பகவத் விஷயம் காலஷேபம் -64– திருவாய்மொழி – -2-8-6….2-8-11—ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

அவதாரிகை –

நீர் சொல்லுகிறவனுக்கு இந்த உத்கர்ஷம் எல்லாம் உண்டோ என்ன -முன்பே அர்ஜுனன் நிரூபித்து
நிர்ணயித்த அர்த்தம் நாம் இன்றி ஆராயும்படி குறை பட்டு இருந்ததோ -என்கிறார் –

தீர்த்தன் உலகளந்த சேவடி மேல் பூந்தாமம்
சேர்த்தி யவையே சிவன் முடி மேல் தான் கண்டு
பார்த்தன் தெளிந்து ஒழிந்த பைந்துழாயன் பெருமை
பேர்த்தும் ஒருவரால் பேசக் கிடந்ததே –2-8-6-

அவதாரத்தில் உண்டான பரத்வம் அதிபிரசித்தம் -விபவ பரத்வம் 2-2- சாதித்தத்தை மீண்டும் அருளுகிறார் –
இருவர் அவர் முதல் -நிர்வாககர் இவனே என்கிறார்
தீர்த்தன் உலகளந்த சேவடி மேல்-கண்ணனா உலகு அளந்தார் -பூர்வ அவதாரத்தில் ஊராக தொட்ட உலகத்தை தொட்ட அவதாரங்கள் –
பூந்தாமம் -அழகிய மாலைகளை
சேர்த்தி யவையே சிவன் முடி மேல் தான் கண்டு -சமர்ப்பித்து -அவற்றையே ஜடாமகுடத்திலே கண்டு -சர்வ நிர்வாஹகன் என்று தெளிந்து
பார்த்தன் தெளிந்து ஒழிந்த பைந்துழாயன் பெருமை பேர்த்தும் ஒருவரால் பேசக் கிடந்ததே –தெளியாத கிடந்த அம்சம் இல்லையே-ஸூ பிரசித்தம் அன்றோ என்று கருத்து –

தீர்த்தன் –
பாதோ தகேன ஸ சிவ ஸ்வ சிரோதருதேன–ஸ்தோத்ர ரத்னம் -13-என்றும் -சிவன் சிவனாக ஆனானே ஸ்ரீ பாத தீர்த்தம் தாங்கி -ச சிவ சிவ பூத் –
பாவனார்த்தம் ஜடாமத்யே யோக்யோஸ் மீத்யவதாரணாத் -என்றும் சொல்லுகிறபடியே
தன் திருவடிகளோட்டை ஸ்பர்சத்தாலே அசுத்தரையும் சுத்தராக்க வல்ல சுத்தியை உடையவன்
இது எப்போது தான் செய்தது என்னும் அபேஷையில்
உலகளந்த சேவடி -என்று அத்தை ஸ்மர்ப்பிக்கிறார்-
குறை கொண்டு -நான்முகன் திருவந்தாதி -9—தன்னுடைய ஆகிஞ்சன்யத்தை முன்னிட்டுக் கொண்டு –நான் முகன் குண்டிகை நீர் பெய்து –
அருகே நின்ற -தர்மதத்வம் இவன் நினைத்தவாறே ஜலமாய் இவன் குண்டிகையிலே பிரவேசித்தது
மறை கொண்ட மந்திரத்தால் வாழ்த்தி -ஸ்ரீ புருஷ ஸூக்தாதிகளைக் கொண்டு ஸ்துதித்து
கறை கொண்ட கண்டத்தான் சென்னி மேலேறக் கழுவினான் –
யுக்த அயுக்த நிரூபணம் பண்ண அறியாதே இவன் அநீதியிலே கை வளரா நின்றான் -அது போக வேணும் -என்று இவன் ஜடையிலே
ஏறும்படி அவன் திருவடிகளை விளக்கினான்
ஸ்ரீ பாத தீர்த்தம் கொண்டு துஷ் புத்ரர்கள் தலையிலே தெளிக்குமா போலே –
இவ்விடம் தன்னில் கிருஷ்ணாவதாரத்துக்கும் வாமனாவதாரத்துக்கும் வரையாதே எல்லாரோடும் பொருந்துமது உண்டாகையாலே சொல்லுகிறார் –
மேல் பூந்தாமம் சேர்த்தி யவையே சிவன் முடி மேல் தான் கண்டு பார்த்தன் தெளிந்து ஒழிந்த
அர்ஜுனனுக்கு ஒரு தேவதை பக்கலிலே ஒரு அஸ்தரம் பெற வேண்டுவதாய் அவன் அதுக்கு உத்யுக்தனான சமயத்திலே இவன்
ஸ்ரமத்தை ஆற்றுகைக்காக புஷ்பங்களை நம் காலில் இட்டு ஜீவி என்று அருளிச் செய்ய அவனும் திருவடிகளிலே இட
அந்த தேவதை ராத்ரியிலே ச்வப்னத்திலே அந்தப் புஷ்பங்களை தன் தலையிலே தரித்துக் கொண்டு வந்து
அஸ்த்ர பிரதானம் பண்ணிற்றதாக சொல்லக் கடவது இறே
அத்தை அருளிச் செய்கிறார்
பூ மாலை என்னுதல் –அழகிய மாலை என்னுதல்
அவையே
அவற்றோடு சஜாதீயங்கள் அன்றிக்கே
சிவன் முடி மேல் தான் கண்டு
பாடே பார்ச்வத்தில் அன்றிக்கே அவன் தலை மேல் கண்டானாயிற்று
தான் கண்டு
ஆப்தர் சொல்லக் கேட்கை அன்றிக்கே ஸ்ருதி ஸ்ம்ருதிகளாதல்-அன்றிக்கே தானே கண்டான் ஆயிற்று
பிரத்யபிஜ்ஞார்ஹமாம் படி பிரத்யஷித்து
பார்த்தன் தெளிந்து ஒழிந்த
அவன் சாரதியாய் தாழ நிற்கச் செய்தேயும் அவனுடைய ஈஸ்வரத்திலே கலங்காதே -ஸ து பார்த்தோ மஹா மநோ என்கிறபடியே
பேரளவுடைய அர்ஜுனன் நிரூபித்து நிர்ணயித்து –நம புரஸ்தாத ப்ருஷ்ட தஸ்தே-என்று -விஸ்வரூப தர்சனம் கண்டு அனுவர்த்தித்த
பைந்துழாயன் பெருமை
சர்வாதிகத்வ த்யோதகமான திருத் துழாய் மாலையை உடைய சர்வேஸ்வரன் உடைய பரத்வம்
பேர்த்தும் ஒருவரால் பேசக் கிடந்ததே
-இன்று சில அறிவு கேடர் -செல்ல விட்டு வர விட்டு-மகா மதிகளை செல்ல விட்டு -மதி கேடர்களை வர விட்டு – ஆராயும் அளவாய் இருந்ததோ —

பார்த்த- அத்தை பிள்ளை –க்ருத நிச்சயதார்த்தா-தெளிவு அடைந்தான் –கங்கா தர மௌலி மத்யே -திருவடி சம்பந்தம் எது வானாலும் தலையால் தாங்கிக் கொள்வான் -பரம சிவனை வைத்து– திரிவிக்ரமனுக்கும் கிருஷ்ணனுக்கும் சாம்யம் சொல்லலாமே -கீழே ஊராக தீண்டி உலகமாக தீண்டி -சொன்னோம் -இங்கு பரம சிவனை வைத்து சாம்யம்  –

———————————————————————————–

அவதாரிகை –

ஒருவன் -அர்ஜுனன் -ருத்ரன் -அனுவர்த்தனம் கொண்டு நிச்சயிக்க வேணுமோ –அவனுடைய இஷ்ட சர்வ சேஷ்டா விஷயமாய் அன்றோ
இஜ்ஜகத்து இருக்கிறது -இதுவே போராதோ பரத்வ ஹேது -என்கிறார் –

கிடந்து இருந்து நின்று அளந்து கேழலாய்க் கீழ்ப் புக்கு
இடந்திடும் தன்னுள் கரக்கும் உமிழும்
தடம் பெரும் தோள் ஆரத் தழுவும் பார் என்னும்
மடந்தையை மால் செய்கின்ற மால் ஆர் காண்பரே –2-8-7-

ரஷ்யமான ஜகத்தை பற்ற -வாத்சல்யத்தாலே -அநேக வியாபாரங்களைப் பண்ணும் – (அஷ்டாஷரத்துக்கு எட்டு கிரியைகள் இங்கே காணலாமே )
விராத குண்டம் -அடர்ந்த காட்டுக்குள் -இன்றும் -உண்டே –
அரவாகிச் சுமத்தியால் -எயிற்றில் ஏந்திதியால் -வாயில் விழுந்குதியால் ஈர் அடியால் ஒழித்தியால்--இது அறிந்து சீறாளோ-திரு மார்பில் வைகுவாள் –கம்பர்
நடந்து –பெருமாள் பண்ணின வியாபாரமும் உண்டே -அத்தையும் இதில் சேர்த்துக் கொள்ள வேண்டும்–பூமா தேவி சிலிர்த்து -புல்லானாதே -ஸ்பர்சத்தாலே – ஏதேனுமாக ஜனிக்கப் பெரும் -ஸ்தாவரம் ஆசைப் படுவர் பெரு மக்கள்-பாதுகையும் இல்லாமல் பெருமாள் ஸ்பர்சித்தாரே பெருமாள்
கிடந்து -திருப்புல்லாணி கடலுக்கு முன்னே -கடல் கடலை நோக்கி -ஜலக்கடல் -குணக்கடல் –
இருந்து -திருச் சித்ர கூடத்தில் இருந்தான் தன்னை
நின்று -ராவணவத அநந்தரம் -நின்ற –கண்டவாற்றால் உலகே தனதே என்று நின்றான்
புளிங்குடி-கிடந்தது வரகுணமங்கை –நின்றது எந்தை ஊரகத்தாய் -நின்றான் இருந்தான் திரு நீர் மலை –
பார்த்தன் தேன் தேர் முன் நின்றான் -இவரையும் அங்கே சேவிக்கலாமே
கண்ணனுக்கும் உண்டே –கிடக்கில் தொட்டில் கிளிய உதைத்திடும் –
நின்றவாறும் -நினைப்பு அரியன -நின்று நின்று நைகின்றேன்
அளந்து –திரு விக்ரமனாய் உலகை அனந்யார்ஹமாம் படி
கேழலாய்க் கீழ்ப் புக்கு இடந்திடும்-அண்ட கடாகத்தில் -விடுவித்து
தன்னுள் கரக்கும்-திரு வயிற்றுக்குள்
உமிழும் -வெளி நாடு காண உமிழ்ந்தும்
தடம் பெரும் தோள் ஆரத் தழுவும்-இடமுடைத்தான -அசாதாராண விக்ரகத்துடன்
பார் என்னும் மடந்தையை
மால் செய்கின்ற மால் -சர்வாதிகன் உடைய வியாமோகத்தை -அதிசய ஞானர்க்கும் அறிய ஒண்ணாது
ஆர் காண்பரே-

கிடந்து –
1-திருப் பாற் கடலிலே கிடந்தபடி யாதல் –
2-அஞ்சலிம் க்ருத்வா –பிரதிசிச்யே -என்னும்படியாகக் கடல் கரையிலே சாய்ந்தபடி யாதல்
பஹூம் புஜக போகாபம் -திரு வனந்த ஆழ்வான் மேலே சாய்ந்தால் போலே யாயிற்று திருக்கையை மடித்து சாய்ந்தால் இருக்கும்படி
படுக்கை எல்லாம் திரு வநந்த ஆழ்வான் அம்சம்
அரி ஸூதன-கிடந்த கிடக்கையிலே இலங்கை குடி வாங்க வேண்டும்படி இருக்கை
பிரதிச்யே மஹா ததே -ஒரு கடலோடு ஒரு கடல் ஸ்பரசித்துச் சாய்ந்தால் போலே இருக்கை –கிடந்ததோர் கிடந்த அழகிலே-
கல்லணை மேல் கண் துயிலக் கற்றாயோ காகுத்தா -இங்கே மல்லணை —
இருந்து –
பரமபதத்திலே இருந்தபடி யாதல்
உடஜே ராம மாஸீ நம் -என்று ருஷிகள் ஆஸ்ரமத்திலே இருந்து
நின்று
1-திருமலையிலே நின்றபடி யாதல்
2-வ்யூஹ பரம பதம் -அர்ச்சை –கிடந்தது இருந்து நின்று
3-ராவணவத சம நந்தரத்திலே கையும் வில்லுமாய் லங்கத்வாரத்திலே நின்ற நிலை யாதல்
4-வாலியைக் கொன்று நின்ற நிலையாதல்
அவஷ்டப்ய ஸ திஷ்டந்தம் ததர்ச தநுரூர்ஜிதம் ராமம் ராமானுஜம் சைவ பர்த்துச் சைவா நுஜம் சுபா -என்கிறபடியே
அவர்களுடைய ஸ்திரீகள் பக்கலிலே கேட்கும் இத்தனை இறே இவனுடைய பரத்வம்
தமஸ பரமோதாத சங்க சக்ர கதாதர -என்னுதல் -மண்டோதரி
த்வமேப்ரமேயச்ச -என்னுதல் -சொல்லா நிற்பார்கள் இறே-தாரை -சகாரம் -ஷமாவான் -சொல்ல வில்லை -விட்ட தப்பையும் பொருப்பானே காட்ட –
பரத்வம் ராமாவதாரத்தில் ஸ்பஷ்டம் -சத்ருக்கள் கூட புகழும் பெருமை அன்றோ -அதனால் ஸ்ரீ ராம விருத்தாந்தமாக வியாக்யானம்-
கோதண்ட கோடி -தனுஷ்கோடி -மூலை–பெரிய நீர் படைத்து -உறைந்து –கடைந்து -அடைத்து -உடைத்து -புஷ்பக விமானம் மூலமே திரும்பினார் –
அக்கரை போனதுமே உடைத்தார் -என்று ஒரு புராணம் சொல்லும் -மற்று ஒரு முறை தெற்கு நோக்கு -சம்புகனை கொல்ல வந்தார்
பூஜிக்கும் ஸ்தலமாக இருக்க வேண்டும் -கடந்து போக கூடாது என்று உடைத்து அருளினார் –

அளந்து-                                                               
தன்னைதான பூமியை மஹா பலி போல்வார் இறாஞ்சிக் கொள்ள அத்தை எல்லை நடந்து மீட்டுக் கொண்டு
கேழலாய்க் கீழ்ப் புக்கு இடந்திடும் –
நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத வராஹ வேஷத்தை பரிக்ரஹித்து -பிரளய சலிலத்துக்கு உள்ளே முழுகி
அண்டபித்தியிலே சேர்ந்த பூமியைப் பிரித்து எடுக்கும் –
ஸ்திரம் -யஜ்ஞ மூர்த்தி -மகா வராஹ-ஸ்புட பத்ம லோசனன் பெரும் கேழலார் -நீல வரை -கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடை கொண்ட எந்தாய்
தன்னுள் கரக்கும்
ரஷிக்க என்று ஒரு பேரை இட்டுக் கொண்டு கொம்பிலும் குளம்பிலும் கொள்ளாதே வயிற்றிலே வைத்து ரஷித்த படி –
உத்தர உத்தர ஆதிக்யம் சொல்லி –
கிடந்து-தொடங்கி-இடந்தகரந்த -வயிற்றில் வைத்து ரஷித்த விருத்தாந்தம்
மேலொரு காலம் பிரளயம் வரும் -என்று ஏலக்கோலி -ஆராய்ந்து -பிரளயம் வந்தாலும் இங்குண்டோ என்று இளைத்துக் காட்டலாம் படி
முன்புத்தையது ஒன்றும் தெரியாதபடி வைக்கும்
உமிழும்
இவை என்பட்டன -என்று பார்க்கைக்காக பின்னை வெளிநாடு காண உமிழும்
தடம் பெரும் தோள் ஆரத் தழுவும்-
மிகப் பணைத்த திருத் தோள்களாலே -ஆரும்படியாகத் தழுவும்
அவள் தழுவியதால் தோள்கள் தடம் பெரும் தோள்கள் ஆயினவாம் –ஈர் இரண்டு தோள் -அல்லி மாதர் புல்க நின்ற ஆயிரம் தோளன் அன்றோ
பார் என்னும் மடந்தையை
ஸ்ரீ பூமிப் பிராட்டியை
பூமியை பிரகாரமாக வுடையவள் ஆகையாலே தத் வாசக சப்தத்தாலே சொல்லுகிறது
தன் விபூதியினுடைய ரஷணம் ஒரு தலையானால் அவன் படும் பாட்டை அனுசந்தித்து ஹ்ருஷ்டையாய்-அதுக்கு அபிமானியான
ஸ்ரீ பூமிப் பிராட்டி அணைக்கும் -அத்தாலே தானும் ஹ்ருஷ்டனாய் அணையா நிற்கும்
மால் செய்கின்ற மால் ஆர் காண்பரே –
மால் -சர்வாதிகனான சர்வேஸ்வரன்
செய்கின்ற மால் -அவன் ஏறுகிற பிச்சை -அவன் காட்டும் ச்நேஹத்தை
ஆர் காண்பாரே -ஒருவராலே இவ்வளவு என்று பரிச்சேதிக்கலாய் இருந்ததோ –

———————————————————————–

அவதாரிகை –

அவனுடைய அத்புத கர்மங்களை தனித்தனியும்
திரளவும் பரிச்சேதிக்கப் போகாது எத்தனையேனும் அளவுடையார்க்கும் என்கிறார்

காண்பாரார் எம்மீசன் கண்ணனை என் காணுமாறு
ஊண் பேசில் எல்லா வுலகுமோர் துற்றாற்றா
சேண் பால் வீடோ வுயிரோ மற்று எப்பொருட்கும்
ஏண்பாலும் சோரான் பரந்துளான் எங்குமே –2-8-8-

பிரகாசிப்பித்த அதிசயித ஆகாரம் துரவவபோதம் -அறிய அரியது
காண்பாரார் எம்மீசன் கண்ணனை-அறிய வல்லார் அறியார் -ஈசனை கண்ணனை -காண பிறந்தவரையும்
-எனக்கு மட்டும் கண்ணன் -மற்றவர்களுக்கு ஈசன்
காட்டக் கண்ட எனக்கு கண்ணன் -அதனாலே ஈசன் ஆனார்
என் காணுமாறு -எப்படி அறிய முடியும்
ஊண் பேசில்-உணவு ஏது என்று பார்த்தால்-
எல்லா வுலகுமோர் துற்றாற்றா-ஒரு பிடி சோற்றுக்கும் ஆகாதே –
சராசரங்களையும் வயிற்றில் -அன்னம் -அளவுடன் உண்டால் நாம் விழுங்குவோம் -அதிகமாக உண்டால் அது நம்மை விழுங்கும்
சேண் பால் வீடோ -வீடோ வைகுந்தம் -அப்பால் அவன் -உயர்ந்த -ப்ருஷ்டேஷூ-
சேண் பால் வீடோ வுயிரோ மற்று எப்பொருட்கும் -ஸ்ரீ வைகுந்தம் சேதன அசேதனம் -அவனே அந்தராத்மா
ஏண்பாலும் சோரான் – ஏண் எண்ணிக்கை –ரேகை கிளிக்கும்- இடமும் கொடான் -பதிவுப் பத்திரம் அவனுக்கே -எட்டு வீதியும் அரங்கனுக்கே –
விழ விட மாட்டான்
பரந்துளான் எங்குமே-ஜகம் அடங்கிலும் –எங்கும் பரந்து -சர்வ வியாபகன் –
1-சர்வ ஜகத் க்ராஹா சீலன்-2 -பரமபத நிலையன் –3-அந்தர் பஹிச்ச வியாப்தன் –எங்கே பரிச்சேதிக்க முடியும்- அசை -சொல் –வினைச் சொல்

காண்பாரார் எம்மீசன் கண்ணனை –
சர்வேச்வரனாய் இருந்து வைத்து -கிருஷ்ணனாய் வந்து அவதரித்து எனக்கு கையாளான் ஆனவனை
அவன் தானே காட்ட நான் கண்டால் போலே காண்பார்க்கு காணலாம் இத்தனை போக்கி ஸ்வ யத்னத்தால் சிலர்க்குக் காணப் புக்கால்
காணப் போமோ -அது கிடக்க -காண்பார் சில உண்டாயிற்று
என் காணுமாறு
எவ்வளவைத் தான் காண்பது
அளவுடையார் சிலர் காண இழிந்தார்கள் என்னா-விஷயத்தைப் பரிச்சேதிக்கப் போகாதே –
ஏன் தான் பரிச்சேதிக்கப் போகாது ஒழிகிறது என்னில் -இது வன்றோ அவனுடைய அபதானம் இருக்கிறபடி
பர வ்யூஹ விபவ அந்தர்யாமி அர்ச்சை -ஒவ் ஒன்றிலும் பல பல உண்டே –
ஊண் பேசில் எல்லா வுலகுமோர் துற்றாற்றா-
அவனுடைய ஊண் ஆகிற ஒரு செயலைச் சொல்லப் பார்க்கில் சர்வ லோகங்களும் ஒரு அவதானத்துக்குப் போராது-
அபதானம் -செயல் -அவதானம் –படிக்கு-ஒரு பிடிக்கு
இவ்வபதானத்தை உடையவன் ஒருவரால் பரிச்சேதிக்கலாய் இருக்கிறதோ –
அவனுடைய செயல் பரிச்சேதிக்க ஒண்ணாது என்கைக்கு ஸ்வரூபமோதான் பரிச்சேதிக்கலாய் இருக்கிறது என்கிறார்
சேண் பால் வீடோ -வுயிரோ மற்று எப்பொருட்கும் –
உயர்த்தியே ஸ்வபாவமாக உடைத்தான பரம பதம் என்ன -முக்தாத்மா ஸ்வரூபம் என்ன -மற்றும் உண்டான
தேவாதிகள் என்ன -இவற்றை உடைத்தான
ஏண்பாலும் சோரான்
1-எண்ணப் பட்ட பிரதேசங்கள் என்னுதல்
2-எட்டுத் திக்கும் வியாபித்து விடாதே நிற்கும் என்னுதல்
பரந்துளான் எங்குமே —
இப்படி வியாபிக்கும் இடத்தில் ஒரு குறை உண்டாம் படி இருக்கை அன்றிக்கே -ஜாதி வியக்தி தோறும் – குறைவற வியாபித்து இருக்கும்
ஆனபின்பு வ்யாபக வஸ்துவை வ்யாபத்திலே ஓன்று பரிச்சேதித்துக் காண்கை-என்று ஒரு பொருள் உண்டோ –

ஈசன் எம்கண்ணனை காண்பாரார்–ஊண் பேசில் எல்லா வுலகுமோர் துற்றாற்றா-சேண் பால் வீடோ வுயிரோ
மற்று எப்பொருட்கும் – ஏண்பாலும் எங்குமே பரந்து சோரான் உளான் என் காணுமாறு-என்று அந்வயம்

நச்சினார்க்கு இனியர் -பிச்சு பிச்சு அர்த்தம் கொள்வார் -என்பர் -எழுத்து ஒவ் ஒன்றையும் பிச்சி பிச்சி கொண்டு கூட்டி அர்த்தம் கொள்வாராம்

——————————————————————————-

அவதாரிகை –

நீர் சொன்னது அனுபபன்னமாய் இருந்ததீ-ஒரு வஸ்துவே அநேக பதார்த்தங்களில் குறைவற வியாபித்து இருக்கும் என்றால்
இது கூடுமோ என்ன கெடுவிகாள்-அவன் சர்வகதத்வத்தை இசையாத இரணியன் பட்டது படாதே கிடி கோள்-என்கிறார் –

எங்கும் உளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து
இங்கில்லை யால் என்று இரணியன் தூண் புடைப்ப
அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய என்
சிங்கப்பிரான் பெருமை யாராயும் சீர்மைத்தே –2-8-9-

ஆஸ்ரித சுசீல்ய அதிசயம் -அபரிச்சின்னம்
எங்கும் உளன் கண்ணன் -சர்வேஸ்வரன் -சர்வ வியாபகன் -நிர்வகிப்பவன் -சர்வத்ர சந்நிஹிதன்
என்ற மகனைக் காய்ந்து இங்கில்லை யால் என்று இரணியன் தூண் புடைப்ப -அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய-என் சிங்கப்பிரான் பெருமை யாராயும் சீர்மைத்தே-மகா உபாகாரம் செய்து அருளிய -ஆஸ்ரித பஷபாதி என்ற பெருமை
பக்த அபசாரம் பொறுக்க மாட்டானே -நெஞ்சால் அறுதி இட்டு அறிய முடியாதே

எங்கும் உளன் கண்ணன்-
இதுவாயிற்று அவன் சொன்ன தப்பு -சர்வேஸ்வரன் சர்வ கதன் என்றான்
மயா இதம் சர்வம் ததம் -ஸ்ரீ கீதை -9-4-எங்கும் உள்ளேன் -சர்வத்துக்கும் பீஜம் –அனைத்துக்கும் அந்தராத்மா என்றானே –
ந ததஸ்தி விநா யத் ச்யான்மயா மயா பூதம் சராசரம் –ஸ்ரீ கீதை -10-39–என்று அவன் சொன்ன வார்த்தை யாயிற்று இவன் தான் சொல்லிற்று –
பூமியில்- தண்ணீரில்- ஆகாசம்- வெளிச்சம் -திக்கில்- திர்யக்கில் -சத் அசத் -இருக்கிறார் என்னலாம் இல்லை என்னலாம் –
உனக்கு உள்ளும் எனக்கு உள்ளும் உளான் சர்வத்ர அஸ்தி சதா அஸ்தி -என்றானே இவன் –
என்ற மகனைக் காய்ந்து
இவ்வர்த்தத்தை சத்ருவே சொன்னாலும் கேட்ட போதே காலில் விழ வேண்டும் வார்த்தை சொல்லிற்று
பிரமாண விருத்தமான அர்த்தத்தைச் சொல்லிலும் கொண்டாட வேண்டும்படி யாயிற்று சம்பந்தம்
பருவத்தாலும் கொண்டாட வேண்டும்
பள்ளியில் ஓதி வந்த -பள்ளி ஓதும் பருவத்தில் உள்ளவை அடைய கொண்டாட்டமாய் இருக்கும்
அதுக்கு மேலே தன் சிறுவன் -தன் வயிற்றில் பிறந்தவன் வார்த்தை மிகவும் பிரியமாய் இருக்கும்
வாயில் ஓர் ஆயிர நாமம் -அதுக்கு மேலே திரு நாமத்தைச் சொல்லிற்று
தமது பிள்ளை ஒன்றே சொன்னாலும் -ஆயிரம் -ஆயிர சமம் என்றுமாம் –
ஒள்ளியவாகிப் போந்த -இவை ஒன்றுமே இல்லை யாகிலும் சொன்ன போதே இனிமை தான் கொண்டாட வேணும்
ஆங்கு அதனுக்கு ஒன்றும் ஓர் பொறுப்பு இலனாகி -அசஹ்ய அபசாரம் இறே
அந்ய உத்கர்ஷம் அசஹ்யம் -பிறர் நல்லது எனக்கு பிடிக்காதது அசஹ்ய அபசாரம் –
பிள்ளையைச் சீறி -திரு நாமம் சொன்னதே ஹேதுவாக புத்திரன் அன்று என்று விட்டான் அவன்
திரு நாமம் சொன்னவர்களோடே தமக்கு எல்லா உறவும் உண்டாக நினைத்து இருக்கையாலே இவர் பிள்ளை என்கிறார்
பிள்ளையைச் சீறி வெகுண்டு —
மகனைக் காய்ந்து –
வயிற்றிலே பிறந்தவனே இருக்கச் செய்தேயும் திரு நாமம் சொல்லப் பொறுக்க மாட்டாமே சீறினான் யாயிற்று –
இங்கில்லை யால் என்று இரணியன் தூண் புடைப்ப
எங்கும் உளனாகில் நீ சொல்லுகிறவன் இங்கு இல்லையே இரானே என்று தூணை அடித்துக் காட்டினான்
அளந்திட்ட தூணை அவன் தட்ட -முன்பே நரசிம்ஹத்தை வைத்து நட்ட தூண் என்ன ஒண்ணாதே
தானே தனக்கு பொருந்தப் பார்த்து நறுக்கி நட்ட தூண் ஆகையாலே
அவன் தட்ட -பெரியாழ்வார் திருமொழி -1-7-9-வேறே சிலர் தட்டினார்கள் ஆகில் கையிலே அடக்கிக் கொண்டு வந்து தூணிலே
பாய்ச்சினார்கள் -என்னவுமாம் இறே -தானே யாயிற்று தட்டினானும்
அங்கு அப்பொழுதே
அத் தூணிலே அடித்த இடத்திலே -அவனுடைய பிரதிஜ்ஞ்ஞா சம காலத்திலே
அவன் வீயத் தோன்றிய
தன் தோற்றரவிலே அவன் பிணமாம் படி தோற்றின
அதிர்த்துக் கொண்டு புறப்பட்ட போதை அட்ட ஹாசமும் -நா மடித்துக் கொண்ட உதடும் -நெற்றியது கண்ணும்--உச்சியது புருவமுமாய்க் கொண்டு-
தோற்றின போதே பொசுக்கின பன்றி போலே உருகினான் ஆயிற்று பொன்னன் ஆகையாலே
என் சிங்கப்பிரான் பெருமை-
ஆஸ்ரித வர்க்கத்துக்காக நரசிம்ஹமாய் உபகரித்தவனுடைய பரத்வம்
யாராயும் சீர்மைத்தே –
இன்று சிலரால் ஆராயும் படி இருந்ததோ –

—————————————————————————————

அவதாரிகை –

இவர்களை விடீர் -நாம் முந்துற முன்னம் இவர்களைப் போலே ஆகாதே –அவனை அனுபவிக்கப் பெற்றோம் இறே
என்று ஸ்வ அனுபவ லாபத்தாலே ஹ்ருஷ்டராகிறார் –

சீர்மை கொள் வீடு ச்வர்க்க நரகு ஈறா
ஈர்மை கொள் தேவர் நடுவா மற்று எப்பொருட்கும்
வேர் முதலாய் வித்தாய் பரந்து தனி நின்ற
கார் முகில் போல் வண்ணன் என் கண்ணனை நான் கண்டேனே –2-8-10-

சர்வ பிரகார உபகாரகன் மோஷ ப்ரதன் -வேர் முதலாய் வித்தாய் பரந்து தனி நின்ற கார் முகில் போல் வண்ணன்-அனுபவிக்கப் பெற்றேன்
சீர்மை கொள் வீடு -பகவத் கிருபை ஒன்றாலே பெறக் கூடிய -கர்மங்களால் இல்லாமல்
ச்வர்க்க நரகு-புண்ய பாபம் அடியாக
ஈறா–ஈர்மை கொள் தேவர் நடுவா-பலம் கொடுக்கும் ஈரம் கொண்ட தேவர் -உபய பாவனா நிஷ்டர் -ப்ரஹ்ம கர்ம பாவனை கொண்ட தேவர்கள் –
மற்று எப்பொருட்கும் -பிரதம பாவியான சமஸ்த
வேர் முதலாய் வித்தாய் -சக காரி -நிமித்த -உபாதான
பரந்து தனி நின்ற -வியாப்தன் -அவற்றில் வேறாய் -தனியாய் -நின்ற
கார் முகில் போல் வண்ணன்-மேகம் போன்ற வடிவை
என் கண்ணனை நான் கண்டேனே -சுலபனான கண்ணனை -கண்டு ஸுவ லாபத்தால் ஹிருஷ்டர் ஆகிறார் –

சீர்மை கொள் வீடு சவர்க்க நரகு ஈறா ஈர்மை கொள் தேவர் நடுவா மற்று எப்பொருட்கும் –
சர்வ பிரகாரத்தாலும் நன்றான பரம பதம் -பரிமித ஸூகமான ஸ்வர்க்கம் -நிஷ்க்ருஷ்ட துக்கமேயான நரகம்
-இவை முடிவாக ஈரப் பாடுடையரான தேவர்கள் நடுவாக மற்றும் உண்டான திர்யக்காதிகளும்
பலம் அனுபவிக்கும் இடங்கள்பல பிரதா நடுவில்கர்மங்கள் செய்பவர் ஈறாக அருளிச் செய்கிறார் –
வேர் முதலாய் வித்தாய் –
த்ரிவித காரணமும் தானேயாய்
பரந்து –
தத் ஸ்ருஷ்ட்வா -ததேவ அநு ப்ராவிசத் தத் அநு பிரவிச்ய சச்ச த்யச்சா பவேத் –என்கிறபடியே — தஜ்ஜ தல்ல தன்ன தஜலன –
முந்துற இவற்றை யடைய உண்டாக்கி
பின்னை இவற்றினுடைய வஸ்துத்வ நாம பாக்த்வங்களுக்காக அநு பிரவேசித்து -இப்படி ஜகதாகாரனாய் நின்று –

வித்து –மாறி மரம் ஆகும் -உபாதானம் -சேதன அசேதன விசிஷ்ட ப்ரஹ்மம் உபாதான காரணம்
முதல் -சங்கல்பம் -நிமித்த -சங்கல்ப விசிஷ்ட ப்ரஹ்மம்-நிமித்த காரணம்
வேர் -கெட்டியாக இருந்து நிற்கும் சஹ காரி காரணம் -ஞான சக்த்யாதி குண விசிஷ்ட ப்ரஹ்மம்
பரமபததுக்கு காரணத்வம் உண்டோ -நித்யம் அன்றோ
பரம பதம் – நித்யா இச்சா வேஷத்தால் நிமித்த காரணம் -கைங்கர்யம் கொண்டு கொண்டே இருப்பேன்-வேற மாதிரி சங்கல்பம் அங்கே –நித்யா இச்சா விசிஷ்ட ப்ரஹ்மம்-அப்ராக்ருத அசித் சித் ஜீவ விசிஷ்ட ப்ரஹ்மம் -மண்டப கோபுராதிகள் அங்கே-நித்யர்-

தோன்றின போதே வீய்ந்தான் -வீய -அங்கு அப் பொழுதே வீய தோன்றிய
அண்ணல் ராமானுஜன் வந்து தோன்றிய அப் பொழுதே -நாரணற்கு ஆயினரே
தோன்றிய பின் வியாபாரிக்க வேண்டாம்
சிருஷ்டி சமகாலத்திலே அந்தர்யாமியாகி அநு பிரவேசித்து –

தனி நின்ற கார் முகில் போல் வண்ணன் என் கண்ணனை நான் கண்டேனே –
இப்படி ஜகத் சரீரனாய் நின்ற அளவே யன்றிக்கே தன்னுடைய வ்யாவ்ருத்தி தோற்றும்படி
ஸ்ரீ வைகுண்டத்திலே வர்ஷூக வலாஹகம் போலே இருக்கிற அழகிய திருமேனியை யுடையனாய் இருந்து வைத்து கிருஷ்ணனாய்
வந்து அவதரித்து எனக்குக் கையாளனானவனை நான் முந்துற முன்னம் கண்டு அனுபவிக்கப் பெற்றேன் -என்கிறார் –
தனி நின்ற
வைகுண்டத்தில் தனித்து உள்ளார் –
தோஷங்கள் தட்டாமல் உள்ளார் என்றுமாம்

————————————————————————————————–

அவதாரிகை –

நிகமத்தில் இத் திருவாய்மொழி அப்யசிக்க வல்லார்கள் இத் திருவாய் மொழியில் சொன்ன முக்த ப்ராப்ய போகத்தைப் பெறுவார் -என்கிறார் –

கண்டலங்கள் செய்ய கருமேனி யம்மானை
வண்டலம்பும் சோலை வழுதி வளநாடன்
பண்டலையில் சொன்ன தமிழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லார்
விண்டலையில் வீற்று இருந்து ஆள்வர் எம்மா வீடே –2-8-11-

ஸ்வ ராஜ்ய நிர்வாகத்வம் பலன் –
கண்டலங்கள் செய்ய -சிகப்பு -கண் தலங்கள் -பரப்பு எங்கும் சிவந்த –கரியவாகி -பெரியவாகி –
கருமேனி யம்மானை -திருமேனி கறுத்து -ச்யாமளமான திருமேனி -பரபாகம் -சர்வ ஸ்வாமி
வண்டலம்பும் சோலை வழுதி வளநாடன் -சோலை வாய்ப்பு -தேன் ஓடும்படி -மது வெள்ளத்தில் வண்டுகள்
பண்டலையில் சொன்ன -தலையான பண் -பண் தளமாமும் படி -அதன் மேலே என்றுமாம்
தமிழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லார் –
விண்டலையில் வீற்று இருந்து -பரமாகாசத்தில் மேல் –ச்வாரட் பவதி -பரம ஸ்வராட் -முக்தன் -பாரதந்த்ரர் தான் –
-கர்ம பாரதந்த்ரம் இல்லை என்கிறார் கர்மம் கோல் செலுத்தாத தேசம் கிருபா பாரதந்த்ர்யம் உண்டே
ஆள்வர் எம்மா வீடே -எங்கும் ஆள்வர் -சர்வ பிரகார விசிஷ்டம் –அந்த -மா வீடு -நிரதிசய போக்யமான மோஷ ஆனந்தம் –
அனுபவிப்பார்கள் -எனக்கும் சம்பந்திகளுக்கும் அருளுவான் -முக்த பிராப்ய போகம் பெறுவார் என்கிறார்

கண்டலங்கள் செய்ய கருமேனி யம்மானை –
பூ தலங்கள்-என்னுமா போலே திருக் கண்களின் பரப்பைப் பற்றச் சொல்லுகிறது
பரந்த சிவந்து இருந்துள்ள திருக் கண்களையும் -அவற்றுக்கு பரபாகமாம் படி கறுத்த திரு மேனியையும் உடைய சர்வேஸ்வரனைக் கவி பாடிற்று
பிரதிபாத்ய வைலஷ்யண்யத்தை சொல்கிறார்
வண்டலம்பும் சோலை வழுதி வளநாடன் -பண்டலையில் சொன்ன தமிழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லார் –
வெள்ளத்திலே அலைவாரைப் போலே தேன் வெள்ளத்திலே வண்டுகள் அலையா நின்றுள்ள சோலையை உடைய
திரு வழுதி வள நாட்டை உடைய ஆழ்வார் அருளிச் செய்தது –
வக்த்ரு வைலஷ்யண்யத்தை சொல்கிறார்
தலையான பண்ணிலே மேலே சொன்ன தமிழ் யாயிற்று இப்பிரபந்தம் தான்
அன்றியே -பண்ணின் மேலே சொன்ன -என்னுதல்
பிரபந்த வைலஷ்யண்யத்தை சொல்கிறார்
ஆயிரத்திலும் வைத்துக் கொண்டு இப்பத்தையும் அப்யசிக்க வல்லார்கள் –
நாகஸ்ய ப்ருஷ்ட்டே -என்கிறபடியே பரமபதத்தில் தங்கள் வ்யாவ்ருத்தி தோற்ற இருந்து -எவ்வகையாலும் விலஷணமான
மோஷமானது தங்களுக்கு விதேயமாம் படி பெறுவார்
நாராயண வல்லி–நா கஸ்ய -ந அஹம் பவதி -துக்கம் இல்லாத -கலசாத தேசம் -பரமாகாசம் உபரி பிரதேச -வாக்குக்கும் மனத்துக்கும் எட்டாத
அம்பச்ய -கனை கடலும் புவனச்ய -கல்லும்
விண்டலையில் வீற்று இருந்து ஆள்வர் எம்மா வீடே
விண் தலை -தலையான விண்ணிலே என்னுதல்
அங்குள்ளார் தங்கள் ஆஜ்ஞ்ஞா அநு வர்த்தனம் பண்ணும் படியாகப் பெறுவார்
எம்மா வீடே —ஆத்மா லாபத்து அளவும் அன்றிக்கே பரம புருஷார்த்த லஷண மோஷத்தை ஆளப் பெறுவார் -இனிமையான உயர்ந்த வீடு –
வீற்று இருந்து –
சாம்சாரிகமான சங்கோசம் எல்லாம் தீரும் படி வீறு பட்டு இருந்து -வீற்று இருந்து -பார்த்தாலே அனுபவம் மிக்கு இருப்பது தோன்றுமே –
ஆள்வர் எம்மா வீடே –
தன் பால் மனம் வைக்கத் திருத்தி வீடு திருத்துவான் -1-5-10-என்று எனக்கும் என் பரிகரத்துக்கும்
தருவானாக சமைத்து நிற்கிற பரம பதத்தை ஆளப் பெறுவார் –
ஆழ்வார் சம்பந்தம் அடியாகவே ஆளப் பெறுவோமே –

முதல் பாட்டில் இத் திருவாய் மொழியில் பரக்கச் சொல்லுகிற அர்த்தத்தை சங்க்ரஹேண அருளிச் செய்யா நின்று கொண்டு
சம்சாரம் ஆகிற இக்கடலைக் கடக்க வேணும் என்று இருப்பவர்களுக்குக் கடத்திக் கொடுக்கும் என்றார்
இரண்டாம் பாட்டில் -அவன் வேணுமோ அவனோட்டை சம்பந்தமே கடத்தும் என்றார்
மூன்றாம் பாட்டில் அவனுடைய அதி மானுஷ சேஷ்டிதங்கள் பிரத்யஷிக்கலாம் என்றார்
நாலாம் பாட்டில் –அந்தமில் பேரின்பத்தைப் பெற வேணும் என்று இருப்பார் அவனை ஆஸ்ரயிங்கோள் என்றார்
அஞ்சாம் பாட்டில் -கீழ் இணைவனாம் எப்பொருட்கும் என்றத்தை விவரித்தார்
ஆறாம் பாட்டில் இவ் உத்கர்ஷம் எல்லாம் அவனுக்கு உண்டோ என்ன நாம் ஆராய வேண்டாதபடி அர்ஜுனன் பண்டே தெரிந்து அறுதியிட்டான் என்றார்
ஏழாம் பாட்டில் -ஒருவன் அநுவர்த்தனம் கொண்டு அறிய வேணுமோ –அவனுக்கு இஷ்ட சர்வ சேஷ்டா விஷயமாய் அன்றோ ஜகத்து இருக்கிறது என்றார்
எட்டாம் பாட்டில் வ்யாப்தி தொடக்கமான அவனுடைய அபதானங்கள் ஒருவரால் பரிச்சேதிக்க முடியாது என்றார்-
ஒன்பதாம் பாட்டில் –அவனுடைய வ்யாப்தியை இசையாதார் ஹிரண்யன் பட்டது படுவர் -என்றார்
பத்தாம் பாட்டில் –ஏவம் பூதனானவனை நான் கண்டு அனுபவிக்கப் பெற்றேன் என்றார்
நிகமத்தில் இது கற்றார்க்கு பலம் சொல்லித் தலைக் கட்டினார் –

எட்டாம் பாட்டில்-வியாப்தி தொடக்கம் -அபதானங்கள் -ஸ்வரூபமும் சேஷ்டிதங்களும் -எத்தையும் – -பரிச்சேதிக்க முடியாதே –
உகந்த உள்ளத்தான் -வேதத்துக்கு உகப்பு -மகா பலி உதாரன் உகப்பு -இந்த்ரன் உகப்பு –ஆழ்வாருக்கு உகப்பு -பெருமாளுக்கு உகப்பு ஐந்தும் உண்டே
அகில ஜகன் நியமன /அவதரண /ஆஸ்ரித பராதீன /வயிற்றில் வைத்து ரஷித்து உமிழ்ந்து /எங்கும் வியாபித்து
-தத் பிரத்யுக்த வியாபாரங்கள் எல்லாம் -பரிச்சேதிக்க முடியாது என்றபடி

——————————————————————————————–

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

ஹரே பிரியதாம் அபேஷ்ய
சர்வாத்மான் ஸூ ஜனாய முனி அஷ்டமேன
மோஷ பிரதத்யம் உபதிஸ
தத் ஆபி முக்ய அலாபாத்
ஸூ லாபம் அதிகம் பஹுமன்ய தேஸ்ம –

—————————————————————–

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –

பிராப்த்யாகார உபபத்யா
ஜனி பரிஹரநாத் –நீந்தும் துயர் பிறவி
விஸ்வ ஸ்ருஷ்ட்யாதி சக்தே 
நிஸ் ஸீம ஆனந்த தேசான்வயத
ரஷணார்த்த அவதாராத் 
ஸூ பிரய்காத அனுபவ -பிரபல
விவித விகரணாத் –பூமா தேவி மால் செய்யும் மால் -கோவர்த்தனம் நின்றும்
கோபிகள் கோப குமாரர்கள் நடுவில் அமர்ந்தும் -கோபிகள் மடியில் சயநித்தும்
வியாப்தி வைசித்திரவத்வாத் 
பக்தைகி த்ராக்த்ருஷ்ய பாவாத் –சிங்கப் பிரான்
அகில பல த்ருதேத்
மோஷ ஸூ க பிரதன்

—————————————————————–

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 18-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்–

அணைந்தவர்கள் தம்முடனே ஆயன் அருட்காளாம்
குணம் தனையே கொண்டு உலகைக் கூட்ட -இணங்கி மிக
மாசில் உபதேசம் செய் மாறன் மலரடியே
வீசு புகழ் எம்மா வீடு–—————18-

மாறன் மலர் அடியே–வீசு புகழ்– எம்மா வீடு –
மாசில் உபதேசம் செய்-கியாதி லாப பூஜைக்காக இல்லாத

——————————————————-
அவதாரிகை –
இதில்
மோஷ பிரதத்வத்தை உபதேசித்த பாசுரத்தை
அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
இப்படி ஈஸ்வரன் சபரிகரமாக விஷயீ கரித்து விடுகிற மாத்ரம் அன்றிக்கே
முக்த ப்ராப்யமான போகத்தை
தமக்கும் தம் பரிகரத்துக்கும் தருவானாகப் பாரிக்கிற படியைக் கண்டு
எல்லாருக்கும் தம்மோடு ஒரு சம்பந்தம் சித்திக்கும் படி
சம்சாரிகளுக்கு அவனுடைய மோஷ பிரதத்வத்தை உபதேசிக்க
அவர்கள் அத்தைக் காற்கடைக் கொள்ள ஸ்வ லாபத்தைப் பேசி த்ருப்தராகிற
அணைவது அரவணை மேல் அர்த்தத்தை
அணைவர்கள் தம்முடனே -என்று அருளிச் செய்கிறார் என்கை-

———————————————————————-

வியாக்யானம்–

அணைந்தவர்கள் தம்முடனே –
அணைவது அரவணை -யில்படியே-
ஸ்ரீ பூமி நீளா நாயகனாய்
அநந்த போக பர்யங்களில் எழுந்து அருளி இருக்கிற
சர்வேஸ்வரனை கிட்டி அடிமை செய்கிற
அநந்த பரிமுகரான சூரி சங்கங்களோடு கூட்ட -என்னுதல்
அன்றிக்கே
கேசவன் தமர் -என்னும்படி
கீழ் அந்தரங்கர் ஆனவர்கள் தங்களோடு கூட்டுதல் என்னுதல்
தம்முடனே -என்கிறது
ஆழ்வார் தம்முடனே -என்றதாகவுமாம் –

தம்முடனே அணைந்தவர்கள் –
எமர் -என்று தாம் அபிமாநிக்கும் படியாக
தம்மோடு அன்வயம் உண்டாம்படி யானவர்கள் -என்னுதல்
ஆயன் அருட்காளாம் குணம் தனையே கொண்டு
எப்பொருட்கும் –இணைவனாம் -என்று –
ஆஸ்ரித ஸூலபனாய் அவதரித்த கிருஷ்ணன் உடைய கிருபைக்கு விஷயமாம் படியாக –
மேலும் –என் கண்ணனை நான் கண்டனே –என்றார் இறே –
ஏவம் விதனானவனுடைய மோஷப் பிரதத்வம் ஆகிற
குணம் ஒன்றையுமே கொண்டு என்னுதல் –

அன்றிக்கே –
குணங்களையே கொண்டு -என்ற பாடம் ஆனபோது
வீடு முதலாம் -என்கிற மோஷ பிரதத்வாதி குணங்களையே
உபாயாந்தர நிரபேஷமாக
திருத்துகைக்கு பரிகரமாகக் கொண்டு -என்னுதல்

அவ் வவதாரத்திலே இறே
இடைச்சி
இடையன்
தயிர்த் தாழி
கூனி
மாலாகாரர்
பிணவிருந்து
வேண்டி அடிசில் இட்டவருக்கு எல்லாம் மோஷம் கொடுத்தது
இணைவனாம் யெப்பொருட்க்கும் வீடு முதலாம் –என்று அவதார சாமான்யமாய் –
வேடன்
வேடுவச்சி
பஷி
குரங்குகள்
சரா சரங்களுக்கும்
மோஷம் கொடுத்தமை யுண்டாய் இருக்கவும்
ஆயனருக்கு -என்றத்தைப் பற்ற
கிருஷ்ணாவதாரத்திலே ஊன்றி சொல்லிற்று –
கச்ச லோகன் அநுத்தமான் -என்று இறே
பெருமாள் பெரிய உடையாருக்கு பிரசாதித்தது –
இப்படி அவதாரத்திலே மோஷ பிரதத்வாதி குணங்களைக் கொண்டு திருத்தி –

உலகைக் கூட்ட -இணங்கி மிக –
நித்ய சம்சாரிகளை
நித்ய சூரிகளோடு கூட்ட
மிகவும் இணங்கி -மிகவும் பொருந்தி
அவர்கள் துர்க் கதியை சஹிக்க மாட்டாமல் அவர்களோடு
இணக்குப் பார்வை போல்-(மிருகத்தை மிருகம் வைத்து கண்ணி வைத்து பிடிப்பாரை போலே இணங்கி தாழ நின்று )-சஜாதீயராய் இணங்கி –

ஆயன் அருட்கு ஆளாம் குணங்களையே கொண்டு
உலகை அணைந்தவர்கள்
தம்முடனே கூட்ட மிகவும் இணங்கி -என்று அந்வயம் –

மிக இணங்கி மாசில் உபதேசம் செய் மாறன்-
க்யாதி லாப பூஜாதி தோஷ ரஹிதமாய் இருக்கும் –
ஸூத்த உபதேசத்தை மிகவும் அடுத்து அடுத்துப் பண்ணும்
பரிசுத்த ஞானரான ஆழ்வார் –
இணைவனாம் எப்பொருட்கும் வீடு முதலாம் -என்றும்
பிறவிக் கடல் நீந்துவார்க்கு புணைவன் -என்றும்
புலன் ஐந்து மேயும் பொறி ஐந்து நீங்கி நலம் அந்தம் இல்லாதோர் நாடு புகுவீர்–என்றும்
பலமுந்து சீரில் படிமின் ஓவாதே -என்று இறே உபதேசித்து அருளிற்று –
மாசில் உபதேசம் செய் மாறன் மலரடியே –
ஏவம் வித உபதேஷ்டாவான ஆழ்வார் உடைய-புஷ்ப ஹாச ஸூகுமாரமான திருவடிகளே –

வீசு புகழ் எம்மா வீடு –
பரமே வ்யோமன் -என்று விக்யாதமான யசஸ்சை உடைய
சர்வ பிரகார விலஷண மோஷம் –
ஆழ்வாருக்கு –செம்மா பாதம் -இறே எம்மா வீடு-பொசிந்து காட்டும் இங்கே
இவருக்கு மாறன் மலர் அடியே யாயிற்று
விபூதிஸ் சர்வம்- ஸ்ரீ மத் ததங்க்ரி யுகளம் இறே-

——————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: