பகவத் விஷயம் காலஷேபம் -77- திருவாய்மொழி – -3-6-6….3-6-11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

தோற்றக் கேடு அவை இல்லவன் உடையான் அவன் ஒரு மூர்த்தியாய்ச்
சீற்றத்தோடு அருள் பெற்றவன் அடிக்கீழ்ப் புக நின்ற செங்கண்மால்
நாற்றம் தோற்றம் சுவை ஒலி உறல்ஆகி நின்ற எம்வானவர்
ஏற்றையே அன்றி மற்றொருவரை யான் இலேன் எழுமைக்குமே.–3-6-6-

ஆஸ்ரித -அனவதிக வாத்சல்யம் -சர்வ காலத்திலும் சர்வ படிகளிலும் இவனை தவிர உத்தேச்யர் அல்லர்
தோற்றக் கேடு அவை இல்லவன்-இதர சஜாதிய போலே –உத்பத்தி விநாசம் இல்லை
உடையான் அவன் ஒரு மூர்த்தியாய்ச்-கார்ய காலங்களில் ஆவிர்பாவம் -ஆஸ்ரித அர்த்தமாக தோன்றி மறைவார் திரோபாவம்
வேண்டித் தேவர் இறக்க வந்து பிறந்த -பிறந்தவாறும் -ஒருத்தி மகனாய் பிறந்து
ஆழ்வார்கள் -ஆவிர்பாதம் -சொல்லாலே தள்ளி வைத்து பிரிப்போமே -அடே போடா வாடா கூப்பிடுபவனை -அவனுக்கு பிடிக்காதே -பாவம் அறிந்தவர்கள் –
யதா யதா தர்மஸ்ய -கார்ய காலங்களில் -அனுக்ரகம் அடியாக
அத்விதீய மூர்த்தி நாரசிம்ஹ வபுஸ் அழகியான் தானே அரி உருவம் தானே
சீற்றத்தோடு அருள் பெற்றவன் -இரண்டு ஆகாரம் -ஹிரண்யன் -பிரகலாதன் –சிசுபாலனையும் சொல்லும்
தாட்பால் அடைந்தான் -சீற்றத்துடன் அருள் இரண்டையும் பெற்றானே
அடிக் கீழ்ப் புக நின்ற செங்கண்மால்-தனது திருவடிக் கீழ் நின்ற பிரகலாதனுக்கு சுலபன்
சிவந்த -வாத்சல்யம் -செருக்கால் -அடியவன் -அன்பால் அவன் மேல் குரோதம்
நாற்றம் தோற்றம் சுவை ஒலி உறல் ஆகி நின்ற -ஸ்பர்சாதி கந்த ரூப -வஸ்துக்களுக்கு நியந்தா
எம்வானவர் ஏற்றையே அன்றி -நித்ய சூரிகளை அனுபவிப்பிக்கும் மேன்மை உடன் ஒக்க அனுபாவ்யம் கொடுத்து
மற்றொருவரை யான் இலேன் எழுமைக்குமே.-சர்வ காலத்திலும் -உத்தேச்யர் வேறே இல்லார்
கீழே உபதேசம் -இங்கு ஸூய அனுபவம்

தோன்றுதலும் அழிதலும் என்பவை இல்லாதவன், தோற்றக் கேடுகளையுடைய பொருள்களையெல்லாம் தனக்கு உடைமையாகவுடையவன்,
கர்மம் அடியாக வரும் பிறவி இல்லாதவன், ஒப்பற்ற நாசிங்க உருவமாகிச் சீற்றத்தோடு இருக்குங் காலத்தில் திருவருளைப் பெற்றவனான
பிரஹ்லாதனானவன் திருவடிகளிலே அணையும்படியாக நின்ற சிவந்த கண்களையுடைய மால்,
நாற்றம் உருவம் சுவை ஒலி ஊறு இவை ஆகின்ற எம் வானவர் ஏறு ஆகிய இறைவனையே அன்றிக் காலம் என்னும் ஒரு பொருள்
உள்ள வரையிலும் வேறொரு தெய்வத்தை யான் உடையேன் அல்லேன்.
தோற்றம் – தோன்றுதல்; பிறவி. மூன்றாமடியிலுள்ள ‘தோற்றம்’ என்பதற்குத் ‘தோன்றும் உருவம்’ என்பது பொருள். உறல் – உறுதல்;
பரிசம். ஏறு – ஏறு போன்றவன்; ஏறு – இடபம். ‘எழுமைக்கும்’ என்பது, ஈண்டு ‘எப்பொழுதும்’ என்னும் பொருளைக் குறித்தது.

‘இவர்களைப் போலே கேட்க இராமல் உபதேசம் வேண்டாமலேயே நித்தியசூரிகளைப் போலே, தனக்குமேல் ஒரு இனிய பொருள் இல்லாதவனான
நரசிம்ஹத்தை ஒழிய வேறு ஒருவரை உத்தேசியமாக உடையேன் அல்லேன், காலன் என்னும் ஒரு பொருள் உள்ள வரையிலும்,’ என்கிறார்.
பரோபதேசம் செய்து கொண்டு –இங்கு ஸூய அனுபவம் -தம்மைப் போலே சம்சாரிகளும் இருக்க வேண்டும் என்று
காட்ட அருளிச் செய்கிறார் -இதுவும் பர உபதேச உக்தி -என்றவாறு –

தேரற்றம் கேடு அவை இல்லவன் –
தோன்றுதல் அழிதல் அவை இல்லாதவன். மற்றை விகாரங்களையும் உப லக்ஷணத்தாற்கொள்க.
ஷட் பாவ விகாரங்களுக்கும் உப லஷணம் –
உடையான் –
தோற்றக்கேடுகள் உள்ள ‘பொருள்களை எல்லாம் தனக்கு அடிமையாக உடையவன்.
‘நிருபாதிக சேஷி’ என்றபடி.
அவன் ஒரு மூர்த்தியாய் –
கர்மம் அடியான பிறவி இல்லாதவன் அடியவன் பொருட்டு ஒரு விக்கிரஹத்தையுடையனாய்.
அஜக -பிறப்பிலி -ஸ்தம்பவத்–ஆவிர்பவித்து- அம்ருத்யு -ஸூ ராரிக -11- திரு நாமங்கள் —
ஒப்பான பொருள் இல்லாததாய் மிகச்சிறந்த அழகினையுடையதாய் உள்ள நரசிம்ஹமாதலின் ‘ஒரு மூர்த்தியாய்’ என்கிறது.
நர சிம்ஹம் கலந்த அத்விதீயமான -பாலும் சக்கரையும் சேர்ந்த -ஒரு மூர்த்தி என்றவாறு -அரியும் மானிடமும் உடனாய்த் தோன்றிய –
‘அழகியான் தானே அரியுருவன் தானே’ என்றார் திருமழிசைப்பிரான்.நாரசிம்ஹ வபுஸ் ஸ்ரீ மான் -இங்கு அழகை சொல்லி அரி உருவன் –
சீற்றத்தோடு அருள் பெற்றவன் அடிக் கீழ்ப் புக நின்ற –
நர சிம்ஹ சேராததவற்றுக்கு மேலே சீற்றமும் அருளும் ஏக காலத்தில் –
ஒரு விக்கிரஹத்தை யுடையனான அதற்கு மேலேயும் ஒன்றே அன்றோ, சீற்றத்தையும் அருளையும் ஒரே காலத்தில் உடையனானதுவும்?
இரணியன் பக்கல் சீற்றமும் செல்லாநிற்கச்செய்தே, திருவருளுக்கும் பாத்திரனான ஸ்ரீ பிரஹ்லாதாழ்வான் திருவடிகளின்
கீழே வந்து புகுரலாம் படி நின்ற. இரணியன் துவேஷத்திற்கு விஷயம் ஆனாற்போலே இவன் அருளுக்கு விஷயமானான் ஆதலின்,
‘சீற்றத்தோடு அருள் பெற்றவன்’ என்கிறது.
இனி, ‘சீற்றத்தோடு’ என்பதனை ‘ஒரு மூர்த்தி’ என்பதற்கு அடையாக்கலுமாம். -சீற்றமே வடிவு கொண்ட ஒரு மூர்த்தி -என்றவாறு —
‘இரணியன் பக்கல் சீற்றமும் செல்லாநிற்க, ஸ்ரீ பிரஹ்லாதாழ்வானுக்குக் கிட்டலாய் இருந்தபடி எங்ஙனே?’ என்று
எம்பெருமானாரைச் சிலர் கேட்க, ‘சிம்ஹம் யானைமேலே சீறினாலும் குட்டிக்கு முலை உண்ணலாம்படி இருக்கும் அன்றோ?’ என்று அருளிச்செய்தார்.
‘அடியாரிடத்துள்ள அன்பினாலே அவர்கள் விரோதி மேலே சீறின சீற்றமானால், பின்னை அவர்களுக்கு அணைய
ஒண்ணாதபடி இருக்குமோ?’ என்று அருளிச்செய்தார் என்றபடி.

செம் கண் மால் –
இரண்டினுடையவும் காரியம். என்றது,
‘இரணியன் பக்கல் சீற்றத்தாலும் சிவந்திருக்கும்; ஸ்ரீ பிரஹ்லாதாழ்வான் பக்கல் வாத்சல்யத்தாலும் சிவந்திருக்கும்’ என்றபடி.
மால் – ‘மஹாவிஷ்ணும்’ என்கிறபடியே, இரணியனுக்கும் கிட்டவொண்ணாதபடி பெரியனாயிருக்கும் இருப்பைச் சொல்லுதல்;
ஸ்ரீ பிரஹ்லாதாழ்வானுக்குக் கிட்டலாம்படி வியாமோஹத்தை உடையவனாயிருக்கும் இருப்பைச் சொல்லுதல்.
நாற்றம் தோற்றம் சுவை ஒலி உறல் ஆகி நின்ற –
இவற்றுக்கு நிர்வாகனாக நின்ற –
சப்தாதி ஆழ்வாருக்கு தானேயாக நின்ற என்றுமாம் -யாருக்கு போலே -என்றால் -நித்ய ஸூ ரிகளுக்கு –
வாசனை உருவம் சுவை ஒலி பரிசம் ஆகியவைகள் எல்லாம் எனக்குத் தானேயாய் நின்ற.
எம் வானவர் ஏற்றை –
நித்தியசூரிகளுக்கு எல்லா விதமான இனிய பொருள்களும் தானேயாய் நிற்குமாறு போன்று,
எனக்கும் ஆகி நின்றான்.
அன்றி மற்று ஒருவரை யான் இலேன்-வேறு ஒருவரை உத்தேஸ்யமாக உடையேன் அல்லேன்.
’இது எத்தனை குளிக்கு நிற்கும்?’ என்னில்,
எழுமைக்குமே –
காலம் என்னும் ஒரு பொருள் உள்ள வரையிலும். அவன் நித்தியசூரிகள் பக்கலிலே இருக்கக்கடவ இருப்பை என் பக்கலில் இருக்க,
நான் வேறொன்றை இனிய பொருளாக நினைத்திருப்பேனோ? அவர்கள் அவனை ஒழிய வேறொன்றை இனிய பொருளாக
நினைக்கில் அன்றோ நான் வேறொன்றை இனிய பொருளாக நினைப்பது?

கடிகாசலம் கடிகை பொழுது வசித்தால் -தத் ஷணங்களில் ஏழு ஜன்ம பாபங்களும் போகுமே –

———————————————————————————————

எழுமைக்கும் எனது ஆவிக்கு இன்அமுதத்தினை எனது ஆருயிர்
கெழுமிய கதிர்ச் சோதியை மணிவண்ணனைக் குடக் கூத்தனை
விழுமிய அமரர் முனிவர் விழுங்கும் கன்னற் கனியினைத்
தொழுமின் தூய மனத்தராய்;இறையும் நில்லா துயரங்களே.–3-6-7-

மீண்டும் பர உபதேசம் -நிரதிசய போக்யன் சுலபன் -நரசிம்ஹன் போலே -ஆஸ்ரயுங்கோள்
எழுமைக்கும் எனது ஆவிக்கு இன்அமுதத்தினை எனது ஆருயிர்-ஸ்வரூபம் -உடன் கலந்து -அத்தால் பிரகாசம்
கெழுமிய கதிர்ச் சோதியை மணி வண்ணனைக் குடக் கூத்தனை-வடிவு அழகு -விளையாட்டு உடையவன்
விழுமிய அமரர் முனிவர் விழுங்கும் கன்னற் கனியினைத்
சீரியர் குணா நிஷ்டர் -கைங்கர்ய இஷ்டர் -அனுபவிக்கும் -நிரதிசய போக்யன் -கன்னலை கனி போன்றவன்
கன்னலால் ஆக்கப் பட்ட கனி -சக்கரை பழம்-விதைத்து தேனைக் கொட்டி வளர்ந்த மரம் -அபூத உவமை -இல் பொருள் உவமை
-வரசிடை புரசம் ஈந்த தேனின் சாற்றை -திருக் கூறும் தாண்டகம் -அக்காரக்கனி
தொழுமின் தூய மனத்தராய்;இறையும் நில்லா துயரங்களே
அநந்ய பிரயோஜனராய் கொண்டு ஆஸ்ரயிங்கோள்-அனுபவ பிரதிபந்தக துரிதங்கள் ஏக தேசமும் நில்லா

எனது உயிர்க்கு எக்காலத்திலும் இனிய அமுதம் போன்றவனை, எனது உயிரோடே வந்து கலந்து அதனாலே
பேரொளியுருவனானவனை, நீலமணி போன்ற நிறத்தையுடையவனை, குடக்கூத்து ஆடியவனை, சிறந்த நித்தியசூரிகளாலும்
முனிவர்களாலும் நுகரப்படுகின்ற கன்னல் கனியினைப் பரிசுத்தமான மனத்தோடு வணங்குங்கள்; துன்பங்கள் சிறிதும் நில்லா.
கன்னல் – ஒரு மரவிசேடம்; கரும்புமாம். ‘தூய மனத்தராய்த் தொழுமின்; துயரங்கள் இறையும் நில்லா,’ என மாறுக.

‘இப்படிச் சுலபனானவன் பக்கல் அரியன் என்னும் ஐயத்தை நீக்கி அவனைப் பற்றுங்கோள்,
உங்களுடைய எல்லாத் துக்கங்களும் போம்படி,’ என்கிறார்.

எழுமைக்கும் எனது ஆவிக்கு இன் அமுதத்தினை –
காலம் என்னும் பொருள் உள்ள வரையிலும் தன் சுவடு அறியாமல் இதர விஷயங்களில் ஈடுபாடு உள்ளதான
என் நெஞ்சுக்கு மிக இனிய பொருள் ஆனவனை. பெரியனவற்றை ஏழாகச் சொல்லுதல் மரபு; ‘காலமெல்லாம்’ என்றபடி
எனது உயிர் கெழுமிய கதிர்ச்சோதியை –
அநாதியாகப் பிறந்து இறந்து போந்த என் ஆத்துமாவோடே கலந்து அத்தாலே பேரொளியன் ஆனவனை.
தாம் கிட்டுகை இறைவனுக்கு நிறக்கேடு என்று இருந்தார் இவர்; அது மற்றைப்படியாய்த் தம்மைச் செறியச் செறியப்
பேரொளியனாய் இருந்தானாதலின், ‘கெழுமிய கதிர்ச்சோதியை’ என்கிறார்.
மணி வண்ணனைக் குடக்கூத்தனை –
வடிவழகையும் மனத்தை அழிக்கும்படியான செயல்களையும் உடையவனை. வண்ணம் – நிறம்.
இனி, ‘நீலமணிபோலே முடிந்து ஆளலாம்படி இருக்கிறவன்,’ எனலுமாம்.
இத்தலையில் இசைவு பாராமலே அகப்படுத்திக்கொள்ளுகைக்கு ஏதுக்கள் இருக்கிறபடி.

விழுமிய அமரர் முனிவர் விழுங்கும் கன்னல் கனியினை –
உண்டாக்கப்பட்ட தேவர்கள் அன்றிக்கே சீரியரான வைகுந்தத்து அமரர்க்கும் முனிவர்க்கும் கன்னல் போலவும் கனி போலவும்
ஆக்கப்பட்ட -சிருஷ்டிக்கப் பட்ட -பேச நின்ற சிவனுக்கும்
தனக்குமேல் ஒரு இனிய பொருள் இல்லாதபடி இனியன் ஆனவனை.
‘சர்வகந்த: சர்வரச:’ என்று சொல்லப்படுமவன் அன்றோ? இனி, கன்னல் கனி என்பதற்கு ‘மாங்கனி’ என்னுமாறு போன்று,
‘கன்னல் பழுத்த பழம் காணும் இது,’ எனப் பொருள் கூறலுமாம்.
தொழுமின் –
இதுவன்றோ நான் உங்களுக்கு இடுகிற வேப்பங்குடி நீர்? பால்குடிக்கக் கால் பிடிக்கிறேன் அன்றோ?
தூய மனத்தராய் –
‘கிட்ட அரியனோ, எளியனோ? அறிய அரியனோ, எளியனோ? இவனைப் பற்றுவோமோ, அன்றி,
பிரயோஜனத்தைக் கொண்டு அகலுவோமோ?’ என்று இங்ஙனம் சந்தேகத்தால் பீடிக்கப்பட்டவராய்ப் போகாமல்,
இவன்தன்னையே பிரயோஜனமாகப் பற்றுங்கோள்
துயரங்கள் இறையும் நில்லா
இப்படிச் சந்தேகம் கொள்ளுகைக்கு அடியான மஹாபாபங்கள் வாசனையோடே பறிந்து போம்.
இனி, ‘பிறப்பு இறப்புகளால் உண்டான துக்கங்கள் அடியோடே போம்,’ என்றுமாம்.

——————————————————————————————

துயரமே தரு துன்ப இன்ப வினைகளாய் அவை அல்லனாய்
உயர நின்றது ஓர் சோதியாய் உலகு ஏழும் உண்டு உமிழ்ந்தான் தனை
அயர வாங்கும் நமன் தமர்க்கு அரு நஞ்சினை அச்சுதன் தனைத்
தயரதற்கு மகன் தனையன்றி மற்றிலேன் தஞ்சமாகவே.–3-6-8-

ஆஸ்ரிதரை நழுவ விடாத சக்கரவர்த்தி திருமகனை ஒழிய வேறே தஞ்சம் இல்லையே
துயரமே தரு துன்ப இன்ப வினைகளாய் அவை அல்லனாய்
இன்பம் சம்பாதிக்க எத்தனை துன்பம் -துயரமே தரும் இன்பமும் துன்பமும்
நிஷ்கிருஷ்ட பரிதாபம் -இன்ப துன்பத்தால் ஏற்படும் பலம் –
துக்க சாத்யத்வ -துக்க மிஸ்ரத்வ -துக்கமே மேலே வரப்போகும் இன்பம் என்றவாறு
பாப புண்ய ரூப கர்மங்களுக்கு நிர்வாகனாய்
அவை அல்லனாய்-இவை அவனுக்கு இல்லையே
உயர நின்றது ஓர் சோதியாய் உலகு ஏழும் உண்டு உமிழ்ந்தான் தனை-உயர்ந்த -அத்வதீயமாய் -நித்தியமாய் -தேஜோ மயோ–
அயர வாங்கும் நமன் தமர்க்கு அரு நஞ்சினை அச்சுதன் தனைத்-மோகிக்கும் படி -ஆயாசம் அடையும் படி ப்ராண அபஹாரம் பண்ணும்
-மீட்க அறிய நஞ்சு -நழுவ விடாதவன்
தயரதற்கு மகன் தனையன்றி மற்றிலேன் தஞ்சமாகவே.-
சக்கரவர்த்தி திருமகன் -மற்று -வேறு ஒரு பகவத் வியக்தியும் அகப்பட -கண்ணனுக்காக பிறந்தவர் சொல்லும் வார்த்தை
தஞ்சம் -ஆபத்துக்கு உரு துணை -ரஷகன் –

‘துன்பத்தையே தருகின்ற பாவங்களும் புண்ணியங்களுமாய், அவை அல்லாதவனுமாய், உயர்ந்து நின்றதாய் ஒப்பற்றதாயுள்ள
ஒளி உருவமான திருமேனியையுடையவனாய், ஏழு உலகங்களையும் உண்டு உமிழ்ந்தவனாய், மயங்கும்படியாக உயிரைக் கொள்ளுகின்ற
யமபடர்க்குப் போக்குதற்கரிய விஷமாயிருப்பவனாய், தன்னை அடைந்தவர்களை நழுவவிடாதவனாய் உள்ள சக்கரவர்த்தி
திருமகனை அல்லாமல் வேறு ஒருவரைத் தஞ்சமாக உடையேன் அல்லேன்,’ என்றவாறு.
‘துன்ப வினைகளாய்,இன்ப வினைகளாய்’ என்க. ‘துயரமே தரும்’ என்பது, மேற்கூறிய இரண்டற்கும் அடைமொழி.
நல்வினையும் பிறத்தற்கு ஏதுவாதல் அறிக, தஞ்சம் – பற்றுக்கோடு. ‘தஞ்சமாக இலேன்’ என மாறுக.

சமுசாரிகளுக்கும் ருசி பிறக்கைக்காக, ‘நான் சக்கரவர்த்தி திருமகனை அல்லது வேறு ஒருவரை ஆபத்துக்குப்
பற்றுக்கோடாகப் பற்றி இரேன்,’ என்று தம் சித்தாந்தத்தை அருளிச்செய்கிறார்.

துயரமே தரு துன்ப இன்ப வினைகளாய் –
துயரத்தையே தரக்கூடியதான புண்ணிய பாப ரூபமான கர்மங்களை ஏவுகின்றவனாய்.
துன்ப வினையோடு வாசி அற இரண்டும் துக்கத்தையே பண்ணித்தரும் என்றாயிற்று இருப்பது இவர்:
‘இப்படி இவர் இருக்கைக்கு அடி என்?’ என்னில்
பகவானுக்கு அடிமையாய் இருக்கும் தன்மைக்கு விரோதியாய்க்கொண்டு தடையாதல் இரண்டற்கும் ஒத்து இருத்தலால்.
‘புண்ணியத்தையும் பாவத்தையும் நீக்கி விட்டு முற்றுவமையை அடைகிறான்,’ என்பது உபநிடத வாக்கியம்.
அவை அல்லனாய் –
கர்மங்கட்குக் கட்டுப்படாதவனாய்;
‘வேறாக ஈசுவரன் கர்ம பலன்களைப் புசியாமல் மிகவும் பிரகாசிக்கிறான்,’ என்பது வேதவாக்கியம்.
‘மிகவும் பிரகாசிக்கிறான்’ என்றது, தான் கர்மத்துக்குக் கட்டுப்படாதவன் அன்றிக்கே,
ஏவும் தன்மையால் வந்த புகரையுடையனாயிருக்கிறபடியைத் தெரிவித்தபடி.
உயர நின்றது ஓர் சோதியாய் –
‘ரஜோ மயமான இந்தப் பிரபஞ்சத்திற்கு மேலே உள்ள பரமபதத்தில் நித்திய முத்தர்களோடு எழுந்தருளியிருக்கின்ற தேவரீரை’ என்றும்,
‘பிரகிருதியைக்காட்டிலும் மேலே இருக்கின்றார் பரமாத்துமா,’ என்றும் சொல்லுகிறபடியே,
இங்குள்ளாராற் சென்று கிட்ட ஒண்ணாததாய் இருக்கிற பிரகிருதிக்கு மேலே இருக்கிற பரமபதத்திலே எல்லை இல்லாத
ஒளி உருவமான திவ்விய விக்கிரகத்தை உடையனாய் இருக்கிற இருப்பைச் சொல்லுகிறது.
அன்றியே,
‘வியஷ்டியாயும் சமஷ்டியாயும் இருக்கிற எல்லா உலகங்கட்கும் மேலே இருக்கிற பரமபதம்’ என்கிறபடியே,
‘உயர்த்தியையுடைத்தாய், நித்தியமாய், இரண்டாவது இல்லாததாய், ஒளிமயமான திவ்விய தேசத்தையுடையவன்’ என்னலுமாம்.

உலகு ஏழும் உண்டு உமிழ்ந்தான்தன்னை –
இப்படி எல்லாம் நிறைந்தவனாய் இருந்தானேயாகிலும், தன் விபூதியில் ஒரு கூறான இவ்வுலகத்தைப் பிரளயங்கொண்டது என்றால்,
இங்கே வந்து வயிற்றிலே எடுத்து வைத்து நோக்கி, ‘இத்தனை போதும் காணப்பெறாமையாலே இவை என்படுகின்றனவோ!’ என்று
உமிழ்ந்து பார்க்குமவனை; வழிபறிக்கும் நிலத்திற் போவார் சீரிய தனங்களை விழுங்கி பின்னை அமர்ந்த நிலத்திலே புக்கால்
புறப்பட விட்டுப் பார்க்குமாறு போலே.
அயர வாங்கும் நமன் தமர்க்கு அரு நஞ்சினை –
தன் திருவடிகளைப் பற்றினாரை அறிவு கலங்கும்படிக்கு ஈடாக உயிரைப் பிரிக்கக் கூடியவர்களாயிருந்துள்ள யமபடர்க்குக்
காற்றவொண்ணாத நஞ்சாக உள்ளவனை; ‘உயிர்கொண்டுஉடல் ஒழிய ஓடும்போது ஓடி அயர வென்ற தீர்க்குமவனே அன்றோ?
‘எங்ஙனே கண்டோம்?’ என்னில்,
தயரதற்கு மகன் தன்னை –
தான் அரசு செலுத்தாநிற்கச்செய்தே ஒரு பிராஹ்மணனுடைய குமாரனுக்கு அகால மரணம் உண்டாக,-சம்பூகன் -(தலை கீழே தபஸ் பண்ண-)
அவனை வாளாலே மீட்டும்; இராவணனைக் கொன்ற பின் படைக்குறி காணாநிற்கிற அளவிலே முதலிகளிலே சிலரைக் காணாதொழிய,
இந்திரனை அழைத்துப் போகவிட்டு வரங்கேட்கிற வியாஜத்தாலே அவனை இடுவித்து அவர்களையும் கூட்டிக்கொண்டு போன சக்கரவர்த்தி திருமகனை;
ஒரு முனிவனுடைய புத்திரனுக்கு அகால மரணம் வர, அப்பாலே மீட்டுக்கொடுத்தும் செய்தவை. –சாந்தீபன் -தர்மி ஐக்கியம் உண்டே
‘தயரதன் மகன்’ என்னாதே, தயரதற்கு மகன் தன்னை’ என்கிறது,
ஒருகால் வெற்றிலைச் செருக்கிலே ‘அரசு தந்தேன்’ என்னா, மீண்டு பெண்ணுக்கு வசப்பட்டவனாய், ‘நான் தந்திலேன்; நீ காடு ஏறப் போ,’
என்னா, இப்படிச் சொல்லலாம்படி அவனுக்கு இஷ்ட வினியோகத்திற்குத் தக்க புத்திரனாய் இருந்தான் ஆதலின்-

அன்றி மற்று இலேன் தஞ்சமாகவே –
இவ்விடத்தைப் பட்டர் அருளிச்செய்யாநிற்க, நஞ்சீயர், ‘இவர் புக்க இடம் எங்கும் இப்படியே சொல்லுவர்; இவர்க்கு இது பணியே அன்றோ?’ என்ன,
ஞானப்பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே -என் சிங்க பிரான் பெருமை ஆராயும் சீர்மைத்தே -போலே –
‘இவர் மற்றோரிடத்தில் தலை நீட்டுவது பாவநத்வத்தைப் பற்ற; இவர் தஞ்சமாக நினைத்திருப்பது சக்கரவர்த்தி திருமகனையே,’ என்று அருளிச்செய்தார்.
‘‘ஸ்ரீராமா, நீதான் எல்லா உலகங்களிலுள்ள எல்லா உயிர்கட்கும் பாவத்தைப் போக்குகின்றவனாய் இருக்கிறாய்-அகஸ்தியர் -,’ என்கிறது இல்லையோ இவரையும்?’ என்ன,
‘அவனும் இவரோடு ஒத்தான் ஒருவன்; இவர் ‘இனிய பொருள் வேறில்லை’ என்றிருக்குமாறு போன்று, அவன்
‘பாவநத்துக்கும் இவர் ஒழிய வேறில்லை’ என்றிருப்பான் ஒருவனாயிற்று.’
போக்யத்தை பற்ற இவர் இடம் -மற்றவர்கள் பாவனத்வம் -இவரையே அனுபவிக்க ஆழ்வார் –
-பாவனே சர்வ லோகானாம் -அகஸ்த்யர் சொல்லி உள்ளாரே -அகஸ்த்யரும் நம்மாழ்வார் உடன் ஒத்தார் -அவர் பாவனத்வத்துக்கும் இவர் ஒழிய இல்லை என்கிறார்
பட்டர் இராமாவதாரத்தில் பக்ஷபாதத்தாலே அருளிச்செய்யுமது கேட்கைக்காக,
சிறியாத்தான், ‘பெருமாளுக்கு எல்லா ஏற்றங்களும் அருளிச்செய்ததேயாகிலும், பாண்டவர்களுக்காகக் கழுத்திலே ஓலை கட்டித்
தூது போன கிருஷ்ணனுடைய நீர்மை இல்லையே சக்கரவர்த்தி திருமகனுக்கு? என்ன,
‘அதுவோ! பெருமாள் தூது போகாமை அன்றுகாண்; இக்ஷ்வாகு குலத்தாரைத் தூது போக விடுவார் இல்லாமைகாண்,’ என்று அருளிச் செய்தார்.
‘அவ்வவதாரத்தில் அக்குறை தீருகைக்காக அன்றோ கிருஷ்ணனாக அவதரித்துத் தூது போயிற்று? ‘முன்னோர் தூது வான ரத்தின் வாயில்
மொழிந்து அரக்கன், மன்னூர்தன்னை வாளியினால் மாள முனிந்து அவனே, பின்னோர் தூது ஆதிமன்னர்க்காகிப் பெருநிலத்தார்,
இன்னார் தூதன் என்ன நின்றான் எவ்வுட் கிடந்தானே,’ என்பது மங்கை மன்னன் மறைமொழி;
பாரதந்திரிய ரசம் அனுபவிக்கைக்காகப் போந்த பின் அதில் ஒன்று குறைந்தது என்று ஏன் இருக்க வேண்டும்?’
‘எம்பெருமானார் திருவாராதனம் பண்ணிப் போருவது வெண்ணெய்க்காடும் பிள்ளையாய் இருக்கும்.
இங்ஙனமிருக்கவும், ஒரு நாள் ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் சக்கரவர்த்தி திருமகனை எழுந்தருளப் பண்ணிக்கொண்டு வந்து கொடுத்தாராய்
அவரைப் பார்த்து, இந்த ‘என் ஒருவனையே சரணமாகப் பற்று’ என்று தேவையிடாதார் எழுந்தருளினார்,’ என்றாராம்.
ஆபிமுக்யத்தாலே பெறலாம் என்றால், அவ்வாபிமுக்கியந்தானும் பரமபத்தியைப் போன்று அரிதாய் இருக்கும் அன்றோ
இம்மக்களைப் பார்த்தால்? ‘இத்தலையில் ஆபிமுக்கியத்திற்கு மேற்பட வேண்டா,’ என்று சொல்லுகிறவை எல்லாம்,
பற்றப்படுகின்ற சர்வேசுவரனுடைய நீர்மையைப் பற்றச் சொல்லுகிறது;
இவனுக்கு வேண்டுவன சொல்லப்புக்கால் ‘மஹாவிஸ்வாச பூர்வகம் – மஹாவிசுவாசம் முன்னாக’ என்ன வேண்டும்படியாய் இருக்கும்.
‘ஒரு சிறாயை நம்பி ஆறுமாதங்கட்கு வேண்டும் சோறும் தண்ணீரும் ஏற்றிக்கொண்டு கடலிலே இழியாநின்றான்;
அதைப் போன்ற நம்பிக்கையாகிலும் வேண்டாவோ பகவத் விஷயத்தைப் பற்றுகிறவர்களுக்கு?’ என்று அருளிச்செய்தார்

———————————————————————————–

தஞ்சம் ஆகிய தந்தை தாயொடு தானுமாய் அவை அல்லனாய்
எஞ்சல் இல் அமரர் குல முதல் மூவர் தம்முளும் ஆதியை
அஞ்சி நீர் உலகத்துள்ளீர்கள் அவன் இவன் என்று கூழேன்மின்;
நெஞ்சினால் நினைப்பான் எவன்?அவன் ஆகும் நீள்கடல் வண்ணனே.–3-6-9-

நிதான பாசுரம் -அர்ச்சையை அருளுகிறார் நேர் கொடு நேராக –
உக்தமான பரத்வம் விபவம் அஸ்மாதாதிகளுக்கு நிலம் அன்று- இறாய்க்காமல் -அர்ச்சை -வடிவில்-சகல உறவுகள் –
நம் உடனே -சம்சய ரஹீதராய் கொண்டு ஆஸ்ரயிக்க
தஞ்சம் ஆகிய தந்தை தாயொடு தானுமாய் அவை அல்லனாய்-ஒரு அவஸ்தையில் பொகட்டுப் போம் தாய் தந்தை போலே இல்லாமல்
இவன் விடும் அளவும் கொண்டு
ஹித பிரிய -அவர்கள் உடன் தானுமாய் -நம்மாகவும் என்றவாறு –
தனக்கு வி நாசகர் இல்லாமல் நன்மையாய் -தனக்கு நன்மையைப் பார்க்கும் நம்மாகவும் -தானுமாகவும் -சொல்லப் படாத அனைத்தும்
சர்வ வித பந்துமாய்
எஞ்சல் இல் அமரர் குல முதல் மூவர் தம்முளும் ஆதியை
அனுபவ சங்கோசம் இல்லாமல் -நித்ய சூரிகளுக்கு சத்தாதி ஹேது பூதன்
மூர்த்தி த்ரயத்துக்கும் பிரதானம் -காரணம்
அஞ்சி நீர் உலகத்துள்ளீர்கள் அவன் இவன் என்று கூழேன்மின்;-சங்கை வேண்டாம் -லௌகிகர்கள்- அவனது மேன்மையைக் கண்டு அஞ்சி -கலங்கி
அவன் -அபரிச்சின்ன மகிமை படைத்தவன்
இவன் -நாம் கொடுத்த லோகம் -நாம் நினைத்த வடிவானவன் -உத்கர்ஷ அபகர்ஷ புத்தியாலே
சங்கை கொள்ளாமல்
நெஞ்சினால் நினைப்பான் எவன்?அவன் ஆகும் நீள்கடல் வண்ணனே.
நினைத்து உகந்து அருளுவிக்கப் பட்டவன் –
கடல் போலே அளவிறந்த ஸ்வ பாவத்தை உடைய சர்வேஸ்வரன் –
அவன் இடம் உள்ளது எல்லாம் இவன் இடம் உள்ளது
பிரதானம் இவனே -இவனே அவன் என்றபடி –
இவன் அவனாகவும் உள்ளான் என்றபடி
அர்ச்சிக்க -தாம் ஏவ ப்ரஹ்ம ரூபினாம் –எழுந்து அருளி இருக்கிறார் -புத்தி பண்ணிக் கொண்டு இல்லை -இருக்கிறார் ஆகவே
பிராப்ய விக்ரகம் இங்கே அந்தர்பூதம்

பற்றுக்கோடாயிருக்கின்ற தந்தையாய், தாயாய், தானுமாய், அல்லாத மற்றைப்பொருள்களுமாய், அனுபவத்தில் குறைவில்லாத
நித்தியசூரிகள் கூட்டத்துக்குச் சத்து ஆதிகளுக்கு எல்லாம் காரணனாய், மூவருள்ளும் முதல்வனாய் இருக்கின்ற இறைவனை
உலகத்திலுள்ளவர்களே! அவனுடைய மேன்மையைக் கண்டு பயந்து, அவனோ இவன் என்று ஐயப்படாதீர்கள்; நீங்கள் நெஞ்சினால்
நினைக்கின்ற வடிவு யாதொன்று உண்டு? அவ்வடிவையே தனக்கு வடிவமாகக் கொண்டிருப்பான் நீண்ட கடல் போன்ற தன்மையையுடைய இறைவன்,’ என்கிறார்.
‘தஞ்சமாகிய தந்தை, தஞ்சமாகிய தாய், தஞ்சமாகிய தான்’ எனத் தனித்தனியே கூட்டுக. ‘தஞ்சமாகிய’ என்னும் இந்த அடை,
இனம் விலக்க வந்தது. கூழ்ப்பு – ஐயப்படுதல்.

‘பரத்துவமே தொடங்கி அவதார சௌலப்யத்தளவும் வர உபதேசித்து, ‘பற்றுங்கோள்’ என்னாநின்றீர்; பரத்துவம் மனத்திற்கும் அப்பாற்பட்டது;
அவதாரத்துக்குப் பிற்பாடர் ஆனோம்; நாங்கள் எங்கே பற்றுவது?’ என்ன, ‘நீங்கள் விரும்பியபடியே உகந்தருளப்பண்ண,
அத்திருமேனியையே இவ்வுலக சம்பந்தமில்லாத தெய்வத் திருமேனியைப் போன்று விரும்பும் அர்ச்சாவதாரத்தைப் பற்றுமின்,’ என்கிறார்
. இத்திருவாய்மொழிக்கு நிதானம் இப்பாசுரம்.
ஸ்ரீ மத் வியோமம் -வாக்குக்கும் மனசுக்கும் ந ஸீமா-காலாந்தரம்-விஸ்வ ஜனனீம் -ஸ்ரீ ரெங்க தாமம் -ஆர்த்த வரவேற்று -கிருபை கரை புரண்டு ஓட –
-கடாஷ வெள்ளத்தால் -ரஷிக்க நனைத்துக் கொண்டு உறங்குவான் போலே யோகு செய்து -அருளுகிறான்

தஞ்சம் ஆகிய தந்தையோடு தாயோடு –
புறம்புள்ளார் ‘தாய், தமப்பன்’ என்று ஒரு பேராய், இவனுக்கு இடர் வந்தவாறே போகட்டுப் போவர்கள்;-காகாசுரன் –
இவனுக்கு யாதானும் ஓர் இடர் வந்தாலும், அப்போது முகங்காட்டிக் காப்பான் இவன் ஒருவனுமே ஆயிற்று.
மாதா பிதாக்கள் ‘இவன் பிறந்த முகூர்த்தம் பொல்லாதது,’ என்று நாற்சந்தியிலே வைத்துப் போவாரும், ஆபத்துக் காலத்திலே
அறவிட்டு -அற விற்று -ஜீவிப்பாருமாய் இருப்பர்கள்; அவர்களைப் போல அன்றி, தங்களை அழிய மாறியும் நோக்கும் தாயும் தந்தையுமாய்.
அன்றியே
இவர்களோடு உண்டான உறவுதான் கர்மம் அடியாக வந்தது ஆகையாலே அக்கர்மம் அழிய,
அவ்வுறவும் அழியும்; இங்கு அங்ஙன் அன்றிக்கே, ‘சர்வேசுவரன் எல்லா ஆத்துமாக்களுக்கும் அழிவற்ற தந்தையாய் இருக்கின்றான்,’
‘உலகத்தில் இருக்கிற எல்லாப் பிராணிகளுக்கும் திருமகள் கேள்வன் தந்தையும் தாயுமாய் இருக்கின்றான்,’ என்கிறபடியே,
உள்ளனவான எல்லாப் பிராணிகளுக்கும் தந்தையாய் இருக்கின்றவன் என்னுதல்.
ஸ்ருதி- பிதா மாதா மாதவ -சரணம் -புருஷரிஷப -த்ரௌபதி -மார்கண்டேயர் -உபதேசம் —ஜனார்த்தனன் நேராக இருக்க புருஷ பிரசவம் ஜகத் அன்றோ –
அதுதன்னிலும் இழவுக்குக் கண்ணநீர் பாயவேண்டாத தந்தையாய் இருப்பான்.
தானுமாய் –
தாய்தந்தையர்கள் போகட்டுப் போன அன்றும் ‘நான் ஜீவிக்கவேணும்; எனக்கு நன்மை உண்டாக வேணும்’ என்று
அன்றோ தான் இருப்பது? இப்படித் தனக்கு நன்மை பார்க்கும் தானுமாய்.
தஞ்சமாகி தாய் /தஞ்சமாகிய தந்தை /தஞ்சமாகிய தான் -சாமா நாதி கரண்யத்திலும்- இல்லாமலும் –
பெருமான் -தன்மை -ஸ்வரூப கதனம் -மகனாய் இருக்கும் தன்மை என்றுமாம் –
துஷ்யந்தன் கார்த்த வீர்யார்ஜுனன் -மக்களுக்கு தானே இப்படி என்று சொல்லிக் கொண்டார்கள் –
தந்தையானவன் தாயாகமாட்டான்: தாயானவள் தந்தையாகமாட்டாள்; இவர்கள் இருவரும் இவன்தான் ஆகமாட்டார்கள்;
இவன்தான் இவர்கள் இருவரும் ஆகமாட்டான். இவர்கள் எல்லாருமாய் இறைவன் இருக்கின்றானாதலின் இறந்தது
தழீஇய எச்சவும்மை கொடுத்துத் ‘தானுமாய்’ என்கிறார்; ‘தஞ்சமாகிய தந்தை, தஞ்சமாகிய தாய், தஞ்சமாகிய தான்’ என்று
எல்லா இடத்திலும் தஞ்சம் என்றதனைக் கூட்டுக. ‘தாயும் தமப்பனும் வேண்டுமாகில், தஞ்சம் இன்றிக்கே ஒழிகின்றார்கள்:
தான் தனக்குத் தஞ்சம் அன்றோ? ‘தஞ்சமாகிய தானும்’ என்று ஓதியது என்?’ என்னில், ‘அன்று;
‘இறைவனை வணங்கும் பொருட்டே விசித்திரமான இந்தச் சரீரத்தை உண்டுபண்ணினான்’ என்கிறபடியே,
சர்வேசுவரன் இவனுக்குக் கை கால் முதலிய அவயவங்களைக் கொடுத்து விட்டால், –கொடுத்து மகனே உன் சமர்த்து என்று விட்டால் –
‘அந்நாள் நீ தந்த ஆக்கையின்வழி உழல்வேன்’ என்கிறபடியே,
தீய வழியிற் செல்லுகின்றவன் அன்றோ? ஆகையாலே, தனக்குத்தான் தஞ்சம் அல்லன்.
அவை அல்லனாய் – தந்தை, தாய், தான் என்னும் இவ்வளவு அன்றிக்கே ‘தாயும் தந்தையும் உடன் பிறந்தவனும் இருப்பிடமும்
காப்பவனும் நட்டோனும் பேறும் ஆகிய எல்லாம் நாராயணனே,’ என்றும்,
‘தந்தை தாய் மகன் உடன் பிறந்தவன் மனைவி நட்டோன் இவர்கள் எல்லாரும் ஒவ்வொரு பலத்தின் பொருட்டு;
கேசவன் எல்லா லாபத்தின்பொருட்டு,’ என்றும்சொல்லுகிறபடியே, எல்லா உபகாரகனும் எல்லாவித உறவும் அவனே அன்றோ?
‘இப்படி இருக்கிறவன் யார்?’ என்னில்,

எஞ்சல் இல் அமரர் குல முதல் –
பகவானுடைய அனுபவத்தில் குறைவில்லாத நித்தியசூரிகள் கூட்டத்துக்கு நிர்வாஹகனை.
இதனால், நித்தியசூரிகள் ஜீவனத்திற்குக் காரணமாயுள்ளவன் என்பதனைக் குறிப்பித்தபடி.

மூவர்தம்முள்ளும் ஆதியை –
மூவர் தாம் தியானிக்கின்ற காரணப் பொருளை; ‘காரணமாயுள்ளவன் தியானிக்கத்தக்கவன்’ என்பது மறைமொழி.
இனி, ‘பிரஹ்மன், உருத்திரன், இந்திரன் இவர்கட்கும் உள்ளுயிராய் நிர்வாஹகனுமானவனை’ என்னுதல்.
இனி, ‘மூவரிலும் வைத்துக்கொண்டு முதன்மையனானவனை’ என்னுதல்.
இனி, ‘மூவரிலும் வைத்துக்கொண்டு முதன்மையனானவனை’ என்னுதல்; அப்போது இந்திரன் ஒழியக் கொள்க.
மூவர் என்கிற இது, எண்ணப்படுபெயராய் மூவரிலும் வைத்துக் கொண்டு காரணபூதன்’ என்றபடி.
அஞ்சி –
மேற்கூறியவை எல்லாம் அச்சத்திற்குக்காரணம்; ‘என்றது, என் சொல்லியவாறோ? ‘எனின்,
‘உலகத்துக்கு எல்லாவித உறவுமாய் இருக்கிறவனை நம்மாலே கிட்டப்போமோ? நித்தியசூரிகளுடைய இருப்புக்குக் காரணமாய்
உள்ளவனை நம்மாலே கிட்டப்போமோ? பிரஹ்மன் உருத்திரர் இவர்களுக்கு நிர்வாஹகனாய் இருக்கிறவனை
நம்மாலே கிட்டப்போமோ?’ என்று இங்ஙனம் அஞ்சி என்றபடி.

உலகத்துள்ளீர்கள் நீர் –
உலகத்தில் உள்ளவரான நீங்கள்.
அவன் இவன் என்று கூழேன்மின் –
‘அவன் ஆகிறான், தேச கால வஸ்துக்களால் அளவிடமுடியாதவனாய் அசாதாரண விக்கிரஹத்தோடே நித்தியசூரிகளுக்கு
அனுபவிக்கப்படுகின்றவனாய்க் கொண்டிருக்கிறான் ஒருவன்;
இவன் ஆகிறான், தேச கால வஸ்துக்களாற்பிற்பட்டு, நாம் விரும்பியது ஒரு பொருளைத் தனக்குத் திருமேனியாகக் கொண்டு
இவ்வழியாலே நம் புத்திக்கு உரிமைப்பட்டவனாய் இருப்பான் ஒருவன்;
ஆன பின்பு, அவன் அளவிடப்படாதவன்; இவன் அளவிற்கு உட்பட்டவன்,’ என்று இங்ஙனம் சந்தேகம் பொருந்திய
மனம் உடையவர் ஆகாதே கொள்ளுங்கோள்.
நெஞ்சினால் நினைப்பான் எவன் –
மனத்தினாலே யாதொன்றைத் திருமேனியாகக் கோலினீர்கள்
நீள்கடல் வண்ணன் அவன் ஆகும் –
அளவிட முடியாத பெருமையையுடைய சர்வேசுவரன் அதனையே தனக்கு அசாதாரண விக்கிரஹமாகக் கொண்டு விரும்பும்.
‘பிராஹ்மணர்கள் அக்நியில் பார்க்கிறார்கள்; யோகிகள் இருதயத்தில் பார்க்கிறார்கள்; அறிவில்லாதவர்கள் பிம்பங்களிலே;
சமமாகப் பார்க்கும் ஞானிகள் எங்கும் பார்க்கிறார்கள்,’ என்று ரிஷிகளைப் போலே தம் வாயாற்சொல்ல மாட்டாமையாலே ‘அவன், இவன்’ என்கிறார்.
அதாகும் -சொல்லாமல் -அவன் என்கிறார் -ஆழ்வார் -சேதனனாக -அர்ச்சாவதாரத்துக்கு மூச்சு உண்டு என்று கருத்து -பேசுவார் உண்ணுவார் –
ரிஷிகள் -பிரதிமாசு பொம்மை என்றார் –

இனி, ‘நெஞ்சினால் நினைப்பான் எவன்? அவனே நீள்கடல் வண்ணன் ஆகும்’ என்று கொண்டு கூட்டி,
‘அங்குத்தைக்கு உகந்தருளின இடத்தை விபூதியாக நினையாதே, இங்குத்தைக்கு அவ்விடத்தை விபூதியாக நினையுங்கோள்,’ என்று பணிப்பர் ஆண்டான்.
‘அருச்சுனா! எவர்கள் எவ்விதமாய் என்னை வணங்குகிறார்களோ, அவர்களுக்கு அவ்விதமாகவே இருந்து நான் அருள் புரிகிறேன்,’ என்றும்,
‘சலனம் அற்ற மனத்தினால் செய்யத்தக்கவன்’ என்றும்,
‘சங்கற்பத்துக்குத் தகுதியாக நினைக்கப்படுகின்ற விஷ்ணு’ என்றும்,
‘பொன்னாலும் வெள்ளியாலும் செய்யப்படுகின்ற திருமேனி’ என்றும், பிரமாணங்கள் கூறாநிற்கும். -ஸுகன முனியும் அர்ச்சையிலே மண்டி இருந்தாரே –
‘ஆயின், இவ்வுலக சம்பந்தமில்லாத விக்கிரகத்திலே செலுத்தும் விருப்பத்தை அர்ச்சாவதாரத்தில் செலுத்தமுடியுமோ?’ எனின்,
அசாதாரண விக்கிரகத்தை நாம் ஆதரிக்கிறதும் ‘அவன் விரும்பி மேற்கொண்டது’ என்றுதானே?
அதைப் போன்று, இதுவும் அவன் விரும்பி மேற்கொண்டானாகில், ஆதரிக்கத் தட்டு இல்லையே?
‘ஆயின், அசாதாரண விக்கிரஹத்தைப் போன்று அர்ச்சாவதாரத்தில் அவன் விரும்பி எழுந்தருளியிருப்பானோ?’ எனில்,
முதல் தன்னிலே அவன் திருமேனியை விரும்பி மேற்கொண்டதும்
‘பக்தாநாம் – பத்தர்களுக்காகவே’ என்கிறபடியே, அடியார்களுக்காக அன்றோ?
அது காரியமாய்ப் பயன் தருமிடத்திலே அன்றோ மிகவும் உறைக்க இருப்பது?
ஆகையாலே, நீள் கடல் வண்ணன் அவன் ஆகும்.
அர்ச்சாவதார சேதன புத்தியால் மூச்சு விடுவான் உண்பான் அன்றோ –

இவரைப் பற்றியே அவனை அடைகிறோம் இவனை தான் கண்ணாலே கண்டோம் -பரம பதமும் 108 திவ்ய தேச கோஷ்டிக்குள் தானே எண்ணுகிறோம் –
சௌனகர் -அர்ச்சையில் மூழ்கிய ரிஷிகள் -பஜனம் தியானம் பண்ணி -தாம் ஏவ ப்ரஹ்ம ரூபி -என்பர் –
அவன் உகந்த திரு மேனி என்பதாலே பரத்வ விபவம் போலே இவரையும் அவன் பரிக்ரகிப்பதால் –
பக்தர்களுக்கு -ஆஸ்ரித அர்த்தமாகவே திவ்ய மங்கள விக்ரகம் -இங்கு தானே அவர் திரு உள்ளம் பலம் கொடுக்கும் -கார்ய கரம் ஆகும் –
நெஞ்சால் நினைக்கும் அங்குத்தைக்கும் -உகந்து அருளினை நிலம் விபூதி சேஷம் அர்ச்சை என்று நினையாதே
அர்ச்சைக்கு பரவாசுதேவன் சேஷன் என்பர் முதலியாண்டான்
தெளி விசும்பு திரு நாடும் அர்ச்சையிலே சேர்த்தே -108-திவ்ய தேசம் எண்கிறோமே

——————————————————————————————————————

கடல் வண்ணன் கண்ணன் விண்ணவர் கருமாணிக்கம் எனது ஆர்உயிர்
பட அரவின் அணைக் கிடந்தபரஞ்சுடர் பண்டு நூற்றுவர்
அடவரும் படை மங்க ஐவர்கட்கு ஆகி வெஞ்சமத்து அன்று தேர்
கடவிய பெருமான் கனை கழல் காண்பது என்று கொல் கண்களே?–3-6-10-

பர உபதேசம் முடித்து -கிருஷ்ண த்ருஷ்ண தத்வம் -தமக்கு -தாமே திருத்த முடியாதே
ஆஸ்ரித உபதேசத்துக்கு ஸ்ரமம் செய்த கிருஷ்ண விருத்தாந்தம்
கடல் வண்ணன் கண்ணன் விண்ணவர் கருமாணிக்கம் எனது ஆர்உயிர்-நீல ரத்னம் -அவிகாரமான -போக்யமாய்
பட அரவின் அணைக் கிடந்தபரஞ்சுடர் பண்டு நூற்றுவர்-லீலா விபூதி நிர்வாக அர்த்தமாக –
ஸுவ ஸ்பர்சத்தால் விகசித படங்கள் -ஜாதி பிரயுக்தமான மென்மை வாசனை குளிர்த்தி
பரபாக தேஜஸ் -பொன் தகட்டில் மாணிக்கம் போலே -சர்வாதிகன் தோற்றும்
அபரிச்சின்ன மகாத்மயம் கொண்டவன் -சரம ஹரமான வடிவு -குணக்கடல் -தாரகன் –
அடவரும் படை மங்க ஐவர்கட்கு ஆகி வெஞ்சமத்து அன்று தேர்
அடர்த்து -எதிர்த்து வந்த படை நாசிக்க
பாண்டர்வர்களுக்கு சர்வ வித ரஷகன் -செத்தாரை மீட்டு சாவாது நோக்கிப் -சமர புங்கவரபோர் ஏற்று நாயனார் -திருப்புட் குழி
கடவிய பெருமான் கனை கழல் காண்பது என்று கொல் கண்களே?-வெற்றி வீரக் கழல் சாத்திய திருவடிகள் -செறிந்த கழல் என்றுமாம் –
ஆசை தீரக் காண்பது என்றோ

நித்தியசூரிகளுக்கு நீல இரத்தினம் போன்றவனும், திருப்பாற்கடலில் படத்தையுடைய ஆதிசேஷ சயனத்திலே யோக நித்திரை
செய்கின்ற பரஞ்சுடரும், கடல் போன்ற நிறத்தையுடையவனான கிருஷ்ணனும், என்னுடைய அரிய உயிராய் இருப்பவனும்,
முற்காலத்தில் துரியோதனன் முதலிய நூற்றுவரோடு சேர்ந்து போர்செய்வதற்கு வந்த சேனைகள் முழுதும் அழியும்படியாகப்
பாண்டவர்கள் பக்கம் சேர்ந்து கொடிய போரிலே அப்பொழுது அருச்சுனனுக்குத் தேரைச் செலுத்திய பெருமானுமான
பார்த்தசாரதியினுடைய செறிந்த வீரக்கழல் பொருந்திய திருவடிகளை என் கண்கள் காண்பது எப்பொழுதோ?’ என்கிறார்.
‘கழலை என் கண்கள் காண்பது என்றுகொல்?’ என்று மாறுக.
‘வெஞ்சமத்து நூற்றுவர் படை மங்க ஐவர்கட்காகித் தேர் கடவிய பெருமான்’ என்க. கொல் – அசைநிலை.

தாம் உபதேசிக்கத் தொடங்கின சௌலப்யத்தை அர்ச்சாவதாரம் முடிவாக அருளிச்செய்து, பின், தன் துறையான
கிருஷ்ணாவதாரத்திலே போய், ‘நான் கண்ணாலே கண்டு அனுபவிக்கப் பெறுவது என்றோ!’ என்னும் மனக் குறைவோடே தலைக்கட்டுகிறார்.
‘ஆயின், சுலபமான அர்ச்சாவதாரத்தை விட்டுக் காலத்தால் முற்பட்ட கிருஷ்ணாவதாரத்திலே போவான் என்?’ எனில்,
ஒரோ விஷயங்களிலே ஈடுபாடுடையவர்களாய் இருப்பவர்கள் அருமையும் எளிமையும் பாரார்களே அன்றோ?
பரத்துவத்துக்கு உயர்வு உண்டாய், போவாரும் பலர் உளராய் இருந்தும், ‘சுவாமி! எனக்குத் தேவரீரிடத்தில் மேலான
பிரீதியானது நிலைத்துவிட்டது; ‘பத்தியும் எப்பொழுதும் இருக்கின்றது; சூரரே! என்னுடைய மனமானது
வேறிடத்தில் செல்லுகிறதில்லை,’ என்றனேயன்றோ திருவடி? அப்படி, கிருஷ்ணாவதாரத்திற்காட்டிலும் அர்ச்சாவதாரத்துக்குச் சௌலப்யம்
மிக்கிருந்ததேயாகிலும், இவர் ‘எத்திறம்!’ என்று ஆழங்காற்பட்டது கிருஷ்ணாவதாரத்திலே ஆயிற்று.
‘ஆயின், ‘தயரதற்கு மகன்தன்னை அன்றிமற்றிலேன்’ என்றது செய்வது என்?’ என்னில், கிருஷ்ணாவதாரத்தில் நீர்மை
காணுமளவுமே இது சொல்லுகிறது. ‘ஆயின், ‘கிருஷ்ணாவதாரத்தைக்காட்டிலும் நீர்மை மிக்க இடம் அன்றோ அர்ச்சாவதாரம்?’ என்னில்,
அதற்கு முன்னரே சமாதானம் சொல்லிற்றே அன்றோ?–அருமையும் எளிமையும் பாரார்கள் இறே பிரவணராய் இருப்பவர் இருப்பார்கள் –

விண்ணவர் கருமாணிக்கம்– படம் அரவின் அணைக்கிடந்த பரஞ்சுடர் கடல் வண்ணன் –கண்ணன் –
நித்தியசூரிகளுக்கு இனியனானவன், கலங்காப் பெருநகரத்தை விட்டு, பிரமன் முதலியோர்கட்கு அடையத்தக்கவன்
ஆகைக்காகத் தன்னுடைய பரிசத்தாலே விரித்த படங்களையுடைய திருவனந்தாழ்வான்மேலே திருப்பாற்கடலிலே கண்வளர்ந்தருளி,
அவனுடைய பரிசத்தாலே தகட்டில் அழுத்தின மாணிக்கம்போலே மிக்க அழகையுடையனாய், ‘அறப்பெரியன்’ என்று தோன்றும்படியாய்
சிரமத்தைப் போக்கும்படியான வடிவையுடையனாய், அளவற்ற பெருமையனான கிருஷ்ணன்.
ஏஷ நாராயணஸ் ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதந மதுரா புரீம் ஆகதா –
‘விண்ணவர் கருமாணிக்கம்’ என்றதனால், நித்திய சூரிகளுக்கு அனுபவிக்கத் தகுந்த விக்கிரகத்தையுடையவன் என்பதனைத் தெரிவித்தபடி.
‘பட அரவின் அணைக் கிடந்த’ என்றதனால், அங்குநின்றும் பேர்ந்து, பிரமன் முதலியோர் கூக்குரல் கேட்கைக்காகத் திருப்பாற்கடலிலே
அணித்தாய் வந்து கண்வளர்ந்தருளுகிறவன் என்பதனைத் தெரிவித்தபடி.
‘கண்ணன்’ என்றதனால், அங்கு நின்றும் பேர்ந்து எல்லார்க்கும் அனுபவிக்கலாம்படி கிருஷ்ணனாய் வந்து அவதரித்தமையைத் தெரிவித்தபடி.
நாற்றம் குளிர்த்தி மென்மைகளை இயல்வாக உடையவன்’ என்பார், ‘அரவு’ என்றும்,
‘இறைவனுடைய பரிச சுகத்தாலே விரிந்த படங்களை உடையவனாய் இருக்கிறான்’ என்பார், ‘பட அரவு’ என்றும்,
‘ஆதிசேஷனுடைய பரிசம் இறைவனுக்கு மனக்கவர்ச்சியாய் இருக்கின்றது’ என்பார், ‘அரவின் அணைக்கிடந்த’ என்றும்
‘இவன்மேலே சாய்ந்ததனாலேயே இறைவன் சர்வாதிகனாய்த் தோன்றுகிறான்’ என்பார், ‘அரவின் அணைக்கிடந்த பரஞ்சுடர்’ என்றும் அருளிச்செய்கிறார்.

எனது ஆர் உயிர் –
எனக்குத் தாரகம் முதலானவைகள் எல்லாம் தானே ஆனவன். பண்டு – முன்பு ஒரு நாளிலே.
நூற்றுவர் அட வரும் படை மங்க –
துர்வர்க்கமடையக் குடி கொண்ட துரியோதனாதிகளோடே கொல்ல வருகிற படை அழியும்படியாக.
‘சாரதீ! சாரதீ!’ என்று வாய் பாறிக்கொண்டே அன்றோ பையல்கள் வருவது? ஆதலின், ‘அட வரும் படை’ என்கிறது.
’விபீஷணன் நான்கு அரக்கர்களோடு நம்மைக் கொல்லுதற்கு எதிர்முகமாய் வருகிறான்; சந்தேகம் இல்லை; பாருங்கள்!’ என்பது போன்று,
அங்கே நலிய வருகிற இது, தம்மை முடிக்க வந்தது போன்று இருத்தலின், ‘சென்ற படை’ என்னாது, ‘வருபடை’ என்கிறார்,
ஐவர்கட்கு ஆகி –
‘பாண்டவர்கள் கிருஷ்ணனையே சரணமாக அடைந்தவர்கள்; கிருஷ்ணனையே பலமாக உடையவர்கள்;
கிருஷ்ணனையே நாதனாக உடையவர்கள்,’ என்கிறபடியே, தான் அல்லது தஞ்சம் இல்லாத பாண்டவர்களுக்காகி.
வெஞ்சமத்து –
போர்க்களத்திலே; ‘நாம் அடியார்க்கு எளியனாயிருத்தலை உலகமனைத்தும் காணவேண்டும்,’ என்று பார்த்து, ‘அருச்சுனனை ரதியாகவும்
தன்னைச் சாரதியாகவும் எல்லா உலகத்துள்ளவர்கள் கண்களுக்கும் இலக்காக்கினான்,-ஸ்ரீ பாஷ்யகாரர் ஸ்ரீ ஸூ க்திகள் -’என்கிறபடியே,
எல்லார் கண்களுக்கும் இலக்கு ஆக்கினான்.
அன்று –
‘உகவாதாரும் கண்டு வாழ்ந்த நாளிலே இழந்த நான்
, இனிப் பெறுதல் என்று ஒன்று உண்டோ?’ என்று வெறுக்கிறார் இழவுக்கு.
தேர் கடவிய பெருமான் கனை கழல் –
‘சேநா தூளியும் உழவுகோலும் சிறுவாய்க் கயிறும் தேருக்குக் கீழே நாற்றின திருவடிகளும் அத்திருவடிகளிலே சார்த்தின
சிறுச்சதங்கையுமாய்ச் சாரதி வேஷத்தோடே நின்ற போதைத் திருவடிகளில் ஆபரணத்தின் ஒலி செவிப்படவும் அவ்வடிவைக் காணவும் காணும் ஆசை.
தீர்ப்பாரை -உன்னித்து -வண் துவராபதி மன்னன் -ஸ்ரீ மன்னார் குடி ராஜ கோபாலர் ஸ்வாமிகளுக்கு சமர்ப்பித்தார் மா முனிகள் –
கனை கழல் – ‘செறிந்த கழல்’ என்னுதல்; ‘ஒலிக்கின்ற கழல்’ என்னுதல்.
கண்கள் காண்பது என்று கொலோ
– இக்கண்கள் அடிப்படுவது –திருவடிப் படுவது -எப்போதோ? இவை முடியப் பட்டினி விட்டே போந்தவை இப்பட்டினி விடக்கடவது என்றோ?
‘அவ்வடிவைக் காண வேண்டும்,’ என்று விடாய்த்த கண்கள் ‘காணப் பெறுவது என்றோ?’ என்றபடி.
இவர் மனஸ் சஹகாரியம் இல்லாமலே கண்கள் காண ஆசைப் படுகின்றனவே –

———————————————————————————–

கண்கள் காண்டற்கு அரியனாய்க் கருத்துக்கு நன்றும் எளியனாய்
மண்கொள் ஞாலத்து உயிர்க்கெலாம் அருள்செய்யும் வானவர் ஈசனைப்
பண்கொள் சோலை வழுதி வளநாடன் குருகைக்கோன் சடகோபன் சொல்
பண்கொள் ஆயிரத்து இப் பத்தால் பத்தராகக் கூடும் பயிலுமினே.–3-6-11-

பகவத் பக்தி லாபம்
கண்கள் காண்டற்கு அரியனாய்க் கருத்துக்கு நன்றும் எளியனாய்-அபரோஷிக்கைக்கு- முன்னால் காண -துர்லபன்
நெஞ்சுக்கு விகசித அனுபவ விஷயம்
மண்கொள் ஞாலத்து உயிர்க்கெலாம் அருள்செய்யும் வானவர் ஈசனைப்-பிருதிவி பிரதான லோகம் –
அர்ச்சாவதார முகத்தாலே உபகரித்துக் கொண்டு ஸூ ரிகளுக்கு கொடுக்கும் அனுபவம் அருளும்
பண்கொள் சோலை வழுதி வளநாடன் குருகைக்கோன் சடகோபன் சொல்-வண்டுகள் ஒலியால் பண்கள் விஞ்சின
-கட்டுத் தறியும் கவி பாடுமே -நிர்வாககர்
பண்கொள் ஆயிரத்து இப் பத்தால் பத்தராகக் கூடும் பயிலுமினே.-பாட பக்தி பிறக்கும் -பண் உடன் கூடிய –
அர்ச்சாவதார சௌலப்ய பிரகாசகம் -பெறுதற்கு அரிய பக்தர்
வா ஸூ தேவ சர்வம் ஸூ துர்லபர் -என்றானே
பரம பக்தர் அளவும் -ஞானி ஆத்மைவ மே மதம் -அநந்ய சிந்தையால் பிரிந்து தரிக்க மாட்டாத பக்திக்கு
இத்தை பயின்றால் போதுமே -அப்யசிக்கவே அமையும் –

கண்களால் பார்த்தற்கு அரியவனாய், மனத்தால் பார்த்தற்கு மிகவும் எளியவனாய், மண்கொள் உலகத்திலே உள்ள உயிர்கட்கெல்லாம்
திருவருள் செய்கின்ற நித்தியசூரிகள் தலைவனைப்பற்றி, வண்டுகளின் பண்கள் பொருந்தியிருக்கின்ற சோலைகளையுடைய
வழுதி நாட்டையுடையவரும் குருகூர்க்குத் தலைவருமான ஸ்ரீ சடகோபரால் அருளிச்செய்யப்பட்ட பண்களோடு கூடின
ஆயிரம் பாசுரங்களிலே இப்பத்துப் பாசுரங்களையும் படிமின்; படித்தால் பத்தராதல் கூடும்.
‘அரியனாய் எளியனாய் அருள் செய்யும் ஈசன்’ என்க. ‘நன்று’ என்பது, ‘பெரிது’ என்னும் பொருளைக் காட்டும் உரிச்சொல்;
‘நன்றுபெரி தாகும்’ என்பது தொல்காப்பியம். ‘ஈசனைப் பற்றிச் சடகோபன் சொன்ன ஆயிரத்து இப்பத்து’ என்க.
‘இப்பத்தால் பத்தராகக் கூடும்; இப்பத்தைப் பயிலுமின்’ என ‘இப்பத்தை’ என்பதனை வருவித்து முடிக்க.
வழுதி நாடு – பாண்டி நாடு. ‘திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும்’ என்பது தனியன்.

முடிவில், ‘இத்திருவாய்மொழியைக் கற்கவே பகவானிடத்தில் அன்பு உண்டாம்; இதனைக் கன்மின்,’ என்கிறார்.

கண்கள் காண்டற்கு அரியனாய்க் கருத்துக்கு நன்றும் எளியனாய் –
கண்களாற்காண அரியனாய், ‘காண ஒண்ணாது’ என்று மறந்து பிழைக்க ஒண்ணாதபடி நெஞ்சுக்கு மிகவும் முன்னிலையாய்
காணப்பெறாத இன்னாப்போடே சொல்லுகிறார். இவர்க்குப் பிரிவாவது, புறக்கண்களால் காணவேண்டும் என்னும் நசையாலே
மனத்தின் அனுபவத்துக்கு வரும் கலக்கம். கலவியாவது புறக்கண்களால் நேரே காண்டலைப் போன்று உட்கண்ணால் காண்டல்.
மண் கொள் ஞாலத்து உயிர்க்கு எல்லாம் அருள் செய்யும் வானவர் ஈசனை –
நித்தியசூரிகளுக்கு அனுபவிக்கத் தக்கவன் ஆனாற்போலே, சமுசாரிகள் என்று வாசிவையாமல் அர்ச்சாவதார முகத்தாலே வந்து சுலபன் ஆனவனை.
பண்கொள் சோலை –
வண்டுகளின் மிடற்று ஓசையாலே பண் மிக்கிருந்துள்ள சோலை; –முக்கோட்டை போலே காணும் சோலை இருப்பது.
முக்கோட்டை–கான ஸ்தானம் -கவி பாடுகைக்கு ஹேது -விநாயகர் ஆலயம் போலே வண்டுகள் உள்ள சோலை என்றவாறு
திருத் தொலை வில்லி மங்கலம் ஆழ்வாரை பாட வைத்த முக்கொட்டை
திருக்கண்ண புரம் திருமங்கை ஆழ்வாரை பாட வைத்த முக்கொட்டை

வழுதி நாடன் குருகைக்கோன் சடகோபன் சொல்
பண்கொள் ஆயிரம் – வண்டுகளின் நினைவு இன்றியே அவற்றின் மிடற்றோசை பண் ஆனாற்போன்று, பகவானுடைய குணங்களை
அனுபவித்த அனுபவம் வழிந்த பேச்சுகள் விழுக்காட்டாலே பண்ணானபடி.
இப்பத்தால் பத்தராகக் கூடும் பயிலுமின் –
எல்லாம் கிடைக்கிலும் கிடையாதது ஒன்று, மக்கட்குப் பகவானிடத்தில் பத்தி;- இத்திருவாய்மொழியைக் கற்க அதுவும் கிடைக்கும்
1- பரத்துவ ஞானத்துக்கு அடியான புண்ணியமாதல், -2-சாஸ்திர ஞானமாதல்,
3- நற்குருவின் உபதேசமாதல், 4-பகவானுடைய நிர்ஹேதுகத் திருவருளாதல் இவையனைத்தும் இல்லாதார்க்கும்
அர்ச்சாவதார சௌலப்யத்தை அநுசந்திக்கவே பகவானிடத்தில் பத்தி உண்டாகக் கூடும் என்பார், ‘பத்தராகக் கூடும் பயிலுமின்’ என்கிறார்.
ஒரு பொருளிலும் விருப்பம் இல்லாதவனான சர்வேசுவரன் அடியார்களிடத்து வைத்த வாத்சல்யத்தாலே இவன்
உகந்தது ஒன்றைத் திருமேனியாக விரும்பி, ‘இவன் உண்பித்ததை உண்டு, அகங்கள்தோறும் புக்கு விடமாட்டாமல் இருந்தால்,
‘இவன் நம்மை விடமாட்டாதே இருந்த பின்பு நாமும் இவனிடத்தில் அன்பு வைத்தல் ஆகாதோ?’ என்னக் கூடும் அன்றோ?’ என்றபடி.
‘‘பயிலுமின்’ என்றால், பயில்வர்களோ?’ எனின், ‘நிதி இங்கே உண்டு’ என்ன, அவ்விடத்தைத் தோண்டுவார்களே அன்றோ?
அப்படியே, ‘பத்தி உண்டாம்’ என்ன, கற்பார்கள் என்று அருளிச்செய்கிறார்.-கல்லுவார்கள் -தோண்டுவார்கள் கற்பார்கள் அப்யசிப்பார்கள்

————————————————————————————————

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

சஷ்டே
தான் நிந்திதாதபி விகாதும்
அசௌ அசக்த சௌரி விமுக
விசார்ய-
துராசததாயா விமுகான் அர்ச்சாவதார சுலபத்வம் உவாச
தேஷாம் — கவலையும் பட்டார்
அர்ச்சாவதார சௌலப்யம்

—————————————————————-

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –

பத்மாஷீம்-செய்ய தாமரை கண்ணன்
பாப ஹந்த்ரீம்–பாப நாசனை
மணி ருசிம் -மணி வண்ணனை
அமராதீச சிந்த்ய அங்க்ரி பத்மாம்
தாதுகிரி குந்தள ஸ்ரீ ஸூ கடித மகுடாம்
பாவுக பிராப்ய பாதாம் -அன்புடைய பிரகலாதனுக்கு அருள்
சுத்தாவச்ய ஸ்வபாவம்
யம பட மதநீம் –
பக்த தீ வ்ருத்தி பவ்யாம் –நெஞ்சு நினைவின் படியே
நீசாசோ -பீஷ்ட வ்ருத்தீம்
நின்நோத யதேஷ்ட வியாபாரம் —உயர்வு தாழ்வு பாராமல் எல்லா வியாபாரங்களும் உண்டே

——————————————————-

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 26-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்–

செய்ய பரத்துவமாய்ச் சீரார் வியூகமாய்
துய்ய விபவமாய்த் தோன்றி வவற்றுள் -எய்துமவர்க்கு
இந்நிலத்தில் அர்ச்சாவதாரம் எளிது என்றான்
பன்னு தமிழ் மாறன் பயின்று—————-26-

———————————————————————————-
அவதாரிகை –

இதில்
அர்ச்சாவதார பர்யந்தமான சௌலப்யத்தை சம்சாரிகளைக் குறித்து
உபதேசிக்கிற பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
தாமே விழுவாரைத் தடி கொண்டு அடிக்கை அன்றோ நாமும் கை விடுகை -என்று
தம்மாலே பொடியப் பட்டார் நாட்டார் இழவு பொறுக்க மாட்டாத
கிருபா அதிசயத்தாலே
மீண்டும் அவனுடைய சௌலப்யத்தை உபதேசிக்கைக்காக
பர வ்யூஹ விபவங்களை
அடைவே அருளிச் செய்து கொண்டு சென்று
நீங்கள் உகந்த படியே உகந்து எழுந்து அருளப் பண்ண
அத்தை அப்ராக்ருத திவ்ய சமஸ்தானத்தோடு
ஒக்க விரும்பும் சீலாதி அதிசயத்தாலே
உங்களோடு புரையறக் கலந்து
சர்வ அபேஷிதங்களையும் குறைவற உபகரிக்கும்
அர்ச்சாவதாரத்தில் ஆஸ்ரயிங்கோள் என்கிற
செய்ய தாமரைக் கண்ணனில் தாத்பர்யத்தை
அருளிச் செய்கிறார்
செய்ய பரத்துவமாய் -இத்யாதியாலே -என்கை-

——————————————————————————-

வியாக்யானம்–

செய்ய பரத்துவமாய்ச் –
பர பரானாம் பரம -என்று
இதர விலஷணமான
அழகிய பரத்வமாய் –

சீரார் வியூகமாய் –
ஏஷ நாராயணஸ் ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதந-என்னும்படி இறே
வ்யூஹம் இருப்பது

சீர் –
என்று குணம் ஆதல்
ஐஸ்வர்யம் ஆதல் –

துய்ய விபவமாய்த் –
பிரத்யஷ அனுபவ யோக்யமான
தூய்மையை யுடைய விபவமாய் –
செய்ய தாமரைக் கண்ணன் -என்றும்
அமரர் குல முதல் -என்றும்
தடம் கடல் கிடந்தான் -என்றும்
அரவம் ஏறி அலை கடல் அமரும் துயில் கொண்ட அண்ணல் -என்றும்
தயரதற்கு மகன் தன்னை -என்றும்
குரவை கோத்த குழகனை -மணி வண்ணனை குடக் கூத்தனை என்றும்
இறே பரத்வாதிகளை அருளிச் செய்தது

தோன்றி இவற்றுள் –
இப்படி
தேச
கால
அதிகாரி
நியமங்களை யுடைத்தாய்
பிரமாணங்களாலேயாய் பிரத்யஷிக்கலாம் படியாய்
இருக்கிற இவற்றில் வைத்துக் கொண்டு –

எய்துமவர்க்கு இந்நிலத்தில் –
இவ் விபூதியில்
கிட்டி ஆஸ்ரயிக்கும் அவர்களுக்கு –

அர்ச்சாவதாரம் எளிது என்றான் –
ஸுலப்யத்தாலே அர்ச்சாவதாரம்
சமாஸ்ரயனத்துக்கு
சஷூர் விஷயமுமாய்
நித்ய சந்நிதியும் யுண்டாகையாலே அதி ஸூலபம் என்கிறார் –

நெஞ்சினால் நினைப்பான் எவனாகும் நீள் கடல் வண்ணன் -என்றத்தை நினைக்கிறது –
எளிவரும் இணைவனாம் -என்றவை பரத்வமாம் படி அவனாகும் சௌலப்ய காஷ்டையை காட்டி -என்றார் இறே
எளிவரும் இயல்பினான் -என்றும் –இணைவனாம்-என்றும் -அவருக்குள் இரண்டும் பரத்வமாம் படி -அவனாகும் சௌலப்யம் காஷ்டை -ஆச்சார்ய ஹிருதயம்
ஸ்ரீ மத்ய அயதனே விஷ்ணோஸ் சிஸ்யே நரவராத்மஜா -என்றும் –
நாரயாணம் உபாகமத் -என்றும்
விபவத்தாலே அர்ச்சயமான ஏற்றம் உண்டாய் இறே இருப்பது -பெருமாள் அர்ச்சித்த -ஏற்றம் -விசாலாட்சி
இப்படி அர்ச்சாவதார வைபவத்தை அருளிச் செய்தவர் தாம்-
கண்ணன் ஆராதனம் செல்லப்பிள்ளை / பெருமாள் ஆராதனை பெருமாள் பெரிய பெருமாள்
இன்னார் -என்கிறார் –
பன்னு தமிழ் மாறன் பயின்று-
அதாவது
சேதனரோடு செறிந்து ஆராயப் படுமதான
த்ரவிடத்தை நிரூபகமாக யுடையரான ஆழ்வார் –
பண்ணிய தமிழ் -என்னும்படி
பிரமாண சரமத்தை வெளி இட்டால் போலே
பிரமேய சரமமான அர்ச்சாவதாரம் எளிது என்று வெளி இட்டு அருளினார் -என்கை-

—————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s


%d bloggers like this: