பகவத் விஷயம் காலஷேபம் -70- திருவாய்மொழி – -3-3-1….3-3-5—ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

‘நிலைப்பெற்று என்னெஞ்சம் பெற்றது நீடு உயிர்’-3-2-10- என்று அவனைக் கிட்டித் தம்முடைய சேஷத்வ விசிஷ்ட ஸ்வரூபம் பெற்றவாறே,
சொரூபத்திற்குத் அனுரூபமான தகுதியான அடிமை பெறவேணும் என்று பாரிக்கிறார் இத்திருவாய்மொழியில்.
பிரகிருதி சம்பந்தத்தால் வந்த கரணங்களின் குறைவை அநுசந்தித்து -அழகர் உடைய சௌந்தர்யாதிகளை -நினைத்த வகைகளெல்லாம்
பரிமாறப் பெறாமையாலே நொந்து இறைவன் முதலிலே இதனைத் தவிர்த்துத் தன்னை யனுபவித்தற்கு உறுப்பாகப் பல உபாயங்களைப் பாரித்து வைத்தான்;
அவற்றிற்குத் தப்பினேன்; அவதாரங்களுக்குத் தப்பினேன்; உயிருக்குள் உயிராயிருக்கும் தன்மைக்குத் -அந்தராத்மாத்வதையும் -தப்பினேன்;
இப்படி அவன் பாரித்து வைத்த வழிகள் முழுதிற்கும் தப்பின யான், இனிக் கிட்டி அனுபவித்தல் என்று ஒரு பொருள் உண்டோ?
இழந்தேனேயன்றோ!’ என்று நைராச்யத்துடன் ஆசையற்றவராய் முடியப் புக, ‘வாரீர் ஆழ்வீர்! நாம் உமக்காக அன்றோ திருமலையில் வந்து நிற்கிறது?
உம்மை இவ்வுடம்போடே அனுபவிக்கைக்காக இங்கே வந்து நின்றோமே! நீர் அங்குச் சென்று காணக்கூடிய காட்சியை
நாம் இங்கே வந்து காட்டினோமே! இனி, உம்முடைய இவ்வுடம்பு நம்முடைய அனுபவத்துக்கு விரோதியுமன்று காணும்;
நீர்தாம் கரணங்களின் குறைவினை நினைத்தலாலே நோவு படுகிறீராகில், முதலிலே இது இல்லாதாரும் நம்மை யனுபவிக்கும்போது
படும் பாடு இது காணும்; அவர்களும் வந்து அனுபவிக்கிற இடங்காணும் இத்திருமலை; ஆன பின்னர், நீரும் இவ்வுடம்போடே நினைத்த
அடிமைகளெல்லாம் செய்யும்,’ என்று தான் திருமலையிலே வந்து நிற்கிற நிலையைக்காட்டிச் சமாதானம் பண்ண
சமாதானத்தையடைந்தவராய், அடிமை செய்யப் பாரிக்கிறார்.-

ந வேதாந்தாது சாஸ்திரம் -ந மது மதனது -தத்வம் -ந சத்வாது ஆரோக்கியம் ந த்வம மந்த்ரம் ஷேம கரம் –
மந்திர ரத்னம் -ஆச்சார்ய ருசி பரிக்ருஹீதம் -த்வயம் -உத்தர வாக்யம் -பிராப்ய நிஷ்கர்ஷம் செய்த அநந்தரம்
வாசிகமாய் அங்கு அடிமை செய்தான் வாய்ந்து –
பூர்வ வாக்யம் -சரணா கதி அனுஷ்டானமும் திருமலையிலே –
ஒழிவில் காலம் எல்லாம் /அகலகில்லேன் இறையும் -இரண்டு பாசுரங்களும் சாரதமம் –
பொல்லா ஆக்கையின் புணர்வினை அறுக்கல் அறா-பொல்லா ஆக்கை இல்லை -அறுக்கவும் வேண்டாமே -ஈஸ்வராயா நிவேதிதும்
உடம்புடன் தானே கைங்கர்யம் செய்ய வேண்டும் -10 புராணம் -ருக் வேதம் சொல்லும் திருவேங்கடம் -கலௌ வேங்கடேசன் –
இதம் பூர்ணம் –சர்வம் பூர்ணம் -குணங்களாலே பூர்ணம் -எழில் கொள் சோதி இங்கே பரஞ்சோதி அங்கே-

திருமந்திரம் -ப்ராப்ய பரம் / த்வயம் உபய பரம் / சரம ஸ்லோகம் ப்ராபக பரம் / த்வய உத்தர வாக்யார்த்தம் திருமந்த்ரார்த்தம் இப்பதிகம் –

‘யாங்ஙனம்?’ எனில்,
1-தர்மி ஒன்றே ஆகையாலே, விஷயம் எங்கும் ஒக்கப் பூர்ணமான பின்பு, ஒரு தேச விசேடத்திலே சென்றால்
செய்யக்கூடிய அடிமைகளெல்லாம் இந்நிலத்திலே செய்யலாம்படிக்குத் தகுதியாகக் குறையற்றிருந்ததாகில்,
2-நமக்கும் இவ்வுடம்பு விரோதியாதலின்றி அடிமை செய்கைக்குப் பாங்காயிருந்ததேயாகில்,
3-இனித்தான் அங்குப் போனாலும் -சோஸ்நுதே -சர்வான் காமான் -‘அவன்கல்யாண குணங்களனைத்தையும் முற்றறிவினனான
இறைவனோடு அனுபவிக்கிறான்,’ என்கிறபடியே, குண அனுபவமன்றோ பண்ணுகிறது?
4-அந்தச் சௌலப்யம் முதலிய நற் குணங்கள்தாம் விளங்கிக் காணப்படுவதும் இங்கேயாகில், -அங்குள்ளார் சாம்யாபத்தி அடைந்தவர்கள் -இங்கு தானே ஸ்பஷ்டமாக இருக்கும்
5-இனி அங்குள்ளாரும் வந்து அடிமை செய்வதும் இங்கேயாகில், நாமும் அங்கே சென்று புக்கு அடிமை செய்வோம்,’ என்று கொண்டு,
பசியுமிருந்து கையிலே சோறும் உண்டாயிருக்குமவன், நீரும் நிழலும் கண்டால் உண்ணப் பாரிக்குமாறு போன்று,
இவரும் அடிமை செய்யப் பாரிக்கிறார். ‘பாரிக்கிறது என்? அடிமை செய்யவொண்ணாதோ?’ எனின்,
இவ்விஷயத்தில் அடிமை செய்ய ஒருப்படுவார்க்கெல்லாம் உள்ளது ஒன்றாயிற்று
முன்பே பாரித்துக் கொண்டு இழியுமது; -அஹம் சர்வம் கரிஷ்யாமி -‘நான் எல்லாக்காலத்திலும் எல்லா அடிமைகளும் செய்வேன்,’
என்பதன்றோ இளைய பெருமாள் படி? -அஹம் -நாம் இவர் /கேசவன் தமருக்கு-2-7- பின் கூடக் கூட்டியே செல்வர் –
-ஒழிவில் – வழு விலா-அடிமை -இவர் -சர்வம் விட ஏற்றம் வ்யதிரேக முகத்தில் அர்த்தம் புஷ்டி
-கிரி சானுஷுசி ரம்யதே-இவரும் திருமலை தாழ் வரைகளில் கைங்கர்யம்-
உணவையே முக்கியமாகக் கொண்ட ஒருவன், ஊண் அத்தியாயம் படிக்குமாறு போன்று இருப்பது ஒன்றாயிற்று
இவருடைய கைங்கரிய மனோரதம்.–நாயனார் ஐயங்கார் கதை –

ஒழிவு இல் காலம்எல்லாம் உடனாய் மன்னி
வழு இலா அடிமை செய்ய வேண்டும் நாம்
தெழி குரல் அருவித் திருவேங் கடத்து
எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே.–3-3-1-

சர்வ தேச -சர்வ கால -சர்வ அவஸ்த உசித -சகல வித கைங்கர்யங்களையும் -நித்ய ஸூரிகள் போலவே –
காம ரூபான் சஞ்சரின் ஏக தா பவதி –
சர்வாதிகன் -சேஷி -திருவேங்கடமுடையான் –சர்வ பிரகார விசிஷ்டமான சேஷ வ்ருத்தியை ஸுவ சம்பந்தி ஜனங்களுடன் ஒருப்பட்டு பாரிக்கிறார்
தெழி குரல் அருவித் திருவேங் கடத்துஎழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே-ஸ்ரீ மதே நாராயண-தேஜோ மய விக்ரகம் –
வாக்ய த்வயத்தில் வியக்தம் அன்றோ ஸ்ரீ சம்பந்தம் -திரு -ஸ்ரீ என்றவாறே
குலக்ரமமான நாதன்
நாம்-அசாதாராண சேஷ பூதரான நாம் -இவருக்காக தானே வந்து நிற்கிறார்
ஒழிவு இல் காலம்எல்லாம் உடனாய் மன்னி-வழு இலா அடிமை செய்ய வேண்டும் -ஆய நம
சர்வ அவச்தைகளிலும் பிரியாமல் -மன்னி -ஒன்றும் நழுவாமல் -எப்போதும் -சர்வ சேஷ வ்ருத்திகளையும் செய்ய வேண்டும்
சர்வ சேஷ வ்ருத்தி நித்ய அபேஷையே சேஷ பூதருக்கு ஸ்வரூபம்
எழில் கொள் சோதி -அப்ரமேய தச் தேஜ -யஸ்ய ச ஜனகாத்மஜா -சௌந்தர்ய ரூபை யான லஷ்மியோட்டை சம்பந்தம் -ஸூ சகம்
வாக்ய த்வயத்தில் லஷ்மி சம்பந்தம் வியக்தம் -ஸ்ரீ மன் நாராயணாய நம-வேண்டுமே –

மிக்க ஒலியோடு கூடிய அருவிகளையுடைய திருவேங்கடத்து எழுந்தருளியிருக்கின்ற அழகினைக் கொண்ட
ஒளியுருவனான எந்தை தந்தை தந்தைக்கு, எல்லையில்லாத காலமெல்லாம் எல்லா இடத்திலும் உடனிருந்து ஒன்றும்
குறையாதபடி எல்லா அடிமைகளையும் நாம் செய்ய வேண்டும்.
தெழித்தல் – ஒலித்தல். வழுவிலா – குற்றமில்லாத. குற்றம் இல்லாமையாவது, ஓர் அடிமையும் நழுவாமை; ‘எல்லா அடிமையும்’ என்றபடி.
இத்திருவாய்மொழி, நாற்சீர் நாலடியான் வருதலின் கலி விருத்தம் எனப்படும்.

‘திருவேங்கடமுடையான் திருவடிகளிலே எல்லாத்தேசத்திலும் எல்லாக்காலத்திலும் எல்லா நிலைகளிலும்
எல்லா அடிமைகளும் செய்ய வேண்டும்,’ என்கிறார்.

ஒழிவு இல் காலம் எல்லாம் –
1- முடிவில்லாத காலமெல்லாம். இது, இனி வருகின்ற காலத்தைக் குறிக்கின்றது.
2-இதற்கு, -காலத்ரயம் –‘இதுகாறும் கழிந்த காலத்தையுங்கூட்டி அடிமை செய்யப் பாரிக்கிறார்’ என்று மிகைபடக் கூறுவாருமுளர்.
அங்ஙனேயாயின், ‘கழிந்த காலத்தை மீட்கை’ என்று ஒரு பொருள் இல்லையேயன்றோ?-பழுதே பல பகலும் போயின –
பரஞ்சோதி உபசம்பத்யே –ஸ்வேன ரூபேண நோ பஜனம் ஸ்மரன்-இதம் சரீரம் ‘ஜனங்களின் நடுவிலிருந்தும்
இச்சரீரத்தை நினையாமலே நாலு பக்கங்களிலும் சஞ்சரிக்கிறான்,’ என்கிறபடியே,
கழிந்த காலத்தில் இழவு நெஞ்சிற்படாதபடி மறப்பிக்கையேயன்றோ உள்ளது?
நமே துக்கம் -இத்யாதி -‘இது ஒன்றே எனக்குத் துக்கத்தைத் தருகிறது; அது யாதெனில், ‘பிராட்டியினுடைய வயதானது
வீணே கழிகின்றதே! போன காலத்தை மீட்க முடியாதே!’ என்று வருந்தினார் பெருமாள்;
ஆகையாலே, ‘இனி மேலுள்ள காலம் எல்லாம்’ என்பதே பொருள்
பகவத் போக்யதா ந ஸ்மரன் -அரக்கியை –மூக்கு ஈர்ந்தாயை அடைந்தேன் முதல் முன்னமே -அடைந்த சீர்மை -பல காலம் நினைவு இல்லாதபடி –
பூர்வ வருத்தம் -பகவத் லீலா உபகரணம் -இப்பொழுது போக உபகரணம் -புத்தி தெளிந்து குறை நெஞ்சில் படாது என்றுமாம் –
காலம் சாவதி -கைங்கர்யமும் சாவதி -காலம் அளவுக்கு உட்படுத்தாமல் பெற்றோமே -ஒழிவில் காலம் என்றபடி
ந காலம் அங்கே போலே

உடனாய் –
காலமெல்லாம் வேண்டினதைப் போன்று, தேச சம்பந்தமும் விருப்பமாயிருக்கிறது காணும் இவர்க்கு.
இளைய பெருமாள் படை வீட்டிலும் அடிமை செய்து வனத்திலும் அடிமை செய்தாற்போலே.
பரதன் பிரிந்து இருந்து பட்டால் போலே இல்லை என்றுமாம் –
மன்னி –
சர்வேசுவரனும் பிராட்டியுமாய்த் திரையை வளைத்துக்கொண்டிருந்தாலும், படிக்கம் குத்து விளக்குப் போன்று அவ்வளவிலும் நின்று
அந்தரங்கமான அடிமைகளைச் செய்ய வேண்டும். இதனால், எல்லா நிலைகளையும் நினைக்கிறது.
நின்று -ராகவத்வே -தத் தத் அவதாரம் -சீதா போலே -எதோ உசிதம் -ஏற்ற திரு மேனி பரிக்ரகம்
மன்னி -எல்லா காலம் சொன்ன பின்பு -யாவத் ஜீவன் அக்னி ஹோத்ரம் சாயம் பிராதா -அது போலே இல்லையே கைங்கர்யம் –
ராமமாணா வனத்ரயா -‘பெருமாள் பிராட்டி இளைய பெருமாள் ஆகிய மூவரும், அழகிய பர்ணசாலையைக் கட்டிக்கொண்டு
காட்டில் மகிழ்ந்தவர்களாயிருந்தார்கள்,’- என்று இருவர்க்கு உண்டான அனுபவத்திலே மூவரைச் சொல்லுகிறார்;
அவ்விருவர்க்கும் பரஸ்பரம் கலவியால் பிறக்கும் ரசம் அச்சேர்த்தியைக் கண்டவனுக்கும் பிறக்கையாலே.
கைங்கர்யம் துக்க ரூபம் இல்லை -பிராப்த விஷயத்திலே -என்கிறபடி
ஆக, ‘ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி’ என்றது, எல்லாக்காலத்தையும் எல்லாத் தேசத்தையும் எல்லா நிலைகளையும் நினைக்கிறது.
ஆழ்வார் திருவரங்கப்பெருமாளரையர் இத்திருவாய்மொழி பாடப்புக்கால், ‘ஒழிவில் காலமெல்லாம், காலமெல்லாம், காலமெல்லாம்’ என்று
இங்ஙனே நெடும்போது எல்லாம் பாடி, மேல் போக மாட்டாமல், அவ்வளவிலே தலைக்கட்டிப் போவாராம்.

வழுவிலா அடிமை செய்யவேண்டும் –
அடிமையில் ஒன்றும் ஒருவர்க்கும் கூறு கொடுக்கவொண்ணாதாயிற்று. எல்லா அடிமைகளும் நானே செய்யவேண்டும். என்றது,
‘இளைய பெருமாள் பிரியாமல் காட்டிலேயும் கூடப்போந்து செய்த அடிமைகளும் செய்ய வேணும்;
ஸ்ரீபரதாழ்வான் படை வீட்டிலே பிரிந்திருந்து செய்த அடிமைகளும் பிரியாதேயிருந்து செய்யவேணும்,’ என்றபடி.
ஓரடிமை குறையிலும் இவர்க்கு உண்டது உருக்காட்டாது; ஆதலின், ‘வழுவிலா அடிமை’ என்கிறார்.

ஸ்ரீ பரதாழ்வானைக் கைகேயி ‘ராஜந்’ என்ன, அப்போது சுவாதந்தரியம் பொறுக்கமாட்டாமல் படுகுலைப்பட்டாற்போன்று
‘கதறினான்’ என்கிறபடியே, கூப்பிட்டான் அன்றோ? இதனால், பாரதந்திரிய ரசம் அறிவார்க்குச் சுவாதந்திரியம் கேடு என்று தோற்றும்.
மேலும், ஏபிஸ்ச ஸசிவைஸ் ஸார்த்தம் – சமீபத்தில் இருக்கிற மந்திரிகளோடுங்கூட’ – தன்னிற்காட்டிலும் கண் குழிவுடையார்
இத்தனை பேர் உண்டாயிற்று. தன்னோடு ஒத்த ஆற்றாமையுடையார் பலரைக் கூட்டிக்கொண்டு போந்தான்.
‘அவற்றுக்கும் அவ்வாற்றாமை உண்டு’ என்றதனை,
‘ஒளிதுறந் தனமுகம் உயிர்து றந்தெனத் துளிதுறந் தனமுகில் தொகையும் தூயநீர்த்
தளிதுறந் தனபரி தான யானையும்களிதுறந் தனமலர்க் கள்ளுண் வண்டினே.
‘நீட்டில களிறுகைந் நீரின் வாய்புதல் பூட்டில புரவிகள் புள்ளும் பார்ப்பினுக்கு
ஈட்டில இரைபுனிற் றீன்ற கன்றையும் ஊட்டில கறவைகன் றுருகிச் சோர்ந்தவே.’-(கம். அயோத். 205. 212) என வரும் பாடல்களால் உணரலாகும்.
‘இவன் தம்பி’ என்று சுவாதந்தரியம் மேற்கொண்டு, கண்ணழிக்கலாவது எனக்கு அன்றோ? இவர்கள் சொன்னவற்றைச் செய்ய வேண்டுமே!
இவர்கள் தாங்களே காரியத்தை விசாரித்து அறுதியிட்டு, ‘நீர் இப்படிச் செய்யும்’ என்று இவர்கள் ஏவினால்
அப்படிச் செய்ய வேண்டி வருமன்றோ அவர்க்கு? அவருடைய பிரிவால் தனக்கு உண்டான ஆற்றாமையை அறிவிக்கப் போகிறானாகில்,
தனியே போய் அறிவிக்கவுமாமன்றோ? இவர்களையெல்லாம் திரட்டிக்கொண்டு சென்றதற்குக் கருத்து என்?’ என்னில்,
‘நம் ஒருவர் முகத்தில் கண்ணீர் கண்டால் பொறுக்கமாட்டாதவர், தம்மைப் பிரிந்த பிரிவு பொறுக்கமாட்டாமல்
கண்ணும் கண்ணீருமாயிருப்பார், இத்துணைப் பேரைக் கண்டால் மீளாரோ?’ என்னுங் கருத்தாலே.
போருக்குப் போவாரைப் போன்று யானை குதிரை அகப்படக் கொண்டு போகிறான்; அவற்றுக்கும் அவ்வாற்றாமை உண்டு ஆகையாலே.
‘ஸிரஸா யாசித : – தலையால் வணங்கி யாசிக்கப்பட்ட நீர்’ – என் பேற்றுக்குத் தாம் விரும்பித் தருமவர் யான் என் தலையால் இரந்தால் மறுப்பரோ?
‘மயா-என்னாமல்’ –அபேஷை- அத் தலை இத்தலையானால் செய்யாதொழிவரோ?
‘ப்ராது: – பின் பிறந்தவன்’ – ‘பரதனையும் உன்னையும் சத்துருக்கனனையும் நீங்கி எனக்குச் சிறிது சுகம் உண்டாகுமேயாயின்,
அந்தச் சுகத்தை நெருப்பானது சாம்பலாக்கட்டும்!’ என்னும்படி தம் பின், பிறந்தவனல்லனோ நான்? இதனால், என் தம்பிமார்க்கு உதவாத
என் உடைமையை நெருப்புக்கு விருந்திட்டேன்,’ என்கிறார் என்றபடி,
‘சிஷ்யஸ்ய -சிஷ்யன்’ -‘தம்பியாய்க் கூறு கொண்டு முடி சூடியிருக்குமவனோ நான்? எல்லா ரஹஸ்யமும் தம்மிடமே அன்றோ பெற்றது?
திரு சங்கு திருவவதாரம் -ஸ்ரீ வைகுண்டத்தில் -ஆசார்யத்வம் உண்டே
‘தாசஸ்ய – அடியவன்’ – சிஷ்யனாய்க் கிரய விக்கிரயங்கட்குத் தகுதியில்லாதவனாயிருந்தேனோ?
ஆன பின்னர், நான் விரும்பிய காரியத்தை மறுப்பரோ? இதுவன்றோ கைங்கரியத்தில் சாபலமுடையார் இருக்கும்படி?’

’இந்தக் கைங்கரியமநோரதம் முன்பும் உண்டன்றோ?
இந்தக் கைங்கரிய மநோரதம் முன்பும் உண்டன்றோ?’ என்றது, ‘தொழுது எழு என் மனனே’ ‘தழுவுவன் வணங்குவன் அமர்ந்தே’,
‘தனக்கேயாகஎனைக்கொள்ளுமிஃதே’ என்பன போன்ற இடங்களைத் திருவுள்ளம் பற்றி.
இப்போது ‘இவ்வளவால் போராது, அநுஷ்டான பரியந்தமாகவேணும்,’ என்பார், ‘செய்ய’ என்கிறார்.
கைங்கரிய மநோரதமே பிடித்து இவர்க்கு உத்தேஸ்யமாயிருக்கிறது ஆதலின், ‘செய்ய வேண்டும்’ என்கிறார்.
‘சிற்றின்பம் நுகரவேணும்’ என்று புக்கால், இரண்டு தலைக்கும் ஒத்த ரசமான போகத்திற்கு 3ஒரு தலையிலே பொருளை நியமித்து,
போகத்திற்குரிய காலம் வருமளவும் லீலையாலே போது போக்கி, போக காலம் வந்தவாறே புறப்படத் தள்ளிவிடுவார்கள்;
இனி, ‘சுவர்க்க அனுபவம் பண்ண வேணும்’ என்று புக்கால், ‘சுவர்க்கத்திலும், நாசமடையக் கூடியவனுக்குக் கீழே
விழுந்துவிடுவோம் என்ற பயத்தினால் சுகமில்லை,’ என்கிறபடியே, அருகே சிலர் நரகானுபவம் பண்ணக் காண்கையாலே,
இருந்து அனுபவிக்கிற இதுதானும் உண்டது உருக்காட்டாதபடியாயிருக்கும்; இனி, சுவர்க்கத்திலிருப்புக்கு அடியான புண்ணியமானது
சாலில் எடுத்த நீர்போலே குறைந்தவாறே ‘த்வம்ஸ’ என்று முகம் கீழ்ப்படத் தள்ளுவார்கள்;
இப்படிச் சொரூபத்துக்குத் தக்கன அல்லாதனவாய் அகங்கார மமகாரங்கள் அடியாக வரும் இவ்வனுபவங்கள் போலன்றி,
சொரூபத்தோடு சேர்ந்ததுமாய், அடிமை கொள்ளுகிறவனும் நித்தியனாய், காலமும் நித்தியமாய், தேசமும் நித்தியமாய்,
ஒரு காலமும் மீள வேண்டாதபடி அபுநராவ்ருத்தி லக்ஷண மோக்ஷமாய், சிற்றின்ப விஷய அனுபவம் போன்று
துக்கங் கலந்ததாயிருத்தல் அன்றி, நிரதிசய சுக ரூபமாய் இருப்பதொன்றன்றோ இது?

நாம் –
1-தம் திருவுள்ளத்தையுங்கூட்டி ‘நாம்’ என்கிறாராதல்;
2-அன்றி, கேசவன் தமர்க்குப் பின்பு இவர்தாம் தனியரல்லாமையாலே திருவுள்ளம் போலேயிருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களையும்
கூட்டிக்கொண்டு, ‘நாம்’ என்கிறாராதல்.
அடிமை செய்யக் கோலுகிற இவருடைய பாரிப்பேயன்றி, அடிமை கொள்ளக் கோலுகிறவனுடைய பாரிப்பு இருக்கிறபடி சொல்லுகிறது மேல்:
இருந்தவிடத்திலேயிருந்து மநோரதிக்கிறார் இத்தனையன்றோ இவர்? அவன் தனக்குக் கலவிருக்கையான கலங்காப் பெருநகரத்தை விட்டு
இவ்வளவும் வர வந்து திருமலையிலே நின்று, தன் அநுஷ்டானத்தாலே தெரிவிக்கிறானன்றோ தன் பாரிப்பை?

தெழி குரல் அருவி –
கம்பீரமான ஒலியையுடைத்தான அருவிகளையுடைய. திரு அருவியின் ஒலியுங்கூடக் கொள்ளத் தக்கதாயிருக்கிறது இவர்க்கு
அந்நிலத்திலுள்ளதொன்றாகையாலே. இந்த ஒலி, இவர்க்குக் ‘கைங்கரிய ருசியுடையார் அடிமை செய்ய வாருங்கோள்’ என்றாற்போலே இருக்கிறது.
‘சிலைக்கை வேடர் தெழிப்பு அறாத’-சிங்க வேழ் குன்றமே – என்று திருவேங்கட யாத்திரை போகிறவர்களைப் பறிக்கிற வேடருடைய ஆரவாரமும்
உத்தேஸ்யமாயிருக்கிறதன்றோ அந் நிலத்திலுள்ளதொன்றாகையாலே? கைம்முதல் -உபாயாந்தர சம்பந்தம் அறுக்க வேடர்களை வைத்து அருளுகிறான் –
ஆக, அங்குத்தைத் திருவேடர் பறிக்கிற ஆரவாரமுங் கூட உத்தேஸ்யமாயிருக்கும்போது இவர்க்கு
இந்தத் திருஅருவியின் ஒலியுங்கூட உத்தேஸ்யமாகச் சொல்லவேணுமோ?

திருவேங்கடத்து எழில் கொள் சோதி –
‘அடிமை கொள்ளுகைக்குப் பாங்கான நிலம் இது,’ என்று அவன் வந்து வசிக்கிற தேசம்.
‘பாங்கான நிலம் ஆயினவாறு என்?’ எனின், இச்சரீர சம்பந்தமற்று அர்ச்சிராதி மார்க்கத்தாலே ஒரு தேச விசேடத்திலே போனால்
இவன் செய்யக்கூடிய அடிமையை இந்நிலத்தில் இவன் செய்யலாம்படி அவன் வந்து வசிக்கின்ற தேசமாகையாலே என்க.திரு-கைங்கர்ய ஸ்ரீ
தூரத்திலுள்ளவனேயாகிலும், மேல் விழ வேண்டும்படி வடிவழகு இருத்தலின், ‘எழில் கொள் சோதி’ என்கிறார்.
வானார் சோதியையும் நீலாழிச் சோதியையும் வேறுபடுத்திக் காட்டும் பொருட்டு ‘வேங்கடத்து எழில் கொள் சோதி’ என்கிறார்.
வானார் சோதி, பகல் விளக்குப்பட்டிருக்கும்: நீலாழிச் சோதி கடல் கொண்டு கிடக்கும்;
வேங்கடத்து எழில்கொள் சோதி, குன்றத்து இட்ட விளக்காயிருக்கும்; ‘வேங்கடமேய விளக்கே’யன்றோ?
அந்நிலத்தின் தன்மையாலே அழகு நிறம் பெற்றபடி.
எந்தை – அழகில்லாதவனேயாயினும்
விடவொண்ணாதபடியிருக்கும் சம்பந்தத்தைத் தெரிவிக்கிறார்.
இனி,-திருவேங் கடத்து-எழில் கொள் சோதி ‘சௌலப்யத்தாலும் அழகாலும் தம்மைத் தோற்பித்த படியைத் தெரிவிக்கிறார்’ எனலுமாம்.
தந்தை தந்தைக்கு –
எல்லார்க்கும் முதல்வன் என்றபடி.

இப்பாசுரத்தால், கைங்கரியப் பிரதானமான திருமந்திரத்தின் பொருளை அருளிச்செய்கிறார்:
புருஷார்த்தம் கைங்கரியமே என்று அறுதியிடுகின்ற திருமந்திரம் என்றபடி.
திருமந்திரத்தின் பொருளாவது,
‘எம்பெருமானுக்கே உரியனான நான், எனக்கு உரியன் அன்றிக்கே ஒழியவேண்டும்; சர்வ சேஷியான நாராயணனுக்கே எல்லா அடிமைகளும்
‘ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்ய வேண்டும்’ என்னுமிதனால்,
நான்காம் வேற்றுமையின் பிரார்த்தனையைச் சொல்லுகிறது; ‘
நாம்’ என்னுமிதனால், பிரணவத்தாற் சொல்லப்படுகின்ற இவ்வாத்துமாவினுடைய சொரூபத்தைச் சொல்லுகிறது;
‘இது, சொல்லின் சுபாவத்தைக் கொண்டு சொன்னோம்’ என்று நம்பிள்ளை அருளிச் செய்தருளின வார்த்தை.
‘தெழிகுரல் அருவித் திருவேங்கடத்து எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கு’ என்றதனால், நாராயண பதத்தின் பொருளை அருளிச்செய்கிறார்;
த்வயத்தின் உத்தரவாக்யார்த்தம் இதில் உண்டே –
ஸ்ரீ மத்-மது பிரத்யயம்–உடனாய் -மன்னி சப்தம் நித்ய யோகத்தை சொல்லும் -ஸ்ரீ சப்தம் கர்ப்பித்தம் –
நாராயணன் தானே பிராப்தி இருக்கிறவர் -நாரங்களுக்கு அயனம் -கைங்கர்யம் பேச்சு வந்தாலே நாராயணன் சொன்னதாகுமே –
இறுதி இரண்டு அடிகள் இத்தை விளக்கும் -நாம் -கைங்கர்யம் கர்த்தா /-முதல் இரண்டு அடிகள் கைங்கர்யம்/ -இறுதி அடிகள் கைங்கர்யம் பிரதி சம்பந்தி –
சௌலப்யமும் வடிவழகும் ஸ்வாமித்துவமும் எல்லாம் – நாராயண பதத்திற்குப் பொருள். பிராப்த விஷயத்தில் செய்யும் கைங்கரியமே பிராப்யமாகும்.
திருவேங்கடத்து’ என்றதனால் சௌலப்யமும், ‘எழில்கொள் சோதி’என்றதனால் வடிவழகும், -‘எந்தை’ என்றதனால் ஸ்வாமித்துவமும் போதருதல் காண்க.

‘பிராப்த விஷயத்தில் கைங்கரியமிறே ரசிப்பது’ (முமுக்ஷூப்படி, 173.)பிராப்தவிஷயம் – வகுத்த விஷயம். பிராப்யம் – பலம்.
ஆக, ‘ஓம் நமோ நாராயணாய’ என்ற திருமந்திரத்தில் ‘ஓம் நாராயணாய’ என்ற பதங்களின்பொருள் இப்பாசுரத்தில் சொல்லப்பட்டன;
இங்குச் சொல்லப்படாத ‘நம’பதத்தின் பொருளை ‘வேங்கடங்கள்’ என்ற பாசுரத்தில் அருளிச்செய்வர்.

தத்வ தீபம் -வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் -அருளிச் செய்ததாம் –
ஸ்வரூபம் –அறிந்து -அதற்குத் தக்க -புருஷார்த்தம் –அதற்கு ஏற்ற உபாயம் –பிராப்ய பிரதானம் -திரு மந்த்ரம் -கைங்கர்ய பிரதானம் என்றபடி –
ஓங்காரம் ஸ்வரூப ஞானம்-சேஷத்வ ஞானம் –
தத் அனுகுணமான புருஷார்த்தம் -நாராயணாயா -ப்ராப்ய ஞானம் -இதை அறுதியிட்டு
வழி / நமஸ் உபாய ஞானம் -ப்ராபக ஞானம் –
உபாய பிரதானம் சரம ஸ்லோகம் –
உபய பிரதானம் த்வயம் -முன் வாக்கியம் பிராப்யம் பிரதானம் – பின் வாக்கியம் பிராபகம் பிரதானம்
பிரதி சம்பந்தி -கைங்கர்யம் ஏற்றுக் கொள்ளும் பரமாத்மா –நித்யம் அயனம் -கைங்கர்ய கர்த்தாவும் நித்யம் -நித்யத்வம்
-தத் புருஷ -பஹூ வ்ருஹீ சமாசங்கள் -எங்கும் நீக்கம் இல்லாமல் புகுந்தால் விபு -உள்ளும் புறமும் வியாபிக்கிறார் -விபுத்வம்
சரீர சரீரி பாவம் /-மாதா பிதா -பிராதா நிவாச சரணம் ஸூ ஹ்ருத் கதி நாராயணா -உறவு முறைகளும் அறிகிறோம் -நவ வித சம்பந்தம் –
பிதா ரஷகன் சேஷி பார்த்தா ஞேய ரமா பதி –
எல்லா படிகளாலும் சர்வ வித -சர்வ தேசம் விபுவான படியால் – கைங்கர்யம் செய்ய தூண்டும் –
பிரார்த்தனாயாம் சதுர்த்தி -ஆய -அடிமை செய்ய வேண்டும் -கீழே லுப்த சதுர்த்தி தாதர்த்த சதுர்த்தி
ராஜ புருஷ -ராஜ சேவகன் –சப்தம் போலே -சப்தம் பிரதானமாக ஜீவாத்மாவை தானே சொல்லும் -அர்த்தத்தால் பரமாத்மாவைச் சொல்லும் –
ஓம் ஆத்மானம் உஞ்சீத -ஆத்மா சமர்ப்பணம் உபதேசம் ஜீவனுக்கு தானே -பரமாத்வுக்காக ஜீவாத்மா –
உகாரம் ஸ்தான பிரமாணம் ஏவ அர்த்தம் -லுப்த சதுர்த்தி இல்லாமல் அகாரமே மகாரம் -அத்வைதைம்
ஆய சேர்த்து -அவனுக்கே மகாரம் -அகாராரர்த்த நாராயணனுக்கே -பிரயோஜனதுக்காகவே மகாரம் –
உலகம் உண்ட பெருவாயா -உபாயம் -சரணம் புகுகிறார் -அதில் பூர்வ கண்டார்த்தம் -இதில் உத்தர கண்டார்த்தம்
உடனாய் மன்னி -என்கிற இடத்தில் – -நித்ய ஸ்ரீ -நித்ய யோக மதுப் பிரத்யயம் -ஸ்ரீ சப்தம் கர்ப்பிதம் -ஆர்த்தமாக –
குணம் விக்ரகம் இரண்டுக்கும் ஆஸ்ரயம் ஸ்வரூபம் -நாராயண சப்த அந்தர்பூதம் -இவை இரண்டும் –தத் புருஷ பஹூ வ்ருஹீ பலிதம்
-ஸ்வாமித்வம் -நியந்த்ருத்வம் -நார சப்தம் குணம் விக்ரகம் சொல்லும் என்றபடி –
முமுஷு -பிரபன்ன அக்ரேசர் பராங்குசர் -திருமந்திர எல்லாக் காலத்தில் கேட்டதும் இங்கே வரும் காலத்தில் பிரார்த்திப்பதும் சரியே
முமுஷுத்வம் உள்ளார் அனைவருக்கும் -மந்திர அனுசந்தானம் செய்பவர்கள் அனைவருக்கும் இதுவே
நாராயணாய -விசேஷணம் இல்லை -அனைத்து காலம் கொள்ளலாம் -அன்பனாய் -பொதுவாக சொன்னது போலே -ஒழிவில் காலம் எல்லாம் –
முக்கால கைங்கர்ய பிரார்த்தனையே ஸ்பஷ்டம் -நித்யர் முக்தர் முமுஷுக்கள் மூவர் தானே திருமந்தரம் அனுசந்திப்பார்கள்
அகரண கால அபவாத் -இல்லை -குறைவில்லா அர்த்தம் கொடுக்கும் நித்யர்களுக்கு –
நம்மாழ்வார் நித்யர் போலே முக்காலத்துக்கும் பிரார்த்திப்பார்
இவனே பிராப்தன் -ஸ்வாமி என்பதால் -எந்தை -என்று தலைக் கட்டுகிறார் –

‘நான்காம் வேற்றுமை’ என்றது, ‘நாராயணாய’ என்ற பதத்திலேயுள்ள ‘ஆய’என்னும் நான்காம் வேற்றுமையுருபினை. ‘பிரார்த்தனையைச் சொல்லுகிறது’
என்றதன் பொருளை ‘ஆய என்கிற இத்தால், ‘சென்றாற் குடையாம்’ என்கிறபடியே எல்லா அடிமைகளும் செய்யவேணும் என்று அபேக்ஷிக்கிறது’,
‘ஆகையால், ‘வழுவிலா அடிமை செய்யவேண்டும் நாம்’ என்கிற பிரார்த்தனையைக் காட்டுகிறது’ (முமுக்ஷூப்படி, 105, 108.) என்னும்
வாக்கியங்களாலுணரலாகும். ஆத்துமாவின் சொரூபம் – இறைவனுக்குச் சேஷமாயிருக்குந்தன்மை; ‘சேஷத்துவமே ஆத்துமாவுக்கு ஸ்வரூபம்.’
‘பிரணவத்தால் ‘கண்ணபுரம் ஒன்றுடையானுக்கு அடியேன் ஒருவர்க்கு உரியனோ?’ என்கிறபடியே
ஜீவ பர சம்பந்தம் சொல்லிற்று.’ என்பன (முமுக்ஷூப்படி, 55, 72.) ‘இது’ என்றது,
‘பிரணவத்தால் ஆத்துமாவின் சொரூபத்தைச் சொல்லுகிறது’ என்று மேலே கூறியதனைச் சுட்டுகிறது.
‘சொல்லின் சுபாவத்தைக்கொண்டு சொன்னோம்’ என்றது, ‘மகாரத்திற்குப்பொருளாயுள்ள நான்,
அகாரத்திற்குப் பொருளாயுள்ள எம்பெருமானுக்கே உரியவன்.’ என்னும் போது ‘நான் உரியவன்’ என்ற கருத்தாவிலே
நோக்காயிருத்தலைத் திருவுள்ளம் பற்றி. பொருளின் பிராதாந்யத்தைநோக்கும் போது ‘அகாரவாச்சியனான எம்பெருமானுக்கே
மகாரவாச்சியனானஆத்துமா உரியது’ என்ற பொருளே போதரும்.

—————————————————-

எந்தை தந்தை தந்தைதந்தை தந்தைக்கும்
முந்தை வானவர் வானவர் கோனொடும்
சிந்து பூமகிழும் திரு வேங்கடத்து
அந்தம் இல்புகழ்க் கார்எழில் அண்ணலே.–3-3-2-

சர்வாதிக சேஷி உடைய குண விக்ரகாதி வைலஷண்யத்தை -புகழ் எழில் -அருளிச் செய்கிறார்
எந்தை தந்தை தந்தை தந்தை தந்தைக்கும்-முந்தை -பிரதம உத்பாதகன் -பந்தம் -பாரம்பர்யம் -ஏழு தலைமுறை -எந்தை -இரண்டு உண்டே
வானவர் வானவர் கோனொடும்-சேஷாசனர் உடன்
சிந்து பூ மகிழும் திரு வேங்கடத்து-விடு பூக்கள் ஸுவ ஸ்பர்சத்தாலே விகசிதமான –
அந்தம் இல் புகழ்க் கார் எழில் அண்ணலே.-முடிவு இல்லாத குண பிரதை பெருமை உடைய -சியாமள வடிவு அழகை யுடையவன் –

நித்தியசூரிகள் சேளை முதலியாரோடும் வந்து தூவி வணங்குகின்ற பூக்கள் வாசனை வீசுகின்ற திருவேங்கடத்து எழுந்தருளியிருக்கின்ற
முடிவில்லாத புகழையுடைய, நீலமேகம் போன்ற அழகையுடைய அண்ணல் என் குலத்திற்கு முதல்வன் ஆவான்.
அண்ணல் – பெருமையுடையவன். சிந்துபூ – வினைத்தொகை.

பரிபூர்ண -‘குறைவில்லாத கைங்கரியத்தைப் பெறவேணும் என்று விரும்புகிறீர்; அது, இச்சரீர சம்பந்தம் அற்று
அர்ச்சிராதி மார்க்கத்தாலே ஒரு தேச விசேடத்திலே போனால் பெறுமதொன்றன்றோ?’ என்ன,
‘அங்குள்ளாரெல்லாரும் வந்து அடிமை செய்கிறது இந்நிலத்திலே யாகையாலே, இங்கே பெறுதற்குக் குறையில்லை,’ என்கிறார்.

எந்தை தந்தை தந்தை தந்தை தந்தைக்கும் முந்தை –
அடியார் அடியார்தம் அடியார் அடியார் தமக்கடியார் அடியார் தம் மடியார் அடியோங்களே’ என்கிறபடியே,
ஆத்தும சொரூபத்தை நிரூபிக்கப் புக்கால், அத்தலையே பிடித்து இவ்வளவும் வர நிரூபிக்குமாறு போலேயாயிற்று,
பரம்பொருளின் சொரூபத்தை நிரூபிக்கப் புக்காலும் இத்தலையே பிடித்து அவ்வளவும் செல்ல நிரூபிக்கும்படி.
அப்பரம்பொருள்-தம் ஈச்வராணம் பரமம் மகேஸ்வரம் – ஈசுவரர்களாய் உள்ளவர்கட்கும் மேலான ஈசுவரனாவான்,’ என்று கூறப்பட்டுள்ளதன்றோ?

ஏழ் தலைமுறைக்கு ஸ்வாமி என்பான் என்?’ என்னும் வினாவை எழுப்பிக்கொண்டு, அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
‘அடியார் அடியார்’என்று தொடங்கி. இங்கு ஏழ் தலைமுறை கூறப்பட்டுள்ளவாறு யாங்ஙனம்?’எனின்,
எந்தை என்பதில் தாம் ஒருவர், தம் தந்தை ஒருவர்; இவ்விருவரோடு மேலேயுள்ள ஐவரையும் கூட்டினால்
ஏழ் தலைமுறையாதல் காண்க. ‘அடியார்அடியார்’ திருவாய். 3. 7 : 10.

வானவர் வானவர் கோனொடும் சிந்துபூ மகிழும் திருவேங்கடத்து –
நித்திய சூரிகள், சேநாபதியாழ்வானோடு கூட, பிரகிருதி சம்பந்தமில்லாத மலர்களைக் கொண்டு வந்து,
தங்களுக்கும் அப்பாற்பட்டவன் கானமும் வானரமுமான இவற்றுக்கு முகங்கொடுத்துக்கொண்டு நிற்கிற
சௌசீல்ய குணத்தை அநுசந்தித்து-சிதிலராய் – நைந்தவர்களாய்ப் பின்னர் முறைப்படி அருச்சிக்கமாட்டாது அடைவு கெட்டுச் சிந்தாநிற்பர்கள்.
இங்குள்ளார் அங்கே சென்று மேன்மையைக் கண்டு -அனந்யார்ஹராய்-அவனுக்கே அடிமைப்படுமாறு போன்று,
அங்குள்ளார் இங்கே வந்து அந்நீர்மை கண்டு ஈடுபடும்படி. மேன்மை அனுபவிக்கலாவது, அந்நிலத்திலே; நீர்மை அனுபவிக்கலாவது, இந்நிலத்திலேயன்றோ!
கொம்பில் நின்ற போதையிற் காட்டிலும், நிலத்திலே விழுந்த போது அந்நிலத்தினுடைய தன்மையாலே செவ்வி பெற்று
மலர்ந்து தோன்றுகிறதாதலின் ‘சிந்துபூ மகிழும் திருவேங்கடம்’என்கிறார்.

அந்தம் இல் புகழ்
பிரகிருதி சம்பந்தமில்லாத விக்கிரகத்தோடே அவ்வடிமை அனுபவிக்கப் பாங்கான உறுப்புகளை யுடையராய்க்கொண்டு
கிட்டினார்க்கு அனுபவ யோக்கியனாயிருக்கையாலே புகழ் ஓரெல்லையோடே கூடியிருக்கும் அப்பரமபதத்தில்;
அப்ராக்ருத விக்ரஹம் -அனுபவிக்க பாங்கான கரணங்கள் கிட்டினாருக்கு அனுபவ யோக்யமாய் இருக்கும் -அங்கே சாவதியாய் இருக்கும்
இங்கு, ‘ஆளியும் கோளரியும் பொன்மணியும் முத்தமும் பூமரமும்’ ஆனவற்றுக்குத் தன்னைக் கொடுத்துக்கொண்டு
நிற்கையாலே புகழ்க்கு முடிவு இல்லையாதலின், ‘அந்தமில் புகழ்’ என்கிறது.
வைப்பன் -மணி விளக்காம் -மாதியை -மாலுக்கு என்று -கை நீட்டும் யானை -கண்டு வணங்கும் களிறு
-இரு கண் வாங்கி –பிடிக்கு –போது அறிந்து பூஞ்சுனை புக்கு –
ஆளி -சரபேஸ்வரர் -பறவையா விலங்கா -சரபம் சலபம் ஆனதே நரசிம்ஹர் முன்னால்-கூரத் தாழ்வான் -விட்டில் பூச்சி போலே ஆனதே
ஆக, ‘ஈசுவரன் சமஸ்தமான கல்யாண குணங்களையும் இயல்பாகவேவுடையவன்,’ என்றபடி.
இதனால், ஸ்ரீவைகுண்டத்தில் புகழ்க்கு முடிவு உண்டு போலும்!’ என்றவாறு.
கார் எழில் – குணமில்லாதவன் ஆனாலும் விடவொண்ணாதபடியாயிற்று வடிவழகு இருப்பது.
அண்ணல் – வடிவழகு இல்லையானாலும், விடவொண்ணாதபடியாயிற்றுச் சம்பந்தமிருப்பது.

‘வானவர் வானவர் கோனொடும் சிந்துபூ மகிழும் திருவேங்கடத்து அந்தமில் புகழ்க்காரெழில் அண்ணல் –
எந்தை தந்தைதந்தை தந்தை தந்தைக்கும் முந்தை; ஆன பின்னர், அங்கே வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம்’ என்கிறார்.
குளகம் -வினைச் சொல் முந்திய பாடலில் இருந்து தருவித்துக் கொள்ள வேண்டும்

———————————————————–

அண்ணல் மாயன் அணிகொள்செந் தாமரைக்
கண்ணன் செங்கனி வாய்க்கரு மாணிக்கம்
தெண்ணிறை சுனை நீர்த்திரு வேங்கடத்து
எண் இல் தொல்புகழ் வானவர் ஈசனே. –3-3-3-

இப்படி விக்ரக வைலஷண்யம் உடையவன் நித்ய ஸூரி சேவ்யன்
அண்ணல் -வடிவிலே ஸ்வாமி -குறிஞ்சி நிலத்து தலைவன் –அகிலாண்ட கோடி ப்ரஹ்மாண்ட நாயகன் அன்றோ
மாயன் -அநுரூப ஆச்சார்ய குண விபீதி உக்தன்
அணிகொள் செந் தாமரைக் கண்ணன் -புண்டரீகாஷன்
கரு மாணிக்கம்-நீல ரத்னம் உஜ்வலம் -அனுபவிப்பார்க்கு- -சிலா திரு மேனி -ச்நிக்தமான திருமேனி -சாளக்ராம திருமேனி
தெண்ணிறை சுனை நீர்த்திரு வேங்கடத்து-தெளிந்து -அவன் நிறம் போலே -ரத்னகர்ப்ப பெருமாள் சாளக்ராமம் -சுனைகள்
எண் இல் தொல்புகழ் வானவர் ஈசனே.-நினைவுக்கு அப்பால் -ஸ்வா பாவிக பழைமையான -நித்ய ஸூரிகளுக்கு போக பிரதானம்
-சௌலப்யம் -இங்கே தானே -காட்டுக்கும் வானரத்துக்கும் வேடருக்கும்

பெருமையுடையவன், ஆச்சரியமான குணங்களையும் செயல்களையுமுடையவன், அழகினைக்கொண்ட செந்தாமரையைப் போன்ற
திருக்கண்களையுடையவன், சிவந்த கனி போன்ற திருவதரத்தையும் கரிய மாணிக்கம் போன்ற வடிவினையுமுடையவன்,
தெளிந்த நிறைந்த தண்ணீரையுடைய சுனைகள் பொருந்திய திருவேங்கடத்தில் எழுந்தருளியிருக்கின்ற
அளவிடற்கரிய இயற்கையில் அமைந்த புகழையுடைய, நித்தியசூரிகட்குத் தலைவன் ஆவன்.
‘தொல்புகழ்’ என்பது ஈசனுக்கு அடை. ‘கருமாணிக்கம்’ என்பது இல்பொருளுவமை.

‘நாம் இங்ஙனம் அடிமை செய்ய வேண்டும் என்று விரும்புகிற இதுவேயோ வேண்டுவது? அவன் தான் நமக்கு அனுபவத்தின் நிறைவைத் தருவானோ?’ என்ன,
‘ஆசையற்றவர்கட்குத் தன்னைக் கொடுத்துக்கொண்டிருக்கிறவன், ஆசையோடு கூடிய நமக்குத் தரச் சொல்லவேண்டுமோ?’ என்கிறார்.
நிரபேஷருக்குக் கொடுப்பவன் சாபேஷருக்கு கொடுப்பதை சொல்ல வேண்டுமோ –
வானவர் ஈசனே’ என்பதனைத் திருவுள்ளம் பற்றி அவதாரிகை அருளிச்செய்கிறார்.
‘ஆசையில்லாதவர்’ என்றது, பகவானுடைய அனுபவ ரச பூர்த்தியைத் திருவுள்ளம் பற்றி.
–உதாரர் -மேலே மேலே கொடுக்க-பரிபூர்ணர்களுக்கு கொடுப்பவன் –சோறே இல்லாதவர்க்கு கொடுக்காமல் போவாரோ

அண்ணல் – ‘குறிஞ்சி நிலத்துத்தலைமகன்’ என்னுதல்; ‘எல்லார்க்கும் தலைவன்’ என்னுதல்.
மாயன் – அழகு சீலம் முதலியவைகளால் ஆச்சரியங்களையுடையவன்.
‘அவற்றில் ஓர் அம்மான் பொடி -சொக்குப் பொடி-சொல்லிக்காணீர்,’ என்ன, சொல்லுகிறார்மேல்:
அம்மான் பொடி – வசீகரண சாதனமான ஒரு வகைப்பொடி. பாலர்களை வசீகரிக்கைக்காக அவர்கள்மேலே ‘அம்மான்’ என்று சொல்லி ஒரு பொடி
விசேடத்தைத் தூவினால், அந்தப் பாலர்கள் கள்ளர் பின்னே ‘அம்மான், அம்மான்’ என்று சொல்லிக்கொண்டு போவார்கள்; அந்தப் பொடி என்றபடி.-
அப்படியே, ஆச்சரியமாக
அணிகொள் செந்தாமரைக் கண்ணன் – ‘இக்கண்ணழகு உடையவனுக்கு வேறொரு ஒப்பனை வேண்டா,’ என்னும்படியிருப்பதாய்,
தனக்குத்தானே ஆபரணமாய், மலர்த்தி செவ்வி குளிர்த்தி நாற்றங்களாலே தாமரையை ஒரு வகைக்கு ஒப்பாம்படி
சொல்லலாயிருக்கிற கண்ணழகையுடையவன். இது, முதலுறவு செய்யுங் கண்களைச் சொல்லுகிறது.-தூது செய் கண்கள் –
அணிகளை வென்று -வேறே ஆபரணம் வேண்டாத படி தாமரையை வென்ற திருக் கண்கள் –
செங்கனி வாய் – அந்நோக்குத் தப்பினார்க்கும் தப்பவொண்ணாதபடியிருக்கிற புன்முறுவலைச் சொல்லுகிறது.ஸ்மிதம் —
முறுவலாலேயாயிற்று இவரை எழுதிக்கொண்டது.
கருமாணிக்கம் – அந்த முறுவலிலே அகப்பட்டாரை மீளாதபடி ஆழங்காற்படுத்தும் வடிவழகைச் சொல்லுகிறது-

தெள் நிறை நீர் சுனைத் திருவேங்கடத்து – தெளிந்து நிறைந்துள்ள நீரையுடைய சுனையையுடைய திருமலையிலே.
இதனால், இறைவன் வடிவேயன்றித் திருமலையும் சிரமத்தைப் போக்கக்கூடியதாய் இருக்கிறபடியைத் தெரிவித்தபடி.
‘ஆயின், விக்கிரக அனுபவத்தை விட்டுச் சுனையை வருணித்தற்குக் காரணம் என்?’ எனின், ‘
அணிகொள் செந்தாமரைக் கண்ணன்’ என்றதனோடு, ‘செங்கனிவாய்’ என்றதனோடு, ‘கருமாணிக்கம்’ என்றதனோடு,
‘தெண்ணிறை நீர்ச்சுனை’ என்றதனோடு வேற்றுமையற்று இருக்கிறதாயிற்று இவர்க்கு, அதுவும் அந்நிலத்தில் உள்ளதொன்றாகையாலே.
எண் இல் தொல் புகழ்- 1‘சிறுவனே! கடலில் இரத்தினங்கள் எப்படி அளவில்லாமல் இருக்கின்றனவோ அப்படியே, மஹாத்துமாவான
பகவானுடைய குணங்களும் அளவிறந்தன,’ -ஸ்ரீ விஷ்ணு புராணம் -என்கிறபடியே, கணக்கு இல்லாதவையாய் இயல்பாகவே அமைந்த குணங்களையுடைய.
வானவர் ஈசன் – குணங்களை அனுபவிப்பித்து நித்தியசூரிகளையுடைய ஸத்தையை நோக்கிக்கொண்டு செல்லுகிறவன். என்றது,
‘கண்ணழிவற்ற ருசியுடையாரைத் தன்னையனுபவிப்பிக்கும்’ என்கை.

——————————————————–

ஈசன் வானவர்க்கு என்பன் என்றால் அது
தேசமோ திரு வேங்கடத் தானுக்கு?
நீசனேன் நிறைவு ஒன்றுமிலேன் என்கண்
பாசம் வைத்த பரஞ்சுடர்ச் சோதிக்கே.–3-3-4-

நித்ய ஸூரிகள் -சேவ்யன் ஆகிற ஆதிக்யம் -முதன்மை -என்னை அங்கீ கரித்த சீலம் உடையவனுக்கு தேஜசோ –
ஈசன் வானவர்க்கு என்பன் என்றால் அதுதேசமோ திரு வேங்கடத் தானுக்கு?-பிரிநிலை -தேஜஸ் அல்ல என்றவாறு
நீசனேன் நிறைவு ஒன்றுமிலேன் என் கண் பாசம் வைத்த பரஞ்சுடர்ச் சோதிக்கே.-இதுதான் தேஜஸ்
ஹேய குணங்களால் பூர்ணன் -சத்குணங்கள் ஒன்றும் இல்லாதவன் -தன்னுடைய ஹேய ப்ரத்ய நீக கல்யாணை ஏக தானனாக -உபக லிங்கம் –
அதற்கு நேர் எதிர்தட்டாக -பிரதிபட -அகில ஹேய ஆஸ்பதம் -கல்யாண குண கந்தமே இல்லாமல்
நிரவதிக சங்கத்தை வைத்து -அத்தாலே பரஞ்சுடர் ஆனானே –
தேஜோ மய விக்ரஹம் -நீர்மையைக் காட்ட வந்தவன் –

தாழ்ந்தவனாய்க் குணம் சிறிதுமில்லாதவனான யான், இறைவனைப் பார்த்து நித்தியசூரிகளுக்குத் தலைவன் என்று
சொல்லுவேன்; அப்படிச்சொன்னால், அது என்னிடத்தில் அன்பை வைத்த மேலான சுடரையுடைய ஒளியுருவனான
திருவேங்கடத்தில் எழுந்தருளியிருக்கின்ற எம்பெருமானுக்குப் புகழாகுமோ? ‘ஆகாது’ என்றபடி.
நிறைவொன்றுமிலேன் – வினையாலணையும் பெயர். ‘நீசனேனும் நிறைவொன்றுமிலேனுமாகிய யான், ‘வானவர்க்கு ஈசன்’ என்பன்;
என்றால், அது, என் கண் பாசம் வைத்த பரஞ்சுடர்ச் சோதியாகிய திருவேங்கடத்தானுக்குத் தேசமோ?’ எனக் கூட்டுக.

‘நித்தியசூரிகளுக்குத் தன்னைக் கொடுத்தவன்’ என்றார் மேல்; ‘மிகத் தாழ்ந்தவனான என் பக்கலிலே பாசத்தை வைத்தவனுக்கு
‘நித்தியசூரிகளுக்குத் தன்னைக் கொடுத்தவன்’ என்னும் இது ஓர் ஏற்றமோ?’ என்கிறார் இப்பாசுரத்தில்.
சோதியான திருவேங்கடத்தானுக்கு, ‘வானவர்க்கு ஈசன்’ என்பன் என்றால்,அது தேசமோ?’ என்று கூட்டி அவதாரிகை அருளிச்செய்கிறார்.

வானவர்க்கு ஈசன் என்பன் – நித்தியசூரிகளுக்கு நிர்வாஹகன் என்று சொன்னேன். என்றால் – நான் இப்படிச் சொன்னால்.
அது திருவேங்கடத்தானுக்குத் தேசமோ – திருமலையிலே வந்து சுலபனாய் நிற்கிறவனுக்கு ‘அயர்வறும் அமரர்கள் அதிபதி’ என்று
இருக்கிற இது ஓர் ஏற்றமாயிற்றதோ? ‘ஸ்ரீவைகுண்ட நாதனுக்கு ஏற்றஞ்சொல்லுகிறேனாக மயங்கினேன்;
கானமும் வானரமும் வேடுமானார் ஓலக்கம் கொடுக்க நிற்கிறவனுக்கு நித்தியசூரிகள் ஓலக்கங்கொடுக்க நிற்கிறது ஓர் ஏற்றமோ?’ என்றபடி,
ஆத்மானம் மானுஷம் மன்யே -அஹம் வோ பாந்தவோ ஜாத – ‘பரமபதத்தை விட்டு இங்கே வந்து இந்நிலத்தையிட்டு
நிரூபிக்க வேண்டியிருக்கிறவன்’ என்பார், ‘திருவேங்கடத்தானுக்கு’ என்கிறார்.
உன்தன்னை சிறு பேர் அழைத்தனவும் -சீறி அருளாதே ஆண்டாள் -அறியாத பிள்ளைகளோம் அன்பினால் -மூன்றும்
விஸ்வரூபம் பார்த்த அர்ஜுனன் -மயா பிரமாதா -பிரணயயி -அதே மூன்றும் -மாற்றி சொன்னான்
‘ஆக,முடி சூடி அரசு செலுத்துமவனுக்கு ஏற்றஞ்சொல்லும்போது தட்டியிலிருந்த காலத்தின் தன்மையையிட்டு
ஏற்றஞ்சொல்ல ஒண்ணாதே,’ என்கிறார் என்றவாறு.
முடி சூடி அரசு செலுத்தும் நிலை, திருவேங்கடத்தில்; தட்டியில் இருக்கும்நிலை, பரமபதத்தில். தட்டி – சிறைக்கூடம்.‘
ஆயின், திருவேங்கடத்தானுக்கு ஏற்றஞ்சொல்லலாவது யாங்ஙனம்?’ எனின்,
‘‘நீசனேன் நிறைவொன்றுமிலேன் என் கண் பாசம் வைத்த பரஞ்சுடர்ச்சோதி’ என்னவேண்டும்; இது கிடக்க அதனையோ சொல்லுவது?’ என்கிறார்.

நிறைவொன்றுமிலேன் – தாழ்வினையும் நிறைவில்லாமையையுங்கூட்டி இங்ஙனம் ஆழ்வாராகப் பண்ணிற்று என்கிறாராயிற்று.
அமர்யாதா -10 குற்றங்கள் சொல்லிக் கொண்டாரே ஆளவந்தார் –நிர்பசு -வ்ருத்யையில் பசு -இருகால் மாடு
‘தாய்க்கும் மற்றொரு பொருளுக்கும் வேற்றுமை வையாது செயல் புரியும் சென்மம்;
1-அமர்யாதா-சாஸ்திரங்கள் ‘ஆகாதன’ என்று விலக்கியனவற்றைச் செய்து அவற்றினின்றும் மீளமாட்டாமல் போந்தேன்;
2-‘ஷூத்ர -சாஸ்திர மரியாதையைத் தப்பி நிற்றல் ஆகாதுகாண்’ என்று ஒருவன் சொன்னால், அதனைக் கைக்கொள்ளுந்துணை நெஞ்சில் அறிவில்லாதானொருவன்;
3- சல மதி -அப்படியின்றி, சொல்லுவாரையும் பெற்று,அது நெஞ்சில் படவும் பெற்றதாகில், அதுதன்னை நம்புதல் செய்யாது
‘நின்றவா நில்லா நெஞ்சினையுடையேன்’ ஆனவன்;
4-அசூயா பிரசவபூ -நன்மை சொன்னவனுடைய உயர்வினைப் பொறாதவன்;
மரம் சுவர் மதிள் எடுத்து -நல்லது சொல்வார் வர முடியாது -மாரீசன் சொன்னதையும் கேட்காமல் ராவணன் –
5-க்ருதஜ்ஞ்ஞன் –உபகரித்த விஷயத்திலே அதனை இல்லை செய்து அபகாரங்களைச் செய்து போந்தவன்;
6-துர்மானி – அபகாரங்களைச் செய்து போதலேயன்றி நன்மை சொன்னவர்களுக்கும் மேலாக என்னை நினைத்துப் போந்தவன்;
7-ஸ்மர பரவச -காமுகர்களுக்கு -காம எண்ணத்துக்கு வசம் -அறிவுடையார்க்கு மேலாகவும் காமுகர்க்குக் கீழாகவும் நினைத்திருப்பவன்;
8-வஞ்சன பர – புறம்பே பறித்துக்கொண்டு வந்து ஒரு பெண் பக்கலிலே சேர்த்து அங்கே திரண்டவாறே அவ்விடந்தன்னில்நின்றும் அபகரிப்பவன்;
9-ந்ருசம்ச‘=–நம்மை விரும்பினவர்களிடத்தில் வஞ்சனையைச் செய்தோம்’ என்ற இரக்கமுமின்றியிருப்பவன்;
10-பாபிஷ்ட-இவை தாம் உருவச் செல்லும்படி மேன்மேலெனக்காரியம் பார்ப்பவன்’ என்றார் ஸ்ரீ ஆளவந்தாரும்.
‘இது ஆளவந்தார் அருளிச்செய்ததேயாகிலும், நான் என் வாயால் இப்பாசுரம் சொல்லமாட்டேன்,’ என்பராம் அனந்தாழ்வான்.
‘அழகர், கிடாம்பியாச்சானை அருள்பாடிட்டு, ‘நீஒன்று சொல்’ என்ன, ‘அபராத ஸஹஸ்ர பாஜனம்’ என்று தொடங்கி
‘அகதிம்’ என்ன, ‘நம் இராமாநுஜனையுடையையாயிருந்து வைத்து, அகதி என்னப் பெறாய்’ என்று அருளிச்செய்தாராம்.
அனந்தாழ்வான் ‘அமர்யாத:’என்ற சுலோகத்தை ஆளவந்தார் அருளிச்செய்தார் என்னக் கேட்டு ‘எனக்குஅது சொல்ல வேண்டா’ என்றான்;
அவர் சம்பந்தத்தாலே’ என வருகின்ற திருப்பாவை வியாக்கியானத்தால் உணரலாகும்.(மாரி மலை முழைஞ்சில், நாலாயிரப்படி)

ஆக, ‘நீசனேன் நிறைவொன்றுமிலேன்’ என்றதனால், ஆத்துமாவிற்குத் தகுதியில்லாத குணங்களே என் பக்கல் உள்ளன;
ஆத்தும குணங்கள் ஒன்றுமில்லை என்பதனைத் தெரிவித்தபடி.
‘என் தண்மையும் நிறைவு இல்லாமையுமன்றோ நான் இவ்வார்த்தை சொல்லிற்று-அதனால் ஈசன் வானவருக்கு
என்றேன் என்கிறார்’ என்பராம் பிள்ளை திருநறையூர் அரையர்-என் பாசத்துக்கு பொருள் இல்லாமல் –

வானவர்க்கு ஈசன் என்கண் பாசம் வைத்த பரஞ்சுடர்ச் சோதி –
1–‘நித்தியசூரிகளுக்கு ஈசனாயிருந்தான்; என் பக்கலிலே பற்றை வைத்தான்.
2-அவர்களுக்கு இருப்பு உண்டாகைக்காக அவர்களோடே கலந்தான்: தன் இருப்பைப் பெறுகைக்காக என்னோடே வந்து கலந்தான்;
3-பிராதம்யத்துக்கும் பழிக்கும் செங்கல் சீரைக்கும் ஜீவனம் வைப்பாரைப் போன்று அவர்கள் பக்கல்; நெஞ்சும் உடம்பும் தந்தது எனக்கு’ என்கிறார்.
இனி,என்கண் பாசம் வைத்த’ என்பதற்கு, ‘என்னிடத்தில் தன் சம்பந்தமான அன்பை உண்டாக்கினான்’ என்று பொருள் கூறுவாருமுளர்.
மதி நலம் அருளினான் -பாசம் -பக்தி -அவன் இடம் சங்கமே பக்தி அன்றோ –
இனி, மனத்தொடுபடாமலிருக்கவும் மனசுக்காகக் கலந்தானாயிருத்தலன்றி, மனம் முன்னாகக் கலந்தானென்னுமிடத்தை
வடிவிற்பிறந்த புகர் காட்டாநின்றதாதலின், ‘சுடர்ச்சோதி’ என்றும், கலந்த பின்னர் முன்பில்லாத புகரெல்லாம் வடிவிலே
உண்டாயிராநின்றதாதலின், ‘பரஞ்சுடர்’ என்றும் அருளிச்செய்கிறார் என்னுதலுமாம்.
‘பிராட்டியோடே கலந்தாற் போலே பேரொளிப் பிழம்பாய் இராநின்றான்’ என்றபடி.

‘வானவர்க்கு ஈசன் என்கண் பாசம் வைத்த பரஞ்சுடர்ச்சோதி’ என்று கூட்டி இதற்கு மூன்று வகையாக பாவம் அருளிச்செய்கிறார்.
முதல் வகை,‘நித்தியசூரிகளுக்கு’ என்று தொடங்குவது.
இரண்டாம் வகை, ‘அவர்களுக்கு இருப்பு’ என்று தொடங்குவது.
மூன்றாம் வகை, ‘பிராதம்யத்துக்கும்’ என்று தொடங்குவது. பிராதம்யம் – முதன்மை. செங்கல் சீரை – காஷாயம்.
‘பிராதம்யத்துக்கும்’ என்று தொடங்கும் வாக்கியத்தின் கருத்து, முதன்முதல்விவாகம் செய்துகொள்ளப்பட்டவள் என்பதற்காகவும்
‘முதல் மனைவிக்குஜீவனம் கொடுக்கவில்லை’ என்று உலகத்தார் கூறும் பழிச்சொற்களுக்காகவும்,
காஷாய வஸ்திரம் தரித்துப் பிச்சை புக்காளாகில் தனக்கு மானக்கேடுஉண்டாகுமே என்ற எண்ணத்தாலும் முதல் மனைவிக்கு ஜீவனோபாயத்துக்குச்
சிறிது பொருள் கொடுப்பாரைப் போன்று என்பது. ‘பாசம் வைத்த’ என்றதனால் நெஞ்சு கொடுத்தமை சொல்லிற்று; ‘பரஞ்சுடர்ச் சோதி’
என்றதனால் உடம்பு தந்தது சொல்லிற்று.

என்னிடத்தில் தன் சம்பந்தமான அன்பையுண்டாக்கினான்’ என்றதன் கருத்து,ஆழ்வார்க்குத் தன் மாட்டு அன்பை உண்டாக்கினான் என்பது.
முதற்பொருளில், இறையவன் ஆழ்வாரிடத்தில் அன்பை வைத்தான் என்பது கருத்து.
இரண்டாவது பொருளில் இறைவனாகிய தன்னிடத்தில் ஆழ்வார்க்கு அன்பை உண்டாக்கினான் என்பது கருத்து.

——————————————————————————
சோதி ஆகி,எல்லா உலகும் தொழும்
ஆதி மூர்த்தி என்றால்அளவு ஆகுமோ,
வேதியர் முழு வேதத்து அமுதத்தைத்
தீது இல் சீர்த் திரு வேங்கடத் தானையே?–3-3-5

சீலம் மட்டும் இல்லை நிரதிசய போக்ய பூதனானனுக்கு சர்வேஸ்வரன் எனபது ஏற்றமோ -பாவனத்வம் விட போக்யத்வம் -ஏற்றம்
வாசி அற அனைவருக்கும் போக்யத்தை அனுபவிப்பித்து -வைஷம்யம் இல்லாமல் –
கானமும் வாணரும் வேடரும் கொடுத்து -அனந்தாழ்வான் -ருக் வேதம் -திருமலை நம்பிக்கும்
உத்கர்ஷ அபகர்ஷ விபாகம் இல்லாமல்
சமஸ்த காரணன் என்று சொல்வது பெருமை இல்லை -இனிமை சொல்வதே பெருமை
மேன்மை – சர்வ ஆஸ்ரயணீயத்வமும் -நீர்மை உடன் கூடிய போக்யதைக்கு சத்ருசம் இல்லையே –

‘வேதங்களையறிந்த அந்தணர்களுடைய எல்லா வேதங்களாலும் சொல்லப்படுகின்ற அமிர்தம் போன்ற இனிமையையுடையவனை,
குற்றமற்ற புகழையுடைய திருவேங்கடத்தில் எழுந்தருளியிருக்கின்ற பேரொளியுருவனாகி எல்லா உலகத்தாராலும் தொழப்படுகின்ற
முதற்காரணப் பொருளாய் இருக்கின்ற வடிவையுடையவன் என்று கூறினால் அது பெருமையாகுமோ?’ என்கிறார். ‘ஆகாது’ என்றபடி.
‘சோதியாகி’ என்பதிலுள்ள ‘ஆகி’ என்னுமெச்சத்தை ‘இருக்கின்ற’ என்னும் வினையைக்கொணர்ந்து அதனோடு முடிக்க.
அன்றி, எச்சத் திரிபாகக் கோடலுமாம்; ‘சோதியாகத் தொழப்படுகின்ற ஆதிமூர்த்தி’ என்க. ‘ஆகுமோ’ என்பதிலுள்ள ஓகாரம், எதிர்மறை.

‘நித்தியசூரிகளுக்கும் தன்னைத் தந்தான் என்றது ஓர் ஏற்றமோ எனக்குத் தன்னைத் தந்தவனுக்கு!’என்றார் மேல் பாசுரத்தில்;
‘எனக்குத் தன்னைத் தந்தான்’ என்கிற இதுதான் ஓர் ஏற்றமோ, என்னிலும் தாழ நின்றாரைத் தேடிப் பெறாதே இருக்கிறவனுக்கு?’ என்கிறார் இப்பாசுரத்தில்.
தேடித் கொண்டே நித்ய வாசம் செய்கிறவனுக்கு-

சோதியாகி –
தனக்குமேல் ஒன்று இல்லாத பேரொளியுருவமான திருமேனியையுடையவனாய்
‘வன்மையுள்ள பேரொளிகளின் கூட்டமாயுள்ள அந்த விஷ்ணு’ என்பது ஸ்ரீவிஷ்ணு புராணம்.
‘நீல நிறத்தையுடைய மேகத்தை நடுவிலேயுடைய மின்னற்கொடி போன்று ஒளியுடன் கூடியதாயும்,
நீவாரதானியத்தின் வால் போன்று மெல்லியதாயும், உருக்கிய தங்கம் போன்று காந்தியையுடையதாயும் இருக்கிற ஒரு சிகையிருந்தால்,
அது பரமாத்துமாவின் சரீரத்திற்கு ஒப்பாகலாம்’ என்பது உபநிடதம்..
நிரவதிக தேஜோ ரூபம் -நீல தோயத மத்யஸ்தா -வித்யுத் லேகேவ பாஸ்வரா -நீவார சுகவத் தன்வீ பீதாபாத் –
இதனால், சிரமத்தைப் போக்கும் வடிவைப் புகர் முட்டாக்கிட்டிருக்கும் என்கையும், அப்புகர்தன்னைச் சிரமத்தைப் போக்கும் வடிவு
தன்னுள் அடக்கிக்கொண்டிருக்குமென்கையும் போதரும்.
இத்தால், ‘ஒன்றையொன்று விடாதே இரண்டும் வேறொன்றை வேண்டாதிருக்கும்’ என்றபடி.
ஆயினும், ‘நீல நிறத்தையுடைய மேகத்தை நடுவிலேயுடைய மின்னல் போன்று’ என்று கூறி,
‘உருக்கின தங்கம் போன்று காந்தியையுடையதாய்’ என்றும் கூறுதலின், ஒளியே விஞ்சியிருக்கும் என்பது போதருதலின்,
இவரும் ‘சோதியாகி’ என்கிறார்.

எல்லா உலகும் தொழும் ஆதிமூர்த்தி என்றால் அளவாகுமோ –
இப்படிச்சொன்னால் தான் அவனுக்கு ஏற்றமாகப் போருமோ!
‘ஆயின், ‘எல்லா உலகும் தொழும் ஆதி மூர்த்தி என்றால் அளவாகுமோ?’ என்பதற்கு, முன்னர்
‘எல்லா உலகும் தொழும் ஆதி மூர்த்தி’ என்றாரோ?’ என்றது, என் சொல்லியவாறோ?’ எனில்,
‘எண்ணில் தொல்புகழ் வானவ ரீசன்’ என்றவர், ‘ஈசன் வானவர்க்கு என்பன்’ என்று அதனையே பின்னும் கூறியது போன்று,
இங்கும் அவ்வாறு சொன்னாரோ?’ என்னில் என்றபடி. விழுக்காட்டாலே-அர்த்தா பத்தி – சொன்னார். ‘எங்ஙனே?’ என்னில்,
மேல், தம்மை ‘நீசனேன் நிறைவொன்றுமிலேன் ‘என்றாரே யன்றோ? இதனால் தம்மைத் தாழ்வுக்கு இவ்வருகாகச் சொன்னாராவர்;
மிகத் தாழ்ந்தவரான தாம் தொழுத போதே எல்லா உலகங்களும் தொழுதமை விழுக்காட்டாலே பெறுதும்;
‘எல்லாவற்றுக்கும் மேல் படி அமிழ்ந்தது’ என்றால், ‘கீழ்ப்படி மூழ்கினமை’ சொல்ல வேண்டா அன்றே?
ஒரு பிறவியில் இரு பிறவி -கண்ணனும் திருமழிசை ஆழ்வாரும் -அக்ர பூஜை -கொடுக்கக் கூடாது –
ஸ்திதம் புஷ்ப ரதம் -த்ருஷ்ட்வா -கேசவே வ்ருத்திம் அவஸா -தங்கள் வசம் இல்லாமல் –
‘கிருஷ்ணனிடத்தில் பரவசப்பட்டவர்களாய்த் தகுந்தவாறு செயலை அடைந்தனர்’ என்கிறபடியே, தொழக்கடவோமல்லோம் என்ற நினைவினைச்
செய்துகொண்டிருந்தவர்களுங்கூடக் கண்டவாறே தொழுதார்களாதலின், ‘எல்லா உலகும் தொழும்’ என்கிறார்.

‘பிரஹ்மம் அறியத் தக்கது,’ என்று கூறி, ‘அறியத் தக்கதான பிரஹ்மத்துக்கு லக்ஷணம் யாது?’ என்ன,
எதனிடத்தினின்றும் இந்தப் பூதங்கள் உண்டாகின்றனவோ, எதனால் உண்டானவை பிழைத்திருக்கின்றனவோ
, இவையெல்லாம் அழிந்து பிரளய காலத்தில் எதனை முற்றிலும் சேர்கின்றனவோ, அதனை அறிவாயாக; அதுதான் பரப்பிரஹ்மம்’ என்பதாக
உலகங்களெல்லாம் உண்டாதல் முதலானவற்றிக்குக் காரணம் பிரஹ்மம் என்று கூறியது
‘அடையத்தக்க பொருள் யாது?’ என்ன, ‘காரணமான பொருளே தியானத்திற்கு உரியது என்றும்,
‘எவன் உலகங்களையெல்லாம் படைப்பதற்கு முன்னே நான்முகனைப் படைத்தானோ, எவன் அந்த நான்முகனுக்கு வேதங்களை உபதேசித்தானோ’ என்றும்
உலகங்கட்கெல்லாம் காரணப் பொருளே தியானத்திற்கு உரியது என்று கூறியது.
அப்படியே, இவரும் ‘எல்லா உலகுந் தொழும்’ என்று அடைகின்ற பொருள்களைக் கூறி, ‘ஆதிமூர்த்தி’ என்று அடையக்கூடிய பொருளை அருளிச்செய்தார்.

ஆதிமூர்த்தியாகையாலே – காரணவஸ்துவாகையாலே, ‘எல்லா உலகும் தொழும்’ என்று கூறத் திருவுள்ளம் பற்றிக் காரண வஸ்துவே உபாஸ்யம்
என்கைக்குச் சூத்திரத்தையும், சுருதியையும் அருளிச்செய்கிறார்
நம்பிள்ளை, பின்பழகிய பெருமாள் ஜீயர் மடத்திலே எழுந்தருளியிருக்கச்செய்தே, ‘ஈஸ்வர பரத்துவத்தை அநுசந்திக்கையாவது,
ஜகத் காரணத்துவத்தை அநுசந்திக்கை’என்றருளிச்செய்தாராம்,
ஆச்சான் பிள்ளை, நடுவில் திருவீதிப்பிள்ளை பட்டரை ‘பகவத் குணங்களையெல்லாம் சேர அனுபவிக்கலாந்துறை யாது?’ என்று கேட்டருள,
‘ஜகத் காரணத்துவத்தை அநுசந்திக்கவே எல்லாக் குணங்களையும் அநுசந்தித்ததாம்’ என்றருளிச்செய்தாராம்.

இனி, ‘அளவாகாது’ என்று சொல்லும்போதும் சிறிதளவு சொல்லிப் பின்னர்,
‘அந்த ஆனந்த குணத்தினின்றும் வாக்குகள் மீளுகின்றனவோ என்னும் வேதம் வேண்டாவோ?’ என்கிறார் மேல்;
வேதியர் முழு வேதத்து அமுதத்தை
வேதியர் முழுவேதத்து அமுதத்தை’ என்பதற்கு இரண்டு வகையில் பொருள் அருளிச்செய்கிறார்:
முதலது, ஸ்வரூபத்தில் இனிமை; இரண்டாவது-குணத்தில் இனிமை.
‘அந்த வேதமானது பெரியோர்கட்கு அழிவற்ற தனமாய் இருக்கிறது,’ என்கிறபடியே, -அந்தணர் மாடு -தனம் –
வேதங்களைச் செல்வமாகவுடைய பிராமணருடைய எல்லா வேதங்களாலும் சொல்லப்படுகின்ற இனிமை மிகுதியையுடையவனை
‘பிரஹ்மம் ஆனந்தமானது’, ‘அந்தப் பிரஹ்மமானது ரச மயமாய் இருக்கிறது,’ என்பன உபநிடத வாக்கியங்கள்.
இனி,எந்தப் பரம்பொருளை எல்லா வேதங்களும் சொல்லுகின்றனவோ’ என்றும்,
‘எல்லா வேதங்களும் எந்தப் பரம்பொருளிடத்தில் ஒரே முகமாய் ஆகின்றனவோ’ என்றும்,
‘எல்லா வேதங்களாலும் அறியப்படுமவன் நானே’ என்றும் வருகின்றவாற்றால் எல்லா வேதங்களாலும் சொல்லப்படுகின்ற
ஆனந்த குணத்தை யுடையவனை என்னுதல்-

தீது இல் சீர்த் திருவேங்கடத்தானை –
குற்றமற்ற குணங்களையுடையவனை. சீருக்குத் தீதாவது, அடைகின்ற அடியார்களுடைய குணாகுண நிரூபணம் பண்ணுகை. என்றது,
‘அங்கீகரிக்குமிடத்தில், ‘இன்னார் ஆவர், இன்னார் ஆகார்’ என்று ஆராயும் குற்றமின்றியிருத்தல்’ என்றபடி.

1-ஈசன் வானவர்க்கு –
2-என் கண் பாசம் –
3-எல்லா உலகுந்தொழும்-
4-தீதில் சீர்–அவசர ப்ரதீஷனாய் நிற்கிறான் -ஒன்றை விட ஒன்றுக்கு ஏற்றமே –

‘நன்று; மேல், ‘எல்லா உலகும் தொழும் ஆதிமூர்த்தி என்றால் அளவு ஆகுமோ?’ என்றதிற்காட்டில் ஏற்றமாகச் சொன்ன பொருள் என்?’ என்னில்,
‘ஈசன் வானவர்க்கு என்பன்’ என்பதைக்காட்டிலும், ‘என்கண் பாசம் வைத்த பரஞ்சுடர்ச்சோதி’ என்ற இடத்தில் ஏற்றங்கண்டோம்;
அதைப்போன்று, ‘எல்லா உலகுந்தொழும்’ என்பதனைக் காட்டிலும் ‘தீதில் சீர்த்திருவேங்கடத்தான்’ என்ற இடத்தில் ஏற்றம் யாது?’ எனின்,
‘என்னை அங்கீகரித்தான் என்ற இது ஒரு ஏற்றமோ? என்னைக்காட்டிலும் தாழ்ந்தாரைத் தேடிக் கிடையாமையாலே பட்டினி விட்டு,
‘பெருமாள் மீண்டும் என்னைக் கூப்பிடுவாரோ என்ற ஆசையினால் இருந்தேன்’ என்பது போன்று,
காலத்தை எதிர்நோக்கிக்கொண்டு நிற்கின்றவனுக்கு. ‘என்றது, என் சொல்லியவாறோ?’ எனின், ‘நீசனேன் நிறைவொன்றுமிலேன்’ என்ற
இவருடைய குற்றங்களைக் குணமாகக்கொண்டு அங்கீகரித்து, இவருக்கு அவ்வருகு குற்றமுடையாரைத் தேடிக் கிடையாமையாலே
நிற்கிறான் என்பதனைத் தெரிவித்தமையால், அவ்வாறு நிற்றலே ஓர் ஏற்றம் என்க.-அவசர ப்ரதீஷனாய் நிற்கிறான் என்றுமாம் –
இனி, பாதுகாக்கிறவனுக்குப் பாதுகாக்கப்படும் பொருள் பெற்ற அளவிற்கு மனநிறைவு வருதல் பாதுகாத்தலுக்குக் குற்றமாமாதலின்,
‘தீதில்சீர்’ என்கிறார் என்னுதல்; ‘க்ஷத்திரியன் பெற்றதைக்கொண்டு திருப்தியடைவானாயின் நஷ்டமடைவான்,’ என்பது பொதுவான தர்மம்.
‘பிராஹ்மணன் பெற்றதற்கு மகிழானாயின், நஷ்டமடைவான்; அப்படியே, க்ஷத்திரியன் பெற்றதைக் கொண்டு திருப்தியடைவானாயின்
நஷ்டமடைவான்; பொதுமகள் நாணத்தையுடையவளாயின் நஷ்டமடைவாள்; நற்குலப்பெண் நாணத்தை விடுவாளாயின் குற்றமுடையவளாவள்,’ என்பது,
ஷத்ரியன்-ஆபத்து வந்தவரை காப்பவனே ஷத்ரியன் -திருவேங்கடமுடையான் ரஷ்ய வர்க்கம் கிடைக்குமா என்று பார்த்து நிற்கிறான்
ஸ்ரீ வைகுண்ட நாதனும் – தேடி இங்கே வந்ததால்- ஷத்ரியன் /நாமும் கைங்கர்யங்கள் தேடி தேடி ஷத்ரியன் ஆவோம் –

————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: