பகவத் விஷயம் காலஷேபம் -42– திருவாய்மொழி – -1-6-6 ….1-6-11 –ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

அவதாரிகை –

அவன் படி இதுவாய் இருக்க அவனை விட்டு பிரயோஜனத்தைக் கொண்டு அகலுவதே -என்று பிரயோஜனாந்தர பரரான தேவர்களை நிந்திக்கிறார் –

அமுதம் அமரர்கட்கு ஈந்த -நிமிர் சுடராழி நெடுமால்
அமுதிலும் ஆற்ற இனியன் நிமிர் திரை நீள் கடலானே –1-6-6-

பிரயோஜனாந்த பரர்க்கு அபேஷித்த பலனைக் கொடுத்து -அனந்யர்க்கு அதிசய போக்கியம் தானே யாக ஆவானே –நால்வரும் உதாரர் கொண்டாடி –
அமுதம் அமரர்கட்கு ஈந்த -சாகாமைக்கு ஆசைப்பட்ட தேவர்களுக்கு மருந்து கொடுத்து
நிமிர் சுடராழி நெடுமால் -வளரும் -தேஜஸ் -சக்கராயுதம் -பற்றிய நிரவதிக மகாத்மியம்
அமுதிலும் ஆற்ற இனியன் -கடைந்த அமுதம் -கிடந்த அமுதம் -வாசி உண்டே கடைந்த அமுதம் விட
நிமிர் திரை நீள் கடலானே-தன்னோட்டை ஸ்பர்சத்தால் வளரும் திரைகள்-தன்னு டைய பெருமைக்கு ஈடாக பரப்பை உடைய திருப் பாற் கடல் –

அமுதம் அமரர்கட்கு ஈந்த –
என்ன பரம உதாரனோ -என்கிறார் -கோடீஸ்வரன் இடம் 10 பைசா கேட்டது போலே -சிரித்த திருமுகத்துடன் கொடுத்து –
காஷ்ட லோஷ்டாதிகள் -மண்ணாங்கட்டி கேட்டாப் போலே -நீ வேண்டா -இத்தை கொடு என்று கேட்டார்களுக்கும்
அமிர்தம் -ந வித்யதே மிருத்யதே -சாகாமைக்கு மருந்து –
கூனி த்ரிவிக்ரா குப்ஜா -ஆலிங்கனம் கேட்டு -மோஷம் கேட்க்காமல் -ததிபாண்டன் /நாவல் பழம் காரி -போலே இல்லாமல் -கௌபீனம் போலே என்கிறார் இத்தை
ஆறு வரம் கேட்ட கதை -உவர் நீர் /தொடப்பம் /பாத்ரம் -பிரம்மா இடம் -பெண் கேட்க-பிராமணர் –கோபித்து -அவள் அங்கங்கள் தாழ்ந்து /யோசித்து சரியாக ஆக்கி /அவள் கேட்டதையே  கொடு -இப்படி மூன்று மூன்று வரங்கள் கேட்டு இழந்தார்கள்
ராஜா இடம் படிக்கலுக்கு ரசாயம் கேட்ட கதை-
நீ வேண்டா -எங்களுக்கு சாவாமைக்கு பரிஹாரம் பண்ணித் தர வேண்டும் -என்றவர்களுக்கு
அவர்கள் உகந்த பதார்த்தத்தை கொடுத்து விடுவதே –
அவர்கள் பிரயோஜனத்தை அருவருத்து தாம் உகந்த பிரயோஜனத்துக்கு உண்டான வ்யாவ்ருத்தி சொல்லுகிறார்
நிமிர் சுடராழி நெடுமால் –
இவருடைய அம்ருதம் இருக்கிற படி
நால் தோள் அமுது -6-10-9-இறே இவர்க்கு அமுது
அமுது என்றும் தேன் என்றும் ஆழியான் என்றும் பூதத்தார் -89—கையும் திரு வாழியுமாய் இறே இருப்பது இவருடைய அமர்த்தம்
இவர்கள் பிரயோஜனத்தைத் தலைக் கட்டிக் கொடுக்கையாலே உண்டான புகர் திரு வாழியிலே தோற்றும்படி இருக்கை
குழைந்தைக்கு கொடுத்து -அது சிரிக்க -அத்தை கண்டு மகிழ்ந்த தாய் போலே -பிரயோஜனாந்த பரருக்கு கொடுத்து உண்டான புகர்
நெடுமால்
நம் பக்கலிலே கொள்ளப் பெற்றோமே -வேர் ஒரு பிரயோஜனமே யாகிலும் -என்று பண்ணின வ்யாமோஹ அதிசயம்
கோதில் வாய்மையினான் -சாந்தீபன் -இவன் இடம் கேட்டதால் கோது இல்லை –
நிமிர் சுடர் ஆழி நெடு மால் –
நித்ய போக்யமான அமுதம் -அனைத்து ரசம் தேன் -பாவ த்வயம் -போக்யதாம் –அதனாலே வந்த புகர் வியாமோஹம்-காந்தி உடையவராகையாலே வியாமோஹம் உடையவர் –
-நிரதிசய நெடுமால் -காந்தியும் வியோமோஹமும் உடையவர் -இரண்டு நிர்வாஹம்
அமுதிலும் ஆற்ற இனியன்
இவர்கள் வாசி அறிவார்கள் ஆகில் இவனைக் கிடீர் கிட்ட அடுப்பது நம்பி திருவழுதி நாடு தாசர் -இத்தேவ ஜாதி வெறும் மறையோ
-காட்டு மான்கள் தவளைகள் போல்வர் –உப்புச் சாறு கிளறுவது எப்போதோ என்று கவிழ்ந்து பார்த்து கிடப்பதே- இவன் –நிமிர் சுடர் ஆழி நெடு மால் –-அழகையையும் –அமுதிலும் ஆற்ற இனியன் –போக்யதையும் விட்டு -என்பாராம் –
வங்கக் கடல் கடைந்த கேசவன் மாதவன் -இவர்கள் பார்க்காததருக்கு சேர்த்து ஆண்டாள் அருளிச் செய்கிறார் –
ஆற்ற இனியன் -மிகவும் இனியன்
நிமிர் திரை நீள் கடலானே —
அசந்நிஹிதன் என்று தான் விடுகிறார்களோ
அவ்வம்ருதம் படுகிற கடலிலே கிடீர் அவன் சாய்ந்து அருளிற்று
தன் வாசி அறியாது இருப்பார்க்கு எழுப்பிக் கார்யம் கொள்ளலாம் படி கண் வளர்ந்து அருளுகிறவன்
தாளும் தோளும் முடிகளும் சமன் இலாத பல பரப்பி -என்கிறபடியே கண் வளர்ந்து அருளுகைக்கு ஈடான பரப்பை உடைத்தாய்
நிமிர் நீள் இரண்டு விசேஷணங்கள்-தாளும் தோளும் முடிகளும் சமன் இலாத பல பரப்பி – ஈடான பரப்பு –
ஸ்வ சந்நிதானத்தாலே திரைக் கிளப்பத்தை உடைத்தான கடலிலே யாயிற்று சாய்ந்து அருளிற்று
மாலும் கரும் கடலே -என் நோற்றாய் என்னக் கடவது இறே
அவன் திருமேனியை நீ ஸ்பர்சித்து -அதனால் கொந்தளிக்கும் கடலே -இதற்கு என்ன சாதனம் செய்தாயோ –

———————————————————————————-

அவதாரிகை

அவன் நிரதிசய போக்யன் என்றீர் -அவனை பிராபிக்கும் அளவு நடுவு கால ஷேபம் பண்ணும் படி என் என்ன –
அதுக்கு அன்றோ மனத்துக்கு இனியானுடைய குணங்கள் இருக்கிறது என்கிறார் –சம்சாரக் கடல் போக்கவும் குண அனுபவம் -காலஷேபத்துக்கும்   இதுவே– மருந்தும் விருந்தும் இதுவே என்றவாறு
குண சாம்ராஜ்ய பட்டாபிஷேகம் -தாரை போன்றாரும் கொண்டாடும்படி உண்டே –

நீள் கடல் சூழ் இலங்கைக் கோன்-தோள்கள் தலை துணி செய்தான்
தாள்கள் தலையில் வணங்கி நாள் கடலைக் கழிமினே –1-6-7-

விரோதி நிரசன சீலன் -சம்சார கடல் கடக்கவும் -கால -சம்சார  கடல்- ஷேபம் இரண்டுக்கும் -பெருமாளை ஆஸ்ரயித்து
நீள் கடல் சூழ் இலங்கைக் கோன்தோள்கள் தலை துணி செய்தான் -20 தோள்களையும் 10 தலைகளையும் –
தலை ஒருமை ஜாதி பரம் -துணித்தவன் உடைய
வெட்ட வெட்ட முளைத்தது தலை -தச இந்த்ரிய ஆனானாம் கணக்கில்
தாள்கள் -யுத்த ரங்கத்தில் புகுந்த போது இருந்த திருவடிகள்
தலையில் வணங்கி நாள் கடலைக் கழிமினே-காலம் ஆகிய கடலை தாண்ட
தலையில் -ஐந்தாம் வேற்றுமை -மூன்றாம் வேற்றுமை பொருளில்
பத்து இந்த்ரியங்கள் -படுத்தும் பாட்டை முடித்து கொடுத்து -ராவணாந்தகன்

நீள் கடல் சூழ் இலங்கைக் கோன்-
பரந்த கடலை அகழாக உடைத்தாய் -அது தானும் மிகையாம்படியான அரணை உடைத்தாய்-அர்த்தாத் சித்தம் -அனுமானத்தால் – உள்ள இலங்கைக்கு
நிர்வாஹம் அல்லேனோ-என்னும் -துர் அபிமானத்தாலே -சக்கரவர்த்தி திருமகன் -என்றும் மதியாதே எதிரிட்ட பையலுடைய
-தான் போலும் என்று எழுந்தான் தரணியாளன்-ராமன் -அது கண்டு பொறுத்து இருப்பான் கோன் போலும் -ராவணன் -என்று எழுந்த
தோள்கள் தலை துணி செய்தான் -தாள்கள் தலையில் வணங்கி
அகப்படாதவன் அகப்பாட்டான் -தப்பாமல் கொன்று விடுவோம் -என்று பாராதே தோலைக் கிழித்து தலையைச் சரித்து
போது போக்காக நின்று கொன்ற படி -அவனுடைய வீர சரீதங்களைக் கொண்டு திருவடியைப் போல் போது போக்கி
கும்பனொடு நிகும்பனும் பட்டான் -ஏழு நாள் -விழுந்த தலைகளை தானே காணும் படி -இதனாலே யாவது திருந்துவானோ -என்கிற நப்பாசை
இன்று போய் நாளை வா -இது என்ன கோஷ்டி -கூரத் தாழ்வான் –
நாள் கடலைக் கழிமினே
அவனுடைய போக்யதை நெஞ்சிலே பட்டால் -அவனை ப்ராப்பிப்பதற்கு முன்பு நடுவுபட்ட நாள் ஒரு கடல் போலே தோற்றுமாயிற்று
அன்றிக்கே
சக்கரவர்த்தி திருமகனை ஆச்ரயித்து –சம்சார துரிதத்தைக் கழித்துக் கொள்ளுங்கோள் -என்கிறாராதல்-கால உப லஷிதமான சம்சாரம் –
தலையில் என்றது —தலையாலே -என்றபடி -மூன்றாம் வேற்றுமை பொருளில்-தலையின் பொருட்டு -தலை கண் –ஐந்தாம் -ஏழாம் வேற்றுமை -இரண்டுமே மூன்றாம் வேற்றுமை உறுப்பின் பொருளில் –
வீர சரித அனுசந்தானம் -திருவடி -மோஷம் உபேஷ்ய-
நாள் -நாழ் -குற்றம் ஆகிற- சம்சாரக் கடலை கழிமின் என்றுமாம் –

———————————————————————————————

அவதாரிகை –

சக்கரவர்த்தி திருமகனுடைய வீர சரித்ரத்தை அனுசந்தித்து -இதர விஷய ப்ராவண்யத்தைத் தவிரவே
அவன் தானே பிரதிபந்தகங்களைப் போக்கி நித்ய கைங்கர்யத்தைத் தந்து அருளும் என்கிறார் –

கழிமின் தொண்டீர்காள் கழித்துத் தொழுமின் அவனைத் தொழுதால்
வழி நின்ற வல்வினை மாள்வித்து அழிவின்றி யாக்கம் தருமே –1-6-8-

விட்டே பற்ற வேண்டும் -பரித்யஜ்யே மாம் ஏகம் சரணம் வ்ரஜ -போலே –
அஞ்சலி மாத்ரமே -தொழுமின் -அநாதி சித்த விரோதியைக் கழித்து -நித்ய புருஷார்த்தம் தரும்
கழிமின் -சாபல்யம் விட்டு -பிரயோஜனாந்தரங்கள் -சாதனாந்தரங்கள் விட்டு
தொண்டீர்காள் கழித்துத் தொழுமின் -நடுவில் கழித்து -சப்தம் -வீடு முன் முற்றவும் -வீடு செய்து -விட்ட பின் -வலி உறுத்தி அங்கு -இரண்டு நிர்வாஹம்
அந்ய சேஷத்வம் கழிவதே பிரதானம் பகவத் சேஷத்வத்திலும் போலே
அவனைத் தொழுதால் -அவனை -கீழ் சொன்ன சக்கரவர்த்தி திருமகனை அஞ்சலி பண்ணின அளவில்
ஆல்  -இதுக்கு புத்தி வராதே -நெடு மரக்கலம் கரை சேர்ந்தால் போலே
வழி நின்ற வல்வினை மாள்வித்து -வலிய-அனுபவித்து கழிக்க அரியதான -கல்ப கோடி கோலம் -அரை வினாடி பொழுதில் சம்பாதிக்கிறோம்
பிராப்தி பிரதிபந்தகம்-பிராப்ய பிரதிபந்தகம் –
அழிவின்றி யாக்கம் தருமே-மீட்சி இல்லாமல் –
மாள்வித்து -ஆக்கம் அழிவில்லாததே-பிராப்தி ரூபமான ஐஸ்வர்ய அபிவிருத்தி கைங்கர்யம் –
சேஷத்வ பாரதந்திர அனுரூபமான ருசி வேண்டுமே
ஜன்மாந்திர சகஸ்ரேஷூ -புத்தி வாசனை ருசி தூண்ட -உபதேசத்தால் என்ன பலன் -ஜீவ ஸ்வா தந்த்ரம் பயன் படுத்தி திருந்த வேண்டுமே -பராத்து-அவனுக்கு அடங்கி -நல்லது தீயது விவேகித்து –
ரூப ஆபத்து த்ருஷ்டம் பயந்து விஷம் உண்ணாமல் -அத்ருஷ்டம் பார்க்காமல் –பகவத் விஷயம் அணுகாமல் -இருக்கக் கூடாதே –
போகியாக இல்லாமல் யோகியாக இருக்க வேண்டுமே நம் ஸ்வா தந்த்ர்யம் கொண்டு
தொண்டீர் –பகவத் விஷய பிராவண்யம் -கொண்டு —கழிமின் -பாஹ்ய விஷயாந்தர பிராவண்யம் கழிக்க

கழிமின் தொண்டீர்காள் –
பாஹ்ய விஷயங்களில் உண்டான ருசியைக் கழியுங்கோள் –
கழிக்கை யாவது -பொல்லாது -என்று இருக்கை
இந்த ருசியைப் பூண் கட்டிக் கொள்ளத் தேடுகிறவர்கள் கழிக்கச் சொன்னால் கழியார்கள் இ றே
பகவத் விஷயத்தில் சாபலம் உடையீர் -கழிக்கப் பாருங்கோள்
கழித்துத் தொழுமின் -அவனைத் தொழுதால்
அவனைத் தொழா நிற்கச் செய்தே இதுவும் க்ரமத்திலே கழிகிறது -என்று இராதே அவசியம் கழித்தே தொழுங்கோள்
கழிமின் -என்று வைத்து கழித்து -என்றது -இதர விஷயங்களில் விரக்தி தானே பிரயோஜனமாக போரும் என்கை-
தொழுமின் என்று வைத்து தொழுதால் -என்கிறது கரும்பு தின்னக் கூலி போலே மேல் ஒரு பலம் இல்லையாகிலும்
தொழுகை தானே பலம் போரும் என்கை
இப்படிச் செய்தால் –
வழி நின்ற வல்வினை மாள்வித்து –
இவ்வாத்மாவுக்கு ஸ்வரூப அநு பந்தியோ -என்னும் படி -கர்மம் வந்தேறி -அநாதி -ஆதி இல்லை -அந்தம் உண்டே -ஸ்வரூபம் என்று –
பொருந்தி இருக்கிற பிரபல கர்மங்களை வாசனையோடு போக்கி
வழி நின்ற வல் வினை -நடுவே நின்று பகவத் பிராப்தியை நிரோதிக்கிற கர்மம் என்றுமாம்
அழிவின்றி யாக்கம் தருமே –
ந ச புன ஆவர்த்ததே என்கிறபடியே அபுனாவ்ருத்தி லஷண மோஷத்தைத் தரும் –மீளுதலாம் ஏதம் இலா வைகுந்தம் -அழிவின்றி ஆக்கம் –

—————————————————————————————

அவதாரிகை –

தன்னைப் பற்றின மாத்ரத்திலே இப்படி விரோதிகளைப் போக்கி இப் பேற்றைத் தரக் கூடுமோ -என்னில்
வெறும் அவன் படியையோ பார்ப்பது -அருகே இருக்கிறார் படியையும் பார்க்க வேண்டாவோ
ந கச்சின் ந அபராத்யதி -என்பார் அன்றோ அருகு இருக்கிறார் -என்கிறார் –

தரும வரும பயனாய -திருமகளார் தனிக் கேள்வன்
பெருமையுடை பிரானார் -இருமை வினை கடிவாரே–1-6-9-

பிரபந்தகம் சங்கல்பத்தாலே போக்கும் ஸ்ரீ யபதி -பூ மேல் இருப்பாள் வினை தீர்க்கும்
தரும வரும பயனாய -தரும் அவ்வரும் பயனாய -தர்மம் -அரும் பயனாய-பயனே உருவாக கொண்ட திருமகளார் –
திருமகளார் தனிக் கேள்வன் -நாரீணாம் உத்தமி -தர்மங்களின் அரும் பயனாகவே உள்ள திரு மகள் -அத்விதிதீயமான பிரணயி
பெருமையுடை பிரானார் –இருமை வினை கடிவாரே-இருமை -பெருமை /இரண்டு -புண்ய பாப என்றுமாம் கோபித்து விலக்கி விடுவார்
அரும் பயனாய திரு மகளார் -இரண்டு விசேஷணங்கள் –

தரும் –
இவ்வர்த்தத்தில் சம்சயம் இல்லை -முந்திய பாசுரத்தில் தரும் என்றதில் சங்கை இல்லை என்கிறார்
இருமை வினை கடிவாரே-அவ்வரும் பயனாய-அநிஷ்ட நிவ்ருத்தியும் இஷ்ட பிராப்தியும்-என்றதில் சங்கை இல்லை-
அவ்வரும் பயனாய -திருமகளார் தனிக் கேள்வன் -பெருமையுடை பிரானார்
பெறுதற்கு அரிய சாஸ்த்ரங்களிலே பிரசித்தமான பிரயோஜனமான ரூபமான வற்றை
அன்றிக்கே
தர்மத்தினுடைய பரம பிரயோஜனம் தான் ஒரு வடிவு கொண்டால் போலே இருக்கிற பெரிய பிராட்டியாருக்கு வல்லபன்
ஆகையாலே அத்விதீய நாயகனாய் இருக்கிறவன் -என்றுமாம்
அப்ரமேயம் ஹி தத்தேஜ-யஸ்ய வா ஜனகாத்மஜா -என்கிறபடியே ஸ்ரீ யபதியாகையாலே வரும் ஏற்றம் உள்ளது இவன் ஒருவனுக்கும் இறே
திருமகளார் தனிக் கேள்வன் பெருமையுடை பிரானார்–ஸ்ரீ லஷ்மி பதியாகையாலே வந்த மேன்மையை உடைய உபகாரர் ஆனவர் –
பிரானார் -ஆஸ்ரித அனுக்ரஹமே ஸ்வரூபமாய் உள்ளவர்
-இருமை வினை கடிவாரே-
பேர் வாசியேயாம்படி-நாம் பண்ணி வைத்த இருவகை கர்மங்களையும் போக்குவார்
புண்ய பாபங்களுக்கு தன்னில் தான் வைஷம்யம் உண்டே யாகிலும் மோஷ விரோதித்வாத் த்யாஜ்யமாக நின்றன விறே

——————————————————————————–

அவதாரிகை –

இப்படி அவனும் அவளுமாக குற்றங்களைப் போக்குவது எத்தனை காலம் கூடி -என்னில் தன் திருவடிகளிலே தலை சாய்ந்த அளவில் -என்கிறார் –

கடிவார் தீய வினைகள் -நொடியாரும் அளவைக் கண்
கொடியாவடு புள்ளுயர்த்த-வடிவார் மாதவனாரே –1-6-10–

விரோதிகளை -கொடி கட்டி சடக்கென போக்கும்- ப்ரஹ்மமே செய்யும் கார்யம் அன்றோ -ப்ரஹ்மோத்சவத்துக்கு கொடி கட்ட வேண்டுமே –
கடிவார் தீய வினைகள்--நொடியாரும் அளவைக் கண் -நொடி நிரம்பும் அளவிடத்து
கொடியாவடு புள்ளுயர்த்த-புள் கொடி உயர்த்த -த்வஜ ஸ்தம்பம் -உத்சவம் போலே –
அடு -அழியச் செய்யும்
வடிவார் மாதவனாரே -விலஷண விக்ரஹ உக்தன் -ஸ்ரீ யபதி-

கடிவார் தீய வினைகள்
கால தத்வம் உள்ளதனையும் தன்னால் -அனுபவித்து -போக்கிக் கொள்ள ஒண்ணாத கொடிய பாவங்களைப் போக்குவார் –
தொழுமின் -தொழுதால் -உடனே -அபிசந்தி விராச மாத்ரத்தல் -பாபங்களின் ஈடுபாடு தவிர்ந்த மாத்ரத்தால் –
வழி நின்ற வல்வினை மாள்வித்து -என்கிற இடத்தில் ஆஸ்ரயித்த மாதரத்தில் பாபங்களைப் போக்கும் என்றார்
இருமை வினை கடிவார் -என்கிற விடத்தில் அவன் தானானதுக்கு மேல் பிராட்டியும் கூட இருக்கையாலே போக்கும் என்றார்
எவ்வளவில் போக்குவது -என்னில் -ஷண காலத்தில் என்கிறார் இதில்-(உடனே போக்குவார் –கட்டாயம் போக்குவார் –க்ஷணம் காலத்தில் -மூன்று  பாசுரங்களின் சுருக்கம் )
நொடியாரும் அளவைக் கண்
நொடி நிறையும் அளவிலே
கொடியாவடு புள்ளுயர்த்த-வடிவார்
தூரத்தில் காணவே பிரதிபஷம் மண் உண்ணும் படியான பெரிய திருவடியை த்வஜமாக எடுக்கையே ஸ்வ பாவமாக உடையவர் -என்னுதல்
1--வடிவார் -மாதவனாரே
–ஆர்ந்த வடிவை உடையவர்
அழகிய வடிவை உடையவர் என்னுதல்
-வடிவார் மா -என்று நாய்ச்சிமாருக்கு விசேஷணம் ஆதல்
2–வடிவிலே ஆர்ந்து இருக்கிறவள் -என்னுதல்
3–அழகிய வடிவை உடையவள் என்னுதல்
4–வடிவிலே பொருந்தி இருந்தவள் என்னுதல் –காள மேகம் -மின்னல்
மாதவனார்
பிராட்டி அருகே இருந்து போக்குவிக்க வாயிற்று போக்குவது -ஒருதலை ஜன்மம் -ஒரு தலை மரணம் –
நடுவே ஆதி வ்யாதிகள் -இவை செய்த குற்றங்களைப் பார்க்கக் கடவதோ -இஹ ஜகதி நிர்தோஷ க -ஸ்ரீ குணரத்ன கோசம் -52-
குற்றம் கண்டு விடில் விபூதியாக விட வேண்டாவோ -பொறுத்து அருளீர் -என்றால் அவளுக்காக பொறுத்தோம் -என்னும் இத்தனை
பெரிய திருவடியைக் கைக் கொள்ளுகிற படியே நம்மையும் பெரிய பிராட்டியார் உடன் கூடிக் கைக் கொள்ளுவான் என்றபடி –

———————————————————————————

அவதாரிகை

நிகமத்தில் இத் திருவாய்மொழியை அப்யசிக்க வல்லார்கள் சம்சாரத்தில் வந்து பிறவார் -என்கிறார் –

மாதவன் பால் சடகோபன் தீதவம் இன்றி யுரைத்த
ஏதமில் ஆயிரத்து இப்பத்து ஓத வல்லார் பிறவாரே –1-6-11-

ஜன்ம நிவ்ருத்தியே பலம் என்கிறார்
மாதவன் பால் -ஸ்ரீ யபதியான சர்வேஸ்வரன் பக்கல்
சடகோபன்
தீதவம் இன்றி யுரைத்த -தீதும் தோஷமும் இல்லாமல் -மாதவன் இடமே இரண்டுமா -மேன்மை பார்த்து நெகிழ நிற்கும் தீது -ஆஸ்ரிதர் தோஷம் பார்த்து கை விடும் அவம் -இல்லாதபடி உரைத்த
ஏதமில் -இலக்கணம் -வைகல்யாதி குற்றங்கள் இல்லாமல்
ஆயிரத்து -ஆயிரமும் குற்றம் இல்லாத
இப்பத்து ஓத வல்லார் பிறவாரே-சுவாராததையை அருளிய இப்பத்தை -ஆச்சார்ய முகத்தாலே அப்யசிக்க வல்லார் பிறவாரே
அறிய கற்று வல்லார் வைட்டணவர் ஆவாரே -ஆச்சார்யர் மூலமே -அங்கும் –
அன்றிக்கே
தீது -பாட்டுண்பவன் குற்றம் -மாதவன் பால்
அவம் –பாடினவன் குற்றம் -சடகோபன் பால்
ஏதம் -பாட்டுக்கு குற்றம் -ஆயிரத்தில் –

மாதவன் பால் சடகோபன் தீதவம் இன்றி யுரைத்த ஏதமில் ஆயிரத்து இப்பத்து ஓத வல்லார் பிறவாரே
தீதும் -அவமும் -ஏதமும் -என்று மூன்றாய் -இம் மூன்றையும் பிரதிபாத்யனுக்கும் வக்தாவுக்கும் பிரபந்ததுக்குமாக்கி
-இவை இல்லாமையைச் சொல்லுகிறது என்று நிர்வஹிப்பாரும் உண்டு
தீது இன்று இருக்கும் மாதவன் பால் -அவம் இன்றி இருக்கும் மாதவன் -ஏதமில் ஆயிரம்-
ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் -ஏற்கும் புகழ் சட கோபன் -ஏற்கும் புகழ் -ஆயிரம் -போலே
பட்டர் அங்கன் அன்றிக்கே –ஏதமில் ஆயிரம் –என்று பிரபந்த லஷணம் சொன்ன போதே த்ரிவித தோஷ ராஹித்யையும் சொல்லிற்றாம்
-இனி தீதும் அவமும் ஆவது செய்வது என்-என்னில் -சடகோபன் மாதவன் பால் தீது அவமின்றி உரைத்த– என்றாகக் கடவது என்று அருளிச் செய்தார்
அதாவது –தீதாவது –நான் ஸ்ரீ யபதி அல்லேனோ-என்று தனது மேன்மையைப் பார்த்து கடக்க இருக்குமது –
அவமாவது –ஆஸ்ரயிக்கிறவன் நித்ய சம்சாரி அன்றோ என்று இவன் சிறுமையைப் பார்த்து கைவிடுமது
இவையில் இல்லாமையைச் சொன்ன இப்பத்து என்றபடி
ஆயிரத்திலும் இப்பத்தையும் அப்யசிக்க வல்லார்கள் பிறவார்
பிறவார் -பிறக்கை சுட்டி இறே-காரணம் பிறவியே தானே என்றபடி -லோகவத்து லீலா கைவல்யம் –
மாத்ரு சம்ரஷணம்-மாத்ரு சிஸ்ரூஷணம்-கைங்கர்யம் -என்றுமாம் – அழகிது என்னுமோபாதி-பகவத் சமாஸ்ரயணம் எளிது -என்று உபதேசிக்க வேண்டுகிறது –
இத் திருவாய் மொழியை அப்யசிக்க வல்லார்கள் உபதேச நிரபேஷமாக-சம்சார சம்பந்தம் அற்று பகவத் அனுபவமே
யாத்ரையாம் படி இருக்கிறவர்கள் உடன் கூடி அனுபவிக்கப் பெறுவார்கள் -என்கிறார் –
கேவலன் போலே பிரகிருதி நிவ்ருத்தி மாத்ரமே சொல்வான் என் -பிரதிபந்தகம் அற்றால் -கைங்கர்யம் சித்தமே –
உத பான கரணம் -கிணறு வெட்டி -தன்னாலே தண்ணீர் வருமே –சஹஜ கைங்கர்யம் சித்தம் -என்றபடி –

முதல் பாட்டில் -ஆஸ்ரயிக்கும் அவனுக்கு த்ரவ்ய நியதி இல்லை -என்றார்
இரண்டாம் பாட்டில் அதிகாரி நியதி இல்லை என்றார்
மூன்றாம் பாட்டில் தம்முடைய கரண த்ரயமும் பகவத் விஷயத்தில் பிரவணம் ஆனபடியை அருளிச் செய்தார்
நாலாம் பாட்டில் நித்ய ஸூரிகளைப் போலே அது தானே யாத்ரை யாயிற்று என்றார்
அஞ்சாம் பாட்டில் தன்னையே பிரயோஜனமாகப் பற்றினார்க்கு அவன் நிரதிசய போகய பூதன் என்றார்
ஆறாம் பாட்டில் இப்படி போகய பூதனானவனை விட்டு பிரயோஜ நத்தைக் கொண்டு அகலுவதே என்று பிரயோஜனாந்தர பரரை கர்ஹித்தார்
ஏழாம் பாட்டில் இவனையே பிரயோஜனமாகப் பற்றினார்க்கு கால ஷேபம் இன்னது என்றார்
எட்டாம் பாட்டில் ப்ராப்தி விரோதிகளையும் அவன் தானே போக்கும் என்றார்
ஒன்பதாம் பாட்டில் இது கூடுமோ என்று சங்கையாக -வெறும் அவன் படியையோ பார்ப்பது -அருகு இருக்கிறார் படியையும் பார்க்க வேண்டாவோ -என்றார்
பத்தாம் பாட்டில் இவர்கள் எத்தனை காலம் கூடி விரோதிகளைப் போக்குவது போக்குவது -என்ன ஷண காலத்திலே-என்றார்
நிகமத்தில் இத் திருவாய்மொழியை அப்யசிக்கவே சம்சரிக்க வேண்டா என்றார் –

————————————————————————————-

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர்

அங்க கால தேச கர்த்ரு த்ரவ்ய -ந நியம புருஷோத்தமன்
பக்தி பரம் பகுமதா
தத் ஏவ ஸ்வயம் ச்வாராத இத் உபதேசித் முனி ஷட்க

—————————————————————————–

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன்

அக்ரிரீதியை அர்ச்சை பாவாத்
அநியத விவித அப்யர்ச்சநாத்
அல்ப துஷ்டேகே
பிரஹ்வீ பாவம் -மாத்ரத்தாலே ஆவர்ஜிக்கப் படுபவன் –
ஸுவ விஷய நியதேஷூ ஆதராத் -உள் கலந்தாருக்கு அமுதே
ஸ்வாது பூம்நா-அமுதிலும் ஆற்ற இனியன்
பாத ஆசக்த பிரசக்தே
சக்ருத் –உபசதனே மோஷாத்
தர்ம சௌச்த்யாத்-தர்ம பல ரூபனாய்-அவளை சொல்லி அதனால் அவனை
ஷிப்ரக் அஹிதம் நிரசனம்
ஸூகர பஜனதாம் மாதவச்ய அப்யதத்த

————————————————————————–

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 6–பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்–

பரிவதில் ஈசன் படியைப் பண்புடனே பேசி
அரியனலன் ஆராதனைக்கு என்று -உரிமையுடன்
ஓதி யருள் மாறன் ஒழிவித்தான் இவ்வுலகில்
பேதையர்கள் தங்கள் பிறப்பு——6-

—————————————————–
அவதாரிகை –

இதில் ஆஸ்ரயணத்தில் அருமை இல்லாமையை அருளிச் செய்த பாசுரத்தை
அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
சீலவானே யாகிலும்
ஸ்ரீ யபதியான பரி  பூர்ணனானவன் பெருமைக்கு ஈடாக
ஷூத்ரனாய்
ஷூத்ர உபகரணான இவனால்
பச்சை இட்டு ஆஸ்ரயிக்கப் போகுமோ –
ஸ்ரீ யபதித்வம் -இத்தலையில் குற்றம் பாராமல் அங்கீ கரிக்கும் நீர்மைக்கு உடலாகையாலும்
பரிபூர்ணத்வம் -இத்தலையில் குற்றம் பாராமல் பெற்றது கொண்டு சந்தோஷிக்கைக்கு உடலாகையாலும்
ஆஸ்ரியிப்பார்க்கு பத்ர புஷ்பாதிகளால் ஸ்வ ஆராதன் என்கிற
பரிவதில் ஈசனனில் அர்த்தத்தைபரிவதில் ஈசன் படியை -இத்யாதியால்
அருளிச் செய்கிறார் –

——————————————————————————————

வியாக்யானம்–

பரிவதில் ஈசன் படியைப் –
ஹேய பிரத்ய நீக கல்யாணை
கதானான சர்வேஸ்வரன் யுடைய
ஸ்வ ஆராதன ஸ்வ பாவத்தை –

பண்புடனே பேசி –
பரிபூர்ணன் ஆகையாலே இட்டது கொண்டு த்ருப்தனாம்
ஸ்வ பாவத்துடனே அருளிச் செய்து –
பரிவதில் ஈசனை -என்று துடங்கி –புரிவதும் புகை பூவே –
என்றத்தை பின் சென்ற படி –
அன்றிக்கே
பண்புடனே பேசி இன்று -அவனுடைய ஸ்வ ஆராததையைச் சொல்லி அல்லது
நிற்க மாட்டாத தன் ஸ்வ பாவத்தாலே சொல்லி -என்றாகவுமாம்-
வாமனன் சீரை இராமானுசன் உரைத்தான் -வாமனன் சீலன் ராமானுசன் -அவன் சீலம் இவருக்கும் என்றதுபோலே

அரியனலன் ஆராதனைக்கு என்று –
இப்படி பத்ர புஷ்பாதிகளாலே –
ஸ்வ ஆராதனாகையாலே ஆஸ்ரயிக்கும் இடத்தில்
சபர்யா பூஜிதஸ் சமயக் -என்னும்படி-சபரிக்கு எளியவன் -அன்றோ –
ஸபர்யைக்கு அருமை இல்லாதவன் என்றபடி -ச பர்யை-நல்ல கைங்கர்யத்துக்கு எளியவன் என்றுமாம் –

உரிமையுடன் ஓதி யருள் மாறன் –
அந்தரங்கமான
சிநேகத்தோடு அருளிச் செய்த ஆழ்வார்-திருக்கைத் தல சேவை பராங்குச நாயகிக்கு மட்டுமே உண்டே
அதாவது –
எது ஏது என் பணி என்னாது அதுவே யாட் செய்யுமீடே -என்றும்
உள் கலந்தோர்க்கு ஓர் அமுதே -என்றும்
அமுதிலும் ஆற்ற இனியன் -என்றும்
தாள்கள் தலையில் வணங்கி நாள் கடலைக் கழிமினே-என்றும்
அவனைத் தொழுதால் -என்றும்
தருமவரும் பயனைய திரு மகளார் தனிக் கேள்வன் -என்றும்
ஆஸ்ரயணாதி பல பர்யந்தமாக அருளிச் செய்தவை -என்கை –

ஒழிவித்தான் இவ்வுலகில் பேதையர்கள் தங்கள் பிறப்பு –
இப்படி உபதேசிக்கையாலே
இந்த லோகத்தில் அறிவிலிகள் ஆனவர்கள்
பிறவியை அகற்றுவித்தார் –
இஜ் ஜகத்தில் அஞ்ஞர் உடைய ஜன்ம சம்பந்தத்தை
ஸுவ ஸூக்தியாலே நிவர்த்திப்பித்தார் –
ஏதமில் ஆயிரத்து இப்பத்து ஓத வல்லார் பிறவாரே – என்றத்தை பின் சென்ற படி –

———————————————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: