பகவத் விஷயம் காலஷேபம் -43– திருவாய்மொழி – -1-7-1 ….1-7-5-ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

பிரவேசம்

கீழில் திருவாய் மொழியில் ஸ்வாராதன் -என்றார்-
அதில் சொன்ன ஆஸ்ரயணம் தான் போக ரூபமாய் இருக்கும் என்கிறார் இதில் –
பகவத் சமாஸ்ரயணம் தான் இதுக்கு இட்டுப் பிறவாத சர்வேஸ்வரனுக்கும் ஆசைப்படும் படி போக ரூபமாய் இருப்பது ஓன்று இறே –

தூய அமுதத்தைப் பருகி பருகி -காணிலும் உருப்பொலார் –செவிக்கிலாத கீர்த்தியார் -போலே அன்றே
அரணவதரணக– கடல் குட்டி போலே –ஆலிலை துயின்ற -தானே திருவடியை -வைஷ்ணவ போக்ய லிப்ஸ யாவ -அளந்த உபகரணம் கொண்டு பார்த்து
போகமாக சொல்லும் திருவடியை திரு அதரத்துக்குள் வைத்து இனிமையை பார்க்கிறானே –
ராஜ வித்யா ராஜ குஹ்ய யோகம் -பக்தி ரகஸ்யம் -பக்தி சிறப்பாக பேசி—5-அத்யாயம் பொசிந்து காட்டி -7-/-8-/-9-அத்தியாயங்களில் பக்தி -பக்தன் ஏற்றம் சொல்லி –இதம் -அத்தை -சொல்லப் போகிறேன் -ஞானம் விஜ்ஞ்ஞானம் சஹிதம்-
எத்தை அறிந்தால் அசுபமான சம்சாரத்தில் இருந்து மோஷம் அடைவாயோ -பவித்ரம் -உத்தமம் -பிரத்யஷமாக என்னைக் காட்டும் –
இந்த தர்மம் அறியாமல் வீணாக போகிறார்கள் -போஷித்து பேணி பேணி-
9 அத்யாயம் –மன் மனா பவ –மத் பக்த -மத யாஜ்ஞ்ஞீ மாம் நமஸ்க்ரு மாமேம் ஏவ -பரம போக்கியம்

அச்ரத்தா நா புருஷா ஸ்ரீ கீதை -9-3—-விஸ்வாச பூர்வாக த்வாரா ரஹீதரானவர்கள் —அஸ்ய தர்மஸ்ய -என்றான் இறே தனக்கும் இனிதாய் இருக்கையாலே
பரந்தப -விரோதி வர்க்கத்தை—பாஹ்ய சத்ருக்கள் -இந்த்ரிய -பிராப்ய பிரதிபந்தகங்கள் – உதற வல்லாய் நீ யன்றோ
அப்ராப்ய மாம் நிவர்த்தந்தே -செய்த குற்றங்களை அடையப் பொறுத்து தங்களை நல வழிப் போக்கும் என்னை விட்டு தம்தாமுடைய
விநாசத்தை சூழ்ப்பதான சம்சாரத்தை விரும்பி அவ்வழியே போகா நிற்பார்கள் -இது தான் இருந்த படி பாராய் -என்கிறான் –
பிரத்யஷாவகமம் –ந மாம்ச சஷூர் அபி வீஷதே தம் -என்கிற நான்-ஊனக் கண்ணுக்கு அப்பால் பட்டவனாக சொல்லும் நான் -பிரத்யஷ பூதன் ஆனேன்
தர்ம்யம் -நம்மைக் காண்கை ஒரு தலையானால் அதர்ம்யமானாலும் மேல் விழ வேணும்
இது அங்கன் அன்றிக்கே தர்மாதநபேதமுமாய் இருக்கும்
ஸூ ஸூகம் கர்த்தவ்யம் -ஸ்மர்த்தவ்ய விஷயம் சாரச்யத்தாலே தானும் போக ரூபமாய் இருக்கும்
அவ்யயம் -கோலின பலங்களை கொடுக்கச் செய்தேயும் ஒன்றும் செய்யாதோமாய் நம் நெஞ்சிலே கிடக்கையாலே தான் முதல் அழியாதே கிடக்கும்
சரீர ஆரோக்ய அர்த்தாத் -கோலின பலம் எல்லாம் அளித்து -ஒன்றும் செய்யாதவனாய் –ருணம் பிரவர்த்தமிவ மே ஹ்ருதயான்லாப சர்ப்பத்தி -என்றான் இறே
மாம் தூரவாசினாம் -வந்து இருந்தால் பஞ்ச பாண்டவர்கள் தலைகள் போயிருக்கும் -கிருஷ்ணா கூப்பிட்டதும் அவன் சொத்து -உணரவில்லையே –
இப்படி பக்திக்கு போக ரூபமாக சொன்னது பிரபதிக்கு கிம் புன நியாய சித்தம் -கைமுதிக நியாயம் –

ஸ்ரீ யபதியாய் –பின்னை நெடும் பணைத் தோள் மகிழ் பீடுடை –
சமஸ்த கல்யாண குணாத்மகனாய் -நிகரில் அவன் புகழ்
சகல ஆத்மாக்களுக்கும் சேஷியாய்-நாதனை –எப்பால் எவர்க்கும் நலத்தால் உயர்ந்து உயர்ந்து அப்பால் அவன்
நிரதிசய ஆனந்த யுக்தனாய்
ஏஷ ஹ்யேவா நந்தயாதி -என்கிறபடி தன்னைக் கிட்டினாரையும் ஆனந்தபிக்கக் கடவனாய் மோஷ தசையிலே அனுபவம்
இனிதாகிறதும் அவனைப் பற்றி வருகையால் இறே
அப்படியே ஆஸ்ரயணமும் அவனைப் பற்றி வருகையாலே போக ரூபமாய் இருக்கும் இறே
இப்படி சாதன சமயமே தொடங்கி இனிய விஷயத்தை பற்றா நிற்கச் செய்தே அவனை விட்டு ஷூத்ர பிரயோஜனத்தைக் கொண்டு அகலுவதே
-என்று கேவலரை நிந்தியா நின்று இருந்து கொண்டு இத்தை ஒழியில் நாம் உளராகாதபடி தமக்கு இனிதாய் இருக்கையாலே
இவ் வாஸ்ரயணத்தின் உடைய இனிமையைச் சொல்லித் தலைக் கட்டுகிறார் –

—————————————-

அவதாரிகை –

இப்படி நிரதிசய போக்யனானவனை விட்டு பிரயோஜ நாந்தரத்தை கொண்டு அகலுவதே என்று கேவலரை நிந்திக்கிறார்

பிறவித் துயர் அற ஞானத்துள் நின்ற -துறவிச் சுடர் விளக்கம் தலைப் பெய்வார்
அறவனை ஆழிப் படை அந்தணனை மறவியை இன்றி மனத்து வைப்பாரே –1-7-1-

கேவலனை நிந்திக்கிறார் -பகவல் லாப உபாசகர் வியந்து –கருமுகை மாலையை சும்மாடாக -இதுவா உங்கள் நிலை-
பஜீநீயனுடைய பாவனத்வம் அருளிச் செய்கிறார் -புனிதன் –
பிறவித் துயர் அற-
ஞானத்துள் நின்று –துறவிச் சுடர் விளக்கம் -கேவலருக்கு ஆத்ம சாஷாத்காரம் -சர்வ உபாதி நிர்விக்தமாய் -சரீரம் ஜன்மம் ஜரா மரணம்
செடியார் ஆக்கை அடியாரை சேர்த்தல் தீர்க்கும் திருமால் -1-5-7-
-உபாசகனுக்கு -பகவத் சாஷாத்காரம் அவலோகன ஞானத்துள் –கேவல ஆசையும் துறந்து இவனுக்கு -/-சுடர் விளக்கம் -பரமாத்மா/தலைப் பெய்வார்
அறவனை -பரம தார்மிகனை -ஏவம்வித அதிகாரிகளுக்கும் இவனே பல ப்ரதன்
ஆழிப் படை அந்தணனை -மனஸ் சுத்தி ஹேது பூதனான திரு ஆழியை உடைய -பரம பாவன பூதன் -ஈஸ்வரன்
ஆழ்வார் –ஆழிப்படை அழகில் ஈடுபட -இவர்கள் அந்தணன் என்று சாதனா பாவத்தில் ஈடுபட்டு
மறவியை இன்றி மனத்து வைப்பாரே -இப்படியும் இருப்பார்களோ -ஆத்மா பிராப்தியை கேவல அனுபவம் மறக்காமல் பகவானை சாதனமாக வைப்பார்களோ –உபாசகனனுக்கு -சாதகமாக பற்றும் நிலை என்னே உங்கள் நிலை
சாதனத்வேனே மனத்தில் வைப்பார் -ஷேபிப்பார்
ஆழிப்படை அந்தணனை கண்டும் அனுபவியாமல் -சாதனம் என்பதை மறந்து விடாமல் -வியந்து நிந்திக்கிறார் –

பிறவித் துயர் அற ஞானத்துள் நின்ற —
ஜரா மரண மோஷாயா தே ப்ரஹ்ம தத் விது மாம் ஆஸ்ரித — ஸ்ரீ கீதை -7-29-என்று இருப்பாரும் உண்டு -கேவலர் -அவர்களைச் சொல்லுகிறது
ஐஸ்வர்யார்த்திக்கும் -ஆத்ம பிராப்தி காமனுக்கும் -பகவத் பிராப்தி காமனுக்கும் ஒக்குமாயிற்று -சர்வேஸ்வரனை உபாசிக்கையும் — அந்திம ச்ம்ர்தியும்-
இனி பேற்றில் தார தம்யம் வருகிறபடி என் என்னில் -உபாசன சமயத்தில் சிறுகக் கோலுகையாலே -பிரதிபத்தி வைஷேத்யாத் -அதாவது அவன் அளவும் செல்லாதே
நடுவே வரம்பிட்டுக் கொள்ளுகை
அத்தை இறே வரம்பொழி வந்து -திருப்பல்லாண்டு -4–என்கிறது -அது தனக்கு அடி அவர்கள் ஸூக்ருத தாரதம்யம்-
சதுர்விதா பஜந்தே மாம் ஜநாஸ் ஸூக்ருதி ந அர்ஜூனா -ஸ்ரீ கீதை-7-16–என்று அருளிச் செய்தான் இறே
அவனை புருஷார்த்தமாக பற்றாமல் -சாதனமாக பெற்றும் பொழுது– என்னிடம் வந்தால் கொஞ்சம் கொஞ்சமாக மனம் பக்குவம் அடைந்து முன்னேற வாய்ப்பு உண்டே-
ருசி வளர்க்க -இப்படி கார்யம் செய்து அருளுவான் -ஸூஹ்ருத தாரதம்யம் –
ஸூக்ருததுக்கு அனுரூபமாக வாயிற்று புருஷார்த்தங்களில் ருசி பிறப்பது
-ருச்ய அனுகுணமாக வாயிற்று உபாசிப்பது
-உபாசன அனுகுணமாக இருக்கக் கடவது பலம் –

பிறவித் துயர் அற ஞானத்துள் நின்ற துறவிச் சுடர் விளக்கம் தலைப் பெய்வார்
இவனைப் பற்றி இப் பேற்றை பெற்றுப் போவதே -என்கிறார்
பிரம்மாவை ஆராதித்து கூரான வாளும்-கொழுந்து உள்ள வாரு கோலும் -துடைப்பம் – அடித்தார் போகாத சட்டியும் -கேட்பது
-அங்க ராக அர்ப்பணம் -கூனி -திருமேனி ஆலிங்கனம் –இஹ லோக ஆனந்தம் கேட்டாளே-
பிறவி என்கிற இத்தால் ஜன்மம் தொடக்கமாக உண்டான மற்ற ஐந்து விகாரங்களையும் நினைக்கிறது –ஷட் பாவ விகாரங்கள் –அஸ்தி ஜாயதே பரிணமதே–இத்யாதி
ஆக ஜன்ம ஜரா மரணாதி சம்சாரிக சகல துரிதங்களும் போம் படியாக -இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை -என்று
இவர் தாமும் கழிக்கிறதாய் இரா நிற்கச் செய்தே இவர்களை நிந்திக்கிறதுக்குக் கருத்து என் என்னில்
இவருக்கு விரோதி போமது ஆநு ஷங்கிகமாய்-பகவத் அனுபவம் உத்தேச்யமாய் இருக்கும் –
அவர்களுக்கு துக்க நிவ்ருத்தி தானே உத்தேச்யமாய் இருக்கும் –காஞ்சி கருட சேவை ஏத்தக்கோல் பட்டுப்புடவை வாங்கும் கதை –

ஞானத்துள் நின்று
இவ்வனுசந்தானம் அவ்வருகே போகா நிற்கச் செய்தேயும் ஆத்ம ஞான மாத்ரத்திலே கால் ஊன்ற அடி இட்டாயிற்று நிற்பது
துறவி என்கிற இது துறக்கையைச் சொன்ன படி-
பிறவித் துயர் அற -என்றதனுடைய பலரூபமான பிரகிருதி விநிர்முக்த வேஷத்தை –
-சுடர் விளக்கம் தலைப் பெய்வார் என்கிற இது ஞானத்துள் நின்று அதனுடைய பலரூபமாய் இருக்கிறது
சம்சார தசையில் கர்மம் அடியாக வரக் கடவ சங்கோசம் –முக்தி தசையில்-இல்லை இறே -மோஷ தசையில் விகசிதமாய் இருக்கும் இறே
ஜ்ஞான குணகமுமாய்-ஜ்ஞாதாவாயும் இறே வஸ்து தான் இருப்பது –
சுடர் -ஞான குணகம் -தர்ம பூத ஞானம் –
ஜ்ஞாதா -ஞானம் -விளக்கம் –ஸ்வச்மை பிரகாசம் தர்மி ஞானம்
பிறவித் துயர் அற ஞானத்துள் நின்று -என்றது உபாசனமானால் துறவிச் சுடர் விளக்கம் தலைப் பெய்கை பலமாய் இருக்கும் இறே
சம்சாரிக சகல துக்கங்களும் போக வேணும் என்று —பிறவித் துயர் அற
ஞானத்துள் நின்று –ஆத்ம ஞானத்தில் ஊன்ற நின்று —துறவிச் சுடர் விளக்கம் தலைப் பெய்வார்-பிரகிருதி விநிர்முக்தமான ஆத்ம ஸ்வரூபத்தை
பிராபிக்க வேண்டி இருப்பார்

அறவனை ஆழிப் படை அந்தணனை மறவியை இன்றி மனத்து வைப்பாரே —
அவர்கள் படியையும் பலம் கொடுக்கிறவன் படியையும் பாரா -என்ன பரம உதாரனோ –என்கிறார்
ஏதேனும் ஒரு பிரயோஜனத்துக்கும் தன்னையே அபேஷிக்கும் அத்தனை யாகாதே வேண்டுவது
எங்களுக்கு நீ வேண்டா — ஷூத்ர பிரயோஜனமே அமையும்– என்று இருக்கிறவர்களுக்கும் அத்தைக் கொடுத்து விடுவதே என்ன தார்மிகனோ -என்கிறார் –
ஆழிப் படை அந்தணனை
ஆத்ம அனுபவ விரோதியைப் போக்குகைக்கு பரிகரமான திரு ஆழியை கையிலே உடையவன்-
அமுதிலும் ஆற்ற இனியனை -அந்தணன் என்று சாணிச் சாற்றோ பாதி -சுத்தன் –என்று கொண்டாடுகிறார்கள் இத்தனை
போக்யதையில் நெஞ்சு சென்றது இல்லை
சுத்தி குண விசிஷ்டன் என்று ஆயிற்று அவர்கள் அனுசந்திப்பது
கையும் திரு ஆழியுமான அழகைக் கண்டால் அதிலே கால் தாழாது தங்கள் பிரயோஜனத்துக்கு உறுப்பான சுத்தி மாதரத்தைப் பற்றுவதே -என்கிறார்
மறவியையின்றி-
இவருக்கு கையும் திரு ஆழியுமான அழகைக் கண்டால் முன்னடி தோற்றாது -சக்கரத் தண்ணலே–4-7-10-என்றால்
-பின்னைத் தரைப் படும் அத்தனை இறே-இவர்
தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே -நேராக பார்த்தால் கைங்கர்யம் தலைப்படும்
இங்கே கேவலனும் அழகைப் பார்க்க வில்லை -பார்த்தால் அவன் இடம் ஆழம் கால் படுவானே -அதனால் மறவாமல் ஆத்மா சாஷாத்காரம்
சுமித்ரை இளைய பெருமாளுக்கு சொல்லி விட்டாளே
திரு மங்கை ஆழ்வாரும் –ஆழியோடும் பொன்னார் சார்ங்கமுடைய அடிகளை இன்னார் என்று அறியேன் -என்று
உத்தேச்ய வஸ்துவையையும் மறக்கும் படி கலங்குவர் –
தேவத்வ ஸூ சசகம் -மனுஷ்யத்வ சூசகம் -அடையாளம் அறிந்தாலும் -தேவதேவனோ ரகுகுலத்தவனோ அறியேன் –
பிள்ளாய் -நல்லத்தைப் மறக்கப் பண்ணா நிற்க -பெருமாளையே மறக்கப் பண்ணும் –இவ்விஷயம் தீயத்தை -கைவல்யத்தை -மறவாது ஒழிவதே
மறவியையின்றி –
அவனுடைய போக்யதையும் கண்டு வைத்து -தங்கள் புருஷார்த்தத்தை மறவாதே ஆஸ்ரயியா நிற்பார்கள்
மறவியை -மறப்பை
மறப்பின்றிக்கே மறவாதே மனத்து வைப்பாரே
உபாசக பரமானால் –சுடர் விளக்கம் –குண பிரகாசகமான விக்ரஹமாகக் கடவது -அவனுடைய போக்யதையை அனுசந்தித்து வைத்தும்
பின்னையும் இந்நிலை குலையாதே நிற்பதே -இவ்வரிய செயலை செய்கைக்கு திண்ணியர் ஆவதே இவர்கள்
சௌந்தர்யத்தில் கால் தாழ்ந்து –சிதில அந்தக்கரணம் -கொண்டால் சாஸ்திர உபாசனம் தியானம் அறிதாகுமே -விஸ்மிதர் ஆகிறார்-

பிறவித் துயர் அற ஞானத்துள் நின்ற -துறவிச் சுடர் விளக்கம் தலைப் பெய்வார் -மறவியை இன்றி அறவனை
ஆழிப் படை அந்தணனை மனத்து வைப்பாரே-இத் அந்வயம்

—————————————————————————————————-

அவதாரிகை –

சர்வேஸ்வரனை ஆஸ்ரயித்து ஷூத்ர பிரயோஜனத்தை கொண்டு போவதே என்று கேவலரை நிந்தித்தார் -முதல் பாட்டில்
அவன் தன்னையே பற்றி இருக்குமவர்களுக்கு–அநந்ய பிரயோஜனர்களுக்கு-  அவன் தான் இருக்கும் படி சொல்லுகிறார் இப்பாட்டில்

வைப்பாம் மருந்தாம் அடியாரை வல்வினைத்-துப்பாம் புலன் ஐந்தும் துஞ்சக் கொடானவன்
எப்பால் எவர்க்கு நலத்தால் உயர்ந்து உயர்ந்து அப்பாலவன் எங்கள் ஆயர் கொழுந்தே –1-7-2-

அநந்ய பிரயோஜனர் -அநந்ய சாதனராய் -அவர்களுக்கு அதிசய அனுபவ ஆனந்தவஹமாய் இருப்பானே –
வைப்பாம் -ஷேம நிதி -புருஷார்த்தம் –
மருந்தாம் -சாதனம் -பிராபகம் -தத் பிராப்தி விரோத சாதனம்
விருந்தும் மருந்தும் அவனே –
அடியாரை -அசாதாராண சேஷ புதரை
வல்வினைத்-துப்பாம் புலன் ஐந்தும் துஞ்சக் கொடானவன்
துப்பு -சாமர்த்தியம் -பிரபல பாபங்கள் அளிக்க வல்ல இந்த்ரியங்கள் -நசிக்கும் படி விட்டுக் கொடான்
எப்பால்-மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்மானந்தம் வரை -எல்லா ஸ்தலத்திலும்
எவர்க்கு -ப்ரஹ்மா பர்யந்தமாக
நலத்தால் -ஆனந்தம்
உயர்ந்து உயர்ந்து
அப்பாலவன்-வாக்குக்கும் மனசுக்கும் எட்டாமல்
அவனே இங்கே இறங்கி வந்து அநந்ய பிரயோஜனரான எங்களுக்கு
எங்கள் ஆயர் கொழுந்தே -அறிவிலி -ஆயர்களுக்கு தலைவன்-

வைப்பாம் –
ஆடறுத்துப் பலியிட்டு -அரப்பையாக்கி-(பணப்பையாக்கி -பொற் குவியில் -அரையில் பையில்-)-இஷ்ட விநியோக அர்ஹ்யமாம் படி ஷேமித்து வைக்கும் நிதி போலே
கட்டை விரல் போகாமல் கொடுக்கிறேன் -திரு மங்கை ஆழ்வார் -கட்டை விரலைக் கொடுத்தார் -தனம் படுத்தும் பாடு –
இவனுக்கு நினைத்த வகைகள் எல்லாம் அனுபவிக்கலாம் படி தன்னை இஷ்ட விநியோக அர்ஹ்யமாம் படி வைக்கும் என்றிட்டு –பிராப்யத்வம் சொல்லுகிறது –
மருந்தாம் –
ஆனாலும் ஷூத்ர விஷயங்களையும் உண்டு அறுக்க -முழுவதும் அனுபவிக்க -மாட்டாதே சம்சாரி சேதனனுக்கு இறே சர்வாதிகனான தன்னை விஷயம் ஆக்குகிறது
இவன் தன்னை அனுபவிக்கும் படி என் என்னில் -அக் குறைகள் வாராதபடி அனுபவ விரோதிகளைப் போக்கி
தன்னை அனுபவிக்கைக்கு ஈடான சக்தி யோகத்தையும் கொடுத்து -தன்னையும் கொடுக்கும் என்று -அவனுடைய பிராபகத்வம் சொல்லுகிறது
ய ஆத்மதா பலதா -என்கிறபடியே -ஆத்மா தா -தன்னையே கொடுத்து -பலத்தையும் கொடுத்து பலதா -யஜூர் வேதம் –
ஆக பிராப்யத்வமும் பிராபகத்வமும் சொல்லிற்று
இப்படி சொல்வது ஆர்க்கு என்னில்
அடியார்க்கு–
1-ந நமேயம் -என்னும் நிர்பந்தம் தவிர்ந்தார்க்கு
2-அவனைப் பற்றி ஒரு பிரயோஜனத்தைக் கொண்டு அகலாதே -அவன் தன்னையே பற்றி அவன் படி விட ஜீவித்து இருப்பாரை-படி விட -அவன் திருமேனி -அருளி -நமக்கு ஜீவனம்-
அத்வேஷம்- ஆபிமுக்யம் -முந்திய யோஜனை/அநந்ய பிரயோஜனர் பிந்திய யோசனை –

வல்வினைத்-துப்பாம் புலன் ஐந்தும் துஞ்சக் கொடானவன்
1-வலிய வினைகளிலே கொண்டு போய் மூட்டுகைக்கு ஈடான சாமர்த்தியத்தை யுடைத்தான இந்த்ரியங்கள் ஐந்தாலும் துஞ்சக் கொடான் -என்னுதல்
2-அஞ்சிலும் புக்குத் துஞ்சக் கொடான் -என்னுதல்
துப்பு என்று -சாமர்த்தியம்
அவன் என்கிறது -எவனைப் பற்ற -அவன் தான் இப்படிச் செய்ய எங்கே கண்டோம் -என்னில் -அத்தை உபபாதிக்கிறது மேல் –

எப்பால் எவர்க்கு நலத்தால் உயர்ந்து உயர்ந்து அப்பாலவன் –
ஸ்தான விசேஷங்களாலும் மனுஷ்யாதி பேதங்களாலும் வரக் கடவன சில உயர்த்திகள் உண்டு இறே
பூமி போல் அன்று இறே ஸ்வர்க்கம்
மனுஷ்யர்களைப் போல் அல்ல விறே தேவர்கள் –
எப்பால் -எல்லா விதத்திலும் என்றபடி –பால் என்று இடம் -அப்பால் இப்பால் என்னக் கடவது இறே -அவ்விடம் இவ்விடம் -என்றபடி இறே
எல்லா விதத்திலும் உண்டான எல்லார்க்கும்
நலத்தால்
ஆனந்தத்தாலே மேலே மேலே போய்
பின்னையும் அது தன்னைச் சொல்லப் புக்கால் -யதோ வாசோ நிவர்த்தந்தே -என்று மீள வேண்டும்படியான ஆனந்த ப்ராசுர்யத்தை உடையவன்
சதகுணி தோத்தர க்ரமத்தாலே அப்யச்யமானமாகா நின்றுள்ள நிரதிசய ஆனந்த யுக்தன் -குணிதம் -எண்ணுதல்
ஆனந்த மய -என்னக் கடவது இறே

எங்கள் ஆயர் கொழுந்தே —
1-இப்படி சர்வாதிகனானவன் இதர சஜாதீயனாய் வந்து அவதரித்து தன்னை ஆச்ரயித்தார் விஷய பிரவணராய் முடியும் படி விட்டுக் கொடுக்கவோ
2-தான் சோக மோகங்களை அனுபவிக்கிறது -தன்னைப் பற்றினார் சோக மோகங்களை அனுபவிக்கைக்காகவோ
3-மேன்மைக்கு எல்லை யானவன் தாழ்வுக்கு எல்லை யாயிற்று அது இவர்களை அனர்த்தப் பட விடவோ —
எங்கள் ஆயர் கொழுந்தே
4-கிருஷ்ணன் திரு வவதரித்த ஊரில் உள்ளாரோடு தமக்கு ஒரு ப்ராக்ருத சம்பந்தம் தேட்டமாய் இருக்கிற படி
அன்றியே
எங்கள்
5-அவதாரம் தான் ஆஸ்ரிதார்த்தமாய் இருக்கும் இ றே
நவநீத சௌர்ய நகர ஷோபம் பழையதாக எழுதிக் கிடக்கச் செய்தேயும் –எத்திறம் –என்றார் இவரே இ றே
ஆயர் கொழுந்தே
6-இடையர் தங்களுக்கு -தான் ப்ரஹ்மாதிகள் கோடியிலேயாம் படி அவர்களில் பிரதானனானவன் துஞ்சக் கொடான் – தாழ்ச்சியில் தலைவன் என்றபடி –

பசலை நோய் காட்டி -அர்ஜுனனுக்கு —நானும் பிறந்து நீங்களும் பிறக்க வேண்டுமோ
எங்கள் ஆயர் -ஆழ்வாருக்கு ஆயர் சம்பந்தம் தேட்டம் மாமான் மகள் போலே ஆசைப் படுகிறார்
எங்கள் கொழுந்து -ஆழ்வார் அவனுடன் சேர்ந்து அனுபவிக்கிறார் -இப்படி இவன் வாடுவதே -எத்திறம் -என்றாரே
பிள்ளையைச் சீறி வெகுண்டு -இரணியன் பிள்ளை இல்லை என்றதும் தம் பிள்ளை –ச்வீகாரம் –
குன்றம் எடுத்த பிரான் அடியாரோடும் ஒன்றி நின்ற சடகோபன் -கோவலர்கள் உடன் இருக்க ஆசை –

———————————————————————————————-

அவதாரிகை –

பிரயோஜனாந்தர பரரான கேவலரை நிந்தித்தார்
அநந்ய பிரயோஜனர் திறத்தில் அவன் இருக்கும் படி சொன்னார்
நீர் இவ்விரண்டு கோடியிலே ஆர் என்ன
நான் பிரயோஜனாந்தர பரன் அல்லேன் -அநந்ய பிரயோஜனனாய் அவனைப் பற்றினேன் -என்று நேர் கொடு நேர் சொல்லவும் மாட்டாரே
அவனை அனுபவியா நிற்க விரோதி தன்னடையே போய்க் கொடு நின்றவன் நான் -என்கிறார் –

ஆயர் கொழுந்தாய் அவரால் படை யுண்ணும் மாயப்பிரானை என் மாணிக்கச் சோதியை
தூய வமுதைப் பருகிப் பருகி என் மாயப் பிறவி மயர்வு அறுத்தேனே--1-7-3-

பரத்வ ஸூசகம் -நிரதிசய ஆனந்தம் -அத்தை விட-அவதார ப்ரயுக்தமான – ஆஸ்ரித பவ்யத்வம் -அத்யந்த சரசம் – (இடத்துக்கு ஏற்று இருக்கும்  என்றபடி )
ஆயர் கொழுந்தாய் -கோபர்களுக்கு பிரதானனாய் -பரத்வம் –
கொழுந்து மரத்துக்கு -மரத்துக்குள் ஒரு பகுதி -ஏக தேசத்வம் -ஸுலப்யம் –
அவரால் படை யுண்ணும் -மொத்தப்படும் -நவநீத சௌர்ய
மாயப்பிரானை –தத் அனுரூபமாக -அழுகை தொழுகை -கேவுவது –அதடியாக அவர்களை உவப்பித்து-
என் மாணிக்கச் சோதியை -சாணையில் பட்டை தீட்டிய மாணிக்கம் -நியமனத்தால் புகரை பெற்ற
தூய வமுதைப் -பரத்வம் கலசாத சீலம்-
பருகிப் பருகி -நிரந்தரமாக அனுபவித்து -பால் குடித்தால் தன்னடையே பித்தம் தீருமா போலே -சாதனம் ஒவ்வாத சம்ப்ரதாயம்=
கைங்கர்யத்தால் அவனை அனுபவிக்க அனுபவிக்க -பாபங்கள் தன்னடையே போகுமே
என் மாயப் பிறவி மயர்வு அறுத்தேனே-பிரகிருதி கார்யமாக வரும் ஜன்ம பிரயுக்தமான அஜ்ஞ்ஞானம் –அமுதைப் பருக பருக -அறுத்தேன் –

ஆயர் கொழுந்தாய் –
இடையருக்குப் பிரதானனாய் இருக்கும் இருப்புச் சொல்லிற்று கீழ் –
இங்கு அவர்களில் ஏக தேசஸ்தனாய் இருக்கும் படி சொல்லுகிறது -வ்ருஷம் -பல்லவ -வ்ருஷாஸ்ரயம் -பாரதந்த்ர்யம்-
அதாவது அவர்கள் வேராக-தான் கொழுந்தாய் இருக்குமவன் -என்கிறது
இடையர் காட்டில் பசுக்களின் பின்னே திரிந்து -அவர்களுக்கு அடி கொதித்தால் வாடுவது கிருஷ்ணன் முகமாய் இருக்கை –
வேரிலே வெக்கை தட்டினால் கொழுந்து இறே முற்பட வாடுவது -தாஸ்யம் ஐஸ்வர்ய வாதேன–
அவரால் படை யுண்ணும்
அவனால் என்னுதல் -அவளால் என்னுதல் -செய்யாமையாலே திருவாய்ப்பாடியிலே பஞ்ச லஷம் குடியிலும் இவனை நியமிக்க உரியர் அல்லாதார் இல்லை
நிவேதயதம் மாம் -வானர முதலிகள் அனைவரையும் பார்த்து ஸ்ரீ விபீஷண ஆழ்வான் வேண்டிக் கொண்டானே -அனைவரும் கடகர்கள் –
மர மத்தாலே ஓர் அடி அடிப்பார்கள் போலே காணும் -என்று பட்டர் அருளிச் செய்யும் படி –ஆஸ்ரித பவ்யத்துக்கு சரமாவதி –
மாயப்பிரானை
அவாப்த சமஸ்த காமனான சர்வேஸ்வரன்
தனக்கு ஒரு குறை உண்டாய் வந்து திருவவதரித்து
ஆஸ்ரித ஸ்பர்சம் உள்ள த்ரவ்யத்தால் அல்லது தரியாதானாய் -அசந்நேவ-ஆவேனே என்று பரம சத்வம் எண்ணுவதே –
அது தான் நேர் கொடு நேர் கிடையாமையாலே களவு காணப் புக்கு தலைக் கட்ட மாட்டாதே வாயது கையதாக
அகப்பட்டுக் கட்டுண்டு அடியுண்டு நிற்கும் நிலையை அனுசந்தித்து -ஈட்டிய வெண்ணெய் தொடு உண்ணப் போந்து –மாயப் பிரானை –என்கிறார் –
என் மாணிக்கச் சோதியை
ஆஸ்ரிதர் கட்டி அடிக்க அடிக்க களங்கம் அற கடையுண்ட மாணிக்கம் போலே திருமேனி புகர் பெற்று வருகிறபடி -அடியுண்டால் புகர் வருமா -சாணையில் தீட்ட தீட்ட
கட்டின அளவுக்கு வெட்டு என்று இருக்குமவன் —கட்டினதுக்கே ஆனந்தம் அடைபவன் –
கட்டியடிக்கப் புக்கால் புகர் பெறச் சொல்ல வேணுமோ
சாமான்யன் -சோழியன் சம்வாதம் -அப்படி நினைத்து அடிக்கிறது என்றால் இன்னும் அடி என்ற ஐதிகம்
கண்ணியார் குறும் கயிற்றால் கட்ட வெட்ட என்று இருந்தானே
என்
அப்புகரை எனக்கு முற்றூட்டு ஆக்கினவன் -தூர த்ருஷ்டத்தன் -அன்று செய்த சேஷ்டிதங்கள் ஆழ்வாருக்காக –
தூய வமுதைப் பருகிப் பருகி
தேவர்கள் அதிகாரிகளாய் ப்ரஹ்மச்சர்யாதி நியமங்கள் வேண்டி சக்ருத் சேவ்யமாய் இருக்கும் இறே அது
சர்வாதிகாரமுமாய் ஒரு நியதியும் வேண்டாதே சதா சேவ்யமான அம்ருதமிறே இது
என் மாயப் பிறவி மயர்வு அறுத்தேனே–
ஆச்சர்யமான ஜன்மம் அடியாக உண்டான அஜ்ஞ்ஞானத்தை வாசனையோடு போக்கினேன்
ஜென்மத்துக்கு ஆச்சர்யமாவது ஒருபடிப் பட்டு இராமை
அறுத்தான் -என்னாமல் –மயர்வறுத்தேன்-என்கிறது -இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை -என்று அபேஷித்த படியே
பல அனுபவம் தம்மதாகையாலே அருளிச் செய்கிறார் –

——————————————————————————————–

அவதாரிகை –

இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை -என்று அடியிலே நீர் அபேஷித்த படியே உம்முடைய அபேஷிதம் தலைக் கட்டிற்றே
இனி இவ்விஷயத்தை விட்டுப் பிடிக்கும் அத்தனை அன்றோ -என்ன நான் என்ன ஹேதுவாலே விடுவேன் -என்கிறார்

மயர்வற என் மனத்தே மன்னினான் தன்னை -உயர்வினையே தரும் ஒண் சுடர்க் கற்றையை
அயர்வில் அமரர்கள் ஆதிக் கொழுந்தை என் இசைவினை என் சொல்லி யான் விடுவேனோ –1-7-4-

சரசனான இவனை விட யோக்யதை இல்லையே
மயர்வற -அஜ்ஞ்ஞானம் தொலையும் படி
என் மனத்தே மன்னினான் தன்னை -நித்ய வாசம் செய்து அருளினான்
உயர்வினையே தரும்-ஞான பக்த்யாதி அபிவிருத்தி -உயர் -வினை -உயர்வினை -வளர்த்து கொடுக்கும்
ஒண் சுடர்க் கற்றையை -நிரதிசய போக்யமான ஜோதி -தேஜோ ராசி குவியல் -பாவநத்வம்-இரண்டையும் –
சந்திர சூர்ய சேர்த்தி இங்கேயே தானே நிறைந்த சோதி வெள்ளம்
அயர்வில் -மறுப்பு இல்லாத
அமரர்கள் ஆதிக் கொழுந்தை -தலைவன் -சத்தாதி ஹேது பூதர்
என் இசைவினை-கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம் -ஆழ்வார் இசைவும் அவன் இட்ட வழக்காய்
என் சொல்லி யான் விடுவேனோ–1-அவன் அடி அறிந்த நான் -விடுவேனோ-  –
  2-அஜ்ஞ்ஞானம் போக்க வில்லை என்று விடவோ–மயர்வற
3-அசந்நிஹிதன் என்று விடவோ-என் மனத்தே மன்னினான் தன்னை
4-உத்கர்ஷகரன் அல்லன் என்று விடவோ-உயர்வினையே தரும்
5-உஜ்ஜ்வலன் அல்லன் என்று விடவோ- ஒண் சுடர்க் கற்றையை
6-விலஷண போக்யன் அல்லன் என்று விடவோ-அயர்வில் அமரர்கள் ஆதிக் கொழுந்தை
7-அனுமதி சுவாதீனம் என்று விடவோ –என் இசைவினை

மயர்வற என் மனத்தே மன்னினான் தன்னை –
அஜ்ஞ்ஞானம் வாசனையோடு போக்க
இன்னமும் மயர்வு குடி கொள்ள ஒண்ணாது -என்று என்னுடைய ஹிருதயத்திலே புகுந்து ஸ்த்தாவர பிரதிஷ்டையாக இருந்தவனை
செடி சீய்த்துக் குடியேற்றின படை வீடுகள் விடாதே இருக்கும் ராஜாக்களைப் போலே -புறம்பேயும் ஒரு கந்தவ்ய பூமி யுண்டு -என்று தோற்ற இராமை
நாடு பிடித்த இடம் அன்றோ இது –ஸ்ரீ வைகுண்டத்தில் இருந்தும் திருப் பாற் கடலில் இருந்தும் போகலாம் -இங்கே இருந்து போக மாட்டானே
கத்யந்த சூன்யத்வம் தோற்ற ஸ்தாவர பிரதிஷ்டை
இப்படி இருந்து செய்கிறது என் என்னில்
உயர்வினையே தரும்
ஜ்ஞான விஸ்ரம்ப பக்திகளைத் தாரா நின்றான் -என்னுதல்
வினை கிரியை –
உயர்வினை -திருமந்தரம்/ஞான ஸ்வரூப ஞானம் -சேஷத்வ பாரதந்த்ர்யம்/நமஸ் உபாய அத்யாவசாயம்/பக்திகளை -சதுர்த்யந்த நாராயண சப்த சித்தமான பிராப்த்யத்வ த்வரை ஹேதுவான பக்தி-யமாதிகள் தலையிலே அடியிடும்படியான உத்கர்ஷத்தைத் தாரா நின்றான் -என்னுதல்
உயர்வினை -உத்கர்ஷம் -நமன் தமர் தலைகள் மேலே நாவலிட்டு –
தரும் –வர்த்தமானம் –
தந்து சமைந்தானாய் இருக்கிறன் அல்லன்
1-காதல் கடல் புரைய
2-காதல் கடலின் மிகப் பெரிதால்
3-நீள் விசும்பும் கழியப் பெரிதால் -7-3-8-
4-சூழ்ந்து அதனில் பெரிய என் அவா -என்றால் போலே

ஒண் சுடர்க் கற்றையை
இத்தால் எனக்கு உபகரித்தானாய் இருக்கை அன்றிக்கே –தான் உபகாரம் கொண்டான் -என்னும் இடம் வடிவிலே புகரிலே தோற்ற இரா நின்றான் -என்னுதல்
தம்மை வசீகரித்த அழகைச் சொல்லிற்றாகவுமாம் –
ஞான விஸ்ரம்பங்களுக்கும் உப லஷணம்
ஒண் சுடர் கற்றை -முன்னும் பின்னும் சேர்த்து -1–உபகரித்து -தாய் குழந்தை பால் குடிக்க மகிழ்வது போலே
2-அழகைக் காட்டி சேஷத்வம் புரிய வைத்து -என்றுமாம்
தேஜசாம் ராசி மூர்ஜிதம் -என்னுமா போலே
துர்வாச சாப நஷ்ட ஸ்ரீ தரன் -பகவான் சங்க சக்ர கதா தரித்து -ஜகாம தர்சனம் –அபூர்வ ரூப சம்ஸ்தானாம் -தேஜசாம் ராசி மூர்ஜிதம் -ஸ்ரீ விஷ்ணு புராணம்
இப்படி தன் பேறாக உபகரித்தவன் தான் உபகாரம் கொள்வார் இல்லாதான் ஒருவனோ என்னில்
அயர்வில் அமரர்கள் ஆதிக் கொழுந்தை
தான் உபகரியாத அன்று தங்கள் சத்தை கொண்டு ஆற்ற மாட்டாதாரை ஒரு நாடாக உடையவன்
பகவத் அனுபவ விச்ம்ருதிக்கு ப்ராக பாவத்தை உடையராய்
அவ்வனுபவத்துக்கு விச்சேத சங்கை இன்றிக்கே தாங்கள் பலராய் இருக்கிறவர்களுக்கு -போதயந்த பரஸ்பரம் -தாரகாதிகள் எல்லாம் தானாய் இருக்கிறவனை
என் இசைவினை
நான் அல்லேன் என்று அகலாத படி என் இசைவு தானாய்ப் புகுந்தவனை
இசைவித்து உன் தாளிணை கீழ் இருத்தும் அம்மான் –
இசைவுக்கு அந்தராத்மாவாகக் கொண்டு நியமிப்பவன்
இசைவு -த்ரவ்யம் -தர்ம பூத ஞானம் –இசைவே அவனுக்கு சரீரம்

என் சொல்லி யான் விடுவேனோ —
1-சிறிது மயர்வு கிடந்தது -என்று விடவோ
2-மயர்வைப் போக்கி தான் கடக்க இருந்தான் என்று விடவோ
3-எனக்கு மேல் மேல் என நன்மைகளைப் பண்ணித் தந்திலன் -என்று விடவோ
4-வடிவு அழகு இல்லை -என்று விடவோ
5-மேன்மை போராது என்று விடவோ
6-இப்பேற்றுக்கு கிருஷி பண்ணினேன் நான் என்று விடவோ
7-எத்தைச் சொல்லி நான் விடுவது -என்கிறார் –

மாமனார் க்ரஹத்துக்கு போக -தரித்திரன் -ஏற்றம் இறைத்து வயலில் நெடும் போது கால் ஓய்ந்த அளவில் -விட்டுப் போக ஹேதுவாக
-கோபம் உண்டாக்க எச்சிலை -உமிழ -குளிர்ச்சி -சுடும் படி எச்சில் துப்புவனை கொள் என்று போனானாம்-
-விட்டு போக காரணம் -கதை —இங்கு விட்டு போகாமல் ஜாமாதா -அழகிய மணவாளன்

——————————————————————————————-

அவதாரிகை

திருவாய்ப்பாடியிலே இடைப்பெண்கள் கிருஷ்ணனை விட்டு பரமபதத்தை விரும்பின் அன்றோ நான் இவனை விட்டுப் புறம்பே போவது -என்கிறார்

விடுவேனோ என் விளக்கை என் ஆவியை -நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதனை
தொடுவே செய்து இள வாய்ச்சியர் கண்ணினுள்ளே விடவே செய்து விழிக்கும் பிரானையே –1-7-5–

விட ஷமன் அல்லேன் என்கிறார் மீளவும்
விடுவேனோ
என் விளக்கை -ஸ்வரூப விஷய ஞான தீப பிரகாசம்
என் ஆவியைநடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதனை -பிழைப்பித்து -அஹங்கார மமகாரங்களை போக்கி -போதரே என்று சொல்லி புந்தியில் புகுந்த
தொடுவே செய்து -தூது -கிருத்ரீம சேஷ்டிதம்
இள வாய்ச்சியர்-இளமையான
கண்ணினுள்ளே
விடவே செய்து -தானும் அவர்களும் மட்டுமே அறிந்த தூத்ய க்ருத்யங்களை பண்ணி -அருகில் உள்ளார் அறியாத படி
விழிக்கும் -கண் கலப்பச் செய்யும் -தூது செய்யும் கண்கள் -புரிந்ததா என்றும் கேட்பானாம்
பிரானையே -உபகாரகனை -அனந்யார்ஹம் ஆக்கியதை காட்டி என்னை கைக்கொண்டான்
இங்கிதம் -கூரத் ஆழ்வான் -இக்காலத்து பிள்ளைகள் போலே -அருகில் உள்ள தாய் அறியாமல் -நம்மாழ்வார் அறியும் படி உபகரித்த பிரான்-

விடுவேனோ என் விளக்கை
ஸ்வ விஷயமான அஜ்ஞ்ஞான அந்தகாரம் போம்படி நிர்ஹேதுகமாக தன்னுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளை பிரகாசிப்பித்தவனை
என் விளைக்கை என்பான் -என்-அல்லாதார்க்கும் ஒவ்வாதோ என்னில் –இவரைப் போல் அல்லாதார்க்கு ச்நேஹம் இல்லையே
ச்நேஹம் உண்டாகில் இறே இவ்விளக்கு பிரகாசிப்பது –ச்நேஹம் பக்தி தைலம் –
விளக்காவது தன்னையும் காட்டி -பதார்த்தங்களையும் காட்டுவது ஓன்று இறே
இவருக்குத் -தன்னையும் -உபாய பிராப்யங்களையும் காட்டி -ஸ்வ ஸ்வரூபத்தையும் -விரோதி ஸ்வரூபத்தையும் காட்டிக் கொடுத்தது –
அர்த்த பஞ்சகமும் காட்டி அருளினார் என்றபடி –

என் ஆவியை —
தான் ஒருவன் உளன் என்னும் அறிவாதல் -தன் பக்கல் அபேஷையாதல் -இன்றிக்கே பிரகிருதி வச்யனாய் உருமாய்ந்து போந்த என் ஆத்மாவை
நடுவே வந்து
1-நிர்ஹேதுகமாக வந்து –
2-விஷய பிரவணனாய் போகா நிற்க நடுவே வந்து மீட்டவித்தனை –
நிர்ஹேதுகமாக – ஆர்த்தம் -அனுமானம் / விஷயாந்தர ப்ராவண்யம் இருக்க –நடுவே -சப்தார்த்தம்
உய்யக் கொள்கின்ற -வர்த்தமானம்-கொண்டு விட்டிலன் -மேன் மேல் என கொள்ளா நிற்கிற வித்தனை
அசந்நேவ ச பவதி -என்கிறபடியே -அசத் கல்பனான என்னை -சந்த மேநம் ததோ வித்து -என்னப் பண்ணினான்
என் ஆவி -என்று உம்மதாகச் சொன்னீர் -உம்முடைய ஆத்மாவை அவன் வந்து உய்யக் கொள்ள நிபந்தனம் என்ன –

நாதனை –
ஆருடைய வஸ்து அழியப் புக்கது
நான் -என்று ஒருவன் உண்டோ
உடையவன் ஆகையாலே செய்தான்
ஆரேனும் பேற்றுக்கு ஆரேனும் யத்னம் பண்ணுவார்களோ -என்ன -திருவாய்ப் பாடியிலே பெண்கள் பேற்றுக்கு யத்னம் பண்ணினார் யார் –
தொடுவே செய்து இள வாய்ச்சியர் கண்ணினுள்ளே விடவே செய்து விழிக்கும் பிரானையே -தொடுவு –களவு —
1-ஆராய்ச்சிப்படும் செயல்களை செய்து ஓர் இடத்திலே போய் களவு கண்டு அங்கே அகப்படுமே
2-கள்ளனைக் காண வேணும் என்று இருப்பாரும் உண்டே
இவனாலே புண்பட்டவர்கள் எல்லாரும் காண வருவார்களே -புண் பட்டவர்கள் -குண சேஷ்டித வித்தர் -விஸ்லேஷ துக்கிதர் –
புருஷர்களுக்கும் வ்ருத்தைகளுக்கும் ஒரு பயமும் இல்லையே
அருகே நின்றார்க்குத் தெரியாமே பருவம் நிரம்பின இடைப் பெண்கள் கண்ணுக்குள்ளே விடும்படியை செய்து விழிக்கும் -தூது விடும்படியைச் செய்து விழிக்கும்
1-தூது விடுகை யாகிற செயலைச் செய்து -என்னுதல்
2-விடருடைய செயலைச் செய்து -என்னுதல் -விஷமமான க்ருத்யம்
தூது செய் கண்கள் -என்னக் கடவது இ றே -அதாவது தூர்த்தருடைய வ்யாபாரங்களைப் பண்ணுதல்
தவாஸ்மி –தா சோஸ்மி-என்றால் போலே சொல்லுகை –
பிரானையே
அந்நோக்காலே இடைப்பென்கள் அனந்யார்ஹைகள் ஆக்கினால் போலே என்னையும் அனந்யார்ஹை
ஆக்கி விட்டவனை விடுவேனோ —

———————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: