பகவத் விஷயம் காலஷேபம் -96- திருவாய்மொழி – -4-6-1….4-6-5–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்–

மேல் திருவாய்மொழி ‘வீற்றிருந்து ஏழுல’ காயிருக்க, அதனை அடுத்த இத்திருவாய்மொழி,
‘தீர்ப்பாரையாம் இனி’யாய் இருப்பதே! எம்பார்,
மேல் திருவாய்மொழியையும் இத்திருவாய்மொழியையும் அருளிச் செய்து, ‘மோருள்ளதனையும் சோறேயோ?
‘மேலெல்லாம் கலவிக்கும் பிரிவுக்கும் ஒருபடி சங்கதி சொல்லிக் கொண்டு போந்தோம்;
இதிலே வந்தவாறே மேடும் பள்ளமுமாயிருந்தது; இது என்னாலே சொல்லலாயிருந்ததோ இதற்கு அசங்கதி ரேவ சங்கதி?’
மேல் திருவாய்மொழியில் அப்படிக் கரை கடந்ததான பிரீதியோடே சென்றது;
இத்திருவாய்மொழியில் இப்படி மயக்கத்தோடே தலைக்கட்டிற்று;
இதற்கு இருந்து அடைவு சொல்லுவேனோ? இதற்கு அசங்கதி ரேவ சங்கதி,’ என்று அருளிச்செய்வாராம்.

‘ஸ்ரீ பரதாழ்வான், ‘பெருமாளுடைய மகுடாபிஷேகத்திற்கு நம்மை அழைத்து வந்தது ஆகையால்,
அவரைத் திரு முடி சூட்டி அடிமை செய்யக்கடவோம்,’ என்று பாரித்துக்கொண்டு வர,
கைகேயி, ‘ராஜந் என்று உனக்கு முடி வாங்கி வைத்தேன்,’ என்ற போது அவன் துடித்தாற்போலே,
இவரும் சரீரத்தின் தோஷத்தை நினைத்து, அஞ்சித் துடித்தாராயிற்று,– 1‘பொய்ந்நின்ற ஞானத்’திலே;
‘நான் அவர் அடியேன் அன்றோ? அவர் என் சொல்லை மறுப்பரோ? –
இப்போதே மீட்டுக்கொண்டு வந்து திருமுடி சூட்டுகிறேன்,’ என்று
திருச்சித்திரகூடத்திலே கிட்டுமளவும் பிறந்த தரிப்புப்போலே -ஆயிற்று திருவாசிரியத்தில் பிறந்த தரிப்பு;
பின்பு, பதினான்கு ஆண்டு கூடி ஆசை வளர்ந்தாற்போலேயாயிற்று. திருவந்தாதியில் ஆசை பெருகினபடி;
‘என் நெஞ்சினார் தாமே அணுக்கராய்ச் சார்ந்தொழிந்தார்’, ‘முயற்சி சுமந்து எழுந்து’ என்று
கூறலாம்படி அன்றோ ஆசை பெருகினபடி? -முந்துற்ற நெஞ்சே –
மீண்டு எழுந்தருளித் திருமுடி சூட்டிக்கொண்ட பின்னர் அவன் எண்ணம் தலைக்கட்டினாற்போலே
ஆயிற்றுத் திருவாய்மொழியில் இவரை அனுபவிப்பித்தபடி.

மேல் ‘வீற்றிருந்து ஏழுலகு’ என்ற திருவாய்மொழியில் பிறந்த கரை கடந்ததான பிரீதியானது மானச அனுபவ மாத்திரமாய்ப்
புறக்கரணங்களால் அனுபவிக்க முடியாமையாலே, எத்தனையேனும் உயர ஏறியது தகர விழுகைக்குக் காரணம் ஆமாறுபோலே
மோஹத்துக்கு உறுப்பாய்த் தலைக்கட்டிற்று.
இப்படி இருக்கிற தம் நிலையை, சர்வேசுவரனோடே கலந்து பிரிந்து நோவுபடுகிறாள் ஒரு பிராட்டி,
தன் ஆற்றாமையாலே மோஹித்துக் கிடக்க,
இவள் நிலையை நினைத்த உறவினர்களும் மோஹித்து, ‘இது வேறு தெய்வங்களாலே வந்ததோ!’ என்று வேறு தெய்வங்களின்
சம்பந்தமுடையாரைக் கொண்டு புகுந்து பரிஹாரம் செய்யப் புக, இவள் தன்மை அறிந்த தோழியானவள்,
நீங்கள் செய்வனவாக நினைப்பவை இவள் நோவிற்குப் பரிஹாரம் அல்ல; அழிவிற்கே காரணமாமித்தனை;
ஆன பின்பு, ‘பகவானுடைய நாமங்களைச் சொல்லுவதாலும் பாகவத பாத தூளியாலும் பரிஹரிக்கப் பாருங்கோள்,’ என்கிற
அவள் பாசுரத்தாலே தம் நிலையைப் -அநந்ய தைவத்வம் -பேசுகிறார்.

இவர்தாம், ‘உம்மைப் பிரிந்தால் சீதை இல்லாதவள் ஆவாள்; அப்படியே, நானும் இல்லாதவன் ஆவேன்,’ என்றும்,
‘அடியவனான என்னைத் தேவரீருக்குப் பின்னேயே சஞ்சரிக்கும்படி செய்தருள வேண்டும்,’ என்றும் சொல்லுகிறபடியே,
பிரிவிலே தரியாமைக்கு இளையபெருமாளோடு ஒப்பர்;
அவன் பொகட்ட இடத்தே கிடக்கைக்கும் குண அநுசந்தானத்தாலே பிழைத்திருக்கைக்கும் ஸ்ரீபரதாழ்வானோடு ஒப்பர்;
எத்தனையேனும் ஆற்றாமை கரை புரண்டாலும் ‘அத்தலையாலே பேறு,’ என்று இருக்கைக்குப் பிராட்டியோடு ஒப்பர்.

‘உயர்வற உயர்நலம்’ என்ற திருவாய்மொழியிலும் பரத்துவமே அன்றோ பேசிற்று?
‘பத்துடை அடியவர்’ என்ற திருவாய்மொழியில் அவதார சௌலப்யத்தை அநுசந்தித்து மோஹித்தாரே யாயினும்,
‘அஞ்சிறைய மடநாராய்’ என்ற திருவாய்மொழியில் தூது விட வல்லராம்படி உணர்த்தியுடையவரானார்;
‘வீற்றிருந்தேழுலகு’ என்ற திருவாய்மொழியில் பரத்துவத்தைக் கூறிய பின்னர், இத்திருவாய்மொழியில் தாமும் மோஹித்துத்
தம் நிலையை நினைந்த உறவினர்களும் மோஹித்து வேறு தெய்வங்களின் சம்பந்தமுடையார் புகுந்து கலக்கினாலும்
உணர்த்தி அறும்படி ஆயினார்.
பகவானைப் பெறுகின்ற காலத்தில் உணர்த்தியும், பெறாத காலத்தில் மோஹமுமாய்ச் சொல்லும் இது,
இவ்வாழ்வார் ஒருவர்க்குமே உள்ளதொன்றாயிற்று.

மற்றும், ஞாநாதிகராய்ப் பகவத் விஷயத்தில் கைவைத்தார்களாயிருக்குமவர்களிலும் ஸ்ரீவசிஷ்ட பகவான் புத்திரனுடைய
பிரிவால் வந்தவாறே கடலிலே புகுவது, மலையிலே ஏறி விழுவது ஆனான்;
ஸ்ரீ வேத வியாச பகவானும் சாயா சுகனைக் கொண்டு உய்ந்தான்;
ஆதலால், பகவத் விஷயத்தில் லாபாலாபமே பேறு இழவாய் இருக்கும் இது, இவ்வாழ்வார் ஒருவர்க்குமே உள்ளதாகும்.

இப்படி இவள் மோஹித்துக் கிடக்க, இவளைக் கண்ட உறவின் முறையார் எல்லாரும் பிரமாஸ்த்திரத்தாலே
கட்டுப்பட்டவர்களைப் போன்று மோஹித்து, செய்யத் தகும் காரியங்கள் இவை, செய்யத் தகாத காரியங்கள் இவை என
அறுதியிடுவதற்கு ஆற்றல் இல்லாதவராய்க் கலங்கிக் கிடக்க,
அங்குப்போலே உணர்ந்திருந்து நோக்குகைக்கு ஸ்ரீஜாம்பவான், மஹாராஜர், திருவடி போல்வாரும் இல்லை யாயிற்று.
‘அந்த நிலையோடு கூடிய ஸ்ரீ பரதாழ்வான் பக்கத்தில் இருந்த ஸ்ரீ சத்ருக்நாழ்வான்’ என்கிறபடியே,
ஸ்ரீ சத்ருக்நாழ்வான் அருகில் இருந்தார் என்னும் இதுவும் இல்லையாயிற்று.
‘பெருமாள் காடேற எழுந்தருளினார்; சக்கரவர்த்தி துஞ்சினான்;
இனி நீயே அன்றோ இராச்சியத்துக்குக் கடவாய்?
உன்னைக் கொண்டன்றோ நாங்கள் வாழ இருக்கிறது?’ என்கிறார்கள் அல்லர்;
‘உன் முகத்தில் உறாவுதல் காணக்காண உன்னை இழக்கமாட்டார்;
அவர் வரவு அணித்து என்றன்றோ நாங்கள் வாழ்கிறது?’ என்றார்களே அன்றோ?
அப்படியே, இவளைக் கொண்டே வாழ இருக்கிறார்கள். ஆகையாலே,
எல்லாம் ஒக்க இவள் நிலையைக் கண்டு கலங்கிக் கிடந்தார்கள்.

இங்ஙனங்கிடக்க, இவ்வளவிலே நாட்டிலே வேரறிவார் விரகறிவார் மந்திரமறிவார் மருந்தறிவார் அடங்கலும் வந்து புகுர,
அவ்வளவிலே, வேறு தெய்வங்களின் சம்பந்தமுடையார்,
‘ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய வீட்டினைத் தூஷிக்க நமக்கு நல்ல அளவு’ என்று வந்து புகுர,
இவளுடைய உறவு முறையிலுள்ளார் கலங்கிக் கிடக்கையாலே, ‘இவளுடைய நோய் இன்னது’ என்றும், ‘
பரிஹாரம் இன்னது’ என்றும் அறியாதே,
அவர்களிலே ஒருத்தி ஒரு கட்டுவிச்சியை ‘இவள் நோய் யாது? நோய்க்கு நிதானம் யாது?’ என்று கேட்டு. அவள் சொற்படியே,
‘ஆராதனத்துக்குரிய பொருள்கள், நிந்திக்கப்படுகின்ற கள் முதலானவைகள்; தெய்வம், மிகத் தாழ்ந்த தெய்வம்; சாஸ்திரம்,
வேதங்கட்குப் புறம்பான ஆகமங்கள்; ஆசாரியர்கள், பூசாரிகள்’ என்கிறபடியே, நிந்திக்கப்படுகின்ற பொருளை
இவளைப் பாதுகாப்பதற்குப் பரிகரமாகக் கொண்டு, புன்சிறு தெய்வம் ஆவேசித்ததாகக் கொண்டு,
வேறு தெய்வ சம்பந்தமுடையாரை ஆசாரியராகக் கொண்டு, இவள் பக்கல் உண்டான அன்பின் மிகுதியாலே,
‘இவள் பிழைக்குமாகில் யாதேனும் ஒரு வழியாலேயாகிலும் நீக்கிப் பாதுகாத்தல் அமையும்,’
என்று வழியல்லா வழியிலே இழிந்தார்கள்;
அப்படிக் கலங்கப் பண்ணுமே அன்றோ அன்பு? ‘முதியவர்களும் இளையவர்களுமான பெண்கள்
காலையிலும் மாலையிலும் கூடிக்கொண்டு, கீர்த்தியையுடைய ஸ்ரீராமபிரானுடைய நன்மைக்காக எல்லாத் தேவர்களையும்
வணங்குகிறார்கள்,’ என்கிறபடியே செய்தார்களே அன்றோ திருவயோத்தியிலுள்ளார்?

இதனைக் கண்ட உயிர்த்தோழியானவள், ‘இவர்கள் செய்கிற இவை,
இவள் அகவாயில் கிடக்கிற உயிரையும் இழக்கப் பண்ணுமித்தனை;
இனி, நாம் இத்தை அறிந்தோமாகச் சொல்லில், ‘உன் காவற்சோர்வாலே வந்ததன்றோ?’ என்று சொல்லுவார்கள்;
நாம் கைவாங்கி இருந்தோமாகில், இவளை இழக்க வரும்; இனி, இதற்குப் போக்கடி என்?’ என்று விசாரித்து,
‘இவர்கள்தாமும் ‘இதுதான் யாதோ?’ என்று ஆராயாநின்றார்களேயன்றோ? அதைப்போன்று நாமும் ஆராய்வதிலே இழிந்து
இவள் தன்மையைக் கொண்டு சொன்னோமாகச் சொல்லுவோம்,’ என்று பார்த்து,
‘நீங்கள் இவளுக்கு ஓடுகிற நோவும் அறிந்திலீர்கோள்;
நிதானமும் அறிந்திலீர்கோள்; பரிஹாரமும் அறிந்திலீர்கோள்; நீங்கள் பரிஹாரமாகச் செய்கிறவை, கருமுகை மாலையைச் செவ்வி
பெறுத்த என்று நெருப்பிலே இடுவாரைப்போலே இவளை இழக்கைக்குக் காரணமாமித்தனை;
ஆன பின்னர், இவற்றை விட்டு, இக்குடியிலே பழையதாகச் செய்துபோரும் பரிஹாரத்தைச் செய்யப் பாருங்கோள்;
‘உலகேழுமுண்டான் சொன்மொழி மாலை அம்தண் அம்துழாய் கொண்டு சூட்டுமினே,-திரு விருத்தம் -20-’ என்றும்,
‘தண் அம் துழாய்த் தாராயினும் தழையாயினும் தண் கொம்பதாயினும் கீழ் வேராயினும் நின்ற
மண்ணாயினும் கொண்டு வீசுமினே,-திரு விருத்தம் -53’ என்றுமே
அன்றோ முன்பும் விதித்தது? அங்கு ‘நின்ற மண்ணாயினும்’ என்றாள்; இங்கு, ‘மாயன் தமர்அடி நீறு’ என்றாள்’
இதுவே அன்றோ அடிபடச் செய்து போந்த பரிஹாரம்?-அடி பட -முன்பே செய்த -திருவடி சம்பந்தம் -பாகவத சேஷத்வம் -என்றவாறு
ஆயிட்டு, இவள் நோய் இது; நோய்க்கு நிதானமும் இது; இதற்குப் பரிஹாரமும், பகவானுடைய திருநாமங்களைச் சொல்லுதலும்
பாகவதர்களுடைய பாததூளியைச் சேர்ப்பிக்கையும்,’ என்று சொல்லி- அவர்கள் செய்கிறவற்றை நீக்குவிக்கிறாளாய்ச் செல்லுகிறது.

‘இதுதன்னில் ஓடுகிறது என்?’ என்னில், அறிவு அற்று இருக்கும் நிலையிலும் வேறு தேவதைகளுடைய சம்பந்தமும்
அத்தேவதைகளுக்கு அடிமைப்பட்ட அடியார்களுடைய சம்பந்தமும் அவ்வப்பொருள்களினுடைய தன்மையால் பாதகமுமாய்,
பகவானுடைய திருநாமங்களைச் சொல்லுதலும் பாகவதர்களுடைய சேர்க்கையும் பொருள்களின் தன்மையால் தாரகமுமாம்படி
ஆழ்வார்க்கு வைஷ்ணவத்தின் தன்மை முறுகினபடி சொல்லுகிறது.
‘இராவணன் மாயா சிரசைக் காட்டின போது பிராட்டியும் மற்றைப் பெண்களைப் போன்று
சோகித்துக் கண்ணநீர் விழவிட்டாளாய் இருந்தது;
இதற்கு அடி என்? இது கேட்ட போதே முடிய அன்றோ தக்கது?’ என்று சீயரைக் கேட்க,
‘அவதாரத்தில் மெய்ப்பாட்டாலே ‘மெய்’ என்றே சோகித்தாள்; ஞானம் இன்றியிலே பிழைத்திருப்பதற்குக் காரணம்
அவருடைய உளதாம் தன்மையாகையாலே உளளாயிருந்தாள்;
இவ்வர்த்தம் மெய்யாகில் உளளாம் தன்மையும் இல்லையாம்,’ என்று அருளிச்செய்தார்.

——————————————–

தீர்ப்பாரை யாம் இனி எங்ஙனம் நாடுதும் அன்னைமீர்!
ஓர்ப்பால் இவ் வொண்ணுதல் உற்ற நல் நோய் இது தேறினோம்;
போர்ப்பாகு தான் செய்து அன்று ஐவரை வெல்வித்த மாயப்போர்த்
தேர்ப் பாகனார்க்கு இவள் சிந்தை துழாஅய்த் திசைக்கின்றதே.–4-6-1-

பராங்குச நாயகி -பாகிலே பிடிபட்ட பாவை -போர்பாகு -தேர்பாகு-
பாண்டவ பஷபாதி கிருஷ்ணனுக்கு ஈடுபட்டவள் -ஆராய்ந்து கண்டோம் -தீர்க்க வேண்டிய நோய் -நல்ல நோய்
பக்தியை வளர்க்கத் தானே வேண்டும் –
தீர்ப்பாரை யாம் இனி எங்ஙனம் நாடுதும் அன்னைமீர்!-இவள் பக்கல் பரிவாலே -எப்படியாவது தீர்க்க
பரிகாரம் தேடும்
யாம் -என்று தங்களையும் இவர்கள் கோஷ்டியில் சேர்த்துக் கொண்டு -நோயின் அடி அறியாமல்
ஓர்ப்பால் இவ் வொண்ணுதல் உற்ற நல் நோய் இது தேறினோம்;-நீ ஆராய்ந்தாயோ
ஒர்ப்பால் -இப்போது நிரூபித்து பார்த்தால் -முன்னால் என்றால் காவல் சோர்வாகுமே
ஸ்லாக்கியமான -இவள் ஸ்வ பாவம் கண்டு – அற்று தீர்ந்தவள் அவயவ சோபையாலும்-
நோய் ஆந்தரமாக உற்றதாலும் -பிராவண்யா ரூபமான விலஷணமான-பக்தி பெயரை மட்டும் சொல்லாமல் –
போர்ப்பாகு தான் செய்து அன்று ஐவரை வெல்வித்த மாயப்போர்த்-யுத்தத்துக்கு நிர்வாகத் திறமை உடைய
தானே செய்து -வெல்லும் படி
ஆயுதம் எடேன் –பகலை இரவாக்கியும் -போன்ற கிரித்ரிம யுத்தம்
தேர்ப் பாகனார்க்கு இவள் சிந்தை துழாஅய்த் திசைக்கின்றதே-எதிரிகள் அம்பு தன் மேல் விழும் படி முன்னே சாரதியாய் நின்றவனை
ஈடுபட்டு -அழிந்து -மயங்கி இருக்கிறாள் –
தேவதாந்திர வியாபாரம் இல்லை –
துழாய் -வினை எச்சப்பாடமும் உண்டு

‘அன்னைமீர்! இந்நோயினைத் தீர்ப்பதற்குரியவர்களை இனிமேல் யாம் எங்ஙனே தேடுவோம்? ஓர்ப்பாலே, இந்தப் பிரகாசம் பொருந்திய
நெற்றியையுடைய பெண்ணானவள் அடைந்த நல்ல நோயினது தன்மை இது என்று தெளிந்தோம்; போருக்குரிய காரியங்களையெல்லாம் தானே செய்து,
அக்காலத்தில் பஞ்சபாண்டவர்களை வெல்லும்படி செய்த மாயப்போர்த் தேர்ப்பாகனார் விஷயத்தில் இவள் மனமானது கலங்கி மயங்குகின்றது,’ என்க.

அன்னைமீர்! யாம் இனித் தீர்ப்பாரை எங்ஙனம் நாடுதும்? ஓர்ப்பால் தேறினோம், இவ்வொண்ணுதல் உற்ற இது நல்நோய்;
தேர்ப்பாகனாருக்கு இவள் சிந்தை துழாஅய்த் திசைக்கின்றது,’ எனக் கூட்டுக. ஓர்ப்பு – ஆராய்ந்து உணர்தல். பாகு – பகுதி. மாயம் – வஞ்சனை.
தேர்ப்பாகன் – பார்த்தசாரதி; கிருஷ்ணன். துழாஅய் – வினையெச்சம். இப்பத்துத் திருப்பாசுரங்களும் ‘வெறி விலக்கு’ என்னும் துறையின்பாற்படும்.
இத்திருவாய்மொழி கலி நிலைத்துறை.

தோழியானவள், இவள் நோய்க்கு நிதானத்தைச் சொல்லி, ‘நீங்கள் செய்கிறவை பரிகாரம் அல்ல,’ என்று விலக்குகிறாள்.

தீர்ப்பாரை யாம் இனி எங்ஙனம் நாடுதும் –
இதற்கு, மூன்று படியாக அருளிச்செய்வர்;
‘தீர்ப்பாரை எங்ஙனம் நாடுதும்’ என்கையாலே, ‘நீங்கள் செய்கிறவை பரிஹாரம் அல்ல’ என்று அவற்றை விலக்குவதிலே தாத்பரியம்;
‘என்னை?’ எனின், இவர்கள், நோயினை நீக்குவதற்கு வேண்டிய உபாயங்களைச் செய்து கொண்டிருக்கும் போது
‘தீர்ப்பாரை எங்கே தேடுவோம்’ என்று கூறினால், இவை பரிஹாரம் அல்ல என்பது தானே போதருமே அன்றோ?
அங்ஙன் அன்றிக்கே,
‘இவள் ஊரும் நாடும் உலகமும் தன்னைப்போலே ஆக்கிக்கொண்டே அன்றோ இருப்பது?
ஆதலால், இவளோடு ஒக்க மோஹிப்பவர்கள் கிடைப்பார்களத்தனை போக்கித் தீர்ப்பாரை எங்கே தேடுவோம்?’ என்னுதல்;
அன்றிக்கே,
‘தோழியாகிய தானும் இப்போது தீர்ப்பாரை ஆராயா நிற்கிறாள் என்று தோற்றி இருந்தது’ என்னுதல்.
அன்றிக்கே,
‘கடல்வண்ணர் இது செய்தார்; காப்பார் ஆர்?’ என்கிறபடியே, -சொல் என்றே கட்டுவிச்சி சொன்னாள் –
‘மருந்தே நோய் நீங்குதற்குத் தடையாய் இருந்தால், பரிஹாரம் உண்டோ?’ ‘நச்சு மா மருந்த’மேயன்றோ தடையாகிறது?
‘ஆனந்தமாக இருப்பவர், மருந்தாக இருப்பவர், மருத்துவராக இருப்பவர்’–நிர்வாணம் பேஷஜம் பிஷக் –மருந்தே அபத்யம்-
என்கிறவன் ஆயிற்று விரோதி ஆகிறான்’ என்பாள், ‘இனி’ என்கிறாள்,’ என்னுதல்.

யாம் –
‘அன்னைமீர்?’ என்று விளித்தவள் அவர்களையும் உளப்படுத்தி, ‘யாம்’ என்கிறாள்;
இதனால், தாய்மார்க்கும் தோழிமார்க்கும் வாசி அற்று இருத்தலைத் தெரிவித்தபடி.
அன்றிக்கே,
தாய்மார் மங்களாசாசனம் செய்து மீளா நிற்க, ‘ஸ்ரீராமபிரானுடைய நண்பர் யாவரும் மனம் கலங்கிச் சோகம்
என்னும் சுமையால் அழுத்தப்பட்டவர்களாய்ப் படுக்கையிலிருந்து அப்பொழுது எழுந்திருக்கவில்லை,’ என்று
சொல்லப்படுகின்றவாறே அதுவும் மாட்டாதே கிடந்தார்களே அன்றோ தோழன்மார்? ஆகையாலே,
தாய்மார்க்கும் தோழிமார்க்கும் வாசி அறுக்கும் விஷயம் என்று தோழிமார்க்கு ஏற்றம் சொல்லுகிறது என்னுதல்.

‘நோய் இன்னது என்று அறிந்த பின்பு’ என்பாள், ‘இனி’ என்கிறாள்;
ஆக, தோழியானவள், ‘இனிப் பரிஹாரம் உண்டோ? எங்கே தேடக்கடவோம்?’ என்றவாறே,
‘இவள் கையது நம் காரியம். இவள் அறிந்தாளாக அடுக்கும்,’ என்று உறவினர் அனைவரும் இவள்மேலே
ஒருமுகம் செய்து பார்த்தனர்; ‘இனி, நாம் முன்னே அறிந்தோமாகச் சொல்லில் நம் காவற் சோர்வாலே வந்தது ஆம்;
நாம் இப்போதே ஆராய்ந்தோம் ஆவோம்,’ என்று பார்த்து,

ஓர்ப்பால் –
‘இப்போது ஓர்ந்து பார்த்தவிடத்து’ என்கிறாள். என்றது, ‘நீங்களும் ஆராயா நின்றீர்களே அன்றோ?
உங்களைப் போன்று நானும் ஆராய்ந்து பார்த்தவிடத்தில் இங்ஙனே தோற்றிற்று,’ என்கிறாள் என்றபடி.
இவள் தான் ஒரு கூரத்தாழ்வானோடு ஓக்குங்காணும்; –
போதாயன வ்ருத்தி கிரந்தம் -இழந்தோம் -துக்கம் பட -ஸ்வாமி திரு உள்ளம் ஆகில் சொல்லவா என்றாரே —
தாய்மார் -ஸ்ரீ பாஷ்ய காரர் -கூரத்தாழ்வான் தோழி –
மனத்தினைப் புறத்தே செல்ல விடாது உட்பொருளை நோக்கச் செய்தால்,-மனசை பிரத்யக் ஆக்கினால் —
மூவகைத் தத்துவங்களையும் அலகு அலகாகக் காண வல்லள் ஆயிற்று.

இவ் ஒள் நுதல் உற்ற நல் நோய் இது தேறினோம் –
இத்தகைய சிறப்பினையுடைய நுதலை யுடையவள் இம் முகத்தை யுடையவளுக்கு
வேறு முகத்தாலே வருவது ஒரு நோய் உண்டோ?
முகாந்தரத்தாலே -சாடு -வேறு காரணத்தால் -கண்ணன் திரு முகத்தைப் பார்த்தே இவள் மயங்குவாள் –
‘கண்ணன், கோளிழை வாண் முகமாய்க் கொடியேன் உயிர் கொள்கின்றதே!’ -7-7-8-என்கிறபடியே,
அம்முகத்தால் வர வேண்டாவோ?
இவள் நோய் என்றால் அவன் அடியாக வர வேண்டாவோ? ஸ்ரீ பரதாழ்வான் நோய் என்றால், சாதுர்த்திகமா யிருக்குமோ?
ஸ்ரீ ராம விரஹத்தாலே வந்தது என்று பிரசித்தமன்றோ? இவளை இப்படிப் படுத்துவது ஒரு விஷயமாக வேண்டாவோ?
அம்பு பட்ட வாட்டத்தோடே முடிந்தாரையும், நீரிலே புக்கு முடிந்தாரையும் முகத்திலே தெரியாதோ?
அப்படியே, குணங்களால் மிக்க சர்வேசுவரனை ஆசைப்பட்டுப் பெறாமையால் உண்டான மோஹம் ஆகையாலே
முகத்தில் செவ்விக்கு ஆலத்தி வழிக்க வேண்டும்படி ஆயிற்று இருக்கிறது.

பரிஹாரம் இல்லாதபடி மறுபாடுருவக் கொண்ட நோய் ஆதலின்,
‘உற்ற நோய்’ என்கிறாள். இந்நோய்தான் பரிஹரிக்கவேண்டா;
‘கைக்கூலி கொடுத்துக்கொள்ள வேண்டும் நோய்,’ என்பாள், ‘நல்நோய்’ என்கிறாள்.
இந்நோய் கொள்ளுகைக்கே அன்றோ முமுக்ஷூக்கள் முயற்சி செய்வது? அப்படியிருக்க, இந்நோய் கொள்ளுகை அன்றிக்கே,
பரிஹாரம் சொல்ல இருப்பதே நான்!
ஞானம் பிறந்த பின்பு சரீரம் முடியும் வரையிலும் செல்லத் தேக யாத்திரைக்கு உறுப்பாய்,
பின்பு தானே அழிவில்லாத பலமான நோய் அன்றோ இது?
இதர சாதனமாக நோக்குமிடத்துச் சாதனமாய், சாதன புத்தி கழிந்த அன்று தானே பலமாக இருக்குமே அன்றோ? ‘
சிலாக்கியமான ஆபத்தை அடைந்தவனாய்’ என்கிறபடியே,அடிக்கழஞ்சு பெற்ற ஆபத்தாயிற்று;
இடர்ப்பட்ட இடத்திலே சர்வேசுவரன் அரை குலைய வந்து விழும்படியான ஆபத்தாயிற்று இது.
‘என்னிடத்திலேயே வைக்கப்பட்ட பத்தியினாலே, உண்மையாக அறிவதற்கும் பார்ப்பதற்கும் என்னுடைய சொரூபத்தை
அடைவதற்கும் தகுந்தவனாய் இருக்கின்றேன்,’ என்கிறபடியே,-
இப்பொழுது தான் பக்தி சப்தம் –ஞான தர்சன பிராப்தி மூன்றுக்கும் பக்தியே வழி –
இது உண்டானால், பின்னை அவன் கைப்பட்டானேயன்றோ? இருடிகள் கோஷ்டியில் கலக்கம் அரிதாய் இருக்குமாறு போலே;
இவர்கள் கோஷ்டியில் தெளிவு அரிதாய் ஆயிற்று இருப்பது; ஆதலின்,தேறினோம்’ என்கிறாள்.
‘இதர விஷயங்களிலே ஈடுபாடு ஆகாது’ என்கிற தெளிவே அன்றோ இருடிகளுக்கு உள்ளது?
பகவானிடத்தில் ஈடுபட்ட காரணத்தால் வந்த கலக்கமே அன்றோ இது?

ஆகில், அது சொல்லிக்காணாய்,’ என்ன, சொல்லுகிறாள் மேல் :
போர்ப் பாகு தான் செய்து –
போர்க்கு வேண்டும் வகைகளை எல்லாம் தானே செய்து; என்றது, ‘இரண்டு தலைக்கும் உறவாய்ப் பொருந்தவிடச் சென்று,
போர்க்களத்தில் வந்தவாறே, ‘மூன்று உலகங்கட்கும் நாதனும் ஜனார்த்தனனுமான அந்தக் கண்ணபிரான்
தருமபுத்திரனுக்கு மந்திரியாயும் இரட்சகனாயும் இருக்கிறான்,’ என்கிறபடியே, அவர்கள் பறித்துக்கொண்ட பரிகரமெல்லாம்
தானேயாய் நின்றானாயிற்று,’ என்றபடி. பாகு – நிர்வாஹகர் செய்யும் தொழில்.
அன்றிக்கே,
‘ஏழுலகும் தனிக்கோல் செல்ல வீற்றிருந்த தான் செய்து’ என்னுதல்; என்றது, ‘தனது ஆசன பலத்தாலே எல்லாவற்றையும்
நடத்தக் கடவ தான் செய்து கை தொடனாய்’ என்றபடி. ‘தான்’ என்று மேன்மை சொல்லிற்று.
‘இவள் மோஹிக்கிறது அவனுடைய எளிமைக் குணத்துக்கே அன்றோ?’ என்றது,
‘எளியவனுடைய எளிமைக் குணத்துக்கு அகப்படுமவள் அன்று இவள்; அம் மேன்மையுடையவன்
தாழ நின்றதிலே அகப்படுமவளே அன்றோ இவள்?’ என்றபடி.

அன்று தான் செய்து ஐவரை வெல்வித்த –
அவர்கள் நூற்றுவராய் தீயோர் அடைய அங்கே திரண்டு, இவர்கள் தாம் ஐவராய் வெறுவியராய் நின்ற அன்று,
தான்-தானே – கையும் அணியும் வகுத்து, படை பொருத்தி, சாரதியாய் நின்று,
குதிரைகள் இளைத்தவிடத்து வாருணாஸ்திரங்கள் விடலாமிடங்கள் காட்டி விடுவித்து,
அங்கே குதிரைகளை விட்டு நீரூட்டிப் பூட்டி வென்றான்,’ என்னுமிடம். அருச்சுனன் மேலேயாக வேண்டும்
செயல்கள் முழுதும் தானே செய்தானே அன்றோ? துரியோதனன் முதலியோர்களையும் இவளையும் தோற்பித்தவதிலும்
அரிது காணும் பாண்டவர்களை வெல்வித்தது; ஆதலின், ‘ஐவரை வெல்வித்த’ என்கிறது.
‘என்றது, என் சொல்லியவாறோ?’ எனின், ‘
துரியோதனன் முதலியோர்கள் செருக்குக் கொண்டவர்கள் ஆகையாலே தோற்பிக்கை அரிது; –
ஸ்த்ரீத்வ அபிமானம் பராங்குச நாயகி -இவளைப் பெண்மைக்குரிய அபிமானத்தாலே தோற்பிக்கை அரிது; அப்படியே,
‘ஏ கிருஷ்ண! வெற்றியையாவது இராச்சியத்தையாவது நாங்கள் விரும்பவில்லை; இராச்சியத்தினாலே என்ன பயன்?
போகங்களினால் என்ன பயன்? உயிர் வாழ்ந்திருப்பதனால் என்ன பயன்?’ என்ற பாண்டவர்களை வெல்வித்தலும் அரிது என்றபடி

மாயம் போர் –
ஆச்சரியமான போர்;
அன்றிக்கே, ‘
வஞ்சனையுடைய போர்’ என்னுதல். பகலை இரவாக்குவது, ‘ஆயுதம் எடேன்’ என்று ஆயுதம் எடுப்பது ஆனவை
இத்தலையிலும் உண்டு; மஹாரதர் பலர் கூடி ஒருவனான அபிமன்யுவைக் கொன்றது
தொடக்கமானது அத்தலையிலும் உண்டு; இவற்றைச் சொன்னபடி.

தேர்ப்பாகனார்க்கு –
அருச்சுனனைப் பகைவர்கள் சீறினால் அழியச்செய்வது தன்னையாம்படி, உடம்புக்கு ஈடு இடாதே
வெறுங்கையோடே -கவசம் சாத்திக் கொள்ளாமல் –
சாரதிக்கு கவசம் கூடாது யுத்த நீதியாம் -தேர்த்தட்டிலே முன்னே நின்று சாரதி வேஷத்தோடே
செய்த தொழிலைச் சொல்லுகிறது. என்றது,
‘நீண்ட கைகளை யுடைய தருமபுத்திரரே! நான் உமக்கு அடியவனாய் இருக்கிறேன்;
ஏவிக் காரியங்கொள்ளல் ஆகாதோ?’ என்றமையைத் தெரிவித்தபடி.

இவள் –
அப் பாகிலே பிடிபட்ட இவள்.
தாழ்ந்த குணங்கள் இல்லாத அந்தப் பரம்பொருள் உம்முடைய சரீரத்தில் பரந்து இருக்கிறார்,’ என்கிறபடியே,-
ஹனுமானைப் பார்த்து பீமா சேனன் சொல்வது
சாரதியாய் இருக்கும் வேஷம் இவள் வடிவிலே நிழல் எழுந்து தோற்றுகிறது இல்லையோ? –
அன்று தேர் கடாவிய கனை கழல் காண்பது என் கொலோ கண்கள் -விபவத்திலே மூழ்கி

சிந்தை துழாஅய்த் திசைக்கின்றது –
இவள் நெஞ்சு கலங்கி மோஹிப்பது தேர்ப்பாகனார்க்கு; ‘கடல் கலங்கிற்று’ என்றால், ‘மந்தரத்தாலே’ என்று இருக்க வேண்டாவோ?
(பராங்குச பயோதி ரஸீமா பூமா அன்றோ ஆழ்வார் )
சாரதியாய் இருந்து செய்த தொழில்களைத் தவிர, பரமபதத்தில் முதன்மைக்கு மோஹிப்பாளோ மயர்வு அற மதிநலம் அருளப்பெற்ற இவள்?
மயர்வுஅற மதிநலம் அருளப்பெற்றார் கலங்கும் போது அவனுடைய அடியார்கட்குப் பரதந்திரப்பட்டு இருக்கும் குணத்திலே ஆகவேண்டாவோ?
ஒருவனுக்குச் சோகத்தை நீக்கினவன் காணுங்கோள் இவளுக்குச் சோகத்தை விளைத்தான்.
ஆணுக்குச் சோகத்தைப் போக்கினான்; அபலைக்குச் சோகத்தை விளைத்தான்.

———————————————————————–

திசைக்கின்றதே இவள் நோய் இது மிக்க பெரும் தெய்வம்
இசைப்பின்றி நீர் அணங்கு ஆடும் இளம் தெய்வம் அன்று இது
திசைப்பின்றியே சங்கு சக்கரம் என்று இவள் கேட்க நீர்
இசைக்கிற்றீர் ஆகில் நன்றேயில் பெறுமிது காண்மினே –4-6-2-

ஷூத்ர தேவதா மூலம் அல்ல -சர்வாதிக -அவனது அசாதாராண திவ்ய ஆயுத அடையாளம் சொல்லி இவளைப் பெறுமின்
திசைக்கின்றதே இவள் நோய் -இவள் நோயால் தான் இருவருக்கும் மோகம்
இது மிக்க பெரும் தெய்வம் -நோய் தெய்வம் -கார்ய காரண நிபந்தன சாமா நாதி கரண்யம் –
சர்வாதிகன் -அபரிச்சின்ன –
நீராய் போலே
இசைப்பின்றி நீர் அணங்கு ஆடும் இளம் தெய்வம் அன்று இது– தெய்வா விஷ்டராய் –
திசைப்பின்றியே-பிரமிக்காமல்
சங்கு சக்கரம் என்று இவள் கேட்க -அசாதாராண சிஹ்னம் -இவள் உணரும் படி
நீர் இசைக்கிற்றீர் ஆகில் -வாய் திறந்து சொன்னாள் -அவள் கேட்கும் படி
நன்றேயில் பெறுமிது காண்மினே-இல்லத்தை பெறுவாள் -நிதானம் அடைவாள் -நன்றாகவே இருப்பு பெறுவாள்
இது பிரத்யஷம் -சத்தை உடன் இருப்பாள்
நாயகன் பக்கல் இல் வாழ்க்கை பெறுவாள் –

ஷூத்ர தேவதா சாந்தியால் இன் நோய் போக்குகை அரிது- பகவத் விஷயத்தை சொல்லில் இவளைப் பெறலாம்

திசைக்கின்றதே -இவள் நோய்
குண நிமித்தமாக இவள் அறிவு கெடா நின்றாள்
நீங்கள் அவள் நோய் நிமித்தமாக அறிவு கெடா நிற்கிறீர்கள்
தாய்மார் -கௌரவித்து வார்த்தை
இதுக்கு நிதானம் அறிந்த நீ சொல்லிக் காண் என்ன

இது மிக்க பெரும் தெய்வம்
கம்பீர -வானோர் தலைமகன் சீராயின வந்த நோய் -திருவிருத்தம்-53-
சாமாநாதி காரண்யம் -கார்ய காரண பாவனத்தால்
சர்வேஸ்வரன் அடியாக வந்த கனவிய
இந்த நோய்க்கும் இத்தை உண்டாக்கிய அவனுக்கும் அபேதம் -கார்ய காரண பாவத்தால் –
இது தன்னை அவனாக சொல்கிறாள்

இசைப்பின்றி நீர் அணங்கு ஆடும் இளம் தெய்வம் அன்று இது
நீர் பரிகாரம் செய்யும் உங்களுக்கும் ஒரு சேர்த்தி இல்லை
இந்த நோய்க்கும் சேர்த்தி இல்லை
இவளுக்கும் சேர்த்தி இல்லை
பகவத் விஷயத்தில் முதலில் கை வைத்தார் பெரும் நோய் இல்லையே
ஒரு வழியாலும் ஒரு சேர்த்தி இல்லை –
உங்கள் மகள் பிரபன்ன ஜன குடியில் வந்தவள் -இவளுக்கும் சேர்த்தி இல்லை –
நோவுக்கு நிதான பூதனுக்கும் சேர்ந்தது அல்ல –
தேவதாந்தர சம்பந்தம் -குந்துமணி -தங்கம் -கௌசிக மகாத்மயம் -ப்ரஹ்ம ரஜஸ்சும் அறிந்ததே
இதர தேவதைகள் இந்நிலத்தில் வந்து புக மாட்டார்கள் -அவர்களுக்கும் சேர்த்தி இல்லை

பிள்ளை உறங்கா வல்லி தாசர் -குடி மகன் -ஒருவனுக்கு ஐயனார் ஏறி வலித்தவாறே
உனக்கு வேண்டியது என் என்று கேட்க
பால் பழம் சாந்து -தண்டு ஏற வேண்டும் அணுக்கன் குடை வேணும் என்ன
சாந்து புழுகு ஆபராணாதிகள் வாங்கி சாந்தி செய்து வர
அன்று இரவு – பண்டை விட இரண்டு பக்கம்
பிள்ளை -பிடிக்கும் குடைக்கு கீழே நான் வரவோ -கூவிக் கொண்டே ஓடிற்றே
பரமபக்தன் உடைமை சேராது –
கோவர்த்தனம் -இதனால் தான் -செய்து அருளினான் -தேவதாந்திர பிரசாதம் பக்தருக்கு கூடாதே
பகவத் விஷயத்தில் விக்ரதராக வேண்டிய நீர்
உதவாத ஷூத்ர தேவதை கண்டு ஆடுவதோ -நீங்கள் ஆடாமல் வேறு யாரோ ஆட
ஆட்டம் மேவி அயர்வு எய்தும் மெய்யடியார்

திசைப்பின்றியே
பரிகாரத்திலும் மயங்காமல்
நிதானத்தில் கலக்கம் பிறந்தாலும்
அறிவு கெட்ட அம்சம் என் -பரிகாரத்திலும் அறிவு கெடாத வழி என்

சங்கு சக்கரம் என்று இவள் கேட்க நீர் இசைக்கிற்றீர் ஆகில்
சங்கு சக்கரங்கள் என்று கை கூப்பும்
சங்கு என்னும்
வட்ட வாய் நேமி வலம் கையா என்று மயங்கும்
இத்தையே சொல்லி -மருந்தாகுமே
நோவு வந்த வழியை அறிந்து பரிகரிக்க வேண்டாமோ
சங்கு சக்கரம் என்று பரிகரிக்கப் பாருங்கோள்
சங்கு என்னும் சக்கரம் என்னும் -சொல்லப் போகிறார்களோ
சங்கு சக்கரம் -சொல்லிப் பரிகரிக்கப் பாருங்கோள் –

பெண்ணுக்கு மயக்கம் -பிரிக்க சக்தி இல்லை –
இவளுக்கு ஆசை -சங்கு என்னும் சக்கரம் என்னும் என்றே சொல்லி
கடலை குளப்படி ஆக்கப் பார்க்கிறீர்கள்
சங்கு என்னும் சக்கரம் -நிதானமாக சொல்ல வேண்டும் –
மனசில் நினைப்பதை நீங்கள் சொல்ல வேண்டும் –
நீங்கள் சொன்னீர்கள் ஆகில் –
இவள் கேட்கும் படி சொன்னீர்கள் ஆனால்
ஆனால் -எங்கே சேர்க்க வேண்டும்
அவள் கேட்க நீங்கள் சொன்னீர்கள் ஆனால்
நீங்கள் முதலில் செய்த தப்புக்கு ஷாமணம் செய்தால் தானே உங்களுக்கு காத்து கொடுப்பாள்
இப்படி சொல்வது தான் செவிப்படும் -தரித்து நீங்கள் உக்தி மாதரம் சொல்ல வல்லீர்கள் ஆகில்

ஆய்ச்சி மகன் அந்திம சமயத்தில் -பட்டர் -தம்மை அறியாதே கலங்கிக் கிடக்கிற படியைக் கண்டு
மெல்ல அழகிய மணவாள பெருமாளே சரணம் -காதில் சொல்ல -இவர் பக்தியை அறிந்த பட்டர் -இவர் காதில் சொல்ல-
அனந்தரம் அதிலே உணர்த்தி உண்டாய் -நெடும் பொழுது அத்தையே சொல்லி திருநாட்டுக்கு நடந்தாராம்
பெற்ற மக்கள் பெண்டிர் என்று இவர் உதாவார் என்று பிரிந்தேன் -கலியன் -திருவிண்ணகர் பாசுரம்-
சோர்வினால் பொருள் வைத்தது உண்டானால் சொல்லு சொல்லு என்பரே -பெரியாழ்வார்-4-5-

என்ன நன்மை
நன்றேயில் பெறுமிது காண்மினே
இல் பெரும் -சரீரம் என்றும் குடும்பம் என்றும் அர்த்தம்
ஆத்மாவுக்கு ஆயதனமான சரீரம் பெரும்
இல் கிளத்தி – க்ருஹுணியாக பெரும் -என்று தமிழர்
ஏ இல் -எயில் கானமாய் பண்ணை வென்ற வார்த்தை சொல்லும்
மயக்கம் தெளிந்து மதுரா மதுராலாபா போலே –

இது காண்மின்
இதுவும் காண்மினே
தேவதாந்திர பஜனம் செய்தீர்
நான் சொன்னதையும் காண்மின்
நான் கை கண்டு சொன்னேன் -சங்கு சக்கரம் கையிலே கண்டதை சொன்னபடி-
ஒன்றேயோ பரிகாரம்
பலத்துடன் சேர்விக்கும்
பெண் புள்ளைக் கடாவுகின்றது காணீர்
இது காண்மின்-இவள் தன நெஞ்சில் பிரகாசிக்கிற படியை காண்மின்
நெஞ்சினூடே ஏசல் காண்கிறான்-வெள்ளைச் சுரி சங்கினுடன் ஆழி ஏந்தி –
நன்றே இல் பெரும் -இது காண்மின் –

————————————————————————-

இது காண்மின் அன்னைமீர்! இக்கட்டு விச்சி சொற் கொண்டு நீர்
எதுவானும் செய்து அங்கு ஓர் கள்ளும் இறைச்சியும் தூவேன்மின்!
மதுவார் துழாய் முடி மாயப்பிரான் கழல் வாழ்த்தினால்
அதுவே இவள் உற்ற நோய்க்கும் அரு மருந்தாகுமே.–4-6-3-

நிந்த்யமான-உபகரணங்களைக் கொண்டு இதர தேவதா சாந்தி செய்யாமல்-கழல் வாழ்த்தினால் -நிரதிசய போக்யமான
அவன் திருவடிகளை பல்லாண்டு பாடுவதே
பேஷஜமாம் போக்யமுமாம் -நோய்க்கு மருந்தும் விருந்தும் -இதுவே
நோய்க்கும் அரு மருந்தாகுமே-விருந்தை தேடினாள் நோய் பட்டாள் -விருந்தை கொடுத்தால் நோயும் போகுமே அந்த அர்த்தத்தில் உம்மை
இது காண்மின் அன்னைமீர்! இக்கட்டு விச்சி சொற் கொண்டு நீர்-பெருமையாக -இறுமாப்பு -சொல்லிற்று கேளாமல்
ஸ்வபாவம் நானே அறிவேன் உற்ற நண்பர்கள் உண்மை அறிவார்கள்
இந்த தண்ணிய -இவள் வார்த்தையால் -ஸ்வரூபம் பாராமல் -ஹேய தேவதா அனுவ்ருத்தி ரூபமான
எதுவானும் செய்து அங்கு ஓர் கள்ளும் இறைச்சியும் தூவேன்மின்!-குலம் அறிவீர் -தூஷியாமல் –
மதுவார் துழாய் முடி மாயப்பிரான் கழல் வாழ்த்தினால்-பல்லாண்டு பாடி -ஏத்தினால் -ஸ்தோத்ரம் பாலும் மருந்துமாம்
திருத் துழாயால் அலங்க்ருதமான-அனுபவிப்பிக்கும் உபகாரன்
கழலுக்கு பல்லாண்டு பாடுவதே ஸ்வரூப அனுரூபம்
அதுவே இவள் உற்ற நோய்க்கும் அரு மருந்தாகுமே.-இது ஒன்றே -இவளுக்கும் பெறுதற்கு அரிய மருந்து
அவளுக்கும் விருந்தும் ஆகும் -உங்கள் கலக்கத்துக்கும் பரிகாரமாகும் –கழல் வாழ்த்த இவை அனைத்தும் கிட்டும்

தாய்மார்களே! இதனைக்காணுங்கோள்; இந்தக் கட்டுவிச்சியினுடைய வார்த்தையைக்கொண்டு நீங்கள் ஏதாகிலும் செய்து
அவ்விடத்திலே ஒரு கள்ளையும் மாமிசத்தையும் இறைக்காதீர்கள்; தேன் ஒழுகுகின்ற திருத்துழாயைத் தரித்த திருமுடியையுடைய
மாயப்பிரானுடைய திருவடிகளைத் துதித்தால், துதிக்குமதுவே இவள் அடைந்திருக்கும் நோய்க்கும் சிறந்த மருந்தாகும்,’ என்றபடி.

அன்னைமீர்! இக்கட்டுவிச்சி சொல்லைக்கொண்டு செய்து தூவேன்மின்,’ என்க. தூவுதல் – வணங்குவதற்காக வைத்தல்.
மாயன் -ஆச்சரியமான குணங்களையும் செயல்களையுமுடையவன். பிரான் – உபகாரகன்.

பொருந்தாத காரியங்களைச் செய்யாமல் அவன் திருவடிகளை ஏத்துங்கோள்; அதுவே இந்நோய்க்கும் மருந்து,’ என்கிறாள்.

அன்னைமீர் இது காண்மின்
வயிற்றில் பிறந்தவர்கள் என்னுமது ஒன்றனையே கொண்டு சொல்லுகிற நலத்தைக் கேளாதொழிய வேண்டுமோ?
ஏவுகின்றவர்கள் என்னும் இத்தனையோ வேண்டுவது? வயிற்றிலே பிறந்தவர்களாகிலும் சொன்ன வார்த்தை
நல்லதாக இருக்குமாகில் கைக்கொள்ள வேண்டாவோ? திருமாலைப் பாடக் கேட்டு,
‘விளக்கொளியை மரகதத்தைத் திருத்தண் காவில் வெஃகாவில் திருமாலைப் பாடக் கேட்டு,
‘வளர்த்ததனால் பயன்பெற்றேன்; வருக’ என்று மடக்கிளியைக் கைகூப்பி வணங்கினாளே.’-திருநெடுந். 14.- ’ என்று
மடக்கிளியைக் கைகூப்பி வணங்கினவளும் உங்களிலே ஒருத்தி அன்றோ? அது கிடக்க :

நான்முகன் பித்ருக்களை திட்ட அவரால் சுக்ராச்சாரியார் இடம் முறை இட
அங்கிரஸ் பிள்ளை சுக்ராச்சாரியார் இடம் வந்து பித்ருக்கள் முறை இட அவர் புத்ரர்களே என்று கூப்பிட்ட விருத்தாந்தம்
புத்திரர்களே!’ என்று அல்லவா சொன்னார் என்றாரும் இல்லையோ?

யாரேனும் சொல்லிலும் வார்த்தை நன்றாகில்
கைக்கொள்ள வேண்டாவோ? இக்கட்டுவிச்சி சொற்கொண்டு – ‘பரிஹாரம் சொல்லுகிற இவள் தன்மை கண்டீர்களே அன்றோ?
இவள் வார்த்தையைக் கேட்டீர்களே அன்றோ? இதனையோ ஆதரிப்பது! நான் சொல்லுகிற வார்த்தையையே
இவள் சொன்னாலும் கேட்கக் கடவதோ? ‘காணிலும் உருப்பொலார்’ என்கிறபடியே அன்றோ இருப்பது?’ என்பாள், ‘இக்கட்டுவிச்சி’ என்கிறாள்.
இவள் சொன்ன வார்த்தையை யான் கூறினாலும் என்னையுங்கூடத் துறக்கும்படி அன்றோ
வார்த்தையின் பொல்லாங்கு இருப்பது?’ என்பாள், ‘இச்சொல்’ என்கிறாள்.
‘செவிக்கு இனாத கீர்த்திய’ராய் இருக்கின்றமையைத் தெரிவித்தபடி

நீர் –
பேய் முலை நஞ்சு, ஊணாக உண்டான் உருவொடு பேர் அல்லால், காணா கண் கேளா செவி,’ என்று இருக்கக்கூடிய நீங்கள்
நாஸ்திகரான பௌத்தர் ஜைநர் முதலான மதத்தினர்களும் ‘பிற உயிரை வருத்தல் ஆகாது’ என்பார்களே அன்றோ?
அவ்வழியாலே கைக்கொள்ளுமவர்களோ நாம்? ‘எந்த உயிரையும் கொல்லுதல் கூடாது,’ என்ற விதியைக் கைக்கொள்ளுதல் போன்று
வைத ஹிம்சையும்’ கைக்கொள்ள வேண்டாவோ? ‘ஆத்தும தத்துவத்தை யறிந்த
பிரஹ்ம ஞானிகள்’ என்னப்படுமவர்களன்றோ உங்களுக்கு உபதேசிக்கத் தக்கவர்கள்?

எதுவானும் செய்து
யாதேனும் பொருத்தம் இல்லாத காரியத்தைச் செய்து. உங்கள் ஆசாரத்தோடு சேர்ந்திருக்கப் பெறில், அதுவும் ஆகுமே அன்றோ?
‘செய்யாதன செய்யோம்’ என்றும், ‘மேலையார் செய்வனகள் வேண்டுவன’ என்றும் அன்றோ உங்கள் ஒழுக்கம்?
அங்கு ஓர் இறைச்சியும் கள்ளும் தூவேன்மின் –
தாழ்ந்த பொருள்களைக் கொண்டு வைஷ்ணவத் திருமாளிகையைத் தூஷியாதே கொள்ளுங்கோள். ‘அங்கு’ என்று முகத்தை மாற
வைத்துச் சொல்லுகிறாள். ‘ஆகில், தவிருகிறோம்; பரிஹாரத்தைச் சொல்லிக்காணாய்,’ என்ன, சொல்லுகிறாள் மேல் :

மது வார் துழாய் முடி மாயப்பிரான் கழல் வாழ்த்தினால் –
‘விரை மட்டு அலர் தண் துழாய் என்னும்’ என்று நீங்கள் சொல்ல அன்றோ நான் கேட்டது?
திருக்குழலின் சம்பந்தத்தாலே தேன் பெருக்கு எடுத்து ஓடுகின்ற திருத்துழாயைத் திருமுடியிலே யுடையனாய்,
அழகு சீலம் முதலியவைகளால் ஆச்சரியத்தையுடையனாய், அந்த அழகு முதலானவற்றை அடியார்களுக்காக ஆக்கி வைக்கும்
உபகாரகன் திருவடிகளை வாழ்த்தினால். ‘உன் சேவடி செவ்வி திருக்காப்பு’ என்றே அன்றோ வாழ்த்துவது?
ஆதலால், இவர்கள் திருநாமம் சொல்லுவதுதான் மங்களாசாசன முகத்தாலே ஆயிற்று என்க.
‘கெண்டை ஒண் கண்ணும் துயிலும்’ என்றார் திருமங்கை மன்னனும்.
கெண்டை ஒண் கணும் துயிலும் என்நிறம் பண்டு பண்டு -போல் ஒக்கும் மிக்க சீர்த்
தொண்டர் இட்ட பூம் துளவின் வாசமே வண்டு கொண்டு வந்து ஊதுமாகிலே –பெரிய திருமொழி 11-1-9-
உறக்கத்தால் அல்லாத செல்லாத கண் துயிலும்
கலப்பதற்கு முன்னே -பண்டு பண்டு நிலை – -வாசி அறியாதார் நிரபேஷர்
என்ன பண்ணினால் -கண் உறங்கும்
மிக்க சீர் தொண்டர் துளவின் வாசம்
பரிவர் இல்லை என்றே இவள் துக்கம் -வியாதியும் போனது பரிவர் உள்ளார் என்று அறிந்து
நஞ்சீயர் நம்பிள்ளை சம்வாதம் -மூலம் இந்த அர்த்தம்

அதுவே
-அடையத் தக்கதுமாய் இனியதுமான அதுதானே
.இவள் உற்ற நோய்க்கும் அருமருந்து ஆகும் –
இவள் மறுபாடு உருவக் கொண்ட நோய்க்கு பெறுதற்கு அரிய மருந்தாம். என்றது,
‘மேல் காற்றிலே காட்டப் பரிஹாரமாம்,’ என்றபடி.

——————————————————————————-

மருந்து ஆகும் என்று,அங்கு ஓர் மாய வலவை சொற் கொண்டு,நீர்
கருஞ்சோறும் மற்றைச் செஞ்சோறும் களன் இழைத்து என் பயன்?
ஒருங்காகவே உலகு ஏழும் விழுங்கி உமிழ்ந்திட்ட
பெருந்தேவன் பேர் சொல்லகிற்கில், இவளைப் பெறுதிரே.–4-6-4-

கிருத்ரம -இவள் செய்வது பிரயோஜனம் இல்லை -ஆபத் சகன் திருநாமம் சொல்ல
மருந்து ஆகும் என்று,அங்கு ஓர் மாய வலவை சொற் கொண்டு,நீர்-பிரதிபத்தி பண்ணி –
வலவை-நேர்மை இல்லாதவள் -ஊர் பேர் இல்லாதவள் -க்ருத்ரிமை -வார்த்தையை விச்வசித்து
தேவதாந்திர ஸ்பர்சதுக்கு யோக்யதை இல்லாத நீங்கள் -பெண்ணின் பரிவால் கலங்கி
கருஞ்சோறும் மற்றைச் செஞ்சோறும் களன் இழைத்து என் பயன்?-சாத்விக அன்னம் இல்லாமல் -பொடி போட்டு வர்ணம் மாற்ற கூடாது
சிகப்பு ரஜஸ் கருத்து தமஸ் -தேவதாந்திர சந்நிதானம் களத்திலே
ப்ரீதி சாந்தி பண்ண என்ன பிரயோஜனம்
ஒருங்காகவே உலகு ஏழும் விழுங்கி உமிழ்ந்திட்ட-ஆஸ்ரித அனாஸ்ரித்த விபாகம் இல்லாமல் ரஷித்து அருளிய
பெருந்தேவன் பேர் சொல்லகிற்கில், இவளைப் பெறுதிரே.-சத்தை -போகுமே ஸ்வரூபம் இழந்தால் சத்தை போகுமே
பர தேவதை திரு நாமம் சொல்ல வல்லீர் ஆகில் இவளை பெறுவீர் –

‘இவள் நோய்க்குப் பரிஹாரமாகும் என்று நினைத்து, வஞ்சனை பொருந்திய ஒரு வலவையினது சொல்லைக் கொண்டு
நீங்கள் கருஞ்சோற்றையும் செஞ்சோற்றையும் அங்கே அத்தேவர்களுடைய முன்னிலையில் படைப்பதால் பயன் யாது?
ஒருசேர ஏழ் உலகங்களையும் பிரளயகாலத்தில் உண்டு, பின் பிரளயம் நீங்கினவுடனே வெளி நாடு காண உமிழ்ந்த
அறப்பெரிய சர்வேசுவரனது திருப்பெயரைச் சொல்லுவீர்களே யானால், இவளைப் பெறுவீர்கள்,’ என்றவாறு.
மருந்து – பரிஹாரம். வலவை – பலவாறு பேசுகின்றவள். களன் – படைக்குமிடம். ‘சொற்கொண்டு இழைத்துப் பயன் என்?’ என்க.
பெருந்தேவன் – ‘முதலாவார் மூவரே; அம் மூவ ருள்ளும் முதலாவான் மூரிநீர் வண்ணன்,’ என்பதனைக் குறித்தபடி.

‘வஞ்சனையுடையவளாய்த் தோன்றியதைச் சொல்லுகிற இவளுடைய பலவாறான வார்த்தைகளை விட்டு,-ஆபத்சகன் -உண்டு உமிழ்ந்து -ரஷித்தவன் –
ஆபத்திற்குத் துணைவனான சர்வேசுவரனுடைய திருநாமத்தைச் சொல்ல வல்லீர்கோளாகில், இவளைப் பெறலாம்,’ என்கிறாள்.

மருந்து ஆகும் என்று –
பத்தியத்திற்கு மாறானவற்றைச் செய்கின்றவர்கள் மருந்து ஆகும் என்று. ‘பத்தியம்’
என்று சொல்லிக்கொள்ளவும் வேண்டுமோ? ‘மருந்தாம்’ என்றபடி.
அங்கு ஓர் மாயவலவை சொற்கொண்டு –
வஞ்சனையுடையவளாய் நெஞ்சில் தோற்றியவைகளையே சொல்லக்கூடியவளான இவள் வார்த்தையைக் கேட்டு.
‘அங்கு ஓர்’ என்று விருப்பம் இல்லாமையைத் தெரிவிக்கிறாள்.

நீர் –
சத்துவ குணத்தை உடையவர்களாய், பகவத் விஷயமல்லது சொல்லாதவர்களாய், நேர்மையாளர்களா யிருக்குமவர்கள்
வார்த்தையைக் கேட்கக்கூடிய நீங்கள் படும் எளிவரவே!
அன்றிக்கே,
‘போனகம் செய்த சேடம் தருவரேல் புனிதம் அன்றே?’ என்ற
சத்துவ குணமுடையார் அமுது செய்த பிரசாதத்தின் பெருமையை அறிந்த நீங்கள். என்றது,
‘சத்துவகுணமுடைய அன்னமல்லது தொடக்கூடியவர் அல்லாத நீங்கள்’ என்றபடி.

கருஞ்சோறும் மற்றைச் செஞ்சோறும் –
தாமச அன்னமும் அதனோடு தோள் தீண்டியான இராஜச அன்னமும்.
களன் இழைத்து என் பயன் –
இராஜச தாமச தேவதைகளுக்கு அவ்வத்தெய்வங்கள் வந்து தங்கியிருக்கும் இடங்களிலே
இராஜசமாயும் தாமசமாயுமுள்ள சோற்றினைக் கொண்டு இடச் சொல்லுகிற முறையிலே இட்டால் என்ன பிரயோஜனம் உண்டு?
பிரயோஜனம் இல்லாமை மாத்திரமேயன்று; அழிவோடே முடியும். களன் – ‘களம்’ என்றபடி. இழைக்கை – இடுகை.
என்றது, புன்சிறு தெய்வங்கள் வந்து தங்கியிருக்கும் நாற்சந்தி தொடக்கமானவற்றிலே அவற்றுக்குச் சொல்லுகிற
நியமங்களோடே படைத்தலைக் குறித்தபடி.
‘பிரளய காலத்தில் எல்லாப் பொருள்களையும் பாதுகாத்தவனான சர்வேசுவரனை ஒழியப் பிரளய ஆபத்தில்
பாதுகாக்கலாமாகில் ஆயிற்று, இவளைப் புன்சிறு தெய்வங்களைக் கொண்டு பாதுகாக்கலாவது,’ என்பாள்,
‘விழுங்கி உமிழ்ந்திட்ட பெருந்தேவன்’ என்கிறாள்.
‘இதில் ஒரு பிரயோஜனம் இல்லையாகில், மற்று, பிரயோஜனம் உண்டாக நீ நினைத்ததைச் சொல்லாய்,’ என்ன,
‘செய்வீர்கோளேயாகில் உங்களுக்கு ஒரு பேரேயன்றோ நான் சொல்லுகிறது?’ என்கிறாள் மேல் :

ஒருங்காகவே உலகு ஏழும் விழுங்கி உமிழ்ந்திட்ட பெருந்தேவன் –
‘அடியார், அடியர் அல்லாதார்’ என்று பாராமல், எல்லாரையும் ஒக்க ஒரே காலத்தில் திருவயிற்றிலே வைத்து நோக்கி,
பிரளயம் கழிந்தவாறே வெளிநாடு காணப் புறப்பட விட்ட பரம்பொருள்.
‘ஒருவர் களன் இழையாதிருக்கச்செய்தே வந்து,வரையாதே பாதுகாக்குமவன்’ என்பாள், ‘ஒருங்காகவே’ என்கிறாள்.
‘ஒருவர் விரும்பாதிருக்க, ஆபத்தே காரணமாக வந்து உதவுமவன்’ என்பாள், ‘உலகு’ என்கிறாள்.
ஆக, ‘அத்தகைய எம்பெருமானைப் பற்றுங்கோள்,’ என்கிறாள்
எல்லாப் பொருள்களையும் பாதுகாப்பவன் ஆகையாலே, எல்லாரைக்காட்டிலும் அறப்பெரியவனான சர்வேசுவரன்;
தளர்ந்தார் தாவளமானவன்-ஆர்த்த ரக்ஷகன் என்றபடி -. முன்பு முகந்தோற்றாதே நின்றானே யாகிலும்,
ஆபத்து வந்தவாறே முகங்காட்டிக் காக்குமவனாயிற்று.
அவன் இப்படியிருப்பான் ஒருவன் ஆகையாலே, எளிதில் ஆராதிக்கப்படுமவன்; —
நீங்கள் பற்றுகின்ற தேவதைகளைப் போன்று கெட்ட தன்மைகளையுடையவன் அல்லன்; ‘
அட்டது ஒழியச் சுட்டது கொண்டு வா,’ என்கிறபடியே, கஷ்டப்பட்டு ஆராதிக்கப்படுமவன் அல்லன்.
தான் காக்குமிடத்தில் இத்தலையில் காப்பதற்கு அறிகுறியான விலக்காமையே வேண்டுவது.
இதனால், ‘அந்தப் பிரளயம் தீர்த்தவனேகாணும் இந்தப் பிரளயத்துக்கும் கடவன்;
நம்மோடு ஒக்கப் பிரளயத்திலே அழுந்தும் புன்சிறு தெய்வங்களையோ பற்றுவது? வரையாதே
எல்லாப் பொருள்களையும் பாதுகாப்பவனாயுள்ளவனை அன்றோ பற்றத் தகுவது?’ என்கிறாள் என்றபடி.

பேர் சொல்லகிற்கில் –
திருப்பெயரைச் சொல்ல வல்லீர்கோளேயானால். ‘இப்படி நேர்த்தி அற்று இருக்குமாகில் பலமும் அளவுபட்டு இருக்குமோ?’ என்னில்,
இவளைப் பெறுதிர் –
அத்தேவதைகள் மாட்டு நேர வேண்டுவன எல்லாம் நேர்ந்தாலும், ‘என் பயன்?’ என்று பிரயோஜனம் இல்லையாகச் சொல்லிற்று;
இங்கு நேர்த்தி திருநாம மாத்திரம் சொல்லுகையாய், பேற்றில் வந்தால் இவளைப் பெறுதலாகிற பெரிய பலத்தைப் பெறலாம்.
‘பேர் சொல்ல வல்லீர்கோளாகில் இவளைப் பெறலாம்; இல்லையாகில் இழக்குமித்தனை,’ என்றபடி.

———————————————————-

இவளைப் பெறும் பரிசு இவ்வணங்கு ஆடுதல் அன்று;அந்தோ!
குவளைத் தடங்கண்ணும் கோவைச் செவ்வாயும் பயந்தனள்;
கவளக் கடாக்களிறு அட்டபிரான் திரு நாமத்தால்
தவளப் பொடிகொண்டு நீர் இட்டிடுமின்; தணியுமே.–4-6-5-

இவள் நோய் விஞ்சா நின்றது நீங்கள் செய்வதால் –
பிரபல விரோதி நிவர்த்தகன் -ஸ்ரீ கிருஷ்ணன் – திரு நாமத்தால் -உச்சரித்து –
பரிசுத்த சூர்ணம் -வெள்ளை -திரு நாமம் ஸ்பர்சிப்பியுங்கோள்
இவளைப் பெறும் பரிசு இவ்வணங்கு ஆடுதல் அன்று;அந்தோ!நீங்கள் செய்வதால் இவள் நோய் விஞ்சி போனதே
குவளைத் தடங்கண்ணும் கோவைச் செவ்வாயும் பயந்தனள்;-பரந்த கண்கள் -நிறம் அழிந்து -பரிகாரம்
கவளக் கடாக்களிறு அட்டபிரான் திரு நாமத்தால்-குவலயா பீடம் மதம் ஏற்ற லாகிரி வஸ்துக்கள் -கொன்று -மதுரையில் பெண்களுக்கு
-கிருஷ்ணன் -மீண்டும் நிறம் குவளைப் பூ கோவைச் செவ்வாய் ஆனதே
தவளப் பொடிகொண்டு நீர் இட்டிடுமின்; தணியுமே-அந்த சரித்ரம் சொல்லி -திரு நாமம் சொல்லி -விரோதி நிரசன ஸூசகம்
ப்ரஹ்ம நிஷ்டர் பாகவதர் ஸ்ரீ பாத தூளி கொண்டு -சடக்கென ஸ்பர்சிக்கும் படி செய்வீர் -சிறிய வேலை தான்
விஞ்சி இருக்கும் வை வர்ண்யம் தணியும் தன்னிறம் பெறுவாள்

‘ஐயோ! இவளைப் பெறுதற்குரிய வழி இந்த அணங்கு ஆடுதல் அன்று; குவளை போன்ற விசாலமான கண்களும் கொவ்வைக்கனி
போன்ற சிவந்த வாயும் பசலை நிறத்தை அடைந்தாள். கவளத்தை உண்ணுகின்ற மதம் பொருந்திய குவலயாபீடம் என்னும்
யானையைக் கொன்ற கண்ணபிரானுடைய திருப்பெயரைச் சொல்லிக் கொண்டு அடியார்களுடைய தூய்மையான பாததூளியை
இவளுக்கு நீங்கள் இடுங்கோள்; இட்டவளவில் இந்நோய் தணியும்.’
பயந்தனள் – பசந்தனள். கவளம் – யானை உண்ணும் உணவு. அட்ட – கொன்ற.
தவளம் – வெண்மை; இங்குத் தூய்மையைக் காட்டிற்று. பொடி – தூளி.

‘நீங்கள் செய்கிற பரிஹாரம் நோயை மிகுதி ஆக்கா நின்றது;
அதனை விட்டு, நோய்க்குத் தகுதியான பரிஹாரத்தைச் செய்யுங்கோள்,’ என்கிறாள்.

இவளைப் பெறும் பரிசு இவ்வணங்கு ஆடுதல் அன்று –
‘இங்ஙனம் சிறப்பினை உடையளாய் இருக்கிற இவளைப் பெறுகைக்கு உபாயம் இத் தெய்வ ஆவேசங்கொண்டு ஆடுமது அன்று;
இந்த நற்சரக்கைப் பெறப் பார்ப்பவர்கள் இந்தத் தாழ்ந்த செயல்களாலேயோ பெறப்பார்ப்பது?’ என்றபடி.
இவள் இப்படிச் சொன்னவிடத்திலும் இவர்கள் மீளாதொழிகையாலே,
அந்தோ –
‘ஐயோ! இவளை இழந்தோமே அன்றோ!’ என்கின்றாள்.
‘இத்தெய்வ ஆவேசங் கொண்டு ஆடத் தொடங்கிய அளவில் இவளை இழந்தோமாதல் எப்படி?’ என்ன, ‘பார்க்கமாட்டீர்களோ?
குவளைத் தடம் கண்ணும் கோவைச் செவ்வாயும் பயந்தனள் –
‘குவளை அம் கண்ணி’ என்கிறபடியே,
குவளைப் பூப்போலேயாய் அனுபவிக்கின்றவர்கள் அளவு அல்லாத பரப்பையுடைத்தான கண்ணும்,
‘கோவை வாயாள்’ என்கிறபடியே, கோவைப்பழம் போன்ற சிவந்த உதடும் பசலை நிறத்தையடைந்தாள்.
‘தொண்டை அம் செங்கனி வாய் நுகர்ந்தானை’-பெரிய திருமொழி-3-7-2- என்றும்,
‘மணநோக்கம் உண்டான்’-பெரிய திருமொழி -8-10-1- என்றும் சொல்லுகிறவாறே ‘இவை அல்லவோ அவனுக்கு ஊண்?
ஆதலால், அவனுடைய வாய்புகுசோறு அன்றோ பறி உண்டாகிறது?’ என்கிறாள்.
(ஞானியை விக்ரகத்தோடே ஆராதிக்குமே )
பகவானைப் பிரிந்ததனால் உண்டான விரஹத்துக்கும் அகஞ்சுரிப்படாதவள்,
வேறு தெய்வங்களின் சம்பந்தத்தாலும் அத்தெய்வங்களின் அடியார்களுடைய சம்பந்தத்தாலுமாகப் பசலை நிறத்தை அடைந்தாள்.

‘ஆனால், பரிஹாரம் சொல்லாய்,’ என்ன,
‘நெடுங்காலமும் கண்ணன் நீள் மலர்ப்பாதம் பரவிப் பெற்ற இளமான்’-திருவிருத்தம் -37- என்று நீங்களே அன்றோ சொன்னீர்கோள்?
அப்படியே, கண்ணபிரானுடைய திருவடிகளை அடைந்து அவனாலே நீக்கிக்கொள்ளப் பாருங்கோள்,’ என்கிறாள்.
கவளம் கடாம் களிறு அட்டவன் திருநாமத்தால் தவளம் பொடி கொண்டு நீர் இட்டிடுமின் –
மதஜலம் ஒழுகாநின்றுள்ள குவலயாபீடத்தை முடித்த உபகாரகனது திருநாமத்தாலே போக்குவதற்குப் பாருங்கோள்.
இதனால், ‘பிரபலமான தடைகளையும் வருத்தம் இன்றிப் போக்க வல்லவன்’ என்பதனைக் குறிப்பித்தவாறு.
‘கவளத்தை உண்பித்துப் போதையைத் தரும் பொருள்களைக் குடிப்பித்துப் பிச்சு ஏற்றுவித்த களிறு’ என்பாள்,
‘கவளக் கடாக் களிறு’ என்கிறாள். ‘தூய்மையான பொடி’ என்பாள், ‘தவளம் பொடி’ என்கிறாள்.
‘பாபம் செய்வதற்குத் துணை புரிந்தவர்கள், கழுவாய்க்கும் கூட்டுப்பட வேண்டாவோ?’ என்பாள், ‘நீர்’ என்கிறாள்.
‘இட்டிடுமின்’ என்றது, ‘இவள் மேலே இடுங்கோள்’ என்றவாறு.
‘வேறு தெய்வங்களின் சம்பந்தம் உண்டானதற்குப் பகவானுடையநாமத்தைச் சொல்லிப் பரிஹரிக்கப் பாருங்கோள்;
வேறு தெய்வங்களின் அடியார்களுடைய சம்பந்தத்துக்கு ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய
பாததூளியைக் கொண்டு பரிஹரிக்கப் பாருங்கோள்,’ என்கிறாள்
ஆக, ‘இங்கே புகுந்த அநீதிகள் இரண்டு உள :
அவ்விரண்டனுக்கும் இவ்விரண்டனையுங் கொண்டு பரிஹரிக்கப் பாருங்கோள்,’ என்கிறாள் என்றபடி.
‘இப்படிச் செய்தல் பரிஹாரம் ஆகுமோ?’ என்ன,
தணியுமே –
இவள் கண்ணும் விழித்து நிறமும் வரும்படி காட்டித் தரக் கடவேன்.

———————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: