பகவத் விஷயம் காலஷேபம் -51– திருவாய்மொழி – -2-1-6 ….2-1-11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

அவதாரிகை –

மேகத்தின் அருகே கலா மாத்ரமான-பிரதமை – சந்தரன் தோற்றினான் -அவனைப் பார்த்து உன் வடிவில் எழில் இழந்தாயாகாதே -என்கிறாள்

நைவாய வெம்மே போல் நாண் மதியே நீ இந்நாள்
மைவான் இருள் அகற்றாய் மாழாந்து தேம்புதியால்
ஐ வாயரவணை மேல் ஆழிப் பெருமானார்
மெய் வாசகம் கேட்டு உன் மெய்ந்நீர்மை தோற்றாயே –-2-1-6-

எங்களைப் போலே சத்யா வாதத்தில் அகப்பட்டாயோ -பிறைச் சந்த்ரனை –
நைவாய வெம்மே போல் -நைவு -நொந்து போவது இளைத்து போவது -இதுவே ஸ்வா பாவமாக –
நாண் மதியே -புதிதாக உதிக்கும் சந்தரன் -தலைச் சங்க நாண் மதிய பெருமாள் -நாளுக்கு நாளுக்கு வளரும் -உதிக்கும் -கலா-தேஜோ ரூபமான நீ-
அஷ்டமி சந்தரன் நெற்றிக்கு  உபமானம் சொல்லுவார்
மை வான் இருள் அகற்றாய்-மை போன்ற ஆகாசத்தில் இருளை போக்குகிறாய் இல்லையே -கருத்த பெரிய- என்றுமாம்
மாழாந்து தேம்புதியால் -ஒளி மங்கி வருந்துகிறாய் -மழுங்கி குறையா நின்றாய்
ஐ வாயரவணை மேல் -பொய்மைக்கு பல முகம் –ஐந்து முகம் -இரண்டு நாக்கு -மேலே பொய் வாசகம் சொல்வதற்கு -அடி –
ஆழிப் பெருமானார் -பொய் சாட்சிக்கு இந்த திரு ஆழி –
கொங்கு உண் வண்டே கரியாக வந்தான் -பரகால நாயகிக்கு -பெரு நிலை நிற்கும் -வாசலில்காவல் இருந்து –
பொய் பாடசாலையில் பெருமை உள்ளவன்
மெய் வாசகம் கேட்டு-விபரீத லஷணை-பொய் வாசகம் -பெரும் பொய்யான வார்த்தை
உன் மெய்ந்நீர்மை தோற்றாயே-உண்மையான வடிவில் நீர்மை -உஜ்வல பாவம் தோற்றாயே -சரீர ஒளி தோற்று என்று –
உஜ்ஜ்வல ஸ்வ பாவரான ஒளி -உக்தி வியர்த்த சங்கை -கனத்தால் ஒளி இழந்து போவார்-சொல்லும் பொய்யானால் யானும் பிறந்தமை பொய்யாகுமோ

நைவாய வெம்மே போல் –
1–நைவை யுடைய எங்களைப் போலே -என்னுதல் -நைவு வாய -நைவுக்கு இடமாய் –
2–நைவு தான் ஒரு வடிவு கொண்டால் போலே என்னுதல் —நைவு ஆய -என்றபடி -கிருஷ்ண த்ருஷ்ணாவால் ஏற்பட நைவு –
வெம்மே-எங்களை -கீழ் சொன்ன நாரை –அன்றில் –வானம் அனைத்தையும் சேர்த்து
ச பங்காம் –பூமியில் நின்றும் தோற்றின போது போலே இருந்தாள்–அசோகா வனத்தில் அழுக்கு-
அநலங்காராம் -அத்தால் அழித்து ஒப்பிக்கும் அவர் அசந்நிதியாலே ஒப்பனை யழிந்து இருந்தாள்-
விபத்மாமிவ பத்மிநீம் –பெருமாள் வந்தாலும் இவ்வாஸ்ரயத்தை உண்டாக்க ஒண்ணாது என்னும்படி முதலிலே
தாமரை குடி போன -குடி பெயர்ந்த -பொய்கை போலே இருந்தாள்-
விரீடிதாம் பரிம்லானாம் -தபஸ்வினீம்
அவ்யக்தலேகாமிவ சந்திர லேகாம் -சுந்தர -15-21–போய்த் தேய்ந்தற்ற படிக்கும் வைவர்ண்யத்துக்கும் நிதர்சனமாகச் சொல்லுகிறது
பாம்ஸூ பிரதிக்தாமிவ ஹேமலேகாம் -நற்சரக்குக்கு வந்த அழுக்கு என்று தோற்ற இருந்தாள்
ஷதப்ரூடாமிவ பாணலேகாம்-அம்புவாய் உள்ளே கிடக்க புறம்புவாய் சமாதானம் பண்ணினால் போலே -அகவாயில் இழவு பெரிது என்று தோற்ற இருந்தாள்
வாயுப்ரபக் நாமிவ மேகலேகாம் -பெரும் காற்றாலே சிதற அடியுண்ட மேகசகலம் போலே இருந்தாள்
சகலம் -சின்ன பகுதி -மேக சிதறுகள் –மின்னல் என்றுமாம் –சூறாவளிக் காற்று ராவணன் -/மேகம் பெரு/மின்னல் சீதா/ என்றவாறு –
வதததாம் வரன் -பேச்சாளிகளில் சிறந்தராமன் –

நாண் மதியே-
நாளால் பூர்ணனான சந்த்ரனே -பண்டு பூர்ணனாகக் கண்டு வைக்குமே -சம்ச்லேஷ தசையிலே –
நாட்பூ என்னுமா போலே இள மதியே என்றுமாம் -தர்ச நீயமான என்றவாறே –
நீ இந்நாள்
தர்ச நீயனான நீ -இக்காலம்
மைவான் இருள் அகற்றாய் மாழாந்து தேம்புதியால்
இப்படி குறையற்று இருக்கக் கடவ நீ இக்காலத்தில் வந்தவாறே ஆகாசத்தில் கறுத்த இருளை போக்க மாட்டு கிறிலை என்னுதல்
எதிரி எளியன் ஆனால் சத்ருக்கள் கூட நின்று உறுமுமா போலே மேலிடா நின்றது
சஹாவஸ்ததானமும் உண்டாகா நின்றதீ –சஹ அவஸ்தானம் -சந்த்ரனுக்கும் இருளுக்கும் உண்டானதே –
மாழாந்து தேம்புதியால்
ஒளி மழுங்கி குறைந்து இரா நின்றாய்
ஐவாயரவணை மேல்
அவருடைய பெரும் பொய்யிலே அகப்பட்டாயாகாதே நீ
தம் பாம்பு போலே நாவும் இரண்டு உளவாயிற்று-நாச் -10-3-என்கிறபடியே தமக்கு பொய் சொல்ல ஒரு வாய் உண்டாகில்
தம் பரிகரத்துக்கு அஞ்சு வாய் உண்டு -அவனுக்கு பள்ளித் தோழமை பலித்த படி
படுக்கை ஸ்வ பாவமும் -கூடப் படித்த இளைய பெருமாள் படியும் பெருமாளுக்கு வந்ததே –
ஆழிப் பெருமானார்-
அல்லாத பரிகரமோ தான் நன்றாக இருக்கிறது
தாம் பகலை இரவாக்க நினைக்கில் அதுக்கு பெரு நிலை -காவல் -நிற்கும் பரிகரம்
பேறு அவர்களே யானால் இழவிலும் இன்னாதாக பிராப்தி யுண்டு -என்கை
பெருமானார் –
அவர்களுக்கும் தம் பக்கலிலே பொய் ஓத வேண்டும் படி பொய்யால் பெரியவர்
பொய்ந்நம்பி புள்ளுவன் கள்வம் பொதியறை –பெரிய திருமொழி -10-7-4-என்னக் கடவது இறே
ஆழிப் பெருமானார் மெய் வாசகம் –என்னவே பொய் என்று பிரசித்தமாய் இருக்கும் போலே காணும் -மெய் கலவாத பொய் அன்றோ இவனது –
பொய் என்னாது ஒழிவான் ஏன் என்னில் பொய் என்னில் நாட்டார் பொய்யோ பாதி யாமே —பொல்லா மணியை என்னுமா போலே –
மெய் வாசகம் கேட்டு
அவர் ஏதத் வ்ரதம் மம-என்ற வார்த்தை கேட்டே–பெருமாள் சரம ஸ்லோகம் -தர்மி ஐக்கியம் உண்டே – நீயும் இப்படி அகப்பட்டது-
கூனே சிதைய உண்டை வில் தெறித்தாய் கோவிந்தா -போம் பழி எல்லாம் அமணன் தலையிலே முடியுமே –
இப்போது உதவாமையாலே பொய் என்று இருக்கிறாள் இறே
ராமாவதாரத்தில் மெய்யும் கிருஷ்ணாவதாரத்தில் பொய்யும் இறே ஆஸ்ரிதர்க்கு தஞ்சம் -அவரே தஞ்சம்-
உன் மெய்ந்நீர்மை தோற்றாயே
உன் வடிவில் எழில் இழந்தாயாகாதே
தர்ச நீயமான தண்ணளியேயாய் லோக உபகாரகமான உன் உடம்பின் ஒளியை யாகாதே இழந்தது –

இந்தோ -கோபிகள் -கூப்பிட -முகுந்தன் -விஸ்ரம்ப்ய -வாய் பேச்சை நம்பினாயே-இருள் கூடி சந்தரன் குறைந்து போகிறதே -பாகவதம் –
சந்த்ரமா மநசோ ஜாதா -மனசில் இருந்து உருவானார் -சங்கல்பித்து அனைத்தையும் உருவாக்க-சர்வ சாதாராணம் –
ஆனால் –சந்த்ரனை -மனசில் என்றது -விசேஷம் உண்டே —ஆசைப்பட்டு படைத்து –உனக்கே இந்த பாடே -என்கிறார் –

———————————————————————-

அவதாரிகை –

மதி கெட்டவாறே-அந்தகாரம் வந்து மேலிட்டது -என்கிறாள்-

தோற்றோம் மட நெஞ்சம் எம்பெருமான் நாரணற்கு எம்
ஆற்றாமை சொல்லி அழுவோமை நீ நடுவே
வேற்றோர் வகையில் கொடியதாய் எனையூழி
மாற்றாண்மை நிற்றியே வாழி கனையிருளே –2-1-7-

பகவானால் நலியப்பட்ட கோஷ்டி-இது வரை -இங்கே பகவானை பிரிந்து ஆழ்வார் மேலும் நலியும் படி -விரோதி போலே -ஒரு நிர்வாகம்
நடுவில் பிரிந்தாரை பார்த்துக் கொள்ள முடியாதபடி -நலிகிறதே –வேற்று ஓர் வகையால் கொடியதாய் -எம்பெருமானார்
இருளும் நலிகிறது -விரஹ தாபத்தால் -நலியப்பட்டு உள்ள எழுவருக்குள் -பல மடங்கு துன்பம் படுகிறாய் –
நாரை வெளுப்பு -கண்ணனை மறக்கலாம் –உன் நிறம் அவனையே நினைவூட்டுமே –ஆளவந்தார் -நிர்வாகம்
– நிருபாதிக சம்பந்த உக்தனை பிரிந்து ஆர்த்தையான என்னை –ஈடுபாட்டைக் காட்டி குறுக்கே வந்து -எங்கள் எழுவருக்குள் -நலிவதே –
ஈடுபாடு -ஆழ்வார் நலிவதே என்று ஈடுபடுதல்
நீ நலியப்பட்டாய் -இது வரை முன் பாசுரங்களில் -இங்கே ராமானுஜர் நிர்வாகம்
தோற்றோம் மட நெஞ்சம் -விதேயமான நெஞ்சை
எம்பெருமான் -நாரணற்கு -எம் ஆற்றாமை சொல்லி அழுவோமை-எழுவரை -ஆழ்வார் உடன்
நீ -பாஹ்ய பாதக சம்பந்தம் இல்லாமல் இருக்க -சிறையன் அறையன் –
நடுவே வேற்றோர் வகையில் -சத்ருக்கள் வகையில் -அதற்கும் மேலே -அழவும் விடாமல்-வேற்று ஒரு வகை / நடுவே -சப்தத்தால் -வேறு வேறு நிர்வாகங்கள் -/1-எழுவருக்குள் நீ படும் துன்பம் கொடியது –2-மற்றது போலே -3–சேர்ந்து துக்கம் போக்கி கொள்ள முடியாமல் நடுவே வந்தாய் -இப்படி மூன்று நிர்வாகங்கள் –
கொடியதாய் -எனையூழி-காலம் உள்ளதனையும்
மாற்றாண்மை நிற்றியே -மாற்று ஆள்-என்னைப் போலே துன்பப்படும் ஆள் -விரோதியான ஆள் -இரண்டும் உண்டே -நிலை நிற்கிறாய்
வாழி கனையிருளே-செறிந்த இருள் -கிலேசம் தீரும் படி விலகி வாழ விடு
இத்தால் தமஸ் பிரக்ருதிகள் மாலின்யமும் ஈஸ்வர விச்லேஷத்தால் –

கீழும் மேலும் போருகிறபடி யொழிய சப்த ஸ்வாரஸ்யத்தைப் பற்ற எம்பெருமானார் அருளிச் செய்து போருவது ஓன்று உண்டு
அம்மங்கி அம்மாளும் அத்தையே நிர்பந்தித்துப் போரும் -அதாகிறது தான் பிரிவற்றாதார் அநேகர் கூடக் கட்டிக் கொண்டு கூப்பிடா நிற்க
இருள் வந்து முகத்தை மறைக்க அத்தைப் பார்த்து –ஆற்றாமைக்கு போக்கு விட்டு தரிக்க ஒட்டாதே நீ வந்து நலியக் கடவையோ -என்கிறாள்
எம்மே போல் என்கிற (ஆறு )-பதார்த்தங்களை எல்லாம் கூட்டிக் கொண்டு சொல்லுகிறது –
தோற்றோம் மட நெஞ்சம்
பகவத் விஷயம் என்றால் விட மாட்டாதபடி சபலமான நெஞ்சை இழந்தோம் —
தோற்றேன் சொல்லாமல் தோற்றோம் என்பதால் முன்பு சொல்லிய அனைத்தையும் சேர்த்துக் கொள்ளுகிறார்
அன்றியே பவ்யமான நெஞ்சை இழந்தோம் -என்னுதல்
எம்பெருமான் நாரணற்கு
கெடுவாய் -வகுத்த விஷயத்தில் அன்றோ நாங்கள் நெஞ்சு இழந்தது
தன்னுடைமை என்றால் வத்சலனாய் இருக்குமவனுக்கு என்றோ இழந்தது -ஸூலபனுக்கு என்றுமாம் –
நாராயணபஹூ வ்ரீஹி சமாசம் -அனைத்து உள்ளும் இருக்கிறார் –வாத்சல்யம்
தத் புருஷ சமாசம் -நாரங்களுக்கு அயனம் -பிராபகத்வம் –ஸூலபம்
எம் ஆற்றாமை சொல்லி அழுவோமை –
ஆற்றாமை உடையார் -தந்தாம் ஆற்றாமை சொல்லிக் கூப்பிடக் கடவது அன்றோ
நாங்கள் பெறப் புகுகிறதொரு பிரயோஜனம் உண்டாய் -அத்தை விலக்கி நாம் பெற வேணும் -என்று தான் செய்கிறாய் அன்றோ
ஆற்றாமை சொல்லி அழுவதே -ஸ்வயம் பிரயோஜனம் இதுவே -இதுக்காவா நீயும் வருகிறாய் –
அவனைப் பெறவோ –போன நெஞ்சைப் பெறவோ -எங்கள் ஆற்றாமையாலே அழப் பெறவோ-
நீ நடுவே
அல்லாதவற்றுக்கு உள்ளது அமையாதோ உனக்கு -அவனை நம்மில் நாம் கழுத்தைக் கட்டிக் கொண்டு கிடந்தது-கூப்பிடுகை ஒழிய பாத்ய பாதக பாவமுண்டோ –
நலிகைக்கு ஒரு ஹேது இன்றிக்கே இருக்கச் செய்தே –
வேற்றோர் வகையில் கொடியதாய்
வேற்றோர் உண்டு -சத்ருக்கள் வகை உண்டு -அவர்கள் நலியும் பிரகாரம் -அதிலும் கொடிதாக நலியா நின்றாய்
சத்ருக்கள் ஆனாலும் நோவுபட்டாரை ஐயோ என்ன வன்றோ வடுப்பது

எனையூழி மாற்றாண்மை நிற்றியே
காலதத்வம் உள்ளதனையும் சாத்ரவத்திலே நிற்கக் கடவையோ
ராவணாதிகள் பிரித்த இத்தனை
கூப்பிடப் பொறுத்தார்கள் நீர்மை யுடையார் சஞ்ஜாத பாஷ்ப -என்று கண்ண நீரை விழ விட்டார்கள்
பெருமாள் சுக்ரீவனை கட்டி கொண்டு வாலி பிரிந்த சோகத்தால் -அழுதாரே –
நீர்மை உடையார் படியும் கண்டிலோம்
சத்ருக்கள் படியும் கண்டிலோம்
உன்னது வ்யாவ்ருத்தமாய் இருந்ததீ
வாழி
காதுகரை -உடன் பிறந்தீர் என்னுமா போலே
கனையிருளே —
செறிந்த இருளே -என்னுதல்
கனை இருளை -கனைத்துக் கொண்டு செருக்கி வருகிற இருளை -என்னுதல்
அன்றியே –
பிரகரணத்தோடே சேர்ந்த பொருளாவது -தமஸ் -என்று ஒரு பதார்த்தமாய் -அது தான் ஒளி மழுங்கி அடங்கி இருக்கை ஸ்வபாவம் என்று அறியாதே
அபிமத விச்லேஷத்தாலே ஒளி மழுங்கி வாய் விட்டுக் கூப்பிடவும் மாட்டாதே நோவு படுகிறபடியைக் கண்டு
உன் இழவு கனத்து இருந்ததீ -என்கிறாள் -வகுத்த விஷயத்தாலே நாம் எல்லாம் நெஞ்சு இழந்து கூப்பிடா நிற்க-நீ உன் ஆற்றாமையைக் காட்டி நலியா நின்றாய் –உன் அவசாதம் நீங்கி நீ ஜீவித்திடுக -என்கிறாள் –

—————————————————————————————–

அவதாரிகை –

அவ்விருளுக்கு இறாய்த்து-அங்கே இங்கே சஞ்சரியா நிற்க- இருள் செறிந்தால் போலே இருப்பதொரு கழியிலே சென்று இழிந்தாள்-
அது மடல் எடுப்பாரைப் போலே கட்டோடு நிற்குமே -பாவியேன் சகடாஸூர நிரசனம் பண்ணின
அச்செயலிலே நீயும் அகப்பட்டாயாகாதே -என்கிறாள்

இருளின் திணி வண்ணம் மா நீர்க் கழியே போய்
மருளுற்று இராப்பகல் துஞ்சிலும் நீ துஞ்சாயால்
உருளும் சகடம் உதைத்த பெருமானார்
அருளின் பெரு நசையால் ஆழாந்து நொந்தாயே –2-1-8-

காருணிகத்வத்தில் நசை கொண்டு ஆழம் கால் பட்டாயோ
இருளின் திணி வண்ணம் -செறிந்த இருள் -நிறத்தை உடையதாய்
மா நீர்க் கழியே போய்-சின்ன ஓடையே –கழி-வாய்க்காலில் ஒரு சிறு பகுதி –மா –இரவிலும் பகலிலும் நீர் ஓடும் படி –
மா நீர் -கருத்த நீர்
பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் -இழவு எப்பொழுதும்
போய்-மிகவும் -வார்தல்- போதல்- ஒழுகல் நெடுமை –
மருளுற்று இராப்பகல் துஞ்சிலும் நீ துஞ்சாயால்-இரவும் பகல் கால தத்வமே முடிந்தாலும் -நீ உறங்காமல்-
உருளும் சகடம் உதைத்த பெருமானார் -திருவடிகளால் -பெருமானார் -விபரீத லஷணை-இங்கே உதவாமல் –
அருளின் பெரு நசையால்ஆழாந்து நொந்தாயே -ஜடா ஜல –பிரக்ருதிகளும் அவன் கிருபா ஈடுபாடு இல்லாமல் நசியுமே-
திருக் கோட்டியூர் –வணங்காதவர் உண்ணும் உணவும் பாபம் செய்தன – என்றாரே

இருளின் திணி வண்ணம் –
அச்சமான இருள் -வெளிறான இருள் அன்றிக்கே இருளின் புற இதழை வாங்கி வயிரத்தை சேரப் பிடித்தால் போலே இரா நின்றது
இருளின் திணி போலே இருக்கிற நிறத்தை உடைத்தாய் பெரு நீரையும் உடைத்தான கழியே-
போய் மருளுற்று
மிகவும் அறிவு கெட்டு-மயர்வற மதிநலம் அருளப் பெற்றார் அறிவு கேட்டுக்கும் அவ்வருகே இரா நின்றதீ உன் அறிவு கேடு-ஞானாதிக்யத்தால் பிறந்த அஜ்ஞ்ஞானம் –
இராப்பகல் துஞ்சிலும் நீ துஞ்சாயால்-
காலத்துக்கு ஓர் எல்லை காணிலும் உன் ஆற்றாமைக்கு ஓர் எல்லை காண்கிறிலோம்-
அந்தம் ரஹித கால தத்வம் -காலம் கோலோச்சுமே-இதற்கு திவா ராத்திரி விபாகம் இல்லை -காலத்துக்கு உண்டே –
அதற்கு எல்லை சொன்னாலும் இதற்கு இல்லை -என்றவாறு -பகல் -இரவுக்கும் -பொழுது முடிந்து பிழைக்கலாம்-
நசையின் கனத்தால் முடிந்து பிழைக்கவும் விரகு இல்லை –
உருளும் சகடம் உதைத்த பெருமானார் அருளின் பெரு நசையால் ஆழாந்து நொந்தாயே —
காவலாக வைத்த சகடம் தானே அஸூராவேசத்தாலே ஊர்ந்து வர தாயும் கூட உதவாத சமயத்திலே
உலகம் உண்ட பெரு வாயனுக்கு அடிக்கடி பசிக்குமே -அகார வாச்யனை விட்டு ஆ ரஷிக்க போனாளே அவள் –
முலை வரவு தாழ்த்துச்சீறி நிமிர்ந்த திருவடிகளாலே முடித்து -ஜகத்துக்கு சேஷியைத் தந்த உபகாரகன்-(ச நாதன் -அன்றோ) பிரணயிநிக்கு உதவானோ என்னும் நசையாலே-அருளின் பெரு நசையால்-
பெரும் குரல் எடுத்து அழுதானாம் -பால் வர வில்லை என்று -கை காலை உதைக்க -சகடம் விழ –
கும்பம் பானைகள் அழிய -கோப கோபி ஜன -ஹா ஹாகாரம் –யசோதை தானே பெற்றாள் கொலோ தத்துக் கொண்டாள் கொலோ
-யசோதை வந்து உத்தான சாயினாம் கண்ணனைக் கண்டாள்-ஸ்ரீ விஷ்ணு புராணம் –
ஜகத்துக்கும் பத்னிமாருக்கும் சேஷியைக் கொடுத்த செயல் –
சேஷி உளராக ஆனதே -அனைவருக்கும் உபகாரகரன் இவளுக்கு உதவ வில்லையே
கழி ஸ்திரீ ஸ்தானம் -பிரணயிநி -என்றவாறே -அசேதனதுக்கு சேஷியைக் கொடுத்தவர் இவளுக்கு கொடுக்காது ஒழிவதே
அருளின் பெரு நசையால்
அருளின் கணத்துக்கு தக்கபடி இறே நசையின் கணம் இருப்பது
ஆழ்ந்து நொந்தாயே
தரைப் பட்டு நோவு பட்டாயாகாதே

————————————————————————————–

அவதாரிகை –

அக்கழிக்கு ஒரு கரை காண மாட்டாதே மீண்டு வந்து படுக்கையிலே விழுந்தாள்-அங்கு எரிகிற விளக்கைக் கண்டாள்-
அது உடம்பில் கை வைக்க ஒண்ணாத படி விரஹ ஜ்வரம் பற்றி எரியா நின்றது என்று அத்தைப் பார்த்து
நீயும் நோவு பட்டாயாகாதே -என்கிறாள் –

நொந்தாராக் காதல் நோய் மெல்லாவி உள்ளளுலர்த்த
நந்தா விளக்கமே நீயும் அளியத்தாய்
செந்தாமரைத் தடங்கண் செங்கனிவாய் எம்பெருமான்
அந்தாமத் தண் துழாய் ஆசையால் வேவாயே –2-1-9-

கமனீய விக்ரஹன் -மநோ ஹராமான -போக்யதா விஷய ஆசையால் வெதும்பி –
நொந்தாராக் காதல் நோய்-நொந்து ஆரும் நோய் -நொந்தாலும் ஆரா நோய் -பிரிவாற்றாமை -ஆத்மவிஷய நோய் -வைதிக காம நோய்
ஈடுபட்டு -நொந்து -அதிலேயே இருக்கும்
மெல்லாவி உள்ளளுலர்த்த -வல்லாவி இல்லை -விளக்கு அன்றோ -சிறகாலே அணையுமே-
நந்தா விளக்கமே -அணையா விளக்கே -முடிந்து தப்பிக் கொள்ளலாமே -அது தெரியாமல் நொந்து கொண்டே உள்ளாயே-
நீயும் அளியத்தாய்
செந்தாமரைத் தடங்கண் செங்கனிவாய் எம்பெருமான்
அந்தாமத் தண் துழாய் ஆசையால் வேவாயே-இந்த விருப்பத்தால் தானே நந்தாமல் இருக்கிறாய்

நொந்தாராக் காதல் நோய் மெல்லாவி உள்ளளுலர்த்த
நோவ என்று புக்கால் நொந்து தலைக் கட்டக் கடவது அன்றிக்கே இருக்கிற ப்ரேம வியாதியானது
தொட்டார் மேலே தோஷமாம் படி மிருதுவாய் இருக்கிற ஆத்மாவைக் குறுத்து வற்றாக உலர்த்த
மெல்லாவி -பகவத் குண அனுபவத்தாலே நைந்து இருக்கை -மார்த்வம் –
காற்றுப் பட பொறாது இருக்கை
நந்தா விளக்கமே –
ஜ்வாலா பேத அனுமானம் இருந்து பார்க்கிறாள் அன்றே –சந்தான விச்சேதம் இன்றிக்கே உருவ நோவு படுகிறாயாகாதே-

பிரத்யஷம் -அனுமானம் -பாதிக்குமே -பிரதம ஷணம் ஜ்வாலை -முன்னால் இல்லாமல் பிறந்து -சரம வினாடி ஷணம்-இருந்தது இல்லாமல் போகுமே
நடுவில் உள்ள ஜ்வாலைகளும் உத்பத்தி விநாசம் இருக்குமே -மத்திய ஷணம் பரம்பரையாக வர்த்தினி ஜ்வாலா –
திரியும் எண்ணெயும் குறையுமே -கண்ணுக்கு கிரஹிக்கும் சாமர்த்தியம் இல்லை -விளக்கு நந்தா விளக்காய் இருக்க முடியாதே
அறிவு எல்லாம் உள் கலங்கி பாடுகிறாள் பராங்குச நாயகி இங்கே –

நீயும் அளியத்தாய்
நாட்டுக்குக் கண் காட்டியான நீ படும் பாடே இது -உன் கண்ணையும் கட்டினானே அந்தோ-(இருளை விலக்கி கண் காட்டியாக அன்றோ விளக்கு இருக்கும் )
அளியத்தாய்
அருமந்த நீ -பரார்த்தமான உடம்பிலே உனக்கு நோவு வருவதே —
செந்தாமரைத் தடங்கண் செங்கனிவாய் எம்பெருமான்-
பதி சம்மாநிதா சீதா பர்த்தாரமஸி தேஷணா-என்ற பேறு பெற வேணும் என்றததையோ நீயும் ஆசைப் பட்டது –
விளக்கு போன்ற சீதா பிராட்டிக்கு பெருமாள் மாலையை சூட்டி சக்கரவர்த்தி கூப்பிட போனாரே – சம்மானிக்கப் பட்டாளே-
பெருமாள் நடை அழகைக் கண்டே கண் அழகு பெற்றாள் -திக் பாலர்களை ரஷிக்க மங்களா சாசனம் செய்தாள்-அயோத்யா -16-
செந்தாமரைத் தடங்கண்
முகத்தைப் பார்த்து குளிர நோக்கின போதைத் திருக்கண்களில் செவ்வி சொல்லுகிறது
செங்கனிவாய் –
இன்சொல் சொல்லலுகிற போதை திருவதரத்தில் பழுப்பைச் சொல்கிறது
எம்பெருமான் -அந்தாமத் தண் துழாய் ஆசையால் வேவாயே —
நோக்காலும் ஸ்மிதத்தாலும் என்னை அனந்யார்ஹை ஆக்கினவனுடைய அழகிய திருத் துழாய் மாலை பெற வேணும் பெற வேணும்
என்னும் ஆசையாலே
வேவாயே –
உக்கக்காலுக்கு -விசிறிக் காற்றுக்கு -உளையக்கடவ- உன்னுடம்பே நெருப்பாக வேகிறாயாகாதே-

————————————————————————————-

அவதாரிகை –

இவள் அவசாதம் எல்லாம் தீர வந்து சம்ச்லேஷித்த எம்பெருமானைக் குறித்து இனி ஒரு நாளும் என்னை விடாது ஒழிய வேணும் -என்கிறார்

வேவாரா வேட்கை நோய் மெல்லாவி யுள்ளுலர்த்த
ஓவாது இராப்பகல் உன் பாலே வீழ்த்து ஒழிந்தாய்
மாவாய் பிளந்த மருதிடை போய் மண் அளந்த
மூவா முதல்வா இனி எம்மைச் சோரேலே –2-1-10-

சந்நிஹிதன் ஆனான் -இனி கை விடேல் -10 பாசுரத்திலே வந்து அருளினான் -ஸ்மாரக பதார்த்தம் இல்லை –
ஆர்த்தியை கண்டு இனி மேல் இருக்க மாட்டாள் என்று சந்நிகிதன் ஆனான் –
சர்வ காரண பூதனான சர்வேஸ்வரனை –இரண்டாம் பத்தே -காரணத்வம் சொல்ல வந்தது அன்றோ
வேவாரா வேட்கை நோய் மெல்லாவி யுள்ளுலர்த்த
வெந்து திருப்தி அடையாமல் -கொளுத்த முடியாத ஆவி –
உலக அக்னியால் -கீதையில் -இங்கே விரஹ தாபம் -கொளுத்த
விரஹத்தால் பலஹீனம் ஆன ஆவி –
ஓவாது இராப்பகல் உன் பாலே வீழ்த்து ஒழிந்தாய் -உன் குணங்களைக் காட்டி -உன்னிடம் அகப்படும் படி
மாவாய் பிளந்த -கேசி -இறுதி வந்த விரோதி நிரசித்த
மருதிடை போய் மண் அளந்த -அனன்யார்ஹம்
மூவா முதல்வா -இளகிப்பதித்த -மண் அளந்ததால் -ஆஸ்ரித இந்த்ரன் பெற்றதால் வந்த ஹர்ஷத்தால்
நித்ய யௌவன ஸ்வ பாவம் – –மூவாது -முதல்வன் இளகி வந்து -ஒன்றும் செய்யாதானாய் ரஷணத்தில் ஒருப்படுகை-
இனி எம்மைச் சோரேலே -இனி ஒரு காலும் நழுவ விடாமல் -அநிஷ்டம் போக்கி சத்தையை நோக்கி அருளி ரஷித்தாயே
ஏகாராம் தேற்றம் -கை விடாதே என்றபடி –

வேவாரா வேட்கை நோய் –
வேவ -வேவ -ஹிம்சிக்க -என்று தொடங்கினால் ஒரு கால் வெந்து தலைக்கட்ட மாட்டாதாயிற்று
அல்லாதவை-சரீரம் -லௌகிக அக்னி – போல் அன்றிக்கே -ப்ரேம வியாதிக்கு உள்ளது ஒன்றாயிற்று இது தான்-(வெந்து முடிந்து போகும் தன்மை பிரேம அக்னிக்கு இல்லையே )
மெல்லாவி –
சரீரத்தில் உண்டான சௌகுமார்யம் ஆத்மாவிலும் உண்டாய் இருக்கிறதாயிற்று இவர்க்கு -பிரேம வியாதிக்கு -பாத்தம் போதாத மென்மை-(-இருபத்தினாராயிரம் படி -வியக்தம் -)
உள்ளுலர்த்த
கூடோக் நிரிவ பாதபம்–பாதபம் -மரம் — என்கிறபடியே உள்ளே படிந்து புறம்பே வர வேவா நின்றதாயிற்று
அதாஹ்யமாய் இருப்பது கேவல அக்னியாகில் இ றே
மஹதா ஜ்வலதாநித்ய மகனி நேவாக்னி பர்வத –சுந்தர -35–என்று வெந்த விடமே விறகாக வேவா நின்றது-
உன் திரு ஆபரணங்கள் ஒவ் ஒன்றாகக் கண்டு பெருமாள் மேலே மேலே வெந்தது போலே -வாங்கி பார்த்து கிலேசித்து சுக்ரீவன் இடம் கொடுக்க –
அவள் உடம்புக்கு அர்ஹம் என்பதால் மஹா அர்ஹம் என்கிறார் –
பாரிதோஷமாக சக்கரவர்த்தி -கௌசல்யை -பணிவினை செய்து பெற்றவை -சொக்கட்டாம் விளையாட்டிலே என்னை ஆடி வென்று பெற்றது-
-என்று எல்லாம் எண்ணி காண்ககையும் காட்டுகையுமே கால ஷேபம் -( ஒவ் ஒன்றும் பெருமாளை மீண்டும் மீண்டும் எரிக்க -தங்க முடியாமல் மீண்டும் மஹா ராஜர் இடம் கொடுக்க -காண்கையும் காட்டுகையுமே பொழுது போக்கு )
சுக்ரீவனுக்கும் பெருமாளுக்கும் கார்யம் செய்ய இளைய பெருமாள் நினைவூட்ட –
ஓவாது இராப்பகல் –தீர்க்க காலம் –
வேவாரா நோய் வேட்கை போலே இராப்பகல் ஓவாது ஒழிகிறபடி
உன் பாலே வீழ்த்து ஒழிந்தாய்
அகப்பட்டார்க்கு மீள ஒண்ணாத படி உன் பக்கலிலே விழ விட்டுக் கொண்டாய்-என்னுதல்
உன் பாலே வீழ்த்து
உன் பக்கலிலே விழ விட்டுக் கொண்டு
ஒழிந்தாய்
முகம் காட்டாதே கடக்க நின்றாய் -என்னுதல்

மாவாய் பிளந்து மருதிடை போய் மண்ணளந்த மூவா முதல்வா-
கேசி வாயை அநாயாசேன கிழித்து -யமலார்ஜூனங்களின் நடுவே போய் -மஹா பலி அபஹரித்துக் கொண்ட பூமியை எல்லை நடந்து மீட்டுக் கொண்டு
இப்படி உபகாரகங்களைப் பண்ணி பின்னையும் ஒன்றும் செய்யாதானாகக் குறைப்பட்டு இவற்றினுடைய ரஷகணத்திலே உத்யுக்தனாய் இருக்குமவனே
இப்படி எல்லாம் செய்யச் செய்தேயும் ஒன்றும் செய்யாதாரைப் போலே ஜகத் ஸ்ருஷ்ட்யாதிகளைப் பண்ணிணவனே-
இனி எம்மைச் சோரேலே —
1-கேசி தொடக்கமான விரோதிகளைப் போக்கினால் போலே தம் விரோதியையும் போக்கி அவன் வந்து முகம் காட்டச் சொல்லுகிறார் ஆதல்
2-தம்முடைய ஆபத்தின் கனத்தால் வந்து முகம் காட்டும் -என்னும் விசுவாசத்தால் சொல்லுகிறாள் ஆதல்
இனி
புத்த்வா காலம் அதீதஞ்ச முமோஹா பரமாதுர-என்னுமா போலே முன்புள்ள காலம் இழந்த தாகிலும் இனி மேலுள்ள காலம் இவ் வஸ்துவைக் கை விடாது ஒழிய வேணும்-
போன காலத்தை மீட்க ஒண்ணாது என்றதுக்கு சோகிக்கிறார்-இனியாவது எம்மை சோரேல்
ந மே துக்கம் ப்ரியா தூரே -என்னுடைய பிரியை யானவள் தூரத்தில் இருக்கிறாள் என்று அதுக்கு சோகிக்கிறேன் அல்லேன்
அது ஒரு பயணம் எடுத்து விடத் தீரும்
ந மே துக்கம் ஹ்ருதேதி வா -வலிய ரஷச்சாலே பிரிவு வந்தது என்று அதுக்கு சோகிக்கிறேன் அல்லேன் -அது அவன் தலையை அறுக்கத் தீரும்
ஏத தேவா நு சோசாமி-இது ஒன்றுமே எனக்கு சோக நிமித்தம் –பின் நின்ற காதல் –கழிய மிக்கோர் காதல் –
வயோஸ்யா ஹ்யதி வர்த்ததே -போன பருவம் இப்பால் மீட்க ஒண்ணாது இறே

——————————————————————————–

அவதாரிகை –

நிகமத்தில் இத் திருவாய் மொழி கற்றார்– கண்ணால் கண்டது எல்லாம் பகவத் அலாபத்திலே நோவு படுகிற சம்சாரத்திலே இருந்து-நோவு படாதே– கண்டார் எல்லாம் –பகவத் லாபத்தாலே களித்து வர்த்திக்கும் நாட்டிலே புகப் பெறுவர் என்கிறார்-

சேராத எப்பொருட்கும் ஆதியாம் சோதிக்கே
ஆராத காதல் குருகூர்ச் சடகோபன்
ஓராயிரம் சொன்ன அவற்றுள் இவை பத்தும்
சோரார் விடார் கண்டீர் வைகுந்தம் திண்ணனவே –2-1-11-

பரமபத பிராப்திபலம்
சேராத எப்பொருட்கும் ஆதியாம் சோதிக்கே -காரண பூதன் -அசேஷ- அகில- நிகில –சோராத -பிரிகதிர் படாமல் -பரஞ்சோதி சப்த வாச்யன்-
ஆராத காதல் குருகூர்ச் சடகோபன் -திருப்தி படாத காதல் -குறையாக சொன்னதை
வேவேரா வேட்கை -ஆராத நோய் -நந்தா விளக்கு -நொந்து ஆராக் காதல் -என்பதை பட்டமாக-நோயாக சொன்னதை பட்டமாக இதில் –
கருட வாகனத்வம் -இன்றியமையாத அடையாளம் அவனுக்கு போலே –ஆழ்வாருக்கு ஆராத காதல்
ஓராயிரம் சொன்ன அவற்றுள் இவை பத்தும் -அத்விதீயமான -அதி பிரேம பிரகாசம்
சோரார் விடார் கண்டீர் -நழுவ விடாமல் கொண்டால்
வைகுந்தம் திண்ணனவே-பரமபதம் உறுதியே

சேராத எப்பொருட்கும் ஆதியாம் சோதிக்கே
இவ்வளவிலே வந்து இவரோடு கலந்து இவரை உளர் ஆக்குகையாலே -ஓன்று ஒழியாதபடி சகல பதார்த்தங்களுக்கும் ஈஸ்வரனாய்-
இவரோடு வந்து கலந்து அத்தாலே உஜ்ஜ்வலனாய் இருந்தான்
இவருக்கு வந்து முகம் காட்டுவதற்கு முன்பு சர்வேஸ்வரத்வமும் அழிந்தது போலே கிடந்தது –
இவர் ஒருத்தரையும் சோரக் கொடுக்கவே சர்வேஸ்வரத்வமும் அழியும் இறே
இவர் இழவு தீர வந்து முகம் காட்டின பின்பு எல்லா பொருட்கும் நிர்வாஹகனானான்
சோதிக்கே
பேறு இழவுகள் இவரது அன்றிக்கே தன்னது என்னும் இடம் வடிவிலே புகரிலே தோற்றா நின்றது -க்ருதக்ருத்யன் -என்னும்படியானான் –

ஆராத காதல் –
இத் திருவாய் மொழியால் சொல்லிற்று யாயிற்று -கண்ணால் கண்ட பதார்த்தங்களுக்கு எல்லாம் -பகவத் அலாபத்தாலே
தம்மைப் போலே நோவு படுகிறவனவாகக் கொண்டு
அவற்றுக்குமாக தாம் நோவு படும்படியான இவருடைய அபிநிவேசமாயிற்று
காதல் -குருகூர்ச் சடகோபன்
காதலை இட்டாயிற்று இவரை நிரூபிப்பது
தம் படி சொல்லும் போதும் தாமே சொல்ல வேணுமே -தகும் புலவோர்க்கே-நன்னூல் –
ஆத்ம பிரசம்சை இல்லை -கொண்டாட வில்லை -உள்ளதை உள்ளதாகச் சொல்ல வேண்டுமே
ஓராயிரம் சொன்ன
இக்காதலோடே யாயிற்று ஆயிரமும் அருளிச் செய்தது
அவற்றுள் இவை பத்தும்
அல்லாதவை ஒரு தலையாக -இது ஒரு தலையாம் படி அக்காதல் முக்த கண்டமாகச் சொன்ன திருவாய் மொழியாயிற்று இது
இவை பத்தும் சோரார் விடார் கண்டீர் வைகுந்தம் –
இங்கே இருந்து கண்ணுக்கு இலக்கான பதார்த்தங்கள் அடங்கலும் பகவத் அலாபத்தாலே நோவு படுகிறவனவாக அனுசந்திக்குமவர்கள்
இவ்விருப்பை விட்டு கண்ணார் கண்டார் அடங்கலும் பகவ லாபத்தாலே களிக்கும் நித்ய விபூதி விடாதே நித்ய அனுபவம் பண்ணப் பெறுவார்கள்
கண்டீர் என்று கையெடுத்துக் கூப்பிடுகிறார் -ஸ்ரீ வைகுண்டத்தில் ஆனந்தமாக இருப்பாரைக் காட்டுகிறார் –
திண்ணனவே –
இது ஸூநிச்சிதம்
இவ்வருகே சிலரைப் பற்றி சொல்லிற்றோர் அர்த்தமாகில் இறே சம்சய விபர்யயங்கள் உள்ளது
பகவத் பிரபாவத்தைப் பற்றிச் சொன்னதாகையாலே இது தனக்கு எங்கேனும் சபதம் பண்ணலாம் –

முதல் பாட்டிலே தொடங்கி-நாரை தொடக்கமாக –அன்றில் -கடல் -காற்று -மேகம் -சந்தரன் -இருள் -கழி -விளக்கு –
இப்பதார்த்தங்களைக் குறித்து -அநுசோகித்து -மிகவும் தளர்ந்த அளவிலே அவன் வந்து முகம் காட்ட -இனி என்னை
விடாது ஒழிய வேணும் -என்று இத் திருவாய் மொழி கற்றார்க்கு பலத்தைச் சொல்லித் தலைக் கட்டுகிறார்-

———————————————————————————–

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

பூர்வ அனுபூத -முன்னால் அனுபவித்த
முரவைரி குண அபி வ்ருத்த -பாஹ்ய சம்ச்லேஷம் -ஆசை கிளற
பாஹ்ய சங்கம ருசி  (-1-10-) –தத் அலாப கின்னக -உடைந்து
சர்வா நபி -அனைத்தையும் –ஸூ சம தூக்கின ஏவ  பாவானாக
சடாரி -த்வீதிய சதகத்ய- ஆத்யே -(-2-1-)

———————————————————————

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன்

நித்ராதி சேதகத்வாத்-வெவ்வேற துன்பம் -தூங்க விடாமல் –
அ ரதி ஜனனதக-சைதில்யம்
அஜச்ர -சர்வ காலத்தில் –சங்ஷோபகத்வம் -கலக்கும் தன்மை
அந்வேஷ்டும்-தேடி போக- பிரேரகத்வாத் -காரார் திருமேனி காணும் அளவும
விலய விதரநாத் –
கார்ய கார்ஷியா தைன்யாதி கிருத்வாத் -கிரிசமாகும் தன்மை -மதி கலை-
சித்த -ஆஷே பாதயாத் -போது போக்க ஒண்ணாத படி
விசம்கீ காரண -அறிய முடியாத படி
உப சம்ஷோஷனம் ஆர்ணவ  ஜந்மாப்யாம் — உலர்த்த -மெல்லாவி
த்ருஷ்ட்வா ஸ்வாத சௌரெ – ஷண விரஹ தசா –துச்சஹத்வம்–ஜகாதா- அருளிச் செய்தார்
—————————————————————-

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 11-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்–

வாயும் திரு மால் மறைய நிற்க ஆற்றாமை
போய் விஞ்சி மிக்க புலம்புதலாய் -ஆய
அறியாத வற்றோடு அணைந்து அழுத மாறன்
செறிவாரை நோக்கும் திணிந்து ————11-

வாயும் -திரு மால் –
அடியார் அனுபவிக்கலாம்படி
அடியாரை கிட்டுகையே ஸ்வ பாவமாக யுடைய
ஸ்ரீ யபதி யானவன் –

ஆய அறியாதவற்றோடு –
அசேதனங்கள் ஆகையால்
தம்முடைய துக்கத்தை ஆராய
அறியாத வற்றை

செறிவாரை திணிந்து நோக்கும் –
ஆஸ்ரிதர்களை
த்ருடமாக
கடாஷித்து அருளுவார்-

—————————————————————

அவதாரிகை –

இதில் சகல பதார்த்தங்களையும் சம துக்கிகளாக எண்ணி
துக்கிக்கிற படியைப் பேசுகிற பாசுரத்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
பெரு நிலம் கடந்த நல்லடிப் போது
அயர்ப்பிலன்
அலற்றுவன்
தழுவுவன்
வணங்குவன் -என்று
இவர் பாரித்த படியே அனுபவிக்கப் பெறாமையால்
ஷட் குண சாம்யத்தாலே-
1-அனன்யார்யக சேஷத்வம் -2–அநந்ய சரணத்வம் -3–அநந்ய போக்யத்வம் -4–ததேக நிர்வாகத்வ
5–சம்ச்லேஷத்தில் தரிக்கை -6–விச்லேஷத்தில் தரியாமை -கடி மா மலர்ப்பாவை யுடன் சாம்யம் உண்டே –
தாமான தன்மை குலைந்து
பிராட்டியான தன்மையைப் பஜித்து
தூது விட ஷமர் ஆனார் அஞ்சிறைய மட நாரையில்-
இங்கு நம்பியை தென் குறுங்குடி நின்ற -இத்யாதிப் படியே
மேன்மை நீர்மை வடிவழகு மூன்றும் குறைவற யுண்டாய்
அவதாரத்தில் பிற்பாடரும் இழக்க வேண்டாத படி
முகம் கொடுத்துக் கொண்டு நிற்கிற ஸ்தலமான
அர்ச்சாவதாரத்திலே அனுபவிக்க ஆசைப் பட்டு
கிடையாமையாலே கண்ணாஞ்சுழலை இட்டு-மயக்கம் உற்று –
நாரை
அன்றில்
கடல்
வாடை
வானம்
மதி
இருள்
கழி
விளக்கு
துடக்கமான லௌகிக பதார்த்தங்களுக்கும் தம்மைப் போலே
பகவத் விரஹத்தாலே நோவு படுகிறனவாகக் கொண்டு
அவற்றுக்குமாக தாம் நோவு பட்டு செல்லுகிற படியை
அன்யாபதேசத்தாலே பேசிச் சொல்லுகிற
வாயும் திரை யுகளில் அர்த்தத்தை
வாயும் திருமாலால் -இத்யாதி யாலே அருளிச் செய்கிறார் –

————————————————————————

வியாக்யானம்–

வாயும் திருமால் மறைய நிற்க –
அனுபவ யோக்யமாம்படி
கிட்டுகையே ஸ்வபாவமாக இருக்கிற
ஸ்ரீ யபதியானவன் –
போக சாத்ம்ய ஹேதுவாக விச்லேஷித்து
அத்ருச்யனாய் நிற்க –
கீழே -மைந்தனை மலராள் மணவாளனை -என்றத்தை அனுபாஷித்த படி
அன்றிக்கே
நீயும் திருமாலால் -என்றதாகவுமாம் –
மணியை வானவர் கண்ணனை தன்னதோர் அணியை -என்று
மேன்மையையும் நீர்மையையும் வடிவு அழகையும் யுடையவன்
விச்லேஷிக்கையாலே –

ஆற்றாமை போய் விஞ்சி மிக்க புலம்புதலாய் –
ஆராத காதல் -என்னும்படி
விஸ்லேஷ வ்யசனம் ஆவது கை கழியப் போய் மிக்கு
சீதே ம்ருதஸ் தேஸ்வ ஸூர பித்ராஹீ நோசி லஷ்மண-என்னும்படி
எம்மே போலே நீயும் -என்று
பல காலும் சொல்லும்படி மிக்க பிரலாபமாய் –

ஆய அறியாத வற்றோடு அணைந்து அழுத மாறன் –
அசேதனங்கள் ஆகையாலே
தம்முடைய துக்கத்தை
ஆராய அறியாத வற்றைக் கட்டிக் கொண்டு
ஆற்றாமை சொல்லி அழுவோமை -என்று
சம துக்கிகளாக அழுத ஆழ்வார் –
காற்றும் கழியும் கட்டி அழ -என்றார் இறே ஆழ்வார் -ஆச்சார்ய ஹிருதயம் -132

செறிவாரை நோக்கும் திணிந்து
அநந்ய பிரயோஜனராய்
அந்தரங்கமாக
ஆஸ்ரயிக்கும் அவர்களை
த்ருடமாக கடாஷிப்பர் –
தம்மைப் போலே அசேதனங்களைக் கட்டிக் கொண்டு அழாமல்
பகவத் சம்ச்லேஷம் யுண்டாய்
ஆநந்திக்கும் படி
கடாஷித்து அருளுவர் –

———————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள்   திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s


%d bloggers like this: