பகவத் விஷயம் காலஷேபம் –50– திருவாய்மொழி – -2-1-1…2-1-5—-ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

பிரவேசம் –

கீழில் திருவாய் மொழியில்மணியை -வானவர் கண்ணனை -தன்னதோர் அணியை -என்று
சௌலப்யத்தையும்-மேன்மையையும் -வடிவு அழகையும் -சொல்லிற்று
இவை ஒரொன்றே போரும் இறே மேல் விழப் பண்ணுகைக்கு
இங்கன் அன்றிக்கே இவை மூன்றும் குறைவற்ற விஷயமானால் அனுபவியாது இருக்கப் போகாது இறே-
-இவ்விஷயத்தை இப்போதே அனுபவிக்க வேணும் என்று பாஹ்ய சம்ச்லேஷ அபேஷை பிறந்தது -உடலால் கட்டித் தழுவ ஆசை கொண்டார் –
அப்போதே நினைத்த பரிமாற்றம் பெறாமையாலே பிறந்த அவசாதாதிசயத்தை –எம்பெருமானோடே கலந்து பிரிந்து ஆற்றாமையாலே
நோவு படுகிறாள் ஒரு பிராட்டி -ஆற்றாமை கை கொடுக்க லீலா உத்யாநத்த்திலே புறப்பட்டு அங்கே வர்த்திக்கிற
பதார்த்தங்களைக் கண்டு அவையும் எல்லாம் பகவத் அலாபத்தாலே நோவு படுகிறனவாகக் கொண்டு
-அவற்றுக்குமாக தான் நோவு படுகிற பாசுரத்தாலே பேசுகிறார்கொண்ட பெரும் காதலுக்கு பக்திமை நூல் வரம்பு இல்லையே –
பின்னை கொல்–திரு மா மகள் கொல் பிறந்து இட்டாள் -சங்கு தங்கை முன்கை நங்கை -பிரிவே இல்லையே அவர்களுக்கு -யாருமே சத்ருசம் இல்லை -இவளுக்கு –
நெய்தல் -கடலும் கடல் சார்ந்த இடம் -பிரிந்தார் பிரிவாற்றமைக்கு -ஆற்றாமை கை கொடுக்க வந்தாள்-
முன்பு தூது விட தரிப்புண்டாய் தூது விட்டார் -நாரை பதிகம் தோறும் உண்டே -என்னே பாக்கியம் –
கார்ய வைஷம்யம் -அங்கே களித்து இருந்தன நாரையும் சேவலும் -இங்கே வருத்தமாக -இருக்க -ஆற்றாமையில் வைஷம்யம் இருப்பதால் –
விஸ்லேஷ ஜனித துக்கம் அதிகம் இங்கே -விஷய ஸ்வபாவத்தாலும் இவர் ஸ்வபாவத்தாலும் -ஆற்றாமை விஞ்சி இருக்குமே –
பரத்வ பஜ நீயத்வ சௌசீல்ய –நிர்ஹேதுக உபகாரத்வ -10 குணங்கள் அனுபவித்த பின்பு இழவு மூன்றை விட அதிகம் உண்டே
நின்னாணை திருவாணை கண்டாய் என்பார் –உண்டு ஒழியாய் என்பார் இறுதியில் –
ஆழ்வார் பாட பாட குணங்கள் புதிதாக வர வில்லை -அவன் காட்ட கண்டவர் ஆகையாலே –இவர் அனுபவம் கூடுமே பதிகங்கள் பாடப் பாட –

அஞ்சிறைய மட நாரையிலும் -இதுக்கு ஆற்றாமை கரை புரண்டு இருக்கும் –அதுக்கு அடி என் என்னில் –
பெரு நலம் கிடந்த நல்லடிப் போது அயர்ப்பிலன் அலற்றுவன் -1-3-10-என்று அவதாரத்திலே அனுபவிக்கக் கோலி பெறாததாகையாலே –
அது ஒரு காலத்திலேயாய்-நாம் பிற்பாடராகையால் -என்று ஆறி இருக்கலாம் -இது அங்கன் அன்றிக்கே- அவதாரத்திலே பிற்பாடர்க்கும்
இழக்க வேண்டாதபடி முகம் கொடுக்கைக்கு நிற்கிற இடம் இறே -உகந்து அருளின நிலங்கள் –பின்னானார் வணங்கு சோதி –
நம்பியைத் தென் குறுங்குடி நின்ற –1-10-9-என்று உகந்து அருளின நிலத்திலே அனுபவிக்க ஆசைப் பட்டு பெறாமையாலே வந்த
ஆற்றாமையாகையாலே -இது கனத்து இருக்கும்
அஞ்சிறைய மட நாரையில்-தூது விடுகைக்கு தரிப்பு உண்டாயிற்று இதில் அங்கு தூது விட்டவையும் நோவு படுகிறனவாக-
அவற்றுக்குமாக தாமும் நோவு படுகிறார் –

அனுபவிக்கிற இவர் தம் படியாலும் இத் திருவாய்மொழிக்கு ஆற்றாமை கனத்து இருக்கும்
பத்துடை யடியவர்க்கு- முன்பு அவ்விஷயத்தை அனுபவித்து பிரிந்த அளவால் உள்ள ஆற்றாமை இறே அதில் உள்ளது
அஞ்சிறைய மட நாரைக்கு பின்பு இவ்வளவும் வர அவனுடைய குணங்களை அனுபவித்து பிரிந்த பிரிவாகையாலே
ஆற்றாமை மிகவும் கனத்து இருக்கும் -இதில் பதில பயில விறே இனிதாய் இருக்கும் இவ்விஷயம்
விருப்பம் விஞ்சி இருக்கும் பகவத் விஷயத்தில் பயில பயில -லௌகிக விஷயத்தில் வெறுப்பு தானே விஞ்சி இருக்கும்
அறியாமையே குற்றம் இங்கு –
வண்டமர் மண மாலை மணி முடி மேலே மணம் நாறும் என்கின்றாளால் -என்றும்
ஆராவமுதே –என்றும் –கொள்ள மாளா இன்ப வெள்ளம் -என்றும் உண்டே-அனுபவிக்க வேண்டியவையே நிறைய இருக்குமே —

1-நாரையாகில் வெளுத்து இருக்கையும்
2-அன்றிலாகில் வாய் அலகு நெகிழ்த்தவாறே கதறுகையும்
3-கடலாகில் எழுத்தும் சொல்லும் பொருளும் தெரியாதபடி கூப்பிடுகையும்
4-காற்றாகில் சததகதியாய் திரிகையும்
5-மேகமாகில் நீராய் இற்றிற்று விழுகையும்
6-சந்த்ரனாகில் தேய்வதும் வளருவதுமாகக் கடவதும்
7-தமஸ்ஸாகில் பதார்த்த தர்சனம் பண்ண ஒட்டாது என்றும்
8-கழியாகில் அலைவாய் முகமாய் ஏறுவது வடிவதாகக் கடவது என்றும்
9-விளக்காகில் இற்றிற்று எரியக் கடவது என்றும்
இவற்றுக்கு இவை நியத ஸ்வபாவம் என்று அறியாதே -இவை எல்லாம் தம்மைப்போலே பகவத் விச்லேஷத்தாலே
வ்யசன படுகிறனவாகக் கொண்டு அவற்றுக்குமாக தாம் அநுசோகிக்கிறார்-
மயர்வற மதி நலம் அருளப் பெற்றவர் இப்படி அநு சோகிக்கிறார் –

இத் திருவாய் மொழியால்-(பிரியில் இலேனுக்கு இளங்கோவும் அக்குளத்தில் மீன் இறே-என்ற )-இளைய பெருமாளில் காட்டில் இவர்க்கு உண்டான வ்யாவ்ருத்தி சொல்கிறது -எங்கனே என்னில்
மத்ச்யத்துக்கு ஜலம் தாரகமாக அறுதியிட்டார் அவர் -இவர் அந்த மத்ச்யத்தொடு ஜலத்தோடு தம்மோடு வாசியற
பகவத் குணங்களே தாரகம் என்று இருக்கிறார் –ஆகையாலே துக்கிகளாய் இருப்பார் தங்களோடு சம துக்கிகளைக் கழுத்தைக் கட்டிக் கொண்டு
கூப்பிட்டு ஆற்றாமைக்குப் போக்குவிட்டு தரிக்குமா போலே இவளும் கண்ணுக்கு இலக்கான பதார்த்தங்கள் எல்லாவற்றோடும்
கழுத்தைக் கட்டிக் கொண்டு கிடந்து நீ பட்டதோ நான் பட்டதோ என்று கூப்பிடுகிறாளாய் இருக்கிறது –
அபிவ்ருஷா பரிம்லா நா -என்னுமா போலே சேதன அசேதன விபாகம் அற நோவு படுத்த வற்றாய் இறே இவள் பிரிந்த விஷயம் தான் இருப்பது
வ்ருஷம் -கழுத்து வரை நீர் பாய்ந்து உள்ள மரங்களுக்கே-அவையே பட்டு போனதே
உபதத் தோதகா நத்ய பலவலா நி சராம்சி ச -என்று ஆறுகளோடு-சிறு குழிகளோடு பெரும் குழிகளோடு வாசி யற கரை யருகும் சென்று
கிட்ட ஒண்ணாத படி ராம விரஹத்தாலே கொதித்தது இறே
பரிசுஷ்க பலாசாநி வநான்யு பவநாநி ச -என்று சிறு காட்டோடு பெரும் காட்டோடு வாசி யற விரஹ அக்னி கொளுத்திற்று
பெருமாள் –சீதே ம்ருதஸ் தேச்வசுர பித்ரா ஹீ நோசி லஷ்மண-என்று ஒருவரை ஒருவர் கட்டிக் கொண்டு கிடந்தது கூப்பிட்டாப் போலே கூப்பிடுகிறார் இங்கு –

பகவத் கைங்கர்யம் புருஷார்த்தம் என்று அறுதி இட்டார் –முதல் பத்தால்தொழுது ஏழு -கல்வி வாயுமே
அந்த கைங்கர்யத்தில் களை அறுத்தார் -பாஹ்ய -ஆந்தர விரோதி -சுவ போக்த்ருத்வ புத்தியும்- சரீர விரோதியும் –களிப்பும் கவர்வும் அற்று
பாகவத் சேஷத்வ பர்யந்தம்
ஐஸ்வர்ய கைவல்ய விரோதி
போக்குவானும் அவனே
விரோதி நிரசன சீலன் திருவடிகளில் சரணம் புக்கு
சம்சாரம் தொடர விஷன்னர் ஆனார்
ஆத்மாத்மீயங்களில் நசை இல்லை -உங்களோடு எங்கள் இடை இல்லை
அதிசங்கை பண்ண நாராயணன் நங்கள் பிரான் -சர்வ அபேஷிதங்கள் முடிப்பேன் சீல குணத்தில் ஆழம் கால் பட்டார்
திரு மோகூர் ஆத்தான் -சூழ் விசும்பு -அவா அற்று வீடு பெற்றார்

————————————————-

அவதாரிகை –

பிரிந்தார் இரங்குவது நெய்தல் நிலத்திலே யாகையாலே கடற்கரைச் சோலையைப் பற்ற இவள் பிரிவுக்கு இரங்கி இருக்கச் செய்தே
அங்கே ஆமிஷார்த்தமாக அவதானம் பண்ணிக் கொண்டு இருக்கிறது ஒரு நாரை கண்ணுக்கு இலக்காக
-அதின் உடம்பில் வெளுப்பைக் கண்டு -அதுவும் தன்னைப் போலே பிரிவாற்றாமையாலே வந்த வைவர்ண்யத்தோடே இருக்கிறதாகக் கொண்டு
பாவியேன் நீயும் நான் அகப்பட்ட விஷயத்திலே அகப்பட்டு நெஞ்சு பரி உண்டாய் யாகாதோ -என்கிறாள்

வாயும் திரையுகளும் கானல் மடநாராய்
ஆயும் அமருலகும் துஞ்சிலும் நீ துஞ்சாயால்
நோயும் பயலைமையும் மீதூர எம்மே போல்
நீயும் திருமாலால் நெஞ்சம் கோட்பட்டாயே –2-1-1-

வாயும் திரையுகளும்-மேலே கிளர்ந்து –திரை உகளும் -நாரை உகளும் -என்றுமாம் -உகளும் திரை -உகளும் மட நாராய் –
கானல் மடநாராய் –கடல் கரையில் -தன் நினைவு கிடைக்கும் மட்டும் உரு மீன் வரும் அளவும் -சம்சார திரை தூக்கி போட்டாலும்-அவனை பார்த்து இருப்பது போலே
ஆயும் அமருலகும் துஞ்சிலும் -ஆய -தாய் -உறங்காத தாய் -தூங்காத தேவர் -தூங்கினாலும்
நீ துஞ்சாயால்ஆல் -ஆச்சார்யம் -ஊரும் துஞ்சிற்று –தேரும் ஒழிந்தன –
நோயும் பயலைமையும் மீதூர-வஞ்சித்ததால் -மனஸ் சிதிலப்பட்டு கலங்கி -பசலை -வை வர்ண்யம் –
எம்மே போல் –அபிமத விஷயத்தில் அகப்பட்ட எங்களைப் போலே
நீயும்-அதற்கு அடைவு அற்று உள்ள நீயும் கூட –
திருமாலால் நெஞ்சம் கோட்பட்டாயே-வஞ்சிக்கவும் திருமாலே வர வேண்டும் -பரித்துக் கொண்டானே
யே-அசை -வினா -கேள்வி  -சம்சார கல்லோலம் மதியாமல் பகவத் விஷயத்தில் -உறங்காமை -ரூப விபர்யாசம் -விஸ்லேஷ ஜனித கார்யங்கள்

வாயும் திரையுகளும் –
வாய்கை -கிட்டுகை-
பெரிய மலை போலே வந்து கிட்டுகிற திரைகள் மேலே தாவிப் போகா நின்றாலும் நினைத்தது கைப் புகுரும் அளவும்-சலியாதே இருக்குமாயிற்று -பகவத் த்யான பரர் இருக்குமா போலே இருக்கும் –
அலைகடல் நீர் குழம்ப அகடாடவோடி அகல் வானுரிஞ்ச முதுகில் மலைகளை மீது கொண்டு வருமீனை -பெரிய திருமொழி -11-4-1-

நான் உளனாய் இருக்க நீங்கள் அஞ்ச வேண்டுமோ -திரு முதுகில் -மலைகளை ஏறிட்டுக் கொண்டு -வேற்று உரு கொண்டு ஆமையாகி–அரியன செய்து ரஷித்தான்-அவனை மறக்காமல் இருக்க வேண்டும் என்கிறார் -கலியன் –

மறவாது இருப்பாருக்கு போலியாய் இரா நின்றது -அலைகள் மீது கொண்டு வருமீன் மறவாது இருக்கிற இதுவும் –
இத்தால் -மீனைக் குறிக்கோளாகக் கொண்ட நாரை என்கிறார் யாயிற்று -மேலே –திரையுகளும் -என்பதற்கு உதாரணம் காட்டுகிறார்
கிரயோ வர்ஷதாராபிர் ஹன்யமாநா ந விவ்யது அபிபூயமாநா வ்யச நைர் யதா தோஷஜ சேதச-ஸ்ரீ மத்  பாகவதம் -10–20-15-என்று சொல்லக் கடவது இறே
நிரந்தரமாக வர்ஷதாரைகள் விழா நிற்கச் செய்தேயும் மலைகள் சலியா நின்றன -சரத் கால வர்ணனை-என் போலே என்றால் -சர்வேஸ்வரனே ரஷகன் -என்று இருப்பார் தாப த்ரயங்களால் வந்த வ்யசனங்களுக்கு இடையாதே இருக்குமாபோலே

கானல் மடநாராய்
வந்து கிட்டுகிற திரை உகளா நின்றுள்ள
கானலிலே -நெய்தல் நிலத்திலே இருக்கிற மட நாராய்
யாகங்களும் பண்ணிப் பவித்ரங்களும் முடித்திட்டு தார்மிகர் என்னும்படி திரியா நிற்பார்கள் இறே -பரஹிம்சை பண்ணா நிற்கச் செய்தே கிராமணிகள்
அப்படியே ஷூத்ர மத்ச்யங்கள் வந்தாலும் அநாதரித்து இருக்குமாயிற்று நினைத்தது கைப்புகுரும் அளவும்
பற்றிற்று விடாது ஒழிகை இறே மடப்பமாவது

ஆயும் -துஞ்சிலும்-நீ துஞ்சாயால்
என் பிறப்பே பிடித்து உறங்காத தாயும் உறங்கிலும்
அமருலகும் துஞ்சிலும் நீ துஞ்சாயால்
தங்கள் சத்தையே பிடித்து உறங்காத நித்ய ஸூரிகள் உறங்கிலும் நீ உறங்குகிறிலை
இவளைப் பெற்ற தாய்க்கு உறக்கம் இன்றிக்கே ஒழிவான் என் என்னில் -முன்பு எல்லாம் -இவளுக்கு சத்ருசனாய் இருப்பான் ஒருவனை
பெற்றுக் கொடுத்தோமாக வல்லோமே -என்று கண் உறங்காது
பின்பு நாயகனைப் பிரிந்து இவள் நோவு படுகிறபடியைக் கண்டு அத்தாலே கண் உறங்காது
பதி சம்யோக ஸூலபம் வயோ த்ருஷ்ட்வா ச மே பிதா சிந்தார்ணவ கத -என்றாள் இறே பிராட்டி
ஆறு வயசில் -கவலைக் கடலில் விழுந்து கரை தெரியாமல் –வைகுந்தன் என்னும் தோனி பெறாமல் உழன்று -இருந்த -அநசூயை இடம் பிராட்டி –
ஒரு உபக்னத்திலே -பற்றுக் கொம்பு -கொண்டு போய் சேர்த்து நோக்கில் நோக்கலாய் இல்லையாகில் கிடையாதபடியான பருவமாய் இரா நின்றது
இவளுக்கு ஈடாய் இருப்பான் ஒருவனைப் பெற்று அவன் கையிலே காட்டிக் கொடுத்தோமாக வல்லோமே -என்று எங்கள் ஐயர்-ஜனகர் –
சிந்தார்ணவ கதரானார் என்றாள் இறே பிராட்டி
அப்படியே இறே இவளைப் பெற்ற தாயாரும் கண் உறங்காதே படும் படி
அநிமிஷராய்-சதா தர்சனம் பண்ணுகிறவர்கள் ஆகையாலே நித்ய ஸூரிகளுக்கும் தானே நித்தரை இல்லையே —

நோயும் பயலைமையும் மீதூர எம்மே போல்
மானச வ்யதையும்–வலியும் –அத்தாலே வந்த வைவர்ண்யமும் தன் பக்கலிலே காண்கையாலே-இவ்விரண்டும் அதுக்கு உண்டு என்று இருக்கிறாள்
உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள் செங்கழு நீர் —அனுமானம் -போலே இங்கும் –
மீதுர-
விஷம் ஏறினால் போலே உடம்பிலே பரக்க
எம்மே போல்
இப்படி கிலேசப் படுக்கைக்கு நான் ஒருத்தியும் என்று இருந்தேன் -நீயும் என்னைப் போலே ஆவதே
1-துக்க பரிபவங்களை பொறுத்து இருக்கையாலும் -2–பற்றிற்று விடாது இருக்கிறபடியாலும் -3–வைவர்ண்யத்தாலும் -என்னைப் போலே இரா நின்றாய் –
நீயும்
4-வ்ரஹ வ்யசனம் பொறுக்க மாட்டாத மார்த்தவத்தை உடைய நீயும்
5-தத் தஸ்ய சத்ருசம் பவேத் -என்று இருக்க மாட்டாமைக்கு இருவரும் ஒத்தோமோ

நீயும் -உம்மைத் தொகை –எம்மே போல் -பிரதான்யத்தால் -படவே தேவை இல்லாத நீ-மயர்வற மதி நலம் அருளப் படாமல் -உம்மைத் தொகை –
உன்னாலே பொறுக்க முடியாதே -அஞ்சிறைய மட நாரையிலே பார்த்து இருக்கிறேனே -அப்படி இருந்த நீயுமா -தானோ தனிமை எப்போதும் –

திருமாலால் நெஞ்சம் கோட்பட்டாயே —
மானச வ்யதையும் வைவர்ண்யமும் இருந்தபடி கண்டேனுக்கு -நீயும் நான் அகப்பட்ட துறையிலே அகப்பட்டாய் ஆகாதே
மைந்தனை மலராள் மணவாளனையோ -1-10-4-நீயும் ஆசைப் பட்டது
புருஷகார பூதை-இருந்தும் -விசிஷ்ட ஈஸ்வர பிராவண்யம் -விளம்ப யோக்யதை இல்லையே -துக்கம் அதிகம் ஆகுமே –
நெஞ்சம் கோட்பட்டாயே —
நெஞ்சு பறியுண்டாயாகாதே
தோல் புரை யன்றியே மாறுபாடுருவ வேர்ப்பற்றிலே நோவு பட்டாயாகாதே

—————————————————————————–

அவதாரிகை –

இப்படி நாரையைப் பார்த்து வார்த்தை சொல்லா நிற்கச் செய்தே அருகே நின்ற பனையிலே தங்கின அன்றிலானது
வாயலகு நெகிழ்ந்த வாறே கூப்பிட்டது -இதனுடைய ஆர்த்த த்வநியைக் கேட்டு –
பாவியேன் நீயும் என்னைப் போலே அகப்பட்டாய் ஆகாதே -என்கிறார் –

கோட்பட்ட சிந்தையையாய்க் கூர்வாய வன்றிலே
சேட்பட்ட யாமங்கள் சேராது இரங்குதியால்
ஆட்பட்ட வெம்மே போல் நீயும் அரவணையான்
தாட்பட்ட தண் துழாய்த் தாமம் காமுற்றாயே –2-1-2-

கோட்பட்ட -பறியுண்ட
சிந்தையையாய்க்-சிந்தையை யுடையையாய்
கூர்வாய வன்றிலே-அழகு கூர்மை -சப்தம் கூர்மை -க்ரூரராம சப்தம் -ஆர்த்தி அடியாக தழு தழுத்த குரலிலே
வாய் -வாய்மை -குரல் -கேட்டவர் ஹிருதயம் பிளக்கும் படி -ஆர்த்த த்வனி –
சேட்ப ட்ட -நெடிதான
யாமங்கள் சேராது இரங்குதியால்-சேர்க்கையில் சேராதே துக்கியா நின்றாய் –ஆல் -ஆதலால்
ஆட்பட்ட வெம்மே போல்-நீயும் -பிரிவாற்றாமை தோற்று உள்ள நீயும்
அரவணையான் -நிரூபகம் -தாட்பட்ட -போக தசையிலே மிதி உண்ட
தண் துழாய்த் தாமம் காமுற்றாயே -மிதுனம் துகைத்த -செவ்வி யுடைய திருத் துழாய் மாலையை ஆசைப்பட்டாயே –

கோட்பட்ட சிந்தையையாய்க்
அபஹரிக்கப் பட்ட ஹ்ருதயத்தை உடையையே
அபஹ்ருதமான மனஸ் ஸூ என்று அறிந்தபடி என் என்னில்
அதினுடைய அடியற்ற த்வனி தான் -மனசை இழந்த குரல் —நெஞ்சு இழந்தது -என்று தோற்ற நின்றது காணும் இவளுக்கு
விளபசித்தம் -வீத நித்ரா -ஈஸ்வர -கச்சித் காட நிர்வின்ன சேத -நளின நயன – -ஹாஸ -உதார -ஈசா தேஷிணை -பாகவதம்-10-90-

கூர்வாய வன்றிலே
தனியாய் இருப்பாரை இரு துண்டமாக இட வல்ல த்வனி யாயிற்று
கூர்வாய்
வாய் -என்று வார்த்தை
அன்றியே கூர்த்த வாய் -அலகை உடைய -என்னுதல்

சேட்பட்ட யாமங்கள் –
ராத்ரியாய் -30 நாழிகை -நெடுகுகை யன்றிக்கே யாமங்கள் தோறும் நெடுகா நின்றதாயிற்று –சேண் -நீண்ட என்றபடி
சேராது இரங்குதியால்
நெடுகுகிற யாமங்களில் படுக்கையில் சேராது ஒழிந்தாலும் தரிக்கலாம் இறே -அங்கனே செய்யாதே சிதிலையாய் நின்றாய்
ஆட்பட்ட வெம்மே போல்
நெஞ்சு பறியுண்டு-படுக்கையிலும் சேராதே -நோவு படுகைக்கு என்னைப் போலே நீயும் அவன் திருவடிகளிலே
தாஸ்ய பரிமளத்திலே யாகாதே அகப்பட்டது
ஐஸ்வர்ய கைவல்யம் தவிர்ந்து திருத் துழாய் பரிமளத்தில் ஆசைப் பட்டோம்
நீயும் –
நாட்டாரில் வ்யாவ்ருத்தமாய் போந்து இருக்கிற நீயும்
பதிம் விச்வச்ய -யஸ் யாஸ்மி -என்று ஓதினாய் அல்லை
மயர்வற மதிநலம் பெற்றதாய் அல்லை
என்தனை உட்புகாத நீயும் இப்படியாவதே –
சாஸ்திர ஜன்ய ஞானம் இல்லை -நூறாயிரம் சாஸ்திரம் அறிந்தாருக்கும் இந்த நிலை வராதே –
தாத்பர்யாந்தர்யம் அருளிச் செய்கிறார் அடுத்து -பகவத் பிரசாத லப்த ஞானமும் இல்லையே

அரவணையான் -தாட்பட்ட தண் துழாய்த் தாமம்
திருமாலால் என்றது இறே கீழே
நஞ்சரவில் துயில் அமர்ந்த நம்பி -வம்பார் –வயலாலி மைந்தா -கருட புட்கொடி –அடுத்து அடுத்து கலியன் -திருமணம் -பண்ணி வைக்க பெரிய திருவடியும் சொல்லி -இருவருமானால் இருப்பது படுக்கையிலேயாய் இருக்குமே
அவனும் அவளுமாய்த் துகைத்த திருத் துழாய் மாலை பெற வேணும் -என்று அத்தையோ நீயும் ஆசைப் பட்டது
தாட்பட்ட தண் துழாய்த் தாமம் காமுற்றாயே —
சுடர் முடி மேல் -1-9-7- துழாய் ஒழிய அவர்கள் இருவரும் கூட துகைத்த துழாயையோ நீயும் ஆசைப் பட்டது
புழுகிலே தோய்ந்து எடுத்தால் போலே பரிமளத்திலே தெரியுமே
கலம்பகன் நாறுமே
தாளிணை மேல் அணி தண்ணம் துழாய் -4-2-5-என்று இறே தான் கிடப்பது
தாமம் -ஒளியும் மாலையும்
காமுற்றாயே
சங்கத்து அளவில் நின்றிலை யாகாதே -சங்கம் -பற்று -முற்றி காமம் —
பெறில் ஜீவித்தல் பெறா விடில் முடிதலான அவஸ்தையை ப்ராபித்தாய் யாகாதே –

————————————————————————————-

அவதாரிகை –

அன்றிலுனுடைய த்வநிக்கு இடைந்து இருக்கிற அளவிலே –கடல் என்று ஒரு மஹா தத்வமாய் –அது தன் காம்பீர்யம் எல்லாம் இழந்து
கரையிலே வருவது -கரை ஏற மாட்டாதே உள்ளே விழுவதாய்-எழுத்தும் சொல்லும் பொருளும் தெரியாதபடி ஊமைக் கூறனாய்க் -மூக ஜல்பிதம் —
கூப்பிடுகிற படியைக் கண்டு –பாவியேன் நீயும் ராம குணத்திலே அகப்பட்டு நான் பட்டது பட்டாயாகாதே -என்கிறாள் –

காமுற்ற கையறவோடு எல்லே யிராப்பகல்
நீ முற்றக் கண் துயிலாய் நெஞ்சுருகி யேங்குதியால்
தீ முற்றத் தென்னிலங்கை ஊட்டினான் தாள் நயந்த
யாமுற்ற துற்றாயோ வாழி கனை கடலே –2-1-3-

கத்தும் கடலைப் பார்த்து -விரோதி நிவர்தகனான -அவன் திருவடிகளை ஆசைப் பட்ட என்னைப் போலே ஆனாயோ
காமுற்ற கையறவோடு –ஆசைப்பட்ட -போகங்கள் -கைத்து -அடையாமல் –அறவு –இழவோடு கூடி
எல்லே -சம்போதனம் -ஆச்சர்யம் —
யிராப்பகல்நீ முற்றக் கண் துயிலாய் -இரவும் பகலும் தூங்காமல்
நெஞ்சுருகி யேங்குதியால் -ஜலமாக உருகி -அகவையும் உருகி -உயர்ந்த குரலில்
தீ முற்றத் தென்னிலங்கை ஊட்டினான் தாள் நயந்த -சக்கரவர்த்தி திருமகன் திருவடி ஆசைப் பட்டு
யாமுற்ற துற்றாயோ -நாங்கள் பட்டது பட்டாயா வாழி -நானும் பட்டு நீயம் பட்டு -கிலேசம் தீர்ந்து வாழ்வாயாக
கனை கடலே-கோஷிக்கும் கடல் -ஆண்பால் -நதிகள் பத்னி -ஆண்மகனைக் கூட்டிக் கொண்டு அழுகிறாள் இதில்
உனக்கு பெருமாள் திருவடி கிடைத்ததே -இலங்கை செல்லும் பொழுது –கலந்து பிரிந்த தசை இருவருக்கும் –
மீண்டும் வருவார் என்று ஆசைப் படுமே -விரக தாபத்தாலும் சப்தம் -ஆழ்வார் பாசுரம் பெற்றதால் ஹர்ஷத்தாலும் தொனி உண்டே-திரும்பும் பொழுது ஸ்பர்சம் கிட்டாமல் புஷபக விமானத்தில் போனார் -ஆழ்வார் ஆசீர்வதிக்கிறார் ஸ்பர்சம் கிடைக்க -என்றுமாம் –

எல்லே கனை கடலே -தீ முற்றத் தென்னிலங்கை ஊட்டினான் தாள் நயந்த யாமுற்ற துற்றாயோ -காமுற்ற கையறவோடு
யிராப்பகல் முற்றவும் நீ கண் துயிலாய் -நெஞ்சுருகி யேங்குதியால் வாழி -என்று அந்வயம் –

காமுற்ற கையறவோடு –
ஆசைப்பட்ட பொருள் இழவோடே-கைத்து -என்று பொருள் –அறவு -இழவு-ஆசைப்பட்ட பொருள் கை புகுராமையால் வந்த இழவோடே-
காமுறுகையும் இழவும் கடலுக்கு இன்றிக்கே இருக்க திருஷ்டாந்த பூதையான தனக்கு உண்டாகையாலே -இதுக்கும் உண்டு -என்று
அநுமித்துச் சொல்கிறாள்
நாரை -அன்றில் -விஸ்லேஷ ஜனித துக்கம் -இனத்து விச்லேஷம் உண்டு அவற்றுக்கு-கடலுக்கு எப்படி -திருஷ்டாந்தம் தான் என்பதால் -அனைத்துக்கும் உண்டே
அனைத்தும் பகவத் சேஷம் -ராஜ்யம் அஹம் இரண்டுமே சொத்து -பரதன் நினைவு போலே -ராஜ்யம் அக்றிணை அஹம் உயர் திணை -பகவத் சேஷத்வத்தில் வாசி இல்லையே -மரம் செடி அழுதனவே பெருமாளை பிரிந்து

எல்லே
இரவோடு பகலொடு வாசி அறக் கதறுகிறபடியைக் கண்டு தன் படிக்கு போலியாய் இருக்கையாலே தோழியை சம்போதிக்குமா போலே
சம்போதிக்கிறாள் -சிறையுறவு போலே –ஒதமும் நானும் உறங்காது இருந்தேனே –பெரிய திருமொழி -9-4-9-என்னக் கடவது இறே
சிறைக் கூடத்தில் சேர இருந்ததால் வரும் உறவு -இருவரும் துன்ப தசையில் உண்டான உறவு –ஓதம் -மா கடல் -புல்லாணி கை தொழுதேன் –
போது அலரும் புல்லாணி அம்மானைக் கை தொழுதேன் -விடிய விடிய பேசிக் கொண்டு இருந்தும் நானும் அவனும் –
போக போக்யமான தேசத்தில் -இனி இவளுக்கு உறங்காது இருக்க அன்றோ வேண்டியது என்று –
தூங்க வேண்டாம் என்பதற்கு கடலுக்கு பணி கொடுத்துப் போனான் –
அன்றிக்கே –எல்லே -என்றது என்னே -என்று ஆச்சர்யமாதல்
யிராப்பகல் நீ முற்றக் கண் துயிலாய்
உறங்கக் கண்ட இரவுக்கும் உறங்காமைக்கு கண்ட பகலுக்கும் உன் பக்கல் ஒரு வாசி கண்டிலோமீ
கங்குலும் பகலும் கண் துயில் அறியாள் -பகலில் தூங்காது இருப்பது போலே இரவில் -திருஷ்டாந்தமாக சொல்கிறாள் –
நீ
உன் காம்பீர்யம் எல்லாம் எங்கே போயிற்று –சமுத்திர இவ காம்பீர்யே –பெருமாளுக்கு -கடலுக்கு முன்னே குணக்கடல் கிடந்ததே
நெஞ்சுருகி யேங்குதியால்
உறக்கம் இன்றிக்கே ஒழிந்தால் நெஞ்சு தான் அழியாது இருக்கப் பெற்றதோ -பேற்றுக்கு ஏற்ற -நெஞ்சு அழிந்து கூப்பிடா நின்றாய்
தீ முற்றத் தென்னிலங்கை ஊட்டினான்
பாவியேன் -பரத்வத்திலே ஆசைப்பட மாட்டிற்று இல்லையாகாதே -பிரணயிநி விரஹம் பொறுக்க மாட்டாத-சக்கரவர்த்தி திருமகனை யாகாதே நீயும் ஆசைப்பட்டது –கண்ணனும் வாராமல் காகுத்தனும் வாராமல் –
ஒரு சொல் ஒரு அம்பு ஒரு தாரம் உள்ளவன் அன்றோ -கண்ணனை இல்லை பெருமாளை —
அவனுக்கு இரண்டாவது தாரம் இல்லை என்பதை மறந்தோமே நாம்-
தென்னிலங்கை முற்றத் தீயூட்டினான் -விபீஷண க்ருஹம் இலங்கைக்குள் அன்று போலே -அவன் அவர்களுக்கு கூட்டில்லாதா போலே
அவனகமும் அவர்கள் அகங்களுக்கு கூட்டில்லை போலே காணும் -அவன் அகம் தாசோஹம் இறே -அகம் -வீடு அஹம் மனம் என்றபடி
ராஷசாநாம் பலாபலம் -பெருமாள் –செல்வ விபீடணற்கு வேறாக நல்லான் –ராஷசர்கள் -அஹம் -இவன் தாசோஹம்
அன்றிக்கே
தீ முற்றத் தென்னிலங்கை ஊட்டினான்
ராவண பயத்தாலே முன்பு அரை வயிறாக ஜீவித்த அக்னி – ஒள்ளெரி மண்டி யுண்ண-பெரிய திருமொழி–10-9-1-என்கிறபடியே
வயிறு நிறைய உண்டு ஜீவிக்கப் பெற்றதாயிற்று –பெருமாளை அண்டை கொண்ட பலத்தாலே -நாமி பலம் -நாம பலம் —
வாயு குமாரர் -திருவடியும் அக்னியும் -சகோதரர்கள் சேர்ந்து —தீ முற்ற -தென் இலங்கை முற்ற இல்லை –
செந்தீயுண்டு தேக்கிட்டதே —என்னக் கடவது இறே
செந்தீயுண்டு தேக்கிட்டதே-கம்பர் -செந்தீ நின்று தேக்கிடுகிறது -தேவர்கள் சிரிப்பார் நன்று நன்று –
முற்ற –முழுவதும் -பூரணமாக என்றபடி
தாள் நயந்த யாமுற்ற துற்றாயோ வாழி கனை கடலே –
பரம பிரணயியான சக்கரவர்த்தி திருமகன் திருவடிகளை ஆசைப் பட்ட நான் பட்டது பட்டாயாகாதே நீயும்
தாள் நயந்தாரோடு -தோள் நயந்தாரோடு வாசி யறுவதே கிலேசப் படுக்கைக்கு –கடலும் பராங்குச நாயகியும்-
பிராட்டியோடு ஸ்ரீ பரத ஆழ்வானோடு வாசி அற்றது இறே-(கடல் அரசன் -நதிகள் சேரும் -புருஷன் -ஆண்பால்இத்தையும் கட்டி அழுகிறாள் -வியசன மேலான தசையில் )
சேது பந்தன நேரத்திலே பெருமாள் திருவடிகளை சமுத்ரம் அடைந்ததே -ஆழ்வார் பிராட்டி பாவத்தில் அவன் தோளை அடைந்தார் -என்றபடி
தாள் உற்றது -நயந்ததில் சாம்யம் -பிராமணர் பிச்சேறினாலும் ஒத்து சொல்வது போலே அடி விடாத தன்மை இவருக்கு –
தேரும் கலங்கி என்று தேறியோம் -அடிக்கீழ் குற்றேவல் -மாயோன் திறத்து அளளே இத்திரு -அடியோம் அடிச்சியோம்
தோள் நயந்தார் வராதே -சீதை தோள் நயந்தார் -பராங்குச நாயகி தோள் நயந்தார் என்றபடி –
வாழி
இவ்வவசாதம் நீங்கி நீ ஜீவித்திடுக
கனை கடலே
வாய் விட்டுக் கூப்பிட மாட்டாதே விம்மல் பொருமலாய் படுகிறாய் ஆகாதே
கோஷிக்கிற கடலே -என்னவுமாம் –அனஷரமாக கோஷிப்பது –

——————————————————————————————–

அவதாரிகை –

காற்று என்று ஒரு வ்யாபக தத்வமாய் -அது தான் அபிமத விரஹ வ்யசனத்தாலே இருந்த இடத்தில் இருக்க மாட்டாதே
மடலூருவாரைப் போலே உடம்பிலே புழுதியை ஏறிட்டுக் கொண்டு வடிவு தெரியாத படியாய் ஜவர சந்நிபதிதரைப் போலே
உள்ளில் வெதுப்பும் புறம்பில் சைத்யமும் –குளிர்ந்து இருந்தது அத்தைப் பார்த்து நீயும் நான் பட்டது பட்டாயாகாதே –என்கிறாள் –

கடலும் மலையும் விசும்பும் துழாய் எம் போல்
சுடர் கொள் இராப்பகல் துஞ்சாயால் தண் வாடாய்
அடல் கொள் படை யாழி அம்மானைக் காண்பான் நீ
உடலம் நோய் உற்றாயோ ஊழி தோர் ஊழியே –2-1-4-

விரோதி நிரசன பரிகரம் கொண்டவனை காணும் ஆசையால்
கடலும் -ஷீராப்தி -அம்பச்ய பாரே
மலையும்-திருமலை
விசும்பும்-பரமபதம்
துழாய் எம் போல் -துழாவிக் கொண்டு –
சுடர் கொள் இராப்பகல் துஞ்சாயால் -சந்த்ராதித்ய தேஜஸ் கொண்ட இரவும் பகலும் உறங்காமல்
நடப்பவர் தூங்க மாட்டார்களே
தண் வாடாய்-சந்நிபதித சரீரம் போலே குளிர்ந்து -தாபம் -உள்ளே கத கத -வெளியில் குளிர்ந்து -சம்போதனம்
அடல் கொள் படை யாழி -குருஷேத்திர கண்ணன் -பக்தர் வாக்கியம் பொய்யாக்காமல் -இவரையும் நம்பி ஏமாந்தேன்
அம்மானைக் காண்பான் நீ -சர்வேஸ்வரனை பீஷ்மர் கண்டது போலே காண -சர்வ உபகாரகரான நீ -வாயு
உடலம் நோய் உற்றாயோ-சரீரம் உள்ள வரை
ஊழி தோர் ஊழியே -கல்ப பேதங்கள் பிறந்து நடந்தாலும்
உபகார சீலருக்கும் பகவத் விச்லேஷத்தில் உடம்பு மெலியுமே

கடலும் மலையும் விசும்பும் துழாய்
காரார் திருமேனி காணும் அளவும் போய்–சிறிய திருமடல் -என்று ஷீராப்தியோடு திருமலையோடு பரமபதத்தோடு வாசி அறத்
தேடுவார்க்கு போலியாய் இருக்கிறபடி –காற்றில் கடியனாய் கலியனைப் போலே
சுருதி பிரக்ரியை -உப லஷணம்-தேடும் இடங்களுக்கு கடலும் மலையும் விசும்பும் –
ஊராய வெல்லாம் -ஒழியாமே தேடுவார்க்கு போலியாய் இருக்கிறபடி-
அங்கு பரமபதம் ஷீராப்தி இல்லையே -திவ்ய தேசங்களில் ஊராய எல்லாம் என்றதால் இவையும் சேருமே
இவர் தேடியது உண்டோ என்னில் -பத சலனம் பண்ணினது இல்லையே -என்னில் அங்க அங்கி பாவத்தாலே பொருந்தும் -ஏன் பின்னே வந்து பட்டோலை எடுத்துக் கொள்ளுங்கோள் -இது துணிவு –காரார் திரு மேனி காணும் அளவும்காரார் திரு மேனி கண்டதுவே காரணமாய் தேடுகிறேனே -ஆசை உந்த உந்த
தௌ வநாநி க்ரீம்ச்சைவ சரிதச்ச சராம்சி ச நிகிலேந விசின்வாநௌ சீதாம் தசரதாத் மஜௌ-என்று தேடித் திரிந்தவர்களுக்கு போலியாய் இரா நின்றது
சீதாம் -தேடிக் கண்டிலோம் என்று ஆறி இருக்கலாம் விஷயம் அன்று
தசரதாத் மஜௌ-தேடப் பிறந்தவர்கள் அல்லர் –அவர்கள் ஜீவிக்கை என்ற ஒரு பொருள் உண்டோ –இத்தால் சென்று அற்றது -என்றபடி
பெருமாள் தேடுவதை -இங்கே சொல்லி-

கடலும் மலையும் விசும்பும் துழாய்
அபரிச்சின்னமான கடல் -நிர்விவரமான மலை -அவகாச பிரதானம் பண்ணுகிற ஆகாசம் -அன்றியே- அச்சமான -தெளிந்த -ஆகாசம்
எம் போல் சுடர் கொள் இராப்பகல் துஞ்சாயால் தண் வாடாய்
ஜவர சந்நிபதிதரைப் போலே சென்று அற்றாயாகாதே-தேடி முடிந்து போனாய் ஆகாமல் – என்னைப் போலே
சுடர் என்று ஆதித்யன்
சுடரைக் கொள்ளப் பட்டது என்றது ஆதித்யன் அஸ்தமித்த இரவோடு சுடரை உடைத்தான பகலொடு வாசி அற உறங்குகிறிலை
குளிர்ந்த வாடாய்
அடல் கொள் படை யாழி அம்மானைக் காண்பான் நீ
அடல் -என்று மிடுக்கு -எதிரிகள் மிடுக்கைக் கொள்ளுதல் என்னுதல்
தான் மிடுக்காய் இருத்தல் என்னுதல்
ஏதத் வ்ரதம் மம என்ற அளவன்றிக்கே ஆஸ்ரித அர்த்தமாக அசத்திய பிரதிஜ்ஞனானவன்- ஓரத்தளவு அகப்பட்டாய் ஆகாதே –
நாமா சத்யா வாக்யமா  என்றால் நம்மை விட்டு சத்ய வாக்ய பரிபாலனம் செய்வார் பெருமாள் இவன் தானே ஆஸ்ரித பஷ பாதன் –
சக்கரத்தின் முனையில் -பஷபாதத்தில் என்றுமாம் –
பாரத சமரத்தில் சக்ர உத்தாரணத்தின் அன்று அர்ஜுனன் இளைத்துக் கை வாங்கினவாறே பண்ணின பிரதிஜ்ஞையை அழித்து
திரு வாழியைக் கொண்டு பீஷ்மரைத் தொடர்ந்தான் இ றே
ஏஹயேஹி -கெட்டு ஓடுகிறவன் பிற்காலித்து நின்று -எங்கள் அம்மை நாயனார் -தாயும் தந்தையும் -மாறி மாறி இடுகிற அடி இருக்கிற அழகு என் -என்றான்
புல்லாம்புஜ பத்ர நேத்ர-என்றும் -ஆணை மறுத்தால் சேதம் என்-சீறிச் சிவந்த கண் அழகைக் காணப் பெற்றால் -ஆத்ம உஜ்ஜீவனதுக்கு –
பிரசஹ்ய மாம் பாதய-ஆயுதம் எடேன் என்ற நீர் ஆயுதம் எடுத்தாலும் அடியேன் கையில் ஆயுதம் இருக்கில் தோலேன் -ஜீவாத்மா தோற்க வேண்டுமே –ஜிதந்தே –
-ஆயுதத்தைப் பொகடச் சொல்லி தலை யறுத்து அருளீர்
லோக நாத -உமக்கும் வீரத்துக்கும் தோலேன் -முதன்மைக்குத் தோற்பேன்
அடல் கொள் படை யாழி
மிடுக்கை உடைத்தான படையாகிற திருவாழி
ஆழி யம்மானை
கையிலே திரு ஆழியை உடைய சர்வேஸ்வரனை யாகாதே நீயும் காண ஆசைப் பட்டதே
நீ உடலம் நோய் உற்றாயோ
வாயுவுக்கு உடல் பிரதானம் என்பதால் -உபகரிக்கும் சர்வ ரஷகமான வாயு என்பதால் –
பிரத்யுபகார நிரபேஷமாக உபகரிக்கும் நீ -சர்வ ரஷகமான சரீரத்திலே நோவு வரும்படி பட்டாய் யாகாதே -என்கிறாள்-
சஞ்சாரம் இதுக்கு நியத ஸ்வபாவம் இ றே
ஊழி தோர் ஊழியே –
கல்பம் தோறும் கல்பம் தோறும் நோவு படா நிற்கச் செய்தே தவிராதபடி சரீராந்தமான நோவு கொண்டாய் யாகாதே
காலம் மாறி வரச் செய்தேயும் நோவு மாறாதே ஏக ரூபமாய் செல்லுகிறபடி

———————————————————————–

அவதாரிகை –

அவ்வளவில் ஒரு மேகமானது கரைந்து நீராய் விழப் புக்கது –நீயும் அவனுடைய விரோதி நிரசன சீலதையிலே அகப்பட்டாயாகாதே –என்கிறாள்

ஊழி தோர் ஊழி உலகுக்கு நீர் கொண்டு
தோழியரும் யாமும் போல் நீராய் நெகிழ்கின்ற
வாழிய வானமே நீயும் மதுசூதன்
பாழிமையில் பட்டவன் கண் பாசத்தாலே நைவாயே –2-1-5-

சக்தி யோகத்தில் அகப்பட்டு நீயும் சிதிலம் ஆகிறாயே
ஊழி தோர் ஊழி-கால தத்வம் உள்ள அளவும்
உலகுக்கு நீர் கொண்டு -தேவையான நீர்
தோழியரும் யாமும் போல்-சமமான துக்கம் –
நீராய் நெகிழ்கின்ற -இற்றுப் போன –
வாழிய வானமே-1-ஆகாசம் /2-மேகம்
நீயும் மதுசூதன் பாழிமையில் பட்டவன்-கண் பாசத்தாலே நைவாயே -உதார சீலமான நீயும் -அவன் மிடுக்கிலே
அகப்பட்டு ச்நேஹத்தால் சிதிலம் ஆனாயே– உதார ஸ்வாபாவருக்கும் சைதில்யம் -பகவத் விரஹ ஜனிதம் -என்கை

ஊழி தோர் ஊழி உலகுக்கு நீர் கொண்டு
கல்பம் தோறும் கல்பம் தோறும் நீராய் நெகிழ்கின்ற
லோகம் அடங்கும் வெள்ளமிட வேண்டும் படி நீரை முகந்து கொண்டு –
உனக்கு ஒரு நல்ல நிதர்சனம் உண்டு
தோழியரும் யாமும் போல் –
என் இழவுக்கு எம்மின் முன் அவனுக்கு மாயும் தோழிமாரையும்-9-9-5-என்னையும் போலே
நீராய் நெகிழ்கின்ற
கரைந்து நீராய் விழுகின்ற
வாழிய
ஜகத்துக்கு உபகாரகமாய் இருக்கிற நீ உன்னுடைய கண்ண நீர் நீங்கி வாழ்ந்திடுக
வானமே
1-மேகத்தைச் சொல்லுதல்
2-ஆகாசத்தைச் சொல்லுதல் –அவகாச பிரதானம் பண்ணி ஔதார்யம் காட்டுமே ஆகாசம் –
அதி ஸூஷ்மமான ஆகாசம் நீரை முகந்து கொண்டு சிதறி உருகி நீராய் விழுகிறது என்று நினைக்கிறாள்
வானம் என்று மேகத்துக்கு பெயர்
வான் கலந்த வண்ணன் –இரண்டாம் திருவந்தாதி -75-என்றது இறே –மேக வண்ணன் —
வானம் வழங்காது எனின் —என்றான் இறே தமிழனும் –
தானம் தவம் இரண்டும் தங்காது வியன் உலகில் -வானம் வழங்கா விடில் –திருக்குறள் -19
நீயும்
லோக உபகாரகமாக வடிவு படைத்த நீயும்
மதுசூதன் பாழிமையில் பட்டவன் கண் பாசத்தாலே நைவாயே-
விரோதி நிரசன சீலனானவனுடைய வீர குணத்திலே அகப்பட்டு -அவன் பக்கல் உண்டான நசையாலே ஜீவிக்கவும் மாட்டாதே
முடியவும் மாட்டாதே நோவு படுகிறாய் யாகாதே
பாழிமை -பலம் -இடமுடமை –ரஷகத்வ பாரிப்பு –என்றுமாம்- மனசில் தாரள இடம் கொண்டவன்
அவன் கண் பாசத்தால் -அவன் பக்கல் நசையாலே
விஷய அனுகூலமாய் இறே நசை இருப்பது
எவ்வளவு நசையுண்டு-அவ்வளவு நைவும் உண்டாம் இறே வ்யதிரேகத்தில்
நைவாயே -நைவே பலம் –

பிரதிகல்பம் –யதா பூர்வ -மேகங்களோ உரையீர்–திருமால் திருமேனி ஒக்கும் —
வியாச பராசர் பாராசரர் —பராங்குசர் பரகால யதிவராதிகள் -சந்தி இதி ஸூசஸ்யதே —கல்பங்கள் தோறும் பிறப்பார்கள் -அன்றோ -28-சதுர் யுகத்தில் உள்ளோம் -28-வியாசர் அடுத்த வியாசர் அஸ்வத்தாமா -என்றும் சொல்லுமே ஸ்ரீ மத் பாகவதத்தில் –-10-90-21–கோபிகள் மேகம் போலே நைவதை சொல்லுமே

—————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள்   திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s


%d bloggers like this: