பகவத் விஷயம் காலஷேபம் -81- திருவாய்மொழி – -3-8-6….3-8-11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

செவிகளால் ஆர நின் கீர்த்திக் கனியெனும் கவிகளே காலப் பண் தேன் உறைப்பத் துற்றுப்
புவியின் மேல் பொன் நெடுஞ் சக்கரத்து உன்னையே அவிவு இன்றி ஆதரிக்கும் எனது ஆவியே.–3-8-6-

பிராணன் -காதின் வியாபாரமும் -கையும் திரு ஆழியும் -உள்ள அழகை அனுபவிக்க
செவிகளால் ஆர நின் கீர்த்திக் கனியெனும்-கீர்த்தி -பக்வ பழம்-கன்னல் கனி போலே –
கவிகளே காலப் பண் தேன் உறைப்பத் துற்றுப்-கவிகளையே -இதுவே இந்த பழம்-கீர்த்தி பழம் -அந்த அந்த கால ராகங்களுடன் –
அதிலே தேன்-மிகவும் செறிய -செவிகளால்
புவியின் மேல் பொன் நெடுஞ் சக்கரத்து -நிரதிசய போக்யமான
உன்னையே அவிவு இன்றி ஆதரிக்கும் எனது ஆவியே-விளம்ப அஷய -பொறுக்காத -விச்சேத ரஹிதமாய்-ஆதரிக்கும்

என் உயிரானது, செவிகள் வயிறு நிறையும்படியாக நின் கீர்த்தியின் உருவமான கனியென்னும் கவிகளை அவ்வக் காலங்கட்குரிய
பண்களாகிய தேனைக்கலந்து அனுபவித்துப் பூமியின்மேலே அழகிய நீண்ட சக்கரத்தையுடைய உன்னையே இடைவிடாது ஆதரியாநின்றது.
‘கனி என்னும் கவிகளே காலம் பண் தேன் உறைப்பத்துற்று’ என்னும் பகுதியை உற்று நோக்கல் தகும்.
அறிவு இன்றி – இடையீடில்லாமல். ‘எனதாவி ஆதரிக்கும்,’ என மாறுக.

‘என்னுடைய உயிரானது-பிராணன் ஆனது – உன்னுடைய கீர்த்தியைத் தன் செவிகளாலே கேட்க ஆசைப்படாநின்றது,’ என்கிறார்;
‘ஆயின், உயிருக்குச் செவி உண்டோ?’ எனின், கன்னமிட்டுக்கொண்டும் கேட்க வேண்டும்படி அன்றோ பகவானுடைய கீர்த்தி இருப்பது?

செவிகளால் ஆர –
செவிகள் வயிறு நிறையும்படியாக.
நின் கீர்த்திக் கனியென்னும் கவிகளே –
கீர்த்தி உருவமாய்க் கனி போலே இருக்கிற கவிகளை.
‘கவி கனி போல் இருக்கையன்றிக்கே, இனிமையின் மிகுதியாலே கனி கவியாயிற்று,’ என்கிறார்.
காலம் பண் தேன் உறைப்பத் துற்று –
செருக்கராய் இருக்கும் அரச புத்திரர்கள் நல்ல பழங்களைத் தேனிலே தோய்த்து உண்ணுமாறு போன்று,
உன் கீர்த்தியாகிற கனிகளைக் காலங்கட்கு அடைத்த பண்களாகிற தேனிலே, பாவின் இன்னிசை பாடித் திரிவனே
அத் தேன் மிஞ்சும்படி கலந்து அனுபவித்து‘ஆயின்,
அவ்வனுபவம் பரமபதத்தே போய்ப் பெறுவது ஒன்று அன்றோ?’ என்ன,
புவியின்மேல் –
‘எங்கேனும் விடாய்த்தாரை எங்கேனும் விடாய் தீர்க்க ஒண்ணாது; பசித்த இடத்தே சோறு இடவேண்டும்,’ என்கிறார்.
‘தேசம் இதுவே ஆனதைப் போன்று விஷயமும் இதுவேயாக வேண்டும்,’ என்கிறார் மேல்;
பொன் நெடும் சக்கரத்து உன்னையே –
விரும்பத்தக்கதாய், இனிமை எல்லை இன்றிக்கேயிருக்கிற திருவாழியை அடையாளமாக உடைய உன்னையே.
‘பரமபதத்தில் சக்கரத்தோடே இருக்குமோ?’ எனின், ’பிரகிருதி மண்டலத்துக்கு மேலான ஸ்ரீ வைகுண்டத்தில் வசிப்பவர்,
திருவாழி திருச்சங்கு கதை இவைகளைத் தரித்திருப்பவர்’ என்பது ஸ்ரீ ராமாயணம்.
அவிவு இன்றி ஆதரிக்கும் –
இடையீடு இன்றி ஆதரியாநின்றது. ‘‘கிடைத்தற்கு அரியது’ என்று பாராமல் கிடைக்கும் விஷயத்திற்போலவே
ஆசைப்படாநின்றது,’ என்றபடி.
எனது ஆவியே –
‘தன்னடையே வரப்பெற வேண்டுங்காண்’ என்றால், அது கேளாது-‘அவன் அருள் பெறுமளவில் நில்லாது’ என்னும்படியான ஆவி.
ஆவி பரந்தாலே ஆராது -அனுக்ரகம் கிடைத்ததும் அவன் சொல்லைத் தான் கேட்கும்

————————————————————————

ஆவியே! ஆரமுதே;என்னை ஆளுடைத் தூவி அம் புள்ளுடையாய்!சுடர் நேமியாய்!
பாவியேன் நெஞ்சம் புலம்பப் பல காலும் கூவியும் காணப்பெறேன் உன கோலமே.–3-8-7-

நானும் பார்க்க வில்லை -பாவியேன் -அதனால் நெஞ்சும் இழந்ததே -பேசாமல் இருக்காமல் கூவினேன்
ஆஸ்ரித சுலபன் -போக்யன் -உன்னை அனுபவிக்க பெற வில்லை
கரணங்கள் போலே கரணி தானும் இழந்ததை சொல்கிறார்
ஆவியே! ஆரமுதே;என்னை ஆளுடைத் தூவி -வியதிரேகத்தில் முடியும் படியாய் -தாரகம்-பரிபூர்ண அமுதம்
-நித்ய போக்கியம் -என்னை அடிமைக் கொள்ள அழகிய சிறகை உடைய
அம் புள்ளுடையாய்!சுடர் நேமியாய்!-பெரிய திருவடி -உஜ்வலமான திரு ஆழி -பிரதிபந்தகம் போக்க
பாவியேன் நெஞ்சம் புலம்பப் பல காலும்-மகா பாவி -நெஞ்சு ஆசைப்பட்டு கூப்பிட
கூவியும் காணப்பெறேன் உன கோலமே-கண்டு அனுபவிக்க பெற வில்லை
தத் தஸ்ய சத்ருசம் பவேத் -ஸ்வரூபமும் இழந்தேன் -பாரதந்த்ர்யம் -அபி மதமும் இழந்தேன் -காணப் பெறேன் -கூவியும் காண வில்லையே –

‘எனது உயிரே! சுவை நிறைந்த அமிர்தமே! என்னை அடிமை கொண்டுள்ள சிறகையுடைய அழகிய கருடப் பறவையை உடையவனே!
சுடர் பொருந்திய சக்கரத்தை உடையவனே! பாவியேனுடைய மனமானது புலம்பும்படி பல தடவை கூவியும்
உன் கோலத்தைக் கண்டு அனுபவிக்கப் பெறுகின்றிலேன்,’ என்கிறார்.
‘புலம்பக் கூவியும் காணப்பெறேன்,’ எனக் கூட்டுக. ‘ஆளுடை’ என்பது உடையானுக்கு அடைமொழி: புள்ளுக்கு அடைமொழியாக்கலுமாம்.

கரணங்களை ஒழியத் தம்முடைய இழவு சொல்லுகிறார். மக்களினுடைய இழவும் பசியும் சொன்னார் மேல்;
இனி, தம் இழவும் பசியும் சொல்லுகிறார். இப்பாசுரத்தில், ‘நான் மஹாபாபி ஆகையாலே, நெஞ்சின் விடாயும் தீரப்பெற்றிலேன்;
என் விடாயும் தீரப்பெற்றிலேன்,’ என்கிறார்.

ஆவியே –
‘காதல் கரை புரண்டு ஓடினும் அடையத்தக்கவன் ஆகிறான் இறைவன் ஆனால், வருந்துணையும் பாடு ஆற்ற வேண்டாவோ?’ என்ன
‘பிராணனை விட்டிருக்கப் போமோ?’ என்கிறார் ‘ஆவியே!’ என்று. -எனது ஆவி ஆவியும் நீ -2-3-4-
ஆரமுதே-
ஆர்ந்த அமுது; நிறைந்த அமுதம்; உள்ளுந்தோறும் தித்திக்கும் அமுது.-நினைக்கும் பொழுது எல்லாம்
அமுதிலும் ஆற்ற இனிய அமுதே அன்றோ? தேவசாதியினுடைய அமுதைக்காட்டிலும் வேறுபாடு தோன்ற ‘ஆர் அமுது’ என்கிறார்.
இவற்றால், தாரகமுமாய் இனிய பொருளுமாய் இருக்க, விட்டிருக்கப் போமோ?’ என்கிறார் என்றபடி.

என்னை ஆள் உடைத் தூவி அம் புள் உடையாய் –
பெரிய திருவடி திருத்தோளில் இருக்கும் இருப்பைக்காட்டி என்னை எழுதிக்கொண்டவனே!
அன்றிக்கே,
‘என்னை ஆளுடை’ என்பதனைப் பெரிய திருவடிக்கு அடையாக்கலுமாம்.
‘ஆயின், திருவடியை ‘என்னை ஆளுடையவன்’ என்று கூறல் என் கருதி?’எனின்,
‘இறைவனோடு சேர்க்குமவர்களுக்குத் தாம் அடிமை என்றே அன்றோ இவர் இருப்பது? இதனால்,
‘மற்றை அமுதத்தைக் கொண்டு வருமவனே காணும், இவ்வமுதத்தையும் கொண்டு வருவான்,’ என்கிறார் என்பதும்,
‘தாரகமுமாய் இனிய பொருளுமாய் இருப்பது ஒன்றைக் கொண்டு வந்து தருவார் உண்டாயிருக்க, ஆறி இருக்க விரகு உண்டோ?’ என்கிறார் என்பதும் பெறுதும்.
சுடர் நேமியாய் –
அழகுக்கும் விரோதிகளை அழிப்பதற்கும் தானேயாக இருக்கும் கருவியை உடையவன்;
இதனால், ‘வரும் வழியில் எவையாகிலும் தடைகள் உளவாகிலும் கைம்மேலே தீர்த்துக்கொண்டு வருகைக்குக் கருவி உண்டு,’ என்பதனைத் தெரிவித்தபடி.

பாவியேன் கூவியும் காணப் பெறேன் –
‘ஆரே துயர் உழந்தார்?’ என்கிறபடியே, பகவத்விஷயத்தை ஆசைப்பட்டாரில் இழந்தார் இல்லை கண்டீர்;
ஆதலால், கூவியும் காணப் பெறாத தாம் தம்மைப் ‘பாவியேன்’ என்கிறார்.
பாவியேன் நெஞ்சம் –
‘நந்தன் பெற்றனன்; நல்வினை இல்லா நங்கள்கோன் வசுதேவன் பெற்றிலனே!’ என்கிறபடியே,
‘தமப்பனான சம்பந்தம் ஒத்திருக்க, புண்ணியம் செய்யாத என்னைக் கைப்பிடிக்கையால் அன்றோ ஸ்ரீ வசுதேவர் இழந்தது?’
என்று தேவகி கூறியதுபோன்று, எனக்குக் கரணமாய் இருப்பதனால் அன்றோ இது இழக்கவேண்டிற்று?’ என்பார்,
‘பாவியேன் நெஞ்சம் புலம்ப’ என்கிறார்.
‘மமைத துஷ்க்ருதம் -என்னுடைய தீவினைகள்தாம் காரணம்’ என்றாள் பிராட்டி.
புலம்ப –
நெஞ்சானது காணப்பெறாத இழவோடே கூப்பிட.
‘ஆயின், காணப்பெறாதது அண்மையில் இன்மையாலோ?’ எனின், அன்று;
‘கடிக்கமலத்துள் இருந்தும் காண்கிலான்,’ என்னுமாறு போன்று, நெஞ்சத்துப் பேராது நிற்கும் பெருமானை அன்றோ
நெஞ்சு காணப்பெறாமல் கூப்பிடுகிறது? பலகாலும் – ஒருகால் கூப்பிட்டார்க்கும் இழக்க வேண்டாத விஷயத்திலே பல கால் கூப்பிட்டும். கூவியும் காணப் பெறேன் –
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் நாராயணா வாராய் ஒரு கால் கூப்பிட்டதும் பெற்றானே –
‘ஒன்றில் விருப்பம் பெற்றேன் அல்லேன்; சொரூபம் பெற்றேன் அல்லேன்,’ என்பார், ‘கூவியும்’ என்கிறார்.

‘இராக்கதர்களைக் கொன்று என்னை அழைத்துச் செல்வாராயின், அது அவருக்குத் தக்க செய்யலாம்,’ என்று இருக்கப் பெற்றேன் அல்லேன்;
மடல் ஊர்ந்தார் பெற்ற பேற்றைப் பெற்றேன் அல்லேன்.
என் சொரூபத்தையும் அழித்தேன், அவன் சொரூபத்தையும் அழித்தேன். அவன் நீர்மையையும் அழித்தேன்,
சீதை கூவாமல் -ஸ்வரூபம் இழக்காமல் -உஷை கூவி பெற்றாள் அபிமதம் -பல கால் கூவி -அவன் ஸ்வரூபத்தை அழித்தேன்-
சர்வ ரஷகன் இப்படி இருப்பானா -உலகோர் பேசும்படி
என் அடிமைத் தன்மையையும் அழித்தேன். அவன் ஈசுவரத்துவத்தையும் அழித்தேன், என்னுடைய ஈசிதவ்யத்துவமும் போயிற்று
இனி, கொள்ள இருக்கிறார் யார், கொடுக்க இருக்கிறார் யார்?
உன கோலமே –
இரண்டு தலையையும் அழித்துப் பெற வேண்டும் விஷயத்தினுடைய சிறப்புச் சொல்லுகிறது.
பிரிவு காலத்தில் கண்ணுறங்குதல், சூது சதுரங்கங்களோடே போது போக்குதல் செய்யலாம் விஷயமாகப் பெற்றேனோ?
உண்டோ கண்கள் துஞ்சுதல்?’ என்றும், ‘என் நினைந்து போக்குவர் இப்போது?’ என்றும் வருகின்றபடியே,
கண்ணும் உறங்காதே போது போக்கவும் அரிதாய் அன்றோ இருப்பது?

——————————————————————————-

கோலமே! தாமரைக் கண்ணது ஓர் அஞ்சன நீலமே! நின்று எனது ஆவியை ஈர்கின்ற
சீலமே! சென்று செல்லாதன முன் நிலாம் காலமே! உன்னை எந்நாள் கண்டு கொள்வனே?–3-8-8-

அனுபாவ்யமான சௌந்தர்யாதிகள்
கோலமே! தாமரைக் கண்ணது ஓர் அஞ்சன-தர்ச நீயமான -அத்விதீயமான -கோலம் ஏய்ந்த கண்ணன் என்றுமாம்
நீலமே! நின்று எனது ஆவியை ஈர்கின்ற-திருமேனி வர்ணம் -நீல நிறமே வடிவாக -குணமே குணியாக
ஸ்திரமாக -ஆத்மாவை சிதிலம் ஆக்கும்
சீலமே! -சீல குணமே நிரூபணம் -சீலவான் இல்லை –
சென்று செல்லாதன முன் நிலாம் காலமே! உன்னை எந்நாள் கண்டு கொள்வனே?–முக்காலத்தையும் -அடியேன் –தமது இழவு
-நீ இட்ட வழக்கு காலம் -எல்லாம் –
ஏவம் விதமான உன்னை என்று கண்டு அனுபவிப்பது

அழகே உருவமானவனே! தாமரை போன்ற கண்களையுடையதான ஒப்பற்ற அஞ்சனத்தினது நீல நிறமே ஒரு வடிவாக உடையவனே!
நிலைபெற்று எனது உயிரை அறுக்கின்ற சீலமே வடிவாக உடையவனே! இறந்த காலம் நிகழ்காலம் எதிர்காலம் என்னும் மூன்று காலமும்
நீ இட்ட வழக்காம்படி இருப்பவனே! உன்னை என்று கண்டு அனுபவிப்பேன்?
ஈர்தல் – அறுத்தல். முன்னிலாங்காலம் – எதிர்காலம்.

‘உம்முடைய விருப்பத்தைச் செய்கைக்கு ஒரு காலம் இல்லையோ? அது வருமே அன்றோ?’ என்ன,
‘அதுவும் நீ இட்ட வழக்கு அன்றோ?’ என்கிறார்.

கோலமே –
அழகும் அழகுக்குப் பற்றுக்கோடான பொருளும் என்று இரண்டு இன்றிக்கே, அழகுதானே வடிவாய் இருக்கிறபடி.
ஞாதாவின் பக்கலிலே ஞான வியபதேசம் பண்ணா நின்றதே யன்றோ தத் குணசாரத்துவத்தாலே?
விஜ்ஞ்ஞாதா என்னாமல் -விஜ்ஞ்ஞானம் யஜ்ஞ்ஞம் தனுதே -பண்ணும் என்பதே போலே –
அப்படி அழகே விஞ்சி அதனையிட்டு நிரூபிக்க வேண்டும்படி இருக்கையாலே, ‘கோலமே!’ என்கிறார்.
தாமரைக் கண்ணது –
அதற்குப் பற்றுக்கோடான திருவுடம்பு இருக்கிறபடி. அதுதன்னிலும் ஒரோ அவயவமே அமைந்திருக்கிறபடி.
சிவப்பாலும் மலர்ச்சியாலும் மிருதுத் தன்மையாலும் தாமரையை ஒரு வகை உவமை சொல்லலாம்படி இருக்கிற கண்ணழகையுடையவனே!
அஞ்சன நீலமே –
‘அஞ்சனமே! நீலமே!’ என்றபடி.
ஒன்றே உபமானமாவது ஒன்று இல்லாமையாலே அங்கும் இங்கும் கதிர் பொறுக்குகிறார்.நீலம்-கறுப்பு -அஞ்சனம் மிக கறுப்பு-என்றபடி
அன்றிக்கே,
‘அஞ்சனத்தினது நீலநிறத்தை வடிவாக வகுத்தாற் போன்ற வடிவை உடையவனே!’ என்னலுமாம்.
‘நன்று; அழகும் வடிவுமேயாய் அகவாயில் ஒரு பசை அற்று இருக்குமோ?’ என்னில், ‘இராது’ என்கிறார் மேல்:
நின்று எனது ஆவியை ஈர்கின்ற சீலமே –
பிரிவு காலத்தில் வடிவை மறக்கிலும் மறக்க ஒண்ணாதபடி பின்னாடி என் நெஞ்சை அறுத்துக்கொண்டு இருக்கின்ற
சீலமே சொரூபமானவனே! இங்கே ‘சீலம்’ என்றது, ‘செய்ய தாமரைக்கண்ணன்’ என்ற திருவாய்மொழியில்
‘நெஞ்சினால் நினைப்பான் எவன்? அவனாகும் நீள்கடல் வண்ணன்,’ என்கிற அர்ச்சாவதாரத்தின் நீர்மையை.
அன்றிக்கே,
‘வளவேழ் உலகின்’ என்ற திருவாய்மொழியில் தம்மைச் சேரவிட்டுக் கொண்ட சீலமாதல்.

‘இப்படி அழகும் குணங்களும் உண்டானாலும், பெறும் இடத்தில் இன்ன காலம் என்று இல்லையோ?’ என்னில்,
சென்று செல்லாதன முன்னிலாம் காலமே –
இறந்த காலம் நிகழ்காலம் எதிர் காலம் என்னும் மூன்று காலத்தையும் நீ இட்ட வழக்காக உடையவனே!
இதனால், ‘அக்காலமும் நீ இட்ட வழக்கு அன்றோ?’ என்கிறார் என்றபடி. ‘சென்று’ என்கிறது, இறந்த காலத்தை.
‘செல்லாதன’ என்கிறது, நிகழ்காலத்தை. ‘முன் நிலாம் காலம்’என்கிறது, இனி வருகின்ற எதிர்காலத்தை.
‘காலத்திற்கும் எமனுக்கும் இயங்கியற்பொருள் நிலையியற்பொருள்கட்கும் பகவான் ஒருவனே ஏவுகின்றவன் ஆகிறான்;
உனக்குச் சொல்லுகிறேன்; இது சத்தியம்,’–சங்கல்ப சக்தியால் -ஈசதே பகவான் ஏகக- என்பது சஞ்சயன் கூற்று.–
சர்வரையும் -ப்ரஹ்மாதிகளையும் – தன் புத்தி அதீனமாக நியமிப்பவன் – பகவத் விஷயத்தில் -இதில் புகழ்ச்சி இல்லை
உன்னை எந்நாள் கண்டுகொள்வன் –
வடிவழகும் குணங்களும் விடலாய் இருந்தன இல்லை; காலக் கழிப்புச் சொல்ல ஒண்ணாதபடியாய் இருந்தது;
ஆனபின்பு, நான் உன்னைக் காண்பது என்று சொல்லாய்? என்றது,
‘பதினான்கு வருஷங்களும் முடிவுற்ற பின்னர், பஞ்சமி திதியில்’ என்றாற்போன்று,
நீயும் ‘நம்மை இந்நாள் காணக் கடவை என்று சொல்லாய்’ என்றபடி.

———————————————————————————–

கொள்வன் நான், மாவலி! மூவடி தா’என்ற கள்வனே! கஞ்சனை வஞ்சித்து வாணனை
உள்வன்மை தீர,ஓர் ஆயிரம் தோள் துணித்த புள்வல்லாய்! உன்னை எஞ்ஞான்று பொருந்துவனே?–3-8-9-

சமஸ்த பிரதி பந்தக நிவர்த்தகனாய் இருக்கும் உன்னை என்று அடைவேன் -வைமுக்யம் மாற்றி -புருஷார்த்த பர்யந்தமாக அனைத்தையும்
நீயே போக்கி அருள வேணும்
கொள்வன் நான், மாவலி! மூவடி தா’என்ற கள்வனே! -முக்த உக்தியால் வசீகரிக்க -கிருத்ரிமன்
கஞ்சனை வஞ்சித்து வாணனை-கஞ்சன் வஞ்சனம் அவன் தன்னோடு போகும் படி பண்ணி
இவன் கண்ணில் இட்ட மருந்து அவன் அழ -மருந்தே இடாமல் அவர்கள் அழுதார்கள்
உள்வன்மை தீர,ஓர் ஆயிரம் தோள் துணித்த புள்வல்லாய்! -நெஞ்சு வலிமை போகும் படி -தொழுவித்துக் கொண்ட தொழ-அவனது
-தொழாத தோள் இவனது -அதனால் அத்விதீயம் -இரண்டை விட்டு விட்டான் –
கருட வாகனன் –
உன்னை எஞ்ஞான்று பொருந்துவனே?-தன்னைப் பற்றியே இதுவும் -ஆஸ்ரித விரோதி சமர்த்தனன்-என்று சேர்வேனோ

‘மஹாபலி! நான் கொள்வேன்; மூவடி மண்தா,’ என்ற கள்வனே! கம்ஸனைக் கொன்று, வாணனுடைய மனவலிமை தீரும்படி
ஒப்பற்ற ஆயிரம் தோள்களையும் துணித்த கருடவாகனனே! உன்னை எப்பொழுது சேர்வேன்?
‘மூவடி’ என்றது, மூவடி மண்ணினைக் குறித்தது. ‘வஞ்சித்துத் துணித்த புள் வல்லாய்’ என்க. புள் வல்லாய் – புள்ளைச் செலுத்துவதில் வல்லவனே.

‘பாதுகாப்பதற்கு உரிய உபாயத்தை உடையனுமாய் விரோதிகளை அழிக்கிற சீலனுமான உன்னை நான் கிட்டுவது என்று?’ என்கிறார்.

கொள்வன்
1-மலையாளர் வளைப்புப் போலே கொண்டு அல்லது போகேன் என்றானாயிற்று.
அன்றிக்கே,
2-இவனுடைய வாமன வேஷத்தைக் கண்டு -விநீத வேஷம் கண்டு -‘இவன் நம் பக்கல் ஒன்று கொள்வதுகாண்’ என்று
நினைந்தமை தோன்ற இருந்தான் ஆயிற்று மகாபலி; நினைத்ததை அறிந்து, ‘நான் கொள்வேன் என்கிறான்’ என்னுதல்.
அன்றிக்கே,
3-இவன் ஒன்றிலும் பற்று இல்லாதவனாய் இருத்தலை வடிவில் கண்டு, ‘இவன் நம் கையில் ஒன்று கொள்ளுமோ?’ என்று இருந்தான் மஹாபலி;
‘நீ அங்ஙன் நினைக்க வேண்டா; நான் விருப்புடையேன்,’ என்கிறான் என்னுதல்
நான் –
உன்பக்கல் பெற்றால் அன்றி ஓர் அடி இடாத நான்.
மாவலி –
பிறந்த அன்றே பிக்ஷையிலே இறங்கினான் ஆகையாலே பிரபுக்களை உபசரித்து வார்த்தை சொல்லி அறியானே!
இவனைத் தவிர வேறு பிரபு இல்லையே -முன்பு சிலர்க்குத் தாழ்வு சொல்லி யறியான்;
பிறந்த பின்பு வாசனை பண்ணுகைக்கு நாள் இல்லை; அதனாலே, ‘மாவலி’ என்கிறான்.
எல்லோரும் தன்னை உயர்த்திச் சொல்லுமது ஒழிய இப்படிச் சொல்லக் கேட்டு அறியாமையாலே ‘இவன் ஒரு பாலன் தன் முன்பே நின்று
சிறு பேரைச் சொல்லி அழைக்கிறான்,’ என்று நினைத்து இனியனாய் முகத்தைப் பார்த்து,-‘உனக்கு வேண்டுவது என்?’ என்றான்.
‘மூவடி’
என்கிறான் -தன் பக்கல் கொள்ளுமவர்களில் இப்படிச் சிறுக விரும்புகின்றவர்கள் இல்லாமையாலே விருப்பு இன்றியே இருந்தான்;‘பராமுகம் பண்ணாதே
‘தா’- என்கிறான்.
என்ற கள்வனே –
இந்திரன் சரணம் புக்கு நின்றான்; கொடையாளியாய் இருப்பான் ஒருவன் அவனுடைய இராச்சியத்தைப் பறித்துக்கொண்டான்;
‘இராவணன் முதலியோர்களைப் போன்று அழியச்செய்யப் போயிற்று இல்லை, சிறிது தர்மத்தை ஏறிட்டுக்கொண்டு நிற்கையாலே;
இந்திரனோ, சரணம் புக்கு நின்றான்; இனிப் போம் வழி என்?’ என்று பார்த்துத் தன்னை இரப்பாளன் ஆக்கி,
சுக்கிரன் முதலியோர், ‘இவன் தேவ காரியம் செய்ய வந்தான்,’ எனச்செய்தேயும், அவ் வார்த்தைகள் அவன் நெஞ்சில் படாதபடி
அவனை வடிவழகாலும் பேச்சழகாலும் வாய் மாளப் பண்ணின வஞ்சனங்கள் எல்லாவற்றையும் நினைத்துக் ‘கள்வனே’ என்கிறார்.

கஞ்சனை வஞ்சித்து –
கம்ஸன் மாமனாய், விழிப்புடன் இல்லாமையாலே புகுந்ததாகத் தானும் துக்கத்தையுடையனாய்க் கண்ண நீர்
பாய்த்துவானாக வாசலிலே குவலயாபீடத்தையும் மல்லரையும் நிறுத்தி வைக்க, அவற்றை அழித்து,
கம்ஸன் கோலின வஞ்சனத்தை அவன் தன்னோடே போக்கினவனே!
வாணன் உள் வன்மை தீர ஓர் ஆயிரம் தோள் துணித்த புள் வல்லாய் –
‘சர்வேசுவரனை அடைந்த பிறகு அந்த சீவாத்துமா பயம் இல்லாதவன் ஆகிறான்’ என்கிறபடியே,
பகவானுடைய அடியார்கள் இருப்பது போன்று, புன் சிறு தெய்வத்தைப்பற்றி இருந்த வாணனுடைய நெஞ்சுவலி
கைமேலே போகும்படியாகப் பெரிய திருவடியின்மேலே ஏறிச் சாரிகை-வையாளி-வந்தவனே!
‘கரபாதை அன்றோஇவனை இப்படிக் கலங்கப் பண்ணிற்று’ என்று அடுத்தேறாக வந்த கரத்தைக் கழித்து
இரண்டு கரங்களோடு நிறுத்தினவன்,’ என்பார், ‘உள் வன்மை தீர ஆயிரம் தோள் திணித்த’ என்கிறார்.
‘ஆயிரம் கரம் கழித்த ஆதி மால்’ என்றார் திருமழிசைப்பிரான். ‘இவன் கைவிஞ்சினான்’ என்று இவனைக் கை கழிய விட்டான் என்றபடி.
‘வாள் வல்லாய், தோள் வல்லாய்’ என்பன போன்று ‘புள் வல்லாய்’ என்கிறார்.

உன்னை எஞ்ஞான்று பொருந்துவனே –
சொரூபஞானம் பிறந்தவாறே அவன்பக்கல்நின்றும் பிரிந்தாற்போலே இருக்கிறது காணும் இவர்க்கு.
‘சூரியனோடு சேர்ந்த ஒளியைப் போன்று நான் ஸ்ரீராமபிரானோடு சேர்ந்தேயிருக்கிறேன், வேறுபட்டவள் ஆகேன்,’ என்கிற பிராட்டி
அசோகவனத்திலே பிரிந்திருந்தாற் போலே இருக்கிறதுகாணும், சொரூபஞானம் பிறந்தவாறே உடம்புடன் இருக்கும் இருப்பு,’ என்றபடி
‘சொரூப ஞானம் பிறந்தால் அவன் பக்கல் நின்றும் பிரிந்தது போன்று தோன்றும்படி எங்ஙனே?’ எனின்,
சொரூபஞானம் பிறந்தவாறே முன்புள்ள காலமெல்லாம் சமுசாரியாய் நின்ற நிலை வந்தேறியாய்த் தோன்றிற்று.
ஆயின், பொருந்துதல் நிச்சயமாமோ ‘எஞ்ஞான்று’ என்கைக்கு?’ எனின்,
‘முற்றறிவினனாய்ச் சர்வசத்தியையுடையனாய்ச் சீலம் முதலான குணங்களையுடையனான உன்னைப் பார்த்தால் இழக்க வேண்டுவது இல்லை;
நான் இழக்கமாட்டாதவனாய் இருந்தேன்; ஆன பின்பு, உன்னைக் கிட்டும் காலம் சொல்லாய்,’ என்கிறார்.

எல்லா ஆத்துமாக்களுக்கும் அடிமையாய் இருக்கும் தன்மை பொதுவாக இருக்கச் செய்தேயும், பத்தரும் முத்தரும் நித்தியரும்
என்கிற பிரிவைப் போன்றதே அன்றோ பிராட்டிமார்களும்? ஆகையால்,-அநந்யா- ‘வேறுபட்டவள் ஆக மாட்டேன்’ என்கிற பிராட்டியினுடைய
வார்த்தை எல்லார்க்கும் சொல்லலாம்படி அன்றோ சொரூபத்தை உணர்ந்தால் இருப்பது?
‘ஆயின், ஈசுவரனோடு ஐக்கியமாக ஈசுவர கோடியாகச் சொல்லாநிற்க, பிராட்டியை உயிர்கள் கூட்டத்தோடு சொல்லுதல் என்?’
எனின், ஈசுவரனில் பிராட்டிமார்க்குப் பேதம் சொல்லுகிற பிரமாணங்கள் எல்லாம், அல்லாதாரைப் போன்று பிரிவு உண்டு என்னுமிடம் சொல்லுகின்றன;
ஐக்கியம் சொல்லுகிற இடமெல்லாம் -கச்சதா மாதுல குலம் போலே –
‘பாரதந்திரிய எல்லையைப் பற்றச் சொல்லுகின்றன’ என்று இடைப்பிற வரலாக-ப்ராசங்கிகமாக – ஓர் உருவிலே அருளிச்செய்தார்-
ஆயிரம் கரம் கழித்த ஆதி மால் –
கரபாஹை கலங்கப் பண்ணியது -அடுத்தேறாக வந்த -அடுக்கு அடுக்க -வந்தவற்றை நீக்கி -பிராப்த கரத்திலே நிறுத்தி -இரண்டில் நிறுத்தினான்
வாணன் உடைய கைப்பற்றையும் கழித்து இறையிலி -கரம் இல்லாமல் -என்றுமாம் –
கைப்பற்று -பரமசிவன் -இறை இல்லாமல் ஆக்கி -இறை -கரம் என்றும் அர்த்தம் உண்டே –
‘வாணனுடைய கைப்பற்றையும் கழித்து இறையிலி ஆக்கின உன்னை எந்நாள் வந்து கிட்டுவேன்?’ என்கிறார்.

—————————————————————————–

பொருந்திய மாமருதின்னிடை போய எம் பொருந் தகாய்! உன் கழல் காணிய பேதுற்று
வருந்தி நான் வாசக மாலை கொண்டு உன்னையே இருந்திருந்து எத்தனை காலம் புலம்புவனே?–3-8-10-

பின் தொடர்ந்து உரலும் போக -நாம் போக வேண்டாமோ -பிரதிபந்தகன்களை போக்குபவனும் அவனே
பொருந்திய மாமருதின்னிடை போய எம் பொருந் தகாய்! -தன்னில் தான் செறிந்து -பெரியவனே -நெடும் தகை குறுங்குடி கலியன்
அக்காலத்தில் மடிய விட்ட திருவடிகளை
உன் கழல் காணிய பேதுற்று-ஈடுபட்டு -கிலேசித்து
வருந்தி நான் வாசக மாலை கொண்டு உன்னையே -குண வாசகம்
இருந்திருந்து எத்தனை காலம் புலம்புவனே?-கால தாமதம் பொறுக்காமல் -நிரதிசய போக்யமான -உன்னையே நோக்கி
இளைத்து சிதிலமாகி இருந்து கூப்பிடக் கடவேன்

பொருந்திய பெரிய மருதமரங்களினிடையே சென்ற எம் பெருந்தகாய்! உன் திருவடிகளைக் காணவேண்டும் என்று
மயங்கி வருந்தி வார்த்தைகளாகிய மாலையைக் கொண்டு இருந்து உன்னையே எத்தனை காலம் புலம்புவேன்?
‘போய பெருந்தகாய்’ என்க. காணிய – வினையெச்சம்.. பேதுறல் – அறிவு திரிதல்.

‘உன்னைக் காணப்பெறாத துன்பத்தால் வருந்துகிற நான், இன்னம் எத்தனை காலம் கூப்பிடக் கடவேன்?’ என்கிறார்.

பொருந்திய மா மருது –
மருது, மா மருது, பொருந்திய மா மருது.
மருது என்கையாலே மரத்தைச் சொல்லி, ‘மரங்கள்போல் வலிய நெஞ்சம்’ என்று வன்மைக்கு
மரத்தைச் சொல்லுகையாலே, நெஞ்சின் வன்மையைத் தெரிவித்தபடி.
‘மா’ என்கையாலே, மா–மாறுஎன்று கறுப்பாய், அத்தால், சீற்றத்தைத் தெரிவித்தபடி.
அன்றிக்கே, ‘மா’ என்பதனால் பெருமையைச் சொல்லி, அதனால், வேறு வினை செய்யாமல் மேலே விழ அமைந்திருத்தலைத் தெரிவித்தபடி ஆகவுமாம்.
‘பொருந்திய’ என்றதனால், நினைத்த காரியத்திற்குப் பொருந்தியிருத்தலைக் கூறியபடியாய், இவற்றின் நெஞ்சில் பொருத்தத்தைத் தெரிவித்தபடி.
ஆக, ‘இப்படிச் செய்து கொள்ளப்பட்ட உடன்பாட்டை யுடையராய், சீற்றத்தை யுடையராய் கிருஷ்ண தரிசனத்தாலும்
நெஞ்சு நெகிழாத வன்மையையுடையராய், மரத்தின் வடிவாய் அமைந்த அசுரர்கள்’ என்றபடி
இடை போய –
இப்படி நிற்கிறவற்றின் அருகே போகையுங்கூடப் பயங்கரமாய் இருக்க, இவற்றின் நடுவே, ஒன்றிலே வெளி கண்டு போவாரைப் போலே போனான் ஆயிற்று.
மருதங்களின் இடை -சொல்லாமல் ஒருமை -பொருந்தி -காம குரோதங்கள் சொல்லி ஒருமை ஒரு தாய் பிள்ளைகள் -லஷ்யம் ஓன்று போலே இங்கும்
எம் பெருந்தகாய் –
அவற்றின் நடுவே அவற்றைத் தப்பிப் போய் எனக்கு இறைவனான உன்னைத் தந்த பெரியோனே!
ஜகத் சேஷி உடைத்தாய் ஆயிற்றே என்று உகக்கிறார் —

உன் கழல் காணிய –
‘அப்போது கடகட என்ற ஓசையைக் கேட்டுப் பரவசப்பட்டு’ என்கிறபடியே, கடகட என்று அவை முரிந்து விழுகிற போதை
ஓசையைக் கேட்டுப் புரிந்து பார்த்து முன் இல்லாத காட்சியைக் கண்ட காரணத்தால் மலர்ந்த அக்கண் போலே சிவந்திருக்கிற
திருவடிகளைக் காணவேண்டும் என்று ஆசைப்பட்டு. என்றது,
‘தாமரைக் கண்ணரான அந்தக் கண்ணபிரான் சென்றார்’ என்று புரிந்து பார்த்த கண்களைக் காண ஆசைப்பட்டான் மஹரிஷி;
தவழ்ந்து போகிற போதைத் திருவடிகளைக் காண ஆசைப்படுகிறார் இவர்,’ என்றபடி.
எல்லா நிலைகளிலும் அவனை அடி விடாரே. ‘மஹரிஷியைப் போன்று கண்ணழகைக் காண ஆசைப்படாமல்,
இவர் திருவடிகளின் அழகைக் காண ஆசைப்படுவான் என்?’ எனில், தந்தாம் ஜீவனத்தை நோக்கத் தேடுமித்தனை அன்றோ எல்லாரும்?
ஆகையாலே, இவரும் தம்முடைய ஜீவனத்தை நோக்கத் தேடுகிறார்.
எல்லா அவச்தைகளிலும் திருவடி விடாதவர் இவர் -ரிஷி ஜீவனம் திருக் கண்கள் இவர் ஜீவனம் திருவடி
உரல் பின்னால் வரும் என்று தெரியாத முக்தன் -தம்மால் போக முடியுமா என்று பார்த்தானாம்
இவன் போனால் எல்லாம் வருமோ -ஜகதாகாரன் தானே –
ஒன்றும் இல்லாத உரலே பின்னால் வர வில்லை -கட கட சப்தம் கேட்டதாம் -விரஜ ஜனங்கள் ஓடி வர -மலங்க விளித்தானாம் –
அந்த கண்களை பார்க்க ஆசைப் பட்டது போலே இவர் சிவந்த திருவடிகளை காண ஆசைப் படுகிறார்

பேதுற்று –
அறிவு கெட்டு. வருந்தி – இழந்த விஷயத்துக்குத் தக்கபடி அன்றோ கிலேசமும் இருப்பது?
நான் –
அடியே பிடித்து ஜீவித்துப் போந்த நான்;
‘நின் செம் மா பாத பற்புத்தலை சேர்த்து ஒல்லை’ என்கிறபடியே, அத்திருவடிகள் பெறில் -தலையாக ஜீவித்து,
அஃது இல்லையாகில் இல்லையாம்படியான நான் என்றபடி.
வாசகமாலை கொண்டு –
ஒருமலை எடுத்தாற் போலே ஆயிற்று- இவர்க்கு ஒரு சொற் கொண்டு சொல்லுகை.
உன்னை –
‘அந்த ஆனந்த குணத்தினின்றும் வேத வாக்குகள் மனத்தாலுங்கூட நினைக்க முடியாமல் திரும்புகின்றனவோ’ என்கிறபடியே,
பேசித் தலைக்கட்ட ஒண்ணாத உன்னை.
இருந்து இருந்து –
ஒருகால் ஒன்று சொல்லப்புக்கால் அது தலைக்கட்டுகைக்கு நடுவே பதின்கால் பட்டைப் பொதிசோறு அவிழ்க்க வேண்டுங்காணும்.
கமுகு பட்டையில் கட்டிக் கொண்டு போன அன்னம் -அவ்வளவு சிதிலம் –
எத்தனை காலம் புலம்புவனே –
‘சாதனமாக நினைத்துச் சொல்லமாட்டார், அடையத்தக்க பேறாக நினைத்துத் தவிரமாட்டார்; இதற்கு முடிவு என்?’ என்கிறார்.

—————————————————————-

புலம்பு சீர்ப் பூமி யளந்த பெருமானை நலங்கொள் சீர் நன் குருகூர்ச் சடகோபன் சொல்
வலங்கொண்ட வாயிரத்துள் இவையுமோர் பத்து இலங்குவான் யாவரும் ஏறுவர் சொன்னாலே –3-8-11-

பலமாக பரமபத பிராப்தி
புலம்பு சீர்ப் பூமி யளந்த பெருமானை -கொண்டாடும்படி குணங்கள் -சர்வேஸ்வரன்
நலங்கொள் சீர் நன் குருகூர்ச் சடகோபன் சொல் -அனுபவ அபி நிவேசம் -இதுவே நலம் -சீர் -ஞானாதி குண விசிஷ்டர்
வலங்கொண்ட வாயிரத்துள் இவையுமோர் பத்து -அர்த்த பிரதிதான பலம் உடைத்தாய் -தெளிவாக சொல்லும் –
இலங்குவான் யாவரும் ஏறுவர் சொன்னாலே-அத்யுஜ்வலமான பரமபதம்

சப்த மாத்ரத்தாலே -பரமபதம் பெறுவார் -சொன்னாலே -இதில் பிரார்த்தித்த படியே –
ஒவ் ஒரு இந்த்ரியமும் -மற்ற வியாபாரம் பெற அங்கே தானே நடக்கும் –

புலம்பு சீர்ப்
இவர் புலம்பிய படி உலகம் எல்லாம் புலம்புமே
பூமி யளந்த பெருமானை
அந்ய சேஷத்வ /ஸூ ஸ்வதந்த்ர்யம் -இரண்டையும் தவிர்ந்தார் -சர்வ ஸ்வாமி –
நலங்கொள் சீர்
கரணங்கள் சேதன சமாதியால் விடாய்த்து
அவை தான் ஓர் இந்த்ரிய வ்ருத்தி மற்றவற்றை ஆசைப்பட்டு
இவர் அவைகள் உடன் ஆசைப்பட்டு
நன் குருகூர்ச் சடகோபன் சொல்
ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ உடைய ஆழ்வார்
அனுபவ அபி நிவேசம் படைத்த ஆழ்வார்
வலங்கொண்ட வாயிரத்துள் இவையுமோர் பத்து
பிரதிபாத்யம் -வலம் வந்து -பிரதஷினம் பண்ணி -வியாபித்த -கபளீகரித்த
இலங்குவான் யாவரும் ஏறுவர் சொன்னாலே
இன்னார் இனையார் இல்லாத
பகவத் விச்சேதம் இல்லாத
ச ஏகதா பவதி -அநேக சரீரங்கள் பரிகரித்து
அவ்வோ சரீரங்களிலும் ஒவ் ஒரு இந்த்ரியமும் மற்றவற்றை எல்லாம் விரும்பி அனுபவித்து
பூர்ண அனுபவம் பண்ணலாம் படி
தேசம் பெறப் பெறுவார் –

——————————————————————————————-

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

சஷ்டே-3-6- பஹிர் நயனதாக ஹரிம் -வெளி அனுபவம் ஆசை பிறந்து –
முனே அத ததீய ஜன அவலோகாத் -3-7-ததியர் -சமோஹம்
உத்தம்பிதா -ஆசை வளர -மேலும் மேலும் பெறுக -அவன் உடன் சேரவும் ஆசை வளரும்
ஸூ கரணைர் அபி –ஆழ்வாரது கரணங்களும்
காம யந்தி -தனித் தனியே ஆசை கொண்டன -பக்தி பரவஸ்யத்தால்-
சோக அதிரேக ஜனனி -மேலும் சோகத்தை கிளப்பி
புநர் அஷ்டமே பூத்

—————————————————————-

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –

சித்தா க்ருஷ்டீ பிரவீணை–நெஞ்சம் கிடக்கும்-
அபி லபன சுகைகி–வாசகமே அபி லாபம் பேசுவது
ஸ்பர்ச வாஞ்சா துகான் -தொடுவதற்கு விரும்பும் கைகள் —
ஆதன்வாதான் த்ரு த்ருஷ்யா -தர்சன இச்சை
சுருதி ஹித சாஹிதை —செவிக்கு ஆசை
ஆத்மா நித்யா ஆதர –ஆவி க்கு
விஸ்லேஷ ஆக்ரோஷ கருதி –நெஞ்சம் புலம்ப -நானும் இழந்து நெஞ்சும் இழந்து
ஸ்மர அரதி கரைத்த -ஆவியை சீலமே
தத்த சாயுஜ்ய ஸஹ சங்கை -பொருந்தி ஸ்ரீ வைகுண்ட குண அனுபவம்
குர்வாணைர் பால லௌல்யம் -பால பிராயம் சஞ்சலமான ஸ்வ பாவம் –
அதி சஞ்சலம் -அதி சபலம் -அழப் பண்ணும் –

——————————————————-

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 28-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்–

முடியாத வாசை மிக முற்று கரணங்கள்
அடியார் தம்மை விட்டவன் பால் -படியா ஓன்று
ஒன்றின் செயல் விரும்ப உள்ளது எல்லாம் தான் விரும்ப
துன்னியதே மாறன் தன் சொல்—————–28-

துன்னியது -நெருங்கியது –
பலன் நேராக அருளிச் செய்ய வில்லை –நமக்கு நெருங்கும் -அவர் அருளிய பலன் கிட்டும்
மாறன் சொல் நெருங்கும் நமக்கு –

———————————————————————–

அவதாரிகை –

இதில்
கரணங்களும் தாமும்
பெரு விடாய் பட்டு பேசின பாசுரத்தை
அனுவதித்து அருளிச் செய்கிறார்
அது எங்கனே என்னில்
பயிலும் சுடர் ஒளியிலே உத்தேச்யராக அனுசந்திக்கப் பட்ட ஸ்ரீ வைஷ்ணவர்கள்
ஸ்வரூபத்துக்கு நிரூபகத்வேன பிரச்துதமான பகவத சௌந்தர்யாதிகள்
விடாய்க்கு உத்தகம்பாய் அத்தாலே விடாய் கரை புரண்டு-
அன்று தேர் கடாவிய கழல் காண தானே முன்பு தாகம் -ஆழ்வாருக்கு –
அனுபாவ்யமான
பூஷண ஆயுத குண விக்ரக சேஷ்டிதங்களைச் சொல்லி
தாமும் தம்முடைய கரணக்ராமமுமாய்
முழு மிடறு செய்து கூப்பிடுகிற
முடியானேயின் அர்த்தத்தை
சங்க்ரஹித்து அருளிச் செய்கிறார் -முடியாத ஆசை மிக -இத்யாதியால் -என்கை-

—————————————————————————

வியாக்யானம்–

முடியாத வாசை மிக-
மயர்வற மதி நலம் அருளுகையாலே
அடியே தொடங்கி வருகிற
ஆராத காதலானது
அனுபவ அலாபத்தாலே அதிசயிக்க –
கீழே பாகவத ஸ்வரூப நிரூபணத்துக்கு உடலாக
பகவத் குணாதிகள் பிரச்துதம் ஆக -அத்தாலே
பக்தி அபிவிருத்தியாக –

முற்று கரணங்கள்
பாஹ்யாப்யந்தர சகல கரணங்களும்

முடியாத ஆசை மிகு முற்று கரணங்கள்
என்று கரண விசேஷணம் ஆகவுமாம் –

அடியார் தம்மை விட்டு –
எம்மை ஆளும் பரமர் –
எம்மை ஆளுடை நாதர் –
எம்மை ஆளுடையார்கள் –
எம் பெரு மக்கள்-
எம்மை அளிக்கும் பிராக்கள் –
எம்மை சன்ம சன்மாந்தரம் காப்பர் –
எம்மை நாளும் உய்யக் கொள்கின்ற நம்பர்-
எம் தொழு குலம் தாங்கள் –
அடியார் எம் அடிகள் –
அடியார் தம் அடியார் அடியோங்களே –
என்று இப்படி சர்வ பிரகாரங்களாலும் சேஷிகளாக அனுசந்திக்கப் பட்ட
ஸ்ரீ வைஷ்ணவர்களை விட்டு –
அவன் பால் -படியா -படிந்து –
புருஷார்த்த காஷ்டையை குலைக்கும் படியான
அவன் இடத்திலே அவகாஹித்து-(நித்ய சத்ருக்கனன் -அவன் நிஷ்டையை குலைக்க முடியாதே )
கரணங்களும் தாமும்
தத் விஷயத்தில்
பிரவணராய்
காத்ரைஸ் சோகாபி கர்சிதை சம்ச்ப்ருசேயம் சகாமாஹம் -என்னும்படியாக –

ஓன்று ஒன்றின் செயல் விரும்ப –
நெஞ்சமே நீணகராக விருந்த என் தஞ்சனே -என்றும்
வாசகமே ஏத்த யருள் செய்யும் வானவர் தம் நாயகனே -என்றும்
கைகளால் ஆரத் தொழுது தொழுது உன்னை -என்றும்
கண்களால் காண வரும் கொல் -என்றும்
வாக் பாணி சஷூஸ் ஸ்ரோத்ரங்களான இந்த்ரியங்களை
மநோ வாக் பாணி சஷூர் வ்ருத்திகள் ஆசைப் படும் படியாக
இந்த்ரிய வ்ருத்தி நியமம் இன்றிக்கே
அவனை அனுபவிக்க வேண்டும்படியான பெரிய விடாயை யுடையவையாய் –

உள்ளது எல்லாம் தான் விரும்ப –
கீழ்ச் சொன்ன கரணங்களின் விடாயை
கரணியான தாம் ஒருவருமே யுடையவராய்
அவனை அனுபவிக்க ஆசைப் பட
அதாவது
உன்னையே அவிவின்றி ஆதரிக்கும் எனதாவி –என்றும்
பாவியேன் நெஞ்சம் புலம்பப் பல காலும் கூவியும் காணப் பெறேன் உன்கோலம் -என்றும்
உன்னை எந்நாள் கண்டு கொள்வன் -என்றும்
உன்னை எஞ்ஞான்று பொருந்துவன் -என்றும்
உன்னையே இருந்து இருந்து எத்தனை காலம் புலம்புவன் -என்றும்
இப்படியே அவருடைய பிராவண்யம் இருக்கும்படி -என்கை

துன்னியதே மாறன் தன் சொல் –
இப்படி
கரண க்ரமத்தின் யுடையவும்
கரணியான ஆழ்வார் தம்முடையவும்
ஆர்த்தி அதிசயத்தை யுடைத்தான ஆழ்வார்
ஸ்ரீ ஸூக்தியான இத் திருவாய் மொழி
மிடைந்த சொல் -என்னும்படி
சப்த நிபிடமாய் இருந்தது
துன்னுதல் -நெருக்கம் –
————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: