மாதர் மா மண் மடந்தை பொருட்டு ஏனமாய்,
ஆதி அம் காலத்து அகலிடம் கீண்டவர்
பாதங்கள் மேல் அணி பைம்பொன் துழாய் என்றே
ஓதுமால் எய்தினள் என்றன் மடந்தையே.–4-2-6-
ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கு உதவிய வராஹ நாயனார் திருவடிகளில் உள்ள திருத் துழாய் -கிடைக்க பிச்சேறி
மாதர் மா மண் மடந்தை பொருட்டு ஏனமாய்,–நீருக்கும் சேற்றுக்கும் இறாயாமல்-
ஆதி அம் காலத்து அகலிடம் கீண்டவர்-கல்பாதி-ஸ்வாயம்பூ மனு -படைத்து -வைக்க பூமி இல்லையே –
பிரமன்-விடைத்த மூக்கு வெளியே -பெரும் கேழலார்-
அம்-சிருஷ்டிக்கு யோக்யமாகும் பிராதுர் பாவ யோக்யம் ஆகும் நன்மை -அண்ட பித்தியில் இருந்து
பாதங்கள் மேல் அணி பைம்பொன் துழாய் என்றே-ரிஷிகள் -சனகாதிகள் -ஸ்தோத்ரம் பண்ணி சமர்ப்பித்த திருத்துழாய்
ஓதுமால் எய்தினள் என்றன் மடந்தையே-பிரமத்தை அடைந்த -மடப்பம் –சொல்வதைக் கேட்கும் நிலையில் இல்லை
என்னுடைய பெண்ணானவள் காதலையுடைய பூமி தேவியின் பொருட்டுப் பண்டைக் காலத்தில் வராக அவதாரத்தைச் செய்து
அகன்ற பூ உலகத்தை ஒட்டு விடுவித்து எடுத்து வந்தவருடைய திருவடிகளின் மேலே அணிந்த பசிய அழகிய திருத்துழாய்
என்றே சொல்லும் படியான மயக்கத்தை அடைந்தாள்.
‘ஆதி அம் காலத்து மாதர் மண் மடந்தை பொருட்டு ஏனமாய் அகலிடம் கீண்டவர்’ என்க.
‘என்றன் மடந்தை மால் எய்தினள்,’ என மாறுக.
‘மனிதத் தன்மை அழியாமல் நப்பின்னைப் பிராட்டிக்கு உதவினாற் போல அன்றிக்கே,ஸ்ரீ பூமிப் பிராட்டிக்காகத் தன்னை
அழிய மாறியும் உதவினவனுடைய திருவடிகளில் திருத்துழாயை ஆசைப்படா நின்றாள்,’ என்கிறாள்.
மாதர் –
அழகு. நிருபாதிகமான பெண்மையையுடையவள் என்னுதல்; –ஆழ்வார் போலே -பெண் தன்மை ஏறிட்டுக் கொள்ள வேண்டாமே-
மாதர் என்று காதலாய், ‘சினேகத்தையுடையவள்’ என்னுதல்.-அஹம் -சிஷ்யாச்சா -தாஸ்யாச்சா -பக்த்யாச்சா -என்றாளே
மா மண் மடந்தைபொருட்டு –
ஏற்றத்தை யுடையவளான ஸ்ரீ பூமிப் பிராட்டியின் பொருட்டு.–அரவாகி சுமத்தியால்–திருவானவள் சீறாளோ-விராதன் –
ஏனமாய் –
‘பாசி தூர்த்துக் கிடந்த பார்மகள்’ என்கிறபடியே, காதலி உடம்பு பேணாமல் கிடக்க, காதலன் உடம்பு பேணி இருக்கை
காதலுக்குத் தக்கது அன்றே? ஆதலால், ‘மாசு உடம்பில் நீர் வாரா மானம் இலாப் பன்றியாம் தேசு’ என்கிறபடியே,
நீருக்கும் சேற்றுக்கும் இளையாத வடிவை யுடையவனாய்.
ஆதி –
வராக கல்பத்தின் ஆதியிலே.
அம் காலத்து –
அழகிய காலத்தில் -காப்பாற்றுகின்ற சர்வேசுவரன் தன் விபூதியைக் காப்பதற்காகக் கொண்ட கோலத்தை
அனுபவிக்கிற காலம் ஆதலின், ‘அம் காலம்’ என்கிறது.
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடை கொண்ட எந்தாய் –
அகல் இடம் கீண்டவர் பாதங்கள்மேல் அணி பைம்பொன் துழாய் என்றே ஓதும் மால் எய்தினள் –
பெரிய இவ்வுலகத்தை அண்ட பித்தியினின்றும் ஒட்டு விடுவித்து எடுத்துக்கொண்டு ஏறினவனுடைய திருவடிகளிலே
வேத மயம் சரீர — யஜ்ஞவராஹன் -‘அந்த வராக நயினாருடைய மயிர்க்கால்களில் உள்ள மஹரிஷிகள் துதி செய்கிறார்கள்,’ என்கிறபடியே,
‘சனகன் முதலானோர்-மானஸ குமாரர்கள்- இட்ட திருத்துழாயை ஆயிற்று இவள் ஆசைப்படுகிறது.
இதனையே எப்போதும் சொல்லும்படி பிச்சு ஏறினாள்’ என்பாள், ‘மால் எய்தினள்’ என்கிறாள்.
என் றன் மடந்தையே –
‘அவன் அன்றோ பிச்சு ஏறுவான்?’ என்று இருப்பவளாதலின், ‘என் மடந்தை’ என்கிறாள்.
‘இப் பருவத்தைக் கண்டார் படுமதனை இப் பருவமுடைய இவள் படுவதே!’ என்கிறாள்.
பேதை- பெதும்பை -மங்கை- மடந்தை -அரிவை – தெரிவை – பேர் இளம் பெண் அவஸ்தைகள் –
அவள் மாதர் மா மண் மடந்தை -இவள் என் மடந்தை -ஆபிஜாத்யம் ஏற்றம்
——————————————————-
மடந்தையை வண் கமலத் திரு மாதினைத்
தடங்கொள் தார் மார்பினில் வைத்தவர் தாளின் மேல்
வடங்கொள் பூந் தண் அம் துழாய் மலர்க்கே இவள்
மடங்குமால்; வாணுதலீர்!என் மடக்கொம்பே.–4-2-7-
அமிருத மதன தசையில் -பிராட்டியை திரு மார்பில் -அஜிதன் -ஹரி -இவன் திரு நாமம் –
இவன் திருவடிகளில் திருத் துழாய் நிமித்தமாக
மடந்தையை வண் கமலத் திரு மாதினைத் தடங்கொள் தார் மார்பினில் வைத்தவர் -பருவம் -அழகிய -தர்ச நீயமான
கமலம் இருப்பிடம் –ஸ்ரீ என்னும் திரு நாமம் -திரு -மாது – சௌந்தர்யாதிகள்
தாளின் மேல்-ஈச்வரத்வ சூசகம் மாலை -தாருக்கும் மாதருக்கும் இங்கே இடம் -தடம் -விசாலமான-வைஜயந்தி வனமாலை –
ஏறும் படி – யயௌ வஷஸ் ஸ்தலம் ஹரி -அடைந்தாள் -என்னாமல் வைத்தவர் –
இவள் அமரும் படி வைத்து அருளினார் -தத் கால வர்த்திகள் தேவர்கள் சாத்தின
வடங்கொள் பூந் தண் அம்துழாய் மலர்க்கே இவள்-தொடையை உடைத்தாய் தர்ச நீயமான
குளிர்ந்த செவ்விய திருத் துழாய் மாலைக்கு தோற்று -வடங்கொள் பூ-தழைத்த புஷ்ப்பம் என்றுமாம்
மடங்குமால்; வாணுதலீர்!என் மடக்கொம்பே.-சிதிலமாகி –உஜ்வலமான நெற்றி உடையவள்
பவ்யமான வஞ்சி கொடி -சுருளா அவசன்னையாய் உள்ளாள்-உங்களை போலே இவளும் ஆக வேண்டுமே
ஒளி பொருந்திய நெற்றியையுடைய பெண்களே! என்னுடைய பெண்ணானவள், மடந்தைப் பருவத்தை யுடையவளாகிய,
வளப்பம் பொருந்திய தாமரைப்பூவில் வீற்றிருக்கின்ற பெரிய பிராட்டியைப் பரந்த மாலையை அணிந்த திருமார்பிலே வைத்த
எம்பெருமானுடைய திருவடிகளின் மேலே அணிந்த தொடுக்கப்பட்ட பூக்களையுடைய
குளிர்ந்த அழகிய திருத்துழாய் மலர்க்கே இவள் சுருண்டு விழுகின்றாள்.
‘என் மடக்கொம்பு இவள் துழாய் மலர்க்கே மடங்கும்,’ எனக்கூட்டுக.
கொம்பு – ஆகுபெயர். ‘தார் கொள் தடம் மார்பு’ என மாறுக.
‘அமிர்தத்திற்காகத் திருப்பாற்கடலைக் கடைகிற காலத்திலே பெரிய பிராட்டியாரைத் திரு மார்பிலே
வைத்தருளினவனுடைய திருவடிகளிற் சார்த்தின திருத்துழாயை ஆசைப்படா நின்றாள்,’ என்கிறாள்.
தானே பெண்ணாகி-வானவரை பெண்ணாகி அமுதூட்டியவன் அன்றோ -திருமார்பில் இடம் கேட்க வில்லையே
பிறந்த அன்றே நேரே அமர்ந்து திருக்கல்யாணம் -பிறந்த அன்றே விரோதி நிரசன சீலன் நரசிம்ஹன் –
மடந்தையை –
எப்போதும் ஒக்க போகத்திற்குத் தகுதியான பருவத்தை யுடையவளை.
(பிறந்த அன்றே திரு மார்பில் ஏறி திருக் கல்யாணம்
பிறந்த குழந்தை சண்டை நரசிம்மன் -போலே)
வண் கமலத் திருமாதினை –
அழகிய தாமரைப்பூவை இருப்பிடமாகவுடைய திருவாகிற பெண் பிள்ளையை. ‘சாக்ஷாத் இலக்குமியை’ என்றபடி.
தடம்கொள் தார் மார்பினில் வைத்தவர் –
பெரிய பிராட்டியாருக்குத் திவ்ய அந்தப்புரமாகப் போகும்படி இடமுடைத்தாய், இறைமைத் தன்மைக்கு
அறிகுறியான மாலையை யுடைத்தான மார்பிலே வைத்தவர்.
அந்தப்புர தீபம் -கௌச்துப ஸ்வஸ்தி தீபம் -சித்திரம் கோலம் –
மாட்டுக் கொம்பு கொண்டு இவனை போட்டுவித்தானே -லஷ்மி லலித க்ருஹம்
கமலா -கௌஸ்துபம் -பர தேவதா கோஷம் –
யசோதை அச்சுத்தாலி ஆமைத்தாலி ஐம்படைத்தாலி -இதுவே சௌலப்யம் காட்டிக் கொடுக்கும் –
மார்பினில் வைத்தவர் தாளின்மேல் வடம்கொள் பூந்தண் அம் துழாய் மலர்க்கே இவள் மடங்குமால் –
பஸ்யதாம் சர்வ தேவா நாம் –‘மஹாலக்ஷ்மி யானவள் பார்த்துக் கொண்டிருக்கின்ற எல்லாத் தேவர்களுக்கும் நடுவில்
பகவானுடைய திருமார்பை அடைந்தாள்’ என்கிறபடியே,
அமிர்தத்திற்காகக் கடைகிற காலத்தில் ‘அம்மா நமக்கு இம்மார்பு பெறவேண்டும்’ என்று தன்பாடு ஏற வர,
அவளும் தண்ணீர் தண்ணீர் என்னும் படி அம்மா -ஸ்வாமி -இவனும் அம் மா பிராட்டி தனக்கு வேண்டும் என்றபடி –
அவளையும் மார்பிலே வைத்துக் கொண்டவனுடைய திருவடிகளின் மேலே செறியத் தொடை உண்டு காட்சிக்கு
இனியதாய்க் குளிர்ந்து செவ்வியையுடைத்தான திருத்துழாய்ப் பூவை
ஆசைப்பட்டுக் கிடையாமையாலே சுருண்டு விழுந்து கிடவா நின்றாள்.
வாள் நுதலீர் –
என் மடக்கொம்பே ‑
என்னைப் பிரியாமல் எல்லா அளவிலும் விகாரம் இல்லாதவளாய் இருக்குமவள் படும் பாடே இது!
வெருவு மாலமும் பிறையும் வெவ் விடையவற்கீந்து
தருவும் வேறுள தகைமையும் சதமகற் கருளி
மருவு தொல் பெரு வளங்களும் வேறுற வழங்கித்
திருவுமாரமும் அணிந்தனன் சீதர மூர்த்தி.’
————————————————————————–
கொம்பு போல் சீதை பொருட்டு, இலங்கை நகர்
அம்பு எரி உய்த்தவர் தாள் இணை மேல் அணி
வம்பு அவிழ் தண் அம் துழாய் மலர்க்கே இவள்
நம்புமால்; நான் இதற்கு என் செய்கேன் நங்கைமீர்?–4-2-8-
அவன் ஏக தார வ்ரதன் நானும் ஸ்ரீ ஜனக ராஜன் திரு மகள் -தாராயினும் –மண்ணாயினும் வேண்டும் –
கொம்பு போல் சீதை பொருட்டு, இலங்கை நகர்-வஞ்சிக் கொடி அபிரூபையாய் –
அயோ நிஜை-கர்ப்ப சம்பந்தம் இல்லாமல் –
அம்பு எரி உய்த்தவர் தாள் இணை மேல் அணி-சராக்னி -பிரவேசிப்பித்தவர் –
முன்பு நுழைய மாட்டார் -அக்னிக்கு துணையாக சரம் -திருவடிகளின் மேல் –
அணிவித்த -ப்ரஹ்மாதிகள் பவான் நாராயணோ தேவ ஸ்துதித்த
வம்பு அவிழ் தண் அம் துழாய் மலர்க்கே இவள்-அபி நவ பரிமள விகாசியாய் -அழகிய குளிர்ந்த
நம்புமால்; நான் இதற்கு என் செய்கேன் நங்கைமீர்?-விரும்பி -பூர்ணையாய் உள்ளீர்களே
இவளும் உங்கள் போலே ஆக என்ன செய்வேன் –
பெண்களே! என் மகளாகிய இவள், பூங்கொம்பு போன்ற சீதாபிராட்டி காரணமாக இலங்கை நகரிலே நெருப்பைச் சொரிகின்ற
அம்பைச் செலுத்திய ஸ்ரீராமபிரானுடைய இரண்டு திருவடிகளின் மேலே அணிந்த வாசனையோடு மலர்கின்ற குளிர்ந்த அழகிய
திருத்துழாய் மலரையே விரும்பாநின்றாள்; இதற்கு நான் என்ன செய்வேன்?
‘நங்கைமீர்! இவள் அம்பு எரி உய்த்தவர் தாள் இணை மேல் அணி துழாய் மலர்க்கே நம்பும்;
என் செய்கேன்?’ எனக்கூட்டுக.
அம்பு எரி -ஆக்நேய அஸ்திரமுமாம். நம்புதல் – விரும்புதல்;
‘நம்பும் மேவும் நசையா கும்மே,’ என்பது தொல்காப்பியம் (சொல்).
‘ஸ்ரீஜனகராஜன் திருமகளுடைய விரோதியைப் போக்கின சக்கரவர்த்தி திருமகன் திருவடிகளில்
சாத்தின திருத்துழாயை ஆசைப்படா நின்றாள்’ என்கிறாள்.
கொம்பு போல் –
‘வஞ்சிக்கொம்பு போலே’ என்னுதல்;
‘அநந்யா – வேறுபட்டவள் ஆகேன்’ என்கிறபடியே, ஒரு பொருளில் ஒரு பகுதியான உறுப்பு’ என்னுதல்.
ராகவேண் அஹம் –பாஸ்கரேண பிரபை -ஏக வஸ்துவில் ஏக தேசம் –
சீதை பொருட்டு –
சீதைக்காக.
இலங்கை நகர் –
சூரிய சந்திரர்கள் சஞ்சரிப்பதற்குப் பயப்படும் ஊர்.
அம்பு எரி உய்த்தவர் –
அம்பாகிய நெருப்பைப் புகச் செய்தவர்.
சக்கரவர்த்தி திருமகன் இதனைக் கை தொட்டு சிக்ஷித்துக் குணவான் ஆக்கிப் பின்பே அன்றோ போகவிட்டது?
பலவான் ஆக்கி என்றபடி -நாணுக்கும் குணவான் -நாணை ஏற்றி அனுப்பினார் என்றபடி –
ஆகையாலே, கேவலாக்நி புகுதற்குக் கூசும் ஊரிலே தன் வாய் வலியாலே புக்கதாயிற்று.-
சரத்தின் பலம் -வாய் வலி –
இப்படி, தான், முதுகிட்டாரையுங்கூட, குணவான்கள் ஆக்கும்படி ஏக்கற்றவருடைய திருவடிகளில் சார்த்தப்பட்ட.
ஏ- வரும் வெஞ்சிலை -ஏ – க்கற்றவர் -சக்தி கொடுத்து போக்க வைத்தவர்
ஏ -அம்பு -கை தொடுகை -பிடிக்கையும் அடிக்கையும்
சிஷை -அர்ஜவம் நியமிக்கி -நாணில் ஏத்தி
முதுகிடவை முதுகிலே அம்புறா தூணி வைப்பதும் -சொன்ன வார்த்தை கேட்கால் முது காட்டி ஓடினார் –
வம்பு அவிழ் தண் அம்துழாய் மலர்க்கே –
‘வாசனையையுடைத்தான மலர்’ என்னுதல்;
‘எப்பொழுதும் புதியதாகவே இருக்கும் மலர்’ என்னுதல்.
அவன் சக்கரவர்த்தி திருமகனாய் இருக்கச் செய்தேயும். பிரகிருதி சம்பந்தம் இல்லாத திவ்விய திருமேனியை
உடையவனாய் இருப்பது போன்று, அவன் ஏதேனும் ஒன்றாலே வளையம் வைத்தாலும்
இவர்களுக்குத் தோற்றுவது திருத்துழாயாயே ஆதலின்,
‘இலங்கை நகர் அம்பு எரி உய்த்தவர் தாள்இணைமேல் அணி துழாய் மலர்’ என்கிறாள்.
நம்புமால் –
அதனை எப்போதும் விரும்பாநின்றாள்.
நான் இதற்கு என் செய்கேன் –
ஸ்ரீகிருஷ்ணனைப் போலே ஊர்ப் பொது அன்றிக்கே, ஏகதார விரதனானவன்
திருவடிகளில் திருத்துழாயை நான் எங்கே தேடும்படி?
நங்கைமீர் –
‘நீங்கள் எல்லாவற்றாலும் நிறைந்தவர்களாய் இருக்க, இவள் இப்படிப் படுகிறபடி கண்டீர்கள் அன்றோ?
இதற்கு ஒரு பரிகாரம் சொல்ல வல்லீர்களோ?’ என்கிறாள்.
————————————————————————————————
நங்கைமீர்! நீரும் ஓர் பெண் பெற்று நல்கினீர்;
எங்ஙனே சொல்லுகேன் யான் பெற்ற ஏழையை?
சங்கு என்னும்; சக்கரம் என்னும்; துழாய் என்னும்;
இங்ஙனே சொல்லும் இராப்பகல் என் செய்கேன்?–4-2-9-
நிதான பாசுரம் -சங்கு சக்கரம் துழாய் இவற்றையே சொல்லிக் கொண்டு –
சங்கு -சொன்னாள்–தாய் அனுவாதம் –தேறாமல்-இவற்றையே மாறி மாறி சொல்லிக் கொண்டு –
ஒவ் ஒன்றுக்கும் 48 நாள் இடை வெளி
-ஒரு மண்டலம் நான் பார்த்துக் கொண்டே இருந்தேன் இவளை -11 பாட்டு வரும் வரை
முளைக்கதிர் -கிளி சொல்லிச் சொல்லி -அளப்பரிய ஆரமுதை –அந்தணர் தம் சிந்தையானை –கண் முழிக்க -வளர்த்ததனால்
-பயன் பெற்றேன் -வருக என்று கை கூப்பி -கிட்டே தான் இருந்தும் ஒரு அடி பிரியாமல் இருக்க வேண்டும்
பெருமாள் சீதைக்கு நடுவில் உள்ள கடல் போல இந்த பிரிவு இருந்ததே -எங்ஙனே சொல்லுகேன் யான் பெற்ற ஏழையை?
இட்ட கால் இட்ட கைகளாக இருந்தாள்-இராப்பகல் –
இன்றியமையாத அடையாளம் -6-1- திரு வண் வண்டூர் – சொல்லி விடுவாள் –
நங்கைமீர்! நீரும் ஓர் பெண் பெற்று நல்கினீர்;-ஒரு பெண்ணை பற்றி ஸ்நேஹித்து வளர்த்தீர்களே
கிடைக்காத இடம் சபலம் ஆசை படும் -என்ன சொல்கிறாள்
எங்ஙனே சொல்லுகேன் யான் பெற்ற ஏழையை?-சொல்ல முடியாதே -சொல்லு நிர்பந்திக்க
சங்கு என்னும்; சக்கரம் என்னும்; துழாய் என்னும்;இங்ஙனே சொல்லும்-இப்படியே –
இரவில் கண் முழித்து பார்த்தாயா
இராப்பகல் என் செய்கேன்-அஹோராத்ரி விபாகம் இல்லாமல்
இப்படி தனித்தனியே சொல்லிக் கொண்டு -கண் துயில் அறியாள்
என் செய்கேன் -ஸ்வரூபம் பார்த்து இவள் வாய் மூட பண்ணவோ –
தத் தஸ்ய சத்ருசம் பவேத்
ரஷகன் ஸ்வரூபம் பார்த்தாலும் இவள் ஸ்வரூபம் பார்த்தால்
தாத் கால அசாதாரண சிஹ்னம் நன்றாக சொல்லும் படி பலத்தை உண்டாக்கவோ -பக்தி உண்டு பலம் இல்லை
அவை தன்னை இப்போது சந்நிஹிதம் ஆக்கவோ
பிரேம தசைக்கு அல்லாத ஆழ்வார்கள் தசையும் ஒவ்வாது -நீரும் பெண் பெற்றீர் -தாத்பர்யம்
பெண்மணிகாள்! நீங்களும் ஒவ்வொரு பெண்ணைப் பெற்று விரும்பி வளர்க்கிறீர்கள்;
யான் பெற்ற பெண்ணினைக் குறித்து
எந்த வகையில் பேசுவேன்? ‘சங்கு’ என்கிறாள்; ‘சக்கரம்’ என்கிறாள்; ‘துழாய்’ என்கிறாள்;
இரவும் பகலும் இங்ஙனமே சொல்லுகின்றாள்; இதற்கு என் செய்வேன்?
‘இராப்பகல் இங்ஙனே சொல்லும்; என் செய்கேன்?’ என மாறுக.
‘என்னும், சொல்லும்’ என்பன, செய்யும் என் முற்றுகள்.
‘அவனுடைய ஆயுதம் முதலானவைகளைக் காண வேண்டும்’ என்று சொல்லப் புக்கு,
முடியச் சொல்ல மாட்டாதே நோவு படா நின்றாள்,’ என்கிறாள்.
நங்கைமீர் –
உங்கள் நிறைவு, இவள் படுகிற பாடு நான் சொல்லக் கேட்டு அறிய வேண்டி இருக்கிறது அன்றோ உங்களுக்கு?
நீரும் ஓர் பெண் பெற்று நல்கினீர் –
நீங்களும் ஒரு பெண் பிள்ளையைப் பெற்று வளர்க்கின்றீர்கள் அன்றோ?
நல்குகை – வளர்க்கை-ஸ்நேஹிக்கை-ஸ்நேஹத்துடன் வளர்க்கை-
இவள் பட்டது பட்டார் உளரோ?
‘எங்கள் பெண் பிள்ளைகளைக் காட்டிலும் உன் பெண் பிள்ளைக்கு வாசி என்?’ என்னில்,
எங்கனே சொல்லுகேன்-
இவள் படி பேச்சுக்கு நிலம் ஆகில் அன்றோ நான் சொல்லுவது? என்றது,,
படி எடுத்து உரைக்கும் படி அல்லன் பெருமாள் -திருவடி
‘மனத்தாலுங் கூட நினைக்க முடியாமல் வேத வாக்குகள் அந்த ஆனந்த குணத்தினின்றும் திரும்புகின்றன,’ என்கிற
பகவானுடைய குணங்களை நிலமாகப் பேசிலும், நற்குணக் கடலிலே
ஆடுகின்றவர்களுடைய (ஆழ்வார்களுடைய) படி பேச்சுக்கு நிலம் அன்றே?’ என்றபடி.
‘பகவானுடைய குணங்களில் ஈடுபட்டவனாய் எல்லாராலும் எப்பொழுதும் பார்க்கத் தகுந்தவனாய் இருப்பான்’ என்கிறபடியே,
கண்டிருக்கும் அத்தனை போக்கிப் பேச முடியாது.
‘என் ஒருவனிடத்திலேயே பத்தியுடைய ஞான சிரேஷ்டன் ஆகிறான்;
அத்தகைய ஞானிக்கு நான் மிகவும் பிரியமுள்ளவன்;
அவனும் எனக்குப் பிரியமுள்ளவன்,’ என்பதே அன்றோ அவன் வார்த்தையும்?
தேசத்தாலும் காலத்தாலும் கைகழிந்த பொருள்களை அந்த அந்தத் தேசத்தோடும் காலத்தோடும்
கூடினதாகப் பெறவேண்டும் என்கிற
இவள் படி என்னாலே பேசலாய் இருந்ததோ?
தர்ஷ்டவ்யா மட்டும் -சர்வ தேஹம் தேகம் கொண்ட எல்லாரும் இந்த பக்தனைப் பார்க்க வேண்டும்
-வா ஸூ தேவ சர்வம் – தேஹம் எடுத்து வந்த –
அனைவருக்கும் -அவனுக்கும் கூட பார்க்க வேண்டும் படியே இவர்கள் படி
-த்ரஷ்டவ்ய ஏவ -ந வாச்யஸ்- வாசாம் மகோசரம் –
அத்யர்த்தம் பிரியம் -ஞானிகளுக்கு பிரியமானவன் -அவர்கள் காட்டும் பிரியத்தை
என்னால் காட்ட முடியவில்லையே –ஏழாம் அத்யாய ஸ்லோகம்
ஆயினும், எங்களைக்காட்டிலும் நீ அண்மையில் இருப்பவள் அன்றோ?
தெரிந்த மட்டு அதனைச் சொல்லிக் காணாய்’ என்ன, கைமேலே சொல்லுகிறாள் :–கேட்ட உடனே சொன்னாள்
சங்கு என்னும் –
மலையை எடுத்தாற்போலே பெரு வருத்தத்தோடே சங்கு என்னும். அது பொறுத்தவாறே,
சக்கரம் என்னும் –
மீளவும் மாட்டுகின்றிலள், சொல்லவும் மாட்டுகின்றிலள். இரண்டற்கும் நடுவே கிடக்கிற மாலையை நினைத்து,
துழாய் என்னும் –
கண் மலங்க மலங்க விளித்து நடுவில் உள்ள திருத் துழாய் மாலை கண்டு துழாய் என்பாள்
சூர்ய சந்திரர் போலே சக்கர சங்கு பார்த்து இராப்பகல் –
‘சங்கு சக்கரங்கள்’ என்று கை கூப்பும் -என்றும்,
‘கூரார் ஆழி வெண் சங்கு’ என்றும் சொல்ல மாட்டுகின்றிலள்.
ஆபத்து மிக்கவாறே ஒருத்தி, ‘சங்க சக்ர கதா பாணே – சங்கையும் சக்கரத்தையும் கதையையும்
கைகளில் தரித்திருப்பவனே!’ என்றாள் அன்றோ?
மற்றவரால் ஆபத்து வந்தால் இப்படி முழுக்க கூப்பிடலாம் -இவனாலே வந்ததால் இவளால்
முழுக்க சொல்ல முடியாமல் ஒவ் ஒன்றைச் சொல்லி சோர்ந்து போகிறாள்
விரோதி நிவர்த்தகங்கள் -சங்கு சக்கரம் சொல்வது பிராப்தம் -அங்கு திரௌபதிக்கு ஆபத்து
ஒரு கா புருஷனால் இங்கு இவளுக்கு புருஷோத்தமனால்
இங்ஙனே சொல்லும் -சொல்லத் தொடங்குவது, சொல்லித் தலைக் கட்டமாட்டாது ஒழிவதாய்ப் படாநின்றாள்.
‘இப்படிச் சொல்லுவது எத்தனை போது?’ என்னில்,
இராப் பகல் –
எல்லாக்காலமும்.
என்செய்கேன் –
இவளைத் தொடங்கினதைச் சொல்லித் தலைக்கட்டப் பண்ணவோ?
பெண்மையைப் பார்த்து மீளும்படி பண்ணவோ?
என் செய்கோ?
——————————————————————
என் செய்கேன்? என்னுடைப் பேதை,என் கோமளம்,
என் சொல்லும் என் வசமும் அல்லள்; நங்கைமீர்!
மின்செய் பூண் மார்பினன் கண்ணன் கழல் துழாய்
பொன்செய் பூண் மென்முலைக்கு என்று மெலியுமே.–4-2-10-
எனக்கு விதேயை இல்லாமல் ஸ்ரீ கிருஷ்ணன் உடைய ஆபரண சோபையில் அகப்பட்டு
என் செய்கேன்? என்னுடைப் பேதை,என் கோமளம்,-ஹிதம் கேட்கும் பருவம் இல்லாத பேதை –
ஹிதம் சொல்லப் பொறுக்க மாட்டாத மார்த்வம் -உடையவள்
என் சொல்லும் என் வசமும் அல்லள்; நங்கைமீர்!-என் சொல்லிலும் வசத்திலும் நினைவிலும்
இவள் இல்லையே -இவள் அவஸ்தை இருந்த படி
மின்செய் பூண் மார்பினன் கண்ணன் கழல் துழாய்-திரு ஆபரணம் தரித்த -ஸ்ரீ கௌஸ்துபாதி –
ஒளி விடும் திரு மார்பினன்
அவன் திருவடி திருத் துழாய்
பொன்செய் பூண் மென்முலைக்கு என்று மெலியுமே.-
விரஹத்தால் -பசலை -வைவரண்யமே ஆபரணமாக கொண்ட மார்பு
விஸ்லேஷ அசஹமாய் துவண்ட -கிரிசை சரீரை யாகா நின்றாள்
நங்கைமீர்! என்னுடைய பேதை, என்னுடைய கோமளம் என் சொல்லிலும் வருகின்றிலள்; என் வசமும் வருகின்றிலள்;
என் செய்வேன்? பிரகாசத்தைச் செய்கின்ற ஆபரணங்கள் பொருந்திய மார்பை யுடையவனான கண்ணபிரானுடைய திருவடிகளில்
அணிந்த திருத்துழாய், பொன்னாற் செய்த ஆபரணங்களையுடைய மெல்லிய முலைகளுக்கு அலங்காரமாக வேண்டும் என்று மெலியா நின்றாள்.
‘கோமளம் கண்ணன் கழல் துழாய் மென்முலைக்கு என்று மெலியும்;
என் சொல்லும் என் வசமும் அல்லள்; என்செய்கேன்?’ எனக்கூட்டுக.
‘உன்மகள் நீ இட்ட வழக்கு அன்றோ? அவளுக்கு நலத்தைச் சொல்லி மீட்கத் தட்டு என் உனக்கு?’ என்றவர்களைக் குறித்து,
‘நான் சொல்லிற்றுக் கேளாதே அவனையே ஆசைப்பட்டு மிகவும் மயங்கா நின்றாள்,’ என்கிறாள்.
என்செய்கேன் –
இவள் நிலை இருந்தபடியால் இவளைக் கிடையாததாய் இருந்தது; நான் எங்ஙனே வாழக்கடவேன்?
என்னுடைப் பேதை –
நான் சொல்லும் நல்வார்த்தைகளைக் கேட்கும் பருவம் அல்லள்.
என் கோமளம் –
‘நான் சொன்ன நல் வார்த்தையைக் கேட்டிலள்’ என்று கைவிட ஒண்ணாதபடி வியசனத்தைப் பொறுக்க முடியாத மென்மையையுடையவள்.
என் சொல்லும் அல்லள் என் வசமும் அல்லள் –
நான் சொன்ன நல்வார்த்தைகளைக் கேட்பதும் செய்யாள்; நான் நலம் சொல்லலாம்படி இருப்பதும் செய்யாள்.
நங்கைமீர் –
இதில் நீங்கள் அறியாதன இல்லை அன்றே?
மின் செய் பூண் மார்பினன் கண்ணன் கழல் துழாய் –
மின்னுகின்ற ஸ்ரீ கௌஸ்துபத்தை மார்விலேயுடைய ஸ்ரீ கிருஷ்ணன் திருவடிகளில் திருத்துழாய்.
பொன் செய் பூண் மென்முலைக்கு –
பொன்னாலே செய்த ஆபரணங்களையுடைத்தாய் விரக தாபத்தைப் பொறுக்கும் ஆற்றல் இல்லாத முலைக்கு.
அன்றிக்கே,
பொன்செய்திருக்கை – பசலை பூத்திருக்கை’ என்னுதல்; ‘மென்முலை பொன் பயந்திருந்த’ என்னக் கடவது அன்றோ?
‘அந்தப் பசலையினையே ஆபரணமாகவுடைய முலை’ என்றபடி. ‘நிந்திக்கப் படாதவள்’ என்னுமாறு போலே.
அவன் புருஷத் தன்மைக்கு இலக்கணமான கௌஸ்துபம் போலே ஆயிற்று, பெண் தன்மைக்கும் பசலை;
ஆதலின், ‘மின் செய் பூண் மார்பினன் – பொன் செய்பூண் முலை’ என்று விசேடித்துக் கூறுகின்றாள்.
காதலனைப் பிரிந்ததால் உளதாய விரகத்தில் இப்படிப் பொன் பயக்கையே அன்றோ பெண் தன்மைக்கு இலக்கணம்?
தனம் படைத்தாரில் இவளைப் போன்று தனம் படைத்தார் உளரோ?
‘தன் காதலனைப் பிரியமாட்டாமையாலே பொன் இட்டுக்கொள்ளுகிறது’ என்பாள், ‘மென்முலை’ என்கிறாள்.
மெலியும் –
‘மென்முலைக்கு வேண்டும்’ என்று சொல்லப்புக்கு மெலிவோடே தலைக்கட்டும்.
——————————————————————
மெலியும் நோய் தீர்க்கும் நம் கண்ணன் கழல்கள் மேல்
மலிபுகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
ஒலிபுகழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர்
மலிபுகழ் வானவர்க்கு ஆவர் நற்கோவையே.–4-2-11-
பலன் சொல்லி -சாது கோட்டியுள் ஆவாரே
மெலியும் நோய் தீர்க்கும் நம் கண்ணன் கழல்கள் மேல்-விரஹ விதையை போக்கும் -நம் கண்ணன்
சேவை சாதித்த பின் தாயார் அனைவரையும் மறந்து
மலி புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்-அபி நிவிஷ்டர் என்னும் படி -காலாந்தர விஷயத்திலும் ஆசைப்படும் புகழ் உண்டே
ஸ்லாக்கியமான -திருக் குருகூர்
ஒலி புகழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர்-பாவ யுக்தமாக அப்யசிக்க வல்லவர்கள்
மலி புகழ் வானவர்க்கு ஆவர் நற் கோவையே. -நித்ய ஸூரிகளுக்கு -கோவையாகி -இருப்பார் –
கைங்கர்யம் இல்லாமல் இருக்க பிரசங்கமே இல்லை அதிசங்கை பண்ணி துன்பப்படுவார்களே
விடாமல் அவிச்சின்னமாய் அபி வ்ருத்தமான -நித்ய சூரிகள்
பிரிவால் மெலிகின்ற விரக நோயினைத் தீர்க்கின்ற நம் கண்ணபிரானுடைய திருவடிகளின் மேல் மிக்க புகழையுடைய
வளவிய திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீசடகோபரால் அருளிச் செய்யப்பட்ட ஒலி புகழ் ஆயிரம் திருப்பாசுரங்களில்
இந்தப் பத்துத் திருப்பாசுரங்களையும் வல்லவர்கள் மிக்க புகழையுடைய நித்திய சூரிகளோடு ஒரு கோவை ஆவார்கள்.
ஒலி புகழ் – பேசப்படும் புகழ். ‘வல்லவர் நற்கோவை ஆவர்,’ என்க. கோவை ஆதல் – சேர்ந்தவர் ஆதல்.
‘இத்திருவாய்மொழியைக் கற்க வல்லவர் நித்தியசூரிகளோடு ஒத்தவர் ஆவர்,’ என்கிறார்.
மெலியும் நோய் தீர்க்கும் –
‘மெலியும்’ என்று தாயார் கை வாங்கினாள்;
‘பெற்றார் பெற்றொழிந்தார்’ என்கிற பாசுரப்படியே
‘பெற்றார் பெற்றொழிந்தார் பின்னும் நின்று அடியேனுக்கு உற்றானாய் வளர்த்து என்னுயிராகி நின்றானை
முற்றா மாமதி கோள் விடுத்தானை எம்மானை எத்தால் யான் மறக்கேன்? இதுசொல் என் ஏழைநெஞ்சே!’–பெரிய திருமொழி. 8. 9 : 7.
உடையவன் – சுவாமி.
பின்னையும் உடையவன் கைவிடானே? ஆதலின், ‘மெலியும் நோய் தீர்க்கும்’ என்கிறது.
நம் கண்ணன் –
இப்படிப்பட்ட ஆபத்துகளிலே வந்து முகங்காட்டுவான் என்னும் பிரமாண பிரசித்தியைப்பற்ற, ‘நம் கண்ணன்’ என்கிறது.
‘-சாஷாத் மன்மத மன்மத -கண்ணபிரான் அந்தக் கோபஸ்திரீகளுக்கு மத்தியில் தோன்றினான்,’ என்பது ஸ்ரீபாகவதம்.
கண்ணன் கழல்கள்மேல் –
இப்படிச் சரீரம் மெலிவதற்கு அடியான விரக வியசனத்தைப் போக்கும் அடியார்கட்குச் சுலபனான ஸ்ரீகிருஷ்ணன் திருவடிகள் விஷயமாக.
மலி புகழ் –
‘தேச காலங்களால் கை கழிந்த அவன் படிகளையும் இப்போதே பெற வேண்டும்’ என்று விடாய்க்கும்படி
பகவத் விஷயத்திலே விடாய்க்கையால் வந்த புகழே அன்றோ? ஆதலின், ‘மலிபுகழ்’ என்கிறது.
வண் குருகூர்ச் சடகோபன் சொல் –
இப்படிப்பட்ட புகழையுடைய ஆழ்வார் அருளிச்செய்த.
ஒலி புகழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர் –
இப்படி இவரை விடாய்ப்பித்தவன் அவ்விடாய் போன இடம் தெரியாதபடி நீக்க வல்லன் என்கிற கல்யாணகுணங்களை
விளக்கமாகச் சொல்லுகிற இந்தப் பத்தையும் கற்க வல்லவர்கள்.
மலிபுகழ் வானவர்க்கு நற்கோவை ஆவர் –
வானவரோடு நல்ல சேர்த்தி ஆவர். ‘மலி புகழ் வானவர்’ என்றதனால், இவ்வாழ்வாரோடு ஒப்பர்கள் ஆயிற்று அவர்களும்.
பகவானுடைய பிரிவால் விடாய்க்கைக்கு இடம் இல்லாத சமுசாரத்திலிருந்து இவர் விடாய்க்க வல்லவர் ஆனாற் போலே ஆயிற்று,
பகவானோடு நித்திய அனுபவம் பண்ணா நிற்கச் செய்தே விடாய்க்க வல்லராம்படியும்.-
அசம்பாவித விடாய்-இருவருக்கும் சாம்யம் –
——————————————————————————————–
திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –
தம் புருஷார்த்தம் –
இதரார்த்த ருசே ஹே நிவர்த்யா -வேறே ஐஸ்வர்யம் கைவல்யங்களை நிவர்த்தி பூர்வகமாக
முனி முமோஹா-
ஸ்திரீ பாவனம் சமதிகம்ய -அடைந்து –
சாந்த்ராஸ் ஸ்ப்ருஹா –திருஷ்ணை -காதல் வளர்ந்து
சமய தேச விதூர ஹந்த -ஈப்சுஹு -காலாந்தர தேசாந்தர –
ததா அனவாப்தி த்விதீயே -ஆசைப்பட்ட படி கிடைக்காமல் பெண் பாவனை
ஆர்யத்வம் -கல்யாண குணம் -நித்ய ஸூ ரிகள் போல அனுபவம் –
பரதன் ராமனைக் கூப்பிட்டான் ஆர்யா என்று -கோவிந்தராஜன் வியாக்யானம் –
ஆர்யா -யார் உடைய குணம் வெகு தூரம் அப்பால் நிற்கும் –நம்மையும் அவனைப் போல் ஆக்கும் —
ஞானம் பலம் சக்தி தேஜஸ் நம்மை அவன் இடம் கூட்டிச் செல்பவன்
—————————————————————-
திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –
அழகாக பிரித்து -பத்து வித திருத் துழாய் -சிறப்பை கிரஹித்து -பத்து விபவம் எடுத்து அருளிச் செய்த ஸ்லோகம் –
சைத்யாத் சௌகந்த்ய பூம்னா
சங்கதச்ய -யோகாத் –திருத் துழாய் விசேஷணங்கள்
விபவ
வடதள சயநாத் அர்ஹனீய-அபதாநாத்
கிருஷ்ண மூர்த்தி சடாரி
உயர் திண்–நோற்ற நாலும்-வரிசையாக வருவதால் –
வேதாதிகளில் — பௌருஷம்-மானவ -கீதா- வைஷ்ணவம் -போலே -அருளிச் செயலில் இது –
தர்ம சாஸ்திரம் மகா பாரதம் புராணங்கள் -சொல்லாமல் –
மரபுகள் உண்டே
சைத்யாத் -குளிர்த்தி
சௌகந்த பூம்னா -பரிமள பாஹூள்யம்
ருசி -ருசிரதச்வ –
காந்தி -செம் பொன் துழாய்
போஷநாத் -அடர்ந்து பைம் பொன் துழாய்
ஆபி ரூப்யா-அழகான
சந்தர்ப்பாத் -தொடர்ச்சியாக
புஷ்ப சங்காத் -கதம்ப மாலை போலே
மஹித துளசி காமாலயா-சிலாக்யமான
சங்க தஸ்ய சக்கர தீச்ய யோகாத் -சங்கம் சக்ரம் நடுவில் உள்ள திருத் துழாய் -இதற்கு
வட தள சயநாத் –ஆதி சொல்லி ஒன்பதையும்-
ராச க்ரீடன –
த்ரிவிக்ரம க்ரமண-மூன்றாவது பாசுரம் -மூன்று திருவடிகள் நினைவு கொள்ள -ஓங்கி உலகளந்த போலே
பரமபத விகரன
வ்ருஷ கண மர்த்தன
மேதினி சமுத்தரண- ஸ்ரீ வராஹ
அம்ருத மதன
லங்கா தகன -அபதானங்கள்
சம்பன்ன -அனேக போக்கிய –
————————————–
திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 32-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்–
பாலரைப் போல் சீழ்கிப் பரனளவில் வேட்கையால்
காலத்தால் தேசத்தால் கை கழிந்த -சால
அரிதான போகத்தில் ஆசை யுற்று நைந்தான்
குருகூரில் வந்துதித்த கோ —-32-
கோ -பிரபன்னராட்-
போகம் -கைங்கர்ய அனுபவத்தில்
————————————–
அவதாரிகை –
இதில்
தேச கால விப்ரக்ருஷ்டமான அவன் படிகளை
தம் தாம் தேச கால விசிஷ்டமாம் படி
அனுபவிக்க வேண்டும் என்று ஆதரித்த
பாசுரத்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
மூன்று களையும் பறித்து சங்காயுமும் வாரின பயிர்
சத சாகமாகப் பணைக்குமா போலே –
வீடுமின் முற்றவும்
சொன்னால் விரோதம் –
ஒரு நாயகம் –
என்ற மூன்று திருவாய் மொழிகளிலே
சம்சாரிகளைக் குறித்து உபதேசித்த இடத்தில்
அவ் உபதேசம் அவர்கள் திருந்துகைக்கு உடல் அன்றிக்கே
தமக்கு
ரசாந்தரங்களாலே அபி பூதனாய்க் கிடந்த
முடியானேயில் விடாய்க்கு உத்தம்பகமாய்
பக்தி சத சாகமாகப் பணைக்க
அத்தாலே தேச கால விபக்ரஷ்டமான அவன் படிகளை
இப்போதே கண்டு அனுபவிக்க வேண்டும் என்னும் அபேஷை பிறந்து
அபேஷித்த படியே அனுபவிக்கப் பெறாமையாலே
தாம் நோவு பட்டு சொல்லுகிற படியை
அந்யாப தேசத்தாலே அருளிச் செய்த
பாலனாய் ஏழு உலகின் அர்த்தத்தை அருளிச் செய்கிறார்
பாலரைப் போலே -இத்யாதியாலே -என்கை –
———————————————————————
வியாக்யானம்–
பாலரைப் போல் சீழ்கிப் –
பிராப்த அப்ராப்த விவேகம்
பண்ண அறியாத பாலர்
தேசத்தாலே விப்ரக்ருஷ்டமான அம்புலி யம்மானையும்
காலத்தாலே கை கழிந்து போன பலாதி வஸ்துக்களையும்
அப்போதே கொடு வந்து தர வேணும் -என்று
பாலச்ய ருதி தம்பலம் -என்னும்படி ரோதனத்தை முன்னிட்டு
அபேஷிக்குமா போலே
இவரும் தேச கால விப்ரக்ருஷ்டமான
பர அவஸ்தய தத் அனுபவங்களை
அப்போதே பெற வேணும் என்று
அழுவன் தொழுவன் -என்னும்படி
பாலர் செய்யுமத்தைச் செய்து
அபீ இதாநீம் ச காலச்யாத் வநாத்பிரத்யா கதம்புன -என்று இறே
ஆசை யுடையார் பவிஷ்ய காலத்தை சம காலமாக அபேஷித்து இருப்பது
அப்படியே இறே இவர் பூத காலத்தில் படிகளை அபேஷிக்கிறார் –
பரனளவில் வேட்கையால் –
சர்வ ஸ்மாத் பரன் இடத்தில்
பர பக்தியாலே –
பரன் -காலத்தால் தேசத்தால் கை கழிந்த –
பாதங்கள் மேல் அணி பைம் பொற்றுழாய் என்றே யோதுமால் எய்தினாள் -என்றத்தை நினைக்கிறது
தேச விபக்ருஷ்டமான பர வ்யூஹங்களும்
கால விபக்ருஷ்டமான விபவமும்
பர விஷய பக்தி ஏகதேசமாய்
ஆலிலை அன்னவசம் செய்யும் அண்ணலார் தாளினை மேல்
தண்ணம் துழாய் என்றே மாலுமால் -என்று துடங்கி
கண்ணன் கழல் துழாய் பொன் செய் பூண் மென் முலைக்கு என்று மெலியும் -என்று
விபவ பிராவண்யம் இறே விஞ்சி அருளிச் செய்தது –
அவை ஆவன
குரவை பிணைந்தவர் நல்லடி -என்றும்
தேவர்கள் மா முனிவர் இறைஞ்ச நின்ற சேவடி -என்றும்
குடக் கூத்தனார் தாளிணை -என்றும்
அகலிடம் கீண்டவர் பாதங்கள் -என்றும்
திருமாதினைத் தடம் கொள் தார் மார்பினில் வைத்தவர் தாள் -என்றும்
இலங்கை நகரம் பரி யுய்தவர் தாளிணை -என்றும்
கண்ணன் கழல் -என்றும்
இப்படி விபவத்தை அடி விடாமல் இருக்கிற படி -என்கை
ந்யக்ரோத சாயியையும் -ஆலிலை / பீயூஷ ஹாரியையும்–பீயூஷ -அமுதில் வரும் -பெண்ணமுதம்
நாயக்ரோத சாயீ பகவான் பீயூஷா ஹரணச்ததா -என்று
விபவங்களோடே இறே சஹ படித்தது-
இங்கேயும்
மடந்தையை வண் கமலத் திரு மாதினை தடம் கொள் தார் மார்பினில் வைத்தவர் -என்றும்
விண்ணவர் அமுது உண்ண அமுதினில் வரும் பெண் அமுதை
ஸ்வீகரித்த படி சொல்லிற்று –
சால அரிதான போகத்தில் ஆசை யுற்று நைந்தான் –
இப்படி
தேச காலங்களால் கை கழிந்து இருக்கிறது
தத் கால வர்திகளுக்கும் தத்ரஸ்தராய் ஆனவர்களுக்குமே இறே அனுபாவ்யமாய் இருப்பது
என்று அறியாமல் –
அபி நிவேச அதிசயம் மாறுபாடுருவும்படி யாவகாடமாய்-அவகாடம் -ஆழ்ந்து அனுபவம் –
அத்தை அப்போதே பெறாமையாலே
சிதிலர் ஆனால் –
இதுக்கடி
குருகூரில் வந்துதித்த கோ –
ஆகையாலே
திரு அயோத்தியில் பிறப்பு ராம பக்தியை ஜனிப்பிக்குமா போலே
திரு நகரியில் பிறப்பும் பராபி நிவேசத்தைப் பிறப்பிக்கும் இறே
கோ
ராஜா
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு எல்லாம் ராஜா என்றபடி –
இவ்விடம் அராஜாகமாய் ஆகாமைக்கு ஆயிற்று
ஆழ்வார் அங்கு நின்றும் போந்து ஆவிர்பவித்தது –
————————————————
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply