பகவத் விஷயம் காலஷேபம் -44– திருவாய்மொழி – -1-7-6 ….1-7-11 –ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

அவதாரிகை –

இப்போது விடோம் என்கிறீர் அத்தனை போக்கி -பின்னையும் நீர் அல்லீரோ –உம்முடைய வார்த்தையை விஸ்வசிக்கப் போமோ -என்ன
நீர்வள வேழ் உலகுக்கு பின் ஆழ்வார் அன்றோ –
அவனாலே அங்கீ க்ருதனான நான் அவனை விடுவேனோ -என்றார் கீழில் பாட்டில்
உம்மை அவன் தான் விடில் செய்வது என் -என்ன -தன் குண சேஷ்டிதங்களாலே என்னைத் தோற்ப்பித்து என்னோடு கலந்தவனை
நான் விட சம்வதிப்போனோ -என்கிறார் இதில் -சம்மதிக்க -சம்வதிக்க வாதம் -சம்வாதம் -இசைய மாட்டேன்-

பிரான் பெரு நிலம் கீண்டவன் பின்னும் விராய் மலர்த்துழாய் வேய்ந்த முடியன்
மராமரம் எய்த மாயவன் என்னுள் இரான் எனில் பின்னை யான் ஒட்டுவேனோ –1-7-6-

அவன் தான் அகலத் தேடினும் நான் இசையேன்
பிரான்-உபகாரகன்
பெரு நிலம் கீண்டவன் -ஸ்ரீ வராஹ நாயனார்
பின்னும்
விராய் மலர்த்துழாய் வேய்ந்த முடியன் -அலங்காரத்துடன் பிராட்டியை அணைக்க திருமுடி யுடன் சென்றவன்
விரை -விரவின மலரை யுடைய திருத் துழாய் -செறிந்த -சூழப் பட்ட திருமுடி யுடையவன் -பரிமளம் உடைய செவ்வித் துழாய் என்றுமாம்
மராமரம் எய்த மாயவன்-மகா ராஜர் விச்வசிக்க -ஒரே அம்பால் -ஆச்சர்ய பூதன்
ஏழு மரங்களையும் -ஏழு லோகங்கள் -ஏழு குல பர்வதங்கள் -ஏழு ரிஷிகள் நடுங்கும்படி -உருவ எய்த ஆச்சர்யம் –
என்னுள் இரான் எனில்-என் நெஞ்சுக்கு உள்ளே வாசிக்காமல் போனால்
பின்னையான் ஒட்டுவேனோ-அவனை ஒழிய செல்லாமல் –இசைவேனோ -ஒத்துப்பேனோ-தாங்குவேனோ -தரிப்பேனோ என்றுமாம் –
அநாவ்ருத்தி சப்தம் -ஸ்ரீ பாஷ்யம் -விட மாட்டானே –

பிரான் –
நிலா தென்றல் சந்தனம்-பிறர்க்கே யாயிருக்குமா போலே தன் படிகளை யடைய பிறருக்கு ஆக்கி வைக்குமவன்
சர்வ விஷயமாகவும் -ஆஸ்ரித விஷயமாகவும் பண்ணும் உபகாரத்தை நினைத்து –பிரான் என்கிறது -பக்தாநாம் -பரிஜன–சகலமேதம் -அடியார்களுக்காக –
அத்தை உபபாதிக்கிறது மேல் –சரீரம் சிருஷ்டி சாஸ்திரம் கொடுத்து அருளி -ததாமி புத்தி யோகம் -விசேஷ உபகாரம் –
பெரு நிலம் கீண்டவன்
சர்வ விஷயமாக பண்ணும் உபகாரம் -பிரளயம் கொண்ட பூமியை நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத வடிவைக் கொண்டு எடுத்தால் போலே
ஆஸ்ரித விஷயமாக–சம்சார பிரளயம் கொண்டு என்னை எடுத்தவன் –
பின்னும் விராய் மலர்த்துழாய் வேய்ந்த முடியன்
ஒப்பனையோடு யாயிற்று பிரளயத்திலே முழுகிற்று
நெருங்கத் தொடையுண்டு -பரிமள பிரசுரமாய் -செவ்வி பெற்று இருந்துள்ள திருத் துழாய் மாலையாலே சூழப் பட்ட திரு அபிஷேகத்தை உடையவன்
விரை -யை -விராய் என்று நீட்டிக் கிடக்கிறது -அன்றிக்கே -மலர் விரவின திருத் துழாய் என்றுமாம்
மராமரம் எய்த மாயவன் –
ஆஸ்ரித விஷயமாக உபகரிக்கும் படி மகா ராஜர் வாலி மிடுக்கையும் பெருமாள் சௌகுமார்யத்தையும் அனுசந்தித்து -நீர் வாலியைக் கொல்ல மாட்டீர் என்ன
நான் வல்லேன் -என்று மழு வேந்திக் கொடுத்துக் கார்யம் செய்யும் வ்யாமோஹத்தை யுடையவன் -மழு -தப்த அய பிண்டம் -இரும்பை -அம்பை என்றபடி-(வடிவாய் மழு ஏந்தி உலகம் ஆண்டு -பரசுராமன் உலகம் ஆளவில்லையே -மழு ஏந்துபவன் -மழு ஏந்தி -ஏந்திக் கொண்டு என்பது இல்லை –)
என்னுள் இரான் எனில் –
இப்படி ஆஸ்ரிதரை விஷயீ கரித்து-அவர்கள் பேற்றுக்கு
தான் கிருஷி பண்ணுமவன்-என்னுள் இரான் எனில்
எனில் -என்கையாலே விட சம்பாவனை இல்லை -என்கை
பின்னையான் ஒட்டுவேனோ —
எப்பிரகாரத்தாலும் இரேன் -என்னுமாகில் பின்னை நான் அவன் போக்கை இசைவேனோ —
என்னுடைய கர்ம பாரதந்த்ர்யம் போலே அவனுடைய ஆஸ்ரித பாரதந்த்ர்யத்துக்கும் ஏதேனும் கண் அழிவு உண்டோ
அஹம் வேலைக சாகரம் -கடலைக் காக்கும் பொறுப்பு கடல் கரைக்கு -இளைய பெருமாள் –
என் இசைவு இன்றிக்கே இருக்க அவனாலே போகப் போமோ –
அன்றியே –நான் தொங்குவேனோ-என்று பிள்ளான் பணிக்கும் படி –ஆச்சான் பணிக்கும் படி -இருபத்தினாயிரப்படி-

————————————————————————————-

அவதாரிகை –

குணத்ரய வச்யராய் போந்தீர்-காதா சித்கமாக -அவனை விடேன் -என்கிறார் -உம்முடைய வார்த்தையை விஸ்வசிக்கப் போமோ என்ன
நான் அவனை விட்டாலும் அவன் தான் என்னை விடான்-என்கிறார் –
வளவேழ் விடுவதே ஆழ்வாருக்கு ரஜோ குணம் -விடுவதும் பற்றுவதும் பகவத் விஷயம்
நாம் விஷயாந்தரம் -பல கால் பற்றி சில காலம் அவனைப் பற்றுகிறோம்
அதிக்ரமித்து அவனை ஆழ்வார் கேட்பார்கள் -அந்தரங்க சம்பந்தம் அடியாக -நமக்கு கர்மாதீனம் –

யான் ஒட்டி என்னுள் இருத்துவன் என்றிலன் தான் ஒட்டி வந்து என் தனி நெஞ்சை வஞ்சித்து
ஊனொட்டி நின்று என்னுயிரில் கலந்து இயல் வானொட்டுமோ இனி என்னை நெகிழ்க்கவே–1-7-7

நான் நெகிழ்கிலும் அவன் இசையான்
யான் ஒட்டி -யான் இசைந்து
என்னுள்( உன்னை)இருத்துவம்என்றிலன்
தான் ஒட்டி வந்து -பிரதிஜ்ஞை பண்ணி ஒட்டி வந்து
என் தனி நெஞ்சை வஞ்சித்து -யாரும் அறியாமல் ஸ்வதந்த்ரமான நெஞ்சை –வசீகரித்து -அறியாமை குறளாய்-போலே
ஊனொட்டி நின்று -சரீர வாசம் -நெஞ்சு தானே தடைச் சுவர்
என்னுயிரில் கலந்து -ஆத்மாவில் கலந்து
இயல்வான் -சத்தை பெற்றான் -இயல்புத் தன்மை அடைந்தான் –ஸ்வ பாவம் அடைந்தான்
ஸ்வேன ரூபேண -ஆத்மா திருநாடு அலங்கரித்த பின்பு அடைவதை அவன் இங்கே ஆழ்வார் திரு உள்ளம்
அலங்கரித்த பின்பு –ஸ்வரூப ஆவிர்பாவம் -ஸ்வ பாவ ஆவிர்பாவம்
ஒட்டுமோ இனி என்னை நெகிழ்க்கவே- சம்மதிக்க மாட்டார்

யான் ஒட்டி என்னுள் இருத்துவன் என்றிலன் –
இசைவு என்னாலே வந்ததாகில் அன்றோ விடுகையும் என்னாலே வந்ததாவது –க்ருஷிகன் -வளைத்து பிடித்து -விடுவானோ –
ஆழ்வீர்-நாம் உம்முடைய பாடே இருப்போம் -என்றால் -ஒட்டேன் -என்பரே -வளவேழ்-
ஆகில் இங்கே இருக்கக் கடவோம் -என்று பிரதிஜ்ஞை பண்ணியாயிற்று வந்து இருப்பது –

கருமி க்ருஹம் -போஜனம் வர -அருகில் உள்ளார் தடுக்க -உண்டு வருவேன் பிரதிஜ்ஞை பண்ணி -ஆர்த்தி காட்டி
கொஞ்சம் இத்தனை சோறு கெஞ்சி ஜீவிக்க –
எத்தனையும் தன்னால் ஆவது இல்லை -இறுகிப் பிடிக்க -கொடுக்க இலை இல்லை என்ன -மடியில் இலையைக் காட்டி –
நீ கொண்டு வந்த இலையில் உண்பது விருந்தோம்பலுக்கு ஒவ்வாது -உம் இலை -கத்தி இலை -கத்தி உண்டு –
இலைக்கோ கழுத்துக்கோ-சார அசனம் -கரைத்த சோறு இட்டானாம் -எப்படியும் உண்டே வருவேன் என்று ப்ரதிஞ்ஜை பண்ணி பெற்றானே –

நான் இசைந்து -என்னுடைய ஹிருதயத்திலே இருக்க வேணும் -என்று இலேன் –
தான் ஒட்டி வந்து –
அத்ய மே மரணம் வாபி தரணம் சாகரஸ்ய வா -என்று -பெருமாள் –மரணம் -தரணம் -தாண்டுவது –
இத்தை முடித்தல் கடத்தல் செய்யுமதுக்கு மேற்பட இல்லை -என்றால் போலே பிரதிஜ்ஞ்ஞை பண்ணி யாயிற்றுப் புகுந்தது –
என் தனி நெஞ்சை –
தன்னாலும் திருத்த ஒண்ணாத படி ஸ்வதந்த்ரமாய்
அவிதேயமான நெஞ்சை
வஞ்சித்து
தன்னுடைய சீலாதி குணங்களாலும் வடிவு அழகாலும் தனக்கு விதேயமாம் படி பண்ணி
தானே அறியாமல் செய்ததால் வஞ்சித்து
பின்னைச் செய்தது என் என்னில்
ஊனொட்டி நின்று என்னுயிரில் கலந்து
1–சரீரத்தைப் பற்றி நிற்கிற என்னுயிரிலே கலந்து -என்கிறார் என்பாரும் உண்டு
அன்றிக்கே
2–அபிமத விஷயத்தில் அழுக்கு உகப்பாரைப் போலே -என்னுடைய சரீரத்தைப் பற்றி நின்று பின்னை என்பக்கலிலே
விலக்காமை பெற்றவாறே -என் ஆத்மாவோடு வந்து கலந்தான் -என்று ஜீயர் அருளிச் செய்யும் படி
பற்றிலன் ஈசனும் –முற்றவும் நின்றனன் -போலே உம்முயிர் வீடுடையான் -வீடு சரீரம் உயிர் உடையான் -ஆத்மாவையே வீடாக உடையவன் போலே இங்கும்
இயல் வானொட்டுமோ இனி என்னை நெகிழ்க்கவே–
இயல்வான்
1-இப்படியை ஸ்வ பாவமாக உடையவன் -என்னுதல்
2-இப்படி எதிர் சூழல் புக்கு உத்சஹித்தவன் -என்னுதல்
ஒட்டுமோ இனி என்னை நெகிழ்க்கவே–
இப்படி நிர்ஹேதுகமாக என்னை விஷயீ கரித்தவன்-நான் தன் பக்கலிலும் நின்று நெகிழ்ந்து போவேன் -என்றால் அவன் இசையுமோ
எனக்கு ஜ்ஞானம் பிறக்கைக்கு கிருஷி பண்ணி
பிறந்த ஜ்ஞானம் பலிக்கும் அளவாக கொண்டு நான் அகன்று போவேன் என்றால் அவன் சம்வதிக்குமோ

————————————————————————–

அவதாரிகை –

நான் விடேன்- அவன் விடான் – என்றால் போலே சொல்லுகிறது என் -இனி அவன் தான் பிரிப்பேன் என்னிலும்
தன்னுடைய கல்யாண குணங்களிலே அகப்பட்ட என் நெஞ்சை அவனாலும் பிரிக்கப் போகாது -என்கிறார் –

என்னை நெகிழ்க்கிலும் என்னுடை நன்னெஞ்சம் தன்னை அகல்விக்கத் தானும் கில்லான் இனி
பின்னை நெடும் பணைத் தோள் மகிழ் பீடுடை முன்னை யமரர் முழு முதலானே –1-7-8-

இப்படிப் பட்ட ஸ்வதந்த்ரன் விடில் செய்வது என் -என்னை பிரிந்தாலும் என் நெஞ்சை பிரியான் –பிரிந்து போக அவனாலும் முடியாதே
நெஞ்சு தானே போக மோஷ ஹேது –
என்னை நெகிழ்க்கிலும் -ஞான பிரேமங்களை கொடுத்து -மதி நலம் அருளி
என்னுடை நன்னெஞ்சம் தன்னை-நல் -தன்னால் வஞ்சிக்கப்பட்ட -சேர்ந்த -நன்மை -உடைய நெஞ்சு
அகல்விக்கத் தானும் கில்லான்-சர்வசக்தனான அவனாலும் -சர்வ சக்தன் சத்ய சங்கல்பன் -ஆத்மாவை அழிக்க முடிந்தாலும் அழிக்க மாட்டான் -தேசிகன்
அது போலே இங்கும் –
இனி -முன்பு போலே விஷயாந்தர பிரவணர் இல்லையே
பின்னை நெடும் பணைத் தோள் மகிழ் பீடுடை-மேன்மையை யுடைய -நப்பின்னை பிராட்டியும் இருக்க –பீடு -மேன்மை
இவருக்கு நப்பின்னை பிராட்டி தரகாதிகள்
முன்னை யமரர் முழு முதலானே-பூர்வரான நித்ய ஸூரிகளுக்கு தாரகாதி முழுவதுமாக உள்ளான்
அவர்களை விட்டால் அன்றோ என்னை விடுவான் –

என்னை நெகிழ்க்கிலும் –
மயர்வற மதி நலம் அருளப் பெற்ற என்னைத் தானே அகற்ற அரிது –
இவ்வரிய செயலைச் செய்யிலும்
என்னுடை நன்னெஞ்சம் தன்னை அகல்விக்கத்
நெஞ்சே இயற்றுவாய் எம்மோடு நீ கூடி -என்றும்
தொழுது எழு என் மனனே -என்றும் சொல்லலாம் படி தன் பக்கலிலே அவகாஹித்த நெஞ்சம் தன்னை அகல்விக்க
தானும் கில்லான் -நல்லை நெஞ்சே -முந்துற்ற நெஞ்சே –
சர்வ சக்தி என்னா -எல்லாம் செய்யப் போமோ -என் செய்து போந்திலனோ -இது நெடும் காலம் என்னா
இனி
அவனும் இனி மேல் உள்ள காலம் மாட்டான் –இனி என்கிற உரப்பு எத்தைப் பற்ற என்னில் -அத்தைச் சொல்லுகிறது மேல்
பின்னை நெடும் பணைத் தோள் மகிழ் பீடுடை முன்னை யமரர் முழு முதலானே —
நப்பின்னை பிராட்டி புருஷகாரமாக
நித்ய ஸூரிகள் ஓலக்கம் இருக்க அடிமை புக்கு அந்தப்புர பரிகரமான வஸ்துவை அகற்றப் போமோ –
சூடா மணி -ஜனகர் கொடுத்த திரு ஆபரணம் பெருமாள் நினைக்க –
நப்பின்னை பிராட்டியுடைய நெடிதாய்ச் சுற்று உடைத்தாய் பசுமையை உடைத்தான மூங்கில் போலே இருக்கிற
தோளோடு அணைக்கையாலே வந்த பெருமையை உடையனாய் -சம்ச்லேஷ ஜனித ஸூகம் –
யத்ரர்ஷய-பிரதமஜா யே புராணா -என்கிறபடியே -பழையராய் இருந்துள்ள நித்ய ஸூரிகளுடைய ஸ்வரூப ஸ்தித் யாதிகள்
தன் அதீநமாம் படி இருக்கிறவன் –தானும் கில்லான்அமரர்களுக்கு முழு -அமரர்களுக்கு முதல் –
ஹர்யருஷகண சன்னிதௌ-என்கிறபடியே அவர்கள் சந்நிதியிலே பிரதிஜ்ஞ்ஞை பண்ணிற்று
திருவடி -ராவணன் இடம் -பெருமாள் பிரதிஜ்ஞை பண்ணினதால் அழிக்காமல் போகிறேன் -கரடி குரங்கு கூட்டம்– முன்னை அமரர் முழு முதலான்
நப்பின்னை பிராட்டி புருஷகாரம் எங்கனே அகற்றும் படி

————————————————————————–

அவதாரிகை –

தானும் கில்லான் -என்கிற பிரசங்கம் தான் என் –ஏக த்ரவ்யம் என்னலாம் படி யான இத்தை எங்கனே பிரிக்கும் படி -என்கிறார்
ஒரே பொருள் ஆன பின்பு பிரியும் பிரசங்கமே இல்லையே –

அமரர் முழு முதல் ஆகிய வாதியை -அமரர்க்கு அமுதீந்த ஆயர் கொழுந்தை
அமர வழும்பத் துழாவி என்னாவி அமரத் தழுவிற்று இனி யகலுமோ –1-7-9-

அப்ருதக் சித்த விசேஷணம் ஜாதி குணம் போலே -அனன்யார்ஹ சேஷத்வம் அறிந்த பின் -பிரகாரம் சரீரம் –இரண்டறக் கலந்ததே
அமரர் முழு முதல்-நித்ய விபூதி நாயகன் -ஸ்வரூப ஸ்திதி பிரவ்ருத்தி இவன் அதீனம்-பரத்வம்
ஆகிய வாதியை –காரணம் -படைத்து -அழித்து -லீலா விபூதி
அமரர்க்கு அமுதீந்த -உப்புச் சாறு கொடுத்து –பிரயோஜனாந்தர பரருக்கும்
ஆயர் கொழுந்தை -ஆயர்களுக்கு -தலைவன் -உள்ளே அடங்கி என்றுமாம் –சௌலப்யம்
அமர வழும்பத் துழாவி -அனந்யார்ஹ பொருத்தம் -கலப்புப் பிறக்கவும் -ஸ்வா தந்த்ரம் இடைத் தடை நீங்கும் படி -ஸ்வரூபாதி சமஸ்த உள்ளே புக்கு
என்னாவி-அமரத் தழுவிற்று-ப்ருதக் ஸ்திதி இல்லாதபடி -ஒன்றான -உகந்து கலந்தது
இனி யகலுமோ-பிரசங்கமே இல்லையே

அமரர் முழு முதல் ஆகிய வாதியை –
நித்ய ஸூ ரிகளுடைய ஸ்வரூப ஸ்தித்யாதிகள் தன அதீநமாம் படி இருக்கிறவனை
இது தொடங்கி லீலா விபூதி விஷயமாய் இருக்கிறது
தன் பக்கல் பாவ பந்தம் சத்தா பிரயுக்தம் இன்றிக்கே இருக்கிறவர்களுக்கும் தன்னை வழி படுக்கைக்கு
உறுப்பாக கரண களேபரங்களைக் கொடுக்குமவனை
அமரர்க்கு அமுதீந்த –
அவன் கொடுத்த கரணங்களைக் கொண்டு -எங்களுக்கு நீ வேண்டா- உப்புச் சாறு அமையும்
என்பார்க்குக் கடலைக் கடைந்து அம்ருதத்தைக் கொடுக்குமவனை
ஆயர் கொழுந்தை-
அவ்வம்ருதம் வேண்டா -நீ அமையும் என்பாருக்காக வந்து திருவவதரித்து தன்னைக் கொடுக்குமவனை
அமர வழும்பத் துழாவி என்னாவி அமரத் தழுவிற்று
இப்படி உபய விபூதி உக்தனாய் இருக்கிறவனை–அமர- கிட்டிச்–வழும்ப- செறிந்து துழாவி –எங்கும் புக்கு அனுபவித்து
என்னுடைய ஆத்மாவானது –அமரத் தழுவிற்று-ஏக த்ரவ்யம் என்னலாம் படி கலந்தது
இனி யகலுமோ —
இரண்டு வஸ்துக்களாகில் அன்றோ பிரிக்கலாவது
பிரகார பிரகாரிகளுக்கு ஏகத்வ புத்தி பிறந்தால் பிரிக்கப் போமோ
ஜாதி குணங்களோ பாதி த்ரவ்யமானதுக்கும் நித்யதாஸ்ரயத்வம் உண்டாகில் பிரிக்கப் போமோ-ஒளி சூர்யன் இரண்டும் த்ரவ்யம் -ஆஸ்ரயம் உண்டே அதே போலே
பிரகாரம் பிரகாரி தனித்து இருக்காதே -விசேஷணம் புத்தி -அறிந்த பின்பு –வஸ்துக்கள் இரண்டானாலும் விசிஷ்டம் ஏகம்
மண் குடம் -நீலக் குடம் -வாயும் வயிறும் -குடம் -போலே -விசேஷணங்கள் பல –விசேஷ்யம் ஓன்று -பிரிக்க முடியாதே -ஓன்று என்பது இல்லை
த்ரவ்யத்தை ஆஸ்ரயித்தே ஜாதி குணம் -புஷ்பத் தன்மை பரிமளம் போலே -ததேவ ஆச்ரயத்வம் போலே ஆத்மா அவனையே ஆஸ்ரயித்து இருக்குமே –

——————————————————————————

அவதாரிகை –

என்னோடு கலந்து எம்பெருமானுடைய குணங்களை கால தத்வம் உள்ளதனையும் அனுபவியா நின்றாலும் த்ருப்தன் ஆகிறிலன்-என்கிறார்

அகலில் அகலும் அணுகில் அணுகும் புகலும் அரியன் பொருவல்லன் எம்மான்
நிகரில் அவன் புகழ் பாடி இளைப்பிலம் பகலும் இரவும் படிந்து குடைந்தே –1-7-10–

திருப்தி ஏற்படாதே –
அகலில்-பிரயோஜன நாந்தரம் பெற்று அகன்றால்
அகலும்-செய்யலாவது அற்று அவனும் அகலும்
அணுகில் -அநந்ய பிரயோஜனராய் சென்றால்
அணுகும் -ஒரு நீராக கலப்பான்
புகலும் அரியன்-அந்ய பரருக்கு
பொருவல்லன்-அநந்ய பரருக்கு- தடை இல்லாதவன் /-பொருத்தமாய் -சேருபவன் -சேர வல்லவன்-என்றுமாம்
எம்மான் -இந்த சீலத்தால் எனக்கு ஸ்வாமி
நிகரில் அவன் புகழ் பாடி இளைப்பிலம் -படிந்து உள் புகுந்து பாடி ஓவுதல் இல்லாமல்
பகலும் இரவும் படிந்து குடைந்தே-தவிரமாட்டோம்-

அகலில் அகலும் –
இவன் அகன்ற படியே நிற்கில் -யதி வா ராவணஸ் வயம் -என்கிற சாபல்யமும் கிடக்கச் செய்தே- கண்ண நீரோடு கை வாங்கும் –
த்விதா பஜ்யேய மப்யேவம் ந ந மேயம் -என்னும் நிர்பந்தத்தோடு நிற்கில் முடித்தே விடும்
கை விட பிராதி கூல்யத்தில் எல்லையில் -கைக் கொள்ள அனுகூலத்தில் முதல் படியில் இருந்தால் போதும்
இவனுக்கும் சாபல்யம் உண்டாகுமே இவன் திருந்துவானோ –அகலில்-அர்த்த த்வயம் 1–பாரா முகமும்-2- த்வேஷமும் –
காகாகுசரன்-இருந்த இடத்திலே அம்பு -சமுத்திர ராஜன் -மருகான்தரம் இருந்த இடத்தே இருந்து அம்பு விட்டார் –
இங்கே கால ஷேபம்-தச மாசம் பொறுமை -முதலிகள் -சேனை -சேது பந்தம்–இலங்கை -கும்பன் நிகம்பன் பட -கால விரயம்-
-இன்று போய் நாளை வா -இவற்றால் சாபல்ய புத்தி பிரகாசம் ஆனதே -கண்ண நீர் உடன் கை வாங்கினார்
அணுகில் அணுகும்
தன் பக்கலிலே ஆபிமுக்க்யம் பண்ணினால் -ஆக்யாஹி மம தத்த்வேன-என்னும்
இளைய பெருமாள் நிற்க -நாலடி வர நின்ற வனையிறே -ராஜ கார்யம் செய்யும் படி சொல்லீரோ -என்றது
ராஷசா நாம் பலாபலம் -இவனை ராஷச ஜாதியனாக நினைக்கை அன்றிக்கே -இஷ்வாகு வம்ச்யனாகவே புத்தி பண்ணி
-ராஷசருடைய பலாபலம் சொல்லீரோ -என்றார் இ றே
இத் திருவாய் மொழியில் முதல் பாட்டு –அகலில் அகலும் என்றவிடம் சொல்லுகிறது
இரண்டாம் பாட்டு –அணுகில் அணுகும் -என்றவிடம் சொல்லுகிறது -(ஆபி முக்கியம் துளி காட்டினாள் மேல் விழுவான்  / விரோதி முற்றினால் தான் கண்ணா நீர் உடன் அகலுவான்-என்றவாறு  )

புகலும் அரியன்-
அர்ஜுனனும் துரியோதனனும் கூட வரச் செய்தே -அர்ஜுனனுக்குத் தன்னைக் கொடுத்து துரியோதனனுக்கு தன்னை ஒழிந்த
பங்களத்தைக் -பதர் கூட்டம் -கொடுத்து விட்டான் இறே
உகவாதார்க்கு கிட்ட அரியனாய் இருக்கும்
பொருவல்லன் –
ஆஸ்ரிதர் தன்னைக் கிட்டும் இடத்தில் தடை உடையன் அல்லன்
யாத்ர கிருஷ்னௌ ச கிருஷ்ணா ச சத்யா பாமா ச பாமிநீ –புத்ரர்களுக்கும் புக ஒண்ணாத சமயத்தில் இ றே சஞ்ஜயனை அழைத்துக் காட்சி கொடுத்தது
பொரு -என்று ஒப்பாய் -ஒப்பாவது நேர் நிற்குமதாய் -அத்தால் தடையைச் சொல்லிற்றாய்-தடை உடையவன் அல்லன் -என்கை
எம்மான்
இஸ் ஸ்வ பாவங்களைக் காட்டி என்னை அனந்யார்ஹன் ஆக்கினவன்
நிகரில் அவன் புகழ் பாடி இளைப்பிலம்
அவனுடைய ஒப்பில்லாத கல்யாண குணங்களைப் பாடி -ஒரு காலமும் விச்சேதிக்க ஷமன் ஆகிறிலேன்
இப்படி விடுகைக்கு ஷமன் இன்றிக்கே ஒழிகிறது-காலம் சாவாதியோ என்னில்
பகலும் இரவும்
சர்வ காலமும் .
ஆனால் விஷயத்தை குறைய அனுபவித்தோ என்னில்
படிந்து குடைந்தே
எங்கும் கிட்டு அனுபவியா நிற்கச் செய்தே விட மாட்டுகிறிலேன்-

————————————————————————————–

அவதாரிகை –

நிகமத்தில் இத் திருவாய்மொழி தானே கற்றவர்களுடைய ப்ராப்தி பிரதிபந்தகங்களை உன்மூலிதமாக்கும் -என்கிறார்-

குடைந்து வண்டுண்ணும் துழாய் முடியானை -அடைந்து தென்குருகூர்ச் சடகோபன்
மிடைந்த சொல்தொடை ஆயிரத்து இப்பத்து உடைந்து நோய்களை ஒடுவிக்குமே –-1-7-11-

சாம்சார மகா வியாதி நிவர்த்தகம் -பலன்
குடைந்து வண்டுண்ணும் துழாய் முடியானை -வண்டுகள் நன்கு புக்கு மதுவை உண்ணும்
-அடைந்த தென்குருகூர்ச் சடகோபன் –சர்வ பிரகாரத்தாலும் செறிந்த -மாதா பிதா இத்யாதி -அனுபவங்கள் எல்லாம்
தென் -பரம உதாரரான -வள்ளல் தன்மை மிக்கு -ஆழ்வார் சம்பந்தத்தால் -தெற்கு நோக்கி கை கூப்புகிறோம்
மிடைந்த சொல்தொடை -நெருங்கின தொடை யுடைய
ஆயிரத்து இப்பத்து
உடைந்து நோய்களை ஒடுவிக்குமே -சாம்சாரிக்க நோய் -பிரயோஜானந்தர நோய் -அனைத்தும்
-அஹங்கார அர்த்த காமம் இவற்றின் செயல்களை உருக் குலைத்து ஒடுவிக்கும் -சடக்கென போம் படி பண்ணும்-உடைத்து ஓடுவிக்கும் என்றுமாம்

குடைந்து வண்டுண்ணும் துழாய் முடியானை
மது பானம் பண்ண இழிந்த வண்டுகளானவை-பெரும் கடலிலே இழிந்தாரைப் போலே -உள்ளே உள்ளே இடம் கொண்டு புஜியா நிற்கும்
அத்தனை போக்கி மது வற்றிக் கை வாங்க ஒண்ணாத படியாய் இருக்கிற திருத் துழாய் மாலையாலே அலங்க்ருதமாய் இருக்கிற
திரு அபிஷேகத்தை உடையவனைக் கவி பாடிற்று
-அடைந்து தென்குருகூர்ச் சடகோபன்
விட மாட்டாத -விடக் காரணங்கள் இல்லை என்று (பல காரணங்கள் பல தடவை கீழே )-அருளினாரே-
அம்மதுவிலே படிந்த வண்டுகள் விட மாட்டாதாப் போலே -பகவத் விஷயத்தை விட மாட்டாத ஆழ்வார் ஆயிற்று அருளிச் செய்தார் –
மிடைந்த சொல்தொடை –
அனுபவ ஜனித ப்ரீதியாலே பிறந்து இருக்கச் செய்தேயும் -சொற்கள் தான் -நாம் இங்குத்தைக்கு கிஞ்சித் கரித்ததாக வேணும் -என்று
என்னைக் கொள் என்னைக் கொள் -என்று மேல் விழுந்தன -தமிழ் ஆழ்வாருக்கு தொண்டு புரியுமே -கைங்கர்யத்தில் ஆசையால் –
செறிந்த சொல் தொடை என்றுமாம் –
ஆயிரத்து இப்பத்து-
ஆயிரத்திலும் வைத்துக் கொண்டு இப்பத்தையும் அப்யசிக்க வல்லார்களுக்கு
உடைந்து நோய்களை ஒடுவிக்குமே
நோய்களை -உடைந்து-ஒடுவிக்குமே
ஐஸ்வர்ய கைவல்யங்கள் -புருஷார்த்தம் என்கைக்கு அடியான பாபங்கள் ஓடிப்போம்
நோய்களை -உடைந்து-ஒடுவிக்குமே-
இவனை விட்டுப் போம் போது திரளாகப் போகப் பெறாது
வள்ளலே உன் தமர்க்கு என்றும் நமன் தமர் கள்ளர் போலே -பெரிய திருமொழி -8-10-7-என்கிறபடி இருவர் ஒரு வழி போகப் பெறார்கள்
இப்பாபங்கள் ஆஸ்ரய அந்தரத்தில் கிடந்தாலும் மறுமுட்டுப் பெறாத படி உடைந்தோடும் –
சிதறிப் போகும் என்றும் / விநியோக ஷமம் இன்றிக்கே உரு மாய்ந்து போகும் என்றும் —

முதல் பாட்டில் –கேவலரை நிந்தித்தார்
இரண்டாம் பாட்டில் –அநந்ய பிரயோஜனர் திறத்தில் இருக்கும் படியைச் சொன்னார்
மூன்றாம் பாட்டில் -இவ்விரண்டு கோடியிலும் நீர் ஆர் என்ன –உன்னை அனுபவியா நிற்க விரோதி கழிந்தவன் நான் -என்கிறார் –
நாலாம் பாட்டில் –என்னை இவ்வளவாக புகுர நிருத்தினவனை என்ன ஹேதுவாலே விடுவது -என்கிறார்
அஞ்சாம் பாட்டில் திருவாய்ப்பாடியில் பெண்கள் கிருஷ்ணனை விடும் அன்று அன்றோ நான் அவனை விடுவது -என்றார்
ஆறாம் பாட்டில் –அவன் தான் விடிலோ -என்ன அவன் போக்கை இசையேன் –என்றார்
ஏழாம் பாட்டில் –நீர் தாம் விடிலோ என்ன -அவன் என்னைப் போக ஒட்டான் -என்றார்
எட்டாம் பாட்டில் -இந்நாள் வரை போக விட்டிலனோ என்ன -நப்பின்னை பிராட்டி புருஷகாரமாகப் பற்றின என்னை இனி அவனாலும் விட ஒண்ணாது -என்றார்
ஒன்பதாம் பாட்டில் -இப்பிரசங்கம் தான் ஏன் –ஒரு நீராக கலந்ததை ஒருவராலும் பிரிக்க ஒண்ணாது -என்றார்
பத்தாம் பாட்டில் –அவனுடைய கல்யாண குணங்களை சர்வ காலமும் அனுபவித்து ச்ரமமுடையேன் அல்லேன் என்றார்
நிகமத்தில் இத் திருவாய் மொழியைக் கற்றார்க்குப் பலம் சொல்லித் தலைக் கட்டினார்

———————————————————————————-

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர்

பும்ச ஸ்ரீ ய ப்ரணித புருஷார்த்த சிம்ஹ–
நிந்தன் -பலாந்தரம் நிரவத்ய-கந்தாத்
தத் ரஸ்யதா அர்ஹ குண ஜாதம் சமர்த்தநேந
தத் சேவனம் சரசம் –வெட்டி போகாது ஒட்டு போகும்

—————————————————————–

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன்

சச் சித்த ஆகர்ஷ ஹேது
அத சமன நிதி -வைப்பாம் நிதி -பாபம்  போக்கும்
நித்ய போக்யாம்ருதச்ய -தூய அமுது சக்ருத் சேவ்யம் -சதா சேவ்யம்
த்யாகே ஹேது -உச்சிதஸ்ய -எத்தால் விடுவேன்
பிரவாஹம் உபக்ருதே -உபகார பரம்பரைகள் –
துஸ் த்யஜ ஸ்வா நுபூதே –
த்யாக ஆகாங்க்ஷா நிரோது -தாழ்ந்தவன் என்று விலக முடியாமல்
ஆஸ்ரித ஹ்ருதயன் ப்ருதக்கார நித்ய அஷமச்ய –நல் நெஞ்சை -அகல்விக்க கில்லான்
ஸ்வாத்ம ஸ்ருஷ்டச்ய -அமர தழுவி
காயது ஸ்ரம ஹர  யசஸ் -பாடி இளைப்பிலம்
சேவனம் ஸ்வாது-

——————————————————

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 7-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்–

பிறவி யற்று நீள் விசும்பில் பேரின்பம் உய்க்கும்
திறம் அளிக்கும் சீலத் திருமால் -அறவினியன்
பற்றும் அவர்க்கு என்று பகர் மாறன் பாதமே
உற்ற துணை என்று உள்ளமே ஓடு ————7-

—————————————————————————————-

அவதாரிகை –

இதில் ஆஸ்ரயண ரச்யதையை பேசின பாசுரத்தை
அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
ஆராதனத்தில் அல்ப சந்துஷ்டதையாலே
அவனுக்கு செய்ய வேண்டியது பணி இல்லையே யாகிலும்
உள்ளது தேவையாய் இருக்கும் அன்று
ஆஸ்ரயணீயம் கூடாதே என்ன
ஸ்மர்த்தவ்ய விஷய சாரச்யத்தாலே
பல தசையில் போலே ஆஸ்ரயணம் தசையே பிடித்தும்
ரசிக்கும் விஷயம் ஆகையாலே
அபிமத விஷயத்தில் பரிமாற்றம் போலே
ஆஸ்ரயணம் அத்யந்தம் சரசமாய் இருக்கும் என்கிற
பிறவித் துயரில் -அர்த்தத்தை
பிறவி யற்று -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -என்கை –

———————————————————————–

வியாக்யானம்–

பிறவி யற்று நீள் விசும்பில் பேரின்பம் உய்க்கும் திறம் அளிக்கும் சீலத் திருமால் –
ஜன்ம சம்பந்தம் அற்று
நிரதிசய போக்யமான பரமாகாசத்திலே
நிரதிசய ஆனந்தத்தை அனுபவிக்கும் படி
அனுஹ்ரகிக்கும் ஸ்வ பாவனான
ஸ்ரீ யபதி யானவன் –
தருமவரும் பயனாய திரு மகளார் தனிக் கேள்வன் -என்றத்தை அனுபாஷித்து அருளின படி –

ஏவம் விதனானவன்
அறவினியன் பற்றும் அவர்க்கு என்று-
மிகவும் சரசனாய் இருக்கும் ஆஸ்ரயிக்குமவர்களுக்கு என்று-
எப்பால் எவர்க்கும் நலத்தால் உயர்ந்து உயர்ந்து அப்பாலவன்-
தூய வமுதைப் பருகி பருகி என் மாயப் பிறவி மயர்வறுத்தேனே –
என்னுமத்தை அடி ஒற்றி அருளிச் செய்த படி –

மற்றும் அவனுடைய போக்யதைக்கு அனுகுணமாகும் படி
ஆழிப் படை அந்தணனை -என்றும்
ஒண் சுடர்க் கற்றையை என்றும்
விடுவேனோ என் விளக்கை -என்றும்
பின்னும் விராய் மலர்த் துழாய் வேய்ந்த முடியன் –என்றும்
பின்னை நெடும் பணைத் தோள் மகிழ் பீடுடை முன்னை யமரர் முழு முதல் -என்றும்
அருளிச் செய்தவையும் தத் சேஷங்களாகக் கடவது –

அறவினியன் பற்றுமவர்க்கு என்று பகர் மாறன் பாதமே உற்ற துணை என்று உள்ளமே ஓடு –
இப்படி ஆஸ்ரயிப்பார்க்கு-
குணைர் விருருசே ராம-என்னும்படி
நிரதிசய போக்கினாய் இருக்கும் என்று
இத் திருவாய் மொழி முகேன அருளிச் செய்யும் ஆழ்வார் திருவடிகளே
பிராப்தமான துணை என்று
நெஞ்சே
சீக்ர கதியாகச் சென்று பற்று –
முந்துற்ற நெஞ்சாய்
அங்கே  பற்றும் படி ஓடு-

—————————————————————————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: