பகவத் விஷயம் காலஷேபம் -72- திருவாய்மொழி – -3-4-1….3-4-5–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

கீழே – ‘ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம்,’ என்று அடிமை செய்யப் பாரித்தார்;
இவர் பாரித்த பாரிப்புக்கெல்லாம் போரும்படி ஈசுவரனும் தன்னுடைய சர்வாத்தும பாவத்தைக் காட்டிக் கொடுத்தான்;
அதனை அநுசந்தித்துச் சொற்களைக்கொண்டு அடிமை செய்கிறார் இத்திருவாய்மொழியில்.

சர்வ பிரகாரத்வம் சொல்லும் திருவாய் மொழிகள் -புகழு நல் ஒருவன் என்கோ 3-4/–நல் குரவும் செல்வமும் -6-3/மாயா வாமனனே -7-8-
‘பேதம் -தது தது பிரகரணங்களுக்கு சேர –இங்கே அனைத்து கைங்கர்யங்களையும் கொள்வதற்கு
சர்வாத்மா பாவம் -இங்கு -சரீரம் எல்லாம் பிரகாரம் -பிரகாரம் எல்லாம் சரீரம் இல்லை -புஷ்பம் -மணம் -பிரகாரம்-சரீரம் இல்லை
இங்கே இரண்டு சப்தங்களையும் வைத்து அருளிச் செய்கிறார் -அப்ருதக் சித்த விசேஷணம் பிரகாரம் –
ஸூ வியதிரிக்த -தான் அந்தராத்மா பாவம் இருப்பதைக் காட்டிக் கொடுத்தான் -என்கோ-சொல்லுவேனா -வாசிக கைங்கர்யம் –
சகலவித கைங்கர்யம் கேட்டு இதுதானா –

“உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்யவேண்டும்,’ என்று பாரித்த இவர், சொற்களை மாத்திரம் கொண்டு
அடிமை செய்வான் என்?’ எனின், இருவரும் இலையகலப் படுக்குமித்தனை போக்கி–ந ச இச்ச்யதி மாதவ- அவனும் அடிமை கொள்ளமாட்டான்; –
‘கேட்டேயும் -காலாழும்நெஞ்சு அழியும் கண்சுழலும்’ என்னும் தன்மையராய் இவரும்.-இவரும் செய்ய மாட்டார் –
இலையகலப்படுக்குமித்தனை’ என்றது, ‘உணவு உண்பதற்கு இடப்பட்ட இலையை மிகப் பெரிதாக இடவேண்டும் என்று நினைத்தல் இத்தனை’ என்றபடி.
அகலப்படுத்தல் – விரிவுபடுத்துதல்; ‘பெரிய இலையாக இருத்தல் வேண்டும்’ என்றபடி.
இவரும் அடிமை செய்யமாட்டார்; ‘ஜனார்த்தனன் ஒன்றையும் விரும்புவது இல்லை,’ என்கிறபடியே,
-அந்ய குசல பிரச்னம் -ந ச இச்ச்யதி மாதவ -விதுரன் -சஞ்சயன் -சொன்னதாகவும் உள்ளது–இரண்டு வித மஹா பாரதம் மா முனிகள் காலத்திலேயே –
விதுரன் சொல்வதாக இவர் இடம் உள்ள மஹா பாரதம் -பூர்வர்கள் சஞ்சயன் சொன்னதாக சொல்வார்கள் என்கிறார் -அவரே
எளிய முறையில் ஆராதிக்கத் தக்கவனாய் இத்தலையில் பெற்றது கொண்டு மனம் நிறைவு பெறுமவனே அவ்விறைவன்;-பூர்தியைப் பற்ற –
‘புனையும் கண்ணி எனதுடைய வாசகஞ்செய் மாலையே;-திரு வாய் மொழியே – வான் பட்டாடையும் அஃதே,’ என்கிற
இவருடைய சொல் அளவையே எல்லாமாகக் கொள்ளும் தன்மையனே யன்றோ அவ்விறைவன்-உக்தி மாதரத்தை எல்லாவாகமாகவே கொள்பவன் அவன் –
இவருடைய காதல்தானே ‘ஆராத காதலே’ அன்றோ? இவருடைய பாரிப்புக்குத் தகுதியாக அவன்
சர்வாத்தும பாவத்தைக் காட்டிக்கொடுத்த இடத்தில் அடிமை செய்கையின்றியே’, அவனுடைய குணங்களை அநுசந்தித்து
நிலை குலைந்த அந்தக் கரணங்களை உடையராய் ‘கேட்டேயும் -காலாழும்நெஞ்சு அழியும் கண்சுழலும்’ என்னும் தன்மையராய் இவரும்.

நான் ஷூத்ர சம்சாரி -அவாப்த சமஸ்த காமன் -என்னுடைய பாரிப்பு ஏற்று -எங்கும் பரந்து வியாபித்து –
தனக்காக இப்பொழுது தான் -சர்வாத்மா பாவம் கொண்டதாக -எண்ணி காலாழும் நெஞ்சு அழியும் கண்சுழலும்’
அப்படி என்றால் வாசிக கைங்கர்யம் எவ்வாறு பண்ணினார் –மனஸ் நினைத்து தானே வாய் பாட வேண்டும் -மநோ பூர்வோ வாக் உத்தர –
முடியானாலே -கரணங்கள் அனைத்தையும் விரும்புமே –
ஸூ வாரதனே யாகிலும் -இவர் பக்கல் சிறிதாகிலும் வேண்டுமே -இவர் கிஞ்சிதவாறே எல்லாமாகவே கொண்டான் அவன்
-தாய் குழந்தை மழலை சொல் போலே -அவன் ப்ரீதியைக் கண்டு இவரும் எல்லாம் செய்ததாக இவரும் மகிழ்ந்தார்
அதீத காதல் கொண்டவன் இவர் கிஞ்சித் செய்ததையும் பெரியதாக கொண்டு மேலே செய்ய விடாமல் இருப்பானே
அதனால் அனைத்து கைங்கர்யங்களையும் பாரித்தபடியே செய்து முடித்தார் என்றவாறு –
இத் திருவாய்மொழியில் -பிரதிபாதிக்கப்படும் -விபூதி யோகமும் -சமா நாதி கரண்யமும் -அலமாப்பும் சம்சயமும் –
பொருவில் சீர் பூமி -விபூதி -சமா நாதி கரண்யம் -என்கோ -அலமாப்பும் சம்சயமும் —

அவன் சொரூபத்தோடு குணத்தோடு விபூதியோடு செயல்களோடு வேறுபாடு இல்லாமலே எல்லாம் உத்தேஸ்யமாய் இருக்கின்றது இவர்க்கு;
‘இறைவனுடைய குணங்களுக்கும் விபூதிக்கும் இவர்க்கு வேற்றுமை இல்லை,’ என்பது கருத்து.
அவனைச் சார்ந்து விட்டுப் பிரியாமல் -அப்ருதக் சித்த விசேஷணம்-பிரகாரம் – என்பதால் இவற்றுக்கு சாம்யம் உண்டே –
அவை தம்மைக் கண்ட கண்ட இடங்களில் -தனித்தனி -வையதிரண்யத்தில் -அனுபவிக்கை யன்றிக்கே, மாணிக்கத்தையும் வயிரத்தையும்
முத்தையும் ஓர் ஆரத்திலே சேர்த்து அனுபவிப்பாரைப் போலே அவற்றை அடைய அவன் பக்கலிலே-சமா நாதி கரண்யத்தில் – சேர்த்து அனுபவிக்கிறார்.
அன்றியே,
‘குணங்களுக்குப் பிரித்து நிலையுதலாதல் தோன்றுதலாதல் இல்லையாமாறு போன்று, விபூதிக்கும் அவனை ஒழிய
நிலையுதலாதல் தோன்றுதலாதல் இல்லாமையாலே, சேர்த்து அனுபவிக்கிறார்,’ என்னுதல்;
அன்றியே,
‘முத்தனுக்கு லீலா விபூதியும் ததீயத்வ ஆகாரத்தாலே அனுபவிக்கப்படும் பொருள் ஆகா நின்றதே யன்றோ?
அத் தன்மையாலே அனுபவிக்கிறார்,’ என்னுதல்.
‘ஆயின், முத்தன் ‘இச்சரீரத்தை நினையாமலே நான்கு பக்கங்களிலும் சஞ்சரிக்கின்றான்,’ என்று கூறப்பட்டுள்ளதே?’ எனின்,
அவ்விடத்தில் கர்மம் காரணமான உருவத்தை நினையான் என்கிற இத்தனையேயாம்.
ஆக, கர்மங்காரணமான உருவம் நினைவிற்கு விஷயம் ஆகாதபடியான பாகம் பிறந்தால், எல்லாம் அவனுடைய பொருள்
என்றே தோன்றி, எல்லாம் ஒக்க அனுபவிக்கப்படும் பொருளாகவே இருக்கும். இவர்க்கு அவன் குணங்களோடு விபூதியோடு
வேற்றுமை அற அனுபவிக்கப்படும் பொருளாகும்படியன்றோ மயர்வற மதிநலம் அருளிற்று?
கர்மம் காரணமான நினைவு பின் நாடாதபடியன்றோ இவர்க்கு ஈசுவரன் வெளிச்சிறப்புப் பண்ணிக்கொடுத்தது?-வெளிச்சிறப்பு – ஞானம்.

‘நன்று; இவ்விபூதிதன்னிலே ‘எண்ணாத மானிடத்தை எண்ணாதபோது எல்லாம் இனியவாறே,’ என்று சிலரைச்சொல்லி,
‘பேராளன் பேரோதும் பெரியோரை ஒரு காலும் பிரிகிலேனே,’ என்று ஒரு சிலரை மறக்கவொண்ணாதபடியாகவும் சொல்லா நின்றதே?’ எனின்,
ஞானம் பிறந்த நிலையிலே இருக்கும்படியாயிற்று இது; பிராப்தி சமயத்தில் வந்தால், இவ்வேறுபாடின்றி எல்லாம் ஒக்க
அனுபவிக்கப்படும் பொருளாகவே இருக்கும். எல்லாம் ஈசுவர விபூதியாக இருக்கச்செய்தேயன்றோ சிலரைப்
‘பொல்லாத தேவரைத் தேவரல்லாரைத் திருவில்லாத் தேவரைத் தேறேன்மின் தேவு’ என்கிறது?
இங்ஙனம், அவ்வந்நிலைகள் காரணமாக விஷயங்களைப் பாகுபாடு செய்யாதொழியின், சாஸ்திரங்கள் எங்கும் ஒக்கச் சேரக் கிடக்கும்படி
பார்க்கும் போது நின்ற நின்ற நிலைகளிலே ஹேய உபாதேய விபாகம் பண்ணி அநுசந்திக்க வேண்டி வருமேயன்றோ?

இவர்க்கு, இறைவன் தன் ஸ்வரூப குண விபூதி சேஷ்டிதங்கள் முதலானவைகளை அடையக் காட்டிக்கொடுக்கக் கண்டு,
விபூதி காரணமான பூதங்கள் பௌதிகங்கள் அவற்றில் பிரகாசிக்கின்ற மாணிக்கம் முதலானவைகள் சுவைப்பொருள்கள்
செவிக்கு இனிய இசை முதலானவைகள் மோக்ஷம் முதலான புருஷார்த்தங்கள் இவ்வுலகிற்குப் பிரதானரான பிரமன் முதலானோர்
இவற்றுக்கு அடையக் காரணமான பிரகிருதி புருஷர்கள் ஆகிய இவை முழுதினையும் விபூதியாகவுடையனாய் இவற்றினுள்ளே
அந்தராத்துமாவாய் அநுப்பிரவேசித்து இவற்றோடே கலந்து நிற்கச் செய்தேயும் இவற்றினுடைய தோஷங்கள் தீண்டப்படாதவனாய்,
’ஈசுவரன் தான் கர்மபலத்தைப் புசியாமல் மிக அதிகமாகப் பிரகாசிக்கிறான்,’ என்கிற பிரமாண பலத்தாலே இவ்வாத்துமாவுக்கு
வரக்கூடியதான இன்ப துன்பம் முதலானவைகள் தன்பக்கல் தட்டாதபடி நிற்கையன்றிக்கே, எல்லாப் பொருள்களையும் ஏவுகின்ற
தன்மையால் வந்த புகரையுடையவனுமாய், விபூதியில் அவ்வப்பொருள்கட்கு வாசகமான சொற்கள் அசித்தையும் அசித்தாலே
அபிமானத்தையுடைய ஆத்துமாவையும் காட்டுகிற கணக்கிலே அவற்றுக்குள் அந்தர்யாமியாய் இருக்கிற பரமாத்துமாவையும்
காட்டி இக்கூட்டத்துக்குப் பெயர்களாய் அவன் பக்கலிலே முடிவு அடைந்திருக்கையாலே அசாதாரணமான நாராயணன் முதலான
சப்தங்களோடு வேற்றுமை அற எல்லாச் சொற்களும் அவனையே சொல்லுகின்றன வாயிருக்கிறபடியையும்,
இவ் விபூதிதான் புறம்பாய் விஞ்சிக் காட்டுகையன்றிக்கே தோளில் கிடக்கின்ற தோள் மாலையைப்போன்று தகுதியாய்
அனுபவிக்கப்படும் பொருள்களிலே அடங்கியிருக்கிறபடியையும் அநுசந்தித்துப் பேறு பெற்றாராய்ப் பாரித்தபடியே
எல்லா அடிமையும் செய்யமாட்டாமையாலும், அவன்தான் ‘கோவை வாயாள்’ என்ற திருவாய் மொழியிற் கூறியபடியே,
ஒன்றையே எல்லா அடிமையுமாகக் கொள்ளும் தன்மையனாதலானும், சொற்களைக் கொண்டு செய்கிற அடிமையிலே இறங்கியவராய்,
மஹா வாதத்திலே பலோபாதாநம் பண்ணுவாரைப் போன்று ‘அத்தைச் சொல்லுவேனோ, இத்தைச் சொல்லுவேனோ!’ என்று இங்ஙனம் அலமருகிறார்.

‘என்கோ!’ என்பது ஐயப்பொருளதாதலின், அதனை உதாரண முகத்தால் விளக்குகிறார், ‘மஹாவாதத்திலே பலோபாதாநம் பண்ணுவாரைப் போன்று’என்று.
மஹாவாதம் – பெருங்காற்று; பல உபாதாநம் – பழங்களைச் சேகரித்தல். என்றது, பெருங்காற்று அடிக்கின்ற காலத்தில் மரங்களினின்றும் கீழே விழுந்து
சிதறிக்கிடக்கின்ற பழங்களை எடுக்கின்றவர்கள் ‘இதனைஎடுப்போமா, அதனை எடுப்போமா!’ என்று மனம் சுழன்று அலைவதுபோன்று’ என்றபடி.

இத்திருவாய்மொழியில், முதற்பாசுரத்தை நோக்கி, ‘விபூதி காரணமான பூதங்கள்’ என்கிறார்.
இரண்டாம் பாசுரத்தைத் திருவுள்ளம் பற்றிப்‘பௌதிகங்கள்’ என்கிறார்.
நாலாம் பாசுரத்தில் முதலிரண்டு அடிகளைத் திருவுள்ளம் பற்றி, ‘அவற்றில் பிரகாசிக்கின்ற மாணிக்கம் முதலானவைகள்’ என்கிறார்.
ஐந்தாம் பாசுரத்தில் ‘நலங்கடல் அமுதம்’ என்பதுமுதலானவைகளைத் திருவுள்ளம் பற்றிச் ‘சுவைப்பொருள்கள்’ என்கிறார்.
ஆறாம்.பாசுரத்தில் ‘நுடங்கு கேள்வி இசை என்கோ’ என்றதனைத் திருவுள்ளம் பற்றிச் ‘செவிக்கினிய இசை முதலானவைகள்’ என்கிறார்.
ஏழாம் பாசுரத்தைத் திருவுள்ளம் பற்றி, ‘மோக்ஷம் முதலான புருஷார்த்தங்கள்’ என்கிறார்.
எட்டாம் பாசுரத்தைத் திருவுள்ளம் பற்றி, ‘இவ்வுலகிற்குப் பிரதானரான பிரமன் முதலானோர்’ என்கிறார்.
‘யாவையும் எவரும் தானே’ என்றதனைத் திருவுள்ளம் பற்றி, ‘இவற்றுக்கு அடையக் காரணமான பிரகிருதி புருஷர்கள்’ என்கிறார்.
‘யாவையும் எவரும் தானாய்’ என்றதனைத் திருவுள்ளம் பற்றி, ‘இவை முழுதினையும் விபூதியாகவுடையனாய்’ என்கிறார்.
‘தோய்விலன்’என்றதனைத் திருவுள்ளம் பற்றி, ‘இவற்றினுடைய தோஷங்கள் தீண்டப்படாதவனாய்’ என்கிறார்.
‘எல்லாப் பொருள்களையும் ஏவுகின்ற தன்மையால் வந்த புகழையுடையவனுமாய்’ என்றது, ‘தோய்விலன்’ என்றதன் பொருள் ஆற்றலால் போந்த பொருள்.
‘கண்ணனை, சங்கு சக்கரத்தன்’முதலான அசாதாரணமான பெயர்களோடு விபூதியில் அவ்வப்பொருள்கட்குச் சாமாநாதி கரண்யம்
சொல்லுகைக்கு ஏதுவை அருளிச்செய்கிறார்,
‘விபூதியில் அவ்வப் பொருள்கட்கு’ என்று தொடங்கி. வாசகமான சொற்கள் – தேவர்கள், மனிதர்கள் முதலான சொற்கள். பதினோராம் பாசுரத்தைத்
திருவுள்ளம் பற்றித் ‘தோளில் கிடக்கின்ற தோள் மாலையைப் போன்று’ என்கிறார்.

ஆக, இத்தால், ‘வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம்’ என்று தாம் பாரித்தபடியே அடிமைசெய்து தலைக்கட்டுகிறார்.
முன்னர்க்கூறிய ‘புனையுங் கண்ணி எனதுடைய வாசகஞ் செய்மாலையே’ என்றதனையும், ‘இவருடைய காதல்தானே ஆராத காதலேயன்றோ?’
என்றதனையும் மீண்டும் அநுவதிக்கிறார், ‘பாரித்தபடியே’ என்று தொடங்கி.

——————————————————–

புகழும் நல் ஒருவன் என்கோ!
பொரு இல் சீர்ப் பூமி என்கோ!
திகழும் தண் பரவை என்கோ
தீ என்கோ! வாயு என்கோ!
நிகழும் ஆகாசம் என்கோ!
நீள் சுடர் இரண்டும் என்கோ!
இகழ்வு இல் இவ் வனைத்தும் என்கோ!
கண்ணனைக் கூவு மாறே.—————–3-4-1—

அனைத்துமே அவன் -எப்படிக் கூப்பிடுவேன் -அத்வைதி போலே இல்லை -விசேஷணங்கள் இல்லை என்பவர்கள் அவர்கள் –
பஞ்ச பூதங்களும் அவனே -மேலே பௌதிகங்களும் அவனே -சகல பிரகாரத்தை சங்க்ரஹமாக -அருளிச் செய்கிறார்
அப்ருதக் ஸ்திதி -பிரியாமல் சார்ந்தே இருக்கும் –
புகழும் நல் ஒருவன் என்கோ!-வேதியர் வைதிக புருஷர் புகழும் -கூடி இருக்கும் அத்விதீயன் விசிஷ்டமான விசேஷ்யம்
குண விக்ரக விபூதிகள் இல்லை என்பர் அத்வைதிகள்
விசேஷணங்கள் -கூடியே -இருக்கும் அத்விதீயன் –
பொரு இல் சீர்ப் பூமி என்கோ!–ஒப்பு இல்லாத சீர்மை -தாங்கும் சீர்மை
திகழும் தண் பரவை என்கோ-பிரசன்ன ஔஜ்வலம் -சீதள -ஜலராசி
தீ என்கோ! வாயு என்கோ!-ஜாட்யம் நிவர்தகமான -அறியாமை இருள் -அக்னி –
திகழும் ஆகாசம் என்கோ!
நீள் சுடர் இரண்டும் என்கோ!-சந்திர சூர்யன்
இகழ்வு இல் இவ் வனைத்தும் என்கோ!-குறைவு இல்லாத -ஒன்றையும் விடாமல் என்றுமாம் -எல்லாமும் என்பேனோ
உபாதேயம் -அனைத்தும் உத்தேச்யம் -அவனுக்கு சரீரம் என்பதால் –
கண்ணனைக் கூவு மாறே.-சர்வாத்ம பிரகாசகன் -சொல்லும் பிரகாரம் அறியேன் அனைத்தைக்கும் ஆத்மா -ஸ்வரூபேண ஒரே தத்வம் அத்வைதி

‘எல்லாப் பொருள்கட்கும் உள்ளுயிராய் நிற்கும் கண்ணபிரானைக் கூறும் விதம், புகழப்படுகின்ற குணங்களை யுடைய ஒப்பற்றவன் என்பேனோ!
ஒப்பில்லாத சிறப்பையுடைய பூமி என்பேனோ! விளங்குகிற குளிர்ந்த கடல் என்பேனோ! தீ என்பேனோ! காற்று என்பேனோ!
உளதாகின்ற ஆகாசம் என்பேனோ! மிக்க ஒளியையுடைய இரண்டு சூரிய சந்திரர்கள் என்பேனோ! கொள்ளத் தக்கதாக இருக்கின்ற
இப்பொருள்கள் எல்லாம் என்பேனோ! யாது என்பேன்?’ என்கிறார்.
‘நல்’ என்பது, குணங்களுக்கு ஆகுபெயர். ஓகாரங்கள், ஐயத்தின்கண் வந்தன. ‘நாடன் என்கோ, ஊரன் என்கோ,
பாடிமிழ் பனிக்கடல் சேர்ப்பன் என்கோ, யாங்ஙனம் மொழிகோ ஓங்குவாட் கோதையை.’ (புறம். 49)’
சொல்லென்கெனோ, முழுவேதச் சுருக்கென்கெனோ, எவர்க்கும் நெல்லென்கெனோ, உண்ணும் நீரென்கெனோ,
மறை நேர் நிறுக்கும் கல்லென்கெனோ, முதிர் ஞானக்கனி என்கெனோ, புகல வல்லென்கெனோ
குருகூர் எம்பிரான் சொன்ன மாலையையே.’ (சடகோபரந். 19) என்ற இடங்களிலும் ஓகாரம் ஐயப்பொருளில் வந்துள்ளமை காணலாகும்.

இத்திருவாய்மொழி அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்.

அவனுடைய குணங்களையும் விபூதி காரணமான ஐம்பெரும்பூதங்களையும் சேரப்பிடித்து,
இத்திருவாய் மொழியில் மேல் விரிவாகச் சொல்லப்படும் அர்த்தத்தையெல்லாம் சுருக்கமாக அருளிச்செய்கிறார்.

புகழும் நல் ஒருவன் என்கோ –
1–‘உயர்வற உயர்நலம்’ தொடங்கி இதுகாறும் தாம் அனுபவித்த குணங்களை யடைய ஒரு சொல்லாலே ‘புகழும் நல் ஒருவன் என்கோ’ என்கிறார்.
2– இனி, ‘சுருதி ஸ்மிருதி இதிகாசம் முதலானவைகளெல்லாம்
கையெடுத்துக் கூப்பிடாநின்றுள்ள வேறுபட்ட சிறப்பையுடையனான ஒத்தாரை மிக்காரை இலையாய புருஷன் என்பேனோ!’ என்னுதல்;
3– இனி, ‘புகழும் என்கோ, நல் என்கோ, ஒருவன் என்கோ’ எனத் தனித்தனியே கூட்டி,
‘எல்லாராலும் நன்றாகப் புகழப்படுமவன் என்பேனோ! நல்ல ஆனந்தம் முதலிய குணங்களையுடையவன் என்பேனோ!
சமாயப்திக தரித்திரன் –ஒத்தாரை மிக்காரை இலையாய அரியவன் என்பேனோ!’ என்னுதல்.
ஆக, குணத்தின் சேர்க்கையால் வந்த வேறுபட்ட சிறப்பினைச் சொல்லி, மேல் விபூதியைச் சொல்லுகிறார்:
‘ஆயின், குணங்களோடு சேர விபூதியைச் சொல்லு வான் என்?’ எனின்,
‘முடிச்சோதி யாயுனது முகச்சோதி மலர்ந்ததுவோ!’ என்று திருமுகத்தினழகையும் திருமுடியினழகையும் சேர்த்து அனுபவித்தது போன்று,
குணங்களுக்கும் செல்வங்களுக்கும் உண்டான சேர்த்தியாலே குணங்களோடு ஒக்கச் செல்வத்தையும் சேர்த்து அனுபவிக்கிறார்.

1-குணம் ஜாதி -வியக்தி விட்டு பிரியாது –கோத்வம் போலே -/ குண்டலம் -த்ரவ்யம் -பிரியுமே -பிரித்து ஸ்திதி உண்டே இதற்கு
சௌலப்யம் -குணம் பிரியாது அறிவோம் –பிருத்வி -த்ரவ்யம் -பிரியாமல் இருக்குமோ சங்கை வருமே -இவற்றின் ஸ்திதி அவனாலே தானே
2-சமா நாதி கரண்யம் இருப்பதால்
3-ஸ்வரூப ருப குண விபூதி -சேர்த்து படிப்பதால்
4-சேர்த்தி -ஆஸ்ரயித்து பெருமை சேர்க்கும் –
5-ஜன்ய ஜனக பாவம் -குணங்கள் -தாய் -படைக்கப் பட்டதால் தானே விபூதி -காருணிகன் நீர்மையால் அருள் செய்தான் -யௌகபத்யம் அனுக்ரகத்தால்
6-ததீயத்வ ஆகாரத்தால் இனிமையாய் எல்லாம் இருக்குமே

பொரு இல் சீர்ப் பூமி என்கோ-
ஒப்பில்லாத பொறுமை முதலிய குணங்களையுடைய பூமி என்பேனோ!
இனி, ‘பூமி திருவடியிலே பிறந்தது’ என்கிறபடியே பூமி அடியிலே பிறந்துடையது ஒன்று ஆகையாலே ‘பொரு இல் சீர்ப்பூமி’ என்கிறார் என்னுதல்.
‘பொருவில் சீர்ப்பூமி’ என்பதற்குக் கூறும் பொருள் வகை இரண்டனுள் முதற்பொருளில், ‘பொரு இல்’ என்பது, சீர்க்கு அடை;
இரண்டாவது பொருளில், பூமிக்கு அடை.-ஆகாசம் -தலையில் -திருவடிகளில் பூமி திசைகள் காதில் இருந்து தோன்றின புருஷ ஸூக்தம்

திகழும் தண் பரவை என்கோ-
காரணத்தின் அடியாக வந்த புகரையுடைத்தாய்ச் சிரமத்தைப் போக்குகிற தண்ணீர் என்பேனோ!
மேற்கூறிய பூமியானது வன்மையாயிருப்பது ஒன்றாதலின், அந்தப் பூமியைக் காரியங்கொள்ளும்போது வன்மையை
நெகிழ்த்துக்கொள்ள வேண்டுமன்றே? அந்த வன்மையை நெகிழ்த்துக்கொடுப்பது தண்ணீராதலின், அதன் பின்னர்த் தண்ணீரை அருளிச்செய்கிறார்.
தீ என்கோ
-மேல் நோக்கி எரிகின்ற நெருப்பு என்பேனோ! அந்நெகிழ்ச்சி காரியங்கொள்ளவொண்ணாத அளவானால்,
அந்நெகிழ்ச்சியை வலிக்கப் பண்ணித் தருவது தீ ஆதலின், தண்ணீரின் பின் தீயை அருளிச்செய்கிறார்.அக்நி -தேஜோ பதார்த்தம் -என்றுமாம் –

வாயு என்கோ –
காற்று என்பேனோ! அந்நெருப்பு உறைத்தால் அதனை ஆற்றச்செய்வது காற்று ஆதலின்,
தீயின் பின் காற்றினை அருளிச்செய்கிறார்.
நிகழும் ஆகாசம் என்கோ-
எல்லார்க்கும் மூச்சு விடுகைக்கு இடம் தருகின்ற ஆகாசம் என்பேனோ!
இனி, நிகழுதல் – உள்ளதாதல்; அதாவது, ‘இவ்வருகில் நான்கு பூதங்களும் அழிந்து தன் பக்கல் வருமளவும் உளதாயிருத்தல்’ என்றாதல்;
அன்றியே, ‘பொருள்களெல்லாம் தன் பக்கலிலே தங்கியிருக்கும்படி இடங்கொடுத்தல்’ என்றாதல்.-திட விசும்பு
ஆக, காரணமான ஐம்பெரும்பூதங்களையும் அருளிச்செய்தார்.
நீள் சுடர் இரண்டும் என்கோ –
காரியமான கூட்டத்துக்கு அடைய உபலக்ஷணமாகச் சந்திர சூரியர்களைச் சொல்லுகிறார்.
′இவற்றின் நீர்க்களிப்பையறுக்கைக்கும் தாபத்தை ஆற்றுகைக்கும் படைத்த சந்திர சூரியர்களைக் கூறுகின்றார்,’ என்றபடி.
நீர்க்களிப்பை அறுத்தற்குப் படைத்த சூரியன்’ என்றும், ‘தாபத்தை ஆற்றுகைக்குப் படைத்த சந்திரன்’ என்றும் கூட்டிப் பொருள் கொள்க.
நீர்க்களிப்பு – நீரால் உண்டாய பசை.
திண் சுடராழி யரங்கேசர் திக்குத் திருச்செவியில் மண் கழலில் சத்ய லோகம் சிரத்தில் மருத்துயிரில்
தண் கதிர் உள்ளத்தில் வானுந் துயில் செந் தரணி கண்ணில் ஒண் கனலிந்திரன் வாழ் முகப் போதி லுதித்தனரே.’-,(திருவரங்கத்து மாலை, 8.)

இகழ்வு இல் இவ்வனைத்தும் என்கோ –
ஒன்று ஒழியாமே எல்லாம் என்பானோ!
‘எல்லாப் பூதங்களுக்கும் காரணமான வித்து யானே; என்னை அன்றிச் சராசரங்கள் இல்லை,’ என்றான் இறைவனும்.
இனி, இவைதாம் சில பொருள்களாகத் தோன்றுகை யன்றிக்கே அவனுடைய -விபூதியாக -செல்வமாகத் தோன்றுகையாலே,
விடத்தக்கது ஒன்றுமின்றிக் கொள்ளத்தக்கனவாகவே இருத்தலின், ‘இகழ்வு இல்’ இவ்வனைத்தும்’ என்கிறார் என்னுதல்.
அப்ரஹ்மாத்வ தத்வமே இல்லையே -அனைத்தும் அவனுக்கு சரீரம் –
‘இகழ்வில்’ என்பதற்கு, ‘ஒன்றும் ஒழியாமல்’ என்றும், ‘இகழ்ந்து தள்ளப்படாத’ என்றும் இரு வகையான பொருள் கொள்க-
கண்ணனைக் கூவுமாறு –
கண்ணனைச் சொல்லும் வகை. ‘கண்ணனைக் கூவுமாறு’ என்பதனைப் ‘புகழும் நல் ஒருவன் என்கோ!’ என்பது
முதலானவற்றோடு தனித்தனியே கூட்டுக.
‘அவனுக்கேயுரிய நாமத்தையிட்டுக் கண்ணனைக் கூவவொண்ணாதோ? ‘பூமி’ என்பான் என்?’ எனின்,
அருச்சுனன், ‘ஏ கிருஷ்ண’ என்றத்தோடு தாம் ‘பொரு இல் சீர்ப் பூமி’ என்றத்தோடு ஒரு வேற்றுமையற்று இருக்கிறதாயிற்று இவர்க்கு.
கறுப்புத் தன்மையும் பூமியும் அவன் இடமே தான் -குணம் இருப்பதை எளிதாக ஏற்றுக் கொள்கிறோம் -வியக்தி விட்டு இதுவும் பிரியாதே –

—————————————————————–

கூவுமாறு அறிய மாட்டேன்,
குன்றங்கள் அனைத்தும் என்கோ!
மேவு சீர் மாரி என்கோ!
விளங்கு தாரகைகள் என்கோ!
நாவியல் கலைகள் என்கோ!
ஞான நல் ஆவி என்கோ!
பாவு சீர்க் கண்ணன் எம்மான்
பங்கயக் கண்ண னையே.–3-4-2-

உக்தமான பூதங்கள் உடைய கார்ய விசேஷத்தை அருளிச் செய்கிறார்
பூமியின் கார்யம் -அதே வரிசை –
பாவு சீர்க் கண்ணன் எம்மான்
பங்கயக் கண்ண னையே கூவுமாறு அறிய மாட்டேன்,-நேராக கூப்பிட்டு விட்டு முடியாது என்று தெளிவாக சொல்கிறார்
பரந்த குணா விபூதி -கண்ணன் -எனக்கு சுலபன் -கண் அழகாலே என்னை தோற்பித்துக் கொண்ட ஸ்வாமி
குன்றங்கள் அனைத்தும் என்கோ!-கடிந்யம் -பூமியின் கார்யம் –
மேவு சீர் மாரி என்கோ!-ஜீவனத்வ -ரூபம் -நீரின் கார்யம் -மேவி -நல்லது பண்ணுமே வாழ்க்கை முதல் -குணம் உத்கர்ஷம்
விளங்கு தாரகைகள் என்கோ!-நெருப்பின் கார்யம்-தேஜஸ் பதார்த்தம் அக்நி இரண்டையும் சொன்னாரே முதலில் –
ஔஜ்வல்யம் -தேஜஸ் கார்யம் –
நாவியல் கலைகள் என்கோ!-வாயு கார்யம் -நாவில் இயற்றியை உடைய வித்யா ஸ்தானங்கள் -சுருதி -அங்கம் உபாங்கம் –
கற்க கசடறக் கற்றவை -பிரயத்தனமே பிராண வாயுவின் கார்யம் -ஐந்து வாயுவும் -பிராண அபான கும்பகம் – சரியான படி இருந்தால் தான் ஆயாசம் வராதே –
ஞான நல் ஆவி என்கோ!-ஆகாசம் கார்யம் -அர்த்த ஞானம் -பொருள் அறிந்து கொள்ள சப்த விசேஷங்கள் -வேதம் -ஆகாச கார்யம் –
லஷணையால் ஞான சரீரம் என்று கொள்ள வேண்டும் -மஞ்சா குரோசம் -சரீரம் -சாதனம் -ஞான சாதனமான சப்த விசேஷங்கள் –
ஆகாசம் தன்மையே சப்தம் -சப்த சாமான்யம் இது –

‘பரந்த புகழையுடைய கண்ணனாய், எனக்குத் தலைவனாய், தாமரை போன்ற கண்களையுடையவனாயிருக்கிற இறைவனைச் சொல்லும்
வகை அறியமாட்டேன் எல்லா மலைகளும் என்பேனோ! பொருந்திய சிறப்பையுடைய மழை என்பேனோ! விளங்குகிற நக்ஷத்திரங்கள் என்பேனோ!
நாவால் இயற்றப்பட்ட அறுபத்து நான்கு கலைகள் என்பேனோ! ஞானத்திற்குக் காரணமான ஒலி என்பேனோ! யாது என்பேன்?’ என்றவாறு.
‘சீர்த்தி மிகுபுகழ்’ என்றார் தொல்காப்பியனார்.

மேற்கூறிய ஐம்பெரும்பூதங்களினுடைய காரியங்களை முறையாகப் பேசுகிறார்.

கூவுமாறு அறிய மாட்டேன் –
பாசுரமிட்டு அழைக்கும்படி அறிகின்றிலேன். அர்த்தங்களில் அறியக் கூடாதது ஒன்று உண்டாய்ச் சொல்லுகிறாரல்லர்;
பகவானுடைய திருவருளால் வந்த வெளிச்சிறப்பால் அர்த்தங்கள் அடைய அறியக் கூடியவாயிராநின்றன. ‘பின்னை என்னை?’ எனின்,
பத்தியினாலே பரவசப்பட்டுப் பேசமாட்டுகின்றிலேன் என்கிறார்.-கூவ கூவ நீ போதியேல் -பெரியாழ்வார் –
அன்றி, ‘இவ்வளவு என்று சொல்லத்தக்க அளவு கடந்திருக்கையால் பேச மாட்டுகின்றிலேன் என்கிறார்,’ என்னுதல்.
குன்றங்கள் அனைத்தும் என்கோ –
பூமியினுடைய வன்மை ஓரிடத்திலே திரண்டாற்போலேயாய், பூமிக்கு ஆதாரமாயிருக்கிற மலைகள் -குல பர்வதங்கள் -என்பேனோ!
இது, மேல் ‘பொரு இல் சீர்ப்பூமி’ என்றதனுடைய காரியம்.
மேவு சீர் மாரி என்கோ –
கண்டார் மேவும்படியான வடிவழகையும் குளிர்த்தியையுமுடைய மேகம் என்பேனோ!
மேகம் இவர் தமக்கு இரண்டொரு காரியமாம்; திருமேனியில் அழகுக்குப் போலியாயிருக்கையாலேயும் விடமாட்டார்.
குன்றம் -மல் ஆண்ட திண் தோள் மணி வண்ணா -மேகத்தையும் விடமாட்டார்
இது, மேல் ‘திகழுந்தண் பரவை’ என்றதன் காரியம்.
விளங்கு தாரகைகள் என்கோ –
விளங்குகின்ற நக்ஷத்திரங்கள் என்பேனோ!
தாரகைகளைக் கூறியது, ஒளி காரணமான எல்லாப் பொருள்களுக்கும் உபலக்ஷணம். இது, மேல் ‘தீ என்கோ!’ என்றதன் காரியம்.
நா இயல் கலைகள் என்கோ
-நாவாலே இயற்றப்பட்ட அறுபத்து நான்கு கலைகள் என்பேனோ! இது, மேல் ‘வாயு என்கோ! என்ற வாயுவின் காரியம்.
‘ஆகாயத்தின் குணமான ஒலியானது வாயுவின் காரியமாமாறு என்?’ என்னில், ஒலிகளினுடைய பிரகாசம் காற்றினுடைய காரியமன்றோ?
‘அதற்கு அடி என்?’ என்னில், முயற்சியால் உண்டாக்கத் தக்கதாய் இருத்தலினாலே. ‘முயற்சியால் உண்டாகக்கத் தக்கதாயிருந்தால்
காற்றின் காரியம் ஆமாறு என்?’ என்னில், முயற்சிதான் காற்றினைக் காரணமாக உடைத்தாயன்றோ இருப்பது?
பிரயத்னம் செய்தே சொல் -சொல்லாலே பொருள் —

ஞான நல் ஆவி என்கோ –
ஆவி என்பது, ஆகுபெயராலே ஒலியினைச் சொல்லுகிறது; ஞானத்தைப் பொதிந்துகொண்டன்றோ ஒலியானது இருப்பது?
இந்திரியம் முதலானவற்றைப் போன்று ஒலிக்கு ஒரு விதக் குற்றமும் இல்லாமையாலே, ‘நல் ஆவி’ என்கிறார்.
இது, மேல் ‘நிகழும் ஆகாசம் என்கோ!’ என்ற ஆகாசத்தின் காரியம். ‘ஆகாசம் என்கோ’ என்ற ஆகாசத்தின் குணமேயன்றோ ஒலி?
திரவியத்தினுடைய காரண குணமேயன்றோ அந்தக் காரியத்தினுடைய குணத்திற்கும் காரணம்?
நூலிலுள்ள வெண்மை நிறமே யன்றோ வஸ்திரத்திலுள்ள வெண்மை நிறத்துக்கும் காரணம்?
பாரிசேடியத்தின் பிரயத்தனத்தாலே ஆகாச குணத்தையே சொல்லிற்றாமத்தனையன்றோ இதில்?
ஞானத்துடைய நல்ல ஆத்மா என்றுமே கொள்ளலாமே -என்னில் -பாரி சேஷம் -எஞ்சி நிற்பத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் –
காரண ஆகாசம் ஸூஷ்ம ஆகாசம் —ஸூஷ்ம சப்தம் -பல்கி பல்கி -ஸ்தூல ஆகாசம் –காரிய ஆகாசம் -வேத சப்தம்
ஒலி நல்ல ஒலியாக மாறிற்றே
ஆவி -சரீரம் லஷணையால் -கொண்டு – சாதனம் என்றவாறு –ஞான நல் சாதனம் -வேதம் என்றவாறு

பாவு சீர்க்கண்ணன் –
‘எல்லாராலும் அறியப்பட்டவர்’ என்கிறபடியே, எங்கும் ஒக்கப் பரம்பின கல்யாண குணங்களையுடைய கிருஷ்ணன்.
எம்மான் பங்கயக் கண்ணன் –
கண்ணழகாலேயாயிற்று இவரை ஒடியெறிந்தது. ‘‘பங்கயக் கண்ணன்’ என்றதனோடு ‘குன்றங்கள் அனைத்துமென்கோ!’ என்பது
போன்றவைகளைச் சேர்த்துச் சொல்வான் என்?’ என்னில், ‘பங்கயக் கண்ணன்’ என்றதனோடு ‘குன்றங்கள் அனைத்தும்’ என்றதனோடு
வாசியற்றிருக்கிறதாயிற்று இவர்க்கு.
அன்றிக்கே,
‘பெரும் புறக்கடல்’ என்கிற திருமொழி நிர்வஹிக்கிற கிரமத்திலே ‘குன்றங்களனைத்தும்’ என்றது
‘நின்ற குன்றத்தினை நோக்கி’ என்னுமாறு போன்று வடிவிற்குப் போலியாய்,
சாமா நாதி கரண்யம் இல்லாமல் அவற்றை நிர்வகிப்பவர் வையதி கரண்யம் -கொண்டு –நிர்வகிப்பது போலே -இவற்றை நிர்வகிப்பவர் –
‘மேவு சீர் மாரி’ என்று மேகத்தைச் சொன்னவிடம் திருநிறத்துக்குப் போலியாயிருக்கிறது’ என்று நிர்வஹிப்பாருமுண்டு.

——————————————————————————-

பங்கயக் கண்ணன் என்கோ!
பவளச் செவ் வாயன் என்கோ!
அங் கதிர் அடியன் என்கோ!
அஞ்சன வண்ணன் என்கோ!
செங் கதிர் முடியன் என்கோ!
திரு மறு மார்பன் என்கோ!
சங்கு சக்கரத்தின் என்கோ
சாதி மாணிக்கத்தையே!–3-4-3-

அசாதாராண விக்ரகம் அனுபவிக்கிறார் -அநு ரூப்யமாக இவை ஸூசிப்பதால் –
பங்கயக் கண்ணன் என்கோ!-பங்கயம்
பவளச் செவ் வாயன் என்கோ!
அங் கதிர் அடியன் என்கோ!-அழகிய தர்ச நீயமான திருவடிகள்
அஞ்சன வண்ணன் என்கோ!
செங் கதிர் முடியன் என்கோ!
திரு மறு மார்பன் என்கோ!-லஷ்மி ஸ்தானம் -ஸ்ரீ வத்சம் -சிஹ்னம் -அடையாளம்
சங்கு சக்கரத்தின் என்கோ-அந்தப் புரத்துக்கு காவல் -திவ்ய ஆயுத பூரணன்
சாதி மாணிக்கத்தையே!–ஆகாரம் -கொண்டு உத்கர்ஷம் உண்டே –
வேங்கடத்தை பதியாக வாழும் மேகம் -வந்தாய் போல் வாராதவன் போலும் இருக்குமே
அத் உஜ்வலமம்

உயர்ந்த மாணிக்கம் போன்ற வடிவழகையுடையவனைத் தாமரைக் கண்ணன் என்பேனோ! பவளம் போன்ற செவ்வாயன் என்பேனோ!
அழகிய ஒளி பொருந்திய திருவடிகளையுடையவன் என்பேனோ! அஞ்சனம் போன்ற நிறத்தையுடையவன் என்பேனோ!
சிவந்த ஒளியையுடைய முடியையுடையவன் என்பேனோ! திருவும் மறுவும் பொருந்திய மார்பையுடையவன் என்பேனோ!
சங்கையும் சக்கரத்தையுமுடையவன் என்று சொல்லுவேனோ!
பங்கயம் – சேற்றில் தோன்றியது; தாமரை. பங்கம்-சேறு. ‘திருமறு பார்பநீ யருளல் வேண்டும்’ என்பது பரிபாடல், செய். 1 : 56.

உலகமே உருவாய் நின்றதனோடு அசாதாரண விக்கிரகத்தையுடையவனாய் நின்றதனோடு வாசியற்று இருக்கையாலே,
உலகமே உருவமாய் நின்ற நிலையோடு அசாதாரண விக்கிரகத்தையும் சேர்த்து அனுபவிக்கிறார்.

பங்கயக் கண்ணன் என்கோ –
சேதநரோடு கலப்பது கண்வழியேயன்றோ? தம்மோடு முதல் உறவு பண்ணின கண்ணழகைச் சொல்லுகிறார்.
ஜிதந்தே புண்டரீகாஷன் -தூது செய் கண்கள் -சைதன்யம் இருந்தால் கண் அழகில் மயங்க வேண்டும் -மயங்கா விடில் கல் போல அசேதனம் தானே –
பவளம் செவ்வாயன் என்கோ –
அந்நோக்குக்குத் தப்பினாலும் தப்பவொண்ணாத முறுவலைச் சொல்லுகிறது.
அம் கதிர் அடியன் என்கோ –
நோக்குக்கும் புன்முறுவலுக்கும் தோற்றார் விழும் நிலத்தைச் சொல்லுகிறது.
அழகிய புகரையுடைய திருவடிகளையுடையவன் என்பேனோ!
அஞ்சனம் வண்ணன் என்கோ –
அத்திருவடிகளிலே விழுந்தார்க்கு அனுபவிக்கக் கூடியதான வடிவைச் சொல்லுகிறது.
செம் கதிர் முடியன் என்கோ –
இது பிராப்த விஷயத்தில் அனுபவம் என்னுமிடத்தைக் காட்டித்தருவது தலைவனாந்தன்மைக்குப் பிரகாசகமான திருமுடி யன்றோ?
திரு மறு மார்பன் என்கோ –
திருமுடியைக் கண்டால் சுவாதந்தரியத்தை அனுசந்தித்து இறாய்க்குமதனைத் தவிர்த்துத் தருவது லக்ஷ்மீ சம்பந்தமன்றோ?
‘திருவையும் மறுவையும் மார்வில் உடையவன் என்பேனோ!’ -திரு மறுவைப் பீடமாக கொண்டு இருப்பவள் என்றுமாம் –
சங்கு சக்கரத்தன் என்கோ –
‘இச் சேர்த்திக்கு என் வருகிறதோ!’ என்று இடமல்லாத இடத்திலும் அச்சத்தாலே ஐயங்கொள்ளுகிற பிரேமத்தின் முடிவெல்லையிலே
நிற்கின்றவர்களுடைய வயிற்றெரிச்சலைத் தவிர்ப்பன திவ்விய ஆயுதங்கள் அல்லவோ?
‘வயிற்றெரிச்சலைத் தவிர்ப்பதற்குத் திவ்விய ஆயுதங்கள் காரணம் ஆமோ?’ எனின்,
‘வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு’ என்னா, ‘சுடராழியும் பல்லாண்டு’ என்னாநின்றார்களன்றோ?
சாதி மாணிக்கத்தையே –
போலி அன்றியே ஆகரத்திலே பிறந்து நன்றான மாணிக்கம் போலே குற்றமற்றதாய் இயல்பாய் அமைந்த வடிவழகையுடையவனை.

——————————————————————————-

சாதி மாணிக்கம் என்கோ!
சவி கொள் பொன் முத்தம் என்கோ!
சாதி நல் வயிரம் என்கோ!
தவிவு இல் சீர் விளக்கம் என்கோ!
ஆதி அம் சோதி என்கோ!
ஆதி அம் புருடன் என்கோ!
ஆதும் இல் காலத்து எந்தை
அச்சுதன் அமலனையே.–3-4-4-

உஜ்வலமான ரத்னாதி பிரகாரங்கள்
சாதி மாணிக்கம் என்கோ!-ஆகார உத்பத்தி வைலஷண்யம் உள்ள மாணிக்கம்
சவி கொள் பொன் முத்தம் என்கோ!-சவி -ஒளி-பொன்னுக்கும் முத்துக்கும் -நீர்மை
சாதி நல் வயிரம் என்கோ!-ஆகார -ரத்னாந்தர வி லஷணம்
தவிவு இல் சீர் விளக்கம் என்கோ!-வி நாச ரஹீதமாய் பிரகாச குணா விசிஷ்டம்
ஆதி அம் சோதி என்கோ!-பிரதம -பரமபத தேஜோ மாயா விக்ரக விசிஷ்டன்
ஆதி அம் புருடன் என்கோ!-ஆனந்தாதி -பரமபத நிலைய விக்ரகம் -திவ்யாத்மா ஸ்வரூபம்
ஆதும் இல் காலத்து எந்தை-சம்ஹார காலத்தில் –எந்தை கிருபாதி சம்பந்தம் அடியாக -அவிபக்த -பிரியாத -நாம ரூப -சிதசித் சரீரியாய்
அச்சுதன் அமலனையே- நழுவாத -எதையும் விலக்காதவன் -ஸூ ஸ்வரூபாதிகளில்-குறைகள் இன்றிக்கே
அவரை சார்ந்து இருப்பதால் ஒஜ்வலம் -என்றபடி

எனக்கு ஒரு துணையும் இல்லாத சமுசார தசையிலே தன்னோடு உண்டான சம்பந்தத்தை அறிவித்தவன், என்னை நழுவ விடாதவன்,
குற்றமற்றவன் ஆன எம்பெருமானை, சாதி மாணிக்கம் என்பேனோ! ஒளியைக் கொண்ட பொன் என்பேனோ! குணம் பொருந்திய முத்தம் என்பேனோ!
உயர்ந்த சாதி வயிரம் என்பேனோ! கெடுதல் இல்லாத விளக்கு என்பேனோ! உலகத்திற்குக் காரணமான அழகிய
பேரொளிப் பிழம்பான பரமபதம் என்பேனோ! முதன்மை பெற்ற அழகிய பரமபுருடன் என்பேனோ! யாது என்பேன்?
‘சவி கொள்’ என்பதனை முத்தத்திற்கும் கூட்டுக. தபுதல் – கெடுதல்.
‘ஆதும் இல் காலத்து எந்தை அச்சுதன் அமலனைச் சாதி மாணிக்கம் என்கோ!’ என்று கூட்டுக. ‘ஆதும்’ என்பது, ‘யாதும்’ என்பதன் மரூஉ.

நம் முதலிகளுள் ஒருவரை ஒருவன் ‘எனக்கு எம்பெருமானை நினைக்க விரகு சொல்லவேண்டும்,’ என்ன, ‘நான் உனக்கு அது சொல்லுகிறேன்;
நீ எனக்கு அவனை மறக்க விரகு சொல்ல வல்லையே?’ என்றாராம்.–குருகைக் காவல் அப்பன்-
அதற்குக் கருத்து: பகவானினின்றும் வேறுபட்டிருக்கின்ற எல்லாப் பொருள்களுக்கும்
அவனை ஒழியப் பொருளாதல், பெயரடைதல் முதலிய தன்மைகள் இல்லாமையாலே, யாதேனும் ஒரு பொருள் தோன்றும் போதும்
அவனை முன்னிட்டுக்கொண்டாயிற்றுத் தோன்றுவது. சாதி குணங்களுக்குப் பிரித்து -ஸ்திதி -நிலையுதலாதல் -உபலம்பம் -தோன்றுதலாதல்
இல்லாமை போன்று, பொருள்களாயிருந்தும் அவனை ஒழியப் பிரிந்து நிலையுதலாதல் தோன்றுதலாதல் இல்லையாம்படி
இருக்கின்றனவே யன்றோ பிரமாண பலத்தாலே?
‘ஆயின், நமக்கு விசேடணக் கூறு ஒழிய விசேடியக்கூறு தோன்றவில்லையே?’ எனின், மற்றையோர்க்கு விசேடணக்கூறு தோன்றுகின்றமை போன்று,
விசேடியம் தோன்றுகின்றபடியாயிருக்கும் இவர்களுக்கு. ‘ஆயின், இவர்களுக்கு விசேடணக் கூற்றில் கருத்து இல்லையோ?’ எனின்,
விசேடணக் கூற்றிலே தாத்பர்யமின்றிக்கே இருக்குமதுவுமன்றிக்கே, –அத்வைதி -விசேஷணம் இல்லை என்பார் –அது போலும் இன்றிக்கே
விசேடண விசேடியங்கள் இரண்டிலும் விசேடியமே தோன்றுகிறதாயிற்று விசேடியப் பிராதாந்யத்தாலே.-விசேஷ்யம் பிரதான்யம்-என்றபடி
இதுவன்றோ வேதாந்தக் கேள்வி ஞானமுடையார்க்கு இருக்கும்படி?
‘வேதாந்தத்தைக் கேட்பதனால்தான் ஞானம் நிறைவு பெறுகின்றது,’ என்னா நின்றதன்றோ?
இதனால், எல்லாப் பொருள்களும் பிரகாரமாக, தான் பிரகாரியாயிருக்கும்படியைச் சொல்லுகிறது.
வேதாந்த சங்க்ரஹம் -சப்த வாச்யம் -பொருள் -பிரத்யஷ பிரமாணத்தால் அறிவோம் -உள்ளே அவன் இருப்பதை சாஸ்திரம் மூலம் தானே அறிவான் –
லௌகிக புருஷர்கள் -சப்தங்களை -சப்த வாச்யம் பிரதான அம்சம் -பரமாத்மா -விட்டு விட்டு -பிரத்யஷ அபரிச்சேத்வாத் -வாச்ய ஏக தேச பூதே-
வேதாந்தா ஸ்ரவணத்தாலே பூரணமாக -அறிவார்
இவ்விபூதியிலும் ‘விபூதியோடு கூடினவும் செல்வத்தையுடையனவும் நல்ல காரியங்களைச் செய்ய முயற்சி செய்வனவுமான
பொருள்கள் எவை எவை உளவோ, அவையெல்லாம் என்னுடைய தேஜஸ்ஸின் ஒரு கூற்றிலிருந்து உண்டானவை என்று நீ அறிவாயாக,’ என்கிறபடியே,
எல்லாம் தனக்கு விபூதியாய் இருந்தும், சிறப்புடைய சில பொருள்களை எடுத்து ‘என்னுடைய விபூதி’ என்றானன்றோ இறைவன்?
அப்படியே இவரும் பேரொளியையுடைய மாணிக்கம் முதலான பொருள்கள் அவனுக்கு விபூதியாயிருக்கிறபடியை அனுபவிக்கிறார்.

சாதி மாணிக்கம் என்கோ –
நல்ல ஆகரத்திலே பிறந்த மாணிக்கம் என்பேனோ!
சவி கொள் பொன் முத்தம் என்கோ –
புகரையுடைத்தான பொன் என்பேனோ! நீர்மையையுடைத்தான முத்தம் என்பேனோ!
‘சவி’ என்பது, பொன்னிற்கு அடையாகும் போது ‘ஒளி’ என்ற பொருளையும், முத்தத்திற்கு அடையாகும் போது ‘நீர்மை’ என்ற பொருளையும் உணர்த்தும்.
சாதி நல்வயிரம் என்கோ – நல்ல ஆகரத்திலே பிறந்த நன்றான வைரம் என்பேனோ!
நலிவு இல் சீர் விளக்கம் என்கோ –
பிளவு இல்லாதஅழகையுடைய விளக்கம் என்பேனோ! ஒளியையுடைய பொருளைச் சொல்லுதல்; ஒளியை மாத்திரம் சொல்லுதல். என்றது,
‘சூரியன் முதலியோரைச் சொல்லுதல். சூரியன் முதலியோரிடத்துள்ள ஒளியை மட்டும் சொல்லுதல்,’ என்றபடி.
ஆதி அம் சோதி என்கோ
1-– ‘பரமபதத்தைக் காரியங்களுக்கெல்லாம் முற்பட்ட காரணமாக அறிகின்றார்கள்’ என்கிறபடியே,
இவ்வருகுண்டான காரியங்களுக்கெல்லாம் தான் காரணமாய், இவற்றினுடைய தோற்றத்திற்கு முன்னே உண்டாய்த் தான்
ஒரே தன்மையாய்ச் சூரியன் சந்திரன் அக்நி இவர்களைக்காட்டிலும் கோடி மடங்கு அதிகமாய் விளங்குகின்ற பரமபதம்’ என்கிறபடியே,
எல்லை இல்லாத பேரொளி உருவமாய் விளங்குகின்ற பரமபதத்தை விபூதியாகவுடையவன் என்பேனோ!
‘ஆயின், பரமபதம் காரணமானபடி என்?’ எனின்,
காரியத்துக்கு நியமமாக முன் கணத்தில் இருப்பது ஒன்றற்கன்றே காரணமாம் தன்மை உள்ளது?
அன்றி,
2– ஆதி என்கிறது, அஸ்த்ர பூஷண அத்தியாயத்தின்படியே சொல்லிற்றாகவுமாம். என்றது,
ஸ்ரீ வத்சரூபத்தாலே பிரகிருதி அமிசத்தைத் தரிக்கும் என்றும்,
ஸ்ரீ கௌஸ்துபத்தாலே உயிர்களின் கூட்டத்தைத் தரிக்கும் என்றும் சொல்லாநின்றதே;
‘புருடன்மணி வரமாகப் பொன்றா மூலப் பிரகிருதி மறுவாக மான்தண்டாகத்
தெருள்மருள்வாள் உறையாக ஆங்கா ரங்கள் சார்ங்கஞ்சங் காகமனம் திகிரி யாக
இருடிகங்கள் ஈரைந்தும் சரங்களாக இருபூத மாலைவன மாலை யாகக்
கருடனுரு வாமறையின் பொருளாங் கண்ணன் கரிகிரிமேல் நின்றனைத்தும் காக்கின் றானே.’ என்ற(அதிகார சங்.80)-ஸ்ரீதேசிகன்
3–அந்தத் திருமேனி தானும் அந்த நித்திய விபூதிக்குள்ளேயே இருக்குமேயன்றோ?’ என்றபடி.
‘நன்று; லீலா விபூதியைச் சொல்லுகிற இடத்தில் நித்திய விபூதியைச் சொல்லுவான் என்?’ என்னில்,
‘ஆதி அம் சோதி என்கோ’ என்றதும், ‘சாதி மாணிக்கம் என்கோ!’ என்றது போலே இருக்கிறது.

ஆதி அம் புருடன் என்கோ –
விபூதியுடையவனைச் சொல்லுகிறது. எல்லாப்பொருள்கட்கும் காரணனாய், உபய விபூதிகளோடு கூடினவனாய், புருஷன் என்ற பெயராலும்
புருஷோத்தமன் என்ற பெயராலும் சொல்லப்படாநின்றுள்ள சர்வேசுவன் என்பேனோ!
ஆதும் இல் காலத்து எந்தை அச்சுதன் அமலனையே –
1–சமுசார காலத்திலே; என்றது, எனக்குத் தன்னைப் பெறுகைக்கு முதல் ஒன்றுமில்லாத காலத்திலே, தான் எந்தையான முறையை எனக்கு அறிவித்து,
பின்பு ஒரு காலமும் நழுவ விடாதே பாதுகாத்து, இதுதான் என்பக்கல் ஒரு பிரயோஜனம் கொண்டன்றியே நிர்ஹேதுகமாகத் தன் பேறாகப் பாதுகாத்தவனை.
அன்றியே,
2–‘யாதுமில்லாத பிரளயகாலத்தில் காரியமாக மாறின இவையடங்கலும் அழிந்து, ‘சத்’ என்ற நிலையாய்க் கிடக்கிற அன்று,
தான் ஸ்வாமியான சம்பந்தத்தைக்கொண்டு நாம ரூபங்களை இழந்த இவற்றைச் சத்தை இழந்து போகாமல்
தன் பக்கலிலே ஏறிட்டுக்கொண்டு இவற்றைத் தரித்து, ‘தான்’ என்று சொல்லலாம்படி இவை தன் பக்கலிலே கலந்த அன்றும்
இவற்றின் குற்றங்கள் தன் பக்கல் தட்டாதபடி இருக்கிறவனை’ என்னுதல்.
‘ஆயின், ‘தோய்விலன்’ என்னுமதனோடு இங்குக் கூறிய இரண்டாவது பொருள், கூறியது கூறலாகாதோ?’ எனின்,
‘நாம ரூபங்களையுடையனவாய்ப் பொருளாகச் சொல்லலாம்படி பிரியநின்ற போதும் இவற்றோடே கலந்து இவற்றின் குற்றம்
தன் பக்கல் தட்டாதபடி நிற்கும் நிலையினைச் சொல்லுகிறது அங்கு; இவை, தான் என்ற சொல்லுக்குள்ளேயாம்படி கலந்து நின்ற
போதும் இவற்றின் குற்றம் தன் பக்கல் தட்டாதபடி நிற்கும் நிலையினைச் சொல்லுகிறது இங்கு,’ என்று அருளிச்செய்வர்.
அதற்கு அடி, பிரவேச ஹேது விசேஷம்.
இங்கே அமலன் -காரண -பிரளய – அவஸ்தையில் -ஸ்தூலம்
-தோய்விலன் -எனபது -கார்ய அவஸ்தையில் -சூஷ்ம –

————————————————————————————–

அச்சுதன் அமலன் என்கோ!
அடியவர் வினை கெடுக்கும்
நச்சு மா மருந்தம் என்கோ!
நலம்கடல் அமுதம் என்கோ!
அச்சுவைக் கட்டி என்கோ!
அறுசுவை அடிசில் என்கோ!
நெய்ச்சுவைத் தேறல் என்கோ!
கனி என்கோ! பால்என் கேனோ!–3-4-5—

விலஷண ரசவத் பதார்த்த -விபூதித்வம் அருளிச் செய்கிறார் –
விபூதி அத்யாயம் போலே -ஹந்த ஹந்த -விஸ்தரம் -வர்க்கமாக அருளிச் செய்தது போலே-
அச்சுதன் அமலன் என்கோ!-ரீங்காரம் -கீழே சொல்லிய வாசனை பால் மனம் மாறாத குழந்தை அன்றோ ஆழ்வார்
போக்தாக்களை நழுவ விடாதவன் -கீழே ஆஸ்ரிதர்களை -நழுவ விடாதாவன் –
ஆராவமுதனை அனுபவிக்க ஆரா காதல் கொண்டவர்களாக இருக்க வேண்டும்
தன் பேறாக அனுபைக்கும் நைர்மில்யம் -அமலன்
அடியவர் வினை கெடுக்கும் நச்சு மா மருந்தம் என்கோ!-ஆஸ்ரிதரை போக அலாப கிலேசம் கெடுக்கும் –
நச்சு — விரும்பித் தேடித் போக கூடிய மருந்து -சாரச்யம் மிக்கு –
நலம்கடல் அமுதம் என்கோ!-ஷீராப்தி -மூலம் வந்த நல் கடல் பாற் கடல் -நல் -அம்-பகவத் சம்பந்தத்தால் தர்ச நீயமான –
அமுதம் கொண்டு உப்புச்சாறு பெற்றார்கள் –
அச்சுவைக் கட்டி என்கோ!-அ-அந்த அமுதத்தின் உடைய -அமுதம் கடைந்து ரசம் -கறுப்புக் கட்டி நீயா –
அறுசுவை அடிசில் என்கோ!-மதுர அமல -இத்யாதி
நெய்ச்சுவைத் தேறல் என்கோ!-மது -நெய்தல் மிகுதி என்ற பொருளில்
கனி என்கோ! பால் என் கேனோ!-பக்வமாய் புஜித்து அல்லது தரிக்க -ஸ்வா பாவிக
மருந்து -கிலேசம் போக்கும்
கடையாமல் கடலில் கிடக்கும் அமுது –

‘அழிவில்லாதவனாய்க் குற்றமற்றவன் என்பேனோ! அடியார்களுடைய பாவங்களைப் போக்குகின்ற விரும்பப்படுகின்ற உயர்ந்த மருந்து என்பேனோ!
கடலிலே கிடக்கின்ற சிறந்த அமிருதம் என்பேனோ! அமிருதத்தின் சுவையையுடைய கருப்புக்கட்டி என்பேனோ!
அறுசுவைகளையுடைய உணவு என்பேனோ! மிக்க சுவையுடைய தேன் என்பேனோ! கனி என்பேனோ! பால் என்பேனோ! யாது என்பேன்?’ என்றவாறு.
‘கெடுக்கும் மருந்து’ எனக் கூட்டுக.

சுவையுடைய பொருள்களை விபூதியாக உடையனாயிருக்கிறபடியை அருளிச்செய்கிறார்.

அச்சுதன் அமலன் என்கோ –
நித்திய விபூதியோடே கூடியிருக்கும் இருப்புக்கு ஒருநாளும் அழிவில்லாதபடியிருப்பவனாய், குற்றம் ஒன்றும் தீண்டப்படாதவனாய்,
நற்குணங்கட்கெல்லாம் தானே இருப்பிடமானவனாய் உள்ளவன் என்பேனோ!
ஆதி யம் சோதி -ஆதி யம் புருடன் -அகில ஹேய ப்ரத்ய நீகன் -கல்யாணைகக ஏக தானத்வம் –
மேற்பாசுரத்தில் ‘ஆதியஞ்சோதி’ என்பதனைக் கடாக்ஷித்து, ‘நித்திய விபூதியோடே கூடியிருக்கும் இருப்புக்கு’ என்று அருளிச்செய்கிறார்.
அச்சுதன்– அழிவில்லாதவன். ஹேயப்பிரத்தியநீஹதை புக்க இடத்தே உபலக்ஷணத்தால் கல்யாணகுணங்களும் புகுமாதலின்,
‘அமலன்’ என்றதற்குக் குற்றம் ஒன்றும் தீண்டப்படாதவனாய் நற்குணங்கட்கெல்லாந் தானே இருப்பிடமானவனாய்’ என்று பொருள் அருளிச்செய்கிறார்.
அடியவர் வினை கெடுக்கும் –
தன் பக்கல் -அடியவர்கள் -சரணாகதர்கள் -பர ந்யாசம் – நியஸ்தபரரானவருடைய எல்லாத் துக்கங்களையும் போக்கிப் பாதுகாக்குமவன்;
இதனால், இப்படிச் ‘சேய்மையில் உள்ளவன்’ என்று-நித்திய விபூதியோடே கூடியிருக்கும் இருப்புக்கு -எட்டாக்கனி அடியார்கள்
இடர்ப்பட வேண்டாதபடி, யானை இடர்ப்பட்ட மடுவின் கரையிலே விழும் தன்மையன் என்பதனைத் தெரிவித்தபடி.
நச்சு மா மருந்தம் –
1–இடர்ப்பட்ட போதாகப் போய் மலை புக வேண்டாமல், ‘அவன் தூரத்தனானானேயாகிலும் நாம் ஆபத்துக்குள்ளான
சமயத்திலே வந்து பாதுகாக்கும்’ என்று நம்பலாம்படி இருப்பான் ஒருவன். -சஞ்சீவி -ஔஷதி நச்சிக் கொண்டு போக வேண்டாத படி
2- இனி, ‘ஆசைப்படும் ஓர் மருந்து’ என்னுதல். மா மருந்து – பெரிய மருந்து; வியாதியினளவு அல்லாத மருந்து; ‘என்றது,
என் சொல்லியவாறோ?’ எனின்,மேல் காற்றிலே காட்ட நோய் தீருமாயிருக்கையைத் தெரிவித்தபடி. –வாட்டம் தணிய வீசீரே —
நமனும் முத்கலனும் பேச -நரகில் நின்றார்கள் கேட்க -நரகமே ஸ்வர்க்கமே நாமங்கள் உடைய நம்பி –
3- இனி, ‘மா மருந்து’ என்பதற்கு, ‘ஒரே மூலிகையாய் எப்பொழுதும் உண்ணக்கூடியதாய் இருக்கிற மருந்து’ என்னுதல்.
ஏக மூலிகை -சஹாயாந்திர நைரபேஷ்யம் -பக்க விளைவு போக்க வேறே மருந்து தேவை இல்லாத -சக்ருத் சேவய்யையாய் இருக்குமே –
சக்ருத் உச்சாரணம் த்வயம் -இங்கே ஒருவரே நோயாளி ஒன்றே நோய் சம்சாரம் -ஒரே மருந்து -சரணாகதி ஒரு முறையே -செய்ய வேண்டுமே –
4- இனி, ‘பத்தியமில்லாத மருந்து’என்னுதல்; என்றது, இவன் பிராமாதிகமாகப் பண்ணும் பாவங்களையும் காணாக் கண்ணிட வல்லனாயிருக்கை.
பார்க்காத தன்மையன் என்றபடி -காவலில் புலனை வைத்து -கட்டுக்காவல் இல்லாமலும் –பலன் கொடுக்கும் -பத்தியமே வேண்டாம் –
வேம் கடங்கள்-முன்பே அனைத்தும் போனதே -இப்பொழுது வினை எங்கு இருந்து வந்தது -என்கிற சங்கைக்கு
-இன்னும் ஆழ்வார் இங்கேயே தான் உள்ளார்
தான் அறிந்து செய்கின்ற அன்று, பிறந்த ஞானத்தோடு மாறுபடும்; தன்னையறிந்த பின்பு முதலிலே இவற்றில் மூளான்;
ஆன பின்பும், விரோதியான சரீரம் தொடர்ந்து வருகையாலே நெஞ்சு இருண்டு பாவங்களைச் செய்தல் தவிரான்;
பின்னர் ஞானம் பிறந்தவாறே அதற்கு வருந்திப் பின் வாங்குவான்.
அவ்வாறன்றி, அறிந்தே பாவங்களைச் செய்வானாயின் ஞானம் பிறந்த தில்லையே யாமித்தனை.
துர் அபிமானத்தால் செய்த தப்புக்கு அனுதாபம் கூட செய்யாமல் இருந்தால் ஞானம் பிறக்க வில்லையே –
ஞானம் என்னும் நெருப்பே பஸ்மம் ஆக்கி விடும் கர்மங்களை -கர்வம் -பெரிய பாவம் –
தெரிந்தே பிரபன்னன் பாபம் செய்தால் தலை குப்புற விழுவான் -ஸ்ரீ கீதை

நலம் கடல் அமுதம் என்கோ –
கடலிலே கடையாமல் வந்த அமிருதம் என்பேனோ! அச்சுவைக் கட்டி என்கோ – அவ்வமிருதத்தைச் சார்த்து ‘அச்சுவைக் கட்டி’ என்று
சுட்டுகிறாராதலின், ‘கட்டி’ என்பது கருப்புக்கட்டியாமித்தனை.
அவ்வமிர்தத்தோடொத்த சுவையை யுடைய கருப்புக்கட்டி என்பேனோ! அறுசுவை அடிசில் என்கோ –
ஆறுபடிப்பட்ட சுவையையுடைய அடிசில் என்பேனோ!
அறுசுவையாவன: ‘கைப்பு, புளிப்பு, கார்ப்பு, தித்திப்பு, துவர்ப்பு, உவர்ப்பு’ என்பன.
நெய்ச்சுவைத் தேறல் என்கோ –
மிக்க சுவையையுடைய தேன் என்பேனோ!
நெய் – மிகுதி. இனி, ‘சுவை’ என்பதனை இடைநிலைத் தீவகமாகக் கொண்டு, ‘சுவையையுடைய நெய், சுவையையுடைய தேறல்’ என்னுதல்.
கனி என்கோ பால் என்கோ –
‘ஒரு காலத்தில் இனியதாம் பழம் என்பேனோ!-ருதுக்கள் தோறும் பல பழங்கள்-எந்த ருதுவானாலும் இயற்கை ரசம் மாறாத பழம் -என்றபடி
இனியதான பால் என்பேனோ! யாது என்பேன்?’ என்றபடி.

———————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s


%d bloggers like this: