பகவத் விஷயம் காலஷேபம் -71- திருவாய்மொழி – -3-3-6….3-3-11—ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

வேங் கடங்கள் மெய் மேல்வினை முற்றவும்,
தாங்கள் தங்கட்கு நல்லனவே செய்வார்,
வேங்கடத்து உறைவார்க்கு நம என்னல்
ஆம் கடமை அது சுமந் தார்கட்கே.–3-3-6—

நமஸ் சப்தார்த்தம் இதில் -கீழே பிரணவம் நாராயணாய முதல் பாசுரம் பார்த்தோம்
-அநிஷ்ட நிர்வாக பூர்வகமாக -பகவத் அனுபவ போகத்துக்கு -உறுப்பான -ஆச்ரயண சௌகர்யம் -கை கூப்புவதே -ஸூ ஸுகரம்
அதிகாரி விசேஷணம் -நிர்ஹேதுகமாக –
வேங் கடங்கள் மெய் மேல்வினை முற்றவும், தாங்கள் தங்கட்கு நல்லனவே செய்வார்,
கடன்கள் -பூர்வாகம் -மேல் வினை உத்தராகம் -ஆகாமி பிராமாதிகம் -அறியாத் தனத்தால் –
முற்றவும் வேம் -தீயினில் தூசாகும் -தத்தங்களாம்-மெய் -சத்யம்
கடன்கள் வேம்–மேல் வினைகள் வேம் –இது மெய்
ஆஸ்ரிதர் -தங்கள் ஸ்வரூபத்துக்கு நல்லது -கைங்கர்யம் -ஸ்வரூபாதி அனுபவம் இவற்றையே செய்வார்கள்
கடன்கள் –த்ரய கடன்கள்
கடன்கள் வேம் -மெய் மேல் வினை முற்றவும் –சரீர சம்பந்தத்தால் வரும் கர்மங்கள் -உத்தராகம் விலக்குவார்-
பலம் வராததால் எரிப்பதுக்கு சாம்யம்-விலகும் என்றாலும் பலம் கிட்டாதே
-ஜாஜலி பறவை கதை–அஹிம்சையில் வென்றேன் என்றான் பறவை குட்டிகளை காத்து –பறவை சொல்லி வந்தாயா -பட்டு நூல் விற்பவன் –
சந்தன வியாபாரி -ஹிம்சித்து இருப்பானே –
தலையில் இருந்த பறவைகளும் குஞ்சுகளும் இங்கே விளையாடி கொண்டு இருக்க –கழுகு பூனை பறவைகள் சேர்ந்து விளையாடும்படி
அஹிம்சை வளர்த்தவன் -சரீரத்துக்கு சுகம் தேடி பாபங்கள் சம்பாதிக்கிறோம் –

வேங்கடத்து உறைவார்க்கு நம என்னல்-சர்வ சமாஸ்ரயணீயன் நித்ய வாஸம் -ஆனந்யாரஹன் ஆகும் படி நம -அஞ்சலி
ஸ்வஸ்வாதந்திர நிவ்ருத்தி யுக்தமான அத்யந்த பாரதந்த்ர்யம் ஸூசகம் -ஸ்வரூப பிராப்தம் –
ஆம் கடமை அது சுமந்தார் கட்கே-அதிகார விசேஷ த்யோதகம் கோள் சொல்லி -குறிப்பிட்டுச் சொல்லி –
நம -சொல்வதை சுமையாக அவன் அபிப்ராயம் –
பூர்வாகம் நெருப்பில் இட்ட தூசு போலே -உபாசனதுக்கு பின் பிராமாதிகமான வந்தவற்றை ஒட்டாமல் விலக்கி –
புஷ்கர பல ஆபம் போலே தாமரை இலைத் தண்ணீர் போல்
தத் அதிகம உத்தர பூர்வாக யோகோ அச்லேஷ விநாசௌ சாஸ்திரம் -ஸ்ரீ ப்ரஹ்ம ஸூ த்ரம்
கடங்கள் வேம் -பூர்வாகம் வேம் -மேல் -உத்தராகம் இருப்பதால் பூர்வ சப்தம் தருவித்துக் கொள்ள வேண்டும்
வலக்கை ஆழி சங்கம் -இடக்கை -தருவித்திக் கொள்ளுவது போலே
மேல் வினை முற்றவும் -உத்தராகம் -ஆகாமி வேம் -ஆர்த்தம் -விலக்கி -சப்தம் வேம் –
இது மெய் -சத்தியம் -வேத நூல் ஓதுகின்றது உண்மை அல்லது இல்லையே –
வேம் -விலகும் எரியும்-இரண்டு கொள்ள வேண்டி உள்ளதே -என்பதால் மாற்றி
கடங்கள் வேம் -மேல் வினைகள் சாரா -இது மெய் -ராமானுஜர் அடுத்த நிர்வாகம் –
வேம் என்பதற்கு எரியும் விலகும் என்று இரண்டும் கொள்ள வேண்டாமே சாரா தருவித்துக் கொண்டால் –
மாதவன் –ஏதம் சாராவே -அங்கு இருந்து தருவித்திக் கொண்டு –
மாரீசன் -தள்ளி சுபாகு கொன்றது போலே -ர சப்தம்-பயந்தவனுக்கும் பக்தனுக்கும் எங்கும் ராமன் திருமுகம் தெரியுமே
ராமன் அனுஷ்டானம் ராமானுஜர் சாஷாத்கரித்து அந்தரங்கமாக இளைய பெருமாள் அறிவாரே -லஷ்மண முனி ஸூரி அன்றோ –
பூர்வாகத்தை அழித்து உத்தராகம் விலக்குவது போலே அன்றோ மாரீசனை விட்டு சுபாகுவை அழித்தது

‘திருவேங்கடத்தில் எழுந்தருளியிருக்கின்றவர்க்கு வணக்கம்,’-என்று சொல்லுதல் எளிதில் செய்யக்கூடிய காரியமாம்;
அதனைச் சுமந்தவர்கட்கு, தீர்க்கக்கூடிய கடன்களும் சரீர சம்பந்தம் காரணமாக வருகின்ற நல்வினை தீவினைகளும் வெந்து அழிந்துவிடும்;
அடியார்களாகிய தாங்கள், தங்கட்குத் தக்கதான கைங்கரியத்தையே செய்வார்கள்.
‘கடங்கள் மெய் மேல் வினை முற்றவும் வேம்,’ என மாறுக. கடன் – கடம்; னகரத்திற்கு மகரம் வந்தது.
‘கள்’ பன்மையையுணர்த்த வந்தது. ‘சுமந்தார்கட்கு வேம்’ எனக் கூட்டுக.

மேல், திருமந்திரத்தின் பொருளை அருளிச்செய்தார்; அங்கு அருளிச்செய்யாததான ‘நம:’ பதத்தின் பொருளை இப்பாசுரத்தில் அருளிச்செய்கிறார்.
‘இறைவன் பாதுகாக்கப்படுகின்ற பொருள்களைப் பெற்ற அளவைக் கொண்டு மனம் நிறைவு பெறாதவனாகவிருந்தாலும், நாம்
ஆசையுடன் கூடினவர்களாகவிருந்தாலும், –ரஷ்ய வர்க்கம் தேட்டமாக அவனும் -அபி நிவேசமும் உண்டே நமக்கும் –
சரீர சம்பந்தங்காரணமாகத் தொன்றுதொட்டு நாம் செய்து வைத்த, பகவானையடைவதற்குத்
தடையாகவுள்ள கர்மங்கள் செய்வன என்?’ என்ன, ‘நாம் இதிலே துணியவே அவையெல்லாம் தாமாகவே நசிக்கும்,’ என்கிறார்.
கைங்கர்யத்திலே ஈடுபடவே -கர்மங்கள் எல்லாம் தன்னடையே நசிக்கும் –கைங்கர்யம் செய்து கொண்டே குணானுபவமும் பண்ண வேண்டும் -என்றபடி –
அலை ஓய்ந்து சமுத்திர ஸ்நானம் போலே கர்மங்கள் கழித்து கைங்கர்யம் செய்வோம் என்று இருப்பது -கைங்கர்யங்கள்
ஸ்ரீ பாஷ்யம் அருளிச் செயல் வாசித்தும் வாசி வாசிப்பதும் – /த்வய நிஷ்டை -கைங்கர்யம் /திவ்ய தேசங்களில் அமுது படி சாத்துப்படி /
திவ்ய தேசம் குடில் கட்டி கைங்கர்யம் -/இப்படி இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவனுக்கு தொண்டு செய்து -இருப்பதே ஸ்வாமி கட்டளை –
ஓர் ஒருவர் உண்டாகில் –எல்லாருக்கும் அண்டாதது அன்றோ இது -மா முனிகள்

கடங்கள் வேம் –
‘ஒருவன் மூன்று கடனுள்ளவனாக வந்து பிறக்கிறான்; பிரஹ்மசர்யத்தாலே முனிவர் கடனையும், யாகத்தாலே தேவர் கடனையும்,
பெறுகின்ற புத்திரனாலே பிதிரர் கடனையும் தீர்க்கக் கடவன்,’ என்றும்,
‘மூன்று கடன்களையும் தீர்த்து மனத்தை மோட்சத்திலே வைத்தல் வேண்டும்; இக்கடன்களைத் தீர்க்காமல் மோட்சத்தையடைய
விரும்புகிறவன் கீழே விழுகிறான்,’ என்றும் சாஸ்திரங்களாலே விதிக்கப்படுகின்ற கடன்கள் வேம்.-மநோ மோஷே நிவேசதயத் -சந்யாசத்தில் -த்ரிவித தியாகத்தில்
‘கடங்கள்’ என்றது, ‘கடன்கள்’ என்றபடி. மெய்ம்மேல் வினை முற்றவும் – சரீரத்தின் சம்பந்தங்காரணமாக வருகின்ற பாவங்களைச் சொல்லுகிறது.
ஆக, கடன்கள், மெய் மேல் வினைமுற்றவும் வேம் – நசிக்கும் என்றபடி.– இங்ஙனம் ஆளவந்தார் அருளிச்செய்வர்.

இதனை, எம்பெருமானார் கேட்டருளி, ‘இதற்கு, வேதாந்தத்திற்சொல்லுகிற கட்டளையிலே பொருள் சொல்ல அமையாதோ?’ என்று இங்ஙனம் அருளிச்செய்வர்
அதாவது, ‘ஞானத்தையடைந்தவுடன் (ஞானத்தின் மஹாத்மியத்தாலே) உத்தர பூர்வாகங்களில், உத்தராகத்திற்குச் சம்பந்தப்படாமலிருத்தலும்,
பூர்வாகத்துக்கு நாசமும் உண்டாகும்’ என்றும், ‘இந்த விதமாகச் செய்கின்ற வேதாந்த ஞானமுடையானுக்கு எல்லாப் பாவங்களும்
நெருப்பிற்போடப்பட்ட துய் போன்று அழிகின்றன; ஆச்சரியம்’ என்றும் சொல்லுகிறபடியே ‘வேம்’ என்கையாலே பூர்வாகத்துக்கு அழிவும்,
உத்தராகத்துக்குச் சம்பந்தியாமற் போய் விடுகையும்-அச்லேஷம் – சொல்லுதல்.
அன்றி, பூர்வாகத்துக்குச் சொன்ன அழிவுதானே உத்தராகத்துக்கும் உபலக்ஷணமாய், சம்பந்தியாமற் போதலைச் சொல்லிற்றாகவுமாம்
.பூர்வாகமாவது – ஞானம் பிறப்பதற்கு முன்பு புத்தி பூர்வகமாகச் செய்து போந்த தீவினைகள்.
உத்தராகமாவது – ஞானம் பிறந்த பின்பு அஜாக்கிரதையால் செய்து போந்த தீவினைகள்.
‘ஆயின், பிரபந்நனுக்கு உத்தராகம் வருவதற்குக் காரணம் உண்டோ?’ எனின், ஞானம் பிறந்த பின்பும் விரோதியான சரீர சம்பந்தம்
தொடர்ந்து வருகையினாலே பாவங்களிலே செல்லுவான்;
நாம் பிரபன்னன் என்ற கர்வம் கொண்டே தெரிந்தே பாபம் பிரபன்னன் செய்தால் கீழே விழுவான் –
பின்னர், ஞானம் பிறந்து, கடுக மீண்டு முன்பு செய்ததற்கு ‘நாம் என் செய்தோமானோம்!’ என்று கழிவிரக்கங்கொண்டு வருந்துவான்.
கடங்கள் மேல் வினை முற்றவும் வேம்; இது மெய்-சத்தியம்.
‘இப்படிச் செய்கின்றவனுடைய எல்லாப் பாவங்களும் அழிகின்றன ‘என்பது உபநிடத வாக்கியம்.
‘ஆயின், உபநிடதம் கூறின், அது மெய்யாக வேண்டுமோ?’ எனின், பிரத்தியக்ஷம் முதலிய பிரமாணங்கள் திரிபுணர்ச்சிக்குக் காரணமாய்
அவ்வுணர்ச்சியை நீக்குவதாயுமிருக்கும்; அவ்வாறு அன்றி, ‘உண்மையை உள்ளவாறே கூறுவது சாஸ்திரம்,’ என்கிறபடியே,
சாஸ்திரம் சொல்லிற்று என்றால் அவ்வர்த்தம் மெய்யாக இருக்குமன்றோ?
அச்லேஷம் விநாசங்களை மாறாடினால் என் –என்றால் -பாபம் -பகவத் நிக்ரகம் ரூபம் -பிராதி கூல்யா ஆசரணத்தால் -நிக்ரகிக்கும் புத்தி –
இவன் பக்கல் ஆனுகூல்ய லேசம் -வந்ததும் நிக்ரக புத்தி ஷமிக்கும்-நிக்ரக புத்தி தானே பாபம் -அது போனதும்
பாபங்கள் நசிக்குமே -சவாசனையுடன் போகுமே –
நிக்ரக புத்தி மாறுவதும் கண்டு கொள்ளாமல் விடுவதும் உண்டே -இத்தையே பூர்வாகம் நசிப்பதையும் உத்தராகம் ஒட்டாமையும் சொல்லிற்று
ஆனுகூல்யம் பிறந்த பின்பு வந்த பிராதி கூல்யத்தில் -பிரமாதிகம் -தெரியாத் தனத்தால்
-கமலேஷண அவிஜ்ஞாதாவாக இருப்பான் -மங்கலாக அருகில் உள்ளவள் ஆக்கி இருப்பாள் -தயா தேவி –
ஹிருதயத்தில் இருந்தே கண் வையாமல் இருப்பதால் அச்லேஷம் -இப்படி நியாமகம் இருப்பதால் மாறாடி சொல்ல முடியாதே

ஸ்ரீ ஆளவந்தார் நிர்வாஹத்தில் ‘கடங்கள்’ என்றது, கடனைக் குறித்தது; ‘மெய் மேல் வினை முற்றவும்’ என்றது, பூர்வோத்தராகங்களைக் குறித்தது;
மெய் – சரீரம். எம்பெருமானார் நிர்வாஹத்தில் ‘கடங்கள்’ என்றது, கடன் போலே அவசியம் அனுபவிக்கத் தக்கவைகளைச் சொல்லி, ‘மேல் வினை
முற்றவும்’ என்றது, உத்தராகத்தைச் சொல்லுகிறது. மெய் – சத்தியம் என்பது பொருளாம். எம்பெருமானாருடைய நிர்வாகம் இரண்டு வகை: ‘அதாவது,
ஞானத்தையடைந்தவுடன்’ என்றது முதல் ‘சம்பந்தியாமற் போய்விடுகையும் சொல்லுதல’ என்றது முடிய ஒரு வகை. ‘பூர்வாகத்துக்குச் சொன்ன
அழிவுதானே’ என்றது முதல் ‘சம்பந்தியாமல் போதலைச் சொல்லிற்றாகவுமாம்’ என்றது முடிய இரண்டாவது வகை.
இவ்விடத்தில்,
‘போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் செப்பேலோ ரெம்பாவாய்’ என்னும் ஆண்டாள் ஸ்ரீ சூக்தியையும்,
‘சாரக் கடவனவாய் நின்ற துன்பங்களாவன: பிறப்பு அநாதியாய் வருதலின், உயிரான் அளவின்றி ஈட்டப்பட்ட வினைகளின் பயன்களுள்
இறந்த உடம்புகளான் அனுபவித்தனவும் பிறந்த உடம்பான் முகந்து நின்றனவும் ஒழியப் பின்னும் அனுபவிக்கக்கடவனவாய்க் கிடந்தன.
அவை விளக்கின் முன் இருள்போல ஞான யோகங்களின் முன்னர்க் கெடுதலான், ‘அழித்துச் சார்தரா’ என்றார்;
மேல் மூன்று உபாயத்தானும் பரம்பொருளை உணரப் பிறப்பு அறும் என்றார்; ‘அஃது

ஆயின், மேல் வினை முற்றவும் சாராவாகில், அவற்றிற்குப் போக்கடி என்?’ எனின்,
கடலுக்குத் தொடுத்த அம்பை, அவன் நாலடி வர நின்றவாறே, அச்சமயத்திலேயே ‘உன் விரோதிகளைச் சொல்லாய்’ என்றார் அன்றோ?
இவ்விடத்திலே பட்டர் ஒரு ஐதிஹ்யம் அருளிச்செய்வர்: கை கூப்பியதற்கு மயங்கினால் போலே பெருமாள் நடித்தாரே –
பண்டு தலையில் மயிர் இல்லாதான் ஒருவன் நெல் அளந்துகொண்டு நின்றான்; அங்கே ஒருவன் சென்று, ‘மயிரைப் பேணாமல் நீர் தனியே
நின்று நெல் அளக்கிறீரே!’ என்ன, ‘வந்தது என்!’ என்ன, ‘ஒன்றுமின்று; கண்டு போக வந்தேன்,’ என்ன,
ஆகில், ‘ஒரு கோட்டையைக் கொண்டு போகலாகாதோ?’ என்று எடுத்துவிட, அவன் அதனைக்கொண்டு வருகின்ற காலத்தில்
எதிரே ஒருவன் வந்து, ‘இது பெற்றது எங்கே?’ என்ன, ‘உன்தனை மொட்டைத் தலையன் தந்தான்’ என்ன,
அவன் சென்று அங்கேயுள்ள அவனைக் கண்டு, ‘இன்னான் உம்மை வைது போகின்றானே!’ என்று அதனைக் கூற
‘அடா! என் நெல்லையுங்கொண்டு என்னையும் வைது போவதே!’ என்று தொடர்ந்து வர, அவன் திரும்பிப் பார்த்து,
‘ஏன்தான் குழல்கள் அலைய அலைய ஓடி வாராநின்றாய்?’ என்ன, ‘ஒன்றுமின்று, இன்னம் ஒரு கோட்டை கொண்டுபோகச் சொல்ல
வந்தேன்,’ என்றானாம்; அப்படியே, கடலை முகங்காட்டுவித்துக்கொள்ளுகைக்காகக் காலைப் பிடிப்பது கோலைத் தொடுப்பதாகா நிற்க,
அவன் வந்து முகங்காட்டினவாறே, ‘உனக்கு அம்பு தொடுத்தோம்’ என வெட்கி, ‘உன் பகைஞரைச் சொல்லு, நாம் இதனை விட’ என்றார் அன்றோ?
சாராது -போக்கடி என் -முன் வினை அழிந்ததே -இவை எங்கே போகும் -ஆனுகூல்யலேசம் மாறுவானா -கடல் திருஷ்டாந்தம் –
கர்மம் -பலனை அவன் சத்ருக்கள் இடம் விட்டானே -பல ஜனன சாமர்த்திய விநாசம் தான் அச்லேஷம் –

இனி, முதற்பாசுரத்திலே சொல்லாமல் விடப்பட்டதொரு பொருளைச் சொல்லுகிறார் மேல்:
தாங்கள் – மற்றை விஷயங்களில் விரக்தராய்க் கைங்கரிய ருசியுடையராயிருக்குமவர்கள்.
தங்கட்கு – இப்படிப்பட்ட ருசியுடையராயிருக்கிற தங்களுக்கு. நல்லனவே செய்வார் – தங்கள் சொரூபத்தோடு சேர்ந்த கைங்கரியத்தையே செய்வார்கள்.
‘ஆக, இதனால், பலத்தை அனுபவிக்கிறவனுக்குப் பலத்தைப் போன்று விரோதி கழிதலைப் பிரார்த்தித்துப் பெறவேண்டியிருக்குமோ?’ என்னில்,
‘அது வேண்டா; தாங்கள் தங்களுக்கு நன்றான கைங்கரியத்தைச் செய்யாநிற்க அமையும்; இவ்விரோதி தன்னடையே போம்,’ என்கிறார் என்றபடி.
கண்டேன் கமல மலர்ப்பாதம் காண்டலுமே விண்டே ஒழிந்தேன் வினையாயினகள் எல்லாம் –
மாயனை –சிந்திக்க போய பிழையும் -புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் -தாமரை இலை தண்ணீருக்கும் உப லஷணம்
‘ஆனால், தாங்கள் தங்கட்கு நல்லனவே செய்வார் என்பதற்கு, ‘தங்களுக்கு நல்லவையாய்த் தோற்றியவற்றைச் செய்வார்கள்’ என்று
பொருள் கூறின் என்னை?’ எனின், அங்ஙனங்கூற ஒண்ணாதே! ‘வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம்’ என்கிற
அதிகாரியைக் குறித்துச் சொல்லுகையாலே. அதிகாரி வைலக்ஷண்யமும் –வ்ருத்தியின் -செய்கையின் வைலக்ஷண்யமும் தோன்றும்படி –
‘தாங்கள் தங்கட்கு’ என இங்ஙனே ஊன்றிச் சொல்லுமாம் அனந்தாழ்வான்.
‘நன்று; ‘தாங்கள் தங்கட்கு நல்லனவே செய்வார்’ என்கிறது, இவர்களை எங்ஙனேயாக நினைத்து?’ எனின்,

வேங்கடத்து உறைவார்க்கு நம என்னல் ஆம் கடமை அது சுமந்தார்கட்கே –
‘வேங்கடத்துறைவார்க்கு’ இதனால், – லுப்த சதுர்த்தியின் – நான்காம் வேற்றுமையின் அர்த்தம் சொல்லப்படுகிறது;
‘நம:’ – எனக்கு அன்று, அவனுக்கு என்றபடி. தாதார்த்தே -சதுர்த்தி -அவனுக்கே ஆக நான் –
என்னல் –
இது தான் நெஞ்சில் உண்டாக வேண்டா; சொல்லளவே அமையும்;
‘இதுதான் சிறியதாய் இருப்பினும் இவன்தனக்குச் செய்தற்கு அருமையாக இருக்குமோ?’ எனின், ஆம் – மிக எளிதான காரியம்
‘எளிது எனின் சொரூபத்தோடு சேராததாயிருக்குமோ?’ என்னில்,
கடமை –
செய்யத்தக்கது. அது சுமந்தார்கட்கு – பெறுகிற பேற்றின் கனத்தையும் இவனுடைய முயற்சியின் சிறுமையையும் பார்த்து,
‘இப்பேற்றுக்கு இவன் இம்மலையைச் சுமவானோ?’ என்பாரைப்போன்று
‘அது சுமந்தார்கட்கு’
என்கிறார்.- இது, பெறுகிற பேற்றின் கனத்தையும் பகவானுடைய திருவருளையும் அறிந்திருக்கிற இவர் தம் கருத்தாலே சொல்லுகிறாராதல்;
இவன் பக்கலுள்ளதைக் கனக்க நினைத்திருக்கும் இறைவன் கருத்தாலே சொல்லுகிறாராதல்.
ஓதி நாமம் குளித்து –உச்சி தன்னால் -பாதம் பணிவதுவும் -நமக்கே நலம் ஆதலால் —உபாய பாவனையில் பண்ணுவேனே -என்று
பயமூட்டி கார்யம் கொள்ளுகிறார் – புல்லாணி எம்பெருமான் பொய் கேட்டு இருந்தேனே
கல் எடுத்து கல் மாரி காத்தாய் என்னும் -சொல் எடுத்து -கல் எடுத்தது அல்பம் -பரகால நாயகி சொல் எடுத்தது தானே
பெரியது சிதிலமாகி -துணை முலை மேல் சோர்கின்றாளே-உபாய பாவம் தொலைந்து கைங்கர்ய பாவத்தில் மூழ்கி இருக்கிறாள் பரகால நாயகி –
‘ஆயின், அவன் நினைவு அப்படியிருக்குமோ?’ எனின், ‘நம:’ என்ற சொல்லைக் கனக்க நினைத்திருக்கும் பகவானுடைய கருத்தாலே
சொல்லுகிறோம் என்னும்படியன்றோ அவன் இருப்பது?
நிர்ஹேதுக கிருபாவான் அன்றோ -நம சொல்லவும் வேண்டுமோ என்னவுமாம் –

திரௌபதி வெகுதூரத்தில் வசிக்கின்ற என்னைக் ‘கோவிந்தா!’ என்று கூவி அழுதாள் என்பது யாதொன்று உண்டு;
அது வட்டிக்கு வட்டி ஏறின கடன் போன்று என்னுடைய மனத்தினின்றும் நீங்கவில்லை,’ என்கிறபடியே,
கிருஷ்ணா மாம் தூரவாசினம் -தள்ளி உள்ள என்னைக் கூப்பிட்டாளே -அவளைக் கொண்டாடி –
‘கோவிந்தா!’ என்று நம் பேரைச் சொன்னாள்; நாம் ஒன்றும் செய்திலோம் என்று அவளைக் கொண்டாடி,
தன்னை நிந்தித்துத் திருவுள்ளம் புண்பட்டிருக்குமவனன்றோ? அப்போது சபையில் பிறந்த பரிபவம் நீக்கப்பட்டிருந்தும்,
‘நம் பேரைச் சொல்லிக் கூப்பிட்டவளுக்கு ஆற்றாமையிலே முகங்காட்டப் பெற்றிலோம்’ என்று தான் உள்ளதனையும்
இழவுபட்டிருந்தான் என்றபடி. ‘இழவுபடுகிறது என்? காரியம் செய்யப்படவில்லையோ?’ எனின்,
‘நம்முடைய பெயர் தன் காரியம் செய்ததத்தனை போக்கி, நாம் இவளுக்கு ஒன்றும் செய்திலோமே!’ என்று இருந்தான்.
‘ஆயின், கிருஷ்ணனையொழியவும் திருப்பெயரே காரியம் செய்யவற்றோ?’ எனின், பொருத்தமில்லாமல்
இரண்டு சொற்களைச் சேர்த்துச் சொல்ல அது விஷத்தைப் போக்குதற்குக் காரணம் ஆகாநின்றதே
சொற்களின் சத்தியால்? அதைப் போன்றும் போராமை இல்லையன்றே திருநாமம்?

ஞான ஜனன அனந்தர பாவி புத்தி பூர்வ பாபம் பீதிர் ந தத் பகவத் பிரபாவ அனுசந்தேயம் –
தத் தைவ அதிகாரி ஸ்வரூப நினைத்தால் -அனுதாபம் பிராயச்சித்தம் எல்லாமும் வேண்டும் -பகவத் ஸ்வரூபம் பார்த்தால் பயப்பட வேண்டாமே-

‘வேங்கடத்துறைவார்க்கு நம என்னல் ஆம் கடமை அது சுமந்தார்கட்கு, கடங்கள் மெய் மேல் வினை முற்றவும் வேம்;
ஆகையால், தாங்கள் தங்கட்கு நல்லனவே செய்வார்’ எனக் கூட்டுக.

—————————————————————

சுமந்து மாமலர் நீர்சுடர் தூபம்கொண்டு.
அமர்ந்து வானவர் வானவர் கோனொடும்
நமன்று எழும்திரு வேங்கடம் நங்கட்குச்
சமன் கொள் வீடு தரும்தடங் குன்றமே.–3-3-7-

நித்தியசூரிகள், சேனை முதலியாரோடும் வந்து சிறந்த பூக்களையும் தண்ணீரையும் விளக்கையும் வாசனைப்புகையையும் தாங்கிக்கொண்டு
வணங்கி எழுகின்ற திருவேங்கடமானது, நமக்கு ஒத்ததாக வுள்ள மோக்ஷத்தைக் கொடுக்கக்கூடிய பெரிய மலையாகும்.
‘மா மலர் நீர் சுடர் தூபம் சுமந்துகொண்டு’ என மாறுக. நமன்று – வணங்கி.

ஆனந்தத்தில் சாம்யா பத்தி -அபஹத பாப்மாதி குணங்களில் -ப்ரஸ்துதமான ஆஸ்ரயனத்தின் உடைய காஷ்டா அர்த்தம் –
சரம பர்வ நிலை -சூ சனநார்த்தம் -அவன் நின்று அருளும் திருமலையே கொடுக்கும்
சுமந்து மாமலர் நீர்சுடர் தூபம்கொண்டு.–ஸ்லாக்கியமான-சுடர் தூபம் புஷ்பம் நன்றான – விலஷணமான-தீபம்
தூபம் அகரு -ஆதாரம் உடன்
அமர்ந்து வானவர் வானவர் கோனொடும்-பிரயோஜ நாந்தரங்களில் பரகு பரகு இல்லாமல் -விஷ்வக் சேனர் உடன்
நமன்று எழும்திரு வேங்கடம் நங்கட்குச்-அத்யந்த பாரதந்த்ர்ய பிரகாசமான நமனம் வணங்கி
பார தந்த்ரய பலம் ஸூ பிரவ்ருத்தி நிவ்ருத்தி
சேஷத்வ பலம் ஸூ பிரயோஜன நிவ்ருத்தி
ஸ்வரூபம் பெற்று கிருத்தார்த்தராய்
சமன் கொள் வீடு தரும்தடங் குன்றமே-லஷ்மி சகாரமான சுவர சஞ்சாரம் பண்ணும் படி உலாவ -ஸூ விச்தீர்ணமான
பிராப்ய ருசி உடைய நமக்கு பரம சாம்யாபத்தி கொண்டு உள்ள மோஷம் கொடுக்கும்
அநந்ய பிரயோஜனருக்கு சாம்யா பத்தி கிட்டும்
பிரயோஜ நாந்தருக்கு அபேஷிதம் அளிக்கும்

‘முதற்பாசுரத்தில் பிரார்த்தித்த கைங்கரியத்தைத் திருமலை தானே தரும்,’ என்கிறார். ‘‘வீடு தரும்’ என்றால், ‘மோக்ஷத்தைத் தரும்’
என்பதன்றோ பொருளாம்? கைங்கரியத்தைத் தரும் என்று பொருள் கூறல் பொருந்துமோ?’ எனின்,
கைங்கரியம் என்பது, பகவானை அடைதலுக்குப் பலமாய் வருவதாதலின் பொருந்தும்.

சுமந்து மா மலர் நீர் சுடர் தூபம் கொண்டு –
‘மா மலர் நீர் சுடர் தூபம் இவற்றைச் சுமந்துகொண்டு’ என்னவுமாம்.
அன்றி, ‘மா மலர் சுமந்து, நீர் சுடர் தீபம் கொண்டு’ என்னவுமாம்.
ஆக, ‘ஒரு கருமுகை மாலையேயாகிலும் இதைக் கண்டருளக்கடவனே! சாத்தி யருளக்கடவனே! நம்மை விசேட கடாக்ஷம் பண்ணியருளக்கடவனே!’
என்றிருக்கிற இவர்கள் அன்பின் மிகுதியாலே கனத்துத் தோன்றுகிறதாதலின், ‘சுமந்து’ என்கிறார். பக்த்யா பிரயச்சதி –
சாது ராமானுஜாச்சார்யர் ஜீயர் ஸ்வாமிகள் -நமக்காக ஆழ்வார் அருளிச் செய்தார் -என்பாராம்
இன்றும் ஜீயர் ஏகாங்கி -பொட்டு சுமந்து போகிறார்கள் -அகோராத்ரி கைங்கர்யம் செய்து கொண்டே இருக்கிறார்கள்-
இனி, அன்புடையவன் இட்டதாகையாலே சர்வேசுவரன் தனக்குக் கனத்துத் தோன்றுமாதலின், ‘சுமந்து’ என்கிறார் என்னுதல்.
ஸ்ரீ புருஷோத்தமமுடையானுக்கு அரசகுமாரன் செண்பகப் பூக்கொண்டு அணிந்தபடியை நினைப்பது. ‘என்றது, என்சொல்லியவாறோ?’ எனின்,
ஸ்ரீ புருஷோத்தமமுடையான் செண்பகம் உகந்து அணிவர்; அரச குமாரர்கள் சிலர், செண்பகங்கொண்டு சார்த்துவதற்குத் தேடி
, கடைகளிலே சென்று பார்க்க, ஒரு பூ இருக்கக் கண்டு, அப்பூவுக்கு ஒருவர்க்கொருவர் செருக்காலே விலையை மிகமிக ஏற்ற,
அவர்களிலே ஒருவன் நினைக்க வொண்ணாதவாறு பொருளை மிகக் கொடுத்து அதனை வாங்கிக்கொண்டு வந்து சார்த்தினான்;
அன்று இரவில் அவனுடைய கனாவில், ‘நீ இட்ட பூ எனக்குக் கனத்துச் சுமக்க முடிகிறதில்லை,’ என்று அருளிச்செய்ததைக் குறித்தபடி.

அமர்ந்து வானவர் வானவர் கோனொடும் நமன்று எழும் திருவேங்கடம் –
நித்தியசூரிகளும் சேநாபதியாழ்வானும் பொருந்தி இப்படி ஆராதனைக்கு வேண்டிய பொருள்களைக்கொண்டு வணங்கி எழுகின்ற திருவேங்கடம்.
இனி, ‘வானவர் வானவர் கோன்’ என்பதற்கு, ‘தேவர்களும் தேவர்கட்குத் தலைவனான பிரமனும்’ என்று பொருள் கூறலுமாம்.
இவர்கள் வேறு பலன்களை விரும்புகின்றவர்களாயினும்,-எழுவார் விடை கொள்வார் -சேர்ந்த நிலத்தின் தன்மையாலே
அநந்யப் பிரயோஜனர்களாக மாறுகிறார்களாதலின், ‘அமர்ந்து’ என்கிறார். -மலம் அறுக்கும் திரு மால் இரும் சோலை மலை அன்றோ
இப்படிச் சமாராதன உபகரணங்களைக் கொண்டு வணங்கி எழுவர்களாயிற்று. -வணங்கி வாழ்ச்சி பெறுவார்கள் என்றபடி
‘துயரறு சுடரடி தொழுது எழு’ என்கிற தமது வாசனை அவர்களுக்கும் உண்டு என்று இருக்கிறாராதலின் ‘நமன்று எழும்’ என்கிறார்.

நங்கட்கு – கைங்கரிய ருசியையுடைய நமக்கு. சமன் கொள் வீடு தரும் –
‘பிரஹ்மத்தை யறிந்தவன் பிரஹ்மம்போல ஆகிறான்,’ என்றும்,-ப்ரஹ்ம வேத ப்ரஹ்ம இவ பவதி -போலவே
‘பிரஹ்ம வித்தையால் குற்றம் அற்றவன் பூர்ண ஒப்புமையையடைகிறான்,’ என்றும்,-நிரஞ்சன பரமம் சாம்யம் உபைதி
மெய் விட்டு ஆதி பரனொடு ஒன்றாம் என்னும் அல்லல் தீர்த்தார் ராமானுஜர் -ஏகி பாவம் இல்லை -சாம்யா பத்தி என்றவாறு
இந்த ஞானத்தையுடையவர்கள் எனக்குச் சமமான உருவம் முதலியவற்றை அடைந்தவர்கள்,’ என்றும்,-மம சாதர்மம் ஆகத –
‘தம்மையேயொக்க அருள் செய்வர்,’ என்றும் சொல்லுகிறபடியே,
அவன், ‘அவனோடு ஒத்ததாகையாகிற மோக்ஷத்தைத் தரும்’ என்னுதல்; -ஸ்வேன ரூபேண -ஸ்வரூப ஆவிர்பாவம் –
‘இவ்வாத்துமாவானது சரீரத்தை விட்டுக் கிளம்பி ஒளியுருவமான பிரஹ்மத்தையடைந்து தனது உருவத்தோடு கூடுகிறான்,’ என்கிறபடியே,
‘இவ்வாத்துமாவினுடைய சொரூபத்திற்குத் தக்கதான மோக்ஷத்தைத் தரும் என்னுதல்;
இனி, ‘திருமலைதானே தன்னோடு ஒத்த பேற்றைப் பண்ணித் தரும்,’ என்னுதல்; என்றது,
‘திருமலையாழ்வார்தாம் திருவேங்கடமுடையானைத் தம் திருமுடியிலே எழுந்தருளுவித்துக்கொண்டன்றோ இருப்பது?
அப்படியே ‘நின் செம் மா பாத பற்புத் தலை சேர்த்து’ என்று இவர் வேண்டிக்கொண்ட பேற்றைத் திருமலையாழ்வார்
தாமே தந்தருளுவர்,’ என்றபடியாம். –திருப் பொலிந்த சேவடி என் சென்னியின் மேல் பொறித்தாய் –
தடங்குன்றம் – திருவேங்கடமுடையானுக்குத் தன் விருப்பின்படி சஞ்சாரம் பண்ணலாயிருக்கும்படி இடமுடைத்தாயிருக்கை.
‘ஸீபக: – வீறுடைத்தாயிருக்கை.
கிரிராஜ உபம: – திருமலையோடு ஒத்திருக்கை.
யஸ்மிந்வஸதி – அதற்கு ஏது சொல்லுகிறது.
காகுஸ்த்த: – போகத்துக்கு ஏகாந்தமான இடம் தேடி அனுபவிக்கும் குடியிலே பிறந்தவர் விடாதே விரும்பி வசித்தார் என்பது யாதொன்று உண்டு?
குபேர இவ நந்தநே – துஷ்ட மிருகங்கள் மிகுதியாகவுள்ள தேசத்திலே செருக்கனான குபேரன் போது போக்குகைக்காகத்
தன் உத்தியானத்திலே உலாவுமாறு போன்று சஞ்சரித்தார்.’

‘சமன் கொள் வீடு’ என்பதற்கு மூன்று வகையாகப் பொருள் அருளிச் செய்கிறார். முதற்பொருளும், மூன்றாவது பொருளும்
சாம்யாபத்தி ரூபமானமோக்ஷம் என்பது. இரண்டாவது பொருள், ஸ்வரூபத்துக்குத் தகுதியான மோக்ஷம் என்பது. சமம் – ஒத்தல்; தகுதி.

—————————————————————————————–

குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன்,
அன்று ஞாலம் அளந்த பிரான்,பரன்
சென்று சேர்திரு வேங்கட மாமலை
ஒன்றுமே தொழ நம்வினை ஓயுமே.–3-3-8-

ஏவம் பூதமான திருமலையை அனுபவிக்க -ஆஸ்ரயிக்க சொல்லாமல் -பிராப்தி பிரதிபந்தகங்கள் ஸ்வயமேவ நசிக்கும்
குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன்,-கோக்களையும் கோபி ஜனங்களையும்
அன்று ஞாலம் அளந்த பிரான்,-உலகமாக தீண்டிய -மகாபலியால் அபஹ்ருதமான அன்று -வியாபித்து -அனந்யார்ஹம் ஆக்கி அருளிய உபகாரகன்
பரன்-பரம சேஷி
மலையை மேல் கொண்டு ரஷிக்கலாம் என்றும் –கோவர்த்தனம் -திருமலை -நின்ற இடத்தே நின்று ரஷிக்கலாம் என்றும் -சொல்லிற்று
சென்று சேர்திரு வேங்கட மாமலை-சேர்ந்த பெரிய திருமலை
ஒன்றுமே தொழ நம்வினை ஓயுமே.-தேசிகன் அளவும் செல்ல வேண்டும் நிர்பந்தம் இல்லை -தேசத்தில் வசிப்பவன் –
தன்னடையே கழன்று போம்
வேம் கடங்கள் -பாசுரம் சொல்லிய அவையும் திருமலை ஆழ்வார் அளிக்கும் -என்றவாறு -வினை ஓயும்
கீழே இஷ்ட பிராப்தி சொல்லி இங்கே அநிஷ்ட நிவ்ருத்தி சொல்லிற்று

கோவர்த்தனமென்னும் மலையைத் தூக்கிக் குளிர்ந்த மழையினின்றும் பசுக்களையும் ஆயர்களையும் காத்தவன்;
அக்காலத்தில் உலகத்தை அளந்த உபகாரகன்; எல்லார்க்கும் மேலானவன்; இவ்வாறான இறைவன் சென்று தங்கியிருக்கின்ற
திருவேங்கடம் என்னும் மலை ஒன்றையுமே வணங்க, நம்முடைய வினைகள் நீங்கும்.
‘ஏந்திக் காத்தவன்’ என்றும், ‘தொழ ஓயும்’ என்றும் முடிக்க. ‘ஒன்றுமே’ என்பதில் ஏகாரம் பிரிநிலை.

‘வேங்கடங்கள்’ என்கிற பாசுரத்திற்கூறிய விரோதி போக்கலையும் திருமலையாழ்வார் தாமே செய்து கொடுப்பர் என்கிறார்.
இனி, ‘ஒரு பேற்றினைத் தரல் வேண்டுமோ? திருமலையே நமக்கு உத்தேஸ்யம்;
அடிமை கொள்பவனுக்கு உத்தேஸ்யமானது அடியவனுக்கு உத்தேஸ்யமாகச் சொல்ல வேண்டுமோ?’ என்கிறார் என்னுதல்.
சேஷிக்கு உத்தேச்யம் -சேஷ பூதனுக்கும் உத்தேச்யம் என்றவாறு –
புருஷார்த்த அலாப ஜனித துக்கங்களும் போகும்

குன்றம் ஏந்திக் குளிர் மழை காத்தவன் –
‘இந்திரன் கல் மழை பெய்த போது பசுக்கள் ஆயர்கள் ஆய்ச்சிகள் எல்லோரும் நோவுபட, அப்பொழுது அக்கோகுலத்தைப் பார்த்துக் கிருஷ்ணன்
சிந்தித்தான்,’ என்கிறபடியே, பசுக்களும் ஆயர்களும் மழையிலே தொலையப் புக, கண்ணுக்குத் தோன்றியதொரு மலையைப் பிடுங்கி
ஏழு நாள் ஒருபடிப்படத் தரித்துக்கொண்டு நின்று அவற்றைக் காத்தவன்.
ஏந்தி -அநாயாசேன -இன்றும் ஏந்திக் கொண்டு சேவை சாதித்து -கோவர்த்தன கிரிதாரானாக
இதனால், துக்கத்தைப் போக்கும் சாதனம் மலையே என்பதனைத் தெரிவித்தவாறு.

அன்று ஞாலம் அளந்த பிரான் –
ஓர் ஊருக்கு உதவினபடி சொல்லிற்று மேல்; இங்கு நாட்டுக்கு உதவினபடி சொல்லுகிறது; -ஆஸ்ரித ரஷகன் -சர்வ ரஷகன் என்றவாறு
விரோதியான மஹாபலியாலே பூமி கவரப்பட்ட அன்று, எல்லை நடந்து மீட்டுக்கொண்ட உபகாரகன்.

பரன் – எல்லாப் பொருள்கட்கும் உயர்ந்தவன்.
சென்று சேர் திரு வேங்கட மா மலை –
அனந்தாழ்வான் -நீயும் வந்து சேர்ந்தவன் -நானும் வந்தவன்
அவன் தனக்கு –உத்தேஸ்யம்’ என்று வந்து வசிக்கிற தேசம்.
ஒன்றுமே தொழ – ‘ஒன்றையுமே வணங்க. உள்ளே எழுந்தருளி யிருக்கிறவன் தானும் வேண்டா,
திருமலையாழ்வார் தாமே அமையும்,’ என்பார், ‘ஒன்றுமே’ என்கிறார். -ஸ்ரீ சைலமே ரஷகம் என்றவாறு –
நம் வினை ஓயும் – ‘பெற வேண்டும் பேற்றினைப் பெற்றிலோம்’ என்கிற துக்கத்தைப் போக்கும்’ என்னுதல்;
‘வேங்கடங்கள்’ என்னும் பாசுரத்திற்கூறிய, அடிமை செய்வதற்குத் தடையாக உள்ளனவற்றைப் போக்கும் என்னுதல்.

—————————————————————————————–

ஓயும் மூப்புப் பிறப்பு இறப்புப் பிணி
வீயுமாறு செய்வான் திரு வேங்கடத்து
ஆயன் நாள்மலராம் அடித் தாமரை
வாயுளும் மனத்துள்ளும் வைப்பார்கட்கே.–3-3-9-

முக் கரணத்தால் -விரோதி நிவர்த்தக சக்தி திவ்ய தேச வாசத்தால் வந்தது என்கிறார் -தேசிகருக்கு தேச சம்பந்தால்
ஓயும் நாம் ஓய்ந்து போவோமே இவற்றால் -பல ஹானியைப் பிறப்பிக்கும்
மூப்புப் பிறப்பு இறப்புப் பிணி வீயுமாறு செய்வான் -செய்கிறவர் -ஸ்வ பாவம் தன்மை உடையவன் என்றுமாம்
ஒழியுமாறும் செய்வான் -பிணைந்து வரும் வியாதிகளையும்
திரு வேங்கடத்து ஆயன் நாள்மலராம் அடித் தாமரை- கிருஷ்ணன் -ஒவ் ஒரு நாளும் -மலரும் பூ -தலைச் சங்க நாள் மதியப் பெருமாள் –
ஸூகுமாரமான
வாயுளும் மனத்துள்ளும் வைப்பார்கட்கே-பேச்சிலும் நெஞ்சுக்கு உள்ளும் –

நோய்களை அழியும்படி செய்கின்றவனான திருவேங்கடத்திலிருக்கிற எம்பெருமானது அன்று மலர்ந்த தாமரை மலர் போன்ற
திருவடிகளை வாயிலும் மனத்திலும் வைப்பார்கட்கு முதுமை பிறப்பு இறப்பு இவைகள் நீங்கும்.
‘மூப்பு பிறப்பு இறப்பு ஓயும்,’ என மாறுக. செய்வான் – வினையாலணையும் பெயர். வினையெச்சமாகப் பொருள் கோடலுமாம்.
ஆயன் – கிருஷ்ணன். ‘வைப்பார்கட்கு ஓயும்’ என முடிக்க.

‘நம் விரோதியையும் போக்கிப் பேற்றினையும் திருமலையாழ்வார்தாமே தருவர்,’ என்றார் மேல் இரண்டு பாசுரங்களாலே;
‘இப்படி விரோதியான பாவங்களைப் போக்கி வீடு பேற்றினைத் தருவதற்குத் திருமலையாழ்வாரெல்லாம் வேண்டுமோ?
திருமலையாழ்வாரில் ஒரு பகுதி அமையாதோ?’ என்கிறார் இப்பாசுரத்தில்.
‘ஒரு பகுதி’ என்றது, திருவேங்கடமுடையானை;- ‘வட மா மலையுச்சியை’ -7-10-3-என்பர் திருமங்கை மன்னன்.
சரம பர்வதத்திலே இன்னும் நிற்கிறார் -கோல் விழுக்காட்டாலே இவனாக அமைந்தது -என்கிறார் –

மூப்பு பிறப்பு இறப்பு ஓயும் –
பிறப்பு முதுமை இறப்பு முதலானவைகள் ஓயும். ‘இப்போது ஓயும்’ என்கையாலே, இதுகாறும் அநாதி காலம்
உச்சி வீடும் விடாதே போந்தது என்னுமிடம் தோன்றுகிறது. -மாத்யான்னிக வேளையிலும் விடாமல் போந்தது –
‘பிணி வீயுமாறு செய்கின்றவனான திருவேங்கடத்து ஆயன்’ என்னுதல்;
‘பிணி வீயுமாறு செய்கைக்காகத் திருவேங்கடத்திலே வந்து நிற்கிற ஆயன்’ என்னுதல்.
‘இவர்கள் பிணியும் இங்ஙனே சென்றிடுவதாக என்று இருந்தானாகில், கலங்காப் பெருநகரத்தில் இரானோ? என்பார்,
‘பிணி வீயுமாறு செய்வான் திருவேங்கடத்தாயன்’ என்கிறார்.
ஈண்டுப் ‘பிணி’ என்கிறது, சரீர சம்பந்தங் காரணமாக வருகின்ற எல்லா நோய்களையும். -ஷட் பாவ -விகாரம் -அஸ்தி —வி நச்யதி
ஆக, இதனால், துக்கத்தைப் போக்கும் தன்மையன் என்பதனைத் தெரிவித்தபடி.
‘முதலடியில், ‘ஓயும் மூப்புப் பிறப்பு இறப்பு’ என்றவர், மீண்டும், ‘பிணி வீயுமாறு செய்வான்’ என்பதற்குக் கருத்து என்?’ என்னில்,
‘இவனுடைய இங்குத்தை துக்கத்தைப் போக்குகைக்காக’ என்கை; -வீயுமாறு செய்யும் தன்மையன் இவற்றைச் செய்தான் என்றவாறு –
அவனே வந்து போக்கானாகில், இந்த எலி எலும்பனுக்குப் போக்கிக்கொள்ளப் போகாதேயன்றோ?

நாள் மலராம் அடித்தாமரை –
செவ்விப்பூவைத் தலையிலே வைத்தலைப் போன்றிருப்பது ஒன்றாதலின், ‘நாண்மலராம் அடித்தாமரை’ என்கிறார்.
‘அவன் கால் காண, ‘மூப்புப் பிறப்பு இறப்பு’ என்கிற இவையெல்லாம் அழியும்’ என்றபடி.
இதனால், ‘விரோதி போகைக்கு இவ்வேப்பங்குடிநீரை ஆயிற்றுக் குடிக்கச் சொல்லுகிறது என்கிறார்,’ என்றபடி.
அடித் தாமரை -ஸூ குமாரமான நிரதிசய போக்யமான திருவடிகள்-
திருமேனியில் கால் பகுதியைக் காண -நாலு பகுதியும் போகும் -மூப்பு -இறப்பு -பிறப்பு -பிணி இவை எல்லாம் போகுமே
நான்கு வர்ணர் நான்கு பகுதிகளில் இருந்து பிறந்தார்கள் என்பதால் திருவடியை கால் பகுதி என்கிறார்

வாயுள்ளும் மனத்துள்ளும் வைப்பார்கட்கு –
இவை இரண்டும் உடலுக்கும் உபலக்ஷணமாய், ‘திருவடிகளை மனம் வாக்குக் காயங்களாலே அநுசந்திப்பார்கட்கு’ என்றபடி.
வாயுள் வைக்கையாவது, ‘ஓவாது உரைக்கு முரை’-முதல் திருவந்தாதி -95- என்கிறபடியே உரைத்தல்.
மனத்துள் வைக்கையாவது, மறவாதிருத்தல். இப்படி -கரணங்களுக்கு-உறுப்புகட்கு -அடைத்த காரியங்களைக் கொள்ளவே,
சொரூபத்திற்கு விரோதியாய் வந்தேறியானவை தாமாகவே போம்.

பிணி வீயுமாறு செய்வான் திருவேங்கடத்து ஆயனுடைய நாண்மலராம் அடித்தாமரை
வாயுள்ளும் மனத்துள்ளும் வைப்பார்கட்கு மூப்புப் பிறப்பு இறப்பு ஓயும்.

—————————————————————————————

வைத்த நாள்வரை எல்லை குறுகிச் சென்று,
எய்த்து, இளைப்பதன் முன்னம் அடைமினோ
பைத்த பாம்பணையான் திரு வேங்கடம்
மொய்த்த சோலை மொய் பூந்தடந் தாள்வரை.–3-3-10-

நிரதிசய போக்யமான திருமலையை பரம போ க்யமாக சீக்கிரமாக பற்ற ஸூ ஜனங்களுக்கு அருளிச் செய்கிறார்
வைத்த நாள்வரை எல்லை குறுகிச் சென்று,-நாள் கடத்தாமல் -நமக்கு அவன் சங்கல்ப்பித்து வைத்த
அவதி வரை -முதல் எல்லை -நகண்டு போக
எய்த்து, இளைப்பதன் முன்னம் அடைமினோ-முன்னமே -நாம் அதைக் கிட்டி -பாலா ஹானி பிறந்த இந்த்ரியங்கள்
-அது அடியாக நெஞ்சு சிதிலமாகும் முன்னர் சென்று –அமரர் உள்ளீர் போந்து -என்றபடி
பைத்த பாம்பணையான் திரு வேங்கடம்-விரிகிற பணங்களை -தத் -சாரூப்யத்தால் -ஆதரிக்கும்-நல்ல மலை தொடர் -திருமலை அஹோபிலம் ஸ்ரீ சைலம் மூன்றும் –
மொய்த்த சோலை மொய் பூந்தடந் தாள்வரை -செறிந்த -அழகிய –இடமுடைய மழைப் பள்ளத்தாக்கு

படத்தையுடைய ஆதிசேஷனைப் படுக்கையாகவுடைய இறைவன் எழுந்தருளியிருக்கின்ற திருவேங்கடத்தினது
மொய்த்த சோலைகளையும் நெருங்கிய பூக்கள் பொருந்திய தடாகங்களையுமுடைய திருத்தாள் வரையை, உங்கட்கு ஏற்படுத்திய
ஆயுளின் முடிவில் எல்லையைச் சென்று குறுகி எய்த்து இளைப்பதற்கு முன்னர் அடைமின்.
‘சென்று குறுகி இளைப்பதன் முன் தாள்வரையை அடைமின்,’ என்க. பை – படம். தாள்வரை – மலையடிவாரம்.
இரண்டாமடியிலும் நான்காமடியிலும் யகரம் ஆசு எதுகையாய் வந்தது.

ஆக, ‘திருமலையாழ்வார் எல்லார்க்கும் ஒக்க உத்தேஸ்யமான பின்பு எல்லாரும் ஒருசேரத் திருமலையாழ்வாரை அடைமின்,’ என்கிறார்.

வைத்த நாள் வரை எல்லை குறுகிச்சென்று எய்த்து இளைப்பதன் முன்னம் அடைமினோ –
1-சர்வேசுவரன் நியமித்து வைத்த ஆயுளின் முடிவான எல்லையைச் சென்று கிட்டி,
2-‘திருமலைக்குப்போக வேண்டும்’ என்னும் ஆசையும் மனத்தில் தொடர்ந்து கிடக்கவும் ‘பாவியேன் கரணபாடவ
தசையுண்டாகப் பெற்றிலேன்’ என்னும் நிலை வருவதற்கு முன்னே செல்லுங்கள்.
ஆக, ‘ஓ பிரமனே! திருமகள் கேள்வனை வணங்கும்பொருட்டு, கை கால் முதலிய உறுப்புகளுடன் கூடின விசித்திரமான
இச்சரீரம் முற்கா-நல்ல மலை தொடர் -திருமலை அஹோபிலம் ஸ்ரீ சைலம் மூன்றும் – லத்தில் உண்டாக்கப்பட்டது’ என்கிறபடியே, —
விசித்ரா தேக சம்பந்தி ஈஸ்வர நிவேதயத –
சர்வேசுவரன் இவ்வாத்துமாவிற்குச் சரீர சேர்க்கையைக் கொடுத்தது, நரகத்திற்குக் காரணமான விஷயங்கள் இருந்த இடம்
தேடிப் போகைக்காக அன்று; திருமலைக்குப் போகைக்கு’ என்கிறார்.

‘ஐயர் சொல்லிற்றுச் செய்ய வேண்டுகையாலே பெருமாள் காடேற எழுந்தருளாநின்றார்; நானும் கூடச் சேவித்துப் போவேன்,’ என்ன
‘அவர் காட்டிலே எழுந்தருளாநிற்கப் படை வீட்டிலே இருக்கைக்கோ, நான் உன்னைப் பெற்றது?
நீ இப்படிச் செய்தாயாகில் நான் உன்னைப் பெற்ற பயன் பெற்றேனாகிறேன்; அவர்க்கு யாதொருபோது துணை வேண்டியிருந்தது,
அப்போது நீ துணையாகைக்காக வன்றோ நான் உன்னைப் பெற்றது? நீ சினேகிதர்கள் பக்கல் அன்பு உடையையன்றோ?
ஆகையாலே, எல்லார்க்கும் வேர்ப்பற்றான பெருமாளை நோக்கித் தாராய்;
அன்றிக்கே,
பெருமாள் பக்கல் பண்டே அன்புடையவனாயன்றோ நீ இருப்பது? இப்போது ‘போ’ என்று நான் உனக்குச் சொல்லவேண்டியிருந்ததோ?
‘இல்லை என்றபடி’ என்னுதல். இப்படி இருக்கிற உன்னை நியமிக்க வேண்டுவது ஒன்று உண்டு;
‘அது யாது?’ எனின், ‘அஜாக்கிரதையாய் இராதேகொள்’ என்பது. ‘என் தான் அஜாக்கிரதை?’ என்னில்,
‘உன் தமையனார் நடப்பர் அன்றோ? ‘அவர் நடையிலே நடைகொள்வர்; அவர் நடை அழகிலே கண்வைத்துக் காவற் சோர்வு
பட-பிரமாதம் -கவனக் குறைவு- விடாதே கொள்வாய்,’ என்றாள் தேவி சுமித்திரை.-ஸ்ரீ வைஷ்ணவ லஷணம் -கைங்கர்யமே என்பதை காட்டி அருளுகிறாள் ஸ்ரீ சுமித்ரா தேவி –
‘அப்படியே, இவ்வாத்துமாவையும் இங்கு வைத்தது திருமலைக்குப் போகைக்காக ஆயிற்று,’ என்றபடி.

பைத்த பாம்பு அணையான் திருவேங்கடம் –
தன்னுடைய பரிசத்தாலே விரித்த படங்களையுடைய திருவனந்தாழ்வானைப் படுக்கையாகவுடைய சர்வேசுவரன் அப்படுக்கையைக்காட்டிலும்
விரும்பி வசிக்கின்ற தேசம். இனி, ‘பைத்த பாம்பு அணையாம் திருவேங்கடம்’ என்னுதல்;
திருமலையாழ்வார் தம்மைத் திருவனந்தாழ்வானாகவும் சொல்லப்படும்.
மொய்த்த சோலை மொய் பூந்தடம் தாள் வரை –
செறிந்த சோலையையும், பரப்பு மாறப் பூத்த தடாகங்களையும் உடைத்தான திருத்தாள்வரையை.
எய்த்து இளைப்பதன் முன்னம் சென்று அடைமினோ. எய்த்தல் – நெஞ்சு இளைத்தல். இளைத்தல் – சரீரம் இளைத்தல்.

————————————————————————————–

தாள் பரப்பி மண் தாவிய ஈசனை
நீள் பொழிற் குருகூர்ச் சடகோபன் சொல்
கேழ்இல் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர்
வாழ்வர் வாழ்வு எய்தி ஞாலம் புகழவே.–3-3-11-

கைங்கர்ய ஐஸ்வர்ய லாபம் பலம்
தாள் பரப்பி மண் தாவிய ஈசனை-படிக்கு அளவாக -திரிவிக்ரமனே திரு வேங்கடமுடையான்
நீள் பொழிற் குருகூர்ச் சடகோபன் சொல்-உயந்த பொழில் -திரு நகரிக்கு நிர்வாககரான
கேழ்இல் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர்-ஒப்பு இல்லாத -அர்த்தானுசந்தானத்துடன் அப்யசிக்க வல்லவர்
வாழ்வர் வாழ்வு எய்தி ஞாலம் புகழவே.-இவர் பிரார்த்தித்த கைங்கர்ய சாம்ராஜ்யத்தை
அடைந்து லோகம் கொண்டாடும் படி அடிமை செய்து வாழப் பெறுவார்

திருவடியைப் பரப்பி உலகத்தை அளந்து கொண்ட சர்வேசுவரனை, நீளுகின்ற சோலைகளையுடைய திருக்குருகூரில்
அவதரித்த ஸ்ரீசடகோபர் அருளிச்செய்த ஒப்பில்லாத ஆயிரம் திருப்பாசுரங்களுள் இப்பத்துத் திருப்பாசுரங்களையும் கற்று வல்லவர்கள்
பூமியிலுள்ளவர்களெல்லாரும் புகழும்படி பேற்றினையடைந்து வாழ்வார்கள்.
‘பரப்பித் தாவிய ஈசன்’ என்க. கேழ் – ஒப்பு. ‘ஆயிரம் இராமர் நின்கேழ் ஆவரோ தெரியின் அம்மா!’ (கம். அயோத்.) என்ற
இடத்துக் ‘கேழ்’ இப்பொருளதாதல் காண்க. ‘வல்லவர் ஞாலம் புகழ வாழ்வெய்தி வாழ்வர்,’ எனக் கூட்டுக. ஞாலம் – ஆகுபெயர்.

‘இத்திருவாய்மொழியைக் கற்க வல்லவர்கள், ஆழ்வார் வேண்டிக் கொண்டபடியே திருவேங்கடமுடையான் திருவடிகளிலே
எத்தகைய அடிமைகளும் செய்யப்பெறுவர்,’ என்கிறார்.

தாள் பரப்பி மண் தாவிய ஈசனை –
கடினமான இடத்திலே பூவைப் பரப்பினாற்போலே சுகுமாரமான திருவடிகளைக் கொண்டு காடும் மலையுமான பூமியை
வருத்தமின்றி அளந்துகொண்ட சர்வேசுவரனை.
‘ஆயின், திருவேங்கடமுடையானை யன்றோ பாடிற்று இத்திருவாய்மொழியில்? மண்தாவிய ஈசனைப் பாடிற்று என்றல் யாங்ஙனம்?’ எனின்,
’கொண்டாய் குறளாய் நிலம் ஈரடியாலே, விண் தோய் சிகரத் திருவேங்கடம் மேய, அண்டா!’-பெரிய திரு மொழி -1-10-4- என்றும்,
’மண் அளந்த இணைத் தாமரைகள்’ என்றும், ‘உலகம் அளந்த பொன்னடியேயடைந்து உய்ந்து’ -5-8-9-என்றும் ஆழ்வார்கள் அருளிச்செய்வர்கள்;
திருவரங்கம் பாசுரம் தானே இது -அஷ்டாஷர உபதேசம் தொண்டைமான் சக்கரவர்த்தி -செய்ததால் இந்த பாசுரம் திருவேங்கடத்துக்கு என்கிறார்
அன்றியும், எல்லாரையும் கிரமத்திலே திருவடிகளின் கீழே இட்டுக் கொள்ளுகைக்காக நிற்கிற நிலையாலும்,
கிரமத்திலே–அடி வைத்த கணக்கிலே -அடியார்களைப் படிப்படியாக -என்றுமாம் –
வரையாமல் கானமும் வானரமுமான இவற்றுக்கு முகங்கொடுத்துக்கொண்டு நிற்கிற படியாலும் திருவேங்கடமுடையானை ஸ்ரீவாமனனாகச் சொல்லப்படும்.

நீள் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல் –
திருவுலகு அளந்தருளின திருவடிகளுக்கு அணுக்கன் இட்டாற் போன்று நிழல் செய்யும்படி வளர்ந்த பொழிலையுடைய
திருநகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வார் அருளிச்செய்த.

கேழ் இல் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர்
ஒப்பில்லாத இப்பத்தையும் கற்க வல்லவர்கள். இப்பத்துக்கு ஒப்பு இல்லாமையாவது, ஆத்துமாவினுடைய சொரூபத்திற்குத்
தக்கதான கைங்கரியத்தை விரும்பிய பத்து ஆகையாலே வந்த ஒப்பு இல்லாமை
ஸ்வரூப அநுரூப கைங்கர்யம் மநோ ரதித்த பத்து —

ஞாலம் புகழவே வாழ்வு எய்தி வாழ்வர் –
‘இளையபெருமாள் ஒருவரே! அவர் பெற்ற பேறு என்?’ என்று இங்ஙனே படைவீடாகக் கொண்டாடியது போன்று,
எல்லாரும் புகழும்படியாகக் கைங்கரியத்தை விரும்பிவிடுதல் அன்றி இவருடைய விருப்பமே விருப்பமாகக் கைங்கரியமாகிற
பேற்றினையடைந்து அனுபவிக்கப் பெறுவர்கள்.-ஆச்சார்யா அபிமானமே உத்தாரகம் என்கிறார் –
‘கைங்கரியத்தைப் பெற்று, ஞாலம் புகழ வாழ்ந்த பேர் உளரோ?’ என்ன, அதற்கு விடையாக, ‘இளையபெருமாள் ஒருவரே!’ என்று தொடங்கி
அருளிச்செய்கிறார். இவ்விடத்தில்,
‘திருவரை சுற்றிய சீரை ஆடையன் பொருவருந் துயரினன் தொடர்ந்து போகின்றான்
இருவரைப் பயந்தவள் ஈன்ற கான்முளை ஒருவனோ! இவர்க்கு இவ்வூர் உற வென்றார்சிலர்.
‘என்பத்தைத் கேட்ட மைந்தன் இராமனுக் கிளையாரென்று முன்பொத்த தோற்றத் தேமில் யானென்றும் முடிவி லாத
துன்பத்துக் கேது வானேன்; அவனது துடைக்க நின்றான்; அன்பத்துக் கெல்லை உண்டே? அழகிதென் னடிமை’ என்றான்.’
என்ற கம்ப ராமாயணச் செய்யுள்கள் ஒருபுடை ஒப்பு நோக்கலாகும்.

இனி, ‘வாழ்வு எய்தி ஞாலம் புகழ வாழ்வர்,’ என்று கொண்டு கூட்டி, கொடியராயிருக்கும் பிரபுக்களை,
அவர்கள் செய்யுங் கொடுமையும் நெஞ்சிலே கிடக்கவும், பிழைக்கவேண்டி ஏத்துவார்களே அன்றோ?
அங்ஙனன்றி, இவனை ஏத்தப் பெற்றோமே! இற்றை விடிவும் ஒரு விடிவே!’ என்று பிரீதியோடே ஏத்தும்படியாக வாழ்வர் என்னுதல்.
‘விசேடஞ்ஞர்கள் ஏத்துதலேயன்றி, அவர்களில் சிலர் நெஞ்சிலே துவேஷமுங்கிடக்க ஏத்துதலேயன்றி,
இருந்ததே குடியாக எல்லாரும் பிரீதியோடே புகழ்வார்கள்,’ என்பார், ‘ஞாலம் புகழ வாழ்வர்’ என்கிறார்.

முதற்பாட்டில், திருவேங்கடமுடையான் திருவடிகளிலே எல்லாத்தேசத்திலும் எல்லாக்காலத்திலும் எல்லா நிலைகளிலும்
எத்தகைய அடிமைகளும் செய்யவேணும் என்று விரும்பினார்;
இரண்டாம் பாட்டில், ‘அது ஒரு தேச விசேடத்திலே போனால் பெறுமதன்றோ?’ என்ன,
‘அங்குள்ளாரும் இங்கே வந்து அடிமை செய்கிற தேசமன்றோ? நமக்கு இங்கே பெறத் தட்டில்லை,’ என்றார்;
மூன்றாம் பாட்டில், ‘நிறைவாளர்க்குத் தன்னைக் கொடுத்தவன் குறைவாளர்க்குத் தன்னைச் தரச்சொல்ல வேண்டுமோ?’ என்றார்;
நான்காம் பாட்டில், ‘அவர்களுக்குத் தன்னைக் கொடுத்தான் என்றது ஓர் ஏற்றமோ, எனக்குங்கூடத் தன்னைத் தந்தவனுக்கு?’ என்றார்;
ஐந்தாம் பாட்டில், ‘எனக்குத் தன்னைத் தந்தான் என்றது ஓரேற்றமோ, என்னிலும் தண்ணியாரைத் தேடிக் கிடையாமல் நிற்கிறவனுக்கு?’ என்றார்;
ஆறாம் பாட்டில், ‘இவ்வடிமையிலே இழிய, விரோதிகளும் தன்னடையே போம்’ என்றார்-
ஏழாம் பாட்டில், ‘இக்கைங்கரியத்தைத் திருமலையாழ்வார் தாமே நமக்குத் தருவர்,’ என்றார்;
எட்டாம் பாட்டில், ‘அத்திருமலையாழ்வார் தாமே நம் விரோதிகளைப் போக்கித் தம்மையும் தருவர்,’ என்றார்;
ஒன்பதாம் பாட்டில், ‘திருமலையாழ்வார் எல்லாம் வேண்டுமோ நமக்குப் பேற்றினைத் தருகைக்கு? அவருடைய சம்பந்தமுடையார் அமையும்,’ என்றார்;
பத்தாம் பாட்டில், ‘சேஷிக்கு உத்தேஸ்யமாகையாலே அடியர் ஆனார் எல்லாரும் திருமலையாழ்வாரை அடைமின்,’ என்றார்;
முடிவில், பலம் சொல்லித் தலைக்கட்டினார்.

———————————————————————————————-

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

சர்வத்ர சர்வ சமயே சகலாஸூ அவஸ்தாஷூ -மூன்று சப்தங்கள் இங்கே -யாவதாத்மபாவி -சர்வ சமய எப்போதும் –
எல்லா காலத்திலும் நித்ய சந்த்யா வந்தனம் போலே இல்லை – மன்னி சப்தார்த்தம் –
ஒழிவில் காலம் எல்லாம் -உடனாய் மன்னி -நான்கு சப்தங்கள்
அப்யர்த்தயன் -பிரார்த்தித்தார்
நிகில தாஸ்ய ரசான் முநீந்திர -நிகில -நான்காவது சப்தம் -ஓன்று விடாமல் அனைத்து கைங்கர்யங்கள் –
ஸ்ரீ வேங்கடாத்ரி நில யஸ்ய
பரஸ்ய பும்ஸக
நிஸ் ஸீமா சீல குணம் -சௌசீல்யம் –கீழே ஸீமா உள்ள சௌசீல்யம் பார்த்தோம் முதல் பத்தில் –
இங்கு -என்னையும் விட தாழ்ந்தார் உள்ளார்களா என்று பார்த்து தேடி காத்து நிற்கிறான் -வேடர் வானரம் –இது அன்றோ நிஸ் சீமா சீல குணம்
த்ருதீயே -அவத்தத் -அருளிச் செய்தார்

———————————————————–

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –

ஸ்தானம் உத்கர்ஷம் ஸூ தீப்தம் -வேங்கடம் மேய விளக்கு எழில் கொள் சோதி யாக எழுந்து அருளி -நிரதிசய தீப்தி உக்தனாய்
ஸ்ரமஹர வபுஷம் -கார் எழில் அண்ணல் –
ஸ்வாங்க பர்யாப்த பூஷம் -அணி கொள் செந்தாமரைக் கண் -செங்கனி வாய் -திரு அங்கங்களே போதுமான ஏற்ற திரு ஆபரணங்கள்
தேஷிஷ்டம் நீச யோகாத் -என் கண் பாசம் வைத்த –பரஞ்சுடர் சோதிக்கே –
பிரணமித புவனம் -எல்லா உலகும் தொழும் ஆதி மூர்த்தி
பாவனம் சன்னதானாம் -வேம் கடங்கள் -மேல் வினை முற்றவும் சாரா- இது மெய் –
பிராப்ய அர்ஹ ஸ்தானம் -சமன் கொள் வீடு -தரும் -தடம் குன்றம்
அம்ஹப் பிரசமணம் விஷயம் -பிராப்தி பந்தகங்கள் போக்கும் ஸ்தானம் உடையவன் -திருவேங்கடத்தில் ஏக தேசம்
பந்த விச்சேதி பாதம் -ஓயும் பிறப்பு –வீயுமாறு –நாண் மலராம் அடித்தாமரை –
சீக்ர அபியான ஷம சுப வசதிம் -எய்த்து இளைப்பத்தின் முன்னம் -நோக்கி போக -சென்று அடையும் படி -ஏற்ற -மங்கள -இருப்பிடம் –
லம்பிதாச்சார்யாமுக்யம் -கைங்கர்யம் பிரார்த்தித்தார்

————————————————————-

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 23-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்–

ஒழிவிலாக் காலம் உடனாகி மன்னி
வழு விலா வாட்செய்ய மாலுக்கு -எழு சிகர
வேங்கடத்துப் பாரித்த மிக்க நலம் சேர் மாறன்
பூங்கழலை நெஞ்சே புகழ்———-23-

—————————————————————————

அவதாரிகை –

இதில்
கைங்கர்யத்தில் பெரிய பாரிப்பை பேசினபடியை
அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
இப்படி பிரகிருதி சம்பந்தத்தின் உடைய கொடுமையை அனுசந்தித்து-3-2-
சோகாவிஷ்டர் ஆன இவருடைய கிலேசத்தை
மாற்றுகைக்காக
தான் வடக்குத் திருமலையில் நிற்கும் நிலையைக் காட்டிக் கொடுக்க
நிலை பெற்றேன் நெஞ்சம் பெற்றது நீடுயிர் -3-2-10–என்று அவனைக் கிட்டி
தம்முடைய ஸ்வரூபம் பெற்றவாறே
ஸ்வரூப அனுரூபமாக அடிமை செய்து வாழ வேணும் -என்று
சீலாதிகனான திருவேங்கடமுடையான் திருவடிகளிலே
வழு விலா வடிமை செய்து வாழப் பாரிக்கிற
ஒழிவில் காலத்தின் தாத்பர்யத்தை
ஒழிவிலாக் காலம் -என்று துடங்கி அருளிச் செய்கிறார்-

—————————————————————————–

வியாக்யானம்–

ஒழிவிலாக் காலம் உடனாகி மன்னி –
சர்வ தேச
சர்வ கால
சர்வ அவஸ்தைகளையும்
நினைக்கிறது –

வழு விலா வாட்செய்ய மாலுக்கு –
அடிமையில் ஒன்றும் நழுவுதல் இன்றிக்கே
சர்வ வித கைங்கர்யங்களையும்
சர்வேஸ்வரனுக்கு செய்ய வேணும் என்று –

எழு சிகர வேங்கடத்துப் பாரித்த –
எழுச்சியை யுதைத்தான சிகரங்களை யுடைய
திருமலையிலே பாரித்த —
பவாம்ஸ்து சஹ வைதேஹ்யா கிரிஸா நுஷூரம்ச்யதே
அஹம் சர்வம் கரிஷ்யாமி ஜாக்ரதஸ் ஸ்வ பதஸ் சதே-என்று
சித்ர கூடத்திலே
இருவருமான சேர்த்தியிலே
அனைத்து அடிமையும் செய்ய வேணும் என்று ஆசைப் பட்ட
இளைய பெருமாளைப் போலே
இவரும்-
அலர்மேல் மங்கை உறை மார்பனாய்-
ஓங்கு வேங்கடம் மேவி
தான் ஓங்கி நிற்கிற
சென்னி ஓங்கு தண் திரு வேங்கட முடையான்
திருவடிகளிலே
எப்பேர்ப்பட்ட அடிமைகளையும் செய்ய வேணும் என்று உத்சாஹித்த –

மிக்க நலம் சேர் மாறன் –
அனுரக்தஸ்ஸ பக்தஸ்ஸ-என்று
ஆராவன்பு இளையவனைப் போலே
ஆரா அன்பில் அடியேன் -என்னும்படி
நிரவதிக பக்தி உக்தரான ஆழ்வார் –

பூங்கழலை நெஞ்சே புகழ் –
அவர்
பூவார் கழல்களிலே அடிமை செய்தாப் போலே
மனசே
நீயும்
அபிராமமாய் புஷ்பம் போலே ம்ருதுளமாய் இருக்கிற
அவர் சரணங்களை ஸ்துத்திப் போரு-
மனசே நினை என்னாமல் ஸ்துதி – முடியானே கரணங்கள் போலே
அவர் விஷயத்திலே வாசகமான அடிமையைச் செய்யப் பார்
உத்தர வாக்யத்தில் பிரதிபாதிக்கிற
கைங்கர்யம் தான் ததீய பர்யந்தமாய் யாயிற்று இருப்பது-

இத்தால் –
ஒழிவில் காலம் எல்லாம் -என்கிற முதல் பாட்டின் அர்த்தத்தை
அருளிச் செய்த படி
மேல்
சிந்து பூ மகிழும் -என்று காயிக கைங்கர்யத்தையும்
தெண்ணிறைச் சுனை நீர் திருவேங்கடம் –எண்ணில்-என்று மானசமான அடிமையையும்
ஈசன் வானவர்க்கு என்பன் –என்று -வாசிகமான அடிமையையும் என்று சொல்லி
வேங்கடத்து உறைவார்க்கு நம -ஸ்வ போக்த்ருத்வ புத்தி நிவ்ருத்தி சொல்லி
சமன் கொள் வீடு தரும் தடம் குன்றம் -என்று
அத்தக் கைங்கர்யத்தை திருமலை ஆழ்வாரே தந்து அருளுவார் -என்றும்
திரு வேங்கட மா மலை ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே -என்று
அந்த கைங்கர்ய விரோதி நிவ்ருதியையும் திருமலை ஆழ்வாரே பண்ணி அருளுவர் என்றும்
இப்படி முதல் பாட்டின் அர்த்தத்தை விவரித்து அருளின இவைகளும்
இவர்க்கு விவஷிதம் –

———————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: