மேல் திருவாய்மொழியிலே அப்படி விடாய்த்தவர், ‘இனி என்ன குறை எழுமையுமே?’ என்னப் பெறுவதே!
உன்மச்தக ப்ரீதி அப்ரீதி மாறி மாறி வருமே -இந்த இரண்டு திருவாய்மொழிக்கும் ஏற்றம் என் என்னில் –
மேல் ‘பொய்ந்நின்ற ஞானம்’ தொடங்கிக் ‘கோவைவாயாள்’ என்ற திருவாய்மொழி முடிய,
‘மண்ணையிருந்து துழாவி’ என்னுந் திருவாய்மொழியில் உண்டான விடாய்க்குக் கிருஷி செய்தபடி.
அப்படி விடாய்க்கும்படி செய்த கிருஷியின் பலம் சொல்லுகிறது இத்திருவாய்மொழியில்.
‘பேற்றுக்கு இதற்கு -பல்லாண்டு பாடுவதற்கு மேல் என்றபடி -அவ்வருகு சொல்லலாவது இனி ஒன்று இல்லை.
‘அங்குப் போய்ச் செய்யும் அடிமைகளை இங்கே இருந்தே செய்யும்படி தன் சொரூபம் முதலானவைகளைத் தெளிவாகக் காட்டிக்
கொடுத்தானாகையினாலே,அவ்வருகு சொல்லலாவது இல்லை,’ என்றபடி.
அவ்வர்ச்சிராதி கதியைப்பற்றிப் பேசுகின்ற-‘சூழ்விசும்பு அணி முகில்’ என்ற திருவாய்மொழிக்குப் பின்
இத்திருவாய்மொழியாகப் பெற்றது இல்லையே!’ என்று அருளிச்செய்வர் நஞ்சீயர்.
-நம்மாழ்வார் மங்களா சாசனப் பதிகம் இது –
( பல்லாண்டு என்று பரமேஷ்ட்டியை -என்று நிகமத்தில் பெரியாழ்வார் அருளிச் செய்தலால் அது அங்கு சென்று
பெற்ற பேறு என்பதில் சங்கை இல்லையே -ஆகையால் இதுவும் சூழ் விசும்புக்கு அப்புறம் இருக்க வேண்டும் என்றார் ஆயிற்று )
பெருமாளும் இளைய பெருமாளுமான இருப்பிலே பிராட்டிக்குப் பிரிவு உண்டாக, மஹாராஜரையும் சேனைகளையும் கூட்டிக்கொண்டு
சென்று பகைவர்கள் கூட்டத்தைக் கிழங்கு எடுத்து அவளோடே கூடினாற்போலே, போலி கண்டு இவர் மயங்கின இழவு எல்லாம் போகும்படி,
நித்திய விபூதியையும் லீலா விபூதியையுமுடையனாய் இருக்கின்ற தன் படிகள் ஒன்றும் குறையாதபடி கொண்டு வந்து காட்டிக் கொடுத்து,
‘கண்டீரே நாம் இருக்கின்றபடி?
இந்த ஐசுவரியங்களெல்லாம் ஒன்றாய்த் தலைக்கட்டுவது, நீர் உம்முடைய வாயாலே ஒரு சொல்லுச் சொன்னால் காணும்,’ என்று
இவர் திருக்கையிலே தாளத்தைக் கொடுக்க, அவ்விருப்புக்கு மங்களாசாசனம் பண்ணி,
‘இவ்வுலகம் பரமபதம் என்னும் இரண்டு உலகங்களிலும் என்னோடு ஒப்பார் இலர்,’ என்று மிக்க பிரீதியையுடையவர் ஆகிறார்.
ஆழ்வார் விடாய் கொண்டமைக்குப் பெருமாளைத் திருஷ்டாந்தமாக்கினாற்போலே, விடாய் தீர்ந்தமைக்கும் பெருமாளைத்
திருஷ்டாந்தமாக்குகிறார் இங்கு. என்றது, இச் சேர்த்தியைச் சேர்த்து வைக்கின்றவர்கள் கூட இருக்கச் செய்தே பிரிகையும்,
போலி கண்டு மயங்குகையும், தக்க பரிகரத்தைக்கொண்டு பரிஹரிக்கையும்,
இரண்டு இடங்களிலும் உண்டு ஆகையாலே, திருஷ்டாந்த தார்ஷ்டாந்திக பாவத்தைத் தெரிவித்தபடி.
அங்கு, அச்சேர்த்திக்குக் கடகர் இளைய பெருமாள்; இங்கு, நித்தியசூரிகள்;
அங்கு மிருகத்தின் போலி; இங்கு அவன் போலி.
அங்குப் பரிகரம் மஹாராஜர் முதலானோர்;
இங்கு யாதோர் ஆகாரத்தைக் கண்டு மயங்கினார், அந்த ஆகாரத்தோடு கூடிய வேஷத்தைக் காட்டுகை.
அங்குப் பிராட்டியோடு கூடிச் சந்தோஷித்தாற்போலே இவர் திருக்கையிலே தாளத்தைக் கொடுக்க,
இவரும் சந்தோஷித்து மங்களாசாசனம் பண்ணுகிறார்-என்க.
நின்ற குன்றத்தினை நோக்கி நெடுமால்’ ஆக மயங்கின மயக்கத்திற்கு வான மாமலையான தன்னைக் காட்டிக்கொடுத்தான்;
‘நீறு செவ்வே இடக்காணில் நெடுமால் அடியார் என்று’ மயங்கி ஓடினதற்கு,
‘தூவி அம்புள் உடையான் அடல் ஆழி அம்மான்’ என்கிற நித்திய புருஷர்களைக் காட்டிக்கொடுத்தான்;
‘செய்யது ஓர் ஞாயிற்றைக் காட்டிச் சிரீதரன் மூர்த்தி ஈது’ என்றதற்கு,
‘மைய கண்ணாள் மலர்மேல் உறைவாள் உறைமார்பினன்’ என்று தானும் பெரிய பிராட்டியாருமாய் இருக்கிற இருப்பைக் காட்டிக்கொடுத்தான்;
‘திருவுடை மன்னரைக் காணில் திருமால்’ என்றதற்கு, உபய விபூதிகளையுடையனான தன் ஐசுவரியத்தைக் காட்டிக்கொடுத்தான்;
‘விரும்பிப் பகவரைக் காணில், வியலிடம் உண்டான்’ என்று சிறிய ஆனந்தமுடையாரைக் கண்டு மயங்கினவர்க்கு,
‘வீவில் இன்பம் மிக எல்லை நிகழ்ந்த நம் அச்சுதன்’ என்று ஆனந்தமயனாய் இருக்கிற இருப்பைக் காட்டிக்கொடுத்தான்;
பிறர் வாயால் ‘என் செய்கேன்’ என்றதைத் தவிர்த்து, தம் திருவாயாலே ‘என்ன குறை எழுமையுமே’ என்னப் பண்ணினான்.
——————————————————————————————
வீற்றிருந்து ஏழுலகும் தனிக்கோல் செல்ல, வீவு இல் சீர்
ஆற்றல் மிக்கு ஆளும் அம்மானை வெம்மா பிளந்தான்றனைப்
போற்றி என்றே கைகள் ஆரத் தொழுது,சொல் மாலைகள்
ஏற்ற நோற்றேற்கு இனி என்ன குறை எழுமையுமே?–4-5-1-
சமஸ்த லோக நிர்வாகன் -பல்லாண்டு பாடப் பெற்ற தமக்கு எக்காலமும் குறை இல்லையே -என்கிறார்
வீற்றிருந்து -விலஷணன் -வேற்றுமை தோற்ற வீற்று இருந்து -சர்வ ஆதாரத்வ -சர்வ நியந்த்ருத்வ –
சர்வ சேஷித்வ -சர்வ வியாபகத்வ -இவற்றால் –
பக்தன் -விசுத்த முக்தன் -நித்யர் விட புருஷோத்தமன் –
கண்டவாற்றால் தனதே உலகு என்று நிற்பான் –
திவ்ய விபூதியில் திவ்ய பர்யங்கத்தில் தர்மாதி பீடம் -இருந்து
ஏழுலகும் தனிக்கோல் செல்ல, -லீலா விபூதி நாயகத்வம் -வியக்த -அவ்யக்த- கால ரூபமாய்
-சுத்த சத்வ ரூபம் சதுர்வித அசேதன ரூபம் -காரண கார்ய ரூபேண அங்கும் இங்கும் –
சுத்த திவ்ய கோபுரம் மண்டபம் -அங்கு -பிரகிருதி காரணம் -மகான் -பிருத்வி காரணம் இங்கு
பக்த முத்த நித்ய த்ரிவித-சேதனர் -ஏழு வகை
அசஹாய -செங்கோல் ஒன்றே கொண்டு ஆளுகிறான் -சங்கல்ப ரூபமான அத்விதீயமான –
வீவு இல் சீர்-நித்ய விபூதி நாயகத்வம் -அப்ரதிகதமான தடங்கல் இல்லாத பண்ண முடியாத–
ஞான சக்த்யாத் கல்யாண குணா கணன்
ஆற்றல் மிக்கு ஆளும் அம்மானை-மஹத்தால் வந்த உத்ரேக ரஹிதமாய்-முக்குறும்பு இல்லாமல் –
சாந்தியால் வந்த ஆற்றல் இவனுக்கு -பிரசாந்த ஆத்மா -ஆழ்கடலில் உள்ள பரம சாந்தி –
ஸ்வா பாவிகம் -ஸ்வரூப வைபவம்
சர்வ சுவாமி
வெம்மா பிளந்தான்றனை–கேசி ஹந்தா -ரஷணத்துக்கு உதாரணம் –
செம்மையே நிரூபகம் இவனுக்கு வெம்மையே நிரூபகம் இதுக்கு
நாரதர் -பயப்பட -ஜகத் அஸ்தமிக்கும் -பார்த்தால் கேசி அஸ்தமிக்க
ரஷநீய வர்க்கத்துக்கு விரோதி அன்றோ -செற்றார் திறல் அழிய -இடையர் கண்ணனுக்கு எதிரி
செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா -பாகவத விரோதிகள் -செற்றார் த்வயம்
குதிரை -கைம்மா யானை -இரு கூறாக விடும்படி -பில த்வாரம் –
போற்றி என்றே கைகள் ஆரத் தொழுது-பலபடிகளாலும் போற்றி -மங்களா சாசனம் பண்ணி
விண்ணைத் தொழுத ஆகாசம் பார்த்து -பசி உடன் அங்கு
இங்கு ஆர தொழுது -கையும் பசிக்குமே -முடியானே -பார்த்தோம்
அஞ்சலி பண்ணி
,சொல் மாலைகள் ஏற்ற நோற்றேற்கு -சப்த சந்தர்ப்ப ரூபமான -சிரசா வஹிக்கும் படி -சமர்ப்பிக்கைக்கு
நோற்றேன் -விதி வாய்க்கின்றது காப்பார் யார்
பெருமாள் கிருபை -நிர்ஹேதுகம் -இதுவே ஆழ்வாருக்கு புண்ணியம்
இனி என்ன குறை எழுமையுமே-ஏழு ஜன்மங்களிலும் போற்றிக் கொண்டே இருப்பேன் -இனி என்ன குறை –
மனத்திடை வைப்பதாம் மாலை –அதிகாரி ஸ்வரூபம் ஏரி வெட்டுவது -உபாயம் இல்லையே –
சப்த சப்த சப்தச -சரீர விமோசன தேச பிராப்தி குறைகள் இல்லை -நித்ய விபூதி அனுபவம் இங்கேயே உண்டே
பாலர் போலே இப்படி பேசுவார் -பக்தர் மௌக்த்யம் கண்டு ஆனந்திப்பான் –
பதட்டுத்துக்கு மயங்குவான் -ப்ரபன்ன ஜன கூடஸ்தர் ஆகிறார் இத்தால்
‘வேறுபாடு தோன்ற இருந்து ஏழுலகங்களிலும் ஒரே கோல் செல்லும்படியாகப் பொறுமை மிகுந்து ஆளுகின்ற அழிதலில்லாத
கல்யாண குணங்களையுடைய அம்மானும், கொடிய கேசி என்னும் அசுரனது வாயைப் பிளந்தவனுமான சர்வேசுவரனைப்
‘போற்றி போற்றி’ என்று சொல்லிக்கொண்டே கைகள் வயிறு நிறையும்படி தொழுது சொற்களாலாகிய மாலைகளை
அவன் தலைமேல் தாங்கும்படி பாட வல்ல புண்ணியத்தையுடைய எனக்கு
இனி ஏழேழ்படிகாலான பிறவிகள் வரக்கூடியனவாக இருந்தாலும்,
என்ன குறை இருக்கின்றது? ஒரு குறையும் இன்று,’ என்றவாறு.
வி-கு : ‘ஏழுலகும் தனிக்கோல் செல்ல வீற்றிருந்து ஆற்றல் மிக்கு ஆளும் வீவில்சீர் அம்மான்’ என்க.
‘வீ’ என்பதற்கு ‘அழிதல்’ என்பது பொருள்.
‘போற்றி – பரிகாரம்’ என்பர் நச்சினார்க்கினியர். ‘போற்றி -பாதுகாத்தருள்க;
இகரவீற்று வியங்கோள்’ என்பர் அடியார்க்கு நல்லார்.
‘இனி எழுமையும் என்ன குறை?’ என மாறுக. எழுமையும் – ‘எப்பொழுதும்’ என்னலுமாம்.
இத்திருவாய்மொழி கலித்துறை என்னும் பாவகையில் அடங்கும்.
‘சர்வேசுவரனாய் வைத்து அடியார்களைக் காப்பாற்றுவதற்காக மனிதர் கதியில் வந்து அவதரித்த ஸ்ரீ கிருஷ்ணனைக் கவி
பாடப் பெற்ற எனக்கு நாளும் ஒரு குறையும் இல்லை,’ என்கிறார்.
வீற்றிருந்து –
வீற்று என்று வேறுபாடாய், தன் வேறுபாடு அடங்கலும் தோற்ற இருந்து.
ஈண்டு ‘வேறுபாடு’ என்றது, தன்னினின்று வேறுபட்ட எல்லாப் பொருள்களும் தனக்கு அடிமையாகத் தான்
இறைவன் ஆகையாலே வந்த வேறுபாட்டினை. இங்ஙன் அன்றாகில்,
ஒன்றற்கு ஒன்று வேறுபாடு எல்லாப் பொருள்கட்கும் உண்டே அன்றோ?
ஆதலால், இங்கு ‘வேறுபாடு’ என்றது, உயர்த்தியால் வந்த வேறுபாட்டினையே என்க.
எல்லா ஆத்துமாக்களுக்கும் ஞானமே வடிவமாய் இருப்பதாலே, அவனோடு ஒப்புமை உண்டாயிருக்கச் செய்தேயும்,
எங்கும் பரந்திருத்தல், எல்லாப்பொருள்கட்கும் இறைவனாயிருத்தல்,
எல்லாப் பொருள்களையும் ஏவுகின்றவனாயிருத்தல் ஆகிய
இவை அந்தச் சர்வேசுவரன் ஒருவனிடத்திலேயே கிடக்குமவை அல்லவோ?’
தன்னை ஒழிந்தார் அடையத் தனக்கு அடிமை செய்யக்கடவனாய், தான் எங்கும் பரந்திருப்பவனாய்,
ஆகாசம் பரந்திருத்தலைப் போல அன்றிக்கே,
ஜாதி பொருள்கள் தோறும் நிறைந்திருக்குமாறுபோலே இருக்கக்கடவனாய், இப்படிப் பரந்திருத்தல் தான் ஏவுவதற்காக அன்றோ?
இவ்வருகுள்ளாரை அடையக் கலங்கும்படி செய்யக்கூடியவைகளான அஞ்ஞானம் முதலானவைகள்-
தர்மாதீ பீடம் ஞான அஜ்ஞ்ஞான –தர்ம அதர்ம –வைராக்ய -அவைராக்ய –ஐஸ்வர்யம் அநஸ்வர்யம்-எட்டு கால்கள் –
முழுதும் தன் ஆசனத்திலே கீழே அமுக்குண்ணும்படி அவற்றை அதிஷ்டித்துக்கொண்டு இருக்கும் படியைத் தெரிவிப்பார்,
‘இருந்து’ என்கிறார்.
அன்றிக்கே, ‘தன்னினின்றும் வேறுபட்ட எல்லாப் பொருள்களையும் உடையவன் ஆகையால்
வந்த ஆனந்தம் தோற்ற இருக்கிற இருப்பைச் சொல்லுகிறது’ என்னுதல்.
ஏழ் உலகும் தனிக்கோல் செல்ல –
சுற்றுப்பயணம் வந்து உலகத்தையெல்லாம் நிர்வாகம் செய்கையன்றிக்கே, இருந்த இருப்பிலே
உலகமடையச் செங்கோல் செல்லும் படியாக ஆயிற்று இருப்பது. ‘ஏழ் உலகு’ என்று பரமபதமும் அதற்குக் கீழே உள்ள
உலகங்களுமான இரு வகை உலகங்களையும் சொல்லிற்றாதல்;
பரமபதத்திற்கு இப்பால் உள்ள உலகங்கள் மாத்திரத்தைச் சொல்லிற்றாதல். இரு வகையான உலகங்களையும் சொல்லும் போது
மூன்று வகையான ஆத்துமாக்களையும் நான்கு வகையான பிரகிருதியையும் சொல்லுகிறது.
நான்கு வகையான பிரகிருதிகளாவன : காரிய காரண உருவமான இரு வகைப்பட்ட பிரிவுகள் அங்கு;
இங்கும், அப்படியுண்டான இரு வகைப்பட்ட பிரிவுகள். லீலாவிபூதி மாத்திரத்தைச் சொன்னபோது,
கீழேயுள்ள உலகங்களையும் பூமியையும் கூட்டி ஒன்று ஆக்கி, பரமபதத்திற்கு இப்பாலுள்ள உலகங்களை ஆறு ஆக்கி,
ஆக ஏழையும் சொல்லுகிறது என்று கொள்க.
வீவு இல் சீர் –
அழிவில்லாத கல்யாண குணங்களைச் சொல்லுதல்; நித்தியமான பரமபதத்தைச் சொல்லுதல்.
ஆக, ‘ஏழ் உலகு’ என்பதற்கு உபயவிபூதிகளையும் என்று பொருள் கொண்டால், ‘
இங்கு வீவில்சீர்’ என்பதற்குக் கல்யாண குணங்கள் என்ற பொருளும்,
அங்கே, லீலாவிபூதியை மாத்திரம் கொண்டால், இங்கு நித்தியவிபூதி என்ற பொருளும்
கோடல் வேண்டும் என்பதனைத் தெரிவித்தபடி.
‘இப்படி உபயவிபூதிகளையுமுடையவனான செருக்கால் தன் பக்கல் சிலர்க்குக் கிட்ட ஒண்ணாதபடி இருப்பானோ?’ என்னில்,
‘அங்ஙனம் இரான்’ என்கிறார் மேல் : ஆற்றல் மிக்கு ஆளும் அம்மான் –
‘ஸ்ரீராமபிரான் இராச்சியத்தை விநயத்தோடு கூடினவராய் நடத்துகையாலே இராச்சியத்தை உபாசித்தார்’ என்பது போன்று
‘செருக்கு அற்றவனாய் ஆளுகின்ற அம்மான்’ என்கிறார். என்றது,
வழி அல்லா வழியே வந்த ஐசுவரியமுடையவன் பிறர்க்குத் திரிய
ஒண்ணாதபடி நடப்பான் என்பதனையும், உடையவனுடைய ஐசுவரியமாகையாலே தகுதியாய்
இருக்கின்றமையையும் தெரிவித்தபடி.
அன்றிக்கே, ‘ஆற்றல்’ என்றது, வலியாய், ‘இவ்வுலகமனைத்தையும் நிர்வஹிக்கைக்கு அடியான
தரிக்கும் ஆற்றலைச் சொல்லுகிறது’ என்று சொல்லுவாரும் உளர்.
இனி, ‘அம்மான்’ என்பதற்கு, ‘எல்லாரையும் நியமிக்கின்ற தன்மையால் வந்த
ஐசுவரியத்தையுடையவன்’ என்று பொருள் கூறலுமாம்.
வெம் மா பிளந்தான் தன்னை –
‘ஆற்றல் மிக்கு ஆளும்படி சொல்லுகிறது’ என்று பட்டர் அருளிச் செய்யும்படி. ‘என்றது, என் சொல்லியவாறோ?’ எனின்,
இவ்வுலகங்கள் அனைத்தையம் உடையவன் ஆனால், இருந்த இடத்தே இருந்து,
‘தஹபச – கொளுத்து அடு’ என்று நிர்வஹிக்கையன்றிக்கே,
இவர்களோடே ஒரே சாதியையுடையனாய் வந்து அவதரித்து, இவர்கள் செய்யும் பரிபவங்களை அடையப் பொறுத்து,
களை பிடுங்கிக் காக்கும்படியைச் சொல்லுகிறது என்றபடி. சமந்தக மணி முதலியவைகளிலே பரிபவம் பிரசித்தம்;
‘நான் ‘பந்துக்களுக்கு இரட்சகன்’ என்பது ஒரு பெயர் மாத்திரமேயாய்,
இவர்களுக்கு அடிமை வேலைகளையே செய்துகொண்டு திரிகின்றேன்,’ என்றும்,
‘நல்ல பொருள்களை அனுபவிக்கும் அனுபவங்களில் பாதியைப் பகுத்திட்டு வாழ்ந்து போந்தேன்;
இவர்கள் கூறுகின்ற கொடிய வார்த்தைகளையெல்லாம் பொறுத்துப் போந்தேன்,’ என்றும் அவன் தானும் அருளிச் செய்தான்.
இனி, ‘வெம் மா பிளந்தான்றன்னை’ என்பதற்கு, ‘ஆற்றல் மிக்கு ஆளும் அம்மான் யார்?’ என்றால்,
இன்னான் என்கிறது என்று அம்மங்கி அம்மாள் நிர்வஹிப்பர்.
கேசி பட்டுப்போகச் செய்தேயும் தம் வயிறு எரித்தலாலே ‘வெம்மா’ என்கிறார் இவர்.
‘நன்றாகத் திறந்த வாயையுடையவனும் மஹாபயங்கரமானவனுமான அந்தக் கேசி என்னும் அசுரன்,
இடியினாலே தள்ளப்பட்ட மரம் போலே
கண்ணபிரானுடைய திருக்கையாலே இரண்டு கூறு ஆக்கப்பட்டவனாய்க் கீழே விழுந்தான்,’ என்பது ஸ்ரீவிஷ்ணு புராணம்.
கேசி வாயை அங்காந்துகொண்டு வந்த போது, சிறு குழந்தைகள் துவாரம் கண்ட இடங்களிலே கையை நீட்டுமாறு போலே,
இவன் பேதைமையாலே அதன் வாயிலே கையை நீட்டினான்;
முன்பு இல்லாதது ஒன்றைக் கண்ட காட்சியாலே கை பூரித்துக் கொடுத்தது;
கையைத் திரும்ப வாங்கினான்; அவன் இருபிளவாய் விழுந்தான் என்பது.
போற்றி –
சொரூபத்திற்குத் தக்கனவாய் அன்றோ பரிவுகள் இருப்பன? கேசி பட்டுப் போகச் செய்தேயும்
சமகாலத்திற் போலே வயிறு எரிந்து படுகிறாராயிற்று இவர்.
என்றே – ‘நம’ என்று வாயால் எப்பொழுதும் சொல்லிக்கொண்டு இருக்கும்
தன்மை வாய்ந்தவர்களாய் இருப்பார்கள்,’ என்பது போன்று,
அன்று இவ்வுலகம் அளந்தான் போற்றி -ஆறு தடவை ஆண்டாள் போலே –
ஒருகால், ‘பல்லாண்டு’ என்றால், பின்னையும் ‘பல்லாண்டு பல்லாண்டு’ என்னுமத்தனை
கைகள் ஆரத் தொழுது –
‘வைகுந்தம் என்று கைகாட்டும்’ என்று வெற்று ஆகாசத்தைப் பற்றித் தொழுத கைகளின்
விடாய் தீர்ந்து வயிறு நிறையும்படி தொழுது.
சொல் மாலைகள் –
வாடாத மாலைகள். என்றது, ‘அநசூயை கொடுத்த மாலை போலே செவ்வி அழியாத மாலைகள்’ என்றபடி.
ஏற்ற –
‘ஆராதனத்தைத் தாமாகவே தலையாலே ஏற்றுக்கொள்ளுகிறார்’ என்கிறபடியே, திருக்குழலிலே ஏற்றும்படியாக.
நோற்றேற்கு –
இவர் இப்போது நோற்றாராகச் சொல்லுகிறது,
1- ‘மண்ணையிருந்து துழாவி’ என்னும் திருவாய்மொழியில் சொல்லப்பட்ட விடாயை;
முன் கணத்திலே நிகழ்வது ஒன்றேயன்றோ ஒன்றுக்கு ஏதுவாவது?
அன்றிக்கே,2-‘பகவானுடைய கிருபையை’ என்னலுமாம்.
கிருபை என்றுமே இருந்தாலும்–பூர்வ ஷண வர்த்தி இறே ஒன்றுக்கு ஹேது வாகும்–
அதனால் விடாய்த்தது அன்றோ என்கிறார் –
இனி என்ன குறை –
பரமபதத்திற்குச் சென்றாலும் தொண்டு செய்தலாலேயாகில் சொரூபம்;
அதனை இங்கே பெற்ற தனக்கு ஒரு குறை உண்டோ?
இங்கே இருந்தே அங்குத்தை அனுபவத்தை அனுபவிக்கப்பெற்ற எனக்கு ‘
அங்கே போகப் பெற்றிலேன்’ என்கிற குறை உண்டோ?
அங்கே போனாலும் சூழ்ந்திருந்து ஏத்துவர் பல்லாண்டே அன்றோ?’ ‘இது எத்தனை குளிக்கு நிற்கும்?’ என்னில்,
எழுமையுமே –
முடிய நிற்குமவற்றை எவ்வேழாகச் சொல்லக்கடவதன்றோ?
‘கீழே பத்துப் பிறவியையும் தன்னையும் பரிசுத்தப்படுத்துகிறது’ என்றும்,
‘மூவேழ் தலைமுறையைக் கரை ஏற்றுகிறது’ என்றும் சொல்லப்பட்டிருக்கின்றது அன்றே?
‘பூவளரும்திரு மாது புணர்ந்தநம் புண்ணியனார் தாவள மான தனித்திவம் சேர்ந்து, தமருடனே
நாவள ரும்பெரு நான்மறை ஓதிய கீதமெலாம் பாவளரும் தமிழ்ப் பல்லாண் டிசையுடன் பாடுவமே.’- என்பது வேதாந்த தேசிகன் ஸ்ரீசூக்தி.
————————————————————————————————
மைய கண்ணாள் மலர்மேல் உறை வாள் உறை மார்பினன்
செய்ய கோலத்தடங் கண்ணன் விண்ணோர் பெருமான் தனை
மொய்ய சொல்லால் இசை மாலைகள் ஏத்தி உள்ளப் பெற்றேன்
வெய்ய நோய்கள் முழுதும் வியன் ஞாலத்து வீயவே.–4-5-2-
ஸ்ரீ யபதி -கடகர் உண்டே -மேன்மைக்கு அடியான லஷ்மி சம்பந்தம் –உடையவனை -என்னுடைய ஜகத் சம்பந்தியான
சகல கிலேசங்களைத் தீரும் படிக்கு புகழப் பெற்றேன்
மைய கண்ணாள் மலர்மேல் உறை வாள் உறை மார்பினன்-அஸி தீஷணை -ஸ்வ பாவத்துக்கு மேல் மை தீட்டி
பிறந்த புகுந்த இரண்டையும் சொல்லி –அவன் வடிவு நிழல் இட்டது அடியாக -நீல மேக சியாமளன்
மார்பில் அமர்ந்தது இயற்க்கை -நித்ய யோகம் -அகலகில்லேன் இறையும் என்று
ஆபிரூப்யம் அபிஜாதம் இரண்டையும் சொல்லி பரிமளமே வடிவாகக் கொண்ட போக்யதையாயும்
நித்ய வாசம் செய்யும் நிரதிசய போக்ய பூதை-
செய்ய கோலத்தடங் கண்ணன் -அழகை உடைத்தாய் -பிரேம பாரவச்யத்தாலே விச்தீர்ணமான –
அவளை நோக்கி மேலும் சிவந்த கண்ணுக்கு விஷயாதீனம் இந்த பாசுரம் –
(ஒன்பதாம் பத்தில் திருமேனிக்கு விஷய ஆதீனம் உண்டே )
இவள் கண் அவன் கறுத்த மேனி பார்த்து -அவன் திருக்கன் இவள் திரு மேனியைப் பார்த்து என்றபடி
விண்ணோர் பெருமான் தனை-இந்த ரசத்தை அனுபவிப்பித்து -அமரர்கள் அதிபதியை
மொய்ய சொல்லால் இசை மாலைகள் ஏத்தி உள்ளப் பெற்றேன்-செறிந்து -சப்தம் -வாக்கியம் -பாடம் -இசை உடைத்தான
வெய்ய நோய்கள் முழுதும் வியன் ஞாலத்து வீயவே.-விச்தீர்ணமான ஜகத்தில் -பரிதாப ஹேது
திருமந்தரம் சமசித்த யத்ர அஷ்டாஷர -மகாத்மா எங்கே கொண்டாடப் படுகிறார்களோ
வியாதி துர்பிஷம் திருட்டு சஞ்சரிக்க மாட்டார்கள் -தஸ்கரம் திருட்டு -பிரணவார்த்தம் நன்றாக அறிந்தால் போகுமே
துர்பிஷம் -நமஸ் -அர்த்தம் சம்சித்தியில் போகுமே -நாராயணாய– அர்த்தம் சம்சித்தியில் -வியாதி போகும்
வாழ்கிறவர் இருக்கும் தேசம் இல்லை -அவர்களை கொண்டாட வேண்டும்
இசை மாலைகளில் நாராயணாய ஏத்தினேன் -அதனால் வியாதி போகுமே என்கிறார்
அவித்யா கர்ம வாசனா ருசி பிரகிருதி -ஜன்ம -சம்பந்த சமஸ்த வியாதிகள்
அவித்யா காரணமாகவே -பகவத் ஆத்மா ஞானம் ஒன்றே அடிப்படை -பொய் நின்ற ஞானம்
அதன் அடியாக -பொல்லா ஒழுக்கம் -அதுக்கு அடியாக -அழுக்கு உடம்பு –
இதுவே கர்மா வாசனை ருசி பிரகிருதி ஜன்ம சம்பந்தம் என்றது
ஏத்தி உள்ளப் பெற்றேன் -ஸ்தோத்ரம் பண்ணி -அவன் திரு உள்ளம் மலர அத்தைக் கண்டு ஆனந்தப் பட்டேன் என்றபடி –
‘மையணிந்த கண்களையுடையவளும் தாமரை மலரில் வசிப்பவளுமான பெரிய பிராட்டி நித்திய வாசம் செய்கின்ற மார்பையுடையவனும்,
செந்நிறம் பொருந்திய அழகிய விசாலமான திருக்ண்களையுடையவனும், நித்திய சூரிகளுக்குத் தலைவனுமான
சர்வேசுவரனைச் செறிந்த சொற்களாலே தொடுக்கப்பட்ட இசை பொருந்திய மாலைகளாலே, அகன்ற இவ்வுலகத்திலே
கொடிய நோய்கள் முழுதும் அழியும்படியாகத் துதித்து அனுபவிக்கப் பெற்றேன்,’ என்கிறார்.
மைய கண் – கரிய கண் என்னலுமாம். ‘விண்ணோர் பெருமான்றன்னை வியன் ஞாலத்து வெய்ய நோய்கள் முழுதும்
வீய இசை மாலைகள் ஏந்தி உள்ளப்பெற்றேன்’ எனக் கூட்டுக.
இம்மஹத்தான ஐசுவரியத்துக்கு அடியான திருமகள் கேள்வனாம் படியை அருளிச்செய்கிறார்.
சர்வேசுவரன் திருவருளாலே அவன் கருத்து அறிந்து நடத்தும் பிரமனுடைய திருவருள் காரணமாக, நாரதர் முதலிய முனிவர்கள்
மூலமாக ஆயிற்று ஸ்ரீமத் ராமாயணம் தோன்றியது; இப்படிப்பட்ட ஸ்ரீராமாயணத்திற்காட்டில் தாம் அருளிச்செய்த பிரபந்தத்திற்கு
ஏற்றம் அருளிச்செய்கிறார். ‘திருமாலால் அருளப்பட்ட சடகோபன்’ என்கிறபடியே, அவர்கள் இருவருடையவும் திருவருள் அடியாக
ஆயிற்று இப்பிரபந்தங்கள் பிறந்தன. ‘சீதாயாஸ்சரிதம் மஹத் – சீதையினுடைய பெருமை பொருந்திய சரிதம்’ என்னுமது இரண்டுக்கும் ஒக்கும்;
‘திருமாலவன் கவி யாது கற்றேன்?’ என்றாரே அன்றோ இவரும்? அவன் பாடித் தனியே கேட்பித்தான்;
அவளோடே கூடக் கேட்பித்து அச்சேர்த்தியிலே மங்களா சாசனம் செய்தார் இவர்;
மையகண்ணாள் மலர்மேலுறைவாள் உறை மார்பினனை ஆயிற்றுக் கவி பாடிற்று.
கவிக்கு விஷயம் ஒக்கும்
1-ஐஸ்வர்யஹேது-மிதுனத்தால் /2-ஹேது அவளும் அவனும் ஆகையாலும் -/3-இவர்களைப் பாடி /4-இவர்களால் கேட்க்கப்பட்டு
இப்படி ஐஸ்வர்யத்தாலும் ஹேதுத்வத்தாலும் விஷயத்தாலும் ஸ்ரோத்ரத்வத்தாலும் இதுக்கு ஏற்றம் உண்டே –
மைய கண்ணாள் –
‘கறுத்த கண்களையுடையவள்’ -அஸி தேஷிணா-ஸ்ரீராமா. சுந். 16 : 5.-என்னக் கடவதன்றோ?
அன்றிக்கே, பெரிய பிராட்டியார் திருக்கண்களாலே ஒருகால் பார்த்தால்
ஒருபாட்டம் மழை விழுந்தாற்போலே சர்வேசுவரன் திருமேனி குளிரும்படி யாயிற்று இருப்பது;
ஆதலால், ‘மைய கண்ணாள்’ என்கிறார் என்னுதல். ‘மழைக்கண் மடந்தை’-திருவிருத்தம், 52.- என்னப்படுமவளன்றோ அவள்?’
இவள் திருவருள் இல்லாமையேயன்றோ அல்லாதார் விரூபாக்ஷர் ஆகிறது? ‘இந்த உலகமானது எந்தப் பிராட்டியின் புருவங்களினுடைய
செயல்களின் விசேடத்தால் நியமிக்கும் பொருளாயும், நியமிக்கப்படுகின்ற பொருளாயும் ஆகுகையாகிற தாரதம்மியத்தாலே
மேடு பள்ளமுள்ளதாக ஆகின்றதோ, அந்த ஸ்ரீரங்கநாயகியின்பொருட்டு நமஸ்காரம்,’ என்கிறபடியே,
அவள் உண்மையாலும் இன்மையாலுமே யன்றோ ஒருவன் அழகிய மணவாளப் பிள்ளையாயிருக்கிறதும்,
ஒருவன் பிச்சையேற்பானுமாயிருக்கிறதும்?
பட்டர் தானே இப்படி தைர்யமாக நாம் நாமவதற்கும் அழகிய மணவாளன் அப்படி ஆவதற்கும் இவள் கடாஷமே காரணம் என்கிறார் –
(பரம/ அபரம /அப ரம- சம்பந்தம் /இல்லாமல் -திரு இல்லா தேவர் )
மலர்மேல் உறைவாள் –
செவ்வித்தாமரை மலரின் வாசனை வடிவு எடுத்தாற்போன்று பிறந்தவள். அவயவ சோபை அது; சௌகுமார்யம் இது.
உறை மார்பினன் –
பூவிலும் கூசி அடியிடுமவள் பொருந்தி வசிக்கும் மார்வு படைத்தவன். ‘ஸ்ரீ ஜனக ராஜன் திருமகள் பெருமாளைக் கை பிடித்த பின்பு
ஸ்ரீ மிதிலையை நினையாதது போன்று, இவளும் இவன் மார்வில் இனிமை அறிந்த பின்பு தாமரையை நினையாதவள்’ என்பார்,
‘உறை மார்பினன்’ என்கிறார். ‘மக்களின் அண்மையில் இருக்கிற தன் சரீரத்தை முத்தன் நினைப்பது இல்லை,’ என்கிறபடியே,
முத்தர்கள் இல்லறவாழ்வினை நினையாதது போன்று இவளும் தாமரை மலரை நினையாதபடி.
இப்பாசுரத்தில் ‘மையகண்ணாள் மலர்மேலுறைவாள் உறை மார்பினன்’(ஸ்ரீயபதித்வம்) என்று
கூறுவதற்கு நான்கு வகையில் கருத்துஅருளிச்செய்கிறார்:
‘இம்மஹத்தான ஜஸ்வர்யத்துக்கு அடியான திருமகள்கேள்வனாம்படியை அருளிச்செய்கிறார்’ என்பது, முதல் கருத்து.
‘இம்மஹத்தான ஐஸ்வரியம்’ என்றது, முதற்பாசுரத்தின் முன்னிரண்டு அடிகளையும் திருவுள்ளம் பற்றி.
‘சர்வேசுவரன் திருவருளாலே’ என்றது முதல் ‘இப்பிரபந்தங்கள் பிறந்தன’ என்றது முடிய, இரண்டாவது கருத்து.
இந்த இரண்டாவது கருத்தால், ஸ்ரீராமாயணத்தைக்காட்டிலும்
திருவாய்மொழிக்கு ஏற்றத்தையும் ஏற்றத்திற்குரிய காரணத்தையும் அருளிச்செய்கிறார்.
இங்கு,‘நாரணன் விளையாட் டெல்லாம் நாரத முனிவன் கூற ஆரணக் கவிதை
செய்தா னறிந்த வான்மீகி என்பான்’-கம்பராமாயணத் தனியன்
‘சீதாயாஸ் சரிதம்’ என்றது முதல், ‘என்றாரேயன்றோ இவரும்’ என்றது முடிய,
மூன்றாவது கருத்து. கவிக்கு விஷயம் பிராட்டியும் அவனும் என்கிற இது,
ஸ்ரீராமாயணத்திற்கும் இப்பிரபந்தத்திற்கும் ஒக்கும் என்பது மூன்றாவதன் கருத்து.
‘அவன் பாடித் தனியே’ என்றது முதல் ‘ஆயிற்றுக்கவி பாடிற்று’ என்றது முடிய, நான்காவது கருத்து,
‘அவன்’ என்றது, ஸ்ரீவால்மீகி பகவானை.ஆக, ஸ்ரீராமாயணத்துக்கும் பிரபந்தத்துக்கும் இரண்டு ஆகாரத்தாலே
வேறுபாடும், ஓர் ஆகாரத்தாலே ஒப்புமையும் கூறியபடி.
செய்ய கோலத் தடம் கண்ணன் –
சிவந்து காட்சிக்கு இனியனவாய்ப் பரப்பையுடையனவான திருக்கண்களையுடையவன்.
ஓர் இடத்திலே மேகம் மழை பெய்யாநின்றால்
அவ்விடம் குளிர்ந்திருக்குமாறு போலே, ‘மைப்படி மேனி’ என்கிறபடியே, சர்வேசுவரனுடைய கரிய மேனியை ஒருபடியே
பார்த்துக்கொண்டிருப்பாளே அன்றோ இவள்? இவள் திருக்கண்களிலே
அவன் திருமேனியின் நிறம் ஊறி இவள் மைய கண்ணாளாயிருக்கும்;
‘செய்யாள் திருமார்வினில் சேர் திருமால்’–9-4-1- என்கிறபடியே, மார்பில் இருக்கின்ற
அவளை ஒருபடியே பார்த்துக் கொண்டிருக்கையாலே
அவள் திருமேனியில் சிவப்பு ஊறி இவன் தாமரைக் கண்ணனாய் இருக்கும்;
‘இருவர் படியும் இருவர் கண்களிலே காணலாம்;
அவன் படி இவள் கண்களிலே காணலாம்; இவள் படி அவன் கண்களிலே காணலாம்.
இவர்களுடைய கண் கலவி இருக்கும்படியிறே இது.
கண்ணோடு கண்ணினை கவ்வி கம்பர் –
இவர் கவி விண்ணப்பம் செய்யக் கேட்டு அத்தாலே வந்த பிரீதிக்குப் போக்கு விட்டு
அவன் பிராட்டியைப் பார்க்க, அவள்,அந்ய பரதை பண்ணாமல் –
‘வேறு ஒன்றிலே நோக்கில்லாமல் -என்னைப் பார்க்காமல் –அத்தைக் கேட்கலாகாதோ?’
என்று சொல்ல, இப்படிக் காணும் கேட்டது.
விண்ணோர் பெருமான் தன்னை –
இக்கண்ணின் குமிழிக்கீழே விளையும் நாட்டினைச் சொல்லுகிறது.
அன்றிக்கே, ‘இக்கண்ணழகும் இச்சேர்த்தியழகும் காட்டில் எறித்த நிலா ஆகாமல்,
‘தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவுந்தலைமகனை என்கிறபடியே,
அனுபவிக்கின்றவர்களை யுடையவனை’ என்னுதல்.
ஆக, பெரிய பிராட்டியாரும் அவனும் கூடவிருக்க நித்தியசூரிகள் ஓலக்கங்கொடுக்க
ஆயிற்றுக் கவி கேட்பித்தது,’ என்றவாறு.
மொய்ய சொல்லால் இசை மாலைகள் ஏத்தி உள்ளப்பெற்றேன் –
சர்வேசுவரனுடைய வேறுபட்ட சிறப்பினை நினைத்துக் ‘கவி பாட’ என்று ஒருப்பட்டு,
‘வேதவாக்குகள் மனத்தால் நினைக்கவும்
முடியாமல் எந்த ஆனந்த குணத்தினின்றும் மீளுகின்றனவோ’ என்கிறபடியே மீளாமல்,
விஷயத்துக்கு நேரான பாசுரம் இட்டுக் கவி பாடப் பெற்றேன்.
‘மொய்’ என்பது செறிவைச் சொல்லுதல்; அல்லது, பெருமையைச் சொல்லுதல், என்றது,
‘செறிவில்லாத பந்தமாய் இருக்கையன்றிக்கே, கட்டுடைத்தாய் இருக்கையாதல்,
விஷயத்தை விளாக்குலை கொள்ளவற்றாய் இருக்கையாதல்’ என்றபடி.
வாசனை மிக்குள்ள மாலை போலே,
கேட்டார் கட்டு உண்ணும்படி இசை மிகுந்து இருப்பனவாதலின், ‘இசை மாலைகள்’ என்கிறது.
நினைத்து அன்று போலேகாணும் ஏத்திற்று; ஆதலால், ‘ஏத்தி உள்ளப் பெற்றேன்’ என்கிறது.
இதனால், ‘மனம் முன்னே வாக்குப் பின்னே’ என்கிற நியதி இல்லையாயிற்று இவர் பக்கல் என்கிறது.
‘என் முன் சொல்லும்’-திருவாய்மொழி, 7. 9 : 2.- என்கிறபடியே,
அவன் நினைவு மாறாமையாலே இது சேர விழுமே அன்றோ?’
‘ஆம் முதல்வன் இவன் என்று தன் தேற்றி’என் நாமுதல் வந்து புகுந்து நல் லின்கவி
தூ முதல் பத்தர்க்குத் தான் தன்னைச் சொன்ன
என் வாய்முதல் அப்பனை என்று மறப்பனோ?’ என்பது திருவாய்மொழி, 7. 9 : 3.‘ என்றபடி.
அன்றிக்கே, ‘‘முடியானே’ என்ற திருவாய்மொழியில் உறுப்புகள் விடாய்த்தாற்போலே, இங்கும் தனித்தனியே
ஆயிற்று அனுபவிக்கிறது’ என்னலுமாம். தாமும் உறுப்புகளைப்போன்று ஈடுபட்டார். என்றது,
‘நாட்டினாய் என்னை உனக்கு முன் தொண்டாக, மாட்டினேன் அத்தனையே கொண்டு
என் வல்வினையைப், பாட்டினால் உன்னை என் நெஞ்சத் திருந்தமை காட்டினாய்,
கண்ணபுரத்து உறை அம்மானே!’-பெரிய திருமொழி, 8. 10 : 9.- என்கிறபடியே,
இவர் வாக்குக் கவி பாட, இவர்தாம் நம்மைப் போன்று சொல்லினாரித்தனை என்றபடி.
நாட்டினாய் என்னை உனக்கு முன் தொண்டாக – அடிமையில் இனிமையறியாத என்னை,
‘இவன் நம்முடையான்’ என்று அங்கே நாடு என்று நிறுத்தி வைத்தாய்;
உன்னுடைய அங்கீகாரத்தைக்கொண்டு முன்புள்ள கர்மங்களை வாசனையோடே போக்கினேன்.
பாட்டினால் உன்னை என் நெஞ்சத்திருந்தமை காட்டினாய் –
பாடின வழியாலே, சர்வஞ்ஞனாய் சர்வசத்தியாயிருக்கிற நீ
என் மனத்திலே இருந்தமையைப் பிரகாசிப்பித்தாய்.
கண்ணபுரத்துறை அம்மானே – பாடுவித்த ஊர் திருக்கண்ணபுரம், பாடுவித்த முக்கோட்டை இருக்கிறபடி.
வெய்ய நோய்கள் முழுதும் வியன் ஞாலத்து வீய –
‘அவசியம் அனுபவித்தே தீரவேண்டும்’ என்கிறபடியே,
அனுபவித்தால் அல்லது நசிக்கக் கடவன அல்லாத கர்மங்கள் முழுதும் நசிக்க.
இவ்வுலகத்திலே இருக்கச் செய்தே, இவை முழுதும் அழிந்தன என்று சொல்லலாம்படி யாயிற்று,
பகவானுடைய அனுபவத்தாலே பிறந்த தெளிவு;
ஆதலால், ‘வியன் ஞாலத்து வீய’ என்கிறது.
அன்றிக்கே,
‘பனை நிழல் போலே தம்மை ஒருவரையும் நோக்கிக் கொள்ளுகை யன்றிக்கே, ஊரும் நாடும் உலகமும்
தம்மைப் போலே யாம்படி தாம் இருந்த உலகத்தில் உண்டான கர்மங்களும் முழுதும் அழிந்தன,’ என்னுதல்.
அங்ஙனம் அன்றிக்கே,
‘வியன் ஞாலம்’ என்று வேறு ஒரு தேசம் போலே இருக்கச் சொல்லுகையாலே,
தாம் ‘வீற்றிருந்து ஏழுலகு’ என்னும் இத் திருவாய்மொழியை அருளிச் செய்கிறது
பரமபதத்திலே இருந்து போலே காணும்,’ என்று அருளிச் செய்வர்.
பாவனையின் மிகுதியாலே திருவுள்ளம் பரமபதத்திலேயாய் அங்குற்றாராய்த் தோன்றுகிறபடி.
வியன் ஞாலம் – ‘ஆச்சரியப்படத் தக்க உலகம்’ என்னுதல்; ‘பரப்பையுடைத்தான உலகம்’ என்னுதல்.
————————————————————————————————–
வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்த நம் அச்சுதன்
வீவு இல் சீரன் மலர்க் கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை
வீவு இல் காலம் இசை மாலைகள் ஏத்தி மேவப் பெற்றேன்;
வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்தனன் மேவியே.–4-5-3-
மேன்மையாலும் -ஸ்ரீ யபதித்வத்தாலும் சித்தமான ஆனந்தாதி கல்யாண குணமயன்-யோகம் உடையவனை
ஸ்தோத்ரம் பண்ண ஆனந்த பூரணன் ஆனேன்
வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்த நம் அச்சுதன்-அவிச்சின்ன மான ஆனந்தம் -ஆனந்த வல்லி-மிகுதியான எல்லை –
மனுஷ்ய யௌவனம் -தொடங்கி-மேலே மேலே –
வாக்குக்கும் மனசுக்கும் எட்டாத -என் போல்வாருக்கும் கொடுப்பதில் நழுவாத நம் அச்சுதன்
வீவு இல் சீரன் மலர்க் கண்ணன் விண்ணோர் பெருமான்றனை
ஆனந்தத்துக்கு அடி -எல்லை இல்லாத கல்யாண குண யோகம் -யௌவன தொடக்கமான -நித்ய –
ஸூ சகமான புண்டரீகாஷன் -அகவாய் தெரியுமே திருக் கண்களில்
இதனால் விண்ணோர் பரவும்
வீவு இல்காலம் இசை மாலைகள் ஏத்தி மேவப்பெற்றேன்;-ஒழிவு இல்லாத -கான ரூபம்
வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்தனன் மேவியே-ஆனந்த மயனைக் கிட்டி -அவனது ஒட்டுமே கிட்டினால் -வெட்டினால் விலகுவோம்
-முடிவு இல்லாத அவன் ஆனந்தம் பெற்றோம் -பட்டோமே -உயர்த்தியால் -பஹூமான உக்தி
‘நித்தியமான இன்பத்தினது மிக்க எல்லையிலே தங்கியிருக்கின்ற நம் அச்சுதனும், அழிவில்லாத கல்யாண குணங்களையுடையவனும்,
தாமரை மலர் போன்ற திருக்கண்களையுடையவனும். நித்திய சூரிகளுக்குத் தலைவனுமான சர்வேசுவரனை ஒழிவில்லாத காலமெல்லாம்
இசை பொருந்திய பாமாலைகளால் துதித்துக் கிட்டப்பெற்றேன்; அவ்வாறு அவனைக் கிட்டியதனால்,
முடிவில்லாத மிக்க இன்பத்தினது எல்லையையுடையவன் ஆனேன்,’ என்கிறார்.
‘மிக’ என்பது, ‘மிக்க’ என்ற சொல்லின் விகாரம். ‘மேவி வீவில் மிக்க இன்ப எல்லை(யிலே) நிகழ்ந்தனன்,’ என மாறுக.
‘எல்லா நற்குணங்களையும் உடையனாய் உபயவிபூதிகளையும் உடையனான சர்வேசுவரனைக் கிட்டிக் கவி பாடுகையாலே,
அவனுடைய ஆனந்தத்தையும் விளாக்குலை கொள்ளும்படியான ஆனந்தத்தையுடையன் ஆனேன்,’ என்கிறார்.
வீவு இல் இன்பம் –
அழிவு இன்றிக்கே இருப்பதான ஆனந்தம். ‘அதுதான் எவ்வளவு போதும்?’ என்னில்,
மிக எல்லை நிகழ்ந்த – ‘
இனி, இதற்கு அவ்வருகு இல்லை’ என்னும்படியான எல்லையிலே இருக்கிற. நம் –ஆனந்த வல்லியில் பிரசித்தி.
அச்சுதன் –
இதனை ஒரு பிரமாணம் கொண்டு விரித்துக்கூற வேண்டுமோ? இவ்வானந்தத்திற்கு ஒருகாலும் அழிவு இல்லை
என்னுமிடம் திருப்பெயரே சொல்லுகிறதே அன்றோ?
வீவு இல் சீரன் –
இந்த ஆனந்தத்திற்கு அடியான பரமபதத்தை உடையவன்.
அன்றிக்கே, ‘நித்தியமான குணங்களையுடையவன்’ என்றுமாம்.
குணங்களும் விபூதியும் ஆனந்தத்திற்குக் காரணமாய் அன்றோ இருப்பன?
மலர்க்கண்ணன் –
ஆனந்தத்தை இயல்பாகவேயுடையவன் என்னுமிடத்தைத் திருக்கண்கள் தாமே கோள் சொல்லிக் கொடுப்பனவாம்.
விண்ணோர் பெருமான் தன்னை –
இக்கண்ணழகுக்குத் தோற்று ‘ஜிதம் – தோற்றோம்’ என்பாரை ஒரு நாடாகவுடையவனை.
‘தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவுந் தலைமகனை’ என்னக்கடவதன்றோ?
வீவு இல் காலம் –
‘சிற்றின்பங்களை அனுபவிக்கப் புக்கால், அவை அற்பம் நிலை நில்லாமை முதலிய குற்றங்களாலே கெடுக்கப்பட்டவை ஆகையாலே,
அனுபவிக்குங்காலமும் அற்பமாய் இருக்கும்; இங்கு, அனுபவிக்கப்படும் பொருள் அளவிற்கு அப்பாற்பட்டதாகையாலே,
காலமும் முடிவில்லாத காலமாகப் பெற்றது,’ என்பார், ‘வீவில் காலம்’ என்கிறார்.
‘ஒழிவில் காலமெல்லாம் என்ன வேண்டியிருக்கும்’ என்றபடி.
இசை மாலைகள் –
‘கருமுகை மாலை’ என்னுமாறு போன்று இசையாலே செய்த மாலை. வாசிகமான அடிமை அன்றோ செய்கின்றது?
ஏத்தி மேவப் பெற்றேன் – ஏத்திக்கொண்டு கிட்டப் பெற்றேன். ‘இதனால் பலித்தது என்?’ என்னில்,
வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்தனன் –
நித்தியமாம் எல்லை இல்லாததான ஆனந்தத்தையுடையேன் ஆனேன்.
‘சர்வேசுவரனுடைய ஆனந்தத்தையும் உம்முடைய ஆனந்தத்தையும் ஒன்றாகச் சொன்னீர்; பின்னை உமக்கு வேற்றுமை என்?’ என்னில்,
‘வேற்றுமை எனக்குச் சிறிது உண்டு,’ என்கிறார் மேல் :ஆனந்தத்தில் சாம்யாபத்தி உண்டே -அதனாலே அதே சப்தங்கள் -பின்னும் –
மேவி – அவனுக்கு இயல்பிலே அமைந்தது; எனக்கு அவனை அடைந்த காரணத்தால் வந்தது; அவனுடைய ஆனந்தத்திற்கு அடி இல்லை;
என்னுடைய ஆனந்தத்திற்கு அடி உண்டு. என்றது, ‘இந்தப் பரமாத்துமா தானே ஆனந்தத்தைக் கொடுக்கிறான்,
என்கிற ஏற்றம் உண்டு எனக்கு; அவனுக்குத் தான் தோன்றி என்றபடி.
——————————————————————–
மேவி நின்று தொழுவார் வினை போக மேவும் பிரான்
தூவி அம் புள்ளுடையான் அடல் ஆழி அம்மான் தன்னை
நாவியலால் இசை மாலைகள் ஏத்தி நண்ணப் பெற்றேன்;
ஆவி என் ஆவியை யான் அறியேன் செய்த ஆற்றையே.–4-5-4-
அநந்ய பிரயோஜநாதிகளை காத்தூட்ட -பரிகரம் உண்டே -வாஹனம் -பெரிய திருவடி -திரு ஆழி உண்டே –
மேவி நின்று தொழுவார் வினை போக மேவும் பிரான்-சேர்ந்து -கலந்து -அநந்ய -விரோதி பாபங்கள் ஸ்வயமேவ நசிக்கும் படி
சம்ச்லேஷித்து –
தூவி அம் புள்ளுடையான் அடல் ஆழி அம்மான்றனை-சிறகு -தூவி -அழகிய -தன்னைக்கொண்டு வர பஷபாதம் –
அம் சிறைப் புள் -வெஞ்சிறை புள் கூட்டிப் போகும் போது
கை கழலா நேமியான் மண் மேல் வினை கடிவான் -யுத்தோன்முகன்-சர்வேஸ்வரன் நியந்தாவை
நாவியலால் இசை மாலைகள் ஏத்தி நண்ணப் பெற்றேன்;-கான ரூபம் சந்தர்ப்பம்
ஆவி என் ஆவியை யான் அறியேன் செய்த ஆற்றையே-அனைவருக்கும் ஆவி –என்னாவி -ஸ்ரீ ரெங்க நாத மம நாத
பிரிகதிர் படாமல் சர்வாத்மா
தாரகன் -அந்தராத்மா பூதன் -தனக்கு சரீரமான என் ஆவியை -ஸ்துதிப்பித்து-உகப்பித்து விரும்புகிற பிரகாரம் -யான் அறியேன்
ஏவம்விதம் என்று பரிச்சேத்து-அறியேன் -இதுவும் -இந்த அறியாமையும் -ஆழம் கால் பட உறுப்பாயிற்று
‘வேறு பயன் ஒன்றையும் கருதாது பொருந்தி நின்று தொழுகின்ற அடியார்களுடைய பாவங்கள் போகும்படி அவர்களோடு சேர்கின்ற உபகாரகனும்,
சிறகையுடைய அழகு பொருந்திய கருடப்பறவையை வாகனமாக உடையவனும், பகைவர்களைக் கொல்லுகின்ற சக்கரத்தைத் தரித்த தலைவனுமான
சர்வேசுவரனை, நாவின் தொழிலாலே இசை மாலைகளைக்கொண்டு ஏத்திக் கிட்டப் பெற்றேன்;
பரமாத்துமாவான சர்வேசுவரன் என் ஆத்துமாவைச் செய்த தன்மையினை யான் அறியமாட்டுகின்றிலேன்,’ என்கிறார்.
தொழுவார் – பெயர். ‘ஆவி, என் ஆவியைச் செய்த ஆற்றை யான் அறியேன்,’ என்க.
‘அநந்யப் பிரயோஜனரையும், முதலிலேயே பயன்களில் இழியாத நித்தியசூரிகளையுமுடையனாய் வைத்து,
நித்தியசூரிகளுக்கு அவ்வருகான தான், பிறந்து இறந்து உழல்கின்ற தம் பக்கல் செய்த மஹோபகாரத்தைத் தம்மால்
அளவிட்டு அறிய முடிகிறது இல்லை,’ என்கிறார்.
மேவி நின்று தொழுவார் –
கிட்டக்கொண்டு –தேஹி மே ததாமி தே -‘நான் உனக்குத் தருகிறேன்; நீ எனக்கு ஒன்று கொடு,’ என்று
வேறு பிரயோஜனங்களுக்கு மடியேற்றுக்கொண்டு போகை அன்றிக்கே
,எழுவார் விடை கொள்வார் ஈன் துழாயானை வழுவா வகைநினைந்து வைகல் தொழுவார்’-முதல் திருவந்-26-என்கிறபடியே,
அவன் றன்னையே பிரயோஜனமாகக் கொண்டு தொழுமவர்கள். என்றது,
‘இன்று வந்தித்தனையும் அமுது செய்திடப்பெறில் நான் ஒன்று நூறாயிரமாக் கொடுத்துப் பின்னும்
ஆளும் செய்வன்’- நாய்ச்சியார் திருமொழி, 9 : 7.என்கிறபடியே தொழுமவர்கள் என்றபடி.
கொடுத்துக் கொள்கை அன்றிக்கே கொண்டதுக்குக் கைக் கூலி கொடுக்க வேண்டும் –
வினை போக –
‘அவர்களுக்குப் பின்னை வினை உண்டோ?’ என்னில், வேறு பிரயோஜனங்களிலே
நெஞ்சு செல்லுகைக்கு அடியான பாவங்கள் போகும்படியாக.
‘ஆஸ்ரயண விரோதி கழிந்ததேயாகிலும், பாப ஹேதுவான சரீரம் இருக்கையாலே வேறு பிரயோஜனங்களிலே மனம்
செல்லுகைக்கு அடியான பாபம் உண்டாகைக்குக் காரணம் உண்டே யன்றோ? அத்தகைய பாபங்கள் போம்படி’ என்பது கருத்து.
மேவும் பிரான் –
இவன் வேறு பிரயோஜனங்களைக் கருதாதவனாய்க் கிட்டினவாறே சர்வேசுவரனும்
வேறு பிரயோஜனத்தைக் கருதாதவனாய்க் கிட்டுவானே அன்றோ?
நடுவில் வினைகளுக்கு ஒதுங்க இடமில்லாமையாலே அழிந்து போகும்;
‘இங்கில்லை பண்டு போல் வீற்றிருத்தல் என்னுடைய செங்கண்மால் சீர்க்கும் சிறிதுள்ளம் – அங்கே
மடியடக்கி நிற்பதனில் வல்வினையார் தாம் மீண்டு அடி யெடுப்ப தன்றோ அழகு?’-என்பது பெரிய திருவந். 30.’ என்றாரே அன்றோ?
பிரான் -உபகாரமே இயல்பு என்னும்படி இருக்குமவன்.
ஆக, முதலடியில், முன்பு சில நாள்கள் வேறு பிரயோஜனங்களைக் கருதினவர்களாயிருந்து, பின்பு தன்னையே
பிரயோஜனமாக விரும்பினார் திறத்தில் உபகரிக்கும்படி சொல்லிற்று.
முதலிலேயே வேறு பிரயோஜனங்களில் நெஞ்சு செல்லாதபடி
இருக்கின்ற திருவனந்தாழ்வான் பெரிய திருவடி முதலானவர்களை உடையனாயிருக்கும்படி சொல்லுகிறது மேல்
தூவி அம் புள் உடையான் –
‘தூவி’ என்ற அடைமொழியால், நினைத்த இடத்திலே கொண்டு ஓடுகைக்கு அடியான கருவியை யுடையவன் என்பதனையும்,
‘அம் புள்’ என்றதனால், ‘தேவரீர் திருவடிகளாலே நெருக்கி அழுத்தின தழும்பினாலே சோபிக்கிறவன்’ என்கிறபடியே,
சோபிக்கிற அழகையுடையவன் ஆகையாலே வந்த ஏற்றத்தையுடையவன் என்பதனையும் தெரிவித்தபடி.
தூவி – சிறகு. அம் -அழகு. அடல் ஆழி – ‘பரமபதத்திலுங்கூட அவனுக்கு என்வருமோ என்று
அச்சங்கொண்டிருப்பவன் ஆகையாலே, எப்போதும் ஒக்க யுத்த சந்நத்தனாய் இருப்பவன்’ என்பார்
அடல் ஆழி’ என்கிறார். அடல் – மிடுக்கு. அம்மான் தன்னை – ‘பெரிய திருவடி திருத்தோளிலே பெயராதிருத்தல்,
திருவாழியைச் சலியாதே பிடித்தல் செய்ய வல்லவனே எல்லார்க்கும் தலைவன்,’ என்பார்,
‘தூவியம் புள்ளுடையான் அடலாழி அம்மான்’ என்று ஒரு சேர அருளிச்செய்கிறார்.-
ஆங்கார வார மதுகேட்டு அழலுமிழும் பூங்கா ரரவணையான் பொன்மேனி – யாங்காணவல்லமே யல்லமே மாமலரான் வார்சடையான்
வல்லரே யல்லரே? வாழ்த்து.’-பரமபதத்திலுங்கூட அவனுக்கு என்வருமோ என்று அச்சங்கொண்டிருப்பவன்–அஸ்தானே பயசங்கிகள் –
நா இயலால் இசை மாலைகள் ஏத்தி –
நெஞ்சு ஒழியவும், வாக்கின் தொழில் மாத்திரமே இசை மாலைகள் ஆயிற்றன; என்றது, நாப் புரட்டினது எல்லாம்
இயலும் இசையுமாய்க் கிடக்கையைத் தெரிவித்தபடி.
ஏத்தி நண்ணப் பெற்றேன் –
இவர் நண்ணியன்று ஏத்தியது; ஏத்தியாயிற்று நண்ணியது.
ஆவி என் ஆவியைச் செய்த ஆற்றை யான் அறியேன் –
‘உலகங்கட்கு எல்லாம் ஓர் உயிரேயோ’ என்றும், ‘ஆத்மந ஆகாஸ : ஸம்பூத :- பரமாத்துமாவினின்றும் ஆகாசம் உண்டாயிற்று’ என்றும்,
‘சர்வாத்துமா’ என்றும் சொல்லுகிறபடியே, ஒரு காரணமும் பற்றாமே எல்லாப் பொருள்கட்கும் ஆவியாய் இருப்பவனை ‘ஆவி’ என்கிறார்,
அன்பன் -அனைவருக்கும் -பொதுவான சப்தம் போலே ஆவி இங்கும் -சநிருபாதிக சர்வாத்மாத்வம் –
தாம் மிகமிகத் தாழ்ந்தவர் என்பதனைத் தெரிவிப்பார், ‘என் ஆவியை’ என்கிறார், என்றது,
அவன் விபு; தாம் அணு என்பதனைத் தெரிவித்தபடி. ‘இந்தப் பரமாத்துமாதானே சந்தோஷத்தைக் கொடுக்கின்றான்?’ என்றும்,
‘வீவில் இன்பம் மிக எல்லை நிகழ்ந்தனன்’ என்றும் சொல்லுகிறபடியே, அவனோடு ஒத்த ஆனந்தத்தை உடையவராம்படி
தம்மைச் செய்தமையைத் தெரிவிப்பார், ‘செய்த ஆற்றை’ என்கிறார்,
அன்றிக்கே, ‘உலகமே உருவமாய் இருக்கின்ற ஒருவன், தன் சரீரத்திலே ஒன்றைப் பெறாப்பேறு
பெற்றானாகத் தலையாலே சுமப்பதே!’ என்கிறார் என்னுதல்
அனுபவித்துக் குமிழி நீர்உண்டு போமித்தனை போக்கி, அது பேச்சுக்கு நிலம் அன்று என்பார், ‘யான் அறியேன்’ என்கிறார்.
அன்றிக்கே, ‘செய்த நன்றியை அறிதலும் அவனது,’ என்கிறார் என்னலுமாம்.
——————————————————————–
ஆற்ற நல்ல வகை காட்டும் அம்மானை அமரர் தம்
ஏற்றை எல்லாப் பொருளும் விரித்தானை எம்மான் தன்னை
மாற்ற மாலை புனைந்து ஏத்தி நாளும் மகிழ்வு எய்தினேன்;
காற்றின் முன்னம் கடுகி வினை நோய்கள் கரியவே.–4-5-5-
அனுபவ உபகரணமான -ஞானாதிகளைக் கொடுத்து அனுபவிப்பிக்கும் சர்வேஸ்வரனை -சகல கிலேசங்களும் –
ச காரணமாக-சடக்கென -ஸ்வயமேவ -நசிக்கும் படி ஸ்துதிக்கப் பெற்றேன்
ஆற்ற நல்ல வகை காட்டும் அம்மானை-சாத்மிக்கப் சாத்மிக்க -பொறுக்க பொறுக்க –
ஞானா பக்திகள் -பரபக்தி -பரஞான பரம பக்தி பர்யந்தமாக -பிரபன்ன —
சாஸ்திரங்கள் கொடுத்து -தானே அவதரித்து -ஆச்சார்ய மூலம் –
பகவத் சம்பந்தி -பர ச்மர்த்தியையே நோக்காகக் கொண்டு –
போக்தாக்களுக்கு பிரகாசிப்பிகும் -நிருபாதிக சுவாமி
அமரர் தம் ஏற்றை -நித்ய சூரிகளுக்கு தருவது போலே -நமக்கும் அருளி -செருக்கை உடையவனாய்
நிரங்குச ஸ்வா தந்த்ரன் –
எல்லாப் பொருளும் விரித்தானை -கீதா உபநிஷத் மூலமாக தன்னையும் தன்னை அடையும் பிரகாரங்களையும்
தன்னை அடைந்து அனுபவிக்கும் பிரகாரங்களையும் -உபாய உபேயங்களை -கர்மாதி -பக்தி யோகம் -அருளிச் செய்தானே
தத்வ ஹித புருஷார்த்தங்களை -மூன்றுமே தானே என்று விரித்தானே
எம்மான்றனை
மாற்ற மாலை புனைந்து ஏத்தி நாளும் மகிழ்வு எய்தினேன்;
சொற்கள் -மறுமாற்றம் -ஸ்தோத்ரம் பண்ணி –
காற்றின் முன்னம் கடுகி வினை நோய்கள் கரியவே-வாயு வேகம் மநோ வேகம் என்பார்களே –
ஞான ப்ரேமாதி பிரதிபந்தங்கள் –ராகத்வேஷாதி மகா வியாதிகளையும்
சீக்ரமாக -வெந்து போகும் படியாக -உரு மாய்ந்து போகும் படி
‘பொறுக்கப்பொறுக்க அனுபவிப்பதற்கு நல்ல வகையைக் காட்டுகின்ற அம்மானை, நித்தியசூரிகளுக்குத் தலைவனை,
எல்லாப் பொருள்களையும் பகவத்கீதை மூலமாக விரித்தவனை, எனக்குத் தலைவனை, வினைகளும் நோய்களும் காற்றிற்கு முன்னே
விரைந்து சென்று கரிந்து போகும்படியாக, சொற்களாலே மாலை புனைந்து ஏத்தி எப்பொழுதும் மகிழ்ச்சியுடையவன் ஆனேன்,’ என்கிறார்.
‘வினைகளும் நோய்களும் காற்றின் முன்னம் கடுகிக் கரிய, எம்மானை மாற்றம் மாலை புனைந்து ஏத்தி, நாளும் மகிழ்வு எய்தினேன்,’ எனக் கூட்டுக,
‘கடுகிக்கரிய, புனைந்து ஏத்தி, மகிழ்வு எய்தினேன்,’ என்க.
‘தான் எல்லார்க்கும் தலைவனாய் இருந்து வைத்து அருச்சுனனுக்கு எல்லாப் பொருள்களையும் பொறுக்கப் பொறுக்க அருளிச்செய்தாற் போலே,
எனக்குத் தன் படிகளைக் காட்ட, கண்டு அனுபவித்து, நான் என்னுடைய தடைகள் எல்லாம் போம்படி திருவாய்மொழி பாடி,
எல்லை அற்ற ஆனந்தத்தையுடையவன் ஆனேன்,’ என்கிறார்.
ஆற்ற –
அமைய : பொறுக்கப் பொறுக்க என்றது, ‘குளப்படியிலே கடலை மடுத்தாற் போலே யன்றிக்கே,
பொறுக்கப் பொறுக்க ஆயிற்றுத் தன் கல்யாண குணங்களை அனுபவிப்பித்தது’ என்றபடி.
‘இந்நின்ற நீர்மை இனியாம் உறாமை’ என்றதன் பின்
‘வீற்றிருந்து ஏழ் உலகு’ என்ற திருவாய்மொழியின் அனுபவத்தை அனுபவிப்பித்தானாகில்,
நான் உளேன் ஆகேன் ஆன்றோ?’ என்கிறார் என்றவாறு.
நல்ல வகை காட்டும் –
தன்னுடைய குணங்களையும் செயல்களையும் அனுபவிப்பிக்கின்ற.
அம்மானை –
உடையவன் உடைமையின் நிலை அறிந்தன்றோ நடத்துவான்?
அமரர் தம் ஏற்றை –
சிறிய விஷயங்களையும் உண்டறுக்க மாட்டாதே போந்த என்னை அன்றோ நித்தியசூரிகள் எப்பொழுதும் அனுபவம்
பண்ணுகிற தன்னை அனுபவிப்பித்தான்?
அன்றிக்கே,
‘தனக்கு ஒரு குறை உண்டாய் அன்று;
அனுபவிக்கின்றவர்கள் பக்கல் குறை உண்டாய் அன்று;
தான் சர்வேசுவரனாய் இருந்து வைத்தும், தன் படிகளை அனுபவிக்கும் நித்திய சூரிகளையுடையனாய் இருந்து வைத்தும்
என்னை அனுபவிப்பித்தான்,’ என்கிறார் என்னுதல்.
தம்மை அனுபவிப்பித்த வகையைச் சொல்லுகிறார் மேல்:
எல்லாப் பொருளும் விரித்தானை –
முதல் வார்த்தையிலே ‘தர்மம் இன்னது என்றும், அதர்மம் இன்னது என்றும் அறிகின்றிலேன்,
‘நான் உனக்கு மாணாக்கன்; உன்னைச் சரணம் அடைந்தேன்; என்னைத் தெளியச் செய்வாய்,’ என்ற அருச்சுனனுக்குப்
பிரகிருதி புருஷ விவேகத்தைப் பிறப்பித்து, கரும யோகத்தை விதித்து, ‘அதுதன்னை, நான் செய்கிறேன் என்ற எண்ணத்தைப்
பொகட்டுப் பலத்தில் விருப்பமில்லாமல் செய்வாய்’ என்று, பின்னர் ஆத்தும ஞானத்தைப் பிறப்பித்து, பின்பு பகவத் ஞானத்தைப் பிறப்பித்து,
எப்பொழுதும் நீங்காத நினைவின் உருவமான உபாசனக் கிரமத்தை அறிவித்து, இவ்வளவும் கொண்டு போந்து இதன் அருமையை
அவன் நெஞ்சிலே படுத்தி, ‘இவை என்னால் செய்யத் தக்கவை அல்ல’ என்று கூறிச் சோகித்த பின்பு,
‘ஆகில், என்னைப் பற்றிப் பாரம் அற்றவனாய் இரு,’ என்று தலைக்கட்டினாற்போலே ஆயிற்று,
கிரமத்தாலே தன்னுடைய குணங்களையும் செயல்களையும் இவரை அனுபவிப்பித்தபடி.
அஸ்தானே சிநேக காருண்யம் -கர்ணன் இத்தாலே இழந்தானே -அதே போலே அர்ஜுனன் கொண்டான் –
மூன்று குற்றங்களை பச்சை இட்டான் -அர்ஜுனன் விஷாத யோகம் முதலில் –தர்மம் அதர்மம் த்யாகுலம் –
பிரகிருதி புருஷ விவேக ஞானம் பிறப்பித்து -பால்யாதி போலேவே -ததாகா தேகாந்திர பிராப்தி –
சத்துக்கு அபாவம் வராது -அசத்துக்கு பாவம் வராது –
நியதம் குரு கர்ம அகர்ம-ஞான யோகம் விட கர்ம யோகம் சிறந்தது -சர்வம் கிருஷ்ணார்ப்பணம் –
ஜனகர் போல்வார் கர்ம யோகத்தால் -காட்டி -த்ரிவித தியாகம் -ஆத்மா சரீரம் பிராணன் இந்திரியங்கள் பரமாத்மா -ஐவரும் உண்டே
கர்த்த்ருத்வ புத்தி இல்லாமல்–கர்த்ருத்வம் சாஸ்திரம் அர்த்தத்வாத் -பராத்து தத் ஸ்ருதே –
அவனுக்கு அடங்கி -பலாபிசந்தி பூர்வகமாக -அஹங்கா மமகாரங்கள் இல்லாமல்
ஞானம் என்னும் அக்னியால் கர்மங்களைத் தொலைத்து -ஆத்ம ஞானம் வளர்த்து –
இத்தை விட பவித்ரமான வேறு உபகரணம் இல்லை –
ஸூவ யாதாத்ம்யம் ஏழாவதில் ஆத்ம ஸ்வரூபம் அறிவித்து மேலே – ஸூவ மஹாத்ம்யம் ஒன்பதாவில்
சர்வஸ்ய-வியாப்தன் தான் -அஹம் சர்வஸ்ய பிரபவம் -தரித்து நிர்வகித்து -தன் பெருமையும் காட்டி அருளி
மன் மநாபவ–நித்ய யுக்தா உபாச்யதே -ஞான தர்சன பிராப்திக்கு -பக்தி ஒன்றே வழி
அனசூயை பொறாமை இல்லாததால் இத்தை சொல்கிறேன் -ராஜ குஹ்ய ராஜ யோகம் –
வகை காட்டி அருள வேணும் -நல்ல வகை என்னை தேர்ந்து எடுத்து சொல்லக் கூடாதே
சரம ஸ்லோகம் -அத்தனையும் செய் -விடு -உபாய பாவமாக இல்லாமை கைங்கர்ய ரூபமாக –
ஸ்வீகாரத்தில் உபாய புத்தி தவிர்த்து -சோகப்பட வேண்டாம் –
பற்றினது என்னை -நம் ஆதீனம் -கரிஷ்யே வசனம் தவ -சொல்லி வந்தான் –
அன்று -மாயன் தெய்வத் தேரில் செப்பின கீதையின் செம்மைப் பொருள் அன்றோ –
புறம்பு சொன்னவை எல்லாம் இவன் நெஞ்சை சோதிப்பதற்காக –
இங்கு வகை –உபாயம் இல்லை -அடியிலே இவனே உபாயம்
கிருஷ்ண த்ருஷ்ணையை வளர்த்ததே –குண சேஷ்டிதங்களை அனுபவிப்பது
அர்ஜுனனுக்கு உபாயம் -ஆழ்வாருக்கு ஸ்வரூப ரூப குண சேஷ்டிதங்களை அனுபவிப்பித்து
பக்தியை வளர்த்ததே ஆற்ற நல் வகை
எம்மான் தன்னை –
‘அருச்சுனனுக்குப் பலித்ததோ, இல்லையோ, அறியேன். அந்த உபதேசத்தின் பலம் நான் பெற்றேன்,’ என்கிறார்.
அவனும் இப்பொருளைக் கேட்ட பின்னர், ‘அடியார்களை நழுவ விடாதவரே! தேவரீர் திருவருளால் என்னால்
தத்துவ ஞானம் அடையப்பட்டது; விபரீத ஞானம் நீங்கியது; எல்லாச் சந்தேகங்களும் நீங்கி நிலைபெற்றவனாய் இருக்கிறேன்;
போர் செய்ய வேண்டும் என்கிற தேவரீருடைய வார்த்தையை இப்போதே நிறைவேற்றிவிடுகிறேன்,’ என்று கூறியவன்,
மீண்டும், ‘சந்தேகத்தையுடையவனாய் இருக்கிறேன்’ என்றானே அன்றோ? –அநு கீதை மீண்டும் பிறந்ததே –
உத்தேசிக்கிறவனும் எல்லார்க்கும் பொதுவானவன்; உபதேசிக்கிற பொருளும் எல்லார்க்கும் பொதுவானது.
ஆகையாலே, அதனை யறிந்த இவர்க்குப் பலித்தது என்னத் தட்டு இல்லை அன்றோ?
‘செம்மை யுடைய திருவரங்கர் தாம்பணித்த மெய்ம்மைப் பெருவார்த்தை விட்டுசித்தர் கேட்டிருப்பர்.’ நாய்ச்சியார் திருமொழி, 11 : 10.
என்னக் கடவதன்றோ? இவர் மநோரதத்திலே நின்று போலே காணும் அருளிச் செய்தது.
த்ரைவர்ணிகர்களுக்கே கீதா சாஸ்திரம் -உபாசனம் -இவர்களுக்கும் பாரதந்திர ஞானம் வந்து ஸ்வாதந்திர லேசம்
இல்லாதவர்களுக்கும் பிரபத்தியே தானே ஸ்வரூப விரோதம் உபாசனம் -சர்வ சாதாரணம் பொது நின்ற பொன்னம் கழலே உபாயம் –
இதனாலே தான் ஆழ்வாருக்கு உபதேசித்து -இது பலித்ததே –
அர்ஜுனன் ரதம் இல்லாமல் விஷ்ணு சித்தர் மநோ ரதம் –
இந்த தேர் தட்டிலே இருந்து இத்தை அருளிச் செய்தார் ஆயிற்று இந்த நல்ல வகையை
மாற்றம் மாலை புனைந்து ஏத்தி –
சொன்மாலையைத் தொடுத்து ஏத்தி. என்றது, அவன் செய்த உபகாரத்திலே தோற்று ஏத்தினார்;
அது திருவாய்மொழியாய்த் தலைக்கட்டிற்று,’ என்றபடி.
மாற்றம் – சொல். நாளும் மகிழ்வு எய்தினேன் – அழிவு இல்லாத ஆனந்தத்தையுடையவன் ஆனேன். எய்துகை – கிட்டுகை.
‘இப்படிப் பெரிய பேற்றினைப் பெற்றீராகில், விரோதிகள் கதி என்ன ஆயிற்று?’ எனின்,
காற்றின் முன்னம் கடுகி வினை நோய்கள் கரியவே –
வினைகளும் வினைகளின் பயனான பிறவியும், காற்றினைக்காட்டிலும் விரைந்து எரிந்து சாம்பல் ஆயின.
புதுப்புடைவை அழுக்குக் கழற்றுமாறு போலே, கிரமத்தாலே போக்க வேண்டுவது தானே போக்கிக் கொள்ளப் பார்க்குமன்றே அன்றோ?
அவன் போக்கும் அன்று அவனுக்கு அருமை இல்லையே?
‘வினைப்படலம் விள்ள விழித்து’ என்கிறபடியே, ஒருகால் பார்த்துவிட அமையுமே?
‘பாப ரூபமான கர்மத்தினுடைய கூட்டங்கள், மேருமலை மந்தர மலை இவைகளைப் போன்று
உயர்ந்திருந்தாலும், வைத்தியனைக் கிட்டிக் கெட்ட வியாதி
அழிந்து போவது, கிருஷ்ணனை அடைந்து பாவங்கள் அழிகின்றன,’ என்கிறபடியே,
வியாதியின் மூலத்தை அறிந்த வைத்தியனைக் கிட்டின வியாதி போலே அன்றோ சர்வேசுவரனைக் கிட்டினால் இவை நசிக்கும்படி?
‘வானோ? மறிகடலோ? மாருதமோ? தீயகமோ? கானோ? ஒருங்கிற்றும் கண்டிலமால் ;- ஆனீன்ற
கன்றுயரத் தாம் எறிந்து காயுதிர்த்தார் தாள் பணிந்தோம் வன்துயரை யாவா மருங்கு.’-இது, பெரிய திருவந். 54.
—————————————————————————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply