பகவத் விஷயம் காலஷேபம் 91- திருவாய்மொழி – -4-3-6….4-3-11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

கால சக்கரத்தொடு வெண் சங்கம் கை ஏந்தினாய்!
ஞால முற்றும் உண்டு உமிழ்ந்த நாராயணனே!’ என்று என்று,
ஓல மிட்டு நான் அழைத்தால் ஒன்றும் வாராயாகிலும்,
கோலமாம் என் சென்னிக்கு உன் கமல மன்ன குரை கழலே.–4-3-6-

3/6 பாசுரங்களில் இவர் சமர்ப்பிக்க வில்லை சேவை சாதிக்கா விடிலும் உன் திருவடிகள் சம்பந்தமே –இத்தலைக்கு சத்தை –
ப்ரணயம் வெளியிடுகிறார்
கால சக்கரத்தொடு வெண் சங்கம் கை ஏந்தினாய்!-காலன் -பகவத் பாகவத் அடியார்களுக்கு –
பரபாக ரசாவகன் திருப் பாஞ்ச ஜன்யம் -சோபாவஹமான திருக்கரங்களில்
1-ஞால முற்றும் உண்டு உமிழ்ந்த நாராயணனே!’ என்று என்று,-ரஷ்யமான ஜகத்துக்கு -பிரளய ஆபத்தில் –
2-திரு வயிற்றில் வைத்து ரஷித்து
3-நிருபாதிக சம்பந்தம் -நாராயணன் -இந்த மூன்றையும் கூவி
ஓல மிட்டு நான் அழைத்தால் ஒன்றும் வாராயாகிலும்,-இருந்த இடத்தில் இருந்து நகர சக்தன் அல்லாமல்
நீ வரும் சுவடு கூட -இல்லாமல் இருந்தாலும் –
கோலமாம் என் சென்னிக்கு உன் கமல மன்ன குரை கழலே-உன்னை ஒழிய செல்லாத எனக்கு –நிரதிசய போக்யமான –
ரஷனத்துக்கு இட்ட வீரக் கழல் எண் சென்னிக்கு அலங்காரம் –ப்ரேமம் சத்தா பிரயுக்தம்

‘பகைவர்களுக்கு முடிவு காலத்தைச் செய்கின்ற சக்கரத்தையும் வெண்மையையுடைய சங்கினையும் திருக்கைகளிலே ஏந்தினவனே!
பூமி முழுதினையும் உண்டு உமிழ்ந்த நாராயணனே!’ என்பதாகக் கூப்பிட்டு நான் அழைத்தால், சிறிதும் வாராமல் இருந்தாயேயாகிலும்,
உனது தாமரை மலர் போன்ற ஒலிக்கின்ற திருவடிகள் எனது தலைக்கு அலங்காரமாம்.
‘உன் கமலம் அன்ன குரைகழல் என் சென்னிக்குக் கோலமாம்,’ என்க. கோலம் – அழகு. ஒன்றும் – சிறிதும். எண்ணுப் பொருளுமாம்.

‘இப்படிக் காதலை உடையையாய் இருந்துள்ள நீ என்னைக் கிட்டாதே ஒழிந்தாயேயாகிலும், உன் திருவடிகளே எனக்குத்
தாரகம் முதலானவைகள்,’ என்கிறார். ‘உனக்கு நான் உதவப்பெற்றிலேனாகிலும், என் உயிர் முதலானவைகள் உனக்குத்
தாரகம் முதலானவைகள் ஆனாற்போலே, நீ வாராயாகிலும் உன் திருவடிகள் எனக்குத் தாரகம் முதலானவைகள்,’ என்கிறார்.
‘அவனுடைய காதலைச் சொல்லாநிற்க, நடுவே தம்முடைய காதலைச் சொல்லுவான் என்?’ என்னில்,
இருவர் கூடிக் கலவாநின்றால் பிறக்கும் ரசங்களும் இருவருக்கும் உண்டாய் இருக்குமேயன்றோ? அவற்றுள்,
மேல் எல்லாம் அவனுடைய காதலைச் சொல்லிக் கொண்டு போந்தார்; இப்போது அவனுடைய காதலின்
மிகுதி தம்மையும் காதலன் ஆக்கிற்று என்கைக்காகத் தம்முடைய காதலைச் சொல்லுகிறார்.

கால சக்கரத்தொடு வெண்சங்கம் கை ஏந்தினாய் –
இவர் கூப்பிட்ட பாசுரந்தான் இதுவாயிற்று. -மூன்று விழி சொற்கள் என்றவாறு –
பகைவர்களுக்குக் கூற்றுவனான திருவாழியோடேகூட, நீலநிறம் பொருந்திய
திருமேனிக்குப் பரபாகமான வெண்மையை யுடைத்தான ஸ்ரீ பாஞ்சஜன்யத்தை, வெறும்புறத்திலே ஆலத்தி வழிக்க வேண்டும் படியிருக்கிற
அழகிய திருக்கையிலே பூ ஏந்தினாற்போலே ஏந்தினவனே! ஸ்ரீ பாஞ்சஜன்யத்துக்கு வெளுப்புத் தன்மை ஆனாற்போலே,
திருவாழிக்குப் பகைவர்களை அழித்தலும் தன்மையாய் இருக்குமாதலின், ‘காலசக்கரம்’ என்கிறார்,

ஞாலம் முற்றும் உண்டு உமிழ்ந்த –
பிரளய ஆபத்திலே வரையாமல் திருவயிற்றிலே வைத்துக் காத்து, அப்பிரளயம் கழிந்தவாறே வெளிநாடு காணப் புறப்படவிட்டு,
இப்படி வரையாமல் காப்பாற்றுகின்ற. என்றது, ‘இவற்றை ஆபரணமாகக் கொண்டு அலங்கரித்து, உலகம் நோவுபடத் தான்
அலங்காரம் அழியாதே இருக்கை. அன்றிக்கே, ஆபத்திற்குத் துணைவனாய் இருக்கும் என்பதனைத் தெரிவித்தபடி.

நாராயணனே –
இப்படி வரையாமல் பாதுகாக்கவும் ‘இவன் நம்மைப் பாதுகாத்தான்’ என்று கைம்மாறு தேடி நெஞ்சாறல் படவும்
வேண்டாதபடி சம்பந்தம் இருக்கிறபடி, ‘தாய் நம்மை வயிற்றிலே பாதுகாத்தாள்; நாம் இவளுக்கு என் செய்வோம்?’ என்று
நெஞ்சாறல்படுவார் இலரே அன்றோ? அதற்கு அடி, சம்பந்தம்; அப்படியே அன்றோ அவனும்?
‘தாய் இருக்கும் வண்ணமே உம்மைத் தன் வயிற்று இருத்தி உய்யக்கொண்டவன்’ என்பதே அன்றோ
ஆறு அங்கம் கூற அவதரித்த ஆலிநாடர் திருவாக்கு?

என்று என்று
–1- கையும் ஆழ்வார்களுமான அழகையும் –2-காலத்திற்குத் தகுதியாக ஆபத்தில் துணையாயினமையையும்,
3–இவை இல்லாவிடிலும் விட ஒண்ணாத சம்பந்தத்தையும் சொல்லி. ‘என்று என்று’ என்னும் அடுக்கு,
தனித்தனியே ஆழங்காற்பட்டமையைத் தெரிவிக்கிறது.

ஓலம் இட்டு நான் அழைத்தால் –
வலி இழந்தவனான நான் கூப்பிட்டு அழைத்தக்கால். ‘ஓலமிட்டு’ என்றதனால் பரமபதத்திலே இருந்தாலும் நிலை குலைந்து
வரவேண்டும்படி பெருமிடறு செய்து கூப்பிடுகின்றமை போதரும்.
ஒன்றும் வாராயாகிலும் –
‘உபப்பிலாவியம் என்ற நகரத்திலிருந்து வந்தவரான ஸ்ரீ கிருஷ்ணன் குசஸ்தலம் என்கிற இடத்தில் தங்கியிருக்கிறார்;
அவர் காலையில் இங்கு வருவார்,’ என்கிறபடியே, அங்குநின்றும் புறப்பட்டான், இங்கே வந்துவிட்டான் என்று
வருகைக்குக் காரணம் இல்லையேயாகிலும்.
அன்றிக்கே, ‘கிருஷ்ணனுடைய திருப்பெயரை நினைவு ஊட்டுகின்ற திருச்சின்னத்தின்
ஓசையானது குளிர்ந்திருக்கும்’ என்னக்கடவதன்றோ?

என் சென்னிக்குக் கோலமாம். –
‘ஸ்ரீராமபிரானுடைய திருவடிகள் என் தலையினால் தாங்குகின்றவரையில் எனக்குச் சாந்தி உண்டாக மாட்டாது’ என்று
இருக்கின்ற என் தலைக்குக் கோலமாம்.
உன் கமலம் அன்ன –
‘செவ்விப்பூச் சூட வேண்டும்’ என்று ஆசைப்படுவாரைப் போலே.
குரைகழல் –
குரை என்று பரப்பாய், அதனாலே இனிமையின் மிகுதியைச் சொல்லிற்றாதல்;
அன்றிக்கே, ஆபரணங்களின் ஒலியைச் சொல்லிற்றாதல். “வாராயாகிலும் கோலமாம்’ என்பான் என்?’ என்னில்,
‘வாராது ஒழியக்கூடாது; கூடாதது கூடிலும் என் நினைவு இது,’ என்கிறார்.
என்னை அடியிலே இப்படி ஆக்கினாயே!’ என்பது கருத்து. அடிவிடில் ‘நின்னலால் இலேன்காண்’ என்பாரே!

‘உமக்கு இப்படி ருசியைப் பிறப்பித்தார் யார்?’ என்ன, ‘என்னை அடியிலே’ என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.
‘அடியிலே’ என்றது, சிலேடை : ‘திருவடிகளிலே’ என்பதும், ‘ஆதிகாலத்திலே’ என்பதும் பொருளாம்.
ஆகையாலே, சத்தாபிரயுக்தம் என்கிறார், ‘அடி விடில்’ என்று தொடங்கி. ‘நின்னலால் இலேன்காண்’ என்ற இது, திருவாய்மொழி, 2.3:7.

———————————————————————————–

குரை கழல்கள் நீட்டி மண் கொண்ட கோல வாமனா!
குரை கழல் கை கூப்புவார்கள் கூட நின்ற மாயனே!
விரைகொள் பூவும் நீரும் கொண்டு ஏத்த மாட்டேனேலும் உன்
உரை கொள் சோதித் திருவுருவம் என்னது ஆவி மேலதே.–4-3-7-

அகிஞ்சித் கரனாய் இருக்கினும் -ஆனந்யார்ஹமாய் ஆக்கி அடிமை கொள்ளும்
ஸ்வாபவம் உடைய திரு மேனி ஆத்மாவை விஷயீ கரித்து
வாமனா -பிரணவம்
கை கூப்புவார்கள் நமஸ் ஏத்த -நாராயணாய -கைங்கர்யார்த்தம்
குரை கழல்கள் நீட்டி மண் கொண்ட கோல வாமனா!-வீரக் கழல் –
குரை கழல் கை கூப்புவார்கள் கூட நின்ற மாயனே!-அஞ்சலி பண்ணினால்-கூட –
அவர்கள் உடன் கூட -உபாயம் உபேயமாக நின்ற
விரைகொள் பூவும் நீரும் கொண்டு ஏத்த மாட்டேனேலும் உன்-பரிமளப் பிரசுரமான -பூவும் நீரும் -ஆராதிக்க –
ஸ்தோத்ரம் பண்ணி ஆபிமுக்யம் செய்து
உரை கொள் சோதித் திருவுருவம் என்னது ஆவி மேலதே -வேதாந்த வாக்யம் ஸ்தோத்ரம் பண்ணி –
அவற்றாலும் சொல்லி முடிக்க முடியாத
உனது திரு மேனி எனது ஆத்மா மேல் அபி நிவிஷ்டமாய் ஆனதே

ஒலிக்கின்ற திருவடிகளை நீட்டி உலகத்தை அளந்து கொண்ட அழகிய வாமனனே!
ஒலிக்கின்ற திருவடிகளில் கைகூப்பி வணங்குகின்றவர்கள் அடையும்படி நின்ற மாயவனே! வாசனை பொருந்திய
பூக்களையும் தண்ணீரையும் கொண்டு துதிக்கமாட்டேனேயாகிலும், வேதங்களால் புகழப்படுகின்ற உன்னுடைய
சோதி மயமான திருமேனியானது என்னுடைய உயிரின் மேலதேயாம்.

‘நீட்டிக்கொண்ட வாமனா! என்க. ‘ஏத்தமாட்டேனேலும், உன் திருவுருவம் என்னது ஆவி மேலது,’ என்க.
விரை – வாசனை. ‘விரை’ என்னும் அடையை நீருக்கும் கூட்டுக.
இப்பாசுரத்தில் முதல் அடியாலே, சேஷித்வ பிரதானமான பிரணவார்த்தமும்,
‘குரைகழல்கள் கைகூப்புவார்கள்’ என்றதனால், நமஸ் சப்தார்த்தமும்,
‘கூடநின்ற மாயனே’ என்றதனால்,
நாராயண சப்தார்த்தமும் சொல்லுகிறது என்பர் பெரியோர்.

‘மேலே கூறிய அன்பும் அதற்குத் தகுதியான செயல்களும் இன்றிக்கே இருக்கிலும்
என் உயிரே உனக்கு ஜீவனத்திற்கு ஏது ஆவதே!’ என்கிறார்.

குரை கழல்கள் நீட்டி –
‘மண் முழுதும் அகப்படுத்து நின்ற’ என்கிறபடியே, பூமிப்பரப்பு அடையத் திருவடிக்குள்ளே யாம்படி திருவடியை நிமிர்த்து.
குரை – பரப்பு என்னுதல்; ஓசை என்னுதல்.
மண் கொண்ட கோல வாமனா –
மண் கொண்ட பின்பும் வாமன வேஷம் இவர் திருவுள்ளத்திலே ஊற்றிருந்தபடி.ஊன்றி இருந்த படி –
இந்திரனுக்கு இராச்சியம் கொடுக்கை அன்றிக்கே, தம்மை அனுபவிப்பிக்கைக்காக அவ்வடிவு கொண்டான் என்று இருக்கிறார்.
இதனால்,பிராப்தியைச் சொல்லிற்று. அஞ்சலி மாத்திரத்தாலே சாதிக்கப்படு பொருள் என்கிறார் மேல்:
குரைகழல் கை கூப்புவார்கள் கூடநின்ற மாயனே –
‘உன் திருவடிகளிலே கைகூப்பி வணங்கினவர்கள் உன்னைக் கூட நின்ற மாயனே’ என்னுதல்.
அன்றிக்கே, ‘கைகூப்புவார்கள் குரை கழல்கள் கூட நின்ற மாயனே’ என்று கொண்டு கூட்டி,
‘உன்னைக் கைகூப்புவார்கள் குரைகழல்கள் கூட நின்ற மாயனே’ என்னுதல்.
திருவடிதான் அஞ்சலிக்கு விஷயமுமாய் அஞ்சலியினாலே சாதிக்கப்படுகின்ற பொருளுமாய் அன்றோ இருப்பது?
இந்திரனுக்கு இராச்சியம் கூறுபட்டாற்போலே இவர்க்கும் அத்திருவடிகளில் அழகு
கூறுபட்டதாதலின், ‘குரை கழல்கள்’ என்கிறார்.
‘அவனுக்குச் சாதனமானது இவர்க்குச் சாத்தியம் ஆயிற்று,’ என்றபடி.
சேஷத்வ ராஜ்ஜியம் இவருக்கு -புருஷார்த்தமே திருவடியே தானே

மாயனே –
‘ஓர் அஞ்சலி மாத்திரத்தாலே உன்னை அடையலாம்படி இருப்பதே! இது என்ன ஆச்சரியந்தான்!’ என்கிறார்.
விரை கொள் பூவும் நீரும் கொண்டு ஏத்த மாட்டேனேலும் –
வாசனையையுடைத்தான பூவையும் நீரையும் கொண்டு ‘எல்லாமாய் இருக்கிற பூமியைப்
பனி போன்று குளிர்ந்திருக்கின்ற தண்ணீரால் நனைக்கட்டும்;
பின்னர், மற்றவர்கள் எங்கும் பொரிகளாலும் மலர்களாலும் வாரி இரைக்கக் கடவர்கள்,’ என்கிறபடியே.
வகுத்த அடிமை செய்யமாட்டிற்றிலனே யாகிலும். என்றது, ‘ஓர் அஞ்சலி மாத்திரத்தாலே
உன்னை அடையலாம்படி நீ இருந்தால்,
அறிவுள்ள ஒருவன் மலர் முதலான கருவிகளைக்கொண்டு அடிமை செய்கையன்றோ தக்கது?
அப்படிச் செய்யப் பெற்றிலனேயாகிலும்’ என்றபடி.

உரை கொள் சோதித் திரு உருவம் –
‘சக்கரவர்த்தி திருமகன் இராச்சியத்தை ஆளுகின்ற காலத்தில் மக்களுக்கு இராமன் இராமன் இராமன்
என்று எல்லா வார்த்தைகளும் உண்டாயின;
உலக முழுவதும் இராமன் சொரூபமே ஆயிற்று,’ என்பது போன்று, ‘அது அது’ என்று வாய் புலற்றும்படி
இருக்கிற சோதி மயமான திருமேனி’ என்னுதல்.
அன்றிக்கே, ‘பேச்சுக்கு அப்பாற்பட்ட திருமேனி’ என்னுதல்.
அன்றிக்கே, ‘மாற்றும் உரையும் அற்ற திருமேனி’ என்னுதல்;
‘சுட்டு உரைத்த நன்பொன் உன் திருமேனி ஒளி ஒவ்வாது,’ என்பது தமிழ் மறை அன்றோ?
என்னது ஆவி மேலது –
இப்படி வேறுபட்ட சிறப்பினையுடைய உன் திருமேனி என் உயிரின் மேலது. நித்தியசூரிகளுக்குப் போக்கியமான
திருமேனிக்குத் தாரகம் முதலானவைகள் என் ஆத்துமா ஆவதே! ‘கலியர் சோற்றின்மேல் மனம்’ என்னுமாறு போலே.
‘இவர்தாம் ‘அஹமந்நம் அஹமந்நம் அஹமந்நம் – நான் பரமாத்துமாவிற்கு இனியன்;
நான் பரமாத்துமாவிற்கு இனியன்; நான் பரமாத்துமாவிற்கு இனியன்,’ என்று இருக்குமவர் அன்றோ?
நித்ய சூரிகளுக்கு சத்தையான உன் திருமேனி என் ஆத்மா தாரகாதிகள் ஆவதே
-பசியன் சோற்றைக் கண்டால் போலே -இருப்பதே -அன்னமாகக் கொண்டு அந்நாதனாக அனுபவிக்கிறான் –

உரைகொள்’ என்பதற்கு மூன்று வகையாகப் பொருள் அருளிச்செய்கிறார்:
முதற்பொருளில், உரையையுடைத்தாயிருக்கை. இரண்டாவது பொருளில்,
உரையை வென்றிருக்கை. மூன்றாவது பொருளிலும் உரையை வென்றிருக்கை
என்பதே பொருள்.

——————————————————————————-

என்னது ஆவி மேலையாய்! ஏர் கொள் ஏழ் உலகமும்
துன்னி முற்றும் ஆகிநின்ற சோதி ஞான மூர்த்தியாய்!
உன்னது என்னது ஆவியும்; என்னது உன்னது ஆவியும்;
இன்ன வண்ணமே நின்றாய் என்று உரைக்க வல்லனே?–4-3-8-

ஞானம் பக்தி ஞப்தி முதல் பத்தில் /முக்தி இரண்டாம் பத்து /வ்ருத்தி கைங்கர்யம் மூன்றாம் பத்தில் /
அதனால் ஏற்படும் விரக்தி நான்காம் பத்தில்
இவை ஆழ்வாருக்கு ஏற்பட்ட நிலைகள் நான்கிலும் –
பரத்வம் -காரணத்வம் -வியாபகத்வம் -நியந்த்ருத்வம் காட்டிக் கொடுத்தான் என்றுமாம் –
என்னது உன்ன– தாவியில் அறிவார் ஆத்மா என்னும் அவன் மதம் தோற்றும் -ஆச்சார்ய ஹிருதயம்
அறிவார்களுக்கு உயிர் ஆனாய் அறிவார்களை உயிராக கொண்டவன் –

எனக்காக அனைத்து உலகும் வியாபித்து என்னை அங்கீ கரித்து
என்னது ஆவி மேலையாய்!-அபி நிவிஷ்டனாய்க் கொண்டு
ஏர் கொள் ஏழ் உலகமும்-ஔஜ்வல்யம் ஸ்வ பாவமாகக் கொண்ட அனைத்து உலகையும்
துன்னி முற்றும் ஆகி நின்ற சோதி ஞான மூர்த்தியாய்!-சமஸ்த பதார்த்தங்களும் பிரகாரமாகக் கொண்டு
ஸ்வயம் ஜோதி ரூபமான ஞானமே ஸ்வரூபம் –
இங்கு மூர்த்தி ஸ்வரூபம் -ஞான மயம் -ஞானமும் உண்டு -தர்ம தர்மி ஞானம்
அஹம் -தர்மி ஞானம் இதம் தர்மபூத ஞானம் –
ஞான ஸ்வரூபனாய் ஞான குணகனுமாய் –
உன்னது என்னது ஆவியும்; என்னது உன்னது ஆவியும்;-இருவருக்கும் போக்கியம் –
முதலில் என்னதாவி உன்னது -அவன் போக்யமாக அனுபவிக்க அத்தைக் கண்டு இவர் அனுபவிக்கிறார்
என்னதாவி உன்னது என்றும் சொல்லவில்லை உன்னதாவி என்னது என்றும் சொல்ல வில்லையே
நான் முதலில் சமர்ப்பித்து தேவரீர் வாங்கிக் கொண்டீர்-வருமே-
பரகத ஸ்வீகார நிஷ்டை காட்ட உன்னது முதலில்- கிருஷி அவனது
இன்ன வண்ணமே நின்றாய் என்று உரைக்க வல்லனே?-இதுக்கு என்ன பாசுரம் சொல்லுவேன்
உபய அனுராகம் சொல்லிற்று ஆயிற்று

‘என் உயிர்மேல் காதல் கொண்டுள்ளவனே! அழகு பொருந்தியிருக்கின்ற ஏழ் உலகங்களிலும் பரந்து நிறைந்து
எல்லாப் பொருள்களுமாகி நின்ற சோதி மயமான ஞானத்தையே வடிவாக உடையவனே! என்னுடைய உயிரும் உன்னுடையது;
உன்னுடைய உயிரும் என்னுடையது; இன்ன தன்மையிலே நின்றாய் என்று உரைக்க வல்லனோ? வல்லவன் அல்லன்,’ என்றவாறு.
மேலையாய் – விளிப்பெயர்; எச்சமாகக் கோடலும் அமையும். அப்பொழுது மேலை ஆகித் துன்னி முற்றுமாகி நின்ற மூர்த்தி’ என இயையும்.
‘வல்லனே’ என்றதில், ஏகாரம் எதிர்மறைப்பொருளது.

‘ஒருவரை ஒழிய ஒருவர்க்குச் செல்லாதபடி பிறந்த கலவி, பேச்சுக்கு நிலம் அன்று,’ என்கிறார்.

என்னது ஆவி மேலையாய் –
1-‘என் ஆத்துமாவைப் பெற்று அதனால் வந்த பிரீதி பிரஹர்ஷத்தை யுடையாய்’ என்னுதல்.
அன்றிக்கே.2- ‘என்னைப் பெற வேண்டும் என்னும் ஆசையை உடையாய்’ என்னுதல். மேலையாய் – எச்சம்.
அன்றிக்கே, 3-‘என்னது ஆவி மேலையாய்!’ என்பதனை விளிப்பெயர் என்னுதல். -சம்போதனம் –

ஏர்கொள் ஏழ் உலகமும் துன்னி முற்றுமாகி நின்ற சோதி ஞான மூர்த்தியாய் –
‘இவரைப் பெற்ற பிரீதியாலே பரந்து நிறைந்து நிற்றலும் புதுக்கணித்தது என்கிறார்’ என்னுதல்.
அன்றிக்கே, ‘ஒருவனைப் பிடிக்க நினைத்து அவன் பக்கல் உண்டான ஆசையாலே ஊரை வளைவாரைப்போலே,
தம்மை அகப்படுத்துகைக்காகப் பரந்து நிறைந்து இருப்பவன் ஆனான் என்கிறார்’ ஆதல்.
இவரோடே வந்து கலந்த பின்பு உலகத்திற்குப் பிறந்த புதுக்கணிப்பைத் தெரிவிப்பார், ‘ஏர்கொள் உலகம்’ என்கிறார்.
‘உண்டி உடல் காட்டும்’ என்னுமாறு போலே, ஆத்துமா நிறைந்தவாறே சரீரமும் புதுக்கணிக்குமே அன்றோ?
உலகத்தையே உருவமாக உடையவன் அன்றோ அவன்? சாதி, பொருள்கள் தோறும் மறைந்து இருத்தல் போன்று,
இறைவனும் குறைவறப் பரந்து நிற்கின்றான் ஆதலின், ‘துன்னி முற்றுமாகி நின்ற’ என்கிறார்.
சோதியின் உருவமான ஞானத்தையே வடிவாகவுடையன் ஆதலின், ‘சோதி ஞான மூர்த்தியாய்’ என்கிறார்.

என்னது ஆவியும் உன்னது; உன்னது ஆவியும் என்னது –
என்னுடைய ஆவி உன்னது; உன்னுடைய ஆவி என்னது. என் சொரூபம் நீ இட்ட வழக்கு; உன் சொரூபம் நான் இட்ட வழக்கு.
இவ்விடத்தை ஆளவந்தார் அருளிச் செய்கையில் இருந்த முதலிகளிற் சிலர், ‘இவ்வாத்துமாவின் சொரூபம் அவன்
இட்ட வழக்கு என்பது கூடும்; அவன் சொரூபம் இவன் இட்ட வழக்காவது என்?’ என்று கேட்க,
‘இவன் தன்னை அவனுக்கு ஆக்குவான் என்ற அன்று கர்மம் தடைசெய்யவும் கூடும்;
சர்வேசுவரன் தன்னை இவன்
இட்ட வழக்கு ஆக்கும் அன்று தடைசெய்பவர் இலர்; ஆன பின்பு, அதுவே நிலை நிற்பது
மேலும், ‘இவன் சொரூபம் அவன் இட்ட வழக்கு ஆகக் கூடுமோ?’ என்று இதிலே காணும்
சந்தேகிக்க வேண்டுவது,’ என்று அருளிச்செய்தார்.
நிரந்குச ஸ்வ தந்த்ரம் அடியாக கொண்ட ஆஸ்ரித பாரதந்திர கல்யாண குணம்
அரசன் தன் குழந்தை காலால் தனது கன்னம் அடித்துக் கொள்வது போலே
காளி தாசன் கதை -பொன் கழஞ்சு பண்ணிப் போடச் சொன்னானே –

இன்னவண்ணமே நின்றாய் –
இந்த வகையிலே நின்றாய். என்று உரைக்க வல்லனே –
‘இப்படிப்பட்ட உன்னுடைய காதல் குணத்தை என்னால் பாசுரம் இட்டுச் சொல்லலாய் இருந்ததோ?’ என்கிறார்

ஆஸ்ரித பாரதந்திரம் -காட்டிய இடத்துக்கு த்ருஷ்டாந்தங்கள் -உபய விபூதியிலும்-
1-ஆவாசம் -இச்சாமி -சர பங்கர் இடம் இடம் கேட்டார் பெருமாள் –
தான் பரமபதம் போவதாக சொல்லி -சுதீஷ்ணர் ஆஸ்ரமம் -கை காட்ட
துஷ்ட மிருகங்கள் –10.5 வருஷம் ஆஸ்ரம மண்டலம் சுத்தி வந்து மீண்டு வந்து அகஸ்த்யர் ஆஸ்ரமம் காட்டினார்
2-விஷ்வக் சேனர் வர -பிரம்மா மாத்த -அந்தபுரம் தேவிமார் மறைந்து –
பிரியேன உதார வீஷணை தேவரீர் இட்ட வழக்கு அன்றோ சொல்லி –

பரஸ்பர ஸ்நேஹம் -அவதாரிகை -அவனது பிரணயித்வம் மிக்கு –
அத்தைக் கண்டு இவர் அன்பாக பரிணமித்தது என்றவாறு

——————————————————

உரைக்க வல்லன் அல்லேன்; உன் உலப்பு இல் கீர்த்தி வெள்ளத்தின்
கரைக்கண் என்று செல்வன் நான்? காதல் மையல் ஏறினேன்;
புரைப்பு இலாத பரம்பரனே பொய்யிலாத பரஞ்சுடரே!
இரைத்து நல்ல மேன்மக்கள் ஏத்த, யானும் ஏத்தினேன்.–4-3-9-

பாரமார்த்திக பரத்வ-உண்மையான -பரத்வ ஔஜ்வல்யம் -என்னால் பேச முடியுமோ
தனித்து முடியாது முன்னுறு சொல்ல பின்னுறு சொல்வேன்
ஆஸ்ரித விஷய பாரதந்த்ர்யம் சொல்ல வல்லேன்
ஆனந்த குணம் வேதம் திரும்பிற்று அத்தைப் பாடுவேன்
உரைக்க வல்லன் அல்லேன்; உன் உலப்பு இல் கீர்த்தி வெள்ளத்தின்-முடிப்பு இல்லாத பிரணயித்வ அன்பு வெள்ளம்
கரைக்கண் என்று செல்வன் நான்? காதல் மையல் ஏறினேன்;
கரை இடத்து கூட போக முடியாதே -காதல் கடலின் கரை கூட வர முடியாதவன்
அடியிலே பேச இழிந்தது எனது பிரேமத்தாலே-
காதல் மையல் -பத்தர் பித்தர் பேதையர் போலே பேசினேன் கம்பர்
கலங்கி போனேன் -அத்தால் பாடினேன் இது வரை
புரைப்பு இலாத பரம்பரனே பொய்யிலாத பரஞ்சுடரே!பொய் கலவாத -உண்மையான பரம்பரன் -பாரமார்த்திகம்
என்னுடன் கலந்து ஔஜ்வல்யம் உடையவன் -வெண்ணெய் உடன் கலந்து போலே என் மெய்யுடன் கலந்தான்
இரைத்து நல்ல மேன்மக்கள் ஏத்த, யானும் ஏத்தினேன்-நித்ய சூரிகள் ஸ்தோத்ரம் பண்ண அடியேனும் சேர்ந்து பண்ணினேன்
அவன் வாசி பார்ப்பவன் இல்லையே –
இரைத்து -பெரும் கடல் போலே கோஷித்து -ஹாவு ஹாவு ஹாவு -பிரேம பரவசத்தால் நானும் ஏத்தினேன் –

‘உரைப்பதற்கு ஆற்றலுடையேன் அல்லேன்; உன்னுடைய எல்லையில்லாத கீர்த்தியாகிய வெள்ளத்தின் கரையிடத்தில்
நான் என்று செல்வேன்? காதலால் மயக்கத்தை அடைந்தேன்; குற்றம் இல்லாத பரம்பரனே! பொய்யில்லாத பரஞ்சுடரே!
நல்ல மேன்மக்கள் ஆரவாரம் செய்துகொண்டு ஏத்த, அதனைக் கண்டு யானும் ஏத்தினேன்,’ என்கிறார்.
பரம்பரன் – உயர்ந்த பரன்; மூவர்க்குள் முதல்வன். பரம் -உயர்வு.
நல்ல மேன்மக்கள் – நித்தியசூரிகள். ‘இரைத்து ஏத்த’ என்க.

‘அனுபவிக்கப்படும் பொருள் பேசத் தட்டு என்?’ என்ன,
‘உன் கரை இல்லாத காதல் என்னுடைய பேச்சுக்கு நிலம் அன்று,’ என்கிறார்.

உரைக்க வல்லன் அல்லேன் –
உன் காதல் குணத்தை அனுபவித்துக் குமிழிநீர் உண்டு போமித்தனை போக்கிப் பேசித் தலைக்கட்ட மாட்டுகின்றிலேன்.
‘எல்லாம் பேச ஒண்ணாதாகில், பேசக்கூடிய கூற்றினைப் பேசினாலோ?’ என்னில்,
உன் உலப்பு இல் கீர்த்தி வெள்ளத்தின் கரைக்கண் நான் என்று செல்வன் –
உன்னுடைய முடிவில்லாத காதல் குணத்தால் வந்த கீர்த்திக் கடலினுடைய கரையிலே தான் என்னாலே செல்லப்போமோ?’
‘இப்படிக் கரை அருகும் செல்ல அரிய விஷயத்தில் நீர் பேசுவதாக முயற்சி செய்வான் என்?’ என்னில்,

காதல் மையல் ஏறினேன் –
‘என்னுடைய ஆசையாலே மிக்க கலகத்தை உடையவன் ஆனேன்;
பிச்சு ஏறினாரை ‘நீர் இப்படிச் செய்வான் என்?’ என்னக் கடவதோ?
இவ்விஷயத்தில் மயங்குவான் என்? மயங்குவார்க்கு ஒரு பற்றுக்கோடு வேண்டாவோ?’ என்ன,
‘நித்தியசூரிகள் பித்து ஏறி ஏத்தக் கண்டேன்; அத்தாலே செய்தேன்,’ என்கிறார் மேல் :
நித்தியசூரிகளோடு இவரோடு அவன் தன்னோடு வேற்றுமை இன்றி அன்றோ இவ்விஷயம் இருப்பது?
முற்றறிவினனாய் எல்லாவற்றையும் முடிக்கவல்ல ஆற்றலையுடையனான தான் அறியப்புக்காலும்
தனக்கும் தன் தன்மை அறிவு அரியனாய் அன்றோ இருப்பது?
தன்னை அறியப் புக்க வேதங்கள் பட்டது படுமத்தனை தானும்.

புரைப்பு இலாத பரம்பரனே பொய்யிலாத பரஞ்சுடரே –
எல்லாப் பொருள்கட்கும் உயர்ந்தவனாய் இருக்கிற இருப்பில் குற்றம் இல்லாதது போலே, என்னுடைய கலவியிலும்
வடிவிற் பிறந்த ஒளியிலும் குற்றம் இன்றிக்கே இருக்கின்றவனே!
அன்றிக்கே,
‘கரை கடந்த காதல் குணம் உண்மையில் கண்ணழிவு இல்லாதது போலே, என்னுடைய கலவியிலும் பொய்யின்றிக்கே
அத்தால் வந்த ஒளி வடிவிலே தோன்ற இருக்கிறவனே!’ என்னுதல்.
நல்ல மேன்மக்கள் இரைத்து ஏத்த யானும் ஏத்தினேன் –
‘நித்திய சூரிகள் பரமபத்தியை உடையவர்களாய்க் கடல் கிளர்ந்தாற்போலே இரைத்துக்கொண்டு ஏத்தக் காண்கையாலே
யானும் ஏத்தினேன் அல்லது, யான் ஆற்றலுடையனாய் ஏத்தினேனோ?’ என்கிறார்.

————————————————————–

யானுமேத்தி ஏழுலகும் முற்றுமேத்தி பின்னையும்
தானுமேத்திலும் தன்னை யேத்த வேத்த வெங்கு எய்தும்
தேனும் பாலும் கன்னலும் அமுதமாகித் தித்திப்ப
யானும் எம்பிரானையே ஏத்தினேன் யானுய்வானே –4-3-10-

ஒருவராலும் எல்லை காண ஒண்ணாத -அபரிச்சேத்யம் உள்ள -சத்தா சித்த்யர்த்தமாக ஏத்தினேன் -நா படைத்த பயன்
யானுமேத்தி ஏழுலகும் முற்றுமேத்தி பின்னையும் தானுமேத்திலும் தன்னை யேத்த வேத்த-மயர்வற மதிலம் அருளப் பெற்ற யானும்
அஜ்ஞ சர்வஜ்ஞ வாசி இல்லா-அபரிச்சேத்யன்
ஒன்றையே அனைவரும் மேன்மேலும் ஏத்தினாலும் -ஏக கண்டராய்
வெங்கு எய்தும் -ஆகிலும் முடிவு எய்தாதே
ஆனால் ஏத்துவது என் என்றால்
தேனும் பாலும் கன்னலும் அமுதமாகித் தித்திப்ப-சர்வ பிரகார ரசம்
யானும் எம்பிரானையே ஏத்தினேன் யானுய்வானே -நான் உஜ்ஜீவிக்கைக்காகவே ஏத்தினேன் –

சர்வேஸ்வரனும் ஏக கண்டராய் ஏத்த முடியாத -சத்தைக்காக ஏற்றினேன்

சர்வரும் சிறியார் பெரியார் வாசி இல்லாமல்
ஸ்வதஸ் சர்வஜ்ஞ்ஞன்
தொடங்கின கார்யம் தலைக் கட்ட வல்ல சர்வ சக்தன் ஏத்தினாலும்
இருப்பதை செய்வ வல்லவன்
இல்லாமையை பண்ண முடியாதே
பெருமையை பேசுவது எல்லை இல்லை
இல்லாதவற்றை இல்லை என்பதே
உனது பெருமையின் எல்லை உனக்கும் உன் மணாளனுக்கும் தெரியாதே என்பர்
ஒரு மிடறாக ஏத்தினாலும் -எத்தின இடம் அளவு பட்டு ஏத்தா இடம் விஞ்சி இருக்குமே -இவன் விஷயத்தில்

அந்ய பரர் -உலகோர்
அநந்ய பரர் -யான்
அளவுடையார்
அளவில்ளார்
கடலுக்குள் கூழாங்கல் திமிங்கலம் அழுந்தி வாசி இல்லையே
நீர் ஏத்த இழிவான் என் என்னில்
சர்வரச ரச்யத்தை போக்யதை யாலும் ஏத்தினேன்
பிரணயித்வம் உபகரித்த உபகாரத்தாலும் ஏத்தினேன்
இனிது -உபகாரம் -அசக்தி என்று இந்த விஷயம் பாடுவீரோ
ஏத்தாவிடில் பிழையேன்
உஜ்ஜீவிக்க ஏத்தினேன் –
சக்தி இல்லாவிடிலும் உஜ்ஜீவனம் பெற ஏத்தினேன்

—————————————————————————-

உய்வு உபாயம் மற்று இன்மை தேறி, கண்ணன் ஒண் கழல் மேல்
செய்ய தாமரைப் பழனம் தென்னன் குருகூர்ச் சடகோபன்
பொய்யில் பாடல் ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்
வையம் மன்னி வீற்றிருந்து விண்ணும் ஆள்வர் மண்ணூடே.–4-3-11-

உபய விபூதியும் தங்கள் நியமத்தில் கொள்வார்கள் -உடையவர் ஆவோம்
உய்வு உபாயம் மற்று இன்மை தேறி,-உஜ்ஜீவனதுக்கு உபாயம் வேறு இல்லை என்று அறுதி இட்டு
கண்ணன் ஒண் கழல் மேல்
செய்ய தாமரைப் பழனம் தென்னன் குருகூர்ச் சடகோபன்-சிவந்த –ஸ்லாக்யநீயமான –நிர்வாகர் –
ஆழ்வார் பிரணயித்வ குணத்தில்
பொய்யில் பாடல் ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்-அர்த்த அனுசந்தானம் உடன் அனுசந்தித்து
வையம் மன்னி வீற்றிருந்து விண்ணும் ஆள்வர் மண்ணூடே-மண்ணோடு பாட பேதம் –
மண்ணில் இருந்தே விண்ணுக்கு போக சீட்டுப் பெறுவார்கள்
வியாவ்ருத்தி தோன்ற வீற்று இருந்து -மண்ணோடு பூமியோடு பரம பதமும் ஆள்வார்

செந்தாமரைமலர்கள் நிறைந்துள்ள வயல்களாற் சூழப்பட்ட தெற்குத் திசையிலேயுள்ள
சிறந்த திருக்குருகூரிலே அவதரித்த ஸ்ரீசடகோபர்,
நன்னெறி சேர்வதற்கு உரிய வழி வேறு இல்லாமை தெளிந்து, கண்ணபிரானுடைய சிறந்த திருவடிகளின்மேலே சாத்திய
பொய் இல்லாத பாசுரங்கள் ஆயிரத்துள் இவை பத்துப் பாசுரங்களையும் கற்று வல்லவர்கள் பூலோகத்தில் பல காலம்
தங்கியிருந்து இவ்வுலகத்தில் இருந்துகொண்டே பரமபதத்தையும் அரசாட்சி செய்வார்கள்.
குருகூர்ச்சடகோபன் உபாயம் மற்று இன்மை தேறிக் கண்ணன் கழல்கள் மேலே கூறிய இவை பத்தும் வல்லார்கள்
வீற்றிருந்து மண்ணூடே விண்ணும் ஆள்வர்’ எனக் ‘கூறிய’ என்னும் வினையை வருவித்து முடிக்க.
‘தேறிக் கூறிய பத்து’ என்க. தென்னன் என்பதனைத் ‘தென் நல்’ எனப் பிரித்துக் குருகூர்க்கு அடையாக்குக.
அன்றி, ‘தென்னன் சடகோபன்’ எனச் சடகோபர்க்கு அடையாக்கலுமாம். மன்னி – நிலைபெற்று.

‘சர்வேசுவரனுடைய இரண்டு வகைப்பட்ட உலகங்களின் செல்வங்களும்
திருவாய்மொழியைக் கற்றவர்கள் இட்ட வழக்கு,’ என்றார்.

உய்வு உபாயம் மற்று இன்மை தேறி –
இவர் சர்வேசுவரனுடைய காதல் குணத்தைப் பேசத் தொடங்கியது, பேசித் தலைக்கட்ட வல்லவராய் அன்று;
இஃது ஒழியத் தரிக்கைக்கு உபாயம் இல்லை என்று தெளிந்து.
கண்ணன் ஒண் கழல் மேல் –
தான் பரம காதலன் என்பதனை அவதரித்துப் பிரகாசிப்பித்த கண்ணபிரானுடைய திருவடிகளிலே.
அவதரித்து ஆவிஷ்கரித்து பிரணயித்வம் காட்டி அருளி –
செய்ய தாமரைப் பழனம் தென் நல் குருகூர்ச்சடகோபன் –
சிவந்த தாமரையையுடைய பழனங்களையுடைத்தாய்த் தெற்குத் திக்கிற்குச் சிறந்ததாயுள்ள
திருநகரியையுடைய ஆழ்வார் அருளிச்செய்த.
அவனுடைய காதல் குணத்தைச் சொல்லுதலாலே இவர் தரித்தவாறே ‘எல்லா மரங்களும் காலம் அல்லாத காலத்திலும்
பழங்களையுடையன ஆகக்கடவன,’ என்கிறபடியே ஆயின ஆதலின், ‘செய்ய தாமரைப் பழனம்’ என்கிறது.

பொய் இல் பாடல் ஆயிரத்துள் இவையும் பத்தும் –
‘இந்தக் காவியத்தில் உம்முடைய வாக்கு ஒன்றேனும் பொய்யாக மாட்டாது,’ என்கிறபடியே,
‘பொய்யில்’ என்பதனைத் திருவாய்மொழி எல்லாவற்றுக்கும் அடைமொழியாகக் கொள்க.
‘பொய்யில்லாத ஆயிரம்’ என்ற போதே அவ்வோபாதி இப்பத்துப் பாசுரங்கட்கும் வருமே அன்றோ?
வால்மீகிக்கு -பொய்யில்லாத மநோ ராம காவ்யம் பாடும் என்று பிரம்மா ஆசீர்வாதம்
அன்றிக்கே, ‘அவாப்த சமஸ்த காமனான சர்வேசுவரன் ஒரு நித்திய சமுசாரியோடே இப்படி விரும்பி வந்து கலந்து
இவருடைய உயிர் முதலானவற்றையே தனக்கு உரிய இன்பப் பொருள்களாக இருந்தான் என்கிற
காதல் குணத்தில் பொய் இன்றிக்கே இருக்கிற பத்து’ என்னுதல்.

வையம் மன்னி வீற்றிருந்து –
பூமியிலே எம்பெருமானாரைப் போலே-பர சமுர்த்தியே ஏக பிரயோஜனம் – ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயோடே பல காலம் இருந்து.
மண்ணூடே விண்ணும் ஆள்வர் –
இங்கே இருக்கச் செய்தே பரமபதம் தங்கள் சிறு முறிப்படி செல்லும்படி ஆள்வர்கள். என்றது,
‘அங்கே போனால் ‘ஆண்மின்கள் வானகம் ஆழியான் தமர்’ என்கை அன்றிக்கே,
இங்கே இருக்கச் செய்தே தாங்கள் இட்ட வழக்காகப் பெறுவர்’ என்றபடி.

‘வையம் மன்னி வீற்றிருந்து’ என்கிற இடத்தில் ‘நம்மைப் போலே வாய் புகு சோறாகப் பறி கொடாதே,-
ஆழ்வார் போலே -32 வருஷம் மட்டும் –
பாவியேன் பல்லிலே பட்டு தெறிப்பதே – பல காலம் பூமியிலே ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயோடே
‘நாட்டாரோடு இயல்வொழிந்து’ என்கிறபடியே,
தங்கள் வேறுபாடு தோன்ற இருக்கப் பெறுவர்கள்,’ என்று சீயர் உருத்தோறும் அருளிச்செய்வர்.
இளமையிலே பட்டரைப் பறி கொடுத்தவர் அன்றோ அவர்?
தமக்கு கிட்டாத ஆச்சார்யர் இழக்க வேண்டாம் – –
முட்டாக்கு போட்டு தீட்டு காத்து கைம்பெண் போலே நஞ்சீயர் இருந்தாரே –

——————————————————————————

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

ப்ரீதக பரம் ஹரி மமுஷ்ய சதா ஸ்வா பாவாத் — மனம் மொழி மெய் -மூன்றாலும் கைங்கர்யம் செய்ய
ஸ்ரக் சந்தன பிரமுக சர்வவித
ஸூ போக்ய சம்லிஷ்டம்வான் இதம் உவாச -என்னது உன்னதாவி இத்யாதி
சர்வ வித போக்ய-முனி
அந்யோந்ய சசம்ச்லிஷ்டத்வம் –இந்த திருவாய் மொழி குணம்
காலோபாதி நிவர்த்தகத்வம் -காலத்தடங்கலை தகர்த்து அருளி குணம் என்றுமாம் –
உபதேச ரத்னமாலையில் இத்தை காட்டி அருளுவார்

—————————————————————-

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –

மித ச்லிஷ்ட பாவம் -அன்யோன்ய -போக்யம்
சேதக கந்தா -மனசை சந்தனம்
ஸ்துதி வசன க்ருத-ஸ்ரக் பட அஞ்சலி ஆபரணம் –திருமாலை திரு வஸ்திரம்
பிராண வாசி –பிராணனே இருப்பிடம்
கலித வர சிரோ பூஷண -ஆத்மாவை ஸீரோ பூஷணம்
சேதனேன -காதல் -ஞானம் கனிந்த நலம் கொண்டு நைபவர்
சீஷ்ணா சத்பாட பீத
ஸூ தனு சாதன ஆத்ம ரூப
விதன்மன் –திவ்ய விக்கிரகத்துக்கு க்ருஹம் ஆத்மாவை கொண்டு
அந்யோந்ய ஆத்ம யோகாத் –எட்டும் ஒன்பதும் பத்தும் இந்த அர்த்தம்
ஆஸ்ரித ஆத்மாத்மீயங்கள் அந்யோந்யம் ஒருவருக்கு ஒருவர் இட்ட வழக்கு
சர்வேஸ்வரத்வம் குறை இல்லாமல்
நிரவதிக தேஜஸ் உக்தனாய் -ஒன்பதாவதில்
சர்வ சேதனர் யதாவத் ஸ்தோத்ர அசக்யன் -பத்தாவதில்

————————————-

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 33-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்–

கோவான வீசன் குறை எல்லாம் தீரவே
ஓவாத காலத் துவாதிதனை -மேவிக்
கழித்தடையக் காட்டிக் கலந்த குணம் மாறன்
வழுத்துதலால் வாழ்ந்துது இந்த மண் –33

பட்டர் நிர்வாகம் -கால உபாதி நிரசன குணம் -அடையக் காட்டி

——————————————

அவதாரிகை –

இதில்
கால உபாதியைக் கழித்து அனுபவிப்பித்த படியை அருளிச் செய்கிற பாசுரத்தை
அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
இப்படி தேச கால விப்ரக்ருஷ்டங்களானதன் படிகளை அனுபவிக்க வேணும் என்று ஆசைப் பட்ட இவர்க்கு
கால சக்கரத்தான் ஆகையாலே
கால உபாதியைக் கழித்து
வர்த்தமான காலம் போலே யாக்கிக் கொடுத்து
இவர் சத்தையே தனக்கு எல்லாமாக இருக்கிற தன்
பிரணயித்வ குணத்தையும்
அவன் அனுபவிப்பிக்கவே எல்லாம் பெற்றாராய்
இந்த பிரணயித்வ குணத்தையும் அனுபவித்து
அந்த ப்ரீதி பிரகர்ஷத்தாலே அத்தையே பேசிச் செல்லுகிற
கோவை வாயாளின் அர்த்தத்தை
சங்க்ரஹித்து அருளிச் செய்கிறார்
கோவான ஈசன் -இத்யாதியால் -என்கை –

——————————————-

வியாக்யானம்–

கோவான வீசன்-
ஆழ்வாரைத் தரிப்பிக்கவே
ஜகத்து உஜ்ஜீவிக்கும் என்று
சர்வ நிர்வாஹகனான
சர்வேஸ்வரன் –
ஆழ்வார் அழிந்தால் அவருக்குள் தானும் உளனே -மின்னு மா மழை தவழும் -ஆறு அங்கம் கூற
அவதரித்தவர்க்கு தன்னைக் காட்டி அருளினான்

குறை எல்லாம் தீரவே –
கீழில் திருவாய் மொழியில்
தேச காலாதித போக்ய வஸ்துவை அனுபவிக்கப் பெறாத
துக்கத்தால் வந்த சங்கோசம் எல்லாம்
நிவ்ருத்தமாம்படி
கால சக்கரத்தான் ஆகையாலே –

ஓவாத காலத் துவாதிதனை —
விச்சேதியாமல் நடந்து செல்லுகிற காலத்தில்
அதீதமான உபாதியை –

மேவிக் கழித்து –
அகால பலின -என்னும்படி
இவரோடு சேர்ந்து
அந்த கால உபாதியைக் கழித்து –

அடைய காட்டிக் –
கீழே அபேஷித்த அவதானங்களைக் காட்டி -என்னுதல்-
அன்றிக்கே
பூசும் சாந்து –
கண்ணி எனது உயிர் -இத்யாதிகளாலே –
கரணங்களும் கரணியான இவர் சத்தையும்
இவருக்கு அங்கராக ஆபரண அம்பராதிகள் ஆன படியையும் காட்டின படி-கீர்த்தி -ஆதி சப்தத்தில்
ஆகவுமாம் –
உன்னாகம் முற்றும் அகத்தடக்கி ஆவி அல்லல் மாய்த்ததே -என்று
என் ஆவி நிர் துக்கமாயிற்று என்று அருளிச் செய்தபடி –

கலந்த குணம் –
உன்னது என்னதாவியும் என்னது உன்னதாவியும் இன்ன வண்ணமே நின்றாய்
என்று உரைக்க வல்லனே -என்று இப்படி
ஏக தத்வம் என்னலாம் படி

கலந்த குணம் –
சம்ச்லேஷித பிரணயித்வ குணத்தை –

மாறன் வழுத்துதலால் –
ஆழ்வார் சத்தை பெற்று
யானும் எம்பிரானை ஏத்தினேன் யான் உய்வானே -என்று
இப்படி கீழ் வ்யசனம் தீர்ந்து
எம்பிரானை ஸ்தோத்ரம் பண்ணுகையால் –

வாழ்ந்துது இந்த மண் –
இந்த ஜகத்தில் உள்ளார் எல்லாரும் எல்லாம் சத்தை பெற்று
வாழ்ந்தார்கள் –
வையம் மன்னி வீற்று இருந்து –என்று இறே பல சுருதி –
அன்றிக்கே
விஸ்வம் பரா புண்யவதீ-என்று
ஆழ்வார் கால் தரித்து இருக்கையாலே
பூமி பாக்யவதியாகி
வாழ்ந்தது ஆகவுமாம்-

————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: