பகவத் விஷயம் காலஷேபம் -66– திருவாய்மொழி – -2-9-6….2-9-11—ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

அவதாரிகை –

தேவாதி பதார்த்தங்களை உண்டாக்கினால் போலே- என்னையும் உன்னை அனுபவிப்பேனாம் படி பண்ண வேணும் -என்கிறாராதல்-
அன்றியே
தேவாதி பதார்த்தங்களுக்கு ஒரோ ஸ்வபாவம் நியதமாம் படி பண்ணினால் போலே எனக்கு உன்னை அனுபவிக்குமது-நியத ஸ்வபாவமாம்படி பண்ணி யருள வேணும் என்கிறாராதல் –
ச்வார்த்ததையே இல்லாத பேற்றைக் கேட்டீர் -லோகத்தில் இப்படி கேட்க வில்லையே -அகடிதகடநா-இல்லாதவற்றை உண்டாக்கினாயே -அது போலே இத்தையும் அருளுவாய் –திருதிய விபூதியாக உண்டாக்கி அருளுவாய் –

மகிழ் கொள் தெய்வம் உலோகம் அலோகம்
மகிழ் கொள் சோதி மலர்ந்த வம்மானே
மகிழ் கொள் சிந்தை சொல் செய்கை கொண்டு என்றும்
மகிழ்வுற்று உன்னை வணங்க வாராயே –2-9-6-

முதல் மூன்றையும் சேரப் பிடித்து –முக்கரண கைங்கர்யங்கள்மகிழ் கொள் சொல்ல மறந்தேன் -அத்தை சேர்த்து அருளுகிறார் –பாஹ்ய அனுபவம் பிரார்த்திக்கிறார்–மகிழ்வுற்று உன்னை வணங்க வாராயே-நேரில் வந்து அருள வேண்டும் என்று பிரார்த்தனை –
மகிழ் கொள் தெய்வம் உலோகம் அலோகம்--தெய்வம் ஞான -மனிஷ்யர் -திர்யக்குகள் ஸ்தாவரங்கள்–சேதனம் அசேதனம் என்றுமாம்
மகிழ் கொள் சோதி மலர்ந்த வம்மானே -தேஜஸ் -பதார்த்தங்கள் சூர்யன் –பஹூச்யாம் -மலர்ந்தானே ஸ்வாமியே-
மகிழ் கொள் சிந்தை சொல் செய்கை கொண்டு என்றும் -ஆபி முக்யத்தால் ப்ரீதி உக்தமான சர்வ காலமும்
மகிழ்வுற்று உன்னை வணங்க வாராயே -ஆனந்த நிர்பரரராய் கொண்டு -அனுபவிக்கும் படி எழுந்து அருள வேண்டும்

மகிழ் கொள் தெய்வம் –
போகய போக உபகரண போக ஸ்தானங்களாலே-மனுஷ்யரைக் காட்டில் ஆனந்த பிரசுரராய் இருந்துள்ள தேவர்கள் –
உலோகம் –
லோக்யத இதி லோகே -என்கிற படி சஷூராதி கரணங்களுக்கு விஷயமான அசித்து -உலோகம் -உகாரம் திராவிட லஷணையால் வந்தது
அலோகம்
இவற்றைக் கிரஹிக்கும் சாதனங்களால் கிரஹிக்கப் படாதே -சாஸ்த்ரைக சமதிகம்யமான சித் வஸ்து
மகிழ் கொள் சோதி –
தாஹகமான தேச பதார்த்தம் -சந்திர ஸூ ர்யர்கள் என்னவுமாம்
மலர்ந்த வம்மானே –
இவற்றை உண்டாக்கின சர்வேஸ்வரனே-
பஹூச்யாம் என்கிறபடியே தன விகாசம் ஆகையாலே –மலர்ந்த -என்கிறார்
சிதசித் விசிஷ்ட ப்ரஹ்மமே காரணமுமாய் கார்யமுமாகக் கடவது இறே
நீர் சொன்னவை எல்லாம் செய்தமை உண்டு -உமக்கு இப்போது செய்ய வேண்டுவது தான் என் -என்ன
மகிழ் கொள் சிந்தை சொல் செய்கை கொண்டு என்றும் மகிழ்வுற்று உன்னை வணங்க வாராயே –
என்னுடைய ஹிருதயம் உன்னை அனுபவித்து மகிழ்ச்சியை உடைத்தாம் படி பண்ண வேணும்
என்னுடைய வாக் வ்யவஹாரமும் அப்படியேயாகப் பண்ண வேணும்
என்னுடைய வியாபாரமும் ப்ரீதி புரஸ் சரமாக பண்ணும் கைங்கர்யமேயாக வேணும்
நானும் தனியே அனுபவித்து ப்ரீதியை உடையேனாம்படி பண்ண வேணும்
என்றும் இப்படி நான் உன்னை அனுபவிக்கும்படி வர வேணும் –
மகிழ் கொள் ப்ரீதி பூர்வகமாக அனுபவிக்கையே இப்பாட்டில் ஏற்றம் –

——————————————————————

அவதாரிகை –

தம்முடைய அபி நிவேசத்தாலே -எல்லாக் காலமும் என்னை அடிமை கொள்ள வர வேணும் -என்கிறார் –

வாராய் யுன் திருப்பாத மலர்க்கீழ்
பேராதே நான் வந்தடையும் படி
தாராதாய் உன்னை என்னுள் வைப்பில் என்றும்
ஆராதாய் எனக்கு என்றும் எக்காலே –2-9-7-

ஆந்த்ர சம்ச்லேஷம் அனுபவித்து ஆராத காதல் அடைந்து மேலும் பாஹ்ய சம்ச்லேஷம் அபேஷிகிறார்
தாராதாய் இருக்கிற நீர் –வாராய் -யான் வந்து அடையும் படி –
உன்னை என்னுள் வைப்பில் என்றும் ஆராதாய் -முன்பு நிலை மாறி -பரதந்த்ரமாய் விஸ்லேஷ ரஹிதமாய் –
யுன் திருப்பாத மலர்க்கீழ் பேராதே நான் வந்தடையும் படி வாராய் –ச விஷாதமாக –வருத்தத்துடன் பாஹ்ய அனுபவ அபேஷையுடன் அருளுகிறார்
வாராய் யுன் திருப்பாத மலர்க்கீழ் பேராதே நான் வந்தடையும் படி தாராதாய்
உன்னுடைய நிரதிசய போக்யமான திருவடிகளின் கீழே புனராவ்ருத்தி இல்லாத பேற்றை நான் பெறும்படி உன்னை எனக்குத் தாராதே இருக்கிறவனே –
வாராத இன்னாப்பாலே –தாராதாய் -என்று இத்தை அவனுக்கு நிரூபகமாகச் சொல்லுகிறார் –மயர்வற மதி நலம் அருளினான் -என்றும் –வீடு திருத்துவான் -என்றும்- கேசவன் தமர் -என்றும் அருளிய இவர்- இன்னாப்பாலே இப்படி அருளிச் செய்கிறார்-அருளாத நீர் -முன்பு சொன்னால் போலே –தாராதாய் -என்று திரு நாமம் சாத்துக்கிறார் –இந்த திரு நாமம் வேண்டாம் என்றால் வாராய்-
தாராதாய் -என்ற வசவாலே -அந்ய பரோக்தியிலே பிராப்யத்தை நிஷ்கர்ஷிக்கிறார்–(பேராதே நான் வந்து-உன் திருவடிகளை -அடைந்து-உன் உகப்புக்காக -கைங்கர்யம் செய்வதே பிராப்தி )
உன்னை என்னுள் வைப்பில் என்றும் ஆராதாய் –
தர நினையா விட்டால் நெஞ்சிலே பிரகாசிக்கிற அத்தை தவிர்க்க்கவுமாம் இறே-
அகவாய் பெரிய திரு நாளாய்ச் செல்லா நின்றது –
உன்னை என்னுள் வைப்பில் என்றும் ஆராதாய்
நிரதிசய போக்யனான உன்னை பாஹ்ய சம்ச்லேஷம் பண்ணாத போது தரிக்க மாட்டாத என்னுடைய
ஹிருதயத்திலே உன்னைக் கொண்டு புகுந்து வைக்கும் இடத்தில் ஒரு நாளும் அமையாத படி இருக்கிறவனே-
எனக்கு என்றும் எக்காலே –
எனக்கு -எல்லா காலத்திலும் எல்லா அவஸ்தையிலும்
வாராய்
வர வேணும்
உன் திருப் பாத மலர்க் கீழே -பேராதே யான் வந்து அடையும்படி -தாராதாய் –என்னுதல்
உன் திருப் பாத மலர்க் கீழே -பேராதே யான் வந்து அடையும்படி-வாராய் -என்னுதல்

—————————————————————————————

அவதாரிகை –

அத்யல்ப காலமாகிலும் சேஷியாய்—
எக்காலத்தும் –ஏதேனும் அற்ப காலமாவதுஆளவந்தார் நிர்வாஹமாக திருமாலை ஆண்டான்
என்னோடு சம்ச்லேஷிக்கப் பெறில்-பின்னை ஒரு காலமும் அதுவும் வேண்டா -என்று தமக்கு அடிமை செய்கையில்
உண்டான விடாயின் மிகுதியை அருளிச் செய்கிறார்
-எல்லா காலத்திலும் –இதுவே வேறு ஒன்றும் வேண்டேன் என்பதாக எம்பெருமானார் நிர்வாஹம் –

எக்காலத்து எந்தையாய் என்னுள் மன்னில் மற்று
எக்காலத்திலும் யாதொன்றும் வேண்டேன்
மிக்கார் வேத விமலர் விழுங்கும் என்
அக்காரக் கனியே உன்னை யானே –2-9-8-

சதா தூஷணி வியாக்யானம் சண்ட மாருதம் -தொட்டாச்சார்யர் ஸ்வாமிகள் -வாதூல ஸ்ரீனிவாச மகா குரு -திருமலை அப்பன் இடம் கைங்கர்யம் –
திருச் சித்திர கூடம் -புனர் பிரதிஷ்டை செய்து அருளினார்-
அம்ருத பல வல்லி நாச்சியார் தாயார் -யோக நரசிம்கர்- திருவடி சேவை –
ஆழ்வார் அனுபவிக்க  அபி நிவேசம் மிக்கு அருளிச் செய்கிறார்
அத்யல்ப காலம் அனுபவம் பெற்றாலும் -அது ஒழிய -வேறு ஒன்றும் வேண்டேன் என்கிறார்
தாகம் மிக்கவன் பஞ்சால் தோய்த்த நாக்கு நனைக்க அமையும் போலே -அத்யபிநிவேசம்
மிக்கார் வேத விமலர் விழுங்கும் -நித்ய சூரிகள் -வைதிகர் -கபளீ கரிக்கும் -அனுபவிக்கும்
என் அக்காரக் கனியே-போக்ய பூதனே -சக்கரையில் தோய்த்த பழம்-
எக்காலத்து -அல்ப காலத்தில் ஆகிலும்
எந்தையாய் -ஸ்வாமி ஆகாரம் தோன்றும் படி
என்னுள் மன்னில் -நெஞ்சகத்தில் பிரகாசித்து நிற்கப் பெற்றால் –
மற்று எக்காலத்திலும் யாதொன்றும் வேண்டேன் -இந்த பிரகாசம் ஒழிய வேறு ஒன்றையும் எப்பொழுதும் அபேஷிக்க மாட்டேன் –

எக்காலத்து எந்தையாய் என்னுள் மன்னில் மற்று -எக்காலத்திலும் யாதொன்றும் வேண்டேன்
எக்காலத்து எந்தையாய் என்னுள் மன்னில்-இதுக்கு ஆளவந்தார் அருளிச் செய்யும் படி -இனிக் கூறிட ஒண்ணாத படி சிறு கூறான அத்யல்ப காலத்திலும்
நீ ஸ்வாமியான முறை தப்பாதபடி என் ஹிருதயத்திலே வந்து புகரப் பெறில்
மற்று எக்காலத்திலும்
இது ஒழிந்த எல்லாக் காலத்திலும்
யாதொன்றும் வேண்டேன் –
பின்னை இது தானும் வேண்டேன் –ஜ்வர சந்நிபதிதர் -ஒரு கால் நாக்கு நனைக்க -என்னுமா போலே
-ஷண காலமும் அனுபவிக்க அமையும் என்னும் படியான விஷயம் உண்டோ -என்ன
மிக்கார் வேத விமலர் விழுங்கும் என் அக்காரக் கனியே உன்னை யானே —
பகவத் அனுபவத்திலே மிக்காராய்-யத்ர ருஷய பிரதமஜா யே புராணா –என்கிறபடியே வேதத்தில் விமலராக
பிரதிபாதிக்கப் பட்டுள்ள நித்ய ஸூரிகள் அனுபவியா நின்றுள்ள
அக்காரம் போலவும் கனி போலவும் உண்டான உன்னுடைய போக்யாதிசயத்தை எனக்கு பிரகாசிப்பித்தவனே
அக்காரம் வ்ருஷமாய்-அது கோட்புக்கு பழுத்த பலம் போலே நிரதிசய போக்யமானவனே-
அக்காரக் கனி -என்கிற இது அவர்களுக்கு சர்வ வித போக்யங்களும் தானே என்னும் இடத்துக்கு உப லஷணம்-
உன்னை யானே —
இப்படி நிரதிசய போக்யனான உன்னை –
உன் சுவடு அறிந்த நான் –
எக்காலத்து எந்தையாய் என்னுள் மன்னில் மற்று எக்காலத்திலும் யாதொன்றும் வேண்டேன்
இத்தை எம்பெருமானார் கேட்டருளி
இது பொருள் அழகியது –
இவ் வாழ்வாருடைய பிரக்ருதிக்குச் சேராது
நஹி வாசோ தரித்திர -வஸூ தேவர் -ஸ்ரீ கிருஷ்ணன் திருவவதரித்த பின் பல நூறு தானம் செய்வதாக எண்ணினால் போலே –
பெறிலும் பெறாது ஒழியிலும் சிறுகக் கோல மாட்டார் -இங்கனேயாக வேண்டும் என்று அருளிச் செய்வர்
எக்காலத்து எந்தையாய் என்னுள் மன்னில் –
எல்லாக் காலத்திலும் எனக்கு சேஷியான நீ -நான் சேஷமான முறை தப்பாமே வந்து என் ஹிருதயத்திலே புகுரப் பெறில்
-எக்காலத்திலும்
-இக்காலம் எல்லாவற்றிலும்
மற்று யாதொன்றும் வேண்டேன்
பின்னை இது ஒழிந்த மற்று ஒன்றையும் வேண்டேன் –
அக்காரக் கனியே — மற்று -எக்காலத்திலும் யான் ஒன்றும் வேண்டேன் -பிள்ளான் நிர்வாகம்
அக்காரக் கனியே மன்னில் -எக்காலத்திலும் யான் உன்னை – மற்று- யாதொன்றும் வேண்டேன்-
யத்ர நான்யத்ர பஸ்யதி -அது தவிர -சுருதி சாயலில் -எம்பெருமானார் நிர்வாகம் –
——————————————————————————–

அவதாரிகை –

மிக்கார் வேத விமலர் விழுங்கும் -என்று நித்ய ஸூரிகள் நித்ய அனுபவம் பண்ணுகிற படியை அனுசந்தித்தார் –
அவர்களோடு ஒத்த பிராப்தி தமக்கு உண்டாய் இருக்க இழந்து இருக்கிற படியையும் அனுசந்தித்து அனர்த்தப் பட்டேன் -என்கிறார் –

யானே என்னை யறியகிலாதே
யானே என் தனதே என்று இருந்தேன்
யானே நீ என்னுடைமையும் நீயே
வானே ஏத்தும் எம் வானவர் ஏறே –2-9-9-

சம்பந்தம் அப்ருக்தக் சித்தமாய் இருக்க -பிரிந்து இல்லாமல் சார்ந்தே இருக்க அநாதி காலம் -அஜ்ஞ்ஞானம் அஹங்கார-மமகார தூஷிதனாய் சம்பந்த ஞானம் இல்லாமல் இழந்தேன்
யானே என்னை யறியகிலாதே-ஆத்மா ஸ்வரூபம் அறியாமல் -யாதாம்ய ஞானம் இல்லாமையாலே
யானே என் தனதே என்று இருந்தேன் -ஸ்வ தந்த்ரன் -என்னை ஒழிந்தவை என்னுடைமை என்றும்
அடியேன் உனக்கு -இவை எல்லாம் உனது என்று இல்லாமல்
இருந்தேன் -முடிந்தேன் -சொல்லாமல் -இன்னும் இருக்கிறேன் -ஆத்மா அழியாதே -ஆத்மா நித்யத்வமும் -அனர்த்தமாம் படி ஆனதே
வானே ஏத்தும் எம் வானவர் ஏறே -இவ்வறிவு கேடு இல்லாமல் பரமபத நித்யர் முக்தர் ஏத்தும் -யாதாத்மா ஞானம் நடையாடும் -சம்பந்தம் ஏத்தும் படி
அங்கு உள்ளார்களுக்கு சேஷி செறுக்கு தோன்ற -அஹங்கார மொத்த உருவாக நீ தானே இருக்க வேண்டும் –
யானே நீ -பிரகார பாவம் அறிந்தேன் –அப்ருதக் சித்த சேஷ பூதனாய் இருப்பேன்தர்சனம் பேத ஏவச –பேதமே சித்தாந்தம்
பூ மணம் -மாணிக்கம் ஒளி போலே –பிரகார பிரகாரி / என்னுடைமையும் நீயே –உடமைகளும் அப்படியே
ஸூகர் காட்டுக்கு போக வியாசர் -பிள்ளாய் கூப்பிட ஸூகர் கேட்க வில்லை -மரங்கள் பதில் கொடுத்தனவே –அனைத்தும் ப்ரஹ்மாத்மகம் பிரகாரம்

யானே –
என் இழவு பகவத் க்ருதமல்ல –
-மத் பாபமே -பரதன் -மந்தரை கைகேயி தயரதன் கௌசல்யை பெருமாள் இல்லை தானே என்றால் போலே
க்யாத-பிராஜ்ஞ-சத் வ்ருத்த -சங்கே -மத் பாப சம்ஷபயாத் -இழந்தேன் சீதை -என்றால் போலே
அவன் எதிர் சூழல் புக்கு திரியா நிற்க –நானே கிடீர் விநாசத்தைச் சூழ்த்துக் கொண்டேன் -என்கிறார்
என்னை யறியகிலாதே-
ராஜ புத்ரன் வேடன் கையிலே அகப்பட்டு தன்னை வேடனாக பிரதிபத்தி பண்ணுமா போலே -சர்வேஸ்வரனுக்கு பிரகார பூதனான என்னை அறியாதே
யானே என் தனதே என்று இருந்தேன் –
அவனும் அவன் உடைமையும் என்ற இருக்கை தவிர்ந்து -நானும் என் உடைமையும் -என்று வகுத்துக் கொண்டு போந்தேன்
இருந்தேன் –
இப்படி நெடுநாள் போருகிற இடத்திலே ஒரு நாள் அனுதாபம் பிறக்கவுமாம் இறே –
அது அன்றிக்கே க்ருதக்ருத்யனாய் நிர்ப்பரனாய் –இழந்தோம் என்ற இழவும் இன்றிக்கே -இருந்தேன்
தீ வினையேன் வாளா விருந்தேன் -என்னுமா போலே –அஹம் சர்வம் கரிஷ்யாமி என்கைக்கு பிராப்தி உண்டாய் இருக்க
ஒரு கார்யம் இல்லாதாரைப் போலே கை ஒழிந்து இருந்தேன்
முடிந்தேன் -என்றால் போலே இருக்கிறது இறே
ஒரு நாள் இழவே போந்திருக்க அநாதி காலம் இழந்து போந்தேன் –
அங்கன் அன்றோ அர்த்த தத்வம் -என்ன-
யானே நீ –
அஹம் மநுரபவம் ஸூர்யச்ச–ப்ருஹத் உபநிஷத் –என்னா நிற்பார்கள் யாயிற்று முக்தர்
மத்தஸ் சர்வமஹம் சர்வம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-19-85 -என்னா நிற்பார் சம்சாரத்திலே தெளிவுடையார்
அஹம் பிரஹ்மாஸ்மி-நான் ராஜ புத்ரன் -என்னுமா போலே -நான் ப்ரஹ்மம் என்னலாம் படி இறே சம்பந்தம் இருக்கும் படி
ஸ வாஸூ தேவ -ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-12-5-என்றது வாஸூ தேவ சரீரம் என்றபடி இறே
என்னுடைமையும் நீயே
யஸ்யைத தஸ்ய தத்தனம் -ஸ்ரீ மகா பாரதம் –என்னுமா போலே
நானே மனு நானே சூர்யன் -சர்வம் ப்ரஹ்மாத்மகம் -ஸ்வரூப ஐக்கியம் இல்லை -பிரகார -பிரகாரி பாவ நிபந்தன சாமா நாதி கரண்யம்
என்னிடத்தில் இருந்து தான் எல்லாம் தோற்றிற்று -பிரகலாதன் –ப்ரஹ்ம பிரகாரா அஹம் அஸ்மி -என்று தானே சம்பந்தம் இருக்கும் படி
வாஸூ தேவனே -ஏகம் சதா ஏகம் -அந்யத் அஸ்தி வேறு பட்டது இல்லை லோகம் எல்லாம் அவர் -சரீர சரீரி ஆத்மா பாவ சாமா நாதி கரண்யம்
அனைத்தும் அவனது சொத்து –
இது எங்கே பரிமாறக் கண்டு சொல்லும் வார்த்தை என்ன
வானே ஏத்தும் எம் வானவர் ஏறே —
நித்ய ஸூரிகள் அடைய இப்படி யன்றோ உன்னை அனுபவிப்பது
மஞ்சா க்ரோசந்தி என்கிறபடியே வானே ஏத்தும் என்கிறது –
எம் வானவர் ஏறே —
அவர்கள் தங்கள் சேஷத்வ அனுரூபமாக அடிமை செய்யா நிற்க அவனும் தன் சேஷித்வத்தால் வந்த உத்கர்ஷம் தோற்ற இருக்கும் இருப்பு
எம் -என்றது
எனக்கும் அவர்களோடு ஒத்த பிராப்தி உண்டாய் இருக்க இழந்து அனர்த்தப் பட்டேன் -என்கிறார் –

—————————————————————————————

அவதாரிகை –

யானே என் தனதே என்று இருந்தேன் -என்று நீர் அனுதபிக்கும் படி பண்ணினோம் ஆகில் உமக்குச் செய்ய வேண்டுவது
ஓன்று உண்டோ –நீர் இங்கனே கிடந்தது படுகிறது எதுக்காக -என்ன இதுக்காக -என்கிறார் –

ஏறேல் ஏழும் வென்று ஏர் கொள் இலங்கையை
நீறே செய்த நெடுஞ்சுடர்ச் சோதி
தேறேல் என்னை உன் பொன்னடி சேர்த்து ஒல்லை
வேறே போக எஞ்ஞான்றும் விடலே –2-9-10-

ஸ்வா பாவிக மகிஷிகள் -நப்பின்னை சீதை –என்னை இசைவித்து உன் தாள் இணைக் கீழ் இருத்த வேணுமே-
சம்பந்தம் குலையாத படி என்னை கை விடாது ஒழிய வேணும்-
ஏறேல் ஏழும் வென்று-நிரர்த்தகமான அவ்வயம் -ஏன்று கொன்ற ஏறுகள் ஏழையும் –
ஏர் கொள் இலங்கையை நீறே செய்த -பெருமை உள்ள இலங்கை-பஸ்மம் ஆகும் படி பண்ணி
நெடுஞ்சுடர்ச் சோதி -உஜ்ஜ்வல விக்ரகம் படைத்தவனே
தேறேல் என்னை -இது தேறாத வஸ்து -என்னை நம்பாதே -கல்லைக் கட்டி இறங்குபவன்-நன்மை அறிபவன் என்று விஸ்வசியாதே -எம் பாட்டை எனக்கு பார்க்கத் தெரியாது என்று அறிய வைத்தாய்-
உன் பொன்னடி சேர்த்து ஒல்லை வேறே போக எஞ்ஞான்றும் விடலே-சடக்கு என சேர்த்து -விஷயாந்தரங்களில் போக ஒட்டாதே
விதி நிர்மிதமான சம்பந்தம் -விடாது ஒழிய வேண்டும்-
ஸ்தோத்ர ரத்னம் –விதி நிர்மிதம் -உன்னை அன்றி நீ இலேன் -என்னை அன்றி நீ இலேன் –நீரே அந்த விதி –
நாதன் -நீரே -தயை பெற நானே -இது தானே விதி -இத்தை பரிபாலனம்  செய்து அருள வேண்டும்

ஏறேல் ஏழும் வென்று
ஏறாகில் ஏழையும் வென்று நப்பின்னை பிராட்டியோட்டை
சம்ச்லேஷத்துக்கு பிரதிபந்தகமான ருஷபங்கள் ஏழையும் வென்று
ஏர் கொள் இலங்கையை –
தர்ச நீயமாய் கட்டுடைத்தான இலங்கையை –அஹோ வீர்ய மகோ தைர்யம் -என்று திருவடி மதிக்கும் படியான இலங்கையை
பபூவ புத்திஸ்து ஹரீச்வரஸ்ய -ராவணனும் ஸ்த்ரீகளுமாய் இருக்கும் இருப்பை கண்டவாறே -தானும் ஒரு சமுதாயத்துக்குக்
கடவனாகையாலே -இங்கனே இருப்பதொரு புத்தி பிறந்தது –திருவடி மதித்த ஐஸ்வர்யம் அன்றோ –
யதீத்ருசீ இத்யாதி -பையல் தானும் ஸ்த்ரீகளுமாய் இருக்கும் இருப்பை -பெருமாளும் பிராட்டியுமாய் இருக்க சம்மதித்தான் ஆகில்
இந்த ஐஸ்வர்யம் குலையாது இருக்கலாயிற்றுக் கிடீர்
இமா யதா ராஷச ராஜ பார்யாஸ் ஸூ ஜாத மஸ் யேதி ஹி சாது புத்தே –சத்ருக்களுக்கும் நன்மை வேணும் என்று இருக்கும் புத்தியை உடையவனுக்கு –
நீறே செய்த
பிராட்டி அருளிச் செய்த படியே பஸ்ம சேஷமாம் படி பண்ணின
நெடுஞ்சுடர்ச் சோதி –
ராவணனை இப்பரிகரததோடே கொன்று கையும் வில்லுமான வீர ஸ்ரீ யோடு நின்ற நிலை –
அவ்விரோதிகளைப் போக்கினாப் போலே என்னுடைய விரோதிகளையும் போக்க வேணும் -என்கிறார் –
தேறேல் என்னை –
நப்பின்னை பிராட்டியோட்டை சம்ச்லேஷத்தில் பிரதிபந்தகம் போக்க அமையும் –
ஸ்ரீ ஜனக ராஜன் திருமகள் அளவில் அவளைப் பிரித்த ராவணனை முடிக்க அமையும்
அவர்களை உனக்காக வேண்டா -பண்டே உனக்கேயாய் இருக்கையாலே
இப்படியே இவன் விரோதிகளைப் போக்கி நமக்கு ஆக்கினோமாகில் இனி என் என்று இருக்க ஒண்ணாதே என்னளவில் .
தேறேன் -என்ற பாடமான போது -தெளியேன் என்னுதல் தரியேன் என்னுதல்
ஆனால் செய்ய வேண்டுவது என் என்ன
உன் பொன்னடி சேர்த்து ஒல்லை
நின் செம்மா பாத பற்புத் தலை சேர்த்து -என்று தொடங்கின அர்த்தத்தைத் தலைக் கட்டுகிறார்
உன் பொன்னடி
கல்லுக்கும் சைதன்யம் கொடுக்க வல்ல அடி யன்றோ
ரஜோ குணத்தால் -ரஜஸ் ஒன்றாலே கெட்டாள் அஹல்யை -காமம் –ஸ்ரீ பாத ரஜஸ் வாழ்வு கொடுத்தது -ரஜ ஏவ பஹு ஹேது –
சேர்த்து -சேர்த்து அருள வேணும்
ஒல்லை -நான் இசைந்த போதே சடக்கெனத் திருவடிகளில் திவ்ய ரேகையோபாதி சேர்த்து அருள வேணும்
அவ்வளவும் போராது
வேறே போக எஞ்ஞான்றும் விடலே —
இவனுக்கு எல்லா உத்கர்ஷமும் பண்ணிக் கொடுத்தோம் ஆகில் இனி என் என்ன ஒண்ணாது
நீ எல்லா உயர்த்திகளும் பண்ணித் தந்தாலும் நான் எல்லாத் தாழ்வுகளும் பண்ணிக் கொள்வேன்
என்னை என் கையிலே காட்டித் தராது ஒழிய வேணும் –நெறி காட்டி நீக்காதே —

(பொன்னடி — ஒல்லை–உபக்ரமம் நியமனம் -இரண்டிலும் –நின் செம்மா பாத பற்புத் தலை சேர்த்து –என்று துடங்கி-உன் பொன்னடிச் சேர்த்து -என்று இறே தலைக் கட்டுத் தான் இருப்பது –தலைக்கு கட்டு -தலைக்கட்டினார் -சாடு-ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்ரீ ஸூ க்திகள்)

————————————————————————-

அவதாரிகை –

இத் திருவாய் மொழி அப்யசிக்க வல்லார்கள் இத் திருவாய் மொழியில் சொன்ன முக்த பிராப்யத்தை பெறுவார் என்கிறார் –

விடலில் சக்கரத் தண்ணலை மேவல்
விடலில் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
கெடலில் யாயிரத்துள் இவை பத்தும்
கெடலில் வீடு செய்யும் கிளர்வார்க்கே –2-9-11-

மோஷ ஆனந்தம் பிரதம் இத் திருவாய்மொழி
விடலில் சக்கரத் தண்ணலை-விடாமல் -ஆழியை விட்டால் தானே உம்மை விடுவேன் -அச்சுதன் அன்றோ-
மேவல் விடலில் வண் குருகூர்ச் சடகோபன் -விடாமல் பற்றி இருக்கும் -மேவுதலை -விட சமர் அல்லாத மகா உதாரர்-(நிகம பாசுரத்தில் ஆழ்வாருக்கு தனியாக தைரியம் வருமே இதே போலே அருளிச் செய்ய -அவன் காட்டக் கண்டு களித்து அருளுகிறார் )
சொல் கெடலில் யாயிரத்துள் இவை பத்தும் -அனர்த்தம் வாராத படியான –
கெடலில் வீடு செய்யும் கிளர்வார்க்கே -ஆசை உடன் ஓத தொடங்குவார்க்கே-கிளர்தல் சொல்லுதல் உத்யோக மாத்திரத்தில் –
ஆதாரத்துடன் சொல்வார்க்கு -மோஷ ஆனந்தம் பண்ணிக் கொடுக்கும்
அவித்யாதி -கேடுகள் இல்லாத –கிளர்த்தி -உத்யோக மாத்ரம் அனைவரும் சொல்லுவார்களே -என்றவாறு –
விடலில் சக்கரத் தண்ணலை –
வீடு தானே பிராப்யம் –ஸ்வார்த்த -கந்த ரஹிதமான ததேக பாரதந்த்ர்யம் —நாம் விடுகிறோம் என்று அதிசங்கை பண்ணுகிறது என் –
நாம் ஒருவரையும் விடோம் காணும் -என்று திருக் கையில் திரு வாழியைக் காட்டினான் –
விடலில் சக்கரத் தண்ணலை —
ஒரு காலும் விடாத திரு வாழியைக் கையிலே உடைய சர்வேஸ்வரனைக் கவி பாடிற்று
மேவல் விடலில் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
ஒருவரையும் விடாத -அவன் ஸ்வபாவத்தாலே கிட்டி
அவனை பிரியில் தரியாத படி -பரம உதாரரான ஆழ்வார் அருளிச் செய்தார்
வண்மை யாவது -இவ்வனுபவத்துக்கு பாசுரம் இட்டு உபகரித்த உபகாரம்
கெடலில் யாயிரத்துள் இவை பத்தும் –
இவ்வாத்மாவுக்கு அனர்த்த கந்தம் வாராதபடி ஹிதத்தை ஆராய்ந்து அருளிச் செய்த இது தான் -அவற்றில்
இப்பத்தும் கிளர்வார்க்கு கெடலில் வீடு செய்யும்
வரில் பொகடேன்-கேடில் தேடேன் -என்று இருக்கை யன்றிக்கே ஸ்ரத்ததாநராய் இருப்பார்க்கு -அனர்த்த கந்த ரஹிதமாய்-
அஹங்கார மமகாரங்கள் உடைத்த தன்றிக்கே-
தனக்கே யாக வேணும் -என்று இவர் பிரார்த்தபடியே இவ்வாத்மவினுடைய ஸ்வரூப அனுரூபமான பேற்றைத் பண்ணித் தரும் –

முதல் பாட்டில் காயிகமான பேற்றை அபேஷித்தார்
இரண்டாம் பாட்டில் மானசமான பேற்றை அபேஷித்தார்
மூன்றாம் பாட்டில் வாசிகமான பேற்றை அபேஷித்தார்
நாலாம் பாட்டில் ஸ்வரூப அனுரூபமான பிராப்யத்தை நிஷ்கர்ஷித்தார்
அஞ்சாம் பாட்டில் நீர் ஆராக இருந்து இப் பேற்றை அபேஷித்தீர் என்ன -நான் ஆராயினும் ஆயிடுக –உன்னை அனுபவித்து மகிழும்படி பண்ணி யருள வேணும் என்றார்
ஆறாம் பாட்டில் த்ரிவித கரணங்களாலும் உன்னை ப்ரீதி புரஸ் சரமாக அனுபவிக்கும் படி பண்ணி யருள வேணும் என்றார் –
ஏழாம் பாட்டில் அப்படிச் சடக்கென செய்யாமையாலே இன்னாதானார்
எட்டாம் பாட்டில் ஸ்வரூப அனுரூபமாக நீ ஷண காலம் என்னோடு அனுபவிக்கப் பெறில் பின்புள்ள காலம் எல்லாம் வேண்டேன் -என்றார்
ஒன்பதாம் பாட்டில் உன்னை அனுபவிக்க இட்டுப் பிறந்து வைத்து அது கிடையாதபடி நானே அனர்த்தத்தை சூழ்த்துக் கொண்டேன் -என்றார்
பத்தாம் பாட்டில் எனக்கு ஒரு நாளும் ஜ்ஞான விசேஷத்தைப் பண்ணித் தந்தோம் இறே என்று என்னை என் கையிலே காட்டித் தராது ஒழிய வேணும் என்றார்
நிகமத்தில் இது கற்றார்க்கு பலம் சொல்லித் தலைக் கட்டினார் –

———————————————————————–

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

மோஷ ஆதாரம் ஸ்புடம் அபேஷ்ய–முகுந்தே
மோஷம் பிரதாதும்
ஆத்மேஷ்ட அஸ்ய பத கிங்கரர் தே ஏக ரூபம்-மோஷாதாக்த்ய வஸ்து இதுவே எனக்கு
நவமே தேன நிரணாதேதி

———————————————————————

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –

ஸ்ரத்தையே ஸ்வங்க்ரி யோகம் -செம்மா பாதம் தலை மேல் ஒல்லை
ஸூ பம் அதி கரம் -ஞானக்கை தா
ஸ்தோத்ர சாமர்த்திய ஹேதும்-கழல் எய்யாது ஏத்த அருள வேண்டும்
ஸ்வ அர்த்தி பரோபகாரம் -தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே
ஸ்ம்ருதி ரசம் சமிதா த்த்யாதரம் -அந்ய விஷய வெறுப்பு
ப்ரீதி வஸ்யம் -என்றும் மகிழ்வுற்று உன்னை வணங்க -நாம் வசப்பட்டால் அவன் நம் வசப்படுவான்
பிராப்தௌ கால அஷமத்வ ப்ரதம் -கால விளம்பம் அசஹியாமை
அம்ருத ரசம் தியானம் -அக்காரக் கனி
ஆத்மனார்ப்பண அர்ஹம்
வைமுக்கியம் த்வாரயந்தம் -வேறே என்னை போகல் விடேல்
கைங்கர்யத்துக்கு உத்தேச்யன் –சக்கர பாணிம் ததாத

—————————————————————————–

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 19-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்–

எம்மா வீடும் வேண்டா என் தனக்குன் தாளிணையே
அம்மா அமையும் என ஆய்ந்து உரைத்த -நம்முடைய
வாழ் முதலாம் மாறன் மலர்த் தாளிணை சூடி
கீழ்மை யற்று நெஞ்சே கிளர் –————–19-

—————————————————————————————–
அவதாரிகை –

இதில்
பிராப்ய நிஷ்கர்ஷம் பண்ணின பாசுரத்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
பிறர்க்கு அவன் மோஷ பரதன் -என்னுமத்தை உபதேசிக்கிற அளவில்-2-8-
முதல்
நடுவு
இறுதி
இவர் மோஷத்தை ஸ்லாகித்துக் கொண்டு பேசுகையாலே
இவருக்கு மோஷத்தில் அபேஷையாய் இருந்தது -என்று
ஈஸ்வரன் அத்தைக் கொடுக்கப் புக –
தமக்கு உகப்பாகத் தரும் மோஷமும்
அஹங்கார கர்ப்பம் ஆகையாலே அபுருஷார்த்தம் -என்று அத்தை கழித்து –
பரமபதஸ்தனாய் ஸூகிக்கவுமாம்
சம்சாரஸ்தனாய் துக்கிக்கவுமாம்
எனக்கு அதில் ஒரு நிர்பந்தம் இல்லை
தேவர்க்கு உறுப்பாம் அதுவே எனக்கு வடிவாம்படி பண்ணி அருள வேணும்
என்று ஸ்வ பிராப்யத்தை நிஷ்கர்ஷிக்கிற
எம்மா வீட்டில் அர்த்தத்தை –
எம்மா வீடும் வேண்டா –-என்று துடங்கி அருளிச் செய்கிறார் -என்கை-

———————————————————————————————

வியாக்யானம்–

எம்மா வீடும் வேண்டா என் தனக்குன் தாளிணையே அம்மா அமையும் என ஆய்ந்து உரைத்த –
எவ்வகையாலும் விலஷணமான மோஷமும் வேண்டா –
சேஷ பூதனான எனக்கு
யாவந்ன சரனௌ சிரஸா தாரயிஷ்யாமி -என்னும்படி
சேஷியான தேவருடைய அங்க்ரி யுகளமே அமையும் என்று
உபய அனுகுணமாக முக்தியை ஆராய்ந்து தலை சேர
நிஷ்கர்ஷித்து அருளிச் செய்த –

வாய்ந்து- என்று
இவ்வர்த்தத்திலே பொருந்தி என்றுமாம் –
இது –எம்மா வீட்டை -அடியே துடங்கி அடி ஒத்தின படி –

நின் செம்மா பாத பற்புத் தலை சேர்த்து –என்று துடங்கி
உன் பொன்னடிச் சேர்த்து -என்று இறே தலைக் கட்டுத் தான் இருப்பது –
தலைக்கு கட்டு -தலைக்கட்டினார் -சாடு
தாளிணையே -என்கையாலே
தனக்கேயாக எனைக் கொள்ளும் ஈதே -என்றது ஸூசிதம்-
திருமுடியை திருவடிகளுக்கு பாத பீடம் ஆக்குகிறது
அத்யந்த பாரதந்த்ர்யம் இறே

நம்முடைய வாழ் முதலாம் மாறன் –
நம்முடைய ஸ்வரூப அனுரூபமான சம்பத்துக்கு அடியாம் ஆழ்வார்
ஆழ்வார் உடைய வாழ்வுக்கு அடிதனியேன் வாழ் முதலே -2-3-5–என்கிற ஈச்வரனாய் இருக்கும்
இவருடைய வாழ்வுக்கு அடி ஆழ்வாராய் இருக்கும் –

மலர்த் தாளிணை சூடி –
கோலமாம் என் சென்னிக்கு உன் கமலம் அன்ன குரை கழலே -4-3-6–என்றும்
பாத பற்புத் தலை சேர்த்து -என்கிறபடியே
செவ்விப் பூ சூடுவாரைப்போலே
பூ போன்ற அடி இணையைச் சூடி –

கீழ்மை யற்று நெஞ்சே கிளர் –
தத் இதர சேவை ஆகிற தாழ்ச்சி அற்று-தேவு மற்று அறியேன் -என்று அவனையும் தவிர்க்கிறார் -(தாழ்ச்சி எங்கும் தவிர்ந்து நின் தாள் இணை கீழ் வாழ்ச்சி என்றார் ஆழ்வார் -இவர் அதையும் தவிர்ந்து –கீழ்மை அற்று ஆழ்வார் மலர் தாளிணை சூடி இருப்பதே நம்முடைய வாழ் முதல் என்று அருளிச் செய்கிறார் )
ஆழ்வார் சேவையாலே
சத்தை பெற்று மனசே மயங்காமல்
மேன்மேல் எனக் கிளர்ந்து போரு –

—————————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s


%d bloggers like this: