பகவத் விஷயம் காலஷேபம் -47– திருவாய்மொழி – -1-9-6 ….1-9-11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

அவதாரிகை –

சர்வ அந்தராத்மா வானவன் என் தோளைப் பற்றி வர்த்தியா நின்றான் -என்கிறார் –

மாயன் என் நெஞ்சினுள்ளான் மற்றும் யவர்க்குமதுவே
காயமும் சீவனும் தானே காலும் எரியும் அவனே
சேயன் அணியன் யவர்க்கும் சிந்தைக்கும் கோசரம் அல்லன்
தூயன் துயக்கன் மயக்கன் என்னுடைத் தோளிணை யானே –1-9-6-

மாயன் என் நெஞ்சினுள்ளான் –
இது என்ன பெறாப் பேறு-ஆச்சர்யமான குண சேஷ்டிதங்களை உடையவன் -என்னுடைய ஹ்ருதயஸ்தனானான்
இது என்ன சேராச் சேர்த்தி
மற்றும் யவர்க்குமதுவே
மற்றும் ஆரேனும் நான் பெற்ற பேறு பெற்றார் உண்டோ
நீர் பெற்ற பேறு தான் என்னில்
காயமும் சீவனும் தானும்
இது என்கிறார் மேல் –
காயமும் சீவனும் தானே -தேவ மனுஷ்யாதி சரீரங்களும் அவ்வவ சரீரஸ்தமான ஆத்மாக்களும் அவன் இட்ட வழக்கு
காலும் எரியும் அவனே
காற்றும் தேஜஸ் தத்வமும் இரண்டுக்கும் அஞ்சுக்கும் உப லஷணமாய் பூத பஞ்சகமும் அவன் இட்ட வழக்கு –
சேயன் அணியன்
சேயன் -ஸ்வ யத்னத்தாலே காண்பார்க்கு தூரச்தனாய் இருக்கும்
அணியன் -அவனாலே அவனைக் காண்பார்க்கு கை புகுந்து அணீயனாய் இருக்கும்
யவர்க்கும் சிந்தைக்கும் கோசரம் அல்லன் –
தூரச்தனாம் படிக்கு எல்லை சொல்லுகிறது
எத்தனைஎனும் அதிசய ஜ்ஞானராய் இருக்குமவர்களுக்கும் கண்ணுக்கு விஷயமாகி அன்றிக்கே மநோ ரத்தத்துக்கும் அவிஷயமாய் இருக்கும்
தூயன் –
இப்படி இருக்கிறவன் யசோதாதிகளுக்கு-யதி சக் நோஷி -என்னலாம் படி இருக்கும்
துயக்கன் மயக்கன்
உகவாதார்க்கு சம்சய விபர்யங்களைப் பிறப்பிக்கும்
துயக்கு -மனம் திரிவு -அருவினையேன் -1-5-1–என்று அகன்ற என் மனசை திரிய விட்டு
உன் தேனே மலரும் திருப்பாதம் சேருமாறு -1-5-5-என்னும்படி திரிய விட்டு என்னுடன் கலந்தவன்
மயக்கம் -கலத்தலும் கூடலும்
ஐதிக்யம் -பட்டர் சாஸ்திர ஞானம் இல்லாத ஒரு வைஷ்ணவர் இடம் பரிந்தது -ஸ்ரீ மன் நாராயணனே பரத்வம் -எம்பெருமானார் திருவடிகளே
தஞ்சம் என்று நீர் சொல்வதையே விச்வசித்து இருந்தேன் என்ற -ஒரு சாஸ்திர ஞானம் இல்லாத வைஷ்ணவர் இடம் பரிந்தது-
என்னுடைத் தோளிணை யானே
என் அளவிலே அங்கன் அன்றிக்கே திருவடி திருத் தோளிலே இருக்குமா போலே இரா நின்றான்

——————————————————————————————

அவதாரிகை –

நான் உகந்த படி அலங்கரித்துக் கொண்டு வந்து என் நாவிலே கலந்தான் -என்கிறார்

தோளிணை மேலும் நன் மார்பின் மேலும் சுடர் முடி மேலும்
தாளிணை மேலும் புனைந்த தண்ணம் துழாய் யுடை யம்மான்
கேளிணை ஒன்றும் இலாதான் கிளரும் சுடர் ஒளி மூர்த்தி
நாள் அணைந்து ஒன்றும் அகலான் என்னுடை நாவில் உளானே –1-9-7-

தோளிணை மேலும் நன் மார்பின் மேலும் சுடர் முடி மேலும் தாளிணை மேலும் புனைந்த தண்ணம் துழாய் யுடை யம்மான்
அபிமத விஷயம் இருந்தவிடத்துக்குப் போவார் அவர்கள் உகந்தபடியே பூசி புலர்த்தி ஒப்பித்துக் கொண்டு போமா போலே
ஆழ்வார் உகந்தபடியே திருத் துழாய் மாலையாலே அலங்க்ருதனாய் வந்தானாயிற்று
இவர் உகப்பதும் அதுவே -அவன் கொடுப்பதுவும் அதுவே இ ரே
புள்ளூர்தி கள்ளூறும் துழாய் கொயல்வாய் மலர் மேல் -திருவிருத்தம் -24-மனத்தை உடையராய் இருப்பர்
திருத் தாயார் சொல்லும் போது-வண்டு திவளும் தண்ணம் துழாய் கொடீர் –2-4-5-என்னும்
இவர் தாம் -விரை மட்டலர் தண் துழாய் –2-4-9-என்னும் -கண்ணன் கழல் துழாய் பொன் செய் பூண் மென்முலைக்கு -4-2-10-என்று மெலியும்-
அவனும் -தன் மன்னு நீள் கழல் மேல் தண் துழாய் நமக்கு அன்றி நல்கான் –6-8-6-என்று இவர்க்கு அல்லது கொடான்
தோளிணை மேலும்
ஸூ காடம் பரிஷச்வஜே -என்கிறபடியே அணைக்கக் கணிசிக்கிற திருத் தோள்களிலும் –

நன் மார்பின் மேலும்
அணிப்பிக்கும் அவள் இருக்கிற திரு மார்பிலும்
சுடர் முடி மேலும்
அணைத்துக் கொண்டு நின்று மேல் நோக்கிப் பார்த்த வாறே தன்னுடைய சேஷித்வ பிரகாசகமாய் இருக்கிற திரு அபிஷேகத்திலும்
தாளிணை மேலும் புனைந்த தண்ணம் துழாய் யுடை யம்மான்
தன்னுடைய சேஷித்வத்தை ஸ்திதிப்பிக்கிற திருவடிகளிலும் சாத்தின திருத் துழாயை உடைய சர்வேஸ்வரன்
தோளிணை -இத்யாதிகளுக்கு பட்டர் -வீரராய் இருப்பர் முற்பட ஆயுதத்துக்கு இடுவார்கள் -அப்படியே திருத் தோள்களுக்கு இட்டான் –
பிரணயிகளாய் இருப்பார் அனந்தரம் அபிமத விஷயத்துக்கு இடுவார்கள் –அப்படியே பெரிய பிராட்டியார் எழுந்து அருளி இருக்கிற
கோயில் கட்டணத்துக்கு கொடுத்தான்
ஆயுதத்துக்கும் அபிமத விஷயத்துக்கும் இட்டால் பின்னைத் தந்தாம் விநியோகம் கொள்ளும் இத்தனை இ றே-ஆகையால் தான் சூடினான்
சேஷம் பின்னை அடியார் இ றே கொள்ளுவார் -ஆகையால் திருவடிகளுக்குச் சாத்தினான் -ஆபத்துக்கு உதவுவார் அடியார் இ றே
-தளர்ந்தும் முறிந்தும் சகடவசுரர் உடல் வேறாப் பிளந்து வீயப் பொருவார் -6-9-4-அடியார் இ றே
நம்முடைய ஆபத்துக்களுக்கு திருவடிகளே துணை யானால் போலே காணும் அவனுடைய ஆபத்துக்களுக்கும் திருவடிகளே
துணையான படி -என்று அருளிச் செய்வர் –

கேளிணை ஒன்றும் இலாதான் –
கேள் -என்ற இத்தை கேழ் -என்றாக்கி அதாவது ஒப்பாய் -இணை என்றும் ஒப்பாய் -திரளவும் தனித்தனியும் ஒப்பில்லாதான் -என்னுதல்-
அன்றிக்கே -கேள் -என்று உறவாய் -சேர்ந்த ஒப்பில்லாதான் -என்னுதல்
கிளரும்
ஆற்றுப் பெருக்குப் போலே மேல் மேல் எனக் கிளரா நிற்பதாய் நிரவதிக தேஜோ ரூபமான திவ்ய மங்கள விக்ரஹத்தை உடையவன்
சுடர் ஒளி மூர்த்தி
சுடர் என்றும் -ஒளி-என்றும் பர்யாயம்-இரண்டாலும் மிக்க ஒளி என்றபடி -ஒளி பேர் அழகு
மூர்த்தி
கீழ்ச் சொன்ன ஒப்பனை மிகையாம் படியான வடிவை உடையவன்
நாள் அணைந்து ஒன்றும் அகலான் என்னுடை நாவில் உளானே –
நாள் தோறும் வந்து கிட்டும் அத்தனை அல்லது கால் வாங்க மாட்டுகிறிலன்
என்னுடைய ஸ்திதி விஷயம் ஆனான் -என்னுதல்
அன்றிக்கே வாசி திஷ்டன் என்கிறபடியே என்னுடைய வாக் இந்த்ரியத்துக்கு விஷயமானான் என்னுதல் –

———————————————————————————-

அவதாரிகை –

சகல வித்யா வேத்யனான சர்வேஸ்வரன் பிரமாணங்களாலே-காணக் கடவ வடிவை என் கண்ணுக்கு விஷயமாக்கினான் என்றார் –
நேதி நேதி -எம் பரோக்ஷம் உபதேச த்ரயி-ந இதி என்றே சாஸ்திரம் சொல்ல -வேதம் ஏமாற்றி ஹச்திகிரிக்கு மேலே நின்று கண்ணுக்கு இலக்காக்கி நிற்கிறானே

நாவினுள் நின்று மலரும் ஞானக் கலைகளுக்கு எல்லாம்
ஆவியும் ஆக்கையும் தானே அழிப்போடு அளிப்பவன் தானே
பூவியில் நால் தடம் தோளன் பொரு படை யாழி சங்கேந்தும்
காவி நன் மேனிக் கமலக் கண்ணன் என் கண்ணினுள் உளானே –1-9-8-

நாவினுள் நின்று மலரும் ஞானக் கலைகளுக்கு எல்லாம்
ஜிஹ்வாக்ரத்திலே விகசியா நின்றுள்ள ஜ்ஞான சாதனமான வித்யா விசேஷங்களுக்கு எல்லாம்
ஆவியும் ஆக்கையும் தானே
ஆவி -என்கிறது -அர்த்தத்தை -ஆக்கை என்கிறது சப்தத்தை
இவ்வர்த்தத்தை இச் சப்தம் காட்டக் கடவது -என்று நியமித்து விட்டான் அவனாயிற்று
ஆக சப்தார்த்த சம்பந்தம் அவனிட்ட வழக்காயிற்று
குறித்தார் இல்லாமல் -தானே -ஆவி ஆக்கை தான் -சாமா நாதி கரணிய -பின்ன பிரவ்ருத்தி நிமித்தம் ஒரே விசேஷ்யத்தை குறித்து –
பிரப்திபாத்ய பிரதிபாத்யாக -சம்பந்தம் -நிர்வாஹ்ய நிரவாஹக சம்பந்தம்
அழிப்போடு அளிப்பவன் தானே
மந்த மதிகளானச சேதனருடைய பிரதிபத்தி தோஷங்களாலும்-லேகக தோஷங்களாலும் பாட பேதங்களாலும் இவை உருமாயும் அளவிலே
சம்ஹரித்தும் அபேஷித்த சமயத்தில் ஸ்ருஷ்டித்தும் போருகிறான் தானே -அல்லாத சிருஷ்டி சம்ஹாரங்களைச் சொல்கிறது -என்பாரும் உண்டு
ஏக சந்தா க்ருஹாதிகள் இல்லாமல் -மேலும் -தனது நெஞ்சிலே தோற்றி இது சுத்த உபதேசம் வழியாக வந்தது என்பாரே –
சரீராத்மா சம்பதம் நீராய் -உடல் மிசை உயிர் எங்கும் பரந்து உளன் -அறியாமல் பிரதிபத்தி தோஷம் பரா சக்தி -உயர்ந்த சக்தி -பரா அஸ்ய சக்தி -குதர்க்கம் –
லேக்க -எழுதும் பொழுதும் -மொழி பெயர்ப்பாலும் தப்பு வருமே –
கலி யுகத்தில் அழித்தும் கருத யுகத்தில் அளித்தும்
ஞானக் கலைகளை அளித்தும் அழித்தும் -அல்லாத வற்றை யும்

பூவியில் நால் தடம் தோளன்
1-பூவால் அல்லது செல்லாத படி ஸூகுமாரமாய் -கல்ப தரு பணைத்தால் போலே நாலாய்ச் சுற்றுடைத்தாய் இருக்கிற திருத் தோள்களை உடையவன் –
சுந்தரத் தோள் உடையான் -சர்வ பூஷண பூஷணாயா-
2-பூவியல் -பூவாலே அலங்க்ருதமான தோள் என்னுதல் –
3-பூவை ஒழியச் செல்லாத சௌகுமார்யத்தை உடையவன் என்னுதல்
பொரு படை
பணைத்து பூத்த கல்பக தரு போலே யாயிற்று -யுத்தத்துக்கு பரிகரமான திவ்ய ஆயுதங்களைத் தரித்தால் இருக்கும் படி
-பொரு படை -யுத்த சாதனங்கள் ஆனவை -கற்பக -கிளைகள் தோள்கள் -போலே திவ்யாயுதங்கள்
யாழி சங்கேந்தும்
காவி நன் மேனிக்
அவ்வாயுதங்களாலே விரோதியைப் போக்கி அனுபவிக்கும் வடிவு அழகு
நன் மேனி –
காவி வடிவு அழகுக்கு உபமானமாக நேர் நில்லாமையாலே -நன் மேனி -என்கிறார் –
சந்திர காந்தானாம் -அதீவ ப்ரீதி தர்சனம் ராமம் போலே காவி நல் மேனி –
கமலக் கண்ணன் என் கண்ணினுள் உளானே —
இவர் கண் வட்டம் ஒழிய புறம்பே போனால் கண் வட்டக் கள்ளனாமே
பட்டம் -கண் வட்டக் கள்வன் -கண்ணில் உளானே -அவதாரணம் -அந்யாத்ர ந கச்சதி -கண் வட்டம் -சஷூர் விஷய தேசம் –
ச்நேஹித்தன் சொல்லை மறுத்தால் அவன் முன்னே வர வெட்கி இருக்குமே -பாட்டு முடியும் முன்னே நெற்றிக்கும் உச்சிக்கும் போவானே
பெரு வெள்ளத்தில் ஒரு சுழி போலே திருக் கண்கள் –
ரிஷிகள் கண்டு -கர்ப்ப பூதா -திருவடியில் விழ -காவல் சோர்வாலே வந்ததே என்று வெட்கினான்
தங்க சாலையிலே க்ருத்ரிம பணம் போட்டவன் -போலே வெட்கி
காவி நல் மேனி -வெள்ளம் -அதில் சிறு சுழி திருக்கண்கள்
என் கண்ணினுள் உளானே —
பிராக்ருத விஷயங்களை அனுபவித்துப் போந்த என் கண்ணுக்கு தன்னை விஷயம் ஆக்கினான் –

——————————————————————————————–

அவதாரிகை –

கண்ணில் நின்ற நிலை சாத்மித்தவாறே என் நெற்றியிலே வந்து நில்லா நின்றான் -என்கிறார்

கமலக் கண்ணன் என் கண்ணினுள் உள்ளான் காண்பன் அவன் கண்களாலே
அமலங்களாக விழிக்கும் ஐம்புலனும் அவன் மூர்த்தி
கமலத்தயன் நம்பி தன்னைக் கண்ணுத லானொடும் தோற்றி
அமலத் தெய்வத்தோடு உலகமாக்கி என் நெற்றி உளானே –1-9-9-

கமலக் கண்ணன் என் கண்ணினுள் உள்ளான்
காண்பன் -இப்பொழுது காண்பன்
அவன் கண்களாலே அமலங்களாக விழிக்கும் -தோஷம் போகும் படி கடாஷிக்க
ஐம்புலனும் -சஷூர் இந்த்ரியமும் இந்த்ரியாந்தரங்களும்
அவன் மூர்த்தி -பிரகாரதையா சேஷம்
கமலத்தயன் நம்பி தன்னைக் கண்ணுத லானொடும் தோற்றி
அஜன் அயன் -நம்பி -பிரம்மாவை சொல்லி -கற்றுக் கொடுத்ததை மறக்காமல் இருப்பதால் -சிருஷ்டி உபயுக்த ஞானம் பூரணன் -தேவையான பகுதி மட்டுமே –
-நுதலில் கண்ணை உடைய ருத்ரனும் – லலாட நேத்திரன் -முக்கண்ணான் -அப்ரதானாம் –
அமலத் தெய்வத்தோடு உலகமாக்கி-ஆக்கி -ஆக்குபவன் -பெயர் -நெய் உண்ணி போல் -லபந்தம் இல்லை -ஆக்கி விட்டு வர வில்லை -திருநாமம் –
என் நெற்றி உளானே-அவர்களை ஏக தேசத்தில் கொண்டவன் ஏன் ஏக தேசத்தில் உள்ளானே

கமலக் கண்ணன் என் கண்ணினுள் உள்ளான் –
புண்டரீகாஷனானவன் என் கண்ணுக்கு விஷயம் ஆனான்
ந சஷூஷா க்ருஹ்யதே -என்கிற மரியாதை குலைந்தது -அது ஸுவ பிரயத்தனத்தால் பார்க்க முயல்பவனுக்கு –
அவன் வடிவை உம்முடைய கண்ணுக்கு விஷயம் ஆக்கினான் ஆனால் நீர் பின்னைச் செய்தது என் என்னில்
காண்பன் –
ச்ரோதவ்யா -த்ரஷ்டவ்ய -கடைசி நிலை
நானும் கண்டு அனுபவியா நின்றான் -இவ் விலஷண விஷயத்தை நீர் கண்டு அனுபவிக்க வல்லீரான படி எங்கனே என்ன
அவன் கண்களாலே அமலங்களாக விழிக்கும்
அவன் தன் திருக் கண்களாலே என் தோஷம் எல்லாம் கழிந்து நான் காண வல்லேனாம் படி குளிரக் கடாஷியா நின்றான்
ஆனாலும் இந்த்ரியங்கள் என்று சில உண்டே காட்சிக்கு பிரதி பந்தகங்கள் -அவை செய்தது என் என்ன
ஐம்புலனும் அவன் மூர்த்தி
காட்சிக்கு பிரதி பந்தகங்களான ச்ரோத்ராதிகளும் அவன் இட்ட வழக்காம் படி அவனுக்கு சரீரவத் விதேயமாய் அங்கே படை யற்றன
விதேயம்-படை அற்று -யுத்தம் சமாப்தமாகை -இது வரை அவனை எனக்கு
பிரதிகூல்ய விஷயங்களில் -போகும் -இப்பொழுது சௌந்தர்யாதிகளை கண்டு அடங்கின
பரிகரமாயிற்று என்றுமாம் –
எதிரிகள் உடன் கூடின இப்பொழுது -இவரை விட்டு அவன் இடமே ஆயின –
கமலத்தயன் நம்பி தன்னைக் கண்ணுத லானொடும் தோற்றி அமலத் தெய்வத்தோடு உலகமாக்கி –
திரு நாபீ கமலத்தில் அவ்யவதா நே ந பிறந்து எல்லாரிலும் விசஜாதீயமான ஜென்மத்தை உடையனாய் தனக்கு இவ்வருக்கு உள்ளவற்றை
உண்டாக்கும் இடத்தில் சர்வேஸ்வரனை கேள்வி கொள்ள வேண்டாத படி நிரபேஷனான சதுர்முகனை லலாட நேத்ரனான
ருத்ரனோடே உண்டாக்கி-அவளவிலே பர்யவசியாதே சத்வ பிரசுரரான தேவதைகளோடு லோகங்களை உண்டாக்கினவன்
நெய்யுண்ணி-என்னுமா போலே ஆக்கி என்றது ஆக்கும் ஸ்வபாவன் -என்றபடி
என் நெற்றி உளானே —
கர்ம அனுகுணமாக ஜகத்தை சிருஷ்டித்து விட்டான் –
பிரயோஜன நிரபேஷமாக என் நெற்றியிலே புகுந்து நின்றான் -ஸ்வயம் பிரயோஜனம்

—————————————————————————————-

அவதாரிகை –

ப்ரஹ்மாதிகள் தன்னைப் பெறுகைக்கு அவசர ப்ரதீஷராய் -சமயம் பார்த்து -தடுமாறும் படி இருக்கிறவன் தான் என்னைப் பெறுகைக்கு
அவசரம் பார்த்து வந்து என் உச்சி உளானே -என்கிறார் –
நெற்றியில் இருந்து உச்சிக்கு போகும் சமயத்தில் சேவிக்க முப்பத்து முக்கோடி தேவர்களும் தடுமாறி நிற்க பார்த்து உள்ளார்களாம்
இவனும் தடுமாறி -ஆழ்வார் திருமேனியில் உஎன்கு போவது என்று உள்ளானே –

நெற்றியுள் நின்று என்னை யாளும் நிரை மலர்ப்பாதங்கள் சூடி
கற்றைத் துழாய் முடிக் கோலக் கண்ண பிரானைத் தொழுவார்
ஒற்றைப் பிறை யணிந்தானும் நான்முகனும் இந்த்ரனும்
மற்றை யமரரும் எல்லாம் வந்து என் உச்சி உளானே –1-9-10-

உத்தம அங்கத்திலே ஆனான்
நெற்றியுள் நின்று என்னை யாளும்-ஆள்கிறார் -அபிமுகமாய் நின்று அடிமை கொள்வதாய்
நிரை மலர்ப்பாதங்கள் சூடி -ஆஸ்ரிதர் இட்ட புஷ்பங்கள் நிறைந்த
கற்றைத் துழாய் முடிக் கோலக்
கண்ண பிரானைத் தொழுவார் -ஆஸ்ரித பவ்யன்
ஒற்றைப் பிறை யணிந்தானும் நான்முகனும் இந்த்ரனும் மற்றை யமரரும் எல்லாம் வந்து-அவர்களுக்கு கிட்டாமல்
சந்திர சேகரன் –தேவர்களால் தொழப் பட்டவன் –
என் உச்சி உளானே -அவர்களை விடுத்து -வந்து -நெற்றியில் இருந்து உச்சிக்கு வந்தான் –
அவர்கள் விட்டு அருகிலே முன்னமே வந்தானே

நெற்றியுள் நின்று என்னை யாளும்
நெற்றியுள் நின்று என்னை அடிமை கொள்ளுகிற
நிரை மலர்ப்பாதங்கள் சூடி
மலரை நிரைத்தால் போலே இருக்கிற திருவடிகளை சிரசா வஹித்து
பூலங்கி சேவை -நிறை மலர் பாதம் -திருஷ்டி தோஷம் வரக் கூடாது என்று மலர்களால் மறைத்து –
கற்றைத் துழாய் முடிக் கோலக் கண்ண பிரானைத் தொழுவார்
ஒரு வாடல் மாலையைக் கொண்டு வந்து திரு முடியில் வைத்தாலும் திருக் குழலின் ஸ்பர்சத்தால் செவ்வி பெற்று தழையா நிற்கும்
தழைக்கும் துழாய் -பெரிய திருவந்தாதி -39–என்னுமா போலே செவ்வி பெற்று தழைக்கிற திருத் துழாய் உடன் கூடின
திரு அபிஷேகத்தை உடையனாய் -தர்ச நீயமான வடிவையும் உடைய உபகார சீலனான கிருஷ்ணனை நிரை மலர்ப்பாதங்கள் சூடித் தொழுவார்
ஒற்றைப் பிறை யணிந்தானும்
ஒரு கலா மாத்ரமான சந்த்ரனை ஜடையிலே தரித்து ஸூக ப்ரதனனாய் இருக்கிற ருத்ரனும்
நான்முகனும் இந்த்ரனும்
அவனுக்கு ஜனகனான சதுர்முகனும் தேவர்களை மெய்க்காட்டுக் கொண்டு இருக்கிற இந்த்ரனும்
மற்றை யமரரும்
மற்றும் உண்டான தேவர்கள் எல்லாம்
எல்லாம் வந்து என் உச்சி உளானே
இப்படி அவர்கள் தடுமாறா நிற்க தன்னைப் பெறுகைக்கு
அது எல்லாம் தான் என்னைப் பெறுகைக்கு பட்டு வந்து
என் உச்சி உளனாகா நிற்கிறான்
ராஜாக்கள் அந்தப் புரத்தில் ஒரு கட்டில் நின்றும் மற்றைக் கட்டில் ஏறப் புகா நிற்க நடுவே -வஸ்த்ரம் மாற்றும் போது -அந்தரங்கர் முகம் காட்டி
தம் கார்யம் கொண்டு போமா போலே இவர் திரு நெற்றியில் நின்றும் திருமுடி ஏறப் போகா நின்றாள் ப்ரஹ்மாதிகள் நடுவே முகம் காட்டித்
தங்கள் கார்யம் கொண்டு போம் அத்தனை –

————————————————————————————–

அவதாரிகை —

நிகமத்தில் இத்திருவாய்மொழியை எம்பெருமானுக்கு விண்ணப்பம் செய்ய அவர்கள் தலையிலே
எம்பெருமான் திருவடிகள் நாடொறும் சேரும் -என்கிறார் -திருப் பொலிந்த சேவடி என் சென்னியிலே பொருந்தும்

உச்சியுள்ளே நிற்கும் தேவ தேவற்கு கண்ண பிராற்கு
இச்சையுள் செல்ல யுணர்த்தி வண் குருகூர்ச் சடகோபன்
இச்சொன்ன வாயிரத்துள் இவையுமோர் பத்து எம்பிராற்கு
நிச்சலும் விண்ணப்பம் செய்ய நீள் கழல் சென்னி பொருமே –1-9-11-

பகவத் பிராப்தி பலன்
உச்சியுள்ளே நிற்கும் தேவ தேவற்கு-பரத்வ
கண்ண பிராற்கு -சௌலப்ய
இச்சையுள் -தம் பக்கல் அபிநிவேசம் -காதலை அவனுக்கு அறிவித்து
செல்ல யுணர்த்தி -அவனுக்கு உணர்த்தி
வண் குருகூர்ச் சடகோபன் இச்சொன்ன வாயிரத்துள் இவையுமோர் -சம்ச்லேஷ க்ரம ஸூசகம்
பத்து எம்பிராற்கு நிச்சலும் விண்ணப்பம் செய்ய நீள் கழல் சென்னி பொருமே
ஆஸ்ரிதர் இருக்கும் இடம் வரை நீளுமே -திருக் கமல பாதம் வந்து

இனி எங்கே போவதாக இருந்தான் என்னில்
உச்சியுள்ளே நிற்கும் -உச்சி உள்ளே -பிரதிஷ்டையாக
1–அமரர் சென்னிப் பூவான தான் -என் சென்னிக்கு அவ்வருகு கந்தவ்ய பூமி இல்லை என்று என் உச்சி உள்ளே வர்த்தியா நின்றான்
2–என் உச்சியிலே நிற்கையாலே தேவதேவன் ஆனான் என்றுமாம்
அம்தாமத்து –ஆவி சேர்ந்த பின்பு அம்மான்
சரம ஸ்லோகத்தை வெளியிட்டு அருளினார் எம்பெருமானார் -வெளியிட்டு அருளியதாலே எம்பெருமானார் ஆனார் –
உள்ளே நிற்கும்
இனி அவ்வருகு போக்கில்லை
தேவ தேவற்கு
அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் இருக்கிற இருப்பையும் நினைக்கிறிலன்
கண்ண பிராற்கு
உபகார சீலனான கிருஷ்ணனுக்கு
இச்சையுள் செல்ல யுணர்த்தி
சர்வேஸ்வரனுக்கு தன பக்கல் உண்டான இச்சையைத் தாம் அறிந்த படியை அவன் திரு உள்ளத்திலே படும்படி உணர்த்தி
அவன் வெட்கி சொல்லாமல் இருக்க -தேவ தேவன் அன்றோ -இவர் அறிவித்த படி –
வண் குருகூர்ச் சடகோபன்
சர்வேஸ்வரனுக்கு அறிவித்த அளவே அன்றிக்கே -சம்சாரிகளுக்கும் அறியும் படி பண்ணின உதாரரான ஆழ்வார்
இச்சொன்ன-வாயிரத்துள் இவையுமோர் பத்து-
இப்பாவ வ்ருத்தியாலே சொன்ன ஆயிரத்திலும் இவையும் ஓர் பத்து
எம்பிராற்கு நிச்சலும் விண்ணப்பம் செய்ய நீள் கழல் சென்னி பொருமே –கண்ண பிரான் -எம் பிரான் -இரண்டு உபகாரகன்
எம்பிராற்கு விண்ணப்பம் செய்ய நிச்சலும் நீள் கழல் சென்னி பொரும்-
தனக்கு பாங்கான சமயத்தில் ஒரு கால் விண்ணப்பம் செய்ய -நாள்தோறும் ஆசாலேசம் உடையார் இருந்த இடத்திலே செல்ல வளரும் திருவடிகள் சென்னியோடே சேரும்
விண்ணப்பம் செய்ய -நிச்சலும் நீள் கழல் சென்னி பெரும் -சப்தம் மாற்றி -எப்பொழுதாவது விண்ணப்பம் செய்ய -அவன் எப்பொழுதும் பொருந்தி
சாயை போலே பாட வல்லார் தாமும் அணுக்கர்களே -சாயை பாடாதே -பாட வல்லார் தாமும் சாயை போலே அணுக்கர்களே –
எம்பிரான் -என்றது -இப்படி சாத்மிக்க சாத்மிக்கவும் -இழவு மறக்கவும் -அனுபவிப்பித்த உபகாரகன் என்றபடி
ஆழ்வார் க்ரமத்திலே உச்சி உளானே -என்ற பெற்ற பேறு-இது கற்றாற்கு முதல் அடியிலே உண்டாம்
பொரு -என்று ஒப்பாய் -ஒப்பாவது சேருகையாய்-சேரும் என்றபடி –
உச்சியுள்ளே நிற்கும் என்று இவர் பெற்றதுவே பேறாகக் கடவது –

இழந்த நாளில் -இழந்ததை அனுசந்திக்க -துக்கம் வருமே -இழந்தோம் என்கிற நினைவே இல்லாமல் -பழுதே —
பல காலும் போயின -அழுதேன் -என்ற நினைவும் இல்லாமல்
அஞ்சிறைய மடநாராய் பிரிந்த நினைவும் இல்லாமல் –
கற்று விண்ணப்பம் செய்வார் முதலிலே சென்னியில் பெறுவார் -பாகவத் சேஷத்வம் பலத்தை சடக்கென கிட்டுமே
சென்னி பொரும்- -ஏக மேவ பலம் -ஆச்சார்யருக்கும் சிஷ்யருக்கும் ரே பலன்

முதல் பாட்டில் என்னுடைய பர்யந்தத்திலே வந்து நின்றான் -என்றார்
இரண்டாம் பாட்டில் -அது சாத்மித்தவாறே அருகே நின்றான் என்றார்
மூன்றாம் பாட்டில் நம்முடனே கூட நின்றான் என்றார்
நாலாம் பாட்டில் ஒக்கலையில் வந்து நின்றான் என்றார்
அஞ்சாம் பாட்டில் நெஞ்சிலே வந்து புகுந்தான் என்றார்
ஆறாம் பாட்டில் தோளிலே வந்து இருந்தான் என்றார்
ஏழாம் பாட்டில் நாவிலே வந்து புகுந்தான் என்றார்
எட்டாம் பாட்டில் கண்ணினுள்ளே நின்றான் என்றார்
ஒன்பதாம் பாட்டில் நெற்றியிலே நின்றான் என்றார்
பத்தாம் பாட்டில் திரு முடியிலே நின்றான் என்றார்
நிகமத்தில் -ஆக -இத்தால் தம்முடனே சாத்மிக்கும் படி கலக்கையாலே அவனை சிரஸா வஹித்தார் -பலம் சொல்லித் தலைக் கட்டினார் –

———————————————————————————————

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

ஆத்மார்ஜவ அனுபவ -குதூகலம் -உபபோக அப்யதிகாம் -மென்மேலும் கொடுக்க
உப போக
தேவ்யாதிபதி ரச்யதை -ரசத்துடன் கடந்தான் க்ரமேன
அகில அங்கா நி ஆஸ்ரயித்தார்
நவமே சடாரி அவதத்

————————————————————————

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன்

பர்யந்தே த்ருஷ்டம்
அங்கே த்ருஷ்டம்
ஸூ விரஹ விமுகம்
டிம்பவது பார்ச்வ லீனம் -ஒக்கலை
சித்தே -நெஞ்சு
பூஜை சிகர
தாலு சின்மாகாசனம் -தாடை சிம்ஹாசனம் நாக்கு
சஷூர் மத்யே நிமிஷ்டம்
ஸ்தித -லாலே
மத்யச்தகம் -உச்சி
பிரத்யாகார உகத கிராமத்தாள் -அஷ்டாங்க -அடுத்து அடுத்து உயர்ந்த நிலை போலே
விபும்
சாத்திய போக பிரதாயாத் –

————————————————————————-

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 9-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்-

இவை யறிந்தோர் தம்மளவில் ஈசன் உவந்து ஆற்ற
அவயவங்கள் தோறும் அணையும் -சுவையதனைப்
பெற்று ஆர்வத்தால் மாறன் பேசின சொல் பேச மால்
பொற்றாள் நம் சென்னி பொரும் —————9-

ஆற்ற -சாத்மிக்க சாத்மிக்க

——————————————————-
அவதாரிகை –

இதில் எம்பெருமான் உடைய
சாத்ம்ய போக பிரதவத்தை அருளிச் செய்த பாசுரத்தை
அனுவதித்து அருளிச் செய்கிறார்
அது எங்கனே என்னில்
இத்தலையில் செவ்வைக் கேடு தனக்கு செவ்வையாம்படி
இவர்களுக்கு பாங்காக தன்னை அமைத்து பரிமாறும்
ஆர்ஜவ குண யுக்தனே ஆகிலும்
தன் நினைவு அறிந்து செவ்வியராய் பரிமாறும்
திருவடி திரு வநந்த ஆழ்வான் துடக்கமான
நித்ய ஆஸ்திரரோடு உகப்போடே கலக்குமா போலே
இன்று ஆஸ்ரயிக்கும் அவர்களோடு உகப்போடே கலந்து பரிமாறக் கூடுமோ என்னில்
அவர்கள் எல்லாரோடும் ஓரோர் பிரகாரத்தில் பரிமாறுகிறவன்
அவர்கள் எல்லாரோடும் பரிமாறுகிற பரிமாற்றம் எல்லாவற்றையும்
இவன் ஒருவனுடனே
சர்வ இந்த்ரியங்களாலும்
சர்வ காத்ரங்களாலும்
பொறுக்கப் பொறுக்க பரிமாறும் -என்கிற
இவையும் அவை யில் அர்த்தத்தை
இவை அறிந்தோர் தம் அளவில் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் –

ஆர்ஜவம் உடன் -கலந்தார் -சொல்லி –
நம்முடன் கலப்பனோ -திருஷ்டாந்தம் -தம்முடன் கலந்து -அவர்கள் ஓர் ஓர் பிரகாரம் -இங்கு போலே அங்கு இல்லையே

——————————————————————————————–

வியாக்யானம்–

இவை யறிந்தோர் தம்மளவில் –
இந்த ஆர்ஜவ குணத்தை அறிந்தவர்கள் விஷயத்தில்

ஈசன் உவந்து ஆற்ற அவயவங்கள் தோறும் அணையும் -சுவையதனைப் பெற்று –
சர்வேஸ்வரன்
ஹ்ருஷ்டனாய்
சாத்மிக்க சாத்மிக்க
சர்வ அவயவங்களிலும்
சம்ச்லேஷிக்கும் ரசம் தன்னை பெற்று
பொறுக்க பொறுக்க உறுப்பு தோறும்
செறிப்பு -கலக்கம் -தீரக் கலக்குமதான பெறாப் பேற்றைப் பெற்று –
அதாவது
சரா மோவா நரேந்தரஷ்ய பிரசாதம் அபி காங்ஷதே-என்னும்படி
என்னுடைச் சூழல் உளானே
அருகல் இலானே
ஒழிவிலன் என்னோடு உடனே –
கண்ணன் என் ஒக்கலையானே-
மாயன் என் நெஞ்சின் உளானே
என்னுடைத் தோள் இணையானே
என்னுடை நாவின் உளானே
கமலக் கண்ணன் என் கண்ணின் உளானே
என் நெற்றி உளானே
என் உச்சி உளானே –
என்று தலைக்கு மேலே ஏறின படியை அடி ஒற்றின படி –

அணையும் சுவை யாவது –
அருகலில் அறுசுவை-
பிராட்டி திரு வநந்த ஆழ்வான் துடக்கமானாரோட்டை
கலவியில் ரசங்கள் எல்லாம் ‘
ஏக விஷயத்தில் உண்டாம்படி கலந்து -என்றத்தை நினைக்கிறது-

ஆர்வத்தால் மாறன் பேசின சொல் பேச –
இப்படிப் பெறாப் பேறு பெற்று
அத்தால் உண்டான அபி நிவேசத்தாலே
ஆழ்வார் அருளிச் செய்த திவ்ய ஸூக்தியை
கேவலம் வாக்காலே வசிக்க-உணர வேண்டாம் -அஹ்ருதயமாக உக்தி மாத்ரத்தாலே

மால் பொற்றாள் நம் சென்னி பொரும் –
ஆஸ்ரித வ்யாமுக்தனான
சர்வேஸ்வரன் யுடைய
ஸ்ப்ருஹணீயமான சரணங்கள்
நம்முடைய சென்னித் திடரிலே சேரும் –
பொரு -என்று ஒப்பாய்
அத்தால் -சேரும் -என்றபடி
நிச்சலும் விண்ணப்பம் செய்ய நீள் கழல் சென்னி பொரும் -என்றத்தை அருளிச் செய்த படி –

——————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s


%d bloggers like this: