பகவத் விஷயம் காலஷேபம் -58– திருவாய்மொழி – -2-5-1….2-5-11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

பிரவேசம் –

கஜ ஆகர்ஷதே தீரே- க்ராஹ ஆகர்ஷதே ஜலே -என்னுமா போலே இறே-கீழே ஆடியாடியிலே ஆழ்வாருக்கு பிறந்த வ்யசனம்-
விஸ்லேஷ வியசனம் முடிக்கத் தேட -நசையானது முடிக்க விடாமல் —
அது எல்லாம் ஆறும்படியாக-அதந்த்ரிசமூபதி பரஹித ஹஸ்தம் –த்வராயா நம- – -ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் -என்கிறபடியே பெரிய த்வரையோடே– ஆயுத ஆபரணங்களை
அக்ரமமாகத் தரித்துக் கொண்டு மடுவின் கரையிலே அரை குலையத் தலை குலைய வந்து உள்ளே போய்ப் புக்கு
ஆனையை ஒரு கையாலும் முதலையை ஒரு கையிலுமாக -அணைத்து எடுத்து கொண்டு கரையிலே ஏறி
க்ராஹம் சக்ரேண மாதவ -என்கிறபடியே -பிரஜையின் வாயிலே முலையைக் கொடுத்து கிரந்தியைச் சிகித்சிப்பிக்குமா போலே –
பெரிய பிராட்டியாரும் தானுமாக இரண்டுக்கும் நலிவு வாராமே திரு வாழியாலே விடுவித்து சாத்தி யருளின
திருப்பரி வட்டத் தலையை சுருட்டி திருப் பவளத்திலே வைத்து அதினுடைய புண் வாயை வேது கொண்டு
திருக் கையாலே குளிர ஸ்பர்சித்து நின்றாப் போலே

என வெகுண்டு சீறாத சீற்றத்தால் -வைகுந்தத்தில் -சீற்றம் காரணம் புரியாமல் அனைவரும் திகைப்ப –
நாராயணா ஒ மணி வண்ணா – நாகணையாய் வாராய் -சப்தம் கேட்டதும் -1000 தேவ மான வருஷம் -இந்த சப்தத்துக்கு காத்து -இருந்தானே –சிசிர சப்த ஸஹ-ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாமம் -வாராய் சப்தத்துக்கு காத்து இருந்து விரைந்தான்
க-சொன்னதும் –ஜம்-என்று குதித்தானே –மணி பாதுகம் -அவாஹன பரிஷ்க்ருதம் –
முதலை மேல் சீறி வந்தார் -நீர்ப்புழு –கொண்ட சீற்றம் ஓன்று உண்டு –பிராப்தி பிரதிபந்தகங்கள் ஒழியும்-விஸ்வசிக்க
அனைவரும் வெள்கி நிற்ப -கிரீட -திவ்ய ஆபரணங்கள் வேண்டுமே -அவை குலைய நாராயணா என்று காட்ட –
சென்று நின்று ஆழி தொட்டானை -துஸ் ஸ்வபன நாசம் -கஜேந்திர மோஷம் -சாப விமோசனம் -பாகவதர் திருவடி ஸ்பர்சத்தாலே-பெற்றதே

இவரும்-வலம் கொள் புள்ளுயர்த்தாய்—2-4-4-என்று கூப்பிட்ட ஆர்த்த நாதம் செவிப்பட்டு -அழகிதாக நாம் ஜகந்நிர்வஹணம் பண்ணினோம்
-நாம் ஆரோனோம் என்று -பிற்பாட்டுக்கு-லஜ்ஜா பயங்களாலே விஹ்வலனாய்
-தன்னுடைய ஸ்வரூப ரூப குணங்கள் ஒப்பனை திவ்யாயுதங்கள் சேர்ந்த சேர்த்தி இவை எல்லாவற்றோடும் வந்து சம்ச்லேஷித்து
அத்தாலே ஹ்ருஷ்டனாய் க்ருதக்ருத்யனாய் இருக்கிற இருப்பை அனுபவித்து
அவ்வனுபவ ஜனித ஹர்ஷ பிரகர்ஷத்தாலே தாம் பெற்ற பேற்றை – பேசி அனுபவிக்கிறார் –

———————————————————–

அவதாரிகை –

அடியார்கள் குழாங்களை –உடன் கூடுவது என்று கொலோ -2-3–என்று இவர் ஆசைப் பட்ட படியே வந்து கலந்தான் -என்கிறார் –

ஆழி –உள-ஸ்வாமியான பெருமான் என்னுடன் கலந்தான் -பிள்ளான் –
என்னுடன் கலந்து ஸ்வாமி யானான் -ஒளி பெற்றது -எம்பெருமானார் –
முத்து மாணிக்கம் பவளம் -முகம் அறிந்து கோப்பது போலே இதே கருத்தால் இந்த பதிகம் -அனுபவம் மாற்றி அருளுவார் –
2-3 பிரார்த்தனை -இங்கே -பலன் -பஞ்ச ஆயுதங்களும் அடியார்கள் தானே -அவர்கள் உடனே கலக்கிறார் -பிரார்தினைக்கு சேரவே கலந்தார் –
கூட்டி வருவதருக்குள் த்வரை மிகுதியால் 2-4- 11 பாசுரங்கள் அருளிச் செய்தார் -இவருக்கு அரை குலைய தலை குலைய வரக் கூடாதே –
தேர் அழுந்தூர் தூது -வருவதற்குள் வேற தூது அனுப்பி க்ரம ப்ராப்தி பெறாமல் –

அந்தாமத்தன்பு செய்து என்னாவி சேர் அம்மானுக்கு
அந்தாம வாழ் முடி சங்கு ஆழி நூல் ஆரமுள
செந்தாமரைத் தடங்கண் செங்கனிவாய் செங்கமலம்
செந்தாமரை யடிக்கள் செம்பொன் திருவுடம்பே –2-5-1-

பூஷாணாதி -விக்ரஹ அனுபவிக்கிறார்
அந்தாமத்தன்பு செய்து -நித்ய விபூதியில் உள்ளோர் இடம் காட்டும் அன்பை
என்னாவி சேர் அம்மானுக்கு -ஹேயமான -நான் எங்கே -பொருந்தி -நிருபாதிக ஸ்வாமி யானவனுக்கு
சேஷித்வ ஸூசகமான திரு முடி இத்யாதி -நமக்கு கை கூப்புச் செய்கை
அந்தாம வாழ் முடி சங்கு ஆழி நூல் ஆரமுள
அழகிய மாலை -உஜ்ஜ்வலமான திரு அபிஷேகம் –யஜ்ஜோபவீதம் -ஹாரம் -ஸ்ப்ருத்தி தோற்றம் -இப்பொழுது தான் ஒளி -சுணக்கம் நீங்கி
செந்தாமரைத் தடங்கண் செங்கனிவாய் செங்கமலம் -சிவந்த தாமரைத் தடாகம் போலே திருக்கண்கள்
பக்வமான பழம் போலே திரு வவதரம் –
செந்தாமரை யடிக்கள் செம்பொன் திருவுடம்பே -தாமரைத் திருவடிகள் – -பொன் போலே வார்த்த திரு உடம்பு
அவயவ ஆபரண சோபை -ஆதித்ய மண்டலத்தில் செய்யும் விருப்பை நம்மிடம் செய்தானே
அந்தராதித்யா வித்யையில் சொன்ன ஹிரண்மய விக்ரகம் -சர்வ ஏவ ஸ்வர்ண -முடியில் தொடங்கி அடி வரை -வேதம் -சுருதி சாயையில்
த்யேதா சதா சவித்ரு மண்டல மத்திய வர்த்தி -த்ருத சங்க சக்கரத்வம் -த்வராக நிலையா —
கோவிந்தம் புண்டரீகாஷா -நினைத்து த்ரௌபதி சரண் அடைந்தால் போலே –
அம்  தாமம் -சூர்யமண்டல விருப்பத்தை என் நெஞ்சில் வைத்தானே -அத்யுஜ்ஜ்வலனாய் உள்ளான் –
வியக்தி ஐக்கியம் சொல்லிற்று -அங்கு உள்ளவரே இங்கும் உள்ளார் –

அந்தாமத்தன்பு செய்து –
அழகிய தாமத்திலே பண்ணக் கடவ ச்நேஹத்தை -என் பக்கலிலே பண்ணி –தாமம் என்று ஸ்தானமாய்-
மஞ்சா க்ரோசந்தி போலே பரமபதத்தில் உள்ளார் பக்கலிலே பண்ணக் கடவ ச்நேஹத்தை கிடீர் என் ஒருவன் பக்கலிலும் பண்ணிற்று
தாமே அருளிச் செய்தார் இறே –முற்றவும் நின்றனன் -1-2-6- என்று –அஸ்மாத் துல்யோ பவது – ஸூக்ரீவன் விபீஷண ஆழ்வான் பக்கல்
ஸ்ரீ வைகுண்ட விரக்தாயா -நீசர்களை கடாஷிக்க
என்னாவி -சேர்
1-அவன் மேல் விழ -தான் இறாய்த்தமை தோற்றுகிறது -ஸ்வா தந்த்ரம் -நம்மாவி அன்றோ
இவர் பூர்வ வ்ருத்தத்தை அனுசந்தித்து இறாயா நின்றார் –தான் ஒட்டி மேல் விழ
இதுவே ஹேதுவாக அவன் மேல் விழா நின்றான்
2-ஆவி -சேர்
கமர் பிளந்த விடத்தே நீர் பாய்ச்சுவாரைப் போலே -இரும்பு போல் வலிய நெஞ்சம்
உள்ளுளாவி உலர்ந்து உலர்ந்து -2-4-7–என்கிற ஆவியிலே காணும் வந்து சேருகிறது
நம்மாவி -பொது உடமை தோற்றுமே-ஸ்வாதந்த்ரம் எதற்க்குக் கொடுத்தாய் –எம்மாவி -என்று அன்றோ சொல்ல வேண்டும் -(ஆழ்வாருக்கும் அவனுக்கும் சம்வாதம் தோன்ற வியாக்யானம் )
3-சேர்
-விடாயர் மடுவிலே சேருமா போலே வந்து சேரா நின்றான் –
என்னாவி சேர்  //ஆவிசேர் //சேர் மூன்று வியாக்யானங்கள்
இப்படி மேல் விழுகைக்கு ஹேது என் என்னில்
அம்மானுக்கு
வகுத்த ஸ்வாமி யாகையாலே –
நித்ய விபூதியில் உள்ளாரோபாதி லீலா விபூதியில் உள்ளாருக்கும் வந்து முகம் காட்ட வேண்டும் பிராப்தியை உடையவனுக்கு –
இவரைப் பெற்ற பின்பு யாயிற்று அவன் சர்வேஸ்வரன் ஆயிற்று –பிராப்திஸ்வாமித்வம்
இவரை விட்டால் ஈஸ்வரனாக இருக்கலாம் -சர்வேஸ்வரன் ஆக முடியாதே -தர்க்கத்தாலும் -பாவத்தாலும்

அந்தாம வாழ் முடி சங்கு ஆழி நூல் ஆரமுள
அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ -என்று இவர் ஆசைப் பட்ட படியே நித்ய ஸூரிகளோடு வந்து கலந்தான்
என்று ஆளவந்தார் அருளிச் செய்தாராக திருமாலை ஆண்டான் பணிக்கும் படி
ஆனால் அவர்களை ஆழி நூல் ஆரம் -என்றோ சொல்லுவது என்னில் சின்மயராய் இருக்கச் செய்தே பாரதந்த்ர்யம் சித்திக்காக
தங்களை அமைத்து வைத்து இருக்கும் அத்தனை இறே –உள -அக்றிணை பிரயோகம்-
ஸ்வாதந்திர புத்தி இல்லாமல் நூல் ஆரம் போலே இருக்கவே இவர்களுக்கும் விருப்பம் –அசித் தத் பாரதந்த்ர்யம் –
ஸ்ரக் வஸ்த்ர ஆபரணாதி அந்யோந்ய -ஸு அநுரூப -தங்களுக்கு பொருத்தம் இல்லாமல் ஸூ பிரகாசம் –
அங்கன் இன்றிக்கே எம்பெருமானார் அருளிச் செய்யும் படி -இவரோடு சம்ச்லேஷிப்பதற்கு முன்பு அவனோடு ஒக்க இவையும்
அனுஜ்ஜ்வலமாய் அசத்சமமாய் –இவரோடு கலந்த பின்பு உஜ்ஜ்வலமாய் சத்தை பெற்ற படி சொல்லுகிறது -என்று
-கல்ப தரு வாடினால் அதில் பூவும் தளிரும் வாடும் இறே -சுணக்கம் -அவனுக்கும் அவர்களுக்கும் –
அவன் வ்ருஷம்– கிளைகள் -தோள்கள் -புஷ்பங்கள் திவ்ய ஆயுதங்கள்
இதற்காகவும் மேலும் அழுவார் -தாங்கள் சத்தை நம்முடன் சேர்ந்து பெறுவதே -என்று –

அந்தாம வாழ் முடி சங்கு ஆழி நூல் ஆரமுள
அழகிய மாலையானது முடி சூடி வாழத் தொடங்கிற்று -பகவான் முடியில் சூழப் பெற்று வாழத் தொடங்கிற்று
அன்றியே வாண் முடி என்றாய் –வாள் -என்று ஒளியாய் -நிரவதிக தேஜோ ரூபமான முடி என்றுமாம்
தாமம் -என்று தேஜஸ் ஆகவுமாம்
தேஜோ ரூபமான ஸ்ரீ பாஞ்சசன்யம் -தேஜோ ரூபமான திருவாழி-நூல் -திரு யஜ்ஞ்ஞோபவிதம் -ஆரம் -திருவாரம் –
இவை நித்ய ஸூரிகளுக்கு உபலஷணம்
உள –
நித்யரான இவர்கள் உளராகை யாவது என் –ச ஏகாகீ ந ரமேத–மஹா உபநிஷத் -என்கிறபடியே இவரோடு கலப்பதற்கு முன்பே
அந்த விபூதியும் இல்லையே தோற்றுகையாலே –
குகன் உடன் சேர்ந்தே சேர்த்தி இன்பம் /பரதன் சத்ருக்னன் இல்லாமல் இளைய பெருமாள் உடன் சேர்த்தி கூட இல்லையே

செந்தாமரைத் தடங்கண் –
ஆர்த்தி எல்லாம் தீர இவரைப் பார்த்துக் கொண்டு நிற்கிற நிலை -அநந்த கோடி ஜென்மமாக அவனுக்கு இவரை அடைய ஆர்த்தி என்றவாறு –
இவரோடு கலந்த பின்பாயிற்று திருக் கண்கள் செவ்வி பெற்றதும் விகசிதம் ஆயிற்றதும் -எம்பெருமானார் நிர்வாகம்-
ஏக ரூபம் ஆனவற்றுக்கு எல்லாம் இதொரு விகாரம் பிறக்கிறது இறே
சதைக ரூப ரூபாயா -என்கிற இடத்தில் கர்மம் அடியாக வரும் விகாரம் இல்லை என்கிறதாயிற்று அத்தனை இறே –அன்பின் அடியாக உண்டே
செங்கனிவாய் செங்கமலம்
சாடுசதங்கள் சொல்லுகிற திருவதரம் இருக்கிறபடி –சிவந்து கனிந்த அதரமானது -சிவந்து கமலம் போலே இரா நின்றது
செந்தாமரை யடிக்கள் –
செந்தாமரைத் தடங்கண் –நோக்குக்கும் -செங்கனிவாய் – ஸ்மித்துக்கும் தோற்று விழும் திருவடிகள் –-திருவடிகளிலே விழுந்து அனுபவிக்கும் திருமேனி
செம்பொன் திருவுடம்பே –
ருக்மாபம் -என்னும்படியாயிற்று இவரோடு கலந்த பின்பு திருமேனியில் பிறந்த புகர் தான் –
ஸ்வர்ணம் போன்ற திரு மேனி —ஸ்வபன தீ கம்யம் போலே-
மயூர கிரீவம் -சத்ருசம் –மயில் கழுத்து போலே -அசத்ருசம் –வர்ணத்துக்கு சத்ருசம் -மதிப்புக்கு -பொன் ச்ப்ருஹணீயத்வம் -மதிப்பு மிக்க என்றவாறே

————————————————————————————-

அவதாரிகை –

தம்மோடு கலந்த பின்பு அவனுக்குப் பிறந்த புகரைச் சொல்லி –தம் உடம்பைப் பற்றி ப்ரஹ்ம ஈசா நாதிகள் சத்தையாம் படி
இருக்கிறவன் தான் என் உடம்பைப் பற்றி தாம் சத்தையாம்படி இரா நின்றான் என்கிறார் –

திருவுடம்பு வான்சுடர் செந்தாமரைக் கண் கை கமலம்
திருவிடமே மார்வம் அயனிடமே கொப்பூழ்
ஒருவிடமும் எந்தை பெருமாற்கு அரனேயோ
ஒருவிடம் ஓன்று இன்றி என்னுள் கலந்தானுக்கே –2-5-2-

விபூதி பூதருக்கும் பிராட்டிமார் உடன் ஒக்க இடம் கொடுத்த ஔஜ்வல்யம்
ஒருவிடம் ஓன்று இன்றி என்னுள் கலந்தானுக்கே -ஒன்றும் சோராத படி -ஸ்வரூபம் ரூபம் குணம் வித்யாதி — இத்யாதி
திருவுடம்பு வான்சுடர் -ச்லாக்கியமான ஆதித்யன் போலே
செந்தாமரைக் கண் கை கமலம் -செவ்வி
திருவிடமே மார்வம்-பிராட்டிக்கு
அயனிடமே கொப்பூழ் -பிரமனுக்கு ஸ்தானம்
ஒருவிடமும் எந்தை பெருமாற்கு அரனேயோ -அரனே ஒ -நீக்கி விட்ட இடம் ருத்ரனுக்கு
இது என்ன ஆச்சர்யம் –
விபூதி ஔஜ்வல்யமும் இவர் உடன் கலந்த பின்பு என்கிறார் இதில் –

திருவுடம்பு வான்சுடர் –
அணைந்த போதை ஸ்பர்ச ஸூகம் கொண்டு அருளிச் செய்கிறார் இறே —திரு –பூஜ்ய வாசி இங்கு –
திரு -பெரிய பிராட்டியாரோட்டை சம்பந்தம் சொல்ல வில்லை -பரம போக்யமான உடம்பு என்பதைக் காட்ட –திரு உடம்பு என்கிறார் –
ஈஸ்வரனுக்கு விக்ரஹம் இல்லை விபூதி இல்லை என்கிறவர்கள் முன்பே ஆப்ததமரான இவர் திருவுடம்பு வான் சுடர் -என்னப் பெறுவதே –
ஈஸ்வரனுக்கு விக்ரஹம் இல்லை குணம் இல்லை என்கிறவர்கள் பண்ணி வைக்க மாட்டாத பாபம் இல்லை
அவர்களை அனுவர்த்தித்து அது கேட்க விடாதபடி -இராதபடி -பெருமாள் நமக்கு பண்ணின உபகாரம் என் -என்று அருளிச் செய்வர் ஜீயர்
-பட்டர் மூலம் சம்ப்ரதாயம் வந்ததை அனுசந்தித்து நஞ்சீயர் அருளிச் செய்த படி
1–மயர்வற மதி நலம் அருளப் பெற்றவர் துவக்கு உண்கிற திருமேனி இறே
2–இச்சா க்ருஹீதா அபிமதோறு தேஹ-என்று தனக்கும் அபிமதமாய் இருப்பதொரு ஓன்று இறே
3–தான் மதித்தார்க்கு ஏஷ சர்வஸ்வ பூதஸ்து-என்று கொடுப்பதும் திருமேனியையே –

பிடித்தவர்க்கு பிடித்ததையே கொடுக்கணும்
புறா வேடனுக்கு சரீரம் கொடுத்தது
ஆத்மா சமர்ப்பணம் பண்ணினார்
ஆழ்வாருக்கு திருமேனியை கொடுத்தான்

வான் சுடர் –
முதலிலே தேஜோ ரூபமான திருமேனி மிகவும் ஒளி பெற்றது இவரோட்டை கலவியாலே –
புறம்பு ஒளியாய் உள்ளு மண் பற்றி பற்றி இருக்கை யன்றிக்கே -நெய் திணுங்கினால்-கெட்டிப்படுத்தால்-போலே தேஜஸ் தத்வமேயாய் இருக்கை –
அபூர்வ ரூப சம்ஸ்தானாம் தேஜசாம் ராசிமூர்ஜிதம் -என்கிறபடியே பஞ்ச சக்தி மயமாய் இருக்கச் செய்தே -ஷாட் குண்ய விக்ரஹன் -என்கிறது
குணங்களுக்கு பிரகாசகமாகை சுட்டி இறே –
செந்தாமரைக் கண்
கடாஷத்தாலே வவ்வலிட்டு சொல்லுகிற வார்த்தை – குளிரில் நடுங்கி -சீதள திருஷ்டி-இதனாலே தானோ அத்யயன காலம் –
-ஒரே தேஜஸ் சொன்னதும் அவன் வவ்வல் இட்டானாம் -கடாஷித்ததும் இவன் வவ்வல் இட்டாராம்
கை கமலம்
கரேண ம்ருதுநா -என்கிறபடியே அணைத்த கை
கண்டா கர்ணன் மோஷ பிரதானம் -ஹரி வம்சம் -கண்டா கர்ணனையே மிருதுவாக அணைத்தானாம் –
இவர் ஒரு கால் சொன்னதைப் பல கால் சொல்லுவது என் என்னில் முத்துக் கோக்க வல்லவன் முகம் மாறிக் கோத்த வாறே
விலை பெறுமா போலே -இவரும் ஒரோ முக பேதத்தாலே மாறி மாறி அனுபவிக்கிறார் –அபூர்வ போக்யத்வம்
திருவிடமே மார்வம்
அக்கையாலே அணைப்பிக்கும் பெரிய பிராட்டியாருக்கு இடம் திரு மார்பு
அயனிடமே கொப்பூழ்
சதுர்தச புவன ஸ்ரஷ்டாவானா ப்ரஹ்மா திரு நாபி கமலத்தை இருப்பிடமாகக் கொண்டு இருக்கும்
ஒருவிடமும் எந்தை பெருமாற்கு அரனேயோ
ஓரிடம் என்னாதே-ஒருவிடம் என்கிறது -ஒருவுதல் நீங்குதலாய்-நீங்கின இடம் என்றபடி –
என் நாயனான சர்வேஸ்வரனுக்கு நீங்கின இடமும் ருத்ரனுக்கு இருப்பிடமாயும் இருக்கும்
தாமஸ தேவதை இருப்பிடம் ஆகையாலே -நீங்கின இடம் என்று அநாதார உக்தி இருக்கிறபடி –
தாழ் சடையும் நீண் முடியும் –தோன்றுமால் –இரண்டு உருவும் ஒன்றாய் இசைந்து –இடப்பாகம் அப்பிரதானம் –காரைக்கால் அம்மையார் தானே சொல்லி –
ஒருவிடம் ஓன்று இன்றி என்னுள் கலந்தானுக்கே –
என்னோடு வந்து கலக்கிற இடத்தில் -நீங்கின இடம் ஒன்றும் இன்றிக்கே வந்து கலந்தான் –
அநந்ய பரையான ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கும் திரு மேனியிலே இடம் கொடுத்து வைப்பதே –என்று இந்த சீல குணத்தை
அனுசந்தித்து வித்தராய் இருந்தார் முன்பு –ஏறவனை பூவனைப் பூ மகள் தன்னை -2-2-3-
இப்போது தமக்கு உடம்பு கொடுத்தபடி கண்டவாறே -அது பரத்வம் என்று தோற்றி இது என்ன சீல அதிசயமோ என்கிறார் –
ஒரு விடம் ஓன்று இன்றி என்னுள் கலந்தானுக்கு திருவுடம்பு என்று தொடங்கி–அரனே ஒ -என்று அந்வயம் –

————————————————————————————–

அவதாரிகை –

ஸ்வ வ்யதிரிக்த சமஸ்த வஸ்துக்களும் தன்னைப் பற்றி உளவாம்படி இருக்கிற சர்வேஸ்வரன் –
தான் என்னைப் பற்றி உளனாய் என்னோடு வந்து கலந்தான் என்கிறார் –

என்னுள் கலந்தவன் செங்கனிவாய் செங்கமலம்
மின்னும் சுடர் மலைக்குக் கண் பாதம் கை கமலம்
மன்னு முழுவேழுலகும் வயிற்றினுள
தன்னுள் கலவாத தெப்பொருளும் தானில்லையே –2-5-3-

தன்னுள் இல்லாத வஸ்துவுக்கு சத்தை இல்லாதவோ பாதி -என்னுள் தான் கலவாத போது தனக்கு சத்தை இல்லை
என்னும் படி ஔஜ்வல்யமாக -இது என்ன சீலம்
என்னுள் கலந்தவன்மின்னும் சுடர் மலைக்குக் செங்கனிவாய்
செங்கமலம் கண் பாதம் கை கமலம் -3 அவயவம் -2 கமலம் -கை மட்டும் கமலம் -கண் பாதம் செங்கமலம் -என்பர் –
மன்னு முழுவேழுலகும் வயிற்றினுள -ஸ்திரமாய் பூரணமான சகல –சத்தை பெறுகின்றன
தன்னுள் கலவாத தெப்பொருளும் தானில்லையே-பகவத் ஆஸ்ரயமாக இல்லாத ஒன்றுமே இல்லையே
சர்வ வஸ்துவுக்கும் தத் வியதிரேகத்தில் சத்தா ஹானி -ஸ்வரூப நாஸ்தி -நாஸ்திகரும் அவனைப் பற்றியே –

என்னுள் கலந்தவன் –
அகஸ்ய ப்ராதா -என்னுமா போலே நிரூபகம் இருக்கிறபடி –நாராயணன் -வாஸூ தேவன் -என்னுமா போலே
என்னுள் கலந்தவன் -என்று காணும் அவனுக்குத் திரு நாமம் –
மாமான் மகளுக்கு பெயர் கிடைத்தால் அஹச்த்ய ப்ராதா வுக்கும் கிடைக்கும் –
செங்கனிவாய் செங்கமலம்
சிவந்து கனிந்த வாய் -செங்கமலம் போலே இரா நின்றது
மின்னும் சுடர் மலைக்குக்
வாட்டமில் புகழ் வாமனன் கலந்த பின்பு வளர்ந்த படியும் -புகர் பெற்ற படியும் -தரையிலே கால் பாவி தரித்த படியும்
-திண்மையை உடையனான படியும் பற்ற –மலை -என்கிறார் –
அழுகை இல்லா ஸ்வாமி -சிரித்து ஹர்ஷம் அடையும் ஸ்வாமி போலே –வாட்டம் உடைய வாமனன் -வாட்டமில் புகழ் வாமனன் -மின்னும் சுடர் மலை வாமனன் –
கண் பாதம் கை கமலம்
முகம் அறிந்து கோத்த வாறே முத்து விலை பெறுமா போலே இவரும் திவ்ய அவயவங்களைச் சரியான விதத்திலே சேர்த்து அனுபவிக்கிறார் –
மன்னு முழுவேழுலகும் வயிற்றினுள
ப்ரவாஹ ரூபத்தாலே நித்தியமான சகல லோகங்களும் தன் சங்கல்பத்தைப் பற்றிக் கிடக்கிறன
தன்னுள் கலவாத தெப்பொருளும் தானில்லையே —
தன் திரு உள்ளத்தை அபாஸ்ரயமாக யுடைத்தது அன்றிக்கே இருக்கிற வஸ்து யாதொன்று -அது நாஸ்தி சப்தத்துக்கு அர்த்தமாகிறது
அப்ரஹ்மாத்மகமாய் இருப்பதொரு பதார்த்தம் தான் இல்லை —ந ததஸ்தி விநா யத் ஸ்யாத்-மயா பூதான் சராசரம் -ஸ்ரீ கீதை -10-39-என்றான் இறே –
தன்னுள் கலவாத தெப்பொருளும் தானில்லையே —
அவை இவனைப் பற்றாத போது சத்தை இன்றிக்கே இருக்கிறது ஸ்வரூபத்தாலே
இவன் இவரை கலவாத போது சத்தை இன்றிக்கே இருக்கிறது பிரணயித்வ குணத்தாலே -வேதாந்தம் சார்ந்த அர்த்தம்
ப்ரஹ்ம ஸ்வரூபம் சொல்ல முடியாதே –பிரணயித்வ குணத்தாலே-என்கிறார் –
ஸ்வரூப பிரயுக்தம் இல்லை -குண பிரயுக்தம் என்கிறார் –

——————————————————————————————-

அவதாரிகை –

நீர் ஒரு கால் சொன்னதை ஒன்பதின் கால் சொல்லி இங்கனே கிடந்தது படுகிறது என் -என்ன -புரா அபி நவம் -புராணம்
நான் அது தவிருகிறேன் –நீங்கள் இவ்விஷயம் ஒரு கால் இருந்த படியே எப்போதும் இருக்கும் படி பண்ண வல்லி கோளோ -என்கிறார்

எப்பொருளும் தானாய் மரகதக் குன்றம் ஒக்கும்
அப்பொழுதைத் தாமரைப் பூக் கண் பாதம் கை கமலம்
எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டூழி ஊழி தொறும்
அப்பொழுதைக்கு அப்பொழுது என்னாரா வமுதமே –2-5-4-

நிரதிசய போக்ய பூதன் -ஸ்திர ஸ்வ பாவன் ஆனான் என்னுடன் கலந்த பின்பே –என்கிறார் –
எப்பொழுதும் -எந்நாளும் -எத்திங்கள் -எவ்வாண்டு -எவ்வூழி
அப்பொழுதைக்கு அப்பொழுது என்னாரா வமுதமே-ப்ரீதி அதிசயத்தால்
எப்பொருளும் தானாய்-கார்ய காரண -சரீராத்மா பாவம் -சர்வம் கல்மிதம் ப்ரஹ்ம -ஜகத் சர்வம் சரீரம் தே -ராமாத்வைதம் ஆனதே –
இங்கே -கலந்த பின்பே சித்திக்கிறதாம்-விருப்பத்தால் -முன்பு கண்டு கொள்ள வில்லை -உள்ளத்தில் திருப்தி இப்பொழுதே
மரகதக் குன்றம் ஒக்கும் -மரகத பச்சை -உறுதி -வண்ணம் –
அப்பொழுதைத் தாமரைப் பூக் கண் -அப்பொழுதை கமலம்-பாதம் கை -புதுமை பெற்றன -இப்பொழுது தான்
மூன்று அவயவங்கள் -இரண்டு இடத்திலும் அந்வயம் –

எப்பொருளும் தானாய் –
ஸ்வ வ்யதிரிக்த சமஸ்த வஸ்துக்களும் தான் என்கிற சொல்லுக்கு உள்ளே பிரகாரமாம் படி -தான் பிரகாரியாய் –
ஸ்வ அதீநம் அல்லாதோரு பதார்த்தத்தைப் பெற்றுத்தான் இப்பாடு படுகிறானோ -அப்ருதக் சித்த விசேஷணம் -பிரகாரம் —
பாடு -திருமேனியில் பெற்ற விகாசம் -ஆழ்வாரைப் பெற்ற பின்பு –
மரகதக் குன்றம் ஒக்கும்
கீழ் -ஜகதாகாரணனாய் நிற்கும் நிலை சொல்லிற்று
இங்கு -அசாதாரண விக்ரஹம் தன்னையே சொல்லுகிறது
கீழ் –மின்னும் சுடர் -என்று தம்மோட்டைக் கல்வியால் வந்த புகரைச் சொல்லிற்று
அதற்கு ஆஸ்ரயமான அசாதாரண விக்ரஹத்தை சொல்லுகிறது இங்கே –மரகதக் குன்றம்
அப்பொழுதைத் -தாமரைப் பூக்
கீழ் தாமரையைச் சொன்ன விடம் தப்பச் சொன்னோம் என்று அழித்து பிரதிஜ்ஞை பண்ணுகிறார்
கேவலம் தாமரையை ஒப்பாகச் சொல்லில் செவ்வி யழிந்த சமயத்திலும் ஒப்பாகத் தொடங்குமே
அப்போது அலர்ந்த செவ்வியை உடைத்தான தாமரை
அதீர்க்கம்நீண்ட அப்பெரியவாய கண்கள் -ஒவ்வாதே –அப்ரேமதுகம்-அன்பு வழியும் இங்கே –ஷண உஜ்ஜ்வலம்ந சோர அந்தகரணச்ய பச்யதாம் -கண்ணை களவாடாதே-
நேர்மையான -விசாலமான திருக்கண்களுக்கு தாமரை ஒப்பாதாகாதே –கூரத் தாழ்வான்
கண் பாதம்
கண் -பந்தத்தை விளைக்கும் கண் -நவ வித சம்பந்தம் -பாவ பந்தம் சிநேகம்
பாதம் -பந்தம் அறிந்தால் அனுபவிக்க இழியும் துறை
கை கமலம்
தம்மோட்டை ஸ்பரசத்தாலே செவ்வி பெற்ற படி
இவை எல்லாம் அப்போது அலர்ந்த கமலம் போலே இருக்கும் –
கண்ணும் செந்தாமரை -கையும் அவை -அடியோ அவையே –திரு விருத்தம் -43-செக்கமலத்து அலர் போல் கை கால் -என்றும் சொல்வார்
கை கமலம் -ஆழ்வாரை தீண்டாத பாதம் கண்கள் வேற கோஷ்டி –கை வேற கோஷ்டி -என்பர் -விலஷணம்-சொல்கிறது

எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டூழி ஊழி தொறும் அப்பொழுதைக்கு அப்பொழுது என்னாரா வமுதமே —
கலா காஷ்டாதிகளாலும் பேதிக்க ஒண்ணாத அத்யல்ப காலம் அனுபவிப்பது -ஒரு நாள் அனுபவிப்பது -ஒரு மாசம் அனுபவிப்பது
ஓராண்டு அனுபவிப்பது கல்பம் தோறும் கல்பம் தோறும் அனுபவிப்பது -இப்படி காலம் எல்லாம் அனுபவியா நின்றாலும்
கீழ்ச் சொன்ன அப்பொழுதைக்கு அப் பொழுது என்னாராவமுதமே –
பூர்வ ஷணத்தில் அனுபவம் போலே வல்ல வாயிற்று உத்தர ஷணத்தில் அனுபவம் இருப்பது
-சேர்த்து -பொழுதுக்குள் பிரிவு உண்டே -அந்த அந்த சின்ன பொழுதிலும் என்றுமாம் –
எப்பொழுதும் நாள் திங்கள் –ஆராவமுதமே —காலத்தை பொதுவாக கொண்டு -வான மா மலை ஜீயர்
பிள்ளை –அத்யல்ப ஷணம் தோறும் ஆராவமுதமே -என்று பிரித்து –

தாராவாஹிக விஜ்ஞானத்தில் காலோபஷ்டம்பாதிகளால்-கால சம்பந்தத்தால் – வருவதொரு பேதம் உண்டு இறே-ஜ்ஞானத்துக்கு
-இங்கு விஷயம் தானே பேதியா நின்றதாயிற்று –
தாரை தாரை யாக விஜ்ஞ்ஞானம் -தொடராக -வஹிக்கப் படுவது -விளக்கு -திரி -குறைய பிரவாஹ ரூபம் ஒன்றே போலே
வஸ்து வேற தான் ஓன்று என்று கிரஹிக்கிறோம்-அது போலே ஞானம் -காலத்தால் உபலஷிக்கப்பட்ட வஸ்து வேற ஞானமும் வேற –
தேசத்தாலும் பேதம் -காவேரி ஸ்ரீ ரெங்கம் -தலைக்காவேரி வேறே
வஸ்து அதே -ஞானம் வேற பூர்வ பஷி -ஆழ்வார் பார்க்கும் கோணத்தால் அப் பொழுதைக்கு அப் பொழுது ஆராவமுதம் -என்பர் –
அவரே அப் பொழுதைக்கு அப் பொழுது ஆராவமுதம்
உபஷடம்பம் –சம்யோகம் என்றவாறு
பிராபகரர் -நையாயிகர் -பூர்வ பஷிகள்-
கடோயம்-பூர்வ உத்தர காலம் -அவச்சின்ன -அளவு படுத்தப் பட்ட- வேஷேண கட ரூப வஸ்துவுக்கு பேதம் உண்டு
காலத்தாலும் தேசத்தாலும் சொல்ல வில்லை வஸ்துவே வேறே -கர்மாதீன விகாரம் இல்லை -கிருபாதீன மாறுதல் குணமே –
அப்பு -அரும்பத வியாக்யான காரர் -அந்ய ஷணம் அந்ய ஷணம் கடம் -விசிஷ்ட கடம் -கிரஹிக்கும் ஞானம் -மாறும் –பிரபாகர மதம்
-ஞான பேதம் சொல்வதில் தாத்பர்யம் இல்லை -காலம் தேசத்தாலே மாறுதல் என்றவாறு
தார்க்கிக -நையாயிகன் -கால சம்யோகத்தால்
ஞானத்துக்கு தான் பேதம் -வஸ்துவுக்கு இல்லை என்பான்
அன்று பார்த்த குடம் இன்று பார்த்தேன் சொல்லுவோமே அதனால் வஸ்து வேற இல்லை –
ஆழ்வார் இரண்டும் இல்லை –வஸ்துவே-வேறே -புதியதாக ஷணம் தோறும் -விஷயம் தானே பேதியா நின்றது -என்கிறார்

—————————————————————————————

அவதாரிகை –

இத்தனை போதும் தாமரையை சிஷித்து உபமானமாகச் சொல்லிப் போந்தார் -விஷயத்திலே அவகாஹித்தவாறே
நேர் கொடு நேர் உபமானமாக நின்றது இல்லை –அவற்றைக் கழித்து உபமேயம் தன்னையே சொல்லுகிறார்-

ஆராவமுதமாய் யல்லாவி யுள் கலந்த
காரார் கரு முகில் போல் என்னம்மான் கண்ணனுக்கு
நேராவாய் செம்பவளம் கண் பாதம் கை கமலம்
பேரார நீண் முடி நாண் பின்னும் இழை பலவே –2-5-5–

தன்னுடன் கலந்த அவனுடைய அவயவ சோபைக்கு உபமானம் இல்லை-நிரதிசய போக்ய பூதனாய்
யல்லாவி யுள் கலந்த – -ஓன்று அல்லாத நெஞ்சுக்கு உள்ளே
காரார் கரு முகில் போல் என்னம்மான்-நாதனுக்கு
கண்ணனுக்கு
நேராவாய் செம்பவளம் -பவளம் வாயுக்கு நேராது நேர் ஒவ்வாது
கண் பாதம் கை கமலம் -கமலம் -கண் பாதம் கைகளுக்கு நேரா -நேர் ஒவ்வாது
பேரார நீண் முடி நாண் பின்னும் இழை பலவே-அசங்யாதமான -பேர் ஆரம் -போல்வன –

ஆராவமுதமாய்
எப்போதும் புஜியா நின்றாலும் மேன்மேல் என த்ருஷ்ணையை விளைக்கும் அமிர்தம் போலே நிரதிசய போக்கினாய்
யல்லாவி யுள் கலந்த
இப்படி போக்யம் குறைவற்றால் போக்தாக்களும் அதுக்கு அனுரூபமாகப் பெற்றதோ
அல்லாவி
ஒரு வஸ்துவாக என்ன ஒண்ணாத என்னுடைய ஆவியோடு கிடீர் வந்து கலந்தது –அவன் நல் ஆராவமுதம் -நான் அல்லாவி –
தன்னையும் அறிந்திலன் என்னையும் அறிந்திலன்
அல் ஆவி
அசித்தைக் காட்டிலும் தம்மை குறைய நினைத்த படி
அசித்துக்கு இழவு இல்லையே -தன் ஸ்வரூபத்திலே கிடந்ததே
சேதனனாய் இருந்து வைத்து ஜ்ஞானம் பலம் இல்லாமையாலே அசித்தில் காட்டில் தம்மைக் குறைய நினைத்து இருக்கிறார்
உள் கலந்த
பெரு மக்கள் உள்ளவரான நித்ய ஸூரிகள் அளவில் கலக்குமா போலே தான் கலந்தானோ
என்னை ஆராவமுதாக நினைத்து -என்னளவாகத் தன்னை நினைத்துக் கிடீர் கலந்தது
உள் கலந்த
ஏக தத்வம் என்னலாம் படி கலந்தானாயிற்று
அவன் இப்படி கலந்தமை நீர் என் கொண்டு அறிந்தது
அவன் இப்படி கலந்தமை நீர் என் கொண்டு அறிந்தது என்னில் -வடிவிலே தொடை கொண்டேன் -என்கிறார்
காரார் கரு முகில் போல் –
என்னோட்டைக் கலவி பெறாப் பேறு என்னும் இடம் தன் வடிவிலே தோற்ற இரா நின்றான்
கார் காலத்திலே ஆர்ந்த கருமுகில் போலே -என்னுதல்
கார் என்று கறுப்பாய்-கருமை மிக்க முகில் என்னுதல்
இவ்வடிவை உடையவன் கிடீர் என்னோடு வந்து கலந்தான் -என்கிறார் –
என்னம்மான் கண்ணனுக்கு
அவ்வடிவு அழகாலே என்னை எழுதிக் கொண்ட கிருஷ்ணனுக்கு –
நேராவாய் செம்பவளம்
பவளமாகில் சிவந்தது அன்றோ இருப்பது என்னில் பிரவாளத்தை ஸ்படிக ஸ்தானத்திலே யாக்கி அவ்வருகே சிறந்த பவளத்தை கற்பித்தால்
அப்படி சிறந்த பவளமாயிற்று ஜாதியாக திருப் பவளத்துக்கு ஒப்பாகாதது
கண் பாதம் கை கமலம் நேரா –
குளிர நோக்கின கண் –நோக்குக்குத் தோற்று விழும் திருவடிகள் -திருவடிகளில் விழுந்தாரை எடுத்து அணைக்கும் கை –
இவற்றுக்குத் தாமரை ஜாதியாக ஒப்பாகா –
பேராரம் –
பெரிய வரை மார்பில் பேராரம்- என்கிறபடியே -திருக் கழுத்துக்கு இருமடியிட்டுச் சாத்த வேண்டும்படியான ஆரம்
நீண் முடி –
ஆதி ராஜ்ய ஸூசகமான திரு அபிஷேகம்
நாண்
விடு நாண்-கடி ஸூத்ரம் இடுப்பில்
பின்னும் இழை பலவே —
அனுபவித்துப் போம் இத்தனை போக்கி என்னால் சொல்லித் தலைக் கட்டப் போமோ –

——————————————————————————————–

அவதாரிகை –

தம்முடனே கலந்து ஆற்றானாய்-அநேக சரீரம் பரிக்ரஹம் பண்ணி என்னை அனுபவியா நின்றான் கிடீர் -என்கிறார் –
சௌபரி ஆபாச அனுபவத்துக்கு -சரீரம் கொண்டது -ஆதி சேஷன் சென்றால் குடையாம் -இத்யாதி கைங்கர்யத்துக்கு கொண்டால் போலே –

பலபலவே யாபரண பேரும் பலபலவே
பலபலவே சோதி வடிவு பண்பு எண்ணில்
பலபல கண்டு உண்டு கேட்டு உற்று மோந்தின்பம்
பலபலவே ஞானமும் பாம்பணை மேலாற்கேயோ--2-5-6-

பூஷணம் அபரிச்சேத்யம் அனுபவிக்கிறார்
பலபலவே யாபரண -க்ரீடாதி ரூப பேதத்தாலும் -ஓர் ஒன்றில் சமஸ்தான பாஹூள்யத்தாலும்
பேரும் பலபலவே -நாமாத்மகம் -ஸ்வரூப குணங்கள் ரூபங்கள் சேஷ்டிதங்கள்-பர வ்யூஹ -இத்யாதி –
சதங்கை அழகியார்தஸ்ய உதித நாமம் –
பலபலவே சோதி –வடிவு அப்ராக்ருத விக்கிரகமும் -பரத்வ-நித்யோதித சாந்த்யோதித-சங்கர்ஷண-இத்யாதி
-மனுஷ்யாதி -யோனிகள் -நின்ற இருந்த இத்யாதி அர்ச்சை
சஹச்ர பஸ்யாமி -திவ்ய சஷூஸ் கொடுத்து –
வடிவு பண்பு என்னில் பலபல--ஸ்வ பாவம் என்னில் -அவாந்தர பேதம்
கண்டு உண்டு கேட்டு உற்று மோந்தின்பம் பலபலவே -இந்த்ரியங்களால் வேண்டாமே அவருக்கு -அதனாலே பன்மையும் உண்டே
-கண்ணாலே கேட்பார் சுவைப்பார் இத்யாதி –
ஞானமும் -தத் த்வாரா -ஸூக ஞானம் -பஹூ விதம்
பாம்பணை மேலாற்கேயோ-மேலார்க்கே ஒ

பலபலவே யாபரணம்
ஜாதி பேதமும் வ்யக்தி பேதமும் இருக்கிற படி
திருக்கைக்கு சாத்துமவை என்றால் அநேகம்
அவை தன்னிலே இடைச்சரி கடைச்சரி என்று அநேகமாய் இருக்கும் இறே -பாஹூ வளையம்-
பேரும் பலபலவே
அனுபவ சமயத்தில் நாம க்ரஹணத்துக்கு இழிந்த இடம் எல்லாம் துறை
சீலப்பேர் வீரப்பர் அநேகமாய் இருக்கும் இறே -கோவிந்தன் மது சூதனன் போல்வன –
பலபலவே சோதி வடிவு –
திரு நாமத்வாரா காணும் வடிவுகளும் பல
அப்ராக்ருத திவ்ய சம்ஸ்தானத்தை இதர சஜாதீயம் ஆக்குகையாலே எல்லாம் சோதி வடிவையே இருக்கும் இறே
சௌபரியைப் போலே அநேகம் வடிவைக் கொண்டாயிற்று இவரை அனுபவிக்கிறது
முக்தன் தன்னை அனுபவிக்கும் போது படுமா போலே தான் என்னை அனுபவிக்க பல வடிவு கொள்ளா நின்றான்
பண்பு என்னில்
பிரகாரங்களை அனுசந்திக்கில்
பலபல கண்டு உண்டு கேட்டு உற்று மோந்தின்பம்
கண்டு கேட்டு உண்டு உற்று மோந்து உண்டாகக் கடவதான ஐந்த்ரிய ஸூகங்களும்
பல பல த்ருஷடி பிரியமாய் இருக்குமவையும் புஜிக்குமவையும் ஸ்ரவண இந்த்ரிய விஷயமாய் இருக்குமவையுமாய் அநேகம் இறே
பாம்பணை மேலாற்கேயோ–
விஷயங்களைச் சொல்லுதல் -அவற்றை அறிக்கைக்கு சாமக்ரியையான ஜ்ஞானங்களைச் சொல்லுதல்
ஜ்ஞானமும் பல உண்டோ என்னில் -விஷயங்கள் தோறும் பேதிக்கும் இறே ஜ்ஞானமும் -கட பட ஞானங்கள் போல –
ஸ்வ வ்யதிரிக்த விஷயங்களை எல்லாம் விஷயமாக உடையவனாய் -அவற்றை எல்லாம் அறியவும் வல்லனாய்
அவற்றை எல்லாம் அனுபவித்தால் வரும் ஏற்றத்தையும் உடையவனாய் இருக்கும் இறே
பலபலவே ஞானமும்
இவை எல்லாம் ஒரு விஷயத்திலே உண்டாய் அனுபவிக்கும் என்னும் இடத்துக்கு உதாரணம் காட்டுகிறார்
ஸ்பர்ச இந்த்ரியத்துக்கு உண்டு -க்ராண இந்த்ரியத்துக்கு உண்டு -கண்ணுக்கு இனியதாய் இருக்கும் இவை தொடக்கமானவை எல்லாம் உண்டு இறே
பாம்பனை மேலாற்க்குபண்பு என்னில் -பலபலவே யாபரணம் பேரும் பலபலவே பலபலவே சோதி வடிவு
பலபல கண்டு உண்டு கேட்டு உற்று மோந்தின்பம் பலபலவே ஞானமும்-ஒ –-என்று அந்வயம் –

——————————————————————————————–

அவதாரிகை –

அயர்வறும் அமரர்களாய் இருந்து வைத்து —ஷீராப்தியிலே கண் வளர்ந்து அருளி- ராம கிருஷ்ணாதி
யவதாரங்களைப் பண்ணிற்று -எல்லாம் எனக்காக கிடீர் என்கிறார் –

பாம்பணை மேல் பாற் கடலுள் பள்ளி அமர்ந்ததுவும்
காம்பணை தோள் பின்னைக்காய் ஏறுடன் ஏழ் செற்றதவும்
தேம்பணைய சோலை மராமரம் ஏழு எய்ததுவும்
பூம்பிணைய தண் துழாய் பொன் முடியம் போரேறே –2-5-7—

திவ்ய சேஷ்டிதங்கள் -இவர் உடன் கலந்ததால் -நிறம் பெற்ற படி -தமக்கு பிரகாசிப்பித்தது
பூ தரு புணர்ச்சி -புனல் தரு புணர்ச்சி -களிறு தரு புணர்ச்சி -வீர மகனுக்கு தன்னை கொடுப்பாள் –
சகடாசுரன் இருந்து தன்னைக் காத்த்ததுக்கு தன்னை கொடுப்பார் ஆழ்வார் –இவருக்காக பண்ணினவை தானே எல்லாம்
இது போலே தானே ஒவ்வொரு ஜீவன் இடமும் கலக்கும் பொழுது அவன் இருப்பதை நாம் உணர வேண்டும் –பக்தாநாம் –பிரகாசிக்கிறான் –
ஒருவனை ஈர்க்க இத்தனையும் –
பாம்பணை மேல் பாற் கடலுள் பள்ளி அமர்ந்ததுவும் -பொருந்தியதுவும்
காம்பணை தோள் பின்னைக்காய் ஏறுடன் ஏழ் செற்றதவும் -ஒரே வியாபாரத்தால்
தேம்பணைய சோலை மராமரம் ஏழு எய்ததுவும் -சால வ்ருஷங்களையும் ஒரு சேர
பூம்பிணைய தண் துழாய் பொன் முடியம் போரேறே -போர் ஏற்று நாயனார் -திருப் புட் குழி -பெருமாள் –
தர்ச நீயமான -செருக்கை உடைத்த -பரத்வ -வ்யூஹ -விபவம் -ராம கிருஷ்ணாதி -மூன்றுமே எனக்காக –

பாம்பணை மேல் பாற் கடலுள் பள்ளி அமர்ந்ததுவும்
ஆர்த்த ரஷணத்துக்காக திருப் பாற் கடலிலே நீர் உறுத்தாமைக்கு-சைத்ய சௌகந்த்ய சௌகுமார்யங்களை யுடையனான
திரு வநந்த ஆழ்வான் மேலே கண் வளர்ந்து அருளிற்றும்
காம்பணை தோள் பின்னைக்காய் ஏறுடன் ஏழ் செற்றதவும்
சுற்றுடைமைக்கும் -செவ்வைக்கும் மூங்கில் போலே இருந்துள்ள தோள் அழகையுடைய நப்பின்னை பிராட்டியோட்டை சம்ச்லேஷத்துக்கு
பிரதி பந்தகங்களான ருஷபங்கள் ஏழையும் ஒரு காலே ஊட்டியாக நெரித்துப் பொகட்டதும் -கழுத்தை பிடித்து நெரித்தது –
தேம்பணைய சோலை மராமரம் ஏழு எய்ததுவும்
மகா ராஜர் நீர் வாலியைக் கொல்ல மாட்டீர் என்ன -அவரை விஸ்வசிப்பைக்காக-தேனை உடைத்தாய் பணைத்து-அடி கண்டு
இலக்கு குறிக்க ஒண்ணாத படியாய் இருக்கிற மரா மரங்கள் ஏழையும் எய்ததும்
பூம்பிணைய தண் துழாய் பொன் முடியம் போரேறே –
பூவை உடைத்தாய் தொடை யுண்ட -என்னுதல்
நல்ல தொடையை உடைத்தான திருத் துழாய் மாலையாலே அலங்க்ருதனாய்-ஆதி ராஜ்ய ஸூசகமான திரு அபிஷேகத்தை உடையனாய்
இவ் வழகு தன்னை நித்ய ஸூரிகளை அனுபவிப்பித்து அத்தால் வந்த மேன்மை தோற்ற -அழகியதாய்
யுத்த உன்முகமான ருஷபம் போலே மேனாணித்து இருக்கும் இருப்பு
பொன் முடியம் போரேறே –
பாற் கடலுள் பள்ளி யமர்ந்ததுவும் –பாம்பணை மேல் -என்று தனித் தனியே க்ரியையாகக் கடவது –
ஒரே வாக்யமாகவும் நிர்வஹித்து -இவனே பரத்வ வ்யூஹ விபவ -என்றவாறே –
இவை எல்லாம் எனக்காகக் கிடீர் என்றுமாம் –

———————————————————————————————–

அவதாரிகை –

அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் இருந்து வைத்து என் தண்மையைப் பாராதே என்னோடு வந்து கலந்த
இம் மகா குணத்தை –சௌசீல்யத்தை-என்னால் பேசி முடியாது -என்கிறார் –

பொன் முடியம் போரேற்றை எம்மானை நால் தடம் தோள்
தன் முடிவொன்றில்லாத தண் துழாய் மாலையனை
என் முடிவு காணாதே என்னுள் கலந்தானை
சொல் முடிவு காணேன் நான் சொல்லுவது என் சொல்லீரே –2-5-8-

சம்ச்லேஷ வைலஷண்யம் வாசாம் மகோசரத்தை அருளிச் செய்கிறார்
பொன் முடியம் போரேற்றை எம்மானை நால் தடம் தோள்
உஜ்ஜ்வலமான -அபிஷேகம் -சமர புங்கவன் -செருக்கு -கீழ் குதிரை பிரசித்தம் -திருப் புட்குழி -செருக்கை காட்டி என்னை அடிமை கொண்ட நாதனை
நான்கு வகைப் பட்ட திருத் தோள்கள் –நீண்டு உருண்டு மலை போல் உயர்ந்த கடினம் -பருத்து -தொட்டால் மிருது –என்பர்
தன் முடிவொன்றில்லாத-பெருமைக்கு முடிவு இல்லாத
தண் துழாய் மாலையனை -குளிர்ந்த –பரத்வ ஸூ சசகம் -பரம போக்யன்
என் முடிவு காணாதே என்னுள் கலந்தானை -தனது உத்கர்ஷதுக்கு முடிவு இல்லை -எனது நிகர்ஷத்துக்கும் முடிவு இல்லை
முடிந்து போகாமல் கலந்தான் -என்றுமாம்
சொல் முடிவு காணேன் நான் சொல்லுவது என் சொல்லீரே பேச்சுக்கு அப்பால் பட்டவன் –
ஸூ சம்வேத்யமாக அறிவேன் ஒழிய -எனக்கு உணர முடியும் -பேச இயலவில்லை –
தாரை –அப்ரமேயன் -புத்திக்கு அப்பால் -என்கிறாள் —த்வம் -கண்ணுக்கு நேராக பார்த்து புத்திக்கு எட்ட வில்லை –
ஆழ்வார் -உணர முடியும் பேச முடியாது —வ்ருத்த கீர்த்தனம் பண்ண முடியாதே -பார்த்து அனுபவித்ததை நாம் பேசுகிறோம்
-அதனால் நம்மிடம் கேட்கிறார் -சொல்லிக் கொடுங்கோள் குத்தலாக சொல்கிறார் லோகத்தில் கலவி பேச முடியும் -அவனுக்கு வியாவ்ருத்தம் உண்டே

பொன் முடியம் போரேற்றை –
உபய விபூதிக்கும் கவித்த முடியை யுடையனாய் -அத்தால் வந்த சேஷித்வ வுரைப்புத் தோற்ற இருக்கிறவனை
நீ தான் சேஷி நான் தாசான் -இது உறுதி என்றானே ஸ்ரீ பரத ஆழ்வான் –
எம்மானை
தன் சேஷித்வத்தில் எல்லையைக் காட்டி -என்னை சேஷத்வத்தின் எல்லையில் நிறுத்தினவனை
நால் தடம் தோள் தன் முடிவொன்றில்லாத தண் துழாய் மாலையனை
நாலாய் பணைத்து இருந்துள்ள தோள்களை
உடையவனாய் தன்னைப் பேசப் புக்கால் வேதங்களும் எல்லை காண மாட்டாத –யதோ வாசோ நிவர்த்தந்தே -என்று
மீளும்படி இருப்பானாய் இருக்கிற தண் துழாய் மாலையானை
எல்லை காண ஒண்ணாத வஸ்துவுக்கு லஷணம் போலே திருத் துழாய் மாலை –
தாமோதரம் -காசும் பிறப்பும் -ஆமைத்தாலி ஐம்படை சாத்தி யசோதை -உதரமே பரத்வ சுசீல்ய ஸூ சகம்
என் முடிவு காணாதே என்னுள் கலந்தானை
1-அவன் பக்கல் நன்மைக்கு எல்லை காண ஒண்ணாதா போலே யாயிற்று இவர் பக்கல் தீமைக்கு எல்லை காண ஒண்ணாதே இருக்கிறபடி
என் முடிவு காணாதே என்னுள் கலந்தானை
2–என் அளவு பாராதே –அவிஜ்ஞாதா -என்கிறபடியே என் தண்மை பாராதே கண்ணைச் செம்பளித்து வந்து கலந்தான் என்னுதல்
அன்றிக்கே –
3–ஆடியாடியிலே விச்லேஷித்த வியசனத்தாலே நான் முடியப்புக -அது காண மாட்டாதே என்னோடு கலந்தான் என்னுதல் –
சொல் முடிவு காணேன் நான் –
1–என்னோடு வந்து கலந்த ஒரு குணத்தையும் சொல்லில் -ஆனந்த குணம் ஒன்றையும் சொல்லப் புக்க வேதம் பட்டது படும் அத்தனை –
2–அவன் என்னை அனுபவிப்பிக்க -அத்தால் எனக்கு பிறந்த ரசம் அனுபவித்து விடும் அத்தனை அல்லது பாசுரம் இட்டுச் சொல்ல முடியாது என்றுமாம்
சொல்லுவது என் சொல்லீரே  –
இதர விஷயங்களை அனுபவித்து அவற்றுக்கு பாசுரம் இட்டுச் சொன்னீர்களாய் இருக்கிற நீங்கள் தான் சொல்ல வல்லிகளோ-

———————————————————————————–

அவதாரிகை –

பாசுரம் இல்லை என்னா கை வாங்க மாட்டாரே –சம்சாரிகளைப் பார்த்து -என் நாயகனான சர்வேஸ்வரனை
எல்லாரும் கூடியாகிலும் சொல்ல வல்லிகோளோ -என்கிறார்

சொல்லீர் என் அம்மானை என்னாவி யாவி தனை
எல்லையில் சீர் என் கருமாணிக்கச் சுடரை
நல்ல வமுதம் பெறர்க்கு அரிய வீடுமாய்
அல்லிமலர் விரையொத்தான் ஆண் அல்லன் பெண் அல்லன் –-2-5-9-

நிரதிசய போக்யனான சொல்ல வல்லி கொளாகில் சொல்லீர்
என் அம்மானை -பேச நசையும் உண்டே -கூடியாகிலும் பேசலாமே -பேச முடியாது என்று அறிந்தாலும் –
என் அம்மான் -சுவாமி —என்னாவி யாவி தனை -அந்தர்யாமி –எல்லையில் சீர் –கல்யாண குணங்கள் -சௌசீல்யம்
என் கருமாணிக்கச் சுடரை -சௌகுமார்யம்-நீல ரத்ன சோதிஸ்-நைல்யம் -கருப்பு சமஸ்க்ருதம் -முற்றூட்டாக அனுபவிப்பித்தவன்
சொல்ல முடியாதே -காரணம்
நல்ல வமுதம்-உப்புச் சாறு போலே இல்லையே –பிறந்தார் உயர்ந்தே -கொடுக்குமே
பெறர்க்கு அரிய வீடுமாய் -மோஷ ஸ்தான நிர்வாஹகனாய் -பரம அயனம் பிராப்யம் சொல்ல வில்லை -கொடுக்கவும் -அங்கெ அனுபவிப்பிக்கவும் அவனே
அல்லிமலர் விரையொத்தான்-விரை ஒத்தான் -பரிமளம் -நிஷ்க்ருஷ்ட போக்ய ரூபன் -தாமரைப் பூ மொட்டுவதும் கூடாதே -பரிமளம் மட்டும்
ஆண் அல்லன் பெண் அல்லன் – பும்ஸ்த்வத்தால் ஸ்திரீகளில் வியாவர்த்தன் -அதே போலே ஆணும் அல்லன் -புருஷோத்தமன் —

சொல்லீர் என் அம்மானை –
ஷூத்ர விஷயங்களை அனுபவித்து -அப்ராப்த விஷயங்களில் –அவற்றுக்கு பாசுரம் இட்டு சொல்லி இருக்கிற
நீங்களாகிலும் சொல்ல வல்லி கோளோ –
என் அம்மானை –
தன் குண சேஷ்டிதங்களாலே என்னை முறையிலே நிறுத்தினவனை
என்னாவி யாவி தனை
என் ஆத்மாவுக்கு அந்தராத்மாவாய் உள்ளவனை

எல்லையில் சீர் என் கருமாணிக்கச் சுடரை
1-திவ்யாத்ம ஸ்வரூப குணங்களுக்கு எல்லை காணிலும் விக்ரஹ குணங்களுக்கு எல்லை இன்றிக்கே இருக்கிற படி
2-அளவிறந்த கல்யாண குணங்களையும் நீல மணி போலே குளிர்ந்த வடிவு அழகையும் என்னை அனுபவிப்பித்தவனை
உபநிஷத்துக்கு ஸ்வ ரூபத்தில் நோக்கு
ஆழ்வார்கள் அருளிச் செயல் திவ்ய விக்ரக ஈடு பாடு
லாவண்யம் -சமுதாய சோபை சௌந்தர்யம் -அவயவ சோபை -மார்த்வம் சௌகுமார்யம்

நல்ல வமுதம் பெறர்க்கு அரிய வீடுமாய்
நித்யமுமாய் போக்யமுமான அமுதம்
ப்ராக்ருத போக்ய
திவ்யாத்ம ஸ்வரூப குணங்களுக்கு எல்லை காணிலும் விக்ரஹ குணங்களுள் தலையான அம்ருதம்
ஒருவராலும் ஸ்வ யத்னத்தாலே ப்ராபிக்க ஒண்ணாத மோஷ புருஷார்த்த முமாய்
அல்லிமலர் விரையொத்தான் ஆண் அல்லன் பெண் அல்லன் —
போக்யதைக்கு தாமரைப் பூவில் பரிமளத் தோடே ஒத்து
இதர புருஷ சஜாதீயன் அல்லன் –
பெண் அல்லன் என்றவோ பாதி
ஆண் அல்லன் என்று அது தன்னையும் கழிக்கிறது
சகஸ்ர சீர்ஷ புருஷ -மகா பிரபு-புருஷ – வேதாஹமேதம் புருஷம் உண்டே என்னில் -புருஷோத்தமன் -என்றே அர்த்தம் –
இத்தால் உபமான ரஹிதன் -என்றபடி –

———————————————————————————

அவதாரிகை –

என்னோடு கலந்த எம்பெருமான் படி பேசப் பெரிதும் மிறுக்குடைத்து-கடினமானது என்கிறார் –
நிர்பந்தித்து சொல்லச் சொன்னால் கொஞ்சம் சொல்லலாம் –

ஆண் அல்லன் பெண் அல்லன் அல்லா வலியும் அல்லேன்
காணலும் ஆகான் உளன் அல்லன் இல்லை அல்லன்
பேணும் கால் பேணும் உருவாகும் அல்லனுமாம்
கோணை பெரிதுடைத்து எம் பெம்மானைக் கூறுதலே –2-5-10-

சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம -நித்யம் -அந்தம் அற்றவர்
அசத்யத்துக்கு எதிராய் உள்ள ப்ரஹ்மம்-அஜ்ஞ்ஞானதுக்கு எதிராய் -அந்தத்துக்கு எதிராய் -என்பர் அத்வைதிகள் –
மூன்று ப்ரஹ்மம் சித்திக்கும் -கண்டோம் முண்டம் பூர்ண ஸ்ருங்கம் போலே -வெவ்வேற காலம் –
கூடி இருக்கும் அவன் என்றே இருவரும் சொல்கிறோம் -விசிஷ்டத்வம் பிடித்தால் எல்லாம் தன்னாலே வரும்
-தன்மை உளது உளதே –நிர்விசேஷ சின் மாத்ரம் -என்பர் –
இங்கே ஆழ்வார் -இருக்கு என்பதை சொல்லி -மற்றது -விரோதமானது இல்லை என்கிறார் –அல்லன் -என்பதால்
புருஷோத்தமன் -விகுதி வைத்து நிரூபணம்
அவன் ஸ்வ பாவத்தை சொல்வது மிகவும் அரிது –
ஆண் அல்லன் பெண் அல்லன் அல்லா வலியும் அல்லேன்
காணலும் ஆகான் -இவற்றை காணும் பிரமாணத்தாலும் காணப்படாதவன்
உளன் அல்லன் -பிரதி கூலருக்கு -நாஸ்தி சப்தத்தாலும் அஸ்தி தானே முன்பே பார்த்தோம் –இரு தகமையோடு ஒழிவிலன் பரந்தே
இல்லை அல்லன் -அனுகூலருக்கு
பேணும் கால் பேணும் உருவாகும் -ஆஸ்ரித்தார் விரும்பும் வடிவை –தமர் உகந்தது –இத்யாதி
அல்லனுமாம் -ஆதாரம் அல்லாதவர்களுக்கு -அவனையே பார்த்தாலும் -ராவணன் -சிசுபாலாதிகள்
கோணை பெரிதுடைத்து எம் பெம்மானைக் கூறுதலே -மிடுக்கு -மிருக்கு உடைத்து -சொல்வது கஷ்டம் –
எப்படி சொல்ல மாட்டேன் என்றே சொல்லுவேன்

ஆண் அல்லன் பெண் அல்லன் அல்லா வலியும் அல்லேன்
நாட்டில் காண்கிற ஆண்களின் படியும் அல்லன் -அப்படியே ஸ்திரீகளின் படியும் அல்லன் –
உபயோக யோக்யம் அல்லாத நபும்சக பதார்த்தத்தின் படியும் அல்லன்-
நைனம் வாசா ச்த்ரியம் ப்ருவன் நைனமஸ்த்ரீ புமான் ப்ருவன் புமாம்சம் ந ப்ருவன் நைனம் வதன் வத்தி கச்சன அ இதி ப்ரஹ்ம-
ஆரணத்தில் இரண்டாம் ஒத்து –
ச வை ந தேவா ஸூ ர மர்த்ய ந ஸ்திரீ ந ஷண்டோ ந புமான் நாயம் குண கர்ம ந சன்ன சாசன் நிஷேத சேஷோ ஜெயதாத சேஷ -என்று
ரிக் ஆரணத்தில் இரண்டாவது அனுவாகம் -வாக்கால் கூற முடியாது என்றதே -இப்படி இல்லை இப்படி இல்லை என்றே சொல்ல முடியும் –
இப்படி பட்டர் அருளிச் செய்த வாறே ஒரு தமிழன் -ஜீயா நாட்டில் காண்கிற மூன்று மூன்றும் படியும் அல்லனாகில்
சொல்லிற்றாகிற வஸ்து சூன்யமோ பின்னை -என்று கேட்க
பட்டரும் -பிள்ளாய் இயல் அறிவுக்கு போந்து இருதது இல்லையீ –ஆண் அல்லன் பெண் அல்லள் அல்லா யலியும் அல்லது என்றது அல்லையே
அல்லன் அல்லன் என்கையாலே புருஷோத்தமன் என்று சப்தம் தான் தோற்று விக்கிறது இல்லையோ -என்று அருளிச் செய்தார்
-புருஷன் -உத் புருஷன் -முக்தர் -உத்தர புருஷன் நித்யர் -உத்தம புருஷன் அன்றோ இவன்
ஆண் அல்லன் பெண் அல்லன் என்கிற இத்தால் சஜாதீய விஜாதீய நிஷேதம் பண்ணின படி –
காணலும் ஆகான்
ஆண் பெண் அலி -என்கிற இவற்றைக் காணும் பிரமாணங்களால் காணப் படாதான் -இத்தால் ஏக பிரமாண கம்யத்வ சாம்யமும் இல்லை -என்கை
உளன் அல்லன்
அநாஸ்ரிதற்கு
இல்லை அல்லன்
ஆஸ்ரிதர்க்கு
அத்தை உபபாதிக்கிறது மேல்
பேணும் கால் பேணும் உருவாகும்
நீ எங்களுக்கு புத்ரனாய் வந்து பிறக்க வேணும் -என்று சிலர் இரந்தால்-அப்படியே வந்து பிறந்து –சபலம் தேவி சஞ்ஜாதம் ஜாதோஹம்
யத் தவோதராத் –என்று நிற்கும் -பிரச்னை சுதபா /அதிதி கஸ்யப /தேவகி -வஸூ தேவர் —
அன்றியே –பேணுங்கால் -தன்னை அர்த்திக்கும் காட்டில் பேணும் உருவாகும் -தன்னைப் பேணி மறைக்க வேண்டும்படி வந்து அவதரிக்கும் -என்றுமாம்
அல்லனுமாம்
இப்படி தாழா நிற்கச் செய்தே சிசுபாலாதிகளுக்கு கிட்ட அரிதாம் படி இருக்கும் –
கோணை பெரிதுடைத்து எம் பெம்மானைக் கூறுதலே-
இவ்வோ நிலைகளை எனக்கு அறிவித்த சர்வேஸ்வரன் படிகளை பேச வென்றால் சால மிறுக்குடைத்து-
இந்த்ரியங்களுக்கு அப்பால் பட்டவன் -என்றவாறு –

——————————————————————————————-

அவதாரிகை –

நிகமத்தில் இத் திருவாய் மொழியை அப்யசிக்க வல்லார் உண்டாகில் அவர்கள் பரமபதத்தில் போய்
நித்ய அனுபவம் பண்ணப் பெறுவர் -என்கிறார் –

கூறுதல் ஓன்று ஆராக் குடக் கூத்த வம்மானை
கூறுதலே மேவிக் குருகூர்ச் சடகோபன்
கூறின வந்தாதி யோராயிரத்துள் இப்பத்தும்
கூறுதல் வல்லார் உளரேல் கூடுவர் வைகுந்தமே –2-5-11-

வைகுண்ட பிராப்தி
கூறுதல் ஓன்று ஆராக் -ஒன்றை கூறப் போனாலும்
குடக் கூத்த வம்மானை -சௌசீல்யம் -எல்லை காண ஒண்ணாதே -அது நினைக்கவே ஒண்ணாதே -மேன்மைக்கு காணிலும் –
கூறுதலே மேவிக் குருகூர்ச் சடகோபன் -கூற முடியாது என்று ஓய்ந்த பின்பு -சொல்லுவதிலே மேவி
மயர்வற மதி நலம் அருளப் பெற்ற ஞானம் ஸுய பிரயத்தனம் இல்லை
லப்த ஞானம் பிரேமம்
கூறின வந்தாதி யோராயிரத்துள் இப்பத்தும் -அடைவு குறைக்க ஒண்ணாத அந்தாதி -அத்வதீயமான
கூறுதல் வல்லார் உளரேல்தன் முடிவு காணாத -சொல் முடிவு காணாதவன்
கூடுவர் வைகுந்தமே –பரம பதம் கூடுவர்

கூறுதல் ஓன்று ஆராக் குடக் கூத்த வம்மானை –
தன் படிகளைப் பேசப்புக்கால்-ஆனந்த வல்லியில் -சொல்லுகிற படியே பேசித் தலைக் கட்ட ஒண்ணாது இருக்கிறவனை
பேச ஒண்ணாது ஒழிகிறது பரத்வம் அல்ல –குடக் கூத்தாடின செயல் ஒன்றுமே யாயிற்று
கள்ளபிரான் -வைகுந்தத்தில் நின்று –சோர நாதன் -சோர நாட்யன் -ராசக்ரீடை /காளிங்க ந்ருத்தம் குடக்கூத்து –
வாராயோ -என்றாற்கு -சென்றேன் என் வல் வினையால் —
அம்மானை
குடக் கூத்தாலே என்னை அனந்யார்ஹம் ஆக்கினவனை –
விஷ்ணோர் ஜிஷ்ணோர் வாசுதேவ ஆத்மஜச்ய –
கூறுதலே மேவிக்
பேச நிலம் அன்று என்று வேதங்கள் மீண்ட விஷயம் என்று தாமும் பேச ஒண்ணாது -என்று கை வாங்காதே –
அழகிதாகப் பேசக் கடவோம் என்று அத்யவசித்தார்
நான் சொல்லுவது என்-சொல்லீரோ என்னா-திரியவும் –சொல்லீர் என் அம்மானை என்று தொடங்குமவர் இறே
அத்யவசித்தத்து இத்தனையோ -கூறிற்றும் உண்டோ என்னில்
குருகூர்ச் சடகோபன் –
குருகூர்ச் சடகோபன் அன்றோ -கூறச் சொல்ல வேணுமோ -மயர்வற மதுநலம் அருளப் பெற்றவர்க்கு பேசத் தட்டுண்டோ –

பேசவே தானே என்னை பிறப்பித்தான்-
புண்டரீகர் திருமாலை சாத்த -கடலை இறைக்க -ஸ்தல சயனப் பெருமாள் -விருத்தாந்தம் -கடல் வற்றிக் காட்ட -தாகம்
-ஐந்து ஆறு பிரசாதம் கொண்டு வாரும் என்ன
திருமாலையை சாத்திக் கொண்டு கண் வளர்ந்து அருளினான் -யதா மனோ ரதம் அனுபவித்து கிருதார்த்தார் ஆனார்
முடிக்க ஒண்ணாத புண்டரீகாஷனை கண்டார் -இவரும்

கூறின வந்தாதி யோராயிரத்துள் இப்பத்தும் –
விஷயத்துக்கு அனுரூபமாகப் பேசித் தலைக் கட்டின அந்தாதி ஆயிரத்திலும் இப்பத்தையும் அப்யசிக்க வல்லார் உண்டாகில்
கூடுவர் வைகுந்தமே –
அடியார் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ –என்று ஆசைப் பட்டுப் பெறாதே
ஆடியாடியாய் வ்யசனப் படாதே -இப்பாசுர மாதரத்தை சொல்லவே நான் பிரார்த்தித்து பெற்ற பேறு பெறுவார்கள்
பித்ரு தனம் கிடந்தால் புத்திரன் அழித்து ஜீவிக்கும் அத்தனை இறே -ஆழ்வார் பட்ட வ்யசனம் பண்ண வேண்டா
இது கற்றார்க்கு இவர் பேற்றிலே அந்வயம் –

முதல் பாட்டில் இவர் ஆசைப்பட்ட படியே அடியார்கள் குழாங்களோடு வந்து கலந்த படி சொன்னார்
இரண்டாம் பாட்டில் -தம்மோடு கலந்த பின்பு அவன் திரு மேனியும் திவ்ய அவயவங்களும் திவ்ய ஆயுதங்களும் நிறம் பெற்றது என்றார்
மூன்றாம் பாட்டில் –தம்மோடு கலந்து தான் சத்தை பெறுதல் -இல்லையாகில் இல்லையாம் படி வந்து கலந்தான் என்றார் –
நாலாம் பாட்டில் கீழ் இவனுக்கு திருஷ்டாந்தமாக சொன்னவை நேர் இல்லாமையாலே அவற்றை சிஷித்து சேர்த்து அனுபவித்தார்-
அஞ்சாம் பாட்டில் அது தானும் உபமானமாக நேர் இல்லாமையாலே அவற்றைக் கழித்து உபமேயம் தன்னையே அனுபவித்தார் –
ஆறாம் பாட்டில் இப்படி விலஷணன் ஆனவன் –முக்தன் தன்னை அனுபவிக்குமா போலே தான் என்னை அனுபவித்தான் என்றார்
ஏழாம் பாட்டில் தமக்காக ராம கிருஷ்ணாதி அவதாரங்களைப் பண்ணினான் –என்றார்
எட்டாம் பாட்டில் அவனை என்னால் பேச முடியாது -என்றார்
ஒன்பதாம் பாட்டில் துணை தேடிக் கொண்டு திரியவும் பேசுகையில் உபக்ரமித்தார்
பத்தாம் பாட்டில் இப்படிகளால் என்னோடு கலந்த இம் மகா குணம் ஒன்றையுமே பேச என்றால் சால மிறுக்குடைத்து என்றார்
நிகமத்தில் இது கற்றார்க்கு பலம் சொல்லித் தலைக் கட்டினார் –

——————————————————————

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

ஆகம்ய ஸூரி சகித —
சமாப்க்ருத ஆர்த்தி –அபாக்ருதம் பண்ணி-ஆர்த்தியை போக்கி
அத் ஔஜ்வல
மரகத அசல சன்னிப அங்க ஈச
கமல பிரபுல்ல அஷி காரா அங்க்ரி
முநி ஆனந்த பஞ்சம

———————————————————————

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன்

ஸூபிராப்த்யா சித்த காந்திம் –தீப்தி உக்தனாய்
ஸூகடித
விஸ் மூர்த்திம்
ப்ரீத் உன்மேஷம்
நவ கண ரசம்
ந ஏக பூஷா த்ருஷ்யம் 
பிரத்யாக ப்ரீதி லீலம் 
துரபி லபரசம் –சொல் முடிவு -அநிர்வசநீயமான ப்ரேமம் உடையவன்
சத் குண ஆமோத க்ருத்யம்
விஸ்வ வியாவ்ருத்த சித்தம்
விரஜ யுவதி கண க்யாத ரீதய அனுபவ புங்க –கோபிகள் உடன் கலந்தது -என்னுள் கலந்தான்–கோபால புரத்தில் வந்து கலந்த கிருஷ்ணனை -அனுபவித்தார் –

—————————————————————-

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 15-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்–

அந்தாமத்து அன்பால் அடியார்களோடு இறைவன்
வந்து ஆரத் தான் கலந்த வண்மையினால் -சந்தாபம்
தீர்ந்த சடகோபன் திருவடிக்கே நெஞ்சமே
வாய்ந்த வன்பை நாடோறும் வை–———–15-

—————————————————————-
அவதாரிகை –

இதில் ஆடியாடியில் -விடாய் தீர
அடியார்கள் குழாங்களுடனே வந்து கலந்த படியைப் பேசின
பாசுரத்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார்
அது எங்கனே என்னில்
இவருடைய ஆர்த்தி தீரக் கலந்து
வாட்டமில் புகழ் வாமனனாவன் –
ஆயிரம் ஆண்டு முதலையின் கையிலே அகப்பட்டு இடர் பட்ட ஆனையின் இடரைச்
சடக்கென வந்து போக்கினால் போலே
ஆடியாடி யிலே தாம் பட்ட இடர் எல்லாம் போம்படி
ஆசைப் பட்டபடியே அடியார் குழாங்கள் உடன் கூடி வந்து
சம்ச்லேஷித்து அருளக் கண்டு
தம்மோட்டைக் கலவியாலே
அவன் வடிவிலே பிறந்த புதுக் கணிப்பை
மண்டி அனுபவித்து
ப்ரீதராய்ச் செல்லுகிற
அந்தாமத்து அன்பில் அர்த்தத்தை
அந்தாமத்து அன்பாலே -அருளிச் செய்கிறார் –

————————————————————————————–

வியாக்யானம்–
அந்தாமத்து அன்பால் –
அழகிய ஸ்ரீ வைகுண்ட தாமத்தில் பண்ணும் விருப்பத்தாலே –
அத்தேசத்திலும்
அத்தேசிகர் இடத்திலும் உண்டான அதி ச்நேஹத்தாலே –

அடியார்களோடு இறைவன் –
அடியார்கள் உண்டு –
அஸ்த்ர பூஷன பிரமுகராய் உள்ள நித்ய சூரிகள் –
அவர்களோடு கூட சர்வேஸ்வரன்
சபரிகரனாய் உளனாம் படி சம்ஸ்லிஷ்டனாய்-
அந்தாமத்து அன்பு செய்து என்னாவி சேர் அம்மானுக்கு
அந்தாம வாழ் முடி சங்காழி நூலாரமுள-என்றத்தை நினைக்கிறது –

வந்து ஆரத் தான் கலந்த வண்மையினால் –
சர்வ ஸ்மாத் பரனான தான்
பரமபதத்தின் நின்றும்
பரமா பதமாபன்னரான–பெரிய ஆபத்தில் இருந்த -இவர் இருந்த இடத்து அளவும் வந்து
பரிபூர்ணமாக சம்ச்லேஷித்த ஔதார்யத்தாலே –

சந்தாபம் தீர்ந்த –
விசோதித ஜடஸ் ஸநாத-தஸ்தௌ தத்ர ஸ்ரியாஜ்வலன் -என்றும்
அதிவ ராமஸ் ஸூஸூபே-என்றும்
செந்தாமரை தடங்கண் செங்கனிவாய் செங்கமலம் செந்தாமரை அடிக்கள் செம்பொன் திரு உடம்பே -என்றும்
திரு உடம்பு வான் சுடர் –என்னுள் கலந்தானுக்கே -என்றும்
என்னுள் கலந்தவன் செங்கனிவாய் செங்கமலம் மின்னும்
சுடர் மலைக்கு கண் பாதம் கை கமலம் -என்றும்
எப்பொருளும் தானாய் மரகத குன்றம் ஒக்கும் -என்றும்
வாட்டமில் புகழ் வாமனன் மலை போலே பெருத்து
அவயவ சௌந்தர்யாதி களையும் யுடையனாய்
இருக்கிற படியை அனுபவித்து
சந்தாபம் ஆனது சவாசனமாக நிவ்ருத்தமான –

சந்தாபம் ஆவது
ஆடியாடி யில்
வாடுதல்
இரக்கம் இல்லாமல் தவித்து
வெவ்வுயிர்த்தல்
வாய் வெருவுதல்
உள்ளம் உக உருகுதல்
உள்ளுள் ஆவி உலருதல்
தன் நெஞ்சம் வேதல் துடக்கமானவை –
உள்ளுள் ஆவி உலர்ந்து -தீர -என்றும்
அல்லாவியுள் கலந்த -என்றும்
என் முடிவு காணாதே என்னுள் கலந்தான் -என்றும்
என்னுள் கலந்தவன் -என்றும் இறே இவர் அருளிச் செய்தது –
சந்தாபம் தீர்ந்த சடகோபன் திருவடிக்கே நெஞ்சமே வாய்ந்த வன்பை நாடோறும் வை –
வானோர் தனித் தலைவன்
அந்தாமத்து அன்பு செய்யும் படியான
ஆழ்வார் திருவடிகளிலே
உன் தன் மொய் கழற்கு அன்பை முயல்கின்றேன் -என்கிறபடியே
மனசே ஸூசங்கதமான சங்கத்தை நித்யமாக நிஷிப்தம் ஆக்கு
நிதியை அடியிலே இட்டு வைப்பாரைப் போலே
அன்பை அடியிலே இட்டு வை-

————————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: