பகவத் விஷயம் காலஷேபம் -78- திருவாய்மொழி – -3-7-1….3-7-5–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

அர்ச்சாவதாரத்தின் எளிமையை அருளிச்செய்யச் செய்தேயும், நெஞ்சில் நெகிழ்ச்சியின்றியே உலகப்பொருள்களில்
ஈடுபட்டவர்களாய் இருக்கிற சமுசாரிகள் தன்மையை அநுசந்தித்தார்;
‘தேர் கடவிய பெருமான் கனைகழல் காண்பது என்று கொல் கண்கள்?’ என்ற இவர்க்கு, நிழலும் அடிதாறுமாய்-பாத ரேகை – இருக்கின்ற
ஸ்ரீ வைஷ்ணவர்களைக் காட்டிக்கொடுக்க, உபதேசம் இல்லாமலே பகவத் விஷயம் என்றால் நெஞ்சு பள்ளமடையாய் இருக்கிற
ஸ்ரீ வைஷ்ணவர்களைக் கண்டார்;–சாயையும் ரேகையும் -எம்பெருமானாருக்கு –எம்பார் – முதலியாண்டான் போல –
அடிதாறு – பாத ரேகை; பாதுகையுமாம்.‘அழகும் அறிவோமாய் வல்வினையைத் தீர்ப்பான் நிழலும் அடிதாறும் ஆனோம்.’
அவர்கள் பக்கலிலே திருவுள்ளம் சென்று, ‘இவர்களும் சிலரே!’ என்று அவர்களைக் கொண்டாடி,
’நான் சர்வேசுவரனுக்கு அடிமை அன்று; ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு அடிமை; அதுதன்னிலும் நேர் கொடு நேர் இவர்களுக்கு
அடிமையாக வேண்டுமோ? இவர்களோடு சம்பந்தி சம்பந்திகள் அமையாதோ?’ என்று இங்ஙனே பாகவதர்களுக்கு அடிமைப்படும்
அடிமை உத்தேஸ்யமாய் அவர்களை ஆதரிக்கிறார் இத்திருவாய்மொழியில்.
சேஷித்வ எல்லையில் அவன் இருக்க -சேஷத்வ எல்லையில் இருக்க ஆசைபடுகிறார் -நமஸ் சப்த ஆந்தரார்த்தம் –

‘நன்று; ‘எம்மா வீட்டின்’ என்ற திருவாய்மொழியில் ‘தனக்கேயாக எனைக்கொள்ளும் இஃதே’ என்று பேற்றினை அறுதியிட்டார்;
இங்கே, ‘பாகவதர்களுக்கு அடிமைப்படும் அடிமை உத்தேஸ்யம்,’ என்கிறார்; பேறு இரண்டாய் இருக்கிறதோ பின்னை?’ என்னில்
, அன்று; ‘தனக்கேயாக எனைக் கொள்ளும் இஃதே.’ என்கிற அதன் உட்பொருளாய் இருக்கிறது இதுவும். ‘யாங்ஙனம்?’ எனின்,
பகவானுக்கு அடிமைப்படும் அடிமையின் எல்லையாகிறது, பாகவதர்களுக்கு அடிமைப்படும் அடிமை அளவும் வருகையே அன்றோ?
நாம் அறிய வேண்டிய அர்த்தங்களில் திருமந்திரத்திற் சொல்லாதது ஒன்று இல்லையே? அதனை அறியும் திருமங்கையாழ்வாரும்,
‘நின் திரு எட்டெழுத்தும் கற்று நான்…உற்றதும் உன்னடியார்க்கு அடிமை,’ என்று இதனை அதற்கு அர்த்தமாக அருளிச்செய்தார்.
‘திருமந்திரத்தில் பகவானுக்கு அடிமைப்படும் அடிமை ஒழியப் பாகவதர்களுக்கு அடிமைப்படும் அடிமை சொல்லும்படி என்?’ எனின்,
திருமந்திரத்திற்கு அர்த்தம், இவனுடைய அநந்யார்ஹ சேஷத்துவம் சொல்லுகை. அநந்யார்ஹ சேஷத்துவமாவது,
ததீயர்க்குக் கிரய விக்கிரயங்கட்குத் தகுதியாம்படியாகை. ‘அந்தப் பகவானுடைய பத்தியில் ஈடுபட்ட மனத்தையுடைய
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்குக் கிரய விக்கிரயங்களுக்குத் தகுந்தவராய்’ என்றும், ‘எந்தம்மை விற்கவும் பெறுவார்களே’
என்றும் வருகின்ற பிரமாணங்களைக் காண்க.

சம்சாரிணாம்-ஸ்வா பாவ அனுசந்தேன-துன்பம் -நானோ ஸ்வா தந்த்ரன் -தன் சரண் தந்திலன் -தச்யாப் அலாப்யாத் —
உபய வித துக்கம் போக -ஸ்ரீ வைஷ்ணவர் காட்டிக் கொடுக்க – -பாத ரேகைகளும் சாயையும் –
க்ரய விக்ரய அர்ஹம் -விற்கவும் வாங்கவும் -கேசவா -கிளர் சோதியாய் -என்று திரு நாமம் சொல்வார் -எம் தம்மை விற்கவும் பெறுவார் -பெரியாழ்வார்

மேலும், தந்தைக்கு ஒரு தேசம் உரியதாமானால், அது புத்திரனுக்கும் கிரய விக்கிரயங்கட்குத் தகுதியாக இருக்கும்;
அப்படி இராத அன்று, தந்தையினுடைய செல்வத்திற்குக் கொத்தையாம். மேலும், ‘சமுசாரமாகிற விஷமரத்துக்கு
அமிருதத்திற்குச் சமானமான இரண்டு பழங்கள் உண்டு; அவை ஒரே காலத்தில் கிருஷ்ணனிடத்தில் பத்தியும் அவன்
அடியார்களிடத்திலேயே எப்பொழுதும் கூடியிருத்தலுமாம்,’ என்னும் பொருளையுடைய சுலோகத்தில்
‘தத்பக்தைர்வா ஸமாகம: பத்தர்களிடத்திலேயே கூடியிருத்தல் ‘என்கிற இடத்தில் ‘வா’ என்றதனை தேற்றேகாரத்திலே ஆக்கி,
‘உத்தேஸ்யந்தானே இங்கே சித்திக்குங்காண்’ என்று எம்பெருமானார் அருளிச்செய்வர். பெறத்தக்க பேற்றிக்கு முதல் எல்லை
பகவானுக்கு அடிமை என்ற அளவிலே நிற்றல்; முடிவின் எல்லை, பாகவதர்களுக்கு அடிமைப்பட்டிருக்கும் அடிமை அளவும் வருகை.
அவன் நிரந்குச ஸ்வ தந்த்ரன் -பட்டத்துக்கு உரிய அரசும் யானையும் -செய்வதை கேட்க முடியாதே –
பாகவதர்கள் தானே பார தந்த்ர்யமே வடிவு கொண்டவர்கள் –
-பயிலும் சுடர் ஒளி -சேஷத்வம் சரண்யத்வம்-இரண்டையும் சொல்லி -பிரதம மத்யம பதார்த்தம் சொல்லி –
பிரணவம் -நமஸ் அர்த்தங்கள் சொல்லி -நெடுமாற்கு அடிமை -திருதிய -புருஷார்த்தம் -நாராயணாயார்த்தம் -சொல்லி அருளுகிறார் –

கச்சதா – போகின்ற. இதற்கு எம்பெருமானார், பயிலுஞ்சுடரொளி’ என்ற திருவாய்மொழியிலும்
‘நெடுமாற்கடிமை’ என்ற திருவாய்மொழியிலும் சொல்லுகின்ற அர்த்தத்தை ஸ்ரீ சத்ருக்னாழ்வான் அநுஷ்டித்துக் காட்டினான்’ என்று அருளிச்செய்வர்.
கண்ணி நுண் சிறுத் தாம்பு -இந்த ஸ்லோகம் பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம் பார்த்தோம் -இங்கு நம்பிள்ளை அருளிச் செய்கிறார் –
இவ்வர்த்தத்துக்கு அடி திருமந்திரம் ஆயிற்றே; அது மூலமாக அநுஷ்டிக்கவே, இத் திருவாய்மொழியிற் சொன்னதைச் செய்தது ஆம்
ஆசாரத்தை முக்கியமாகக் கொண்ட அவதாரமாய், அதில் பெருமாள் ‘பிதா சொல்லிற்றுப் புத்திரன் செய்யக்கடவன்,’-
என்கிற மரியாதை குலையாதே அதனை நிலைநிறுத்துகைக்காகப் பித்ருவசன பரிபாலனம் முதலான சாமாந்ய தருமத்தை அநுஷ்டித்தார்
’இதுதான் செய்யத்தக்க விஷயத்தில் செய்யக்கடவது’ என்னுமிடத்தை அநுஷ்டித்துக் காட்டினார் இளையபெருமாள்;
‘அது செய்யுமிடத்தில் அவன் உகந்த அடிமை செய்யக்கடவது,’ என்னுமிடத்தை ஸ்ரீ பரதாழ்வான் அநுஷ்டித்துக் காட்டினான்;
‘அதுதான் பாகவதர்களுக்கு அடிமைப்பட்டிருக்கும் அடிமையை முடிவாகக் கொண்டு இருக்கும்,’ என்னுமிடத்தை ஸ்ரீ சத்ருக் நாழ்வான் அநுஷ்டித்துக் காட்டினான்.
பெருமாள், ‘பிதா சொல்லிற்றுச் செய்யக் கடவது’ என்னுமிடத்தை அநுஷ்டித்தார்; அதுதன்னிலும் நேரே பிதாவைப் பின்பற்றக் கடவன்
என்னுமிடத்தை இளையபெருமாள் அநுஷ்டித்தார்; அதுதன்னிலும் ‘குருஷ்வ – செய்’ என்று நிர்ப்பந்திக்கக் கடவர்அல்லர்;
‘இராச்சியத்திலே இரும்’ என்னில், அது இன்னாதாகிலும் அதிலிருந்து அடிமை செய்யக்கடவன் என்னுமிடத்தை
அநுஷ்டித்தான் ஸ்ரீ பரதாழ்வான்; அதன் எல்லையை அநுஷ்டித்தான் ஸ்ரீ சத்ருக்நாழ்வான்.
பல்லவிதம் -பகவத் கைங்கர்யம் -புஷ்பிதம் -பாகவத கைங்கர்யம் -பலிதம் -ஆச்சார்ய கைங்கர்யம் –

அவன் படி சொல்லுகிறது ‘கச்சதா’ என்னும் சுலோகம்.
‘மாதுல குலம் கச்சதா பரதேந நீத: –
அம்மான் வீட்டிற்குச் செல்லுகிற பரதனாலே அழைத்துச் செல்லப்பட்டான்’ – மாமன் வீடு உத்தேஸ்யமாகப் போனான் அவன்;
அவன் தான் உத்தேஸ்யமாகப் போனான் இவன். ‘இவனும் மாமன் வீடு உத்தேஸ்யமாகப் போனான் என்ன ஒண்ணாதோ?’ எனின்,
யுதாஜித்து அழைத்தது ஸ்ரீபரதாழ்வானை அன்றோ? ‘கச்சதா – போகிற’ என்கிற இந்த நிகழ்காலச் சொல்லால் முன் கணத்திலும் தன்னெஞ்சிலும் இல்லை;
பெருமாளுக்கு விண்ணப்பஞ்செய்தமையும் இல்லை; சக்கரவர்த்தியைக் கேள்வி கொண்டமையும் இல்லை என்கை.
‘பரதேந –
பரதனால்’ – பெருமாளும் போகட்டுப் போக, இளையபெருமாளும் அவரைத் தொடர்ந்து போக, சக்கரவர்த்தியும் இறக்க,
ஸ்ரீ சத்ருக்நாழ்வானும் தன்னையல்லது அறியாதே இருக்க, பெருமாளுடைய இராச்சியத்தைப் பரித்துக்கொண்டிருக்கையாலே ‘பரதன்’ என்கிறது
‘பரத இதி ராஜ்யஸ்ய பரணாத் – பரதன் என்னும் இப்பெயர் ராஜ்யத்தைத் தாங்குகையாலே.’
‘ததா – அப்படியே’ –
தானும் ராஜபுத்திரனாய் நக்ஷத்திரமும் வேறுபட்டிருந்தால், பிரிந்து தனக்குப் பொருந்தும் முகூர்த்தத்திலே செல்லுதலே முறையாம்.
அது செய்யாதே அவன் புறப்பட்டதே தனக்கும் முகூர்த்தமாகப் போனான்.
‘அநக: –
பாபம் அற்றவன்’ – அப்படை வீட்டில் அல்லாதார் எல்லாம் பாபம் கலந்த ஜீவனம் போலேகாணும். என்றது,
இராம பத்தி கலந்திருத்தலைக் குறித்தபடி. ‘ஆயின், இராம பத்தியைப் பாபம் என்னலாமோ?’ எனின்,
‘இருவினைகளில் புண்ணியம் உத்தேஸ்யமாயினும், மோக்ஷ உலகிற்கு விரோதி என்னும் முறையாலே இரு வினையும் விடத்தக்கது
என்னாநின்றதே அன்றோ? இங்கும், உத்தேஸ்ய விரோதியாகையாலே சொல்லலாம்,’ என்பது.
-கிருஷ்ண பக்தி பாபம் – வல்வினையேன் போனேன் குடக் கூத்து ஆடுவதை கான
‘ஆயின், இது உத்தேஸ்ய விரோதியோ?’ என்னில், பேற்றுக்கு முடிவின் எல்லையை நோக்க, முதற்படியில் நிலை விரோதி அன்றோ?
‘சத்ருக்ந:’ –
பிறந்த போதே ‘எதிரிகள் மண்ணுண்ணும்படி வளரும்’ என்று தோற்றியிருக்கையாலே, இப்படித் திருநாமம் சாற்றினான் வசிஷ்டன்.
‘நித்ய சத்ருக்ந:’
புறம்பேயுள்ள பகைவர்களை வெல்லுதல் அன்றியே, உட் பகைவர்களான இந்திரியங்களை வென்றிருப்பவன். என்றது,
‘பும்சாம் திருஷ்டி சித்தா பஹாரிணம் –
ஆடவர்களுடைய கண்களையும் மனத்தையும் கவரக்கூடியவன்’ என்கிற விஷயத்தில் கண் வையாமையைத் தெரிவித்தபடி.
அங்கும் ‘இவனுக்கு இனிது’ என்று இவ்வழியாலே புகுவானித்தனை.

‘‘அநக:’ என்பதற்கும், ‘நித்யசத்ருக்ந:’ என்பதற்கும் வேறுபாடு என்?’ என்னில்,
அநக: என்னும் இதனால், பரிசுத் தத்தில் ஸ்ரீ பரதாழ்வானை ஒவ்வார் பெருமாள் என்கிறது;
‘நித்ய சத்ருக்ந:’ என்னுமிதனால், இனிமையில் ஸ்ரீ பரதாழ்வானை ஒவ்வார் பெருமாள் என்கிறது.
‘நீத: – அழைத்துச் செல்லப்பட்டான்’ – ஒரு குற்றுடைவாள், நிழல் உள்ளிட்டவையைப் போன்று போனான். என்றது
‘ஒருவனோடு மற்றொருவன் சேர்ந்து செல்லுகின்ற காலத்துச் செல்லுதலாகிய அத்தொழில் செல்லுகின்ற இருவர் இடத்திலும் இருக்குமே?
தான் வேறு ஒருவனாக இருந்தும், ஜாதி குணங்களைப் போன்று பரதந்திரனாய்ப் போனான்,’ என்றபடி.
‘பிரீதி புரஸ்க்ருத: – தமையன் பின்னே தம்பி போகக் கடவன்’ என்னும் முறையாலே தேவை போன்று இருக்குமோ?’ என்னில், அங்ஙன் அன்று;
‘படைவீட்டிலே இருந்தால் ஒருவன் சோற்றைப் பகுந்து உண்ணுமாறு போன்று படை வீடாகப் பெருமாளுக்கு அடிமை செய்வார்கள்;
ஏகாந்தமான இடத்தில் நாம் எல்லா அடிமைகளையும் செய்யலாம்,’ என்று, ‘அஹம் சர்வம் கரிஷ்யாமி –
நான் எல்லா அடிமைகளையும் செய்வேன்’ என்று இளைய பெருமாள் காடேறப் போயினமை போன்று,
இவனும் ‘நாம் எல்லா அடிமைகளையும் செய்யலாம்’ என்கிற பிரீதி பிடரி தள்ளத் தள்ளப் போனான்.

எம்பெருமானார் இச்சுலோகத்துக்கு வாக்கியார்த்தமாக, ‘ஸ்ரீசத்ருக்நாழ்வான் பெருமாளுக்கு நல்லனானபடி,
பெருமாளைக் காற்கடை கொண்டு, பெருமாளுக்கு நல்லனான ஸ்ரீ பரதாழ்வானையல்லது அறியாதபடியானான்’ என்று அருளிச்செய்தார்.
இது காரணமான பின்பு, சொன்ன மிகை எல்லாம் பொறுக்கும் அன்றோ? அல்லது, ஒரு மனிதனுக்கு மற்றொரு மனிதன்
உத்தேஸ்யன் ஆகையாவது, ஓட்டை ஓடத்தோடு ஒழுகல் ஓடமாம் அன்றோ?
‘அநந்யா – இறைவனைத் தவிர வேறொன்றனையும் விரும்பாத’ என்கிற நிலை இவர்களுக்கு உண்டானால்
இவர்களைப் பின்பற்றுகிறது அவனைப் பற்றியதாம் அன்றோ?

அமிர்தம் ஒத்த பாயாசம் கொடுத்து பிறந்த சத்ருக்னன் அன்றோ -பெருமாள் கைங்கர்யத்துக்கு இளைய பெருமாளும்
ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு ஸ்ரீ சத்ருகன ஆழ்வான்
இதுதான் செய்யத்தக்க விஷயத்தில் செய்யக்கடவது’ என்னும் இவ்விடத்தில்,
நற்றா தையும்நீ; தனிநா யகன்நீ; வயிற்றில் பெற்றாயும் நீயே; பிறரில்லை: பிறர்க்கு நல்கக்
கற்றா யிதுகா ணுதிஇன் றெனக்கை மறித்தான் முற்றா மதியம் மிலைந்தான் முனிந்தானை யன்னான்.’-(கம்ப அயோத்:நகர்நீங்கு. 136)
‘முத்துருக் கொண்டுசெம் முளரி அலர்ந்தால் ஒத்திருக் கும்எழி லுடையஇவ் வொளியால்
எத்திருக் கும்கெடும் என்பதை உன்னாச் சத்துருக் கன்எனச் சார்த்தினன் நாமம்.’-கம்பர்
தாயுரை கொண்டு தாதை உதவிய தரணி தன்னைத் தீவினை யென்ன நீத்துச் சிந்தனை முகத்திற் றேக்கிப்
போயினை என்ற போது புகழினோய்! தன்மை கண்டால் ஆயிரம் இராமர் நின்கே ழாவரோ தெரியி னம்மா!’ஸ்ரீ குகப்பெருமாள்.
எண்ணில் கோடி இராமர்க ளென்னிலும் அண்ணல் நின்னரு ளுக்குஅரு காவரோ?
புண்ணி யம்எனும் நின்னுயிர் போயினால் மண்ணும் வானும் உயிர்களும் வாழுமோ?’-கௌசல்யா தேவியார்.

பிராஹ்மண சாதி ஒன்றாய் இருக்கவும், குலம் சரணம் கோத்திரம் முதலியவைகளால் பிரித்துச் சம்பந்திக்குமாறு போன்று,
வைஷ்ணவர்களுக்கு நிரூபகம், அவனுடைய குணங்கள் செயல்கள் முதலியவைகளால் ஆம். அவ்வழியாலே, அவனுடைய
வடிவழகிலே துவக்குண்டிருக்குமவர்கள், குணங்களிலே துவக்குண்டிருக்குமவர்கள், செயல்களிலே துவக்குண்டிருக்குமவர்கள் என்று
இவ்வழியாலே அவர்களைப் பிரித்து, அவர்கள் எல்லாரோடும் தமக்கு ஒரு சம்பந்தத்தை ஆசைப்பட்டு, ‘அவர்கள் எல்லாரும் எனக்கு ஸ்வாமிகள்’ என்கிறார்.

—————————————————————————

பயிலும் சுடரொளி மூர்த்தியைப் பங்கயக் கண்ணனைப்
பயில இனிய நம் பாற்கடற் சேர்ந்த பரமனைப்
பயிலும் திருவுடையார் எவரேலும் அவர்கண்டீர்
பயிலும் பிறப்பிடை தோறு எம்மைஆளும் பரமரே.–3-7-1-

விலஷண விக்ரக குண விசிஷ்டன் -ஷீரார்ணவ -சர்வாதிகன் -சம்ச்லேஷிக்கும் -சம்பத்து உடையவர்கள்
ஜன்ம வ்ருத்தாதிகளால் தாழ்ந்தவர்களாக இருந்தாலும் எனக்கு சேஷிகள் என்கிறார் -பிரணவார்த்தம்-என்றவாறு
பயிலும் சுடரொளி மூர்த்தியைப் பங்கயக் கண்ணனைப்-செறிந்த -சௌந்தர்ய லாவண்யம் -அவயவ -சமுதாய சோபைகள்
தேஜோ மாயா திவ்ய விக்ரகம்
புண்டரீகாஷத்வம் –
பயில இனிய நம் பாற்கடற் சேர்ந்த பரமனைப்-அனுபவிக்க போக்கியம் -நிரதிசய -பாற் கடல் சேர்ந்த -நம் பரமன்
-ஆஸ்ரித அர்த்தமாக கண் வளர்ந்து அருளும்
விக்ரக குண -யோக்யதா -பாரம்யம் -பரமன்
பயிலும் திருவுடையார் எவரேலும் அவர்கண்டீர்-நிரந்த அனுபவம் பண்ணி செறிகை -இதுவே செல்வம்
எவரேலும் -ஜன்ம -வித்யா வ்ருத்தங்கள்-எத்தனை தாழ நின்றாலும்
பயிலும் பிறப்பிடை தோறு எம்மைஆளும் பரமரே-எத்தனை ஜன்மம் எடுத்தாலும் -ஜன்ம அவகாசங்கள் -பரம சேஷிகள்
அவனுடைய பாரம்ய அனுபவம் -பரமன் -அவனை அனுபவிக்கும் -இவர்கள் -தமக்கு பாரம்ய -அனுபவிப்பதில் இவர்களே பரமம்
அவன் குண சௌந்தர்யங்களில் நிகர் இல்லாதது போலே நிகர் அற்றவனை அனுபவிப்பதால் இவர்களுக்கு நிகர்

செறிந்துள்ள பேரொளி மயமான சரீரத்தையுடையவனும், தாமரை போன்ற திருக்கண்களையுடையவனும், பயில்வதற்கு இனிய
பாற்கடலிலே யோகநித்திரை செய்கின்ற நம் பரமனுமான எம்பெருமானைச் சேர்கின்ற பெரிய செல்வத்தை உடையவர்கள்,
எப்பிறவியை உடையவர்களாகிலும், அவர்கள் தாம், உண்டாகின்ற பிறவிதோறும் எம்மை அடிமை கொள்ளத் தக்க சுவாமிகள்.
‘பயில இனிய’ என்பது, பரமனுக்கு அடைமொழி. எவரேலும் – உம்மை இழிவு சிறப்பு. கண்டீர் – தெளிவின்கண் வந்தது.
பின்னர் வருகின்றவைகளையும் இங்ஙனமே கொள்க. தோறு – இடைச்சொல்; இடப்பன்மையைக் காட்ட வந்தது.
இத்திருவாய்மொழி, ஐஞ்சீர் அடியாய் வந்தமையின், கலி நிலைத்துறை.

’வடிவழகிலும் குணங்களிலும் தோற்றிருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் எனக்கு ஸ்வாமிகள்,’ என்று
இத்திருவாய்மொழியிற் சொல்லப்படும் பொருளைச் சுருங்க அருளிச்செய்கிறார்.

பயிலும் சுடர் ஒளி மூர்த்தியை –
எல்லை இல்லாத ஒளிப் பிழம்பையே வடிவாக உடையவனை.
இதர விஷயங்களில் ஒளி கர்மம் காரணமாக வளருகையாலே வளருமாறு போன்று குறைந்து வரும்; இது அங்ஙனம் அன்றியே
என்றும் ஒக்கப்புகர் விஞ்சி வாராநிற்குமாதலின், ‘பயிலும்’ என நிகழ்காலத்தால் அருளிச்செய்கிறார்.
பயிலுகை – செறிகை. சுடர் என்றும், ஒளி என்றும் தேஜஸ்ஸாய் ‘மிக்க தேஜஸ்’ என்கை. அன்றியே, ஒளி – அழகுமாம்.
அன்றியே,
‘பயிலும்’ என்பதனை ‘மூர்த்திக்கு’ அடைமொழியாக்கி, என்றும் உளதாந் தன்மையைச் சொல்லிற்றாகக் கோடலுமாம்.
என்றும் உளதாவதாவது, எல்லாக்காலத்திலும் இருப்பது ஒன்று ஆகையாலே, ‘பயிலும்’ என நிகழ் காலத்தால் அருளிச்செய்கின்றார்.
ஆக, ‘சுத்த சத்துவமயமாய்ச் சொரூபப் பிரகாசகமான விக்கிரகத்தையுடையவன்’ என்கை.
நிஷ்கிருஷ்ட சத்துவமேயாய் ‘அந்த முக்குணங்களுக்குள்ளே பரிசுத்தமாயிருப்பதனாலே ஸ்படிகம் போன்று பிரகாசிக்கிறதும்
சாந்தமாயிருப்பதுமான சத்துவகுணம்’ என்றும், ‘கிளர்ச்சியோடு இருக்கிற ஒளிகளினுடைய கூட்டமாய் இருக்கிற அந்த விஷ்ணு’ என்றும்,
‘ஆகாயத்தில் அநேகம் ஆயிரம் சூரியர்களுடைய ஒளியானது ஒரே காலத்தில் உண்டானால் அது அம்மகாத்துமாவினுடைய ஒளிக்கு ஒப்பாகும்’ என்றும்
சொல்லுகிறபடியே, எல்லை இல்லாத ஒளி உருவமாய் ‘ஆறு குணங்களுடைய விக்கிரஹம்’ என்று மயங்குவார்க்கு மயங்கலாம்படியாய்,
ஞானம் முதலான குணங்களுக்கும் சொரூபத்துக்கும் பிரகாசகமான விக்கிரகம் என்பதனைத் தெரிவித்தபடி.

பங்கயக்கண்ணனை –
வடிவழகு எல்லாம் பாதியும், கண்ணழகு பாதியுமாயிருக்கும்.-
‘ராம: கமல பத்ராக்ஷ:’ என்னுமாறு போன்று, வடிவிலே துவக்கு உண்பாரை வளைத்துக்கொள்வது கண் அழகாயிற்று.
ஒரு சுடர்க்கடல் போலே ஆயிற்று வடிவு; அது பரப்பு மாறத் தாமரை பூத்தாற்போலே ஆயிற்றுக் கண் அழகு.
வடிவுதானே கவரும் தன்மையது? அதற்கு மேலே அகவாயில் வாத்சல்யம் முதலிய குணங்களுக்கும் பிரகாசகமாய் இருக்குமன்றோ திருக்கண்கள்?
ஆக, ‘என்றும் உள்ளதாய் எல்லை இல்லாத ஒளி உருவமான விக்கிரஹத்தையும் அதிலும் கவர்ச்சிகரமான கண்ணழகையுடையவனை’ என்றபடி.

இப்படி வடிவழகும் கண்ணழகும் கண்ணழிவு அற்று இருக்கையாலே இனியதாய் இருக்குமன்றோ? இதர விஷயங்கள் கிட்டுந்தனையும்
ஒன்று போலேயாய்க் கிட்டினவாறே அகல வழி தேடும் படியாயிருக்கும் ஆதலின்,
‘பயில இனிய’ என்கிறார்.
என்றது, ‘அவற்றினுடைய தாழ்வினை அறிகைக்கும் அங்கே செறிய அமையும்; பகவத்விஷயத்தினுடைய என்றும் உள்ளதாய்
அடையக்கூடியதாய் இருக்குந்தன்மையை அறிகைக்கும் அங்கே நெருங்க அமையும்,’ என்றபடி.
மால் பால் மனம் சுழிப்ப மங்கையர் தோள் கை விட்டு-
ஆகையாலே அன்றோ இவ்வஸ்து நித்தியமாய் அடையக் கூடியதாய் இருக்கிறது?மற்றும், இவ்விஷயத்தில் அனுபவித்த அழகை
நோக்க அனுபவிக்கும் அழகு, ‘முத்தன் இச்சரீரத்தை நினையாதவனாகி’ என்கிறபடியே, முத்தன் சமுசார வாழ்க்கையை மறக்குமாறு போன்று,
அனுபவித்த தன்மையை நினைக்க ஒண்ணாதபடி அன்றோ இருப்பது? ஆதலால் அன்றோ, ‘பண்டு இவரைக் கண்டு அறிவது எவ்வூரில்
யாம் என்றே பயில்கின்றாளால்’ என்றார் மாறன் பணித்த தமிழ் மறைக்கு ஆறங்கம் கூற அவதரித்த ஆலிநாடரும்? என்றது,
‘முதல் நாள் கண்டால், இயற்கையில் அமைந்த இறைமைத்தன்மையாலும் முகத்தில் தண்ணளியாலும்
ஆக, காணாது கண்டவனுக்கும் ‘பண்டு கண்டு விட்ட முகமோ?’ என்று தோன்றியிருக்கும்; சில நாள் பழகினால்,
‘பண்டு இவரை நாம் கண்டு அறியோமே!’ என்று தோன்றியிருக்கும்’ என்றபடி.
‘ஆயின், இரண்டற்கும் சொல் ஒத்திருக்க, இப்பொருளைக் காட்டும்படி எங்ஙனே?’ என்று நான்-நம்பிள்ளை – கேட்டேன்;
‘பயில்கின்றாளால்’ என்று முதல் முன்னம் பார்த்த நிலையோடு பார்த்துப் பின்னர்க் கலங்கிய நிலையோடு வேற்றுமை அற
வார்த்தை இதுவேயாய் இருந்தது கண்டீரே’ என்று நஞ்சீயர் அருளிச்செய்தார்.-வர்த்தமான பிரயோகம் —
தெரிந்த பின்பு தெரியாதது என்று அறிந்தேன் -அறிந்தேன் என்பவன் அறியாதவன் -என்று ஸ்ருதி சொல்லுமே –
‘வடிவழகு குறை அற்றுக் குணத்தில் கொத்தையாலே கிட்ட வொண்ணாதபடி இருப்பானோ?’ என்னில்,
‘கலங்காப் பெரு நகரத்தை இருப்பிடமாக உடையவன் திருப்பாற்கடலிலே வந்து அடைகின்றவர்கட்கு முகம் கொடுக்கைக்கு ஒருப்பட்டிருக்கின்றான்,’ என்பார்
, ‘நம் பாற்கடற்பரமனை’
என்கிறார். ‘நம்’என்றது, ‘அடியவர்கட்காக’ என்றபடி. என்றது, ‘அல்லாதார் வடிவு படைத்தால்,
‘வடிவில் வீறுடையோம்’ என்று, அணைய விரும்பினால், அருமைப்படுத்திப் புறப்படத் தள்ளுவர்கள்;
இப்படி அழகுடையவன், தானே அடியார்களை அனுபவிப்பிக்கைக்காக அணித்தாக வந்து சாய்ந்தமையைத் தெரிவித்தபடி.
‘வடிவழகாலும் குணங்களாலும் அல்லாதாரைக் கழித்து, இவனுக்கு ஓர் ஏற்றம் சொன்னீர்; மேன்மைக்கு இவனுக்கு அவ்வருகே
ஒரு பொருள்தான் உண்டோ?’ என்னில், ‘மேன்மைக்கும் இவனுக்கு அவ்வருகு ஒரு பொருள் இல்லை,’ என்பார், ‘பரமனை’ என்கிறார்.

பயிலும் திருவுடையார் –
‘நல்ல வாய்ப்பாய் இருந்தது’ என்று முகம் காட்டுவித்துக்கொண்டு பிரயோஜனத்திற்கு மடி யேற்கை யன்றியே,
அவன் தன்னையே பிரயோஜனமாகப்பற்றி நெருங்கும் செல்வமுடையார். என்றது, ஒரு பிரயோஜனத்துக்குப் பற்றினவர்கள்
அது பெற்றவாறே அவனை விட்டுப் போவர்கள் அன்றோ? அவன்தன்னையே பற்றினவர்கள் பின்னை அங்கே நெருங்குமத்தனையே யாதலின்,
‘பயிலும்’ என நிகழ்காலத்தால் அருளிச்செய்கிறார் என்றபடி. அவன் இறைமைத்தன்மைக்கு எல்லையாய் முடி கவித்தாற்போலே,
இவர்கள் அடிமைக்கு எல்லையாய் முடி கவித்திருப்பவர்களாதலின், ‘திருவுடையார்’ என்கிறார்.
‘ஆயின், இதனைத் திருவாகச் சொல்லலாமோ?’ எனின், ‘அந்தரிக்ஷ கதஸ் ஸ்ரீமான் – ஆகாயத்தை அடைந்தவன் ஸ்ரீமானாக உள்ளவன்’
, ‘ஸது நாகவரஸ் ஸ்ரீமான் – அந்தக் கஜேந்திர ஆழ்வான் ஸ்ரீமானாய் இருந்தான்,’ ‘லக்ஷ்மணோ லக்ஷ்மி சம்பந்ந:’ என்னும்
இடங்களில் இதனைத் திருவாகக் கூறப்பட்டுள்ளமை காண்க.
‘அந்தரிக்ஷ கதஸ் ஸ்ரீமான்’ – இலங்கைவிட்டுப் பெருமாள் திருவடிகளில் வர என்று ஓரடி இட்டபோதே, இராவண சம்பந்தத்தால் வந்த
திருவின்மை நீங்கிச் சொரூபத்திற்குத் தகுந்ததான ஸ்ரீ குடி புகுந்தது என்றபடி.
‘சதுநாகவரஸ் ஸ்ரீமான்’ – சர்வேசுவரன் அரைகுலையத் தலைகுலைய வந்து விழ வேண்டும்படியான ஆர்த்திதன்னை
ஒரு செல்வமாகச் சொல்லப்பட்டது அன்றோ ஸ்ரீ கஜேந்திராழ்வானுக்கு?
‘நீர் இளவரசாக முடி சூடாவிடில் நாம் முடி சூடோம்,’ என்று பெருமாள் அருளிச் செய்யவும் முடி சூட இசையாத
இளைய பெருமாளை அன்றோ, ‘இலக்ஷ்மணன் ஐஸ்வரியத்தால் நிறையப்பெற்றவன்,’ என்றது?

மற்றும், ஸ்ரீ பரதாழ்வானை, ‘பிள்ளாய்! உன் உள் வெதுப்பு ஆறுவது எப்போதோ!’ என்று கேட்க,
‘இராஜ இலக்கணம் பொருந்திய தமையனாருடைய திருவடிகளைத் தலையிலே எதுவரையிலும் தாங்கமாட்டேனோ,
அது வரையிலும் எனக்கு நிம்மதியானது உண்டாகமாட்டாது,’ என்கிறபடியே, பெருமாளும் தமக்கு வகுத்த முடி சூடி,
நானும் எனக்கு வகுத்த முடி சூடின அன்று ஆறும்,’ என்றான் அன்றோ? ‘அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசு’ என்றார் ஸ்ரீ குலசேகரப் பெருமாள்
. ‘அடியிலே தலையாக வாழ அடியிடுகிறார்,’ என்றபடி. ‘வைஸ்ரவணன்’ என்னுமாறு போன்று, பாரதந்திரியமாகிற செல்வத்தையுடையவர்களாதலின்,
‘உடையார்’
என்கிறார். ‘இச்செல்வத்தை உடையர் ஆகிறார்கள்: மற்று என்ன ஏற்றம் உண்டாக வேண்டும் இவர்களை ஆதரிக்கைக்கு?’ என்னில்,
எவரேலும் –
ஜன்ம ஒழுக்க ஞானங்கள் எவையேனும் ஆகவுமாம்; இது உண்டாமத்தனையே வேண்டுவது.
அவர் கண்டீர் –
அபிமானம் இல்லாதார் நமக்குத் தேட்டம்,’ என்கிறார்; ‘பிறப்பு ஒழுக்கம் ஞானம் இவைகளால் வரும் அபிமானம்
பகவானுக்கு அடிமைப்படுதற்கு விரோதியாகையாலே அவை இல்லாதார் உத்தேசியர்,’ என்கிறார் என்றபடி.
‘அவர்கள் எத்தனை நாள்களுக்கு உத்தேசியர்?’ என்ன,
பயிலும் பிறப்பிடை தோறு –
மேன்மேல் என நெருங்கி வருகிற பிறவிகளில் அவகாசங்கள்தோறும். ‘நின் பன் மா மாயப் பல்பிறவியில் படிகின்றயான்’ என்று
வெறுக்கத் தக்கதாகச் சொன்ன பிறவி தன்னையே விரும்புகிறார் இப்போது; பாகவதர்களுக்கு அடிமைப்படுவதற்கு உறுப்பு ஆகையாலே
. ‘மேன்மேல் எனப் பிறவிகள் உண்டாகவும் அமையும்; ஒரு பாகவதர் ஸ்ரீ பாதத்திலே வசிக்கப்பெறில்’ என்கிறார் என்றபடி.
எம்மை ஆளும் பரமர் –
என்னை அடிமை கொள்ளக்கூடிய ஸ்வாமிகள். ‘முன்பு அவனைப் ‘பரமன்’ என்றீர்; இங்கே இவர்களைப் ‘பரமர்’ என்னாநின்றீர்;
இது இருக்கும்படி என்?’ என்னில், அனுபவிக்கும் குணங்களின் மிகுதியாலே சொல்லிற்று அங்கு;
இங்கு, அக்குணங்களுக்குத் தோற்றவர்களைச் சொல்லுகிறது. ‘நன்று; ‘எவரேலும்’ எனின், அமையாதோ?
‘பயிலுந் திருவுடையார்’ எனல் வேண்டுமோ?’ எனின், அந்தச் சம்பந்தம் ஒழியச் சொல்லில் பகவானுடைய சம்பந்தம் அற்றதாம்.
குண க்ருத தாஸ்யம் -அவன் இடம் பாகவதர்கள் பண்ண –நான் ஸ்வரூப பிரயுக்த தாஸ்யம் இவர்கள் பக்கல் என்கிறார்

————————————————————–

ஆளும் பரமனைக் கண்ணனை ஆழிப்பிரான் தன்னைத்
தோளும் ஓர் நான்குடைத் தூமணி வண்ணன் எம்மான் தன்னைத்
தாளும் தடக்கையும் கூப்பிப் பணியுமவர் கண்டீர்
நாளும் பிறப்பிடை தோறு எம்மை ஆளுடை நாதரே.–3-7-2-

அவதார விக்ரக வை லஷ்ண்யத்தில் ஈடுபட்ட -இறைஞ்சும் பாகவதர் நமக்கு நாதன்
ஆளும் பரமனைக் கண்ணனை ஆழிப்பிரான் தன்னைத்-சீலாதி -கொண்டு ஆளும் -இதில் தன்னிகர் அற்று -பரமன் –
சௌசீல்யம் காட்டி -வாத்சல்யம் சௌலப்யம் -ஆதி –
கண்ணனை -பிரகாசகமான அவதார சௌலப்யம்
தோளும் ஓர் நான்குடைத் தூமணி வண்ணன் எம்மான் தன்னைத்-அவதார தசையிலும் கையும் திரு ஆழியும் –
ஆவிர்பாவம் பொழுதும் -அப்பூச்சி -அர்ஜுனனுக்கும் சேவை –
அத்விதீயமான -ஒதுங்க நிழல் -நான்கு தோள்கள் -நிவாசம் –
சீதை பெருமாள் தோள்களில் அண்டி -நாடு காடு ஸ்வர்க்கம் நரகம் -பஹூ —
தாரை -நிவாச வ்ருஷ சாதூநாம் -ஆபன்னானாம் பராம் கதி -நாமி பலம் -யசச்சுக்கு ஏக பாஜனம்
அனுபாவ்யம் -முடிந்து ஆளலாம் படி -வி லஷணம் -வடிவும் வர்ணம்
இத்தை காட்டி என்னை அடிமை கொண்ட ஸ்வாமி
தாளும் தடக்கையும் கூப்பிப் பணியுமவர் கண்டீர்-தங்கள் ஒடுக்கம் தோன்றும் படி -கை கூப்பி ஆகிஞ்சன்யம் –
காலைக் கூப்பி அநந்ய கதித்வம் -பிரணாமம் செய்து
நாளும் பிறப்பிடை தோறு எம்மை ஆளுடை நாதரே.-
என்றும் -ஜன்ம அவகாசங்கள் தோறும் -எம்மை ஆளும் ஸ்வாமி

ஆளுகின்ற மேலானவனை, கண்ணபிரானை, சக்கரத்தைத் தரித்த உபகாரத்தையுடையவனை, ஒப்பற்ற நான்கு தோள்களையுடைய
பரிசுத்தமான நீலமணி போன்ற நிறத்தையுடையனான எம்பெருமானைத் தாளும் தடக்கையும் கூப்பி வணங்குகின்ற அவர்கள்தாம்,
பிறப்புகள்தோறும் எப்பொழுதும் எம்மை அடிமையாகவுடைய தலைவர் ஆவர்.
‘பணியுமவர் எம்மை ஆளுடை நாதர்,’ என்க. கண்டீர் – முன்னிலையசை. பணியுமவர் – வினையாலணையும் பெயர்.
எம்மை – தனித்தன்மைப்பன்மைப் பெயர்.

‘அவனுடைய அவயவங்களின் வனப்பிற்குத் தோற்றிருக்குமவர்கள் எனக்கு நாதர்,’ என்கிறார்.

ஆளும் பரமனை –
நாம் உகந்ததை உகக்கிறோம்: இவ்வாத்துமாவை ஆளுமிடத்தில் இங்ஙனம் – அவனைப் போன்று -ஆள வல்லார் இலர்;
‘ஆயின், இறைவன் இவ்வாத்துமாவை அடியார்க்கு ஆட்படுத்தி ஆள்வானோ?’ என்னில்,
‘அடியார்கட்கு என்னை ஆட்படுத்த விமலன் விண்ணவர்கோன்’ என்னக் கடவது அன்றோ? ‘இவ்வுகப்புக்கு அடி அவன்,’ என்கிறார்.
அடியாரை விரும்புவது அவன் அடியாக அன்றோ?–கிருஷி பலன் -மடி மாங்காய் இட்டு –இத்யாதி
கண்ணனை –
ஆட்செய்து அடிமை கொள்ள வல்லார் அவனைப் போன்றார் இலர். ‘அப்படி ஆட்செய்து அடிமை கொண்டானோ?’ என்னில்,
‘அஞ்சேல் என்று அடியேனை ஆட்கொள்ள வல்லானை’ என்றும்,ஆட்கொள்ளத் தோன்றிய ஆயர்தங் கோவினை’ என்றும் சொல்லுகிறபடியே,
தான் தூதனாயும் சாரதியாயும் இருந்து அடிமை செய்தன்றோ அடிமை கொண்டது? ‘எதிர் சூழல் புக்கு ஒரு பிறவியிலே இவனை
அடிமை கொள்ளுகைக்காகத் தான் பல பிறவிகளை எடுத்துத் திரிகின்றவன்’ என்றபடி.
ஆழிப் பிரான் தன்னை –
தான் தாழ நின்று ஆட்கொள்ளுமிடத்து, பகலை இரவாக்குகைக்கும், ‘ஆயுதம் எடேன்’ என்று ஆயுதம் எடுக்கைக்கும்
பெருநிலை நிற்கும் கருவியை உடையவனை. ‘நினைத்த மாத்திரத்தில் உடனே கண்ணபிரானுடைய திருக்கையில் உச்சியில்
தானாகவே வந்து அடைந்தார்’ என்கிறபடியே, ஒரு கையிலே-சிந்தனையிலே- ஏறி விரோதிகளை அழியச் செய்பவன் அன்றோ?
‘நினைவு அறிந்து காரியம் செய்யுமவன்’ என்பதாம். கையும் திருவாழியுமான அழகினை அடியார்கட்கு ஆக்கி அதனைக்கொண்டு
விரோதியைப் போக்குவார்க்கு விரோதியைப் போக்கி அது தன்னைக் கையில் கண்டு அனுபவிப்பார்க்கு
அனுபவிப்பிக்கும் உபகாரகன் ஆதலின், ‘ஆழிப்பிரான்’ என்கிறார்.
கருதும் இடம் பொருது -நினைத்ததையே செய்பவன் -சொன்ன வார்த்தை படி செய்பவன் அல்ல -என்றபடி –
சஸ்மார-நினைத்து -சக்கரம் -சுதர்சனம் -சிந்தித்த மாத்ரம் -அக்ர ஹஸ்தம் -ஏறி அமர்ந்தார் -புல்லாங்க பத்ர நேத்ர -தேவர்கள் கொண்டாட –
பீஷ்மர் வார்த்தை பொய்யாக்காமல் -பீஷ்மரை கொல்லாமலும் அர்ஜுனன் வார்த்தையும் -காத்து -பீஷ்மருக்கும் சேவை சாதித்து –

தோளும் ஓர் நான்குடை –
விரோதி போக்குகைக்கும் அழகுக்கும் வேறொன்று வேண்டாதே, தோள்கள்தாமே அமைந்திருக்கை.
‘நீண்டனவாயும் அழகோடு திரண்டனவாயும் இரும்புத்தூண்களை ஒத்தனவாயும் எல்லா ஆபரணங்களாலும் (கண்ணெச்சில் வாராதபடி)
அலங்கரிக்கப்படத் தக்கனவாயுமிருக்கிற திருத்தோள்கள் என்ன பிரயோஜனத்திற்காக அலங்கரிக்கப்படவில்லை?’என்றான் திருவடி.
இதனால், ‘கோலின காரியத்தின் அளவல்ல இப்பாரிப்பு’ என்றபடி.-ஆழ்வாரை அடியார்க்கு ஆட்படுத்த ஹர்ஷத்தால் நான்கு தோள்கள் ஆயினவாம் பூரித்து –
பாஹவா -பஹூ வசனம் -சர்வ பூஷண–தென் புலத்து – தேவரோ தான் -அர்ச்சிராதி மார்க்கம் தரும் பாவனத்வம் -நான்கு தோள்கள் காட்டி அருளினான் –
பட்டர் திருக்கோட்டியூரிலே எழுந்தருளியிருக்கும் போது அனந்தாழ்வான் கண்டு, ‘பரமபதத்தில் சர்வேசுவரன் நாற்றோளனாயோ,
இரு தோளனாயோ எழுந்தருளியிருப்பது?’ என்ன, ‘ஏகாயநர் இருதோளன் என்னாநின்றார்கள்; நம்முடையவர்கள் நாற்றோளன் என்னாநின்றார்கள்,’ என்ன,
‘இரண்டிலும் வழி யாது?’ என்ன, ‘இருதோளனாய் இருந்தானாகில் பெரிய பெருமாளைப் போலே இருக்கிறது;
நாற்றோளன் என்று தோன்றிற்றாகில் பெருமாளைப் போலே இருக்கிறது,’ என்று அருளிச்செய்தார்;
முக்த கண்டமாக பரிகரியாதே -தெளிவாக சொல்லாமல் -அனந்தாழ்வான் -கௌரவ்யர் -அவர் முன்னே சொல்லக் கூடாது சின்னப் பிள்ளை தாம் என்று –
ஜ்ஞ்ஞார்க்கு இரு கைகள் -ஞானாதிகருக்கு தெளியக் கண்ட -காட்டக் கண்ட -கையினார் சுரி சங்கு -என்றாரே -சதுர புஜம் காட்டி அருளுவார்
நம்மளவு அன்றியே தெரியக் கண்டவர்கள் ‘கையினார் சுரிசங்கு அனல் ஆழியர்’ என்றார்கள் அன்றோ பெரிய பெருமாளை?

‘ஆயின், சாதாரண மக்களுக்கு அங்ஙனம் தோன்ற இல்லையே?’ எனின், ஆயர் பெண்களுக்கு நான்காய்த் தோன்றி,
உகவாத கம்சன் முதலியோர்களுக்கு இரண்டாய்த் தோன்றுமாறுபோலே கொள்க. ‘நான்காகத் தோன்றுகைக்கு நாற்றோளனாய் அவதரித்தானோ?’ எனின்
ஆதி அம் சோதி உருவை அங்கு வைத்து இங்குப் பிறந்தவிடத்து நாற்றோளனாய் அன்றோ வந்து அவதரித்தது? ‘மறைத்துக்கொள்க’ என்ன,
மறைத்தான் மற்றைத் தோள்களை. நிலாத்துக்குறிப் பகவர், பட்டரை நோக்கி, ‘ஸ்ரீவைகுண்டத்தில் நாற்றோளனாய் இருக்கும்
என்னுமிடத்துக்குப் பிரமாணம் உண்டோ?’ என்ன, ‘பிரகிருதி மண்டலத்திற்கு மேலேயுள்ள ஸ்ரீ வைகுண்டத்தில் இருப்பவர்,
சங்கு சக்கரம் கதை இவற்றைத் தரித்திருப்பவர், போஷகர்’ என்று உண்டாய் இருந்ததே?’ என்ன,
வேறு பதில் சொல்ல முடியாமையாலே வேறுபட்டவராய் இருக்க, ‘பிரமாணப்போக்கு இதுவாயிருந்தது பொறுக்கலாகாதோ?’ என்று அருளிச்செய்தார்.

தூ மணிவண்ணன் எம்மான்தன்னை –
பழிப்பு அற்ற நீலமணி போலே இருக்கிற வடிவழகைக் காட்டி என்னைத் தனக்கே உரிமையாக்கினவனை.
இதனால், சிலரை அகப்படுத்துகைக்குத் தோள்கள் தாமும் மிகையாம்படி இருக்கிற வடிவழகைத் தெரிவித்தபடி.
‘அடியார் பக்கல் அன்புடையராய்ச் செல்லும் இவர் இறைவனை ‘எம்மான்’ என்பான் என்?’ எனின், அடியார் பக்கலிலே சென்ற
மனத்தையுடையராய்ப் போவாரை நடுவே வழி பறிக்கும் வடிவழகுடையவன் ஆதலின், ‘எம்மான்’ என்கிறார்.
அன்றியே, ‘அடியாரை விரும்பும்படி செய்ததும் இவ்வடிவழகாலேயாதலின், ‘எம்மான்’ என்கிறார்’ என்னலுமாம்.
இரண்டுக்கும் ஹேது அழ்கு தானே -தன்னிடம் அடிமை கொள்வதற்கும் -ததீயர் இடம் போவாரை வழி பறிக்கவும் -இதே அழ்கு
ததீயர் இடம் ஆட்செய்ய்து அருளுவதற்கும் இதே அழ்கு தான்
குண கிருத தாஷ்யத்துடன் நாம் போனோம் -வழி பறித்து ஸ்வரூபம் உணர்த்தி ஆள்படுத்தி வைக்கிறான் என்றபடி –

தாளும் தடக்கையும் கூப்பிப் பணியுமவர் –
இவ்வழகை அனுபவித்துத் தொழ என்றால் தாளும் தோளும் பணைத்துக் கொடுக்குமவர்கள்;
தாள் கூப்புகையாவது, அநந்யகதியாகை; கைகூப்புகையாவது, அகிஞ்சன் ஆகை.ஆக இரண்டாலும் ஒக்க ஏறின பிரயோஜனம்,
அபிமான பங்கமாய் -உபாயாந்தரம் கத்யந்தரம் இல்லாமல் -வான மா மலை- திருக்குடந்தை பதிகங்கள் -காட்டிய படி –
சீதையை சேவித்த அநந்தரம் பவ்யமாக கொண்ட திருவடி நிலை -‘நிப்ருத:-பிரணத: பிரஹ்வ:
‘நிப்ருத: – ஒரு அவயவத்திலே எல்லா அவயவங்களும் ஒடுங்கும்படியாகை;
பிரணத: – வேறே சிலர் எடுக்கவேண்டும்படி சிதிலனாய் விழுந்து கிடக்கை.
பிரஹ்வ:- ‘இப்படிக் கிடந்தோம் என்னுமது நெஞ்சில் நடையாடாதிருக்கை’ என்கிறபடியே, நீங்கின அபிமானத்தை உடையன் ஆகை.

நாளும் பிறப்பிடைதோறு –
பிறவிகளில் இடங்கள்தோறும், அவை தம்மிலே நாள் தோறும்.
எம்மை ஆளுடை நாதரே – ‘
வடிவழகாலேயாதல், குணங்களாலேயாதல், யாதேனும் ஒரு காரணத்தாலே அடிமை கொள்ள வேண்டுவது ஈசுவரனுக்காயிற்று,
ஒரு காரணமும் இன்றியே அடிமை கொள்வார் இவர்கள்,’ என்பார், ‘எம்மை ஆளுடை நாதர்’ என்கிறார்.
‘காரணம் இல்லை என்கிறது என்? பகவானுடைய அநுமதி முதலானவைகள் வேண்டாவோ?’ எனின், அவனதானால்,
எந்தம்மை விற்கவும் பெறுவார்களே’ என்றார் பட்டர் பிரானும்.

————————————————————————-

நாதனை ஞாலமும் வானமும் ஏத்தும் நறுந்துழாய்ப்
போதனைப் பொன்னெடுஞ் சக்கரத்து எந்தை பிரான் தன்னைப்
பாதம் பணிய வல்லாரைப் பணியுமவர் கண்டீர்
ஓதும் பிறப்பிடைதோறு எம்மை ஆளுடை யார்களே.–3-7-3-

உபய விபூதியும் மேல் விழுந்து அனுபவிக்கும் பெருமை போக்யதை -ஈடுபட்ட சேஷ பூதர்கள் –அடியார்கள் -எம்மை ஆளும் நாதர்கள்
நாதனை ஞாலமும் வானமும் ஏத்தும் நறுந்துழாய்ப்-சம்சாரிகள் -நித்யர்களும் வாசி அற கொண்டாடும் படி -பரிமளப் பிரசுரமான
போதனைப் பொன்னெடுஞ் சக்கரத்து எந்தை பிரான் தன்னைப்–தார்ச நீயமான -போக்யதையால் விஞ்சிய அழ்கு -கையும் திரு ஆழியுமான அழ்கு -ஸ்வாமி
பாதம் பணிய வல்லாரைப் பணியுமவர் கண்டீர்-பணியும் அடியார்களை பணிந்து -ஒரு படி இறக்கி
ஓதும் பிறப்பிடைதோறு எம்மை ஆளுடை யார்களே.-சாஸ்த்ரத்தில் சொல்லும் ஜன்மங்கள் தோறும் -எனக்கு நாதர் –

தலைவனும், பூமியும் தெய்வ உலகமும் ஏத்துகிற வாசனை பொருந்திய திருத்துழாய் மலரைத் தரித்தவனும், அழகிய நீண்ட
சக்கரத்தையுடைய எந்தையும், எல்லார்க்கும் உபகாரகனுமான எம்பெருமானுடைய பாதங்களை வணங்குகின்ற அடியார்களை வணங்குகின்ற
அடியார்கள்தாம் சொல்லப்படுகின்ற பிறப்புகளில் எல்லாம் எம்மை அடிமை கொண்டவர்கள் ஆவார்கள்,’ என்கிறார்.
ஞாலம், வானம் என்பன, ஆகுபெயர்கள். துழாய்ப் போது – துழாய் மலர். எம் தந்தை – எந்தை.

தோளும் தோள்மாலையுமான அழகிலே தோற்றிருக்குமவர்களுக்கு அடிமைப்பட்டிருக்கும் அடியார்கள் எனக்கு ஸ்வாமிகள்,’ என்கிறார்.

நாதனை –
ஒரு காரணம் பற்றாமலே தலைவனாய் உள்ளவனை.
ஞாலமும் வானமும் ஏத்தும் நறுந்துழாய்ப் போதனை –
தோளும் தோள்மாலையுமான அழகைக் கண்டால் திருத்திரை நீக்கின பின்னர் போலே, நித்தியசூரிகளோடு நித்திய சமுசாரிகளோடு
வாசி அறப் புகழாநிற்பர்கள். திருமேனியின் பரிசத்தால் நறு நாற்றத்தை உடைத்தாய்ச் செவ்வி பெற்றிருக்கின்ற
திருத்துழாய்ப் பூவை உடையவன் ஆதலின், ‘நறுந்துழாய்ப் போதன்’ என்கிறார்.
’தத்தமது கற்பு அழியும் வார்த்தை சொன்னால் என்றிருக்கும் பெண்கள், முதலிலே வார்த்தை சொல்ல அறியாத பாலகர்கள்,
வாய்விட்டு ஒன்றும் சொல்லாத யுவாக்கள், உறுப்புகளின் சத்தி குறைந்த முதியோர்கள் இவர்கள் அனைவரும் வாய்விட்டு ஏத்தும்படி
ஆயிற்றுப் பெருமாள் அழகு,’ என்றார் ஸ்ரீ வால்மீகி பகவான்.
பொன் நெடுஞ்சக்கரத்து எந்தை பிரான்தன்னை –
பொன் போன்று அழகியதாய், அழகுக்கும் ஆபரணத்துக்கும் மிடுக்குக்கும்
தனக்கு அவ்வருகு இன்றியே இருப்பதாய், இனிமையாலே அளவு இறந்து இருப்பதான திருவாழியை உடையனாய்,
அவ்வழியாலே என்னை எழுதிக்கொண்ட உபகாரகனை. ‘ஆயின், பலகால் திருவாழியைச் சொல்லுவான் என்?’ எனின்,
இராஜகுமாரர்களுக்குப் பிடிதோறும் நெய் வேண்டுமாறு போன்று, இவரும் ‘ஆழிப்பிரான்’ என்பது,
‘பொன் நெடுஞ்சக்கரத்து எந்தை பிரான்’ என்பதாய் அடிக்கடி கையும் திருவாழியுமான சேர்த்தியை அனுபவிக்கிறார்.
பாதம் பணிய வல்லாரை –
இவ்வழகைக் கண்டு இதிலே அசூயை பண்ணாதே, இதிலே தோற்றுத் திருவடிகளிலே விழ வல்லவர்களை.-
நானும் இசைந்து உன் தாள் இணைக் கீழ் இருக்க -இசைவித்து என்னை உன் தாள் இணைக் கீழ் இருத்தும் அம்மான்
‘இறைவன் விஷயத்திலே அசூயை பண்ணுவர்களோ?’ எனின், விஷயத்தைப் பாராதே அன்றோ அசூயை பண்ணுகிறது?
சர்வேசுவரனும் ‘அசூயை இல்லாத உன்பொருட்டுச் செவ்வையாய்ச் சொல்லுகிறேன்.’ என்றும்,
‘யாவன் ஒருவன் என்னை நிந்திக்கிறானோ, அவனுக்குச் சொல்லத் தக்கது அன்று,’ என்றும் அருளிச்செய்தான் அன்றோ?
‘ஆயின், இறைவனிடத்தில் அசூயை இல்லாமல் இருப்பது அருமையோ?’ எனின், முன்புள்ளார் அநுஷ்டிக்கையாலே நமக்கு எளிதான
இத்தனை அல்லது, புறம்புள்ளார் பக்கலிலே அன்றோ இதன் அருமை தெரிவது?
வல்லாரைப் பணியுமவர் கண்டீர் –
ஈசுவரன் பக்கல் உட்பட அசூயை பண்ணாநின்றால் அடியார் பக்கல் சொல்ல வேண்டுமோ? இறைவன் பக்கல் அவனுடைய
பெருமையாலே வணங்கவுமாம்; ’நான் ஒருவருக்கும் உரியன் அல்லேன்,’ என்று இருக்கவுமாம்;
சோறு தண்ணீர் முதலியவற்றாலே தரிக்கிற இவர்கள் பக்கல் பணிய மனம் பொருந்தாதே அன்றோ? தோன்றுகிற உருவத்தைப் போகட்டு
அடியராய் இருக்கின்ற தன்மையையே பார்த்து விரும்பும்போது அதற்குத் தக்க அளவு உடையவனாக வேண்டும்;
ஆதலின், ‘வல்லாரைப் பணியுமவர் கண்டீர்’ என்கிறார்.
‘ஆயின், அவதரித்துச் சுலபராய் இருக்கிறவர்களைத் தோன்றுகின்ற வடிவத்தை நோக்கி வெறுக்கக் கூடுமோ?’ எனின்
சௌலப்யந்தானே நறுகு முறுகு -பொறாமை -என்று முடிந்து போகைக்கு உடலாயிற்று அன்றோ சிசுபாலன் முதலியோர்கட்கு?
‘பிள்ளையாத்தான் என்று போர நல்லனாய் இருப்பான் ஒருவன், நஞ்சீயர் ஸ்ரீ பாதத்திலே வந்து ‘எனக்கு ஓர் உரு
திருவாய்மொழி அருளிச் செய்ய வேண்டும்,’ என்ன, ‘உனக்கு விளக்கமாகத் தெரிவது நம்பிள்ளையோடே கேட்டால் ஆயிற்று; அங்கே கேள்,’என்ன,
‘அவரைத் தண்டன் இடவேண்டுமே?’ என்ன, ‘அது ஒன்று உண்டோ? வேண்டுமாகில் செய்கிறாய்,’ என்று என்னை அழைத்து,
‘இவனுக்குப் பாங்கானபடி ஓர் உரு திருவாய்மொழி சொல்லும்,’ என்ன, இவ்வளவும் வரக் கேட்டவாறே, எனக்குத் தண்டன் இடப்புக,
நான் ஒட்டாதொழிய, சீயர் பாடே சென்று ‘இவ்வர்த்தத்தினுடைய சீர்மை அறியாமையாலே முன்பு அப்படிச் சொன்னேன்;
இனி, நான் வணங்குவதற்கு இசையும்படி அருளிச் செய்ய வேண்டும்,’ என்று சீயரையிட்டு நிர்ப்பந்தித்து,
அவன் வணக்கத்தை நான் ஏற்றுக்கொள்ளச் செய்தான்,’ என்று அருளிச்செய்வர்.–நம்பிள்ளை –

ஓதும் பிறப்பிடைதோறு –
‘சாஸ்திரங்களிலே தாழ்வாகச் சொல்லப்படுகிற பிறவிகளில் அவகாசந்தோறும்’ என்னுதல்;
அன்றியே, ‘பிறந்தான், செத்தான்’ என்கிற சொல்லளவேயான பிறவிகளும் அமையும்; இது பெறில் என்னுதல்.
எம்மை ஆள் உடையார்களே
– ‘அடியார்கள் குழாங்கள்’ என்றும், ‘அந்தம் இல் பேரின்பத்து அடியரோடு இருந்தமை’ என்றும் ஒரு தேச விசேடத்திலே
அடிமை செய்வது இவர்களுக்கே அன்றோ? அதனை இங்கே கொள்ளக் கூடியவர்கள் இவர்கள்.
‘திருமகள் கேள்வன், தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் பொதுவான தெய்வம்,’ என்கிறபடியே, பொதுவான தலைவனாந்தன்மையே
அன்றோ இறைவனுக்குஉள்ளது? மயர்வு அற மதிநலம் அருளி விசேஷ கடாக்ஷம் பெற்ற எம்போல்வார்க்குத் தலைவர்கள்
இவர்களே என்பார், ‘எம்மை ஆளுடையார்கள்’ என்கிறார்.
ஆழி கடைந்தமுதம் எங்களுக்கே ஈந்தாய் அவுணர்கள் தாம் நின்னடிமை அல்லாமை யுண்டோ?’–கம்பர்

‘ஆயின், பகவானுக்கு அடிமைப்பட்டிருத்தல் மாத்திரம் போதியதாமோ? பிறவி முதலியன பார்க்கவேண்டாவோ?’ என்ன,
இங்குள்ளவை பார்க்க வேண்டாதபடி அன்றோ பகவானுடைய ஈடும் எடுப்பும் இல்லாத பெருமை இருப்பது?
மேலும், ‘முற்காலத்தில் கெட்ட ஆசாரமுள்ளவனும், உண்ணத் தகாதனவற்றை உண்டவனும், செய்ந்நன்றி மறந்தவனும்,
வைதிக மரியாதையை இல்லை என்றவனும் ஆகிய இவர்கள், விசுவாசத்தோடு ஆதிதேவனான ஸ்ரீமந் நாராயணனைச் சரணமாக
அடைந்தார்களாகில், இவர்களைப் பரம புருஷனுடைய மஹிமையால் தோஷம் அற்றவர்களாக அறிவாய்,’ என்கிறபடியே,
யாதேனும் தண்மை உடையவனாயினும், அவனை அடைந்தானாகில், அவ்வாறு அடைந்தவனைக் குற்றம் அற்றவனாக
நினைக்கவேண்டும் என்று அன்றோ இதிகாசம் கூறுகின்றது? ‘ஆயின், குற்றம் கிடக்கச் செய்தே குற்றம் அற்றவனாக
நினைக்க வேண்டுகிறது என்?’ என்னில், ‘பரமபுருஷனுடைய பிரபாவத்தாலே.’ ஆன பின்பு, இவனைக் குறைய நினைக்கையாவது,
‘இவனைச் சுத்தன் ஆக்குதற்குத் தக்கதான சத்தி இறைவனுக்கு இல்லை,’ என்று பகவானுடைய பிரபாவத்தைக் குறைய நினைத்தலாம் அன்றோ?

வீரப்பிள்ளையும், பாலிகை வாளிப்பிள்ளையும் என்ற இருவர், நஞ்சீயர் ஸ்ரீபாதத்தில் விருப்பம் உள்ளாராய், தங்களிலே செறிந்து
போந்தார்களாய்த் தேசாந்தரம் போனவிடத்தே வெறுப்பு உண்டாய்த் தங்களில் வார்த்தை சொல்லாதேயிருக்க, இவர்களைப் பார்த்துப்
‘பிள்ளைகாள்! பொருள் இன்பங்கள் தியாச்சியம் அல்லாமையோ, பகவத் விஷயம் அராட்டுப் பிராட்டாயோ,-அல்பம் என்றோ – ஒரு ஸ்ரீவைஷ்ணவனும்
ஸ்ரீவைஷ்ணவனும் தங்களிலே வார்த்தை சொல்லாதே வெறுத்து இருக்கிறது?’ என்ன, இருவரும் எழுந்திருந்து
தெண்டனிட்டுச் சேர்ந்தவர்களாய்ப் போனார்கள்.–ததீய சேஷத்வம் புரிந்தோம் -பரஸ்பர நீச பாவம் வேண்டுமே –

———————————————————————————

உடை ஆர்ந்த ஆடையன் கண்டிகையன் உடை நாணினன்
புடையார் பொன் நூலினன் பொன்முடியன் மற்றும் பல்கலன்
நடையா உடைத் திரு நாரணன் தொண்டர் தொண்டர் கண்டீர்
இடையார் பிறப்பிடை தோறு எமக்கு எம் பெரு மக்களே.–3-7-4-

திரு ஆபரண சோபையில் ஈடுபட்டு -அடிமை புக்கு -அவர்களின் அடியார் -சேஷிகள்
சுலபமாக ஈர்க்குமே
உடை ஆர்ந்த ஆடையன் கண்டிகையன் உடை நாணினன்-திருப் பரியட்டம் உடையவன் -பரி -சுற்றும் சூழ்ந்த -திவ்ய ஆடை –
கண்ட திவ்ய ஆபரணம் -கழுத்தை ஒட்டி -அரை நாண் கொடி-
புடையார் பொன் நூலினன் பொன்முடியன் மற்றும் பல்கலன்
யஜ்ஞோ பவிதம் -பார்ச்வத்தில் -கிரீடம் -பல வகை திவ்ய ஆபரணங்கள் –
நடையா உடைத் திரு நாரணன் தொண்டர் தொண்டர் கண்டீர்-ஸ்வா பாவிக உடை-ஸ்ரீ மான் -சேஷ பூதர்களுக்கு சேஷ பூதர்
இடையார் பிறப்பிடை தோறு எமக்கு எம் பெரு மக்களே
நடுவே நடுவே -இடை வெளி இல்லாமல் -ஜன்மங்கள் எல்லாம் -அசாதாராண பரம சேஷிகள்
இந்த நாலு பாட்டாலும் பாகவத சேஷித்வம் -பிரணவம் அர்த்தம் அருளி மேலே
5/6/7 -சரண்யத்வம் -நமஸ் அர்த்தம் அருளி
8 -சுருக்கமாக நாராயணயா அர்த்தம் -விரிவாக நெடுமாற்கு அடிமையில் அருளிச் செய்கிறார்

உடுத்திருக்கின்ற பொருந்திய பொன்னாடையை உடையவன், கழுத்தணியையுடையவன், தரித்த அரை ஞாணினை உடையவன்,
ஒரு பக்கமாகப் பொருந்தியிருக்கின்ற பொன்னாலான பூணூலையுடையவன், பொன்னாலான திருமுடியையுடையவன்,
மற்றும், இயற்கையிலேயே பொருந்திய பல ஆபரணங்களையுடையவனான திரு நாராயணனுடைய அடியார்கள் கண்டீர்
இடம் பொருந்திய பிறவிகள்தோறும் எமக்கு எம்முடைய பெருமக்கள் ஆவர்கள்.
கண்டிகை – மார்பில் அணியும் ஓர் ஆபரண விசேடம்; கண்டத்தில் அளியப்படுவது கண்டிகை. ‘மற்றும் நடையாவுடைப் பல்கலன்’ என மாறுக.
இடை – இடம்; இதனை, பெயரினிடமாகவும், வினையினிடமாகவும் பிறக்கும் இடச்சொல்லை ‘இடைச்சொல்’ என்பது போலக் கொள்க.

‘இறைவனுடைய ஆபரண வனப்பிலே தோற்றிருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு அடியரானவர்கள் எனக்கு ஸ்வாமிகள்,’ என்கிறார்.

உடை ஆர்ந்த ஆடையன் –
திரு அரை பூத்தது போன்று இருக்கிறபடி.
‘திரு அரை மலர்ந்தது போன்று இருக்கின்ற பட்டாடை’,
தாஸாம் ஆவிரபூத் சௌரி -ஸ்மயமான முகாம்புஜா பீதாம்பர ச்ரக்வீ சாஷாத் மன்மத மன்மதன்
மறைய நின்றான் -வந்து நடுவில் தோற்றினான் -கமர் பிளந்த இடத்தில் ஒரு பாட்டம் மழை பெய்தால் போலே –
தன்னை ஒழிய செல்லாமை உண்டானால் -அப்போது அவன் திரு முகம் உகக்குமே -கிருஷி பலித்ததே –
பிரணய ரோஷம் -என் சினம் தீர்வேனே -மறம் ஆறும் படி உடை வாய்ப்பு –
‘பீதாம்பரத்தைத் தரித்திருப்பவர்’ என்பது பாகவதம்.
படிச்சோதி ஆடையோடும் பல் கலனாய் —-கடிச்சோதி கலந்ததுவோ -இதுவே யாத்ரையாய் இருக்கும்
பும்ஸாம் திருஷ்டி சித்த அபஹாரிணம்-சாஷாத் மன்மத மன்மதன் -அவனுக்கும் மடல் எடுக்க வேண்டி இருக்குமே –
கண்டிகையன் –
‘கூறையுடை அழகு மேலே எழ வீசிப் போகாநிற்க, நடுவே வழி பறித்துக்கொள்ளும் திருக்கழுத்தில் ஆபரணம்,
இவரை மடி பிடித்துக்கொண்டு போய்க் கழுத்தளவு-முழு அனுபவம்- வனப்பிலே நிறுத்திற்று’ என்றபடி.
மடி-புடைவை. கண்டிகை-கண்டத்திலே சார்த்துமவை;
ஆரம். உடை நாணினன் –
அரைநூல் வடத்தை உடையவன்; கழுத்தே கட்டளையாக அனுபவியாநிற்க,-கழுத்தே கட்டளையாக -முழு அனுபவம் என்றவாறு –
கண்டத்திலேயுள்ள அழகுத் திரைகள் -சௌந்தர்ய தரங்கங்கள் -கீழே போர வீச,
நடுவே நின்று அனுபவிக்கிறார்.
புடையார் பொன் நூலினன் –
தான் கிடந்த பக்கத்தில் வேறோர் ஆபரணம் வேண்டாதே, காளமேகத்திலே மின்னியது போன்று இருக்கின்ற பூணூலை யுடையவன்.
இந்த அழகுக் கடலின் நடுவே அலையப் புக்கவாறே, தமக்குப் பற்றுக்கோடாக ஒரு நூலைப் பற்றினார் காணும்.
நக்ஷத்ர சாஸ்திரம் பொன் நூல்-

பொன் முடியன் –
‘தேர் கடவிய பெருமான்’ என்கிறபடியே, அடியார்கட்கு ஆட்செய்கைக்கு முடி கவித்திருக்கின்றவன்; பொன் முடி – அழகிய முடி.
ஒரு நூலைப் பற்றி நின்றவர்களை அதுதானே ஒரு தலை சேர்த்து விடுகை நிச்சயம் அன்றோ?
மற்றும் பல் கலன் நடையாவுடை –
வேறு விதமான திரு ஆபரணங்களையும் இயற்கையாக உடையவன்;
ஒரு தலை சேர்ந்தால் பின்னை எல்லாம் வேண்டினபடி அனுபவிக்கலாம் அன்றோ?
மின்மினி பறவா நிற்கிறதாதலின், ‘மற்றும் பல் கலன்’ என்கிறார்.
அன்றிக்கே,
‘அளவு இறந்தன ஆகையாலே முடியச் சொல்லமாட்டார்;
ஆசையாலே, சொல்லாதொழிய மாட்டார்; இதுவன்றோ படுகிற பாடு!’ என்னுதல்.

திரு நாரணன் –
அங்குத்தைக்கு லக்ஷ்மீ சம்பந்தமும் அவ்வாபரணங்களைப் போலே காணும்; ‘உன் திருமார்வத்து மாலை நங்கை’ என்பர் மேல்.
அணிகலன்களைச் சொல்லுகிற இடத்தில் பிராட்டியை அருளிச்செய்வதற்குக் காரணத்தை அருளிச்செய்கிறார், ‘அங்குத்தைக்கு’ என்று தொடங்கி.
‘திருவாபரணங்களோடு சேர்த்துச் சொல்லப்படுகையால் பிராட்டியையும் திருவாபரணவகையில் கோடல் வேண்டும்,’ என்பதாம். அதற்குக் காட்டும்
பிரமாணம், ‘உன் மார்வத்து மாலை நங்கை’ என்பது. இது, திருவாய்.-10. 10 : 2.
திரு மார்பு ஆர மார்பு -திருவார மார்பு போலே –
அன்றிக்கே,
திரு ஆபரண ஆழ்வார்களாகிறார் நித்திய சித்த புருஷர்களாகையாலே இவர்களையுடையவன் திரு நாரணன் என்கையாலே,
இம்மிதுனமே உலகத்துக்குச் சேஷி என்கிறார்,’ என்னுதல்.
திரு’ என்பதனை ஆபரண கோடியிலே சேர்த்து அருளிச்செய்தார் மேல்.
திரு’ என்பதனை ‘நாரணன்’ என்ற பதத்தோடே கூட்டிச் சேஷித்வத்திலே நோக்காக அருளிச்செய்கிறார்,
திருவாபரண ஆழ்வார்களாகிறார்’ என்று தொடங்கி. மிதுனம் – இரட்டை. சேஷி – இறைவர்
தொண்டர் தொண்டர் கண்டீர் –
இறைவனாந் தன்மைக்கு எல்லை அம்மிதுனமாய் இருப்பது போன்று, அடிமையாம் தன்மைக்கும் எல்லையாய் இருக்கிறவர்கள்.
இடையார் பிறப்பிடை தோறு எமக்கு எம் பெருமக்களே –
உச்சிவீடும் விடாதே நடு நெருங்கி வருகின்ற பிறவிகளில் இடங்கள்தோறும் ஓர் ஒப்பனையால் அன்றிக்கே வெறும் புறத்திலே நமக்குத் தலைவர்கள்;
இடையில் இருப்பது ஆர்ந்து -செறிந்து -இடை வெளி இல்லாமல் -நடு நெருங்கி வருகிற -என்கிறார் –
அடைமொழி இல்லாமல் தொண்டர் தொண்டர் -வெறும் புறத்திலே சேஷிகள் -ஸ்வரூப க்ருத தாஸ்யம் –
அன்றிக்கே,
‘ஸ்ரீமானான நாராயணனுக்கு அடிமை புக்கிருப்பார்க்கு ‘இச்சேர்த்தி அறிந்து இவர்கள் பற்றுவதே!’ என்று அடிமை
புக்கார்க்கு அடியேன் என்கிறார்,’ என்னுதல்.
அவர்கள், எங்களை எண்ணாதே இருந்த போதும் எமக்கு ஸ்வாமிகளே யாவர் என்பார்,
அவர்கள் தாங்களை ஸ்வாமி என்று எண்ணா விடிலும் -‘எமக்கு எம் பெருமக்களே’ என்கிறார்.
‘எங்களுக்கே உரிய தலைவர்கள்’ என்றபடி.
தொண்டர் தொண்டர் கண்டீர் -தங்கள் அபிப்ராயத்தால் தொண்டர் -எம் நினைவால் அசாதாராண சேஷிகள் -என்கிறார் -பிரணவ அர்த்தம் –

———————————————————————-

பெருமக்கள் உள்ளவர் தம் பெருமானை அமரர்கட்கு
அருமை ஒழிய அன்று ஆர்அமுது ஊட்டிய அப்பனைப்
பெருமை பிதற்ற வல்லாரைப் பிதற்றுமவர் கண்டீர்
வருமையும் இம்மையும் நம்மை அளிக்கும் பிராக்களே.–3-7-5-

ஆஸ்ரிதர் பிரயோஜாஜா நாந்தரங்களைக் கேட்டு பெற்று -உபகாரத்வ அதிசயம் -இதற்கு ஈடுபட்டு ச்துதிப்பாரை ச்துதிப்பார்
பெருமக்கள் உள்ளவர் தம் பெருமானை அமரர்கட்கு-சாவாமை வேண்டி இருக்கும் தேவர்களுக்கு
அருமை ஒழிய அன்று ஆர்அமுது ஊட்டிய அப்பனைப்-துர்வாசர் சாபம் பெற்ற அன்று
பூரணமாக அமுதத்தை புஜிப்பித்து-சத்தையை நோக்கினவன்
பெருமை பிதற்ற வல்லாரைப் பிதற்றுமவர் கண்டீர்-உபகார மகத்தையை ஜல்ப வல்ல -ப்ரீதியால் –
தாங்களும் ப்ரீதி வசமாக ஜல்பிப்பார்கள்
வருமையும் இம்மையும் நம்மை அளிக்கும் பிராக்களே-வரும் ஜன்மங்களிலும் -இப்பிறவியிலும் -உபகாரகர்கள் -உஜ்ஜீவிக்கும் உபகாரகர்கள்

பெருமக்களாக உள்ளவர் தங்கட்குப் பெருமானும் தேவர்களுக்கு வருத்தம் இல்லாதபடி அக்காலத்தில் அரிய அமுதத்தை
உண்பித்த தலைவனுமான எம்பெருமானுடைய பெருமையைக் கூறுகின்ற அடியவர்களுடைய பெருமையைப் புகழ்ந்து பேசுகின்ற
அடியவர்கள்தாம் இனி வருகின்ற பிறவிகளிலும் இப்பிறவியிலும் நம்மைப் பாதுகாக்கும் ஸ்வாமிகள் ஆவார்கள்.
பெருமக்களாக உள்ளவர்கள் – நித்தியசூரிகள். அருமை ஒழிய என்றது, வருத்தமின்மையைக் காட்ட வந்தது.
பிதற்றுதல் – அடைவு கெடப் புகழ்தல். வருமை – வருகின்ற பிறவிகள். பிராக்கள் – பிரான்கள்.

‘வேறு பிரயோஜனங்களை விரும்புகின்றவர்கட்கும் விரும்புகின்றவற்றைக் கொடுக்கின்ற இறைவனுடைய கொடையிலே
தோற்றவர்கள் தன்மைக்குத் தோற்றவர்கள் எனக்கு ஸ்வாமிகள்,’ என்கிறார்.

பெருமக்கள்
நித்தியசூரிகள்; ‘பெரியோர்’ என்றபடி. ‘பேராளன் பேர் ஓதும் பெரியோர்’ என்பது அன்றோ மறைமொழி?
‘மஹாத்துமாக்களோ என்றால்’ என்றும், ‘என்னையே அடைகின்றவன் மஹாத்மா ஆவான்; அவன் கிடைப்பது அரிது,’என்றும்,
‘இவர்கள் நல்ல மஹாத்மாக்கள்,’ என்றும் வருவன இறைவன் வார்த்தை அலவோ?
சமுசாரத்திலே முமுக்ஷீவாய் எதிர்முகம் பண்ணின மாத்திரத்திலே சொல்லுகிறபடி இதுவானால்,
நித்தியசூரிகளை இப்படிச் சொல்லக் கேட்க வேண்டா அன்றே?
உள்ளவர் –
‘பரம்பொருள் இலன் என்று அறிந்தானாகில் இவனும் இல்லாதவன் ஆகிறான்,’ என்பது, ஒரு நாள் வரையிலே
‘பரம் பொருள் உளன் என்று அறிந்தானாகில் இவனும் உள்ளவன் ஆகிறான்,’ என்பதாகாதே, என்றும் ஒக்க உள்ளவர்கள் என்பார், ‘உள்ளவர்’ என்கிறார்.
அசந்நேவ-சந்தமேவ ஆகாமல் நித்யர்கள்
‘சொரூபமான அடிமை ஞானம் அழியாமையாலே உள்ளவர்கள் என்கிறார்,’ என்றபடி.
நிரூபகம் இல்லையானால் நிரூபிக்கப்படும் பொருள் இல்லையாம் அன்றே?
ஆக, ‘அடிமையாயிருக்கும் தன்மைக்கு ஒரு நாளும் குறைவு வாராதவர்கள்’ என்றபடி.

தம் பெருமானை –
அவர்கள் இருப்பிற்குக் காரணமாய் அந்த உண்மையை நடத்திக்கொடுக்குமவனை.
அமரர்கட்கு –
நம்மைக் காட்டிலும் நான்கு நாள் சாகாதே இருக்கின்றமையை இட்டு அவர்கள் பேரைச் சுமந்து கொண்டிருக்கிற
இந்திரன் முதலான தேவர்களுக்கு.
அருமை ஒழிய – அசுரர்கள் கையிலே படும் எளிவரவு தீரும்படியாகக் கடலைக்கடைந்து அவர்கள் பலத்தை அடையும்படி
செய்தமையைத் தெரிவிக்கிறார். இனி, ‘கடலைக் கடையும் வருத்தம் தன் பக்கலிலே ஆக்கி, இவர்களுக்கு அமிருத போகத்திலே சேர்க்கை
உளதாம்படி பண்ணினான் ஆதலின், ‘அருமை ஒழிய’ என்கிறார்,’ என்னலுமாம்.
அன்று –
தூர்வாச சாபத்தாலே பீடிக்கப்பட்டு வருந்திய அக்காலத்தில்.
ஆர் அமுது ஊட்டிய அப்பனை –
நண்ணாத வாளவுண ரிடைப்புக்கு வானவரைப் பெண்ணாகி அமுதூட்டும் பெருமானார்’-பெரிய திருமொழி–2-6-1-அன்றோ?
அப்பன் – உபகாரகன்.- குழந்தைகட்குத் தாய் பண்ணும் உபகாரமாவது, அதன் முகம் வாடாமல் வளர்த்தலே அன்றோ?

பெருமை –
‘உதாரர்கள்’ என்கிறபடியே, தன்னையே பிரயோஜனமாகப் பற்றினார்க்குப் போலே, செல்வம் முதலியவற்றை விரும்பியவர்கட்கும்
‘இதனையாகிலும் நம் பக்கல் கொள்ளப்பெற்றோமே! இவர்கள் நமக்குச் சர்வஸ்வதானம் பண்ணுகிறார்கள் அன்றோ?’ என்று இருக்கும் பெருமை
நாட்டார் படி அல்ல இவனது: நாட்டில் கொடுப்பார் உதாரராயிருப்பார்; இங்குக் கொள்வார் உதாரராயிருப்பார்.
யாதேனுமாகக் குறை தீர்ப்பார் உதாரராமித்தனை அன்றோ?
பிதற்ற வல்லாரை –
‘அறவனை’ என்கிறபடியே, ‘வேறு பிரயோஜனங்களை விரும்புகிறவர்களிடத்திலும் இப்படியிருப்பதே!’ என்று
இதனை நெஞ்சிலே நினைத்து அடைவு கெடக் கூப்பிட்டு ஏத்துமவர்களை. பிதற்றுமவர் கண்டீர் – ‘
இந்நீர்மை இவர்களுக்கு நிலமாவதே!’ என்று அவர்கள் அவன்பக்கல் இருக்கும் இருப்பை அவர்கள் பக்கலிலே இருக்குமவர்கள் தாம்.
‘இவர்கள் உத்தேசியராவது எத்தனை நாள்களுக்கு?’ என்ன,
வருமையும் இம்மையும் –
‘இவ்வுலகம் மேலுலகம் இரண்டிலும்’ என்கிறபடியே, இவ்வுலகம் மேலுலகம் என்னும் இரண்டிலும்.
இவ்வுலகத்தில் –நாட்டாரோடு இயல்வொழித்து, அவ்வுலகத்தில் நாரணனை நண்ணுவித்து,- அடியார்கள் குழாங்களிலே உடன்கூட்டும் உபகாரகர்.
நம்மை அளிக்கும் பிராக்கள் –
நம்மை உஜ்ஜீவிக்கும் ஸ்வாமிகள். –
சர்வேசுவரன் ஒரு நாள்வரையிலே தன்னிடத்தில் ஒடுக்கி வைத்து, ஒரு நாள் வரையிலே சமுசாரத்திலே தரு துயரம் தடாதே
வைப்பான் அன்றோ? ஸ்ரீ வைஷ்ணவர்களோடே சேர்ந்து வசிக்கப்பெறில் ‘சமுசாரந்தானே நன்று’ என்னும்படி அன்றோ அவர்கள் படி?
ஆதலின், ‘அளிக்கும் பிராக்களே’ எனத் தேற்றேகாரங் கொடுத்து ஓதுகிறார்.
மேலே ‘நறு மா விரை நாண்மலர் அடிக் கீழ்ப் புகுதல் உறுமோ?’ என்றாரே அன்றோ?

—————————————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s


%d bloggers like this: