பகவத் விஷயம் காலஷேபம் -85- திருவாய்மொழி – -3-10-6….3-10-11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

துயர் இல் சுடர் ஒளி தன்னுடைச் சோதி நின்ற வண்ணம் நிற்கவே
துயரின் மலியும் மனிசர் பிறவியில் தோன்றிக் கண் காண வந்து
துயரங்கள் செய்து தன் தெய்வ நிலை உலகில் புக உய்க்கும் அம்மான்
துயரம் இல் சீர்க் கண்ணன் மாயன் புகழ் துற்ற யான் ஓர் துன்பம் இலனே.–3-10-6-

இதர சஜாதீயனாய் அவதரித்து நின்ற -அதி மானுஜ சேஷ்டிதம் செய்து அருளிய கிருஷ்ணன் -பற்றிய நான் -துன்பம் இலேன்
துயர் இல் சுடர் ஒளி தன்னுடைச் சோதி நின்ற வண்ணம் நிற்கவே–அத்யுஜ்வல தேஜோ ரூபம் -பரஞ்சோதி சப்த வாச்யன்
-யதா பூர்வ அவஸ்தா -போலே நிற்க தீபாதி -உத்பன்ன ப்ரதீபம் போலே -தீப பிரவ்ருத்தி -தத் சஜாதீய அப்ராக்ருத திரு மேனி
துயரின் மலியும் மனிசர் பிறவியில் தோன்றிக் கண் காண வந்து-துக்கத்திலே வர்த்தித்து -வரக் கடவதான மனுஜ்ய ஜன்மத்தில் ஆவிர்பவித்து
கண் காண தோன்றி
அதீந்த்ரிய விக்ரகத்தை சேவை சாதித்து உலாவி வந்து
துயரங்கள் செய்து தன் தெய்வ நிலை உலகில் புக உய்க்கும் அம்மான்-ஈடு படுத்தி -ரூப ஔதார்ய சௌர்யாதி குணங்களால் –
ஆஸ்ரித அநாஸ்ரிதர் விபாகம் அற -தூத்ய சாரத்யாதி பண்ணி தாழ நிற்கும் நிலையில்
தனக்கு அசாதாரணமான பர ஸ்திதியை -விஸ்வரூபம் காட்டி
தனது வாசி அறியாத லோகத்தில் -தன்னை -பக்தியை நிலை நிற்கக் கடவ துயரம் இல் சீர்க் கண்ணன் மாயன் புகழ் துற்ற யான் ஓர் துன்பம் இலனே.
குணம் சேஷ்டிதங்களால் வந்த புகழை நெருங்க அனுபவிக்கப் பெற்ற -மனுஷ்யத்வே பரத்வம் -அறிந்த நான் –
துன்பம் -இன்பத்துக்கு எதிர் தட்டு இல்லை

‘துன்பங்கட்கு எதிர்த்தட்டான மிக்க ஒளியுடன் கூடிய தன்னுடைய திவ்விய மங்கள விக்கிரகமானது பரமபதத்தில்
நிற்கிறவாறே இவ்வுலகத்திலும் நிற்கும்படியாக, துன்பங்களால் மிக்கிருக்கின்ற மனிதப் பிறவியில் தோன்றி,
ஊனக் கண்கள் காணுமாறு வந்து துன்பங்களைச் செய்து, தனது தெய்வத் தன்மையை உலகத்தில் புகும்படியாகச் செலுத்துகின்ற இறைவனும்,
குற்றம் இல்லாத புகழையுடைய கண்ணபிரானும், ஆச்சரியமான குணங்களையும் செயல்களையுமுடையவனும் ஆன
எம்பெருமானது நற்குணங்களை அனுபவித்த யான் ஒரு துன்பமும் இல்லாதவன் ஆனேன்,’ என்கிறார்.
‘நிற்கத் தோன்றிக் காண வந்து துயரங்கள் செய்து புக உய்க்கும் அம்மான்’ எனக் கூட்டுக.
துயரங்கள் செய்தலை வியாக்கியானத்திற்காண்க. துற்ற – நுகர்ந்த.

‘இவ்வுலக சம்பந்தம் இல்லாத தன்னுடைய விக்கிரகத்தை, இதர சாதிகளின் தன்மையை உடையதாக்கிச் சமுசாரிகள் கண்களுக்கு
விஷயம் ஆக்கின கிருஷ்ணனுடைய குணங்களை அனுபவிக்கப்பெற்ற எனக்கு ஒரு துக்கத்தின் வாசனையும் இல்லை,’ என்கிறார்.

துயர் இல் சுடர் ஒளி தன்னுடைச் சோதி –
தள்ளத்தக்க குற்றங்கட்கெல்லாம் எதிர்த்தட்டாய், சுத்த சத்துவமயம் ஆகையாலே தனக்கு மேல் ஒன்று இல்லாததான ஒளியுருவமாய்
பிறர்க்கு உள்ளது ஒன்று அன்றிக்கே, தனக்கே சிறப்பாகவுடைய விக்கிரகமானது.
நின்ற வண்ணம் நிற்கவே –
அங்கு இருக்கும்படியில் ஒன்றும் குறையாமல், விளக்கிலே கொளுத்தின விளக்குப் போன்று அங்கு நின்ற வண்ணம் இங்கு நிற்க
‘எனக்கு உரியதான பிரகிருதியை அதிஷ்டித்து என் மாயையால் உண்டாகிறேன்,’ என்று சொல்லப்பட்டதே அன்றோ?
துயரில் மலியும் மனிசர் பிறவியில் தோன்றி –
துக்கக் கடலிலே அழுந்தா நின்றுள்ள மனிதர்களுடைய பிறவிகளிலே தோன்றி.
‘எல்லா உலகங்கள் ஆகிற தாமரை மலரும்படி தேவையாகிற கீழைச்சந்நிதியில் மிக்க ஒளியையுடைய கிருஷ்ணன் ஆகிற
சூரியன் உதித்தான்,’ என்கிறபடியே, தோன்றினவன் ஆதலின், ‘தோன்றி’ என்கிறார்.

கண் காண வந்து –
ஊனக்கண்களுக்குப் புலப்படுதல் இன்றி நித்தியசூரிகளுக்கு எப்பொழுதும் காண்பதற்கு விஷயமான தன்னை
ஊனக்கண்களுக்குப் புலப்படச் செய்து.
துயரங்கள் செய்து –
அடியார்களை அழகாலே நோவுபடுத்தியும்;
பகைவர்களை ஆயுதத்தாலே நோவுபடுத்தியும்;
‘நீண்ட கண்களையுடைய கிருஷ்ணர் பூமியினுடைய பாரத்தைப் போக்கி, எல்லா உலகத்தையும் மயங்கச் செய்து,
தம்முடைய மேலான இருப்பிடத்தை அடைந்தார்,’ என்கிறபடியே,
பகைவர்களை முட்கோலாலே சாடியும் அடியார்களை கண்ணழகாலே சாடியும் போனபடி
‘ஏழையர் ஆவி உண்ணும் இணைக்கூற்றங்கொலோ அறியேன்! ஆழி அம் கண்ணபிரான் திருக்கண்கள்கொலோ அறியேன்!’ என்னும்படி
அன்றோ கண்ணற்று நலியும்படி?

தன் தெய்வ நிலை –
இவ்வுலக சம்பந்தம் இல்லாத தன்னுடைய தன்மையை.
உலகில் –
இதற்கு இட்டுப்பிறவாத சமுசாரத்திலே.
புக உய்க்கும் –
செலுத்துகின்ற.
அம்மான் –
அவர்கள் விரும்பாமலே, சமுசாரிகளுக்குத் தன் படிகளை வெளியிடுகைக்கு வேண்டும் சம்பந்தத்தைச் சொல்லுகிறார்.
‘ஆக, ‘பரமபதத்திலே நடையாடக் கூடிய இவ்வுலக சம்பந்தம் இல்லாத விக்கிரகத்தைச் சமுசாரிகளுக்குத் தெரிவித்து,
அங்கு உள்ளாரோடு சம்பந்தம் இங்கு உள்ளாரோடும் ஒத்திருக்கையாலே, ‘தன் தெய்வ நிலை புக உய்க்கும் அம்மான்’ என்கிறார்,’ என்றபடி.
அன்றிக்கே,
‘தூது சென்று, சாரதியாய் இருந்து தேரை ஓட்டித் தன் படியைத் தெரிவித்து, இச்செயலாலே உலகத்தாரை எழுதிக்கொண்டவன்’ என்றுமாம்.

துயரம் இல் சீர்க் கண்ணன் –
குற்றங்கட்கு எதிர்த்தட்டான கல்யாண குணங்களையுடைய கிருஷ்ணன்.
மாயன்
– ஆச்சரியமான குணங்களையும் செயல்களையும் உடையவன்.
புகழ் துற்ற யான் –
அவனுடைய கல்யாண குணங்களை நெருங்க நுகரப்பெற்ற யான்.
ஓர் துன்பம் இலன் –
‘இவ்வுலக சம்பந்தம் இல்லாத திவ்விய மங்கள விக்கிரகத்தைக்கொண்டு இவ்வுடம்போடே அணையலாம் படி
அவன் கிட்டுவான் ஆயிற்ற பின்பு, நான் இச்சரீரத்தை விட்டு அங்கே போய் அவ்வுடம்போடே அணைய வேண்டும்,’ என்றால்
எனக்கு அவன் அருமைப்படுத்துவானோ?

——————————————————————–

துன்பமும் இன்பமும் ஆகிய செய் வினையாய் உலகங்களுமாய்
இன்பம் இல் வெந் நரகாகி இனிய நல்வான் சுவர்க்கங்களுமாய்
மன்பல் உயிர்களும் ஆகிப் பலபல மாய மயக்குகளால்
இன்புறும் இவ் விளையாட்டுடையானைப் பெற்று ஏதும் அல்லல் இலனே.–3-10-7-

லீலா விபூதியை கர்மானுகுணமாக நிர்வகிக்கும் அவனைப் பற்றி அல்லல் தவிர்ந்தேன் –
அவர் தானே கர்மம் தொலைக்க வேண்டும் -மம மாயா துரத்தயயா –
துன்பமும் இன்பமும் ஆகிய செய் வினையாய் உலகங்களுமாய்-அப்ரீதி ரூபம் துன்பம் ப்ரீதி ரூபம் -இன்பம் -செய்யப்பட வினை பாப புண்யங்கள்
கர்மங்களுக்கு நிர்வாகனாய் -தூண்டுபவன் இல்லை –கர்ம பூமியையும் சிருஷ்டித்து
இன்பம் இல் வெந் நரகாகி இனிய நல்வான் சுவர்க்கங்களுமாய்-கர்ம பலத்துக்கு -லோகங்களையும் நிர்வாகனாய்
மன்பல் உயிர்களும் ஆகிப் பலபல மாய மயக்குகளால்-கர்மம் செய்யும் சேதனர்களும்-நித்யராய்
-பல பல-அசங்க்யேமான மோக விகாரங்கள் பிறப்பிக்கும் பிரகிருதி –
இன்புறும் இவ் விளையாட்டுடையானைப் பெற்று ஏதும் -ஆனந்தப்படும் -போகத்துக்கும் லீலைக்கும் -கிட்டப் பெற்று
அல்லல் இலனே.அல்லல் துன்பம் -பர்யாய சொற்கள் பலவும்
அலமாப்பு உடையேன் அல்லேன்

‘துன்பத்திற்கும் இன்பத்திற்கும் காரணமாகிய நல்வினை தீவினைகளுமாகி, உலகங்களுமாகி, இன்பம் இல்லாத கொடிய நரகமாகி,
இனிய பொருள்கள் தங்கியிருக்கின்ற மிகச்சிறந்த சுவர்க்கலோகம் முதலிய உலகங்களுமாகி, நிலை பெற்ற பல உயிர்களுமாகி,
மாயையால் உண்டாகும் பல விதமான மக்களுடைய மயக்கங்களால் இன்புறுகின்ற இவ்விளையாட்டுடையவனைப்
பெற்றுத் துன்பம் யாதும் இல்லாதவன் ஆனேன்,’ என்கிறார்.
‘ஆய் ஆய் ஆகி ஆய் ஆகி இன்புறும் விளையாட்டுடையவன்,’ என முடிக்க.
‘மன் பல் உயிர்’ என்ற இடத்து ‘மன்னுயிர் எல்லாம் தொழும்’ என்ற திருக்குறள் ஒப்பு நோக்கல் தகும்.

‘இறைவன் கர்மங்கட்குக் கட்டுப்பட்டவன் அல்லன் ஆகையாலே, அவனுக்கு இவ்வுலகத்தில் உள்ளது லீலா ரசமாத்திரம் ஆகையாலே,
அதனை அநுசந்திக்கும் நான் கர்மங்கட்குக் கட்டுப்படவும் வேண்டா; இவ்வுலகத்தில் தோன்றவும் வேண்டா,’ என்கிறார்.
தந்தை காலில் விலங்கு அற வந்து தோன்றிய தோன்றல் -சம்சாரிகள் விலங்கு அறுக்க அவதரித்தான்
அவனும் பிறந்து நாமும் பிறக்கவும் வேண்டுமோ

துன்பமும் இன்பமும் ஆகிய செய் வினையாய் –
இன்ப துன்பங்களுக்குக் காரணமான புண்ணிய பாப உருவங்களான கர்மங்களை ஏவுகின்றவனாய்.
உலகங்களுமாய் –
இவற்றை ஈட்டுதற்கு உரிய இவ்வுலகங்கட்கு நிர்வாஹகனாய்.
அன்றிக்கே,
போக பூமியைச் சொல்லுதலும் ஆம்.
இன்பம் இல் வெம் நரகு ஆகி –
இன்பம் என்பது சிறிதும் இல்லாத நரகலோகத்துக்கு நிர்வாஹகனாய்.
இனிய நல் வான் சுவர்க்கங்களும் ஆய் –
நரகத்தைக்காட்டிலும் சிறிது சுகத்தை உடைத்தான சுவர்க்கம் முதலிய உலகங்கட்கு நிர்வாஹகனாய்.-துன்பம் இல் ஸ்வர்க்கம் என்னாமல் –
‘உலகங்களும் ஆய்’ என்ற இடம் புண்ணிய பாவங்களை ஈட்டுதற்குரிய உலகத்தைச் சொல்லிற்றாகில் இவை, போக பூமிகள் ஆகின்றன;
அன்றிக்கே,
அங்கே, போக பூமியைச் சொல்லிற்றாகில், இங்கு, இன்ப துன்பங்களை மாத்திரமே சொல்லுகின்றன.

மன் பல் உயிர்களும் ஆகி
நல் வினை தீ வினைகளைச் செய்கின்றவர்களும் அவற்றின் பலன்களை நுகர்கின்றவர்களுமாய்,
என்றும் உள்ளவர்களாய், பலராய் உள்ள ஆத்துமாக்களுக்கு நிர்வாஹகனாய்.
பல பல மாய மயக்குகளால் இன்புறும் இவ்விளையாட்டுடையானைப் பெற்று –
கணக்கு இல்லாததான பிரகிருதியின் விகாரமுகத்தால் உண்டான மக்களுடைய மதிமயக்கங்களாலே பிரீதிக்கு இடமான
விளையாட்டுகளை உடையவனைப் பெற்று. ‘எல்லார்க்கும் நலத்தையே செய்கின்றவனாய்ப் பேரருட் கடலான சர்வேசுவரனுக்கு,
தன்னை நீங்கி மக்கள் துதிக்கப்படுகிற இது பிரீதிக்குக் காரணம் ஆகிற படி யாங்ஙனம்?’ என்னில், இவற்றைத் தன்னுடைய பேரருளால்
காக்க நினைத்தால் அது இவற்றுக்கு விருப்பம் இல்லாததாய் இருக்கும் இருப்பு இறைவனுக்கு நகைக்குக் காரணமாய்,
அவ்வழியாலே லீலா ரசத்துக்குக் காரணமாய்விட்டது; இதற்கு நேர்கொடு நேரே கருத்து இது. கொடுத்த அறிவுதான் பொதுவாய்
ருசி பேதத்தாலே வழி விலங்கிப் போய்க் கேட்டினை விளைத்துக்கொண்டு இருக்கிறபடியைக் கண்டு,
‘நாம் ஒன்றை நினைத்துச் செய்ய, இவை ஒன்றைச் சூழ்த்துக்கொண்ட படி கண்டாயே!’ என்று பிராட்டி
முகத்தைப் பார்த்துப் புன்முறுவல் செய்ய, ‘அது கோல் விழுக்காட்டாலே லீலா ரசமாக முடியும்’ என்றபடி.

ஏதும் அல்லல் இலனே –
‘அவனுடைய கர்மங்கட்குக் கட்டுப்படாத தன்மையைச் சொல்லிய எனக்குக் கர்மங்கட்குக் கட்டுப்படுதலாகிய துக்கம் இல்லை,’ என்கிறார். என்றது,
‘என்னைக் கர்மங்கள் ஒட்டுவது இல்லை; கர்மபலத்தில் எனக்கு ஆசை இல்லை; இவ்விதமாய் என்னை எவன் அறிகின்றானோ,
எனக்கும் கர்மங்கட்குக் கட்டுப்படுதல் இல்லை,’ என்கிறார் என்றபடி.
புருஷோத்தம ஞானம் வந்தால் கர்மங்கள் தீண்டாதே -அந்த பிறவியிலே பிரபன்னன் போலே பேறு கிட்டுமே
அன்றிக்கே,
‘உலகத்தின் படைப்பு முதலானவைகளை அவனுடைய விளையாட்டாக நினைக்கின்ற எனக்கு இந்த லீலா விபூதியில்
சேர்தலாகிற துக்கம் இல்லை,’ என்கிறார் என்னலுமாம். என்றது,
‘‘நான் கட்டிய கட்டினை எவன் ஒருவன் என்னையே கால் கட்டி அவிழ்த்துக்கொள்ளப் பார்க்கிறான்? அவன் இதனைக் கடப்பான்,’ என்று
அவன் சொல்லி வைத்தபடியே, அவன்றன்னையே பற்றி விடுவித்துக்கொள்ள இருக்கிற எனக்கு ஒரு துன்பமும் இல்லை,’ என்கிறார் என்றபடி.
அவன் காலைக் கட்டி நாம் கால் கட்டு விடுவித்திக் கொள்ளலாமே –

————————————————————————————-

அல்லல் இல் இன்பம் அளவு இறந்து எங்கும் அழகு அமர்சூழ் ஒளியன்
அல்லி மலர்மகள் போக மயக்குகள் ஆகியும் நிற்கும் அம்மான்
எல்லை இல் ஞானத்தன் ஞானம் அஃ தேகொண்டு எல்லாக் கருமங்களும் செய்
எல்லை இல் மாயனைக் கண்ணனைத் தாள் பற்றி யான் ஓர் துக்கம் இலனே.–3-10-8-

சர்வ ஸ்மாத் பரன் ஸ்ரீ யாபதி சங்கல்ப ரூப ஞானத்தால் நிர்வாகன் -ஆஸ்ரயித்து நான் துக்கம் இலேன் ஆனேன் -என்கிறார்
அல்லல் இல் இன்பம் அளவு இறந்து எங்கும் அழகு அமர் -கிலேச பிரசங்கமே இல்லாத இன்பம் —
எங்கு இருந்தாலும் அழகு திருமேனியில் எங்கும் என்றுமாம்
சூழ்ஒளியன்–சமுதாய ரூப லாவண்யம்
அல்லி மலர்மகள் போக மயக்குகள் ஆகியும் நிற்கும் அம்மான்
லீலா விலாசங்கள் -ஸூ பர விபாகம் மறந்து போகும் படி -போக ஆனந்த ரூபனே -சர்வாதிகன்
எல்லை இல் ஞானத்தன் ஞானம் அஃ தேகொண்டு எல்லாக் கருமங்களும் செய்-ஆனந்தம் அழகு போலே -ஞான வைபவம்
வேறு ஒன்றை எதிர்பார்க்காத
கார்ய பூத சமஸ்த ஜகத் -வியாபாரங்கள் -சங்கல்ப ரூபத்தாலே
எல்லை இல் மாயனைக் கண்ணனைத் தாள் பற்றி யான் ஓர் துக்கம் இலனே-திருவடிகளைப் பிடித்து அநிஷ்டம் தீர்ந்தேன்

‘துன்பம் இல்லாத இன்பத்திற்கு அளவு இல்லாமல் எல்லா இடங்களிலும் பொருந்திய அழகும் எல்லா இடங்களிலும்
சூழ்ந்த ஒளியும் உடையவனும், அக இதழ்களையுடைய தாமரைப்பூவில் வீற்றிருக்கின்ற பெரிய பிராட்டியின் சேர்க்கையால்
உண்டான ஆனந்தங்களையுடையனாய் நிற்கின்ற தலைவனும், முடிவு இல்லாத ஞானத்தை உடையவனும்,
அந்த ஞானத்தினால் படைத்தல் முதலான எல்லாக் காரியங்களையும் செய்கின்ற, எல்லை இல்லாத ஆச்சரியமான
குணங்களையும் செயல்களையுமுடையவனும், கண்ணபிரானாய் வந்து அவதரித்தவனும் ஆன
எம்பெருமானுடைய திருவடிகளைப் பற்றி, யான் ஒரு துக்கமும் இலேன்,’ என்கிறார்.
‘இறந்து அமர் ஒளியன்’ எனக் கூட்டுக. ‘செய் மாய்’ என்க-

நித்திய விபூதியை அனுபவித்துக் கொண்டிருக்கிற மேன்மையையுடையவன் உலகினைக் காக்கும்
நீர்மையினை நினைக்கப் பெற்ற எனக்கு ஒரு துக்கம் இல்லை,’ என்கிறார்.

அல்லல் இல் இன்பம் அளவு இறந்து –
சுவர்க்கம் முதலான உலகங்களிற்போன்று –துக்கம் கலந்ததாய் –அளவுக்கு உட்பட்ட -தாய் இராமல், துக்கத்தின் வாசனை
சிறிதும் இல்லததாய்– இன்பத்திற்கே நிலைக்களனாய் –அளவிடப்படாததான ஆனந்தத்தை உடையவன்.
எங்கும் அமர் அழகன் –
மோக்ஷ உலகம் முழுவதும் வெள்ளமிடும் காந்தியை யுடையவன்.
எங்கும் சூழ் ஒளியன் – திருமேனி எங்கும் ஒக்கப் பரந்து நிறைந்து அலை எறியும்படியான இலாவண்யத்தையுடையவன்.
அன்றிக்கே,
‘அழகு என்று அவயவ சோபையாய், சூழ் ஒளி என்பது சமுதாய சோபையைச் சொல்லுகிறது,’ என்னலுமாம்.
அன்றிக்கே,
‘எங்கும் அழகு அமர் – பாதம் முதல் முடி வரையில் அவயவங்களைத் தனித்துப் பார்த்தால்
‘இங்கே அழகு குடி கொண்டது, இங்கு அழகு குடி கொண்டது,’ என்னும்படி பாதாதி கேசம் பழிப்பு அன்று,
சூழ் ஒளியன் –
மோக்ஷ உலகம் அடங்கலும் காநதியின் நிறைவினாலே வெள்ளமிடாநிற்பவன்,’ என்னுதல்.

அல்லி மலர் மகள் போக மயக்குகள் –
இதனால், இவ்வழகு காட்டில் எறித்த நிலவு ஆகாதபடி நெஞ்சோடே அனுபவ்விப்பாரைச் சொல்லுகிறது.
உளமார அனுபவிப்பார் -மார்பிலே இருந்தே அனுபவிப்பார் –
மலரில் வாசனை வடிவு கொண்டு இருப்பதைப் போன்று தனக்குமேல் ஓர் இனிய பொருள் இல்லாதவளான பெரிய பிராட்டியுடைய
சேர்க்கையாலே பிறந்த ஆச்சரியமான ஆனந்தத்தையுடையனான சர்வேசுவரன் மயக்குகள் – ஆனந்தங்கள். மயங்கள் – கூடல், கலத்தல்.
ஆகியும் நிற்கும் –
தன்னுடைய ஆனந்தத்துக்கு மேலே திருமகள் கேள்வனாய் இருக்கும் தன்மையால் வந்த ஆனந்தத்தையுடையனாய் இருக்கும்.
ஸ்ரீ யை அணைத்து ஆனந்தம் -ஸ்ரீ யபதி என்பதை அனுசந்தித்து ஆனந்தம் –
அம்மான் –
ஆனந்த மயனாய் திருமகள் கேள்வனாய் இருக்குமவன் அன்றோ சர்வேசுவரன்?

எல்லை இல் ஞானத்தன் –
மநஸ்வீ – அவளிடத்தில் சென்ற மனத்தை உடையவன்’
தானும் அவளுமான சேர்த்தியிற் பிறந்த வெளிச்சிறப்பையே வேறு துணையை வேண்டியிராதே கருவியாகக் கொண்டு
, இக்காரியங்களின் கூட்டத்தை எல்லாம் உண்டாக்குகிறவன். ‘யாதொரு பிராட்டியினுடைய முகத்தை நோக்கிக் கொண்டு
அம்முகக் குறிப்பில் பரவசப்பட்டவனாய், படைத்தல் முதலான எல்லாத் தொழில்களையும் செய்கிறானோ, அவன்’ என்றார் அன்றோ பட்டரும்
இம்முகத்தாலே அன்றோ பஹூஸ்யாம் – பல பொருள்கள் ஆகக்கடவேன்’ என்பது?
மற்றை எல்லார்க்கும், விஷயங்களினுடைய சேர்க்கை ஞானக் கேட்டினையும் வலிமைக் குறைவினையும்
உருவத்தில் அழகு இன்மையினையும் செய்விக்கும்; பிராட்டியினுடைய சம்பந்தம் அவற்றுக்கு எதிர்த்தட்டாய் இருக்குமாதலின்,
‘ஞானம் அஃதே கொண்டு எல்லாக் கருமங்களும் செய்’ என்கிறார்.-அவளுக்காகவே புருஷ பிரசவம் —
இவளுக்கும் ஆனைக்கு குதிரை வைப்பார் போலே அவனது ஞானம் –

எல்லை இல் மாயனை –
நினைவின் உருவமான ஞானத்தாலே படைத்தல் முதலிய காரியங்களைச் செய்ய வல்ல ஆச்சரியமான சத்திகளோடு கூடியவனை.
‘இப்படிப்பட்டவன் யார்?’ என்னில்,
கண்ணனை –
கிருஷ்ணனை. ‘ஆயின், கிருஷ்ணனுக்குப் படைத்தல் முதலான தொழில்கள் உண்டோ?’ எனின்,
‘உலகங்களினுடைய உற்பத்தியும் கிருஷ்ணனேயாவன்; உலகங்கள் பிரளயத்தால் அழிவதும் கிருஷ்ணனேயாவன்,’ என்பது பாரதம்.
கண்ணனைத் தாள் பற்றி யான் ஓர் துக்கம் இலனே-பிராட்டி சந்நிதியும் உண்டாய், அவள் புருஷகாரமாக வேறு துணைக்காரணம்
வேண்டாமலே நம் காரியம் செய்யுமவனுமாய், ‘இந்தப் பரமாத்துமா தானே சந்தோஷிப்பிக்கிறான்’ என்கிறபடியே,
‘ஆனந்தத்தை உடையவனைப் பற்றின எனக்கு ஒரு துக்கம் இல்லை,’ என்கிறார்.

——————————————————————————————

துக்கம் இல் ஞானச் சுடர் ஒளி மூர்த்தி துழாய் அலங்கல் பெருமான்
மிக்க பன் மாயங்களால் விகிர்தம் செய்து வேண்டும் உருவுகொண்டு
நக்க பிரானோடு அயன் முதலாக எல்லாரும் எவையும் தன்னுள்
ஒக்க ஒடுங்க விழுங்க வல்லானைப் பெற்று ஒன்றும் தளர்வு இலனே.–3-10-9-

சர்வ பிரகார ரஷகன் -ஆபத் சகன்
துக்கம் இல் ஞானச் சுடர் ஒளி மூர்த்தி துழாய் அலங்கல் பெருமான்-தேஜோ -அலங்க்ருதன்
மிக்க பன் மாயங்களால் விகிர்தம் செய்து வேண்டும் உருவுகொண்ட
அநவதிக அதிசய ஆச்சர்ய -பஹூ வித -இச்சாக்ருஹீத திரு உருவம் -அபிமத -இதர சஜாதீய விக்ருதம் -செய்து
நக்க பிரானோடு அயன் முதலாக எல்லாரும் எவையும் தன்னுள்-திகம்பரன் -திக்குகளே ஆடை -ஈஸ்வர அபிமானன்
அஜன் பிரசித்தமான நான்முகனும்
ஒக்க ஒடுங்க விழுங்க வல்லானைப் பெற்று ஒன்றும் தளர்வு இலனே-களைப்பும் இல்லை
தாரதம்யம் இல்லாமல் ஏக தேசத்தில் ஒதுங்க -ரஷண சக்தி உக்தன்

துக்கம் இல்லாத ஞானமும் மிக்க ஒளியோடு கூடிய திருமேனியும் திருத்துழாய் மாலையுமுடைய பெருமான், அளவு இல்லாத
பல வகைப்பட்ட ஆச்சரியமான சத்திகளோடு கூடி வேண்டிய வடிவைக்கொண்டு சேராச்சேர்த்தியான காரியங்களைச் செய்து,
சிவபெருமானோடு பிரமன் முதலாக உள்ள எல்லாச் சேதநரையும் அசேதனங்களையும் சமமாகத் தன்னுள் அடங்கும்படி விழுங்கும்
ஆற்றலை உடையவனுமான எம்பெருமானைப் பெற்றுச் சிறிதும் தளர்வு இல்லாதவன் ஆனேன்.
‘வேண்டும் உருவு கொண்டு விகிர்தம் செய்து’ என மாறுக. நக்கன் – வஸ்திரம் இல்லாதவன்;
சிவன். அயன் – அஜன்; விஷ்ணுவிடம் தோன்றினவன்; பிரமன். அ – விஷ்ணு.

‘அகடிதகடநா சமர்த்தனான ஆல் இலையில் துயில்கொண்ட அண்ணலை நுகரப்பெற்ற எனக்கு ஒரு தளர்வும் இல்லை’ என்கிறார்.
இனி, ‘மஹாப்பிரளயத்தின் செயலை நினைக்கிறார்,’ என்னலுமாம்.

பிராக்ருத பிரளயம் -மகா பிரளயம் -சமஷ்டியாக ஒட்டிக்கும் -விழுங்குவது இல்லை -i
நைமித்திக பிரளயம் -மூன்று லோகம் –இப்பொழுது தான் விழுங்குவார் -ஆதரவு காட்டி நான்முகன் –
மூன்று அளக்க ஏழு அளந்தது போலே

துக்கம் இல் ஞானம் சுடர் ஒளி மூர்த்தி துழாய் அலங்கல் பெருமான் –
தள்ளத்தக்கனவான குற்றங்கட்கு எதிர்த்தட்டான ஞானத்தையும், எல்லை இல்லாத ஒளியின் உருவமான விக்கிரகத்தையுமுடையவனாய்,
அவ்வடிவிற்கு அலங்காரமாகத் தக்கதான திருத்துழாய் மாலையையுடையனான சர்வேசுவரன்.
அலங்கல் – மாலை. மிக்க பல மாயங்களால் – அளவு கடந்தன வாய்ப் பல வகைப்பட்ட ஆச்சரிய சத்திகளின் சேர்க்கையாலே.
வேண்டும் உருவு கொண்டு விகிர்தம் செய்து –
இச்சையினாலே கொள்ளுகின்ற விக்கிரகங்களை மேற்கொண்டு விகிருதங்களைச் செய்யாநிற்கும்.
விகிருதம் – வேறுபட்ட காரியங்கள். என்றது, சிறிய வடிவைக் கொண்டு, பெரிய உலகங்களை வயிற்றிலே வைத்து,
அப்பொழுது தோன்றியது ஒரு ஆலந்தளிரிலே கண் வளர்ந்தருளுகையாகிற அகடிதகடநா சாமர்த்தியத்தைச் சொல்லுகிறது.
விகிர்தம் -ஸ்தூல ஆகாரம் சம்ஹரித்து ஸூ ஷ்ம ரூபம் ஆக்குதல்
வேண்டும் உருவு -சங்கர்ஷன ரூபம் கொண்டு சம்ஹாரம் என்றுமாம்
நக்க பிரானோடு அயன் முதலாக எல்லாரும் எவையும் தன்னுள் ஒக்க ஒடுங்க விழுங்க வல்லானை –
தன் கூட்டத்துக்கு உபகாரகனாகப் பிரசித்தனாய் இருக்கிற சிவபிரானோடு கூட, அவனுக்கும் தந்தையான ஏற்றத்தையுடைய
நான்முகன் தொடக்கமான எல்லா அறிவுடைப்பொருள் அறிவில் பொருள்களையும் ஒரே தடவையில் பிரளயம் தேடிலும் காணவொண்ணாதபடி
வயிற்றிலே வைத்துக் காப்பாற்ற வல்ல சர்வ ரக்ஷகனை.
முடிந்து பிழைக்கப் பெற்றேன் -சம்ஹாரக்கடவுள் என்பதால் சிவபிரானையும் பிரான் என்பர் –
ஒடுங்க விழுங்குகையாவது,
‘ஏழுலகும் உண்டும் இடமுடைத்து’ என்கிறபடியே, சிறிய வயிற்றிலே பெரிய உலகங்களை வைத்தால், ஈர்க்கில் அத்திக்காய்
கோத்தது போன்று விசைத்து வேறாய் இராமல், அடங்கித் தகுதியாய் இருக்கை. இப்படிப்பட்டவனை
பெற்று ஒன்றும் தளர்வு இலனே –
எல்லாவற்றையும் செய்து முடிக்கும் ஆற்றலை உடையவனாய்ப் பிரமன் முதலானவர்களையும் காப்பாற்றுகின்றவனானவனை
வேறு பயன் ஒன்றையும் கருதாதவனாய் அடைந்த எனக்கு ஒரு துக்கம் உண்டோ?’ என்கிறார்.
நைமித்திகப் பிரளயமான போது, அவர்களால் காக்கப்படுகின்ற மூன்று உலகங்களையும் பாதுகாக்கையாலே அவர்களையும் பாதுகாப்பவன்’ என்கை.

————————————————————————————————-

தளர்வு இன்றியே என்றும் எங்கும் பரந்த தனிமுதல் ஞானம் ஒன்றாய்
அளவுடை ஐம்புலன்கள் அறியா வகையால் அருவாகி நிற்கும்
வளர் ஒளி ஈசனை மூர்த்தியைப் பூதங்கள் ஐந்தை இருசுடரைக்
கிளர் ஒளி மாயனைக் கண்ணனைத் தாள் பற்றி யான் என்றும் கேடு இலனே.–3-10-10-

சர்வாந்தர பூதனான கிருஷ்ணனைப் பற்றி -ஒரு அழிவும் உடையேன் அல்லேன்
தளர்வு இன்றியே என்றும் எங்கும் பரந்த தனிமுதல் ஞானம் ஒன்றாய்-நியந்த்ருத்வ சக்தியில் -பூரணமாக -குறை வில்லாமல்-
சமஸ்த காரணமாய் -ஞானத்தினாலே நிரூபணம்
அளவுடை ஐம்புலன்கள் அறியா வகையால் அருவாகி நிற்கும்-இந்த்ரியன்களால் அறிய முடியாத -அருவமாகி -அவயவங்கள் இல்லாமல்
வளர் ஒளி ஈசனை மூர்த்தியைப் பூதங்கள் ஐந்தை இருசுடரைக்
அபிவிருத்த தேஜஸ் -அசாதாரண விக்ரகன் -சமஷ்டி ரூப பூதங்கள் வியஷ்டி சிருஷ்டி சந்திர சூரியர்கள்
கிளர் ஒளி மாயனைக் கண்ணனைத் தாள் பற்றி யான் என்றும் கேடு இலனே.-அவதார -அபிவிருத்த அதுஜ்வலமம் -ஆச்சார்ய பண்புகள்

‘தளர்ச்சியில்லாமல் எக்காலத்திலும் எல்லா இடத்திலும் பரந்திருக்கின்ற தனித்த காரணமான ஒப்பற்ற ஞானத்தினையுடையவனாகி,
அளவிற்குட்பட்ட ஐம்புலன்களும் அறியாதபடி அருவாகி நிற்கின்ற. வளர்கின்ற ஒளியையுடைய தலைவனை, திருமேனியையுடையவனை,
ஐம்பெரும்பூதங்களையும் சூரியசந்திரர்களையும் சரீரமாக உடையவனை, கிளர்கின்ற ஒளியையுடைய ஆச்சரியமான குணங்களையும்
செயல்களையுமுடையவனை, கிருஷ்ணனைத் திருவடிகளைப் பிடித்ததனால் யான் எக்காலத்திலும் கேடு இல்லாதவன் ஆனேன்,’ என்கிறார்.
‘ஒன்றாய் அருவாகி நிற்கும் ஈசன்’ என்க. பற்றி – பற்றியதனால்; ‘செய்து’ என்னும் வாய்பாட்டு வினையெச்சம் காரணப் பொருளில் வந்தது.

‘உலகமே உருவமாய்ச் சத்தையையும் நோக்குமவனாய், தன்னிடத்து விருப்பம் செலுத்தினாரைத் தனக்கே உரியதான சிறப்பையுடைய
விக்கிரகத்தோடே வந்து அவதரித்துக் காக்குமவனைப் பற்றி எனக்கு ஒரு கேடு இல்லை,’ என்கிறார்.

தளர்வு இன்றியே என்றும் எங்கும் பரந்த தனி முதல் ஞானம் ஒன்றாய் –
என்றும் உண்டாய் எங்கும் ஒக்கப் பரந்து நிறைந்து நின்றால் ஒரு தளர்த்தி இல்லாமலே, படைக்குமிடத்தில் இரண்டாவதாக வேறு
ஒரு காரணம் இல்லாததாய் உள்ள நினைவின் உருவமான ஞானத்தை உடையவனாய்.–தளர்ச்சி இல்லாமல் -மூன்றுக்கும் சேர்த்து அன்வயம் –
அன்றிக்கே,
‘ஒரு பொருளிலும் குறைவு வாராதபடி எங்கும் ஒக்க ஒரே உருவமாய் எல்லாக் காலத்திலும் பரந்து நிறைந்து,
இவற்றைப் படைக்குமிடத்தில் மூன்று விதக்காரணமும் தானேயாய், வேறுபட்ட சிறப்பையுடைய ஞான உருவனாய்’ என்னுதல்.
அளவுடை ஐம்புலன்கள் அறியா வகையால் –
உழக்காலே கடலை முகக்க ஒண்னாதது போன்று, அளவிற்கு உட்பட்ட பொருள்களை அறியும் இந்திரியங்களாலே
அளவிற்கு உட்படாத பரம்பொருளை அறிய முடியாது அன்றோ? ஆதலால், ‘ஐம்புலன்கள் அறியா வகையால்’ என்கிறார்.
அருவாகி நிற்கும் –
அவற்றால் அறிய ஒண்ணாதபடி உருவம் இல்லாதபடி நிற்பான்.

வளர் ஒளி ஈசனை –
‘இப்படி அறிவுடைப்பொருள் அறிவில் பொருள்களோடே கூடி அவற்றுக்கு உள் உயிராய்ப் புக்கு நின்றால்,
அவற்றிற்கு உண்டாகும் குற்றங்கள் அவனைத் தீண்டாவோ?’ என்னில், ‘ஆத்துமா கர்மபலத்தை நன்றாக நுகர்கின்றது;
இறைவன் கர்மபலத்தை நுகராமல் வேறாக மிகுதியாகப் பிரகாசிக்கின்றான்,’ என்கிறபடியே,
அவற்றிற்கு உண்டான குற்றங்களால் தீண்டப்படாதவனாய், எல்லாப் பொருள்களையும் ஏவுகின்றமையால் வந்த புகரையுடையனாய் இருப்பான்
மூர்த்தியை –
இப்படி உலகமே உருவாய் இருக்கவும் இவ்வுலக சம்பந்தம் இல்லாத திவ்விய விக்கிரகத்தோடு கூடினவனாய் நித்தியவிபூதியில்
இருக்கும் இருப்பைச் சொல்லுகிறது.
பூதங்கள் ஐந்தை இரு சுடரை –
காரணமான மண் முதலான ஐம்பெரும்பூதங்களையும், காரியக் கூட்டத்தில் தலையான சந்திர சூரியர்களையுமுடையவனாய்
லீலா விபூதிக்கு நிர்வாஹகனாய் இருக்கும் இருப்பைச் சொல்லுகிறது. இதனால், அவனுக்கே உரியதான விக்கிரகத்தைப் போன்று
உலகமே உருவமாக நிற்கிற அதுவும் இவர்க்கு அனுபவிக்கத் தக்கதாய் இராநின்றது என்பது போதரும்.
இவ்வுலகத்துள்ளே இவ்வுலக சம்பந்தம் இல்லாத தனது திருமேனியை, இதர சாதிகளின் தன்மையை உடையதாம்படி ஆக்கிக்கொண்டு
வந்து கிருஷ்ணனாய் அவதரித்தவனை.
கண்ணனைத் தாள் பற்றி –
‘என் ஒருவனையே பற்றுக்கோடாகப் பற்று,’ என்றவன் திருவடிகளைப் பற்றி.
யான் என்றும் கேடு இலன் –
‘இவன் விருப்பம் இல்லாதவனாய் இருந்த அன்றும் சம்பந்தத்தாலே சத்தையை நோக்கி, இவன் விரும்புகிற அன்று
கண்ணுக்குத் தோற்றி நின்று காக்குமவன் திருவடிகளை முறையிலே பற்றின எனக்கு ஒரு நாளும் கேடு இல்லை,’ என்கிறார்.

‘மூர்த்தியை, தனி முதல் ஞானம் ஒன்றாய், பூதங்கள் ஐந்தை, இரு சுடரை, என்றும் எங்கும் பரந்து, தளர்வு இன்றியே, அளவுடை ஐம்புலன்கள்
அறியா வகையால் அருவாகி நிற்கும் வளர் ஒளி ஈசனை, கிளர் ஒளி மாயனைக் கண்ணனைத் தாள் பற்றி யான் என்றும் கேடு இலன்’ என்று கூட்டுக.

வியாப்யமே மூன்றாம் பத்தின் -சாரம் -எங்கும் வியாபித்து -த்ரிவித காரணன் – சங்கல்ப ஞானத்தாலே -ஞானம் மிக்கு
-வியாபகத தோஷம் இல்லாமல் -விபுவாக -அந்தர் பஹிஸ்ஸ சர்வம் –
நியந்த்ருத்வம் தொடங்கி -அடுத்த பத்தின் சாரமும் கோடி காட்டி -பொசிந்து காட்டுவதை காணலாமே –

————————————————————————————-

கேடு இல் விழுப் புகழ்க் கேசவனைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
பாடல் ஓர் ஆயிரத்துள் இவையும் ஒருபத்தும் பயிற்ற வல்லார்க்கு அவன்
நாடும் நகரமும் நன்குடன் காண நலனிடை ஊர்தி பண்ணி
வீடும் பெறுத்தித் தன் மூவுல குக்கும் தரும் ஒரு நாயகமே.–3-10-11-

ஸூ ராஜ்ய பிராப்தியே பலம் –
கேடு இல் விழுப் புகழ்க் கேசவனைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன-அகில ஹேய ப்ரத்ய நீக-கல்யாணை ஏக குணா பிரதை கேசி ஹந்தா
பாடல் ஓர் ஆயிரத்துள் இவையும் ஒருபத்தும் பயிற்ற வல்லார்க்கு அவன்-குறை இல்லை என்று அருளிச் செய்த
-பகவத் அனுபவ பிரதிபாதகம் -பிரகாசப்படுத்தி
சப்தார்த்த செறிவு மிக்கு -பயில -வைப்பார்க்கு -பயிற்றவுமாம்
நாடும் நகரமும் நன்குடன் காண நலனிடை ஊர்தி பண்ணி
அவிசேஷஜ்ஞ்ஞர் பிரசுரமான நாடும் விசேஷஜ்ஞ்ஞர் பிரசுரமான நகரமும்
நாடு புகழும் பரிசு -பகவத் பாகவத சேஷத்வ சம்பத் –
வீடும் பெறுத்தித் தன் மூவுல குக்கும் தரும் ஒரு நாயகமே.-ஆளும் செல்வம் அவன் கொடுத்தால் இதில் மயங்கி இருக்காமல் –
மோஷானந்தம் அருளி -த்ரிவித -சேதனருக்கும் த்ரிவித அசேதனர்க்கும் –மூ வுலகுக்கும் ஒரு நாயகம் –
அவர் சம்பந்தத்தால் அனைத்தும் உத்தேச்யம் –அத்விதீய நாயகத்வம்
பகவத் ஸ்வரூப -அந்தர்பாவத்தால் -வந்த ததாத்மகத்வம்
சர்வாத்மகம் -சரீரம் ஆத்மா -மத்தஸ் சர்வம் -பிரகலாதன் சொல்லிக் கொள்வது போலே -கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும் –

‘அழிவில்லாத விழுமிய புகழையுடைய கேசவனைப்பற்றி, திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீ சடகோபர் அருளிச்செய்த ஆயிரம் திருப்பாசுரங்களுள்
இப்பத்துத் திருப்பாசுரங்களையும் கற்கவல்லவர்கட்கு, அவ்விறைவன், நாடும் நகரமும் நன்மையோடே கூடக் காணும்படி ஸ்ரீவைஷ்ணவ சம்பத்தோடு நடக்கச் செய்து, மோக்ஷத்தையும் பெறச்செய்து, தன்னுடைய மூன்று உலகங்கட்கும் ஒப்பற்ற தலைமையையும் தருவான்,’ என்றபடி.-: ‘கேடுஇல் விழுப்புகழ்’ என்கிறார்.
‘தாவா விழுப்புகழ்’ என்றார் ஆசிரியர் தொல்காப்பியனார். ‘பொருள் சேர் புகழ்’ என்றார் தெய்வப்புலமைத் திருவுள்ளுவனார்,
‘பயிற்ற’ என்பது, ஈண்டுத் தன்வினையின்கண் வந்தது. ‘வல்லார்கட்கு நாயகத்தைத் தரும்,’ என முடிக்க.
நாடு, நகரம், உலகு என்பன இடவாகு பெயர்கள். ‘காணப் பண்ணிப் பெறுத்தித் தரும்,’ என்க.

‘இத்திருவாய்மொழியைக் கற்றவர்களை எல்லா உலகங்களிலும் பிரசித்தமாம்படி ஸ்ரீ வைஷ்ணவ செல்வத்திலே நடத்தி,
மேலே பரமபதத்திலே சென்றால் தன் செல்வத்தை இவர்கள் இட்ட வழக்கு ஆக்கும்,’ என்கிறார்.

கேடு இல் விழுப்புகழ் கேசவனை –
கேடு இல்லாமல் விழுப்பத்தையுடைத்தான நித்தியமாய் இருக்கிற மங்களம் பொருந்திய நற்குணங்களையுடைய,
கேசியைக் கொன்ற கிருஷ்ணனை.
குரு கூர்ச்சடகோபன் சொன்ன –
‘முனிவரான வால்மீகி பகவானால் சொல்லப்பட்ட ஸ்ரீராகவனுடைய சரிதம்’ என்கிறபடியே, அவதாரத்துக்கு அவ்வருகு போகமாட்டாத
ஆழ்வாரால் அருளிச்செய்யப்பட்ட. –ரகுவர சரிதம் பிரணதீயம் -கேசவனைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
பாடல் ஓர் ஆயிரம் –
தந்த்ரீய லய சம்விதம் -ஏழு ஸ்வரம் –‘பாடத்திலும் கானத்திலும் கேட்பதற்கு மதுரமாய் இருக்கிற’ என்கிறபடியே,
ஸ்ரீ ராமாயணமும் திருவாய்மொழியும் இருக்கும் வரை நம் சம்ப்ரதாயம் வாழுமே –
இசையோடே சேர்ந்த ஆயிரத்துள்.
இவையும் ஒரு பத்தும் – முத்துகளை முகம் அறிந்து கோத்துச் சேர்வை பார்க்குமாறு போன்று, ‘இவையும் ஒரு பத்து’ என்கிறார்.
பயிற்ற வல்லார்கட்கு –
கற்க வல்லவர்கட்கு. ‘பயிற்ற’ என்னும் பிறவினை, ஈண்டுத் தன்வினையின் கண் வந்தது. ‘அவன் தரும்’ என்று கூட்டுக.

நாடு –
பொருளின் விசேடத்தை அறியாத சாதாரண மக்கள்.
நகரம் –
பொருளின் விசேடம் அறிந்திருக்கும் பெரியோர்கள்.
நன்கு உடன் காண –
நன்மையோடே காண. ‘இவனும் ஒருவனே!’ என்று கொண்டாட என்றபடி.
நலன் இடை ஊர்தி பண்ணி –
நன்மைக்கு நடுவே நடக்கும்படி செய்து. நன்மையா வது, ஸ்ரீ வைஷ்ணவஸ்ரீ.
வீடும் பெறுத்தி –
பரமபுருஷார்த்த மோக்ஷத்தையும் கொடுத்து.
மூவுலகுக்கும் தரும் ஒரு நாயகம் –
தன்னதான மூன்று விதமான உயிர்களின் கூட்டத்துக்கும் இவன்தான் ஒப்பு அற்ற தலைவன் ஆம்படி பண்ணிக்கொடுக்கும்
‘ஆயின், சர்வேசுவரனைப் போன்றவனோ இவனும்?’ எனின், அவன் தன்னதான ஐஸ்வர்யத்தை இவன் ‘என்னது?’ என்னும்படி
செய்யும். என்றது, ‘இவனுக்கு ஐஸ்வர்யம் கொடாநிற்கச் செய்தே, இது தனக்குப் புறம்பாம்படி இருக்கை அன்றித்
தன் ஐஸ்வர்யத்திலே அடங்கியதாகும்படி செய்து கொடுப்பான்,’ என்றபடி.-ஸ்வரூப அந்தர்பூதம் -தாதார்த்தம் -என்றவாறு -சரீரம் போலே தானே –

————————————————————————–

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

பூயக-அவதீர்ய புவி
ஸ்வகீயம் திவ்ய வபுகு
பிரத்யஷம் அஷந்தம்
அகிலாஞ்ச குணா ஆனந்தம்
ஸ்துத்வா முனி
சு சரிதா அர்த்தவத் சரிதார்த்த தயா
ந கிஞ்சித் துக்கம் மம
இதரான் சந்தோஷ -தசமே –

—————————————————————-

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –

கேசவன் -பாடி
ப்ராதுர் பாவம் -அவதரித்து -பல பிறப்பாய் ஒளி வரும் இயல்வினன்
பரிஜன விபவாத்
பாவன அலங்க்ரியத்வாத்
ஜயித்ர வியாபார யோகாத்
அகடிகடதகடநாத்
தேவ பாவ பிரசித்தே
ஆச்ரய க்ரீடனத்வாத்
சரசிஜ நியய ஆனந்த்வாத் -அல்லி மலர் போக மயக்குகள் –
சந்த வ்ருத்தே -வேண்டிய உரு
ஐஸ்வர்ய வ்யக்திமத்வாத் –
அத சமனதநு

சதக–மூன்றாம் பத்துக்கு -சங்க்ரஹ ஸ்லோகம் -நாதம் த்ருதீயே
ஏவம் சௌந்தர்ய பூம்னா -முடிச் சோதி
தநு விஹித ஜகத் க்ருத தஸ்ய சௌபாக்ய யோகாத்
ச்வேச்ச்யா சேவ்யா க்ருத்யாத்
நிகில தநு தயா
உன்மாத தானம் அர்ஹ காந்த்யா
லப்ய அர்ச்சா வைபாவத்யாத்
குண ரசிக குணோத்கர்ஷாத்
அஷய க்ருஷ்ட்யா-ஆகர்ஷணம்
ஸ்துத்யத்வாத்
பாப பங்காத்

நித்ய நிரவத்ய நிரதிச ஔஜ்வல்ய சௌகுமார்ய சௌந்தர்ய லாவண்ய யௌவன அநந்த குண நிதி
சௌந்தர்ய –
கரண அபரிச்சேத பௌஷ்கல்யம்
-நிஸ் ஸீமா சௌசீல்யம் –
சர்வாத்மகத்வம் –
ஹர்ஷா பிரகர்ஷத்வம் –
அர்ச்சா வைபவம்
பாகவத தர்சித்வம்
-சர்வ இந்த்ரிய அனுபாவ்யத்வம்
கரண அனந்யார்ஹத்ருத்வம்
காரண சுவ அர்ஹ கர்த்ருத்வம்

—————————————————

திராவிட உபநிஷத் சாரம் -ஸ்ரீ தேசிகன்-

அநீத்ருக் சௌந்தர்யம்
தநு விகாதி சர்காதி
ஸூவ சேவார்த்த ஆகாரம்
பிரகுன வபுஷம்
மோகன தநும்
அர்ச்சா விபவம் -வைபவம்
அதி தாஸ்ய வஹோ தனு
தாத்ருச்யம் –சாத்ருசம் -சதா த்ருச்யம் –
ஸ்துத்யா ஆக்ருதி
அகன நிவ்ருத்தி விக்ரகன்
உபாயத்வ உபேயத்வ திருமேனி

உபாயத்வம் முதல் பத்தால் பஜநீயத்வம்
பலத்வம் போக்யத்வம் இரண்டாம்
இரண்டும் திருமேனியில் காணலாம் மூன்றாம் பத்தால் அருளி
போக்யத்வம் நாலாம் பத்தில் விளக்கி மற்றவை பிராப்யாந்தர தள்ளத்தக்கவை என்கிறார்
ஸ்ரீ யகாந்தன்
அனந்தன் ஸூப தனு விசிஷ்டன் விக்ரகன்
பலம் அசௌ
அவாப்தா ஹேது
பலம் தரும் உபாயம்
உபபத்த்யேய
இதி ச நிர்த்தார்யா சதக
இதானிம்
புத்திஸ் ஸ்தக்ரமம்-இக யுக்தா முனி வராக த்ருடயதீ த்ருடி கரிக்கிறார்
தத அந்யத வைராக்கியம் -வைமுக்ய பூர்வகமாக –
பல பர்யாய போக்யத்வம் -இரண்டும் பராயம்

——————————————————-

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 30-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்–

சன்மம் பல செய்து தான் இவ்வுலகு அளிக்கும்
நன்மை யுடைய மால் குணத்தை நாடொறும் -இம்மையிலே
ஏத்தும் இன்பம் பெற்றேன் எனும் மாறனை யுலகீர்
நாத் தழும்ப வேத்தும் ஒரு நாள்———30-

————————————————————————————–

அவதாரிகை –

இதில்
பகவத் அர்ஹனான எனக்கு ஒரு குறைகளும் இல்லை
என்ற பாசுரத்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
இதரரைக் கவி பாடுகைக்கு அனர்ஹ கரண மாத்ரமாகை அன்றிக்கே
பகவத் விஷயத்தை கவி பாடுகைக்கு அர்ஹ கரணனாகவும் ஆகப் பெற்றேன்
எனக்கு இனி வேண்டுவது உண்டோ என்று
ஹ்ருஷ்டராகிற
சன்மம் பல பல-வின் அர்த்தத்தை
சங்க்ரஹித்து அருளிச் செய்கிறார் -சன்மம் பல செய்து -இத்யாதியாலே -என்கை-

———————————————————————————–

வியாக்யானம்–

சன்மம் பல பல செய்து -என்ற பாட்டு
இத் திருவாய் மொழிக்கு உயிர் பாசுரம் ஆகையாலே
அத்தைக் கடாஷித்து
அருளிச் செய்கிறார் –

சன்மம் பல செய்து என்று –
சன்மம் பல பல செய்து -என்றும் –
பஹூனி மேவ்யதீதானி –
பஹூதாவிஜாயதே –
என்றும் சொல்லுகிறபடியே அசந்க்க்யாதமான அவதாரங்களைப் பண்ணி –

சன்மம் பல பல செய்து தான் –
அகரம வச்யனான தான் –
கௌசல்யாஜனயத் ராமம்
ஜாதோஹம் யத் தவோதராத் –
என்னும்படி ஆஸ்ரித அர்த்தமாக அசந்க்யதமான அவதாரங்களைப் பண்ணி

இவ்வுலகு அளிக்கும் –
தன் வாசி அறியாத
இச் சம்சாரிகளை ரஷிக்கும்
ரஷணம் தான் விரோதி நிரசன பூர்வகமாக இறே இருப்பது –
குணவான் கஸ்ய வீர்யவான் -இறே
விரோதிகளைப் போக்கி
ஈரக் கையாலே தடவி
ரஷிக்கும் நன்மை யுள்ளது சர்வேஸ்வரனுக்கே இறே
நஹி பாலன சாமர்த்த்யம்ருதே சர்வேஸ்வரீம் ஹரீம் –
உலகில் வன்மை யுடைய வரக்கர் அசுரரை மாளப் படை பொருத
நன்மை யுடையவன் சீர் -என்றத்தை சொல்லுகிறது –

இவ்வுலகு அளிக்கும் நன்மை யுடைய மால் குணத்தை –
சீர்ப் பரவப் பெற்ற நான் -என்றத்தை
மால் குணத்தை நாடொறும் இம்மையிலே
ஏத்தும் இன்பம் பெற்றேன்-என்கிறது –

ஒரு தேச விசேஷத்திலே
விபன்யவே
விண்ணோர் பரவும்-2-6-3-
என்று ஸ்துதித்து
சோஸ்நுதே சர்வான் காமான் சஹ ப்ரஹ்மணா-
என்று அனுபவிக்கும் குணங்களை
இவ் விபூதியிலே ஸ்தோத்ரம் பண்ணுகையால் யுண்டான
ஆனந்தத்தைப் பெற்றேன்
குறைவு முட்டுப் பரிவு இடர் துயர் துன்பம் அல்லல் துக்கம் தளர்வு கேடுகள் இன்றி
அம்ருத ஆனந்த மக்னரானவர் என்று இறே
ஆச்சார்ய ஹிருதயத்தில் அருளிச் செய்தது –

ஏத்தும் இன்பம் பெற்றேன் எனும் மாறனை யுலகீர் நாத் தழும்ப வேத்தும் ஒரு நாள் –
இப்படி அவன் கல்யாண குணங்களை
ஸ்துதிக்கப் பெற்றேன் என்று அருளிச் செய்த ஆழ்வாரை
லௌகிகராய் உள்ளவர்களே
நாத் தழும்பு ஏறும்படி ஸ்துதியுங்கோள்
அது தான் பல நாள் வேண்டா
ஒரு நாள் அமையும்
வீவில் காலம் இசைமாலைகள் ஏத்தி மேவப் பெற்றேன்
வீவில் இன்பம் மிக வெல்லை நிகழ்நதனன் மேவியே –
பகலிராப் பரவப் பெற்றேன் -என்கிற நிர்பந்தம் வேண்டா

நாத் தழும்ப வேத்தும் ஒரு நாள்
சத்ருத் சேவிக்க அமையும்
சர்வதா சரசமாய் இருக்கும்
நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன் -என்னும் விஷயம் இறே –

————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: