பகவத் விஷயம் காலஷேபம் -79- திருவாய்மொழி – -3-7-6….3-7-11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

அளிக்கும் பரமனைக் கண்ணனை ஆழிப் பிரான் தன்னைத்
துளிக்கும் நறுங்கண்ணித் தூமணி வண்ணன் எம்மான்தன்னை
ஒளிக்கொண்ட சோதியை உள்ளத்துக் கொள்ளுமவர் கண்டீர்
சலிப்பின்றி யாண்டு எம்மைச் சன்ம சன்மாந்தரம் காப்பரே.–3-7-6-

அநந்ய பிரயோஜனருக்கு -தன் வடிவு அழகை அனுபவிப்பிக்கும் உஜ்வல ஸ்வ பாவன் -அனுபவிப்பார் நமக்கு ரஷகர்
-அநிஷ்டம் தொலைத்து -இஷ்ட பிராப்தி
அளிக்கும் பரமனைக் கண்ணனை ஆழிப் பிரான் தன்னைத்-கொடுப்பதில் இவரை விட இதை விட மேல் இல்லை என்னும் படி
தன்னையே கொடுப்பவர் என்றபடி –
அவர்கள் இட்ட வழக்காக -கையும் திரு ஆழி
துளிக்கும் நறுங்கண்ணித் தூமணி வண்ணன் -மது பிரவகிக்கும் –
எம்மான்தன்னை-ஸ்வாமி
ஒளிக்கொண்ட சோதியை உள்ளத்துக் கொள்ளுமவர் கண்டீர்-தேஜஸ் -உள்ளத்தில் கொள்ளுமவர்
சலிப்பின்றி யாண்டு எம்மைச் சன்ம சன்மாந்தரம் காப்பரே-சன்மாந்தரம் வராமல் காப்பார் என்றபடி
பிரயோஜாஜா நாந்தரம் போக விடாமல் காப்பர்

காப்பாற்றுகின்ற மேலானவனை, கண்ணபிரானை, சக்கரத்தையுடைய உபகாரகனை, தேன் துளிக்கின்ற வாசனையையுடைய
திருத்துழாய் மாலையைத் தரித்த பரிசுத்தமான நீலமணிபோன்ற நிறத்தையுடையவனை, எம்மானை, ஒளி பொருந்திய ஜோதி
சொரூபத்தையுடையவனைத் தம் மனத்தின்கண் வைத்துத் தியானிப்பவர்கள்தாம், சலனமில்லாமல் எம்மை அடிமைகொண்டு
இப்பிறவியோடு மற்றைப் பிறவிகளோடு வேற்றுமையின்றிக் காப்பவர் ஆவர்.
கண்டீர் – தெளிவின்கண் வந்தது. சன்மாந்தரம் – வேறு பிறவி. அந்தரம் – வேறு. எம்மை தனித்தன்மைப்பன்மை.

‘மேலே கூறிய சௌந்தர்யம் முதலியவற்றைத் திரள அனுபவிக்குமவர்கள் எனக்கு இரட்சகர்’ என்கிறார்.
ஆறு பாசுரங்களில் அருளிச் செய்த அனைத்தையும் சேர்த்து அனுபவிக்கும் இவர்கள் என்றபடி –

அளிக்கும் பரமனை –
இவ்வாத்துமாக்களைக் காப்பாற்றுமிடத்தில் தனக்கு மேம்பட்டாரை இல்லாதவனை.
அன்றிக்கே, ‘கொடுக்குமிடத்தில் தனக்கு மேல் இல்லாதவன்’ என்னுதல். அளித்தல் – காத்தலும், கொடுத்தலும்.
கண்ணனை –
அளிப்பது தன்னையே அன்றோ? ‘எனக்கே தன்னைத் தந்த கற்பகம்’ என்றார் முன்னும்.
ஆழிப்பிரான் தன்னை –
‘நாயுதாநி – ஆயுதங்கள் உனக்காக இல்லை’ என்கிறபடியே, தன்னோடு ஆயுதத்தோடு வாசி அற
‘பக்தாநாம் – பக்தர்களுக்காகவே’ என்று இருக்குமவனை. இதனால், ‘ஆளும் பரமனை’ என்ற பாசுரத்தை நினைக்கிறது
துளிக்கும் நறுங்கண்ணி –
அவ்வளவில் அகப்படாதாரை அகப்படுத்துகைக்கு ஈடான கண்ணி இருக்கிறபடி.
கண்ணி -மிருகம் வளைக்க -கண்ணி போட்டு பிடிப்பது போலே -ஆயுதத்தால் அகப்படாதவரை இத்தைக் கொண்டு அகப்படுத்த –
திருமேனியில் பரிசத்தாலே செவ்வி பெற்றுத் தேன் பெருக்கு எடுக்கின்ற நறு நாற்றத்தையுடைய திருத்துழாய்மாலையையும் உடையனாய்;
‘நாதனை’ என்ற பாசுரத்தில், நறுந்துழாய்ப் போதனை’ என்ற பகுதியை நினைக்கிறது.
தூ மணி வண்ணன் எம்மான் தன்னை –
பழிப்பு அற்ற நீலமணி போலே இருக்கின்ற திருநிறத்தைக் காட்டி என்னைத் தனக்கே உரியவனாம்படி செய்தவனை;
‘மணியை வானவர் கண்ணனை’-1-10-11- என்கிறபடியே, நித்தியசூரிகளை எழுதிக்கொண்ட படியே காணும் இவரையும் எழுதிக்கொண்டது;
‘படி கண்டு அறிதியே’ என்ற இடத்துப் படி என்பது ‘திருமேனி’ என்னும் பொருளாதல் காண்க.
படி – திருமேனி. ‘படி’ என்பது, திருமேனி என்ற பொருளில் வருவதற்கு மேற்கோள்,‘படி கண்டு அறிதியே’ என்பது. இது, முதல் திருவந். 85.
இதனால், மேலே போந்த ‘தோளும் ஓர் நான்குடைத் தூ மணி வண்ணன்’ என்ற பகுதியை நினைக்கிறது.

ஒளிக்கொண்ட சோதியை –
தனக்குமேல் ஒன்று இல்லாததான ஒளி உருவமான விக்கிரகத்தையுடையவனை;
இதனால், ‘பயிலும் சுடர் ஒளி’ என்ற பகுதியை நினைக்கிறது.
உள்ளத்துக் கொள்ளுமவர் கண்டீர் –
குணங்களை நினைத்து ஈடுபட்டவராய் வாய்விட மாட்டாதே இருக்குமவர்கள் தாம்.
எம்மைச் சலிப்பு இன்றி ஆண்டு –
பகவானை அடைந்தால் பிரமலோகம் முதலான ஐஸ்வரியங்களைப் பெற்று மீளவுமாம்;
அடியார்கட்கு அடிமை என்னும் அளவு ஆனால் ஆயிற்று மீளாதொழிவது; ஆதலின், ‘சலிப்பின்றி ஆண்டு’ என்கிறது.
‘ஆயின், அடியார்கட்கு அடிமை என்னும் அளவு சென்றும் மீளுகின்ற பேர் உளரே?’ எனின், மீண்டார்களாகிலும்,
திரிதந்தாகிலும் தேவபிரானுடைக் கரிய கோலத் திரு உருக் காண்பரித்தனையே.
‘தெரிவைமார் உருவமே மருவி’-
அருளிச்செய்கிறார், ‘தெரிவைமார் உருவமே’ என்று தொடங்கி.‘தெரிவைமார் உருவமே’ என்ற பாசுரம், என்கிறபடியே,
பல உருச்சொல்லிப் போக வேண்டாதே இவ்வோர் உருவிலும் போரும்படி -அன்றோ அவர்கள் சொல்லுவது?
பன்மையில் பல உருவுகள் தேட வைப்பார் பகவத் சம்பந்தம் தேடினால் -என்றும் -பல சந்தை சொல்ல வேண்டாம் -என்றும் —
சன்ம சன்மாந்தரம் காப்பர் –
ஜன்ம பரம்பரைகளில் புகாதபடி பாதுகாப்பார்கள். மேற் பாசுரங்களிலே ஸ்ரீவைஷ்ணவர்கள்பக்கல் ஆதரத்தாலே பிறவியை ஆதரித்தார்;
இப்பாசுரத்தில் அவர்கள் செய்யும்படியைச் சொல்லுகிறார்.

——————————————————————

சன்ம சன்மாந்தரம் காத்து அடியார்களைக் கொண்டு போய்த்
தன்மை பெறுத்தித் தன் தாளிணைக் கீழ்க் கொள்ளும் அப்பனைத்
தொன்மை பிதற்ற வல்லாரைப் பிதற்றுமவர் கண்டீர்
நன்மை பெறுத்து எம்மை நாள் உய்யக் கொள்கின்ற நம்பரே.–3-7-7-

ஸுவ அனுபவம் பண்ணுவரை ஸ்வரூப ஆவிர்பாவம் பிறப்பித்து -அனுபவிப்பிக்கும் அவனை புகழும் அவரை
புகழும் அவர்கள் நமக்கு புருஷார்த்த ப்ரதர்
சன்ம சன்மாந்தரம் காத்து அடியார்களைக் கொண்டு போய்த்-ரஷித்து -அர்ச்சிராதி மார்க்கம்
தன்மை பெறுத்தித் தன் தாளிணைக் கீழ்க் கொள்ளும் -ஸ்வரூப ஆவிர்பாவம் –
அப்பனைத்-ஸ்வாமியை
தொன்மை பிதற்ற வல்லாரைப் பிதற்றுமவர் கண்டீர்-ஸ்வா பாவிக உபகாரம் -புகல வல்லாரை புகல வல்லவர்
நன்மை பெறுத்து எம்மை நாள் உய்யக் கொள்கின்ற நம்பரே-விச்வச நீயர்- நம்மை -புருஷார்த்தம் அருளி -பாகவத -அடியார்கள்
-அந்தமில் பேர் இன்பத்து அடியவர்கள் உடன் இருக்கும் -புருஷார்த்தம் அளிப்பார்கள்
நாள் -யாவதாத்மா பாவி -உஜ்ஜீவனம் –
இம் மூன்று பாட்டாலும் 5/6/7 சரண்யத்வம் சொல்லிற்று

தொடர்ந்து வருகின்ற பிறவிகளிற்புகாதபடி காத்து அடியார்களை ஒரு தேச விசேஷத்திலே கொண்டு சென்று தனது
சொரூபத்தைக் கொடுத்துத் தன் திருவடிகளின் கீழே அடிமைகொண்டருளும் எந்தையினுடைய இயற்கையான உபகாரத்தை அடைவு கெடக் கூறும்
அடியார்களுடைய புகழை அடைவு கெடக் கூறுகின்றவர்கள்தாம் நன்மையைப் பெறும்படி செய்து எம்மை எப்பொழுதும் உய்யும்படி கொள்ளுகின்ற நம்பர் ஆவர்.
‘சன்ம சன்மாந்தரம் காத்து’ என்ற இடத்துச் சன்மாந்தரங்களில் வாராமற்காத்து என ஒரு சொல்லைக் கொணர்ந்து பொருள் காண்க.
தொன்மை என்றது, இயல்பினை உணர்த்திற்று. ‘பிதற்றுமவர் உய்யக் கொள்கின்ற நம்பர்,’ என்க.
பிதற்றுதல் – பத்தி பாரவசியத்தினால் அடைவு கெடப் பேசுதல். நம்பர் – நம்பப்படுமவர்கள்.

‘அடியார்கள் விஷயத்தில் அவன் செய்யும் மஹோபகாரங்களில் ஈடுபட்டு இருப்பவர்களுக்குத் தோற்றிருக்குமவர்கள் தாம்
எனக்கு எற்றைக்கும் ஸ்வாமிகள்,’ என்கிறார்.

சன்ம சன்மாந்தரம் காத்து –
பஞ்சாக்நி வித்தையிற்சொல்லுகிறபடியே, மேகத்திலே புக்கு மழை உருவத்தாலே பூமியைஅடைந்து,
நெல்லிலே புக்குச் சோற்றின் உருவத்தாலே புருஷன் பக்கலிலே புக்கு, பின்பு, ஐந்தாவதான பெண்ணின் சரீரத்திலே புக்கு,
பின்பே அன்றோ கர்ப்பமாவது? இப்படி வருகின்ற பிறவியின் தொடர்ச்சியை வேர்ப்பற்றோடே அறுத்து. என்றது,
ஆகாசம் /மழை /பூமி /புருஷன் /பெண் –ஐந்து அக்னி
பனி /மழை துளி /மழை /அன்னம் /ரேதஸ் –ஐந்து ஆகுதி
இந்தச் சரீரத்தோடு முடிவுசெய்து பின்பு ஒரு சரீரத்திற்புகாதபடி செய்து’ என்றபடி. ‘இப்படிச் செய்வது யாரை?’ என்னில்
அடியார்களை –
தன் திருவடிகளில் எல்லாப் பாரங்களையும் விட்டிருக்குமவர்களை.
பிரபன்னனுக்கு -சரீர அவசானம் மோஷம் –சாதனா பக்தி -பிராரப்த கர்ம போகாதே –
கொண்டுபோய்த் தன்மை பெறுத்தித் தன் தாள் இணைக்கீழ்க் கொள்ளும் அப்பனை –
‘மரணமானால்’ என்கிறபடியே, சரீரம் பிரியுமளவும் பொறுத்திருந்து– உயிர் உடம்பின் நீங்குங் காலத்து நினையும்
நினைவையும் பத்தியையும் இவர்களுடைய பணியாக்காமல் –’அஹம் ஸ்மராமி – நானே நினைக்கிறேன்,’ என்கிறபடியே,
தானே நினைத்து, வழி தெரியாதபடி இருக்கின்ற நூற்றோராவது நாடியாலே
‘ஆர்த்தனான பரம புருஷனால் அநுக்கிரஹிக்கப்பட்டவனாய்’ என்கிறபடியே, தான் கூடக் கொண்டு புறப்பட்டு,
அச் சரீரத்தின் பிரிவு சமயத்திலே இவன் பட்ட வருத்தமெல்லாம் தீரும்படியாக அவ்வளவிலே ஒரு பரமாத்தும பிரவேசத்தைப் பண்ணுவித்து,
சிறு குழந்தைகள் நொந்தால் தாயானவள் குளிர்ந்த உபசாரம் பண்ணுமாறு போன்று அவ்வளவிலே
மேல் வழி போகைக்குத் தரிப்பு உண்டாம்படி செய்து, ’உயிர்கொண்டு உடல் ஒழிய ஓடும்போது ஓடி, அயர்வென்ற தீர்ப்பான்’ என்கிறபடியே
சென்று முகங்கொடுத்து, கர்ம சம்பந்தம் அற்றிருப்பினும் வித்யா மஹாத்மியத்தாலே விரஜையளவும் சூக்ஷ்ம சரீரம் நிற்கும்படி பண்ணி
அர்ச்சிராதி கணங்களோடு ஒக்க ஆள் இட்டிராமல், ‘நயாமி – அடையச்செய்கிறேன்’ என்கிறபடியே,
தானே வந்து ‘மாதவன் தன் துணையா நடந்தாள்’ என்கிற ‘கள்வன்கொல்’ என்கிற திருப்பதிகத்திலே பிராட்டியைப் போலே
தன் சிறகின்கீழே கொண்டு, வழியிலுள்ளார் தலைமேல் தாங்கும்படி இவ்வருகுள்ளவற்றைக் கழித்துப் பரமபதத்திலே கொண்டு புக்கு,
’இந்த உயிர் இந்தச் சரீரத்திலிருந்து புறப்பட்டுப் பரஞ்சோதியாய் உள்ள பரம்பொருளை யடைந்து’ என்கிறபடியே
தனக்கே உரியதான உருவத்தோடு விளங்கும்படியாகச் செய்து,
பின்னையும் விடாதே திருவடிகளே அணையாகத் தன் திருவடிகளின் கீழே இட்டுக்கொண்டு,
இதுதான் இவனுக்கு உபகரித்தானாய் இருத்தல் அன்றிக்கே, தன் பேறாக நினைத்திருக்கும் மஹோபகாரகனை.
‘எவர் ஒருவர் மிக்க பத்தியையுடையவராய் உபாசனை செய்து எனது சாயுஜ்ய பதவியை அடைகின்றாரோ அவர் விரோதி கழிந்தவராய்
எப்பொழுதும் என்னுடைய கைங்கரிய பரர் ஆகின்றார்,’ எனப்படுதலால் ‘தன் தாளிணைக் கீழ்க்கொள்ளும்’ என்கிறார்.
‘தன்மை பெறுத்தி’
என்றது, ‘தனது சொரூபம் தோன்றும்படி செய்து’ என்றவாறு.
இதுதன்னை இவன் அறிவினை உடையவன் ஆகையாலே உபகாரமாக நினைத்திருப்பான்;
பாரதந்திரியத்தாலே அவன் தனக்காகச் செய்தானாக இருப்பான் ஆதலின், ‘அப்பனை’ என்கிறார்.

தொன்மை பிதற்ற வல்லாரை –
இயற்கையாக அமைந்த வள்ளல் குணத்திலே ஈடுபட்டு முறை கெடப் புகழுமவர்களை.
‘என்னைத் தூஷித்தவர்களையும் துவேஷம் செய்தவர்களையும் கொடிய தன்மையுடையவர்களையும் பிறப்பு இறப்பு வழிகளிலே
என்னை அடைவதற்குத் தடையாகவுள்ள பிறவிகளிலே எப்பொழுதும் தள்ளுகிறேன்,’ என்று
தள்ளுமது இவன் செய்த குற்றங்களைக் கண்டு ஆகையாலே, அது ஒரு காரணம் பற்றி வந்த தன்மையே;
இயற்கையான நிலையாவது, இப்படிப் பாதுகாத்தலேயாம்.-தள்ளுவது காரணத்தாலே கொள்ளுவதே இயற்க்கை என்றவாறு –
பிதற்றுமவர் கண்டீர் –
‘அந்தப்புர விருத்தாந்தம் இவர்களுக்கு நிலையாவதே!’ என்று அவர்கள் விஷயத்திலே ஈடுபட்டு ஏத்துமவர்கள் தாம்.
நன்மை பெறுத்து –
பாகவதர்களுக்கு அடிமைப்பட்டிருத்தலை எல்லையாகவுடைய பகவானுக்கு அடிமைப்பட்டிருத்தல் ஆகிற செல்வத்தை உண்டாக்கி
எம்மை நாள் உய்யக் கொள்கின்ற நம்பரே –
நமக்கு அவன் திருவடிகளில் கைங்கரியத்தை உயிர் உள்ள வரையிலும் நடத்தக்கூடிய நம்பத்தக்கவர்கள்;
இனி, ‘நம்பர்’ என்பதற்கு, ‘முதலிகள்’ என்னலுமாம்.

—————————————————————-

நம்பனை ஞாலம் படைத்தவனைத் திரு மார்பனை
உம்பர் உலகினில் யார்க்கும் உணர்வு அரியான் தன்னைச்
கும்பி நரகர்கள் ஏத்துவரேலும் அவர் கண்டீர்
எம்பல் பிறப்பிடைதோறு எம் தொழு குலம் தாங்களே.–3-7-8-

பிராப்ய பூதன் -ஸ்ரீ யபதியை ச்துதிக்குமவர்கள்
எங்களுக்கு கைங்கர்ய பிரதிசம்பந்திகள்
நம்பனை ஞாலம் படைத்தவனைத் திரு மார்பனை -பகவத் சம்பந்தம் வைத்தே பாகவதர்கள் -ஆச்ரயித்து
அனுபவிக்கைக்கு உறுப்பாக சிருஷ்டித்து
சிருஷ்டி தசையிலும் -பிராப்ய பிராபக தசைகளிலும் ஸ்ரீ யபதி -ஆச்ரயண தசையிலும்
-புருஷகாரம் -பிராப்ய தசையிலும் கைங்கர்ய அபி வ்ருத்தி செய்து அருளுபவர் -ஸ்ரீ யபதி-திரு மார்பனை-
உம்பர் உலகினில் யார்க்கும் உணர்வு அரியான் தன்னைச்
ஸூ ஸ்ருஷ்டமான உபரிதன லோகங்களில் -உணர்வுக்கும் கூட அப்பால் பட்டவன் –
மேன்மையை சொல்லி -இனி மேல் –
கும்பி நரகர்கள் ஏத்துவரேலும் அவர் கண்டீர்-கும்பி பாக நரக வாசிகள் பாப பிரசுரர்கள் -ஸ்தோத்ரம் பண்ணினால்
அவர்கள் தாம் கிடீர் – –
எம்பல் பிறப்பிடைதோறு எம் தொழு குலம் தாங்களே-பரமாத்மா உடைய பிரபாவத்தால் —
குற்றங்கள் தீண்டாமல் -எக்குற்றவாளர் –நம்மை ஆட் கொள்ளும் –
எம் ஸ்ரீ வைஷ்ணவர்கள் -பல ஜன்மங்களிலும் சேஷ வ்ருத்திக்கு -பிரதிசம்பந்தி –
பிராப்ய பலம் -இப்பாசுரத்தில் -நாராயணயா சப்தார்த்தம் -விவரணம் நெடுமாற்கு அடிமை திருவாய்மொழி –

நம்பத்தகுந்தவனும், உலகத்தையெல்லாம் படைத்தவனும் திருமகளை மார்விலே தரித்திருப்பவனும் மேல் உலகங்களிலுள்ள
எத்தகையோர்க்கும் அறிதற்கு அரியவனுமான எம்பெருமானுடைய திருநாமத்தை, கும்பீபாக நரகத்திலே கிடப்ப
வர்களாகி அங்கிருந்து ஏத்துவார்களே யாகில், அவர்களேதாம் எம்முடைய பல வகைப்பட்ட பிறவிகள்தோறும் எமக்குத் தெய்வங்கள் ஆவர்கள்.
‘அவர்தாங்கள் கண்டீர் எம் பல் பிறப்பிடைதோறு எம் தொழுகுலம்,’ எனக் கூட்டுக.
அவர்தாங்கள் என்பதில் ‘கள்’ என்பது அசைநிலை. அன்றியே, ‘தாங்கள் என்பதிலுள்ள ‘கள்’ என்பதனை ‘அவர்’ என்பதனோடும் கூட்டி
‘அவர்கள் தாங்கள்’ என்று கொண்டு பொருள் கூறலுமாம்.
தொழுகுலம் – தொழக்கூடிய குலதெய்வம்; குலம் – குலதெய்வத்திற்கு ஆகுபெயர். ‘யார்க்கும் தொழுகுலமாம் இராமன்’ என்றார் கம்பநாடர்.

‘அவனுடைய திருமகள்கேள்வனாந் தன்மையிலே தோற்றிருக்குமவர் எனக்கு நாதர்,’ என்கிறார்.
நரகத்தில் உள்ளாரையும் திருத்த ஸ்ரீ யபதித்வம் -பூ மேல் இருப்பாள் தானே வினை தீர்ப்பாள் –

நம்பனை –
நம்பப்படுமவனை; ‘எத்தகைய தீய நிலையிலும் ஆத்துமாவுக்குத் தஞ்சமானவனை’ என்றபடி.
ஈஸ்வரனால் வந்த ஆபத்தையும் அவனே ரஷிப்பான் -கர்மம் கண்டு சிஷிக்கவும் கிருபை கொண்டு ரஷிப்பதும் அவனே –
இரண்டு ஆகாரமும் உண்டே
‘மேற்பாசுரத்திலே அடியார்களை நம்பர் என்றாரே?’ எனின், ‘மேற்சொன்னவர்களும் நம்பர் ஆகைக்கு அடியானவனை என்கிறார்’ இப்பாசுரத்தில்.
இதனால், ‘இவனை ஒழிந்த பந்துக்கள் நம்பத் தகுந்தவர்கள் அல்லர்’ என்கை;
‘அந்தக் காகாசுரன் தகப்பனாலும் மஹரிஷிகளோடு கூடியிருக்கின்ற தேவர்களாலும் விடப்பட்டவனாய் மூன்று உலகங்களிலும்
நன்றாகத் திரிந்து பின் அந்தப் பெருமாளையே புகலிடமாக அடைந்தான்,’ என்பது ஸ்ரீராமாயணம்.
‘பெற்றார் பெற்றொழிந்தார் பின்னும் நின்று அடியேனுக்கு உற்றனாய் வளர்த்து என்னுயிராகி நின்றானை’ என்றார் திருமங்கை மன்னன்.
ஆக, இப்படி, எல்லா நிலைகளிலும் நம்பத்தகுந்தவன் சர்வேசுவரனே என்பதனைத் தெரிவித்தபடி.
ஸ்வச்தமான தசையில் நானே அறிவித்து வைத்தால் -ச பித்ராச -நோக்குமா போலே தான் தனக்கு உதவாத தசையிலும் உதவுவானே –
ஈஸ்வரன் -நாம் நமக்கும் ஆகாத அன்றும் -தஞ்சமாவான் தானே யாவான்
பெருமாள் பக்கம் அபராதத்தால் தமப்பன் கை விட்டான்
ச காரத்தாலே தாயும் கை விட்டாள்-
பற்றும் பொது அவள் முன்னாக பற்றும் -கை விடும் பொழுது அவன் விட்ட பின்பே இவள் விடுவாள்
வாத்சல்யம் உரைத்த இடத்திலே முந்துற விழுவது -அவள் காலிலே முந்துற விழுந்தான் –
அவள் சசிதேவி -தாயார்-மை எழுதி ஒப்பனை -த்வேஷித்தால் -விலகி -இவனும் குட நீர் வழித்து நின்றான் -நன்றாக விட்டான் பரித்யாகம் –
ஸூரைஸ்ஸ -தேவர்களும் -சஜாதீயர்களும் கை விட்டார்கள் -ச மகரிஷிபி -ஜீவ காருண்யம் உள்ளவர்களும் -கை விட்டார்கள் –
ஆன்ரு சம்சயத்துக்கு விஷய விவிஸ்தை உண்டே –
திரீன் லோகன் -திறந்து கிஒடக்கும் வாசல் தோறும் நுழைந்து திரியும் பதார்த்தம் -ஒன்பதின் கால்
புகப்புக தள்ளிக் கதவை அடைத்து
தமேவ சரணம் கத -பிரம்மாஸ்திரம் ஏவின -அரி சினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் மற்று அவள் அருள் நினைந்தே -அழும் குழவி அது போலே –
நம்பன் -விச்வச நீயன் -சர்வேஸ்வரன் -எல்லா அவச்தைகளிலும் இவனே –
சிஷித்தவனை ரஷித்தால் குற்றம் இல்லையே -ரஷித்தவனை சிஷித்தால் தானே குற்றம் –
‘இதனை எங்கே கண்டோம்?’ என்னில்,
ஞாலம் படைத்தவனை –
தனக்கு, தானும் இன்றிக்கே பிறரும் இன்றிக்கே
அறிவு இல் பொருளைப் போன்று கிடக்கிற நிலையிலே பேற்றிக்கு உபயோகமான சரீரத்தை உண்டாக்கினவனை.-
‘அது யாருக்குப் பிரியமாக?’ என்னில்,
திருமார்பனை –
அவளுக்குப் பிரியமாக.
‘பிராட்டியினுடைய முகத்தை நோக்கிக்கொண்டு அந்த முகத்தின் குறிப்புகளைப் பின் சென்றவனாய்ப் படைத்தல்
முதலான காரியங்களைச் செய்கிறான்,’ என்னக்கடவதன்றோ?-
-யஸ்யா வீஷ்யா முகம் –தத் இங்கித பராதீனன் -விதத்தே அகிலம் –ஐகரஸ்யம்–ப்ரூ பங்கமே பிரமாணம் –

உம்பர் உலகினில் யார்க்கும் உண்ர்வு அறியான்தன்னை –
மேல் உலகங்களில் எத்தனையேனும் அதிசயிக்கத்தக்க ஞானத்தைஉடையவர்களுக்கும் அறிய ஒண்ணாதவனை.
கும்பி நரகர்கள் ஏத்துவரேலும் –
மஹா பாபத்தின் பலமாகக் கும்பீ பாகமான நரகத்திலே கிடந்தும் அங்கே திருநாமத்தைச் சொல்லுவர்களாகில்.
அவர் கண்டீர் –
எத்தகைய தீவினையாளரேயாகிலும், அவ்விருப்பிலே நமக்கு அடையத்தக்கவர்.
எம் பல் பிறப்பிடை தோறு எம் தொழுகுலம் தாங்கள் –
நம்முடைய பல வகைப்பட்ட பிறவிகளிலே இடங்கள்தோறும் திருநாமத்தைச் சொன்னவர்கள் மாத்திரமே அன்று எனக்கு உத்தேஸ்யர்;
அவர்கள் குலங்களாக எங்கள் குலத்துக்கு ஆசாரியர் ஆவார்கள். ‘அங்குத் துக்க அனுபவம் பண்ணாநிற்க,
திருநாமத்தைச் சொல்லக்கூடுமோ?’ என்னில், ‘துன்பத்தின் மிகுதியாலே, ‘அம்மே! அப்பா!’ என்னக்கூடாதோ?’ என்று காணும் இவர்க்கு நினைவு.
இவர்க்கு நினைவு’ என்கையாலே, ‘துக்கத்தை அனுபவிக்கும் சமயத்தில் திருநாமத்தைச் சொல்லுதல் அரிது,’ என்பது கருத்து.
‘அந்தக ராசலம் வந்தாலுனை யழையாதிருப்பார் அந்தகராச லங்காபுரி யார்க்கரங்கா!மறையின்
அந்தக ராசலக் கூக்குரலோயுமுன் ஆழ்தடங்கல் அத்தக ராசலத்தே துஞ்ச நேமி யறுக்கக்கண்டே.’–என்றார் திவ்வியகவியும்.

—————————————————————————–

குலந்தாங்கு சாதிகள் நாலிலும் கீழ் இழிந்து எத்தனை
நலந்தான் இலாத சண்டாள சண்டாளர்கள் ஆகிலும்
வலந்தாங்கு சக்கரத்து அண்ணல் மணிவண்ணற்கு ஆள் என்று உள்
கலந்தார் அடியார் தம்மடியார் எம் அடிகளே.–3-7-9-

ஆஸ்ரிதர் ஜென்மாதி -அபகர்ஷ தோஷ நிவர்தகமான -பரம பாவனத்வம் -அநந்ய பிரயோஜனமாக
அனுபவிப்பார் -த்ரி புருஷம் எனக்கு சேஷிகள்
குலந்தாங்கு சாதிகள் நாலிலும் கீழ் இழிந்து எத்தனை-அநு லோமம் -பிரதி லோமம் -ஈர் இரண்டிலும் பிறந்திலேன் –
நலந்தான் இலாத சண்டாள சண்டாளர்கள் ஆகிலும்-அறிவும் இன்றிக்கே -இருக்கும் –
முதல் சண்டாளர் ப்ராஹ்மண ஸ்தானம் வைத்து -மீமிசை சொல்
வலந்தாங்கு சக்கரத்து அண்ணல் மணிவண்ணற்கு ஆள் -பெருமானுக்கு ஆட்செய்தவன் -வலக்கை -பலம் என்றுமாம் –
சரணம் பவித்ரம் -பவித்ர பூதன் -சக்கர பொறி ஒற்றிக் கொண்டு -சுவாமி –
ஸூ சம்பந்தத்தால் பவித்ரம் ஆக்கும் ஸ்வ பாவன் –
என்று உள் கலந்தார் அடியார் தம்மடியார் எம் அடிகளே-சேஷபூதர் -அநந்ய பிரயோஜனராய் கலந்தார் -அடியாருக்கு அடியார் எங்களுக்கு சுவாமிகள்
நிதான பாசுரங்கள் இதுவும் அடுத்ததும்

குலங்களைத் தரித்திருக்கின்ற நான்கு சாதிகளிலும் கீழே கீழே சென்று மிகச்சிறிய நன்மையுங்கூட இல்லாத சண்டாளர்களாகிலும்,
வலக்கையில் தரித்திருக்கின்ற சக்கரத்தையுடைய பெருமையிற்சிறந்தவனான நீலமணி போன்ற நிறத்தையுடைய எம்பெருமானுக்கு அடிமை
என்று நினைத்து வேறு பிரயோஜனத்தைக் கருதாதவர்களுடைய அடியார் அவர்தம் அடியார் எமக்குக் கடவுள் ஆவர்.

வி-கு : இப்பாசுரத்தால் சாதிகள் நான்கு உள என்பது ஆழ்வார் திருவுள்ளமாதல் காண்க.
வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும், கீழ்ப்பால் ஒருவன் கற்பின், மேற்பால் ஒருவனும் அவன்கட் படுமே,’ என்பது புறநானூறு.
ஆசிரியர் தொல்காப்பியனார் மரபியலில் நான்கு வருணங்களைக் கூறியிருத்தல் ஈண்டு நினைவு கூர்க.
‘நலந்தான் எத்தனை இலாத’ என மாறுக. இது, சண்டாளர்களுக்கு அடைமொழி. ‘எத்தனை’ என்பது, ‘சிறிது’ என்னும் பொருளது.
‘எத்தனையும்’ என்ற உம்மை தொக்கது.

‘கையும் திருவாழியுமான அழகிலே தோற்றிருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு அடிமைப்பட்டவர்கள் எனக்கு ஸ்வாமிகள்,’ என்கிறார்.

குலம் தாங்கு சாதிகள் நாலிலும் கீழ் இழிந்து –
முறைப்படி நடக்கும் விவாகத்தாலும் அநுலோம பிரதிலோம விவாகத்தாலும் உள்ள குலங்களைத் தரிப்பதான
பிராஹ்மண வருணம் முதலான நான்கு பிறவிகளிலும் கீழே கீழே போய்.
ரிஷ்ய சிங்கர் -சாந்தா தேவி ரோமஹர்ஷர் பெண் -அநு லோமம் விவாகம் த்ரேதா யோகம்
யயாதி எது -மேல் ஜாதி கல்யாணம் பிரதி லோமம் -த்வாபர யுகம்
மனு -சாஸ்திரம் -கலி யுகம் கூடாது -அவர்களுக்கு பிராயச்சித்தம் செய்ய சக்தி உண்டு என்பதால்
எத்தனை நலந்தான் இலாத சண்டாள சண்டாளர்கள் ஆகிலும்-
அந்தச் சண்டாள ஜன்மத்துக்கு அடைத்த ஞான ஒழுக்கங்கள் இன்றியே இருப்பாருமாய், ‘சண்டாளர்’ என்றால் நாம் நோக்காமல்
போமாறு போன்று அந்தச் சண்டாளர்களும் விலகிச் செல்லக் கூடியவர்களாகிலும்.
பிரணவம் சொல்லாமலே அருளிச் செயல் -ஒழுக்க சீலர்கள் -நமோ நாராயாணாய தான் சொல்லுவார்கள் –
‘இவர்கள் உத்தேஸ்யர் ஆகைக்கு என்ன வலக்குறி -அடையாளம்-உண்டு?’என்ன,
விருத்தவான்கள் -வ்ருத்த வான்கள் -ஒழுக்க சீலர் -சக்கர குறி வலக்குறி-அன்றோ இவர்கள் என்று
கைமேலே காட்டிக்கொடுக்கிறார் மேல்.–உள்ளங்கை நெல்லிக் கனி போலே -கை மேல் உள்ள சக்கரப் பொறியே பலம் –

வலம் தாங்கு சக்கரத்து மணிவண்ணன் அண்ணற்கு –
‘வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு’ என்றவர்,
‘வடிவார் சோதி வலத்து உறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு’ என்னுமாறு போன்று, இவரும் மேற் பாசுரத்திலே
‘திருமார்பனை’ என்றார்; இங்கே ‘வலந்தாங்கு சக்கரம்’ என்கிறார்.
அந்தப்புரத்துக்கு காவல் வேண்டுமே -இதனால் நம்மாழ்வார் பெரியாழ்வார் -இப்படி அருளிச் செய்கிறார்கள் –
வலப்பக்கத்தே தரிக்கப்பட்ட திருஆழியை உடையனாய் அதற்குப் புகலிடமான நீலமணி போலே சிரமத்தைப் போக்குகின்ற
வடிவழகையுடைய அறப்பெரியவனுக்கு.
ஆள் என்று உள் கலந்தார் அடியார்தம் அடியார் என் அடிகளே –
‘சொரூப ஞானம் முன்பாக ‘அடிமை செய்கையே பிரயோஜனம்’ என்று இருக்குமவர்களுடைய அடியார் எனக்கு ஸ்வாமிகள்,’ என்கிறார்.
விருத்தவான் அபிமானத்திலே ஒதுங்கும் இதுவே அன்றோ வேண்டுவது? அவர்கள் அவனிலும் உத்தேஸ்யர் ஆவர்கள் அன்றோ!
அத்யந்த நிஹீனாக இருந்தாலும் -வ்ருத்தவான்கள் -வலக்கை ஆழியான் -பற்றியவர்கள் -மகாத்மா உடைய பிரபாவத்தால் பாபம் ஒட்டாதே
-ஈட்டிய வினையரேலும் அருவினை பயன் ஒட்டாதே சிந்தையிலே வைத்து மருவி -என்றார் -இவர் ஆள் என்று உள் கலந்தார் -என்கிறார் –

‘இவ்வாறு ‘சண்டாள சண்டாளர்களாகிலும் – எம் அடிகளே’ என்று கூறுதல் உலக நடைக்கு மாறுகோடல் அன்றோ?’ எனின்
‘இப்படி வைஷ்ணவர்களை விரும்பினால் இது உலக மரியாதைக்குச் சேராதிருந்ததாகில்,
ஆழ்வார் விரும்பியதை நம்பினவர்களாகிறோம்,’ என்று நஞ்சீயர் அருளிச்செய்வர்.

—————————————————————————————–

அடி ஆர்ந்த வையம் உண்டு ஆலிலை அன்ன வசஞ்செயும்
படியாதும் இல் குழவிப்படி எந்தை பிரான் தனக்கு
அடியார் அடியார் தம்மடியார் அடியார் தமக்கு
அடியார் அடியார் தம்மடியார் அடியோங்களே.–3-8-10-

சப்த பர்வம் -நிலை -பிரளய ஆபத்சகன் -ஆலிலை -சாயிக்கு சேஷ பூதர் -சம்பந்தி பரம்பரைக்கு ஏழு படி கால்
அடி ஆர்ந்த வையம் உண்டு ஆலிலை அன்ன வசஞ்செயும்-திரிவிக்ரமம் -அடியால் ஆர்ந்த -அளந்து போகம்
-அனைத்தும் உள்ளே இருக்கா என்று பார்த்து கராரவிந்தம் –
அன்ன வசம் செய்து -உண்டது ஜரியாமல் ஒருக்களித்து
இடது பக்கம் -ஜரிக்கும்-உண்ட பின்பு -நடை -கொஞ்சமாக பேசி -இடது பக்கம் படு -வியாதி வராது ஆயுர் வேதம்
படியாதும் இல் குழவிப்படி எந்தை பிரான் தனக்கு-ஒப்பு இல்லா-முக்த சிசு விக்ரகம் -அந்த ஸ்வாபாத்தாலே எங்களை எழுதிக் கொண்ட சுவாமி
அடியார் அடியார் தம்மடியார் அடியார் தமக்கு அடியார் அடியார் தம்மடியார் அடியோங்களே.
சப்த -சம்பந்தி பாரம்பரையின் எல்லை நிலங்களின் –
பாட்டு முடிந்த வாறே -சந்தச்சில் இல்லை சந்தத்தில் உள்ளத்தில் இடம் இருந்தாலும்
சேஷத்வ ப்ரீதி -ததீயரான சேஷ சேஷி பாரம்பர்யத்துக்கும் ஒப்பு இல்லை

‘திருவடிகளுக்கு அளவான பூமியை உண்டு, உண்ட உணவுக்கு அநுகுணமாகக் காரியத்தைச் செய்த, ஒப்பு ஒன்று இல்லாத இளமை பொருந்திய
திருமேனியையுடைய எந்தை பிரானுக்கு அடியார் அடியார்தம் அடியார் அடியார்தமக்கு அடியார் அடியார்தம்மடியார்கட்கு அடியோம் யாம்,’ என்கிறார்.
படி – ஒப்பு. குழவிப்படி – குழவி வடிவு. ‘அடியோங்களே’ என்பதில் ‘கள், ஏ’ என்பன அசைநிலைகள்.

‘அவனுடைய அகடிதகடநாசாமர்த்யத்தில் தோற்றிருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய அடிமையின் எல்லை நிலம் நான்,’ என்கிறார்.

அடி ஆர்ந்த வையம் உண்டு –
அமுதுசெய்ய, முன்பே அடி இட்ட படி அன்றோ இது? தன் படிக்குக் காற்கூறும் போராததை அன்றோ அமுது செய்தது?
காலால் அளந்ததை -கால் பங்கு தான் உண்டார் -திருவடிக்கு அளவான பூமியை அமுது செய்து.
ஆல் இலை அன்ன வசம் செய்யும் –
அப்பொழுது தோன்றியது ஓர் ஆலந்தளிரிலே உணவுக்கு ஈடாக இடம் வலங்கொள்ளும். அமுது செய்த படி ஜீரணியாமல்,
வலக்கை கீழ்ப்பட ஆயிற்றுக் கிடப்பது. ‘வலக்கை கீழ்ப்படக் கிடப்பான் என்?’ எனின், தந்தாம் ஜீவனத்திற்குக் கேடு வாராமல்
பாதுகாத்தல் எல்லார்க்கும் ஒக்குமே? கூழாட்படுகை அவனுக்கும் ஒத்திருக்கிறபடி.
அன்ன வசஞ்செய்யும்’ என்றது, ‘உண்ட அன்னத்துக்குத் தகுதியாகச் செய்யுமவன்’ என்பதாம்; என்றது,
‘உண்ட உணவு அறாதபடி வலக்கை கீழதாகக் கண்வளர்பவன்’ என்றபடி. இவ்விடத்தில்,
‘தாமக் கடை யுகத்துள்ளே விழுங்கித் தரித்தபழஞ் சேமப் புவனம் செரிக்குமென்றே,சிவன் மாமுடிக்கு நாமப் புனல் தந்த
பொற்றாளரங்கர், நலஞ் சிறந்த வாமத் திருக்கரமேலாகவே கண் வளர்வதுவே.’-என்ற திவ்வியகவியின் பாசுரத்தை நினைவு கூர்க.

படி யாதும் இல் குழவிப் படி –
ஒப்பு ஒன்றுமின்றியே இருக்கின்ற பிள்ளைத்தனத்தாலே. ‘யசோதையின் முலைப்பால் உண்ணும் பிள்ளையும் ஒப்பு அன்று வடதளசாயிக்கு’ என்பார்,
‘படி யாதும் இல் குழவி’ என்கிறார். ‘தொட்டில்நின்றும் தரையிலே விழப் புகுகிறோம்’ என்று அஞ்ச அறியாத இளமையே அன்றோ அங்கு?
‘ஆல் இலையினின்றும்பிரளயத்திலே விழுகிறோம்,’ என்று அஞ்ச அறியாத மௌக்த்யம் அன்றோ இங்கு?’ என்றபடி.
எந்தை பிரான் –
அகடித கடநா சாமர்த்யத்தாலே என்னைத் தோற்பித்த உபகாரகன்.

அடியார் அடியார்தம் அடியார் அடியார்தமக்கு அடியார் அடியார்தம் அடியார் அடியோம் –
‘அந்தப் பரம்பொருள் ஈசுவரர்களான சிவன் முதலியோர்களுக்கும் மேலான ஈசுவரன்’ என்கிறபடியே,
இறைமைத்தன்மைக்கு அவனுக்கு அவ்வருகு இல்லாதது போன்று, அடிமையாம் தன்மைக்குத் தமக்கு
அவ்வருகு இல்லாதபடி அதன் எல்லையிலே நிற்கிறார். ஐஸ்வரியத்தை ஆசைப்பட்டவர்கள் தம்மோடு ஒத்த இனத்தாரில் ஏற்றத்தை ஆசைப்பட்டு,
க்ஷத்திரியர்க்கு மேலே ஆசைப்பட்டு, இந்திர பதத்தை ஆசைப்பட்டு, பிரஹ்மாவின் அளவில் ஆசைப்படுமாறு போன்று,
இவரும் இவ்வருகில் எல்லையை ஆசைப்படுகிறார். இப்போதும் தம்முடைய ருசிக்கு அவதி உண்டாய் இவ்வளவிலே நின்றார் அல்லர்;
பாசுரத்தில் இதற்கு அவ்வருகு போக ஒண்ணாமையாலே நின்றார் இத்தனையேயாம்.
‘இவ்வாறு ‘சண்டாள சண்டாளர்களாகிலும் – எம் அடிகளே’ என்று கூறுதல் உலக நடைக்கு மாறுகோடல் அன்றோ?’ எனின்
‘இப்படி வைஷ்ணவர்களை விரும்பினால் இது உலக மரியாதைக்குச் சேராதிருந்ததாகில்,
ஆழ்வார் விரும்பியதை நம்பினவர்களாகிறோம்,’ என்று நஞ்சீயர் அருளிச்செய்வர்.
லௌகிக விருத்தம் ஆனாலும் ஆழ்வார் திரு உள்ளப்படி நடந்தோம் ஆவோம் என்றபடி –

—————————————————————————–

அடி ஓங்கு நூற்றுவர் வீய அன்று ஐவர்க்கு அருள்செய்த
நெடியோனைத் தென் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
அடி ஆர்ந்த ஆயிரத்துள் இவை பத்து,அவன் தொண்டர் மேல்
முடிவு ஆரக் கற்கில் சன்மம் செய்யாமை முடியுமே.–3-8-11-

ஜன்ம நிவ்ருத்த பலன்
அடி ஓங்கு நூற்றுவர் வீய அன்று ஐவர்க்கு அருள்செய்த-ராஜ்ய பிரதிஷ்டை உயர்ந்து வரும்படி -அவர்களால் நிரஸ்தரான அன்று
-பாண்டவர்க்கு சர்வ பிரகார உபகாரம்
நெடியோனைத் தென் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
செய்தாலும் ஒன்றும் செய்யாதாவன் போலே -பாரிப்பு உடையவன் -நிர்வாககர் -கட்டளைப் பட்ட திரு நகரி -அந்தரங்க வ்ருத்திகள்
அடி ஆர்ந்த ஆயிரத்துள் இவை பத்து,அவன் தொண்டர் மேல்
திருவாய் மொழி -வாசா கைங்கர்யம் -பாத பந்தம் -தொகை –
அடியார்களைப் பற்றிய
முடிவு ஆரக் கற்கில் சன்மம் செய்யாமை முடியுமே-சன்மம் முடிக்கும் என்கிறது இல்லை -பாகவத கைங்கர்யம் இல்லாத ஜன்மம் கிட்டாது -உத்தேச்யம் இதுவே
நெஞ்சிலே புகும் படி அப்யசிக்க முடியுமாகில் -துர் லாபம் -ததீய சேஷத்வம் இல்லாத ஜன்மம் முடிக்கும்

எல்லா வகையாலும் வேர் ஊன்றிய துரியோத நாதிகள் அழியும்படி அக்காலத்தில் பஞ்சபாண்டவர்களுக்கு அருள் செய்த
நெடியோனைப் பற்றிய, அழகிய திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீசடகோபருடைய குற்றேவல்களாகிய, அடிகளுக்குக் கூறிய
இலக்கணங்கள் அமைந்த ஆயிரம் பாசுரங்களுள் இப்பத்துப் பாசுரங்களும் அவனுடைய அடியார்கள்மேல் முடிவு;
இவற்றை நன்றாகக் கற்றால், பிறவி உண்டாகாதபடி முடிந்துபோம்.
‘அவன் தொண்டர் மேல் முடிவான இவை பத்து ஆரக் கற்கில் சன்மம் செய்யாமை முடியும்’ என மாறுக. ‘வீயச்செய்த நெடியோன்’ என்க.

‘பாகவதர்களுக்கு அடிமைப்பட்டிருக்கும் அடிமையைப் பற்றிப் பரக்கப் பேசிய இத்திருவாய்மொழியைக் கற்றவர்கள்,
இப்பேற்றிற்கு விரோதியான சமுசாரத்தைக் கடப்பார்கள்,’ என்கிறார்.

அடி ஓங்கு நூற்றுவர் வீய –
பாண்டவர்களை அரக்கு மாடத்திலே அகப்படுத்தியும், சூதிலே தோற்பித்தும், வனவாசம் முதலியவைகளைப் பண்ணுவித்தும்,
தாங்கள் புத்திரர் மித்திரர் முதலியவர்களாலே நிறைந்து இராச்சியத்திலே வேர் விழுந்த துரியோதனாதிகள் நூற்றுவரும் முடியும்படி.
அன்று –
அவர்களாலே தள்ளப்பட்ட அன்று.
ஐவர்க்கு அருள் செய்த நெடியோனை –
இரண்டு இடத்திலும் ஒக்குங்காணும் ஐவர்க்கு அருள் செய்கை.-பாண்டவர்க்கும் -ஆழ்வாருக்கு -பஞ்ச இந்த்ரியங்கள்
இங்குத் திசை திசை வலித்து எற்றுகின்ற ஐவர்க்கு அருள் செய்தான்;
அங்கு அவர்களாலே எற்று உண்ட ஐவர்க்கு அருள் செய்தான். இவர்களுடைய யானை குதிரை உள்ளிட்டவை அவர்கள் பறித்துக் கொள்ள,
எவனுக்கு மந்திரியாயும் காக்கின்றவனாயும் இருக்கின்றானோ’ என்கிறபடியே, இழந்தவை எல்லாம் தானேயாய் நின்றான் ஆதலின்-‘அருள் செய்த’ என்கிறார்.
நெடியோனை –
பாண்டவர்கள் காரியம் செய்து போகிற அன்றும், ‘நிறைவு பெறாத மனத்தையுடையவனாய்
இருக்கிறேன்,’ என்கிறபடியே, ‘அவர்கள் காரியம் ஒன்றும் செய்யப்பெற்றிலோம்,’ என்றிருந்தபடி.

தென்குருகுகூர்ச் சடகோபன் குற்றேவல்கள் –
ஆழ்வார் பாகவதர்களுக்கு அடிமைப்பட்டிருக்கும் அடிமையை எல்லையாகவுடைய கைங்கரியத்தை வாசிகமாகப் பண்ணுகையாலே
அந்தரங்க அடிமை ஆயிற்றுச் சர்வேசுவரனுக்கு.
அவனைப் பற்றி பாடினால் பஹிரங்கமாம் -தொண்டர் மேல் பாடினால் அந்தரங்கமாம் –
அடி ஆர்ந்த ஆயிரத்துள் –
இருக்கு வேதம் போலவும், ‘நான்கு அடிகளோடு கூடியதும் ஒவ்வோரடியும் எழுத்துக்களால் ஒத்திருப்பதும்’ என்கிற
ஸ்ரீ ராமாயணம் போலவும் அடிகள் நிறைவுற்ற ஆயிரம்.
அவன் தொண்டர்மேல் முடிவு இவை பத்து –
இதில் சர்வேசுவரனைச் சொன்ன இடங்கள் உபசர்ஜ்ஜன கோடியிலே யாமித்தனை.
உபசர்ஜன கோடி அவனைப் பற்றி -உடையவன் -திருமால் அடியார் -திருமாலை சொல்லித் தானே அடியார் -திருமால் அடியாருக்கு விசேஷணம் –
ஆரக்கற்கில் – நெஞ்சிலே படும்படி கற்க ஆற்றல் உள்ளவர்களாகில்.
இனி, ‘இதில் ஒரு பாட்டும் விழ விடாதே கற்கில்’ என்னுதல்.
சன்மம் செய்யாமை முடியும் –
அடியார்கட்கு அடிமையாம் தன்மைக்கு விரோதியான பிறவியிலே சேர்தல் அறும்.
அடியார்க்கு அடிமையாகும் தன்மை கிட்டும் சொல்லாமல் -வியாதி போக்க சக்கரைப் பொங்கல் போலே அநிஷ்ட நிவ்ருத்தி –
ஆனபின்பு இஷ்ட பிராப்தி -பாகவத கைங்கர்யம் பள்ள மடை தன்னடையே வரும் –

————————————————————————————

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

தத் சோக சாந்தி விதயே -தேர் கடாவிய கனை கழல் காண சோகப் பட்டாரே –திருவடி ஸ்தானம் அடியார்களை காட்டி அருளி
ஹரிணா-பிரசாதாத்
ஆவிஷ்க்ருத்தான் தத்-ச- குண சேஷ்டிதான் போக சீலான்
ஆலோக்ய வைஷ்ணவ ஜனான் முனி
ஆத்மா நாதன் ஆக்யாயா -நம்பர் பரமர் ஆளுடையர்
சப்தமே சக -ஜஹர்ஷ-அதி ஜஹர்ஷ -அவர்களை ஆனந்திப்படுத்தி தானம் ஆனந்தித்தார்
பாகவத பிரதர்சனம் திருக்குணம் -அடியார்க்கு ஆட்படுத்தும் விமலன் –இது தான் அவன் குணம் —பாகவதருக்கு சேஷத்வம் -ஆழ்வாருக்கு

—————————————————————-

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –

ஸூ ஸ்வாமிதாம்–தனக்கு ஸ்வாமிகள் -என்பதை பேசினார்
ஸ்பீதாலோகாதீ பீம்தாம் –பயிலும் சுடர் ஒளி மூர்த்தி
ப்ருத்வு பஹூ புஜயா –தோள் கள் நான்குடை
திவ்ய மால்ய அஸ்த்ர பூஸா –நாறும் துழாய் போதனை -சக்கரத்து அண்ணலை
சத் வஸ்த்ர -உடையார்ந்த ஆடையன்
த்ருதச ரசக்ருத -அமரர்களுக்கு ஆர அமுதூட்டி
ரஷணம் உன்முக்ய-வத்யா -அளிக்கும் பரமன் கண்ணன்
முக்தைகி உத்தம்ஸி தம் க்ரியா –முக்தர்களால் வண்னக்கப்படும் -ஜன்ம சன்மாந்தரம் காத்து
ஸ்திர த்ருத ரமயா–திரு மார்பன்
ச்யாமயா -அண்ணல் மணி வந்தனர்
நித்ய சத்யா –ஆலிலை அன்னவாசல் செய்யும்
தாச தாச -தனக்கு ஸ்வாமிகள்

——————————————————-

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 27-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்–

பயிலும் திருமால் பதம் தன்னில் நெஞ்சம்
தயலுண்டு நிற்கும் ததியர்க்கு -இயல்வுடனே
ஆளானார்க்குக் ஆளாகும் மாறன் அடி அதனில்
ஆளாகார் சன்மம் முடியா——–27-

—————————————–

அவதாரிகை –

இதில்
ததீயரை பத்தும் பத்தாக உத்தேச்யராக அனுசந்தித்த
பாசுரத்தை
அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
கீழே
சௌலப்ய காஷ்டையை யுபதேசிக்க அத்தையும்
காற்கடை கொள்ளுகையான
சம்சாரிகளோட்டை சஹவாசத்தால் வந்த வெக்காயம் மாறாத படி –
தனக்கு பாத ரேகை போலே பரதந்த்ரரான ஸ்ரீ வைஷ்ணவர்களை
அவன் காட்டக் கண்ட அவர்கள் திருவடிகளிலே தலையை மடுத்து
அவர்கள் தான் அவன் படிகளிலே பல படியாக மண்டி இருக்கிற படியைக் கொண்டாடி
அவர்கள் எல்லை நிலத்திலே சென்று இனியராகிற
பயிலும் சுடர் ஒளியின் தாத்பர்யத்தை
பயிலும் திருமால் -இத்யாதியால் -அருளிச் செய்கிறார் -என்கை –
கச்சதா மாதுலகுலம் -இதிவத் –

—————————————————————————————-

வியாக்யானம்–

பயிலும் திருமால் –
ஆஸ்ரித சங்க ஸ்வபாவனான
ஸ்ரீ யபதியினுடைய-ஆஸ்ரிதற்காக சங்கல்பிக்கும் திருமால் – திருவடிகளிலே
இத்தால் -திரு நாரணன் -என்றத்தை சொல்லுகிறது —

பயிலும் திரு என்று
எம்பெருமானோடே சர்வ காலமும் சம்ஸ்லிஷ்டையான ஸ்ரீ என்னவுமாம் –

பதம் தன்னில் நெஞ்சம் தயலுண்டு நிற்கும் ததியர்க்கு –
என்றது –
பாதம் பணிய வல்லாரை -என்றபடி –

நெஞ்சம் தயலுண்டு நிற்கையாவது –
திருவடிகளிலே போக்யதையை அனுசந்தித்து
ச்நேஹார்த்தரதா யுக்தா சித்தராய் தன நிஷ்டராய் இருக்கை-என்றபடி
உன் இணைத் தாமரைகட்கு அன்புற்று நிற்குமது -என்னக் கடவது இறே –

அன்றிக்கே
தயல் -என்று தையலாய்
திருவடிகளிலே பந்த பாவராய் இருக்குமவர்கள்
என்றாகவுமாம்
ததீயர் -என்று
தத் சம்பந்தமே நிரூபகமாய் உள்ளவர்களுக்கு -என்கிறது
பயிலும் திரு உடையார் -என்றும்
தாளும் தடக்கையும் கூப்பிப் பணியுமவர் -என்றும்
பாதம் பணிய வல்லார் -என்றும்
திரு நாரணன் தொண்டர் -என்றும்
இப்புடைகளிலே நிரூபகமாய் இருக்கை -என்கை –
பாகவதம் -பாகவத இதம் பாகவதம் போலே அவன் சம்பந்தமே நிரூபகம்

இயல்வுடனே ஆளானார்க்குக் ஆளாகும் மாறன் அடி –
வடிவு அழகிலும்
ஆயுத ஆபரணாதி ஒப்பனை அழகிலும்
தோற்று அடிமையாய் இருப்பவர்களுக்கு ஆளாகையே
ஸ்வரூபமாய்
இருக்கும் ஆழ்வார் திருவடிகளில் –

ஆளாகார் –
அடிமை ஆகாதார் –

சன்மம் முடியா –
சன்ம ஷயம் பிறவாது –
எமர் கீழ் மேல் ஏழ் பிறப்பும் விடியா வென்னரகத்து என்றும் சேர்த்தல் மாறினார் -என்னும்படி
ஆழ்வார் சம்பந்தம் உடையவர்களுக்கு இறே
சம்சார சம்பந்தம் அறுவது –
இவையுமோர் பத்து சொன்னால் இறே சன்மம் செய்யாமே
இலங்கு வான் யாவரும் ஏறுவது
அல்லாதாருக்கு சித்தியாது இறே –

ஆகையால்
ததீய சேஷத்வத்தின்
எல்லை நிலத்திலே
நிற்கிற ஆழ்வார் திருவடிகளை ஆஸ்ரயிக்கவே
ஜன்ம சம்சார பந்த நிவ்ருத்தி பூர்வகமாக
மோஷ சித்தியாம் –
என்றபடி –

—————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: