பகவத் விஷயம் காலஷேபம் -67– திருவாய்மொழி – -2-10-1….2-10-11-ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

பிரவேசம்

கீழ் எம்மா வீட்டில் நிஷ்கர்ஷித்த ப்ராப்யம் –தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே -2-9-4-பெறுகைக்கு திருமலையை –
திருமால் இரும் சோலையை -ஆஸ்ரயிக்கிறார்—சமன் கொள் வீடு தரும் தடம் குன்றம் –2-10-5-என்று ஆளவந்தார் என்று
அருளிச் செய்தாராக திருமாலை யாண்டான் பணிக்கும் படி –
எம்பெருமானார் -அங்கன் அல்ல -இவர் பாட்டுத் தோறும் –ஒல்லை 2-9-1–ஒல்லை -2-9-10-என்றும் 2-9-2–காலக் கழிவு செய்யேல்
-என்றும் த்வரிக்கப் புக்கவாறே –நமக்கும் அறிவித்து நாமும் இவர் கார்யம் செய்வதாக அறுதி இட்டால் -சரீர சம நந்தரம் பேறு தப்பாது –
என்று அறுதி இட்டு இருக்கலாய் இருக்க இவர் இப்படி த்வரிக்கிறது -இச் சரீரத்தோடு நாம் அடிமை கொள்ள வேணும் -என்று
போலே இருந்தது -இனி இவருக்கு நாம் நினைத்தபடி பரிமாறுகைக்கு ஏகாந்தமான தேசம் ஏதோ என்று
ஞாலத்தூடே நடந்து உழக்கி பார்த்து -10-7-4-வரச் செய்தே -இவ்விடம் சால ஏகாந்த ஸ்தலமாய்
இருந்தது என்று – திருமலையிலே சந்நிதி பண்ணி யருளி -நாம் உமக்கு முகம் தருகைக்காக வந்து நிற்கிறோம் –நீர் இங்கே வந்து
நினைத்த வகைகளில் எல்லாம் பரிமாறி அனுபவியும் என்று தெற்குத் திருமலையில் நிற்கும் நிலையை காட்டிக் கொடுக்க இவரும்
அத்தை அனுசந்தித்து பகவான் பிராப்யனானால் அவன் வர்த்திக்கும் தேசமும் பிராப்யமாகக் கடவது இறே
அத்தாலே திருமலையோடு-
அத்தோடு சேர்ந்த அயன் மலையோடு
புற மலையோடு
திருப்பதியோடு
போம் வழியோடு
போகக் கடவோம் என்று துணியும் துணிவோடு வாசியற பிராப்ய அந்தர்கதமாய் அனுபவித்து இனியராகிறார் –என்று -(அதனாலே பர உபதேசத்தில் இழிகிறார் )

தெற்குத் திரு மலை -சுந்தர தோளுடையான்-முதல் திவ்ய தேசம் இதில் மங்களா சாசனம் -மேலே வடக்குத் திருமலை மங்களா சாசனம்- (மூன்றாம் பத்தில் -தாம் அவதரித்த திருக் குருகூர் அடுத்த பத்தில் -இப்படி ஒவ் ஒன்றையே அனுபவம் 9
பிராபகமாக பற்றுகிறார் -திருமாலை ஆண்டான் நிர்வாகம்கிறி-பதத்தில் நோக்கு
பிராப்யமாக பற்றுகிறார் -எம்பெருமானார் நிர்வாகம்பயன் -பதத்தில் நோக்கு
ஸுவ அனுபவம் –ஐந்தும் பரோபதேசம் ஐந்துமாக அருளிச் செய்கிறார் –

முதல் இரண்டு பத்துக்கள் –பர ஸ்வரூபம் -என்றார் வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர்-அர்த்த பஞ்சகம் பரமாகவே பத்து பத்தும் –
அதில் 1-1-பர ரூபம்வ்யூஹஅஞ்சிறைய தூது -1-10- பெரு நிலம் கடந்த நல்லடிப்போது –-ஜகதாதிஜா -விஷ்ணு –திண்ணன் வீடு -விபவம்
நெஞ்சின் உள்ளே புகுந்து –என்னுள் மன்னி -தீ மனம் கெடுத்தாய் -அந்தர்யாமித்வம் –
இதில் அர்ச்சை -2-10-சொல்லி பர ஸ்வரூபம் நிகமிக்கிறார் –(ஆக பஞ்ச பிரகாரங்களும் அருளிச் செய்கிறார் )

ஆறு ஆழ்வார்கள் -மங்களா சாசனம் -128 பாசுரங்கள் -மலையத்வஜன்-இந்த்ரத்வஜன் திருக் குமாரர் இவர் -பாண்டிய மன்னன் –
-சுதபா ரிஷி- மண்டூக மகரிஷி யாக- துர்வாசர் சாபம் -தர்மாத்ரி மலை –  ரிஷபாத்ரி மலை -யம தர்ம ராஜன் ரிஷப ரூபம் தபம் இருந்த திருமலை –
18 படி கருப்பன் -18 மாந்த்ரிகர்கள் -இடம் மாற்ற வர -அழகைக் காட்டி கள்ளத் தனத்தால் உள்ளம் திருந்தி -கருப்பன் ஸ்வாமி ஆனாராம் –
பெரியாழ்வார் திருவரசு -இங்கே -தீ பிடித்து -சமீபத்தில் ஆனதே-
பிள்ளை லோகச்சார்யர் திருவரசு -பாறை விழுந்து -சமீபத்தில் ஆனதே –
நூபுர கங்கை தீர்த்தம் கொண்டு தான் திரு மஞ்சனம் –தொட்டித் திரு மஞ்சன சேவை த்வாதசி அன்று -தலை வாரி விட்டு சீயக்காய் சாத்தி சேவை –
இரும் -இருமை பெருமை என்றுமாம் -நெருக்கமான -சோலை -திரு மால் இரும் சோலை –

—————————————————————–

அவதாரிகை –

திருமலையை பிராபிக்கையே இவ்வாத்மாவுக்கு நிரதிசய புருஷார்த்தம் –என்கிறார் –
பகவத் அனுபவ ப்ரீதி காரித கைங்கர்யமே புருஷார்த்தம் -திருமலைக்கு சென்றால் தானே கைங்கர்யம் கிட்டும்

கிளர் ஒளி இளமை கெடுவதன் முன்னம்
வளர் ஒளி மாயோன் மருவிய கோயில்
வளர் இளம் பொழில் சூழ் மாலிரும் சோலை
தளர்விலராகில் சார்வது சதிரே –-2-10-1-

நிரதிசய ஔஜ்வல்ய விசிஷ்ட சர்வேஸ்வரன் திருமலையே -வளர் ஒளி மாயோன் மருவிய கோயில்-பிராப்யம் என்கிறார் –
கிளர் ஒளி-ஞான ஔஜ்வல்யத்துக்கு யோக்யமான
இளமை கெடுவதன் முன்னம் -இளமை -விஷயாந்தரம் சென்று கெடுவதன் முன்னம்
இளமைக்கு கிளர் ஒளி -ஞானம் வளர யோக்யதை உண்டே –
பால்யம் -யௌவன ஆரம்ப ரூபமான இளமை என்கிறார்-
வளர் ஒளி மாயோன் மருவிய கோயில் -ஆஸ்ரித அர்த்தமாக இங்கே உகந்து எழுந்து அருளின பின்பு இரட்டிப்பான -வளர்ந்த சீல-இத்யாதி
அவிகாராய சுத்தாய -சதைக ரூப ரூபாயா -இச்சாதீனம் -என்றவாறு -கிருபாதீனம் –
வளர் இளம் பொழில் சூழ் மாலிரும் சோலை -வளரா நிற்கச் செய்தே- இளமையான பொழில் -இளமை வளரும் என்றபடி –
யுவா குமாரன் கைங்கர்யத்தால்
தளர்விலராகில் சார்வது சதிரே-பிரயோஜ நாந்தர சம்பந்தம் ஆகிய தளர்ச்சி இல்லாமல்
பிராபிக்கும் அதுவே –திருமலையை சார்வதுவே சதிர் -அடைவதே பிராப்யம் -பொருத்தம் -சாமர்த்தியம்
இது தவிர வேறு பிரயோஜனம் என்று இருப்பது சதிர் இல்லை
தனக்கு தான் உரைத்துக் கொள்கிறார் –நெஞ்சுக்கு -உபதேசம்
இளமை -யௌவனம் பால்யம் தாண்டி யௌவனம் பிறக்கும் பருவம் என்றவாறு

கிளர் ஒளி இளமை கெடுவதன் முன்னம்
திருமலையை ஆஸ்ரயிங்கோள் என்றார் –
செய்கிறோம் என்று ஆறி இருந்தார்கள் -ஆமாகில் சொல்லிப் பார்க்கிறேன் -எட்டு எழுத்து சொல்லச் சொன்னால் —
கெடுவிகாள் எத்தை விஸ்வசித்து தான் நீங்கள் ஆறி இருக்கிறது
வயோ அச்யாஹ்யாதி வர்த்ததே -யுத்த -5-5-அன்றோ
வாள்களாகி நாள்கள் செல்ல -திருச்சந்த விருத்தம் -115-வன்றோ நீங்கள் ஆறி இருக்கிறது
கழிந்த பருவத்தை உங்களால் தான் மீட்கப் போமோ
கிளர் ஒளி இளமை -என்றது மானச ஸ்ரத்தையாய் பிறந்த இஸ்ரத்தை -இதில் நின்றும் மாறி விஷயாந்தரத்திலே பிறப்பதற்கு முன்பே
ஒருவனுக்கு ஒரு விஷயத்திலே ஒரு கால் ஸ்ரத்தை பிறக்கும் -அவன் தனக்கே அவ்விஷயத்தில் அஸ்ரத்தை பிறக்கக் கடவதாய் இருக்கும்
ஆக பிறந்த ருசி மாறுவதற்கு முன்னே என்னுதல்
சங்கம் -தொடர்பு தானே விருப்பமாக மலரும் -பற்று –ஒளி ஞானம் –இளமை நிலை இச்சை –ஒளி இளமை என்றது சங்கம் –என்றபடி
மானஸ ஸ்ரத்தை-என்றபடி -மனசில் ஈடுபாடு –
மாறுவதற்கு முன்னம் -விஷயாந்தரத்தில் போவதற்கு முன்னம்
ஒளி ஞானம் என்ற பொருளில் ஒளி கொள் விளக்கு -மூன்றாம் திருவந்தாதி -95-ஞான சுடர் விளக்கு-இரண்டாம் திருவந்தாதி -1-போலே
கிளர் ஒளி இளமை -மனதில் பிறந்த ஆழ்ந்த ஈடுபாடு என்றவாறு –
ஸ்ரத்தை வந்து அஸ்ரத்தை மாறுவதற்கு முன்னே -திருமால் இரும் சோலை சென்றால் -மோஷம் பர்யந்தம் வரை வளர்ப்பது அவன் வேலை அன்றோ
சிறு சிறிதே -கடாஷித்து-ஈர நெல் விளைவித்து -கிருஷிகன் வளர்ப்பானே –
அங்கன் இன்றிக்கே –
பிராப்யம் -என்னும் பிரதிபத்தி பிறந்தாலும் கரணபாடவம் இல்லையே -என்று கை வாங்க வேண்டாதபடி –
கரண பாடவம் உள்ள போதே -என்னுதல்
பால்யே கிரீட நகா சக்தா –ஸ்ரீ விஷ்ணு புராணம் -17-94-என்னா –
-தஸ்மாத் பால்யே விவேகாத்மா யதேத -ஸ்ரீ விஷ்ணு புராணம் -17-95-என்னா நின்றது இறே –
வளர் ஒளி –
ஸ்வ வ்ருத்தி ஷயாதிகள் இல்லாதவனுக்கு விகாரத்தை பிறப்பிக்க வற்றதாயிற்று தேச ஸ்வபாவம்
நாட்செல்ல நாட செல்ல வளரா நின்றுள்ள புகரை உடையனாய்
மாயோன் மருவிய கோயில் –
ஆச்சர்ய சக்தி உக்தனான -சர்வேஸ்வரன்
அவதாரங்கள் போலே தீர்த்தம் பிரசாதியாதே நித்ய வாசம் பண்ணுகிற தேசம்
வளர் இளம் பொழில் சூழ் மாலிரும் சோலை
அடிமை செய்கிறவர்கள் -கிளர் ஒளி இளமையை உடையவர்கள்
அடிமை கொள்ளுகிறவன் வளர் ஒளி மாயோன்
அடிமை செய்கிற தேசம் -வளர் இளம் பொழில் சூழ் மாலிரும் சோலை
ஆக –இப்படி அடிமை செய்யுமவனும் அடிமை கொள்ளுமவனும் அடிமை செய்யும் தேசமும் ஒத்த பருவமாயிற்று இருப்பது
வளர வளர இளகிப் பதித்துச் செல்லா நிற்குமாயிற்று சோலை –
மனுஷ்ய ஆனந்தம் -சொல்ல வந்த ஸ்ருதி இளமை -அசன சீலத்வம் -ஆசீர் வசன பாத்திர பூதன் -என்றதே –
இளமை வளரும் சேஷ பூதர் -சேஷி -திவ்ய தேசம் -என்றதாயிற்று –
சக்கரவர்த்தி திரு மகன் –வா போகு வந்து ஒரு கால் கண்டு போ-என்று இளகிப் பதித்தானே
தளர்விலராகில் சார்வது சதிரே-
யன் முஹூர்த்தம் ஷணம் வாபி -இத்யாதி -சர்வ பிரகாரத்தாலும் வரும் அனர்த்தமாகிறது -திருமலையைக் கிட்டாமை -என்கிறார்
ஒரு முஹூர்த்தம் வாஸூ தேவனை சிந்திக்காமல் விட்டால் -அதுவே தளர்வு –
சர்வ பிரகாரம் -பிராபகம் பிராப்யம் இரண்டாலும் -என்றபடி -தளர்ச்சி வந்தால் இரண்டையும் விடுவோம் –சாராமல் இருந்தால் அதுவே தளர்வு –
திருமலை பிராப்யம் -என்னும் புத்தி பிறந்து லபிக்கைக்கு விரோதியாய் வரும் அனர்த்த பாகிகள் யன்றியே ஒழிய வேண்டில்
சார்வது சதிரே —
திருமலையைக் கிட்டும் இதுவே இவ்வாத்மாவுக்கு சதிர்
அல்லாதவை எல்லாம் இளிம்பு
கண்ணுக்கு இலக்கான விஷயங்களை விட்டு வேறு சிலவற்றைப் பெறுகைக்கு யத்னியா நின்றி கோளீ-என்று நீங்கள் நினைத்து இருக்கும் அதுவே இளிம்பு
இதுவே சதிர் –

இந்த்ரியங்களை விட்டு -கண்ணுக்கு இலக்கான எம்பெருமானை பெறுகைக்கு யத்னம் -ஏன் என்று சம்சாரிகள் நினைப்பதே -இளிம்பு என்றவாறே
திருமலையை சாராமை ஆகும் துக்க பாகிகள் இன்றிக்கே -/கிட்டுகைக்கு விரோதி பாப பாகிகள் இன்றிக்கே -பாபத்தின் பலம் துக்கம் -என்று இரண்டு நிர்வாகங்கள்–காரண கார்ய சம்பந்தம் உண்டே –

————————————————————————-

அவதாரிகை

திருமலையோடு சேர்ந்த ஸ்ரீ யபதியை கிட்டுகையே பரம பிரயோஜனம் என்கிறார் –
அன்றிக்கே – -திருமலை தன்னையே சொல்லுகிறதாதல் -அன்றிக்கே (திருப்பதியை யாதல் )-சில கோசங்களில்

சதிரிள மடவார் தாழ்ச்சியை மதியாது
அதிர்குரல் சங்கத்து அழகர் தம் கோயில்
மதி தவழ் குடுமி மாலிரும் சோலை
பதியது வேத்தி எழுவது பயனே –-2-10-2-

திருமலை உடன் சேர்ந்த திருப்பதி -ஸ்தானம் -தேச விசேஷம் -பிராப்தம் –
குன்றம் இருக்கும் இடம் குமரன் இடம் -என்று தப்பாக -பரி
பாடல் -மா அயோயே -மா அயோயே -திருமால் இடம் என்றே சொல்லும்
சதிரிள மடவார் தாழ்ச்சியை மதியாது -சதிர் -அர்த்த -அனுரூபமாக -குற்றம் -மதி மயக்கி செல்லாமை தோற்ற இருக்கும்
பசப்பு மொழி உக்தி சேஷ்டிதங்களை ப்ரீதி பண்ணாதே
அதிர்குரல் சங்கத்து அழகர் தம் கோயில் -ஐந்து ஆயுதம் -ஏந்தும் மூலவர் இங்கே -சம்ச்லேஷ ஜனிதத்தால் வந்த ப்ரீதியால்-
-நிரதிசய -சௌந்தர்யம் -அழகு படைத்தவன் -அசாதாராண ஸ்தானம் -விசேஷ ஸ்தானம்-
மதி தவழ் குடுமி மாலிரும் சோலை -சந்தரன் தவழும் படி சிகரம் -மலை முகடு -அழுக்கு நீக்கிக் கொள்ள –
பதியது வேத்தி எழுவது பயனே-திருப்பதி பிரசித்தமான அது -ஸ்தோத்ரம் பண்ணி எழுவது
-உஜ்ஜீவனம் -அடைவதே பிரயோஜனம் -இதுவும் தம் நெஞ்சுக்கு உபதேசம்

சதிரிள மடவார் தாழ்ச்சியை மதியாது
சதிரிள மடவார் விஷயமாக நீங்கள் பண்ணும் தாழ்ச்சியை ஒன்றாக புத்தி பண்ணாதே -என்னுதல்
சதிரிள மடவார் தாங்கள் பண்ணும் தாழ்ச்சியை மதியாதே -என்னுதல்
பண்ணின் மொழியார் -பைய நடமின் -என்னாத முன் –கண்ணும் சுழன்று —கண்டு ஆற்றேன் உலகு இயற்கை-
மதித்தால் பிரயோஜனம் இல்லாமையே யன்று -மேல் நரகம் -இங்கு சிஷ்டகர்ஹை -சான்றோர்கள் இகழ்வார்கள் –
முஹூர்த்த அர்த்த -லுப்தானாம் -அநேக வர்ஷ துக்கம் -கர்ம ஜாதேய-
பக்தாநாம் -என்று பரார்த்தமாய் நிரதிசய போக்யமாய் இருக்கும் விஷயம் அன்றே
சதிரை உடையராய் இருப்பார்கள் -பிறரை அகப்படுத்திக் கொள்ளுகைக்கு ஈடான விரகை உடையராய் இருப்பார்கள்
செத்துக் காட்டவும் கூட வல்லராய் இருக்கை
சதிரையும் பருவத்தின் இளமையையும் காட்டி யாயிற்று அகப்படுத்துவது
கீழே கிளர் ஒளி இளமை -என்றதே -அப்பருவம் கண்ட இடத்தே இழுத்துக் கொள்ளும் முதலைகள் யாயிற்று விஷயங்கள்
அதிர்குரல் சங்கத்து அழகர் தம் கோயில்
திருக் கையின் ஸ்பர்சத்தாலே-எப்போதும் ஒக்க முழங்கா நின்றுள்ள ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை திருக் கையிலே உடையராய்
-அச் சேர்த்தி அழகாலே அது தன்னையே தமக்கு நிரூபகமாக உடையவர் –
சங்கரவம் ஒலி-சப்த லோகம் சென்று குழல் அழகர் இங்கே உள்ளார் என்று கோள் சொல்லுமே -ஷண்ட மரம் -சோலை வாய்ப்பு -கூரத் தாழ்வான்
ஆஸ்ரித ரஷணத்துக்கு பாங்கான நிலம் என்று திரு உள்ளத்தாலே விரும்பி என்னது என்று ஆதரித்து வர்த்திக்கிற கோயில்
மதி தவழ் குடுமி மாலிரும் சோலை -பதியது-
சூற் பெண்டுகள் சுரம் ஏறுமா போலே சந்தரன் தவழ்ந்து ஏறா நின்றுள்ள சிகரத்தை உடைய திருமலை -தவழ்கை -முழம் தாள் கீழே படும்படி-
மாலிரும் சோலை யாகிற பதி -என்னுதல் -மால் இரும் சோலையில் பதி என்று திருப்பதியைச் சொல்லுதல்
பதியது வேத்தி எழுவது பயனே —
ஸ்வரூப அனுரூபமான வ்ருத்தி விசேஷத்தைப் பண்ணி உஜ்ஜீவிக்கும் அதுவே இவ்வாத்மாவுக்கு பிரயோஜனம்-
அல்லாதவை நிஷ்பிரயோஜனம் -பிரயோஜனம் என்றது பிராப்யம் என்றபடி -ஏத்தி -உக்தி வ்ருத்தி விசேஷம் –

————————————————————————-

அவதாரிகை –

உத்தேச்யத்துக்கு இது எல்லாம் வேணுமோ –திருமலையோடு சேர்ந்த அயன்மலையை யடைய யமையும் –என்கிறார்-

பயனல்ல செய்து பயனில்லை நெஞ்சே
புயல் மழை வண்ணர் புரிந்துறை கோயில்
மயல் மிகு பொழில் சூழ் மாலிரும் சோலை
அயன்மலை யடைவது அது கருமமே –2-10-3-

ஸ்பஷ்டமாக நெஞ்சு -பரம உதாரன் -வர்த்திக்கும் -திருமலை உடன் சேர்ந்த பக்கத்து மலையும் பிராப்தம் –
பயனல்ல செய்து பயனில்லை நெஞ்சே -பிரயோஜனம் அல்லாதது செய்து என்ன பிரயோஜனம் -இது கூட தெரியாமல் உள்ளீர்களே -ஸூ பிரசித்தம்
புயல் மழை வண்ணர் புரிந்துறை கோயில் -தூரலும் துளியுமான -ஆகு பெயர் -மேகம் -லஷணையால்
-ஜல ஸ்தல விபாகம் அற வர்ஷிக்கும் ஸ்வ பாவம் -கறுத்த நிறம் என்றுமாம்
புரிந்து அபிமுகராய் விரும்பி
மயல் மிகு பொழில் சூழ் மாலிரும் சோலை -தர்ச நீய மான –
அயன்மலை யடைவது அது கருமமே-அருகில் உள்ள மலையை அடைவதே கர்த்தவ்யம் -ஸ்வரூப பிராப்தம்-

பயனல்ல செய்து பயனில்லை நெஞ்சே
பயன் அல்லவாக நினைத்து இருக்கிறது -பரம பதத்தில் இருப்பையும் -அல்லாத அவதாரங்களையும்
தேச கால -விப்ரக்ருஷ்டம் -துர்லபம்-தஸ்மாத் –பின்னானார் வணங்கும் சோதி -இதி -பகவத் நித்ய சந்நிதி -சமாஸ்ரயணமே பிரயோஜனம்-
ஆவரண ஜலம் -அந்தர் வாஹினி -திருப்பாற்கடல் -பெருக்காறு போலே பரத்வ-அந்தராத்மா வ்யூஹம் விபவம் -அதிலே தேங்கின மடுக்கள் -அர்ச்சை அன்றோ –
ஏரார் முயல் விட்டு காக்கை பின் போவதோ -ஸ்வர்க்காதி தேடாமல்
அன்றியே
பிரயோஜன சூன்யமானவற்றை செய்து ஒரு பிரயோஜனமும் இல்லை
செயலும் பலமும் இரண்டும் பிரயோஜனமாயிற்று தாம் பற்றின விஷயம் –
ஸூ ஸூகம் கர்த்தும் –-ஸ்ரீ கீதை -9-2-என்னக் கடவது இறே –
ராஜா வித்யா ராஜ குஹ்யம் -பவித்ரம் -பிரத்யாஷாவஹம் -தர்ம்யம் -பக்தி யோகம்
சாதன தசையிலும் துக்க ரூபமாய் பல வேளையிலும் துக்க மிஸ்ரமாய் இருக்கிற ஸ்வர்க்க தத் சாதனங்களை யாயிற்று இவர் நினைத்து இருக்கிறது
நெஞ்சே
விஷயாந்தரத்துக்கும் இவ் விஷயத்துக்கும் உண்டான நெடுவாசி உனக்கு அனுபூதம் இறே
நெஞ்சே
பந்த மோஷங்கள் இரண்டுக்கும் பொதுவாய் இறே நெஞ்சு தான் இருப்பது
இவ்வளவிலும் இவ்விஷயத்தை அகலுகைக்கு கார்யம் பார்த்தாய் நீ இறே
புயல் மழை வண்ணர் புரிந்துறை கோயில்
பிராப்யம் -புயல் மழை வண்ணர்
பிராபகம் -புரிந்துறை-அவன் எண்ணமே பிராபகம்
பயனான விஷயம் தான் இருக்கிறபடி
வர்ஷூக வலாஹகம் போலே இருக்கிற வடிவு அழகை உடையவர்
அவ் வடிவு அழகை சர்வஸ்தானம் பண்ணி வர்த்திக்கிற கோயில்
வர்ஷூகமான மேகம் போலே ஜல ஸ்த்தல விபாகம் இன்றிக்கே சர்வஸ்தானம் பண்ணி வர்த்திக்கிற தேசம் என்றுமாம்
சாமான்யமான அதி தைவம் -இன்றும் பலர் பலி கொடுத்து -சித்ரா பௌர்னமி -கூட்டம் அறிவோமே -பீச்சாங்குழல் உத்சவம்
எண்ணம் சுண்ணம் எதிர் எதிர் தூவிட –
இத்தால் தமக்கு பிராப்ய பிராபகங்கள் ஒருவனேயாய் இருக்கிறபடி –
மயல் மிகு பொழில் சூழ் –
சோலைச் செறிவாலே புக்கார்க்கு இருண்டு இருக்கும் -என்னுதல்-
அன்றியே போக்யதா பிரகர்ஷத்தாலே நெஞ்சை இருளைப் பண்ணும் என்னுதல்
மாலிரும் சோலை அயன்மலை
திருமாலை யோட்டை சம்பந்தத்தையே தனக்கு பேராக உடைத்தான மலை-அகஸ்த்ய ப்ராதா -மாமான் மகளே-என்னுமா போலே-
யடைவது அது கருமமே –
அது ஒன்றுமே கர்த்தவ்யம்
அல்லாதவை யடைய அகர்த்தவ்யம் என்கிறார் –

———————————————————————————–

அவதாரிகை –

கர்ம பந்தத்தைப் போக்கி ஆஸ்ரிதரானவர்கள் அடிமை செய்து வாழுகைக்கு ஈடாம் படி சர்வேஸ்வரன் வர்த்திக்கிற
திருமலையை ஆஸ்ரயிக்கையே சத்ருசம் என்கிறார் –

கரும வன்பாசம் கழித்து உழன்று உய்யவே
பெருமலை எடுத்தான் பீடுறை கோயில்
வருமழை தவழும் மாலிரும் சோலை
திருமலை யதுவே யடைவது திறமே –2-10-4-

கரும வன்பாசம் கழித்து உழன்று உய்யவே -ஏகாரம் – -தன்னேற்றம் –உய்யவே –கழிப்பதற்கும் உய்வதற்கும் -பொருட்டு –எம்பெருமானார்
பிரிநிலை ஏகாரம் –வேறு உபாயம் இல்லை -திருமலை அடைவது தவிர வேறு வழி இல்லை –கூரத் தாழ்வான்
ரஷகன் வர்த்திக்கும் பெரிய பொழில் சூழ்ந்த திருமலையை ஆஸ்ரயிப்பதே கர்த்தவ்யம்
கரும வன்பாசம் கழித்து உழன்று உய்யவே -பந்த கர்மம் -கழற்ற அறிய பாபங்கள் -உழன்று உய்யவே கைங்கர்யம் செய்து உஜ்ஜீவிக்க –
பெருமலை எடுத்தான் பீடுறை கோயில் -ஆர்த்தமான கோப கோபி ஜனங்கள் –பீடு –ரஷண ஐஸ்வர்யம் -ரஷகத்வம் பெருமாள் திரு மேனியில் தோற்றும்
வருமழை தவழும் மாலிரும் சோலை -வரும் -மேகம் -தவழும் -மதி போலே தவழும் -தேவப் பெண்கள் -பிரயோஜ நாந்தர பரர்கள் –
திலகம் -இட்டுக்கொள்ள கண்ணாடி -மதி எடுத்து -சந்தரன் பக்தன் கைப் பட்டு -கங்காதரன் பாப விமோசனம் –
வேடர்கள் -தொட மாட்டார்கள் -அந்த ஸ்பர்ச -அநந்ய பிரயோஜன பரர்கள் இவர்கள் கூரத் தாழ்வான்
திருமலை யதுவே யடைவது திறமே-இதுவே கர்த்தவ்யம் -மால் உயர்த்தி /இருமை பரப்பை குறிக்கும் -திருமலை சோலைகளும் பிராப்யம்-

கரும வன்பாசம் கழித்து உழன்று உய்யவே
இது நம்மால் செய்து தலைக் கட்டப் போமோ -திருமலையை ஆஸ்ரயிக்கும் அது ஒழிய -என்று இங்கனே ஆழ்வான் ஒரு உருவிலே பணித்தானாம்
அங்கனம் நிர்வஹிக்கக் கடவது
அன்றிக்கே –
கரும வன் பாசம் கழிக்கைக்காகவும் -உழன்று உய்க்கைக்காகவும் என்று இங்கனே எம்பெருமானார் அருளிச் செய்யும் படி
முராசூரன் -நரகாசுரன் அமைச்சன் -அநேக மாயிரம் பாசங்களாலே தன்னை மறைய வரிந்து கொண்டு இருந்தால் போலே
யாயிற்று அவித்யாதிகளால் தன்னை மறைய வரிந்து கொண்டு இருக்கும் படி
கர்மமாகிற வலிய பாசங்களைக் கழிக்கைக்காகவும் -தன பக்கல் கைங்கர்யத்தைப் பண்ணி உஜ்ஜீவிக்கைக்காகவும்
பரித்ராணாயா சாதூனாம் -என்கிறபடியே விரோதிகளைப் போக்கி உஜ்ஜீவிப்பிக்கை இறே அவதாரங்களுக்கு பிரயோஜனம்
பெருமலை எடுத்தான் பீடுறை கோயில்
அரியன செய்தும் ஆஸ்ரித ரஷணம் பண்ணுமவன்
கோப கோபீ ஜன சங்குலம் அதீவார்த்தம் –என்று இடையரும் இடைச்சிகளும் நோவுபட ஒரு மலையை எடுத்து நோக்கினவன்
அந்த ஐஸ்வர்யத்தோடு நித்ய வாசம் பண்ணுகிற கோயில் –கல் எடுத்து கல் மாரி காத்தான் -ஆதேயம் -ஆதாரம் இரண்டு திருமலைகள்
பெரு மலை
பஞ்ச லஷம் குடியும் நிழலிலே ஒதுங்கலாம் படி இறே மலையின் பரப்பு
பீடு -பெருமை -அதாவது ஐஸ்வர்யம் -ஆபத்சகத்வாதிகள்
பசுக்களுக்கும் இடையருக்கும் ரஷகன் ஆகையாலே வந்த ஐஸ்வர்யம் தோற்ற வர்த்திக்கும் கோயில்
வருமழை தவழும் மாலிரும் சோலை
சமுத் வஹந்தஸ் சலிலாதி பாரம் பலாகி நோ வாரி தரா நதந்த-மஹத் ஸூ ஸ்ருன்கேஷூ மஹீ தராணாம் விச்ரம்ய விச்ரம்ய புன ப்ரயாந்தி-
மால்யவானில் -பிரச்வரண கிரியில் பெருமாள் இளைய பெருமாள் இடம் சொன்ன வார்த்தை
என்கிற படியே சூற் பெண்டுகள் சுரம் ஏறுமா போலே யாயிற்று மேகங்கள் சஞ்சரிப்பது
ஊர்க்கு இரண்டாயிற்று மழை-நின்ற இடத்தில் நின்று வர்ஷிப்பதொரு மேகமும் -போவது வருவதுமாய் இருப்பதொரு மேகமும்
புயல் மழை வண்ணர் -என்றது இறே
மாலிரும் சோலை யாகிற திருமலையை ஆஸ்ரயிக்கும் இதுவே திறம்
செய் திறம் -செய்ய அடுப்பது இதுவே
மாலிரும் சோலை யை உடைத்தான திருமலையை -என்னுதல்
மால் -என்று பெருமை —இருமை என்றும் பெருமை –ஓன்று ஒக்கத்திலே ஓன்று பரப்பிலே –

——————————————————————————-

அவதாரிகை –

திருமலைக்கு புறம்பான மலையை பிராபிக்கையே நல் விரகு -என்கிறார் –

திறமுடை வலத்தால் தீவினை பெருக்காது
அற முயலாழிப் படையவன் கோயில்
மறுவில் வண் சுணை சூழ் மாலிரும்சோலை
புறமலை சாரப் போவது கிறியே –2-10-5-

ரஷண உத்யுக்தமான திரு ஆழி உடையவன் வர்த்திக்கிறவன் -புற மலை கிட்டுவதே உபாயம்
கிறி உபாயம் –ஆளவந்தார் நிர்வாகம் –
திறமுடை வலத்தால் தீவினை பெருக்காது -நானா வித பலத்தால் -அக்ருத்ய கரணம் -தீ வினை வளர்க்காமல் -நெஞ்சுக்கு சொல்லி
அற முயலாழிப் படையவன் கோயில் -ரஷணம் தர்மம் -கொண்ட ஆழி உடையவன் கோயில் -வாசஸ் ஸ்தானம்
மறுவில் வண் சுணை சூழ் மாலிரும்சோலை-களங்கம் இல்லாத -கொடிகள் சேறு இல்லாமல் -வண்மை யுடைய -சுனைகள் -நீர் நிலைகள் சூழ்ந்த
புறமலை சாரப் போவது கிறியே-அதுவே உபாயம் -கிட்டுவதிலும் கிட்டபிரயத்னம் செய்வதே உபாயம் –

திறமுடை வலத்தால் தீவினை பெருக்காது
திறம் -சமூஹம் –வலம் -பலம் –
திரண்ட பலத்தாலே பிரயோஜநாந்தர பிராவண்யம் ஆகிற மஹா பாபத்தை கூடு பூரியாதே
அற முயலாழிப் படைய-லஷ்மணச்ய தீமத -சுந்தர -16-4-என்கிறபடியே -சர்வேஸ்வரனிலும் ஆஸ்ரித ரஷணத்திலே முயலா நின்றுள்ள
திரு வாழியை ஆயுதமாக உடையவன் வந்து வர்த்திக்கிற தேசம் –
சர்வேஸ்வரன் கடைக்கணித்து விட அரை ஷணத்திலே வாரணாசியை தஹித்து வந்து நின்றான் இறே –
அப்யாதிக்யம் ஸூ சிதம்-வாராணாசி -பௌண்டரக வாஸூ தேவன் – கிருஷ்ணம் பிரதிமை -மரம் வைத்து சங்கு சக்கரம் -மச் சின்னானி -கிமர்த்தம் தாரயசி கேட்க –
பித்ரு ஹந்த்ரு-கிருதியை தவம் பெற்று பெற்றான் காசி ராஜன் பிள்ளை -அவனை கொன்று மொத்தமும் எரித்தார் சக்கரத்தாழ்வான்
அறம் + முயல்-தர்மம் முயல் / அற முயல் -மிகுந்த முயல் என்றுமாம்
மறுவில் வண் சுணை சூழ் மாலிரும்சோலை புறமலை சாரப் போவது கிறியே –
ரமணீயம் ப்ரசன் நாம்பு சந் மனுஷ்ய மநோ யதோ –என்கிறபடியே –மறுவற்று-ஆழ்வார் திரு உள்ளம் போலே தெளிவை உடைத்தாய்-
வால்மீகி சிஷ்யர் பரத்வாஜர் இடம் தமஸா நீர் தெளிவை பற்றி சொன்னார் –
தர்ச நீயமாய் ஊற்று மாறாத சுனைகளாலே சூழப் பட்ட மாலிரும் சோலை புறமலை சாரப் போமிதுவே-
பகவத் பிரத்யாசத்தி வேண்டியிருப்பாருக்கு வருத்தம் அற லபிக்கலாம் நல் விரகு –
கொசித் –கொசித் சுந்தர புஜன் திருவடிகளில் -நூபுரா கங்கை தேனைக் குடித்து வேகமாக –மந்தமாக -சிரித்து -நொங்கும் நுரையுமாக –

——————————————————————————-

அவதாரிகை –

திருமலைக்குப் போம் மார்க்க சிந்தை பண்ணும் இதுவே இவ்வாத்மாவுக்கு நல்லது -என்கிறார்

கிறியென நினைமின் கீழ்மை செய்யாதே
உறியமர் வெண்ணெய் யுண்டவன் கோயில்
மறியோடு பிணை சேர் மாலிரும் சோலை
நெறி படவதுவே நினைவது நலமே –2-10-6-

வ்யாமுக்தன் வர்த்திக்கிற வழி உட்பட –
கிறியென நினைமின் கீழ்மை செய்யாதே -விஷயாந்தரம் போகும் நீச்யத்தை
உறியமர் வெண்ணெய் யுண்டவன் கோயில் -கண்ணன் நித்ய வாசம் செய்யும் திவ்ய தேசம்
மறியோடு பின்னை சேர் மாலிரும் சோலை -கன்றுகள் உடன் பெண் மான்கள் சேரும்
நெறி படவதுவே நினைவது நலமே -வழியிலே உட்பட வேண்டும் என்பதையே நினைமின் –

கிறியென நினைமின் கீழ்மை செய்யாதே
இதை நல் விரகு என்று புத்தி பண்ணுங்கோள் –
நான் சொல்லுகிற இது ஒழிய தண்ணிதான வற்றைச் செய்ய நில்லாதே –அதாவது பிரயோஜநாந்தர பராவண்யம்
உறியமர் வெண்ணெய் யுண்டவன் கோயில்
உறிகளிலே சேமித்து கள்ளக் கயிறு உருவி வைத்த வெண்ணெயை தெய்வம் கொண்டதோ -என்னலாம் படி
களவு கண்டு அமுது செய்தவன் வந்து வர்த்திக்கிற தேசம்
தெய்வம் கொண்டதோ –கண்ணன் என்னும் கரும் தெய்வம் -அன்றோ –
இத்தால் அனுகூல ஸ்பர்சம் உள்ள த்ரவ்யத்தால் அல்லது தரிக்க மாட்டாதவன் -என்கை
ஆனந்தப் பட்டவள் யசோதை கை பட்டு கபோலம் -பருத்து இன்றும் அழகர் இடம் சேவிக்கலாமே –

மறியோடு பிணை சேர் மாலிரும் சோலை
குட்டியும் தாயும் பிரியாதே வர்த்திக்கிற தேசம்
சிஷ்யர் ஆச்சார்யர் -சேஷர் சேஷிகள் கூட வர்த்திக்கும் -சுந்தர ராஜ -வரத நாராயண குரு ஸ்லோஹம் –
ரஷ்ய ரஷகங்கள் தம்மில் பிரியாதே வர்த்திக்கும் தேசம் -என்கை
நெறி படவதுவே நினைவது நலமே –
நெஞ்சிலே அடிப்படும்படியாகத் திருமலையை அனுசந்திக்குமதுவே நன்மையாவது என்னுதல்-
அன்றிக்கே -நெறி படுகைக்கு நினைக்குமதுவே -மார்க்க சிந்தை பண்ணுமதுவே-இவ்வாத்மாவுக்கு நன்மையாவது -என்னுதல்
அதுவே நினைவது நலம்
இத்தை நினைக்கும் அதுவே விலஷணம்-அது ஒழிந்தவை எல்லாம் பொல்லாதது -என்கை –
போம் வழியை நினைக்கவே நலம் -புருஷார்த்தம் -இந்த வழிக்குள் அடியேன் உட்பட வேண்டும் என்ற நினைவே வேண்டியது –

————————————————-

அவதாரிகை –

திருமலையை சென்று கிட்டி -வலமுறை-நிரந்தர வாஸம் பண்ணுகையே இவ்வாத்மாவுக்கு வெற்றி என்கிறார் –

நலமென நினைமின் நரகழுந்தாதே
நிலமுன மிடந்தான் நீடுறை கோயில்
மலமறு மதி சேர் மாலிரும் சோலை
வலமுறை எய்தி மருவுதல் வலமே –2-10-7-

பிரளய ஆபத் சகன் வர்த்திக்கும் இடத்தில்-வலமுறை- ஆநு கூல்யமே -ஆபிமுக்யம் ஒன்றே -பிரபலம் -அதுவே வலம் –
நலமென நினைமின் நரகழுந்தாதே-சம்சாரத்தில் அழுந்தாமல் -பஹிஷ்டராய் -வெளியில் -அந்தர்கதர் இல்லாமல் –
பரம பிரயோஜனம் என்று இத்தையே நினைமின்
நிலமுன மிடந்தான் நீடுறை கோயில்முனம் -முன்னம் -பிரளயம் -ஸ்ரீ வராஹ மூர்த்திய இடந்து எடுத்தவன்
-நித்ய வாசம் செய்து அருளும் -தர்மாத்ரி -கோயிலே
மலமறு மதி சேர் மாலிரும் சோலை -சிகரம் தேய்ந்து -களங்கம் போக்கப் பெற்ற சந்தரன் -நிஷ்களங்கமான மதி –
வலமுறை எய்தி மருவுதல் வலமே -பிரதஷிண நமஸ்காரங்கள் -செய்வதே பலம் –
சேஷ சேஷி -முறைப்பாட்டால் -முறை அறிந்து கைங்கர்யம் –
பலம் -என்பதையே வலம் -வெற்றி என்றுமாம் -காரணம் பலம் கார்யம் வெற்றி

நலமென நினைமின் நரகழுந்தாதே
நான் சொல்லுகிற வார்த்தையை நன்மை என்று புத்தி பண்ணுங்கோள் –
விலஷணமான புருஷார்த்தம் என்று புத்தி பண்ணுங்கோள்-நலம் -நன்மை /புருஷார்த்தம்
நரகங்களும் இவர்களுக்கு வ்யவஸ்திதமாய் இறே இருப்பது –
பகவத் விச்லேஷம் தான் ஆழ்வார்களுக்கு நரகம்நெஞ்சே நகு-பகவத் விஸ்லேஷ ஜனித துக்கம் இங்கே தானே -சம்சாரம்
யஸ் த்வயா சஹ ச ஸ்வர்க்க -நிரயோ யஸ் த்வயா வி நா –அயோத்யா -30-18-காட்டிலே போமது துக்கம்
-படை வீட்டில் இருக்குமது சுகம் -என்றாயிற்று பெருமாள் அருளிச் செய்தது –
அங்கன் அல்ல ஸூக துக்கங்கள் வ்யக்தி தோறும் வ்யவஸ்திதமாய் காணும் இருப்பது —
யாதொன்று உம்மோடு பொருந்துகிறது -அது ஸூகமாகிறது
உம்மை ஒழிய படை வீட்டில் இருக்கும் இருப்பு துக்கமாகிறது -நின் பிரிவினும் சுடுமோ காடு
இதி ஜானன்–அயோத்யா -30-18-தம்தாமுக்கு இல்லாதவை பிறர் பக்கலிலே கற்று அறிய வேணும் காணும்
பராம் ப்ரதீம் -உம்மைப் போலே நிறுத்து அல்ல காணும் என்னுடைய ப்ரீதி இருப்பது
நிறுத்தும் பிரீதி உம்முடைய -ஆளை போகாமல் நிறுத்தல் -தராசு தட்டில் -அளவுக்கு உட்பட்டது –
என்னது நிறுத்து அல்ல காணும் -நிறுத்தாத உம்மைக் கூடிப் போகும் ப்ரீதி -அளவில்லாத ப்ரீதி –
நில் வார்த்தை சொன்னதாலேயே ப்ரீதி குறைவு என்று அறிந்தேன் -வாரும் -என்பதால் என் ப்ரீதி அதிகம் என்று காட்டும்
என்னை விட்டு பிரிந்து உயிர் உடன் இருப்பாய் நம்பி சொல்லும் வார்த்தை உம்மது -தேக தாரண சமர்த்தன் –
நானோ உம்மைப் பிரிந்து வாழ மாட்டானே –
ராமஸ்து சீதா சார்த்தம் -து -இங்கும் -கலவியிலும் -சீதைக்கு பிரதான்யம் –து சப்தத்தால் பெருமாளுக்கு அபிரதான்யம்-
நம்மில் உனக்கு ப்ரீதி பரையாகச் சொன்னாய் -அது நமக்குச் சொல்லுகிறது என் என்ன
கச்ச ராம மயா சஹ —அக்ர தஸ்தே கமிஷ்யாமி –அயோத்யா -27-16-என்று நான் புறப்பட்ட படியே
என்னை முன்னே போக விட்டு பின்னே வரப் பாரும் –சஹ -சப்தம் அப்ரதானம் தோன்றும் —
முன்னே நடந்து -சேஷி பாவம் அவளுக்கா –மிருத்யந்தி குஷா -முன்னே சென்று கல்லையும் முள்ளையும் எடுக்க -கைங்கர்யத்துக்காக
-ப்ரீதியில் ஆதிக்யம் இருந்தாலும் கைங்கர்யம் செய்வேன் – நலம் என நினைமின் நரகு அழுந்தாதே –விளக்க இந்த ஸ்லோக வியாக்யானம் –
ந ச சீதா த்வயா ஹீ நா -அயோத்யா -55-31–என்றார் இறே இளைய பெருமாள் –
விட்டுப் பிரிந்தால் உயிர் வாழ மாட்டேன் -இளைய பெருமாளும் -சொன்னதை -ஆண் பெண் வாசி இல்லை –
சேஷத்வ பார தந்த்ர்ய ஸ்வரூபம் அறிவதே வேண்டும்
நரகழுந்தாதே -பிரிவால் வரும் கிலேச அனுபவம் பண்ணாதே –
நிலமுன மிடந்தான் நீடுறை கோயில்-
வராஹ கல்பத்தின் ஆதியிலே மஹா வராஹமாய் அண்ட பித்தியிலே சேர்ந்து உரு மாய்ந்த பூமியை ஒட்டு விடுவித்து எடுத்துக் கொண்டு
அவதாரங்கள் போலே தீர்த்தம் பிரசாதியாதே நித்ய வாஸம் பண்ணுகிற தேசம் –நீடுறை கோயில்-
மலமறு மதி சேர் மாலிரும் சோலை
சந்திர பதத்துக்கு அவ்வருகே வளர்ந்து நிற்கையாலே அவன் போம் போது சிகரங்களிலே தேய்ப்புண்டு
சாணையிலே இட்டால் போலே களங்கம் அறா நிற்கும் -என்னுதல்
கீழைக் கதிரவன் மேல் தண் மதி புராணப்படி சந்தரன் மேலே ஒருவரே -அறிவியில் பல சந்தரன் -அண்டம் ஒன்றுக்கு ஒரே சந்தரன் –
அன்றிக்கே –திருமலை ஆழ்வார் தாம் ஜ்ஞான லாபத்தை உண்டாக்குவார் -என்று பிள்ளான் வார்த்தை -மலம் -ஞானம் என்றவாறே –
வலமுறை எய்தி மருவுதல் வலமே –
காலயவன ஜரா சந்தாதிகளைப் போலே அன்றிக்கே அனுகூலமான முறையிலே கிட்டி -ஜராசந்தன் பெண்களை கம்சன் மணந்தான் –
மருவுதல் வலம்- என்னுதல்- வரம் என்னுதல் –பலவத்தரம் என்னுதல்- ஸ்ரேஷ்டம் என்னுதல் –
நாரதர் கண்ணன் அடையாளம் காலயவனுக்கு சொல்லி -முசுகுந்தன் -ஆயாசம் உடன் தூங்க -இந்த்ரன் வரம் பெற்றவன் –
கண்ணை முழித்து பஸ்மம் ஆனான் -முசுகுந்தன் பதவி பெற்றான் கண்ணன் சேவை சாதித்து –

—————————————————————————–
அவதாரிகை

திருமலையை நிரந்தரமாக வலம் செய்வதே வழக்கு என்கிறார் –

வலம் செய்து வைகல் வலம் கழியாதே
வலம் செய்யும் ஆய மாயவன் கோயில்
வலம் செய்யும் வானோர் மாலிரும் சோலை
வலம் செய்து நாளும் மருவுதல் வழக்கே –2-10-8-

வானோர் மாலிரும் சோலை -விண்ணோர் வெற்பு -விண்ணவர் நாடு -அவனுக்கு ஆசை –
ஆஸ்ரித அனுகூலன் -இங்கே நிரந்தர வாஸம்-நிரந்தர அனுகூல வ்ருத்தி –நாளும் மருவுதல் வழக்கே
-ஸ்வரூப பிராப்தம் –வழக்கே -ஆத்மாவுக்கு நியாயம்
வலம் செய்து வைகல் வலம் கழியாதே -கரணங்களுக்கு இந்த்ரியங்களுக்கு -பலம் கொடுத்து
-தக்க வைத்து -இதர விஷயமாக்கி கெடாதே
வலம் செய்யும் ஆய மாயவன் கோயில் -ஆயனான மாயவன் -ஆஸ்ரிதர்க்கு பவ்யமான -ஆனுகூல்யம் செய்யும்-
வினயம் தானே பலம் -அஞ்சலி ஹஸ்தம் –பரமா முத்ரா -ஷிப்ரம் தேவ பிரசாதினி –
ஆயன் -கிருஷ்ணன் -ஆச்சர்ய பூதன்
வலம் செய்யும் வானோர் மாலிரும் சோலை -அனுகூல்ய வ்ருத்தி கைங்கர்யம் செய்யும் வானோர்
வலம் செய்து நாளும் மருவுதல் வழக்கே -பிரதஷிணம்-போன்ற அனுகூல வ்ருத்தி செய்வதே ஸ்வரூபம்
சத்தம் கீர்த்தயந்த -நித்ய யுக்தா உபாசயே-

வலம் செய்து வைகல் வலம் கழியாதே
சர்வேஸ்வரன் தன்னை ஆஸ்ரயிக்கைக்கு உறுப்பாக தந்த மனுஷ்ய சரீரத்தைக் கொண்டு பலத்தை உண்டாக்கி பின்னை அவனை
ஆஸ்ரயிக்கை இன்றிக்கே மாயவன் தன்னை வணங்க வைத்த கரணமிவை –இராமானுசன் நூற்றந்தாதி -67-
விசித்ரா தேக சம்பந்தி ஈச்வராய நிவேதிதும் -காருணிகன் நீர்மையினால் அருள் செய்தான் –
இதர விஷய பிராவண்யத்துக்கு உடலாக்கி அனர்த்தப் படாதே
வலம் செய்யும் ஆய மாயவன் கோயில்
சித்ர கூட பரிசரத்தில் பிராட்டியும் கூடக் கையைப் பிடித்துக் கொண்டு உலாவினால் போலே பிராட்டி கையைப் பிடித்துக் கொண்டு
அழகர் ஆதாரத்தோடு சஞ்சரிக்கிற தேசம்
காகுஸ்தன் -குபேர இவ நந்தன -மந்தாகினி போலே நூபுர
மா தவன் -என்பதால் பெரிய பிராட்டியார் உடன் –இந்த்திரா லோக மாதா -மா
ய ஆத்மாதா பலதா -என்கிறபடியே -தன்னையும் கொடுத்து தன்னை தன்னை அனுபவிக்கைக்கு ஈடான சக்தியையும் கொடுக்கும்
ஆச்சர்ய பூதனான கிருஷ்ணன் வர்த்திக்கிற தேசம் -மாயத்தை உடையவன் -மாதவன் –
ஆழ்வார்கள் திரு உள்ளம் -கண்ணன் -ஆச்சார்யர்கள் திரு உள்ளம் ராமன்-
ஆழ்வார்கள் -திரு வேங்கடவன் பஷபாதிகள் -ஆச்சார்யர்கள் திருவரங்கன் பஷபாதிகள் –
வலம் செய்யும் வானோர் மாலிரும் சோலை
கீழே –தண்ணார் வேங்கட விண்ணோர் வெற்பன் -1-8-3–என்கிறார்
இங்கே வானோர் மாலிரும் சோலை என்கிறார்
இதுக்கு நினைவு என்-உகந்து அருளின தேசம் எல்லாம் கிடக்க -என்னில் பிரஜைக்கு தாயினுடைய அவயவம் எல்லாம் கிடக்க
முலைக் கண்ணிலே இறே வாய் வைக்கலாவது
அப்படியே இங்கு தென்னன் உயர் பொருப்பும் தெய்வ வட மலையும்-என்கிற முலை யாகையாலே அவர்களுக்கேயாய் இருக்கிறது –
ஆரியர் இகழ்ந்த மிலேச்ச பூமியில் உள்ளாருக்கு நிர்வாஹகரான ஷத்ரியர் தங்களது என்று அபிமாநிக்கும் படி –தென்னன் -பாண்டிய மன்னன்
வானோர் மாலிரும் சோலை
பெருமாள் காட்டுக்கு எழுந்து அருளுகிற  போது லஷ்மண பரதர்கள் பின் தொடர்ந்தால் போலே -சர்வேஸ்வரன் இங்கே போருகையாலே
நித்ய ஸூரிகளும் போந்து வலம் செய்யா நிற்பர்கள் -சித்ர கூடம் வரை -பரதன் –
வலம் செய்து நாளும் மருவுதல் வழக்கே —
நாமும் இவர்களோடு கூட அங்கே அனுகூல வ்ருத்திகளைப் பண்ணி –
விஷ்ணோர் ஆயதனம் நித்யம் சாயம் ப்ராதர் திநே திநே ப்ரதஷிண த்வயம் குர்யாத் அஸ்வமேத பலம் லபேத்
பிள்ளை திரு நறையூர் அரையரும் பட்டரும் பிரதஷிணம் பண்ணா நிற்க பின்னே சேவித்துக் கொண்டு போனேன் –
அல்லாதார் கடும் குதிரை போலே வாரா நிற்க இவர்கள் திருக் கோபுரங்களையும் திரு மாளிகைகளையும் கண்ணாலே
பருகுவாரைப் போலே பார்த்துக் கொண்டு வந்தார்கள் என்று நஞ்சீயர் அருளிச் செய்வர்-
துறும்பு நறுக்க பிராப்தி இல்லை -பிரபன்ன ஜன கூடஸ்தர் பிரதஷிணம் செய்ய சொல்வான் என் –
உபாயதயா புத்தியால் இல்லை -கைங்கர்யத்துக்கு -கண்ணால் பருகுவார் -பிராப்யம் -அனுபவித்து செல்வார்-
அஸ்வமேத பலம் -உபாயமா எண்ணம் வருமே -சாமான்யனுக்கு -பிரபன்னர் இப்படி பிராப்யமாக எண்ணுவார் –
எண்ணுவதற்கு ஐதிகம் –அவர்களுக்கு அது பிராப்யம் -நஞ்சீயருக்கு இவர்களை பார்த்து கொண்டே செல்வதே பிராப்யம்
நாளும் மருவுதல் வழக்கே —
நித்ய ஸூரிகளுடைய யாத்ரையே தனக்கு யாத்ரையானால் பின்னை மறுவல் இடாது இறே -இதுவே வழக்கு
வாழ் முதல் -தாரகம் / போஷகம் –வளர் முதல் /போக்யம் மகிழ் முதல் –
உபாயத்வ கந்தம் இல்லாமல் -நித்யர் போலே இதுவே பிராப்யம் –

—————————————————————————-

அவதாரிகை –

திருமலையைத் தொழுவோம் -என்று அத்யவசித்து நினைக்கை அமையும் விஜய ஹேது -என்கிறார்

வழக்கென நினைமின் வல்வினை மூழ்காது
அழக்கொடி யட்டான் அமர் பெரும் கோயில்
மழக் களிற்றினம் சேர் மாலிரும் சோலை
தொழக் கருதுவதே துணிவது சூதே –2-10-9-

-பூதனா நிரசன-சீலன் நித்ய வாஸம் செய்யும் திருமலையை -தொழுதற்கு –நினைவுக்கு -துணிவே வெற்றிக்கு அடி
வழக்கென நினைமின் வல்வினை மூழ்காது -கடக்க அரிதான -பிரபல பாபங்கள் -ஸ்வரூப அனுரூபம் கைங்கர்யம் என்று நினைத்தால்-
நினைத்தால் -மூழ்க மாட்டீர்கள் -மனசை -அடக்க -இந்த்ரியங்கள் -அடக்க -அவன் மேலே வைக்க -மால் பால் –மங்கையர் தோள் கை விட
அழக்கொடி யட்டான் அமர் பெரும் கோயில் -கொடி போன்ற பெண் -பூதனை -பேய்ப்பெண்-அழக்கொடி
மழக் களிற்றினம் சேர் மாலிரும் சோலை -கூட்டமாக -கன்றுகளான யானைத் திரள் -பால கஜம் -இனத்துடன் இனம் சேரும் –
அழகர் -பால கஜம் -மேனானிப்பு தோன்ற நிற்கிறார் –
தொழக் கருதுவதே துணிவது சூதே-நினைவிலே துணிவதே சம்சாரம் வெல்ல ஹேது
நிஜகுலப-ஹரி குலம்-சூ குலப -கரடி ஜாம்பவான் மேல் யானை -கஜங்கள் கஜேந்த்திரன் இடம் ஆனை சிங்கம் உடன் சண்டை போடமாட்டோம்
நின்னாணை திருவாணை கண்டாய் -திருமால் இரும் சோலை யானையைப் பற்றியே ஆழ்வார் –
பிருங்கி காயதி ஹம்ச -தாள நிப்ருதம் –கோகுலாபி-வல்லி தல்லஜ முகாத் -தேன் ஓட -சம்பாவானை
-ஆனந்த பாஷ்பம் –மான் கணங்கள் மெய்கை மறந்து ஆ ச்தப் தோ ஸ்தி எழுது சித்திரங்கள் போலே

வழக்கென நினைமின் வல்வினை மூழ்காது
நான் சொல்லுகிற இதுவே முறை என்று புத்தி பண்ணுங்கோள்-
வல் வினை -உங்களால் போக்கிக் கொள்ள ஒண்ணாது -மகா பாபங்களைப் பரிஹரிக்க வேண்டி இருந்தி கோளாகில்
அழக்கொடி யட்டான் அமர் பெரும் கோயில்
அழன்-என்று பேய்க்கு பேர் –
கொடி -என்று பெண்ணுக்கு பேர் –
பேய்ப் பெண் என்றபடி
அழன்-என்று-பிணமாய் -அத்தால் பேய் என்றபடி -பூதனையை முடித்தவன் –
கண்ணனுக்கே ஆமது விஷம் என்று வந்தாள்-க்ருஹீத்வா பிராண சஹிதம் –
இங்கன் ஒத்த விரோதிகள் வந்த போதாக நம்மை -ஸ்ரீ வைகுண்டத்தில் இருந்து -நெடுங்கை நீட்டாக்கி வைக்க ஒண்ணாது என்று
நித்ய வாஸம் பண்ணுகையாலே ஸ்லாக்கியமான கோயில்
மழக் களிற்றினம் சேர் மாலிரும் சோலை
அங்கு உண்டான திர்யக்குகளும் அழகரோடு ஓரினமாய் –வளர் ஒளி மாயோன் –இளமையாய் -ஆயிற்று இருப்பது
இள வானைக் கன்றுகள் இன இனமாகச் சேரா நின்றுள்ள திருமலையை
லஷண உபேதமாய் இருப்பதொரு ஆனை நின்ற இடத்தே ஆயிரம் ஆனைகள் வந்து சேரா நிற்கும்
அங்கு நிற்கிறது –நந்தா விளக்கின் சுடரே– சோலை மலைக் களிறு இறே
உலகம் ஏத்தும் –தென்னானை இறே
தொழக் கருதுவதே துணிவது சூதே-
திருமலையைத் தொழ வேணும் என்னும் மநோ ரதத்திலே துணிவதே இவ்வாத்மாவுக்கு விஜய ஹேது

——————————————————————-

அவதாரிகை –

பல படியாலும் திருமலையே பர பிராப்யம் என்று உபக்ரமித்த படியே உப சம்ஹரிக்கிறார்
சார்வது சதிரே -என்றத்தையே புகுவது பொருளே என்கிறார்

சூதென்று களவும் சூதும் செய்யாதே
வேத முன் விரித்தான் விரும்பிய கோயில்
மாதுறு மயில் சேர் மாலிரும் சோலை
போதவிழ் மலையே புகுவது பொருளே –2-10-10-

சர்வ பிரகாரத்தாலும் -இதுவே -பொருள் -புருஷார்த்தம் –வைதிக ஞான பிரவர்த்தகன்
-ஸ்ரீ கீதாச்சார்யன் வர்த்திக்கும் பிரதேசத்தில் பிரவேசிப்பதே –பொருள்
சுலபமான ஸூ கரமான – பொருள் என்று-
சூதென்று களவும் சூதும் செய்யாதே -பஸ்யதோ ஹரத்வம்
வேத முன் விரித்தான் விரும்பிய கோயில் -கீதா உபநிஷத் முகத்தாலே
மாதுறு மயில் சேர் மாலிரும் சோலை -மாது -மாதிமை -மிருத் மென்மை உடைய மயில்கள்
மாது பெண் மயில்கள் உடன்
போதவிழ் மலையே புகுவது பொருளே -போது பூ மலரும் திருமலை -மலையை முட்டாக்கு இட்டுக் கொண்டு இருக்கும்
திருமலையே பூக்கும் -சூர்ய ஒளி –வெப்பம் -தாக்காத படி

சூதென்று களவும் சூதும் செய்யாதே
நமக்கு நல்ல வாய்ப்பாய் இருந்தது என்று சூதும் களவும் செய்யாதே –
சாஸ்திரங்கள் இவற்றை நிஷேதிக்கையாலே அவற்றையும் சொல்லவுமாம்
அன்றிக்கே களவாவது -சோரேணாத்மாப ஹாரிணா -என்கிற ஆத்மாபஹாரமாய்
சூதாவது சாத்விகனாய் ப்ராமாணிகனாய் இருப்பான் ஒருவன் சர்வேஸ்வரன் ரஷகன் -என்று விஸ்வசித்து இருந்தால்
காண்கிற தேஹத்துக்கு அவ்வருகே ஒரு ஈஸ்வரன் ஆவது என் ஆத்மா ஆவது என் -என்று காணக் காண அபஹரிக்கை
கௌசீல்யம்-பவேது அத் த்ரிகணி-இல்லாமல் சூது களவு தூர்த்த சஹவாசம் இல்லாமல் பிராமணர் மனு
சூது -பார்த்து கொண்டு இருக்கும் பொழுதே பரித்தல் –
சாஸ்திர சாரம் -களவு ஆத்மா அபஹாரம் –பிறர் நன் பொருள் -சூது -சாருவாகன் போலே -தேகமே ஆத்மா -காணக் காண அபகரிக்கை –
வேத முன் விரித்தான் விரும்பிய கோயில்
இவை ஒருவருக்கு வாராத படி வேதார்த்தத்தை விசதீ கரித்த கீதோ உபநிஷத் ஆசார்யன் வர்த்திக்கிற கோயில்
மாதுறு மயில் சேர் மாலிரும் சோலை
மாது -என்று மாதுர்யத்தைச் சொல்-என்னுதல்-பேடையை உற்ற மயில் என்னுதல்
அங்குள்ள சத்வங்கள் எல்லாம் மிதுனமாய் வர்த்திக்கும் என்னுதல்
போதவிழ் மலையே புகுவது பொருளே
கொடியும் தண்டும் சருகும் இடை இடையிலே பூவுமாய் இருக்கை யன்றிக்கே திருமலை தன்னை முட்டாக்கிட பூத்துக் கிடக்கும் அத்தனை
திருமலையைக் கிட்டுமதுவே இவ்வாத்மாவுக்கு பிரயோஜனமாக தலைக் கட்டுவது -அல்லாதவை எல்லாம் வ்யர்த்த வ்ருத்திகள் -என்கிறார்

———————————————————————————-

அவதாரிகை –

நிகமத்தில் இத் திருவாய் மொழியைக் கற்றாரை இத் திருவாய் மொழி தானே ஜன்மத்தைப் போக்கி அழகர் திருவடிகளிலே சேர்த்து விடும் -என்கிறார்

பொருள் என்று இவ்வுலகம் படைத்தவன் புகழ் மேல்
மருளில் வண் குருகூர் வண் சடகோபன்
தெருள் கொள்ளச் சொன்ன ஒராரிரத்துள் இப்பத்து
அருளுடையவன் தாள் அணைவிக்கும் முடித்தே –2-10-11-

பகவத் பிராப்தி பலம்
பொருள் என்று இவ்வுலகம் படைத்தவன் புகழ் மேல் -சபலம் ஆகும் ஒரு நாள் என்று -கிருஷி பலிக்கும் –
ஆஸ்ரித ஆபி முக்கியம் பிரயோஜனம் -தயா ஷமா ஔதார்யாதி -குணங்கள் -விஷயமாக
மருளில் வண் குருகூர் வண் சடகோபன் -அஜ்ஞ்ஞான கந்த ரஹிதமாக -ஐயம் திரிபு இல்லாமல்
தெருள் கொள்ளச் சொன்ன ஒராரிரத்துள் இப்பத்து -தத்வ ஞானம் தெளியும்படி
அருளுடையவன் தாள் அணைவிக்கும் முடித்தே -சம்சாரம் முடிக்கும் -அருள் விசிஷ்ட ப்ரஹ்மம் திருவடியை அடைவோம்
கிருபா பரி பூரணன் -அழகன் -ஸ்வரூப தர்மம் இதுவே –
முடித்து -கர்தவ்யங்களை தலைக் கட்டும் -என்றுமாம் –
அவதார ரகசியம் -புருஷோத்தமன் என்று அறிந்தவன் க்ருதக்ருத்யன் —செய்த வேள்வியர் ஆவார் –

பொருள் என்று இவுலகம் படைத்தவன் புகழ் மேல் மருளில் வண் குருகூர் வண் சடகோபன்
பிரயோஜனப் படும் என்று இந்த லோகங்களை உண்டாக்கினவனுடைய கல்யாண குண விஷயமாக அஜ்ஞ்ஞான கந்தம் இல்லாத
ஆழ்வார் அருளிச் செய்தது தான் இது தான்
இவற்றை உண்டாக்கி கரண களேபரங்களை கொடுத்து விட்டால் கொடுத்த உபகரணங்களைக் கொண்டு சப்தாதி விஷயங்களிலே
பிரவணராய் கை கழியப் புக்கால் நம் நினைவு தப்பிற்றே என்று நெகிழ்ந்து கை வாங்குகை யன்றிக்கே –
ஒரு நாள் அல்லா ஒரு நாள் ஆகிலும் பிரயோஜனப் படாதோ என்ற பலகாலும் உண்டாக்கா நிற்கும்
மயர்வற மதி நலம் அருளப் பெற்றவர் ஆகையாலே அவனுடைய குண விஷயமாக மருள் இல்லாதவர் ஆயிற்று இவ்வாழ்வார்
தெருள் கொள்ளச் சொன்ன ஒராரிரத்துள் இப்பத்து
பிரபந்தமோ என்னில் –
மருள் உண்டாய் கழிய வேண்டிற்று ஆழ்வாருக்கு
இவருடைய பிரபந்தம் அப்யசித்தார்க்கு முதலிலே அஜ்ஞ்ஞானம் தான் இல்லை
மருள் இருந்து கழிந்த ஆழ்வார் போல் இல்லாமல்
கேட்டார்க்கு தெளிவைப் பிறக்கும்படி யாயிற்று இவர் அருளிச் செய்தது
தம்முடைய ஜ்ஞானத்துக்கு அடி ஈஸ்வரன் -இவர்களுக்கு தம்மடியாக வந்தது –
தூ மணி / துவளில் மா மணி போலே -பந்த மோஷ ஹேது அவனது -சாதாரண ஸ்வ தந்த்ரயம்-
உஜ்ஜீவன ஏக ஹேது –அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே – ஆழ்வார் உடைய அருள் அதிசயத்தால்
பிரபந்தம் தான் செய்வது என் என்ன -என்னில்
அருளுடையவன் தாள் அணைவிக்கும் முடித்தே
அருளை இட்டாயிற்று வஸ்துவை நிரூபிப்பது -அருளை உடையவன் திருவடிகளிலே சேர்த்து விடும்
அது செய்யும் இடத்தில்
முடித்தே
சம்சார பந்தத்தை வாசனையோடு போக்கி திருவடிகளிலே சேர்த்து விடும்
ஒரு ஜ்ஞான லாபத்தைப் பண்ணி விடும் அளவன்றிக்கே
அர்த்த க்ரியா காரியாய் இருக்கும்
கள் அழகருக்கு -அருளுடைய பெருமாள் என்ற திரு நாமம் உண்டே –

முதல் பாட்டில் -கடுகத் திருமலை யாழ்வாரை ஆஸ்ரயிங்கோள் என்றார்
இரண்டாம் பாட்டில் –திருமலையொடு சம்பந்தித்த ஸ்ரீயபதியை ஆஸ்ரயிக்கச் சொன்னார்
மூன்றாம் பாட்டில் அத்தோடு சேர்ந்த அயன் மலை அமையும் என்றார்
நாலாம் பாட்டில் திரி தந்தாகிலும் என்கிறபடி திரியவும் திருமலையை ஆஸ்ரயிக்கச் சொன்னார்
அஞ்சாம் பாட்டில் அத்தோடு சேர்த்த புற மலையை ஆஸ்ரயிங்கோள் என்றார்
ஆறாம் பாட்டில் திருமலைக்குப் போம் மார்க்க சிந்தை பண்ண அமையும் என்கிறார்
ஏழாம் பாட்டில் அவ்வழி யோடு சேர்ந்த திருமலையை ஆஸ்ரயிக்கச் சொன்னார்
எட்டாம் பாட்டில் நித்ய ஸூரிகளுக்கும் கூட ப்ராப்யம் ஆகையாலே திருமலையே பரம பிராப்யம் என்கிறார்
ஒன்பதாம் பாட்டில் திரு மலையைத் தொழக் கடவோம் என்ற துணிவே வேண்டுவது என்றார்
பத்தாம் பாட்டில் எல்லாப் படியாலும் திருமலை ஆழ்வாரை ஆஸ்ரயிக்கையே புருஷார்த்தம் என்று தலைக் கட்டினார் ‘
நிகமத்தில் இது கற்றாருக்கு பலம் அருளி தலைக் கட்டுகிறார் –

முதல் திருவாய் மொழியாலே மணியை வானவர் கண்ணனை தன்னதோர் அணியை –என்று விலஷண விஷயம் ஆகையாலே
பிரிந்தார் கண்ணாஞ்சுழலை இடப் பண்ணும் என்றார்
இரண்டாம் திருவாய் மொழியில் அவ்வோபாதி கூடினாலும் மறப்பிக்கும் என்றார்
மூன்றாம் திருவாய் மொழியாலே கூடின விஷயம் தானே ஸூக ரூபமாய் இருக்கும் என்றார்
நாலாம் திருவாய் மொழியாலே அவ்விஷயத்துக்கு தேசிகரோடே அனுபவிக்கப் பெறாமையாலே மோஹாங்கதரானார்
அஞ்சாம் திருவாய் மொழியிலே தாம் ஆசைப்பட்ட படியே வந்து கலந்தபடி சொன்னார்
ஆறாம் திருவாய் மொழியாலே தம் இழவுக்கும் அவன் அதி சங்கை பண்ணும் என்றார்
ஏழாம் திருவாய் மொழியாலே தம்முடைய சம்பந்தி சம்பந்திகளையும் விஷயீகரித்தபடி சொன்னார்
எட்டாம் திருவாய் மொழியிலே அவனுடைய மோஷ பிரதத்வத்தை அருளிச் செய்தார்
ஒன்பதாம் திருவாய் மொழியாலே பிராப்ய நிஷ்கர்ஷம் பண்ணினார்
பத்தாம் திருவாய் மொழியாலே நிஷ்கர்ஷித்த பிராப்யத்தை லபிக்கைக்கு திருமலை ஆழ்வாரை ஆஸ்ரயிக்கச் சொன்னார்

———————————————————–

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர்

ஏதது-நிஜ அர்த்தி
இஹைவ ஹரி பிரசாத
வன
பிராப்யம் தமேவ தன் அன்வயி நஞ்ச சர்வே
தசமே தசகே முநீந்த்ரர்

—————————————————————-

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன்

தீப்த ஆச்சர்ய ஸ்வ பாவம்
முகரித ஜலஜம் –பாஞ்ச ஜன்யம்
வருஷுகாம்போத வர்ணன்
சைல சைத்ரா-கொற்றக் கொடை
அதி விலசத ஹேதிம்
ஆபீத கவ்யம்
சம்ப்ராம்ப உஷிப்பித்த
பிரணத மத் அனுகூலம் –தன்னையும் சக்தியையும் கொடுப்பான்
பூதனா சேதனாந்தம்
பூர்வாச்சார்யர் சுருதி
கிரி ஸ்தான -அதி சமீப வர்த்தி –கண்டு அனுபவித்தார் –

இத்யப்ருத
அத்ய அசஹ்யத்வ ஷணம் விரஹதயா
மானுஷ்யத்வே பரத்வம்
சர்வாத் ஆச்வாதம்
போக்யதை
வியசன ஹரதயா
ச்வாப்தி சம்ப்ராப்தி
வைமுக்ய த்ராச யோகாத்
நிஜ ஸூ ஹ்ருத் ரஷணம்
முக்தி சாரஷ்ய தானாத்
கைங்கர்ய உத்தேச்ய பாவாத்
ஸூ ப நிலையத்தா
ச அதி போக்யம்
த்வதீயே

————————————————————

திராவிட உபநிஷத் சாரம் -ஸ்ரீ தேசிகன் –

பத்து குணங்கள் –த்வித்யே
அதி கிலேச ஷணம் கிலேசம்
உத்துங்க லலிதம்
மிலத் சர்வாத் ஸ்வாதம்
வியசன சமனம்
ச்வாப்தி முதிதம்
ஸ்வ வைமுக்ய த்ரச்தம்
ஸ்வ ஜன ஸூஹ்ருதம்
முக்தி இரசதம்
சுவ கைங்கர்ய உத்தேச்யம்
சுபக சவிதஸ்தம்
நிரவிசத்

உபாயத் த்வைகாந்தம்
சேவ்யத்மம் உதிதம் பிரதமம் ஏகாந்த உபாயம்
போக்யதம் பிராப்யத்வம் –இரண்டாம் பத்தில்
அனிதர சாதாரணம் திவ்ய மங்கள விக்ரஹம் உள்ளவனுக்கே மூன்றாம் பத்தில்
ஸூப ரூபம் சுபாஸ்ரயம் –

——————————————-

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 20-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்–

கிளர் ஒளிசேர் கீழ் உரைத்த பேறு கிடைக்க
வளர் ஒளி மால் சோலை மலைக்கே -தளர்வறவே
நெஞ்சை வைத்துச் சேரும் எனும் நீடு புகழ் மாறன் தாள்
முன் செலுத்துவோம் எம்முடி——–20-

—————————————————————————–
அவதாரிகை –

இதில் சர்வ பிரகாரத்தாலும் திருமலையை ஆஸ்ரயிக்கையே
புருஷார்த்த சாதனம் என்று பரோபதேசம்
பண்ணுகிற பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அன்றிக்கே –
ஸ்வயம் புருஷார்த்தமாக வனுபவிக்கிற பிரகாரத்தை
அனுவதித்து அருளிச் செய்கிறார் -என்று ஆகவுமாம் –
இது எங்கனே என்னில்
எம்மா வீட்டில் ஸ்வ பிராப்யத்தை நிஷ்கரிஷத்த அளவில்
ஒல்லை ஒல்லை -என்று இவர் த்வரிக்கப் புக்கவாறே
இவர் த்வரிக்கைக்கு அனுகுணமாக
இங்கேயே
இவ்வுடம்போடேயே
கிட்டி அடிமை செய்யலாம் படி
தெற்குத் திருமலையிலே தான் நிற்கிற படியை
இவருக்குக் காட்டிக் கொடுக்க
அத்தை அனுசந்தித்து
அவனிலும்
அவன் உகந்து வர்த்திக்கிற தேசமே பிராப்யம் என்று நினைத்து
திருமலை ஆழ்வாரை பெரிய ஆதாரத்தோடு அனுபவித்து
ப்ரீதராய்
சம்சாரிகளையும் அங்கே ஆஸ்ரயிக்கும் படி
பரோபதேசம் பண்ணுகிற கிளர் ஒளியின் அர்த்தத்தை
கிளர் ஒளி சேர் இத்யாதியாலே
அருளிச் செய்கிறார் —

——————————————————————————-

வியாக்யானம்–

கிளர் ஒளிசேர் கீழ் உரைத்த பேறு கிடைக்க –
அதிசயமான ஒஜ்வல்யத்தை யுடைத்தாய்
கீழ் உக்தமான எம்மா வீட்டில் பிராப்யமானது லபிக்கைக்காக –

வளர் ஒளி மால் சோலை மலைக்கே –
பயிலும் சுடர் ஒளி மூர்த்தியை -என்னும்படி
கிளர் ஒளி மாயோனாய்
நாள் செல்ல செல்ல வளர்ந்து வாரா நின்றுள்ள ஒளியை யுடைய சர்வேஸ்வரன் வர்த்திக்கிற
திருமால் இரும் சோலை மலைக்கே –

தளர்வறவே நெஞ்சை வைத்துச் சேரும் எனும்-
பகவத் ஸ்மரண ராஹித்யம் ஆகிற
அநர்த்தம் இன்றிக்கே
அவன் வர்த்திக்கிற திருமலையில்
மனஸை வைத்து ஆஸ்ரயிங்கோள்
என்று அருளிச் செய்யும் –

தளர்வு -மநோ தௌர்ப்பல்யம்-ஜீவ ஸ்வா தந்த்ர்யம் -நின்றவா நில்லா நெஞ்சு

அறவே –அது இன்றிக்கே -என்றபடி
கீழ் பிராப்யம்மான பாத பற்புக்கு
தென்னன் உயர் பொருப்பை பிராப்யமாக விதித்த படி –
இது வன்றாட்சி மயமாகையாலே -திரு விருத்தம் -ஆஸ்ரயிக்கைக்கு அடி உடைத்து –சிமயம் -சிகரம் –
சமன் கொள் வீடு தரும் தடம் குன்றமே

இப்படி நெஞ்சை வைத்து சேரும் எனும் –
நெஞ்சை வைத்துச் சேரும் என்கிறதுக்கு மூலம் –கிளர் ஒளி இளமை –என்கிற பாட்டு
மானஸ ஸ்ரத்தை மாறுவதற்கு முன்னே -என்று இறே இதுக்கு அர்த்தம் அருளிச் செய்தது –
உய்த்து உணர்வு எனும் ஒளி விளக்கு –என்னக் கடவது இறே
சேரும் என்றது –கிளர் ஒளி இளமை கெடுவதம் முன்னம் என்கிற முதல் பாட்டு பிரதானமாய்
போதவிழ் மலையே புகுவது பொருளே –என்னும் அளவும் அருளிச் செய்தவை –
அதாவது
சார்வது சதிரே -என்றும்
ஏத்தி எழுவது பயனே -என்றும்
அயன் மலையை அடைவது கருமமே -என்றும்
திருமலை யதுவே அடைவது திறமே -என்றும்
நெறி பட வதுவே நினைவது நலமே -என்றும்
பிரதஷிணஞ்ச குர்வாணஸ் சித்ர கூடம் மஹா கிரிம் -என்னும்படி
வலம் செய்து நாளும் மருவுதல் வழக்கே -என்றும்
தொழக் கருதுவது துணிவது சூதே -என்றும்
போதவிழ் மலையே புகுவது பொருளே -என்றும்
திருமலையோடு
அத்தைச் சேர்ந்த அயன்மலையோடு
புற மலையோடு
திருப்பதியோடு
போம் வழியோடு
போகக் கடவோம் -என்று துணிந்த துணிவோடு
வாசி அற பிராப்யாந்தர்க்கதமாய்
ஸ்வ அனுபவ கர்ப்ப
பரோபதேச முகேன
அனுபவித்து இனியராகிற பிரகாரமும் இவர்க்கு இப்பாட்டிலே விவஷிதம் –
அந்தர்கத குணா உபாசனத்தை
மதித்து பெருக்கி மூழ்கி அழுந்து கீழ்மை
வலம் சூது செய்து இளமை கெடாமல் செய்யும் ஷேத்திர வாசம்
சங்கீர்த்தனம் அஞ்சலி பிரதஷிண கதி சிந்தநாத்யங்க உக்தம் ஆக்குகிறார் இரண்டாம் பத்தில் –
என்று இறே-ஆச்சார்யா ஹிருதயம் -சூர்ணிகை -220-உபாயபரமாக நாயனார் அருளிச் செய்கிறார்
நாயனார் உபாய பரமாக அருளிச் செய்தது
ஆகையால் திருமலையை பிராப்யதயாவும் ப்ராபகதயாவும்
ஆஸ்ரயிக்கும் படி அருளிச் செய்யக் குறை இல்லை இறே
நெஞ்சை வைத்து சேரும் எனும் -நீடு புகழ் மாறன் தாள் –
இப்படி பரர அநர்த்தம் கண்டு
பரோபதேசம் பண்ணுகையாலே
நெடுகிப் போருமதாய்
அத்தாலே நித்தியமான
யசஸை யுடைய ஆழ்வார் திருவடிகளிலே –

முன் செலுத்துவோம் எம்முடி –
அவர் திருவடிகளின் முன்பே
நம்முடைய தலை சேரும்படி நடத்துவோம்
ஸ்ரீ மத தத் அங்கரி யுகளம் ப்ரணமாமி மூர்த்த்நா-என்னக் கடவது இறே
இனி அவர் அடி அறியவே இறே வேண்டுவது
அன்றிக்கே
ஆழ்வார் திருவடிகள் நம் சென்னியிலே சேருவதற்கு முன்னமே
நாம் முற்பாடராய்
முடியைச் செலுத்துவோம் -என்றாகவுமாம் –

—————————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s


%d bloggers like this: