பகவத் விஷயம் காலஷேபம் -60– திருவாய்மொழி – -2-6-6….2-6-11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

அவதாரிகை –

ஆஸ்ரிதனுடைய பிரதிஜ்ஞ்ஞா சமகாலத்திலே தோற்றுவான் ஒருவானான பின்பு எனக்கு ஒரு கர்த்த்வ்யாம்சம் உண்டோ -என்கிறார் –

உன்னைச் சிந்தை செய்து செய்து உன் நெடுமா மொழியிசை பாடியாடி என்
முன்னைத் தீ வினைகள் முழு வேரரிந்தனன் யான்
உன்னைச் சிந்தையினால் இகழ்ந்த இரணியன் அகல் மார்வம் கீண்ட என்
முன்னைக் கோளரியே முடியாதது என் எனக்கே –2-6-6-

கைங்கர்ய லாபம் -திருவாய்மொழி பாடி –சர்வ அபீஷ்டங்கள் பெறப் பெற்றேன் –
உன்னைச் சிந்தை செய்து செய்து -வகுத்த ஸ்வாமி -உபகாரகரான
நெஞ்சால் தீங்கு

உன்னைச் சிந்தையினால் இகழ்ந்த இரணியன் அகல் மார்வம் கீண்ட என் முன்னைக் கோளரியே-அநாயாசேன-
என் விரோதி நிரசனத்துக்கு -லக்ஷணம்
முன்னால் -காலம் முன் -என் கண் முன்னால்
ஆஸ்ரிதன் பிரகலாதன் நினைவு க்கு முன்னே –
நீ தானே அவன் பரம பக்தன் ஆக நீ தானே சங்கல்பித்தாய்
கோள் –மிடுக்கு
-அப்பொழுது நடந்ததும் –இரணியன் அகல் மார்வம் கீண்ட -தனக்கே என்று உள்ளார்
ஆபத் சகன் -பிராப்தன் -பரம போக்யன் -நிரந்தர அனுசந்தானம் பண்ணி
உன் நெடுமா மொழியிசை பாடியாடிநெடு மொழி /மா இசை -பெருத்த சங்கீதம் –
ப்ரீதியாலே உத்துங்கமான திரு வாய்மொழி -ஆயிரம் -பெருமையை யுடைய -அவனுக்குத் தக்க -இசை உடன்
விஷயம் -ஏற்ற ராகம் -ஏற்று பாடி -ஏற்ற ஆடி -பாட்டுக்கு ஈடான அபிநயம்
இயல் -இசை -நாடக தமிழ் -மூன்றும் -நெடுமா மொழியிசை பாடியாடி-அருளி –
கரண த்ரயத்தாலும் கிட்டிய போகத்தாலே
என் முன்னைத் தீ வினைகள் முழு வேரரிந்தனன் யான் -அநிஷ்டங்கள் தீரப் பெற்றேன் –
சரீரம் உறவோரைப் பார்க்காமல் போகும் முக்தன் போலே -அநாதி கால ஆர்ஜித பாபங்களை போக்கப் பெற்றேன்
போக்த்ருத்வம் -விரோதி நிவர்த்தகம் -இங்கே யாக தட்டில்லையே
இவரா வெட்டினார் –தான் தான் அனுபவித்தார் என்கிறார் -இதுவும் தப்பா –
போக்தா அவன் தானே -போக்குபவரும் அவரே -ஸ்வரூபம் தத் பிரகாரமான பின்பு -விட்டுப் பிரியாமல் சார்ந்து
அப்ருதக் ஸ்திதி -சார்ந்தே -விசேஷணமாக இருக்கும் -கை பண்ணிற்று என்று சொன்னால் போலே
முடியாதது என் எனக்கே -என்னால் முடியாததே என் -நேற்றே அடைந்தேன் -சங்கல்ப சக்தியால் தோன்றியவன்
-அவன் தோன்றிய பின்பு முடியாதது என்

உன்னைச் சிந்தை செய்து செய்து –
இனிமையாலே விட ஒண்ணாது இருக்கிற உன்னை மாறாதே அனுசந்தித்து
உன்னை –
யோக்யனுமாய் -பிராப்தனுமான உன்னை –
சிந்தை செய்து செய்து –
நிதித்யாசிதவ்ய -என்கிற விதி ப்ரேரிதனாய் இன்றிக்கே போக்யதையாலே விட மாட்டாதே அநவரத பாவனை பண்ணி
சிந்தை செய்வதே ஸ்வயம் பிரயோஜனம் -உபாசகனில் வியாவர்த்தன் பிரபன்னன்
உன் நெடுமா மொழியிசை பாடியாடி
நெடுமையும் மஹத்தையும் -மொழிக்கும் இசைக்கும் விசேஷணம்-
இயலில் பெருமையும் -இசையில் பெருமையும் சொல்லுகிறது
இயலும் இசையும் கரை காண ஒண்ணாத படி இருக்கிற மொழியைப் பாடி -அது இருந்த இடத்திலே இருக்க ஒட்டாமை ஆடி –
என் முன்னைத் தீ வினைகள் முழு வேரரிந்தனன் யான் –
என்னுடைய ப்ராக்தனமான கர்மங்களை வாசனையோடு போக்கினேன்
முழு வேர் -வேர் முழுக்க -என்றபடி -பக்க வேரோடு என்றபடி –பிரதான வேர் –ருசி பக்க வேர் –வாசனை
செயலில் ஈடுபாட வைக்கும் வாசனை -பார்ச்த்வத்தால் அத்தை -தடுத்த பின்னும் செய்வது ருசி
அவன் விரோதியைப் போக்கச் செய்தேயும் பலான்வயம் தம்மதாகையாலே -அரிந்தனன் யான் -என்கிறார் –எனக்கு பண்டே உபகரித்தவனே
உன்னைச் சிந்தையினால் இகழ்ந்த
உக்தி மாதரம் அன்றிக்கே நெஞ்சாலே இகழ்ந்தான் ஆயிற்று -இத்தால் அவன் விடுவது புத்தி பூர்வம் ப்ராதிகூல்யம் பண்ணினாரை-
கைக் கொள்ளுகைக்கு மித்ர பாவம் அமையும்
இரணியன் அகல் மார்வம் கீண்ட —
வரபலம் புஜபலம் ஊட்டியாக வளர்ந்த சரீரமானது திரு வுகிர்க்கு இரை போராமையாலே -அநாயாசேன கிழித்துப் பொகட்டானாயிற்று
என் முன்னைக் கோளரியே
நர சிம்ஹமுமாய் உதவிற்றும் தமக்காக என்று இருக்கிறார்
கோள் என்று மிடுக்காதல் -தேஜஸ் ஆதல் –மஹா விஷ்ணும் -என்கிற வியாபித்த மிடுக்காதல் –ஜ்வலந்தம் என்கிற தேஜஸ் ஆதல்
ஆஸ்ரிதனுக்கு ஒருவனுக்குச் செய்ததும் தமக்குச் செய்ததாக நினைத்திராத வன்று பகவத் சம்பந்தம் இல்லையாம் அத்தனை
முடியாதது என் எனக்கே-
நீ பிரதிஜ்ஞ்ஞா சம காலத்திலேயே வந்து தோற்றுவாயாயிற்ற பின்பு எனக்கு முடியாதது உண்டோ –

———————————————————————————————-

அவதாரிகை –

என்னளவில் விஷயீ காரம் என்னுடைய சம்பந்தி சம்பந்திகள் அளவும் சென்றது கிடீர் -என்கிறார் –

முடியாதது என் எனக்கேல் இனி முழு ஏழ் உலகும் உண்டான் உகந்து வந்து
அடியேனுள் புகுந்தான் அகல்வானும் அல்லன் இனி
செடியார் நோய்கள் எல்லாம் துரந்து எமர் கீழ் மேல் ஏழ் பிறப்பும்
விடியா வென்னரகத்து என்றும் சேர்த்தல் மாறினரே –2-6-7-

குலத்தில் சம்பந்தித்தார் எல்லாரும் உஜ்ஜீவனம் -என்கிறார் -நம்மை -சேர்க்க –மாதா பிதா -பிரணமாமி மூர்த்தனா -என்கிறார் ஆளவந்தார் –
முழு ஏழ் உலகும் உண்டான் -சமஸ்த லோகங்களும் -தனது செல்லாமைக்காக உண்டான் –
உகந்து வந்து அடியேனுள் புகுந்தான் –அந்த செல்லாமை -ரஷிக்காமல்-இருக்க முடியாதே -தனக்கு தரிக்க முடியாமல்
சேஷத்வ சம்பந்தமே பற்றாசாக -அடியேன் -உள் புகுந்தான்
அகல்வானும் அல்லன்-லோகங்கள் போலே புறம்பு போவானும் அல்லன் –
எமர் கீழ் மேல் ஏழ் பிறப்பும் இனி செடியார் நோய்கள் எல்லாம் துரந்து -சமஸ்த வியாதிகளையும் -அவித்யை -கர்ம -வாசனை -ருசி -கடக்க ஒட்டி
விடியா வென்னரகத்து என்றும் சேர்த்தல் மாறினரே-முடிந்து வெளிசிறப்பு இல்லாமல் -அது விடியும் நரகம் -இது சம்சாரம் விடியா வென் நரகம் –
என்றும் -யாவதாத்மபாவி -பிறக்க வேண்டிய பிரசக்தியே இல்லையே
முடியாதது என் எனக்கேல் இனி -குல சம்பந்தி பர்யந்தமாக -பஷ பதித்தத பின்பு இனி என்ன வேண்டும்
எல்லா காரியமும் தலைக் கட்டும் -என்னுடன் அனுபந்தித்தாகில்
நமக்காக சரண் அடைந்து மாறன் அடி பணிந்த உடையவர் செய்த பின்ப உ நமக்கு என் குறை –

முடியாதது என் எனக்கேல் இனி
எனக்காகில் இனி முடியாதது -உண்டோ –எனக்கு இனி அநவாய்ப்பதமாய் -அடையப்படாதது -இருப்பது ஓன்று உண்டோ –
நீர் இது என் கொண்டு சொல்லுகிறீர் என்ன –
முழு ஏழ் உலகும் உண்டான் உகந்து வந்து –
பிரளயாபத்தில் அகப்பட்ட பூமி -தன் வயிற்றிலே புகாத போது
படும் பாடு அடங்க தான் என் பக்கலிலே புகுராத போது படுவானாய் வந்து புகுந்தான் –
எனக்கு இனி முடியாதது உண்டோ
அடியேனுள் புகுந்தான் –
சம்பந்தத்தைப் பார்த்து புகுந்தான்
உட்கலந்தான் –
ஒரு நீராகக் கலந்தான்
தன் பக்கல் ஜகத்து புக்கால் போல் அன்றியே -உகந்து புகுந்தான் –
இவனுக்கும் ஜகத்துக்கும் செல்லாமை ஒக்கும் -உகப்பு இவ்விஷயத்தில் தன்னேற்றம் –
உரலுக்கும் கண்ணனுக்கும் ஒரே வாசி அழுகை போலே –
அகல்வானும் அல்லன் இனி
அந்த பூமிக்கு -பிரளயம் கழிந்த வாறே அகல வேணும் -இவனுக்கு அதுவும் இல்லை -முதலிலே பிரிவை பிரசங்கிக்க ஒட்டுகிறிலன் –
அல்லாவி -சொல்லவும் ஓட்ட மாட்டானே
சேதனரைப் போலே -பாபத்தாலே அகன்று -ஒரு ஸூக்ருதத்தாலே கிட்டுமது இல்லையே இவனுக்கு –

உம்மை அவன் இப்படி விரும்பினான் ஆகில் பனை நிழல் போலே உம்மை நோக்கிக் கொண்டு விட அமையுமோ -என்ன
செடியார் நோய்கள் எல்லாம் துரந்து –
செடி -பாபம்
பாபத்தாலே பூரணமான துக்கங்கள் -தூறு மண்டின நோய்கள் எல்லாம் துரந்து -விஷய பிராவண்யத்தாலே வந்த நோய்
அயோக்ய அனுசந்தானத்தாலே வந்த நோய் -பகவத் அனுபவ விச்லேஷத்தாலே வந்த நோய்
இவற்றை எல்லாம் வாசனையோடு ஒட்டி
உள்ள நோய்கள் எல்லாம் துரந்து என்கிற இடத்தில் சொல்லிற்று இல்லையோ இது என்னில் -அங்குச் சொல்லிற்று -தம் அளவில்
-இங்கு தம் சம்பந்தி சம்பந்திகள் விஷயமாயிற்று
இப்படி இவர்கள் ஒட்டிற்று எத்தாலே என்னில்
எமர் –
வேறு ஒன்றால் அன்று -என்னோட்டை சம்பந்தமே ஹேதுவாக
சம்பந்தம் எவ்வளவு என்னில்
கீழ் மேல் ஏழ் பிறப்பும்
கீழ் ஏழு படிகாலும் -மேல் ஏழு படிகாலும் தம்மோடு ஏழு படிகாலுமாக-இருபத்தொரு படிகால்
சேஷத்வ காரணமாக இவருள் புகுந்தான் -நம்மாழ்வார் சேஷமான ஹேதுவாக நம்மை விடாமல் அநிஷ்ட நிவ்ருத்தி செய்து –
21 -கோக்குல மன்னரை போக்கின புனிதன் -அரசு களை கட்ட -அவன் செய்வான் -ஆழ்வார் சம்பந்தம் என்பதால் நாம் உய்வோம் –
விடியா வென்னரகத்து –
ஒரு நாள் வரையிலே கர்ம ஷயம் பிறந்தவாறே விடியுமது இறே யமன் தண்டல் -இது விடியா வென்னகரம் இறே
நரகம் -என்று புத்தி பிறக்கும் அதில் -தண்மை தோற்றாத நரகம் இது
என்றும் சேர்த்தல் மாறினரே –
என்றும் கிட்டக் கடவதான தண்மை தவ்ர்ந்தார்கள்
நானும் பிரார்த்திக்க வேண்டிற்று இல்லை
அவனும் நினைப்பிட வேண்டிற்று இல்லை
எத்தாலே என்னில் -என் பக்கல் அவன் பண்ணின பஷபாத ராஜ குலத்தாலே மாறிக் கொண்டு நின்றார்கள்
முடியாதது என் எனக்கேல் இனி -என்று அந்வயம் –

மோஷயிஷ்யாமி -தன்னடையே ஓடிப்போமே -கிருஷ்ண சம்பந்தம் -இங்கே கிருஷ்ண த்ருஷ்ண சம்பந்தம் –
குலம் -சப்த சப்தச்ச சப்த – -தச பூர்வா தச உத்தர தன்னோடு -அந்தன்-ஒருவன் அநந்தன் ஒருவன் -கூட்டிப் போவது போலே
ஆழ்வார் குருடர்களான நம்மையும் கூட்டிப் போவார் –

——————————————————————————————-

அவதாரிகை –

இப்படி கனத்த பேற்றுக்கு நீர் செய்த ஸூக்ருதம் என் என்ன -ஒரு ஸூக்ருதத்தால் வந்தது அல்ல
நான் பிறந்து படைத்தது என்கிறார் –அதுவும் ஓன்று உண்டு-அந்தாதியாகப் பிறந்து போந்தேன் -என்கிறார் –
பிறந்து படைத்தது -தமப்பன் ஐஸ்வர்யம் பிள்ளைக்கு உண்டு -ஜன்ம சித்தம் –
அந்தாதி -பூர்வ தேக அந்தம் உத்தர தேஹம் ஆதியாக இருக்குமே -திருவாய்மொழி போலே இதுவும் -என்றவாறு –

மாறி மாறிப் பல பிறப்பும் பிறந்து அடியை யடைந்து உள்ளம் தேறி
ஈறிலின்பத்து இருவெள்ளம் யான் மூழ்கினன்
பாறிப்பாறி யசுரர் தம் பல் குழாங்கள் நீர் எழப் பாய் பறவை யொன்று
ஏறி வீற்று இருந்தாய் உன்னை என்னுள் நீக்கல் எந்தாய் –2-6-8-

விச்சேதியாது ஒழிய வேணும் இப் பேறு என்கிறார்
ஆழ்வார் தானே அவனுக்கு மாஸூச சொல்கிறார் -எதனால் இந்த சங்கை –
மரத்துண்டு அலையில் அகப்பட்டு கரை சேர்ந்தால் போலே -நாமும் பிறவி என்னும் அலையில் சிக்கி -பிறந்ததே அடியாக
-சரம தாழ்வு –நிலை மாறி மாறிப் பல பிறப்பும் பிறந்து -தேவாதி நாநா ஜன்மங்களிலும் -மீண்டும் மீண்டும்
அடியை யடைந்து –துரும்பு கரை சேர்ந்தால் போலே –பிறந்ததே உபாயம் –
உள்ளம் தேறி –அடியை அடைந்த பின்பு சேஷத்வ ஞானம் பிறந்ததால் –நீயே உபாய பூதன் -நெஞ்சில் தரம் உடையனாய்
ஈறிலின்பத்து இருவெள்ளம் யான் மூழ்கினன் -பேற்றில் சரம நிலை -அரை பாசுரத்துக்குள் -அனுபவ ஜனித
-முடிவு இல்லாத ஆனந்த சாகரம் –இரு -பெரு வெள்ளம் –ஈறில்லா முடிவு இல்லாத
யான் -அஹமர்த்தமான நான்
பாறிப்பாறி யசுரர் தம் பல் குழாங்கள் நீர் எழப் பாய் -சிதறி சிதறி போகும் படி -சேனா மத்யத்தில் பாய்ந்து
பறவை யொன்று ஏறி வீற்று இருந்தாய் -அத்விதீயமான -மேன்மை தோன்றும் படி இருந்தாய் நாதனே
உன்னை என்னுள் நீக்கல் எந்தாய்பிராப்தன் போக்யன் சரண்யன் விரோதி நிவர்தகன் -நான்கும் -ஆன உன்னை
என்னை விட்டு விலக வேண்டாம் என்கிறார்

மாறி மாறிப் பல பிறப்பும் பிறந்து
சபரிகரமாக உம்மை விஷயீ கரிக்க நீர் செய்தது என் என்ன
கடலுக்கு உள்ளே கிடந்த தொரு துரும்பு திரை மேல் திரையாக தள்ள வந்து கரையிலே சேருமா போலே மாறி மாறி பிறந்து
வாரா நிற்க திருவடிகளிலே கிட்டிக் கொண்டு நிற்கக் கண்டேன் இத்தனை
அனுபவித்து மீளுதல் -பிராயச் சித்தி பண்ணி மீளுதல் செய்யக் காலம் இல்லை யாயிற்று
மாறி மாறி இரண்டும் -அனுபவித்தும் பிராயச்சித்தம் பண்ணியும் போக்க முடியாத என்றபடி –
அடியை யடைந்து உள்ளம் தேறி
உள்ளம் தேறி அடியை அடைந்தவர் அல்லர்
அடியை அடைந்தாயிற்று உள்ளம் தேறிற்று-
ராமனை அடைந்து உள்ளம் தேறின தாரை போலே –
மனஸ் தெளிந்து -அடியை அடைவார் உபாசகர் -சித்த உபாய நிஷ்டர் -பர அனுக்ரக லப்தர் -அடியை அடைந்து மனஸ் தெளிவார்கள்
உள்ளம் தேறி
நெடுநாள் விஷய வாசனையாலும் பகவத் அலாபத்தாலும் உள்ள அந்த கரண காலுஷ்யம் -அழுக்கு-போய் ஹிருதயம் தெளிந்து
தெளிந்த அளவே அன்றியே
ஈறிலின்பத்து இருவெள்ளம் யான் மூழ்கினன்
முடிவு இன்றிக்கே இருக்கிற பெரிய ஆனந்த சாகரத்திலே அவகாஹித்தேன்
திருவடி திரு வநந்த ஆழ்வான் இவர்கள் குமிழ் நீர் உண்கிற விஷயத்திலே இறே நான் அவகாஹிக்கப் பெற்றது –
அஜீர்ணம் போய் அக்கார அடிசில் பெற்றேன் –ஒரு கடலில் தப்பி பிராப்த கடலில் ஆழ்ந்தேன் –துன்பக் கடலில் இருந்தும் இன்பக் கடலில் மூழ்கினேன் –
சம்சார நாற்றத்துக்குள் ஆழ்ந்து இருந்தவன் இப்பொழுது சம்சார கந்தமே இல்லாத நித்ய ஸூரிகள் உடன் ஒரு கோவையாக பெற்றேனே –

ஆனால் உம்முடைய விரோதிகள் செய்தது என் என்ன அதுக்குக் கடவாரை கேளிகோள் என்கிறார்
பாறிப்பாறி யசுரர் தம் பல் குழாங்கள் நீர் எழப் பாய் பறவை யொன்று ஏறி வீற்று இருந்தாய்
அசுர வர்க்கத்தினுடைய பலவகைப் பட்ட குழாங்கள் ஆனவை பாறிப் பாறி நீர் எழுந்து போம் படியாக
பிரதிபஷத்தின் மேலே பாயா நின்றுள்ள அத்விதீயமான பறவையை மேற்கொண்டு உன்னுடைய வ்யாவ்ருத்தி தோன்ற இருந்தவனே –
பெரிய திருவடிக்கு அத்விதீயம்-அவன் கருத்து அறிந்து நடக்கையிலே தலைவனாகை –காய் சின பறவை அன்றோ –
அவன் பிரதிபஷ நிரசனத்துக்கு பண்ணின வியாபாரம் பெரிய திருவடி திருத் தோளிலே பேராதே இருந்தவனை
கொற்றப் புள் ஓன்று ஏறி மன்று ஊடே வருகின்றான் என்கின்றாளால் –
உன்னை என்னுள் நீக்கல் எந்தாய் —
ஸ்வாமியான நீ இனி ஒரு காலமும் உன்னை என் பக்கலிலும் நின்று பிரித்துக் கொண்டு போகாது ஒழிய வேணும்
உன்னை என்னுள் நீக்கல் –
என்னோடு இப்படிக் கலந்த உன்னை -உன்னுடைய கல்வியால் வந்த ரசம் அறிந்த என் பக்கல் நின்றும் நீக்க நினையாது ஒழிய வேணும்
தம்முடைய இனிமையாலே அதிசங்கை பண்ணுகிறார்
தன் உகப்பு அவனை எதிரிட்ட படி –
இந்த போகம் நமக்கு தொங்கப் புகுகிறதோ –அதி சங்கை -ஆழ்வாருக்கு -கீழும் மேலும் ஈஸ்வரன் அதிசங்கை –
பரஸ்பர அனுராகம் -பிரகாசிப்பிக்கிறார் –சேர்ந்த பின்பும் கொஞ்சம் விலகி இவர் உறுதியாக இருக்கிறாரா பார்ப்பானாம் –
அவர் நினைவு எல்லாம் இவனுக்கும் வர வேண்டும் -அவன் நினைவை அனுவாதம் பண்ணுகிறார் –
எதிரிட்ட -படி -அவன் சங்கைக்கு அனுவாதம் -என்றபடி –அஹம் அன்னம் –அஹம் அந்நாதா-தைத்ரிய உபநிஷத் –
அவனே போக்தா -அவன் ஆனந்தத்தை உணவாக நாம் உண்ணுகிறோம் –
ஆழ்வார் -பெருமாளை அடைந்ததை நிலைக்குமா சந்தேகம் –
கலந்த கலவி நிலைக்குமா என்று அவன் சந்தேகிக்க –
நாம் உணவை உண்டு ஹர்ஷிக்கிறோம் – உணவு இங்கே அவன் ஆனந்தமே –போலே -பிரகரணதுக்குத் தகுந்ததே –

எந்தாய்
விரோதியைப் போக்கிக் கலக்கைக்கு அடியான ப்ராப்தியைச் சொல்லுகிறது –

———————————————————————————

அவதாரிகை –

முதலிலே உன்னை அறியாது இருக்க -என்னை உன்னையும் உன் போக்யதையும் அறிவித்து
உன்னால் அல்லது செல்லாதபடி ஆக்கின நீ இனி என்னை விட்டுப் போகாது ஒழிய வேணும் -என்கிறார் –

எந்தாய் தண் திருவேங்கடத்துள் நின்றாய் இலங்கை செற்றாய் மராமரம்
பைந்தாள் ஏழுருவ ஒரு வாளி கோத்த வில்லா
கொந்தார் தண் அம் துழாயினாய் அமுதே உன்னை என்னுள்ளே குழைந்த வெம்
மைந்தா வானேறே இனி எங்குப் போகின்றதே –2-6-9-

நீயே கிருஷி பண்ணி கலந்த பின்பு நீயே பிரிவாயோ –
எந்தாய் -நிருபாதிக ஸ்வாமி
தண் திருவேங்கடத்துள் நின்றாய் -ஸூ லபன்
இலங்கை செற்றாய் -அம்மணக் கூத்து -ஆஸ்ரித விரோதி வாசஸ் ஸ்தானம் அழித்தாய்
மராமரம் பைந்தாள் ஏழுருவ ஒரு வாளி கோத்த வில்லா -அநாயாசேன –
கொந்தார் தண் அம் துழாயினாய் -கொத்து கொத்தாய் –அலங்க்ருதனாய்
அமுதே -நித்ய போக்தனாய்
உன்னை என்னுள்ளே குழைந்த வெம் மைந்தா -ஏக த்ரவ்யமாம் படி கலசின-நித்ய யௌவன ஸ்வ பாவனை
வானேறே -இத்தால் ஸூ ரிகளுக்கும் -செருக்காக இருப்பவனே
இத்தனை நாளும் ஆழ்வார் இடம் அமரரர்கள் அதிபதி செருக்கி இருக்க
இப்பொழுது நம்மாழ்வார் நாயகன் என்று சொல்லி செருக்கிக் கொள்வாராம்
இனி எங்குப் போகின்றதே-போக்கிடம் இல்லையே உமக்கு -எதனால் என்னை விட முடியும் –
1-அசாதாராண சம்பந்தத்தையும் -எந்தாய்
2-சௌலப்யம்
3-விரோதி நிவர்த்தகத்வத்தையும்
4-மகா ராஜரைப் போலே என்னையும் விச்வசிப்பித்து
5-ஒப்பனை அழகைக் காட்டி நித்ய போக்தனாய்
6-பிரிக்க ஒண்ணாத படி கலந்து
7-அத்தாலே இளகிப் பதித்து
8-இத்தாலே நித்ய ஸூரிகளுக்கும் செருக்கி வானேறே-

எந்தாய் தண் திருவேங்கடத்துள் நின்றாய் –
ஸ்ரமஹரமான திருமலையிலே வந்து நின்று உன் ஸ்வாமித்வத்தை காட்டி என்னை சேஷத்வத்திலே நிறுத்தினவனே
இலங்கை செற்றாய் –
பிராட்டியோட்டை சம்ச்லேஷ விரோதியைப் போக்கினாப் போலே -என்னுடைய சேஷத்வ விரோதியைப் -மயர்வு அறுத்து -போக்கினவனே
மராமரம் பைந்தாள் ஏழுருவ ஒரு வாளி கோத்த வில்லா –ஆஸ்ரித விஷயத்தில் மழு வேந்திக் கொடுத்து கார்யம் செய்யும் படி –
மழு வேந்திக்-தப்த அய பிண்டம் -கொதிக்கும் இரும்பு
பரந்த அடியை உடைத்தான மராமரங்கள் ஏழும் மாறுபாடுருவும் படியாக
பண்டே தொளையுள்ளது ஒன்றிலே ஓட்டினால் போலே அம்பைக் கோத்த வில் வலியை உடையவனே
கொந்தார் தண் அம துழாயினாய்
வைத்த வளையத்தோடு நின்றாயிற்று மராமரம் எய்தது
அவதாரத்துக்குச் சேர ஏதேனும் ஒன்றால் வளையம் வைக்கிலும் திருத் துழாய் அல்லது தோற்றாது இவருக்கு
அவதாரத்துக்கு சேர –துழாய் மாலை தரித்தே -எந்த புஷ்பம் சாதிக்கக் கொண்டு இருந்தாலும் -ஆயுதம் -சக்கரம்
வாகனம் -பெரிய திருவடி -படுக்கை -திரு அநந்த ஆழ்வான் அம்சம் சுக்கிரக் கண்ணை துரும்பால் கிளறின சக்கரக் கையன் போலே
கொந்தார் -தழைத்து இருக்கை
அமுதே
மராமரம் எய்கிற போது இலக்கு குறித்து நின்ற நிலை இவருக்கு போக்யமாய் இருக்கிறபடி
இப்படித் தானே பக்க நோக்கு அறியாமல் என்னையே இலக்காக நோக்கி அருளினான் –
-உன்னை என்னுள்ளே குழைந்த வெம்
கலக்கிற இடத்தில் -ஏக தத்வம் என்னலாம் படி கலந்து இனி போவேன் என்றால் போகப் போமோ -போகிலும் கூடப் போம் இத்தனை
மைந்தா –
என்னோடு கலந்த இத்தாலே நவீக்ருதமான யௌவனத்தை உடையவனே
வானேறே
தன் போக்யதையை நித்ய ஸூரிகளை அனுபவிப்பித்து -அத்தாலே வந்த மேன்மை தோற்ற இருக்குமா போலே யாயிற்று
இவரை அனுபவிப்பித்து மேன்மை தோற்ற இருந்தபடி
இனி எங்குப் போகின்றதே-
உன்னால் அல்லது சொல்லாத படியான என்னை விட்டு உன்னை ஒழியக் கால ஷேபம் பண்ண வல்லார் பக்கல் போகவோ —
நித்ய ஸூரிகளை விடில் அன்றோ என்னை விடலாவது
இவர் நம்மை விடில் செய்வது என் என்று அவனுக்கு உண்டான அதி சங்கையை பரிஹரியா நிற்க நீ என்னை விட்டுப் போகாதே கொள்
என்கிற இதுக்கு கருத்து என் -என்னில்
விலஷண விஷயம் -தானும் கால் கட்டி -எதிர்த் தலையும் கால் கட்டப் பண்ணுமாயிற்று —
சேதனன் -அதி வியாமோஹம் -கால் கட்டப் பண்ணுவதாவது அதி சங்கை பண்ணுகை –விலஷண விஷயம் தன்னையும் அதி சங்கை பண்ணப் பண்ணும் —
எதிர்த் தலையையும் அதி சங்கை பண்ண வைக்கும்

1-எந்தாய் -நீ சேஷி அல்லாமல் போகவோ -சேஷத்வம் மறந்தேன் என்று போகவோ –
2-தண் திருவேங்கடத்துள் நின்றாய் -நீ தூரச்தனாய் போகவோ
3-இலங்கை செற்றாய் -நீ விரோதி நிரசன சீலன் அல்லாமல் போகவோ
4-மராமரம் பைந்தாள் ஏழுருவ ஒரு வாளி கோத்த வில்லா -ஆஸ்ரித விஷயத்தில் மழு ஏந்திக் கொடுத்து கார்யம் செய்யும் அவன் அல்லாமல் போகவோ
5-கொந்தார் தண் அம் துழாயினாய் -ஆஸ்ரித ரஷணத்துக்கு மாலையிட்டிலையாய் போகவோ -கங்கணம் -ரஷை-தீஷை –
6-அமுதே-போகய பூதன் அல்லாமல் போகவோ
7- உன்னை என்னுள்ளே குழைந்த-ஒரு நீராக கலந்திலையாய் போகவோ
8- வெம் மைந்தா -நவீக்ருத ஸ்வ பாவன் அல்லாமல் போகவோ
9-வானேறே -மேன்மையன் அல்லாமல் போகவோ
10-இனி எங்குப் போகின்றதே-போகிலும் கூடப் போம் இத்தனை ஒழிய -ஏக தத்வம் என்னலாம் படி கலந்து தனித்துப் போகலாமோ

—————————————————————————————

அவதாரிகை –

நாம் போகாது ஒழிகிறோம் -நீர் நம்மை விடாது ஒழிய வேணுமே -என்ன -நீ பண்ணின உபகாரங்களைக் கண்டு வைத்து
விட சம்பாவனை உண்டோ என்கிறார் –கால த்ரயத்தாலும் சர்வ வித பந்துவுமான உன்னை விட சம்பாவனை இல்லை என்கிறார் –

போகின்ற காலங்கள் போய காலங்கள் போக் காலங்கள் தாய் தந்தை உயிரா
கின்றாய் உன்னை நான் அடைந்தேன் விடுவேனோ
பாகின்ற தொல் புகழ் மூ வுலகுக்கும் நாதனே பரமா தண் வேங்கட
மேகின்றாய் தண் துழாய் விரை நாறு கண்ணியனே –2-6-10-

உபகாரங்களைக் கண்ட நான் உன்னை பெற்று வைத்தும் விடுவேனோ
போகின்ற காலங்கள் போய காலங்கள் போக் காலங்கள்-வர்த்தமான பூத ஆகாமி -முக்காலத்திலும்
தாய் தந்தை உயிரா கின்றாய்-தன் ஆத்மாவும் தனக்குப் பண்ணும் பரிவையும் பண்ணா நிற்பானாய்
பாகின்ற தொல் புகழ் மூ வுலகுக்கும் நாதனே -பரவுகின்ற -அநாதி சித்தமான -குணத்தால் வந்த சீர்மை
த்ரிவித சித் அசித்-நாதனே
பரமா தண் வேங்கட மேகின்றாய்- பெருமைக்கு மிக்கார் இல்லாமல் -அன்றியே ஸ்ரமஹரமான -மேவி நிற்கும் சௌலப்யம்
தண் துழாய் விரை நாறு கண்ணியனே -ஸூ சகம் -திருத் துழாய் -பரத்வ சௌலப்ய போக்யத்வ –
உன்னை நான் அடைந்தேன் விடுவேனோ -அடைந்த பின்பு விட ஷமன் அல்லேன் –

போகின்ற காலங்கள் போய காலங்கள் போக் காலங்கள் தாய் தந்தை உயிராகின்றாய் உன்னை நான் அடைந்தேன் விடுவேனோ –
தாய் ஆகின்றாய் -தந்தை ஆகின்றாய் -அவர்கள் விட்ட பொழுதிலும் உயிர் ஆகின்றாய் -தான் தனக்கு பார்க்கும் ஹிதமும் –
கால த்ரயத்தாலும் பரிவுடைய தாய் செய்வதும் செய்து -ஹித காமனான தமப்பன் செய்வதும் செய்து- ச பித்ரா ச பரித்யக்த -என்று
அவர்கள் விடும் அளவிலும் தான் தனக்கு பார்க்கும் ஹிதமும் பார்க்கும்படி சர்வ பிரகாரத்தாலும் ப்ராப்தனுமாய்
உபகாரகனுமான உன்னை உபகார ஸ்ம்ருதியை உடைய நான் கிட்டப் பெற்று வைத்து விட சம்பாவனை உண்டோ
பாகின்ற தொல் புகழ் மூ வுலகுக்கும் நாதனே
விதித என்கிறபடியே சத்ரு கோஷ்டியிலும் பிரசித்தமாம்படி பரம்பி இருப்பதாய் ஸ்வாபாவிகமான கல்யாண குணங்களை
விதித சித தர்மஸ்ய சரணாகத வத்சல -உன் கோஷ்டியிலும் அறிவார்கள் -சூர்பணகை -மாரீசன் -கர தூஷணாதிகள் -விபீஷணன் -அறிவார்களே
உடையையாய்-தரை லோக்யத்துக்கு நிர்வாஹகனானவனே
பரமா தண் வேங்கட மேகின்றாய்
குணங்களுக்கும் ரஷணத்துக்கும் உன்னை எண்ணினால் பின்னை எண்ணலாவார் இல்லாதபடி சர்வாதிகனாய் இருக்கிருமவனே –
இப்படி சர்வாதிகனாய் இருந்து வைத்து -என்னை அடிமை கொள்ளுகைக்காக ஸ்ரமஹரமான திருமலையிலே வந்து சந்நிஹிதன் ஆனவனே
-உன்னை நான் அடைந்தேன் விடுவேனோ -என்று அந்வயம்-
தண் துழாய் விரை நாறு கண்ணியனே —
இவருடைய ஆர்த்தி எல்லாம் தீரும்படியாக வந்து விஷயீகரித்து-தன்னை அனுபவிப்பித்து -இவர் தன்னை விடில் செய்வது என் என்கிற
அதி சங்கையும் தீர்த்து
தோளில் இட்ட மாலையும் –தண் துழாய் விரை நாறு கண்ணியனே –இப்பொழுது தான் –அதி சங்கை தீர்ந்த பின்பு பரிமளிதமாய்
பிடித்து மோந்த இலைத் தொடை மாலையும் -கைபந்து –தானுமாய் -பரிபூர்ண மநோ ரதனுமாய்-நின்றபடி

———————————————————————————–

அவதாரிகை –

நிகமத்தில் இத் திருவாய் மொழியை அப்யசிக்க வல்லார் ஆரேனும் ஆகவுமாம் -அவர்களுக்கு குல சரண கோத்ராதிகள்
அப்ரயோஜகம் -இவ்வாகாரத்தாலே அவர்கள் பகவதீயர் என்கிறார் –

விசிஷ்டாத்வைதம் /
கண்ணித்  தண்ணம் துழாய் முடிக் கமலத் தடம் பெரும் கண்ணனைப் புகழ்

நண்ணித் தென் குருகூர்ச் சடகோபன் மாறன் சொன்ன
எண்ணில் சோர்வில் அந்தாதி ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து இசையோடும்
பண்ணில் பாட வல்லார் அவர் கேசவன் தமரே –2-6-11-

பகவத் சேஷத்வ சித்தி -கேசவ தமர் ஆவார் -அவனுக்கே சங்கை தீர்த்த பத்து -அவன் மயர்வு அற இவர் அருளிய படி
விசிஷ்டாத்வைதம் /
கண்ணித்  தண்ணம் துழாய் முடிக்
-மாலாகாரமாய் -குளிர்ந்த -அலங்க்ருதமான
கமலத் தடம் பெரும் கண்ணனைப் -விசாலமான நீண்ட திருக்கண்கள்
புகழ் நண்ணித் -ஆஸ்ரித சம்ச்லேஷ
தென் குருகூர்ச் சடகோபன் மாறன் சொன்ன -குடிப்பர் -காரிமாறன் -உலகு இயல்பில் மாறி
எண்ணில் -பகவத் அபிப்ராயமே பாட்டாக
சோர்வில் அந்தாதி -அடைவாக
ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து இசையோடும் பண்ணில் பாட வல்லார் அவர் கேசவன் தமரே
பண்ணிலே பாடுவார் -அவ்வவிகித -இடை இல்லாத -தோல்வி அற்ற -சம்பந்தம்
எண் -ஞானம்- தத்வ ஞானம்- தப்பாத பண் ஸ்வரம்

விசிஷ்டாத்வைதம் /
கண்ணித்  தண்ணம் துழாய் முடிக் கமலத் தடம் பெரும் கண்ணனைப்
இப்போது யாயிற்று வளையம் செவ்வி பெற்றதும் -முடி நல தரித்ததும் -திருக் கண்கள் விகசிதம் ஆயிற்றும்
உன்னை நான் அடைவேன் -விடுவேனோ -விசிஷ்டாத்வைதம் /
கண்ணித்  தண் துழாய் -கேட்டு ஆனந்தம் -திருமேனி குளிர்ச்சியால் மாலையே மலர்ந்ததே
-நித்ய ஸூ ரிகளும் மகிழ்ந்தனர் -இப்பொழுதே கமலத் தண் தடம் கண்ணன் ஆனான் –
புகழ் நண்ணித்
அவன் தம் பக்கல் பண்ணின வயாமோஹ குணத்திலே அவகாஹித்து
தென் குருகூர்ச் சடகோபன் மாறன் –
ஓன்று திரு நாமம்
ஓன்று சத்ரு வர்க்கத்துக்கு ம்ருத்யுவாய் உள்ளவர் -என்கிறது
சொன்ன
எண்ணில் சோர்வில் அந்தாதி -ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து
அவன் தம் பக்கல் பண்ணின வயாமோஹ அதிசயத்தை அனுசந்தித்து -அவற்றில் ஒன்றும் குறையாமே அருளிச் செய்த ஆயிரத்தில் இப்பத்து
இசையோடும் பண்ணில் பாட வல்லார்
இதில் அபி நிவேசத்தால் இசையோடும் பண்ணோடும் பாட வல்லவர்கள் –
பண்ணாகிறது -கானம்
இசையாகிறது -குருத்வ லகுத்வாதிகள் தன்னிலே நெகிழ்ந்து பொருந்துகை -நீட்டி சுருக்கி –
சம்யுக்தங்கள் -ஆதி சப்தம் -இசை கானம் நெகிழ்ந்து பொருந்த வேண்டும் –தொனி பண் -நிறம் -இசை –
அவர் கேசவன் தமரே –
அவர்கள் ஆரேனும் ஆகவுமாம்
குல சரண கோத்ராதிகள் அபிரயோஜகம்
அரையர்கள் -விண்ணப்பம் செய்வார்கள் என்னுமா போலே இவ்வாகாரத்தாலே அவர்கள் பகவதீயர் -தன் முகத்தாலே -உத்தேச்யர் ஆவார்

முதல் பாட்டில் எம்பெருமான் இவர் நம்மை விடில் செய்வது என் -என்கிற அதி சங்கையைப் போக்கினார்
இரண்டாம் பாட்டில் –அது போன பின்பு அவனுக்குப் பிறந்த புது கணிப்பை சொன்னார்
மூன்றாம் பாட்டில் தமக்கு அவன் பண்ணின ஔதார்யத்தை அனுசந்தித்து வித்தரானார்
நாலாம் பாட்டில் அவன் உமக்குப் பண்ணின ஔதார்யம் ஏது என்ன இதர விஷய வைராக்கியம் என்றார்
அஞ்சாம் பாட்டில் இதர விஷய வைராக்ய பூர்வகமாக ஆத்மானந்த தாச்யத்திலே அதிகரித்த நான் இனி ஒரு நாளும் விடேன் -என்றார்
ஆறாம் பாட்டில் ஆஸ்ரிதற்கு உதவுவாயான பின்பு எனக்கு ஒரு குறையுண்டோ என்றார் –
ஏழாம் பாட்டில் என்னுடைய சம்பந்தி சம்பந்திகளுக்கும் ஒரு குறையில்லை என்றார்
எட்டாம் பாட்டில் இதுக்குத் தாம் அனுஷ்டித்த உபாயம் இன்னது என்றார்-
ஒன்பதாம் பாட்டில் இவர் அகவாய் அறிய வேணும் என்று ஓர் அடி பேர நிற்க இனிப் போக ஒண்ணாது என்கிறார்
பத்தாம் பாட்டில் –நாம் போகாது ஒழிகிறோம் நீர் தாம் போகாது ஒழிய வேணுமே என்ன-கால த்ரயத்தாலும் சர்வவித பந்துவுமான
உன்னை விட சம்பாவனை இல்லை என்றார்
நிகமத்தில் இது கற்றார்க்கு பலம் சொல்லித் தலைக் கட்டினார் –

—————————————————————————————-

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

நீசந்து மாம் அதிகதாக யம் –தாழ்ந்தவன்
இது ஸூ சூக்த்யா-ஜாதாம்-
-ஹரே ஸுவ விரஹ ஆகமனே அதிசங்கை நிரசய
திருட சங்க இரா –வாக்காலே -சிக்கென பிடித்தேன்
தத் ஆதாரத

————————————————————————-

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –

சுவ ஆஸ்வாத ஆஹ்யா பகத்வாத் –வைகல் தோறும் அமுதான வானேறே
ச்ரித நியத த்ருஸ் ஏக –எங்கும் பக்க நோக்கு அறியாமல்
ந ஏக போக பிரதாநாத் –
தியாக அனர்ஹ பிரகாசாத் –பிரசக்தியே இல்லையே கை விட
ஸ்திர பரிசரண பாவநாத் -ச்தாபநாத் —உனது அந்தமில் அடிமை அடைந்தேன் -நான்கும் -அடைந்தேன் -/அடிமை அடைந்தேன் -/அந்தமில் அடிமை அடைந்தேன் -/உனது அந்தமில் அடிமை அடைந்தேன் -/
பாவ பங்கா த்-முழு வினை
துஸ்ஸாகார்ரர்த்த சித்தேயே –முடியாதது இனி எனக்கேல் இனி
விரக பய க்ருத்யே
துர் விபேத ஆத்மயோகாத் –என்னுள் குழைத்த
நித்ய அநேக உபகாராத்யேத்-
ஆஸ்ரிதர் விடில் –செய்வது என் -விஸ்வாசம் அருளி –

——————————————————————————-

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 16-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்–

வைகுந்தன் வந்து கலந்ததற் பின் வாழ் மாறன்
செய்கின்ற நைச்சியத்தைச் சிந்தித்து -நைகின்ற
தன்மைதனைக் கண்டு உன்னைத் தான் விடேன் என்று உரைக்க
வன்மை யடைந்தான் கேசவன்—————-16-

பித்தின் அடியாக -கர்மத்தால் அல்ல-ஆஸ்ரிதர் வியாஹோமம் அடியாக –
2-5- வந்து கலந்த –வைகுந்தன் –என்பதால் அந்தாமத்து அன்பில் –
செய்கின்ற நைச்ச்யம் -சிந்தித்து -1-5- பழைய நினைவு வர –
பகவான் நைகின்ற தன்மைதனை ஆழ்வார் கண்டு
உன்னை விடேன் -என்று ஆழ்வார் உரைக்க
சத்ய சங்கல்பர் சத்ய வாக்யர் இவர் என்று விஸ்வசித்து
இழந்த வன்மையை மீட்டுக் கொண்டான் –
மேலும் மீளும் -பின்னும் தீருவார் -இப்படி பண்ணி அருளி -பிறந்து படைத்த ஐஸ்வர்யம் அல்லவோ இது –

—————————————————————————————

அவதாரிகை –

இதில்
அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆராவமுதம் -என்று
அனுபவிக்கிற இவர்
அயோக்யன் என்று அகலில் செய்வது என் -என்று
ஈஸ்வரன் அதி சங்கை பண்ண –
இவர் சமாதானம் பண்ணி தேற்றின படியைப் பேசுகிற
பாசுரத்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார்
அது எங்கனே என்னில் –
சர்வேஸ்வரன் உடன் சம்ச்லேஷித்த இவர்
அல்லாவியுள் கலந்த -என்று
தம் சிறுமையைப் பார்த்து அனுசந்திக்கையாலே
வள வேழ் உலகு -தலை எடுத்து
இன்னமும் இவர் நம்மை விடில் செய்வது என் –என்று
அதி சங்கை பண்ணி
அலமருகிற படியைக் கண்டு
இவனுக்கு நம் பக்கல் பாரதந்த்ர்ய வாத்சல்யங்கள் இருந்த படி என் –என்று விஸ்மிதராய்
அல்லாவிகுணமாக கொண்ட திருக் கல்யாண குணமே வாத்சல்யம் –
தான் அகலாமைக்கு உறுப்பாக பலவற்றையும் சொல்லி
அவன் அதி சங்கையையும் தீர்த்து
அவனைத் தரிப்பிக்கிற –வைகுண்ட மணி வண்ண -னில் அர்த்தத்தை
வைகுந்தன் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் –

ஸ்ரீ பாஷ்யத்தை ஒருகால் -திருவாய்மொழியை சதா காலம் அனுபவிக்க -திருவாய்மொழிப் பிள்ளை
மணவாள மா முனிகளுக்கு ஆஜ்ஞ்ஞை செய்து அருளினாரே

————————————————————————————

வியாக்யானம்–

வைகுந்தன் வந்து கலந்ததற் பின் –
நித்ய விபூதி உக்தன்
அந்தாமத்து அன்பு செய்து என் ஆவி சேர் அம்மான் -என்னும்படி
ஒரு நீராக கலந்த பின்பு –

வாழ் மாறன் –
அத்தாலே சத்தை பெற்று
சம்பன்னரான ஆழ்வார் –

செய்கின்ற நைச்சியத்தைச் சிந்தித்து –
இவர் -அல்லாவி -என்று அகல நினைக்கிற
நைச்சய அனுசந்தானத்தைக் கண்டு
இது என்னாக விளையக் கடவது -என்று
ஈஸ்வரன் விசாரித்து –
பாலாழி கண் வளரும் பண்பை கேட்டே யும் கால் ஆளும் -ஆழ்வாருக்கு -இங்கே -நைகின்ற தன்மையைக் கண்டு பெருமாள் –

நைகின்ற தன்மைதனைக் கண்டு –
அவன் சிதிலனாகிற பிரகாரத்தை தர்சித்து –

உன்னைத் தான் விடேன் என்று உரைக்க –
இப்படி என் விச்லேஷத்தில் அதி பீருவாய் இருக்கிற
உன்னை தான் விடேன் என்று –
உன்னை நான் பிடித்தேன் கொள் சிக்கெனவே -என்றும்
உன்னை எங்கனம் விடுகேன் -என்றும்
அந்தமில் அடிமை அடைந்தேன் விடுவேனோ -என்றும்
உன்னை நான் அடைந்தேன் விடுவேனோ -என்றும்
ஈஸ்வரனைக் குறித்து அருளிச் செய்ய –
வன்மை யடைந்தான் கேசவன் –
விஜ்வர ப்ரமுமோதஹா-என்னும்படி
துளக்கற்ற அமுதமாய் எங்கும் பக்க நோக்கு அறியாதே – என்றும்
என் மரகத மலையே -என்னும்படி
ஸ்தர்யத்தைப் பிராபித்தான் –பிரசக்த கேசவன் ஆனவன் -மரகத மலை –
விஜ்ஜுர ப்ரமோதாகஅநிஷ்ட நிவ்ருத்த இஷ்ட பிராப்தி -வன்மை அடைந்தார் -இங்கே -விடேன் சொன்னதுமே

——————————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: