பகவத் விஷயம் காலஷேபம் 95- திருவாய்மொழி – -4-5-6….4-5-11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

கரிய மேனி மிசை வெளிய நீறு சிறிதே இடும்
பெரிய கோலத் தடங்கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை
உரிய சொல்லால் இசைமாலைகள் ஏத்தி உள்ளப்பெற்றேற்கு
அரியது உண்டோ எனக்கு இன்று தொட்டும் இனி என்றுமே?–4-5-6-

அச்கலித-ப்ரேமம் -நழுவல் இல்லா -நிரதிசய அனுபாவ்யமான அழகு -ஸ்தோத்ர முகத்தால் அனுபவித்த
எனக்கு துர்லபம் ஒன்றும் இல்லையே
கரிய மேனி மிசை வெளிய நீறு சிறிதே இடும்-வெளிய நீறு அஞ்சனப்போடி -ஸ்யாமளமான வடிவு அழககுக்கு மேலே
பெரிய கோலத் தடங்கண்ணன் விண்ணோர் பெருமான்றனை-அனுபவிக்கக் கொடுப்பவர் –ஸூ ரிகளை குமிழ் நூரூட்டும்-
உரிய சொல்லால் இசைமாலைகள் ஏத்தி -இந்த அழகுக்குத் தக்க -படி எடுத்துக் காட்டும் படி அல்லவே அவன் படி
இவனுக்கு ஏற்ற சப்தங்கள் உண்டே -இவற்றையும் அவனே அன்றோ அருளினான் -சொல்ல பின்னுரு சொன்னேன் என்றார்
உள்ளப்பெற்றேற்கு-பெற்றதால் இனி
அரியது உண்டோ எனக்கு இன்று தொட்டும் இனி என்றுமே?-துர்லபமானது ஏதாவது உண்டோ
வெளியம் -அஞ்சனம் -அன்றியே -ஸ்யாமளமான திருமேனிக்கு மேலே – பச்சைக் கற்பூர பொடி-வெளிய நீறு –
கற்பூர படி ஏற்ற உத்சவம் -பொடி தூவி -அளவு படச் சாத்தின -முகவாயிலும் -திருமண் காப்பிலும் இன்றும் சாத்துவார்களே –

‘கரிய திருமேனியின்மேலே வெண்மையான சூர்ணத்தைச் சிறிதளவே இடுகின்ற, பெரிய அழகிய விசாலமான திருக்கண்களையுடையவனும்,
நித்தியசூரிகளுக்குத் தலைவனுமான சர்வேசுவரனைத் தகுதியான சொற்களாலே சமைந்த இசையோடு கூடிய மாலைகளால் துதித்து நினைக்கின்றவனான
எனக்கு இன்று தொடங்கி இனி எப்பொழுதும் கிடைத்தற்கு அருமையான பொருள் ஒன்று உண்டோ?’ என்கிறார்.

‘இடும்’ என்பதனைக் கண்ணுக்கு அடைமொழியாக்குவர் வியாக்கியாதா.
அதனைப் பெருமானுக்கு அடைமொழியாக்குவர் திருக்குருகைப்பிரான் பிள்ளான்.
‘இடும் பெருமான்’ என்றும்,பெரிய கோலத் தடங்கண்ணனாகிய பெருமான்’ என்றும் தனித்தனியே கூட்டிக்கோடல் வேண்டும்.
வெளிய நீறு – பச்சைக்கற்பூரச் சூர்ணம். ‘நீறு’ என்பது, பல பொருள் ஒரு சொல் :
‘சிலைவேடன் அவ்வளவில், நீறாய் விழுந்தான் நிலத்து’ (நளவெண்) என்றவிடத்துச் சாம்பலையும்.
‘மாந்தரும் மாவும் செல்ல மயங்கிமேல் எழுந்த நீறு’ (சிந்.) என்றவிடத்துப் புழுதியையும்.
‘மந்திரமாவது நீறு’ என்றவிடத்து விபூதியையும் காட்டுதல் காண்க.
அரசர்கள் அஞ்சனம் அணிந்துகோடல் மரபு. ‘உள்ளப்பெற்றேற்கு எனக்கு இன்று தொட்டும் இனி என்றும் அரியது உண்டோ?’ எனக் கூட்டுக.

‘சர்வேசுவரன் திருவடிகளில் அடிமை செய்யவும் பெற்றுத் தடைகளும் போகப்பெற்றேன்,’ என்றார் மேல் பாசுரத்தில்.
‘ஆனால், இனி உமக்குச் செய்ய வேண்டுவது என்?’ என்றான் ஈசுவரன்;
‘இதற்கு முன்பு பெறாததாய் இனிப் பெற வேண்டுவது ஒன்று உண்டோ?’ என்கிறார் இப்பாசுரத்தில்.

கரிய மேனி மிசை –
திருக்கண்களில் கருவிழியினுடைய கறுத்த நிறத்தால் வந்த அழகுக்கு மேலே. மேனி – நிறம்.
‘கரியவாகிப் புடை பரந்து’ என்னக்கடவதன்றோ?
வெளிய நீறு –
அஞ்சன சூர்ணம்,
சிறிதே இடும் –
அதனை அளவே கொண்டு அலங்கரிக்கும். –ஆரார் அயில் வேற்கண் அஞ்சனத்தின் நீறு அணிந்து’ என்னக் கடவதன்றோ?
அழகுக்கு இட வேண்டுவது இல்லையே? இனி, மங்களத்தின் பொருட்டு இடுவது ஆகையாலே, ‘சிறிதே இடும்’ என்கிறது.
பெரிய கோலம் –
ஒப்பனை வேண்டாதபடி அழகு அளவு இறந்து இருக்கிறபடி.
தடம் கண்ணன் –
அனுபவிக்கின்றவர்களுடைய அளவில் நில்லாது அனுபவிக்கப்படுகின்ற பொருள் மிக்கு இருக்கிறபடி.
அன்றிக்கே,
‘கரிய மேனி மிசை வெளிய நீறு சிறிதே இடும் பெரிய கோலம் தடம் கண்ணன்’ என்பதற்கு,
‘திருமேனியில் கறுத்த நிறத்தாலே வந்த அழகுக்கு மேலே அதற்குப் பரபாகமான திருக்கண்களிலே அஞ்சனத்தை இடுகின்ற’ என்னலுமாம்.
இனி, ‘கரி’ என்று யானையாய், அத்தால் நினைக்கிறது குவலயாபீடமாய், குவலயாபீடமானது,
அம்மேனி மிசை –
அழகிய திருமேனியிலே, வெளிய – சீற. ‘நீறு சிறிதே இடும் – பொடியாக்கும்’ என்றார் ஒரு தமிழ்ப்புலவர்.

விண்ணோர் பெருமான் –
‘இக் கண்ணழகை அனுபவிக்கின்றவர்கள் நித்தியசூரிகள்’ என்பார், அதனையடுத்து ‘விண்ணோர் பெருமான்’ என்கிறார்.
‘பரமபதத்திலுள்ளார் அடைய அனுபவியாநின்றாலும், அனுபவித்த பாகம் குறைந்து
அனுபவிக்கவேண்டிய பாகம் விஞ்சியிருக்கும்’ என்பார், ‘பெருமான்’ என்கிறார்.

உரிய சொல்லால் –
அவயவ சோபை அது; அனுபவிக்கின்றவர்கள் அவர்கள்; இப்படியிருந்தால், ‘நாம் பாடுகிற கவிக்கு இது விஷயம் அன்று’ என்று
மீளுதல் அன்றோ தக்கது?- இப்படி இருக்கச்செய்தேயும், இவ்விஷயத்திற்கு நேரே வாசகமான சொற்களாலே.
இசை மாலைகள் –
ஸம்ஸ்ராவே அமுதம் வாக்கியம்-‘கேட்பதற்கு இனியனவான வார்த்தைகள்’ என்கிறபடியே, திருச்செவி சார்த்தலாம்படி இருக்கை.

ஏத்தி உள்ளப்பெற்றேற்கு –
ஏத்தி அனுபவிக்கப்பெற்றஎனக்கு. அரியது உண்டோ – அடையாதது அடைய வேண்டியதாய் இருப்பது யாதொன்றுமில்லை,’ என்கிறபடியே,
‘இதற்கு முன்பு அடையாததாய் இனி எனக்கு அடையப்படுவது ஒன்று உண்டோ?
எனக்கு –
ஈஸ்வரோஹம்-‘ஈசுவரன் நான்’ என்று இருக்கிற இவ்வுலகத்திலே அடிமை இனிக்கப்பெற்று,
சொரூபத்திற்குத் தகுதியாக வாசிகமான அடிமை செய்யப்பெற்று,
‘வினை நோய்கள் கரிய’ என்கிறபடியே, விரோதிகள் கழியப்பெற்று இருக்கிற எனக்கு.

இன்று தொட்டும் இனி என்றுமே –
அடிமையில் இழிந்த இன்று தொடங்கி இனி மேல் உள்ள காலம் எல்லாம் அரியது இல்லை.
(திருமாலே நானும் உனக்கு பழ அடியேன் -அடிமைத்தனம் அநாதி –இசையாமல் இழக்கிறோம்
இசைவித்து தான் தாள் இணை அடிக்கீழ் இருத்தும் அம்மான் அன்றோ )
பின்னர் அவன் பயம் இல்லாதவன் ஆகிறான்,’ என்பது உபநிடதம்.
பின்பு ‘தீர்ப்பாரை யாம் இனி’ என்ற திருவாய்மொழியாவது அறியாமலே அன்றோ இவர் இவ்வார்த்தை சொல்லுகிறது?

——————————————————————–

என்றும் ஒன்று ஆகி ஒத்தாரும் மிக்கார்களும் தன் தனக்கு
இன்றி நின்றானை எல்லா உலகும் உடையான்றனைக்
குன்றம் ஒன்றால் மழைகாத்த பிரானைச் சொன் மாலைகள்
நன்று சூட்டும் விதி எய்தினம் என்னகுறை நமக்கே?–4-5-7-

சமாப்யாதி ரஹிதம் -போக்யதைக்கு -பரத்வம் -மற்ற அவச்தைகளிலும் -அவதாரம் -ஹாரத்த ரூபம் –
என்றும் ஒன்று ஆகி ஒத்தாரும் மிக்கார்களும் தன் தனக்கு இன்றி நின்றானை -தனக்கு அசாதாரண சௌலப்யாதிகள் –
இதுவே தானான தன்மை -நிரதிச போக்யமான இவை –
தனக்கு ஒத்தார் மிக்கார் இல்லை -வேறே இடம் சொல்வார் -இங்கு இந்த இனிமைக்கு
எல்லா உலகும் உடையான்றனைக்-கிருஷ்ணச்ய க்ருதே -அவரே அனைத்தும் -சேஷமாக உடையவன்
குன்றம் ஒன்றால் மழைகாத்த பிரானைச் -இந்த்ரனால் வந்த வர்ஷாபத்தை
கண்டதொரு மலையால் ரஷித்த உபகாரகன்
சொன் மாலைகள்-சப்த சந்தர்ப்ப பா மாலைகளை
நன்று சூட்டும் விதி எய்தினம் என்னகுறை நமக்கே?–அவன் உகந்து கொள்ளும் படி
பகவத் கிருபையே விதி நமக்கே ஆத்மனி பஹூ வசனம்

‘எக்காலத்திலும் தன்னுடைய எல்லாப் படிகளுக்கும் ஒத்தவர்கள் இல்லை என்கையேயன்றித் தன்னுடைய சௌலப்ய குணத்துக்கு
ஒத்தவர்களும் மிக்கவர்களும் இல்லாமலே நின்றவனும், எல்லாவுலகங்களையுமுடையவனும், மழையினால் துன்புறாதபடி
பசுக்களையும் ஆயர்களையும் கோவர்த்தனம் என்னும் ஒரு மலையினால் காத்த உபகாரகனுமான சர்வேசுவரனுக்குச் சொன்மாலைகளைப்
பெரிதாகச் சூட்டுவதற்குத் தக்கவாறு அவனுடைய கிருபையைப் பெற்றோம்; ஆதலால், நமக்கு இனி என்ன குறை? ஒரு குறையும் இல்லை,’ என்றபடி.
தன்தனக்கு – தன்னுடைய சௌலப்ய குணத்துக்கு. ‘நன்று பெரிதாகும்’ என்பது தொல்காப்பியம்.
விதி – பகவானுடைய திருவருள். ‘நமக்கு என்ன குறை?’ என மாறுக.

“அரியது உண்டோ எனக்கு?’ என்கிற இந்த நிறைவு உமக்கு எத்தாலே வந்தது?’ என்ன
‘பகவானுடைய கிருபையாலே வந்தது,’ என்கிறார்.

என்றும் –
எல்லாக்காலமும்.
ஒன்று ஆகி ஒத்தாரும் மிக்கார்களும் தன் தனக்கு இன்றி நின்றானை –
‘அந்தப் பரமாத்துமாவுக்குச் சமானமான பொருளும் மேலான பொருளும் காணப்படுகிறது இல்லை,’ என்கிறபடியே,
எல்லாம் கூடின கூட்டத்துக்கு ஒப்பு இல்லாமையே அன்றிக்கே, ஒரோ வகைக்கும் ஓர் ஒப்பு இன்றிக்கே இருப்பவனை.
‘அவனுக்குச் சரீரமாக இருப்பதனாலே, ஒத்தாராயும் மிக்காராயும் இருப்பாரை இன்றிக்கே இருப்பவனை’ என்றபடி.
ஆழ்வார் -ஐக்ய நிராகாரம் செய்து அருளுகிறார் –
என்றும் ஒன்றாகி –
ஒவ் ஒரு குணத்துக்கும் -அதனால் வரும் போக்யதைக்கும்
சமமோ அதிகமோ இல்லை -அவனும் உண்டு குணங்களும் உண்டு என்பதால்
‘தன் தனக்கு இன்றி நின்றானை’ என்பதற்கு,
எம்பெருமானார் தெற்கே எழுந்தருளின நாளிலே, ஆளவந்தார் மகனார்
சொட்டை நம்பி அருளிச்செய்த வார்த்தை: ‘தன் தனக்கு என்றது, தானான தனக்கு என்றபடி.
ஒரு படிக்கு ஒப்பு இன்றிக்கே இருக்கிறது பரத்துவத்தில் அன்று; ‘என்னை நான் மனிதனாகவே நினைக்கிறேன்,’ என்கிறபடியே,
அவதரித்து மனிச்சு ஏறிட்டுக்கொண்டு நிற்கிற நிலையிலே’ என்றாராம்.
எல்லா உலகும் உடையான் தன்னை –
‘உலகங்களினுடைய தோற்றமும் பிரளயமும் கிருஷ்ணனிடத்திலே; இது பிரசித்தம்;
சராசரங்களாகிற இந்தப் பிராணி வர்க்கம் எல்லாம் கிருஷ்ணன் நிமித்தமாகவே இருக்கின்றன. இது பிரசித்தம்,’ என்கிறபடியே,
எல்லா உலகங்கட்கும் ஈசுவரனான கிருஷ்ணனை. ‘இப்படி எல்லாவற்றையுமுடைய செருக்காலே உடைமை நோவுபடவிட்டுப்
பார்த்துக்கொண்டு இருப்பானோ?’ என்னில், ‘அங்ஙனம் இரான்,’ என்கிறார் மேல் :

குன்றம் ஒன்றால் மழை காத்த பிரானை –
இந்திரன் பசிக்கோவத்தாலே பசுக்களும் ஆயர்களும் தொலையும்படி மழை பெய்த போது, தோன்றியது ஒருமலையை எடுத்து,
அந்த ஆபத்தினின்றும் காத்த உபகாரகனை. ‘தீ மழை’ அன்றோ?

சொன்மாலைகள் நன்று சூட்டும் விதி எய்தினம் –
சொன்மாலைகள் நன்று சூட்டும்படியான பாக்கியத்தை அடையப்பெற்றோம். பரத்துவத்தில் குணங்கள் உளவாம் தன்மை மாத்திரமே உள்ளது,
அவதரித்த இடத்தே அன்றோ அவை பிரகாசிப்பன? ‘இப்படி விஷயம் நிறைவுற்றிருந்தால் ‘பேச ஒண்ணாது’ என்று மீளுகை அன்றிக்கே,
இந்நிலையிலே விளாக்குலை கொண்டு பேசும்படியானேன்,’ என்பார், ‘நன்று சூட்டும்’ என்கிறார்.
இவர் இப்போது ‘விதி’ என்கிறது,
பகவானுடைய கிருபையை. தமக்குப் பலிக்கையாலும், அவனுக்குத் தவிர ஒண்ணாதாகையாலும்,
‘விதி’ என்கிறார். ‘விதி சூழ்ந்ததால்’ -திருவாய்.2. 7 : 6.-என்றாரேயன்றோ முன்னரும்?
என்ன குறை நமக்கே –
ந ஷமாமி -‘சீற்றத்திற்கு’ இலக்கு ஆகாதே அவன் கிருபைக்கு விஷயமான நமக்கு ஒரு குறை உண்டோ?
நமக்கு ஒரு குறை உண்டாகையாவது, பகவானுடைய கிருபையை அளவிற்கு உட்படுத்துகையேயன்றோ?

காகாசுர விருத்தாந்தம்
‘ஸ :- பாதுகாவலே சொரூபமாக இருக்குமவர்,
தம் – தீய செயலிலே முதிர நின்ற அவனை,
நிபதிதம் பூமௌ – தெய்வத் தன்மையாலே பூமியிலே கால் வையாதவன் போக்கற்றுத் தரையிலே வந்து விழுந்தான்;
அன்றிக்கே, குழந்தை தீம்பு செய்தால் தந்தை தண்டிக்கத் தொடர்ந்தால், தாயின் காலிலே விழுமாறு போலே காணும்,
இவன் பூமியிலே விழுந்தது.
சரண்ய :-
ஏதேனும் தசையிலும் சரணமாகப் பற்றுதற்குத் தகுந்தவர்.
சரணாகதம் –
கண்வட்டத்தில் வேறு கதியில்லாமை தோன்ற விழுந்துள்ளவனை.
வதார்ஹமபி –
பெருமாள் சித்தாந்தத்தாலும் கொல்லுதற்கு உரியவனே; ஆனாலும்,
காகுத்ஸ்த : –
குடிப்பிறப்பால் வந்த நீர்மையாலே பாதுகாத்தார். ‘குடிப்பிறப்பு, தண்டிக்கத் தகுந்தவரைத் தண்டித்தற்குக் காரணமாய் இராதோ?’ என்னில்,
கிருபயா பரிபாலயது –
‘நாம் தொடங்கின கார்யம் பிரபலமான கர்மத்தாலே முடிக்க ஒண்ணாததைப் போன்று, அவரும் கிருபைக்குப் பரதந்திரப்பட்டவர்
ஆகையாலே நினைத்த காரியத்தை முடிக்கமாட்டார். அவன் கிருபை விளையும் பூமியைப் பற்றியவன் ஆனான்;
அதற்கு மேலே கிருபையும் விளைந்தது; இனி, அவர் எவ்வழியாலே தண்டிப்பார்?
ஆகையாலே, எனக்குக் குறை உண்டாகையாவது, பகவானுடைய கிருபை அளவிற்குட்பட்ட விஷயமாக அன்றோ?’ என்கிறார்.
(பெருமானுக்கு கிருபை விளையும் பூமி -பூமி பிராட்டி -சீதையால் – கிருபை விளைந்தது
எடுத்த கார்யம் செயல் முடிக்காமல் அன்றோ கிருபை தடுத்தது இங்கு )

————————————————————————–

நமக்கும் பூவின்மிசை நங்கைக்கும் இன்பனை ஞாலத்தார்
தமக்கும் வானத்தவர்க்கும் பெருமானைத் தண் தாமரை
சுமக்கும் பாதப் பெருமானைச் சொல்மாலைகள் சொல்லுமாறு
அமைக்க வல்லேற்கு இனியாவர் நிகர் அகல் வானத்தே?–4-5-8-

உபய விபூதி உக்தன் -ஸ்துதிக்கும் எனக்கு சத்ருசர் இல்லை -என்கிறார் –
நமக்கும் பூவின்மிசை நங்கைக்கும் இன்பனை –
அநாதி அஜ்ஞ்ஞானாதி சம்சார சம்சர்க்கத்தாலே -நீசனான எனக்கும் -நித்ய சூரிகள் நாயகி -பூவில் பிறப்பால் வந்த இனிமை
சௌகுமார்யம் சௌகந்த்யம் -பூவின் மிசை ஆத்ம குண பூர்த்தி -நங்கை
போக்யதா அதிசயத்தாலே -முதலிலே நமக்கும் -மீதி வழிந்த சொச்சம் அவளுக்கு
ஞாலத்தார்-தமக்கும் வானத்தவர்க்கும் பெருமானை லீலா விபூதியில் உள்ள –
இங்குள்ளார் முதலில் -படுகரணன் –விண்ணோர் தலைவன்
தண் தாமரை சுமக்கும் பாதப் பெருமானை -ஆசன பத்மம் தோற்று அதனால் சுமக்குமே -ஆசன பத்மத்திலே அழுந்தின திருவடிகள் –
சௌந்த்ர்ய சௌகந்த்ய லாவண்யா -இவ்வாகார அனுசந்தானத்தாலே
சொல்மாலைகள் சொல்லுமாறு அமைக்க வல்லேற்கு -உடை குலைப் படாமல் -மனஸ் சிதிலமாகா –
மற்றவர் பேச முடியாது -நான் பேசினேன் -நானும் சிதிலமாகாமல்
அமைத்து தரிக்க வல்லேன் -தேற்றி சொல்ல வந்தேனே
இனியாவர் நிகர் அகல் வானத்தே?–உபய விபூதியிலும் -த்ரிபாத் விபூதியிலும் அவிகார ஆகாரமாக –
அங்கு உள்ளாரும் அனுபவித்து அழுது கொண்டு இருக்க –
நானும் அழுதேன் -பாடும்படி கிருபையும் செய்தானே
இந்தலத்திலே தாமரை போலே இங்கேயே அனுபவிப்பிக்கப் பண்ணினான்
இருள் தரும் மா ஞாலத்திலே -தெளி விசும்பில் அனுபவிப்பார் சத்ருசம் அல்லர்
கலங்கா பெருநகர் -கலங்குவாரும் கலங்கப் பண்ணுவாறும் இல்லையே -விண்ணுளாரிலும் சீரியர்

‘தன் திருவடிகளை இன்று வந்து பற்றிய நமக்கும் தாமரை மலரில் வீற்றிருக்கும் பெரிய பிராட்டியார்க்கும் இனியனானவனும்,
பூலோகத்திலுள்ளவர்கட்கும் நித்தியசூரிகட்கும் தலைவனும், குளிர்ந்த தாமரை மலராலே சுமக்கப்படுகின்ற திருவடிகளையுடைய
பெருமானுமான சர்வேசுவரனைச் சொல் மாலைகள் சொல்லும்படியாகத் தரிக்க வல்ல எனக்குப்
பரமபதத்திலேயுள்ள நித்தியசூரிகளுக்குள் இனி ஒப்பாவார் யாவர்?’ என்கிறார்.
‘நமக்கும்’ என்ற உம்மை, இழிவு சிறப்பு. ‘தண் தாமரை சுமக்கும் பாதப் பெருமான்’ என்ற இவ்விடத்து,
‘மலர்மிசை ஏகினான்’ என்ற திருக்குறளை நினைவுகூர்க. ‘அமைக்க வல்லேன்’ என்றது, தரித்திருந்து பாடும்படியைத் தெரிவித்தபடி.
‘யாவர்’ என்ற வினா, இன்மைப்பொருளைக் குறித்து நின்றது. வானம் – இடவாகு பெயர்.

எம்பெருமானுக்குத் தம் பக்கல் உண்டான அன்பின் மிகுதியை நினைத்து, ‘அவனுடைய உபய விபூதிகளை உடையனாம் தன்மைக்கும்
மிருதுத் தன்மைக்கும் தகுதியாகக் கவி சொல்ல வல்ல எனக்குப் பரமபதத்திலும் ஒப்பு இல்லை,’ என்கிறார்.

நமக்கும் –
இன்று தன் திருவடிகளைப் பற்றிய நமக்கும்.
அன்றிக்கே, பிறந்து இறந்து பிறிவிகளிலே உழன்று திரிகின்றவர்கட்கும் இவ்வருகாயிருக்கிற நமக்கும்;
‘நீசனேன் நிறைவு ஒன்றும் இலேன்’ என்றாரே அன்றோ தம்மை?
பூவின்மிசை நங்கைக்கும் –
நித்திய சூரிகளுக்கும் அவ்வருகாய், ரூப குணத்தாலும் ஆத்தும குணத்தாலும் நிறைந்திருக்கிற பெரிய பிராட்டியார்க்கும்.
மலரில் மணத்தை வகுத்தாற் போலே இருந்துள்ள மிருதுத் தன்மையையும் இனிமையையும் உடையவளாதலின்,
‘பூவின் மிசை நங்கை’ என்கிறது.
‘இத்தலை நிறைவு இன்றியே இருக்கிறாப் போலே யாயிற்று அத்தலை குறைவு அற்றிருக்கிறபடி’ என்பார், ‘நங்கை’ என்கிறார்.

இன்பனை –
இன்பனாமிடத்தில், முற்பாடு இங்கேயாய்ப் பின்பு ஆயிற்று அவளிடத்தில் அன்பு செலுத்தியிருப்பது.
இலங்கையிலேயுள்ள சுவேல மலையிலே பெருமாள் எழுந்தருளி நிற்கச் செய்தே இராவணன் கோபுர சிகரத்தே வந்து தோன்றினவாறே,
‘இராஜத் துரோகியான பையல் திரு முன்பே நிற்கையாவது என்?’ என்று மஹாராஜர் அவன்மேலே எழப் பாய்ந்து வென்று வந்த போது
பெருமாள் அவரைப் பார்த்து, ‘இராஜாக்கள் இப்படிப்பட்ட சாகஸ காரியங்களைத் தாங்களே செய்யமாட்டார்கள்,’ என்றார்; என்றது,
‘சிலர்மேல் விழ வேண்டினால், சேனைத் தலைவர்கள் நிற்க அரசரோ மேல் விழுவார்?’ என்கிறார் என்றபடி.
‘ஸ்ரீராமபிரான் உலகங்கட்கெல்லாம் நாதனாய் இருந்தும் சுக்கிரீவனை நாதனாக இச்சிக்கிறார்,’ என்னா நின்றதே அன்றோ?
கிடைப்பது கிடையாதொழிவது இச்சியா நின்றார்.
‘அத்தகைய இந்த ஸ்ரீராமபிரான் சுக்கிரீவனைச் சரணமாக அடைந்தார்,’ என்னா நின்றதே அன்றோ?
நீர் மஹாராஜரான தரம் குலைய அவன் ஒரு வார்த்தை சொல்லுமாகில்,
நீர் தேடிப் போகிற சரக்குதான் நமக்கு என்ன செய்ய?’ என்றாரே அன்றோ?
இன்பனாமிடத்தில், முற்பாடு இங்கேயாய்ப் பின்பாயிற்று அவளிடத்தில் அன்பு செலுத்தியிருப்பது,’ என்பதற்குப் பிரமாணங் காட்டுகிறார்,
‘நீர்மஹாராஜரான தரம் குலைய’ என்று தொடங்கி. இது, ஸ்ரீராமா. யுத். 41 :4.
‘நீர் தேடிப்போகிற சரக்கு’ என்றது, சீதாபிராட்டியை.
பரிகரம் இருக்க அரசனா முன்னால் போவது என்றாரே பெருமாள் –
தாமே இவனுக்கு பரிகரம் என்ற நினைவால் அர்ஜுனனுக்கு இவன் தான் முன்னே இன்று பார்த்த சாரதி பெயர் வாங்கிக் கொண்டார் –
அன்று ஈன்ற கன்றின் மேல் உள்ள வாத்சல்ய அதிசயம் –
இச் சுலோகப்பொருளோடு,
‘இந்நிலை விரைவின் எய்தா தித்துணை தாழ்த்தி யாயின் நன்னுதற் சீதை யாலென்? ஞாலத்தாற் பயனென்? நம்பி!
உன்னையான் தொடர்வன்; என்னைத் தொடருமிவ் வுலக மெல்லாம்; பின்னை என்?
இதனை நோக்கி விளையாடிப் பிழைப்ப செய்தாய்.’என்ற கம்பராமாயணச் செய்யுளை ஒப்பு நோக்குக.

‘ஸ்ரீ விபீஷணாழ்வானைப் புகுரவொட்டேன்!’ என்றார் மஹாராஜர்;
‘இவன் புகுராவிடில் நாம் உளோம் ஆகோம்,’ என்கிறார் பெருமாள்;
‘இப்படி இருவரும் மாறுபடுதற்குக் கருத்து என்?’ என்று நஞ்சீயர் கேட்க,
‘இருவரும் ‘சரணமாகப் பற்றினவர்களை விடோம்!’ என்று மாறுபடுகிறார்கள் காணும்,’ என்பது பட்டர் அருளிச்செய்த வார்த்தை. என்றது,
‘சுக்கிரீவம் சரணம் கத:’ என்றதனை நடத்தப் பார்த்தார் மஹாராஜர்;
‘ராகவம் சரணம் கத:’-(சுக்ரீவம் நாதம் இச்சதி -வார்த்தைக்கு இந்த அர்த்தம் என்றபடி ) என்றதை நடத்தப் பார்த்தார் பெருமாள்,’ என்றபடி
‘அங்ஙனமாயின், மஹாராஜர்க்குத் தம்மை அடிமையாக நினைத்திருக்கும் நிலை குலையாதோ?’ எனின், ஆகையாலே அன்றோ
‘ஆநயைநம் ஹரி சிரேஷ்ட – வானரங்களுக்குத் தலைவனே!
இவனை அழைத்துக் கொண்டு வா’ என்று அவரை இடுவித்து அழைத்துக்கொள்ள வேண்டிற்று?

‘ஆதலால் அபய மென்ற பொழுதத்தே யபய தானம் ஈதலே கடப்பாடு என்பது இயம்பினீர் என்பால் வைத்த
காதலால்; இனி வேறு எண்ணக் கடவதென்? கதிரோன் மைந்த!
கோதிலாதவனை நீயே என்வயிற் கொணர்தி என்றான்.’- என்றார் கம்பநாடரும்.

‘இப்படி அவன் இருக்கைக்கு அடி என்?’ என்னில், அதனை அருளிச்செய்கிறார் மேல் :
ஞாலத்தார் தமக்கும் வானத்தவர்க்கும் பெருமானை –
இப்படி நெடுவாசிபட்ட விஷயங்களிலே சினேகம் ஒத்திருக்கைக்கு அடி, சம்பந்தம் இரண்டு இடத்தில் உள்ளாரோடும் ஒத்திருப்பினும்,
இவர் படுக்கைப் பற்றில் உள்ளவராகையாலே.
அன்றிக்கே, ‘அவன் இறைவனான நிலையும் இத்தலை பரதந்திரமான நிலையும் ஒத்திருக்கையாலே’ என்னுதல்.
அன்றிக்கே, ‘தாய் தந்தையர்கள் குழந்தைகளில் குறைவாளர் பக்கலிலே யன்றோ இரங்குவது?
அதனாலே, சமுசாரிகள் முற்பட வேண்டுகிறது,’ என்னுதல். அந்தப் பரம பதமும் உண்டாயிருக்கவே அன்றோ,
‘அந்தப் பரமாத்துமா உயிர்க்கூட்டம் எல்லாம் பிரிகிருதியில் லயப்பட்டுக் கிடந்த அக்காலத்தில் தான்
தனியாய் இருந்து சந்தோஷத்தை அடையவில்லை,’ என்கிறது?

தண் தாமரை சுமக்கும் பாதப்பெருமானை –
குளிர்ந்த தாமரைத் தவிசினாலே தரிக்கப்பட்ட திருவடிகளையுடைய பெருமானை.
குளிர்த்தியாலும் பரிமளத்தாலும் செவ்வியாலும் தாமரை திருவடிகளுக்குத் தோற்றுச் சுமக்கிறாப் போலே ஆயிற்று இருக்கிறது;
ஆதலின், ‘தாமரை சுமக்கும் பாதம்’ என்கிறது. ‘தாமரை நின் கண் பாதம் கை ஒவ்வா’ என்றது அன்றோ முன்பும்?
ஸ்ரீ ஸூ ந்தர பாஹு ஸ்தவ ஸ்லோகம் –
சௌகந்த்யம் சௌகுமார்யம் மார்த்வம் போட்டி -டம்பம் அடிக்கும் –ஆசன தாமரை -பராஜிதம் -திருவடித் தாமரை வென்றதே –
பெருமான் –
எல்லார்க்கும் தலைவன்
சொல் மாலைகள் சொல்லுமாறு அமைக்க வல்லேற்கு –
அவனுடைய உபய விபூதிகளை உடைமையால் வந்த ஐசுவரியத்துக்கும் மிருதுத்தன்மைக்கும் தகுதியாம்படியான கவி பாட வல்ல எனக்கு.
இதற்கு, ‘சர்வேசுவரன்,ஆழ்வீர்! நம்மை ஒரு கவி சொல்லும்,’ என்றால்,
அப்போதே கவி சொல்லிச் சமையும்படியாக வல்ல எனக்கு,’-ஆசு கவித்துவம்- என்கிறார் என்று முன்புள்ள முதலிகள் நிர்வஹிக்கும்படி.
அங்ஙனன்றிக்கே, பட்டர், ‘என்னாகியே, தப்புதல் இன்றித் தனைக் கவி தான் சொல்லி’ என்கிறபடியே,
சர்வேசுவரன் கவி பாடினான். ஆகையாலே, கவி பாடத் தட்டு இல்லை;
அவன் அங்கீகரித்துத் திருக்கண்களாலே குளிர நோக்கி,
‘நீர் ஒரு கவி சொல்லும்,’ என்றால் ‘பிரீதியாலே உடை குலைப்படாமல்
தரித்து நின்று சொல்ல வல்லேனான எனக்கு’ என்று அருளிச்செய்வர்.

முன்புள்ள முதலிகள் நிர்வாஹத்துக்குக் கருத்து, ‘ஆசு கவியாகக் கவி சொல்லிச் சமைக்க வல்லேனான எனக்கு’ என்பது.
பட்டர் நிர்வாஹத்திற்குக் கருத்து, ‘தரித்து நின்று சொல்ல வல்லேனான எனக்கு’ என்பது.
‘என்னாகியே’ என்ற பாசுரம், திருவாய். 7. 9 : 4.‘உடைகுலைப்படாதே’என்றது ‘பரவசப்படாமல்’ என்றபடி.

இனி யாவர் நிகர் அகல் வானத்தே –
பரமபதத்திலே தரித்து நின்று, ‘அஹமந்நம் அஹமந்நம் – நான் பரமாத்துமாவுக்கு இனியன், நான் பரமாத்துமாவுக்கு இனியன்’
என்னுமவர்கள் எனக்கு என் கொண்டார்? திரிபாத் விபூதியாய்ப் பரப்பை யுடைத்தாமத்தனையோ வேண்டுவது? –
அகல் வானம் அது -நிகர் அற்றவன் அடியேனே
தெளிவிசும்பு ஆகையாலே அந்நிலந்தானே சொல்லுவிக்கும்;
இருள் தருமாஞாலமாகையாலே இந்நிலம் அதனைத் தவிர்ப்பிக்கும்;
‘சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியர்’-திருவிருத்தம், 79.– என்னக் கடவதன்றோ?

———————————————————————————-

வானத்தும் வானத்துள் உம்பரும் மண்ணுள்ளும் மண்ணின் கீழ்த்
தானத்தும் எண் திசையும் தவிராது நின்றான் தன்னை,
கூனற் சங்கத் தடக்கை யவனை, குடமாடியை,
வானக் கோனைக் கவிசொல்ல வல்லேற்கு இனி மாறுஉண்டோ?–4-5-9-

எண் திசையும் தவிராது நின்றான்-வியாப்தி தசை — குடமாடியை,-அவதார தசை -உள்ளடக்கி ஸ்துதிக்க வல்லன்
வானத்தும் வானத்துள் உம்பரும் மண்ணுள்ளும்-ஸ்வர்க்கம் -உபரிதன லோகம் உள் வானம் -மகாதாதி சித்தர்
மண்ணின் கீழ்த் தானத்தும் எண் திசையும் தவிராது நின்றான் தனை,-வியாப்தி தசை
தேவாதி ப்ராஹ்மனாதி-ஆக எட்டு வகை -தேவர்களில் நான்கு வகை
ப்ராஹமணர் ராஷசர் -ராவணன் -அஷ்ட விதங்களில் சர்வ வியாபகன்
கூனற் சங்கத் தடக்கை யவனை, குடமாடியை,-பரம சுலபன் -அவதார தசை -முகம் தொடராமல் ரஷிக்கை அன்றிக்கே
பவ்யமான சங்கத் தாழ்வான்-தர்ச நீயமான –
குடமாடியை-சர்வ ஜன மநோ ஹாரி சேஷ்டிதங்கள்
இந்நிலையில் வானவர் கோன்-என்றபடி –
மனுஷ்யத்வே பரத்வம் -கீதாச்சார்யன் நிலையில் இல்லை குடமாடும் பொழுதே
இத்தை தான் அவர்களுக்கு அபூர்வம் –
வியாப்தி -அவதாரம் சேஷ்டிதம் பரத்வம் -கபளீகரித்து பாட வல்ல எனக்கு யார் நிகர்
இனி மாறுஉண்டோ?–ஒவ் ஒரு ஆகாரம் பாடவும் அதிகாரிகள் இல்லை

‘சுவர்க்க லோகத்திலும் அதற்குள்ளே மேலேயிருக்கின்ற பிரமலோகம் முதலான உலகங்களிலும் பூலோகத்திலும் பூமியின் கீழேயிருக்கின்ற
பாதாளலோகத்திலும் எட்டுத் திக்குகளிலும் நீங்காது பரந்து நிற்கின்றவனும், வளைந்த சிறந்த பாஞ்சஜன்யம் என்னும்
சங்கைப் பெரிய கையிலே உடையவனும், குடக்கூத்தாடியவனும், நித்தியசூரிகளுக்குத் தலைவனுமான சர்வேசுவரனைக் கவி சொல்ல
வல்ல எனக்கு இனி ஒப்பாவார் உளரோ?’ என்கிறார்.
கூன் நல் – கூனல். வான் அம் கோன் – வானக்கோன்; அம் – சாரியை.

‘அவனுடைய எங்கும் பரந்திருத்தல் அவதாரங்கள் முதலான எல்லா நிலைகளிலும் புக்குக்
கவி சொல்ல வல்ல எனக்கு எதிர் உண்டோ?’ என்கிறார்.
நித்தியசூரிகள் தாங்கள் அனுபவிக்கின்ற விஷயத்தில் இனிமையின் மிகுதியாலே வேறு ஒன்று அறியார்கள்;
யாரைக் கண்டால் கண் பார்க்காதோ புத்தி வேறு ஒன்றில் போகாதோ -சுருதி வாக்கியம் –
வேறு ஒரு பிரகாரம் போகாது என்று கொண்டு -ஆழ்வார் –
முத்தர்கள் ‘இந்தச் சரீரத்தை நினையாமலே எங்கும் சஞ்சரிக்கிறார்கள்’ என்கிறபடியே, இவ்வுலக வாழ்க்கையை நினையாமல்
நிற்பர்களாகையாலே, அவர்களும் நித்தியசூரிகளோடு ஒப்பர்கள்;
இங்குள்ள பராசரர் வியாசர் முதலிய முனி புங்கவர்கள் ஒரோ துறையிலே மண்டியிருப்பர்கள்; ‘எங்ஙனே?’ என்னில்,
‘ஸ்ரீ வால்மீகி பகவான் ஸ்ரீ ராமாவதாரமல்லது அறியாதே இருக்கும்.
ஸ்ரீ பராசர பகவானும் ஸ்ரீ வேதவியாச பகவானும் கிருஷ்ணாவதாரமல்லது அறியார்கள்;-கிருஷ்ண த்வைபாயனர் —
ஸ்ரீ சௌனக பகவான் அர்ச்சாவதாரத்திலே ஈடுபட்டவனாய் இருக்கும்;
அங்ஙனன்றிக்கே, சர்வேசுவரனை எல்லா நிலைகளிலும் புக்குக் கவி பாடப்பெற்ற என்னோடு ஒப்பார் உளரோ?’ என்கிறார்.

வானத்தும் –
சுவர்க்கத்திலும்,
வானத்து உள் உம்பரும் –
அதற்குள்ளாய்ப் பெரியதாயிருக்கிற மஹர் லோகம் முதலியவைகளிலும்.
அன்றிக்கே,
‘வானத்தும் வானத்துள் உம்பரும் என்பதற்குச் சுவர்க்கம் முதலான உபரிதனலோகங்களிலும்
அவற்றுக்குள்ளே மேலே இருக்கிற பிரம லோகம் முதலானவைகளிலும் இருக்கிற
பிரமன் முதலான தேவர்கள்’ என்று பொருள் கூறலுமாம்.
மண்ணுள்ளும் – பூமியிலும்,
மண்ணின் கீழ்த்தானத்தும் –
கீழே உண்டான பாதாளம் முதலியவைகளிலும்,
எண்திசையும் –
எட்டுத்திக்குகளிலும்,
தவிராது நின்றான்தன்னை –
அவ்வத்தேசங்களிலும் அவ்வத்தேசங்களிலே இருக்கிற தேவர்கள் முதலான எல்லாப் பொருள்களிலும்,
கடல் கோத்தாற் போலே எங்கும் ஒக்கப் பரந்து நிறைந்து இருக்கிறவனை. இதனால், அணு அளவான பொருள்களிலும்
விபுவாய் இருக்கிற பொருளிலும் வாசி சொல்லுகிறது;
‘எங்ஙனே’ என்னில், அணுவான ஆத்துமா, சரீரம் எங்கும் பரந்திருக்க மாட்டாது;
விபுவான ஆகாயத்திற்கு ஏவுகின்ற தன்மையோடு கூடிப் பரந்திருக்கும் தன்மை இல்லை.

இப்படி எங்கும் பரந்து நிற்கிறவன், பரந்திருக்கப்படுகின்ற பொருள்களோடு ஒக்க வந்து அவதரிக்கும்படி சொல்லுகிறது மேல் :
கூன் நல் சங்கம் தடக்கையவனை –
‘இப்படி அவதரிப்பதுதான் இதரசஜாதீயனாயோ? என்னில், ‘ஆதியஞ்சோதி உருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த’ என்கிறபடியே,
தன்னுடைய பிரகிருதி சம்பந்தமில்லாத திருமேனியை இதர சஜாதீயமாக்கிக்கொண்டாயிற்று வந்து அவதரிப்பது,’ என்கிறது. என்றது,
‘தேவர்களுக்கும் தேவர்களான நித்திய சூரிகளுக்குத் தலைவனே! சங்கு சக்கரம் கதை இவற்றைத் தரித்தவனாய் வந்து அவதரித்தாய்,’
என்று சொல்லும்படியாயிற்று இருந்தது என்றபடி.

‘அஞ்சலி செய்தவராய் வணக்கத்துடன் இருக்கின்ற’ என்கிற இளைய பெருமாளைப் போலே, பகவானுடைய அனுபவத்தால்
வந்த மகிழ்ச்சியாலே சரீரத்தை வளைத்துக் கொண்டிருப்பவன் ஆதலின், ‘கூனல் சங்கம்’ என்கிறது. என்றது,
‘வாயது கையதுவாக அனுபவிக்கின்றவன் அன்றோ?’ என்றபடி.
‘உண்பது சொல்லில் உலகளந்தான் வாயமுதம்; கண்படை கொள்ளல் கடல்வண்ணன் கைத்தலத்தே;
பெண்படையார் உன்மேல் பெரும்பூசல் சாற்றுகின்றார்; பண்பல செய்கின்றாய் பாஞ்ச சன்னியமே!’-என்ற நாய்ச்சியார் திருமொழிப்
பாசுரத்தை அடியாகக்கொண்டு எழுந்தது.–‘வாயது கையது’ என்பது, சிலேடை.
உரிமை நிலை நாட்டி -வாரணமாயிரம் -இப்பொழுது அத்தை கேட்கிறாள் -கற்பூரம் நாறுமோ –
சங்கரய்யா உன் செல்வம் சால பெரியதே -நிகர் உனக்கு யார் -என்கிறாள்
லீலா விபூதியும் நித்திய விபூதியுமாகிய இரு வகைப்பட்ட உலகங்களும்
வந்து ஒதுங்கினாலும், பின்னையும் கையே விஞ்சி இருக்குமாதலின் ‘தடக்கை’ என்கிறது.
குடமாடியை –
எங்கும் ஒரே தன்மையாய்ப் பரந்து நின்றாற்போலே, ஓர் ஊராகக் காணும்படி குடக்கூத்து ஆடினபடி.
குடக்கூத்தினைக் கூறியது, எல்லாச் செயல்களுக்கும் உபலக்ஷணம்
வானம் கோனை –
ஓர் ஊர் அளவன்றிக்கே ஒரு நாட்டுக்காகக் காட்சி கொடுத்துக்கொண்டிருக்கிறபடி
கவி சொல்ல வல்லேற்கு –
இப்படி இருக்கிறவனை எங்கும் புக்குக் கவி சொல்ல வல்ல எனக்கு.
இனி மாறு உண்டே –
அகல்வானம்’ என்று விசேடித்துச் சொல்ல வேண்டுமோ?
‘நித்திய விபூதி லீலா விபூதிகளாகிற இரு வகைப்பட்ட உலகங்களிலும் எதிர் இல்லை’ என்கிறார்.

———————————————————

உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும் கிடந்தும் நின்றும்
கொண்ட கோலத்தொடு வீற்றிருந்தும் மணம் கூடியும்
கண்ட ஆற்றால் தனதே உலகு என நின்றான் றன்னை
வண்தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே.–4-5-10-

வியாப்ய விஷய ரஷண அர்த்தமான மநோ ஹார சேஷ்டிதங்கள்
உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும் கிடந்தும் நின்றும்-கிரியா பதங்கள் எல்லாம் -வைத்து -கடந்தது அளந்தது –
கொண்ட கோலத்தொடு வீற்றிருந்தும் -மீண்டு வந்து திருப் பட்டாபிஷேகம் செய்து அருளி
மணம் கூடியும்-நித்ய உத்சவமாய் -திருக்கல்யாணம்
கண்ட ஆற்றால் தனதே உலகு என நின்றான் றன்னை-சேஷ்டித பிரகாரங்கள் மூலம் –பதிம் விச்வச்ய -பிரமாணம் –
சேஷம் -காட்ட -பிரமாணம் வேண்டாமே –
தனக்கே சேஷம் நாடாகச் சொல்லுமே
வண்தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே.-
அருள் மாரி-கலியன் -திராவிட பிரபந்தம் -விலஷணம்-சர்வாதிகாரம் –
பாட அவன் அங்கீ காரம் ஆகிய புண்ணியம் பெற்றேனே –
பாகவதர்களுக்கு ஆனந்த வர்ஷி –
எண்ணில் அடங்காத சேஷ்டிதங்களை எண்ணிப்பாடின இவற்றுக்குள் அடங்கும் -அகடிகடநா சாமர்த்தியம்

பிரளய காலத்தில் உலகத்தையெல்லாம் புசித்தும், பிரளயம் நீங்கியவுடனே வெளி நாடு காண உமிழ்ந்தும், திரிவிக்கிரமனாய் அளந்தும்,
வராக அவதாரமாய் இடந்து எடுத்தும், கடற்கரையிலே கிடந்தும், இலங்கையில் போர் முடிந்த பின்பு தேவர்களுக்குக் காட்சியளித்து நின்றும்,
மீண்டு வந்து மகுடாபிஷேகம் செய்த திருக்கோலத்தோடு வீற்றிருந்தும், இராச்சிய பரிபாலனம் செய்தும் போந்த காரியங்களைக்
கண்கூடாகப் பார்த்த தன்மையால் இந்த உலகமெல்லாம் தனக்கே உரிமைப்பட்டவை என்று சொல்லும்படி நின்ற சர்வேசுவரனைப் பற்றி
வளப்பமான தமிழ்ப்பிரபந்தத்தைச் செய்வதற்குப் புண்ணியத்தைச் செய்தேன்;
இப்பிரபந்தமானது அடியார்க்கு இன்பத்தையுண்டாக்கும் மேகமாகும்,’ என்கிறார்.

‘மணங்கூடியும் செய்து போந்த காரியங்களைக் கண்ட ஆற்றால்’ என விரித்துக்கொள்க.

அவன் செயல்கள் அடங்க என் சொல்லுக்குள்ளேயாம்படி கவி பாட வல்லேனாய், வகுத்த சர்வேசுவரனிடத்திலே வாசிகமான அடிமை
செய்யப்பெற்ற அளவன்றிக்கே, ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு ஆனந்தத்தையுண்டாக்கக் கூடியவனாகவும் பெற்றேன்,’ என்கிறார்.

உண்டும் –
பிரளய ஆபத்திலே திருவயிற்றிலே வைத்து நோக்கியும்.
உமிழ்ந்தும் – திருவயிற்றிலேயிருந்து நெருக்குப்படாதபடி வெளி நாடு காணப் புறப்பட விட்டும்.
கடந்தும் – மஹாபலி போல்வார் பருந்து இறாஞ்சினாற் போலே பறித்துக்கொண்டால் எல்லை நடந்து மீட்டும்.
இடந்தும் – பிரளயம் கொண்ட பூமியை மஹாவராஹமாய் அண்டப் பித்தியிலே செல்ல முழுகி எடுத்துக்கொண்டு ஏறியும்,
கிடந்தும் – என்றது,
‘பகைவர்களை அழிக்கின்ற ஸ்ரீராமபிரான் பாம்பின் உடல் போலே இருக்கிற திருக்கையைத் தலையணையாகக் கொண்டு, கிழக்கு
முகமாகக் கையைக் கூப்பிக்கொண்டு கடலை நோக்கிச் சயனித்தார்,’ என்கிறபடியே, கிடந்த கிடையிலே இலங்கை குடி வாங்கும்படியாக,
ஒரு கடல் ஒரு கடலோடே சீறிக் கிடந்தாற்போலே கடற்கரையிலே கிடந்தபடியைத் தெரிவித்தவாறு.
நின்றும் –
‘கம்பீரமான வில்லைப் பிடித்துக் கொண்டு நிற்கின்ற ஸ்ரீ ராமபிரானைத் தாரையானவள் கண்டாள்,’ என்கிறபடியே, நின்ற நிலை
கொண்ட கோலத்தொடு வீற்றிருந்தும் –
‘பர்ணசாலையில் எழுந்தருளியிருப்பவரும் சடை மரவுரி இவற்றைத் தரித்தவருமான ஸ்ரீ ராமபிரானை ஸ்ரீ பரதாழ்வான் பார்த்தார்,’ என்கிறபடியே,
இருந்த இருப்பாதல்; க்ஷத்திரியர்களுக்குரிய ஒப்பனையோடே பதினோராயிரம் ஆண்டு இருந்த இருப்பாதல்.
மணம் கூடியும் –
பதினோராயிரம் ஆண்டு தன் படுக்கைப் பற்றான பூமியைக் காப்பாற்றுகையாலே ஸ்ரீ பூமிப்பிராட்டி அணைக்க, அவளோடே கலந்தும்.

கண்ட ஆற்றால் உலகு தனதே என நின்றான் தன்னை –
பிரமாணங்கொண்டு அறிய வேண்டாமல், தொன்று தொட்டு வருகின்ற அனுபவம் கொண்டு,
‘இவனுக்கே உரிமை’ என்று அறியலாய் இருக்கை; என்றது, ஒருவன் ஒரு நிலத்தைத் திருத்துவது கமுகு வைப்பது
எரு இடுவதாய்க் கிருஷி பண்ணாநின்றால், ‘இது இவனது’ என்று அறியலாமே அன்றோ?’
ஒத்தி நிலத்தில் கமுகு வைக்க மாட்டார்கள் —
‘பெய்த காவு கண்டீர் பெருந்தேவுடை மூவுலகே,’ –திருவாய். 6. 3 : 5.-என்னக் கடவதன்றோ?

வண் தமிழ் நூற்க நோற்றேன் –
திருவாய்மொழி பாடுகைக்குப் பாக்கியம் செய்தேன். தன்னைச் சொன்ன மாத்திரத்தில் எல்லாப் பலன்களையும்
கொடுக்கக் கூடியதான உதார குணத்ததாய் இருத்தலின், ‘வண்தமிழ்’ என்கிறது.
அன்றிக்கே.
இது முன்னே நடந்ததாயிருந்தாலும் இப்பொழுது நேரிற்கண்டது போல இருக்கின்றது,’ என்பது போன்று,
லவ குசர்கள் பாட பாட நடந்த ராம சரித்ரம் மக்களுக்கு விளங்கினது போலே –
பழையதாகச் செய்தவை இவர் பேச்சாலே இன்று செய்த செயல் போலே விளக்கமாய் இருத்தலின், ‘வண்தமிழ்’ என்கிறது என்னுதல்.
‘கண்டவாற்றால்’ என்று நேரில் பார்ப்பதாய் இருக்கிறதே அன்றோ?

அடியார்க்கு இன்பமாரியே –
சர்வேசுவரனைக் கவி பாடப் பெற்ற இதுவேயோ? இது, வைஷ்ணவர்களுக்கு ஆனந்தத்தை உண்டாக்கக் கூடியதாகவும் ஆயிற்று.
இன்பத்தையுண்டாக்கும் மேகம் ஆதலின், ‘இன்பமாரி’ என்கிறது.
‘இது எனக்கு இருக்கிறபடி கண்டால், இது உகக்குமவர்களுக்கு எங்ஙனே இருக்கிறதோ!’ என்கை.
‘தொண்டர்க்கு அமுது உண்ணச் சொன்மாலைகள் சொன்னேன்,’ என்றாரே அன்றோ?

———————————————————–

மாரி மாறாத தண் அம் மலை வேங்கடத்து அண்ணலை
வாரி மாறாத பைம்பூம் பொழில் சூழ் குருகூர் நகர்க்
காரி மாறன் சடகோபன் சொல் ஆயிரத்து இப்பத்தால்
வேரி மாறாத பூமேல் இருப்பாள் வினை தீர்க்குமே.–4-5-11-

திருவாய் மொழிப் பிள்ளை -இவரும் வைகாசி விசாகம் திருவவதாரம் –
திருவேங்கடத்தான் ஆழ்வாரை சூழ்ந்தே இருப்பார்கள் -ஆழ்வார் திருநகரி –
அன்வய மாத்ரத்தாலே பகவத் அனுபவ விரோதியான சகல பாபங்களையும் தன கடாஷ மாத்ரத்தாலே போக்கி அருளுவாள்
மாரி மாறாத தண் அம் மலை வேங்கடத்து அண்ணலை-அனுக்ரஹம் -ஆழ்வார் வாக் நதி ஓட –அழகிய குளிர்ந்த திருமலை
சீலம் உடைய -தாழ்ந்தாருக்கு முகம் கொடுத்து நிற்கும் -சௌசீல்ய சீமா பூமி -நிருபாதிக சுவாமி
வாரி மாறாத பைம்பூம் பொழில் சூழ் குருகூர் நகர்க்-ஜல சம்ருத்தி மாறாமல் –
பாத பாதிகளுக்கு சிசிரோபசாரம் -மரங்களுக்கு -குளிர்ந்த உபசாரம்
காரி மாறன் சடகோபன் சொல் ஆயிரத்து இப்பத்தால்
பித்ரு சம்பந்தம் உடையவராய் -மாறன் குடிப்பெயர் -உலக இயல்பில் இருந்து மாறி
வேரி மாறாத பூமேல் இருப்பாள் வினை தீர்க்குமே.–வேரி பரிமளம் -மது பிரவாகம் மாறாமல் தாமரையில் நித்யவாசம்
அனுபவ விரோதிகள் -ரதி மதி -இத்யாதி -கடாஷம் ஒன்றாலே –
ஈஸ்வரத்வ அபராத சஹாத்வம் அவர்ஜ நீயம் என்று கருத்து –

‘மழை மாறாமல் இருந்துகொண்டிருக்கின்ற குளிர்ந்த அழகிய திருமலையில் எழுந்தருளியிருக்கின்ற திருவேங்கடமுடையானை,
வருவாய் மாறாமல் இருக்கின்ற பசுமையான பூக்கள் நிறைந்த சோலைகளாற் சூழப்பட்ட திருக்குருகூரிலே எழுந்தருளியிருக்கின்ற
காரிமாறரான சடகோபரால் அருளிச்செய்யப்பட்ட ஆயிரத்துள் இப்பத்துத் திருப்பாசுரங்களையும் சொல்லுகிறவர்கட்கு,
வாசனை மாறாத தாமரைப் பூவில், எழுந்தருளியிருக்கின்ற பெரிய பிராட்டியார் வினையைத் தீர்ப்பார்,’ என்கிறார்.
வாரி – வருவாய் : வரவுக்குக் கருவியாய் இருப்பது. இ -கருவிப்பொருள் விகுதி. காரி – ஆழ்வாருடைய தந்தையார் பெயர்.
மாறன் சடகோபன் – இவருடைய திருப்பெயர். வேரி – வாசனை. தீர்க்கும் – செய்யுமென் முற்று.

‘இத்திருவாய்மொழி கற்றாரைப் பெரிய பிராட்டியார் தம் பொறுப்பாகக் கொண்டு
எல்லாத் துக்கங்களையும் போக்குவார்,’ என்கிறார்.

மாரி மாறாத தண் அம் மலை வேங்கடத்து அண்ணலை –
எப்பொழுதும் மழை பெய்கையாலே சிரமத்தைப் போக்கக் கூடியதாய்க் காட்சிக்கு இனியதான திருமலையையுடைய
சர்வேசுவரனை ஆயிற்றுக் கவி பாடிற்று; ‘நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பனை’ என்கிறபடியே,
நித்திய அநபாயினியான பெரிய பிராட்டியாருக்கு முன்பே நித்திய சமுசாரிகளுக்கும் முகங்கொடுக்கும் சீலமுடையவனது
தன்மையைச் சொல்லிற்றாகையாலே, சீலத்துக்கு எல்லையான திருவேங்கடமுடையான் ஆயிற்றுக் கவி பாடிற்று.
‘விண்முதல் நாயகன் நீள் முடி வெண் முத்த வாசிகைத்தாய், மண் முதல் சேர்வுற்று
அருவி செய்யா நிற்கும் மாமலை’ -திரு விருத்தம் -50-ஆகையாலே,
அறற்றலையாய்க் காட்சிக்கு இனியதாய் இருத்தலின், ‘மாரி மாறாத தண் அம் மலை’ என்கிறது.
கிரீட மகுட சூடாவதம்ச -திரு மலை கிரீடம் போலே -வெண் முத்தம் போலே அருவி
அரல்- நீர் தலை தன்னிடம் அறற்றலை ஜலம் மாறாத தேசம் -தர்மம் தலையில் கொண்ட தேசம் -என்றுமாம்-

வாரி மாறாத பைம்பூம்பொழில் சூழ் குருகூர் நகர் –
அழகியதாய்க் காட்சிக்கு இனியதாய் இருந்துள்ள பொழிலாலே சூழப்பட்ட திரு நகரி.
திருநகரிக்கு ஸஹ்யம் திருமலையாகையாலே,
திருமலை மாரி மாறாதாப் போலே திருநகரியும் வாரி மாறாதே இருக்குமாதலின், ‘வாரி மாறாத நகர்’ என்கிறது.

காரி மாறன் சடகோபன் சொல் ஆயிரத்து இப்பத்தால் ‑
சொன்ன பொருளில் அதிசங்கை பண்ணாமைக்கு ஆப்தி அதிசயம் சொல்லுகிறது.
வேரி மாறாத பூமேல் இருப்பாள் வினை தீர்க்கும் –
‘இத்திருவாய்மொழி கற்றார்க்குப் பலம் கொடுப்பாள் பெரிய பிராட்டி,’ என்கிறது. திருமலை மாரி மாறாதாகையாலே,
திருநகரி வாரி மாறாது; ஆறாக் கயமாகையாலே -பொற்றாமரை கயமாகையாலே –
பிராட்டியுடைய ஆசனமாகிய தாமரை வேரி மாறாது.
(வேரி பரிமளம் -கீழே பன்னீராயிரத்தில் மது அர்த்தம்
மாரி-வாரி -வேரி-மூன்றும் மாறாது – )

‘இது கற்றார்க்கு இவள் பலம் கொடுக்க வேண்டுவான் என்?’ என்னில், தனக்கு முன்பே தான் காட்டிக்கொடுத்த
சேதனருக்கு புருஷகாரமாக திருவடியைக் காட்டி அவற்றை சேதனருக்கு கொடுத்த என்றபடி -இந்த சமுசாரியை
விரும்பும் சீல குணத்தையாயிற்று இதில் சொல்லிற்று; இந்தச் சீல குணம் ஒருவர்க்கும் நிலம் அன்று;
தான் அறிதல் மயர்வற மதிநலம் அருளப்பெற்றவர் அறிதல், செய்யும் இத்தனையாயிற்று;
‘இந்தப் பிரபாவத்தை அறிந்து இவர் வெளியிட்டார்,’ என்னும் கருணையின் மிகுதியாலே, –
பிரசாத வெள்ளம் திருக்கண்களில் வழிய பிரவாஹமாக வெளியிட –
சர்வேசுவரன் பலம் கொடுக்கிற நிலையிலே அவனை விலக்கி,
‘நானே இதற்குப் பலம் கொடுக்கவேண்டும்,’ என்று தனக்கே பொறுப்பாக ஏறிட்டுக் கொண்டு, பலம் கொடுக்கும்.
இத்திருவாய்மொழி கற்றாருடைய, பகவானுடைய அனுபவத்திற்கு விரோதியான
எல்லாத்தடைகளையும் ஈண்டு ‘வினை’ என்கிறது. தீர்க்கும் – போக்குவாள்.
‘இத்திருவாய்மொழி கற்றார்க்கு அந்தப்புரத்திலே படியும் நடையும்’ என்கை.
வினை தீர்க்கும் பாசுரம் -பலம் கொடுக்கும் வியாக்யானம் –அநிஷ்டம் போக்கி இஷ்ட பிராப்தி கிட்டும்
சகல பிரதி பந்தகங்கள் போக்கும் -தன்னடையே பலம் கிட்டுமே -படி நடை -இரண்டும் அந்தப்புரம் –

————————————————————————————–

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

ஆனந்த நிர்ப்பர ஆ தீன விபூதி உக்தம் அத வீஷம்
நான்யஸ்ய சமாப்தி ஆசசாத அதி பஞ்சமா
நாபி அனவாப்ய மத்ய ஆனந்த பூரம்
நான்யத்ராப்ய அஸ்தி நாபி அநவாப்யம் அஸ்தி

ஆ தீன விபூதி உக்தம் -தீன விபூதி லீலா -அ தீன -நித்ய விபூதி
வைகுண்ட நாதம்
அத வீஷம்-நன்கு கண்டார் -நன்றாக ஸ்தோத்ரம்
நான்யச்ய சமாப்தி -அன்யா சம நாஸ்தி
ஆசசாத அதி பஞ்சமா–ஐந்தாவில் கூறி
நாபி அனவாப்ய மத்ய -நிறைவேறாத ஆசையும் இல்லையே
ஆனந்த பூரம் -மகிழ்ச்சியில் எல்லை

நித்ய விபூதி வைசிஷ்ட்யம் -இதில் காட்டிய கல்யாண குணம்-வீற்று இருக்கும் வேற்றுமை தோற்ற இருக்கும் இருப்பு

பரம புருஷார்த்தத்வம் -4-1- முதல் பதிகம்
ஆர்யத்வம் -பாலனாய் -4-2–குணங்கள் -யாரை நினைக்க உள்ளம் தூக்கிச் செல்லப்படுமோ
அந்யோந்ய சம்ச்லிஷ்ட்த்வம் -4-3-நன்றாக கலந்து
சர்வ சம்பந்தித்வம் –சர்வ சத்ருசத்வம் -4-4-போலி கண்டு மயங்கி –
சர்வாத்மத்வம்- புகழும் நல ஒருவன் என்கோ கீழே பார்த்தோம்
நித்ய விபூதி வைசிஷ்ட்யம் இதில்

—————————————————————-

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –

நிந்தித்த அந்ய ஆபன்னான் அந்ய பந்தோ சரசிஜ நிலய வல்லபே
சாந்திர மோதே பக்த அக த்வம்ச சீலே தத் உசித சமய
ஆஸ்வாச தான -ப்ரதன் -ப்ரவீண கர்ப்பூர ஆலேப
சோபே சமயதிக ரஹித தோஷகே சர்வ பூர்ணே ஸர்வத்ர-

1-நிந்தித்த அந்ய -பாக்யம் இல்லாதாரை நிந்தித்தும்

2-ஆபன்னான் அந்ய பந்தோ –வீவு இல் சீர் ஆற்றல் மிக்கு ஆளும் அம்மானை வெம்மா பிளந்தான்றனை–
ஆஸ்ரித அர்த்தமாக அவதரித்து விரோதி நிரசன சீலன்

3-சரசிஜ நிலய வல்லபே–மைய கண்ணாள் மலர்மேல் உறை வாள் உறை மார்பினன்

4-சாந்திர மோதே –வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்தனன் மேவியே–ஆனந்த எல்லை-

5-பக்த அக த்வம்ச சீலே –மேவி நின்று தொழுவார் வினை போக மேவும் பிரான்

6-தத் உசித சமய ஆஸ்வாச தான -ப்ரதன் -ப்ரவீண –ஆற்ற நல்ல வகை காட்டும் அம்மானை —
பொறுக்க பொறுக்க-சாத்மிக்க-சாத் மிக்க

7-கர்ப்பூர ஆலேப சோபே –பெரிய கோலத் தடங்கண்ணன் விண்ணோர் பெருமான்-
வெளிய நீறு -பச்சை கற்பூரம் -சோபை மிக்கு

8-சமயதிக ரஹித –ஒத்தாரும் மிக்கார்களும் தன் தனக்கு இன்றி நின்றானை –
ஓத்தார் மிக்கார் தன் தனக்கு இல்லாமல் ஸுலப்யம் இயற்கைத்தனம்

9-தோஷகே –நமக்கும் பூவின்மிசை நங்கைக்கும் இன்பனை-ஆனந்திப்பிக்குமவன்

10-சர்வ பூர்ணே –வானத்தும் வானத்துள் உம்பரும் மண்ணுள்ளும் மண்ணின் கீழ்த்
தானத்தும் எண் திசையும் தவிராது நின்றான் தன்னை,-சர்வ வியாபகத்வம்

ஸர்வத்ர–உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும் கிடந்தும் நின்றும்
கொண்ட கோலத்தொடு வீற்றிருந்தும் மணம் கூடியும்
கண்ட ஆற்றால் தனதே உலகு என நின்றான் றன்னை
சொல் மாலைகள் ஏற்ற நோற்றேற்கு இனி என்ன குறை எழுமையுமே
தன்யன் ஆனேன் -பாடப் பெற்றேன்

ஏவம் பூதன் வண் துவாராபதிப் பிரான் ஸ்துதிப்பவர் பாஹ்யவான்
தத் வியதிரிக்தர் பாஹ்ய ஹீனர்

——————————————————-

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 35-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்–

வீற்று இருக்கும் மால் விண்ணில் மிக்க மயல் தன்னை
ஆற்றுதற்காத் தன் பெருமையானது எல்லாம் -தோற்ற வந்து
நன்று கலக்கப் போற்றி நன்கு உகந்து வீறு உரைத்தான்
சென்ற துயர் மாறன் தீர்ந்து —35-

————————————————————-

அவதாரிகை –

இதில்
அப்ராக்ருத விபூதியில்
அசாதாராண ஆகாரத்தைக் காட்ட அனுபவித்து ஹ்ருஷ்டராகிற படியைப் பேசின பாசுரத்தை
அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –

வல்வினை தீர்க்கும் கண்ணனான சர்வேஸ்வரன்
சத்ருச சம்பந்த வஸ்துக்களையும் அவனாகவே
அனுசந்திக்கும்படி பிறந்த இவருடைய பித்து சவாசனமாகத் தீரும்படி
சர்வ தேவ நமஸ்காரம் கேசவனுக்கு செல்லுமே -மழை நீர் அருவிகள் கடலுக்கு போவது போலே -சாதாராண ஆகாரம் சர்வாத்மகம்
அசாதாராண வடிவம் -சத்வாரகமாக அன்றி நேராக கூராழி வெண் சங்கு ஏந்தி வாராய்
விலஷண ஸ்வரூப குண விக்ரஹ விபூஷண ஆயுத பத்னீ பரிஜன விசிஷ்டனாய்க் கொண்டு
பரமபதத்திலே வ்யாவ்ருத்தி தோன்ற இருக்கிற மேன்மையையும்
லீலா விபூதியில் உள்ளார் எல்லாரையும்
ஸ்ருஷ்ட்ய அனுபிரவேசாதிகளால் ரஷிக்கிற அளவன்றிக்கே
மனுஷ்யாதி ரூபேண வந்து அவதரித்து
ரஷித்துக் கொண்டு போருகிற படியையும் இவருக்குக் காட்டிக் கொடுத்து
சர்வேஸ்வரன் இவரோடு வந்து பூர்ண சம்ச்லேஷம் பண்ணி அருள
அத்தைக் கண்டு

சூழ் விசும்பு அணி முகிலுக்கு மேலே அங்கே சென்றால்
பண்ணுகிற மங்களா சாசனத்தை
இங்கேயே இருந்து
அவனுடைய உபய விபூதி ஐஸ்வர்யத்துக்கும் மங்களா சாசனம் பண்ணி
க்ருத்க்ருத்யராய்
உபய விபூதியிலும் என்னோடு ஒப்பார் இல்லை -என்று
ஹ்ருஷ்டர் ஆகிற -வீற்று இருந்து ஏழ் உலகின் தாத்பர்யத்தை
அருளிச் செய்கிறார் -வீற்று இருக்கும் மால் விண்ணில் -இத்யாதியாலே -என்கை –

———————————————————————————

வியாக்யானம்–

வீற்று இருக்கும் மால் -விண்ணில்
விண்ணில்-வீற்று இருக்கும் மால்-
ஆசீன காஞ்சநே திவ்யேச ச சிம்ஹாச நே பிரபு -என்றும்
ராமம் ரத்ன மயே பீடே சஹ ஸீதம் ந்யவேசயத் -என்றும்
பரிவார்யா மஹாத்மானம் மந்த்ரினஸ் சமூபசிரே -என்றும்
சொல்லுகிறபடியே
வானக் கோனாய்
விண்ணோர் பெருமானாய்
மைய கண்ணாள் மலர் மேல் உறை மார்பனாய்
வீற்று இருந்து ஏழ் உலகும் தனிக் கோல் செல்ல
எழுந்து அருளி இருக்கிற சர்வேஸ்வரன் –

மிக்க மயல் தன்னை –
ஆழ்வார் உடைய அத்யந்த
வ்யாமோஹத்தை-
மயல் பெரும் காதல் என் பேதைக்கு என் செய்கேன் வல் வினையேனே -என்று
பெற்றவர்களும் பேசிக் கை விடும்படியான
மிக்க மயல் தன்னை

ஆற்றுதற்காத் –
கைபிடித்த தான் ‘இத்தை ஆற்றுதற்க்காக-

தன் பெருமையானது எல்லாம் -தோற்ற வந்து –
கீழில் ப்ரமம் எல்லாம் ஆறும்படி –
பூவின் மிசை நங்கைக்கு இன்பன் –
தூவியம் புள்ளுடையான் அடலாழி அம்மான் தன்னை –
என்று
பிராட்டியாரோடும்
நித்ய சித்தரோடும்
கூடி இருக்கிற இருப்பையும்
ஞாலத்தார் தமக்கும் வானவர்க்கும் பெருமானை -என்றும்
உபய விபூதி ஐஸ்வர்ய உக்தனாய் இருக்கிற படியையும்
வீவில் சீரன் மலர்க் கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை -என்றபடி
குண விக்ரஹாதி வைலஷண்யம் முதலான
வைபவம் எல்லாம் பிரகாசிக்க
இங்கே வந்து –

நன்று கலக்கப் –
மேவி நின்று தொழுவார் வினை போக மேவும் பிரான் -என்னலாம்படி
இவருடன் சம்ச்லேஷிக்க –

போற்றி நன்கு உகந்து –
சர்வ ஸ்மாத் பரனான சர்வேஸ்வரனை கண்டு –
போற்றி என்றே கைகள் ஆரத் தொழுது
மங்களா சாசனம் பண்ணி
வீவில் காலம் இசை மாலைகள் ஏத்தி மேவப் பெற்றேன்
வீவில் இன்பம் மிக வெல்லை நிகழ்நதன் மேவியே –
என்று மிகவும் ஹ்ருஷ்டராய் –

அந்த ப்ரீதி உத்ததியாலே
வீறு உரைத்தான் –
வானக் கோனை கவி சொல்ல வல்லேற்கு இனி மாறுண்டே -என்றும்
இனி யாவர் நிகர் அகல் வானத்தே -என்றும்
தாம் உபய விபூதியிலும் வ்யாவர்த்தரான படியைப் பேசினார்

சென்ற துயர் மாறன் தீர்ந்து –
நிவ்ருத்த துக்கரான ஆழ்வார்
விஸ்லேஷ வ்யசனம் -என்னுதல்
வெய்ய நோய்கள் முழுவதும் வியன் ஞாலத்து வீயவே -என்றும்
காற்றின் முன்னம் கடுகி வினை நோய்கள் கரியவே -என்றும்
சொல்லுமவை யாதல் –

சென்ற துயர் -தீர்ந்து – மாறன் -நன்கு -உகந்து -வீறு -உரைத்தான் –
நடந்து சென்ற துக்கம் தீர்ந்து
ஆழ்வார் அத்யந்த ப்ரீதராய்
ப்ரீதி பிரகர்ஷத்தாலே
தம்முடைய பெருமையை
தாமே பேசினார் -ஆயிற்று-

—————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: