம் உன்னை சொல்ல -விலஷணன்-என்று -அதுவே -பிரிநிலை ஏகாரம் -எவ்வளவு சொன்னாலும் -உன்னை சொல்லி முடிக்காதே
அடியேனும் முடிந்த அளவு சொன்னாலும் அதுவே தனக்கு என்று ஏற்றுக் கொள்கிறாய் இது என்ன ஆச்சர்யம் -தேற்று ஏகாரம் -தன்னேற்றம் நிச்சயம் –
நித்யம் -சூஷ்ம சித்அசித் மூல பிரக்ருதியும் ஸூ ஷ்மம் இந்த்ரியங்களால் கிரகிக்க முடியாதே -பிரகாரமாக கொண்ட நீ
வாக்காலும் மனசாலும் -சொல்ல முடியாதே இல்லை நுணுக்கங்களே இதனி்ற் பிறி தென்னும் வண்ணம்-
இத்தை விட சூஷ்மம் இல்லையே -அவ்யக்தம் தொல்லை நன்னூலிற் சொன்ன உருவும் அருவும் நீயே-புருஷனால் சொல்லப்படாத
வேத சாஸ்திரம் -சமஷ்டி சேதன அசேதனம் -சதேவ ஸோமயே –ஏகமேவ அத்விதீயம் நீயே இருந்தாய் -சரீரியாய்
அல்லித் துழாய் அலங்கல் அணிமார்ப!என் அச்சுதனே!-பூம் தாரை உடைத்தாய் -அப்ரச்சுதா நழுவல் இல்லாத ஸ்வ பாவன் –
வல்லதோர் வண்ணம் சொன்னால் அதுவே உனக்காம் வண்ணமே -சர்வ பிரகார -ஆற்றல் மிக்க -வேதாதிகள் சொன்னாலும்
உனக்கு அதுவே பிரகாரமாம் படி -ஆஸ்ரித பவ்யனாய் இருப்புதியே

‘இதனைக்காட்டிலும் வேறு நுணுக்கங்கள் இல்லை,’ என்னும் வண்ணம் பழையதான சிறந்த வேதத்தில் சொல்லப்பட்ட அசித்தும் சித்தும் நீயே;
அகவிதழையுடைய திருததுழாய் மாலையை அணிந்த திருமார்பினையுடையவனே! என் அச்சுதனே! வல்லது ஒரு வண்ணம் சொன்னால்
உனக்கு ஆம் வண்ணம் அதுவேயாம்.
‘இதனில் நுணுக்கங்கள் பிறிது இல்லை என்னும் வண்ணம்’ என்று மாற்றுக. அல்லி – பூந்தாதுவுமாம்.

வேதங்களாலேயே அறியப்படுமவனாய்க் –காரணாமாய் –அதி சூக்ஷ்மமாயிருந்துள்ள சேதனங்களையும் அசேதனங்களையும்
விபூதியாக வுடையவனாய் இருக்கிறபடியை அருளிச் செய்கிறார்.

இதனின் பிறிது நுணுக்கங்கள் இல்லை என்னும் வண்ணம் –
இதனைக் காட்டிலும் வேறு சூக்ஷ்மமாய் இருப்பது இல்லை என்னும்படி.
அதாவது,
இவற்றுக்குத் தனக்கு என்று ஒரு நாமமும் உருவமும் இன்றிக்கே பிரமத்தினுடைய
நாமத்தையும் உருவத்தையும் இட்டுப் பேச வேண்டும்படி,
காரண நிலையிலே இருக்கிற சேதனங்களும் அசேதனங்களும் நீ இட்ட வழக்கு.

தொல்லை நன்னூலில் சொன்ன உருவும் அருவும் நீயே –
‘முதன்முதலில் ‘சத்’ என்ற ஒன்றே இருந்தது’ என்றது அன்றோ?

ஸதேவ ஸோம்ய இதமக்ர ஆஸீத் ஏகமேவாத்விதீயம்’-என்பது, சாந்தோக்யம், 6. 2 : 1.

ஆக, உலகமே உருவமாய் இருக்கும் இருப்பைச் சொல்லிற்று.

அல்லித் துழாய் அலங்கல் அணி மார்ப-
பரமபதத்தை யுடையனாய் இருக்கும் இருப்பைச் சொல்லுகிறது.
அல்லியை யுடைத்தான திருத்துழாய் மாலையாலே அலங்கரிக்கப்பட்ட திருமார்பினையுடையவனே!

அச்சுதனே –
அவ்விருப்புக்கு ஒரு நாளும் அழிவில்லாதபடி பரமபதத்திலே எழுந்தருளி யிருக்கிற இருப்பை எனக்குப் பிரகாசிப்பிக்கிறவனே!

வல்லது ஓர் வண்ணம் சொன்னால் அதுவே உனக்கு ஆம் வண்ணம் –
இதற்கு இரண்டு படியாக அருளிச்செய்வர்:
‘இவன், தனக்கு உள்ள அளவு எல்லாம் கொண்டு பேசினால், உன் பக்கல் சொல்லிற்றாமத்தனை போக்கியல்லது,
உனக்கு ஓர் அளவு இல்லையே அன்றோ?’ என்னுதல்;
அப்போதைக்கு, அதுவே உனக்கு ஆம் வண்ணம்? – -‘அது அன்று என்கிறது’ என்னுதல்.

அன்றிக்கே,
உன் பக்கல் அன்புள்ளவர்களாய் இருப்பார் எத்தனையேனும் அளவு இன்றிக்கே, இருந்தார்களாகிலும்,
அவர்கள் ஒன்றைச் சொன்னால், ‘ஸ்ரீவைகுண்டத்திலே நித்திய சூரிகள் நடுவே அவர்களுக்குங்கூடப் பேச்சுக்கு நிலம் அன்றிக்கே
இருக்கிற நம்மைச் சம்சாரத்திலே மிகத் தாழ்ந்தவனாய் இருக்கிற இவன் அறிந்தானாகச் சொல்லுவதே?’ என்று சீறுகை அன்றிக்கே,
இவன் சொன்னதுவே தனக்கு அளவாக நினைத்திருக்கும் என்னுதல்.

—————————————————————————————-

ஆம் வண்ணம் இன்னது ஒன்று என்று அறிவது அரிய அரியை
ஆம் வண்ணத்தால் குரு கூர்ச் சடகோபன் அறிந்து உரைத்த
ஆம் வண்ண ஒண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இப் பத்தும்
ஆம் வண்ணத்தால் உரைப்பார் அமைந்தார் தமக்கு என்றைக்குமே.–7-8-11-

யவாதாத்மபாவி பகவத் அனுபவத்துக்கு அற்று தீர்வார்
ஆம் வண்ணம் இன்னது ஒன்று என்று அறிவது அரிய அரியை-இன்னதாம் அவன் வண்ணம் என்று அறிவது அரிய -சர்வேஸ்வரன்
ஆம் வண்ண த்தால் குரு கூர்ச் சடகோபன் அறிந்து உரைத்த-மயர்வற மதி நலம் அருளப் பெற்றதால் அருளிச் செய்த
இதுவே வண்ணம் என்று -உள்ளபடி அறிந்து -அங்குத்தைக்கு அனுரூபமாக அருளிச் செய்த
ஆம் வண்ண ஒண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இப் பத்தும்-சந்தஸ் உடைத்தாய் -சர்வாதிகாரம் தமிழ்
ஆம் வண்ணத்தால் உரைப்பார் அமைந்தார் தமக்கு என்றைக்குமே.-தங்கள் பிரகாரத்துக்கு ஏற்ற படி சொல்லுவார்
என்றைக்கும் -யாவதாத்மா பாவி -சமைந்தார் ஆவார்

வண்ணம் ஒவ்வொரு அடியிலும் இன்ன பிரகாரம் –உள்ளபடி -சந்தஸ் -தங்களுக்கு ஏற்ற படி -என்றபடி

‘உண்டான பிரகாரம் இன்னபடிப்பட்டது ஒன்று,’ என்று அறிதற்கு அரிய சர்வேஸ்வரனை, ஆகின்ற தகுதியால் திருக்குருகூரில் அவதரித்த
ஸ்ரீசடகோபர் அறிந்து அருளிச்செய்த பொருந்திய ஓசையையுடைய அழகிய தமிழ்ப் பாசுரங்கள் ஆயிரத்துள் இப்பத்துப் பாசுரங்களையும்
தங்களுக்குத் தகுந்த முறையால் சொல்ல வல்லவர்கள், தாங்கள் என்றைக்கும் ஈஸ்வரனுடைய அனுபவத்துக்குச் சமைந்தார்கள் ஆவார்கள்.

முடிவில், ‘அங்குத்தைக்குத் தகுதியாக ஆழ்வார் அருளிச்செய்த ஆயிரம் திருவாய்மொழிகளிலும்
தங்கள் தகுதிக்குத் தக்கவாறு சொல்ல வல்லார் என்றைக்கும் -க்ருதக்ருத்யர் ’ என்கிறார்.

ஆம் வண்ணம் இன்னது ஒன்று என்று அறிவது அரிய அரியை
-இன்னபடிப்பட்டது ஒரு தன்மையையுடையவன் என்று கொண்டு யாவராலும் அறிய அரியனாய் இருக்கிற
சர்வேஸ்வரனை ஆயிற்றுக் கவி பாடிற்று.
‘அந்த ஆனந்த குணத்தினின்றும் வேத வாக்குகள் மீண்டனவோ?’ என்கிறபடியே,

‘யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மாஸாஸஹ’-என்பது, தைத்திரீய. ஆனந். 9 : 1.

வேதங்களும் மீண்டவனை ஆயிற்றுப் பேசிற்று.

ஆம் வண்ணத்தால் குருகூர்ச் சடகோபன் அறிந்து உரைத்த-
அவனுக்குத் தகுதியாம்படி ஆழ்வார் அருளிச் செய்த. ‘அறிவது அரிய அரியை’ என்றதாகில்,
‘ஆம் வண்ணத்தால் உரைக்கையாவது என்? முரண் அன்றோ?’ என்னில், ‘அறிந்து உரைத்த’ என்கிறார்; என்றது,
‘அவன் மயர்வற மதிநலம் அருள ஆயிற்று இவர் பேசிற்று. தன் முயற்சியால் அறியப் பார்க்கில் அன்றோ அரிது?’ என்றது,
அவன் கொடுத்த அறிவு கொண்டு அறிவார்க்குக் குறை இல்லை அன்றோ?
‘நெறி வாசல் தானேயாய் நின்றனை ஐந்து. பொறி வாசல் போர்க் கதவம் சாத்தி அறிவானாம்’ நான்முகன் திருவந்தாதி.-என்று
ஆக்ஷேபிப்பது, தம் முயற்சியாலே அறியப் பார்ப்பாரை அன்றோ?

ஆம் வண்ணம் ஒண் தமிழ்கள் –
‘அவனுக்குத் தகுதியாம்படி இருக்கிற அழகிய தமிழ்’ என்னுதல்;
‘தகுதியாக இருக்கிற பாசுரங்களை யுடைத்தாய், சர்வாதிகாரமாகிற நன்மையை யுடைத்தான தமிழ்’ என்னுதல்.

வண்ணம் –
பா.
அன்றிக்கே,
வண்ணம் என்று ஓசையாய், ‘நல்ல ஓசையை யுடைய செந்தமிழ்’ என்னுதல்.

தமிழ்கள் இவை ஆயிரத்துள் இப் பத்தும் –
தமிழாக இருந்துள்ள இவை ஆயிரத்துள் இப் பத்தையும்.

ஆம் வண்ணத்தால் உரைப்பார் –
‘பின்னை, இதனைச் சொல்லுமவர்களுக்கும் மயர்வு அற மதி நலம் அருளப் பெற்று
அவனுக்குத் தகுதியான சொல்லாலே சொல்ல வேணுமோ?’ என்னில்,
அத் தேவை எல்லாம் ஆழ்வார் தம்மோடே; இவர்களுக்குத் தாங்கள் வல்ல அளவும் சொல்ல அமையும்.

அமைந்தார் தமக்கு என்றைக்கும் –
அவர்களுக்கு இவ் வாத்துமா உள்ளதனையும், ஈஸ்வரன் முழங்கைத் தண்ணீர் வேண்டா;
ஆழ்வார் அங்கீகாரத்துக்கு விஷயமானதுவே போரும். என்றைக்கும் தந்தாமுக்குத் தாமே அமைந்தார்களாய் இருப்பர்கள்.

————————————————————————————————–

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் –

சங்கம் நிவர்த்ய மம–என்னுடைய உலக பற்றுதலைப் போக்கி அருளி
ஸம்ஸ்ருதி மண்டலேமாம் ஸம்ஸ்தாபயன்-இங்கேயே வைத்த ஆச்சர்யம்
ஹரிநா சுசம் விஸ்மரித
கதம் அபி வியசனம்
ஆச்சரிய லோகம் தனு தாம் தர்சயித்வா –திருமேனியாகக் கொண்டு இருப்பதைக் காட்டி

ஹரிநா சுசம் விஸ்மரித -ஹரியால் ஆழ்வாருக்கு ஏற்பட்ட சோகம் மறக்கடிக்கப் படுகிறது

————————————————————————-

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –

ஸ்ரீ மான் ஆச்சரிய நாநாய வைபவம் பூதைகை சந்த்ரார்யம் மாத்தியை
சகல யுகத்தைபி வஸ்துபி சேதனாதியை தேஹாத்ம ஸ்வைர் லோகாநாம்
ஸ்மரண தத் இதரம் உத்பாத நாத் மாமனாத்யை துர் ஞானே யேத்வாத்
ஸூ பாஜாம் பஹு சுப கரணாத் வேத சமவேத்ய பாவாத்

1–ஸ்ரீ மான் ஆச்சரிய நாநாய வைபவம்–மாயா! வாமனனே!மது சூதா! நீ அருளாய்
—நீயாய் நீ நின்றவாறு இவை என்ன நியாயங்களே!

2-பூதைகை–பொங்கு பொழி மழையாய்ப் புக ழாய்ப் பழி யாய்ப் பின்னும் நீ
வெங்கண் வெங் கூற்றமுமாம் இவை என்ன விசித்திரமே!

3–சந்த்ரார்யம் மாத்தியை–சித்திரத் தேர் வலவா!திருச் சக்கரத் தாய்!அருளாய்

4–சகல யுகத்தைபி வஸ்துபி–வெள்ளத் தடங்கடலுள் விட நாகணை மேன் மருவி
உள்ளப் பல்யோகு செய்தி இவை என்ன உபாயங்களே!–

5-சேதனாதியை–காயமும் சீவனுமாய்க் கழிவாய்ப் பிறப்பாய் பின்னும் நீ
மாயங்கள் செய்து வைத்தி;இவை என்ன மயக்குகளே.–

6–ஸ்வைர் லோகாநாம்–வியப்பாய் வென்றிகளாய் வினையாய்ப் பயனாய்ப் பின்னுநீ
துயக்கா நீ நின்றவாறு இவை என்ன துயரங்களே

7–ஸ்மரண தத் இதரம்–அயர்ப்பாய்த் தேற்றமுமாய் அழலாய்க் குளிராய் வியவாய்
வியப்பாய் வென்றிகளாய் வினையாய்ப் பயனாய்ப்

8–மாமனாத்யை-துயரஞ் செய் மானங்களாய் மதனாகி உகவைகளாய்த்
துயரஞ் செய் காமங்களாய்த் துலையாய் நிலையாய்

9-துர் ஞானே யேத்வாத் –இன்னதோர் தன்மையை என்று உன்னை யாவர்க்குந் தேற்றரியை-

10-ஸூ பாஜாம் பஹு சுப கரணாத்–துன்னு கர சரணம் முதலாக எல்லா உறுப்பும்-
உன்னு சுவை ஒளி ஊறு ஒலி நாற்றம் முற்றும் நீயே

வேத சம் வேத்ய பாவாத்–தொல்லை நன்னூலிற் சொன்ன உருவும் அருவும் நீயே-

——————————————————————————

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 68-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்-

அவதாரிகை

இதில் ஸ்ரீ எம்பெருமான் காட்டின விசித்திர ஜகதாகாரதையை அனுபவித்து
விஸ்மிதராய் அருளிச் செய்த திவ்ய ஸூக்தியை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –

ஏழையர் ஆவியில் உருவு வெளிப்பாட்டாலே நோவு படும்படி ஆற்றாமை கரை புரண்டு இருக்கச் செய்தேயும்
தம்மை அறியாத படி வைத்து நோக்கிக் கொண்டு போருகிற இவ் வாச்யர்த்தைக் கண்டு இவர் விஸ்மிதராக
இது ஓன்று கண்டோ நீர் இப்படி விஸ்மயப் படுகிறது என்று
தன்னுடைய ஆச்சர்ய ஐஸ்வர்ய ஜகதாகாரத்தைக் காட்டிக் கொடுக்க-

அத்தை அனுபவித்து விஸ்மிதராக
இது ஓன்று கண்டோ நீர் இப்படி விஸ்மயப் படுகிறது
என்று தன் ஐஸ்வர்ய ஜகதாகாரத்தைக் காட்டிக் கொடுக்க

அத்தை அனுபவித்து விஸ்மிதர் ஆகிற
மாயா வாமானனில் அர்த்தத்தை-மாயாமல் தன்னை வைத்த இத்யாதியால்
அருளிச் செய்கிறார் -என்கை-

—————————————————

மாயாமல் தன்னை வைத்த வை சித்திரியாலே
தீயா விசித்திரிமாச் சேர் பொருளோடு ஆயாமல்
வாய்ந்து நிற்கும் மாயன் வளமுரைத்த மாறனை நாம்
ஏய்ந்து உரைத்து வாழுநாள் என்று –68-

மாயாமல் தன்னை வைத்த-தம்முடைய சேஷத்வ ஸ்வரூபம் மாயாமல் நசியாமலேயே இங்கே தம்மை வைத்த
வளம் -விபூதி விஸ்தாரத்தை

ஆயாமல்-ஆராய்ச்சி இல்லாமல் -வியாப்பிய கத தோஷம் தட்டாமல்

——————————————————

வியாக்யானம்–

மாயாமல் தன்னை வைத்த வைசித்திரியாலே-
அதாவது-
சரண்யனான யுனக்கு அஞ்ஞான அசக்திகள் ஆகிற தோஷம் இன்றிக்கே
சர்வஞ்ஞத்வாதி குணங்களும் உண்டாய் இருக்க
சரணாகதனான எனக்கு ஆகிஞ்சன்ய அனந்யகத்வம் ஆர்த்தியும் உண்டாகையாலே
அதிகாரி மாந்த்யமும் இன்றிக்கே இருக்க
வைத்த இதில் பொருந்தாத என்னை-வைத்து நடத்திக் கொண்டு போருகிறதுக்கு ஹேது என் என்று –
பாசங்கள் நீக்கி -என்று தொடங்கி– மாயவனே அருளாய் -என்று அவன் தன்னைக் கேட்க

அவனும் அதுக்கு நிருத்தனாக
இது ஓன்று இருந்த படி என் –என்று-இவ் வாச்சர்யத்தில் இவர் விஸ்மிதர் ஆக

அவன் அவற்றைக் கண்டு வைத்து
இது ஓர் ஆச்சர்யமோ -என்று-தன் விசித்திர ஜகதாகாரயதையைக் காட்ட –

தீயா விசித்திரிமாச் சேர் பொருளோடு-
மாயா வாமனனே -என்று தொடங்கி-இவை என்ன விசித்ரமே -என்றத்தை பின் சென்று அருளிச் செய்தபடி –
தீ யாதியாக பஞ்ச பூதங்களும்-ஒன்றின் கார்யம் ஒன்றுக்கு இன்றிக்கே விவிதாகாரமாய்
சேதன வர்க்கங்களும் அப்படியே விவிதாகாரம் ஆகையாலே விசித்திர மாயச் சேர்ந்த பதார்த்தங்களோடு –

ஆயாமல் வாய்ந்து நிற்கும் மாயன் –
அவற்றின் தோஷங்களை ஆராயாமல் வாய்ந்து நிற்கும் மாயன் –

ஓயாமல் வாய்ந்து நிற்கும் மாயன் -என்ற பாடமாம் போது
நிரந்தரமாகச் சேர்ந்து நிற்கும் -என்றாகவுமாம்–
பொருந்தி நிற்கும் ஆச்சர்ய சக்தி உக்தனான ஸ்ரீ சர்வேஸ்வரன்
மாயா -என்றத்தைப் பேசின படி –

வளமுரைத்த –
விபூதி விச்தாரத்தை அருளிச் செய்த –
அதாவது –

புரா பூத்வா ம்ருதுர்த் தாந்த ந கரோத வசமாபன்ன -என்னும்படி –
அம் கண் மலர்த்த்ண் துழாய் முடியானே அச்சுதனே அருளாய் —
பின்னும் வெம் கண் வெம் கூற்றமுமாய் இவை என்ன விசித்ரமே -என்றும்
சித்திரத் தேர் வலவா–வித்தகத்தால் நிற்றி நீ -என்றும்
கள்ளவிழ் தாமரைக் கண்ணனே -உள்ளப் பல் யோகு செய்தி -என்றும்
பாசங்கள் நீக்கி என்னை –இவை என்ன மயக்குகளே -என்றும்
மாயக்கா வாமனனே –இவை என்ன துயரங்களே -என்றும்
துயரங்கள் செய்யும் கண்ணா -இவை என்ன சுண்டாயங்களே -என்றும்
என்ன சுண்டாயங்களால் எங்கனே நின்றிட்டாய்–இவை என்ன இயற்கைகளே -என்றும்
என்ன இயற்கைகளால் நின்றிட்டாய் –உலப்பில்லை நுணுக்கங்களே -என்றும்
இல்லை நுணுக்கங்களே அச்சுதனே –அதுவே உனக்காம் வண்ணமே -என்றும்
இப்படி அவன் விசித்திர விபூதி விஸ்தார உக்தனாய் இருக்கிறபடியை அருளிச் செய்தவை-என்கை-

மாயன் வளம் உரைத்த மாறனை-
இப்படி விசித்திர ஜகதாகாரனானவன் சம்பத்தை அனுபவித்து அருளிச் செய்த ஸ்ரீ ஆழ்வாரை –

நாம் ஏய்ந்து உரைத்து வாழுநாள் என்று —
நாம் கிட்டி அவர் திரு நாமங்களைச் சொல்லி வாழும் காலம் ஆக வற்றோ-
அன்றும் ஒரு நாளாக ஆகவற்றோ -என்றபடி –

———————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பகவத் விஷயம் காலஷேபம் -155- திருவாய்மொழி – -7-7-1….7-7-11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்–

June 30, 2016

மேல் திருவாய்மொழியிலே
‘மல்கு நீலச் சுடர் தழைப்பச் செஞ்சுடர்ச் சோதிகள் பூத்து ஒரு மாணிக்கம் சேர்வது போல்,
அந்தர மேல் செம்பட்டோடு அடி உந்தி கை மார்பு கண் வாய், செஞ்சுடர்ச்சோதி விட உறை என் திருமார்பனையே’ என்று
அவன் வடிவழகினைச் சொன்னார்;

அவ்வடிவழகு தானே நெஞ்சிலே ஊற்றிருக்க, அதனையே பாவித்த காரணத்தாலே,
அந்த பாவனையின் மிகுதியாலே கண் கூடாகக் காண்பதே போன்றதாய்,
பின்பு கண் கூடாகப் பார்ப்பதாகவே நினைத்து
அணைக்கக் கணிசித்துக் கையை நீட்டி. அப்போதே பெறாமையாலே
தமக்கப் பிறந்த ஆற்றாமையை,
எம்பெருமானோடே கலந்து பிரிந்து உருவு வெளிப்பாட்டாலே நோவு படுகிறாள்.
ஒரு பிராட்டி பாசுரத்தாலே அருளிச் செய்கிறார்.

சர்வேஸ்வரனோடே கலந்து பிரிந்து தளர்ந்து
உருவு வெளிப்பாட்டாலே நோவு படுகிறாள் ஒரு பிராட்டி.-
ஒருவர் ஒருவரோடு கலக்கும் போது காட்சி முன்னாகப் பின்பே அன்றோ
மற்றைப் பரிமாற்றங்களை ஆசைப்படுவது?

ஆகையாலே,-
திருக் கண்களின் அழகைக் கூறி,
அவ் வழியாலே திரு முகத்தில் அழகைக் கூறி
பின்பு அவ் வருகே சில பரிமாற்றங்களை ஆசைப்பட்டு
அப்போதே அது கை வாராமையாலே நோவு பட;
இவள் நிலையைக் கண்ட தோழிமாரும் தாய்மாரும், ‘உனக்கு ஓடுகிறது என்? என்று கேட்க,

ஆற்றாமை பிரசித்தமானபடியால் சிலர்க்குச் சொல்லிச் சிலர்க்கு மறைக்கும்படியான நிலை இல்லையே!
ஆகையாலே, அவர்களைக் குறித்து,
‘அவனுடைய திருமுகத்தில் அழகானது தனித் தனியும் திரளவும் வந்து நலியா நின்றது’ என்ன,
(திரளவும் வந்து நலியா நின்றது–கோல் இழைத் தாமாரை -என்பதைப் பற்ற )

‘நீ இங்ஙனே சொல்லுமது உன்னுடைய பெண்மைக்குப் போராது;
அவனுடைய தலைமைக்கும் போராது;
நீ தான் எங்களை நோக்கக் கடவதாய் இருப்பது ஒரு தன்மை உண்டே அதுக்கும் போராது;
ஆன பின்பு, இதனைத் தவிர்,’ என்று ஹிதம் சொல்லுவாரும் பொடிவாருமாக;

‘நீங்கள் பொடிகிற இதனைக் கேட்டு மீளும் அளவு அன்று அது என்னை நலிகிறபடி;
இனித் தான் ஏதேனுமாக உறைத்ததிலே ஊன்றி நிற்குமத்தனை அன்றோ?
ஆன பின்பு, நீங்கள் என்னை விட்டுப் பிடிக்க அமையும்,’ என்று
அவர்களுக்குத் தன் பக்கல் நசை அற வேண்டும்படி
தனக்குப் பிறந்த ஆற்றாமையை அறிவிக்கறாளாய் இருக்கிறது.

‘இவர்க்குத் திருவாய்மொழி எங்கும் ஓடுகிற தன்மைகள்
சர்வேஸ்வரனுடைய குணங்களை ஆசைப் படுகையும்,
அதுதான் மானஸ அனுபவமாய் இருக்கையும்,
அனுபவித்த குணங்கள் ஒழிய மற்றைய குணங்களிலே விருப்பம் செலுத்துதலும்.
அது தன்னில் கிரமப் பிராப்தி பற்றாமையும்,
அது தான் மேல் நின்ற நிலையை மறக்கும்படி செய்கையும் ஆகிற இவையே அன்றோ?

அவற்றைக் காட்டிலும்,
உருவு வெளிப்பாடாகச் சொல்லுகிற இதில் ஏறின அமிசம் என்?’ என்னில்
‘முன்பு பிறந்த – வைஸத்யமும் -தெளிவும் கிடக்கச் செய்தே
மேலே விருப்பத்தை உண்டாக்குமது அன்றோ உருவு வெளிப்பாடாகிறது?
மற்றைய இடத்தில்,
முன் பிறந்த தெளிவை அழித்தே அன்றோ மேலில் விருப்பம் பிறப்பது?

‘எங்ஙனேயோ?’ என்ற திருவாய்மொழியிலும்-(5-5) பெரும்பாலும் இதுவே அன்றோ ஓடுகிறது?
அதில் இதற்கு வாசி என்?’ என்னில்,
அதில் பிரீதியும் பிரீதி இன்மையும் சமமாக இருக்கும்;

இங்குப் பிரீதி இன்மை மிக்கிருக்கும்.
திருக் கண்களில் அழகை ‘இணைக் கூற்றங்கொலோ!’ என்னும்படி யாயிற்று

இங்குத் தீங்கு செய்வதில் உறைப்பு இருக்கும்படி.

———————————————————————————————

ஏழையர் ஆவி உண்ணும் இணைக் கூற்றங் கொலோ அறியேன்
ஆழியங் கண்ண பிரான் திருக்கண்கள் கொலோ அறியேன்
சூழவும் தாமரை நாண் மலர் போல் வந்து தோன்றுங் கண்டீர்
தோழியர் காள்!அன்னைமீர்!என் செய்கேன் துயராட்டியேனே.–7-7-1-

திருக்கண்கள் நலியும் படி –
ஏழையர் ஆவி உண்ணும் இணைக் கூற்றங் கொலோ அறியேன்-சபலைகள் பெண் பிள்ளைகளை கிரசிக்கக் கடவதாய்-
சேர்த்தியான இரட்டை -மிருத்யுவோ அறியேன் -பாதகத்வாலே கண் என்ன அறுதி இட மாட்டிற்று இலேன்
ஆழியங் கண்ண பிரான் திருக்கண்கள் கொலோ அறியேன்-ரத்நாகரம் போலே அபரிச்சின்ன விலக்ஷண ஸ்வ பாவன்-
தூது செய் கண்கள் கொண்டு ஒன்று பேசி (9-9)–பிரதமத்தில் விதேயமாய் உபகரித்தவன் -ஸம்ஸ்லேஷித்து பவ்யனாக -இருந்தவன் –
தர்ச நீயம் மிருத்யு என்று சொல்ல மாட்டிற்று இலேன்
சூழவும் தாமரை நாண் மலர் போல் வந்து தோன்றுங் கண்டீர்-அகலப் போக ஒண்ணா போலே -பாருமின்-கண்டீர்
தோழியர் காள்!அன்னைமீர்!என் செய்கேன் துயராட்டியேனே-இருவரையும் -அந்தரங்கள் ஆந்திர கிலேசம் அறியாத தோழி-
பெற்று வளர்த்த தாய் -ஸ்வயம் வேத்யமான -வேத வேத்யன் அவன் -ஸ்வயம் வேத்யன் இவள் -என்ன பரிகாரம்
தோன்றும் கண்களை மறைக்க மாட்டேன் -அடைந்து அனுபவிக்க மாட்டிற்று இலேன்

தோழிமீர்காள்! அன்னைமீர்காள்! கடல் போன்ற நிறத்தையுடைய அழகிய கண்ணபிரானுடைய திருக்கண்கள், பெண்களினுடைய உயிர்களை
உண்ணும்படியான இரண்டு கூற்றங்கள் தாமோ? அறியேன்! அல்லது, திருக்கண்கள்தாமோ? அறியேன்! அத்திருகண்கள் நான்கு புறங்களிலும்
அன்று மலர்ந்த மலர்கள் போன்று வந்து தோன்றா நின்றன; வருத்தத்தையுடைய யான் என்ன செய்வேன்?
கூற்றம் – உயிரையும் உடலையும் கூறுபடுபடுத்துமவன்; யமன். கண்டீர் – முன்னிலையசை.
இத்திருவாய்மொழி கலிநிலைத்துறை.

‘இம் முகத்துக்குக் கண்ணாக இருப்பவர் நாம் அன்றோ?’ என்று முற்படத் திருக் கண்களின் அழகு
வந்து தம்மை நலிகிறபடியை அருளிச் செய்கிறார்.
முகத்துக்கு -நேத்ர பூதர் – கண் -பிரதேசத்துக்கு பிரதான -நலிவதில் முற்பட்டவை –

ஏழையர் ஆவி உண்ணும் இணைக் கூற்றங்கொலோ அறியேன்-
ஒவ்வொரு விஷயத்திலே விருப்பத்தைச் செய்து,
அவை பெறா விடில் தரிக்க மாட்டாத பலம் இல்லாத பெண்களுடைய
பிராணன்களை முடிக்கிற கூற்றுகள் இரண்டோ?

பிரிந்து ஆற்றாமையை விளைத்தவனுக்கும் அன்றிக்கே,
‘இது ஆகாது’ என்று ஹிதம் சொல்லி மீட்கப் பார்க்கும் பருவம் கழிந்த தாய்மார்க்கும் அன்றிக்கே,
அபலைகளையே முடிப்பன இரண்டு கூற்றமோ!

தன் கண் அழகு தான் அறிகின்றிலனே!
தன்னையும் நலிந்ததாகில் வாரானோ?
கண்ணாடிப் புறத்திலும் கண்டு அறியானோ?

இராம பாணம் போலே, ஒப்பனை குறி அழியாதே இருக்க
உயிரை முடியா நின்றது ஆதலின், ‘ஆவி உண்ணும்’ என்கிறது.

கூற்றுவர் இருவர் தங்களிலே கிருத சங்கேதராய் வந்தாற்போலே காணும்
திருக் கண்களில் அழகு பாதகமாகின்றன என்பாள், ‘இணைக் கூற்றங்கொலோ’ என்கிறாள்.

‘‘அறியேன்’ என்பான் என்?
‘கூற்றம்’ என்று அறுதியிட்டாலோ?’ என்னில்,
கூற்றுவர் இருவர் கிருத சங்கேதராய் வந்தாலும் அபலைகளையே நலிய வேண்டும் நிர்ப்பந்தமில்லையே!
‘ஆடவர்களுடைய கண்ணையும் மனத்தினையும் கவர்கின்றவர்’ அன்றோ?
அதனாலே ‘அறியேன்’என்று சொல்லுகிறது.(பும்ஸாம் த்ருஷ்டி ஸித்த அபஹாரிணாம் போல் அனைவரையும் நலியவில்லையே )

ஆழி அம் கண்ணபிரான் திருக் கண்கள் கொலோ அறியேன் –
அன்றிக்கே, பெண் பிறந்தாரையே நலியக் கூடியவைகள் தாமேயோ?
அற்பம் அண்ணியாரே பாதகராம் அன்று தப்ப விரகு இல்லை;

(நலியும்-என்றால் பிரான் என்னலாமோ என்னில்
சற்று தள்ளி இருந்து -பிரதி கூலன் விரோதி யானால் உபாயத்தால் தப்பலாம் –
அநு கூலன் பாதகமானால் தப்ப முடியாதே
உபகார வேஷத்துடன் வந்த பாதகன் அன்றோ )

இப்படி முதலுறவு பண்ணிப் பொருந்த விட்ட இத் திருக்கண்கள் தாமேயோ? .
உபகாரம் செய்தலையே ஸ்வபாவமாக வுடைய கிருஷ்ணனுடைய கடல் போலே திருக்கண்கள் என்னுதல்;
அன்றிக்கே,
‘கடல் போன்ற ஸ்ரமஹரமான வடிவை யுடைய உபகார சீலனான கிருஷ்ணனுடைய திருக்கண்கள்’ என்னுதல்.

அறியேன் –
இதற்கு முன்பு பிரிந்து அறியாமையாலே திருக் கண்கள் பாதகமாம் என்று அறியக் காரணம் இல்லை.
நாம் கேட்டிருந்தபடி அன்றிக்கே இரா நின்றது, இப்போது காண்கிறபடி.

‘உயிர்க்கு எல்லாம் தாயாய் அளிக்கின்ற தண் தாமரைக் கண்’-பெரிய திருமொழி, 7. 1 : 9- என்றே அன்றோ கேட்டிருப்பது?
இக் கடாக்ஷமே தாரகமாக அன்றோ உலகம் அடைய ஜீவிப்பது?

சர்வாதிகத்வமும் ரக்ஷகத்வமும் திருக் கண்கள் -நம் கண் அல்லாதது கண் அல்ல -கப்யாசம் புண்டரீகாக்ஷன் –
வெருவ நோக்கி -அழல விழித்து -தாமரைக் கண்கள் கொண்டு ஈர்த்தியாலோ -மது சூதனன் ஜயமான கடாக்ஷம்

பெரும் கேழலார் நம் மேல் ஒருங்கே பிறழ வைத்தார் –
அந் நோக்கும் தொல்லை இன்பத்து இறுதி கண்டாள்

பூதராக்கும் நெடும் நோக்கு சிரமணி சபரி விதுரர் ரிஷி பத்நிகள்-நெடு நோக்கு கொள்ளும் பத்ம விலாசன்
தாமரைக் கண்களால் நோக்காய் -செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ
விஷ்ணோர் கடாக்ஷம் -அல்வழக்கை ஒழித்து படிப்படியாக -அனைத்தையும் பண்ணுமே திருக் கண்கள்

‘ஆனால், தப்பினாலோ?’ என்னில்,
சூழவும் தாமரை நாண் மலர் போல் வந்து தோன்றும் கண்டீர் –
மூல பலத்தின் அன்று பார்த்த இடமெல்லாம் பெருமாளே ஆனாற் போலே ஆயிற்று;
இராம பாணத்துக்கு இராக்கதர்கள் தப்பலாம் அன்றாயிற்று,
இக் கண்களின் அழகின் கீழ் அபலைகளாய் இருப்பார்க்குத் தப்பலாவது?

‘புண்டரீக நெடுந்தடங்கள் போலப் பொலிந்து எமக்கு எல்லா இடத்தவும்’ –திருவிருத்தம், 39.-என்னக் கடவது அன்றோ?
பாம்பைக் கண்ட அச்சம் போலே இருக்கை. இறாய்க்க நினைத்த இடம் எங்கும் தானேயாய் இரா நின்றது.

‘இப்போது ‘தாமரை நாண் மலர் போல்’ என்பான் என்?’ என்னில்,
‘பூஜிக்கத் தக்க பிராட்டியே! அந்தப் பெருமாள் தேவரீரைப் பார்க்காத காரணத்தால் மிகப் பெரியதாயும் எரிந்து கொண்டு
இருக்கிற நெருப்பினாலே சூழப்பட்ட நெருப்பு மாலை போன்று பரிதபிக்கிறார்,’ என்றும்,

‘ஸ தவ அதர்ஸநாத் ஆர்யே ராகவ: பரிதப்யதே
மஹாத ஜ்வலதா நித்யம் அந்நிநே வாக்நி பர்வத:’-என்பது, ஸ்ரீராமா. சுந். 35 : 44.

நைவ தம்ஸாந் நமஸகாந் ந கீடாந் ந ஸரீஸ்ருபாந்
ராகவோ அபநயேத் காத்ராத் த்வத் கதேநாந்தராத்மநா’-என்பது, ஸ்ரீராமா, சுந். 36 : 42.

அதற்கு-துடைக்க அறியாமல் இருந்ததற்கு.
த்வத் கதேந அந்தராத்மநா‘என்றான்’ என்றது, ஸ்ரீ வால்மீகியை.

‘கன்மத்தை ஞாலத் தவர்ஆர் உளரே கடப்பார்?
பொன்மொய்த்த தோளான் மயல்கொண்டு புலன்கள் வேறாய்
நன்மத்தை நாகத் தயல்சூ டியநம்ப னேபோல்
உன்மத்த னானான் தனைஒன்றும் உணர்ந்தி லாதான்.’-என்பது, கம்பராமா. உருக்காட்டுப்பட. 84.

பெருமாள் ஊர்ந்ததும் கடித்ததும் துடைக்க அறியார்’ என்றும் சொல்லப்படும் நிலை அன்றோ அவருடை நிலை?
‘நன்று; அதற்கு அடி என்?’ என்ன,
‘த்வத்கதேநாந்தராத்மநா-உன்னிடத்தில் வைத்த மனத்தை யுடையவராதலாலே’ பெருமாள் இங்கே குடி போர,
அங்கு இவை யார்தான் அறிவார் என்றான் அன்றோ?

பிரிவில் இவ்வளவு அன்று அன்றோ அத்தலைக்கு ஆற்றாமை? அதனை அறிகிலளே இவள்.
தன்னோடே வந்து கலந்த விளைநீர் அடைத்துக் கொண்டு -பூர்ண அனுபவம் -பிரிகிற போதைச் செவ்வி அன்றோ இவள் அறிவது?
அதுவே அன்றோ இவள் நெஞ்சில் பட்டுக் கிடப்பது? பின்பு அவன் பட்டது அறியாளே;
ஆகையாலே, தாமரை நாண் மலர் போல்’ என்று சொல்லுகிறாள்.
(ஸம்ஸ்லேஷ தசையில் பார்த்த படியே சொல்கிறாள் –
அவன் படும் பாட்டை திருவடி வந்த பின்பே அன்றோ அறிவாள் )

வந்து தோன்றும் –
பிரத்யக்ஷத்லே அத் தலையாலே வரவு ஆனாற்போலே
உருவு வெளிப்பாட்டிலும் அத் தலையாலே வந்து தோன்ற ஆயிற்றுத் தான் அறிகிறது.

கண்டீர் –
உங்களுக்கு இது தோற்றுகிறது இல்லையோ?

தோழியர்காள் அன்னைமீர் –
சிலர்க்குச் சொல்லிச் சிலர்க்கு மறைக்கும்படி யன்றே இவள் நிலை? என்றது,
‘தோழிமார்க்குச் சொன்ன இதனைத் தாய் மார்க்குச் சொல்லுவோம் அல்லோம்,’ என்று மறைக்கும் அளவு அன்று ஆயிற்று,
இவளுக்குப் பிறந்த நிலை விசேடம்,’ என்றபடி.

என் செய்கேன் –
இதனைத் தப்பப் பார்ப்பதோ,
அனுபவிக்கப் பார்ப்பதோ?
எதனைச் செய்கேன்?

துயராட்டியேனே –
‘இறைவனுடைய ஆனந்தத்தை அறிந்தவன் எப்பொருளினின்றும் அஞ்சான்,’ என்று இருக்க வேண்டி இருக்க,
அங்ஙன் அன்றிக்கே, ‘அவசியம் அனுபவிக்கத் தக்கது’ என்கிறபடியே,பழைய கிலேசமே அனுபவிக்கும்படி ஆயிற்றே.

‘ஆநந்தம் ப்ரஹ்மணோ வித்வாந் நபிபேதி குதஸ்சந’-என்பது, தைத்திரீ.

‘இடராக வந்தென்னைப் புன் சிறு தெய்வங்கள் என்செயுமான்
இடராக வன்பிணி மாநாக மென்செயும் யான்வெருவி
இடராக வன்னி புனல்இடி கோள்மற்றும் என்செயும்வில்
இடராக வன்அரங் கன்திருத் தாள்என் இதயத்ததே.’-என்ற திருவரங்கத்தந்தாதிச் செய்யுள்,
மேற் சுலோகப் பொருளோடு ஒப்பு நோக்கல் தகும்.

———————————————————————————

ஆட்டியும் தூற்றியும் நின்று அன்னைமீர்! என்னை நீர் நலிந்து என்?
மாட்டுயர் கற்பகத்தின் வல்லியோ கொழுந்தோ அறியேன்
ஈட்டிய வெண்ணெய் உண்டான் திரு மூக்கு எனதாவி யுள்ளே
மாட்டிய வல் விளக்கின் சுடராய் நிற்கும் வாலியதே.–7-7-2-

ஆஸ்ரித த்ரவ்ய அபி நிவேசம் -நாஸா தண்டம்
ஆட்டியும் தூற்றியும் நின்று அன்னைமீர்! என்னை நீர் நலிந்து என்?-பிரிய பரை தாய் -ஹிதம் சொல்லி இருந்த இடத்தில்
இருக்க ஒட்டாமல் பழி சொல்லியும் நலிந்து -பலியாமைக்கு அடி
மாட்டுயர் கற்பகத்தின் வல்லியோ கொழுந்தோ அறியேன்-பரிசரத்தில் ஓங்கி உள்ள கற்பகத்தின் கொடியோ கொழுந்தோ -அறியேன்
ஈட்டிய வெண்ணெய் உண்டான் திருமூக்கு எனதாவி யுள்ளே-திரட்டி வைத்த வெண்ணெய் -உண்டான் திரு மூக்கில் ஒட்டிக் கொண்டு -தூண்டப்பட்டு
மாட்டிய வல் விளக்கின் சுடராய் நிற்கும் வாலியதே.–வலியதே- ஸ்திரம் -நின்று எரியும் -தூண்டப்பட்டு பெரியதாக எரியும் –
தீப ஜ்வாலை போலே பிரகாசியா நின்றது –
ருஜு வாகையால் கொடி-வல்லி–என்னலாம் -அசைந்து ஓங்கின தலை இருப்பதால் கொழுந்து என்னலாம்–மாட்டிய – தூண்டிய

ஸ்ரீ சுந்தர பாஹு ஸ்தவம்
கண் கடல் -பிரேம அமிருதம் பூர்ணம் -பரிவாஹி-மத்யே -சேது
தடுப்பு அணை -ஸூந்தர புஜ-கல்ப திரும அங்குரா-வல்லியோ கொழுந்தோ -வன சைல பர்த்ரு
புருவம் மூக்கு காது தடுப்பு அணை –மேலும் வலப்பக்கமும் இடப்பக்கமும் -கீழே வராதே –

தாய்மார்களே நீங்கள், என்னை வருத்தியும் பழி மொழிகளைக் கூறியும் நின்று நலிவதனால் பயன் யாது? திரட்டிய வெண்ணெய்
உண்டவனான கிருஷ்ணனது அழகிய மூக்கானது, பக்கத்தில் உயர்ந்து விளங்குகின்ற கறபகத்தின் கொடியோ? அல்லது, கொழுந்தோ? அறியேன்;
அது, என்னுடைய உயிருக்குள்ளே ஏற்றிய வலிய விளக்கினது சுடராய் நிற்கும் பெருமையையுடையது.
‘திருமூக்கு வல்லியோ, கொழுந்தோ அறியேன்; திருமூக்குச் சுடராய் நிற்கும் வாலியது,’ என்க.

‘இரண்டுக்கும் நடுவே நாம் இருக்க, இவை முற்படுகையாவது என்?
அத்தனையோ நம் மூக்கு வலி?’ என்று
திரு மூக்கில் அழகு நலிகிறபடியைச் சொல்லுகிறது.–
மூக்கு வலி -மூக்கு பலன் -வலி -வலிமை -பலம் –மூச்சு வலி -பிராணன் -ரஸோக்தி மூச்சு வலி -என்றபடி –

ஆட்டியும் தூற்றியும் –
ஆட்டுகையாவது, தாம் தாம் பழி சொல்லி அலைக்கை.
தூற்றுகையாவது, பிறரும் அறியப் பழி சொல்லுகை நின்று –
‘அச்சம் உறுத்தி மீட்கலாமோ? என்று ஒருகால் அலைக்கை இயல்பே அன்றோ?
அங்ஙன் அன்றிக்கே, முன்பு செய்ததற்கு ஒரு பிரயோஜனம் காணாதிருக்கச் செய்தேயும் விடாதே நின்று.

அன்னைமீர் என்னை நீர் நலிந்து என் –
ஹிதத்திலே நடக்கும் தமப்பனைப் போலே, என் பிரியத்திலே நடக்கும் நீங்கள் என்னை நலிகிறது என்?
என் உகப்பே பேறாக நினைத்திருக்கக் கூடிய நீங்கள் நலிகிறது என்?

அந்த உருவு வெளிப்பாட்டைத் தடை செய்யலாம் என்றோ,
என்னை மீட்கலாம் என்றோ?
ஒரு பிரயோஜனம் இல்லாததிலேயும் முயற்சி செய்யக் கடவதோ?’ என்பாள், ‘நலிந்து என்’ என்கிறாள். என்றது,
‘அவனுடைய மூக்கு வலி இருக்கிற படியையும் அறிந்து நீங்கள் என் செய்யப்படுகிறீர்கோள்?’ என்றபடி.

‘நாங்கள் சொல்லுகிற ஹித வசனத்துக்கு ஒரு பிரயோஜனம் இல்லையாகில்,
என் செய்தால் பிரயோஜனம் உண்டு?’ என்ன,

மாடு உயர் கற்பகத்தின் வல்லியோ கொழுந்தோ அறியேன் –
வல்லீர் கோளாகில் இந்தச் சந்தேகத்தை அறுத்துத் தாருங்கோள்.
ஒரு கடல் அருகே அக் கடல் ஊற்றே தாரகமாக வளருகிறது ஒரு கொடி போலே ஆயிற்று.
திருக் கண்களுக்கு அருகே திரு மூக்கு இருக்கிறபடி. மாடு – அருகு.
‘உந்நஸம் – உயர்ந்த மூக்கை யுடைய’ என்கிறபடியே‘உயர்’ என்கிறது. ‘
ஸூசிஸ்மிதம் கோமள கண்டம் உந்நஸம் லலாட பர்யந்த விலம்பி தாலகம்’-என்பது, ஸ்தோத்திர ரத்தினம், 32.

ஒழுகு நீட்சியாலே கொடி என்னவுமாய், ஊக்கம் மாறாமையாலே கொழுந்து என்னவுமாய்
இரா நின்றதாதலின், ‘வல்லியோ கொழுந்தோ’ என்கிறது.
‘இன்னது’ என்று நிச்சயிக்க அரிதாக இருக்கையாலே‘அறியேன்’ என்கிறது.
‘ஸர்வதா சாம்யம் -முற்றுவமை இருக்கிறபடி, எங்களுக்கு அறியப் போமோ?
இதிலே உட் புக நின்று அனுபவிக்கிற நீ பின்னைச் சொல்லாய்’ என்ன, சொல்லுகிறாள் மேல்:

ஈட்டிய வெண்ணெய் உண்டான் திரு மூக்கு –
அநுகூலர்களுடைய சம்பந்தமுடைய திரவியத்தால் அல்லது தரிக்க மாட்டதே வெண்ணெய் களவு காணப் புக்குக்
கொண்டியிலே பிடி உண்டு,
பின்பு அதனை இல்லை செய்கைக்காக முகத்திலே தடவிக் கொள்ளுமே;
அவ் வெண்ணெயிலே முடை நாற்றமும் உருவு வெளிப்பாட்டிலே தோற்றுகிறதாயிற்று இவளுக்கு.
அப் போதை முடை நாற்றம் தோற்றும்படியாயிற்று உருவு வெளிப்பாட்டில் மெய்.-வாசனை உடன் அன்றோ காட்டி அருளுகிறார் –
கையும் களவுமாக பிடிப்பேன் என்பார்கள் கையை மூக்கில் தடவிக் கொண்டு கையில் இல்லை என்பான் –
‘நீ காண்பதாகச் சொல்லுகிற இது எங்களுக்குத் தெரிகிறது இல்லையே!’ என,

காத்ரே -அதிமானுஷ ஸ்தவம் -சுவட்டை அழிக்காமல் தடவிக் கொண்டாயே

எனது ஆவி யுள்ளே –
என் மனதிற்குள்ளே.

மாட்டிய –
‘சுடர் வெட்டிய’ என்னுதல்:
‘ஏற்றிய’ என்னுதல்,

வல் விளக்கின் சுடராய்-
பெரிய விளக்காய் –
விரக தாபத்தாலே அவியாத விளாக்காயிற்று.
‘‘ஏற்றிய பெரு விளக்கு’ என்று ஒரு தமிழ் புலவன் இட்டு வைத்தான்’ என்று அருளிச் செய்வர்.

நிற்கும் வாலியதே –
வலிதாய் நின்று நலியா நிற்கும்.

‘விளக்காகிறது
தான் சிறிது நேரம் இருப்பதுமாய்
ஓர் இடத்திலே இருப்பதுமாய் அன்றோ இருப்பது?

இது அங்ஙன் அன்றிக்கே,
எப்போதுமாய் எங்கும் உண்டாய் இரா நின்றது:
பாதகத்துவத்தில் உறைப்பை நினைத்துச் சொல்லுகிற வார்த்தை அன்றோ இது?

—————————————————————————————————–

வாலிய தோர் கனி கொல்?வினையாட்டியேன் வல் வினை கொல்?
கோலம் திரள் பவளக் கொழுந்துண்டங் கொலோ அறியேன்
நீல நெடு முகில் போல் திருமேனி யம்மான் தொண்டை வாய்
ஏலும் திசையுள் எல்லாம் வந்து தோன்றும் என் இன் உயிர்க்கே.–7-7-3-திசைகள் எல்லாம் பாட பேதம்

ஸ்யாமளமான வடிவுக்கு அதர சோபை -பரிபாகம் -நீளம் -சிகப்பு -பார்த்த பார்த்த இடம் தோற்றா நின்றது
வாலிய தோர் கனி கொல்?வினையாட்டியேன் வல் வினை கொல்?-நேரம் கடத்தாத கனி -பூ காய் பழம் போலே இல்லையே
போது செய்யாத நன்மை மென்மை நிறம் இவற்றால் கனி -அப்பொழுதே அனுபவிக்க முடியாத
பாவ பலமோ -பக்குவ பலமோ பாவ பலமோ -ஈஸ்வர ப்ரீதி புண்ணியம் அப்ரீதி பாபம் -அனுபவித்து கழிக்க அரிய பாவம்
கோலம் திரள் பவளக் கொழுந்துண்டங் கொலோ அறியேன்
சுந்தரம் ஸூலபம் ஸுகுமாரம்-ஸூ லப்யம் ஸுகர்யம் ஸூ ரஸம் -முழு பவளம் அழுக்கு படியும் -துண்டம் புது சிகப்பாய் இருக்கும் –
நீல நெடு முகில் போல் திருமேனி யம்மான் தொண்டை வாய்-ஸ்யாமளம் -கூட்டுப்படை -திரு மேனி -தொண்டைப் பழம் சிகப்பான பழம் –
ஏலும் திசையுள் எல்லாம் வந்து தோன்றும் என் இன் உயிர்க்கே-திசைகள் எல்லாம் பாட பேதம் -பார்த்த திசைகள் எல்லாவற்றிலும் -தோன்றுமே

நீல நிறம் பொருந்திய பெரிய முகில் போன்ற திருமேனியை யுடைய அம்மானது கொவ்வைக் கனி போன்ற திரு அதரமானது, தூய்மையையுடையதான
ஒப்பற்ற பழநீதானோ? தீவினையேனாகிய என்னுடைய கொடிய தீவினைதானோ? அழகிய திரண்ட பவளத்தினது கொழுவிய துண்டு தானோ? அறியேன்;
தப்புவதற்குத் தகுதியான திக்குகளில் எல்லாம் எனது இனிய உயிரைக் கொள்ளை கொள்ளுவதற்கு வந்து தோன்றாநின்றது.
‘அம்மான் தொண்டை வாய் கனி கொல்? வினை கொல்? கொழுந்துண்டங்கொலோ? அறியேன்; திசையுள் எல்லாம் வந்து தோன்றும்’ என்க.

அது தன் மூக்கு வலி காட்ட நாம் பேசாதே இருந்தால்,
‘அத்தனையோ இதன் வாய் வலி’ என்று நம்மை ஏசுவர்கள்
என்று திருப் பவளத்தின் அழகு வந்து நலிகிறபடியை அருளிச் செய்கிறார்–

வாலியது ஓர் கனி கொல் –
முன்பு பிஞ்சாய், பின்பு பக்குவமாய், பின்பு அனுபவ யோக்கியம் அன்றிக்கே போவன சில பழங்கள் –
எட்டிப் பழம் போலே -உளவே அன்றோ?
அங்ஙன் அன்றிக்கே, என்றும் ஒக்க ஒரே தன்மையாய் இருப்பது ஒரு கனியோ?
அத் தலையில் இனிமை போது செய்யாமையாலே இத் தலையில் ஆற்றாமையும் போது செய்யாதே!

வினையாட்டியேன் வல் வினை கொல் –
இனிய பொருள் தீயது ஆயிற்று. அனுபவிக்கின்றவர்கள் செய்த பாபத்தாலே அன்றோ?
அமிருதமே விஷமாம்படியான பாவத்தைச் செய்தேன்.

கொஞ்சுகிளி அன்னமொழி குமுதஇதழ் அமுதால்
எஞ்சினன் நராதிபதி ஈதொரு வியப்போ!
அஞ்சுதரு தீவினையின் ஆரமுதும் நஞ்சாம்;
நஞ்சும் அமுதாம் உரிய நல்வினையின் மாதோ,’-என்பது, வில்லி பாரதம்.

பாவத்தைச் செய்த என்னுடைய பாபமானது பலத்தைக் கொடுப்பதாய்க் கொண்டு அங்கே குடி ஏறிற்றோ?
அங்கே கிடந்தே அன்றோ இங்கே அனுபவிப்பிப்பது? என்றது,
‘பகவத் விஷயத்தில் தண்டனை உருவமாகக் கிடந்தே அன்றோ இங்கு அனுபவிப்பிப்பது?’ என்றபடி.
செய்த செயலாகையாலே செய்த போதே நசித்துப் போமே?
இவன் செய்த பாபத்துக்கு, தானே ஸ்வதந்தரமாய் நின்று பலத்தைக் கொடுப்பதற்குத் தகுதி இல்லையே!
அனுபவித்தாலும் அழியாத பாவம்’ என்பாள், ‘வல்வினை’ என்கிறாள்.

கோலம் திரள் பவளம் கொழுந்துண்டங்கொலோ அறியேன்-
அழகு திரண்டிருந்துள்ள பவளத்தினுடைய அன்பினை யுடைத்தான முறியோ? அறிகிலேன்.
புழுதி புடைத்திராமைக்கு ‘முறியோ’ என்கிறது;
முறித்த வாயானது ஒளி உண்டாய் நெய்த்திருக்கும் அன்றோ?

நீல நெடு முகில் போல் திருமேனி அம்மான் –
இது தான் என்றும் உண்டாய் இருக்கச் செய்தே, இதற்கு முன்பு பாதகமாயிற்று இல்லை அன்றோ?
கூட்டுப் படை நின்றவாறே வலியா நின்றதாயிற்று.
நீலமாய் இனிமை அளவு இறந்துள்ள முகில் போன்ற வடிவையுடைய சர்வேஸ்வரனுடைய.

தொண்டை வாய்-
கொவ்வைப் பழம் போலே கனிந்து நெய்த்து அன்றோ திருப் பவளந்தான் இருப்பது?
தொண்டை-கொவ்வை.
தன்னில் தான் உண்டான பகை பார்த்திருக்கிறது இல்லை யாயிற்று, இவளை நலிகிற விடத்தில்.
‘இரண்டுக்கும் சேர வன்னியம் இல்லை அன்றோ?-வன்னியம் ஸ்வ தந்திரம் -இருவரும் ஸ்வ தந்தரராய் இல்லாமல் கூட்டு சேர்ந்து நலியும் அன்றோ
அவை நலிந்து கொடு தோற்றா நின்றதாகில் தப்பப் பார்த்தாலோ?’ என்ன,
‘வாய் வலி தப்பலாயோ இருக்கிறது?’ என்கிறாள் மேல்:

ஏலும் திசையுள் எல்லாம்
நானும் இவை நலியாத இடம் தேடித் தப்ப விரகு பாரா நின்றேன்:
அவ்வவ் விடங்களிலே வந்து தோன்றா நின்றது. என்றது,
‘பாரத்த இடமெல்லாம் தானேயாய் இரா நின்றது,’ என்றபடி.
‘தோன்றுகிறதற்குக் கருத்து என்?’ என்னில்,

என் இன் உயிர்க்கே-
என்னுடைய நற்சீவனை முடிக்கைக்காக.

——————————————————————————————-

இன்னுயிர்க்கு ஏழையர் மேல் வளையும் இணை நீல விற்கொல்
மன்னிய சீர் மதனன் கருப்புச் சிலை கொல்?மதனன்
தன்னுயிர்த் தாதை கண்ணப் பெருமான் புருவம் மவையே
என்னுயிர் மேலனவாய் அடுகின்றன என்றும் நின்றே.–7-7-4-

காம உத்பாதகன் காமனார் தாதை -திருப் புருவம் நலியா நின்றன
இன்னுயிர்க்கு ஏழையர் மேல் வளையும் இணை நீல விற்கொல்-பிராணனை அபகரிக்க -சபலை பெண் பிறந்தார் மேல்
இரண்டு வில் -இரண்டு புருவங்கள்
மன்னிய சீர் மதனன் கருப்புச் சிலை கொல்?மதனன்-காம தேவன் கரும்பு சிலை -ஸ்திர சவுந்தர்யாதி குண உக்தன் -காமுகரை நலியும்
தன்னுயிர்த் தாதை கண்ணப் பெருமான் புருவம் மவையே-சத்தா பிரதன்-சர்வாதிகன் -தன் கை சார்ங்கம் அதுவே போன்ற –
அவதாரணம் -பாதகத்வம் கனத்து -த்ருஷ்டாந்தங்களை விட அதிக துன்பம் -கொடுப்பதால் -வில்லும் -கரும்பு வில்லும் விட இவை மிகவும் நலிய
என்னுயிர் மேலனவாய் அடுகின்றன என்றும் நின்றே-ஆத்மா மேல் அபி நிவேசம் -ஆபி முக்கியம் கொண்டு -ஒருப்படிப் படி நின்று நலியா நின்றன –

ப்ரஹ்ம தேவன் வரத ராஜன் -கேசம் -வரைய -தீற்றி பார்த்ததே திருப் புருவம் -அலகாலி சிகீரஷ்ய லலாட பட்டே நெற்றி துணி
சாப த்வயம் சகஸ்ர தள தாமரை காவலுக்கு வில் -கூரத் ஆழ்வான்

மன்மதனுக்கு உயிர் போன்ற தந்தையாகிய கண்ணபிரானுடைய புருவங்களானவை, இனிய உயிர்களைக் கவர்வதற்காகப் பெண்கள்மேல் வளைகின்ற
நீல நிறம் பொருந்திய விற்கள்தாமோ? அன்றிக்கே, நிலைபெற்ற கீர்த்தியையுடைய மன்மதனுடைய கரும்பு வில்தாமோ என்னுடைய
உயிர் மேலனவாய் எப்பொழுதும் நிலை பெற்று வருத்துகின்றன?
‘கண்ணப் பெருமான் புருவமவை நீல விற்கொல்? கருப்புச் சிலை கொல்? என் உயிர் மேலனவாய் என்றும் நின்று அடுகின்றன,’ என்க.

‘என் தான்! அதரம் உதரம் ஆயிற்றோ சாடு
இங்ஙனே கீழ் மேல் ஆயிற்றோ போய்?’ என்று திருப் புருவத்தில் அழகு
வளைந்து கொடு வந்து நலிகிறபடியை அருளிச் செய்கிறார்.

இன் உயிர்க்கு –
என்னுடைய நற்சீவனைக் கொள்ளுகைக்காக.

ஏழையர் மேல் வளையும் –
வளைப்பாரும் இன்றிக்கே வளைக்கைக்கு விஷயமுமின்றிக்கே,
செயப்படு பொருள் இல்லாமலும் செய்பவன் இல்லாமலும் வளையா நின்றது.
வளைப்பார் இல்லாமையாலே கர்த்தா இல்லை;
விஷயம் -லஷ்யம் –
வான வில் -நீல வில்-இதுக்கும் கர்த்தாவும் விஷயமும் இல்லையே

இணை நீல வில் கொலோ –
ஏழையர் மேல் வளைகிற நீலமான இரண்டு விற்களோ? என்றது,
வான வில் -நீல வில்-
‘பகைவர்களை அழிக்கத் தக்க, இந்திர வில் போன்ற விற்களைப் பிடித்து’ என்னும் படியே என்றபடி.
ஸக்ர சாப நிபே சாபே க்ருஹீத்வா ஸத்ரு நாஸநே’–என்பது, ஸ்ரீ ராமா. கிஷ்கிந். 3 : 9.

இந்திர வில்லுக்கு அபலைகளையே நலிய வேணும் என்னும் நிர்பந்தம் இல்லை அன்றோ?

மன்னிய சீர் மதனன் கருப்புச் சிலை கொல் –
பெண் பிறந்தாரையே நலியக் கூடியதான காமனுடைய வில்லு தானேயோ?
அது தன்னிலும் சிவனாலே வடிவு இழப்பதற்கு முன்புத்தை அவன் கையில் வில்லாக வேணும் கருப்புச் சிலை கொல்-
கண்ணுக்கு ஆபாசமாய்ப் பாதகம் உறைத்திருக்கிறபடி.

மதனன் தன் உயிர்த் தாதை கண்ணப் பெருமான் புருவம் அவையே-
அவனுடைய சம்பந்தத்தால் வந்த இராசகுலங்கொண்டு திரிகிறவன் கையில் வில்லுக்கு இத்தனை உறைப்பு உண்டாக மாட்டாது,
அவனுக்குங்கூடத் தந்தையான கிருஷ்ணனுடைய திருப் புருவங்கள் தாமே ஆக வேணும்.
தன் கைச்சார்ங்கமதுவே போல் புருவ வட்டம் அழகியவனுடைய புருவங்கள் தாமேயாக வேண்டும்.
ஆண்டாள் வார்த்தை இருக்கிறபடி அன்றோ? நாய்ச்சியார் திருமொழி. 14 : 6.-

தருமம் அறியாக் குறும்பனை –
தருமம் அறியும் போது முடி சூடின க்ஷத்திரியன் வயிற்றிலே பிறந்தவனாக வேண்டாவோ?
யாதவர்கள் நேரே முடி சூடுவது இல்லை அன்றோ? இரக்கம் இருக்கும்படி முதலிலே புதியது உண்டு அறியாதவனாயிற்று.
குறும்பனை
ஸ்ரீநந்தகோபர், தம்முடைய இராச்சியத்திலே மூலையடியே நடந்து திரிவான் ஒரு பிள்ளை யாயிற்றுப் பெற்றது.

தன் கைச் சார்ங்கம் –
கையிலே வில்லைக் கண்டால், ‘முகத்திலே இருக்கக் கூடிய அது கையிலே இருந்ததே! என்னாலாம்படியாய் இருக்கும்;
முகத்திலே கண்டவாறே, ‘கையிலே இருக்கக் கூடிய இது முகத்திலே இருந்ததே!’ என்னலாய் இருக்கும்.
அதுவே போல என்கிறதாயிற்று, முற்றும் ஒத்திருக்கையாலே.

‘புருவ வட்டமழகிய’ என்றதனால் ‘தருமமறியான்’ என்று இழக்க ஒண்ணாதபடி யாயிற்று,வடிவழகு இருப்பது.
பொருத்தம் இலியை-சில பொருள்கள் உளவே அன்றோ,
நிறங்கள் அழகியனவாய்ப் பார்த்தாவாறே அனுபவிக்க யோக்கியம் அன்றிக்கே இருப்பன?
அவை போலே, வடிவழகேயாய், ஆசைப்பட்டார் பக்கல் ரசம் தொங்கிலும் தொங்கானாயிற்று.

கண்டீரே –
அவனுக்குப் பொருத்தம் இல்லா விட்டால், நமக்குப் பொருத்தம் இல்லையாகில் அன்றோ விட்டிருக்கலாவது?
அவன் பொருந்தாமை தமக்குத் தொடர்ந்து திரியுமத்தனையாயிற்று.

புருவம் அவையே-
மேலே கூறிய அழகுகள் தாம் அநுகூலங்கள் என்னும்படியாக வாயிற்று, இவை பாதகமாகிறபடி.

என் உயிர் மேலனவாய்-
இருப்பன அங்கேயாய் இருக்கச் செய்தேயும், நோக்கு என் மேலேயாய் இரா நின்றது.
எங்கும் பக்கம் நோக்கு அறியாமல் அன்றோ இருப்பது? திருவாய். 2. 6 : 2.

அடுகின்றன –
கொல்லா நின்றன.

என்றும் நின்றே-
பாதகமாக நிற்கச் செய்தேயும் அழிந்து போகக் கூடியனவாய் இருப்பன சில பொருள்கள் உள அன்றோ?
இவை அங்ஙன் அன்றிக்கே என்றும் ஒக்க நின்று நலியா நின்றன.
என்னை நலிகைக்காக நித்தியமாய் இருக்கும் தன்மையை ஏறிட்டுக் கொண்டன;
நித்தியமாய் இருப்பதும் நித்தியமாய் இருக்கும் வடிவை ஏறிட்டுக் கொண்டதும்’ என்கிறது தானே அன்றோ நலிகிறது?

———————————————————————

என்று நின்றே திகழும் செய்ய ஈன் சுடர் வெண் மின்னுக்கொல்?
அன்றிஎன் ஆவி அடும் அணி முத்தங்கொலோ? அறியேன்
குன்றம் எடுத்த பிரான் முறுவல் எனது ஆவி அடும்
ஒன்றும் அறிகின்றிலேன் அன்னைமீர்!எனக்கு உய்விடமே.–7-7-5-

மந்த ஸ்மிதம் -முகமும் முறுவலும்-ஸுசீல்ய ஸூ சகம் -சம்பாஷண மாவ இவ-ஸ்மிதம் நிர்ஜரிகா-தவ வத்ஸல -அருவி கொட்ட
பூதலே விகீர்ணா-ரத்னம் ஹாரம் -முத்து ஹாரம் -ஒளி பட்டு -தேவ பெருமாள் திருவடி தொடும் படி பவள மாலை ஆடி இருக்குமே –
ஓடையாக சுழித்து வெளுப்பாக -உள் மல்லிகை மாலை -போலே ரம்பா ஸ்தம்பம் தொடைகளில் இறங்கி விரல் வெள்ளை நகம் வெளியே ஓடும் –
கோவர்த்தன உத்தாரணம் -பண்ணி புன்சிரிப்பு -செய்து அருளினான் -தாத்காலிக மந்த ஸ்மிதம் –
ஈட்டிய வெண்ணெய் தோய்ந்த மூக்கு போலே முன்பு -ஒதுங்கி பிழைக்க இடம் இல்லையே
என்று நின்றே திகழும் செய்ய ஈன்சுடர் வெண் மின்னுக்கொல்?-திகழும் சிவக்க -அதரம்-தாய் -முத்து பல வரிசை –
மின்னல் போலே -செக்கர் வானம் பிரசவித்த -பவளம் ஈன்ற முத்தோ
ஒவ்வொரு பாட்டிலும் இரண்டு சொல்லி இதுவா அதுவா என்பது போல் இங்கும் –
அன்றிஎன் ஆவி அடும் அணி முத்தங்கொலோ? அறியேன்-32 அணி அணியாக நின்ற மகா உபகாரகன் –
குன்றம் எடுத்த பிரான் முறுவல் எனது ஆவி அடும்-ரக்ஷித்ததால்
ஒன்றும் அறிகின்றிலேன் அன்னைமீர்!எனக்கு உய்விடமே.-எங்கும் சென்று பிழைக்க இடம் இல்லை
அவயவங்கள் தனித் தனியே நலியும் -பாதகம் எங்கும் -பெருமாள் திருமேனி ஒவ் ஒரு அழகும் பாதகம்

‘கோவர்த்தன மலையைத் தூக்கிக் குடையாகப் பிடித்த உபகாரகனான ஸ்ரீகிருஷ்ணனுடைய முறுவலானது, என்றும் நிலைபெற்று விளங்குகின்ற
செம்மையை வீசுகின்ற சுடரையுடைய வெண்மையான மின்னல் தானோ? அன்றி, என் உயிரை வருத்துகின்ற அழகிய முத்துகள் தாமோ?
அறியேன் எனது ஆவியை வருத்துகின்றது, அன்னைமீர்! நான் பிழைக்கும் இடத்தை ஒரு சிறிதும் அறிகின்றிலேன்,’ என்றபடி.
‘முறுவல், மின்னுக்கொல்’ முத்தங்கொல்’ அறியேன்; உய்விடம் ஒன்றும் அறிகின்றிலேன்,’ என்க.

முகத்தில் வாய்க்கரை நாம் இருக்க இவை முற்படப் போவதே –
வாய்க்கரை -தொடக்கம் -அதரம்

என்றும் நின்றே திகழும் செய்ய ஈன் சுடர் வெண் மின்னுக் கொல்-
என்றும் ஒக்க மாறாதே விளங்கா நிற்பதாய், செய்ய சுடரை ஈனா நின்றுள்ள வெண் மின்னோ?
திருப் பவளத்திற் சிவப்பும் திரு முத்து நிரையில் வெளுப்புமாய்க் கலந்து தோற்றுகிற போது,
திருப் பவளத்தின் சிவப்பை அது ஈன்றாற் போலே ஆயிற்று இருக்கிறது. –
அபூத உவமை -இல் பொருள் உவமை —

இதனை ‘அசிராம்ஸூ;’ என்பர்களே.
பிறரை நலிய என்றவாறே பல் இறுக்கிக் கொண்டு வருகிறது காணும்.
புன்னகை எப்பொழுதும் நிற்காதே -நித்தியமாக நலிய நித்யத்வம் ஏறிட்டுக் கொண்டதே –
(புன்னகை எப்பொழுதும் நீங்காது -அது என்னை நலியவே நித்யத்வத்தை ஏறிட்டுக் கொண்டது என்றவாறு
முத்துப் பரிசை வரிசை ஸ்திரமாக இருக்குமே )

அன்றி என் ஆவி அடும் அணி முத்தங்கொலோ-
அன்றிக்கே, என் உயிரை முடிக்கிற திருமுத்து நிரை தானேயோ?
யானை அணி செய்து வந்து தோன்றினாற்போலே இருத்தலின், ‘அணி முத்தம்’ என்கிற்று.
அன்றிக்கே,
‘அழகிய முத்தம்’ என்னுதல் –
மேலே ‘வெண் மின்னுக்கொல்’ என்ற இடத்தே திரு அதரத்தோடே கூடின சேர்க்கையாலே நலிந்தபடி சொல்லிற்று;
இங்குத் தனியே நலிகிறபடி சொல்லுகிறது.

குன்றம் எடுத்த பிரான் முறுவல் எனது ஆவி அடும்-
மலையை எடுத்து மழையிலே நோவு படாத படி பெண்களை நோக்கின உபகாரகனுடைய முறுவலானது,
என் ஒருத்திக்கும் பாதகமாகா நின்றது.
‘பசுக்களை அன்றோ தான் நோக்கிற்று?’ என்னில்,
‘‘கோ கோபீஜந ஸங்குலம், அதீவார்த்தம்’-என்பது, ஸ்ரீவிஷ்ணு. புரா. 5. 11. 13.

மிக்க வருத்தம் அடைந்த பசுக்களின் கோபிமார்களின் கூட்டத்தைப் பார்த்து’ என்னக் கடவது அன்றோ?
மழையால் வந்த நலிவை மலையை எடுத்து நீக்கி, அவர்கள் துன்பம் எல்லாம் போம் படி
புன்முறுவல் செய்து கொண்டாயிற்று நின்றது.
‘ஆனால், இது வாராதபடி இடம் தேடி உஜ்ஜீவிக்கப் பார்த்தலோ?’ என்ன,

ஒன்றும் அறிகின்றிலேன் அன்னைமீர் எனக்கு உய்விடமே –
‘எனக்குச் சென்று உஜ்ஜீவிக்கலாவது ஓரிடம் உண்டோ?’ என்று நானும் தேடா நின்றேன்;
‘இங்கு ஒதுங்குவதற்கு ஓரிடம் காண்கின்றிலேன்.

அன்றிக்கே,
மேலே சொன்ன அழகுகள் பாதகமாகிற இத்தனை அல்லது.
ஒதுங்க நிழலாய் இருப்பது ஓரிடம் காண்கின்றிலேன்,’ என்னுதல்.
சாதக அழகு ஒன்றும் இல்லை எல்லாமே பாதகம் தான்

—————————————————————————————————

உய்விடம் ஏழையர்க்கும் அசுரர்க்கும் அரக்கர்கட்கும்
எவ்விடம்? என்றிலங்கி மகரம் தழைக்கும் தளிர் கொல்?
பைவிடப் பாம்பணையான் திருக் குண்டலக் காதுகளே
கைவிடல் ஒன்றும் இன்றி அடுகின்றன காண்மின்களே.–7-7-6-

கரண பூஷண -தோள்களுக்காக குழல்களுக்கா காதுகளுக்கா -மனசுக்கு இட்ட ஆபரணம் -நயன -மீன் -குண்டலம் மீன் –
சண்டை போடாமல் இருக்கே -சீறு பாறு-மின்னு மா மகர மா குண்டலங்கள் –
அவதார கந்தம்-பீஜம் -அனந்த சாயி -திரு மகர குழைகள்
உய்விடம் ஏழையர்க்கும் அசுரர்க்கும் அரக்கர்கட்கும்-யாருமே உய்ய முடியாதே -அடைய வில்லையே அபலைகள் -அநு கூலர் -பிரதி கூலர் விபாகம் இல்லாதபடி
எவ்விடம்? என்றிலங்கி மகரம் தழைக்கும் தளிர் கொல்?-ஆடி அசைந்து தேஜஸ் -மகராகாரம் மீன் வடிவம் கொண்டு தளிர் போல காது காப்புகள்
பைவிடப் பாம்பணையான் திருக் குண்டலக் காதுகளே-ஸ்பர்சத்தால் விகஸித்த பணங்கள்-
கைவிடல் ஒன்றும் இன்றி அடுகின்றன காண்மின்களே-ஒரு பிரகாரத்தாலும் கை விடாமல் -நலிகின்றன –
போக்யமான -இவை -அஸக்யத்தையால் பாதகம் -காண்மின் -நீங்களும் பார்க்கலாமே

‘பெண்களுக்கும் அசுரர்களுக்கும் அரக்கர்கட்கும் உய்விடம் எங்கே?’ என்று கொண்டு விளங்கி மகரத்தின் வடிவாகத் தழைக்கின்ற தளிர்கள்
தாமோ படத்தையுடைய விஷம் பொருந்திய பாம்பைப் படுக்கையாகவுடைய எம்பெருமானது குண்டலங்கள் தரித்த காதுகள்?
சிறிதும் விட்டு நீங்குதல் இன்றி என்னை வருத்துகின்றன காண்மின்கள்,’ என்கிறாள்.
‘குண்டலக் காதுகள், மகரம் தழைக்கும் தளிர்கொல்? ஒன்றும் கைவிடல் இன்றி அடுகின்றன காண்மின்கள்,’ என்க. மகரம்-மகரகுண்டலங்கள்.

‘நாம் செவிப் பட்டிருக்க இவற்றை முன்னே போக விட்டிருந்தோம்’ என்று திருக் காதில் அழகு வந்து
நலிகிற படியைச் சொல்லுகிறது. காதாட்டிக் கொண்டு சொல்லுவரே.
(செவிப் பட்டிருக்க–இவர் பாடுவதை கேட்டுக் கொண்டே இருக்க -செவியில் மகர குண்டலங்கள் இருக்க —
என்னிடம் தானே ஆபரணங்கள் உள்ளன -என்று -ஆட்டிக் கொண்டு காதே பேச )

வேறும் ஒரு வகையாக ரசோக்தியாக அவதாரிகை அருளிச் செய்கிறார்,
‘காதாட்டிக் கொண்டு சொல்லுவரே’ என்று. ‘
அவனுடைய திருமகர குண்டலங்களும் திருக் காதுகளும் நலிகிறபடி சொல்லுகிறாள்’ என்பது,
இருபத்து நாலாயிரப்படி.

ஏழையர்க்கும் அசுரர்க்கும் அரக்கர்கட்கும் உய்விடம் எவ்விடம் என்று இலங்கி மகரம் தழைக்கும் தளிர் கொல் –
‘அசுரர்கட்கும் அரக்கர்கட்கும் பெண்களுக்கும் தப்பிப்போய்ப் பிழைக்கும் இடம் எவ்விடம்?’ என்று
விளங்குகின்றனவாய்க் கொண்டு மகரம் தழைக்கின்ற தளிரே?
அசுரரும் அரக்கரும் அழகு கண்டால் பொறுக்க மாட்டாமல் முடிவர்கள்; பெண்கள் அடையப் பெறாமல் முடிவர்கள்.

‘பெண்களை நலியுமாறு போலே அசுரர்கட்கும் அரக்கர்கட்கும் சினேகத்தை விளைத்துப் பாதகம் ஆகா நின்றன’ என்று
ஒரு தமிழன் கூறி வைத்தான் என்று கூறியதனைச் சீயர் கேட்டருளி,
‘இப் பொருள் அழகிது: ஆனாலும். அபக்ஷதர்மம்; அசுரர்களுக்கும் அரக்கர்களுக்கும் பாதகம் ஆகா நின்றது என்று
இப்போது இது சொல்லுகை, தேட்டம் அன்றே?
ஆன பின்பு அது வேண்டா,’ என்று அருளிச் செய்தாராம்.
அசுரர் அரக்கர் பாதகம் போலே பெண்களுக்கும் பாதகம் என்பதே பிரகரணத்துக்கு சேரும் –

பை விடம் பாம்பு அணையான் திருக் குண்டலம் காதுகள்-
தன்னுடைய ஸ்பர்சத்தாலே விரிந்திருக்கிற படங்களையும்,
உகவாதார் முடியும்படியான விஷத்தை யுமுடையனான திருவனந்தாழ்வானைப் படுக்கையாக
வுடையவனுடைய திருக்குண்டலக் காதுகளே.
‘திருக் காதுகளில் அழகு பாதகம் ஆமாறுபோலே ஆயிற்று, திருவனந்தாழ்வானுடைய சேர்த்தியும் பாதகம் ஆகிறபடி.
மூக்கு வெண்ணெய் -கோவர்த்தனம் புன்னகை போலே அரவணை -சேர்ந்து இவை -அநந்த எண்ணிறந்த புருஷகாரம்
அன்றிக்கே,
‘பெறுகைக்கு அநந்த புருஷகாரமுண்டாய் இருக்கக் கண்டீர், நான் நோவு படுகிறது!’ என்னுதல்.
(அநந்த புருஷகாரமுண்டாய்-எண்ணிறந்த -திரு அனந்தாழ்வானை புருஷகாரமாக சாடு )
மேலே பாதகமாகக் கூறுப் பட்டவையும் ‘நன்று’ என்னலாம்படி இவை நலிகின்றனவாதலின், ‘காதுகளே’என்கிறாள். என்றது,
‘அவை, தண்ணீர்ப் பந்தல் வைத்தது என்னும்படியாக ஆயின,’ என்றபடி,
‘மாலை. . . நல்கிற்றை எல்லாம்’திருவிருத்தம், 35.-என்னுமாறு போலே.
மனம் உடையோருக்கு-திருத் துழாயில் ஆசைப்பட்டவருக்கு -மாலை -திருடுவது போலே புகுந்து
பணி வாடை வீசி சந்த்யா காலம் நல்லதாக்கிற்றே –

கைவிடல் ஒன்றும் இன்றி –
ஒரு காலும் கைவிடாதே; என்றது,
‘ஒருகால் விட்டுப் பற்றுமது அன்றிக்கே’ என்றபடி.

அடுகின்றன-
முடியா நின்றன.

காண்மின்களே –
அவர்களுக்கும் எல்லாம் உருவு வெளிப்பாடாய்த் தோற்றும் என்றிருக்கிறாள்;
‘வாயுந் திரையுகளில்’-நீயும் திருமாலால் நெஞ்சம் கோள் பட்டாயே -என்ற ஆழ்வார் அன்றோ?

———————————————————————————————-

காண்மின்கள் அன்னையார்காள்! என்று காட்டும் வகை அறியேன்!
நாண் மன்னு வெண் திங்கள் கொல்,நயந்தார்கட்கு நச்சிலை கொல்
சேண் மன்னு நால் தடந் தோள் பெருமான் தன் திரு நுதலே?
கோண் மன்னி ஆவி அடும் கொடியேன் உயிர் கோளிழைத்தே.–7-7-7-

மகா புஜன் கிருஷ்ணன் திரு நெற்றி அழகு
காண்மின்கள் அன்னையார்காள்! என்று காட்டும் வகை அறியேன்!-பிரகாரம் அறியேன்
நாண் மன்னு வெண் திங்கள் கொல்,நயந்தார்கட்கு நச்சிலை கொல்-அஷ்டமி சந்திரன் -சுக்ல பக்ஷம் -கலங்கம் இல்லாத சந்திரனோ
ஆசைப்பட்டார்களுக்கு விஷ இலையோ
சேண் மன்னு நால் தடந் தோள் பெருமான் தன் திரு நுதலே?-ஓங்குதலை உடைத்தாய் நாலு வகைப்பட்ட
கோண் மன்னி ஆவி அடும் கொடியேன் உயிர் கோளிழைத்தே.–கோள் -மிடுக்கு மன்னி அவலம்பித்து அழகே பாதகமாம் படி -ஆத்மாவை நலியும்

‘தாய்மார்களே! பாருங்கோள் என்று காட்டுகின்ற தன்மையை அறியேன்; நீட்சி பொருந்திய வலிய நான்கு திருத்தோள்களையுடைய
கண்ணபிரானது அழகிய நெற்றியானது, எட்டாம் நாள் பிறைதானோ? அன்றி, விரும்பினவர்கட்கு நஞ்சு வடிவாக இருப்பது ஒரு இலைதானோ?
அறியேன்; கொடியேனாகிய என்னுடைய உயிரைக் கொள்ளுவதற்கு நினைத்து வலியோடு என் உயிரை வருத்துகின்றது,’ என்கிறாள்.
நாள் மன்னு வெண் திங்கள் – எட்டாம்பிறை. நச்சு – பெயர்ச்சொல்; விஷம். ‘கொடியேன் உயிர் கோள் இழைத்துக் கோள் மன்னி ஆவி அடும்,’ என்க.
கோள் – வலிமையும், கொள்ளதலும்.

‘இவை அவள் முன்னே நிற்க வல்லனவோ? இவற்றுக்கெல்லாம் தாம் நெற்றிக்கை அன்றோ?’ என்று
திரு நுதலில் அழகு வந்து நலிகிற படியை அருளிச் செய்கிறார்.
(நெற்றிக்கை –முந்தின வ்யூஹம் -மேலே உள்ளது அன்றோ

அன்னையர்காள்! ‘காண்மின்கள்’ என்று காட்டும் வகை அறியேன் –
‘இது நலியா நின்றது என்று சொல்லா நின்றாய்; எங்களுக்கு இது தெரிகிறது இல்லை;
எங்களுக்கும் தெரியும்படி சொல்லிக் காணாய்’ என்ன, ‘நீங்களும் இதனைக் காணுங்கோள்’ என்று,
உங்களுக்குக் காட்டும் பிரகாரம் அறிகின்றிலேன்.

என் கைக்குப் பிடி தருதல்,
உங்களுக்கு உருவு வெளிப்பாடு உண்டாதல் செய்யில்
அன்றோ என்றார் காட்டலாவது?

அன்னையர்காள்’
ஆண்களுக்குக் காட்டில் அன்றோ
பருவம் நிரம்பின உங்களுக்குக் காட்டலாவது?’ என்பாள், ‘அன்னையர்காள்’ என்கிறாள்.

நாள் மன்னு வெண் திங்கள் கொல்-
சுக்கில பக்ஷத்து எட்டாம் நாள் சந்திரனோ?
இளகிப் பதித்திருக்கைக்கும்,
‘காட்டு, காட்டு’ என்று வளருகைக்கும்,
காட்சிக்கு இனியதாய் இருக்கைக்கும்.

நயந்தார்கட்கு நச்சு இலை கொல்-
ஆசைப்பட்டார்க்கு நச்சுப் பூண்டோ?’ என்னுதல்;

அன்றிக்கே,
‘தன்னை ஆசைப் பட்டார்க்கு ஆசைப்பட வேண்டாதிருக்கிறதோ?’என்னுதல். –
நச்சினால் இல்லை–இல்லாமல் போனாயோ –

‘நச்சு மா மருந்தம்’ திருவாய். 3. 4. : 5. -என்னுமவர் அன்றோ
இப்போது கண்ணாஞ்சுழலை இட்டு இவ்வார்த்தை சொல்லுகிறார்?
‘இன்ன மலையிலே உண்டு’ என்று அங்கே சென்று தேடி வருந்த வேண்டாமல்,
ஆசைப்படுவதுமாய்
மேல் காற்றிலே காட்டப் பரிகாரமுமாம் மருந்தாயிற்று இது.

மா மருந்தம்’
அபத்தியத்தையும் பொறுத்துக் கொள்ளும் மருந்தாதலின். ‘மா மருந்தம்’என்கிறது.
இவன் தலையிலே பழி இட்டுக் கைவிடும் மருந்து அன்று;
வான மா மலையில் தலையான மருந்து அன்றோ. இப்போது இவளுக்கு நச்சுப் பூண்டு ஆகிறது?

சேண் மன்னும் நால் தடம் தோள் பெருமான் தன் திரு நுதலே-
ஒக்கத்தை யுடைத்தாய், கற்பகத் தரு பணைத்தாற் போலேயாய்ச் சுற்றுடைத்தாய் இருக்கிற திருத் தோள்களில்
அழகாலே என்னைத் தனக்கே உரியவளாகும்படி ஆக்கினவனுடைய திருநெற்றியே

‘ஆயதாஸ்ச ஸூவ்ருத்தாஸ்ச பாஹவ: பரிகோபமா:
ஸர்வபூஷண பூஷார்ஹா, கிமர்த்தம் ந விபூஷிதா:’-என்பது, ஸ்ரீராமா. கிஷ். 3 : 14.

‘நீண்டு உருண்டு கணையங்கள் போன்ற அழகிய திருத் தோள்கள் அணிகளால்
ஏன் மறைக்கப்படாமல் இருக்கின்றன? என்னும்படியே
திருவடி அகப்பட்ட துறையிலே காணும் இவளும் அகப்பட்டது.

கொடியேன் உயிர் கோள் இழைத்துக் கோள் மன்னி ஆவி அடும்-
என் உயிரினுடைய அழகை அழித்துக் கொள்கையிலே விருப்பத்தைச் செய்து முடியா நின்றது.

அன்றிக்கே,
‘அழகு பாதகமாம்படி பாவத்தைச் செய்த என்னுடைய உயிரை முடிக்கையிலே துணிந்து,
அதிலே விருப்பத்தை வைத்து, உயிரை முடியாநின்றது,’ என்றுமாம்.

—————————————————————————————————

கோளிழைத் தாமரையும் கொடியும் பவளமும் வில்லும்
கோளிழைத் தண் முத்தமும் தளிரும் குளிர் வான் பிறையும்
கோளிழை யாவுடைய கொழுஞ்சோதி வட்டங்கொல்? கண்ணன்
கோளிழை வாண் முகமாய்க் கொடியேன் உயிர் கொள்கின்றதே.–7-7-8-

சேர்ந்து -படைகள் திரண்டு -உத்தம அவயவ ஸுந்தர்யம் திரு முக ஸுந்தர்யம் -திரு முக சோபை
கோளிழைத் தாமரையும் கொடியும் பவளமும் வில்லும்-கண்கள் /மூக்கு / அதரம் /புருவம் /-நெற்றி /கோள் மிடுக்கு -ஒளி
கோள் -மிடுக்கு -ஒளி -இழை ஆபரணம் -ஒளியே ஆபரணம் இவற்றுக்கு -காதுக்கு மட்டும் ஒளி ஆபரணமும் மகர நெடும் குழை ஆபரணமும் உண்டே
த்ருஷ்டாந்தம் -மட்டுமே சொல்லி -உபமேயம் சொல்லாமல் முற்று உவமை -சாத்ருஸ்யம்-
கோளிழைத் தண் முத்தமும் தளிரும் குளிர் வான் பிறையும்-குளிர்ந்த முத்தம் -புன் சிரிப்பின் ஒளியும் -தந்த பந்த காந்தி தனியாக –
தளிர் கர்ண பாசம் குண்டலங்கள் -சீதளம் -தனக்கு ஆபரணமாக நெற்றியும்
கோளிழை யாவுடைய கொழுஞ்சோதி வட்டங்கொல்? கண்ணன்-அழகை ஆபரணமாகக் கொண்ட பூரணமான ஜோதிர் மண்டலம் திரு முகம்
உபமேயமான திருக்கண்கள் –திரு நெற்றி –
கோளிழை வாண் முகமாய்க் கொடியேன் உயிர் கொள்கின்றதே.-அழகால் நோவுபடும் பாவியேன் -பிராணனை அபஹரியா நின்றது

தன் ஒளியையே தனக்கு ஆபரணமாகவுடைய தாமரையும் கொடியும் பவளமும் வில்லும் தன் ஒளியையே தனக்கு ஆபரணமாகவுடைய
குளிரந்த முத்தமும் தளிரும் குளிர்ந்த பெரிய எட்டாம் பிறையுமாகிய இவற்றையெல்லாம் தன்னகத்தேயுடைய, கொள்ளப்பட்ட ஆபரணத்தையுடைய சோதி மண்டலமோ? கண்ணபிரானுடைய, தன்னழகே தனக்கு ஆபரணமாய் ஒளியையுடைத்தான முகமாய்க்கொண்டு கொடியேனுடைய உயிரைக் கொள்ளை கொள்ளுகின்றது.

‘கண்ணன் கோள் இழை வாள்முகம், தாமரையும் கொடியும் பவளமும் வில்லும் தண்முத்தமும் தளிரும் பிறையும் ஆகிய இவற்றைத் தன்னகத்தேயுடைய கொழுஞ்சோதி வட்டங்கொல்? அத்தகைய சோதி வட்டமானது, வாண்முகமாய்க் கொடியேன் உயிர் கொள்கின்றது?’ என்று சொற்களைக் கொணர்ந்து கூட்டி முடித்து கொள்க.

‘தலையான பேரை நெற்றிக்கையிலே (நெற்றியை பூசல் களத்தில் முதலில் )விட்டுக் காட்டிக் கொடுக்க ஒண்ணாது’ என்று, மேலே நலிந்தவை எல்லாம் சேர
ஒரு முகமாய் வந்து நலிகிறபடி சொல்லுகிறது. அங்கும் இங்கும் சிதறிக் கிடந்த படையைப் பகைவர்கள் வந்து முடுகினவாறே
ஒன்றாகத் திரட்டி ஒரு காலே தள்ளுவாரைப் போலே, தனித்தனியே நலிந்த அழகுகள் எல்லாம் திரள வந்து நலிகிறபடியைச் சொல்லுகிறாள்.

கோள் இழைத் தாமரையும்-
சாதி ஒன்றாய் இருக்கச் செய்தேயும், ‘பொற்கால் தாமரை, நூற்கால் தாமரை’ என்பனவாகத் தாமரையில்
சில பேதங்கள் உள அன்றோ?
1-அதில் நூற்கால் தாமரை என்னுதல்;
2-அன்றிக்கே, ‘கொள்கையிலே துணிந்திருக்கிற தாமரை’ என்னுதல்;
3-அன்றிக்கே, ‘தன்னழகே தனக்கு ஆபரணமாக வுடைய தாமரை என்னுதல்;
4-அன்றிக்கே, ‘ஒளியே ஆபரணமான தாமரை’ என்னுதல்.

(நூலை உடைத்தான தாமரை
நெஞ்சை அபஹரிக்கை -அபஹரிக்கையில் துணிவு
தனது அழகே ஆபரணம் -கோள் -அழகு
தேஜஸே ஆபரணம் )

திருக் கண்ணும்-
திருக் கண்களும்,

கொடியும் –
திரு மூக்கும்.

பவளமும்-
திரு அதரமும்,

வில்லும் –
திருப் புருவமும்.

கோள் இழைத் தண் முத்தமும்-
தன் ஒளியே ஆபரணமாக வுடைய குளிர்ந்த பற்களின் நிரையும்.

அன்றிக்கே,
‘இழையிலே கோப்புண்ட முத்துப் போலே இருக்கிற குளிர்ந்த பற்கள்’ என்னுதல்,

‘தளிரும் –
திருக் காதும்.

குளிர் வான் பிறையும்-
திரு நெற்றியும்.

‘ஆக,
1-நேத்திரமானவரும்
2-‘மூக்கு வலியோம்’ என்றவரும்,
3-வாய் சொல்லிப் போனவரும்,
4-‘கீழ் மேல் ஆயிற்றோ’ என்று வளைத்துக் கொடு போனவரும்,
5-வாய்க்கரையிலே இருந்தவரும்.
6-தாம் செவிப்பட்டவாறே போனவரும்,
7-‘இவற்றுக்கு நெற்றி நாம்’ என்று போனவரும்
எல்லாம் ஒரு முகமாய்த் திரண்டு வந்து’ என்றபடி.

கோள் இழையா வுடைய கொழுஞ்சோதி வட்டம் கொல்-
கொள்ளப்ட்ட ஆபரணத்தை யுடைத்தான ஜோதி மண்டலமோ உருவகம் இருக்கிறபடி?

அன்றிக்கே,
‘தன்னழகே தனக்கு ஆபரணமாய் இருக்கது ஒரு ஜோதி மண்டலமோ?’ என்னுதல்.

கண் கோள் இழை வாண் முகமாய்-
கண்ணனுடைய, தன்னழகே தனக்கு ஆபரணமாய் ஒளியை யுடைத்தான முகம் என்று ஒரு வியாஜத்தை இட்டு.

கொடியேன் உயிர் கொள்கின்றதே-
வாழுங்காலத்தில் கெடும் படியான பாவத்தைச் செய்த என்னுடைய உயிரைக் கொள்கின்றது,

கோள் இழையாவுடைய கொழுஞ்சோதி வட்டங்கொல்?
‘உயிர் பெறுங்காலத்திலே உயிர் இழக்கும்படியான பாபத்தைச் செய்தேன்’ என்பாள், ‘கொடியேன்’ என்கிறாள்.

——————————————————————————————

கொள்கின்ற கோள் இருளைச் சுகிர்ந்திட்ட கொழுஞ் சுருளின்
உள் கொண்ட நீல நன்னூல் தழை கொல்?அன்று மாயன் குழல்
விள்கின்ற பூந் தண் துழாய் விரை நாற வந்து என்னுயிரைக்
கள்கின்றவாறு அறியீர் அன்னைமீர்!கழறா நிற்றிரே.–7-7-9-

ப்ரசஸ்த கேச பாசம் -திரு முகத்துக்கு முட்டாக்கு போல உள்ள திருக் கேசம் -ஜோதிஸ்ஸூ க்கு –
ஆச்சர்ய ரூபம் -கிருஷ்ணன் உவமானம் சொல்ல முடியாத திருக் குழல்
கொள்கின்ற கோள் இருளைச் சுகிர்ந்திட்ட கொழுஞ் சுருளின்உள் கொண்ட நீல நன்னூல் தழைகொல்?-
இரவு -அம்மாவாசை -மார்கழி நள் இருள் -காள ராத்திரி -பட்டையாக்கி நூலாக்கி -வெளுப்பு பாகம் கழற்றி -சாயம் தீட்டி –
சுகிர்தல் பன்னுதல் -சாரம் எடுத்து -திரட்டுப்பால் போலே -நீல நன்னூல் -அழகிய நூல் திரளோ
லோகம் முழுங்கும் கும் இருட்டு-கை படாமல் இந்த்ரம் -சுருட்டையாக இருக்காதே –
சோழ தேச பெண்கள் பேசுவது போலே தேசிகன் -குறுக்க குறுக்க பேசி –
அன்று மாயன் குழல்-இப்படி இல்லை என்று இதற்கு மட்டும் தான் -கிருத்ரிம மாகத் தானே இருக்கும் –
விள்கின்ற பூந் தண் துழாய் விரை நாற வந்து என்னுயிரைக்-விகசித்த புஷ்ப்பம்-திருத் துழாய் -இருந்து இருக்கலாம் -தளமே புஷ்ப்பம் என்றுமாம்
கள்கின்றவாறு அறியீர் அன்னைமீர்!கழறா நிற்றிரே.ஏசுதல் குறை சொல்லுதல் -திருடி விடும் பிரகாரம் அறியார்
-தாய் மாறாக இருந்து அவஸ்தை அறியாதே நியமியா இருந்தீர்கள்

உலகத்தை எல்லாம் கொள்ளக்கூடியதான வலிய இருளை எஃகிய செறிந்த இருளின் உள்ளே கொள்ளப்பட்ட நீல நிறத்தையுடைத்தான
அழகிய நூலின் திரளோ? அன்று; மாயனுடைய திருக்குழல், மலர்கின்ற பூக்களையுடைய குளிர்ந்த திருத்துழாயினது வாசனையானது
பரவும்படி என் உயிரைக் கொள்கின்றவாற்றை அறியீர்கோள்; தாய்மார்களே! இடித்துக் கூறுகின்றீர்கோள்.
‘அன்னைமீர்! மாயன் குழல், உள் கொண்ட நீல நன்னூல் தழைகொல்? அன்று; மாயன் குழல் என் உயிரைக் கள்கின்றவாறு அறியீர்; கழறாநிற்றீர்.’ என்க.

‘இச் சமயத்துக்கு அன்றோ நமக்குப் பூவும் புழுகும் இட்டுச் சிரஸா வஹித்துக் கொடு போந்தது?’ என்று
‘திருக் குழற் கற்றையில் அழகு வந்து நலியா நின்றது’ என்கிறாள்.

கொள்கின்ற கோள் இருளைச் சுகிர்ந்திட்ட கொழுஞ்சுருளின் உள் கொண்ட நீல நன்னூல் தழைகொல் –
திருக் குழலின் அழகுக்கு ஓர் உவமானம் சொல்லப் புக்கு, அழகுக்கு அது தான் நேர்கொடு நேர்
உபமானமாகப் போராமையாலே அதனைக் கிடந்து சிக்ஷிக்கிறது.

‘பிரளய காலத்தில் பகல் இரவு என்னும் வேறுபாடு அற எங்கும் ஒக்கத் தானே யாம்படி
பரந்து நின்றுள்ள, கோட்பாட்டையுடைய இருள்’ என்னுதல்.

‘கோள்’ என்று மிடுக்காய், ‘மிடுக்கையுடைய இருள்’ என்னுதல்.
அந்த இருட்டினைச் சுகிருவது -எஃகுவது:
இப்படி எஃகி அதிலே கொழுவிதான அமிசத்தைத் திரட்டுவது,
அது தன்னிலும் உண்டான புற இதழைக் கழிக்க, அக வாயில் வயிரமாய் நீலமான
நிறத்தை யுடையத்தாய் நன்றாய் இருந்துள்ள நூல் திரளோ?

அன்று மாயன் குழல் –
இவள் நெஞ்சிலே அழகிதாக மயிர்பட்டது காணும்.
இத்தனை அடைமொழி கொடுத்துக் கூறினால் ஆயிற்று உபமானமாகப் போராது என்னலாவது.

பராசர பட்டர் ஆயிரம் நாக்கு வாங்கி அரங்கன் வைபவம் சொல்ல முடியாது என்றால் போலே –
பின்னையும், ஆச்சரியத்தை யுடையனான அவனுடைய திருக்குழல் என்னுமித்தனை. –
மாயன் குழல் என்று சொல்லுவதே –
இத்தனை இடு சிவப்பானது அவனுடைய இயல்பிலே அமைந்ததான திருக் குழலுக்கு ஒப்பாகுமோ?

விள்கின்ற பூந் தண் துழாய் விரை நாற வந்து-
அலரா நிற்பதாய் அழகியதாய்க் குளிர்ந்திருந்துள்ள திருத் துழாயில் பரிமளமானது
முகத்திலே அலை எறிய வாயிற்று வந்து தோற்றுகிறது.
திருக் குழலில் அழகுக்குத் திருத் துழாயில் பரிமளமானது தூசி ஏறி நடக்க ஆயிற்று வந்து பாதகம் ஆகிறது.

சேனா முகத்திலே வந்து அனைத்தையும் பாதகமாக தூண்டிற்று-என்றவாறு

என் உயிரைக் கள்கின்றவாறு அறியீர் –
நீங்கள் எல்லாரும் சுகமே இருக்கச் செய்தே, என் ஒருத்தி யுடைய ஆத்துமாவை வந்து
களவு காண்கிற பிரகாரத்தை அறிகின்றலீர்கோள்.

கள்கின்ற –
களவு காண்கின்ற.
‘களவு காண்கையாவது என்?’ என்னில்,
இத் தலையில் இசைவு இன்றிக்கே இருக்கக் கைக் கொள்ளுதல்.
‘அவன் அன்றோ களவு காண்கிறான்?’

பண்டே உன் தொண்டாம் பழ வுயிரை என்ன தென்று
கொண்டேனைக் கள்வன் என்று கூறாதே-மண்டலத்தோர்
புள் வாய் பிளந்த புயலே! உனைக்‘கச்சிக்
கள்வா!’ என்று ஓதுவது என் கண்டு?’-என்பது, நூற்றெட்டுத் திருப்பதியந்தாதி.

இத் தலை அத் தலையானபடி.
சம்பந்தம் இல்லாதவன் அபகரித்தால் அதனைப் போக்கலாம்;
சம்பந்தமுள்ளவன் அபகரித்தால் பரிகாரம் இல்லை அன்றோ?

‘த்வம்மே ஹம்மே குதஸ்தத் ததபிகுத:
இதம் வேத மூல ப்ரமாணாத்
ஏதச்சாநாதி ஹித்தாத் அநுபவவிபவாத்
ஸோபி ஸாக்ரோஸ ஏவ
க்வாக்ரோஸ: கஸ்ய கீதாதிஷூ மம விதித:
கோத்ர ஸாக்ஷீ ஸூதீ: ஸ்யாத்
ஹந்த த்வத் பக்ஷபாதீ ஸஇதி
ந்ருகலஹே ம்ருக்ய மத்யஸ்த் த்வத்வம்’-என்று பட்டர் அருளிச் செய்த சுலோகம் அநுசந்தேயம்.

இது கைப் பட்டவாறே ஒரு பிரமாணம் கொடு நின்று வழக்குப் பேசத் தொடங்கும் அன்றோ அவன்?

அன்னைமீர் கழறா நிற்றிரே –
நீங்கள் வருந்தி இக் களவுக்கு நானும் பெரு நிலை நின்று கூட்டுப் பட்டேனாகப் பொடியா நின்றீர்கோள்.
இந்த உருவு வெளிப்பாட்டைத் தடை செய்தலும் வேண்டாவோ?
ஒரு நியமித்தல் நியமிக்கப்படுதல் என்னும் தன்மையேயோ வேண்டுவது பொடிகைக்கு?
கழறல் – நோவச் சொல்லுதல்.

—————————————————————————————-

நிற்றி முற்றத்துள் என்று நெரித் தகையராய் என்னை நீர்
சுற்றியும் சூழ்ந்தும் வைதிர் சுடர்ச் சோதி மணி நிறமாய்
முற்ற இம் மூவுலகும் விரிகின்ற சுடர் முடிக்கே
ஒற்றுமை கொண்டது உள்ளம் அன்னைமீர்! நசை என் நுங்கட்கே?–7-7-10-

சர்வாதிகத்வ ஸூ சகம் திரு அபிஷேகம்
நிற்றி முற்றத்துள் என்று நெரித் தகையராய் என்னை நீர்-முற்றத்தில் நிற்கிறாள் என்று சூழ்ந்து பழி சொல்லி
சுற்றியும் சூழ்ந்தும் வைதிர் சுடர்ச் சோதி மணி நிறமாய்-உலகம் கபளீ கரிக்கும் சுடர் ஒளி
முற்ற இம் மூவுலகும் விரிகின்ற சுடர் முடிக்கே-த்ரிவித சேதன அசேதன -அடங்களும் வியாபிக்கும் தேஜஸ்
ஒற்றுமை கொண்டது உள்ளம் அன்னைமீர்! நசை என் நுங்கட்கே?-ஒருமை பட்டது -வைக்கும் உங்களுக்கு -என்னிடம் என்ன பிரயோஜனம் –

‘முற்றத்திலே நிற்கின்றாய்’ என்று நெரித்த கையினையுடையவர்களாய்ச் சுற்றிலும் நின்றுகொண்டும், உங்களிலே விசாரித்துக்கொண்டும்
என்னை நீங்கள் வைகின்றீர்கள்; மூன்று உலகங்கள் முழுதும் சுடர்ச்சோதி மணி நிறமாய் விரிகின்ற சுடர் முடிக்கே என் உள்ளம் ஒருப்பட்டது;
‘அதுவாயிற்று’ என்றபடி. தாய்மார்களே! உங்களுக்கு என் பக்கல் விருப்பம் எதற்கு?
‘அன்னைமீர்! நீர் நெரித்த கையராய் என்னை வைதிர்; மூவுலகும் மணி நிறமாய் விரிகின்ற சுடர் முடிக்கே என் உள்ளம்
ஒற்றுமை கொண்டது; நுங்கட்கு நசை என்?’ என்க.

‘திருமகள் கேள்வனுங்கூட நம்மைத் தலை மேல் கொண்டு போருகிறது இவ் வவஸ்தைக்கு அன்றோ?’ என்று
திருமுடியில் அழகு வந்து நலிகிறபடியைச் சொல்லுகிறாள்.

நிற்றி முற்றத்துள் என்று. . . . . . . . . .நுங்கட்கு நசை என் –
இத்தனையும் நசை அறச் சொல்லாவிடில் அவர்கள் விடார்கள் போலே.
நிற்றி முற்றுத்துள் என்று –
‘முற்றத்துள் நிற்றி’ என்பர்கள்.

படுக்கையினின்றும் எழுந்திருந்து எல்லாரும் காணும்படி முற்றத்திலே நிற்கைக்கு மேற்படப்
பழி இல்லையாக நினைத்திரா நின்றார்கள்.
‘எவள் முன்பு ஆகாச சாரிகளான பிராணிகளாலும் பார்க்கப்படாதவளாய் இருந்தாளோ,
அத்தகைய சீதையைப் பெருந்தெருவில் செல்லும் மக்களும் கண்டார்கள்,’

‘யாந ஸக்யா புரா த்ரஷ்டும் பூதை: ஆகாஸகைரபி
தாமத்ய ஸீதாம் பஸ்யந்தி ராஜமார்க்ககதா ஜநா:’-என்பது, ஸ்ரீ ராமா. அயோத். 33 : 7.

என்றதைப் போன்று நினைத்திரா நின்றார்களாயிற்று இதனை.
முற்றித்திலே புறப்பட்டு நிற்கும்படி பிறந்த ஸாஹஸத்துக்கு நெரித்த கையராய்.

என்னை நீர் –
என்னை
உருவு வெளிப்பாடு புறப்பட விடுவித்து நிறுத்த நிற்கிற என்னை,
நீர்
இதனால் நலிவு வாராதபடி புண்ணியம் செய்த நீங்கள். என்றது.
‘அவன் புறப்பட விடுவித்து நிறுத்த நிற்கிற என்னை,
இது கொண்டு காரியம் இல்லாத நீங்கள்’ என்றபடி.

சுற்றியும் சூழ்ந்தும் வைதிர்-
‘இவளைத் தப்புவித்தோமாம் விரகு என்?’ என்று நெஞ்சிலே விசாரிக்கையும்,
கால் வாங்கிப் பேர நிற்கவும் ஒண்ணாதபடி சூழ நின்றும் பொடியா நின்றீர்கோள்.
அன்றிக்கே,
‘போயும் வந்தும் பொடியா நின்றீர்கோள்’ என்னுதல்.

சுடர்ச்சோதி மணி நிறமாய் இம்மூவுலகும் முற்ற விரிகின்ற சுடர் முடிக்கே
என் உள்ளம் ஒற்றுமை கொண்டது –
மிக்க புகரை யுடைத்தான இரத்தினத்தினுடைய ஒளியை யுடைத்தாய்க் கொண்டு
கண்ட இடம் எங்கும் பரம்பா நின்றுள்ள
ஒளியை யுடைய திருமுடியிலே ஒருமைப் பட்டது என்னுடைய உள்ளம்.

அன்றிக்கே,
‘அங்கே விலை செய்து கொடுத்தது’ என்னுதல். என்றது,-
ஒருப்பட்டது தத்பரமானது ஐகாந்த்யம் –
ஈடுபட்டு கிரயம் பண்ணிக் கொடுத்தது –
‘தப்புவிக்கைக்கு வார்த்தை சொல்லுகிற இவர்களைப் போலே ஓர் இடத்தில் அன்று அன்றே,
அகப்படுத்தி நலியக் கோலுகிற அது நிற்கும்படி?’ என்பதனைத் தெரிவித்தபடி.

அன்னைமீர் நசை என் நுங்கட்கே-
தாய்மாரான நீங்கள் என் பக்கல் நசை அற அமையும்,
தாய்மாராவார், பெற்று வளர்த்தப் போகத்திற்குத் தக்க பருவம் பிறந்தவாறே
கைப்பிடித்தவன் கையிலே காட்டிக்கொடுத்துக் கடக்க நிற்குமத்தனை போக்கி,
பொடியக் கடவர்களோ?
தக்க வந்து வந்தவர்களையும் பெற்ற சம்பந்தம் கொண்டு ஹிதம் சொல்லி மீட்கப் பார்க்கக் கடவதோ?

———————————————————————————————

கட்குஅரிய பிரமன் சிவன் இந்திரன் என்ற இவர்க்கும்
கட்குஅரிய கண்ணனைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
உட்குஉடை ஆயிரத்துள் இவையும் ஒருபத்தும் வல்லார்
உட்குஉடை வானவரோடு உட னாய் என்றும் மாயாரே.–7-7-11-

நித்ய ஸூரிகள் உடன் நித்ய சம்ஸ்லிஷ்டர் ஆவார் ஒரு கோவையாவார்
கட்குஅரிய பிரமன் சிவன் இந்திரன் என்ற இவர்க்கும்-காண அரிய கிருஷ்ணனை
கட்குஅரிய கண்ணனைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன-மானஸ அனுபவம்
உட்குஉடை ஆயிரத்துள் இவையும் ஒருபத்தும் வல்லார்-ஸ்வரூபம் ரூபம் குணம் வைபவம் இவற்றை நன்றாக பிரதிபாதனம் பண்ணி
உட்குஉடை வானவரோடு உட னாய் என்றும் மாயாரே.-சிரமம் பட மாட்டார்கள் -நிரந்தர பகவத் அனுபவ சக்தி உடைய நித்ய ஸூரிகள்
சர்வ காலமும் -இருந்து -சம்சார பந்தம் இல்லாமல் -வி நாசம் இல்லாமல் இருப்பார்கள் –

மக்கள் கண்களால் காண அரிய பிரமன் என்ன, சிவன் என்ன, இந்திரன் என்ன, ஆகிய இவர்கட்கும் காண அரிய கண்ணபிரானைத் திருக்குருகூரில்
அவதரித்த ஸ்ரீசடகோபர் அருளிச்செய்த மிடுக்கையுடைய ஆயிரம் திருப்பாசுரங்களுள் ஒப்பற்ற இந்தப் பத்துத் திருப்பாசுரங்களையும் வல்லவர்கள்,
ஆற்றலையுடையவாரன நித்தியசூரிகளோடு ஒரு கோவையாய் எப்பொழுதும் பேரின்பத்தை அனுபவிக்கப் பெறுவர்கள்.
உட்கு – அச்சமுமாம். மாயார் – அழியார்; என்றது, ‘நித்தியானுபவத்தை அனுபவிக்கப்பெறுவர்’ என்றபடி.

முடிவில், ‘இத்திருவாய்மொழியைக் கற்றவர்கள், பகவானுடைய பிரிவால் வருந்தாமல்,
நித்திய ஸூரிகளோடே கூடி நித்தியானுபவம் பண்ணப் பெறுவார்கள்,’ என்கிறார்.

கட்கு அரிய பிரமன் சிவன் இந்திரன் என்ற இவர்க்கும் கட்கு அரிய கண்ணனை –
மக்களுடைய கண்களுக்குப் புலப்படாதபடி இருக்கிற பிரமன் சிவன் இந்திரன் என்னும் இவர்களுக்கும்
கண்களுக்குப் புலப்படாதபடி இருக்கிற கிருஷ்ணனை.

பிரமன் முதலானோர்களுடைய கண்களுக்குக் காண முடியாதவனாய் இருக்கிற கிருஷ்ணன்,
மறக்க ஒண்ணாதபடி உருவு வெளிப்பாடாய்த் தோன்ற, அதனாலே நலிவு பட்டு,
போன போன இடம் எங்கும் சூழ்ந்துகொண்டது என்னும்படி ஆயிற்று இவர்க்குப் பிரகாசித்தபடி.

அவர்கள் கண்களுக்கு அரியன் ஆனாற்போலே ஆயிற்று,
இவர் கண்களுக்குச் ‘சூழவுந் தாமரை நாண் மலர் போல் வந்து தோன்றும்’ என்னும்படி பிரகாசித்தபடி.

குருக்கூர்ச் சடகோபன் சொன்ன-ஆழ்வார் அருளிச் செய்த உட்கு உடை ஆயிரத்துள் இவையும் ஒரு பத்தும் வல்லார்
உட்கு உடை வானவரோடு உடனாய் என்றும் மாயாரே –
சொல்லப் படுகின்ற பொருளை உள்ளபடி சொல்ல வல்ல ஆற்றலை யுடைத்தான ஆயிரத்திலும் வைத்திக் கொண்டு
இப் பத்தையும் கற்க வல்லவர்கள்,
நித்தியானுபவம் பண்ணா நின்றாலும் மேன்மேலெனப் பகவத் குணங்களைப்
பூர்ணமாக அனுபவிக்கைக்குத் தகுதியான யோக்கிதை யுடைய
நித்திய ஸூரிகளோடு ஒரு கோவையாய்
உருவு வெளிப்பாட்டாலே நோவுபடாமல்
அடியார்கள் குழாங்களை உடன் கூடி நித்தியானுபவம் பண்ணப் பெறுவர்.

என்றும் மாயாரே –
மாய்கையும் உருவு வெளிப்பாடும் பரியாயம் என்று இருக்கிறார் காணும்.

அன்றிக்கே,
‘மாயார்’ என்பதற்கு, ‘பிரியார்’ என்னுதல்.
பகவத் அபசாரம் பாகவத அபசாரம் உண்டானால் வருமது போல அன்றே, –
பகவானுடைய அங்கீகாரம் உண்டாய்
அது நிலை நில்லாமையால் படும் கிலேசம்? –
பிரளயம் கோத்தாற்போலே, கண்ணைக் கண் கோத்து அன்றோ கிடக்கிறது?
தம்முடைய கண் அவன் கண் கோத்து கிடந்தது -என்றபடி -ரஸோக்தி -முகமே இப்படி படுத்திற்றே –

சூழவும் –
இவை எல்லாம் அவன் கழுத்துக்கு மேலே படுத்தின கிலேசம் அன்றோ?-
மனஸ் சகாயம் இல்லாமல் -செய்து அருளினான் -என்றவாறு

——————————————————————————————-

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

சக
பீடாம் மஹதீம் அபாவ –
ஆலோக்யந் அபி –
கரே ந ஸம்ஸராபிஸ்மின் -கையால் அணைக்க முயல் -முடியாமல்
தத் பிரார்த்தித்த அனுபிகம ச -பிரார்த்தித்த படி -சேராமல்
பாவனா பூம்னா அச்யுத புரஸ்திதம் இவ -பக்தி பாவனை எல்லை -மானஸ உரு வெளிப்பாடு

————————————————————————-

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –

த்ருப்யாம் பத்மா க்ருத்ப்யாம் அமர தரு லதா நாசிகா தக
அதரேந ப்ருவாகேன ஸ்மிதேன மகர லதா குண்டலாப்யாம் விசிஷ்டா
அஷ்டமி சந்திரன் -அர்த்த இந்து பாலின பாஸ்யாம் அமல முக சசிநான்
நேத்ர சோபாதி பாஸா ஸ்ரீ மான் தேவக க்ரீடி ஸ்ம்ருதி விசத தனு-

1–த்ருப்யாம் பத்மா க்ருத்ப்யாம்–ஆழியங் கண்ண பிரான் திருக்கண்கள் கொலோ அறியேன்

2-அமர தரு லதா நாசிகா தக–மாட்டுயர் கற்பகத்தின் வல்லியோ கொழுந்தோ அறியேன்

3-அதரேந–கோலம் திரள் பவளக் கொழுந்துண்டங் கொலோ அறியேன்

4-ப்ருவாகேன–இன்னுயிர்க்கு ஏழையர் மேல் வளையும் இணை நீல விற்கொல் மன்னிய சீர் மதனன் கருப்புச் சிலை கொல்?

5-ஸ்மிதேன–என்று நின்றே திகழும் செய்ய ஈன்சுடர் வெண் மின்னுக்கொல்?
அன்றி என் ஆவி அடும் அணி முத்தங்கொலோ? அறியேன்

6-மகர லதா குண்டலாப்யாம் விசிஷ்டா–என்றிலங்கி மகரம் தழைக்கும் தளிர் கொல்?
பைவிடப் பாம்பணையான் திருக் குண்டலக் காதுகளே

7–அஷ்டமி சந்திரன் —நாண் மன்னு வெண் திங்கள் கொல்,நயந்தார்கட்கு நச்சிலை கொல்
சேண் மன்னு நால் தடந் தோள் பெருமான் தன் திரு நுதலே?–அர்த்த இந்து பாலின பாஸ்யாம் —

8-அமல முக சசிநான்– கோளிழை யாவுடைய கொழுஞ்சோதி வட்டங்கொல்? கண்ணன்
கோளிழை வாண் முகமாய்க் கொடியேன் உயிர் கொள்கின்றதே

9–நேத்ர சோபாதி பாஸா ஸ்ரீ மான் தேவா –மாயன் குழல் விள்கின்ற பூந் தண் துழாய் விரை நாற வந்து என்னுயிரைக்
கள்கின்றவாறு அறியீர் அன்னைமீர்!கழறா நிற்றிரே.

10-ஸ்ரீ மான் தேவா தேவக க்ரீடி–சுடர்ச் சோதி மணி நிறமாய் முற்ற இம் மூவுலகும் விரிகின்ற சுடர் முடிக்கே ஒற்றுமை கொண்டது உள்ளம்-

ஸ்ம்ருதி வீசத தனு

—————————————————————————————-

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 67-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்-

அவதாரிகை –

இதில் அவனுடைய உத்தம அங்கத்தில் அழகு ஒரு முகமாய் நலிகிறபடியைப் பேசுகிற
ஸ்ரீ ஸூக்தியை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
மல்கு நீலச் சுடர் தழைப்ப (7-6)-என்று கீழே பிரஸ்துதமான
ஸ்ரீ எம்பெருமான் உடைய அழகு திரு உள்ளத்திலே ஊற்று இருந்து
அத்தையே இடைவிடாமல் பாவித்து
பாவனா பிரகர்ஷத்தாலே அவ் வழகு பிரத்யஷ சாமானாகாரமாகத் தோற்றி
தனித் தனியாகவும்
திரளாகவும்
ஒரு முகம் செய்து நலிய தாம் நலிவு பட்டு செல்லுகிற படியை
உருவு வெளிப்பாட்டாலே நோவு படுகிறாள் ஒரு ஸ்ரீ பிராட்டி பாசுரத்தால் அருளிச் செய்கிற
ஏழையர் ஆவியில் அர்த்தத்தை-
ஏழையர்கள் இத்யாதியாலே அருளிச் செய்கிறார்-என்கை –

———————————————–

ஏழையர்கள் நெஞ்சை இளகுவிக்கும் மாலழகு
சூழ வந்து தோன்றித் துயர் விளைக்க -ஆழு மனம்
தன்னுடனே யவ் வழகைத் தான் உரைத்த மாறன் பால்
மன்னுமவர் தீ வினை போம் மாய்ந்து –67-

—————————————–

வியாக்யானம்–

ஏழையர்கள் நெஞ்சை இளகுவிக்கும் மாலழகு –
சபலைகளான-அபலைகள் யுடைய மனசை த்ரவிப்பிக்கும் ஸ்ரீ சர்வேஸ்வரன் உடைய
ஸ்மயமான முகாம்புஜத்தில் நயன சௌந்தர்யம் –

(தாஸாம் ஆவிரபூத் சௌரி: ஸ்மயமான முகாம்புஜ:
பீதாம்பரதர: ஸ்ரக்வீ ஸாக்ஷாத் மன்மத மன்மத: (ஸ்ரீ மத் பாகவதம் -32-32)

சூழ வந்து தோன்றித் துயர் விளைக்க –
எங்கும் சூழ்ந்து-ஸ்ம்ருதி விஷயமாய் பாதகமாக இறே துக்கத்தை விளைப்பது –
அதாவது
வ்ருஷே வ்ருஷே ஹி பஸ்யாமி–பாச ஹஸ்த மிவாந்தகம்-என்னும்படி
1-ஏழையர் ஆவி யுண்ணும் இணைக் கூற்றம் கொலோ அறியேன் -என்கிற முதல் பாட்டின் அடி ஒத்தின படி-

ஆழு மனம் தன்னுடனே யவ் வழகைத் தான் உரைத்த-
2-வெண்ணெய் யுண்டான் திரு மூக்கென தாவியுள்ளே மாட்டிய வல் விளக்கின் சுடராய் நிற்கும் -என்றும்
3-நீல நெடு முகில் போல் திருமேனி அம்மான் தொண்டை வாய் ஏலும் திசையுள் எல்லாம் வந்து தோன்றும் -என்றும்
4-கண்ண பிரான் புருவம் அவையே என்னுயிர் மேலென வாயடுகின்றன வென்று நின்றே -என்றும்
5-குன்றம் எடுத்த பிரான் முறுவல் என தாவி யாடும் -என்றும்
6-பைவிடப் பாம்பணையான் திருக் குண்டல காதுகளே கை விடல் ஒன்றும் இன்றி அடுகின்றன -என்றும்
7-பெருமான் திரு நுதலே கோள் மன்னி ஆவி ஆடும் -என்றும்–
இப்படித் தனித் தனியும் –

8-கோளிழைத் தாமரையும் -இத்யாதிப்படியே
ஒரு முகமாயும்

அதுக்கு மேலே
செங்கமலப் பூவில் தேன் உண்ணும் வண்டு போலே பங்கிகள் வந்து உன் பவள வாய் மொய்ப்ப (பெரிய திருவந்தாதி )-என்றும்
லலாட பர்யந்த விளம்பிதாலகம் (ஸ்தோத்ர ரத்னம் )-என்றும் சொல்லும்படியாய்
10-மாயன் குழல் விள்கின்ற பூம் தண் துழாய் விரை நாற வந்து என்னுயிரை கள்கின்றவாறு-என்றும்
அருளிச் செய்த இவை என்கை –

இப்படி துக்க மக்னமான மனஸ் உடனே
அவ் வழகைத் தான் உரைத்த மாறன் பால் மன்னுமவர் தீ வினை போம் மாய்ந்து –
நிரவதிக போக்யமான அந்த உத்தம அங்கத்திலே சௌந்தர்யத்தை அனுபவித்து அருளிச் செய்த
ஸ்ரீ ஆழ்வார் விஷயத்திலே பொருந்தி இருக்குமவர்களுடைய
பிரபல ப்ரதிபந்தகம் நசித்து நிச் சேஷமாகப் போம் –

தீ வினை -துஷ் கர்மம்
மாறன் சொல் மன்னுமவர் தீ வினை போம் மாய்ந்து-என்ற பாடம் ஆன போது
ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த திருவாய் மொழியை மனசிலே பொருந்தி
அனுசந்திக்குமவர்கள் பிரதிபந்தகம் நிச் சேஷமாகப் போம் -என்றபடி –

————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பகவத் விஷயம் காலஷேபம் -154- திருவாய்மொழி – -7-6-6….7-6-11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

June 29, 2016

வந்து எய்துமாறு அறியேன் மல்கு நீலச் சுடர் தழைப்பச்
செஞ்சுடர்ச் சோதிகள் பூத்து ஒரு மாணிக்கம் சேர்வது போல்
அந்தர மேற் செம்பட்டோடு அடி உந்தி கை மார்பு கண் வாய்
செஞ்சுடர்ச் சோதி விட உறை என் திரு மார்பனையே.–7-6-6-

பிராப்யதா பிரகாசமான நிரதிசய ஆபி ரூப்பியம் -உன்னை நான் எப்படி கிட்டுவேன்
வந்து எய்துமாறு அறியேன் மல்கு நீலச் சுடர் தழைப்பச்–நீலச் சுடர் பரந்து -உபாயம் நான் அறியேன்
அறிந்த நீயே தானே வந்து அருள வேணும் என்றவாறு
செஞ்சுடர்ச் சோதிகள் பூத்து ஒரு மாணிக்கம் சேர்வது போல்-இடை இடையே சிவந்த பூக்கள் -நீல மாணிக்கம் –
அந்தர மேற் செம்பட்டோடு அடி உந்தி கை மார்பு கண் வாய்-பரம வ்யோமம் -இங்கு -யீட்டில் பீதாம்பரம்
செஞ்சுடர்ச் சோதி விட உறை என் திரு மார்பனையே-எழுந்து அருளி இருக்கும் இருப்பை -எனக்கு பிரகாசிப்பித்த ஸ்ரீ மான்

‘செறிந்த நீலச் சுடரானது பரவச் சிவந்த சுடர்ச் சோதிகள் மலர்ந்து ஒரு நீல இரத்தினம் சேர்வது போன்று, திருவரையின் மேலே அணிந்திருக்கிற
செம்பட்டோடு திருவடிகளும் திருவுந்தியும் திருக்கைகளும் திருமார்பும் திருக்கண்களும் திருவாயும் சிவந்த சுடர்ச் சோதியைப் பரப்ப
எழுந்தருளியிருக்கின்ற என் திருமார்பனை நான் சென்று கிட்டும் வழியை அறியேன்,’ என்றவாறே.
வந்து-இடவழுவமைதி. ‘செலவினும் வரவினும்’ (தொல்சொல்.) என்னும் பொதுச் சூத்திரத்தாற்கொள்க. ‘மார்பனை வந்து எய்துமாறு அறியேன்’ என்க.
‘தழைப்பப் பூத்து ஒரு மாணிக்கம் சேர்வது போல் சோதி விட உறை திருமார்பன்’ என்க.

(அசக்தன் )ஆனாலும், ‘ஏதேனும் ஒரு படி நீரும் சிறிது செய்து வந்து கிட்ட வேண்டாவோ?’ என்ன,
‘உன்னை வந்து கிட்டும் உபாயம் அறியேன்,’ என்கிறார்.

வந்து எய்துமாறு அறியேன் –
வந்து கிட்டும் உபாயத்தை அறியேன். என்றது,
‘நீ தானே மேல் விழுந்து உன் வடிவழகைக் காட்டா நின்றால் அதனை விலக்காமைக்கு வேண்டுவது உண்டு;
என்னால் உன்னை ஒரு சாதனத்தைச் செய்து வந்து கிட்டப் போகாது,’ என்றபடி.
‘ஆனால், இழந்தாலோ?’ என்ன,
‘இழக்கலாம்படியோ உன் படி இருக்கிறது?’ என்கிறார்.

வடிவழகு இல்லை என்று விடவோ,(மல்கு நீலம் சுடர் தழைப்ப )
பெறுவிக்கைக்குப் புருஷகாரம் இல்லை என்று விடவோ,(திருமார்பனை)
எனக்கு ஆசை இல்லையாய் விடவோ(வந்து எய்துமாறு அறியேன் -ஆசை உண்டு -என்னால் வர முடியாதே )

மல்கு நீலம் சுடர் தழைப்ப –
குறைவு அற்ற நீலப் புகரானது தழைப்ப?
கர்மம் காரணமாக வந்தது அல்லாமையாலே மேன்மேலென மிக்கு வருதலின், ‘தழைப்ப’ என்கிறார். என்றது,
‘இவ்வளவு என்ன ஒண்ணாதபடி மேன்மேலென வளரா நிற்கின்றது’ என்றபடி. –
மல்கு தழைப்ப-பர்யாயம் -மேலும் மேலும் மிக்கு வளரும்

நெஞ்சுடர்ச் சோதிகள் பூத்து-
சிவந்த சுடரை யுடைத்தான ஒளியானது காலப்பூ அலர்ந்தாற் போலே பூத்து.

ஒரு மாணிக்கம் சேர்வது போல் –
அனுபவத்திற்குத் தகுதியாம்படி ஒரு மாணிக்கமானது சாய்ந்தாற்போலே.

‘மல்கு நீலம் சுடர் தழைப்ப’ என்கையாலே, நிறம் இருந்தபடி சொல்லிற்று;
‘நெஞ்சுடர்ச் சோதிகள் பூத்து’ என்கையாலே, திவ்விய அவயங்கள் இருந்தபடி சொல்லிற்று;
‘ஒரு மாணிக்கம் சேர்வது போல்’ என்கையாலே,
இரண்டுக்கும் -ஆஸ்ரயமான-பற்றுக்கோடான திருமேனியைச் சொல்லுகிறது.

‘செஞ்சுடர்ச் சோதிகள் பூத்து’ என்கிற இடத்தில்
தெரியாதபடி மறைத்துச் சொல்லிற்று ஒன்று உண்டே அன்றோ?
அதனை விளக்கமாக அருளிச் செய்கிறார் மேல்:

அந்தரம் மேல் செம்பட்டோடு அடி உந்தி கை மார்பு கண் வாய் செஞ்சுடர்ச் சோதி விட –
அந்தரம் – நடுவு. உடம்புக்கு நடுவு, அரை. திருவரையில் (பன்னீராயிரப்படி -அந்தரம் பரம வ்யோமம் )
திருப் பீதாம்பரத்தோடே, திருவடிகள், திருநாபி கமலம், திருக் கைகள்,
பெரிய பிராட்டியார் எழுந்தருளி யிருக்கையாலே மேலே கூறியவற்றோடு ஒக்கச் சொல்லலாம்படி சிவந்திருக்கிற
திரு மார்பு, திருக் கண்கள், திருப் பவளம்
இவை, சிவந்த சுடரை யுடைத்தான ஒளியை வீச.

உறை என் திரு மார்பனை –
இதுவும் ஓர் ஆபரணம் போலே:
என் தலைவியான பெரிய பிராட்டியாரைத் திரு மார்பிலே உடையவனை.

திருப்பாற் கடலிலே நீர் உறுத்தாதபடி திருவனந்தாழ்வானைப் படுக்கையாகக் கொண்டு,
அதிலே பலப் பல வர்ணங்களாய் இருப்பது ஒரு மேல் விரியை விரித்தாற்போலே அவன் சாய்ந்தருள,
மேல் எழுந்தருளி இருக்கமாயிற்றுப் பிராட்டி.
நானும் மிக்க ஆயாசனத்தினால் பெருமாள் மடியில் தூங்கிக் கொண்டிருந்தேன்’ என்னக் கடவதன்றோ?

‘மலராள் தனத்துள்ளான்’ (மூன்றாந்திருவந். 3.) என்ன வேண்டி யிருக்க,
அவன் மார்விலே இருக்கிறான் எனக் கூடுமோ?’ என்ன,
அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘நானும்’ என்று தொடங்கி.

‘பரிஸ்ரமாத் பர்ஸூப்தா ச ராகவாங்கே அஸ்மிஅஹம் சிரம் பர்யாயேண ப்ரஸூப்தஸ்ச
மமஅங்கே பரதாக்ரஜ;’-என்பது, ஸ்ரீராமா, சுந். 38 : 20.

——————————————————————————————————-

என் திரு மார்பன் தன்னை என் மலைமகள் கூறன் தன்னை
என்றும் என் நா மகளை அகம்பாற் கொண்ட நான் முகனை
நின்ற சசி பதியை நிலங்கீண்டு எயில் மூன்று எரித்த
வென்று புலன் துரந்த விசும்பாளியைக் காணேனோ?–7-6-7-

ஸ்வரூபேணாகாவும் கார்ய புருஷ ரூபமாகவும் நின்று சர்வ பிரகார ரக்ஷகன் -என்று காண்பேன்
என் திரு மார்பன் தன்னை என் மலைமகள் கூறன் தன்னை-சேஷித்வ ஸூசகம் எனக்கு பிரகாசிப்பித்து பார்வதி சரீரம் கொண்ட
அர்த்த நாரீஸ்வரன் பிரகாரம் என்றும் என் நா மகளை அகம்பாற் கொண்ட நான் முகனை–சரஸ்வதி வாக் தேவி -நான் முகனை -எனக்கு பிரகாசிப்பித்து
நின்ற சசி பதியை நிலங்கீண்டு எயில் மூன்று எரித்த-சமமாக படிக்கும் சசிபதி மணாளன் இந்திரன் -ஸ்ரீ வராஹனாக உத்தரணம் பண்ணி
திரிபுரம் எரித்த -அந்தர்யாமி வென்று புலன் துரந்த விசும்பாளியைக் காணேனோ-மூன்று லோகம் ரஷித்த-இந்திரியங்கள் வசப்படுத்தி
ஸ்ருஷ்டித்த நான் முகனுக்கு அந்தர்யாமி -காணக் கிட்டாது ஒழிவதே-காண ஆசை இருந்தாலும் –

‘என்னுடைய திருமகளை மார்பிலே கொண்ட திருமாலை, என்னுடைய பார்வதியை ஒரு பக்கத்திலேயுடைய சிவபெருமானுக்கு
உள்ளுயிராய் இருப்பவனை, என்னுடைய சரஸ்வதியை எப்பொழுதும் தன்னிடத்திலே கொண்டவனான பிரமனுக்கு உள்ளுயிராய் இருப்பவனை,
நின்ற இந்திரனுக்கு உள்ளுயிராய் இருப்பவனை, நிலத்தைக் கேட்டாலே குத்தி மேலே கொண்டு வந்து, முப்புரங்களை எரித்த,
ஐம்புலன்களையும் வென்று ஓட்டிய சுவர்க்கலோகத்தை ஆளுகின்றவனைக் காணேனோ?’ என்கிறார்.

நிலங்கீண்டல், எயில் மூன்று எரித்தல், வென்று புலன் துரத்தல், விசும்பு ஆளுதல் என்னும் நான்கனையும், மேலே கூறிய நால்வர்க்கும்
முறை நிரல் நிறையாகக் கொள்க. ‘என் திருமார்பனாய் நிலங்கீண்டவன், என் மலைமகள் கூறனாய் எயில் மூன்று எரித்தவன்,
நாமகளை அகம்பாற்கொண்ட நான்முகனாய் வென்று புலன் துரந்தவன், சசிபதியாய் விசும்பு ஆண்டவன்’ என்க. சசி-இந்திராணி.

உத்தேசிய லாபம் அவனாலேயாயிருந்தது.
இத் தலையாலே முயற்சி செய்வதற்குத் தகுதி இல்லாதபடியான பாரதந்திரியும் உண்டாய் இருந்தது;
அத் தலையாலே பெறுமிடத்தில் ஒரு கண்ணழிவு இன்றிக்கே இருந்தது;
இப்படி இருக்கச் செய்தேயும் இழந்து இருக்கக் காண்கையாலே
‘நான் இழவோடே கிடந்து முடிந்து போமித்தனையே யன்றோ?’ என்கிறார்.

என் திரு மார்பன் தன்னை –
இவ் விடத்திலே ‘என்’ என்கிற சொல், விசேடண அமிசத்திற்கு அடைமொழி;
‘என் திருமகள் சேர் மார்பன்’ என்ற இடத்திலே கொண்டது போன்று கொள்க.
என் ஸ்வாமினியான பெரிய பிராட்டியாரைத் திரு மார்விலே யுடையவனை.

என் திரு மார்பன் தன்னை –
ஆஸ்ரயண தசையில் அவளைப் பற்றும் –
பிராப்தி தசையில் அவனைப் பற்றும் –
பிராபகத்தில் இருவரையும் பற்றும் –
(இப்படி மூன்றிலும் -விசேஷணத்திலும் விசேஷ்ய அம்சத்திலும் விசிஷ்டத்திலும் உண்டே )

‘என் மலை மகள் கூறன்’ என்பது முதலான இடங்களில் உள்ள ‘என்’ என்பது,
விசேடிய அமிசத்திலே ஊற்றம். ‘என்றது,
என் சொல்லியவாறோ?’ எனின்,
‘அவனுடைய விபூதி யோகத்துக்கு உறுப்பாகச் சொல்லுகிறார் இத்தனை அன்றி,
‘மறந்தும் புறம் தொழா மாந்தர்’ நான்முகன் திருவந். 68.-ஆக இருக்குமவர் ஆதலின்,
இவர்களோடே தமக்கு ஒரு சம்பந்தம் உண்டு என்கிறார் அல்லரே?’ என்றபடி,

என் மலை மகள் கூறன் தன்னை –
இமய மலையின் பெண் பிள்ளையைத் தன்னுடம்பிலே ஒரு பக்கத்திலே யுடையனாய் இருக்கிற
சிவனைத் தான் இட்ட வழக்காக வுடையனாய் இருக்கிறவனை.என்றும்

என் நா மகளை அகம் பால் கொண்ட நான்முகனை –
சரஸ்வதியை என்று மொக்கத் தன் பக்கலிலே யுடையனாய் இருக்கிற பிரமனுக்கு
அந்தராத்துமாவா யுள்ளவனை.

நின்ற சசிபதியை –
இவர்களை எண்ணினால் தன்னை எண்ணலாம்படி ஐஸ்வரியத்தால் குறைவற்றிருக்கிற இந்திரனுக்கு
அந்தராத்துமாவாய் உள்ளவனை.
‘அவன் பிரமன், அவன் சிவன்’ என்றால்,
‘அவன் இந்திரன் என்று ஒக்கச் சொல்லலாம்படி முட்டுப் பொறுத்து நின்ற
இந்திரனுக்கு அந்தர்யாமியா யுள்ளவனை.
ஸ ப்ரஹ்மா ஸ ஸிவ: ஸேந்த்ர;’ என்பது, தைத். நாரா.

‘இப்போது இவை சொல்லுகிறதற்குக் கருத்து என்?’ என்னில்,
‘ஸ்வரூபமும் உயர்வும் அவன் அதீனம்’ என்றார்;
இங்கே, ‘தக்க வயதினை அடைந்த புத்திரர்களுக்கு ஒத்த இடங்களிலே திருமணம் செய்விக்கும்
தமப்பன் மார்களைப் போலே,
இவர்கள் தாம் மனைவிகள் அடைந்ததும் தந்தாமால் அன்று;
சர்வேஸ்வரனாலேயாம்’ என்பதனைத் தெரிவித்தபடி.

‘இவர்களுடைய செயல்கள் எல்லாம் அவனுடைய அதீனம்’ என்கிறது மேல்:

நிலம் கீண்டு. . .விசும்பாளியை –
‘பிரளய சமுத்திரத்திலே மூழ்கினதாய் அண்டப் பித்தியிலே புக்கு ஒட்டி பூமியை மஹா வராஹமாய்ப் புக்கு
எடுத்துக் கொண்டு ஏறின போதைய செயல் தன்னுடைய அதீனம் ஆனாற்போலே,
அவர்களுடைய செயல்களும் அவனுடைய அதீனம்’ என்கிறது.

எயில் மூன்று எரித்த –
மதிள் மூன்றை எரித்த.
‘விஷ்ணு அந்தராத்துமாவாய் நின்றான்’ என்னக் கடவது அன்றோ?
அதுவும் அவன் இட்ட வழக்கு-

‘விஷ்ணு: ஆத்மா பகவத: பவஸ்ய அமிததேஜஸ;
தஸ்மாத் தநுர்ஜ்யா ஸமஸ்பர்ஸம் சவிஷேஹே மஹேஸ்வர;’-என்பது, பாரதம், கர்ண பர்வம்.

வென்று புலன் துரந்த-
படைப்புக்கு உறுப்பாக ஐம் பொறிகளை அடக்கியவனை புலன்களை வென்று ஓட்டின

விசும்பாளியை –
ஸ்வர்க்கத்தை வன்னியம் அறுத்து ஆளுகின்றவனை.

காணேனோ –
காணப் பெறேனோ?

ஆகச் சொல்லிற்றாயிற்றது:
உத்தேஸ்ய லாபம் அவனாலேயாய் இருந்தது.
அதற்கு உறுப்பான முயற்சியில் ஈடுபடுதற்குத் தகுதி இல்லாதபடி அதுவும் அவன் இட்ட வழக்காய் இருந்தது.

இனி.
இத் தலையாலே பேறு ஆம் அன்று விளம்பத்திற்குக் காரணம் உண்டாய் இருந்தது;
அவனாலே பேறு ஆம் அன்று விளம்பத்திற்குக் காரணம் இன்றிக்கே இருந்தது.

இப்படி இருக்கச் செய்தேயும்
தம்மை இழந்து இருக்கக் கண்டார் ஆகையாலே,
‘இனி, இந்த இழவோடே இங்ஙனே முடிந்து போமித்தனையே அன்றோ?’ என்று வருந்துகிறார்.

———————————————————————————————————–

ஆளியைக் காண் பரியாய் அரி காண் நரியாய் அரக்கர்
ஊளை இட்டு அன்று இலங்கை கடந்து பிலம்புக்கு ஒளிப்ப
மீளியம் புள்ளைக் கடாய் விறன் மாலியைக் கொன்று பின்னும்
ஆளுயர் குன்றங்கள் செய்து அடர்த்தானையும் காண்டுங்கொலோ?–7-6-8-

ஆளியைக் காண் பரியாய் அரி காண் நரியாய் அரக்கர் ஊளை இட்டு அன்று இலங்கை கடந்து பிலம்புக்கு ஒளிப்ப-
பிலத்துவாரம் பாதாளம் -பய அதிசயத்தால் -குளவிக் கூடு
மீளியம் புள்ளைக் கடாய் விறன் மாலியைக் கொன்று பின்னும்-பலிஷ்டமான பெரிய திருவடி நடத்தி
மாலிக்கு நான்கு பிள்ளைகள் -விபீஷணன் கூட போன நால்வர் -சுமாலிக்கு -பெண் கைகசி விச்வரஸ் கல்யாணம்
ப்ரஹ்மா மகன் புலஸ்தியர் மகன் விச்வரஸ் -குபேரன் முதல் மனைவி பெண் -மால்யவான் -இவன் வேற
ராவணனுக்கு உபதேசித்த மால்யவான் வேற — சுகேசன் பிள்ளைகள் இந்த மூவரும் மாலி சுமாலி மால்யவான் -நந்தி சாபம்
குரங்கால் சாவு வேகவதி சாபம் ராவணனுக்கு பல சாபங்கள்
ஆளுயர் குன்றங்கள் செய்து அடர்த்தானையும் காண்டுங்கொலோ-அதி சூரர் புருஷர்கள்
புலஸ்தியர் பிராதா மரீசி -இஷுவாகு குலம் -பிராமண ராக்ஷஸன் ராவணன்
அழிக்கும் உபேந்த்ரன் -அகங்கார மமகார பிரதானம் ராக த்வேஷம் தொலைக்க இந்த சரித்திரம் கூறுகிறார்

‘யாளியைக் கண்ட குதிரை போலவும், சிங்கத்தைக் கண்ட நரி போலவுமாகி அரக்கர்கள் கதறிக்கொண்டு அக்காலத்தில்
இலங்கையை விட்டுப் பிலத்திலே சென்று மறைய, வலிய அழகிய கருடப் பறவையை நடத்திய வலிய மாலி என்றவனைக் கொன்று,
பின்னும் உயர்ந்த பிண மலைகளாக வீரர்களைக் கொன்று குவித்து சர்வேஸ்வரனையும் காணக் கூடுமோ?’ என்கிறார்.
ஆளி வேறு: அரி வேறு. ‘ஒளிப்பக் கடாய் மாலியைக் கொன்று குன்றங்கள் செய்து அடர்த்தவன்’ என்க. அடர்த்தவன் – பெயர்.

‘மாலி தொடக்கமான பகைவர்கள் கூட்டத்தைக் கொன்றருளின சர்வேஸ்வரனைக் காண வல்லோமே?’ என்கிறார்.
முதல் இரண்டு பாசுரங்களாலே பிராப்பியன் அவனே என்னும் இடம் சொல்லி,
மேல் ஐந்து பாசுரங்களாலே, பிராபகன் அவனே தன்னைப் பெறுகைக்கு என்னும் இடம் சொல்லி.
இப் பாசுரத்தாலும் அடுத்த பாசுரத்தாலும் பகைவர்களை அழிக்கின்ற அவனது தன்மையைச் சொல்லி,
தடைகளைப் போக்குவான் அவனே என்னும் இடத்தைச் சொல்லுகிறார்.
10 -பாசுரத்தால் -இஷ்ட பிராப்தம் மோக்ஷ பிரதத்வம் சொல்லி -நிகமிக்கிறார் –

ஆளியைக் காண் பரியாய் –
யாளியைக் கண்ட குதிரை போலவும்.

அரி காண் நரியாய் –
சிங்கத்தைக் கண்ட நரியைப் போலவும்.
ஸ்ரீராமாயணத்தே, அந்த அரக்கர்கள் அஞ்சின படியாகப் பல உதாரணங்களை இட்டுச் சொல்லிப் போரக் கடவதன்றோ?
இங்கே இரண்டு வகையாலே அதனைச் சூசிப்பிக்கிறார். பரி-குதிரை. அரக்கர்.

(சரபம் கண்ட ஸிம்ஹம்
ஸிம்ஹம் கண்ட-யானை
யானை கண்ட புலி
புலி – கண்ட மக்கள் –
போல் பெருமாளைக் கண்டு ராக்ஷஸர்கள் )

ஊளை இட்டு –
மேலே ‘நரி’ என்கையாலே அதற்குத் தகுதியாகச் சொல்லுகிறார்.

அன்று இலங்கை கடந்து பிலம் புக்கு ஒளிப்ப –
தூசித் தலையில் நேர் நின்று போர் புரிய ஆற்றல் இல்லாமையாலே
இலங்கையை விட்டுப் போய்ப் பாதாளத்திலே புக்கு ஒளிப்ப. என்றது,

‘புற்றுகள் எப்போதும் ஒக்கப் பாம்பு பற்று அறாதவாறு போலே என்றும் ஒக்கு அரக்கர்கள் மாறாதே,
‘மாலி, சுமாலி, மால்யவான்’ என்றாற் போலே சொல்லப் படுகிறவர்கள் வாழ்ந்து போந்தவர்களாய்,
பெரிய திருவடி முதுகிலே வந்து தோன்றி, அவர்களை அழித்தானாகச் சொல்லக் கடவது அன்றோ?
அதனை இங்கே அருளிச் செய்கிறார்’ என்றபடி.

‘பிலம் புக்கு ஒளிப்ப’
கையில் ஆயுதம் பொகட்டாரையும், முதுகு காட்டினாரையும் கொல்லக் கூடாதே அன்றோ?
ஆகையாலே, தப்பி ஓடிப் போய் ஒளிப்பாரும்
உள்ளே பட்டுப் போனாருமாய்ப் போனார்களாதலின், ‘பிலம் புக்கு ஒளிப்ப’ என்கிறார்.

மீளி அம் புள்ளைக் கடாய்-
வலியை யுடைய பெரிய திருவடியை நடத்தி. மீளியம்; ஒருசொல்; வலி என்பது பொருள்.
அன்றிக்கே,
‘மீளி அம் புள்’ என்று பிரித்து,
‘கறை யணி மூக்குடைப் புள்ளைக் கடாவி’ திருவாய், 3. 10 : 2.-என்கிறபடியே,
பகைவர்களுக்கு யமன் போலே இருப்பானாய்,
‘தூவாய புள்ளூர்ந்து’பெரியதிருமொழி, 6. 8 : 3.-என்கிறபடியே,
அநுகூலர்க்குக் காண்பதற்கு இனியதான வேடத்தை யுடையவனான பெரிய திருவடியை நடத்தி என்னுதல்.

பெரிய திருவடி முதுகிலே வந்து தோற்றும் போதை அழகையே அன்றோ இவர் பாவித்துக் கிடப்பது?
‘பண் கொண்ட புள்ளின் சிறகு ஒலி பாவித்து’ (திருவாய். 3. 8 : 5) என்றதனைத் திருவுள்ளம் பற்றி,
‘இவர் பாவித்துக் கிடப்பது’ என்கிறார்.

மீளி என்று வலிக்கும், யமனுக்கும், பாலை நிறத் தலைமகனுக்கும் பேராகச் சொல்லுவர்கள்.

விறல் மாலியைக் கொன்று –
ஆக, பிரசித்தர்களிலே ஒருவனைச் சொல்லிற்று. பின்னும்

ஆள் உயர் குன்றங்கள் செய்து-
பின்னும் ஆண் பிள்ளைகளாய் இருப்பார் பலரை அழியச் செய்து, அவர்களாலே பிண மலையாம்படி செய்து.
ஆண்களாலே உயர்ந்த மலைகளாம்படி செய்து.

அடர்த்தானையும் காண்டுங்கொலோ-
அவன் அரக்கர் கூட்டத்தை அழியச் செய்தாற்போலே, நம் விரோதிகளைப் போக்கி
நமக்குக் காட்சியிலே தொடர்புண்டாய் நாம் கண்டோமாய்த் தலைக் கட்ட வல்லோமோ?

————————————————————————————————-

காண்டுங் கொலோ நெஞ்சமே!கடிய வினையே முயலும்
ஆண் திறல் மீளி மொய்ம்பில் அரக்கன் குலத்தைத் தடிந்து
மீண்டு மவன் தம்பிக்கே விரி நீர் இலங்கை அருளி
ஆண்டு தன் சோதி புக்க அமரர் அரி ஏற்றினையே?–7-6-9-

விபீஷண பக்ஷ பாதத்தால் -ராவண குலத்தை நிஸ் சேஷமாக முடித்து -லங்காதிபதி பட்டம் -தானும் அபிஷிக்தனாய் ராஜ்யம் பண்ணி
தன்னுடைச் சோதி எழுந்து அருளி -சக்கரவர்த்தி திருமகனை காணப் பெறுவமோ
காண்டுங் கொலோ நெஞ்சமே!கடிய வினையே முயலும்-உன் கூட்டாக சேருவோமோ
காண் திறல் மீளி மொய்ம்பில் அரக்கன் குலத்தைத் தடிந்து-பும்ஸவத்ம் செறுக்கு-வீரத்தால் -பர அபிபாவ வீரம் –
மீளி -சிம்கம் போல மிடுக்கு -ராஜஸ ஜன்மா ராக்ஷஸன் -விசேஷங்கள் அவனுக்கு -கும்ப கர்ணன் இந்திரஜித் குலத்துடன் அழித்து
மீண்டு மவன் தம்பிக்கே விரி நீர் இலங்கை அருளி-விபீஷணன் -ஆஸ்ரயித்த காரணத்தால் -ராஜ்யம் கொடுத்து அருளி
ஆண்டு தன் சோதி புக்க அமரர் அரி ஏற்றினையே-போர் ஏற்று நாயனார் -11000 வருஷம் திரு அயோத்யையில்
அசாதாரண ஜோதி ரூபம் பரம பதம் -நித்ய ஸூரிகளுக்கு சிம்ம ஸ்ரேஷ்டம் போலே செறுக்கு தோன்ற –
மீண்டு -என்பதை ஆண்டு என்பதுடன் அந்வயிக்கவுமாம் –
ரஜஸ் தமஸ்-அழித்து -குலம் -கும்பன் நிகம்பன் கும்ப கர்ணன் பிள்ளைகள் -அந்யதா விபரீத ஞானங்கள் அழித்து –
தேகாத்ம அபிமானம் விபரீத ஞானம் -ஸ்வ தந்த்ரன் பிரமிப்பு அந்யதா ஞானம் –ரஜஸ் தமஸ் தத் ஜெனித காம க்ரோதங்கள் –
தேகத்துக்கு விருப்பம் செய்து -தர்மாத்மா விபீஷணன் –விச்வரஸ் புத்ரன் குபேரன் வைஸ்ரவணன் இன்னொரு பெயர் –
சுத்த சத்வ கார்யம் -ஞான விசேஷத்துக்கு ராஜ்யம் -கைங்கர்ய சாம்ராஜ்யம் -கொடுக்கும் ஸூரி தலைவனைக் காணக் கூடுமோ –

கொடுந்தொழிலையே செய்கின்ற ஆண் தன்மையினையும் திறலையும் மிக்க வலியினையுமுடைய அரக்கனான இராவணனுடைய குலத்தைக் கொன்று,
மீண்டும், அவனுடைய தம்பியாகிய விபீஷணனுக்கே கடல் சூழ்ந்த இலங்கையைக் கொடுத்து, திரு அயோத்தியில் வீற்றிருந்து பதினோராயிரம் ஆண்டுகள்
அரசாட்சியைச் செலுத்தித் தன்னுடைச் சோதியை அடைந்த நித்திய ஸூரிகளுக்கு ஆண் சிங்கத்தைப் போன்றவனான சர்வேஸ்வரனை நெஞ்சம்! காண்போமோ?
‘குலத்தைத் தடிந்து தம்பிக்கு அருளி ஆண்டு புக்க அரியேறு’ என்க.

‘இராவணன் முதலியோரை அழித்த சக்கரவர்த்தி திருமகனை, நெஞ்சே! காண வல்லோமோ?’ என்கிறார்.

காண்டுங்கொலோ நெஞ்சமே –
இழவாலே கட்டிக் கொண்டு கதறுகைக்குக் கூட்டான நீ, இப் பேற்றாலே இன்பமடைந்தவர் அனுபவிக்கும் அனுபவத்துக்கும்
கூட்டாய் நாம் அவனைக் காண வல்லோமோ?

கடிய வினையே முயலும் –
தாயையும் தமப்பனையும் இரண்டு இடங்களிலே ஆக்குவாரைப் போலே அன்றோ,
பெருமாளையும் பிராட்டியையும் இரண்டு இடங்களிலே ஆக்கிற்று?
இதில் தாழ்ந்திருப்பது ஒரு செயல் இல்லையாயிற்று, இவன் செய்யுமவற்றில்.
‘கிரமத்திலே பலம் கொடுக்கிறோம்’ என்று சர்வேஸ்வரனுக்கு ஆறியிருக்க ஒண்ணாதபடி யாயிற்றுக் கொடிய செயல்கள் செய்யும்படி.

‘மிகக் கொடியனவான பாவங்கள், மிக உயர்ந்தனவான புண்ணியங்கள் ஆகிய இவற்றால் உண்டான பலன்களை
இப் பிறப்பிலேயே மூன்று வருடங்களில் மூன்று மாதங்களில் மூன்று பக்ஷகளில் மூன்று நாள்களில் அனுபவிக்கிறான்’ என்னும்படியே.

‘அத்யுத்கடை: புண்யாபாபை: இஹைவபலம் அஸ்நுதே
த்ரிபி: வர்ஷை: த்ரிபி: மாஸை: த்ரிபி: பக்ஷை: த்ரிபி: திநை:’-என்பது, தர்ம சாஸ்திரம்.

கொடிய வினையே என்ற ஏகாரத்தால்
இவன் நல் வினைத் தொடர்பு இல்லாதவன் என்பது பெறப்படும்.

ஆண் திறல் மீளி மொய்ம்பில் அரக்கன் –
ஆண் பிள்ளைத் தனத்தில் வந்தால், திறலையுடைய சிங்கம் போன்ற மிடுக்கையுடைய அரக்கன்.
மீளி-சிங்கம்.
அன்றிக்கே,
‘திறலை யுடையனாய், பிறரை அடக்குதற்குரிய ஆற்றலை யுடையனாய்,
யமனைப் போன்ற மிடுக்கை யுடையனான இராவணனுடைய’ என்னுதல்.

குலத்தைத் தடிந்து-
‘ஜனக ராஜன் திருமகள் காரணமாகப் பிசாச ஜாதி அற்றதாயும் அரக்கர் குலம் அற்றதாயும் செய்வேன்’ என்கிறபடியே,
கரிஷ்யே மைதிலீ ஹேதோ: அபிஸாசம் அராக்ஷஸம்’-என்பது, ஸ்ரீராமா. ஆரண். 64 : 66.

எந்தையே! இராகவ! சரணம் என்ற சொல் தந்தவர் எனைவரோ சாற்று மின் என’

குலமாக அழித்து.அவன் தம்பிக்கே விரிநீர் இலங்கை அருளி –
‘இராவணன் தானேயாகிலும்’ என்கிறபடியே, ‘சரணம்’ என்ற சொல் அழகியதாய் இருந்தது,
விபீஷணோ வா ஸூக்ரீவ யதிவா ராவண: ஸ்வயம்’-என்பது, ஸ்ரீராமா. யுத். 18 : 34.

‘அவனோடு சம்பந்தமுடையான் ஒருவன் வந்தானாகை அன்றிக்கே,
அவன் தானே வரப் பெறுவது காண்’ என்று செவி சீப்பாய்ந்து இருந்தார் அன்றோ?

‘அங்கு நின்றும் வந்தான் ஒருவனைக் கைக் கொண்டாராக அமையாதோ? இந் நிர்பந்தம் என்?’ என்னில்,
அவனோடு சம்பந்தமுடையான் ஒருவனைக் கைக் கொண்டால், அவன் தானும் நான்கு பேருமாகப் போம்;
அவன் தானே வரப் பெற்றதாகில் துருப்புக் கூடாக நோக்கிற்று ஆகலாம் அன்றோ?

மேலும், பகைமையில் முதிர நின்றானும் அவனே ஆகையாலே,
‘காப்பாற்றுமவனாக வேண்டும்’ என்ற விருப்பம் உள்ளதும் அவனிடத்திலே அன்றோ?
இப்படி அவனை அங்கீகரிப்பதற்குக் கோலிப் பெறாத இழவு தீர்ந்தது இவனைக் கைக் கொண்ட பின்பாயிற்று.

‘அநுஜ; ரநவணஸ்ய அஹம் தேநச அஸ்மி அவமாநித:
பவந்தம் ஸர்வ பூதாநாம் ஸரண்யம் ஸரணம் கத:’-என்பது, ஸ்ரீராமா யுத் 19 : 4.

‘நான் இராவணனுக்குப் பின் பிறந்தவன்’ என்று அவன் வர,
இவரும் ‘அவன் தம்பியே’ என்றாயிற்று அவனைக் கைக் கொண்டது.

‘பஞ்செனச் சிவக்கும் மென்கால் தேவியைப் பிரித்த பாவி
வஞ்சனுக்கு இளைய என்னை வருக என்றருள் செய் தானோ?’-என்றார் கம்பரும்.

விரிநீர் இலங்கை அருளி –
கடல் சூழ்ந்த இலங்கையைக் கொடுத்தருளி.

மீண்டும் ஆண்டு –
இராவணனைக் கொன்ற பின்பு, பிரமன் முதலான தேவர்கள், ‘தேவரை அம்புக்கு இலக்கு ஆக்கி,
நாங்கள் எங்கள் காரியத்தைத் தலைக் கட்டிக் கொண்டோம்;
இனி தன்னுடைச் சோதி ஏற எழுந்தருள அமையும்,’ என்ன,

அவ்வளவிலே சிவன்,
‘தேவர் அங்ஙன் செய்தருள ஒண்ணாது,
திருவடி சூடுதற்குத் தடை உண்டாகையாலே திருத் தாய்மாரும் இழிவு பட்டிருந்தார்கள்;
நாடும் அடைய நொந்திருந்தது: ஸ்ரீபரதாழ்வானும் ஆர்த்தனாய் இருந்தான்:
ஆன பின்பு, ‘வருந்தியிருக்கிற ஸ்ரீபரதாழ்வானையும்
பெருமை பொருந்திய ஸ்ரீகௌஸல்யையாரையும் சமாதானம் செய்து’ என்கிறபடியே’
‘ஆஸ்வாஸ்ய பரதம் தீநம் கௌஸல்யாம்ச யஸஸ்விநீம்’-என்பது, ஸ்ரீராமா. யுத். 122 : 4.

ஸ்ரீபரதாழ்வான் தொடக்கமானவர் ‘இழவுகள் எல்லாம் தீரும்படி மீண்டு எழுந்தருளி,
திருமுடி சூடி, நாட்டை வாழ்விக்க வேணும்’ என்ன,
அது திருவுள்ளத்துக்குப் பொருந்தும் செயலாகையாலே பதினோராயிரம் ஆண்டு
ஒரு படிப்பட இருந்து நாட்டினை வாழ்வித்தருளி.

தன் சோதி புக்க –
அம்புக்கு இலக்கு ஆக்குவார் இருந்த இடத்தை விட்டுத்
தனக்கே சிறப்பாய்
எல்லை அற்ற பேரொளிப் பிழம்பு வடிவமாய் இருக்கிற
பரம பதத்திலே போய்ப் புக்க.

அமரர் அரி ஏற்றினையே-
அம்பு இட்டு எய்வார் இன்றிக்கே ஆநுகூல்யமே தன்மையாய்த் தொண்டிலேயே நிலை பெற்றவர்களான நித்திய ஸூரிகள்
நடுவே அவன் இருக்கும் இருப்பைக் காண வல்லோமே?

பசுக்களின் கூட்டத்தின் நடுவே ஓர் இடபம் செருக்கித் திரியுமாறு போலே, நித்திய ஸூரிகள் கொண்டாட,
அவர்கள் நடுவே அதனாலே செருக்கி மேனாணித்திருக்கும் இருப்பைச் சொல்லுகிறது.

நித்திய ஸூரிகள் திரளிலே அந்த ஓலக்கத்தின் நடுவே இருக்கும் இருப்பைக் காண்கை
அன்றோ பிராப்பியமாகிறது?

———————————————————————————————

ஏற்றரு வைகுந்தத்தை அருளும் நமக்கு ஆயர் குலத்து
ஈற்றிளம் பிள்ளை ஒன்றாய்ப் புக்கு மாயங்களே இயற்றிக்
கூற்றியல் கஞ்சனைக் கொன்று ஐவர்க்காய்க் கொடுஞ்சேனை தடிந்து
ஆற்றல் மிக்கான் பெரிய பரஞ்சோதி புக்க அரியே.-7-6-10-

தனது கிருஷ்ண அனுபவ துறையில் மேலும் ஆழ்ந்து அனுபவிக்கிறார் -ஸூஜனம் வாசுதேவ பாண்டவ விரோதி நிரசித்து அருளிய
நமக்கு இஷ்ட பிராப்தம் அருளுவான்
ஈற்றிளம் பிள்ளை ஒன்றாய்ப் புக்கு மாயங்களே இயற்றிக்-ஈன்று -பிறந்த உடனே அதி சைஸவம் -ரசிக்கும் –
கோப குலத்தில் ஏகி பவித்து புக்கு பூதநா சகட யமலார்ஜுனாதி -பிரவர்த்திப்பித்து
கூற்றியல் கஞ்சனைக் கொன்று ஐவர்க்காய்க் கொடுஞ்சேனை தடிந்து-10 வயசில் —கூற்று -மிருத்யு தேவன் -போலே கஞ்சனை
பிராண புதன் தன்னை பிரித்தானே -62 வயசில் மகா பாரதம் -ஒன்றும் செய்தாரைப் போலே ருணம் -கோவிந்தா கூப்பிடட கடன் வளர -சீற்றம் மிஞ்சி
ஆற்றல் மிக்கான் பெரிய பரஞ்சோதி புக்க அரியே-அபரிச்சின்ன மஹாத்ம்யம் -கீழே பெருமாள் தன்னுடைச் சோதி எழுந்து அருளியதை
அருளிச் செய்து இதில் கிருஷ்ணன் -பூ பாரம் நீத்து புக்கு –
ஏற்றரு வைகுந்தத்தை அருளும் நமக்கு ஆயர் குலத்து-ஏற்ற அரிய-ஸ்ரீ வைகுண்டம் ஏறுவதற்கு ஸ்தோத்ரம் பண்ணுவதற்கு –
பரம யோகிகளுக்கும் வாக்குக்கும் மனஸ் எட்டாத -பரம பதம் நிர்ஹேதுக கிருபையால் –
மாஸூச என்றபடி -அருளுவான் -சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி 8/9 பாசுரங்கள்
அரி -பாபங்கள் அபகரித்து -அரம் சக்கரம் கையில் பிடித்து என்றுமாம் –

‘பிறந்த ஓர் இளம்பிள்ளையாய் ஆயர் குலத்திலே புகுந்து ஆச்சரியமான காரியங்களையே செய்து, யமனப் போன்ற தன்மையனான
கம்ஸனைக் கொன்று, பாண்டவர்களுக்காக் கொடியசேனைகள் எல்லாவற்றையும் கொன்று, ஆற்றலின் மிக்கானாய், பெரிய பரமபதத்திலே
சென்று சேர்ந்த கிருஷ்ணனானவன், ஒருவர் தம்முயற்சியால் ஏறுதற்கு அரிய பரமபதத்தை நமக்குக் கொடுப்பான்’ என்றவாறு.
ஸ்ரீ வைகுண்டம் தரும் -என்றாலும் அவனைத் தானே அனுபவிக்கக் கொடுப்பான் -என்றபடி

ஏற அரு என்பது, ‘ஏற்றரு’ என்றாயிற்று. ‘அரி நமக்கு வைகுந்தத்தை அருளும்,’ என்க. அரி – சிங்கம்; உவம ஆகு பெயர்.
‘ஈன்ற இளம்’ என்பது, ‘ஈற்றிளம்’ என்றாயிற்று. ‘ஆயர் குலத்திலே புக்கு இயற்றிக் கொன்று தடிந்து ஆற்றிலின் மிக்கான்’ என்க.
ஆற்றல் – பொறை. வலியுமாம்.

பிராப்யன் அவனே என்னும் இடத்தைச் சொல்லி, (1-2)
தன்னைப் பெறுவதற்குச் சாதனம் தானே என்னும் இடத்தையும் சொல்லி,(3-4-5-6-7 )
விரோதிகளை அழிப்பானே அவனே என்னும் இடத்தையும் சொல்லி, (8-9-)
இப்படி நம் பேற்றுக்குக் கண்ணழிவு இன்றிக்கே இருந்த பின்பு
அவன் தன்னை நமக்குத் தரும் என்று அறுதியிடுகிறார்.
(வைகுந்தம் தரும் என்றாலே அவன் தன்னைத் தந்து கைங்கர்யம் கொள்வது தானே )

ஏற அரு வைகுந்தத்தை அருளும் நமக்கு –
ஒருவராலும் தம் முயற்சியால் அடைய ஒண்ணாதிருக்கிற ஸ்ரீவைகுண்டத்தை
அவன் தானே தரப் பெற இருக்கிற நமக்குத் தரும்.
‘எல்லா வழியாலும் அவன் தன்மையை அறிந்து, ‘அதனைத் தரும்’ என்று இருந்தீரே யாகிலும்,
பெற இருக்கிற நம் படியைப் பாரானோ?’ என்னில்,

ஆயர் குலத்து ஈற்றிளம்பிள்ளை –
நம் படி பார்க்க அறியாத இளைஞன்.
அவனே தருவான் -வைகுண்டம் தருவான் -உடனே தருவான் -தந்தே ஆக வேண்டும் –
நம்மைப் பார்க்க அறியாத சிறு பிள்ளை அன்றோ –
‘இளைஞனே! (சிசுபாலனுக்கு) நித்திய ஸூரிகளோடு ஒத்த இன்பத்தை அளித்தவன் ஆனாய்’ என்னக் கடவதன்றோ?
முக்த ஸாயுஜ்யதோபூ:’ என்பது, ஸ்தோத்ர ரத்நம், 63.

ஈற்றிளம்பிள்ளை –
‘ஈறான இளம்பிள்ளை’ என்றாய், மிக்க இளைஞன் என்றபடி. ஈறு -முடிவு.
அன்றிக்கே,
ஈன்றிளம்பிள்ளை என்றாய், ‘கற்றிளம்பிள்ளை’ என்றபடி.
இரண்டாலும் அதி இளைஞன் என்றபடி.

ஒன்றாய்ப் புக்கு –
கம்ஸனும் பொய்யே அம்மானாய் ‘வில் விழவுக்கு’ என்று அழைத்து விட,
இவனும் பொய்யே மருமகனாய்
அவற்றிற்கெல்லாம் தானே கடவனாக விரும்பிப் போய்ப் புக்கானாயிற்று.
அன்றிக்கே,
‘வில் விழவு’ என்று கொண்டு ஒரு வியாஜத்தை இட்டுப் போய்ப் புக்கு என்னுதல்.

மாயங்களே இயற்றி –
ஆயுதச் சாலையிலே புக்கு ஆயுதங்களை முரிப்பது, -ஈரங்கொல்லியைக் கொன்று பரிவட்டம் சாத்துவது,
குவலயா பீடத்தின் கொம்பை முரிப்பது, -மல்லரைக் கொல்லுவது ஆன ஆச்சரிய காரியங்களையே செய்து.

இயற்றுதல் – செய்யத் தொடங்குதல்.
இவன் இப்படிச் செய்யப் புக்கவாறே அவற்றைக் கேட்டுப் பொறுக்க மாட்டாமல்
கூற்றுவனைப் போலே கிளர்ந்தான் ஆயிற்றுக் கம்ஸன். —
போய்ப் புக்கு- கோகுலத்தில் புக்கு -வட மதுரையில் புக்கு என்றுமாம் –

கூற்று இயல் கஞ்சனைக் கொன்று-
மஞ்சத்திலே இருந்த கம்ஸனை முகம் கீழ்ப்பட விழ விட்டுக் கொன்று பொகட்டானாயிற்று. இயல்பு-தன்மை.
‘அந்தக் கண்ணபிரான், கிரீடம் கீழே விழும்படி மயிரைப் பிடித்து இழுத்துப் பூமியிலே தள்ளினார்’ என்றதற்குக்
கருத்து என்னையோ?’ எனின்,‘

கேஸேஷூ ஆக்ருஷ்ய விகளத் கிரீடம் அவநீதலே
ஸ கம்ஸம் பாதயாமாஸ தஸ்ய உபரி பபாத ச’-என்பது, ஸ்ரீவிஷ்ணு புரா. 5. 20 : 84.

‘இராஜத் துரோகிகளைக் கொல்லும் போது இராஜ சிந்நங்களை வாங்கிக் கொல்லுவாரைப் போலே காண்’ என்று அம்மாள் பணிப்பர்.
தான் கொடுத்த தரம் ஆகையாலே மற்று ஒருவர்க்குத் தோற்றத்துக்குக் காரணமாக வேண்டும் அன்றோ?

ஆக, தன்னைத் தான் அறிவதற்கு முன்பு,
கம்ஸன் வர விட்டவர்களையும்
அவனையும் தப்புகைக்குப் பணி போந்தது;

பருவம் நிரம்பித் தன்னைத் தான் அறிந்த பின்பு,
பாண்டவர்கள் காரியம் செய்து இத்தனை என்கிறார்.

ஐவர்க்காய்க் கொடுஞ்சேனை தடிந்து –
பாண்டவர்களைச் சீறினவர்கள் அடைய ‘சாரதி, சாரதி’ என்று வாய் பாறிக் கொண்டு வர,
அவர்களை அடையத் தேர் காலாலே உழக்கிப் பொகாட்டானாயிற்று.

ஆற்றல் மிக்கான் –
பகைவர்கள்யும் வேரோடே வாங்கிப் பொகட்டு, தரும புத்திரன் தலையிலே முடியையும் வைத்து,
இவள் குலைந்த சூழலையும் முடிப்பித்த இடத்திலும்,
‘நிலை பெறாத மனத்தை யுடையவனாய் இருக்கிறேன்’ என்றே அன்றே எழுந்தருளினான்?
‘நாதி ஸ்வஸ்த மநா யயவ் :’ என்பது, பாரதம், உத்யோக.

ஆற்றல் என்று பொறையாய், ‘பொறை மிக்கவன்’ என்னுதல்.
அன்றிக்கே,
வலியாய், ‘வலி மிக்கவன்’ என்னுதல்.
இவற்றை அடைய அழியச் செய்கைக்கு அடியான வலியைச் சொன்னபடி.

பெரிய பரஞ்சோதி புக்க அரியே –
கம்ஸனும் துரியோதனனும் இல்லாத இடத்தில் பரம பதத்திலே போய்ப் புக்க பின்பும்,
‘நித்திய ஸூரிகள் நடுவே இருந்தோம் அன்றோ?’ என்று பாராதே,
கம்ஸன் துரியோதனன், கர்ணன் என்று,ஆசிலே வைத்த கையுந்தானுமாய்ப்
பகைவர்கள் மேலே சீறன சீற்றத்தின் வாசனை அங்கேயும் தொடர்ந்தபடி.

————————————————————————————————–

புக்க அரி உருவாய் அவுணன் உடல் கீண்டு உகந்த
சக்கரச் செல்வன் தன்னைக் குருகூர்ச் சட கோபன் சொன்ன
மிக்க ஒர் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார் அவரைத்
தொக்குப் பல்லாண்டிசைத்துக் கவரி செய்வர் ஏழையரே.–7-6-11-

பகவத் கைங்கர்ய பரர்கள் மதி முக மடந்தையர் சாமராதிகள் கொண்டு சத்கரிப்பார்கள் -பலம் அருளிச் செய்கிறார்
புக்க அரி உருவாய் அவுணன் உடல் கீண்டு உகந்த–புக்கு -அரி உருவாய் -புக்க-புக்கு அ -அத்புதமான சிம்ம விக்ரகம் -ஆஸூர பிரகிருதி
ஹிரண்யன் அனாயாசன -ஆஸ்ரித விரோதி தொலைந்தால் உகந்து
சடக்கென புக்கு என்றுமாம் -உருவம் முடிவு ஹிரண்யன் வார்த்தை கேட்ட பின்பே எடுத்தார் –
சக்கரச் செல்வன் தன்னைக் குருகூர்ச் சட கோபன் சொன்ன-விரோதி நிரசனம் அவகாசம் இல்லாத படி
அழகுக்கும் செல்வத்துக்கும் ஐஸ்வர்யம் -திரு ஆழி-உடைய -மிக்க ஒர் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார் அவரைத்
தொக்குப் பல்லாண்டிசைத்துக் கவரி செய்வர் ஏழையரே-மதி முக மடந்தையர் அப்சரஸ் ஸ்த்ரீகள் –
பகவத் குண சேஷ்டிதங்களை முழுமையாக பிரதிபாதிக்கும் ஆயிரம் -பிராப்த்யத்வ உபாயத்வ விரோதி நிவர்த்தகங்கள் அடியாக இப்பத்து -அபி நிவேசம் மிக்கு
சபல புத்தி உடைய -மதி முக மடந்தையர் பாகவத கைங்கர்யம் மேல் சபலம் -தத் விஷயத்தில் செய்வதை இவர்களுக்கும் –

அந்த நரசிங்கத்தின் உருவமாகிப் புக்கு அவுணனாகிய இரணியனுடைய சரீரத்தைப் பிளந்து மகிழ்ந்த சக்கரத்தையுடைய சர்வேஸ்வரனை,
திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீசடகோபர் அருளிச்செய்த மேம்பட்ட ஒப்பற்ற ஆயிரம் திருப்பாசுரங்களுள் இத்திருப்பாசுரங்கள் பத்தையும்
கற்று வல்லவர்களாகிய அவர்களைப் பெண்கள் சூழ்ந்து கொண்டு பல்லாண்டு பாடிச் சாமரை வீசுவார்கள்.

முடிவில், ‘இத்திருவாய்மொழி கற்றாரை மதிமுக மடந்தையர் விரும்பித் திருப்பல்லாண்டு பாடிச் சிறப்பிப்பர்கள்,’ என்கிறார்.

புக்கு அ அரி உருவாய் –
உக்ரம் வீரம் –இத்யாதி அந்த அரி உருவாய்ப் புக்கு. அவ்வரியுரு என்னுமித்தனையாயிற்றுச் சொல்லலாவது.
நரசிங்கமான வேடத்தைக் கொண்டு பகைவன் அண்மையிலே கிட்டி.
அன்றிக்கே,
இரணியன் உடலைப் பிளந்து கொடு புறப்பட்ட போதைக்கடுமை,(அங்கு அப்பொழுதே தோன்றிய என் சிங்கப்பிரான் பெருமை )
புறம்பு இட்டு ஒருவன் வந்து செய்தானாகை அன்றிக்கே,
உள்ளு நின்றும் ஒரு சிங்கம் பிளந்து கொண்டு புறப்பட்டாற்போலே யாயிற்று அதனைச் சொல்லுதல்.

அவுணன் உடல் கீண்டு உகந்த –
இரணியன் உடலைப் பிளந்து போகட்டு, ‘சிறுக்கன் விரோதி போகப் பெற்றோம்!’ என்று உகந்தனாயிற்று.

சக்கரச் செல்வன் தன்னை –
இரணியனுடைய உடலுங்கூடத் திரு உகிருக்கு அரை வயிறாகப் போகையாலே,
பின்னை அழகுக்குப் பத்திரங்கட்டின இத்தனையாயிற்று.
(அழகுக்கும் ஐஸ்வர்யத்துக்கும் உறுப்பாக திருவாழி
பத்ரம் கட்ட -பல்லாண்டு பாட
திரு உகிரின் அழகுக்கு )

குருகூர்ச் சடகோபன் சொன்ன –
ஆழ்வார் அருளிச் செய்த.

மிக்க ஓர் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார்-
பகவத் விஷயத்தை உள்ள அளவும் சொன்ன ஆயிரத்திலும் வைத்துக் கொண்டு இப்பத்தையும் கற்றவர்களை.

தொக்குப் பல்லாண்டு இசைத்துக் கவரி செய்வர் ஏழையர் –
கிண்ணகத்தில் இழிவாரைப் போலே தனி இழிய ஒண்ணாமை திரண்டு கொண்டு,
‘பொலிக! பொலிக!’ என்று மங்களாசாசனம் செய்து,
சர்வேஸ்வரன் பக்கல் செய்யக் கூடிய அசாதாரண கைங்கரியங்களை யடைய இப் பத்தைக் கற்றவர்கள்
பக்கலிலே செய்யா நிற்பார்கள் மதிமுக மடந்தையர்.
நெடுநாள் சம்சாரத்தில் பட்ட இழவெல்லாம் தீரும்படி அவர்களாலே கொண்டாடப் பெறுவர்கள்.

——————————————————————————————

சரணாகதி பண்ணி 6-10-
இந்திரியங்கள் நலிய அடுத்து -7-1-
பின்பு தாய் பாசுரம் கங்குலும் பகலும் -7-2-
திருநாம ப்ரஸ்த்துதம் -தரித்து தென் திருப்பேரை -வேத ஒலி கேட்டு வியசனம்-7-3-
விஜய பரம்பரை காட்டி சமாதானம்-7-4-
இலங்கை செற்ற நேரே -ராமாவதாரம் பிரஸ்த்துதம்
கற்பாரை -அனுபவம்-7-5-
மோக்ஷம் கிடைக்க உபாய பாவம் நீயே -கூப்பாடு -7-6- கை கூப்பி –
ப்ராப்யம் 1-2-
ப்ராபகம் -3-7-
அநிஷ்டம் தொலைப்பவன் -8-9-
இஷ்ட பிராப்தி -10 பாசுரம்
முமுஷுக்களுக்கு அனுபாவ்யமான குண யோகம் படைத்தவன் -இதுவே இப்பதிக அர்த்தம்

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

தாத்ரு குண பிரவிசித அனுபவ ப்ரவ்ருத்த ஸூ அபேக்ஷித
அபி ருசித ஆர்த்தி மகா ஆர்ண வசன் த அங்க்ரியோஸ்த்வ
கதா அனுசரியதாம் பிராப்யாம் சரண்யம் அபி வீஷ்ய
கதா அனுகஸ்யாம் விலலாப முனி சஷ்டே

விலலாப முனி சஷ்டே-அரற்றினார்
தாத்ரு குண பிரவிசித அனுபவ ப்ரவ்ருத்த -விபவ அனுபவம் நாலிலும்-அதனால் வளர்ந்த ஆர்த்தி
அவதார குணங்களை ஐந்திலும் அனுபவித்து -அது ஆர்த்தியை வளர வைக்க
ஸூ அபேக்ஷித-அபி ருசித ஆர்த்தி மகா ஆர்ண வசன்-பூர்ண நித்ய அனுபவ ஆசையால் –துடிப்புக்கடல் -பூர்ண அனுபவ ஆசை மிக்கு
த அங்க்ரியோஸ்த்வ கதா அனுசரியதாம் -என்று தலை பெய்வேன் -பின் தொடர்ந்து அடைவது என்றோ என்று கதறி
பிராப்யாம் சரண்யம் அபி வீஷ்ய -புருஷார்த்தமாகவும் உபாயமாகவும் உனது திருவடிகளே என்று அறுதியிட்டு
எப்படி அடைவேன் யோசிக்க வேண்டாமே
கதா அனுகஸ்யாம்–முமுஷுக்களுக்கு அனுபாவ்யமான குண யோகம் படைத்தவன் -இதுவே இப்பதிக அர்த்தம்
பிராப்யமாகவும்- உபாய பாவமும் அவனே என்று கண் வைத்து
கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ –அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வக
அனுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யம் -பெற வேண்டுமே –

————————————————————————-

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –

நாபி பத்ம உஜ்வலத்வாத்-பத்ம நாபாவோ விதி சிவ பஜநீய அங்க்ரி பாவாத்
வ்ருஷ்டேஹே ரோதாத் கவாஞ் சா த்ராணாத் யேகி சர்வ பூதாந்தர நியமனதயாத்
ஸம் ஸ்ரிதே பவ்ய பாவாத் ப்ரஹ்மாதி ஆபத் விமோச நத்வாத் அஸூர நிரஸனாத்
திராத ரக்ஷ அனுஜத்வாத் ஸூவீயத் க்ரந்தபஹாரி(ஆக்ரந்தநம் ) பதிஐ பகவான் –

1-நாபி பத்ம உஜ்வலத்வாத்- —பாமரு மூவுலகும் படைத்த பற்ப நாபாவோ!–ஜகத் காரணத்வ பெருமை

2-விதி சிவ பஜநீய அங்க்ரி பாவாத் -அரன் நான்முகன் ஏத்தும் செய்ய நின் திருப் பாதத்தை-

3–வ்ருஷ்டேஹே ரோதாத் —காத்த எங் கூத்தாவோ! மலை ஏந்திக் கன் மாரி தன்னை–மழை காத்த கோ பாலன்-

4–கவாஞ் சா த்ராணாத் யேகி—கொங்கலர் தண் அந் துழாய் முடி என்னுடைக் கோவலனே!–பசுக்களைக் காத்து -நீரூட்டி இத்யாதிகள்

5–சர்வ பூதாந்தர நியமனதயாத் —உன்னுடைய உந்தி மலர் உலகமவை மூன்றும் பரந்து
உன்னுடைச் சோதி வெள்ளத்து அகம்பால் உன்னைக் கண்டு கொண்டிட்டு– -சரீராத்மா பாவம் -நியமனம்

6–ஸம் ஸ்ரிதே பவ்ய பாவாத் –என்னுடைக் கோவலனே! என் பொல்லாக் கரு மாணிக்கமே!—பவ்யனாய் –

7-ப்ரஹ்மாதி ஆபத் விமோசநத்வாத் —அங்கு உயர் முக்கண் பிரான் பிரம பெருமான் அவன் நீ-வெங்கதிர் வச்சிரக்கை –இந்திரன் முதலாத் தெய்வம் நீ

8–அஸூர நிரஸனாத் —அன்று இலங்கை கடந்து பிலம்புக்கு ஒளிப்ப
மீளியம் புள்ளைக் கடாய் விறன் மாலியைக் கொன்று பின்னும்
ஆளுயர் குன்றங்கள் செய்து அடர்த்தானையும் காண்டுங்கொலோ?–மாலி ஸூ மாலி மால்யவான் இத்யாதிகள் நிரஸனம்

9–திராத ரக்ஷ அனுஜத்வாத் —அரக்கன் குலத்தைத் தடிந்து
மீண்டு மவன் தம்பிக்கே விரி நீர் இலங்கை அருளி–

10-ஸூ வீயத் க்ரந்தபஹாரி–ஆக்ரந்தநம் அபகரித்து கஞ்சனைக் கொன்று ஐவர்க்காய்க் கொடுஞ்சேனை தடிந்து
ஆற்றல் மிக்கான் பெரிய பரஞ்சோதி புக்க அரியே.–ஹரியாக என்றும்

11-புக்க அரி உருவாய் அவுணன் உடல் கீண்டு உகந்த சக்கரச் செல்வன்-என்றும்

பதிஐ பகவான் –

ஆழ்வார் புலம்பலை அபகரித்த ராமன் கண்ணன் நரஸிம்ஹன் என்றவாறு
ஒரே பாசுரத்தில் ஒவ்வொரு அவதாரம் சுருக்கமாக அருளிச் செய்கிறார் இதில் –

——————————————————————————

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 66-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்-

அவதாரிகை –

இதில் எம்பெருமான் உடைய குணங்களைச் சொல்லிக் கூப்பிட்ட பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
கற்பாரில் – நிரவதிக போக்யங்களான கல்யாண குணங்களை யுடைய ஸ்ரீ எம்பெருமான் உடைய
பிராப்யத்வம்-பிராபகத்வம்-விரோதி நிவர்த்தகம் (அநிஷ்ட நிவர்த்தகமும் இஷ்ட பிராப்தியும் )ஆகிற இவ்வோ ஸ்வபாவங்களை அனுசந்தித்து
இப்படி குணாதிகன் ஆனவனை அனுபவிக்க வேணும் என்று ஆசைப்பட்டு கிடையாமையாலே
அம்பு பட்டாரைப் போலே கிடந்தது உழலுகின்ற -உழைக்கின்ற -அழைக்கின்ற –
பாமருவு மூவுலகில் அர்த்தத்தை-பா மருவு வேதம் -இத்யாதியாலே
அருளிச் செய்கிறார் -என்கை –

—————————————————-

பா மருவு வேதம் பகர் மால் குணங்களுடன்
ஆ மழகு வேண்டற்பாடாம் அவற்றை -தூ மனத்தால்
நண்ணியவனைக் காண நன்குருகிக் கூப்பிட்ட
அண்ணலை நண்ணார் ஏழையர்–66-

பா மருவு வேதம்-சந்தஸ் ஸூக்கள் கூடிய வேதம்
மால்-ஆஸ்ரித வ்யாமோஹன் இங்கு
நண்ணார் ஏழையர்-ஆஸ்ரியாதார் ஏழையர் -ஆஸ்ரயிப்பார் ஸ்ரீ மான் ஆவார்

—————————————————-

வியாக்யானம்–

பா மருவு வேதம் பகர் மால் குணங்களுடன் ஆ மழகு வேண்டற்பாடாம் அவற்றை-
சந்தஸ்ஸூக்களுடன் கூடின வேதப் பிரதிபாத்யமான குணங்களோடு கூடி
நன்றான அழகு மேன்மை யானவற்றை –

தூ மனத்தால் நண்ணி –
மனசாது விஸூத்தேன -என்று-மானஸ சாஷாத் காரத்தாலே கிட்டு அனுபவித்து –

அவனைக் காண-
கீழ் உக்த குண விசிஷ்டன் ஆனவனை பிரத்யஷ அனுபவம் பண்ண வேணும் என்று இச்சித்து –

நன்குருகிக் கூப்பிட்ட –
நன்றாக உருகி-அந்த பிரேம அனுகூலமான உருகதலோடே கூப்பிட்ட –

அண்ணலை நண்ணார் ஏழையர்-
அதாவது
வேதம் பகரும் ஸ்ரீ மால் குணங்கள் ஆவன – சர்வான் காமான் -என்கிற கல்யாண குணங்கள் –
அவை தான் பிராப்யங்களாயும் பிராபகங்களாயும் இருக்கும் இறே
மோஷ தசையில் பிராப்யமுமாய்-முமுஷூ தசையில்
அனுபவிப்பார்க்கு அவதாராதிகளில் பிராப்யத்வ பிராபகத்வம் ஆகிற
உபய ஆகாரத்தையும் யுடைத்தாய் இருக்கும் –

1-பாமருவு மூவுலகும் படைத்த பற்ப நாவாவோ -என்று தொடங்கி
தாமரைக் கையாவோ யுன்னை என்று கொல் சேர்வதுவே -என்றும்
2-என்று கொல் சேர்வது அந்தோ -என்று தொடங்கி – நின் திருப் பாதத்தை யான் -என்றும்–பிராப்யத்வத்தையும்

3-காத்த எம் கூத்தாவோ -என்று தொடங்கி -உன்னை எங்குத் தலைப் பெய்வனே -என்றும்
4-எங்குத் தலைப் பெய்வன் நான் என்று தொடங்கி -என்னுடைக் கோவலனே -என்றும்
5-என்னுடை ஆருயிரார் எங்கனே கொல் வந்து எய்துவரே -என்றும்
6-வந்து எய்து மாற்றியேன் -என்று தொடங்கி -என் திரு மார்பனை -என்றும்
7-என் திரு மார்பன் தன்னை -என்று தொடங்கி -விசும்பு ஆளியைக் காணேனே -என்றும்
இப்படி அஞ்சு பாட்டாலே -அவனுடைய பிராபகத்வத்தையும்-

8-ஆளியைக் காண்பரியாய் -என்று தொடங்கி -அடர்த்தானையும் காண்டும் கொலோ -என்றும்
9-காண்டும் கொலோ நெஞ்சம் -என்று தொடங்கி -அமரர் அரி ஏற்றினையே -என்றும் –
இவ் விரண்டு பாட்டாலே விரோதி நிரஸனத்தையும்

10-ஏற்றரும் வைகுந்தத்தை அருளும் நமக்கு ஆயர் குலத்தீற்று இளம் பிள்ளை -என்று
மோஷ பிரதத்வத்தையும் –

இப்படியான பகவான் ரூப கல்யாண குண-என்கிற இக் கல்யாண குணங்களோடு
நன்றான அழகையும் –
அதாவது –
பற்ப நாபாவோ -என்று -கொப்பூழில் எழு கமலப் பூ அழகையும்

பற்ப பாதாவோ -தாமரைக் கண்ணாவோ -தாமரைக் கையாவோ- செய்ய நின் திருப்பாதம் -என்று
திவ்ய அவயவ சௌந்தர்யத்தையும்

காத்த எம் கூத்தாவோ-என்று சமுதாய சோபையையும் (த்ரிபங்க அழகு )

பூம் தண் துழாய் முடியாய் -என்று ஒப்பனை அழகையையும்

என் பொல்லாக் கரு மாணிக்கமே -என்றும்
செஞ்சுடர் சோதிகள் பூத்து ஒரு மாணிக்கம் சேர்வது போல் -என்று வடிவு அழகையும்

என் திரு மார்பனையே -என்று ஸ்ரீ யபதியால் வந்த சேர்த்தி அழகையும்-

அத்தோடு வேண்டப்பாட்டையும் –
அதாவது –
மூ வுலகும் படைத்த -என்று ஜகத் ஸ்ருஷ்டத்வத்தையும்

மூ வுலகும் அளந்த -என்று ஸ்ருஷ்டமான ஜகத்தை தன் காலின் கீழே யாம்படி எல்லை நடந்து மீட்டியும்

அதுக்கு மேலே
தாமரைக் கண்ணாவோ -என்று புண்டரீகாஷத்தால் வந்த மேன்மையையும்

அரன் நான்முகன் ஏத்தும் செய்ய நின் திருப் பாதம் -என்று சர்வ ஸ்மாத் பரத்வத்தையும்

என் மலைமகள் கூறன் தன்னை என்றும்
என் நா மகளை அகம்பால் கொண்ட நான்முகனை நின்ற சசிபதியை
என்று அவர்களுக்கு அந்தர்யாத்மதயா நிர்வாஹகனான படியையும் –
இவற்றாலே பலித்த வேண்டப்பாடு இவை என்கை –

தூ மனத்தால் நண்ணி -இத்யாதி –
கீழே உக்தங்களான இவற்றைத் தூ மனத்தனனாய் என்கிற பரிசுத்தமான ஞான விஷயமாம்படி
அனுபவித்து

ஏவம் விதமானவனை பிரத்யஷ சாஷாத்காரத்தாலே அனுபவிக்க இச்சித்து
பக்தி பாரவச்யரால் த்ரவீபூதராய்க் கூப்பிட்ட
பற்ப நாபாவோ -என்றும்
காத்த எம் கூத்தாவோ -என்றும்
விசும்பாளியைக் காணேனே -என்றும்-இப்படி விஷாத அதிசயத்தாலே கூப்பிட்ட

அண்ணலை நண்ணாதார் ஏழையர்–
இதர விஷயத்தில் சாபல்யராய்-தத் அலாபத்தாலே கூப்பிடுகிற சம்சாரிகள் நடுவே
ஸ்ரீ பகவத் அலாபத்தாலே கூப்பிடுகிற
சர்வாத்ம சேஷியான ஸ்ரீ ஆழ்வாரை ஆஸ்ரயியார்கள்-
அதுக்கு அடி இதர விஷய சாபல்யம் இறே-

இப்படி
ஸூலபராய் பிராப்த சேஷியான ஸ்ரீ ஆழ்வாரை லபியாதே இதர விஷய சாபல்யர் ஆவதே
என்று வெறுக்கிறார் –

————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பகவத் விஷயம் காலஷேபம் -153- திருவாய்மொழி – -7-6-1….7-6-5–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்–

June 29, 2016

இப்படித் தெளிந்தால்,(தெளிவுற்ற ஆழ்வார் -அவனே உபாயம் உபேயம் என்று தெளிந்த பின்பு )
பின்னைச் செய்வது கூப்பிடுகை போலே காணும்;
இல்லையாகில் ‘சம்சாரம் நன்று’ என்று கலங்கினார் ஆவரே.

‘அம்மங்கி அம்மாள்’ இத் திருவாய்மொழியில் பாடக் கேட்டு அனுபவித்துப் போரும் இதற்கு மேற்பட,
இதில் ஓடுகிற ஆர்த்திக்கு நம்மாற்பாசுரம் இட்டச் சொல்லப் போகாது’ என்று பணிக்கும்’ என்று அருளிச் செய்வர்.

மேலே, ‘ஆழி எழச் சங்கும்’ என்ற திருவாய்மொழியிலே,
சர்வேஸ்வரன் காட்டிக் கொடுத்த வெற்றிச் செயல்களை அனுபவிக்கைக்கு உறுப்பாக,
அவனுடைய வீரச் செயல்களை அருளிச் செய்தார்;

அருளிச் செய்த முகத்தாலே
அவனுடைய அவதாரங்களையும்
அதற்கு அடியான கிருபை முதலான குணங்களையும் நினைத்து,
‘இக் குணங்களும் நடையாடா நிற்க,
இவற்றிலே சம்பந்தம் உண்டாய் இருக்க,
தாங்கள் சேதநராய் இருக்க,
சம்சாரிகள் இதனை இழப்பதே!’ என்று ஆச்சரியப்பட்டார் மேல் திருவாய்மொழியில்.

‘அவர்கள் விருப்பம் இல்லாமையாலே இழக்கிறார்கள்;
விருப்பமுடைய நாம் இழப்போம் அல்லோம்;
அவனுடைய அவதாரங்களையும்
வடிவழகையும் அனுபவிப்போம்,’ என்று பார்த்த விடத்து,

அவற்றை அப்போதே கிட்டி அனுபவிக்கப் பெறாமல்
மிகவும் துக்கித்தவராய்ச்
சர்வேஸ்வரனுக்குப் பரம பதத்திலும் இருப்பு அரிதாம்படி ஆர்த்தியாலே
நிரம்பிற்று ஒரு கடல் கையெடுத்துக் கூப்பிடுமாறு போலே கூப்பிடுகிற கூப்பீடு கேட்டு
அவ் விருப்புக் குலைந்து வந்து முகங்காட்ட வேண்டும்படி,

அவன் பிராப்பியனாய் இருக்கிற படியையும்-(1-2-பாசுரங்கள் -தாமரைக் கண்ணாவோ -ஸ்ப்ருஹணீயன் )
பிராபகனாய் இருக்கிறபடியையும் -(3-7–பாசுரங்கள் -வந்து எய்துமாறு அறியேன் )
விரோதிகளை அழிக்கும் தன்மையனாய் இருக்கிறபடியையும் சொல்லி,
கேட்டாரடைய நீராகும்படி பெரு மிடறு செய்து கூப்பிடுகிறார்.

‘பஹவோ ந்ருப’ – சக்கரவர்த்தி, ‘பெருமாளைத் திருமுடி சூட்ட’ என்று கோலி,
‘அறுபதினாயிரம் ஆண்டு ஒரு தலை மிதிக்க ஒரு தலை மேல் எழும்படியான இராச்சியத்தை வருந்தி ஒருபடி அடிப்படுத்தினோம்;
இதனை ஒரு சிறு பிள்ளையின் தலையிலே வைத்தால் பொறுக்குமோ, போறாதோ?’ என்று விசாரித்து,
‘இதனை உலகத்தோடே கூட்டிப் பார்ப்போம்’ என்று கோலி,
அரசர்கள் எல்லாரையும் திரட்டி,
‘நான் இங்ஙனே பெருமாளைத் திருமுடி சூட்டப் பாரா நின்றேன்: உங்களுக்கு இஷ்டமோ, இன்றோ?’ என்று கேட்க,
உடனே, ‘கிழவா! போகாய்’ என்ன, கிழவா போகாய்’ என்றது

‘அநேக வர்ஷ ஸாஹஸ்ரோ வ்ருத்தஸ்த்வம் அஸி பார்த்திவ
ஸராமம் யுவராஜாநம் அபிஷிஞ்சஸ்வ பார்த்திவம்’-(ஸ்ரீராமா. அயோத். 2 : 21 .)

(இச்சா மோஹி மஹா பாஹூம் ரகுவீரம் மஹா பலம்
கஜேந மஹதா யாந்தம் ராமம் சத்ரா வ்ருதா நநம –அயோத்யா -2-22-

இச்சா மோஹி -ஆசைப்படுகிறோம் அன்றோ
மஹா பாஹூம் -நீண்ட திருக் கைகளை யுடையராய்
ரகுவீரம்-ரகு குல ஸ்ரேஷ்டராய்
மஹா பலம் -பெரும் பலத்தை யுடையரான
கஜேந மஹதா -மஹதா கஜேந -பெரிய யானையின் மேலே
யாந்தம் -எழுந்து அருளுமவராயும்
ராமம் -ஸ்ரீ ராமனை
சத்ரா வ்ருதா நநம –குடையால் வெய்யில் படாதபடி மறைக்கப் பட்ட திரு முகத்தை யுடையவராயும்
இச்சா மோஹி -ஆசைப்படுகிறோம் அன்றோ –)
என்றதனைத் திருவுள்ளம் பற்றி.

‘கதம்நு மயி தர்மேண ப்ருதிவீம் அநுஸந்ஸதி
பவந்தோ த்ரஷ்டும் இச்சந்தி யுவராஜம் மமாத்மஐம்’-என்பது, ஸ்ரீராமா. அயோத். 2 : 25.

நாம் ஒருப்பட்ட காரியம் நன்றாக விழுந்தது; அரசர்கள் கூட்டம் இப்படி விரையப் பெறுவதே!’ என்று
அதிலே மிகுந்த உவகையனாய், அந்த உவகையை நெஞ்சிலே இட்டு வைத்து,
‘அதனை இவர்கள் வாயாலே சொல்லக் கேட்கலாகாதோ?’ என்று நினைத்து,

‘வாரீர்கோள்! அறுபதினாயிரம் ஆண்டு அரசைச் செலுத்துகிற இடத்து. இற்றைவரை எனக்கு என்று ஒரு சுகத்தைக் கோலாதே
உங்கள் இரட்சணத்துக்கு ஆமவையே தேடிக்கொடு போந்த நான். ஒரு வார்த்தை சொன்னால்,
‘இப்போது நீ இருந்தாயாகில் வீகம் என்? கிரமத்திலே செய்து கொள்ளுகிறோம்,’ என்னதல்:
அன்றாகில், ‘உனக்குப் பிரியமாகில் அப்படிச் செய்யலாகாதோ?’ என்று ஒரு வார்த்தை சொல்லி ஆறியிருத்தல் செய்கை ஒழிய,
படுகொலைக்காரர் கையிலே அகப்பட்டார், ‘தப்ப வேணும்’ என்று பார்க்குமாறு போலே
நீங்கள் இங்ஙன் கூப்பிடுகைக்கு நான் செய்த குற்றம் என்?’ என்ன,

‘ஓ அரசனே! உன் பிள்ளையான ஸ்ரீராமபிரானுக்கு மங்களகரமான குணங்கள் பல இருக்கின்றன’ என்கிறபடியே,

‘‘தே தம் ஊசு: மஹாத்மாநம் பௌரஜாபதைஸ்ஸஹ
பஹவோ ந்ருப கல்யாண குணா: புத்ரஸ்ய ஸந்தி தே’-என்பது, ஸ்ரீராமா. அயோத். 2 : 26.

எதிரிகள் அம்பால் அழியப் பெற்றது இல்லை உன்னுடைய தேசம்;
உன் மகனுடைய குணத்தாலே நாட்டைப் படுகொலைக் குத்தினாய் காண் நீ,’ என்றார்கள் ஆயிற்று. என்றது,
‘நாங்கள் குணங்களால் வெல்லப்பட்டவர்களாய் இவ்வார்த்தை சொன்னோமித்தனை அல்லது ஒரு காரியபுத்தியோடு
சொன்னோம் அல்லோங்காண்,’ என்றார்கள் என்றபடி.

‘தாதுக்களுக்கு இமயமலை போன்று குணங்களுக்குப் பிறப்பிடமாய் இருக்கின்றான்,
ஒருவராலும் அசைக்கக் கூடாத ஆற்றலை யுடையனாயும் இருக்கிறான்,’ என்கிறபடியே,

‘ஜ்ஞாந விஜ்ஞான ஸம்பந்நோ நிதேஸே நிரத: பிது:
தாதுநாம் இவ ஸைலேந்த்ரோ குணாநாம் ஆகரோ மஹாந்’-என்பது, ஸ்ரீராமா. கிஷ். 15 : 21.

தாதுக்களானவை ‘இன்ன மலையிற்பொன்’ என்றவாறே விலை போமாறு போலே,
புறம்பே குணங்கள் சிலவற்றைக் கண்டால்,
பெருமாள் பக்கல் குணம்’ என்று இட்டாயிற்று அங்கு விலை போவது,
‘இவ் வடித்தில் குணம்’ என்றாயிற்றுப் புறம்பு விலை போவது;
இப்படிப் பட்டவனுடைய குணங்களைச் சொல்லிக் கூப்பிடுகிறார்.

————————————————————————————————

பாமரு மூவுலகும் படைத்த பற்ப நாபாவோ!
பாமரு மூவுலகும் அளந்த பற்ப பாதாவோ!
தாமரைக் கண்ணாவோ! தனியேன் தனி ஆளாவோ!
தாமரைக் கையாவோ! உன்னை என்று கொல் சேர்வதுவே?–7-6-1-

குணங்கள் இருக்க நான் இழக்கவோ இங்கு -முன்பு சம்சாரிகள் இழப்பதை சொன்னார்
காரணத்வாதிகள் அசாதாரண சம்பந்தம் -படைத்த -அளந்த -ரக்ஷணம் -ஈரக் கையால் தடவி கடாக்ஷித்து
திருவடியால் -உன்னை என்று கிட்டு அனுபவிப்பேன்
பாமரு மூவுலகும் படைத்த பற்ப நாபாவோ!-பரப்பை உடைத்தாய் -மூ உலகம் பாட பேதம் -விரிந்த -க்ருதகம் -க்ருத அக்ருதக அக்ருதக மூன்றும் –
பாமரு மூவுலகும் அளந்த பற்ப பாதாவோ!-அநந்யார்ஹம் ஆக்கி -அளந்த நிரதிசய போக்யத்தை
தாமரைக் கண்ணாவோ! தனியேன் தனி ஆளாவோ!-கடாக்ஷித்து நோக்கி ரக்ஷித்து–ஸ்பர்ச சுகத்தால் ஆனந்திப்பிக்க -தொட்டு தொட்டு –
நானும் இவர்களில் ஒன்று தானே -விரோதி பூயஸ்தன் தனியேன்-நித்ய ஸூரீகள் போலவும் இல்லாமல் நித்ய சம்சாரிகளும் இல்லாமல்
ஆளாகி கடவ ஸ்வாமி -விரோதி நிவர்த்தகத்தில் நீ அத்விதீயன் -தனி
தாமரைக் கையாவோ! உன்னை என்று கொல் சேர்வதுவே-இப்படி பிராப்யன் -ரக்ஷகன் -போக்யனுமாய் -நாபி –
பிராப்தி -திருவடித் தாமரை போக்யம் -தாமரைக் கண்ணா ரக்ஷகத்வம் -பதம் தோறும் ஓ ஓ ஆர்த்திஅதிசய விசேஷம் காட்டுகிறதை

‘பரப்பை யுடைய மூன்று உலகங்களையும் உண்டாக்கின திரு வுந்தித் தாமரையை யுடையவனே!
பரப்பை யுடையவான மூன்று உலகங்களையும் அளந்து தாமரை போன்ற திருவடிகளை யுடையவனே!
தாமரை போன்ற திருக் கண்களை யுடையவனே! தாமரை போன்ற திருக் கரங்களை யுடைவனே!
தனியேனாய் இருக்கின்ற என்னைத் தனித்து ஆளுகின்றவனே! உன்னைச் சேர்வது என்று கொல்?’ என்கிறார்.

பெரியவனை மாயவனைப் பேருலகம் எல்லாம்
விரிகமல உந்தியுடை விண்ணவனை’
‘மூவுலகும் ஈரடியால் முறைநிரம்பா வகைமுடியத்
தாவிய சேவடி’–என்பது, சிலப்பதி. ஆய்ச்சியர் குரவை.

‘கரனிருந்த வனமன்றோ இவை படவுங் கடவேனோ
அரனிருந்த மலை யெடுத்த அண்ணாவோ அண்ணாவோ’-என்பது, கம்ப ராமா. சூர்ப்பணகைப்பட. 109.

பற்பநாபன், பற்பபாதன், தாமரைக் கண்ணன், தாமரைக் கையன்’ என்பனு, விளி ஏற்றலின் ஈறு கெட்டு அயல் நீண்டு ஓகாரம் பெற்று வந்தன.
ஓகாரங்கள், துக்கத்தின் மிகுதியைக் காட்ட வந்தன. ‘பத்மம்’ என்பது, ‘பற்பம்’ எனத் திரிந்தது.
இத் திருவாய்மொழி, கலிநிலைத்துறை.

‘உலகத்தைப் படைத்தல் முதலாயினவற்றைச் செய்து உபகரித்து எல்லை யற்ற இனியனாய் இருக்கிற உன்னை,
உன்னாலே உபகாரம் கொண்டு உன் சுவடு அறிந்த நான் கிட்டுவது அன்றோ?’ என்கிறார்.
(முதலாயினவற்றை -அளந்த -ரஷித்த )

பாமரு மூன்று உலகும் படைத்த பற்பநாபாவோ –
பா என்பது,பதார்த்த வாசகமாய்
தேவர் மனிதர் முதலான பொருள்களைக் காட்டுவதாய்,
பா மருவி இருந்துள்ள;
அதாவது,
‘பொருள்களினுடைய நெருக்கத்தை யுடையவான மூன்று உலகு’ என்னுதல்.

அன்றிக்கே,
‘பாபம் மருவி இருந்துள்ள மூன்று உலகு’ என்னுதல்:
பாபம் என்றது, ‘பா’ எனக் கடைக் குறைந்து வந்தது.

அன்றிக்கே,
‘பா’ என்று பரம்புதலாய்,
‘பரப்பை யுடையவான மூன்று உலகு’ என்னுதல்.
‘மூன்று உலகு’ என்று,
கீழும் மேலும் நடுவுமான உலகங்களைச் சொல்லுதல்.
அன்றிக்கே,
கிருதகம், அகிருதகம், கிருதகாகிருதகம் என்று இவ்வகையிலே ஆக்கிச் சொல்லுதல்.

‘என் தாயே’ என்பாரைப் போலே ‘படைத்த பற்ப நாபாவோ!’ என்கிறார்.
இதனை உண்டாக்குகைக்கு அடியான சம்பந்தமேயாய்,
இனிமை இன்றிக்கே ஒழிந்ததாகில் தான் நான் ஆறி இரேனோ?
நீ இதனை வருந்திப் படைத்தது அழிக்கைக்காகவோ?

அன்றிக்கே,
இல்லாத பொருள்களை உண்டாக்கக் கூடிய நீ, உள்ள பொருளை அழிக்கிறது என்?’ என்னுதல்.

பாமரு மூன்று உலகும் அளந்த பற்ப பாதாவோ –
இவற்றை உண்டாக்கி ‘மேல் பட்டது படுகிறது’ என்று இருந்தாயாகில் தான் ஆறி இரேனோ?
பெற்ற தாய் வளர்க்குமாறு போலே இவற்றைக் கண்களிலே வெண்ணெய் இட்டுக் கொண்டு நோக்குமவன் அல்லையோ?

மஹாபலி போன்றவர்கள் இறாஞ்சினாற் போலே இதனைக் கவர்ந்து கொண்டால்
எல்லை நடந்து மீட்டுக் கொள்ளுமவன் அன்றோ நீ?
‘படிக்கு அளவாக நிமிர்த்த நின் பாத பங்கயமே தலைக்கு அணியாய்’ திருவாய். 9. 2 : 2.-என்று ஆசையுடைய நான் இருக்க,
இச்சை இல்லாதார் தலைகளிலே திருவடியை வைப்பதே!’

‘அது செய்தமை உண்டு, உமக்கு இப்போது விருப்பம் என்?’ என்ன,
அருளிச் செய்கிறார் மேல்:

தாமரைக் கண்ணாவோ –
‘கடாட்சித்தைத் தருதலாலே மறுபடியும் என்னைக் காப்பாற்றி அருள வேண்டும்,’ என்னமாறு போலே
அவலோகந தாநேந பூயோ மாம் பாலய அவ்யய’-என்றது, ஸ்ரீவிஷ்ணு புரா. 16. 20 : 1.

‘திருக் கண்களாலே நோக்க வேணும்’ என்கிறார்.
தோன்றுதலும், வளர்தலும், வாழ்தலும் எல்லாம் உன் பக்கலிலே யாயிற்று,

தனியேன் தனி ஆளாவோ –
ஆக, திருக் கண்களின் அழகை அநுசந்தித்தார்;
அக் கண்ணழகே தாரகமாக இருக்கும் நித்திய ஸூரிகள் திரளிலே தம்மை இருக்கக் கண்டிலர்;
அதனாலே ‘தனியேன்’ என்கிறார்-

கண்களின் அழகைச் சொன்னதன் பின், ‘தனியேன்’ என்றதற்கு பாவம் அருளிச் செய்கிறார், ’ஆக’ என்று தொடங்கி.
‘தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனை’ (திருவாய். 2. 6 : 3.) என்றதனைத் திருவுள்ளம் பற்றி,
‘அக் கண்ணழகே’ என்று தொடங்கி அருளிச் செய்கிறார்.

‘பெண்களுடைய நோக்கே தாரகமாக இருக்குமவர்களுடைய திரளுக்கும் கூட்டு அன்றிக்கே,
உன் நோக்கே தாரகமாக இருக்கும் அவ்விபூதியிலுள்ளாருடனும் கூட்டு ஆகாதே,
என்னை மூன்றாம் விபூதியாக்கி ஆளுகிறவனே!’ என்பார், ‘தனி ஆளாவோ’ என்கிறார்.
அன்றிக்கே,
‘உன் கிருபையே தாரகமாக இருக்கிற என்னை உன் கிருபைக்கு என்னை ஒழிய
வேறு விஷயம் இல்லை யாம்படி ஆளுகிறவனே’ என்றுமாம்.

தாமரைக் கையாவோ-
அக்குரூரனைப் போன்று போரேனோ?
‘ஸோப்யே நம்’ திருக்கையில் அடையாள மித்தனையும் இலச்சினைப்படி அவன் உடம்பிலே காணலாம்படி
அவனைத் தீண்டி அவன் ஸ்பரிசத்தாலே செயல் அற்றவனாய் நிற்கையாலே கையைப் பிடித்து ஏறட்டு,
பின்னை அணைக்கைக்கு இருவரைக் கண்டது இல்லை-
பரதன் அக்ரூரர் மாருதி -அணைத்த –

ஸோபி ஏநம் த்வஜ வஜ்ராப்ஜ க்ருத சிஹ்நேந பாணிநா
ஸம்ஸ்ப்ருஸ்ய ஆக்ருஷ்யச ப்ரீத்யா ஸூகாடம் பரிஷஸ்வஜே’-என்பது, ஸ்ரீவிஷ்ணு புரா. 5. 18 : 2.

‘மிருதுவான கைகளால் கண்டா கர்ணனுடைய சரீரத்தையும் கூட எல்லாவிடத்திலும் தொட்டருளினார்,’ என்கிறபடியே.
பஸ் பர்ஸ அங்கம் ததா விஷ்ணு: பிஸாசஸ்ய அபி ஸர்வத:’
கரேண ம்ருதுநா தேவ: பாபந் நிர்மோசயந் ஹரி:’-என்பது, ஹரி வம்ஸம்.. 275 : 15.

உன்னை என்று கொல் சேர்வதுவே –
‘பதினான்கு ஆண்டுகளும் முடிந்த பின் பஞ்சமி திதியில்’ என்று நாள்
‘பூர்ணே சதுர்த்தஸே வர்ஷே பஞ்சம்யாம்’-என்பது, ஸ்ரீராமா. யுத். 127 : 1.

இட்டுக் கொடுக்கலாவது தம்பிமார்க்கோ?
உனக்கே உரியரான அடியார் ஆனால் ‘இன்ன நாள் பெறக்கடவது’ என்று ஒருநாள்
இட்டுக் கொடுக்கல் ஆகாதோ?

அடியன் ஆகில் தலைவன் கொடுத்த நாள் பெறக் கடவதாய் அன்றோ இருக்க அடுப்பது?

அங்ஙனம் கிரமத்திலே அடைகிறோம் என்று பார்த்து ஆறி இருக்க மாட்டுகின்றிலேன்.

தனியேன் உன்னை என்று கொல் சேர்வதுவே –
நாராயணனை ஒழிந்து இருப்பது ஒரு நாரம் இல்லையே?
இனிச் ‘சேருகையாவது, அடியார்கள் குழாங்களை உடன் கூடுகை அன்றோ?

‘உன்னை என்று கொல் சேர்வதுவே’ என்னா நிற்க,
அது சேரும்படி என்?’ என்னில்,
ஒண்டொடியாள் திருமகளும் நீயுமே நிலா நிற்பக் கண்டு வைக்கையாலே,
‘உன்னைச் சேர’ என்ற போதே தன்னடையே வருமன்றோ?

——————————————————————————

என்று கொல் சேர்வது அந்தோ!அரன் நான்முகன் ஏத்தும் செய்ய
நின் திருப் பாதத்தை யான்? நிலம் நீர் எரி கால் விண்ணுயிர்
என்ற இவை தாம் முதலா முற்றுமாய் நின்ற எந்தாயோ!
குன்று எடுத்து ஆநிரை மேய்த்து அவை காத்த எம் கூத்தாவோ!–7-6-2-

ஆர்த்தியின் மிகுதியால் மீண்டும் –சர்வாந்தராத்மா ஆபத் சகன் -உன் திருவடிகளை என்று கிட்டுவேன்
என்று கொல் சேர்வது அந்தோ!அரன் நான்முகன் ஏத்தும் செய்ய நின் திருப் பாதத்தை யான்? -தர்ச நீயமான
அநந்ய பிரயோஜனம் -உள்ள எனக்கு கிட்ட கூப்பிட வேண்டுவதே -அந்நிய பரர்-ஸ்ருஷ்ட்டி சம்ஹாரம் செய்யும் இவர்கள்
பிரயோஜனாந்த பரர்களுக்கு -போலே இல்லாமல்
நிலம் நீர் எரி கால் விண்ணுயிர்-ஜீவ ராசிகள் -ஸமஸ்த பதார்த்தங்கள் தானானுமாய் சரீரமாய் பிரகாரமாய்
என்ற இவை தாம் முதலா முற்றுமாய் நின்ற எந்தாயோ!
குன்று எடுத்து ஆநிரை மேய்த்து அவை காத்த எம் கூத்தாவோ!-பாதகம் தீர குன்று எடுத்து ரக்ஷித்து மநோ ஹார
சேஷ்டிதங்ககள் பிரகாசிப்பித்து -பிராப்யத்வம் முன் பாசுரம் ஸ்ப்ருஹ நீயத்வம் இதில்

‘நிலமும் நீரும் நெருப்பும் காற்றும் ஆகாயமும் உயிரும் என்ற இவை முதலாக மற்றுமுள்ள எல்லாப் பொருள்களும் உனக்குச் சரீரமாக நின்ற எந்தையே!
பசுக் கூட்டங்களை மேய்த்து, மலையைத் தூக்கிப் பிடித்து அப் பசுக்களைக் காத்த எம் கூத்தனே! சிவனும் பிரமனும் ஏத்துகின்ற நின் செய்ய திருப் பாதத்தை
யான் சேர்வது என்றுகொல்? அந்தோ!’ என்கிறார்.
‘அந்தோ’ என்பது. இரக்கத்தைக் காட்டும் இடைச்சொல். ‘அரன் நான்முகன் ஏத்தும் செய்ய நின் திருப் பாதத்தை யான் சேர்வது என்று கொல்?’ என்க.
‘எந்தை, கூத்தன்’ என்பன, விளி ஏற்றலின் ஈறு திரிந்து ஓகாரம் பெற்றன.

’வேறு விஷயங்களிலே நோக்கு உள்ளவர்களாய்ப் புறம்பே தாரகம் முதலானவைகளாம்படி இருக்கின்றவர்களுக்குங்கூட
விரும்பும்படியாக இருக்கிற திருவடிகளை, வேறு ஒன்றிலும் நோக்கு இல்லாதவனாய்
இதுவே பிரயோஜனமாக இருக்கிற நான் என்று பெறக் கடவேன்?’ என்கிறார்.

என்று கொல் –
திருக் கையில் ஸ்பர்ச சுகத்தை விரும்பி, ‘என்று கொல் சேர்வது?’ என்ற அளவே அன்றோ மேல்?
அதற்கு ஒரு மறு மொழி பெறாதே இருக்க, ‘என்று கொல் சேர்வது?’ என்கிறது என்ன நிலையோ தான்!

அந்தோ –
இனி ‘என்று கொல் சேர்வது?’ என்பாருங்கூட இன்றியே ஒழியக் காண் புகுகிறது;
நான் முடிந்தேன் என்கிறார்.
‘அந்தோ’ என்பதனால், தம்முடைய ஆற்றாமையைத் தெளிவு படுத்துகிறார்.

அரன் நான்முகன் ஏத்தும் செய்ய நின் திருப் பாதத்தை –
அழிப்பாருடன் ஆக்குவாருடன் வாசி அற உகக்கும் படியான திருவடிகளை.
வேறு பிரயோஜனங்களை விரும்புகின்றவர்களுக்கும் கூட விரும்பத் தக்கனவாம்படி இருக்கிற திருவடிகளை
வேறு பிரயோஜனங்களை விரும்பாத நான் என்று பெறக் கடவேன்?
தங்கள் தங்கள் தொழில்களிலேயே நோக்கு உள்ளவர்கள் பிரமன் முதலாயினாரும் தத்தம் தொழில்களிலே
நோக்கு இல்லாதவர்களாய் ஏத்தும்படி விரும்பத் தக்கனவாய்ச் சிவந்திருந்துள்ள உன் திருவடிகளை,
வேறு ஒன்றிலும் நோக்கு இல்லாத நான் கிட்டப்பெறுவது என்றோ?
அரன் நான்முகன் ஏத்தும் செய்ய நின் திருப்பாதத்தை யான் என்று கொல் சேர்வது?

நிலம் நீர் எரி கால் விண் உயிர் என்ற இவை முதலா முற்றுமாய் நின்ற-
பெற்ற பின்பு நோக்குகை அன்றிக்கே, ‘குழந்தையைப் பெற வேணும்’ என்று ஏற்கவே வருந்தும் தாயைப் போலே,
படைப்பதற்கு முன்பே இவற்றை உண்டாக்குகைக்காகத் திருவ்ருத் கரணத்தை-தேஜஸ் அப்பு பிருத்வி மூன்றும் —
நினைத்துப் பஞ்சீகரணத்தைச் செய்து,-ரக்ஷணத்தில் உள்ள பாரிப்பால் –
இவற்றை அடையப் படைத்து,படைக்கப்பட்ட பொருள்கள் பொருளாந்தன்மையைப் பெறுதல், பெயரை அடைதல்
முதலியவைகளுக்காக உயிர் வழியாக அநுப் பிரவேசித்து, பின்னர், இவற்றைச் சொல்லுகிற சொற்கள்,
அசித்தும் அசித்தை விரும்பி நிற்கிற உயிரும் உயிருக்குள் உயிராய் இருக்கிற பரமாத்துமாவுமான
இக்கூட்டத்தைச் சொல்லுகின்றன வாய்க் கொண்டு,
தன்னளவிலே வரும்படி நிற்கிற நிலையைச் சொல்லுகிறது, ‘முற்றுமாய் நின்ற’ என்னும் இதனால்.

முற்றுமாய் நின்ற என்றது –
ஸ்வரூப ஐக்கியம் இல்லை -அனு பிரவேசித்து பெற்ற பிரகார பிரகாரி பாவம் அருளிச் செய்கிறார்
இவை அறியாது இருக்க, இவற்றின் பேற்றுக்கு அவன் வருந்த வேண்டுவதற்கு உரிய காரணத்தைச் சொல்லுகிறது,

‘எந்தாய்’ என்ற இதனால்.
என்றது, ‘அதற்கு அடியான சம்பந்தத்தைச் சொல்லுகிறது’ என்றபடி.
இவற்றை உண்டாக்கும் நாளிலே உண்டாக்கி,
இனி மேல் வரும் ஆபத்தை இவை தாமே நீக்கிக் கொள்கின்றன,’ என்று
விட்டு வைக்கை அன்றிக்கே, அரியன செய்தும் நோக்குமவன் என்கிறார் மேல்:

குன்று எடுத்து –
மலையை எடுத்தே அன்றோ நோக்கிற்று?

ஆநிரை மேய்த்து-
நோக்குமிடத்து, வரையாதே பசுக்களை நோக்குமவனாயிற்று.

அவை காத்த எம் கூத்தாவோ –
மழையிலே நோவு படுகிற பசுக்களைப் பாதுகாப்பதற்காக மலையை எடுத்தான் அவன்;
அப்போது திரிபங்கியாய் நின்ற வடிவு தான் வல்லார் ஆடினாற் போலே தமக்குக்
கவர்ச்சி கரமாயிருக்கையாலே, ‘எம் கூத்தாவோ’ என்கிறார்.

ஆக, இந்த இரண்டு பாசுரங்களாலும்
அவன் விரும்பப்படுகின்றவனாக இருக்கும் தன்மையைச் சொல்லும் முகத்தால்,
பிராப்பியத்துவம் சொல்லப்பட்டது:
மேல் ஐந்து பாசுரங்களாலே, அவனுடைய பிராபகத்துவம் சொல்லப்படுகிறது.

——————————————————————————————————–

காத்த எங் கூத்தாவோ! மலை ஏந்திக் கன் மாரி தன்னைப்
பூத் தண் துழாய் முடியாய்! புனை கொன்றை யஞ் செஞ்சடையாய்
வாய்த்த என் நான்முகனே! வந்து என் ஆருயிர் நீ ஆனால்
ஏத்தருங் கீர்த்தியினாய்!உன்னை எங்குத் தலைப் பெய்வனே?–7-6-3-

சர்வ சுலபன் சர்வாதிகன் -எனக்கு தாரகனாம் படி செல்லாமை விளைந்து இருக்க நான் எங்கே கிட்டுவேன்
காத்த எங் கூத்தாவோ! மலை ஏந்திக் கன்மாரி தன்னை-வல்லார் ஆடினால் போலே -நின்ற நிலை
பூத் தண் துழாய் முடி யாய்! புனை கொன்றை யஞ் செஞ்சடையாய் வாய்த்த என் நான்முகனே! -அசாதாரணமான சிஹ்னம்
சிவனுக்கு அந்தராத்மா -நான் முகனுக்கு அந்தராத்மா –
ஸர்வேச்வரத்வ ஸூசகம் -விகசிதமான பூ தார் -குளிர்ந்த சிரமஹரமான–தன்னையும் ஈஸ்வரனாக அபிமானித்து
ஈச்வரத்வ சாதகம் -சிவந்த சடை -மலர் சூடி அபிமானம் -சடை சாதனம் இரண்டும் உண்டே -மார்க்கண்டேயர் இடம் சடை பார் பூவைப் பார்க்காதே என்றானே
வாய்த்தது -அவனுக்கும் உத்பாதகன் தன் பக்கலிலே உத்பன்னனா-பிரகார பாவம் எனக்கு பிரகாசிப்பித்து
வந்து என் ஆருயிர் நீ ஆனால்-உபாய பாவம் இதில் இருந்து ஐந்து பாசுரங்களில் –
ஏத்தருங் கீர்த்தியினாய்!உன்னை எங்குத் தலைப்பெய்வனே?-அந்த தேவதைகளும் ஸ்தோத்ரம் பண்ண அப்பால் உள்ளவன் –
ஸுலப்யம் பரத்வம் எல்லை கண்டு ஸ்தோத்ரம் பண்ண முடியாமல் -நான் பிரார்த்திக்காமல் -அபேஷா நிரபேஷமாக தாரகன் ஆன பின்பு
எங்கு நான் தலைப்பு பெய்வனே -ஒரே ஓ கூத்தாவோ -இதில் -வாசி அறிந்த எனக்கு அரிதாவதே -நீ ஒருவனே தாரகன் என்று அறிந்த எனக்கு

‘மலையை ஏந்திக் கல் மழையைத் தடுத்துப் பசுக்களைப் பாதுகாத்த எம் கூத்தனே! குளிர்ந்த பூக்களை யுடைய திருத்துழாயினைத் தரித்த
திருமுடியை யுடையவனே! கொன்றை மாலையை அணிந்த அழகிய சிவந்த சடையை யுடைய சிவபெருமானைச் சரீரமாக வுடையவனே!
படைக்கும் தொழிலை யுடைய பிரமனைச் சரீரமாக வுடையவனே! நீயே விரும்பி வந்து என்னுடைய அரிய உயிரும் நீயே ஆயினாய்;
அப்படி ஆனால், துதிக்க முடியாத கீர்த்தியை யுடையவனே! உன்னை எங்கே சேர்ந்து அனுபவிப்பேன்?’ என்கிறார்.

‘ஐந்தலை உயரிய அணங்குடை அருந்திறல்
மைந்துடை ஒருவனும் மடங்கலும் நீ
நலமுழு தளைஇய புகர்அறு காட்சிப்
புலமும் பூவனும் நாற்றமும் நீ
வலனுயர் எழிலியும் மாக விசும்பும்
நிலனும் நீடிய இமயமும் நீ’-என்ற பரிபாடற்பகுதி ஈண்டு ஒப்பு நோக்குக.

‘பிரமன் சிவன் முதலானவர்களுக்கும் காரணனாய் இருக்கிற நீ,
காரணம் இல்லாமலே வந்து நீயே தாரகனாம்படி செய்தருளினாய்;
ஆன பின்னர்,
நீயே குறையும் செய்தருள வேணும்,’ என்கிறார்.

காத்த எம் கூத்தவோ –
மேலே கிருஷ்ணனுடைய சரிதம் வந்ததே அன்றோ, ‘ஆநிரை மேய்த்து அவை காத்த எம் கூத்தாவோ’ என்று?
‘எத்திறம்’ என்றால், பின்னரும் ‘எத்திறம்’ என்று அதிலே போமித்தனை அன்றோ?
மேலே கூறியது வடிம்பிட்டு, திரியட்டும் ‘காத்த எம் கூத்தாவோ’ என்கிறார்.

அன்றிக்கே,
‘பசுக்கள், தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கு மலையை எடுத்தனவோ?’ என்னுதல்.

மலை ஏந்திக் கல் மாரி தன்னை –
கல்லாலே பெய்தலாலே கல்லை எடுத்துப் பாதுகாத்தான்;
நீராலே பெய்தானாகில் கடலை எடுத்து நோக்குங்காணும்.

பூத்தண் துழாய் முடியாய் புனை கொன்றை அம் செம் சடையாய் வாய்த்த என் நான்முகனே!-
அவர் அவர்களுடைய ஸ்வரூபங்களுக்கே உரியனவான இலட்சணம் சொல்லுகிறது

பூத் தண் துழாய் முடியாய் –
தனக்கே சிறப்பானதாய் இறைமைத் தன்மைக்கு ஸூசகமான மாலை யாயிற்று இது;
பதிம் விஸ்வஸ்ய ஆதமேஸ்வரீம் -தன்னுடைய சத்தை தன் அதீனமாம்படி இருக்கும் பொருளுக்கு இலக்ஷணமாயிற்று இம் மாலை,
‘இதனால் இவர் பெற்றதாயிற்றது என் இப்போது?’ என்னில்.
‘உன் சத்தை உன் அதீனமாக இருக்க, நான் எங்ஙனே உன்னைப் பெறுகைக்கு ஒரு சாதனத்தைச் செய்து காணும்படி?’ என்கை.

புனை கொன்றை அம் செம் சடையாய் –
பிறர் சத்தையோ தான் உன் அதீனம் அன்றிக்கே இருக்கிறது?
பசுக்களின் சத்தை உன் அதீனமானாற் போன்று ஈஸ்வரர்களாகச் செருக்குற்றிருப்பார்களுடைய சத்தையும்
உன் அதீனமாய் அன்றோ இருக்கிறது?
புனையப்பட்ட கொன்றையை யுடையதாய் அழகியதாய்ச் சிவந்திருந்துள்ள சடையை யுடைய சிவனும் நீ இட்ட வழக்கு.

வாய்த்த என் நான்முகனே –
மேலே இரண்டு இடங்களிலும் சொன்ன மாலைகள் அவர் அவர்கட்கே உரியவனாய் இருக்குமாறு போலே ஆயிற்று,
இவனுக்கும் தனக்கு அடைத்த காரியத்துக்கு நான்கு முகங்கள் சிறப்பாக இருக்கிறபடி.
இன்னமும், ஈஸ்வரன் தனக்கும் ‘இப்படி படைப்போம்’ என்றாலும் முடியாதபடி யாயிற்று பிரமனுடைய படைப்பில் உண்டான வாய்ப்பு.

‘என்’ என்னும் சொல், விசேடியத்திலே ஊற்றமாகக் கடவது.
வையதிகரண்யத்தாலே சொன்னால் கழற்றிக் கொள்ளுகைக்கும் உடலாய்,
கேவலம் பேதத்தையே சொல்லுகிறது என்று மயங்குவதற்கும் உடலாய் இருக்கும்;
சாமாநாதிகரண்யத்தாலே சொன்னால் சேஷ சேஷி பாவமாகிற பிரிவும் தோற்றி இருக்கும்.
நான் முகனை உடலாகக் கொண்டவனே -வையதிகரண்யம் -சொன்னால் கழற்ற உடலாகும்
நான் முகனும் -கேவல பேதம் சொல்லாமல்
பிரிந்து இருந்தால் சத்தை இல்லையே -அப்ருதக் சித்த விசேஷணம் -என்பதால்

(வேத சப்தங்கள் படியே ஸ்ருஷ்ட்டி -வேத சப்தங்கள் படியே பொருள் உண்டாகும்
பூ -சொல்லி தபஸ்ஸூ பண்ணி பூமி படைக்கிறார் -கார்ய ஸ்ருஷ்டிக்கு சப்தம் வேதத்தில் இருந்து எடுத்தே செய்கிறார்
ஆகவே வாய்த்த நான்முகன் -)

ஆக, சாமாநாதிகரண்யம் வையதிகரண்யம் என்னும் இரண்டற்கும் பலம் எல்லாவற்றையும் நியமித்தலே அன்றோ?
ஆனாலும், சாமாநாதிகரண்யத்தாலே சொல்லுமதற்கு இத்தனை வாசி உண்டு.
ஸ்வம் உத்திஸய-தன்னை நோக்கியே அன்றோ இவற்றைத் தாங்கிக் கொண்டிருக்கிறான்?
‘திருவரங்கநாதனே! திருமால் தன்னை நோக்கியே சேதனகள் அசேதனங்கள் ஆகிய இவற்றினுடைய
ஸ்வரூபம் இரட்சணம் நியமனம் முதலானவற்றை ஏற்றங்கொள்ளுகிறான் என்று உபநிடதம் சொல்லுகிறது’ என்கிறபடியே,

‘உபாதத்தே ஸத்தா ஸ்திதி நியமந ஆத்யை; சித்அசிதௌ
ஸ்வம் உத்திஸ்ய ஸ்ரீமாந் இதிவததி வாக் ஒளபநிஷதீ’-என்பது, ஸ்ரீரங்கராஜஸ்தவம், 2 : 87.

சத்தையே பிடித்து, அளித்தல் நியமித்தல் முதலியவைகள் அகப்பட அவன் அதீனமாயிருக்கையாலே,
பிரிய நின்று ஒரு சாதனத்தைச் செய்வதற்கு ஒரு தகுதி இல்லையாம்படி ஆயிற்றுப் பாரதந்திரியத்தின் எல்லை இருக்கும்படி.

வந்து என் ஆர் உயிர் நீ –
பிறர் பக்கல் செய்த உபகாரத்தைச் சொல்ல வேணுமோ? என் பக்கல் செய்த உபகாரந்தனோ அமையாதோ?
‘நீ ஒருவன் உளை’ என்று கனாக் கண்டும் அறியாதே புறம்பே பற்று உள்ளவனாய் இருக்கிற என்னை,
அதனைத் தவிர்த்து உன் படியை அறிவித்து உன்னை ஒழியத் தரியாத படியான நிலையைப் பிறப்பித்தாய்.
ஆனால் – இப்படி இருந்த பின்பு.

ஏத்த அருங்கீர்த்தியினாய் –
நீ சத்தையை உண்டாக்க உன்னாலே சத்தையைப் பெற்று இருக்கிற நான் ‘ஏத்துவேன்’ என்றால்,
என்னாலே தான் ஏத்தலாம்படி இருந்ததோ?’ ஆனால் – உன்படி அது; என்படி இது;
இங்ஙனே இருந்த பின்பு, உன்னை எங்குத் தலைப் பெய்வனே-
யான் ஓர் உபாயத்தைச் செய்து உன்னை எங்கே வந்து கிட்டப் புகுகிறேன்?
என்னாலே வந்து கிட்டுகை என்று ஒன்று உண்டோ?

————————————————————————————————-

எங்குத் தலைப் பெய்வன் நான்! எழில் மூவுலகும் நீயே
அங்கு உயர் முக்கண் பிரான் பிரம பெருமான் அவன் நீ
வெங்கதிர் வச்சிரக்கை இந்திரன் முதலாத் தெய்வம் நீ
கொங்கலர் தண் அந் துழாய் முடி என்னுடைக் கோவலனே!–7-6-4-

சர்வ ஸ்மாத் பரன் -ஆஸ்ரித பவ்யனாய் -அதிசயித்த போக்யனாய் -மூன்றையும் சொல்லி –
எங்குத் தலைப் பெய்வன் நான்! எழில் மூவுலகும் நீயே-தர்ச நீய வை லக்ஷண்யம் -எழிலே நீ -என்றபடி
தண்ணீர் ரசம் நான் -கீதையில் சொன்னானே -இதனாலே உண்ணும் நீர் இத்யாதி –
கீழே பொருள்கள் சிவன் நான் முகன் அவன் அதீனம்-இதில் சக்திகளும் இவன் அதீனம்
தத் பிராப்தி ஹேது இல்லாத நான் உன்னை எங்கனம் கிட்டுவேன்
அங்கு உயர் முக்கண் பிரான் பிரம பெருமான் அவன் நீ -ஞான சக்தாதிகளால் உயர்ந்த ஈஸ்வர அபிமானி -அவனையும் படைத்த ப்ரம்மா நீ இட்ட வழக்கு
வெங்கதிர் வச்சிரக்கை இந்திரன் முதலாத் தெய்வம் நீ -சத்ருக்களுக்கு -பயம் கொடுக்கும் வஜ்ரம் இந்திரன் தேவாதிகள் நீ இட்ட வழக்கு
கொங்கலர் தண் அந் துழாய் முடி என்னுடைக் கோவலனே-மதுவை உடைத்தாய் விகசிதமான –அழகை பிரகாசிப்பித்த பவ்யன்

தேனோடு மலர்கின்ற குளிர்ந்த அழகிய திருத்துழாயைத் தரித்த திருமுடியையுடைய என்னுடைய கோபாலனே!
அழகிய மூன்று உலகங்களும் நீ இட்ட வழக்கே; அவ்வுலகங்களிலே ஞானம் சத்தி முதலியவற்றால் உயர்ந்த மூன்று கண்களையுடைய
சிவனும் அவனுக்குத் தந்தையாகிய பிரமனும் அவனும் நீ இட்ட வழக்கு; கொடிய கிரணங்களையுடைய வச்சிராயுதத்தைக்
கையிலேயுடைய இந்திரன் முதலான தெய்வங்களும் நீ இட்ட வழக்கு; இங்ஙனம் இருக்க, நான் உன்னை எங்கே வந்து கிட்டுவேன்?
‘பெருமானாகிய பிரமன் அவன்’ என்க, கோவலன் என்பது, ‘கோபாலன்’ என்ற சொல்லின் சிதைவு என்பர் அடியார்க்கு நல்லார்.

மேற் பாசுரத்தில், ‘அவர்கள் ஸ்வரூபம் அவன் அதீனம்’ என்றது;
அந்த ஸ்வரூபத்தைப் பற்றி இருப்பன சில மினுக்கம் உத் கர்ஷம் -உயர்வுகள் உளவே அன்றோ?
அவையும் அவனுக்கு அதீனங்கள் என்கிறது இதில்.

எங்குத் தலைப் பெய்வன் நான் –
ஒரு துர்பலனை -வலி இல்லாதான் ஒருவனை ‘மலையைத் தாங்கு’ என்றால்,
அவனாலே அது செய்து தலைக் கட்டப் போமோ?
(ஆர்த்தி அதிசயத்தால் கூப்பிடுகிறார் )

எழில் மூன்று உலகும் நீயே-
மூன்று உலகங்களிலே உள்ள பொருள்களின் உயர்வுகளும் உன் அதீனம்.
(நீயே எழில் -பொருள்களின் உயர்வும் நீயே )

அங்கு உயர் முக்கண் பிரான்-(யும் நீயே-)
அந்த அண்டத்தில் மற்றைத் தேவர்களைக் காட்டிலும் சிவன் பக்கல் வந்தவாறே
ஓர் உயர்வு உண்டே அன்றோ?
அந்த உச்சராயமும் -உயர்வு உன் அதீனம்.

பிரம பெருமான் அவன் நீ-
அவனுக்கும் தந்தையாய்ப் பதினான்கு உலகங்கட்கும் ஈஸ்வரனாகையாலே வருவது
ஓர் ஏற்றம் உண்டே அன்றோ பிரமனுக்கு?
அதுவும் நீ இட்ட வழக்கு.

(எழில் –உயர் -பெருமான் -இத்யாதிகள் மூன்றிலும் விசேஷணம் -இதிலே மாத்திரம் தாத்பர்யம் –
லோகம் -எழில் –
சிவன் -உயர்த்தி
நான் முகன் -பெருமான் –
கிழக்கு நோக்கி அமர்ந்து அன்னம் சாப்பிடு -வாக்கியத்தில் எதில் நோக்கம் -கிழக்கு நோக்கி உட்கார்வதில் –
இதை தான் விதிக்கும் வேதம் -தானே நடப்பதை சொல்லாதே -குளித்தே சாப்பிட வேண்டும் என்பது போலே –
கீழில் ஸ்வரூபம் தத் அதீனம் சொல்லி –
எழில் நீயே மூ உலகும் நீயே -இங்கு -அதனால் இந்த பாசுரத்தில் எழில் கருத்து என்றவாறு -)

வெம் கதிர் வச்சிரம் கை இந்திரன் முதலாத் தெய்வம் நீ-
‘வச்சிரத்தைக் கையிலே யுடையவன் புரந்தரன் என்ற பெயரை யுடையவன்’ என்கிறபடியே,
வெவ்விய கதிரை யுடைத்தான வச்சிரத்தைக் கையிலே யுடையனாய் இருக்கிற இந்திரன் தொடக்கமான
தேவதைகளுடைய உயர்வுகளும் நீ இட்ட வழக்கு.

கொங்கு அலர் தண் அம் துழாய் முடி என்னுடைக் கோவலனே –
உன்னை ஒழிந்த பொருள்களினுடைய உயர்வுகளும் உன் அதீனமாம்படி இருக்கிற நீ,
உன்னுடைய உயர்வு நான் இட்ட வழக்காம்படி ஆனாய்.
தேனை யுடைத்தாய் மலர்ந்த செவ்வித் திருத் துழாயாலே அலங்கரிக்கப்பட்ட மயிர் முடியை யுடையாய்,
அவ் வழகை எனக்குப் பிரகாசிப்பித்த அடியார்கட்கு அடக்க முடையவனாய் இருக்கிற கிருஷ்ணனே!

‘கொங்கு அலர் தண் அம் துழாய் முடி’ என்கையாலே,
இனிமையின் மிகுதி சொல்லிற்று;

‘என்னுடைக் கோவலனே!’ என்கையாலே,
அடியார்கட்குப் பவ்யனாய் இருக்கும் தன்மையைச் சொல்லுகிறது.

————————————————————————————–

என்னுடைக் கோவலனே! என் பொல்லாக் கரு மாணிக்கமே!
உன்னுடைய உந்தி மலர் உலகமவை மூன்றும் பரந்து
உன்னுடைச் சோதி வெள்ளத்து அகம்பால் உன்னைக் கண்டு கொண்டிட்டு
என்னுடை ஆர் உயிரார் எங்ஙனே கொல் வந்து எய்துவரே?–7-6-5-

நிரதிசய பிராப்ய பூதன் நீ -லௌகிக விஷயத்தில் ஆழ்ந்த முதலியார் என் ஆத்மா -ஆர் உயிரார்-
என்னுடைக் கோவலனே! என் பொல்லாக் கரு மாணிக்கமே!-ஆஸ்ரித பவ்யன் -துளையாத -நீல ரத்னம் போலே அவிகல போக்யன்
உன்னுடைய உந்தி மலர் உலகமவை மூன்றும் பரந்து-நாபி கமலத்தில் –மலரும் மூன்று லோகங்கள் -குண த்ரய விபாகம்
இதில் அன்றோ நான் ஈடுபட்டு உழன்று உள்ளேன் -தம்மை போக்தாவாக அபிமானம் பண்ணி -என்னுடைய ஆத்மாவானவர்
உன்னுடைச் சோதி வெள்ளத்து அகம்பால் உன்னைக் கண்டு கொண்டிட்டு-வி லக்ஷண தேஜோ ராசி -ஸ்ரீ வைகுண்டம் –
ஆயிரம் கால் மண்டபத்தில் உன்னைக் கண்டு -நித்ய ஸூரிகள் போலே நிதி எடுத்துக் காண்பாரைப் போலே -என்கிற கணக்கிலே கண்டு கொண்டு
என்னுடை ஆர் உயிரார் எங்ஙனே கொல் வந்து எய்துவரே?-ஆத்மாவை ஆர் உயிர் -பூஜ்ய வாசகம் -வெறுப்பில் சொல்கிறார்
இப்படிப் பட்ட பெரியவர் என்று எங்கு வந்து அடைவார்–சாம்சாரிக விஷயத்தில் ஆழ்ந்த என்னால் உன்னைக் கிட்டுவது என்றோ -எப்படியோ –
நான் உபாயம் செய்வது -பிராப்தி இல்லை -என்றார் -கீழே இனி சக்தி இல்லை என்கிறார் –

‘என்னுடைய கோபாலனே! என்னுடைய பொல்லாக் கருமாணிக்கமே! உன்னுடைய திருவுந்தித் தாமரையில் பிறந்த உலகங்களிலே
சத்துவம் இராஜசம் தாமதம் என்னும் முக்குணங்களைப் பற்றி வருகின்ற விஷயங்களிலே பரந்து அனுபவிக்கின்ற என் அரிய உயிரானவர்,
உன்னுடைய சோதி வெள்ளமான ஸ்ரீவைகுண்டத்திலே எழுந்தருளியிருக்கிற உன்னைக் கண்டு கொண்டு வந்து அடைவது எங்ஙனே கொல்?’ என்கிறார்.
‘மூன்று’ என்பது, முக்குணங்களைக் குறிக்கின்றது ‘பரந்து’ என்ற சொல்லுக்குப் பின் ‘அனுபவிக்கின்ற’ என்ற சொல்லைக் கொணர்ந்து கூட்டுக.
‘பரந்து அனுபவிக்கின்ற என் ஆர் உயிரார்’ என்க. உயிரார் – இகழ்ச்சிக் குறிப்பு.

‘எல்லாம் செய்தாலும் ‘சாஸ்திர பரம் பிரயோக்தரி’ அன்றோ?
பலம் உம்மதான பின்பு நீரும் சிறிது முயற்சி செய்ய வேணுங்காணும்,’ என்ன
நீ படைத்த உலகங்களிலே விஷயங்கள் தோறும் அகப்பட்டுக் கிடக்கிற நான் உன்னைப் பெறுகைக்கு ஒரு சாதனத்தைச் செய்து
வந்து பெறுகை என்று ஒன்று உண்டோ?’ என்கிறார்.

என்னுடையக் கோவலனே –
பாண்டவர்களுடைய கோவலன் ஆனாற்போலே ஆயிற்று:
இது சீலம் இருந்தபடி.

என் பொல்லாக் கரு மாணிக்கமே
இது வடிவழகு இருந்தபடி.
‘அழகிது’ என்னில், உலகத்தோடு ஒப்பாம் என்று பார்த்து,
வேறு சொல்லாலே சொல்லுகிறாராதல்;
அன்றியே
‘தொளையா மணி’ என்கிறாராதல். பொல்லல்-தொளைத்தல்.
‘அனுபவிக்கப்படாத இரத்தினம் போலே’ என்றபடி.

‘உன்னுடை உந்தி மலர் உலகமவை மூன்றும் பரந்து –
உன் படி இதுவாய் இருக்க, உன்னை ஒழிந்த விஷயங்களினுடைய வடிவழகிலும் குணங்களிலும்
கால் தாழ்ந்து போந்தவனாய் இருந்தேன் நான்.
( படி -திருமேனி பிரகாரம்-அழகு சீலம் மறந்து
முக்குண மய விஷயங்கள் தோறும் ஆழ்ந்து போனேனே )

உன்னடைய உந்தியிலே மலரா நின்றுள்ள உலகங்கள் மூன்றிலும் உண்டான விஷயங்கள் தோறும்,
தனித் தனியே அற்றுக் கால் தாழ்ந்து போந்தவனாய் இருந்தேன் நான்.
நீ ஸர்வ சத்தி யோகத்தாலே பரந்திருக்கும் இடம் முழுதும் நான் என்னுடைய ஆசையாலே கால் தாழ்ந்து திரிந்தேன்.
இது என் நிலை இருந்தபடி.
அதற்கு மேலே நீ எட்டா நிலத்தை இருப்பிடமாக வுடையையாய் இருந்தாய்.

உன்னுடைச் சோதி வெள்ளத்து அகம்பால் உன்னைக் கண்டு கொண்டிட்டு-
உனக்கே சிறப்பாய் எல்லை அற்ற ஒளி உருவமாய்,
‘அத்யர்க்காநல தீப்தம் தத் ஸ்தாநம் விஷ்ணோ: மஹாத்மந:
ஸ்வயைவ ப்ரபயா ராஜந் துஷ்ப்ரேக்ஷம் தேவதாநவை;’-என்பது, பாரதம், ஆரண்ய பர். 163.

ஸூரியன் அக்கினி ஆகிய இவர்களின் ஒளியைக் காட்டிலும் அதிகமாக விளங்குகிற,
மஹாத்துமாவான நாராயணனுடைய வைகுண்டம்’ என்று சொல்லப்படுகிற ஸ்ரீவைகுண்டத்தை
இருப்பிடமாக வுடையையாய் இருக்கிற உன்னை,
சரீரத்திலும் சரீரத்தோடு சம்பந்தப்பட்ட பொருள்களிலும் உண்டான சம்பந்தம் அற்று
நெடுந்தூரம் வழி வந்து
அதற்குத் தக்கதாய் இருப்பது ஒரு சரீரத்தை மேற்கொண்டு
பரம பதத்தை அடைந்தால் அனுபவிக்க வேண்டி இருந்தது;

ஆக, என் நிலை இருந்தபடி இது;
உன் நிலை இருந்தபடி அது;
என் நெஞ்சில் ஈடுபாடு இருந்தபடி இது;
ஆன பின்பு இந்த முதலியார் கடுக வந்து உன்னைக் கிட்டாரோ?

ஆக. ஸ்வரூபம் உன் அதீனமாய் இருந்தது,
அவர் அவர்களுடைய உயர்வுகளும் உன் அதீனமாய் இருந்தன;
என் நிலை இது, உன் நிலை அது; என் நெஞ்சில் ஈடுபாடு இது;
ஆன பின்பு, நான் ஒரு சாதனத்தைச் செய்து வந்து கிட்டுகை என்று ஒரு பொருள் உண்டோ?’ என்கிறார்.

———————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பகவத் விஷயம் காலஷேபம் -152- திருவாய்மொழி – -7-5-6….7-5-11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்–

June 29, 2016

கேட்டும் உணரந்தவர் கேசவற்கு ஆளன்றி ஆவரோ?
வாட்டமிலா வண்கை மாவலி வாதிக்க வாதிப்புண்டு
ஈட்டங்கொள் தேவர்கள் சென்றிரந் தார்க் கிடர் நீக்கிய
கோட்டங்கை வாமனனாய்ச் செய்த கூத்துகள் கண்டுமே.–7-5-6-

ஆகாரத்தை அழிய மாறின அளவும் அன்றியே ஆத்ம குணத்தை-மாற்றிக் கொண்டு இரந்து-அர்த்தித்வ சாமர்த்தியம்
வாட்டமிலா வண்கை மாவலி வாதிக்க வாதிப்புண்டு-ஒரு காலும் சுவராத உதாரன் -கொடுத்து நீண்ட -மாவலி -நலிய நலிந்த தேவர்கள் –
ஈட்டங்கொள் தேவர்கள் சென்றிரந் தார்க் கிடர் நீக்கிய-கூட்டமாக -பரஸ்பர விரோதம் அற்று இதற்காக கூடி -சேர்ந்து திரண்ட தேவர்கள்
உதார ஸ்வ பாவர்கள்-எழுந்து அருளிய இடம் இவர்கள் போக -மநோ துக்க நிவர்த்தகன் –
கோட்டங்கை வாமனனாய்ச் செய்த கூத்துகள் கண்டுமே.-உதாரமே பற்றாசாக அர்த்தியாக சென்று பல பிரதான திசையில் காட்டில்
தானே வேண்டி -அழகிய திருக்கை வாமனன் குவிந்த அழகிய
நடப்பதே கூத்தாடுவது போலே இருக்குமே -கை குவித்திக் கொண்டே போனான் பழக்கம் இல்லையே -கிளம்பின இடத்திலே
வரத ஹஸ்தம் வாங்கும் ஹஸ்தம் ஆனதே -திருக் கண்ண புரம் -வாங்கும் ஹஸ்தம் -கன்யா தானம் திருக் கண்ணபுர நாயகி தானம் வாங்கும் ஹஸ்தம்
கேட்டும் உணரந்தவர் கேசவற்கு ஆளன்றி ஆவரோ?-வசீகரித்தும் -வார்த்தையால் நெஞ்சை கலக்கி –
வியாபரித்தும் -வளர்ந்த பொழுதே அநாயாசேன-பிரத்யக்ஷ சமானாகாரமாக கண்டும் -புராணங்களில் கேட்டும் உணர்ந்தும் –
உணரந்தவர்-அறிவுடையார் -பிரசஸ்த கேசம் கொண்ட கேசவன் அலைந்த குழல் உடன் நடந்து வந்த வாமனன் –
கைதி ப்ராஹ்மணோ நாம ஈசன் -இருவருக்கும் நியாந்தா -திருவடி விளக்க தலையில் தங்கி காட்டினார்கள் –

‘கொடுப்பதில் குறைவு இல்லாத கையை யுடைய மாவலி வருத்த வருந்தி, கூட்டம் கூட்டமாகச் சென்று இரந்தவர்களாகிய தேவர்களுக்குத் துன்பத்தை
நீக்கும் பொருட்டுக் கோட்டம் பொருந்திய கையையுடைய ஸ்ரீ வாமனனாகிச் செய்த செயல்களைக் கண்டும் கேட்டும் உணர்ந்தவர்கள்,
கேசவனுக்கு ஆள் ஆவரே அன்றி வேறு ஒருவர்க்கு ஆள் ஆவரோ?’ என்றபடி.
‘வண் (மையில்) வாட்டம் இல்லாத கை’ என்க. ‘கோட்டம் கை’ என்றது, வாங்கும்போது கை வளைந்திருத்தலைக் குறித்தபடி.
நீக்கிய ‘செய்யிய’ என்னும் வாய்ப்பாட்டு வினையெச்சம்; நீக்கும் பொருட்டு வாமனன் ஆனான்.

‘மேலே கூறிய குணங்கள் தாம் ஓர் ஏற்றமோ,
அலம் புரிந்த நெடுந் தடக் கையைக் கொண்டு திருநெடுந்தாண்டகம், 6.
கோட்டம் கை வாமனனாய் இந்தப் பூமியைக் காப்பாற்றிய மஹா குணத்துக்கு?’ என்கிறார்.

கேட்டும் உணர்ந்தவர் –
ஓர் ஆசாரியன் ஓர் அர்த்தத்தை உபதேசித்தால் அதனைக் கேட்டு,
‘அறிந்து இதன்படி ஆகக் கடவன்’ என்கிறபடியே, பின்னை அந்த அர்த்தத்தைத் தெளிந்திருக்குமவர்கள்.

கேசவற்கு ஆள் அன்றி ஆவரோ –
புறம்பே அடையத் தக்கவர் இல்லாதபடி தானே அடையத் தக்கவனானவனுக்கு ஒழிய ஆள் ஆவரோ?
‘கேசவன்’ என்ற பெயர்
‘பிரமனும் ஈசனுமாகிய நாங்கள் இருவரும் தேவரீருடைய திருமேனியில் உண்டானோம்;
ஆதலால், கேசவன் என்ற பெயரை யுடையரானீர்,’ என்கிறபடியே யாதல்
ப்ரசஸ்த கேசம் -அடர்ந்து நீண்ட மயிர் முடியை யுடையவன் என்ற காரணத்தாலாதல் வந்தது.

இதி ப்ரஹ்மணோநாம ஈஸோஹம் ஸர்வ தேஹிநாம்
ஆவாம் தவ அங்கே ஸம்பூதௌ தஸ்மாத் கேஸவ நாமவாந்’-என்பது, பாரதம், ஹரிவம்ஸம், கைலாச யாத்திரை.

வெள்ளியை யாதல் விளம்பினை மேலோர்
வள்ளிய ராக வழங்குவ தல்லால்
எள்ளுவ என்சில? இன்னுயி ரேனும்
கொள்ளுதல் தீது; கொடுப்பது நன்றால்.’-என்பது, கம்பராமாயணம்.

வாட்டம் இலா வண் கை
கொடுத்து மாறக் கடவது அன்றியே, எப்போதும் கொடுக்கையிலே ஒருப்பட்ட கை.
இராவணன் முதலாயினோரைப் போன்று தலை அறுத்துப் பொகட ஒண்ணாமைக்குக் காரணம் உண்டாகையாலே அழியச் செய்திலன்.

மாவலி வாதிக்க வாதிப்புண்டு-
இது பற்றாசாக அவன் நெருக்க நெருக்குண்டு.

ஈட்டம் கொள் தேவர்கள் –
கிராமணிகளைப் போலே, ஒருவர் உயர்வு ஒருவர் பொறாதே,
தலை அறுப்பாரும் தலை அறுப்பு உண்பாருமாய்த் திரியக் கடவ சாதி அன்றோ?
இப்படிச் சேராச் சேர்த்தியாய் இருக்கிறவர்கள் ஆபத்து மிக்கவாறே தங்கள் தங்கள் செருக்கினைப் பொகட்டு.
எல்லாரும் ஒரு மிடறாய் வந்து விழுந்தார்கள்.
ஈட்டம் – திரள்.

சென்று இரந்தார்க்கு இடர் நீக்கிய –
மணியக்காரர் -கூறு செய்வானும் அம்பலத்தே இருந்தால் ‘ஈஸ்வரனும் நம் பக்கல் வரத் தட்டு என்?’ என்று இருக்குமாறு போலே,
‘எல்லாரும் நம் பக்கல் வர வேணும்’ என்று இருந்தவர்கள் தங்கள் ஆபத்தின் மிகுதியினால் அன்றோ
செருக்கு உற்றவர்களாய் இருக்கிறவர்கள் திரள வந்து இரந்தது?’ என்று திருவுள்ளத்தே கொண்டு அவர்கள் இடரைப் போக்கினபடி.
(‘பெரியவர் யார்?’ என்ற ஐயத்தினால் விஷ்ணுவுக்கும் சிவனுக்கும் போரை மூட்டிவிட விஷ்ணு ஜயித்ததனால் )
‘விஷ்ணுவை அதிகனாக எண்ணினார்கள்’ என்கிறபடியே, ‘அதிகம் மேநிரே விஷ்ணும்’-என்பது, ஸ்ரீராமா. பால. 75 : 19.
ஒரு சொத்தை வில்லை முரித்த போதாக எம்பெருமான் அறப் பெரியன் என்பது;
அல்லாது போது ‘ஈஸ்வரோஹம்’ என்பதான தேவசாதி பற்களைக் காட்ட, அவர்கள் இடரை நீக்கினபடி.

கோட்டம் கை வாமனனாய் –
நீர் ஏற்கக் குவித்த அழகிய கையை யுடையவனாய்;
‘பொல்லாக் குறள் உருவாய்ப் பொற் கையில் நீர் ஏற்று’–நாய்ச்சியார் திருமொழி, 11 : 5.-என்கிறபடியே,
தேவர்களை நெருக்குகையாலே அழியச் செய்ய வேணும்;
குண விசேடத்தாலே அழியச் செய்ய மாட்டான்;
இனி, இரண்டற்கும் தக்கதாக ஒரு வழி இரட்சகனான தான் பார்க்குமித்தனை அன்றோ?

பொற் கை –
பொலிவு எய்தின கை;
‘அழகிய கை’ என்றபடி.
கொடுத்து வளர்ந்த கை;
‘ஆயிரக் கணக்கான பசுக்களைத் தானம் செய்ததான பருத்து நீண்ட கை’ என்றும்,
‘சத்திய பராக்கிரமத்தை யுடையவரான பெருமாள் கொடுப்பார்; வாங்க மாட்டார்’ என்றும் சொல்லுகிறபடியே.

கோ ஸஹஸ்ர ப்ராதாதாரம் உபதாய புஜம் மஹத்’-என்பது, ஸ்ரீராமா. யுத். 21:7.

‘தத்யாத் ந ப்ரதி க்ருஹ்ணீயாத்’-என்பது, ஸ்ரீராமா. சுந். 33 : 25.

செய்த கூத்துகள் கண்டுமே –
அன்றே பிறந்து அன்றே வளர்ந்து அன்றே இரப்பிலே மூண்டு,
மஹாபலி வேள்வி செய்யும் இடத்தளவும் செல்ல,
பூமி நெளியும்படி பதறி நடந்து சென்று புக்கு,
மான் தோலும் பூணு நூலும் தருப்பைப் புல்லுமான வணக்கமுள்ள வடிவத்தோடு நின்று
‘கொள்வன் நான்’ திருவாய். 3. 8 : 9.-என்றாற் போலே சொன்ன பிள்ளைப் பேச்சுக்களும்
சிறு காலைக் காட்டிப் பெரிய காலாலே அளந்ததும் ஆகிற இச் செயல்கள் அடங்கலும்
இவர்க்கு வல்லார் ஆடினாற்போலே இருக்கிறபடி.

‘இறைமைத் தன்மைக்குரிய மேன்மையும் கிடக்கச் செய்தே, திருமகள் கேள்வனான தான் இரந்து தன்னை
அடைந்தாரைக் காத்த நீர்மைக்குப் பிரளயங்கொண்ட பூமியை எடுத்துக் காத்தது ஒரு குணமாயிற்றதோ?’ என்கிறார்.

————————————————————————————————

கண்டு தெளிந்தும் கற்றார் கண்ணற்கு ஆளன்றி ஆவரோ?
வண்டுண் மலர்த் தொங்கல் மார்க்கண்டேயனுக்கு வாழு நாள்
இண்டைச் சடை முடி ஈசன் உடன்கொண்டு உசாச் செல்லக்
கொண்டங்குத் தன்னொடுங் கொண்டு உடன் சென்றது உணர்ந்துமே.–7-5-7-

கேட்டதுக்கு மேலே தன்னிடமே வைத்துக் கொண்ட மகா உபகாரம் -தான் அர்த்தியாய்-வளர்ந்து தேவதைகள் திருவடிக்கீழ்
இருப்பது அன்றிக்கே தேவதாந்த்ர பஜனான மார்கண்டேயன் -அங்கீகரித்து அருளிய அதிசய குண அனுபவம் –
வண்டுண் மலர்த் தொங்கல் மார்க்கண்டேயனுக்கு வாழுநாள்-கர்ப்ப க்ருஹம் பிருகு மார்க்கண்டேயர் -புஷப மாலை -அனுபவிக்கும் –
இண்டைச் சடைமுடி ஈசன் உடன் கொண்டு உசாச் செல்லக்-போக்தா -உபாசகர் இரண்டு ஆகாரம் -சடை முடியில் புஷ்பம் சாத்திக் கொண்டு
ஈஸ்வர அபிமானி -ஆஸ்ரிதன் கூட்டிக் கொண்டு
கொண்டங்குத் தன்னொடுங் கொண்டு உடன் சென்றது உணர்ந்துமே-ரக்ஷணீயன் ஆக திரு உள்ளத்தில் கொண்டு தேவதாந்தர அந்வயம் கழித்து –
தன்னுடனே கூட்டிக் கொண்டு யாவதாத்மபாவி அவன் கூடவே இருக்கும் படி
கண்டு தெளிந்தும் கற்றார் கண்ணற்கு ஆளன்றி ஆவரோ?
பிரத்யக்ஷமாக கண்டும் தெளிந்து – -விலக்ஷணர் புருஷர்கள் -ஆனந்தம் கொடுக்கும் சர்வேஸ்வரனுக்கு ஆளாகாமல் ஆவரோ –
கற்று தெளிந்து கண்டார் -என்று அந்வயம் உபநிஷத் த்ரஷ்டவ்ய -அர்த்த க்ரமம் சப்த க்ரமம் மாற்றி

‘வண்டுகள் தேனை உண்ணுகின்ற மலர்களால் கட்டப்பட்ட மாலையைத் தரித்த மார்க்கண்டேயனுக்கு வாழ்நாள் அளித்தல் சம்பந்தமாக,
பூமாலையைத் தரித்த சடைமுடியையுடைய சிவபெருமான், அவனைத் தன்னோடு அழைத்துக் கொண்டு, அறப் பெரியனான சர்வேஸ்வரன்
பக்கல் உசாவ வேண்டும் என்று செல்ல, அந்த நிலையிலேயே அவனைக் காக்க வேண்டும் என்று திருவுள்ளத்தே கொண்டு தன்னோடே
ஒத்த தன்மையையும் கொடுத்துப் பின் ஒரு நாளும் பிரியாதே சென்றபடியை உணர்ந்தமு கண்டும் தெளிந்தும் கற்றவர்கள்
கண்ண பிரானுக்கு ஆள் ஆவரே அன்றி, மற்று ஒருவர்க்கு ஆவரோ? ஆகார்,’ என்றபடி.
ஈசன் மார்க்கண்டேயனுக்கு வாழு நாளை உசாச்செல்ல. அங்குக் கொண்டு தன்னொடுங் கொண்டு உடன் சென்றதை உணர்ந்தும்
கண்ணற்கு ஆளன்றி ஆவரோ?’ எனக. இண்டை – மாலை.

‘திருமகள் கேள்வனான தன்னைத் தாழ விட்டு இரந்து பாதுகாத்து ஒரு பெரிய ஏற்றமோ,
வேறு தெய்வத்தைத் துதித்து வணங்கிய மார்க்கண்டேயனை அங்கீகரித்த இம் மஹா குணத்துக்கு?’ என்கிறார்.

கண்டும் தெளிந்தும் கற்றார் –
கற்றுத் தெளிந்து கண்டார்;
ஒருவன் பக்கலிலே ஓர் அர்த்தத்தைக் கேட்டு, அதிலே தெளிய வாசனை பண்ணி.
பின்பு நேரே அறிதல் பரியந்தமாக்கி வைப்பார்.
கேட்டல் தெளிதல்கள் தாம், நேரே பார்ப்பதற்குச் சமானமான ஆகாரத்தளவும் சென்று நிற்கும் அன்றோ?
(த்ரஷ்டவ்ய -ஸ்ருதி போல் ஆழ்வார் இங்கும் கண்டும் என்கிறார்
ஸ்ரவணம் மனனம் நிதித்யாசிதவ்யம் சாஷாத்காரம் அளவு கூட்டிப்போகுமே )

கண்ணற்கு ஆள் அன்றி ஆவரோ –
தியானிக்கின்றவர்கள். தியானிக்கப்படுகின்ற பொருளை விட்டுப் புறம்பே போவாரோ?

வண்டு உண் மலர்த் தொங்கல் மார்க்கண்டேயனுக்கு வாழுநாள் –
‘வண்டுகள் தேனைக் குடிக்கின்ற பூமாலையை யுடைய ஸ்ரீ மார்க்கண்டேயனுக்கு வாழ் நாள் உண்டாகைக்காக’ என்னுதல்;
அன்றிக்கே.
‘வாழுநாள்’ என்பதனை, மேலே வருகின்ற ‘உசாச் செல்ல’ என்றதனோடு கூட்டலுமாம்.

தாய் தந்தையர்கள் மார்க்கண்டேயனை ஒப்பித்து விளையாட விட,
அங்கே ஓர் அசரீரி வாக்கியம் ‘இவனுக்குச் சாக்காடு குறுகிற்று’ என்று சொல்ல,
அதனைக் கேட்டத் தாய் தந்தையர்கள் வெறுக்க, ‘இதற்கு நீங்கள் அஞ்ச வேண்டா; நான் போக்கிக் கொள்ளுகிறேன்,’ என்று
இவன் சென்று சிவனை அடைய, அவனும் பச்சை இடும் நாள் எல்லாம் இடுவித்துக் கொண்டு, ஒரு நாளிலே வந்தவாறே
தலைக் கடையையும் புழைக் கடையையும் அடைத்துச் சடையை விரித்துக் காட்டி,

‘உன் காரியத்தைப் போன்றே ஆறல் பீறல் காண் என் காரியமும்:
அருகில் மாலையைப் பாராதே
என் தலையில் சடையைப் புத்தி பண்ணாய்’ என்று காட்டி,
‘ஆனாலும் நெடு நாள் பச்சை இட்டு என்னைத் துதித்த நீ பேசாதே போக ஒண்ணாதே அன்றோ?
உனக்கு ஒரு பற்றுக் கோடு காட்டக் காணாய்!’ என்று,
சர்வேஸ்வரனுடைய சௌலப்யம் முதலிய குணங்களையும்
மோட்சத்தைக் கொடுத்தல் முதலான குணங்களையும் சொல்லிக் கொண்டு
சர்வேஸ்வரன் பக்கல் ஏறச் சென்றான்.

அங்குக் கொண்டு –
‘ஐயோ! மரண பயத்தை யுடையனாய்க் கொண்டு வந்தாய் அன்றோ!’ என்று திருவுள்ளத்திலே கொண்டு:
‘நெஞ்சிற்கொண்டு’ பெரிய திருமொழி, 5. 8 : 4.-என்னும்படியே.-சுமுகன் விருத்தாந்தம் -கலியன் பாசுரம் –
அன்றிக்கே,
‘செருக்கனான சிவன் கொண்டு வந்தான்’ என்று பாராமல்,
ஒரு பிராட்டி புருஷகாரமாக வருவாரைக் கைக் கொள்ளுமாறு போலே கைக் கொண்டு என்னுதல்.

தன்னொடும் கொண்டு–
இவன் வந்த காரியத்தை முடித்து,
பின்பு தன்னுடன் ஒத்த தன்மையையும் கொடுத்து.

உடன் சென்றது உணர்ந்தும் –
ஒரு ‘கள்வன் கொல்’ பெரிய திருமொழி, 3 : 7.-என்ற திருமொழியில்
பிராட்டியைக் கொடு போமாறு போலே கொடு போனான் காணும்.
மன்னு மா முனி பெற்ற -மிருகண்டு பிள்ளை மார்க்கண்டேயர் ‘பின்னை என்றும்
நின் திருவடிப் பிரியா வண்ணம் எண்ணிய’ பெரிய திருமொழி. 5. 8. 6.-என்கிறபடியே
ஒரு பிருதக் தர்மி -‘ஒரு வேறுபட்ட பொருள்’ என்று தோற்றாதபடி தன்னோடு விளைகிற ரசத்தை உண்பித்தபடியை நினைத்து,
கண்டும் தெளிந்தும் கற்றார் கண்ணற்கு ஆள் அன்றி ஆவரோ?

தன்னை அடைந்த இந்திரனுக்காத் தன்னைத் தாழவிட்டது ஓர் ஏற்றமோ?
‘என்னையே எவர்கள் சரணம் அடைகின்றார்களோ அவர்கள் இந்த மாயையினைத் தாண்டுகின்றார்கள்’ என்னக் கடவ அவன்,‘

மாமேவ யே ப்ரபத்யந்தே மாயாமேதாம் தரத்தி தே’-என்பது, ஸ்ரீ கீதை, 7 : 14.

வேறு தேவதையைத் துதிக்க, அதற்கு மேலே அவன் புருஷகாரமாகக் கொண்டு வந்து காட்டிக் கொடுக்க,
‘என் செய்வான், தன்னை அடைந்தவனை அழிய விடாதே புறம்பே யாகிலும் கொண்டு போய் இரட்சிப்பித்தான்’
என்னும் குணம் சிவனுக்கு உண்டாக,

மார்க்கண்டேயனைக் காத்த நீர்மைக்கு.
தாமஸ புருஷர்களுடைய சினேகம் சர்வேஸ்வரன் விடுகைக்குக் காரணம்;
சத்துவ நிஷ்டருடைய சினேகம் அவன் அங்கீகரி்ப்பதற்குக் காரணம்;
இங்ஙனே இருக்கச் செய்தே அன்றோ சிவன் முன்னிலையாக வந்த மார்க்கண்டேயனுக்கும் காரியம் செய்தது!

——————————————————————————————

செல்ல உணர்ந்தவர் செல்வன் தன் சீர் அன்றிக் கற்பரோ?
எல்லை இலாத பெருந் தவத்தால் பல செய்மிறை
அல்லல் அமரரைச் செய்யும் அரணியன் ஆகத்தை
மல்லல் அரி யுரு வாய்ச் செய்த மாயம் அறிந்துமே.-7-5-8-

ஆஸ்ரித உபகார அர்த்தமாக துடிப்புடன் ஒன்றின் தலையும் ஒன்றின் உடம்புமாய் கூட்டின விக்ரகம் -ஆஸ்ரிய பக்ஷபாத மேன்மை
எல்லை இலாத பெருந் தவத்தால் பல செய்மிறை-தபஸால் வரம் பெற்று -அதனால் லோகம் பீடித்து
அல்லல் அமரரைச் செய்யும் அரணியன் ஆகத்தை-குடி இருப்பு இழந்து நித்ய துக்கிகளாக-கிலேசம் பண்ணும் இரணியன் சரீரத்தை –
மல்லல் அரியுரு வாய்ச் செய்த மாயம் அறிந்துமே-அழகியான தானே அரி உருவானே -உக்ரம் –மகா விஷ்ணும் பெரிய உருவம் –
வரத்தில் வைத்த சிரத்தை வரம் கொடுத்தவனுக்கும் படைத்தவன் உள்ளான் என்று இல்லாமல் -மல்லல் அட்டகாசம் என்றுமாம்
அநாயாசேன கிழித்து -புராணங்கள் மூலம் அறிந்த பின்பும்
செல்ல உணர்ந்தவர் செல்வன் தன் சீர் அன்றிக் கற்பரோ?-போக -சிறுவன் ஆசை -நான்முகன் வரப்படி -ஆழ்வார்களுக்கு ரூப சேவை
ஆஸ்ரித பக்ஷபாதம் அவதார தாத்பர்யம் -செல்வன் -திருமேனி –நாரசிம்ம வபுஸ் ஸ்ரீ மான் –புகழை தவிர வேறு ஒன்றை கற்பரோ

‘எல்லை இல்லாத பெரிய தவத்தினாலே, தேவர்களுக்குப் பல வகையாக மிக்க துன்பங்களைச் செய்யும் இரணியனுடைய சரீரத்தைப் பெரிய
நரசிங்கமாகிக் கிழித்த ஆச்சரியத்தை அறிந்தும், (ஐஸ்வரிய கைவல்யங்களிலே இழியாமல் பகவத் விஷயத்திலே இழிந்து, அது தன்னிலும்
அவதரித்த மேல்எல்லை அளவும்) செல்லும்படி அனுபவித்தவர்கள், ‘திருமகள் கேள்வனுடைய பொருள் சேர் புகழை அன்றி
மற்றையோருடைய பொருள் இல் புகழ்களைக் கற்பரோ? கல்லார்,’ என்றபடி.
மிறை – துன்பம்; மிறை அல்லல் – மிக்க துன்பம். அமரரை – வேற்றுமை மயக்கம். அரி – சிங்கம்.

வேறு தேவதையை வணங்கித் துதித்தவனை அங்கீகரித்த மஹா குணத்தைக் காட்டிலும்
மனித வடிவம் சிங்க வடிவம் என்னும் இரண்டனையும் ஏறிட்டுக் கொண்டு
தன்னை அடைந்தவனைப் பாதுகாத்த மஹா குணத்தை அருளிச் செய்கிறார்.

செல்ல உணர்ந்தவர் –
போலியான ஐஸ்வரியம் கைவல்யம் என்னும் இவற்றின் அளவிலே முடிவு பெற்று நில்லாமல்,
எல்லை நிலமான பகவத் புருஷார்த்தத்தளவும் செல்ல உணர்ந்தவர். என்றது,
‘அவனுடன் நித்தியமான இன்பத்தை வேண்டி இருக்குமவர்கள்’ என்றபடி.
வாய்க் கரையான சரீரம் சரீர சம்பந்தப்பட்ட பொருள்கள் அன்றிக்கே,
ஆத்துமாவினுடைய உண்மை ஞானம் முன்னாகப் பகவானை அடைதல் அளவும் செல்ல உணர்ந்தவர்கள்.
செல்ல உணர்ந்தவர் -ஆஸ்ரித பஷபாதம் -பன்னீராயிரப்படி —
இங்கு பாகவத கைங்கர்யம் -பாகவத பாரதந்த்ரன் -புருஷார்த்தம் என்றபடி –

செல்வன் தன் சீர் அன்றிக் கற்பரோ –
ஸ்ரீமானுடய கல்யாண குணங்களை ஒழியக் கற்பரோ?
‘இன்னம் சொல்லாய் சீமானை’ என்னக் கடவது அன்றோ?
அர்ஜுனன் கீதாச்சார்யன் இடம் கேட்டால் போலே –

எல்லை இலாத பெருந்தவத்தால்-
அளவு இல்லாத பெரிய தவத்தாலே. வரத்தைக் கொடுத்த தேவ சாதிக்கும்
குடி யிருப்பு அரிதாம்படி அன்றோ பலித்தது?

பல மிறை செய் அல்லல் அமரரைச் செய்யும் –
தேவ சாதி கிடந்த இடத்தில் கிடவாதபடி பல மிறுக்குகளைச் செய்து,
துக்கத்தை உண்டாக்குகிற இரணியனுடைய சரீரத்தை. மிறுக்கின் காரியம் – துக்கம்.

மல்லல் அரி உருவாய்-
மல்லல்-பெருமை.
‘மஹா விஷ்ணும்’ என்கிறபடியே,‘
உக்ரம் வீரம் மஹா விஷ்ணும் ஜ்வலந்தம் ஸர்வதோமுகம்
ந்ருஹிம்ஹம் பீஷணம் பத்ரம் ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்’
இரணியன் குளம்படியாம்படியாகப் பெரிய வடிவைக் கொண்டு.

அன்றிக்கே,
மல்லல் என்று செல்வமாய்,
அதனால், இலட்சுமி நரசிம்மமாய்’ என்னலுமாம்;
‘நாராயணனே நரசிங்கன்’ அமரேஸ்வர்யான நீ சத்தி’ எனப்படுகின்றதே அன்றோ?
நாராயணோ ந்ருஹிம்ஹஸ்து ஸக்திஸ்த்வம் அமரேஸ்வரி’-இங்கு, ‘ஸக்தி’ என்றது, பிராட்டியை.
அவளை ஒழிந்திருப்பது ஒரு போதும் இல்லை அன்றோ?

செய்த மாயம் அறிந்துமே –
சிறுக்கனுடைய சூளுறுவு செய்த அக் காலத்திலே தோற்றி,
இரணியனுடைய உடலை இரு பிளவு ஆக்கின இவ் வாச்சரியமான செயலை அறிந்தும்.

ஒருவன் புருஷகாரமாகக் கொடு வர அவனைக் காப்பாற்றியது ஒரு குணமோ,
தமப்பன் பகையாக,
உத்தம அங்கம் -முகம் ஒரு வடிவம் திருமேனி ஒரு வடிவுமாகக் கொண்டு
பாதுகாத்த குணத்துக்கு?’ என்கிறார்.

‘பெற்றார் பெற்று ஒழிந்தார் பின்னும் நின்று அடியேனுக்கு உற்றனாய் வளர்த்து’ பெரிய திருமொழி.8. 9 : 7.-
என்கிறபடியே வந்து பாதுகாத்த குணம் அன்றோ?

——————————————————————————-

மாயம் அறிபவர் மாயவற்கு ஆளன்றி ஆவரோ?
தாயம் செறும் ஓரு நூற்றுவர் மங்க ஓர் ஐவர்க்காய்த்
தேசம் அறிய ஓர் சாரதியாய்ச் சென்று சேனையை
நாசம் செய்திட்டு நடந்த நல் வார்த்தை அறிந்துமே –7-5-9-

கிட்டே நெருங்க முடியாத கோபம் -அனாபிபவ-அர்ஜுனன் -பரதந்த்ரன் -பவ்யதா பிரகாசகம் -தாழ நின்று அநிஷ்ட வர்க்கம் நிரசித்த குணாதிக்யம்
தேரோட்டி -இதில் -சரம ஸ்லோகார்த்தம் -அடுத்து -தூத்ய சாரத்யங்கள் பண்ணி -லோகமே பார்க்கும் அளவும் –
தாயம் செறும் ஓரு நூற்றுவர் மங்க ஓர் ஐவர்க்காய்த்-பங்காளிச் சண்டை -தாயாதி -ராஜ்யாம்சத்தை செருத்துக் கைக்கு கொண்ட
நைர் க்ருண்யம் இரக்கம் இல்லா -பரிபவ பிராண அபஹார பர்யந்தம் -சகல வித பந்துவாகி -மந்திரி ஸூஹ்ருத் –
தேசம் அறிய ஓர் சாரதியாய்ச் சென்று சேனையை நாசம் செய்திட்டு-அனைவரும் அறியும் படி -பூ பாரம் குறைத்து
நடந்த நல் வார்த்தை அறிந்துமோ -பரமபதம் தன்னுடைச் சோதி நடந்த வார்த்தை -பாரதம் பஞ்சமோ வேத நல் வார்த்தை
நமோ வியாச விஷ்ணவே -வேதம் தரைவர்ண -ப்ரஹ்ம சூத்ரம் சாதித்து -உப ப்ருஹ்மணம் -ஸ்த்ரீ பாலர்கள் கேட்க்கும் படி
கங்கா காங்கேயன் பூசல் பட்டோலை -எச்சில் வாய் கழுவ -ஸ்ரீ மத் பாகவத ரஸமால்யம் சாறு போலே
அவதாரம் ஆஸ்ரித பக்ஷ பாதம் -ரகஸ்ய த்ரயம் நம் ஆச்சார்யர்
மாயம் அறிபவர் மாயவற்கு ஆளன்றி ஆவரோ?-தாத்பர்யம் -ஆஸ்ரித பவ்ய ரூபதயா ஆச்சர்யம் -பரதந்த்ரர்களுக்கு பரதந்த்ரர்
அறிந்தவர் -பெருமை பாராமல் ஆஸ்ரிதற்கு இழி தொழில் செய்யும் ஆச்சர்ய பூதன்-
அவன் அன்றி மாற்று ஒருவருக்கு அடிமைத் தன்மை காட்டுவாரா

‘தாய பாகத்தைச் செறுத்துக் கைக்கொண்ட துரியோதனாதியர்கள் அழியும்படியாக, ஒப்பற்ற பாண்டவர்களுக்காகத் தேசம் எல்லாம் அறியும்படி
ஒப்பற்ற சாரதியாய்ச் சென்று, சேனையை அழித்துத் தன்னுடையச் சோதிக்கு எழுந்தருளின நல் வார்த்தையை அறிந்தும், அவனுடைய
ஆச்சரியமான செயல்களை அறிகின்றவர்கள் மாயவனுக்கு அடிமை ஆவரே ஒழிய வேறு ஒருவர்க்கு அடிமை ஆவரோ? ஆகார்,’ என்றபடி.
‘மங்கச் சாரதியாய்ச் சென்று நாசஞ்செய்திட்டு நடந்த நல்வார்த்தை’ என்க. மாயம் – தன்னை அடைந்தவர்கட்குச் சுலபனாய் இருக்கும் ஆச்சரியம்.

தன்னை அடைந்த பிரஹ்லாதனுக்காக நரசிங்கமான அதிலும் அதிக குணமான
சாரதியாய் நின்ற செயலை அருளிச் செய்கிறார்.

மாயம் அறிபவர் –
அவனுடைய செயல்கள் முழுதும் தன்னை அடைந்தவர்களின் பொருட்டாய்
ஆச்சரியமாய் இருக்கும் என்று அறியுமவர்கள்.

மாயவற்கு ஆள் அன்றி ஆவரோ-
அடியவர்கட்குப் பரதந்திரப்பட்டவனுக்கு அன்றி ஆள் ஆவரோ?

தாயம் செறும் ஒரு தூற்றுவர் மங்க –
தாய பாகம் சம்பந்தமாகச் செறுகிற துரியோதனாதியர்களான தீயோர் கூட்டம் மங்க.
தாயம் கொண்டு நெருக்கிற்றுத் தம்மையோ?
அநுகூலரான பாண்டவர்களை நெருக்கிற்றுத் தம்மை நெருக்கிற்றாய் இருக்கிறபடி.
(சாமான்யமாக பொதுவாக செறும் என்பதுக்கு இவ் வியாக்யானம் –
மம பிராணா பாண்டவா -என்று அவனை செறுக்கிற்று என்றுமாம் )

ஒரு நூற்றுவர், ஓர் ஐவர் –
நெருக்குகிறவர்களும் நெருக்குண்கிறவர்கள் இருக்கிறபடி.-பிரபல துர்பலர் –
உயிர் எழுத்துக்கு முன் ஓர் -ஒரு நூற்றுவர் இலக்கணப்படி

ஓர் ஐவர்க்காய் –
தீயோர் திரள் முழுதும் அங்கே திரண்டு ஒரு சாரதியை ஒழிய வேறு துணை இன்றிக்கே இருக்கிறவர்கள்.
‘தன் வழியே ஒழுகாதவர்களை அழியச் செய்து, தன்னை ஒழிய அறியாதவர்களுக்காகத் தான் தாழ நின்று நோக்கினான்.
அன்றிக்கே,
சம்பந்தம் இரண்டு தலைக்கும் ஒத்திருக்க, தாழ்ந்த தலை கண்டு நோக்கினானித்தனை அன்றோ?’ என்னுதல்,

‘கண்ணனுடைய திருவடிகள் அருச்சுனனுடைய மடியில் இருப்பதைப் பார்த்தேன்;
‘அர்ஜூநாங்க கதௌ பாதௌ கேஸவஸ்ய உபலக்ஷயே
அர்ஜூநஸ்ய து க்ருஷ்ணாயா: ஸூபாயா: ச அங்ககாவுபௌ’-என்பது, பாரதம், உத்யோக பர்.
அருச்சுனனுடைய கால்கள் கற்புக் கரசியாக திரௌபதியினுடைய மடியில் இருப்பதைப் பார்த்தேன்,’ என்கிறபடியே,
ஒருவர்க்கு ஒருவர் கால் மேல் கால் ஏறட்டு ஒரு நாளாக இருந்த சமயத்திலே ‘சஞ்சயன் வாசலிலே வந்தான்’ என்று சொல்ல,
‘அவனைப் புகுர’ விடுங்கோள்; இவ் விருப்புக் காண உகப்பான் ஒருவன்;
உகவாதார் நெஞ்சு உளுக்கச் சொல்ல வல்லான் ஒருவன்; ஆன பின்னர் அவனை அழையுங்கோள்,’ என்றான்.
உகவாதார் கண் படல் ஆகாதாவறு போன்று, உகந்தார் கண் பட்டால் உள்ள நன்மையும்;
இப்படி அன்றோ பாண்டவர்கள் விஷயத்தில் அவன் இருக்கும்படி?

தேசம் அறிய ஓர் சாரதியாய் –
‘அருச்சுனன் ரதியாகவும் தான் சாரதியாகவும் எல்லா உலகத்திலுள்ளவர் கண்களுக்கு இலக்கானான்’ என்னும்படியே, ‘

‘பார்த்தம் ரதிநம் ஆத்மாநம் ச ஸாரதிம் ஸர்வ லோக ஸாக்ஷிகம் சகார’-என்பது, கீதா பாஷ்யம்.

இன்னார் தூதன் என நின்றான்’ பெரிய திருமொழி, 2. 2 : 3.-என்கிறபடியே.
உலகத்தில் ஸ்வாதந்திரியமும் பாரதந்திரியமும் முறை மாறின இடத்திலும் ரஹஸ்யத்திலே அன்றோ அவை நடப்பன?
கணவனும் மனைவியும் காலைப் பிடிப்பதும் ரஹஸ்யத்திலே அன்றோ?

இப்படி இருக்கச் செய்தே அன்றோ உலகப் பிரசித்தமாம்படி தன்னைத் தாழ விட்டது?
பார்த்த சாரதி -நின்ற திருக் கோலம் -அங்கே நடந்தும் தேர் ஒட்டியும் –
பாண்டவ தூதன் நடந்தாலும் இன்று இருந்த திருக் கோலம் –
உபதேசத்தால் சேவித்தும் பிரயோஜனம் பெறுவோம்

சென்று சேனையை நாசம் செய்திட்டு –
‘இது தானும் அருச்சுனன் முதலாயினோர் அம்புகளாலே அன்று’ என்றபடி.
‘ஆயுதம் எடுக்க ஒண்ணாது’ என்று வேண்டிக் கொண்டபடியாலே,
சாரதியாயிருந்து தேர்க் காலாலே உழக்கிப் பொகட்டான்.

நடந்த நல் வார்த்தை அறிந்தும் –
தன் மேலே அம்பு மழையாகப் பெய்கிற இத் தண்ணிய பூமியினின்றும் தன் வரவுக்கு எதிர் கொள்வார்
இருந்த இடத்தே போய்ப் புக்கான் என்கிற பெரிய வார்த்தையை அறிந்தும்.
‘நீண்ட கண்களை யுடைய கண்ண பிரான் பூமியினுடைய பாரத்தைப் போக்கி உலகத்தை எல்லாம்
மோஹிக்கச் செய்து மேலான தம் இருப்பிடத்தை அடைந்தார்’ என்கிறபடியே,
துரியோதனாதியர்கள் இல்லாத இடத்தே போய்ப் புகப் பெற்றது அன்றோ?

‘க்ருத்வா பாராவதரணம் ப்ருதிவ்யா: ப்ருதுலோசந:
மோஹயித்வா ஜகத் ஸர்வம் கத: ஸ்வம் ஸ்தாநமுத்தமம்’-என்பது, பாரதம், மௌசல். பர்.

‘மேலே கூறிய செயல்கள் அடங்கலும் தன் ஸ்வாதந்திரியம் கிடக்கச் செய்தே செய்தவை அன்றோ?
தன்னைப் பாதுகாத்துக் கொள்ளுதற்குத் திரு உகிராலும் உண்டே அங்கு; அவை போல அன்றே இங்கு?
தன்னை அடைந்தவர்க்குப் பரதந்திரனாய்த் தன்னை அழிய மாறி,
பாண்டவர்களுக்கு உடம்புக்கு ஈடு இடாதே-ஈடு -கவசம் –
எதிரிகள் அம்புக்கு இலக்கு ஆக்கின இந்நீர்மைக்குப் போருமோ. மேலே கூறிய குணங்கள்?’ என்கிறார்.

————————————————————————————————-

வார்த்தை அறிபவர் மாயவற்கு ஆளன்றி ஆவரோ?
போர்த்த பிறப்பொடு நோயொடு மூப்பொடு இறப்பிவை
பேர்த்துப் பெருந்துன்பம் வேரற நீக்கித் தன் தாளின் கீழ்ச்
சேர்த்து அவன் செய்யும் சேமத்தை எண்ணித் தெளிவுற்றே.–7-5-10-சேர்த்து-சேர்த்தி -பாட பேதம் –

கீழ் சொன்ன ஒன்பதும் அசத் சமம் -மகா பாரதம் -நல் வார்த்தை -ஐவர்க்கு -நல்லவர்க்கு -ராஜ்யம் -அங்கே
இங்கே அனைவருக்கும் நல்லார் தீயார் இல்லாமல் மோக்ஷ சாம்ராஜ்யம் –
சர்வ பூதங்களுக்கும் சரம ஸ்லோகம் –பேசி இருப்பனவும் -வராஹ -சரம ஸ்லோகம்-மெய்ம்மை பெரு வார்த்தை –
கிருஷ்ண சரம ஸ்லோகம் –சொல்லும் -ராம சரம ஸ்லோகம் ஆண்டாள் –
போர்த்த பிறப்பொடு நோயொடு மூப்பொடு இறப்பிவை பேர்த்துப் பெருந்துன்பம் வேரற நீக்கித -ஐஸ்வர்யம் கைவல்யம் போக்கி
சரீர உறை-ப்ரஹ்மாவை விரோதம் தடுக்கும் ஜென்மம் சரீர அனுபந்தி வியாதி -அபரிகாரமான மூப்பு -இறப்பில் முடியுமே
ஷட் பாவ விகாரங்கள் -விட்டு கழியும் படி -அபரியந்த துக்கம் கர்ப்ப நன்றாக ஸ்வர்க்க மனுஷ்ய -சுழல் பெரும் துன்பம்
மூலமான கர்மங்களையும் போக்கி -கை வலய அனுபவமும் போக்கி
தன் தாளின் கீழ்ச்சேர்த்து அவன் செய்யும் சேமத்தை எண்ணித் தெளிவுற்றே–சேர்த்தி -பாட பேதம்
மாஸூச சோக நிவ்ருத்தி சேம வைப்பு நச புன ஆவர்த்ததே
வார்த்தை அறிபவர் மாயவற்கு ஆளன்றி ஆவரோ?-தெளிந்து -விரோதி தொலைத்து ஆச்ரயணீயன் -இவனைத் தவிர வேறு யாருக்கு ஆவார்

‘ஆத்தும சொரூபம் தெரியாதபடி மறைத்துக் கொண்டிருக்கிற பிறப்பும் நோயும் மூப்பும் இறப்பும் என்னும் இவற்றை நீக்கிப் பெரிய நரகத்துன்பத்தையும்
அடியோடு நீக்கித் தன் திருவடிகளின் கீழே நித்தியமான கைங்கரியத்தைக் கொடுத்து, அவன் செய்கின்ற சேமத்தை எண்ணித் தெளிவை அடைந்து,
அவனுடைய வார்த்தையை அறிகின்றவர்கள், அக்கண்ணபிரானுக்கு அடிமை ஆவரே அன்றி மற்று ஒருவர்க்கு ஆள் ஆவரோ?’ என்றபடி.
வார்த்தையாவது, ‘என்னையே சரணமாகப் பற்று; நான் உன்னை எல்லாப் பாவங்களினின்றும் நீக்குகிறேன்,’ என்ற பகவத் கீதை வாக்கியம்.
‘பேர்த்து நீக்கிச் சேர்த்துச் செய்யும் சேமம்’ என்க. ( அதனை) எண்ணித் தெளிவுற்று அறிபவர் என்க.

மேலே சேதநர்க்குச் செய்த உபகாரங்கள் எல்லாம் சம்சாரத்திலே இருக்கச் செய்தே செய்தவை அன்றோ?
அவை போன்றது அன்றி,
சம்சாரம் மறுவல் இடாதபடி செய்து தன் திருவடிகளிலே சேர்த்துக் கொண்டது ஒரு மஹோபகாரத்தை அருளிச்செய்கிறார்.

‘ஸர்வ தர்மாத் பரித்யஜ்ய மாமேகம் ஸரணம் வ்ரஜ
அஹம் த்வா ஸர்வ பாபேப்ய; மோக்ஷயிஷ்யாமி மாஸூச:’-என்பது, ஸ்ரீ கீதை, 18 : 66.

வார்த்தை அறிபவர் –
மஹாபாரதம் எல்லாவற்றாலும் சொல்லிற்றாயிற்றது ஒரு வார்த்தை அன்றோ?
வார்த்தையாவது, பிரயோஜனத்தோடு கூடி இருப்பது அன்றோ?
‘என் ஒருவனையே சரணமாகப் பற்று,’ என்றதனை அன்றோ இங்கு வார்த்தை என்கிறது?
மேலே சொன்னவை அடங்கலும் கடல் போலே; அதில் அமிருதம் போலே இது.-
கீதையிலும் இத் திருவாய்மொழியிலும்

மாயவற்கு ஆள் அன்றி ஆவரோ-
அவன் ‘என்னையே பற்று’ என்று சொல்லா நின்றார், இவர்கள் அவனை ஒழியவும் பற்றுவார்களோ?
ரஹஸ்யங்கள் எல்லாவற்றையும் வெளியிட்டான் அன்றோ அவள் சூழல் முடிக்கைக்காக?

போர்த்த பிறப்பொடு நோயொடு மூப்பொடு இறப்பு இவை –
பரணி, கூடு வரிந்தாற் போலே, இவ்வாத்துமாவை அறிய ஒண்ணாதபடி சூழப் பொதிந்து கிடக்கிற பிறவிகள்,
அவை புக்க இடத்தே புகக்கடவ நோய், அங்ஙனேயாகிலும் சிலநாள் செல்லாதபடி இடி விழுந்தாற்போலே நிற்கிற முதுமை,
அங்ஙனேயாகிலும் இருக்க உண்ணாதபடி இவனுக்கு விருப்பம் இல்லாத இறப்பு, இவற்றை எல்லாம்.

பேர்த்து –
ஈஸ்வரனுக்கு ஒரு விரகு பார்த்துத் தள்ள வேண்டும்படி அன்றோ அவற்றின் கனம்,
விரகர் நெடுஞ்சுவர் தள்ளுமாறு போலே தள்ளி?

பெருந்துன்பம் வேர் அற நீக்கி –
பிறவி போனால் பின் வரக் கூடியமான கைவல்யமாகிற பெரிய துக்கத்தை வாசனையோடே போக்கி.
‘முன்பு நின்ற நிலைதான் நன்று’ என்னும்படி அன்றோ இதன் தன்மை?
அதற்கு, பின்னை ஒரு சரீரத்தை எடுத்தாகிலும் பகவானை அடைவதற்குத் தகுதி உண்டே அன்றோ?
இது எப்பொழுதும் அழிந்ததே அன்றோ?

தன் தாளின் கீழ்ச் சேர்த்து-
பாத ரேகை போலே இருக்கத் திருவடிகளிலே சேர்த்து.

அவன் செய்யும் சேமத்தை எண்ணி –
பின்னை இவனுடைய மீட்சி தன் புத்தி அதீனமாம்படி பண்ணிவிடுகை. ‘

‘இமாந் லோகாந் காமாந்நீ காமரூப்யநுஸசஞ்சரந்.’ தைத்திரீ. பிரு.

இவன் நினைவோடு தன் சங்கற்பத்தோடு வாசி அறும்படி செய்தல்.
இவனும் சேதனனாய் இருக்கச் செய்தே, முத்தன் ஆனாற் கொள்ளும் பல வகையான நிலைகளும்
அவன் புத்தி அதீனமாய் அன்றோ இருப்பவன்?’
இவன் கையிலே இவனைக் காட்டிக் கொடுத்தாலும் அவனுக்கு அஞ்ச வேண்டாதபடியாய் இருக்கை.

எண்ணித் தெளிவுற்று –
இதனை எண்ணித் தெளிந்து.
அவன்-மாம் ஏகம் சரணம் வ்ரஜ ‘என்னையே பற்று’ என்று சொன்னதில், தலையாடியிலே, -உத்தரார்த்தம் –
‘எல்லா விரோதிகளையும் நானே போக்கி என்னைத் தருவான்’ என்று சொன்னதனைத் தெளிந்திருக்குமவர்கள்;
அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வக இஷ்ட பிராப்தி தன்னடையே வரும் -வார்த்தை பூர்வார்த்தம் —

அவனுக்கு அல்லது ஆள் ஆவரோ?
மேலே கூறிய குணங்கள் எல்லாம், ‘மண் தின்ன வேணும்’ என்று அழுத குழந்தைக்கு அதனை இட்டு
அதற்குப் பரிஹாரம் பண்ணுமாறு போலே ஆயிற்று;
இங்கு, இவற்றினுடைய ஹிதமே பார்த்துச் சம்சாரம் தொடக்கமான எல்லாத் துன்பங்களும் மறுவலிடாதபடி
போக்கித் தன் திருவடிகளின் கீழே வைத்துக் காத்த பெரிய நீர்மைக்குப் போருமோ மேலே கூறியவை அடங்கலும்?

மேலே செய்த பரிஹாரங்கள் கிரந்தி கிடக்கச் செய்யும் பரிஹாரம் போலே சம்சாரம் கிடக்கச் செய்த பரிஹாரங்கள் அன்றோ?
அது புண் இல்லாதபடி அறுத்து நோக்குவாரைப் போலே இதிற் சொல்லுகிற குணம்.

மேற் கூறியவை சம்சாரிகள் இச்சையாலே செய்தவை;
இது ஈஸ்வரன் தன்னிச்சையாலே செய்ததன்றோ?

————————————————————————————

தெளிவுற்று வீவின்றி நின்றவர்க்கு இன்பக் கதி செய்யும்
தெளிவுற்ற கண்ணனைத் தென் குரு கூர்ச்சட கோபன் சொல்
தெளிவுற்ற ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார் அவர்
தெளிவுற்ற சிந்தையர் பாமரு மூவுல கத்துள்ளே.–7-5-11-

விசத தமமான ஞானம் கொண்ட சித்தம்
தெளிவுற்று வீவின்றி நின்றவர்க்கு இன்பக் கதி செய்யும்-உபாயம் உபேயம் அவனே என்ற தெளிவு -மோக்ஷம் கொடுக்கும்
தெளிவுற்ற கண்ணனைத் தென் குருகூர்ச் சட கோபன் சொல்-விடேன் என்று தெளிவு அவனுக்கு -இவன் கலங்கின அன்றும் -ஆஸ்ரித ஸூலபன்
தெளிவுற்ற ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார் அவர்-சம்பந்திகளை தெளிவு படுத்தும்
தெளிவுற்ற சிந்தையர் பாமரு மூவுல கத்துள்ளே.-பாபம் திரும்பி வரும் மூன்று உலகத்து உள்ளே –குண த்ரயம் -கர்ம நிபந்தம்
ஸூத்த சத்வ ஞானம் கொண்ட சிந்தை –

ஞானத்தைப் பெற்று அந்த ஞானத்திற்கு இடையீடு இல்லாமல் நின்ற அடியார்கட்கு மோக்ஷ உலகத்தைத் தருகின்ற ஞானமே சொரூபமான
கண்ணபிரானை. அழகிய திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீ சடகோபராலே அருளிச் செய்யப்பட்ட தெளிந்த ஆயிரம் திருப்பாசுரங்களுள் இவை
பத்துத் திருப்பாசுரங்களையும் வல்லவர்கள், பரந்திருக்கின்ற மூன்று உலகத்திற்குள் தெளிந்த சிந்தையினையுடையராவர்.

முடிவில், ‘இத்திருவாய்மொழி கற்று வல்லவர்கள் சம்சாரத்துக்குள் இருந்து வைத்தே சுத்த பாவர்’ என்கிறார்.

தெளிவுற்று வீவு இன்றி நின்றவர்க்கு-
‘பிராப்ய பிராபகங்கள் இரண்டும் அவனே’ என்று அறுதியிட்டு, பின்னர்
நாட்டார் செயல்களைக் கண்டாதல்,
போலி வார்த்தைகளைக் கண்டாதல் பிற்காலியாதே நின்றவர்களுக்கு.

நாட்டார் செயல்களாவன, சாதன அநுஷ்டானங்கள்.
போலி வார்த்தைகளாவன: உபாய பல்குத்துவம் – சாதனம் சிறிதாய் இருத்தல்,
உத்தேஸ்ய துர்லபத்துவம் – பேறு கிடைத்தற்கு அரியதாய் இருத்தல்,
ஸ்வ கிருத தோஷ பூயஸ்த்வம்-தன்னால் செய்யப்பட்ட பாவங்கள் பலவாக இருத்தல் என்னுமிவை.

பாரதப் போரிலே நின்று அருச்சுனனை நோக்கி,
‘நான் சொன்ன இது உனக்குத் தொங்கிற்றோ? எதிரே போந்ததோ?’ என்ன,
‘நிலை பெற்றேன்’ என்ன,
‘ஸ்த்திதோஸ்மி’ என்பது, ஸ்ரீ கீதை, 18 : 73.
‘கரிஷ்யே வசநம் தவ’ என்பது, ஸ்ரீ கீதை, 18 : 72.

அவன், ‘ஆனால் நம் காரியம் செய்யப் பார்த்தது என்?’ என்று கேட்க,
‘உன்னுடைய வார்த்தையின்படி செய்கிறேன்’ என்கிறபடியே,
‘தேவரீர் ஏவின அடிமை செய்யக் கடவேன்,’ என்றான் அன்றோ?

‘அருச்சுனன் தான் எம்பெருமானைப் பெற்றானோ,இல்லையோ?’ என்று நம்பிள்ளை சீயரைக் கேட்க,
‘உமக்கு அது கொண்டு காரியம் என்? இது சொன்னவன் எல்லார்க்கும் பொதுவானவனாகில்,
பகவானுடைய வார்த்தை என்னுமிடம் நிச்சயமாகில்.
தங்கள் தங்களுடைய கர்மங்கட்குத் தகுதியாகவும் ருசிக்குத் தகுதியாகவும் பெறுகிறார்கள்;
பெற்றவர்களை ஆராய்ந்து பார்த்து அதனாலே அன்றே நாம் பற்றப் பார்க்கிறது?’ என்று அருளிச் செய்தார்.
சேர்ந்து குளிர்ந்த தண்ணீர் இருந்தால், அது குடித்துத் தாகம் கெட்டவனைக் கண்டு அன்றே
தாகம் கொண்டவன் தண்ணீர் குடிப்பது?

இன்பக் கதி செய்யும் –
தனக்கு மேல் ஒன்று இல்லாததான ஆனந்தத்தோடு கூடிய பேற்றினைப் பண்ணிக் கொடுக்கும்,

தெளிவுற்ற கண்ணனை
இவன் தெளிய மாட்டாத இழவு தீர இவனுக்கு நித்தியமான கைங்கரியத்தைக் கொடுக்கையிலே தான் தெளிந்தபடி
இருக்கும் கண்ணபிரானை. ‘நான் நினைக்கிறேன்’ என்பது போலே.

ஸ்திதே மநஸி ஸூஸ்வஸ்தே சரீரே ஸதி யோநர:
தாதுஸாம்யே ஸ்திதே ஸ்மர்த்தா விஸ்வரூபஞ்ச மாமஜம்’
‘ததஸ்தம் ம்ரியமாணந்து காஷ்டபாஷாண ஸந்நிபம்
அஹம் ஸ்மராமி மித்பக்தம் நயாமி பரமாம் கதிம்’-என்பன, வராஹ சரமம்.

தெளிவுற்ற ஆயிரம் –
மலையிலே கலங்கின நீரானது ஒரோ பிரதேசங்களில் வந்து தெளிந்து உபயோகத்திற்குத் தகுதியாமாறு போலே

‘மண்ணாடின ஸஹ்ய ஜலம் தோதவத்திச் சங்கணித் துறையிலே துகில்
வண்ணத் தெண்ணீராய அந்தஸ்தத்தைக் காட்டுமாபோலே அல்ப ஸ்ருதர்
கலக்கின ஸ்ருதி நன்ஞானத்துறை சேர்ந்து தெளிவுற்று ஆழ் பொருளை
அறிவித்தது,’ என்பது, ஆசார்ய ஹ்ருதயம், சூத். 71.

‘அந்த மிலாமறை ஆயிரத்து ஆழ்ந்த அரும்பொருளைச்
செந்தமி ழாகத் திருத்தில னேல்நிலத் தேவர்களும்
தந்தம் விழாவும் அழகும்என் னாம்தமி ழார்கவியின்
பந்தம் விழாஒழு கும்குரு கூர்வநத பண்ணவனே.’-என்றார் கம்பநாடரும். சடகோபரந். 14.

ஒரு சிலரே ஓதத் தகுந்ததாய்க் கூளமும் பாலப் பசினும் போலே ஒன்றே அறுதியிட்டுப் பிரிக்க ஒண்ணாத படியாயிருக்கிற
வேதார்த்தாமானது, எல்லாரும் படிக்கத் தகுந்ததாய் எல்லா ஐயங்களும் தீர்ந்து தெளிந்தது அவர் பக்கலிலே வந்தவாறே.

இவை பத்தும் வல்லார் அவர் தெளிவுற்ற சிந்தையர்-
இத் திருவாய்மொழியைக் கற்க வல்லவர்கள், இவ்வாழ்வார் தம்மைப் போலே தெளிவுற்ற நெஞ்சினையுடையராவர்.
‘அப்படித் தெளிவது தேச விசேடத்திலே போனாலோ?’ என்னில்,

பாமரு மூவுலகத்துள்ளே –
‘பாபம் நிறைந்திருக்கிற தேசத்திலே’ என்றபடி.
அவ் வருகே ஒரு தேச விசேடத்தே போனால் பெறக் கடவே தெளிவை அதற்கு எதிர்த்தட்டான இங்கே இருந்தே யுடையராவர்;
‘சர்வேஸ்வரன் தானே இங்கு வந்து அவதரிக்கிலும் சோக மோகத்தைச் செய்ய வல்ல சம்சாரத்தே இருந்தே தெளிவுற்ற சிந்தையர்:
குற்றங்களுக்கு எல்லாம் எதிர்த் தட்டான பரமாத்துமாவையும் தன் வழி ஆக்க வல்ல இவ் விபூதியிலே இருந்து வைத்தே சுத்த பாவராய் இருப்பர்.
பாபம் என்பது, ‘பா’ எனக் கடைக் குறைந்து நிற்கிறது.

—————————————————————————————————-

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

ஆத்மைக ரக்ஷண பரான்
அவதார ஹேதூன்
அன்யத் கதம் மதி மதாம் யது அவபோத நீயம்

இத் யான்ய பர்யம்
அலுநாத் அதி பஞ்சமம் ஸஹ

சர்வ ஆஸ்ரித ரக்ஷண அவதார குணவத்வம் –இத் திருவாய் மொழியில் காட்டும் குணம்
அதி பஞ்சமம் ஸஹ ஆத்மைக ரக்ஷண பரான் -அடியார்களை ரக்ஷிக்கவே
அவதார ஹேதூன்-அவதார கல்யாண குணக் கூட்டங்கள்
அன்யத் கதம் மதி மதாம் யது அவ போத நீயம் -புத்தி உள்ளவர்களால் -மாயவருக்கு ஆள் அன்றி ஆவரோ
இத்யான்ய பர்யம் -இப்படி அந்நிய பரராய் இருக்காமல் -ததேக பரனாக இருக்க –

————————————————————————-

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –

சர்வாஸ்ரயம் ஸ்நேஹம் பிரகடயிதி ஹரி சாகேதம் முக்தி தாநாத் சரசரா-
சர்வ சோ ரக்ஷகத்வாத் சைத்யே சாயுஜ்யே தாநாத்
ஜகத் உதய க்ருதே உத்ருதே பூமி தேவ்யா
யாஞ்சார்த்தம் வாமனத்வாத் சிவ பஜக முனி மோஷார்த்தம் தாநாத்

1-சாகேதம் -அயோத்யா ராமன் – –நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்
நற்பாலுக்கு உய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே-முக்தி தாநாத் சரசரா-

2-சர்வசோ ரக்ஷகத்வாத்—நாட்டிற் பிறந்தவர் நாரணற்கு ஆளன்றி ஆவரோ?–அனைவரையும் ரக்ஷிக்கவே படைக்கப் பட்டு-ரக்ஷிக்கப்பட்டு

3-சைத்யே சாயுஜ்யே தாநாத் —சேட்பாற் பழம் பகைவன் சிசு பாலன் திருவடி தாட்பால் அடைந்த தன்மை அறிவாரை அறிந்துமே-

4–ஜகத் உதய க்ருதே—நன்மைப் புனல் பண்ணி நான்முகனைப் பண்ணித் தன்னுள்ளே
தொன்மை மயக்கிய தோற்றிய சூழல்கள் சிந்தித்தே–ஸ்ருஷ்ட்டி இத்யாதி

5–பூமி தேவ்யா உத்ருதே—ஆழப் பெரும் புனல் தன்னுள் அழுந்திய ஞாலத்தைத்
தாழப் படாமல் தன் பால் ஓரு கோட்டிடைத் தான் கொண்ட
கேழல் திருவுரு வாயிற்றுக் கேட்டும் உணர்ந்துமே–

6–யாஞ்சார்த்தம் வாமனத்வாத்–கோட்டங்கை வாமனனாய்ச் செய்த கூத்துகள் கண்டுமே.-

7-8-9-10—சிவ பஜக முனி மோஷார்த்தம் தாநாத் —
மார்க்கண்டேயனுக்கு வாழு நாள் இண்டைச் சடை முடி ஈசன் உடன்கொண்டு உசாச் செல்லக்
கொண்டங்குத் தன்னொடுங் கொண்டு உடன் சென்றது உணர்ந்துமே–என்றும் –
அல்லல் அமரரைச் செய்யும் அரணியன் ஆகத்தை மல்லல் அரி யுரு வாய்ச் செய்த மாயம் அறிந்துமே–என்றும் –
நூற்றுவர் மங்க ஓர் ஐவர்க்காய்த் தேசம் அறிய ஓர் சாரதியாய்ச் சென்று சேனையை
நாசம் செய்திட்டு நடந்த நல் வார்த்தை அறிந்துமே–என்றும் –
பெருந்துன்பம் வேரற நீக்கித தன் தாளின் கீழ்ச் சேர்த்து அவன் செய்யும் சேமத்தை எண்ணித் தெளிவுற்றே–என்றும்
அருளிச் செய்த பாசுரங்களாலும் –

சர்வாஸ்ரயம் ஸ்நேஹம் பிரகடயிதி ஹரி-ஆஸ்ரிதர் அனைவர் இடமும் ஸ்நேஹம் –
ஒவ் ஒரு சரித்திரத்திலும் இதுவே காட்டி எம்பெருமான் பிரகாசப்படுத்தி அருளினான் –

——————————————————————————

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 65-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்-

அவதாரிகை –

இதில் விஜயங்களுக்கு அடியான விபவங்களை இழப்பதே என்று வெறுத்த படியை அனுவதித்து
அருளிச் செய்கிறார்
அதாவது
கீழ்ச் சொன்ன விஜய பரம்பரைக்கு அடியான விபவ குணங்களை அனுசந்தித்து
படுக்கைக்கு கீழே தனம் கிடக்க கால் வீங்கிச் சாவாரைப் போலே
இம் மகா நிதி யுண்டாய் இருக்க
இவர்கள் இத்தை இழந்து அனர்த்தப் படுவதே
என்று சம்சாரிகள் இழவுக்கு வெறுக்கிற கற்பார் ராம பிரானில் அர்த்தத்தை
கற்றோர் கருதும் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -என்கை –

————————————————-

கற்றோர் கருதும் விசயங்களுக்கு எல்லாம்
பற்றாம் விபவ குணப் பண்புகளை -உற்று உணர்ந்து
மண்ணில் உள்ளோர் தம் இழவை வாய்ந்து உரைத்த மாறன் சொல்
பண்ணில் இனிதான தமிழ்ப் பா –65-

கற்றோர்-தசரதர் வசுதேவர் போல்வார் ஆதரிக்கும்
விபவ குணப் பண்புகளை-கீழே -7-4-விஜய பரம்பரைகளைச் சொல்லி இதில் அதில் காட்டிய கல்யாண குணங்கள்
உற்று உணர்ந்து-மண்ணில் உள்ளோர் தம் இழவை-ஆராய்ந்து அறிந்து வைத்தும் இழக்கிறார்கள்
வாய்ந்து உரைத்த-பொருந்தி அருளிச் செய்த
பண்ணில் இனிதான -போக்யமான காந ரஸமான
தமிழ்ப் பா–திராவிட ப்ரஹ்ம ஸம்ஹிதை

———————————————–

வியாக்யானம்–

கற்றோர் கருதும் விசயங்களுக்கு எல்லாம் பற்றாம் விபவ குணப் பண்புகளை -உற்று உணர்ந்து –
அதாவது –
சகல சாஸ்திர தாத்பர்யங்களையும் கற்ற
ஸ்ரீ சக்கரவர்த்தி-ஸ்ரீ வசுதேவர் -ஸ்ரீ ஜாம்பவான்-ஸ்ரீ மகா ராஜர் -ஸ்ரீ திருவடி
முதலாய் உள்ள அவதார விஜய ஹர்ஷிகள் ஆனவர்கள் ஆதரிக்கும் விஜயங்களுக்கு எல்லாம்
ஆஸ்ரமாய் உள்ள அவதாரமான ஸ்ரீ விபவ குண ஸ்வ பாவங்களை —
அவதாரம் தோறும்-தத் அனுகுணமாக குணங்களும் இறே பேதித்து இருப்பது –
அவை தான் ஆஸ்ரித ரஷணத்துக்கு உறுப்பாகையாலே-அவற்றின் ஸ்வபாவத்தை உற்று உணர்ந்து
அவற்றின் படியை மேல் எழ அன்றிக்கே அந்தரங்கமாக ஆராய்ந்து –

அதாவது –
ராமோ ராமோ ராம இதி -என்றும்
கற்பார் ராம பிரானை அல்லால் மற்றும் கற்பரோ -என்றும்
நடந்தமை கேட்டும் நாட்டில் பிறந்தவர் நாரணற்கு ஆள் அன்றி ஆவரோ -என்றும் –
தன்மை அறிவாரை அறிந்தும் கேட்பார்கள் கேசவன் கீர்த்தி அல்லால் மற்றும் கேட்பாரோ -என்றும்
தோற்றிய சூழல்கள் சிந்தித்து தன்மை அறிபவர் தாம் அவர்க்கு ஆள் அன்றி ஆவரோ -என்றும்
கேழல் திரு உருவாய் ஆயிற்று கேட்டும் உணர்ந்தவர்
சூழல்கள் சிந்திக்கில் மாயன் கழல் அன்றி ஆவரோ -என்றும்
கோட்டங்கை வாமனனாய் செய்த கூத்துக்கள் கண்டும் கேட்டும் உணர்ந்தவர்
கேசவற்கு ஆள் அன்றி ஆவரோ -என்றும்
கொண்டு அங்கு தன்னோடும் கொண்டுடன் சென்றது உணர்ந்தும் கண்டும் தெளிந்தும்
கற்றார் கண்ணற்கு ஆள் அன்றி ஆவரோ -என்றும்
இரணியன் ஆகத்தை மல்லல் அரி உருவாய்ச் செய்த மாயம் அறிந்தும் செல்ல உணர்ந்தவர்
செல்வன் தன் சீர் அன்றி கற்பரோ -என்றும்
நடந்த நல் வார்த்தை அறிந்தும் மாயவற்கு ஆள் அன்றி ஆவரோ -என்றும்
அவன் செய்யும் சேமத்தை எண்ணித் தெளிவுற்று –மாயவற்கு ஆள் அன்றி ஆவரோ -என்றும்
இப்படி பத்தும் பத்தாக ஆராய்ந்து -என்கை-

மண்ணில் உள்ளோர் தம் இழவை –
அவன் குணம் இப்படியாய் இருக்க இத்தை இழப்பதே -என்று
பூமியில் உண்டானவர்கள் உடைய ஸ்ரீ பகவத் குண அனுபவ அலாபத்தை –

வாய்ந்து உரைத்த மாறன் சொல் –
ஸூலபராய்க் கிட்டி நின்று அந்தரங்கமாக அருளிச் செய்த
ஸ்ரீ ஆழ்வார் திவ்ய ஸூக்தியானது-

பண்ணில் இனிதான தமிழ்ப் பா –
நட்ட ராகத்தோடு கூடி திராவிட சப்த ரூபமான சந்தஸ் ஸூ
இப்படி கானத்தோடு கூடின இதுவும் ஒரு சந்தஸ்ஸே என்று ஈடுபாடாய் இருக்கிறது-

——————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பகவத் விஷயம் காலஷேபம் -151- திருவாய்மொழி – -7-5-1….7-5-5–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்–

June 29, 2016

மேல் திருவாய்மொழியிலே, எம்பெருமானுடைய வெற்றிச் செயல்களை அனுபவித்தார்;
அவை தாம் அடியார்களின் பொருட்டே அன்றோ இருப்பன? ‘அவன், தன்னை இவர்களுக்கு ஆக்கி வைக்கக,
இவர்கள் புறம்பு உண்டான விஷயங்களிலே வேறு நோக்குள்ளவர்களை ஆவதே!’ என்று ஆச்சரியப்படுகிறார்.
யஸ்ய அஸ்மி -எவனுக்கு அடியவனாகிறேன்?’ என்கிறபடியே,
யாவன் ஒருவனுடைய சத்தையே பிடித்து அவனுக்காய் இருக்கும்?
அப்படி இருக்கிறவன் தான் பிறந்தது தொடங்கி இவனுக்கு ஆக்கி வைக்கிறான் அன்றோ?

பாதுகாப்பதற்கே உரியனவான பிறவிகளிலே வந்து பிறந்த படியையும்,
தன் ஸ்வரூபம் ரூபம் குணம் முதலானவைகளையும் பிறர்க்கு ஆக்கி வைக்கிற படியையும்,
அதற்குக் காரணமான கிருபையைத் தனக்கு வடிவாகவுடைனாய் இருக்கிற படியையும்,
கிருபையின் காரியமான செயல்களையும் நினைத்து, முற்றத்திலே பொற் குவியல் புதைந்து கிடக்க,
அதனை அறியாதே மேலே சஞ்சரித்துப் புறங்கால் வீங்குவாரைப் போலே
இச் செல்வம் தங்களுக்காக இருக்கச் சம்சாரிகள் புறம்பே போது போக்குவதே!’ என்று ஆச்சரியப்படுகிறார்.

ஆழ்வான் ஒருகால், இத் திருவாய்மொழி பத்துப் பாசுரங்களையும் இராமாவதார விஷயமாக்கி நிர்வஹித்தாராம்.
அதற்குக் காரணம்: ஆயிரத்தில் ஒன்றும் கடலில் குளப்படியும் போலே, பெருமாளுடைய குணத்தில் ஒரு பகுதியே அன்றோ?
அல்லாத அவதாரங்கள் எல்லாவற்றிலும் உள்ளது ஆதலின்.
‘பேரெயில் சூழ்கடல் தென்னலங்கை செற்ற பிரான்’ என்றும்,
‘மாறு நிரைத்து இரைக்கும் சரங்கள்’ என்றும்,
மேலே சொல்லிப் போந்த இராமாவதாரத்தினுடைய செயலை அநுசந்தித்து,
அவ்வழியாலே அன்றோ அவதாரங்களை அநுசந்திக்கிறது?

மற்றைய அவதாரங்களிலே ஈடுபட்டவர்களும் இராமாவதாரம் பிராசங்கிகமாகச் சொல்ல வேண்டி வந்தால்,
‘மனத்துக்கு இனியானை’ என்றே அன்றோ சொல்லுவது?
‘பட்டர் இராமாவதாரத்தில் போரப் பக்ஷிபதித்து இருப்பர்’ என்று,
அவர் அருளிச் செய்யுமது கேட்கைக்காகச் சிறியாத்தான் ஒருநாள்
‘பெருமாளுக்கு எல்லா நன்மைகளும் உளவாகிலும், கழுத்திலே ஒலை கட்டித் ‘தூது போ’ என்ன,
தூது சென்ற கிருஷ்ணன் நீர்மை இல்லையே?’ என்ன,
‘அது அங்ஙன் அன்று காண்; கழுத்திலே ஒலை கட்டித் ‘தூது போ’ என்பார் இல்லாமையாலே
தவிர்ந்தார் அத்தனை காண்,’ என்று அருளிச் செய்தார்.
நாடுடை மன்னர் வேறே சிலர் இலரே.– முடி சூடிய க்ஷத்திரிய குலத்திலே பிறக்கையாலே போக விடுவாரைப் பெற்றது இல்லை.
முடியைத் தவிர்ந்து சடையைப் புனைந்து நாட்டினை விட்டுக் காடு ஏறப் போனவர், தூது போகாமை இல்லை அன்றோ?

‘காடு ஏறப் போகவுமாம்; துரியோதனன் கோட்டியிலே போகை அன்றோ அரிது?
‘மதுசூதனரே! எந்த இடத்திலே நல்ல வார்த்தையும் கெட்ட வார்த்தையும் வாசி இல்லாமல் ஆகின்றதோ,
அங்குத் தெரிந்தவன் ஒன்றும் பேசக்கூடாது,’ என்பதே அன்றோ பிரமாணம்?
‘யத்ர ஸூக்தம் துருக்தம் வாஸமம் ஸ்யாத் மதுசூதந
ந தத்ர ப்ரல்பேத் ப்ராஜ்ஞ: பதிரேஷ்விவ நாயக:’-என்பது, பாரதம், உத்யோகபர். 95.( விதுரர் வாக்கியம் )

‘பாண்டவர்கள் கிடக்கைக்கு ஐந்து ஊர் தர வேணும்’ என்று இவன் சொன்ன வார்த்தைக்கும்,
‘பந்துக்களுக்கும் ஒரு கோற் குத்தும் கொடேன்’ என்று அவன் சொன்ன வார்த்தைக்கும் வாசி அறியாத கோட்டியிலே அன்றோ போய்ப் புக்கது?
‘இராமாவதாரத்தில் தூது சென்ற திருவடியுடைய ஏற்றம் தன் திருவுள்ளத்திலே பட்டுக் கிடந்தே அன்றோ,
‘அவனே பின்னோர் தூது ஆதி மன்னர்க்கு ஆகிப் பெரு நிலத்தார் இன்னார் தூதன் என நின்றது?பெரிய திருமொழி, 2. 2 : 3.

மீனோடு –முன்னும் இராமனாய் தானாய் பின்னும் இராமனாய் –
மற்றவை தான் இல்லையோ -ஸ்ரீ ராமாவதார சிறப்பால் தானாய் என்கிறார்
ஆழ்வார் ஸ்ரீ கிருஷ்ணனுக்காக -குலசேகர பெருமாள் பெருமாளுக்காக -மனத்திற்கு இனியன் என்றாள் ஆண்டாள்
பாரார்த்தியம் ஸ்வம் பராஸ்மி காகுஸ்த –
கண்ணன் பக்தராக்கி தான் பிரிந்து சென்று திரும்பாமல் -வேறே வேறே இடங்களுக்கு தானே செல்வான்
ராமனோ அனைவரையும் கூட்டிச் சென்றான்
ஸ்ரீ ராம ராம ராமேதி -ஸஹஸ்ர நாம சாரமே இது ஒன்றே

———————————————————————————————–

கற்பார் இராம பிரானை அல்லால் மற்றும் கற்பரோ?
புற்பா முதலாப் புல்லெறும்பாதி ஒன்று இன்றியே
நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்
நற்பாலுக்கு உய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே.–7-5-1-

பெருமாள் உடைய-சக்கரவர்த்தி திருமகன் உடைய – புருஷார்த்தத்தை -பிரதத்வம் அனுசந்தித்து
கல்வியில் ஆசை உள்ளவர்க்கு இவரை விட வேறே விஷயம் இல்லை -பிரிய ஹித ரூபங்கள் -அதீவ பிரிய தர்சனன்
கற்பார் இராம பிரானை அல்லால் மற்றும் கற்பரோ?-ராமோ விக்ரகவான் தர்மம் -சாதனமும் பிராப்பியமும் இவரே
புற்பா முதலாப் புல்லெறும்பாதி ஒன்று இன்றியே-பா புல் –பரம்பிய புல் தொடக்கமாக அது ஷூத்ரமான புல்லிய எறும்பு
ஸ்தாவர ஜங்கமங்களில் சிறியது முதலாக
நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்-குண அனுபவ ப்ரீதி உக்தராக வர்த்திக்கும் -ராம குணங்கள் நடையாடும் திரு அயோத்யையில்
நற்பாலுக்கு உய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே-ஸ்ரஷ்டமான பூமியில் -உபயாந்தரங்கள் சம்பந்தம் இல்லாமல் -புல்லும் எறும்புக்கு கூட
மோக்ஷம் -ஸாந்தானிக வைகுண்டம் கார்ய வைகுண்டம் -வால்மீகி ஸாந்தானிக லோகம் என்றே அருளிச் செய்கிறார்
ஜெய விஜயர் சாபமும் கார்ய வைகுண்டத்தில் தான் -அங்கே இல்லையே

‘நல்ல தேசமான அயோத்தியில் வாழ்கின்ற பரந்த புல் முதலாக, சிறிய எறும்பு முதலாக உள்ள சராசரங்கள் எல்லாவற்றையும் அவற்றின் பக்கல்
ஒரு சாதனமும் இல்லாமல் இருந்தும், பிரமனாலே படைக்கப்பட்ட இந்த உலகத்திலே அவை நல்ல தன்மையை யுடையனவாம்படி செய்தான்;
ஆதலால், கற்கின்றவர்கள் ஸ்ரீராமபிரானுடைய கீர்த்தியை அல்லாமல் வேறு சில கீர்த்திகளையும் கற்பார்களோ?’ என்றபடி.
‘பா புல் முதலாப் புல் எறும்பு ஆதியா நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும் ஒன்று இன்றியே நற்பாலுக்கு உய்த்தனன்,’ என்று கூட்டுக.
‘ஒன்று’ என்றது, அவனை அடைவதற்கு உபாயமாகக் கூறப்பட்ட சாதனங்களில் ஒன்றும் என்றபடி.
இத்திருவாய்மொழி கலி நிலைத்துறை.

‘பிரியத்தையும் ஹிதத்தையும் நினைத்து ஒன்றைக் கற்பார், திருவயோத்தியில் உண்டான எல்லாப் பொருள்களையும்
காரணம் ஒன்றும் இல்லாமலே தன் சேர்க்கையே ஸூகமாகவும் தன் பிரிவே துக்கமாக வுமுடையராம்படி செய்தருளின
உபகார சீலனான சக்கரவர்த்தி திருமகனை அல்லது கற்பரோ?’ என்கிறார்.

கற்பார் இராம பிரானை அல்லால் மற்றும் கற்பரோ –
‘இவ் விஷயத்தை ஒழியப் புறம்பு கற்குமது கல்விக்கு உடல் அன்று,’என்று இருக்கிறார்.
‘அந்த ஞானந்தான் ஞானம் என்று சொல்லத் தக்கது; ஆகையால், மேற்கூறிய ஞானத்திற்கு வேறானது
அஞ்ஞானம் என்று சொல்லப்பட்டது’ என்றன் அன்றோ?

‘ஸம் ஜ்ஞாயதே யேந தத் அஸ்த தோஷம் ஸூத்தம் பரம் நிர்மலம் ஏக ரூபம்
ஸம் த்ருஷ்யதே வாப் யதிகம்யதே வா தத் ஜ்ஞாநம் அஜ்ஞாநம் அத: அந்யத் உக்தம்’-என்பது, ஸ்ரீவிஷ்ணு புரா. 6. 5 : 84

தது அந்த ப்ரஹ்மம் -அறியப் படுகிறதோ பார்க்கப் படுகிறதோ அடையப் படுகிறதோ ததேவ ஞானம் –
ஸ்ரவண நினைக்க கேட்க -சந்த்ருஷ்யதே கண்ணால் பார்ப்பது -ஸம் ஞாயதே -ஞான தரிசன பிராப்தி அவஸ்தைகள்

பகவானை அடைவதற்கு உடலான ஞானம் ஞானமாகிறது; அல்லாதது அஞ்ஞானம் என்னக் கடவது அன்றோ?

‘ப்ரியவாதீச பூதாநாம் ஸத்ய வாதீச ராகவ:
பஹூ ஸ்ருதாநாம் வ்ருத்தாநாம் ப்ராஹ்மணாநாம் உபாஹிதா;-என்பது, ஸ்ரீராமா. அயோத். 2. 32.

‘எதிர்வரு மவர்களை எமை யுடை இறைவன்
முதிர்தரு கருணையின் முகமலர் ஒளிரா,
‘எது வினை இடரிலை இளிது நும்மனையும்
மதிதரு குமரரும் வலியர்கொல்?’ எனவே’-என்பது,கம்பராமாயணம், பால.

கற்பார் –
ஒருவன் ஒன்றைக் கற்பது ‘அப்போதைக்கு இனியது’ என்றாதல்
‘பின்பு ஒரு நன்மையை விளைக்கும்’ என்றாதல் ஆயிற்று;
‘இராம பிரான்’ என்கையாலே
‘அவை இரண்டும் (பிரியமும் ஹிதமும் )இவ் விஷயத்தை ஒழிய இல்லை’ என்கிறது.

‘யாங்ஙனம்?’ எனின்,
‘இராமன்’ என்கிற இதனால்,
புறம்பு போகாமல் காற்கட்டும் படியான அழகைச் சொல்லுகிறது;
‘பிரான்’ என்கிற இதனால்,
அவ் வழகாலே சேதநரை அநந்யார்ஹமாக்கும்படியும்,
நிலாத் தென்றல் சந்தனம் தண்ணீர் போலே, தன்னுடைய ஆனந்திக்கச் செய்கிற தன்மையும்
பிறர்க்கே யாயிருக்கும் உபகாரமாம் தன்மையும் சொல்லுகிறது.

ப்ரிய வாதீச ராகவ – பெருமாள் ஒன்றை அருளிச் செய்தால் அது செவிப்படாது ஒழியில் செய்யலாவது இல்லை;
செவிப்படில் இனியதாய் அன்றி இராது. ‘யார்க்கு?’ என்றால்,
பூதா நாம் – சத்தை யுடையனவான எல்லாப் பொருள்களுக்கும்: அசத்துக்கு வேறுபட்ட தன்மை மாத்திரமே வேண்டுவது.
‘நன்று; அப்போது பிரியமாய்ப் பயன் கொடுக்குமிடத்தில் வேறு ஒரு பலனைக் கொடுக்குமோ?’ என்னில்,
ஸத்ய வாதீச ராகவ – அருளிச் செய்யுமது தான் ஆத்மாக்களுக்கு ஹிதமாய் அன்றி இராது என்கிறது. சத்யம் பூத ஹிதம் ப்ரோக்தம்
ஒரு வார்த்தையே இரண்டு ஆகா நின்றால் அல்லாதனவற்றிற்கு –
ஸ்வரூபம் ரூபம் குணம் இத்யாதிகள் சொல்ல வேண்டா அன்றோ?

‘ராமோ ராமோ ராம இதி’ என்னும்படியன்றோ நாட்டை அகப் படுத்தியிட்டு வைக்கும்படி?
(உபேயத்திலே கண் வைத்து இருக்கும் அயோத்யா பிரஜைகள் -ஸித்த உபாயம் கைப்பட்டு இருக்குமவர்கள் அன்றோ
ராம ராஜ்யம் -சரணாகதியை உபேயமே பிரதானம் – )

‘ராமோ ராமோ ராம இதி ப்ரஜாநாம் அபவந் கதா;
ராம பூதம் ஜகத்அபூத் ராமே ராஜ்யம் ப்ரஸாஸதி’-என்பது, ஸ்ரீராமா. யுத். 131 : 97

அவன் ஸத்தை இவனுடைய ஸத்தைக்குக் காரணம்; பின்பு உண்டானவை இவனுடைய போகத்துக்குக் கண்டவை.
ஆக, ‘பிரியமும் ஹிதமும் ஆகிய இரண்டையும் வேண்டியிருப்பார் அவனை ஒழியக் கற்பரோ?’ என்றபடி.
‘நேரான ஐஸ்வரியத்தோடு கூட நேரான தர்மமும் ஸ்ரீராம பிரானிடத்தினின்றும் உண்டாயிற்று’ என்பது ஸ்ரீராமாயணம். என்றது,

‘ராம: ஸத் புருஷோ லோகே ஸத்ய தர்ம பராயண:
ஸாக்ஷாத் ராமாத் விநிர் வ்ருத்த: தர்மஸ்சாபி ஸ்ரியாஸஹ’-என்பது, ஸ்ரீராமா. அயோத். 2 : 29.

தர்மம் – உபாயம் / ஸ்ரியம் – செல்வம் பிராப்யம் –
அவ்யவதான இடையூறு வேறே அங்கங்கள் இல்லாமல் -‘நேரே சாதனம் சாத்தியம் ஆகிய இரண்டும் இந்த இராமனே என்கிறது அன்றோ?’ என்றபடி.

கற்பார் இராம பிரானை –
கற்பார் என்கை அன்று இவர்க்கு உத்தேசியம்;
‘மற்றையவற்றைக் கற்கலாகாது,’ என்று விலக்குதலேயாம்,
-ராக ப்ராப்தம் ஸ்வயம் ஏவ ப்ரவர்த்திக்குமே -ஆசையாலே செய்யப் படுவதாகில் தானாகவே செல்லும் அன்றோ’
ஆகையால், வேறு ஒன்றில் போகாமையே வேண்டுவது.

‘மற்றும்’ என்றதனால்,
வேறு தெய்வங்களை வணங்குதல் முதலானவற்றை வேறுபடுத்துகிறார் அல்லர்.
பஜனீய -வணங்கக் கூடிய பொருளிலே கூறு இடுகிறார்.
வேறு தெய்வங்களாகிற பதரைக் கூட்டிக் கழிக்குமவர் அல்லரே இவர்?
ஆதலால், பரத்துவத்தையும் மற்றை அவதாரங்களையும் கழிக்கிறார்.

‘என் எண்ணமானது வேறிடத்தில் போகிறது இல்லை’, என்றாற்போலே, ‘

‘ஸ்நேஹோ மே பரமோ ராஜந் த்வயி நித்யம் ப்ரதிஷ்டித:
பக்திஸ்ச நியதா வீர பாவோ ந அந்யத்ர கச்சதி’-என்பது, ஸ்ரீராமா. உத். 40 : 16. இது திருவடி கூற்று.

மற்றுங் கற்பரோ’ என்கிறார்.
ஸ்நேஹ: மே பரம:-
எழுந்தருளுகிற போது ‘என் வழியே போந்தாலோ?’ என்ன,
‘அவ்வளவு அன்று காணும் எனக்குச் சிநேகம்’, என்கிறான்.
‘என்றன் அளவு அன்றால் யானுடைய அன்பு’-(இரண்டாம் 100 )என்றும்,
‘உயிரின் பரமன்றிப் பெருகுமால் வேட்கையும்’–(9-6-1-) என்றும் சொல்லுமாறு போலே

ராஜந் த்வயி-
இது தானும் என்னால் வந்தது அன்று.-‘ரஞ்ஜயதீதி ராஜா’ ஆகையாலே.

நித்யம் ப்ரிதிஷ்டித; –
‘இப்போது ஒண்ணாதாகில், மற்றொரு போது கொள்ளுகிறோம்’, என்றால், அது செய்ய ஒண்ணாது,
தர்மியைப் பற்றிக் கிடப்பது ஒன்று ஆகையாலே .

பக்திஸ்ச நியதா –
பெருமாளை ஒழியச் செல்லாமை பிறந்து பிரிவில் முடிந்த சக்கரவர்த்தியின் நிலை சினேகம்;
பத்தியாவது, ‘நில்’ என்ன, ‘குருஷ்வ – கொள்க’ என்னும் படியாய், முறை அறிந்து பற்றின இளைய பெருமாள் நிலை.

வீர –
உம்முடைய வீரம் கொண்டு புறம்பே வென்றீர் என்னா, இங்கும் வெல்ல முடியாது.
தானும் அவன் ஆகையாலே ( நீயும் வீரன் நானும் வீரன் )தோற்பித்த துறையைப் பிடித்துச் சொல்லுகிறான்,

பாவோ ந அந்யத்ர கச்சதி –
என்னை மீட்டீராகிலும் என்னுடைய நெஞ்சினை மீட்கப் போகாது,
‘என்னுடை நல் நெஞ்சந்தன்னை அகல்விக்கத் தானும் கில்லான் இனி’ திருவாய். 1. 7 : 8.என்னுமாறு போலே.
‘சர்வ சக்தியான அவனாலும் மீட்கப் போகாது,’ என்கை.

கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணோவே’ என்னுமாறு போலே, ‘அந்யத்ர ந கச்சதி’ என்கிறது.

‘அந்யத்ர’ என்கிறது,
போகிற இடத்தின் பேரும் சொல்லுகை பொறாதபடி;

‘மற்று ஆரானும் உண்டு என்பார்’( திரு மடல் ) என்னமாறு போலே,
இவரும், ‘மற்றுங் கற்பரோ?’ என்கிறார்.

கற்பரோ –
சேதநர் அல்லரோ? உலகம் அடங்கலும் தம்முடையபடி என்று இருக்கிறார்;
‘இவ்வூரிற்பிள்ளைகள் கண்ட சர்க்கரை ஒழிய உண்ணும்படி எங்ஙனே?’ என்பாரைப் போலே.
மற்றையவற்றை விட்டு இராம பிரானைக் கற்கைக்குக் காரணம் சொல்லுகிறார் மேல்:

(ராஜகுமாரன் ஒரு ஊரில் சென்று பிரசாதம் கேட்டு தொட்டுக்க -உப்பைக் கொடுக்க –
கண்ட சக்கரை இல்லையோ என்ன
இங்கு கண்ட சக்கரை இல்லாமல் எங்கனம் உண்கிறார்கள் என்றானாம் )

புல் பா முதலா –
பா என்பது, பொருள்; புல்லாகிற பொருள் என்னுதல்.
‘பா’ என்பது பரப்பு; ‘பரந்திருக்கிற புல்’ என்னுதல்; என்றது,
பசுவின் வாய்க்கு எட்டாதபடியாய் இருக்ககையைத் தெரிவித்தபடி.
பா பதார்த்த வாசகம் -படர்ந்த புல்
இதனால், ‘புல் முதலாகத் தாவரம் முடிவாக’ என்றபடி.

புல் எறும்பு –
ஆதி பிறிவிகளிற் கடையான எறும்பு தொடக்கமாக.
பிரமனை எண்ணினால் பின்பு முடிவில் நிற்கக் கடவது அன்றோ எறும்பு? (பிபீலிகை)
‘புற்பா முதலாப் புல் எறும்பு ஆதி’ என்று இவற்றுக்கு ஒரு முதன்மை சொல்லுகிறார் அல்லர்;
‘ஸ்ரீராமபிரானுடைய திருவுள்ளத்துக்கு முற்பட்டன இவை,’ என்கிறார்;

வெள்ளமானது தாழ்ந்த இடத்திலே ஓடுமாறு போலே.
தாவரங்களில் தாழ்ந்தது புல்; சங்கமங்களில் தண்ணியது எறும்பு;
இவை இரண்டனையும் ஒக்க எடுக்கையாலே. ஞான பலம் மோக்ஷம் என்றதனைத் தவிர்க்கிறது.
‘ஞானம் உண்டாகையும் இல்லையாகையும் காரணம் அன்று. பெருமாள் கிருபைக்கு,’ என்கிறது.
‘இவற்றின் கர்மங்களால் வரும் உயர்வு தாழ்வுகள் காரணம் அன்று.’ என்கிறது.
காரணம் இல்லாமலே சேஷியாக இருக்கிற சர்வேஸ்வரன் பக்கல் விலக்காமையே பேற்றுக்கு வேண்டுவது.

ஸ்ரீ பரதாழ்வானைக் கண்டு சேதநர் எல்லாரும் கண்ண நீர் விழ விட்டு நிற்கக்
கழுத்தளவு நீரிலே நிற்கிற மரங்கள் அன்றோ வாடி நின்றன,
‘மரங்களும் எல்லாம் வாடி நின்றன’ என்கிறபடியே?
‘விஷயே தே மஹாராஜ ராமவ்யஸந கர்ஸிதா;
அபிவ்ருக்ஷா; பரிம்லாநா; ஸபுஷ்பாங்குர கோரகா;-என்பது, ஸ்ரீராமா. அயோத். 59 : 4.

‘உபதப்த உதகாநத்ய; பல்பலாநி ஸராம்ஹிச
பரிஸூஷ்க பலாஸாதி வநாநி உபவநாநிச’-என்பது, ஸ்ரீராமா. அயோத். 59 : 5.

உப தப்தஉதகா நத்ய: – நீரோடு, அந்நீரில் விழுகிறாரோடு வாசி அற்றபடி.
உபதப்தமாகையாவது, கரையரும் கிட்ட ஒண்ணாதபடியாய் இருக்கை.
பல்வலாநி ஸராம்ஸிச – இதில், சிறுமை பெருமை என்று ஒரு வாசி இல்லை,
‘வனம் என்ன உபவனம் என்ன’ என்பது போலே.

ஒன்று இன்றியே –
எல்லாவற்றையும் என்கிறது அன்று;

மேலே ‘முற்றவும்’ என்று
முழுவதும் என்ற பொருளைக் காட்டுகிற சொல் உண்டாகையாலே.-ஸாகல்ய வசனம் உண்டாகையாலே
இனி, ‘ஒன்று இன்றியே’ என்கிறது,
‘பேற்றுக்குத் தகுந்ததாய் இருப்பது ஒரு சாதனம் இன்றிக்கே இருக்கச் செய்தே’ என்றபடி.

பெறுகிற தன் சிறுமையையும் பேற்றின் கனத்தையும் பார்த்தால். தன் பக்கல் ஒரு சாதனம் இன்றிக்கே இருக்கும் அன்றோ?
பரம பத்தியோடு அவனே உபாயமானதோடு வாசி இல்லை. பேற்றைப் பார்த்தால் இத் தலையில் ஒன்றும் சொல்ல ஒண்ணாமைக்கு.
இனி, அங்கீகாரத்துக்குக் காரணமாய் இருப்பது ஒரு சாதனம் இன்றிக்கே இருக்க. யாது ஒன்றாலே பலம் உண்டாயிற்று, அதுவன்றோ சாதனம்!
அதாவது, ‘திருவயோத்யையினின்றும் குடி வாங்க நினைவு இல்லை’ என்கிற இது வன்றோ?

நற்பால் அயோத்தியில் –
நல்ல இடத்தை யுடைத்தான திருவயோத்தியில். பால் – இடம்.

‘பவித்ரம் பரமம் புண்யம் தேஸோயம் ஸர்வ காமதுக்’ என்பது, கருடபுராணம், 11.

‘மானத்து வண்ட லுழவோர் எழுத்தின் வடிவுற்றசீர்
மானத் துவண்ட வினையான ராயினு மால்வளர்வி
மானத் துவண்டல மாமரங் கம்வழி யாவரினும்
மானத்து வண்டமர் தாரண்ட ராம்பதம் வாய்க்குமங்கே.’என்பது, திருவரங்கத்தந்தாதி.

இதனால், ‘நில மிதியே இராம பத்தியை விளைக்கும்’ என்கை.
‘இந்தத் தேசமானது விரும்பினவற்றை எல்லாம் தரக் கூடியது’ என்கிறபடியே அன்றோ?
கைகேசியின் உறவினர்களுக்கு வேலைக்காரியும் எங்கேயோ பிறந்தவளும்’ என்கிறது அன்றோ?

‘ஜ்ஞாதி தாஸீயதோ ஜாதா கைகேய்யாஸ்து ஸஹோஷிதா
ப்ரஸாதம் சுந்த்ர ஸங்நாஸம் ஆருரோஹ யத்ருச்சாயா’என்பது, ஸ்ரீராமா. அயோத். 7 : 1

‘இதற்குக் கருத்து என்?’ என்னில்,
‘இந்த அயோத்தியிலே பிறந்தாளாகில் பெருமாளுக்கு விரோதம் செய்யாள் ஆகையாலே,
எங்கேனும் ஓரிடத்தே பிறந்தாள்- ஒரு விழுந்தான் கிடக்கை’ என்றது.
‘யத: குதஸ்சித்ஜாதா – யாதாம் ஓரிடத்தில் பிறந்தாள்’ என்று வியாக்கியானம் செய்தான் உடாலி.
‘இந்த நிலத்திற்பிறவாமை இவளுக்குக் கொடுமை விளைந்தது,’ என்கிறான் அன்றோ?

தேசந்தானே எல்லா நன்மைகளையும் பிறப்பிக்கவற்றாய் இருக்குங்காணும்.
இவ்வூரிலவர்கள் (கோயிலில் வாழும் வைஷ்ணவர்களை சொன்னவாறு )
மற்றையோரைப் போலே உண்டு உடுத்துத் தடித்து வார்த்தை சொல்லித் திரிந்து.
பெருமாளுக்கு வருவது ஒரு பிரயோஜனத்தோடு மாறுபட்டவாறே, சத்துரு சரீரம் போலே இருக்க,
சரீரங்களைப் பொகட்டுக் கொடு நிற்பார்கள். சத்துரு சரீரம் பொகட வேண்டுவது ஒன்றோ அன்றோ?

‘ராகவார்த்தே பராக்ராந்தா ந ப்ராணே குருதே தயாம்’-என்பது, ஸ்ரீராமா. யுத்.

‘இராகவனுக்காகச் சூழ்ந்து கொண்டிருக்கிற சேனையானது பிராணனிடத்தில் அருள் வைப்பது இல்லை,’ என்கிறபடியே
பிராணன்கள் பழைமையாலே பல் காட்ட, உடையவரும்(ஸ்வாமியான ராமனும் ) நீங்களும் ஒரு தலையானால்
உங்களைக் கைக் கொள்ளப் போமோ என்றார்களே அன்றோ?’ என்றபடி,
பழைமை பார்ப்பரோ, அவன் தானும் இவனைப் பற்ற ‘பிரணான்களை விட்டு’ என்னா நிற்க?
ஆர்த்தோவா யதிவா த்ருப்த: பரேஷாம் ஸரணாகத;
ஹரி; ப்ரணாந் பரித்யஜ்ய ரக்ஷிதவ்ய: க்ருகாத்மநா’என்பது, ஸ்ரீராமா. உத். 18 : 18.

அயோத்தியில் வாழும்-
வசிக்கும் என்னாமல் ‘வாழும்’ என்கிறது,
அத் தேச வாசமும் வாழ்வும் என்று இரண்டு இல்லாமையாலே;
‘வேங்கடத்தைப் பதியாக வாழ்வீர்காள்!’ என்றும்,
‘நல்லார்கள் வாழும் நளிர் அரங்கம்’நாய்ச்சியார் தி. 8 : 9., 11 : 5.என்றும், சொல்லுகிறபடியே,
‘அயோத்தியில் வாழும்’ என்கிறார்,

பிராப்பிய தேசத்தில் வசிப்பது தான் வாழ்ச்சியாக இருக்குமன்றோ?
நித்தியப் பிராப்பியமான பொருள் அன்றோ இங்கு எப்பொழுதும் அண்மையில் எழுந்தருளி யிருக்கிறது?
நமக்கு அனுபவம் ஒரு காலத்தில் உண்டாகிறது சரீரத்தின் சேர்க்கையால் (அசித் சம்சர்க்கத்தாலே)அன்றோ?
தர்மியில் ஐக்கியத்தாலே அங்குத்தைக்கு ஒரு குறை இல்லை அன்றோ?

நற்பாலுக்கு உய்த்தனன் –
நல்ல ஸ்வபாவத்தை யுடைத்தாம்படி செலுத்தினான். என்றது,
தன் சேர்க்கையாலே சுகத்தை யுடையவர்களாகவும்
தன் பிரிவாலே துக்கத்தை யுடையவர்களாகவும் செய்கையைத் தெரிவித்தபடி.

இவற்றினுடைய கர்மங்களின் தார தம்யத்தால் -ஏற்றத் தாழ்வுகளால் வரில் அன்றோ அவற்றிற்குத் தக்க அளவுகளாய் இருப்பன?
அவனாலே வந்தன ஆகையாலே எல்லார்க்கும் ஒக்க நன்மை விளைந்தபடி.
‘என்னால் நியமிக்கப்பட்டவராய் நீர் அந்த உத்தம உலகத்தை அடைவீர்,’ என்கிறபடியே,
அபராவர்த்திநாம் யாச யாச பூமிப்ரதாயிநாம்
மயா த்வம் ஸமநுஜ்ஞாதோ கச்ச லோகந் அநுந்தமாந்’-என்பது, ஸ்ரீராமா. ஆரண். 68 : 80.
இது, ஜடாயுவைப் பார்த்து ஸ்ரீராமபிரன் கூறியது.

இங்கு உண்டான பற்று அறுத்து ஒரு தேச விசேடத்து ஏறச் சென்று அனுபவிக்கும் அனுபவத்தைக் கொடுக்க வல்லவனுக்கு
இங்குத் தன்னை ஒழியச் செல்லாமை விளைக்கை பணியுடைத்து அன்றோ?

நான்முகனார் பெற்ற நாட்டுளே நற்பாலுக்கு உய்த்தனன் –
அரசன் தன்னுடையான் ஒருவனுக்கு ஒரு நாட்டைக் கொடுத்தால் அவனுடைய ஆணையும் ஆஜ்ஞையுமாக
அவனுடைய ஸ்வாதந்திரியமே நடக்கும்படி செய்து கொடுக்குமாறு போலே,
சம்சாரி சேதநர்க்குத் தலையான பிரமனுக்குக் கை யடைப்பான நாட்டுக்குள்ளே,
அவன் ஸ்வாதந்திரியத்தையும் தவிர்த்து,
இவற்றின் கர்ம பாரதந்திரியத்தையும் தன் குணத்தாலே பதஞ்செய்து,
தன்னைப் பெற்ற போது ஜீவிக்கும்படியாய்ப்
பெறாத போது உறாவும்படியான தன்மையை உண்டாக்கினான்.
ஆன பின்பு அவனை ஒழிய வேறேயும் சிலவற்றைக் கற்பரோ?

(கோயில் கந்தாடை ஆயன் -முதலிகள் சம்வாதம்
மூவரும் திருவரங்கம் திருக்கோயிலில் ரெங்க விலாஸ மண்டபத்தில் சேர்ந்து எழுந்து அருளி இருக்க காரணம்
பாவோ நான்யத்ர கச்சதி -திருவடி
அச்சவை பெறினும் வேண்டேன் -தொண்டர் அடிப்பொடி ஆழ்வார்
மற்று ஒன்றைக் காணாவே -திருப்பாண் ஆழ்வார் -என்றாராம் –
யத்ர நந்யத்ர பஸ்யதி –ஒன்றைக் கண்டால் வேறே ஒன்றைக் கானாவோ நினைக்காது பேசாதோ அதுவே -பூமா –
இவர்களுக்கு ராம அனுபவம் அரங்கன் அனுபவம் திருநாம சங்கீர்த்தனமே பூமா )

மூவுலகும் ஈரடியால் முறைநிரம்பா வகைமுடியத்
தாவிய சேவடி சேப்பத் தம்பியொடும் கான்போந்து
சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த
சேவகன்சீர் கேளாத செவிஎன்ன செவியே!
திருமால்சீர் கேளாத செவிஎன்ன செவியே!’-என்ற சிலப்பதிகாரம் (ஆய்ச்சியர் குரவை)

‘மடந்தாழும் நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்
கடந்தாளை நூற்றுவர்பால் நாற்றிசையும் போற்றத்
தொடர்ந்த ரணமுழங்கப் பஞ்சவர்க்குத் தூது
நடந்தாளை ஏத்தாத நாவென்ன நாவே!
நாராய ணாவென்னா நாவென்ன நாவே!’-என்பது, சிலப்பதிகாரம், ஆய்ச்சியர் குரவை.

——————————————————————————————–

நாட்டிற் பிறந்தவர் நாரணற்கு ஆளன்றி ஆவரோ?
நாட்டிற் பிறந்து படாதன பட்டு மனிசர்க்கா
நாட்டை நலியும் அரக்கரை நாடித் தடிந்திட்டு
நாட்டை அளித்து உய்யச் செய்து நடந்தமை கேட்டுமே.–7-5-2-

கீழ் சொன்னதுக்கு மேலே உத்தர யுத்தர பலிஷ்ட -அவதாரம் முடிந்த பின்பு செய்த செயலை விட -11000 ஆண்டு ரஷித்த ஸீலாதிசயம்-
ஸுசீல்யம் -திருவவதார குணம் பட்டர் -பரத்வாஜர் -சபரி வாசி இல்லாமல் கொடுத்ததை உண்டு –
நாட்டிற் பிறந்தவர் நாரணற்கு ஆளன்றி ஆவரோ?-அவர் வாசி அறியாத நாட்டில் -ஆஸ்ரிதர் -அர்த்தித்தார் ரக்ஷணார்த்தமாக-கர்ம வஸ்யர் பிறக்குமா போலே
நாட்டிற் பிறந்து படாதன பட்டு மனிசர்க்கா-ராஜ்ய நஷ்ட -காட்டுக்கு சென்று -சீதை -இழந்து ஜடாயு இழந்து -மனுஷர்கள் படாதனவாம் தாம் பட்டு –
பின்பு பழி சொல்லும் நாட்டார்
நாட்டை நலியும் அரக்கரை நாடித் தடிந்திட்டு-ராவணனாதிகளை முடித்து -தச வருஷ சகஸ்ராணி சதவருஷ 11000 வருஷங்கள்
நாட்டை அளித்து உய்யச் செய்து நடந்தமை கேட்டுமே.-ரக்ஷித்து-அகால மரணம் நேராதபடி உஜ்ஜீவித்து -சம்பூகன் முடித்து
பிள்ளை -பிழைப்பித்த -மன்னன் குற்றம் -புஷ்பக விமானம் ஏறி நாட்டுக்குள் சென்று தப்பைக் கண்டு பிடிக்க கோதண்டம் கொண்டு தனித்து
தோலாத தனி வீரன் -தெற்குத் திக்கில் இரவில் வரண தர்மம் சேராத தபஸ் பண்ணி பகவத் அபசாரம் செய்து -இதனால் அகால மரணம்
அவன் தலை சீவ பிள்ளை உயிர் பெற்றான் செரித்தவ செம்புகன் தன்னை சென்று கொண்டு -உத்தர காண்டம் சரித்திரம் –
அப்ராக்ருத திவ்ய மேனி கொண்டு -பவான் நாராயணோ தேவதோ -பெருமாள் தானே நாராயணன் –
அடிமை ஆவது -சத்தா நிபந்தம் குண நிபந்தம் இரண்டாலும் சேஷ வ்ருத்தி பண்ண வேண்டுமே –
ரக்ஷணத்தையும் முதலில் சொல்லில் இப் பாட்டில் புருஷார்த்த பிரதத்வம் -கைங்கர்யம் தானே புருஷார்த்தம் –
நாரணற்கு ஆள் -அடிமைத் திறம் -அருளிச் செய்கிறார்

‘இந்த உலகத்திலே பிறந்து மக்கள் படாத துன்பத்தை எல்லாம் தான் பட்டு, மனிதர்களுக்காக, நாட்டினை வருத்துகின்ற அரக்கர்களைத் தேடிச் சென்று
கொன்றிட்டு நாட்டைப் பாதுகாத்து அகால மரணம் உண்டாகதபடி வாழச் செய்து தன்னுடைச் சோதிக்கு எழுந்தருளின பிரகாரத்தை ஸ்ரீராமாயண முகத்தாலே
கேட்டிருந்தும், இந்த உலகத்திலே பிறந்தவர்கள் ஸ்ரீஇராமபிரானுக்கு ஆள் ஆவரே அன்றி வேறு ஒருவர்க்கு அடிமை ஆவரோ?’ என்கிறார்.

‘மடந்தாழும் நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்
கடந்தாளை நூற்றுவர் பால் நாற்றிசையும் போற்றத்
தொடர்ந்தரண முழங்கப் பஞ்சவர்க்குத் தூது
நடந்தாளை ஏத்தாத நாவென்ன நாவே!
நாராயணா வென்னா நாவென்ன நாவே!’-என்பது, சிலப்பதிகாரம், ஆய்ச்சியர் குரவை.
‘பிறந்து பட்டு நாடித் தடிந்திட்டு அளித்து உய்யச் செய்து நடந்தமை கேட்டும் நாரணற்கு ஆள் அன்றி ஆவரோ?’ என்க.

‘மேல் பாசுரங்களில் சொல்லப் புகுகிற குணங்களை நோக்க, முதற்பாசுரத்திற் சொன்ன குணம் குண ஹாநி’ என்னும்படி
மேலே யுள்ள பாசுரங்கள் குணாதிக்கியம் சொல்லுகின்றன’, என்று அருளிச் செய்வர்.

நாட்டிற்பிறந்தவர் –
இப் பாசுரத்தில், ‘திருவயோத்தியிலுள்ளாரை இராம குணங்களையே தாரகராம்படி செய்த அளவையோ,
நாட்டிலுள்ளாருடைய விரோதிகளைப் போக்கிக் காப்பாற்றும் விதம் உயர்ந்தது இல்லையோ?’ என்கிறார்.

நாட்டிற்பிறந்தவர் –
‘நாட்டிற் பிறவாதார் இலரே அன்றோ? ஆயின், ‘நாட்டிற்பிறந்தவர்’ என்றதற்குப் பொருள் தான் யாதோ?’ எனின்,
இராம குணங்கள் நடையாடும் இடத்திலே பிறந்தவர்கள் என்கிறது.
பெருமாளுடைய எல்லை இல்லாத இடம் இல்லை அன்றோ?
‘மலைகளும் வனங்களும் காடுகளும் ஆகிய இவற்றோடு கூடிய இந்தப் பூமி இட்சுவாகு குலத்து அரசர்களைச் சேர்ந்தது.’ என்கிறபடியே.
இக்ஷ்வாகூணாம் இயம்பூமி; ஸஸைலவநநாநநா
ம்ருக பக்ஷி மநுஷ்யாணாம் நிக்ரஹ ப்ரக்ரஹாவபி’-என்பது, ஸ்ரீராமா. கிஷ். 18 : 6. இது வாலியைப் பார்த்து ஸ்ரீராமபிரான் கூறியது.

‘விதிக:ஸஹி தர்மஜ்ஞ:- ‘இராவணா!! பெருமாளுடைய குணங்கள் கேட்டு அறியாயோ?’ என்றாள் அன்றோ?
விகித: ஸஹி தர்மஜ்ஞ: ஸரணாகத வத்ஸல:’ என்பது, ஸ்ரீராமா. சுந். 21 : 20. இஃது இராவணனைப் பார்த்துப் பிராட்டி கூறியது.

அந்தக் குணங்கள் நடையாடாதது ஓரிடம் உண்டானால் அன்றோ, அவ்விடம் இவர் எல்லை அன்றிக்கே இருப்பது?
நாட்டில் பிறக்கையாவது, அவருடைய எல்லைக்குள்ளே பிறந்து, அவர் தோள் நிழலிலே வாழ்தல்.

நாரணற்கு ஆள் அன்றி ஆவரோ –
‘பெருமாளுக்கு ஆள் அன்றி ஆவரோ?’ என்றபடி.
பிரமன் முதலான தேவர்களும், ‘நீவிர் நாராயணரான தேவர் ஆவீர்’ என்றார்களே அன்றோ?
‘பவாந் நாராயணோ தேவ; ஸ்ரீமான் சக்ராயுதோ விபு:-என்பது, ஸ்ரீராமா. யுத். 120 : 13.

‘ஒருவன் சோற்றை உண்டவர்கள் அவனை ஒழிய வேறு ஒருவர்க்குக் காரியம் செய்வார்களோ?’ என்னுமாறு போலே.

நாரணற்கு –
வரையாதே எல்லாரோடும் பொருந்துகையும்,
அடியார்களுக்காகத் தன்னை ஆக்கி வைக்கயும்,
அவர்களுக்காத் தன் மார்பில் அம்பு ஏற்கையும்,
அவர்கள் விரோதிகளைப் போக்குவதையும்,
அடியார்கட்கு வத்சலனாய் இருக்கையும்,
அவர்கள் தோஷத்தைப் பார்த்து விட்டுப் போக மாட்டாமையும் ஆகிய இவை
எல்லாவற்றாலும் பெருமாளை‘நாராயணன்’ என்னத் தட்டு இல்லை அன்றோ?

ஆள் அன்றி ஆவரோ –
மேற்பாசுரத்திலே ‘கற்பரோ?’ என்றது;
இங்கே,‘ஆள் இன்றி அவரோ’ என்கிறது;
‘கல்வியினுடைய பலம் ஆள் ஆகை’ என்றபடி.

பிறந்தவர் ஆள் அன்றி ஆவரோ –
‘நீ காட்டில் வசிப்பதற்காகவே தோற்றுவிக்கப்பட்டாய்’ என்னுமாறு போலே
‘ஸ்ருஷ்ட ஸ்தவம் வநவாஸாய’
என்பது, ஸ்ரீராமா. அயோத். 40 : 5. இஃது இளைய பெருமாளைப் பார்த்துச் சுமத்திரா தேவி கூறியது.

பிறந்தவர் பிறவியின் பலத்தை இழப்பரோ?’ என்றபடி. -ஜெனித்தவர் ஜன்ப பலன் இன்றி இருப்பாரோ –
வகுத்த துறையிலே பாரதந்திரியமாகையாலே வாசி அறிந்த இவர்களுக்கு உத்தேசியமாகத் தோற்றுமன்றோ?
வகுத்தது அல்லாத துறைகளில் பண்ணின வாசனையாலே ‘இது புருஷார்த்தமோ?’ என்று தோற்றுகிறது.
சர்வம் பரவசம் துக்கம் -லௌகிக அபிராப்த விஷயத்தில் -வகுத்த துறையில் பாரதந்தர்யம் -பிராப்தன்-இயல்பே

நாட்டிற்பிறந்து –
சம்சார சம்பந்தம் சிறிதும் இல்லாதவனாயிருக்கிறவன், கர்மங்கட்குக் கட்டுப்பட்டுவர்களுங்கூட அருவருக்கும் தேசத்திலே பிறந்து.
‘செருக்கனான இராவணனுடைய வதத்தைப் பிரார்த்திக்கிற தேவர்களால் பிரார்த்திக்கப்பட்டவரும்
நித்தியருமான விஷ்ணு மனித உலகத்திலே அவதரித்தார்; இது பிரசித்தம்’ என்கிறபடியே.

‘ஸஹிதேவை: உதீர்ணஸ்ய ராவணஸ்ய வதார்த்திபி;
அர்த்திதோ மாநுஷே லோகே ஜஜ்ஞே விஷ்ணு: ஸநாதந;’-என்பது, ஸ்ரீராமா அயோத். 1 : 7

ஸ:-ஜஞே ஹி –
‘கர்மங் காரணமான பிறவி இல்லை’ என்று பிரமாண பிரசித்தனானவன் கண்டீர்
கர்மங்கட்குக் கட்டுப்பட்டவர்கட்கும் இவ்வருகாய் வந்து பிறந்தான்’ என்றபடி.

‘இப்படிப் பிறப்பதற்குக் காரணம் என்?’ என்னில்,
‘அர்த்தித:’ என்கிறது, அவர்கள் இரந்ததற்காக என்றபடி.
இரப்பு தான் இச்சையும் பிறப்பிக்குமே அன்றோ? ‘இச்சையாலே மேற்கொள்ளப்பட்டது’ அன்றோ?

‘இச்சா க்ருஹீத அபிமதோருதேஹ;
ஸம்ஸாதிக அஸேஷ ஜகத்தித: ய;’-என்பது, ஸ்ரீவிஷ்ணு புரா. 6. 5 : 84.

தேவை:-
தங்கள் காரியத்துக்காக இரந்து பிறக்கச் செய்து காரியம் தலைக் காட்டினவாறே எதிரிட்டு
‘ஈஸ்வரோஹம்’ என்று இருப்பார்க்ககாக் கண்டீர்,
‘நீள் நகர் நீள் எரி வைத்தருளாய்’ திருவிருத். 92.என்பார்கள். என்றது,
‘இலங்கையை சுட்டுத் தர வேணும்,’ என்பர்கள் என்றபடி.

உதீர்ணஸ்ய ராவணஸ்ய –
அச்சத்தை உண்டாக்குகின்றவனான பையல், தானே வர பலத்தாலே அழியச் செய்யவேண்டும்படி விஞ்சினவாறு.

வத அர்த்திபி:-
தாங்கள் பட்ட நலிவாலே திருவுள்ளத்துக்குப் பொருந்தாதனவற்றையும் விண்ணப்பம் செய்தார்கள்.
‘ஒருவனை அழியச் செய்ய ஒரு நாடாகப் பிழைக்குமாதில் ஆகாதோ?’ என்று அழியச் செய்தானைத்தனை.
அர்த்தித:- தன்னுடையச் சோதிக்கு எழுந்தருளுந்தனையும் திருவுள்ளத்திற் பட்டுக் கிடந்து இதுவே
அர்த்தித:– உபாசித்தவர் அல்லர்.

மாநுஷே லோகே விஷ்ணு: ஸநாதந;-
‘உண்டு பண்ணப்பட்ட தேவர்கள், மனித வாசனைக்கு வாந்தி பண்ணிப் பூமியில் இழிய அருவருத்து,
ஒன்றரை யோசனைக்கு அவ்வருகே தின்று ஹவிஸ்ஸினைக் கொள்ளுவார்கள்;
அவர்கள் மனிதத் தானத்திலே யாம்படியான பொருள் கண்டீர் இங்கே வந்து பிறந்தது,’ என்கிறார்.
மனிசர்க்குத் தேவர் போலத் தேவர்க்கும் தேவன் அன்றோ?திருவாய். 8. 1 : 5.-

ஜஜ்ஞே–
தோன்றிய மாத்திரமன்று; நாட்டார் பத்து மாதங்கள் கர்ப்ப வாசம் அனுபவிக்கில் பன்னிரண்டு மாதங்கள்
அன்றோ இவன் அனுபவித்தது?’ பின்னர்ப் பன்னிரண்டாவது மாதமான சித்தரை மாதத்தில்’ என்பது ஸ்ரீராமாயணம்.
‘ததஸ்ச த்வாதஸே மாஸே சைத்ரே நாவமிகே திதௌ’-என்பது, ஸ்ரீராமா. பால. 18 : 10.
பன்னிரு மாதம் மணி வயிறு வாய்த்தவனே
‘நான் உன்னுடைய உதரத்தினின்றும் உண்டானேன்’ என்பது ஸ்ரீவிஷ்ணு புராணம்.
‘ஜாதோஹம் யத்தவோதராத்’-என்பது, ஸ்ரீவிஷ்ணு புரா. 5. 3 : 14.

நாட்டிற் பிறந்து படாதன பட்டு மனிசர்க்கா –
கர்மங்கட்குக் கட்டுப்படாத தான் கர்மங்கட்குக் கட்டப்பட்டவர்களோடே ஓரினனாய் நாட்டிலே வந்து பிறந்து,
அவர்கள் படும் துக்கத்துக்கு அளவன்றிக்கே,
கடலுக்கு அக்கரையிலே உயிரும் இக்கரையிலே உடலுமாம்படியான ஜானகியின் பிரிவு என்ன,
பெரிய வுடையார் சாக்காடு என்ன, இந்த விதமான துக்கங்களையும் பட்டு,
அதற்கு மேலே,
செய்ந்நன்றி அறியாத மனிதர்கட்காக.

நாட்டை நலியும் அரக்கரை நாடித் தடிந்திட்டு நாட்டை அளித்து உய்யச் செய்து –
யாதொரு குற்றமும் இல்லாத நாட்டினை நலிகிற இராவணன் முதலான கண்டகரை,
‘பொருந்தார் கை வேல் நுதி போல் பரல் பாய மெல்லடிகள் குருதி சோர விரும்பாத கான் விரும்பி,
‘எவ்வாறு நடந்தனை எம்மிராமாவோ!’ பெருமாள் திருமொழி, 9 : 5.- 2-என்கிறபடியே.
அவர்கள் இருந்த இடங்களிலே தேடிச் சென்று கொன்று,
இலங்கையின் வாசலிலே வீர லக்ஷ்மியோடு கூடினவராய்க்கொண்டு எழுந்தருளி நிற்க,

அவ்வளவிலே பிரமன் முதலான தேவர்கள் வந்து.
‘தருமத்தைத் தாங்குகிறவர்களுக்குள் சிறந்தவரே! எங்களுடைய இந்தக் காரியம் தேவரீரால் செய்யப்பட்டது;
இராமரே! இராவணன் கொல்லப்பட்டான்; மகிழ்ச்சியுடையவராய் வைகுண்டத்திற்குச் செல்லும்’ என்கிறபடியே,

‘ததிதம் ந: க்ருதம் கார்யம் த்வயா தர்மப்ருதாம்வர
நிஹதோ ராவணோ ராம ப்ரஹ்ருஷ்சடா திவமாக்ரம’-என்பது, ஸ்ரீராமா. யுத். 120 : 29.
‘நாங்கள் வேண்டியவை அடைய எங்கள் அளவு பாராதே தேவர் செய்தருளிற்று,
இனி, தன்னுடைச்சோதி ஏற எழுந்தருள அமையும்’ என்ன,

அவ்வளவிலே சிவன், ‘நாடு அடையத் தேவரீருடைய பிரிவினாலே அழிந்ததைப் போன்று கிடக்கின்றது;
திருத்தாய்மாரையும் திருத்தம்பிமாரையும் திருப்படை வீட்டிலுள்ள சனங்களையும், மீண்டு புக்குச் சில நாள்
எழுந்தருளியிருந்து ஈரக்கையாலே தடவிப் பாதுகாத்து எழுந்தருள வேணும்,’ என்ன,
‘கடல் ஞாலத்து அளி மிக்கான்’ திருவாய்.. 4. 8 : 5.என்னும்படியே, பதினோராயிரம் ஆண்டு எழுந்தருளியிருந்து
பாதுகாத்த படியைச் சொல்லுகிறது ‘நாட்டை அளித்து’ என்று.
இதற்காக அன்றோ முக் கண்ணனை, ‘ஷடர்த்தநயந: ஸ்ரீமாந் – முக்கண்ணனான ஸ்ரீமாந்’ என்றது?

‘ஷடர்த்த நயந: ஸ்ரீமந் மஹாதேவோ வ்ருஷத்வஜ;’-என்பது, ஸ்ரீராமா. யுத். 120 : 3.
இல்லையாகில், பிக்ஷூகனை ‘ஸ்ரீமாந்’ என்ன விரகு இல்லை அன்றோ?

உய்யச் செய்து
நெடுநாள் இருந்து தன்னால் அல்லது செல்லாதபடி செய்து, இட்டு வைத்துப் போகாதே கூடக் கொடு போய்
உஜ்ஜீவிப்பித்தபடியைச் சொல்லுகிறது‘உய்யச் செய்து’ என்று.

நடந்தமை கேட்டுமே –
‘விலங்கினங்கள் அனைத்தும் இராமனைப் பின் தொடர்ந்தன’ என்கிறபடியே,
‘திர்யக்யோகிநிகதாஸ்சாபி ஸர்வே ராமம் அநுவ்ரதா:’என்பது, ஸ்ரீராமா. உத்தர காண். 109 : 22.

தன்னுடனே கூடக் கொடுபோய் வைத்தான்’ என்று ஐயப்பட்ட வேண்டாதபடி அருளிச் செய்து வைத்தாரே அன்றோ ஆழ்வார்,
‘அன்று சராசரங்களை வைகுந்தத்து ஏற்றி, பெருமாள் திருமொழி. 10 : 10.- என்று பரமபதத்தே கொடு போனமையை?

நடந்தமை கேட்டும் –
கொடு சென்ற இந்தச் செயலைக் கேட்டும் என்றது, பசித்தார் இளைத்தாரைப் பார்த்துக் கொடு போகையைத் தெரிவித்தபடி.
தாமரைக் கண்ணனுடைய திருநாம சங்கீர்த்தன அமிருதமே அன்றோ பாதேயம்?
‘புண்டரீகாக்ஷனே! உனக்குத் தோற்றோம்’ என்றுகொடு போலே காணும் போவது.
‘இராமர் தாமரை மலர் போன்ற கண்களை யுடையவர்’ என்னப்படுவதன்றோ?
‘பாதேயம் புண்டரீகாக்ஷ நாம ஸங்கீர்த்தநாம்ருதம்’என்பது, ஜிதந்தா.
‘ராம: கமல பத்ராக்ஷ: ஸர்வ ஸத்வ மநோஹர: ரூப தாக்ஷிண்ய ஸம்பந்ந: ப்ரஸூதோ ஜநகாத்மஜே’–என்பது,
ஸ்ரீராமா. சுந். 35 : 8. இது பிராட்டியைப் பார்த்துத் திருவடி கூறியது.

‘அண்ணல்தன் திருமுகம் கமல மாமெனின்
கண்ணினுக் கவமைவேறு யாது காட்டுகேன்!
தண்மதி யாமென வுரைக்கத் தக்கதோ!
வெண்மதி பொலிந்தது மெலிந்து தேயுமால்.’-என்பது கம்பராமாயணம்.

‘மூவுலகும் ஈரடியால் முறைநிரம்பா வகைமுடியத்
தாவியசே வடிசேப்பத் தம்பியொடுங் கான்போந்து
சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த
சேவகன்சீர் கேளாத செவிஎன்ன செவியே!
திருமால்சீர் கேளாத செவிஎன்ன செவியே!’-என்பது, சிலப்பதிகாரம், ஆய்ச்சியர் குரவை.

சப்தம் போன்ற விஷயங்களில் பிரவணராய் சர்வேஸ்வரன் என்ற தத்வம் உண்டு என்று கேட்டார் வாய் கேட்டு இருந்து
தான் வந்து அவதரித்து
அழகு குணங்களால் வசீகரித்து
தன்னால் அல்லால் செல்லாமை -பிறப்பித்து பின்பு
பொகட்டுப் போவது படு கொலை போலே –
இதில் ஸ்ரீ வைகுந்தம் -தன்னுடன் கூட கொடு போய் ரஷித்த குணத்துக்கு ஆள் ஆகாமல் இருப்பாரோ –

—————————————————————————————————–

‘கேட்பார்கள் கேசவன் கீர்த்தி யல்லால் மற்றுங் கேட்பரோ?
கேட்பார் செவி சுடு கீழ்மை வசவுகளே வையும்
சேட்பாற் பழம் பகைவன் சிசு பாலன் திருவடி
தாட்பால் அடைந்த தன்மை அறிவாரை அறிந்துமே .–7-5-3-

அநிஷ்ட நிரசித்து ரஷித்த அளவு அன்றிக்கே அநிஷ்டம் காரியான சிசுபாலனுக்கே மோக்ஷம் அளித்த குணாதிக்யம்
குண ஹானி கேட்க வேண்டும் என்பாருக்கும் -பகவான் நிந்தனத்துக்கு வைப்பு நிதி வைத்து சொல்லி –
கேட்பார் செவி சுடு கீழ்மை வசவுகளே வையும்-அக்னி கல்பம் போலே -கீழ்மை கொடுக்கும் கடுமையான பாஷாணங்கள்
சேட்பாற் பழம் பகைவன் சிசு பாலன் திருவடி-ஹிரண்ய ராவண சிசுபாலன் -மூன்றும் -ஜென்ம ஜென்ம பகைமை –
தூர கால பழைமை -நிருபாதிக ஸ்வாமி கண்ணன் திருவடி -நானும் உனக்கு பழ அடியேன் என்ற பேறு அன்றோ பெற்றான் –
தாட்பால் அடைந்த தன்மை அறிவாரை அறிந்துமே-சாயுஜ்யம் அடைந்து -அசாதாரண தன்மை அறிந்தும் -தன்மை அறிவாரை அறிந்தும்
‘கேட்பார்கள் கேசவன் கீர்த்தி யல்லால் மற்றுங் கேட்பரோ?-
தங்களுக்கு ஜீவனமாக கேட்க வேண்டி இருப்பார்கள் –பிரதிபவ அபராத்தா வுக்கு- மோக்ஷ பிரதான-கீர்த்தி- இந்த விருத்தாந்தம் –
வேறு ஒன்றைக் கேட்பரோ -ஒரு படி இறக்கி -இங்கு -ஸ்ரவணம் பண்ணுவார் -இருந்தால் சொல்வார் வேண்டுமே –
தன்மை அறிவாரை -சப்தம் -ஆச்சார்ய சிஷ்ய முறைமை காட்டி அருளுகிறார் இதில்
மற்றும் -இங்கு பெருமாள் -கிருஷ்ண த்ருஷ்ணா -விலக்காத வர்களுக்கு மோக்ஷம் கொடுத்த வியக்த்யந்தரம் அன்றோ அவர்
விலக்காத புல்லுக்கும் எறும்புக்கு கொடுத்தார் ராமர்
விலக்கிய சிசுபாலனுக்கு அன்றோ கண்ணன் கொடுத்தான்

‘பகைவனைப் பற்றிய நிந்தை மொழிகளைக் கேட்க வேண்டும் என்னும் விருப்பமுள்ளவர்களுடைய செவிகளையும் சுடக்கூடிய தாழ்ந்த
வகைச் சொற்களையே பேசிய, பல காலமாக வருகின்ற பழம்பகைவனான சிசுபாலன், கண்ணபிரானுடைய திருவடிகளை அடைந்த
தன்மையை அறிவாரான ஞானிகளை அறிந்து வைத்திருந்தும் தாங்கள் உய்வதற்குரிய வழியைக் கேட்கவேண்டும் என்று இருப்பவர்கள்
கேசவனுடைய கீர்த்தியை அல்லாமல் வேறு சிலவற்றையும் கேட்பாரோ?’ என்கிறார்.
‘தன்மை அறிவாரை அறிந்தும், கேட்பார்கள் கேசவன் கீர்த்தி அல்லால் மற்றும் கேட்பரோ?’ என்க.

‘சிசுபாலனையும் உட்படத் தன் திருவடிகளிலே சேர்த்துக் கொண்ட மேலான கிருபையை அறிந்தவர்கள்,
கேசியைக் கொன்ற கிருஷ்ணனுடைய கீர்த்தியை ஒழிய வேறு ஒன்றனைக் கேட்பாரோ?’ என்கிறார்.

கேட்பார்கள் –
மேலே ‘கற்பரோ’ என்றது; அதாவது,
முதல் நடு இறுதி தன் நெஞ்சிலே ஊற்றிருக்குபடி வாசனை பண்ணுகை யாயிற்று;
இனி கேட்கையாவது,
கற்றுக் கேட்டுத் தெளிந்திருப்பான் ஒருவன் ஒரு பொருளை விரித்துப் பேசினால்,
அதனைப் புத்தி பண்ணி நம்பி யிருத்தல்.
நடுவிருந்த நான்கு நாள்களும் தன் நெஞ்சு தெளிவு பிறந்தது இல்லையே யாகிலும்
விழுக் காட்டில் இருவர்க்கும் பலம் -ஒத்திருக்கக் கடவது.

கற்றிலனாயினும் கேட்க; அஃதொருவற்கு ஒற்கத்தின் ஊற்றாந் துணை.’-என்பது, திருக்குறள்

கற்றிலன் ஆகிலும் கேட்க வேண்டுவது உண்டே அன்றோ?
கற்றுத் தெளியக் கண்ட பொருளைக் கேட்டு நம்பியிருத்தல்.
கல்லாதவனுக்கு ஸ்ரவண அதிகாரம் உண்டோ -கற்றுத் தெளிந்தவர் ஆழ்வார் -கேட்டு மதுர கவி ஆழ்வார் –
கற்றுத் தெளிந்து எம்பெருமானார் -கேட்டு நம் போல்வார்
திரிபுரா தேவியார் உடையவர் காட்டும் பர தேவதை நம்புவேன்
சந்தேகம் வரலாம் — நம்பிக்கை இல்லாமல் போக கூடாது –

கல்வியும் அதன் பலத்தின் உருவமான கைங்கரியமும் சேரப் பெற்றிலன் ஆகிலும், ஆசாரியன் பக்கலிலே
ஓர் அர்த்தத்தைக் கேட்ட மாத்திரமாய் இருந்தாலும் தனக்கு ஓர் ஆபத்திலே உதவுகைக்கு ஒரு குறை இல்லை.

இனி, தன்னிழவு,
பிறர்க்குச் சொல்லச் சத்தி இல்லாமையும்,
தன் நெஞ்சு தெளியாமையால் வருவதுவுமே அன்றோ உள்ளது?

கேட்பார்கள் – செவியில் தொளை யுடையவர்கள். பகவத் குணங்களைக் கேட்கை அன்றோ செவிக்குப் பிரயோஜனம்?
‘கேளாச் செவிகள் செவி அல்ல கேட்டாமே’ என்னா நின்றதே அன்றோ?

‘நீள் வான் குறளுருவாய் நின்றிரந்து மாவலி மண்
தாளால் அளவிட்ட தக்கணைக்கு மிக்கானைத்
தோளா மணியைத் தொண்டர்க் கினியானைத்
கேளாச் செவிகள் செவியல்ல கேட்டாமே.’-என்பது, பெரிய திருமொழி.

கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி.’-என்பது, திருக்குறள்.

எறும்பு வளையைப் போன்றதே அன்றோ?

தவப்பொழி மாரி காப்பத் தடவரைக் கவிகை அன்று
கவித்தவன் கோயில் செல்லாக் கால்மரத் தியன்ற காலே;
உவப்பினின் அமுத மூறி ஒழுகுமால் சரிதங் கேளாச்
செவித்தொளை நச்சு நாகம் செறிவதோர் தொளைமற் றாமல்.’-என்பது, பாகவதம்,
சௌனகாதியர் அன்பினாலை உரைத்த அத்தியாயம்.

கேசவன் கீர்த்தி அல்லால் –
பகைவர்களை அழிக்குந் தன்மையனான ஸ்ரீ கிருஷ்ணன் கீர்த்தி அல்லது வேறே சிலவற்றைக் கேட்பரோ?
பருவம் நிரம்பிக் கற்ற பின்பு அன்று விரோதிகளைப் போக்கியது;
பூதனை தொடக்கமான விரோதிகளைத் தொட்டிற் பருவத்தே அன்றோ போக்கியது?
விரோதிகளை அழிப்பது தான் அறிந்ததனால் அன்று; பொருளின் உண்மையாலேயே பாதகமாய் இருக்கிறபடி.
நஞ்சு கொல்லுவது அறிவு உண்டாய் அன்றே?

‘நன்றாகத் திறந்து வாயை யுடைவனும் மஹா பயங்கரமானவனுமான அந்தக் கேசி என்னும் அசுரன்
இடியேறு உண்ட மரம் போன்று கிருஷ்ணனுடைய திருக் கரத்தால் இரண்டாகச் செய்யப்பட்டவனாய்க் கீழே விழுந்தான்,’ என்கிறபடியே
,‘வ்யாதிதாஸ்ய: மஹா ரௌத்ர: ஸ. அஸூர: க்ருஷ்ண பாஹூநா
நிபபாத த்விதாபூத: வைத்யுதேந யதா த்ரும:’-என்பது, ஸ்ரீவிஷ்ணு புரா. 5. 16 : 14.

இந்த ஸ்லோகத்தில், பாஹூப்யாம் என்னாமல்
‘பாஹூநா’ என்றதற்கும்,
‘த்விதாபூத;’ என்றதற்கும் கருத்து அருளிச் செய்கிறார்,

கேசியானவன் வாயை அங்காந்து கொண்டு கண்டார் எல்லாரும் நடுங்கும்படி வந்து தோற்ற,
இளைஞராய் இருப்பார் துவாரம் கண்ட இடத்தே கை நீட்டக் கடவர்களாய் இருப்பார்கள் அன்றோ?
அந்த வாசனையாலே இவன் வாய்க்குள்ளே கையை நீட்ட, புதிதான அனுபவத்தால் கை விம்ம வளர்ந்து கொடுத்தது;
அப்போதோ இடியேறு உண்ட மரம் போலே இரு பிளவாய் விழுந்தான்.

மற்றுங்கேட்பரோ –
மேலே கூறிய இராமனுடைய சரிதையைத் தான் கேட்பரோ?
இவர் ஸ்வபாவம் இருந்தபடி என்? இராம பிரானை அல்லால் மற்றும் கற்பரோ?’ என்றார் மேல்;
இங்கே, ‘கேசவன் கீர்த்தி அல்லால் மற்றும் கேட்பரோ?’ என்னா நின்றார்;
‘இது தனக்கு அடி என்? என்னில்,

அந்த அவதாரத்தினை நினைத்த போது ‘தயரதற்கு மகன் தன்னை அன்றி மற்றிலேன் தஞ்சமாக’ திருவாய். 3. 6 : 8.-என்பர்;
இந்த அவதாரத்தை நினைத்த போது ‘நம் கண்ணன் கண் அல்லது இல்லை ஓர் கண்ணே’ திருவாய். 2. 2 : 1.-என்பர்;
இப்படி இழிந்த துறைகள் தோறும் அழுந்த வல்லார் ஒருவர் அன்றோ?
ஒவ்வொரு குணத்தை அனுபவிக்கப் புக்கால் வேறு குணங்களில் கால் வாங்க மாட்டாதவாறு போலே ஆயிற்று,
ஒவ்வோர் அவதாரத்தில் இழிந்தால் மற்றை அவதாரங்களில் போக மாட்டாமையும்.

கேட்பார் செவி சுடு கீழ்மை வசவுகளை வையும் –
இங்குக் ‘கேட்பார்’ என்றார், மேலே ‘கேட்பார்’ என்றது போன்று அன்று;
கீழ்மை வசவுகளையே கேட்பாரைக் குறித்தது இங்கு.
பகவானுடைய நிந்தைக்கு ஜீவனம் வைத்துக் கேட்கும் தண்ணியவர்களுங்கூடப் பொறுக்க மாட்டாமை செவி புதைத்து,
‘இத்தனை அதிரச் சொன்னாய், இப்படிச் சொல்லப் பெறாய் காண்’ என்று சொல்லும்படியான வசவுகளையே வைதல்.
‘அநுகூலராய் இருப்பார்க்கு உடலின் சேர்க்கையாலே தம்மை அறியாமலும் ஒரு தீச் செயல் விளையும் அன்றோ?
அப்படியே இவனுக்கும் தன்னை அறியாமலே ஒரு நல் வார்த்தையும் கலசுமோ?’ என்னில்,
‘அதுவும் இல்லை’ என்பார், ‘வசவுகளே வையும்’ என்கிறார்.
அதற்கு அடி சொல்லுகிறார் மேல்:

சேண் பால் பழம் பகைவன் –
‘மிகவும் ஜன்மப் பகைவன்’ என்றபடி;
இந்தப் பிறவியே அன்றிக்கே முற் பிறவிகளிலும் பகைவனாய்ப் போருகிறான் அன்றோ? என்றது,
‘இவன் ஒவ்வொரு பிறவியிலும் செய்த பகைச் செயல்களுக்கு ஓர் அளவு இல்லை அன்றோ?’ என்றபடி.
இப்படிப்பட்ட பிறவிகள் தாம் பல. அந்த அந்தப் பிறவிகளில் உண்டான காலத்தின் மிகுதியும், செய்த பகைச் செயலின் மிகுதியும்,
இவை எல்லாவற்றையும் நினைக்கிறது, பகையினுடைய பழமையாலே.
இதனால், ‘நினைவு இல்லாமலே சொல்லிலும் வாசனையாலே தப்பாது,’ என்கை.
அன்று ஈன்ற கன்று அப்போதே தாய் முலையிலே வாய் வைக்கும்: அது அந்தப் பிறவியின் வாசனை கொண்டு அன்றே?
இவனுக்கும் இப் பிறவியிலே பகவானை நிந்தை செய்வதற்குக் காரணம் முற்பிறவிகளின் வாசனை அன்றோ?

‘பவ்லாவுள் உய்த்து விடினும் குழக்கன்று
வல்லதாம் தாய்நாடிக் கோடலை;-தொல்லைப்
பழவினையும் அன்ன தகைத்தரோ தற்செய்
கிழவினை நாடிக் கொளற்கு.’-என்பது, நாலடியார்.

திருவடி தாள் பால் அடைந்த-
எல்லாப் பொருளுக்கும் ஸ்வாமி கிருஷ்ணனுடைய திருவடிகளின் பக்கத்தைக் கிட்டின.
சாயுஜ்ய வக்ஷண மோக்ஷமாகிறது தான் இன்னது என்கிறது. என்றது,
இடையீடு இன்றிக்கே கிட்டி நின்று நித்திய கைங்கரியம் செய்யப் பெறுதல் என்பதனைத் தெரிவித்தபடி.

‘பரம் பொருளை அறிந்தவன் பரம் பொருள் போன்று ஆகிறான்,’ என்றும், மேலான ஒப்புமையைப் பெறுகின்றான்’

‘பரமம் ஸாம்யம் உபைதி’ என்பது, முண்டகோபநிடதம், 3. 1 : 3.

‘பிரஹ்ம வேத ப்ரஹ்மைவ பவதி’ என்பது, முண்டகோபநிடதம், 3 : 2.

‘ப்ரஹ்மைவ’ என்றவிடத்தில் ஏவகாரம், ‘விஷ்ணுரேவ பூத்வா’ என்ற
இடத்திற்போன்று, ‘ஸாம்யம் உபைதி’ என்பது போன்ற வசனங்கட்குத் தகுதியாக,
‘இவ’ என்ற சொல்லின் பொருளைக் காட்டுகிறது.

‘தம்மையே ஒக்க அருள் செய்வர்’ பெரிய திருமொழி-என்றும்,

‘என்னுடைய ஒப்புமையை அடைந்தவர்’ மம ஸாதர்ம்யமாகதா;’ என்பது, ஸ்ரீ கீதை, 14:2.-என்றும்,

‘பரமாத்துவோடு ஒத்தவன்’ என்றும் சொல்லுகிறவற்றால், ஸமாநோ ஜ்யோதிஷா’ என்பது, போதாயன விருத்தி.
வஸ்து ஐக்யம் சொல்லுகிற அன்று;
பேற்றில் வந்தால் அவனோடு இவனுக்கு எல்லா வகையாலும் ஒப்புமை உண்டு என்றது.
‘உலகத்தைப் படைத்தல் முதலியன நீங்கலாக’ என்றும்,
அனுபவத்தில் பரமாத்துமாவோடு ஒப்புமை கூறுகிற காரணத்தாலும்’ என்றும் சொல்லுகையாலே.

‘ஜகத் வியாபார வர்ஜம்,’
‘போக மாத்ர ஸாம்ய லிங்காச் ச’-என்பன, பிரஹ்ம மீமாம்சை
சாயுஜ்யமாகிறது, ‘அவனோடு ஒன்றாம்’ என்கிறது அன்று; அவன் திருவடிகளிலே கைங்கரியம்-‘

ஆதிப் பரனோடு ஒன்றாம் என்று சொல்லும் அவ்வல்லவெல்லாம்
வாதில் வென்றான் எம்மிராமாநுசன் மெய்ம் மதிக் கடலே’-என்பது, இராமாநுச நூற்றந்தாதி, 58.

செய்யும் என்கிறது;
‘யாவர் மிக்க பத்தியை யுடையவர்களாய் உபாசனை செய்கிறவர்களாய்ச் சமானமான உயர்ந்த ஜீவனத்தை அடைந்தார்களோ,
அவர்கள் விரோதி கழிந்தவர்களாய் எப்பொழுதும் என்னுடைய தொண்டர்கள் ஆகிறார்கள்,’ என்றும் சொல்லுகையாலே
.ஸாயுஜ்யம் ப்ரதிபந்நா யே தீவ்ர பக்தா: தபஸ்விந:
கிங்கரா மம தே நித்யம் பவந்தி நிருபத்ரவா;’-என்பது, பரமஸம்.

தன்மை அறிவாரை அறிந்துமே –
கேட்பார்க்கு விஷயம் உண்டாக்குகிறார்,
இந்தக் குண ஞானமுடையாரை அறிந்து வைத்தும் கேட்பார்கள் கேசவன் கீர்த்தி அல்லால் மற்றுக் கேட்பரோ?

‘இவன், திருவடிகளைக் கிட்டிற்று என் கொண்டு?’ என்னில்,
திரு நாமங்களைச் சொல்லித் துவங்கரிக்கையும்,
கையும் திருவாழியுமான அழகை மரண காலத்தில் நினைக்கவும் கூடும் அன்றோ?
மேலெழ ஆராய்ந்து பார்த்தால், சில காரணங்கள் சொல்லலாம்;
இதற்கு இனி ஒரு காரணம் தேடிச் சொல்லுகையாவது,
அவன் கிருபைக்கு ஒரு கொத்தை சொல்லுகை யன்றோ?

‘சர்வேஸ்வரன் கிருபையாலே சிசுபாலன் திருவடிகளைப் பெற்றான்’ என்று ஆழ்வார்களும் இருடிகளும்
எல்லாரும் சொல்லிக் கொண்டு போருவார்கள் அன்றோ?
இவன் பக்கலிலே பரம பத்தி அளவாக உண்டானாலும்,
‘அதற்கும் கரணங்கிளன் சேர்க்கையைக் கொடுத்தான் ஈஸ்வரன் அன்றோ?’ என்று
அதுவும் கழியா நிற்க, வருந்தி இல்லாதது ஒன்று உண்டாக்குகை பணி அன்று.

ஆளவந்தார், ‘சிசுபாலன் பெற்றிலன் காண்’ என்று அருளிச் செய்வர்; ‘அது என்?’ என்னில்,
‘இதற்கு அடியாகச் சொல்லலாவது ஒரு சாதனம் இவன் கையில் இல்லாமையாலே;
நாட்டை நலியாமைக்குக் கொற்றவன் வாசலுக்குள்ளே சுழற்றி எறிந்தான் அத்தனை காண்’ என்று அருளிச் செய்வர்.

காகம், திரு முன்பே எய்த்து விழுகையாலும், இவன் திருநாமத்தைச் சொல்லித் துவங்கரிக்கையாலும்,
அவன் குணங்கள் நினைத்தபடி விரிவாகப் பெறாதே குறைந்தவகள் ஆயிற்றன’ என்றே அன்றோ சொல்லுகிறது?
‘காகாசுரனிடத்திலும் சிசுபாலனிடத்திலும் சிறிது குணமாயினும் இருந்ததனால்
குறைவு பட்ட தான் தேவரீருடைய பொறுமை’ என்கையாலே.‘

பலிபுஜி சிசுபாலே தாத்ருக் ஆகஸ்கரே வா
குண லவ ஸஹவாஸாத் த்வத் க்ஷமோ ஸங்கு சந்தீ’-என்பது, ஸ்ரீரங்கராஜஸ்தவம், 3 : 97.

‘பல பல நாழம் சொல்லிப் பழித்த சிசுபாலன் தன்னை, அலை வலைமை தவிர்த்த
அழகன்’ பெரியாழ்வார் திருமொழி,4. 3 : 5. ‘-என்றார் அன்றோ பெரியாழ்வாரும்?

‘வைது நின்னை வல்லவா பழித்தவர்க்கும்’ திருச்சந்த விருத்தம், 111.-என்றார் திருமழிசையாழ்வார்.

இப் பாசுரத்தில் ஏற்றமாகிறது,
‘தன்னால் அல்லது செல்லாமை விளைந்தாரைக் கூடக் கொடு போனான்’ என்றது ஓர் ஏற்றமோ,
தன் பக்கல் அபராதம் செய்த சிசுபாலனுக்கும் அவர்கள் பேற்றைக் கொடுத்ததற்கு?’ என்பதாம்.

சர்வாதிகன்-உன்னை சிசுபாலன் வாலி போல்வார் -தஸ்மிந் லயம் -பரமாம் கதி-அடைந்தார்கள் –
இவர்களும் வந்து உன்னை எய்தலாகும் என்பர் -ரிஷிகள்
பகவந்தம் -லயம்-என்றார் பராசரர் –
ராம பாணத்தால் -அடிபட்ட வாலி பரமாம் கதி அடைந்தான் வால்மீகி
நிர்ஹேதுக கிருபை என்றவாறு –

வைதாரையும் முன் மலைந்தாரையும் மலர்த் தாளில் வைத்தாய்
மொய்தாரை யத்தனைத் தீங்கிழைத்தேனையும் மூதுலகில்
பெய்தாரை வானிற் புரப்பான் இடபப் பெருங்கிரியாய்!
கொய்தாரை வேய்ந்த திருவடிக் கீழ்த் தொண்டு கொண்டருளே.’–என்பது, அழகரந்தாதி.

———————————————————————————-

தன்மை அறிபவர் தாம் அவற்கு ஆளன்றி ஆவரோ?
பன்மைப் படர் பொருள் ஆதுமில் பாழ் நெடுங் காலத்து
நன்மைப் புனல் பண்ணி நான்முகனைப் பண்ணித் தன்னுள்ளே
தொன்மை மயக்கிய தோற்றிய சூழல்கள் சிந்தித்தே.–7-5-4-

இல்லாத ஜகத்தை உண்டாக்கிய அதிசயத்தை அனுசந்தித்து -பன்மைப் படர் பொருள் ஆதுமில் பாழ் நெடுங் காலத்து-
பலவகைப்பட்ட தேவாதி பேதங்கள் உடைத்தாய் -புண்ய பாப-அனுரூபமாக -தீவீத பதார்த்தே -பிரளயம் வந்து -சூன்யமான
திவீதிய பதார்த்த காலம் -ஏக மேவ –
நன்மைப் புனல் பண்ணி நான்முகனைப் பண்ணித் தன்னுள்ளே-கார்ய உத்பத்தி ஹேதுவான -நன்மை உடைத்தான் காரண ஜலம்
அபஞ்சீ கரணமான ஜலம் -உத்பன்னமான அண்டத்தில் -நான் முகனையும் ஸ்ருஷ்டித்து -அத்வாரக ஸ்ருஷ்ட்டி
தொன்மை -பூர்வ வாசனை -மயக்கிய தோற்றிய சூழல்கள் சிந்தித்தே-தன் ஸ்வரூப ஏக தேசத்தில் ஸமஸ்த பதார்த்தங்களையும் தோற்றிய
விபக்தமாக்கி நாம ரூப வியாகரணம் -ஈஷண சங்கல்ப்பித்து–சிருஷ்ட்டித்து -சத்தை கொடுக்க அனு பிரவேசித்து
வேதாந்த முகத்தால் இவற்றை அனுசந்தித்து தன்மை அறிபவர் தாம் அவற்கு ஆளன்றி ஆவரோ?-அசாதாரண லக்ஷணம்
காரணமான ஸ்வ பாவம் அறியுமவர்கள் -ஜகத் காரண பூதனான கிருஷ்ணனுக்கு அன்றி வேறு யாருக்கு ஆள் ஆவார்கள்

‘பல விதமாகப் படர்ந்திருக்கும் பொருள்களுள் ஒன்றும் இல்லாதபடி அழிவு அடைந்த காலத்து, நன்மையையுடைய தண்ணீரை
உண்டாக்கிப் பின்னர்ப் பிரமனை உண்டாக்கி. முன் வாசனை அழியும்படி தன்னுள்ளே கலந்திருந்த எல்லாப் பொருள்களையும்
தோற்றுவித்த விரகுகளைச் சிந்தித்து, உலக காரணனாய் இருக்கும் தன்மையை அறிகின்றவர்கள் தாம் காரணப் பொருளான
கண்ண பிரானுக்கு ஆள் ஆவரே அன்றி மற்று ஒருவர்க்கு ஆள் ஆவரோ?’ என்றபடி.
மயக்கிய – கலந்து கிடந்த பொருள்கள். சூழல் – விரகு. ‘சிந்தித்து அறிபவர் அவற்கு ஆள் அன்றி ஆவரோ?’ என்க.
அவற்கு-அவனுக்கு; அகார வாச்யனான கண்ண பிரானுக்கு.

‘சிசுபாலனுக்குத் தன்னைக் கொடுத்தது ஓர் ஏற்றமோ,
பிரளயத்திலே மங்கிக் கிடந்த உலகத்தை உண்டாக்கின இந்த மஹா குணத்துக்கு?’ என்கிறார்.
சிசுபாலனைக் காட்டிலும் குறைந்தார் இலர் அன்றோ சம்சாரிகளில்?

தன்மை அறிபவர் தாம் –
உண்மை நிலையினை அறியுமவர் தாம். என்றது,
‘இதனுடைய படைப்பு அவனுக்காகக் கண்டது என்று இருக்குமவர்கள்’ என்றபடி;
அவனுக்காகக் கண்டது’ என்றது,
‘அவனுடைய கைங்கரியத்துக்கு உடலாகப் படைக்கப்பட்டது’ என்றபடி.

‘கோளில் பொறியிற் குணமிலவே எண் குணத்தான் தாளை வணங்காத் தலை.’என்பது, திருக்குறள்.

‘திருமால் சீர் கேளாத செவி என்ன செவியே!’
‘நாராயணா வென்னா நா வென்ன நாவே!’
‘கண்ணனைக் காணாத கண்ணென்ன கண்ணே!’-என்பவை, சிலப்பதிகாரம், ஆய்ச்சியர் குரவை.

‘காட்டில் வசிக்கும் பொருட்டே படைக்கப் பட்டாய்’ என்பது போலே.
‘ஸ்ருஷ்டஸ்த்வம் வநவாஸாய’-என்பது, ஸ்ரீராமா. அயோத். 40 : 5.
இஃது இளைய பெருமாளைப் பார்த்துச் சுமித்திரா தேவி கூறியது.

அன்றிக்கே,
‘உலகத்திற்குக் காரணமாக வுள்ள பொருளே உபாசிக்கத் தக்கது என்று அறியுமவர்கள்’ என்னுதல்.
‘காரணப் பொருளே தியானம் செய்யத் தக்கது’ என்பது சுருதி. ‘
‘காரணம் து த்யேய:’ என்பது, சுருதி.
‘அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா, ஜந்மாத் யஸ்ய யத:’என்பவை, பிரஹ்ம சூத்திரம். 1. 1 : 1, 2.

வேதத்தின் பூர்வ பாகத்தின் பொருளை விசாரித்த பின் ஞானமுடையவனாய்ப் பிரஹ்மத்தை அறியக் கடவன்’ என்னா,
‘இந்த உலகத்திற்குப் படைப்பு அளிப்பு அழிப்பு என்னும் முத்தொழில்களும் எதனிடத்தினின்றும்
உண்டாகின்றனவோ, அது பிரஹ்மம்’ என்னாநின்றதே அன்றோ?

அவற்கு ஆள் அன்றி ஆவரோ –
கரண களேபரங்களைக் கொடுத்தது தனக்கு அடிமை செய்கைக்கு அன்றோ?

பன்மை படர் பொருள் ஆதும் இல் பாழ் நெடுங்காலத்து-
தேவர்கள் முதலான வேற்றுமையாலே பல வகைப் பட்டுக் கர்மங்களுக்குத் தகுதியாக
விரிந்த பொருள்களுள் ஒன்றும் இல்லாத காலத்து. என்றது,
‘தேவர் மனிதர் திரியக்குகள் முதலான உருவங்களான உண்டாக்கக் கூடிய பொருள்களுள் ஒன்றும் இல்லாதபடி
பாழ் கூவிக் கிடக்கிற நெடுங்காலத்து’ என்றபடி.

ஈஸ்வரன் உலகத்தை அழித்து நெடுங்காலம் பாழ் கூவிக் கிடக்கும்படி இட்டு வைப்பான்.
பயிர் செய்கிறவன் விளை நிலம் உவர் கழியும்படி நீரைத் தேக்கி வைக்குமாறு போலே,
இவற்றினுடைய துர் வாசனை போகைக்காகப் படைத்ததைப் போன்ற காலம் அழித்திட்டு வைப்பன்.
கண்ணுக்கு இட ஒரு துரும்பு இல்லாதபடி சத்து என்ற நிலையுடன் கூடிய காலத்து.

நன்மைப் புனல் பண்ணி –
அழிப்பதற்குப் பரப்பின நீர் போல அன்று. ‘தண்ணீரையே முதலில் படைத்தான்’ என்கிறபடியே,
‘அப ஏவ ஸஸர்ஜ ஆதௌ’ என்பது, மநு ஸ்மிருதி, 1 : 8.
முதன் முன்னம் தண்ணீரைப் படைத்து. நான்முகனைப் பண்ணி –
இவ்வளவும் வர அசித்தைக் கொண்டு காரியம் கொண்டு,
‘இவை இரண்டும் நம் புத்தி அதீனமான பின்பு
இனிச் சித்தையும் கொண்டு காரியம் கொள்ளுவோம்’ என்று பார்த்துப் பிரமனையும் படைத்து.
‘எவனுக்கு ஆத்துமாக்கள் எல்லாம் சரீரமோ,’ ‘எவனுக்கு மண் முதலியவை சரீரமோ’ என்கிறபடியே,
‘யஸ்ய ஆத்மா ஸரீரம்’ ‘யஸ்ய ப்ருதிவீ ஸரீரம்’என்பன, பிருஹதாரண்ய உபநிஷத்.

இரண்டும் இவனுக்கு உறுப்பாய்ப் பரதந்திரமாய் அன்றோ இருப்பன?
‘எவன் பிரமனை முன்பு படைத்தானோ’ என்பது சுருதி.
‘யோ ப்ரஹ்மாணப் விததாதி பூர்வம்’ என்பது, ஸ்வேதாஸ்வ. உப
ஒரு குழமணனைப் -மரப்பாச்சி பொம்மை -பண்ணி என்பாரைப் போலே
‘நன்மைப் புனல் பண்ணி நான்முகனைப் பண்ணி’ என்கிறார்.

தன்னுள்ளே –
தன்னுடைய சங்கற்பத்தின் ஆயிரத்தில் ஒரு கூற்றிலே.

தொன்மை மயக்கிய தோற்றிய சூழல்கள் சிந்தித்து –
பழையதாக, ‘ஸதேவ – சத் ஒன்றே’ என்கிறபடியே,
‘தான்’ என்கிற சொல்லுக்குள்ளே யாம்படி பண்ணியிட்டு வைத்து,
பின்னர்,
‘பஹூஸ்யாம் – பல பொருளாக ஆகக் கடவேன்’ என்கிறபடியே,
இவற்றைத் தோற்றுவித்த விரகுகளைச் சிந்தித்து,
உண்மை நிலையை அறியுமவர்கள் அவனை ஒழிய வேறே சிலர்க்கு ஆள் ஆவரோ?

‘விரோதியான சிசுபாலனுக்குத் தன் திருவடிகளைக் கொடுத்தான்’ என்றது,
‘இது ஓர் ஏற்றமோ விரோதிகளை உண்டாக்கித் தன்னை வைவித்துக் கொண்ட நீர்மைக்கு?’ என்கிறார்.

‘பன்மைப் படர் பொருள், தன்னுள்ளே தொன்மை மயக்கிய, ஆதும் இல் பாழ் நெடுங்காலத்து
நன்மைப் புனல் பண்ணி நான்முகனைப் பண்ணி, தோற்றிய சூழல்கள் சிந்தித்து,
தன்மை அறிபவர் தாம் அவற்கு ஆள் அன்றி ஆவரோ?’ என்று கூட்டுக.

———————————————————————————————

சூழல்கள் சிந்திக்கில் மாயன் கழல் அன்றிச் சூழ்வரோ?
ஆழப் பெரும் புனல் தன்னுள் அழுந்திய ஞாலத்தைத்
தாழப் படாமல் தன் பால் ஓரு கோட்டிடைத் தான் கொண்ட
கேழல் திரு வுரு வாயிற்றுக் கேட்டும் உணர்ந்துமே.–7-5-5-

ஸ்ரீ வராஹ -நாயனார் -ஆபத்து -நிரசனம்– தன்னை அழித்தும்-ரஷித்த ஏற்றம் -அழிந்த ஜகத்தை உண்டாக்குவதைக்
காட்டிலும் மானமிலா பன்றி தன்னையே அழிய மாறி –
ஆழப் பெரும் புனல் தன்னுள் அழுந்திய ஞாலத்தைத்-அபரியந்தமான பிரளய ஜலத்தில் அண்ட கபாலம் வரை ஆழ்ந்து
கால விளம்பத்தால் உரு மாய்ந்து போகாத படி -தன் திருமேனியில் ஏக தேசத்தில்
தாழப் படாமல் தன் பால் ஓரு கோட்டிடைத் தான் கொண்ட–ஏக தேசத்தில் அபேஷா நிரபேஷமாக ஸ்வ இச்சையால் கோல வராகம்
கேழல் திருவுரு வாயிற்றுக் கேட்டும் உணர்ந்துமே-திரு மேனி ஆகாரம் தாழ விட்டுக் கொண்ட படி -திரு உரு -கேட்டும் உணர்ந்தும்
வேத இதிகாச முகமாக -கேட்டும் -உணர்ந்துமே-மனனம் பண்ணி வைத்தும்
சூழல்கள் சிந்திக்கில் மாயன் கழல் அன்றிச் சூழ்வரோ?-உஜ்ஜீவன உபாயம் தேடினால் -நான் கண்ட நல்லதுவே -ஞானப் பிரானுக்கு திரு விருத்தம் –
ஆஸ்ரயிக்க- மாயன் திருவடிகளே -பிரளய ஆபத்துக்கு உதவி சம்சார ஆரணவ உத்தரண உபாய பூதன் -ஸ்ரீ வராஹ நாயனார் -மாயன் –
பராசர பட்டர் -மத்ஸ்யம் கரை ஏறாமல் கூர்மம் எழுந்து கழுத்துக்கு மேலே -வாமனன் காலைக் காட்டி
பலராமன் அஹங்காரம் -பரசுராமன் கோப ராமன் -கண்ணன் ஏலாப் பொய்கள் உரைப்பான்
ராமன் -ஒரு பெண்ணையே பிரிய விட்டானே
இப்படி வராஹ நாயனார் கைசிக புராணம் அவதாரம் சாதித்தார்

‘பிரளய வெள்ளத்திலே ஆழ அழுந்திய பூமியைக் காலம் நீட்டிக்காமல், தன் திருமேனியில் ஒரு கொம்பிலே தானே கொண்ட வராகத்தின்
அழகிய வடிவான இதனைக் கேட்டும்உணர்ந்தும், தான் உய்வதற்குரிய உபாயங்களைச் சிந்தித்தால், ஆச்சரியமான செயலைச் செய்த
எம்பெருமானுடைய திருவடிகளை அல்லாமல் வேறு ஒன்றனைப் பற்றுவரோ?’ என்கிறார்.
சூழல் – உபாயம். சூழ்தல் – பற்றுதல். ‘ஆழ அழுந்திய ஞாலம்’ என்க. ஆற்றொழுக்காகப் பொருள் கூறலுமாம்,
தாழப்படாமல் – காலம் நீட்டிக்காமல். கேழல் -பன்றி. ‘உணர்ந்தும் மாயன் கழல் அன்றிச் சூழ்வரோ?’ என்க.

‘உலகத்தைப் படைத்தது ஓர் ஏற்றமோ, படைக்கப்பட்ட உலகத்தைப் பிரளயம் கொள்ள
மஹா வராகமாய் எடுத்துக் காத்த குணத்துக்கு?’ என்கிறார்.

சூழல்கள் சிந்திக்கில் –
தான் தன்னோடு உறவு அற ஜீவிக்கைக்கு உறுப்பான விரகு பார்க்கில்.
தாங்கள் தாங்கள் விரும்பிய பொருள்கள் சித்திப்பதற்கு விரகுகள் பார்க்கில்.
(அசித் சம்சர்க்கம் விட்டு -வி ஸூத்தாத்-முக்தனாக –
ஸூத்த ஜீவாத்மா -தன்னுடன் கூடிய சரீரம் -பத்த ஜீவாத்மாவின் இருந்து மாற வேண்டுமே
அபிமதங்கள் பெற வேண்டி இருந்தீர்கள் ஆகில் அடுத்து
அநிஷ்டம் போனால் தான் இஷ்டம் சித்திக்கும் -)

மாயன் கழல் அன்றிச் சூழ்வரோ –
பாதுகாக்கப் படுகின்ற பொருள்களைப் பாதுகாத்தல் ஒரு தலையானால் தான் தன்னைப் பேணாத நோக்கும்
ஆச்சரியத்தை யுடைய இறைவனது திருவடிகளை அல்லது பற்றுவரோ?
(அடியாரானால் அடியைப் பற்ற வேண்டுமே )

ஆழப் பெரும் புனல் தன்னுள் அழுந்திய ஞாலத்தை –
‘ஆழத்தை யுடைத்தான மிக்க தண்ணீரிலே அழுந்தின பூமி’ என்னுதல்.
‘பெரும் புனல் தன்னுள் ஆழ அழுந்திய பூமி’ என்னுதல்.

அழுந்திய ஞாலம் –
அண்ட பித்தியில் சென்று ஒட்டின பூமி.

தாழப் படாமல் –
தரைப் படாமல்; மங்காமல். என்றது,
‘உள்ளது கரைந்து போன பின்பு இனிச் சத்தையுங்கூட அழிந்து போக ஒண்ணாது என்று பார்த்து’ என்றபடி.

தன் பால் ஒரு கோட்டிடைத் தான் கொண்ட –
பெரிய பூமியைத் தன் எயிற்றிலே நீல மணி போலே கொண்ட; -ஸ்வேத வராஹம் –
தன் திரு எயிற்றிலே ஒரு கூற்றிலே கொண்ட உதாரராய் இருப்பார் நாற்பது பேருக்குச் சோறு இட நினைத்து
நூறு பேருக்குச் சோறு சமைக்குமாறு போலே,
பாதுகாக்கப்படுகிற பொருள்களின் அளவு அன்று காணும் கொண்ட எயிற்றின் பெருமை;

தான் கொண்ட-
முகாந்தரத்தாலே -வேறு முகத்தாலே காத்தல் அன்றியே,
தன் முகத்தாலே எடுத்துக் காத்தபடி கரைந்து போன பூமி
வேண்டிக் கொள்ளச் செய்தது அன்று ஆதலின், ‘தான் கொண்ட’ என்கிறார்.

கேழல் திரு உரு ஆயிற்று –
அழிவுக்கு இட்ட வடிவிற்கே ஆலத்தி வழிக்க வேண்டி இருந்தபடி.
அடியார்களைப் பாதுகாக்க வந்து தன்னைப் பேணாதே ஒழிய ஒழிய
அதுதானே நிறம் பெறும்படியாய்க் காணும் இருப்பது;(விக்ரஹம் சீர்மையும் குணத்தின் சீர்மையும் )

‘மானம் இலாப் பன்றியாம் தேசு’நாச்சியார் திருமொழி, 11 : 8. என்னும்படியே.
‘மாசு உடம்பில் நீர் வாரா – எங்கேனும் உண்டான அழுக்கும் வந்து சேரும்படி இருப்பது ஒரு வடிவைக் கொண்டு.
மானம் இலாப் பன்றியாம் ஈஸ்வரனாந்தன்மை பின்னாட்டாதபடி இருக்கை.

தன் இனங்கள் மோந்து பார்த்துத் ‘தன்னினம்’ என்று நம்பும்படி அக வாயில் புரை அற்று இருக்கை.
மாரீசனாகிய மாயமானை மோந்து பார்த்து ‘இராக்கத வாசனை உண்டு’ என்று போயின அன்றோ மற்றைய மான்கள்?

பன்றியாம் தேசுடை தேவர் –
இவ் வடிவு கொண்டிலனாகில் அருமந்த ஒளியை எல்லாம் இழக்குமத்தனை யன்றோ.
நித்திய ஸூரிகளுக்கு ஓலக்கம் கொடுத்து அங்கே இருப்பதைக் காட்டிலும் தாழ விட்டதால் வந்த ஏற்றம்?’

கேட்டும் உணர்ந்துமே-
கேட்டும் மனனம் செய்தும்,
அதனாலே தம் முயற்சியை விட்டவர்கள் சூழல்கள் சிந்திக்கில் மாயன் கழல் அன்றிச் சூழ்வரோ?

தான் உலகத்திற்குக் காரணனாய் இருத்தல் முதலிய குணங்களுள் ஒன்றும் குறையாதபடி சங்கற்பத்தாலே
உலகத்தைப் படைத்தான் என்னுமது ஓர் ஏற்றமோ,
பிரளயம் கொண்ட பூமியைத் தன்னுருக் கெடுத்து வேற்றுருக் கொண்டு எடுத்த இந்த உபகாரத்துக்கு?

———————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பகவத் விஷயம் காலஷேபம் -150- திருவாய்மொழி – -7-4-6….7-4-11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்–

June 28, 2016

போழ்து மெலிந்த புன் செக்கரில் வான் திசை
சூழும் எழுந்து உதிரப் புனலா மலை
கீழ்து பிளந்த சிங்கம் ஓத்ததால் அப்பன்
ஆழ் துயர் செய்து அசுரரைக் கொல்லுமாறே.–7-4-6-

இரண்டு திரு மணத் தூண்களுக்கு நடுவில் அரங்கன் -ஒரு தூணிலே தோன்றிய நரசிம்மன் -எங்கும் உளன் கண்ணன்
அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய சிங்கப்பிரான் -சிங்க வேள் குன்றம் -ஹிரண்ய வத விருத்தாந்தம்
போழ்து மெலிந்த புன் செக்கரில் வான் திசை-ஷயம் அடைந்த -திசை சூழ சிகப்பு எழுந்து-பொன் பெயரோன் -கோபம் ரத்தம் சிகப்பு
சூழும் எழுந்து உதிரப் புனலா மலை-கீழ்து பிளந்த சிங்கம் -புன் செக்கர் சந்த்யா காலம் ஓத்ததால் அப்பன்-மலை கீழே -பிளந்த சிங்கம் ஒத்ததாக
ஆழ் துயர் செய்து அசுரரைக் கொல்லுமாறே.—மலை போன்ற ஹிரண்யனை கிழித்து பொகட்டது ஒத்தது

‘பகற்காலம் நீங்கிய புல்லிய செவ்வானம் போலே, ஆகாயமும் திக்குகளும் சூழ எழுந்து இந்தப் பெருக்கு ஆகும்படியாக,
மலை கீழேயாகும்படி மேலே இருந்து கொண்டு பிளந்த சிங்கத்தின் செயலை ஒத்திருந்தது.
என்னப்பன் மிக்க துயரைச் செய்து அசுரனான இரணியனைக் கொன்ற தன்மையானது’ என்க.
செக்கர்-அந்தி வானம்; அந்தி நேரமுமாம். ‘புன்’ என்பது காலத்தின் சிறுமையைக் காட்ட வந்தது.
சூழ எழுந்து உதிரப் புனலாக அசுரரைக் கொல்லுமாறு ஒத்தது என்க.

இரணியனைக் கொன்ற செயலை அருளிச் செய்கிறார்.

போழ்து மெலிந்த-
‘பெரும்பாலும் பகற்பொழுது போயிற்று’ என்னுமாறு போலே,
பொழுது போகா நிற்கச் செய்தே.

புன் செக்கரில்
செக்கர் வானம் இடுகிற அளவிலே. என்றது,
‘அவன் வரத்தில் அகப்படாத சந்தியா காலத்திலே’ என்றபடி
‘இரவிலும் படகில்லேன்; பகலிலும் படகில்லேன்’ என்று வரங்கொண்டானே.

வான் திசை சூழும் எழுந்து உதிரப் புனலா-
பரப்பை யுடைத்தான ஆகாசம் திக்குகள் அடங்கலும்,
பள்ளங்கொண்ட இடம் எங்கும் வெள்ளம் பரக்குமாறு போலே குருதியானது கொழித்துப் பரக்கும்படி.

மலை கீழ்து பிளந்து சிங்கம் ஒத்ததால் –
‘ஒரு மலையைக் கீழே இட்டுக் கொண்டு மேலே இருந்து அதனைப் பிளந்த சிங்கத்தை ஒத்தது’ என்னுதல்.

அன்றிக்கே,
‘கிழித்துப் பிளந்த சிங்கத்தை ஒத்தது’ என்னுதல்.

அன்றிக்கே
‘மகிழ்ந்து பிளந்த சிங்கத்தை ஒத்தது’ -என்னுதல்.

‘இரண்டு கூறு செய்து உகந்த சிங்கம்’ திருச்சந்த விருத். 62.எனக் கடவது அன்றோ?

மலையை கீழே விட்டு –
இரண்டாகா அநாயாசனே இரண்டு கூறாக –
மகிழ்ந்து -கீழ்து -மரை இதழ் புரையும் சேவடி – தாமரை இதழ் முதல் எழுத்து போனால் போலே தலைக் குறைத்தல் –
மகரம் போய் நீட்டி கீழ்ந்து -நகர ஒற்று போய்
(மலையைக் கீழே -என்றும் -இரண்டு கூறாக அநாயாசேன கிழித்து -மகிழ்ந்து -மூன்று அர்த்தங்கள் )

அப்பன் ஆழ் துயர் செய்து –
நரசிங்கத்தினுடைய மொறாந்த முகத்தைக் கண்ட போதே, மேல் போய் அனுபவிக்கக் கூடிய அனுபவமடைய
அப்போதே அனுபவித்து அற்றான். என்றது,
‘பல காலம் பகவத் பாகவத விஷயங்களிலே செய்து போந்த தீமை முழுதினையும் அரைக் கணத்திலே அனுபவித்து அற்றபடி.
மிகவும் துக்கத்தை விளைத்து.

அசுரரைக் கொல்லுமாறே-
அசுரனைக் கொன்றபடி.

‘இதனால், என் சொல்லியவாறோ?’ எனின்,
‘எல்லார்க்கும் பொதுவாளனாய் நிற்கும் நிலை ஒழிய. தாய் தந்தையர்கள் முகமாகக் குழந்தைகள் பக்கலிலே
வத்சலனாய் நிற்பது ஒரு நிலையும் உண்டு அன்றோ?
அது குலைந்தால், அவன் பகைவனாயும் நிற்கும் அன்றோ?
அப்போதும் இவன் தான் முன்னின்று பாதுகாப்பான்’ என்பதனைத் தெரிவித்தபடி.

இத்தாலும் சொல்லிற்றாயிற்று,
ஆபத்துக் கனத்ததனையும் கடுக வந்து இரட்சிக்கும் என்கை.
தமப்பன் பகையாக உதவினவன், அவனில் அண்ணியனான தான் தனக்குப் பகையானால் உதவச் சொல்ல வேணுமோ?
‘தனக்குத் தானே அன்றோ பகைவன்?’ என்கிறபடியே
,உத்தரேத் ஆத்மநா ஆத்மாநம் நஆத்மாநம் அவஸாதயேத்
ஆத்மைவ ஹி ஆத்மநோ பந்து; ஆத்மைவ ரிபு: ஆத்மந:’-என்பது, ஸ்ரீ கீதை, 6 : 5.

————————————————————————————————–

மாறு நிரைத் திரைக் குஞ்ச ரங்களின்
நூறு பிணம் மலை போற் புரளக் கடல்
ஆறு மடுத்து உதிரப் புனலா அப்பன்
நீறு பட இலங்கை செற்ற நேரே.–7-4-7-

லங்கா பங்கா பிரகாரம்
மாறு நிரைத் திரைக் குஞ்ச ரங்களின்-சாரிகை -ஏசல் போலே திரிந்து -எதிர் எதிராக -அம்புகள் ஆகாய பரப்பு அடங்க லும்
நூறு பிணம் மலை போற் புரளக் கடல் -மலை போலே -சவங்கள் புரண்டு விழ
ஆறு மடுத்து உதிரப் புனலா அப்பன்-உதிர புனலால் ஆறு ஓடி கடலில் கலக்க -கடலே சிவந்து -கீழே புனலாக -ஹிரண்யன் –
ஆஸ்ரித உபகாரகன் சக்கரவர்த்தி திரு மகன் -நீறு பட இலங்கை செற்ற நேரே-பஸ்மாமாம் படி -செவ்வைப் போர்

‘எதிர் எதிராக நிரைத்து ஒலிக்கின்ற பாணங்களாலே இனம் இனமாக நூற்றுக்கணக்கான பிணங்கள் மலைகளைப் போன்று
புரண்டு விழவும் கடலானது இரத்தத்தாலே நிறைந்து ஆறுகளிலே புக அதனாலே ஆறுகள் எல்லாம் உதிரப் புனல் ஆகும்படியும்,
என்னப்பன் இலங்கையானது சாம்பலாகும்படி அழித்த நேர்மை இருந்தது,’ என்றபடி.
‘அப்பன் இலங்கை செற்ற நேர். பிணம் மலைபோற்புரளவும், கடல் ஆறு மடுத்து உதிரப்புனல் ஆகும்படியும் இருந்தது’ என்க.
‘(குருதியாகிய) ஆறு மடுத்துக் கடல் உதிரப்புனலா’ எனலுமாம்.

இராம விருத்தாந்தத்தை அருளிச் செய்கிறார்.

மாறு நிரைத்து இரைக்கும் சரங்கள் –
சாரிகை வந்த சடக்கு, நாலு திசைகளிலும் விட்ட அம்புகள் எதிர் அம்பாய் ஒன்றோடு ஒன்று பொருது
கலார் கலார் என்று ஒலிக்கின்ற ஒலி, கடல் இரைத்தாற்போலே இரா நின்றது.
சாரிகை வந்த சடக்கு, தன்னில் தான் எதிரம்பு கோத்தது காணும். –
அஸ்தரம் –மந்திரித்து –சஸ்திரம் -மந்த்ரம் இல்லா அம்புகள் .

இன நூறு பிணம் மலை போல் புரள-
நூறு நூறாக இனம் இனமான பிணங்களானவை, அம்பு பட்டு உருவின சடக்காலே உயிர் ஓரிடத்து ஒதுங்கப் பெறாதே
இரண்டு துண்டங்களிலும் கலந்து மலை போலே கிடந்து துடிக்கிறபடி.

கடல் ஆறு மடுத்து உதிரப் புனலா –
‘ஆபூர்ய மாணம் அசல ப்ர திஷ்டம்’-என்பது, ஸ்ரீகீதை, 2:70.
‘அசல ப்ர திஷ்டம்’ என்றது, ‘கரையைத் தாண்டாது’ என்றபடி.

தண்ணீர் கூட்டம் தானாய் நிறைந்திருக்கிறதாயும் ஒரே விதமாயும் இருக்கிற கடல்’ என்றபடியே,
புக்க எல்லாம் கொண்டிருக்கக் கூடிய கடல், இரத்த வெள்ளத்தாலே நிரம்பி ஆறுகளிலே மடுக்கும்படி.
‘வையமூடு பெரு நீரில் மும்மை பெரிதே’பெரிய திருமொழி. 11. 4 : 4.- என்றார் அன்றோ?

நீறு பட
‘சுடுகாட்டுக்கு ஒப்பாக’ என்று சொன்னபடியே, -சாம்பலாகும்படியாக —
சிதா தூமாகுல பதா க்ருத்ர மண்டல ஸங்குலா
அசிரேணைவ லங்கா இயம் ஸ்ஸஸாந ஸத்ருஸூ பவேத்’என்பது, ஸ்ரீராமா, சுந். 26 : 26.

இலங்கை செற்ற நேரே –
இலங்கை செற்ற பொழுது. ‘நேர்’ என்பது, ‘நேரம்’ என்று காலத்தைக் காட்டுவதாம்.
‘இலங்கை செற்ற பொழுது மாறு நிரைத்து இரைக்கும் சரங்கள்’ என்பது அந்வயம்.

அன்றிக்கே,
‘இலங்கையைச் செற்ற வாய்ப்பு’ என்னுதல்.

அன்றிக்கே,
‘மாயாப் பிரயோகத்தால் அன்று,
செவ்வைப் பூசலிலே நின்று காண் இலங்கையை அழித்தது’ என்னுதல்.

நேர் – நேராக என்றபடி.
அப்போது, ஏகாரம்: தேற்றகாரம்.
‘நேர்மையாலே இலங்கை செற்றது’ என்றபடி.

——————————————————————————————-

நேர் சரிந்தான் கொடிக் கோழி கொண்டான் பின்னும்
நேர் சரிந்தான் எரியும் அனலோன் பின்னும்
நேர் சரிந்தான் முக் கண் மூர்த்தி கண்டீர் அப்பன்
நேர் சரி வாணன் திண் தோள் கொண்ட அன்றே–7-4-8-

பாண யுத்த பிரகாரம்
நேர் சரிந்தான் கொடிக் கோழி கொண்டான் பின்னும்-கோழி மயில் அர்த்தம் -ஸ்கந்தன் தேவ சேனாபதி -கார்த்திகையானும் –வாணன் பிழை பொறுத்த
நேர் சரிந்தான் எரியும் அனலோன் பின்னும்-ருத்ரன் -போலே அக்னி –ஜாதி ஏக வசனம் -மோடி கிருத்தியை
நேர் சரிந்தான் முக்கண் மூர்த்தி கண்டீர் அப்பன்-அனிருத்ரனுக்கு உபகாரகன் -சிவன் -சக்தி அதிசயம் கொண்டவன் -முன் நிற்க மாட்டாமல் முதுகிட்டு போனான் –
நேர் சரி வாணன் திண் தோள் கொண்ட அன்றே-வர பலாதிகள் -துணித்த அன்றே -கண்டீர் பிரசித்தம் –

‘என்னப்பன், எதிரிட்டு வந்து தோற்ற வாணனுடைய வலிய தோள்களை அழித்த காலத்தில், கோழிக் கொடியையுடைய முருகன் எதிரிட்டுத் தோற்றான்;
அதற்கு மேல், எரிகின்ற அக்கினி தேவனும் தோற்றான்; அதற்கு மேலே, மூன்று கண்களையுடைய சிவபெருமானும் தோற்றான்’ என்றபடி.
கண்டீர்-முன்னிலை அசைச்சொல், நேர் சரிதல்-எதிர்த்துத் தோற்றல். கோழிக்கொடி, முருகனுக்கு உரியது.

வாணன் திண் தோள்களைக் கோண்ட வெற்றிச் செயலை அருளிச் செய்கிறார்.

கோழிக் கொடி கொண்டான் நேர் சரிந்தான் –
மயிலைக் கொடியிலே யுடையனாய்த் தேவ சேனாதிபதியாய் இளமறியாய்த் தூசித் தலையிலே நின்ற சுப்பிரமணியன்
தோற்றரவிலே கெட்டான். ( இளமறி-குட்டிக் குதிரை -இளம் கன்று பயம் அறியாதே )

பின்னும் நேர் சரிந்தான் எரியும் அனலோன் –
அவ்வளவிலே நாற்பத்தொன்பது அக்கினிகளும் பெரிய கிளர்த்தியோடே எரிந்து தோன்றின:
49 மருத் கூட்டங்களும் உண்டே -ஜாடராக்கினி வயிற்றுக்குள்
அவையும் எல்லாம் பின்னிட்டன.

பின்னும் நேர் சரிந்தான் முக்கண் மூர்த்தி –
‘மகன் கொடி கட்டிக் கொண்டு சென்று இளிம்பு பட்டான்’ என்று தன் ( எருதுக் )கொடியைப் பொகட்டு வந்து தோற்றின உடனேயே,
கண்ணைப் புதைத்துக் கெட்டு ஓடத் தொடங்கினான்.
அவன் மறைத்துக் கொண்டு போக, இவர், ‘முக்கண் மூர்த்தி கண்டீர்’ என்று கண்ணைக் காட்டிக் கொடுக்கிறார்.
எல்லாம் செய்தாலும் உடம்பில் அடையாளத்தை மறைக்கப் போகாதே அன்றோ?
‘வாணன் ஈரைஞ்ஞூறு தோள்களைத் துணித்த நாள் அந்த அந்த ஆகுலம்’ (திருச்சந்த )என்கிறபடியே,
பாசுரம் இட்டுச் சொல்ல ஒண்ணாத வியாகுலம் அன்றோ அது?
புற முதுகு காட்டி ஓடி -ஸ்தோத்ரம் பண்ணி -போன்ற அந்தவந்த வியாகுலம்

அப்பன் –
நிருபாதிக -காரணம் இல்லாமலே பாதுகாப்பவன்.

நேர் சரி வாணன் –
பிரதானனான வாணன் தான் வந்து தோற்றினான்;
அவனும் பின்னிட்டு ஓடத் தொடங்கினான் என்னுதல்;
அன்றிக்கே,
‘நின்றவிடத்தே நின்று முதுகு காட்டினான்’ என்னுதல்.

திண் தோள் கொண்ட அன்று –
கையில் ஆயுதம் பொகட்டாரையும், மயிர் விரித்தாரையும் கொல்லக் கடவது அன்று.
தன்னோடு ஒக்க ஆறல் பீறலாய் இருப்பது ஒரு தேவதையைப் பற்றி, அரணுக்குள்ளே இருப்பாரைப் போலே
திண்ணியனாய் இருந்தானாயிற்று. புருடோத்தமனைப் பற்றி இருப்பாரைப் போலே, கபாலி கந்தரைப் பற்றி நிர்ப்பரனாய் இருந்தான்.
சர்வேஸ்வரனைப் பற்றி ‘எதினின்றும் அஞ்சுகிறான் அல்லன்’ என்று இருப்பாரைப் போன்று எண்ணினான்.

‘நபிபேதி குதஸ்சந;’ என்பது, தைத். உப. ஆநந்’.

‘இடராக வந்தென்னைப் புன்சிறு தெய்வங்கள் என்செயுமான்
இடாரக வன்பிணி மாநாக மென்செயும் யான்வெருவி
இடராக வன்னி புனல்இடி கோள்மற்று மென்செயும்வில்
இடராக வன்அரங் கன்திருத் தாள்என் இதயத்ததே.’-என்பது, திருவரங்கத்தந்தாதி, 39.

திண் தோள் கொண்ட –
‘உஷை தந்தை அற்றவள் ஆக ஒண்ணாது’ என்று கரத்தைக் கழித்து விட்டான்.
‘கர பாதை அன்றோ இவனைக் கண்டார் கால்களில் எல்லாம் விழச் செய்தது’ என்று
அவனுக்குள்ள கரத்தைக் கழித்து, இறையிலி யாக்கி விட்டான்.
‘எந்தக் கைகள் அந்தப் பகவானைப் பூஜிக்கின்றனவோ அவை தாம் கைகள்’ என்றும்
,‘ஸா ஜிஹ்வா யாஹரிம் ஸ்தௌதி தத்சித்தம் யத்ததர்பிதம்
தாவேவ ச கரௌ ஸ்லாக்யௌ யௌ தத் பூஜா கரௌ கரௌ’-என்பது, ஸ்ரீவிஷ்ணு தர்மம்

‘சர்வேஸ்வரனை வணங்கும் பொருட்டு விசித்திரமான இந்தச் சரீரமானது படைக்கப்பட்டது’ என்றும் விதித்துக் கிடக்கச் செய்தேயும்,
விசித்ரா தேஹஸம்பத்தி: ஈஸ்வராய நிவேதிதும்’ என்பது, ஸ்ரீவிஷ்ணு தர்மம்.
ஆயிரங்கைகளையும் கொண்டு சம்பந்தம் இல்லாத விஷயத்திலே காரியங்கொள்ளுகையாலே அவற்றையே கழித்து விட்டான்.
அந்தத் தேவதை தானே வந்து, ‘வரம் தந்த நீயே அதனைக் கழிக்கவோ?
(அவரவர் -அந்தராத்மாவாக நின்று அன்றோ நீயே வரம் கொடுத்தாய் )
நீ இவனைக் கொல்லில் என் காலிலே குனிவார் இல்லை இனி’ என்று பல்லைக் காட்டுகையாலே விட்டான்.
‘கிருஷ்ண கிருஷ்ண மஹா பாஹோ’- ‘‘க்ருஷ்ண க்ருஷ்ண மஹாபாஹோ ஜாநேத்வாம் புருஷோத்தமம்
பரேஸம் பரமாத்மாநம் அநாதி நிதனம் பரம்’–என்பது, ஸ்ரீ விஷ்ணு புரா. 5. 33 : 4

மஹாபாஹோ, த்வாம் புருஷோத்தமம்., ஜாநே’-என்று ‘தோள் வலி கண்ட பின்பு உன்னைச் சர்வேஸ்வரன் என்று அறிந்தேன்’
என்னும் சிவனுடைய மறுதலை எண்ணத்தால் தோன்றும் பாவத்தை அருளிச்செய்கிறார்,-‘தேவரை’ என்று தொடங்கி.

தேவரை உள்ளபடி அறியாதே அம்பை விட்டுக் கொண்டு நின்ற நிலையைக் கண்டு‘இதர ஸஜாதீயனோ!’ என்று இருந்தேன்;
‘கழுத்திலே கயிறு இட்ட பின்பு காண் நான் பூனை என்று அறிந்தேன்’ என்பாரைப் போலே.

‘இதனால் என் சொல்லியவாறோ?’ எனின், ஈஸ்வரனை ஒழிந்தார் அடங்கலும்,
தாங்கள் உளரான போது காப்பாற்றுகின்றவர்களாகச் செருக்குக் கொண்டு.
ஆபத்து வந்தவாறே இவர்களைக் காட்டிக் கொடுத்துத் தங்கள் தங்களைக் கொண்டு தப்புவர்கள்;
‘எல்லா நிலைகளிலும் தன்னை அழிய மாறியாயினும் அடியார்களைக் காப்பாற்றுவான் சர்வேஸ்வரன் ஆகையாலே,
அடையத் தக்கவன் இவனே; அல்லாதார் பற்றத்தக்கவர் அல்லர்,’ என்னும் இடம் சொல்லியபடி.

————————————————————————————–

அன்று மண் நீர் எரி கால் விண் மலை முதல்
அன்று சுடர் இரண்டும் பிறவும் பின்னும்
அன்று மழை உயிர் தேவும் மற்றும் அப்பன்
அன்று முதல் உலகம் செய்ததுமே.–7-4-9-

ஸ்ருஷ்ட்டி தொடங்கி –ஜகத் ஸ்ருஷ்ட்டி பிரகாரம் அருளிச் செய்கிறார்
அன்று மண் நீர் எரி கால் விண் மலை முதல்-பஞ்ச பூதங்கள் -ஹேது-காரணங்கள் -பர்வதாதி பதார்த்தங்கள் -கார்ய வர்க்கங்கள் –
அன்று சுடர் இரண்டும் பிறவும் பின்னும்-சந்த்ர ஆதித்யர்
அன்று மழை உயிர் தேவும் மற்றும் அப்பன்-மழை அதனால் வாழும் பிராணிகள் வர்ஷம் பிரதர் தேவதைகள் மற்றும் பிராணி பதார்த்தங்கள்
அன்று முதல் உலகம் செய்ததுமே.-பிரதமத்தில் லோகத்தை உண்டாக்கி
க்ரம ஸ்ருஷ்ட்டி -அன்று -ஆகாசம் தொடங்கி -சப்த தன்மாத்ராம் படைத்து ஆகாசம் -இடை வெளி இல்லாமல்
எல்லாம் யுக பத் ஏக கால ஸ்ருஷ்ட்டி -அனைத்தும் ஒன்றாக படைத்து –

அப்பன் உலகத்தைப் படைத்ததும் ஆதியான சிருஷ்டி காலத்திலே; பூமியும் தண்ணீரும் நெருப்பும் காற்றும் ஆகாசமும் மலை முதலான
பொருள்களும் ஆகிற இவற்றைப் படைத்ததும் அக்காலத்திலே; சூரிய சந்திரர்களையும். பிற பொருள்களையும் படைத்ததும் அக்காலத்திலே;
அதற்கு மேலே, மழையையும் உயிர்களையும் தெய்வங்களையும் பிற பொருள்களையும் படைத்ததும் அக்காலத்திலே.

படைப்பும் உலகத்தாரால் செய்யப்படுவது அன்றிக்கே வேறுபட்டது ஒரு செயல் ஆகையாலே,
அதனையும் வெற்றிச் செயலாக அருளிச் செய்கிறாராகவுமாம். –
விசஜாதிய சேஷ்டிதம் -விஜய பரம்பரையில் இதுவும் —

அப்பன் முதல் உலகம் செய்ததும் அன்று –
மஹோபகாரகன் முதலிலே உலகத்தை உண்டாக்கிற்றும் ஆதியான படைப்புக் காலத்திலே.
அதற்குக் காரணமாக ‘மண் நீர்’ என்பது முதலாக அருளிச் செய்கிறார்.

அன்றிக்கே,
முன்னும் பின்னும் கிருஷ்ணனுடைய செயலைப் பற்றி அருளிச் செய்கையாலே,
‘வாணனைத் தண்டித்த அன்று கண்டீர் உலகத்தை உண்டாக்கினான்’ என்று அதனையே பேசுகிறார் என்னுதல்.
பயிர் செய்கையே அன்றே வேண்டுவது?
பயிர் அழியாமல் நோக்கின அன்றே அன்றோ – பயிர் செய்ததாவது?

அன்று மண் நீர் எரி கால் விண் மலை முதல் –
காரணங்களோடு காரியங்களோடு வாசி அற உண்டாக்கினபடி.

சுடர் இரண்டு –
சந்திர ஸூரியர்களை உண்டாக்கினபடி.

பிறவும் –
மற்றும் உண்டான நக்ஷத்திரங்கள் முதலான ஒளிப் பொருள்களும்.

பின்னும் அன்று மழை உயிர் தேவும் மற்றும் –
அதற்கு மேலே மழை பெய்யக் கடவதான மேகம்,
மழையாலே உயிர் வாழக் கூடிய ஆத்துமாக்கள்,
மழையைத் தோற்றுவிக்கின்றவர்களான தேவர்கள்,
மற்றும் உண்டான திரியக்குத் தாவரங்கள் முதலானவைகள்.

அப்பன் –
எல்லாப் பொருள்களையும் தோற்றுவித்தவன்.

அன்று முதல் உலகம் செய்ததுமே –
‘தனித் தனியே சொல்ல வேணுமோ?
வாணனைந் தண்டித்து ஈர் அரசு அறுத்த அன்று கண்டீர் இவற்றை எல்லாம் படைத்தது?’ என்கிறார் என்னுதல்.

செய்தது என்பதை மூன்று பாதத்திலும் கூட்டுவது-

அன்றிக்கே,
நாம ரூபங்களை -‘பெயர் வடிவங்களை இழத்து,
‘‘சத் ஒன்றே’ இருந்தது என்கிற நிலையில்
‘பல பொருள்கள் ஆகக் கடவேன்’ என்று நினைத்த அன்று முதல்’ என்றுமாம்.

‘ஸதேவ ஸோம்ய இதமக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம்’-என்பது, சாந்தோக்யம். 6. 2 : 1.

பஹூஸ்யாம்’ என்பது, சாந்தோ. 6. 2:3.

———————————————————————————

மேய் நிரை கீழ் புக மா புரளச் சுனை
வாய் நிறை நீர் பிளிறிச் சொரிய இன
ஆநிரை பாடி அங்கே ஒடுங்க அப்பன்
தீ் மழை காத்துக் குன்றம் எடுத்தானே.–7-4-10-

முன்னும் பின்னும் கிருஷ்ணாவதாரம் -அதனால் சிருஷ்டியும் வாணன் முடித்த அன்று -என்று அருளிச் செய்தார் முன் பாசுரத்தில்
கோவர்த்தன உத்தரணம் அருளிச் செய்கிறார் -16 சக்கர வண்டி -திடலில் -சேர்த்து –
த்ரோணாச்சலம் பிள்ளை கோவர்த்தன மலை-கீழே வைத்தால் நகர மாட்டேன் -பிருந்தாவனம் அருகில் பாரம் மிக்கு –
கிருஷ்ணன் வருவார் என்றே முன்பே அமர்ந்ததே
திரை உங்கள் கண் என்றான் -அஹம் கோவர்தநோஸ்மி என்றான் -பர தேவதை இருக்க தேவதாந்த்ர போஜனம் பண்ணுவதோ
அன்றதோர் பூதமாய் ஆயர் விழவின் கண் -ஆயர் அஞ்ச அஞ்சா முன் –
மேய் நிரை கீழ் புக மா புரளச் சுனை-கீழ் மேல் எடுத்தபடியாக -அருவிகள் சுனைகள் பொழிய -பிளிறிச் சொரிய -ரக்ஷிக்கும் மழை இது
யானை குதிரைகள் புரள வாய் நிறை நீர் பிளிறிச் சொரிய இன-கோஷத்துடன் சொரிய
ஆநிரை பாடி அங்கே ஒடுங்க அப்பன்-ஆயரையும் பசுத் திரளையும்-ஆபன் நிவாரகன்
தீ் மழை காத்துக் குன்றம் எடுத்தானே-விநாசம் கொடுக்கும் மழை என்பதால் தீ மழை -கோவர்த்தனம் -எடுத்து ரக்ஷித்தான்

மேய்க்கின்ற பசுக்கூட்டங்கள் கீழே புகும்படியாகவும், மேலேயுள்ள விலங்குகள் புரண்டு விழும்படியாகவும், சுனைகளின் வாயளவும்
நிறைந்திருக்கின்ற தண்ணீரானது ஒலித்துக்கொண்டு சொரியும்படியாக, பசுத்திரளும் ஆயர்பாடியும் அங்கே ஒடுங்கும்படியாகவும், என்னப்பன்
கொடிய மழையினின்றும் பசுக்களையும் ஆயர்களையும் பாதுகாப்பதற்காகக் கோவர்த்தனம் என்னும் மலையைக் குடையாக எடுத்தான்.
‘புக, புரள, சொரிய, ஒடுங்க, குன்றம் எடுத்தான்’ என்க. பாடி-ஆயர் பாடி.

கோவர்த்தனத்தைக் குடையாகப் பிடித்துப் பாதுகாத்த செயலை அருளிச் செய்கிறார்.

மேய் நிரை கீழ் புக –
மேய்கிற பசுக்கள் புல்லும் உமிழாதே அசை யிட்டுக் கொண்டு கீழே புகுர.

மா புரள –
மலையை எடுத்து மறிக்கையலே அங்கு வாழ்கின்ற மிருகங்கள் எல்லாம் புரண்டு விழ.

சுனை வாய் நிறை நீர் பிளிறிச் சொரிய-
சுனையிடத்து நிறைந்து நிற்கிற நீரானது, நிறை குடத்தைக் கவிழப் பிடித்தாற்போலே ஒலித்துக் கொண்டு சொரிய.
ஒரு மழை காக்கப் புக்கு அங்கே பல மழையை உண்டாக்கினபடி.

இன ஆநிரை பாடி அங்கே ஒடுங்க –
பசுத் திரளும் திருவாய்ப்படியும் அங்கே ஒடுங்கவும்.-பசுத் திரள் இங்கு தானே ஒன்றாகப் பார்க்கும் படி

அப்பன்-
ஆபத்திற்குத் துணைவனான உபகாரகன்.

தீ மழை காத்து –
கேட்டினை விளைக்க வந்த மழையாகையாலே ‘தீ மழை’ என்கிறார்.
ஆயர்களும் பசுக்களும் அன்றிக்கே அன்று தாமே அன்றோ நோவு பட்டார்?

குன்றம் எடுத்தானே –
‘மலையை எடுத்துக் காத்த மஹோபகாரகன்’ என்கிறார்.
‘பசியினால் உண்டான கோபம் ஆறுந்தனையும் மழை பெய்து போவானுக்கு’ என்று ஏழு நாள் அன்றோ
மலையைத் தரித்துக் கொடு நின்று நோக்கிற்று?

கல் எடுத்து கல் மாரி காத்தாய் -சொல் எடுத்து பாடுவது அரிதானதே –
சொல் எடுத்து தான் கிளியை சொல் என்று துணை மேலை மேல் சோர்கின்றாள்

இராவணன் முதலானோர்கள் ஆனால் அன்றோ அழியச் செய்யலாவது?
அநுகூலனால் வந்த கேடு ஆகையாலே செய்யலாவது இத்தனையே அன்றோ?

‘இதனால் என் சொல்லியவாறோ?’ எனின்,
அடியவன் தப்பினாலும் தான் பொறுத்துக் காப்பாற்றுவான் என்பதனைத் தெரிவித்தபடி.

குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
ஊணைப் பறித்தோம் உயிரைப் பரிக்கக் கூடாது என்ற உதார குணத்துக்கு பல்லாண்டு –

—————————————————————————

குன்றம் எடுத்த பிரான் அடியாரொடும்
ஒன்றி நின்ற சட கோபன் உரை செயல்
நன்றி புனைந்த ஓர் ஆயிரத்துள் இவை
வென்றி தரும் பத்தும் மேவிக் கற்பார்க்கே–7-4-11- .

சர்வ பிரகார விஜயங்கள் பலன்
குன்றம் எடுத்த பிரான் அடியாரொடும்-கோவர்த்தன உத்தரணம் -அசாதாரண சேஷ பூதர்கள்
ஒன்றி நின்ற சட கோபன் உரை செயல்-ஏகி பவித்து -த்வாபர யுகத்தில் இருந்த கோபி ஜனங்கள் உடன்
நன்றி புனைந்த ஓர் ஆயிரத்துள் இவை வென்றி தரும் பத்தும் மேவிக் கற்பார்க்கே-விஜய பரம்பரைகள் கிட்டும்
உரை செயல்-வாசிக வ்ருத்தி ரூபம் -உரையாகிய செயல் –

‘மலையை எடுத்த உபகாரகனான கண்ண பிரானுடைய அடியார்களோடும் பொருந்தி நின்ற
ஸ்ரீசடகோபராலே அருளிச் செய்யப்பட்ட நன்மை பொருந்தி
ஒப்பற்ற ஆயிரம் திருப் பாசுரங்களுள் இவை பத்தும் பொருந்திக் கற்பவர்கட்கு வெற்றியைக் கொடுக்கும்,’ என்றபடி.
‘இவை பத்தும் மேவிக் கற்பார்க்கு வென்றி தரும்’ என்க.

முடிவில், ‘இத் திருவாய்மொழியைக் கற்றவர்கட்கு இது தானே வெற்றியைத் தரும்,’ என்கிறார்.

குன்றம் எடுத்த பிரான் அடியாரோடும் ஒன்றி நின்ற சடகோபன் உரை செயல் –
கோவர்த்தனத்தை எடுத்துத் தரித்த நீர்மையிலும்
அப்போதை அழகிலும் ஈடுபட்டு இருக்குமவர்களோடே கூடி நின்று
தாமும் பிரீதராய்,
பிரீதிக்குப் போக்கு வீடாகச் சொன்ன பாசுரமாயிற்று.-
த்ரிபங்கியாய் நின்ற அழகு –

உரை செயல் -வாசிக விருத்தி என்றபடி -உரையும் செயலையும் என்று கொள்ளாமல் உரையான செயல் என்றபடி

நன்றி புனைந்து ஓர் ஆயிரம் –
சர்வேஸ்வரனுடைய பரத்வ சௌலப்யங்களை வகையிட்டுத் தொடுத்த ஆயிரம் நன்மையாவது,
சம்சாரி சேதனுக்கு, இவனே சர்வ ஸ்மாத் பரன் என்றும், சர்வ சுலபன் என்றும்,
சர்வ சமாஸ்ரயணீயன் என்றும் சொல்லுகை அன்றோ?
அவையே அன்றோ முதல் திருவாய்மொழி தொடங்கி அருளிச் செய்தது?
அன்றிக்கே,
‘எம்பெருமானுடைய வெற்றிச் செயல்களைத் தொடுத்துச் சொன்ன இப் பத்தும்’ என்னுதல்.

நன்றி விசேஷணம் ஆயிரத்துக்கும் என்றும் இத்திருவாய் மொழிக்கும் என்று கொண்டு இரண்டு நிர்வாகங்கள்

மேவிக் கற்பார்க்கு வென்றி தரும் –
ஆசையோடு கற்பார் யாவர் சிலர், அவர்களுக்கு வெற்றியைப் பண்ணிக் கொடுக்கும்.

இன்ன வெற்றி விசேஷித்து இல்லாமையால் ஸமஸ்த வெற்றி-
செல்வத்தை விரும்புகிறவனுக்குச் செல்வத்திற்குத் தடையாக வுள்ளனவற்றை-கவனக்குறைவு அசுத்தி பேராசை போன்ற -வென்று கொடுக்கும்;
கேவலனுக்கு -வேறே ப்ரயோஜனமாகிய -விரோதியைப் போக்கிக் கொடுக்கும்;
பகவானைச் சரணம் அடைந்தவர்களில்
உபாசகனுக்கு ஐம்புலன்களையும் வெல்லுதல் முதலியவற்றைச் செய்து கொடுக்கும்;
பிரபந்நனுக்குக் கைங்கரிய விரோதிகளை வென்று கொடுக்கும்.

‘இது தான் ‘குலந்தரும்’ என்கிறபடியே எல்லா அபேக்ஷிதங்களையும் கொடுக்கும்’;
‘ஐஸ்வர்ய கைவல்ய பகவல் லாபங்களை ஆசைப் பட்டவர்களுக்கு அவற்றைக் கொடுக்கும்’;
‘கர்ம ஞான பத்திகளிலே இழிந்தவர்களுக்கு விரோதியைப் போக்கி அவற்றைத் தலைக் கட்டிக் கொடுக்கும்’;
‘பிரபத்தியிலே இழிந்தவர்களுக்கு ஸ்வரூப ஞானத்தைப் பிறப்பித்துக் கால க்ஷேபத்துக்கும் போகத்துக்கும்
ஹேதுவாயிருக்கும்’ என்ற வாக்கியங்கள் இங்கு அநுசந்தேயங்கள்.(முமுக்ஷூப்படி. திருமந்திரம். சூ. 18-21.)

——————————————————————-

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

ஆதந்வதா ஹிதம் அத ஆத்ம தசா அனுரூபம் ஹிதம்
ஆவிஷ் க்ருதான் அனுபமா புருஷோத்தமன்
ஆத்ம அபதான விபதான் அதீ லோபநீயதான்
அத்ஷயாந்தன் சடஜித் அன்வ பவத் சதுர்த்தே

தசா-வெவ்வேறே தசைகளுக்கு ஏற்ற ஹிதம்

அனுபமா-உவமானம் சொல்ல முடியாத

அத்ஷயாந்தன்-உபாத்தியாயர் போல் தானே முன் நின்று காட்டி அருள

————————————————————————-

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –

விக்ரமண விக்ராந்த ஸ்ரீ சன் அம்ருத மதந பூத தாத் உத்ருத்யே
கல்பே லோக அதநாத் ஷிதி பர ஹரணாத் தைத்ய ராஜ ப்ரகாராத்
லங்கா சங்கோசத்வாத் அசுர புஜ வன சேதநாத்
லோக ஸ்ருஷ்டே கோவர்த்தன அத்ரே த்ருதே –

1–விக்ரமண விக்ராந்த-ஸ்ரீ சன்–அப்பன் ஊழி எழ உலகங் கொண்ட வாறே

2-அம்ருத மதந–அப்பன் சாறு பட அமுதம் கொண்ட நான்றே.

3-பூத தாத் உத்ருத்யே–அப்பன் ஊன்றி இடந்து எயிற்றில் கொண்ட நாளே

4-கல்பே லோக அதநாத் —அப்பன் ஊழி எழ உலகம் உண்ட ஊணே–அவாந்தர பிரளயம் -உண்டு

5-ஷிதி பர ஹரணாத்—அப்பன் காணுடைப் பாரதம் கையறை போழ்தே.-பூ பாரம் தொலைத்து

6-தைத்ய ராஜ ப்ரகாராத்—அப்பன் ஆழ் துயர் செய்து அசுரரைக் கொல்லுமாறே–ஹிரண்ய நிரஸனம்

7–லங்கா சங்கோசத்வாத்–அப்பன் நீறு பட இலங்கை செற்ற நேரே

8-அசுர புஜ வன சேதநாத்–அப்பன் நேர் சரி வாணன் திண் தோள் கொண்ட அன்றே

9-லோக ஸ்ருஷ்டே–அப்பன் அன்று முதல் உலகம் செய்ததுமே

10-கோவர்த்தன அத்ரே த்ருதே –அப்பன் தீ் மழை காத்துக் குன்றம் எடுத்தானே-

——————————————————————————–

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 64-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்-

அவதாரிகை –

இதில் –
விஜய பரம்பரைகளைப் பேசின படியை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
மண்டிணி ஞாலமும் ஏழ் கடலும் நீள் விசும்பும் கழியப் பெரிதால் -என்று
பக்தி அதிசயத்தாலே அவசன்னரான இவர் தளர்த்தியை மாற்றித் தரிப்பைக்கு
பேர் எயில் சூழ் கடல் தென்னிலங்கை செற்ற பிரான் -7-3-என்று பிரஸ்துதமான
அவதார சரிதமாய் யுள்ள ஸ்ரீ த்ரி விக்ரமணம் தொடங்கி
ஸ்ரீ கோவர்த்தன உத்தாரணம் பர்யந்தமான விஜய பரம்பரைகளை
பத்தும் பத்தாக அவன் காட்டிக் கொடுக்க
அத்தை அனுபவித்து ஹ்ருஷ்டராகிற
ஆழி எழ சங்கில் அர்த்தத்தை
ஆழி வண்ணன் இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -என்கை –

———————————————————–

ஆழி வண்ணன் தன் விசயமானவை முற்றும் காட்டி
வாழிதனால் என்று மகிழ்ந்து நிற்க -ஊழிலவை
தன்னை யின்று போல் கண்டு தானுரைத்த மாறன் சொல்
பன்னுவரே நல்லது கற்பார்——64-

விசயமானவை-விஷயமானவை -விஜயமானவை
வாழிதனால்-வாழ் இதனால்
ஊழிலவை-பழைய அவதாரங்களை-சேஷ்டிதங்களை

—————————————————————

வியாக்யானம்–

ஆழி வண்ணன் தன் விசயமானவை முற்றும் காட்டி வாழிதனால் என்று மகிழ்ந்து நிற்க –
அதாவது –
கீழ்-ஆழி நீர் வண்ணனை அச்சுதனை -என்று
ஸ்ரமஹரமான வடிவை யுடைய ஸ்ரீ சர்வேஸ்வரன்
தன் விஜய பரம்பரைகளான சர்வ சேஷ்டிதங்களையும் இவருக்கு விஷயமாம்படி காட்டி
ஏவம் விதமான இவற்றாலே ஹ்ருஷ்டராய் வாழும் என்று சொல்லி
அவ்வாகாரங்களைக் காட்டிக் கொடு நிற்க –

சிர நிர்வ்ருத்தம் அப்யே தத் ப்ரத்யஷம் இவ தர்சிதம் -என்னும்படியே
1-ஆழி எழ -என்று தொடங்கி-அப்பன் ஊழி எழ யுலகம் கொண்டவாறே -என்று ஸ்ரீ த்ரிவிக்ரமணத்தையும்-
2-ஆறு மலைக்கு எதிர்ந்து ஓடும் ஒலி-என்று தொடங்கி – அப்பன் சாறு பட வமுதம் கொண்ட நான்றே -என்று
அம்ருத மதன வைசித்ரதையும்
3-நான்றில வேழ் மண்ணும் -என்று தொடங்கி
அப்பன் ஊன்றி இடந்து எயிற்றில் கொண்ட நாளே -என்று பூமி உத்தரண சக்தியையும்-
4-நாளும் எழ -என்று தொடங்கி அப்பன் ஊழி எழ உலகம் உண்ட ஊனே -என்று ஜகன் நிகரணத்தையும்
5-ஊணுடை மல்லர் ததர்ந்த ஒலி -என்று தொடங்கி – அப்பன் காணுடைப் பாரதம் கையறப் போழ்தே -என்று-
பாரத சமர அத்புதத்தையும்
6-போழ்ந்து மெலிந்த புன் செக்கரில் -என்று தொடங்கி – அப்பன் ஆழ் துயர் செய்து அசுரரைக் கொல்லுமாறே -என்று
ஹிரண்ய விதாரண க்ரமத்தையும்-
7-மாறு நிரைத்து இரைக்கும் சரங்கள் என்று தொடங்கி இலங்கை செற்ற நேரே -என்று
ராவண நிகரணத்தையும் (ராமாவதாரத்தையும் )
8-நேர் செரிந்தான் -என்று -தொடங்கி அப்பன் நேர் சேரி வாணன் திண் தோள் கொண்ட அன்றே -என்று
பாண பாஹூ வனச் சேதன சேஷ்டிதத்தையும் –
9-அன்று மண் நீர் எரி கால் -என்று தொடங்கி அப்பன் அன்று முதல் உலகம் செய்ததுமே -என்று
ஜகத் சமஷ்டி ஸ்ருஷ்டிதையும்
10–மேய நிரை கீழ் புக -என்று தொடங்கி அப்பன் தீ மழை காத்து குன்றம் எடுத்தானே -என்று
ஸ்ரீ கோவர்த்தன உத்தரண சாமர்த்தியத்தையும்
கண்டு அனுபவித்து-
11-குன்றம் எடுத்த பிரான் அடியோரோடும் ஒன்றி நின்ற சடகோபன் -என்று
மகிழ்ந்து கால் தரித்து நின்றார் ஆயிற்று –
நந்தாமி பஸ்யன் நபி தர்சநேன -என்னக் கடவது இறே –

ஊழிலவை தன்னை –
பழையதாய் கழிந்த அந்த அபதானங்களை-

இன்று போல் கண்டு-
பிரத்யஷமாக இன்று போல் அனுபவித்து –

தானுரைத்த மாறன் சொல் –
தாம் அனுபவித்து  அதுக்கு-போக்கு விட்டு அருளிச் செய்த ஸ்ரீ ஆழ்வார் திவ்ய ஸூக்தியை –

பன்னுவரே நல்லது கற்பார் –
ஆராய்ந்து அனுசந்திக்கும் அவர்களே தங்கள் பிரிய ஹிதங்களுக்கு உறுப்பாக
விலஷண சப்தங்களை அப்யசிப்பார் ஆவார் —

தங்கள் பிரிய ஹிதங்களுக்கு உறுப்பாக
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம் என்று அறிந்து அனுசந்திக்குமவர்களே
எல்லாம் அறிந்து அனுசந்திக்குமவர்கள் -என்றது ஆயிற்று-

—————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பகவத் விஷயம் காலஷேபம் -149- திருவாய்மொழி – -7-4-1….7-4-5–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்–

June 28, 2016

மேல் திருவாய்மொழியிலே,(7-3) பகவத் விஷயத்திலே இவர் கவரப்பட்ட மனத்தினை யுடையரானபடி சொல்லிற்று:
மேல் திருவாய்மொழியில் இவர்க்குப் பிறந்த துக்கம், ஒன்றைக் கொடுத்து மாற்றுதல்,
ஒருவராலே நீக்குதல் செய்யுமது ஒன்று அன்றே அன்றோ?
‘இனி இவர்க்குச் செய்யலாவது என்?’ என்று சர்வேஸ்வரன் பார்த்து அருளி ‘ஒன்று கொடுக்கலாவது இதற்கு மேல் இல்லை அன்றோ?
என்று பார்த்துத் தன்னுடைய விஜய பரம்பரைகளைப் பத்தும் பத்தாகக் காட்டிக் கொடுக்கக் கண்டு அனுபவித்து உவகை அடைகிறார்.

நினைத்து அனுபவிக்கவில்லை -கண்டு அன்றோ அனுபவிக்கிறார்-

அவனுக்கு உறுப்பாம் அன்று தம்மையும் வேண்டி. அவனுக்கு உறுப்பு ஆகாத அன்று தம்மையும் வேண்டாத
‘வளவேழ் உலகின்’ என்ற திருவாய்மொழியைப் பாடிய ஆழ்வார் அன்றோ இவர்தாம்!
தம்மை அழிய மாறியும் அத்தலைக்கு நன்மை தேடுமவர் அன்றோ?
இப்படி இவர் தன்மையினை அறியுமவனாகையாலே, தன்னுடைய வெற்றிச் செயல்களைக் காட்டி
இவருடைய இழவு எல்லாம் தீரும்படி சமாதானம் செய்ய அனுபவித்துத் தலைக் கட்டுகிறார்.

இறந்த காலத்தில் உள்ளவை அடங்கலும் சம காலத்திற்போலே கண்கூடாகக் காணலாம்படி செய்து கொடுத்தான்.
அடியிலே இவர்தாம் எல்லாவற்றையும் கண்கூடாகக் காண வல்லராம்படி செய்து கொடுத்தான் அன்றோ?
மயர்வற மதிநலம் அருளின பின்பும் இவ்வளவும் வர வாசனை பண்ணுவித்தானே! ஆகையாலே, இவர்க்கு ஒரு குறையும் இல்லையே!

முதலிலே -திருவடியில் -திரு உலகு அளந்த விருத்தாந்தம் தொடக்கமாக -என்றவாறு

அன்றிக்கே,
மேலே, ‘பேரெயில் சூழ்கடல் தென் இலங்கை செற்றபிரான்’ என்று
இராமாவதாரத்திற்செய்த வெற்றிச்செயல் சொல்லப்பட்டமையாலே,
அவ்வழியாலும் எல்லா அவதாரங்களிலும் உண்டான வெற்றிச் செயல்களை நினைந்து,
இராமாவதாரத்தில் நடத்திய வெற்றிச் செயல்களைக் கண்டு உகக்கும் சக்கரவர்த்தியைப் போலவும்,
கிருஷ்ணாவதாரத்தில் நடத்திய வெற்றிச் செயல்களைக் கண்டு உகக்கும் ஸ்ரீவசுதேவரைப் போலவும்
இவரும் உகந்து பேசுகிறார் என்னுதல்.

‘அஹம் புந;- ‘அஹம்புந: தேவகுமார ரூபம் அலங்க்ருதம் தம் ஸூதம் ஆவ்ரஜந்தம்
நந்தாமி பஸ்யந்நபி தர்ஸநேந பவாமி த்ருஷ்ட்வா ச புநர்யுவேவ’என்பது, ஸ்ரீராமா. அயோத். 12 : 105.
இது, கைகேகியைப் பார்த்துத் தசரத சக்கரவர்த்தி புலம்பிக் கூறுவது.

அஹம் புந–என் தன்மையை அறிந்து என் வழியே போந்த நீ, ‘பெருமாள் காடு ஏறப்போக’ என்றால்
நான் உயிர் வாழ்வேன் என்று சொன்னாயே!
தேவ குமார ரூபம் – அது கிடக்க; இவரையே நீ தான் ‘காடு ஏறப்போக’ என்கிறது?
‘இவர்க்கும் அவ்வளவேயோ?’ என்று சிறியத்தான் கேட்க, ‘கண்ணெச்சில் ஆம்’ என்று
தரம் போராதாரை ஒப்பாகச் சொல்லி இருடி கரி பூசுகிறான் என்றார்.
அலங்க்ருதம் – அதனாலும் வெறும் புறங்காண் ஒரு போலிச் சொல்லலாவது! ஒப்பித்தால் ஒக்கச் சொல்லலாவார் இல்லை.
தம் ஸூதம் – இவனுக்கு இரண்டு படியும் உத்தேசியமாய் இருக்கிறபடி.
ஆ வ்ரஜந்தம் – மலர் மலரும்போது எங்கும் ஒக்கப் பிறக்கும் மலர்ச்சி போலே.
அதுவும் வண்டினை நோக்கி அன்றோ மலர்வது? இவரும் அனுபவிக்கின்றவர்களைக் குறித்தே அன்றோ?
நந்தாமி பஸ்யந்நபி – கண்டபடியே இருக்கச் செய்தே, காணாது கண்டாரைப் போலேயாயிற்று,
நாடோறும் நாடோறும் கணந்தோறும் கணந்தோறும் உகக்கும்படி.
தர்ஸநேந – அணைத்தல், வார்த்தை சொல்லுதல் செய்ய வேண்டா; காட்சியே அமையும்.
கரை புரண்ட அனுபவம் உள்ள இடத்திற்போலே காணும் பிரயோஜனம்,
‘ஸதாபஸ்யந்தி’ அன்றோ?
பவாமி த்ருஷ்ட்வாச புந: யுவேவ-அறுபதினாயிரம் ஆண்டு வயது நிறைந்து கிழவனான சக்கரவர்த்தி,
பெருமாளைக் கண்ட பின்பு, பெருமாளுக்கும் தனக்கும் வாசி தெரியாதபடியானான்.’-
வா போகு–வந்து ஒரு கால் கண்டு அருளி -ஏசல் கண்டு –
‘காமனைப் பயந்த காளை’ என்னுமாறு போலே தன்னை அனுபவிப்பாரையும் தன்னைப் போலே ஆக்கி
உஜ்ஜீவிப்பிக்கும் விஷயம் போலே காணும்.

‘ஸ்ரீவசுதேவர்’ பெரிய திருவிழாவை அடைந்தாற்போலே பிள்ளைகளின் திருமுகங்களைப் பார்ப்பதை அடைந்து,
தமக்கு உண்டாய் இருந்த முதுமை நீங்கி யௌவனம் உடையவரானார்’ என்னும்படி ஆனாரே அன்றோ ஸ்ரீவசுதேவரும்?

‘மஹோத்ஸவமிவ ஆஸாத்ய புத்ராநந விலோகநம்
யுவேவ வஸூதேவ: அபூத் விஹாய அப்யாகதாம் ஜராம்’-என்பது, ஸ்ரீவிஷ்ணு புரா. 5. 20 : 52.

அன்றிக்கே, (இது மூன்றாவது சங்கதி )
‘மேலே, ‘கண்ணபிரானுக்கு என் பெண்மை தோற்றேன்’ என்று கொண்டு இத்தலையில் தோல்விக்கு
எதிர்த் தலையான அத் தலையில் வெற்றிச் செயல்களை அநுசந்திக்கிறார்’ என்று
பிள்ளை திருநறையூர் அரையர் பணிக்கும்படி-

சூட்டு நான் மாலைகள் தூயன ஏந்தி -கொடுத்துக் கொள்ளாதே கொண்டதுக்கு கைக்கு கூலி கொடுத்து -அமுது செய்திடில் ஒன்றுக்கு
நூறாயிரமாகக் கொடுத்து பின்னும் ஆளவும் செய்ய வேண்டுமே -வென்று தரும் மேவி கற்பார்க்கு -இந்த திருவாயமொழி –
ஸமஸ்த சரிதங்களைக் காட்டி -ஆழ்வார் ஸமஸ்த துக்கங்களையும் -மகள் தோழி தாயார் தசை துக்கங்களை -தீர்த்து அருளினான் –
வேண்டிற்று எல்லாம் தரும் கோதில மணி வண்ணன் -கனம் குழை இட காது பெருக்குவாராய்ப் போலே விச்வாஸம் பிறப்பித்து
பைய பைய -சிறுச் சிறிதே விழித்து -கோதில் வாய்மையினான் சாந்தீபன் –

மகா க்ரம -கிரமத்தில் ஏத்தி அருளுவான்
இது ஒரு நேர் முக ஒளி பரப்பு -ஆழ்வார் இருந்த இடத்திலே பத்தும் பத்தாக காட்டி அருளுகிறார்
இதற்கு மங்களா சாசனம் பண்ணாமல் இருக்கக் கூடாதே –

——————————————————————————————–

ஆழி எழச் சங்கும் வில்லும் எழத் திசை
வாழி எழத் தண்டும் வாளும் எழ அண்டம்
மோழை எழ முடி பாதம் எழ அப்பன்
ஊழி எழ உலகங் கொண்ட வாறே.–7-4-1-

முதல் பாட்டில் -திரு உலகளந்த பிரகாரத்தை அனுசந்தித்து ஸந்துஷ்டராகிறார் –
ஆழி எழச் சங்கும் வில்லும் எழத் –திரு உலகு அளந்து அருளுகிற போது திவ்ய ஆயுதங்கள் பரிவாலே
பிரதானனான திரு வாழி யாழ்வான் முன்னே உயர்ந்து தோன்றவும் –(முன்னே சென்று கல்லும் முள்ளும் அகற்ற )
அநந்தரம் -ஸ்ரீ பாஞ்ச ஜன்யமும் ஸ்ரீ சார்ங்கமும் தோன்றவும்
திசை வாழி எழத் தண்டும் வாளும் எழ –கதையும் நாந்தகமும் தோன்றவும் -இவ்வாயுத பூர்த்தியைக் கண்டு உகந்து-
திக்குக்கள் தோறும் நின்ற நின்ற நிலையிலே தேவ மனுஷ்யாதிகளுடைய மங்களா சாசன கோஷம் கிளம்பும்படியாகவும் –
அவிளம்பமாக வளர்ந்தபடியாலே
அண்டம் மோழை எழ முடி பாதம் எழ –அண்ட கபாலம் பிளந்து ஆவரண ஜலம் குமிழி கிளம்பும்படியாகவும் –
வளர்ந்து அருளின சடக்காலே திரு முடியும் எடுத்த திருவடியும் ஒக்கக் கிளம்பும்படியாகவும் –
ஆஸூர ப்ரக்ருதியான மஹா பலி அபிமானம் நடந்த காலம் போய் / மோழை-குமிழி
அப்பன் ஊழி எழ உலகங் கொண்ட வாறே.–விலக்ஷண காலம் கிளம்பும்படியாகவும் சர்வ ஸ்வாமியான சர்வேஸ்வரன்
லோகத்தை அளந்து கொண்ட பிரகாரம் இருந்தபடியே —

திருஉலகு அளந்தருள வளருகிற போது. திருவாழியாழ்வான் முன்னே தோன்றவும், பின் ஸ்ரீபாஞ்சஜன்யம் ஸ்ரீகோதண்டம்
ஆகிய இவைகள் தோன்றவும், எல்லாத் திசைகளினின்றும் மங்களாசாசனம் செய்கின்ற ஒலி தோன்றவும், கதை என்ன, வாள் என்ன
நல்லகாலம் தோன்றும்படி ஆயின; அதலால், என்னப்பன் உலகத்தை அளந்துகொண்ட விதம் என்னே!
‘தண்டும் வாளும் எழத் திசையும் வாழி எழ’ என மாற்றுக, ஏகாரம், ஆச்சரியப்பொருளில் வந்தது.
இத்திருவாய்மொழி, கலி விருத்தம்.

அவை எல்லாவற்றுக்கும் அடியாக, திருவுலகு அளந்தருளின பெரிய வெற்றிச் செயலை அருளிச் செய்கிறார்.

‘தேவர்கள் தங்கள் தங்கள் இருப்பிடத்திற்குச் செல்லுகிறார்கள்; அசுரர்கள் கொல்லப்பட்டார்கள்;
அச்சம் என்பது சிறிதும் இல்லை; பகவானால் இவ்வுலகமானது வெல்லப்பட்டது,’ என்கிறபடியே,
‘தேவா: ஸ்வ ஸ்தாநம் ஆயாந்தி நிஹதா தைத்ய தாநவா:
ந பயம் வித்யதே கிஞ்சித் ஜிதம் பகவதா ஜகத்’-
இது, திருவுலகு அளந்தருளின போது ஜாம்பவான் மஹாராஜர் பறையறைந்தபடியாம்.
தனக்கு ஆக்கிக் கொண்ட செயல் அன்றோ?
இராவணனைப் போலே எதிரி ஆக்கிக் கொல்லாதே குணங்கள் சில உண்டாகையாலே நின்ற நிலையிலே தோற்பித்துக் கொண்டபடி.

நாயகனுக்கு அடியார் அன்றோ வென்று கொடுப்பார்?
ஆழி எழ –
‘மூன்று உலகங்களையும் காற்கீழே இட்டுக் கொள்ள வேணும்’ என்னும் கறுவுருதல் உள்ளது சர்வேஸ்வரனுக்கே அன்றோ?
அந்த எண்ணம் இன்றிக்கே இருக்கச் செய்தேயும் அவனுக்கு முன்பே பரிகரம் முற்பட்டபடி.

‘காட்டுக்குப் போம்’ என்று நியமித்தது பெருமாளையே யாயிருக்க. இளைய பெருமாள் முற்பட்டாற்போலே.
‘ப்ராகேவ து மஹாபாக: ஸௌமித்ரி: மித்ராந்தந:
பூர்வஜஸ்ய அநுயாத்ரார்த்தே த்ருமசீரை: அலங்க்ருத:’- என்பது,
ஸ்ரீராமா. சுந். 33 : 28. இது, திருவடியைப் பார்த்துப் பிராட்டி கூறியது.

‘புண்ணிய சீலரும் சிநேகிதர்களுக்குச் சந்தோஷத்தைச் செய்கிறவரும் சுமித்தரையின் புத்திரருமான இளைய பெருமாள்,
தமையனாருக்குப் பின்னே செல்லும் பொருட்டு முன்னரே மரவுரியினால் தம்மை அலங்கரித்துக் கொண்டார்’ என்கிறபடியே,
போக்குக்குத் தகுதியாக முற்கோலி அலங்கரித்துக் கொண்டு நின்றார் அன்றோ?

ஆழி எழ –
தோற்றத்திலே அரசு போராயிற்று; ஹேதி ராஜன் அன்றோ?
திவ்விய ஆயுதங்களுக்கெல்லாம் பிரதானம் அன்றோ திருவாழி?
பரிகரம் நிற்க மஹாராஜர் இராவணன் மேலே பாய்ந்தாற்போலே;
‘பையல் முடியுந்தானுமாய்ப் பெருமாள் திரு முன்பே நிற்பதே! ஈர் அரசு ஆயிற்றோ?’ என்று
பொறாமையாலே-பொறுக்காத படியாக – மேல் விழுந்தார் அன்றோ?

அத ஹரி வர நாத: ப்ராப்ய ஸங்க்ராம கீர்த்திம்
நிஸி சர பதிம் ஆஜௌ யோஜ யித்வா ஸ்ரமேண,
ககந மதி விஸாலம் லங்கயித்வா அர்க்க ஸூநு:
ஹரிவர கண மத்யே ராமபார்ஸ்வம் ஜகாம.’- என்பது, ஸ்ரீராமா. யுத். 40:29

‘அத ஹரி வர நாத:-தம்மோடு ஒக்க வினை செய்ய வல்ல பேர் தனித்தனியே பலர் அன்றோ?
ப்ராப்ய ஸங்க்ராம கீர்த்திம் – இவர்களோடு கூடி நின்று ஒத்த போர் ஆக ஒண்ணாது,
தூசித் தலையில் ஓர் ஏற்றம் செய்து தரம் பெற வேணும்,’ என்று இருந்தார்.
பூசல் தலையிலே பெருமாளுக்கு உண்டான கீர்த்தியையும் தம் தலையிலே ஏறிட்டுக் கொண்டார்.
நிசி சர பதிம் – அத் தலையிலும் அவனோடு ஒக்க வினை செய்ய வல்லார் பலர் அன்றோ?
‘அவன் கீழ்த் திரியுமவர்கள் தரம் போரார்’ என்று அவனோடே பொருதபடி.
ஆஜௌ-அவர்களைப் போலே வழி அல்லா வழியே இளைப்பிக்கை அன்றிக்கே, செவ்வைப் பூசல் செய்து இளைப்பித்தபடி.
யோஜ யித்வா ஸ்ரமேண-இதற்கு முன்பு கூடாதது ஒன்றோடோ கூட்டினார்.
ககந மதி விசாலம் லங்கயித்வா – பரப்பை யுடைத்தான ஆகாயத்தைத் திறலாலே வருத்தம் அறக் கடந்தார்.
அர்க்க ஸூநு:- மீட்சியில் தம் வரவு தெரியாதபடி மீண்டார்.
பிறப்புக்கு ஈடாகச் செய்தார். தன் நிலம் அன்றோ? சூரியன் ஓரிடத்தினின்றும் ஓரிடத்து ஏறப் போம் போது தெரியாது அன்றோ?
ஹரி வர கண மத்யே-‘இவர்களில் ஒரு வேறுபாடு தோற்ற ஒண்ணாத’ என்று இவர்கள் நடுவே நின்றார்.
ராம பார்ஸ்வம் ஜகாம – ‘தூசித் தலையிலே மதிக்க ஒரு வினை செய்தாரன்றோ முன்னிற்கப் பெறுவர்?’
என்று பெருமாள் பக்கத்திலே வந்து நின்றார்.

ஆழி எழ –
‘ஆயிரக் காதம் பறப்பதன் குட்டி ஐந்நூற்றுக் காதம் சிறகு அடிக் கொள்ளும்’ என்னுமாறு போலே முற்கோலி வளர்ந்தபடி.
சிறகடிக் கொள்ளுகையாவது, பின்பு தூரப் பரப்பதற்குத் தகுதியாம்படி இளமையிலே பயிலுதல்.
அச்சங்கொள்ளுதற்கு இடம் அல்லாத இடத்திலும் பயப்படக் கூடியவர்கள்,
அஞ்சத்தக்க இடத்தைக் கண்டால் வாளா இரார்களே அன்றோ?

பய சங்கை இல்லாத இடத்திலும் அஞ்சும்படி செய்கிறது விஷய வைலக்ஷண்யம் அன்றோ?
துரியோதனன் கோட்டியிலே கிருஷ்ணன் எழுந்தருளின போது அவர்கள் செய்த வஞ்சனத்தைக் கண்டு,
அச்சங்கொண்டு, தம்முடைய திருமாளிகையில் படுக்கையையும் தடவிப் பார்த்தாரே அன்றோ ஸ்ரீவிதுராழ்வான்?
‘மஹாபுத்திமானான அந்த விதுரர் கண்ணனுடைய படுக்கையைத் தடவிப் பார்த்தார்,’ என்கிறபடியே,
‘ஸம்ஸ்ப்ருசந் ஆஸநம் ஸௌரே: விதுரஸ்ஸ மஹாமதி:’- என்பது, பாரதம், உத்யோக.

கடல் கலங்குவது தன்னளவிலே அன்றோ?
பிள்ளை யுறங்கா வில்லிதாசர் ‘மஹாமதி என்றது, மதிகேடர் என்றபடியோ?’ என்றார்,
பிள்ளை தாம், ‘பெருமாள் எழுந்தருளும் போது எங்கேனும் ஒரு சலனம் பிறக்கில் நம் பிராணனை விடுமத்தனை’ என்று
சொட்டையை உருவிப் பிடித்துக் கொண்டு சேவிப்பாராம்.
நம் முதலிகள் அதனைக் கண்டு, இவரை ‘மஹாமதிகள்’ என்று அழைப்பார்கள்.
அறிவு உண்டாகையாவது, பகவத் விஷயத்தில் அறிவு கெடுகை அன்றோ?

ஆழி எழ –
இவன் வளர்ந்தருளுகைக்குக் கணிசித்த படியைக் கண்டு,
‘தனியாக ஒண்ணாத’ என்று அஞ்சித் திருவாழி யாழ்வான் ஒரு கையிலே ஏறினார்.

சங்கும் வில்லும் எழ-
தூசி ஏறினவர்கள் போரப்-( புகப் )- புக்கவாறே நின்ற இளவணி கலங்கி மேலே நடக்குமாறு போலே,இளவணி-காலாள்.
மற்றை ஆழ்வார்களும் மற்றைக் கைகளிலே ஏறினார்கள்.
(ஆழியும் எழ இல்லையே -ஆகவே இவை இளவணி )
அன்றிக்கே, (பரிவால் முதல் அர்த்தம்)
‘இரை பெறாத இடத்தே இருந்து சீறுபாறு என்னக் கூடியவர்கள் இரையுள்ள இடத்தில்
ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடார்கள் அன்றோ?’ என்னுதல்;
இனத்திலே ஒருவன் வாழ்வதனைக் கண்டவாறே உறவினர்கள் கூட்டம் வந்து மேல் விழுமாறு போலே,
மற்றைத் திவ்விய ஆயுதங்களும் மேல் விழுந்தபடி என்னுதல்.

‘இடங்கை வலம்புரி நின்று ஆர்ப்ப-இரண்டாந். 71.
இவனுடைய வடிவழகினை நினைந்து ஸ்ரீ பாஞ்சஜன்யமானது நின்று ஆர்ப்ப.

எரி கான்று அடங்கார் ஒடுங்குவித்தது ஆழி-
அவனைப் போல் ஆர்த்துக் கொள்ளுதற்குக் காலம் அற்று நெருப்பினை உமிழ்ந்து கொண்டு
நமுசி முதலானவர்களை வாய் வாய் என்றது திருவாழி.

விடம் காலும் தீவாய் அரவுகிடந்த இடத்தே கிடந்து பகைவர்கள் மேலே விஷமாகிய நெருப்பினை
உமிழுமத்தனை அன்றோ திருவனந்தாழ்வானாலாவது?

அரவணை மேல் தோன்றல் –
திருவனந்தாழ்வானைப் படுக்கையாகவுடைய பிரதானன்.

திசை அளப்பான் பூவார் அடி நிமிர்த்த போது-
ஒரு பூவினைக் கொண்டே அன்றோ காடும் ஓடையும் அளந்து.கொண்டது?
பூவை இட்டுப் பூவை கொண்டான் காணும்.
அப் படுக்கையிலே பொருந்தும் சௌகுமார்யத்தை யுடையவன் இக்காடும் ஓடையுமான உலகத்தினை
அளக்கப் புக்கால், இவர்களுக்கு இப்படிப்பட வேண்டாவோ?
அவன் இப்படி அளவா நின்றால் இவர்கள் பேசாது இரார்கள் அன்றோ?’

‘மூன்று அடிகளால் முறையே மூன்று உலகங்களையும் ஒரு கண நேரத்திற்குள் ஆக்கிரமித்தவராய் விளங்குகிற
திவ்விய ஆயுதங்களையுடையவராய் எந்தத் திரிவிக்கிரமனாக ஆனானோ அந்த வாமனன்
உன்னை எப்போதும் காக்கக் கடவன’ என்கிறபடியே.
‘வாமநோ ரக்ஷது ஸதா பவந்தம் ய: க்ஷணாத் அபூத்
த்ரிவிக்ரம: க்ரமாக்ராந்த த்ரைலோக்ய: ஸ்புரதாயுத:’- என்பது, ஸ்ரீ விஷ்ணு புரா. 5. 5.:17

திசை வாழி எழ –
‘அவனுக்கு என் வருகிறதோ?’ என்று ஆயிற்றுத் திவ்விய ஆயுதங்கள் கிளர்கின்றன!
‘அவை தமக்கு என் வருகிறதோ?’ என்று
‘வடிவார் சோதி வலத்து உறையும் சுடராழியும் பல்லாண்டு, படைபோர் புக்கு முழங்கும்
அப்பாஞ்சசன்னியமும் பல்லாண்டே’ என்னா நிற்பார்கள் அன்றோ?
‘நின் கையில் வேல் போற்றி!’ என்று வேல் தனக்கும் பரிய வேண்டி இருக்குமன்றோ?
அன்றிக்கே,
திக்குகள் தோறும் அநுகூலருடைய’ வாழி வாழி’ என்கிற மங்களாசாசன ஒலிகள் கிளர என்னுதல்.
திவ்விய ஆயுதங்களிலும் அவனுக்குப் பாதுகாவல் இவர்களுடைய மங்களாசாசனம் என்று இருக்கிறார்,
திவ்விய ஆயுதங்களின் நடுவே இவற்றைச் சொல்லுகையாலே.
ஏத்த ஏழ் உலகும் கொண்ட கோலக் கூத்தன் அல்லனோ? -திருவாய். 2. 2,11.

தண்டும் வாளும் எழ-
‘தூசித் தலையில் அவர்களே கை தொடராய்த் தரம் பெற்றுப் போக ஒண்ணாது’ என்று நின்று
பேரணியும் குலைந்து மேல் விழுமாறு போலே;
‘பிற்பட்டோம், கெட்டோம்’ என்று ஒருவருக்கு ஒருவர் படுகிறபடி;
ஒருவர்க்கு இட்ட சோற்றைப் பலர் ஆசைப்படுமாறு போலே காணும் இவர்கள் படுகிற பாடு.
அநுகூலன் வந்து புகுர, ‘கொல்லத் தக்கவன்’ என்கிறவர்கள் பிரதிகூலர் உள்ள இடத்தில் பேசாது இரார்கள் அன்றோ?’

‘என் இது மாயம் என்னப்பன் அறிந்திலன் முன்னைய வண்ணமே கொண்ட அளவாய்’- பெரியாழ்வார் திருமொழி. 1. 9 : 8.-
என்று நமுசி வந்து,‘என் தந்தை உன் வஞ்சநம் அறிந்திலன்; நீ முன்பு போலே நின்று அளக்க வேணும்’ என்று
திருவடிகளைக் கட்டிக் கொண்டு கிடந்தான் அன்றோ?
அன்றே பிறந்து அன்றே வளர்ந்தான் ஒருவனுடைய செயல் அன்றோ இவை அடைய?
ஆகையாலே, பரிகைக்குக் காரணம் உண்டு என்றபடி.
‘சீராற்பிறந்து’-பெரிய திருவந். 16. என்கிறபடியே, ‘உன் கையிலே பருத்தி பட்ட பன்னிரண்டும் படுகிற
பூமியை நீர் ஏற்கும் போது இப்படிப் பட வேணுமோ?’ என்கிறார்.
‘மார்பாரப் புல்கி நீ உண்டு உமிழ்ந்த’ என்றதனைக் கடாட்சித்துப்‘பருத்தி பட்ட பன்னிரண்டும் படுகிற பூமியை’ என்கிறார். ‘

அண்டம் மோழை எழ –
இந்திரனுக்காக மூன்று உலகமித்தனையும் அளந்து கொடுப்பதாக அன்றோ தொடங்கியது?
கணிசம் அவ்வளவு அல்லாமையாலே அண்டத்தின் இடமுள்ள அளவும் சென்று அளந்து,
அண்ட கடாஹத்திலே திருவடி சென்று,
‘ஒண்மிதியிற் புனல் உருவி ஒருகால் நிற்ப’ என்கிறபடியே கீழேயுள்ள அண்ட கடாஹத்தை உருவி நிற்க,
கீழேயுள்ள ஆவரண ஜலம் மேலே எழ.
ஆவரண ஜலத்துக்கு நடுவே ஒரு கழல் போலே மிதக்குமித்தனை அன்றோ அண்டம்?
‘இரட்சகமான செயலே பாதகமாகிறதோ?’ என்று அஞ்ச வேண்டும்படி அன்றோ அப்போதைக் கறுவுதல்’
மோழை-குமிழி.

முடி பாதம் எழ-
திருமுடியளவும் திருவடிகள் கிளர.
‘முடி மேலே பாதம் எழ’ என்றும் சொல்லுவர்கள் நிருத்த லக்ஷணத்துக்காக.

அப்பன் ஊழி எழ –
மஹாபலி தகுதி இல்லாமல் அரசு நடத்துகையால் வந்த பொல்லாக் காலமானது போய், நல்லடிக் காலமாயிற்று;
நல்லடிக் காலம் கிளரும் படியாகவும்.

அப்பன் உலகம் கொண்டவாறே –
‘மஹேபகாரகனான சர்வேஸ்வரன் உலகத்தைக் கொண்ட ஆச்சரியம் இருந்தபடி என்?’ என்னுதல்:
அன்றியே,
‘உலகத்தைக் கொண்ட பிரகாரம் இருந்தபடி என்?’ என்னுதல்.
அப்பன் அப்பன் என்று உவகை அடைகிறாராகவுமாம்.

அப்பன் –
‘இந்திரனுக்கு இராயச்சித்தைக் கொடுத்த செயலாலே எனக்கு ஆத்துமாவைத் தந்தான்’ என்கிறாராகவுமாம்.

——————————————————————————————————-

ஆறு மலைக்கு எதிர்ந்து ஒடும் ஒலி அர
வூறு சுலாய் மலை தேய்க்கும் ஒலி கடல்
மாறு சுழன்று அழைக்கின்ற ஒலி அப்பன்
சாறு பட அமுதம் கொண்ட நான்றே.–7-4-2-

அநந்தரம் அம்ருத மதன வ்ருத்தாந்தத்தை அனுசந்தித்து ஸந்துஷ்டராகிறார் –

அப்பன் சாறு பட அமுதம் கொண்ட நான்றே.–மஹா உபகாரகனான சர்வேஸ்வரன் தேவர்களுக்கு மஹா உத்சவம் உண்டாம்படியாக
கடலைக் கடைந்து அம்ருதத்தைக் கொண்ட நாள் -கடைந்த வேகத்தாலே
சாறு -உத்சவம் -சாரமுமாம் -/ நான்று -நாள்
ஆறு மலைக்கு எதிர்ந்து ஒடும் ஒலி –ஆறுகளானவை தனக்குப் பிறப்பிடமான மலையை நோக்கி எதிரே ஓடுகிற ஒலியும்
அர வூறு சுலாய் மலை தேய்க்கும் ஒலி –வாசுகியாகிற பாம்பினுடைய யுடம்பை சுற்றி மந்தரத்திலே தேய்க்கிற ஒலியும்
ஊறு-உடம்பு / சுலாய்-சுற்றி
கடல் மாறு சுழன்று அழைக்கின்ற ஒலி –கடைகையாலே கடல் இடம் வலமாக மாறி கூப்பிடுகிற ஒலியும் ஆயிற்றன –

‘தேவர்களுக்குத் திருவிழா உண்டாகும்படி எம்பெருமான் திருப்பாற்கடலைக் கடைந்து அமுதம் கொண்ட காலத்தில் ஆறுகள் எல்லாம்
தாம் பிறந்து வந்த மலைகளை நோக்கி எதிர்த்து ஒடுகின்ற ஒலியும், வாசுகி என்னும் பாம்பினது உடலைச் சுற்றி மந்தரம் என்னும்
மலையானது தேய்கின்ற ஒலியும், திருப்பாற்கடலானது இடம் வலமாக மாறிச் சுழன்று அழைக்கின்ற ஒலியும் உண்டாயின,’ என்றவாறு.
‘கொண்ட நான்று ஒலி ஒலி ஒலி உண்டாயின’ என்க. ‘உண்டாயின’ என்னும் வினைச்சொல் ஒன்றைக் கொணர்ந்து முடிக்க.
நான்று – காலம். அரவு – ஈண்டு வாசுகி, ஊறு – உடல். சுலாய் – சுற்றி.

திருப்பாற் கடலைக் கடைந்த ஆச்சரியமான காரியத்தைச் சொல்லுகிறார்.
அஜிதன் -அமிருத மதன பெருமாள் திருநாமம் -எட்டு உருவங்கள் கொண்டாரே
ஹரி கஜேந்திர மோஷ பெருமாள் திருநாமம்

ஆறு மலைக்கு எதிர்ந்து ஓடும் ஒலி-
கடலிலே மந்தர மலையை நட்டவாறே கடல் கொந்தளித்து, மலை போய்த் தாழ்ந்து கொடுத்தது;
நீரானது தாழ்ந்த விடத்தே ஓடக் கடவதன்றோ?
ஆறுகளானவை மலையைக் குறித்து எதிரிட்டு ஓடுகிற போதை ஒலியானது இவர்க்குச் செவியிலே படுகிறபடி.
இவர்க்கு முக் காலத்திலும் உள்ளன எல்லாம் தெரியும்படி அன்றோ அவன் வெளிச் சிறப்பித்தது?

அரவு ஊறு சுலாய் மலை தேய்க்கும் ஒலி –
வாசுகியினுடைய உடலைச் சுற்றிக் கடைகிற போதைச் சரசர வென்கிற ஒலியும்.
(கீழே சல சல என்ற ஒலி )
ஊறு – உடம்பு. சுலாய் – சுற்றி.

கடல் மாறு சுழன்று அழைக்கின்ற ஒலி –
மந்தர மலையை கொடு புக்கு நட்டுத் திரித்த போது,
கீழ்க் கடல் மேற் கடலாய்க் கிடாய்ப் பாய்ச்சல் போலே
திரையோடு திரை தாக்கிக் கிளருகிற ஒலியும்,

அப்பன் –
உபகாரகன்.

சாறு பட –
கடலிலே நீர் கோதாம்படி பிரயோஜனமான அமிருதம் உண்டாக. என்றது,
‘நீரிலே ரசமான பசை பட’என்றபடி.

அன்றிக்கே,
சாறு என்று திருவிழாவாய், ‘தேவ சாதிக்குத் திருவிழா உண்டாம்படியாக’ என்னுதல்;
சாறு பட – என்றபடி.

அமுதம் கொண்ட நான்றே –
திருப்பாற்கடல் கடைந்து அமுதம் கொண்ட காலத்தில் இவை எல்லாம் உண்டாயின.

————————————————————————————–

நான்றில ஏழ் மண்ணுந் தானத்தவே பின்னும்
நான்றில ஏழ் மலை தானத்தவே பின்னும்
நான்றில ஏழ்கடல் தானத்தவே அப்பன்
ஊன்றி இடந்து எயிற்றில் கொண்ட நாளே.–7-4-3-

அநந்தரம் பூமி உத்தரண வ்ருத்தாந்தத்தை அனுசந்தித்து ப்ரீதராகிறார் –
ஸ்திதே -அஹம் ஸ்மராமி -நயாமி பரமாம் கதிம் –

அப்பன் ஊன்றி இடந்து எயிற்றில் கொண்ட நாளே.–தன் வடிவை அழிய மாறி நீருக்கு இறாயாத ஸ்ரீ வராஹ வேஷத்தைக் கொண்ட
மஹா உபகாரகன் -பிரளய அந்தர்கதையான பூமியை அண்டகபாலத்தில் ஓட்டுவிடும்படி குத்தி இடந்து எயிற்றின் மேலே கொண்ட காலத்தில்
நான்றில ஏழ் மண்ணுந் தானத்தவே -சப்த த்வீப ரூபமான பூ பேதங்களானவை நழுவாதே ஸ்வ ஸ்தா நஸ்த்தங்களாயிற்றன
பின்னும் நான்றில ஏழ் மலை தானத்தவே–அதுக்கும் மேலே அதுக்கு தாரகமான சப்த குல பர்வதங்களும்
சலியாதனவாய்க் கொண்டு ஸ்வ ஸ்தா நஸ்த்தங்களாயிற்றன
பின்னும் நான்றில ஏழ்கடல் தானத்தவே -அதுக்கும் மேலே சப்த சமுத்ரங்களும் உடைந்து ஒழுகாதே ஸ்வ ஸ்தா நஸ்த்தங்களாயிற்றன-

அஜகத் ஸ்வஸ்த பாவம் -நீருக்கு இறாயாத -பூமாதேவியை -உதாரணம் பெரும் கேழலார் -மேரு கணா கணா —
ஸ்புட பத்ம லோசனன் -எயிற்று இடை மண் கொண்ட எந்தை –அண்ட புத்தி மேலே முட்டி தூக்க –

‘என் அப்பன் வராக அவதாரத்தைச் செய்து பூமியைக் குத்தி இடந்து தன் கொம்பிலே கொண்ட காலத்தில் ஏழு தீவுகளும் நழுவாமல்
அந்த அந்த இடங்களிலே உள்ளவாயின; அதற்கு மேல், ஏழு மலை சலித்தல் இல்லாதனவாய்க் கொண்டு அந்த அந்த இடங்களிலே இருப்பனவாயின;
அதற்குமேல், ஏழு கடல்களும் உடைந்து ஓடாமல் அந்த அந்த இடங்களிலே இருப்பனவாயின,’ என்றபடி.
‘ஏழ் மண்ணும்’ என்றது, ஏழு தீவுகளைக் குறித்தபடி, நாலுதல் -தொங்குதல். ‘நான்றில’ என்றது,
‘ஒவ்வொன்றும் தனது தனது நிலையினின்றும் மாறிற்று இல்லை’ என்றபடி.

மஹா வராஹ அவதாரத்தின் செயலை அருளிச் செய்கிறார்.

நான்றில ஏழ் மண்ணும் தானத்தவே-
ஏழு பூமியும் நாலாதபடி எடுக்கை. என்றது,
‘ஏழு தீவுகளாய் இருக்கின்ற பூமியை எடுக்கச் செய்தே,
ஒன்றும் நாலாதே முன்பு போலே தன் தன் இடத்திலே கிடக்கும்படி.
இவன் பெரிய யானைத் தொழிலைச் செய்யா நிற்கச் செய்தேயும், முன்பு போலே ஒரு குறை அற,
உண்பார் உடுப்பாராய்ச் செல்லுகிறபடி.
ஆதாரமானவன் கூட நிற்கையாலே இவற்றுக்கு ஒரு குறை வாராதே.
ஏழு தீவுகளும் சலித்தன இல்லை: தனது தனது இடத்தில் இருந்தன ஆயின.

பின்னும் –
அதற்கு மேலே,

நான்றில ஏழ் மலை தானத்தவே –
பூமிக்கு ஆணி அடித்தாற்போலே இருக்கிற ஏழு குல மலைகளும் ஒன்றும் குலையாமல் தன்தன் இடத்தில் நிற்கும்படி. என்றது,
‘ஒரு கோத்ர ஸ்கலனம் பிறந்தது இல்லை’ என்றபடி.
(பர்வத ஸ்கலித்வம்
நாம வேறுபாடு என்றுமாம் )

‘பின்னும் பின்னும்’ என்று
வருவதற்குக் கருத்து, ‘இவற்றிலே ஒரு செயலே அமையுங்கண்டீர்!
அதற்கு மேலே இவையும் செய்தான்’ என்கைக்காக.

நான்றில ஏழ் கடல் தானத்தவே –
அவை தாம் கடினத் தன்மையாலே குலையாதே ஒழிந்தன என்னவுமாம் அன்றோ? அதுவும் இல்லை அன்றோ இதற்கு?
நீர்ப் பண்டம் அன்றோ தண்ணீர்? அதுவும் தன் இடத்திலே கிடக்கும்படியாக.
அவற்றின் கடினத் தன்மையும் இதனுடைய நெகிழ்ச்சித் தன்மையும் பயன் அற்றவை;
‘அவன் திருவுள்ளக் கருத்து யாது ஒன்று? அதுவே காரியமாக முடிவது,’ என்கை.
புண்ணியம் பாபம் -பேற்றுக்கு சாதனம் இல்லை -இரண்டையும் தொலைத்து –
அவன் நிர்ஹேதுக கிருபையே மோக்ஷ ஹேது போலே –

‘இவை இப்படிக் கிடத்தல் அவன் (சாவதானமாய் ஜாதரூபனாய் )குறிக்கோளுடையவனாய்க் கொண்டு
காப்பாற்றும் போதோ?’ என்னில்,

ஊன்றி இடந்து எயிற்றில் கொண்ட நாளே-
மாறுபடுருவத் தைக்கும் படியாகக் குத்தி. அண்ட பித்தியினின்றும் ஒட்டு விடிவித்து எடுத்து ஏறட்டு,
எயிற்றிலே எற்றிக் கொண்டு (வியாபரித்த போது )செயல் செய்த போது:
‘மண்ணெலாம் இடந்து எடுத்து மதங்கள் செய்து’ பெரிய திருமொழி, 3. 4 : 3. என்கிறபடியே.
அவன் இப்படி முக்கியமாகக் காக்கப் புக்கால் அவை சலிக்கமோ?
அசையாத பொருள்களோடு அசையும் பொருள்களோடு வாசி யறத் தம் தம் இடத்திலே நின்றன-

————————————————————————-

நாளும் எழ நிலம் நீரும் எழ விண்ணும்
கோளும் எழ எரி காலும் எழ மலை
தாளும் எழச் சுடர் தானும் எழ அப்பன்
ஊளி எழ உலகம் உண்ட ஊணே.–7-4-4-

அநந்தரம் ஜெகன் நிகரணத்தை அனுசந்தித்து ஸந்துஷ்டராகிறார்
மகா பிரளயம் –பிராகிருத பிரளயம் என்றுமாம் இதற்கு
அவாந்தர பிரளயம் கல்ப காலம் -நைமித்திக பிரளயம் இதற்கு பெயர் -மூன்று லோகங்கள் மட்டும் அழியும்

நாளும் எழநிலம் நீரும் எழ விண்ணும் கோளும் எழ எரி காலும் எழ –நிவசாதி விபாகம் நிலை குலைந்து போகவும் –
ஆகாசமும் க்ரஹங்களும் நிலை குலைந்து போகவும் அக்னி வாயுக்களும் நிலை குலைந்து போகவும் –
கோள்-க்ரஹம்
மலை தாளும் எழச் சுடர் தானும் எழ அப்பன் ஊளி எழ உலகம் உண்ட ஊணே.–பர்வதங்கள் அடி பறிந்து போகவும்
நக்ஷத்ராதி தேஜோ பதார்த்தங்களும் குலையவும் -பிரளய ஆபத் சகனான மஹா உபகாரகன் பசித்து உண்டான் என்று
தோன்றும்படியாக லோகத்தை உண்ட ஊண் இருந்தபடியே -ஊளி-பசி -உறிஞ்சின ஓசை என்பாரும் உளர் –

அத்தா -சராசரம் கிரஹாத் –
அரியே என்று உன்னை அழைப்ப -பிரளய ஆபத் ஸகத்வம் -ஊளி சப்தம் –பசி என்றுமாம் நெருக்கு உள்ளே போலும் சப்தம்

நாள்களின் கூறுபாடு குலையவும், நிலம் தண்ணீர் இவற்றின் கூறுபாடு குலையவும், ஆகாயம் கிரகங்கள் இவற்றின் கூறுபாடு குலையவும்.
நெருப்புக் காற்று இவற்றின் கூறுபாடு குலையவும். மலைகள் வேரோடு பறிந்து விழவும், சூரிய சந்திரர்களுடைய கூறுபாடு குலையவும்,
என் அப்பன் ஒலி உண்டாகும்படியாக உலகத்தை உண்ட ஊண் இருந்தது.
‘எழ’ என்றது, தத்தம் நிலையினின்றும் நீங்குதலைக் குறித்தது. ஊளி-ஒலி. எழ-கிளர.

மஹா பிரளயத்தில் காத்த பிரகாரத்தை அருளிச் செய்கிறார்.
அன்றிக்கே, ‘‘இப்போது இருப்பது போன்று மார்க்கண்டேயன் திருவயிற்றுள் ஒன்றும் அழியாது இருக்கக் கண்டான்’ என்கிற
புராணத்துக்குத் தகுதியாக அவாந்தர பிரளயத்தை இவ்விடத்தே அருளிச் செய்கிறாரகவுமாம்,’ என்று அருளிச் செய்வர்.

நாளும் எழ –
கால நியதி போக.
‘அக்காலத்தில் பகல் இல்லை; இரவு இல்லை; ஆகாயம் இல்லை; பூமி இல்லை; இருள் இல்லை: சூரிய சந்திரர்கள் இல்லை;
வேறு ஒன்றும் இல்லை; பிரஹ்மம் ஒன்றே சமஷ்டி புருஷரூபமாய் இருந்தது,’ என்கிறபடியே.

‘நஅஹ: நராத்ரி: நநப; நபூமி; நஆஸீத்தம; ஜோதி: அபூத்நச அந்யத்
ஸ்ரோத்ராதிபுத்யா அநுப லப்தம்ஏகம் ப்ராதாநிகம் பிரஹ்ம புமாந்ததா ஆஸீத்’–என்பது, ஸ்ரீவிஷ்ணு புரா, 1. 2 : 25.
இது, மஹா பிரளயத்துக்குப் பிராமணம்.
‘ந அஹ:நராத்ரி;’ என்பது மாத்திரமே அவாந்தர பிரளயத்துக்குப் பிரமாணம்.

எழ.
பேர. ஆண்டு என்றும், மாதம் என்றும், நாள் என்றும், கலை என்றும், காஷ்டை என்றும் சொல்லுகிறவை எல்லாம்
சூரியனுடைய செல்லுதல் வருதலாலே வருகின்றனவை அன்றோ?
பாகுபாட்டைச் செய்கிற சூரியன் உள்ளே புக்கால் பாகுபடுத்தப் படுகின்ற இவையும் போமித்தனை அன்றோ?

நிலம் நீரும் எழ-
காரணங்களோடு காரியங்களோடு வாசி அற உள்ளே புக.
காரியம் உள்ள இடத்தே காரணம் தொடர்ந்து நிற்றலைக் காணா நின்றோம்;
‘மாமாயை . . . . . . . .மங்க ஒட்டு’ என்று பிரகிருதி தத்துவத்தைச் சொல்லா நிற்கச் செய்தே,
‘இங்கு இவ்வுயிர் ஏய் பிரகிருதி’ என்று சொல்ல நின்றாரே அன்றோ?
இது தான் காரணத்திலே போகாமைக்ககா.‘உயிர் ஏய் பிரகிருதி’ என்கிறார்,
ஆத்துமாக்களோடு கூடியுள்ள பிரகிருதி என்று தோற்றுகைக்காக.
ஜீவத்வாரா பிரவேசம் பிரகிருதி மகான் முதலான தத்துவங்களுக்கு இல்லை
ஆத்மா ஏய்ந்த பிரகிருதி சரீரம் -கார்ய பாவமாக பரிணமித்த என்றபடி -அபஞ்சீகரணமாக வெளியில் இருக்குமே

விண்ணும் கோளும் எழ-
ஆகாயமும் அங்குள்ள கிரகங்களும் எழ.

எரி காலும் எழ –
நெருப்பும் காற்றும் போக.

மலை தாளும் எழ-
மலைகள் அடியோடே பறிந்து உள்ளே புக. என்றது, ‘வேர்க் குருத்தோடோ பறிய’ என்றபடி.

சுடர் தானும் எழ-
சொல்லப்படாத ஒளிப் பொருள்களும் உள்ளே புக.

அப்பன் ஊளி எழ-
ஒலி உண்டாக. என்றது, ‘ஒவ்வொரு காலத்தில் கலகங்கள் உண்டானால்
நம்முடைய அடைய வளைந்தானுக்குள்ளே புகும் போது திருவாசலில் பிறக்கும் ஆரவாரம் போலே,
திருவயிற்றிற்புகுகிற போது பிராணிகளுக்கு உண்டான பரபரப்பான ஒலிகள் கிளர’ என்றபடி.
(பசி என்று பன்னீராயிரப்படி )
அன்றிக்கே,
‘‘இவற்றை உரிஞ்சுகிற போதை ஒலி காண்!’ என்று நடாதூர் அம்மாள் பணிக்கும்படி’ என்று அருளிச் செய்வர்’
அதனால் நினைக்கிறது, ஈஸ்வரத்வப் பிடரால் அன்றியே பத்தும் பத்தாக அடியார்களைக் காப்பாற்றுதலேயாய் இருக்கிறபடி.

——————————————————————————————-

ஊணுடை மல்லர் தகர்த்த ஒலி மன்னர்
ஆணுடைச் சேனை நடுங்கும் ஒலி விண்ணள்
ஏணுடைத் தேவர் வெளிப்பட்ட ஒலி அப்பன்
காணுடைப் பாரதம் கையறை போழ்தே.–7-4-5-(அறை தட்டுதல் -எறி பாட பேதம் )

அநந்தரம் பாரத சமர ப்ரவர்த்தகத்வத்தை அனுசந்திக்கிறார் –
அப்பன் காணுடைப் பாரதம் கையறை போழ்தே.–ஆஸ்ரித பக்ஷபாதியான ஸ்ரீ கிருஷ்ணன் தர்ச நீயமான
பாரதத்தை கை குவித்து பொருத போது
ஊணுடை மல்லர் தகர்த்த ஒலி -பலகரமான ஊணை உடைய பெரு மிடுக்கரான மல்லரானவர்கள்
த்வந்த்வ யுத்தம் பண்ணி நெரிந்து விழுகிற ஓசையும்
ததர்ந்த-நெரிதல்
மன்னர் ஆணுடைச் சேனை நடுங்கும் ஒலி –ராஜாக்களுடைய வீர புருஷரை உடைத்தான சேனைகளானவை
ஸ்ரீ கிருஷ்ண பல அனுசந்தானத்தாலே அஞ்சி நடுங்குகிற சப்தமும்
விண்ணள் ஏணுடைத் தேவர் ஒலி -ஆகாசத்தில் தந்தாம் பத மரியாதைகளை யுடைய பிரதான தேவர்கள்
யுத்த தர்சன அர்த்தமாக வெளிப்பட்டுக் கொண்டாடுகிற ஓசையும் ஆயிற்று

தேவர்கள் ஒளிந்து இருந்தனர் கம்சன் அட்டகாசத்தால்
இப்பொழுது தான் வெளிப்பட்டார் -தம் தாம் மரியாதை பதவிகள் -யுத்த தரிசன அர்த்தமாக வேடிக்கை பார்க்க
அறைதல்- அடித்தல் தட்டி சொல்வது -பசுக்களை மேய்த்து -வ்யூஹம் செய்தால் போலே
தர்ச நீயமான-பாரதம் -கை குவித்து சண்டை இட்ட பொழுது -கை தட்டியே சண்டை போட்டு -பார்த்து கை தட்டுவாரும் உண்டே

‘என் அப்பன், காட்சிக்கு இனியதான மஹாபாரதப் போரை அணி வகுத்தப் போர் செய்த காலத்தில், சிறந்த உணவுகளை உண்டு வளரந்த
மல்லர்கள் நெரிந்து விழுகிற ஒலியும். அசுரர்களுடைய ஆண்மை மிகுந்த சேனைகள் நடுங்குகின்ற ஒலியும், ஆகாயத்திலே பெருமை மிகுந்த
தேவர்கள் வெளிப்படையாய் நின்று காண்கிற காலத்தில் செய்கின்ற ஒலியும் தோன்றின,’ என்றபடி.
ஆண்-ஆண் தன்மை. ஏண்-வலியுமாம். கையறை-அணி வகுத்தல்.

பாரதப் போர்ச் செயலை அருளிச் செய்கிறார்.

ஊணுடை மல்லர் ததர்ந்த ஒலி –
ஏற்றிலக்கை -(அதிக சம்பளம்) -பெற்று-உண்கிற மிடுக்கை யுடையரான துரியோதனன் சேனை தேர்க் காலிலே நெரிந்த ஓசை.
மல் என்பது மிடுக்கு; ‘மிடுக்கையுடைய சேனை’ என்றபடி.
அன்றிக்கே,
‘மல்லர்க்கு மிடுக்கு உண்டாகைக்காக மது மாமிசங்களை உண்பித்து ஆட்டத்து வெளியிலே நிறுத்தினான் ஆயிற்று நலிகைக்காக:
அதனை அறிந்து பையல்களைத் தேர்காற்கீழே இட்டு நெரித்த ஓசை’ என்னுதல்.
வலியைப் போரப் பொலியச் சொல்லி வைத்து,‘ததர்ந்த’ என்கிறார் காணும்,
பசளைக் கலம் (பச்சைப்பானை )நெரித்தாற்போலே வருத்தம் இன்றியே நெரித்த படியைப் பற்ற.

மன்னர் ஆணுடைச் சேனை நடுங்கும் ஒலி –
அரசர்களுடைய ஆண் பிள்ளைத் தனத்தை யுடைத்தான சேனை ‘கிருஷ்ணன் சாரதியாக ஏறினான்’ என்று கேட்ட வாறே
‘நாம் முடிந்தோம் அன்றோ?’ என்று அவ்வளவில் குடல் குழம்பிக் கூப்பிட்ட ஒலி.
ஆண் பிள்ளைகளான வீடுமன் துரோணன் முதலாயினோர்கள் அன்றோ தூசி ஏறின பேர்?

விண்ணுள் ஏணுடைத் தேவர் வெளிப்பட்ட ஒலி –
சர்வேஸ்வரனோடு ஒக்க இன்னார் இன்னார் என்னும்படி தங்கள் தங்களைச் சமைய விட்டுக் கொண்டு
செருக்கினை யுடைவர்களாய் ஒரோ இருப்பிடங்களை யுடையவர்களாய் இருக்கிற தேவர்களின் கூட்டம்

கண்ணுக்குத் தோற்றும்படி நின்று துதிக்கிற ஒலி.
இந்த அந்தர சாதிகளைத் (தாழ்ந்த ஆகாச வாசிகள் )தன்னுடனே ஒரு சேர எண்ணலாம்படி
தன்னைத் தாழ விட்டு வைக்குமே தன் சௌலப்பியத்தாலே!
‘அவன் பிரமன்; அவன் சிவன், அவன் இந்திரன்,’ என்று ஒரு கோவையிலே எண்ணலாம்படி இருக்கிறவர்கள்
.‘ஸபிரஹ்மா ஸஸிவ: ஸேந்த்ர;’ என்பது நாராயண ஸூக்தம்.

அப்பன்-
பூ பாரத்தை நீக்கிய உபகாரகன்.

காணுடைப் பாரதம் கை அறை போழ்தே-
கண் முதலான கரணங்களைப் படைத்ததற்குப் பிரயோஜனம் அற்றை நிலையைக் காண்கை அன்றோ?
சேனையின் தூளியும், கையும் உழவு கோலும் சிறு வாய்க் கயிறும், நாற்றின திருவடிகளுமாய் நிற்கிற நிலை அன்றோ அது?
இந் நிலைக்கு உபேயத்துவ மாத்திரமன்றிக்கே, உபாயத்துவமும் உண்டு என்கிறார்,

‘மாம்’ என்று தொடங்கி. ‘கையும் உழவு கோலும், பிடித்த சிறு வாய்க் கயிறும்.
ஸேநா தூளி தூசரிதமான திருக் குழலும், தேருக்குக் கீழே நாற்றின திருவடிகளுமாய் நிற்கிற
சாரத்ய வேஷத்தை ‘மாம்’ என்று காட்டுகிறான்’
என்பது, முமுக்ஷூப்படி சரம ஸ்லோக ப்ரகரணம், சூ. 33.

காணுதற்கு இனிய பாரதம். கை அறை போழ்து –
கையும் அணியும் வகுத்து அங்கோடு இங்கோடு உலாவிப் படை பொருத்தி,
‘நீங்கள் இன்னபடி செய்யக் கடவீர்கோள்! நாங்கள் இன்னபடி செய்யக் கடவோம்’ என்று
கை தட்டி விட்ட போது இந்த ஒலி எல்லாம் உண்டாயின.

——————————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பகவத் விஷயம் காலஷேபம் -148- திருவாய்மொழி – -7-3-6….7-3-11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்–

June 27, 2016

காலம் பெற என்னைக் காட்டுமின்கள்
காதல் கடலின் மிகப் பெரிதால்
நீல முகில் வண்ணத்து எம்பெருமான்
நிற்கு முன்னே வந்தென் கைக்கும் எய்தான்
ஞாலத்தவன் வந்து வீற்றிருந்த
நான் மறை யாளரும் வேள்வி ஓவாக்
கோலச் செந்நெற்கள் கவரி வீசும்
கூடு புனல் திருப் பேரெயிற்கே.–7-3-6-

அநந்தரம் -உதார ஸ்வ பாவனான அவன் ஸந்நிஹிதனாய் வந்து சம்ச்லேஷ ப்ரதன் அல்லாமையாலே
அபி நிவேசம் கரை புரண்டு செல்லா நின்றது –
(கீழே ஊற்று பெருக ஹிருஷீ பண்ணினான் பார்த்தோம் -அது பெருகி கடல் போல் இங்கு )
அவன் இருக்கிற தேசத்திலே சடக்கெனக் கொடு போங்கோள்-என்கிறாள் –

நீல முகில் வண்ணத்து எம்பெருமான் நிற்கு முன்னே வந்தென் கைக்கும் எய்தான்–காளமேகம் போலே உதார ஸ்வ பாவனான
வடிவு அழகைக் காட்டி என்னை அடிமை கொண்ட ஸ்வாமியானவன் என் முன்னே வந்து உரு வெளிப்பாடாம் படி நில்லா நிற்கும்
வந்தவன் தானே மேல் விழுந்து அணையாது ஒழிகை அன்றிக்கே-என் கைக்கும் எட்டாதபடி அம் மேகம் போலே தூரஸ்தனாகா நிற்கும் –
(முகில் வண்ணன் தானே இவன் )
காலம் பெற என்னைக் காட்டுமின்கள்-காதல் கடலின் மிகப் பெரிதால் ஆகையால் காதலானது கடல் புரையும் அளவன்றியே
மிகப் பெரிதாய் இரா நின்றது -ஆனபின்பு
ஞாலத்தவன் வந்து வீற்றிருந்த நான் மறை யாளரும் வேள்வி ஓவாக்-பூமியிலே அவ்வடிவு அழகோடு வந்து
அவன் தன உதாரகுணம் தோற்றும்படி இருக்குமிடமாய் -அங்கு வர்த்திக்கிற சதுர் வேதிகளான விலக்ஷண புருஷர்களும்
தத் ஆராதன ரூபமான வைதிக அனுஷ்டானத்தில் ஓவாதே நடக்கும்படியாய் –
கோலச் செந்நெற்கள் கவரி வீசும் கூடு புனல் திருப் பேரெயிற்கே.–தர்ச நீயமான செந்நெல் கதிர்கள் கவரி போலே அசையும்படியுமாய்
தத் அனுரூபமாகச் சேர்ந்த ஜல ஸம்ருத்தியையுமுடைய திருப்பேரெயிற்கே –
விளம்ப அஷமையான என்னை கடுக கொடு போய்க் காட்டுங்கோள்

‘நீலமுகில் போன்ற நிறத்தையுடைய எம்பெருமான் என் முன்னே வந்து நிற்பான்; ஆனால், கையால் அணைப்பதற்கு அகப்படான்’ ஆதலால்,
காதலானது கடலைக்காட்டிலும் மிகவும் பெரியதாய் இருக்கிறது; பூலோகத்திலே வந்து அவன் வீற்றிருந்த, நான்கு வேதங்களிலே வல்லவர்களான
பிராஹ்மணர்களும் அவர்களால் செய்யப்படுகின்ற யாகங்களும் நீங்காமல் இருக்கின்ற, அழகிய செந்நெற்பயிர்கள் சாமரையைப் போன்று வீசுகின்ற
சேர்ந்த தண்ணீர் நிறைந்திருக்கின்ற திருப்பேரெயில் என்ற திவ்விய தேசத்திற்குக் காலம் நீட்டிக்காமல் என்னைக் கொண்டுபோய் விடுங்கோள்,’ என்கிறாள்.
‘வீற்றிருந்த திருப்பேரெயில்’ என்றும், ஓவாத் திருப்பேரையில்’ என்றும், ‘கவரி’ வீசும் கூடு புனல் திருப்பேரெயில்’ என்றும் தனித்தனியே கூட்டுக.

‘நீங்களும் ‘கொடு போவோமோ அல்லோமோ? என்று விசாரிக்கும் நிலை அன்றிக்கே,
எனக்குக் காதலானது அறமிக்கது;
எனக்கு இங்குத் தரிப்பு அரிது; ஈண்டென என்னைத் தென்திருப்பேரெயில் கொடு புக்கு
மகர நெடுங்குழைக்காதனைக் காட்டுங்கோள்’ என்கிறாள்.

காலம் பெற என்னைக் காட்டுமின்கள் –
குடிக்குப் பரிஹாரம் இல்லையாகிலும் எனக்குப் பரிஹாரம் இது அல்லது இல்லை.
இனி என் மேல் குற்றம் இல்லை. ‘என்? இப்படிக் கடுக வேண்டுவான் என்?’ என்னில்,

காதல் கடலின் மிகப் பெரிதால் –
இந்தக் காதல் அளவு பட்டோ இருக்கிறது? முதலில் சொன்ன வார்த்தையைக் காணுங்கோள் நீங்கள் நினைக்கிறது.
‘கடல் புரைய’ திருவாய், 5. 3:4.-என்றாளே.
ஒரு காரியப் பட்டாலே விளைந்தது போலே அன்றே உகப்பாலே விளைந்திருப்பது?
‘ஆனாலும், காதலை அளவுபடுத்தி, நாங்கள் சொல்லுகிற வார்த்தையைக் கேட்டு எங்களோடே ஒழுக வேண்டாவோ?’ என்ன,
கார்யார்த்தமாக விளைந்த சாதன பக்தி
கடல் போன்ற முன்னம் -இங்கே வளர்ந்த –
ஜகத்தை வைத்து திருத்த -கார்ய அர்த்தமாக முன்பு -ஈர நெல் வித்து -அன்னை நீர் -ஊரவர் கவ்வை
ராக பிராப்தமான காதல் -ஸ்வயம் வை லக்ஷண்யம் பார்த்து வளர்ந்த காதல் –

நீலம் முகில் வண்ணத்து எம்பெருமான் –
நான் உங்கள் வழியே போகவோ, இவன் வழியே போகவோ?
என்னை அப்படிச் சேர்த்துவிட வந்து முன்னே நிற்க, நான் மீளும்படி என்?
அப்படியாலே அவன் துவக்கா நிற்க, உங்கள் வார்த்தையைக் கேட்கவோ? -அப்படி -அவன் திருமேனியுடன் சேர்த்து –
சிரமத்தைப் போக்கும்படியான வடிவினைக் கொண்டு முன்னே நின்று காதலை வளர்க்கின்றவனாகா நின்றான்.
இக்காதலை ஒருபடியே -காரமர் மேனி-வளர்க்கிறது அன்றோ?
கடல் புரைய விளைவித்ததும் காரமர் மேனி அன்றோ? திருவாய். 5. 3 : 4.-நிற்கும் முன்னே வந்து –
இவன் கிட்ட நின்றிலனாகில் நான் உங்கள் வார்த்தையைக் கேட்டு மீளேனோ?
‘ஆனால் உனக்குப் பொல்லாதோ?’ என்ன, என் கைக்கும் எய்தான் – அழகிது அன்றோ,
எனக்கு இப்படித் தரப் பெறில்! வார்த்தை சொல்லுதல், அணைத்தல் செய்யாமையே அன்று;

என் கைக்கும் எட்டுகின்றிலன்.
‘இனி நீ செய்யப் பார்த்தது என்?’ என்ன,
‘உரு வெளிப்பாடு அன்றியிலே கண்ணாலே கண்டு அனுபவிக்கலாம் தேசத்திற்குப் போகப்பார்த்தேன்,’ என்கிறாள் மேல்:

ஞாலத்து அவன் வந்து வீற்றிருந்த –
தூரத்தே சென்று காண வேண்டாதபடி பரமபதத்தில் ஐஸ்வரியம் எல்லாம் இங்கே தோற்றும்படி இருந்த.

நான்மறையாளரும் வேள்வி ஓவா –
வேதார்த்த வித்துகளும் சமாராதனத்திலே எப்பொழுதும் ஈடுபட்டவர்களானார்கள்.
என்னோடு ஒத்தவர்களும். தங்கள் தங்களுக்கு வகுத்த கைங்கரியம் பெற்று வாழா நிற்பார்கள்.
(என்னோடு ஒத்தவர்களும்–சஜாதீயர் அநந்ய ப்ரயோஜனர் என்றபடி )

கோலம் செந்நெல் கவரி வீசும் கூடுபுனல் திருப்பேரெயில் –
மழை சோறு முதலியவைகள் விஷயமாக அங்குள்ளார்க்கு முயற்சி செய்ய வேண்டாமலே இருக்கை.
அவை ஆநுஷங்கிக பலமாய் வருமத்தனை; –
ஆழி மழைக்கண்ணா -வருண பகவானும் கைங்கர்யத்துக்கு கிஞ்சித் காரம் செய்வான் –
நீள்செல்வம் வேண்டாதான் தன்னையே தான் வேண்டும்’ பெருமாள் திருமொழி, 5 : 9. -என்றும்,
‘அங்கங்கே அவை போதரும்’ பெரியாழ்வார் திருமொழி, 5. 1 : 4.-என்றும் சொல்லக் கடவதன்றோ?-கூறை சோறு முதலியன –
காட்சிக்கு இனிய செந்நெல்களானவை அங்குத்தைக்குக் கவரி வீசினாற்போலே அசையாநிற்கும்.
ஆற்றுநீர், ஊற்றுநீர், மழைநீர் என்னும் இவை மூன்றும் கூடி இருக்கையாலே
தண்ணீர் நிறைந்திருத்தலின் ‘கூடு புனல் திருப்பேரெயில்’ என்கிறது.

திருப்பேரெயிற்கே காலம் பெற என்னைக் காட்டுமின்கள் –
என் விடாய் தீரச் சிரமத்தைப் போக்கும்படியான தேசத்திலே கொடுபோய்ப் போகடப் பாருங்கோள்.
அன்றிக்கே,
‘அங்குள்ள செந்நெல்லுக்குத் தண்ணீர் தாரகமாய் இருக்குமாறு போலே,
இவளுக்கும் அவ்வூரில் காட்சியே தாரகமாய் இருக்கிறபடி’ என்னுதல்.

———————————————————————————————–

பேரெயில் சூழ் கடல் தென்னிலங்கை
செற்ற பிரான் வந்து வீற்றிருந்த
பேரெயிற்கே புக்கு என் நெஞ்சம் நாடிப்
பேர்த்து வர எங்கும் காண மாட்டேன்;
ஆரை இனி இங்குடையம் தோழீ!
என் நெஞ்சம் கூவ வல்லாரு மில்லை;
ஆரை இனிக் கொண்டென் சாதிக்கின்றது?
என் நெஞ்சம் கண்டதுவே கண்டேனே.–7-3-7-

அநந்தரம்-ப்ராப்திக்கு பிரபல பிரதிபந்தகமான லங்கா நிரசனத்தைப் பண்ணினவன் வர்த்திக்கிற தேசத்திலே சென்று
புக்க நெஞ்சு மீள வரக் காண்கின்றிலேன் -நானும் இனி அங்கே போம் இத்தனை என்கிறாள் –

பேரெயில் சூழ் கடல் தென்னிலங்கை செற்ற பிரான் வந்து வீற்றிருந்த–பெரிய மதிளாலே சூழப்பட்டு அதுக்கு அகழான
கடலையுடைத்தாய் -கட்டளைப்பட்ட இலங்கையை செறுத்து அழியச் செய்த உபகாரகனானவன் ஸ்ரமம் தீருகைக்காக வந்து –
அந்த வீர ஸ்ரீ தோன்றும்படி எழுந்து அருளி இருக்கிற
பேரெயிற்கே புக்கு என் நெஞ்சம் நாடிப் பேர்த்து வர எங்கும் காண மாட்டேன்;–திருப் பேரெயிற்கே சென்று புக்கு என் நெஞ்சமானது
அவனைத் தேடி மீண்டு ஓர் இடத்திலும் காண்கின்றிலேன்
நாடி என்று நாட்டம் பெற்றது என்றுமாம் –
ஆரை இனி இங் குடையம் தோழீ! என் நெஞ்சம் கூவ வல்லாரு மில்லை;ஆனபின்பு -என்னோடு சம துக்கையாய் இருக்கிற தோழீ
இவ்வஸ்தையிலே நியமிக்கிற தாய்மாரையும் பழி சொல்லும் ஊராரையும் ஒழிய துணையாக ஆரை உடையோம் –
முன்பே போன நெஞ்சை அழைத்துத் தர வல்லாரும் இல்லை –
ஆரை இனிக் கொண்டென் சாதிக்கின்றது? என் நெஞ்சம் கண்டதுவே கண்டேனே.–நெஞ்சும் உதவாதே -நீயும் தளர்ந்த பின்பு
ஆரைக் கொண்டு என்ன பிரயோஜனத்தை சாதிப்பது –
ஆகையால் என் நெஞ்சு கண்ட விஷயத்தையே நானும் கண்டு விட்டேன்

‘பெரிய மதில்கள் சூழ்ந்த கடலுக்கு நடுவேயுள்ள அழகிய இலங்கா நகரத்தை அழித்த பிரான் வந்து வீற்றிருந்த திருப்பேரெயில் என்ற
திவ்விய தேசத்திலே புக்கு எனது நெஞ்சமானது தேடி மீண்டு வருதலை எங்கும் காண்கிறேன் இல்லை;
தோழீ! இனி, இங்கு யாரை உடையோம்? சென்ற என் நெஞ்சினைக் கூவ வல்லாரும் இல்லை; இனி, யாரைக்கொண்டு
என்ன பிரயோஜனத்தைச் சாதிப்பது? என் நெஞ்சம் கண்ட விஷயத்தையே நானும் கண்டேன்,’ என்கிறாள்.

‘இலக்குமணன் சென்ற வழியை நானும் பின்பற்றுகிறேன்’ என்ற பெருமாளைப் போலே இந்தப் பிராட்டியும்
‘என் நெஞ்சு, தரிக்கைக்கு விரகு பார்த்துத் திருப்பேரெயில் புக்காற்போலே நானும் அங்கு புகுமத்தனை,’ என்கிறாள்.

‘அஹஞ்ச அநுகமிஷ்யாமி லஷ்மணேந கதாம் கதிம்’-என்பது, ஸ்ரீராமா, உத்தரகா.
மேல் பாசுரங்களில் கூறியவாறே முடிந்த பின்பு, ‘இனி, நான் செய்யப் பார்த்தது இது என்கிறாள்,’ என்னுதல்.

பேர் எயில் சூழ் கடல் தென் இலங்கை செற்ற பிரான் –
மதிளுக்கு அகழியாம் படி அம் மதிளைச் சூழ்ந்த கடலை யுடைத்தாய், கேட்க அஞ்சும்படியான ஊரை
மூலை அடியே நடக்கச் செய்த உபகாரகன். பேர் எயில் – பெரிய மதிள்.

வந்து வீற்றிருந்த-
ராவண வத அநந்தரம் சீதைக்கு முகம் அன்று திருப்பிக் கொண்ட பெருமாள் இங்கே –
அப்போது முகம் மாற வைத்த இழவு தீர அணைக்கலாம்படி கிட்ட வந்திருக்கிற.
‘விமல சசாங்க நிபாநநா’ என்கிறபடியே, எப்போது பெருமாள் முகம் வைக்க ஒண்ணாதபடி கொடியராய் இருந்தார்,
‘வதாம் உதித பூர்ண’ சுந்த்ரகாந்தம் விமல ஸஸாங்க நிபாநநா ததாஸீத்’ -என்பது, ஸ்ரீராமா, யுத்,. 117 : 36.
அவ்வளவிலும் இவள் மறுவற்ற சந்திர மண்டலம் போலே முகத்தில் குளிர்ச்சி மாறாதே இருந்தாள்.
‘கண் நோய் கொண்டவனுக்கு விளக்குப் போன்று எனக்குப் பிரதிகூலமாய் இருக்கிறாய்; நிச்சயம்’ என்பது பெருமாள் திருவார்த்தை

‘தீபோ நேத்ரா துரஸ்யேவ ப்ரதி கூலாஸி மே த்ருடம்’-என்பது, ஸ்ரீராமா. யுத். 118:17.

‘கண்களின் தோஷத்தால் வந்தது போக்கி, விளக்கின் தோஷத்தால் வந்தது அன்று,’ என்று இதற்கு ஆளவந்தார் அருளிச் செய்வார்.
பகைவர்களைக் கொன்று அதனாலே விடாய்த்து வந்திருப்பார்,
‘கணவனைத் தழுவிக் கொண்டாள்’ என்கிறபடியே,‘பர்த்தாரம் பரிஷஸ்வஜே’ என்பது, ஸ்ரீராமா. ஆரண்ய, 30 : 40.
குளிர்ந்த உபசாரங்களைச் செய்வதற்குப் போக வேணும்.

பேரெயிற்கே புக்கு என் நெஞ்சம் நாடிப் பேர்த்து வர எங்கும் காண மாட்டேன் –
அவன் இருந்த திருப்பேரெயிலே புக்குத் தேடி என் நெஞ்சமானது ஓரிடத்திலும் மீண்டு வரக் காண்கின்றிலேன்.
மீள ஒண்ணாத இலங்கையிலே புக்க திருவடியும் மீண்ட வந்தான்;
அணித்தான இவ்வூரிலே புக்க என் நெஞ்சமானது மீண்டு வரக் காண்கின்றிலேன்!
நெஞ்சுங்கூட வாராத பின்பு அவன் வாராமை சொல்லா வேண்டா அன்றோ?
நெஞ்சினது வரவு பார்த்துக் கண் மறைந்து காணும் இவள் நிற்கிறது.
அன்றிக்கே,
‘கண்டு ஜீவியாமல் நான் இங்ஙனே முடிந்து போமித்தனையன்றோ?’ என்னுதல்.

‘நாதன் வருந்துணையும், அவனுக்காக அவன் செயல்களைப் பாடிக் கொண்டு தரித்திருக்க வேண்டாவோ?’ என்னில்,
ஆரை இனி இங்கு உடையும் தோழீ! –
நெஞ்சும் இல்லாத அன்று இனியார் உளர்?

தோழீ –
‘நெஞ்சில் அண்ணியன் நானோ?’ என்றாயாகில், நீ நீ ஆனாயே.
(நீ தோழி எனக்கு முன்னே மயங்கி அன்றோ உள்ளாய் )
‘இப்போது நான் இங்கு இல்லையோ? உன் நெஞ்சினை அழைத்துக் கொள்ளுவதற்கு என்?’ என்ன,

என் நெஞ்சம் கூவ வல்லாரும் இல்லை –
நெஞ்சினை மீட்கைக்கு நீ வேணுமோ? நெஞ்சினை அவனுக்கு ஆக்கின நீ வேணுமே எனக்கு ஆக்கும் போதும்;
உன் நிலை இது; உனக்குக் கால்கள் நடை தாரா:
அல்லாதார்க்குக் ‘கூட்ட வேணும்’ என்னும் விரைவு இல்லை: யார் நெஞ்சினை அழைப்பார்?

ஆரை இனிக் கொண்டு என் சாதிக்கின்றது-
யாரைக் கொண்டு தான் சாதிப்பது? இனிச் சாதிக்க வேண்டுவது தான் ஏது?
நெஞ்சும் அவனும் வந்தால் இனி நான் தான் உண்டாக வேணுமே?
இங்கு வெறுந்தரையாய் அன்றோ கிடக்கிறது?

‘ஆனால், செய்யப் பாரத்தது என்?’ என்னில், என் நெஞ்சம் கண்டதுவே கண்டேனே
மீளாதே நெஞ்சு போன வழியே போகப் பார்த்தேன்.
‘நான் இப்பொழுதே இலக்குமணன் சென்ற வழியிலேயே செல்லப் போகிறேன்’ என்கிறபடியே,
‘நெஞ்சு சென்ற வழியே செல்லப் பார்த்தேன்’ என்கிறாள்.

—————————————————————————————-

கண்டதுவே கொண்டு எல்லாரும் கூடிக்
கார்க்கடல் வண்ணனோடு என் திறத்துக்
கொண்டலர் தூற்றிற்றது முதலாக்
கொண்ட என் காதல் உரைக்கில் தோழீ!
மண் திணி ஞாலமும் ஏழ் கடலும்
நீள் வீசும்புங் கழியப் பெரிதால்;
தெண் திரை சூழ்ந்தவன் வீற்றிருந்த
தென் திருப் பேரெயில் சேர்வன் சென்றே.–7-3-8-

அநந்தரம் -அவனோட்டை சம்பந்தம் அடியாக ஊர்ப் பழி விழையும்படி வந்த காதலானது சர்வ லோகத்தையும்
விளாக்குலை கொண்டு போகா நின்றது –
ஆனபின்பு அவன் இருக்கிற திருப்பேரையிலே சென்று புகுவேன் என்கிறாள் –

கண்டதுவே கொண்டு எல்லாரும் கூடிக் கார்க்கடல் வண்ணனோடு என் திறத்துக்–புறவாயில் கண்ட வைவர்ணயாதிகளையே கொண்டு
தாய்மாரோடு ஊராரோடு வாசியற எல்லாரும் ஒரு மிடறாய்க் கூடி
(வெளி அடையாளம் பார்த்தே இப்படி -உள் நெஞ்சு
அவன் என்றே இருப்பதை அறியாமல் -தூங்காமல் அன்னை மாடி பிடிக்காமல் -வெளி அடையாளங்கள் )
கறுத்த கடல் போலே
ஸ்ரமஹரமான வடிவை யுடையவனோடு கூடி என்னிடையாட்டமான ஸைதில்யத்தை அவலம்பித்துக்
கொண்டலர் தூற்றிற்றது முதலாக் கொண்ட என் காதல் உரைக்கில் தோழீ!–கொண்டு பழியைத் தூற்றின அதுவே ஹேதுவாக
இடம் கொண்டு என் காதல் -அடியிலே இதுக்கு ப்ரவர்த்தகையான தோழீ பாசுரம் இட்டு உரைக்கப் பார்க்கில் –
கடலின் மிகப் பெரிது என்ற அளவேயல்ல –
மண் திணி ஞாலமும் ஏழ்கடலும் நீள் வீசும்புங் கழியப் பெரிதால்;–மண் செறிந்த பூமியும் அத்தைச் சூழ்ந்த கடல் ஏழும்
இது எல்லாவற்றுக்கும் இடம் கொடுக்கும் மஹா அவகாசமான ஆகாசமும் தனக்குள்ளே யாம்படி அவ்வருகே பெருத்து இரா நின்றது
தெண் திரை சூழ்ந்தவன் வீற்றிருந்த தென் திருப் பேரெயில் சேர்வன் சென்றே.–ஆனபின்பு தெளிந்த நீரத் திரையை யுடைத்தாயாகையாலே
ஸ்ரமஹரமாய் காதலைப் பெருக்க வளைத்தவன் இருக்கிற தென் திருப்பேரையில்
என் தாபம் ஆறும்படி சென்று சேரக் கடவேன்

‘என் சரீரத்தில் கண்ட வேறுபாடு முதலியவற்றைக் கொண்டு, எல்லோரும் கூட்டம் கூடிக் கரிய கடல் வண்ணனோடு கூடியதால்
என்னிடத்திலுண்டான வேறுபாட்டினைக் காரணமாக்கொண்டு பழிச்சொற்கள் கூறிய அதனையே காரணமாகக் கொண்டு வளர்ந்த
என்னுடைய காதலை உரைக்குமிடத்து, தோழியே! அணுக்கள் செறிந்திருக்கின்ற இந்த உலகத்தையும், இதனைச் சூழ்ந்துள்ள ஏழு கடல்களையும்,
இவற்றை எல்லாம் தனக்குள் அடக்கிக்கொண்டிருக்கின்ற ஆகாசத்தையும்விட மிகமிகப் பெரியதாகும்; தெளிந்த அலைகளையுடைய தண்ணீரானது சூழ.
அவன் எழுந்தருளியிருக்கின்ற தென்திருப்பேரெயில் என்ற திவ்விய தேசத்திற்குச் சென்று சேர்வேன்,’ என்கிறான்.

‘கொண்டு கூடி என் திறத்துக்கொண்டு அலர் தூற்றிற்றது முதலாக் கொண்ட காதல்’ என்க. தூற்றிற்றது – தூற்றியது. முதல் – காரணம்.
சூழ்ந்த – சூழ -எச்சத்திரிபு. ‘சூழ இருந்த திருப்பேரெயில்’ என்க.

எனக்கு ‘அவனைக் காண வேணும்’ என்னும் காதல் கடலின் மிகப் பெரிது’ என்னுமளவு அன்றிக்கே,
அற மிக்கது, ஆன பின்பு, நீங்களாக இசையீர் கோளாகில், தன் வேண்டற்பாடு தோன்ற
எழுந்தருளியிருக்கிற தென்திருப்பேரெயிலை நான் சென்று சேர்வன்’ என்கிறாள்.

கண்டதுவே கொண்டு –
அவன் பேர் சொல்லுதல்,
‘தலையில் வணங்கவுமாங்கொலோ?’ திருவாய். 5. 3 : 7.-என்று ஒரு வணக்கஞ்செய்தல் செய்யுமன்றோ?
அவ்வளவினையே கொண்டு;
புற இதழ் கண்டு படுகிறபடி இதுவானால், அகவாயில் ஓடுகிறது அறியில் என்படுவார்கள்?

எல்லாரும் கூடி –
பரிவரோடு, நலத்தை விரும்புமவரோடு, ‘இவை இரண்டுந்தான் என்?’ என்று இருப்பாரோடு வாசி அறக்கூடி.
பிறரைப் பழி சொல்ல என்னில், தம்மில் தாம் சேராதவர்களும் சேர்வார்கள் அன்றோ?

கார்க் கடல் வண்ணனோடு என் திறத்துக் கொண்டு –
இவள் நிறம் பசலை நிறமாம் போது, அவன் திறத்தே இழந்ததாக வேண்டாவோ?
கடல் ஏறி வடிந்த இடம் என்று தோற்றுகிறது இல்லையோ?
என் செயலைச் -பாரிப்பை -சிரமத்தைப் போக்குகிற நிறத்தை யுடையவனோடே கூட்டி.

அலர் தூற்றிற்றது முதலாக் கொண்ட என் காதல் உரைக்கில் –
இவர்கள் பேசாமலே இருந்தார்களாகில் நானும் சுகமே இரேனோ?
நான் பழிக்கு அஞ்சி மீளுவேன் என்று காணும் இவர்கள் பழி சொல்லப் புக்கது.
அலர் தூற்றிற்று – அலர் தூற்றினார்கள்.
அது முதலாக் கொண்ட என் காதல் -அதுதானே அடியாகக் கொண்ட என் காதலானது நூறு கிளைகளாகப் பணைக்கப் புக்கது.
‘ஊரவர் கவ்வை’- என்றி திருவாய்மொழிப் பாசுரம் 5. 3 : 4 நினைவு கூர்க.

‘ஊரவர் கவ்வை எருவாக அன்னைசொல்நீராக நீளுமிந் நோய்.’-என்பது திருக்குறள்.

தன் காதலைத் தன்னாலும் சொல்ல ஒண்ணாத ஆதலில் ‘காதல் உரைக்கில்’ என்கிறாள்.
‘எதனின்று வேதங்கள் மீள்கின்றனவோ என்கிற விஷயத்தைச் சொல்லிலும் இவள் காதல் பேச்சுக்கு நிலம் அன்று.’ என்றபடி.
‘யதோ வாசோ நிவர்த்தந்தே’ என்பது, தைத்தீரியம்.
இந்தக் காதலுக்கு விஷயமாக இருக்கிறவனையும் விளாக்குலை கொள்ளவற்றான காதல் அன்றோ?
‘சுடர் ஞான இன்பம்’திருவாய். 10. 10 : 10.- என்று பகவானுடைய ஆனந்தத்தைச் சொல்லி வைத்து,
‘அதனிற்பெரிய என்னவா’ என்றார் அன்றோ?(ஆர்த்தி ஹரத்வம் பத்தாம் பத்தின் குணம் )

தோழீ –
‘இந்தக் காதலை விளைக்கைக்கு நீ செய்யும் கிருஷி அறிதி அன்றோ? இது இருந்தபடி பாராய்.

மண் திணி ஞாலமும் ஏழ்கடலும் நீள் விசும்பும் கழியப் பெரிது –
‘காதல், கடலின் மிகப் பெரிதால்’ என்ற இடம் ஓராதே சொன்னோம்;
‘ஆனால், எங்ஙனே சொல்லும்படி?’ என்னில், பெரியவற்றில் பெரியது என்னுமித்தனை யல்லது,
ஒரு பாசுரமிட்டுச் சொல்லலாவது இல்லை.
மண்ணாலே நெருங்கின பூமியும், அதனைச் சூழ்ந்த கடல் ஏழு, அவற்றுக்கெல்லாம் இடம் தருகின்ற ஆகாசமும்
என்னுமிவை இத்தனைக்கும் அவ்வருகுப் பட்டிருக்கை.

‘இப்படிக் காதல் கரை புரண்டால் செய்யப் பார்த்தது என்?’ என்ன,

தெண் திரை சூழ்ந்து அவன் வீற்றிருந்த தென் திருப்பேரெயில் சென்று சேர்வான் –
இந்தக் காதல் மறு நனையும் படியான விஷயம் இருந்த இடத்தே போய்ப் புகுமத்தனை.
தெளிந்த திரைகளாலே சூழப்பட்டு அவன் வீற்றிருந்த தென் திருப் பேரெயிலே போய்ப் புகுமத்தனை.
‘பலவித மலர்களினுடைய சிறந்த வாசனை நிறைந்த அந்தச் சித்திரகூட மலையில் பல உத்தியானங்களில்
விளையாடி அதனால் வியர்வை யடைந்து வாட்டமுடையவளாய்த் தேவரீருடைய மடியில் படுத்துக் கொண்டேன்’ என்கிறபடியே,
‘தஸ்ய உபவந ஷண்டேஷூ நாநா புஷ்ப ஸூகந்திஷூ
விஹ்ருத்ய ஸலிலக் லிந்நா தவாங்கே ஸமுபாவிஸம்’-என்பது, ஸ்ரீராமா, சுந். 38 : 14.

அனுபவத்திற்குத் தகுதியான தேசத்திலே போய்ப் புகக் கடவோம்.

சேர்வன் சென்றே –
இனிப் பகட்டால் தீராது, புக்கு அல்லது விடேன்.
ஆள் விடுதல்,
அவன் வரவு பார்த்திருத்தல் செய்யேன்.

சென்று சேர்வன் –
இனி எதிரே அவன் வரிலும் மீளேன்.
அவனைச் சேர்தல் அன்று உத்தேசியம்,
அங்கே சென்று கிட்டகை.

—————————————————————————-

சேர்வன் சென்று என்னுடைத் தோழிமீர்காள்!
அன்னையர்காள்!என்னைத் தேற்ற வேண்டா;
நீர்கள் உரைக்கின்றது என்னிதற்கு?
நெஞ்சும் நிறைவும் எனக்கு இங்கு இல்லை;
கார் வண்ணன் கார்க் கடல் ஞாலம் உண்ட
கண்ண பிரான் வந்து வீற்றிருந்த
ஏர் வள ஒண் கழனிப் பழனத்
தென் திருப் பேரெயில் மாநகரே.–7-3-9-

இப் பாசுரம் கொண்டே ஸ்ரீ நாயனார்
சென்று சேர்வாருக்கு உசாத் துணை அறுக்கும் ஸுந்தர்யம்
மா நகரிலே கோஷிக்கும் —ஸ்ரீ ஆச்சார்ய ஹ்ருதயம் -சூர்ணிகை –170

அநந்தரம் பிரளய ஆபத் சகனானவன் வர்த்திக்கிற தேசத்திலே சென்று புகத் தவிரேன் –
நீங்கள் என்னைத் தேற்றி யுரைக்கிற இதுக்கு பிரயோஜனம் இல்லை என்று
தோழிமாரையும் தாய்மாரையும் பார்த்துச் சொல்லுகிறாள் –

சேர்வன் சென்று என்னுடைத் தோழிமீர்காள்! அன்னையர்காள்!என்னைத் தேற்ற வேண்டா;–எனக்கு ஸமான துக்கைகளாய்
இருக்கச் செய்தே ஹிதம் சொல்ல ஒருப்பட்ட தோழிமீர்காள் -ஹித பரைகளாயே போரும் அன்னைமீர்காள்
என்னைத் தேற்ற வேண்டுவது இல்லை
நீர்கள் உரைக்கின்றது என்னிதற்கு? நெஞ்சும் நிறைவும் எனக்கு இங்கு இல்லை;-இந்த அவஸ்த்தைக்கு -தேறுகைக்கு உறுப்பாக
நீங்கள் என்ன வார்த்தை சொல்லுவது -தேறி இருக்கைக்கு அடியான நெஞ்சும் பூர்த்தியும் எனக்கு உறுப்பாம்படி இங்கே இல்லை –
அவை அங்கேயான பின்பு தேற்றமும் அங்கே போயிற்று ஆதலால் நெஞ்சையும் நிறைவையும் அபஹரிக்கைக்கு அடியான
கார் வண்ணன் கார்க்கடல் ஞாலம் உண்ட கண்ண பிரான் வந்து ஸ்யாமளமான வடிவையும் பிரளய ஆபன்னமான ஜகத்தை
அமுது செய்த ஆபத் ஸகத்வத்தையும் ஆஸ்ரித உபகாரகமான பவ்யத்தையுமுடைய —
ஸ்ரீ கிருஷ்ணன் வீற்று இருந்த இருக்குமிடமாய்
ஏர்வள ஒண் கழனிப் பழனத் தென் திருப் பேரெயில் மாநகரே.–ஏரினுடைய மிகுதியையும் யுடைத்தாய் தர்ச நீயமான
கழனியையும் நீர் நிலங்களையும் யுடைத்தான திருப்பேரெயிலாகிற மஹா நகரத்தை சென்று கிட்டி விடக் கடவேன்

‘என்னுடைய தோழிமீர்காள்! அன்னையர்காள்! என்னைத் தேற்ற வேண்டா; இந்த நிலைக்கும் நீங்கள் சொல்லுகிற வார்த்தைக்கும்
என்ன சம்பந்தம் உண்டு? நெஞ்சம் நிறையும் எனக்கு இங்கு இல்லை; மேகம் போன்ற நிறத்தை யுடையவனும் கரிய கடல் சூழ்ந்த
உலகத்தைப் புசித்த கண்ண பிரானுமான எம்பெருமான் வந்து எழுந்தருளி யிருக்கின்ற அழகிய வளப்பம் பொருந்திய பார்ப்பதற்கு
இனிய வயல்கள் சூழ்ந்த மருதநிலங்களையுடைய தென்திருப்பேரெயில் என்னும் மாநகரைச் சென்று சேர்வன்,’ என்கிறாள்.
‘வீற்றிருந்த திருப்பேரெயில்’ என்க. ‘நீர்கள்’ என்பதில் ‘கள்’ அசை நிலை.

‘நீங்கள் இனி என்னைத் தேற்றிப் பிரயோஜனம் இல்லை; தென் திருப்பேரெயிலைப் போய்ப் புகக் கடவேன்,’ என்கிறாள்.
(சாஹசவத்தில் துணிவது ஸ்த்ரீத்வத்துக்கு சேராது -தலைக்கட்டவும் முடியாது போன்ற வார்த்தைகள் -சொல்லிப் பிரயோஜனம் இல்லை )

சேர்வன் சென்று –
‘உன் ஆற்றாமையாலே சில சொல்லுகிறயாகில் இது கடைப் படவற்றோ?’ என்ன,
‘அவசியம் அங்கே புக்கு அல்லது விடேன்!’ என்கிறாள்.

என்னுடைத் தோழிமீர்காள் அன்னையர்காள் –
எனக்காக இருப்பாரும், என்னைத் தங்களுக்காக நினைத்திருப்பாரும் ஒன்றும் சொல்ல வேண்டா.
தோழிமாரோடு தாய்மாரோடு வாசி இல்லை காணும் இவளைத் தேற்றப் போகாமைக்கு.
அறிவில்லாத மாக்களோ ஞானிகளை உபதேசத்தால் மீட்கப் பார்ப்பார்?
விஷயம் காரணமாக வருகின்றதனைச் சாதனத்தில் செலவு எழுதுகின்றவர்களோ எனக்கு வார்த்தை சொல்லுவார்?
விஷயம் காரணமாக’ என்னும் இவ்விடதில் 5-ஆம் பத்து 5-ஆம் திருவாய்மொழி, வியாக்கியானம் பார்க்க.

இவள்,தன்னை மறந்து, அவனையே பார்த்துப் பேசுகிறாள்;
அவர்கள் அவனை மறந்து, தங்கள் தங்களையே பார்த்து மீட்கத் தேடுகிறார்கள்.
உபாயத்தில் கண் வைக்காமல் பிராப்ய ஏக பரராகவே இருக்க வேண்டுமே
பற்றிற்று எல்லாம் பற்றி அவனை பற்றுதல் பக்தி யோகம் உபாயாந்தரம்
விடுவது எல்லாம் விட்டு தம்மையும் விடுகை பிரபத்தி -நாம் பற்றும் பற்றும் பற்று அல்லவே –

நீர்கள் உரைக்கின்றது என் இதற்கு –
கலங்கினாரோ தெளிந்தாரைத் தேற்றுவார்?
நீங்கள் நிற்கிற நிலை எது? என் நிலை எது?
போகையிலே துணிந்திருக்கிற என்னை,
‘புறப்படுகை பழி’ என்று இருக்கின்ற நீங்கள் சொல்லுவது என்?
இதற்கு – எனக்கு ஓடுகிற நிலைக்கு.

‘ஆனாலும், நெஞ்சும் அடக்கமுமுடையார்க்கு இது வார்த்தையோ?
நாங்கள் சொன்னபடி செய்து எங்கள் வழியே ஒழுக வேண்டாவோ?’ என்ன,

‘நெஞ்சும் நிறைவும் எனக்கு இங்கு இல்லை;
அது வேணுமாகில் அங்கே போய்ச் சொல்லுங்கோள்.
மனமும் அடக்கமும் அவன் பக்கலின், நிறைவு – அடக்கம். நெஞ்சு – அது இட்டுவைக்கும் கலம்.
நெஞ்சும் நிறைவும் எனக்கு ஆம்படியோ அவன் படி -திருமேனி அழகு -இருக்கிறது?

கார் வண்ணன் –
தாய்மார் தோழிமாரானவர்கள் வார்த்தை கேளாத படியாக வடிவைப் படைத்தவன்.
‘வெறும் வடிவழகேயோ உள்ளது?’ என்னில்,

கார்க் கடல் ஞாலம் உண்ட –
‘தளர்ந்தார் தாவளம்,-ஆதாரம் –
ஆபத்து வந்தால் காப்பாற்றி விடும் அத்தனையோ?’ என்னில்,

கண்ண பிரான் –
தன்னைப் பிறர்க்கு ஆக்கி வைக்கும் உபகாரகன்.

வந்து வீற்றிருந்த-
தன் செல்வம் எல்லாம் -அழகு ஆபத் சகத்வம் ஸுலப்யம் உபகாரத்வம் -தோற்றும்படி இருந்த.

ஏர் வளம் ஒண் கழனிப் பழனம் தென்திருப்பேரெயில் மாநகரே –
ஏரினுடைய நிறைவினை யுடையனவாய், அழகியனவான கழனிகளையும் நீர்நிலங்களையுமுடைய

திருப்பேரெயிலாகிற மாநகரிலே சென்று சேர்வேன்.
உங்கள் தடைக்கு மீளுதல்,
அவ்வழியில் நிற்றல் செய்யேன்.
என்னைத் தேற்ற வேண்டா.’
வளம் – மிகுதி.

—————————————————————————————-

நகரமும் நாடும் பிறவும் தேர்வேன்
நாண் எனக்கு இல்லை என் தோழிமீர் காள்!
சிகர மணி நெடு மாட நீடு
தென் திருப் பேரெயில் வீற்றிருந்த
மகர நெடுங்குழைக் காதன் மாயன்
நூற்று வரை யன்று மங்க நூற்ற
நிகரில் முகில் வண்ணன் நேமியான் என்
நெஞ்சங் கவர்ந்து எனை ஊழியானே–7-3-10-

அநந்தரம்-
நிதானப் பாசுரம் -மங்களா சாசனப் பாசுரம் -பூர்த்தி இந்த பாசுரம் வைத்து –
ஆஸ்ரித விரோதி நிரசன சீலனாயத் திருப்பேரையிலே இருந்த மகர நெடும் குழைக்காதன் என் நெஞ்சை அபஹரித்து
அநேக காலம் உண்டு -அவன் இருந்த நகரத்தோடே நாட்டோடு மற்றுமுள்ள தேசங்களோடு வாசியற
நானே புறப்பட்டு ஆராயக் கடவேன் -எனக்கு லஜ்ஜை இல்லை என்கிறாள் –

சக்ர தாரித்தவமே ஆழ்வார் திரு உள்ளத்தில்
சுரி சங்கு உபக்ரமித்து நேமியான் இதில்
உத்சவர் நிகரில் முகில் வண்ணன்

என் தோழிமீர் காள்!–எனக்கு தோழிமார் என்ற பெயராய் ஹிதம் சொல்லி நியமிக்கது தேடுகிறவர்களே
சிகர மணி நெடு மாட நீடு தென் திருப் பேரெயில் வீற்றிருந்த–சிகரங்களை யுடைத்தாய் மணி மயமாய் ஓங்கின மாடங்களை யுடைத்தாய்
சிரகால ஸ்த்தாயியான தென் திருப்பேரெயிலே எழுந்து அருளி இருக்கிற
மகர நெடுங்குழைக் காதன் மாயன் நூற்று வரை யன்று மங்க நூற்ற–மகர ஆகாரமான பெரிய ஆபரணத்தை யுடைய கர்ண பாசங்களை யுடையனாய் –
அவ்வாபரண சோபையோபாதி ஆச்சர்யங்களான குண சேஷ்டிதங்களை யுடையனாய்
ஆஸ்ரித விரோதிகளான துர்யோதனாதிகளை பாரத சமரம் பரவ்ருத்தமான அன்று நசிக்கும்படி மந்திரித்து -அத்தாலே
நிகரில் முகில் வண்ணன் நேமியான் என் நெஞ்சங் கவர்ந்து எனை ஊழியானே–ஒப்பு இல்லாத காளமேக நிபமான வடிவில் புகரை யுடையனாய்
ஆஸ்ரித சம்ரக்ஷண அர்த்தமான திரு வாழியை யுடையனானவன் –
இவ்வபதானத்தைக் காட்டி என் நெஞ்சை அபஹரித்துக் கொண்டு எத்தனை காலத்தான்-
ஆன பின்பு –
நகரமும் நாடும் பிறவும் தேர்வேன் நாண் எனக்கு இல்லை–அவன் இருந்த நகரமும் சேர்ந்த நாடும் மற்றும் உண்டான பட்டணாதிகளும்
நானே போய் ஆராயக் கடவேன்
இவர்கள் பழிக்கும் படி இவர்கள் சந்நிதியில் போகும்படி என் என்று ஸ்த்ரீத்வ ப்ரயுக்தமான லஜ்ஜை எனக்கு இல்லை –

என்னுடைய தோழிமீர்காள்! நகரங்களிலும் நாடுகளிலும் பிற இடங்களிலும் தேடுவேன்; எனக்கு நாணம் இல்லை; ‘என்னை?’ எனின்,
சிகரங்களையுடைய அழகிய நீண்ட மரடங்கள் நிலைத்திருக்கின்ற தென்திருப்பேரெயிலில் எழுந்தருளியிருக்கின்ற மகர நெடுங்குழைக்காதனும்
மாயனும் துரியோதனாதியர்கள் அன்று அவியும்படியாபக மந்திரித்த ஒப்பில்லாத முகில் வண்ணனும் நேமியானுமான எம்பெருமான்
என் மனத்தினைக் கொள்ளைக்கொண்டு எத்தனை ஊழிக் காலத்தை யுடையான்?

‘மகர நெடுங்குழைக்காதன்’ என்பது, அந்தத் திவ்விய தேசத்தில் எழுந்தருளியிருக்கின்ற
இறைவன் திருப் பெயர்.
‘எனை ஊழியான்’ என்பது,
‘அவன் என் மனத்தினைக் கவர்ந்து எத்தனை ஊழிக் காலமாயிற்று?’ என்றபடி.

‘இருந்ததே குடியாக உலகத்தார் உன்னைப் பழி சொல்லார்களோ?’ என்று தோழிமார்கள் சொல்ல
‘அவர்கள் அன்றோ எனக்குத் தேட்டம்?’ என்கிறாள்.

நகரமும் நாடும் பிறவும் தேர்வன்-
‘உன் துணிவாக, நாட்டார் நகரத்தார் மற்றுமுள்ளாரும் எல்லாரும் அறிந்து பழி சொல்லுகிறார்களே!’ என்ன,
‘எனக்குத் தான் தேட்டம் அவனேயோ? நகரம், நாடு பட்டணம் முதலானவைகள்,
இவற்றிலுள்ளாருடைய பழியே யன்றோ எனக்குத் தேட்டம்? ‘தேர்வன்’ ‘தேடுகிறேன்’ என்றபடி.

நீங்கள் சேர்க்கிலீர்கோளாகில்,
அவன் தானாக வாரானாகில்,
அவனுடனே கூட்டிப் பழி சொல்லுகிற இவர்கள் அன்றோ என் ஆத்மாவை நோக்குகிறார்கள்?
‘அலர் எழ ஆருயிர் நிற்கும்’ -திருக் குறள் என்றான் அன்றோ?

பிறவும் –
மற்றுமுள்ளனவும்.

நாண் எனக்கு இல்லை –
நாணம் இங்கு இல்லாமையே அன்று;
அங்குப் போனாலும் இல்லை.
இந்தச் சரீரத்தில் முதலிலே இல்லாமை.

என் தோழிமீர்காள் –
இது நான் உங்களுக்குச் சொல்லி அறிய வேண்டுபடி ஆவதே!

சிகரம் மணி நெடு மாடம் நீடு தென் திருப்பேரெயில் வீற்றிருந்த –
மலைகளின் சிகரங்களைக் கொடுவந்து வைத்தாற்போலே ஓக்கமுடைத்தாய்,
இரத்தின மயமான மாடங்களையுடைய பெரிதான தென்திருப்பேரெயில் வீற்றிருந்த.

மகர நெடுங்குழைக்காதன் –
மகரத்தின் வடிவமான பெரிய ஆபரணத்தை யுடைய கர்ண பாசங்களை யுடையவன்.
தோள் கண்டார் தோளே கண்டார்; தொடுகழற் கமல மன்ன
தாள்கண்டார் தாளே கண்டார்; தடக்கைகண் டாரும் அஃதே;
வாள்கொண்ட கண்ணார் யாரே வடிவினை முடியக் கண்டார்?
ஊழ்கொண்ட சமயத் தன்னான் உருவுகண் டாரை ஒத்தார்.’-என்ற கம்பராமாயணச் செய்யுளை ஒப்பு நோக்குக.

அவனுடைய ஒரோ அவயங்களில் படிந்தாரை மீட்கலாயோ இருப்பது?
மாயன் –
சொல்லிச் சொல்லாத தேக காந்தியையும் ஆத்தும குணங்ளையும் நினைக்கிறது.
அன்றிக்கே,
மாயன் – ‘அடியார்களிடத்தில் பக்ஷபாதத்தையுடையவன்’ என்னுதல்.

நூற்றுவரை அன்று மங்க நூற்ற –
சிலரை அழிக்க நினைத்தால் ஒருவரும் தப்பாதபடி அழிக்குமவன்.-தேர்ப் பாகன்
துரியோதனன் முதலாயினோர்களைப் பாரதப் போர் உண்டான அன்று நசிக்கும்படி மந்திரித்த.

நிகர் இல் முகில் வண்ணன்-
ஒப்பில்லாத காளமேகம் போலே இருக்கிற வடிவழகு.
இதனால், ‘விரோதியை வளர்த்தாலும் விட ஒண்ணாத வடிவழகு’ என்கை.

நேமியான் –
அடியார்களுடைய விரோதிகளைப் போக்கும் போது பகலை இரவு ஆக்கும் பரிகரத்தை யுடையவன்.
திருவாழியைக் கொண்டு வீடுமன் முதலாயினோர்களையும் தொடரா நிற்பன் அன்றோ?

நிகர் இல் முகில் வண்ணன் நேமியான் –
துரியோதனன் முதலாயினோர்கட்கு மின்னும் இடியுமாய்,
பாண்டவர்கள் துன்பம் தீர மழை பெய்து நின்றபடி.
‘அவன் உன் விரோதிகளைப் போக்கிக் கூட நினையாத பின்பு,
அவன் தானே வந்து உன் காலிலே விழும்படி மந்திரத்தாலோ?’ என்ன,

என் நெஞ்சம் கவர்ந்து எனை ஊழியானே –
அதற்கு ஈடான பரிகரத்தை நான் இழந்து எத்தனை காலம் உண்டு?
வடிவழகையும் ஆயுதச் சேர்த்தியையும் காட்டி என் நெஞ்சினைக் கவர்ந்து போய் எத்தனை காலத்தான்?

எனை ஊழியானே –
பல கல்பங்கள் உண்டு.
துரியோதனன் முதலாயினோரை வெல்ல எண்ணினார் போலே,
என் நெஞ்சினைக் கவர்வதற்கு எத்தனை காலம் எண்ணினானோ!

—————————————————————————————

ஊழிதோறு ஊழி உருவும் பேரும்
செய்கையும் வேறவன் வையம் காக்கும்
ஆழி நீர் வண்ணனை அச்சுதனை
அணி குருகூர்ச் சடகோபன் சொன்ன
கேழில் அந் தாதி ஓர் ஆயிரத்துள்
இவை திருப் பேரெயில் மேய பத்தும்
ஆழி அம் கையனை ஏத்த வல்லார்
அவர் அடிமைத் திறத்து ஆழியாரே.–7-3-11-

அநந்தரம் -இத்திருவாய்மொழியைச் சொல்லி ஸ்துதிக்க வல்லவர்கள் பகவத் கைங்கர்யத்தில்
அவகாஹனத்தை யுடையவராவார் என்று பலத்தை அருளிச் செய்கிறார் –

ஊழிதோறு ஊழி உருவும் பேரும் செய்கையும் வேறவன் வையம் காக்கும்–கல்பம் தோறும் கல்பம் தோறும் நாம ரூப
வியாபாரங்களை வேறாக யுடையனாய்க் கொண்டு ஜகத்தை ரக்ஷிக்குமவனாய்
ஆழி நீர் வண்ணனை அச்சுதனை அணி குருகூர்ச் சடகோபன் சொன்ன–சமுத்திர ஜலம் போலே பசுத்த அசாதாரண விக்ரஹத்தை
யுடையனாய் ரஷ்ய வர்க்கத்தை நழுவ விடாதவனானவனை
ஜகத்துக்கு அலங்காரமான திரு நகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வார் அருளிச் செய்த
கேழில் அந் தாதி ஓர் ஆயிரத்துள் இவை திருப் பேரெயில் மேய பத்தும்-ஒப்பு இல்லாத ஓர் அந்தாதி ஆயிரத்துள்
திருப்பேரெயில் சேர்ந்த இப்பத்தைக் கொண்டு
ஆழி அம் கையனை ஏத்த வல்லார் அவர் அடிமைத் திறத்து ஆழியாரே.–திருக்கையும் திருவாழியுமான சர்வேஸ்வரனை
ஸ்துதிக்க வல்லரானவர்களை சேஷ வ்ருத்தி விஷயத்திலே அவகாஹிப்பாரே –
இது எண் சீர் ஆசிரிய விருத்தம் –

கல்பந்தோறும் வடிவும் பேரும் செயலும் வேறுபடக் கொள்ளுமவனும், பூலோகத்தைப் பாதுகாக்கின்ற கடல் வண்ணனும் அச்சுதனுமான
எம்பெருமானை, அழகிய திருகுருகூரில் அவதரித்த ஸ்ரீசடகோபர் அருளிச்செய்த ஒப்பில்லாத அந்தாதி ஓராயிரத்துள், திருப்பேரெயில்
என்னும் திவ்விய தேசத்தைச் சேர்ந்த இவை பத்தும் கொண்டு, திருவாழியை அழகிய கையிலேயுடைய மகரநெடுங்குழைக்காதனைத்
துதிக்க வல்லாராகிய அவர்கள் அடிமை விஷயத்திலே திருவாழியின் தன்மையையுடையவர்களாவார்கள்.
அச்சுதன் – அழிவில்லாதவன்; ‘அடியார்களை நழுவ விடாதவன்’ என்னலுமாம். திருப்பேரெயில் மேய இவை பத்தும் என்று கூட்டுக.
ஆழியார்-மூழ்கினவர்கள் என்னலுமாம்.

‘இத்திருவாய்மொழி கற்றார், பகவானுடைய கைங்கரியத்திலே மிகவும் மூழ்கினாரே யாவர்,’ என்கிறார்.

ஊழிதோறு ஊழி உருவும் பேரும் செய்கையும் வேறவன்-
அடியார்களைக் காப்பாற்றும் பொருட்டுக் கல்பந்தோறும் கல்பந்தோறும்
திருமேனியும் திருப்பெயரும் செயல்களும் வேறுபடக் கொள்ளமவன்.
‘இதற்குப் பயன் என்?’ என்னில்,

வையம் காக்கும்
உலகத்தைக் காப்பாற்றுதல்.
அப்படியே காத்திலனாகில் இப்படி நம்புவார் இல்லையே, இவனை ‘இரட்சகன்’ என்று,
அந்த பிரகாரத்தில் -அந்த திருமேனி காட்டி -அப்படி பூமியை -பாரம் போக்கி அருளி -என்றுமாம் –
(ஆஸ்ரித ரக்ஷகத்வம் -வையம் காப்பதற்காக -ஜகத்துக்குள் துரியோதனாதிகள் உண்டே –
சங்கோசப்படுத்தி ஆஸ்ரிதர் -என்று காட்டி அருளுகிறார் –
நூற்றுவரை மங்க ஓட்ட கீழே உண்டே
ஆகவே சங்கோசப்படுத்து ஆஸ்ரித ரக்ஷனார்த்தம்
அப்படியே–படி பிரகாரம் பூமி தன் திருமேனி மூன்றும் )

ஆழி நீர் வண்ணனை –
நோக்காதே படுகொலை அடிக்கிலும் விட ஒண்ணாத வடிவு. -அழகு படுத்தும் பாடு –
வேறுபடாதே அங்குள்ளார்க்குக் காட்சி கொடுக்கும் அசாதாரண விக்கிரகத்தைச் சொல்லுகிறது.

அச்சுதனை –
அவ்வடிவு தனக்கு ஒருநாளும் அழிவு இல்லை என்னுதல்.
பற்றினாரை ஒரு நாளும் விடான் என்னுதல்.
சுதி இல்லாதவன் -தான் நழுவாமல் -தன்னைப் பற்றினார்களை நழுவ விடாதவன் -இரண்டும்
பச்சை -மா மலை போல்மேனி அச்சுதன் பவளவாய் அச்சுதன் -ஒவ் ஒன்றிலும் சேர்த்து
பற்றிய அமரர்களை நழுவ விடாதவன்

அணி குருகூர் –
ஆபரணமான திருநகரி.

கேழ் இல் அந்தாதி –
ஒப்பு இல்லாத அந்தாதி.
தம்மாலும் பிறராலும் மீட்க ஒண்ணாதபடி பகவத் விஷயத்தில் உண்டான உறுதியைச் சொன்ன பத்து ஆகையாலே,
ஒப்பு இன்றிக்கே இருக்கிறபடி.

ஓர் ஆயிரத்துள் திருப்பேரெயில் மேய இவை பத்தும் –
ஒப்பு இல்லாத ஆயிரத்துள் திருப்பேரெயிலிலே சேர்ந்த இப்பத்தைக் கொண்டு.

ஆழி அம் கையனை ஏத்த வல்லார் –
‘இவை எல்லாவற்றாலும் என் சொல்லியவாறோ?’ எனின், கையும் திருவாழியுமான
அழகிலே இவர் அகப்பட்ட படியைத் தெரிவித்தபடி.
அல்லாத அழகுகள் ஒருபடியும் இது ஒரு படியுமாய் இருக்கை;
இது கை மேலே அனுபவித்துக் காணலாமே.

அவர் அடிமைத் திறத்து ஆழியாரே –
அடிமைக் கூட்டத்தில் திருவாழியின் தன்மையை யுடையவர் என்னுதல்;-திறம் -வர்க்கம் சமூகம் என்றபடி –
அடிமை இடையாட்டத்தில் ஒருவரால் மீட்க ஒண்ணாதபடி உட்புகுவர் என்னுதல்.திறம்-யத்னம் –ஊற்றம்-என்றபடி

————————————————————————-

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

ஸ்ரீ ரெங்க பத்ரு அசரண்ய சரண்ய பாவம்
பிரஸ்தாபம் லப்த த்ருதீய பஹுளா அதி ருசி
அவாரிய ஆஸீத் ஸ்வஸ்மின் ஸ்வ ப்ரிய ஹித
இதர நிர்விசேஷர் உதாசீன ச பூய

அவாரிய ஆஸீத் -நிவாரகர் இல்லாத படி ஆனார்-

————————————————————————-

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –

ஸ்வாந்த காந்த்யா ஸ்வேஷூ ஸ்வம் போக்த்ருபாவம் பிரகடயிந்தி
ஹரி பத்மா ஷியேதவேன ஹ்ருதயத் சக பரமாகாச ஸூ
உபகாரி விகர்ஜ சங்காதஅநிஷ்ட பிரகர்த்தா ஆதார விலசன க்ருத
ரக்ஷக அம்போதி த்ருச்ய ஆபத் சம் ரக்ஷத்ய ஸ்ரீ மகர வர லஸ குண்டலயா –

1–ஸ்வாந்த காந்த்யா –வெள்ளைச் சுரிசங்கொடு ஆழி ஏந்தித் தாமரைக் கண்ணன் என் நெஞ்சினூடே
புள்ளைக் கடாகின்ற ஆற்றைக் காணீர்!

2-ஸ்வேஷூ ஸ்வம் போக்த்ரு பாவம் –தென் திருப் பேரெயில் வீற்றிருந்த வானப் பிரான் மணி வண்ணன் கண்ணன்
செங்கனி வாயின் திறத்ததுவே-

3–பிரகடயிந்தி ஹரி –தென் திருப் பேரெயில் வீற்றிருந்த நங்கள் பிரானுக்கு

4- பத்மா ஷியேதவேன ஹ்ருதயத் சக –தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்தும்

5–பரமாகாச ஸூ உபகாரி –தென் திருப் பேரெயில் வீற்றிருந்த நங்கள் பிரானுக்கு என் நெஞ்சம் தோழீ!
நாணும் நிறையும் இழந்ததுவே

6–விகர்ஜ சங்காத–முழங்கு சங்கக் கையன் மாயத்து ஆழ்ந்தேன்-

7-அநிஷ்ட பிரகர்த்தா –முனிந்து சகடம் உதைத்து மாயப் பேய் முலை உண்டு மருதிடை போய்க்
கனிந்த விளவுக்குக் கன்று எறிந்த கண்ண பிரானுக்கு என் பெண்மை தோற்றேன்

8–ஆதார விலசன க்ருத –காதல் கடலின் மிகப் பெரிதால் நீல முகில் வண்ணத்து எம்பெருமான்

9–ரக்ஷக –தென்னிலங்கை செற்ற பிரான் வந்து வீற்றிருந்த பேரெயிற்கே புக்கு

10-அம்போதி த்ருச்ய –கண்டதுவே கொண்டு எல்லாரும் கூடிக் கார்க்கடல் வண்ணனோடு

ஆபத் சம் ரக்ஷத்ய –கார் வண்ணன் கார்க்கடல் ஞாலம் உண்ட கண்ண பிரான்

ஸ்ரீ மகர வர லஸ குண்டலயா –தென் திருப் பேரெயில் வீற்றிருந்த மகர நெடுங்குழைக் காதன் மாயன்

—————————————————————————

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 63-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்-

அவதாரிகை –

இதில்-ஸ்ரீ தென் திருப் பேரிலே அபஹ்ருத சித்தர் ஆனபடியை பேசுகிற பாசுரத்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார் – அது எங்கனே என்னில்
கீழ் –
தம் தசை தாம் வாய் விட்டு பேச மாட்டாதே மோஹித்துக் கிடந்தவர்
ஸ்ரீ பெரிய பெருமாளுடைய திரு நாம பிரசங்கமே-சிசிரோப சாரமாக-அத்தாலே ஆஸ்வச்தராய் யுணர்ந்து
தத் வைலஷ்ய அனுசந்தானத்தாலே அப்ருஹ்ய சித்தராய்
ஸ்ரீ பெரிய பெருமாள் எழுந்து அருளி இருக்கிற (நிகரில் முகில் வண்ணன் தானே இங்கும் )
ஸ்ரீ தென் திருப் பேரிலே போவதாகப் பதறிப் புறப்பட இப்படி பதறுகை நம் ஸ்வரூபத்துக்கு சேராது
அவர் தாமே வரக் கண்டு
நம் சேஷத்வத்தை நோக்கிக் கொண்டு-பாடாற்றிக் கொண்டு இருக்க வேண்டாவோ என்று பரிசர வர்த்திகள் நிவாரிக்க
சர்வதா நான் அங்கே போய் சேருகை தவிரேன் -என்று தம் துணிவை அவர்களுக்கு சொல்லுகிற படியை
அன்யாபதேசத்தாலே அருளிச் செய்கிற-வெள்ளிச் சுரி சங்கில் அர்த்தத்தை
வெள்ளிய நாமம் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -என்கை –

———————————————

வெள்ளிய நாமம் கேட்டு விட்டகன்ற பின் மோகம்
தெள்ளிய மால் தென் திருப்பேர் சென்று புக -உள்ளம் அங்கே
பற்றி நின்ற தன்மை பகரும் சடகோபற்கு
அற்றவர்கள் தாம் ஆழியார் —63-

தெள்ளிய மால் -தெளிந்த பித்து
ஆஸ்ரிதருக்கு உபாயமாக இருப்பதில் தெளிவு
உபேயமாக பரிமாறும் பொழுது மால்

———————————————

வியாக்யானம்–

வெள்ளிய நாமம் கேட்டு விட்டகன்ற பின் -மோகம் –
வெள்ளிய நாமம் கேட்டு -மோகம் -விட்டகன்ற பின் –
பாவநத்வ-போக்யத்வ-தாரகத்வாதி குணங்களை யுடைய முகில் வண்ணரான
ஸ்ரீ பெரிய பெருமாள் யுடைய திரு நாமங்களை பாட்டுத் தோறும் திருத் தாயார் சொல்லக் கேட்டு
கீழில் மோஹமானது விட்டுப் போன பின்பு –

தெள்ளியமால் தென் திருப்பேர் சென்று புக –
ஆஸ்ரித ரஷணத்திலே விவேகஜ்ஞ்ஞனான ஸ்ரீ சர்வேஸ்வரன் வர்த்திக்கிற ஸ்ரீ தென் திருப் பேரிலே
தென் திருப் பேரையில் சேர்வன் நானே -என்றும்
திருப் பேரையில் சேர்வன் சென்றே -என்றும்-சென்று புகுவதாக ஒருப்பட

இவ் வதிபிரவ்ருதியை
தாய் மாறும் தோழி மாறும் தடஸ்தராய் உள்ளாறும் கண்டு
இப்படி சாஹசத்தில் ஒருப்படுகை உக்தம் அன்று
என்று நிஷேதிக்க –

உள்ளம் அங்கே பற்றி நின்ற தன்மை பகரும் –
திரு உள்ளம் தம்மை ஒழியவும்-முந்துற்ற நெஞ்சாய்- வீற்று இருந்த இவ்விஷயத்தில்
மாறுபாடு உருவ ஊன்றி நின்ற ஸ்வபாவத்தை நிஷேதிப்பாருக்கு அருளிச் செய்த ஸ்ரீ ஆழ்வார் –

அதாவது –
நானக் கருங்குழல் தோழி மீர்காள் அன்னைமீர்காள் அயர் சேரி யீர்காள்
நான் இத்தனை நெஞ்சம் காக்க மாட்டேன் -என்று தொடங்கி
கண்ணன் செங்கனி வாயின் திறத்ததுவே -என்றும்
செங்கனி வாயின் திறத்ததாயும்-என்று தொடங்கி –
நங்கள் பிரானுக்கு என் நெஞ்சம் தோழீ நாணும் நிறையும் இழந்ததுவே -என்றும்
இழந்த எம்மாமைத் திறத்து போன என் நெஞ்சினாறும் அங்கே ஒழிந்தார் -என்று தொடங்கி
அன்னையர்கள் என்னை என் முனிந்தே -என்றும்
கண்ண பிரானுக்கு என் பெண்மை தோற்றேன் —
காலம் பெற என்னைக் காட்டுமினே –
காலம் பெற என்னைக் காட்டுமின்கள் -என்றும்
பேரையிற்கே புக்க என் நெஞ்சம் நாடிப் பேர்த்து வரவெங்கும் காண மாட்டேன்
என் நெஞ்சம் கண்டதுவே கண்டேனே -என்றும்
நெஞ்சு நிறைவும் எனக்கு இங்கு இல்லை -என்றும்
நிகரில் முகில் வண்ணன் நேமியான் என் நெஞ்சம் கவர்ந்து எனை ஊழியானே-என்றும்
இப்படி தாம் அங்கே பத்த பாவரான படியை-பத்தும் பத்தாக அருளிச் செய்தவை -என்கை –

அச்யா தேவயா மனஸ் தஸ்மின் -என்னக் கடவது இறே-

அன்றிக்கே
வெள்ளிய நாமம் கேட்டு விட்டு அகன்ற பின் மோகம் தெள்ளிய மால் தென் திருப் பேர் சென்று புகுந்து
உள்ளம் அங்கே பற்றி நின்ற தன்மை பகரும் -என்று ஏக வாக்யமாக யோஜிக்கவுமாம் –

உள்ளம் அங்கே பற்றி நின்ற தன்மை பகரும் சடகோபற்கு அற்றவர்கள் தாம் ஆழியார் –
இத் திருவாய் மொழி முகேன தம் திரு உள்ளம் ஸ்ரீ திருப் பேரில் இருப்பிலே அபஹ்ருதமான படியை அருளிச் செய்த
ஸ்ரீ ஆழ்வார் விஷயத்திலே தேவு மற்று அறியேன் -என்றவர்கள்-

தாம் –
இப்படியான பெருமையை யுடைய தாங்கள் –

ஆழியார் –
அவர் அடிமைத் திறத்து ஆழியார் -என்னும் அவர்களிலும்
இவர்களே அகாத பகவத் பக்தி சிந்துவான
ஸ்ரீ நாத முனிகளைப் போல மிக்க வேதியர் வேதத்தின் உட்பொருளை அறிய வல்லரான
அகாத ஜ்ஞான பிரேமங்களை யுடையார் –

————————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பகவத் விஷயம் காலஷேபம் -147- திருவாய்மொழி – -7-3-1….7-3-5–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்–

June 27, 2016

மேல் திருவாய்மொழியில், ‘இட்ட கால் இட்ட கை’ என்கிறபடியே, இவள் மோகித்துக் கிடக்க,
இவளுக்கு முன்னே தோழிமாரும் தரைப்பட, திருத் தாயார் ஒருத்தியும் இவள் நிலையை நினைந்து
அருகே இருந்து கூப்பிட்டுப் போருமதும் தவிர இப் பெண்பிள்ளை தானே எழுந்திருந்து கால் நடை தந்து போமளவாய் விழுந்தது.

அதற்கு அடி:
‘பற்றிலார் பற்ற நின்றானே’ என்று பெரிய பெருமாளுடைய பற்றிலார் பற்ற நிற்கும் தன்மை தொடக்கமான,
இவளுக்குப் பற்றாசான குணங்களையும் அழகு முதலான விக்கிரஹ குணங்களையும்
இவள் தான் வாய் வெருவியும் திருத்தாயார் சொல்லவும் கேட்டு அதனாலே தரித்தாள்.
போன உயிரை மீட்கவற்றாயன்றோ குணங்களின் தன்மை இருப்பது?

இவ்விடத்திலே,
‘இத: பரம் மிருத ஸஞ்ஜீவநீம் ராம வ்ருத்தாந்த கதம் ஆஹ’-என்ற
ஸஹஸ்ரநாம பாஷ்ய வாக்கியத்தை நினைப்பது.

‘அவித்த ஜம்புலத்தவ ராதியாயுள
புவித்தலை யுயிரெலாம் இராமன் பொன் முடி
கவிக்கும் என்றுரைக்கவே களித்த தாலது
செவிப்புலம் நுகர்வதோர் தெய்வத் தேன்கொலாம்!’-என்பது, கம்பராமாயணம், அயோத்தியாகாண்டம், ஆற்றுப்படலம், 23.

மேல் திருவாய்மொழியில் பிறந்த மோகமுந்தெளிந்து பிரிவின் வியசனமும் நினைக்க வல்லளாய்,
பின்பு, ‘அவனைக் கிட்டியல்லது நில்லேன்’ என்னும்படியான ஆற்றாமையும் பிறந்து, அது பெறாமையாலே துக்கமுடையவளாக,
இவள் விடாய்கு ஈடாகும்படி அணித்தாகத் தென்திருப்பேரெயில் வீற்றிருந்த மகர நெடுங்குழைக்காதனுடைய புன்சிரிப்பு
கடைக்கண் நோக்கம் முதலியவைகளாலே கவரப்பட்ட மனத்தை யுடையவளாய்,
அவன் இருந்து இடத்து ஏறப்போக வேணும்,’ என்று ஒருப்பட,

பழையபடியே தோழிமாரும் தாய்மாரும் அவளைச் சூழப்போந்து,
உனக்கு இத்துணை அளவு கடந்த ஈடுபாடு ஆகாது: நமக்கு இது பழியாய் விளையும்,’ என்ன,

நீங்கள் சொல்லுகிறவற்றால் பிரயோஜனம் உண்டாக மாட்டாது. நான் அவன் பக்கலிலே சென்ற மனத்தை யுடையவள் ஆனேன்;
ஆன பின்பு நானே போனேன் ஆகாமே நீங்கள் என்னோடு உடன்பட்டு அங்கே கொடு போய்ச் சேர்க்கப் பாருங்கோள்,’
என்று தனக்குப் பிறந்த துணிவை அவர்களுக்கு அறிவித்துச் சொல்லுகிறாளாய் இருக்கிறது.

அங்ஙன் அன்றிக்கே,
பிள்ளான் சாஷாத் அனுபவம் பெற்றாள் என்று கொண்டு நிர்வாகம் –
‘முகில் வண்ணன் அடியே இவள் அணுகி அடைந்தனள்,’ என்றது ஆகையாலே,
‘நான் அங்கும் இராகவனுடைய வீட்டில் பன்னிரண்டு வருடங்கள் முடிய மனிதர்களுக்குரிய போகத்தை அனுபவித்தேன்,’ என்கிறபடியே,
ஸமா த்வாதஸ தத்ராஹம் ராகவஸ்ய நிவேஸநே
புஞ்ஜாநா மாநுஷாந் போகாந் ஸர்வ காம ஸம்ருத்திநீ’-என்பது, ஸ்ரீராமா. சுந். 33.17.

பெரிய பெருமாளோடே நெடுங்காலம் பூர்ண ரசமான கலவி உண்டாக,
பிரிந்து கூடா விடில் இரண்டு தலைக்கும் அழிவு வருமளவு ஆயிற்றது.

இனி, எல்லா அளவிலும் ஒரு நீராகக் கலக்கிறது தர்மிகள் இரண்டும் கூடி அன்றோ?
ஆகையாலே, பிரியா விடில் தர்மியே அழியும் அளவாகப் புக, இவ்வளவில். நாயகனான இவன் இரண்டு தலையும்
ஜீவிக்கப் பார்ப்பான் ஒருவன் ஆகையாலே பிரிவைப் பற்றிப் பேசினான்;

பேச, இவளும் பிரிவில் வாசனை இல்லாதாள் ஒருத்தி ஆகையாலே,
‘கலவியிலே ஒரு வகையோ’ என்று கொண்ட, இவளும் அதற்கு இசைந்தாள்;
இசைய அவனும் வேட்டை நிமித்தமாகப் புறப்பட, இவளும் திரு அணுக்கன் திருவாசல் அளவும் ஒருப்படுத்தி மீண்டாள்:

எல்லா அளவிலும் பிரிவு தன் காரியம் செய்தன்றி நில்லாதே அன்றோ?
பின் இவள் நோவு படப்புக. இதனைக் கண்ட தோழிமாரும் தாய்மாரும், ‘உனக்கு ஒடுகிறது என்?’ என்று கேட்க,
ஸ்ரீஜனகராஜன் திருமகள் காட்டிலே கூடப் போய் அவர் இருந்த இடம் நின்ற இடம் உலாவின இடந்தோறும்
கூட இருந்து அனுபவித்தாற்போலே, நானும் அவன் இருந்த இடத்தே போய்ப் புக்கு அல்லது நில்லேன்,’ என்றாள்;

அதனைக் கேட்ட அவர்கள், ‘உன் தலைமைக்கு இது போராது: நீ சொல்லுகிறது வார்த்தை அன்று,’ என்ன,
அவர்கள், ‘அதற்கு நாங்கள் வழிப்படோம்’ என்ன, ‘ஆகில், நானேயாகிலும் போகை தவிரேன்,’ என்கிறாள் என்று பிள்ளான் பணிப்பர்.

சம்ஸ்லேஷம் -இருந்தால் வேறு சேர்ந்து அனுபவித்த திருவாய்மொழி இருக்க வேண்டுமே –
அதனால் இந்த நிர்வாகம் கொஞ்சம் அஸ்வாரஸ்யம் –

ஸமா த்வாதச தத்ர அஹம்-
இப்போது ஒருவேளை தரிசனமுங்கூட அரிதாம்படி இருக்கிற நான், முன்பு பல காலம் அவரோடே அனுபவிக்கப் பெற்றேன் காண்!
ராகவஸ்ய நிவேசநே-
எங்கள் மாமனாருடைய மாளிகையிலே அவர் தண்ணீர்த் துரும்பு அறுத்துத் தர, நெடுங்காலம் அனுபவித்தேன்
புஞ்ஜாநா மாநுஷாந் போகாந் ஸர்வ காம ஸம்ருத்திநீ- ‘எல்லாக் காமங்களையும்’ என்கிறபடியே,
‘சோஸ்னுதே ஸர்வாந் காமாந் ஸஹ ப்ரஹ்மணா’ என்றது, தைத்.- எல்லாம் அனுபவிக்கப் பெற்றேன்.
அப்படியும் அன்றே இங்கு:
‘அரசனே! கல்யாண குணங்கள் பல’ என்கிறபடியே, குணங்கள் இரட்டித்த இடம் அன்றோ இது?
‘பஸவோ ந்ருப கல்யாண குணா:’ என்பது, ஸ்ரீராமா, அயோத். 2:26.

‘ஆக, இதனால் என் சொல்லியவாறோ?’ எனின்,
‘நமக்கு ஐம்புல இன்பங்களினின்றும் இந்திரியங்களை மீட்க ஒண்ணாதவாறு போலே அன்றோ
இவரைப் பகவத் விஷயத்தினின்றும் மீட்க ஒண்ணாதபடி?’ என்பதனைக் கூறியவாறு.
அது கருமம் அடியாக வருகிறது: இது பகவானுடைய திருவருள் அடியாக வருகிறது.

‘திருத் தாயார் பேச்சாக வருமவை, ஆழ்வாருக்குப் பிறந்த நிலை விசேடம்:
தலை மகளாய்ப் பேசுகிறதும், இவர்க்குப் பிறந்தது ஓர் அவஸ்தா விசேடம்:
அங்ஙனம் இருக்க, விலக்குவதும் போவதாகக் கூறுவதும் ஒருவர்க்கே கூடுமோ?’ எனின்,

அவற்றுள், விலகுகின்ற திருத் தாயார் முகத்தாற் சொல்லுகிறது,
ஸ்வரூபமான பிராவண்யம் உபாயத்திற் சேர்ந்தால் செய்வது என்?’என்னுமதற்குச் சொல்லுகிறது;

பெண்பிள்ளை கருத்தாற் சொல்லுகிறது. ‘உபாயம் அவனே யாகில் பிராவண்யம் ஸ்வரூபமாமத்தனை அன்றோ?’ என்று சொல்லுகிறது.

ஆக, இவ்விரண்டு அர்த்தத்தையும் -உபாய அத்யாவ சாயத்தையும் பிராப்ய த்வரையும் இரண்டு முகத்தாலே
ஆழ்வார் தாம் அநுசந்தித்தபடியைச் சொல்லுகிறது.
மோகமும் தெளிந்து தானே கூப்பிட வல்லளான இதுவே, இத் திருவாய்மொழிக்கு ஏற்றம்.-

ஸ்ரீ பேரி-தென் திரு பேரியில்-மஹா லஷ்மி இடத்தை எடுத்துக் கொண்டு பூமா தேவி -தபஸ் -அரவாகி சுமத்தியால் —எயிற்றில் ஏந்தி –
வாயில் விழுங்கி —விராட ஸ்தோத்ரம் -பார் என்னும் மடந்தையை மால் செய்யும் மால் –
துர்வாசர் -சாபம் -செய்யாளாக-மாறி -ஸ்ரீ பேரம் -திருமேனி கிடைத்தது -தாமிர பரணி தென் கரை
மஸ்த்ய மகர தீர்த்தம் -மகர குண்டலங்கள் -கிடைக்க –
மகர பூஷணரோ-சாபம் தீர்ந்து கரும் பச்சை நிறம் பெற்றாள் -தென் திருப்பேரை
ஸுந்தர்யம் மா நகரில் கோஷிக்கும் -சென்று சேர்வார்க்கு உசாத் துணை அறுத்து -நெஞ்சினாரும் அங்கே ஒழிந்து-
மகர நெடும் குழைக் காதர் –கோஷிக்கும் தொனிகள்- நெஞ்சில் -புள்ளைக் கடாவும் -வேத ஒலியும்-விளையாட்டு ஒலி-

தென் திருப்பேரையில் என்ற திவ்ய தேச திரு நாமம் – தென் திருப்பேரை மருவி உள்ளது
நிகரில் முகில் வண்ணன் பெருமாள் திரு நாமம் –

————————————————————————————————–

வெள்ளைச் சுரிசங்கொடு ஆழி ஏந்தித்
தாமரைக் கண்ணன் என் நெஞ்சினூடே
புள்ளைக் கடாகின்ற ஆற்றைக் காணீர்!
என் சொல்லிச் சொல்லுகேன் அன்னைமீர்காள்!
வெள்ளச் சுகமவன் வீற்றிருந்த
வேத ஒலியும் விழாவொலியும்
பிள்ளைக் குழா விளையாட்டொலியும்
அறாத்’திருப் பேரெயிற் சேர்வன் நானே- .–7-3-1-

முதல் பாட்டில் -அநு பாவ்யமான திவ்ய ஆயுதங்களோடும் திவ்ய அவயவங்களோடும் தன் நெஞ்சிலே பெரிய திருவடியை நடத்தி
பிரகாசிக்கிற ஆகாரத்தாலே ஈடுபட்டு -அவன் இருந்த தென் திருப் பேரையிலே செல்லுகையில்
யுண்டான துணிவைத் தாயாரைக் குறித்துச் சொல்லுகிறாள்-தன் நெஞ்சுக்குள் ஏசல்

அன்னைமீர்காள்!–வாசா மகோசரமான அகவாயில் விகாரம் அறியாதே பெற்றவர்கள் இறே நாம் என்றே
விலக்கத் தேடுகிறவர்களே -நான் ஆசைப்பட்ட படியே –
வெள்ளைச் சுரிசங்கொடு ஆழி ஏந்தித்–வெளுத்த நிறத்தையும் சுரியையும் யுடைத்தான ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தோடு திரு வாழியையும் ஏந்தி
தாமரைக் கண்ணன் என் நெஞ்சினூடே புள்ளைக் கடாகின்ற ஆற்றைக் காணீர்!–நான் தளரும்படி அநன்யார்ஹை யாக்கின
தாமரைக் கண்ணை யுடையவன் -தானும் தன் விபூதியும் புகுந்தாலும் இடமுடைத்தான என் நெஞ்சின் உள்ளே
பெரிய திருவடியை தன் அபிநிவேச அநு ரூபமாக நடத்துகிற பிரகாரத்தை நீங்கள் அறிகிறிலிகோள்
என் சொல்லிச் சொல்லுகேன் -இவ்வனுபவத்துக்கு என்ன பாசுரம் இட்டு நான் சொல்லுகேன்
வெள்ளச் சுகமவன் வீற்றிருந்த-இவ்வளவில் பகவத் அனுபவத்தால் அபரிமித ஸூக ஆர்ணவத்தை யுடைத்தாய்-
என் நெஞ்சுக்குள்ளே பிரகாசிக்கிறவன் தன் மேன்மை தோன்ற இருக்குமிடமாய்
வேத ஒலியும் விழாவொலியும்–அந்த ஆசன சோபையை அனுபவிக்கிறவர்களுடைய வேத கோஷமும்
நிரந்தர உத்சவத்தால் யுண்டான வாத்யாதி கோஷமும்
பிள்ளைக் குழா விளையாட்டொலியும்–அவனுடைய குண சேஷ்டிதாதிகளைப் போற்றி இட்டுக் கொண்டு
பிள்ளைகள் திரள் விளையாடும் கோஷமும் அறாத்’திருப் பேரெயிற் சேர்வன் நானே- .அவிச்சின்னமாய் நடக்கும் –
திருப் பேரெயிலே நான் சேருவேன் –

தாய்மார்களே! வெண்ணிறத்தையும் உள் சுரிந்திருத்தலைமை யுடைய ஸ்ரீபாஞ்சசன்யம் என்னும் சங்கோடு
சுதரிசனம் என்னும் சக்கரத்தையும் ஏந்திக் கொண்டு தாமரைக் கண்ணனான எம்பெருமான் என் மனத்திற்குள்ளே
கருடப் பறவைச் செலுத்துகின்ற விதத்தைக் காணுங்கோள்; அவன் தன்மையை என்ன வார்த்தைகளைக் கொண்டு உங்களுக்குச் சொல்லுவேன்!
பேரின்ப வெள்ளத்தை யுடைய எம்பெருமான் எழுந்தருளி யிருக்கின்ற, வேதங்களின் ஒலியும் திருவிழாக்களின் ஒலியும் குழந்தைக் கூட்டங்கள்
விளையாடுகிற விளையாட்டின் ஒலியும் நீங்காமல் இருக்கின்ற திருப்பேரெயில் என்ற திவ்விய தேசத்தை நான் அடைவேன் என்கிறாள்.
சுரிதல் – உள்ளே சுழித்திருத்தல், கடாவுதல்-ஏறிச் செலுத்தல். காணீர் -காண்கின்றிலீர் என்னலுமாம். வீற்றிருந்த திருப்பேரெயில் என்க.
‘ஒலியும் ஒலியும் விளையாட்டு ஒலியும் அறாத் திருப்பேரெயில்’ என்க.
இத்திருவாய்மொழியில் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.

இந்தப் பிராட்டி, சொற்களால் சொல்ல முடியாதபடி தனக்கு உண்டான வியசனத்தாலே,
தென்திருப்பேரெயில் போக வேணும் என்று தனக்குப் பிறந்த நிலையை வினவுகிற திருத் தாய்மார்க்குச் சொல்லுகிறாள்.

வெள்ளைச் சுரி சங்கொடு ஆழி ஏந்தி –
‘தவள ஒண் சங்கு சக்கரம்’ -திருவாய். 6. 5:1.-என்றும்,
‘கூரார் ஆழி வெண் சங்கு’ திருவாய். 6. 9:1.-என்றும்,
‘சங்கு சக்கரங்கள் என்று கை கூப்பும்’ -7. 2:1.-என்றும் கையும் திருவாழியுமான அழகு
கைவிடாதே இவரைத் தொடருகிறபடி.
முகில் வண்ணன் அன்றோ? அந்த நிறத்துக்குப் பரபாகமான வெளுப்பையும் சுரியையுமுடைத்தான ஸ்ரீபாஞ்சஜன்யத்தையும்,
அங்ஙனம் ஒரு விசேடணம் இட்டுச் சொல்ல வேண்டாதபடியான அழகையுடைத்தான திருவாழியையும் ஏந்தி,

தாமரைக் கண்ணன்-
‘தாமரைக் கண் என்றே தளரும்’ என்றது. பின் நாட்டுகிறபடி.
திருமேனிக்குத் திவ்விய ஆயுதங்கள் பிரகாசகமாய் இருக்குமாறு போலே,
ஆத்ம குணங்களுக்குத் திருக் கண்கள் பிரகாசகமாய் இருக்கிறபடி. என்றது,
‘அக வாயில் தண்ணளி எல்லாம் கண் வழியே அன்றோ தோற்றுவது?’ என்றபடி.

பகைவார்களுக்குத் திவ்விய ஆயுதங்களோடு ஒக்கத் திருக் கண்களும்
விரோதியாய்த் தோற்றுமாறு போலே அன்றோ,-அழல விழித்தான் அச்சோ அச்சோ
அனுகூலர்க்குத் திருக் கண்களைப் போன்று திவ்விய ஆயுதங்களும் அழகுக்கு உடலாகத் தோற்றுகிறபடி?

திருக் கண்களோடே திவ்விய ஆயுதங்களையும் திவ்விய ஆயுதங்களோடே திருக் கண்களையும் சேர்த்து அனுபவிப்பர்கள்.
தாமரை சூரிய சந்திரன் பார்த்து -சேர்ந்தே அருளிச் செய்வார் -நாடு பிடிக்க பார்க்க ஆழ்வார்கள் தடை -என்றுமாம் –
ஆயுதங்களோடே திருக் கண்களைக் கூட்டுகிறது, தோற்பித்தபடிக்கு;
‘உனக்குத் தோற்றோம்’ என்னப் பண்ணுமன்றோ? கண்களோடு திவ்விய ஆயுதங்களைக் கூட்டுகிறது அழகுக்கு.
ஜிதந்தே புண்டரீகாஷா –
செய்ய கண்ணா செஞ்சுடர் ஆழி-திருக் கண்களை சொல்லியும் ஆழ்வார்களை சொல்லுவதும் உண்டே

இவ் விடத்தே நிலாத்துக் குறிப் பகவர் வார்த்தையை அருளிச் செய்வர் சீயர். –
ஸ்ரீ வைகுண்ட நாதனுக்கு இரண்டு தோள்களா நான்கு தோள்களா —
கைக்கு ஆழ்வார்கள் ஆபரணமாய் இருக்குமாறு போலே ஆயிற்று, முகத்துக்கு திருக் கண்கள் ஆபரணமாய் இருக்கும்படியும்.

‘திருக் கண்டேன் பொன் மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணி நிறமும் கண்டேன்-செருக்கிளரும்
பொன் ஆழி கண்டேன் புரி சங்கம் கைக் கண்டேன்,
என் ஆழி வண்ணன் பால் இன்று’-என்று
வடிவழகைப் போன்று திவ்விய ஆயுதங்களும் ஆபரணமாய் அழகியனவாயன்றோ இருப்பன?
ஆழ்வார்கள் தாம் அவனைக் கை செய்திருக்கையாலே ஆபரண கோடியிலே இருப்பார்கள்.
கை செய்தல் –- அலங்கரித்தல்.-சகாயம் செய்தல் -யுத்தம் செய்தல்

என் நெஞ்சினூடே-
தங்கள் நெஞ்சல் இல்லாமையாலே இது கூடாது என்று இருப்பார்கள் அன்றோ?
ஆதலின், ‘என் நெஞ்சினூடே’ என்கிறாள்.

என் நெஞ்சினூடே புள்ளைக் கடாகின்ற ஆற்றைக் காணீர்-
‘இவர்க்கு மயர்வு அற மதிநலம் அருளி
‘நெஞ்சமே நீள் நகர்’ திருவாய்மொழி-3. 8:2. -என்னும்படி யன்றோ திருத்திற்று?’
ஒரு திரிபாத் விபூதியிலும் இடம் உடைத்தாயிருக்கை. -விசுவஸ்ய ஆய தனம் மஹத் –
திருவடி திருத் தோளில் ஏறி அங்கு உள்ளார்க்கு உஜ்ஜீவனமாகச் சாரிகை வந்து காட்டுமாறு போலே,
இவர் நெஞ்சினுள்ளே தடை இல்லாமல் அழகு செண்டு -விளையாட்டு வையாளி -ஏறுகிறபடி.
நெஞ்சினூடே-‘அகவாயில் உள்ளது கண்களுக்குத் தெரியாதோ?’ என்று இருக்கிறார்கள் ஆயிற்று இவர்கள்.

‘குற்றம் அற்றவனான அந்தப் பரமாத்துமாவானவன் உன்னுடைய உடலில் நிறைந்து நிற்கின்றான்,’ என்னுமாறு போலே.
நிர்குண: பரமாத்மாஸென தேஹம் தே வ்யாப்ய திஷ்ட்டதி’-என்பது, பாரதம், ஆரண்
‘நெஞ்சில் இல்லையாகில் நானும் இல்லை என்று நினைத்து இருக்கலாயிற்றுக் காண்’ என்று இருக்கிறாள் இவள்.

ஒரு வாசத் தடத்தில் அன்னங்கள் சக்கர வாகங்களை போன்ற ஆழ்வார்களும்,
காடு பட அலர்ந்த தாமரை போலே இருக்கிற திவ்விய அவயவங்களும்,
அத் தடாகத்தில் நீரும் இலையும் போலே இருக்கிற திருமேனியுமாய்,
அதனைக் கினிய -கபளீகரிக்க.-ஒரு மேரு தாங்கினாற்போலே இருக்கிற பெரிய திருவடியோடே கூட
இவர் திருவுள்ளத்தே உலாவுகிறபடி.
இப்படியே அன்றோ அநுகூலரோடு பரிமாறும்படி?

‘மாயக் கூத்தா! வாமனா! வினையேன் கண்ணா! கண்கைகால்
தூய செய்ய மலர்களாச் சோதிச் செவ்வாய் முகிழதாகச்
சாயல் சாமத் திருமேனித் தண்பா சடையா தாமரைநீள்
வாசத் தடம் போல் வருவானே ! ஒருநாள் காண வாராயே.’என்பது, திருவாய். 8. 5;1.

கரு முகில் தாமரைக் காடு பூத்து நீடு
இரு சுடர் இரு புறத் தேந்தி ஏடலர்த்
திரு வொடும் பொலிய வொர் செம் பொற் குன்றின் மேல்
வருவ போற் கழலுன் மேல் வந்து தோன்றினான்.-என்பது, கம்பராமா. திருவவதாரப். 13.

நஞ்சீயர் கோயிலுக்கு எழுந்தருளா நிற்க, வழியிலே திருக் குருகைப் பிரான் பிள்ளானைக் கண்டு
‘‘ஈஸ்வரனுக்கு ஸ்வரூப வியாப்தியேயோ, விக்கிரஹ வியாப்தியும் உண்டோ?’ என்று கேட்க,
பாஷ்யகாரர் தோற்ற அருளிச் செய்து கொண்டு போந்தது, ஸ்வரூப வியாப்தியாய் இருக்கும்;
ஆகிலும், எம்பார் ஒரு நாள் ‘உபாசகர்கட்கு அநுக்கிரஹம் செய்தற்பொருட்டு அடியார்களுடைய நெஞ்சிலே
விக்கிரஹத்தோட வியாபித்திருக்கும்’ என்று அருளிச் செய்யக் கேட்டேன்’ என்று பணித்தான்;’
‘மனமாகிய குகையில் வசிப்பவர்’ என்றும்,
‘மனத்தில் இருப்பவரும் புராண புருஷரும்’ என்றும்
,குஹாயம்’ தைத். ஆரண். கஹ்வரேஷ்டம் புராணம்’, கடோபநிஷத்.

‘அரவத்து அமளியினோடும் அழகிய பாற்கடலோடும் அரவிந்தப் பாவையும் தானும் அகம்படி
வந்து புகுந்து’ பெரியாழ்வார் திருமொழி, 5. 2:10.-என்றும்,
‘எவர்களுடைய மனத்தில் கரு நெய்தல் போன்ற நிறத்தை யுடைய பகவான் நன்கு எழுந்தருளி இருக்கிறாரோ’ என்றும்,
‘ஏஷாம் இந்தீவர ஸ்யாம: ஹ்ருதயே ஸூப்ரதிஷ்டித;’என்பது, ஸ்ரீராமா.-
‘என் நெஞ்சினூடே புள்ளைக் கடாகின்ற’ என்றும் வருவனவற்றைக் காண்க.

தியானத்திற்குப் பற்றுக்கோடு தெரிவிக்கும் இடங்களிலும் ‘தன்னால் விரும்பப்படுகிறவனுக்கு
இந்தப் பரமாத்துமா தன் ஸ்வரூபத்தைக் காட்டுகிறான்’ என்கிறபடியே
தஸ்ய ஏஷ ஆத்மா விவ்ருணுதே தநூம் ஸ்வாம்’-என்பது, முண்டகோபிநிடதம்.. 3. 2:3.
அவ்வடிவே ஆயிற்றுத் தியானிக்கத் தக்கதாகச் சொல்லுகிறது;
பின்பு ‘இந்த ஆலிங்கமானது எல்லாப் பொருளுக்கும் சமானமாகக் கடவது,’ என்று கொடுப்பது அவ்வடிவே யாயிற்று
ஏஷ ஸர்வஸ்வ பூதஸ்து பரிஷ்வங்கோ ஹநூமத:’-என்பது, ஸ்ரீராமா.யுத். 1:13.

புறம்புள்ளார் சொன்னபடி சொல்லுகிறார்கள்; நம் ஆழ்வார்கள் போன வழி இதற்கு மேற்பட இல்லை:
‘இதற்கும் உள்ளே ஒன்று உண்டு’ என்று சொல்லுகிறவர்கள்,
ஸ்வரூபத்தின் உண்மை சொல்லுகிறார்களித்தனை;
விக்கிரஹம் இல்லை என்று அன்று.

புள்ளைக் கடா நின்ற-
‘அகவாயில் நின்று சுழிக்கு மத்தனையோ?’ என்று அவன் விரைந்து வடிம்பு இட்டுத் தாக்க
‘ஓம் காண்! நீ அறிந்தாயோ?’ என்று தூண்டி மீளா நிற்கும்;
‘அறிவுள்ளவனுடைய’ என்கிறபடியே, பக்ஷபாதத்தோடே சேர்க்கையிலே அன்றோ அவனுக்கும் பணி? –
ஆழ்வார் கட்சியில் சேர்ந்து -ஸ்வ தந்த்ரன் கட்சியில் இல்லை என்றபடி

கடாகின்ற –
நடந்து போனதாய் மறக்கிறீர்கள் அன்று; இனி வருவதனை உபதேசிக்கிறது அன்று;
இப்பொழுது நடப்பதற்கு உபதேசம் வேணுமோ? -பூத பவ்ய இல்லை வர்த்தமானம் –

காணீர் –
காண்கின்றிலீர். இப்பொழுது நடக்கிறதும் காணாமலே ஒழிகிறது தடுக்கின்ற நிர்பந்தத்தாலே அன்றோ?
உங்களுக்குக் குர கோஷம் கேட்கிறது இல்லையோ? பிரசித்தமான பொருளை உபதேசிக்க வேண்டுவதே.

காணீர்-
உங்களுக்குக் கண்களும் செவிகளும் இன்றிக்கே இருந்தோ தடுக்கிறது?
என்னைப் போலே உட் கண்ணாலே காணீர்கோள்!

‘நாங்கள் கண்டிலோம்; கண்ட நீ சொல்லிக் காணாய்!’ என்றார்கள்; என்ன, சொல்லுகிறாள் மேல்:

என் சொல்லிச் சொல்லுகேன் –
எனக்குச் சொல்லலாவது இல்லை! என்ன பாசுரமிட்டு எதனைச் சொல்லுவது?
உங்கள் கண்களுக்கு விஷயம் ஆகாதவாறு போலே என் வாக்கிற்கும் விஷயம் ஆகிறது இல்லை.
இவர்க்கு நெஞ்சு நிறைந்தது வாய் கொள்ளுகிறது இல்லை காணும்!

என் சொல்லிச் சொல்லுகேன் –
நான் வலிமை குன்றியவளாக இருப்பதனாலே சொல்ல மாட்டேன்.
விஷயம் இவ்வளவு என்று சொல்ல முடியாமையாலே சொல்லி முடிக்கப் போகாது;
எண்ணிப் பார்த்தற்கு உங்களுக்குப் பரிகரம் இல்லாமையாலே சொல்லத் தான் வேண்டா.

அன்னைமீர்காள்-
அறிந்த விஷயங்கொண்டு ஒருவருக்கு ஒருவர் அறிவித்துக் கொள்ளல் செய்யலாம் அன்றோ
எனக்கு ஒத்தவர்கள் ஆனிர்கோளாகில்?

என் சொல்லிச் சொல்லுகேன் அன்னைமீர்காள் –
எனக்கு ஓடுகிற வியசனத்துக்குப் பாசுரம் இல்லை;
நிலையை அறியும் ஞானம் இன்றிக்கே பழமை கொண்டாடுகின்றீர்கோள் இத்தனை யன்றோ?
விலக்குவதற்கு என்னைப் பின்பற்றி வருகின்றவர்களாமத்தனையோ வேண்டுவது?

‘எங்களுக்குக் காணவும் கேட்கவும் கண்ணும் செவியும் இல்லையாகில், நீதான் செய்யப் பார்த்தது என்?’ என்ன,

‘ஹிதம் சொல்லி மீட்க நினைப்பர் இல்லாத ஊரிலே போய்ப் புகுமித்தனை அன்றோ?’ என்கிறாள் –
பிரியம் சொல்லுவார் தேசம் புகப் போகிறேன் –
‘முத்தன் ஜனங்களின் மத்தியில் உள்ள இந்தச் சரீரத்தை நினைப்பது இல்லை,’ என்கிறபடியே,
நோபஜனம் ஸ்மரந் இதம் சரீரம்’-சாந்தோக்யம். 8. 12:3. பிரிந்தவர்கள் நினைக்க ஒட்டாத தேசம் அன்றோ?

வெள்ளம் சுகமவன்-
இன்ப வெள்ளத்தை யுடையவன். என்றது,
‘பிரிந்திருக்கும் நிலையிலும் கலந்திருக்கும் காலத்தில் உண்டாகிற பேரின்பம் மாறாதவன்’ என்றபடி.
‘என்றது, என் சொல்லியவாறோ?’ எனின்,
‘பிரிவிலும் அரையாறு படாதபடி காணும் கலவியில்
அவன் தேக்கின பேரின்பம் இருந்தபடி’ என்பதனைச் சொல்லியபடி.
‘வெள்ளை’ என்பது பாடமான போது, மறுவற்ற இன்பம் என்று பொருள் கொள்க.

அவன் வீற்றிருந்த –
‘இட்ட கால் இட்ட கையளாய் இருக்கிற இருப்புக்கு எதிர்த் தட்டாயிருக்கிற இருப்பு அன்றோ அது?’ என்றது,
இத் தலையைத் துடிக்க விட்டுத் தன் ஐஸ்வரியம் தோற்ற மேலான சுகத்தோடு இருக்கிறபடியைத் தெரிவித்தபடி.
அன்றிக்கே,
இத் தலையைத் தோற்பித்த தன் வெற்றி எல்லாம் அவ் விருப்பிலே தோற்றும்படி இருக்கிறபடி என்னுதல்.

அவன் மெய் மறந்து அப்படி இருந்தால் நாமும் மெய் மறந்திருக்கவோ?-மெய் -வை லக்ஷண்யம் –
நிறைவாளனாய் அவன் செருக்காலே இருந்தால், குறைவாளராய் நோவுபடுகிற நாமும் இருக்கவோ?
அவன் முறை தப்ப நின்றால் நாமும் முறை தப்புமித்தனை அன்றோ?

அவன் வந்து ரஷித்து இருக்க வேண்டும் -தத் தஸ்ய பவேத் -என்று இருப்பது நம் முறை –

பிரிந்தால் முறை பார்த்திருக்கலாம்; விஷயத்துடனே கலந்தோமாகில் அன்றோ நாம் ஆறி இருக்கலாவது?
முறையை அழித்தாகிலும் மடலை எடுத்துக் கொண்டு போமித்தனை அன்றோ?
‘நமக்கே நலம் ஆதலின்’ என்னக் கடவதன்றோ?-பெரிய திருமொழி. 9. 3 : 9.
திருப்புல்லாணி -பாசுரம் அடைய போவது அவனாகில் வழி அல்ல வழியிலும் அடைவோமே –

வேத ஒலியும் –
அவன் நெஞ்சு ஒழிந்து பழம் புணர்ப்புக் கேளா நின்றான் காணும். என்றது,
பண்டு தான் வென்ற வெற்றி மாலைகள் கேட்கையைத் தெரிவித்தபடி.
அதாவது, ‘புண்டரீகாக்ஷனே! உனக்கு வெற்றி’ என்கிற வெற்றி மாலைகளைத் தெரிவித்தபடி.

விழா ஒலியும் –
இவளைத் தோற்பித்ததற்கு நெய்யாடல் போற்றுகிறபடி.

அறா-
தீர்த்தம் கொடுத்த பிற்றை நாளே திருமுளைச் சாத்தா நிற்குமத்தனை.
சமந்தகமணி கைப்பட்ட பின்பு அக்குரூரன் அடுத்து அடுத்து அஸ்வமேதம் செய்தாற் போலே,
அவர்க்கும் அடுத்து அடுத்துத் திருவிழாவாகச் சொல்லுகிறதித்தனை; -ஸ்த்ரீ ரத்னம் -பெண்மணி அன்றோ இவள்?
இவள் இருக்கிற இடம் அன்றோ மங்கள ஒலிகள் மாறிக் கிடக்கிறது?

பிள்ளைக் குழா விளையாட்டு ஒலியும் அறா-
பருவம் நிரம்பி இருக்கச் செய்தே விலகுகிறவர்கள் இருக்கிற ஊரை விட்டு, பருவம் நிரம்புவதற்கு முன்னே
பகவானுடைய அனுபவமே யாத்திரையாகச் செல்லுவார் இருக்கிற ஊரில் போய்ப் புகுமித்தனை என்கிறாள்.
அவ்வூரில் பருவம் நிரம்பாத பிள்ளைகளும் அகப்பட மகர நெடுங்குழைக் காதனுடைய வடிவழகிலே தோற்று, வாய் வெருவா நிற்பர்கள்.

தம்பி வார்த்தை கேட்க்கும் கோஷ்ட்டியில் புகுந்து ஸ்ரீ விபீஷண ஆழ்வான் தம்பி வார்த்தை கேட்க்காத தேசம் விலகினால் போலே
‘விளையாடும் இளம் பிள்ளைகளும் வீடுகளின் வாசல்களில் கூட்டங்கூடி ஒருவர்க்கு ஒருவர்
இராம தோத்திர விஷயமான கதைகளையே செய்தார்கள்’ என்கிறபடியே.
‘பாலா அபி க்ரீடமாநா க்ருஹ த்வாரேஷூ ஸங்கஸ:
ராமாபிஷடவ ஸம்யுக்தா: ச க்ருரேவ மித: கதா:-என்பது, ஸ்ரீராமா. அயோத். 6:16.

‘ராமோ ராமோ ராம இதி-சோறு சோறு சோறு என்பாரைப் போலே.
ப்ரஜாநாம பவந் கதா:- -ஜனி தர்ம -பிறந்தவர்களுக்கு எல்லாம் பாசுரம் இதுவே.
ராம பூதம் ஜகத் அபூத்-நாடு அடங்க இராமன் ஒருவன் ஆனபடி.

‘நித்திய விபூதியில் பரிமாறக் கடவது இங்கே பரிமாறுகைக்குக் காரணம் என்?’ என்னில்,
ராமே ராஜ்யம் ப்ரஸாஸதி-நாடு அடங்கலும் தந்தாமுடைய கர்மங்களின் பலன்களை
அனுபவிக்கப் பெற்றார்கள் இல்லை; இராம பாக்யமே அனுபவித்து விட்டது.’

‘ராமோ ராமோ ராம இதி ப்ரஜாநாம் அபவந் கதா:
ராமபூதம் ஜகத்அபூத் ராமே ராஜ்யம் ப்ரஸாஸதி’-என்பது, உத்தர ராமாயணம்.

‘நசாக்நிஜம் பயம் கிஞ்சித்-நெருப்பும் சோறு வேக வேண்டிய உஷ்ணத்துக்கு மேற்பட உடைத்தாவது இல்லை.

‘நசாக்நிஜம் பயம் கிஞ்சித் நாப்ஸூ மஜ்ஜந்தி ஜந்தவ:-என்பது, சங்க்ஷேப ராமாயணம், 1:92.

நாப்ஸூ மஜ்ஜந்தி ஜந்தவ:- கொண்டு ஆழக்கடவ தண்ணீர் தானே கொண்டு மிதக்கப் புக்கது இராம சரத்துக்கு அஞ்சி.
பண்டே கை கண்டு இருப்பது ஒன்றே தண்ணீர் தான்.
வேலை வேவ வில் வளைத்தவனை அன்றோ?

திருப்பேரெயில் சேர்வன் நானே-
வென்றார் இருந்த இடத்தே தோற்றார் சென்று விழுமத்தனை அன்றோ?

தாமரைக் கண்ணன் என் நெஞ்சுனூடே அன்றோ?
ஆகையாலே ‘உனக்கு வெற்றி’ என்று சென்று விழுமத்தனையேயாம்.

———————————————————————————————–

நானக் கருங்குழல் தோழிமீர் காள்!
அன்னையர் காள்! அயற் சேரியீர் காள்!
நான் இத் தனி நெஞ்சம் காக்க மாட்டேன்
என் வசம் அன்று இது இராப்பகல் போய்த்
தேன் மொய்த்த பூம்பொழில் தண் பணை சூழ்
தென் திருப் பேரெயில் வீற்றிருந்த
வானப் பிரான் மணி வண்ணன் கண்ணன்
செங்கனி வாயின் திறத்ததுவே.–7-3-2-

அநந்தரம் -நிரவதிகமான பரத்வ ஸுலப்யங்களை யுடையவன் பக்கலிலே சக்தமாய்ப் போன என் நெஞ்சைத்
தகைய மாட்டுகிறிலேன் -என்று தோழிமாரையும் தாய்மாரையும் அயலாரையும் குறித்துச் சொல்லுகிறாள் –

நானக் கருங்குழல் தோழிமீர் காள்! அன்னையர் காள்! அயற் சேரியீர் காள்!–பரிமள உத்தரமான கந்த த்ரவ்யத்தாலே-
நானம்–மயிர்க்கு இடும் கந்த த்ரவ்யம் -புனுகு ஆகவுமாம் –
வாசிதமாய் கறுத்த குழலை யுடையவரான தோழிமீர்காள் –
அவர்களோடு என்னோடு வாசியற நியந்திரிகளான அன்னைமீர்காள் –
செய்தி வினவ வந்த அயல் சேரியீர்காள்
நான் இத் தனி நெஞ்சம் காக்க மாட்டேன்–அதி பிரவணையான நான் என்னிலும் அதிசயித ப்ராவண்யத்தை யுடைத்தாய்
ஸ்வ தந்திரமான இந்த நெஞ்சை என்னை விட்டுப் போகாமல் தகைய மாட்டேன்-இ சுட்டு தனி நெஞ்சம்
வேறே நெஞ்சு இருந்தால் -நியமிக்கலாம்
என் வசம் அன்று இது இராப்பகல் போய்த்–எனக்கு விதேயம் அல்ல -இது இரவோடு புகழோடு வாசியற
தேன் மொய்த்த பூம்பொழில் தண் பணை சூழ் தென் திருப் பேரெயில் வீற்றிருந்த–வண்டுகள் மொய்த்த பூம் பொழிலை யுடைத்தாய் –
குளிர்ந்த நீர் நிலங்கள் சூழ்ந்து இருக்கிற கட்டளைப்பட்ட திருப் பேரெயிலிலே தண் பெருமை தோன்றும் படி இருக்கிற
வானப் பிரான் மணி வண்ணன் கண்ணன் செங்கனி வாயின் திறத்ததுவே.– பரம பாத நிலயனான மேன்மை யுடையனாய்
உஜ்ஜவலமான மாணிக்கம் போலே இருக்கிற வடிவை யுடையனாய் ஆஸ்ரித பவ்யனான
ஸ்ரீ கிருஷ்ணனுடைய சிவந்த கனி போலே இருக்கிற அதர சோபையிலே சக்தமாயிற்று

மாலே மணி வண்ணா ஆலின் இலையாய் -மணியை வானவர் கண்ணன் -தன்னதோர் அணியை –
வடிவின் அழகு -ஸ்வரூபத்தின் மேன்மை ஆஸ்ரித பவ்யன் -அதர சோபை
பரத்வ ஸுந்தர்ய ஸுலப்யம் மூன்றும்
பிராட்டிக்கு இற் பிறப்பு இரும் பொறை கற்பு மூன்றும் களி நடம் புரியும் –

நறுநாற்றத்தையுடைய கரிய கூந்தலையுடைய தோழிமீர்காள்! தாய்மார்காள்! அருகில் உள்ள சேரியில் உள்ளவர்காள்!
இந்தத் தனித்த நெஞ்சத்தினைக் காக்கமாட்டேன்; என் வசத்தில் இருப்பது அன்று; இந்நெஞ்சமானது, இரவும் பகலும் சென்று.
வண்டுகள் மொய்த்திருக்கின்ற பூக்கள் நிறைந்த சோலைகளும் குளிர்ந்த வயல்கள் சூழ்ந்திருக்கின்ற தெற்குத்திசையிலேயுள்ள
திருப்பேரெயில்என்ற திவ்வியதேசத்தில் எழுந்திருளியிருக்கின்ற வானப்பிரானும் மணிவண்ணனும் கண்ணனுமான
எம்பெருமானது சிவந்த கொவ்வைக்கனி போன்ற திருவதரத்தினிடத்தது’ என்கிறாள்.
நானம் – கத்தூரியுமாம். சேரி – தெரு; அல்லது, ஊர். வானப்பிரான் -நித்தியசூரிகளுக்குத் தலைவன்;
வானம் – இடவாகு பெயர். வாயின் திறத்து-வாயினிடத்தது.

தாய்மார் முகம் பார்த்துச் சொன்னாளாய் அன்றோ மேற்பாசுரத்தில் நின்றது?
‘இவள் இவ்வளவிலே மீளுமவள் அன்றிக்கே இருந்தாள்’ என்று தாய்மாரோடு தோழிமாரோடு அயற்சேரியுள்ளாரோடு வாசி அற
வந்து திரண்டு ஹிதம் சொல்லப் புக்கார்கள். -அந்தர்யாமித்வத்தில் ஆழ்ந்த அயல் சேரி –
‘உங்களுடைய நல் வார்த்தையைக் கேளாதபடி நிரவதிகமான பரத்துவ ஸௌலப்பியங்களை யுடையவன் பக்கலிலே
சென்ற சேர்ந்த என் நெஞ்சினைத் தகைய மாட்டுகின்றிலேன்; என் நெஞ்சினைக் கடல் கொண்டது காணுங்கோள்!’ என்கிறாள்.

நானம் கருங்குழல் தோழிமீர்காள் –
அவர்களுக்கு ஒரு பழி சொல்லுமாறு போலே சொல்லுகிறாள்,
அவர்கள் தலையான நறு நாற்றத்தை யுடையவர்கள் வந்து நிற்கையாலே, நானம் – நறு நாற்றம்.
மயிர்பட மாந்தும்படி அன்றோ இவள்படி? -இவர்கள் மயிர் அவன் மயிருக்கு ஸ்மாரகமாய் -கவரி மான் போலே
உங்கள் சந்நிதி இல்லையாகில் நான் இங்கே இரேனோ?
மை வண்ண நறுங்குஞ்சியினை நினைப்பு ஊட்டுகிறதாய் இரா நின்றாதே இவர்கள் குழல்.
நானம் கருங்குழல்-மை வண்ணம் அங்கு -இவளுக்கு வாசனை சொல்லி வண்ணம் -அவனுக்கு வண்ணமும் வாசனையும்
‘நம் இருவர்க்கும் இன்பமும் துன்பமும் ஒன்றே’ என்று
ஏகம் துக்கம் ஸூகஞ்ச நௌ’–என்பது, ஸ்ரீராமா. கிஷ். 5:18.
இவளுடைய இன்ப துன்பங்களையே தங்களுக்கும் இன்ப துன்பங்களாக இருக்கை அன்றோ தோழிமாராவது?

இவள் மயிர்முடி பேணாதே நறுநாற்றங்காணில் முடியும்படியாக இருக்க,
இவர்கள் கூந்தலைப் பேணி நறு நாற்றங்கொண்டு காரியங்கொள்ளப் போருமோ?’ என்னில்,
கலவியில் இவளோடு அவன் நெருங்க நெருங்கச் சாத்திக் கழித்தபடியே எல்லாவற்றையும் கொடுப்பது இவர்களுக்கே;
அப்போது அவன் செய்த மிகுந்த திருவருளாலே, அது சருகு ஆனாலும் அவர்கள் மாறாதே வைத்துக் கொண்டு இருப்பார்களே!
அது இவளுக்கு நினைப்பு ஊட்டுவதாய் நலிகிறபடி.
பெருமாள் சர்வ ஸ்வதானம் -மாலை -ஆச்சார்யர் சர்வ ஸ்வதானம் அர்த்த விசேஷங்கள் –
வாசல் காப்பார் -பெருமாள் -தத்ர காஷாயணோ வ்ருத்தர்கள் அந்தப்புரம் -வெள்ளை வேஷ்ட்டி காவி -ஸூ அலங்கருதான் –
பெருமாள் ஆலிங்கனம் -மங்களா சாசனம் பண்ணுவார்கள் -சந்தனம் புஷபம் ஒட்டிக்குமே –
மலரிட்டு யாம் முடியோம் -அவன் சூட்ட சூடுவோம்

சத்ருச சம்பந்த பதார்த்தங்கள் பார்த்து -மண்ணை துழாவி -போலே இந்த இரண்டும்
சத்ருசம் -முதலில்
சம்பந்தம் -அடுத்து
மூன்றாவதாக -இவள் தளராமல் இருக்க ஒப்பித்து இருப்பார்கள்

அன்றிக்கே,
‘இவர்கள் தாம் நறுநாற்றங்கொண்டு காரியங்கொள்ளவும் வல்லர்கள்’ என்னுதல். என்றது,
‘தாங்கள் தளரந்து காட்டில் இவள் மிகவும் தளரும் என்று ஒப்பித்துக் கொண்டு இருப்பர்கள்’ என்றபடி.
தங்கள் தங்களுடைய பொறாமையும்–பொருக்காமையும் – பாரார்களாயிற்று, இவளைப் பிழைப்பிக்கைக்காக.

அகாரத்தின் பொருளான அவனும் ஜீவித்து மகாரத்தின் பொருளான இவனும் ஜீவித்துப் பல காலம் போகச் செய்தேயும்,
உஜ்ஜீவிக்கப் பெறாதே நடுவே கிடந்து போயிற்றே.
இனி, சேர்க்கின்றவர்களுடைய காரியம் அன்றோ உஜ்ஜீவிப்பிக்கை? அப்படியே இவளை இசைவித்து உஜ்ஜீவிப்பக்க வேணுமே.
ஆய-சேஷத்வம் / உ காரம் -அநந்யார்ஹத்வம் /நடுவில் உள்ளவை
ஆச்சார்யர்கள் -ஆடும் மாட்டை ஆடிக் கறக்க வேண்டுமே -எளிமைப் படுத்தி -விஷயம் குறைக்காமல் அருளிச் செய்வார்கள் என்றவாறு –
‘சேஷிக்கு அதிசயம் வேணும்’ என்றிருப்பர், தங்கள் தங்களுடைய துக்கத்தைப் பாரார்களே அன்றோ?

பெருமாளிலும் துக்கம் விஞ்சி இருக்கச் செய்தே பெருமாளுடைய இரட்சணத்துக்காக இளைய பெருமாள்
தம்மைப் பேணிக் கொண்டு தரித்து இருக்குமாறு போலே. இளைய பெருமாள் தாம் பரம் போகி அன்றோ?
‘ஸௌமித்ரே பஸ்ய பம்பாயா:- அங்குத்தை இனிமை நெஞ்சிலே படச் செய்தே