பகவத் விஷயம் காலஷேபம் -76- திருவாய்மொழி – -3-6-1….3-6-5–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

சர்வேசுவரன் திருவடிகளில் கைங்கரிய ருசியுடையார்க்கு அதனைக் கொடுக்கக் கடவனுமாய், அவ்வடிமைதான் அவன் தனக்கு
இனியதாயிருக்கக்கடவதுமாய், அவ்வழியாலே இம்மக்களுக்கு உத்தேஸ்யமாகக் கடவதுமாயிருக்க,
அதனை இழக்கையாலே நிந்திக்க வேண்டும்படி இருந்தமையின், இவ்வடிமையிலே சேர்ந்தவர்களைக் கூட்டிக்கொண்டு,
அது இல்லாதாரை வெறுத்தவராய் நின்றார் மேல் திருவாய்மொழியில்;

அவ்வாறு வெறுத்தல், தாமே விழுவாரைத் தடிகொண்டு அடித்தலைப் போன்றது என்று நினைந்து, ‘இவர்கள் பண்டே
அறிவு கேட்டாலே வழி தப்பிப் போய்க் கேட்டினை அடையாநின்றார்கள்; நாம் இவர்களைக் கைவிட ஒண்ணாது;
நலத்தைச் சொல்லுவோம்,’ என்று பார்த்து, -தாய்க்கும் மகனுக்கும் தம்பிக்கும் இவருக்கும் இவர் அடி பணிந்தார்க்கும் இவை உள்ளதே —
பிராட்டி நலம் அருளிச் செய்தாற்போலே நலத்தை அருளிச்செய்கிறார் இத்திருவாய்மொழியில்.
இராவணன் பிராட்டிபக்கல் ‘பெற்றதாய்’ என்ற நினைவு இன்றிக்கே திருமுன்பே நின்று சிலவற்றைப் பிதற்றப் புக்கவாறே
‘ஸ்ரீராமபிரான் யானையைப் போல எண்ணப்படுகிறார்; நீ மிகச் சிறிய முயலைப் போல எண்ணப் படுகிறாய்,’ என்று வெறுத்து வைத்து
பின்னையும் ‘ஐயோ! இவன் நினைவு இருந்தபடி என்? இவனுக்கு ஒரு நல்வார்த்தை சொல்லுவார் இன்றிக்கே ஒழிவதே!’ என்று
இரக்கங்கொண்டு ‘நீ ஸ்ரீராமபிரானோடு தோழமை கொள்,’என்று அவன்தனக்கே நலத்தை அருளிச்செய்தாற்போன்று,
இவரும் மேல் திருவாய்மொழியில் அவர்களை நிந்தித்து வைத்து, இரங்கி இத்திருவாய்மொழியில் நலத்தை அருளிச்செய்கிறார்.

ஸ்ரீராமா சுந். 21 : 19.- இந்தச் சுலோகத்திற்கு வியாக்கியாதா அருளிச்செய்த பொருள் வருமாறு:
மித்ரம் ஒளபயிகம் கர்த்தும் ராம :-
‘பெருமாளைச் சரணம் புகு’ என்றால் அப்பையல் அதனைத் தனக்கு எளி வரவாக நினைத்திருக்குமே? அதற்காகத் ‘தோழமை கொள்’ என்கிறாள்.
தங்களைச் சரணம் புக்காரைத் தங்களிற் காட்டில் குறைய நினைத்திருப்பதில்லையே இவர்கள்;
‘மித்ரபாவேந’ என்றும்,‘மித்ரம் ஒளபயிகம் கர்த்தும்’ என்றுமிறே இருவர் படியும்.-துல்ய சீல வயோ வ்ருத்தாம் -முதலிலே சொன்னது பிராட்டியே –
இவள் துவம்சிக்கும் ராவணனை பார்த்து -சொல்ல -சரணாகதி என்று சொல்லாதவன்
-பெருமாள் -சரண் அடைந்த விபீஷணன் இடம் -ஊருக்கு பந்தல் போட சொன்ன வார்த்தை
ஸ்தாநம் பரீப்ஸதா
– வழியடிப்பார்க்கும் தரையிலே கால் பாவி நின்று வழியடிக்கவேணுமே? உனக்கு ஓர் இருப்பிடம் வேண்டியிருந்ததேயாகிலும் அவரைப் பற்ற
வேணுங்காண்.-கிளை மேலே இருந்து மரத்தை அடியிலே வெட்டுவது போலே உள்ளேயே —
எளிமையாக எதிரி காலிலே குனிந்து இவ்விருப்பு இருப்பதில் பட்டுப் போக அமையும் என்றிருந்தாயோ?
வதஞ்சாநிச்சதா கோரம் –
அப்படி உன்னை நற்கொலைப்பட விடுவரோ? உன்னை வைத்து உன் முன்னே உன் சந்தான கூட்டத்தைக் கொன்று பின்னை உன்னைச்
சித்திரவதை பண்ணுகையாகிற இவ்வதத்தை இச்சித்திலையே யாகிலும் அவரைப் பற்ற வேணுங்காண்.
த்வயா –
உன் நிலை இருந்தபடியால் விசேடித்து உனக்கு அவரைப் பற்றவேணும்.
அசௌ-
உருவெளிப்பட்டாலே முன்னிலையாயிருக்குமிறே இவளுக்கு;
அவனுக்கும் தானே மாயாமிருகத்தின் பின்னே போகிற போது கண்ட காட்சியாலே அச்சத்தாலே எப்போதும் முன்னிலையாயிருப்பரிறே.
புருஷர்ஷப:-
‘நான் பண்ணின அபராதத்துக்கு என்னை அவர் கைக்கொள்ளுவாரோ?’ என்றிருக்க வேண்டா; இவற்றை ஒன்றாக நினைத்திரார்காண்;
அவர் புருஷோத்தமர்காண்.
அசௌ புருஷர்ஷப: ராம: த்வயா மித்ரம் கர்த்தும் ஒளபயிகம்.

பிராப்தி ஒத்து இருக்க ‘இவர்கள் தாம் வழி தப்பிப் போய்க் கேட்டினை அடைதற்குரிய காரணம் யாதோ, சம்பந்தம் ஒத்திருக்க?’ என்று பார்த்தார்;
பகவானுடைய பரத்துவ ஞானம் இல்லாமையும் அவனுடைய சௌலப்ய ஞானம் இல்லாமையுமாயிருந்தது
அதாவது, ‘ஈசுவரனாகிறான் பெரியான் ஒருவனன்றோ? அவன், விசைக்கொம்பு; நமக்கு அவனை எட்டப்போகாதொன்றாய் இருந்தது’
என்று சமுசாரிகள் கைவாங்க,
விசைக்கொம்பு -பனி பட்டு மூங்கில் சாயுமே -காலை கட்டு சாதம் வைத்து பாட -ராகம் பாட -மாலைக்குள் போஜனம் மேலே போனதே –
விசை எந்தரம் -கிட்டே போனால் அடிக்கும் என்றுமாம்
‘அவனுடைய சௌலப்யத்தை விரித்துப் பேசுவோம்,’ என்று பார்த்து,
‘நீங்கள் அவன் அரியவன் என்று கைவாங்க வேண்டா; அவன் அடைவதற்குச் சுலபன்; அவனை அடையுங்கோள்,’ என்கிறார்.
ஆயின், மேல் ‘பத்துடையடியவர்’ தொடங்கிச் சௌலப்யமே யன்றோ சொல்லிக்கொண்டு போந்தது?
இப்போதாகச் சௌலப்யம் சொல்ல வேண்டுகிறது என்?’ என்னில்,
அங்குச் சொன்ன சௌலப்யந்தான் பரத்துவம் என்னும்படி அர்ச்சாவதாரம் எல்லையான சௌலப்யத்தின் எல்லை நிலத்தை அருளிச்செய்கிறார்.
அர்ச்சாவதாரம் -சௌலப்ய காஷ்டை -என்றவாறே -திருமால் இரும் சோலை -சொன்னாரே -கிருஹார்ச்சா -காஷ்டை என்றபடி –

‘அர்ச்ய – சமுசாரிகளுக்கும் அர்ச்சிக்கலாம்படி வணங்கத் தக்கவனாய் இருக்கும்.
சீலா ஜடீ பூயதே -நீராக உருக்கப் பண்ணுமே -குணா பரிவாஹம் -அவதாரம் –
‘சமுசாரிகளாகில் அர்ச்சிக்கிறார்கள்; அவர்கள் குற்றமே அன்றோ பண்ணுவது?’ என்னில், -அபசாரமே -செய்து போவது –
ஸர்வ ஸஹிஷ்ணு: – அவற்றையடையப் பொறுத்துக்கொண்டு நிற்கும். ‘ஆனாலும், நினைவு இரண்டாய் இராநின்றதே!’ என்னில்,
அர்ச்சக பராதீந அகிலாத்ம ஸ்திதி : – ‘நமக்கு ஒரு நினைவும் அவர்களுக்கு ஒரு நினைவுமாகில் அன்றோ சேராச் சேர்த்தியாவது?’ என்று
அவர்களுக்கு ஈடாகத் தன்னை அமைத்து நிற்கும்,’ என்றார் பட்டர்.
‘தமர் உகந்தது எவ்வுருவம்? அவ்வுருவந் தானே; தமருகந்தது எப்பேர்?மற்றப்பேர் – தமருகந்து,
எவ்வண்ணம் சிந்தித் திமையா திருப்பரே? அவ்வண்ணம் ஆழியானாம்,’ என்றார் பொய்கையார்.
‘எவர் சிலர் அதிகாரிகள் யாதொருபடியாகவேண்டும் என்று நம்மை வணங்குகிறார்கள்? அவர்களைக் குறித்து அப்படிக் கிட்டலாம்படிக்கு
ஈடாக நம்மை அமைத்துக்கொண்டு நிற்போம்; இப்படி அவர்கள் நினைவே நமக்கு நினைவாம்படி இருக்கையாலே அவர்கள்
எல்லாரும் நம் வழி போனார் ஆவர்கள்,’ என்பது இறைவன் திருவாக்கு.
‘சங்கல்பத்துக்குத் தகுதியாக நினைக்கப்படுகின்ற விஷ்ணு’ என்பது ஸ்ரீவிஷ்ணு புராணம். ‘நன்று; ‘சங்கல்பத்துக்குத் தகுதியாக’ என்பது,
பரத்துவம் முதலான நிலைகளைச் சொல்லுகிறது என்று கொள்ளாமல், அர்ச்சாவதார விக்கிரஹத்தைச் சொல்லுகிறது என்று
கொள்ளுதற்குக் காரணம் யாது?’ எனின், பரமபதத்தில் அசாதாரண விக்கிரஹத்தோடும் குணங்களோடும் இருக்கும்;
விபவங்களில் வந்தால் அது தன்னைத் தன்னின் வேறுபட்ட மற்றைச் சாதிகட்குத் தகுதியாக -இதர சஜாதீயனாய்
-ஆக்கிற்றாய் இருக்கும்;-நம் போல்வார் கண்ணுக்கு இலக்காக ஆகிறானே –
தேவகி வாசுதேவன் யசோதா நந்த கோபன்-சங்கல்பத்துக்கு தகுதியாகவே அமைத்துக் கொள்பவன் கிருஷ்ணன் -அன்றோ
தமர் உகந்த அவ்வுருவம் போலே அன்றோ இங்கும்
அசாதாராண விக்ரகம் -தான் அபிமாநிக்கிறார் -பிரக்ருதிம் ஸ்வாம்-அதிஷ்டாயா -ச விக்ரகனாய் -நாம் வைத்த விக்ரகத்துக்குள் புகுகிறான் -வட தேசம் –
புகுந்தால் தாழ்மை வரும் என்றதே தப்புதானே -தாழ்ந்தது என்ற எண்ணமே அவனுக்கும் வாராதே -இரண்டு குற்றங்களும் வருமே –
அபசாரம் பட்டு அவன் மகாத்மயம் குறைக்க முடியாது -நாம் தான் நம்மை காத்துக் கொள்ள படாமல் இருக்க வேண்டும் -சாந்நித்த்யம் குறையாது அவனுக்கு –
அந்தர்யாமியாய் இருந்து அமிர்தமாய் இருக்கிறான் -சுருதி -அவன் சம்பந்தத்தால் அமிர்தம் ஆக்குவான் தான் புகுந்து -வியாப்தகத தோஷம் வாராது
தூப்பில் பிள்ளை கத்ய வியாக்யானத்தில் -ஷாட் குணிய பிரகாச -சுத்த சத்வமயம் -நாம் உகந்த வற்றிலே -அர்ச்சாபி-என்கிறார் –
அர்ச்சாவதார திருமேனியாக இருந்தாலும் -உம்மைத் தொகை சொல்வதையே ஒத்துக் கொள்ள மாட்டார்கள் –
இங்ஙன் அன்றிக்கே, அடியவன் தான் உகப்பது யாதேனும் ஒரு பொருளைத் திருமேனியாகக் கோலினால், அதனையே
தனக்குத் திருமேனியாகக் கொண்டு, அதிலே அசாதாரண விக்கிரஹத்தில் பண்ணக்கூடிய அபிமானத்தைப் பண்ணி,
இவ்வழியாலே முகங்கொடுக்கும்படியாய் இருப்பது இந்நிலை.மேலும், தன்னினின்றும் வேறுபட்ட எல்லாப் பொருள்களினுடையவும்
சொரூபம், நிலை பேறு, தொழில் நடத்தல், தொழில் நடவாமை முழுதும் தன் அதீனமாம்படி இருக்கிற இறைவன்,
தன்னுடைய சொரூபம் நிலைபேறு முதலியவைகள் அடியார்களுடைய அதீனமாம்படியாய் அவர்களுக்கு வீடு நிலம் முதலியவைகளைப் போன்று
கூறு கொள்ளலாம்படி நின்ற நிலை அன்றோ இது? மேலும், இவனுக்கு ருசி பிறந்த போது மற்றொரு இடத்தில் போக வேண்டாதே,
இங்கே அனுபவிக்கலாம்படி நிற்கிற நிலையாய், இச்சரீர சம்பந்தமற்று ஒரு தேச விசேடத்திலே போய் அதற்கு ஈடாய் இருப்பது
ஒரு சரீரத்தைப் பெற்றுச் செய்யக்கூடியனவான அடிமைகளை இதர விஷயங்களின் ஆசைக்கு உறுப்பான இவ்வுடம்போடே செய்யலாம்படியாய்,
இவன் வேறொன்றிலே நோக்குள்ளவனான அன்றும் இவன் கையையே பார்த்திருக்கக் கூடியவனாய்
, இவன் தான் பசித்த போது உண்ணும் பொருளை ‘அமுது செய்ய வேண்டும்’ என்று விரும்பினால், அப்போதே அமுது செய்யக்கூடியவனாய்,
ஆசனம் படுக்கை அணிகள் முதலியனவெல்லாம் இவன் இட்ட வழக்காக்கி, திருமகள் கேள்வனாய், அடையப்பட்ட
எல்லா விருப்பத்தையுமுடையவனான இறைவன் அடியார்கட்கு வசப்பட்டவனாய், இவன் யாதேனும் ஒரு பொருளை இட்டால்
அதனைத் திருவாய்ப்பாடியில் யசோதை முதலானோர் வெண்ணெயைப் போன்று விரும்பக்கூடியவனாய்,
இப்படித் தன்னை அமைத்துக் கொண்டு நிற்கிற இடமே அன்றோ அர்ச்சாவதாரமாவது?

பரத்துவமே தொடங்கி அவதாரங்களிலே வர அவன் குணங்களைச் சொல்லிக்கொண்டு போந்து அர்ச்சாவதாரத்தின்
எல்லை நிலமான சௌலப்யத்தின் எல்லை நிலத்தை உபதேசிக்கிறார்.
‘ஆயின், இப்போது உபதேசிக்கப்புகுகிறது சௌலப்யமேயாகில், பரத்துவமே தொடங்கி உபதேசிக்க வேண்டுவான் என்?’ என்னில்,
‘மேன்மையுடையவன் தாழாநின்றான்’ என்றால் அன்றோ குணமாவது? தாழ்ந்த நிலையினனான ஒருவன் தாழாநின்றால்
சொரூபமாமித்தனையே அன்றோ? இப்படித் தாழ நிற்கிறவன் மேன்மையையுடையவன் என்கைக்காகச் சொல்லுகிறது.
உபாயங்களில் பிரபத்திமார்க்கம் போன்றது, சௌலப்யங்களில் அர்ச்சாவதார சௌலப்யம்.
‘தான் உகந்த பொருளைத் திருமேனியாகக் கொண்டு சந்நிதி பண்ணுவானேயாயின், கௌரவபுத்தி உண்டாகுமோ?’ எனின்,
தாய்க்கும் பெண்களுக்குரிய தன்மை ஒத்திருந்தும் பண்ணுகிற உபகாரங்களைக் காண்கையாலும்
சாஸ்திரம் சொல்லுகையாலுமன்றோ கௌரவிக்கிறது? அப்படியே,பிரமாணத்தை நம்புகிறவனுக்கு அடையத்தக்க இடம் அர்ச்சாவதாரம்
ஒழிய இல்லை என்று இவ்வளவான சௌலப்யத்தின் எல்லை நிலத்தை உபதேசிக்கிறார் ஆதலின், கௌரவபுத்தி உண்டாகும்.

தாம் உபதேசிக்கிற அதிகாரிகளுக்கும் தம்மைப் போன்று கைங்கரியத்தில் பிராப்தியுண்டு என்று காட்டுகைக்காக ‘ஒழிவில் காலமெல்லாம்’ என்ற
திருவாய்மொழி தொடங்கிச் சங்கதி அருளிச்செய்கிறார், ‘சர்வேஸ்வரன்’ என்று தொடங்கி. ‘சர்வேஸ்வரன்’ என்றது முதல் ‘உத்தேஸ்யமாகக் கடவதுமாயிருக்க’
என்றது முடிய, ‘ஒழிவில் காலமெல்லாம்’ என்ற திருவாய்மொழியின் அநுவாதம். அதற்குமேல் ‘வெறுத்தவராய் நின்றார்’ என்றது முடிய, மேல்
திருவாய்மொழியின் அநுவாதம். ‘இப்படி நிந்திக்கத் தக்கவர்கட்கு உபதேசிக்கைக்குக் காரணம் என்?’ என்ன, ‘அருள் கண்டீர் இவ்வுலகினில்
மிக்கதே’ என்கிறபடியே, மிக்க பேரருளே காரணம் என்கிறார், ‘அவ்வாறு வெறுத்தல்’ என்று தொடங்கி.

‘நண்ணாதார் மெய்யில் ஊன் ஆசை நிர்வேதத்தோடே ஆஸ்திக்ய அமாநித்வாதிகள் விஞ்சின பிரணிபாத அபிவாதந பரிப்ரச்ந சேவாபரர்க்கு
உளங்கொள் பேசுமளவன்று என்னும் அர்த்தத்தை வம்மின் விரோதம் ஈனச் சொல் எவ்வுயிர்க்கும் அறிய என்று அடைவுகெட அதபஸ்கர்க்கு
உபதேசிக்கிறது ஞாலத்தார் பந்தபுத்தியும் அநர்த்தங்கண்டு ஆற்றாமையும் மிக்க கிருபையுமிறே.’ ‘தாய்க்கும் மகனுக்கும் தம்பிக்கும்
இவர்க்கும் இவர் அடிபணிந்தவர்க்குமே இவையுள்ளது’ என்னும் ஆசார்யஹ்ருதய ஸ்ரீசூக்திகளை இங்கு அநுசந்திக்கத் தகும்.
வேத வேத்ய நியாயம் பரதவ பரமுது வேதம் வ்யூஹ வ்யாப்தி அவதாரங்களிலே ஓதின நீதி கேட்ட மனு படு கதைகளாய் ஆக
மூர்த்தியில் பண்ணிய தமிழ் ஆனவாறே வேதத்தை த்ராவிடமாகச் செய்தார் என்னும்
-பெரும் புறக்கடலும் சுருதி சாகரமும் அலைத்து ஆழ்ந்து ஓடும் இடங்களில் அயோக்யருக்குச் சமைத்த மடுவும் சாய்கரமும் மாந மேய சரமம் –
கௌரவ பிரதிபத்தி நமக்கு வருமோ என்னில் -ஜனனிக்கு ஸ்திரீ சாம்யம் ஒத்து இருக்கச் செய்தே பண்ணும் உபகாரங்களை
பிரத்யஷிக்கையாலும் -மாத்ரு தேவோ பவ -பிதா விட சதா -100 மடங்கு -சாஸ்திரம் சொல்லிற்றே
பிரத்யஷமாக நாமும் பார்க்கிறோம் -த்ரவ்ய புத்தி மாத்ரு யோனி பரிஷை உடன் ஒக்கும் –
வீட்டு இன்பப் பாக்களில் த்ரவ்ய பாஷா நிரூபண சமம் இன்ப மாரியில் ஆராய்ச்சி
இது பூர்ணம் –அது பூர்ணம் -பர -அங்கு இருந்து அது பூர்ணம் -வ்யூஹம் -அங்கு இருந்து அது பூர்ணம் -விபவங்கள்
அங்கு இருந்து அது பூர்ணம் -அர்ச்சை –அதுவே பூர்ணம் -க்ருஹ அர்ச்சை –

————————————————————-

செய்ய தாமரைக் கண்ணனாய் உலகு
ஏழும் உண்ட அவன் கண்டீர்
வையம் வானம் மனிசர் தெய்வம்
மற்று மற்றும் மற்றும் முற்றுமாய்
செய்ய சூழ் சுடர் ஞானமாய் வெளிப்
பட்டு இவை படைத்தான் பின்னும்
மொய்கொள் சோதியோடு ஆயினான் ஒரு
மூவர் ஆகிய மூர்த்தியே.–3-6-1-

சம்ஹார பூர்வகமான -சிருஷ்டி அவன் இட்ட வழக்கு
செய்ய தாமரைக் கண்ணனாய் -சர்வ ஸ்மாத் பரன் -ஐஸ்வர்ய ஸூ சசகம் -செருக்கால் -குதறிச் சிவந்து இருக்கும்
உலகு ஏழும் உண்ட அவன் கண்டீர்-சம்ஹிருதி சம்சயத்தில் அத்தா- சராசர க்ரஹனாத் -அத்தா -சாஸ்திரம் உண்ணுகிறான் என்கிறது -கிடீர்
ஒரு மூவர் ஆகிய மூர்த்தி யாய் .-மூர்த்தி த்ரயாத்மகன் –
வையம் வானம் மனிசர் தெய்வம்-பூமி ஊர்த்வ லோகங்கள் -தத் வாசிகள் மனிசர்
மற்று மற்றும் மற்றும் முற்றுமாய்-த்ரியக்குகள் ஸ்தாவரங்கள் பூத பஞ்சகங்கள் -மஹதாதி சமஷ்டிகள் -கீழே இருந்து மேலே –
அஹங்காரம் /மகான் /மூல பிரகிருதி
சேதன அசேதன விசிஷ்ட ப்ரஹ்மம் -ஆய்-என்றவாறு -உபாதான காரணம் -மண் -மாறி -சரீராத்மகம் -என்றவாறு –
ஜகத் காரணத்வம் -புண்டரீகாஷன் -சாந்தோக்யம்
செய்ய சூழ் சுடர் ஞானமாய் -அமோகம் ஆகையால் செவ்வியதாய் -தப்பாமல் -சத்ய சங்கல்பன் -ஸ்ருஜ்ய பதார்த்தங்கள்
அத்தைனையும் சூழ்வதாய் கொண்டு பிரகாசிக்கும் சங்கல்ப ஞானம்
பஹூச்யாம் -படைத்து -படைத்த பின்பும் -விடாமல் அவன் ஞானம் சூழ்ந்து -ஸ்திதி பிரவ்ருத்தி நிவ்ருத்தி இவன் அதீனம்
வெளிப்பட்டு இவை படைத்தான் -சிருஷ்டிக்கப் போகிறேன் என்று -நிமித்தமாக -அபின்ன நிமித்த காரணம் ப்ரஹ்மம்
சதேவ சோமே ஏக மேவ அத்விதீயம் -ஸ்வேகேதுக்கு உபதேசம்
பின்னும் மொய்கொள் சோதியோடு ஆயினான் -அதுக்கு மேலே செறிந்த தேஜோ -பரம பதத்துடன் -கூடி உள்ளான்
முற்றுமாய் -கார்ய காரண நிபந்தனமான சாமா நாதி கரண்யம்
ஞானமாய் -குணா குணி பாவத்தால் -ஸ்வரூப ஸ்வ பாவ தர்மி தர்ம ஞானம்
மூவர் -ப்ரஹ்ம இந்த்ரன் ருத்ரன் என்றுமாம்

ஒப்பற்ற மூவராகிய மூர்த்தியாய், செந்தாமரைக் கண்ணனாய், உலகேழும் உண்டவனாய் உள்ள அவன்தான் பூமியும்
தெய்வலோகங்களும் மனிதர்களும் தேவர்களும் விலங்குகளும் தாவரங்களும் மற்றும் எல்லாப் பொருள்களும் உண்டாகும்படி,
எல்லாவற்றையும் சூழ்ந்துள்ள சுடரையுடைய சிறந்த சங்கல்ப ரூப ஞானத்தையுடையவனாய்த் தோன்றி இவற்றைப் படைத்தான்;
அதற்கு மேலும், செறிந்த ஒளியுருவமான பரம பதத்தோடு கூடியிருக்கின்றவனும் ஆயினான்.
கண்டீர் – முன்னிலையசைச்சொல். ‘முற்றுமாய்’ என்பதில், ஆய் என்பது, செயவெனெச்சத் திரிபு. மூர்த்தத்தையுடையவன் மூர்த்தி; மூர்த்தம் – திருமேனி.
இத்திருவாய்மொழி எழுசீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்.

‘உலக காரணனாதல்- தாமரைக் கண்ணனாதல்- முதலிய குணங்களையுடையவன் பற்றத்தக்கவன்; அவனைப் பற்றுமின்,’ என்கிறார்.
அன்றியே, ‘உலகத்திற்குக்காரணப் பொருளை உத்தேசித்து அப்பொருளுக்கே தாமரைக் கண்ணனாதல் முதலியவைகளை விதிக்கிறார்,’ என்னுதல்.

செய்ய தாமரைக் கண்ணனாய் –
‘சூரியனுடைய ஒளியால் மலர்ந்த தாமரை மலர் எவ்வண்ணம் இருக்கும்? அவ்வண்ணமே அந்தப் பரம்பொருளான
நாராயணனுடைய திருக்கண்கள் இருக்கின்றன,’ என்றும், ‘யாகங்களுக்கு ஈஸ்வரனாயும் யாகபுருஷனாயும் தாமரைக்கண்ணன் என்னும்
பெயரையுடையவனாயுமிருக்கிற அந்த விஷ்ணு’ என்றும் சுருதி ஸ்மிருதி முதலியவைகளில் சொல்லப்படாநின்றுள்ள
அப்போது அலர்ந்த செவ்வித்தாமரை போலே இருந்துள்ள திருக்கண்களையுடையவனாய்.

தஸ்ய யதா கப்யாசம் புண்டரீகம் ஏவம் அஷிணீ–இரண்டு அஷீணீ -இரண்டுக்கு மேலே -ஆசம் -மலர்த்தப்பட்ட –
கம்பீராம்ப -சமுத்பூத ச்ம்ருஷ்ட நாள- ரவி கர விகசித -புண்டரீக தல -அமல ஆயத ஈஷண-
வேதார்த்த சங்க்ரஹ -ஸுத பிரகாச -6 நிர்வாகங்கள் -மூன்று பூர்வ பஷம் -மூன்று சம்ப்ரதாயம்
1-கபி சலன தாது -ஆதித்ய –ஆசம் -மண்டலம் -கம் பிபதி அவயவ சக்தி -புண்டரீகம் ஹிருதய புண்டரீகம் –
உபாசான ஸ்தானங்கள் இரண்டும் -அதே போலே இரண்டு மலர்ந்த திருக் கண்களும் –
உபாசகனுக்கு என்று ஆறாம் வேற்றுமையும் -உபாசகன் ஸ்தானம் -போலே -தருவித்துக் கொள்ள வேண்டுமே –
-வலது திருக்கண் -ஏகாஷியே உபாசன ஸ்தானம் என்று விதித்ததே -சாஸ்திரம் -அனுபபன்னம் –
2-கபி மர்க்கடம் -ப்ருஷ்ட சத்ருசம் -ஆசனவாய் போலே -தாமரை -போல மலர்ந்த திருக் கண்கள் -இரண்டு போலே –
மர்கட ஆசனம் போலே திருக்கண்கள் -தாமரை போலே திருக் கண்கள் -பிரித்தும் -இதுவும் அயுக்தம்
இரண்டு உபமானங்களா -ஒன்றா -இரண்டு என்றால் – உத்க்ருஷ்ட வனுடைய உத்கிருஷ்ட அவயவத்துக்கு -இதுவா
அபகிருஷ்ட வத்தின் அபகிருஷ்ட அவயவம் -கப்யாசம் லஷணையால்-வேறு பொருள் -மஞ்சா க்ரோசந்தி போலே -கப்யாசம் நேராக சேராதே
3-ஈஷது விகசிதம் சிறிது மலர்ந்த -செங்கண் சிறு சிறிதே -நிகண்டு இல்லையே ஈஷத் அர்த்தம் -அர்த்தம் உசிதமாக இருந்தாலும் -வராது
4-கம்பீராம்ப -சமுத்பூத -ச்ம்ருஷ்ட நாள- ரவி கர விகசித -புண்டரீக தல -அமல ஆயத ஈஷண-
கம் பிபதீதி கபி -தண்ணீரை குடிப்பதால் -ஆதித்யன் -கதிரால் அலர்த்தப் பட்ட –ரவி கர விகசித -அசிக்கப் பட்ட
5-கம் ஜலம் பானம் பண்ணுவதால் நாளம்-ஆசம் -இருக்கும் புண்டரீகம் – ச்ம்ருஷ்ட நாள–நாளச்த பத்மத்துக்கு சோபை உண்டே பரிக்கப் பட்டதை விட –
6-கம் ஜலம் அப்யாசம் -அ லோபம் -ப்யாசம் -அபி உப சர்க்கமாய் -சலிலத்திலே இருக்கும் தண்ணீரிலே உள்ள தாமரை என்றவாறு
கம்பீராம்பஸ் -சமுத்பூத -ச்ம்ருஷ்ட நாள- ரவி கர விகசித -புண்டரீக தல -அமல ஆயத ஈஷண-
அமலங்களாக விளிக்கும் கரியவாகி –நீண்ட அப்பெரிய வாய கண்கள்

உலகு ஏழும் உண்ட அவன்
வடிவழகில் தாமரைக் கண்ணன் ஆதலைப் போன்று குணங்களில் பிரளய ஆபத்தில் துணைவன் ஆயினமையும்.
‘வையம்’ என்றது, பூமியை. ‘வானம்’ என்றது, மேலே உள்ள உலகங்களை. ‘மனிசர்’ என்றது, வையத்தில் உள்ளாரை
‘தெய்வம்’ என்றது, வானத்தில் உள்ளாரை. ‘மற்றும்’ என்றது, விலங்கு பறவை தாவரங்களை.
மீண்டும், ‘மற்றும்’ என்றது, அவற்றுக்குக் காரணமான ஐம்பெரும்பூதங்களை.
மீண்டும் மற்றும் என்றது, அவை தமக்கும் காரணமான மகான் முதலிய தத்துவங்களை. ‘முற்றும்’ என்றது, மேற்கூறியவை எல்லாவற்றையும்.
‘முற்றுமாய் வெளிப்பட்ட இவற்றை,
செய்ய சூழ் சுடர் ஞானமாய்ப் படைத்தான்’ என்னுதல்;
அன்றியே,
‘தனிமாப் புகழே எஞ்ஞான்றும் நிற்கும்படியாகத் தான் தோன்றி’-8-10-7- என்றும் ‘பல பொருள்களாக ஆகக்கடவேன்’ என்றும் சொல்லுகிறபடியே,
முற்றவும், உண்டாகைக்காக இவையாய்க்கொண்டு தான் தோன்றி இவற்றைப் படைத்தான் என்னுதல்.
அப்போது, வெளிப்பட்டு என்கிறது, ‘படைத்தலில் கருத்து உள்ளவனாய்த் தோன்றி’ என்றபடி.
செய்ய சூழ் சுடர் ஞானமாய் – ஞானத்துக்குச் செவ்வையாவது, வருத்தம் அற்று இருக்கை.
அன்றியே,
‘முன்பு படைத்த வண்ணமே படைத்தார்’ என்கிறபடியே, ‘அதனுடைய கர்மத்துக்குத் தகுதியாகப் படைத்த செவ்வை’ என்னுதல்.
சூழ்தலாவது, காரியக் கூட்டத்தில் எல்லாம் பரந்திருக்கை. சுடராவது, மழுங்காத ஞானமாய் மிக விளக்கமாயிருக்கை.
‘ஞானமாய்’ என்றது, ‘இப்படிப்பட்ட நினைவின் உருவமான ஞானத்தை உடையவனாய்’ என்றபடி.-வெறும் ஞானமாய் -அத்வைதம் –
‘வெளிப்பட்ட இவை’ என்றது, ‘பிரமாணங்களால் அறியப்படுகின்ற இவை’ என்றபடி.
ஆக, இதுகாறும் உலக காரணன் ஆதல் சொல்லிற்று. மேல் நித்திய விபூதியையுடையவனாய் இருத்தலைச் சொல்லுகிறது:

பின்னும் –
லீலாவிபூதியையுடையனானதற்கு மேலே.
மொய் கொள் சோதியோடு ஆயினான் –
’சூரியன் சந்திரன் அக்நி இவர்களைக்காட்டிலும் கோடி மடங்கு அதிகமாய் விளங்குகிற, மஹாத்துமாவான விஷ்ணுவினுடைய
அந்த ஸ்ரீ வைகுண்டம்’ என்கிறபடியே, செறிந்துள்ள ஒளியை உடைத்தான நித்திய விபூதியையுடையனாய் இருக்கும் இருப்பைச் சொல்லுகிறது.
அன்றியே,
‘ஒளி நிறைந்துள்ள கல்யாண குணங்களையுடையவன்’ என்னுதல்; சோதி – குணம். ‘சோதி’ என்றது, குணங்களுக்கெல்லாம் உபலக்ஷணம்.
‘இப்போது குணங்களைச் சொல்லுகிறது என்?’ என்னில், குணங்களையுடைய பொருள் அன்றோ பற்றத்தக்கது? ஆதலால், சொல்லுகிறது.
ஒரு மூவராகியமூர்த்தி –
பிரம ருத்திரர்களுடைய சரீரங்களையும் ஆத்துமாக்களையும் தனக்குச் சரீரமாகக்கொண்டு, அவற்றில் உள்ளுயிராய் நின்று
படைத்தல் அழித்தல்களைச் செய்தும், தன் உருவத்தோடு நின்று பாதுகாத்தலைச் செய்தும் போருகிற சர்வேசுவரன்.
‘ஆயின், மூர்த்தி என்னும் சொல் சர்வேசுவரனைக் காட்டுமாறு யாங்ஙனம்?’ எனின், மூர்த்தி என்னும் சொல்,
பரத்துவத்தைக் கூறுவதாம். அன்றியே, பிரமன் உருத்திரர் இவர்களோடே இந்திரனையுங் கூட்டி மூவர் என்று சொல்லவுமாம்.

‘மொய் கொள் சோதியோடு ஆயினான் ஒரு மூவராகிய மூர்த்தி –பின்னும் வையம் வானம் மனிசர் தெய்வம்
மற்றும் மற்றும் மற்றும் முற்றுமாய், வெளிப்பட்ட இவற்றை,- செய்ய சூழ் சுடர் ஞானமாய்ப் படைத்தான்:
செய்ய தாமரைக் கண்ணனாய், உலகு, ஏழும் உண்ட அவன் கண்டீர்: ஆன பின்பு, அவனைப் பரவுமின்,’ எனக் கூட்டுக.

—————————————————————————

மூவர் ஆகிய மூர்த்தியை முதல்
மூவர்க்கும் முதல்வன் தன்னைச்
சாவம் உள்ளன நீக்குவானைத்
தடங் கடற் கிடந்தான் தன்னைத்
தேவ தேவனைத் தென்னிலங்கை
எரி எழச்செற்ற வில்லியைப்
பாவ நாசனைப் பங்கயத் தடங்
கண்ணனைப் பரவுமினோ.–3-6-2-

ஸ்ருஷ்டமான இவற்றை -ரஷணார்த்தமாய் -ஷீராப்தி -அவதார கந்தம் -வ்யூஹம்
மூவர் ஆகிய மூர்த்தியை -சரீரியாய் இருப்பவன் –
முதல் மூவர்க்கும் முதல்வன் தன்னைச்-பிரதான மூவருக்கும் -காரண பூதன்
சாவம் உள்ளன நீக்குவானைத்-குரு பாதகாதி சாபம் -போக்குபவன்
தடங் கடற் கிடந்தான் தன்னைத்-இடம் உடைத்தான கூப்பிடும் குரல் கேட்க
தேவ தேவனைத் -ராவண -வதார்தபி -தேவர்களுக்கு ஆஸ்ரயணீயனாய் அவதரித்து -முமுஷுக்களாக இல்லை
தென்னிலங்கை எரி எழச் செற்ற வில்லியைப்-அக்னி பகவான் நுழைய வில்லையே முன்பு -ராம பானம் -நெருப்பு முதலில் -இலங்கைக்கு வந்தது
பாவ நாசனைப்-சேதுவில் -வரதாதி முகத்தால் -பாப நாசன் -ஏஷ சேது -ஜல தர்ப்பணம் -தர்சனத்தாலும் தீர்த்தத்தாலும் போகும்
உடைத்த இடம் தனுஷ் கோடி -வர பிரதானம் –
பங்கயத் தடங் கண்ணனைப் பரவுமினோ-புண்டரீகாஷனை ஸ்தோத்ர முகத்தால் ஆஸ்ரயிங்கோள்

‘மூவராகிய மூர்த்தியை, தலைவர்களான அம்மூவர்க்கும் காரணமானவனை, அவர்களிடத்திலிருக்கின்ற சாபங்களை நீக்குகிறவனை,
அகன்ற திருப்பாற்கடலில் சயனித்திருப்பவனை, நித்தியசூரிகளுக்குத் தலைவனை, தெற்கே உள்ள இலங்கையானது
நெருப்புப் பற்றி எரியும்படியாக அழித்த வில்லையுடையவனை, பாவங்களைப் போக்குகின்றவனை, தாமரை போன்ற
விசாலமான அழகையுடைய கண்களையுடையவனைத் துதி செய்ம்மின்,’ என்கிறார்
‘முதலாவார் மூவரே அம்மூவருள்ளும், முதலாவான் மூரிநீர் வண்ணன்’ என்பது பொய்கையார் திருவாக்கு.
‘மூவுருவாகிய தலை பிரி ஒருவனை’ என்பது பரிபாடல் (13 : 37) ‘மூன்று கவடாய் முளைத்தெழுந்த மூலமோ?’ என்றார் கம்பநாட்டாழ்வார். (கம்ப. ஆரண். கவந்.)
‘மேவரு ஞானானந்த வெள்ளமாய் விதித்தோனாதி, மூவருமாகி அந்த மூவர்க்கும் முதல்வனாகி’ என்றார் வில்லிபுத்தூராழ்வார்.

‘உலக காரணனாதல் தாமரைக் கண்ணனாதல் முதலிய குணங்களைச் சொல்லி, ‘பற்றுங்கோள்’ என்னாநின்றீர்;
அவை பரத்துவத்துக்கே உரியவையான இலக்கணங்களாம்; ஆன பின்பு, எங்களாலே அவனை அடையப் போமோ?’ என்ன
‘அப்படிப்பட்டவன்தானே உங்களோடு ஒரே இனத்தவனாய்ச் சக்கரவர்த்தி திருமகனாய் வந்து அவதரித்தான்? அங்கே பற்றுமின்,’ என்கிறார்.
மேற்பாசுரத்தில் பரத்துவத்தை அருளிச்செய்தவர், இப்பாசுரத்தில் அவதாரத்தை அருளிச்செய்வதன் நோக்கத்தை அருளிச்செய்கிறார்,
‘உலக காரணனாதல்’ என்று தொடங்கி. ‘தென்னிலங்கை எரியெழச் செற்ற வில்லியை’ என்றதனை நோக்கிச் ‘சக்கரவர்த்தி திருமகனாய்’ என்கிறார்.

மூவராகிய மூர்த்தியை –
மேல் பாசுரத்தில் சொல்லப்பட்ட சாமாநாதிகரண்யத்துக்குக் காரணம் சொல்லுகைக்காக இப்பாசுரத்திலும் ‘மூவராகிய மூர்த்தியை’ என்கிறார்.
முதல் மூவர்க்கும் முதல்வன் தன்னை
உலகத்திற்குக் காரணனாய் இருந்துள்ள தன்னோடு கூடின மூவர்க்கும் காரணனாய் உள்ளவனை.
‘பிரமனுக்கும் சிவனுக்கும் காரணன் ஆகிறான், தனக்குக் காரணன் ஆகையாவது என்?’ என்னில், தான் இவர்களுக்குக் காரணனாய்
இருப்பது போன்று தனக்கு அவ்வருகு வேறொரு காரணம் இன்றியே இருத்தலைத் தெரிவித்தபடி. -அகில காரணாய அத்புத காரணாய நிஷ்காரணமாய் –
‘பதிம் விச்வச்ய ஆத்மேஸ்வரம் – தனக்குத் தானே தலைவன்’ என்பது உபநிடத வாக்கியம். இதனால், ‘மேற்கூறிய சாமாநாதிகரண்யம் சொரூபத்தால் அன்று;
காரிய காரணம் பற்றி வந்தது,’ என்பதனைத் தெரிவித்தபடி. அன்றியே, இந்திரனையும் கூட்டி,
‘உலகிற்கு முதல்வராய் இருக்கிற பிரமன் ருத்ரன் இந்திரன் இவர்களுக்கும் காரணனாயுள்ளவனை’ என்னுதல்.
சாவம் உள்ளன நீக்குவானை –
‘வேதங்கள் கொள்ளை கொள்ளப் பட்டது என்ன, தமப்பனாகிய பிரமனிடத்திற் செய்த பிரமஹத்தி என்ன,
அசுரர்களால் உண்டான துன்பங்கள் என்ன’ என்பன போன்று சொல்லுகின்றவற்றைப் போக்கும் தன்மையனாய் உள்ளவனை.
போக்குகிற அவன் பாரிப்புக்கு இவை மிக அற்பமாய் இருக்கிறபடியைத் தெரிவிப்பார் ‘உள்ளன’ என்கிறார்.
சாபத்தை நீக்கி -என்னாமல்-சாபம் உள்ளன நீக்கி -என்றது –
வேத அபஹார -குரு பாதக -தைத்ய பீடா –பிரஜா பதி சசி பதி உமா பதி -பதியாவது ரமா பதியாலே –
சேச மகேச கணேச ஸூரேச –எல்லா ஈசர்களும் -தபஸ் பண்ண -வெண்ணெய்க்கு ஆடும் பிள்ளை அன்றோ –

தடம் கடல் கிடந்தான் தன்னை –
‘இன்னம் இவர்கட்கு ஆபத்து வந்த போது நம்மைத் தேடித் திரிய ஒண்ணாது’ என்று ஏற்கவே கடலில் இடங்கொண்டவனை
தேவதேவனை –
பிரமன் முதலியோர்கட்குப் புகலிடமாய்க் கொண்டு ஆயிற்றுக் கண்வளர்ந்தருளுகிறது.
அன்றியே, ‘நித்தியசூரிகளால் ஏத்தப்படுகின்றவனை’ என்னலுமாம்.
தென்னிலங்கை எரி எழச்செற்ற வில்லியை-
நெருப்பானது இராவணபயத்தாலே புகமாட்டாத ஊரிலே தான் நினைத்தபடி பரவும்படி செய்ய வல்ல வில்வலியையுடையவனை,
இதனால், பிரமன் முதலியோர் கூப்பீடு கேட்டு எழுந்திருந்து செய்த தொழிலைத் தெரிவித்தபடி.
‘இதனால்’ என்றது, ‘முதல்வன்’ என்றதனைக் குறித்தது. ஆக, ‘முதல்’ என்றதற்கு இரண்டு பொருள்:
ஒன்று, காரணன்; மற்றொன்று, தலைவன்.-முதல்வன் – காரணன்.
இனி, ‘தேவதேவனை’ என்பதனை, எரி எழச் செற்ற வில்லிக்கு விசேஷணம் ஆக்கலுமாம்;
அப்பொழுது, மனிதத்தன்மையில் பரத்துவம் சொல்லுகிறார் என்பது போதரும்.
ஷட்ரத்த நயனன் ஸ்ரீ மான் -முக்கணான் ஸ்ரீ மான் -பவான் நாராயணோ தேவா –
பாவநாசனை –
கையும் வில்லுமாய் இருக்கிறபடியைக் காண எல்லாருடைய பாவங்களும் போம். என்றது,
‘இரகு நந்தன! நீதான் எல்லா உலகத்தாருடைய பாவங்களையும் போக்குகிறவன்,’ என்கிறபடியே, அந்நிலையிலே
மக்கள் எல்லாருடைய பாவங்களையும் போக்கும் தன்மையன் ஆனவனை என்றபடி.
பங்கயம் தடம் கண்ணனை –
பாப நாசனாய் இல்லாமல் – பாவத்தை வளர்ப்பவன் ஆனாலும், விடவொண்ணாத படியான கண்ணழகையுடையவனை.
பரவுமினோ
-ஜிதந்தே புண்டரீகாஷே நமஸ்தே -‘தாமரைக் கண்ணரே! தேவரீருக்கு வெற்றி!’ என்று முறைகெடப் புகழுங்கோள்.

வெந்தார் என்பும் சுடுநீறும் மெய்யிற் பூசிக் கையகத்தோர் சந்தார் தலைகொண்டுலகேழும் திரியும் பெரியோன் தான்சென்று
‘எந்தாய் சாபம் தீர்’ என்ன இலங்கு அமுது நீர் திருமார்பில் தந்தான் சந்தார் பொழில் சூழ்ந்த சாளக்கிராமம் அடைநெஞ்சே!’-திருமங்கை மன்னன்.

—————————————————————————————-

பரவி வானவர் ஏத்த நின்ற
பரமனைப் பரஞ்சோதியைக்
குரவை கோத்த குழகனை மணி
வண்ணனைக் குடக்கூத்தனை
அரவம் ஏறி அலைகடல் அம
ருந் துயில் கொண்ட அண்ணலை
இரவும் நன் பகலும் விடாது என்றும்
ஏத்துதல் மனம் வைம்மினோ.–3-6-3-

ஸ்ரீ ராமாவதாரம் -காட்டில் ஆஸ்ரிதர் அர்த்தார்த்த பிரவ்ருத்திகள் கிருஷ்ணாவதாரம் -ஆஸ்ரியுங்கோள் என்கிறார்
பரவி வானவர் ஏத்த நின்ற பரமனை– பூ பாரம் -தவிர்க்க -குண கணங்களை -சந்நிதி பண்ணி -பரமனை
பரஞ்சோதியைக்-ஜாதோசி-தேவ தேவேச சங்க சக்ர கதா தர -32 பல்லாலும் சிரித்தானே -த்வஜ சந்திர சந்த்ரிகா -அத்புதம் பாலகம் -பிறக்கும் பொழுதே
குரவை கோத்த குழகனை -சௌந்த்ர்யம் அகப்பட்ட கோப கன்னிகளுக்கு -ராசக்ரீடா -இஷ்ட வினியோக அர்ஹன் பவ்யனாய்
மணி வண்ணனைக் குடக்கூத்தனை-முடிந்து ஆளலாம் படி சுலபன் பெண்கள் மட்டும் அன்றி -ஊராக அனுபவிக்க
அரவம் ஏறி அலைகடல் அமருந் துயில் கொண்ட அண்ணலை-சந்நிதியால் -அலை -ஏறின உடன் கொந்தளிக்க -ஸ்பர்சம் -ஆர்பரித்து
இரவும் நண்பகலும் விடாது -ச்தோத்ரத்தால் அஹோராத்ரா விபாகம் இல்லாமல்
என்றும் ஏத்துதல் மனம் வைம்மினோ.-நெஞ்சை வைம்மின் -விஷய வைலஷண்யத்தால் தானே முழுகிக்கும்
இரும்பு போல் வலிய நெஞ்சம் தானே நீரிலே மூழ்குமே

‘நித்தியசூரிகள் துதித்து ஏத்தும்படி நின்ற மேலானவனை, மேலான ஒளியுருவனை, குரவைக்கூத்தை ஆடிய
இளமைப் பருவமுடையவனை, நீலமணி போன்ற வடிவையுடையவனை, குடக்கூத்து ஆடியவனை,
அலைகளையுடைய திருப்பாற்கடலிலே ஆதிசேஷன்மேலே ஏறிப் பொருந்திய யோகநித்திரையை மேற் கொண்ட அண்ணலை,
நல்ல இரவும் நல்ல பகலும் என்றும் விடாமல் துதித்தலை மனத்தில் வைம்மின்,’ என்கிறார்.
பரவுதல் – துதிக்கும் முறையில் நின்று துதியாமை; ‘பரவசப்பட்டுத் துதித்தல்’ என்றபடி. குழகு – இளமை; குழகையுடையவன் குழகன்;
‘குழகராய் இள மடந்தையர்க்கு உருகுவோர்’ என்பது வில்லி பாரதம். ‘இடவல குடவல’ என்ற பரிபாடற்பகுதியும்,
‘ஆய்ச்சியரோடு குரவை கோத்தலால் அவர்க்கு இடமும் வலமும் ஆயினோய்! கூத்தாடுதற்கு எடுத்த குடத்தினையும்
பகைவரைக் கொல்லுதற்கு எடுத்த அலப்படையினையுமுடையோய்!’ என்ற அதனுரையும் இப்பாசுரத்தின் இரண்டாமடியோடு ஒப்பு நோக்கத் தக்கன.

‘மேற்பாசுரத்திற்கூறிய இராமாவதாரம் பரத்துவம் என்னும்படியான கிருஷ்ணாவதாரத்திலே பற்றுங்கோள்,’ என்கிறார்.

பரவி வானவர் ஏத்த நின்ற பரமனை –
முறைகேடாக நித்திய சூரிகள் ஏத்த, அத்தாலே சமாதிக தரித்திரனாய் நின்றவனை.
அன்றியே, ‘நித்தியசூரிகள் ஏத்தினாலும் அளவிட முடியாதபடி அவ்வருகாய் நின்றவனை’ என்றுமாம்.
சமாதிக தரித்திரன் – ஒத்தாரும் மிக்காரும் இலையாய மாமாயன். ‘பரமன்’ என்பதற்கு இரண்டு பொருள்:
ஒன்று, ‘ஏத்துவதனாலே பரமன்’ என்பது;மற்றொன்று, ‘ஏத்தினாலும் அதற்கும் அப்பாற்பட்டவன்’ என்பது.
பரஞ்சோதியை – அவர்கள் ஏத்த, அதனாலே ஒளியை உடையவனாயிருக்கிறவனை; என்றது,
‘பரமபதத்திலே இருக்கின்ற நித்தியசூரிகளும் துதி செய்துகொண்டேயிருக்கின்றார்கள்,’ என்கிறபடியே,
அவர்கள் ஏத்துமது தன் பேறாக நினைத்து, அது தன் வடிவிலே தோன்ற இருக்கின்றமையைத் தெரிவித்தபடி.
‘பரஞ்சோதி என்னும் சொல்லின் பொருளான பரம்பொருள்’ என்பது உபநிடத வாக்கியம். ‘ஆயின், இவர்கள் ஏத்துதல் எதற்காக?’ என்னில்,
தலைவனுக்கு அதிசயத்தைப் பண்ணுகை அடியார்களாயுள்ள இவர்களுக்குச் சொரூபம்: ஆதலின், ஏத்துகிறார்கள்.
குரவை கோத்த குழகனை –
நித்தியசூரிகளோடு செய்யும் செயல்களை ஆயர் பெண்களோடு கலக்கும் இடத்தில், வாசி அறக் கலக்க வல்லவனை. குழகன் – பவ்யன்
மணி வண்ணனை –
அவர்களை வசீகரிக்கைக்கும் மருந்திடும் பரிகரத்தை உடையவனை;
‘நீல மணி போலே சிரமத்தைப் போக்குவதாய் உள்ள விக்கிரஹத்தை உடையவன்’ என்றபடி.
குடக்கூத்தனை –
திருக்குரவைக்கூத்தில் சேராதவர்களும் இழக்க ஒண்ணாதபடி மன்றிலே தன்னுடைய வடிவழகினை முற்றூட்டாக அநுபவிப்பிக்குமவனை.
மன்றம் அமர கூத்தாடி -இவன் ஆடி விட்டு போன பின்பும் கோபிமார்கள் மன்றிலே அமரும் படி –
அத்யயன உத்சவம் முடிந்த பின்பும் அத்தை நோக்கி பார்த்துக் கொண்டு அசை போடுவது போலே
அரவம் ஏறி அலை கடல் அமரும் துயில் கொண்ட அண்ணலை –
குடக்கூத்து ஆடின சிரமம் ஆறும்படிக்கு ஈடாகப்போய்த் திருப்பாற்கடலிலே சாய்ந்தருளினபடி.
தன் சந்நிதானத்தாலே (அண்மை) கிளர்த்தியையுடைத்தாய் இருத்தலின், ‘அலைகடல்’என்றும்,
நாய்ச்சிமாராலும் உணர்த்த ஒண்ணாதிருத்தலின் ‘அமருந்துயில்’ என்றும், பாம்பினைப் படுக்கையாக உடைமையால் வந்த முதன்மையாகிய
உறைப்பை உடையவனாதலின் ‘அண்ணலை’ என்றும் அருளிச்செய்கிறார்.
இரவும் நன்பகலும் விடாது என்றும் ஏத்துதல் மனம் வைம்மினோ –
‘காலம் நடையாடாத தேசத்தில் அனுபவத்தை அன்றோ காலம் நடையாடும் தேசத்திலே நான் உங்களை அனுபவிக்கச் சொல்லுகிறது?’ என்கிறார்.
ஏத்துகைக்கு ஈடான காலம் ஆகையாலே ‘நல் இரவும் நன்பகலும்’ என்கிறார்.
‘துதி செய்துகொண்டேயிருக்கின்றார்கள்’ என்கிறபடியே ஆதல் வேண்டும் என்பார், ‘என்றும் ஏத்துதல்’ என்கிறார்.
‘நீங்கள் அங்கே நெஞ்சை வைக்குமித்தனையே வேண்டுவது; விஷயம் தன்னடையே கொண்டு முழுகும்,’ என்பார், ‘மனம் வைம்மினோ’ என்கிறார்;
‘நீங்கள் ஏத்த என்று ஒருப்படுமித்தனையே வேண்டுவது; பின்னை உங்களுக்கு உபதேசிப்பார் வேண்டா,’ என்றபடி.
‘யாதாயினும் நேர்ந்து அணுக வேண்டும்’ என்றது, ‘யாதாகிலும் ஒன்றைச் செய்தாயினும் கிட்ட வேண்டும்’ என்றபடி. ‘யாதானும் ஒன்று அறியில்’
என்னும் பாசுரத்தை அடியாகக் கொண்டு எழுந்தது இது. (பெரிய திருவந். 33.)
பாசுரம் முழுதினையும் திருவுள்ளம் பற்றி அருளிச்செய்கிறார்,
‘நித்திய சூரிகள்’என்று தொடங்கி. ‘பரவி வானவர் ஏத்த நின்ற’ என்றதனைநோக்கி, ‘நித்தியசூரிகள்’ என்று தொடங்கும் முதல் வாக்கியம் எழுகின்றது;
‘பரமனை’ என்றதனை நோக்கி, ‘அறப்பெரியவனை’ என்ற இரண்டாம் வாக்கியத்தை அருளிச்செய்கிறார்;
‘பரஞ்சோதியை’ என்றதனை நோக்கி, ‘நீங்கள் ஏத்துகிற’ என்று தொடங்கும் வாக்கியத்தை அருளிச்செய்கிறார்.
இங்ஙனமே ஏனையவற்றையும் பகுத்துக்காண்க.

‘நித்தியசூரிகள் ஏத்தும் விஷயத்தை அன்றோ நான் உங்களை ஏத்தச் சொல்லுகிறது?
அறப் பெரியவனை அன்றோ நான் உங்களை ஏத்தச் சொல்லுகிறது? நீங்கள் ஏத்துகிற இது தன் பேறு என்னுமிடம்
வடிவிலே தோன்ற இருக்கிறவனை அன்றோ நான் உங்களை ஏத்தச் சொல்லுகிறது?
உங்களுடைய விலக்காமையே பற்றாசாக வந்து கலக்குமவனை அன்றோ நான் உங்களை ஏத்தச் சொல்லுகிறது?
யாதாயினும் நேர்ந்து அணுக வேண்டும் வடிவழகையுடையவனை அன்றோ ஏத்தச் சொல்லுகிறது?
சேஷசயனத்தையுடையவனை அன்றோ ஏத்தச் சொல்லுகிறது?
உங்களுடைய சேர்க்கையாலே செருக்கியிருக்கிறவனை அன்றோ ஏத்தச் சொல்லுகிறது?
ஒரு கால நியதி உண்டாய் இருக்கின்றீர்களோ? ஏத்துகைக்குச் சாதனம் இல்லாதவர்களாய்த்தான் இருக்கின்றீர்களோ?
அதில் ஒரு அருமை உண்டாய்த்தான் இருக்கின்றீர்களோ?
ஆனபின்னர், விஷயங்களிலே ஓடித்திரிந்த மனத்தினை மீட்டு இவ்விஷயத்திலே வைக்கப் பாருங்கோள்,’ என்கிறார்.

——————————————————————————————————–

வைம்மின் நும் மனத்து என்று யான் உரைக்
கின்ற மாயவன் சீர்மையை
எம்மனோர்கள் உரைப்பது என்? அது
நிற்க; நாடொறும் வானவர்
தம்மை ஆளுமவனும் நான்முக
னும் சடைமுடி அண்ணலும்
செம்மையால் அவன் பாத பங்கயம்
சிந்தித்து ஏத்தித் திரிவரே.–3-6-4-

ஈஸ்வர அபிமானிகளுக்கும் ஆஸ்ரயிக்கும் படியாக சீலன் -கள்வா–இறைவா -என்று புள்ளூர்த்தி கழல் ஏத்தும் படி –
இவனை ஆஸ்ரயிக்குங்கோள் –
ஈச்வரத்வ அபிமானம் தாழ்ச்சி
வைம்மின் நும் மனத்து என்று யான் உரைக்கின்ற மாயவன் சீர்மையை-நம்மை பார்த்து ஆழ்வார் சொல்வது -ஆச்சர்ய சேஷ்டிதங்கள் சீரிய சீலவத்யை
எம்மனோர்கள் உரைப்பது என்? அது நிற்க; -பிரவணர் -என்னை போலே -சொல்வது பெரியதா -ஆழ்வார் கோஷ்டிகள் மட்டும் இல்லை
எதிரி கோஷ்டி தலைவர்களும் -கூட -பாடும்படியான சீலவத்யை
நாடொறும் வானவர் தம்மை ஆளுமவனும் நான்முகனும் சடைமுடி அண்ணலும்-தனித் தனி பதஸ்தரான தேவர்களை ஆளும் இந்த்ரனும்
-சர்வதோ முகமாக சிருஷ்டி உபதேசாதி களைப் பண்ணும் -பிரமனும்
ஜடா முடி தபஸ் மகாத்மயம் -தபஸ் பண்ணியும் போகம் ஆசை கொண்ட அண்ணல்
செம்மையால் அவன் பாத பங்கயம்-துரபிமானம் தொலைந்த செவ்வி -சேஷன்-சேஷி -பாவத்தால் வந்த ஆர்ஜவம் –
அபிமான பங்கமாய் வந்து பள்ளிக் கட்டின் கீழே -சேஷ பாவம் அறிந்து
நிரதிசய போக்யமான திருவடிகளை
சிந்தித்து ஏத்தித் திரிவரே.-சிந்தித்து இதுவே யாத்ரையாக திரிவர் -ஆகையாலே அவனை ஆஸ்ரயிங்கோள்

‘உங்களுடைய மனத்தின்கண் வைம்மின் என்று யான் உரைக்கின்ற மாயவனுடைய சிறப்பினை எம்மைப்போன்றவர்கள்
சொல்லுவது என்? அது கிடக்க, தேவர்களை ஆளுகின்ற இந்திரனும் பிரமனும் சிவனும் அன்போடு அம்மாயவனுடைய
திருவடித்தாமரைகளைத் தியானித்து ஏத்தித் திரிவார்கள்,’ என்கிறார்.
‘வைம்மின்’ என்பதிலுள்ள ஐகாரம், ஒரு மாத்திரையாய் ஒலித்துக் குற்றெழுத்தாய் நின்றது.
எம்மனோர் – உளப்பாட்டுத் தன்மைப்பன்மை. ‘செம்மை’ என்பது, ஈண்டு அன்பினைக் குறித்தது.
‘சிந்தித்து ஏத்தித் திரிவர்’ என்றதனால், மனம் வாக்குக் காயங்களைக் கூறியபடி.

செருக்கு மிக்கவர்களான பிரமன் உருத்திரன் முதலாயினார்கட்கும் தடையின்றிக்கே புக்குப் பற்றும்படியாக இருக்கிற
சீலகுணத்தைப் பேசுகிறார்.

நும் மனத்தே வைம்மின் என்று யான் உரைக்கின்ற மாயவன் சீர்மையை
உம்முடைய மனத்திலே வையுங்கோள் என்று நான் சொல்லுகின்ற ஆச்சரியமான அழகு குணம் செயல்களை யுடையனானவனுடைய சீலத்தன்மையை.
அன்றியே,
‘மாயவன் சீர்மை’ என்றதனால், ‘அதிகாரி புருஷர்களான பிரமன் சிவன் முதலாயினார்கள் எல்லாம் வந்து பற்றும்படியாக
அன்றோ அவனுடைய பெருமை’ என்று, பற்றுவதற்கு உறுப்பாக அவனுடைய பரத்துவத்தைச் சொல்லிற்றாகவுமாம்.
எம் அனோர்கள் உரைப்பது என் –
எம் போல்வார் சொல்ல வேண்டுவது என்? ‘நாங்கள் சொன்னவாறே பத்தி பாரவஸ்யத்தாலே சொன்னோம்,’ என்பார்கள். அது நிற்க – அது கிடக்க.
பத்தர் பேசின பித்தர் பேசின பேதையர் பேசின -கம்பர்

நாள்தொறும் வானவர் தம்மை ஆளுமவனும் நான்முகனும் சடைமுடி யண்ணலும் செம்மையால் அவன் பாதபங்கயம் சிந்தித்து ஏத்தித் திரிவர் –
அதிகாரி புருஷர்களான பிரமன் சிவன் முதலாயினார்கள் எல்லாம் வேறு ஒரு பயனையும் கருதாதவரைப் போல வந்து பற்றும்படியன்றோ
அவனுடைய சீலத்தன்மை இருப்பது?
அன்றியே,
அதிகாரி புருஷர்களான பிரமன் சிவன் முதலாயினார்கள் எல்லாம் வந்து பற்றும்படி அன்றோ அவன் பெருமை?’ என்று பற்றுவதற்கு
உறுப்பாக அவனுடைய பரத்துவத்தைச் சொல்லிற்றாகிறது.

நாள்தொறும் வானவர் தம்மை ஆளுமவனும்
தேவர்களைச் சனியும் புதனும் மெய்க்காட்டுக்கொண்டு அவர்கள் மிகுதி குறைகள் ஆராய்ந்து செல்லுகின்ற இந்திரனும்.
நான்முகனும் –
பதினான்கு உலகங்களையும் படைத்தவனான பிரமனும்.
சடை முடி அண்ணலும் –
தவவேடம் கிடக்கவும் ஈசுவரனாகச் செருக்குக் கொண்டவனான உருத்திரனும்.
அவன் பாத பங்கயம் நாள்தொறும் சிந்தித்து ஏத்தித் திரிவர் –
வேறொரு பயனையும் கருதாதவர்களைப் போலே அவன் திருவடிகளை நினைந்து, அந்நினைவு வழிந்து புறப்பட்ட சொல்
என்று தெரியும்படி ஏத்தி, அத்தாலே தரித்துக் கால்நடை தந்தாராய்ச் சஞ்சரியா நிற்பர்கள்,
‘பாடித்திரிவனே’ என்னுமாறு போலே. வேறு பலன்களைக் கருதும் தன்மையும் நெஞ்சிலே கிடக்கச்செய்தே
வேறு பலனைக் கருதாதவர்களைப் போல வந்து பற்றாநிற்பர்கள் ஆதலின்,
‘செம்மையால் திரிவர்’ என்கிறது;
‘வேறொரு பயனை விரும்புகிற விருப்பமும் உள்ளே கிடக்கச்செய்தே அது இன்றித் தன்னையே பற்றினாரைப் போலே இருக்க,
புகுவது புறப்படுவதாய்த் திரியும்படி அன்றோ அவன்படி இருக்கிறது?’ என்றபடி.
செம்மை – செவ்வை; அதாவது, வேறொரு பயனையும் கருதாமை.
தூயோமாய் வந்தோம் –என்று இல்லாமல் -இவர்கள் மித்ர பாவேன -பாவ தோஷமும் கிடக்கச் செய்தே -அநந்ய பிரயோஜனர் போலே புகுந்து புறப்பட்டு –

—————————————————————————-

திரியும் காற்றோடு அகல் விசும்பு திணிந்த மண் கிடந்த கடல்
எரியும் தீயோடு இரு சுடர் தெய்வம் மற்றும் மற்றும் முற்றுமாய்
கரிய மேனியன் செய்ய தாமரைக் கண்ணன் கண்ணன் விண்ணோர் இறை
சுரியும் பல் கருங்குறிஞ்சி எங்கள் சுடர் முடி யண்ணல் தோற்றமே –3-6-5-

அகில விபூதி உடன் – அபிநா பூதம் -சேர்ந்தே இருக்கும்
கரிய மேனியன் செய்ய தாமரைக் கண்ணன் கண்ணன் விண்ணோர் இறை -பரபாகம் -சியாமள -நித்ய சூரிகளுக்கு நித்ய அனுபாவ்யன்
சுரியும் பல் கருங்குறிஞ்சி எங்கள் சுடர் முடி யண்ணல் தோற்றமே-சுருண்டு -அலகு அலகாய்-ஔஜ்வல்யம் -கிரீடம் திருஷ்டி வராமல் இருக்க -ஸ்வாமி
கண்ணன் உடைய ஆவிர்பாவம் -அசாதாராண விக்ரகம் சொல்லி மேலே சாதாராண -பொதுவான
திரியும் காற்றோடு அகல் விசும்பு திணிந்த மண் கிடந்த கடல்
சதா கதியான காற்று -விச்தீர்ணமான ஆகாசம் -செறிந்த கடினமான -கரை கடவாமல் -கிடந்த கடல் –
எரியும் தீயோடு இரு சுடர் தெய்வம் மற்றும் மற்றும் முற்றுமாய்
ஊர்த்வ அக்னி சந்திர சூர்யர் முகமான தேவதா வர்க்கம் -மனுஷ்ய -திரைக் -ஸ்தாவர -வர்க்கங்கள் –
சாமா நாதி கரண்யம் -முற்றுமாய்-
காரண கார்யம் -சரீராத்மா -தாரக தார்யா பாவம் –

வாத்சல்யத்தால் எப்பொழுதும் விபூதி உடன் கூடி -ஜகதாகாரம் -பெருமைகள் குறையாமல் -அஜகத் ஸுவபாவம் –
மயில் தோகை விரித்தால் போலே சவிபூதிகனாய் –ஆண் மயில் -புருஷோத்தமன் –
தோகை கூடியே தானே இருக்கும் விரித்தாலும் சுருங்கி இருந்தாலும் -தோற்றரவு இப்படியே இருக்கும்
அன்றிக்கே
பூதானாம் ஈச்வரோபிசன் -ஐஸ்வர்யம் உடனே அவதரிக்கும் -இங்கு தோற்றம் -அவதாரம்

திரியும் காற்றோடு அகல் விசும்பு -ஆகாசம் –
அவகாச பிரதானம் கொடுக்கும் ஆகாசம்
திணிந்த மண் கிடந்த கடல்
கடின தன்மை -பகவத் ஆஜ்ஞ்ஞையால் கடக்காத கடல்
எரியும் தீயோடு இரு சுடர் –
பிரகாசமான சூர்யா சந்திர
தெய்வம் -ஆஸ்ரயித்து -மழை-வருணன் – -அபிமத சித்தி
மற்றும் மற்றும் முற்றுமாய் -ஆஸ்ரயிக்கும் -மனுஷ்யர் -அவர்களை நம்பிய திர்யக்குகள் –இத்தை நாம் தானே வருத்துகிறோம்
சொல்லலாம் படி அவன் தோற்றம் -சரீரியாய் -ஜகதாகாரன்
மேலே அசாதாராண விக்ரகம்
கரிய மேனியன்
தாபம் த்ரயங்களும் தீர ஸ்ரமஹரமான -திருமேனி
செய்ய தாமரைக் கண்ணன்
அக வாயில் வாத்சல்ய பிரகாசம்
கண்ணன்
ஆஸ்ரிதர் கையாளாக -தூதன் -குதிரைகளை குளிப்பாட்டி –
த்ரௌபதி பரிபவம் கண்டு பொறுக்க மாட்டாமல்
விண்ணோர் இறை
நித்ய சூ ரிகளுக்கும் -இந்நிலையிலே வந்து -ஏத்த வேண்டும் படி -மனுஷ்யத்வே பரத்வம் –
கண்ணனாக இருக்கும் பொழுதே விண்ணோர் இறை
சுரியும் பல் கருங்குறிஞ்சி எங்கள் சுடர் முடி யண்ணல் தோற்றமே-சுருண்டு அலகு அலகா எண்ணலாம் படி
செறிந்தும் – இருக்கும் -நீண்டும் -குழன்றும் -நெய்த்தும் -கறுத்தும் –
அஞ்சனம் கண்டார் கண்களுக்கு இடலாம் படி
பல் -தனித் தனியாக எண்ணலாம் படி
குளிர்ந்த –
மறைக்கும் அளவு ஔஜ்வல்ய கிரீடம்
ஆதி ராஜ்ய சூ சசகம் -அநந்ய பிரயோஜனர் அனுபவிக்க
தோற்றம்
பிரகாசம் /அவதாரம் -என்றுமாம்
ஐஸ்வர்ய விசிஷ்டமாக திருவவதரிக்கிறான்
கரிய —-முற்றுமாய் –தோற்றும் -சாஸ்திரம் சொல்லும் -உபய விபூதி விசிஷ்டன் சாஸ்த்ரங்களில் பிரகாசிக்கும்
கரிய –முற்றுமாய் இருக்கும் -அண்ணல் தோற்றம் -அவதாரம் –

————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: