பகவத் விஷயம் காலஷேபம் 93- திருவாய்மொழி – -4-4-6….4-4-11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

கூத்தர் குடம் எடுத்து ஆடில்,‘கோவிந்தனாம்’எனா ஓடும்;
வாய்த்த குழல் ஓசை கேட்கில், ‘மாயவன்’ என்றுமை யாக்கும்;
ஆய்ச்சியர் வெண்ணெய்கள் காணில், ‘அவன் உண்ட வெண்ணெய் ஈது’ என்னும்;
பேய்ச்சி முலை சுவைத்தாற்கு என் பெண் கொடி ஏறிய பித்தே!–4-4-6-

மநோ ஹர சேஷ்டிதங்களை அனுசந்தித்து
கூத்தர் குடம் எடுத்து ஆடில்,-துர்லபம் -ஆதில் என்கிறார் –
‘கோவிந்தனாம்’எனா ஓடும்;-செருக்கு மிக்கு கூத்தாடும் கிருஷ்ணன் –
பிராமணர் தனம் விஞ்சினால் யாகங்கள் பண்ணுவது போலே
வாய்த்த குழல் ஓசை கேட்கில்,-நெஞ்சை வருத்தும் ஓசை
‘மாயவன்’ என்றுமை யாக்கும்;-இடைப்பெண்கள் பிரணய ரோஷம் ஆறும் மாறும் படி –
தனது தாழ்ச்சி வைத்து -குழல் ஓசை -மோஹியா நிற்கும்
ஆய்ச்சியர் வெண்ணெய்கள் காணில்,-இடைச்சிகள் கையில் வெண்ணெய்
‘அவன் உண்ட வெண்ணெய் ஈது’ என்னும்;-சஜாதீய வெண்ணெய் -பிராமணிகள் வெண்ணெய் தொட மாட்டானாம் –
அதனால் இவளும் ஆய்ச்சியர் வெண்ணெய் என்கிறாள்
பேய்ச்சி முலை சுவைத்தாற்கு -லோகத்தார்க்கு தன்னையே ரஷித்து உபகாரித்தாரே
என் பெண் கொடி ஏறிய பித்தே!-கொடி போன்ற மெல்லிய இவள் –
பிச்சைப் பற்றி பிச்சிப் பிச்சி சொல்கிறாள்
பூ தரும் புணர்ச்சி -களிறு தரும் பணர்ச்சி போல் இல்லாமல்
தன்னை காப்பாத்திக் கொண்டதற்கு தன்னையே சமர்ப்பிக்கிறார் ஆழ்வார் –

கூத்தாடுமவர்கள் குடங்களை எடுத்து ஏறவிட்டுக் கூத்தாடினார்களாகில், ‘கோவிந்தன் ஆம்’ என்று ஓடும்;
பொருந்திய வேய்ங்குழலின் இசையைக் கேட்டால், ‘கிருஷ்ணன்தான்’ என்று மோகிப்பாள்;
ஆய்ப்பெண்கள் கையிலே வெண்ணெயைப் பார்த்தால், ‘இது அந்தக் கிருஷ்ணன் உண்ட வெண்ணெய் ஆகும்,‘ என்பாள்;
பூதனையினுடைய முலையைச் சுவைத்து அவளை உயிர் உண்ட கண்ணபிரான் விஷயத்தில் என்னுடைய கொடி போன்ற
பெண்ணானவள் கொண்ட பிச்சு இருந்தவாறு என்னே!

தன் மகளுடைய பிச்சுக்கு நிதானத்தையும் அது அடியாக வந்த பிச்சையும் சொல்லுகிறாள்.

கூத்தர் குடம் எடுத்து ஆடில் கோவிந்தன் ஆம் எனா ஓடும் –
இவள் தன்மை அறிந்திருக்கையாலே ‘இவளைக் கிடையாது’ என்று கூத்து விலக்கி யிருந்தாற் போலே காணும் கிடப்பது;
ஆதலின், ‘ஆடில்’ என்கிறாள்.
ஆயர்கள் செருக்குக்குப் போக்கு விட்டு ஆடுவது ஒரு கூத்தாயிற்று குடக்கூத்தாகிறது.இடையர் கூத்தாட வில்லை -இங்கு
விளைவது அறியாதே வழிப்போக்கர் புகுந்து ஆடாநிற்பர்களே, அதனைக்கண்டு, இக்குடக்கூத்து ஆடும் போது நிறைந்த பசுக்களையுடைய
கிருஷ்ணனாக வேண்டும் என்று காண ஓடும். ‘இரந்து திரிகின்ற இவர்கள் அவன் ஆகையாவது என்?’ என்பார்கள் அன்றோ
அதனைக் கேட்டும், அவன் கிருஷ்ணனே என்று காண ஓடுகின்றாள் என்பாள், ‘ஆம் எனா ஓடும்’ என்கிறாள்.

வாய்த்த குழல் ஓசை கேட்கில் மாயவன் என்று மையாக்கும் –
‘பொருளின் தன்மை அறிந்தவர்கள், பொருளின் தன்மை அறியாதவர்கள்’ என்று வாசி இன்றிக்கே எல்லாரையும் ஒக்க
ஈடுபடுத்தும் குழலின் நல்லிசை வந்து செவிப்படில் கிருஷ்ணன் என்று மோஹிப்பாள்;
‘நுடங்கு கேள்வி இசை’ என்னப்படுகின்றவன் அன்றோ அவன்?
அன்றிக்கே, ‘பகல் எல்லாம் பசுக்களின் பின்னே போனேன்; மாதா பிதாக்களுக்குப் பரதந்திரன் ஆனேன்; பிரிந்தேன் ஆற்றேன்,
‘ஒரு பகல் ஆயிரம் ஊழி’ என்பன போலே சொல்லிச் சமாதானம் பண்ணிக்கொண்டு வந்து தோற்றுமவன் என்று,
அவன் குழலிலே வைத்துச் சொல்லும் தாழ்ந்த சொற்களை நினைத்து மோஹிக்கும் என்னுதல்.

ஆய்ச்சியர் வெண்ணெய்கள் காணில் அவன் உண்ட வெண்ணெய் ஈது என்னும் –
முடைநாற்றம் மிக்க வெண்ணெய்கள் காணில், ‘களவு காணப் புக்கு வாயது கையது ஆக அகப்பட்ட போது எஞ்சியிருந்த
வெண்ணெயோடே ஒத்த வெண்ணெய் ஈது,’ என்பாள்.
உண்டு சேஷித்த வெண்ணெய் உடன் சஜாதீயம் -சம்பந்த பதார்த்தம் -உண்டு விட்டது சேஷித்த என்று சொல்ல ஒண்ணாது –
பொதுவான வெண்ணெய் -வாயது கையதாக பிடித்த போது கையில் சேஷித்த வெண்ணெய் என்றவாறு
‘பிராமணப் பெண்கள் தீண்டிய வெண்ணெய் இது,’ என்றால் கொள்ளாள் என்பாள்,
‘ஆய்ச்சியர் வெண்ணெய்’ என்கிறாள்.
‘இவள் இப்படிக் கலங்குகைக்கு நிதானம் என்?’ என்னில், ‘அவன் முன்னரே ஓர் உபகாரத்தைப் பண்ணி வைத்தான்;
அதிலே தோற்ற அன்று தொடங்கி இவள் பிச்சு ஏறத் தொடங்கினாள்,’ என்கிறாள் மேல் :
பேய்ச்சி முலை சுவைத்தாற்கு –
தாயுங்கூட உதவாத சமயத்திலே பூதனை வந்து முலை கொடுக்க, அவ்வளவிலே உணர்த்தி உண்டாய், அவளை முடித்துத் தன்னை
நோக்கித் தந்தானே! அவ்வுபகாரத்திலே தோற்று அன்று தொடங்கி இவள் பிச்சு ஏறினாள்.-‘என்றது, என் சொல்லியவாறோ?’ எனின்,
பூத்தரு புணர்ச்சி, புனல் தருபுணர்ச்சி, களிறு தருபுணர்ச்சி என்ற இவை புணர்ச்சிக்குக் காரணங்களாம்.
எட்டாத கொம்பிலே நின்றதொரு பூவை ஆசைப்பட்டால், இவன் தன்னைப் பேணாதே இவள் ஆசையை முடித்துக் கொடுக்கை;
‘இவன் தன்னைப்பேணாதே நம் நினைவை முடித்தானே!’ என்று அதற்காகத் தன்னைக் கொடுக்கை பூத்தரு புணர்ச்சியாம்.
ஆற்றிலே அழுந்துகிற இவளைத் தான் புக்கு ஏற விட்டதற்காகத் தன்னைக் கொடுக்கை புனல் தருபுணர்ச்சியாம்.
தன் நினைவின்றியே யானையின் கையிலே அகப்பட்டவளை மீட்டுக் கொடுத்ததற்காகத் தன்னைக் கொடுக்கை களிறு தரு புணர்ச்சியாம்.
இங்கே இவற்றுள் ஒன்றும் அன்று; அவன் தன்னை நோக்கினதற்கு இவள் தன்னை எழுதிக் கொடுக்கிறாள்;
என் பெண் கொடி –
இவர்களில் வேறுபாடு, இயல்பாகவே அமைந்த பெண் தன்மையையுடையவள்.
ஏறிய பித்து –
இவள் கொண்ட பிச்சு.

————————————————————————————

ஏறிய பித்தினோடு ‘எல்லா உலகும் கண்ணன் படைப்பு’ என்னும்’
நீறு செவ்வே இடக் காணில், நெடுமால் அடியார்’ என்று ஓடும்;
நாறு துழாய்மலர் காணில்,‘நாரணன் கண்ணி ஈது’ என்னும்;
தேறியும் தேறாதும் மாயோன் திறத்தனளே இத் திருவே.–4-4-7-

பரத்வம் சிஹ்னம் கண்டு -படிகளில் ஈடுபட்டும் -கலங்கிய பொழுதும் இல்லா பொழுதும்
ஏறிய பித்தினோடு ‘எல்லா உலகும் கண்ணன் படைப்பு’ என்னும்’-அதிகப்பட்ட பிரமம் வந்த பொழுதும் – –
வேதாந்த வித்துக்கள் போலே -எல்லா லோகமும் கண்ணன் படைப்பு –
அத்வைதிகள் -கண்ணன் என்பர் -கிருஷ்ணன் ஏவ –
வேதமும் அறிந்தவர்கள் சொல்லும் பிரமாணம்
நீறு செவ்வே இடக் காணில், நெடுமால் அடியார்’ என்று ஓடும்;-பஸ்மம் நீளவாட்டில் இட்டாலும் -ஊர்த்வ புண்டரம் போலே –
த்ரவ்யம் இன்னது என்று அறியாமல் -அத்யந்த வ்யாமுக்தன் அடியார் என்று பிரமித்து
அத்யந்த வ்யாமுக்த சர்வேஸ்வரன் -நெடுமால்
நாறு துழாய்மலர் காணில்,‘நாரணன் கண்ணி ஈது’ என்னும்;உண்மையான திருத் துழாய் கண்டால் ஓடாது இருப்பாளோ
தேறியும் தேறாதும் மாயோன் திறத்தனளே இத் திருவே.-
அத்திரு அவனைப் பற்றும் இத்திரு இருவரையும் பற்றும் -அத்திரு மார்பைப் பற்றும் -இத்திரு திருவடிகளைப் பற்றும்
அவளும் -நின் ஆகத்து இருப்பது -கண்டும் இவளும் நின் தாள் நயந்து இருந்தாளே
மிகவும் கலங்காத அந்த திரு -ஊர்த்வம் மாசாய ஜீவிஷ்ட்டே -தத் தஸ்ய சத்ருசம் பவேத்
பிரிந்த தசையில் சத்ருச சம்பந்த பதார்த்தங்களைக் கண்டு -இத்திரு -கலங்கி
சீதையைப் போல் தேறியும் இவளைப் போலே தேறாமலும்
மாயோன் இடமே ஈடுபடா நின்றாள் – -தெளிந்து கோவை வாயாள் -தேராமல் மண்ணை இருந்து துழாவி –

மிகுந்த மயக்கத்தை அடைந்திருக்கும் நிலையிலும் ‘இந்த எல்லா உலகங்களும் கண்ணபிரானுடைய படைப்பு,’ என்னா நிற்கும்;
திருநீற்றினை நேரே (ஊர்த்துவபுண்டரம்) இட்டிருத்தலைக் கண்டால் ‘சர்வேசுவரனுடைய அடியார்கள்’ என்று ஓடுவாள்;
வாசனை வீசுகின்ற திருத்துழாயினைக் கண்டால், ‘நாராயணனுடைய மாலை இதுவாகும்,’ என்பாள்; ஆதலால், இந்தப் பெண்ணானவள்
தெளிந்த நிலையிலும் தெளியாத நிலையிலும் ஆச்சரியமான குணங்களையுடைய சர்வேசுவரனுடைய திறத்தினளே ஆவாள்.
செவ்வே இடுதலாவது, மேல் நோக்கியிருக்கும்படி ஊர்த்துவபுண்டரமாக இடுதல். ‘இத்திரு, தேறியும் தேறாதும், மாயோன் திறத்தனள்,’ என்க.

‘தேறின போதோடு தேறாதபோதோடு வாசி அற எப்போதும் அவன் திறம் அல்லது அறியாளே!’ என்கிறாள்.

ஏறிய பித்தினோடு எல்லா உலகும் கண்ணன் படைப்பு என்னும் –
இவள் பிச்சேறி இருக்கிற நிலையிலே, ‘இந்த உலகம் எல்லாம் கிருஷ்ணனாலே படைக்கப்பட்டன,’ என்பாள்.
பிராமணர் பிச்சு ஏறினாலும், ஓத்துச் சொல்லுமாறு போலே இவ்விஷயத்தில் வாசனை இருக்கிறபடி.
இவள் பிச்சு ஏறிச் சொல்லும் வார்த்தை கேட்கைக்கு, மைத்திரேயர் முதலிய மஹரிஷிகளைப்போலே தொடர்ந்து திரிய வேண்டிக்காணும்
திருத்தாயார்க்கு இருக்கிறது. ‘எல்லா உலகங்களும் மஹாவிஷ்ணுவின் சமீபத்தினின்றும் உண்டாயின;
அந்த விஷ்ணுவினிடத்தில் தானே எல்லா உலகங்களும் லயமாகின்றன?’ என்னா நின்றாள்.
‘உலகங்களினுடைய பிறப்பும் கிருஷ்ணனே, பிரளயமும் கிருஷ்ணனே என்னும் இவை பிரசித்தம்’ என்கிற
இதில் ஒருக்காலும் கலக்கமில்லை என்றபடி.

நீறு செவ்வே இடக் காணில் நெடுமால் அடியார் என்று ஓடும் –
நீற்றினைச் செவ்வே இட்டிருத்தலைக் கண்டால் மேல் நோக்கியிருக்கும் அத்துணை மாத்திரத்தையே கொண்டு
‘மகா வராஹத்தை எடுத்த மஹாவிஷ்ணுவினால் தூக்கப்பட்டவள் ஆகிறாய்’ என்கிறபடியே, என்றும் ஒக்க பகவானுடைய சம்பந்தம்
மாறாத தேசத்தில் மண்ணைக்கொண்டு தரித்துப் போருமவர்களாகக் கொண்டு மயங்கி, ‘இவர்கள் சர்வேசுவரன் அடியார்’ என்று ஓடாநிற்கும்.
பிராயஸ்சித்தப் பிரகரணங்களிலே பிரஹ்மஹத்தி முதலான பாவங்களைப் பண்ணினார்க்குப் பிராயஸ்சித்தமாக விதித்த
திரவியத்தைத் தாமசபுருஷர்கள் தரித்துப் போந்தார்கள்;
அந்தத் திரவியத்தைப் பாராதே செவ்வை மாத்திரத்தைக் கொண்டு மயங்குகின்றாள் இவள்;
அது பொடிபட்டுக் கிடக்கிறது என்று அறிகின்றிலள்; சிறிது ஒப்புமை அமையுமாயிற்று இவள் மயங்குகைக்கு,
இவளுடைய மயக்கபுத்தி இருக்கிறபடி. ‘நன்று; அவர்கள் செவ்வே இடுவார்களோ?’ என்னில், அதுவும் அன்றிக்கே,
மசகப் பிராயராய் இருப்பவர்கள் தரிப்பார்களே அன்றோ?

நாறு துழாய் மலர் காணில் நாரணன் கண்ணி ஈது என்னும் –
வாசனையையுடைய திருத்துழாயைக் காணில், ‘உபய விபூதிகளையுமுடையனான சர்வேசுவரன் ஐஸ்வரியத்துக்கு இட்ட தனி மாலை ஈது,’ என்னும்.
அது அல்லாததனை அதுவாக நினைத்து மயங்குகின்றவள் அதனையே கண்டால் விடாளே அன்றோ?
‘சுடர்முடிமேலும் தாளிணை மேலும் புனைந்த தண் அம் துழாய்’ என்கிறபடியே, அவன்-சிரஸா வஹித்து – தலைமேல் கொண்டு அடியார்க்குக்
கொடுக்குமது அன்றோ அதுதான்? என்றது. ‘ஸ்ரீசடகோபனுக்குச் சாத்துகை’ என்றபடி.

தேறியும் தேறாதும் –
‘துழாய் மலர் காணில்’ என்றதனை நோக்கித் ‘தேறியும்’ என்கிறாள்;
நீறு செவ்வே இடக்காணில்’ என்றதனை நோக்கித் ‘தேறாதும்’ என்கிறாள்.
அன்றிக்கே, ‘கோவை வாயாள்’ என்ற திருவாய்மொழியை நோக்கித் ‘தேறியும்’ என்கிறாள்;
இத்திருவாய்மொழியை நோக்கித் ‘தேறாதும்’ என்கிறாள் என்னுதல்.

மாயோன் திறத்தனளே இத்திருவே –
மாயோன் இடையாட்டத்திலாள் இத்திரு. பிறந்த ஞானம் கலக்கத்துக்குக் காரணமாம்படி செய்ய வல்ல ஆச்சரியத்தையுடையவன்
என்பாள், ‘மாயோன்’ என்கிறாள். ‘அநபாயிநியான அவளோடு ஒக்க விகற்பிக்கலாம்படி காணும் இவள்படிகள் தாம் இருப்பன’ என்பாள்,
‘இத்திரு’ என்கிறாள். அவளுக்கு அவன் உத்தேஸ்யன்; இருவரும் உத்தேஸ்யரான சேர்த்தி உண்டு இவளுக்கு.

———————————————————————-

திருவுடை மன்னரைக் காணில், ‘திருமாலைக் கண்டேனே’ என்னும்;
உருவுடை வண்ணங்கள் காணில், ‘உலகுஅளந் தான்’என்று துள்ளும்;
‘கருவுடைத் தேவில்கள் எல்லாம் கடல்வண்ணன் கோயிலே’ என்னும்;
வெருவிலும் வீழ்விலும் ஓவாக் கண்ணன் கழல்கள் விரும்புமே.–4-4-8-

ஐஸ்வர்ய -திருவுடை மன்னர்கள் -ஆபி ரூப்ய-உருவுடை வண்ணங்கள் -ஆதரணீயதயா -கருவுடைத் தேவில்கள்-
போலி -கண்டாலும் -எல்லா அவச்தைகளிலும் அவனையே விரும்பும்
திருவுடை மன்னரைக் காணில், ‘திருமாலைக் கண்டேனே’ என்னும்;-பூரணமான ஐஸ்வர்யம் உடைய அரசர்கள்
பரி பூரணமான ஐஸ்வர்யம் உடைய திருமால் -ஏக தேச அல்ப அம்ச சாம்யம் -பிரம கார்யம்
உருவுடை வண்ணங்கள் காணில், ‘உலகுஅளந் தான்’என்று துள்ளும்;-கடலும் காயாவும் கருவிளை
தொடக்கமான உரு -வெவ்வேற வடிவம் வெவ்வேற வர்ணம்
ஒரு நாளே வளர்ந்த செவ்வி உடைய ரூபா சோபை
ஆழி எழ -போலே -கரு நீல வர்ணம் -ஆகாசம் சூரியன் சந்தரன் -சங்கு சக்கரம் -திரு ஆபரணங்கள் நஷத்ரம்
தாயார் மின்னல் போலே வெட்ட -துள்ளுகிறார் ஆழ்வார்
‘கருவுடைத் தேவில்கள் எல்லாம் கடல்வண்ணன் கோயிலே’ என்னும்;-கர்ப்பக்ருஹம் -பிரதிமையை உடைய
எந்த கோயில்களைக் கண்டாலும் -தேவு இல் தேவ க்ருஹம்
கடல் போன்ற தர்ச நீயமானவன் உடைய திருக் கோயில்
வெருவிலும் வீழ்விலும் ஓவாக் கண்ணன் கழல்கள் விரும்புமே.-பந்து சன்னதியால் அஞ்சின போதும் –
ஆர்த்தியாலே மோகித்த போதும் வாசி அற இடைவிடாமல் திருவடிகளை ஆதரியா நிற்கும்

‘செல்வத்தையுடைய அரசர்களைக் கண்டால், ‘திருமகள் கேள்வனைக் கண்டேன்,’ என்பாள்; அழகு பொருந்திய வடிவங்களைக் கண்டால்,
‘உலகத்தையெல்லாம் அளந்த திரிவிக்கிரமன்’ என்று துள்ளுவாள்; படிமங்களையுடைய கோயில்கள் எல்லாம்
‘கடல் போன்ற நிறத்தையுடைய திருமால் கோயில்களே’ என்பாள்; தெளிவுடையளாய்ப் பந்துக்களுக்கு அஞ்சின காலத்திலும்
மயங்கின காலத்திலும் இடைவிடாமல் கண்ணபிரானுடைய திருவடிகளையே விரும்பாநின்றாள்,’ என்றவாறு.
திரு – அரசச்செல்வம். வண்ணம் – வடிவிற்கு ஆகுபெயர். கரு – படிமை. தே இல் – கோயில்; தே – தெய்வம்.
வெருவுதல் – உறவினர்க்கு அஞ்சுதல். வீழ்தல் – மயக்கம்.

‘மிகத்தடுமாறிய நிலையினளாய் இருந்தாலும் இவள் அவனுக்கே உரியவளாய் இருக்கின்றாள்,’ என்கிறாள்.

திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே என்னும்
-குறைவற்ற ஐஸ்வரியங்களையுடைய இராசாக்களைக் காணில், ‘திருமகள் கேள்வனை ஒருபடி காணப் பெற்றேனே’ என்பாள்.
நாதமுனிகள், இராஜா சாமந்தன் தலையிலே அடியை இட்டு யானைக் கழுத்திலே புக்கபடியைக் கண்டு,
சர்வேசுவரன் பிரமன் முதலியோர் தலையிலே அடியிட்டுப் பெரியதிருவடியை மேற்கொள்ளும்படி இதுவாகாதே!’ என்னா
மோகித்தார் என்பது பிரசித்தமே அன்றோ? இராஜா தன் சேனையோடே கங்கை கொண்ட சோழபுரத்து ஏறப் போகச்செய்தே,
பெரிய முதலியார் மன்னனார் திருவடிகளிலே சேவித்திருக்கச் செய்தே, பெண்பிள்ளை வந்து,
‘நம் அகத்திலே ஒரு குரங்கும் இரண்டு வில்லிகளும் ஒரு பெண்ணுமாய் வந்து புகுந்தார்கள்,’ என்றவாறே,
‘பெருமாளும் இளைய பெருமாளும் பிராட்டியும் ஐந்திரவியாகரண பண்டிதனும்’ என்று புத்தி பண்ணிப் பின் தொடர்ந்து போய்,
முன்னே போகின்றவர்கள் ‘போகின்றார்கள், போகின்றார்கள்’ என்னக் கேட்டுக் கீழை வாசலிலே சென்றவாறே,
‘இப்படிப் போகின்றவர்களைக் கண்டீர்களோ?’ என்று வாசலில் அவர்களைப் பார்த்துக் கேட்க,
அவர்கள் ‘கண்டிலோம்’ என்ன, அதுவே காரணமாகத் திருநாட்டிற்கு எழுந்தருளினார் அன்றோ?-காணும் அளவும் போனாரே

உருவுடை வண்ணங்கள் காணில் உலகு அளந்தான் என்று துள்ளும் –
நீலம் குவளை காயா உருப்பெற எழுதின சித்திரம் இவற்றைக் காணில், நிற மாத்திரத்தையும் ஊனக்கண்ணுக்குத் தோன்றுகிற
எளிமைத் தன்மையையும் கொண்டு, குணாகுண நிரூபணம் பண்ணாதே எல்லார் தலைகளிலும் திருவடிகளை வைத்தவன் என்று,
பசுவின் அருகே கட்டி வைத்த கன்று துள்ளுமாறு போலே பரபரப்போடும் கூடிய செயல்களைப் பண்ணாநிற்கும்.

கருவுடைத் தேவில்கள் எல்லாம் கடல்வண்ணன் கோயிலே என்னும் –
கல் புதைத்துக் கிடக்கும் இடங்களைக் காணில், அவையெல்லாம் பெரிய பெருமாள் பள்ளிகொண்டருளுகிற கோயிலே என்பாள்.
இவற்றிற்கு உள்ளீடு சர்வேசுவரன் ஆகையாலே, இவற்றைக் ‘கரு’ என்கிறது.
‘திசைமுகன் கருவுள் இருந்து படைத்திட்ட கருமங்களும்’ என்பது மறைமொழி.

வெருவிலும் வீழ்விலும் ஓவாக் கண்ணன் கழல்கள் விரும்பும் –
தெளிவுடையளாய்ப் பந்துக்களைக் கண்டு அஞ்சியிருக்கும் போதோடு அறிவு அழிந்து மோகித்த சமயத்தோடு வாசி அற,
இடைவிடாதே கிருஷ்ணன் திருவடிகளையே விரும்பாநிற்பாள். ‘இது, என்றும் ஒரே தன்மையாய் இருக்கும்.
மாறாடி வருவது மோஹமும் உணர்த்தியும்; நிலையாயிருப்பது இதுவே.
இதனால், பகவானிடத்தில் ஈடுபட்டு இருக்குந்தன்மை இவர்க்கு உயிரோடு சேர்ந்தேயிருப்பது என்றபடி.
பகவத் பிராவண்யம் -அபி நிவேசம் இவருக்கு -சத்தா பிரயுக்தம் -சஹஜம்

—————————————————————————-

விரும்பிப் பகவரைக் காணில், ‘வியலிடம் உண்டானே’ என்னும்;
கரும் பெரு மேகங்கள் காணில், ‘கண்ணன்’ என்று ஏறப் பறக்கும்;
பெரும் புலம் ஆநிரை காணில், ‘பிரான் உளன்’ என்று பின் செல்லும்;
அரும் பெறல் பெண்ணினை மாயோன் அலற்றி அயர்ப்பிக்கின்றானே.–4-4-9-

ஆஸ்ரிதர் பக்கல் உபகாரம் அனுசந்தித்து சத்ருச சம்பந்திகள் கண்டு வாய் புலற்றி
விரும்பிப் பகவரைக் காணில், ‘வியலிடம் உண்டானே’ என்னும்;சன்யாசிகளைக் கண்டு -வில்லி புத்தூர் பகவர் துறை மாற்றி –
கைங்கர்ய பரர்-குண நிஷ்டர் -வைதிகர் -வேத தாத்பர்யம் ரகச்யார்த்தம் நிஷ்டர் என்பர் அவர் –
பழுதிலா ஒழுகல் ஆறு வேண்டும் வேதம் அறிய –
வேத சாரம் -மனம் உடையீர் ஸ்ரத்தையே அமையும் -ஆத்மாவைப் பாக்கும் திருமந்தரம் -என்பர்
ஞான பூர்த்தியால் ஆஸ்ரிதர்களை
இதுவே சதர்சம் இவர்களுக்கும் அவனுக்கும் -மோஷ ஆச்ரமிகள் சன்யாசிகள் –
கரும் பெரு மேகங்கள் காணில், ‘கண்ணன்’ என்று ஏறப் பறக்கும்;-கறுத்த பெருத்த
ஞான அஜ்ஞ்ஞான விபாகம் இல்லாமல் வடிவைக் காட்டி உபகரித்தவன் -பறக்க தேடா நிற்கும்
பெரும் புலம் ஆநிரை காணில், ‘பிரான் உளன்’ என்று பின் செல்லும்;-பசுக் கூட்டம் பார்த்தால் –
இவற்றை மேய்த்து ரஷிப்பவன்–கண்டால் கண்ணன் –
கூடவே வருவார் -நடுவில் நிச்சயமாக உளன் -உடன் கூட அனுபவிப்பான்
அரும் பெறல் பெண்ணினை மாயோன் அலற்றி அயர்ப்பிக்கின்றானே.-உபகார சேஷ்டிதங்களை உடைய -மயக்கம் அடைய வைக்கிறான் –

‘பகவானுக்கு அடிமைப்பட்ட துறவிகளைக் கண்டால், விரும்பி, ‘அகன்ற உலகத்தை எல்லாம் புசித்த திருமால்’ என்பாள்;
கரிய பெரிய மேகங்களைக் கண்டால், ‘கண்ணபிரான்’ என்று கூறிக் கொண்டு மேலே எழுந்து பறப்பதற்குப் பாராநின்றாள்;
பெரியனவாயும் காட்சிக்கு இனியனவாயும் இருக்கிற பசுக்கூட்டங்களைக் கண்டால், ‘கண்ணபிரான் அவற்றினிடையே இருக்கிறான்,’ என்று
அவற்றின் பின்னே செல்லுவாள்; பெறுதற்கரிய என் பெண்ணினை மாயவன் வாய்விட்டு அலற்றும்படி செய்து மயங்கச் செய்கிறான்,’ என்கிறாள்.

பகவர் – பகவானுக்கு அடிமைப்பட்டவர்கள்; சந்யாசிகள். ‘காணில் விரும்பி என்னும்’ என மாறுக. விரும்புதல் – பெண்ணின் தொழில்.

பெறுதற்கு அரிய இவள், தன்னையே வாய் வெருவி மயங்கும்படி பண்ணா நின்றான்,’ என்கிறாள்.

பகவரைக் காணில் விரும்பி வியல் இடம் உண்டானே என்னும் –
ஞானம் பக்தி வைராக்கியம் முதலான குணங்களால் நிறைந்தவர்களாய் இதர விஷயங்களில் விரக்தராய்
இருக்கும் துறவிகளைக் காணில், ஆதரித்து,
‘பிரளய ஆபத்திலே உலகத்தை அடைய வயிற்றிலே வைத்து நோக்கி, பாதுகாக்கப்பட வேண்டிய பொருள்களைப் பாதுகாத்தலைச் செய்கையாலே
வந்த மன நிறைவு தோற்ற இருக்கின்ற சர்வேசுவரன்,’என்னும். வியல் இடம் – அகன்றதாய் உள்ள பூமி.
‘நின்ற குன்றத்தினை நோக்கி நெடுமாலே!’ என்று மயங்கினாற் போலே காணும் அடியார்களைச் சர்வேசுவரனாகக் கொண்டு
மயங்குகின்றதாகிய இதுவும்.
அசித்துக்கும் ஈசுவரனுக்கும் பேதமுண்டாயிருக்கச் செய்தேயும் ஐக்கியம் கூறியது மயக்கத்தின் காரியமானாற் போன்று, இதுவும்
மயக்கத்தின் காரியம்’ என்றபடி.

கரும்பெரு மேகங்கள் காணில் கண்ணன் என்று ஏறப் பறக்கும் –
கறுத்துப் பெருத்துச் சிரமத்தைப் போக்கக்கூடியதான மேகத்தைக் கண்டவாறே, அவ்வடிவையுடைய கிருஷ்ணன் என்று,
பறப்பாரைப்போலே இருக்கப் பரபரப்போடு நிற்பாள். மேகத்தைக் கண்ட அளவில் சிறகு எழும் போலே காணும். -மயில் ஆலுமே –
சேர்ப்பாரை பஷிகள் ஆக்கி பிரபன்ன ஜட கூடஸ்தர் -ஜ்ஞான கர்மங்களே சிறகுகள் –
மேகத்தைக் கண்டவாறே ஒரு பக்ஷபாதம் உண்டாகக் கூடியதன்றோ?’ ‘இராஜேந்திர சோழன் என்ற ஊரிலே
திருவாய்க்குலத்தாழ்வார் என்ற ஒருவர் உண்டு; அவர் கார் காலத்தில் பயிர் பார்க்க என்று புறப்பட்டு மேகத்தைக் கண்டவாறே மோஹித்து
விழுந்தார்; அவர் விழுந்ததைக் கண்டு நின்ற குடிமகன் ஓடி வந்து அவரை எடுத்துக்கொண்டு வந்து வீட்டிலே விட்டு,
‘இவர் தன்மை அறிந்திருந்தும் இந்நாளிலே இவரை வயல் பார்க்கப் புறப்பட விடுவார் உண்டோ?’ என்றான்.

‘குவலையஞ் சூழ்கடல் காயா மரகதங் கொண்டல் நெய்தல்
குவலையங் கண்டன்பர் நைவரென்றால் கொற்ற வாணற்குவா
குவலைய நேமி தொட்டாயரங் கா!கொடும் பல்பிறப்பா
குவலையங் கற்றுனைக் காணில் என்னாங்கொல் குறிப்பவர்க்கே?’–என்ற திவ்வியகவியின் திருப்பாசுரம், இங்கு அநுசந்திக்கத்தகும்.

‘வெய்யோனொளி தன்மேனியின் விரிசோதியின் மறையப்
பொய்யோஎனு மிடையாளொடு மிளையானொடும் போனான்
மய்யோ மர கதமோ மறிகடலோமழை முகிலோ
அய்யோஇவன் வடிவென்பதொர் அழியாஅழ குடையான்’– என்ற கம்பநாட்டாழ்வார்

பெரும்புலம் ஆநிரை காணில் பிரான் உளன் என்று பின்செல்லும் –
அளவு மிகுந்து பெருத்துக் காட்சிக்கு இனியதாய் இருக்கிற பசுநிரைகளைக் காணில், ‘என் நிலை அறிந்து வந்து
உதவுகைக்காகக் கடைக்கூழையிலே வாரா நின்றான்’ என்று அவற்றிற்குப் பின்பு ஏறப்போகாநிற்கும்.
அன்றிக்கே, ‘அவற்றின் திரளுக்குள்ளே அவனையும் காணலாம்’ என்று அவற்றின் பின்னே போகா நிற்கும் என்னுதல்.
பின் செல்லும்’ என்பதற்கு இரண்டு வகையாகக் கருத்து அருளிச்செய்கிறார்:
ஒன்று, கிருஷ்ணன் பசுக்கூட்டங்கட்குப் பின்னே வருகின்றான் என்று நினைத்து, முன்னிடத்தில் இருக்கும் இவள் கிருஷ்ணனிருக்கும்
பின்னிடத்திற்குச் செல்கின்றாள் என்பது.
மற்றொன்று, கிருஷ்ணன் பசுக்களின் மத்தியில் இருக்கிறான் என்று நினைத்துப்
பசுக்களின் பின்னேயே தொடர்ந்துசெல்கின்றாள் என்பது.

அரும்பெறல் பெண்ணினை –
ஸ்ரீராமா! தசரத சக்கரவர்த்தி செய்த மஹத்தான தவத்தாலும் மஹத்தான யாகம் முதலிய செயல்களாலும்
அவருக்குப் புத்திரன் ஆனாய்,’ என்கிறபடியே, தம்மைப் பெற்றவர்கள் பட்ட வருத்தம் அல்ல கண்டீர் நான் இவளைப் பெறுதற்குப் பட்டது;
அடியிலே பல காலம் தவம் செய்தே அன்றோ இவளைப் பெற்றது இவள்.
‘அடியிலே’ என்றது, சிலேடை : ‘ஆதி காலத்திலே’ என்பதும், ‘திருவடிகளிலே’ என்பதும் பொருள்.

மாயோன் –
‘குரவர்களாகிய தாய் தந்தையர்கள் நம்மை என் செய்வார்கள்?’ என்கிறபடியே, பெற்றவர்களைக் கை விடும்படி செய்ய வல்லவன்.
அலற்றி அயர்ப்பிக்கின்றான் –
எப்போதும் தன்னையே வாய் வெருவும்படி செய்து, அத்துணையில் நில்லாது மயங்கும்படி பண்ணாநின்றான்.

—————————————————————————————-

அயர்க்கும்;சுற்றும் பற்றி நோக்கும்; அகலவே நீள் நோக்குக் கொள்ளும்;
வியர்க்கும்; மழைக் கண் துளும்ப வெவ் வுயிர் கொள்ளும்;மெய் சோரும்;
பெயர்த்தும்‘கண்ணா!’என்று பேசும்; ‘பெருமானே, வா!’என்று கூவும்;
மயற் பெருங் காதல் என் பேதைக்கு என் செய்கேன் வல் வினையேனே?–4-4-10-

சௌலப்யாதி குணங்களை அனுசந்தித்து சத்ருசா சம்பந்தி பதார்த்தங்களையும் கூட காண முடியாத ஆர்த்தி விஞ்சி
அயர்க்கும்;சுற்றும் பற்றி நோக்கும்; அகலவே நீள் நோக்குக் கொள்ளும்;மோகியா நிற்கும் -நடுவில் கொஞ்சம் உணர்ந்து சுற்றும் நோக்கும்
உணர்த்தி வந்ததும் இந்த அவஸ்தையில் வாராது ஒழிவான் என்று
வந்து கொண்டு இருக்கிறான் -என்று கண்ணை விளித்து தூரமும் பார்க்கும்
வியர்க்கும்;காணா விட்ட வாறே -பிரணய ரோஷம் -தலை எடுத்து வியர்த்து நீராகி நிற்கும்
மழைக் கண் துளும்ப வெவ் வுயிர் கொள்ளும்;மெய் சோரும்;-மழை போலே -வெளியில் வியர்த்த நீர் தவிர கண் வழியே வரும்
-கோப அக்னியால் சுவரி அடி அற்று உலர்ந்து வெம்மை தோன்ற நெடு மூச்சு எறியும்
பரிதாபத்தால் சரீரம் தரிக்க முடியாமல் சோர்ந்து போகும்
பெயர்த்தும்‘கண்ணா!’என்று பேசும்; ‘பெருமானே, வா!’என்று கூவும்;ஆசையால் மீண்டும் கண்ணா -சம்பாதித்து
பெயர் கேட்ட பின்பு வந்தானாக -கை காட்டிதற்கே தூணில் தோன்றினான் -அதிசயமாக வந்தானே -என்று அழைக்கும்
மயற் பெருங் காதல் என் பேதைக்கு என் செய்கேன் வல் வினையேனே?-பிச்செரும் படி பெரும் காதல்
பவ்யம் இல்லாத சொல் கேளாத பெண் -அதி பிரபல பாவம் -வாராதவனை வரப் பெறுவேனோ -இவளை ஆற்றுவேனோ

‘மயங்குவாள்; பின்னர் நாற்புறத்திலும் பலகாலும் பாராநிற்பாள்; விரிந்து செல்லும்படி நீண்ட தூரம் பார்ப்பாள்;
பின்னர் வியர்த்து நீராக நிற்பாள்; குளிர்ந்த கண்களில் நீர் துளும்பும்படி பெருமூச்சு எறிவாள்; தளர்வாள்; மீண்டும்,
‘கண்ணபிரானே!’ என்று பேசுவாள்; ‘பெருமானே, வா!’ என்று கூவுவாள்;
பெரிய காதலால் மயக்கங்கொண்ட என் பெண்ணிற்கு வல்வினையேன் என் செய்வேன்!’ என்கிறாள்.
‘அயர்க்கும், நோக்கும், கொள்ளும், வியர்க்கும், கொள்ளும், சோரும், பேசும், கூவும்’ என்பன,
செய்யும் என் முற்றுகள். பேதை – பருவப்பெயர்.

நிறம் முதலியவற்றால் எம்பெருமானை ஒத்திருக்கும் பொருள்களை நினைப்பதற்கு ஆற்றல் இல்லாத துன்பத்தின்
மிகுதியாலே இவளுக்குப் பிறந்த வேறுபாடுகளைச் சொல்லி, ‘நான் என் செய்வேன்?’ என்கிறாள்.

அயர்க்கும் –
நின்றுகொண்டு இருக்கும்போதே சித்தத்தின் செயல் அற்று மயங்குவாள்.
சுற்றும் பற்றி நோக்கும் ‑
பின்னையும் அறிவு குடிபுகுந்து, தன் ஆபத்தே செப்பேடாக அவன் வரவை அறுதியிட்டு, வந்து அருகே நின்றானாக,
ஆசையோடு சுற்றும் பாரா நிற்பாள்.
அகலவே நீள் நோக்குக் கொள்ளும் –
அங்குக் காணாமையாலே, ‘எப்படியும் இவ்வளவில் புறப்படாதொழியான்,’ என்று அவன் புறப்படுதல் தொடங்கிக்
காண்கைக்காகப் பரக்கக் கொண்டு பரம பதத்தளவும் செல்லப் பாரா நிற்பாள்.
வியர்க்கும் –
அங்குக் காணாமையாலே, ‘என்னளவு இதுவாய் இருக்க வாராது ஒழிவதே!’ என்று நொந்து, இளைப்பாலே வேரா நிற்பாள்.
மழைக்கண் துளும்ப வெவ்வுயிர் கொள்ளும் –
மழைபோலே அருவி சொரிகின்ற கண்ண நீரானது கோபத்தீயாலே சுவறி அடி அற்றுக் கண்ணளவிலே துளும்பும்படி
அவ்வெம்மை தோன்ற நெடுமூச்சு எறிவாள். என்றது, ‘வியர்வையாய்ப் புறப்பட்டுப் புறப்படாதது கண்ணீராய்ப் புறப்படும்;
கண்ணீராய்ப் புறப்படாதது நெடுமூச்சாய்ப் புறப்படும்,’ என்றபடி.

மெய் சோரும் –
அகவாயில் உள்ளது நேராகப் போனவாறே தன் வசம் இல்லாத சரீரத்தையுடையவள் ஆம்.
‘இவள்படியே இப்படித் துவளுவது! ஏன்? முடிந்தாலோ?’ எனின், அற முடிய ஒட்டாதே ஆசையாகிய தளை?
பெயர்த்தும் கண்ணா என்று பேசும் –
மீண்டும் ‘கிருஷ்ணனே!’ என்று விளிப்பாள். பெருமானே வா என்று கூவும் – அவ்வாறு விளித்து, அந்தத் திருப்பெயராலே
பிறந்த நினைவின் மிகுதியாலே வந்த உருவெளிப்பாட்டாலே வந்தானாகக் கொண்டு, ‘வா’ என்று அழைப்பாள்.
அன்றிக்கே, பின்னையும் ‘உடையவன் உடைமையை இழக்க விடுமோ?’
நாம் படுவது காண மறைய நின்றானத்தனை’ என்று ‘வா என்று அழைப்பாள்’ என்னுதல்.
‘பெருமானே வா என்று கூவும்’ என்றதற்கு இரண்டு விதமாகக் கருத்து அருளிச்செய்கிறார், ‘அவ்வாறு விளித்து’ என்று தொடங்கி.
‘உரு வெளிப்பாடு’என்றது, ஞானத்தின் தெளிவை. முதல் கருத்து, பாவனையின் மிகுதியாலே
முன்னே தோன்றுகையாலே வா என்று அழைக்கிறாள் என்பது.
இரண்டாவது கருத்து, ‘இந்நிலையில் உடையவன் நம்மை விட்டுப் போகான், மறைய நிற்கின்றான்’ என்று
நினைத்து வா என்று அழைக்கிறாள் என்பது.

மயல் பெருங்காதல் என் பேதைக்கு –
மயக்கத்தைச் செய்யக் கூடியதான பெரிய காதலையுடைய என்னுடைய இளம் பெண்ணுக்கு,
என் செய்கேன் –
இவள் மயங்காதபடி செய்யவோ? நான் இதனைப் பொறுத்திருக்கவோ?
வல்வினையேனே –
இவளை இப்படிக் காணும்படி மஹா பாவத்தைப் பண்ணினேன்!
ஆழ்வான் திருக்கண்கள் நோவுபட்ட பின்பு எம்பெருமானார் திருவுள்ளம் நோவுபட்டாற்போலேகாணும் திருத்தாயார் திருவுள்ளமும் படுகிறது
தாயாரின் ஈடுபாடு, ‘இவள் படியே’ என்று தொடங்கும் வாக்கியம். ‘
இவள்படி’ என்றது, சிலேடை : சரீரமும், விதமும்.

‘அவத்தப் புன் சமயச் சொற் பொய்யை மெய்யென்று அணிமிடறு புழுத்தான்றன் அவையில் மேவிச்
‘சிவத்துக்கு மேற்பதக்குண்’ டென்று தீட்டும் திருக் கூர வேதியர்கோன் செவ்வி பாடப்
பவத்துக்கம் பிணி நீங்க நரகந் தூரப் பரமபதங் குடிமலியப் பள்ளி கொள்ளும்
நவத்துப்புச் செங்கனி வாய்க் கரிய மேனி நம்பெருமாள் அரங்கேசர் ஆடி ரூசல்.’– என்றார் திவ்விய கவியும்.

—————————————————————————–

வல்வினை தீர்க்கும் கண்ணனை வண் குருகூர்ச் சடகோபன்
சொல் வினையாற் சொன்ன பாடல் ஆயிரத்துள் இவை பத்தும்
நல்வினை என்று கற்பார்கள் நலனிடை வைகுந்தம் நண்ணித்
தொல் வினை தீர எல்லாரும் தொழுது எழ வீற்றிருப்பாரே.–4-4-11-

பகவத் சேஷத்வ சாம்ராஜ்ய பிரதிஷ்டிதர் ஆவார்கள் புருஷார்த்தம் கிட்டும் –
வல்வினை தீர்க்கும் கண்ணனை வண் குருகூர்ச் சடகோபன்-ஆஸ்ரிதர் -சம்ச்லேஷ பிரபந்தகங்களை தீர்க்கும்
அனுபவிக்க விரோதியான -ஆழ்வார் தசை –
சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி
சொல் வினையாற் சொன்ன பாடல் ஆயிரத்துள் இவை பத்தும்-வாசிக சேஷ வ்ருத்தி ரூபமாக -வாசா கைங்கர்யம்
நல்வினை என்று கற்பார்கள் நலனிடை வைகுந்தம் நண்ணித்-நலனுடை -பாட பேதம் -அவன் மேவு வைகுந்தம் -கிட்டும் –
விலஷண வ்ருத்தி விசேஷம் கற்பதே தொண்டு என்று நினைத்து
பகவத் அனுபவ ஆனந்தம் உடைத்தான ஸ்ரீ வைகுண்டம்
தொல் வினை தீர எல்லாரும் தொழுது எழ வீற்றிருப்பாரே-அவித்யாதிகள் தீர -மறுவல் இல்லாதபடி –
நித்ய சூரிகள் ததீய சேஷத்வம் தோன்ற தொழுவார்
கிளர்த்தி உடன் நாடு நாயகமாக வீற்று இருப்பார் -சேஷத்வ சாம்ராஜ்ய பட்டாபிஷேகம் –
வேறு பாடு தோன்ற -4-4- சொல்லி வந்த வேறுபாடு –
ஆழ்வாரைப் பற்றி வந்த வேறுபாடு என்றபடி

வளப்பம் பொருந்திய திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீ சடகோபர், கொடிய வினைகளை எல்லாம் தீர்க்கின்ற கண்ணபிரான்
விஷயமாகச் சொல்லியல்லாது நிற்க ஒண்ணாத பத்தி பாரவஸ்யத்தாலே சொன்ன திருப்பாசுரங்கள் ஆயிரத்துள்
இந்தப் பத்துத் திருப்பாசுரங்களையும் புண்ணியம் என்று கற்பவர்கள், நன்மையையுடைய பரமபதத்தை அடைந்து,
பழமையான வினைகள் எல்லாம் நீங்க, எல்லாரும் தொழுது எழும்படி வேறுபட்ட சிறப்போடு எழுந்தருளியிருப்பார்கள்.
‘சடகோபன் கண்ணனைச் சொல்வினையாற்சொன்ன பாடல் இவை பத்தும் நல்வினை என்று கற்பவர்கள், தொல்வினை தீர,
வைகுந்தம் நண்ணி, எல்லாரும் தொழுது எழ வீற்றிருப்பர்,’ என்க. வண்மை சடகோபருக்கு அடை : குருகூருக்கு ஆக்கலுமாம்.

‘இத்திருவாய்மொழி கற்றார், சமுசாரத்துக்கம்போய், பகவானை விட்டுச் சிறிதும் பிரிதல் இல்லாத திருநாட்டிலே
எல்லாரும் தலைமேல் தாங்கும்படி மேன்மையோடே இருக்கப்பெறுவர்,’ என்கிறார்.

வல் வினை தீர்க்கும் கண்ணனை –
அடியார்களுடைய பிரிவிற்குக் காரணமான மஹா பாவத்தைப் போக்கும் தன்மையனான கிருஷ்ணனை.
இதனால், ‘பெற்றவர்கள் கைவிட்டால் பிடித்தவர்கள் கைவிடார்கள்,’ என்பதனைத் தெரிவித்தபடி.
என் செய்கேன் என்று கை விட்டதும் -இவன் கைக் கொண்டான் -கை பிடித்தவர் -இதம் சீதா -பிரியம் உடன் -பிடித்தவர்
வண் குருகூர்ச் சடகோபன் –
பெருவள்ளலான ஆழ்வார். இன்று நாமுங்கூட இருந்து பகவானுடைய குணங்களை அநுசந்தானம் பண்ணும்படி
பண்ணின வள்ளன்மை அன்றோ? -ஆதலால், ‘வண் சடகோபன்’ என்கிறது.
சொல் வினையால் சொன்ன பாடல் –
சொல்லி அல்லது நிற்க ஒண்ணாத பத்தி பாரவஸ்யத்தாலே சொன்ன பாடல்.
அன்றிக்கே, ‘பகவானுடைய குணங்களின் பலாத்காரத்தாலே சொன்ன பாடல்’ என்னுதல்.
அன்றிக்கே, ‘சொல் தொழிலால் – அதாவது, வாசிகமான அடிமையால் சொன்ன பாடல்’ என்னுதல்.
ஆயிரத்துள் இவை பத்தும் –
ஆயிரம் திருவாய்மொழியிலும், இவர் எம்பெருமானுக்கு நிறம் முதலியவற்றால் ஒத்திருப்பவையான பொருள்களைக் கண்டு
அவனாக நினைத்துப் பிச்சு ஏறின இத்திருவாய்மொழி.

நல் வினை என்று கற்பார்கள் –
இப்படிப் பிச்சு ஏறின இது எல்லார்க்கும் கூடுவது ஒன்றா? அன்றே அன்றோ?
ஆன பின்னர், இது பாவனம் என்றாகிலும் கற்க வல்லவர்கள்.
அன்றிக்கே, ‘இது விலக்ஷண கிருத்யம் என்று கற்குமவர்கள்’ என்னுதல்.
நலனிடை வைகுந்தம் நண்ணி –
பிரிவு என்பது சிறிதும் இல்லாத பரமபதத்தைக் கிட்டி.
தொல்வினை தீர –
அநாதியாய் வருகின்ற அவித்தியை முதலானவைகள் தீர்ந்து.
எல்லாரும் தொழுது எழ
சமுசார சம்பந்தம் சிறிதும் இல்லாதவரான நித்திய சூரிகளும் தொழுது ஆதரிக்க. என்றது,
‘பணியா அமரருங்கூட, ‘பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர்’ என்கிறபடியே,
அவர்கள் வழிபாடு செய்து ஆதரிக்கும்படி ஆவர்கள்,’ என்றபடி.
‘தொழுது எழு என் மனனே’ என்று, அநாதிகாலம் ‘பரம்பொருளைப் பற்றிய அறிவு இல்லாதவன்,
இல்லாதவன் போலே ஆகிறான்,’ என்னும்படி
போந்தவர் அவனைத் தொழுது உய்வு பெற்றாற்போலே காணும், இவர் பாடின திருவாய்மொழியைக் கற்றவர்களைத்
தொழுது நித்திய சூரிகள் உய்வு பெறும்படி.
வீற்றிருப்பாரே –
அவன் இறைவனாம் தன்மைக்கு முடிசூடி இருக்கப்பெறுவர்கள்.
‘அந்த முத்தன் சுதந்தரன் ஆகிறான்,’ என்னக் கடவதன்றோ? என்றது,
‘கர்மம் அற்றவன் ஆகின்றான்’ என்றபடி. வீற்று -வேறுபாடு.
ஸ்வராட் பவதி -ஸ்ருதி-சாம்யாபத்தி அடைந்து -கைங்கர்ய சாம்ராஜ்யத்துக்கு முடி சூடி என்றபடி –

————————————————————————–

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

தேன பிரகர்ஷம் அதிமாத்ர பவம் ஸூ கீயம் –
சாத்ம்யம் விதாதுமத தூரகத முகுந்தே
சம்பந்திநஸ்ய சத்ருநஸ்ய விலோக்ய
சௌரெ ப்ரமை யால் முனி ஆர்த்திம்

தேன பிரகர்ஷம் அதிமாத்ர பவம் ஸூ கீயம் –
சாத்ம்யம் விதாதுமத -சாத்ம்யம் ஆவதற்கு
தூரகத முகுந்தே -தள்ளிப் போக தளன்று
சம்பந்திநஸ்ய சத்ருநஸ்ய
விலோக்ய சௌரெ-பார்த்து
ப்ரமை யால்
முனி ஆர்த்திம்
பொறுக்கப் பண்ணி -சாத்ம்ய போக பிரதத்வம் -9-2- புளிங்குடி
போக சாந்தனம் -பண்ணி
சாந்த்யத்வம் குறைக்கும் தன்மை இங்கு
பொறுக்க பொறுக்க போகம் கொடுக்கும் தன்மை -9-2-புளிங்குடி -இங்கு போகம் குறைக்கும் தன்மை –

—————————————————————-

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –

பூம்யாத் தேகி சாகராத் தேகி ஜ்வலன சசிமுகைகி
வச்துபூர் வத்ச்ய பூர்வ ந்ருத்யைத்ய லோகாதிபி
ஊர்த்வ புண்டர தளம் துளசி தாமம் பிருத்வி ஷிப்தி
ஆத்மீய தாஸ்யை சுவீக ஸூ சதுரச

1-பூம்யாத் தேகி –மண்ணை இருந்து துழாவி, ‘வாமனன் மண் இது’ என்னும்;
விண்ணைத் தொழுது, அவன் மேவு வைகுந்தம்’ என்று கை காட்டும்–மண்ணை -ஆதி -விண் –

2-சாகராத் தேகி –பெய் வளைக் கைகளைக் கூப்பி, ‘பிரான் கிடக்கும் கடல்’ என்னும்;

3-ஜ்வலன சசிமுகைகி–அறியும் செந்தீயைத் தழுவி,‘அச்சுதன்’ என்னும்
ஒன்றிய திங்களைக் காட்டி, ‘ஒளி மணி வண்ணனே!’ என்னும்;

4-வச்துபூர் வத்ச்ய பூர்வ –கோமள வான் கன்றைப் புல்கி, ‘கோவிந்தன் மேய்த்தன’ என்னும்;

5–ந்ருத்யைத்ய –கூத்தர் குடம் எடுத்து ஆடில்,‘கோவிந்தனாம்’எனா ஓடும்;

6–லோகாதிபி-ஏறிய பித்தினோடு ‘எல்லா உலகும் கண்ணன் படைப்பு’ என்னும்’
ஊர்த்வ புண்டர தளம் -நீறு செவ்வே இடக் காணில், நெடுமால் அடியார்’ என்று ஓடும்;
துளசி தாமம் –நாறு துழாய்மலர் காணில்,‘நாரணன் கண்ணி ஈது’ என்னும்;

8–பிருத்வி ஷிப்தி–திருவுடை மன்னரைக் காணில், ‘திருமாலைக் கண்டேனே’ என்னும்;

9-ஆத்மீய தாஸ்யை –விரும்பிப் பகவரைக் காணில், ‘வியலிடம் உண்டானே’ என்னும்;

10–சுவீக ஸூ சதுரச—-மயற் பெருங் காதல் என் பேதைக்கு என் செய்கேன் வல் வினையேனே?

வல்வினை தீர்க்கும் கண்ணனை–வண் துவரை பெருமாள் விச்லேஷத்தால் -ஆச்ரிதை துக்கிப்பியா நின்றான் –
இறுதியில் விலக்கினான் அன்னை கைவிட்டதும் –

——————————————————-

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 34-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்–

மண்ணுலகில் முன் கலந்து மால் பிரிகையால் மாறன்
பெண்ணிலைமை யாய்க் காதல் பித்தேறி -எண்ணிடில் முன்
போலி முதலான பொருளை யவனாய் நினைந்து
மேல் விழுந்தான் மையல் தனின் வீறு–34-

———————————————-

அவதாரிகை –

இதில்
சத்ருச பதார்த்தங்களையும்
சம்பந்தி பதார்த்தங்களையும்
அவனாகவே பிரமித்து பேசின பாசுரத்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார்
அது எங்கனே என்னில் –
கீழ் –
காதல் மையல் ஏறினேன் -என்று
பிரணயித்வ குணத்தை அனுபவித்து விளைந்த
ப்ரீதி பிரகர்ஷம் ஆஸ்ரயத்தையும் அழிக்கும் படி கரை அழித்துப் பெருக
அத்தை அரை ஆறு படுத்துக்கைக்காக அவன் பேர நிற்க –
பிரிந்தது அவனை ஆகையாலே அவசன்னராய்
ராம குணங்களுக்கு இட்டுப் பிறந்த பரத ஆழ்வான்
ஒரு வேடன் வாய் இட்டு
ராம சரிதத்தைக் கேட்டு
தரித்தால் போலே
இவ் வாழ்வாரும் அவனோடு சத்ருச பதார்த்தங்களையும்
சம்பந்தி பதார்த்தங்களையும்
அவனே என்று பிச்சேறும் படி
தமக்குப் பிறந்த அவஸ்தா விசேஷத்தை
அன்யாபதேசத்தாலே பேசின
மண்ணை இருந்து துழாவி -யின் -அர்த்தத்தை
மண்ணுலகில் -இத்யாதியால் -அருளிச் செய்தார் -என்கை –

—————————————–

வியாக்யானம்–

மண்ணுலகில் முன் கலந்து மால் பிரிகையால் –
பூலோகமான இவ் விபூதியில் முன்னம்
கோவை வாயாளிலே பெறாப் பேறான சம்ச்லேஷத்தை யுண்டாக்கி
சர்வேஸ்வரன் விச்லேஷிக்கையாலே –

மாறன் பெண்ணிலைமையாய்க் –
ஆழ்வார்
அபலையினுடைய
அவஸ்தையை
அடைந்து –

காதல் பித்தேறி –
என் கொடியே பித்தே -என்னும்படி
பக்தியாலே காதல் பித்தேறி –
க்வசிதுத் பரமதே -இத்யாதிப்படியே சித்த விப்ரகம் பிறக்க –

எண்ணிடில்-
அந்த பித்தேறின பிரகாரத்தை நிரூபிக்கில் –

அன்றிக்கே –
பித்தேறி எண்ணிடில் –
பித்தேறின ஆகாரத்தோடே
தாம் நிரூபிக்க புகில்

முன் போலி முதலான பொருளை யவனாய் நினைந்து –
அதாவது –
மண்ணை இருந்து தொடங்கி
அயர்க்கும் அளவும் பிரதிபாதிக்கப் படுகிற
முன் கண்ட சத்ருச பதார்த்தங்களையும்
சம்பந்த பதார்த்தங்களையும்
அவனாகவே பிரதிபத்தி பண்ணி -என்கை –

இது எத்தாலே என்னில்
மேல் விழுந்தான் மையல் தனின் வீறு
மையல் தனின் வீறு -மேல் விழுந்தான்-
வயாமோஹ அதிசயத்தாலே
அவற்றிலே அத்ய அபி நிவிஷ்டரானார்
இவருடைய அபி நிவிஷ்ட அதிசயம் இருந்த படி என் என்று
ஜீயருக்கும் இது கண்டு
சஹிக்க ஒண்ணாதபடி யாயிற்று —

சத்ருச பதார்த்தங்களும்
சம்பந்த பதார்த்தங்களும் ஆவன –

சத்ருச பதார்த்தம் –
விண்
கடல்
நாயிறு
செந்தீ
தண் காற்று
ஒன்றிய திங்கள்
நின்ற குன்றம்
நன்று பெய்யும் மழை
கூத்தர்
நீறு செவ்வே இட
திரு வுடை மன்னர்
உரு வுடை வண்ணங்கள்
கருவுடைத் தேவில்கள்
விரும்பிப் பகவர்
கரும் பெரு மேகங்கள் —

சம்பந்தி பதார்த்தங்கள் ஆவன –
நாறு துழாய்
வாமனன் மண்
கோமள வான் கன்று

சம்பந்த பதார்த்த சத்ருசங்கள் –
போம் இள நாகம்
வாய்த்த குழலோசை
ஆய்ச்சியர் வெண்ணெய்
என்று விபஜித்து ஆயிற்று ஆச்சான் அருளிச் செய்யும் படி-
அடையவளைந்தான் அரும் பெரும் உரை அருளிச் செய்த ஆத்தான் ஜீயர் –

————————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: