பகவத் விஷயம் காலஷேபம் -80- திருவாய்மொழி – -3-8-1….3-8-5–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

செய்ய தாமரைக் கண்ணனாய்’ என்ற -3-6-திருவாய் மொழியில் –
‘தேர் கடவிய பெருமான் கனைகழல் காண்பது என்று கொல் கண்கள்!’ என்று தம்முடைய கண்கள் அவனைக் காண வேண்டும்
என்று விடாய்த்தபடி சொன்னார். நிழலும் அடிதாறுமான ஸ்ரீவைஷ்ணவர்களைக் காட்டிக்கொடுக்க, பின்னர்த் தொடங்குகின்ற
பாகவதர்களுடைய சேர்க்கை-போதயந்த பரஸ்பரம் – ஒருவர்க்கு ஒருவர் உணர்த்திக்கொண்டு தரிக்கைக்கு உடல் அன்றிக்கே,
பகவானுடைய குணங்களை நினைவு மூட்டக்கூடியதாய் மேலே பிறந்த விடாயினை மேன்மேல் வளரச் செய்தது.
‘அச் சேர்க்கை விடாயினை மேன்மேல் வளரச் செய்தவாறு யாங்ஙனம்?’ என்னில், மேலே பாகவதர்களுடைய
சொரூபத்தை நிரூபிக்கும் முறையாலே பகவானுடைய குணங்கள் முதலாயினவும் சொல்லப்பட்டன அன்றோ?

அடியார்கள் குழாங்களை கூடுவது என்று கொலோ கேட்டது கிடைக்காமல் -ஆடி ஆடி -சோகம் விஞ்சி அழுதார் -அங்கே
இங்கு -தேர் கடவிய பெருமான் கனைகழல் காண்பது என்று கொல் -என்று கேட்டதும் அடியார்களைக் காட்டிக் கொடுக்க
-சம்ச்லேஷம் வேறு ஒன்றை கிளப்பி விட -இங்கும் அழுகிறார் -சம்ச்லேஷம் விடாயை -உத்கம்பகம் -ஆனதே -வளர்த்ததே –
ஐச்வர்யார்த்தி கைவல்யார்த்தி பகவல்லாபார்த்தி திருமாலுக்கு போவது போலே அனைவரையும் ஈர்க்க maall கட்டி வைத்து இருக்கிறார்கள்

‘நன்று; நிரூபகமாகச் சொன்னால் அது விடாயை வளர்க்கக் கூடுமோ?’ என்னில், வேறு ஒன்றற்காகப் புகுந்தாலும்
தன்னை ஒழியப் புறம்பு ஒன்றுக்கு ஆள் ஆகாதபடி தன் பக்கலிலே துவக்கிக்கொள்ள வற்றாய் அன்றோ
பகவானுடைய கல்யாண குணங்கள் இருப்பன? அவற்றாலும் காதல் கரை புரண்டு, ‘என்றுகொல் கண்கள் காண்பது!’ என்னும்
அளவே அன்றி, மற்றை இந்திரியங்களும் விடாய்த்து,-3-6 -கண்கள் மட்டும் தாகம் -இங்கு -3-8-அனைத்து இந்திரியங்களும் தாகம் –
ஒர் இந்திரியத்தின் தொழிலை மற்றை இந்திரியங்களும் ஆசைப்பட்டும்,
மற்றை இந்திரியங்களினுடைய தொழிலை மற்றை இந்திரியம் ஆசைப்பட்டும்,
அவை எல்லாவற்றினுடைய தொழில்களையும் தாம் ஆசைப்பட்டும், –அவன் செய்த கிருஷி பலன் இப்படி விடாயை வளர்த்து –
தம்மிலும் விடாய்த்த உறுப்புகளும் உறுப்புகளிலும் விடாய்த்த தாமுமாய், பல குழந்தைகளைப் பெற்றான் ஒருவன்,
வற்கடம் உண்டான காலத்திலே தன் பசிக்கு ஆற்றமாட்டாமல் அவற்றின் வாயிற் சோற்றைத் தான் பறித்து ஜீவிப்பது,
தன் வாயிற்சோற்றை அவை பறித்து ஜீவிப்பதாய், ‘என் பசிக்கு என் செய்வேன்? என் குழந்தைகளின் பசிக்கு என் செய்வேன்?’
என்னுமாறு போன்று, தாமும் தம்முடைய இந்திரியங்களின் கூட்டமுமாக நோவுபட்டுக் கூப்பிடுகிறார்.

‘மிக்க அன்போடு கூடின யான் துக்கத்தால் மிக இளைத்திருக்கிற உறுப்புகளால் ஆடவர் திலகனான அவ்விராமபிரானைத் தொடுவதற்குத்
தகுதியாக நீ என்னிடத்தில் அருளைச் செய்’ என்றாள் அன்றோ பிராட்டியும்? ‘என்றது, என் சொல்லியவாறோ?’ எனின்,
சிலர் பட்டினி கிடக்கச் சிலர் ஜீவிக்குமாறு போன்று, இவ்வுடம்பைக்கொண்டு அணைய ஆசைப்பட்டு, இவ்வாசையோடே முடிந்துபோய்
இனி வேறு ஒரு சரீரத்தை மேற்கொண்டு அவரை அனுபவிக்க இராமல், ஆசைப்பட்ட இவ்வுறுப்புகளைக்கொண்டே நான்
அநுபவிக்கும்படி செய்து தரவேண்டும் என்றாள் என்பது. அப்படி இவரும் நோவுபட்டு, ஆயுதங்களையும் ஆபரணங்களையும்
அவற்றுக்குப் பற்றுக்கோடான திருமேனியையும் குணங்களையும் செயல்களையுமுடைய எம்பெருமானைக் காணவேண்டும் என்று,
‘ஈசுவரனால் முன்பு போலே குணங்களை அனுபவிப்பித்தல் முதலியவைகளாலே பட்டினியைப் போக்க ஒண்ணாது’ என்னும்படி,
கேட்டார் எல்லாம் நீராகும்படி பெருந்தானத்திலே பெருமிடறு செய்து கூப்பிடுகிறார்.

குண வை லஷண்யம் தான் உம்மை படுத்து கிறது -கரண அசங்கு சத்தால் அல்ல என்றீரே முன்னம்
-இப்படி ஒரே கரணம் அனைத்தையும் அனுபவிக்கும் குணமும் உண்டே -கட்செவி -சஷூஸ் காது ஒன்றே தானே -பாம்பணையான் –
சாம்யா பத்தி அருளுவீரே -நித்ய ஸூ ரிகள் அனுபாவ்யம் கொடுக்கிறீர் என்றேனே -கொடுக்கலாகாதோ
இப்படி மடி பிடித்து கெஞ்சி பிரார்த்திக்கிறார் -தொண்டை கிழிய கூப்பாடு போடுகிறார் –

பொன்னெடுஞ் சக்கரத் துன்னையே’ என்பது போன்றவைகளை நோக்கி, ‘ஆயுதங்களை’ என்றும்,
‘முடியானே’ என்றதனை நோக்கி, ‘ஆபரணங்களை’ என்றும்,
‘மூவுலகும் தொழுதேத்தும் சீர்’ என்பது போன்றவைகளை நோக்கி,‘குணங்களை’ என்றும்,
‘முன்பு போலே’என்றது, ‘முந்நீர் ஞாலம்’ என்ற திருவாய்மொழியில் அருளிச்செய்த முன்னுரையை நோக்குக,
பெருந்தானம் – பெரிய ஸ்வரம்.

ஸ்ரீ குகப்பெருமாளோடே கூட, பெருமாளைப் பிரிந்த இடத்தினின்றும் கால் வாங்க மாட்டாதே நின்றான் ஆயிற்றுச் சுமந்திரன்;
சக்கரவர்த்தி ஜீவிக்கும் பொழுதே சுமந்த்ரன் திரும்பினான் -5 நாள்களில் —
அங்கு நின்றது ஒன்று இரண்டு நாளாய் இருக்கச்செய்தே,-திவாசான் பஹூன் ‘பலநாள்’ என்னாநின்றான் ஆயிற்று; பிரிவாலே காலம் நெடுகினபடி.
‘ஸ்ரீ குகப்பெருமாளோடே நிற்க, காலம் நெடுகுவான் என்?’ என்று மிளகாழ்வானைக் கேட்க.
‘ஸ்மாரக சந்நிதியில் ஆற்றாமை இரட்டிக்கும் அன்றோ? என்று அருளிச்செய்தாராம்.
‘மேகக்குழாங்காள்! காட்டேன்மின் நும்முரு; என் உயிர்க்கு அது காலன்,’ என்றார் அன்றோ?

‘ஞானம் வெளிப்படுதற்கு வழியாக உள்ள கரணங்கள் விடாய்க்கையாவது என்?’ என்னில், ஆழ்வாருடைய காதல்
மிகுதியைச் சொன்னபடி. அன்றியே, ‘இந்திரியங்களும் தனித்தனியே அறிவுடைப்பொருள்களைப்போன்று விடாய்க்கு
இதர விஷயங்களில் வாசனை விடாயைப் பிறப்பியாநின்றால், நற்குணக்கடலான இறைவன் விஷயத்திற் சொல்ல வேண்டா அன்றே? ‘நன்று;
இதர விஷயங்கள், தாமே இனியவைகள் ஆகையாலே, அவற்றில் வாசனை விடாயைப் பிறப்பிக்கும்;
இறைவனிடத்தில் வாசனை பண்ணுகிறது பலத்தைப் பெறுதற்குச் சாதனமாக அன்றோ? அங்ஙனம் இருக்க, இவ்வாசனை,
விடாயைப் பிறப்பிக்கக் கூடுமோ?’ எனின், பகவத் விஷயத்தில் வாசனை பண்ணுகிறார் பண்ணுகிறது ஒரு பயனைப் பெறுவதற்காக அன்று;
இதர விஷயங்களைப்போன்று இவ்விஷயம் ரசிக்க வேண்டும் என்று. ’அறிவில்லாதவர்களுக்குச் சிற்றின்பங்களில் இடையீடு இல்லாத
பிரீதி இருப்பதைப் போன்று, தேவரீரை நினைக்கிற எனக்கு அத்தகைய பிரீதியானது மனத்தில் நீங்காதிருக்க வேண்டும்,’ என்றான் ஸ்ரீ பிரஹ்லாதாழ்வான்.

பூ உடன் சேர்ந்த நாறும் மணக்கும் -ஆழ்வார் அபிநிவேச அதிசயத்தால் இவைகளும் -அவன் பெருமையும் இவற்றை தூண்டுவிக்குமே –
சாத்ய புத்தியே வேண்டும் -நம் இயலாமைக்காக அவனை சாதனமாக்குகிறோம் –

‘நன்று; ஓர் இந்திரியத்தின் தொழிலை மற்றை இந்திரியம் ஆசைப்படக் கூடுமோ?’ எனில், பாம்பு கண்ணாலே காண்பதுஞ்செய்து
கேட்பதுஞ்செய்யாநின்றதே அன்றோ? அதுவும் அவன் கொடுத்ததே; அவன் தந்தால் அது நமக்குத் தட்டு என்?
அடியார்கட்கு அவன் கொடுக்க எங்கே கண்டோம்?’ என்னில், தம்மையே ஒக்க அருள வேண்டுகையாலே, ஒரு தேச விசேஷத்திலே
தன்னை அனுபவிப்பார்க்குக் கொடா நின்றானே அன்றோ? தூது செய் கண்கள் கொண்டு ஒன்று பேசித் தூ மொழி இசைகள் கொண்டு
ஒன்று நோக்குவது –9-9-9-அன்றோ அவன்றன் படி?
‘நன்று; கரணங்களும் அறிவுடைப் பொருள்களைப் போன்று விடாய்த்தால், தம் காதல் குறையாதோ?’ என்னில்,
ஆறு கிண்ணகம் எடுத்தால் பல வாய்த்தலைகளாலும் போகச் செய்தேயும் கடலில் புகும் பகுதி குறைவற்றுப் போமாறு போன்று,
இவருடைய -அபி நிவேச அதிசயம் -காதலின் மிகுதி இவருடைய கரணங்களாகிற வாய்த்தலைகளாலே பெருகினாலும் காதல் குறையற்றே நிற்கும்.

—————————————————————

முடியானேஎ! மூவுலகும் தொழுது ஏத்தும்சீர் அடியானேஎ! ஆழ்கடலைக் கடைந்தாய்! புள்ளூர்
கொடியானேஎ! கொண்டல்வண்ணா! அண்டத்து உம்பரில் நெடியானேஎ! என்று கிடக்கும்என் நெஞ்சமே.–3-8-1-

பிராப்தம் -சரண்யம் -பிராப்யம் -திருமந்த்ரார்த்தம் -பகவத் விஷயத்தில் நெஞ்சுக்கு உண்டான அபி நிவேசத்தை அருளிச் செய்கிறார் –
முடியானே! மூவுலகும் தொழுது ஏத்தும்சீர் அடியானே! -உபய விபூதி நாயக உறவால் –
சர்வ லோகமும் ஆச்ரயித்து ஸ்தோத்ரம் பண்ணும் -சரணத்வ ஏகாந்த குணம்
பிராப்தி முடியான -சரணத்வம் அடியானே
ஆழ்கடலைக் கடைந்தாய்!-பிரயோஜ நாந்தரம் கேட்டாலும் உபகரித்தாய்
புள்ளூர் கொடியானே!-ஊர்தி கடை குறைத்தல் ஊர் – -ஆஸ்ரிதர் உள்ள இடம் -வாகனம் கொடி -முன்னேவே காட்டிக் கொடுக்க கொடி
கொண்டல்வண்ணா! அண்டத்து உம்பரில் நெடியானே! என்று
அனுபாவ்யம் ஸ்ரமஹர்ரம் -தாபம் தீர்க்கும்
வடிவு அழகை அனுபவிப்பித்து-நித்ய ஸூ ரிகளை -ப்ரஹ்மாதிகள் என்றுமாம்
கிடக்கும்என் நெஞ்சமே.–என்று என்று -ஒவ் ஒன்றுக்கும் அந்வயம்
இவ்வாறு பேசும் -என்கிறார் -2-7 -ஒன்றின் செயலை ஓன்று விரும்புதல் -/ 8-10 உள்ளது எல்லாம் தான் விரும்புதல் – –
இங்கு வியாபாரம் இல்லாமல் கிடக்கும் -பிரவ்ருத்தி சமம் இல்லாமல் சிதிலமாய் /
நெஞ்சு இப்படி பேசிக் கொண்டு கிடக்கும் -வாக் வியாபாரம் மனஸ்ஸூ க்கு -என்றுமாம்
எ அளவிடை -பொருள் இசை நீட்டிச் சொல்ல வேண்டும்

‘முடியையுடையவனே! மூன்று உலகத்தாரும் தொழுது ஏத்துகின்ற சீரையுடைய திருவடிகளையுடையவனே! ஆழ்ந்த கடலைக் கடைந்தவனே!
கருடப்பறவையை வாகனமாகவும் கொடியாகவு முடையவனே! மேகம் போன்ற வடிவையுடையவனே!
தேவலோகத்துள்ள பிரமன் முதலான தேவர்கட்கும் பெரியவனே!’ என்று கூறிக்கொண்டே என் மனமானது கிடக்கின்றது.
‘ஊர்தி’ என்பது, ‘ஊர்’ எனக் கடை குறைந்து நிற்கிறது; ஊர்தி – வாகனம். ‘ஊர் புள் கொடியானே’ என்று மாற்றிப் பொருள் கோடலுமாம்.
‘என் நெஞ்சம் கிடக்கும்’ என மாறுக.
வியாக்கியானத்தில் ‘முடியானேஎ! அடியானே! கொடியானே! நெடியானே!’ என்ற பாடம் காண்கிறது. இத்திருவாய்மொழியின் அவதாரிகையில்
‘பெருந்தானத்தில் பெருமிடறு செய்து கூப்பிடுகிறார்’ என்று அருளிச்செய்வதனால், அளபெடை கொண்ட பாடமே சிறப்புடைத்தாம்.

இத்திருவாய்மொழி நாற்சீர் அடியான் வருதலின் கலி விருத்தம் எனப்பெறும்.

தம்முடைய திருவுள்ளத்துக்கு இறைவன் பக்கல் உண்டான காதலின் மிகுதியை அருளிச்செய்கிறார்.

முடியானேஎ –
ஆதிராச்சியத்திற்கு அறிகுறியாய்-ஆதி ராஜ்ய ஸூ சகமாய்- உபய விபூதிக்கும் கவித்த முடியன்றோ? ஆதலால், அவன் இறைவனாந் தன்மைக்குப் பிரகாசகமான
ஓங்காரார்த்தம் முதலில் சொல்லி -திருமுடியிலே முந்துறக் கண்வைக்கிறார். ‘ஆயின், சிவன் முதலானோர்க்கும் முடி உண்டே?’ எனின்,
அல்லாதார் முடிகளைப் பொய்ம்முடி ஆக்கும்படி-அசத் சமம் -அலங்காரத்துக்கு இட்டவை – தலையான முடியே அன்றோ இது?
மற்ற தலைகள் வணங்கும் -அடி சேர் முடியனராகி -அபிமான பங்கமாய் வந்து சங்கம் இருப்பார்களே –
உபய விபூதிகளும் ஒரு முடியிலே கட்டுண்ணும்படி
கவித்த முடியே அன்றோ இது? இவர்க்கு இதில் ஓடுகிற விடாயின் மிகுதி, ‘முடியானேஎ!’ என்னும் இசையின் ஓசையிலே காணலாமித்தனை
யே-நெடிலுக்கு மேலே எ-அதி மாத்திரை /எடுத்த உடனே சிரஸ் மூலம் முடியானே என்கிறார் /
இத்தால் இசையின் முக்கியத்வம் -அரையர் சேவை -புகும் முறைகள் எல்லாம் இல்லை இதில்:நெடிலுக்கு பின்னால் குறில் வருவது அக்ரமம்
முதலிலே உயர்ந்த தானமாய் இருக்கும்-மந்த்ர -மத்யம -தரங்க -நாபி ஹ்ருத் கழுத்து சிரஸ் -க்ரமத்தில் சொற்கள் வியாகரண சாஸ்திரம் –
மேல் திருவாய்மொழியில் ‘பொன் முடியன்’ என்றதுதான், முடியத் தொடர்ந்து வருகிறபடி.-தொடங்கின வற்றை முடிக்கிறார் -என்றபடி

முதலில் முடியைச் சொல்லுவான் என்?’ என்னும் வினாவிற்கு விடையாக, ‘ஆதிராச்சியத்திற்கு அறிகுறியாய்’ என்று தொடங்கி அருளிச்செய்கிறார்.
‘பொய்ம்முடியாக்கும்’ என்பதற்கு ‘அசத்துக்குச் சமமாக்கும்’ என்பது நேர்ப் பொருள்; ‘சப்பரையான முடி’ என்பது தொனிப்பொருள்.
‘தலையான முடி’ என்பதற்கு, ‘தலையிலே இருக்கிற முடி’ என்பது நேர்ப்பொருள்; ‘உயர்ந்த முடி என்பது’ தொனிப்பொருள்.
அடிசேர் முடியனராக அரசர்கள் தாம் தொழ -அபிமான பங்கமாய் —
‘ஒரு முடியிலே’ என்பதற்கு,‘ஒப்பற்ற திருமுடியிலே’ என்பது நேர்ப்பொருள்; ‘ஒரு முடிச்சிலே’ என்பது தொனிப்பொருள்.
தலைமையான முடி என்பதனைக் காட்டுகிறார், ‘உபய விபூதிகளும்’ என்று தொடங்கி.

‘கதிராரு நீண்முடி சேர்ந்தகைப் போது எக்கடவுளர்க்கும் அதிராசன் ஆனமை காண்மின் என்றே சொல்லும்; ஆயபொன்மா
மதிலார் அரங்கர் பொற்றாளார் திருக்கரமற்றிதுவே சதுரானன் முதல் எல்லா உயிர்க்கும் சரண் என்னுமே,’–திருவரங்கத்து மாலை
கருமுகில் தாமரைக் காடு பூத்து நீடு இருசுடர் இரு புறத்து ஏற்றி ஏடுஅவிழ்
திருவொடும் பொலிய ஓர் செம்பொற் குன்றின்மேல் வருவபோற்கலுழன்மேல் வந்து தோன்றினான்.’-கம்பர்

மூன்று உலகும் தொழுது ஏத்தும் சீர் அடியானேஎ –
குணா குண நிரூபணம் பண்ணாதே எல்லா உலகங்கட்கும் புகலிடமானதிருவடிகளையுடையவனே!
திருமுடியின் அழகை நினைந்து தோற்றுத் திருவடிகளிலே விழுகிறார். ஒருகாலும் அடி விடாரே.
மேல் திருவாய்மொழியில் ‘தன் தாள் இணைக்கீழ்க் கொள்ளும் அப்பனை’ என்றது, வடிம்பு இடுகிறபடி.
‘எல்லார்க்கும் பொதுவான திருவடிகளை என் தலையிலே வையாய்,’ என்பது கருத்து.

ஆழ்கடலைக் கடைந்தாய் –
‘அளவிட முடியாத கடல் என்கிறபடியே, ஒருவரால் அளவிடப்போகாதபடி இருக்கிற கடலைக் குளப்படி போலே கலக்கினவனே!
மேல் திருவாய்மொழியில் ‘ஆர் அமுது ஊட்டிய அப்பனை’ என்றது, பின்னாடுகிறபடி. இதனால், ‘இத்திருவடிகளில் இனிமையை விட்டு
வேறு பிரயோஜனத்தை ஆசைப்பட்டார்க்கும் வருந்தி அவர்கள் விரும்பியவற்றைக் கொடுக்குமவன்’ என்பதனைத் தெரிவித்தவாறு.
அப்ரமேயோ சகர -மகோதத பெரிய சாகரம்-ராம சாகரம் படுத்த-கடலை குளப்படி ஆக்கினான்

புள் ஊர் கொடியானேஎ –
தன்னை உவந்தார் பக்கல் வந்து தோற்றும்படி பெரிய திருவடியை வாகனமாகவும் கொடியாகவும் உடையவனே!
அடியார்கள் இருந்த இடத்தே செல்லுகைக்கு வாகனம்; தூரத்திலே கண்டு வாராநின்றான் என்று தரிக்கைக்குக் கொடி.
இனி, ‘கடலைக் கடையப் புக்குத் தேவசாதி இளைத்துக் கை வாங்கின அளவிலே சாய் கரகம் போலே அமிருதத்தைக் கொண்டு
வந்து கொடுக்கைக்குத் திருவடி திரு முதுகிலே வந்து தோன்றினபடியைக் கூறுகிறார்’ என்னுதல்.
கொண்டல் வண்ணா –
திருவடி முதுகிலே தோன்றினபோது ஒரு மேருவைக் கினிய – கபளீகரித்த -முழுதும் அபகரித்த -காளமேகம் படிந்தாற்போலே ஆயிற்று இருப்பது –
‘மேருமலையின் மேலே இருக்கின்ற -அம்புதம் –நீர் உண்ட மேகம் போல’ என்பது பாரதம்.
அண்டத்து உம்பரில் நெடியானேஎ –
அவன் தோளில் இருக்கும் இருப்பைக் கண்டால் ‘இவனே எல்லார்க்கும் முதல்வன்’ என்று தோற்றும்படி இருப்பவனே! என்றது
‘பிரமன் முதலியோருடைய ஐஸ்வரியம் அடைய ஓர் அளவுக்கு உட்பட்டதாய்த் தன் ஐஸ்வரியம் மேலாய்த் தோன்றும்படி இருப்பவனே!’ என்றபடி.
வடிவழகைப் போன்றே அவன் ஐஸ்வரியமும் மனக்கவர்ச்சியாய் இருக்கிறபடி. என்று கிடக்கும் –
‘நெடியானே!’ என்றால் காணவேணும் கேட்கவேணும் என்கிற சொல்லால் தலைக் கட்டமாட்டுகின்றது இல்லை;
‘நெடியானேஎ!’ என்று பாடு ஓடிக் -பார்ஸ்வே ரணம் –கிடக்கின்றது
‘துக்கத்தால் மிகுதியும் தபிக்கப்பட்டவராயும் மிக்க பராக்கிரமத்தையுடையவராயும் இருக்கிற ஸ்ரீ பரதாழ்வான் ஒரு முறை
தீனசுரத்தோடு ‘ஆர்யா!’ என்று கூறி, வேறு வார்த்தை ஒன்றையும் கூற இல்லை,’ என்று
சொல்லப்பட்ட ஸ்ரீ பரதாழ்வானைப் போன்று கிடக்கிறது என்றபடி.
ஆர்யா -இத் உக்த்வா -மனத்தையும் கண்ணையும் இழுக்கும் -குணம் -பார்ஸ்வம் ரணத்துடன் -கண்டேன் பாக்கியம் பெற்றேன் சொல்லி முடிக்க வில்லையே
என் நெஞ்சமே –
‘கடியன் கொடியன் —-கொடிய என் நெஞ்சம்’அவன் என்றே கிடக்கும் –திருவாய் -5-3 -5.என்னுமாறு போன்று கொண்டாடிச் சொல்லுகிறார் அல்லர்;
‘பிறர், குற்றம் சொன்னாலும் அவனை விடாதே அவன் பக்கலிலே பற்றிக் கிடக்கப் பெற்றோமே இந்நெஞ்சம்!’
என்று அங்கே நெஞ்சத்தைக் கொண்டாடிச் சொல்லுதலைப் போன்று சொல்லுகிறார் அல்லர் என்றபடி.
‘நான் செய்தபடி செய்ய, இதன் விடாய்க்கு என்செய்வேன்!’ என்கிறார். ‘‘ஐயகோ என் செய்வேன்’ என்கிறது என்?
தம்மால் நோக்க ஒண்ணாதோ?’ எனின்,-பார்த்தா தானே பார்யையை ரஷிக்க வேண்டுமே
‘நாதா! காப்பாற்ற வேண்டாவோ! இவ்வயிறு தாரி-ஒன்றின் ஒன்றின் செயலை கேட்க்கிறதே ஒரு வயிறு இல்லையே –
நெஞ்சை என்னால் பரிக்கப் போமோ?’ என்கிறார்.

—————————————————————-

நெஞ்சமே நீள் நகராக இருந்த என் தஞ்சனே! தண் இலங்கைக்கு இறையைச் செற்ற
நஞ்சனே! ஞாலம் கொள் வான் குறளாகிய வஞ்சனே! என்னும் எப்போதும் என் வாசகமே.–3-8-2-

வாக்கு சொல்லா நின்றது -அநிஷ்டம் போக்கி அனந்யார்ஹம் ஆக்கும் குணத்தை –
நெஞ்சமே நீள் நகராக இருந்த என் தஞ்சனே! –வாய் முரண்டு பிடிக்கிறது -நெஞ்சுக்கு என்ன ஒர வஞ்சனை -அங்கேயே வசிப்பீரோ
நெஞ்சம் ஸூ ஷ்மம் தானே -நான் எவ்வளவு -ஹிருதயம் -சடகோப வாக் வபுஷி உள்ளான் -பட்டர் –
இது தான் வாக் வைக்கும் கோரிக்கை –நல்ல துணை ஆனவரே -கோபித்து சொல்லும் வார்த்தை –
நெஞ்சில் இருந்தால் தான் பேச முடியும் மனோ உத்தர வாக் பூர்வ
தண் இலங்கைக்கு இறையைச் செற்ற நஞ்சனே! -அழகு -நிர்வாகன் இராவணன்
ஞாலம் கொள் வான் குறளாகிய வஞ்சனே! என்னும் எப்போதும் என் வாசகமே.-அபிமானம் கழித்து -உலகம் அனந்யார்ஹம் ஆக்கி –

‘என்னுடைய வார்த்தையானது, மனத்தினையே எப்போதும் நீண்ட நகரமாகக் கொண்டிருந்த என் தஞ்சனே! குளிர்ந்த இலங்கைக்கு
இறைவனாகிய இராவணனை அழித்த நஞ்சனே! பூமியைக் கொள்ளும்பொருட்டு வாமனனாகிய வஞ்சனே!’ என்று கூறாநிற்கும்.
தஞ்சம் – பற்றுக்கோடு. கொள்வான் – வினையெச்சம். என்னும் – முற்று.

‘மனம் முன்னே வாக்குப் பின்னே’ என்கிறபடியே, ‘மனத்துக்குப் பின்னதான வாக்கு, மனத்தின் தொழிலையும்
தன் தொழிலையும் ஆசைப்படாநின்றது,’ என்கிறார்.
தன் வேலையையும் நெஞ்சின் வேலையையும் விரும்புகிறது -மனசை எதிர்த்து பேசுகிறது –

நெஞ்சமே நீள் நகராக இருந்த என் தஞ்சனே –
‘என்றும் நெஞ்சிலே இருந்துபோம் இத்தனையேயோ? என் பக்கலிலும் ஒரு கால் இருத்தல் ஆகாதோ?’ என்னாநின்றது;
வாக்கின் வார்த்தை இருக்கிறபடி இது. ‘மற்றை இந்திரியங்கள், பரம பதம், பாற்கடல் தொடக்கமான இடங்கள் என் படுகின்றனவோ!
என்னே பாவம்!’ என்பார், ‘நெஞ்சமே இருந்த’ எனப் பிரிநிலை ஏகாரங் கொடுத்து ஓதுகிறார்.
‘கல்லும் கனைகடலும் வைகுந்த வானாடும், புல்லென்று ஒழிந்தனகொல்? ஏ பாவம்!’ – பெரிய திருவந். 68.-என்னுமாறு போன்று
‘பரமபதமும் அவ்விருப்பும் என்படுகின்றதோ?’ என்றபடி.
‘கலங்காப் பெருநகரத்திற் பண்ணும் ஆதரத்தை என் நெஞ்சிலே பண்ணாநின்றான்,’ என்பார், ‘நகராக’ என்கிறார்.
பரமபதத்தில் இட்டளமும் -சங்கோசம் -தீர்ந்தது இவர் நெஞ்சிலே ஆதலின், ‘நீள் நகராக’ என்கிறார்.- வைகுந்தம் நகர் நெஞ்சு நீள் நகர்
மனத்தினை இட்டளம் இல்லாத நரகமாகக் கொண்டிருந்தான் –நீள் நகராகக் கொண்டிருந்தமை-என்றபடி.
‘மனத்தினை நீள் நகராகக் கொண்டிருந்தமையை அறிந்தபடி எங்ஙனே?’ என்ன,‘இல்லையாகில், மறந்து கூப்பீடு மாறும் அன்றோ?
இப்படிக் கூப்பிடப் பண்ணின உபகாரத்தின் தன்மையை நினைத்து ‘என் தஞ்சனே!’ என்கிறார்.
சமுசாரிகளில் இப்படிக் கூப்பிடுகின்றவர் இலர் அன்றே? இவர் நெஞ்சிலே இருக்கை அன்றோ இவ்விஷயத்திற் கூப்பிடுகிறது?

தண் இலங்கைக்கு இறையைச் செற்ற நஞ்சனே! –
கட்டளைப்பட்ட இலங்கைக்கு இறைவனான இராவணனை அழித்து அவனுக்கு நஞ்சு ஆனவனே!
ஒன்றுக்கும் வேறுபடாதவனான திருவடியும் இலங்கையில் கட்டளையைக் கண்டு,
‘இது என்ன வீர்யம்! இது என்ன தைர்யம்! இது என்ன பலம்! இது என்ன ஒளி! அரக்கர் தலைவனான இராவணனுக்கு
எல்லா இலக்கணங்களும் பொருந்தி இருப்பது ஆச்சரியம்!’ என்று மதித்த ஐஸ்வர்யமாதலின்,-அஹோ -சர்வ லஷண சம்யுத –
‘தண் இலங்கை’ என்கிறார். ‘தண்’ என்பது ஆகு பெயரால் கட்டளைப்பாட்டைக் காட்டுகிறது.

ஞாலம் கொள்வான் குறளாகிய வஞ்சனே! –
மஹாபலியாலே கொள்ளப்பட்ட பூமியை மீட்கும் விரகு அறியுமவனே!
இராவணன் தலையை அறுத்தது போன்று அறுக்காமல் விட்டது, கொடை என்பது ஒரு குணம் சிறிது உண்டாகையாலே.
வஞ்சனை-விரகு. விரகாவது, ‘இவன் கையிலே தர்மம் ஒரு சிறிது உண்டாய் இருந்தது’ என்று
‘இவனை அழிக்காமல், அறப்பெரியவனான தன்னை-அழித்து- இரப்பாளன் ஆக்கி இந்திரனுக்கு இராச்சியத்தை வாங்கிக்கொடுத்தது.
இனி, ‘வஞ்சனையையுடையவனே! என்னலுமாம். ஈண்டு வஞ்சனையாவது, கள்ளக் குறளாய் மாவலியை வஞ்சித்து,
சிறுகாலைக் காட்டி ‘மூவடி’ என்று வேண்டிப் பெரிய காலாலே அளந்து, இரண்டு அடியிலே அடக்கி,
ஓரடிக்குச் சிறையிலே இட்டு வைத்தது. இந்திரன் பேறு தன் பேறு ஆகையாலே, ‘கொள்வான்’ என்கிறது.
என்னும் என் வாசகமே –
என் வாக்கானது இவ் வஞ்சனத்தையே சொல்லா நின்றது. ‘இவ்வஞ்சனத்தை அநுசந்தித்த பின்பு இராமாவதாரத்தின்
செவ்வையிலும் போகிறது இல்லை,’ என்பார், ‘வஞ்சனே என்னும்’ எனப்பிரிநிலை ஏகாரங்கொடுத்து ஓதுகிறார்.
‘இராமாவதாரத்திலும் இதற்குப் பெருமை என்?’ எனின், தன் பெருமை அழியாமற் செய்த இடம் அன்றோ இராமாவதாரம்?
தன் பெருமை அழிய மாறின இடம் அன்றோ இது? எப்போதும் – கலியர் ‘சோறு சோறு’ என்னுமாறு போன்று.

———————————————————————————————-

வாசகமே ஏத்த அருள் செயும் வானவர் தம் நாயகனே! நாள் இளந் திங்களைக் கோள்விடுத்து
வேய் அகம் பால் வெண்ணெய் தொடு வுண்ட ஆன் ஆயர் தாயவனே! என்று தடவும் என் கைகளே.–3-8-3—

ஆஸ்ரித வ்யாமோஹம்-கர ஸ்பர்ச த்ரவ்யத்தில் -கைகள் ஆராயா நின்றன -வாசகம் செய்யும் வியாபாரத்துடன் –
வாசகமே ஏத்த அருள் செயும் வானவர் தம் நாயகனே! -அதுக்கே அருள் செய்யும் நித்ய ஸூரிகள் கொண்டாடும் ஸ்வாமியே
நான் இளந் திங்களைக் கோள்விடுத்து-உதய சந்தரன் -அபி நவனாய்-தேஜஸ் -அதர சோபா விசிஷ்டமான -முத்துப் பல் வரிசை காந்தி
ஸ்மிதத்தால் விரித்து -பிரகாசிப்பித்தது -உபமான முகத்தால் -லஷிக்கிறது உபமேயத்தை -முற்று உவமை
வேய் அகம் பால் வெண்ணெய் தொடு வுண்ட -மூங்கில் குடில் – அகவாசலில் வைத்த -களவு
ஆன் ஆயர் தாயவனே! என்று தடவும் என் கைகளே.-பேசவும் தொடுவதற்கும் ஆசைப்பட்டதே -சத்தாதிகளுக்கு வர்த்தகன் -தாய் போலே
அங்கே சென்று கைகள் தடவ -பாடவும் விரும்பும்

என்னுடைய கைகளானவை, ‘வாசகமே ஏத்தும்படி திருவருளைச் செய்த, வானவர்களுக்குத் தலைவனே!
நாளால் இளைய சந்திரனைப் போன்று இருக்கின்ற பற்களினின்றும் ஒளியை வெளிப்படுத்தி,
மூங்கிலால் கட்டப்பட்ட குடிலில் உள்ள பாலையும் வெண்ணெயையும் களவு செய்து உண்ட,
ஆயர்களுக்குத் தாய்போன்றவனே!’ என்று கூறிக்கொண்டே தடவாநின்றன.
‘அருள் செய்யும் நாயகன்’ என்றும், ‘உண்ட தாயவன்’ என்றும் கூட்டுக. ‘விடுத்து உண்ட’ என்க.
திங்கள்-பற்கள்; ஆகுபெயர். வேய் – மூங்கில்.

‘கைகளானவை வாக்கின் தொழிலையும் தன் தொழிலையும் ஆசைப்படாநின்றன’ என்கிறார்.

என் கைகள் வாசகமே ஏத்த அருள் செய்யும் வானவர்தம் நாயகனே என்னும்
– கைகளானவை ‘இவ்வாக்கே ஏத்திப் போமித்தனையேயோ! நானும் ஒருகால் ஏத்தினால் ஆகாதோ!’ என்னா நின்றது.
‘துதித்துக் கொண்டே யிருக்கின்றார்கள்’ என்கிறபடியே, ‘நித்தியசூரிகள்-ஏத்த இருக்கிற உனக்கு,
வாக்கு ஏதேனும் பச்சையிட்டது உண்டோ?’ என்கிறார். என்றது, ‘யாதொரு விருப்பமும் இல்லாதவனாய் இருக்கச்செய்தே
அன்றோ வாக்குக்கு ஏத்தலாம்படி விருப்பத்தை உடையவன் ஆயிற்று?
வானவர் தம் நாயகனே -விசேஷித்து சொன்னது -வானவர்கள் ஏத்தி நிற்பது தானே உன் ஸ்வ பாவம் –
வாய்க்கு கொடுத்தாயே -நான் பாடக் கூடாதோ –
நிர பேஷனாய் இருக்கச் செய்தே சாபேஷனாய் இருப்பாய் போலே வாய் இருந்தால் தான் பாட வேண்டும் என்னலாமோ
இந்த்ரியங்களுக்கு புலப்படாத நீ -அந்த நைர பேஷ்யம் என் பக்கல் வைக்கல் ஆகாதோ
அந்த விருப்பம் இல்லாத் தன்மை என் பக்கலிலே ஆயிற்றோ?’ என்கிறார் என்றபடி.
அன்றிக்கே,
‘வாசகம் ஏத்தவே அருள் செய்யும்’ என்று ஏகாரத்தைப் பிரித்துக் கூட்டி, ‘நித்தியசூரிகளைப் போலே வாக்கிற்கு உன்னை
ஏத்துகையே இயற்கை என்னும்படி கொடுத்தவனே!’ என்னுதல்.

நாள் இளந்திங்களைக் கோள் விடுத்து –
‘படல் அடைத்த சிறு குரம்பை நுழைந்து புக்குப் பசு வெண்ணெய்’ களவு காணப்புக்க இடத்திலே,-ஹை யங்க வீநம்-புது வெண்ணெய் –
உறிகளிலே சேமித்து வைத்திருப்பார்கள் அன்றோ? ‘தன் நிறத்தின் இருட்சியாலும் அவ்விடத்தின் இருட்சியாலும்
தெரியாமையாலே தடவாநிற்கச் செய்தே, கையிலே வெண்ணெய்த் தாழிகள் தட்டின அளவிலே பிரியத்தாலே நகைத்தலைச் செய்வான்
அவ்வாறு நகைத்தலைச் செய்யுமதுவே கை விளக்காக அமுது செய்வான்,’ என்றபடி.
‘அமுது செய்யும் போது எவரேனும் வருவார் உளராயின், என்செய்வது?’ எனின், ஆள் தட்டிற்றாகில் வாயை மூட அமையுங்காணும்;
ஆள் தட்டுகை தான் தனக்கு விருப்பம் இல்லாத செய்கை ஆகையாலே நகைத்தல் மாறுமே அன்றோ?
கௌச்துப ஸ்வஸ்தி தீபம் -‘நன்று; ஸ்ரீகௌஸ்துபம் உண்டே?’ எனின், ஸ்ரீகௌஸ்துபத்தைக் கையாலே புதைக்க அமையும்.
புதிய சந்திரனைப்போலே ஆயிற்று முறுவல் இருக்கிறது;
‘செக்கரிடை நுனிக்கொம்பில் தோன்றும் சிறு பிறை முளைப் போல், நக்க செந்துவர்வாய்த் திண்ணை மீதே
நளிர் வெண்பல் முளை இலக’ என்றார் பட்டர்பிரான். திங்கள் போல் என்னாது, ‘திங்கள்’ என்றது,
தாவி வையம் கொண்ட தடம் தாமரை’-6-9-9- என்னுமாறு போன்று முற்றுவமை இருக்கிறபடி.
கோள் விடுத்தல் – ஒளியைப் புறப்படவிட்டுத் திரு அதரம் மறைக்குமதனைத் தவிர்தல்.
சன்ம சன்மாந்தரம் விடுத்து -தன்மை பெருத்தி –ஸ்ரோது பங்க -அணை -திறந்தாலே தண்ணீர் வரும் -அதே போலே அதரம் திறந்தால் ஒளி வருமே –
வேய் அகம் –
1-மூங்கிலாலே சமைத்த வீடு.
பால் வெண்ணெய் தொடு உண்ட –
அவ் வவ்வீடுகளில் பாலையும் வெண்ணெயையும் களவு கண்டு அமுது செய்த.
அன்றிக்கே,
2-‘பால் என்பதனைப் பெயர்ச்சொல்லாகக் கொள்ளாது, உருபு இடைச்சொல்லாகக் கொண்டு
வீட்டினிடத்தில் வெண்ணெயை அமுது செய்த’ என்று பொருள் கூறலுமாம்.
அன்றிக்கே,
3-வேய் அகம்பால் வெண்ணெய் தொடு உண்ட என்பதற்கு,
‘வேய்த்து அகத்திலே உள்ள வெண்ணெயை அமுது செய்த’ என்று பொருள் கூறலுமாம்.
வேய்த்து-வேவு பார்த்து -சமயம் பார்த்து; ஆராய்ந்து.- சமயம் பார்த்த பின்பு அன்றோ களவு காண்பது?
‘போரார் வேற்கண் மடவாள் போந்தனையும் பொய் உறக்கம்,– ஓராதவன் போல் உறங்கி அறிவுற்று, தாரார் தடந்தோள்கள்
உள்ளளவும் கை நீட்டி,ஆராத வெண்ணெய் விழுங்கி அருகு இருந்த, மோரார் குடம் உருட்டி முன்கிடந்த தானத்தே,
ஓராதவன்போல் கிடந்தானை’ என்றார் திருமங்கை மன்னன்.

ஆன் ஆயர் தாயவனே –
பசுக்களையுடைய ஆயர்கட்குத் தாய்போலப் பரிபவன் ஆனவனே!
என்று தடவும் என் கைகள் –
படலை அடைத்து -கை-உள்ளே புக்குக் கொண்டியிலே பிடிக்கக் காணும் தேடுகிறது.
அவன் கை வெண்ணெய் தடவ -கையும் மெய்யுமாக பிடிக்க ஆழ்வார் கை தடவுகிறது
அன்றிக்கே,
‘வெண்ணெய் களவு கண்டு புசித்த விருத்தாந்தத்தை நினைந்தவாறே கைகளுக்குக் கண் தோற்றுகிறது இல்லை;
அதனாலே, தேடுகின்றன’ என்னுதல். –கைகளும் மயங்கின -ஆழ்வார் அபி நிவேசம் இவற்றுக்கும் உண்டே –
‘கடல் கொண்ட பொருள் மீளுமோ? அறுபதினாயிரம் ஆண்டு மலடு நின்று பட்டினி விட்ட என் கண்கள் மீளுமோ? நல்லது கண்டு கால்
தாழ்ந்தத்தை இனி நம்மது என்று வழக்குப் பேசினால் பசை உண்டோ? தன்னைக் கொண்டு காரியம் கொள்ள வேண்டும் இன்றைக்கும்
உதவுகிறது இல்லை; அவரைக் காணாவிட்டால், அவரைப் பெற்ற சௌபாக்யமுடைய உன்னைக் கண்டு தரிக்க வேண்டும்
இவ்வளவிலும் மீளுகிறது இல்லை,’ என்றான் தசரத சக்கரவர்த்தி.
‘ராமம் மேநுகதா த்ருஷ்டி: அத்யாபி நநிவர்ததே ந த்வா பஸ்யாமி கௌஸல்யே ஸாது மா பாணிநா ஸ்ப்ருஸ.’
‘என்னுடைய பார்வையானது ஸ்ரீராமனைப் பின் சென்றது, இப்போதும் திரும்பவில்லை; கௌஸல்யே! உன்னைப் பார்க்கிறேன் இல்லை; என்னைக்
கையினால் நன்றாகத் தொடு,’ என்பது. ‘கடல் கொண்ட வஸ்து மீளுமோ?’ என்பது, -சமுத்திர இவ காம்பீர்யம் -‘ராமம்’ என்ற சொல்லிற்கு பாவம்,
‘அறுபதினாயிரம்’ என்றது முதல் ‘பசையுண்டோ?’ என்றது முடிய, ‘மே’ என்ற சொல்லிற்கு பாவம்.
பசை – பிரயோஜனம். ‘தன்னைக்கொண்டு’ என்ற இடத்தில் ‘தன்னை’என்றது கண்களை.

—————————————————————————————

கைகளால் ஆரத் தொழுது தொழுது உன்னை வைகலும் மாத்திரைப் போதும் ஓர் வீடு இன்றிப்
பைகொள் பாம்பு ஏறி உறை பரனே! உன்னை மெய்கொளக் காண விரும்பும் என் கண்களே.–3-8-4-

அவதார மூலமான அனந்தசாயீ காண ஆசைப்படா நின்றது
கைகளால் ஆரத் தொழுது தொழுது -பல காலும் பரி பூர்ணமாக
உன்னை வைகலும் மாத்திரைப் போதும் ஓர் வீடு இன்றிப்-கால தத்வம் -விட்டு விடுதல் இல்லாமல்
பைகொள் பாம்பு ஏறி உறை பரனே!-விரிகிற பணங்களை உடைய
உன்னை மெய்கொளக் காண விரும்பும் என் கண்களே.-பிரத்யஷமாக காண -அபரோஷம் -பரோக்ஷம் -மாநஸம்
கைகள் வியாபாரமும் விரும்புகிறது -கண்கள் –

படத்தைக் கொண்டுள்ள பாம்பின்மேலே ஏறி உறைகின்ற மேலானவனே! என் கண்கள் உன்னைக் கைகளால் நன்றாகத்
தொழுது தொழுது நாடோறும் ஒரு மாத்திரைப் பொழுதும் நீங்குதல் இன்றி உன்னை மெய்யாகக் காணவேண்டுமென்று விரும்பாநின்றன.
‘தொழுது தொழுது’ என்னும் அடுக்கு, இடையறாமையின்கண் வந்தது. ‘ஒரு மாத்திரைப்போதும்’ என மாறுக.
மாத்திரைப்போது – ஒரு முறை இமை கொட்டும் கால அளவு.

‘கண்களானவை கைகளின் தொழிலையும் தம் தொழிலையும் ஆசைப்படாநின்றன,’ என்கிறார்.

கைகளால் ஆரத்தொழுது –
‘பசியர் வயிறு ஆர உண்ண’ என்னுமாறு போன்று, உன்னைத் தொழவேண்டும் என்று ஆசைப்பட்டுப் பெறாமையாலே
உறாவிக் கிடக்கிற இக் கைகளானவை நிறையத் தொழுது.
இவற்றுக்குத் தொழாதொழிகை –காதலையுடையவளாய் முலையெழுந்து வைத்துக் கணவனுடைய கைகளால் தீண்டப் பெறாததைப்
போன்றதாதலின், ‘கைகளால்’ என்று வேண்டா கூறுகிறார்.
சர்வேசுவரனை வணங்குவதற்காகவே கை கால் முதலிய அவயவங்களோடு கூடின விசித்திரமான இந்தச்சரீரம் ஆதிகாலத்தில் உண்டாக்கப்பட்டது,’ என்கிறபடியே,
‘கை வந்தபடி செய்ய அன்றோ இவர் ஆசைப்படுகிறது?-இஷ்டப்படி -சிருஷ்டிக்கு காரணமான படி –
வாய்க்கு ஏத்துதல் போன்று கைக்குத் தொழுகையும் ஆதலின், வாய் வந்தபடி சொல்லவும் கை வந்தபடி செய்யவுமே
அன்றோ இவர் ஆசைப்படுகிறார்?’ என்றபடி. வேறு ஒரு பிரயோஜனத்துக்காகத் தொழுதால் பிரயோஜனத்தளவிலே மீளும்;
சாதனம் என்ற எண்ணத்தோடு தொழில் பெற வேண்டிய பயன் கிடைத்த அளவிலே மீளும்;
அங்ஙன் அன்றிக்கே, இதுவே செயலாய் இருத்தல் என்பார், ‘தொழுது தொழுது’ என்கிறார்.
ஆர-பசியர் -தொழ வேண்டும் ஆசைப் பட்டு பெறாமையாலே உறாவிக் கிடந்த கைகள் திருப்தி -வாய் வந்தபடி சொல்லவும்
கை வந்தபடி செய்யவும் ஆசைப்படுகிறார் லௌகிக சப்தங்கள் -நல்ல அர்த்தம் -சிருஷ்டிக்கு காரணம் -வாய் எத்துகையும் -கைகள் தொழுகையும் –
மெய்யானை -தொழாக் கை கை அல்ல கண்டோமே -தொழுகையே ஸ்வயம் பிரயோஜனம் –

முத்தர்களுக்கு இலக்கணம் சொல்லும் போது சுவேதத் தீவில் வசிக்கின்றவர்களுக்கு எது இலக்கணமோ,
அதுவே முத்தர்களுக்கு இலக்கணமாம்; ‘அவர்கள் தன்மை என்னை?’ எனில்,
எக்காலத்திலும் கை கூப்பி வணங்கிக்கொண்டே இருப்பார்கள்; அவ்வாறு செய்தலே தமக்கு விருப்பம் என்று
சந்தோஷத்துடன் இருப்பார்கள்; ‘நம:’ என்று எப்பொழுதும் சொல்லிக்கொண்டேயிருப்பார்கள்,’ என்று சுவேதத்தீவில்
வசிக்கின்றவர்கள் படியைச் சொல்லியிருத்தல் ஈண்டு நினைத்தல் தகும்
நித்ய அஞ்சலி -புடாக -ஹ்ருஷ்டாகா -பசியில் உண்ணப் பெற்றால் போலே தொழுது ஆனந்திப்பார் –
நம இத்யேவ வாசின -இதுவே சீலம் ஒழுக்கம் -யாத்ரை
உன்னை –
இத்தலை தொழுது இருப்புப் பெறுமாறு போன்று, தொழுவித்துக் கொண்டு இருப்புப் பெறும் உன்னை. என்றது,
‘தொழுது அல்லது தரியாத கையாலே தொழுவித்துக்கொண்டு அல்லது தரியாத உன்னை’ என்றபடி.
அன்றிக்கே,
‘கை வந்தபடி செய்யச் சொல்லி விட்ட உன்னை’ என்னுதல்.–இஷ்டப்படி -சிருஷ்டித்த பயன் படி –
‘ப்ராப்தனான -அடையத்தக்கவனான உன்னை’ என்னுதல். ‘ஆயின்,
நாம் தொழுகைக்குத் தொழப்படுகின்றவன் தகுதி உள்ளவனாக வேண்டுமோ?’ எனின், ‘நாய்த்தொழிலே அன்றோ புறம்பு தொழுவது?

வைகலும் ஓர் மாத்திரைப் போதும் வீடு இன்றி
– நாள்தோறும் அதுதன்னிலும் ஒரு கணமும் இடைவிடாதே.‘ஒரு நாளைக்கு ஒருகால் தொழுது தேவை அற்று இராதே இடை விடாதே
பை கொள் பாம்பு ஏறி உறை பரனே –
திருமேனியின் பரிசத்தாலே விரிந்திருக்கிற பணங்களையுடைய திருவனந்தாழ்வான்மேலே சாய்ந்தருளுகையாலே
தகட்டில் அழுத்தின மாணிக்கம் போலே இருக்கையாலே ‘பரன்’ என்கிறது.
இதனால் தொழுவித்துக் கொள்ளுகைக்கு ஈடான உயர்வு அற உயர்ந்த உயர்வினையும், விரும்பத் தக்கதாகையையும்
தொழுமவர்கள் இருக்கும்படியையும் சொல்லிற்று.
அரவு அணையான் அன்றோ சர்வேசுவரனாவான்? -பர்யங்க வித்தையிற் சொல்லுகிற பேற்றை ஆசைப்படா நின்றது என்றபடி.
உன்னை – அடையத் தக்கவனுமாய் இனியனுமான உன்னை-
மெய் கொள்ளக் காண –
பத்தும் பத்தாக மெய்யே காண. என்றது, ‘மனத்தின் அனுபவம் எப்பொழுதும் இடையறாது நிற்கின்ற நினைவின் மிகுதியாலே
நேரே கண்கூடாகக் காணுதலைப் போன்று நன்கு வெளிப்பட,-பாவனா பிரகர்ஷம் -உருவ வெளிப்பாடு – ‘இனிக் கிட்டிற்று’ என்று
அணைக்கத் தேட, -கைக்கு எட்டாமையாலே கூப்பீட்டோடே முடிந்து போதலன்றிக்கே, பிரத்ய பிஜ்ஞார்ஹமாம்படி தேடாநின்றது,’ என்றபடி.
விரும்பும் –
ஆசைப்படாநின்றது. ‘கிடைப்பது, கிடையாது ஒழிவது, ஆசைப்படுகின்றது’ என்றபடி.
என் கண்கள் தம் கைகளாலே தொழவும் தாம் காணவும் ஆசைப்படா நின்றன.
‘ஸ்ரீபரதாழ்வான் பெருமாள் பின்னே போன இளைய பெருமாளை ‘அவரும் ஒருவரே’ என்று கொண்டாடி,
அவர் போய்ச் செய்த அடிமையையும் தான் செய்ய ஆசைப்பட்டாற் போலே ஆசைப்படாநின்றன,’ என்றபடி.

—————————————————————————————-

கண்களாற் காண வருங் கொல் என்று ஆசையால் மண் கொண்ட வாமனன் ஏற மகிழ்ந்து செல்
பண் கொண்ட புள்ளின் சிறகு ஒலி பாவித்துத் திண் கொள்ள ஓர்க்கும் கிடந்து என் செவிகளே.–3-8-5-

செவிகள் காணவும் ஆசைப்பட்டு -காட்சி கொடுக்க வரும் பொழுது -பெரிய திருவடி ஓசையும் கேட்கவும் ஆசைப்படா நின்றன
கண்களாற் காண வருங் கொல் என்று -அபரோஷித்து பிரத்யஷமாக
ஆசையால் மண் கொண்ட வாமனன் ஏற மகிழ்ந்து செல்-வஸ்துவை -அர்த்தியாக பூமியைக் கொண்ட
ஆசைக் கொண்டாருக்கு கருட வாகனனாக -அத்தாலே இருவரும் மகிழ்ந்து –
பண் கொண்ட புள்ளின் சிறகு ஒலி பாவித்துத் -சாம ஸ்வரம் -வேதாத்மா -சேணத்துடன் -என்றுமாம்
திண் கொள்ள ஓர்க்கும் கிடந்து என் செவிகளே.-பரவசமாக கிடந்து -திண்ணியதாக நிருபியா நின்றன –

என் செவிகள், ‘கண்களாலே காண்பதற்கு வருவானோ?’ என்று ஆசையால், பூமியை மூன்று அடிகளால் அளந்துகொண்ட
வாமனன் தன்மேலே ஏறி வீற்றிருக்க அதனாலே மகிழ்ச்சி கொண்டு செல்கின்ற கருடப்பறவையினது சாமவேதத் தொலிகளையும்-
கண்ணின் செயலையும் தனது செயலையும் ஆசைப்படதின் ஒலியையுடைத்தான சிறகின் ஒலியை நினைத்துக் கிடந்து
திண்ணிதாக நினைத்துக்கொண்டேயிருக்கும்.
‘என் செவிகள் ‘கண்களாற்காண வருங்கொல்!’ என்று ஆசையால் பாவித்துக் கிடந்து, திண்கொள்ள ஓர்க்கும்’ எனக் கூட்டுக.
‘மகிழ்ந்து செல் புள்’ என்க. பண் – சாம வேதம்: கலனையுமாம்.

செவிகளானவை கண்ணினுடைய தொழிலையும் தம்முடைய தொழிலையும் ஆசைப்படா நின்றன,’ என்கிறார்.

கண்களால் காண வருங்கொல் என்று ஆசையால் –
தன்னைக் காணவேண்டும் என்று விடாய்த்த இக்கண்களாலே ஒருகால் காண வருமோ?’ என்னும் ஆசையாலே
செவிகள் கிடந்து ஓர்க்கும்; கன்னம் இட்டும் காணவேண்டும்படியன்றோ இறைவனுடைய சிறப்பு இருப்பது?
பிச்சை புகினும் கற்கை நன்றே போலே திருடியும் காண வேண்டும் படி அன்றோ விஷய வை லக்ஷண்யம் -கன்னக் கோல் இட்டு காண ஆசைப்பட்டன செவிகள்
‘பார்க்கின்ற கண்களும் பார்க்கப்படுகிற பொருள்களும் நாராயணனே,’ என்கிறபடியே,
‘கண்ணுக்கு வகுத்த அப்பரமனைக் காண வருமோ?’ என்னாநின்றது என்றபடி. ‘ஆயின், அறிவு இல்லாத
கரணங்களுக்கு ‘வருங்கொல்’ என்று விடாய்க்கை கூடுமோ? எனின்,
‘அன்போடு கூடின யான் துக்கத்தால் மிக இளைத்திருக்கிற அவயவங்களால் ஆடவர் திலகனான ஸ்ரீ ராமபிரானை எப்படித் தொடுவேனோ?’ என்றாள் பிராட்டி.
ஆழ்வார் உடைய அபிநிவேசம் வெள்ளம் இட்டு இவற்றுக்கும்
‘அவனும் வருவானாயோ?’ என்னில், அஃது ஒன்று இல்லை; ஆசையால் – தன் ஆசையாலே.
அன்றியே, ‘தன் ஆசையைப் பார்த்தால் அவன் வரவு தப்பாது என்னும் நினைவாலே’ என்னுதல்.
‘ஆசை மாத்திரம் போதியதாமோ?’ எனின், அவ்வளவு அமையும் ஒன்றே அன்றோ?
பகவத் விஷயத்தில் இட்ட படை கற்படை அன்றோ?-பத்துடை அடியவர்க்கு எளியவன் -அவன் சக்தியால் வைத்த பொருளுக்கு சக்தி உண்டே
‘சாஸ்திரங்களிற் கூறப்பட்ட காரியங்களைத் தொடங்குவது வீண் ஆகாது; தோஷமும் இல்லை,’ என்பது ஸ்ரீகீதை.
மண் கொண்ட வாமனன் –
மண் கேட்ட வாமனன் -என்றும் – மண் கொண்ட திரிவிக்ரமன் சொல்லாமல்
முடி சூடின பின்பும் கருந்தரையில் பேர் சொல்லும் அந்தரங்கரைப் போலே மண் கொண்ட பின்பும் ‘வாமனன்’ என்கிறார் காணும்.
அன்றியே,
இதிலே தாம் துவக்குண்டபடியாலே வளர்ந்த பின்பும் ‘வாமனன்’ என்கிறார் என்னுதல்.
ஏற மகிழ்ந்து செல் –
தன்னை மேற்கொள்ள, அத்தாலே வந்த மகிழ்ச்சியின் மிகுதிக்குப் போக்குவிட்டுச் சஞ்சரியாநிற்கை.
பண் கொண்ட –
வாகனத்தின்மேல் இடுகிற சேணத்தைச் சொல்லுதல்;
அன்றி, கருடன் உருவம் வேதமே ஆகையாலே பிருஹத்ரதந்தரம் முதலிய சாமங்களைச் சொல்லுதல்.
சிறகு ஒலி பாவித்து –
திருவடி சிறகின் ஒலியையே பாவித்து.
திண்கொள் ஓர்க்கும் என் செவிகள் –
முன்னே நின்று சிலர் வார்த்தை சொன்னால் அதிலே செவி தாழ்கிறது இல்லை;
இதனையே திண்ணிதாகப் புத்திபண்ணாநின்றது. அதன் பக்கல் பக்ஷபாதமன்றோ அதற்கு அடி?
பெரிய திருவடியின் மேல் உள்ள ஆசை -இறகின் ஒலி கேட்க ஆசை என்றுமாம் –

———————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: