பகவத் விஷயம் காலஷேபம் -45– திருவாய்மொழி – -1-8-1 ….1-8-11—ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

பிரவேசம் –

கீழில் திருவாய் மொழியில் நிரதிசய போக்யன் என்றார் –
இதில் அவனுடைய ஆர்ஜவ குணம் சொல்லுகிறார்
சௌலப்யம் ஆவது என் -சௌசீல்யம் ஆவது என்-ஆர்ஜவம் ஆவது என் –என்னில்
சௌலப்யமாவது -ஸ்ரீ வைகுண்டம் கலவிருக்கையாக உடையவன் -அங்கு நின்றும் சம்சாரி சேதனர் நின்ற இடத்தே வந்து அவதரித்து எளியனாகை-
சௌசீல்யமாவது-இப்படி தாழ விட்டால் -சிறியார் அளவில் நம்மைத் தாழ விட்டோமே -என்று தன் திரு உள்ளத்திலும் இன்றிக்கே இருக்கை-
இனி ஆர்ஜவ குணமாவது -இப்படிப் பொருந்தினால் -நினைவும் சொலவும் செயலும் ஒருபடிப் பட்டு இராதே-
பலவகைப் பட்ட சேதனரோடு தான் பரிமாறும் இடத்தில்
அவர்கள் போன வழி தனக்கு வழியாம் படி –தான் அவர்களுக்கு செவ்வியனாய் பரிமாறுகை –
புள்ளேறி ஓடும் -தண் துழாய் சூடும் -நீர் புரை வண்ணன் -தக்க அனுபவம் கொடுத்து -ஆர்ஜவம் திருக் குணம் காட்டி
குணவான் -என்று சௌசீல்ய குணத்தை சொல்லா நிற்கச் செய்தார் இ றே
ருஜூ என்று ஆர்ஜவ குணத்தை பிரிய அருளிச் செய்தார் இ றே –வசீ வதான்யோ குணவான் ருஜூ -ஸ்தோத்ர ரத்னம் -18-

பத்துடை அடியவர்க்கு சௌலப்யம் -வளவேழ் உலகம் -சௌசீல்யம் -இங்கே ஆர்ஜவம்
சீலம் -சௌசீல்யம் -உள் பிரிவு -முடிந்த நிலம் -ஆர்ஜவம் –
குணவான் -ஆளவந்தார் -சௌசீல்யம் -வால்மீகி –குணவான் -சௌசீல்யம் என்றால் போலே
– சமஸ்க்ருதத்தில் குணனம் என்றால்  பெருக்குதல் -பெருக்கி பெருக்கி பல மடங்கு அனுபவிக்கும் குணம் சௌசீல்யம் –
சீலம்மகதோ மந்த -புரை அறக் கலந்து -நீர் போலே கலப்பது சீலம்
அது நெஞ்சிலும் இன்றிக்கே இருப்பது சௌசீல்யம்
மந்தர்கள் உடன் புரை அறக் கலக்கை சீலம்
அதுவும் தனது லாபத்துக்காக நினைப்பது சௌசீல்யம்
ஆர்ஜவம் -செவ்வையனாய் இருக்கையே யாகிலும் -ஆஸ்ரிதர் செவ்வைக் கேடே தமக்கு செவ்வையாய் இருக்கையே ஆர்ஜவம்

இத் திருவாய் மொழி தான் சர்வேச்வரனுடைய ஐஸ்வர்யத்தைச் சொல்கிறது –என்பாரும் உண்டு
அன்றிக்கே –ஈச்வரத்வ லஷணம் சொல்லுகிறது என்பாரும் உண்டு
அன்றிக்கே கீழே பாடி இளைப்பிலம் -என்றார் -அப்படியே பாடி அனுபவிக்கிறார் என்பாரும் உண்டு –
ஆர்ஜவ குணம் சொல்லுகிறது -என்று பட்டர் அருளிச் செய்யும் படி
பத்தர் முக்தர் நித்யர் -என்று சேதனற்கு ஒரு த்ரைவித்யம் உண்டு இ றே
த்ரிவித சேதனரோடும் பரிமாறும் இடத்தில் அவர்கள் தம் நினைவிலே வரும்படி பண்ணுகை யன்றிக்கே-நீர் ஏறா மேடுகளிலே விரகாலே நீர்
ஏற்றுவாரைப் போலே தன்னை அவர்களுக்கு ஈடாக அமைத்து பரிமாறும் என்னும் அவ்வழியாலே இவனுடைய ஆர்ஜவ குணம் சொல்லுகிறார்

—————————————————————–

அவதாரிகை –

நித்ய விபூதியில் உள்ளாரோடு செவ்வியனாய் பரிமாறும் படி சொல்கிறது -அவர்களுக்குச் செவ்வைக் கேடு இல்லை இறே
அவர்கள் பலராய்-ருசி பேதம் உண்டால் –அவர்கள் நினைவு இருந்து பரிமாறவே –அங்கும் ஆர்ஜவ குணம் ஏறும் இறே –

ஓடும் புள்ளேறி சூடும் தண் துழாய்
நீடு நின்றவை ஆடும் அம்மானே –1-8-1-

ஓடும் புள்ளேறி-உலாவும் -பெரிய திருவடி திரு உள்ளப் படி
சூடும் தண் துழாய் -செவ்வி குலையாமல் -திரு மேனியிலே
நீடு நின்றவை ஆடும் -நிலை நின்ற நித்ய வஸ்துக்கள் -புள் -துழாய் -பிரஸ்துததமான உடன் நெடும் காலம் பரிமாறும்
கர்ம நிபந்தனம் இல்லை -செயல்பாடு எல்லாம் இவன் நினைவின் படியே இருக்குமே –
கைங்கர்யத்துக்கு உறுப்பான வினை முன்னே வைத்து ஓடும் –சூடும் -என்கிறார் –

ஓடும் புள்ளேறி
புள்ளேறி ஓடும் -பெரிய திருவடியை மேற்கொண்டு சஞ்சரியா நிற்கும் –
பொறு சிறைப் புள் உவந்து ஏறும்-இருவருக்கும் அதீத ஆனந்தம் –
மஹிஷிக்கு ஸ்தன பரிரம்பணம் போலே தன்னை மேற்கொண்டு நடத்துவது அபேஷிதமாய் இருக்கும் இறே வாகனத்துக்கு
பெரிய திருவடியை மேற் கொள்ளுமது தான்-1- அவ்விபூதியில் உள்ளார்க்கு காட்சி கொடுக்கைக்கும்
2-அவனுடைய ஸ்வரூப லாபத்துக்காகவுமாய் இருக்கும் இறே
த்வதங்க்ரி சம்மர்த்த கிணாங்க சோபி நா -ஸ்தோத்ர ரத்னம் -41–காமிநியானவளுக்கு போக சிஹ்னங்கள் தாரகமாமோ பாதி
-திருவடிகள் உறுத்துகையாலே வந்த தழும்பு இவனுக்குத் தாரகமாய் இருக்கும் இறே

சூடும் தண் துழாய்
இப்போதே பறித்து திருக் குழலில் வளையமாக வையாது ஒழியில் செவ்வி அழியும் -என்னும் அளவில் அப்போதே பறித்து திருக் குழலிலே வைக்கும்-(கைங்கர்யத்துக்கு உறுப்பானை வினையை முதலில் வைத்து -இதுவே அன்றோ தாரகம் -)இதுக்குச் சைதன்யம் உண்டோ என்னில் -சின்மையஸ் ஸ்வ பிரகாசச்ச -என்னக் கடவது இறே
சில சேதனர் -புள்ளாயும் துழாயாயும் அங்குத்தைக்கு உறுப்பாக வர்த்திக்கிற படி இறே –
வஸ்த்ரம் -சந்தனம்-நித்யர்கள் –அனந்தாழ்வான் -எறும்பு -ஐதிகம் -எதேனுமாக ஜனிக்க பெற ஆசைப் படுவார்களே –
விரோதி சைதன்யமே கழிந்தது -ராஜ சந்நிதியிலே வர்த்திப்பார் கூனர் குறளராய் வர்த்திக்குமோ பாதி இறே
கர்ம நிபந்தனமாக பரிக்ரஹித்த சரீரங்களும் அன்றே –இச்சையாலே பரிக்ரஹிக்கிற அத்தனை இறே
இவ்விபூதியில் திர்யக் ஸ்தாவரங்கள் ஆமவை கர்மத்தாலேயாய் இருக்கும் –
வாசிக அபசாரம் -பறவை /மானச அபசாரம் -தாழ் சாதி /காயிக அபசாரம் -மரம் -சாஸ்திரம் -இந்த விபூதியில் -கர்மத்தால் –
அங்கு ஸ்வ இச்ச அதீனமாய் இருக்கும் பரிக்ரஹித்த சரீரங்கள்
சம்சாரிகளுக்கு அன்றோ ருசி பேதமும் செவ்வைக் கேடும் உள்ளது
நித்ய ஸூரிகளுக்கு விஷயம் ஒன்றாகையாலே ருசி பேதம் இல்லை -செவ்வைக் கேடும் இல்லை
அவர்களுடன் செவ்வையனாய் பரிமாறுகை யாவது என் -என்னில் எல்லார்க்கும் விஷயம் ஒன்றே யாகிலும் -அவ்விஷயம்
தன்னில் வ்ருத்தி பேதத்தாலே ருசி பேதம் உண்டாம்

நீடு நின்றவை ஆடும் அம்மானே —
கர்ம அநு கூலமாகில் இறே அநித்யமாவது-
ஸ்வரூப அனுரூபமான பரிமாற்றம் ஆகையாலே இது தான் நித்தியமாய் இருக்கும்
அவனுக்கு இவர்களை ஒழியச் செல்லாது -இவர்களுக்கு அவனை ஒழியச் செல்லாது
அநாவ்ருத்தி சப்தாத் அநாவ்ருத்தி சப்தாத் –இருவருக்கும் இருவரை ஒழிய செல்லாதே -தத் ஏக பிரிய -சத்ய சங்கல்ப
அசங்குசித ஞானம் -பரப்ரஹ்ம அனுபவமே ஸ்வ பாவம் -அநவதிக அதிசய ஆனந்தம் –
அவைபுள் என்றும் –துழாய் -என்றும் சொல்லுகையாலே அவை என்கிறது
அவர்கள் -எண்ணாமல் லௌகிக மரியாதையால் – விரோதி சைதன்யம் தொலைத்து அவர்கள் இருப்பதாலும்
ஆடும்
அவற்றோடு பரிமாறும் என்னாதே-அவை ஆடும் என்கிறது
சர்வேஸ்வரனுக்கு அவர்களோடு அணையும் அது
விடாயர் மடுவிலே புக்கு ஆடினால் போலே இருக்கையாலே
அம்மானே
நித்ய ஸூரிகளோடு நித்ய சம்சாரிகளோடு வாசி அறும்படி சர்வாதிகனாய் இருந்து வைத்து -இப்படி பரிமாறும்

—————————————————————————–

அவதாரிகை –

இப்பாட்டு நித்ய விபூதியில் நின்றும் வந்து அவதரித்து விரோதிகளைப் போக்கி சம்சாரிகளுடன் செவ்வையனாய்ப் பரிமாறும் படி சொல்கிறது

அம்மானாய்ப் பின்னும் எம்மாண்பும் ஆனான்
வெம்மா வாய் கீண்ட செம்மா கண்ணனே –1-8-2-

ஆஸ்ரித சம்ச்லேஷ அர்த்தம் -அவதார வைலஷண்யம்
அம்மானாய்ப் -ஸ்வாமி
பின்னும் எம்மாண்பும் ஆனான் -எல்லா மாட்சியும் -தர்ச நீயமான -வேற பல சேஷ்டிதங்கள் -வேறு பல அவதாரங்கள் என்றுமாம்
வெம்மா வாய் கீண்ட -கேசி இறுதி விரோதி
தேவர்கள் இரக்க-தாங்கள் கால் வைக்க மாட்டாதே -குமட்டி -ஆஹுதி வாங்கிப் போவார்கள் -அவதரித்து சம்சாரிகள் விருப்பப் படியும் இருந்தும் –

அம்மானாய்ப் –
இப்படி சர்வாதிகனாய் இருந்து வைத்து
பின்னும் எம்மாண்பும் ஆனான் வெம்மா வாய் கீண்ட செம்மா கண்ணனே –
வெம்மா வாய் கீண்ட செம்மா கண்ணன் -பின்னும் எம்மாண்பும் ஆனான்-
செவ்விதான மா வுண்டு -கேசி -அதினுடைய வாயைக் கிழித்துப் பொகட்ட-
கேசி வாயை அங்காந்து கொண்டு வந்து தோற்றின போது கண்ட ஸ்ரீ நாரத பகவான் -ஜகத் அஸ்தமிதம் -என்று
கூப்பிட்டுக் கொண்டு வந்து விழுந்தான் இறே
அவனுக்கு தத் காலத்திலே பிறந்த பயம் –அவன் பட்டுக் போகச் செய்தேயும் ஸ்ம்ருதி சமயத்தில் அஞ்சுகிறார் இவர்
பய நிவர்தகங்களுக்கு பயந்து -கதே ஜலே சேது-
செம்மா கண்ணனே
விரோதி போகையாலே வந்த ப்ரீதியாலே சிவந்து மலர்ந்த திருக் கண்களை உடைய கிருஷ்ணன்
பின்னும் எம்மாண்பும் ஆனான்
மாண்பினான் ஆனான் இல்லை -குணத்தை சொல்லி –குணமாகவே உள்ள பொருளை -அவரே கோபம் கோபம் உரு போலே –
அவ்வவதாரத்திலே பர்யவசிக்கை யன்றிக்கே அதுக்கு மேலே அநேக அவதாரங்களைப் பண்ணினான்
பஹூ நி –-ஸ்ரீ கீதை -4-5-என்கிறபடியே
மாண்பு -என்று அழகு
பரத்வத்திலும் மனுஷ்யத்வே பரத்வத்தால் வந்த அழகைச் சொல்லுகிறது

————————————————————————————–

அவதாரிகை —

இரட்டை பிரஜை பெற்ற மாதாவானவள் இருவருக்கும் முலை கொடுக்கப் பாங்காக நடுவே கிடக்குமா போலே –
நித்ய சூரிகளுக்கும் சம்சாரிகளுக்கும் ஒக்க முகம் கொடுக்கைக்காக திருமலையிலே நின்று அருளின நீர்மையை அருளிச் செய்கிறார் –

கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு
தண்ணார் வேங்கட விண்ணோர் வெற்பனே –1-8-3-

உபய விபூதி சாதாரணமான திரு மலை -ஸ்திதியை அருளிச் செய்கிறார்
கண்ணாவான் என்றும் -சஷூஸ் -எப்போதும் ஒக்க -கண்ணாக -ரஷகன் -நிர்வாஹகன்
-கண் ஆகைக்காக -கண்களுக்கு விஷயம் ஆகிறான் என்றுமாம்
மண்ணோர் விண்ணோர்க்கு –
தண்ணார் வேங்கட -கிளிர்தியால் விஞ்சி
விண்ணோர் வெற்பனே-ஸூரி சேவ்யமான திருமலையை யுடையவன்-பார்க்கப் படுவதற்காக -இங்கே -இவனே ரஷகன் -என்றுமாம் –
வெற்பு என்று வேங்கடம் பாடினேன் -வீடாக்கி நிற்கின்றேன் –சமன் கொள் வீடு தரும் சமன் குன்றமே -ஒன்றுமே தொழ நம் வினை வீயுமே

கண்ணாவான் –
1-நிர்வாஹகனாவான் -என்னுதல்
2-கண்ணாகைக்காக -என்னுதல்
ஸ்வஸ்தி சஷூர் தேவா நாமுத மர்த்யா நாம் -என்கிற ஸ்ருத்யர்த்தத்தை அருளிச் செய்கிறார்
மண்ணோர் விண்ணோர்க்கு -என்றும்-கண்ணாவான் —
நித்ய ஸூரிகளோடு சம்சாரிகளோடு வாசியில்லை யாயிற்று தங்கள் கார்யம் தாங்கள் செய்து கொள்ள மாட்டாமைக்கு –
தெளி விசும்பு நாடு -கலக்கம் இல்லா நாடு அன்றோ -பரம சாம்யா பத்தி உள்ளவர்கள் அன்றோ -நிர்வாக அபேஷை எதற்கு இவர்களுக்கு என்னில்
பகவத் பாரதந்த்ரர் அவர்களும்
தண்ணார் வேங்கடம்-
குளிர் அருவி வேங்கடம் -என்னுமா போலே அவனுக்கு ரஷ்யம் பெறாமையாலே வரும் தாபத்தை ஆற்ற வற்றாய் இருக்கை
விண்ணோர் வெற்பனே –
அவன் இரண்டு விபூதியில் உள்ளார்க்கும் முகம் கொடுக்க வந்து நின்றானே யாகிலும் -திருமலை தான் நித்ய ஸூரிகளதாயிற்று-
வானவர் நாடு போலே –விண்ணோர் வெற்பு -என்கிறார்
பெருமாள் மலையோ -திரு வேங்கடம் என்று கற்கின்ற வாசகமே
காடும் – வானரமும் வேடும் உடை வேங்கடம் –
கானமும் வானரமுமான இவற்றுக்கு முகம் கொடுத்துக் கொண்டு நிற்கிற நீர்மையை அனுசந்தித்து
இது என்ன நீர்மை -என்று ஈடுபட்டு இருக்கையாலே அவர்களதே திருமலை என்கிறார் –
திரு வேங்கடாசலம் -பகவதி ஏவ -அவனுக்கே -விபூதி இரண்டுக்கும் பொது -இல்லாமல் -அவர்களுக்கே
-ஸ்வயம் -ஆஸ்ரித ஆதீனம் -அவனது தான் -பக்தாநாம் –
நீர்மையை அனுசந்தித்து ஈடுபட்டு இருப்பதால் -பரம பதம் தமக்கே போலே இத்தை இவர்களுக்கு என்று இருக்கும் நீர்மை
இதிலே ஆசை கொண்டு இருப்பார்களே -அங்கே இருந்தாலும்-ராசியில் உட்காராமல் எதிர் கட்டம் பார்வை -உயர்த்தி –
ஆண்டாள் கடாஷம் சென்னை -சங்க தமிழ் மாலை அனுபவம் அங்கே -ஸ்ரீ வில்லி புத்தூரில் இல்லை என்பாராம் -ஸ்ரீ கார்ப்பங்காடு ஸ்வாமிகள்
அங்கு அவர்களுக்கு எப்படியோ அது போலே இங்கே குரங்குகளுக்கு –

—————————————————————————-

அவதாரிகை

அவனுடைய ஆர்ஜவ குணம் தம்மளவிலே பலித்த அடியை அருளச் செய்கிறார்

வெற்பை ஓன்று எடுத்து ஒற்கமின்றியே
நிற்கும் அம்மான் சீர் கற்பன் வைகலே –1-8-4-

ஆஸ்ரித -ஆபத்சகத்வம் -அருளிச் செய்கிறார் -ரஷ்ய வர்க்கம்
நிற்பது
ஓர் வெற்பில் -எடுத்தது -ஒரு வெற்பு -கோவர்த்தனம் –
வெற்பை ஓன்று எடுத்து -பெயர் இல்லாமல் –அத்விதீயம் அன்றோ –
ஒற்கமின்றியே -ஒடுக்கம் இல்லாமல் -திரு விரல்கள் வாடாமல் –ஒல்குதல்-பல சங்கோசம் -ரஷிக்கைக்காக ரஷித்தது
நிற்கும் –
அம்மான் சீர் -கல்யாண குணம் -ஆபத்சகத்வம்
கற்பன் வைகலே-தினப்படியே -அப்யசிப்பேன்
மலையே ரஷிக்கும் சொன்னதை காட்ட அத்தையே எடுத்து ரஷித்தானே –

வெற்பை ஓன்று எடுத்து
பசுக்களும் இடையரும் தொலையும்படி வர்ஷிக்கப் புக்கவாறே -அதுக்கு ஈடாய் இருப்பது ஒன்றை இட்டு ரஷிக்கப் பற்றாமையாலே
தோற்றிற்று ஒரு மலையை எடுத்து பரிஹரித்தான் யாயிற்று
இப்படி ஏழு பிராயத்தின் பாலன் ஒருபடிப் பட்ட மலையை எடுத்து தரித்துக் கொண்டு நின்ற இடத்தில் இளைப்பு உண்டாயிற்று இல்லையோ என்னில்
ஒற்கமின்றியே நிற்கும் அம்மான்-
ஒற்கமாவது-ஒடுங்குதல் -அதாகிறது இளைப்பு
ஏழு நாள் ஒருபடிப்பட மலையைத் தரித்துக் கொண்டு நின்ற இடத்தில் இளையாமைக்கு ஹேது என் என்னில்
அவன் ரஷணத்தைப் பகிர்ந்து கொள்வார் இல்லாமையாலே இளைப்பு இல்லை
தாது ஷயம் பிறவா விடில் இளைப்பு இல்லை இறே
உண்கிற சோற்றிலே மணலைத் தூவுகை இல்லா விடில் இளைப்பு இல்லை இறே
சஹாயத்துக்கு வேற உண்டானால் அவனுக்கு இளைப்பு வருமே -பிரஹ்மாஸ்திரம் போலே
பிரபத்தி -இருவரையும் பொறாது
பக்தி -இருவரையும் பொறுக்கும்
ஈஸ்வரன் தன்னைப் பொறுக்கும்
ரஷணம் தானே அவனது உணவு -நாமே ரஷிக்கப் பார்த்தால் அவன் உணவைப் பரித்தோம் ஆவோமே –
அம்மான்
வகுத்த ஸ்வாமி யாகையாலே
ஸ்வபாவிக சம்பந்தத்தாலே இளைப்பின்றிக்கே நின்றான்
பிரஜா ரஷணத்தில் மாதாவுக்கு இளைப்பு உண்டாகாது இறே

சீர் கற்பன –
அவன் மலையை எடுத்து ரஷ்ய வர்க்கத்தை நோக்கின நீர்மையை அனுசந்தித்து -அவனுடைய கல்யாண குணங்களை
அந்த குண ப்ரேரிதனாய் அப்யசிப்பன் -குணைர் தாஸ்யம் உபாகத -என்னுமா போலே
வைகலே —
ஒரு கால் இத்தைச் சொல்லி பின்னை என் கார்யத்துக்கு போமவன் அல்லன்
நித்ய ஸூரிகளைப் போலே எனக்கும் இதுவே யாத்ரையாய் இருக்கும் –
விபன்யவ ஸ்துதி சீல -இறே –ருக் வேதம் -எப்போதும் ஸ்துதித்த படியே உள்ளனர் -என்றபடி

—————————————————————————-

அவதாரிகை –

நீர் அவன் குணங்களை அப்யசியா நின்றீராகில் -அவன் தான் செய்கிறது என் என்னில் –நான் அவனை விட்டு அவன் குணங்களை
விருமபுகிறாப் போலே அவனும் என்னை விட்டு என்னுடைய தேஹத்தை விரும்பா நின்றான் என்கிறார்-(சீர் வைகல் கற்றால் பொய் கலவாது மெய் கலப்பானே -முந்தின பாசுரம் சேர்த்து பொருள் )

வைகலும் வெண்ணெய் கை கலந்து உண்டான்
பொய் கலவாது என் மெய் கலந்தானே –1-8-5-

ஏவம் பூதனான – ரஷகனான- கண்ணன் தம்முடன் சம்ச்லேஷித்த படி
வைகலும் வெண்ணெய் கை கலந்து உண்டான் -கை உள்ள அளவும் –பாத்ரத்துடன் கலந்து -இரண்டு கைகளிலும் கலந்து
-களவுக்கு வந்தார் கைகள் உடன் கலந்து
பொய் கலவாது -கார்யப்பாடு பொய் இல்லாமல்
என் மெய் கலந்தானே-ஒரு நீராகி கலந்தான் -சீர் கற்றால் பெரும் பேறு
சாஸ்திரம் -மதுரமான இனிமையாக உண்ண வேண்டும் -மா முனிகள் -பூர்வாச்சார்யர்களில் இறுதி போலே –

வைகலும் –
கற்பன வைகலே -என்று எனக்கு அவன் குணம் என்றும் தாரகமாய் இருக்கிறாப் போலே
ஆஸ்ரித ஸ்பர்சம் உள்ள த்ரவ்யம் என்றும் ஒக்க தாரகமாய் இருக்குமாயிற்று அவனுக்கு -வெண்ணெய் கை கலந்து உண்டான் –
1-வெண்ணெயில் உண்டான ஆதரத்தாலே இடக்கையாலும் வலக்கையாலும் வாங்கி அமுது செய்தான்
அன்றியே
2-தாரார் தடம் தோள்கள் உள்ளளவும் கை நீட்டி -என்கிறபடியே கை நிறையும் அத்தனையும் வயிறு நிறையும் -என்னும் மௌக்யத்தாலே
திருக்கைகள் உள்ளளவும் கலந்து அமுது செய்தான் -என்னுதல்
3-கள்ளன் -என்று சிலுகிட்ட வாறே அவர்கள் தங்களோடு கலந்து அமுது செய்தான் -என்னுதல்
சர்வாதிகனானவன் நித்ய சம்சாரியாய் போந்தவனுடைய தேஹத்தை திருவாய்ப்பாடியிலே வெண்ணெயோபாதி ஆதரித்தான்
என்றால் இது கூடுவது ஒன்றோ என்னில்
பொய் கலவாது என் மெய் கலந்தானே —
அவ் வெண்ணெயில் பண்ணின விருப்பத்தில் பொய் இல்லாதாப் போலே கிடீர் என் உடம்புடன் கலந்த கலவியிலும் பொய் இல்லாதபடி -என்கிறார்
என் மெய்
அவன் மேல் விழ மேல் விழ தாம் இறாய்த்தமை தோற்றுகிறது
அழுக்கு உடம்பு -என்று நான் அநாதரிக்கிற சரீரம் இவனுக்கு ஆதரணீயம் ஆவதே -என்கிறார் –
வைகலும் வெண்ணெய் கை கலந்து உண்டான் -உண்டவன் என் மெய் கலந்தானே-இதில் பொய் கலவாது -என்று அந்வயம்

———————————————————————————————-

அவதாரிகை –

இப்படி கலந்து செய்தது என் என்ன -தேஹத்து அளவிலே விரும்பி விட்டிலன் -என் ஆவி நலத்தையும் கொண்டான் -என்கிறார் –

கலந்து என்னாவி நலம் கொள் நாதன் —
புலன் கொள் மாணாய நிலம் கொண்டானே –1-8-6-

லோகத்தை அனன்யார்ஹாம் ஆக்கினால் போலே -திரு விக்ரமன் -எனது ஆவியையும் ஆக்கிக் கொண்டான்
கலந்து என்னாவி-நலம் கொள் நாதன் –கீழே மெய் சரீரம் -வெண்ணெய் போலே – இங்கே ஆவி நலம் கொண்டான் –
ஆவி நலம் -1–சேஷத்வம் கொண்டான்-2- கைங்கர்யம் கொண்டான் -3–தனக்கு பிரயோஜனமாகக் கொண்டான்
நாதன் -இச்சித்துக் கொண்டான் -மாம் மதீயஞ்ச அகிலம் -கொள்ள தேசிகன் பிரார்த்திக்கிறார் வரதன் இடம்
புலன் கொள் மாணாய-நிலம் கொண்டானே-நிலம் -லோகாந்தரம் -கொண்டது போலே
த்யாஜ்ய தேக வியாமோஹம் திரு மால் இரும் சோலை அழகர் காட்டிய கல்யாண குணம்

கலந்து என்னாவி நலம் கொள்
என்னோடு ஒரு நீராக கலந்து
பின்னை என் ஆத்மாவினுடைய நற்சீவனைக் -சேஷத்வம் -கொண்டான் -அவ்வளவேயோ
நாதன் —
சேஷத்வம் கொண்டபடியால் நாதன்
என்னை யாளும் கொண்டு –திரு நெடும் தாண்டகம் -25-என்கிறபடியே  நான் எனக்கு உரியேனாய் இருக்கிற இருப்பையும் தவிர்த்தான்
அகவாயில் குணங்களைக் காட்டி அகவாயில் பதார்த்தங்களை கொண்டான் —சௌசீல்ய நாதத்வங்களைக் காட்டி -சேஷத்வம் கொண்டான்(அகவாயில் உள்ளவற்றை கொண்டு இவர் அகவாயில் உள்ள சேஷத்வம் கொண்டான்-என் சர்வத்தையும் கொண்டு என்னையே தூக்க வைக்கும் நாதன் –  )
புற வாயில் சௌந்தர்யம் காட்டி சரீரம் கொண்டான்
இப்படி அகப்பட்டார் நீரேயோ என்ன –
புலன் கொள் மாணாய நிலம் கொண்டானே –
மகா பலியும் அகப்பட்டான் –ஆவி நலம் கொடுத்திலன்
கழஞ்சு மண் கொடுத்தான் அத்தனை
சர்வ இந்த்ரிய அபஹார ஷமமான வேஷத்தை பரிக்ரஹித்து -அவன் என்னது என்று அபிமானித்து இருக்கிற பூமியை அபஹரித்தன்

—————————————————————————————-

அவதாரிகை –

ஆவி நலம் கொண்டுவிட்ட அளவேயோ –நித்ய விபூதியில் பண்ணும் ஆதரத்தையும் என் பக்கலிலே பண்ணினான் -என்கிறார்

கொண்டான் ஏழ் விடை உண்டான் ஏழ் வையம்
தண் தாமம் செய்து என் எண் தானானானே –1-8-7-

என் நினைவே தனக்கு நினைவு ஆனான்
கொண்டான் ஏழ் விடை -நப்பின்னை பிராட்டியைக் கொண்டான் -அபிமத விஷயம் அடையும் விரோதிகளை போக்கி
கர்ப்பம் -மரணம் -ஏழு தசைகள் -ஏழு ரிஷபங்கள்
அலாப்யலாபம் -கோவை வாயாள் பொருட்டு -சிரிப்பு மாறாமல் -வஞ்சிக் கொம்பை கொள்ள ஏழு கொம்பில் விழுந்தான்
உண்டான் ஏழ் வையம் -ஆபத்துக் காலத்தில் ரஷித்து
தண் தாமம் செய்து -குளிர்ந்த ஸ்ரீ வைகுண்டத்தில் கொண்ட அபிமானம் -சம்சார தாபம் இல்லாமல் –
என் எண் தானானானே-என்னுடைய எண்ணப்படியே -மநோ ரதப்படி அனுபவம் கொடுத்தான் –
என் எண்-இப்பொழுது –அவனது ஆனதே -அவன் என் மேலே இங்கே அனுபவிக்க -நான் வைகுண்ட ஆசை வைத்தது போலே –

கொண்டான் ஏழ் விடை –
இன்ன படைவீடு கொண்டான் -என்னுமா போலே
நப்பின்னை பிராடியோட்டை சம்ச்லேஷத்துக்கு பிரதிபந்தகமான வ்ருஷபங்கள் ஏழையும் ஜெயித்தான்
உண்டான் ஏழ் வையம்
பிரளய ஆபத்தில் பூமி தன் வயிற்றில் புகா விடில் தரியாதா போலே தான் என் பக்கல் புகுந்தால் அல்லது தரியாதானாக கலந்தான்
தனக்கு ச்நேஹிதகளாய் இருப்பார்க்கு செய்யுமதும் செய்தான்
தான் பண்ணும் ரஷணம் விலக்காதார்க்குச் செய்யுமதும் செய்தான்
அதுக்கு மேலே
தண் தாமம் செய்து
தட்பத்தை உடைத்தான தாமம் உண்டு பரம பதம்
அதில் பண்ணும் விருப்பத்தையும் என் பக்கலிலே பண்ணினான்
தத் விபூதிகனாக என்னை ஆதரித்து -என்றுமாம்
என் எண் தானானானே —
நான் மநோ ரதித்த படியே எனக்க்குக் கை புகுந்தான் என்னுதல்
அன்றிக்கே
என் மநோ ரதத்தை தான் கைக் கொண்டான் என்னுதல்
அதாவது மாக வைகுந்தம் காண்பதற்கு இறே இவர் ஏகம் எண்ணுவது
கண்ணன் விண்ணூர் தொழவே சரிகின்றது சங்கம் -திரு விருத்தம் -47-என்று நான் ஸ்ரீ வைகுந்தத்து ஏறப் போக வேணும் என்றும்
அங்கே அனுபவிக்க வேணும் என்று ஆசைப்பட
அவன் –திரு நகரி ஏறப் போக வேணும் ஆழ்வாரை அனுபவிக்க வேணும் -என்று பாரியா நின்றான்

—————————————————————————————-

அவதாரிகை –

என்னைச் சுட்டி அவன் பிறந்த பிறவிகளுக்கு ஒரு முடிவு இல்லை -என்கிறார்

ஆனான் ஆனாயன் மீனோடு ஏனமும்
தான் ஆனான் என்னில் தானாய சங்கே –1-8-8-

ஆஸ்ரித அர்த்தமான அவதாரங்களுக்கு எண்ணிக்கை இல்லை
ஆனான்
ஆனாயன் -கிருஷ்ணாவதாரமும் எனக்கே
மீனோடு ஏனமும் -மத்ஸ்ய வராஹ அவதாரமும் எனக்கே -ஆபத் ரஷார்த்தமாக
நறையூரும் பாடுவாள் -போலே
தான் ஆனான் என்னில்
தானாய சங்கே-சங்க்யா- எண்ணிக்கை இல்லா திருவவதாரங்கள் / சொல்ல முடியாதே -பஹூநி என்றுமாம் –
விலஷண ஸ்வரூபன்
என் பக்கல் தான் பண்ணின சங்கத்தால் -பற்றால் தான் இத்தனையும் செய்து அருளினான்
என்னில் -என் நிமித்தமாக என்றுமாம்-

ஆனான் ஆனாயன்
இடையனாய்ப் பிறந்து
பெருமாள் போலே இல்லாமல் -முடிசூட இராதே ஜாதி உசிதமான கோ -ரஷணத்திலே அதிகரித்தான்
இடையனாய்ப் பிறந்த மெய்ப்பாடு -இடையனாய் பிறந்து இடைத் தொழிலும் செய்தானே –
அவ்வளவிலே தான் விட்டானோ
மீனோடு ஏனமும் தான் ஆனான்
கீழே ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தைச் சொன்னார்
அது அயர்வறும் அமரரர்கள் அதிபதியாய் இருந்தவோ பாதி இறே இவ்வவதாரங்களைப் பற்ற
சர்வாதிகனான தான் இவற்றோடு சஜாதீயன் ஆனான் -யத் ஜாதி யாத்ருச யத் ஸ்வபாவ -அத் -சுந்தரோ வத்சலா -கூரத் தாழ்வான் –
அவன் க்ரமத்திலே பிறக்கச் செய்தே அனுசந்தானத்தில் பதற்றத்தால் ஏக காலத்தில் இரண்டு அவதாரம் போலே இருக்க அருளிச் செய்கிறார்
மத்சயவதாரம் தொடங்கி எனக்கு தான் –வராஹ நான் கண்ட நல்லது என்பதால் சொன்னேன்
உபதேசத்தில் -சிறந்த கிருஷ்ண -மூவரும் உபதேச பரமான அவதாரங்கள் –
ஆனான்
வடிவும் சொல்லும் செயலும் தஜ்ஜாதியர்க்கு அடுத்தவையாய் இருக்கை -அவதாரத்தில் மெய்ப்பாடு-
இவை தான் வித்யாவதாரங்கள் -இதுக்கு அடி என் என்னில்
என்னில் தானாய சங்கே —
என் பக்கல் தனக்கு உண்டான சங்காதிசயத்தாலே -என்னுதல்
என்னைக் குறித்து -தான் ஆனவை -தன் அவதாரங்கள் –தன் சங்கே -மஹா சங்க்யை-என்னும் அத்தனை
அங்கன் அன்றிக்கே
சங்கே -மஹா சங்க்யை யளவோ முடிவுண்டோ –பஹூ நி –என்னும் அத்தனை

——————————————————————————————————

அவதாரிகை –

இப்படி அவதரிக்கும் இடத்தில் ஐஸ்வர்யமான சிஹ்னங்களோடு வந்து அவதரிக்கும் என்கிறார் –

சங்கு சக்கரம் அங்கையில் கொண்டான்
எங்கும் தானாய் நங்கள் நாதனே –1-8-9-

சங்கு சக்கரம் அங்கையில் கொண்டான்
சிலரை வசீகரிக்க நினைத்தவர்கள் -கையிலே மருந்து கொண்டு திரியுமா போலே
அவதாரங்கள் தோறும் திவ்ய ஆயுதங்களோடு வந்து அவதரிக்கும்
திவ்யாயுதங்கள் எல்லாம் அவதாரங்களிலும் உண்டோ என்னில் எங்கும் உண்டு
ராஜாக்கள் கறுப்புடுத்துப் புறப்பட்டால் அந்தரங்கர் அபேஷித்த தசையிலே முகம் காட்டுகைக்கா பிரியத் திரிவார்கள் –
அது போலே தோற்றாதாயும் நிற்பார்கள்
கூராழி வெண் சங்கு ஏந்தி வாராய் என்னும் இவர்களுக்கு அப்படி இறே தோற்றுவது
கையினார் சுரி சங்கு -காட்டவே கண்டார் திருப் பாண் ஆழ்வார்
சங்குச் சக்கரம்
வெறும் புறத்திலே ஆலத்தி வழிக்க வேண்டும் கையிலே திவ்ய ஆயுதங்களைத் தரித்தான்
எங்கும் தானாய்
1–தேவ மனுஷ்யாதி பேதங்கள் தோறும் தான் வந்து அவதரித்து உளனாய்
அன்றிக்கே
2–ஒருவனைப் பிடிக்க ஊரை வளைப்பாரைப் போலே தம்மை விஷயீ கரிக்கைக்காக வியாபித்த படியைச் சொல்லுதல்
நங்கள் நாதனே –
நம்மை எழுதிக் கொள்ளுகையே பிரயோஜனமாக -விருப்பத்துடன் -இச்சையில் தாத்பர்யம்

—————————————————————————————–

அவதாரிகை –

அவன் நீர்மையைப் பேசப் புக்கு -நம்மால் பேசப் போமோ -கடல் கிளர்ந்தால் போலே வேதமே பேச வேண்டாவோ -என்கிறார் –

நாதன் ஞாலம் கொள் பாதன் என்னம்மான்
ஓதம் போல் கிளர் வேத நீரானே —1-8-10-

நாதன் -நிருபாதிக சர்வ சேஷியாய்
ஞாலம் கொள் பாதன் -திரிவிக்ர -தாரதம்யம் பாராமல்
என்னம்மான் -அத்தாலே எனக்கு அசாதாராண சேஷி
ஓதம் போல் கிளர் வேத நீரானே -கடல் போலே வேதம் சொல்லும் நீர்மை

நாதன்–சர்வ நியந்தாவானவன்
ஞாலம் கொள் பாதன் –வசிஷ்ட சண்டாள விபாக ரஹீதமாக எல்லார் தலைகளிலும் திருவடிகளைப் பரப்பினவன்
என்னம்மான் -இம் மேன்மையையும் நீர்மையையும் காட்டி என்னை அனந்யார்ஹம் ஆக்கினவன்
அதவா
நாதன் –
முதல் பாட்டில் சொன்ன சேஷத்வத்தை உடையவன்
ஞாலம் கொள் பாதன் –
இரண்டாம் பாட்டில் சொன்ன அவதார சௌலப்யத்தை உடையவன்
என் அம்மான் –
எனக்கு கிட்டலாம் படி திருமலையிலே வந்து என்னை அடிமை கொண்டவன் -மூன்றாம் பாட்டில் கண்ணாவான்-என்றத்தை நினைக்கிறார்
ஓதம் போல் கிளர் வேத நீரானே –
இவனுடைய இந்நிலைமைகளை பேசும் பொழுது கடல் கிளர்ந்தால் போலே கிளரா நின்றுள்ள வேதத்தால் பிரதிபாதிக்கப் பட்ட நீர்மையை உடையவன்
நீர்மையாவது –ஆர்ஜவ குணம் –

—————————————————————————————–

அவதாரிகை

நிகமத்தில் இத் திருவாய் மொழி -எல்லா திருவாய் மொழி களிலும் அவனுடைய ஆர்ஜவ குணத்தை ஆராய்ந்து சொன்ன பத்து -என்கிறார் –

நீர் புரை வண்ணன் சீர் சடகோபன்
நேர்தல் ஆயிரத்து ஓர்தல் இவையே –1-8-11-

நீர் புரை வண்ணன் -ஒருக்கின இடத்திலே பாயும் நீர் போலே ஆர்ஜவ குணம் –நித்யர்- தேவர்- சம்சாரிகளுக்கு தக்கபடி தன்னை அமைத்து கொள்ளும்
சீர் சடகோபன் நேர்தல் ஆயிரத்து ஓர்தல் இவையே-ஒர்தலை வடிவாக -ஆராய்ந்து ஆர்ஜவம் கூறும் இப்பத்து –
இப்பத்தே சதா அனுபாவ்யம் –என்றுமாம்

நீர் புரை வண்ணன் சீர்
ஆக இத் திருவாய் மொழியில் சொல்லிற்று யாயிற்று -சர்வேஸ்வரனுடைய-ஆர்ஜவ குணம் யாயிற்று
நீரோடு ஒத்த ஸ்வ பாவத்தை உடையவனுடைய ஆர்ஜவ குணத்தை யாயிற்று சொல்லிற்று
ஆர்ஜவ குணமாவது -சம்சாரிகள் விலங்கிப் போனது தனக்கு வழியாம் படி தான் செவ்வியனாகை –
சடகோபன் நேர்தல்
இவை தான் -இவ்வர்த்தத்தைக் கடக்க நின்று ஒருவன் கவி பாடுகை அன்றிக்கே இவ்வார்ஜவ குணத்துக்கு இலக்கான ஆழ்வார் அருளிச் செய்தவை
ஆயிரத்து ஓர்தல் இவையே —
ஆயிரத்திலும் வைத்துக் கொண்டு ஓர்ந்து அருளிச் செய்யப் பட்டவை
அதாவது சம்சாரிகளுடைய செவ்வைக் கேட்டை அனுசந்தித்து -அத்தால் இழக்க வேண்டாத படி அவனுடைய ஆர்ஜவ குணத்தை
அனுசந்தித்து அருளிச் செய்யப் பட்டவை
அன்றிக்கே
சம்சாரிகளுக்கு ஓரப்படுபவை என்னுதல்
ஆயிரத்திலும் சடகோபன் நீர்புரை வண்ணனுடைய சீரை நேர்ந்த இவை ஓர்தல் -என்று அந்வயம் –

முதல் பாட்டில் –நித்ய விபூதியில் உள்ளாரோடு செவ்வையனாய்ப் பரிமாறும் படியை அருளிச் செய்தார்
இரண்டாம் பாட்டில் லீலா விபூதியில் உள்ளாரோடு செவ்வையனாய்ப் பரிமாறும் படியை அருளிச் செய்தார்
மூன்றாம் பாட்டில் இரண்டு விபூதியில் உள்ளாருக்கு முகம் கொடுக்கைக்காக திருமலையில் நிற்கிறபடியை அருளிச் செய்தார்
நாலாம் பாட்டில் அவ்வார்ஜவ குணம் தம்மளவிலே பலித்த படியை அருளிச் செய்தார்
அஞ்சாம் பாட்டில் நான் அவன் குணங்களை விரும்புமா போலே அவன் என் தேஹத்தை விரும்பா நின்றான் -என்றார்
ஆறாம் பாட்டில் -என்னுடைய தேஹத்தின் அளவன்றிக்கே என்னுடைய ஆத்மாவையும் கைக் கொண்டான் என்றார்
ஏழாம் பாட்டில் அவ்வளவும் அல்ல நித்ய விபூதியில் பண்ணும் ஆதாரத்தை என் பக்கலிலே பண்ணினான் என்றார்
எட்டாம் பாட்டில் என்னைச் சுட்டி அவன் பிறந்த பிறவிகளுக்கு ஒரு முடிவு இல்லை என்றார்
ஒன்பதாம் பாட்டில் இப்படிப் பிறந்த பிறவிகள் தோறும் ஐஸ்வர்யத்தோடு வந்து பிறந்தான் என்றார்
பத்தாம் பாட்டில் அவனுடைய ஆர்ஜவ குணத்தை பேசும் போது வேதமே பேச வேணும் என்றார்
நிகமத்தில் இத் திருவாய் மொழி சம்சாரிகளுக்கு எப்போதும் ஒக்க அனுசந்திக்கப் படும் –என்றார்

——————————————————————————————

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர்

கௌடில்ய வஸ்து கரண த்ரயதேபி ஜந்துஷூ–ஜனனம் உள்ள அனைவருக்கும் -ஜந்துஷூ -குடில புத்தி குறுக்கு புத்தி இருந்தாலும்
ஆத்மீயம் ஏவ கரண த்ரதய ஏக ரூப்யம் -ஆர்ஜவம்
சந்தர்சய -வெளிப்படுத்திக் கொண்டு
தான் அபி -அப்படி இல்லாதவர்களை கூட
ஹரி ஸுவ வசீகரோதி -ஹரி ஹரதி பாபானி -அநார்ஜவம் அபஹரித்து–ஆர்ஜவம் கருவியாக கொண்டு வசீகரிக்கிறார்
ஆசஷ்ட-விளக்கி உரைத்தார்
-சாந்தர கருணா முனி அஷ்டமேன–கருணையே வடிவான ஆழ்வார் -1–8-திருவாய் மொழியில்

—————————————————————-

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன்

சூரிணாம்-ச்வரைய சேவ்யே
ஸ்வயம் அவதரதி
ஷூத்ர திவ்ய ஏக நேத்ரே -கண்ணாவான் மண்ணோர்க்கும் விண்ணோர்க்கும்-நிர்வாஹகன் /கண்ணுக்கு விஷயம்
கோபாத்யர்த்தாம் த்ருத்யத்ரி-கோ கோபீ ஜன ரஷணார்த்தம்
ஸ்ரீத தனு ரசிகே -ஆஸ்ரித சரீரம் விருப்பம்
வாமநீ பாவ த்ருச்யே -புலன் கொள் மாணாய்
சச் சித்த அநந்ய வ்ருத்தௌ -என் எண் தான் ஆனானே-எண்ணத்தை பூர்த்தி -சத்ருச வியாபாரம் உடையவன்  –
விபவ சம தனு -ஆனான் ஆனாய
சு ஆயுத ஆரூட ஹஸ்தே -சங்கு சக்கரம் அம்கையில் கொண்டான்
நீச உச்ச க்ராஹ்ய பாதே  -நிம்ன உன்னமித வேறுபாடு இல்லாமல்-பரப்பின திருவடிகளை யுடையவன் –
நீர வர்ணம் ஜகாத -ருஜூ புத்தி

———————————————————————

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 8-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்-

ஓடு மனம் செய்கை உரை யொன்றி நில்லாதாருடனே
கூடி நெடுமால் அடிமை கொள்ளும் நிலை –நாடறிய
ஒர்ந்தவன் தன் செம்மை உரை செய்த மாறன் என
ஏய்ந்து நிற்கும் வாழ்வாம் இவை-————-8-

————————-

அவதாரிகை –

இதில் ருஜூக்களோடு குடிலரோடு வாசி அற
ஆர்ஜவ குண யுக்தன் என்று அனுசந்தித்த
ஆழ்வார் திவ்ய ஸூக்தியை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
எங்கனே என்னில் –
ஆஸ்ரயணம் அத்யந்த சரசமாய் இருந்ததே யாகிலும்
ஆஸ்ரயிக்கிறவர்கள் கரணத்த்ரயத்தாலும் செவ்வைக் கேடரான சம்சாரிகள் ஆகையாலே
பரிமாற்றத்தில் அருமை தட்டி இராதோ என்னில்
நீர் ஏறா மேடுகளிலே விரகாலே நீர் ஏற்றுவாரைப் போலே
இவர்களுடைய செவ்வைக் கேடே தனக்கு செவ்வையாகும் படி
இன்று ஆஸ்ரயிக்கிற இவர்கள் அளவிலும் செவ்வியனாய்
பரிமாறும் ஆர்ஜவ குண யுக்தன்
என்கிற –ஓடும் புள்ளில் அர்த்தத்தை
ஓடு மனம் செய்கை-இத்யாதியாலே அருளிச் செய்கிறார்-

————————————————————————————–

வியாக்யானம்–

ஓடு மனம் செய்கை உரை யொன்றி நில்லாதாருடனே கூடி –
சஞ்சலமாய்
நின்றவா நில்லா நெஞ்சும் –
அதன் வழியே பின் செல்லும் வாக் காயங்களும்
ஒருமைப் பட்டு இருக்கை அன்றிக்கே
செவ்வை கெட நடக்கும்
குடிலரோடு கூடிக் கலந்து –

நெடுமால் அடிமை கொள்ளும் நிலை —
சர்வ ஸ்மாத் பரனானவன்
அடிமை கொள்ளும் ஆர்ஜவ ஸ்வபாவத்தை –

நாடறிய ஒர்ந்து –
நாட்டார் அறியும் படி ஆராய்ந்து –

அவன் -தன் செம்மை-
தெனதே தம நுவ்ரதா-
ராமோ ராஜ்ஜியம் உபாசித்வா –
என்னும் படியான அவனுடைய ஆர்ஜவத்தை

உரை செய்த –
அருளிச் செய்த –
அதாவது
ஓடும் புள்ளேறிச் சூடும் தண் துழாய் நீடு நின்றவை யாடும் அம்மானே -என்று
நித்ய சூரிகள் திறத்தில் பரிமாறும் ஆர்ஜவத்தையும்
அம்மனாய் -என்றும்
கண்ணாவான்-என்றும்
நீர் புரை வண்ணன் -என்னும் அளவும்
நித்ய சம்சாரிகளோடே செவ்வையனாய் பரிமாறும் ஆர்ஜவத்தையும்
அருளிச் செய்தார் -என்கை-
இப்படி உரை செய்த –
மாறன் என –
ஆர்ஜவ குணத்தை அருளிச் செய்த
ஆழ்வார் என்று அனுசந்திக்க –

ஏய்ந்து நிற்கும் வாழ்வாம் இவை –
ஸ்வரூப அனுரூபமான
சம்பத்தாய் உள்ளவை எல்லாம் பொருந்தி
சென்று ஒன்றி நின்ற திரு -என்னும்படி
நிலை நிற்கும் –

————————————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: