பகவத் விஷயம் காலஷேபம் –63– திருவாய்மொழி – -2-8-1…2-8-5—-ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

அணைவது அரவணை மேல் -பிரவேசம்

சர்வேஸ்வரன் தம் பக்கல் பண்ணின வ்யாமோஹம் தம் ஒருவர் அளவிலும் அன்றிக்கே -தம்மோடு சம்பந்தம்
உடையார் அளவிலும் வெள்ளம் இட்ட படியை சொன்னார் கீழ் –
இத் திருவாய் மொழியில் -தம்மோட்டை சம்பந்தமே ஹேதுவான அவன் இப்படி விஷயீ கரிப்பானான பின்பு –சம்சாரிகளுக்கும் நம்மோட்டை
ஒரு சம்பந்தத்தை உண்டாக்கி அவன் கிருபைக்கு விஷயம் ஆக்குவோம் -என்று அவர்களுக்கு மோஷ பிரதத்வத்தை அருளிச் செய்கிறார் –
இத் திருவாய் மொழி தன்னை –ஈஸ்வரத்வம் சொல்லுகிறது என்று நிர்வஹிப்பாரும் உண்டு –
இருவரவர் முதலும் தானே -2-8-1- என்றும் தீர்த்தன் உலகளந்த -2-8-6-என்பததைக் கொண்டு –
மோஷ ப்ரதத்வம் சொல்லுகிறது -என்று பட்டர் அருளிச் செய்யும் படி –பிறவிக்கடல் நீந்துவார்க்கு புணைவன் -2-8-1- என்பதைக் கொண்டு –
இவை தான் ஒன்றை ஓன்று விட்டிராது –ஈஸ்வரன் யாயிற்று மோஷ பிரதானவன் -மோஷ பிரதானாம் போது ஈஸ்வரனாக வேணும் –

சங்க்ரஹ சங்கதி அருளிச் செய்து அத்தை விஸ்தரிக்கிறார் மேல் –
இது தன்னில் செய்ததாகிறது என்-என்னில் –
ஆழ்வாருக்கு முதல் தன்னில்-1- அத்வேஷத்தைப் பிறப்பித்து –2–ஆபிமுக்யத்தைப் பிறப்பித்து–3- ருசியை உண்டாக்கி
யாதானும் பற்றி நீங்கும் வ்ரதத்தை நல்வீடு செய்யும் -திரு விருத்தம் -95—மயர்வற மதி நலம் அருளினான் -1-1-1—
யானொட்டி என்னுள் இருத்துவம் என்றிலன் -1-7-7- அடிமைக் கண் அன்பு செய்வித்து –2-3-3-
இசைவித்து -என்னை -5-8-9–நின்னலால் இல்லை காண் -2-3-7-
4-இவர் விடிலும் தாம் விடாதே விரும்பி–5- இது தான் இவர் தம்மளவில் இன்றிக்கே தம்மோடு சம்பந்தம் உடையார் அளவும்-இப்படியே பெருகிக் கரை புரளுகிறபடியை அனுசந்தித்து
சர்வேஸ்வரன் ஸ்வபாவம் இதுவான பின்பு –நாம் பெற்ற பேறு எல்லாரும் பெறும்படி பண்ணுவோம் என்று சம்சாரிகளை அடையப் பார்த்து
-அவர்களுக்கு மோஷ ப்ரதன்-என்னும் இடத்தை அருளிச் செய்கிறார்-
பரத்வம் முதல் பத்தில் அருளி -இரண்டாம் -பத்தில் காரணத்வம் -த்யாநித்தால் மோஷம் கிட்டும் –முக்த பிராப்த போகம் -அருளிச் செய்கிறார் –

இதில்
உபகார பரம்பரைகள் –
யாதானும் பற்றி நீங்கும் விரதம் -மாற்றி –அத்வேஷம்
இசைவித்து உன் தாளிணைக் கீழ் இருத்தும் அம்மான்
ஆபி முக்கியம் -மயர்வற மதி நலம் அருளினன்
தீ மனம் கெடுத்தாய் -மருவித் தொழும் மனமே தந்தாய்
அடிமைக் கண் அன்பு செய்வித்து -ருசியை விளைத்து –
நின் அலால் இலேன் -தான் ஒட்டி வந்து என் தனி நெஞ்சை வஞ்சித்து -கேசவன் தமர் –சம்பந்தி அளவும் -வளர்ந்ததே
ஷீணே புண்யே மர்த்ய லோகம் – -ந புன ஆவர்த்தந்தே -இருள் அகற்றும் -வைகுந்த லோகம் ஏற்றி வைத்து ஏணி வாங்கி –புணை கொடுக்கிலும் போக ஒட்டாரே
மாம் உபேத்ய -புனர் ஜன்ம -துக்க ஆலயம் -அசாஸ்வதம் சம்சாரம் -கர்மத்தால் திரும்ப திரும்ப பிறப்பானே –
அநாவ்ருத்தி சப்தாத் அநாவ்ருத்தி சப்தாத் -சாஸ்திரம் -எழுதா மறை ஏழு முறை சொல்லி –

இவர் தாம் பெற்றதாய் -பிறருக்கு உபதேசிக்கிற பேறு தான் -பிராட்டி- திருவடி திரு வநந்த ஆழ்வானை- பரிகரமாக யுடைத்தாய் -பெருமானை-
விஷயமாகக் கொண்ட –முக்த பிராப்ய போகம் -அணைவது அரவணை மேல் பூம்பாவை யாகம் புணர்வது  -யானை இடர் கடிந்த -பெரிய திருவடி அங்கே
எத்தனை யேனும் அளவுடையார்க்கும் ஸ்வ யத்னத்தாலே ப்ராபிக்க அரிதாய் அவனாலே பெறப் பார்ப்பார்க்கு வருத்தம் அறப் பெறலாய்-
புணைவன் -தெப்பம் -அவனை உபாயமாகக் கொண்டு அடையப் பார்ப்பார்க்கு –நாயாமாத்மா -தேர்ந்து எடுத்து அருளுவான் –
நலம் அந்தமில்லதோர் நாடு புகப் பெறுவீர் -துயரில்லா வீடு-
சம்சாரத்தில் போகங்கள் போலே அஸ்திரமாய் இருக்கை யன்றிக்கே – நித்தியமாய் –அவிசதமாய் இருக்கை யன்றிக்கே அத்யந்தம் ஸ்புடமாய்-
துக்க மிஸ்ரமாய் இருக்கை யன்றிக்கே ஸூககைதாநமாய்-மங்களமாய் -உத்தமமாய்- அபரிச்சின்னமாய் –
இப்படி இருக்கிற முக்த பிராப்ய போகத்தை தமக்கும் தம் பரிகரத்துக்கும் அவன் கொடுப்பானாக பாரிக்கிற படியைக் கண்டு
சம்சாரிகளையும் ஈத்ருச போகிகளாம் படி பண்ண வேணும் என்று பார்த்து அவர்களைக் குறித்து ஹிதம் அருளிச் செய்ய
அது கேட்ட பின்பும் அவர்கள் பழைய நிலையில் நின்றும் குலையாதே மால்யமான் தொடக்கமானார் ராவணனுக்கு சொன்ன ஹிதம் போலே
அவர்கள் இத்தை அநாதரித்து இருக்க
மால்யமான் -மாதா மகன் -காலச்ய வசப்பட்டு ஏற்க வில்லை -மாரீசன் –பலியோ நமுசியோ ராமர் முடிப்பார் -வீரன் சூரன் -மஹா தேஜஸ்வி –
விபீஷணன் -துஸ் ஸ்வப்னம் -கருடன் பாம்பை பிடித்தால் போலே -சீதையை ஒப்படைக்கா விடில் கோரம் –குருஷ்வ மம வசனம் -குல பாம்சினி
நாம் நம்முடைய அனுபவத்தை விட்டு இவர்களோடு துவக்குண்கிற இதுக்கு பிரயோஜனம் என் என்று-
வழி பறிக்கும் நிலத்தில் தம் கைப்பொருள் கொண்டு தப்பினார் ஹ்ருஷ்டராமா போலேநாம் முந்துற முன்னம் இவர்களைப் போலே ஆகாது
ஒழியப் பெற்றோம் இறே-என்று ஸ்வ லாபத்தை அனுசந்தித்து இனியராகிறார் –

———————————————-

அவதாரிகை –

முக்த பிராப்ய போகத்தைச் சொல்லுகிறது -முதல் பாட்டுத் தான் இத் திருவாய் மொழிக்கு சங்க்ரஹமாய்
மேலுள்ள பாட்டுக்களில் ஒரு பதத்தை பற்றிப் போருமவையும் அது தன்னைப் பற்றி எழுமவையுமாய் இருக்கிறது –

அணைவது அரவணை மேல் பூம்பாவை யாகம்
புணர்வது இருவரவர் முதலும் தானே
இணைவனாம் எப்பொருட்கும் வீடு முதலாம்
புணைவன்  பிறவிக்கடல் நீந்துவார்க்கே –2-8-1-

இத் திருவாய்மொழிக்கு சங்க்ரஹ ரூபமான சர்வ நிர்வாககத்வம் -ஈஸ்வரத்வம் –அருளிச் செய்கிறார் –
அணைவது அரவணை மேல்-அபிமதமாகச் சேர்வது –
பூம்பாவை யாகம் புணர்வது -பூவிலே பரிமளமே வடிவு கொண்டால் போல் பெரிய பிராட்டியார் போகய போதை -போக்யமாக சம்ச்லேஷிப்பது –நித்ய விபூதி நிர்வாகத்வம் இத்தால்
இருவரவர் முதலும் தானே –இந்த இருவர் -உத்பத்தி ஸ்தித்யாதிகளுக்கும் தானே ஹேதுவாக இருக்கும் -கேசவ -நியாமகன் மட்டும் இலை –முதல் -காரணத்வம்
இணைவனாம் எப்பொருட்கும் -சமஸ்த பதார்த்தங்களுக்கும் -அவதார முகத்தாலே சஜாதீயனாக இருப்பான்-இத்தாலே லீலா விபூதி நிர்வாகத்வம் சொல்லிற்று
வீடு முதலாம் -மோஷ பிரதன்-ரஷணத்துக்கு மேல் எல்லையான மோஷத்துக்கு ஹேதுவாக இருக்கும் –நாம் அடையும் உபாயமாக இருக்கும் -என்றவாறு
சர்வ முக்தி பிரசங்கம் வாராமைக்காக அடுத்து –
புணைவன் -புணைவனாம்-உபாயம் –
பிறவிக்கடல் நீந்துவார்க்கே-சம்சாரக் கடல் கடக்க விருப்பம் இருப்பார்க்கு -என்றவாறு –போஜனத்துக்கு ஷூத்து போலே -அதிகாரி விசேஷணம்-

அணைவது அரவணை மேல் –
முக்த ப்ராப்ய போகம் தான் இருக்கிற படி -பர்யங்க வித்யையிலே சொல்லுகிற படியே -சர்வேஸ்வரனும் பிராட்டிமாரும் கூட
திரு வநந்த ஆழ்வான் ஆகிற படுக்கையில் இருக்கிற இருப்பிலே
இச் சேதனன் முக்தனாய் சென்று கிட்டினால் –அஹம் பிரஹ்மாஸ்மி -நான் ராஜ புத்திரன்- ப்ரஹ்ம பிரகார பூதன் -என்னக் கடவன் -காரண கார்ய பாவம் -உண்டே –
ஆகில் இங்கனே போராய் -என்றால் -வாராய் -என்றபடி -அவன் அங்கீகாரம் பெற்று மாதா பிதாக்கள் இருந்த படுக்கையில் பிரஜை சென்று ஏறுமா போலே
தமேவம் வித்பாதேநாத்யாரோஹாதி என்று ஏறக் கடவனாகச் சொல்லுகிற அப் பேற்றைச் சொல்லுகிறது –
கூர்மாதின் திவ்ய லோகே -ஆயிரம் கால் மண்டபம் -தேவானாம் அதி தேவ யஸ்ய ஆஸ்தே-எட்டு தள தாமரை –
அஷ்ட தள -விமலா -சத்யா போன்ற எட்டு பேர் இருக்க -அனுக்ரகையை -கரணிகையில்-வெண் சாமரம் வீச –
அணைவது
தாபத்ரயங்களாலே நொந்த சம்சாரி சேதனன் –ஏஷ ப்ரஹ்ம பிரவிஷ்டோச்மி-என்கிறபடியே -அப்பெரிய மடுவிலே விழுந்து
தன் தாபம் எல்லாம் ஆறுமா போலே யாயிற்று
முதலில் இவை இல்லாதவன் –திரு வநந்த ஆழ்வான் மேல் அணைந்து -இவை உண்டாய்க் கழிந்தாரைப் போலே இருக்கும் படி
விடாயர் மடுவில் விழுமா போலே யாயிற்று அணைவது
அரவணை மேல்
நாற்றம் குளிர்த்தி மென்மைகளை ஸ்வபாவகமாக உடைய திரு வநந்த ஆழ்வானோடே அணைவது -வெண்மை விசாலம்-பஞ்ச சயனம்
புல்கும் அணையாம் -என்னக் கடவது இறே
அவனை சேஷ பூதன் அடிமை செய்து அல்லது தரியாதாப் போலே சேஷியும் சேஷ பூதனோடு அணைந்து அல்லது தரியாதானாய் இருக்கும் படி –

பூம்பாவை யாகம் புணர்வது -என்கிறது இறே மூவர்க்கும் போகம் ஒத்து இருக்கையாலே
போக்யதைக வேஷையாய்-நிரூபாதிக ஸ்த்ரீத்வத்தை உடைய பெரிய பிராட்டியாரோடு கலந்து வர்த்திப்பது
தேனும் பாலும் கன்னலும் அமுதும் –எல்லா ரசம் சேரப்பிடித்தவன் அவன் -வாசனைகளை சேரப்பிடித்தவள் இவள் –
ஆகம் புணர்வது –
ஆத்ம குணங்கள் குமரிருந்து போம் அத்தனை
ஆகமே புணர்வது -தாண்டி ஆத்ம குணங்களை நோக்கான் -திரு மேனி சௌந்தர்யத்தில் மூழ்கி இருப்பான்
அணைவது புணர்வது –
பொதுவான சப்தங்கள் -அணைந்தான் என்று அவனுக்கு பிரதான்யம் –அவன் ஏற்றான் என்று
இவனுக்கு பிரதான்யம் இல்லாமல் அணைவது -இருவருக்கும் பொது -ஆனந்தம் சமம் -மூவருக்கும் என்று காட்டி அருள –
ரம்ய மாவசதம் க்ருத்வா –அறுபதினாராயிரம் மலடு நின்ற
சக்கரவர்த்தி தன் ஆதரத்துக்கு போம்படி சமைத்த மாளிகைகளிலும் திரு உள்ளத்துக்கு பொருந்தி அழகியதாய் இருந்தது காட்டிலே
இளைய பெருமாள் சமைத்த ஆஸ்ரமம் ஆயிற்று
த்ரயகா ரமமாணா-நாயகரான பெருமாள் ரசம் அல்லவே பிராட்டி யுடையது
பிராட்டிக்கு பிறக்கும் ரசம் அல்லவே பெருமாளது
அப்படியே அச் சேர்த்தி கண்டு உகக்குமவர் இறே இளைய பெருமாள்
வெத்தலை பாக்கு இளைய பெருமாள் சேகரித்து பட்ட ஹர்ஷம் -மடித்துக் கொடுத்த ஹர்ஷம் பிராட்டிக்கு -போட்டு அனுபவித்த ஹர்ஷம் பெருமாளுக்கு
வநே -படை வீடர் காட்டிலே ரமித்தார்கள் என்று தோற்றாதே-காடர் காட்டிலே வர்த்தித்தால் போலே பொருந்தி இருந்த படியாகச் சொல்லிற்று யாயிற்று
சர்வேஸ்வரனும் பிராட்டிமாருமாக திரு வநந்த ஆழ்வான் ஆகிற படுக்கையிலே இருக்கக் கண்டு உகந்து அடிமை செய்கை முக்த ப்ராப்ய போகமாகிறது

இருவரவர் முதலும் தானே
ப்ரஹ்ம ருத்ரர்களுக்கு காரண பூதனாய் இருக்கும்
ஸ ப்ரஹ்ம ஸ சிவா -என்கிற பிரசித்தியாலே –இருவரவர் -என்கிறார்
அவ்விபூதியைச் சொல்லுகிற இடத்தில் அணைவது புணைவது -என்கையாலே அது போக பூமியுமாய் -நித்யமுமாய் -இருக்கும் என்னும் இடமும்
இங்கு முதல் -என்கையாலே இவ்விபூதியில் கார்ய காரண பாவத்தால் வந்த சம்பந்தமும் -இது தான் ஆவதும் அழிவதாம் என்னும் இடமும் சொல்லுகிறது
முதல் -உத்பத்தி -முதல் இருந்தாலே முடிவும் உண்டே -சம்ஹாரம் -இரண்டும் உண்டே –
இத்தால் ப்ரஹ்ம ருத்ரர்கள் சம்சார பக்தர்கள் என்னும் இடமும் ஈஸ்வரனே மோஷ ப்ரதனாக வல்லான் என்னும் இடமும் சொல்லுகிறார்
ஆக -ஆஸ்ரயணீயன் அவனே -ப்ரஹ்ம ருத்ராதிகள் ஆஸ்ரயணீயர் அல்லர் -என்கை
ஆ ப்ரஹ்ம ஸ்தம்ப பர்யந்தா ஜகத்தந்தர் வ்யவஸ்திதா பிராணின கர்மஜனித சம்சார வச வர்த்தின -ஸ்ரீ விஷ்ணு தர்மம் -என்னா நின்றது இறே
ஸ்ரீ சௌனக பகவான் வார்த்தை -அர்ச்சா மூர்த்திகள் பற்றி பல சொல்லி இருக்கிறார்
இப்படி ப்ரஹ்ம ருத்ரர்களுக்கும் காரண பூதன் ஆகையாலே வந்த மேன்மையை உடையவன் –
இணைவனாம் எப்பொருட்கும்
தேவாதி சகல பதார்த்தங்கள் தோறும் சஜாதீயனாய் வந்து அவதரிக்கும்
ப்ரஹ்ம ருத்ரர்கள் நடுவில் வந்து –விஷ்ணுவாக -ஜகதாதிஜா -அவதரிப்பது –உபேந்த்ரனாவது
-சக்கரவர்த்தி ஸ்ரீ வசுதேவர்கள் அளவிலே வந்து பிறப்பது -மஹா வராஹமாவது -குப்ஜாம்மரமாவதாக நிற்கும்
இப்படி தாழ விட்டு பிறக்கிறது எதுக்காக என்னில்
வீடு முதலாம்
மோஷ பிரதனாகைக்காக
அவதரித்த இடங்களிலே பஷிக்கு மோஷத்தைக் கொடுப்பது பிசாசுக்கு மோஷத்தைக் கொடுப்பதாகா நிற்கும் –
1-1- உயர்வற பரத்வனே -திண்ணன் வீடு -அவதரித்து -விபவ பரத்வன் -அணைவது -இங்கே மோஷ ப்ரதத்வ பரன்--மேலே 4-10- ஒன்றும் தேவும் -அர்ச்சா பரத்வம்
அவன் வந்து அவதரிப்பது மோஷ பிரதன் ஆகைக்காக வாகில் எல்லாரும் பின்னை முக்தராக வேண்டாவோ என்னில்
புணைவன் பிறவிக்கடல் நீந்துவார்க்கே —
சம்சாரம் என்ற ஒரு பெரும் கடல் -அது எங்களால் கடக்கக் போகாது –பிரபலனான நீயே கழித்துத் தர வேண்டும் என்று
இருப்பார்க்கு பிரதிபூவாய் நின்று கடத்திக் கொடுக்கும் –ஜாமீன் -பிரதிபூ என்றபடி –பணையம் என்றவாறு
புணையாம் அவன் என்றபடி -சர்வ பர நிர்வாஹகனாம் அவன் என்றபடி
சம்சார சாகரம் கோரம் அநந்த கிலேச பாஜனம்-த்வாமேவ சரணம் பிராப்ய–ஜிதந்தே ஸ்தோத்ரம் -என்று
இருப்பார்க்குக் கடத்திக் கொடுக்கும்
புணைவன் -என்று தெப்பமாவான் என்றுமாம் –விஷ்ணு போதம் -ஸ்ரீ விஷ்ணு தர்மம் –என்னக் கடவது இறே
ஏக தேசத்தைப் பற்றி நிற்கை யன்றிக்கே அக்கரையும் இக்கரையும் பற்றி நிற்கும் ஒடமாயிற்று –
லீலா விபூதியையும் நித்ய விபூதியையும் பற்றி நிற்கும் –சர்வ வியாபி அன்றோ –

கோ சகஸ்ரம் -1000 பாசுரங்கள் -கொண்டு இருளைப் போக்கினவர் –
நம்மோட்டை-சிஷ்ய ரூப சம்பந்தத்தை உண்டாக்கி -ஆய்க்குடி -பிள்ளை லோகாச்சார்யர் -தம்மை பெருமாள் இடம் சமர்ப்பிக்க-(பறி கொடுத்தார் -சப்தம் இதை காட்டவே -சர்வ ஸ்வ தானம் பண்ணுவது -அவன் தம்மை நமக்கு முழுவதும் அருளுவான்  )-உமக்கும் உம்முடைய சம்பந்திகளுக்கும் -அருளுவேன் -என்றானே –
எம் எம் ஸ்பர்சதி–எம் எம் பஸ்யதி –கிம் புநவா பாந்தவா ஜனதா -எறும்புகளை -ஸ்தாவரங்களையும் தொட்டு அருளிய ஐதிக்யம் –
———————————————————————————

அவதாரிகை –

என் தனி நாயகன் புணர்ப்பு என்கையாலே எம்பெருமான் தான் வேணுமோ –அவனோடு உள்ள சம்பந்தமே மோஷ ப்ரதம் -என்கிறார் –
சம்பந்தம் சாமான்யம் ஆயிற்றே -சர்வ முக்தி பிரசங்கம் வருமே -உணர வேண்டும்
தாண்ட விருப்பம் வேண்டுமே -அப்பொழுது தான் சம்பந்தம் பிரயோஜனப்படும் –
பிறவிக் கடல் -என்றத்தை இதில் விவரிக்கிறார் –

நீந்தும் துயர்ப்பிறவி யுட்பட மற்று எவ்வெவையும்
நீந்தும் துயரில்லா வீடு முதலாம்
பூந்தண் புனல் பொய்கை யானை யிடர் கடிந்த
பூந்தண் துழாய் என் தனி நாயகன் புணர்ப்பே –-2-8-2-

என் தனி நாயகன் புணர்ப்பே வீடு முதலாம் –அவனும் வேண்டாம் -சம்பந்தமே கொடுக்கும் –சமன் கொள் வீடு தரும் தடம் குன்றமே- போலே
சம்சார நிச்தரன பூர்வகமாக மோஷ ஹேது அவன் சம்பந்தமே -ஆழ்வார் மூலம் நமக்கு -சிஷ்யர்
கண் கூடு என்னும் படி திருஷ்டாந்தம் ஸ்ரீ கஜேந்திர மோஷம்
பூந்தண் புனல் பொய்கை யானை யிடர் கடிந்த பூந்தண் துழாய்
என் தனி நாயகன் புணர்ப்பே-அத்விதீய ஸ்வாமி உடைய சம்பந்தமே
நீந்தும் -ஸ்ரமப்பட்டு கடக்க வேண்டிய -துஸ்தரம்
துயர்ப்பிறவி யுட்பட மற்று -நீந்தும்-ஸ்ரமப்பட்டே போக்க வேண்டிய –மற்று எவ்வெவையும்-மூப்பு இத்யாதி
நீத்தும் -கடத்தும் –
அநிஷ்ட நிவ்ருத்தி -சொல்லி இஷ்ட பிராப்தி
அன்றிக்கே வீட்டுக்கு விசேஷணம் –இவை இல்லாத வீடு
துயரில்லா வீடு முதலாம் -துயர் ஸ்பர்சியாத மோஷத்துக்கு முதலாக இருக்கும் -நலம் அந்தமில்லா நாடு -ஹேதுவாம்
அந்தமில் பேரின்பத்து அடியவர் உடன் -ஆனந்தத்தில் சாம்யம் அவனுடன் உண்டே
பொசிந்து காட்டும் –வீடு –பிராப்ய நிஷ்கர்ஷம் அடுத்து -2-9- பண்ணிக் காட்டுவார் எம்மா வீட்டில் –
வீடு -சொன்னதை விவரிக்கிறார் -மேலே விரியும் என்றாரே –

நீந்தும் துயர்ப்பிறவி யுட்பட மற்று எவ்வெவையும்
பிறவிக் கடல் நீந்துவார்க்கு -என்கிற அதினுடைய விவரணமாய் இருக்கிறது
நீந்தும் துயர்ப்பிறவி யுட்பட மற்று எவ்வெவையும் நீந்தும் துயரில்லா வீடு முதலாம் –என்று பிரித்து யோஜிக்கவுமாம்
அன்றிக்கே ஒன்றாக –வீட்டு விசேஷணம் ஆக்கவுமாம்
நீந்தும் -மெல் ஒற்றை வல் ஒற்றாக்கி நீத்தும் -அநிஷ்ட நிவ்ருத்தி என்றவாறே-
நீந்தும் –
என்கிற வர்த்தமான நிர்த்தேசத்தால் கடக்க அரிதான துக்கத்தை விளைப்பதான ஜனனம் தொடக்கமான மற்றும்
உண்டான அபஷய விநாசாதிகளையும் கடத்தும் –நீந்திக் கொண்டே இருக்கிறோமே –
துயரில்லா வீடு முதலாம்
துக்க கந்த ரஹிதமான மோஷத்துக்கும் ஹேதுவாம் -கடக்க அரிதான துக்கத்தை உடைத்தான ஜன்மம் தொடக்கமாக நீந்தும் துயரான
மற்று எவ்வெவையும் இல்லாத மோஷத்துக்கு ஹேதுவாம் என்னுதல்-
இவர் வீடு என்கிறது -சம்சார நிவ்ருத்தி மாதரத்தை அன்று –ஸூகபாவிக லஷணையான பகவத் பிராப்தியை
முக்திர் மோஷா மஹா நந்தா -என்னக் கடவது இறே-

சம்சார –கர்ப்ப ஜன்மம் -ஜரை -பொறிகள் -கொதிப்பு -விமுக்தி -மரத்தின் நிழல் -தாபத்ரயம் –
நிரஸ்த அதிசய ஆஹ்லாத ஸுக பாவைக லஷணம் –
பேஜஷம் பகவத் பிராப்தி -தஸ்மாத் -அவனை அடையவே முயல வேண்டும் -தத் கர்ம ந பந்தாயா -சா வித்யாயா முக்தி –தத் பிராதி ஹேது -கர்ம ஞான யோகம் -பக்தி ஆரம்ப விரோதிகளைப் போக்கி -விலக்கும் –
மகா ஆனந்தம் சொன்னது கைவல்யம் அல்ப ஆனந்தம் –
முமுஷுவுக்கு அறிய வேண்டும் ரகஸ்ய த்ரய ஞானம் -கைவல்யத்துக்கு வேண்டாமே -அங்கே மா முனிகள் விளக்கம் –

இப்படி துக்கத்தைப் போக்கி வீடு முதலாக எங்கே கண்டோம் -என்னில் –
பூந்தண் புனல் பொய்கை யானை யிடர் கடிந்த –
பரப்பு மாறப் பூத்துக் குளிர்ந்த புனலை உடைத்தான பொய்கையிலே போய்ப் போக்கு முதலையாலே இடர்ப்பட்ட ஆனையினுடைய
துக்கத்தை வாசனையோடு போக்கினவன் –
பூவில் செவ்வி அழியாமே-திருவடிகளிலே இட வேணும் என்று நினைத்து அது பெறாமையால் வந்த இடரைப் போக்கின
அகில குரௌ நாராயணா நமஸ்தே -ச அம்புஜா கரம் உத்க்ருஷ்ய -தம் விஷய -சக்ராஹம் சரஸா கிருபா உத்ஜகார
தொழும் காதல் -களிறு அன்றோ
பூந்தண் துழாய் என் தனி நாயகன் புணர்ப்பே —
1-வைத்த வளையத்தோடு காணும் மடுவில் போய் விழுந்தது -புருஷோத்தமன் லஷணம் அன்றோ
2-திருத் துழாயில் பரிமளம் போலே காணும் ஆனை இடரைக் கடந்தது -சம்பந்தமே மோஷம் – –வாட்டம் தணிய வீசீறே
3–ஆனை இடராவது -சர்வேஸ்வரன் ஆபத் சகன் -என்று இருந்தோம் -இவன் இப்படி ஆபன்னனாக உதவாது ஒழிவதே –
நிர்க்குணனாய் இருந்தானீ-என்று நாட்டில் உள்ளோர் நினைக்கில் செய்வது என் -என்ற அத்தாலே வந்த இடராகிலுமாம்-
திரௌபதிக்கு எங்கேயோ  இருந்து புடவை சுரந்தது போலே ஆகாதே -கையில் உள்ள செவ்வித் தாமரையை
திருவடியில் இட வன்றோ இது ஆசைப்பட்டது
என் தனி நாயகன்-
ஆனை இடரைப் போக்குகை அன்றிக்கே நம் இடரைப் பரிஹரித்தால் போலே யாயிற்று இவர்க்கு இருக்கிறது
புணர்ப்பே —
அவனோட்டை சம்பந்தம் –
அவன் திருவடிகளிலே சம்பந்தம்
துக்க நிவ்ருத்தியையும் பண்ணி –ஸூக பாவைக லஷணம்-என்கிற பேற்றையும் தரும் –
தனி நாயகன் புணர்ப்பு –வீடு முதலாம் -என்று அந்வயம்-

—————————————————————————————–

அவதாரிகை –

இருவரவர் முதலும் தானே -என்கிற பதத்தை விவரியா நின்று கொண்டு -ஸ்ரீ யபதியான அவனுடைய
அதி மானுஷ சேஷ்டிதங்களை பிரத்யஷிக்கலாம் என்கிறது –

புணர்க்கும் அயனாம் அழிக்கும் அரனாம்
புணர்ந்த தன்னுந்தியோடே ஆகத்து மன்னி
புணர்ந்த திருவாகித் தன் மார்வில் தான் சேர்
புணர்ப்பன் பெரும் புணர்ப்பு எங்கும் புலனே –2-8-3-

புலன்களுக்கு புலப்படுவது -அவன் சேஷ்டிதங்கள்
புணர்க்கும் அயனாம் -லோகத்தை படைக்கும்
அழிக்கும் அரனாம் -சம்ஹரிக்கும் -தத் தத் அந்தர்யாத்மாவாக
புணர்ந்த தன்னுந்தியோடே ஆகத்து மன்னி -புணரும் இடங்கள் -திரு நாபி கமலம் -ஆகம்
புணர்ந்த திருவாகித் தன் மார்வில் -ஸ்வரூப நிரூபக தர்மம் –
தான் சேர் புணர்ப்பன்-வ்யூஹ மூர்த்தியாகி – ஸூ ஆதீன சேஷ்டிதங்கள்
பெரும் புணர்ப்பு-சேஷ்டிதங்கள்- எங்கும் புலனே-எங்கும் கண்டு அனுபவிக்கலாம் படி
இருவர் அவர் முதல் என்றத்தின் விவரணம் –

புணர்க்கும் அயனும் அழிக்கும் அரனும்-
இவற்றை ஸ்ருஷ்டிக்கையே தொழிலாய் இருக்கிற ப்ரஹ்மாவும்-வர்த்தமானம் –
தொட்டாலே அழிக்கும் -சுடுதடி போலே இவற்றை யடைய அழித்துக் கொண்டு நிற்கிற ருத்ரனுமாம் –
ததா தர்சித பந்தானௌ–பிரசாத ஜ கோப ஜ – சிருஷ்டி சம்ஹார காரகௌ-என்றும்
-ஸ்ருஷ்டிம் தாதா கரிஷ்யாமி த்வாம் ஆவிச்ய ப்ரஜாபதே -என்கிறபடியே
அவன் அந்தராத்மாவாய் நின்று பிரவர்த்திப்பிக்க -இவற்றைச் செய்கிறார்கள் –
புணர்ந்த தன்னுந்தியோடே ஆகத்து மன்னி புணர்க்கும் அயனும் அழிக்கும் அரனும்-
இவை தான் இவர்கள் செய்ய வல்லராவது அவன் திருமேனியைப் பற்றியிருந்த போதாயிற்று –
ஸ்த நந்த்ய பிரஜை வாயில் முலை வாங்கினால் தரியாதாப் போலே –
சிவன் நான்முகன் புத்திர முகேன இவரை விடாமல் இருப்பானே –ப்ரஹ்மானீசம் கமலாநாசனச்தம்-பவ்யமாக திருக்குமாரார் நிற்கக் கண்டான் அர்ஜுனன்
இத்தால் சாமா நாதி கரண்யத்தால்-அந்தர்யாமித்வம் சொல்லிற்று
புணர்ந்த தன் உந்தி -என்கையாலே –காரணத்வம் சொல்லிற்று
ஆகத்து மன்னி -என்கையாலே திரு மேனியைப் பற்றி லப்த ஸ்வரூபர்-என்னும் இடம் சொல்கிறது
புணர்ந்த திருவாகித் தன் மார்வில்
தன் திரு மார்வில் நித்ய சம்ச்லிஷ்டையாய் இருக்கிற பெரிய பிராட்டியாரை யுடையனாய் –
இது இப்போது சொல்லுகிறது என் என்னில் -ப்ரஹ்மாதிகளுக்கு நிர்வாஹகன் என்றவோபாதி ஸ்ரீ லஷ்மி சம்பந்தமும்
ஐஸ்வர் யத்துக்கு உடலாகையாலே –பெரிய பிராட்டியாரோடு சேர்த்தி நீர்மைக்கும் மேன்மைக்கும் உடலாய் இருக்கும் இறே
தான் சேர் புணர்ப்பன் –
சிருஷ்டி யர்த்தமாக ஏகார்ணவத்திலே சாய்ந்து அருளினவன் -என்னுதல் –புணரி –கடல் -தான் சேரும் கடலை யுடையவன் என்ற பொருளில் –
தனக்குத் தகுதியான சேஷ்டிதங்களை உடையவன் என்னுதல் -தனக்கு தகுதியான சேஷ்டிதங்கள் புணர்ப்பு -என்றுமாம்
பெரும் புணர்ப்பு எங்கும் புலனே —
ப்ரஹ்மாதிகள் அதிகரித்த கார்யங்களை அவர்கள் வழியாலே நடத்தியும்- வ்யூஹ மூர்த்தியாக –
-தான் அதிகரித்த கார்யங்களை தானே நடத்தியும் -தனக்கு தகுதியான சேஷ்டிதங்கள்-
போருகையாலே -தன்னுடைய பெரும் புணர்ப்பு ஆனைத் தொழில்கள் எங்கும் காணலாய் இருக்கும் –

———————————————————————

அவதாரிகை –

அவனுடைய ஈஸ்வரத்தில் கண்ணழிவு அற்று இருந்தது -இனி இதுக்கு அவ்வருகு இல்லை என்று
நன்மை பெற வேணும் என்று இருப்பார் அவனைக் கடுக ஆஸ்ரயிக்கப் பாருங்கோள் என்கிறார் –

புலன் ஐந்து மேயும் பொறி ஐந்து நீங்கி
நலமந்த மில்லதோர் நாடு புகுவீர்
அலமந்து வீய அசுரரைச் செற்றான்
பலமுந்து சீரில் படிமின் ஓவாதே –2-8-4-

குணங்களில் நித்ய அவஹாகனம் பண்ண வேண்டும் -சம்சார நிவ்ருத்தி பூர்வகமாக -பரமபத பிராத்திக்கு –
புலன் ஐந்து மேயும் பொறி ஐந்து நீங்கி -விஷயங்கள் புலன் -சப்தாதி -மேய்ந்து கொண்டு இருக்கும் இந்த்ரியங்கள் –
பெருச்சாளி பொறி போலே -இந்த்ரியங்கள் -நீங்கி
புலப்படும் விஷயங்கள் புலன் -பொறி போலே அகப்படுத்திக் கொள்ளும் இந்த்ரியங்கள்-நீங்கி
நலமந்த மில்லதோர் நாடு புகுவீர் -புக்கீர் -சொல்லாமல் -விருப்பம் இருந்தால் தானே போக முடியும் -அதிகாரி வேண்டுமே –
ஆனந்தம் அளவில்லாமல் — சாம்யா பத்தி உண்டே – அத்விதீயமான தேசம் -புக வேண்டி இருப்பீர் –
புகுவீர் -கூப்பிடுகிறார் -1-வேண்டுதல் -2–ருசி-
அலமந்து வீய அசுரரைச் செற்றான் -பிரதி பந்தகங்களை -போக்கும் விரோதி நிரசன சக்தன் –
பலமுந்து சீரில் படிமின் ஓவாதே-கல்யாண குண அனுபவமே பலம் -முந்தி இருக்கும் –அநாதி -அதுவே பலம் –ஓவாதே
நித்ய அவஹாகனம் = படிமின் ஓவாதே-
கல்யாண குண அனுபவமே பலம் -பால் குடித்து பித்தம் போக்கி -அத்தையே குடித்து இஷ்ட பிராத்திக்கும்
மருந்தும் விருந்தும் –
ரசாயனமான -பயப்பான -தண்ணீர் உடன் கூடிய பால் -பித்த சாந்தி -மருந்து -போகய குணங்களில் நிரந்தர அனுபவம் பண்ணவே-அநிஷ்ட நிவ்ருத்தியும் இஷ்ட பிராப்தியும் – தன்னடையே வரும்-
புலன் பொறி -இந்த்ரியங்கள் விஷயங்கள் -சப்தங்கள் -மாறி வரும்

புலன் ஐந்து மேயும் பொறி ஐந்து நீங்கி
புலன் ஐந்து என்கிறது -விஷயங்களை யாய் -அவற்றிலே பிரவணமாகக் கடவவான பொறி ஐந்து உண்டு -ஸ்ரோத்ராதிகள்-
அவற்றுக்கு வச்யராகை தவிர்ந்து -சில பதார்த்தங்களை வறை நாற்றத்தைக் காட்டி முடிக்குமா போலே-
மூஷிகாதிகளை -எலிகளை தீய கந்தம் காட்டி முடிக்குமா போலே – சப்தாதிகளிலே மூட்டி நசிப்பைக்கையாலே இந்த்ரியங்களை பொறி என்கிறது
இத்தால் பரிச்சின்ன வஸ்து க்ராஹகமான இந்த்ரிய வச்யராகை தவிர்ந்து
நலமந்த மில்லதோர் நாடு புகுவீர்
நன்மைக்கு முடிவின்றிக்கே இருக்கிற நாட்டிலே புக வேண்டி இருப்பீர்
ஸ்வவிநாசம் காண் மோஷம் என்கை -மாயாவாதி சாருவாகன் போலே-யன்றிக்கே ஆப்த தமரான இவர் நன்மைக்கு முடிவில்லாததொரு
தேசவிசேஷம் உண்டாக அருளிச் செய்தார் இறே –உயிர்கள் ஆதிப்பரன் உடன் ஒன்றும் –அல்லல் எல்லாம் வாதில் வென்றான் – –
தத் பதம் பிராப்து காமா –ஆனந்த மயா லோகா -போகா -அநந்த லஷணம் -பரமானந்த லஷணம் –
புகுவீர்
இப் பேற்றுக்கு இசைவே அதிகாரம் என்கிறார்
இசைவு அதிகாரம் தான் -உபாயம் இல்லை -அவன் இரக்கமே உபாயம் -இனிமை தானே உபேயம் –
அது ஒரு நாடு உண்டாய் – அத்தை பெற வேணும் என்ற நசை உண்டானாலும் பிரபல விரோதிகள் கிடக்குமாகில் பிரயோஜனம் இல்லையே என்னில்
அலமந்து வீய அசுரரைச் செற்றான்
விரோதி போக்குகை நம் பணியோ-என்கிறார்
தடுமாறி முடிந்து போம் படி அசூர வர்க்கத்தை அழியச் செய்தான் –
அவனுடைய பலமுந்து சீரில் படிமின் –
பலம் முற்பட்டு இருக்கிற கல்யாண குணங்களிலே ப்ரவணர் ஆகுங்கோள்
ஸூ ஸூகம் கர்த்துமவ்யயம் -ஸ்ரீ கீதை -9-2–என்னும்படி -சுலபம் -ஸூ கமாகவும் இருக்கும் –முந்து சீர் -சாதனதசையிலே இனிமையாய் இருக்குமே
ஸ்மர்த்தவ்ய விஷய சாரச்யத்தாலே-சாதன தசையே தொடங்கி இனிதாய் இருக்கும் இறே
குஹ்யதமம் -ராஜ வித்யா -ராஹ குஹ்ய யோகம் 9 -அத்யாயம் –பிரத்யஷாவஹமம் –நேராகக் காட்டும் ஸ்வரூபத்துக்கு -ஏற்ற-பிராப்தம்
ஓவாதே –
அபர்வணி கடல் தீண்டலாகாது -என்னுமா போலே ஒரு நியதி இல்லை இதுக்கு –
தமக்கு ரசித்த படியாலே இடைவிடாமல் அனுபவிக்கப் பாருங்கோள் என்கிறார் -என்றுமாம் –நான் கண்ட நல்லது இது -என்கிறார்
நானும் சொன்னேன் நமரும் உரைமின் -என்னுமா போலே மாறாதே ஆஸ்ரயிக்கப் பாருங்கோள்
ரசித்த பேரைச் சொல்லச் சொல்லி -கலியன் -ரசித்த குணங்களை -சொல்லச் சொல்லி –நம்மாழ்வார்– யானி நாமானி கௌனானி- வியாசர்

————————————————————————————–

அவதாரிகை –

கீழ் -இணைவனாம் எப்பொருட்கும் -என்றார் அத்தை உபபாதிக்கிறார் –

ஓவாத் துயர்ப் பிறவி யுட்பட மற்று எவ்வெவையும்
மூவாத் தனி முதலாய் மூவுலகும் காவலோன்
மாவாகி யாமையாய் மீனாகி மானிடமாம்
தேவாதி தேவ பெருமான் என் தீர்த்தனே –2-8-5-

சமஸ்த காரண பூதன் -அவதார வைலஷண்யம் – -சஜாதீயனாய் -கார்ய பூதமான ஜகத் ரஷண அர்த்தமாக –
இணைவனாம் எப் பொருள்களுக்கும் என்பதின் விவரணம்
ஓவாத் துயர்ப் பிறவி யுட்பட மற்று எவ்வெவையும் -ஓவாத் துயர் -ஓவா பிறவியால் வரும் -ஸ்திதி சம்ஹாரம் சிருஷ்டி-ரஷணம் சம்ஹாரம் உட்பட –
மூவாத் தனி முதலாய் மூவுலகும் காவலோன் -சோம்பாமல் இல்லாமல்
சஹாயாந்தர நிரபேஷ காரண பூதனாய் கொண்டு -ஸ்ருஜ்யமான லோகத்துக்கு ரஷகன்
மாவாகி யாமையாய் மீனாகி மானிடமாம்-குதிரை -வேத ஹயக்ரீவ -கூர்ம மத்ஸ்ய புராணம் -கீதோ உபநிஷத் -கிருஷ்ணனாகி-இவை கொடுத்ததே ரஷணத்துக்காக-
தேவாதி தேவ பெருமான் -ப்ரஹ்மாதிகள் -நித்ய ஸூ ரிகள் -பூர்வே சாத்யா -யாத்ர பூர்வே சாத்யே சந்தி தேவா -ஸ்ருதிகள்–ஆதி தேவர் -நித்ய ஸூரிகள் –என் தீர்த்தனே-புனிதன் -இறங்கி-அவஹாக்கிக்க ஸூ லபன்

ஓவாத் துயர்ப் பிறவி யுட்பட-மற்று எவ்வெவையும்
கீழே நீந்தும் துயர்ப்  பிறவி -என்கிறார் -அங்கே யானைக்கு துயர் விட்டுப் போனதே அது போலே இல்லாமல்
இதிலே ஒரு கால் விட்டுப் பிடிக்குமதுவும் இல்லை என்கிறார்
அஹரஹர் சந்த்யா உபாசீத -தினம் பண்ணு -காலை மத்யானம் மாலை -நடுவில் விடுமுறை உண்டே –
துயர் பிறவி -தப்பாக சொன்னேன்- ஓவா துயர் பிறவி என்கிறேன் -என்கிறார்
உச்சிவீடும் விடாதே துயரை விளைக்கக் கடவதான ஜன்மம் தொடக்கமான மற்றும் உண்டான ஐந்துக்கும்-ஷட்பாவ விகாரம் என்கிறார் -அவற்றை உடைத்தான பதார்த்தங்களுக்கும்
மூவாத் தனி முதலாய் மூவுலகும் காவலோன்
மூவா என்கிற இத்தை கீழோடு கூட்டுதல்
மூவா -தனி முதல் -என்று மேலே கூட்டுதல்
பிரவாஹ ரூபத்தாலே நித்தியமாய் போருகிற-இதுக்கு தனி முதல் -என்னுதல்
முசியாத அத்விதீய காரணமாய் என்னுதல் -முசியாத -சோம்பல் இல்லாமல்
தான் தன் பகலிலே வழி பட வேண்டும் என்று நினைத்து உபகரணங்களைக் கொடுத்து விட கொடுத்த உபகரணங்களைக் கொண்டு
வழி கெட நடவா நின்றால்-இப்போது இங்கனே போயிற்று யாகில் க்ரமத்திலே நம் பக்கல் ருசியைப் பிறப்பித்து மீட்டுக் கொள்கிறோம்
என்று அனுமதி தானத்தைப் பண்ணி உதாசீனனாய் இருக்கும் -இப்படி தன் நினைவைத் தப்பிப் போரச் செய்தேயும் கர்ஷகனாய் இருக்குமவன்
-ஒரு கால் பார்த்தது இறே என்று சோம்பிக் கை வாங்காதே மேலே மேலே கோலுமா போலே
ஒருகால் அல்லால் ஒருகால் ஆகிலும் ஆகிறது -என்று சிருஷ்டியா நிற்கும்
சோம்பாது இப்பல்லுருவை எல்லாம் படர்வித்த வித்தா -பெரிய திருவந்தாதி -18-என்னக் கடவது இறே –
இப்படி இவன் சிருஷ்டித்து ரஷிப்பது எவ்வளவு என்னில்
மூ வுலகும் காவலோன் –
சிருஷ்டிக்கு கர்மீபவிக்கும் எல்லை யளவும்
கீழும் மேலும் நடுவும் -என்னுதல்
க்ருதகம் அக்ருதகம் க்ருதாக்ருதகம் -என்னுதல் (மகர் லோகம் –க்ருதாக்ருதகம் / கீழ் மூன்றும்-க்ருதகம் /மேல் மூன்றும் =அக்ருதகம்)
காவலோன்
சாஸ்திர ப்ரதா நாதிகளாலே ரஷிக்கை -இப்படி ரஷிப்பது தன் மேன்மை குலையாதே நின்றோ என்னில்
மாவாகி யாமையாய் மீனாகி மானிடமாம்
அகர்ம வச்யனானவன் கர்ம வச்யரோடு ஒக்கப் பிறந்தாயிற்று
மாவாகி –
ஹயக்ரீவ மூர்த்தியாய் அவதரித்த படி
யாமையாய் மீனாகி
வித்யா பிரகாசகமான அவதாரங்கள்
மானிடமாம்-
ராம கிருஷ்ணாதி யாவதாரங்கள் -அனுஷ்டேயார்த்த பிரகாசகமான அவதாரங்கள்
மர்யாதானாம் ச லோகஸ்ய கர்த்தா காரயிதா ச ச -என்றும்
யத் யதாசரதி ஸ்ரேஷ்ட -என்றும் சொல்லுகிறபடியே
இப்படி தாழ விட்டு அவதரிக்கிறவன் தான் ஆர் என்னில்
தேவாதி தேவ பெருமான்
மனுஷ்ய கந்தம் பொறாத தேவர்கள்– தேவர்கள் கந்தம் பொறாத நித்ய ஸூரிகளுக்கு அவ்வருகானவன்
என் தீர்த்தனே —
நல்ல போக்யஜாதம் இருக்க நிஷித்த த்ரவ்யங்களை விரும்புவாரைப் போலே
தானும் தன்னுடைய குணங்களும் இருக்க -சப்தாதி விஷயங்களை விரும்பிப் போந்த என்னை-அவற்றை விட்டுத் தன்னையே விரும்படியான சுத்தியைப் பிறப்பித்த சுத்தியை உடையவன்-
அன்றிக்கே -நான் இழிந்து ஆடும் துறை என்னுதல் –

—————————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: