பகவத் விஷயம் காலஷேபம் -40– திருவாய்மொழி – -1-5-6 ….1-5-11 –ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

அவதாரிகை

இவர் ஆபிமுக்யம் பண்ணினவாறே அவன் அல்பம் தாழ்த்தான் –இவர் என்னை இழந்தாய் கிடாய் என்கிறார் –
ஆழ்வார் நைந்தால் இவன் அவரை இழப்பான்-

வினையேன் வினை தீர் மருந்தானாய் விண்ணோர் தலைவா கேசவா
மனை சேர் ஆயர் குல முதலே மா மாயனே மாதவா
சினை யேய் தழைய மரா மரங்கள் ஏழும் எய்தாய் சிரீதரா
இனையாய் இனைய பெயரினாய் என்று நைவன் அடியேனே –1-5-6-

நவ ரச பாட்டு -அவனது நவ ரசங்களையும் சொல்லுமே
தன்னைப் பற்றி ஒரே வார்த்தை -என்று நைவன் அடியேனே-
அபேஷித்த அனந்தரம் அனுபவம் சித்திக்க வில்லை -அதற்கு ஹேதுவான திரு நாமங்கள் குணங்கள் சேஷ்டிதங்கள் நினைத்து சிதிலர் ஆகிறார்
1-வினையேன் வினை தீர் மருந்தானாய் -வினையேனுக்கு அசாதாராணமான-அவத்யம் என்று அகலப் பார்த்த வினை –
அனைவருக்கும் பொது என்று காட்டி
பிரேமத்தில்-அன்பு சேர்க்கையால் அவத்யம் என்று நினைத்த குற்றம் –சௌசீல்யம் -சீலவத் ரூபமான மருந்து –
2-விண்ணோர் தலைவா -நித்ய சூ ரிகள் அதிபதி -இப்படிப்பட்ட குற்றம் இல்லாத அவர்களுக்கு தலைவர் -விரோதி பிரசங்கமே இல்லாத வர்களுக்கு நிர்வாஹகன்
3-கேசவா -பிரயோஜ நாந்த பரர்களுக்கும் -சத்தா ஹேதுவாகையாலே –தன்னில் மூவர் முதலாய –
4-மனை சேர் ஆயர் குல முதலே-குடிசில் கூடக் கொண்டு திரிவதாலே -மனையோடு சேர்ந்த ஆயர் குலத்துக்கு மூலமானவனே
5- மா மாயனே -நவநீத -இத்யாதி அபரிச்சேத்யமான ஆச்சர்ய சேஷ்டிதங்கள் உள்ளவனே
6-மாதவா -இவற்றை -மேலும் உள்ளதையும் -கற்றது அவள் இடம் -ராசிக்யம் கற்றுக் கொடுத்து –ஒவ் ஒன்றுடன் சேர்த்து மாதவா -நடு சொல்
மா மாயன் மாதவன் வைகுந்தன் போலே லோக நாத மாதவ பக்த வத்சலன் போல
ஸ்ரீ யபதி -ஏஷ நாராயண ஸ்ரீ மான் -ஷீரார்ணவ நிகேதன -ஆகாதோ மதுராம் புரம் வரவு சொல்லி –
திருப்பேர் நகரான் -திருமால் இரும் சோலை -ஆழ்வார் திரு உள்ளம் போலே
7-சினை யேய் தழைய மரா மரங்கள் ஏழும் எய்தாய் -பணைத்து-இயந்து தழைகளை யுடைய சால வ்ருஷங்கள்
8-சிரீதரா -அத்தாலே சிரீதரா –வீர ஸ்ரீ -சீதையை கண்டு பிடிக்க சுக்ரீவன் விச்வசித்தான் என்றுமாம்
9-இனையாய் இனைய பெயரினாய் -ஸ்வ பாவங்கள்
என்று நைவன் அடியேனே—நிருபாதிகமாய் நிர்ஹேதுகமாக சம்பந்தம் சிதிலம்-
அனுபவ விரோதி நிவர்த்தகம் -/அனுபாவ்ய விபூதி யோகமும் /ஆஸ்ரித சத்தாதி ஹேதுத்வமும்-/
தத் விஷய சௌலப்யாதிகளும்/அத்தால் வந்த உன்மேஷமும் /பிராட்டி சம்பந்தம் /விசுவாச ஜனகத்வமும் அத்தால் வந்த ஔ ஜ்ஜ்வல்யமும்

வினையேன் வினை தீர் மருந்தானாய் விண்ணோர் தலைவா கேசவா
உன்னைப் பார்த்தல் –என்னைப் பார்த்தல் -செய்ய வேண்டாவோ –9/1/விண்ணோர் தலைவன் –வினையேன் சர்வஜ்ஞ்ஞன் நீ -அனந்யகதி நான் –
வினையேன் வினை
சேதனர் எல்லாருக்கும் உள்ள வினை போலே வல்ல வாயிற்று இவரது –பகவத் சம்ச்லேஷம் பெற வேணும் என்று இறே அவர்கள் இருப்பது
-அகல நினைக்கிற இது உள்ளது இவர் ஒருவருக்கும் இறே
தீர் மருந்தானாய்-
நான் கிட்டுகை அத்தலைக்கு அவத்யம் என்று அகலுகைக்கு அடியான வினையைப் போக்கும் மருந்தானவனே-
வினையைப் போக்கிற்று எங்கு நின்றும் வந்து-என்னில்
விண்ணோர் தலைவா
நித்ய அனுபவம் பண்ணா நிற்கச் செய்தே நான் அயோக்யன் என்று அகல வேண்டாதார்க்கு நியந்தாவாய் இருக்கும் இருப்பில் நின்றும் வந்தாயிற்று
கேசவா
அதுக்கு இவ்வருகே ஒரு பயணம் எடுத்து விட்ட படி –
பிரத்யும்னன் -ஆனபின்பே ப்ரஹ்மாதிகள் –
ஆவாம் தவாங்கே சம்பூதௌ தஸ்மாத் கேசவ நாமாவான் -என்கிறபடியே
இவை எல்லாம் ஆழ்வாரை சேர்த்துக் கொள்வதற்கு -தீர்க்க தர்சி அன்றோ அவன் -கோர மாதவம் செய்தனன் கோல்

மனை சேர் ஆயர் குல முதலே மா மாயனே மாதவா
அந்நிலையில் நின்றும் இவ்வருகே போந்து கிட்டின படி
ஏஷ நாராயண ஸ்ரீ மான் விண்ணோர் தலைவா /ஷீரார்ணவ -கேசவ -ஆகாதோ மதுராம் புரம்மனை சேர் ஆயர் குல முதலே-நாராயணன் -பாற்கடலில் பையத் துயின்ற -மா மாயன் வைகுந்தன்–அங்கும் இங்கும் மூவர் அனுபவம் மூன்று இடங்களிலும்  –
மனை -சேர் ஊர் கிருஷ்ணன் ஆயற்கு
இங்கே அவதாரம் செய்யாததால் சேர்த்தல் என்றது
1–பஞ்ச லஷம் குடியாகையாலே மனையோடு மனை சேர்ந்த -என்னுதல் –
2-ஆயர் மனைகளிலே வந்து சேர்ந்து அவர்கள் குலத்துக்கு முதலானவன் என்னுதல்
ஆயர் மனை சேர் குல முதலே -புக்க இடம் -அங்கு ஓர் ஆய்க்குலம் புக்கதும் -அதனால் தான் பிறந்த என்னாமல் சேர்
அன்றிக்கே
3-நாலு மூங்கிலைக் கொண்டு போய்-தங்கும் இடத்தில் வளைத்து தங்குகையாலே சொல்லிற்று ஆதல் —
மா மாயனே –
இடைக் குலத்திலே வந்து பிறந்து -அவர்கள் ஸ்பரசித்த த்ரவ்யமே தாரகமாய் -அது தான் களவு கண்டு புஜிக்கும் படியாய்
அது தான் தலைக் கட்ட மாட்டாதே வாயது கையதாக அகப்பட்டு கட்டுண்டு அடியுண்டு நிற்கும் நிலை
இவ் வெளிமைக்கு அடி சொல்கிறது
மாதவா
அவளோட்டைச் சேர்த்தி-
சினை யேய் தழைய மரா மரங்கள் ஏழும் எய்தாய் சிரீதரா
மகா ராஜரை விஸ்வசிப்பித்து கார்யம் செய்த படி –சினை என்று பணை-ஏய்கை –நெருக்குகை-பணைகளோடு பணைகள் நெருங்கித் தழைத்து
நினைத்த படி இலக்கு குறிக்க ஒண்ணாத படி நின்ற மராமரங்கள் ஏழையும் எய்தவன்-
இத்தால் ஆஸ்ரிதர் தன்னுடைய ரஷணத்தில் சங்கித்தால் – சங்கா நிராகரணம் பண்ணி ரஷிக்குமவன் –என்றபடி
சிரீதரா –
மரா மரங்கள் எய்குகைக்கு இலக்கு குறித்து நின்ற போதை வீர லஷ்மீயைச் சொல்லுகிறது
இனையாய் இனைய பெயரினாய் என்று நைவன் அடியேனே —
இனையாய் -ஏவம் விதமான குண சேஷ்டிதங்களை உடையவனே
இனைய பெயரினாய் –
குண சேஷ்டிதங்களுக்கு வாசகங்களான திரு நாமங்களை உடையவனே
யானி நாமானி கௌனானி குணங்களையும் சேஷ்டிதங்களையும் குறிக்கும் –கேசவா இத்யாதி -மரா மரம் எய்தவன் இத்யாதி
என்று நைவன்
காண வேணும் -கேட்க வேணும் -என்ன மாட்டாதே நையா நின்றேன் -சங்கு சக்கரங்கள் என்று கை கூப்பும் -பலம் இல்லாமல் –
இனையாய் இனைய பெயரினாய் –பல்லாண்டு சொல்ல முடியாமல் நைந்து –
அடியேனே
ஆர் உடைமை அழிகிறது -உடையவர்கள் தங்கள் வஸ்துவை வேணுமாகில் நோக்கிக் கொள்ளுகிறார்கள் என்கிறார்
1-இது ஏதேனும் ஸ்வ தந்திர வஸ்துவாய் படுகிறதோ –அடியேனே –
2-பிறர்க்கு உரித்தாய் அழிகிறதோ —கேசவா அடியேன்
3-உன்னால் ரஷிக்க ஒண்ணாமல் அழிகிறதோ —மரா மரம் ஏழும் எய்தாய்
4-என்னால் ரஷிக்கலாய் அழிகிறதோ —வினையேன் அடியேன் நைவன்

—————————————————————————————-

அவதாரிகை –

நைவன் என்றார் -இவரை நையக் கொடுக்க மாட்டாமையாலே வந்து முகம் காட்டினான் –எத்தை விட்டாலும் –ரஷணம் விட மாட்டானே
அவனைப் பார்த்து நம்மால் வரும் குணாதியமும் இவனுக்கு வேண்டா -என்று அகலுகிறார் -குணாதிக்யம்-சர்வாதிகாரத்வம் வருமே -நீசனும் அடையலாம்

அடியேன் சிறிய ஞானத்தன் அறிதலார்க்கும் அரியானை
கடி சேர் தண்ணம் துழாய்க் கண்ணி புனைந்தான் தன்னைக் கண்ணனை
செடியார் ராக்கை யடியாரைச் சேர்த்தல் தீர்க்கும் திருமாலை
அடியேன் காண்பான் அலற்றுவன் இதனின் மிக்கதோர் அயர்வுண்டே –1-5-7-

அஜ்ஞ்ஞன் -பரம போக்யன்-அத்யந்த சுலபன் – அலற்றுகை – என்ன அறிவு கேடு -நிகர்ஷ அனுசந்தானம் -நிராசராய் அகலப் பார்க்கிறார்
அடியேன் சிறிய ஞானத்தன்-அல்ப ஜ்ஞானத்தனான அடியேன்
அறிதலார்க்கும் அரியானை-அதிசய ஜ்ஞானராலும் அறிய அரியவன்
முதல் அடியில் –அடியேன் என்றது நாம் சொல்லும் நான் -போலே –பொருள் நான் -வார்த்தை அடியேன் –சேஷத்வ நிரூபிதமான அஹம் அர்த்தம்
ஞான ஆனந்த சேஷத்வம் –அடியேன் ஞானத்தன் என்கிறார் -சிறியதாக இருந்தாலும் -சேஷ பூதன் என்று இசைந்து கூற வில்லை –
ஞாத்ருத்வ ஆனந்த்ருத்வ சேஷத்வ நிரூபிதம் ஆத்மா அன்றோ-ஆகையால் நான் சிறிய ஞானத்தன் -என்றபடி -இசையாமல் சொன்னபடி -சம்வாதம் -பெருமாளுக்கும் ஆழ்வாருக்கும் —
கடி சேர் தண்ணம் துழாய்க் கண்ணி புனைந்தான் தன்னைக் கண்ணனை –பரிமளம் செறிந்த குளிர்ந்த -துர் அபபோதத்வம் -போக்யத்வம்
-இனியவன் அறிந்து அனுபவிக்க முடியாது என்று அறிந்து
செடியார் ராக்கை யடியாரைச் சேர்த்தல் தீர்க்கும் திருமாலை -சம்சார காந்தார சம்ச்ப்ருஷ்டராய் ஆக்கை -சரீர சம்பந்தத்தை -கிட்டாத படி ரஷிக்கும்
கைவல்யம் நீக்கும் என்றுமாம் -மூவகை பட்டாரும் அவனையே ஆஸ்ரயிப்பார்கள்
அடியார் -கேவலர் -என்றபடி -ஆத்மபிராப்தி பரர்கள்
அடியார் -அதிசயம் ஏற்படுத்தும் -சேஷ பூதர்-பரகத அதிசய ஆதேன–சேஷத்வம் லக்ஷணம் –
அடியேன் காண்பான் அலற்றுவன் -காண அத்தலைக்கு அவத்யம் வரும் படி அலற்றுவது
இதனின் மிக்கதோர் அயர்வுண்டே-

அடியேன் சிறிய ஞானத்தன் அறிதலார்க்கும் அரியானை
சம்சாரிகளில் அறிவு கேடர் சர்வஜ்ஞ்ஞர் என்னும் படி கிடீர் என் அறிவு கேடு –
அங்கோர் ஆலமர்வித்து -லோகத்தில் குள்ளர்கள் த்ரிவிக்ரமர் போலே —
அல்லேன் என்று அகலுகிற இவர்- அடியேன் -என்கிறது வாசனையாலே –நான் அல்லேன் சொல்லாமல்-
அன்றிக்கே – அடியேன்- என்கிறது அடிமைக்கு இசைந்து அன்று -ஜ்ஞான ஆனந்தகளோ பாதி நிரூபகமாக
சேஷத்வத்தை பிரதி பத்தி பண்ணி இருக்கையாலே அஹம் என்றவோ பாதி அடியேன் என்கிறார் -ஜீவாத்மா அடியவன் -என்கிறார் என்றபடி –
சிறிய ஞானத்தன்
அத்யல்ப ஞானத்தை உடையவன்
அறிதலார்க்கும் அரியானை-
எத்தனையேனும் அதிசய ஜ்ஞானராய் இருப்பார்க்கும் அறியப் போகாதவன் யாயிற்று அவன்
சவதஸ் சர்வஜ்ஞனான தனக்கும் அறியப் போகாது
தனக்கும் தன தன்மை அறிவரியான் -8-8-6-இறே
தம் பிரகாசங்களுக்கு உள்ள சேர்த்தி போரும் கிடீர் எனக்கும் அவனுக்கும் –தேஜஸ் இருள் சேராதே-
கடி சேர் தண்ணம் துழாய்க் கண்ணி புனைந்தான் தன்னைக் கண்ணனை-
அறிவரிய வஸ்துவுக்கு அடையாளம் திருத் துழாய் மாலை
நாட் செல்ல நாட் செல்ல பரிமளம் ஏறி வாரா நின்றுள்ள திருத் துழாய் மாலையைப் புனைந்தவனே
கண்ணனை
அறிவரியவனாய் இருந்து வைத்து -இடையர்க்கும் இடைச்சிகளுக்கும் தன்னை எளியனாக்கி வைத்தவனை-

செடியார் ராக்கை யடியாரைச் சேர்த்தல் தீர்க்கும் திருமாலை
செடி -பாபம்–ஆர்தல் -மிகுதி -பாபம் மிக்கு இருக்கிற சரீரம் -நோய் எல்லாம் பெய்ததோர் யாக்கை இறே -நெய் எல்லாம் பெய்த அக்கார அடிசில் போலே –
ஜரா மரண மோஷாயா மாம் ஆஸ்ரித்ய யதந்தியே -என்று அவனையே உபாயமாகப் பற்றி தூறு மண்டின சரீரத்தை அறுத்துக் கொள்ளும்
அடியார் உண்டு -கேவலர் -அவர்களுக்கு அத்தை அறுத்துக் கொடுக்கும் ஸ்ரீ மானை -கதித்ரய மூலச்தம் –
மாறி மாறி பல பிறப்பும் பிறந்து –செடியார் ஆக்கை தீருவதற்காக -அடியாராகி – மாம் ஆஸ்ரய -ஸ்ரீ கீதா ஸ்லோகம் -எத்தையும் கேட்டவர்களுக்கும் கொடுக்கும் ஸ்ரீ மத்வம் -ஜரா மரண மோஷாயா -யஜந்தி மாம் -அதுக்காக அடியாரானவர்கள் –
அவர்கள் பின்னை அடியரோ என்னில் அடியார் ஆவார் அவர்களே -என்று இருக்கிறார் -சேஷிக்கு அதிசயத்தை விளைவிக்கும் அவரே சேஷ பூதர் ஆவார்-
என்னைப் போலே கிட்டி அவனுக்கு அவத்யத்தை விளைவிக்கப் பாராதே சம்சார சம்பந்தத்தை அறுத்துக் கொண்டு கடக்க நிற்கிறவர்கள் இறே-
அகல நினைக்கும் இவருக்கு அவர்கள் தான் உண்மையான அடியார்கள் நொந்து சொல்லும் சொல் –எழுவார் —
விடை கொள்வார் -வழுவா வகை நினைந்து வைகல் தொழுவார்-
உமக்கு இப்போது வந்தது என் -என்ன
அடியேன் காண்பான் அலற்றுவன் இதனின் மிக்கதோர் அயர்வுண்டே —
அடியேன் -என்பது -காண வேணும் என்பதாகா நின்றேன்
சம்சாரியான நாளில் அறிவே நன்றாய் இருந்தது இறே -அது நன்றானபடி என் என்னில்
அப்போது கடக்க நின்று பகவத் தத்வத்தையே குறி அழியாமே வைத்தேன்
இப்போது அன்றோ நான் கிட்டி நின்று அழிக்கப் பார்த்தது -இதில் காட்டில் அறிவு கேடு உண்டோ-
மதிநலம் அருளப் பெற்று இப்படி அறிவு கேடன் ஆனானே –

——————————————————————————————–

அவதாரிகை —

இவர் இப்படி அகலப் புக்கவாறே -இவர் துணிவு பொல்லாதாய் இருந்தது -இவரைப் பொருந்த விட வேணும் என்று பார்த்து –
வாரீர் ஆழ்வீர்-திருவாய்ப்பாடியிலே வ்ருத்தாந்தம் கேட்டு அறியீரோ -என்ன
அடியேன் அறியேன் என்றார் –அது கேட்கையில் உண்டான ஸ்ரத்தையாலும் -அவன் தான் அருளிச் செய்ய கேட்க வேணும் என்கிற
ஸ்ரத்தையாலுமாக –-முன்பு ஒரு காலத்தில் பூமியை எடுத்து வயிற்றிலே வைத்தோம் -பின்பு அது தன்னை வெளி நாடு காண உமிழ்ந்தோம்
அதில் ஏதேனும் சேஷித்தது உண்டதாகக் கருதி திருவாய்ப்பாடியிலே வெண்ணெயை விழுங்கினோம் காணும் -என்ன-
அது இதுக்குப் பரிஹாரமாகச் செய்தாயோ -அது ஒரு கால விசேஷத்திலே இது ஒரு கால விசேஷத்திலே என்ன-
ஆனால் இது நாம் ஏதுக்குச் செய்தோம் -ஆஸ்ரித ஸ்பர்சம் உள்ள த்ரவ்யம் உனக்கு தாரகம் ஆகையாலே செய்தாய் அத்தனை என்ன
ஆனால் அவ் வெண்ணெயோ பாதி உம்மோட்டை சம்ச்லேஷமும் நமக்குத் தாரகம் காணும் -ஆனபின்பு
நீர் உம்மைக் கொண்டு அகலுவீர் யாகில் திருவாய்ப்பாடியில் வெண்ணெய் விலக்கினார் புக்க லோகம் புகுவீர் கிடீர் -என்றான்
-அவன் கருத்தை தாம் அறிந்தமை தோற்ற அநு பாஷிக்கிறார் இப்பாட்டில்

உண்டாய் உலகு ஏழ் முன்னமே யுமிழ்ந்து மாயையால் புக்கு
உண்டாய் வெண்ணெய் சிறு மனிசர் உவலை யாக்கை நிலை எய்தி
மண் தான் சோர்ந்தது உண்டேலும் மனிசர்க்காகும் பீர் சிறிதும்
அண்டா வண்ணம் மண் கரைய நெய்யூண் மருந்தோ மாயோனே –1-5-8-

நம் சம்பந்தம் உள்ளாரை கை விடோம் -இத்தால் வரும் அவத்யம் -இல்லை -அபதானத்தில் கண்டு கொள் –ஆஸ்ரித வியோமோஹம்-கர ஸ்பர்சம் பிடிக்குமே –
உண்டாய் உலகு ஏழ் முன்னமே -சமஸ்த லோகத்தையும் அமுது செய்து
யுமிழ்ந்து -உமிழ்ந்தாய்-
மாயையால் புக்கு உண்டாய் வெண்ணெய் -கிரித்ரிமத்தால் புக்கு
சிறு மனிசர் உவலை யாக்கை நிலை எய்தி -தாழ்ந்த யாதவ குல சரீரம் கொண்டு -தோஷத்தால் வென்றவன் கண்ணன் -குணத்தால் வென்றவர் ராமர்
மண் தான்சோர்ந்தது உண்டேலும்
மனிசர்க்காகும் பீர் சிறிதும் அண்டா வண்ணம் மண் கரைய
நெய்யூண் மருந்தோ மாயோனே-ஒ -பிரிநிலைமருந்து ஆகாது என்றபடி
பீர் -வெளுப்பு -மண் உண்டால் உடம்பில் பசலை நோய் வருமே
ஆஸ்ரித வஸ்து ஒழிய செல்லாது –
அன்னை குடி நீர் அருந்தி தன்னுடைய குழந்தை நோய் தவிறாளோ-ராமானுஜர் மருந்து -எங்கள் நோய் தீர
காலாந்தரம் -அதிகாரி வேற -ஆழ்வார் வாதம் -இவன் பிரதிவாதம் –
மண் தங்காது -நன்றாக உமிழ்ந்தீர் -மாற்று மருந்து வேண்டாம் -உம்மை அடைய எதிர் சூழ புகுந்து -சம்பந்தம் இல்லா வாதம் வைத்து நீர் அகலலாமோ
நீர் வேணும் என்று நான் இறங்கி வந்து இருக்க -ஆழ்வார் சமாதானம் அடைந்தார் –

உண்டாய் உலகு ஏழ் முன்னமே யுமிழ்ந்து — லோகங்கள் ஏழையும் எடுத்து வயிற்றிலே வைத்தாய் முன்பு ஒரு காலத்தில்
பின்னை அதுதன்னை வெளிநாடு காண உமிழ்ந்து
மாயையால் புக்கு உண்டாய் வெண்ணெய்மாயா -இச்சா ரூபா ஞானம் என்றபடி –
மாயா வயுனம் ஜ்ஞானம் -என்கிறபடியே இச்சா பர்யாயமாய் இருக்கிற ஜ்ஞானத்தாலே புக்கு உண்டாய் வெண்ணெய் –
அது செய்யும் இடத்தில் சக்கரவர்த்தி திரு மகனாய்ப் புக்கு -வெண்ணெய் அமுது செய்ய -என்றால் கொடார்கள் இறே
சிறு மனிசர் உவலை யாக்கை நிலை எய்தி –உன் விருப்பாதால் அந்த நிலை எய்தினாய் –
ஷூத்ரரான மனுஷ்யர்களுடைய ஹேயமான சரீரத்தினுடைய நிலையை-அப்ராக்ருத திவ்ய சமஸ்தானத்துக்கு உண்டாக்கிக் கொண்டு
வந்தாயிற்று இப்படிச் செய்தது
கறையினார் துவருடுக்கை -என்கிறபடியே என்கிறபடியே இடையர் அளவிலே தன்னை அமைத்து வந்து கிட்டி இறே வெண்ணெய் அமுது செய்தது
சபலம் தேவி சஞ்ஜாதம் ஜாதோஹம் யத் தவோதராத் -என்னா நிற்கச் செய்தது இறே
நைஷ கர்ப்பத்வமாபேத ந யோன்யாம்வசத் பிரபு -என்கிறது
இஷ்வாகு வம்சயரில் ஒருவன் யாகம் பண்ணா நிற்க -பிபாசை வர்த்தித்தவாறே -மந்திர பூதமான ஜலத்தை பானம் பண்ண கர்ப்பம் உண்டாயிற்று
மாந்தாதா கதை -கர்ப்பம் உண்டாயிற்றே -கும்ப ஜலத்துக்கு இந்த சக்தி உண்டே
சுக்ல சோணீத ரூபத்தாலே பரிணதமாய் யன்று இறே -சக்த்யதிசயத்தாலே இப்படிக் கண்ட பின்பு -சர்வ சக்திக்கு கூடாதது இல்லை-என்று கொள்ளத் தட்டில்லை இறே
மண்ணை அமுது செய்தது -அதின் சத்தைக்காக-
வெண்ணெயை அமுது செய்தது உன் சத்தைக்காக –
மண் தான் சோர்ந்தது உண்டேலும் மனிசர்க்காகும் பீர் சிறிதும் அண்டா வண்ணம் மண் கரைய நெய்யூண் மருந்தோ மாயோனே –
பூமியைத் திரு வயிற்றிலே வைத்து உமிழ்ந்த போது சேஷித்தது ஏதேனும் மண் உண்டாகிலும் பிற்பட்ட மனுஷ்யர்க்கு அத்யல்பமும்
சேஷியாத படி நெய் அமுது செய்தது அதுக்கு ஓர் மருந்தோ —பீர் -சிறிது -வெளுப்பு இரண்டு அர்த்தங்கள் இரண்டு நிர்வாஹம் —
ஒன்றும் சேஷியாத படி அமுது செய்யிலோ மருந்தாவதோ
அன்றிக்கே பீர் –சோகை -என்று வைவர்ண்யமாய்-மண்ணிலே சிறிது சேஷித்தால் மனுஷ்யர்க்கு வரக் கடவதான-வைவர்ண்யம் சிறிதும் வாராத படி நெய்யூண் மருந்தோ-அன்று இ றே -ஆனால் ஏதுக்குச் செய்தோம் என்னில்
மாயோனே
ஆஸ்ரித ஸ்பர்சம் உள்ள த்ரவ்யத்தால் அல்லது தாரணம் இல்லாத படியான ஆஸ்ரித வ்யாமோஹத்தாலே செய்தாய் அத்தனை அன்றோ –

——————————————————————————————

அவதாரிகை

திருவாய்ப்பாடியில் யசோதாதிகள் வெண்ணெயோ பாதி தாரகம் காணும் நீர் தண்ணிதாக நினைத்து இருக்கிற உடம்பு -என்றான்
பாவ பந்தம் உள்ளவர்களுடைய வெண்ணெய் உனக்கு தாரகம் -அது இல்லாத என்னோட்டை ஸ்பர்சம் உனக்கு நஞ்சு -என்றார்
நஞ்சோ தான் -நஞ்சானமை குறையில்லையே -என்றான் அவன் –இவரும்-இது நஞ்சே இதுக்கு ஒரு குறை இல்லை -என்றார்
ஆனால் பூதனையினுடைய நஞ்சு தாரகமான நமக்கு ஆகாதது இல்லை காணும் –என்றான் –என்னை– பொருந்துகிறார்-(அப்யமகம வாதம் / அநப்யமகம வாதம் -இரண்டாலும் அருளிச் செய்து பொருத்தினான்)
அன்றிக்கே -பூதனையை முடித்தால் போலே நான் அல்லேன் –என்று அகலப் புக என் நிர்பந்தத்தைப் போக்கினான் என்பாரும் உண்டு
விடப்பால் அமுதாய் -முதல் நிர்வாஹம் –வஞ்சப் பேய்-என்பதில் நோக்கி -இரண்டாவது நிர்வாஹம்-

மாயோம் தீய வலவலைப் பெருமா வஞ்சப் பேய் வீய
தூய குழவியாய் விடப்பால் வமுதா வமுது செய்திட்ட
மாயன் வானோர் தனித்தலைவன் மலராள் மைந்தன் எவ்வுயிர்க்கும்
தாயோன் தம்மான் என்னம்மான் அம்மா மூர்த்தியைச் சார்ந்தே –1-5-9-

சர்வாத்ம வத்சலன் -கிட்டி உஜ்ஜீவிக்கக் கடவோம் என்கிறார் மாயோம் -இரண்டு தலையையும் முடித்துக் கொள்ள வல்லோம்
தாமும் தம் தொண்டர்களும் மாயோம் என்றுமாம்
தீய வலவலைப் பெருமா வஞ்சப் பேய் வீய -மீமிசைச் சொல்/பெரு மா –சர்வஞ்ஞனும் தாய் என்று பிரமிக்கும்  படி –
வலவலை-வழ வழ பேசுபவள் -தாய் போலே வாய் புலற்றி-
தூய குழவியாய்-புரை யற்ற பிள்ளைத் தனம் -தாய் பால் போலே ஆதாரத்துடன்
விடப்பால் வமுதா வமுது செய்திட்ட மாயன்-விஷமும் அமுதமாகும் வேளையில் அவதரித்தானே -ஆஸ்ரித ஸ்வ பாவன்
வானோர் தனித்தலைவன் -நித்ய சூ ரிகளுக்கும் அத்விதீய நிர்வாஹகன்
மலராள் மைந்தன் -போக்யமான யௌவனம் -மைந்தன்
எவ்வுயிர்க்கும் தாயோன்-மாத்ருவத் வத்சல்யன்
தம்மான்-தனக்குத் தானே ஈஸ்வரன் பதிம்விச்வச்ய ஆத்மேச்வரம்
என்னம்மான்-என்னை அகலாமை அருளிய சுவாமி
அம்மா மூர்த்தியைச் -அம்மா விக்ரக வைலஷண்யம் கொண்டவன் -ஈர்க்க வல்ல
சார்ந்தே-பிரியாமல் இருக்க அனைவரும் சத்தை பெறுவார்
இருவருக்கும் பயன் ஆன பின்பு எதற்காக விலக வேண்டும் –உன்தனக்கும் அது –

மாயோம் –
பிரிகையாவது விநாசம் என்று இருக்கையாலே இனி அகன்று மாயக் கடவோம் அல்லோம் -என்கிறார் –
நானும் என்னோடு சம்பந்தம் உடையாரும் முடியக் கடவோம் அல்லோம் –
அன்றியே இரண்டு தலையையும் அழித்துக் கொள்ள கடவோம் அல்லோம்
தீய வலவலைப் பெருமா வஞ்சப் பேய் வீய
ஸ்தன்யம் தத் விஷ சம்மிச்ரம் ரஸ்ய மாஸீத் ஜகத் குரோ -என்கிறபடியே ஜகத்துக்கு வேர் பற்றானவனை முடிக்கப் பார்த்த நெஞ்சில்
தீமையை உடையளாய்–யசோதைப் பிராட்டியைப் போலே பரிவு தோற்ற ஜல்ப்பித்துக் கொண்டு வருவாளாய்
ஸ்வதஸ் சர்வஜ்ஞனானவனும் தாய் என்று பிரமிக்கும் படி தோற்றின மகா வஞ்சகையான பூதனை முடியும்படியாக
ஒரு வழிப்பாதை -அனுகூலர் திரும்பார் பிரதிகூலர் முடிவார்கள்–அநந்ய வஸ்து நஞ்சு -குந்துமணி -தங்கம் -கதை -பொத்த உரல் -கண்ணி நுண் சிறுத் தாம்பு
128 மைல் -பிருந்தாவனம் -விரஜை வாசிகள் -இன்றும் லீலா -அனுபவித்துக் கொண்டு –
சரபங்கர் ஆஸ்ரமம் -இந்த்ரன் வர –ராமாவதாரம் ஈஸ்வரத்தன்மை காட்டாமல் –இவன் தொட்டால் எதுவும் தூய்மை யாகுமே -அமுதம் ஆகுமே விஷமும் –
தூய குழவியாய் –
ஐஸ்வரமான மேன்மையும் நடையாடா இருக்கச் செய்தே அது தோற்றாதபடி கலப்பற்ற பிள்ளைத் தனத்தை உடையனாய்
இவனுக்கு பிள்ளைத் தனத்தில் குறை இல்லை யாகில் அதின் கார்யம் காணாது ஒழிவான் என் என்னில் -விஷம் கார்யம் செய்யாதது எதனால் –
விடப்பால் வமுதா –
விஷம் அமிர்தமாம் முஹூர்த்தத்திலே யாயிற்று பிறந்தது
தர்மியை வேறாக்க ஒண்ணாமையாலே விரோத்தித்த ஆசூர பிரக்ருதிகள் முடிய பிராப்தம்
வைகுண்ட நாதனும் இந்த பிள்ளையும் ஒரே தர்மி என்றவாறே –

வமுது செய்திட்ட மாயன்
விஷம் அமிர்தமாம் படி அமுது செய்து-தன்னை காப்பாற்றி – தன்னைத் தந்து நம்மை உண்டாக்கின ஆச்சர்ய பூதன் –
புனல் தரு புணர்ச்சி பூ தரு புணர்ச்சி களிறு தரு புணர்ச்சி –தன்னைக் காத்து –அதனால் தங்களை சமர்ப்பிப்பார்களே ஆழ்வார்கள்
-சத்தையை உண்டாக்கிய ஆச்சர்ய பூதன்
எனக்கும் அல்ல -பிறர்க்கும் அல்ல –அவனுக்கே -என்று அவள் அனந்யார்ஹம் ஆக்குகையாலே அமிர்தம் ஆயிற்று –
இதனாலே ஆத்மாவின் வினைகளும் கழியுமே
பூதனையுடைய விஷம் அமிர்தமாம் படி அமுது செய்தவன் தான் ஆர் -என்னில்

வானோர் தனித்தலைவன் மலராள் மைந்தன்
அயர்வறும் அமரர்களுக்குத் தனித்தலைவன் ஆனவன் –
அவர்கள் பரிந்து பரிசர்யை பண்ண பெரிய பிராட்டியாரும் தானுமாய் இருக்குமவன்
தேவிமாராவார் திருமகள் பூமி ஏவ மற்று அமரர் ஆட் செய்வார் -என்கிறபடியே
மைந்தன்
அவளுக்கு மிடுக்கானவன் -அவளோட்டை சேர்த்தியாலே நித்தியமான நவ யௌவனத்தை உடையவன் -என்னுதல்
அவளோட்டை சேர்த்தியாலே அழகிய மணவாளப் பெருமாளாய் இருக்கிறவன் என்னுதல்
எவ்வுயிர்க்கும் தாயோன்
சகல ஆத்மாக்களுக்கும் தாய் போலே பரிவானவன்
தம்மான் என்னம்மான் அம்மா மூர்த்தியைச் சார்ந்தே –
தம்மான் -சர்வேஸ்வரன்
என்னம்மான் -நான் தன்னை அகன்று முடிந்து போகாதபடி நோக்கினவன்
நித்ய ஸூரிகளும் மற்றும் உள்ள சகல ஆத்மாக்களும் ஒரு தட்டும் தான் ஒரு தட்டுமாம்படி என் பக்கலிலே
விசேஷ கடாஷத்தை பண்ணினவன் என்றுமாம்
அம்மா மூர்த்தியைச் சார்ந்தே —
விலஷணமான திருமேனியை உடைய அம் மஹா புருஷனைக் கிட்டி மாயக் கடவோம் அல்லோம்
மூர்த்தி -அழகான திரு மேனி என்றும் மஹா புருஷன் என்றுமாம்-
தச் சப்தத்தால் –அம்மாகாரம் –பிரசித்திவிலஷணம்-விக்ரஹத்திலும் புருஷனிலும் சேர்த்து -மா மூர்த்தி -சேர்த்து-
சஹச்ராஷ சீர்ஷா புருஷ -மா -வேதஹா மேதம் புருஷம் -மஹாந்தம்

———————————————————————————————

அவதாரிகை –

இப்படி இவரை இசைவித்து வைத்து ஒரு புதுமை செய்ய வேண்டாதபடி யான பரமபதத்தைக் கோடிக்கத் தொடங்கினாள்-

சார்ந்த விரு வல்வினைகளும் சரிந்து மாயப் பற்று அறுத்து
தீர்ந்து தன்பால் மனம் வைக்கத் திருத்தி வீடு திருத்துவான்
ஆர்ந்த ஞானச் சுடராகி யகலம் கீழ் மேல் அளவிறந்து
நேர்ந்த யுருவாய் யருவாகும் இவற்றின் உயிராம் நெடுமாலே –1-5-10-

சமாஹிதனர் ஆனார் -ப்ரீதரான அவனைக் கண்டு ஹ்ருஷ்டர் ஆகிறார்
சார்ந்த விரு வல்வினைகளும் -வலியபுண்ய பாப
சரிந்து மாயப் பற்று அறுத்து -அஜ்ஞ்ஞான கார்யம் -விஷயான்தார ஈடு பாட்டு அறுத்து
தீர்ந்து தன்பால் மனம் வைக்கத் திருத்தி
அவனுக்கே யாம் படி பண்ணி
அனுபவிக்க மனம் பிரதிஷ்டிதமாம் படி -அவனுக்கே -திருத்தி
வீடு திருத்துவான் -ஸ்ரீ வைகுண்டம் திருத்த -அங்குமா -உம்மைப் போலே மகா புருஷன் அங்கே போக அதற்கு ஏற்ற
-இந்த சரீரத்துடனே கூட்டிச் செல்ல -ஸ்வாதந்த்ரம் –ஒரு புதுமை செய்வான் –
கடி மா மலர் பாவை உடன் உள்ள சாம்ய ஷட்கத்தாலே
பின்னை கொல் திரு மா மகள் கொல் நிலா மகள் கொல்-அவளும் நின் ஆகத்து இருப்பதும் கண்டும் -நின் மேல் ஆசை விடாளால்
ஆர்ந்த ஞானச் சுடராகி -நிறைந்த ஞான பிரபை
யகலம் கீழ் மேல் அளவிறந்து -அளவிறந்த ஸ்வ ரூபனாய்
நேர்ந்த யுருவாய் யருவாகும் -அதி சூஷ்மமான உருவமான அசித்தும் அருவமான சித்தும்
உபய வியாப்தியும் தமக்காக -என்கிறார் ஆழ்வார்
இவற்றின் உயிராம் நெடுமாலே-அள்ள அள்ள குறையாத வியாமோஹம்

சார்ந்த விரு வல்வினைகளும் சரிந்து மாயப் பற்று அறுத்து
திலதைலவத் தாருவஹ் நிவத் -என்கிறபடி பிரிக்க ஒண்ணாத படி பொருந்திக் கிடக்கிற புண்ய பாப ரூப கர்மங்களையும் சரித்து
சர்வ சக்தியான தான் போக்கும் அன்றும் போக்க ஒண்ணாத படி சதசாகமாகப் பணைத்த வினைகளை –சரிந்து-
விரகர் நெடும் சுவர் தள்ளுமா போலே போக்கி –சரிந்து-
மாயப் பற்று அறுத்து
ருசி வாசனைகளையும் கழித்து
தீர்ந்து தன்பால் மனம் வைக்கத் திருத்தி வீடு திருத்துவான்
தீர்ந்து -தான் க்ருத்க்ருத்யனாய் -என்னுதல்
தீர்ந்து தன்பால் மனம் வைக்கத் திருத்தி –
அல்லேன் என்று அகலாதே –தனக்கே தீர்ந்து -தன் பக்கலிலே நெஞ்சை வைக்கும்படி திருத்தி –
வீடு திருத்துவான்
கலங்கா பெரு நகருக்கும் ஒரு புதுமை பிறப்பியா நின்றான்
ஆர்ந்த ஞானச் சுடராகி –
பரிபூர்ண ஞான பிரபனாய்
யகலம் கீழ் மேல் அளவிறந்து
பத்து திக்கிலும் வியாபித்து
நேர்ந்த யுருவாய் யருவாகும் இவற்றின் உயிராம் –
அதி ஸூ ஷ்மமான சேதன அசேதனங்களுக்கும் ஆத்மாவாய் இருக்கிற
அன்றிக்கே –நேர்ந்த -கிட்டின -அதாவது ப்ரத்யஷ பரித்ருஷ்டமான ப்ரக்ருத் யாத்மாக்களுக்கும் ஆத்மாவாய் -என்றுமாம்
நேர்ந்த -சூஷ்ம -காரண அவஸ்தையில் -அந்தராத்மா
அகலம் -கீழ் மேல் ஸ்தூல சித் அசித் வியாப்தி
அளவிறந்த -பஹிர் வியாப்தி
நேர்ந்த -அந்தர்வியாப்தி
நெடுமாலே —
இப்படி இருக்கிற நெடுமால் வீடு திருத்துவானான்
வ்யாப்தியும் இவரைப் பெற்ற பின்பு புதுக் கணித்தது -என்னுதல்
அன்றியே -ஒருவனைப் பிடிக்க நினைத்து ஊரை வளைப்பாரை போலே இவரைத் திருத்துகைக்காக வ்யாப்தனாய் இருந்தான் என்னுதல்
மனம் வைக்க திருத்தின பின்பு –ஆர்ந்த –வீடு திருத்துவான் -தனக்கே அற்று தீர்ந்து -தனது வியாப்தி பலித்தது-
தீர்ந்து -எடுத்த செயல் முடித்தான் -க்ருதக்ருத்யன் என்றவாறு -வியாப்தியின் பலம் பெற்றேன் -இவரை திருத்தவே வியாப்தி –
நெடுமாலே
முனியே நான் முகன் அளவும் அவன் பண்ணின உபகாரத்தைச் சொல்லுகிறது
அவன் தெளிந்து வந்து கொடு போகப் பற்றாமே கூப்பிடுகிறார் இறே நடுவு எல்லாம் –
வீடு திருத்துவான் -போனானே -வியாமோஹம் தெளிய வேண்டுமே -1-6-1 முதல் 10-10-10 -வரை நடுவு எல்லாம் கூப்பிடுகிறார் –
நாடு திருந்தின வாறே திரும்பி வந்தார் –-அதனால் காலம் தாழ்த்தினான் –
ஊரும் நாடும் உலகமும் —பேரும் தாரும் தம்மைப் போலே பிதற்றப் பண்ணினார் –

————————————————————————————

அவதாரிகை

நிகமத்தில் -இத் திருவாய் மொழியை அப்யசிக்க வல்லார்க்கு -அவன் வரக் கொள்ள –அயோக்ய அனுசந்தானம் பண்ணி
அகன்று இவர் பட்ட கிலேசம் பட வேண்டா -என்கிறார் –

மாலே மாயப் பெருமானே மா மாயனே என்று என்று
மாலே ஏறி மால் அருளால் மன்னு குருகூர்ச் சடகோபன்
பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும் ஆயிரத்தின்
பாலே பட்ட இவை பத்தும் வல்லார்க்கு இல்லை பரிவதே –-1-5-11-

பலமாக ஸுவ நிகர்ஷ அனுசந்தான துக்கம் இல்லை
மாலே -சர்வாதிக சேஷித்வ உத்கர்ஷம்
மாயப் பெருமானே -நித்ய சம்சாரிகளையும் நித்ய சூ ரிகள் உடன் கோவையாக்கி கொடுக்குமே -ஸ்வா தந்த்ரம் உண்டே
மா மாயனே என்று என்று -விபூதி விக்ரஹ சேஷ்டிதங்கள் அபரிச்சின்னமாக உடையவனே
ஒவ் ஒரு வர்க்கத்துக்கும் -ஒரே சேஷி ஒரே பிராபாகன் ஒரு பிராப்யன்
மாலே ஏறி -ஒவ் ஒன்றையும் பார்த்து சேராமல் அகன்று
மால் அருளால்-வத்சலன் அருளால் -நிரவதிக கிருபையால்
மன்னு குருகூர்ச் சடகோபன் -சமாஹிதராய் ஆழ்வார் உடைய
பாலேய் தமிழர்இயல் அறிந்த -தமிழ் பகுதியில் பொருந்திய
இசைகாரர்- இசை அறிந்த
பத்தர் பொருள் அறிந்த
பரவும் ஆயிரத்தின்
பாலே பட்ட இவை பத்தும் வல்லார்க்கு இல்லை பரிவதே
கடலில் முத்து பட்டது போலே இவை -சௌசீல்யம் காட்டும் திருவாய்மொழி –
பாவ உக்தமாக அப்யசிக்க வல்லார் -கிலேசம் இல்லை -ஸுவ நிகர்ஷம் -காரணமான விச்லேஷம் இல்லை

மாலே
ஸ்வரூபத்தால் வந்த விபுத்வம் -வானோர் இறையை -1-5-1- என்றாரே
மாயப் பெருமானே
குணத்தால் வந்த விபூத்வம் -வெண்ணெய் தொடு வுண்ட -1-5-1- என்றாரே
மா மாயனே
சேஷ்டிதங்களால் வந்த ஆதிக்யம் -இள வேறு ஏழும் தழுவிய -1-5-1- என்றாரே
என்று என்று மாலே ஏறி –
ஏவம் விதமான வை லஷண்யத்தை அனுசந்தித்து -நான் அயோக்யன் -என்று அகலும்படி பிச்சேறி
மால் அருளால் மன்னு குருகூர்ச் சடகோபன்
தன்னை முடித்துக் கொள்வதாக கழுத்திலே கயிற்றை இட்டுக் கொண்டவனை யறுத்து விழ விடுவாரைப் போலே
அகன்று முடியப் புக இவரைப் பொருந்த விட்டுக் கொள்ள -அவன் அருளாலே பொருந்தின ஆழ்வார்
பிடி தோறும் நெய் ஒழியச் செல்லாத ஸூகுமாரரைப் போலே நின்ற நின்ற நிலைகள் தோறும் அவன் அருள் ஒழிய நடக்க மாட்டார்
தர்மர் -த்வம் த்வங்கார அத்யாயம் -பவ சொல்லாமல் -கொல்வதற்கு சமம் -நின்ற நின்ற தசைகளில் அவன் அருளே
மயர்வற மதிநலம் அருளினான் -என்றும் அருளாத நீர் அருளி -போலே அருளிச் செய்தாரே
பாலேய் தமிழர் –
பால் போலே இனிய தமிழை உடையவர்கள்
இசைகாரர் –
இயலுக்கு இசைய இசை இட வல்லவர்கள் -ஸ்ரீ மதுர கவியும் ஸ்ரீ நாத முனிகளையும் போல்வார்கள்
பத்தர் –
பகவத் குண அனுபவத்தில் இவர் தம்மைப் போலே காலாழும் நெஞ்சு அழியும் கண் சுழலும் -என்று இருக்குமவர்கள்
ஆழ்வான் ஒரு உருவிலே -ஸ்ரீ பராங்குச நம்பியை –பாலேய் தமிழர் என்கிறார் –
இசைகாரர் என்கிறது ஆழ்வார் திருவரங்கப் பெருமாள் அரையரை-பத்தர் என்கிறது -பிள்ளை உறங்கா வல்லி தாசரை -என்று பணித்தானாம்
பாலேய் தமிழர் -என்கிறது முதல் ஆழ்வார்களை -இசைகாரர் -என்று திருப் பாண் ஆழ்வாரை –பத்தர் -என்கிறது பெரிய ஆழ்வாரை -என்று
ஆளவந்தார் அருளிச் செய்வர்
இயல் அறிவார் இசை அறிவார் பகவத் குண வித்தராய் இருப்பர்-
இவர்கள் பரவும் –
இவர் அகலுகை தவிர்ந்து பாடின பின்பு உண்டான லோக பரிக்ரஹத்தைச் சொல்கிறது-
இவர் அகன்றால் பரவ முடியாதே –பத்தர் பரவும் ஆயிரம் -த்ரிகால சர்வஜ்ஞ்ஞர் -அதனால் ஆயிரம் -என்கிறார்
ஆயிரத்தின் பாலே பட்ட-
கடலிலே முத்துப் பட்டது -என்னுமா போலே -ச்லாக்கியமான ஆயிரத்தின் நடுவே பட்ட இத் திருவாய் மொழி வல்லார்க்கு
இல்லை பரிவதே —
பரிவது இல்லை
அஞ்சிறைய மட நாரையிலே தூது விட்டு
அவன் வந்து சம்ச்லேஷ உன்முகன் ஆனவாறே
அயோக்யன் என்று அகன்று படும் துக்கம் இல்லை –

முதல் பாட்டிலே அயோக்யன் என்று அகன்றார்
இரண்டாம் பாட்டில் அகலுகைக்கு தானும் அதிகாரி அல்லேன் என்றார்
மூன்றாம் பாட்டில் சீல குணத்தைக் காட்டித் துவக்க துவக்குண்டார்
நாலாம் பாட்டில் அகல ஓட்டுவார்களோ உடையவர்கள் என்றார்
அஞ்சாம் பாட்டில் உடைய உன் திருவடிகளைக் கிட்டும்படி பார்த்து அருள வேணும் என்கிறார்
ஆறாம் பாட்டில் அவன் அரை ஷணம் தாழ்க்க முடியப் புகா நின்றேன் என்றார்
ஏழாம் பாட்டில் அப்படி அவன் வரக் கொள்ள அயோக்யன் என்று அகன்றார்
எட்டாம் பாட்டில் திருவாய்ப்பாடியிலே வெண்ணெயோபாதி உம்மோட்டை சம்ச்லேஷகமும் தாரகம் -என்றான் அவன்
ஒன்பதாம் பாட்டில் –அப்படி அல்ல இது நஞ்சு என்ன நஞ்சு தானே தமக்கு தாரகம் –என்றான்
பத்தாம் பாட்டில் தம்மை இசைவித்து பரமபதத்தைக் கோடிக்கத் தொடங்கினான் என்றார்
நிகமத்தில் கற்றார்க்கு பலம் சொல்லித் தலைக் கட்டினார்

——————————————————————————————

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

ஸ்வ ஆலிங்க நாதி சபலே புருஷோத்தமன் அபி
ஸுவ அயோக்யதாம் அபிதா -விமுக சடாரி
த்ரிவிக்ரமாதி சரிதம் பிரதிபோத்ய
தேன நீத சீல வசதாம் -அத பஞ்சமே அபூத் 

————————————————————————

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன்

ஷுத்ராஹ்வைம்– அது கண்டு அபிமுகம்
நிஜ மஹிமா திரஸ்கார அர்ச்சாப் பிரியத்வாத்
ஸர்வதரா அங்கரி-குணா குணம்
சவித சயன-ஷீரார்ணவம்
ஸுவ அங்க்ரி -ஆசை யுடையார் இடம் ஆசை
கோப ஆப்தன்
அசேஷ க்ஷணம்விஷயதையா
பக்த வஸ்து ப்ரசக்தே -வெண்ணெய் -ஆச்ரித காரா ஸ்பர்சம்
சிலிஷ்யன்–
தத் அஹித சமனம்-சார்ந்த இரு வல் வினைகள் அறுத்து
சுசீலன்

 

————————————————————————-

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 5–பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்–

வளம் மிக்க மால் பெருமை மன்னுயிரின் தண்மை
உளமுற்று அங்கூடுருவ ஓர்ந்து -தளர்வுற்று
நீங்க நினை மாறனை மால் நீடு இலகு சீலத்தால்
பாங்குடனே சேர்த்தான் பரிந்து—————-5-

ஊடுருவ  ஓர்ந்து -தீர்க்கமாக ஆராய்ந்து

—————————————————————————————————————————————-
-அவதாரிகை –

இதில் சர்வ சமாஸ்ரயணத்துக்கு உறுப்பாக
சௌசீல்யத்தை பேசுகிற பாசுரத்தை
அனுவதித்து -அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
அஞ்சிறைய மட நாரையில் தூத பரேஷண வ்யாஜத்தாலே
தம் ஆற்றாமையை அவனுக்கு அறிவித்த
அநந்தரம்
அவன் வந்து சம்ச்லேஷித்து அருளக் கண்டு
அவன் பெருமையையும் தம் சிறுமையையும் நினைத்து
ஸூ ரி போக்யனானவனை அயோக்யனான நான் கிட்டி
தூஷிப்பதில் அகன்று போகை நன்று என்று தாம் அகலப் புக
ஆழ்வீர்-
உம்முடைய பொல்லாமையைப் பாராதே
நம்முடைய செல்லாமையைப் பாரீர் -என்று
ஆக்ரம்யா லோகன் -என்று
த்ரிவிக்ரம அபதான சித்தமான தன் சௌசீல்யத்தையும்
நவநீத சௌர்ய வ்ருத்தாந்த சித்தமான தன் செல்லாமையையும் காட்டி
தம்மை அவன் சேர்த்துக் கொள்ள
அத்தாலே தாம் அகலுகை தவிர்ந்து பொருந்தின படியை அருளிச் செய்கிற
வள வேழு உலகின் அர்த்தத்தை
வளம் மிக்க -இத்யாதியால்
அருளிச் செய்கிறார் -என்கை-

—————————————————————————————————————————————–

வியாக்யானம்–

வளம் மிக்க மால் பெருமைமன்னுயிரின் தண்மை –
அதாவது –
அச்ப்ருஷ்ட சம்சார கந்தரான நித்ய ஸூரி நிர்வாகத்தால் வந்த
சர்வேஸ்வரன் உடைய பெருமையையும்
அசித் சம்ஸ்ருஷ்டம் ஆகையாலே ஹேய சம்சர்கார்ஹ்யமாய்
அணு பரிணாமமாய் இருக்கிற ஆத்மாவின் உடைய தண்மையையும்-என்கை
வள வேழ் உலகின் முதலாய வானோர் இறையை
கள வேழ் வெண்ணெய் தொடு யுண்ட கள்வா என்பன்
அருவினையேன் -என்று அருளிச் செய்த படியை அடி ஒற்றின படி –

உளமுற்று –
எம்பெருமான் யுடையவும்
தம்முடையவும்
உத்கர்ஷ அபகர்ஷங்கள்
திரு உள்ளத்திலே பட்டு

அங்கூடுருவ ஓர்ந்து –
இப்படி திரு உள்ளத்தில் உற்ற தசையில்
நிரூபிக்கும் இடத்து முடிய விசாரித்து
அருவினையேன் -என்று துடங்கி-1-5-1-
அடியேன் சிறிய ஞானத்தன் -என்னும் அளவும் -1-5-7-ஆராய்ந்து
இப்படி தீர்க்க தர்சியாய் தர்சித்து –

தளர்வுற்று –
மிகவும் அவசன்னராய்
ந கல்வத்யைவ
யதி ப்ரீத்தி -இத்யாதிப் படியே
நீங்க நினை மாறனை –
அகன்று அத்தலைக்கு அதிசயத்தை
பண்ண எண்ணுகிற ஆழ்வாரை

நீங்குகை
ஸ்வ விநாசம் ஆனாலும்
ஸ்வாமிக்கு அதிசயம் -ஆவஹராய் விச்லேஷிக்க ஸ்மரிக்கிறவரை

மால் –
தன் செல்லாமையைக் காட்டி
ஆஸ்ரித வ்யாமுக்தனான சர்வேஸ்வரன் –
நெடுமாலே –
மாலே மாயப் பெருமானே -என்றத்தை கடாஷித்து அருளிச் செய்தபடி –
ஏவம் வித வ்யாமுக்தன் ஆனவன் –

நீடு இலகு சீலத்தால் –
நெடுகிப் போரும்தான
நித்ய விசதக சீல குணத்தாலே
அதாவது திசைகள் எல்லாம் திருவடியால் தாயோன் -என்றும் –
உண்டாய் உலகு ஏழும் முன்னமே –என்று துடங்கி -நெய்யூண் மருந்தோ மாயோனே -என்றும்
இப்படி சௌசீல்யாதிகளாலே வசீகரித்த படி -என்கை-

பரிந்து பாங்குடனே சேர்த்தான் –
பரிந்து பாங்குடனே சேர்க்கையாவது-
இவனை ச்நிக்தநோபாதியாக ச்நேஹித்து மங்க விடாமல்
அலாப்ய லாபமாக ஹர்ஷத்துடனே
சங்கதாராக பண்ணினான்
திருவாய் பாடியிலே வெண்ணெயோபாதி
இவரையும் சேர விரும்பினான் –
வைகலும் வெண்ணெய் கை கலந்து யுண்டான் பொய் கலவாது என் மெய் கலந்தானே -என்னக் கடவது இ றே-

——————————————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s


%d bloggers like this: