பகவத் விஷயம் காலஷேபம் -73- திருவாய்மொழி – -3-4-6….3-4-11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

பால் என்கோ! நான்கு வேதப்
பயன் என்கோ! சமய நீதி
நூல் என்கோ! நுடங்கு கேள்வி
இசை என்கோ! இவற்றுள் நல்ல
மேல் என்கோ! வினையின் மிக்க
பயன் என்கோ! கண்ணன் என்கோ!
மால் என்கோ! மாயன் என்கோ
வானவர் ஆதி யையே.–3-4-6-

வேதம் –ஸ்ம்ருதி இதிகாசம் -புராணம் -இத்யாதிகள் -வைதிகாத்மகமாய் -கான பர்யந்தமான சப்த ராசி பிரகாரத்வத்தை அருளிச் செய்கிறார்
பால் என்கோ! நான்கு வேதப்-வேதப்பால் -சாகாதி விபாகங்கள் -பால் -பகுதி
பயன் என்கோ! சமய நீதி-நூல் என்கோ–ததாவித சதுர்வித -வேதங்கள் ஆகிய பயன் –அர்த்த விவஸ்த -மீமாம்ஸா பூஜ்ய விஷய விசாரம் –
அர்த்தம் நிலை நிறுத்தி –
நுடங்கு கேள்வி இசை என்கோ! -ச்ரோத்ராக்களை ஈடு படுத்தும் -சங்கீதம்
இவற்றுள் நல்லமேல் என்கோ! -உக்தமான இவற்றுள் அநவதிக அதிசய விலஷண போக்கியம் –
வினையின் மிக்க பயன் என்கோ! -பயன் மிக்கது -சிறிய கிஞ்சித் வினை -திருவடிகளே உபாயம்கத்யர்த்தம் புத்த்யர்த்தம்
கண்ணன் என்கோ!ஆனந்த பலமாகவே உள்ள கிருஷ்ணன் -கண் அழகு -ரஷகன் -ஆனந்தாத்மகன் கிருஷ்ணன் -பூ வாசக சப்தம் –
மால் என்கோ! -புஜிப்பிக்கும் அவர்களை வ்யமுக்தமாய் புஜிக்குமவன் -வாரிக் கொண்டு –என்னில் முன்னம் பாரித்து –என்னை முற்றம் பருகினான்
மாயன் என்கோ-தத் அனுரூபமான ஆச்சார்ய சேஷ்டிதங்கள்
வானவர் ஆதி யையே.-சமஸ்த -சத்தாதி ஹேது பூதன் –

‘தேவர்களுடைய இருப்பு முதலானவற்றிற்கெல்லாம் காரணனான இறைவனைப் பால் என்பேனோ! நான்கு வேதங்களாகிய பயன் என்பேனோ!
வைதிக சமயத்துக்குரிய இதிகாச புராணங்கள் என்பேனோ! கேட்பார்களை ஈடுபடுத்துகின்ற கேள்வியையுடைய இசை என்பேனோ!
இதுகாறும் கூறியவற்றுளெல்லாம் வேறுபட்டதாய் மேம்பட்டதாய் இருப்பது ஒன்று என்பேனோ! சிறிய முயற்சியால்
பெரிய பயனைக் கொடுப்பது ஒன்று என்பேனோ! கண்ணன் என்பேனோ! மால் என்பேனோ! மாயன் என்பேனோ! யாது என்பேன்?’ என்றபடி.

வேதம் தொடக்கமான இயலும் இசையுமான ஒலிகளின் கூட்டத்தை விபூதியாக உடையனாயிருக்கிறபடியைப் பேசுகிறார்.

பால் என்கோ –
மேற்பாசுரத்தில் கூறிய சுவை பின் நாடினபடி.–கீழில் ரச்யத்தை பின்னாட்டின படி –
நான்கு வேதப் பயன் என்கோ –
நாலு வகைப்பட்ட பிரமாணக் கூட்டத்தில் -சுருதி ஸ்ம்ருதி இதிகாச புராணங்களில்-சாரமாய் இருக்கிற வேதமாகிற பிரயோஜனம் என்பேனோ!
வேதங்களில் வேறேயும் ஒரு கூறு வேறு ஒருவனைத் துதித்தாலேயன்றோ ‘நான்கு வேதங்களில் பயன்’ என்ன வேண்டுவது?
அது இல்லையாதலின் ‘நான்கு வேதப் பயன்’ என்கிறார்.
இனி, வேதமானது ஆராதன சொரூபம் சொல்லுமிடமும், ஆராதிக்கப்படும் இறைவன் சொரூபம் சொல்லுமிடமுமாய்க் கட்டடங்க
இவனையே சொல்லுகையாலே, வேதத்தில் நாலு மூலைக்கும் உள்ள பயன் இல்லாத இடம் இல்லையாதலின், ‘நாலு வேதப் பயன்’ என்கிறார் என்னுதல்:
‘பூர்வபாகம் உத்தரபாகம் என்று பிரிவுபட்டுள்ள எல்லா வேதங்களாலும் நான் அறியப்படுமவன்’ என்பது ஸ்ரீ கீதை.
சமய நீதி நூல் என்கோ –
வைதிக சமயத்துக்கு நிர்வாஹகமான இதிகாச புராணங்கள் என்பேனோ! இவை வேதங்களின் பொருள்களை
விரித்துக் கூறுவனவாதலின், ‘நீதி நூல்’ என்கிறார். நீதி – நிர்வாஹகம். ‘வேதமானது இதிகாசங்களாலும் புராணங்களாலும்
விவரிக்கப்பட வேண்டியது’ என்பது ஸ்மிருதி வாக்கியம்.
நுடங்கு கேள்வி இசை என்கோ –
கேட்டாரை நஞ்சுண்டாற் போன்று மயங்கச்செய்கிற கேள்வியையுடைத்தான இசை என்பேனோ!

இவற்றுள் நல்ல மேல் என்கோ –
மேலே கூறியவற்றுளெல்லாம் வேறுபட்டதாய் அவ்வருகாய் இருப்பது ஒன்று என்பேனோ!
’எல்லாம் சொல்ல வேண்டும், எல்லாம் சொல்லமாட்டார்’ ஆதலின், ‘இவற்றுள் நல்ல மேல் என்கோ’ என்று தொடங்கி அருளிச்செய்கிறார்.
வினையில் மிக்க பயன் என்கோ –
சிறிய முயற்சியால் பல விதமான பலத்தைப் பலிப்பது ஒன்று என்பேனோ! ‘என்றது, என் சொல்லியவாறோ?’ எனின்,
கல நெல்லை வித்தி நூறாயிரக் கலமாக விளைத்துக்கொள்வாரைப் போன்று, இத்தலையிலுள்ளது நட்புத் தன்மையேயாய்
அதற்கு -மித்ர பாவமே சம்ப்ராப்தம் -’நத்யஜேயம்-நான் விடமாட்டேன்’ என்னும்படி இருக்கையைக் கூறியபடி.
கண்ணன் என்கோ –
வேடர் -ராஷசர் -குரங்கு தலைவர்களை அன்றோ பெருமாள் நட்பாகக் கொண்டார் –
’உனக்கு நான் இருந்தேனே’ என்று ‘மாசுச:- நீ துக்கப்படவேண்டா’ என்னும் கிருஷ்ணன் என்பேனோ!
‘‘நான் தரும் அதனை நீ விலக்காமல் ஏற்றுக்கொள்ளுமித்தனையே வேண்டுவது; உனக்கு நான் இருந்தேன்,’ என்றவனன்றோ?’ என்றபடி.
மால் என்கோ –
அடியார்களிடத்தில் வியாமோகத்தையுடையவன் என்பேனோ! ‘நான் இருக்கிறேன் நீ துக்கப்படாதே’ என்று அருச்சுனனை நோக்கிக் கூறியவன்,
உடனே‘உனக்கு ஞானமுண்டாகும் நிமித்தமாகச் சொன்ன இந்தக் கீதை, தவஞ்செய்யாதவனுக்கும் பத்தி இல்லாதவனுக்கும்
சிரத்தை இல்லாதவனுக்கும் என்னிடத்தில் அசூயையுடையவனுக்கும் உபதேசிக்கத் தக்கதன்று,’ என்று கூறினானாதலின்,
‘அடியார்களிடத்தில் வியாமோகத்தையுடையவன் என்பேனோ!’ என்கிறார்.
‘‘இதம் து தே குஹ்ய தமம் பரவக்ஷ்யாமி’ என்றது போன்று ‘இதம் தே நாத பஸ்காய’ என்ற சுலோகத்தையும்
முன்னரன்றோ சொல்லல் வேண்டும்? அங்ஙனஞ்செய்யாது, ‘சர்வ தர்மாந்’ என்ற சுலோகத்தை முந்துறச் சொல்லிப் பின்னர்,
‘இதந் தே நாத பஸ்காய’ என்றான்;
இதற்கு அடி என்?’ என்று நஞ்சீயர் பட்டரைக் கேட்க, ‘திரௌபதி குழலை விரித்துக் கிடக்கையாலே அது முடிக்கைக்காக,
செய்வது அறியாமையாலே மூலையில் கிடந்தாரை முற்றத்தே இட்டான்; பின்னை அர்த்தத்தின் சீர்மையை அநுசந்தித்து,
‘ஆர் அதிகாரிகளாகச் சொன்னோம்? கைப்பட்ட மாணிக்கத்தைக் கடலிலே போகட்டும்,’ என்று பதண்பதண் என்றான்காணும்,’ என்று அருளிச்செய்தார்.
மாயன் என்கோ –
அடியார்கட்குத் தூது போதல் சாரதியாதல் முதலியவற்றைச் செய்யும் ஆச்சரியத்தையுடையவன் என்பேனோ!
‘தூதர்கள் தாம் வந்த காரியம் முடிந்த பின்னர்த் தூது வந்த வீட்டில் உண்பர்கள்; ஆதலால், யானும் வந்த காரியம் முடிந்த பின்
உன் வீட்டில் உண்கிறேன்,’ என்று கூறியதனால் தூது சென்றமை உணரலாகும்.-
க்ருத்தார்த்தா -வேலை முடிந்ததும் -உண்ண-வந்த கார்யம் செய்தால் உண்ணலாம் –

‘என்னி னின்னிலொரு பேத மில்லையிது என்னி னின்னிலது என்னினும்
மின்னின் முன்னிலகு விறல்நெ டும்படைவி தூரன் வந்தெதிர் விளம்பினான்;
உன்னி வின்னமுள தொன்று: பஞ்சவ ருரைக்க வந்தவொரு தூதன்யான்;
நின்னி லின்னடிசி லுண்டு நின்னுடன்வெ றுக்க எண்ணுவது நீதியோ?’—பாரதம், உத்தியோகபர்வம்-வில்லி பாரதச் செய்யுள் –
வானவர் ஆதி யையே-
பிரமன் முதலானோர்களுடைய சத்து முதலியவைகள் தனக்கு உரிமையாம்படி இருக்கிறவன், என் அதீனமான சத்து
முதலியவைகளையுடையவனாயிருக்கிற இருப்பை நான் எத்துணை என்று அளவிட்டுக் கூறுவது?
பரத்வத்தில் பரத்வம் சொல்லி இருப்பவர் -இத்தை சொல்வது -தம் அதீனமாக அப்பராத்பரன் உள்ளானே –

————————————————————————————-

வானவர் ஆதி என்கோ!
வானவர் தெய்வம் என்கோ!
வானவர் போகம் என்கோ!
வானவர் முற்றும் என்கோ!
ஊனம்இல் செல்வம் என்கோ!
ஊனம்இல் சுவர்க்கம் என்கோ!
ஊனம்இல் மோக்கம் என்கோ
ஒளிமணி வண்ண னையே!–3-4-7-

போக மோஷ விபூத் த்வ்யத்தை அருளிச் செய்கிறார்
வானவர் ஆதி என்கோ! வானவர் தெய்வம் என்கோ!-போக சக்தர் -தேவர் -ஆராத்ய தெய்வமும்
வானவர் போகம் என்கோ!பலமும்
வானவர் முற்றும் என்கோ!சர்வ வித ரஷணம்
ஊனம்இல் செல்வம் என்கோ!-உருண்டு ஓடும் செல்வம் போலே அநச்வர செல்வம்
ஊனம்இல் சுவர்க்கம் என்கோ!-ஆகல்ப அவசான ஸ்வர்க்கம் போலே இல்லாமல்
ஊனம்இல் மோக்கம் என்கோ-போகத்துக்கு அவ்வருக பட்ட கைவல்யம் இல்லையே –
ஒளிமணி வண்ண னையே!-ஒஜ்வல்யம்

‘ஒளி பொருந்திய மாணிக்கம் போன்ற வடிவையுடைய இறைவனை, நித்தியசூரிகளுடைய இருப்பு முதலானவைகட்கெல்லாம் காரணன் என்பேனோ!
அவர்கட்குத் தெய்வம் என்பேனோ! அவர்கட்கு இன்பம் என்பேனோ! அவர்கட்கு இங்குக் கூறப்படாத மற்றைப் பொருள்கள் எல்லாமானவன் என்பேனோ!
குற்றமில்லாத செல்வம் என்பேனோ! குற்றமில்லாத சுவர்க்க இன்பம் என்பேனோ குற்றமில்லாத மோக்ஷம் என்பேனோ! யாது என்பேன்?’ என்கிறார்.

இப்பாசுரம் வந்த சொல்லும் பொருளுமே பின்னும் வருதலின், சொற்பொருட்பின் வரும் நிலையணி.
மோக்ஷம் – மோக்கம்; க்ஷகரத்துக்கு இரு ககரம் வந்தன; ‘பக்ஷம், பக்கம்’ என்பது போன்று.

செல்வம் முதலான புருஷார்த்தங்கள் எல்லாம் தனக்கு விபூதியாகவுடையனாய் இருக்கிறபடியைப் பேசுகிறார்.

மேல் ‘வானவர் ஆதி’ என்ற இடம் பிரமன் முதலானோர்கட்குக் காரணன் என்னுமிடம் சொல்லிற்று.
இங்கு ‘வானவர் ஆதி’ என்பது, நித்தியசூரிகட்கு நிர்வாஹகனாய் அவர்கள் இருப்புக்குக் காரணனாயிருக்கும்படியைச் சொல்லுகிறது.
‘ஆயின், இரண்டு இடங்களிலும் சொல் ஒன்றாயிருக்க, வேறுபடுத்திப் பொருள் கூறக் காரணம் என்னை?’ எனின்,
பிரமன் முதலானோர்கட்கு அவர்கள் உற்பத்தியிலே உதவி செய்வானித்தனையே; அங்ஙனமன்றி,
நித்திசூரிகளுக்கு ‘எல்லாம் கண்ணன்’ என்கிறபடியே, எல்லாம் தானேயாய் இருப்பான்;
அவர்களும் ‘எல்லாம் வாசுதேவனே’ என்கிறபடியே, ‘எல்லாம் வாசுதேவனே’ என்று நினைத்திருப்பார்கள்; ஆதலால் என்க.
வானவர் ஆதி என்கோ-
நித்தியசூரிகள் சத்துக்குக் காரணமானவன் என்பேனோ! ‘சத்துக்குக் காரணமாகையாவது என்? அது நித்தியமாயன்றோ இருப்பது?’ எனின்,
அது நித்தியமாயினும் ஆக; அநித்தியமாயினும் ஆக; அதனுடைய நித்தியத்துவம் (என்றுமிருக்குந்தன்மை) அவனுடைய நித்தியமான இச்சையாலே இருக்கும்;
அந்த இச்சை நெகிழில், அதனுடைய நித்தியத்துவமும் மாறும்படியாய் இருக்கும். ‘எத்தேவர் வாலாட்டும் எவ்வாறு செய்கையும்,
அப்போது ஒழியும்’ என்கிறபடியே,-ஆறு -உபாயம் – அவன் நெகிழ்ந்த அன்று பின்னை இல்லையேயாம்.
திருமந்த்ரார்த்தம் -மூன்றையும் சேஷித்வம் -சரண்யத்வம் பிராப்யத்வம் மூன்றும் -ஆதி -தெய்வம் -போகம் -என்கிறார் -நம்மாழ்வார் பதத்ரயம்

வானவர் தெய்வம் என்கோ –
அவர்களுக்கு ஆராதிக்கத் தக்கவன் என்பேனோ!
வானவர் போகம் என்கோ –
அவர்களுக்கு உண்ணுஞ்சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையும் எல்லாமானவன் என்பேனோ!
வானவர் முற்றும் என்கோ –
அவர்களுக்குச் சொல்லப்படாத எல்லாப் பொருள்களும் என்பேனோ!
ஊனம் இல் செல்வம் என்கோ –
சில நாள் நின்று வற்றுமதன்றி, ஒரு நாளும் அழியாத செல்வம் என்பேனோ!
ஊனம் இல் சுவர்க்கம் என்கோ –
சில நாள் இருந்து பின்னை ‘த்வம்ஸ’ என்று தள்ளும்படியானது அன்றி ஒழிவில்லாத சுவர்க்க இன்பம் என்பேனோ!
‘ஆயின், ஊனமுடைய செல்வம் முதலியவைகளும் அவனுக்குச் செல்வமன்றோ? அங்ஙனம் இருக்க, ‘ஊனமில்’ என்று விசேடிப்பான் என்?’ எனின்,
‘உலகத்தில் மங்களம் பொருந்திய செல்வத்தையுடைய பொருள்கள் எவை உண்டோ, அவையெல்லாம் என் ஒளியின் ஒரு கூற்றிலிருந்து
உண்டானதாக நீ அறிவாய்,’ -ஸ்ரீ மத் ஊர்ஜிதம் -என்று பகவானும் கூறினானன்றோ?
ஊனம் இல் மோக்கம் என்கோ –
குற்றமில்லாத மோக்ஷம் என்பேனோ!
‘சரீரமான ஆத்தும அனுபவ மாத்திரத்தில் அன்றி, சரீரியளவும் செல்லும்படி அநுசந்திக்கையாலே, பரம புருஷார்த்த லக்ஷண மோக்ஷம்’ என்பார்,
’ஊனமில் மோக்கம்’ என்கிறார்.
ஒளி மணி வண்ணனை –
விபூதியைச் சொல்லுகிற இவ்விடத்தில் ‘ஒளிமணி வண்ணன்’ என்று அவன் தனக்கேயுரிய விக்கிரகத்தைச் சொல்லுகிறது;
இதனால், இவ்வசாதாரண விக்கிரகத்தைப் போன்று இருக்கிறதாயிற்று -மேற்கூறியவையெல்லாம் என்பதனைத் தெரிவித்தபடி.

—————————————–

ஒளி மணி வண்ணன் என்கோ!
ஒருவன் என்று ஏத்த நின்ற
நளிர் மதிச் சடையன் என்கோ!
நான் முகக் கடவுள் என்கோ!
அளி மகிழ்ந்து உலகம் எல்லாம்
படைத்து அவை ஏத்த நின்ற
களி மலர்த் துளவன் எம்மான்
கண்ணனை மாயனையே.–3-4-8-

லோக பிரதான காரண ஈஸ்வர விபூதித்வத்தை அருளிச் செய்கிறார்
உத்தரார்த்தம் முதலில் -படைத்த பின்பு -அவர்கள் ஏத்த -சிருஷ்டிக்கு பிரயோஜனம் -மகிழ்ந்து நின்ற -இவர்களாவது கிடைத்தோம்
திருத் துழாயும் புகர் அடைந்தது -பரம சிவன் சிவன் -ஒளி மன்னன் எங்கோ -என்று சொல்கிறார்களே -அவர்களும் நீ என்பேனோ
அளி மகிழ்ந்து உலகம் எல்லாம்-படைத்து அவை ஏத்த நின்ற-உத்சாகம் நிறைந்து -சோம்பாது உலகை படைத்த
நெத்தியை கொத்தி பார்த்தாலும் பசை இல்லாமல் இருந்தாலும் -ஒன்றி ஒன்றி உலகம் படைத்து
உபகார ச்ம்ர்த்தியால் ஸ்துதி பண்ண -அத்தாலே க்ருதக்ருதனாய் நிற்பானாய்
களி மலர்த் துளவன் எம்மான்-மலர்ந்த மாலையால் என்னை அனந்யார்ஹம் ஆக்கின மாயன்
கண்ணனை மாயனையே.-ஆயர் கொழுந்தாய் அவரால் புடை உண்ணும் சோதி -அடிக்க அடிக்க ஒளி பெற்ற ஸ்லாக்கியமான
சாணைக்கல்லில் மாணிக்கம் தீட்டுனால் போலே
ஒளி மணி வண்ணன் என்கோ!ஒருவன் என்று ஏத்த நின்ற-ஏக என்று ஸ்துதிக்க
நளிர் மதிச் சடையன் என்கோ!-குளிர்ந்த -சந்திர சேகரன் -ஜடா -போக தபஸ் இரண்டையும் விரும்பும் ருத்ரன்
நான் முகக் கடவுள் என்கோ!-தேவ ஜாதி கடவும் என்னும் பிரமன் -என்பேனோ
சிவ பக்தர் தங்கள் தெய்வம் -என்று பேசும் படி நிற்கிறவன் என்றுமாம் –

‘காத்தலையே ஆதரித்து உலகமெல்லாவற்றையும் படைத்து, அவ்வுலகங்கள் ஏத்தும்படியாய் நின்ற, தேனையும் மலரையுமுடைய
திருத்துழாய் மாலையைத் தரித்த எம்பெருமானாகிய, ஆச்சரியமான குணங்களையும் செயல்களையுமுடைய கண்ணபிரானை,
ஒளி பொருந்திய மாணிக்கம் போன்ற வடிவையுடையவன் என்பேனோ! ஒப்பற்றவன் என்று துதிக்கும்படி நின்ற சந்திரன் பொருந்திய
குளிர்ந்த சடையையுடைய சிவபெருமான் என்பேனோ! நான்கு முகங்களையுடைய பிரமன் என்பேனோ! யாது என்பேன்?’ என்றவாறு.
‘ஏத்த நின்ற சடையன்’ என்க. ‘மகிழ்ந்து படைத்து ஏத்த நின்ற துளவன்,’ எனக் கூட்டுக.

உலகத்தில் முதன்மையினையுடையவரான பிரமன் சிவன் முதலியோர்களை விபூதியாகவுடையனானபடியைப் பேசுகிறார்.

ஒளி மணி வண்ணன் என்கோ –
மேலே கூறின வடிவழகு பின்னும் நாடினபடி.
ஒருவன் என்று ஏத்த நின்ற நளிர் மதிச்சடையன் என்கோ –
‘இவன் உலகத்துக்குப் பிரதாநன்’ என்று அறிவிலிகள் ஏத்தும்படியாய், குளிர்ந்த மதியையும் சடையுமுடைய சிவன் என்பேனோ!
மதிச்சடையன் – தலையான மதியையுடையவன். –ஆரோக்கியம் பாஸ்கரன் -ஞானம் -ருத்ரன் -மோஷம் ஜனார்த்தன்-
‘ஏத்துகின்றவர்களுடைய மயக்கமேயன்றி, அவன் பக்கல் ஒன்றுமில்லை,’ என்பார், ‘சடையன்’ என்கிறார்.
நான்முகக் கடவுள் என்கோ –
அவனுக்குங்கூடத் தந்தையான நான்முகனான தெய்வம் என்பேனோ!
அளி மகிழ்ந்து உலகமெல்லாம் படைத்து அவை ஏத்த நின்ற –
‘பாதுகாத்தலையே ஆதரித்து உலகங்கள் முழுதையும் உண்டாக்கி அவை ஏத்த நின்ற. ‘யாதொரு பிரயோஜனத்தை நினைத்துப் படைத்தான்?
அந்தப் பிரயோஜனத்தைப் பெற்று நின்றான்’ என்பார், ‘படைத்து அவை ஏத்த நின்ற’ என்கிறார்.
களி மலர்த் துளவன் எம்மான் கண்ணனை மாயனை –
களி -தேன் மலர் -பூ – மதுவையும் பூவையுமுடைத்தான திருத்துழாய் மாலையையுடையனாய், அம்மாலையாலே என்னைத் தனக்கே
உரியவனாம்படி எழுதிக்கொண்டவனுமாய், எனக்குச் சுலபனுமாய், ஆச்சரியமான குணங்களையும் செயல்களையுடையவனுமானவனை.

——————————————————————-

கண்ணனை மாயன் றன்னைக்
கடல் கடைந்து அமுதம் கொண்ட
அண்ணலை அச்சு தன்னை
அனந்தனை அனந்தன் றன்மேல்
நண்ணி நன்கு உறைகின்றானை
ஞாலம் உண்டு உமிழ்ந்த மாலை
எண்ணுமாறு அறிய மாட்டேன்
யாவையும் எவரும் தானே.–3-4-9-

உக்த விபூதி-மாதரம் அன்றியே சகல சேதன அசேதனங்களும் தானே யானவனை -பிரகாரத்தாலே -சரீரம் -பரிச்சேதிக்கும் பிரகாரம் அறியேன் –
கண்ணனை மாயன் றன்னைக்-ஆஸ்ரித சுலபன் -ஆச்சர்ய குண சேஷ்டிதங்கள் -ஸ்வரூப நிரூபகம் மாயன் –
கடல் கடைந்து அமுதம் கொண்ட-அருவாசீன பிரயோஜன அர்த்திகளுக்கும் கார்யம் செய்யும் சர்வ ஸ்வாமியாய்
அண்ணலை அச்சு தனை-நழுவல் இல்லாதவன் –
அனந்தனை -அபரிச்சின்ன -ஸ்வரூபம் ரூபம் குணம் விபவம் –
அனந்தன் றன்மேல்நண்ணி நன்கு உறைகின்றானை-இத்தனையும் தன்னுள் அடங்கும் படி -திரு வனந்த ஆழ்வான்-சிந்தாமணி
-அந்தம் உள்ளவனாக ஆக்கிக் கொண்டு
நன்றாக பொருந்தி -உகந்து -கண் வளரா நின்று அருளி -கிடந்த நாள் கிடத்தி எத்தனை நாள் -ஆழ்வார்கள் வயிறு பிடிக்கும் படி
ஞாலம் உண்டு உமிழ்ந்த மாலை எண்ணுமாறு அறிய மாட்டேன் ரஷ்யத்துக்கு ஆபத்து வந்தால் திருவயிற்றில் வைத்து ரஷித்து
வெளி நாடு காண உமிழ்ந்து -வாத்சல்யம் உடையவன் –
யாவையும் எவரும் தானே.-எல்லா வகைப்பட்ட -அசேதனங்கள் சேதனங்கள் -எல்லாம் பிரகாரம் -ஸ்வாதீன த்ரிவித-
பரிச்சேதித்து அறிய மாட்டேன்

‘கண்ணபிரானை, ஆச்சரியமான குணங்களையும் செயல்களையுமுடையவனை, கடலைக் கடைந்து அமுதம் கொண்ட பெருமையையுடையவனை,
அழிவில்லாதவனை, எல்லையில்லாத குணங்களையுடையவனை, ஆதிசேஷசயனத்தின்மேலே நன்கு பொருந்தித் தங்கியிருக்குமவனை,
உலகத்தையெல்லாம் புசித்து மீண்டும் உமிழ்ந்த திருமாலைச் சொல்லுமுறையறிந்திலேன்;
அஃறிணைப்பொருளும் உயர்திணைப்பொருளும் அவனேயாவன்,’ என்றவாறு.

‘அவனுடைய விபூதியினுடைய விரிவினைத் தனித்தனியே பேச முடியாது; காரிய காரண உருவமான அறிவுடைப் பொருள்களும்
அறிவில் பொருள்களும் அவனுக்கு விபூதி என்று -பிரயோஜகத்திலே -சேர பிடித்து -கோவையாக -சுருங்கச் சொல்லலாமித்தனை,’ என்கிறார்.

கண்ணனை மாயன் தன்னை –
‘எத்திறம்!’ என்ன வேண்டும்படியான குணங்களையும் செயல்களையுமுடையவனை.
கடல் கடைந்து அமுதம் கொண்ட அண்ணலை –
வேறு பயன்களை விரும்புகிறவர்களுக்கும், உடம்பு நோவக் கடல் கடைந்து அவர்கள் விரும்பிய பொருள்களைக் கொடுக்கும் ஸ்வாமியை.
கர்மாதீனமாக உடம்பு நொந்து போகாது -திரு மேனி மார்த்வம் -சௌகுமார்யம் நினைக்க -ஆழ்வார்கள்
அச்சுதனை –
தன்னை அடைந்தவரை ஒருநாளும் நழுவவிடாதே காக்குந்தன்மையனை.
அனந்தனை – சொரூப ரூப குண விபூதிகளால் அளவிட்டு அறிய முடியாதவனை
அனந்தன்தன்மேல் நண்ணி நன்கு உறைகின்றானை –
திருவனந்தாழ்வான் மேலே கிட்டி நன்கு கண்வளர்ந்தருளுகிறவனை. ‘அடிமை நிலத்தின் எல்லை நிலத்திலே நிற்கையாலே
சேக்ஷியானவனையும் விளாக்குலை கொள்ள வல்லவன்’ என்பார், ‘அனந்தன்’ என்கிறார்.
கைங்கர்ய ஸ்ரத்தையாலே -வசப்படுத்தி என்றவாறு
கல்யாண மந்த்ரம் -பிள்ளை தலை மேல் உட்கார -அங்கும் குணங்களால் வசப்படுத்தி
பிராட்டிமார் திருமுலைத் தடத்தாலும் நெருக்கி எழுப்பவொண்ணாதபடி கண்வளர்கின்றானாதலின், ‘நண்ணி நன்கு உறைகின்றானை’ என்கிறார்.
அனந்தன் முடிவில்லாதவன்.

ஞாலம் உண்டு உமிழ்ந்த மாலை –
ஆபத்துக்கு உள்ளானவர்கள் உண்டானால், அப்படுக்கையிலும் பொருந்தாதவனை.எண்ணுமாறு அறியமாட்டேன்
– அவனும் விபூதி விஷயமாகப் பரக்கச் சொல்லிக்கொண்டு போந்து ‘அருச்சுனா! முக்கியமானவற்றைச் சொல்லுகிறேன்;
ஏனென்றால், என் விபூதியின் விரிவிற்கு முடிவு இல்லை,’ என்றானன்றே? அப்படியே, இவரும் மேலே சிலவற்றைச் சொல்லி,
பாதாளானாம் -விஷ்ணு -திரு மேனி -சேஷன் பெயரில் பெருமாளே -குணங்களுக்கு அந்தம் இல்லை -ஸ்ரீ விஷ்ணு புராணம்
ஸ்ரீ கீதை -10 அத்யாயம் -விஸ்தாரம் -அந்தம் இல்லை –
‘இவனைச் சொல்லும் வகையினை அறிகின்றிலேன்,’ என்கிறார்.
‘ஆனாலும், சுருங்கச் சொன்னாலோ?’ என்னில், யாவையும் எவரும் தானே – அறிவுடைப்பொருள்
அறிவில்பொருள் முற்றும் சரீரமாகத் தான் ஆத்துமாவாக இருக்குமித்தனை.

———————————————————-

யாவையும் எவரும் தானாய்
அவர் அவர் சமயந் தோறும்
தோய்வு இலன்; புலன் ஐந்துக்கும்
சொலப்படான்; உணர்வின் மூர்த்தி;
ஆவி சேர் உயிரின் உள்ளால்
ஆதும் ஓர் பற்று இலாத
பாவனை அதனைக் கூடில்,
அவனையும் கூட லாமே.–3-4-10-

பிரகார பூத -நிதான பாசுரம் -தோய்விலன் -ஸ்பர்சம் இல்லாதவன் -வியாபித்தாலும் தோஷங்கள் இல்லாதவன் -வியாப்ய கத தோஷம் தட்டாதவர்
அசித் சதத பரிணாமி –ஸ்வரூப விகாரம் உண்டே -சித் ஸ்வ பாவம் மாறும் –
யாவையும் எவரும் தானாய்-பிரகாரமாய் –
அவர் அவர் சமயந் தோறும்-அந்த அந்த -தேவாதி -கர்மங்களுக்குத் தக்க
தோய்வு இலன்-அவர்களைப் போலே சங்கம் இல்லாதவன் -சரீர தோஷம் ஜீவாத்மாவுக்குத் தட்டுமே -கர்மாதீனம் -இவனுக்கு இச்சாதீனம் –
சிறையன் அரையன் சிறையில் இருக்குமா போலே -இருவரும்
புலன் ஐந்துக்கும் சொலப்படான்; -இந்த்ரியங்களுக்கு விஷயம் ஆகான் –
உணர்வின் மூர்த்தி;-ஸ்வயம் பிரகாச -ஸ்வரூப வாசகம் -ஞான ஸ்வரூபன்
ஆவி சேர் உயிரின் உள்ளால்-பிராணாச்ரம சரீரம் -ஆவி -சேர்ந்த ஆத்மாவின் உடைய -ஸ்வரூபத்தில்
ஆதும் ஓர் பற்று இலாத பாவனை அதனைக் கூடில், அவனையும் கூட லாமே.-சுக துக்கங்கள் ஆத்மாவுக்கு
-பால்யம் இது போன்ற அவஸ்தைகள் சரீரம் -இத்தை ஜீவாத்மாவுக்கு பொருந்துமானால் –
இந்த தன்மை அவனையும் -தன்னுடைய சரீரங்களுக்கு வரும் விகாரம் கூடலாமே -என்றவாறு –
உயிரான வாக்கியம் -ஐந்து வியாக்யானம் -பக்தி பாவனை வந்தால் அவனைக் கூடலாம்

‘அறிவில்பொருள்களும் அறிவுடைப்பொருள்களும் தானேயாய், அவர் அவர்களுடைய அவஸ்தைகளில் பற்று இல்லாதவனாய்,
ஐம்பெரும்புலன்களாலும் அறியப்படாதவனாய், ஞான உருவினனாய் இருப்பான் இறைவன்; உடலோடு கூடியிருக்கிற உயிரினுடைய சொரூபத்தில்,
சரீரத்தினுடைய தோன்றுதல் வளர்தல் குறைதல் முதலிய தன்மை வேறுபாடு ஒன்றிலும் பற்றில்லாத பாவனையானது ஆத்துமாவின்
பக்கல் கூடுமாகில், சரீரத்தினுடைய வளர்தல் குறைதல் முதலிய தன்மைகளும், ஆத்துமாவினுடைய
இன்ப துன்பங்களும் சாரமாட்டா என்னுமிதுவும், அவ்விறைவனையும் கூடலாம்,’ என்றவாறு.

‘அவர் அவர் சமயந்தோறும்’ என்ற இடத்து ‘அவையவை சமயந்தோறும்’ என்பதனையும் சேர்த்துக்கொள்க.
சமயம்-அவஸ்தை; விகாரம். ஆவி-உடல்; ஆகுபெயர். ஆதும்-யாதும் என்றதன் மரூஉ. ‘உடம்பினுள் இருக்கின்ற உயிர் அவ்வுடலின்
விகாரங்களை அடைவது இல்லை என்பதனை நாம் நன்கு அறிவோமாயின், அவ்வுடல் அவ்வுயிர் இரண்டினுள்ளும் இருக்கின்ற இறைவன்
அவ்விரண்டின் விகாரங்களையும் அடைவதில்லை என்பதையும் நாம் நன்கு தெளியலாம்,’ என்பது பின்னிரண்டு அடிகளின் கருத்து.

‘அறிவுடைப்பொருள் அறிவில் பொருள்களுக்கு உள்ளுயிராய் நிறைந்து நின்றாலும், அவற்றின் குற்றங்களால் தீண்டப்படாதவன்’ என்கிறார்.

யாவையும் எவரும் தானாய் –
அறிவுடைப்பொருள் அறிவில் பொருள் முழுதும் ‘தான்’ என்கிற சொல்லுக்குள்ளே அடங்கும் படி சரீரமாகத் தான் ஆத்துமாவாய்.
அஹம் சப்தத்துடன் சமானமாக அதிகரிக்கும் படி யோக்யதையாய் இருக்கை -ப்ரஹ்மம் உடன் கூடி இருக்குமே –
அவர் அவர் சமயந்தோறும் –
அவர் அவர்களுடைய அவஸ்தைகளில்; மக்களுடைய பன்மையை நோக்கி ‘அவரவர்’ என்கிறார்.
மேற்பாசுரத்தில் ‘யாவையும் எவரும்’ என்று ஒருசேர எடுக்கையாலே அதனைத் தொடர்ந்து பின்னே கூறுகின்ற இப்பாசுரத்திலும்
‘அவையவை’ என்று அசித்தும் தன்னடையே வந்து சேரும். ‘ஆயின், அதுதன்னைக் கூறாது ஒழிந்தது என்னை?’ எனின்,
முதன்மை இன்மையாலும் அதிகார பலத்தால் தன்னடையே வரும் என்னும் கருத்தாலும் கூறாதொழிந்தார்.
ஆக, சரீரத்தினுடைய பரிணாமம் முதலியவைகளையும், ஆத்துமாவினுடைய இன்ப துன்பங்களையும் நினைக்கிறது
தோய்விலன் –
அறிவுடைப்பொருள் அறிவில்பொருள்கள் ‘தான்’ என்ற சொல்லுக்குள்ளே அடங்கும்படி அவற்றோடே கலந்து நிற்பினும்,
அவற்றினுடைய தோஷங்கள் தன் பக்கல் தட்டாதபடி நிற்பான்.
ஆத்துமாவிற்கு, சரீரத்திற்கு உண்டாகும் பரிணாமம் முதலியவைகள் இல்லையேயாயின், அந்தச் சரீரத்தின் சேர்க்கையாலே
இன்பதுன்பங்கள் உண்டாகின்றனவே! அப்படியே, இச்சேதந அசேதநங்களெங்கும் புக்குப் பரந்துநின்றால்,
அவற்றினுடைய தோஷம் இறைவனைப் பற்றாதோ?’ எனின், அவற்றால் தீண்டப்படாதவனாக இருப்பான்.
‘ஆயின், எல்லாம் செய்யினும் இவ்வாத்துமாவிற்கு இன்ப துன்பங்கள் இல்லாமலே இருக்க, இச்சரீரத்தினுடைய சேர்க்கையால் அன்றே
ஆத்துமாவிற்கு இன்ப துன்பங்கள் உண்டாகின்றன? அப்படி இறைவனுக்கும் கூடாதோ?’ என்னில், கூடாது;
அதற்கு அடி – உட்புகுதற்கு உளதாய காரண விசேடம். என்றது, ஆத்துமா கர்மமடியாகப் பிரவேசிக்கின்றது;
இறைவன் இவற்றுக்குள் திருவருள் காரணமாகப் பிரவேசிக்கின்றான்.
சிறைக்கூடத்திலே சிறையனும் கிடந்தான்; அரசகுமாரனும் இருந்தான்; சிறையன் கர்மமடியாகப் பிரவேசிக்கையாலே
துக்கத்திற்கு ஏதுவாயிற்று; அரசகுமாரன் இச்சையாலே பிரவேசிக்கையாலே போகரூபமாயிருந்தது.
‘ஆத்துமாவும் இறைவனும் ஒரு சரீரத்தைப் பற்றித் தங்கியிருக்கின்றார்கள்; அவர்களுள் ஆத்துமாவானது
கர்ம பலத்தை அனுபவிக்கின்றது; இறைவன் கர்ம பலத்தை அனுபவியாமல் மிக அதிகமாகப் பிரகாசிக்கிறான்,’ என்பது மறை மொழி.
-பரஞ்சோதி உபசம்பத்ய -ஸ்வேன ரூபேண -இயற்க்கை -என்றவாறு
சம்போக பிராப்தி இதி சேத ந -ஜீவன் சரீரத்துக்குள் -இருந்து போலே அவனுக்கு இல்லை –
வைசேஷ்யாத் -வேறு பாடு இருக்கிற படியால் -பிரவேச ஹேது மாறு பட்டு இருக்கிறபடியால் –

புலன் ஐந்துக்கும் சொல்லப்படான் –
ஐம்புலன்களுக்கும் விஷயமாகச் சொல்லப்படான்.
அன்றிக்கே,
‘நினைத்தேயன்றோ சொல்லுவது? அங்ஙனம் சொல்லுதற்கு முன்பில் நினைவினை ஆகுபெயரால் கூறியதாகக் கொண்டு
அந்நினைவினால் நினைக்கப்படான்,’ என்னுதல். -ஸ்மரிப்பதும் கூட இல்லை என்றவாறு –
சொல் என்னும் சொல்லுக்கு சொல் அர்த்தம் இல்லாமல் நினைவு என்றவாறு -லஷணையால்
‘பின்னை, அவன்தான் இருக்கும்படி என்?’ என்னில்,
உணர்வின் மூர்த்தி – ஞானத்தையே வடிவாகவுடையவனாயிருப்பான்.-மூர்த்தி சப்தம் -ஸ்வரூப வாசி —
‘எல்லாம் செய்தாலும் இவற்றோடு உண்டான சேர்க்கை மெய்யாயிருக்க, இவற்றினுடைய தோஷம் தன்பக்கல்
தட்டாதபடியிருப்பான் என்னும் இது கூடுமோ?’ என்னில்,
ஆவி சேர் உயிரின் உள்ளால் ஆதும் ஓர் பற்றிலாத பாவனை அதனைக்கூடில் அவனையும் கூடலாம் –
1–உடலில் சேர்ந்திருக்கின்ற உயிரினிடத்து அந்தச் சரீரத்திற்கு உண்டான பால்யம் யௌவனம் முதலியவைகள் ஒன்றினாலும்
ஒரு சம்பந்தமும் இல்லையாம்படியாகச் சொல்லுகிற சொல்லானது அந்த ஆத்துமாவிற்குக் கூடாநின்ற பின்பு,
அப்பொருள் அவனையுங்கூடத் தட்டு இல்லை.-பாவனை -அனுசந்தானம்-
அன்றிக்கே, பின்னிரண்டு அடிகட்கு,
2– ‘அவன் பக்கல் பத்தி உண்டாகில் அவனைக் கிட்டலாம்’ என்றும்,
3–‘புறம்பே உள்ளவேறு உபாயங்களில் உண்டான பற்று முழுதையும் விட்டு, அவனையே பற்றில் அவனைக் கூடலாம்’ என்றும்,
4–‘மரண காலத்தில் நம்பிக்கை உண்டாகில் அவனைக் கூடலாம்’ என்றும்
வேறு வேறு வகையாகவும் பொருள் அருளிச்செய்வர்.
இவ்வுரை விகற்பங்களை எம்பெருமானார் கேட்டருளி, ‘முன்னிரண்டு அடிகளில் எங்கும் பரந்து நிறைந்திருத்தலை
அருளிச்செய்தாராதலின், இனி வியாபிக்கப்படுகின்ற பொருள்களினுடைய தோஷங்கள் எங்கும் பரந்து நிறைந்திருக்கிற
இறைவனுக்குத் தட்டமாட்டா என்னுமிடம் அவசியம் சொல்ல வேண்டும்;
ஆன பின்னர், இத்தையே சொல்லிற்றாக அமையும்,’ என்று அருளிச்செய்வர்.
‘இத்தையே சொல்லிற்றாக அமையும்’ என்றது,
‘சரீரத்துக்கு உண்டாகும் பால்யம், யௌவனம் முதலானவைகள் ஆத்துமாவைச் சாரமாட்டாத தன்மையைப் போன்று,
உடல் உயிர் என்னும் இவ்விரண்டின் தோஷங்களும் இறைவனைச் சாரமாட்டா என்னும் இதனையே சொல்லிற்றாக அமையும்,’என்றபடி.
பின் இரண்டு அடிகட்கு வேறு வகையாகக் கூறப்படும் மூன்று விதமான பொருள்களை அருளிச்செய்கிறார்.
‘அவன் பக்கல் பத்தியுண்டாகில் அவனைக்கிட்டலாம்’ என்றது, முதல் யோஜனை; பத்தி பரமாக அருளிச்செய்தது;
‘ஆத்துமாவோடு சேர்ந்திருக்கிற பரமாத்துமாவின் பக்கலிலே பத்தியானது உண்டானால், அந்தப் பரமாத்துமாவையும் கூடலாம்,’ என்பது
இதற்குப் பொருள்; இங்கு, ஆவி – உயிர்; உயிர் – பரமாத்துமா. பாவனை – பத்தி. ‘புறம்பேயுள்ள வேறு உபாயங்களில் உண்டான பற்று முழுதையும்
விட்டு, அவனையே பற்றில் அவனைக் கூடலாம்,’ என்றது,
இரண்டாவது யோஜனை; இது, பிரபத்தி பரமாக அருளிச்செய்தது; இங்கு யாதுமோர்பற்றிலாத பாவனையாவது,
வேறு உபாயங்கள் ஒன்றிலும் ஒரு சிறிதும் பற்று இன்றி இருக்கும் பாவனையாம்;
‘களைவாய் துன்பம் களையாதொழிவாய் களைகண் மற்றிலேன்’ என்றிருப்பது.
‘மரண காலத்தில் நம்பிக்கைஉண்டாகில் அவனைக் கூடலாம்’ என்றது, மூன்றாவது யோஜனை;
இது, அந்திம ஸ்மிருதி பரமாக அருளிச்செய்தது; இங்கு, யாதுமோர் பற்றிலாத பாவனையாவது,
வேறுபட்ட பொருள்கள் ஒன்றிலும் ஒரு சங்கமில்லாத அந்திம ஸ்மிருதியாகும்;
‘உயிர் உடம்பின் நீங்கும் காலத்து அதனால் யாதொன்று பாவிக்கப்பட்டது? அஃது அதுவாய்த் தோன்றும்,’ என்பது
எல்லா ஆகமங்கட்கும் துணிபாகலின், வீடெய்துவார்க்கு அக்காலத்துப் பிறப்பிற்கேதுவாய பாவனை கெடுதற்பொருட்டுக்
கேவலப் பொருளையே பாவித்தல் வேண்டும்: அதனான், அதனை முன்னே பயிறலாய இதனின் மிக்க
உபாயமில்லை என்பது அறிக,’ என்று பரிமேலழகருரை இங்கு ஒப்பு நோக்கலாகும்.-(திருக்குறள், 358.)
ஆக, ‘ஆதுமோர் பற்றிலாத’ என்பதற்கு, ‘அநுசந்தான பரமான போது சரீரத்திற்குண்டாகின்ற
பால்யம் முதலிய தோஷங்கள் ஒன்றிலும் ஒருசம்பந்தமில்லாத’ என்றும்,
பத்தி பரமான போது ‘பிரயோஜநாந்தரங்களில் பற்றில்லாத’ என்றும்,
பிரபத்தி பரமானபோது ‘உபாயாந்தரங்களில் பற்றில்லாத’ என்றும், அந்திம ஸ்மிருதி பரமான போது ‘வேறுபட்ட விஷயங்களில்
சங்கமில்லாத’ என்றும் நான்கு வகையாகப் பொருள் அருளிச்செய்யப்பட்டமை காணலாம்.
1-பாவனை -அனுசந்தானம் -ஜீவனுக்கு பல்யாதி கூடுமானால் அவனுக்கும் கூடுமே -வியாபித்தகாத தோஷம் தட்டாது என்பதே பிரமாணத்துக்கு சேரும் -எம்பெருமானார் –
2-பக்தி -பிரயோஜனாந்தர சங்கம் இல்லாமல் அவனை கூடலாம்
3-பிரபத்தி சாத்தனாந்தரங்களில் பற்று இல்லாமல் அவனை கூடலாம்
4-அந்திம ஸ்ம்ருதி கிடைத்தால் அவனை கூடலாம்

———————————————————————————

கூடிவண்டு அறையும் தண்தார்க்
கொண்டல்போல் வண்ணன் றன்னை
மாடுஅலர் பொழில் குருகூர்
வண்சட கோபன் சொன்ன
பாடல்ஓர் ஆயி ரத்துள்
இவையும்ஓர் பத்தும் வல்லார்
வீடுஇல போகம் எய்தி
விரும்புவர் அமரர் மொய்த்தே.–3-4-11-

பலமாக அவிச்சின்ன பகவத் அனுபவம்
கூடிவண்டு அறையும் தண்தார்க்-குளிர்ந்த மாலை-மது பான ப்ரீதியால் சப்திக்கும்
கொண்டல்போல் வண்ணன் றன்னை-நீல மேக சியாமளன்
மாடுஅலர் பொழில் குருகூர்-சுற்று புறம் எங்கும் அலர்ந்த பொழில்
வண்சட கோபன் சொன்னபாடல்ஓர் ஆயி ரத்துள்-இசை உடன் கூடிய அத்விதீயமான
இவையும்ஓர் பத்தும் வல்லார்-அசாதாரணத்வ விக்ரகம் போலே-அனைத்தும் -கூடி -அகில விபூதி பிரகாரத்தை
வீடுஇல போகம் எய்தி-அவிச்சின்னமான -பகவத் அனுபவம்
விரும்புவர் அமரர் மொய்த்தே.-நித்ய ஸூ ரிகள் மொய்ப்பார்கள் -3-4 பாகு ஒட்டிக் கொண்டு வந்தவர்கள்
-வண்டுகள் இனிய பதார்த்தம் மொய்ப்பது போலே -நித்ய கைங்கரியம் பெற்று -நித்யரால் விரும்பப் படுவார்கள் –

‘வண்டுகள் கூடி ஒலிக்கின்ற குளிர்ந்த மாலையைத் தரித்த காளமேகம் போன்ற நிறத்தையுடையவனை, சுற்றிலும் அலர்ந்த
சோலைகளையுடைய திருக்குருகூரில் அவதரித்த உதாரகுணத்தையுடைய ஆழ்வார் அருளிச்செய்த இசையோடு கூடின
ஒப்பற்ற ஆயிரம் திருப்பாசுரங்களுள் ஒப்பற்ற இப்பத்துத் திருப்பாசுரங்களையும் கற்க வல்லவர்கள் பிரிவில்லாத
பேரின்பத்தைப் பெற்று, அமரர்களால் மொய்க்கப்பட்டு விரும்பப்படுவார்கள்,’ என்றவாறு.
‘வல்லார் விரும்புவர்,’ என்க. விரும்புவர் – செயப்பாட்டு வினைப்பொருளது. ‘விரும்பப்படுவர்’ என்பது பொருள்.

‘இத்திருவாய்மொழி கற்றவர்கள் நித்திய கைங்கரியத்தைப் பெற்று, அயர்வறும் அமரர்களாலே விரும்பப்படுவார்கள்,’ என்கிறார்.

கூடி வண்டு அறையும் தண் தார் கொண்டல் போல் வண்ணன்றன்னை –
‘கிண்ணகத்திலே இழிவாரைப்போன்று வண்டுகளானவை திரண்டு தேனைக் குடித்து ஒலிக்கின்ற சிரமத்தைப் போக்குகின்ற
மாலையையும், சிரமத்தைப் போக்குகிற மேகம் போன்றிருக்கின்ற திருமேனியையுமுடைய சர்வேசுவரனை.
இத்திருப்பதிகத்தில் பரக்கச்சொன்ன விபூதி முழுதும், தோளில் தோள் மாலையைப் போன்று அவனுக்குத்
தகுதியாயிருக்கிறபடியைக் கண்டு கூறினேன்,’ என்பார், ‘வண்டு கூடி அறையும் தண்தார் கொண்டல்போல் வண்ணன்’ என்கிறார்.

மாடு அலர் பொழில் குருகூர் வண் சடகோபன் சொன்ன
பக்கங்களிலே அலர்ந்த சோலையையுடைய திருநகரிக்கு உரியவராய் வள்ளலாரான ஆழ்வார் அருளிச்செய்த.
பாடல் ஓர் ஆயிரத்துள் இவையும் ஓர் பத்தும் வல்லார் –
மலர்கள் மணத்தோடே மலருமாறு போன்று இசையோடு கூடின ஆயிரத்திலும் வைத்துக்கொண்டு இப்பத்தையும் கற்க வல்லவர்கள்.

வீடு இல போகம் எய்தி –
பிரிவின் ஐயம் ஒருநாளும் இல்லாத மோக்ஷ இன்பத்தையடைந்து.
அமரர் மொய்த்து விரும்புவர் –
அமரராலே மொய்த்து விரும்பப்படுவர்.
‘லீலா விபூதியை அவனுடைமை என்னும் தன்மையாலே அநுசந்திப்பார் நித்தியசூரிகளாகையாலே,
தாங்கள் அனுபவிக்கக்கூடிய அநுபவத்தை, ‘இவ்வுலகத்தே இருந்து வைத்தும் இப்படி இருப்பதொரு ஞானவிசேடம் பிறந்து அநுசந்திப்பதே!’ என்று
ஆழ்வார் பக்கல் பண்ணின பிரேமத்தின் மிகுதியாலே, அவருடைய பிரபந்தங்களைக் கற்றவர்களை,
சர்வேசுவரனை விட்டு இவர்களை நெருங்கி ஆதரிப்பார்கள் நித்தியசூரிகள் ஆதலின், ‘அமரர் மொய்த்து விரும்புவர்,’ என்கிறார்.

முதற்பாட்டில், இத்திருவாய்மொழியில் பரக்க அருளிச்செய்த அர்த்தத்தைச் சுருங்க அருளிச்செய்தார்;
இரண்டாம் பாட்டில், முதற்பாட்டில் சொன்ன ஐம்பெரும்பூதங்களினுடைய காரியத்தை முறையே பேசினார்;
மூன்றாம் பாட்டில், உலகமே உருவமாய் நின்ற நிலையோடே அசாதாரண விக்கிரகத்தைச் சேர்த்து அனுபவித்தார்;
நான்காம் பாட்டில், ‘ஒளி பொருந்திய மாணிக்கம் முதலிய பொருள்களை விபூதியாகவுடையவன்’ என்றார்;
ஐந்தாம் பாட்டில், ‘சுவைப்பொருள்களை விபூதியாக உடையவன் என்றார்;
ஆறாம் பாட்டில், ‘வேதம் தொடக்கமான இயலும் இசையுமான ஒலிகளின் கூட்டத்தை விபூதியாக உடையவன்’ என்றார்;
ஏழாம் பாட்டில், ‘செல்வம் முதலான புருஷார்த்தங்களை விபூதியாக உடையவன்’ என்றார்;
எட்டாம் பாட்டில், ‘உலகத்தில் பிரதானரான பிரமன் சிவன் முதலியோரை விபூதியாக உடையவன் என்றார்;
ஒன்பதாம் பாட்டில், அவனுடைய விபூதியின் விரிவைத் தனித்தனியே பேசமுடியாமையாலே
‘சேதன அசேதனங்களை விபூதியாகவுடையவன்’ என்று சுருங்க அருளிச்செய்தார்;
பத்தாம் பாட்டில், ‘இவற்றுக்கும் உள்ளுயிராய்ப் பரந்து நின்றாலும் அவற்றினுடைய தோஷங்களால் தீண்டப்படாதவன்’ என்றார்;
முடிவில், இது கற்றார்க்குப் பலஞ்சொல்லித் தலைக்கட்டினார்.

——————————————————-

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

சர்வம் ஜகத் -சம அவலோக்ய விபு சரீரம் -ஸமஸ்த லோகத்தையும் நோக்கி -அவன் சரீரமாகவே
தத் வாசினச்ய சாகலாம் அபி சப்த ராசி —வாஸ்யத்துக்கு வாசகம் –
பூத பௌதிக முகாம் கதாயன் பதார்த்தான் -முகாம் கதாயன் -பத அர்த்தமே அவனே
தாஸ்யம் சகாரச்ய-வாக் கைங்கர்யம் -தாஸ்யம் செய்தார் -என்கோ-
முனி சதுர்த்தே
சௌந்தர்யம் /கரண அபரிச்சேத்ய கல்யாண குண பௌஷ்கல்யம் /நிஸ் ஸீம சௌசீல்யம் /சர்வாத்மகத்வம் -குணங்கள்

———————————————————–

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –

பூதைகி -பஞ்ச பூதங்கள்
தத் கார்ய பூதைகி -அவற்றின் கார்யம் மாறி குன்றம்
சுப பிஜ வபுஷா -அசாதாரண விக்ரகம்
தீப்தி மத்ய பதார்த்த -தேஜோ பதார்த்தம்
பத்யார்த்த ஸ் வாது-ரஸா பதார்த்தம் – ஷாட் குண்யம் –
சுருதி முக சுப கானாதி -சப்தங்கள்
நாநா காரைகி புமர்த்தம் -புருஷனால் விரும்பப்படும் அர்த்தம் பொருள்கள்
ஜகத் அதிபதிகி -ப்ரஹ்மாதிகளும் விபூதி
சேதன அசேதன கூட்டம் -யாவையும் யாவரும் தானாய்
துஷ்டம் தோஷைர் அதுஷ்டம் -வியாபியா கத தோஷம் இல்லாமல் வியாபித்து தோய்விலன்
நிகில தனுதையா சம்பிரதாய சந்துஷ்டம்

———————————————————-

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 24-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்–

புகழ் ஓன்றும்மால் எப்பொருள்களும் தானே
நிகழ்கின்ற நேர் காட்டி நிற்க -மகிழ் மாறன்
எங்கும் அடிமை செய்ய இச்சித்து வாசிகமாய்
அங்கு அடிமை செய்தான் மொய்ம்பால் ———24-

———————————————————————————

அவதாரிகை –

கீழ் பாரித்த கைங்கர்யத்துக்கு அனுகுணமாக
அவன் சர்வாத்மபாவத்தைக் காட்ட
அத்தைப் பேசி அடிமை செய்த பாசுரத்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
கீழ்
இவர் அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்று பாரித்தபடியே
சர்வாத்ம பாவத்தைக் காட்டி அடிமை கொள்வதாக
ஒருப்பட்ட சர்வேஸ்வரனுக்கு
உத்யோக மாத்ரத்திலே வயிறு நிறையும் அவன் பிரக்ருதிக்கும்
வாசிகத்துக்கும் மேற்பட அடிமை செய்ய மாட்டாத தம் பிரக்ருதிக்கும்
சேர வாசிகமாக அடிமை செய்து தலைக் கட்டுகிற
புகழு நல ஒருவனில் -அர்த்தத்தை
புகழ் ஒன்றும் மால் -என்று துடங்கி அருளிச் செய்கிறார் –

————————————————————————————–

வியாக்யானம்–

புகழ் ஓன்றும் மால் –
கீழ்
எண்ணில் தொல் புகழ் வானவர் ஈசனாய் -3-3-3-
புகழு நல ஒருவன் –
என்று சர்வைஸ் ஸ்துதியனாமது சத்ருசமாய் சேரும்படியான
சர்வேஸ்வரன்
பொழில் ஏழும் காவல் பூண்ட படியாலே புகழும் பொருந்தி இருக்கும் இறே
அன்றிக்கே
இவரை அடிமை கொள்ளுகையால் வந்த
அந்தமில் புகழ் பொருந்தின -என்றுமாம் —

எப் பொருள்களும் தானே நிகழ்கின்ற நேர் காட்டி நிற்க –
சமஸ்த வஸ்துக்களும் தான் என்னும்படி
சர்வ சப்த வாச்யனாய் வர்த்திக்கிற
பிரகார பிரகாரி பாவத்தை பிரகாசிப்பித்துக் கொண்டு
இவருக்கு ஞான சாஷாத்காரம் ஆம்படி நிற்க –
அதாவது
பொருவில் சீர் பூமி என்கோ -என்று துடங்கி அருளிச் செய்த பூதங்கள்
குன்றங்கள் அனைத்தும் என்கோ மேவு சீர் மாரி என்கோ -என்றது துடக்கமான பௌதிகங்கள்
சாதி மாணிக்கம் என்கோ -இத்யாதியில் உஜ்ஜ்வலமான மாணிக்யாதிகள்
அச்சுதன் –அச்சுவைக் கட்டி என்கோ -இத்யாதியில் ரசத்வ பதார்த்தங்கள்
நான்கு வேதப் பயன் என்கோ சமய நீதி நூல் என்கோ
நுடங்கு கேள்வி இசை என்கோ -என்று
காநாதி சப்த ராசிகள் –
வானவராதி -இத்யாதியில் மோஷாதி புருஷார்த்தங்கள்
ஒளி மணி வண்ணன் -இத்யாதியில் ஜகத் பிரதானரான ப்ரஹ்ம ருத்ராதிகள்
இவற்றுக்கு அடைய காரணமான -யாவையும் யாவரும் தானே -என்கிற பிரகிருதி புருஷர்கள்
இவற்றை அடைய விபூதியாக யுடையனாய்
இவற்றிலே அந்தர்யாமியாக வியாபித்து
தோய்விலன் -என்று தத்கத தோஷ ரஹிதனாய் சம்ப்ருஷ்டனாய் இருக்கிறபடி –
சர்வம் சரீரம் தே ச்தைர்யன் தேவ ஸூ தாசலம்
அக்னி கோப பிரசாதாஸ் தேசோமஸ் ஸ்ரீ வத்ச லஷண -என்னும் படியே
இப்படி
புகழு நல ஒருவன் என்கோ பொருவில் சீர் பூமி என்கோ என்று துடங்கி
நான்முகக் கடவுள் என்கோ -என்னும் அளவும்
சகல வஸ்துக்களும் தான் என்னும் படி பிரகாரமாக
வர்த்திக்கிற பிரகாரியை காட்டிக் கொண்டு நிற்க –

மகிழ் மாறன் –
வகுள தரரான ஆழ்வார் –

எங்கும் அடிமை செய்ய இச்சித்து-
சர்வ தேச சர்வ கால சர்வ அவச்தைகளிலும்
திரு வேங்கட முடையான் திருவடிகளிலே
அடிமை செய்ய இச்சித்து –
வாசிகமாய் அங்கு அடிமை செய்தான்-
அப்படி ஆசைப்பட்ட அவ் விஷயத்திலே
என்கோ என்கோ -என்று வாசிகமாக அடிமை செய்தார் –

மொய்ம்பால் –
ய ஆத்மதாபலதா –
வலந்தரும்-
நிலைப்பெற்று என் நெஞ்சம் பெற்றது நீடுயிரே –
என்று அவன் தந்த ஆத்மபலத்தாலே சத்தை உண்டானால் இறே
சம்ருதியை அபேஷிப்பது-
மொய்ம்பு -மிடுக்கு-

கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு -என்றும்
வானோர்க்கும் மண்ணோர்க்கும் வெற்பனே -என்றும்
கண்ணா ஏழ் உலகுக்கும் உயிராய எம் கார் வண்ணனை
விண்ணோர் தாம் பரவும் பொழில் வேங்கட வேதியனை -என்றும்
தாய் தந்தை உயிர் ஆகின்றாய் –தொல் புகழ் உலகுக்கும் நாதனே-என்றும்
பரமா தண் வேங்கடம் மேகின்றாய் -என்றும்-
திரு வேங்கடத்தானுக்கு என் கண் பாசம் வைத்த பரஞ்சுடர் சோதிக்கு -என்றும்
அம்பரம் -இத்யாதியாலும்
அவனுடைய
உபய விபூதி நிர்வாஹகத்வத்தையும்
அந்தர் வ்யாப்தியையும்
சர்வ கால வர்த்தித்வத்தையும்
அருளிச் செய்கையாலே
வ்யாப்த அனுசந்தான ரூப வாசா கைங்கர்யம் –
திரு வேங்கடத்து என்னானை என்னப்பன் எம்பெருமானுக்கே இறே ஏற்றி இருப்பது
அத்தைப் பற்றி இறே
அங்கே அடிமை செய்தான் -என்று இவர் அருளிச் செய்தது –

——————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: