பகவத் விஷயம் காலஷேபம் -41– திருவாய்மொழி – -1-6-1…1-6-5..-ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

பிரவேசம் –

முதல் திருவாய்மொழியில் -அவர் சர்வ ஸ்மாத் பரனாய் இருக்கும் படியைத் தாம் அனுசந்தித்தார் –
இரண்டாம் திருவாய்மொழியில் இப்படி பரனானவனை பஜியுங்கோள் என்றார்
அநந்தரம் பஜனத்துக்கு உறுப்பாக அவனுடைய சௌலப்யத்தை அருளிச் செய்தார்
அதுக்கு உறுப்பாக அவனுடைய அபராத சஹத்வத்தை அருளிச் செய்தார்
அதுக்கு உறுப்பாக சீலவான் என்றார் -அபராதங்கள் இருக்கு என்று அகல வேண்டாம் என்று கட்ட சௌசீல்யம் –
இவை எல்லாம் உண்டானாலும் பசையில்லை இறே பரிமாற்றத்தில் அருமை தட்டி இருக்குமாகில் என்ன -அது வேண்டா -ஸ்வாரதன் -என்கிறார்
கைங்கர்யம் தானே சேஷிக்கும் சேஷ பூதனுக்கும் நடுவில் பரிமாற்றம்-அகிஞ்சித் கரஸ்ய சேஷத்வம் அனுபபத்தி –
ஏகதா பவதி பல உருவு கொண்டு சகல வித கைங்கர்யங்களும் பண்ணலாமே அங்கே –

கீழில் திருவாய்மொழியில் -அயோக்யன் என்று அகன்ற இவரைப்-சேதனர் அனைவருக்கும் உப லஷணம் – பொருந்த விட்டுக் கொண்ட-
இதுக்கு-சௌசீல்யத்துக்கு – ஒரு பிரயோஜனம் கண்டிலோமீ —பொருந்த விட்டுக் கொள்ளுகிறது தான் ஒரு பரிமாற்றத்துக்கு இறே
அதில் ஷூத்ரனான இவனால் ஷூத்ர உப கரணங்களைக் கொண்டு சர்வேஸ்வரனை ஆச்ரயித்துத் தலைக் கட்டப் போகாமையாலே
சம்சாரியான இவனால் நேர் கொடு நேராய்- நன்றாக -ஆஸ்ரயித்து தலைக் கட்ட ஒண்ணாத படி அவாப்த சமஸ்த காமனாய் -நிரபேஷன்-இருக்கையாலும்
இவன் இட்டது கொண்டு த்ருப்தனாகா வேண்டாத படி பரிபூரணன் ஆகையாலும் –இரண்டுக்கும் கொஞ்சம் வாசி உண்டே–அபேக்ஷை இருந்தாலும் பூர்ணன் –
இவ்விரண்டுக்கும் அடியாக ஸ்ரீ யபதியாய் இருக்கையாலும்
இவன் அவனை ஆஸ்ரயிக்கை என்று ஒரு பொருள் இல்லையீ என்ன -அது வேண்டா
அப்படிகள் அடைய ஆஸ்ரயணத்துக்கு உறுப்பு –
-இவன் தன் ஸ்வரூப லாபத்துக்கு உறுப்பாக கிஞ்சித்கரிக்கும் இது தான் தன் பேறாகா நினைத்து இருக்கும்
1–இதுக்கு மேற்பட தனக்கு வேறு ஓன்று தேட வேண்டாதபடி எல்லாம் கை புகுந்து இருப்பான் ஒருவன் ஆகையாலும்
2-இவன் இட்டது கொண்டு த்ருப்தனாக வேண்டாதபடி பரிபூர்ணனாய் இருக்கையாலே இவன் பக்கல் பெற்றது கொண்டு
முகம் காட்டுகைக்கு உடலாய் இருக்கையாலும்
3-ஸ்ரீ யபதியாகையாலே ஸூசீலனாய் இருக்கையாலும்
இதர சமாஸ்ரயணம் போலே பகவத் சமாஸ்ரயணம் அருமைப் பட்டு இராது
இனி இது தன்னிலே இழியவே விரோதிகள் அடங்கலும் நசிக்கும் -கடிவார் தீய வினைகள் நொடியாரும் அளவைக் கண் –வல்வினை மாள்வித்து -என்கிறார்
ஆஸ்ரயணம் தான் கிலேச ரூபமாய் இருக்கை யன்றிக்கே போக ரூபமாய் இருக்கும்உள் கலந்தார்க்கு ஓர் அமுது –அமுதிலும் ஆற்ற இனியன் -என்றார்
இவனுக்கு வருந்தி ஒன்றும் தேட வேண்டாதபடி பெற்றது உப கரணமாய் இருக்கும் -புகை பூவே —
பகவத் சமாஸ்ரயணம் ஆகையாலே பிரத்யவாய பிரசங்கம் இல்லை -த்ரவ்யம் நியதி கால நியதி அதிகாரி நியதி இல்லை
வசந்தே வசந்தே ஜியோதீஷ் ஹோமம் -கால நியதி உண்டு-
கொள்கை கொளாமை இலாதான் -முதுவே முதல்வனுக்கு எது வேது என் பணி என்னாது அதுவே ஆட்செய்யுமீடே -என்றார் –
இப்படி இருக்கையாலே ஆஸ்ராயணம் ஸூகம் -ஆஸ்ரயிங்கோள் என்கிறார் –

த்வத் அங்க்ரிம் உத்திச்ய -ஸ்தோத்ர ரத்னத்தில் அல்லாத ஆஸ்ரயணீயர்களில் காட்டிலும் இவனுக்கு உண்டான வ்யாவ்ருத்தியும்
இவன் பக்கல் சேஷபூதனுக்கு இழியும் துறை திருவடிகள் என்னும் இடமும் சொல்லுகிறது
கதாபி -கால நியதியை விதிக்கிற கர்மத்தில் காட்டில் வ்யாவ்ருத்தி
கேநசித் –அதிகாரி நியதியை விதிக்கிற வற்றில் வ்யாவ்ருத்தி
யதாயதா -க்ரம நியதியை அபேஷித்து இருக்கும் கர்மங்களில் வ்யாவ்ருத்தி
வா -அபி -என்கையாலே விகல்ப சமுச்சயங்களில் ஒன்றே ஆகக் கடவது என்கிற கர்மத்தில் காட்டில் வ்யாவ்ருத்தி
சக்ருத் -தீர்க்க சஸ்த்ராதிகளில் வ்யாவ்ருத்தி
க்ருத-ஆதி கர்மணிக்தவாய்-உத்தியோக மாத்ரத்திலே பலமாகச் சொல்கிறது
அஞ்ஜலி–வித்தவ்யா சஹகாரி சாத்தியமான அஸ்வமேத தைகளில் வ்யாவ்ருத்தி
ததைவ -தேசாந்திரே காலாந்திரே நின்று பலிப்பனவாகச் சொல்லுகிற கர்மங்களில் வ்யாவ்ருத்தி
முஷ்ணாதி–இவன் தானே தொடர்ந்து பிடிக்கும் -என்று இவன் அறியாமே போம் -என்கை
சும்மெனாதே கை விட்டோடித் தூறுகள் பாய்ந்தவனே -என்கிறபடியே
அசுபாநி-ஒரு கர்மம் ஒரு பாபத்தை சொல்லுகிற அதில் வ்யாவ்ருத்தி
அசேஷத -வாசனை கிடக்கப் போக்கும் கர்மங்களில் வ்யாவ்ருத்தி
சுபானி -ஒரு ஸூ க்ரோதம் ஒரு பலத்தை பலிப்பதாக சொல்லுவதில் வ்யாவ்ருத்தி
புஷ்ணாதி -தீமையைப் போக்கி விடும் அளவன்றிக்கே -அது போன இடம் எங்கும் நன்மையால் நிறைக்கும்
ந ஜாது ஹீயதே -பலத்தைக் கொடுத்து தான் நசிப்பதில் வ்யாவ்ருத்தி

பத்ரம் புஷ்பம் -ஸ்ரீ கீதை -9-86–இத்யாதி -த்ரவ்ய தாரதம்யம் பார்ப்பது இல்லை –இடுகிறவன் நெஞ்சில் ஈரமாயிற்று பார்ப்பது
அச் நாமி -இப்படித் தரப் பட்டவற்றை மநோ ரத பதத்துக்கும் அவ்வருகானவை கை புகுந்தால் போலே நினைத்து இருப்பவன் -என்னுதல்
அவன் கலங்கித் தருமா போலே நானும் கலங்கி அடைவுகெட விநியோகம் கொள்ளுவேன் என்னுதல்
அந்யத் பூர்ணா தபாம் கும்பாத் இத்யாதி
ந சேச்சதி-இவனுடைய உத்தியோக மாத்ரத்திலே வயிறு நிறையுமாயிற்று அவனுக்கு
யா க்ரியாஸ் சம்ப்ரயுக்தாஸ் ஸ்யு—மோஷ தர்ம ஸ்லோகம் -அபிமத விஷயத்தின் பரிமாற்றம் போலே எல்லாம் உத்தேச்யமாய்த் தோற்றும்
ஏகாந்த கதபுத்திபி -இது ஒன்றுமே வேண்டுவது
தாஸ் சர்வா பிரதிக்ருஹ்னாதி -அவற்றில் ஒன்றும் விட்டுப் பிடியான்
சிரஸா பிரதிக்ருஹ்னாதி -இவன் காலாலே பொகட்ட வற்றையும் அவன் தலையாலே சுமக்கும்
தேவ -காலாலே கொள்ளப் பிறந்தவன்
ஸ்வயம் பிரதிக்ருஹ்னாதிசெல்வக் கிடப்பு உண்டு என்னா மகிஷி ச்வேதத்துக்கு ஆளிட ஒண்ணாதே -பெரு நாடு காண இம்மையிலே பிச்சை தாம் கொள்வர் –
ஆக இப்படிகளாலே அவனுடைய ஸ்வ ஆராதயைச் சொல்லுகிறார்  -இத் திருவாய் மொழியிலே

—————————————————

அவதாரிகை

எம்பெருமான் பரி பூரணன் ஆகையாலே ஸ்வாராதன் -என்கிறார்

பரிவதில் ஈசனைப் பாடி –விரிவது மேவலுறுவீர்
பிரிவகையின்றி நன்னீர்த் தூயப் –புரிவதும் புகை பூவே –1-6-1-

ஆராதன உபகரண சௌகர்யத்தை அருளிச் செய்கிறார் –
பரிவதில் -பரிவது இல் -துக்காதி ஹேய பிரதி படனாய் -விலகினால் துக்கப்படுவானே -அந்த துக்கம் இல்லாதபடி -என்றபடி –
ஆராதனைக்கு எளியவன்
ஈசனைப் -நிகில நியந்த்ருத்வாதி சமஸ்த கல்யாண குண பரி பூரணன் -நம்மை நியமித்து அருளி –
பாடி -அனுபவ ஜனித ப்ரீதி காரித சாம கான முகேன பாடி
–விரிவது -ஆவிர்பூதமான ஸ்வரூப -ஆத்ம ஞான விகாசம் அடைய விருப்பம் கொள்பவர்களே
மேவலுறுவீர் -பெறுகையில் உறுதி கொள்பவர்களே -சம்போதனம் -இங்கே -ஸ்வேன ரூபேண-
பிரிவகையின்றி -எழுவார் -விடை கொள்வார் போலே பிரியாமல் -பிரியாமல் இருந்தால் தான் துக்கம் அவனுக்கு வராது-
பிரயோஜநான்தரம் பெற்று விலகாமல் -அனந்யராய்
நன்னீர்த் தூயப் –புரிவதும் புகை பூவே–தூய்-சமர்ப்பித்து இல்லை -பதட்டத்தால் தூவியும் –
பிரேமத்தால் அக்ரமாக பரிமாறி -கேவலம் புகையும் பூவும் -அமையும் –எளிமை சுவாராதத்வம் –
புரிவதுமாவது பூவே -தேட எளிய பூவே பாட பேதம் –

பரிவதில் –
பரிவது -துக்கமாகவுமாம் -பஷ பாதமாகவுமாம்
இல் –இல் என்பது -இல்லாமை
இத்தால் துக்கம் இல்லாமை -என்னுதல் -பஷ பாதம் இல்லை என்னுதல்
துக்கமாவது -நான் இடுகிறவை அவன் கொள்ளுமோ கொள்ளானோ-என்று ஆஸ்ரயிக்கிற இவன் நெஞ்சில் துக்கம் உண்டாமன்று
ஆஸ்ரயணீயனுக்கு துக்கமாம் இ றே
அன்றிக்கே பஷ பாதமான போது -ஒருவன் குருவாக த்ரவ்யத்தைக் கொடுத்தால் அவன் பக்கல் பஷ பதித்து இருக்குமாகில் துஷ்ப்ராபன்
என்று ஆஸ்ரயணீயனுக்கு ஹேயம் இ றே
இவை இல்லாத படி இருக்கையாலே ஹேய ப்ரத்ய நீகன்-என்றபடி –
பிராபகம் பிராப்யம் பரமாக இவ்விரண்டு பொருளும் சாதிக்கிறார் -அடையத் தக்கவர் -அனுபவிக்கத்தக்கவர் –பிராப்ய பிராபக பரமான அர்த்தங்கள் —
தரதமவிபாகம் பாராதே இருக்கைக்கு அடி என் என்னில்
ஈசனைப் –
வகுத்த சுவாமி யாகையாலே
ஹேய ப்ரத்ய நிகம் புக்க இடத்தே கல்யாண குணங்களும் புகும் இ றே
ஆக ஹேய ப்ரத்ய நீகதையும் கல்யாண குண யோகமும் சொல்லிற்று ஆயிற்று
ஈசனை
புறம்பே ஒருவனுக்கு ஒருவன் விருந்து இடும் போது -நெடு நாள் பச்சை தேடி விருந்திட்டால் -இவன் உண்டு என்ன குறை
சொல்லப் புகுகிறானோ-என்று நெஞ்சாறல் உடன் தலைக் கட்ட வேண்டி இருக்கும்
புத்திரன் பிதாவுக்கு விருந்திட்டால் உண்டாகில் உள்ள குறை தமப்பதனாய் நெஞ்சாறல் பட வேண்டாது இருக்கும் இ றே
அப்படிப் பட்ட சம்பந்தத்தைப் பற்ற ஈசன் என்கிறது
பாடி –
சர்வேஸ்வரனை கிட்டினால் வாங் நியதியோடு நிற்கை யன்றிக்கே -ஹர்ஷத்துக்குப் போக்கு விட்டுப் பாடி –
பாடி விரிவது மேவலுறுவீர்-
ஏதத் சாம காயன் நாஸ்தே –என்று பாடி -விஸ்த்ருதர் ஆகையாகிற பேறு பெற வேண்டி இருப்பீர் –
பேறு கனத்து இருக்கிறது -நாங்கள் செய்ய வேண்டுவது என் என்னில்
பிரிவகையின்றி —
பிரிகை யாகிற வகையின்றி –
இமையோர் பலரும் முனிவரும் புனைந்த கண்ணி நீர் சாந்தம் புகையோடு ஏந்தி வணங்கினால் உன் பெருமை மாசுணாதோ-என்று
அகல வகையீட்டுக் கொண்டு அகலாதே
நல் நீர் –
ஏலாதி சம்ச்காரமும் இன்றிக்கே இருக்கை -கேவல ஜலமும் அமையும்
தூய
யதா ததா வாபி
புரிவதுவும்
இவன் அவனுக்கு அருள் கொடையாக கொடுக்குமதுவும்
புகை பூவே
அகில் புகை -கரு முகைப் பூ -என்று விசேஷியாமையாலே-ஏதேனும் புகையும் ஏதேனும் பூவும் அமையும்
செதுகையிட்டு புகைக்க அமையும் -கண்டகாளி இடவும் அமையும் -என்று பட்டர் அருளிச் செய்யும் படி
இத்தை பட்டர் அருளிச் செய்தவாறே -ந கண்டகாரிகா புஷ்பம் தேவாய விநிவேதயேத்-என்னா நின்றது இ றே-என்று நஞ்சீயர் கேட்க
அவனுக்கு ஆகாது என்கிறது அல்ல -பறிக்கிற ஆஸ்ரிதன் கையிலே முள் பாயும் என்றதற்காக தவிர்த்தது காணும் -என்று அருளிச் செய்தார்
கள்ளார் துழாயும் கணவலரும் கூவிளையும் முள்ளார் முளரியும் ஆம்பலும் -என்று விசஜாதீயங்களை சேர எடுக்கிறது கண்டீரே
-த்ரவ்ய தாரதம்யம் பார்ப்பது இல்லை என்கைக்காக –
புள்ளாய் ஓர் ஏனமுமாய் புக்கிடந்தான் –
அப்ராக்ருத த்ரவ்யம் வேணும் என்று இருந்தான் ஆகில் ஸ்ரீ வைகுண்டத்தில் இரானோ வராஹ கல்பம் பாரா நிற்கச் செய்தே
-ஸ்ரீ வராஹ நாயனார்க்கு முத்தக்காசை-கோரைக் கிழங்கு – அமுது செய்விப்பது -என்று கிடந்ததாய்
இது என்ன மெய்ப்பாடு தான் என்று நஞ்சீயர் போர வித்தராய் அருளினார்
உள்ளாதார் உள்ளத்தை உள்ளமாகக் கொள்ளோமோ-இப்படி அனுசந்தியாராதருடைய ஹிருதயத்தை ஹிருதயமாக நினைத்து இரோம்
நாங்கள் பதின்மரும் -என்று என்று தம்மை ஒழிந்த ஆழ்வார்களையும் -மதுர கவி ஆழ்வார் எல்லாமே ஆழ்வாருக்கு என்பரே –

—————————————————————————–

அவதாரிகை

ஆஸ்ரயிக்குமவனுக்கு த்ரவ்யத்தில் குறை பார்த்து அகல வேண்டா -என்றார் முதல் பாட்டில்-நான் அதிகாரி அல்லேன் -என்று அகல வேண்டா என்கிறார் இதில் –

மதுவார் தண்ணம் துழாயான் –முது வேத முதல்வனுக்கு
எதுவேது என் பணி என்னாது அதுவே ஆட்செய்யுமீடே –1-6-2-

அதிகாரி சௌகர்யம்-அருளிச் செய்கிறார் 
மதுவார் தண்ணம் துழாயான் –சர்வேஸ்வரத்துக்கு ஸூசசகம்
முது வேத முதல்வனுக்கு -பழைய -பிரதிபாத்ய பிரதிபாத்ய சம்பந்தம்
எதுவேது என் பணி-என் பணி ஏது-நானா பண்ணனும் இத்தையா பண்ணனும் -அதிகாரி விஷயம் கைங்கர்ய விஷயம் இரண்டுக்கும் -என்றவாறு –
என்னாது அதுவே ஆட்செய்யுமீடே-சர்வம் கரிஷ்யாமி -செய்வதே தகுதி
பூவே -மது -அந்தம் ஆதி -பொருள் இசை–சொல் இசை -அந்தாதி
வதுவார்-பாட பேதம் -உடல் எழுத்து வகரம் -எழுத்து முதல் -ஏ பாவம் -உயிர் எழுத்து முதல் -அல்லது கண்ணே -முடிந்து ஏ தொடங்கி –
விண்ணப்பமே -திருவிருத்தம் -அடுத்து செழு நீர் -ஆரம்பம் போலே

மதுவார் தண்ணம் துழாயான் –முது வேத முதல்வனுக்கு
புரிவதும் புகை பூவே -என்றது கீழே
இதில் மதுவார் தண்ணம் துழாயன்-என்று தொடங்கிற்று –
இது சேரும்படி என் என்ன
பூவாகில் மதுவோடு கூடி அல்லது இராமையாலே சேரும் -என்று சொல்லுவார்கள் தமிழர்
வதுவார் தண்ணம் துழாயன் -என்ற பாடமான பொது போரச் சேரும்
வதுவை என்று –மணம்–ஆர்தல் -பூர்ணம் —
வதுவை வது என்று கடைக் குறைத்தலாய் நறு நாற்றத்தை யுடைய திருத் துழாய் -என்றுமாம் -இது தமிழர் போரச் சேரும் என்பர்
பொருள் இசை அந்தாதி இயல் இசை அந்தாதி -புரிவதுவும் -என்பதால் -மகாரத்தில் தொடங்கலாமே –இது இயல் இசை அந்தாதி
அடியேன் செய்யும் விண்ணப்பமே –செய்யும் என்பதால் செங்கழு நீர் -என்று அடுத்த பாசுரம்
மதுவார் தண்ணம் துழாயான் —
ஒரு வாடல் மாலையைக் கொண்டு வந்து திருக் குழலிலே வளையமாக வைத்தால் -திருக் குழலோட்டை ஸ்பர்சத்தாலே-செவ்வி பெற்று
மது நிரம்பி -சினையாறு பட்டு வார்ந்து வெள்ளம் இடா நிற்கும் –சினையாறு -ஆறு நீர் வர அணித்தாகில் பொசிந்து காட்டுமே-
-பரிம்லா நா –என்றும் -சர்வே சாபி மதுஸ்ரவா -என்றும் –
மரங்கள் நின்று மது தாரைகள் பாயும் -என்றும்–பெரியாழ்வார் -3-6-10- தழைக்கும் துழாய் -பெரிய திருவந்தாதி 39-என்றும் சொல்லக் கடவது இ றே
முது வேத முதல்வனுக்கு –
இவ் வொப்பனை அழகு பேசும் போது-இன்னமும் பாசி பூத்த வேதமே பேச வேண்டாவோ
நித்தியமாய் அபௌருஷேயமான வேத பிரதிபாத்யனாய் உள்ளவனுக்கு
வேத முதல்வனாகையாவது -சாஸ்திர யோநித்வாத் -என்கிறபடியே வேத பிரதிபாத்யன் -என்கை
1-புகை -நெருப்பு -/ 2-மண் -குடம்-1- காரக/ 2- ஞாபக ஹேது -இரண்டும் உண்டே –
சாஸ்திரம் யாருக்கு காரணமோ அவன் சாஸ்திர யோனி -அத்யந்த அதீந்த்ர்யத்வேன-வேதைகைதிக சமைதிகம்யன்–
மதுவார் தண்ணம் துழாயான் -என்கையாலே சர்வாதிகன் என்றதாயிற்று -வஷஸ் ஸ்தல்யாம் துளசி கமலா கௌச்துபைர் வைஜயந்தீ
சர்வே சத்வம் கதயதிதராம் -என்னக் கடவது இ றே
முது வேத முதல்வன்-என்கையாலே பரிபூர்ணன் என்றதாயிற்று -பூர்ணஸ்ய பூர்ணமாதாய சர்வமிதம் அப்யாத்த அவாக்யநாதர-என்னக் கடவது இ றே
இரண்டும் ஸ்வாராதன் -என்கைக்கு உறுப்பாகிறது

எதுவேது என் பணி என்னாது அதுவே ஆட்செய்யுமீடே
முது வேத முதல்வனுக்கு எது பணிஎன் பணி ஏதுஎன்னாது அதுவே –ஆட்செய்கைக்கு அதிகாராமாவது
நித்ய ஸூ ரிகள் அன்றோ அவனுக்கு ஈடான அடிமை செய்ய வல்லார் -நான் செய்யுமது ஏது -என்று தன்னைக் கொண்டு கை வாங்காது ஒழியுமதுவே
அன்றிக்கே
முழு வேத முதல்வனுக்கு ஏது பணி ஏது என் பணி என்னாததுவே
இது அவனுக்கு ஈடன்று என்று சிலவற்றை விடாதே சகல கைங்கர்யத்திலும் அந்வயிக்கும் அதுவே ஆட்செய்கைக்கு அதிகாரம் ஆவது என்னுதல் –
அயோக்யதா அனுசந்தானம் பண்ணியோ -கைங்கர்யம் குறை சொல்லி அகலாமல் -சகல கைங்கர்யம் செய்வதுவே -அதிகாரம் –
ஒழிவில் காலம் எல்லாம் உடனே மன்னி வழு விலா அடிமை செய்ய வேண்டும் -என்பதே அதிகாரம் –

———————————————————————————-

அவதாரிகை –

அவனுடைய இஸ் ஸ்வ பாவத்தை அனுசந்தித்து -தாம் அதிகரித்த கார்யத்தை மறக்கும் படி தம்முடைய மநோ வாக் காயங்களுக்கு
அவன் பக்கல் உண்டான பிராவண்யத்தை அருளிச் செய்கிறார் –
இதிலும் அடுத்த பாசுரத்திலும் தம் மனசுக்கு உபதேசம் -முந்திய -மற்றும் பின் பாசுரங்கள் மற்றையோர்க்கு உபதேசம்

ஈடும் யெடுப்புமிலீசன் -மாடு விடாது என் மனனே
பாடும் என் நா அவன் பாடல் ஆடும் என் அங்கம் அணங்கே –1-6-3-

தோஷம் குணம் பாராதே -கரணத்ரயத்தையும் அவகாஹித்து -உபதேசம் விட்டு -அவன் இடம் சென்றதே –
ஈடும் யெடுப்புமிலீசன் -ஈடும் இல்லை விட்டு -தோஷம் பார்த்து விடுவதும் இல்லை –குண சாலி என்று எடுப்பதும் இல்லை
அவன் இடத்தில் –மாடு விடாது என் மனனே-பாடும் என் நா அவன் பாடல் –ஆடும் என் அங்கம் அணங்கே-தெய்வாவிஷ்டம் போலே ஆடும்-
தனித் தனி -என் -உகப்புத் தோன்ற அருளிச் செய்கிறார் –
ஏகாரம் -மனம் விடாதே காணும் -நா பாடுமே காணும் -அங்கமே ஆடும் -அங்கமே ஆடும் -பண்ணியே தீரும் என்றவாறு

ஈடும் யெடுப்புமிலீசன்-
சிலரை உபேஷித்தல்-சிலரை ச்வீகரித்தல் செய்யாத சர்வேஸ்வரன்
சம்பந்தம் சர்வ சாதாரணமாய் இருக்கையாலே சிலரை விடப் போகாது இ றே
தேவானாம் தானவா நாஞ்ச சாமான்ய மதிதைவதம் –என்று சவீகரிக்குமவனோடு உள்ள சம்பந்தம் விடுமவன் பக்கலிலும் உண்டு இ றே
-ஈசன் மாடு விடாது என் மனனே
மாடு -பொன் பக்கல் செல்வம்-இங்கே பக்கம் பொருளில் –
ஒரு சாதனா புத்த்யா கிட்டிற்றாகில் இறே பலம் கை புகுந்தவாறே விடுவது -உபதேசமும் சாதனா புத்தியாக இல்லை –
நான் அதிகரித்த கார்யத்துக்கு எனக்கு நெஞ்சு ஒழிகிறது இல்லை
நாவியலால் இசை மாலைகள் ஏத்தி –4-5-4-என்றோ -மனஸ் சஹகாரம் வேணுமோ உமக்கு –
மனஸ் சகாயம் இல்லாமல் நாவால் பாடுவீரே -திருமால் இரும் சோலை என்றேன் என்ன
உம்முடைய அஹ்ருதயமான உக்தி அமையாதோ எங்களுடைய ஹிதத்துக்கு என்ன
பாடும் என் நா அவன் பாடல்
என்னுடைய வாக் இந்த்ரியமும் மனஸ்ஸூ அதிகரித்த அந்த கார்யத்திலே ஆதிகரித்தது
ஆனால் உம்முடைய ஹஸ்த முத்தரை அமையாதோ எங்களுக்கு அர்த்த நிச்சயம் பண்ணுகைக்கு என்ன
ஆடும் என் அங்கம் அணங்கே
அதுவும் அவ்விஷயத்தில் பிரவணம் ஆயிற்று
அணங்கு அப்சரஸ் தேவ பெண் போல ஆடிற்று

என் மனனே ஈடும் யெடுப்புமிலீசன் -மாடு விடாது – என் நா அவன் பாடல் பாடும் – என் அங்கம் அணங்கு என் ஆடும்-என்று அந்வயம்

————————————————————————————————

அவதாரிகை –

தம்முடைய மநோ வாக் காயங்களுக்கு அவன் பக்கல் உண்டான பிராவண்யம் காதாசித்கமாய் விடுகை யன்றிக்கே-
நித்ய ஸூரிகளைப்போலே யாத்ரையானபடி சொல்கிறார் – (Vத்ருஷ்டாந்தம் காட்டி -எப்பொழுதும் முக்கரணங்கள் அவன் இடம் அடைந்ததை இதில் காட்டி அருளுகிறார் -)

அணங்கு என ஆடும் என் அங்கம் -வணங்கி வழி படும் ஈசன்
பிணங்கி யமரர் பிதற்றும் -குணங்கு எழு கொள்கையினானே –1-6-4-

அணங்கு என ஆடும் என் அங்கம் -பிரேமத்தால் -ஆடும் என் சரீரம்
-வணங்கி வழி படும் -ஈசன்
பிணங்கி யமரர் பிதற்றும்-சு அனுபவ போக்யதையால் -வாத்சல்யம் சௌலப்யம் சௌசீல்யம் -தான் சொன்னதே -நீர் சொன்னதே சரி
பிணக்கம் -பரஸ்பர நீச பாவ பிணக்கம் -சரச விவாத கோலாகலம்
-குணங்கு எழு கொள்கையினானே-குணங்கள் செறிந்த கோட்பாட்டை யுடையவன் –ஆஸ்ரயம் கொண்டவன்-என்றுமாம் –

அணங்கு என ஆடும் என் அங்கம்வணங்கி வழி படும் ஈசன் பிணங்கி யமரர் பிதற்றும் -குணங்கு எழு கொள்கையினானே என்னுதல் –
பிணங்கி யமரர் பிதற்றும் -குணங்கு எழு கொள்கையினானே ஈசனை அனுபவித்து அணங்கு என ஆடும் என் அங்கம் -வணங்கி வழி படும்-என்னுதல்
பிணங்கி யமரர் பிதற்றும் -குணங்கு எழு கொள்கையினானே ஈசனை அனுபவித்து -என் அங்கம் -வணங்கி வழி படும்-அணங்கு என ஆடும் -என்னுதல்
வழி படும்--1-பெயர் எச்சம் /2-முற்று வினை இரண்டும் –உண்ணும் சோறு -வழிபடும் ஈசன் போலே பெயர் எச்சம் -விசேஷணங்கள் போலே -வழி படப்படும் ஈசன்
தைவா விஷ்டம் -என்னலாம் படி ஆடுகிற என் அங்கம் -வணங்கி அது தானே யாத்ரையாக செல்லும் படி இருக்கிற ஈசன்

பிணங்கி யமரர் பிதற்றும் –குணங்கு எழு கொள்கையினானே-
தாம் தாம் அனுபவிக்கிற குணங்களுக்கு ஏற்றம் சொல்லப் புக்கு -எதிரி சொல்லுகிற குணங்களுக்கு ஏற்றம் சொல்லித் தலைக் கட்டுகை-எதிரே நின்று பேசுபவர் -நித்ய விபூதியில் எதிரிகள் இல்லையே –
தாம்தாம் அகப்பட்ட குணங்களைச் சொல்லி -நான் முந்துறச் சொல் -நான் முந்துறச் சொல்ல -என்று பிணங்கி
நித்ய ஸூரிகள் ஜவர சந்நிபதிதரைப் போலே அடைவு கெடக் கூப்பிடுகிற குணங்கள் வந்து சேருகைக்கு ஆச்ரயமானவன்
ரத்னாகரம் போலே குணங்கள் சேருகைக்கு ஆச்ரயமாய் -இருப்பிடம் -உள்ளான் என்னுதல்
இக் குணங்கள் வந்து கெழுகையை ஸ்வபாவமாக -தன்மையாக -உடையவன் என்னுதல்
சர்வஜ்ஞரானவர்கள் படுகிற பாடு என் கரணங்களுக்கும் உண்டாகா நின்றது கிடீர் என்கிறார் –

————————————————————————————-

அவதாரிகை –

திரியட்டும் தாம் அதிகரித்த கார்யத்திலே போந்து -சர்வேஸ்வரன் தன பக்கலில் வந்து கிட்டினால் -இவர்கள் பிரயோஜனாந்தரத்தைக் கொண்டு
அகலுவார்களோ -என்று ஆராய்ந்து தன்னையே பிரயோஜனமாகப் பற்றினார்களுக்கு தானும் நிரதிசய போக்கினாய் இருக்கும் -என்கிறார்

கொள்கை கொளாமை இலாதான் எள்கல் இராகம் இலாதான் –
-விள்கை விள்ளாமை விரும்பி –உள் கலந்தார்க்கு ஓர் அமுதே —1-6-5-

அனந்யரான அதிகாரிகளுக்கு பரம போக்யன்
கொள்கை கொளாமை இலாதான் -குணங்களை கொண்டு கனக்க கொள்ளுவதும் தோஷம் பார்த்து கை விடாமல்
எள்கல் இராகம் இலாதான் – நெஞ்சிலும் இல்லை நெகிழ்ச்சியும் ராகமும் இல்லாதவன்
-விள்கை விள்ளாமை விரும்பி -விலகி -விரும்பி -பிரயோஜநான்தரம் -வில்லாமை -அநந்ய பிரயோஜனர் -இருவரையும் விரும்பி பார்த்து
-உள் கலந்தார்க்கு ஓர் அமுதே -அத்விதீயமான அமுதம்

கொள்கை கொளாமை இலாதான் –
இவன் ஜன்ம வ்ருத்த ஜ்ஞானங்களால் உயர்ந்தான் ஒருவன் இவனை அந்தரங்க வ்ருத்தி கொள்வோம்
இவன் அவற்றால் தாழ்ந்தான் ஒருவன் -இவனைப் புறம்பு தொழில் கொள்வோம் -என்னுமவை இல்லாதான்
வ்ருத்தி கொள்ளும் போது இல்லையாகில்
திரு உள்ளத்திலே தான் நினைத்து இருக்குமோ -என்னில்
-எள்கல் இராகம் இலாதான் –
திரு உள்ளத்தாலே சிலரை இகழ்ந்து இருத்தல் -சிலரை ஆதரித்தல் செய்யான் –
ஈடும் எடுப்பும் இல் ஈசன் -என்ற இடம் ச்வீகார சமயத்தில் குறை பாரான் என்றது -இங்கு பரிமாற்றத்தில் தரம் இட்டுக் கொள்ளான்-என்கை –
விள்கை விள்ளாமை விரும்பி –உள் கலந்தார்க்கு ஓர் அமுதே —
இது ஒன்றுமே பார்ப்பது –
விள்கை -பிரயோஜனங்களைக் கொண்டு விடுகை
விள்ளாமை -அநந்ய பிரயோஜனம் ஆகை
விரும்பி -ஆதரித்து
உள் கலந்தார்க்கு-இவனையே பிரயோஜனமாகப் பற்றி இவனுடனே ஒரு நீராக கலந்தவர்களுக்கு
ஓர் அமுதே –அத்விதீயமான அமிர்தமாய் இருக்கும் -ஆராவமுது இ றே –

ஜகன்னாத -அம்பரீஷ விருத்தாந்தம் -உபாசித்து -ஐரா வதம் -கருடன் இந்த்ரன் போலே தானே -சந்நிதானம் -த்ரை லோக்ய-விரும்பிய வரம் கேள்
தேவதாந்திர பரம் இல்லை -போ என்று அனுப்பி -ஸ்ரீ விஷ்ணு தர்மம் -சுய ரூபம் கொண்டு அபேஷிதங்களை வழங்கினார்

—————————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: