பகவத் விஷயம் காலஷேபம் -87- திருவாய்மொழி – -4-1–6….4-1–11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

வாழ்ந்தார்கள் வாழ்ந்தது மாமழை மொக்குளின் மாய்ந்து மாய்ந்து
ஆழ்ந்தார் என்று அல்லால், அன்று முதல் இன்று அறுதியா
வாழ்ந்தார்கள் வாழ்ந்தே நிற்பர் என்பது இல்லை ; நிற்குறில்
ஆழ்ந்தார் கடற் பள்ளி அண்ணல் அடியவர் ஆமினோ.–4-1-6-

நிலை நின்ற ஜீவனம் இல்லை -ஸ்திர ஜீவனம் -ஷீரார்ணவ சாயிக்கு சேஷி ஆகுமின் –
வாழ்ந்தார்கள் வாழ்ந்தது மாமழை மொக்குளின் மாய்ந்து மாய்ந்து-நீர் குமிழி போலே அஸ்தரம் -மா மழை-அதபதித்தார்
ஆழ்ந்தார் என்று அல்லால், அன்று முதல் இன்று அறுதியா-இறுதியா -பாட பேதம் –
வாழ்ந்தார்கள் வாழ்ந்தே நிற்பர் என்பது இல்லை ; நிற்குறில்-ஏக ரூபமாக ஜீவித்தே இருப்பார் -எனபது இல்லை
-அப்படி நிற்க ஆசைப் பட்டால் -அஸ்திர அநித்திய மண்டலத்தில் கிட்டாதே
ஆழ்ந்தார் கடற் பள்ளி அண்ணல் அடியவர் ஆமினோ-பகவத் ஏக தாஸ்யர் ஆகுமின் -சர்வ சுவாமிக்கு அடியார் –
ஆர்தல் இடம் உடைத்த பாற் கடல்
சேஷத்வம் ஒன்றே நிலை நிற்கும் –பணிந்தான் வாழ்ந்தான் -தொழுதான் வாழ்ந்தான் –

‘வாழ்ந்திருந்தவர்கள் வாழ்ந்தது பெரிய மழை நீரிலே தோன்றுகிற குமிழி போன்று அழிந்து நரகத்திலே விழுந்து அழுந்தினார்கள் என்பதே;
அது அல்லாமல், அன்று முதல் இன்று வரையிலும் வாழ்ந்தவர்கள் ஒரே தன்மையாக வாழ்ந்தே இருந்தார்கள் என்பது இல்லை;
ஆதலால், நிலை பெற்ற பேற்றினைப் பெறவேண்டும் என்று இருந்தீர்களாகில், ஆழ்ந்து நிறைந்திருக்கின்ற கடலைப் படுக்கையாகவுடைய
இறைவனுக்கு அடியவர் ஆகுங்கோள்,’ என்கிறார்.
‘வாழ்ந்தது மொக்குளின் மாய்ந்துமாய்ந்து ஆழ்ந்தார் என்பதே; அது அல்லால், வாழ்ந்தே நிற்பர் என்பது அன்று முதல் இன்று அறுதியா இல்லை ;
ஆதலால், நிற்குறில், அண்ணல் அடியவர் ஆமின்,’ என்க. ‘நிற்குறில்’ என்பது, நிற்க உறில் என்பதன் விகாரம்.

‘மருத்துவர்கள் பிழைத்தாரை எண்ணுமாறு போன்று இறந்தவர்களை எண்ணுகிறது என்? வாழ்ந்தவர்களும் சிலர் இலரோ?’ என்ன,
‘அது இருந்தபடி கேட்கலாகாதோ பின்னை?’ என்கிறார்.

வாழ்ந்தார்கள் வாழ்ந்தது
– வாழ்ந்தாராய் இருக்கிறவர்கள் வாழ்ந்தது எல்லாம். அவர்கள் வாழ்ந்தார்களாக நினைத்திருக்கிறார்கள்; இவர் ‘கேடு’ என்று இருக்கிறார்.
அவர்கள் வாழ்வாக நினைத்திருக்கிற இதனை அன்றோ,-இன்னம் கெடுப்பாயோ?’ என்று கேடாகவே நினைத்திருக்கிறது இவர்?
மா மழை மொக்குளின் –
பெருமழைக் குமிழி போலே. ‘தண்ணீரில் தோன்றுகிற குமிழிக்குச் சமம்’ என்றார் பிறரும்.
‘பின் விழுந்த துளியோடே நசிக்கும்,’ என்பார், ‘மாமழை’ என்கிறார்.
மாய்ந்து மாய்ந்து –
அழிந்து அழிந்து.
ஆழ்ந்தார் என்று அல்லால் –
உயிர் வாழ்கின்ற நாள்களில் செய்த பாபத்தாலே கீழான கதியில் வீழ்ந்து தறைபடுமது ஒழிய.
அன்று முதல் இன்று அறுதியா வாழ்ந்தார்கள் வாழ்ந்தே நிற்பர் என்பது இல்லை – படைப்புக்காலம் தொடங்கி இற்றை அளவும் அவர்கள்
வாழ்ந்தவர்கள் ஒருபடிப்பட வாழ்ந்தே போந்தார்கள் என்னும் இந்தத் தன்மைதானும் முதலில் இல்லை.

நிற்க உறில் –
நிலை நின்ற பேற்றினைப் பெறவேண்டி இருந்தீர்களேயாகில்
ஆழ்ந்து ஆர் கடல் பள்ளி அண்ணல் –
ஆழ்ந்து பரந்த கடலைப் படுக்கையாகவுடைய சர்வேசுவரன். திருமேனியின் சௌகுமார்யத்துக்குத் தகுதியாக உறுத்தாதபடியான
ஆழத்தையுடைத்தாய், திவ்ய அவயவங்களைப் பரப்பிக்கொண்டு கண்வளர்கைக்குத் தகுதியான பரப்பையுடைத்தாய் இருக்கின்றமையைத் தெரிவிப்பார்,
‘ஆழ்ந்து ஆர்’ என்கிறார். ‘திருப்பாற்கடலிலே வந்து கண்வளர்ந்தருளுகிறது கர்மத்திற்குக் கட்டுப்பட்டவனாய் அல்லவே?
நம்மால் பற்றப்படுமவன் ஆகைக்காக அன்றோ? ஆன பின்னர், அவன் நினைவோடே சேரச் சொரூபத்திற்குத்
தகுதியான பேற்றினைப் பற்றுங்கோள்,’ என்பார், ‘கடற்பள்ளி அண்ணல்’ என்கிறார். சர்வ சமாஸ்ரயணீயனாக ஆவதற்கே -இங்கே கிடக்கிறான் –
அடியவர் ஆமினோ –
அவன் தலைவனாயிற்ற பின்பு நீங்கள் உங்கள் அடிமையை இசையப் பாருங்கோள்.
அன்றிக்கே,
தாச பூதர் -இயற்கையிலே
அடிமை அல்லாதது ஒரு பொருளை இன்று அடிமை ஆக்கிக்கொடுத்ததாக நினைத்திருக்கும்
பகவானுடைய அபிப்பிராயத்தாலே சொல்லுகிறார் ஆகவுமாம்.

————————————————————————————

ஆமின் சுவை அவை ஆறோடு அடிசில் உண்டு ஆர்ந்த பின்
தூமென் மொழி மடவார் இரக்கப் பின்னும் துற்றுவர்,
‘ஈமின் எமக்குஒரு துற்று’என்று இடறுவர் ; ஆதலின்,
கோமின் துழாய்முடி ஆதிஅம் சோதி குணங்களே.–4-1-7-

தேக போஷண ஹேதுவான அன்ன பாநாதிகளும் -போகமும் அநித்தியம் –சர்வ காரணமான சர்வ ஸ்மாத் பரனான
குணங்களை அனுசந்தியுங்கோள்
ஆமின் சுவை அவை ஆறோடு அடிசில் உண்டு ஆர்ந்த பின்-பிரசித்த அரு சுவை -வி லஷண அன்னம்
-உண்டு -பூரணரான பின்பு கழுத்தே கட்டளையாக உண்ட பின்பு
தூமென் மொழி மடவார் இரக்கப் பின்னும் துற்றுவர்,-தூய மேன்மை இனிமையான -பரிவால் பேசும் சுத்தம்
பாஷனம் -அடக்கம் மடப்பம் உள்ள ஸ்திரீகள் அபேஷிக்க -மறுக்க முடியாமல் மீண்டும் உண்ண
‘ஈமின் எமக்குஒரு துற்று’என்று இடறுவர் ; ஆதலின்,-சம்பத்து நசித்த பின்பு -நீங்கள் ஒருபிடி சோறு இட அபேஷிக்க –
வாசல் தோறும் தட்டி திரிவர்
கோமின் துழாய்முடி ஆதிஅம் சோதி குணங்களே.-நிரதிசய போக்யன்-இவனே கோமின் -பற்றுங்கோள்
சர்வான் காமன் அஸ் நுதே என்று சேர்ந்து -குணங்களை சேர்ந்து அனுபவித்தால் -அப்பொழுதைக்கு அப்பொழுது ஆராவமுதம்
சேர்ந்து அனுபவிக்க கோமின்
எமக்கு -பிச்சைக்கு வந்தாலும் பூஜ்ய வாச்யம்-அவ்வ்வச்தையிலும் ஸூ பஹூமானம்

‘பொருந்திய இனிய அந்த அறுசுவையோடு கூடின உணவை உண்டு வயிறு நிறைந்த பின், தூய்மை பொருந்திய மெல்லிய
சொற்களைப் பேசுகின்ற பெண்கள் இரந்து கூறப் பின்னரும் உண்பார்கள் ; அவ்வாறு உண்டவர்கள், அந்நிலை கெட்டு,
‘எமக்கு ஒரு பிடி அன்னம் கொடுமின்,’ என்று தட்டித் திரிவார்கள் ; ஆதலின், திருத்துழாய் மாலையைத் தரித்த திருமுடியையுடைய
ஆதி அம் சோதியான இறைவனுடைய கல்யாண குணங்களை அனுபவிக்கப் பாருங்கோள்,’ என்கிறார்.
‘ஆம் இன் அவை ஆறு சுவையோடு அடிசில் உண்டு’ எனப் பிரித்துக்கூட்டுக. தூ – பரிசுத்தம். துற்றல் – உண்டல். துற்றுவர் – பெயர்.
‘துற்றுவர் இடறுவர்’ என முடிக்க. இடறுவர் – முற்று. கோமின் – தொகுத்துச் சொல்லுமின். ‘குணங்கள் கோமின்’ என மாறுக.

‘ஐஸ்வர்யத்துக்கு நீர் சொல்லுகிற குற்றம் உண்டே ஆகிலும், சோறு முதலானவைகட்கு, தரித்திருப்பதற்குக் காரணமுமாய்
இனியவையுமாய் இருக்கிற தன்மை உண்டே?’ என்ன, ‘அவையும் நிலை நில்லா,’ என்கிறார்.

ஆம் இன் சுவை
– ஆன இனிய சுவை ; நன்றான நல்ல சுவை.
அவை ஆறோடு – ‘அறுசுவை’ என்று பிரசித்தமானவற்றோடே கூட.
அடிசில் உண்டு –முன்பு இரந்து உண்டு திரிந்தவன், நாழி அரிசி பெற்று வாழப்புக்கவாறே ஒரு வெள்ளாட்டியையும் சம்பாதித்து
‘முதலியார்’ என்னவும் பண்ணி, ‘அடிசில் உண்ணாநின்றார்’ என்னவும் பண்ணும்.
ஆர்ந்த பின் –
கண்டது அடைய இட்டு வயிற்றினை நிரப்பி, உதிரம் குடித்து வாய்விட்ட அட்டை போலே பெயரவும் திரியவும் மாட்டாதே
கிடந்து புரளாநிற்குமே? அவ்வளவிலே இவனிடத்தில் அன்புடையார்களாய் இருப்பார் பெண்டுகள் சிலர் வந்து,
‘உடம்பு பதர் போலே இருந்தது ; இது கொண்டு எங்ஙனம் காக்கப்படுமவர்களான எங்களை நோக்கப் பார்க்கிறது?’ என்பர்கள் ;
அதனைக் கேளா ‘நாம் உண்டிலேமோ!’ என்று இவன் தானும் மயங்கும். முன்பு இவர்கள் விரும்பிக் கூறினால் மறுக்குமே?
ஒரு திரளையைத் திரட்டி ‘இது என் பிடி’ என்பர்கள்; பின்பு உண்ணாது ஒழியமாட்டானே?
அப்பேச்சின் இனிமையிலே துவக்குண்டு பின்னரும் உண்ணா நிற்கும்.
எமக்கு ஒரு துற்று ஈமின் என்று –
இவர்களை இக்கட்டளையிலே வேறே ஒருவன் கைக்கொள்ளுமே ; அவனையும் முன்புத்தையவனைப் போலே இரந்து உண்பிப்பார்களே இவர்கள்;
அங்கே, தன் வயிறு வாழாமல் சென்று, ‘நீங்கள் எல்லாருமாக எனக்கு ஒரு பிடி தரவேண்டும்,’ என்னும்.
பண்டு நல்லது கண்டால் தன் வாயில் இடாதே இவர்களுக்குக் கொடுத்துப் போந்தவன், தன் செல்லாமையாலே இப்பொழுது
‘எனக்கு’ என்கிறான் அன்றோ?
இடறுவர் –
அப் போதையவனுக்குப் பிரியமாக அவர்கள் இவன் முகம் பாரார்களே? பின்னையும் தட்டித் திரிவர்கள்.
கொசித் தாரா -கொசித் பிந்து -கொசித் பாத்திர நிஷேதனம் -கொசித் காண கணா சப்த -கொசித் தத் அபி துர்லபம்
ஆதலின் – ஆன பின்பு
‘வாழ்வின் நிலையாமை இதுவான பின்பு’ என்றபடி.
ஆதி அம் சோதி குணங்கள் கோமின் –
எல்லா ஐஸ்வர்யத்திற்கும் அறிகுறியான திருத்துழாய் மாலையைத் திருமுடியிலே உடையனாய், உலக காரணனாய்,
எல்லை இல்லாத ஒளி உருவமான விக்கிரஹத்தை யுடையவனாய் இருந்துள்ளவனுடைய குணங்களைச் சேர்த்து அனுபவியுங்கோள்
‘-ஆதி-சொரூபத்தைப் பற்றியதாயும்–அம் சோதி- விக்கிரஹத்தைப் பற்றியதாயும் உள்ள கல்யாண குணங்கள்’ என்பார், ‘ஆதி அம் சோதி குணங்கள்’ என்கிறார்.
‘நான் பரமாத்துமாவாகிய இனிய பொருளை அனுபவிக்கிறவன்,’ என்றும்,
‘அவன் எல்லாக் கல்யாண குணங்களையும் பரமாத்துமாவோடு அனுபவிக்கிறான்,’ என்றும்,
-கோமின் -சாயுஜ்யம் பெற்று சோஸ் நுதே சர்வான் காமான் -என்கிறபடியே
‘ஓவாத் தொழிற் சார்ங்கன் தொல்சீரை நன்னெஞ்சே, ஓவாத ஊணாக உண்’ என்றும் சொல்லப்படுகின்றவாறே’ அனுபவியுங்கோள்’ என்றவாறு.

துணைநாள் பெருங்கிளையும் தொல்குலமும் சுற்றத் திணைநாளும் இன்புடைத்தா மேலும் – கணைநாணில்
ஓவாத் தொழிற்சார்ங்கன் தொல்சீரை நல்நெஞ்சே! ஓவாத ஊணாக உண்.’– பெரிய திருவந்தாதி, 78.

————————————————————————————-

குணங்கொள் நிறை புகழ் மன்னர் கொடைக்கடன் பூண்டிருந்து
இணங்கி உலகு உடன் ஆக்கிலும், ஆங்கு அவனை இல்லார்
மணங்கொண்ட போகத்து மன்னியும் மீள்வர்கள்; மீள்வு இல்லை;
பணங்கொள் அரவணையான் திரு நாமம் படிமினோ.–4-1-8-

பகவத் பிரசாதம் இல்லாத போது-லப்தமான ராஜ்யமும் நில்லாதே
குணங்கொள் நிறை புகழ் மன்னர் கொடைக்கடன் பூண்டிருந்துசீலாதி குணங்கள் -பூரணமான குணங்கள்
அபிஷிக்த ஷத்ரிய புத்ரர்கள் -பிராப்தர் -ஔதார்யம் கடமையாக கொண்டவர்கள்
இணங்கி உலகு உடன் ஆக்கிலும், ஆங்கு அவனை இல்லார்
பிரதிஷ்டிதையாக இருந்து -ரஷித்து போக்கிலும்
பகவத் ஆஸ்ரயம் இல்லாமல் இருந்தால் -ஐஸ்வர்யப்ரதன் அவனே அன்றோ
மணங்கொண்ட போகத்து மன்னியும் மீள்வர்கள்; மீள்வு இல்லை;-நன்றாக அனுபவித்து நிலை நின்றார்களே ஆகிலும் நிவ்ருத்த ஐஸ்வர்யம் ஆவார்கால்
துர்வாசர் சாபத்தால் இந்த்ரன் இழந்தானே –
பணங்கொள் அரவணையான் திரு நாமம் படிமினோ.-பர்யங்க வித்யை-அனுபவிக்க -புணரா வருத்தி இல்லாத புருஷார்த்தம்
-ஸ்ரீ வைகுண்ட -பகவத் அநுபவ ப்ரீதி கார்ய கைங்கர்யம் -ஆஸ்ரிதரை அணைக்க விரிந்த பணங்கள் -திருநாமங்கள் சொல்லி பெறுவீர்

‘நல்ல குணங்கள் பொருந்திய நிறைந்த புகழையுடைய மன்னர்கள் தர்மம் செய்தலாகிய கடமையை மேற்கொண்டு உலகத்தாரோடு
பொருந்தி இருந்து உலகத்தை எல்லாம் தமக்கே உரியதாகச் செய்து அரசாண்டாலும், அந்த அரசச் செல்வமானது இறைவன்
திருவருளால் வந்தது என்று நினையாதவர்கள், செவ்வையையுடைத்தான இன்பத்திலே நிலைபெற்று இருப்பவர்களாயினும்,
அந்த இன்பத்தினின்றும் நீங்குவார்கள்; ஆதலால், படத்தைக்கொண்ட பாம்பினைப் படுக்கையாகவுடைய இறைவனது
திருநாமத்தைப் படியுங்கோள் ; அங்ஙனம் கூறினால், பின்னர் மீண்டு வருதல் இல்லை ;
அந்தமில் இன்பத்து அழிவில் வீட்டினை அடையலாம்,’ என்கிறார்.
‘மன்னர் கொடைக்கடன் பூண்டு இணங்கி இருந்து உலகு ஆக்கிலும்’ எனக் கூட்டுக. ‘திருநாமம் படிமின் ; மீள்வில்லை,’ என்க.
படித்தல் – கற்றல். அன்றிக்கே, ‘திருநாமம் படிமின் – கல்யாண குணங்களாகிய கடலில் மூழ்குங்கோள்’ என்னலுமாம்.
‘நற்குணக்கடல் ஆடுதல் நன்றரோ,’ என்றார் கம்பநாட்டாழ்வார்.

‘இராச்சிய இலக்குமி நிலை நில்லாது ஒழிவது, நாட்டாரோடு பொருந்தி வாழாது ஒழியில் அன்றோ?
அவர்களோடு பொருந்தி வாழவே அது நிலை நிற்குமே?’ என்ன, ‘பொருந்தி வாழ்ந்தாலும், எம் பெருமானை அடையாவிடில் கிடையாது;
அவனை அடைந்து பெற்றாலும், அதன் தன்மையாலும் நிலை நில்லாது;
ஆன பின்பு, அவன்தன்னையே பிரயோஜனமாக அடையுங்கோள்,’ என்கிறார்.

குணம் கொள் –
குணங்களைக் கொண்டிருப்பாராய்; குணங்களால் மிக்கு இருப்பாராய். என்றது,
‘நிறைந்த குணப் பிரசித்தியையுடையவர்கள்’ என்றபடி.
நிறைபுகழ் –
நிறைந்த புகழையுடையராய். இப்படி இருந்தார்களே ஆகிலும், அடையத்தக்கவர் அல்லராகில் உபேக்ஷிப்பர்கள்;
ஆதலின்,
‘மன்னர்’ என்கிறார். என்றது,
‘முடி சூடிய அரச வமிசத்தில் பிறந்த அரசர்கள்’ என்றபடி.
அடையத்தக்கவராகிலும் உலோபிகளாய் இருப்பர்களே ஆகில் கிட்டுவார் இலரே? ஆதலின்,
‘கொடைக்கடன் பூண்டு இருந்து’ என்கிறார். என்றது,
‘கொடுக்கையே இயற்கையாக உள்ளவர்கள்’ என்றபடி. தர்மம் செய்தலையே இயற்கையாய் உள்ளவர்களாகிலும், தங்களது
மேன்மையை நினைத்து இருப்பவர்களாயின், அவர்களைக் கிட்டுவோர் இலர் அன்றே? ஆதலின், ‘இணங்கி’ என்கிறார். என்றது,
பிரதாபர் -பரந்தப -தபிக்கும் படி தோள் வலிமை கொண்டவர் -‘எளியனாய் எல்லாரோடும் பொருந்தியிருப்பவர்களாய்’ என்றபடி.
உலகு உடன் ஆக்கிலும் –
உலகத்தைத் தங்களோடே சேர்த்துக்கொண்டார்களே ஆகிலும். என்றது,
‘ஸ்ரீராமபிரான் இராச்சியத்தை எல்லாரையும் அநுசரித்துக்கொண்டு ஆண்டார்,’ என்கிறபடியே,-ராம பூதம் ஜகத் பூதம் -ராமாத்வைதம் ஆனதே
அப்படி அனைவரையும் -சேர்த்துக்கொண்டு அரசு ஆண்டார்களேயாகிலும்’ என்றபடி.
ஆங்கு அவனை இல்லார் –
அந்த இராச்சியத்தில் அவன் திருவருள் இல்லையாகில், அந்த இராச்சிய இலக்குமிதான் கிடையாது.
மணம் கொண்ட போகத்து மன்னியும் –
பகவானுடைய திருவருளால் அந்த இராச்சியத்தை அடைந்தாலும். செவ்வையை உடைத்தான செல்வம் ஆதலின்,
‘மணம் கொண்ட போகம்’ என்கிறார்.
மீள்வர்கள் –
அந்த ஐஸ்வரியம் கிட்டினாலும் அதனுடைய இயற்கையாலே மீளுவர்கள்.-சாலில் எடுத்த நீர் போலே –

மீள்வு இல்லை –
‘பின்னர் மீண்டு வருகிறான் இல்லை’ என்கிற பேற்றைப் பெற அமையும். ‘எத்தால்?’ என்னில்,
பணம் கொள் அரவு அணையான் திருநாமம் படிமின் –
தன்னுடைய பரிசத்தாலே விரிந்த படங்களையுடைய திருவனந்தாழ்வானை நிரூபகமாகவுடையவனுடைய திருநாமங்களிலே மூழ்குங்கோள்
‘திருநாமத்திலே மூழ்கினவர்களைத் திருவனந்தாழ்வானைப் போன்று விடான்’ என்பார்.–‘அரவணையான் திருநாமம் படிமின்’ என்கிறார்.
அன்றிக்கே,
‘இவ்விதமாக அறிந்தவர்கள் பாதங்களால் ஏறுகிறார்கள்,’ என்கிறபடியே, துகைத்து ஏறலாம்படியான
படுக்கையையுடையவன்-கோட்டுக் கால் கட்டில் மேல் ஏறி -என்பார், ‘அரவணையான் திருநாமம் படிமின்’ என்று அருளிச்செய்கிறார் என்னுதல்.

இனி, ‘பலத்தில் நோக்கம் இல்லாதவனாய்த் தான தர்மங்களைச்செய்து எம்பெருமானையே பலமாகப் பற்றாமல்,
பலத்தில் நோக்கம் உள்ளவனாய்த் தான தர்மங்களைச் செய்து சுவர்க்கம் முதலான உலகங்களை விரும்பினால் அவை நிலை நில்லா,’
என்று இத்திருப்பாசுரத்திற்குப் பொருள் கூறலுமாம்

யோக ஷேமம் வஹாம் அஹம் -கிடைக்காதது கிட்டும் -கிடைத்தது நிற்கும் அவனைப் பற்றினால் என்றபடி –

————————————————————————-

படி மன்னும் பல்கலன் பற்றோடு அறுத்து,ஐம் புலன்வென்று,
செடி மன்னு காயம் செற்றார்களும், ஆங்கு அவனை இல்லார்
குடி மன்னும் இன் சுவர்க்கம் எய்தியும் மீள்வர்கள்; மீள்வு இல்லை;
கொடி மன்னு புள்ளுடை அண்ணல் கழல்கள் குறுகுமினோ. –4-1-9-

ஐஸ்வர்யம் த்யாஜ்யம் 9 பாசுரங்கள் -கைவல்யம் 10 பாசுரம்
ஸ்வர்க்காதி சுகமும் நிலை இல்லையே -என்கிறார்
மயர்வற மதி நலம் அருளி அனைத்தையும் காட்டி அருளினான் -கொடு நரகம் காட்டேல் என்றேன்
நிலை நின்ற புருஷார்த்தத்தை கொடி கட்டிக் கொடுக்கும் –
படி மன்னும் பல்கலன் பற்றோடு அறுத்து,ஐம் புலன்வென்று,-ஷேத்ரத்தையும் -ஆபரணங்கள் -நடமாடும் தேர் போலே -சங்கத்துடன் அறுத்து –
சரீரத்திலே மண்ணும் பல் காலன் என்றுமாம்
படி -தலை முறை தலை முறையாக வந்த ஆபரணங்கள் என்றுமாம் –
இந்த்ரியங்களையும் ஸூ வசமமாம் படி
செடி மன்னு காயம் செற்றார்களும், ஆங்கு அவனை இல்லார்-தூறு மண்டிய சரீரம் -போகும் படி உபவாசாம் பண்ணி
தபஸ் -பலமாக -கல்பம் -பிரம்மா பகல் வரைக்கும் மன்னுமே 1000 சதுர யுகம் நிற்குமே
பெற்றார்களே ஆகிலும் -இத்தை பெறவும் அவனை ஆசரிக்க வேண்டுமே -அவனே பல ப்ரதன்
குடி மன்னும் இன் சுவர்க்கம் எய்தியும் மீள்வர்கள்; மீள்வு இல்லை;-நிவ்ருத்தி இல்லா பலம் பெற –
ஒரே வரியில் சுலபமாக அவனை பெறலாம்
நித்ய சந்நிதி பண்ணும் சர்வேஸ்வரன் -திருவடியை நெருங்க
கொடி மன்னு புள்ளுடை அண்ணல் கழல்கள் குறுகுமினோ.

பூமியையும் பொருந்திய பல ஆபரணங்களையும் அவற்றிலுள்ள வாசனையோடு நீக்கி, ஐந்து இந்திரியங்களையும் வென்று,
தூறு மண்டும்படி இச்சரீரத்தை ஒறுத்துத் தவம் செய்தவர்களும், அவ்விஷயத்தில் அவனுடைய திருவருள் இல்லாதவர்கள் குடிகள் பொருந்தி
இருக்கின்ற இனிமையையுடைய சுவர்க்கலோகத்தை அடையினும் மீண்டு வருவார்கள்; ஆதலால், நிலைபெற்ற கொடியிலே
கருடப்பறவையையுடைய சர்வேசுவரனுடைய திருவடிகளைச் சேருங்கோள்;
சேர்ந்தால், மீண்டு வருதல் இல்லாத தன்மையையுடைய உலகத்தைப் பெறலாம்.
அறுத்து வென்று செற்றார்களும் அவனை இல்லார் எய்தியும் மீள்வர்கள்,’ என்க. ‘அண்ணல் கழல்கள் குறுகுமின்; மீள்வு இல்லை,’ எனக் கூட்டுக

மேல் எட்டுப் பாசுரங்களால் ‘இவ்வுலக இன்பம் நிலை அற்றது,’ என்றார்;
இப்பாசுரத்தில். ‘உடலை வருத்தும் தன்மையையுடைய தவத்தைச் செய்து அந்தத் தவத்தின் பலம் சுவர்க்கமாகக் கொண்டு
சுவர்க்கத்தை அடையும்போது பகவானுடைய திருவருள் வேண்டும்; அவனுடைய திருவருளால் சுவர்க்கத்தை அடைந்தாலும்,
அதனுடைய இயற்கையாலே நிலை நில்லாது,’ என்கிறார்.

இவன் தவத்தைச் செய்தற்குத் தொடங்கும் போது விடுமவை சொல்லப்படுகின்றன மேல் :
படி – பூமி. மன்னு பல்கலன் –
முறையாக வந்த பல வகைப்பட்ட ஆபரணங்களின் கூட்டம்.
அன்றிக்கே,
‘படி மன்னு பல்கலன்’ என்பதற்குத் ‘தன் குலத்திலுள்ளார் பரம்பரையாகப் பூண்டு போருகிற பல வகைப்பட்ட ஆபரணங்கள்’ என்னுதல்.
பற்றோடு அறுத்து –
அவற்றை நீக்கி விட்டு வாழ்தல் அன்றிக்கே அவற்றில் வாசனையும் போகை.
ஐம்புலன் வென்று –
அவற்றில் ருசிக்குக் காரணமான ஐம்பொறிகளும் விஷயங்களிற்போகாதபடி வென்று.
‘உன்னால் முன்பு இந்திரியங்கள் வெல்லப்பட்டு மூன்று உலகங்களும் வெல்லப்பட்டன,’ என்றாள் மண்டோதரி
இந்த்ரியாணி புரா ஜித்வா -முன்நாள் இன்று அவற்றால் தோற்றாய் என்றாள் மண்டோதரி –
செடி மன்னு காயம் செற்றார்களும் –
தவத்திற்காகப் பல காலம் ஒரோ ஆசனங்களிலே இருந்தால் சலியாமையாலே உடம்பிலே தூறு மண்டும்படி சரீரத்தை ஒறுத்துத் தவத்தைச் செய்தவர்களும்;
‘நெறியார் குழற்கற்றை முன்னின்று பின் தாழ்ந்து அறியாது இளங்கிரி என்று எண்ணிப்-பிறியாது, பூங்கொடிக்கள் வைகும்’ என்னக் கடவது அன்றோ?
சரீரத்திலே தூறு மண்டும்படி தவம் செய்தலுக்கு மேற்கோள், ‘நெறியார்’என்று தொடங்கும் பாசுரம் – இரண்டாந்திருவந். 53.

அங்கு அவனை இல்லார் –
அவன் திருவருள் இல்லையாகில் தானே சித்தியாது.
அவன் திருவருளால் பெற்றதாகில், குடி மன்னும் இன்சுவர்க்கம் எய்தியும் – ‘இதற்கும் ஆள் பற்றுவதே!’ என்பர் பட்டர்.
குடிகளினது நெருக்கத்தையுடைத்தாய்; நரகத்தைக் காட்டிலும் வேறுபட்டதான இனிமையையுடைத்தான சுவர்க்கத்தை அடைந்தாலும்.
மீள்வர்கள் – மீளுவார்கள்; புண்ணியம் குறைந்தவாறே ‘த்வம்ச’ என்று தள்ளுவார்கள் அன்றோ?

மீள்வு இல்லை –
அங்ஙனம் ஒரு மீட்சி இல்லை. என்றது, ‘அப்படி அவனுடைய புண்ணியத்திற்குக் குறைவு இல்லையே’ என்றபடி.
கிருஷ்ணன் தர்மம் சநாதனம் -உன் தன்னை –புண்ணியம் யாம் உடையோம்
வாயினால் நமோ நாரணா வென்று மத்தகத்திடைக் கைகளைக் கூப்பி போயினால் பின்னை இத்திசைக்கு என்றும்
‘புணை கொடுக்கிலும் போக ஒட்டாரே’ என்பர் பட்டர் பிரான்.- பெரியாழ்வார் திருமொழி, 4. 5 : 2.

கொடி மன்னு புள்
-கொடியாய் மன்னாநின்றுள்ள பறவை. என்றது, தன்னை அடைந்த அடியாரையும் தனக்கு வேறுபடுத்தும்
விசேஷணமாகக் கொள்ளுமவன் என்பதனைத் தெரிவித்தபடி. ‘அல்லாதாரைக்காட்டிலும் அவனை வேறுபடுத்தும்
விசேஷணமாகக் கொள்ள வேண்டுவான் என்?’ என்னில், அவனுடைய மூக்கு வலியும் அவன் பக்கல் பக்ஷபாதமும் அதற்கு அடி.
புள்ளுடை அண்ணல் –
‘திருமகள் கேள்வன்’ என்னுமாறு போலே ஈசுவரனுக்கு நிரூபகமேயன்றோ அவன்? அண்ணல் – தலைவன்.
கழல்கள் குறுகுமின் –
உங்கள் பிறவி கழல அவன் கழல்களைக் குறுகுங்கோள்.
‘திருநாரணன் தாள் காலம் பெறச் சிந்தித்து உய்ம்மினோ’ என்றார் முதற்பாசுரத்தில்.
இங்கே, ‘புள்ளுடை அண்ணல் கழல்கள் குறுகுமினோ’என்கிறார்காணும், அவளோபாதி இவனும் அங்குத்தைக்கு நிரூபக தர்மம் என்று.

——————————————————————————

குறுக மிக உணர்வத்தொடு நோக்கி எல்லாம் விட்ட
இறுகல் இறப்பெனும் ஞானிக்கும் அப்பயன் இல்லையேல்,
சிறுக நினைவது ஓர் பாசம் உண்டாம்; பின்னும் வீடு இல்லை,
மறுகல் இல் ஈசனைப் பற்றி விடாவிடில், வீடு அஃதே.–4-1-10-

4 நாயிகா பாவம் -நான்காம் பத்து / 4-2–4-4-தாய் பாசுரம் / 4-6- தோழி /4-8 மகள்
கதி த்ரய மூலம் -மூன்றுக்கும் இவனே உபாயம் -இதற்காகவாவது நம்மிடம் வந்தால் அழகு குணம் கண்டு ருசி பிறந்து நம்மையே கேட்டுப் போவானே –
ஸ்திரமான கைவல்யமும் -இதுவும் முக்தி -பரம புருஷார்த்தம் பற்ற இதுவும் அல்பம் -தானே -பசை அற்று இருக்குமே
நியந்தாவான சர்வேஸ்வரனை அடைவதே
குறுக மிக உணர்வத்தொடு நோக்கி -பிரத்யக் விஷயத்தில் ஆசன்னமாய் –பரந்து விரிய பார்க்காமல் –
தனக்கு தோன்றும் ஜீவாத்மா -பிரத்யக் -பராக் -அசேதனம் –
ஞான ஸ்வரூபன் -ஞானத்தாலே நிரூபணம் ஆத்மா
மிக நோக்கி -தர்சன சமா நாதிகாரம் போலே -ப்ரத்யஷ சமா நாதி கார சாஷாத் காரம் –
எல்லாம் விட்ட-ஐஸ்வர்யா ஆசை விட்டு -சரீரம் விட்டு
ஈஸ்வரனையும் கூட விட்டானே இவன் –
இறுகல் இறப்பெனும் -கைவல்ய மோஷம் -அடைய விரும்பும்
ஞானிக்கும் அப்பயன் இல்லையேல்,-இவனும் அவனையே பற்ற வேண்டும்
குறுகல் -நுண்ணிய -பகவான் விபு பெறுகல் –
ஆத்ம மாதரத்தில் பர்யவசித்த மோஷம்
ஸ்வயம் பிரயோஜனமான அவனைப் பற்றா விட்டால் -அப்பயன் -என்று சொல்லி அவ்வுபாயம் இல்லையேல் சொல்லாமல்
கடைசி முயற்சி உபதேசம் கைவல்ய நிஷ்டருக்கு –
மூன்று எழுத்து உடைய பேரால் போலே -ஆசை உடன் எந்த மூன்று கேட்பானே
அப்பயன் -ஸ்வயம் பிரயோஜனமாக இருப்பவனை -என்றவாறு –
உபாயமாக பற்றாவிடில் -கருமுகைப் பூவை சும்மாட்டு ஆக்கி
சிறுக நினைவது ஓர் பாசம் உண்டாம்;-அல்ப புருஷார்த்தம் -நீ விட்ட ஐஸ்வர்ய பாசம் -சங்கம் உண்டாகுமே
பின்னும் வீடு இல்லை,-மேலும் நீ நினைக்கும் கைவல்யமும் கிட்டாதே
வியதிரேகத்தில் சொல்லி -அவனை பகவல் லாபார்த்தி யாக்க முயலுகிறார்
மறுகல் இல் ஈசனைப் பற்றி விடாவிடில், வீடு அஃதே-ஆனபின்பு -ஸ்வாப பேதாதி –உண்டே -ஸ்வரூபத்தால் ஆத்மாவுக்கு மாறுதல் இல்லையே
அழுக்கு பட்ட மாணிக்கம் -அப்படி இல்லாத மறுகல் இல் ஈசனை
ஸ்வா பாவிக-நியமன சாமர்த்தியம் -ஈசிதவ்யன் -அணு -ஆத்மா –
பிராப்யத்வேனவும் பிராபகத்வேனும் பற்றி
விடா விடில் -பிராப்யாந்தரங்களை வாங்கி -எழுந்து போகாமலும் – -விடை கொள்ளாமல் -அதுவே பரம புருஷார்த்தம் –
இவன் தூ மா மணி ஆத்மா துவளில் மா மணி

‘(மனமானது) தன்னைச் சார (தன் வசப்பட்ட அம்மனத்தினை) ஞான சொரூபமாக உள்ள ஆத்துமாவோடு சேர்த்து நன்றாகப் பார்த்து
எல்லாப்பற்றுகளையும் அடியோடே விட்ட, குறுகிய ஆத்தும அனுபவத்தையே மோக்ஷமாக நினைத்திருக்கும் ஞானிகளுக்கும் பகவானை
உபாயமாகப் பற்றுதல் இல்லையாகில் சிறிய பேறுகளை நினைப்பதற்குக் காரணமான ஒரு பற்று உண்டாகும்;
அதற்குமேல், அம்மோக்ஷமும் இல்லை; ஆன பின் ஒரு விதக் குற்றமும் இல்லாத இறைவனை அடைந்து அகலாதொழிவானேயானால்,
அதுவே பரமபுருஷார்த்தமான மோக்ஷமாகும். ஆதலால், மேற்பாசுரத்தில் கூறிய ‘அண்ணல் கழல்கள் குறுகுமினோ’ என்ற அதுவே மோக்ஷமாகும் என்றபடி.
‘குறுக நோக்கி விட்ட ஞானி’ என்க. உணர்வு – ஞானம்; ஆத்துமா. இறுகல் – இறுகப்பிடித்தல். இறப்பு – மோக்ஷம். பாசம் – பற்று.
மறுகல் – குற்றம். ‘பற்றி விடாவிடில் பின்னும் வீடு இல்லை’ எனக் கூட்டுக. இங்கே, ‘வீடு’ என்றது, கைவல்யத்தை. ‘அஃதே வீடு’ என மாறுக.

‘பூமியில் ஐஸ்வர்யம், சுவர்க்க அனுபவம் இவை நிலை நில்லா,’ என்றார் மேல்;
‘இவைபோல் அன்றிக்கே, ஆத்தும அனுபவம் நிலை நின்ற புருஷார்த்தமே அன்றோ?’ என்னில்,’
‘மேலே கூறியவற்றை நோக்கும்போது இதற்கு ஒரு நன்மை உண்டேயாகிலும், பகவானுடைய ஆனந்தத்தைப் பார்க்கும்போது
இது மிகச் சிறியதாய் இருக்கையாலே இதுவும் தண்ணிது; ஆன பின்பு, அவனைப் பற்றப் பாருங்கோள்,’ என்கிறார்.

குறுக உணர்வத்தொடு மிக நோக்கி –
பல காலம் புறம்பே உள்ள விஷயங்களில் பண்ணிப் போந்த வாசனை அடைய ஆத்துமாவிலேயாம்படி
‘விசத தமமாகத் தியானம் செய்து’ என்றது, ‘புறம்பேயுள்ள விஷயங்களிலே தூரப் போய்ப் பற்றுகின்ற மனத்தினை
ஆத்துமாவின் பக்கலிலே சேர்த்து’ என்றபடி. இது கண்ணை இட்டுக் கண்ணைப் பார்த்தாற்போலே இருப்பது ஒன்று ஆதலின், ‘குறுக’ என்கிறார்.
இதனால், முதல் தன்னிலே ஆத்துமாவின் பக்கலிலே சேர்த்திய மனத்தினை யுடையவனுக்கே ஆத்தும அனுபவத்தில் அதிகாரம் உள்ளது
என்பதனைத் தெரிவித்தபடி.
எல்லாம் விட்ட –
திருமகள் கேள்வன் பெரிய திருவடி திருத்தோளிலே தோளும் தோள் மாலையுமாய் வந்து நின்றாலும்,
சாணகச்சாற்றைப் போன்று-சாணகச்சாறு – பஞ்ச கவ்யம்.– சுத்தி மாத்திரத்தையே பற்றிக்கொண்டு,
இனிமையிலே நெஞ்சு செல்லாதபடி அதனையும் விடுவது.

இறுகல் இறப்பு என்னும் ஞானிக்கும் –
சங்கோசத்தை மோக்ஷம் என்று சொல்லுகிற ஆத்தும ஞானிக்கும்.இவ்வருகு உள்ளனவற்றை நோக்கும்போது ‘விரிந்தது, மேலானது’ என்று
இருந்தானே ஆகிலும், அவ்வருகும் கண்டவர் ஆகையாலே மோக்ஷ உலகத்தை. ‘ஒண்டொடியாள் திருமகளும் நீயுமே நிலா நிற்பக்,
கண்ட சதிர் கண்டொழிந்தேன் அடைந்தேன் உன் திருவடியே,’ என்பது இவருடைய திருவாக்கு.-(திருவாய்மொழி,4.9:10)
‘இறுகல்’ என்று இருக்கிறார் இவர். இறப்பு – மோக்ஷம்.
அப்பயன் இல்லையேல் –
அந்தப் பகவானுடைய உபாசனம் இல்லையாகில் ஆத்துமாவைத் தியானம் செய்ய ஒண்ணாது, உபாசனமானது
இன்ப ரூபமாயிருக்கையாலே அதனைப் ‘பயன்’ என்கிறார். அவனுடைய சாதனம் இவருக்குப் பலமாய் இருக்கிறது.
சிறுக நினைவது ஓர் பாசம் உண்டாம் –
தன்னை முன்புத்தையிற் காட்டில் மிகச் சிறியனாக நினைக்கும்படி தளைகளான அவித்தை முதலானவைகள் நூறு கிளைகளாகக் கிளைக்கும்
‘தேவோஹம் – நான் தேவன், மனுஷ்யோகம் – நான் மனிதன்’ என்கைக்கு அடியான தளை ஆதலின், ‘சிறுக நினைவது ஓர் பாசம்’ என்கிறார்.

மறுகல் இல் ஈசனைப் பற்றி விடாவிடில் பின்னும் வீடு இல்லை –
மறுகல் இல் ஈசனைப் பற்றி -அந்திம ஸ்மிருதி பண்ணி சரீரத்தை-விடாவிடில் பின்னும் வீடு இல்லை –
இந்திரிய நியமனம் முதலானவைகள் உண்டாய், பின்பு பகவானை வழிபட்டுக் கர்மங்களை எல்லாம் அழித்து, ஆத்துமாவைக் காண
வேண்டும் என்று இருக்கின்ற அன்றும், சர்வேசுவரன் பக்கல் அந்திம ஸ்மிருதி பண்ணி இச்சரீரத்தை விடுவதற்குப் பாரானாகில்,
அந்த மோக்ஷந்தான் இல்லை.
எதோ உபாசனம் ததோ பலம் -விருப்பம் இல்லாதவனுக்கு கொடுக்கக் கூடாதே –
அண்டாதிபதே -சொல்லி ஐஸ்வர்யம் பெற்று போவான் –
அசுத்த சரீரம் -கர்மா தீனம் இல்லாமல் -சுத்தன் என்றே உபாசித்து -கைவல்யம் பெற்று போவான் –
அவன் அழகை அனுசந்தித்து -பகவத் ப்ரீதி காரித கைங்கர்யம் பெற்று போவோம் –
உபாசனம் ஆபிராணாத்- இதற்கு சாஸ்திரம் அந்திம ஸ்ம்ருதி -விதிக்கிறதே –
மறுகல் இல் ஈசனை – குற்றங்கட்கு எதிர்த்தட்டான சர்வேசுவரனை,
அன்றிக்கே,
‘மறுகலில் –-சப்தமி -ஏழாம் வேற்றுமை – மறுகுகிற சமயத்தில்; உயிர் நீங்குங்காலத்தில் வருகின்ற கலக்கத்தில்’ என்னுதல்.
ஈசனைப் பற்றி விடாவிடில் – பற்றாமல் இருந்தாயாகில் என்றபடி –
அந்திம ஸ்மிருதி இல்லையாகில் ஆதி பரதனைப்போலே மான் ஆதல், மரை ஆதல் ஆமித்தனை.
அஃதே வீடு –
‘திரு நாரணன் தாள் காலம் பெறச் சிந்தித்து உய்ம்மினோ’ என்று நான் சொல்லுகிற அதுவே புருஷார்த்தம்.
பன்னீராயிரப்படி மட்டும் -அவனைப் பற்றி பிரயோஜ நாந்தரம் பெற்று விடா விடில் -அஃதே வீடு –

——————————————————————————————

அஃதே உய்யப் புகும் ஆறு என்று கண்ணன் கழல்கள் மேல்
கொய் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்
செய்கோலத்து ஆயிரம் சீர்த்தொடைப் பாடல் இவை பத்தும்
அஃகாமல் கற்பவர் ஆழ் துயர் போய் உய்யற் பாலரே.–4-1-11-

துக்க நிவ்ருத்தி பூர்வகமாக உஜ்ஜீவனம் பெறுவோம் -உபாயம் அதுவே -4/5/6 பதிகங்கள் உபாய பரம்
அஃதே உய்யப் புகும் ஆறு என்று கண்ணன் கழல்கள் மேல்-திரு நாரணன் தாள்
கொய் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்-குற்றேவல்கள் -உரை பாடம் அந்தரங்க கைங்கர்யங்கள்
செய்கோலத்து ஆயிரம் சீர்த்தொடைப் பாடல் இவை பத்தும்-வாசிக கைங்கர்யம் –
அலங்கார பூரணமான –எழுத்து சீர் தொடை
அஃகாமல் கற்பவர் ஆழ் துயர் போய் உய்யற் பாலரே.-நழுவாமல் கற்பவர் -ஐஸ்வர்யம் கைவல்யம்
ஆழ்ந்த துயர் போகும் -பகவத் பக்தி -ஆத்ம உஜ்ஜீவனம் அடைவார்கள்

‘உய்வதற்கு உரிய வழி மேலே கூறிய அதுவே என்று கண்ணபிரானுடைய திருவடிகளின்மேலே, பறிக்கப்படுகின்ற பூக்கள் நிறைந்த
சோலையாற்சூழப்பட்ட திருக்குருகூரிலே அவதரித்த ஸ்ரீ சடகோபரால் அந்தரங்கக் கைங்கரிய ரூபமாகச் செய்யப்பட்ட அழகிய ஆயிரம்
திருப்பாசுரங்களுள் இறைவனுடைய கல்யாண குணங்களைத் தொடுத்துப் பாடிய இந்தப் பத்துத் திருப்பாசுரங்களையும்
குறைவில்லாதவாறு கற்பவர்கள், ஆழ்ந்துள்ள துன்பங்கள் நீங்கி நற்கதி பெறுவார்கள்,’ என்றவாறு.
‘உய்யப் புகுமாறு அஃதே என்று கண்ணன் கழல்கள் மேல் சடகோபன் குற்றேவல் பாடல் இவை பத்தும் கற்றவர் துயர் போய் உய்யற்பாலர்,’ என்க.

முடிவில், ‘இத்திருவாய்மொழி பத்துப் பாசுரங்களையும் கற்றவர்கள் ஐஸ்வரியம் கைவல்யம் எனப்படுகின்ற சிறிய
புருஷார்த்தங்களைத் தவிர்ந்து, பகவானுடைய கைங்கரியத்தையே புருஷார்த்தமாகப் பெற்றவர் ஆவர்,’ என்கிறார்.

உய்யப் புகுமாறு அஃதே என்று –
‘திருநாரணன்தாள்’ என்று நான் சொன்ன அதுவே உய்வதற்கு உரிய வழியும் பலமும் என்று.
உபாயாந்தரம் வேறே இல்லை —பிரயோஜ நாந்தரம் இல்லை -அதுவே உய்வு -அதுவே ஆறு -அதுவே உய்யப் புகும் ஆறு –
கண்ணன் கழல்கள் மேல் –
‘கண்ணனைத் தாள் பற்றி’ என்று தாமும் சொல்லி, கண்ணன் கழல்கள் நினைமினோ’ என்று பிறர்க்கும் உபதேசித்து நின்றாரே?
அது தன்னையே அருளிச்செய்கிறார். ‘இப்படி அடியுடையார் புறம்பு இல்லை’ என்றே அன்றோ இவ்வடிகளைத் தாம் பற்றியது?
‘துயர் அறு சுடர்அடி தொழுது எழு’ என்று தம் திருவுள்ளத்திற்கு அருளிச்செய்தார்;
‘வண் புகழ் நாரணன் திண்கழல் சேரே’ என்று பரோபதேசம் செய்தார் அங்கு.
இங்கு, ‘கண்ணனைத் தாள் பற்றி யான் என்றும் கேடு இலனே,’ என்றார்;
‘கண்ணன் கழல்கள் நினைமினோ,’ என்று பரோபதேசம் செய்தார்.
இது என்ன அடிப்பாடுதான்! ‘கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண்,’ என்றே அன்றோ பரோபதேசம் முடிக்கிறதும்?
திருவடியில் என்ன ப்ராவண்யம் –
விரோதி ஸ்வரூபம் சொல்ல வந்ததில் -கொண்ட பெண்டிரில் நிகமிக்கறார் –
கண்ணன் கழல் இணை நண்ணும் மனம் -சாமான்யதயா பர உபதேசம் –

கொய்பூம்பொழில் சூழ்குருகூர்ச் சடகோபன் குற்றேவல் –
எப்பொழுதும் பூவும் தளிருமாய் இருக்கின்ற திருச்சோலை சூழ்ந்த திருநகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வார்,
சர்வேசுவரன் திருவடிகளில் அந்தரங்கக் கைங்கரியம் செய்தவை இவைதாம்.
செய்கோலத்து ஆயிரம் –
கவிக்குச் சொல்லுகிற அலங்காரத்தால் குறைவற்ற ஆயிரம். செய் – செய்த கவி என்னுதல்;
‘குற்றேவல் செய்’ என்று மேலே கூட்டி, ‘வாசிகமான அடிமை’ என்னுதல்.
சீர்த்தொடைப் பாடல் இவை பத்தும் அஃகாமல் கற்பவர் ஆழ்துயர் போய் உய்யற்பாலர் –
அவன் குணங்களைத் தொடுத்துப் பாடின இவற்றில் ஒன்றும் குறையாமல் கற்றவர்கள் பகவானுக்கு வேறுபட்ட பலன்களான
ஐஸ்வர்ய கைவல்யங்களாகிற கேடுகள் நீங்கி உய்யும் தன்மையர் ஆவர்.
அஃகல் – சுருங்கல். ‘உய்தலே தன்மையாக உடையர் ஆவர்,’ என்பார், ‘உய்யற்பாலர்’ என்கிறார்.
‘காலம் பெறச் சிந்தித்து உய்ம்மினோ’ என்று தாம் சொன்னபடியே உடையவர் ஆவர் என்றபடி.

————————————————————————————————————-

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

ஆத்யே சதுர்த்த சதகே
சடாரி துஷ்ட சந்தோஷமாக பர உபதேசம்
பரஹிதம் தயயா-
ராஜ்ய ஆத்ம போக பரி போக
அல்பபாவம் –
சல பாவம் -அஸ்திர
சமயக் பிரகாசம்
ஹரியே புருஷார்த்தம்

—————————————————————-

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –

நிரவதிக – ஐஸ்வர்யா சீமா
ஸ்ரீ மண் நாராயண
ஸ்வாம் அனுகுண மகுட
வீர தாமாங்க மௌலி
துர்தாந்த ஹந்தா
அத்புத நியமததம
கல்ப பாத அதிதம
விச்வாத்யாத ஜ்யோதி
உர்வீத பணி
வேத ரூபஸ் சுவ ஹேது
நிர்தூத அசேஷ தோஷ

——————————————————-

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 31-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்–

ஒரு நாயகமாய் யுலகுக்கு வானோர்
இரு நாட்டில் ஏறி யுய்க்கும் இன்பம் -திறமாகா
மன்னுயிர்ப் போகம் தீது மாலடிமையே யினிதாம்
பன்னியிவை மாறன் உரைப்பால் ———31-

மாறன் உரைப்பால் போம் –உயற்பாலவே கிரியை வரவழைத்துக் கொள்ள வேண்டும் -அறியப்பட்டன என்றுமாம்

——————————————————————————
அவதாரிகை –

இதில்
ஐஸ்வர்யாதிகளின் அல்ப அஸ்திரத்வாதி தோஷங்களை
பேசின பாசுரத்தை
அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
சீர் பரவப் பெற்ற நான் -என்று
கீழ்
பகவத் அனுபவத்தாலே ஹ்ருஷ்டரான ஆழ்வார்
அந்த ஹர்ஷத்தாலே
இவ் விஷயத்தை ஒழிய
ஐஸ்வர்யாதிகளிலே மண்டி இருக்கிறவர்களைக் குறித்து
மீளவும்
இவற்றின் யுடைய அல்ப அஸ்திரத்வாதிகளாகிற தோஷங்களை அறியாதே
இவற்றிலே மண்டி இருக்கிறார்கள் என்று
இவற்றின் தோஷங்களைப் பரக்க பேசா நின்று கொண்டு
பரம புருஷார்த்த பூதனான
ஸ்ரீயபதியின் திருவடிகளை ஆஸ்ரயுங்கோள் என்று
பிறருக்கு உபதேசித்துச் செல்லுகிற
ஒரு நாயகத்தின் அர்த்தத்தை சங்க்ரஹித்து
ஒரு நாயகமாய் -இத்யாதியால் அருளிச் செய்கிறார் -என்கை –

————————————————————————

வியாக்யானம்–

ஒரு நாயகமாய் -என்று துடங்கி
யுலகுக்கு -ஒரு நாயகமாய் –
யுய்க்கும் இன்பமும்
வானோர்
இரு நாட்டில் ஏறி யுய்க்கும் இன்பமும் –
திறமாகாது –
என்கிறார் –
ஒரு நாயகமாய் ஓட வுலகு உடன் ஆண்டவர் –
என்றத்தை நினைக்கிறது –
சார்வ பௌமராய்
பாண்டரச்யாதா பத்ரச்ய – என்று
ஏகாத பத்திரமாக நாட்டை நடத்துகிற வத்தால் வருகிற ஸூகமும்
எனைத்தோர் யுலகங்களும் இவ் வுலகாண்டு கழிந்தவர் –என்றும்
வாழ்ந்தார்கள் வாழ்ந்தே நிற்பார் எனபது இல்லை -என்றும்
சொல்லுகையாலே
அஸ்த்ரமாய் இருக்கும் –

வானோர் இரு நாட்டில் ஏறி யுய்க்கும் இன்பமும் -ஆவது
தேவர்களுக்கு வாசஸ் ஸ்தானமாய்
ஐஹிக போக விலஷணமான ஸ்வர்க்காதி அனுபவம்
அதுவும் திறமாகாது-
புக்த்வாஸ் ஸ்வர்க்க லோகம் விசாலம் ஷீணே புண்யே மர்த்த்ய லோகம் விசந்தி –
என்கிறபடியே அஸ்திரமாய் இருக்கும்
குடிமன்னு மின் ஸ்வர்க்கமும் எய்தியும் மீள்வர்கள் -என்றத்தைப் பின் சென்றபடி –

இரு நாட்டில் ஏறி யுய்க்கும் இன்பமும் -ஆவது-
ஸூக்ருத விசேஷத்தாலே ப்ராபித்தாலும்
ஸ்திரமாகாது
இது ஆ ப்ரஹ்மபவனம் புனராவ்ருத்தி-என்பதுக்கும் உப லஷணம்-

மன்னுயிர்ப் போகம் தீது-
இறுகல் இறப்பு -என்று
சங்கோச ரூப மோஷம் ஆகையாலே
அதுவும் தோஷ யுக்தமாய் இருக்கும் –

மன்னுயிர்ப் போகம்-என்கையாலே
நித்தியமான ஆத்மா அனுபவம்
கீழில் அவை போல் அஸ்தரம் போகம் ஆகை அன்றிக்கே
நித்ய போகமாய் இருந்ததே யாகிலும்
பர ப்ரஹ்ம அனுபவத்தைக் குறித்து
சிற்றின்பமாய் இருக்கும்
ஆகையாலே -தீது -என்றது –

மாலடிமையே யினிதாம் -பன்னியிவை மாறன் உரைப்பால் –
பன்னியிவை மாறன் உரைப்பால் -மாலடிமையே யினிதாம்-
இவற்றின் அல்ப அஸ்த்ர த்வாதி தோஷங்களை ஆராய்ந்து
ஆழ்வார் அருளிச் செய்கையாலே
ஸ்ரீ யபதியான சர்வேஸ்வரன் உடைய தாச்யமே சரசமாய் இருக்கும்
திரு நாரணன் தாள் காலம் பெறச் சிந்தித்து உய்மினோ என்றும்
செம்மின் முடித் திருமாலை விரைந்து அடி சேர்மினோ -என்றும்
கடி சேர் துழாய் முடிக் கண்ணன் கழல்கள் நினைமினோ -என்றும்
பனைத்தாள் மத களிறு அட்டவன் பாதம் பணிமினோ -என்றும்
மணி மின்னு மேனி நம் மாயவன் பேர் சொல்லி வாழ்மினோ -என்றும்
ஆழ்ந்தார் கடல் பள்ளி அண்ணல் அடியவர் ஆமினோ -என்றும்
பணம் கொள் அரவணையான் திரு நாமம் படிமினோ -என்றும்
கொடி மன்னு புள்ளுடை அண்ணல் கழல்கள் குறுகுமினோ -என்றும்
மறுகலில் ஈசனைப் பற்றி விடா விடில் வீடு அக்தே -என்றும்
அக்தே உய்யப் புகும் ஆறு -என்றும்
அருளிச் செய்தவை எல்லாவற்றையும் நினைத்து
மால் அடிமையே இனிதாம் -என்று அருளிச் செய்தது –

————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: