பகவத் விஷயம் காலஷேபம் -69- திருவாய்மொழி – -3-2-1….3-2-11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

முந்நீர் ஞாலம் பிரவேசம் –

ஸ்ரீ பராசர பட்டர் திருக் கோஷ்டியூரிலே எழுந்து அருளி இருக்கச் செய்தே ஸ்ரீ இராமப் பிள்ளை
இவர் பரத்வ அனுபவத்தை ஆசைப்பட்டு ஒரு தேச விசேஷத்தில் போனால் அனுபவிக்குமதாய் நோவு படுகிறார் அல்லர் –
அவதாரங்களில் அனுபவிக்க ஆசைப்பட்டு பிற்பாடார் ஆனோம் என்று நோவு படுகிறார் அல்லர் –
உகந்து அருளின நிலங்களிலேயாய் -அது தன்னிலும் திருமலையில் யாகில் அனுபவிக்க இழிந்தது –
பின்னை மேன்மேல் என அனுபவிக்குமது ஒழிய இவர் இழந்து நோவு படுக்கைக்கு காரணம் என் என்று கேட்க –

பர வியூஹ விபவங்களோடு அர்ச்சாவதாரத்தொடு வாசியற தர்மைக்யத்தாலே விஷயம் எங்கும் ஒக்க பூரணமாய் இருக்கும்
குறைந்து தோற்றுகிற இடம் பிரதிபத்தாக்கள் உடைய பிரதிபத்தி தோஷத்தாலே –
கடல் அருகே போகா நின்றால் தன் கண்ணாலே முகக்கலாம் அளவிறே காண்பது –
அப்படியே அழகருடைய சௌந்தர்யாதிகளை அனுபவிக்க புக்க இடத்தில் விளாக்குலை கொண்டு அனுபவிக்கலாய் இருந்தது இல்லை
பெரு விடாய் பட்டவன் சேர்ந்து குளிர்ந்த தண்ணீர் சந்நிஹிதமாய் இருக்க ஆஸ்யம் பிஹிதமானால் துடிக்குமா போலே
விஷயமும் சந்நிஹிதமாய் விடாயும் மிக்கு இருக்கச் செய்தே அபரிச்சின்ன விஷயம் ஆகையாலே பரிச்சேதித்து அனுபவிக்க ஒண்ணாது ஒழிய
இது விஷய தௌர்ஜன்யத்தாலே வந்தது என்று அறிய மாட்டாதே தம்முடைய கரண சங்கோச நிபந்தனமாக வந்தது என்று அனுசந்தித்து –
சேர்ந்த -ஏலாதி சம்ச்க்ருதமான தீர்த்தம் -தீர்த்தன் –
ஆச்யம் பிஹிதம் -வியாதி -முதலான -வற்றால் -தீர்த்தம் குடிக்க முடியாமல் துடிக்குமா போலே –
ஜீயர் நாயனார் -மா முனிகள் திருப்பேரனார் -திருவரங்கம் எழுந்து அருள -எழு ஞாயிறு படு ஞாயிறு -பட -வயிற்றைக் கீறி
தண்ணீர் கொடுப்பார் இல்லையோ என்று துடித்த ஐதிக்யம்

அவன் தானே முதலில் இத்தைக் கழித்து தன்னை அனுபவிக்கைக்கு உறுப்பாக -1-ஜகத் சிருஷ்டியைப் பண்ணினான்
2-ஸ்ருஷ்டமான ஜகத்திலே தானே வந்து திருவவதரித்தான்
3-அதற்கு மேலே அந்தர்யாமி ரூபேண நின்று சத்தாதிகளை நிர்வஹித்தான்
அவன் இப்படி உபகார பரம்பரைகளைப் பண்ண நான் அவற்றை எல்லாம் அசத் சமம் ஆக்கிக் கொண்டேன்
இனி நான் அவனை கிட்டுகை என்று ஓன்று உண்டோ -என்று நிர்மர்யாத வ்யசன சாகராந்தர்நிமக்னராய்
-முடிந்தேனே யன்றோ யன்று இவர் சோகிக்க-
ஞாலம் படைத்த –எம் வாமனா -எங்கும் நிறைந்த எந்தாய் -ஆக்கையின் வழி உழல்வேன் -என்று எய்தி தலைப் பெய்வன் –

நீர் கரண சங்கோசத்தாலே வந்தது என்று சோகிக்க வேண்டா
கரண சங்கோசம் இல்லாதவரும் நம்மை அனுபவிக்கும் இடத்தில் இப்படியே காணும் படுவது
என்று இவர் இழவைப் பரிஹரிக்க கோலி-நீர் நினைத்த வகைகள் எல்லாம் பரிமாறுகைக்கு ஈடாக வடக்கில் திருமலையில் நின்றோம்
அங்கே கிட்டு அனுபவியும் என்று தான் அங்கே நிற்கிற நிலையைக் காட்டி சமாதானம் பண்ண-
நிலை பெற்று என்நெஞ்சம் -3-2-10- என்று சமாஹிதராய் தலைக் கட்டுகிறார் –

தெற்குத் திருமலையில் நிற்கிற நிலையை அனுபவிக்க கோலி பெறாதே நோவே பட்ட இவரை வடக்குத் திருமலையில் நிற்கிற நிலையைக் காட்டி
சமாதானம் பண்ணின படி என் என்னில் -முலை வேண்டி அழுத பிரஜைக்கு முலையைக் கொடுத்து பரிஹரிக்கும் அத்தனை -இறே
இன்ன முலையைத் தர வேணும் என்று அழுதால் அம்முலையையே கொடுத்து ஆற்ற வேண்டாவோ -என்னில் -வேண்டா –
தென்னன் உயர் பொருப்பும் வடக்குத் திருமலையும் இரண்டு முலைகள் –
இவர் தாம் வழி திகைத்து அலமருகையாலே -வழி திகைத்து அலமருகின்றேன் -3-2-9-என்கிறாரே –
1-அதுவே வேணும் -அதுவன்று இது என்கிற தெளிவில்லை யாயிற்று
2-இன்னமும் தான் ஒரு வஸ்து தானே ஒரு போது தாரகமாய் மற்றைப்போது அது தானே பாதகமாய் காணா நின்றோம் இறே
அஜீர்ண வியாதி இருந்தால்-ஆமத்தில் பாதகமான சோறு தானே அது கழிந்தவாறே தாரகம் ஆகா நின்றது இறே
இவருக்கு- இன்னது இன்ன போது தாரகமாம் -இன்னது இன்ன போது பாதகமாம் -என்று தெரியாது
குண ஆவிஷ்காரத்தாலே தரிப்பித்துக் கொண்டு போருகிற ஈஸ்வரனுக்கும் – தரித்த இவர்க்கும் – தெரியும் அத்தனை இது தான்
3-ஆரியர்கள் இகழ்ந்த ம்லேச்ச பூமியில் உள்ளோருக்கும் முகம் கொடுத்துக் கொண்டு இருக்கிற நீர்மை இறே -அங்கு
கானகமும் வானரமும் வேடும் ஆனவற்றுக்கு முகம் கொடுத்த நீர்மை உண்டு இறே – இங்கு –

முந்திய திருவாய் மொழி-வாசா மகோசரத்வம்- குணம் காட்டி அருளி – -இதில் -கரண அபரிச்சேத்ய குண புஷ்கல்யம் –

—————————————————————————–

அவதாரிகை –

முதல் பாட்டில் ஜகத் சிருஷ்டியைப் பண்ணி உன்னை வழி படுகைக்கு உடலாக கரண களேபரங்களை கொடுத்து விட்டாய் நீ –
கொடுத்து -மகனே உன் சமர்த்து என்று விட்டாயே –
நான் அவற்றை இதர விஷய ப்ராவண்யத்துக்கு உடலாக்கி அனர்த்தப் பட்டுப் போனேன் –
இங்கனே இருக்கிற நான் உன்னை வந்து கிட்டுவது ஒரு நாள் சொல்ல வேணும் என்கிறார் –

முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணனே
அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழல்வேன்
வெந்நாள் நோய் வீய வினைகளை வேர் அறப் பாய்ந்து
எந்நாள் யான் உன்னை இனி வந்து கூடுவேன் –3-2-1-

சிருஷ்டி கர்த்தா -சரீரம் வழி உழலும் நான் -காரணம் கர்மம் -போக்கி உன்னை பிராபிப்பது என்றோ
முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணனே -ஜல ஸ்தல விபாகம் இல்லாமல் எனக்கு உபகாரம் பண்ணினவனே
எம் -தனக்கு பண்ணினதாக பர சம்ருத்தி நமக்கு -ஸ்ரீ வைஷ்ணவ லஷணம்
அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழல்வேன் -தயாமானாவாகக் கொண்டு -ஆச்ரயண அர்த்தமாக தந்த
பந்தகந்த்வ மார்க்கம் -கர்ப்பம் பிறவி –பாப புண்யம் -ஸ்வர்க்கம் நரகம் -பிறவி -அலமந்து –
வெந்நாள் நோய் வீய வினைகளை வேர் அறப் பாய்ந்து -நல்ல நாள் -ஞான உதயம் வந்த பின்பு -பரிதாப ஹேதுவான நாளில்
அஹங்கார அர்த்த காமம் நசிக்கும் படி -சவாசனமாக பொகட்டு
எந்நாள் யான் உன்னை இனி வந்து கூடுவேன –பிரதிகூல்யத்துக்கு உறுப்பான நான் -கெட்டு ஒழிந்த நான் -பிரதம உபகாரனான உன்னை
இப்படி க்ருத்ஜ்ஞனான பின்பு என்று வந்து கூடுவேன் -நாள் குறித்து அருள வேணும்
தேவகி -10 வருஷம் /பகல் கோபிகள் /-போலே

முந்நீர்
1–ஆற்று நீர் -ஊற்று நீர் வர்ஜ ஜலம்-என்று சொல்லுகிறவற்றை-அப ஏவ ச சார்ஜ தௌ –மனு ஸ்ம்ருதி -1-8-என்று
2–முற்பட ஜல சிருஷ்டியைப் பண்ணி பின்பிறே அண்ட சிருஷ்டி தான் பண்ணிற்று
மேலைத் தண் மதி என்றால் கீழை கதிரவன் வாங்கிக் கொண்டு அர்த்தம் போலே முந்நீர் பின் ஞாலம் தருவித்துக் கொள்ள வேண்டும் –
ஞாலம் படைத்த -திருவாய் மொழி -9-5-9–இந்திர ஞாலங்கள் காட்டி என்பதற்கு ஏற்ப –
1-விசித்தரமாக ஜகத் சிருஷ்டியைப் பண்ணின -தய நீய தசையைக் கண்டு –
2-இவை கரண களேபரங்களைப் பெற்று கரை மரம் சேர வேணும் என்று தயா பரதந்த்ரனாய் சிருஷ்டித்த படி
எம் முகில் வண்ணனே
அவன் சர்வ விஷயமாக உபகரிக்கச் செய்தே -மதர்த்தம் -என்று இருக்கிறார்
1-இவர் ஒருவர் சாதனானுஷ்டானம் பண்ணி வர்ஷிப்பிக்க – நாடு வாழ்ந்து போமா போலே -பகீரதன் -கங்கை –
2-அவன் எனக்காக ஜகத் சிருஷ்டியைப் பண்ணினான் நாடு வாழ்ந்து போயிற்று என்று இருக்கிறார் –
முகில் வண்ணனே
1-சர்வ விஷயமாக உபகரித்த படியும்
2-பிரத்யுபகாரம் கொள் இராமையும் பற்ற முகில் வண்ணனே என்கிறார் –

அந்நாள்-
கரண களேபர விதுரமாய் -தமோபூதமாய்-தயநீய தசையை பிராப்தமாகக் கிடந்த அந்நாள்
நீ –
இத்தலையில் ஏகாகீ ந ரமேத -என்ற இழவு உன்னதாய்-திருமுகம் காட்டி அருளின நீ
தந்த –
திருவடிகளில் தலை சாய்த்து உன்னைப் பெறுகைக்கு உறுப்பாக உடம்பை உபகரித்த –
நீ தந்த –
பரம தயாளுவான நீ தந்த — இவை அர்த்திக்கச் செய்கை அன்றிக்கே தன் தயையாலே தந்த இத்தனை -மாத்ருவத் பித்ருவத் –
துர்லபோ மா நுஷோ தேஹ–ஸ்ரீ மத பாகவதம் -11-2-29-என்றும் -துர்லபம் மாநுஷம் ப்ராப்ய –ஸ்ரீ மகா பாரதம் -இத்யாதி –

இத்தை உபகாரமாகச் சொல்லுகிறது என் -கர்ம அநுகுணமாய் அன்றோ சிருஷ்டி இருப்பது -என்னில்
ஸ்ர்ஷ்டிப்பது கர்மத்தை கடாஷித்தாகிலும் யௌகபத்யம் அனுக்ரஹ கார்யம் –சிருஷ்டி அனுக்ரகத்தால் -விஷம சிருஷ்டி கர்மத்தால் –
அசித விசேஷிதான் பிரளயசீம நி -கரண களேபரைர் கடயிதும் தயமாந மநா
வரத நிஜ இச்சயா ஏவ பரவான் அகரோ ப்ரக்ருதிம் மகாத் அபிமான பூத கரண
ஆவளி கோர கிணீம்-ஸ்ரீ ரங்க ராஜ ஸ்தவம் -2-41-என்னக் கடவது இறே
ஒரோ காலங்களிலே சிறை வெட்டி விடுமா போலே -புத்தர உத்தர காலத்தில் அரசன் பண்ணுவது போலே -தன் தயையாலே உண்டாக்கும் அத்தனை இறே
ஆக்கையின் வழி உழல்வேன்
நீ ஒன்றை நினைத்துத் தந்தாய்
நான் அதின் வழியே போந்தேன்
தெப்பத்தைத் தூக்கிப் போய் பெருமாளை அனுபவிக்கலாய் இருக்க சரீரம் பாங்கன்று என்று நீர்வாக்காலே போய்க் கடலிலே புகுவாரைப் போலே
இதர விஷய பிராவண்யத்துக்கு உடலாக்கி அனர்த்தத்தை விளைத்துக் கொண்டேன் என்பார் எம்பார் –

வெந்நாள்
ஸ்வரூப ஞானம் பிறந்த பின்பு சம்சாரத்தில் இருக்கிற இருப்பு -பிராட்டி இலங்கையிலே இருந்தால் போலே தோற்றா நின்றது காணும் இவருக்கு –
பகவத் விச்லேஷத்தோடே இருக்கையாலே நெருப்பை ஏறேட்டினால் போலே இரா நின்றதாயிற்று நாள்
நோய்
பிறவி
ஸ்ரீ பரதாழ்வான் உடைய நோய் சாதுர்த்திகமாய் இராதே -பெருமாள் விரஹத்தாலேயாய் இருக்கும்
அப்படியே இவர் நோயும் பிரசித்தம் காணும்
உபகோசலை வித்யை-ஆச்சார்யர் வெளியில் போக -அக்னி சிஸ்ரூஷணம் பண்ணச் சொல்லிப் போக -குளித்து மூன்று அனலை ஓம்பி
– வியாதியால் பூரணமாக உள்ளேன் -நன்றாக உண்டேன் -சம்சாரத்தில் உழன்று இருப்பதே சொல்லி
வீய
முடிய
வினைகளை வேர் அறப் பாய்ந்து
ராஷசா நாம் ஷயம் க்ருத்வா ஸூதயித்வா ச ராவணம் லங்கா முன் மூலிதாம் க்ருத்வா கதா த்ரஷ்யதி
மாம் பதி -ஸ்ரீ ஸூந்தர காண்டம் -37-6-என்கிறபடியே
இவரும் மநோ ரதித்து விஸ்லேஷ வியசனத்துக்கு அடியான அவித்யாதிகளை வாசனையோடு போக்கி
பாய்ந்து –
என்று சினம் தோற்றுகிறது-முதலை மேல் சீறி வந்தானே -கொண்ட சீற்றம் ஓன்று உண்டே
ஒரு சர்வ சக்தி செய்யுமத்தை நான் செய்யவோ –

எந்நாள் –
எனக்கு இப்போதே பெற வேணும் என்னும் அபேஷை இல்லை
இன்ன நாள் பெறக் கடவை என்று ஒரு நாளிட்டுத் தர அமையும்
பூர்ணே சதுர்தேச வர்ஷே -யுத்த காண்டம் -127-1–என்னுமா போலே
யான்
நீ தந்த உபகரணங்களை இதர விஷய ப்ராவண்யத்துக்கு உடலாக்கி அனர்த்தத்தை சூழ்த்துக் கொண்ட நான்
உன்னை
நான் விளைத்துக் கொண்ட அனர்த்தத்துக்கு போக்கடி சொல்லாய் என்று என்று வளைக்கலாம் படி இருக்கிற உன்னை
இனி
நீ தந்த கைம்முதலை அழித்துக் கொண்ட பின்பு -கைம்முதல் -சரீரம் / அஞ்சலி பரமா முத்ரா -ஷிப்ரம் பகவத் பிரசாதம் –
இனி வந்து கூடுவேன் —
இனி வந்து கிட்டுகை என்று ஒரு பொருள் உண்டோ என்று நிராசர் ஆகிறார் என்று முன்புள்ள முதலிகள் –
எம்பெருமானார் -நிராசர் ஆனால் பின்னை முடிவார் ஒருவர் -ஒன்பதாம் பாட்டில் நிராசராக
-பத்தாம் பாட்டில் அவன் வந்து சமாதானம் பண்ணினாக அமையும் -என்று அருளிச் செய்வர்
நான் வந்து உன்னைக் கிட்டுவேனாக நீ பார்த்து வைத்த நாளைச் சொல்லாய் -என்கிறார் –
பிரச்னம் -கேள்வி -எம்பெருமானார்
ஷேபம் -வருத்தம் -முன்புள்ள முதலிகள்

————————————————————————

அவதாரிகை –

உம்முடைய உடம்பு கொண்டு நாம் இருந்த இடத்தே வந்து கிட்ட மாட்டிற்று இலீராகில் -நம் உடம்பைக் கொண்டு நீர் இருந்த இடத்திலே
வந்து கிட்டினோமே-வாமன வேஷத்தைக் கொண்டு மகாபலி முன்னே வந்து நின்றோமே -தாவி அன்று உலகை அளந்தோம்
-அங்கே கிட்ட மாட்டிற்றிலீரோ-என்ன அதுக்கும் தப்பினேன் என்கிறார் –

வன் மா வையம் அளந்த எம் வாமனா நின்
பன் மா மாயப் பல் பிறவியில் படிகின்ற யான்
தொன் மா வல்வினைத் தொடர்களை முதல் அரிந்து
நின் மா தாள் சேர்ந்து நிற்பது எஞ்ஞான்று கொலோ –3-2-2–

ஸ்ருஷ்டித்ததை முதல் சொல்லி இனி -அவதரித்த உபகாரம் -அர்த்தியாக வந்து உலகை அனன்யார்ஹம் ஆக்கின
உன் ஸ்லாக்கியமான திருவடிகளை என்று அடைவேன் –
வன் மா வையம் அளந்த எம் வாமனா -காடின்யம்-பெரிய -ஸூ குமாரமான திருவடிகளால் அளந்து -அத்தால் என்னை அடிமை கொண்ட
நின் பன் மா மாயப் பல் பிறவியில் படிகின்ற யான் -குண பேதம் -கார்ய பேதம் -பல் பிறவியில் -கடப்பதற்கு அரிய –
பிரகிருதி அடியான பிறவிகளில் பொருந்தி படிகின்ற -மன்னி –
தொன் மா வல்வினைத் தொடர்களை முதல் அரிந்து-அநாதி -அபரிச்சேத்யமாய்-வெட்டி -சவாசனமாக
நின் மா தாள் சேர்ந்து நிற்பது எஞ்ஞான்று கொலோ-பிராப்தமான -சேர்ந்து -விலகாமல் -நிற்பது -நித்ய வாசம் -எப்போதோ

வன் மா வையம் அளந்த –
1-அவன் தானே தன்னைக் கொண்டு வந்து காட்டின இடத்திலும் நெஞ்சில் நெகிழ்ச்சி இன்றிக்கே இருந்த பூமி இறே-
2-ஆசூர பிரக்ருதியான மகாபலிக்கு உள்ள இரக்கமும் இல்லை இறே -சுக்ராதிகள் விலக்கச் செய்தேயும் அவர்கள் வழி போயிற்று இலன் இறே
மகாபலி சுக்ராதிகள் வழி போக வில்லை –ஆக்கையின் வழி போகின்றோம் –
3-மகாபலி மிடுக்காலே -தர்மத்தால் -புக்கு அளக்க அரிதான பூமி என்னுதல்-முக்த பாஷணம்-பண்ணி அவன் நெஞ்சை வஞ்சித்து
இருக்கா விடில் -புக்கு அளந்து இருக்க முடியாதே
கொள்வன் நான் மாவலி மூவடி -1-8-8-//
இப்படி வன்மையை உடைத்தான மகா பிருதிவியை அளந்த -என்னுதல்
வடிவிணை இல்லா மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடியைக் கொண்டு கிடீர் காடும் மலையுமான பூமியை அளந்து என்னுதல் –

எம் வாமனா –
அபஹ்ருத ராஜ்யனான இந்த்ரனுக்குக்காக அல்ல –
வாமனவதாரமும் மதர்த்தம் என்று இருக்கிறார்
நின்
மம மயா துரத்யயா-என்று சொன்ன இது எனக்கு ஒருவனுக்கும் பலித்து விட்டது
பன் மா மாயப்
மாயம் என்கிறது மூலப்பிரக்ருதியை
பன்மையாவது என் என்னில் -கார்யகதமான தேவாதி நாநாத்வத்தை காரணத்தே ஏறிட்டுச் சொல்லுகிறது ஆதல்
அன்றிக்கே குண த்ரயங்களுக்கு ஆஸ்ரயமாய் இருக்கையாலே குண பேதங்கள் இட்டு பலவாகச் சொல்லுதல் –

பல் பிறவியில் –
பிரகிருதி சம்பந்த நிபந்தனமாக இறே அநேக ஜன்மங்கள் உண்டாகிறது -அவற்றிலே
படிகின்ற –
தரை காணாதே அவகாஹிக்கிற
விழுகின்ற என்னாதே படிகின்ற என்கிறது இவ்வனர்த்தத்திலே வெறுப்பு இன்றிக்கே பொருந்தி இருக்கை
வர்த்தமான நிர்த்தேசத்தால் இன்னம் தரை கண்டது இல்லை என்கை
யான்
சம்சார பாந்தனான நான் -வழி போக்கன் -ஆனந்தமாக வர்த்திக்கும் –

தொன் மா வல்வினைத் –
இச் சேதனன் உள்ளவன்றே உண்டாய் அனுபவித்தாலும் நசியாததாய் ஈஸ்வரன் போக்கும் அன்று ஒரு நிலை நின்று போக்க
வேண்டும்படி பிரபலமாய் ஒன்றோடு ஓன்று அனுபந்தித்து தான் குவாலாய் இருக்கிற பாபத்தை வாசனையோடு போக்கி –

தொடர்களை முதல் அரிந்து
தொடர் -என்று விலங்கு
நின் மா தாள் சேர்ந்து-
பரம ப்ராப்யமாய் -நிரதிசய போக்யமாய் இருக்கிற திருவடிகளைக் கிட்டி
நிற்பது
பறக்கிறது ஒன்றில் பாரம் வைத்தால் போலே இருப்பது ஓன்று இறே நித்ய சம்சாரிகளுக்கு பகவத் சமாஸ்ரயணம்
அதஸோ பயங்கதோ பவதி -என்னக் கடவது இறே
நிற்பது எஞ்ஞான்று கொலோ —
1-அது என் நாளாக வற்றோ –
2-அபீதா நாம் ச கால ஸ்யாத் -அயோத்யா 24-35—இன்றாக இருக்கக் கூடாதோ –ஸ்ரீ கௌசல்யையார் திருவாக்கு -என்னுமா போலே
3-இந்நாள் என்ற ஓர் அவதி பெற்றதாகில் இன்று பெற்றதோடு ஒக்கும் -என்றும் சொல்லுவர்கள் -சத்ய வாக்யன் அன்றோ

——————————————————————————————

அவதாரிகை –

வாமன அவதாரம் முற்காலத்திலே யாகையாலும் -நீர் பிற்பாடர் ஆகையாலும் இழந்து அங்கே கிட்டப் பெற்றிலீராகில்
ஒருத்தி யுடைய மங்கள ஸூத்ரத்துக்காக பாண்டவர்களுக்குச் சொல்லிற்று செய்து திரிந்தோமே –
புருவம் நெரித்த இடத்திலே -தேரை நடாத்தியும் -செத்தவனை மீட்டும் -கையாளாக -இருந்தோமே –
அங்கே வந்து கிட்ட மாற்றிற்று இலீரோ -என்ன -அங்கும் தப்பினேன் -என்கிறார் –

கொல்லா மாக்கோல் கொலை செய்து பாரதப் போர்
யெல்லாச் சேனையும் இரு நிலத்து அவித்த எந்தாய்
பொல்லா வாக்கையின் புணர்வினை யறுக்கலறா
சொல்லாய் யான் உன்னைச் சார்வதோர் சூழ்ச்சியே –3-2-3-

தோள் தீண்டி -த்வாபர யுகம் -உலகமாக தீண்டிய அந்த அவதாரம் -ஊராக தீண்டிய
ஆஸ்ரித விரோதி நிரசன சீலன் -உன்னை நான் கிட்ட விரகு அருளிச் செய்ய வேணும்
கொல்லா மாக்கோல் கொலை செய்து பாரதப் போர் -கோல் குதிரை அடக்க -மாடுகளை ஓட்ட -இன்றும் ஏந்தி பார்த்த சாரதி -கதை இல்லை
சங்கல்ப மாத்ரத்தால் அழித்தான் –சங்க நாதம் யுத்தம் தொடங்க அறிவிக்க-கொல்வதற்கு உபயோகிக்க வில்லை -கோலைக் கூட கொல்வதற்கு உபயோகிக்க வில்லை –
யெல்லாச் சேனையும் இரு நிலத்து அவித்த எந்தாய் -சத்ரு சேனை பாண்டவ சேனை சமஸ்த -பூ பாரம் தொலைக்க –
அஸ்வத்தாமா கிருபாச்ச்சர்யர் பஞ்ச பாண்டவர்கள் தவிர அனைவரையும் அழித்த
பெரிய பூமியில் -தர்ம ஷேத்ரம் -அர்ஜுனன் மூலம் நசிப்பிவித்த
பொல்லா வாக்கையின் புணர்வினை யறுக்கலறா-அனர்த்த ஹேது -சரீர சம்பந்தம் -அறுக்க முடியாதே
சொல்லாய் யான் உன்னைச் சார்வதோர் சூழ்ச்சியே-வழி -அறியாமல் -நல்ல வழி பண்ணி அருள் -விலக்காமை-உண்டே
-அகப்பட்டு தவிக்கும் நான் -விரோதிகளை அழிக்க வல்ல உன்னை கிட்ட
அத்விதீயமான மார்க்கம் உபாயம் அருளுவாய் -அர்ஜுனனுக்கு அருளிச் செய்தது போலே –

கொல்லா மாக்கோல் கொலை செய்து
துரியோதனனும் அர்ஜுனனும் கிருஷ்ணன் பள்ளி கொண்டு அருளா நிற்கச் செய்தே படைத்துணை வேண்டி வந்து
துர்யோதனன் திருமுடி பக்கல் இருந்தான் -அர்ஜுனன் திருவடிகளில் பக்கலிலே இருந்தான் –
பள்ளி உணர்ந்து அருளி -ராஜாக்கள் போந்தது என் என்ன -துர்யோதனன் நான் முற்பட வந்தேன் என்ன –
பவா நபிகத பூர்வமத்ர மே நாஸ்தி சம்சய -என்று -நீர் முற்பட வந்ததுக்கு குறை இல்லை
நம் கண் முற்பட்டது இவன் பக்கலிலே — கடாஷம் இவன் பக்கம் என்று தெளிவாக சொல்லி
அவனுக்காக சில வழக்குச் சொல்லி -உங்களுக்கு வேண்டுவது என் என்ன -படைத்துணை வேண்டி வந்தோம் -என்ன
ஆகில் நாராயண கோபாலர்களை ஒருவர் கொள்ளுவது என்னை ஒருவன் கொள்ளுவது என்ன
அசேதன கிரியா லாபங்களைப் பற்றுவாரைப் போலே துரியோதனன் அவர்களைக் கொண்டு போக
பீஷ்மாதிகள் கேட்டு தப்பச் செய்தாய் -இனி கிருஷ்ணன் ஆயுதம் எடாது ஒழிவானாக வேண்டிக் கொண்டு போராய்-என்ன
அவனும் வந்து நீ ஆயுதம் எடாது ஒழிய வேணும் -என்ன அப்படியே ஆகிறது என்று சொல்லிவிட்டு பரிகரம் அன்றிக்கே
குதிரையை நடத்தும் கோலைக் கொண்டு முடித்துப் பொகட்டான் –
பீஷ்மாதிகளும் -சேஷத்வ ஞானம் பறிபோய் -ஆயுதம் எடுக்காமல் இருந்தால் கிருஷ்ணன் கொல்ல மாட்டார் –
-சங்கல்பத்தாலே அனைத்தும் பண்ணுவான் என்பதை மறந்து –
குந்தி புத்திரன் தனஞ்சயன் -துரியோதனன் -இருவரும் -பிரயோஜனம் கொள்வார்கள் போல் -தூங்கும் அழகை பார்க்காமல் –
கை கூப்பி அர்ஜுனன் -அஞ்சலி கை கூப்பி அர்ஜுனன் திருவடி கீழே அமர்ந்தான் –துரியோதனன் -சம்பந்தம் துல்யம் -பூர்வம் நான் வந்தேன்
-பூர்வ கடாஷம் அர்ஜுனனுக்கு -தம்பிக்கு முதல் உரிமை –

பாரதப் போர் –
பாரத சமரத்திலே
யெல்லாச் சேனையும்
துர்வர்க்கம் அடைய திரண்டது இறே உபய சேனையிலும் -இங்கே நாலைந்து பேரும்-அங்கே ஓன்று இரண்டு பேரும்
ஒழிய முடித்து பொகட்டான் ஆயிற்று -தர்ம புத்ராதிகள் இங்கே -அஸ்வத்தாமா /கிருபாச்சார்யர் கிருதவர்மா இங்கே
இரு நிலத்து –
அவர்கள் பக்கல் நன்மை இல்லையே யாகிலும் அங்கே பட்டார்க்கு வீர ஸ்வர்க்கம் கிட்டும் தேசத்திலே -தர்ம ஷேத்ரம்
அவித்த
பீஷ்மாதிகள் காட்டுத் தீ கிளர்ந்தால் போலே வர காளமேகம் வர்ஷிக்குமா போலே அவித்தான்
மழை கொலோ வருகின்றது -பெரியாழ்வார் -3-4-1-என்றது இறே அவன் வரத்து தான் இருப்பது
சக்கரம் கொண்டு -கள்வ பொறுத்து அருள் -காள மேகம் போலே பீஷ்மர் முன்னே போனானே –
மேகம் போலே வருகிறாய் பீஷ்மர் சொன்னாரே ஆழி எடுத்து வந்த அழகைக் கண்டு –
எந்தாய்
பாண்டவர்களுக்கு அன்று உதவிற்றும் தமக்கு என்று இருக்கிறார் –

பொல்லா வாக்கையின்
நீ அழியச் செய்தது துர்யோதநாதிகள் அல்ல கிடாய் இதன் தண்மை-அனுகூலம் போலே இருந்து பாதகமாம் இறே இது
தன் பக்கலிலே போக்யதா புத்தியைப் பிறப்பித்து ஈஸ்வரனுடைய போக்யதையை திரச்கரிப்பிக்கும்-
உடம்பு -பாம்புடன் படுத்தால் போலே -அனந்தாழ்வான் -கடி உண்ட பாம்பு கடி பட்ட பாம்பு –
சிஷ்டர்கள் ஒருவனுக்கு அநேக தோஷம் உண்டானால் -அவன் தண்ணியன் என்று விடும் அத்தனை இறே
அப்படியே இவர் இதன் தண்மைகளை எல்லாம் திரள நினைத்து பொல்லா வாக்கை -என்கிறார்
புணர்வினை
சரீரத்துக்கு அடியாய் ஒன்றோடு ஓன்று பிணைந்து இருக்கிற பாபங்கள் ஆனவை
புணர் வினை என்று சரீர சம்பந்தம் தன்னை என்னுதல் –

யறுக்கலறா
ராவணன் தலை போலே முளையா நிற்கும் –
சொல்லாய்
இத்தைக் கழித்து நான் உன்னைக் கிட்டும் ஒரு விரகு அருளிச் செய்ய வேணும்-நான் அறிந்தால் தப்புவேன் -நான் அறியாத படி விரகு பார்க்க வேண்டும் –
அது தன்னை எனக்குச் சொல்லவும் வேணும் -என்கிறார் -சொல்லி நான் விலக்காமையும் பண்ணி அருள வேணும் –
யான்
சிறையில் கிடப்பாரை போலே பிரக்ருதியோடே பிணை யுண்டு இருக்கிற நான்
உன்னைச்
ஒரு தேச விசேஷத்திலே நித்ய சூரிகள் அனுபவிக்கும் உன்னை
சார்வதோர் சூழ்ச்சியே —
சேருவதொரு பிரகாரம் சொல்லாய்
அதாவது -சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி-என்று அருளிச் செய்கை இறே –
சூழ்ச்சி -அறியாமல் செய்வது -சேதனன் தள்ளி விட முடியாத உபாயம் -வசீகர உபாயம் -அறிந்தவன்
-சத்ய சங்கல்பன் -வசீகரித்து திருவடியில் சேர்த்தே தீருவான் –

———————————————————————————-

அவதாரிகை –

இப்படி நீர் இருந்த இடத்தே நாம் வரச் செய்தேயும் -இழந்தீர் ஆகில் -அவதாரங்களைப் போலே ஒரு கால விசேஷத்திலே ஆகாதே
எல்லாக் காலத்திலும் அந்தர்யாமித்வேன-உகவாதார் பக்கலிலும் விட மாட்டாமையாலே புகுந்து நின்றோமே –
அங்கே அனுகூலித்து உம்முடைய அபேஷிதம் பெற்றுப் போக மாட்டிற்று இலீரோ -என்ன -அதுக்குத் தப்பினேன் -என்கிறார் –
எங்கணும் நிறைந்த வெந்தாய்-என்பதை வைத்து அவதாரிகை –
அங்கு -அனுகூலம் -அந்தர்யாமித்வத்தில் -ஹார்த்த ரூபத்தில் -எப்படி அனுகூலிப்பது-ஞான ஹ்ருதே -குளம் -நீர் -இரண்டும் -இருக்க வேண்டுமே
அறிவாகிற குளம் -தியான ஜலம் -ராக த்வேஷம் -அழுக்கு -தியானம் செய்பவன் பரமாம் கதிம்
-யோக நீதி நண்ணுவார் சிந்தையுள் -ஷேத்ரஜ்ஞ்ஞன் சுத்தி ஞானம் இருந்தால் –
தியானமே அனுகூலிப்பது என்றவாறு -ஈஸ்வரன் ஞானம் இருந்தால் தான் ஷேத்ரஞ்ஞனுக்கு சுத்தி –

சூழ்ச்சி ஞானச் சுடர் ஒளியாகி என்றும்
ஏழ்ச்சிக் கேடு இன்றி எங்கணும் நிறைந்த வெந்தாய்
தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து நின் தாளிணைக் கீழ்
வாழ்ச்சி யான் சேரும் வகையருளாய் வந்தே –3-2-4-

வியாபித்து -அந்தர்யாமி -ஸ்வரூபேண ஞானத்தால் –இரண்டாலும் வியாபித்து-ரஷணம் அர்த்தமாக -இருக்க –
அடியேன் தப்பினேன் முன்னே வந்து சொல்லி அருள வேணும்
சூழ்ச்சி ஞானச் சுடர் ஒளியாகி என்றும் -ஞானத்தாலும் -ஸ்வரூபேண-எங்கும் சூழ்ந்து -ஞானப் பிரபை உடைய -ஸ்வயம் பிரகாசன்
என்றும் -எக்காலத்திலும்
ஏழ்ச்சிக் கேடு இன்றி எங்கணும் நிறைந்த வெந்தாய்-விகாசமும் சங்கோசமும் இல்லாமல்
ஞானத்துக்கும் -ஸ்வரூபத்தாலும் -இரண்டாலும் -அசித் சித் வியாவ்ருத்தி –
ஸ்வரூபம் வியாபித்து – அசேதனத்துக்கு வ்யாவ்ருத்தி / ஆத்மாவுக்கு கர்மாதீனமாக ஞானம் மாறும் -ஞான வியாப்தி அதில் வியாவருத்தி
சர்வ பிரதேசத்திலும் பரி பூரணமாக வியாபித்து -என்னைப் பிடிக்க ஊரை வளைத்து ஒருவனைப் பிடிக்குமா போலே –
என்னை அங்கீ கரித்த ஸ்வாமி
தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து நின் தாளிணைக் கீழ் –
உன்னை தவிர மற்ற ஸமஸ்த விஷயங்களில் கால் தாழாமல்-நின்- பிராப்தனான உன்னுடைய -போக்யமான
வாழ்ச்சி- பரதந்த்ரமான வாழ்வு-பாரதந்த்ர ஞானம் வந்தாலே வாழ்ச்சி என்றவாறு – -இதுக்கு முன் அந்வயித்து அறியாத நான் பிராபிக்கும் பிரகாரத்தை
அவதார முகத்தாலே வந்து என் முன்னே அருள வேணும்

சூழ்ச்சி ஞானச் சுடர் ஒளியாகி-
1-சேதனரைத் தப்பாதபடி அகப்படுத்திக் கொள்ளுகையாலே -வியாப்தியை -சூழ்ச்சி -என்கிறது
2-எங்கும் ஒக்க வியாபித்து இருப்பதாய் -சூழ்ச்சி–விசதமமாய் இருக்கிற -ஒளி-இது அடை மொழி -ஜ்ஞான பரப்பை -சுடர் -யுடையையாய் –
-ஜ்ஞானத்துக்கு ஆஸ்ரயமான ஸ்வரூபத்தைச் சொல்லுதல் –
ஜ்ஞானத்தைச் சொல்லுதல் -ஸ்வரூப வியாப்தியும் -ஜ்ஞான வியாப்தியும் இரண்டும் சொல்லக் கடவது இ றே-

என்றும் ஏழ்ச்சிக் கேடு இன்றி –
எல்லாக் காலத்திலும் -ஏழ்ச்சி யாதல் -கேடாதல் இன்றிக்கே –
கர்மம் அடியாக ஆத்மாவுக்கு வரக் கடவதான சங்கோச விகாசங்கள் இன்றிக்கே இருக்கை –
ஏழ்ச்சி-எழுச்சி-விகாசம் –கேடு -குறை -சங்கோசம் –

தாரண நியமநாதிகள் -ஸ்வரூபத்தால் தரிக்கிறார் /ஞானத்தால் நியமிக்கிறார் -இரண்டும் பரார்த்தமாகவே
என்றும் சூழ்ச்சி ஞானச் சுடர் ஒளி ஏழ்ச்சிக் கேடு இன்றி எங்கணும் நிறைந்த வெந்தாய்-
என்றும் ஏழ்ச்சிக் கேடு இன்றி
சூழ்ச்சி
ஞானச் சுடர் ஒளி
எங்கணும் நிறைந்த வெந்தாய்-
சர்வ காலேபி -பிரகிருதி -ஸ்வ பாவம் -மாறிக் கொண்டே -என்றும் -ஏழ்ச்சிக் கேடு இன்றி-ரஹிதமாக-
சூழ்ச்சி-சேதன அசேதனங்களை வசீகரிக்க -அதி விசாலமான ஞான பிரபையால் -சுடர் ஒளியால் -ஸ்வரூபத்தால் -ஞானமாகி
ஞான வடிவமான ஸ்வரூபம் –
தர்மி தர்மிக் ஞானம் – ஞான ஸ்வரூபன் ஞான ஆஸ்ரயம்-ஞான குணகன்-
ஸ்வரூப ஞானம் ஞான மயம் -இரண்டாலும் வியாபிக்கிறார் -என்றவாறு -ஞானம் ஒரு சொல்லைக் கொண்டே
ஸ்வரூப ஸ்வபாவ ஞானம் என்று கொண்டு -என்றவாறு –
ஞான வியாப்தி -சப்தார்த்தம்
என்றும் -உயர்வு தாழ்வு இல்லாமல் -கர்ம சம்பந்தால் வருமே தர்ம பூத ஞான சுருக்கம் சேதனனுக்கு -இவனுக்கு இல்லையே
ஞானத்தாலே நிறைந்த எந்தாய் -வீர்யத்தால் தாங்கப்படுகின்றன –சங்கல்ப ரூப ஞானம் வியாபித்து –

எங்கணும் நிறைந்த-
இப்படி வியாபிப்பது ஒரு பிரதேசத்திலேயோ -என்னில்
எங்கணும்
கண் -என்று இடமாய் -இடம் திகழ் பொருள் தோறும் கரந்து-1-1-10-என்கிறபடியே
எல்லாவிடத்திலும் உண்டான எல்லாவற்றிலும்
ஜாதி வியக்தி தோறும் பரிசமாப்ய வர்த்திக்குமா போலே பூரணமாக வியாபித்து இருக்கும் –

வெந்தாய்-
ஒருவனைப் பிடிக்க நினைத்து ஊரை வளைப்பாரை போலே-வியாப்தியும் தமக்காக என்று இருக்கிறார் –
உன் பக்கலிலே அகப்படுத்திக் கொள்ள விரகு தேடி- உணர்ந்து – என்னை வியாபித்துக் கொண்டு நிற்கச் செய்தேயும்
விஷய பிரவணனாய் தப்பினேன் என்கை-

தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து
உன்னை ஒழிந்த மற்றுள்ள இடத்திலும் வரக்கடவதான தாழ்ச்சியையும் தவிர்ந்து
யாதானும் பற்றி -திருவிருத்தம் -95–என்கிறபடியே நீ யன்றிக்கே ஒழிய அமையுமே நான் மேல் விழுகைக்கு-

நின் தாளிணைக் கீழ் வாழ்ச்சி –
வகுத்ததாய்-நிரதிசய போக்யமாய் இருக்கிற உன் திருவடிகளில் உண்டான கைங்கர்யத்தை -வாழ்ச்சி என்றாலே கைங்கர்யம் தானே –
இதுக்கு முன் புதியது உண்டு அறியாத கிட்டுவது ஒரு பிரகாரம் அருளிச் செய்ய வேண்டும் -புதியது -ஏக தேசத்திலும் –
இரண்டு இடத்திலும் ப்ராவண்யம் ஒத்து இருக்க தாழ்ச்சி என்றும் வாழ்ச்சி என்றும் சொல்லுகிறார்
சர்வம் பரவசம் துக்கம் -என்றும்-ஸ்வ வசம் ஸூகம் -அப்ராப்த விஷயத்தில் இது -அவனுக்கு வசம் ஸூகம் என்றபடி
-சேவா ஸ்வ வ்ருத்தி-என்றும் அவற்றைச் சொல்லா நின்றது இறே
சாயா வா சத்வம் அநு கச்சேத்-என்று இத்தை விதியா நின்றது –
அவற்றைப் பற்ற இவ்வாழ்ச்ச்சிக்கு இட்டுப் பிறந்து வைத்து அத்தை இழந்து இருக்கிற நான் கிட்டுவது ஒரு பிரகாரம் அருளிச் செய்ய வேணும்
யான் சேரும் வகையருளாய்
வந்தே –
அது தானும் முகம் தோற்றாதபடி நின்று அருள ஒண்ணாது
என் கண்ணுக்கு இலக்கு ஆம்படி
ராம கிருஷ்ணாத் யாவதாரங்கள் போலே எனக்காக ஒரு அவதாரத்தைப் பண்ணியே யாகிலும் வந்து அருள வேணும் –

—————————————————————————-

அவதாரிகை –

நீர் -வந்தே அருள வேணும் -என்னா-இது நமக்குத் தட்டுப்படும் நின்றீர் -ஒரு விசை பதினோராயிரம் ஆண்டு இருந்தோம் –
ஒரு விசை நூறு ஆண்டு இருந்தோம் -வருகை நமக்கு பணியுண்டு காணும் -என்ன
எனக்கு அவை போலே சில நாள் இருந்து உபகரித்து அருளப் பெறில் அழகிது
அது செய்யத் திரு உள்ளம் அல்லவாகில் ஆனைக்குத் தோற்றினால் போலேயும்
ப்ரஹ்லாதனுக்கு தோற்றினால் போலேயும் எனக்கு ஓர் தோற்றரவு தோற்றியே யாகிலும் உதவ வேணும் -என்கிறார் –

வந்தாய் போலே வந்து மென் மனத்தினை நீ
சிந்தாமல் செய்யா யிதுவே யிதுவாகில்
கொந்தார் காயாவின் கொழு மலர்த் திரு நிறத்த
எந்தாய் யானுன்னை எங்கு வந்து அணுகிற்பனே–3-2-5-

பிரயாச சித்தம் அன்றோ ராம கிருஷ்ண அவதாரங்கள்-விலக்ஷண விக்ரஹ யுக்தன் -நரசிம்ஹ போலே வந்தாய் போலே வரலாமே –
நெஞ்சை தரிப்பித்து -அருள வேண்டும்
வந்தாய் போலே வந்து மென் மனத்தினை நீ -ஆவிர்பவித்து -ப்ராதுர் பாவம் -சடக்கென -வந்தும் -வந்தாகிலும் -என்றவாறு
ஆனைக்கு-பிரகலாதனுக்கு வந்தால் போலாவது வந்தும்
என் -உன்னை கிட்ட ஆசைப் பட்ட
சிந்தாமல் செய்யா யிதுவே யிதுவாகில்-சிதையாமல் -கலக்கப் படாத படி –
இதுவே இது -உதவாமை ஆகிய இதுவே -தேவரீருக்கு ஸ்வ பாவம் ஆகில்
கொந்தார் காயாவின் கொழு மலர்த் திரு நிறத்த -கொத்துக்கள் -நிறைந்த -செவ்விப் பூ -காயம் பூ -நிறம்
எந்தாய்- அழகைக் காட்டி அடிமை கொண்ட ஸ்வாமி
எந்தாய் யானுன்னை எங்கு வந்து அணுகிற்பனே-அழகை கண்டு அகலாத என்னை –
ஐயப் பாடு அறுத்து ஆதாரம் பெருக வைத்து அழகன் -எங்கு வந்து கிட்ட வல்லேன் -அஷ்டாங்க யோக சமர்த்தன் இல்லை
வந்தாய் போலே வந்தாய் -மனசை சிதிலப்படாமல் அன்றோ வர வேண்டும்

வந்தாய் போலே வந்தும்
வந்து சில நாள் இருந்தவை போல் அன்றிக்கே -வந்தாய் போலே வந்தும்
என் மனத்தினை நீ
உன்னை ஒழிய தரியாத படியான என் மனசை தசை அறிந்து தரிப்பிக்கும் நீ
உரு அழிந்தவற்றை உண்டாக்க வல்ல நீ
சிந்தாமல் செய்யா யிதுவே யிதுவாகில்
இது த்ரவீ பூதமாய் மங்கிப் போகாதபடி செய்கிறிலை
யிதுவே யிதுவாகில்
1-உன்னை ஒழிய மங்கிப் போகையும் இதுக்கு ஸ்வ பாவமாய்
2–இது மங்கக் கொடுத்து பார்த்து இருக்குமது உனக்கு ஸ்வ பாவமாய் விட்டதாகில்

கொந்தார் காயாவின் கொழு மலர்த் திரு நிறத்த எந்தாய்
சிறியதுக்கு இனியது இடேன்-என்று இப்படி செய்யக் கடவதாக இருந்த நீ இவ்வடிவில் சுவட்டை எனக்கு அறிவித்தது என்
தழைந்து இருந்துள்ள காயாவினுடைய கொழுவிய மலர் போலே குளிர்ந்து இருந்துள்ள திரு நிறத்தைக் காட்டி என்னை எழுதிக் கொண்டவனே —

யானுன்னை எங்கு வந்து அணுகிற்பனே–
உன்னைக் கிட்டுகைக்கு ஒரு கைம்முதல் இல்லாத நான்
இவ்வடிவில் போக்யதை அறிந்த நான்
பிரியில் தரியாத வடிவு படைத்து இருக்கிற உன்னை -தச்யைஷ ஆத்மா விவ்ருணுதே தநூம் ஸ்வாம்-என்று நீயே அனுபவிக்கும் உன்னை
என்ன சாதன அனுஷ்டானத்தைப் பண்ணி எங்கே வந்து கிட்டக் கடவேன் -நான் உன்னைக் கிட்டுகை-என்ற ஒரு பொருள் உண்டோ –
பூர்வ நிர்வாகம் -ஷேபம் -பாஷ்ய காரர் -கேள்வி

————————————————————————-

அவதாரிகை –

1-என்னைப் பார்த்தால் கிட்ட விரகில்லை-உன்னைப் பார்த்தால் தப்ப விரகில்லை -ஆனபின்பு நிரதிசய போக்யமான
உன் திருவடிகளைக் கிட்டுவது என்று என்கிறார் –
2-விதி நிஷேதங்களுக்கு வச்யன் அன்றிக்கே இதர விஷய ப்ரவணனாய் கை கழிந்து போன நான் உன் திருவடிகளைக் கிட்டுவது என்று என்கிறார் –

கிற்பன் கில்லேன் என்றிலன் முன நாளால்
அற்ப சாரங்கள் அவை சுவைத்து அகன்று ஒழிந்தேன்
பற்பல்லாயிரம் உயிர் செய்த பரமா நின்
நற் பொற் சோதித் தாள் நணுகுவது எஞ்ஞான்றே –3-2-6-

அநாதி காலம் விஷய பிரவணனாய் விலகி போன நான்
எல்லாம் செய்ய வல்ல நிரவதிக சக்தி -சர்வ சக்தன் -நினைத்த படி -கிட்டுவது என்று
கிற்பன் என்றிலன்- கில்லேன் என்றிலன்- முன நாளால் -பண்ணுவேன் முடியும் ஆம் செய்வேன் -என்று இலன் -கில்லேன் என்று இலேன் –
கிருத்திய அகரணம் அக்ருத்ய கரணம் -முன்பு -தேவரீர் அனுக்ரகம் அருளுவதற்கு முன்பு
செய் -என்றால் செய்ய வல்லேன் -தீமை செய்யல் ஆகாது என்றால் மாட்டேன் என்று தவிரவும் இல்லை
விதி நிஷேதங்களுக்கு -அவிஷயமாய் போந்தேன்
அற்ப சாரங்கள் அவை சுவைத்து அகன்று ஒழிந்தேன் -பசை -அத்யல்ப -நாநா வித துர்விஷயங்கள் சுவைத்து -பசை உண்டாக பிரமித்து
-நாய் -எலும்பு துண்டு கடித்து ரத்தம் வர -அதை சுவைத்து ரசிப்பது போலே –
எதிர் பசை கொடுத்து புசித்து -அதன் அடியாக தரஸ்தான் ஆனேன்
பற்பல்லாயிரம் உயிர் செய்த பரமா -எண்ணிறந்த பிராணி சாதங்களை -நினைத்தபடி செய்ய வல்லன் -சக்தி சிறப்பை உடையவன்
நின் நற் பொற் சோதித் தாள் நணுகுவது எஞ்ஞான்றே-அபிராக்ருதமான -நித்ய பரம சாரம் -அதி ரமணீயமான தேஜோ மயமான திருவடிகள்
சக்திமான் நீயே கிட்டுவித்தால் தானே முடியும் –

கிற்பன் கில்லேன் என்றிலன்-
ஆழ்வீர் -பகவத் விஷயத்தில் வந்தால் இச்சைக்கு மேற்பட ஓர் ஆயாசம் இன்றிக்கே
பேற்றில் வந்தால் அபுநா வ்ருத்தி லஷண மோஷமாய் இருக்கும்
அதுக்கு ஈடாக ஒன்றைச் செய்ய வல்லீரே -என்றால் -ஓம் அப்படியே செய்கிறேன் என்று இலேன் -ஆம் என்பதை ஓம் என்பர் பிராந்திய மொழி
இதர விஷய ப்ராவண்யம் ஆகிறது ஆயாசம் கனத்துப் பேற்றில் ஓன்று இன்றிக்கே இருப்பது ஓன்று –
அத்தைத் தவிர வல்லீரே என்றால் -ஓம் தவிருகிறேன் -என்று இலேன் –
இப்படி விஹிதத்தைச் செய்யாமையும் அவிஹிதத்தைச் செய்கையும் என்று தொடங்கி -என்ன
விருப்பம் ருசி ஒன்றே நம் க்ருத்யம் அகதி -அசரணன் -பவ சாகரம் -சரண வரணம் வார்த்தையும் உன் அருளாலே கிட்ட வேண்டும் -கூரத் தாழ்வான்

முன நாளால்
காலம் எல்லாம் எனக்கு இதுவே யன்றோ யாத்ரை -இப்படி நெடுநாள் பட நம்மை ஒழிய புறம்பே
துவக்க வல்லபடி போக்ய பூதமான விஷயங்களும் உண்டாயிற்றோ -என்னில்
அற்ப சாரங்கள் அவை சுவைத்து அகன்று ஒழிந்தேன்
உன் பக்கல் வாராதபடி தகைய வேண்டுவது உண்டு -அது தன் பக்கல் ஓன்று இல்லை –
முள்ளிப் பூவில் ரசம் போலே தான் அல்பமாய் -அவை தாம் பலவாய் -தன்னாவில் பசை கொடுத்து புஜிக்க வேண்டும் படி
இருக்கிற விஷயங்கள் தோறும் கால் தாழ்ந்து
சர்வ சக்தியான தேவரை ஓடினேன் என்கிறபடியே கை கழியப் போனேன்
நெடு நாள் இப்படி நம்மைக் கை கழிந்தீர் ஆகில் நம்மை இனிச் செய்யச் சொல்லுகிறது என் -என்ன –

பற்பல்லாயிரம் உயிர் செய்த பரமா
உயிர் செய்கை யாவது -ஸ்திதி கமன சயநாதிகளுக்கு யோக்யமாம் படி சரீரத்தோடு சம்பந்திப்பிக்கை
எண்ணிறந்த பதார்த்தங்களை உண்டாக்கின சர்வாதிகனே
இல்லாத வஸ்து உண்டாக்கின உனக்கு உள்ள வஸ்துவுக்கு ஒரு குண தானம் பண்ணுகை அரிதோ –

நின் நற் பொற் சோதித் தாள் நணுகுவது எஞ்ஞான்றே —
உன்னுடைய –நன்றாய் -ச்ப்ருஹணீயமாய் -நிரவதிக தேஜோ ரூபமான திருவடிகளை நான் என்று வந்து கிட்டக் கடவேன் –

—————————————————————————————

அவதாரிகை –

நின் நற் பொற் சோதித் தாள்-என்று திருவடிகளின் போக்யதையை அனுசந்தித்தவாறே -திரு உள்ளம் பதறத் தொடங்கிற்று -அதைப்பார்த்து —
கெடுவாய் உன் படி ஆராயாதே நல்லத்தை ஆசைப் பட்டால் கிடைக்குமோ -என்கிறார் –

எஞ்ஞான்று நாம் இருந்து இருந்து இரங்கி நெஞ்சே
மெய்ஞ்ஞானம் இன்றி வினையியல் பிறப்பு அழுந்தி
எஞ்ஞான்றும் எங்கும் ஒழிவற நிறைந்து நின்ற
மெய்ஞ்ஞானச் சோதிக் கண்ணனை மேவுதுமே –3-2-7-

எஞ்ஞான்றும் எங்கும் ஒழிவற நிறைந்து நின்ற -மெய்ஞ்ஞானச் சோதிக் கண்ணனை வியாப்தன் -சுலபன் -வந்தால்- பிராப்தி சாதனம் இல்லாதான் கிட்டுவேனோ -நெஞ்சுக்கு
மித்ர பாவேன போரும் -அதுவும் இல்லை
எஞ்ஞான்று நாம் இருந்து இருந்து இரங்கி நெஞ்சே -துக்கித்து பிராப்தம் கிடைக்க விரும்பி -தத்வ ஞானம் -அறிவும் இல்லாமல்
பாபத்தாலே அடைந்த
மெய்ஞ்ஞானம் இன்றி வினையியல் பிறப்பு அழுந்தி -இதுவே யாத்ரை
எஞ்ஞான்றும் எங்கும் ஒழிவற நிறைந்து நின்ற -பரிபூர்ண வியாப்தி -ஞானம் ஜோதி தேஜஸ்
மெய்ஞ்ஞானச் சோதிக் கண்ணனை மேவுதுமே-வடிவத்துடன் சுலபனாக -ஆஸ்ரித சௌலப்யமே காட்ட வந்த -எப்போது கூடுவோம்

எஞ்ஞான்று நாம் இருந்து இருந்து இரங்கி-
காலம் எல்லாம் நாம் இருந்து -சிழகிச் சிழகி அழுதால் என்ன பிரயோஜனம் உண்டு -விம்மி விம்மி -பாலரைப் போல் சீழ்கி

நெஞ்சே
உன்னை நீ அறியாயோ
இதுக்கு முன்பு எல்லாம் பந்த ஹேதுவாய் போந்தாய் அல்லையோ
என் தான் நமக்கு பெறுகைக்கு குறை என் -அல்ப அனுகூல்யம் -மித்ர பாவேன / மர்ம ஸ்பர்சிக்கு மனம் உடையீர் என்னும் ஸ்ரத்தையே அமையுமே
விஷயத்தைப் பெற என்ன –

மெய்ஞ்ஞானம் இன்றி
இதுவன்றோ நம்முடைய பூர்வ வ்ருத்தம்-
மெய்ஞ்ஞானம்–மித்ர பாவேன – இல்லை கண்டாயே
அல்ப அனுகூல்யம் இருந்தாலே மெய்ஜ்ஞ்ஞானம் என்று கொள்வானே –
தத் ஜ்ஞானம் அஜ்ஞானமதோ அந்ய துக்தம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-5-87-
ஆளவந்தார் உடையவர் அடிக்கடி உபயோகிக்கும் பிரமாணம் இது –
பர வித்யை மைத்ரேயருக்கு பராசரர் -அது ஞானம் -மற்றவை அஜ்ஞ்ஞானம் -சுத்தம் ஏக ரூபம் -ப்ரஹ்மத்தை-அறியும் ஞானமே ஞானம்
வித்யான்யா சில்ப நை புணம்–ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-1-41-என்று -விமுக்திக்கு பயன்படும் வித்யையே வித்யை
புறம்பே சில ஜ்ஞானம் உண்டது அத்தனை அல்லது சமயக் ஜ்ஞானம் இல்லை கண்டாயே
ஆமாறு அறிவிலோமே -சமயக் ஞானம் இல்லை கண்டாயே
வினையியல் பிறப்பு அழுந்தி
மெய்ஞ்ஞானம் இல்லாத அளவேயோ
பாபங்களிலே கொண்டு போய் மூட்டக் கடவதான ஜன்மங்களிலே அழுந்திக் போரும்படி யன்றோ நம் நிலை இருக்கிறது-

எஞ்ஞான்றும் எங்கும் ஒழிவற நிறைந்து நின்ற
எல்லாக் காலத்திலும் எல்லா வஸ்துக்களிலும் ஒன்றும் பிரிகதிர் படாமே குறைவற வியாபித்து நின்ற

மெய்ஞ்ஞானச் சோதிக் கண்ணனை மேவுதுமே —
நம் நிலை அறியாதான் ஒருவனாய் கிட்டப் பார்க்கிறோமோ
நித்ய வஸ்துவாய் இருக்கச் செய்தே ஜ்ஞான சங்கோச விகாச அர்ஹமாகா நின்றது இறே இவ்வ்வஸ்து –
குற்றம் காண ஞானம் இல்லை கைவிட சக்தி இல்லையே இவனுக்கு –
கிருபாதீனம் -காணாக் கண் இட்டுக் கொண்டு இருக்குமே
அங்கன் இன்றிக்கே
மெய்யான ஜ்ஞான ஜ்யோதியை யுடைய கிருஷ்ணனை
ஏகோ அஹம் அஸ்மீதிச மன்ய சேத்வம் -என்னும் படியே -சகுந்தலை துஷ்யந்தன் இடம் -சோரேண ஆத்மா அபஹாரம் -பிறர் நன் பொருள்

நெஞ்சே -மெய்ஞ்ஞானச் சோதிக் கண்ணனை மேவுதுமே —
1-ஸூலபன் என்னா நமக்குக் கிட்டப் போமோ என்னுதல்-
2-நிர்வாஹகனானவனை நம்மால் கிட்டப் போமோ என்னுதல் -ரஷகன் -நம் கண்ணன் அல்லது இல்லை ஓர் கண் –

மெய்ஞ்ஞானச் சோதிக் கண்ணனை மேவுதுமே- நம்மால் கிட்டப் போமோ
நெஞ்சே -மெய்ஞ்ஞானச் சோதிக் கண்ணனை எஞ்ஞான்று மேவுதுமே—என்று அந்வயம் ஆகவுமாம்
ஈற்று அசையாக எம்பெருமானார் -பிரிநிலை ஏகாரம் முன்னோர் –

————————————————————————-

அவதாரிகை –

சாதன அனுஷ்டானம் பண்ணினார் பலம் தாழ்த்துக் கூப்பிட கடவ கூப்பீட்டை
பேற்றுக்கு ஈடாய் இருப்பதொரு கைம்முதல் இல்லாத நான் எங்கே வந்து கிட்டக் கூப்பிடுகிறேன் -என்கிறார் –

மேவு துன்ப வினைகளை விடுத்துமிலேன்
ஓவுதல் இன்றி யுன் கழல் வணங்கிற்றிலேன்
பாவு தொல் சீர்க் கண்ணா வென் பரஞ்சுடரே
கூவிகின்றேன் காண்பான் எங்கு எய்தக் கூவுவனே –3-2-8-

சாதனா உபாசகர் -கூவுவது போலே -தது தஸ்ய சத்ருசம் பவேத் -பிரபன்னன் -படியும் இல்லை –பிரகாரம் சொல்கிறார்
சௌலப்யன் குணவிக்ரக ஔஜ்வல்யன் -அனுசந்தித்து நிஸ் சாதனனான நான் எங்கே காண கூப்பிடுவேன்
மேவு துன்ப வினைகளை விடுத்துமிலேன்-ஓவுதல் இன்றி-ஹார மத்திய மணி நியாயம்-தேஹளீ தீப நியாயம்
அவிநா பூதம் -விலகாத -பொருந்தி இருக்கும் -துக்கம் -பாபங்களை போக்க வில்லை
தன்நிவர்த்தகமான தபஸ் ஞான -கர்ம ஞான யோகம் செய்து -நராணாம் ஷீண பாபாநாம்
ஓவுதல் இன்றி யுன் கழல் வணங்கிற்றிலேன் -தொடர்ந்து விலகியே ஒழிந்தேன் -போது எல்லாம் போது கொண்டு உன் பொன்னடி புனைய மாட்டேன் –
-வணக்குடைத்தவ நெறியால் வணங்க வில்லை
பாவு தொல் சீர்க் கண்ணா வென் பரஞ்சுடரே -ஸ்வா பாவிகமான ரஷணத்துக்கு ஏகாந்தமான குணங்கள்
ஆசா ஜனகமான நிரவதிக தேஜோ ரூபம் ஆனவனே
கூவிகின்றேன் காண்பான் எங்கு எய்தக் கூவுவனே-சாதநாந்தர நிஷ்டர் போலே -கூவினேன் –
அறியாமல் செய்த குற்றம் -அனுதாபமும் பட வில்லை –

மேவு துன்ப வினைகளை விடுத்துமிலேன்
தில தைலவத் தருவஹ் நிவத் -என்கிறபடியே இவ்வாத்மாவோடு பிரிக்க ஒண்ணாதபடி இருப்பதாய் –
துன்பங்கள் வினைகள் உடன் மேவி -வினைகள் மேவி இருக்கும் ஆத்மா அன்றோ என்னது
துக்கத்தை விளைப்பதாய் இருக்கிற பாபங்களை
தர்மேண பாபமப நுததி -என்கிறபடியே விஹித கர்ம அனுஷ்டானத்தாலே போக்கிற்றிலேன் -பிராயச்சித்தம் பண்ணி -அனுபவித்து இரண்டாலும் –போக்காமல்
துன்பம் வினைகள் உடன் மேவி -அந்த துன்பங்கள் நம்முடன் மேவி -நம் ஆத்மாவுடன் -அரணிக்கட்டை நெருப்பு -எள்ளுக்குள் எண்ணெய் போலே

ஓவுதல் இன்றி யுன் கழல் வணங்கிற்றிலேன் –
நிதித்யாசிதவ்ய -என்கிறபடியே -அநவரத பாவனை பண்ணி உன்னை சாஷாத் கரிக்க விரகு பார்த்து இலேன்
ஓவுதல் இன்றி —மேவு துன்ப வினைகளை விடுத்துமிலேன்–ஓவுதல் இன்றி—யுன் கழல் வணங்கிற்றிலேன் -என்று எம்பார் அருளிச் செய்யும் படி
கிற்பன் கில்லேன் -அநிஷ்டமும் தொலைய வில்லை இஷ்டமும் கிட்ட வில்லை
கண்ணாலப் பெண்டாடிக்கு உண்ண அவசரம் இல்லை என்னுமா போலே இந்த்ரியங்களுக்கு இரையிட்டுத் திரிந்தேன் இத்தனை
-எனக்கு ஒன்றும் ஹிதம் பார்த்திலேன் –
ஓவுதல் இன்றி மேவியும் ஓவுதல் இன்றி துன்பம் ஓவுதல் இன்றி வினைகள் –
வர்ணாஸ்ரமம் -ஆகார சுத்தி -சத்வ குணம் -த்யானம் -கர்ம ஞான பக்தி யோகம் இல்லை –

பாவு தொல் சீர்க் கண்ணா –
இங்கனே இருக்க உன்னை அனுசந்தித்தவாறே விட மாட்டு கிறிலேன்-
விதித –சுந்தர -21-20-அனைவராலும் அறியப் படுபவன் -என்கிறபடியே உகவாதார் கோஷ்டியிலும் பிரசித்தமான
ஸ்வாபாவிக கல்யாண குணங்களை உடைய கிருஷ்ணனே –
ஸ்ருத்வா குணான்–புவன சுந்தர –ஹர தாபம் -சித்தம் அபரக்ரமே—குண்டினபுரத்தில் கேட்டு இருக்கிறாள் ஸ்ரீ ருக்மிணி –
உகவாதார் கோஷ்டி -பாவி தொல் சீர் -த்வாரகை தேசம் -விதர்பா தேசத்தில் உபன்யாசித்து
வென் பரஞ்சுடரே
சர்வ பிரகாரத்தாலும் உண்டான உத்கர்ஷத்தை எனக்கு அறிவித்தவனே –
கண்ணா -வென் பரஞ்சுடரே –
தாழ நின்று இவ்வடிவு அழகை எனக்கு முற்றூட்டு-பூர்ண போஜனம் – ஆக்கினவனே-என்றுமாம் –
பரஞ்சுடர் உடம்பாய்-6-3-7-என்னக் கடவது இறே

கூவிகின்றேன் காண்பான் –
சாதன அனுஷ்டானம் பண்ணி -பலம் கை புகுராதார் கூப்பிடுமா போலே -காண வேணும் -என்று கூப்பிடா நின்றேன்
எங்கு எய்தக் கூவுவனே —
ஒரு கொசுகு கூப்பிட்டது -என்று ப்ரஹ்மாவின் ஓலக்கத்தில் கேட்கப் புகுகிறதோ
எங்கனே வந்து கேட்கக் கூப்பிடுகிறேன் –
புண்ய பலம் விருப்பம் -புண்யத்தில் விருப்பம் இல்லாமல் -பாப பலத்தில் விருப்பம் இல்லாமல் பாபத்தில் விரும்பி போகிறோமே
புண்யத்தில் விருப்பம் இல்லை -புண்ய பலத்தில் ஆசை உண்டே -பாப பலம் வேண்டாம் பாபங்களில் ஆசை மிக்கு உள்ளதே

————————————————————————-

அவதாரிகை –

வரையாதே எல்லாருக்கும் ஒக்க முகங்கள் கொடுத்த அவதாரங்களுக்குத் தப்பின நான்
-இனி உன்னைக் கிட்டுகை என்ற ஒரு பொருள் உண்டோ -என்று நிராசர் ஆகிறார் –

கூவிக் கூவிக் கொடு வினைத் தூற்றுள் நின்று
பாவியேன் பல காலம் வழி திகைத்து அலமர்கின்றேன்
மேவி அன்று ஆ நிரை காத்தவன் உலகம் எல்லாம்
தாவிய வம்மானை எங்கினித் தலைப் பெய்வனே –3-2-9-

இதில் கிருஷ்ண வாமன -சேர்த்து -2/3/ பாசுரார்த்தம்
அறிவில்லாதார் அறிவுடையார் வாசி அற உபகரித்த -தப்பின நான் கிட்டுவது எங்கனே
எம்பெருமானார் இதில் துக்கப் படுகிறார் என்பர் முன்னோர் போலவே
கூவிக் கூவிக் கொடு வினைத் தூற்றுள் நின்று -சம்சாரத்தில் -வீப்சை -குரூரமான பாபங்களுக்கு ஆகாரமான -மண்டிக் கிடக்கும் சம்சாரம்
-தரித்து நின்று அவன் இடம் பிரிந்து ஓடி இங்கே நிற்கிறேன்
பாவியேன் பல காலம் வழி திகைத்து அலமர்கின்றேன்-வழி தெரியாமல் சுழன்று
மேவி அன்று ஆ நிரை காத்தவன் -கோப வ்ருத்தர் கோலைக் கொடுத்த அன்று
நெஞ்சு பொருந்தி -உகந்து -பிறந்த கார்யம் இதற்கே -கடமைக்காக அல்லாமல் –
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி செங்கனி வாய் எங்கள் ஆயர் கோவே
உலகம் எல்லாம் தாவிய வம்மானை எங்கினித் தலைப் பெய்வனே-சர்வ லோக விஷய -சர்வ ஸ்வாமி
அன்று தப்பின நான் -இனி கூவி ஆர்த்தியாலே சம்சார வெக்கை துடிப்பால் -எவ்விடத்தில் கிட்டுவேன்
-வருத்தமே பிரச்னம் இல்லை -ஷேபமே -வியசனத்திலே முடிக்கிறார்

கூவிக் கூவிக்
ஸ்வரூப ஞானத்தாலே ஆறி இருக்க மாட்டாதே -சம்சாரத்திலே இருந்து கூப்பிடா நிற்பர்-
ஒரு கால் கூப்பிட்டு அநுதபித்து மீளுமதும் அன்றிக்கே மேன்மேல் எனக் கூப்பிடா நிற்பர்
பேறு தப்பாது என்று துணிந்து இருக்க மாட்டாதே பேற்றுக்கு த்வரிக்கிறார் –
கொடு வினைத் தூற்றுள் நின்று
கூப்பீடு கேட்டு இரங்கி எடுப்பதாக ஈஸ்வரன் கை நீட்டினால் -நீட்டின கை வாங்க ஒண்ணாத நிலத்திலே இருந்தாயிற்று கூப்பிடுவது
பாவியேன்
ஒரு வால்மீகி பரிசரத்திலே இருந்து தான் கூப்பிடப் பெற்றேனோ -சமீப வாசத்தால் பிராட்டிக்கு அப்பொழுதே கிலேசம் போனதே –

பல காலம் வழி திகைத்து அலமர்கின்றேன்
காலம் எல்லாம் அறிவு கெட்டுத் தடுமாறுகிற நான்
மேவி அன்று ஆ நிரை காத்தவன்
ஆபத்துக்கு உதவாதானாய் தான் படுகிறேனோ -எங்கு உதவினார் என்னில்
கோ கோபி ஜன சங்குலம் அதிவார்த்தம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -ஆயர் அஞ்ச அஞ்சா முன் -தோற்றிற்று ஒரு மலையை எடுத்து உதவினான் –
நித்ய ஸூரிகளுக்கு நிர்வாஹகனான தன் கையில் கோலைத் தந்து -பசு மேய் -என்றால் -ரஷகனான நமக்கு விஹிதம் இறே என்று
இருக்கை அன்றிக்கே அலப்யலாபமாகப் பொருந்தி
அன்று
அதுவும் ஒரு காலமே
வழி திகைத்து அலமர்கின்றேன்-மேவி அன்று ஆநிரை காத்தவன்
காட்டிலே வழி திகைத்தார்க்கு இடையர் போலே காணும் வழி காட்டுவார் –அழகான யுக்தி –
மாமேகம் சரணம் வ்ரஜ -என்று வழி காட்டினவன் இறே
வேறு வழி காட்டினார் இல்லை
திருத் தேர் தட்டிலே நின்று சகல ஆத்மாக்களும் உஜ்ஜீவிக்கும் படி வழி காட்டினான் அவன் இறே -அர்ஜுனனை வியாஜ்யமாக கொண்டு

உலகம் எல்லாம் தாவிய வம்மானை
ஒரூருக்கு உதவின அளவன்றிக்கே -சகல பதார்த்தங்களிலும் -ஒன்றும் பிரிகதிர் படாத படி எல்லார் தலைகளிலும் ஒக்கத் திருவடிகளை வைத்து
நான் சுவாமி -என்னும் இடத்தை அறிவித்தவன் –
எங்கினித் தலைப் பெய்வனே —
எங்கனே கிட்டப் போகிறேன்
அந்த தூளி தானத்துக்கும்-பூரி தானத்துக்கும்- தப்பின நான் பரீஷை சொல்லிப் -சாதன அனுஷ்டானம் பண்ணிப் -பெறப் புகுகிறேனோ
இத்தால் -அவன் தானே வந்து உபகரித்த வன்று தப்பின நான் -சாதன அனுஷ்டானம் பண்ணி
எங்கே சென்று கிட்டப் புகுகிறேனோ -என்று நசை அறுகிறார் –

———————————————————————————-

தலைப்பெய் காலம் நமன் தமர் பாசம் விட்டால்
அலைப்பூண் உண்ணும் அவ் வல்லல் எல்லாம்
அகலக் கலைப்பல் ஞானத்து என் கண்ணனைக் கண்டு கொண்டு
நிலைப்பெற்று என்னெஞ்சம் பெற்றது நீடுஉயிரே.–3-2-10-

பொ-ரை : யமனுடைய தூதுவர்கள் தலைப்படுகின்ற காலத்தில் பாசத்தை வீசினால், இங்கும் அங்கும் அலைக்கப்படுகின்ற
அத்துன்பங்களெல்லாம் நீங்கும்படி, பல வகைப்பட்ட சாஸ்திரங்களின் ஞானத்தாலே அறியப்படுகின்ற என் கண்ணபிரானைக் கண்டுகொண்டு
என் நெஞ்சம் நிலைபெற உயிரும் நிலைத்தது.சமாதானம் ஆனார்
-என் கண்ணனைக் கண்டுகொண்டு-நிலைப்பெற்று என்னெஞ்சம் பெற்றது நீடுஉயிரே.-

எங்கினித் தலைப் பெய்வனே- ஆழ்வார் உடைய -நிராசையைக் கண்ட கண்ணன் -திருமேனியை -பிரமாண சித்தியான ஆசக்தியைப் பிரகாசிக்க –
கலி யுகத்தில் -கலை பல் ஞானம் -சொல்லி உள்ளேனே -பின்னானார் வணங்கும் சோதி -வடக்குத் திருமலையைக் காட்டி அருள –
கிலேச நிவ்ருத்தி பிறந்து சந்துஷ்டர் ஆகிறார்
-தலைப்பெய் காலம் நமன் தமர் பாசம் விட்டால்-யம படர்கள்-பாசக் கையிற்றை –
அலைப்பூண் உண்ணும் அவ் வல்லல் எல்லாம்-அலைக்கப் படுவதை அனுபவித்து -விரோதி தர்சனத்தால் வந்த -அந்த அல்லல் -ஆழ்வாருக்கு நரகப்பாடு இல்லையே
அது போன்ற அல்லல் -ஆழ்வாருக்கு பகவத் விச்லேஷம் -இத்தைக் காட்ட விரோதி தர்சனம் –
அகலக் கலைப்பல் ஞானத்து என் கண்ணனைக் கண்டுகொண்டு-வேதங்களால் அறியப்பட்டு -என் கண்ணனை
நிலைப்பெற்று என்னெஞ்சம் பெற்றது நீடுஉயிரே.-சிதிலமான நெஞ்சு ஸ்தைர்யம் அடைந்து
-ஸ்திதோச்மி கத சந்தேக கரிஷ்யே வசனம் தவ -அர்ஜுனன்
ஆர்த்தியால் முடிய நினைத்த ஆத்மாவும் நித்யம் ஆனதே
சேஷத்வம் போனால் வஸ்து இல்லையே -இப்பொழுது பெற்றாரே -நிலை நின்ற அடையாளம் சேஷத்வம் -கைங்கர்யம் தானே ஆத்மாவுக்கு

பாசம் – கயிற்று வடிவமான ஓர் ஆயுத விசேடம். ‘அகலக் கண்டுகொண்டு நெஞ்சம் நிலைபெற உயிர் நீடுபெற்றது’ எனக் கூட்டுக.
‘நிலைப்பெற்று’ என்பது, செயவென் எச்சத்திரிபு. ‘பெற்றது நீடு உயிர்’ என்பதனை, ‘உயிர் நீடு பெற்றது’ என மாறுக-

பத்தாம் பாட்டு. இவர் ஆசையற்றவராய் முடியப் புக்கவளவில், ‘இவர் கிரமப்பிராப்தி பொறாதவர் போலும்!’ என்று நினைத்து,
‘நீர் ஒரு பெருவிடாயர் உண்டு என்றறிந்து, உமக்காக அன்றோ வடக்குத்திருமலையில் நிற்கிறோம்?’ என்று
அந்நிலையைக் காட்டித் தரிப்பிக்கத் தரித்து, இனியராகிறார்.

நமன் தமர் தலைப்பெய் காலம் – யமபடர் வந்து கிட்டுங் காலம். இவன் வாழ்கின்ற நாளில் செய்த குற்றங்களைப் பட்டோலை
யெழுதிப் பலத்தை அனுபவிக்கும் சமயத்தில் வந்து முகங்காட்டுவார்களாதலின், ‘நமன் தமர் தலைப்பெய் காலம்’ என்கிறார்.
நமக்கு எதிர் உண்டோ என்று -மூலையடியில் நின்று வேண்டிற்றுச் செய்து -திரிய -எம பட்டர்கள் – –
வைஷ்ணவர்கள் எனக்கு பிரபு -அவர்கள் இடம் ஸ்ரீ பாத தீர்த்தம் வாங்கி கொள்ள -உபதேசித்தான்

பாசம் விட்டால் –
அவர்கள் தங்கள் கையிலுள்ள பாசத்தை வீசினால்.
அலைப்பூண் உண்ணும் அவ்வல்லல் எல்லாம் அகல –அலைப்பு ஊண் உண்ணும்
இவனுக்கு இவ்வருகே நசை கிடைக்கையாலே அது இங்கே இசிக்க,
புத்ரா நிரரத்தக சிந்தனம் -ஹஸ்திகிரி நாதா -பிள்ளைகளை எனக்கு அப்புறம் ரஷணம் யாரோ -கூரத் தாழ்வான் -இப்படி நசையால் இசிக்க –
யமபடர்கள் அங்கே இசிக்கப்படும் துக்கத்துக்கு
ஓரெல்லையில்லையாதலின்,
‘அல்லல் எல்லாம்’ என்கிறார். அத்துன்பங்களை உவமை முகத்தால் விளக்குதற்கு ஒண்ணாதாதலின்,
‘அவ்வல்லல்’ எனச் சுட்டுகிறார்.
இனி, இதற்கு, ‘அவையெல்லாம் காணக்காண விட்டுக் கடக்க நிற்க, அவற்றோடு ஒத்ததான-சஜாதீயமான துன்பம்’ என்று எம்பார் அருளிச்செய்வர். என்றது,
‘அந்தத் துக்கத்தைப் போலேயிருக்கிற, பகவானைப் பிரிந்ததனால்-விச்லேஷத்தால் – உண்டான துக்கமெல்லாம் இவர்க்கும் அகல’ என்றபடி.

‘’திறம்பேன்மின் கண்டீர் திருவடிதன் நாமம் மறந்தும் புறந்தொழா மாந்தர் – இறைஞ்சியும்சாதுவராய்ப் போதுமின்கள் என்றான் நமனும்தன்
தூதுவரைக் கூவிச் செவிக்கு.’(நான்முகன் திரு. 68.)–என்று பிரமாணம் இருக்கின்றதே? ஆதலின், ஸ்ரீவைஷ்ணவர்கட்கு யமபாதை
உண்டாகக் கூடுமோ?’ என்ற வினாவைத் திருவுள்ளத்தே கொண்டு, அதற்கு விடையாக, ‘அவையெல்லாம் காணக்காண’ என்று தொடங்கி அருளிச் செய்கிறார்.

இனி,பகவான் கைவிட்ட பின்னர் யமனுக்கு வஸ்யனாகையும் வந்ததேயன்றோ? அந்த யம வஸ்யதை போம்படியாக’ என்று ஆண்டான் அருளிச்செய்வர்.
ஆனந்த– மய லாபம் -அது –யம லாபம் இது –
முதலியாண்டான் நிர்வாஹத்துக் கருத்து, ‘ஸ்வதந்திரனான சர்வேஸ்வரன் உபேக்ஷித்தால் யமபாதை உண்டாம்,’ என்பது. இதனை, நித்திய சூரிகளைப்
போன்ற நித்தியானுபவ யோக்கியதை இவருக்கு உண்டாயிருக்கவும், பிரிவு இடையிடையே வருதலைப் போன்று கொள்க. இதனை ஸ்ரீ பரதாழ்வான்
பக்கலிலே கண்டோம்.

‘கடுஞ்சொலார் கடியார் காலனார் தமரால் படுவதோர் கொடுமிறைக்கு அஞ்சி நடுங்கி நான் வந்துன் திருவடி யடைந்தேன்
நைமிசா ரணியத்துள் எந்தாய்!’ என்பது, திருமங்கைமன்னன் திருவாக்கு.

கலைப்பல் ஞானத்து என் கண்ணனைக் கண்டுகொண்டு –
எல்லா வேதங்களாலும் அறியத்தக்கவனும், வேதங்களைச் செய்தவனும்,வேதங்களையறிந்தவனும் நானே,’ என்கிறபடியே,
பல கலைகளாலும் அறியப்பட்ட-உத்கர்ஷம் – ஏற்றத்தையுடையனாயிருந்து,
நெடுங்கை நீட்டாகப் பிரமாணங்களால் கேட்டுப் போகாதபடி கண்களுக்கு விஷயமாகக் கிருஷ்ணனாய் வந்து அவதரித்தவனைக் கண்டுகொண்டு.

என் நெஞ்சம் நிலைப்பெற்று – ‘சிந்தாமற் செய்யாய்’-3-2-5- என்ற சிதிலமான நெஞ்சும் ஒரு படி தரிக்கப்பெற்றது. உயிர் நீடு பெற்றது –
அச்சேத்யம்-வெட்டத்தகாததாய் எரிக்கத் தகாததாயிருக்கிற — -ஆத்துமாவும்’- அழியப்புக்கது;
அங்ஙனம் அழியப்புக்க ஆத்துமாவும் இப்போதாயிற்று அழிவின்மையைப் பெற்றது.
‘ஆயின், ஆத்துமாவிற்கு அழிவு உண்டோ?’ எனின், -சேத்யாதி விசஜாதீயம்-‘சேதிக்க முடியாத வேறுபட்ட சிறப்பினையுடையது’ என்ற
இத்துணையேயல்லது, தன்னில் சூக்ஷ்மமாய்ப் புக்கு எங்கும் பரந்து அழிக்க வல்ல பகவானுடைய குணங்களுக்கு அழியாமையில்லை என்க.
அவன் நினைத்தால் அழிக்க முடியும் -அழிக்க மாட்டேன் என்றார் சத்ய சங்கல்பன் அன்றோ –
இனி நித்தியமான ஆத்துமாவிற்கு நாசமாவது, தாஸ்யாசித்தி;-தாஸ்ய அசித்தி- ‘சேஷமானமான ஆத்துமாவிற்கு நாசமாவது, தாஸ்யாசித்தி;-தாஸ்ய அசித்தி-
‘சேஷமான பொருளுக்குச் சேஷத்துவம் நிரூபகமானால், நிரூபகத்தையொழிய நிரூப்ய சித்தியில்லையே’ என்னுதல்.
ஒளி மணம் இல்லாத மணி புஷ்ப்பம் போலே அன்றோ தாஸ்யம் இல்லாத ஆத்மா –

நெஞ்சம் பெற்றது நீடுயர் -நெஞ்சம் என்று ஆத்மாவை சொன்னவாறு மனசை இல்லை

————————————————————————–

உயிர்கள் எல்லா உலகமும் உடையவனைக்
குயில்கொள் சோலைத் தென்குருகூர்ச் சடகோபன்
செயிர்இல்சொல் இசைமாலை ஆயிரத்துள் இப்பத்தும்
உயிரின்மேல் ஆக்கை ஊனிடை ஒழிவிக்குமே.–3-2-11-

பலமான -அபேஷித்த சரீர சம்பந்த நிவ்ருத்தி கிட்டும்
உயிர்கள் எல்லா உலகமும் உடையவனைக்-எல்லாம் சொத்து அன்றோ அவனுக்கு
குயில்கொள் சோலைத் தென்குருகூர்ச் சடகோபன்-குயில் பாட்டு -நிர்வாஹகர்
செயிர்இல்சொல் இசைமாலை ஆயிரத்துள் இப்பத்தும்-லஷணம் குறை இல்லாத -இசை உடன் கூடிய
உயிரின்மேல் ஆக்கை ஊனிடை ஒழிவிக்குமே-ஆத்மாவுக்கு வந்தேறி -பந்தகமான -சரீரம் -சம்சாரத்தில் தழைப் படுத்தும் -மாமிசம் கூடிய தேகம் -கழிவிக்கும்
இடை -அதில் இருந்து என்றவாறு –

பொ-ரை எல்லா உயிர்களையும் எல்லா உலகங்களையுமுடையவனைக் குயில்களையுடைய சோலைகள் சூழ்ந்த அழகிய திருக்குருகூரில்
அவதரித்த ஸ்ரீசடகோபர் அருளிச்செய்த குற்றமில்லாத சொற்களையுடைய இசையுடன் கூடின மாலையாகிய ஆயிரம் திருப்பாசுரங்களுள்
இப்பத்துப்பாசுரங்களும் உயிருக்கு வந்தேறியாக உள்ள ஊன் பொருந்திய சரீரத்திலுண்டான சம்பந்தத்தைப் போக்குவிக்கும்.

வி-கு : செயிர் – குற்றம். யாக்கை – எழுவகைத் தாதுக்களால் கட்டப்பட்டது; சரீரம். ஊன் – தசை.

முடிவில், தம்முடைய வருத்தமெல்லாம் போம்படி அவன் வந்து முகங்காட்ட, ‘நிலைப்பெற்று என் நெஞ்சம் பெற்றது நீடு உயிர்’ என்றார் இவர்;
அவன் முகத்தைப் பார்த்தவாறே அவன் உயிர் நீடு பெற்றதாயிருந்தது.–என் நெஞ்சம் என்றவர் என் உயிர் சொல்ல வில்லையே –
எல்லா உயிர்கள் எல்லா உலகமும் உடையவனை – ‘இவர் தரித்த பின்பாயிற்று அவன் எல்லாவுயிர்களையும் எல்லா உலகங்களையுமுடையவனாயிற்று;

இங்கு இவர் ஒருவரையுமே ஆயிற்று இழக்கப்புக்கது; அங்கு ஸவிபூதிகனானவனை ஆயிற்று இழக்கப்புக்கது’ என்றபடி.
இனி, ‘உறுப்புகளில் ஒன்று குறையினும் உறுப்புக்குறைவு உண்டு அன்றோ? அப்படியின்றிக்கே, இவரைப் பெற்ற பின்பாயிற்று
ஈசுவரனாந்தன்மை நிறைவுற்றது,’ என்னுதல்.
இங்கு -ஆழ்வார் உள்ளம் படி –
பெருமாள் திரு உள்ளம் -இவர் ஒருவரை இழந்தால் அனைத்தும் இழந்த படி -கால் ஊனம் உற்றவர் -ஒரு ஊனம் உற்றாலும் ஊனம் உற்றவர்
சர்வ ரஷகன் பேர் போனதே சர்வ சக்தன் சர்வஜ்ஞ்ஞன் பேர் போனதே -பதிம் விச்வச்ய ஆத்மேஸ்வரம் –

குயில் கொள் சோலைத் தென்குருகூர்ச் சடகோபன் –
பிரகாரியானவன் தரித்து, பிரகாரரான இவரும் தரித்து, இவர் தம்மளவே யன்றித் திருநகரியும் தரித்து, அங்கு உண்டான சோலைகளும் தரித்து,
அங்கு உண்டான பறவைகளுடைய மகிழ்ச்சிக்கு அறிகுறியான ஒலியும் -ஹர்ஷா சூசகமான தொனி -கேட்கும்படியாயிற்று,’ என்பதாம்.
அகால பலினோ வ்ருஷ மது ‘காலம் அல்லாத காலங்களிலும் பழங்களையுடையனவாயும், தேன்களைப் பொழிகின்றனவாயும்’ என்னும்படியாயிற்று என்றபடி.

செயிர் இல் சொல் இசை மாலை – குற்றமற்ற இயலையும் இசையையுமுடைத்தான மாலை; ஈண்டுக் குற்றமாவது,
சரீர சம்பந்தத்தோடே பொருத்தம் உண்டாயிருக்கச் சொல்லுதல்; அது இல்லாத மாலை எனவே, பகவல் லாபம் ஒழியச் செல்லும்படி யாயிருத்தல்
செய்யச் சொன்ன மாலையன்று என்பதனைத் தெரிவித்தபடி. எங்கு இனித் தலைப்பெய்வனே’ என்ற வார்த்தைக்கு நினைவு
தப்பி யிருக்குமாகில், அது குற்றமேயன்றோ?-உக்திக்குச் சேர்ந்த நினைவு உண்டே ஆழ்வாருக்கு

‘இப்பத்தும் செய்வது என்?’ என்னில் உயிரின்மேல் ஊனிடை ஆக்கை ஒழிவிக்கும் – அரசகுமாரனையும் வேடுவனையும்
ஒருங்கு பிணைத்தாற்போன்று, நித்தியமாய் ஞான ஆனந்த லக்ஷணமாய் ஈசுவரனுக்கு அடிமையாயிருக்கிற ஆத்துமாவையும்,
பரிணாம த்ரவ்யமான வளர்தல் குறைதல் முதலிய மாறுபாடுகளையுடைய சரீரத்தையும் தன்னிலே கட்டுவித்துக்கிடக்கிற
அவித்தியை முதலானவைகளை வாசனையோடே போக்குவிக்கும்.
இவர்க்கு இப்போது உண்டாய்ப் போக்குவிக்குமென்கிறது அன்று; ‘இந்நின்ற நீர்மை இனி யாமுறாமை’
என்றபோதே ஈசுவரன் இவர்க்கு இது போவதாக நினைப்பிட்டான்.
‘ஆயின், ‘பொல்லா ஆக்கையின் புணர்வினை யறுக்கலறா’ என்கிறது என்னை?’ எனின், பாதிதாநுவ்ருத்தியாலே அருளிச்செய்கிறார்.
ஆனாலும், இவர் கூப்பீட்டுக்கும் ஒரு பலன் வேண்டுமே?
இவரோடு சம்பந்தமுடையவர்களுடைய சரீர சம்பந்தத்தை அறுத்துக் கொடுக்கும்.
பாதித அநு வ்ருத்தி-கானல் நீர் -போக்கிய ஞானம் வந்தாலும் கண்ணுக்கு தெரியும் -தத்தபடம் -எரிந்த புடவை போலே –

முதற்பாட்டில், ‘நீ தந்த கரணங்களைக்கொண்டு அனர்த்தத்தை கேட்டினை விளைத்துக்கொண்ட நான் உன்னை வந்து கிட்டுகை என்று ஒன்று உண்டோ? என்றார்;
இரண்டாம் பாட்டில், ‘இப்படிச் சூழ்த்துக் கொண்ட பாவங்களைப் போக்கி, தேவரீரை நான் எப்போது வந்து கிட்டுவேன்?’ என்றார்;
மூன்றாம் பாட்டில், ‘இதற்கு முன்பு உன்னைப் பெறுகைக்குத் தந்த கரண களேபரங்களைக்கொண்டு நான் சூழ்த்துக்கொண்ட பாவங்கள்
‘நான் போக்கி வர’ என்றால் அது செய்யப்போகாது; இனி, நான் அறியாததாய் நீ அறிந்திருப்பதோர் உபாயத்தை அருளிச்செய்ய வேணும்’ என்றார்;
நான்காம் பாட்டில், ‘உன்னையொழிந்த வேறுபட்ட பொருள்களிலே என்னுடைய தாழ்ச்சியைத் தவிர்த்து, உன் திருவடிகளிலே வாழ்ச்சியேயாம்படி செய்யவேணும்,’ என்கிறார்;
ஐந்தாம் பாட்டில், ‘அப்படிச் செய்யப் பார்த்திலையாகில், உன் இனிமையை -போக்யதையை -எனக்கு எதற்காக அறிவித்தாய்? என்றார்;
ஆறாம் பாட்டில், ‘இல்லாத அன்று உண்டாக்கின அருமையுண்டோ, உண்டாக்கின இதற்கு ஒரு குணத்தைக் கொடுத்தற்கு?’ என்றார்;
ஏழாம் பாட்டில், ‘நம் படியறியாதே நாம் அவனை வெறுக்கிறது என்?’ என்றார்;
எட்டாம் பாட்டில், ‘தீரக் கழியச் சாதனத்தைச் செய்தேனோ, நான் இங்ஙனம் கூப்பிடுகைக்கு?’ என்றார்;
ஒன்பதாம் பாட்டில், ‘திரைவிக்ரம அபயதானத்துக்கும் தப்பின நான் இனி எங்கே கிட்டப்போகிறேன்?’ என்றார்;
பத்தாம் பாட்டில், அவ்வளவிலே வந்து அவன் முகங்காட்டித் தரிப்பிக்கத் தரித்தார்; முடிவில், பலம் சொல்லித் தலைக்கட்டினார்.

—————————————————————-

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர்

சங்கோசித சூவ கரணச்ய
ஹரிம் யதேஷ்டம் புஞ்சே நசாஹம் -இஷ்டப்படி அனுபவிக்க முடியவில்லையே
பின்ன மதி சடாரி -கிலேசப்பட்ட ஆழ்வார்
ஆச்வாச்தச்ய ஹரினாம் ஸுவ மகத்த யவ்ய-என் பெருமையால் அனுபவிக்க முடியவில்லை என்பதை காட்டி
அச்சக்தி ஸூ மகத்யே ஏவ
தத் கதிதம் த்வதீயே

—————————————————————-

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன்

ஸ்ரஷ்டா
கிராந்தா ச லோகன்
க்ருத தரணி பர
அநந்ய போக்ய அங்க்ரி யுக்மம்
சிந்தோயந்த்வ நீல ரூப
நிரவதிக ரச
அத்யஷ மூர்த்தி
நித்ய உபாதச்ய யோக்யதா
நிகில வசுமதி கோபண -ஸ்வ அங்கரி
முஷ்ணன்னு யம பரவச லோகைக நாதா

————————————————————

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 22-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்–

முன்னம் அழகர் எழில் மூழ்கும் குருகையர் கோன்
இன்ன வளவென்ன எனக்கு அரிதாய்த் -தென்ன
கரணக் குறையின் கலக்கத்தை கண்ணன்
ஒருமைப் படுத்தான் ஒழித்து——22-

—————————————————————————–
அவதாரிகை —

இதில்
சௌந்தர்யாதிகள் முகந்து கொண்டு அனுபவிக்க ஒண்ணாமைக்கு
ஹேது -கரண சங்கோசம் -என்று கலங்க –
அந்த கலக்கத்தை அவன் தீர்த்த படியைப் பேசின
பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார்
அது எங்கனே என்னில்
கீழ்
அழகர் உடைய அழகு முதலானவற்றை அனுபவிக்கப் புக்க இடத்தில்
விளாக் கொலை கொண்டு அனுபவிக்க ஒண்ணாது ஒழிய
அதுக்கு அடி விஷய பௌஷ்கல்யம்-என்று அறிய மாட்டாமல் கரண சங்கோசம் -என்று அனுசந்தித்து
இஸ் சங்கோசம் அற்று தன்னை அனுபவித்து
வாழுகைக்கு உடலாக
அவன் பண்ணின சிருஷ்டி அவதாராதிகள் தப்பி
அனர்த்தப் பட்ட நான்
இனி கிட்டுகை என்று ஒரு பொருள் உண்டோ
என்று சோக பரவசராய்க் கூப்பிட்ட முந்நீர் ஞாலத்தின் அர்த்தத்தை
முன்னம் அழகர் எழில் -என்று துடங்கி அருளிச் செய்கிறார் –

——————————————————————————–

வியாக்யானம்–

முன்னம் அழகர் எழில் மூழ்கும் -குருகையர் கோன்
முந்துற முன்னம்
ஸ்வரூப குணாதிகளில் அகப்படாதே
அழகர் உடைய அழகிலே யாயிற்று அகப்பட்டது –

மூழ்குகை யாவது –
சௌந்தர்ய சாகரத்தில் ஆழம் கால் பட்டு அழுந்துகை –

இப்படி சௌந்தர்ய சாகரத்திலே மக்னாரான ஆழ்வார் –

இன்ன வளவென்ன –
இவ்வளவு என்று
பரிச்சேதிக்க-

எனக்கு அரிதாய்த் -தென்ன –
மயர்வற மதி நலம் அருளப் பெற்ற
எனக்கு அரிதாயிற்று
என்று அருளிச் செய்ய
திரு மாலே கட்டுரையே -என்று
அவளோட்டைச் சேர்த்தியாலே
எல்லையில் ஞானத்தனாய்
ஸ்வதஸ் சர்வஞ்ஞனைக் கேட்கையாலே
தமக்குப் பரிச்சேதிக்க அரிது என்னும் இடம் தோற்றுகிறது-

கரணக் குறையின் கலக்கத்தை —
அவன் அனுபவ பரிகரமாகக் கொடுத்த
கரண சங்கோசத்தால் வந்த காலுஷ்யத்தை –
அஜஞதையை-
அதாவது –
அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழல்வேன் –என்றும்
வினைகளை வேர் அறப்பாய்ந்து எந்நாள் நான் உன்னை இனி வந்து கூடுவன் -என்றும்
பன்மாயப் பல் பிறவியில் படுகின்ற யான் தொல் மா வல் வினைத் தொடர்களை
முதலரிந்து நின் மா தாள் சேர்ந்து நிற்பது எஞ்ஞான்று கொலோ-என்றும்
பொல்லா வாக்கையின் புனர் வினை அறுக்கல் ஆறு சொல்லாய்-என்றும்
உன்னை சார்வதோர் சூழ்ச்சியே -என்று
இத்யாதிகளில் அருளிச் செய்தவை –
லங்கா முன் மூலிதாம் க்ருத்வா கதாத்ரஷ்ய தி மாம்பதி -இறே
இப்படி கரண சங்கோசம் அடியாக வந்த கண் கலக்கத்தை

கண்ணன் ஒருமைப் படுத்தான் ஒழித்து –
மாசுசா -என்று ஆஸ்ரிதர் உடைய சோக நிவர்தகனான கிருஷ்ணன்
அந்த கரண சங்கோச நிபந்தனமாக வந்த துக்கத்தைப் போக்கிக் கொடுத்து
அக் கரணங்களைக் கொண்டு அனுபவிக்கும்படி
திரு உள்ளத்தை ஒரு தலைக்கும் படி பண்ணினான் –
கலைப் பல் ஞானத்து என் கண்ணனைக் கண்டு கொண்டு
நிலைப் பெற்று
என் நெஞ்சம் பெற்றது நீடுயிர் -என்றத்தை நினைத்து அருளிச் செய்தபடி –
கரண சங்கோசம் அடைய திர்யக்குகளும் பரிசர்யை பண்ணும்படி யான
பெரிய திருமலையில் நிலையைக் காட்டி சமாதானம் பண்ணினான் ஆயிற்று-

—————————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: