பகவத் விஷயம் காலஷேபம் -57– திருவாய்மொழி – -2-4-6 ….2-4-11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

அவதாரிகை –

இவள் அவசாதத்தைக் கண்ட திருத்தாயார் -நிர்த்தயர் -என்றாள் -இவள் அது பொறாதே-தகவுடையவனே என்று
அத்தை நிரூபகமாகச் சொல்லா நின்றாள் -என்கிறார் -தொண்டர் அடிப் பொடி–திருத் துழாய் -நிரூபகம் ஆனால் போல்

தகவுடையவனே யென்னும் பின்னும்
மிக விரும்பும் பிரான் என்னும் என
தகவுயிர்க்கு அமுதே என்னும் உள்ளம்
உகவுருகி நின்றுள்ளுளே–2-4-6-

சிதிலையாய் -போக்யதா அதிசயம் புலம்பி கொண்டே -தாயார் இல்லை என்றால் -அதுவே உண்டே என்பாள்
உள்ளம் உகவுருகி நின்றுள்ளுளே-மேலே மேலே –நீராக உருகி
தகவுடையவனே யென்னும் -கூப்பிடுகிறாள் -உடையவனே என்று அவதாரணம் உறுதி பட அடித்து
இப்படி பட வைத்தானே அதுவே கிருபை -உற்ற பெரும் நோய் அன்றோ
பின்னும் அவ்வளவிலே நில்லாதே
மிக விரும்பும் பிரான்-உபகாரகன் -தன்னை அவன் விரும்பி என்றுமாம் -தான் மிக விரும்பும் என்றும்
என்னும் என தகவுயிர்க்கு அமுதே என்னும் -அந்தராத்மாவுக்கு போக்யமானவனே-ஆத்மா நித்யம் -அமுதம் -போக்யத்வ விஷயம் –

தகவுடையவனே யென்னும்
கெடுவாய் ஆகாரத்தில்-உத்பத்தி ஸ்தானத்தில் – தகவு மறுக்குமோ -நம் குற்றம் காண்-என்னா நின்றாள்
மமைவ துஷ்க்ருதாம் கிஞ்சித் -மஹத்-சீதை வசனம் போலே-
தகவில்லை என்றவள் வாயைப் புதைத்தால் போலே வந்து தோற்றுவதே-என்று
அவன் வந்தால் பண்ணும் விருப்பத்தைப் பண்ணா நிற்கும் -அவன் வந்தால் செய்யும் உபகாரங்கள் -பூசும் சாந்தும் புனையும் கண்ணியும்-போல்வன –
இங்கு இல்லை -என்றவன் வாயை மூட அங்கே தோற்றினால் போலே -வந்தானாக எண்ணி உபசரிப்புகளை எண்ணுகிறாள்
பின்னும் மிக விரும்பும் –
பாவனா பிரகர்ஷம் இருக்கும் படி -உரு வெளிப்பாட்டாலே வந்தானாக எண்ணி உபசரிப்புகளை எண்ணுகிறாள்
பிரான் என்னும்
பெற்ற தாய்க்கு அவகாசம் வையாதே வந்து தோற்றுவதே -இது என்ன உபகாரம் தான் என்னும் –

என தகவுயிர்க்கு அமுதே என்னும் -எனது அக உயிர்க்கு —
என்னுடைய பிரத்யகாத்மாவாவுக்கு போக்யனாவனே -என்னும்
நித்ய வஸ்து அழியாமல் நோக்கும் அமிர்தமாயிற்று இது -தாஸ்யம் -போக்கியம் தாரகம் –
போக தசையில் சொல்லுமவை எல்லாம் சொல்லா நின்றாள்
உள்ளம் உகவுருகி நின்றுள்ளுளே-
உள் -இடம் மனம் /மேல் மூன்றும் -உள் எனபது -மேல்
வடிவு இல்லா மனஸ் -அமூர்த்தம் -அமூர்த்தமானது மூர்த்தி பாவித்து உருகி த்ரவீ பூதமாய் மங்கிப் போகா நின்றது
உள்ளம் மிக உருகி நின்று தகவுடையவனே யென்னும் -பின்னும் மிக விரும்பும் பிரான் என்னும் -என தகவுயிர்க்கு அமுதே என்னும் –
இது நாம் பேச்சுக் கொண்டு அறிந்த அம்சம் உள்ளம்
உள்ளோடுகிறது -உள்ளுளே–வாசா மகோசரம்
உள்ளுளே-உருகி நின்று -என்பாரும் உண்டு –

————————————————————————————–

அவதாரிகை –

தன் நெஞ்சில் ஓடுகிறது பிறர் அறியாதபடி அடக்கமுடைய இவள் வாய் விட்டுக் கூப்பிடும்படி இவளை வஞ்சித்தான் -என்கிறாள்-
அடக்கத் தெரிந்த இவள் நாடகம் -அடக்கம் உடைய இவள் -ஸ்வபாவம் -இரண்டுமாம் –

உள்ளுளாவி உலர்ந்து உலர்ந்து என்
வள்ளலே கண்ணனே என்னும் பின்னும்
வெள்ள நீர்க் கிடந்தாய் என்னும் என்
கள்வி தான் பட்ட வஞ்சனையே –2-4-7-

அபேஷித்தார்கு உபகரிக்க அணித்தாக வர்த்திக்கிறவனே-நாடகம் -உள் விகாரம் அறியாமல் மறைத்து
என் கள்வி தான் பட்ட வஞ்சனையே-நல்லது சொன்னாலும் கேட்காத கள்வி–தான் பட்ட வஞ்சனை யாலே
உள்ளுளாவி உலர்ந்து உலர்ந்து -அந்தராத்மா உலர்ந்து உலர்ந்து
என் வள்ளலே கண்ணனே என்னும் -முற்றூட்டாக தந்த வள்ளலே -என்னும் -இது தானே கள்ளத் தனம்
நிர்த்தயன் சங்கை போக்க நாடக வேஷம் -உபகாரகர் என்னும் நினைவு மாறாத ஆழ்வார்
அதுவும் தன் பேறாக -வள்ளல்
பின்னும் வெள்ள நீர்க் கிடந்தாய் என்னும் -அவதார மூலம் ஷீராப்தி நாதன் –
படுக்கை தனக்கு உறுப்பாகும் -என்னும் -அவதாரமும் எனக்காக தான் -வள்ளல் அன்றோ –

உள்ளுளாவி உலர்ந்து உலர்ந்து
ஆந்தரமான மனஸ்ஸூக்கு தாரகமான ஆத்மா சருகாய் வருகிறபடி -அச்சேத்ய அயமதாஹ்ய அயமக்லேத்ய
அசோஷ்ய ஏவ ச –ஸ்ரீ கீதை -2-24-என்று அசோஷ்யம் என்று சொல்லுகிற இதுவும் போயிற்று -என்கிறாள் –
பாவபந்தம் அடியாக வருகிற நோய் ஆகையாலே அகவாயே பிடித்து வெந்து கொண்டு வருமாயிற்று
பந்தம் -அடியாக -பக்தி பிரபாவம் -உள்ளே பிடித்து தானே வெந்து வரும் –
விடாயர் கற்பூர நிகரம் வாயிலே இடுமா போலே
என் வள்ளலே கண்ணனே என்னும் –
இவ்வளவான ஆர்த்திகளிலே வந்து உன்னை எனக்குக் கையாளாகத் தருமவனே என்னா நின்றாள்
பின்னும் வெள்ள நீர்க் கிடந்தாய் என்னும்
அந்தகாரம் தீர -நரசிம்கன் –ஷீராப்தி தாபார்த்தம் -கருட வாகனன் -விஷம் தீர நெருப்பில் உலர்ந்து -இவள் -வெள்ள நீர் கிடந்தாய்
அதுக்கு மேலே -தாபார்த்தோ ஜல சாயி நம் -என்று என் விடாய்க்கு உதவ திருப் பாற் கடலிலே வந்து சாய்ந்து அருளிற்றே -என்னும்
இக்கிடை இவளுக்கு ஒரு படுக்கையிலே -அருகாமையில் -சாய்ந்தால் போலே இருக்கிறது காணும் –
என் கள்வி தான் பட்ட வஞ்சனையே —
தன் ஹிருதயத்தில் ஓடுகிறது பிறர் அறியாதபடி மறைத்துப் பரிமாறக் கடவ இவள் படும் பாடே இது
தான் பட்ட
ந ஜீவேயம் ஷணம் அபி -என்கிற தான் அவிக்ருதனாய் -இவள் விக்ருதையாவதே
கள்வி தான் -பட்ட வஞ்சனை -தான் சேர்த்தது அவன் பட வேண்டியதை இவள் படுகிறாளே
வஞ்சனை –
அளவு படைக்கு பெரும் படை தோற்பது வஞ்சனையாலே இறே
பகலை இரவாக்கியும் ஆயுதம் எடேன் என்று எடுத்தும் செய்த செயல் போலே இவளை வஞ்சித்தீர் இத்தனை –

———————————————————————-

அவதாரிகை –

உம்மை அனுபவித்து -ஸூகிக்க வைத்தீர் அல்லீர் -கம்சனைப் போலே முடித்து விட்டீர் அல்லீர்
உம்மை ரஷகர் என்று இருந்த இவள் படும் பாடே இது என்கிறாள் –

வஞ்சனே என்னும் கை தொழும் தன்
நெஞ்சம் வேவ நெடிதுயிர்க்கும் விறல்
கஞ்சனை வஞ்சனை செய்தீர் உம்மைத்
தஞ்சம் என்று இவள் பட்டனவே –2-4-8-

உம்மை விஸ்வசித்து -அனுபவ விரோதி நிரசிப்பவர் என்று -வஞ்சித்து -உள் புகுந்தாரைப் போலே பவ்யதையைக் காட்டி
வஞ்சனே என்னும் கை தொழும் -வஞ்சனைக்கு தொழ -பிரணய ரோஷத்துக்கு-வெறுப்பால் – கும்பீடு-அன்பின் மிகுதியால் வந்த கோபம்
தன் நெஞ்சம் வேவ நெடிதுயிர்க்கும்-பூர்வ சம்ச்லேஷம் நினைத்து -தனது நெஞ்சம் -பெரு மூச்சு இழுத்து விடும்
விறல்கஞ்சனை வஞ்சனை செய்தீர் -அவன் வஞ்சனை அவனோடு போகும் படி செய்தீர் இயற்கையாக அவன் மனைவிகள் அழும்படி செய்தான் –
உம்மைத் தஞ்சம் என்று இவள் பட்டனவே-மதுரையில் பெண்களுக்கு உதவின உம்மை -இதனாலே -உம்மை விஸ்வசித்து இழந்தாள்
பட்ட வெள்ளம் -வெள்ளை கோபுரம் போலே -கரண த்ரயம் -கை தொழும் -நெஞ்சம் வேவ -தஞ்சம் என்று வாசிக -மூன்றும்

வஞ்சனே என்னும் –
தாயார் வஞ்சித்தான் -என்னப் பொறுத்து இலள்-நான் அல்லேன் -என்றாலும் தவிர ஒண்ணாத படி வஞ்சித்து உன் திருவடிகளிலே
சேர்த்துக் கொண்ட உபகாரகனே -என்னா நின்றாள்
தானொட்டி வந்து என் தனி நெஞ்சை வஞ்சித்து ஊனொட்டி நின்று என் உயிரில் கலந்து இயலுமவன் –1-7-7-அன்றோ
இப்படி என்னையும் அறியாதே வஞ்சித்து உன் திருவடிகளில் சேர்த்த உபகாரகனே என்னா நின்றாள் –
அறியா காலத்து -அடிமைக் கண் அன்பு வைத்து -மாவலியை வஞ்சித்தால் போலே என்கிறாள் –
கை தொழும் –
வஞ்சித்த உபகாரத்துக்குத் தோற்றுத் தொழும்
தன் நெஞ்சம் வேவ நெடிதுயிர்க்கும்
தாயார் சொன்ன குண ஹானிக்கு ஒரு பரிஹாரம் பண்ணினவாறே ஆற்றாமை போகாதே -தன் நெஞ்சம் வேவ நெடு மூச்சு எறியா நிற்கும்
ததோ மலின சம்வீதாம் ராஷசீ பிஸ் சமாவ்ருதாம் உபாவாசக்ருசாம் தீநாம் நிச்வசந்தீம் புன புன —
உள்ளம் மலங்க -2-7-4–என்று வெட்டி விழுந்தபடி சொல்லிற்று
உள்ளுளாவி உலர்ந்து உலர்ந்து -2-4-7-என்கிற இடத்திலே உலர்ந்த படி சொல்லிற்று
இங்கே தன் நெஞ்சம் வேவ -என்கையாலே -நெருப்புக் கொளுத்தினால் போலே சொல்லுகிறது –
மரம் வெட்டி -உலர்த்த -நெருப்பு கொளுத்தி -நிலைகளை 4/7/8 பாசுரங்களில்

விறல்கஞ்சனை வஞ்சனை செய்தீர்
மிடுக்கனான கம்சனை அழியச் செய்தீர்
உம்மைத் தோற்பிக்க நினைத்தாரை நீர் தோற்பிக்குமவராய் இருந்தீர்
ஆஸ்ரித நாஸ்ரித விபாகம் அற-உமக்கு இரண்டு இடத்திலும் கார்யம் ஒன்றேயோ
அநாஸ்ரிதர் கம்சாதிகள் வென்று ஆஸ்ரிதர் யசோதாதிகள் இடம் தோற்பீரே -அந்த நிலை மாறிற்றே -தாய்க்கு இட்டது தாரத்துக்கு இல்லையோ
உம்மைத் தஞ்சம் என்று இவள் பட்டனவே –
தஞ்சம் அல்லாரை தஞ்சம் என்று இருந்தால் சொல்லுமது போலே சொல்லுவதே
தஞ்சமாகிய தந்தை தாயோடு தானுமாய் -3-6-9-என்னும் சர்வ ரஷகனை காதுகரை சொல்லுமா போலே சொல்லுகிறாள் இறே-
மகள் தசையைப் பார்த்து இவள் பட்டனவே
ஒரு மகா பாரதத்துக்கு போரும் போலே -சம்சாரிகளைப்போலே உண்டு உடுத்து திரிய வைத்தீர் அல்லீர்
நித்ய சூரிகளைப் போலே அனுபவம் கொடுத்து இல்லீர் –
எங்களைப் போலே தத் தஸ்ய சத்ருசம் பவேத் -என்னும் அளவில் இருக்கப் பெற்றிலள்-சீதா கோஷ்டியில் தாயார் சேர்த்து கொண்டாள்
கம்சனைப் போலே முடித்தீர் அல்லீர்
என் வழி வாராதே-என் சொல் வழி வராதே – -உம்மைத் தஞ்சமாகப் பற்றின இவளை எத்தனை படுத்த வேணும் –
வஞ்சகத்தை உபகாரமாக சொல்வதால் சம்சாரிகளில் வியாவ்ருத்தி
நெஞ்சம் வேவ -திருத் தாயார் -நித்ய சூரிகளில் வியாவ்ருத்தி
கை தொழும் -எங்களைப் போலே இல்லை -துரும்பு நறுக்க பிராப்தி இல்லை -உபாயத்தில் சேரக் கூடாதே -துடிப்பால் தொழுகிறாள் -த்வரை உந்த
கஞ்சனை கொன்று பிழைக்க வைத்தீர் -அந்த கோஷ்டியிலும் இல்லை –

—————————————————————————————–

அவதாரிகை –

இவள் பட்டன -என்கைக்கு என் பட்டாள்-என்ன-
படுவது எல்லாம் பட்டாளாகிலில் இவள் இனி என் படுவாள் -என்கிறாள் –
இத பூர்வ துக்கம் அனநபூதம் -இதம் பர அனுபாவ்யம் -அனுபவிக்க என்ன உள்ளது –

பட்டபோது எழுபோது அறியாள் விரை
மட்டலர் தண் துழாய் என்னும் சுடர்
வட்ட வாய் நுதி நேமியீர் நும்
திட்டமென் கொல் இவ்வேழைக்கே–2-4-9-

ரஷண உபகரணம் வைத்துக் கொண்டு -என்ன நினைத்து இருக்கிறீர் -நினைவை உபகரணமாக கொண்டவரே என்ன நினைத்து இருக்கிறீர்
பட்டபோது எழுபோது அறியாள் -உறங்காமையாலும் -உணர்ந்து தெளிவு உடையவளாய் இல்லை யாகையாலும்
அஸ்தமித்த உதயம் -அறியாமல்
விரை மட்டலர் தண் துழாய் என்னும் -பரிமளம் -மது -பறம்பின செவ்வித் திருத் துழாய் என்னும்
சுடர் வட்ட வாய் நுதி நேமியீர் -சவாலை -வட்ட -கூர்மை
நும் திட்டமென் கொல் இவ்வேழைக்கே-நுமது -பரிகரம் உடைய -இட்டம் நினைவு -பற்றிற்று விடமாட்டாத சபலைக்கு-
நீர் காசு கொடுத்து எளிது வைத்த புராணம் அறியாமல் –சத்தைக்கா முடிவுக்கா -உம நினைவு

பட்டபோது எழுபோது அறியாள்
உதித்ததும் அஸ்தமித்ததும் அறிகிறிலள்-இவள் அறிவதும் ஏதேனும் உண்டோ என்னில்
விரை மட்டலர் தண் துழாய் என்னும்
விரை -இது ஒரு பரிமளமே
மட்டு -இது ஒரு தேனே
அலர் -இது ஒரு பூவே
தண் இது இரு குளிர்த்தியே
என்று திருத் துழாய் விஷயமாக ஒரு கோடியைச் சொல்லும் -அம் தண் துழாய் கமழ்தல் இவள் நேர் பட்டதே –
உம்முடைய பேரும் தாரும் ஒழிய அறியாள் -என்கிறாள்
என்றவாறே -நம்மை ஆசைப் பட்டு இப்படிப் படப் பெற்றோமே -என்று அலாப்ய லாபத்தாலே கையிலே திரு வாழியை விதிர்த்தான்
கிருஷி பலித்ததே -என்று மகிழ்ந்தான் —
சுடர் வட்ட வாய் நுதி நேமியீர்
சுடரையும்
வட்டமான வாயையும்
கூர்மையையும் உடைய திரு வாழியைக் கையிலே உடையீர்
இப்போது சுடர் வட்ட வாய் நுதி -என்கிற விசேஷணம்-என் என்னில்
பெண் பிள்ளையைக் காட்டில் திருத் தாயார் கையும் திரு வாழியுமான அழகிலே ஈடுபட்டு விசேஷணங்கள் இட்டு அனுபவிக்கிறாள் –
மதுரகவி ஆழ்வார் நம்மாழ்வாரை விட்டு பெருமாளைப் பாடுவது போலே திருத் தாயார் பெண்ணை விட்டு அவனை அனுபவிக்கிறார் –
ஆஸ்ரித அநாஸ்ரித விபாகம் அற உமக்கு அழிகைக்கு பரிகரம் ஒன்றேயோ -குத்தலாக பேசுகிறாள் -கொண்டாட வில்லை என்றுமாம் –
ஆழிப் படை அந்தணனை மறவியை இன்றி மனத்து வைப்பாரே-1-7-1- என்று இறே இவர் தம்முடைய வார்த்தையும்
கையும் திருவாழியுமான அழகைக் கண்டால் நெஞ்சு அழியுமவர்கள் இறே
நும் திட்டமென் கொல்
ராவண ஹிரண்யாதிகளைப் போலே முடிக்க நினைக்கிறீரோ
நித்ய ஸூரிகளைப் போலே கையும் திருவாழியுமான அழகை அனுபவிக்கிறீரோ
தன்னையும் மறந்து உம்மையும் மறந்து சம்சாரிகளைப் போலே உண்டு உடுத்து திரிய வைக்கிறீரோ
இவள் பேற்றில் நீர் நினைத்து இருக்கிறது என்
இவ்வேழைக்கே–
அத்யந்த சபலையான இவள் விஷயத்தில் நீர் நினைத்து இருக்கிறது என் –
ஸ்வாமி தானே உடைமையை ரஷிக்க வேணும் -உன் நினைவால் என் நினைந்து இருந்தாய் என்கிறாள் திருத்தாயார் –

————————————————————————–

அவதாரிகை –

இவள் நோக்கும் ஒன்றும் ஒழிய அல்லாதது எல்லாம் ஒழித்தான் -இந் நோக்கு ஒன்றையும் நோக்கிக் கொள்ளீர் -என்கிறாள் –

ஏழை பேதை இராப்பகல் தன்
கேழில் ஒண் கண் கண்ண நீர் கொண்டாள் கிளர்
வாழ்வை வேவ இலங்கை செற்றீர் இவள்
மாழை நோக்கு ஒன்றும் வாட்டேன்மினே –2-4-10-

விரோதி மிக்கால்-சேஷம் இல்லாமல் நிரசிப்பீர் -வெந்து விளப்பன்னும் வீரப்பாடு -நோக்கு ஓன்று அழிய செற்று அற்றது –
அதையாவது விட்டு விடுவீர் -அழியாது ஒழிய வேண்டும்
ஏழை பேதை இராப்பகல் -கிட்டாமல் இருந்தாலும் சபலை -சொல் கேளாத பேதை -இரவும் பகலும் வாசி இல்லாமல்
தன் கேழில் ஒண் கண் கண்ண நீர் கொண்டாள்
தனது -ஒப்பற்ற -உயர்ந்த -அழகிய -திருக் கண்களில் -அருவி போல நீரைக் கொண்டாள்
கிளர்வாழ்வை வேவ இலங்கை செற்றீர் -மிக்க உயர்த்த உயர்வை -ராவண ஐஸ்வர்யம் புஜ வர பண பலம்
-பர பீடா பலம் -அக்னி சாத்தாம் படி இலங்கையை அழிய செற்றவனே
இவள் மாழை நோக்கு ஒன்றும் வாட்டேன்மினே-மருண்ட பார்வை ஒன்றே பாக்கி -அனைத்தும் இழந்தாள்
முக்தமான மானின் நோக்கு போலே -போதரிக் கண்ணினாய் -சஞ்சரிக்கும் மானின் விளி -புஷ்பம் அபகரிக்கும் அழகு –
ஒன்றையாகிலும் ஷயிப்பியாது ஒழிய வேண்டும் -வாட்டம்
இவள் நோக்கு கிடீர் அனைவருக்கும் உஜ்ஜீவன ஹேது –
ஆழ்வாரை படைத்த பலன் கிட்ட வேண்டுமே -உனக்கே ஆபத்து கிடீர் -எல்லாருக்கும் -உனக்கும் உஜ்ஜீவன ஹேது என்றவாறு –
ஆஹ்லாத சீத நேத்ராம்பு –த்ரஷ்டவ்ய சர்வ தேஹபி -அனுபவித்து கண்ண நீர் -சர்வ சப்தத்தில் அவனையும் சேர்த்தே வியாக்யானம்
அஜ்ஞ்ஞர் -ஞானி -ஞான விசேஷ உக்தர் -சர்வஜ்ஞ்ஞர் நால்வருக்கும்
கரை ஏற்றும் அவனுக்கும் நாலாறும் அறிவிப்பார் -மங்க ஒட்டு உன் மா மாயை -என்பர் -நான் ஏறப் பெறுகின்றேன் அது நமது விதி வகையே –
நிலை அறியாதார்க்கு உய்யப் புகும் ஆறும் -இக்கரை ஏறினாருக்கு இன்ப வெள்ளமும்
ஆழ்வார்களுக்கு-நிலை அறியாதாருக்கு – ஆழம் கால் காட்டியும் -சௌசீல்யம் -உயிர் காத்து ஆட்செய்மின் செஞ்சொல் கவிகாள் –

ஏழை-
கிடையாது என்ற பிரமாண பிரசித்த மானதிலே-கிடைக்குமதில் பண்ணும் சாபலத்தை பண்ணுகை –

ஆகாசத் தாமரை கிடையாது -என்பதில் சாபல்யம் வைக்கவா -பகவத் விஷயம் -எளிதில் கிடைக்காது -என்பதில் சாபல்யம் வைப்பதா –
நுமது இட்டம் என் கொல்-இவ்வேழைக்கே- ததேவ ரஷ்யத்வ விஸ்வாசம் -அத்யவசாய -ரஷிக்க நாம் பிரார்த்தனை
பர பிரவ்ருத்தி பிரதிபந்தகமான ஸு பிரவ்ருத்தி நிவ்ருத்தியே -பிரதிபத்தி -லஷணம்
ஈஷது கால விளம்பம் -ரஷிக்க பிரார்த்தனை வைத்ததால் -அப்போது இந்த திருத்தாயார் சொல்கிறாள் –
ஸூ பிரத்யத்னத்தால் கிடைக்காது என்பதில் சாபல்ய புத்தியால் -அழுவதை தப்பாக கொண்டான் -அதனால் இவள் ஏழை –
-அந்திமக் காலத்துக்கு தஞ்சம் என் -இப்போது தஞ்சம் என்ற நினைவு குலைகை தானே
விற்றுவது உபாயமா பற்றுகை உபாயமா -விட்டுவித்து பற்றுவிக்கும் அவனே உபாயம்

பேதை
கிடையாது என்று அறிந்து மீளும் பருவம் அல்ல
நான் ஹிதம் சொன்னாலும் கேளாத பருவம்
இராப்பகல் தன் கேழில் ஒண் கண் கண்ண நீர் கொண்டாள்
ஆனந்த ஸ்ருவுக்குத் தகுதியாய்
கேழில் -கேழ் என்று ஒப்பாய் -இல் என்று இல்லாமையாய்-ஒப்பின்றிக்கே இருப்பதாய்
ஒண் கண் –
கண்ண நீர் இல்லாவிடிலும் கண்டார்க்கு ஆலத்தி வழிக்க வேண்டும் படியான கண் -சர்வ காலமும் அஸ்ரு பூர்ணம் ஆயிற்று
தாமரையில் முத்துப் பட்டால் போலே இக் கண்ணும் கண்ண நீருமாய் இருக்கும் இருப்பை காட்டில் எறிந்த நிலா வாக்குவதே
இவ்விருப்புக்கு கிருஷி பண்ணி பல வேளையில் இழப்பதே
பொன்னும் முத்தும் விளையும் படி இறே கிருஷி பண்ணிற்று
இப்போது இவள் இழவுக்கு அன்றியே அவன் இழவுக்கு யாயிற்று இவள் கரைகிறது –

வைவர்ண்யம்-ஆழ்வார் திரு மேனி -பசலை நோய் -வெளிறின நிறம் -பொன் விளைந்ததே
முத்து -கண்ண நீர் -அது விளைந்தது -தாமரைக் கண்ணில்
சம்ச்லேஷம் உன்மத்ம்ய-ரசமானால் –சாத்மிக்கவும் ஆர்த்தி வளர்க்கவும் -சற்றே பிரியே -கிருஷி பலித்தது
-கண்ண நீரை மாற்றி கலக்கப் பெறாமல் -ஆரண்ய சந்த்ரிகை -காட்டில் நிலவு –
கண்ண நீர் விடாத ஞான தசை -பிரேம தசை இந்த திருவாய்மொழி போல்வன -கொதிக்கும் சோறு -சமையும் பொழுது இழக்கவோ
ஸ்ரீ வைஷ்ணவர்கள் விண்ணப்பம் செய்ய -பெரும் பாழில் -ஷேம கிருஷி பலன் -பக்தி உழவன்

கிளர் வாழ்வை வேவ இலங்கை செற்றீர்
நடுவே கண்ணீர் விழ விடும் அத்தனையோ விரோதி கனத்து இருக்க -என்ன -ராவணனிலும் வழிதோ இவளுடைய விரோதி வர்க்கம்
உதீர்ணச்ய ராவணச்ய -என்கிறபடியே -தாயும் தமப்பனும் சேர இருக்கப் பெறாத ஐஸ்வர்யம் இ றே
கிளர்ந்த ஐஸ்வர்யம் ஆனது வேம்படி இலங்கையை நிரசித்தீர்
ஒன்றை அழிக்க நினைத்தால் முதல் கிடவாமே அழிக்குமவராய் நின்றீர்
இவள் மாழை நோக்கு ஒன்றும் வாட்டேன்மினே —
இவளுடைய முக்தமான நோக்கு ஒன்றும் கிடக்கும் படி கார்யம் பார்க்க வேணும்
மாழை -என்று இளமை
நோக்கு ஒன்றும் வாட்டேன்மினே —
இவள் தானே முடிந்து போகிறாள்
நாங்கள் தானே இழக்கிறோம்
ஜீவிக்க இருக்கிற நீர் வேணுமாகில்-உம்முடைய ஜீவனத்தை நோக்கிக் கொள்ளப் பாரும்
வண்டார் பூ மா மலர் மங்கை மண நோக்கம் உண்டான் -8-10-1-நாயகி வீஷணமே நாயகன் ஜீவனம் -ஞானிகளே ஆத்மா என்னுமவன் அன்றோ –
விபவம் -சிறிய திரு மடலில் அழிக்க -அர்ச்சை -பெரிய திருமடலில் அழிக்க கண் கட்டாமல்
திரு நெடும் தாண்டகம் -தன்னை அழிக்கப் பார்த்தார் -அவர் உள்ளத்தில் தானும் உண்டே தானும் ஜகமும் அழியுமே என்று
சேர்த்துக் கொண்டானே பரகால நாகியை –

——————————————————————————-

அவதாரிகை –

நிகமத்தில் இத் திருவாய் மொழியை அப்யசிக்க வல்லார் இவர் பிரார்த்த படியே நித்ய ஸூரிகள் திரளிலே போய்ப் புக்கு
சர்வேஸ்வரன் திருவடிகளிலே சூட்டு நன் மாலைப் படியே திருமாலை சாத்தி அடிமை செய்யப் பெறுவார்கள் -என்கிறார் –

வாட்டமில் புகழ் வாமனனை இசை
கூட்டி வண் சடகோபன் சொல் அமை
பாட்டோராயிரத்து இப்பத்தால் அடி
சூட்டலாகுமே அந்தாமமே –2-4-11-

பகவத் ஆராதன ரூபமான கைங்கர்ய பலன் -அமரர்கள் உடன் கூடியே தானே கைங்கர்யம் -இதுவே முக்கிய பலன் –
அடியார்கள் குழாங்களை கூடுவதே கைங்கர்யதுக்காகத் தானே
வாட்டமில் புகழ் வாமனனை -அர்த்தியாக வந்து ஆஸ்ரித கார்யம் செய்ததால் வட்டம் இல்லாத -ஆழ்வார் நோக்கம் வாட்டாத படி கடாஷம் –
நோக்கை வாட்டவிட்டார் என்னும் அபகீர்த்தி இல்லாமல் முகம் காட்டியவாறே
இசை கூட்டி வண் சடகோபன் சொல் -இசையுடன்
அமை பாட்டோராயிரத்து இப்பத்தால் -சொல் -இத்யாதி அமைந்த
அடி சூட்டலாகுமே அந்தாமமே-திருவடிகளில் அழகிய மாலைகள் சமர்ப்பிக்கலாம் தாமம் -மாலையும் -தேசமும் –

வாட்டமில் புகழ் வாமனனை –
இவ்வளவில் வந்து முகம் காட்டிற்றிலன் ஆகில் அவன் புகழுக்கு வாட்டம் வந்தது இறே
வாமனனை -தன் உடமை பெறுகைக்கு இரப்பாளனாமவனிறே
இசை கூட்டி
பரிமளத்தோடே பூ அலருமா போலே இசையோடு புணர்ப்புண்டாயிற்று -சந்தர்ப்பிக்கப் பட்டது –பாவின் இன்னிசை பாடித் திரிவனே –
வண் சடகோபன் சொல்
உதாரதீர் முனி -என்னுமா போலே மானஸ அனுபவ மாதரம் அன்றிக்கே -வாசகமாக்கி நாட்டை வாழ்வித்த ஔதார்யம்
லவ குசர் -பாடுவதால் உதாரர் என்று வால்மிகியைக் கொண்டாடினார்கள் -வண்மை சொல்லால் வந்ததே –
அமை பாட்டோராயிரத்து –
அமைவு -சமைவாய் -சப்தார்த்தங்கள் நிறைந்து இருக்கை
ஈ ஆடுவதோ கருடற்கு எதிரே -இரவிக்கு எதிர் மின் மின் ஆடுவதோ -நாய் ஆடுவதோ புலி முன் நரி கேசரி முன் நடை ஆடுவதோ
பேய் ஆடுவதோ அழகு ஊர்வசி முன் -ஒரு சொல் போருமோ உலகில் கவியே
இப்பத்தால் அடி சூட்டலாகுமே அந்தாமமே –
இப்பத்தையும் அப்யசிக்க வல்லவர்களுக்கு -செவ்வி மாலையைக் கொண்டு அவன் திருவடிகளிலே நித்ய கைங்கர்யம் பண்ணப் பெறலாம்
கைங்கர்யம் பண்ண வேணும் என்று ஆசைப்பட்டு -அதி பெறாமையாலே போலே காணும் இவ்வாற்றாமை எல்லாம் பிறந்தது
பித்ருதனம் புத்ரனுக்கு பிராப்தமானால் போலே இவ்வாற்றாமையால் வந்த கிலேசம் இது -ஆச்சார்யர் சொத்து சிஷ்யர்களுக்கு –
கற்றவர்களுக்கு அனுபவிக்க வேண்டாதே அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ -என்று ஆசைப்பட்ட படியே
அத்திரளிலே போயப்புக்கு அனுபவிக்கப் பெறுவர்-என்கிறார் –

முதல் பாட்டில் ஆஸ்ரித ஆபத்தே செப்பேடாக உதவும் ஸ்வபாவனாவான் –இவளுடைய ஆபத்துக்கு வந்து உதவுகிறிலன்-என்றாள்
இரண்டாம் பாட்டில் விரோதி உண்டே -என்று நினைவாக பாணனுடைய பஹூ வனத்திலும் வலிதோ இவள் விரோதி என்றாள்
மூன்றாம் பாட்டில் இப்படி செய்த நீர் முன்பு அச் செயலை என்றிய செய்தீர் என்றாள்
நாலாம் பாட்டில் அது பொறுக்க மாட்டாமல் அது தன்னையே உபகாரமாகச் சொல்லா நின்றாள் -என்கிறாள்
ஐந்தாம் பாட்டில் அவ்வளவிலும் வாராமையாலே நிர்த்தயன் என்றாள் திருத் தாயார்
ஆறாம் பாட்டில் அது பொறுக்க மாட்டாமல் -கெடுவாய் ஆகரத்தில் தகவு மறுக்குமோ -அது நம் குறை காண் -என்றாள்
ஏழாம் பாட்டில் அவன் குண ஹானி தன்னையே குணமாகக் கொள்ளும் படி இவளை வஞ்சித்தான் என்கிறாள்
எட்டாம் பாட்டில் உம்மை அபாஸ்ரயமாக பற்றின இவள் படும் பாடே இது என்றாள்
ஒன்பதாம் பாட்டில் இவள் பேற்றில் நீர் செய்து அருள நினைக்கிறது என் என்றாள்
பத்தாம் பாட்டில் -சேஷித்தது நோக்கு ஒன்றுமே யாயிற்று -இது ஒன்றையுமே நோக்கிக் கொள்ளீர் -என்றாள்
நிகமத்தில் இத் திருவாய் மொழியை அப்யசித்தாருக்கு பலம் சொல்லித் தலைக் கட்டினார் –

—————————————————————–

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

சதுர்த்தே
மஹதிம் மூர்ச்சாம் -பெரிய மயக்கம்
பர முகேன -மாற்றார் வாயால்
ஹரேகே அக்ரே
முனி ரகாத்
தத் பிரார்த்தித அநதிகம சமுதித
யதா விதேயம்-மடப்பான மகள்
ஆர்த்தேகே நிவேதனம்
அபாகரணம் -அர்த்த நஞ்ச -நுமது இட்டம், என் கொல்

—————————————————————

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன்

பிரகலாதேர்த்த நர சிம்ஹம்
ஷபித விபத் உஷா வல்லபன்
ஷிப்த லங்கம்
ச்வேள பிரத்யர்த்த திகேதும் -வலம் கோல் புள்ளுயர்த்தாய் -விஷ விரோதியை கொடி
ஸ்ரமஹர துளசி மாலாம்
தைர்ய ஹேதும்
த்ராணே தத்தாதவராணாம்
தீப்த ஹேதி
சத் பிரேஷா தாராம் –
வியாசன நிரசனம்

———————————————————–

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 14-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்–

ஆடி மகிழ் வானில் அடியார் குழாங்களுடன்
கூடி இன்பம் எய்தாக் குறையதனால் -வாடி மிக
அன்புற்றார் தம் நிலைமை ஆய்ந்து உரைக்க மோகித்து
துன்புற்றான் மாறன் அந்தோ —————-14-

————————————————————————

அவதாரிகை –

இதில் ததீயரையும் அவனையும் பிரிகையாலே
மிகவும் தளர்ந்து
தாய் பேச்சாலே பேசுகிற பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
எங்கனே என்னில் –
எம்பெருமானைப் பிரிந்த அளவன்றிக்கே அவனுக்கு பிராண பூதரான
நித்ய சூரிகளையும் கூடப் பிரிகையாலே
தம் தசையை அறியாதபடி மோஹிதராய் கிடக்கிற தம் படியை
பார்ஸ்வச்தரான பரிவர் அவனுக்கு விண்ணப்பம் செய்கிற பிரகாரத்தை
கலந்து பிரிந்து மோஹங்கதையான பிராட்டி உடைய
விரஹ பரவச வியாபார உக்திகளை அனுகரித்து
அவனுக்கு அறிவிக்கிற திருத் தாயார் பேச்சாலே
அருளிச் செய்கிற -ஆடி யாடியில் அர்த்தத்தை –
ஆடி மகிழ் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் –

————————————————————————

வியாக்யானம்-

ஆடி மகிழ் வானில் அடியார் குழாங்களுடன் கூடி இன்பம் எய்தாக் குறையதனால் -வாடி மிக –
ஆடி மகிழ் வானில் –
பகவத் அனுபவத்தில் அவஹாகித்து
ஹிருஷ்டர் ஆகிற -என்னுதல் –
அன்றிக்கே
பகவத் அனுபவ பிரகர்ஷத்தாலே
நருத்யந்தி கேசித் -என்னும் படியாக –
அத்தாலே ஹ்ருஷ்டராக -என்னுதல் –
இப்படியான வானில் அடியார் உண்டு
வைகுண்ட வாசிகளான நித்ய சூரிகள்
அவர்கள் சங்கத்திலே சங்கதராய்
ஆனந்தத்தை அடையாத அபூர்த்தியாலே
வாடி வாடும் -என்று மிகவும் வாடி –

அன்புற்றார் தம் நிலைமை ஆய்ந்து உரைக்க –
முயல்கின்றேன் அவன் தன் மொய் கழற்கு அன்பை -என்று
நிரவதிக சிநேக ய்க்தரான
மதுரகவி ப்ரப்ருதி ப்ரயுக்த ஸூக்ருத்துக்கள்-
இவர் வ்யாமோஹத்தை எம்பெருமானுக்கு நிரூபித்து
தன் முகேன இது தேவர் கிருபா சாத்தியம் -என்று
விஞ்ஞாபிக்கிற படியை
தன் திறத்திலே பரிவுடைய திருத் தாயார்
தன் ஸ்வ பாவத்தை அறிந்து பேசும்படியாக –

மோகித்து துன்புற்றான் மாறன் அந்தோ –
தாம் தம் தசையைப் பேச மாட்டாமல்
பிறர் பேசும்படி மோஹித்து துக்கத்தைப் பிராப்தர் ஆனார் ஆழ்வார் –

ஐயோ -மமா பிவ்யதிதம் மன -என்று
அற்ற பற்றர்க்கும் இரங்க வேண்டும் படியாய் இறே இவர் தசை இருப்பது –
அற்ற பற்றார் -மதுரகவி போல்வார் –

அன்புற்றார் தன்னிலைமை யாய்ந்து உரைக்கை யாவது –
சாதியர் கூர்த்தவஞ்ச -இத்யாதிப் படியே
எங்கும் நாடி நாடி நரசிங்கா வென்று வாடி வாடும் -என்றும்
உம்மைக் காணும் ஆசையுள் நைகின்றாள் -உம்மைக் காண நீர் இரக்கம் இலீரே -என்றும்
வண்டு திவளும் தண்ணம் துழாய் கொடீர் என தவள வண்ணர் தகவுகளே -என்றும்
உம்மைத் தஞ்சம் என இவள் பட்டனவே -என்றும்
நுமது இட்டம் என் கொலோ இவ் ஏழைக்கு -என்றும்
இவள் மாழை நோக்கு ஒன்றும் மாட்டேன்மினே -என்றும்
இப்புடைகளிலே அருளிச் செய்தவை-என்கை –
இப்படி தம் தசை தமக்கும் வாசோ மகோசரமாய்
கண்டார் எல்லாரும் இரங்க வேண்டும்படியாய்
இருக்கும் ஆயிற்று –

——————————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s


%d bloggers like this: