பகவத் விஷயம் காலஷேபம் -49– திருவாய்மொழி – -1-10-6 ….1-10-11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

அவதாரிகை —

இப்படி ஸூலபனானவன் நம்மை விடான் இறே -என்ன நம் அயோக்யதையை அநு சந்தித்து அகலாது ஒழியில்
நம்மை ஒரு நாளும் விடான் என்று திரு உள்ளத்துக்கு அருளிச் செய்கிறார் –

நீயும் நானும் இந்நேர் நிற்கில் மேல் மற்றோர்
நோயும் சார் கொடான் நெஞ்சமே சொன்னேன்
தாயும் தந்தையுமாய் இவ்வுலகினில்
வாயுமீசன் மணி வண்ணன் எந்தையே –1-10-6–

ஏக கண்டராய் நிற்கில் -ஓர் மிடறாக -அசாதாராண பந்த விசிஷ்டன் -கிலேசப் படக் கொடான் –
நீயும் நானும்-மனஸ் -ஆத்மா -பவ்யமான நெஞ்சும் -உன்னைக் கரணமாக உள்ள நானும் -கரணி கரணமும் –
நெஞ்சு பாட்டுக்கு ஏதோ நினைக்கிறதே என்று பயப்படுகிறோம் -அது அசேதனம் -மனசின் மூலம் நாமே செய்கிறோம் -முக்குண சேர்க்கையால் இஷ்டப்படி போகுமே –
இந்நேர் நிற்கில்-விமுக வ்யாவ்ருத்தியை -கீழ் சொன்ன -பிரக்ரியை -இந்த –
மேல் மற்றோர் -மேல் உள்ள காலம் எல்லாம் மற்ற
நோயும் சார் கொடான்-அஹங்கார -அர்த்த காமங்கள் -அதுக்கு அடியான சரீர கர்ம சம்பந்தம் -ஸுவ நிகர்ஷ அனுசந்தானம் அடியாக விச்லேஷமும்
நெஞ்சமே சொன்னேன் -கீதாசார்யன் போலே கொட்டினேன் -திருக் கோஷ்டியூர் நம்பி போலே இல்லையே
தாயும் தந்தையுமாய் -பிரியனாயும் ஹிதபரனாயும்
இவ்வுலகினில் வாயுமீசன்-திரு அவதரித்து வந்து -நித்ய நிரூபாதிக ச்வாமித்வமே அடியாக
மணி வண்ணன் எந்தையே-நீல ரத்னனமான வடிவை உபகரித்து அடிமை கொண்டான் –
சாஸ்திரம் வழியாக அன்றி அழகைக் காட்டி -இதுவே பாமரர்களான நமக்கு வழி
நமக்கு தானே லௌகிக விஷய ஈடுபாடு இல்லாமல் பகவத் விஷயம் ஈடுபட சொல்ல வேண்டும் –
ஆழ்வாருக்கு -அது போலே இல்லாமல் -அப்புள்ளின் பின் போனதே –
நெஞ்சு அவன் பரிகரம் ஆனதே -ஆழ்வாரும் அவன் பரிகரம் -இருவரும் சேர்ந்து அவன் இடம் போவோம் என்கிறார்

நீயும் நானும் இந்நேர் நிற்கில் –
அப்புள்ளின் பின் போன தனி நெஞ்சமே -திரு விருத்தம் -3–நீயும் -உன்னைப் பரிகரமாக உடைய நானும் -பல அனுபவம் பண்ண விருக்கிற நாம்
இப்படி விலக்காதே இருக்கில் -ந நமேயம் -என்னும் பிராதிகூல்ய மநோரதம் இன்றிக்கே ஒழியில்
மேல் மற்றோர் நோயும் சார் கொடான் –
எந்த நோயைக் கொடுப்பான் -தன்னால் -உற்ற நல் நோய் இது தேறினோம் -விலக்க வேண்டாமே –பக்தி முற்றின நோய் வேண்டுமே —
நிஷித்த அனுஷ்டானம் பண்ணி அகலவிடுதல் -பாகவத அபசாரம் போல்வன –
தன்னை ஒழிய பிரயோஜனத்தைக் கொண்டு அகல விடுதல்
அயோக்ய அனுசந்தானம் பண்ணி அகல விடுதல்
வேறொரு சாதன பரிக்ரஹம் பண்ணி அகல விடுதல் -நெறி காட்டி நீக்குதியோ –
முன்பு பண்ணின பாப பல அனுபவம் பண்ணி அகலவிடுதல் -செய்ய விட்டுக் கொடான்

கர்ம வியாவ்ருத்தி சொல்கிறது –
திரு மந்திர பத த்ரய விரோதிகளை வர ஒட்டான் –
உபேயாந்திர பிராப்யாந்தர சம்பந்தம்
சாதனாந்தர சம்பந்தம்
ஸ்வரூப விரோதிகள்
நமஸ் -ஆந்தர அபிப்ராயம் -பாகவத சேஷத்வம் -விரோதி -பாகவத அபசாரம் –

நெஞ்சமே சொன்னேன்
திருக் கோட்டியூர் நம்பியைப் போலே பிறர் வைத்து –இதம் தே நாத பஸ்காய—ஸ்ரீ கீதை -18-67—என்றவனைப் போலே படுகிறார்
சொன்னேன்
என்று -த்ரௌபதி குழல் விரித்துக் கிடக்கிற படியை பார்த்து செய்வது காணாமல் சொல்லிக் கொடு நின்றான்
அர்த்தத்தின் கனத்தைப் பார்த்து -கைப்பட்ட மாணிக்கத்தை கடலிலே பொகட்டோம்-என்று பதண் பதண்-என்றான் இறே –
இனி பிரதிபத்தி பண்ணாதார் இழக்கும் அத்தனை –

தாயும் தந்தையுமாய் –
மாதா பிதாக்களைப் போலே பரிவனாய் -அவர்கள் அளவன்றிக்கே
இவ்வுலகினில் வாயுமீசன்
பிரஜை கிணற்றில் விழுந்தால் ஒக்கக் குதிக்கும் மாதாவைப் போலே -சம்சாரத்தில் ஒக்க விழுந்து எடுக்குமவன்
இங்கு வந்து அவதரிக்கைக்கு ஹேது என் என்னில்
ஈசன்
பிராப்தன் ஆகையால்
அன்றிக்கே இங்கே வந்து அவதரித்து ஈரரசு தவிர்க்கையாலே ஈசன் ஆனான் என்னவுமாம் –
துக்க சிந்தோ -தாண்ட முடியாத -சம்சாரம் –சம்மக்னான் ப்ரேரிதா-கூபாந்தக முக்த புத்திரன் -வைகுண்ட தாம்னே –
மணி வண்ணன் எந்தையே —
தன் வடிவு அழகைக் காட்டி என்னை விஷயாந்தர பிரவணன் ஆகாத படி மீட்டு தன் சேஷித்வத்தைக் காட்டி
என்னுடைய சேஷத்வத்தை நிலை நிறுத்தினவன்
ஐயப்பாடு அறுத்து -ஆதாரம் பெருக வைத்த அழகனூர் அரங்கன்

தாயும் தந்தையுமாய் -இவ்வுலகினில் வாயும் மணி வண்ணனாய் எந்தையான ஈசன் -நீயும் நானும் இந் நேர் நிற்கில்
மேல் மற்றோர் நோயும் சார் கொடான் நெஞ்சமே சொன்னேன் -சத்யம் சத்யம் என்கிற படியே இது மெய் –

———————————————————————————–

அவதாரிகை –

கீழ் இவர் அஞ்சினால் போலே விடிந்தது -அயோக்யன் என்று அகலுகிறார் –துஞ்சும் போதும் விடாதே தொடர் கண்டாய் என்றாரே –
பிரபாதம் -பலித்தது –

எந்தையே என்றும் எம்பெருமான் என்றும்
சிந்தையுள் வைப்பன் சொல்லுவன் பாவியேன்
எந்தை எம்பெருமான் என்று வானவர்
சிந்தையுள் வைத்து சொல்லும் செல்வனையே –1-10-7-

ஸூரி போக்யத்வ வைலஷண்யம் கொண்டவன் -சுவ நிகர்ஷம் அடியாக அகலப் பார்க்கிறார்
எந்தையே என்றும் எம்பெருமான் என்றும் -ஹிதபரன் -சேஷி என்றும்
சிந்தையுள் வைப்பன் சொல்லுவன் -மநோ வாக் வியாபாரங்கள் இரண்டும் -நெஞ்சுக்குள் வைத்து சொல்லுவேன்
பாவியேன் -மீண்டும் நைச்யானுசந்தானம் -எடுப்பும் சாய்ப்புமாய் -தர்மாதர்ம வியாகுலனாய் அர்ஜுனன் போலே –
நெஞ்சு இடம் -முன்னமே சொல்லி இந்த நோய் வந்தாலும் பிரியாமல் கொள் என்றாரே -துஞ்சும் போதும் விடாதே தொடர் கண்டாய் என்றாரே
அந்த தைர்யத்தால் மீண்டும் வள வேழ் உலகம் தலை எடுக்கிறது
எந்தை எம்பெருமான் என்று-சத்தாதி ஹேது பூதர் -பரம சேஷி என்று –
வானவர் சிந்தையுள் வைத்து சொல்லும் செல்வனையே -ஐஸ்வர் யாம் உடையவனை
மநோ வாக் வியாபாரங்கள் இரண்டும் -மநோ உத்தர வாக் பூர்வ
அவர்கள் எங்கே -நான் எங்கே –

எந்தையே என்றும் –
எனக்கு பரிவனானவனே என்றும்
எம்பெருமான் என்றும்
எனக்கு வகுத்த ஸ்வாமியே என்றும்
சிந்தையுள் வைப்பன்
எத்தனை விஷயங்களை நினைத்துப் போந்த நெஞ்சிலே வைத்தது
நான் அறிந்ததாக நெஞ்சிலே வைத்து தூஷித்த அளவேயோ -அழுக்கு பிடித்த சேற்றில் மாணிக்கத்தை வைத்த அளவு மட்டும் இல்லை
சொல்லுவன்
பிறர் அறியும் படி தூஷித்தேன்
இவ் வஸ்துவை அழிக்கைக்கு நான் ஒரு பாபகர்மா உண்டாவதா -முற்றின பக்தியை -தான் பாபம் என்கிறார் –
பாவியேன்
சாத்விகனாய் இருப்பான் ஒருவன் தமோ குண அபிபூதனாய் ஒரு கிருஹத்தில் நெருப்பை வைத்து சத்வம் தலை எடுத்தவாறே
அனுதபிக்குமா போலே பாவியேன் -என்கிறார்
நீர் இங்கனே சொல்லுவான் என்
பகவத் விஷயத்தை நினைக்கையும் சொல்லுகையும் பாப பலமோ என்னில் புரோடாசத்தை நாய் தீண்டினால் போலே விலஷணர் உடைய
போகய வஸ்துவை அழிக்கை பாப பலம் அன்றோ
எந்தை எம்பெருமான் என்று வானவர் சிந்தையுள் வைத்து சொல்லும் செல்வனையே —
நினையாவிடில் அரை ஷணம் தரிக்க மாட்டாதே நித்ய ஸூரிகள் நினைத்து அனுபவித்த அவ்வனுபவம் வழிந்து
எங்களுக்கு பரிவன் ஆனவனே ஸ்வாமியானவனே -என்று தங்கள் நெஞ்சிலே வைத்து சொல்லும்படியான ஐஸ்வர்யத்தை உடையவனை
நான் என் சொன்னேன்
இவ்வஸ்துவை ஒருவர் நம்பாதபடி அழித்தேன் -என்கிறார் –
நித்ய ஸூரிகளும் நம்ப முடியாத படி -நான் சொல்ல எம்பெருமான் இவரை அணுக -அத்தால் அவர்களுக்கும் அவநம்பிக்கை விழுந்ததே -பாவியேன் -என்கிறார் –
இந்த பாட்டை அனுசந்தியா நிற்க -முதலிகள் -இப்படி -அகல்வது -சமாஹிதர் ஆவது -எண் என்னில்
இவனுக்கு அவன் இடத்தில் சிறிது ச்நேஹம் உண்டானதைக் கொண்டு தோஷம் பாராமல் மேல் விழவும் ஒண்ணாது -தோஷம் கண்டு அகல்வதும் ஒண்ணாது –
மாறி மாறி வருமே -வாத்சல்ய சௌசல்யம்-இத்யாதிகளையும் -நம்முடைய நீச தண்மையையும் அனுசந்தித்து கிட்ட வேணும் என்கிறார்

———————————————————————————–

அவதாரிகை –

நாம் இதுக்கு முன்பு நினைத்தும் பேசியும் தப்பச் செய்தோம் -இனித் தவிரும் அத்தனை -என்று
அவன் குணங்கள் நடை யாடாதோர் இடத்திலே கிடக்க வேணும் -என்று போய்-ஒரு குட்டிச் சுவரிலே முட்டாக்கிகிட்டுக் கொண்டு கிடந்தார்
அங்கே வழி போகிறவன் ஒருவன் சுமை கனத்து -ஸ்ரீ மன் நாராயணன் -என்றான்
அச் சொல்லைக் கேட்டு தம்முடைய கரணங்கள் அங்கே பிரவணம் ஆகிறபடியை கண்டு விஸ்மிதர் ஆகிறார் –

ஸ்வா பதேசம் -குட்டிக் சுவர் –கைவல்யம் -ஏகாந்தமாக -பாஹ்ய இந்த்ரியங்கள் –
முட்டாக்கு -பகவத் பர்யந்தாக அந்தர் இந்த்ரியங்கதங்கள் -ஆத்மா அளவில் நிறுத்தி
சுமை -சம்சார பாரம்
இறக்கியதும் செல்வ நாரணன் சொல்லலாமே

செல்வ நாரணன் என்ற சொல் கேட்டலும்
மல்கும் கண் பனி நாடுவன் மாயமே
அல்லும் நன்பகலும் இடைவீடின்றி
நல்கி என்னை விடான் நம்பி நம்பியே –1-10-8-

திரு நாம ஸ்ரவணத்தால் சேர்த்துக் கொண்டானே
செல்வ நாரணன் என்ற –செல்வன் நாரணன் -பாட பேதம் –
சொல் கேட்டலும் -ஹிரண்யகசிபு தேசத்தில் போனாலும் -நெற்றி அழித்து -வெட்கி -முக்காடு போட்டுக் கொண்டு –
இன்னார் தெரிய கூடாதே -குட்டிச் சுவர் ஏகாந்த தேசம் –
மறந்தே போக யத்னம் செய்ய -சுமை தாங்கி கல்லில் -செல்வ நாரணன் சொல்ல –
சொல் கேட்டதும்
மல்கும் கண் பனி -ஓடி வந்ததே –
நாடுவன் -எங்கே எங்கே நாடி -அவனைத் தேடவா -கண்ணீர் வர காரணம் தேடவா
மாயமே -கோத்து கோத்து வியாக்யானம் ஈட்டில் அதுவே ஆச்சர்யம் -சொன்னவனுக்கும் ஆச்சர்யம் –
ஆழ்வார் தேட -நான் எப்படி இத்தை சொன்னேன் -அவன் கேட்க -மாயமே
ஆழ்வார் எங்கு இருந்தாலும் உஊரும் நாடும் உலகும் பெரும் தாரும் பிதற்ற -அச்யுத பானுக்களுக்கு -வகுள பூஷண பாஸ்கர உதயத்திலே
முதலியாண்டான் ஸ்ரீ பாததீர்த்த மகிமையால் ராமானுஜர் அடியார்கள் ஆனார்களே –
ஹிரண்ய கசிபும் ஸ்ரீ யபதி சொல்வானாம் -விலகும் அவரை சேர்த்துக் கொண்ட மாயம் –
கண்ணீர் வந்த மாயத்தை சொல்ல முடியுமோ
அல்லும் நன்பகலும் இடைவீடின்றி -நல் அல்லும் நல் பகலும் -வாசி இல்லாமல் -நன்மை -அவனை கிட்ட உறுப்பாக இருப்பதால் -விச்சேத ரஹிதமாக
நல்கி என்னை விடான் நம்பி நம்பியே
நம்பி என்னை விடான் -அழியல் நம் பையல் என்று ததீயத்வ புத்தி பண்ணி தன்னுடையவன் என்று விஸ்வசித்து
நம்பி என்னை நம்பி நல்கி விடான் -அவனே சாதனம் -ஆகவே இதோ கூடுகிறேன் –
பெருமாள் தாமரைப் பூவை காட்ட குழந்தை அலுத்து -மறைத்தால் அழுமே -அதே போலே ஆழ்வார் எடுப்பும் சாய்ப்பும்

செல்வ நாரணன் என்ற சொல் கேட்டலும் மல்கும் கண் பனி நாடுவன்-
ஆழ்வார் பரிசரத்தில் ப்ரஹ்மசாரி எம்பெருமான் பேர் சொல்லுவார் இல்லை
அதில் அர்த்த அனுசந்தானம் பண்ண வேண்டா வாயிற்று இவர் நோவு படுக்கைக்கு -அஹ்ருதயமாகவே
என் போலே என்னில் -விஷ ஹரண மந்த்ரம் போலே
அச்சொல் செவிப்பட்ட அளவில் கண்ணானது என்னை ஒழியவே நீர் மல்கப் புக்கது –
-நெஞ்சும் அவ்வளவிலே -எங்குற்றாய் -என்று தேடப் புக்கது –
சொல் கேட்டு உருகி அழ வில்லை -கண் தானாகவே செயல் பட்ட ஆச்சர்யம் -நெஞ்சும் அப்படியே -நாடுவன் -நெஞ்சு நாடப் புக்கது தம்மை ஒழிய
கீழே நெஞ்சிலே நினைத்து சொல்லுதல் -இங்கேயும் கண் நெஞ்சு இரண்டு வியாபாரங்கள்
மாயமே –
அல்லேன் என்று அகலுகைக்கு நான் வேண்டிற்று
ஆவேன் என்று கூடுகைக்கு நான் வேண்டிற்று இல்லையீ
ஈதோர் ஆச்சர்யம் இருந்தபடி என்
அவன் பின்னைச் செய்கிறது என் என்னில்
அல்லும் நன்பகலும் இடைவீடின்றி நல்கி என்னை விடான் நம்பி நம்பியே —
தம் அபிசந்தி ஒழியவே தம்முடைய கரணங்களுக்கு பகவத் அனுபவமே யாத்ரையாம் படி அவன் மேல் விழுகிற காலம் ஆகையாலே
-நல்ல அல்லும் நல்ல பகலும் -என்கிறார் –

திவா ராத்ரம் விபாகம் அற எனக்கு ச்நேஹித்து பரிபூர்ணன் ஆனவன் என்னை சுவீகரித்து என்னை விட ஷமன் ஆகிறிலன்
அவன் பேர் மாதரம் கேட்ட அளவில் என் கண்ணானது பனி மல்கா நின்றது -நெஞ்சானது தேடா நின்றது -இது ஓர் ஆச்சர்யம் இருந்த படி என் -என்கிறார் –
அல்லும் பகலும் இடை வீடு இன்றி நம்பி என்னை விடான் -செல்வ நாரணன் –மாயமே -என்று அந்வயம்
சாதனம் சொல்லி -அப்புறம் சாத்தியம் –உத்தாரார்த்த பூர்வகம்-
பூர்வார்த்த பூர்வகம் -சாத்தியம் முதலில் -கண்ண நீர் பனி மல்குவது -இதற்கு சாதனம் அப்புறம் –

இடைவீடின்றி
நான் ஒரு கால் தேடி விடா நின்றேன்
அவன் இடை விடாதே ச்நேஹியா நின்றான் -இதுவே மாயம்-
என்னை விடான் நம்பி நம்பியே
1-அபூர்ணனான என்னைப் பூர்ணனான தான் -நம்பி விடுகிறிலன்-நம்பி என்னை விஸ்வசித்து விடுகிறிலன் –
நம்பி
2-என்னை ஒரு மதிப்பனாக நினைத்து நம்பி -அல்லும் நன் பகலும் இடைவீடின்றி நல்கி நம்பி என்னை விடான் மாயமே
நம்பியே
3- இவனையே பரி பூரணன் என்கிறது
சம்சாரி சேதனனைப் பெற்று பெறாப் பேறு பெற்றனாய் இருக்கிற இவனையே பரிபூரணன் என்கிறது லோகத்தார்
இவனையா -பரிபூர்ணன் என்கிறது என்று விஸ்மிதர் ஆகிறார்

மாயமே என்பதற்கு
நெஞ்சத்திலே நோக்கு -நாடுவன்
சொல் கேட்டதும் நோக்கு
மதிப்பன் -நம்பி பதத்தில் நோக்கு
மூன்று நிர்வாகங்கள்

———————————————————————————-

அவதாரிகை –

நீர் தாம் இங்கனே கிடந்தது படா நில்லாதே -அவ்விஷயத்தை மறந்து சம்சாரிகளோ பாதி
உண்டு உடுத்து திரிய மாட்டீரோ என்ன நான் எத்தைச் சொல்லி அவனை மறப்பதோ என்கிறார் –

நம்பியைத் தென் குறுங்குடி நின்ற அச்
செம்பொனே திகழும் திரு மூர்த்தியை
உம்பர் வானவர் ஆதி யஞ்சோதியை
எம்பிரானை என் சொல்லி மறப்பேனோ –1-10-9–

உபகாரகத்வம் -மறக்கப் போமோ
நம்பியை என் சொல்லி மறப்பேனோ- -பரிபூர்ணன் -குணம் இல்லை -அபூர்ணன் -என்று மறக்கவோ
தென் குறுங்குடி நின்ற -என் சொல்லி மறப்பேனோ–சந்நிஹிதன் இல்லை என்று மறக்கவோ -உம்மைப் போலே பிள்ளை -அசுலாபன் என்று மறக்கவோ
சமஸ்த கல்யாண குண பூரணன்
அச் செம்பொனே திகழும் திரு மூர்த்தியை என் சொல்லி மறப்பேனோ-அழகன் இல்லை என்று மறக்கவோ
பரம பதத்தில் இருக்கும் வடிவைக் காட்டிலும் உஜ்வலமான
நாங்கள் கோலத் திருக்குறுங்குடி நம்பியைக் கண்ட பின்
உம்பர் வானவர் ஆதி யஞ்சோதியை-என் சொல்லி மறப்பேனோ-பெருமை இல்லை என்று மறக்கவோ -நித்ய ஸூரிகளுக்கும் சத்தாதி ஹேது பூதன்
ஆதி சோதி -சத்தாதி ஹேது பூதன்
அம் சோதி -சதா தர்ச நீயமான -பரஞ்சோதி சப்த வாச்யனாய்
எம்பிரானை என் சொல்லி மறப்பேனோ-உபகாரகன் இல்லை என்று மறக்கவோ -ஊரையே திருத்தும்படி அருளி அனுபவிப்பித்து அடிமை கொண்டவன்
என் சொல்லி மறப்பேனோ-நிபிடமாய் பற்றிக் கொண்டார் – எத்தை சொல்லி மறக்கப் போகிறேன் -விலக வழியே இல்லை –

நம்பியைத்
கல்யாண பரிபூர்ணனை
பரம பதத்திலே குணங்களுக்கு சத்பாவமே இறே உள்ளது
இங்கே இறே குணங்களுக்குப் பூர்த்தி
தென் குறுங்குடி நின்ற
கலங்கா பெரு நகரை கலவிருக்கையாக உடையவன் -கலந்து இருக்கை -ராஜ தர்பாரில் ஓலக்கம் இருக்குமவன் –
அத்தை விட்டு என்னைப் பற்ற திருக் குறுங்குடியிலே அவசர ப்ரதீஷனாய் கொண்டு ஸ்தாவர பிரதிஷ்டையாக நின்றவன்
நம்பியைத் -தென் குறுங்குடி நின்ற
குணத்திலே குறை உண்டாதல்
தூரஸ்தன் என்னுதல் -செய்து நான் மறக்க வேணுமே
அச் செம்பொனே திகழும் திரு மூர்த்தியை
வடிவு அழகிலே குறை உண்டாய்த்தான் மறக்கவோ
அச் செம்பொன்
உபமான ரஹிதமாய்-ஓட்டற்ற செம்பொன் போலே நிரவதிக தேஜோ ரூபமாய் வாங் மனஸ்ஸூக்களாலும் பரிச்சேதிக்க ஒண்ணாத
திவ்ய மங்கள விக்ரஹத்தை உடையவன்
உம்பர் வானவர் ஆதி யஞ்சோதியை
அவ வடிவு அழகை அனுபவிக்க இட்டுப் பிறந்த நித்ய ஸூரிகளைச் சொல்லுகிறது
ஆக்கரான இவருகில் வானவரைப் போல் அன்றியே மேலான நித்ய ஸூரிகளுடைய சத்தாதிகளுக்கும் தானே கடவனாய்
அவர்களுக்கு அனுபாவ்யமான திவ்ய மங்கள விக்ரஹத்தை உடையவனை
வானவர் -சிருஷ்டிக்கப்படும் -ஆக்கர் தேவர்கள்
இவர்கள் உம்பர் வானவர் -மேலான நித்ய ஸூரிகள்
எம்பிரானை
அவர்கள் அனுபவிக்கும் படியை எனக்கு உபகரித்தவனை
என் சொல்லி மறப்பேனோ –

1-அபூர்ணன் என்று மறக்கவோ
2-அசந்நிஹிதன் என்று மறக்கவோ
3-வடிவு அழகு இல்லை என்று மறக்கவோ
4-மேன்மை இல்லை என்று மறக்கவோ
5-எனக்கு உபகாரகன் அன்று என்று மறக்கவோ
எத்தைச் சொல்லி மறப்பன் -என்கிறார் –

மூர்த்தி -சௌந்தர்யம் -வடிவு அழகில் நோக்கு
அம் சோதி -நித்ய ஸூரிகளால் அனுபாவ்யம் -மேன்மையில் நோக்கு
நிகமத்திலும் -சாற்றுப் பாட்டிலும் –சௌந்தர்யம் சௌலப்யம் பரத்வம் -வியக்தம் –

————————————————————————-

அவதாரிகை

ஆனாலும் வருந்தியாகிலும் மறந்தாலோ வென்ன-நெஞ்சில் இருளை அறுத்துக் கொண்டு
நிரந்தர வாசம் பண்ணுகிறவனை மறக்க விரகுண்டோ என்கிறார் –

மறப்பும் ஞானமும் நான் ஒன்றும் உணர்ந்திலன்
மறக்கும் என்று செந்தாமரைக் கண்ணோடு
மறப்பற என்னுள்ளே மன்னினான் தன்னை
மறப்பனோ இனி யான் என் மணியையே –1-10-10-

மறவாத படி அவனே யத்னம் பண்ணா நிற்க மறக்க விரகு உண்டோ
மறப்பும் ஞானமும் -மறதி -அறிவு -நினைவு
நான் ஒன்றும் உணர்ந்திலன் -இரண்டில் ஒன்றையும்
மறக்கும் என்று செந்தாமரைக் கண்ணோடு -அறிவை அருளி -தன விஷய ஞானத்தை உண்டாக்கி –
மறக்கும் என்று நினைத்து கடாஷிக்கைக்கு அடியாக திருக் கண்கள் உடன்
மறப்பற என்னுள்ளே மன்னினான் தன்னை -மறப்பு புகுராதபடி -நிரந்தர நித்ய வாசம் செய்து அருளி
மறப்பனோ இனி யான்
என் மணியே -நீல ரத்னம் -அழகு முந்தானையில் முடிந்து கொள்ளும் படி சௌலப்யம் –

மறப்பும் ஞானமும் நான் ஒன்றும் உணர்ந்திலன்
நான் சேதனனாய் நினைத்தேனாகில் அன்றோ மறப்பது
நினைத்தேன் நானான வன்று இறே மறக்க இடம் உள்ளது
ஜ்ஞானத்திருக்கு ஆஸ்ரயமாமது இறே அஜ்ஞ்ஞானத்துக்கும் ஆஸ்ரயம் ஆவது
அசித் கல்பனாய் கிடீர் நான் இருந்தது -சா வித்யா-ச விமுக்த்யயே- சம்சாரம் உழையாமல் முக்தி வழி கொடுப்பதே ஞானம் அறிவு

தன்னைப் பற்றி ஞானம் கொடுத்து அருளி –மயர்வற மதி நலம் அருளி -அதன் பின்பு

மறக்கும் என்று செந்தாமரைக் கண்ணோடு -மறப்பற என்னுள்ளே-
இப்படி இருக்கிற நான் நினைத்தேனாகவும்
நினைவையும் என் தலையிலே ஏறிட்டு–நினைவையும் -என்றது மறுப்பையும் என்றபடி -மடி மாங்காய் இடுமா போலே-
பிறந்த ஜ்ஞானத்துக்கு விச்சேதம் ஏதும் வர ஒண்ணாது என்று பார்த்து
அழகிய திருக் கண்களாலே குளிர நோக்கிக் கொண்டு
தன்னைப் பற்றி எனக்கு வரும் விச்ம்ருதி போம்படி என் ஹிருதயத்திலே நித்ய வாசம் பண்ணுகிறவனை-

ஞானம் நான் ஒன்றும் உணர்ந்திலன் -என்ற போது விச்ம்ருதியும் இல்லை -ஆகுமே -தனித்து சொல்ல வேண்டுமோ
பிறவியில் பெற்ற ஞானம் மறப்பது ஓன்று -விட்ட இடத்தில் இருந்து அடுத்த ஜன்மம் தொடரலாம் என்கிறானே -அந்த ஜன்ம ஞானம் -வேறே உண்டே –
அத்தையும் மறக்க வாய்ப்பு உண்டே -மறப்பு இல்லை தனியாக சொன்னது அத்தையும் சேர்த்து சொன்னபடி
காலம் அநாதி -காதசித்கமாக வந்த அறிவையும் மறக்கலாமே -ஸ்ம்ருதியும் இல்லை என்னாமல் மறுப்பும் என்பான் என் என்னில்
மறப்பு இல்லை என்றாலே நினைப்பும் இல்லை என்கிறார் -ஜன்ம ஜன்மத்தால் தமது யத்னம் இல்லை என்கிறாரே
பிண்டம் இல்லாமல் கலசம் பிறக்காதே -ஸ்ம்ருதி உண்டாகுமானால் நினைவு இருந்து இருக்க வேண்டும் –
ஞானமும் மறுப்பும் -சொல்லாமல் மறுப்பும் ஞானமும் -அந்தாதிக்கு சேர -மறுப்பை முதலில் சொல்ல –
தன்னை அசித் சொல்லிக் கொள்கிறார் -உலகோர் போலே இல்லை -மறுப்பே இல்லை என்பதால் அசித் துல்யம் தோற்றுமே
ஞானத்திலும் மறப்பிலும் ஸ்வாதந்த்ர்யம் இல்லை என்றாரே -மறக்கும் என்று சேருமோ என்னில் -அருளிய மதிநலம் மறக்கவும் ஸ்வாதந்த்ர்யம் இல்லையே
ஞானம் வந்ததால் ஸ்வா தந்த்ர்யம் வரலாம் -அது அடியாக மறதியும் வரலாமே

மன்னினான் தன்னை
புறம்பே அந்ய பரதை உண்டு என்று தோற்ற இருக்கிறிலன்-
எங்கும் பக்க நோக்கு அறியான் என் பைந்தாமரைக் கண்ணன் –

மறப்பனோ இனி யான் என் மணியே
பெரு விலையனான ரத்னம் கை புகுந்தால் அத்தை முடிந்து அனுபவியாதே உதறுவார்களோ
மறப்பேனோ இனி
மறவாமைக்கு பரிகரம் அவன் கையிலே உண்டாய் இருக்க இனி மறக்க உபாயம் உண்டோ –
திருக்கண்கள் -ஏழையர் ஆவி உண்ணும் இணைக் கூற்றங்கள் -தூது செய் கண்கள் -பரிகரம் உண்டே –
கீழ் அநாதி காலம் நினைக்க விரகு இல்லாப் போலே இறே மேல் உள்ள காலமும் மறக்க விரகு இல்லாத படியும் –
யான் என் மணியையே –
அநாதி காலம் -மறந்தேன் உன்னை முன்னம் –பெரிய திருமொழி -6-2-2-என்கிறபடியே விஸ்மரித்துப் போந்த நான்
என் மணியையே –
பெரு விலையனாய் முடிந்து ஆளலாம்படி கை புகுந்து புகரை உடைத்தான நீல மணி போலே இருக்கிற தன்னை
எனக்கு அனுபவ யோக்யமாம்படி பண்ணி வைத்த பின்பு நான் அவனை அநாதரிப்பனோ –

—————————————————————————————-

அவதாரிகை –

நிகமத்தில் இப்பத்திக் கற்றவர்கள் நிரதிசய புருஷார்த்தமான பகவத் கைங்கர்யத்தை பெறுவார் -என்கிறார்

மணியை வானவர் கண்ணனைத் தன்னதோர்
அணியை தென் குருகூர்ச் சடகோபன் சொல்
பணி செய் ஆயிரத்துள் இவை பத்துடன்
தணிவிலர் கற்பரேல் கல்வி வாயுமே –1-10-11-

இத் திருவாய்மொழியை கல்வியே கைங்கர்யம்
மணியை -ஔஜ்வல்யம்
வானவர் கண்ணனைத் -நிர்வாஹகன் /கண் அழகு என்றுமாம்
தன்னதோர் அணியை-ஒப்பு இல்லாமையாலே தனக்குத் தானே பூஷணம்
தென் குருகூர்ச் சடகோபன் சொல் -கட்டளைப் பட்ட -திருக்குருகூர் நகருக்கு நிர்வாஹகர்
பணி செய் ஆயிரத்துள் இவை பத்துடன் -சொல்லாலே பணி செய்த -அபிப்ராயத்துடன் உடன்பட்டு -மனஸ் -நல்லை நெஞ்சே -சொல்வதால் -நேர் நிற்கில் –
தணிவிலர்-ஆறுதல் அற்று -தணிவு போதும் என்கிற புத்தி -மீண்டும் மீண்டும் இத் திருவாய்மொழியிலே ஆசை கொண்டு
கற்பரேல் -அபி நிவேசதுடன் ஆச்சார்ய முகேன கற்று
கல்வி வாயுமே-கைங்கர்யம் கிட்டும் -வித்யைக்கு பலமான கைங்கர்யம் –
மணியை வானவர் கண்ணனைத் தன்னதோர் அணியை–பரத்வம் சௌந்தர்யம் சௌலப்யம் -மாலே –மணி வண்ணா -ஆலின் இலையாய் -போலே –

மணியை
முந்தானையில் முடிந்து ஆளலாம் படி கை புகுந்து இருக்கும் சௌலப்யம் சொல்லுகிறது
தென் குறுங்குடி நின்ற -என்கிற விடத்தில் சௌலப்யம்
வானவர் கண்ணனைத்
உம்பர் வானவர் ஆதி யஞ்சோதி -என்ற மேன்மையைச் சொல்லுகிறது
தன்னதோர் அணியை
அச் செம்பொன்னே திகழும் திருமூர்த்தி -என்கிற வடிவு அழகை நினைக்கிறது
இம் மூன்றும் கூடின பசும் கூட்டாயிற்று -பரதத்வம் ஆகிறது
கற்பூர சந்தன கும்குமங்கள் கூடிய பசும் கூட்டம் –மூன்றும் பூர்ணம் -பிரதம சதகம் -பரத்வ -காரணத்வம் -அடுத்து -முதலிலே பார்த்தோம் –

தென் குருகூர்ச் சடகோபன் சொல் பணி செய் ஆயிரத்துள் இவை பத்து –
1-ஆழ்வார் அருளிச் செய்ததாய்
நாம் இங்குத்தைக்கு கிஞ்சித் கரித்ததாக வேணும் என்று சொற்கள் தானே என்னைக் கொள் என்னைக் கொள் என்று
மிடைந்த சொல் 1-7-11–என்கிறபடியே சொற்கள் பணி செய்த ஆயிரம் -என்னுதல்
2–சொல்லாலே பணி செய்த ஆயிரம் என்று வாசிகமான அடிமையைச் சொல்லுதல் –

உடன் தணிவிலர் கற்பரேல்
சாபிப்ராயமாக கற்பராகில் –
தணிவு ஆகிறது -மெத்தென்கை-மந்த புத்தி -என்றவாறு –
வரில் பொகடேன் -கெடில் தேடேன் -என்று இருக்கை அன்றிக்கே ஸ்ரத்தை மாறாதே கற்பராகில்
கல்வி வாயுமே
1–ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு -முதல் திருவந்தாதி -67-என்கிறபடியே
ஜ்ஞானமாகில் பகவத் விஷயத்தை பற்றி அல்லது இராமையால் -இத்தை அப்யசிக்க -இதுக்குப் பலமாக கைங்கர்யத்தை இது தானே தரும்
கல்வி வாயுமே
2–கல்வி தானே பிரயோஜனமாம் -என்றுமாம் –

இத் திருவாய் மொழியில் மேல் பரக்க அருளிச் செய்யப் புகுகிற அர்த்தத்தை சங்க்ரஹேண முதல் பாட்டிலே அருளிச் செய்தார்
இரண்டாம் பாட்டில் பரம பக்திக்கும் பரிகணநைக்கும் ஒக்க முகம் காட்டும் என்றார்
மூன்றாம் பாட்டில் -கண்டாயே அவன் ஸ்வரூபம் இருந்தபடி -நீயும் உன் ஸ்வரூபத்துக்குச் சேர நிற்கப் பாராய் -என்றார்
நாலாம் பாட்டில் ஸ்வரூப அனுரூபமாக நெஞ்சு தொழுத வாறே நெஞ்சைக் கொண்டாடினார்
அஞ்சாம் பாட்டில் கீழ் எண்ணிலும் வரும் என்றது பலத்தோடு வ்யாப்தமான படியை நெஞ்சுக்கு அருளிச் செய்தார்
ஆறாம் பாட்டில் நாம் இருவரும் இப்படி இருக்கப் பெறில் நமக்கு ஒரு அனர்த்தமும் வாரா என்றார்
ஏழாம் பாட்டில் கீழ் இவர் அஞ்சினபடியே விடிந்த படி சொன்னார்
எட்டாம் பாட்டில் திரு நாம ஸ்ரவணத்தாலே தம்முடைய கரணங்களுக்கு பிறந்த விக்ருதியைச் சொன்னார்
ஒன்பதாம் பாட்டில் விக்ருதர் ஆகாதே மறந்தாலோ என்ன மறக்க ஒண்ணாது என்றார்
பத்தாம் பாட்டில் வருந்தியாகிலும் மறந்தாலோ என்ன என் ஹிருதயத்திலே இருக்கிறவனை மறக்கப் போமோ என்றார்
நிகமத்தில் கற்றார்க்கு பலம் சொன்னார் -கைங்கர்யம் இல்லாமல் கல்விக்கு பலன் இல்லையே -பகவத் ஆஜ்ஞா -பகவத் கைங்கர்ய ரூபம் –

————————————————————————————————-

1-சர்வ ஸ்மாத் பரன் என்றார்
2-பஜநீயன் என்றார்
3-அவன் தான் ஸூலபன் என்றார்
4-ஸூலபனானவன் அபராத சஹன் என்றார்
5-அவன் சீலவான் என்றார்
6-ஸ்வாராதன் என்றார்
7-நிரதிசய போக்யன் என்றார்
8-அவனுடைய ஆர்ஜவ குணம் சொன்னார்
9-சாத்ம்ய போகப்ரதன் என்றார்
10-இப்படி ஏவம் பூதனானவன் நிர்ஹேதுகமாக விஷயீ கரிப்பான் ஒருவன் என்றார்
ஆகையாலே அவன் துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே என்று தம் திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்து தலைக் கட்டினார் –

————————————————————————-

முதல் பத்தால் பகவத் கைங்கர்யம் புருஷார்த்தம் என்று அறுதியிட்டார் –தொழுது எழு-கல்வி வாயுமே-
இரண்டாம் பத்தால் அந்த கைங்கர்யத்தில் களை அறுத்தார் –தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே –
மூன்றாம் பத்தால் விரோதி கழிந்த கைங்கர்ய வேஷம் பாகவத சேஷ பர்யந்தமான பகவத் கைங்கர்யம் என்றார் —பயிலும் –எம்மை ஆளும் பரமரே
நாலாம் பத்தால் இப்படிப்பட்ட கைங்கர்யத்துக்கு விரோதி ஐஸ்வர்ய கைவல்யம் என்றார் —ஒரு நாயகமாய் –
ஐந்தாம் பத்தால் அந்த விரோதியைப் போக்குவானும் அவனே என்றார் -களைவாய் –களை கண் மற்று இலேன் —
ஆறாம் பத்தால் விரோதி நிரசன சீலனானவன் திருவடிகளிலே சரணம் புக்கார் –அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே
ஏழாம் பத்தால் இப்படி பெரிய பிராட்டியார் முன்னிலையாக சரணம் புக்க இடத்தில்ய்ம் தக்தபட நியாயம் போலே
சம்சாரம் அனுவர்த்திக்கிற படியைக் கண்டு விஷண்ணர் ஆகிறார் –
திருவரங்கமே இவர்களுக்கு நினைவு -தென் திருவரங்கம் கோயில் கொண்டானே -அடிக் கீழ் புகுந்து நகர வில்லையே –
அசேஷ –சேஷ சாயினே -சேஷாசலத்தில் அருளி –ஊனிலாயா ஐவரில் கூப்பாட்டு போட்டாரே
எட்டாம் பத்தால் இப்படி பிரபன்னராய் இருக்கச் செய்தேயும் தக்தபட நியாயம் போலே நம்மை விடாதே அனுவர்த்திக்கிறது
நம்முடைய ஆத்மாத்மீயங்களில் நசை யறாத படியாலே என்று பார்த்து -அவற்றில் நசையில்லை என்கிறார் –உங்களோடு எங்கள் இடை இல்லை
ஒன்பதாம் பத்தால் இப்படி நசை யற்ற பின்பும் ரஷியாது ஒழிவான் என் -என்று அதிசங்கை பண்ண -நான் நாராயணன் சர்வ சக்தி உக்தன்
-உம்முடைய சர்வ அபேஷிதங்களையும் செய்து முடிக்கிறோம் -என்று அருளிச் செய்ய அவனுடைய சீல குணத்திலே ஆழம் கால் படுகிறார் -செஞ்சொல் கவிகாள் –
பத்தாம் பத்தால் ஆழ்வாருடைய பதற்றத்தைக் கண்டு திரு மோகூரிலே தங்கு வேட்டையாக வந்து தங்கி -இவருக்கு
அர்ச்சிராதி கதியையும் காட்டி -இவருடைய அபேஷித்த சம்விதானம் பண்ணின படியை அருளிச் செய்தார் —அவா அறச் சூழ்ந்தாயே -பிறந்தார் உயர்ந்தே –

———————————————————————————————

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

சடாரி அவதத்
பக்த்யாதிவத் ஸுவ கணணே
சமஸ்த தேக சம்ச்லேஷம் ஸூ துர்லபம்
நிர்ஹேதுகம் கிருபா பிரசாதாத் –

———————————————————————————-

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன்

விஷ்வக் விக்ராந்த த்ருஷ்யம்
விகணன் ஸூ லபம்
வியக்த பூர்வ உபகாரம்
ஸ்வ அந்தச்ய ஐகாக்ரா
ஸ்வயம் உதய ஜுஷம்
பந்த மாதரோ உபாதேயம்
சிந்தாத் ச்துத்யாதி லஷ்யம்
நத ஜன ச்லேஷினம்
தர்சித அர்ச்சம்
ச்மிர்த்தே சித்தே
ஸுவ விதரண

ஆது இத்தம்
பரத்வாத்
அகில சமதயா
பக்த சௌலப்ய பூம்னா
நிச்ச்செஷ அபராத
கிருபண ஸூ கடனாத் சௌசீல்யம்
சகா சம்ஸ்ராதநாத்
சுவாது சோமா
பிரகிருதி ரிஜுதயா
சாத்ம்ய போக பிரத்யாத்
ஔதார்ய நிருபாதிக

———————————————————–

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 9-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்-

பெருமாழி சங்குடையோன் பூதலத்தே வந்து
தருமாறு ஓர் ஏது அறத் தன்னை -திறமாகப்
பார்த்துரை செய் மாறன் பதம் பணிக வென் சென்னி
வாழ்த்திடுக வென்னுடைய வாய் ————–10-

————————————————————————
அவதாரிகை –

சர்வாங்க சம்ச்லேஷம் பண்ணுகைக்கு
ஹேத்வாந்தரம் காணாமல் ‘
நிர்ஹேதுகமாகாதே -என்று நிர்வ்ருத்தர் ஆகிற படியை பேசுகிற பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார்
எங்கனே என்னில்
இப்படி உகப்புடனே பண்ணும் சர்வாங்க சம்ச்லேஷம் ஆகிற
இந்தப் பேற்றுக்குத் தகுதியாக
இவனாலே நேர்ந்து செய்யத் தக்கது உண்டோ -என்னில்
புத்தியாதி சகல பதார்த்தங்களுக்கும் நியாமகன் ஆகையாலே
அத்வேஷம் துடங்கி
பரிகணிநை நடுவாக
பரமபக்தி பர்யந்தமாக தானே விளைவித்து
வந்து
நிர்ஹேதுகமாக அங்கீகரிக்கும்
ஸ்வபாவன் என்று அவனுடைய
நிர்ஹேதுக உபகாரத்வத்தை அனுசந்தித்து
நிர்வ்ருத்தராகிற –
பொருமா நீள் படையில் அர்த்தத்தை
பெருமாழி சங்கு டையோன் -என்று துடங்கி அருளிச் செய்கிறார்-

————————————————————————————-
வியாக்யானம்–
பெருமாழி சங்கு டையோன் பூதலத்தே வந்து –
சத்ருக்கள் மேலே பொரா நிற்கிற
திரு வாழி ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் ஆகிற
திவ்ய ஆயுதங்களை உடைய சர்வேஸ்வரன்
எதிர் அம்பு கோக்கிற இந்த பூதலத்திலே
சஷூர் விஷயமாம் படி வந்து
பொரு மா நீள் படை என்று துடங்கி
கரு மாணிக்கம் என் கண் உளதாகும் -என்றத்தை கடாஷித்து
அருளிச் செய்தபடி –

தருமாறு ஓர் ஏது அறத் தன்னை –
நிர்ஹேதுகமாக
தன்னை உபகரிக்கிற
உபாயத்தை –

ஓர் ஏது அறத் தன்னை -தருமாறு-
ஒரு ஹேது இன்றிக்கே
நிர்ஹேதுகமாக
பல ஸ்வரூபனான தன்னையே
தருகிற பிரகாரத்தை –

திறமாகப் பார்த்துரை செய் மாறன் –
அதாவது
கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழில் என் கண்ணுள்ளே வரும் -என்கிற
பக்திக்கும் பரிகணைனைக்கும் ஒக்க முகம் காட்டும்
படிக்கு மேலே
ஓர் எண் தானும் இன்றியே வந்து இயலுமாறு கண்டாயே -என்று
சஹித சஹித
சங்கத
என்று கரை சேர்த்த நிர்ஹேதுக கிருபையை
அல்ப அஞ்ஞராலே அவி சால்யமாம் படி ஸ்திரமாக தர்சித்து

அந்த பிரகாரத்தை அருளிச் செய்த ஆழ்வார் உடைய
பதம் பணிக வென் சென்னி வாழ்த்திடுக வென்னுடைய வாய் –
இப்படி நிர்ஹேதுக வைபவத்திலே நிர்வ்ருத்தர் ஆகிறபடியை
வெளியிட்ட ஆழ்வார் திருவடிகளை
மூர்த்த்னா ப்ரண மாமி -என்னும்படி
என் சிரஸ் சாந்து பஜித்திடுக –
திருக் குருகை பெருமாள் தன் திருத் தாள்கள் வாழியே-என்று
என் வாக்கானது மங்களா சாசனம் பண்ணி விடுக-

இப்படி உபகார ஸ்ம்ருதி அதிசயத்தாலே
தாம் ஆழ்வார் திருவடிகளிலே ஆழம் கால் பட்ட படியை
அருளிச் செய்து அருளினார் –

————————————————————————–

திராவிட உபநிஷத் சாரம் -ஸ்ரீ தேசிகன் –

சேவ்யத்வம் -சேவா யோக்யாக -முதல் பத்தால் –
அதி போக்ய
சுபாஸ்ரைய
சர்வ போக்யாதிசய
ஸ்ரேயா தத் ஹேதுதாதா
பிரபதன ஸூ லபன்
அநிஷ்ட நிவ்ருத்தி சீலன்
பக்தா சந்தானுவருதி
நிர்பதிக ஸூ ஹ்ரூத்
சத் பதவியியாம் சகாயம்
ஸ்ரீ மான்
சர்வ உபநிஷத்

சதகார்த்தங்களுக்கு சங்கதி –
பஸ்யன் உபாயம்
பிரபுமிக பிராப்ய பூதன்
கல்யாண உதார மூர்த்தி -முடிச்சோதி
ஐஸ்வர் யாத் சதுர்த்த்யே –விஷ மது துலய-அநந்ய போக்யத்வம் இச்சன்
ஷட் -6-10-அனிதர கதிதாம்

ஆத்ய சதகே
பரம் –
நிர்வைஷம்யம்
ஸூ லாபம்
அபராத பிரசகனம்
சூசீலம்
ஸுவ ஆராதனம்
சரசம்
ஆர்ஜவ
ஸூ சாதமா ஆனந்த பரதம்
அநக விஸ்ரான பரம் –குற்றம் இல்லாமல் கொடுத்து -ஹேது இல்லாமல்
முகுந்தம் -ஆத்ய சதகே முனி

ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம்
22- ஸ்ரீ பாஷ்ய அர்த்தம் -காரணத்வம் -அபாத்யத்வம்
உபாயத்வம் -பிராப்யத்வம்
த்விகாப்யம் -துரதிகமனம்-த்வய அஷ்ட அங்க்ரி பாதம் -16 பாதங்கள்
தூரதி கமன-அந்த்யாந்தா மீமாம்ஸா -சுருதி சிரசி தத்வம்
தத் ஆதௌ-அதிக விம்ச -22 பாசுரங்களால் –
கிருபா –
சரீரா சாஸ்திரம் -ஜகத் காரணத்வம் முதல்
தத் அபாத்யத்வம் -அவனே -இரண்டாவது
முமுஷு உபாச்யத்வம்
முக்த பிராப்யத்வம்
முதல் 6 பாசுரங்கள் -காரணத்வம் -முதல் அத்யாயம்
மேல் 5 -த்வீதிய அத்யாயம் –
2-1—2-9- திருதிய -உபாயத்வம் -புல்கு பற்று அற்றே
2-10-வண் புகழ் நாரணன் தின் கழல் சேரே -4 அத்யாயம் –

பரத்வாதி –
சேவா யோக்யம் பிரதம சதகே விஷய வரதம் –
தமேவ -போக்ய-அனுபவிக்கத் தக்கவன் –
வரிக்கத்தக்கவன் –
உடையார் ஸ்ரீ பாத முதலிகள் -பேர் அருளாலனையே பாடிற்று -அயர்வற அமரர்கள் அதிபதி
பல இடங்களிலும் நித்ய ஸூ ரி நிர்வாஹத்வம் சொல்லி
திரு வெங்கடாசலம் திருக் குறுங்குடி வாசஸ் ஸ்தானம் பேர் அருளாளானுக்கும் உண்டே -என்பாராம்
நெஞ்சுக்கு உபதேசிக்கும் படியே நம்மாழ்வார் சேவை சாதிக்க -ஞான முத்தரை திரு மார்புக்கு
கலியன் -இடது திருக்கை மடியிலும் வலது திருக்கை -மாற்றி செய்ய -முடியாமல் –
திருமாலை ஆண்டான் அருளிச் செய்தார் -விஸ்மிதராய்-ஆழ்வார் ஆவேசித்து -இங்கனே பிரதிஷ்டை செய்ய சொல்லி –

——————————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s


%d bloggers like this: