பகவத் விஷயம் காலஷேபம் -74- திருவாய்மொழி – -3-5-1….3-5-5–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

‘புகழும் நல் ஒருவன்’ என்ற திருவாய்மொழியிலே, பகவானுடைய சொரூப ரூப குண விபூதிகளை அனுபவித்து,
அதனால் வந்த ஹர்ஷப் பிரஹர்ஷத்தாலே களித்து அவ்வனுபவமில்லாதாரை நிந்தித்து, அவ்வனுபவமுடையாரைக் கொண்டாடிச் சொல்லுகிறது
‘மொய்ம்மாம்பூம்பொழில்’ என்ற இத்திருவாய் மொழி.
இவர் ‘முந்நீர் ஞாலம்’ என்ற திருவாய்மொழியில், சரீர சம்பந்தத்தை அநுசந்தித்தும்,
மற்றைய விஷயங்களில் ஈடுபாட்டினை அநுசந்தித்தும் சோகித்த சோகம் சிலர்க்கு நிலமாகில் அன்றோ,
இத்திருவாய்மொழியில் பகவானை அனுபவித்த அனுபவத்தாலே மகிழ்ச்சி கொண்டவரான இவருடைய மகிழ்ச்சி சிலர்க்கு நிலமாவது?
‘ஆயின், இவரும் பகவானை அனுபவம் பண்ணுகிறார்; நாமும் அவ்விஷயத்திலே கை வைக்கிறோம்;
இவருக்கு இங்ஙன் இருப்பான் என், நமக்கு இங்ஙன் இராதொழிவான் என்?’ என்னில்,
நாமாகிறோம் கண்டார்க்கு ஒளிக்க வேண்டுமவையாய், சாஸ்திரங்களெல்லாம் ஒருமுகஞ்செய்து நீக்குகின்றவையாய்,
முதல் தன்னிலே கிடையாதவையாய், கிடைத்தாலும் நிலை நில்லாதவையாய், பின்னர் நரகத்திலே மூட்டிக் கேட்டினை
விளைக்கக்கூடியனவான மற்றைய விஷயங்களினுடைய லாபாலாபங்களில் பிறக்கும் சோகமும் மகிழ்ச்சியுமே ஆயிற்று அறிவது.
நெருப்பும் நெய்யும் பக்கம் -ஆண் பெண் -தஸ்மாத் நாரீச சம்சர்க்கம்
விஷத்தை விட விஷயாந்தரம் தாழ்ந்ததே -நினைத்தாலே விநாசம் –
ஞானவான்களையும் அழிக்கும்-மனம் சஞ்சலம் -பிரம்மா த்யானமே பண்ண வேண்டும் –
ராக -பய -குரோத மூன்றையும் வெல்ல வேண்டும் -பிடித்தது -நடக்காமல் போகுமே -பயம் -நடந்தால் கோபம் வருமே –

‘நன்று; ஆசையற்றவராய், சத்துவ குணத்தையுடைய பெரியோர்கட்குத் தலைவராய் இருக்கிற இவர்க்குச் சாஸ்திரங்கள்
‘கூடாதவை’ என்று விலக்கிய சோகமும் மகிழ்ச்சியும் கூடினபடி எங்ஙனே?’ எனின்,
‘இவருடைய சோகமும் மகிழ்ச்சியும் சாஸ்திரங்களிலே விலக்கிய சோகமும் மகிழ்ச்சியும் அல்ல;
சமஸ்த கல்யாணகுணாத்மகனான சர்வேசுவரனை அனுபவித்து அவ்வனுபவத்தால் உண்டான பிரீதியாயிற்று இவர்க்கு மகிழ்ச்சியாவது.
‘இப்படி வகுத்த சர்வேசுவரனை அநாதிகாலம் இழந்து இதர விஷயத்தில் ஈடுபாடு உடையோமாய்க் கேட்டினை அடைவோமே!’
என்னுமதாயிற்று இவர்க்குச் சோகமாவது.
மேலும் ‘காமம் ஆகாது’ என்று விலக்கியிருக்கவும், ‘இடைவிடாது தியானம் செய்யத் தக்கவன்’ என்று கொண்டு
பகவத் காமத்தைச் சாஸ்திரங்கள் விதியா நின்றனவே அன்றோ?
சேம நல் வீடும் –சீரிய நல் காமமும் -கண்ணனுக்கே ஆமது காமம் -அத்தை கிட்ட இது வேண்டுமே –
இனி, முத்தரும் பகவானுடைய அனுபவத்திலே ‘நான் பரமாத்துமாவுக்கு இனியவனாய் இருக்கிறேன்; நான் பரமாத்துமாவாகிற
இனிய பொருளை அனுபவிக்கிறவன்,’ என்று-அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம்-
களியாநிற்பர்கள் அன்றோ? ‘இறந்தகாலம் எதிர்காலம் இவற்றில் நடந்த நடக்கும் காரியங்களைச் சொல்லுகிறவராயும்,
ஒன்றிலும் ஐயம் இல்லாதவராயும், எல்லாத் தர்மங்களையும் அறிந்தவராயுமுள்ள நாரதர்’ என்று சொல்லப்படுகிற நாரதர்
முதலிய முனிவர்களும் பகவானுடைய சந்நிதியில் வந்தவாறே ஆடுவது பாடுவது ஆகாநிற்பர்கள் அன்றோ?
விரக்தரில் முதல்வனான திருவடியும் பிராட்டியைக் கண்டுவந்த மகிழ்ச்சியினாலே முதலிகளைப் பார்த்து,
‘நீங்கள் மதுவனத்தை அழித்து உண்ணுங்கோள்! நான் உங்களுடைய விரோதிகளைத் தடுக்கிறேன்!’
(விரோதிகளாவார், காத்திருந்த ததிமுகன் முதலியோர்) என்றானன்றோ? மஹாராஜர்க்கு, ‘உம்முடைய காவற்காடு அழிந்தது’ என்று அறிவிக்க,
‘நம்மோடு கூறிப்போந்த காலமுந்தப்பி, நாந்தாம் ‘தீக்ஷ்ண தண்டர்’ என்று அறிந்திருந்தும், இவர்கள் காவற்காட்டை அழிக்கும் போது,
‘செய்யவேண்டிய காரியத்தைச் செய்யாதவர்கட்கு இப்படிப்பட்ட ஆரம்பம் உண்டாகமாட்டாது. ஆதலால், எல்லாப்படியாலும்
பிராட்டியைத் திருவடி தொழுதார்களாக வேண்டும்,’ என்று அப்போது உண்டான மகிழ்ச்சி, இருந்த இடத்தில் இருக்க வொட்டாமல்,
வாலானது ருஸ்யமூக பர்வதத்தின் கொடுமுடியிலே சென்று அறைந்ததாயிற்று. நடுவே ‘காவற்காடு’ என்று ஒன்று உண்டாயிற்று,
ராஜபுத்திரர்களுடைய ஜீவன அத்ருஷ்டமாயிற்று; அன்றாகில், முதலிகளுடைய மகிழ்ச்சி இராஜபுத்திரர்கள் முதுகோடே போமாயிற்று.

வெற்றிலைச்சாறு சிறிது மிடற்றுக்குக் கீழே இழியப்பெற்ற ஒருவன், தன்னைத்தான் அறிகின்றிலன்; அங்ஙனம் இருக்க
உள் கலந்தார்க்கு ஓர் அமுதமாய், அமுதிலும் ஆற்ற இனியனாய், எனக்கே தன்னைத் தந்த கற்பகம் என் அமுதம்,’ என்று
தாமே முற்றூட்டாக இவ்வமுதத்தை உண்ட இவர்க்கு மகிழ்ச்சி உண்டாகச் சொல்ல வேண்டாவே அன்றோ? நிற்க.
இப்படிப்பட்ட பகவானுடைய அனுபவத்தால் வந்த பிரீதியின் மிகுதியினாலே முதலிலே-1- இதில் அறிவில்லாதாரையும்,
-2- அறிவுண்டாய்ப் புறம்பே கருத்தூன்றினவர்களாயிருப்பாரையும்,-3- சந்தி செய்தல் முதலிய ஒழுக்கங்களையே முக்கியமாகக் கொண்டவர்களாய்,
‘அநுஷ்டான காலங்களில் திருநாள் சேவிக்கலாகாது,’ என்று இருப்பாரையும், -4-அறிவு உண்டாகியே புறம்பே பரபரக்கற்று
‘அதற்கும் இதற்கும் வாசி என்?’ என்று சமானபுத்தி பண்ணி இருப்பாரையும், -5-தங்களை ஆஸ்திகராகப் புத்தி பண்ணி
அவ்வாஸ்திக்யத்துக்குப் ‘புறம்பே விநியோகம்’ என்று இருப்பாரையும்,6- இராஜச தாமசங்கட்கு ஒத்தனவான
அற்பப் பலன்களைக்கொண்டு போவாரையும், -7-அந்த அந்தப் பலன்களுக்காகத் தாமத தேவதைகளை அடைகின்றவர்களையும் எடுத்து,
அவர்களுக்குப் புறம்பே எல்லா நன்மைகளும் உளவேயானாலும், பகவானுடைய குணங்களை அநுசந்தித்தால் அவிக்ருதராகில்,
‘அவர்கள் அவஸ்துக்கள்’ என்று அவர்களை நிந்தித்து,
‘உயர்குடிப்பிறப்பு, உயர்ந்த தொழில், ஞானம் இவைகள் இல்லாதிருப்பினும், பகவானை அனுபவம் பண்ணி விக்ருதராமது உண்டாகில்,
அவர்களுக்கு நான் அடிமை’ என்று அவர்களைக் கொண்டாடிப் பிரீதராகிறார்.
ரத யாத்ரை – -தாரு ப்ரஹ்மம் -தள்ளு முள்ளு நடுவில் -பூரி -ஏழு நாளும் தொட்டு சேவிக்கலாம் -752 அடுப்புக்கள் -மடப்பள்ளி -2000 படி தளிகை –
ஸ்ரீ பத்ரி அலக நந்தாவில் குளித்து–ஸ்ரீ த்வாரகையில் பட்டு ஆடை உடுத்தி -ஸ்ரீ பூரியில் உண்டு – ஸ்ரீ ரெங்கம் வந்து
கண் வளர்ந்து அருளுவதே நித்ய கைங்கர்யம் என்பர் –
மத்யானம் -சந்த்யா வந்தனம் -கைங்கர்யம் -செய்யும் பொழுது கர்ம லோபம் -மூன்று கோடி ரிஷிகள் இவன் விட்ட கைங்கர்யம் செய்வார்களாம் –
விஷ்ணு பக்தி இல்லாதவனுக்கு ஜபம் தபஸ் போல்வன -பிணத்துக்கு அலங்காரம் பண்ணினது போலே -பிரமாணம்

————————————————————————-

மொய்ம்மாம் பூம்பொழிற் பொய்கை
முதலைச் சிறைப்பட்டு நின்ற
கைம்மாவுக்கு அருள் செய்த
கார்முகில் போல்வண்ணன் கண்ணன்
எம்மானைச் சொல்லிப் பாடி
எழுந்தும் பறந்தும் துள்ளாதார்
தம்மால் கருமம் என்? சொல்லீர்,
தண் கடல் வட்டத்து உள்ளீரே!–3-5-1-

வாரணம் -காரணம் -நாரணம் -மூன்றாலும் சொல்லலாம் -துஸ் ஸ்வப்ன நாசனம் –
மொய்ம்மாம் பூம்பொழிற் பொய்கை முதலைச் சிறைப்பட்டு நின்ற-காப்பாத்திக் கொள்ள முடியாமல் நின்ற
கைம்மாவுக்கு அருள் செய்த-புஷ்பம் செவ்வி அழியாமல் திருவடியில் வாங்கிக் கொண்ட
1000 தேவ வருஷம் -வாடாமல் உள்ள -இது பெருமாள் திருவடிக்கு என்ற நினைவால் -தன்னிலம் என்று தாமரை நினைக்க –
கார்முகில் போல்வண்ணன் கண்ணன்-ஆர்த்தி தீர -கண்டு களிக்கும் படி -வெளுத்த திரு முகம் இப்பொழுது தன்னிறம் பெற்றான்
-ஆனந்தம் கொடுக்கும் கண்ணன் இறங்கி வந்தவன் -அத்யந்த சுலபன்
எம்மானைச் சொல்லிப் பாடி-இரண்டுக்கும் அடி எனக்கு உறவு உடையவன் -அழகன் சுலபன் பிராப்தன்
எழுந்தும் பறந்தும் துள்ளாதார்-இருந்த இடத்தில் இருக்காமல் -ஆகாசத்தில் குதித்தும் -சசம்ப்ருத நர்த்தனம் -இன்றும் வடக்கில் பலர் ஆடுவதை பார்க்கலாமே
தம்மால் கருமம் என்? சொல்லீர்,-என்ன கார்யம்
தண் கடல் வட்டத்து உள்ளீரே!-கடலால் சூழப் பட்ட -கடல் -வட்டம் -உள்ளார்- படைத்ததே நாமங்கள் பாடி ஆடத் தானே
கைம்மா -துதிக்கை ஒழிய அழுந்தியத்தை நினைத்து –

‘வண்டுகள் மொய்க்கின்ற பூக்களையுடைய சோலையாற்சூழப்பட்ட பொய்கையிலுள்ள முதலையால் பிடிக்கப்பட்டு நின்ற கைம்மாவுக்குத்
திருவருள் புரிந்த, கார்காலத்து எழுந்த மேகம் போன்ற நிறத்தையுடையவன் கண்ணன் எம்மான் ஆன எம்பெருமானைச் சொல்லிப் பாடி
எழுந்தும் பறந்தும் துள்ளாதவரால் காரியம் யாது? குளிர்ந்த கடலாற்சூழப்பட்ட பூமியில் உள்ளவர்களே! நீங்களே சொல்லுங்கள்,’ என்கிறார்.
‘தண்கடல் வட்டத்துள்ளீர், சொல்லீர்’ என மாறுக.
இத்திருவாய்மொழி அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்.

ஆஸ்ரிதன்-‘அடியவன் இடர்ப்பட்ட மடுவின் கரையிலே, கலங்காப் பெருநகரினின்றும் அரை குலையத் தலை குலைய வந்து விழுந்த
நீர்மையை அநுசந்தித்தால் மனமும் உடலும் வேறுபடாதவர்கள் மக்கள் ஆகார்,’ என்கிறார்.
கலங்கிய மடுவின் கரைக்கு கலங்கா பெரு நகரின் இருந்து வந்தானே –

மொய்ம் மாம் பூம் பொழில் –
மொய்க்கப்பட்ட வண்டுகள் பொருந்திய பூக்களையுடைய பொழில்.மொய் -செறிந்து -பூ -பூவாய் -மா-கறுமையும் பெருமையும் -செறிவும் மநோ ஹரம் –
அன்றி, ‘செறிந்துள்ள மாமரங்களையுடைய அழகிய பொழில்’ என்னுதல்.
அன்றியே, ‘விரும்பத்தக்கதாய்ப் பரந்துள்ள மலர்ந்த பொழில்’ என்னுதல்.
பொழில் – சோலை. மொய் மாம் பூம் பொழில் பொய்கை –
பூவார் கழல்களிலே பணி மாறப் பூத்தேடிக் கிடையாமையாலே இடர்ப்பட்டு வருகின்றவன், தூரத்திலே குளிர்ந்த சோலையும்
பூத்த பொய்கையுமாய்த் தோற்றக்கண்டு ‘உள்ளே கொடிய முதலை கிடந்தது’ என்று அறியாமல் மேல் விழுந்து வந்து பறித்தான் ஆயிற்று
‘உத்தேஸ்யனான ஈசுவரனை விட்டு, பொழிலையும் பொய்கையையும் இப்போது வர்ணிப்பது என்?’ எனின்,
அப்போது அவனுக்கு-ஸ்ரீ கஜேந்த்ரனுக்கு – உத்தேஸ்யம் ஆயினமை போன்று, அச்சோலையோடு பொய்கையோடு வேற்றுமை அற
இவர்க்கு உத்தேஸ்யமாயிருத்தலின் வர்ணிக்கிறார்.
சம்சாரத்தில் -நாம் சிக்கிக் கொண்டு இருப்பது போலே -ஜனன மரண சக்ர -அகதி சம்சார சாகரம் -பவம் -காடு –
போது அறிந்து –வானரங்கள் பூஞ்சுனை புக்கு ஆங்கு அலர்ந்த போது அரிந்து-கடிக்கும் முதலைகள் -இருக்காதே -திவ்ய தேசங்கள் –
அன்றியே,
‘வல்லரக்கர் புக்கு அழுந்த –தயரதன் பெற்ற மரகத மணித்தடத்துக்கு இப்பொய்கையும் போலியாய் இருத்தலின், வர்ணிக்கிறார்,’ என்னுதல்.
அன்றியே
‘தாமரைக்காடு மலர்க்கண்ணொடு கனிவாய் உடையதுமாய்’ என்கிறபடியே, உபமான முகத்தாலும் விரும்பத்தக்கதாய்
இருக்கிறதாதலின், வர்ணிக்கிறார் என்னுதல்.பரிபுல்லது புண்டரீக -பட்டர் –

பொய்கை முதலைச் சிறைப்பட்டு நின்ற –
தன் நிலம் அல்லாமையாலே -விசஜாதீயம் – வேறுபட்ட சாதியது ஒன்றன் கையிலே அகப்பட்டது;
-சிறைக்கு -பத த்வயம் -விசேஷித்தது-பொய்கை -முதலை -குளத்து முதலை -என்றவாறு
வெளி நிலமாகில் யானையே வெல்லுமன்றோ? யானைக்கு யானை யன்று; யானைக்குச்சிங்கம் அன்று;
அற்பமாய் இருப்பதொரு நீர்ப்புழுவின் கையிலே அகப்பட்டது என்பார், ‘முதலைச் சிறைப்பட்டு’ என்கிறார்.
‘தெய்வ ஆண்டில் அநேகம் ஆயிரம் ஆண்டு முதலை நீருக்கு இழுக்க, யானை கரைக்கு இழுக்க’ என்கிறபடியே,
ஸூ ரஷணே ச்வான்யவம் ஒழிந்த நிலை வர பல ஆயிரம் தேவ வருஷம் ஆனதே –
இரண்டினுடையவும் செயல்களாய்ப் போந்தது, பின்பு அது தவிர்ந்து, முதலையின் செயலே யாய் யானையின் செயல் ஒழிந்ததாதலின், ‘நின்ற’ என்கிறார்.
யானைக்குத் தன் நிலம் அல்லாமையாலே வலிமை குறைய நேர்ந்தது; முதலைக்குத் தன் நிலம் ஆகையாலும்,
‘விரும்பியது பெற்றோம்’ என்ற எண்ணத்தாலும் வலிமை இரட்டித்திருக்குமன்றோ?-சாப விமோசனம் -பெற பெற்றோமே -அபிமத சித்தி –
‘முழுவலி முதலை’ என்றாரே அன்றோ திருமங்கை மன்னனும்? ‘தன் விருப்பம் முற்றுப் பெறுதற்கு ஒரு கறையடி-யானைக்கால் –
காண வல்லோமே!’ என்று மனக் கிலேசத்தோடே கிடக்கையாலே வலிமை குறைந்திருந்தது;
இப்போது அது பெறுகையாலே முழுவலியாயிருந்தது என்றபடி. தன் விருப்பம் முற்றுப்பெறுதற்கு இதுதான்-பக்தன் திருவடி மகாத்மயம் –
உபாயம் —கால் வாசி அறிந்தே அன்றோ பற்றிற்று? முன்பு ஒன்றைப் பிடித்தது இல்லையே? நெடுங்காலமெல்லாம் நம் சாபம் நீங்குதற்கு
ஒரு கறையடி காண வல்லோமே!’ என்று கிடக்கிறது, அது பெற்றால் விடாதே அன்றோ?
கறையடி – யானை. கைம்மாவுக்கு – யாதேனும் ஒன்று வந்தாலும் நம்மைக் கைம்மிஞ்சி வாராது,’
என்று கையைக் கண்டிருந்த -பலம் இருக்கிறது என்ற எண்ணம் -யானைக்கு வந்து நோவு ஆதலின், ‘கைம்மா’ என்றது.
அன்றியே,
‘துதிக்கையும் முழுகிப் போய்விட்ட துன்பம் ஆதலின், ‘கைம்மா’ என்கிறது ‘என்னுதல்.
‘இடர்ப்படும்போதும் தன் பெருமைக்குத் தக்க படியாகவே பட்டது’ என்றபடி. ‘ஆனையின் துயரம்’ என்னக்கடவதன்றோ?
அருள் செய்த –
துதிக்கை மூழ்கியும் பூவுக்கு ஒரு வாட்டம் வாராதபடி எடுத்துப் பிடித்துக்கொண்டு நின்றதாயிற்று, அதிற் செவ்வி மாறாதபடி
திருவடிகளிலே இடுவித்துக் கொண்டு நின்ற நிலை. என்றது, ‘யானைக்கு நெடுங்கை நீட்டாக ஒண்ணாது என்று
‘தூவாய புள் ஊர்ந்து வந்து’ பூ இடுவித்துக்கொண்டான் என்றபடி.
அன்றி,
‘முதலையின் வாயிலே அகப்பட்ட யானையின் காலைத் திருக்கையாலே ஸ்பரிசித்துக்கொண்டு குளிரக் கடாக்ஷித்து நின்ற நிலை’ என்னுதல்;
சென்று -நின்று -ஆழி தொட்டானை -யானையின் காலில் விலங்கை அன்றோ வெட்டிவிட்டது? ‘கொடிய வாய் விலங்கே’ அன்றோ?
‘விலங்கு’ என்றது, சிலேடை: கால் விலங்கு, முதலை, ‘முதலையை ‘விலங்கு’ என்றல் கூடுமோ?’ எனின், அதற்குப் பிரமாணம் காட்டுகிறார்,
கொடிய வாய்விலங்கு’ என்று. இது, பெரிய திருமொழி, 6-8-3.
ஆக முதலையின் வாயிலே அகப்பட்ட யானையின் காலைத் திருக்கையாலே தொட்டு,
திருமால் சக்கரத்தால் முதலையைப் பிளந்தார்’ என்கிறபடியே, அதனுடைய கிராஹத்தைப் போக்கி நின்ற நிலையைத் தெரிவித்தபடி.
க்ராஹம் சக்ரேண மாதவ -தேவி போதுமா -என்று ரஷித்ததும் பிராட்டியை நோக்கினானாம் –
‘அருள்செய்த’ என்பதற்கு இரண்டு வகையில் பொருள் அருளிச் செய்கின்றார்:
முதற்பொருள், ‘பூவின் செவ்வி மாறாதபடி திருவடிகளிலே இடுவித்துக்கொண்டு யானையின் துயரைப் போக்கிய’ என்பது.
இங்குச் ‘சிறை’ என்பதற்குப் ‘பறித்த மலரைத் திருவடிகளிலே சார்த்தப்பெறாமையால் உண்டான துக்கம்’ என்பது பொருள்.
இரண்டாவது பொருள்,
‘விலங்கைவெட்டி அருள் செய்தான்’ என்பது. இங்குச் ‘சிறை’ என்பதற்கு ‘விலங்கு’ என்பது பொருள். இப்பொருளில்
‘அருள்செய்த’ என்றதனொடு பின் வருகின்ற ‘கண்ணன்’ என்ற சொல்லையும் கூட்டிப் பொருள் காண்க.
கண்ணன் – கண்ணையுடையவன்; இதனையே ‘குளிரக் கடாக்ஷித்து நின்ற நிலை’ என்கிறார் வியாக்கியானத்தில்.

இறைவனுடைய செயல்கள் பல இருக்க, யானைக்கு அருள் செய்த இச்செயலை எடுத்து முதல் முன்னம் கூறும் கருத்து யாது?’ என்னும்
வினாவை எழுப்பிக்கொண்டு, அதற்கு விடையாக, அது ஈசுவரனை வசீகரிப்பதற்குச் சிறந்த சாதனமாம்’ என்று கூறத் திருவுள்ளம் பற்றி அதற்குச்
சம்வாதம் காட்டுகிறார், ‘காலைக் கதுவிடுகின்ற’ என்ற திருப்பாசுரம்,-நாய்ச்சியார் திருமொழி, 3 : 5.
‘‘காலைக் கதுவிடுகின்ற கயலொடு வாளை விரவி’ என்பது, என் சொல்லியவாறோ?’ எனின்,
ஸ்ரீ கோபிமார் கரையிலே திருப்பரிவட்டங்களை இட்டுவைத்துப் பொய்கையில் இழிந்தவாறே, பரிவட்டங்களையெல்லாம் வாரிக்கொண்டு
ஒரு குருந்தின் மேலே ஏறி நிற்க, தங்களால் ஆன அளவெல்லாம்-அனுதவித்து – வருந்திப் பார்த்த இடத்திலும் அவன் பின்னையும் கொடாதே ஒழிய,
கயல் -பெண் மீன் -வாளை -ஆண் மீன் -குருந்திடை கூரை பணியாய்-நீ சாத்திக் கொண்டவை வேண்டாம் -தோழியும் நானும் தொழுதோம் –
அவர்களிலே ஈசுவரனுடைய திருவுள்ளத்தை -மர்மஜ்ஞதை – அறிவாள் ஒருத்தி சொல்லுகிற வார்த்தை இது:
‘கயலோடே கூட வாளையானது காலைக் கதுவாநின்றது’ என்கிறாள். என்றது,
‘தன்னைப் புகல் புக்கதொரு யானையை ஒரு நீர்ப்புழு நலிய, அது பொறுக்கமாட்டாமல் விரைந்து வந்து விழக்கூடிய அவன்,
அந்தரங்கர்களான நாம் நோவு படாநின்றால் வாராதிரான்’ என்னுமதனாலே சொல்லுகிறாள்.
‘யானையை ஒரு நீர்ப்புழுவாயிற்று அங்கு நலிந்தது; அபலைகளான எங்களை இரண்டு நீர்ப்புழுக்கள் அலவோ நலிகின்றன?’ என்கிறாள்;
‘இதனைக் கேட்ட போதே பரிவட்டங்களையும் கொண்டு அரை குலையத் தரை குலைய விழும் என்றிருக்கிறாள்’ என்றபடி.
‘ஆயின், ஆய்ச்சியர்கட்கு ஈசுவர மர்மம் தெரியுமோ?’ எனின், வைஷ்ணவ சந்தானத்திலே பிறந்தார்க்கு -விஷ்ணு சித்தர் திரு மகள் அன்றோ –
ஈசுவர மர்மங்கள் தெரியுமன்றோ? ‘இன்னதற்கு வருவர், இரங்குவர்’ என்று அறிகின்றவர்கள் அவர்களேயாவர்.

கார் முகில் போல் வண்ணன் கண்ணன் –
யானையின் இடரைப் போக்கின போது வடிவிற் பிறந்த துடிப்பும் குணத்திற் பிறந்த துடிப்பும் இருக்கிறபடி.
வடிவழகையனுபவிப்பித்து யானைக்குக் கையாளாய் நின்ற நிலை; தன்னை அனுபவிப்பித்துத் தாழ நின்றாயிற்றுப் போக்கிற்று.
‘ஆயின், ‘கண்ணன்’ என்றால், ‘கையாள்’ என்று காட்டுமோ?’ எனின், ‘கிருஷ்ணன் என்றால், தன்னை அனுபவிப்பார்க்குக் கையாளாயிருக்கும்,
’ என்னுமிடம் பிரசித்தமன்றோ? யானையின் இடரைப் போக்கின விசல்ய கரணியும் சந்தான கரணியும் இருக்கிறபடி.
சந்தான கரணி -தோல் மாமிசம் -பிந்ததற்கு -மருந்து -விசல்யம் -வெட்டு பட்ட இடத்துக்கு மருந்து –
வடிவழகையும் குணத்தையும் சொல்லுவதற்கு ஒரு ரசோக்தி ‘யானையின் இடரைப் போக்கின போது’ என்று தொடங்கும் வாக்கியம்.
துடிப்பு –அதிசயம். ‘கார்முகில்போல் வண்ணன்’ என்றதனை நோக்கி, ‘வடிவழகை அனுபவிப்பித்து’ என்கிறார்.
‘கண்ணன்’ என்றதனை நோக்கிக் ‘கையாள்’என்கிறார்.

எம்மானை –
யானைக்கு உதவியவதனால் அதன் சிறை விட்டது; அந்நீர்மையிலே தாம் சிறைப்படுகிறார்;
ஒரு ஜன்மமாதல், ஒரு ஞானமாதல், ஒரு ஒழுக்கமாதல் ஒன்றும் இன்றியே ருசிமாத்திரமேயுடைய ஸ்ரீ கஜேந்திராழ்வானுக்கு
உதவினபடியை அநுசந்தித்து, ‘இது என்ன நீர்மை!’ என்று அதனாலேயாயிற்று இவர் -அனன்யார்ஹர்-அவனுக்கே உரியவர் ஆயிற்று.
பட்டர், இவ்விடத்தை அருளிச் செய்யும் போது மேலும் இயலைச் சொல்லச் செய்து ‘அவன் நூறாயிரம் செய்தாலும் மனமும் செயலும்
வேறுபடாதிருப்பதற்கும் நாமே வேணும்; நமக்கு ஒரு ஆபத்து உண்டானால் இருந்த விடத்தில் இருக்கமாட்டாமல்
விரைந்து வருவதற்கும் அவனே வேணும்,’ என்று அருளிச்செய்தார்.
ஆயிரம் அவன் செய்தாலும் விக்ருதர் ஆகாமைக்கு நாம் வேணும் -நமக்கு ஒரே சின்ன ஆபத்தில் விக்ருதர் ஆவதற்கு அவன் வேணும்

சொல்லிப் பாடி எழுந்தும் பறந்தும் துள்ளாதார் –
யானைக்கு உதவின நீர்மையை வாயாலே சொல்லி பிரீதியினால் தூண்டப்பட்டவராய்ப் பாடி, பின்னை உடம்பு இருந்தவிடத்தில்
இராமல் எழுந்தும், தரையில் கால் பாவாதே பறந்தும், இப்படிக் களிப்போடு கூடி நடனம் செய்யாதார்.
தம்மால் கருமம் என் –
‘இவன் தன் படைப்பால் கொண்ட பிரயோஜனம் என்?
தன்னுடைய பிறப்பால் பிரயோஜனம் கொள்வான் தானே அன்றோ?
ஆதலால், தான் சரீரத்தை எடுத்த இதனால் என்ன பிரயோஜனம் கொண்டானானான்?’ என்கிறார்.
இவனுக்கும் இல்லை அவனுக்கும் இல்லை என்றவாறு –

தண் கடல் வட்டத்து உள்ளீர் சொல்லீர்
– எங்களைப் போன்று வேறுபட்டவராயிருத்தலின்றியே இருந்தீர்களேயாயினும், சரீரத்தை எடுத்துப் பகவானை பஜனை செய்யாதே.
இதர விஷயங்களிலே ஈடுபட்டவர்களாயுள்ளவர்களோடு ஒரே சாதியராய்ச் செல்லுகிற நீங்கள் தாம் சொல்லிக்காணீர்.
‘ஆயின், விசேஷஜ்ஞர்களைக் கேளாமல், ‘தண்கடல் வட்டத்து உள்ளீர்’ என்று பொதுவிலே கேட்பது என்?’ எனின்,
கடலுக்குட்பட்ட பூமியிலுள்ளார் அடைய விசேஷஜ்ஞர்களாய் இரார்களே? ‘ஆயின்,
இதர விஷயங்களில் ஈடுபட்டுள்ளவர்களாய்ச் செல்லுகின்றவர்களைக் கேட்பின் தெரியுமோ?’ எனின்,
விசேஷஜ்ஞர்களோடு அல்லாதாரோடு இவ் வர்த்தம் பிரசித்தம் என்று இருக்கிறார்.

———————————————————————————–

தண் கடல் வட்டத்து உள்ளாரைத்
தமக்கு இரையாத் தடிந்து உண்ணும்
திண் கழற்கால் அசுரர்க்குத்
தீங்கு இழைக்கும் திருமாலைப்
பண்கள் தலைக் கொள்ளப் பாடிப்
பறந்தும் குனித்தும் உழலாதார்
மண் கொள் உலகிற் பிறப்பார்
வல்வினை மோத மலைந்தே.–3-5-2-

விபூதியை அழிக்கும் -ஆசூர நிரசன சீலன் -சாது சனத்தை நலியும் கஞ்சனை சாய்ப்பதற்கு -என்பதை அனுசந்தித்து
விக்ருதர் ஆகாதவர் -சம்சாரத்தில் பாபம் செய்து கொண்டே இருப்பார்
தண் கடல் வட்டத்து உள்ளாரைத்-குளிர்த்தி -கடல் சூழ்ந்த பூமியில் உள்ளாரை
தமக்கு இரையாத் தடிந்து உண்ணும்-அழித்து-அவர் உள்ள இடத்தில் இருப்பதே காரணமாக -தங்கள் சரீர போஷணமே பிரயோஜனமாக
-பிராணி ஹிம்சை மகா பாதகம்
திண் கழற்கால் அசுரர்க்குத் தீங்கு இழைக்கும் திருமாலைப்-பாதகத்தை -வீரக் கழல் சூடிக் கொண்டு -திரியும் அசுரர்கள் –
விநாசம் செய்து கொடுக்கும் -அத்தாலே பிராட்டிக்கு உகப்பை கொடுப்பவன் -உகப்புக்கு விஷயம் ஆனவன் -மாலுக்கு பித்து -திருவுக்கு உகப்பு
பண்கள் தலைக் கொள்ளப் பாடிப்-ராகங்கள் -சங்கீதம் உடன் பாடி -ஆகாசத்தில் துள்ளிக் குதித்து -வணங்கி கை கூப்பி
பறந்தும் குனித்தும் உழலாதார்-எங்கும் திரியாதார்
மண் கொள் உலகிற் பிறப்பார் வல்வினை மோத மலைந்தே.மண் மிஞ்சின லோகத்தில் –
போக்க அரிதான-வல் வினை மோத மலிந்து – மகா பாபங்கள் மேலிட்டு தரையிலே தள்ளும் படி -சம்சாரத்தில் பிறப்பார் –

‘குளிர்ந்த கடல் சூழ்ந்த பூமியில் உள்ளவர்களைக் கொன்று தங்களுக்கு உணவாக உண்ணுகின்ற வலிய வீரக்கழலைக் கட்டிய
கால்களையுடைய அசுரர்களுக்குத் தீங்கினைச் செய்கின்ற திருமகள் கேள்வனை, பண்கள் தம்மில் கலக்கும்படியாகப் பாடிப்
பூமியில் கால் பாவாமல் நடனத்தைச் செய்துகொண்டு திரியாதவர்கள் மண்கொண்ட இவ்வுலகத்தில் வல்வினை
மலைந்து மோதும்படி பிறப்பார்கள்,’ என்றவாறு.
‘தடிந்து இரையாக உண்ணும் அசுரர், வல்வினை மலைந்து மோதப் பிறப்பார்,’ என மாறுக.
தலைக்கொள்ளுதல் – ஒன்றோடு ஒன்று கலத்தல். மோத – அடிக்க. மலைதல் – ஈண்டு, வருத்துதல்.
மண்கொள் உலகு – அணுக்களைக் கொண்ட உலகு,
‘மண் திணிந்த நிலனும்’ என்ற இடத்து ‘அணுக்கள் செறிந்த நிலனும்’ என்று உரை கூறினர் புறநானூற்று உரையாசிரியர்.
இனி, பொன்னுலகை விலக்குவதற்கு ‘மண் கொள் உலகு’ என்கிறார் எனலுமாம்; இனச்சுட்டுள்ள அடை.

‘ஸ்ரீ கஜேந்திராழ்வானுக்கு உதவின உதவி, நித்தியசூரிகட்கு உதவிய உதவி என்னலாம்படியன்றோ,
தங்களுக்கு இடர் உண்டு என்று அறியாத சமுசாரிகளுடைய விரோதியைப் போக்கி உதவி செய்வது?
அங்ஙனம் உதவி செய்யும் அந்நீர்மையை அநுசந்தித்தால், விகாரமில்லாதவராயிருப்பவர்கள் மஹா பாவம் அனுபவிக்கப் பிறக்கிறவர்கள்,’ என்கிறார்.
ஆபத்துக்கு உள்ளே இருந்து சம்பத்து என்று நினைத்துக் கொண்டு இருப்பார்களுக்கும் வந்து ரஷித்தானே-என்று நீர்மையை நினைந்து விக்ருதர் ஆகாதார் –
மஹா பாவம் அனுபவிக்கப் பிறக்கிறவர்கள்,’ என்கிறார்.

தண்கடல் வட்டத்துள்ளாரைத் தமக்கு இரையாகத் தடிந்து உண்ணும் திண்கழல் கால் அசுரர் –
அசுரர்கள் பிராணிகளைக் கொன்று உண்டு, அதனாலே ஜீவிப்பார்களாயிற்று.
‘இவர்களைக் கொல்லுதற்கு இவர்கள் செய்த அபகாரம் என்?’ என்னில்
தண் கடல் வட்டத்துள்ளார் –
ஏக தேச வாசித்வ பாந்தமே -ஒரே தேசத்தில் வசிக்கும் காரணத்தால் வந்த சம்பந்தமே காரணமாக ஆயிற்று நலிவது.
சர்வேசுவரன் ரக்ஷிக்கைக்கு ஹேது -ஏது யாது ஒன்று? அதுவே ஆயிற்று இவர்கள் நலிவதற்குக் காரணமும்.
‘தேவரீருடைய தேசத்திலே வசிக்கின்ற நாங்கள் உம்மாலே ரக்ஷிக்கத் தகுந்தவர்கள்,’ என்பது ஸ்ரீ ராமனைப் பார்த்த மகரிஷிகள் கூற்று.
சர்வ ரஷகன் அன்றோ -கர்ப்பம் தாய் காப்பது போலே ரஷிப்பான் -உபாசன பலத்தால் இல்லை -அது சொல்லில் –
தேவருக்கு கண் அழிவு சொல்லி விடலாம் -தூபம் கழிந்தது தீபம் கழிந்தது -அங்க உபாங்க அபசாரங்கள் உண்டே
மந்திர லோபம் -கிரியா லோபம் -அபசாரமாக தலைக் கட்டின படி -பவத் விஷய வாசின -தப்ப முடியாத காரணம் –
இவற்றின் புறத்தாள் -திவ்ய தேச எல்லைக்கு அப்பால் உள்ளவள் என்றா ரஷிக்காமல்-திருத்தாயார்
தமக்கு இரையாக –கண்டா கர்ணன் -பெருமானுக்கு சமர்ப்பிக்க தடிந்தான் -அப்படி அன்றிக்கே இவர்கள் ஹிம்சித்து ஜீவிப்பர்
ஆக, ‘இவர்கள், தங்கள் கண் வட்டத்திலே உண்டு உடுத்துத் திரிகிற இதுவே காரணமாக நலிவர்கள்,’ என்பதாயிற்று.
‘தங்களுடைய சரீரப் பாதுகாப்பிற்காகப் பிறரைக்கொன்று ஜீவிக்கிற திண்ணிய வீரக்கழலைக் காலிலேயுடைய அசுரர்கள்.
இறைவன், ரக்ஷிக்கைக்கு ‘அது எனக்கு விரதம்,’ என்று அறுதியிட்டு இருக்குமாறு போன்று, இவர்கள் பிறரை நலிவதற்கு
அறுதியிட்டு வீரக்கழலைக் கட்டியிருப்பவர்கள்’ என்பார், ‘கழல் கால் அசுரர்’ என்கிறார்.
‘அவனுடைய ரக்ஷணத்துக்கு ஈடான கிருபையைத் தவிர்க்கிலும், இவர்கள் பிறரை நலிவதற்கு இட்ட வீரக்கழலைத்
தவிர்க்க ஒண்ணாது,’ என்பார், ‘திண்கழல்’ என்கிறார்.

தீங்கு இழைக்கும் திருமாலை – ‘இவர்களும் நம்மாலே படைக்கப்பட்டவரன்றோ?’ என்று -ஸ்ருஷ்டர்கள் -இவர்களும் நம் தேச வாசி -குடல் தொடக்கைப்
பார்த்திருப்போமாகில், நம் விபூதி அழியும்; இவர்களை அழியச்செய்தாகிலும் விபூதியை நோக்கும் விரகு ஏதோ?’ என்று,
‘சினேகிதன் என்று நெருங்கி வந்த இவனை, என் உயிருக்குக் கேடு வருவதாக இருப்பினும் விடமாட்டேன்;
அவனிடம் தோஷம் இருப்பினும் இருக்கட்டும்; இந்த விபீடணனை ஏற்றுக்கோடலைப் பெரியவர்கள் நிந்திக்கமாட்டார்கள்,’ என்னும் தானும்,
‘திரிசடை சொன்னவைகள் உண்மையாக இருக்குமேயாயின், அபயம் தந்து உங்களைப் பாதுகாக்கிறேன்,’ என்னுமவளும் கூட
இருந்து எண்ணுவார்கள் ஆயிற்று. என்றது,
மித்ர பாவேன—நத்யஜேயம் என்பான் அவன் -க்ரீமதி பாலா வெட்கி முகம் சிவந்து -பவேயம் -சரணாகதி அறியாமல் நலிந்து
கொண்டு இருப்பாரையும் ரஷிப்பேன் -என்பவளும் இருக்க -திருமாலை-
‘களை பிடுங்கி அடியார்களை இரக்ஷித்தோமாம் விரகு யாதோ?’ என்று இருவரும் கூட விசாரியாநிற்பர்கள் என்றபடி.

பண்கள் தலைக்கொள்ளப் பாடி –
1-‘திருமகள் கேள்வனைப் பாடாநின்றார்கள்’ என்று,
2- பண்கள்தாம் ‘என்னைக்கொள், என்னைக்கொள்’ என்று வந்து தலை காட்ட. என்றது,
3- ‘பண் சுமக்கப் பாடி’ என்றபடி. -அதிகமாக பாடி -ராக மாலிகையில் என்றுமாம் –
4-அன்றி, ‘பண்கள் தலைமை பெறும்படி பாடி’ என்றுமாம். என்றது, ‘தலையான பண்ணிலே பாடி’ என்றபடி.
5-அன்றி, ‘அன்பினாலே அடைவு கெட்டு, ஒரு பண்ணிலே எல்லாப் பண்களும் வந்து முகங்காட்டும்படி பாடி’ என்னலுமாம்.
பறந்தும் குனித்து உழலாதார் –
கால் தரையிலே பாவாதே கூத்தாடி, அதுவே வாழ்க்கையாகத் திரியாதார்;
‘பறந்துகொண்டு குனித்து இதுவே வாழ்க்கையாக இராதார்’ என்றபடி.
மண் கொள் உலகில் வல் வினை மலைந்து மோதப் பிறப்பார் –
வல்வினை மலைந்து மோத மண் கொள் உலகிற் பிறப்பார். என்றது,
‘பகவானுடைய குண அனுபவம் பண்ணும் போது ‘நாம் விகாரமில்லாதவர்களாய் இருக்கவேணும்,’ என்று
குறிக்கொண்டு இறுக்கு வாதம் பற்றினாற் போலே இருப்பவர்கள் சாதுர்த்திகம் வந்து எடுத்து எடுத்து எற்றப்புக்கால்
செய்யலாவது இல்லையே!’ என்றபடி. ‘பிறப்பு’ என்ற இது, மற்றைத் துக்கங்களுக்கும் உபலக்ஷணம்.

————————————————————————————————

மலையை எடுத்துக் கல் மாரி
காத்துப் பசு நிரை தன்னைத்
தொலைவு தவிர்த்த பிரானைச்
சொல்லிச் சொல்லி நின்று எப்போதும்
தலையினொடு ஆதனம் தட்டத்
தடு குட்டமாய்ப் பறவாதார்
அலை கொள் நரகத்து அழுந்திக்
கிடந்து உழக்கின்ற வம்பரே.–3-5-3-

ஆர்த்தங்களான கோக்களை -கோ கோபி ஜனங்கள் -இடக்கை வலக்கை அறியாத -கண்ணனை மட்டுமே அறிந்தவர்கள் –
சம்பிராந்தி அடையாதார் -நரக வாசிகளாக கிலேசிப்பார்
மலையை எடுத்துக் கல் மாரி காத்துப் பசு நிரை தன்னைத்-கோவர்த்தனம் -கொஞ்சமாக குறைந்து கொண்டே வருகிறதாம் –
த்ரோணாச்சாலம் பிள்ளை கோவர்த்தனம் -கிருஷ்ண சேஷ்டிதம் நினைத்து கனத்து –கலி யுகத்தில் முடியும் என்பர் –
ஆராதன பங்கம் அடியாக -கல் மாரி-அஹோராத்ரா விபாகம் அற-ஏழு நாள்கள் -அபேஷிக்கவும் அறியாத
தொலைவு தவிர்த்த பிரானைச் சொல்லிச் சொல்லி நின்று -வி நாசம் அடையாமல் -உபகாரகன் -ஓவாதே நின்று
எப்போதும் தலையினொடு ஆதனம் தட்டத் தடு குட்டமாய்ப் பறவாதார்-ஆசனம் -தலை தட்ட -கால் மேலே -குட்டிக் கரணம் போட்டு ஆட -கீழது மேலது மேலது கீழது
அலை கொள் நரகத்து அழுந்திக் கிடந்து உழக்கின்ற வம்பரே-கடல் அலை போலே துக்கங்கள்
கரை ஏற முடியாமல் கிலேசிக்கும் -புதுமை மாறாமல் -வம்பர் கொள்வானாய்

‘மலையை எடுத்துக் கல் மழையைக் காத்து, அதனால் பசுக்கூட்டங்களினுடைய துன்பத்தை நீக்கிய உபகாரகனைப் பலகாலும் சொல்லி,
எல்லாக் காலத்தினும் ஒழியாமல் நின்று, தலையானது தரையிலே படும்படியாகக் கீழது மேலதாய்ப் பறந்து ஆடாதவர்கள்
பல துக்கங்களையுடைய நரகத்திலே அழுந்திக்கிடந்து வருந்துகிற புதியவர் ஆவர்,’ என்றவாறு.
‘எடுத்துக் காத்துத் தவிர்த்த பிரான்’ என்றும், ‘சொல்லி நின்று தட்டப் பறவாதார்’ என்றும் கூட்டுக
‘பரவாதார் வம்பர்’ என்க. பறவாதார் – வினையாலணையும் பெயர். வம்பு – புதுமை; வம்பையுடையவர் – வம்பர்.
ஆதனம் – ஆசனம்; தரை. தடுகுட்டம் – கீழது மேலதாகை; ஒரு வகைக்கூத்து. நரகம், ஈண்டுப் பிறவிக்கடல்.

‘உபகாரம் அறியாத பசுக்களுக்கும் பசுவினைப்போன்ற சாதுக்களான ஆயர்கட்கும் வந்த ஆபத்தை நீக்கின மஹாகுணத்தை அநுசந்தித்து
உளமும் செயலும் வேறுபடாதவர்கள் நித்திய சமுசாரிகளாய்ப் போவார்கள்,’ என்கிறார்.

மலையை எடுத்து கல் மாரி காத்து பசு நிரை தன்னை தொலைவு தவிர்த்த பிரானை –
இந்திரனுக்கு ஆயர்கள் இடுவது யாண்டுக்கு ஒரு போஜனம் ஆயிற்று; அவர்கள் அவனுக்கு விருந்து இடுகைக்குப் பாரிக்கிற படியைக் கண்டு,
‘நீங்கள் செய்கிற இது என்?’ என்று கேட்க, ‘மழையின்பொருட்டு இந்திரனுக்குச் சோறு இடுகையாய் இருக்கும்,’ என்ன,
‘தான் பிறந்து வளருகிற ஊரிலே ஒரு பொருளை வேறு ஒரு தேவதை கொள்ளுகையாகிற இது
மஹிஷீ ஸ்வேதம் பிறரதானதைப் போன்றது’ என்று பார்த்து, ‘அவ்வாகாச வாயனுக்கோ இடுவது? -ஆகாசம் வாசமாக கொண்ட இந்த்ரன் –
நமக்கும் மழைக்கும் காற்றுக்கும் இடம் தந்து பசுக்களுக்கும் புகலாய்ப் புல்லும் தண்ணீரும் உண்டாய் இருக்கிற
இம்மலைக்கு அன்றோ இடுவது?’ என்று அருளிச்செய்ய, ஆயர்கள் ஆகையாலே ‘அப்படியே செய்வோம்’ என்று அவர்களும் இசைந்து,
துன்னு சகடத்தாற் புக்க பெருஞ் சோற்றை அம்மலையைப் போன்று குவித்தார்கள்; அதனை முழுதும், அப்படியே இருப்பது
ஒரு வடிவைக்கொண்டு, ‘கோவர்த்தநோஸ்மி – கோவர்த்தனமாய் இருக்கிறேன்’ என்று அழுது செய்துவிட்டான்;
திரை போட்டு தானே தளிகை அமுது செய்ய வேண்டும் -கண்ணை மூடிக் கொள்ளச் சொல்லி -அஹம் கோவர்த்தநோஸ்மி-என்று அமுது செய்தானே
உண்ண இருந்தவன் உண்ணப் பெறாமையாலும் பசிக் கோபத்தாலுமாகக் கல் மழையைப் பெய்விக்க,
‘பாதுகாப்பது’ என்று சொன்ன மலையை எடுத்துப் பாதுகாத்தான். வீரராயிருப்பார் வினை முடுகினால் எதிரியுடைய
ஆயுதந்தன்னைக் கொண்டு அவரை வெல்லுவார்களே அன்றோ? அப்படியே, முன்னே நின்ற கல்லை எடுத்துக் கல் மாரியைக் காத்தான்.
அவன் செய்த தீங்கிற்குத் தோளைக் கழிக்க வேண்டியிருக்க, ‘பாவி பசிக்கோபத்தாலே செய்தானாகில் செய்வது என்?
அசுரர்கள் பக்கல் செய்யுமதனை இவனோடு செய்ய ஒண்ணாது; தானே கையோய்ந்து போகிறான்!’ என்று,
அவனால் வந்த நலிவைக் கணக்கிட்டு ஏழு நாள் ஒருபடிப்பட்ட மலையை எடுத்துக்கொண்டு நின்றானாயிற்று.
குன்று குடையாக எடுத்தான் குணம் போற்றி – ‘கல்லை எடுத்துக் கல் மாரி காத்து’ என்னும் இவ்விடத்தில்
‘நீராலே வர்ஷித்தானாகில் கடலை எடுத்துக் காக்குமித்தனை காணும்’ என்று பட்டர் அருளிச்செய்வர்.
‘பசுநிரை தன்னைத் தொலைவு தவிர்த்த’
யானையையும் சமுசாரிகளையும் காத்தது தான் நித்தியசூரிகளைக் காத்தது போன்றதே யன்றோ?
‘ஆயர்களுடையவும் பசுக்களுடையவும் நிலை’ என்பார், ‘பசுநிரை தன்னை’ என்கிறார்.
‘‘பசுநிரை தன்னைத் தொலைவு தவிர்த்த’ என்பான் என்?’ என்னில், பாதுகாக்கப்பட்டவர்களில் பிரதானரைச் சொல்ல வேணுமே?
செய்த உபகாரத்தை அறிந்திருப்பாரைச் சொல்ல வேணுமே! ஆதலால், சொல்லுகிறது.
‘பசுக்களால் பரிகாசம் பண்ணப்பட்டவர்கள் போல இருக்கிற ஆயர்கள்’ என்கிறபடியே, ஆயர்களுடைய இளிம்பு கண்டால்
சிரிப்பன பசுக்களேயன்றோ?
ஆர்ஜவம் -அகௌடில்யம்-அசட்டு -அப்பாவிகள் கோபிகள் என்று பசுக்கள் சிரிக்கின்றவாம்
அவன் தானே நியமிக்கிறான் என்ற நினைவு இல்லாமல் -இவர்கள் தங்களைப் போலே அசித்வத் பாரதந்த்ர்யம் இல்லாமல் இருக்கிறார்களே என்று சிரிக்குமாம்
தொலைவு தவிர்த்த – தொலைவாவது, பசுக்களும் ஆயர்களும் மாளுதல்;
‘அங்ஙனம் ஆகாதவாறு காத்த’ என்றபடி. அன்று அம்மழையிலும் காற்றிலும் அடியுண்டாரும் தாமாய்,
உதவிற்றும் தமக்காக என்றிருக்கிறாராதலின், ‘பிரானை’ என்கிறார்.
இந்த சரித்ரத்தால் ஆழ்வார் தொலைவு தவிர்த்த பிரான் -இவரும் பசுக்களைப் போலே அசித்வத் பாரதந்த்ர்யம் உள்ளவர் அன்றோ
அவர்கள் உடன் தாமும் இருந்த -குன்ற நின்ற பிரான் அடியாரோடும் ஒன்றி நின்ற சடகோபன்

சொல்லிச்சொல்லி நின்று எப்போதும்
– ஒரு பிரயோஜனத்துக்காகச் சொன்னாலன்றோ ஒரு முறை சொல்லுதல் அமையும்?
பயன் கருதாமல் என்பார், ‘சொல்லிச்சொல்லி’ என்கிறார். ‘ஒருகால் சொல்லிவிடுகையும் அன்று;
ஒரு காலத்தில் பலகால் சொல்லிவிடுகையும் அன்று’ என்பார், ‘நின்று’ என்கிறார்.
‘ஆள் கண்ட போதாக அன்றி எல்லாக்காலமும்’ என்பார், ‘எப்போதும்’ என்கிறார்.
தலையினொடு ஆதனம் தட்ட-தலை தரையிலே தட்டும்படி. தடுகுட்டமாய்ப் பறவாதார் – கால் தரையிலே பாவாதபடி ஆடாதார்.
தடுகுட்டமாவது – குணாலை; அதாவது, அடைவு கெடச் செய்யும் விகாரம். அலை கொள் நரகத்து அழுந்திக் கிடந்து உழக்கின்ற
– துக்கோர்மி பரம்பரைகளையுடைய நரகத்திலே தரை காண ஒண்ணாதபடியாக அழுந்தி வருந்துகிற.
வம்பர் – என்றும் ஒக்க யமதூதர்க்குப் புதியராவர். முன நாள் நலிந்தால், பிற்றை நாள் வந்து தோன்றினால்,
‘முனநாள் நம்மால் நலியப்பட்டவன்’ என்று அருள் செய்யாதே, ‘மோம் பழம் பெற்றாற்போலே,
‘வாரீரோ! உம்மையன்றோ தேடித் திரிகிறது?’ என்னும்படியாவர் ஆதலின், ‘வம்பர்’ என்கிறார். வம்பு – புதுமை.

இனி, மலையை எடுத்துக் கல் மாரி காத்து – அடியார்கள் நிமித்தமான காரியமித்தனையே வேண்டுவது;
அரியன செய்தாலும் எளியதாய்த் தோன்றும்-
பசுநிரைதன்னை தொலைவு தவிர்த்த –
‘அரியன செய்து பாதுகாப்பதற்குப் பண்ணும் செயலை விலக்காது ஒழியுமத்தனையே வேண்டுவது; இத்தலையில் தரம் இல்லை,’ என்கிறது.
பிரானை – நிலா, தென்றல், சந்தனம், தண்ணீர் போலே பிறர்பொருட்டாக ஆயிற்று வஸ்து இருப்பது.
சொல்லிச்சொல்லி நின்று எப்போதும் தலையினொடு ஆதனம் தட்டத் தடுகுட்டமாய்ப் பறவாதார் –
‘மௌனமாக இருப்பவன், ஒன்றிலும் ஆசை இல்லாதவன்,’ என்கிறபடியே,
இருக்கக்கூடிய பரம்பொருள், ‘அலவலை வந்து அப்பூச்சி காட்டுகிறான்’ என்னும்படி அலவலையாய்த் தன்னைத் தங்களுக்காக
ஆக்கிவைத்தால், தங்கள் வாய் கொண்டு மானிடம் பாடாதே,
‘என் தஞ்சனே! நஞ்சனே! வஞ்சனே! என்னும் எப்போதும் என் வாசகம்,’ என்கிறபடியே,
‘வாய் படைத்த பிரயோஜனம் பெற்றோம்’ என்று ஏத்தாதார். அலைகொள் நரகத்து அழுந்திக் கிடந்து உழக்கின்ற வம்பர் –
‘இந்நரகத்திலே போய்ப் புகுவர்கள்’ என்கிறார். ‘தடுகுட்டமாகப் பறவாமை நரகம்’ என்கிறார்.
‘ஆயின், இது நரகமாமோ?’ எனின், ‘ஸ்ரீராமா! உம்மோடு கூடியிருக்கும் இருப்பு யாது ஒன்று உண்டு?
அது சுவர்க்கம்; உம்மைப் பிரிந்திருக்கும் இருப்பு யாது ஒன்று உண்டு? அது நரகம்,’ என்றார் இளைய பெருமாள்;
ஆதலால், சுவர்க்க நரகங்கள்தாம் அவர் அவர்களுக்கு வகை செய்யப்பட்டனவாய் அன்றோ இருப்பன?
‘ஆயின், எல்லார்க்கும் இப்படி இருக்கவில்லையே?’ எனின், தமக்கு இருந்தபடியாலே சொல்லுகிறார்

—————————————————————

வம்பு அவிழ் கோதை பொருட்டா
மால் விடை ஏழும் அடர்த்த
செம் பவளத்திரள் வாயன்
சிரீதரன் தொல் புகழ் பாடிக்
கும்பிடு நட்டம் இட்டு ஆடிக்
கோகு உகட்டு உண்டு உழலாதார்
தம் பிறப்பால் பயன் என்னே
சாது சனங்க ளிடையே?–3-5-4-

‘வாசனையோடு மலர்கின்ற மலர் மாலையையுடைய நப்பின்னைப் பிராட்டி காரணமாகப் பெரிய இடபங்கள் ஏழனையும் கொன்ற
செம்பவளத் திரள் வாயன், சிரீதரன், அவனுடைய இயல்பாகவே அமைந்துள்ள புகழ்களைப் பாடி, வணக்கத்தோடு நடனத்தையும் செய்து ஆடி,
அடைவு கேடான ஆரவாரத்தைச் செய்து திரியாதவர்களுடைய பிறப்பால், நன்மக்கள் நடுவில் என்ன பயன் உண்டு? ஒரு பயனும் இன்று,’ என்பதாம்.
‘பொருட்டாக’ ஈறு கெட்டது. ‘தொல்’ என்பது, ஈண்டு இயல்பினைக் குறித்தது. ‘கோகுகட்டு’ என்பதனை, ‘கோகு உகட்டு’ என்று பிரித்து,
‘அடைவு கேடு தலைமண்டையிட்டு’ என்று வியாக்கியாதா அருளிச்செய்யும் பொருள் நினைவில் இருத்தற்பாலது. உழலாதார் – வினையாலணையும் பெயர்.

‘நப்பின்னைப் பிராட்டிக்காக ஏழு எருதுகளையும் அடர்த்து அவளோடே கலந்த காதல் குணத்தை அநுசந்தித்து ஈடுபடாதவர்கள்,
ஸ்ரீ வைஷ்ணவர்கள் நடுவே என்ன பிரயோஜனத்துக்காகப் பிறந்தார்கள்?’ என்கிறார்.

வம்பு அவிழ் கோதைபொருட்டா
– நறுநாற்றம் கமழாநின்றுள்ள மாலையைத் தரித்த மயிர் முடியையுடைய நப்பின்னைப்பிராட்டியின் நிமித்தமாக.
வம்பு அவிழ் வாசையோடு மலர்ந்த. கோதை – மாலை; மயிர் முடிக்கு ஆகுபெயர்.
நப்பின்னைப் பிராட்டியை ஒப்பித்து நிறுத்தினார்கள் ஆயிற்று
‘இந்த இடபங்களை வென்றார்க்கு இவளைக் கொடுக்கக் கடவோம்’ என்று. ஒப்பனையழகையும் மயிர் முடியையுங்கண்டவாறே
தன்னைப் பேணாதே ‘தவாஸ்மி – உனக்காக இருக்கிறேன்’ என்று அவளுக்காகத் தன்னை ஓக்கினான் என்றபடி.
மால் விடை –
பெரிய இடபங்கள். வடிவில் பெருமை தன்னைக் கண்ட போதே பிற்காலிக்கும்படியாயிற்று இருப்பது; அதனால் ‘மால் விடை’ என்கிறார்.
ஏழும்-
‘பெரியோர்களுக்குங்கூட நற்காரியங்களுக்குப் பல தடைகள் உண்டாகின்றன,’ என்று சொல்லுகிறபடியே, ஒன்று இரண்டு அன்றிக்கே, ஏழு விரோதிகள்.
அடர்த்த –
பின்னர் அணையப் புகுகிறது அவள் தோள்களை ஆகையாலே 1கிரமப் பிராப்தி பற்றாமே ஒரு காலே ஊட்டியாக நெரித்தான் ஆயிற்று.
செம்பவளம் திரள் வாயன் –
விருப்பத்திற்குத் தடையாய் இருந்தவைகள் போகையாலே புன்முறுவல் செய்தபடி.
அன்றியே,
‘அவை திருத்தோள்களுக்கு இரை போராமையாலே புன்முறுவல் செய்து நின்றபடி’ என்னுதல்.
சிரீதரன் – இவ்விடைகள் ஏழையும் வென்று வீர லக்ஷ்மியோடே நின்ற நிலை
அன்றி,
‘அவள் அணைக்கும்படியாக நின்ற நிலை’ என்றுமாம்.
1’பிராட்டி பெருமாளை அணைத்தது போன்று நப்பின்னைப்பிராட்டி அணைக்க நின்றபடி’ என்றவாறு.

தந் திருஷ்ட்வா –
பிரணயதாரையில் ரசிகத்வமேயாயிற்று முன்பு கண்டு போந்தது, ‘அந்தப் போகத்துக்கு விரோதிகளானவற்றைப் போக்க வல்லர்’
என்று கண்டது இன்றாயிற்று. வேட்டைக்குப் போனால், ‘இன்ன துஷ்டமிருகத்தைக் கொன்றார்; இன்ன ராக்ஷசனைக் கொன்றார்,’ என்று
கூடப்போனவர்கள் சொல்லக் கேட்குமத்தனை முன்பு; அவ்வளவன்றிக்கே, கண்ணாலே கண்டது இன்றாயிற்று.
ஸத்ருஹந்தாரம் –
தம் திருமேனியில் ஒரு வாட்டம் வாராமே எதிரிகளே நோவுபடும்படியாக. அம்போடே வெட்டோடே போகாமே எதிரிகளை முதல் அற மாய்த்து வந்தவரை.
மஹர்ஷீணாம் சுகாவஹம் –
பார்யை பக்கல் முகம் பெறுகைக்குப் பிரஜையை எடுத்துக்கொண்டு போவாரைப்போலே, இருடிகட்கு விரோதிகளான
ராக்ஷசரைக் கொன்று பிராட்டியை அணைக்கைக்கு அது பச்சையாக வந்தார்.
பபூவ –
ராக்ஷசருடைய குரூரத் தன்மையையும் பெருமாள் சௌகுமார்யத்தையும் அநுசந்தித்து, ‘என் புகுகிறதோ!’ என்று ‘சத்தையில்லை’
என்னும்படியிருந்தவள், வெற்றியோடே கண்டு உளளானாள்,
ஹ்ருஷ்டா –
தர்மியுண்டானால் தர்மங்களும் உண்டாமிறே.
வைதேஹீ –
‘வீரவாசியறியும்குடியிலே பிறந்தவள்’ என்னுதல்; அன்றிக்கே, ‘ஒரு வில்லை முரிக்க என்னைக் கொடுத்த எங்கள் ஐயர், தனியே
நின்று பதினாலாயிரம் ராக்ஷசரைக் கொன்ற வீரவாசியைக் கண்டாராகில், என்படுவரோ!’ என்று அவரை நினைத்தாளாகவுமாம்.
இவள் வாயாலே நல்ல பெயர் வாங்க -வைதேஹி -வால்மீகி இந்த பெயரை வைக்கிறார் -சீதா என்னாமல் –
பர்த்தாரம் –
‘ஐயர் நீர் வார்த்துக் கொடுத்தவர்’ என்று விரும்பிப் போந்தாள் முன்பு: இப்போதாயிற்று ‘ஆண்பிள்ளை’ என்று அணைத்தது;
ஸ்த்ரியம் புருஷம் விக்ரஹம் என்றவள் -‘ஆண் வடிவாக இருக்கின்ற பெண்’ என்றவளேயன்றோ முன்பு?
பரிஷஸ்வஜே –
யுத்தவடு உள்ள இடமெங்கும் திருமுலைத் தடத்தாலே வேது கொண்டாள். அப்படியே. நப்பின்னைப் பிராட்டி அணைக்க நின்றபடி.
பிராட்டி – சீதாபிராட்டி. பெருமாள் –ஸ்ரீராமபிரான்.

தொல்புகழ் பாடி –
அந்தப்புரத்திலுள்ளாரைப்போன்று சொரூபத்தோடு கட்டுப்பட்டதான காதல் குணத்தைப் பாடி;
‘நின்வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு’ என்பவர்களேயன்றோ அவர்கள்?
கும்பிடு நட்டம் இட்டு ஆடி
– வணங்குவது ஆடுவது. அன்றியே, அஞ்சலியுடன் ஆடவுமாம்.
கோகு உகட்டு – அடைவு கேடு தலைமண்டையிட்டு,
உண்டு –
3அதுவேஜீவனமாய்.
உழலாதார் –
இதுவே வாழ்க்கையாக நடத்தாதார். தம் பிறப்பால் பயன் என்னே சாது சனங்களிடையே –
‘கும்பிடு நட்டம் இட்டு ஆடிக் கோகு உகட்டு உண்டு உழலுகிறவர்கள் நடுவே இவர்கள் பிறந்த இத்தால் இவர்கள்
தாம்கொண்ட பிரயோஜனம் என்? வைஷ்ணவர்கள் நடுவே இவர்கள் மனித சரீரம் எடுத்தது என்ன பிரயோஜனத்துக்காக?’ என்கிறார் என்றபடி.
‘திருப்புன்னைக்கீழ் ஒருவர் இருக்குமிடத்திலே நம் முதலிகள் பத்துப்பேர் கூட நெருக்கிக்கொண்டிருக்கச்செய்தே, கிராமணிகள்,
மயிரெழுந்த பிசல்களும் பெரிய வடிவுகளும் மேலே சுற்றின இரட்டைகளுமாய் இடையிலே புகுந்து
நெருக்குமாறு போலேகாண்’ என்று பிள்ளைப்பிள்ளை அருளிச்செய்வர்.–பிள்ளைப்பிள்ளை – கூரத்தாழ்வான் சிஷ்யர்.-
பகவானுடைய குணங்களைக் கேட்டு ஆனந்தத்தால் வேறுபாடு இல்லாதவர்கள் நடுவே வந்தால் அவர்களுக்கு அஸஹ்யமாயிருக்கும் என்று
கூறுதற்குத் திருவுள்ளம் பற்றி, அதற்கு ஆப்த சம்வாதம் காட்டுகிறார், ‘திருப்புன்னைக் கீழ்’ என்று தொடங்கி.

————————————————————————————–

சாது சனத்தை நலியும்
கஞ்சனைச் சாதிப்பதற்கு
ஆதி அம் சோதி உருவை
அங்கு வைத்து இங்குப் பிறந்த
வேத முதல்வனைப் பாடி
வீதிகள் தோறும் துள்ளாதார்
ஓதி உணர்ந்தவர் முன்னா
என் சவிப்பார் மனிசரே?–3-5-5-

ஆஸ்ரித விரோதி நிர்சன அர்த்தமாக அவதரித்தவன் மேல் ஈடுபடாமல் ஜபாதிகளால் என்ன பயன் –
சாது சனத்தை நலியும் கஞ்சனைச் சாதிப்பதற்கு-நியமிக்க
ஆதி அம் சோதி உருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த-பிரதான -அப்ராக்ருத -பர ரூபம் -ஔஜ்வல்யம் -பரஞ்சோதி –
அந்த உருவை எடுத்துக் கொண்டு இங்கு அவதரித்த -அங்கு வைத்த கணக்கிலே -அங்கு வைத்தால் போலே –
வேத முதல்வனைப் பாடி-வேத பிரதிபாத்யன் -அவதார வைலஷ்ண்யம் -அஜாயமானோ பஹூதா விஜாயதே -பிறப்பிலி என்று கொண்டாடப்பட்ட பிறப்பைக் கொண்டாடி
ஓதி உணர்ந்தவர் முன்னா என் சவிப்பார் மனிசரே?—சாஸ்திர அப்யாச உக்தரான -ஞானாதிகர் சந்நிதியிலே -மனிசர் போலே என்ன ஜபம் பண்ணுவது –
ஜபம் -ஆசீர்வாதம் -நமது சொல்லை அவர்கள் –சபித்து என் வாழ்வு மாறுமோ
ஒத்து உணர்ந்ததுக்கு பலம் பாடுவது -இவர்கள் முன்னோடியாக இருந்து இருக்க வேண்டும் – இவர்கள் சாபத்தால் என்ன பயன்
மனிசரும் அல்ல -ஜபமும் வியர்த்தம்

‘நன்மக்களை வருத்திய கஞ்சனைக் கொல்லுவதற்காக ஆதியஞ்சோதியுருவை அங்கு இருக்கிறபடியே தன் பக்கலிலே
வைத்துக்கொண்டு இங்கே பிறந்த வேதமுதல்வனைப் பாடி வீதிகள் தோறும் துள்ளாதவர்கள்,
ஓதி உணர்ந்த ஞானிகளுடைய சந்நிதியில் எதனை ஜபிப்பார்கள்? இவர்கள் மனிதர்களா? அல்லர்,’ என்றவாறு.
‘சாதிப்பதற்குப் பிறந்த வேதமுதல்வன்’ என்க. சாதித்தல் – கொல்லுதல்; ‘சா’ என்பது பகுதி. ‘தொறு என்பது,
தான் சார்ந்த மொழிப்பொருட்குப் பன்மையும் இடமாதலும் உணர்த்தி நிற்கும்,’ என்பர் சேனாவரையர்.
‘சேரி தோறிது செல்வத் தியற்கையே’ என்பது சிந்தாமணி. (செய். 129.)
‘தொறு’ என்பது, ‘தோறு’ என நீட்டல் விகாரம் பெற்று வந்தது. துள்ளாதார்: வினையாலணையும் பெயர்.
‘மனிசரே’ என்பதில் ஏகாரம், எதிர்மறையின்கண் வந்தது

‘அடியார்களுடைய விரோதிகளை அழிக்கும்பொருட்டு அசாதாரண திவ்ய ரூபத்தோடு கூடினவனாய்க்கொண்டு
அசாதாராண திவ்ய ரூப விசிஷ்டன் – திருவவதாரம் செய்த குணத்தை அநுசந்தித்தால் உள்ளமும் செயலும் வேறுபடாதார் மக்கள் ஆகார்,’ என்கிறார்.

சாது சனத்தை நலியும் கஞ்சனைச் சாதிப்பதற்கு –
சாது சனத்தை நலிந்த கஞ்சனை அழிக்கைக்காக; ‘சாதுசனம்’ என்றது, ஸ்ரீ வசுதேவரையும் தேவகியாரையும்.
‘கஞ்சன் இவர்களை நலிந்தானோ?’ எனின்,-ரோசயாமாச – ‘தந்தையாக அடைய வேண்டும் என்று நிச்சயித்தார்’ என்று தான் அவதரிக்க
நினைத்த இவர்களை யன்றோ அவன் நலிந்து நெடுநாள் சிறையிட்டு வைத்தது?
‘சாதுக்களுடைய நலத்திற்காகவும் துஷ்டர்களுடைய நாசத்திற்காகவும் தர்மத்தை நிலை நிறுத்தும்பொருட்டும்
ஒவ்வொரு யுகத்திலும் அவதரிக்கிறேன்’ என்கிற பிரமாணப் பிரசித்தியைப் பற்ற
‘சாது சனத்தை நலியும் கஞ்சனைச் சாதிப்பதற்குப் பிறந்த வேத முதல்வன்’ என்கிறார்.
பாகவத அபாசாரம் பொறாமையாலே இவன் அவதரித்து ஆனைத் தொழில்கள் -என்பர் -ஆஸ்ரிதர்களுக்காகவே திருவவதாரம் என்பர்

ஆதி அம் சோதி உருவை
– இவ்வருகு உண்டான காரியவர்க்கத்துக்கு எல்லாம் ஊற்றாய், ஞானம் முதலிய குணங்களுக்குப் பிரகாசகமாய்,
‘குணங்களின் கூட்டமே விக்ரஹம்’ என்று மயங்குவார்க்கும் மயங்கலாம்படியே யன்றோ திருமேனிதான் இருப்பது?
அங்கு வைத்து இங்குப் பிறந்த –
அங்கு இருந்தபடியே வைத்துக்கொண்டு இங்கே வந்து பிறந்த;-வைத்துக் கொண்டே பிறந்த -என்றபடி —
‘என்னுடையதான தன்மையை நிலைக்களமாகக் கொண்டு என்னுடைய சங்கற்பத்தினால் அவதரிக்கிறேன்,’ என்றான் ஸ்ரீ கீதையில்.
-அவதார சத்யத்வம் -ஆறு அர்த்தங்கள் -நான்கு ஸ்லோகங்கள் –அஜகத் சூ ஸ்வ பாவத்வாத் -தன்மைகளில் -ஒன்றும் குறையாமல் –
பிரக்ருதிம் அதிஷ்டாயா சம்பவாமி –
‘நித்திய விபூதியில் உள்ளார் அனுபவிக்கிறபடியே லீலா விபூதியில் உள்ளாரும் அனுபவிக்கும்படியாக அவதரித்தான்,’ என்றபடி.
அனுபவிக்கிற படியே’ என்றது சிலேடை; அனுபவிக்கிற பிரகாரமும்,-அனுபவிக்கிற திருமேனியும்.
படி – திருமேனி; ‘படிகண்டு அறிதியே’, ‘செவ்விப் படிக்கோலம்’ என்பன அருளிச்செயல்.
‘பல படிகளாலும் இவர்களை நாம் பாதுகாக்க வேணும்,’ என்று அவன் வந்து அவதரித்தால் ஒரு படியாலும்
திருந்தாதபடியே அன்றோ இவர்கள் படி இருப்பது?
‘ஆயின், பல படிகளால் அவதரிக்குமோ?’ எனின்,
‘கர்மம் காரணமான பிறப்பு இல்லாமலிருக்கிற சர்வேசுவரன் இச்சையடியாக அநேக விதங்களாக
மற்றைய இனத்தினனாய் வந்து அவதரிக்கிறான்,’ என்றும், ‘அந்தப் பரமாத்துமாவினுடைய சரீரமானது
பஞ்ச பூதங்களின் சேர்க்கையால் உண்டாயது அன்று,’ என்றும், ‘அந்தப் பரமாத்துமாவுக்குச் சதை கொழுப்பு எலும்பு இவைகளால்
உண்டான இவ்வுலக சம்பந்தமான சரீரம் இல்லை,’ என்றும், ‘கல்பந்தோறும் கல்பந்தோறும் உம்முடைய திருமேனியோடு அவதரித்தவராய்
அடைந்தவர்களான எங்களைக் காப்பாற்றவேண்டும்,’ என்றும், ‘முன்னை வண்ணம் பாலின் வண்ணம் முழுதும் நிலைநின்ற,
பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம்’ என்றும், ‘பாலின் நீர்மை செம்பொன் நீர்மை பாசியின் பசும்புறம்,
போலு நீர்மை பொற்புடைத் தடத்து வண்டு விண்டு உலாம் நீல நீர்மை’ என்றும் சொல்லுகிறபடியே பல படிகளாலே அன்றோ திருவவதரிப்பது?

‘பல விக்கிரஹங்களாலே’ என்றபடி. இப்படிப் பிறவா நின்றாலும், ‘பிரபுவான கிருஷ்ணன் கர்ப்பவாசம் செய்யும்
தன்மையை அடையவில்லை; யோனியிலும் வசிக்கவில்லை’ என்கிறபடியே, கர்ப்பத்தில் சம்பந்தமில்லை.
‘இதுதான் கூடுமோ?’ என்ன ஒண்ணாது; ‘என்னை?’ எனின், இக்ஷ்வாகு வமிசத்திலே யுவநாஸ்வான் என்பான் ஒருவன்
மந்திரத்தாலே சுத்தம் செய்யப்பட்ட தண்ணீரைக் குடிக்க, அவன் வயிற்றிலே கர்ப்பம் உண்டாயிற்றே யன்றோ ஒரு சத்தி விசேஷத்தாலே?
அங்கு ஆணும் பெண்ணுமாய்க் கலந்து பிறந்தமை இல்லையே? அப்படியே, இங்கும் சர்வ சத்தி யோகத்தாலே இவ்வர்த்தம்
பொருத்தமாகத் தட்டு இல்லையேயன்றோ? இதற்குப் பிரமாணம் ‘அஜாயமாந:’ என்ற சுருதியேயன்றோ? அதனைச் சொல்லுகிறார் மேல்:
சாம்பவன் பெண் வேஷம் விஸ்வாமித்ரர் உலக்கை -சாப விசேஷத்தால் பிறந்ததே –

வேத முதல்வனைப் பாடி –
வேதங்களால் அறியப்படுகின்றவனைப் பாடி; அன்றி, ‘வேதங்களாலே முதல்வனாகச் சொல்லப்படுகின்றவனைப் பாடி’ என்னுதல்.
‘பிறந்த முதல்வனைப் பாடுகிறது என்? வளர்ந்த விதங்களையும் பாடலாகாதோ?’ எனின்,
‘பிறந்தவாறு எத்திறம்?’ என்னா, வளர்ந்தவாற்றில் போகமாட்டாதே அன்றோ இருப்பது?
‘எத்திறம்!’ என்றால், பின்னையும் ‘எத்திறம்!’ என்னுமித்தனை. ‘உபாசகர்கள் சர்வேசுவரனுடைய அவதாரத்தைச்
சுற்றும் சுற்றும் வாரா நிற்பர்கள்,’ என்கிறபடியே, அதனைச் சுற்றும் சுற்றும் வாராநிற்குமத்தனை.
வீதிகள்தோறும் துள்ளாதார் –
மனிதர்கள் உள்ள பெருந்தெருவேயன்றி, குறுந்தெருவோடு நெடுந்தொருவோடு ஆடாதார்.
இங்கே, மிளகாழ்வான் வார்த்தையை நினைப்பது.
இந்த ஐதிஹ்யத்தை இத்திருவாய்மொழியில் எட்டாம் திருப்பாசுரத்தின் வியாக்கியானத்தில் காணலாகும். ‘துள்ளி ஆடினால் உலகத்தார் சிரியாரோ?’
என்ன, அதற்கு விடையாக, ‘மிளகாழ்வான் வார்த்தையை நினைப்பது’ என்கிறார். இதனால், ‘உலகத்தாருடைய நகையே பூஷணமாய்விடும்,’ என்பது கருத்து.
‘இப்படி ஆடாதாருமாய், அறிவு கேடருமாய் இருப்பாரையோ நீர் நிந்திப்பது?’ என்னில்,
ஓதி உணர்ந்தவர் முன்னா – கற்றுக் கேட்டு முற்றறிவினர்களாய் இருக்கிறவர்கள் முதலாக.
‘இவர்கள் நிந்திக்கத் தக்கவர்களில் முதன்மை பெற்றவர்களானபடி யாங்ஙனம்?’ எனின், வித்துவான்கள் சாஸ்திரத்தைக் கடந்தால்
அவர்களுக்குத் தண்டனை அதிகமேயன்றோ? என் சவிப்பார் – ‘இவர்கள் இருந்து செவிப்பறை பறைந்து ஜபிக்கிறது என்?’ என்னுதல்.
‘இவர்கள் சாப அநுக்கிரஹங்களைச் செய்யும் ஆற்றலரோ?’ என்னுதல்.
மனிசரே –
இவர்கள் சாஸ்திரங்களுக்கு வசப்பட்டவர்களாய் மனிதப் பிறவியில் பிறந்தமை உண்டாகமாட்டாது என்னுமதினும் ஐயம்
இன்மையைத் தெரிவிக்கிறார். ‘மானிடவர் அல்லர் என்று என்மனத்தே வைத்தேனே’ என்றார் திருமங்கை மன்னன்.
மனிசரே’ என்பதில் ஏகாரம்: எதிர்மறை. ‘மனிதர் அல்லர்’ என்றபடி. அதற்குப் பிரமாணம், ‘மானிடவரல்லர்’ என்னும் பாசுரம் பெரியதிருமொழி 11-7-9-
‘மனிதப் பிறவிக்கும் பலம் பகவானை அடைதலேயாயிருக்க, அது இல்லாதார் மனிதரே அல்லர்’ என்கிறார்;
இனி, ஈசுவரன் கிருபையாலும்செய்யலாவதில்லை; ‘செம்பிலும் கல்லிலும் வெட்டிற்று’ என்னுமாறு போன்று. என்றது,
‘ஈசுவரன் கை விட்டாலும் விடாத என் நெஞ்சிலும் அவர்களைஉபேக்ஷித்தேன் என்கிறார்,’ என்றபடி.

மேல் திருவாய்மொழியிலே, அவன் உடைமை என்னும் தன்மையாலே இவ்விபூதிமுழுதும் உத்தேஸ்யம் என்று அனுபவித்தார்;
இத்திருவாய்மொழியில், இவ்விபூதிதன்னிலே, ‘எண்ணாத மானிடத்தை எண்ணாத போதெல்லாம் இனியவாறே’ என்றும்,
‘பேராளன் பேரோதும் பெரியோரை ஒருகாலும் பிரிகிலேனே’ என்றும் சொல்லுகிறபடியே, சிலரைக் கழித்துச் சிலரைக் கூட்டிக்கொள்ளாநின்றார்;
‘இது சேருகிறபடி யாங்ஙனம்?’ என்னில்,
இவ்வாகாரமும் கிடக்கச்செய்தே, வேறு ஆகாரம் தோற்றாதபடியான பாகம் பிறந்தவாறே, அவன் உடைமை என்னும் தன்மையே தோற்றி
,மேல் திருவாய்மொழியில் உபாதேயம் என்று அநுசந்தித்தார். ‘இவர்தாம் எல்லார் படிகளும் உடையராயன்றோ இருப்பது?
முத்தர் படியையுடையர் என்னுமிடம் சொல்லிற்று மேல் திருவாய்மொழியாலே. முமுக்ஷூக்கள் படியையுடையர் என்னுமிடம்
சொல்லுகிற இத்திருவாய்மொழியாலே,’ என்று அருளிச்செய்வர்.

—————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s


%d bloggers like this: