பகவத் விஷயம் காலஷேபம் –59– திருவாய்மொழி – -2-6-1…2-6-5—-ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

பிரவேசம் –

ஆடியாடியிலே ஆர்த்தி –தீர வந்து சம்ச்லேஷித்த படி சொல்லிற்று அந்தாமத்தன்பு –
அந்த சம்ச்லேஷத்தால் வந்த ப்ரீதி அவனது என்னும் இடம் சொல்லுகிறது இத் திருவாய் மொழி
பிரணயி ப்ரீத்யநுசந்தானம் காண் இது -என்று ஆளவந்தார் அருளிச் செய்யும் படி -ஆழ்வார் விஷயமாக அவனது பிரேமம்-
ஆழ்வார் விஷயமாக ஈஸ்வரனுக்கு உண்டான ப்ரீதி சொல்லுகிறது இதில்
ஊனில் வாழ் உயிரிலே -ஆழ்வார் தாம் பகவத் அனுபவம் பண்ணி தமக்கு அவன் பக்கலில் உண்டான ப்ரேமம் அவன் அளவிலே பர்யவசியாதே
அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ என்று ததீயர் அளவும் சென்ற படி சொல்லிற்று –
இத்திருவாய் மொழியில் –சர்வேஸ்வரன் ஆழ்வார் பக்கல் பண்ணின ப்ரேமம் இவர் ஒருவர் அளவன்றிக்கே சம்பந்தி சம்பந்திகள்
அளவும் வெள்ளம் இடுகிறபடி சொல்லுகிறது -எம்பெருமானார் நிர்வாகம் –
இரண்டு தலைக்கும் ரசம் அதிசயித்தால் சம்பந்தி சம்பந்திகள் அளவிலும் செல்லும் இறே
எமர் கீழ் மேல் எழு பிறப்பும் விடியா வென் நரகத்து என்றும் சேர்தல் மாறினர்—மா சதிர் இது பெற்றோம் என்கிறாரே -என்கிறார் இறே

உபய விபூதி உக்தனாய் -சமஸ்த கல்யாண குணாத்மகனாய்-சர்வ பிரகார பரி பூர்ணனான தான் தன படிகள் ஒன்றும் குறையாதபடி
வந்து இவரோடு சம்ச்லேஷித்து –-அந்தாம தன்பு செய்து –என்னுள் -அல்லாவி உள் கலந்தான் –
-அந்த சம்ச்லேஷம் தான் தன் பேறு என்னும் இடம் தோற்ற ஹ்ருஷ்டனாய் –பிராப்திக்கு உகப்பானும் அவனே –
அநாதி காலம் எதிர் சூழல் புக்கு திரிந்த வஸ்துவை -ஒருபடி பிராபிக்க பெறுவோமே –இவர் தாம் இனி நம்மை விடில் செய்வது என் என்று அதிசங்கை பண்ணி
அவன் அலமாக்குகிற படியைக் கண்டு -நீ இங்கன் பட வேண்டா என்று அவன் அதி சங்கையை பரிஹரித்து அவனை உளன் ஆக்குகிறார்
வைதேஹி ரமசே கிச்சித் சித்ர கூடே மயா சஹ -அயோத்யா -94-18-என்றால் போலே யாயிற்று இதில் ரசமும்
மைதிலி உன்னை அறிந்தாயே -நம்மை அறிந்தாயே -கலக்கிற தேசம் அறிந்தாயே -என்றார் இறே பெருமாள் –

விசித்திர சிகரம் –குபேர இதி நந்தன -வன வாசேன -இரண்டு லாபம் -பிதா கடன் தீர்த்தேன் -பரதம் ப்ரீதி நாட்டுக்கு தெரியப் பெற்றேன் –
வைதேகி -மூன்றாவது பலத்துக்கு ஆசைப் படலாமா -எப்பொழுதும் நீ கூடவே இருந்து அனுபவிப்போமா –அதீத ப்ரீதியால் வந்த சங்கை –
யோக -கிடைக்காதது கிடைப்பது -ஷேமம் -கிடைத்தது நிலைப்பது
அல்லாவி -என்றாரே -இவர் உடன் கலவி நிலைக்குமா அவனது ஆரத்தியைத் தீர்க்கிறார் ஆழ்வார் இதில் -மாஸூச சொல்கிறார் அவனுக்கு –
நீர் வாய்ப்பு நிழல் வாய்ப்பு -அழகையும் -தங்கள் சேர்த்தி அழகையும் கண்டு -அதிசங்கை பண்ணினாரே பெருமாள் –
பெருமாளுக்கு -ஆழ்வார் இடம் -சம்ச்லேஷ ஜனித ப்ரீதியும் –அல்லாவி உள் கலந்த –என்றும் –என் முடிவு காணாதே என்னுள் கலந்தானே -என்றும்
-நைச்சாயானுசந்தானமும் -அதிசங்கையை பரிகரித்த பதிகம் -இது –உன்னை நான் பிடித்தேன் கொள் சிக்கனவே-ஜீவன் பரமாத்மாவுக்கு சொல்லும் -மாஸூச-
செவ்வரத்த அரைவாடை கச் என்கின்றாளால் -போன்ற சொற்கள் –

——————————–

அவதாரிகை —
அந்தாமத் தன்பிலே ஆழ்வார் உடனே வந்து கலந்து தான் பெறாப் பேறு பெற்றானே இருக்கச் செய்தே -இவர் –
அல்லாவியுள் கலந்து -என்றும்
என் முடிவு காணாதே என்னுள் கலந்தான் -என்றும் தம்முடைய நைச்யத்தை அனுசந்தித்தவாறே
-வளவேழ் உலகு தலை எடுத்து இன்னம் இவர் நம்மை விடில் செய்வது என் என்று
எம்பெருமானுக்குப் பிறந்த அதி சங்கையை நிவர்த்திப்பிக்கிறார்

வைகுந்தா மணி வண்ணனே என் பொல்லாத் திருக் குறளா என்னுள் மன்னி
வைகல் வைகல் தோறும் அமுதாய வானேறே
செய்குந்தா வரும் தீமை உன் அடியார்க்குத் தீர்த்து அசுரர்க்குத் தீமைகள்
செய்குந்தா உன்னை நான் பிடித்தேன் கொள் சிக்கனவே –2-6-1-

நிரதிசய போக்யனான -அநிஷ்ட நிவ்ருத்தனனான உன்னை –நான் சிக்கென பற்றி உள்ளேன் திரு உள்ளம் பற்று என்கிறார்
வைகுந்தா -அந்தாமத்து -பதிகம் சங்க்ரஹண சொல் -வைகுண்ட நிலையனே -அசாதாராண சேஷி
மணி வண்ணனே -நீல ரத்னம் போலே வடிவு கொண்ட ஸூலபனே
என் பொல்லாத் திருக் குறளா -சௌந்தர்யம் -தர்ச நீய மான -வாமன விக்ரஹம் -போக்யனான
ஆகார த்ரவ்யம் பிரகாசிப்பித்துக் கொண்டு –
என்னுள் மன்னி -சத்திர சம்ச்லேஷம் பண்ணி
வைகல் வைகல் தோறும் -காலம் தோறும் இருக்கும்
அமுதாய வானேறே -நிரதிசய போக்யனான -நித்ய ஸூ ரிகள் சமானமாம் படி அனுபவிப்பிக்கும் -மேன்மை யுடையவன்
செய்குந்தா வரும் தீமை உன் அடியார்க்குத் தீர்த்து-தானே செய்யும் -குந்தா -குறையாத -பலத்தை கொடுத்தே தீரும்
-பரிகரிக்க அரியதான -நம்முள் மன்னி -கொடிய பாபங்களை
சேஷ பூதர்களுக்கு தீர்த்து -பிரதிகூலர் பக்கலிலே யாம் படி பண்ணி –
அனுகூலர் இடம் புண்ய விநியோகம் -பாப பலம் பிரதிகூலர் பக்கல் விநியோகம் -ஆகுமே –
அசுரர்க்குத் தீமைகள் செய்குந்தா -அசுரர்கள் இடம் அந்த பாப பலம் போகும் படி –
அநர்த்தம் விளைவிக்கும் –குந்தன் -பெருமாளுக்கு திரு நாமம் –முகுந்தன் –குந்தம் –ஆயுதம்
உன்னை நான் பிடித்தேன் கொள் சிக்கனவே-போக்ய பூதனாய் -அநிஷ்ட நிவர்தகனாய் -ஆஸ்ரித பஷபாதனனாய் –
உன்னை ஒழிய செல்லாத நான் -இனி ஸ்திரமாக விடாமல் பற்றினேன் -திரு உள்ளம் கொள் -என்கிறார்
செய்கும் -தாவரும் -செய்யப்பட்டு இருக்கும் -தா அரும் -கடப்பதற்கு அரிதாய் –
குந்தம் -மரம் -வெளுப்பு -சுத்தன் -பொல்லா -விபரீத லஷணையால்-அழகை சொல்லிற்று
என் பொல்லா -தம்மை அழகால் அனந்யார்ஹன் ஆக்கிற்று என்கிறார்

வைகுந்தா –
நித்ய விபூதி உக்தன் தம்முடனே வந்து கலந்தான் -என்று ஹ்ருஷ்டராகிறார் என்னும் இடம் தோற்றுகிறது-
அவனது முதல் பேரைச் சொல்லுகிறார் –
முதல் பேர் -பிரதானம் -நாராயணன் -பிரதானம் தான் -ஐந்தில் சுருக்கிய மூன்றில் -உபாய பிராப்ய -சாதனம் விட்டு
-பிராப்யம் -புருஷார்த்தம் தானே பிரதானம் -நாராயண -அயன சப்தம் -இவனால் அடையப் பெறுகிறோம்
-இவனை அடைகிறோம் –இரண்டும் வருமே -கருமுகை மாலையைச் சும்மாடு ஆக்க கூடாதே –வைகுந்தா -பிராப்யம் மட்டுமே -சங்கை இல்லாமல்
ஸ்ரீ ஜனக ராஜன் திருமகள்-ஆர்ய புத்ர -என்னுமா போலேயும் -ராஜ குமாரி அன்றோ
ஆர்ய-ஷத்ரியன் -உயர்ந்த பூஜ்ய வாசி -சொல்லுவார் உள்ளம் வெகு தூரத்துக்கு உயர்த்தப் படும் திரு நாமம்
திருவாய்ப்பாடியில் பெண்கள் கிருஷ்ணா -என்னுமா போலேயும் –சரஸ் சந்திர மசம் -கௌமோதீகி-நஷத்ரம் -தாரகமான கிருஷ்ணன் –
நந்த கோபாலன் குமாரன் –ஆற்ற படைத்தான் மகனே -ஆண்டாள் -பர்த்ரு பேரை சொல்லாமல் –
-வைகுந்தா -என்கிறார் –
போகம் உத்கூலமானால் பரஸ்பரம் நாம க்ரஹணத்தாலே தரிப்பது என்று ஓன்று உண்டு இறே
மணி வண்ணனே-
அணைத்த போதை ஸ்பர்சத்தாலே-என்னாவி சேர் அம்மான் — திமிர்த்துச் சொல்கிறார் -நீல ரத்னம் போலே குளிர்ந்த வடிவை உடையவனே-
என் பொல்லாத் திருக் குறளாகுறள் -திரு -பொல்லா -மூன்றும் சொல்லி –
மகா பலி பக்கலிலே இரப்பாளனாய் நின்றால் போலே காணும் இவரைப் பெறுகைக்கு சிறாம்பி-சங்கோசம் அடைந்து – இரப்பாளனாய் நின்ற நிலை –
1–அழகிது -என்னில் நாட்டு ஒப்பம் என்று அழகில் விசஜாதியைச் சொல்லுதல்
2–கண் எச்சில் வாராமைக்கு கரி பூசுகிறார் என்னுதல்-ஸ்கந்தன் போலே அழகன் பெருமாள் -ரிஷி கரி பூசுகிறார் –
வைகுந்தா -என்று மேன்மை சொல்லிற்று
மணி வண்ணனே -என்று வடிவு அழகு சொல்லிற்று –
என் பொல்லாத் திருக் குறளா -என்று சௌலப்யம் சொல்லிற்று –
இம் மூன்றும் கூடினதாயிற்று பரத்வமானது -பசும் கூட்டம் –
என்னுள் மன்னி –
இந்த்ரன் ராஜ்ய லாபம் பெற்றுப் போனான்
மகா பலி ஔதார்ய லாபம் பெற்றுப் போனான்
அவ்வடிவு அழகுக்கு ஊற்று இருந்தது இவர் நெஞ்சிலே யாயிற்று
என்னுடைய ஹ்ருதயத்தே வந்து நித்ய வாசம் பண்ணி
வைகல் வைகல் தோறும் அமுதாய
கழிகிற காலம் தோறும் எனக்கு அபூர்வாம்ருதவத் போக்யனானவன் –
வானேறே –
நித்ய ஸூரிகளோடே கலந்து அவர்களை தோற்பித்து மேணானித்து இருக்குமா போலே யாயிற்று
இவரோடு கலந்து இவரைத் தோற்பித்து இருந்த இருப்பு –ஏறு என்கிறது —பின்பும் அவன் ஏற்றமே விஞ்சி இருக்கை –
நதிகள் கங்கை உடன் கலந்த பின்பு கங்கை என்னும் பெயரே -அது போலே வானேறே –கலந்த பின்பும் அவன் ஏற்றமே விஞ்சி இருக்கும்

தம்முடைய அனுபவ விரோதிகளைப் போக்கின படி சொல்லுகிறார் –
1–செய்குந்தா வரும் தீமை –
செய்யப்பட்டு -குந்தாவாய் -தப்பாவே -இருக்கும் தீமை என்னுதல்
2–செய்கும் -செய்யப்பட்டு தாவரும் தீமை -கடக்க அரிதான தீமை-என்னுதல்
உன் அடியார்க்குத் தீர்த்து அசுரர்க்குத் தீமைகள் —
உன் பக்கலிலே நிஷித்த பரராய் இருப்பார்க்கு வாராதபடி பரிஹரித்து -ஆசூர பிரக்ருதிகள் மேலே போகும்படியான
சுத்தியை உடையவனே – ஆகம்போழ்ந்த புனிதன் -செற்றாருக்கு வெப்பம் கொடுக்கும் விமலா -குற்றம் இல்லாத புனிதன் சுத்தன் –
கஞ்சனை வஞ்சம் தீர்த்தான் -கொடுமையையே நிரசிப்பான்-
அசுரனாக இருந்து தீமைகள் செய்து -பின்பு அடியானாகி -வந்தால் -ஷமை திருக்குணம் உண்டே -சத்ருக்கள் மேல் பொகடுவானே –
முன் பிரதிகூல்யம் பண்ணினவர்கள் அனுகூலித்து நாலடி வர நின்றவாறே பின்னை அவர்கள் சத்ருக்கள் மேலே பொகடுமாயிற்று
த்விஷந்த பாபக்ருத்யாம் -என்கிறபடியே கடலுக்கு தொடுத்த அம்பை அவன் முகம் காட்டினவாறே மருகாந்தரத்தில் அசுரர்கள் மேலே
விட்டால் போலே -ராம பானம் அமோகம் -வீண் ஆகாதே -ஆபீர பிரமுகரர்கள் -மேலே செலுத்தினான் –
தூராந்தரம் செலுத்தி -அதே வேகத்தில் இலங்கை முடிக்காத குணம் என்னே -கூரத் தாழ்வான் –
அங்கன் ஒரு போக்கடி கண்டிலனாகில்-உரஸா தாரயாமாச பார்த்தம் சஞ்ஜாத்ய மாதவ -என்று பகதத்வன் விட்ட சத்தியை
அர்ஜுனனைத் தள்ளி தன் அந்தப்புரத்திலே ஏற்றால் போலே தான் ஏறிட்டுக் கொண்டு அனுபவித்தல் செய்யும் அத்தனை –
பிராட்டி எழுந்து அருளி இருக்கும் திரு மார்பிலே ஏற்றுக் கொண்டானே –மாதவன் –ஏற்றான் —
பாபங்களாவன தான் -அசேதனமாய் இருப்பன சில க்ரியா விசேஷங்களாய்-அவை செய்த போதே நசிக்கும்
கர்த்தா அஜ்ஞன் ஆகையாலே மறக்கும்
சர்வஜ்ஞ்ஞன் உணர்ந்து இருந்து பல அனுபவம் பண்ணுவிக்க அனுபவிக்கும் அத்தனை இறே
அவன் மார்விலே ஏற்றுக் கொள்ளுகையாவது –பொறுத்தேன் -என்னத் தீரும் அத்தனை இறே –
விரோதி -நம் பாபத்தின் உரு தானே -பகதத்தன் -அர்ஜுன பாபம்-பலத்தை அவன் அனுபவிக்க வேண்டாம் என்று பொறுக்கிறார் -என்றவாறு –

செய்குந்தா–
அபூர்வம் காண் -சக்தி காண் –பல அனுபவம் பண்ணுவிக்கிறது என்னில் –என்று சொல்வதைக் காட்டிலும் —மீமாம்சகன் பஷம் –
ஒரு சர்வஜ்ஞ்ஞன் செய்விக்கிறான் என்கை -அழகு இது இறே -பொருந்தும் -அபூர்வம் அசேதனம் அன்றோ –
கல்பனா கௌரவம் எத்ர-கல்பனா லாகவம் -ஒத்துக் கொள் நியாயம் –அநந்த கர்ம ஜனித -அநந்த அபூர்வங்கள் -கல்பிக்க வேண்டும்
காலாந்தர -பலம் -நொடியில் ஸூ ஹ்ருத துஷ்க்ருத -சாதனத்வ -அந்யதா அனுபபத்தி -பிரதிநியாத பல ஜனித்வம் -பொருந்தாதே
சேதனனை அதிஷ்டானம் பண்ணிதானே கொடுக்க முடியும் –பலமத உபபத்தே -பலாதிகரணம் –
1–குந்தம் என்று -குருந்தம் என்றபடியாய்-அதன் பூ வெளுத்தா யாயிற்று இருப்பது -அவ்வழியாலே சுத்தியை நினைக்கிறது-
அன்றிக்கே –
2-குந்தா -என்று திரு நாமம் –குமுத குந்தர குந்த -என்கிறபடியே –
உன்னை
-ஆஸ்ரீதபஷபாதியான உன்னை
நான் –
ஆடியாடியிலே விடாய்த்த நான் -நீ உஜ்ஜீவிப்பிக்க உன்னாலே உளேனான நான்
பிடித்தேன் கொள்
பிடித்தேனாகவே திரு உள்ளம் பற்று
முன்பு சொல்லிப் போரும் வார்த்தை யன்றோ இது என்னா -அங்கன் அல்ல
சிக்கென பிடித்தேன் கொள்
என்னைப் பெறுகைக்கு பூர்வஜனான-எதிர் சூழல் புக்கு திரிந்த- நீ விடிலும் விடாத படி நான் பிடித்தேனாகவே திரு உள்ளம் பற்ற வேணும்
அவனை மாஸூச -என்கிறார் –

———————————————————————————

அவதாரிகை –

அவன் -இவர் நம்மை விடில் செய்வது என் -என்று அதிசங்கை பண்ணின படியைச் சொல்லிற்று கீழில் பாட்டில்
இவர் விடேன் என்ற பின்பு அவனுக்கு வடிவில் பிறந்த பௌஷ்கல்யம் சொல்கிறது இப்பாட்டில்

சிக்கெனச் சிறிதோரிடமும் புறப்படாத் தன்னுள்ளே உலகுகள்
ஒக்கவே விழுங்கிப் புகுந்தான் புகுந்ததற் பின்
மிக்க ஞான வெள்ளச் சுடர் விளக்காய் துளக்கற்ற அமுதமாய் எங்கும்
பக்க நோக்கு அறியான் என் பைந்தாமரைக் கண்ணனே –2-6-2-

உஜ்ஜ்வல ச்வரூபனாய்க் கொண்டு அந்ய பரதை அற்று இரா நின்றான்
சிக்கெனச் சிறிதோரிடமும் புறப்படாத் -ஏக பிரகாரமாக அடக்கி
தன்னுள்ளே உலகுகள் ஒக்கவே விழுங்கிப் புகுந்தான்-செய்ய வேண்டியவற்றை எல்லாம் செய்து முடித்து புகுந்தான் –
புகுந்ததற் பின் -வேற நினைவு இல்லாமல் -அழித்து வந்த பின் வேற கார்யம் இல்லை -படைத்த பின் வந்தால் -ரஷணம் இத்யாதிகள் உண்டே
மிக்க ஞான வெள்ளச் சுடர் விளக்காய் -ஞான ஒளி ஆகிய -பிரபைக்கு ஆஸ்ரயமாய்
துளக்கற்ற அமுதமாய் -விஸ்லேஷ அதி சங்கையால்  வந்த நடுக்கம் தீர்ந்து நிரதிசய போக்யமாய்
எங்கும் பக்க நோக்கு அறியான் -என் பக்கல் அபி நிவேசம் பத்னிகள் கூட இல்லாமல்

சிக்கெனச் சிறிதோரிடமும் புறப்படாத் தன்னுள்ளே உலகுகள் ஒக்கவே விழுங்கிப் புகுந்தான்
நாம் ஆழ்வாரை அனுபவிக்கும் போது-செருப்பு வைத்து தொழப் புக்கால் போலே ஆக ஒண்ணாது என்று பார்த்து
ஸ்ரீ பாதம் பித்தப்பிடிப்பு -ஸ்ரீ பாத ரஷையில் திரு உள்ளம் சென்று -தீர்த்தம் பிரசாதித்து அருளும்
என்னாதே செருப்பு பிரசாதித்து அருளும் என்றாரே
ஜகத் ரஷணத்துக்கு வேண்டும் சம்விதானம் எல்லாம் பண்ணி
அநந்ய பரனாய் அனுபவித்து போக மாட்டாதே இருந்தான் -ராஜாக்கள் அந்தப்புரத்தில் புகுவது நாட்டுக் கணக்கு அற்ற பின்பு இறே
அத்யல்பமாய் இருப்பதொரு பதார்த்தமும் தன் பக்கலிலே நின்றும் பிரி கதிர்ப்பட்டு நோவு படாத படியாகத் தன் சங்கல்ப்ப சஹச்ர
ஏக தேசத்தில் லோகங்களை ஒரு காலே வைத்து இனி போராதபடி புகுந்தான்
சிக்கெனப் புகுந்தான்
அநந்ய பிரயோஜனமாகப் புகுந்தான் என்றுமாம்
புகுந்ததற் பின் மிக்க ஞான வெள்ளச் சுடர் விளக்காய் –
இவரோடு வந்து கலந்து -அக்கலவியில் அதி சங்கையும் தீர்ந்த பின்பாயிற்று -விகசித சஹஜ சார்வஜ்ஞனுமாய் -விஜ்வரனுமாயாயிற்று
துளக்கு அற்று -என்பதில் தாத்பர்யம் -சங்குசித ஞானவான் ஆழ்வார் விச்லேஷத்தால் -புகுந்ததற் பின் -விகாசம் -பிரணயித்வத்தால் –
தனக்கு நித்ய தர்மமான ஜ்ஞானத்தை உடைத்தானே ஆத்மவஸ்து -கர்ம நிபந்தமாக ஒரு தேஹத்தை பரிஹரித்து இந்த்ரியத்வாரத்தை
அபேஷித்துக் கொண்டு பிரசரிக்க வேண்டும்படி போந்தது –
ஒரு நாள் வரையிலே பகவத் பிரசாதமும் பிறந்து ஜ்ஞான சங்கோசமும் கழியக் கடவதாய் இருக்கும் இறே
அங்கன் ஒரு ஹேதுவும் இன்றிக்கே இருக்கிறவனும் இவரோடு வந்து கலப்பதற்கு முன்பு சங்கு சித ஜ்ஞானனாய் இவரோடு கலந்த பின்பு
விகசிதமான ஜ்ஞான வெள்ளத்தை யுடையவனானான் —திவ்ய மங்கள விக்ரஹமும் புகர் பெற்றது இப்போது
துளக்கற்ற –
1-ஆடியாடியில் ஆற்றாமையால் வந்த உள் நடுக்கமும் தீர்ந்தானாய் இரா நின்றான்
விஜ்வர -என்னக் கடவது இறே
2-இவர்நம்மை விடில் செய்வது என் -என்கிற உள் நடுக்கமும் அற்றது இப்போது
அமுதமாய் –
ப்ரமுமோத ஹ -என்கிறபடியே அவன் தம்மை விரும்பி போக்யமாய் நினைத்து இருக்கிற இருப்பு தமக்கு போக்யமாய் இருக்கிறபடி –

எங்கும் – பக்க நோக்கு அறியான் –
ஆழ்வார் பக்கல் இவனுக்கு உண்டான அதிமாத்ர ப்ராவண்யத்தைத் தவிர்க்க வேணும் -என்று நாய்ச்சிமார் திரு முலைத் தடத்தாலே
நெருக்கிலும் அவர்கள் பக்கலிலே கண் வைக்க மாட்டு கிறிலன்-
இங்கே ஆளவந்தாருக்கு குருகைக் காவல் அப்பன் அருளிச் செய்ததாக அருளிச் செய்யும் வார்த்தை
-அப்பன் ஸ்ரீ பாதததிலே ஒரு ரகஸ்ய விசேஷம் உண்டு என்று மணக்கால் நம்பி அருளச் செய்ய -அது கேட்க வேணும் என்று
ஆளவந்தாரும் எழுந்து அருள -கங்கை கொண்ட சோழ புரத்தேற
அப்பனும் அங்கே ஒரு குட்டிச் சுவரிலே யோகத்திலே எழுந்து அருளி இருக்க -இவரை சமாதி பங்கம் பண்ண ஒண்ணாது என்று சுவருக்கு புறம்பே பின்பே நிற்க
அப்பனும் யோகத்திலே எழுந்து அருளி இருக்கிறவர் திரும்பிப் பார்த்து இங்குக் சொட்டைக் குலத்தில் ஆரேனும் வந்தார் உண்டோ என்று கேட்டருள
அடியேன் -என்று ஆளவந்தாரும் எழுந்தருளி வந்து கண்டு -நாங்கள் பின்னே தெரியாத படி நிற்க இங்கனே அருளிச் செய்கைக்கு ஹேது என் என்னா
நானும் தானுமாக அனுபவியா நின்றால்-பெரிய பிராட்டியார் திரு முலைத் தடத்தாலே நெருக்கி அணைத்தாலும்-அவள் முகம் கூடப் பாராத
சர்வேஸ்வரன் என் கழுத்தை அமுக்கி நாலு மூன்று தரம் அங்கே எட்டிப் பார்த்தான்
இப்படி அவன் பார்க்கும் போது சொட்டைக் குலத்தில் சிலர் வந்தார் உண்டாக வேணும் என்று இருக்க வேண்டும் என்று இருந்தேன் காணும்
-என்று அருளிச் செய்தார் –
என் பைந்தாமரைக் கண்ணனே —
ஆடியாடியிலே வந்த தாபமும் தீர்ந்து திருக் கண்களும் குளிர்ந்து –

———————————————————————————————

அவதாரிகை –

நித்ய ஸூரிகளுக்கும் அவ்வருகானவன் தன்னை நான் தேசிகனாய் அனுபவிக்கும் படி பண்ணின இதுவும் ஓர் ஔதார்யமே தான் என்கிறார் –
பகவத் பக்திக்கு வழிகாட்டும் ஆழ்வார் என்றபடி –விண்ணோர் பரவும் தலைமகனை–நா வலர் -பா மருவி நிற்கத் தந்த பான்மையே வள்ளலே-(பதங்களை குறித்து அவதாரிகை )

தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனை துழாய் விரைப்
பூ மருவி கண்ணி எம்பிரானைப் பொன் மலையை
நாம் மருவி நன்கேத்தி யுள்ளி வணங்கி நாம் மகிழ்ந்தாட நா வலர்
பா மருவி நிற்கத் தந்த பான்மையே வள்ளலே –-2-6-3-

சென்ம விடாய்க்கு நிழல் -திருவாய்மொழி -சர்வ கரணங்களாலும் -த்ரய-நாம் மருவி நன்கேத்தி யுள்ளி வணங்கி -நிரந்தர அனுபவம் பண்ணு வித்த ஔதாரன்
தாமரைக் கண்ணனை -அழகாலே
விண்ணோர் பரவும் தலைமகனை-சர்வாதிகத்வம் -நித்ய ஸூரிகள் நிரந்தரம் புகழும் படி கண் அழகு –
துழாய் விரைப் பூ மருவி கண்ணி -திருத் துழாய் மாலை உடையவனாய்
எம்பிரானைப் – எங்கள் ஸ்வாமி–பொன் மலையை -கலந்ததால் ஔஜ்ஜ்வலம்
நாம் மருவி நன்கேத்தி-வாசா கைங்கர்யம் -நிகர்ஷம் பார்த்து அகலாதே -ஸூரிகள் போலே பொருந்தி –
யுள்ளி வணங்கி-உள்ளி -அவர்கள் போலே நினைத்தல்-மனஸ் கைங்கர்யம் – –வணங்கி -காயத்தால் கைங்கர்யம் -வணங்கி வழிபடும் –
நாம் மகிழ்ந்தாட நா வலர் -ஆனந்திகளாய் -சசம்பரமாய் ஆடி -தலை கீழே -ஆடி -நாவிலே அலர்ந்த
பா மருவி நிற்கத் தந்த-நாவில் அலர்ந்த பா -திருவாய் மொழி பாடி -மருவி நிற்கும் படி
பான்மையே வள்ளலே -பான்மை எய்ந்து இருக்கும் வள்ளல் -பான்மை -ஸ்வபாவம்
தன்னையே பாட வைக்கும் படி அருளிய ஔதார்யம் -கொண்டாடி -இதற்கு ஏய்ந்த ஸ்வபாவன் –

தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும்
ஒரு கால் திருக் கண்களாலே நோக்கினால் -அதிலே தோற்று ஜ்வர சந்நிதபரைப் போலே அடைவு கெட ஏத்தா நிற்பார்கள் ஆயிற்று நித்ய ஸூரிகள் —
தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனைஜிதந்தே புண்டரீகாஷ நமஸ்தே -பூர்வஜ —
ஸ்ருதோயமர்த்தோ ராமஸ்ய ஜாமதக்நஸய ஜல்பத -என்கிறபடி -ஜல்பித்துக் கொண்டு இருக்கும் பரசுராமன் -அக்கிரம அபிதானம் —
சாந்தி பர்வம் -மூன்று உப பர்வம் – -மோஷ தர்மம் -ஆப்த தர்மம் -ராஜ தர்மம் –
தலைமகனை
இவர்கள் ஏத்தா நின்றாலும் –நிரவத்ய பர ப்ராப்தே -என்று அவன் பரனாய் இருக்கும் –
குற்றம் -அவத்யம் இல்லாமல் -அடைய துர்லபம் -நிராராதரன் -அபிரதிபந்த -உத்சாகம் –

துழாய் விரைப் பூ மருவி கண்ணி எம்பிரானைப் பொன் மலையை
நித்ய ஸூரிகளைக் கண் அழகாலே தோற்பித்தான்
இவரைக் கண்ணியிலே அகப்படுத்தினான் –
மார்வில் மாலையைக் காட்டி மாலாக்கினான் –
விரை -பரிமளம் —விரையும் பூவும் மருவி இருந்துள்ள துழாய்க் கண்ணி எம்பிரானை
பொன்மலையை –
என்னோட்டைக் கலவியாலே அபரிச்சின்னமான அழகை உடையனாய் -கால் வாங்க மாட்டாதே இருக்கிறவனை –
நான் ஏத்தப் பெற்ற படியாலே வளர்ந்தபடி என்னவுமாம் –
ஆக இத்தால் அவரைப் பெற்ற பின்பு வளர்ந்து புகர் பெற்ற படி

நாம் மருவி –
அருவினையேன் என்று அகலக் கடவ நாம் கிட்டி
நன்கேத்தி –
நித்ய ஸூரிகள் ஏத்தக் கடவ விஷயத்தை நன்றாக ஏத்தி –
வானவர் சிந்தையுள் வைத்துச் சொல்லும் செல்வனை எந்தையே என்பன் -என்று அகன்றவர் இறே
யதோ வாசோ நிவர்த்தந்தே -என்று வேதங்களும் கூட மீண்ட விஷயத்தை மாறுபாடு உருவ ஏத்தி என்றுமாம் –
அந்தாமத்தன்பு கொடுத்த தைரியத்தால் -மாறுபாடு உருவ-ஆழமாக -மிச்சம் இல்லாமல் –
யுள்ளி –
நினைந்து என்று அனுசந்தானத்துக்கு பிராயச் சித்தம் பண்ணத் தேடாதே அனுசந்தித்து
லௌகிக விஷயம் உள்ளினாலே தானே -பிராயாச்சித்தம் –
அயோக்யதய அனுசந்தானத்தால் அகல நினைக்கை -ஒரு வகை பிராயாச்சித்தம்
கலந்தபின்பு சேரும் இல்லை அவனை போலே மாணிக்கமாக ஆக்கி அருளினானே
வணங்கி –
குணபலாத் க்ருதராய் நிர்மமராய் வணங்கி –
குணங்கள் தூண்ட வணங்கி –குண க்ருத தாஸ்யம் -ஸ்வரூப ப்ரயுக்த தாஸ்யம் –துன்பம் கொடுத்து பரிஷை பண்ணினாலும் வணங்க வேண்டும்
ஸ்வரூப பிரயுக்த தாஸ்யம் தான் நினைக்கும் -அநசூயை -சீதை -சம்வாதம் -குணங்களை பிரிக்க முடியாதே பெருமாள் இடம் இருந்து –
வணங்கினால் உன் பெருமை மாசூணோதோ–1-5-2-என்னும் நாம் வணங்கி
நாம் மகிழ்ந்தாட
பகவத் அனுபவத்தால் வந்து ப்ரீதித்வம் -கனாக் கண்டு அறியாத நாம்- ஹிருஷ்டராய் அதுக்கு போக்குவிட்டு ஆட
–நா வலர் பா மருவி நிற்கத் தந்த பான்மையே வள்ளலே —
நாட்பூ அலருமா போலே ஜிஹ்வாக்ரத்திலே விகசியா நின்றுள்ள -சந்தஸ்ஸானது என் பக்கலிலே நிற்கும்படியாக தந்த இது தன்னை
ஸ்வபாவமாக உடையையே இருக்கிற பரம உதாரனே
நாட்பூ--அப்போது அலர்ந்து இருக்கும் பூ
நா வலர் பா –
மனஸ் சஹகாரமும் வேண்டாத படி இருக்கை -கம்பர் வீட்டுக் கட்டித் தறியும் பாடும் போலே –

தாமரைக் கண்ணனாய் – விண்ணோர் பரவும் தலைமகனாய் – துழாய் விரைப்பூ மருவி கண்ணி எம்பிரானாய் – பொன் மலையாய் -இருக்கிற தன்னை
நாம் மருவி -நன்கேத்தி- யுள்ளி வணங்கி -நாம் மகிழ்ந்தாட நா வலர் பா மருவி நிற்கத் தந்த பான்மை ஏய்ந்த வள்ளலே-என்று சொல்லுகிறார் ஆகவுமாம்-
படர்க்கையில் -பெருமானைப் பற்றிய தன்மையை அருளிச் செய்கிறார் –
அன்றிக்கே –
தாமரைக் கண்ணனாய் – விண்ணோர் பரவும் தலைமகனாய் – துழாய் விரைப்பூ மருவி கண்ணி எம்பிரானாய் – பொன் மலையாய் இருக்கிற நீ
நாம் மருவி -நன்கேத்தி -யுள்ளி வணங்கி -நாம் மகிழ்ந்தாட நா வலர் பா மருவி நிற்கத் தந்த பான்மையே
இதுவும் ஒரு ஸ்வபாவமே –வள்ளலே-பரம உதாரனே -என்றுமாம் -சம்போதனம் -முன்னிலையாக அருளிச் செய்கிறார் –

—————————————————————————————-

அவதாரிகை –

நாம் மருவி நன்கேத்தி உள்ளி வணங்கி நாம் மகிழ்ந்தாட -என்று தம்முடைய நைச்யத்தை அனுசந்தித்தவாறே -நாம் கூட மருவி –அதிசங்கா ஹேது –
இவர் நம்மை விடில் செய்வது என் -என்று அவர் அதி சங்கை பண்ண நிர்ஹேதுகமாக உன் வடிவு அழகை நீ என்னை அனுபவிப்பிக்க
அனுபவித்து அத்தாலே சிதிலனான நான் உன்னை விட சம்பாவனை உண்டோ -என்கிறார் –
அழகாலே அடிமையானால் விலக மாட்டான் என்றவாறே –

வள்ளலே மது சூதனா என் மரகத மலையே உனை நினைந்து
எள்கல் தந்த வெந்தாய் உன்னை எங்கனம் விடுகேன்
வெள்ளமே புரை நின் புகழ் குடைந்தாடிப் பாடிக் களித்து உகந்து உகந்து
உள்ள நோய்கள் எல்லாம் துரந்து உய்ந்து போந்து இருந்தே –2-6-4-

சர்வ பிரகார உபகாரனான உன்னை விடப் போமோ -என்கிறார்
வள்ளலே மது சூதனா என் மரகத மலையே–அர்த்தித்த நிரபேஷமாக -உதாரனே
உபாகரம் கொள்ளும் எனது விரோதியை -கர்மாதி -தடுக்குமே -அவற்றை -விரோதி நிரசன சக்தன்
-சௌந்தர்யம் -உத்துங்க உஜ்ஜ்வலமாய் -வடிவை -உயர்ந்த ஒளி படைத்த மலை –அவனை அனபவி
மால் பால் மனம் சுளிப்ப மங்கையர் தோள் கை விட்டு -என்றால் போலே –
உனை நினைந்து -உன்னை அனுசந்தித்து
எள்கல் தந்த வெந்தாய் -இகழ்தல் -த்வஜித்து -லோக விஷய வைராக்கியம் அருளிய ஸ்வாமி
உன்னை எங்கனம் விடுகேன்
வெள்ளமே புரை -வெள்ளம் கடல் போன்ற சீரை
நின் புகழ் குடைந்தாடிப் பாடிக் களித்து உகந்து உகந்து
ஆழ்ந்து அனுபவித்து -மேலே மேலே பரவி
உள்ள நோய்கள் எல்லாம் துரந்து உய்ந்து போந்து இருந்தே
அஹங்கார அர்த்த காமங்கள் -எல்லாம் தொலைத்து –
அனுபவ விச்லேஷம் -நிகர்ஷ அனுசந்தானம் -ஆழ்வாருக்கு மட்டும் இந்த விரோதி –
லப்த சத்தை -சம்சார ஸ்திதி போந்து -உன்னளவில் அடைந்து
இருந்து -அனுபவித்துக் கொண்டி –ஏதத் சாம காயநாச்தே –

வள்ளலே
நிர்ஹேதுகமாக உன்னை எனக்குத் தந்த பரம உதாரனே
மது சூதனா
நீ உன்னைத் தரும் இடத்தில் நாம் ச்வீகரியாதபடி பண்ணும் விரோதிகளை -மதுவாகிற அசுரனை நிரசித்தால் போலே நிரசித்தவனே
என் மரகத மலையே
உன்னை நீ ஆக்கும்படி உன்னிலும் சீரியதாய் -ஸ்ரமஹரமாய் -அபரிச்சேத்யமான வடிவு அழகை யன்றோ எனக்கு ஔதார்யம் பண்ணிற்று
பரத்வ பிரகாசகம் -ஸ்வரூபம் -விக்ரகம் -மரகத மலை -ரூபம் -நீ -ஸ்வரூபம் -உன்னை உன்னாக்குவதே ரூபம் -அத்தை அறிந்தே ஸ்வரூபம்
அழகைப் பார்த்து ஆட்பட்ட கோஷ்டி -சாஸ்திரம் பார்த்து ஆட்பட்ட கோஷ்டி இல்லை
தேவரீரை -உன்னை -ஸ்வரூபம் -ஏக வசனம் சொல்லும் படி ஆக்குமே ரூபம் –
உனை நினைந்து எள்கல் தந்த வெந்தாய் -எள்கல் த்யாகம் ஈடுபாடு –
1-உன்னை அனுசந்தித்தால் இதர விஷயங்களை நான் விடும்படி பண்ணினவனே -என்னுதல்
அன்றிக்கே
2-எள்கலாவது-ஈடுபாடாய்-உன்னை அனுசந்தித்தால் –காலாளும் நெஞ்சு அழியும் கண் சுழலும் – என்கிறபடியே
அள்ளி எடுக்க வேண்டும்படி பண்ணித் தந்த என் நாயகனே -என்னுதல்
பாலாழி நீ கிடந்த பண்பை கேட்டேயும் காலாளும் நெஞ்சு அழியும் கண் சுழலும்- –அள்ளி எடுக்க தான் முடியும்
-அங்கும் போக முடியாமல் பின்னும் வர முடியாமல் \

உன்னை எங்கனம் விடுகேன்
1-உதாரன் அல்ல என்று விடுவோ
2-விரோதி நிரசன் அல்லன் என்று விடவோ
3-உனக்கு வடிவு அழகு இல்லை என்றுவிடவோ
4-உன் விஷயத்தில் இப்படி ஈடுபட்ட நான் உன்னை விட சம்பாவனை உண்டோ -என்னுதல்
5-உன்னை அனுசந்தித்தால் இதர விஷயங்களிலே விரக்தனான நான் விட சம்பாவனை உண்டோ-என்னுதல்
இப்படி பல பிரகார உபகாரகன் -இனி மேல் எல்லாம் அவன் அதிசங்கையைத் தீர்க்கிறார் –

வெள்ளமே புரை நின் புகழ் குடைந்தாடிப் பாடிக் களித்து உகந்து உகந்து
கடலோடு ஒத்து இருந்துள்ள உன்னுடைய கல்யாண குணங்களை நாலு மூலையும் புக்கு வியாபித்து நான் மறு நனைந்து
ப்ரீதி ப்ரேரிதனாய்க் கொண்டு -அத்தாலே செருக்கி மிக்க ப்ரீதனாய்
உள்ள நோய்கள் எல்லாம் துரந்து
கர்ம நிபந்தமாக வருமவை
உன்னைப் பிரிந்து படுமவை
அயோக்யன் என்று அகன்று வருமவை –இத்யாதிகள் எல்லாவற்றையும் ஒட்டி
உய்ந்து போந்து இருந்தே —
உய்ந்து -சந்தமேனம்ததோ விது -என்கிறபடியே உஜ்ஜீவித்து
போந்து -சம்சாரிகளை விட்டு வ்யாவ்ருத்தனாய்
இருந்து -நிர்பரனாய் இருந்து -வள்ளலே மது சூதனா உன்னை எங்கனம் விடுகேன்

———————————————————————————————

அவதாரிகை –

ஆத்மாந்த தாச்யத்திலே அதிகரித்த நான் உன்னை விட பிரசங்கம் உண்டோ -என்கிறார் –

உய்ந்து போந்து என் உலப்பிலாத வெந்தீ வினைகளை நாசம் செய்து உனது
அந்தமில் அடிமை அடைந்தேன் விடுவேனோ
ஐந்து பைந்தலை யாடரவணை மேவிப் பாற் கடல் யோக நித்திரை
சிந்தை செய்த வெந்தாய் உன்னைச் சிந்தை செய்து செய்தே –2-6-5-

த்வத் அனுபவ ஜனித கைங்கர்ய போகம் -நீ ஹர்ஷிக்க அத்தைக் கண்ட நான் ஹர்ஷிக்க -நான் விடும் படி என்
ஐந்து பைந்தலை யாடரவணை மேவிப் பாற் கடல் யோக நித்திரை-பொருந்திக் கண் வளர்ந்து
-விகசித்த -ஆடும் -அரவணை மேல் -ஜகத் ரஷண யோகத்தில் –
வெந்தாய் உன்னைச் சிந்தை செய்து செய்தே -நிரந்தர அனுசந்தானம் செய்து
உய்ந்து போந்து -சத்தை அடைந்து -ஸ்வரூப -லப்த ஸ்வரூபனே -சம்சாரிகளில் வியாவ்ருத்தனாய்
என் உலப்பிலாத -நானே தேடிக் கொண்ட
வெந்தீ வினைகளை நாசம் செய்து
உனது அந்தமில் அடிமை அடைந்தேன் விடுவேனோ -கைங்கர்ய போகம் அடைந்தபின்
ஆஸ்ரித விஷயத்தில் உனக்கு பொருத்தம் இல்லாமல் விடுகிறேனோ
அவர்கள் ரஷணத்தில் உனக்கு சிந்தை இல்லாமல் விடுவேனோ
உன் அனுபவத்தில் சீலனம் எனக்கு -பரிசீலனம் இல்லாமல் விடவோ
என் ஸ்வரூபம் பிரகாசியாமல் விடவோ
விஷயாந்தர சம்சாரிகளில் பொருந்தி உள்ளேன் என்று விடவோ
பிரதிபந்த பாபங்கள் உண்டாய் விடவோ
பிராப்ய கைங்கர்ய சுவடு அறியாமல் விடுவேனோ
லப்த அபீஷடம் அடைந்தேன் -நான் விடுவேனோ -என்று கருத்து –

உய்ந்து போந்து
நான் உளேனாய் -சம்சாரிகளில் வ்யாவ்ருத்தனாய்ப் போந்து -சத்தை அடைந்து -ஸ்வரூபம் பெற்று –
என் உலப்பிலாத வெந்தீ வினைகளை நாசம் செய்து உனது அந்தமில் அடிமை அடைந்தேன்
என்னுடைய முடிவு இன்றிக்கே இருந்துள்ள கொடிய பாவங்களை வாசனையோடு போக்கி உன் திருவடிகளில் ஆத்மாந்த தாச்யத்திலே
அதிகரித்த நான் இனி விட பிரசங்கம் உண்டோ
விடுவேனோ
உனது அந்தமில் அடிமை அடைந்தேன் விடுவேனோ
விஷயாந்தரங்களை விரும்பினேனோ விடுகைக்கு –உனது
ஸ்வரூப சித்தி இன்றிக்கே ஒழிந்து விடுகிறேனோ –உய்ந்து -ஆத்மா தாஸ்யம் -நீ ஸ்வாமி
தாஸ்ய அறிமலத்தில் சுவடி அறியாமல் விடுகிறேனோ — அடிமை-
எனக்குத் தேகுட்டி விடுகிறேனோ -அந்தமில் அடிமை
ஐந்து பைந்தலை யாடரவணை மேவிப் பாற் கடல் யோக நித்திரை -சிந்தை செய்த வெந்தாய் –
அடிமையில் சுவடு அறிந்த திருவனந்த ஆழ்வான் உன்னை விடில் அன்றோ நான் உன்னை விடுவது
பெரு வெள்ளத்துக்கு பல வாய்த்தலைகள்-வாய்க்கால் – போலே பகவத் அனுபவத்தால் வந்த ஹர்ஷத்துக்கு போக்குவீடாக
பல தலைகளை உடையனாய்-தலையில் உள்ள வாய்கள் –
யாடரவணை– மதுபானமத்தரைப் போலே ஆடா நிற்பானாய்–சைத்ய சௌகுமார்ய சௌகந்த்யங்களை உடையவனாய்
திரு வநந்த ஆழ்வான் மேலே திருப் பாற் கடலிலே -மெத்தென்ற பஞ்ச சயனம் -மென்மை-குளிர்ந்து -வெளுத்து -விசாலம் -மணம்
சகல பிராணிகளும் கரை மரம் சேர்ந்ததாம் விரகு என் -என்று யோக நித்ரையிலே திரு உள்ளம் செய்த என் நாயகனானவனே –
யோக நித்தரை –
ஆத்மாநாம் வாசு தேவாக்யம் சிந்தயன்-என்கிறபடி தன்னை அனுசந்தித்தல்
தியானம் சொல்லி -ஆத்மா தியானம் சொல்லுகிறது -ஜீவாத்மா தியானமும் தன் தியானமும் -யோகத்தை சிந்தை செய்கின்றான் -யோகம் -தன்னுடன் சேர்க்க –
நைமித்திக பிரளயம் -பிரதி சஞ்சரம் –பிரம்மா பகல் பொழுது முடிந்து மூன்று லோகங்கள் -மக லோகத்தார் ஜன லோகம் சென்று ஸ்தோத்ரம் பண்ண –
சிந்தை செய்த வெந்தாய்
நீர்மையைக் காட்டி என்னை அனந்யார்ஹன் ஆக்கினவனை
உன்னைச் சிந்தை செய்து செய்தே –
தான் நினைக்கக்கு கிருஷி பண்ணின உன்னை நினைத்து வைத்து விட பிரசங்கம் உண்டோ –

———————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: