பகவத் விஷயம் காலஷேபம் –54– திருவாய்மொழி – -2-3-1…2-3-5—-ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

பிரவேசம் –

வாயும் திரை யுகளில் ஆர்த்தி தீர வந்து சம்ச்லேஷித்ததைச் சொல்லுகிறது இத் திருவாய் மொழியில்
நடுவு ப்ராசங்கிகமாக ப்ரஸ்துதமான இத்தனை ஈஸ்வரத்வம்
தாம் பெற்ற பேற்றின் கனத்தைப் பார்த்தார்
அது தாம் அடியாக வந்ததாகில் இறே அளவு பட்டு இருப்பது -சர்வேஸ்வரன் அடியாக வந்ததாகையால் கனத்து இருக்கும் இறே
தாம் அனுபவித்த அனுபவத்துக்குள் எல்லா ரசங்களும் உண்டாய் அது தான் சமாப்யதிக வர்ஜிதமுமாய் இருந்தது –

வாயும் திரை யுகளில்-விச்லிஷ்டச்ய-பிரிந்த -அத்ர நிரதிசய அனுபவம் –கலவி -சொல்கிறார்–நடுவு -பிரசாங்கிகம் –
மாயக் கூத்தனில் -8-5-ஆழ்வாருக்கு கிளர்ந்த ஆர்த்தி சமனாய –எல்லியும் காலையும் -8-6- திருக் கடித்தான நகர் -ஸ்திதிம் பிரதர்சய –ஆர்த்தி தொலைய
தாயப்பதி-யுகம் முன்பு -நின்று -இன்று ஆழ்வாரை சமாதானம் படுத்த -ஏணி —திருக் கடித் தானமும் என்னுடை சிந்தையும் ஒருக்கடித்து உறையும் பிரான் –
எட்டி உதிக்கும் நன்றி கேட்ட தனம் இல்லை –சாத்திய ஹ்ருத்யச்தன் -சாதனம் ஒருக்கிடக்கும் க்ருத்தஞ்ஞன்–கந்தம் தாயப்பதியிலே —
யதா –இருத்தும் வியந்துஎன்னைத் தன் பொன்னடிக் கீழ் -வீற்று இருந்தான் கண்டு கொண்டே –அந்யோந்யம்-வைத்த கண் வாங்காமல் –8-7-அனுபவம் கொடுத்தானோ
மூன்று தத்துக்கு பிழைத்த குழைந்தை -மாயக் கூத்தாவில் ஆழ்வார் நிலை
அதே போலே வாயும் திரை யுகளில்-ஆர்த்தி சமானாய -திண்ணம் வீடு பரத்வம் காட்டி -சமாதானம் பண்ணி -இந்த திருவாய்மொழி –அந்த மூன்றுக்கு இந்த மூன்றும் -என்றபடி –
விஜய பெருமாளை சேவித்து -திருவடி சொன்ன வார்த்தைக்குள் எல்லா நன்மைகளும் அடங்கினது போலே-பிரதியுபகாரம் இல்லையே நீர் சொன்ன வார்த்தைக்கு என்றாளே-வார்த்தைக்குள் எல்லா நன்மை போலே- எல்லா ரசங்களும் ஆழ்வாருக்கு கிட்டிற்றே
ஆழ்வார் திரு உள்ளத்தில் ஓடும் நிலை அறிவது எளிது அன்றே -அங்கமே திருவதரித்து நம்பிள்ளை –கிருஷ்ணனே திருவவதரித்து பெரியவாச்சான் பிள்ளை தானே அறிந்து வியாக்யானம் செய்ய முடியும்

இப்படிப் பட்ட பேற்றுக்கு உசாத் துணை யாவார் யார் -என்று பார்த்த இடத்தில் சம்சாரத்தில் ஆள் இல்லாமையாலே
அவன் தன்னோடு ஒக்க பிராப்யருமாய் -அவனை நித்ய அனுபவம் பண்ணா நிர்பாருமாய் -பகவத் அனுபவத்துக்கு தேசிகருமாய்
இருக்கிற நித்ய ஸூரிகள் திரளிலே போய்ப் புக்கு –போதயந்த பரஸ்பரம் -ஸ்ரீ கீதை -3-11-பண்ணி அனுபவிக்கப் பெறுவது
எப்போதோ என்னும் அநவாப்தியோடே தலைக் கட்டுகிறார் –
வாயும் திரையுகளியிலே ஆற்றாமைக்கு அறிவு நடையாடாத திர்யக்குகளையும் சேதனங்களையும் சேர்த்தார் அங்கு
இங்கு சம்ச்லேஷத்தால் வந்த ப்ரீதிக்கு அறிவு நைசர்க்கிகமான -ஸ்வா பாவிகமான -ஞானத்தை ஸ்வபாவமாகக் கொண்ட -நித்ய ஸூரிகளைத் தேடுகிறார் –
ஆற்றாமைக்கு அந்த கூட்டம் -ஆனந்தத்துக்கு இந்த கூட்டம் -நித்ய ஸூரிகளுக்கு விஸ்லேஷ வியசனமே தெரியாதே –
திர்யக்குகள் பகவத் அனுபவம் அபாவம் உண்டே –
ப்ரேம அதிசயம் -கலங்கி -அங்கே-விஸ்லேஷ தசையில் -இங்கே அனுபவ அதிசயம் -தெளிந்த ஞானம் -சம்ச்லேஷ தசை

ராமஸ்து சீதயா சார்த்தம் விஜஹார பஹூன் ருதூன் மனச்வீ தத்கதஸ் தஸ்யா நித்யம் ஹ்ருதி சமர்ப்பித்த -பால -77-27-
அந்த ராமனோ என்னில் -72 ருதுக்கள் -12 வருஷங்கள் -பிராட்டி திரு உள்ளத்தில் சேர்ந்தாரே -தகப்பனார்கள் பார்த்து திருமணம் செய்ததால் -பித்ரு ஹ்ருதயா –ஐயரை கேட்டே பின்பே திருக் கல்யாணம் –
பங்குனி உத்தரத்தில் திருக் கல்யாணம் -ஒன்றாக கலந்தார்களே -ஜானகி மைதிலி வைதேகி சீதா-இயல் பெயர் –
ராமஸ்து -பெருமாளும் பிராட்டியும் ஏக தத்வம் என்னலாம் படி கலந்த கலவியைச் சொல்லுகிறது
பித்ரு சுச்ரூஷண பரரானார் -தர்மங்களை பிரவர்த்திப்பித்தார் தேவதா சாமாராதநம் பண்ணினார் -என்றாயிற்று சொல்லிக் கொண்டு போந்தது
இப்படிப் போந்த இவர் இப்போது வாத்ச்யாயனம் கற்றுக் காம தந்த்ரமேயோ நடத்திப் போந்தது -என்னும் படி வேறு பட்டார்
சீதயா சார்த்தம் -பரமபதத்திலே செவ்வியோடு வந்தவளும் பிற்பாடையாம்படி போகஸ் ரோதஸ் ஸிலே முற்பாடரானார்
விஜஹார -இப்படி பரிகாரச் செய்தேயும் போகோபோத்காதத்துக்கு அவ்வருகு பட்டிலர் – போக உபத்காதம் -தொடக்க நிலை தாண்ட வில்லையே –
பஹூன் ருதூன்நஹூன் சம்வத்சரான் என்னாது ஒழிந்தது -அவ்வோ கால விசேஷங்களுக்கு அடுத்த போக உபகரணங்களை
கொண்டு புஜித்தார் என்று தோற்றுகைக்காக
மனச்வீ -சம்ச்லேஷத்தில் பிராட்டி கோலின அளவுக்கு அவ்வருகு பட்டு பரிமாறினார்
தத்கதஸ் -தஸ்யாம்-கத ஜாதி குணங்கள் த்ரவ்யத்துக்கு பிரகாரமாய் பிரிக்க ஒண்ணாதபடியாய் இருக்குமா போலே
பிரிக்க ஒண்ணாதபடி ஒரு நீராகக் கலந்தபடி
தஸ்யா நித்யம் ஹ்ருதி சமர்ப்பித்த -இவர் உயர்த்தியை அறிந்து இருப்பாள் ஒருத்தி யாகையாலே -அப்பெரியவன் இப்படி
தாழ விடுவதே -என்று அச்செயலிலே தன் நெஞ்சு துவக்கப்பட்டு –அது அது -என்று கிடக்குமாயிற்று –
அப்படியாயிற்று இங்குக் கலந்த கலவி தான் –
கடல் பள்ளியில் நீங்கி –அண்ணலும் நோக்கி அவளும் நோக்கி மனம் மாறிற்று -இப்பொழுது தான் அவர் அவர் மனஸ் அவர் இடம் வந்தது –

————————————————————————————————-

அவதாரிகை –

ராஜ்யத்தை இழந்த ராஜபுத்ரனை ஒருவன் ராஜ்யத்தில் பிரவேசிப்பித்தால் -இவனாலே இப்பேறு பெற்றோம் -என்று
அவனைக் கொண்டாடுமா போலே கைங்கர்ய சாம்ராஜ்யத்துக்கு இட்டுப் பிறந்து வைத்து நெடுநாள் இழந்து கிடக்க
இந் நெஞ்சு இறே இத்தைத் தந்தது –என்று திரு உள்ளத்தைக் கொண்டாடுகிறார் –

ஊனில் வாழுயிரே நல்லை போ உன்னைப் பெற்று
வானுளார் பெருமான் மது சூதன் என்னம்மான்
தானும் யானும் எல்லாம் தன்னுள்ளே கலந்து ஒழிந்தோம்
தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஒத்தே –2-3-1-

சர்வ ரசமான வஸ்து -உடன் உண்டான சம்ச்லேஷம் -தம்முடைய திரு உள்ளம் அடியாக -வந்ததால் கொண்டாடுகிறார் –
ஆழ்வார் மனசே உபாத்யாயர் -நெஞ்சை பார்த்து உகக்குகிறார் –எதிர் சூழல் புக்கு வர அவன் உண்டு -விலக்காமைக்கு நெஞ்சு உண்டு
ஊனில் வாழுயிரே -உயிர் -நெஞ்சு இங்கே -ஸூகிக்கும் -இந்தளத்தில் தாமரை பூத்தால் போலே-பகவத் அனுபவம் பெற்று வாழும்  –
நல்லை போ -நல்லை நல்லை -என்கிறார் -வா என்கிறார்
உன்னைப் பெற்று -விதேயமான நெஞ்சே
வானுளார் பெருமான்-நித்ய ஸூரிகளுக்கும் மேலான மேன்மை
மது சூதன் -விரோதி நிரசன சீலன் -அனுபவ விரோதிகளை போக்கி
என்னம்மான்தானும் -அடிமை கொண்டு அருளிய என் சுவாமி
யானும் -அடிமை செய்ய ஆசை கொண்ட நானும்
எல்லாம் தன்னுள்ளே கலந்து ஒழிந்தோம்
தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஒத்தே-அவனுக்கு உள்ளே கலந்தோம் -ஏக ஜாதி த்ரவ்யம் கலந்தால் போலே
அநேக திருஷ்டாந்த தாத்பர்யம் சர்வ வித சாரச்யம் தோன்ற
தேன் -பல புஷ்பங்களில் இருந்து -சர்வ ரச சமவாயம்
பால் -ஸ்வா பாவிக ரசம் –நெய் -ப்ருஹ்மான ரசம்
கன்னல் -கரும்பு -பாகம் பண்ணும் ரசம்
அமிர்தம் -நித்ய ரசம்
உயிர் -பிராண ஆஸ்ரயமான நெஞ்சு
போ -சாதரமான சம்போதம் ஸூ சகம் –

ஊனில் வாழுயிரே
ஊன் -என்று
1– சரீரமாய் -வாழ்க்கையாவது -வர்த்திக்கையாய் -சரீரத்திலே வர்த்திக்கிற உயிர் -என்னுதல்
2–சரீரத்தைப் பற்றி அவ்வருகு ஓன்று அறியாதே வாழ்ந்து போன உயிர் -என்னுதல்
3–மாம்சளமான சரீரத்திலே இருந்து வைத்து வாழ்கிற உயிரே -பரம பதத்தைப் பெற்று அங்கே நாநாபவநத்தோடே அனுபவிக்கிற இடத்தையோ நீ உதவிற்று
வாழுகை -வர்த்தகையும் -சப்தாதி விஷய அனுபவ ஸூகம்- நித்ய முக்தர் போலே பகவத் அனுபவ ஸூகம் -மூன்றையும்-
மாம்சாஸ் ருக் பூய விண் மூத்ரஸ் நாயு மஜ்ஜாஸ்தி களான சரீரத்திலே நித்ய ஸூரிகள் அனுபவிக்கும் அனுபவத்தை அன்றோ நீ உபகரித்தது
இத்தால் –வாழுகையாவது-அனுபவிக்கையாய் -நெடு நாள் ப்ராக்ருத போகங்களைப் புஜித்து போந்த நீ அப்ராக்ருத போகத்திற்கு கை தர நிற்பதே -என்றபடி
மனசை உயிர் என்பான் என் என்னில் -ஆத்மாவுக்கு தர்ம பூத ஜ்ஞானம் நித்தியமாய் இருக்கச் செய்தே
மன ஏவ மனுஷ்யாணாம் காரணம் பந்த மோஷயோ-என்று பந்த மோஷங்களுக்கு ஹேது மனஸ்ஸூ என்கிற பிரதான்யத்தைப் பற்ற
உயிரே என்று ஆத்மாவை சம்போதிக்குமா போலே சம்போதிக்கிறார்
நல்லை போ
நல்லை வா -என்றபடி –1-நல்லை நல்லை -என்று கொண்டாடுகிறார் -விபரீத லஷணை-
2–போ என்று சம்போதனம் ஆகவுமாம் –3–நல்லை போ என்று முழுச் சொல்லாய் நல்லை நல்லை என்னுதல் –
நடுவே என்னைக் கொண்டாடுகிறது என் -என்ன
உன்னைப் பெற்று
பந்த ஹேதுவாய்ப் போந்த நீ -மோஷ ஹேதுவாகப் பெற்று -ஈஸ்வரனும் என்றும் உண்டு -தத் சம்பந்தமும் அநாதி –
அவன் எதிர் சூழல் புக்கு திரியா நிற்கவும் நீ ஆபிமுக்யம் பண்ணாமையால் அன்றோ நெடும் காலம் இழந்தது
இன்று நீ ஆபிமுக்யம் பண்ணி அன்றோ இப் பேறு பெற்றது –நீர் பெற்ற பேறு ஏது என்ன -சொல்லுகிறார் மேல் –
சேதன உஜ்ஜீவனார்த்தம் –பக்தி உழவன் -ஷேம க்ருஷிகன் -முயர்ச்சியும் எப்போதும் உண்டு -ஈஸ்வரனும் நித்யம் -சம்பந்தமும் நித்யம் -எதிர் சூழ் புக்கு நிற்கவும் ஆபி முக்கியம் பெறாமல் இழவு இது வரை –

வானுளார் பெருமான் மது சூதன் என்னம்மான் தானும் யானும்
அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் இருந்து வைத்து அவதரித்து -மதுவாகிற அஸூரனைப் போக்கினால் போலே
என்னோட்டை சம்ச்லேஷ விரோதியைப் போக்கி -என்னைத் தோற்பித்து -தன் பக்கலிலே கைங்கர்யத்திலே மூட்டின தானும்
-கைங்கர்யத்துக்கு விஷய பூதனான நானும்
வாயும் திரைகளில் கண்ணால் கண்ட பதார்த்தங்கள் அடங்கலும் பகவத் அலாபத்தாலே நோவுபடுகிறனவாக நினைத்து விடாய்த்த நானும்
நெடுநாள் என்னைப் பெறுகைக்கு எதிர் சூழல் புக்கு விடாய்ப்பித்த தானும்
-கிருஷி பண்ணின தானும் -கிருஷிக்கு விஷய பூதனான நானும் /-ருசி -நாம் தானே உண்டாக்கிக் கொள்ள வேண்டும் –

எல்லாம் தன்னுள்ளே கலந்து ஒழிந்தோம்
ஆயிரத்தில் ஒன்றும் -கடலில் குளப்படியும் -குளம்பு படி -போலே தானும் நானுமான சேர்த்தியிலே எல்லா ரசங்களும் பிறக்கும் படி சம்ச்லேஷித்தோம்
ஒழிந்தோம்
நித்ய விபூதியிலே புக்காலும் இப்பேற்றை அசையிட்டு இருக்குமத்தனை -அங்கு ஏற்றமாகச் செய்யலாவது இல்லை
இதினுடைய அவிச்சேதமே அங்கு உள்ளது
இப்படி இங்கே கலந்து இருக்க இனிப் பரமபதத்து ஏறத் தேடுகிறது –1-உசாத் துணைக்காகவும் –2-இதுதான் விச்சேதி யாமைக்கும் யாயிற்று
என் போலே கலந்தது என்றால்-

தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஒத்தே –
இதுக்கு ஆளவந்தார் அருளிச் செய்தாராக திருமாலை ஆண்டான் பணிக்கும் படி
ஏக ஜாதீய த்ரவ்யங்கள் தன்னிலே கலந்தால் போலே என்று –ஞான ஆனந்தங்களால் பரமாத்மா ஜீவாத்மா ஏக ஜாதி தானே-
-அதாவது -தேனும் தேனும் கலந்தால் போலவும் பாலும் பாலும் கலந்தால் போலவும்
நெய்யும் நெய்யும் கலந்தால் போலவும் கன்னலும் கன்னலும் கலந்தால் போலவும் அமுதும் அமுதும் கலந்தால் போலவும் -என்று
அங்கன் அன்றியே
எம்பெருமானார் அருளிச் செய்யும் படி -இவற்றை ரசவத பதார்த்தங்களுக்கு எல்லாம் உப லஷணமாக்கி-
தானும் நானுமான கலவிக்கு உள்ளே எல்லா ரசங்களும் பிறக்கும்படி சம்ச்லேஷித்தோம் என்கிறார் என்று –
சர்வ கந்தஸ் சர்வ ரச-என்கிற வஸ்துவோடே இறே கலக்கிறது –சாம்யா பத்தி அருளுவானே –
ஜ்ஞானாநந்த வஸ்துக்களுடைய சேர்த்தியிலே சர்வ ரசங்களும் பிறக்கும் படியாயிற்று கலந்தது
இவை எல்லாவற்றையும் சேர்த்துச் சொல்லும் போது வருவது ஒரு பரிமாணாதிக்யம் உண்டு இறே -அது தானே இறே த்ரவ்ய சத்பாவத்தில் பிரமாணம் –

தானும் யானும் ஆகிய கலவிக்கு உள்ளே –தன்னுள்ளே -என்றது கலவிக்கு உள்ள -ஒத்து -உண்டாகும் படி -என்றவாறு
தஜ்ஜா தல்ல தததுனு -உபாசிப்பாய் பாரூபா -சத்ய சங்கல்பன் சர்வ காமன் சர்வ ரச சர்வ கந்த
ஸ்வரூப ஐக்யம் சொல்லிற்று ஆகாதோ -ப்ரஹ்மம் போலே ஆவான் -ப்ரஹ்மமாகவே ஆக மாட்டான் –
நாழித் தேனும் நாழித் தேனும் கூட்டி இரு நாழி -பிரிக்கப் போகாது என்பதே தாத்பர்யம் -ப்ரஹ்ம ஏவ பவதி இல்லை இவ பவதி– ஐக்கியம் இல்லை –
நதிகள் சமுத்ரம் சேர்ந்து நாமம் ரூபம் இழந்து சேருவது போலே -ஜீவன் பரமாத்வா விடம் சேர்வது -கூடிற்றாகில் -அது அதுவே
இரண்டு த்ரவ்யங்களும் இருக்கும் -த்ரவ்யாந்தர சத்பாவம் உண்டே –
பஞ்சாம்ருதம் போல -தனித்தனி ரசமும் -சேர்ந்த ரசமும் கிட்டும் –ஞான ஆனந்தங்கள் உடன் மற்ற அவன் ரசங்களும் சேருமே –
இங்கே கலவிக்கு உள்ளே -தன்னுள்ளே -மூன்றாவது சொல்லி எல்லாம் தன்னுள்ளே நிர்வாஹம் –

——————————————————————————————

அவதாரிகை –

இப்பாட்டு பிரஸ்துதமான அளவிலே எம்பார் கோஷ்டியில் -இவ்வாத்மாவுக்கு பிரதம குரு ஆர் -என்று பிறந்ததாய்-
இருந்த முதலிகளில் சிலர் ஆசார்யன் அன்றோ என்றார்கள் –
-சிலர் ஆசார்யன் ஸ்ரீ பாதத்தில் ஆஸ்ரயிக்கப் போரு-என்று அழைத்துக் கொண்டு போய்ச் சேர விட்ட ஸ்ரீ வைஷ்ணவன் பிரதம குரு என்றார்கள் –
அங்கன் அன்று காண் -அவன் இவனை அழைத்தாலும் இவன் அல்லேன் என்னாத படி –இசைவித்து என்னை -5-8-0–என்கிறபடியே
அகவாயிலே இருந்து இசைவித்த சர்வேஸ்வரன் காண் பிரதம குரு -என்று அருளிச் செய்தார் அகன்ற நம்மை அவன் திருவடிகளிலே சேர விட்டது
நெஞ்சு இறே என்று இவர் திரு உள்ளத்தைக் கொண்டாடப் புக்கவாறே நீர் வழி போவாரைக் கொண்டாடுகிறது என் – அடி அறியாதே -என்ன
-ஆராய்ந்த வாறே -அதுக்கும் அடி அவனே இருந்தது -நடுவே நெஞ்சைக் கொண்டாடினோம் அத்தனை யாகாதே என்று அத்தை விட்டு
என்னையும் இசைவித்த சர்வேஸ்வரனை கொண்டாடீர் என்ன –பெற்ற தாய் இருக்க மணை நீராட்டுவாரைப் போலே இல்லாமல்
-தம் திரு உள்ளத்தை விட்டு சர்வேஸ்வரனை கொண்டாடுகிறார் –

ஒத்தார் மிக்கார் இலையாய மா மாயா
ஒத்தாய் எப் பொருட்கும் உயிராய் என்னைப் பெற்ற
அத்தாயாய் தந்தையாய்த் அறியாதன யறிவித்து
அத்தா நீ செய்தன அடியேன் அறியேனே –2-3-2-

ஏக ரசம் என்பதால் இவர் அளவு அல்லையே அவன் நிலை -அத்தை அருளிச் செய்கிறார் -உபகார பரம்பரைகள் சில சொல்லி –
அல்ப அம்சம் -சொல்லாதவை ஹிமாசலம் போலே –
தேவ மனுஷ்ய ஸ்தாவர யோனிகளில் அவதரித்து ஒத்தாய்
சாரச்ய உக்தன் தம் பக்கல் பண்ணின உபகாரங்கள் அபரிச்சேத்யம்
ஒத்தார் மிக்கார் இலையாய மா மாயா -சமாப்யதிக தாரித்ர்யம் ராஹித்யம்
அபூர்வத விஸ்மய -பிரதி ஷணம் அனுபவித்தாலும் -ஆராவமுதன்
ஒத்தார் எப் பொருட்கும் -சஜாதீயன் சகல பதார்த்தங்களுக்கும்-பத்ம நாபம் -அமரபிரபு -மரபிரபுவும்-தமிழ் சொல்லில் மரம் -அவதரித்து அனுபவிப்பிக்கும் அவனே
உயிராய் -தாரகன்
என்னைப் பெற்ற அத்தாயாய் தந்தையாய்த் -அசாதாராண சம்பந்தம் -உத்பத்தி ஹேது -பிரிய பரன் -ஹித பரன்/- -அசாதாரண -தாய்க்கும்  தந்தைக்கும் சேர்த்து
அறியாதன யறிவித்து -அஜ்ஞ்ஞாதமான அனுபவங்களை -ஒத்த அனுபவம் தேன் இத்யாதி –
அத்தா -ஒழிக்க ஒழியாத சம்பந்தம் உண்டே
நீ-தனியாக நீ –முன்னால் சொன்னர்வர்களில் வியாவர்த்தி-
மாரி–போதருமா போலே பூவைப் பூ வண்ணா – நடுவில் நீ -இரண்டையும் உன்னிடத்தில் காணும் படி போலே –
மூன்றுமாக உள்ளாயே -வேற பலவும் உண்டே -நிருபாதிக நித்ய சம்பந்தம் உண்டே உன்னிடம்
செய்தன அடியேன் அறியேனே-அடியேனான உறவால் –நீ செய்து அருளியவை –என்று இருக்குமது ஒழிய –
உறவு அடிமை காரணமா -சாமான்யம் -அனைவரும் சேஷபூதர்கள் -ஒத்துக் கொள்ள வேண்டியதே நம் கடமை
இசைவு ஒன்றே வேண்டுவது -வைமுக்யம் மாறினாலே போதும் –விலக்காமை ஒன்றே வேண்டுவது –

ஒத்தார் மிக்கார் இலையாய மா மாயா
என்னை இப்படி விஷயீ கரித்த நீ தான் ஒரு குறைவாளனாய்ச் செய்தாயோ
ஸ்ரீ யபதிக்கும் தன்னால் கழிக்க ஒண்ணாத படி இருப்பதொரு தாரித்ர்யம் உண்டு (கீழே ஏக ரசமாய் கலந்தவனை நெஞ்சிலே நினைத்து -அவன் எவ்விடத்தான் நாம் யார் என்று நினைத்து அருளிச் செய்கிறார் )
ந தத் சமச்சாப்யாதி கச்ச த்ருச்யதே –என்கிறபடியே சமாதிக தரித்ரனாய் இருக்கும்
இது என்ன ஆச்சர்யம் தான் –
ஒத்தார் எப் பொருட்கும்
நீ –யாராய் -என் பட்டாய் –
சமாதிக தரித்ரனாய் இருக்கிற –நீயே இதர சஜாதீயனாய் வந்து அவதரித்தாய் -(ஸ்வரம் கூட்டி அர்த்தம் )ஏவகாரம் -இப்படி மேன்மையான நீ
எப்பொருட்கும் ஒத்தாய்
ப்ரஹ்ம ருத்ரர்கள் நடுவே விஷ்ணு நாமாவாயும் இந்திர அனுஜனாயும்-ராம கிருஷ்ணாத் யவதாரங்களைப் பண்ணியும்
திர்யக்குகளோடே ஒக்க மஹா வராஹமாயும் -ஸ்தாவரஙகளோடு ஒக்க குப்ஜாம்ரமாயும் நிற்கும் நிலை
குப்ஜாம்ரமாய் நின்றதுக்கு கருத்து -செவ்வே நின்றால்  பெண்ணுக்கும் பேதைக்கும் ஏற ஒண்ணாது என்று எல்லாருக்கும் ஒக்க ஸூலபன் ஆகைக்கு
அபிமானம் -உபமானம் இல்லா பன்றியாய் –
இப்படி இருக்கிறது என் என்னில் -மேன்மையோடு வரில் கிட்ட ஒண்ணாது -என்று அகலுவார்கள்
தாழ விட்டு வரில் காற்கடைக் கொள்ளுவார்கள் -ஆகையாலே சஜாதீயனாய் வந்து அவதரிக்க வேணும்
ப்ரஹ்மேச மத்ய கணநா கண நார்க்க பங்க்தா விந்த்ரா நுஜத்வ மதிதேஸ்தநய த்வயோகாத் இஷ்வாகு வம்ச யதுவம்ச ஜ நிச்ச ஹந்த
ச்லாக்யான் யமூன்யநுபமஸ்ய பரஸ்ய தாம்ன –அதி மானுஷ ஸ்தவம் -15-என்னக் கடவது இறே
இப்படி அவதரித்து செய்தது என் என்னில்
உயிராய்
1-இச் சேதனன் தான் தனக்குப் பார்க்கும் ஹிதத்தையும் பார்க்கக் கடவனாய் இருக்கை
2–தாரகனாயும் -என்னவுமாம்
என்னைப் பெற்ற அத்தாயாய்
தான் உண்டாகில் இறே தான் தனக்கு ஹிதம் பார்ப்பது –உயிராய் என்பதற்கு பின் தாய் தந்தை அறிவித்த அத்தா என்கிறார் –
வளர்த்துக் கொண்ட தாய் அன்றிக்கே -பெற வேணும் என்று நோன்பு நோற்று தன் சரீரத்தை ஒறுத்துப் பெற்று
-இவன் பிரியத்தையே நடத்தக் கடவ தாயாய்
தந்தையாய்த் –
இப்படி நோன்பு நோற்று வருந்தி வரம் கிடந்தது பெற்ற தாயும் இட்டு வைக்கைக்கு ஒரு பை மாத்ரமாம் படி
இவனுக்கு உத்பாதனாய் ஹிதம் பார்க்கும் தந்தையாய்
அவ்வளவு அன்றிக்கே
அறியாதன யறிவித்து
சரீரமேவ மாதாபிதரௌ ஜனயத -என்னும் அளவன்றிக்கே -ஜ்ஞான விகாசத்தைப் பண்ணித் தரும் ஆசார்யனுமாய்
ச ஹி வித்யாதஸ்தம் ஜநயதி தச்ச்ரேஷ்டம் ஜன்ம -என்கிறபடியே –ஏதத் வ்ரதம் மம-மாமேகம் சரணம் வ்ரஜ -என்னுமவன் இறே
அத்தா
மஹா உபகாரகன் ஆனவனே -இவ் உபகாரங்களை-உடைமைக்கு உடையவன் ஆகையாலே செய்தான் என்கிறார்-(ஸ்வாமித்வம் / உபகாரத்வம் / ஞான பிரதத்வம் மூன்றும் அத்தா என்பதால் )
மாதா பிதா ப்ராதா நிவாசஸ் சரணம் ஸூஹ்ருத் கதிர் நாராயண -என்கிறார்
பெற்ற தாய் நீயே பிறப்பித்த தந்தை நீயே மற்றையார் யாவாரும் நீயே –பெரிய திருவந்தாதி -5-என்றார் இறே
ஸ்வாமித்வம் -உபகாரகன் -ஞான பிரதத்வம் -மூன்றும் அத்தா என்பதால் –
நீ செய்தன
ஓன்று இரண்டாகில் இறே இன்னது என்னாலாவது -ஆகையாலே நீ செய்தன -என்னும் இத்தனை-
ஸ்வாமியான நீ சேஷபூதனான என் பக்கல் பண்ணின உபகாரங்கள்
அடியேன் அறியேனே –
உபகரித்த நீ அறியில் அறியும் அத்தனை-
என்னால் சொல்லித் தலைக் கட்டப் போமோ -அனுபவித்துக் குமிழி நீருண்டு போம் இத்தனை ஒழிய -என்கிறார்
விரோதியான சரீரம் கொடுத்தவர் போலே அன்றி ஞானம் கொடுத்து அருளும் ஆச்சார்யர் –அத்தா –

——————————————————————————————-

அவதாரிகை –

ஆளவந்தார் அருளிச் செய்ததாக திருமாலை யாண்டான் பணிக்கும் படி
அறிவு நடையாடாத தசையிலே -சம்பந்த ஜ்ஞானத்தைப் பிறப்பித்து -பிறந்த ஜ்ஞானத்தை அழிக்கக் கடவதான தேக சம்பத்தோடு-(சம்சாரத்தில் வைத்தாயால்  என்பதிலே நோக்கு )-பின்னையும் வைத்தாய் என்கிற இழவாலே சொல்லுகிறார் -என்றாம்-
இத்தை எம்பெருமானார் கேட்டருளி -முன்னில் பாட்டுக்களும் பின்னில் பாட்டுக்களும் ப்ரீதியோடு நடவா நிற்க நடுவே அப்ரீதீ
தோற்றச் சொல்லுமது சேராது -ஆனபின்பு இங்கனே யாமித்தனை –
அறியா மா மாயத்து அடியேனை அறியாக் காலத்துள்ளே
அடிமைக் கண் அன்பு செய்வித்து வைத்தாயால்-என்கிறார் என்று இத்தையும் ஒரு உபகாரமாக்கி அருளிச் செய்தார்
அத்தா நீ செய்தன என்று நாம் பண்ணின உபகாரங்களைச் சொல்லா நின்றீர் அவற்றிலே நீர் மதித்து இருப்பதொரு
உபகாரத்தைச் சொல்லிக் காணீர் என்ன அத்தைச் சொல்லுகிறார் – கடந்த பாசுரத்தில் ஞான உபகாரத்தைச் சொல்லி-
-இதில் பக்தி உபகாரத்தை உரைக்கிறார்–(அடிமைக் கண் அன்பு செய்வித்து-சங்க –காம– அநுராகம்– ஸ்நேஹம் அவஸ்தைகள் -நின் கை வேட்க்கை எழுவிப்பன் -)
கையார் சக்கரம் -கீழும் மேலும் ஹர்ஷம் -5-1-4/5-நடுவில் வருத்தம் -அது போலே இங்கும் வருத்தம் என்பார் பிள்ளான்
வைத்தாய் -சம்சாரத்தில் வைத்தாய் –பிள்ளான் நிர்வாஹம்
அடிமைக் கண் அன்பு செய்வதை வைத்தான் -ஈடுபடுத்தி அருளினான் -இதுவும் உபகாரம் -எம்பெருமானார்
புன்மையாய் கருதுவார் ஆதாலால் -என்னை கொண்டான் சடகோபன் -ஒன்றை சொல் என்ன நம்பினேன் பிறர் நன் பொருள்
இங்கே பல உபகாரங்களில் ஒன்றை சொல் என்ன அருளிச் செய்கிறார்

அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து
அறியா மா மாயத்து அடியேனை வைத்தாயால்
அறியாமைக் குறளாய் நிலம் மாவலி மூவடி என்று
அறியாமை வஞ்சித்தாய் எனதாவியுள் கலந்தே –2-3-3-

இசைய மாட்டேன் என்று இருந்த என்னை மாவலியை வஞ்சித்தது போலே -அறிவித்து –ஆத்மா தாஸ்யம் -ஹரி ஸ்வாமித்வம் காட்டி -இங்கேயே வைத்து உள்ளாயே –
அபி நிவேசம் -ஆழ்வார் -ஈடுபடுப்பித்தியத்தை அருளிச் செய்கிறார் –
த்ரஷ்டும் ஸூ வ காந்த்யா –
அறியாக் காலத்துள்ளே – பால்யா-முலையோ –இவள் பரமே -திருவேங்கடம் என்று கற்கின்ற வாசகமே –
அடிமைக் கண் அன்பு செய்வித்து -தத் பலமான சேஷ வ்ருத்தியில் ஆதாரத்துடன் வைத்து -உன் உடைமையை நழுவ விடாமல் -வைத்தாய்
ஆனந்தமாகவே அருளிச் செய்கிறார்-
அன்பு -சங்க காம அனுராக சிநேக அவஸ்தைகள் -சங்கம் முதல் நிலை -காமம் -நினைத்து நினைத்து -அனுராகம் -சினேஹம் வளர
காதல் -வேட்கை -அன்பு – அவா -நான்கும் உண்டே –
அறியா மா மாயத்து -தாண்ட முடியாத சம்சாரத்தில்
அடியேனை வைத்தாயால்-அடியேனை -என்னை என்னாமல் -இத்தனை நல்லதும் அடியேன் என்பதால் பெற்றேன் –
சுத சித்தமான சேஷத்வம் இருப்பு என்பதே காரணம்
அறியாமைக் குறளாய் நிலம் மாவலி மூவடி– என்று அனந்வித பதங்க ளுமாய்-அபரிசமாப்த்யமான வாக்கியம் -வாக்மி ஸ்ரீ மான் –
அறியாமை வஞ்சித்தாய்-ஈஸ்வரன் என்று அறிவிக்கும் சுக்ராதிகள் வார்த்தை கேட்காத படி -தன்னது என்ற ஜகத்தை
எனதாவியுள் கலந்தே-எனக்கு பிரகாசிப்பித்தது

அறியாக் காலத்துள்ளே
பால்யாத் ப்ரப்ருதி ஸூஸ் நிகத -என்கிறபடியே அறிவு நடையாடாத பால்யத்திலே
அடிமைக் கண் அன்பு செய்வித்து
அடிமைக் கண் -அடிமையிலே –அஹம் சர்வம் கரிஷ்யாமி என்கிறபடியே அச்ப்ருஷ்டசம்சார கந்தரான நித்ய ஸூரிகளுடைய
பரிமாற்றத்தில் அன்றோ என்னை அன்வயிப்பித்தது
அன்பு செய்வித்து –
வரில் பொகடேன் -கெடல் தேடேன் -என்று இருக்கை அன்றிக்கே –குருஷ்வ –என்னும்படி பெறா விடில் முடியும்படி யன்றோ பண்ணிற்று
முந்தி வந்து நான் நிற்ப -உகப்பே கூவிப் பணி கொள்ளாய் –

அறியா மா மாயத்து அடியேனை வைத்தாயால்
பிள்ளாய் -ஊமத் தங்காய் தின்று பிரமித்தாரைப் போலே -அசித் சம்ஸ்ருஷ்டனாய் இருக்கிற என்னைக் கிடீர் இப்படிப் பண்ணிற்று
அறிவு கேட்டைப் பண்ணக் கடவதான பிரகிருதி சம்ஸ்ருஷ்டனாய் இருக்கிற அடியேனை -இது எங்கு சிறைப் பட்டாலும்-நல்லது நம் வஸ்து அன்றோ -என்று-வைத்தாயால்-இத் தண்ணீர் பந்தலை வைத்தாயால் -என்கிறார்
கற்பார் –நான்முகனார் -நாட்டுக்குள்ளே- நல் பாலுக்கு உய்த்தனன் –அயோத்தியிலே மோஷம் என்றுமாம் -இங்கேயே அதே அனுபவம் –
அறியா மா மாயத்து இருக்கும் போதே அடிமைக் கண் அடியேனை அன்பு செய்வித்தாய் –
பார்த்து கிரமேன மோஷம் -சிறை வைப்பது -வெறுப்பு வருமே ஆளவந்தார் -(அடியேனை -சேஷத்வ ஞானம் அறிந்து சொன்ன வார்த்தை இல்லை -எம்பெருமானார் அபிப்பிராயம் -அடிமைத்தனமும் அநாதி தானே –)வைத்தாய் -கௌரவ தொநி -அர்த்தம் வேற ராமானுஜர்-
-தண்ணீர் பந்தலை வைத்தாயே -அன்பு பக்தி பார்த்து தானே பெருமை உடன் பேசுகிறார்

அறியா மா மாயத்து அடியேனை அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்தாயால் -இதுக்கு ஒரு நல்ல நிதர்சனம் உண்டு-
அறியாமைக் குறளாய் நிலம் மாவலி மூவடி என்று அறியாமை வஞ்சித்தாய் எனதாவியுள் கலந்தே
நெஞ்சு அறியாதபடி கார்யம் செய்வாரைப் போலே -திரு மார்வில் இருக்கிற நாச்சியாரும் கூட அறியாமே- வாமன வேஷத்தை பரிக்ரஹித்து
கொள்வன் நான் மாவலி -என்றால் போலே -நிலம் மாவலி மூவடி என்று அனந்வித பாஷணங்களைப் பண்ணி –
பண்டும் இரந்து பழக்கம் உண்டாகில் இறே அந்வித பாஷணம் பண்ணுவது
அறியாமை வஞ்சித்தாய் –
சுக்ராதிகள் -இவன் சர்வேஸ்வரன் -தேவ கார்யம் செய்ய வந்தான் -உன் சர்வஸ்வத்தையும் அபஹரிக்க வந்தான் -என்றால்
அவர்கள் பாசுரம் செவிப் படாத படி தன் பேச்சாலே அவனை அறிவு கெடுத்து வஞ்சித்தான் யாயிற்று
எங்கு சிறைப் பட்டாலும் –தாமதாக கைக் கொள்வோம் -என்று வெறுப்புடன் ஆளவந்தார் நிர்வாஹம் அடியாக அருளிச் செய்து
தண்ணீர் பந்தல் –கைங்கர்யத்தில் அன்பை வளர்த்து அருளினாய் -என்று எம்பெருமானார் நிர்வாஹம் அடியாக அருளிச் செய்கிறார் –
அப்படியே எனதாவியுள் கலந்து –
நான் இருக்கிற இடத்தளவும் வந்து -என்னோடு கலந்து -அத்யந்தம் அந்ய பரனான என் ஆத்மாவிலே புகுந்து உன் குண சேஷ்டிதங்களாலே வசீகரித்து
அறியாமைக் குறளாய் நிலம் மா வலி மூவடி என்று அறியாமை வஞ்சித்தால் போல எனது ஆவியுள் கலந்து
அறியா மா மாயத்து அடியேனை அறியா காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து வைத்தாயால் -என்று அந்வயம் –

—————————————————————————————–

அவதாரிகை –

வைத்தாயால் என்று அவன் பண்ணின உபகாரத்தை அனுசந்தித்து இங்கனே கிடந்து நெஞ்சாறல் படா நில்லாதே
பிரத்யுபகாரமாக உம்மதாய் இருப்பதொரு வஸ்துவைக் கொடுத்து நெஞ்சாறல் தீர மாட்டீரோ -என்ன
அப்படியே இறே செய்வது என்று அவன் திருவடிகளிலே ஆத்ம சமர்ப்பணத்தைப் பண்ணி அனுசயிக்கிறார் –
அனுசயிக்கிறார் -மறுபடியும் துன்பம் வெட்கம் படுகிறார் –

எனதாவியுள் கலந்த பெரு நல்லுதவிக் கைம்மாறு
எனதாவி தந்து ஒழிந்தேன் இனி மீள்வது என்பதுண்டே
எனதாவி யாவியும் நீ பொழில் எழும் உண்ட எந்தாய்
எனதாவி யார் யானார் தந்த நீ கொண்டாக்கினையே –-2-3-4-

ஸ்வரூப -பல -பர சமர்ப்பணம் -அஹம்- மத் பர ரஷணம் – பல ரஷணம் -அவரதை அவர் ஏற்றுக் கொண்டார் –
அத்யந்த பரதந்த்ரர் -பிரதானம் -அவனே –அசித் வத் பாரதந்த்ர்யமாக வளர வேண்டுமே –
சேஷத்வ ஞானம் வந்தால் சமர்ப்பிக்கவும் -அது வளர்ந்து அத்யந்த பாரதந்த்ர்யம் வந்த பின்பு அதற்கு வெட்கப் படவும் வேண்டும் –
கல்லுபோலே கட்டை போலே வைத்த இடத்திலே இருக்க வேண்டும் -அவனதை அவன் இடம் சமர்ப்பிக்க கூடாதே
இரண்டும் இந்த பாசுரத்தில் உண்டே -ஸ்தோத்ர ரத்னம் -52-சமர்ப்பித்து அடுத்து -53-எத்தை சமர்ப்பிப்பேன்-மயா சமர்ப்பித்த -அதவா கிந்து சமர்ப்பயாமி தே-என்றார் இறே-என்றாரே -இரண்டும் மாறி மாறி வருமே
1–சேஷத்வம் அசேதனதுக்கும் சேதனதுக்கும் பொது -சமர்ப்பித்தால் தான் அசேதன வியாவர்த்தி -சைதன்ய கார்யம் வெளிப்பாடு –
2-சமர்ப்பித்தவனுக்கு தானே மோஷம் -ஜீவர்களுக்கும் வியாவர்த்தி இதுவே
3-யாருடையதை யார் இடம் கொடுத்தோம் -அத்யந்த பரதந்த்ராயம் அறிந்து -இட்ட கால் இட்ட கையாய் அவன் வைத்த இடத்திலே இருக்க வேண்டுமே
பிராரப்த கர்மா தொலைக்கும் சக்தர் நாம் இல்லையே -சரணாகதி -ஆத்மா சமர்ப்பணமும் வெட்கமும் லஜ்ஜையும் மானசீகமே-

பிரத்யுபகாரம் இல்லை என்கிறார்
பொழில் எழும் உண்ட எந்தாய் -சமஸ்த லோகங்களையும் ரஷித்து -என்னையும் ரஷித்து
எனதாவியுள் கலந்த பெரு நல்லுதவிக் கைம்மாறு –-உதவி /நல்லுதவி /பெரு நல்லுதவி -மூன்றும் -நிர்ஹேதுகமாக-தன் பேறாக-
எனதாவி தந்து ஒழிந்தேன் -இனி மீள்வது என்பதுண்டே -இல்லையே —எனதாவியாவியும் நீ -அந்தராத்மா -தாரகம் -நீயே
எனதாவியார் யானார் -சரீரி பிரகாரி -சரணாகதி -ஆத்மா சமர்ப்பணம் என்னும் -கர்மமும் நான் இட்ட வழக்கு இல்லை கர்த்ருத்வமும் எனது வசத்தில் இல்லை-
தந்த நீ கொண்டாக்கினையே-உருவாக்கின நீயே -சேர்த்து கொண்டதும் நீ -ஞாத்ருத்வ கர்த்ருத்வாதி -சத்தையும் நீயே -நீரே ச்வீகரித்தாய் –
உம் ஆனந்ததுக்காக -உம் சொத்தை -நீரே திருவடிகளில் சேர்த்துக் கொண்டீர் –

எனதாவியுள் கலந்த
அநாதி காலம் சம்சாரத்திலே வாசனை பண்ணிப் போந்த என்னுடைய ஆத்ம வஸ்துவிலே கிடீர் வந்து கலந்தது
எனதாவி
வசிஷ்டன் சண்டாள ஸ்ரேணியிலே புகுந்தால் போலே தம்மை அனுசந்திக்கிறார்
நீசனேன் என்று இறே தம்மை அனுசந்திப்பது
உள் கலந்த –
அது தன்னிலும் கடக்க நின்று சில போக மோஷங்களை தந்து போகை அன்றிக்கே
எல்லாம் தன்னுள்ளே கலந்து ஒழிந்தோம் -என்னும்படி கலப்பதே
கடக்க நிற்றல் –
பிராப்யன் அன்றிக்கே ஒழிகை -உபாயமாத்ரமாக -பல நீ காட்டி படுப்பாயோ
மோஷயிஷ்யாமி-சங்கல்பித்து -ரசத்தை அனுபவிப்பிக்காமல் -நாளை ஆவாய் -தள்ளி
பெரு நல்லுதவிக்
உதவி –யாவது -உபகரிக்கை
நல்லுதவி -யாவது -பச்சை கொள்ளாதே உபகரிக்கை
பெரு நல்லுதவி -யாவது தன் பேறாக உபகரிக்கை
கைம்மாறு
இம் மஹோ உபகாரத்துக்கு -பிரத்யுபகாரமாக
எனதாவி தந்து ஒழிந்தேன்
என்னுடைய ஆத்ம வஸ்துவை தேவர் திருவடிகளிலே சமர்ப்பித்தேன்
அழகிது இது தான் எத்தனை குளிக்கு நிற்கும் என்றான் ஈஸ்வரன் –
இனி மீள்வது என்பதுண்டே
சத்யோ தசாஹமாகத் தந்தேன் -தசாஹம் -10 நாள் -உடனேயாக 10 நாளை தந்தேன் -தந்ததை வாங்க மாட்டேன் என்றபடி-

அழகிது- நீர் தாம் ஆரத்தை ஆருக்கு தந்தீர் -என்று ஆராய்ந்து பார்த்துக் காணும் -என்றான் ஈஸ்வரன் -ஆராய்ந்தவாறே
அவனதை அவனுக்கு கொடுத்ததாய் இருந்தது
எனதாவியாவியும் நீ
எனது ஆத்மாவுக்கு அந்தராத்மாவாக புகுந்து நிற்கிறாயும் நீயாய் இருந்தாய்
பகவத் அதீயமான வஸ்துவை –நெடு நாள் நம்மது என்று இருந்து –இத்தை இன்று அவன் பக்கலிலே
சமர்ப்பித்தோம் -சர்வஜ்ஞனாவன் என் நினைந்து இருக்கும் -என்று அத்தை அறிந்து அதுக்கு லஜ்ஜிக்கிறார்
உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறுதி –திருமாலை -34-
ஆத்ம சமர்ப்பணம் பண்ணா விடில் சர்வ முக்தி பிரசங்கமாம் -சமர்ப்பிக்கில் அவனதான வஸ்துவை அவனுக்கு கொடுத்ததாம்
-ஆனால் செய்ய அடுப்பது என்-என்னில்
பிராந்தி சமயத்தில் சமர்ப்பிக்கவும் வேணும் -தெளிந்தால் கொடுத்தோம் என்று இருக்கக் கடவன் அல்லன் –
மயா சமர்ப்பித்த -அதவா கிந்து சமர்ப்பயாமி தே-என்றார் இறே-

பிரத்யுபகாரம் பண்ண முடியாமல்- முயல்கின்றேன் உன் தன் மொய் கழற்கே -என்று சொல்வதே நமக்கு கிருத்தியம் –
ஸ்வரூப சிஷை பண்ணுகிறார்-1- -பிரபுத்த தீ -விளங்கிய ஞானம் –2-அப்ரபுத்த தீ –விளங்காத ஞானம் –3-அதி அப்ரபுத்த தீ -ரொம்பவும் விளங்காத ஞானம் -மூன்று நிலைகள் உண்டே –
சேஷத்வ ஞானம் மட்டும் -பாரதந்த்ர்யா ஞானம் இல்லாத நடு நிலை -பிராந்தி நிலை -என்றவாறு –
ஸ்ரத்தா ஈடுபாட்டால் -ஆத்ம சமர்ப்பணம் பண்ணி —
ஸ்வரூப சமர்ப்பணம் -முதல் -ஆத்ம சமர்ப்பணம் -பிரணவ அர்த்தம்
பர சமர்ப்பணம் -உபாயம் அவன் –நம அர்த்தம் –
பல சமர்ப்பணம் -நாராயணாய-அனுபவிப்பதும் அவனே –
அஹம் ந மம -பரம் ந மம -பல ந மம-மூன்றும் சொன்னபடி –
ஸ்வரூப சமர்ப்பணம் -ஸ்வத -சித்தமான ஜீவாத்மா சேஷன் -சேஷ பூதன் என்று அனுசந்திக்கையே -நினைப்பதே -ஸ்வரூப சமர்ப்பணம் –
நான் உன் சொத்து என்பதில் குற்றம் இல்லையே -சமர்ப்பணம் தானே கூடாது –
அப்ரபுத்த புத்தருக்கு தோற்றும் -சமர்ப்பிக்க -நம் வஸ்துவை அவனுக்கு சமர்பிக்கை-என்று -ஞானம் விளக்கம் இல்லாதவர்களுக்கு –
அவனதான ஆத்மவஸ்துவை அவனுக்கு சமர்ப்பிக்க முடியாதே –
சமரிப்பித்தான் ஆகிலும் -சேஷத்வ ஞானம் வந்ததே என்று –பரம புருஷார்த்த சித்தியில் தட்டு இல்லை –
பிரபுத்தன் அவனே ஆகி பாரதந்த்ர்ய ஞானம் வந்த பின்பு சமர்ப்பித்தோம் என்ற ஞானம் வந்தால் பண்ணின பிரதிபத்தி கார்யகரம் ஆகும்
விதி அன்று -அனுவாதம் -தெளிந்த உடனே கொடுத்தோம் அல்லோம் -என்ற எண்ணம் விதி இல்லை –
சரீராதிகளில் ஏதேனுமாகிறேன் -குணங்களிலும் ஏதேனும் -ஞானவான் -ஆகிலும் -கல் போலவும் –தத் அஹம்--தவ பாத பத்மயோக -ஷணத்தில்-சமர்ப்பிக்கப் பட்டது –சர்வம் தயைய மாதவ நாதனே -நியதஸ்-எப்பொழுதும் உன்னது--பிரபுத்த தீ -கின்னு சமர்ப்பயாமி -ஆளவந்தார் –திருஷ்டாந்தம் ஆபாத பிரதிதீ -சமர்ப்பணம் -முதல் ஸ்லோகத்தில்--மம நாத -என்பதே சமர்ப்பணத்தின் விவரணம் -ச்வகீய பதார்த்தத்தின் உடைய பர சொத்து ஆபாதனம் -ஆக்குவதே சமர்ப்பணம்
இங்கே நம்மதாகியதே இல்லையே -அந்த அர்த்தத்தை இங்கே சங்கித்துக் கொண்டு பரிகரிக்கிறார் –பிரபத்யே -சமர்ப்பணம் -சப்த பிரயோகம் –
அதன் அர்த்தம் நிஷ்கர்ஷிக்க -அர்த்தாந்தரம் பூர்வ பஷமாக கொண்டு -ஆத்ம சமர்ப்பணம் -பூர்வ பஷம் -சேஷத்வ அனுசந்தானமே அர்த்தம் –
ஸ்வாபாவிக தாஸ்ய அனுசந்தானமே ஸ்வரூப சமர்ப்பணம் என்கிறார் –
ஆழ்வாருக்கு -பிராந்தி கூடும் -பதட்டத்தில் -ஆளவந்தாருக்கு பதட்டம் இல்லை -ஆழ்வாரை பற்றிய தெளிவு உண்டே –
அதனால் ஆத்ம சமர்ப்பணமும் வெட்கப்படவும் கூடும் –
லோகத்தில் உள்ளாருக்கு தெளிவு படுத்த சமர்ப்பண சப்தம் உபயோகிக்கிறார் பரமாச்சார்யர் –
சமர்ப்பண அர்த்தம் தெளிவு படுத்தவே இந்த இரண்டு ஸ்லோகங்களும் -ஆச்சான் பிள்ளை ஸ்தோத்ர ரத்னம் வியாக்யானம் –
எம்மத்தை நான் சமர்ப்பித்தேன் -வெட்கி -உம்மைத்தை நீர் ச்வீகரித்தீர் –என்ற உணர்வு வர வேண்டும் –ஆத்ம சமர்ப்பணமும் ஆத்ம அபஹாரத்துடன் ஒக்குமே –
-அநாதி காலமான அவித்யா சித்தமான –ஸ்வா தந்த்ரம் அடியாக -பகவத் வைமுக்யம் பிறந்து -அத்தாலே ஹதன் என்று பீதி பிறந்த அளவிலே –
சம்சாரத்தில் அடிக் கொதிப்பு வேண்டுமே -முக்தனாக -சேஷத்வ அனுசந்தானம் பிறக்க -அந்த நினைவே -ததீயத்வ அனுசந்தானம்
-தாஸ்ய சங்கல்பம் -உறுதி எடுப்பது -பூர்வ பஷம்-இது -ராஜா உடைய ஆபரணம் ரஷித்து வைத்து பிராப்த காலங்களில்
சமர்ப்பிக்குமா போலே -கொடுப்பதும் -பூர்வ பஷம்
ததீயத்வம் சேதன அசேதன சாதாரணம் -தாஸ்யம் சேதனத்வ அசாதாரணம் -சங்கல்பம் எனபது இச்சையால் சாதிப்பது –
திருமாலே நானும் உனக்கு பழ வடியேன் –
தாஸ்யம் பழையது -சங்கல்பம் பண்ண கூடாதே –
இவை இரண்டும் சமர்ப்பணம் சப்தமாக சம்பாவிதம் –
இவை அனுசய ஹேது -லஜ்ஜைக்கு காரணம் -பண்டே அவனது வஸ்துவை அவனது என்று இசைகையே -என்னது என்ற எண்ணத்தால் சமர்பிக்க கூடாதே
சங்கல்பம் -தாஸ்யதுக்கு இச்சையால் சாதிப்பது தோற்றும் -புரிந்து கொள்வது ஏற்றுக் கொள்வது ஒன்றே சரி –
அவரது என்று நினைத்த அன்றே ஸ்வரூப ஞானம் பிறந்ததாக ஆகுமே -ராஜா ஆபரண திருஷ்டாந்தம் ஒவ்வாது
அத்தை செய்ததாக கொண்டு வெட்கப்படுகிறார்
இரண்டும் யாவன் மோஷம் அனுவர்த்திக்கக் கடவது -ஆழ்வாருக்கு பிராந்தியா
ஈஸ்வரன் ஸ்வ அபிலஷித புருஷார்த்த சித்திக்காக ஆழ்வார்களை இங்கே இருத்தி வைத்து -பிராப்ய த்வரை அதிசயத்தால் கூப்பிட்டு
நாம் பச்சை இடாமல் இறே இங்கே வைக்கிறான் என்று சமர்ப்பித்து பின்பு வெட்கப்படுகிறார் -அவருக்கு முதல் அடியிலே அத்யந்த பாரதந்த்ர்யம் உண்டே –

பொழில் எழும் உண்ட எந்தாய் –
ஸ்வாபாவிகமான சேஷித்வம் கொண்டு சொல்ல வேணுமோ
பிரளய ஆபத்தில் வயிற்றிலே வைத்து நோக்கின அது போராதோ-நீ சேஷி என்கைக்கு –
எந்தாய் –
பிரளய ஆபத்தில் நசியாதபடி ஜகத்தை ரஷித்தால் போலே பிரிந்து நசியாதபடி என்னோடு கலந்து அடிமை கொண்டவன் -என்னவுமாம்
எனதாவியார் யான் யார்
பிரதேயமான வஸ்து ஆரது-பிரதாதா ஆருடையவன் –நான் என் ஆத்மாவை சமர்ப்பித்தேன் -என்னக் கடவேனோ –
சமர்பிக்கும் ஜீவாத்மா சமர்பிக்கப்படும் ஜீவாத்மா இரண்டு இல்லையே -ஒன்றே -அதுவும் அவனதே –
தந்த நீ கொண்டாக்கினையே
முதலிலே இத்தை உண்டாக்கின நீயே கொண்டாய் யானாய் -உண்டாக்குகை யாவது என் நித்ய வஸ்துவை என்னில்
இச்சாத ஏவ தவ விஸ்வ பதார்த்த சத்தா -என்று அவனுடைய நித்ய இச்சையாலே இறே இதினுடைய நித்யத்வம் –
இச்சா ஒன்றாலே நித்ய வஸ்துக்கள் சத்யை – –விஸ்வ பதார்த்தங்களுக்கும் சத்யை அவன் சங்கல்பத்தினாலே –

—————————————————————————————–

அவதாரிகை –

ஜ்ஞான லாபமே அமையுமோ –ப்ராப்தி வேண்டாவோ -என்ன -எனக்கு பிரதம ஸூக்ருதமும் நீயேயாய்-என்னை சம்சாரிகளிலே
வ்யாவ்ருத்தன் ஆக்கின அன்றே பெற்றேனே யன்றோ என்கிறார் -சேஷத்வம் ஸ்வதா சித்தம் –
அறியாதன அறிவித்த அத்தா -என்றீரே –ஞானம் வேண்டாவோ என்ன–தனியேன் வாழ் முதலே உனபாதம் சேர்ந்தேனே -பிராப்தி -என்கிறார் –

இனியார் ஞானங்களால் எடுக்கல் எழாத வெந்தாய்
கனிவார் வீட்டின்பமே என் கடல் படா வமுதே
தனியேன் வாழ் முதலே பொழில் ஏழும் ஏனம் ஒன்றாய்
நுனியார் கோட்டில் வைத்தாய் யுனபாதம் சேர்ந்தேனே –-2-3-5-

அப்ராருத போக்யதைக் காட்டி –ருசி ஜனகன் -ஆனபடியால் -உன் திருவடிகளைப் பெற்றேன் அல்லேனோ
யார் ஞானங்களால் -அதிசயித ஞானங்கள் கொண்டவராலும்
எடுக்கல் எழாத வெந்தாய்-பிடிபடாதவனே –யதோ வாசோ நிவர்த்தந்தே -ஸ்வாமி-எடுக்கல் -தம் வசம் ஆக்குதல்
காம்பீர்யம் -ஆழம் காண முடியாதவர் –
கனிவார் வீட்டின்பமே-ச்நேஹத்தாலே -பரி பக்குவ ஹிருதயப் பட்டு இருப்பார்க்கு -மோஷ ஆனந்த பூதனாய்
உபய வியாவர்த்தனான எனக்கு -முன்பு சொன்ன ஞானம் பக்தி இல்லாத எனக்கு –
என் கடல் படா வமுதே -மதனாதி யத்னத்தால் -உப்புச்சாறு கடல் பட்ட அமுது -சாத்தியம் -என்றவாறு –
தனியேன்-சம்சாரத்தில் பொருந்தாத தனியேன் -நம் கோஷ்டி இல்லை /நித்ய முக்த கோஷ்டியும் இல்லை /ஈஸ்வர கோஷ்டியும் இல்லை
/முமுஷு போலேவும் இல்லை த்வரை விஞ்சி -த்ருதீய விபூதி
வாழ் முதலே -த்வத் அனுபவ ரூபமான வாழ்வுக்கு -ருசி ஜனகத்வாதியால் -பிரதம ஹேது பூதன் ஆனவனே
பொழில் ஏழும் ஏனம் ஒன்றாய் -நான் கண்ட நல்லதுவே -என்றாரே
நுனியார் கோட்டில் வைத்தாய்-கோரைப்பற்கள் கோடு-நிபிடமாக -சம்சார சாகரத்தில் இருந்து ஆழ்வாரை எடுக்க செய்த இந்த சேஷ்டிதம் இது -சூசகம் இது
சப்த தீபங்கள் -உக்தமான ஜகத்தை -அத்விதீயமான மானம் இல்லா பன்றியாய்
கூர்ந்து உள்ள கொம்பிலே வைத்தாய்
இனி-நீயே ஹேது பூதனான பின்பு இழக்க வாய்ப்பு இல்லையே
யுனபாதம் சேர்ந்தேனே-பிராபித்தேன் -தேற்ற ஏகாரம் –

இனியார் ஞானங்களால் எடுக்கல் எழாத வெந்தாய்
இனி -மேலே அன்வயம்
யார் ஞானங்களால் எடுக்கல் எழாத வெந்தாய்-
எத்தனையேனும் அதிசயித ஜ்ஞானரானவர்களுடைய ஜ்ஞான விசேஷங்களாலும் ஸ்வ யத்னத்தாலே அறியப் பார்க்கும் அன்று
பேர்க்கப் பேராது இருக்கிற என் நாயகனே –அறிகை -1-தெரிந்து கொள்ளுதல் /2-எடுக்கப் பார்ப்பது
அதாவது -துர்யோதனனாலே பரிச்சேதித்தல் ராவணனால் எடுக்கலாய் இருத்தல் செய்ய அரிதாய் இருக்கை
-ஞானங்களாலும் -அறிவு -ஐஸ்வர்யம்-(பலசாலி) உள்ளாராலும் –எழான்
-எடுக்கிலும் எழான் -என்றபடி -பரதானுஜனை தூக்க முடியவில்லையே -அவனே பாரம் என்பதால் -லகுத்வம் –கபே-யார் -பல உச்சாராயம் பற்ற –ஆனுகூல்ய லேசமே வேண்டுவது –

கனிவார் வீட்டின்பமே-
நீ என்றால் உள் கனிந்து பக்வமாய் இருக்குமவர்களுக்கு மோஷ ஸூகமானவனே
அன்றியே -நீ என்றால் இனியராய் இருக்குமவர்கள் இருப்பிடத்திலே வந்து அவர்களுக்கு ஆனந்தத்தை விளைக்குமவனே-
அப்படி எங்கே கண்டோம் என்னில் –யசோதைப் பிராட்டி தொல்லை இன்பத்து இறுதி கண்டாளே-
தொழுத கை -சுனை கேடன் -பெண்களை ஒரு சேர காண -உன் புண்ணியத்தால் -அதற்கு நன்றி –

ஸ்வரூப க்ருத தாஸ்யம் -தாதுகன் ஆனாலும் கனிய வேண்டும்-
வீட்டின்ப இன்பப் பாக்களில் த்ரவ்ய பாஷா நிரூபண சமம் இன்ப மாரியில் ஆராய்ச்சி -ஆச்சார்ய ஹிருதயம் சூர்ணிகை -75
வீட்டின்பத்தில் த்ரவ்ய நிரூபணம் பண்ணாதே -இன்பப் பாக்களில் பாஷா நிரூபணம் பண்ணாதே
இன்ப மாரியில் ஜாதி நிரூபணம் பண்ணாதே –இவை மாத்ரு யோனி பரிஷை உடன் ஒக்கும்-என்று பிள்ளை லோகாச்சார்யார் அருளிச் செய்தார் –

என் கடல் படா வமுதே
அவ்விரண்டு கோடியிலும் எண்ண ஒண்ணாத படி இருக்கிற எனக்கு அயத்ன சித்த போக்யனானவனே-

பிராப்யத்வம் -சொல்லிற்று கடல் படா அமுது என்று
சத்ருக்கள் -அநாஸ்ரிதர் -ஆஸ்ரிதை யசோதை -இரண்டு கோடியில் சேராமல் அத்வேஷம் மாத்ரம் உள்ள என்னிடம்
அன்றிக்கே – ஸூஷ்க சாஸ்திர ஜன்ய ஞாநாதிக கோஷ்டியிலும் -பக்திமான் கோஷ்டியிலும் -இந்த இரண்டு கோடியிலும்
இல்லாத என்னை –நிர்ஹேதுகமாக அருளினாய்-
தனியேன் வாழ் முதலே
தனியேனான என்னுடைய அனுபவத்துக்கு பிரதம ஸூக்ருதம் ஆனவனே
ஏகாஷீ-ஏக கரணிகள் நடுவே இருந்தால் போலே பிராட்டி -இவருக்கும் தனியாய் இருக்கும் இறே சம்சாரத்தில் இருப்பு
700 ரஷசிகள் நடுவில் சீதா பிராட்டி –இவர் 700 கோடி சம்சாரிகள் நடுவில்
மானுக்கு நரி கூட்டங்கள் போலே
-லங்கா சிறையில் விதேக ராஜா மகள் நியாயம் -சீதை -ஆத்மா -உப்புக்கடல் -சம்சார சாகரம் /பத்து இந்த்ரியங்கள் மனஸ்
/பரமாத்மா விருத்தாந்தம் அறியாமல் /ஆச்சார்யர் -சங்கு சக்கர லாஞ்சனை
ராமன் நம்மை பற்றி அறிவான் -அங்கு இருவருக்கும் தெரியாது -அங்கே சீதை பணிய வில்லை
-நாம் ஆக்கையின் வழி சென்று உழல்கின்றோம் -இரண்டு வாசிகள் உண்டே

பொழில் ஏழும் ஏனம் ஒன்றாய் –
தனிமையில் வந்து உதவும் படியைச் சொல்லுகிறது
அத்விதீய மகா வராஹ வேஷத்தை பரிக்ரஹித்து -பிரளயம் கொண்ட புவனங்கள் ஏழையும் எடுத்து
பெரும் கேழலார் பெரும் கண் மலர் புண்டரீகம் நம் மேல் ஒருங்கே பிறள வைத்தார் -எங்கும் பக்க நோக்கு அறியான் என் பைம் தாமரைக் கண்ணன்
நுனியார் கோட்டில் வைத்தாய்
நுனி -என்று கூர்மை –ஆருகை மிகுதி -கூர்மை மிக்க கோட்டிலே வைத்தாய் என்றபடி -இத்தால் ரஷ்ய வர்க்கத்தின் அளவில்லாத
ரஷகனுடைய பாரிப்பைச் சொல்கிறது –சிலம்பினிடை சிறு பரல் போல் மேரு –
-இனி -யுனபாதம் சேர்ந்தேனே –
1-பிரளயம் கொண்ட பூமியை எடுத்தால் போலே சம்சார பிரளயம் கொண்ட என்னை எடுத்த போதே -தேவர் திருவடிகளை நான் கிட்டினேனே யன்றோ
2-இமையோர் தலைவா இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை -என்னும்படி அறிவை தந்த போதே உன் திருவடிகளைப் பெற்றேன் அன்றோ
3- வாயும் திரை உகளும் விசனம் தீர ஊனில் வாழ் உயிரே கலந்து தீர்ந்து -அன்றே பெற்றேன்-4-நீயும் நானும் ஸூதகா சித்தம் -அப்பொழுதே -என்றவாறு /
5-அறியாதது அறிவித்த அத்தா என்ற அப்புறம் இப்படி பல அர்த்தங்கள் -இனி -என்றதுக்கு

—————————————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: