பகவத் விஷயம் காலஷேபம் -55– திருவாய்மொழி – -2-3-6 ….2-3-11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

அவதாரிகை –

இனி உன் பாதம் சேர்ந்தேனே என்றார் –இனி என்று விசேஷிக்க வேணுமோ -பொய் நின்ற ஞானத்திலே நீ விசேஷ கடாஷம்
பண்ணின போதே கிட்டிற்றிலேனோ என்னுதல்-
அன்றிக்கே –
ஸ்வரூபத்தை அனுசந்தத்தவாறே ஸ்வாபாவிக சேஷத்வமேயாய் நிலை நின்ற ஆகாரம் -நடுவுள்ளது
வந்தேறியாகத் தோற்றுகையாலே சொல்லுகிறார் ஆகவுமாம் –
ராஜ புத்திரன் -வேடன் கையில் –இன்னான் என்று அறிந்த பின்பு நடுவு உள்ளது வந்தேறி –ஸ்வாபாவிகம் உணர்ந்தால் போலே

சேர்ந்தார் தீ வினைகட்கு அரு நஞ்சைத் திண் மதியைத்
தீர்ந்தார் தம் மனத்துப் பிரியாதவருயிரை
சோர்ந்தே போகல் கொடாச் சுடரை அரக்கியை மூக்கு
ஈர்ந்தாயை அடியேன் அடைந்தேன் முதன் முன்னமே –2-3-6-

1-சேர்ந்தார் தீ வினைகட்கு அரு நஞ்சைத் -அடியேன் அடைந்தேன் முதன் முன்னமே
2-திண் மதியைத் அடியேன் அடைந்தேன் முதன் முன்னமே
3-தீர்ந்தார் தம் மனத்துப் பிரியாது– அவருயிரை சோர்ந்தே போகல் கொடாச் சுடரை –அடியேன் அடைந்தேன் முதன் முன்னமே
4-அரக்கியை மூக்கு ஈர்ந்தாயை– அடியேன் அடைந்தேன் முதன் முன்னமே
கீழே சொன்ன  – பிராப்தியும் ஸ்வரூப பிரயுக்தம் -அநாதி சித்தம் –
சேர்ந்தார் தீ வினைகட்கு அரு நஞ்சைத் -நெடும் கால பாபங்களுக்கு விஷம்
திண் மதியைத் -திண்ணிதான மதி விவாசாயம் கொடுத்து -அவனே உபாயம் உபேயம்-சாமா நாதி கரண்யம் -பிரதான பிரதாதா சம்பந்தம்
தீர்ந்தார் தம் மனத்துப் பிரியாதவருயிரை -திட அத்யாவசாயம் உள்ளவரை –ஆத்ம வஸ்துவை
சோர்ந்தே போகல் கொடாச் சுடரை -விலகாமல் -சோர்வு அடையாமல் -விஷயாந்தர விஷயங்கள் போகாமல் –
இதனாலே தேஜஸ் கொண்டவனை -உஜ்ஜ்வல ஸ்வபாவனாய் –
அரக்கியை மூக்கு ஈர்ந்தாயை-விஷயாந்தர ருசியை வெட்டி விட திருஷ்டாந்தம்
அடியேன்-சேஷ பூதன் என்று உணர்ந்த
அடைந்தேன் முதன் முன்னமே-தன்னேற்றம் –மயர்வ மதி நலம் அருளியதற்கு முன்னமே –அநாதி காலம் என்றவாறு –

சேர்ந்தார் உண்டு
த்விதா பஜ்யேயமப்யேயம் ந நமேயம் து கஸ்யசித் -என்னும் நிர்பந்தம் இல்லாதவர்கள்
அத்வேஷம் இல்லாததே போதும் என்றதாயிற்று –
சேர்ந்தார் –
கெடுமரக்கலம் கரை சேர்ந்தால் போல் இவனைக் கிட்டினவர்கள்
அநாதி காலம் சம்சரித்துப் போந்த ஆத்மா சர்வேஸ்வரனை கிட்டுகையாவது -கரை சேருகை இறே –
இக்கரை ஏறினார்கள் இறே அவர்கள்
அக்கரை அனர்த்த கடலில் அழுந்திக் கிடந்தேன் -உன் பேர் அருளால் இக்கரை ஏறினேன் –
தீ வினைகட்கு அரு நஞ்சைத்
அவர்களுடைய பிராப்தி பிரதிபந்தக கர்மங்களுக்கு ஆற்ற ஒண்ணாத நஞ்சானவனே
பிரத் ஔஷதம் கொண்டு மாற்ற ஒண்ணாத -காற்ற– காக்க ஒண்ணாத –
திண் மதியைத்
முன்பே சேர்ந்து இருக்குமவர்களுக்கு திண்ணியதான மதியை கொடுக்குமவனை(ஜனகன் ஜன்ய சாமாநாதிகரண்ய பிரயோகம் )
அம்பரீஷன் தமஸ்ஸூ பண்ணா நிற்க சர்வேஸ்வரன் இந்திர வேஷத்தைத் தரித்துக் கொண்டு சென்று உனக்கு வேண்டியவற்றை
வேண்டிக்கொள்என்ன -நான் உன்னை ஆராதிக்குமவன் அல்லேன் காண்-என்னை சமாதி பங்கம் பண்ணாதே போக வல்லையே
உன்னைக் கும்பிடுகிறேன் -என்றான் இறே –
நாஹமா ராதயாமி த்வாம் தவ பத்ததோய மஞ்ஜலி -ஸ்ரீ விஷ்ணு தர்மம் –என்று தானே அழிக்கப் பார்க்கும் அன்றும் அழிக்க ஒண்ணாத படியான
திண்ணிய மதியைக் கொடுக்குமவனை –
திரு வித்துவக்கோடு ஸ்தல புராணம் இது -தானே சேவை சாதிக்க -வாசூதேவ சங்கர்ஷன பிரத்யும்ன அநிருத்த -நான்கு மூர்த்தி கோயில் அது-

தீர்ந்தார் தம் மனத்துப் பிரியாதவருயிரை சோர்ந்தே போகல் கொடாச் சுடரை
தீர்ந்தார் – பிராப்ய த்வரை உள்ளவர் –
ஜலான் மத்ச்யாத் விவோத் த்ருதௌ-என்று தன்னைத் பிரிய மாட்டாதே இருக்குமவர்கள் நெஞ்சை விட்டுப் போக மாட்டாதே-
அவர்கள் உயிர்- தன்னைப் பிரிந்து- (அதுக்கு தான் இளைய பெருமாள் வாக்யம் -) த்ரீவி பூதமாய் மங்கிப் போகக் கொடாதே -அது தன் பேறு-என்னும் இடம் வடிவிலே தோன்ற இருக்குமவனை-
தீர்ந்தார் உண்டு -உபாயத்தில் துணிவுடையார்-அவர்களாகிறார்-பிராப்ய பிராபகங்கள் இரண்டும் அவனே என்று  இருக்குமவர்கள்-
அவர்கள் தன்னைப் பிரிந்து நோவு படாதபடி அவர்கள் நெஞ்சிலே இருக்குமவன் -என்றுமாம்-
அரக்கியை மூக்கு ஈர்ந்தாயை-
பிராட்டியோட்டை அவர்கள் சம்ச்லேஷ விரோதியை போக்குமா போலே யாயிற்று -அவர்களுடைய விரோதிகளைப் போக்கும் படியும் –
ஆனால் இவனோ பின்னை மூக்கறுத்தான்-என்னில் -ஆம் கையால் அறுக்க வேணுமே –ராமஸ்ய தஷிணோ பாஹூ -என்னக் கடவது இறே
கொல்லை அரக்கியை மூக்கரிந்த பிரான் சொல்லும் பொய்யானால் –
ராமஸ்ய தஷிணோ பாஹூ–நித்யம் பிராணோ-பஹிச்ர–இவன் என்கிறாள் சூர்பணகை-வெளியில் உள்ள பிராணன் -வலக்கரம் –
அடியேன் அடைந்தேன் முதன் முன்னமே —
சேஷ பூதனான நான் பண்டே அடைந்தேன் அன்றோ –
1–அநாதி காலம் இழந்த இழவை மறக்கும் படி வந்து கலக்கையாலே -இன்றோ பெற்றது –
2–இவ்வாத்மா உள்ளவன்றே பெற்றேன் அல்லேனோ -என்றுமாம்
3–வாயும் திரையுகளில் -கீழ் -1-9-சம்ச்லேஷித்த தேற்றம்– கலங்கி விச்லேஷமாய்ச் சென்றால் போலே -இங்கு 2-3-கலவியின் மிகுதியாலே
அத்தை மறந்து-2-1-பிரிவை மறந்து – முன்பே பெற்றேன் அல்லேனோ-என்கிறார் என்றுமாம் –முதல் முன்னமே -பழையதாக -என்றபடி –
4-பொய் நின்ற ஞானம் விசேஷ கடாஷம் -அநாதி காலமே பெற்றேன்
5-அறியாத அறிவித்த அத்தா முன்பே – பெற்றேன் அன்றோ
அநாதி காலமே விஸ்லேஷமே இல்லையே –முன்பு அருளிச் செய்த விஸ்லேஷ திருவாய்மொழி மறக்கும் படி -என்றுமாம் –

————————————————————————————-

அவதாரிகை

இப்படி தாம் பெற்ற பேற்றின் கனத்தையும் அனுசந்தித்து -இவ்விஷயத்தினுடைய போக்யதையும் அனுசந்தித்து
இது இருந்தபடி கண்டோமுக்கு தொங்காது போலே இருந்தது -என்று அதி சங்கை பண்ணி –தேவர் என்னைக் கைவிடில்
நான் உளேன் ஆகேன் என்னைக் கை விடாது ஒழிய வேணும் -என்கிறார் –

முன் நல் யாழ் பயில் நூல் நரம்பின் முதிர் சுவையே
பன்னலார் பயிலும் பரனே பவித்திரனே
கன்னலே அமுதே கார் முகிலே என் கண்ணா
நின்னலால் இலேன் காண் என்னை நீ குறிக்கொள்ளே–2-3-7-

1-உபகரித்த-2–நிரதிச போக்யனான உன்னை ஒழிய-3-சத்தை உண்டோ
முன் நல் யாழ் பயில் நூல் -அநாதி விலஷண –யாழ் –வித்யுத்சுக்களால் -கீத சாஸ்திரம் -காந்தர்வ வேதம்
நரம்பின் முதிர் சுவையே -நிரதிசய போக்ய பூதனாய்
பன்னலார் பயிலும் பரனே-பல் நல் ஆர் -பஹூ விதராய் -அச்கலித ஞானாதி வை லஷண்யம் உடைய -நித்ய அனுபவம் பண்ணும் -அப்பால் பட்டவனே
பவித்திரனே -ரசஜ்ஞ்ஞர் அல்லாருக்கும் அஜ்ஞ்ஞானாதிகளைப் போக்கி அருளும் சுத்தனே -புஜிப்பிக்கும் பாவனபூதனாய்
கன்னலே அமுதே கார் முகிலே -கருப்பஞ்சாறு -அமிர்த ரசம் -அழிந்தாரை ஆக்க வல்ல -சாரச்யதுக்கு ஆஸ்ரயம் உதாரன் -ஸ்வபாவன் வண்ணத்தன்
என் கண்ணா -அனுபாவ்யம் ஆவதற்கு கிருஷ்ணனாக வந்து
நின்னலால் இலேன் காண் என்னை நீ குறிக்கொள்ளே-சத்தை இல்லை -வியதிரேகத்தில் இல்லாமல் போகும் படி இருக்கும் என்னை
அழிப்பாரை ஆக்க வல்ல நீ -இரண்டு தலையும் அறிந்து திரு உள்ளம் கொள்ள வேண்டும்

முன் நல் யாழ் பயில் நூல் –
முன்னல் -என்கிற ஒற்றைப் போக்கி முனல் ஆக்கி முரல் ஆக்கி-ஒலிக்கும் – நிர்வஹிப்பாரும் உண்டு
அன்றிக்கே –முன்னல் என்றது உன்னலாய் – நினைத்தலாய் இனிமையாலே அது அது என்று வாய் புலற்றும் படி இருக்கை
அன்றிக்கே –முன் -சாஸ்திரத்தின் உடைய பழைமையாய் -ஆதியிலே உண்டாய் -நல் -அது தான் நன்றாய்
யாழ் பயில் நூல் -யாழ் விஷயமாக அப்யசிக்கப்படுமதான நூல் உண்டு சாஸ்திரம் -அந்த சாஸ்திர உக்தமான படியே
நரம்பின் முதிர் சுவையே
நரம்பிலே தடவப் பட்ட -அதிலே பிறந்த பண் பட்ட ரசம் போலே போக்யனானவனே
மிடற்றைச் சொல்லாது ஒழிந்தது –கர்ம அனுகுணமாக போது செய்யுமது -ச்லேஷம் -கபம் -உண்டாகையாலே அதுக்கு
முதல் 33 வருஷம் கபம் ஜல தோஷம் /அடுத்த 33 பித்தம் தலை சுத்தும் /அடுத்த 33 வருஷம் வாதம் முட்டி வலி -ஆயுர் வேதம்
இப்படி போக்யதை குறைவற்றால் போக்தாக்கள் வேணுமே -அவர்களைச் சொல்லுகிறது மேல் –
பன்னலார் பயிலும் பரனே
தெள்ளியார் பலர் கை தொழும் தேவனார் என்கிறபடியே -தாங்கள் பலராய்-பகவத் குணங்களுக்கு தேசிகராய் இருந்துள்ள நித்ய ஸூரிகள்
சதா அனுபவம் பண்ணா நின்றாலும் அனுபூத அம்சம் அளவுபட்டு அனுபாவ்ய அம்சமே பெருத்து இருக்கை –பயிலும் -வர்த்த மானம் —
ஊற்றம் உடையாய் பெரியாய் -வேதத்தால் சொல்லப் படுபவன் -சொல்லி முடிக்க முடியாதவன் –பன்னலார் பயிலும் -பரனே –
பவித்திரனே
நித்ய சம்சாரிகளுக்கும் நித்ய சித்தரோபாதி உன்னை அனுபவிப்பைக்கு யோக்யராம் படியான சுத்தியை பிறப்பிக்குமவன்
அன்றிக்கே
பன்னலார் என்று முமுஷூக்களை யாக்கி அவர்கள் எப்போதும் அனுபவியா நின்றாலும் தொலையாத போக்யதையை
யுடையவையாய்ப் –பரனே-அவர்களுக்கு தவ அனுபவ விரோதியைப் போக்கும் சுக்தி யோகத்தை உடையவனே -பவித்திரனே-என்றுமாம்
கன்னலே அமுதே கார் முகிலே என் கண்ணா
கன்னலே -எனக்கு நிரதிசய போக்யனானவனே
அமுதே -என்னைச் சாவாமல் ஜீவிப்பித்துக் கொண்டு போருமவனே
கார் முகிலே -ஔதார்யத்தைப் பற்ற
என் கண்ணா -தன்னைக் கொடுத்தபடி
இவ்வளவும் இவருடைய சங்கா ஹேது

நின்னலால் இலேன் காண்
உன்னை ஒழிய அரை ஷணம் ஜீவிக்க மாட்டேன்
உன்னை ஒழிய ரஷகரை உடையேன் அல்லேன் என்றுமாம் –மற்றோர் நல் துணை நின்னலால் இலேன் -கலியன்
பிரியில் இலேனுக்கு இளம் கோவும் அக்குளத்தில் மீன் இறே -இந்த பாசுரத்தில் இருந்து நாயனார்
என்னை நீ குறிக்கொள்ளே–
என்னைப் பார்த்து அருள வேணும் -என்னுதல்
என்னைத் திரு உள்ளம் பற்ற வேணும் என்னுதல்
என்னை
உன்னை ஒழிந்த வன்று அசித் பிராயனான என்னை
நீ
இதுக்கு தாரகனான நீ -என்றுமாம் –

—————————————————————————————————

அவதாரிகை –

என்னை நீ குறிக் கொள்ளே என்றவாறே அவன் குளிரக் கடாஷித்தான் -அத்தாலே
சகல வியசனங்களும் போய் அவனை அனுபவிக்கிறார் –
செங்கண் சிறுச் சிறிதே நம் மேல் விழியாவோ -தாமரைக் கண்ணால் நோக்காய்
விஷ்ணோ கடாஷம் -ஒருங்கே பிறள வைத்த புண்டரீகாஷ கடாஷம்

குறிக் கொள் ஞானங்களால் எனை யூழி செய்தவமும்
கிறிக் கொண்டு இப்பிறப்பே சில நாளில் எய்தினன் யான்
உறிக் கொண்ட வெண்ணெய் பால் ஒளித்து உண்ணும் அம்மான் பின்
நெறிக் கொண்ட நெஞ்சனாய்ப் பிறவித் துயர் கடிந்தே –2-3-8-

இவ்வனுபவம் தமக்கு கை வந்த படியை அருளிச் செய்கிறார்
உறிக் கொண்ட வெண்ணெய் பால் ஒளித்து உண்ணும்
கிருத்ரிம வியாபாரம் பண்ணி
அம்மான்-ஸ்வாமி -என்னை அடிமை கொண்டவன் -அவ்வபதானத்துக்குத் தோற்று
பின்- நெறிக் கொண்ட நெஞ்சனாய்ப்-சரம ஸ்லோஹம் படி
பின்நெறி -அவன் பின்னால் -அநு யாத்ரை –
கொண்ட நெஞ்சனாய்பிறவித் துயர் கடிந்தே-ஜன்ம பிரயுக்தமான துரிதங்களை கால் கடைக் கொண்டு அநாதரித்து
குறிக் கொள் -கர்த்ருத்வ பல மம இத்யாதி -த்யாகங்கள் பூர்வகமான யம நியமாதிகளால் குறிக் கொள்ளப் படும் -அங்கமாக கொண்ட
ஞான யோகம் –அஷ்டாங்க யோகம்-
யமம் -பிராமச்சர்யம் -ஹிம்சிக்காமல் -சத்யம் பேசி -திருடாமல் –
நியமம் -புலன்களை அடக்கி -ஸ்வாத்யாய -கற்று -சௌச்ச -சந்தோஷம் –
ஆசனம் -இருக்கை-
பிராணாயாமம் -கதி -ருத்வா -கும்பகம் -ரேசகம் -இத்யாதி
பிரத்யாகார -உள் முகமாக பார்க்க வைத்து -இரண்டு புருவங்களுக்கு நடுவில் வைத்து -ஆகரித்து இழுத்து
தாரணா -உள்ளத்தை திருமேனியில் ஸ்தாபித்து
த்யானம் –
சமாதி பரமாத்மா வசீகரணம்-
ஞானங்களால்-வேதன –தியான உபாசன பாவ பேதங்கள் -மனசால் -வித்யைகள் -சத் தகர –சாண்டில்ய -32 வித்யைகள் –வியக்தி பேதங்கள் –
குணம் -வீர்யம் ஐஸ்வர்யம் -ஒன்றை கொண்டு உபாசிக்கவா -பல உண்டே -அவர்களைச் சேர்த்து –குண உபசம்ஹார -ப்ரஹ்ம ஸூத்ரம் சூர்ணிகை –
எனை யூழி செய்தவமும் -ஜன்மாந்தர சஹஸ்ரேஷூ –நராணாம் ஷீண பாபாநாம் -பக்தி பிறக்க-
பக்தி யோகம் என்னும் தபஸின் பலத்தை –கிறிக் கொண்டு -கிருபை -உபாயமாக கொண்டு -ஆறு -விரகு
இப்பிறப்பே சில நாளில் எய்தினன் யான்எனை யூழி-சில நாள் அங்கே செய்து கொண்டே இருக்க -இங்கே எய்தினன் -பூத காலத்தில் –
அனுபவத்துக்கு அடைவு கூட இல்லாத நான் –

குறிக் கொள் ஞானங்களால்
யம நியம த்யவஹிதராய்க் கொண்டு சம்பாதிக்க வேணும் -ஜ்ஞான விசேஷங்களாலே -அவை யாவன
வேதன த்யாநோபாஸ நாத்யவஸ்த்தா விசேஷங்கள்
எனை யூழி செய்தவமும் -செய் தவத்தின் பலத்தை –
அநேக கல்பங்கள் கூடி ஸ்ரவணமாய் மனநமாய் த்ருவ அநு ச்ம்ருதியாய் -இங்கனே வரக் கடவ தபஸ் பலத்தை
கிறிக் கொண்டு
ஒரு யத்னம் இன்றிக்கே இருப்பதொரு விரகைப்-பற்றி அதாவது அவன் தன்னையே கொண்டு என்றபடி
-கிறி என்று அவனைக் காட்டுமோ என்னில் —பெரும் கிறியான் –திரு விருத்தம் -மகா உபாய சாலி -என்னக் கடவது இ றே
இது தான் எத்தனை ஜன்மம் கூடி என்னில்
இப்பிறப்பே
இஜ் ஜன்மத்திலே -இஜ் ஜன்மம் எல்லாம் கூடியோ என்னில்
சில நாளில்
அல்ப காலத்திலேயே
அழகிது ப்ராபிக்க கடவீராய் நின்றீரோ -என்ன –
எய்தினன்
பிராபித்தேன்
யான்
இப்பேற்றுக்கு யத்னம் பண்ணாத நான்
உறிக் கொண்ட வெண்ணெய் பால் ஒளித்து உண்ணும் அம்மான்
தவம் எய்தினன் -என்கிற பலத்தைச் சொல்லுகிறார் ஆதல்
கிறிக் கொண்டு என்கிற உபாயத்தைச் சொல்லுகிறார் ஆதல்
உறிகளிலே சேமித்து கள்ளக் கயிறு உருவி வைத்த வெண்ணெயையும் பாலையும் தெய்வம் கொண்டதோ என்னும்படி
மறைத்து அமுது செய்த -அச் செயலாலே ஜகத்தை எழுதிக் கொண்டவனுடைய
பின் நெறிக் கொண்ட நெஞ்சனாய்ப்
அவன் பின்னே -நெறிப்பட்ட நெஞ்சை உடையனாய் -பலத்தை அனுபவிக்கிறார் -கைங்கர்யத்தில் அந்வயித்த நெஞ்சு –
யேன யேன ததா கச்சதி தேன தேன சஹ கச்சதி -என்கிறபடியே
அன்றியே –
பின் நெறிக் கொண்ட என்கிறது -பிரபத்தியை
பின் நெறி என்கிறது பின்னே சொன்ன நெறி என்றபடி –நெறி -வழி-சரமமான நெறி –சரம ஸ்லோகம் –
பிறவித் துயர் கடிந்தே –
பலத்தைச் சொன்ன இடத்தில் விரோதி நிவ்ருத்தியையும் சொல்லிக் கிடந்தது இறே -அத்தைச் சொல்லுகிறது
அன்றியே
பின் நெறிக் கொண்ட நெஞ்சனாய்
பாரத சமரத்திலே அர்ஜுனனுக்கு ஒரு அவஸ்தையைப் பிறப்பித்து இறே உபாயத்தை உபதேசித்தது
இவர் வெண்ணெய் களவு காண போன இடத்திலே அடியொற்றிக் கொண்டு சென்று அவன் புக்க கிருஹத்திலே
படலைத் திருகி வைத்தாயிற்றுக் கேட்டுக் கொண்டது –
தீர்க்க சிந்தயந்தி அன்றோ இவர் –உபதேசம் திருட அந்த வெண்ணெய் திருடன் பின்னே போனார் -என்றவாறே –
துன்னு படல் திறந்து புக்கு -சாத்தி விட்டு குனிந்து போவானே
படலை மூடினால் போக மாட்டான் அன்றோ -இவ்விடத்தில்
ததி பாண்டவன் கதையை ஸ்மரிப்பது-இங்கு இல்லை என்ற இவனுக்கும் மோஷம் –இங்கு உண்டு என்றேனோ பிரகலாதான் போலே
இங்கு உண்டு என்றேனோ ததி பாண்டன் போலே -உபய கோடியிலும் இல்லை என்கிறாள்
பிறவித் துயர் கடிந்தே –
சர்வ பாபேப்யோமோஷயிஷ்யாமி-என்றே வைத்தான் இறே

———————————————————————————-

அவதாரிகை —
சோஸ்நுதே சர்வான் காமான் சஹ ப்ரஹ்மணா விபச்சிதா -என்கிறபடியே -என்னுடைய சகல துரிதங்களும்
போம் படி- சர்வேஸ்வரனை அனுபவிக்கப் பெற்றேன் என்று ஹ்ருஷ்டர் ஆகிறார் –

கடிவார் தண்ணம் துழாய்க் கண்ணன் விண்ணவர் பெருமான்
படிவானம் இறந்த பரமன் பவித்ரன் சீர்
செடியார் நோய்கள் கெடப் படிந்து குடைந்தாடி
அடியேன் வாய் மடுத்துப் பருகிக் களித்தேனே –2-3-9-

குணங்களை அனுபவித்து ஆனந்தி ஆனேன்
கடிவார் தண்ணம் துழாய்க் கண்ணன்-பரிமளம் பிரவஹியா நிற்கும் –ஆஸ்ரித பவ்யன்
விண்ணவர் பெருமான் -அனுபவிக்கும் பரமபத வாசிகளுக்கு அவ்வருகே
படிவானம் இறந்த -வானத்தவராலும் ஒப்பு இல்லாத -வானம் படி இறந்த -ஸ்வபாவத்துக்கு
வானத்தில் உள்ள மேகமும் ஒப்பு இல்லாத -நிறத்துக்கு –
பரமன் பவித்ரன் சீர் -மேல் இல்லாத பெரியோன் -இத்தை அறியாதார் அறிவு கேட்டையும் போக்கி அனுபவிப்பிக்கும் பாவனத்வம்
சீர் -பரத்வம் /சௌலப்யம் /போக்யத்வம் /-பாவனத்வம் -இங்கே உள்ள சொற்கள்
செடியார் நோய்கள்-புதருக்குள் செறிந்து மிடைந்து தூறு மண்டின -விஷய ருசிகள் தொடக்கமான
கெடப் படிந்து குடைந்தாடி -கெடும்படி கிடந்து-உள் புக்கு —அடியேன் –அனந்யார்ஹன்
வாய் மடுத்துப் பருகிக் களித்தேனே -புஜிக்க உபகரணமும் அவன் கொடுத்ததே -அபி நிவேசம் -பெரு விடாயன் தண்ணீர் குடிப்பது போலே

கடிவார் தண்ணம் துழாய்க் கண்ணன்-
பரிமள பிரசுரமான திருத் துழாய் மாலையைஉடைய கிருஷ்ணன் -என்னுதல்
மது ச்யந்தியா நின்றுள்ள திருத் துழாயயை உடையவன் என்னுதல்
விண்ணவர் பெருமான்
இவ் வொப்பனை அழகாலே எழுதிக் கொள்வது -அனந்த வைனதேயாதிகளை யாயிற்று
படி வானம் இறந்த பரமன்
தன் படிக்கு வானில் உள்ளார் ஒப்பாகாத படியாக இருக்கும் பரமன்
பரம சாம்யா பன்னரான நித்ய ஸூரிகளும் தன் படிக்கு ஒப்பாகாத படியான மேன்மை உடையவன் என்னுதல்
தன் திருமேனிக்கு வானம் உண்டு மேகம் -அது ஒப்பாதாகாத படி இருக்கிறவன் என்னுதல் –
பவித்ரன்
இவ் வடிவு அழகை சம்சாரிகளுக்கும் அனுபவிக்கைக்கு யோக்யராம் படி பண்ணும் சுத்தியை உடையவனுடைய சீருண்டு–கல்யாண குணங்கள்
அவற்றை அடி காண ஒண்ணாத படி தூறு மண்டிக் கிடக்கிற சம்சாரிக சகல துரிதங்களும் போம்படி வந்து கிட்டி
நாலு மூலையும் புக்கு அவஹாகித்து அனந்யார்ஹனான நான் முழு மிடறு செய்து அனுபவித்து யமாதிகள் தலையிலேயும் அடியிட்டுக் களிக்கப் பெற்றேன்
படிந்து கிட்டி /குடைந்து எங்கும் புக்கு -ஆடி அவஹாகித்து
அடியேன் வாய் மடித்து பருகி –
பெரு விடாயோடு அனுபவித்து
களித்தேனே
இதர விஷய ஸ்பர்சம் துக்கமே யானால் போலே பகவத் குண அனுபவம் களிப்பேயாகக் கடவது –

அவதாரணம் -ஹர்ஷம்
-பகவத் விஷயம் களிப்பு -வேறே உண்டாய் -வருத்தமும் உண்டாய்
பகவத் விஷயம் களிப்பே -வருத்தம் இல்லை -வேற விஷயம் களிப்பு –பகவத் விஷயமே களிப்பு –
அயோக அந்ய யோக விவச்சேதங்கள் –இரண்டும் –
சீர் பருகிக் களித்தேனே -அயோக விவச்சதம்
சீரே களிப்பு என்று கொள்ள வேண்டும்

———————————————————————————–

அவதாரிகை –

களித்தேனே -என்னா–திரியட்டும் சம்சாரிகளோடே இருக்கை யன்றியே இவ்வனுபவத்துக்கு தேசிகரான நித்ய ஸூ ரிகள்
திரளிலே போய்ப் புகுவது எப்போதோ -என்கிறார் –

களிப்பும் கவர்வும் அற்றுப் பிறப்புப் பிணி மூப்பு இறப்பு அற்று
ஒளிக் கொண்ட சோதியமாய் உடன் கூடுவது என்று கொலோ
துளிக்கின்ற வான்நிலம் சுடர் ஆழி சங்கேந்தி
அளிக்கின்ற மாயப்பிரான் அடியார்கள் குழாங்களையே -2-3-10-

ஏவம் வித போக அனுபவத்துக்கு நித்ய போக்தாவான நித்ய ஸூரிகள் உடன் கூடுகையை அர்த்திக்கிறார் -திருப் புளி அடியில் இருந்து -ஆழ்வார்
களிப்பும் கவர்வும் அற்றுப் -விஷய லாபம் -அலாபம் -கிலேசம் மாறி மாறி இங்கே -அது இல்லாமல் –
பிறப்புப் பிணி மூப்பு இறப்பு அற்று -ஜன்ம வியாதி ஜரா மரணம் இல்லாமல்
ஒளிக் கொண்ட சோதியமாய் –ஞான ஒளி வளர்ந்தால் தானே -ஆவிர்பூதமான ஞானாதிகளுக்கு –கிடைத்த விக்ரஹம் முக்தாத்மாவுக்கு
துளிக்கின்ற வான் -வர்ஷிக்கின்ற வானத்தையும் –நிலம் -பூ லோகத்தையும்
சுடர் ஆழி சங்கேந்தி அளிக்கின்ற மாயப்பிரான் -ரஷிக்கும் உபகாரகன்
அடியார்கள் குழாங்களையே உடன் கூடுவது என்று கொலோ -நித்ய தாஸ்யம் அறிந்த -நிரூபணீயர் -இதுவே அடையாளம் சங்கங்களை ஒரு நீராக கலசி –

களிப்பும் –
இதர விஷய அனுபவத்தாலே வரும் களிப்பும்
கவர்வும்
அவை பெறாத போது ஆசைப்பட்டு வரும் கிலேசமும்
-அற்றுப்
போய்
பிறப்புப் பிணி மூப்பு இறப்பு அற்று
இவை இரண்டுக்கும் அடியான ஜன்மம் -அது புக்க விடத்தில் புகக் கடவதான வியாதி -அநந்தரம் வரும் ஜரை-
இத்தோடு யாகிலும் இருந்தால் ஆகாதோ என்று நினைத்து இருக்கச் செய்தே வரும் நிரந்வய விநாசம் -இவை யடைய வற்று
நிரந்வய விநாசம் -சரீர அந்வயம் இல்லாத விநாசம்–சரீர அந்வயம் பொழுது -பால்யம் -கௌமரம்-இத்யாதி அவஸ்தைகள் வருமே
ஒளிக் கொண்ட சோதியமாய்
ரஜஸ் தமஸ்ஸூக்கள் கலசின இந்த சரீரம் போலே அன்றியே -சுத்த சத்வ மயமாய் நிரவதிக தேஜோ ரூபமான சரீரத்தை யுடையோமாய்
உடன் கூடுவது என்று கொலோ
நான் எனக்கு என்று அகல வேண்டாத–சுத்த சத்வ குணம் உடைய இவ்வுடம்பு உடையார் திரளிலே போய்ப் புக்கு நெருக்கப் பெறுவது என்றோ –
துளிக்கின்ற வான்நிலம்
வர்ஷிக்கையே ஸ்வபாவமாக உடைத்தான ஆகாசம் -அத்தாலே விளையக் கடவதான இந்த பூமி
இவற்றை கடற்கரை வெளியிலே -முதலிகளை -நோக்கினால் போலே திவ்யாயுதங்களை தரித்து நோக்குகிற ஆச்சர்ய பூதன்
சுடர் ஆழி சங்கேந்தி அளிக்கின்ற மாயப்பிரான் அடியார்கள் குழாங்களையே
பரம பதத்தில் ஆபரணமாகக் காட்சி தரும்
இங்கு ஆயுதமாய் இறே இருப்பது
இப்படி ரஷிக்கிறவனுடைய அந்த ரஷணத்தில் தோற்று இருப்பாராய்–அவன் தன்னோடு ஒக்க ப்ராப்யருமாய் பகவத் குணங்களுக்கு
தேசிகராய் இருப்பாருமாய் -போதயந்த பரஸ்பரத்துக்கு துணையாய் இருக்கிறவர்களுடைய குழாங்கள்
கலியர் -கலவரிசிச் சோறு உண்ண-என்னுமா போலே -அத்திரள்களிலே போய்ப் புகப் பெறுவது எப்போதோ -என்கிறார் –
அடியார்கள் குழாங்களையே-இரண்டிலும் பன்மை -அத்திரள்களிலே

—————————————————————————————————-

அவதாரிகை –

நிகமத்தில் இத் திருமொழியை பகவத் ஏக போகராய் இருப்பார் -என்னைப் போலே தனிப்படாதே திரளாக அனுபவியுங்கோள்-என்கிறார் –

குழாங்கொள் பேரரக்கன் குலம்வீய முனிந்தவனைக்
குழாங்கொள் தென் குருகூர்ச் சடகோபன் தெரிந்துரைத்த
குழாங்கொள் ஆயிரத்துள் இவை பத்தும் உடன் பாடி
குழாங்களாய் யடியீருடன் கூடி நின்றாடுமினே –2-3-11-

குழாங்கொள் பேரரக்கன்-பாதகர் கூட்டம் கூட்டமாக –பெருமை உடைய ராவணன்
குலம்வீய முனிந்தவனைக்
குழாங்கொள் தென் குருகூர்ச் சடகோபன்-ஸ்ரீ வைஷ்ணவர்கள் திரளை யுடைத்தான
தெரிந்துரைத்த -ஆராய்ந்து அருளிச் செய்த
குழாங்கொள் ஆயிரத்துள் இவை பத்தும் உடன் பாடி -பத்து பத்தாக -பாடல் திருவாய் மொழி பத்து –
ஆயிரம் பாடல்களிலும் அர்த்தத்துடன் இசைந்து -ப்ரீதிக்கு போக்கு வீடாக பாடி
குழாங்களாய் யடியீருடன் -பரஸ்பர -ஏக கண்டராய் -ஏக கருத்தராய் -ஸ்வரூப தாஸ்யம் அறிந்த –கூடி நின்றாடுமினே -நிலை நின்று -ஆடுமின்-

குழாங்கொள் பேரரக்கன் குலம்வீய முனிந்தவனைக்
புத்ர புத்ராதிகளும் -பந்துக்களுமான இவர்களாலே குழாம் கொண்டு வர பல புஜ பலத்தாலே தழைத்து வேரூன்றின
ரஷச்சினுடைய ஜாதியாக கிழங்கு எடுத்த சக்ரவர்த்தி திருமகனை –கரீஷ்யே மைதலீ ஹேதோரபிசாசம ராஷசம் -என்கிறபடியே
குழாங்கொள் தென் குருகூர்ச் சடகோபன்
ஜனஸ்தானம் அடி யறுப்புண்ட பின்பு தண்ட காரண்யம் குடியேறினால் போலே
வாயும் திரை யுகளுக்குத் தப்பின ஆழ்வாரைக் காண வேணும் -என்று ஸ்ரீ வைஷ்ணவர்கள் அடையத் திரண்டதாயிற்று
நல்லார் நவில் குருகூர் -திருவிருத்தம் -100-இறே -சத்ருக்கள் இருந்த இருந்த இடங்களிலே வாய் புலற்றும் படியான தேசத்தில்
அத் தேசத்தில் உள்ளார் திரளச் சொல்ல வேண்டா விறே
தெரிந்துரைத்த
உள்ளபடி அனுசந்தித்துச் சொன்ன
குழாங்கொள் ஆயிரத்துள் இவை பத்தும் உடன் பாடி
இவை பத்தும் –
திரண்டவர்களுக்கு ஜீவனம் வேணுமே –
குழாங்கொள் ஆயிரம்
தொண்டர்க்கு அமுது உண்ண –9-4-9-என்கிறபடியே
பத்துப் பாட்டு ஒரு திருவாய் மொழி
பத்துத் திருவாய்மொழி ஒரு பத்தாய்
இப்படி பத்து பத்தான ஆயிரம்
திரண்ட ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஜீவனம் வேணுமே
இவை பத்தும் உடன் பாடி -விசேஷ ஜீவனம் இந்த பத்து –
சாபிப்ராயமாக அப்யசித்து
குழாங்களாய்
என்னைப் போலே பருகிக் களித்தேனே -என்னா –ஏக வசனம் -தனிமை –
குழாம் தேட இராதே
முற்படவே திரளாக இழியப் பாருங்கோள்
யடியீருடன் கூடி நின்றாடுமினே –
அவன் பக்கலிலே நிஷிப்த பரராய் இருக்கிற நீங்கள்-அடியீர் -சம்போதனம் — நால்வர் இருவர் இங்கு இருக்கும் நாலு நாளும் த்யாஜ்யமான
அர்த்த காமங்களைப் பற்றி –சதுர்விதா பஜந்தே மாம் -ஸ்ரீ கீதை -7-16-
சிறு பாறு-என்னாதே-நம் பெரிய குழாத்திலே போய்ப் புகுமளவும் ஒரு மிடறாய் அனுபவிக்கப் பாருங்கோள்

முதல் பாட்டில் திரு உள்ளத்தைக் கொண்டாடினார்
இரண்டாம் பாட்டில் அத்தையும் இசைவித்து சர்வேஸ்வரனை கொண்டாடினார்
மூன்றாம் பாட்டில் தன் நெஞ்சில் பட்டதொரு உபகாரத்தைச் சொன்னார்
நாலாம் பாட்டில் அதுக்கு பிரத்யுபகாரமாக ஆத்ம சமர்ப்பணம் பண்ணி அது தனக்கு அனுசயித்தார்
அஞ்சாம் பாட்டில் எனக்கு பிரதம ஸூக்ருதம் நீயேயான பின்பு– உன் திருவடிகளைக் கிட்டினேன் அன்றோ- என்கிறார்
ஆறாம் பாட்டில் இன்றோ கிட்டிற்று– தேவர் எனக்கு விசேஷ கடாஷம் பண்ணின வன்றே பெற்றேனே யல்லேனோ-என்றார்
ஏழாம் பாட்டில் அவனுடைய போக்யதையை அனுசந்தித்து –உன்னைப் பிரியில் தரியேன் -என்றார்
எட்டாம் பாட்டில் இப்படி நிரதிசய போக்யனானவன்- எளியதொரு விரகாலே லபிக்கப் பெற்றேன் -என்றாராதல் -அன்றிக்கே –
அநேக காலம் கூடிப் பண்ணின லபிக்கக் கடவ தப பலத்தை அவனைப் பின் சென்று எளிதாக லபித்தேன் -என்னுதல்
ஒன்பதாம் பாட்டில் என்னுடைய சகல கிலேசங்களும் போம்படி அனுபவித்து களித்தேன் -என்றார்
பத்தாம் பாட்டில் இப்படி இவனை அனுபவித்துக் களிப்பார் திரளிலே போய் புகப் பெறுவது எப்போதோ -என்றார்
நிகமத்தில் -இத் திருவாய் மொழியை சாபிப்ராயமாக அப்யசித்து நாலு நாளும் நால்வர் இருவர் உள்ளார்
கூடி இருந்து அனுபவிக்கப் பாருங்கோள்-என்றார் -உடன் பிராப்தி கிட்டுமே -என்பதால் நால் நாள்
கிடைக்க போவார் -அல்பம் என்பதால்- நாலும் இரண்டும் -என்கிறார்

——————————————————————————————-

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

அந்தஸ்த சர்வ ரசம்–தன்னுள்ளே
அம்புஜ நேத்ர–லோசனஸ்ய –
சம்யோக ரூபம் அவகாக்ய -முழுசி தழுவி-தன்னுள்ளே
சுக அமிருத தாப்திம்-கடல் படா அமுதம் -கலவி என்னும் அமுதக் கடலில் பிறந்த அனுபவம்
தத் தேசிக பிரதம சூரி கணர்
கதாஸ் யாத் மம சங்க –
ச முனி -த்ருதீயே –

——————————————————————–

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –

சித்ர ஆச்வாத அனுபூதம் -விசித்ரமான -சேர்ந்த -அனுபவம்
பிரியம் உபக்ருதிபி -மகா உபாகரகம்
தாஸ்ய சாரச்ய ஹேதும்
ச்வாத்மன் நியாஸார்ஹ  க்ருத்யம்
பஜத அமிருத ரசம்
பக்த சித்தையக போக்யம்
சர்வ அஷ பிரியார்ஹம்  சர்வ இந்த்ரிய -சஷூஸ் ச்ரோத்ரு
சபதி பகு பல ச்நேஹம் -சடக்கென -அருளி
ஆச்வாத்ய சீலம் –ஆழ்ந்து அனுபவிக்க
சத்யைகி சாத்யைகி-சமேதம் – சேர்ந்து உள்ளவன்

————————————————————————————————–

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 13-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்–

ஊனம் அறவே வந்துள் கலந்த மாலினிமை
யானது அனுபவித்தற்காம் துணையா -வானில்
அடியார் குழாம் கூட ஆசை யுற்ற மாறன்
அடியார் உடன் நெஞ்சே ஆடு–————-13-

———————————————————-
அவதாரிகை –

இதில் எம்பெருமான் ஏக தத்வம் என்னும் படி சம்ச்லேஷிக்க-ஆதி நாதர் ஆழ்வார் தேவஸ்தானம் அன்றோ –
தத் அனுபவ சஹகாரி சாபேஷராய்
அருளிச் செய்த பாசுரத்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
இப்படி பிரசாங்கிகமான பரோபதேசத்தை –திண்ணன் வீடு -தலைக் கட்டின
அநந்தரம்
கீழ்
தம்முடைய ஆர்த்தி தீர வந்து கலந்த எம்பெருமான் உடைய
சம்ச்லேஷ ரசத்தை பேச ஒருப்பட்டு
எப்பேர்பட்ட இனிமையும் விளையும் படி
தம்முடனே அவன் வந்து
ராமஸ்து சீதயா ஸார்த்தம்-இத்யாதிப் படியே
ஏக தத்வம் என்னலாம் படி கலந்தபடியையும்
அந்த கல்வியால் வந்த ரசம் தம் ஒருவரால் உண்டு அறுக்க ஒண்ணாத படி
அளவிறந்து இருக்கிற படியையும் அனுசந்தித்து
தனித் தேட்டமான இதர விஷயங்கள் போல் அன்றிக்கே
துணைத் தேட்டமாய்
அதுக்கு இவ் விபூதியில் ஆள் இல்லாமையாலே
இவ் வனுபவத்தில் நிலை நின்ற நித்ய சூரிகள் திரளிலே
போய்ப் புக்கு அனுபவிக்கப் பெறுவது எப்போதோ
என்று பிரார்திக்கிற
ஊனில் வாழ் அர்த்தத்தை
ஊனம் அறவே வந்து -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் –

—————————————————————————-

வியாக்யானம்–

ஊனம் அறவே வந்துள் கலந்த மாலினிமை யானது –
அதாவது
நித்ய சம்சாரி என்று சங்கோசியாமல்
சங்கோசம் அற சர்வேஸ்வரன் வந்து
தானும் யானும் எல்லாம் தன்னுள்ளே கலந்து ஒழிந்தோம்
தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஒத்தே -என்றும்
என தாவியுள் கலந்த பெரு நல் உதவி -என்றும்
கனிவார் வீட்டின்பமே -என்றும்
அடியேன் வாய் மடுத்துப் பருகிக் களித்தேனே -என்றும்
இப்படி சர்வ ரசங்களும் உண்டாம்படி
அந்தரங்கமாகக் கலந்த கலவியின் இனிமையானது
ச ஹிருதயமாக சம்ச்லேஷித்த சாரஸ்யம் ஆனது

அனுபவித்தற்காம் துணையா –
ஏவம் வித ரச்யதையை அனுபவிக்கைக்கு
அடியார்கள் குழாம்களை உடன் கூடுவது என்று கொலோ -என்று
அனுகூல சஹவாசம் அபேஷிதமாய்

வானில் அடியார் குழாம் கூட ஆசை யுற்ற மாறன் அடியார் உடன் நெஞ்சே யாடு –
வையத்து அடியவர்கள் அன்றிக்கே
அனுபவத்துக்கு தேசிகராய்
வானில் அடியார்கள் குழாம்களுடன் கூட வேணும் என்று
அபி நிவேசத்திலே ஊன்றின
ஆழ்வார் அடியாரான இங்குத்தை ஸ்ரீ வைஷ்ணவர்களோடே
நெஞ்சே கூடி யாடு
அன்றிக்கே –
அக் குழாத்தில் முழுகி அனுபவிக்கப் பார் -என்றுமாம்
அடியீருடன் கூடி நின்று ஆடுமினோ -என்றார் இறே

——————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s


%d bloggers like this: