பகவத் விஷயம் காலஷேபம் -92- திருவாய்மொழி – -4-4-1….4-4-5–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்–

மேல் திருவாய்மொழியில் அவனுடைய காதல் குணத்தை அருளிச்செய்தார்;
இத் திருவாய்மொழியில் பிச்சு ஏறினார்;
இவர்க்கு மேல் திருவாய்மொழியில் பிறந்த கரை கடந்த பிரீதியானது இவருடைய சொரூபமும் அழியும் என்னும்படியாய் இருந்தது;
அந்த ரசத்தை அரையாறு படுத்திப் பொறுக்கும்படி செய்கைக்காக அந்தக் கலவியைச் சிறிது நெகிழ நின்றான் ஈசுவரன்.
ஆனாலும், பிரிந்தது அவனை ஆகையாலே, அது தன் காரியத்தைச் செய்து அன்றி நில்லாதே அன்றோ?
ஆகையாலே ஆற்றாமை மீதூர்ந்து, செல்வத்திலே பேராசையுள்ள ஒருவன்
கிழிச்சீரையைக் -கிழிச்சீரை – பணப்பை.-கெடுத்தால் அதனோடு
போலியான முடிகளை எல்லாம் அவிழ்த்து அவிழ்த்துப் பார்க்குமாறு போன்று, அவனோடு ஒத்த பொருள்களையும் -சத்ருசம்-
அவனோடு சம்பந்தப்பட்ட பொருள்களோடு ஒத்த பொருள்களையும் அகப்பட அவனாகக் கொண்டும்,
-சம்பந்தப்பட்ட பொருள்களாகக் கொண்டும் மயங்கிக் கிட்டிப் பார்த்து அவன் அன்றிக்கே ஒழிந்தால் மீளவும் மாட்டாதே
நோவுபட்டுச் செல்லுகிறது.- ‘வைப்பாம் மருந்தாம்’ என்னும்படியே, இவர்க்குச் சேமநிதி அன்றோ அவன்?

‘அவனோடு ஒத்த பொருள்கள்’ என்றது, ‘கரும்பெருமேகங்கள்’, ‘உருவுடைவண்ணங்கள்’,
‘விரும்பிப் பகவரைக் காணில்’ என்பன போன்று வரும் பாசுரங்களைத் திருவுள்ளம் பற்றி.
‘அவனோடு சம்பந்தப்பட்ட பொருள்களோடு ஒத்த பொருள்கள்’ என்றது, ‘கோமள ஆன்கன்று,’
‘ஆய்ச்சியர் வெண்ணெய்கள்’, ‘வாய்த்த குழலோசை’ என்பன போன்று வருகின்ற பாசுரங்களைத் திருவுள்ளம் பற்றி.
அவனோடு சம்பந்தப்பட்ட பொருள்களோடு ஒத்த பொருள்களைத் தேடுகிறதற்குக் கருத்து,
‘இவர் பகவானையும் பாகவதர்களையும் உத்தேஸ்யராக நினைத்திருக்கு மவராகையாலே,
பகவானைப் பிரியுமிடத்துப் பாகவதர்களோடு கூடியாகிலும் தரிக்கலாம் என்று தேடுகிறார்’ என்பது.

‘பிராட்டியைத் தேடுவதில் நோக்கமுடைய பெருமாள் ஓரிடத்தில் சுற்றும் முகத்தைத் திருப்பி மேலே பார்க்கிறார்;
‘ஓரிடத்தில் தம் வலிமையால் நாலு பக்கங்களிலும் சுழலுகிறார்;
ஓரிடத்தில் பித்தனைப்போலத் தோற்றுகிறார்,’ என்கிறபடியே,
பிராட்டியைப் பிரிந்த பின்னர் ஆற்றாமையாலே மேல் நோக்கிப் பார்த்து விலங்கச் சஞ்சரிப்பது,
அதுதானும் மாட்டாது ஒழிவது,
‘ஒரு மரத்தினின்றும் வேறு மரத்திலே சென்று கிட்டுவது, ‘மைதிலியைக் கண்டீர்களோ?’ என்று கேட்பது,
ஆணாறு பெண்ணாறுகள் ஒன்று இன்றிக்கே-ஆண் ஆறு மேற்கு நோக்கி-நதம்/ நதி பெண் ஆறு கிழக்கு நோக்கி – தேடுவதாய்,
அவர் பட்டாற்போலே இவளும் அப்படியே படுகிறாள் இப்போது.
இப்படி நோவுபடுகிற இவள் நிலையை நினைத்த திருத்தாயார், இவள் படுகிற பாடுகளையும் இவள் சொல்லுகிற
வார்த்தைகளையும் சொல்லி, இது கண்டு தான் பொறுக்கமாட்டாமல் நோவு படுகின்றபடியையும் சொல்லிக் கை வாங்குமளவாக,
அவன் வந்து முகங்காட்டித் தேற்றுவிக்கத் தரித்ததாய்த் தலைக்கட்டுகிறது இத்திருவாய்மொழி.

————————————————————————————————

மண்ணை இருந்து துழாவி, ‘வாமனன் மண் இது’ என்னும்;
விண்ணைத் தொழுது, அவன் மேவு வைகுந்தம்’ என்று கை காட்டும்;
கண்ணை உண்ணீர் மல்க நின்று, ‘கடல்வண்ணன்’ என்னும்;அன்னே!என்
பெண்ணைப் பெருமயல் செய்தாற்கு என் செய்கேன், பெய் வளையீரே!–4-4-1-

மூன்றாவது தாய் பதிகம் -விபூத் த்வய சம்பந்தம் அனுசந்தித்து
மண் வைகுந்தம் -பூமி அந்தரிஷங்களைக் கண்டு விக்ருதி ஆகா நின்றாள்
மண்ணை இருந்து துழாவி, ‘வாமனன் மண் இது’ என்னும்;-அவன் இரந்து- அளந்து கொண்ட மண்
இந்த ஆழ்வார் திருநகரி கலி யுக மண்ணைத் தடாவி
விண்ணைத் தொழுது, அவன் மேவு வைகுந்தம்’ என்று கை காட்டும்;-ஆகாசம் தொழுது -ஸ்ரீ வைகுண்டம் –
விண் மீது இருப்பாய் -திக்கையே நோக்கி
கண்ணை உண்ணீர் மல்க நின்று, ‘கடல்வண்ணன்’ என்னும்;அன்னே!என் அபரோஷித்தாரைப் போலே
நேராக கண்ணால் கண்டால் போலே –
கூட இருந்து பார்த்ததை நினைவில் கொண்டு சொல்கிறாள் –
ஹஸ்த முத்ரையால் காட்டுகிறாள்
பார்க்க முடியாத ஸ்ரீ வைகுண்டம் -பிரத்யஷமாக பார்த்தால் போலே -பிறருக்கும் காட்டும்
நீணிலா முற்றத்து–நின்று இவள் நோக்கினாள் – காணுமோ கண்ணபுரம் என்று காட்டினாள்-
மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் அவன் –
இங்கு பற்றி அங்கு போகலாம்
கண்ணுக்குள் கண்ண நீர் மல்க -அகவாயில் அஸ்ரு ஜலம் -அனுபவம் வழிந்து
அபரிச்சின்ன ஸ்வ பாவம் -ஸ்ரமஹரமான வடிவைக் காட்ட ஆர்த்தி போக்க
பெண்ணைப் பெருமயல் செய்தாற்கு என் செய்கேன், பெய் வளையீரே!-வினவிய தோழிகளைப்
பார்த்து -சொல்கிறாள் திருத் தாயார் –
முக்தமான பெண்ணை -பெரும் பிச்சு -பார்த்த பார்த்த பதார்த்தங்கள் அவனே என்பாள்
இவள் வளை போலே கழருகை அன்றி இடப் பெற்ற வலைகல் கொண்டீர்
எத்தை செய்வேன்
அழைத்துக் கொடுக்க மாட்டு கிறிலேன்
அவர் தாமும் வரும் வரை பிச்சை தவிர்கிறிலேன்
அம்மே -வெறுப்பில்
விண் -பாஞ்ச பௌதிகம் -அங்கு வரை பிரகாசிக்கும் படி காட்டி அருளினான்

அணிந்த வளையல்களையுடைய பெண்காள்! இருந்து பூமியைத் துழாவி, ‘இது வாமனனுடைய பூமியாகும்,’ என்பாள்;
ஆகாயத்தை நோக்கித் தொழுது, ‘அவன் எழுந்தருளியிருக்கின்ற பரமபதம்’ என்று கை காட்டுவாள்;
கண்களில் நீர் பெருகும்படி நின்று ‘கடல் போன்ற நிறத்தையுடையவன்’ என்பாள்:
ஐயோ! என்னுடைய பெண்ணைப் பெரிய மயக்கத்தை அடையச் செய்தவர்க்கு எதனைச் செய்வேன்?
‘என்னும், காட்டும், என்னும்’ என்பன, செய்யும் என் முற்றுகள். ‘கண்ணை’ என்பதில், ஐகாரம் அசைநிலை,
உருபு மயக்கமாகக் கோடலும் அமையும்.
‘அன்னே’ என்பது, அந்தோ என்னும் பொருளைக் காட்டுவதோர் இடைச்சொல்.
‘அன்னேயோ அன்னேயோ ஆ கொடியேற் கடுத்தநாள் அரக்கர் வேந்தள். பின்னேயோ’
(கம்ப. உயுத். இராவணன் வதைப். 288.) என்றவிடத்தும்‘அன்னே’ என்பது இப்பொருளதாதல் காணலாகும்.
இத்திருவாய்மொழி அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்.

வினவ வந்தவர்களுக்குத் தன் மகள் செய்தியைக் கூறுகின்ற தாயானவள்,
‘இப்படி இவளை எம்பெருமான் பிச்சு ஏற்றினான்; நான் இதற்கு என் செய்வேன்?’ என்கிறாள்.

மண்ணை இருந்து துழாவி –
‘மண்முழுதும் அகப்படுத்து நின்ற எந்தை’ என்கிறபடியே, அவன் திருவடிகளுக்கு உட்பட்ட பூமிப்பரப்பு அடைய இருந்து துழாவா நிற்கும்.
அவன் சம்பந்தங்கொண்டே இதனை விரும்புகிறது; ‘அது ஓரிடத்தில் இருப்பது அன்றே?’ என்றது, ‘எங்கும் இருப்பது’ என்றபடி.
‘முன்பு தோற்றுகின்ற சோலை என் என்பது?’ என்று பெருமாள் கேட்டருள. ‘பண்டு ‘சித்தாஸ்ரமம்’ என்று
ஸ்ரீ வாமனன் எழுந்தருளியிருந்த தேசமாயிற்று; அவன் எழுந்தருளின பின்பு அவன் பக்கல் பத்தியாலே விடமாட்டாமே
அம் மண்ணை மோந்துகொண்டு கிடப்பேன்,’-உப புஜ்யதே -அனுபவிக்கிறேன் — என்றான் அன்றோ விசுவாமித்திரன்?
‘விஷ்ணு பகவான் மனித உருவத்தோடு சக்கரவர்த்தி திருமகனாய் இராமன் என்ற பெயரோடு இப்பூமியில் சஞ்சரித்தார்,’ என்றான்
திருவடி.–பீமா சேனன் இடம் ஆரண்ய பர்வத்தில் சொன்னார் –பாவோ நான்யத்ர கச்சதி என்றேன் –
‘தங்கள்நாயகரிற் றெய்வம் தவம் பிறிதில்என்று எண்ணும் மங்கைமார் சிந்தை போலத் தூயது; மற்றுங் கேளாய்:
எங்கள் நான்மறைக்கும் தேவர் அறிவிற்கும் பிறர்க்கும் எட்டாச் செங்கண்மால் இருந்து மேனாள் செய்தவம் செய்த தன்றே.’-கம்பர்
இச்சுலோகப்பொருளோடு,
‘அந்த வார்சிலை இராமனுக்கு அடிமையாய் என்றும் சிந்தையால் அவன் திருப்பதம் சிந்தைசெய் பவனும்
முந்தை யாகிய வாயுவுக்கு உற்பவித்தவனும் இந்த வாழ்வுடை அனுமனே என்றனன் இகலோன்.’ என்ற செய்யுள்
திண்சுட ராழி யரங்கேசர் திக்குத் திருச்செவியில் மண் கழலில் சத்ய லோகம் சிரத்தில் மருத்து உயிரில்
தண் கதிர் உள்ளத்தில் வான் உந்தியில் செந் தரணி கண்ணில் ஒண் கனல்
இந்திரன் வாழ் முகப்போதில் உதித்தனரே’- என்றார் திவ்வியகவியும்.

ஆகையாலே, அவன் பக்கல் ருசியுடையார் விடமாட்டார்கள் அன்றோ?
இருந்து –
இவ்விருப்புக்கு முன் கணத்தில்
நிற்றல் நடத்தல் கிடத்தல் முதலியவற்றில் ஒரு நியதி இன்றிக்கே நோவுபட்டமை தோன்றுகிறது.

துழாவி –
இதனால், பித்தத்தால் பீடிக்கப்பட்டவன் சந்தனக் குழம்பினின்றும் கைவாங்க மாட்டாததைப் போன்று
இம் மண்ணை விடமாட்டாமையும் தோன்றுகிறது.
விட்டுக் கைவாங்கினால் விரஹ அக்நியினாலே வேம். தாங்கள் தெளிந்திருந்தார்களாய்
‘இவள் மயங்கினாரைப் போன்று செய்கின்றது என் என்பது?’ என்பர்களே,
அவர்களை ‘நீங்கள் மயங்கினீர்களோ?’ என்னுமாயிற்று இவள் என்கிறாள் மேல்
வாமனன் மண் இது என்னும் –
‘வாமனன் மண் அன்றோ இது?’ என்னா நின்றாள்.
‘திருவடியிலே பிறந்ததனால் உண்டான வாசனையையுடைய பூமி அன்றோ?’ என்னா நின்றாள் என்றபடி,
‘பூமியானது வாசனையையுடையது’ என்றே அன்றோ நாட்டில் பிரசித்தி?
‘ஸர்வகந்த:’ என்கிற விஷயத்தினுடைய சம்பந்தமே ஆயிற்று இவள் அறிவது.
அடியே பிறந்து அடைய கந்தம் -கந்த தன்மாத்ரை பிருத்வி என்றவாறு -வாமனன் திருவடியால் பெற்ற கந்தம் –
பூமிக்கு வாசனை இயற்கையாய் இருக்கவும், திருவடிகளினுடைய சம்பந்தத்தால் வந்த வாசனை என்று இவளுக்கு நினைவு என்கிறார்
‘பூமியானது’ என்று தொடங்கும் இரண்டு வாக்கியத்தாலே,
‘விண்ணொலி தழுவும், காற்று மேவுறும் ஒலியு மூறும், நண்ணுமால் ஒலியும் ஊறும் நலந்திகழ் உருவும் செந்தீ,
தண்ணறல் ஒலியும் ஊறு முருவமுஞ் சுவையும் சாரும், மண்ணிதை நான்கி னோடு மணத்தையும் புணர்ந்து மன்னும்.’
என்பது பாகவதம், சுகமுனி தத்துவமுரைத்த அத்தியாயம்.

‘அவன் இரந்து தனக்கு ஆக்கிக்கொண்டது அன்றோ?’ என்னா நின்றாள்; அவனதானால் இந்திரனுக்குக் கொடுத்தது போன்று
கொடுக்க வேண்டா காணும் இவளுக்கு; அவனது ஆனபோதே இவளது ஆயே இருக்கும்.
இது வாமனன் மண் ஆகவே இது என் மண் இவர் நினைக்க -இந்தரன் தன் மண் என்று அவனும் என் மண் என்கிறான் –
அவனது எல்லாம் இவரது -பார்த்தா உடையது நாயகிக்கு உண்டே -அப்படி சம்பந்தம் உடைய ஆழ்வார் -கொடுக்க வேண்டாமே -ததீயத்வம்
‘அவனது அன்று காண்’ என்று இவளை மீட்க ஒண்ணாதே? ‘கண்கூடாகப் பார்க்கும்போதும் உங்களுக்குச் சந்தேகம்
தொடராநின்றதோ?’ என்கிறாள் என்பாள்,
ஜீவாத்மா வாமனன் என்று புரிந்தால் தானே இது வாமனன் மண் இது என்று உணர்வீர்கள் -சேஷத்வம் புரிய வில்லையே
‘இது என்னும்’ என்கிறாள். ‘ஆயின், நேரே காண்கின்றாளாயின், அனுபவிக்கத்தடை என்?’ எனின்,
இறந்த காலத்தில் உள்ளதும் நிகழ்காலத்தில் உள்ளதைப் போன்று தோன்றுகின்ற தித்தனை போக்கி,
மண் அளந்தவனை இப்போது காண ஒண்ணாதே?

விண்ணைத் தொழுது அவன் மேவும் வைகுந்தம் என்று கைகாட்டும் –
இறந்த காலத்தில் உள்ளதும் நிகழ்காலத்தில் உள்ளதைப் போன்று தோன்றுமாறு போன்று,
வேறு உலகத்தின் செயலும் இங்கே தோன்றாநின்றது.
நமக்கு அவ்விடத்திலும் இவ்விடம் அணித்தாய் இருக்குமாறு போன்று, அவர்களுக்கு ‘அக்கரை, இக்கரை’ என்னும்படி
இவ்விடத்திலும் அவ்விடம் அணித்தாய்த் தோன்றும்.
ஆர்ஷ்டிஷேணன் ஆஸ்ரமத்திலே நின்று பரமபதம் கண்டார்களே அன்றோ சிலர்?

‘அக்கரை யென்னு மனத்தக் கடலுள் அழுந்தி உன் பேரருளால் இக்கரையேறி இளைத்திருந்தேனை
அஞ்சேல் என்று கைகவியாய்’ என்பது பெரியாழ்வார் திருமொழி.
அக்கரை – சமுசாரம். இக்கரை – பரமபதம். ‘அப்படிக் கண்ட பேர் உளரோ?’ என்ன,
‘ஆர்ஷ்டிஷேணன்’ என்று தொடங்கி அதற்கு விடை
அருளிச்செய்கிறார். ஆர்ஷ்டிஷேணன் என்பவர் ஒரு முனிவர்.
‘சிலர்’ என்றது, தருமபுத்திரனை. தருமபுத்திரனுக்கு அம்முனிவர்
தமது ஆஸ்ரமத்திலிருந்து பரமபதம் காட்டினார் என்று சரிதம் கூறும்.
திருமங்கை ஆழ்வார் சன்னிதியில் இருந்து தானே உத்பலாக விமானம் இன்றும் சேவை ஆகும் —

‘என்னோடே கலந்து அகன்ற இடம் போலே பிரிவோடே கூடி இராமல் அவன் நித்தியவாசம் செய்யும் தேசம்’ என்பாள்,-
இவள் தன்னை மேவா வைகுந்தம் என்கிறாள் ‘அவன் மேவும் வைகுந்தம் என்னும்’ என்கிறாள்.
‘மேவும் வைகுந்தம்’ என்பதில் அவதாரத்திற்கு வேறுபாடும் தனக்கு இழக்க வேண்டாமையும் தோன்றும்.
அவன் ஒரே தன்மையனாய் இருக்கின்ற இருப்பை நினைத்து,
அவ்விருப்பிலும் தாம் அனுபவிக்கப் பெறாமையாலே நடுவே தளர்ந்து,
சொல்லப் புக்க வார்த்தையைத் தலைக்கட்டமாட்டாதே ஹஸ்த முத்திரையாலே
தலைக்கட்டாநின்றாள் என்பாள், ‘கைகாட்டும்’ என்கிறாள்.
‘பரமபதத்திலே நித்திய சூரிகள் எப்பொழுதும் அனுபவித்துக் கொண்டிருக்க, அவர்களைப் போன்ற சம்பந்தம்
நமக்கும் உண்டாயிருக்க நாம் இழப்போமே!’ என்று தளர்ந்து தொடங்கின வார்த்தையைத் தலைக்கட்ட மாட்டுகின்றிலள்’ என்றபடி.
அன்றிக்கே, ‘பெயர் ஒற்றுமையாலும் மேலே உள்ள தன்மையாலும்
இந்த ஆகாசத்தைப் பரமபதம் என்று தொழாநிற்கும்,’ என்னலுமாம்.
முடிக்க முடியாமல் ஹஸ்த முத்தரை காட்டுகிறாள் -என்றும் அஞ்சலி செய்கிறாள் என்றுமாம் –

கண்ணை உள் நீர் மல்க நின்று –
‘அவதாரம் போல அன்றிக்கே என்றும் ஒக்க அனுபவிக்கலாம்படி இருக்கிற பரமபதத்தில்
இருப்பிலும், நான் இழப்பதே!’ என்று
கண்ணீர் மல்காநின்றாள்.
கடல் வண்ணன் என்னும் –
ஒரு கருங்கடல் வடிவு கொண்டு செவ்வே இருந்தாற்போலே அங்கு இருக்கும் இருப்பைச் சொல்லாநின்றாள்;
அவ் வடிவினைக் காட்டிக் காணும் இவளை அவன் பிச்சு ஏற்றினான்;
இவளும் தன்னைப் பிச்சு ஏற்றின படியே சொல்லா நின்றாள் என்றபடி.
‘ஏற்றின படி’ என்றது, சிலேடை : ‘ஏற்றிய திருமேனி’ என்பதும், ‘ஏற்றிய விதம்’ என்பதும் பொருள்.
அன்னே –
‘அம்மே’ என்று துக்கத்தின் மிகுதியைக் காட்டுவதோர் இடைச்சொல்.
‘மன்னே’ என்னலுமாம்.
என் பெண்ணை –
‘யுவதியாயும் குமாரிணியாயும் இருப்பவள்’ என்றபடியே, கலவியிலும் உட்புக மாட்டாத பருவமாயிற்று இவளது.
பெருமயல் செய்தார்க்கு –
‘தம்மைக் கலந்து பிரிந்தார் படும் வியசனத்தளவும் அன்று காணும்
இவளைப் படுத்தியது,’ என்பாள், ‘பெருமயல்’ என்கிறாள்.
அவனை ஒத்த பொருள்களைக் கண்டு கலங்கினாள் இவளே அன்றோ?
ஆண்டாள் -மையல் ஏற்றி மயக்க -உன் முகம் மாய மந்த்ரம் தான் கொலோ -பெரு மையல் இல்லையே
சீதா -கலந்து பிரிந்த -உன்மாதம் விகாராவோ -மகோ உன்மாதம் இல்லை
இவள் வியசனம் அதிகம் -சத்ருச பதார்த்தங்கள் பார்த்து அவனே என்று பிரமித்து அன்றோ இவள்
என் செய்கேன் –
இவள் ஆற்றாமை தீர அவனை வரச் செய்யவோ?
‘அவன் வருமளவும் கிரமத்திலே அடையலாம் என்று பார்த்து
ஆறி இருக்க வேண்டுங்காண் என்று இவளைத் தரிப்பிக்கவோ?
யாது செய்வேன்?
பெய்வளையீரே!
‘பெருவெள்ளத்திலே புறவடி நனையாமலே இருப்பாரைப் போன்று, இவ்வளவிலும் கையும் வளையுமாய்
இருப்பதே நீங்கள்!’ என்பாள், ‘பெய்வளையீரே! என்கிறாள்.-
நகையை இட்டுக் கொண்டு இருப்பாள் -பிராந்திய வார்த்தை –
அன்றிக்கே, ‘நீங்கள் வளை தொங்குகைக்குச் செய்த உபாயத்தைச் சொல்ல வல்லீர்களோ,
நானும் கைமேல் செய்து பார்க்க!’ என்பாள், அங்ஙனம் விளிக்கின்றாள் என்னலுமாம்.

————————————————————————————————-

பெய் வளைக் கைகளைக் கூப்பி, ‘பிரான் கிடக்கும் கடல்’ என்னும்;
செய்யது ஓர் ஞாயிற்றைக் காட்டி, ‘சிரீதரன் மூர்த்தி ஈது’ என்னும்;
நையும் கண்ணீர் மல்க நின்று, ‘நாரணன்’ என்னும்; அன்னே!என்
தெய்வ உருவிற் சிறுமான் செய்கின்றது ஒன்று அறியேனே.–4-4-2-

கடலையும் ஆதித்யனையும் கண்டு சிதிலை ஆகா நிற்கிறாள்
பெய் வளைக் கைகளைக் கூப்பி, ‘பிரான் கிடக்கும் கடல்’ என்னும்;-பல காலும் கழன்று
இடப்பெறாத-கடல் வண்ணன் சொன்னதும்
தெம்பு வந்து சில வளைகள் விழாமல் இருக்க –
உன்னித்து –வண் துவராபதி மன்னன் -சகி வெறி விலக்க-ஏத்துமின் -எத்துதலும் தொழு ஆட சொல்ல -அடுத்த பாட்டில்
தொழுது ஆடி தூ மணி -இந்த வார்த்தை கேட்டு தைர்யம் மிருத சஞ்சீவனம் அன்றோ அவன் திரு நாமம்
சரணம் புக்கும் தேவர்களுக்கு சரண்யம் பாற் கடல் என்னும்
செய்யது ஓர் ஞாயிற்றைக் காட்டி, ‘சிரீதரன் மூர்த்தி ஈது’ என்னும்;-சிறந்த ஒளி-அத்விதீயனான ஆதித்யன்
-வித்யா சகாயம் -ஆதித்யஸ்தம் -சூர்ய நாராயணன் சனாதன் என்னை துதிப்பாய் என்றானே
ஸ்ரீ லஷ்மி விசிஷ்டன் சுருதி போலே ஸ்ரீதரன் –
நையும் கண்ணீர் மல்க நின்று, ‘நாரணன்’ என்னும்; அன்னே!என்-நைந்து -சரண்யன் உபாஸ்யன் -கிட்ட முடியாமல்
நிருபாதிக சம்பந்த உக்தன்
தெய்வ உருவிற் சிறுமான் செய்கின்றது ஒன்று அறியேனே-தெய்வ–காந்தி -தெய்வ உரு -சிறுமி –சூரிகள் வடிவு போலே
அப்ராக்ருத தேஜஸ் இவளுக்கு இருக்க -சரண்யா ஸ்தலத்தை அஞ்சலி பண்ணா நின்றாள் -பிரான் கிடக்கும் கடல்
உபாஸ்ய ஸ்தலம் காட்டா நின்றாள் -கப்யாசம் -புண்டரீக அஷிணி பார்த்தோம்
ஒன்றிலே நின்றாளாக இல்லாமல் தாவிக் கொண்டே இருக்கிறாள் –

அப்ராக்ருத ரூப்யையாக உள்ளாள்-செய்கின்றது ஒன்றும் அறியேன் –

பெய் வளைக் கைகளைக் கூப்பி
அவனைத் தொழுவித்துக் கொள்ளும் பரிகரம் உடையவள் தான் தொழா நின்றாள்
அவளைத் தொழுவிக்கப் போகும் காணும் கையில் வளை கொண்டது
அவன் சங்கு சக்கரம்
கடல் வண்ணன் என்றவாறே சரிந்த -கழன்ற வளைகளை ஒழிய -வளைகள் பூரித்தன
கையிலே பிரம்மாஸ்திரம் கொண்டு இவள் படும் பாடு
பரகால நாயகி திருக்கையில் மடல் போலே –
வீரக் கழல் உடன் பட்டு கிடப்பாரைப் போலே இவள்
திருப் பாற் கடல் -விட்டு இங்கே வந்தான் அணித்தாக-தமக்காக வந்த -மகா உபகாரகன்
இரவு கடல் ஓசை உடன் அலைந்து இருக்க –
சூர்ய உதயம் கண்டு ஸ்ரீ தரன் வடிவு
சர்வதா சாத்ருசம் -இல்லை யாகிலும் அல்ப சாத்ருசம் பிரமிக்க அமையா நின்றது –
கொஞ்சம் தேஜஸ் என்பதால் அல்பம் என்கிறாள் இல்லை –
பள பளப்பை வைத்து இல்லை -ஸ்ரீதரன் -பாஸ்கரன் ஒளி -பிரியாமை வைத்தே மயங்குகிறாள்-
பெருமாள் பிராட்டி வார்த்தை
மாதா பிதா சேரா நிற்க -அவர்கள் சந்நிதியில் பசித்த பிள்ளைகள் -பிரஜைகள் – போலே சிதிலை யாகா நின்றாள்
புருஷகார பூதை அருகே இருப்பினும்– பெறாத நான்– யார் புருஷகாரம் பண்ணிப் பெறுவேன்
அம்மே -போலே ஸ்ரீ மன் நாராயணன் சொல்ல மாட்டாமல்-தளர்ந்து -செல்வ நாரணன் சொல்ல மாட்டாளே -நாராயணன்
கண்ணீராலே கையைக் கழுவி -நல்ல கார்யம் செய்ய -கை கழுவ வேண்டுமே -கண்ணீரால் கழுவி நாராயணன் என்கிறாள்
பின்னை நாராயணா என்றே சொல்லிக் கொண்டு நின்றாள்
யாகம் போலே வைதிக கிரியை
அம்மே -மைத்ரே போலே ஊன்று கோல்
தெய்வ உருவில் -சத்ருச சம்பந்த பதார்த்தம் நினைக்க நினைக்க
சதா பச்யந்தி சூரிகள் போலே அவர்கள் தேஜஸ்
இதிலும் சாம்யம் இவளுக்கு
அவர்கள் புராணர் விண்ணாட்டு மூதுவர் -பழையவர்கள்
இவள் இளைய மான் -அன்று ஈன்ற கன்று
செய்கின்றது ஒன்றும் அறியேன் –

—————————————————————–

அறியும் செந்தீயைத் தழுவி,‘அச்சுதன்’ என்னும்;மெய் வேவாள்;
எறியும் தண் காற்றைத் தழுவி, ‘என்னுடைக் கோவிந்தன்’ என்னும்;
வெறி கொள் துழாய் மலர் நாறும் வினையுடை யாட்டியேன் பெற்ற
செறிவளை முன்கைச் சிறுமான் செய்கின்றது என்கண்ணுக்கு ஒன்றே?–4-4-3-

அக்னி வாயு அவன் தானாகவே பிரதிபத்தி பண்ணுகிறாள்
அறியும் செந்தீயைத் தழுவி,‘அச்சுதன்’ என்னும்;மெய் வேவாள்;-
தேஜோமயோ விக்ரகம் -சொல்லுவது மட்டும் இல்லை -தழுவி -அச்சுதன் என்கிறாள்
அறிவாள் முன்பு -முன் தசையில் – இப்பொழுது அறியாமல் தழுவினாலும் -மெய் வெந்து போகணுமே -இவள் மெய் மேவாள்-
விரஹ தாபம் -கொதித்து இருக்க -முன்பு -விரஹ தாபம் அனைய –
நேர் மாறி இவர்கள் உணர -அச்சுதன் சொன்னதும் அக்னி வாய் திறக்குமோ -பாம்பு கருடன் சொன்னதும் விலகுமே போலே
அச்சுதன் சப்தார்த்தம் நழுவ விடாதவன் -அக்னி அறிந்து -அவனை தகையப் போமோ
பிரகலாத சரிதம் போலே உடம்பு வேவாள்
இவள் பிரமித்தாலும் அவனுக்கு அஞ்சுகையாலே -நெருப்பு தகையாதே
பீஷாத்மாத் –இத்யாதி
எறியும் தண் காற்றைத் தழுவி, ‘என்னுடைக் கோவிந்தன்’ என்னும்;-பிரணயி போலே -பக்யனான கோவிந்தன்
காற்று -கிலேசிக்கிறேன் என்று காற்றில் கடியனாய் வந்தானே
வெறி கொள் துழாய் மலர் நாறும் வினையுடை யாட்டியேன் பெற்ற-பரிமளப் பிரசுரமான திருத் துழாய் நாறா நின்றும்
காற்றுடன் வந்து கலந்து வீசி உஜ்ஜீவித்தார்
இப்படி பிரமிக்கும் அளவு பாப்பம் செய்த
செறிவளை முன்கைச் சிறுமான் செய்கின்றது -அவனாக நினைத்து மேல் விழுவதால் பூரித்து -செறி வளை-முக்தமான மான்
என்கண்ணுக்கு ஒன்றே?ஓன்று அல்ல -ஒருவளும் அல்ல -சேர்ந்தவளா செராதவலா -பக்தையா நித்யையா
நெருப்பு சுடாமையால் லோகத்தார் படி அல்லள்
காற்று சுடாமையாலே பிரிந்தார் படி அல்லள்
போலி கண்டு பிரமிக்கையால் கொடினார் படி அல்லள்
திருத் துழாய் மணப்பதால் கூடாதார் படியும் அல்லள்

‘சுடும் தன்மையது என்று எல்லாராலும் அறியப்படுகின்ற சிவந்த நெருப்பைத் தழுவி, ‘அச்சுதனே!’ என்று சொல்லுவாள்;
உடம்பு வேகின்றிலள்; வீசுகின்ற குளிர்ந்த காற்றைத் தழுவி, ‘என்னுடைய கோவிந்தனே!’ என்பாள்;
வாசனையையுடைய திருத்துழாய் மலரின் நறுமணம் வீசாநின்றாள்; மஹா பாவியாகிய யான் பெற்ற செறிந்த
வளையல்கள் பொருந்திய முன்கையினையுடைய சிறிய மான் போன்ற என் பெண்ணானவள் செய்கின்ற
செயல் என் கண்களுக்கு ஒன்றா? அன்று; பல,’ என்கிறாள்.
‘பெற்ற சிறுமான்’ என்க. செய்கின்றது – வினையாலணையும் பெயர். ‘ஒன்றே’ என்பதில் ஏகாரம் : எதிர்மறை.

இவளுடைய அதியான செயல்களைச் சொல்லப்புக்கு, ‘அவற்றிற்கு எண் இல்லை’ என்கிறாள்.

அறியும் –
‘ஒன்றால் அவிக்க ஒண்ணாது, எரிக்குந் தன்மையது’ என்று எல்லாராலும் அறியப்படுகின்ற.
அன்றிக்கே,
‘இவள் தானும் இப்படி மயங்குவதற்கு முன்பு எரிக்குந்தன்மையது என்று அறிந்து நீக்கிப் போந்தது’ என்னுதல்.
செந்தீயைத் தழுவி –
எரிக்கின்ற நெருப்பைத் தழுவாநின்றாள்;
‘மந்திரம் மருந்து முதலியவைகளால் தடைசெய்யப்பட்ட ஆற்றலையுடையது’ என்று தான் தழுவுகிறாளோ?’
தேஜஸாம் ராசி மூர்த்ததாம் -‘ஒளிகளின் நிலையான திரள்’ என்கிறபடியே, ஒளியுடைமையையே பார்த்துத் தழுவாநின்றாள்.
அன்றிக்கே,
‘பொருநீர்க் கடல் தீப்பட்டு எங்கும், திகழும் எரியோடு செல்வது ஒப்ப’ என்னுமாறு போன்று, இப்போது தனக்காக
ஒரு மாணிக்கப்படி சாத்தி அணைக்கைக்காக வந்தான் என்று பார்த்துத் தழுவுகின்றாள் என்னுதல்.
ரத்னாங்கி சாத்திக் கொண்டு வந்தான் இவளை அணைக்க வந்தான்
அச்சுதன் என்னும் –
‘உடைமையை மங்கக் கொடாமைக்காக வந்தானே!’ என்பாள்.
மெய் வேவாள் –
இவள் தான் மயக்கத்தாலே கட்டிக் கொள்ளுகிறாள்; ‘அந்நெருப்புத் தன் காரியம் செய்யாது ஒழிவான் என்?’ என்னில்,
‘அந்த விராட் புருஷனுடைய முகத்திலிருந்து இந்திரனும் அக்கினி தேவனும் உண்டானார்கள்,’ என்கிறபடியே,
அச்சுதன் முகத்தாலே வந்தது ஆகையாலே எரித்திலது. -அச்சுதன் முகத்தால் பிறந்த அக்னி -பக்தி இரண்டும் –
அன்றிக்கே, ‘செந்தீயைத் தழுவி அச்சுதன் என்னும்; மெய் வேவாள்’ என்கிறாள் ஆகையாலே,
இவளுடைய அக்கினி ஸ்தம்பந மந்திரம் இருக்கிறபடி என்னுதல்.
அன்றிக்கே, ‘அந்தப் பகவானை நினைப்பதனால் உண்டான சந்தோஷத்தோடு கூடினவனாய்’ என்கிறபடியே,
‘அவனுடைய நினைவாலே நனைந்திருக்கையாலே சுட மாட்டுகிறது இல்லை,’ என்னுதல்.
‘தந்தையே! இந்த நெருப்புக் காற்றாலே தூண்டப்பட்டதாக இருப்பினும், இங்கு என்னைக் கொளுத்த இல்லை;
நான் நான்கு பக்கங்களிலும் எல்லாத் திக்குகளிலும் தாமரைப்பூக்களாகிற விரிப்பினால் பரப்பப் பட்டனவாயும்
குளிர்ந்திருப்பனவாயும் பார்க்கிறேன்,’ என்றான் அன்றோ ஸ்ரீ பிரஹ்லாதாழ்வான்?
அன்றிக்கே,ஸீதோபவ – தண்ணிது ஆகக்கடவாய்’ என்றவளும் இல்லை அன்றோ?
‘தண்ணிதாகக் கடவாய்’ என்றவள் தானே இங்ஙனம் செய்கிறாள்? ஆதலின், எரித்திலது’ என்னுதல்.
ஆக, ‘பிரிவு காலத்தில் வாயு புத்திரனைத் தழுவுகை நாயகனுக்கும் நாயகிக்கும் பணி’ என்றபடி.
‘ஹநுமானான திருவடிக்கு என்னால் கொடுக்கப்பட்ட இந்த ஆலிங்கனமானது’ என்றதனால், நாயகன் தழுவினமை உணரலாகும்.
‘வாயுவினின்றும் நெருப்பு உண்டாயிற்று,’ என்றதனால், நெருப்புக் காற்றின் புத்திரனாதல் உணர்தல் தகும்.

ஸ்ரீராமா. சுந். 53 : 28. இதனால், தன் சத்தியாலே வேவாதிருந்தாள் என்பதனைத் தெரிவித்தபடி.
‘தாயே யனைய கருணையான் துணையே! ஏதுந் தகைவில்லா
நாயே யனைய வல்லரக்கர் நலியக் கண்டால் நல்காயோ?
நீயே உலகுக் கொரு சான்று, நிற்கே தெரியுங் கற்பு,அதனில்
தூயேன் என்னில் தொழுகின்றேன்; எரியே! அவனைச் சுடல்,’ என்றாள்’– என்றார் கம்பநாட்டாழ்வார்.
‘செந்தீயைத் தழுவி’ என்றதற்குச் சிலேடையாக அருளிச்செய்கிறார்,
‘பிரிவுகாலத்தில்’ என்று தொடங்கி. வாயு புத்திரன் – நெருப்பும், அனுமானும்.

எறியும் தண் காற்றைத் தழுவி –
வீசுகிற குளிர்ந்த காற்றைத் தழுவி. ‘விரஹ நோயினரைச் சுடுந்தன்மையதான காற்றும் சுட்டிலது;
இதுவன்றோ ஆச்சரியம்!’ என்பாள், ‘எறியும் தண்காற்றை’ என்கிறாள்.
‘பிராணனிடத்தில் காற்றுத் தோன்றியது’ என்கிறபடியே, இக் காற்றும் அவனுடைய பிராணனாய் இருப்பது ஒன்றே அன்றோ?
ஆகையாலே, அதுவும் சுட்டதில்லை.
என்னுடைக் கோவிந்தன் என்னும் –
‘நீங்கி ஒரு கணநேரமும் உயிர் பிழைத்திருக்கமாட்டேன்!’ என்கிறபடியே, ‘பிரிவில் பொறுக்க வல்லனோ?
அவன் உண்மை பிறர் பொருட்டாக அன்றோ இருப்பது?’ என்று சொல்லாநிற்கும்.
அன்றிக்கே, ‘கன்று மேய்த்த வடிவோடே என் துன்பம் தீர அணைக்க வந்தான் என்று சொல்லாநின்றாள்,’ என்னுதல்.
காம் பூமி -பாலயதி கோவிந்தன் -பரோபகாரம் -பரார்த்தமாகவே இருப்பான் -என்னுடை கோவிந்தன் -ஆர்த்தி தீர வந்தானே –
‘உலகத்தார் படியும் அன்று; விரஹ நோயினர்கள் படியும் அன்று; உலகத்தார் படியாகில் நெருப்புச் சுடவேண்டும்;
விரஹ நோயினர்கள் படியாகில் காற்றுச் சுடவேண்டும்; இரண்டும் கண்டிலோம்,’ என்கிறாள்.

வெறி கொள் துழாய் மலர் நாறும் –
‘கோவைவாயாள்’ என்ற திருவாய்மொழியிற் கூறிய கலவியால் வந்த பரிமளம் பத்து எட்டுக் குளிக்கும் நிற்குமே அன்றோ?
அத்தாலேயாதல்; வந்தேறி கழிந்தால் ஆத்துமாவின் தன்மை பகவானுக்கு உரிமைப்பட்டதாய் அன்றோ இருப்பது? அத்தாலேயாதல்.
அனன்யார்ஹ சேஷத்வம் சம்பந்த வாசனை உண்டே –
அன்றிக்கே, ‘காற்றோடே கலந்து வந்து புகுந்து அணைந்தான்’ என்று காரியத்தைக் கொண்டு கற்பித்துக் கூறுகின்றாள் ஆகவுமாம்.
‘அன்றி மற்றோர் உபாயம் என் இவள் அம்தண் துழாய் கமழ்தல்?’ என்னக் கடவதன்றோ?
-குட்ட நாட்டுத் திருப்புலியூர் திருத் துழாய் வாசனை கமழ்வதை தோழிகள் அன்னைக்கு தெரிவிக்க

வினையுடையாட்டியேன் பெற்ற –
இவள் இத்தனை உள் புகுந்தது – மூழ்கியது நான் செய்த பாபமே அன்றோ?
பிரிவிலும் வடிவு திருத்துழாய் நாறும்படி உள்புகுந்து – மூழ்கி, பின்பு போலி கண்டு மயங்கும்படி மயக்கமேயாய் விடுகைக்கு அடி,
பாவத்தைச் செய்த என் வயிற்றிற்பிறப்பே அன்றோ?’ என்கிறாள் என்றபடி.
பல பிறவிகளிலே ஈட்டப்பட்ட புண்ணிய பலத்தைப் பாப பலமாகச் சொல்லுகிறாளாயிற்று இப்போதை இழவைப் பற்ற.
பகவத் விஷயத்தில் உள் புகுந்தவர்கள் பெற்றவர்களுக்கு ஆகார்களே அன்றோ?
‘அன்னையும் அத்தனும் என்று அடியோமுக்கு இரங்கிற்றிலள்,’ என்னக் கடவதன்றோ?

செறிவளை முன்கைச் சிறுமான் –
முன் கையிலே செறிந்த வளையை யுடையவள்; இதுவன்றோ இருக்கத் தகும்படி! முன்பு இருக்கும்படி யாதல்,
பின்பும் அப்படியே இருக்கத் தகுமவள் என்னுதல்.
அன்றிக்கே, ‘இவள் வளைத்தழும்பு அவன் உடம்பில் காண்கை அன்றிக்கே, இவள் உடம்பிலே அவன் உடம்பில்
திருத்துழாய் காணுமத்தனையாவதே!’ என்பாள், ‘செறிவளை முன்கை என்கிறாள்’ என்னுதல்.
‘இதற்கெல்லாம் பற்றுக்கோடு எங்குத்து?’ என்பாள், ‘சிறுமான்’ என்கிறாள். ‘நனி இளையள்’ என்றபடி.

செய்கின்றது என் கண்ணுக்கு ஒன்றே? –
‘ஒன்றன்று; பல’ என்கிறாள்.-
அன்றிக்கே, ‘ஒன்றே’ என்பதற்கு,
‘நெருப்பைக் கட்டிக்கொள்வது, காற்றைத் தழுவுவது, திருத்துழாய் நாறுவது ஆகா நின்றாள்.
‘நெருப்புச் சுடாமையாலே உலக ஒழுக்கினள் என்று நிச்சயிக்க ஒண்கிறது இல்லை;
போலியான காற்றைத் தழுவுகையாலே ‘சேர்ந்தவள்’ என்ன ஒண்ணாது;
திருத்துழாய் நாறுகையாலே ‘விரஹிணி’ என்ன ஒண்ணாது;
ஆகையாலே, ஒன்றில் வைக்கப்பட்டிருக்கிறதோ இவள் படி?’ என்கிறாள் என்னுதல்.

——————————————————————————–

ஒன்றிய திங்களைக் காட்டி, ‘ஒளி மணி வண்ணனே!’ என்னும்;
நின்ற குன்றத்தினை நோக்கி, ‘நெடுமாலே! வா!’ என்று கூவும்;
நன்று பெய்யும் மழை காணில், ‘நாரணன் வந்தான்’ என்று ஆலும்;
என்று இன மையல்கள் செய்தார் என்னுடைக் கோமளத்தையே.–4-4-4-

உஜ்ஜ்வலம் உத்துங்கம் ஸ்ரமஹரமான வடிவு சந்தரன் -மலை- மேகம் -மூன்றையும் –
ஒன்றிய திங்களைக் காட்டி, ‘ஒளி மணி வண்ணனே!’ என்னும்;ஒன்றப்பட்ட -கலைகளால் -பூர்ண சந்தரன் –
அருகில் நின்றார்க்குக் காட்டி
சுத்த ஸ்படிகம் -போலே -ஒளி ஸ்படிக மணி போன்ற -வடிவு
ஏகாரம் -மழுங்கிய சந்தரன் இல்லை -பூர்ண சந்த்ரனைக் காட்டி -ஆஷேபிப்பாருக்கு இது தான் கண்ணன்
நின்ற குன்றத்தினை நோக்கி, ‘நெடுமாலே! வா!’ என்று கூவும்;சந்திர பத்து அளவும் -ஒக்கம் உள்ள –
மதி தவழ் குடுமி மால் இரும் சோலை –
நெடுமாலே -சம்போதனம் -சிநேகம் -பைத்தியம் மால் –மலை போலே ஒக்கம் -நெடு மால்
உன் வடிவு போலே நெடிதான சிநேகம் -மலையின் நெடுமை சிநேகத்துக்கு ஒப்பு –
சாபராதம் போலே நிற்க வேண்டாம் -தபிக்க விட்டு இருந்ததால் வருந்தி தேங்கி கால் தாழ்ந்து
கேளாமை போன நீ யாரைக் கேட்டு வர வேணும்
நன்று பெய்யும் மழை காணில், ‘நாரணன் வந்தான்’ என்று ஆலும்;பயிர் தளிரும் படி நார சப்த வாச்யன் அப்பு –
மழை லஷணையால் மேகம் –
நிறம் -ஔதார்யம் -காரணம் -இங்கே சொல்ல வில்லை
பெய்யும் -சப்தம் ஜல துளி -ஆபோ நாரா –
நமது உராவுதல் தீர வந்தான் -துளிர்க்க வைக்க இவன் வந்தான் -பயிர்களை துளிர்க்க மழை வருமா போலே
ஆலும் -ஆடும் -மயில் -ஆழ்வார் ஆடுவார் இவனைக் கண்ட
தலையினோடு தட்ட –
என்று இன மையல்கள் செய்தார் என்னுடைக் கோமளத்தையே.–மென்மையானவள் -கூடுவதையும்
தாங்கா தவள் பிரிவை தாங்குவாளோ
என்று பண்ணினார்- எப்படி பண்ணினார் –
இந்த துர் தசையிலே களம் இடம் உண்டோ -கோமளம் அன்றோ

‘பதினாறு கலைகளும் நிறைந்த சந்திரனைக் காட்டி, ‘ஒளி பொருந்திய படிகமணி போன்ற நிறத்தையுடையவனே!’என்பாள்;
நிற்கின்ற மலையைப் பார்த்து, ‘நெடுமாலே! வா,’ என்று கூவுவாள்; மிக அதிகமாகப் பெய்கின்ற, மேகத்தைக் கண்டால்,
‘நாராயணன் வந்தான்!’ என்று மகிழாநிற்பாள்; என்னுடைய கோமளத்தை இத்தகைய மயக்கங்களைச் செய்தார் என்றுகாண்,’ என்கிறாள்.
ஒளி மணி – படிகமணி. ‘நன்று பெரிது’ என்பது தொல்காப்பியம். ‘என்னுடைய கோமளத்தை இன மையல்கள் செய்தார் என்று’ என மாறுக.
என்று – எச்சமுமாம். ‘இன’ என்பது, ‘இன்ன’ என்பதன் விகாரம். இன்ன – இத்தன்மையான.

வியஸன சஹிதை இல்லாத-‘துன்பத்தைப் பொறுக்கும் ஆற்றல் இல்லாத இவளை இப்படி நோவுபடுத்துவதே!’ என்கிறாள்.

ஒன்றிய திங்களைக் காட்டி –
எல்லாக் கலைகளும் நிரம்பின சந்திரனை அருகு நின்றவர்களுக்குக் காட்டி.
ஒளி மணி வண்ணனே என்னும் –
‘ஒளி மணி வண்ணனே!’ என்று அழைக்கின்றாள். ‘புகரையுடைத்தான இரத்தினம் போலே குளிர்ந்த
வடிவோடே அணைக்க வந்ததே!’ என்பாள் என்றபடி.
அன்றிக்கே,
‘இவன் மிக்க ஒளியையுடைய சர்வேசுவரன்’ என்று அவர்களுக்குச் சொல்லா நிற்பாள் என்னுதல்.
சைத்ய குண சாம்யம் -சந்த்ரனுக்கும் இவனுக்கும் -வா -சப்தம் சேர்த்து -சம்போதனம் -வாராய் -சொல் சேர்த்துக் கொண்டு-
கொதித்து கிடக்கும் அங்கங்களுக்கு குளிரும் படி வா என்கிறாள் -சந்திரன் சதி ஆஹ்லாத சைத்திய குளிர்ந்த-
கேட்ட அவர்கள். ‘இம்மழுங்கல் சந்திரன் அவன் ஆகையாவது என்?’ என்பார்களே? ‘ஐயம் இன்று; இவன் அவனே’ என்பாள்,
‘ஒளி மணி வண்ணனே’–ஸூ நிச்சிதம்- எனத் தேற்றேகாரம் கொடுத்துக் கூறுகிறாள்.

நின்ற குன்றத்தினை நோக்கி –
இவ்வளவிலே ஏதேனும் ஒருமலை வாராக் கண்ணுக்குத் தோன்றுமே? அதனைப் பார்த்து,
‘நெடுமாலே வா,’ என்று கூவும் –
வடிவில் பெருமையைக் கண்டவாறே, ‘உலகம் முழுதையும் தன் திருவடிகளின் கீழே இட்டுக்கொள்ளும்படி பெரிய வடிவையுடைய
திருவுலகு அளந்தருளின சர்வேசுவரன்’ என்று நினைத்து, ‘இங்ஙனே வாராயோ?’ என்று அழைப்பாள். இது, பிள்ளான் நிர்வாஹம்.
அங்ஙன் அன்றிக்கே, சீயர்,-நஞ்சீயர்- ‘மலை பேரமாட்டாதே பல கால் மழை பெய்கையாலே அழுக்கு அற்றுப் பசுகு பசுகு என்று இருக்குமே?
அதனைக் கண்டு, ‘அவன் குற்றமுடையவன் ஆகையாலே நாணங் கொண்டு, வந்து கிட்ட மாட்டாமையாலே
பச்சைப் படாத்தை இட்டு முட்டாக்கிட்டு நிற்கிறான்,’ என்று,
‘யானைக் கூட்டத்துக்குக் – யானையின் கலவி.-கதவு இடில் -தடையிடுதல்.-அன்றோ
உமக்கு நாண வேண்டுவது? இங்ஙனே போரீர்,’ என்னா நின்றாள்,’ என்று பணிப்பர்,

நன்று பெய்யும் மழை காணில் நாரணன் வந்தான் என்று ஆலும் –
கெட்டு மழை அன்றிக்கே பெய்ய வேண்டிய காலத்தில் பெய்யும் மழையைக் கண்டவாறே, -‘நாரணன்’-ஒரு காரணம் இன்றியே
உயிரை நோக்குமவன் வந்தான் என்று, மயில்கள் கார் காலத்திலே மகிழ்ச்சியினாலே ஆரவாரித்து ஆடுவதைப் போலே ஆடுகிறாள்.
என்று – என்று இப்படிகளைச் சொல்ல.
உபகாரம் கறுமை குளிர்த்தி -மூன்றும் சாதுர்ச்யம் -மழை மேகத்துக்கும் இவனுக்கும் –
இன மையல்கள் செய்தார் –
இப்படிப் பிச்சுகளைப் பண்ணினார். அன்றிக்கே, ‘இப்படிப் பிச்சு ஏற்றிற்று என்று?’ என்னலுமாம்.
‘இவள் எனக்கு அடங்கியிருப்பவளாதல் தவிர்ந்த பின்பு இவற்றிற்கெல்லாம் காலம் உண்டோ?’ என்கிறாள்.
‘என் சொல்லும் என் வசமும் அல்லள்’-திருவாய். 4. 2 : 10.- என்றது எப்போது?
இவளை இப்படிப் பிச்சு ஏற்றிற்று எப்போது?’ என்கிறாள் என்றபடி.
என்னுடைக் கோமளத்தையே –
அதுதான் செய்யும்போது இடம் வேண்டாவோ?’ ‘கலவியும் கூடப் பொறாத மிருதுத் தன்மையை யுடையவளைப் பிரிவு
பொறுக்கும்படி செய்வதே!’ என்பாள், ‘என்னுடைக் கோமளத்தை’ என்கிறாள்.

————————————————————————————

கோமள வான் கன்றைப் புல்கி, ‘கோவிந்தன் மேய்த்தன’ என்னும்;
போம் இள நாகத்தின் பின் போய், ‘அவன் கிடக்கை ஈது’ என்னும்;
ஆம் அளவு ஒன்றும் அறியேன் அருவினை யாட்டியேன் பெற்ற
கோமள வல்லியை மாயோன் மால் செய்து செய்கின்ற கூத்தே!–4-4-5-

ரஷண பிரவ்ருத்திகளை அனுசந்தித்து -கோவிந்தன் -கன்றுகள் -சர்ப்பங்கள் -அவன் ரஷித்தவன் –
சுமுகன் -பள்ளிக் கட்டின் கீழ் வந்தானே -அத்தை சொல்ல வில்லை
இங்கு ஆதி சேஷன் மேல் சயனித்து உறங்குவான் போல் யோகு செய்வான் –
கோமள வான் கன்றைப் புல்கி, ‘கோவிந்தன் மேய்த்தன’ என்னும்;-இளையவாய் –
கற்றுக் கறவை -கன்றுகள் ஆக இருக்கும் பொழுதே கறவை –
வான் -அளவிலே பெரிய -கிருஷ்ண கர ஸ்பர்சம் பெற்றதால் -ஒரே ஜாதி -அதனால் கன்று ஒருமை-
பசு மேய்க்கைக்கு முடி சூட்டிய
கன்றை -ஒருமை -மேய்த்தன-பன்மை -ஜாதி ஏக வசனம் –
ஆழ்வார் கட்டும் கன்றுகள் ஒரே ஜாதி -அவன் மேய்த்தன பல வுண்டே
வான் ஆண் கன்று என்றுமாம்
இட்டமான பசுக்களை இனிது மறித்து நீரூட்டி
கோமள -துள்ளிப் போகும் -இனம் புரியாமல் இளம் கன்று பயம் அறியாதே
இலைகள் சல சலக்க நாகம் ஓட
போம் இள நாகத்தின் பின் போய், ‘அவன் கிடக்கை ஈது’ என்னும்;-இது போன இடத்தில் அவனும் இருப்பானே
படுக்கை தானே இது
ஆம் அளவு ஒன்றும் அறியேன் அருவினை யாட்டியேன் பெற்ற-வினை -அனுபவித்து முடிக்க முடியாமல்
ஈடுபடுகைக்கு உறுப்பாக பெற்ற
எவ்வளவு புண்ணியம் -பாபமும் புண்ணியமும் வினை கர்மம் தானே
கோமள வல்லியை மாயோன் மால் செய்து செய்கின்ற கூத்தே!-ஆம் அளவு ஒன்றும் அறியேன்-
இவ்வளவு என்று அறிய முடியவில்லையே
வல்லி கொள் கொம்பு இல்லாமல் -மால் தேடும் மனம் -கோல் தேடி போகும் கொழுந்து
மால் செய்து -பிச்சேறும் படி
இவள் பாம்பின் வாயில் புகுந்து அழிந்தால் அவளும் அவன் விபூதியும் முடியுமே –
தாரகமே இல்லை என்றால் தரிக்கப் பட்டவனும் இல்லையே
நித்ய வஸ்து சர்வ நியந்தாவுக்கு என்ன ஆகும் அறியேன்

‘இளமையையுடைய பெரிய கன்றுகளைத் தழுவிக் ‘கிருஷ்ணன் மேய்த்த கன்றுகள் இவையாகும்’ என்பாள்;
செல்லுகின்ற இளமையையுடைய பாம்பின் பின்னே சென்று, ‘இது அவன் படுக்கை’ என்னாநின்றாள்; மேல் விளையக் கூடியது
ஒன்றனையும் அறிகின்றிலேன். போக்கற்கு அரிய தீய வினைகளையுடைய யான் பெற்ற இளைய வல்லிக்கொடி போன்ற
பெண்ணை மாயோன் மயக்கத்தைச் செய்து செய்கின்ற கூத்து என்னேதான்!’ என்கிறாள்.
கோமளம் – இளமை; அழகுமாம், மேய்த்தன : வினையாலணையும் பெயர்.
கிடக்கை – படுக்கை. கூத்து – தொழில் உணர்த்தும் பெயர்; பகாப்பதம்.

‘இவளுக்கு இந்தத் துன்பம் எவ்வளவாய் முடியக் கூடியது என்று அறிகின்றிலேன்?’ என்கிறாள்.

கோமளம் வான் கன்றைப் புல்கி –
‘பருவத்தால் இளையதாய் வடிவால் பெருத்திருக்கிற கன்றுகளைத் தழுவி’ என்னுதல்; -சிறு மா மனிசர் போலே
‘மாணிக்கம் போலே வேறுபட்ட சிறப்பினவாய்ப் பெருத்திருக்கிற கன்றுகளைத் தழுவி’ என்னுதல்.
கோமளம் என்று மாணிக்கத்துக்கும் இளமைக்கும் பேர்.
ஆக, இப்படிக் காட்சிக்கு இனியவாய் மிருதுத்தன்மையை உடையனவுமான கன்றுகளைத் தழுவி என்றபடி.
கிருஷ்ணன் பருவம்போலே ஆயிற்று இவற்றின் பருவம் இருக்கும்படி.
கிட்டினார்க்கு ஒப்புமையை அடைதலே -சாம்யாபத்தி -அன்றோ பலம்?
கோவிந்தன் மேய்த்தன என்னும் –
வஸ்த்ய மத்யகதம் பாலன்-‘கன்றுகளின் நடுவில் உள்ளவனும் இளமைப் பருவமுடையவனுமான கிருஷ்ணன்’ என்றும்,
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி -‘கன்று மேய்த்து இனிது உகந்த காளாய்’ என்றும் வருகின்றவாறே.
‘இவற்றினுடைய பாதுகாவலுக்கு முடி சூடினவன் உகந்து காப்பாற்றினவை’ என்பாள்.
-கன்றுக்குட்டி கண்ணன் என்று அன்றோ இவன் முடி சூடியது -ஸா பத்நயா விசாலாட்சி அயோத்யா ராமன் போலே-
‘உரியவன் உணர்ந்து நோக்கினவை என்று தோற்றுகிறதாயிற்று இவற்றின் வடிவில் அழகின் நிறைவு.
கன்றின் கழுத்தினைக் கட்டிக்கொண்டவாறே – அது துள்ளிப் போகா நிற்குமே – அதனைக் கண்டு,
கோவிந்தன் -மேய்த்தன -வெறுப்புடன் -கன்றுக் குட்டி கழுத்தைக் கட்டி போகின்றான் –
என்னை எப்பொழுது கட்டுவான் – ‘அவன் பரிகரமாகவே இருந்தது’ என்பாள்.
வெறுப்பிலே நோக்காக வேறும் ஒரு கருத்து அருளிச்செய்கிறார்,-
அவன் ஓடுமாறு போலே இவையும் ஓடாநின்றன,’ என்பது கருத்து.

போம் இள நாகத்தின் பின் போய் –
அவ்வளவிலே ஒரு பாம்பு போகாநிற்குமே, அதன் பின்னே போகா நிற்கும். –
இவளுடைய போகப் பிராவண்யம் இருக்கும்படி. ‘முத்தர்கள் எப்பொழுதும் பகவானை அனுபவிக்கும் அனுபவத்தாலே
இருபத்தைந்து வயதினர்களாகவே இருப்பார்கள் அன்றோ?
அவர்களுடைய இளமை இது என்றிருக்கிறாள்’ என்பாள், ‘இளநாகம்’ என்கிறாள்.
‘போகம்’ என்பது, பாம்பின் உடலுக்கும் அனுபவத்திற்கும் பெயர்
இளமைப்பருவமுடைய கன்றுகளைத் தழுவுவதற்கு அடி யாது?’ என்ன,
‘கிருஷ்ணன்’ என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.
‘இவற்றுக்குக் கிருஷ்ணன் பருவம் வருகைக்கு அடி யாது?’ என்ன,
‘கிட்டினார்க்கு’ என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.
‘தம்மையே நாளும் வணங்கித் தொழுவார்க்குத் தம்மையே ஒக்க அருள் செய்வ ராதலின்’- என்பது பெரிய திருமொழி.
‘கன்றைப் புல்கி’ என்றும், ‘நாகத்தின் பின்போய்’ என்றும் கூறாநின்றாள்; ‘இத்தனை உணர்த்தி உண்டோ?’ என்னில்,
கன்று ஓரிடத்தே நிற்கையாலே கழுத்தினைக் கட்டிக்கொண்டாள்; அம்புக்கு எட்டாதபடி பாம்பு ஓடாநிற்குமாதலின்,
அதன் பின்னே போகாநின்றாள். ‘அது புக்க இடத்தே அவன் வரவு தப்பாது’ என்று
காண்கைக்காக அதன் பின்னே போகாநிற்கிறாள் என்றபடி.
அவன் தானும் பரம போகியாய் இருப்பான் ஒருவன் அலனோ?
‘பரம போகி’ என்பதற்கு, ‘பரமனான போகியையுடையவன்’ என்றும்,
‘பரமனான போகி’என்றும் பொருள் காண்க. போகி – பாம்பு; இன்பத்தை யுடையவன்.
அவன் கிடக்கை ஈது எனும் –
அது ஒரு தூற்றிலே போய்ப் புகுமே, அதனை நோக்கிக் கொண்டு கிடப்பாள்’ அவன் வந்தால் காண்கைக்கு.

ஆம் அளவு ஒன்றும் அறியேன் –
உலகமே அழியப் புகுகிறதோ?’ அறிகின்றிலேன். என்றது, ‘இவளை இழக்கவே உலகத்திற்குக் காரணமானவன்
கிடைக்கமாட்டான்; காரணமானவன் இல்லாமையாலே காரியமான இவ்வுலகம் தன்னடையே இல்லையாமே அன்றோ?’ என்றபடி.
அன்றிக்கே, ‘பாம்பு என்று மீளமாட்டுகின்றிலள்; இது என்னாய் விளையக் கடவது?’ என்கிறாள் என்னுதல்.
பாம்போடு ஒரு கூரையிலே பயின்றாற்போலே அன்றோ திருத் தாயார்க்கு இருக்கிறது?
‘பாம்போடு ஒரு கூரையிலே பயின்றாற் போல் தாங்கா துள்ளம் தள்ளுமென் தாமரைக்கண்ணா!’–பெரிய திருமொழி,-11-3-

அருவினையாட்டியேன் பெற்ற –
‘இவளுக்கு இங்ஙனம் ஒரு புத்தி பிறந்து படுகிறது நான் செய்த பாபமே அன்றோ?’ என்பாள்,
‘அருவினையாட்டியேன்’ என்கிறாள்.
‘பிறந்திட்டாள்’ என்கிறபடியே,-‘பின்னைகொல்! நிலமா மகள்கொல்! திருமா மகள்கொல் பிறந்திட்டாள்!
என்ன மாயங்கொ லோ!இவள் நெடுமால் என்றே நின்று கூவுமால்’– திருவாய்மொழி, 6. 5 : 10.
அக்கரையளாய் – பரமபதத்திலிருப்பவள்-இவள் தனக்குப் பெறாப் பேறாய் இருக்கிறபடியைத் தெரிவிப்பாள், ‘பெற்ற’ என்கிறாள்.
‘அன்றிக்கே, ‘நெடுங்காலமும் கண்ணன் நீள் மலர்ப்பாதம் பரவிப் பெற்ற’-திருவிருத்தம், 37.- என்கிறபடியே,
‘செய்து முடிக்க ஒண்ணாத புண்ணியங்களைப் பண்ணிப் பெற்ற மிருதுத் தன்மையையுடைய இவளை’ என்னுதல்.
கோமள வல்லியை –
‘கேவலம் வல்லி அன்று; கோமள வல்லி ஆயிற்று.-மிருதுத்தன்மையையுடைய வல்லி.
அன்றிக்கே, ‘ஒரு கொள் கொம்போடே சேர்க்கவேண்டும் பருவம்; அதாவது, பிள்ளைப்பருவம்’ என்னுதல்.
மாயோன் –
தன்னைக் கண்டால் தந்தாமை அறியாதபடி பண்ண வல்ல காதல் குணத்தையுடையவன்.
மால் செய்து –
பிச்சு ஏற்றி. செய்கின்ற கூத்து – அடிக்கிற ஆட்டம். ‘ஆம் அளவு ஒன்றும் அறியேன்’ என மேல் உள்ளதனோடு கூட்டுக.

——————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: