எல்லாத்தேசத்திலும் எல்லாக்காலத்திலும் உண்டான அவன் படிகள் எல்லாம் இப்போதே பெற்று அனுபவிக்க வேண்டும் என்று
விடாய்ப்பார் ஒருவரைப் பெறுகையாலே, இவர் உயிர் வாழ்வினையே இறைவனாகிய தனக்கு எல்லாமாம்படி இருக்கிற
தன் காதல் குணத்தைக் காட்டிக் கொடுக்கக் கண்டு, இவரும் எல்லாம் பெற்றாராய் அனுபவிக்கிறார்.
சர்வேசுவரனுடைய ‘பாலனாய் ஏழுலகு’ இத்திருவாய்மொழி.
மந்திர லோபம் கிரியா லோபம் போக்க-நித்ய திருவாராதானம் பொழுது சொல்ல வேண்டிய திருவாய்மொழி -இதுவாகும்-
‘சர்வேசுவரனுடைய ‘பாலனாய் ஏழுலகு’ இத்திருவாய்மொழி’ என்றது, ‘மேல் திருவாய்மொழியாகிய ‘பாலனாய் ஏழுலகில்’
ஆழ்வாருடைய காதற் குணம் சொன்னாற்போலே, இத்திருவாய்மொழியில்
ஆழ்வார் பக்கல் சர்வேசுவரனுக்கு உண்டான காதற் குணம் சொல்லுகிறது’ என்றபடி.
வாஸூ தேவ சர்வம் என்று இருப்பார்க்கு அவரே சர்வம் என்று இருப்பானே –ஆழ்வார் பாலனாய் -போன்ற பல நிலைகளில்
சாத்திக் கொண்ட வகுள மாலை அனுபவிக்க இவன் ஆசைப் படுகிறான்
‘நெடுமாற்கடிமை, ஆழ்வாருடைய நெடுமாற்கடிமையும் எம்பெருமானுடைய நெடுமாற்கடிமையும் என இரு வகைப்படும்;
அவற்றுள் எம்பெருமானுடைய ‘நெடுமாற்கடிமை’ இத்திருவாய்மொழி,’ என்றார் முன்னும். இரண்டாம் பத்து ஏழாந்திருவாய்மொழி முன்னுரை.
இதுதனக்கு மூன்று படியாக நிர்வஹிப்பர்கள் நம் முதலிகள்;
ஒன்றை கேட்டால் -வேறு ஒன்றைக் காட்டி சமாதானம் பண்ணுவது
அத்தையே கொடுப்பதாகச் சொல்லுவது –
அத்தையே கொடுப்பது -என்ற மூன்று நிலைகளும் மூவரும் அருளுவார்கள் –
எம்பார், “அம்புலி அம்மானைப் பிடித்துத் தரவேண்டும்’ என்று அழுத குழந்தைக்குத் தேங்காயைக் –
உடைத்த தேங்காயைக்-கொடுத்து அழுகையை ஆற்றுவாரைப்போலே, வேறு ஒரு குணத்தைப் -காதற்குணத்தை.-
பிரகாசப்படுத்தி அனுபவிப்பிக்க அனுபவிக்கிறார்,’ என்று அருளிச்செய்வர்.
திருமலை நம்பி, ஒருவன் ஒன்றை விரும்பினால், அவனும் அது செய்வானாய்த் தலை துலுக்கினால், பின்பு பின்னில்
இழவு தோன்றாதே அன்றோ இருப்பது? ஆகையாலே, அவனும் ‘அப்படிச் செய்கிறோம்’ என்ன, மேல் உண்டான இழவு மறந்து,
எல்லாம் பெற்றாராய் அனுபவிக்கிறார்,’ என்று அருளிச்செய்வர்.
ஸ்ரீ கௌசல்யையார், பெருமாள் வனத்திற்கு எழுந்தருளுகிற போது, ‘ஒரே புதல்வனை யுடைய நான் உம்மைப் பிரிந்திருக்க மாட்டேன்!
கூட வருவேன் இத்தனை!’ என்ன, ‘ஆச்சி, நீர் சொல்லுகிற இது தர்மத்திற்கு விரோதம் கண்டீர்,’ என்று முகத்தைப் பார்த்து
ஒரு வார்த்தை அருளிச்செய்ய, இழவை மறந்து மங்களாசாசனம் பண்ணி மீண்டாரே அன்றோ?’
இது, பேச்சின் இனிமை விசுவாசத்திற்குக் காரணம் என்பதற்குத் திருஷ்டாந்தம்.
‘ஒரே புதல்வனையுடைய நான்’ என்று தொடங்குமிவ்விடத்தில்,
‘ஆகி னைய! அரசன்றன் ஆணையால் ஏகல் என்பது யானு முரைக்கிலென்;
சாகலா உயிர் தாங்க வல்லேனையும் போகில் நின்னொடுங் கொண்டனை போகென்றாள்.’ என்ற செய்யுளையும்,
‘ஆச்சி! நீர் சொல்லுகிற இது’ என்றுதொடங்குமிடத்தில்
‘என்னை நீங்கி இடர்க்கடல் வைகுறும் மன்னர் மன்னனை வற்புறுத் தாதுடன்
துன்னு கானம் தொடரத் துணிவதோ?அன்னை யே!அறம் பார்க்கிலை யாமென்றான்.’-என்றும்
‘வரிவில் எம்பி மண்ணர சாயவற்கு உரிமை மாநிலம் உற்றபின் கொற்றவன்
திருவின் நீங்கித் தவம்செயு நாளுடன் அருமை நோன்புகள் ஆற்றுதி யாமன்றே!’- என்ற செய்யுள்களையும் ஒப்பு நோக்கல் தகும்.
ஸ்ரீ கிருஷ்ணன், ‘மாஸூச – சோகத்தைக் கொள்ளாதே’ என்று ஒரு வார்த்தை அருளிச் செய்ய, அருச்சுனன்,
‘சந்தேகங்கள் எல்லாம் நீங்கினவனாய் நிலைத்து நிற்கிறேன்; உனது வார்த்தையின் படி செய்கிறேன்,’ என்று தரித்தானே அன்றோ?
பட்டர், ‘முக்காலத்தில் உள்ளவற்றையும் இப்போதே பெறவேண்டும் என்று விடாய்த்த இவர்க்கு அப்படியே அனுபவிக்கலாம்படி,
கால சக்கரத்தன் ஆகையாலே, கால வேறுபாட்டிற்குரிய காரணங்களைக் கழித்து, நிகழ்காலத்திற் போலே அனுபவத்திற்குத்
தகுதியாகும்படி காலத்தை ஒரு போகி ஆக்கிக்கொடுக்க அனுபவிக்கிறார்,’ என்று அருளிச் செய்வர்.
கால சக்கரத்தன்’ என்றது, ‘சக்கரம் போன்று சுழன்று வருகின்ற காலத்துக்கு நிர்வாஹகன்’ என்றபடி.
‘ஒரு போகி ஆக்கி’ என்றது, ‘நடுவில் தடையில்லாத வெளியாக்கி’ என்றபடி. அல்லது, ‘ஒரே காலத்தில் பலமாக்கி’
என்னலுமாம். பட்டர் நிர்வாகத்துக்கு நிதானம், ‘கால சக்கரத்தானுக்கே’-என்ற நாலாவது திருப்பாசுரம்.
‘மேல் திருவாய்மொழியில் விரும்பியபடியே இத் திருவாய்மொழியில் அனுபவிக்கிறார்’ என்று அருளிச்செய்யக் காரணம் வருமாறு :
‘தோளி சேர் பின்னை’ என்றதற்கு, ‘கோவை வாயாள்’ என்ற பாசுரம்.
‘கொம்பு போல்’என்ற பாசுரத்திற்கு, ‘மதிள் இலங்கைக் கோவை வீய’ என்ற பாசுரப்பகுதி.
‘பாலனாய்’ என்ற பாசுரத்திற்கு, ‘கால சக்கரத்தோடு’ என்ற பாசுரம்.
‘பாவியல் வேத நன்’ என்ற பாசுரத்திற்கு, ‘குரை கழல்கள் நீட்டி’ என்ற பாசுரம்.
மற்றைப் பாசுரங்களையும் இங்ஙனமே கண்டுகொள்க.
—————————————————————————
கோவை வாயாள் பொருட்டு ஏற்றின் எருத்தம் இறுத்தாய்! மதிள் இலங்கைக்
கோவை வீயச் சிலை குனித்தாய்! குல நல் யானை மருப்பு ஒசித்தாய்!
பூவை வீயா நீர்தூவிப் போதால் வணங்கேனேலும், நின்
பூவை வீயாம் மேனிக்குப் பூசும் சாந்து என் நெஞ்சமே.–4-3-1-
பிராப்தி விரோதி போக்கும் ஸ்வ வாபன் -சர்வேஸ்வரனுக்கு -நெஞ்சை சந்தனமாக்குகிறார் –அங்கராகம்
கோவை வாயாள் பொருட்டு ஏற்றின் எருத்தம் இறுத்தாய்! மதிள் இலங்கைக்-கோவை-
பழம் போலே சிவந்த -அதரம் தெரியவே சிரிப்பாளாம்-
சீதை மந்தகாசம் திரு அயோத்தியில் -ஸ்ரீ தண்ட காரண்யத்தில் தான் இப்படி சிரித்தாளாம்-
நம்பி மூத்த பிரான் -கண்ணன் வந்ததும் இந்த வெண்ணெய் தின்னும் பிள்ளையா என்று கணுக் என்று சிரித்தாளாம்
ககுஸ்தன் -க்குது திமில்
கோவை வீயச் சிலை குனித்தாய்! குலநல் யானை மருப்பு ஒசித்தாய்!-இலங்கைக்கு கோவை நிர்வாகன் ராவணன் -அடுத்த விரோதி இங்கே
ஜாதி யானை -குவலயா பீடம் -தந்தம் அநாயாசேன -ஒசித்து
நப்பின்னை -ஸ்ரீ ஜனக ராஜன் திரு மகள் -ஸ்ரீ வடமதுரை ஸ்திரீகளுக்கும் -செய்து அருளின விரோதி நிரசன சீலம்
பூவை வீயா நீர் தூவிப் போதால் வணங்கேனேலும், -புஷ்பம் விட்டு விலகாமல் நீர் அக்ரமாக-பணிமாறி பிரேமத்தால்
நின் பூவை வீயாம் மேனிக்குப் பூசும் சாந்து என் நெஞ்சமே.-
ஏற்பட்ட காலத்தில் வணங்க வில்லை எனினும்
பூவை பூ நிறம் உடைய -சாத்த தகுந்த அந்தராகம் -சந்தனம் -அனுராக -லேசமே காரணமாக –பற்றாசாக -ஆஸ்ரய தோஷம் பாராமல் –
ஆக்கி அருளினாய் -இதுக்கு அடி
அவஸ்தா சப்தக விகாரம் கழித்து -ஏழு கொம்புகள் -கர்ப்ப ஜன்ம பால்ய கௌமாரம் யௌவனம் –மூப்பு மரணம் -புண்ய பாபங்கள் –
தீ மனம் கெடுத்து -தசேந்தரன் -இராவணன் -விவேக சரம் விட்டு
பகவத் பாகவத பிரவேச விரோதி துர்மானம் -ஆனை போலே மதத்து இருக்கும் நிலை கழித்து
ஆதலால் -நம் பிராப்ய விரோதிகளை அழித்து-ராக லேசம் உண்டே -நெஞ்சை கொண்டார் –
கொவ்வைக்கனி போன்ற சிவந்த வாயையுடைய நப்பின்னைப்பிராட்டி காரணமாக இடபங்களின் கழுத்தை முரித்தாய்!
மதிலால் சூழப்பட்ட இலங்கை நகர்க்கு அரசனான இராவணன் அழியும்படி வில்லை வளைத்தாய்!
சிறந்த நல்ல குவலயாபீடம் என்னும் யானையின் தந்தங்களை முரித்தாய்! பூக்களை விட்டு அகலாத தண்ணீரைத் தூவி
அவ்வக்காலத்தில் வணங்குதல் செய்திலேன் ஆயினும், பூவைப் பூவினது நிறத்தையுடைய
நினது திருமேனிக்குப் பூசுகின்ற சாந்து என் நெஞ்சமே ஆகும்.
‘நீர் தூவி வணங்கேனேலும் மேனிக்குப் பூசும் சாந்து என் நெஞ்சம்,’ என்க. ‘நீர் வீயாப் பூவை’ என மாறுக. வீதல் – நீங்குதல்;
வீயா -நீங்காத. பூவை என்பதில் ‘ஐ’ இரண்டாம் வேற்றுமை யுருபு. ஆக, நீரை விட்டு அகலாத பூ, ‘நீர்ப்பூ’ என்றபடி.
அன்றிக்கே, வீயாப் பூவை – ‘உலராத மலர்களை’ என்னலுமாம். நான்காம் அடியில் ‘பூவை’ என்பதே சொல்;
‘காயாம் பூ’ என்பது பொருள். வீ – மலர். ‘ஆகும் மேனி’ என்க.
‘நப்பின்னைப் பிராட்டி, ஸ்ரீ ஜனகராஜன் திருமகள் தொடக்கமானார் உனக்குத் தேவிமார்களாய் இருக்க. நீ அவர்கள் பக்கலிலே
இருக்கும் இருப்பை என் பக்கலிலே இருக்கும்படி என் இருப்பே உனக்கு எல்லாமாய்விட்டது,’ என்கிறார் ஆதல்;
அன்றிக்கே,
‘அடியார்களுடைய பகைவர்களை அழிக்கிற இடங்களில் அந்த அந்தச் சமயங்களில் வந்து முகங்காட்டி
அடிமை செய்யப் பெற்றிலேன் நான்; இங்ஙனே இருக்கவும், என் மனத்தினையே இனிய பொருளாகக் கொள்வதே!’ என்கிறார் ஆதல்.
கோவை வாயாள் பொருட்டு ஏற்றின் எருத்தம் இறுத்தாய் –
‘தன்னைப் பேணாதே அவனுக்கு இவ்வெருதுகளின் மேலே விழ வேண்டும்படியாய் இருந்தது
அவயவ சோபை-உறுப்புகளின் அழகு’ என்பார், ‘கோவை வாயாள்’ என்கிறார்.
அன்றிக்கே, இடபங்களை முன்னிட்டு, ‘இவற்றை அடர்த்தாருக்கு இவளைக் கொடுக்கக் கடவோம்,’ என்று
இவளை அலங்கரித்து -இடு சிவப்பு இட்டு –
முன்னே கொண்டு வந்து நிறுத்தினார்கள்;
‘இவளை அணையலாமாகில் இவற்றை முரித்தல் ஆகாதோ?’ என்று தன்னைப் பேணாதே
அவற்றின் மேல் விழுந்தான் என்பார், ‘கோவை வாயாள்’ என்கிறார் என்னுதல்.
அன்றிக்கே, ‘நம்பி மூத்த பிரான் முற்பட வந்து கிட்டின இடத்து, ‘இவன் தலையிலே வெற்றி கிடந்தால் செய்வது என்?’ என்று
வெறுப்பாலே கீழ் நோக்கிய முகத்தாளாய் இருந்தாள்;
ஸ்ரீ கிருஷ்ணன் வந்து தோன்றினவாறே பிரீதியின் மிகுதியாலே புன்முறுவல் பூத்தாள்;
அப்போது அதரத்தில் பழுப்பு இருந்தபடியைத் தெரிவிப்பார், ‘கோவை வாயாள்’ என்கிறார்’ என்னுதல்.
‘அந்தப் புன்முறுவலுக்குத் தோற்றுத் தன்னை அவளுக்கு ஆக்கினான்’ என்றபடி.
ஏற்றின் பிடரியை முரித்தான் ஆதலின், ‘எருத்தம் இறுத்தாய்’ என்கிறார். எருத்தம் – கழுத்து.
அவற்றின் செருக்கிற்குக் காரணம் கழுத்தே அன்றோ? அதனை முரித்தபடி.
‘வீரராய் இருப்பார் எதிரி கையில் ஆயுதத்தை வெறுங்கையோடு சென்று வாங்குமாறு போலே
இருப்பது ஒன்றே அன்றோ, இவன் செய்தது?
அவைதாம் தலையான ஆயுதத்தோடே-திமிரு -திமில் -என்றவாறு – அன்றோ நிற்கின்றன?
மாயா மிருகமான மாரீசன் பின்னே பெருமாள் எழுந்தருளுகிற போது இளைய பெருமாள் தெளிந்து நின்று,
‘இது மாயா மிருகம் கண்டீர்; இராக்கதர்களுடைய மாயை,’ என்றாற்போலே, நானும் அவ்வளவிலே நின்று ‘
இவை அசுர ஆவேசம் உண்டு’ என்ன அன்றோ அடுப்பது? அது செய்யப் பெற்றிலேன்,’ என்கிறார்.
மதிள் இலங்கைக் கோவை வீயச் சிலை குனித்தாய் –
‘மதிளை உடைத்தான இலங்கைக்கு நிர்வாஹகன் அல்லனோ?’ என்று செருக்கு உற்றிருக்கிற இராவணன் முடிய வில்லை வளைத்தாய்;
‘இம்மதிளும் ஊரும் உண்டே நமக்கு,’ என்று சக்கரவர்த்தி திருமகனை எதிரிட்டவன் ஆதலின், ‘மதிள் இலங்கைக்கோ’ என்கிறார்.
சர்வ இரட்சகனான பெருமாளை விட்டு, மதிளை இரட்சகம் என்று இருந்தானாயிற்று.
இது அன்றோ தான் தனக்குச் செய்து கொள்ளும் காவல்?
ஆக, ‘மதிள் இலங்கைக் கோ’ என்றதனால், ‘இராவணனால் ஆளப்படுகின்ற இலங்கை’ என்கிறபடியே,
மண்பாடு தானே ஒருவர்க்கும் புகுவதற்கு அரிது; அதற்குமேலே உள் நின்று நோக்குகின்றவனுடைய வலிமையைக் கூறியபடி.
இராக்கதர்கள் மாயப்போர் அல்லது அறியார்கள்; அதைப்போன்று, இவர் செவ்வைப் பூசல் அல்லது அறியார்;
ஆதலின், ‘சிலை குனித்தாய்’ என்கிறார்.
‘நீர் தரும யுத்தத்தில் ஆற்றல் உள்ளவராய் இருத்தல் போன்று, இராக்கதர்கள் மாயப்போர் செய்வதில் ஆற்றல் உள்ளவர்கள் கண்டீர்,’ என்று
ஸ்ரீ விபீஷணாழ்வானைப் போன்று அறிவிக்கப் பெற்றிலேன்.
குலம் நல்யானை மருப்பு ஒசித்தாய் –
ஆகரத்திலே பிறந்து எல்லா இலக்கணங்களையுமுடைய குவலயாபீடத்தினுடைய கொம்பை வருத்தம் என்பது சிறிதும் இன்றி முரித்தவனே!
அவ்வளவிலே ஸ்ரீமதுரையில் உள்ள பெண்களைப் போல நின்று, ‘தரையில் உள்ள இராமனுக்கும் தேரில் உள்ள
இராக்கதனுக்கும் போர் ஏற்றது அன்று,’ என்று சொல்லப் பெற்றிலேன்.
பூவை வீயா நீர் தூவி –
‘மலர்களைத் திருவடிகளிலே பணிமாறி நீரைத் தூவி’ என்னுதல்;
அன்றிக்கே, ‘மலரை ஒழியாத நீர் – மலரோடே கூடின நீர்; அதனைத் தூவி’ என்னுதல்.
போதால் வணங்கேனேலும் –
அந்த அந்தக் காலத்திலே பூவை வீயா நீர் தூவி வணங்கிற்றிலேன் ஆகிலும். என்றது,
‘எருது ஏழ் அடர்த்தல் தொடக்கமான காலங்களிலே பிறந்த சிரமம் மாற, குளிர்ந்த உபசாரம் பண்ணிற்றிலேன் ஆகிலும்’ என்றபடி.
பூவை வீயாம் நின் மேனிக்கு –
பூவால் அல்லது செல்லாத நின் திருமேனிக்கு.
அன்றிக்கே, ‘பூவைப்பூவோடு ஒத்த திருமேனி’ என்னுதல். என்றது,
‘மலர்ந்த மலரைப் போன்ற மிருதுத் தன்மையையுடைய திருமேனிக்கு’ என்றபடி.
வீ என்பது பூவுக்குப் பேர். மேனிக்குப் பூசும் சாந்து என் நெஞ்சமே –திருமேனிக்குப் பூசும் சாந்து என் நெஞ்சமாய்விடுவதே!
நம்பி மூத்த பிரானும் தானுமாக ஸ்ரீ மதுரையிற் போய்ப் புக்கவாறே கூனியைக் கண்டு,
‘அண்ணர்க்கும் நமக்கும் பூசலாம்படி சாந்து இட வல்லையோ?’ என்ன, வழக்கனாய் இருக்கிற சாந்தைக் கொடுத்தாள்;
‘இது உனக்காய் இருந்தது’ என்ன, அதற்குமேல் தரமாய் இருப்பது ஒன்றனைக்காட்டினாள்;
‘இது கம்சனுக்கு ஆம்’ என்ன, அதற்கு மேல் தரமாய் இருப்பது ஒன்றனைக் காட்டினாள்;
‘நிறமே இதில் கொள்ளக்கூடியது’ என்ன,
இப்படி அருளிச்செய்தவாறே, ‘வெண்ணெய் நாற்றத்திலே பழகினார் இளம் பருவமுடையார் இருவர் சாந்தின் வாசி அறிந்தபடி என்?’ என்று,
அதனால் வந்த உவகை தோன்றப் புன்முறுவல் செய்தாள்;
‘நல்ல சாந்து இடுக்கைக்காக இது ஒரு முகம் இருந்தபடி என்தான்!’ என்கிறான்.
ஆக, ‘நற்சரக்குப் பரிமாறுவார். அது கொண்டு பயன் கொள்ளுவார் உடம்பின் வாசி அறிய வேண்டுங்காண்;
நம் அண்ணர் உடம்புக்கும் நம் உடம்புக்கும் ஈடான சந்தனம் தா,’ என்று, இப்படித் தரம் இட்டுப் பூசப்படுகின்ற
திருமேனி என்பதனைத் தெரிவிக்கும் பொருட்டு, ‘மேனி’ என வேண்டாது கூறுகிறார்.
———————————————————————————————
பூசும் சாந்து என் நெஞ்சமே; புனையும் கண்ணி எனதுடைய
வாசகம் செய் மாலையே; வான் பட்டாடையும் அஃதே;
தேசமான அணிகலனும் என்கை கூப்புச் செய்கையே;
ஈசன், ஞாலம் உண்டு உமிழ்ந்த எந்தை ஏக மூர்த்திக்கே.–4-3-2-
சாந்து -நெஞ்சம் -/ -மாலை -வாசகம் செய் பா மாலை /பட்டாடையும் வாசகம் செய் பா மாலையே /
கை கூப்புச் செய்கை -அணி கலன்-
இப்படி முக்கரணங்கள்-மநோ வாக் காயங்கள் சமர்ப்பித்து –
திருஷ்டி விதி-சந்த்யா வந்தனத்தில் சொல்கிறோம் -அசௌ ஆதித்ய ப்ரஹ்ம -என்று
சூர்யன் ஒளியை ப்ரஹ்மம் ஒளி என்று சொல்வது போலே –
ஈசன், ஞாலம் உண்டு உமிழ்ந்த எந்தை ஏக மூர்த்திக்கே.
சர்வ நியந்தா -சர்வ ரஷகன் –ஸ்வாமி -முக்கரணங்களும் போக்யமாகா நின்றது –
ஈசன் -ஞாலம் உண்டு உமிழ்ந்த -எந்தை என்பதால்
நிருபாதிக நியந்தா -இவ் வபதானத்தால் என்னை அடிமை ஆக்கிக் கொண்ட ஸ்வாமி
ஏக மூர்த்தி-அத்விதீயம் -திரு மேனி -நாராயணன் மூர்த்தி கேசவன்
பூசும் சாந்து என்நெஞ்சமே; கூனி சாத்திய சாந்து என் மனமே
புனையும் கண்ணி எனதுடைய வாசககம் செய் மாலையே; மாலாகாரர் உகந்து சாத்தும் -ஆகாதோ மம கேதம் –
ஆகதவ் –உபாகதவ் -கேகம் உபாகதவ் -மம கேகம் உபாகதவ் –ஐந்து சப்தங்கள் —
பரம பதம் -திருப்பாற்கடல் -வடமதுரை -பெரிய தெரு -குறுக்குத்தெரு -ஐந்து உண்டே
ஸ்ரீ வைகுண்டம் உபாகதோ -பெரிய தெரு- மம கேகம் உபாகதௌ -தன்யோஹம் அர்ச்ச இஷ்யாமி
குறும்பு அறுத்த நம்பி போலே -வாக் வ்ருத்தி சப்தத்தால் தொடுக்கப்பட்ட
வான் பட்டாடையும் அஃதே;-திரு வநந்த ஆழ்வான் -சமர்ப்பித்த –
கம்சனின் வண்ணான்-ரஜதன் சாத்தியைதை சொல்லாமல் தப்பு பண்ணி -தட்டப் பட்டான் –
பூம் பட்டாம் திருமாற்கு அரவு –அங்கே அவனே -சமர்ப்பித்தான் என்றபடி இங்கே
தேசமான அணிகலனும் என்கை கூப்புச் செய்கையே;அஞ்சலி பந்தம்
மாத்தி சொன்னால் என்ன -ஒப்பனைக்கு பௌஷ்கல்யம்-சப்தமும் அர்த்தமும் சேர்ந்து தானே வாசகம் செய் மாலை –
அஞ்சலி -தலையிலே வைத்தது -கை கூப்பினத்தை அவன் தனது தலைக்கு மேல் கொள்கிறானே – திரு அபிஷேகம் போலே –
ஈசனும் உலகத்தை எல்லாம் உண்டு உமிழ்ந்த என் தந்தையுமான ஏகமூர்த்திக்குப் பூசுகின்ற சந்தனம் எனது நெஞ்சமே ஆகும்;
சார்த்துகின்ற மாலையும் என்னுடைய சொற்களாலே தொடுக்கப்பட்ட மாலையே ஆகும்; உயர்ந்த பொன்னாடையும்
அந்த வாசகம் செய் மாலையே ஆகும்; ஒளி பொருந்திய அணியப்படுகின்ற ஆபரணங்களும்
என் கைகளால் கூப்பித் தொழுகின்ற வணக்கமே ஆகும்.
வாசகம் – சொற்கள். வாசகம் செய் மாலை – திருவாய்மொழி முதலான பிரபந்தங்கள்.
ஏகமூர்த்தி – தன்னை ஒத்த இரண்டாவது ஒரு பொருள் இல்லாதபடியான விக்கிரஹத்தையுடையவன்.
‘ஏக மூர்த்திக்குச் சாந்து நெஞ்சமே; கண்ணி வாசகம் செய் மாலையே; பட்டாடையும் அஃதே;
கலனும் கைகூப்புச் செய்கையே ஆம்,’ என்க.
‘என்னுடைய உறுப்புகளின் காரியங்களான – நினைவு முதலானவைகளே எல்லாவற்றாலும் நிறைவுற்று விளங்கும்
இறைவனுக்கு இன்பப் பொருள்கள் எல்லாம் ஆயின,’ என்கிறார்.
(கரண கார்யங்கள் மனசால் உருகுதல் இத்யாதிகள் -ஸ்ம்ருதி யாதிகள் -இத்தைக் கொண்டே பரிபூர்ணன் –
அவாப்த ஸமஸ்த காமன் -அன்றோ-போக உபகரணங்களாக கொண்டான் )
பூசும் சாந்து என் நெஞ்சமே –
சர்வேசுவரனுடைய திருமேனியின் வேறுபட்ட சிறப்பினையும், அவனுக்குத் தம் பக்கல் உண்டான விருப்பத்தையும்
நினைத்துப் பின்னாடி மீளவும் சொல்லுகிறார், ‘பூசுஞ்சாந்து என் நெஞ்சமே’ என்று.
புனையும் கண்ணி –
செலவு மாலை -வழக்கனான மாலை, அன்றிக்கே, சார்த்தப்படும் மாலை.
என்னுடைய வாசகம் செய்மாலை –
இவர் அவனுக்கு என்று சொல்ல வேண்டா; இவர் உண்மையாகில் அவனுக்கேயாய் இருக்கும்; ஆதலின், ‘எனதுடைய’ என்கிறார்.
இவர் நெஞ்சினைக் காட்டிலும் வாக்குப் பரிமளம் விஞ்சி இருக்கும் போலே காணும்.
சாந்து மணம் கொடுப்பது பூவை அணிந்த பின்பே அன்றோ?
ஆஸ்ரித கர ஸ்பர்சம் விரும்புவன் அன்றோ -இவர் அவனுக்கு என்று சொல்ல வேண்டாமே
ஆழ்வார் எனக்கு சொன்னாலும் அவனுக்கே -நாம் அவனுக்கே சொன்னாலும் நமக்கே –
நான் -அஹம் -மாறாடி அன்றோ இருக்கும்
நானே அவர் தனம் ஆனபின்பு என்னுடையது எல்லாமே உன்னுடையதே
வான் பட்டாடையும் அஃதே –
பூ கட்டியே இ றே சாந்து மணம் கொடுக்கும் -நெஞ்சின் பெருமை வாசகத்தாலே தானே தெரியும் –
அந்தச் சொற்கள்தாமே புருஷோத்தமனாம் தன்மைக்கு அறிகுறியான பரிவட்டமும்.
இவருடைய பா, நல்ல நூல் ஆதலின், வான் பட்டாடை ஆயிற்றுக்காணும்;
‘நல்ல நூலாக வேண்டும்’ என்று அடியிலே நோற்று நூற்றவர் அன்றோ?
வாசகம் பட்டாடை ஆயினவாறு யாங்ஙனம்?’ என்ன, அதற்கு விடையைச் சிலேடையாக அருளிச்செய்கிறார்,
‘இவருடைய பா’ என்று தொடங்கி. பா –செய்யுள்; நூலின் சேர்க்கை. நூல் -சாஸ்திரம்; இழை. ‘அடியிலே நோற்று நூற்றவர்’ என்றது.
“கண்ட வாற்றால் தனதே உலகென நின்றான் றன்னை வண்தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே.” (திருவாய். 4. 5 : 10.)
நூற்றல்; பிரபந்தத்தைச் செய்தல்.
தேசமான அணிகலனும் –
தனக்கு ஒளியை உண்டாக்குகிற ஆபரணமும்.
என் கைகூப்புச் செய்கையே –
சேரபாண்டியன் தம்பிரானைப் போன்று, அவனுக்கு ஒளியை உண்டாக்கா நின்றது இவருடைய அஞ்சலி.
‘இவற்றாலே நிறம் பெற்றானாய் இருக்கிறவன் தான் ஒரு குறைவாளனாய் இருக்கின்றானோ?’ எனின்,
ஈசன் –
சர்வேசுவரன் என்கிறார். ‘ஆயின், ‘இரட்சகன்’ என்னும் பெயரேயாய் உடைமை நோவுபட விட்டிருப்பவன் ஒருவனோ?’ எனின்,
ஞாலம் உண்டு உமிழ்ந்த –
உலகத்திற்கு எல்லா வகையாலும் இரட்சகன் என்கிறார்.
எந்தை –
அந்த இரட்சணத்தாலே என்னை அடிமை கொண்டவன்.
ஏக மூர்த்திக்கு –
ஈடும் எடுப்பும் இல்லாததான திருமேனியை யுடையவனுக்கு. ஏகமூர்த்திக்குப்
பூசும் சாந்து என் நெஞ்சமே –
‘‘சர்வகந்த :’ என்கிற திருமேனியை உடையவனுக்குப் பூசும் சாந்து என் நெஞ்சம் ஆவதே! இது சேருமே!’ என்கிறார்.
——————————————————————————————————-
ஏக மூர்த்தி இருமூர்த்தி மூன்று மூர்த்தி பல மூர்த்தி
ஆகி ஐந்து பூதமாய் இரண்டு சுடராய் அருவாகி
நாகம் ஏறி நடுக்கடலுள் துயின்ற நாராயணனே!உன்
ஆக முற்றும் அகத்து அடக்கி ஆவி அல்லல் மாய்த்ததே.–4-3-3-
சர்வாத்மா பாவாதியால் வந்த -புகழும் நல ஒருவன் என்கோ 3-4- பார்த்தோம் -சம்பந்தம் உடைய வடிவு அழகை அனுபவித்து
இங்கு ஜகதாகார வடிவு அழகு -சொன்னபடி –
ஜகம் எல்லாம் சரீரமாக -பௌவ நீர் ஆடையாகச் சுற்றி -கலியன்
பார் அகலம் திருவடியா -பவனம் மெய்யா -செவ்வி மா திறம் எட்டும் தோளா -அண்டம் திரு முடியா -போலே
நீராய் நிலனாய்-போலேவும் -சாஷாத்காரம் பெற்றவர்களே இத்தை உணர முடியும்
அனுபவித்து பிரகிருதி துக்கம் தீரப் பெற்றேன்
ஏக மூர்த்தி -ஸூஷ்ம -காரண ரூபம் -பிரகிருதி சரீரமாக கொண்ட -நாம ரூப விபாக அனர்ஹ -ஏகமேவ என்கிறபடியே
இருமூர்த்தி -அவ்யக்த காரணமான -மகதாதி -தமஸ் -பிரகிருதி -அவ்யக்தம் -அஷரம் -விபக்தம் பர்யாய சொற்கள் –
மஹத் அஹங்காரங்கள் -வடிவாக கொண்டவன் -சரீரமாக கொண்ட ப்ரஹ்மம்-
மூன்று மூர்த்தி -சாத்விக ராஜச தாமஸ -அஹங்காரம் -தத்தேஜா ஐத்யேஷ -சங்கல்பித்தே
-வைகாரிக -சாத்விக /-மனஸ் /தைஜச-ராஜச /பூதாதி தாமஸ –
வைஷம்யங்களை பிரகாரமாக உடையவன் -சரீரமாக
பல மூர்த்தி ஆகி -ஏகாதச இந்த்ரியங்கள் -வைகாரிக காரியம்
ஐந்து பூதமாய் -பூதாதி -கார்யம் பஞ்ச பூதங்கள் –
இது வரை சமஷ்டி சிருஷ்டி -மேலே வியஷ்டி சிருஷ்டி -சத்வாரகம் நான்முகன் மூலம்
இரண்டு சுடராய் -சூர்ய சந்தரன் –
அருவாகி-அந்தராத்மாவாக அனுபிரவேசித்து ஸூஷ்ம பூதனாய்
அனுபிரவேசம் ஜீவாத்மாவை சரீரமாகக் கொண்டு நாம ரூபம் கொடுத்து
புத்திக்கு புரிய இப்பொழுது சொல்லி -சத்தைக்கு சிருஷ்டியின் பொழுதே அனுபிரவேசம் உண்டே
நாகம் ஏறி நடுக்கடலுள் துயின்ற நாராயணனே!-அந்தராத்மா தயாவாலும் -ஷீராப்தி நாதனாகியும் -ரஷண அர்த்தமாக –
உன் ஆக முற்றும் -கீழ் சொன்ன உன் வடிவம் முற்றியும் -என் சகல கரணங்களையும் -சர்வ அலங்காரமாகக் கொண்டு
அகத்து அடக்கி ஆவி அல்லல் மாய்த்ததே.என் நெஞ்சுக்கு உள்ளே அடக்கி கபளீ கரித்து அனுபவித்து
கீழ் பட்ட அல்லல்கள் அனைத்தும் தீர்த்தாயே
அன்றிக்கே
பர மூர்த்தி -அளவும் -பர வ்யூஹ விபவ அவஸ்தைகளையும் சொல்லி
ஐந்து பூதம் –லீலா விபூதி சம்பந்தம் சொல்லி –
அத்விதீய வாசுதேவ -ஏக மூர்த்தி
சாந்தோதித நித்யோதித இரண்டு அவஸ்தைகள் இரு மூர்த்தி
நித்யோதிதத -மூன்றாக சங்கர்ஷண பிரத்யும்னன் அனிருத்னன் -வ்யூஹம் மூன்றும்
கேசவாதி -பல மூர்த்தி -அவதாரங்களிலும் பல மூர்த்தி என்றுமாம்
‘ஒரு மூர்த்தியாகி இருமூர்த்தியாகி மும்மூர்த்தியாகிப் பல மூர்த்தியாகி ஐம்பூதங்களாகி இருசுடர்களான சூரிய சந்திரர்களாகி
இவற்றுக்கு உள்ளுயிராகித் திருப்பாற்கடலின் நடுவில் ஆதிசேஷனாகிய படுக்கையின்மேலே ஏறி யோகநித்திரை செய்கின்ற நாராயணனே!
உன் திருமேனிக்கு வேண்டும் சாந்து பூமாலை முதலிய இன்பப்பொருள்கள் எல்லாம் என்னுள்ளேயாம்படி செய்து
உன் திருவுள்ளமானது துன்பத்தை நீக்கியது,’ என்கிறார்.என்றது, ‘ஒருபடி கரை மரம் சேர்க்க வல்லனே’ என்று
இருந்த உன்னுடைய திருவுள்ளத்தில் துன்பம் கெட்டு, கிருதார்த்தன் ஆனாயே!’ என்றபடி.
ஆவி – ஈண்டு, மனம். ‘ஆவி அடக்கி அல்லலை மாய்த்தது’ என்க.
‘இத்தலையை உனக்கு ஆக்கி அத்தாலே கிருதக் கிருத்தியன் ஆனாயே!’ என்கிறார்.
ஏகமூர்த்தி –
‘சோமபானம் செய்தற்குரிய சுவேத கேதுவே! காணப்படுகிற இந்த உலகமானது படைப்பதற்கு முன்னே ‘சத்’ என்று
சொல்லக்கூடியதாயும் நாமரூபங்கள் இன்மையால் ஒன்றாகவும் அடையக்கூடிய வேறு பொருள் இல்லாததாயும் இருந்தது,’ என்கிறபடியே,
படைப்பதற்கு முன்னே ‘இது’ என்ற சொல்லுக்குரிய பொருளாய்க் கிடந்த உலகமுழுதும்,
அழிந்து ‘சத்’ என்று சொல்லக்கூடிய நிலையாய் -பொடி மூடிய தணல்-நீறு பூத்த நெருப்புப்போலே
இவை அடையத் தன் பக்கலிலே கிடக்கத் -தான் ஒருவனுமேயாய் நிற்கும் நிலையைச் சொல்லுகிறது.
ஆக, ‘படைப்புக்கு முன்னே இருக்கும் இருப்பைச் சொல்லுகிறது,’ என்றபடி.
இரு மூர்த்தி –
பிரகிருதியும் மஹானும் ஆகிய இரண்டையும் நோக்கிக்கொண்டு அவற்றைத் திருமேனியாகக் கொண்டிருக்கும்
இருப்பைச் சொல்லுகிறது; என்றது, ‘காரிய காரணங்கள் இரண்டையும் தனக்குத் திருமேனியாக வுடையனாய் இருக்கும்
இருப்பைச் சொல்லுகிறது,’ என்றபடி. இரண்டுக்கும் உண்டான அண்மையைப் பற்றச் சொல்லுகிறது.
அவ்யக்தத்தினுடைய மலர்ந்த விளக்கமான நிலையன்றோ மஹானாகிறது?
காரணம் கார்யமாகட்டும் என்று அனுக்ரஹிக்க கடாஷிக்கிறார் என்றபடி -இரண்டையும் பிடித்து
-காரண கார்ய அவஸ்தைகள் இரண்டையும் சொன்னபடி –
மூன்று மூர்த்தி –
மூன்று விதமான அகங்காரங்களைச் சரீரமாகக் கொண்டிருக்கும் இருப்பைச் சொல்லுகிறது.
சாத்விகமாயும் இராஜசமாயும் தாமசமாயும் மூன்று வகைப்பட்டே அன்றோ அகங்காரந்தான் இருப்பது?
பல மூர்த்தியாகி ஐந்து பூதமாய் –
மேலே கூறிய முறை அன்று இங்குச் சொல்லுகிறது; சாத்துவிக அகங்காரத்தின் காரியம்,
பதினோரிந்திரியங்கள்; தாமச அகங்காரத்தின் காரியம், மண் முதலான ஐம்பெரும்பூதங்கள்; இரண்டற்கும் உபகாரமாய் நிற்கும்,
இராஜச அகங்காரம்-ராஜச அஹங்காரம் மேற்பார்வையாளர் போலே ; ஆக பதினோரிந்திரியங்களையும், குணங்களோடு கூடிய
ஐம்பெரும்பூதங்களையும் சொல்லி -அவற்றைத் திருமேனியாகவுடையவனாய் இருக்கும் இருப்பைச் சொல்லுகிறது.
(நம்பிள்ளை -ச குணமான பூத பஞ்சகம் என்பதால் வியாசர் பஷத்தை சொன்னபடி )
அவ்யக்தம் பிரக்ருதியின் அவஸ்தா பேதம்
பிரகிருதி -அவிபக்த தமஸ் -விபக்த தமஸ் அஷர தமஸ் அவ்யக்தம் தமஸ் -நான்கு நிலைகள் உண்டே
பூதலே -விதை -போலே பிரகிருதி -பீஜ ச்தாநீயம்
நிச்சிருத வெடித்த -நிலை விபக்தி
சலில சம்ஸ்ருஷ்ட -நீரை வாங்கி -சிதில –
உஜ்ஜூன பீஜ சமான ஆகாரம் -முளை அவ்யக்தம்
அங்கூர ஸ்தானம் முளை ஸ்தானம் மகான் -நான்கு நிலைகளை தாண்டி –
சகுணமான பூத பஞ்சகம்-வேத வியாசர் அபிப்ராயம் இது –
தன் மாத்ரா விசிஷ்டமான பூதம் எகமாக்கி ஐந்து பூதம் என்கிறது
ஏகாதச இந்த்ரியங்கள் -தன்மாத்ரா விசிஷ்ட பூதங்கள் ஐந்தும்
சப்தாதி குணங்கள் ஐந்தும் -பிரித்து -24 தத்வங்கள் –
பராசரர் -ஏகாதச இந்த்ரியங்கள் -தன்மாத்ரைகள் ஐந்தும் -பிரித்தே சொல்லி -இவரும் 24 தத்வங்கள் -என்பர் –
இரண்டு சுடராய் –
‘பிரமாவானவர் சூரிய சந்திரர்களை முன்பு போலே படைத்தார்,’ என்கிறபடியே, படைத்த சூரிய சந்திரர்களைச் சொல்லுகிறது.
இவற்றைக் கூறியது, காரியமான பொருள்கள் எல்லாவற்றிற்கும் உபலக்ஷணம்.
அருவாகி –
‘அவற்றைப் படைத்து அவற்றுக்குள் அநுப்பிரவேசித்தார்; அவற்றுக்குள் அநுப்பிரவேசித்துச்
சேதனமாயும் அசேதனமாயும் ஆனார்,’ என்றபடியே, இவற்றை உண்டாக்கி இவைகள் பொருள் ஆகைக்காகவும்
பெயர் பெறுகைக்காகவும் தான் அவ்வவ் வுயிருக்குள் அந்தராத்துமாவாய் அநுப் பிரவேசித்து நிற்கும் நிலையைச் சொல்லுகிறது.
‘நன்று; மேலே, அசித்தை அருளிச் செய்தாராதலின், அங்கு ‘அரு’ என்பதற்கு ஆத்துமா என்று பொருள் கூறுதல்
ஏற்புடைத்தாம் அன்றோ?’ என்னில், சரீரமாகவுடைய நான் அந்தரியாமியாய்ப் புகுந்து நாம ரூபங்களை உண்டு பண்ணுகிறேன்,’ என்கிறபடியே,
இந்த ஆத்துமாக்களையெல்லாம் சரீரமாகவுடைய சர்வேசுவரனுக்கு அநுப் பிரவேசமாகையாலே அப்பொருளும் சொல்லிற்றாயிற்று.
நாகம் ஏறி நடுக்கடலுள் துயின்ற நாராயணனே –
தன்னால் படைக்கப்பட்ட பிரமன் முதலானோர்கட்குப் பற்றப்படுமவன் ஆகைக்காகத் திருப்பாற்கடலின் நடுவில்
திருவனந்தாழ்வான் மேலே சாய்ந்தருளினவனே!
அன்றிக்கே, ‘பயிரைச் செய்து செய்த்தலையிலே குடி கிடக்குமாறு போன்று, படைக்கப்பட்ட பொருள்களைப் பாதுகாத்தற்காகக்
கண்வளர்ந்தருளுகின்றவனே!’ என்னவுமாம். ‘இப்படி எல்லாக் காலமும் ஒரு படிப்படத் திருவருள் புரிதலையே
இயல்பாகவுடையன் ஆகைக்கு அடியான சம்பந்தத்தையுடையவன்’ என்பார், ‘நாராயணனே’ என்கிறார்.
அனைவரையும் சமமாக பார்க்க வேண்டுமே இத்தை அறிந்த பின்பு வித்யா விநய தர்சனம் பண்டிதம் சம தர்சினி -என்றானே –
உன் ஆகம் முற்றும் –
உன் திருமேனிக்கு வேண்டும் சாந்து பூமாலை பரிவட்டம் ஆபரணங்கள் இவையெல்லாம்.
அகத்து அடக்கி –
என்னுள்ளே உண்டாம்படி செய்து. ‘இதுவே அன்றோ படைப்புக்குப் பிரயோஜனம்? இப்படிச் செய்த காரணத்தால்
துக்கம் இல்லாதவர் ஆனார் யார்?’ என்னில்,
‘அவன்’
என்கிறார் மேல்;
ஆவி அல்லல் மாய்த்தது –
உன் திருவுள்ளத்தில் உண்டான துன்பம் ஒருபடி அழியப்பெற்றதே! என்றது,
‘இத்தலையை ஒருபடி கரைமரஞ் சேர்த்து நீ கிருதக்கிருத்யன் ஆனாயே!’ என்றபடி.
அன்றிக்கே, ‘என் உள்ளமானது துக்கம் இல்லாததாயிற்று,’ என்னுலுமாம்.
இனி, இப்பாசுரத்திற்கு, ‘ஏகமூர்த்தி என்பது, பரத்துவத்தைச் சொல்லுகிறது’ என்றும்,
‘இருமூர்த்தி’ என்பது, வியூகத்தைச் சொல்லுகிறது; அதாவது, ‘வாசுதேவ சங்கர்ஷணர்களைச் சொல்லுகிறது’ என்றும்,
‘மூன்று மூர்த்தி என்பது, ‘வியூகத்தில் மூன்றாம் மூர்த்தியான பிரத்யும்நரைச் சொல்லுகிறது’ என்றும்,
‘பல மூர்த்தி’ என்பது, அவதாரங்களைச் சொல்லுகிறது என்றும்,
‘ஐந்து பூதமாய் இரண்டு சுடராய் அருவாகி நாகம் ஏறி நடுக்கடலுள் துயின்ற நாராயணனே!’ என்பது,
இன்னார் படைப்புக்குக் கடவர், இன்னார் பாதுகாத்தலுக்குக் கடவர் என்கிற படியாலே சொல்லுகிறது’ என்றும் நிர்வஹிப்பார்கள் உளர்.
‘உளர்’ என்பதனாலே, இவ்வாறு பொருள் கூறுதல் தமக்குத் திருவுள்ளம் அன்று என்பது போதரும்.
‘இந்த ஆத்துமாக்களை எல்லாம் காரிய காரணங்கள் இரண்டையும்’ என்றது, மஹானாகிய காரியத்தையும்
மூலப்பகுதியாகிய காரணத்தையும் குறித்தபடி.
‘அகங்காரம் முதலான தத்துவங்களும் மூலப்பகுதியின் காரியமாயிருக்க,
‘மஹத்’ என்னும் தத்துவத்தை மாத்திரம் சொல்லுவான் என்?’ என்னும்
வினாவிற்கு விடை அருளிச்செய்கிறார், ‘இரண்டுக்கும் உண்டான’ என்றுதொடங்கி. ‘
அண்மை எப்படி?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
‘அவ்யக்தம்’ என்று தொடங்கி. ‘அவ்யக்தத்தினுடைய மலர்ந்த விளக்கமான நிலை’ என்றது,
அவ்யக்தமாவது, பிரகிருதியினுடைய நிலை வேறுபாடுகளுள் ஒன்று;
பிரகிருதியானது. ‘அவிபக்த தமஸ்’ என்றும், ‘விபக்த தமஸ்’ என்றும்,‘அக்ஷரம்’ என்றும்,
‘அவ்யக்தம்’ என்றும் நான்கு வகையாக இருக்கும்;
அவற்றுள் ஒன்றான அவ்யக்தத்தினுடைய காரியநிலை மகானாய் இருத்தலால் என்றபடி,
‘அவிபக்த தமஸ்’ என்பது, பூமியில் விதைக்கப்பட்ட விதை போன்றது.
‘விபக்த தமஸ்’ என்பது, பூமியிலிருந்து எழும் விதை போன்றது.
‘அக்ஷரம்’ என்பது, நீருடன் கலந்து நனைந்து பிரிந்த உறுப்புகளையுடைய விதைபோன்றது.
‘அவ்யக்தம்’ என்பது, ஊறிப் பருத்து மேலெழுந்து வெடித்த விதை போன்றது.
‘மகத்’ என்பது, வித்தினின்றும் எழுந்த முளை போன்றது.
‘மேலே கூறிய முறையன்று இங்குச் சொல்லுகிறது’ என்றது,
‘ஏகமூர்த்தி இருமூர்த்தி மூன்று மூர்த்தி’ என்ற இடங்களில் காரணகாரியங்கள் என்ற முறை பற்றி அருளிச்செய்தார்;
‘இனி, அருளிச்செய்வது அம்முறையில் அன்று,’ என்றபடி. அதனை விளக்குகிறார், ‘சாத்விக அகங்காரம்’ என்று
தொடங்கி. பதினோர் இந்திரியங்கள் ஆவன, ஞானேந்திரியங்கள் ஐந்து, கர்மேந்திரியங்கள் ஐந்து,
மனம் ஒன்று. இங்குக் கூறிய தத்துவங்களின் முறையையும் விரிவையும் பரம காருணிகரான
ஸ்ரீமத் பிள்ளை லோகாசார்யர் அருளிச்செய்த தத்துவத்திரயத்தில் அசித் பிரகரணத்தாலும்,
பாகவதத்தில் சுகமுனி தத்துவமுரைத்த அத்தியாயத்தாலும் தெளிவாக உணரலாகும்,
‘ஐந்து பூதமாய் இரண்டு சுடராய் அருவாகி’ என்றதனால், இன்னார் படைப்புக்குக் கடவர் என்றும்,
‘நாகமேறி நடுக்கடலுள் துயின்ற நாராயணனே’ என்றதனால், இன்னார் பாதுகாத்தலுக்குக் கடவர் என்றும் பிரித்துக் கூட்டிக்கொள்க.
‘ஐந்து பூதமாய் இரண்டு சுடராய் அருவாகி’ என்றது, சிருஷ்டியைக் கூறுவதனால்,
மேலே கூறிய பிரத்யும்நரது தொழிலாகிய சிருஷ்டியைக் கூறுகின்றது என்பது பொருள்.
‘நாகமேறி நடுக்கடலுள் துயின்ற நாராயணனே’ என்பது,
‘அநிருத்தரையும் அவருடைய காரியமான பாதுகாத்தலையும் கூறுகின்றது’ என்பது பொருள்.
‘ஆயின், சங்கர்ஷணருடைய தொழிலாகிய சம்ஹாரத்தைக் கூறவில்லையே?’ எனின்,
‘அழித்தலானது, படைத்தற்றொழிலில் லயப்பட்டிருப்பது ஒன்றாகையால்,
அது, பொருளாற்றலால் தானே சித்திக்கும்’ என்க.
———————————————————————————
மாய்த்தல் எண்ணி ‘வாய்முலை தந்த மாயப் பேய் உயிர்
மாய்த்த ஆய மாயனே! வாமனனே! மாதவா!
பூத்தண் மாலை கொண்டு உன்னைப் போதால் வணங்கேனேலும்,நின்
பூத்தண் மாலை நெடு முடிக்குப் புனையும் கண்ணி எனதுயிரே.–4-3-4-
அனுகூல சத்ருவான -பூதனை -நிரசித்து -என்ன அனந்யார்ஹம் ஆக்கிக் கொண்ட ஸ்ரீ யபதி –
உனக்கு எனது பிராணன் திரு முடிக்கு விசேஷ அலங்காரம் ஆவதே
மாய்த்தல் எண்ணி ‘வாய்முலை தந்த மாயப் பேய் உயிர்-திருப்பவளத்தில்–முலை தாயைப் போலே வந்த பேய்ச்சி –
முதல் வந்த -12 மைல் தூரம் சரீரம் விழ -விளையாடிக் கொண்டு
பூதி கந்தமே இல்லை -சர்வகந்தன் சர்வரசன் -கோபால பாவத்தில் புரையற்ற மாயன்
மாய்த்த ஆய மாயனே! வாமனனே! மாதவா!-அபதானத்தால் ஜகத்தை ஆனந்யார்ஹம் ஆக்கி –
விஷப்பாலாக இருந்தாலும் ரசமாக இருக்க
-ஜகத் குரு வான படியால் -குற்றம் பொறுக்க
ஜகத்தை ரஷிக்க-ஸ்வாமித்வத்தை பிரகாசிப்பிக்கும் வேஷம்
ஸ்வா பாவிக ஸ்ரீ யபதித்வம் நிலை நிறுத்தி -வாமன அவதாரம் -பிரதம ஆச்ரயம் ப்ரஹ்மச்சாரி –
வாமனனே மாதவம் சங்கை வேண்டாம் என்கிறார் -உன்னை -அனுகூல சத்ரு -பூதனை மகா பலி இருவரையும் –
பூத்தண் மாலை கொண்டு உன்னைப் போதால் வணங்கேனேலும்,நின்-விலஷணமான புஷ்ப உக்தமாக
-அவஸ்தா -நேரங்களில் போது-இங்கு போது -காலம் -எந்தக்காலத்திலும் செய்யாமை –
-பண்ண விடாவிடிலும் -தத் தத் காலங்களில் -அவதார சமயங்களிலும் –
பூத்தண் மாலை நெடு முடிக்குப் புனையும் கண்ணி எனதுயிரே-ஆத்மாவே -ஆதி ராஜ்ய ஸூசகமான
ஒக்கம் கொண்ட திரு அபிஷேகம் -நெடு முடி
அலங்காரமாக சாத்தும் மாலை எனது ஆத்மாவாவதே பிராணன் ஆவதே –மாயவனே -இதுவும் அவன் மாயம்
கீழே பாசுரங்கள் மாலை -இங்கு சத்தையே-என்றவாறு-
அழிப்பதற்கு நினைத்து உனது திருவாயிலே முலையை வைத்துப் பாலைக் கொடுத்த வஞ்சனை பொருந்திய பேய் மகளாகிய
பூதனையினது உயிரை நீக்கிய ஆச்சரியமான செயல்களை யுடைய ஆயனே! வாமனனே! திருமகள் கணவனே!
குளிர்ந்த மலர்களால் தொடுக்கப்பட்ட மாலையைக்கொண்டு உன்னை அவ்வக்காலத்தில் வணங்கிலேனே யாகிலும்,
உனது குளிர்ந்த அழகிய மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட நீண்ட திருமுடிக்கு அணிகின்ற மாலை என்னுடைய உயிரேயாம்.
‘எண்ணித் தந்த பேய்’ என்க. ‘ஆய மாயனே’ என்பதனை ‘மாய ஆயனே’ எனப் பிரித்துக் கூட்டுக. ஆயன் – கிருஷ்ணன்.
‘பூதனை முதலானோரை அழிக்கின்ற காலத்தில் சிரமம் தீரக் குளிர்ந்த உபசாரங்களைச் செய்யப்பெற்றிலேனே யாகிலும்,
குளிர்ந்த உபசாரத்தால் அல்லது செல்லாத உன்னுடைய மிருதுத் தன்மையை யுடைய திருமேனிக்குச் சாத்தும்
மாலை என் உயிரேயாய்விடுவதே!’ என்கிறார்.
ஆழ்வார் உடைய சத்தையே-அவனுக்கு அலங்காரம் –
மாய்த்தல் எண்ணி –
‘இன்னாரை மாய்த்தல் எண்ணி என்னாமையாலே உலகத்தையே அழிப்பதற்காக அன்றோ
அவள் கோலி வந்தது?’ என்பதனைத் தெரிவிக்கிறார்.
கேசி வரும் பொழுது நாரதர் பயந்தாரே இப்படியே –
‘சரீரியை நலிந்தால் சரீரம் தன்னடையே அழிந்துவிடும். அன்றோ?
உயிரிலே நலிந்தால் உறுப்புகள் தோறும் தனித்து நலிய வேண்டாவே அன்றோ?
உலகங்கட்கெல்லாம் ஓர் உயிரே அன்றோ அவன்?
‘நம்மைக் கொல்ல வருகின்றான்; சந்தேகம் இல்லை,’ என்றாரே அன்றோ மஹாராஜர்?
ஆக, ‘அவள் கோலி வந்த படி அவசியம் சிலர் பரிய வேண்டியதாக இருந்ததாதலின்’
‘மாய்த்தல் எண்ணி’ என்கிறார் என்றபடி.
வாய் முலை தந்த –
அவன் திருப்பவளத்திலே நஞ்சினைக் கொடுத்தாற் போலே இருக்கையாலே ‘தந்த’ என்கிறார்.
அன்றிக்கே, ‘தருகையும் கொடுக்கையும் ஒரு பொருட்சொற்களாய்,
கொடுத்த என்னும் பொருள் பெற்றுக் கிடக்கிறது,’ என்னுதல்.
மாயப் பேய் –
பிறவியால் வந்த அறிவு கேட்டுக்கு மேலே, வஞ்சனையை யுடையளாயும் வந்தாள்; என்றது,
‘பேயாய் வருகை அன்றிக்கே, தாயாயும் வந்தாள்,’ என்றபடி.
‘தாயாய் வந்த பேய்’ என்றார் திருமங்கை மன்னன்.
உயிர் மாய்த்த –
அவள் கோலி வந்ததனை அவள் தன்னோடே போக்கினபடி.
மாய ஆயனே – ஆச்சரியமான ஆற்றலையுடைய ஆயனே!
இவனும் பிள்ளையாயே முலையுண்டான்; அவளும் தாயாய் முலை கொடுத்தாள்;
பொருளின் தன்மையாலே முடிந்தாள் இத்தனை.
வாமனனே –
‘வெங்கொங்கை உண்டானை மீட்டு ஆய்ச்சி ஊட்டுவான், தன்கொங்கை வாய்வாய்த்தாள் சார்ந்து’ என்றும்,
‘பேய்ச்சிபால் உண்ட பெருமானைப் பேர்ந்தெடுத்து, ஆய்ச்சி முலைகொடுத்தாள் அஞ்சாதே’ என்றும் சொல்லப் படுகின்றபடியே
அந்த அவதாரத்தில் பூதனை முலை கொடுத்தால் அதனை மாற்றுவதற்கு உரிய மருந்தாக முலை கொடுக்கைக்கு
ஒரு தாயாகிலும் உண்டே அன்றோ அங்கு?
அதுவும் இன்றிக்கே, இவனைப் பெற்றிட்டு வைத்துத் தாயும் தமப்பனும்-அதிதி கஸ்யபர்- தவத்திலே
கருத்து ஊன்றினவர்களாய் இருந்துவிட, அசுரத்தன்மை வாய்ந்தவர்கள் இருந்த இடத்தே
தானே போய்க்கிட்டும்படியாய் அன்றோ இருந்தது? என்றது
‘தான் இருந்த இடத்தே அவர்கள் வந்து கிட்டினாற்போலே அன்றோ எதிரிகள் இருந்த இடத்தே தான் சென்று கிட்டுமது?
அது, மிகவும் வயிறு எரித்தலுக்குக் காரணமாய் இருக்குமே அன்றோ?’ என்றபடி. அதனையே அன்றோ,
‘சீராற் பிறந்து சிறப்பால் வளராது, பேர்வாமன் ஆகாக்கால் பேராளா!’ என்று வயிறு பிடித்தார்கள்?
இவனை – வாமனனை. ‘தாயும் தமப்பனும்’ என்றது, அதிதியையும் காசிப முனிவரையும்.
‘காலநு னித்து உணர் காசிபன் என்னும் வாலறிவற்கு அதிதிக்குஒரு மகவாய்
நீலநிறத்து நெடுந்தகை வந்தோர் ஆலமர் வித்தின் அருங்குறள் ஆனான்.’– என்றார் கம்பநாட்டாழ்வார்.
மாதவா –
‘தீ நாள் திருவுடையார்க்கு இல்’ என்கிறபடியே, இந்த அபாயங்களில் அவன் தப்பியது அவள் நெஞ்சோடே யிருந்து
நோக்குகையாலே அன்றோ? -சஹ்ருதயமாக -உளமாக-என்றுமாம் –
ஓர் அபாயமும் இல்லையே யாகிலும், பெரிய பிராட்டியாரும் அவனுமான சேர்த்திக்கு
மங்களாசாசனம் செய்கின்றவர்கள் தேட்டமாய் இருக்கிறது காணும். அன்புடையவர்கள்
‘வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு,’ என்னா நின்றார்கள் அன்றோ?
பூத்தண் மாலைகொண்டு உன்னைப் போதால் வணங்கேனேலும் –
பூதனை முதலாயினோர் வந்து கிட்டின அவ்வக் காலத்திலே குளிர்த்தியை யுடைத்தான பூ மாலையைக் கொண்டு
குளிர்ந்த உபசாரத்தைச் செய்யப் பெற்றிலேனே யாகிலும்.
பூத்தண்மாலை நெடுமுடிக்குப் புனையும் கண்ணி எனது உயிரே –
குளிர்ந்த மாலையால் அல்லது செல்லாதபடியாய் ஆதி ராஜ்ய சூசகமான உன்னுடைய திருமுடிக்கு விரும்பிச் சார்த்தும் மாலை,
என் உயிர் –
என் சத்தையாய் விட்டது.
—————————————————————————-
கண்ணி எனது உயிர் காதல் கனகச் சோதி முடி முதலா
எண்ணில் பல் கலன்களும்; ஏலும் ஆடை யும் அஃதே;
நண்ணி மூவுலகும் நவிற்றும் கீர்த்தியும் அஃதே;
கண்ணன் எம்பிரான் எம்மான் கால சக்கரத் தானுக்கே.–4-3-5-
இங்கு உயிர் காதல் -ஆத்மாவையும் அபி நிவேசத்தையும் -சமர்ப்பிக்கிறார் -ஆபரணாதி சமஸ்தமும் –
1-ஸ்வாமி –2-உபகாரகன் -3-சுலபன் -4-போக்யன் -5-கண்ணன் –ஐந்துக்கும் இவரும் ஐந்தும் கீர்த்தியையும் சேர்த்து –
1-கண்ணி-2 எனது உயிர்-அபிமான அந்தர்கதமான -தலையால் -ஆழ்வாரை தாங்குகிறார் -என்றவாறு
காதல் கனகச் சோதி முடி முதலா எண்ணில் பல்கலன்களும்; ஏலும் ஆடை யும் அஃதே;-ஆத்ம தர்மம் ப்ரேமம்
-தங்க மயமான ஆதி ராஜ்ய ஸூ சகம் -திரு அபிஷேகம் –
அசந்க்யேயமான திவ்ய ஆபரணங்களும் அவையே
அநு ரூபமான திருப் பீதாம்பரமும் அதுவே
நண்ணி மூவுலகும் நவிற்றும் கீர்த்தியும் அஃதே;-
காதலைக் கொண்டு இத்தனையும் -சாகரம் அன்றோ -கடலின் மிகப் பெரியதால்
-கடல் புரைய விளைவித்தான் -தத்வ த்ரயமும் கபளீ கரிக்குமே ஆழ்வார் அவா
திக்கு எட்டும் பரவி -எண் திசையும் அறிய இயம்புகேன் -கீர்த்தியும் ஆழ்வார் காதலே
பிரேமத்துக்கு -விஷயமாக உள்ளதே அவனுக்கு அலங்காரம் -என்றவாறு
கண்ணன் எம்பிரான் எம்மான் கால சக்கரத் தானுக்கே.-கால நிர்வாககன் -திரு வாழி- யுடையவன்
அழகைக் காட்டி கால வச்யன் ஆகாமல் அடிமைப் படுத்தி -ஸ்வாமி –
உபகாரகன் -கால தத்வம் உள்ளதனையும் அழகை அனுபவிப்பித்த
கால சக்கரம் வைத்து இரண்டையும் அநிஷ்ட நிவ்ருத்தி -இஷ்ட பிராப்தி
அவதாரம் -காலத்துக்கு அனுரூபமாக –
காலத்தை நடத்துகின்ற சக்கரத்தையுடையனான எம்மானும் எம்பிரானுமான கண்ண பிரானுக்கு, என்னுடைய உயிரானது
அவன் அணிந்து கொள்ளுகின்ற மாலையாய் இராநின்றது; அவன் தரித்திருக்கின்ற பொன் மயமான ஒளி பொருந்திய
திருமுடி முதலான எண் இல்லாத பல வகையான ஆபரணங்களும் என்னுடைய அன்பே யாய் இராநின்றது;
பொருந்திய பீதாம்பரமும் அந்த அன்பேயாகும்; மூவுலகத்தாரும் பொருந்திச் சொல்லுகின்ற கீர்த்தியும் அந்த அன்பேயாகும்.
‘எனது உயிர் கண்ணி; காதல் கனகச் சோதி முடி முதலா எண் இல் பல் கலன்களும் அஃதே;
ஏலும் ஆடையும் அஃதே; கீர்த்தியும் அஃதே’ என்க.
கண்ணி – மாலை. கண்ணி என்பதற்குத் ‘தலையில் அணியும் மாலை’ என்பர் புறநானூற்று உரையாசிரியர்.
கலன் – ஆபரணம்.
தம்முடைய அன்பு முதலானவைகள் ஓர் ஒன்றே ஆபரணங்கள் முதலான
எல்லாப் பரிச்சதங்களும் ஆயிற்று அவனுக்கு என்கிறார்.
எனது உயிர் கண்ணி –
‘நான் ‘என்னது’ என்று இருக்கிறதை அன்றோ அவன் தனக்கு மாலையாகக் கொண்டது?’ என்பார்,
‘எனது உயிர் கண்ணி’ என்கிறார்.
அன்றிக்கே, ‘மார்வத்து மாலை’ என்கிறவளைத் தனக்கு மாலையாகக் கொள்ளுகை தக்கது;
அஃது ஒழிய என் உயிரை அன்றோ தனக்கு மாலையாகக் கொண்டான்?’ என்பார்,
‘கண்ணி எனது உயிர்’ என்கிறார் என்னலுமாம்.
கனகம் சோதி முடி முதலா எண் இல் பல் கலன்களும் காதல் –
விரும்பத் தக்கதாய் ஆதி ராஜ்ய சூசகமான திருமுடி முதலான எண் இறந்து பல வகைப்பட்ட
திரு ஆபரணங்களும் என்னுடைய அன்பேயாம்.
‘இவருடைய காதல் அவனுக்கு ஆபரணமாவது என்?’ என்னில்,
இவருடைய அன்பிற்குத் தான் விஷயமாகப் பெற்ற இதனையே,
தனக்குப் பல ஆபரணங்கள் சாத்தினால் பிறக்கும் புகர் உண்டாக அவன் நினைத்திருக்கையாலே,
அதனை நோக்கிச் சொல்லுகிறார்.
குணம் த்ரவ்யம் ஆகுமா -இவற்றைக் கொண்டு பெரும் உகப்பு இவர் அபி நிவேசம் கண்டு அடைகிறார் -என்றபடி
-அத்ருஷ்ட ரூபமான மானஸ அனுபவம் காதல் ப்ரேமமே வேண்டுவது –
பூவை –பூம் புட்டில் யாவையும் திருமால் திரு நாமங்களை போலே –
அதே பிரியம் இவள் திருநாமத்தால் அடைகிறாள் -என்றபடி போலே –
ஏலும் ஆடையும் அஃதே –
திரு அரைக்குத் தகுதியான திருப்பீதாம்பரமும் அந்த அன்பேயாம்.
ஒரு நாள் ஸ்ரீ வைஷ்ணவ வண்ணாத்தான், திருப் பரிவட்டங்களை அழகியதாக
வாட்டிக்கொண்டு வந்து எம்பெருமானார்க்குக் காட்ட,
மிக உவந்தாராய் அவனைப் பெருமாள் திருவடிகளிலே கைப்பிடித்துக்கொண்டு புக்கு,
‘நாயன்தே! இவன் திரு அரைக்குத் தகுதியாம்படி
வாட்டினபடி திருக்கண் சார்த்தி அருளவேண்டும்’ என்று இவற்றைக் காட்டியருள,
கண்டு உவந்தருளி, உடையவரை அருள்பாடு இட்டருளி,
‘இவனுக்காக ரஜகன், நம் திறத்தில் செய்த குற்றம் பொறுத்தோம்’ என்று திருவுள்ளமாயருளினார்.
அன்றிக்கே,
‘ஏலும் ஆடையும் அஃதே’ என்பதற்கு, ‘சிறந்த பொன்னாடை’ என்கிறபடியே,
அர்த்தவாதம் இல்லை -மகா ரஜதம்-தங்கமயம் -வெள்ளிப் பட்டைகள் -திருப் பரிவட்டம் -உபநிஷத் –
‘புருடோத்தமனுக்கு இலக்கணமான திருப்பீதாம்பரமும் அந்த அன்பேயாம்’ என்னலுமாம்.
இவர் பல காலம் கூடிப் பண்ணுகிற திரு ஆபரணமும் திருப்பரிவட்டமும் அன்றோ?
‘அறியாக் காலத்துள்ளே அடிமைக்கண் அன்பு செய்வித்து’ என்கிறபடியே,
இவருடைய அன்பு அடியே தொடங்கியுள்ளது அன்றோ?
‘இது கூடுமோ?’ என்று சந்தேகிக்க வேண்டா; இவை ‘பொய்யில் பாடல்’ ஆகையாலே கூடும்.
மூ உலகும் நண்ணி நவிற்றும் கீர்த்தியும் அஃதே –
விசேடஜ்ஞர் அன்றிக்கே, மூன்று உலகத்துள்ளாரும் வந்து கிட்டிக் கடல் கிளர்ந்தாற்போலே
துதிக்கிற கீர்த்தியும் அந்த அன்பேயாம்.
‘இவர் காதலித்த பின்னர் வேறு பொருள்களிலே நோக்குள்ளவர்களும் அப்பொருள்களில் நோக்கு
இல்லாதவர்களாகி ஏத்தாநின்றார்கள்.’ என்றாயிற்றுவன் நினைத்திருக்கிறது.
பிரயோஜனத்தை விரும்புகிறவர்கள் துதிக்கிற கீர்த்தியை அநந்யப்பிரயோஜனரான
தம்முடைய காதல் என்னலாமோ?’ என்ன, அதற்கு விடை அருளிச் செய்கிறார்,
‘இவர் காதலித்த பின்னர்’ என்று தொடங்கி. இங்கே‘ஊரும் நாடும் உலகமும் தன்னைப்போல் அவனுடைய,
பேரும் தார்களுமே பிதற்ற’ (திருவாய். 6. 7 : 2.) என்ற திருப்பாசுரம் அநுசந்திக்கத்தகும்.
ஆக, ‘ஓர் இனப்பொருள்கள் பலவாதலே அன்றி, வேற்றினப் பொருள்களும்
பலவாகத் தொடங்கின’ என்பதனைத் தெரிவித்தவாறு.
முதலா -பல ஜாதிகளுக்கும் -என்றவாறே –
இக்காதலுக்குக் கைதொட்டுக் கிருஷி பண்ணினபடி சொல்லுகிறது மேல் :
விருத்த வான்களைக் காட்டிக் காணும் விருத்தி பரர் ஆக்கிற்று இவரை.
கால சக்கரத்தான் எம்மான் எம்பிரான் கண்ணனுக்கு –
கையும் திருவாழியுமான அழகைக் காட்டி எனக்கு வேறு ஒன்றிலே நெஞ்சு செல்லாதபடி
செய்தலாகிய மஹோபகாரத்தைச்செய்து,
‘கழிவதோர் காதலுற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதல்?’ என்னும்படி செய்த என் ஸ்வாமியான கிருஷ்ணனுக்கு.
பகலை இரவு ஆக்க வல்ல சக்கரமாதலின், ‘காலசக்கரம்’ என்கிறார்.
கால சக்கரம் – ‘காலத்தை நடத்துகின்ற சக்கரம்’ என்றபடி.
அன்றிக்கே, ‘கலிகாலத்தில் பாஷண்டிகளால் கெடுக்கப்பட்ட மக்கள் விஷ்ணுவாகிய
சர்வேசுவரனைப் பூஜிக்கின்றார்கள் இல்லை,’ என்கிற காலத்திலும்,
இருள் தரு மா ஞாலத்திலும் இருளை ஓட்டி, அருளார் திருச்சக்கரமாய்த் திருக்கரத்திலே விளங்கிக் கொண்டிருப்பவன் ஆதலின்,
‘காலத்திற்குக் கட்டுப்பட்டிருக்குந்தன்மையைப் போக்கும் சக்கரம்’ என்னுதல்.
சர்வேசுவரன் திருக்கரத்தைத் தான் பிரியாமல் இருத்தல் போலே,
திருவடிகளைத் தாம் பிரியாதபடியான ருசியை உண்டாக்கக்கூடிய திருவாழி என்பதனைத் தெரிவித்தபடி.
அவனுடைய திருக்கையிலே நின்ற அழகாலே மக்கள் சென்று காலிலே விழும்படி செய்யுமவன் என்பதாம்.
‘அருளார் திருச்சக் கரத்தால் அகல்விசும் பும்நிலனும் இருளார் வினைகெடச் செங்கோல் நடாவுதிர்’
பாஷண்டோ -கலி காலத்தில் -கலௌ ஜகத் பதிம் -பூஜிக்காமல் -பராசரர் –
காலத்தால் வந்த கொடுமை பாதிக்காமல் அருளிய திரு ஆழி என்றவாறு
அவர் திருக்கையை விட்டு பிரியாமல் இவரை திருவடியில் விழ வைத்து பிரியாமல் பண்ணி அருளினார் என்றபடி
————————————————————————————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply